ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை
                                         

திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம்

அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)

ஆசார்யன்–நம்மாழ்வார்

ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வான மா மலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான்.

அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :-

1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
2. குருகைக் காவலப்பன்
3.கீழையகத்தாழவான்
4.மேலையகத்தாழ்வான்
5. திருகண்ணமங்கையாண்டான்
6. பிள்ளை கருணாகர தாசர்
7.நம்பி கருணாகர தாசர்
8. ஏறு திருவுடையார்
9 வான மா மலை தெய்வ நாயக ஆண்டான்
10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
11.சோகத்தூர் ஆழ்வான் .

ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

திருஅவதாரம்–முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்ய ஸூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈஸ்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்ட பிறகு, நாதமுனிகள் ஆனார்.

ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.

திருமணம்:-
ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார்.

நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார்.

ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச் செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார்.

நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார்.

நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப் பேரனாருக்கு “யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வர முனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத் துறைவருக்குக் கற்றுக் கொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார்.

நாத முனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாத முனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.

மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடி விட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள்.

நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார்.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

——–

மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம்.

ஆளவந்தார் அவதாரம்:-

யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு
“ யமுனைத் துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர்.

யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று,
ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார்.

பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.

ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:-

இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன்.
ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர்.

கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார்.

இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது..

இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர்.

இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர்.

இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார்.

கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார்.

ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது.

ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம்
மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.

ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம்.

நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

———

வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை
வைணவம்
சைவம்
சாத்தமம்
காணா பத்த்யம்
ஸுரவம் கௌமாரம்
வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை
நியாயம்
வைசேஷிகம்
சாங்க்யம்
யோகம்
மீமாம்ஸை
வேதாந்தம்
அவைதிக தத்வம்
சாருவாகம் உலோகாயதம்
புத்த
ஜைன மதங்கள்

————–

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: