செல்வ நாராயணன் -திரு நாராயணன் -திருவுக்கும் திருவாகிய செல்வா
தானம் மதீயம் தவ பாத பங்கஜம்
அவனும் அவளும் விட்டாலும் விடாத திண் கழல்கள் தனம்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.–மூன்றாம் திருவந்தாதி –4-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -பசிக்கு விருந்தும் நோய்க்கு மருந்தும் இதுவே
வெங்கடாஜலா பாதி– காலோபதி வைத்தியம் —
அடி உதவுமாறு அண்ணன் தம்பியும் உதவ மாட்டானே -நம்பி மூத்த பிரானும் கிருஷ்ணனையும் விட திருவடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்தியும் அளிக்க வல்லது
உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாதமாநம் அவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை
பற்றற்ற மனமாகிய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டுமே
உள்ளம் நெஞ்சம் அகம் மனம் சித்தம் சேதஸ் ஹ்ருதயம் ஸ்வாந்தம் ஹ்ருத் மாநஸம் மநஸ் பர்யாய சொற்கள்
ஆத்மா இதயம் உயிர் மூச்சு இவற்றை விட வேறுபட்டது
மந்யதே அநேந இதி மந –மனனம் நினைக்க உதவும் உபகரணம் கருவியே மனஸ்
அறிவுப்பதிவுகளைக் காட்டும் திரையே மனஸ்
மாயவனையே மனத்து வை -பொய்கையார்
மனஸா து விஸூத் தேந -பராக்கைப் பார்க்காமல் ப்ரத்யக்க்கை நோக்கித் திருப்பா எம்பெருமான் அருள் புரியட்டும்
———-
மனம் புத்தி ஆத்மா -சித்தம்-கடஉபநிஷத் தேர்
தேர் ஒட்டி பார்த்தசாரதி –
அந்தக் கரணம் இருப்பிடம் ஹ்ருதயம் ஆத்மா பரமாத்மாவைப் போலவே
பஞ்ச பிராணன் போல் மனத்தின் வெளிப்பாடு 10 வகை ராமானுஜர்
காமம் –ஆசை -விருப்பம் -தூண்டும் கருவி
சங்கல்பம் -செய்ய வேணும் என்னும் உறுதியைத் தூண்டும் கருவி
விஜிகித்சா –ஐயத்தை அறிய ஆவலைத் தூண்டும் கருவி
ஸ்ரத்தா -முனைப்பு ஆர்வம்
அஸ்ரத்தா -ஆர்வம் இன்மை
த்ருதி -உறுதி
அத்ருதி –உறுதி இன்மை
ஹ்ரீஹீ –வெட்கம்
தீ -புத்தி
பீ -பயம் நாளை வரும் பிரதிகூலம் பற்றிய எண்ணம் -முன்பு நடந்தது போல் நடக்குமோ என்ற எண்ணமே பயம்
நல்ல சங்கல்பம் எடுத்து
ஸ்ரத்தையுடன் தொடங்கி
உறுதியுடன் இறைவனை அடைய
நம் மனம் துணை நிற்க அவன் அருளட்டும்
தேவ ஹூதி -ஒன்பது பெண்கள் -ரிஷிகளுக்கு கல்யாணம் பிள்ளையான கபிலர் இடம் ஸாஸ்த்ர அர்த்தம் கேட்க ஆசை
மோக்ஷம் அறிய ஆர்வம் -ஸ்ரத்தை -த்ருதி -கடைப்பிடித்து பேறு பெற்றாள்
ஸூஷ்மம் -பஞ்ச பூதங்களால் செய்யப் பட்ட சரீரம்
இயற்க்கை யெய்தல் காரியப் பொருள்கள் காரணத்தில் லயம் அடைதல்
இந்திரியங்கள் -பாஹ்ய- அந்தக் கரண -ஜீவன் உடனே சென்று மீண்டும் சேரும்
பிராகிருதம் -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவானவை-த்ரிகுண மயம் -ஜடப்பொருள் –
ஹ்ருதயம் வேறே மனஸ் வேறே
அறிவு நித்யம் அப்ராக்ருதம் -முக்குணங்கள் பீடிக்காததே ஞானத்துக்கு -உருவாக்கப்படாதது -புத்தி
மனம் மொழி வாக்கு -பிரதானம் மூன்றுமே –
காரண கார்ய பாவம் -சங்கிலி தங்கம் போல் -காரணம் பிரதானம் -நினைத்தால் தானே பேசவும் செய்யவும் முடியும்
ஆத்மா கர்மா- வாசனா- மனசில் பதிக்கும்-மோக்ஷ பந்த ஏக ஹேது -மனமே -முந்துற்ற நெஞ்சே -நெஞ்சமே நல்லை நல்லை –
கர்த்தா -பிரதம வேற்றுமை -ஆத்மா
காரணம் -ஆசையால் செய்கிறான்
காரியம் -நடை
கரணம் -ஆல் -இத்தால் -கருவி -கால்
நான்கும் அறிய வேண்டும்
மனம் நினைவுக்கு கருவி -காரணமாக ஆகுமோ -மனமே பந்த மோக்ஷ காரணம் சொல்லலாமோ
கர்த்தா தனது தலையில் ஏற்றுக் கொள்ளாமல் இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
காமம் க்ரோதம் லோபம் மோகம் மதம் மாத்சர்யம்-அஸூயை-பொறாமை -மனதின் நிலைமைகள்
மயக்கம் ஸம்மோஹ-அஞ்ஞானத்தால் மனம் மயக்கம்
மனம் குழப்பம் -இதுவோ அதுவோ சந்தேகம்
தப்பானதை இது தான் முடிவு மன மயக்கம்
மயர்வு –
ஞானத்தால் மனத் தெளிவு —
மன அழுத்தம்-
மஹா கல்பம் தொடங்கி –இன்று வரை நம் மனம் அழியாமல் –
அடுத்தடுத்த பிறவியில் தொடர்கிறது
ஆனால் முன் பிறவிகளின் நினைவுகள் தொடராது
இறுதியில் அவன் அருளால் ஸ்ரீ வைகுந்தம் அடையும் போது தான் அப்ராக்ருதமான வேறு மனம் கிடைக்கும்
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளுவான் –
இந்த்ரியங்களுக்குத் தலைவன் -மனம்
மனத்துக்குத் தலைவன் ஆத்மா
ஆத்மாவுக்குத் தலைவன் பரமாத்மா
அவன் அருளால் உட் புலனும் வெளிப்புலன்களும் சரியாக இயங்கட்டும்
மனஸ் த்ரவ்யம்-கண்ணுக்குத் தெரியாத ஓன்று -இருந்தாலும் நம்ப வேண்டும்
த்ரவ்யம் என்பது -அவஸ்தாச்ரயம் -வெவ்வேறே அவஸ்தைகளுக்கு இருப்பிடம்
விதை காய் பழம் போல் அவஸ்தைகள் மாறலாம்
விருப்பம் கோபம் பேராசை மயக்கம் ஆணவம் பொறாமை போன்ற தீட்ட அவஸ்தைகளையும்
அஹிம்ஸை ஸமத்வம் திருப்தி புலன் அடக்கம் போன்ற நல்ல அவஸ்தைகளையும் அடையும்
மனம் ப்ராக்ருதம் -அறிவற்ற ஓன்று
எனது மனம் சிந்திக்கிறது -விரும்புகிறது என்பது பொருந்தாது
ஆத்மாவின் செயல்களை இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அறிவுக்கு இருப்பிடம் -ஆத்மா வாக்கிய வீட்டிலே தான்
மனஸ் வீட்டின் வாசல் தான்
கர்மத்தால் பாதிக்கப்பட்ட அறிவுப் -காமம் கோபம் போன்ற அழுக்குகளால் பாதிக்கப்பட்ட மனம்
நோயால் பாதிக்கப்பட்ட கண் போன்ற புலன்கள்
இவை ஒவ்வொன்றும் பொருளை பற்றிய உண்மை அறிவை ஏற்படுத்தாதே
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்தஸ் ஸ்ம்ருதி அபோஹநம் ச
நினைப்பதும் மறப்பதும்-அவனாலே தானே ஒழிய மனஸால் அல்லவே
மனம் வலிமையோடு இறைவனிடம் ஈடுபட்டு இருந்தால் அறிவும் நினைவும் வரும் -மறதி விலகும் –
யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி
யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி
மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏக்கம் மஹாத்மா நாம்
மனஸ் அந்யத் வசஸ் அந்யத் கர்மண் யன்யத் துராத்ம நாம்
முதலில் சிறிது சிந்தித்து -எதைச் செய்ய இயலுமோ அதை மட்டும் பேசி
எதைப் பேசினோமோ அதைப்பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்க வேண்டும்
செய்ய இயலாததை பற்றித் தொடர்ந்து சிந்திக்கவோ பேசவோ கூடாது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுவோம்
இம்முறையை கடைப்பிடித்தால் பெருமானைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் நமக்கு நிறைய நேரம் கிட்டும்
கீழே மனசால் உயர்த்திக் கொள் -இங்கு மனசை வெல்வாய் -விஷயாந்தரங்களில் போகாமல் தடுப்பாய் என்கிறான்-அநாத்மா வெல்லப்படாத மனஸ் கொண்டவன் -புலன்கள் ஐந்தையும் வென்றிலேன் –அளப்பில் ஐம் புலன் அடக்கி -என் மனஸ் என்று கொள்ளாமல் பகவத் விஷயத்தைக் காட்டிக்கொடுக்கும் உபகரணம் என்று கொள்ள வேண்டுமே -ராமம் மே அனு கச்சதி-சக்ரவர்த்தி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாவ
பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷
யேந –எந்த மனத்தினால்
ஆத்மா -தன் மனம்
ஆத்மநா ஏவ -தன்னாலேயே
ஜித -விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ
தஸ்ய ஆத்ம ந -அம் மனிதனுக்கு
ஆத்மா பந்துர் -அம் மனம் உறவினன் ஆகும்
ராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்மநஸ் து -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ என்னில்
ஆத்மா ஏவ -தன் மனமே
ஸத்ருவத்-தனது எதிரியைப் போலே
ஸத்ருத்வே -நன்மைக்குத் தடையாய் இருப்பதில்
வர்த்தேத —ஈடுபடும்
எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்
பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் –
ஒரே மனசே மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்
மனம் மொழி காயம் மூன்றிலும் முதலான மனமே ஏக பந்த மோக்ஷ ஹேது வாகும்
நமது அறிவுக்கு முக்குண பாதிப்பு கிடையாது
ஆனால் அறிவு மனம் வழியாகவே பயணிக்கிற படியால்
மனத்தில் உயர்ந்து இருக்கும் குணம் அறிவையும் பாதிக்கும் –
உடலும் மனமும் முக்குண வசப்பட்டு இருக்கும்
தேவனாகப் பிறந்த உடலில் சத்வகுணம் அதிகமாயும்
அசுரனுக்கு ரஜோ குணமும்
அரக்கனுக்கு தமோ குணமும்
மனிதர்க்கு மூன்றும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும்
மேலும்
க்ருத யுகத்தில் சத்வ குணமும்
த்ரேதா யுகத்தில் ரஜோ குணமும்
த்வாபர யுகத்தில் ரஜோ குண தமோ குணம் கலந்தும்
கலியுகத்தில் தமோ குணம் அதிகமாகவும் இருக்கும்
இவை பொது விதி
விதி விளக்குகள் -ப்ரஹ்லாதன் -ஜெயத்ரன் விபீஷணன் பாக்களில் பார்க்கிறோம்
மனத்தில் ஸத்வ குணத்தை வளர்க்க பெருமானைத் தியானித்தல் உதவும்
உடல் அளவில் இன்ன பிறவி எடுத்ததற்காக
பக்தியோ முக்தியோ கிடைக்காது என்று எந்த சாஸ்திரங்களும் சொல்ல வில்லை
மனத்தில் ஸத்வ குணம் வளர்ந்து பக்தி முற்றினால் யாருக்கும் முக்தி கிட்டும்
செய்யப்பட கர்மங்கள்
அதன் பதிவுகளாக வாஸனை
அதனால் மீண்டும் செய்யத் தூண்டும் ருசி
இவை தான் நாம் தொடர்ந்து பிறந்து கர்மங்களை செய்யக் காரணங்கள்
ஈஸ்வரன் ஆத்மாவுக்குள் கிடைக்கும் கர்ம வாஸனை ருசி ஆகியவற்றை மேல் எழுப்பி மனம் என்கிற திரையில் அதே ஆத்மாவுக்கு காட்டுகிறார்
ஆத்மச அவற்றைப் பார்த்து அதற்கு வசப்பட்டு நடக்கிறார்
அல்லது தனக்குள்ள புத்தியைப் பயன்படுத்தி அந்தக் காட்சிகளுக்கு வசப்படாமல்
அதைத் தாண்டி சாஸ்திரங்கள் காட்டும் நல்ல வழியில் நடக்கிறார்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணவே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
இதனால் சிந்திக்கிறோம் -மனஸ்
இதனால் அறிகிறோம் -புத்தி -கட ஞானம் பட ஞானம் -போன்ற பலவற்றை அறிகிறோம்
ஒரே புத்தி பலவற்றை அறிகிறது –
ஞானம் வேறே ஸ்ம்ருதி வேறே -அறிந்தவற்றை ஸ்மரணம் பண்ணுகிறோம்
மன ஏவ ஹி மனுஷ்யா ணாம் காரணம் பந்த மோக்ஷயோ பந்தாய விஷயாங்கி முக்தியை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நெஞ்சமே நல்லை நல்லை
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்
மனத்தைக் காட்டிலும் வலியது நம் புத்தி
ஆத்மா தனது புத்தியால் மனத்தைத் திருத்த வேண்டும்
அல்லது
பகவான் இடம் சரணாகதி செய்து வேண்டினால் தான் வசிக்கும் இடமாகிய மனத்தை பகவானே தூய்மை ஆக்குவார்
அறிவில்லாத மனம் பந்த மோக்ஷ ஹேது வாகாதது-
உண்மையில் அறிவுள்ள ஆத்மாவே தான் காரணமாக இருந்தாலும் அதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அநாதி காலம் ஆர்ஜித்த கர்மம் வாஸனை ருசி ஆகியவையே
காமம்
கோபம்
லோபம் என்னும் பேராசை
மோகம் -தர்ம அதர்ம விபாகம் அறியாமை
மதம் -கர்வம்
மாத்சர்யம் -பொறாமை
டம்பம் –
தர்ப்பம் -கர்த்தவ்ய -அகர்தவ்ய விபாகம் பண்ண முடியாமல் ஆக்கும் சிற்றின்ப ஸூகம்
பாருஷம் -சாதுக்களையும் வருத்தும் நம் காடின்யம்
இவை தான் மனத்தின் அழுக்குகள்
நாம் மெது மெதுவே மனத்தை பகவான் இடம் ஈடுபடுத்தி தியானித்தால்
அழுக்குகள் நீங்கி
புடம் போட்ட தங்கம் போல் மனம் தூய்மையாகும்
விடா முயற்சியால் அநாதிகாலம் தொடர்ந்து செய்யவே இந்த நிலையை அடைவோம்
தானம்
யாகம்
தூ மலர் தூவித்தொழும் அர்ச்சனை
சமம்
தமம்
அஹிம்சை
த்ருதி -நிச்சய புத்தி
தேஜஸ் -உறுதியான நிஷ்டை
இவற்றை நாம் படிப்படியாகக் கடைப்பிடித்து -பகவத் பிரீதி கார்யங்கள் செய்வதே
இந்த அழுக்குகள் நீக்கும் வழிகளாகும்
பேதை மனமே பேசு
முந்துற்ற நெஞ்சே
மட நெஞ்சே
நெஞ்சே நீயும் நானும் நேற் நிற்கில்
பகவத் ப்ரஸாதத்தாலேயே ஆத்மாவின் ஆணைக்கு உட்பட்டு நெஞ்சம் நல்ல காட்சிகளையே காட்டும்
ஸத்வ குணத்தாலேயே மனத்திரையைத் துடைத்து சுத்தமாக வைத்துக் கொண்டு
நல்ல காட்சிகளையே காட்டும்படி செய்வோம்
மன மயக்கம் -அறிவுக் கோளாறு -தீருவதற்கு
உண்மை அறிவும்
மனத்தின் ஸத்வ குணமும் தேவை
ஆன்றோர்கள் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக்க கொள்ள வேண்டும்
மன அழுத்தம் அறிவின்மையாலே வரும்
உண்மை அரிவாள் விலகும்
ஆதி -மன நோய்
வியாதி -உடல் நோய்
லங்கநம் பரம ஒவ்ஷதம் –inter mittent fasting
கீழா நெல்லி கரிசலாங்கண்ணி ஏலக்காய் தேன் மிளகு வேப்பிலை மணத்தக்காளி சுண்டைக்காய் துளசி
போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து ஆரோக்யம் கொடுக்கும்
ருஷ்ட்டிக்கல் காற்றையும் நீரையும் மட்டும் புஜித்து -அதன் மூலம் சக்தி பெற்று நீண்ட காலம் நல் வாழ்வு வாழ்ந்தார்கள்
வயதாக உடல் உறுப்புக்கள் வலிமை இழக்கும்
மனமோ அனுபவத்தால் பக்குவம் அடைந்து வலுவடையும் –
மன வலிமையால் உடல் நோயை எதிர்த்து நீக்கலாம்
சோக ஸ்தாநே ஸஹஸ்ராணி பய ஸ்தாந ஸதாநி ச
திவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம் –மஹா பாரத ஸ்லோகம்
விவேக ஞானமும் பக்தியும் மனத்தெளிவை உண்டாக்கும்
ஸ்ரீ மத் பாகவதத்தில் -புரஞ்சந உபாக்யானத்தில்
ஜரா என்னும் பெண் ம்ருத்யு என்னும் ஆணை மணம் புரிய வேண்டுகிறாள்
அதை ஏற்காமல் ம்ருத்யு தன் தம்பியான ப்ரஜ்வாரனையும் தன் ஸேனையையும்
ஜாராவுக்குத் துணையாக மனிதற்குத் துன்பம் விளைவிக்க அனுப்புகிறார்
மூப்பைத் தடுக்க முடியாவிட்டாலும் மூப்புக்குத் துணையான உடல் நோயைக் கட்டுப்படுத்தி
மன நோயை நீக்கி ஆரோக்யமாக வாழ வேண்டும் என்பதையே இது காட்டும்
மானஸ ஸ்நாநம்
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கருவினை களைந்தடுகிற்கும்
த்ரிவிக்ரம பாதாரவிந்த தீர்த்தம் மம பஹிரந்தச் ஸூத்தி கரம்
யஜ தேவ பூஜாயாம்
ராத்ரு ப்ரீணன -தாதுப்படி திரு வாராதனமே பகவத் ப்ரீதி யர்த்தம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்துக் கைகளால் தூ மலர் தூவித் தொழுது –
இவ்வாறு மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களாலும் ஈடுபட்டு திருவாராதனம் செய்ய வேண்டும்
108 திவ்ய தேசப்பெருமாள்களையும் மானஸீகமாக எழுந்து அருளப் பண்ணி முக்கரணங்களாலும் ஈடுபட்டு
திருவாராதனம் செய்ய வேண்டும்
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
பரமாபதம் ஆ பன்ன மனஸா சிந்த யேத் ஹரிம் –
கத்யர்த்த புத்த்யர்த்தம்
மானஸ சரணாகதி கண்டிப்பாகப் பலிக்கும்
பகவானையே நம்பும் அறிவும்
அவனையே நினைக்கும் மனமுமே
சரணாகதிக்குத் தேவை
ஜீவ காருண்யம் ஸத்யம் நேர்மை புலன் அடக்கம் -போன்ற உள் அடையாளங்கள் தான் முக்கியம்
வெளி அடையாளங்களும் வேண்டும்
கல்வியும் செயல்பாடும் வேண்டுமே
குதிரையும் வேண்டும் -கடிவாளம் சோணம் -ஆகியவையும் வேண்டுமே
கற்கக் கசடற –கற்றபின் நிற்க அதற்குத் தக
(கைங்கர்யம் பண்ணப் பண்ண
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
சுமந்து –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
பெரும் பலன்களைப் பட்டியல் இடுகிறார்
மனம் மாசு அஞ்ஞானம் -காம க்ரிதாதிகள் போகும்
தீரா வினைகள் கிட்டாவே
பக்திச் செல்வம் தானாகவே வந்து சேரும்
கைங்கர்ய ரூபம் -சாதனமாக அல்ல )
பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–
பதவுரை
புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்
மனமாசு தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் -(வாசனை விட ருசி பிரபலம் )
அரு வினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் )அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்
(குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் பண்ண ருசி பக்தி வேண்டுமே -அது தானே உண்டாகும்)
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –
(இவை சாதனம் அல்லவே
சூட்டு நன் மாலைகள் -அங்கு போல் இங்கும்
சாதனம் ஆக்குவது உபாயாந்தர பரர்கள் )
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-(பரபக்த்யாதிகள் -போஜனத்துக்கு சுத்தி போல் இவை )
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –
(செல்வச் சிறுமீர்காள் -அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –நாகவர ஸ்ரீ மான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்ற நினைவே -லஷ்மணோ லஷ்மீ சம்பந்தம்)
(நீ செய்ய வேண்டியத்தைச் செய்தால் -ஸ்வ தந்த்ரனாக நினைத்த்தால் சாதனம் ஆகுமே
நீ -அத்யந்த பரதந்த்ரனாக அறிந்து -ப்ராப்யத்தில் அன்வயித்து கைங்கர்யம்
ஸ்வாமி தனது கார்யம் உடைமைக்குச் செய்ய சொல்ல வேண்டுமோ)
(சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திரு விருத்தம் -20-
அதை இங்கேயே இவ்வு டம்புடனே இக்காலத்திலேயே
செய்யுமவர்கள் -விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -70-
ஸ்வரூப அனுரூபமான தனமாவது பரபக்தி பரஞானம் பரமபக்திகள் –
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் யுத்த -16-17-
ச து நாக வர ஸ்ரீ மான்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால-18-20-)
இதில் மன மாசு -அவித்யாதிகள் தொலைந்தாலும் -இவற்றுக்குக் காரணமான கர்மங்கள் இருக்கும் வரை மீண்டும் மேலைக்குமே
ஆகவே அரு வினையும் சாரா -கர்மங்கள் வாஸனை ருசி -போன்றவையும்
பகவத் ப்ரஸாதத்தாலேயே தொலைய வேண்டும்
தடங்கலான கர்மங்களும் -அதனால் வந்த மன மாசும் தீர்த்ந்தால் தானே தனமாயவை கைகூடும்
தனமாய் -ஆத்ம ஞானம் பக்தி போன்றவையும் அவற்றுக்குக் காரணமான புலன் அடக்கம் சாந்தி போன்ற நற் குணங்களும்
இவை தானே கைகூடும் என்பதால் நமது முயற்சி இல்லாமல் பகவத் ப்ரஸாதத்தாலேயே கிட்டும்
பகவத் ஆராதனம்
ஸாது சங்கம்
வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள்
இவற்றை விடாமல் அனுஷ்ட்டிக்க மனமாசு தீரும்
மற்றனைத்துத் தோஷங்களும் நீங்கும்
இந்திரியாணி மநோ புத்தி அஸ்ய அதிஷ்டானம் உச்யதே
ஏதை விமோஹ யத் யேஷ ஞானமும் ஆவ்ருத்ய தேஹினம்
கர்மங்கள் முக்குணங்களைக் கூட்டும்
ரஜோ குணம் காமத்தைக் கூட்டும்
காமம் புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றைப் பீடித்து அறிவை மறைக்கும்
இவற்றுக்கு மாற்று பகவத் காமமே
இதற்காகவே கோயில்களில் நம்மைச் சூழ்ந்து அழகைக் காட்டி ஈர்க்கிறான்
யத் அக்நி உத்தத சிகஸ் கஷம் தஹதி ஸாநில ததா சித்தஸ்திதோ விஷ்ணு யோகிநாம் ஸர்வ கில்பிஷம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-7-4
ப்ரஹதாரண்யமும் -ஸ்ரவணம் மனனம் -த்யானம் -மூலம் சாஷாத்காரம் பெறலாம்
என்பவற்றைச் சொன்னாலும் எளிதாக
ஞான அக்னி தத்த கர்மாணாம் தமாஹ
எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூ பாஸ்ரயம்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் —
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம்
தன் பால் ஆதாரம் பெறுக வைப்பதும் அவனது அழகே
ஜாக்ரத்–விழித்து இருக்கும் முதல் நிலை –வெளிப்புலன்களும் மனமும் இயங்கும்
ஸ்வப்னம்
ஸூ ஷுப்தி -கனவைத் தாண்டி ஆழ்ந்த உறக்கம்
துரீயம்
பாலஸ் தாவத் க்ரீடா ஸக்த தருண ஸ்தாவத் தருணீ சக்த
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த
சிறுவன் விளையாட்டிலும் இளைய நிலையில் பெண்கள் இடமும்
கிழவனாய் வீணான கவலைகளிலும் ஈடுபட்டு பர ப்ரஹ்மத்திடம் ஈடுபடாமல் உள்ளார்கள்
ஆனாது மாயயா ஸூஅஸ்வப்னம் அத்வைதம் புத்யதே ததா –மாண்டூக்ய காரிகை
ஆத்மா உறங்காமல் அறிவு மலர்ந்தே இருந்து மனமும் உறங்காமல்
விழிப்போடு பெருமான் நினைவாகவே இருக்கும்
நமது கர்மங்களின் படியே கனவுக்காட்சிகளும்
புண்ணியத்தின் பலனாக இன்பக்காட்சிகளையும்
பாவத்தின் பலனாக துன்பக்காட்சிகையும்
கண்பாவில் எம்பெருமான் காட்டு அருளுகிறார்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து தொடங்கி
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் -பத்துப்பாசுரங்களையும் பாடி அருளுகிறார் நாச்சியார்
கனவுகளைக் காணும் போதும் நமது கர்மங்களைத் தொலைக்கும் கருணை -இவை தான் பெருமானின் பெருமை –
ஸூ ஷுப்தி நிலையில் வெளிப்புலன்களும் மனமும் செயல் அற்று உறங்கி விடும்
மனம் ஜீவனின் வசத்தில் இருக்காது
ஆத்மா ப்ரஹ்மத்துடன் கூடி அனுபவிப்பார்
உத்ஸாஹம் மற்றும் சக்தியின் இருப்பிடம் பகவான்
அவனுடன் கூடுகிற படியால் ஜீவனும் சக்தியைப் பெறுகிறான்
துரீய தசை -மரண தசை –
ஆத்மா அநாதி கால கர்மாக்கள் பூத ஸூஷ்மங்கள் -மனம் ஆகியவை அவருடன் அடுத்த பிறவி அடையும்
கர்ப்ப கதி
யாம்ய கதி
தூமாதி கதி
அர்ச்சிராதி கதி
மாளும் ஒர் இடத்திலும் வணக்கொடு மாள்வது நலமே
அஹம் ஸ்மராமி மத் பக்தன் நயாமி பரமாம் கதிம்
ஆஹார நித்ரா பய மைதூ நாதி துல்யானி கல்வத்ர ஸமஸ்த ஐந்தோ
ஞானாத் விஸிஷ்டோ ஹி நர பரேப்ய ஞாநேந ஹீந பசுபி ஸமாந -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
கஜேந்திரன் ஜடாயு திருவடி -பிறவி எப்படி இருந்தாலும் முன் பிறவியில் செய்த புண்ய பலத்தால் ஸ்ரேஷ்டர்கள் ஆனார்கள்
உன்னுடைய விக்கிரமன் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
சாளக்கிராமம் அடை நெஞ்சே
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான்
நல்ல நெஞ்சே நாம் தொழுதும்
இன்புருகு சிந்தை இது திரியா
முந்துற்ற நெஞ்சே
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவன் என்றே கிடைக்கும் எல்லே
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என்ன செய்யோம் இனி என் குறைவினம்
இத்தகைய அருளிச் செயல்களை நினைந்து இருந்தே நம்முடைய நெஞ்சமும் நல் வழிப்பட்டு பெருமான் பின்னேயே செல்லட்டும்
ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்த –வீட்டில் இருந்த போதே ஸந்நியாசியாகலாமே
ரமணீயம் ப்ரஸன்னாம்பு ஸந் மனுஷ்ய மநோ யதா –
தமஸா ஆற்று நீர்
அஹிம்சை இரக்கம் அடக்கம் சாந்தி ஆகியவை நிரம்பி உள்ள
மஹான்களின் உள்ளம் போல் தெளிந்து உள்ளது –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே
கேவலம் ஸ்வ இச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
ஸுஹார்த்தம் -சோபனம் ஹ்ருதயம்
ஸுஹார்த்தம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திக்கு ருச்சதி –5-29-
உதாரண ஸர்வ ஏவைதே ஞானீத்வாத் மைவ மே மதம் –7-18-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா பிரயச்சதி–9-26-
ஆத்மாநம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மநஸ் ப்ரக்ரஹ வான் நர –கட உபநிஷத்
உடல் ஒரு தேர்
ஆத்மா தேருக்கு உடையவன்
புலன்கள் குதிரைகள்
புத்தி உறுதி தேரோட்டி
மனம் கடிவாளம்
ஆத்மாவின் விருப்பட்டியே உடலும் புலன்களும் செயல்பட வேண்டும்
அதற்கு ஒரே வழி பார்த்த சாரதி எம்பெருமான் இடத்திலே தேரை ஒப்படைப்பது தானே –
சஞ்சலம் ஹி மநஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம்
அப்யாஸமும் வைராக்கியமும் தேவை
காந்தம் இரும்பை இழுப்பது போல் ஸ்ரீ காந்தன் இரும்பு போல் வலிய நெஞ்சை தன் பால் ஈர்த்து அருளுவார்
திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் –உறையும் பிரான் –8-6-2-
அரவத்தமளியினோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்தான்
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேடன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் ஏன் நெஞ்சுளே
இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டி இருக்கும்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி
ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்தத்திற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற என் மனதுக்கு இனியான்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –
இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –
காப்புன்னைக் யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பதவுரை
திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.
அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்
காப்புன்னைக் யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —
(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-
கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-
தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)
மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்
யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்
மன மாசு தீர்வதோடு அல்லாமல் மூப்பு கொடிய வினைகள் ஆகியவையும்
பகவானை மனத்தினால் நினைத்து இருத்தினால் கழியுமே
போதில் கமலா வன்னெஞ்சம் புகுந்து என்னுள்ளே ஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்க விடுவித்து
எப்பொழுதும் எதிராசர் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வந்து உனது அடிப்போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி –
ஆத்மா குத்து விளக்கு
தர்மபூத ஞானம் அதன் வெளிச்சம்
மனம் இதய வாசல் -திரையும் அதுவே
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து
ஆச்சார்யர்கள் காட்டிய வழியில் மனத்தை உள்ளே இருக்கும் திருமாலை நோக்கித் திருப்பி
தியானித்து அச்சம் கவலை முதலிய அழுக்கு நீக்கி
தூய மனதில் அவரை ஆனந்தமாக எழுந்து அருளி இருக்கச் செய்வதே மனமன் படைத்த பயன்
முக்தி மோஷோ மஹா ஆனந்த -இன்பமே உருவான பரமபுருஷார்த்தம் பெற மனதார பகவானைப் பிராத்திப்போம்
——————————————————-—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply