ஸ்ரீ நாராயண–ஸ்ரீ அச்யுதன் -ஸ்ரீ அநந்தன் -ஸ்ரீ கோவிந்தன் -திரு நாம வைபவங்கள் —

“நாராயண பரா வேதா தேவா நாராயணாங்கஜா: |
நாராயண பரா லோகா நாராயண பரா யாகா : |!”

[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை; தேவர்கள்‌ 
நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்‌; 
உலகங்களும்‌ நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும்‌ 
நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும்‌, 

நாபிர்‌ போக்‌ நிர்‌ முகமம்பு, ரேதோத்‌,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்‌,ரிருர்வீ | 
சந்த்‌ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா ஹ்யஹம்‌ ஸமுத்‌,ரோ ஜடம்‌ பு,ஜேந்த்பா: ॥ 
ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | 
ப்ரஜாபதிர்‌ ஹ்ருதயம்‌ யஸ்ய தர்ம: ஸ வை பவார்‌ புருஷோ லோககல்ப: ||
 
[நாபியே ஆகாசம்‌; அக்நி முகம்‌; ஜலம்‌ ரேதஸ்‌, ஸ்வர்க்கம்‌ 
தலை: திக்குகளே செவிகள்‌; திருவடிகள்‌ பூமி; சந்த்ரன்‌ 
மனஸ்‌. ஸூர்யன்‌ கண்‌; அஹங்காரம்‌ சிவனாகிய நானே; 
சமுத்திரம்‌ வயிறு; இந்திரன்‌ புஜங்கள்‌; ` ஓஷதிகள்‌ 
ரோமங்கள்‌; மேகங்கள்‌ தலைமயிர்‌; பிரமனே புத்தி; பிரஜா 
பதியே ஆண்குறி; தர்மமே ஹ்ருதயம்‌; (இப்படிப்பட்ட) 
நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட விராட் புருஷனாக நீர்‌. ] 
என்றும்‌ ஸ்ரீபாகவதத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. 

“ஜ்யோதிம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணு: விஷ்ணுர்‌ கிரயோ திலுமச | 
நத்‌,யஸ்‌ ஸமுத்‌,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம்‌ யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” 
[விப்ர ஸ்ரேஷ்டரே! சந்திரன் முகலிய சோதிகளும்‌ 
விஷ்ணுவே; உலகங்களும்‌ விஷ்ணுவே; வனங்களும்‌, மலை 
களும்‌. திசைகளும்‌ விஷ்ணுவே. நதிகளும்‌, சமுக்திரங்களும்‌. 
விகாரமடைபவையும்‌,  விகாரமடையாதவையும்‌ ஆகிய எல்லாம்‌ ௮வனே.] என்றும்‌. 

“ஸர்வ ரத்ன மயோ மேரு: ஸர்வாங்சர்யமயம்‌ நப: | 
ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வ தேவ மயோ ஹரி: |." 
[மேருமலை ஸர்வ ரத்னங்களையும்‌ கொண்டது; ஆகாசம்‌ எல்லா 
ஆச்சரியங்களையும்‌ உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய 
மானது; ஹரி எல்லா கேவதைகளையும்‌ சரிரமாகக்‌ 
கொண்டவர்‌.  என்றும்‌ பராசர செளனகாதி ரிஷிகள்‌  சொல்லியிருக்கிறார்கள்‌. 

“ஸு ஆத்மா அங்கங்ளந் யந்யர தேவதா: `` [அந்தப்‌ பரம 
புருஷன்‌ ( எல்லாருக்கும்‌ ) ஆத்மாவாயிருக்கிறான்‌; மற்ற 
தெய்வங்கள்‌ அங்கங்களாகின்‌றனர்‌.] என்று வேதமும்‌  விளம்பிற்று. 

ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மாவென்றும்‌, 
மற்றவர்களெல்லாராம்‌ அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர்‌ 
களே என்றும்‌ ஸகல ஸாஸ்த்ரங்களும்‌ கோஷிக்கின்‌றன. 

இதையே பாரரரீரக மீமாம்ஸாமாஸ்த்ரமும்‌ உத்கோஷிக்கறது. 

தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர சரிரங்களிலிருக்கும்‌ ஆத்மாக்களை 
யெல்லாம்‌ தரிப்பவன்‌ தாமோதரனே; நியமிப்பவன்‌ 
நாராயணனே; ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸ்ரீதரனே. இப்படி 
ஜீவ பரர்கள்‌ ஒருவரை யொருவர்‌ பிரித்துப்‌ பார்க்கமுடி 
யாத படி ஒன்று சேர்ந்திருப்பதினால்‌ ஜீவாத்‌மாக்களைச்‌ 
சொல்லும்‌ பதங்களெல்லாம்‌ அபர்யவஸாய வ்ருத்‌தி யினால்‌ 
அந்தர்யாமி பகவான்‌ வரையிலும்‌ குறிக்கும்‌. 
இவ்விஷயங்களை 
“ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத, 
யஸ்ய மாத்மா சரீரம்‌ ய ஆத்மா ந வேத அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத்‌: |!"
[எவன்‌ ஆத்மாவிலிருந்து கொண்டு , எவனை ஆத்மா அறிய 
வில்லையோ. எவனுக்கு ஆத்மா சரீரமோ , எவன்‌ ஆத்மாவை 
உள்ளிருந்துகொண்டு நியமிக்கிறானோ. அழிவற்றவனான 
அவனே உனக்கும்‌ ஆத்மாவாகவும்‌. உள்ளிருந்து நியமிப்ப 
வனாகவுமிருக்கிறான்‌.] என்றும்‌. 
ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம 
பதத்திலிருக்கும்‌ இந்த நாராயணன்‌ ஒருவனே, தோஷ 
மற்றவனாகவும்‌ எல்லா ஜீவராசிகளுக்கும்‌ அந்தராத்மாவாக 
வும்‌ விளங்குகிறான்‌. ] என்றும்‌. 
“யஸ்ய ப்ருதிீவீ மமரீரம்‌ ய: ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர்‌ யம்‌ ப்ருதி,வீ ' வேத,--எவனுக்கு 
பூமி இத்யாதிகள் சரீரமோ , எவன்‌ பூமியினுள்‌ ஸஞ்சரித்துக்கொண்டி 
ருக்கிறானோ. . எவனை பூமியானது ௮றியவில்லையோ--என்றும்‌. -
அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா'' 
[ஸர்வாந்தர்யாமியான நாராயணன்‌ ஜனங்களை உள்‌ 
நுழைந்து நியமிக்கிறான்‌.] என்றும்‌, 
“ அந்தர்‌ பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: " [நாராயணன்‌ 
அவையெல்லா வற்றையும்‌ உள்ளும்‌, புறமும்‌ வியாபித்து 
நிற்கிறான்‌.] என்றும்‌. 
ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்‌,ர:  ஸோஃக்ஷர: பரம: ஸவராட்‌ "` --அவனே பிரமனுக்கும்‌. சிவ 
னுக்கும்‌, இந்திரனுக்கும்‌. அழிவற்றவனும்‌. கர்மவசப்படாத 
வனும்‌, மேலானவனுமான முக்காத்மாவுக்கும்‌ அந்தர்யாமி,--என்றும்‌. 
பல பல வாக்யங்களில்‌ வேதம்‌ விளக்கிற்று. 

எல்லாப்‌ பொருள்களுக்கும்‌  அந்தர்யாமியாயிருப்பதால்‌ 
ஸ்ரீமந் நாராயணன்‌ ஸர்வ ஸப்த வாஸயனாயிருக்கறான்‌ என்று 
ஆசார்யர்களும்‌ நிர்வஹித்திருக்கிறார்கள்‌. 

இப்படிப்பட்ட ஸ்ரீமந் நாராயணனை அடைவதற்கு பக்தி 
ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம்‌ வித்‌வான்‌ 
அம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த 
ஜன்‌மத்திலேயே மோக்ஷம்‌ அடைகிறான்‌.] என்றும்‌. 
“யோ வேத, நிஹிதம்‌ கு,ஹாயாம்‌ பரமே வ்யேரமந்‌। ஸோூஸ்நுதே 
ஸர்வாந்‌ காமாக்‌ ஸஹ ப்‌,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய 
குலையிலிருக்கும்‌ பரமாத்மாவை எவன்‌ அறிகி றானோ, 
அவன்‌ பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ அவ 
னுடைய கல்யாண குணங்கள்‌ எல்லாவற்றையும்‌ அநுபவிக்‌ 
கிறான்‌.] என்றும்‌ வேத வாக்யங்கள்‌ விளக்குகின்‌றன. 
ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும்‌. இந்த விஷயமே பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. 
“அநந்யாம்‌ சிந்தயந்தோ மாம்‌ யே ஜரா: பர்யுபாஸதே | 
தேஷாம்‌ நித்யாபி,யுக்தாநாம்‌ யோக,க்ஷேம்‌ வஹாம்யஹம்‌।।”' 
[மற்ற எதையும்‌ நினையாதவர்களாய்‌. என்னையே எந்த 
ஜனங்கள்‌ உபாஸிக்கிறார்களோ , எப்போதும்‌ என்னுடன்‌ 
சேர்ந்திருக்கையை விரும்பும்‌ அவர்களுடைய யோக 
ஷேமத்தை நான்‌ வஹிக்கறேன்‌.] என்றும்‌, 

“விசார்ய ச புராணார்த்த,ாம்‌ ஸவேதரநாத்மடி ஸ்திதம்‌ । 
விஷ்ணும்‌ ஸத,ா ஹ்ருதி, த்‌,யாயேத்‌ ஸம்ஸாராக,விமுக்தயே।/”' 
[வேதங்களுடன்‌ கூடிய புராணங்களின்‌ பொருள்களை 
விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும்‌ விஷ்ணுவை. ஸம்ஸார 
பாபங்கள்‌ நீங்குவதற்காக எப்போதும்‌ ஹ்ருதயத்தினுள்‌ தியானிக்கவேண்டும்‌.] என்றும்‌, 

“ஆலோட்‌,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪| 
இத,மேகம்‌ ஸுநிஷ்பந்நம்‌ த்‌,யேயோ நாராயணஸ் ஸதா ॥!”' 
[எல்லா சாஸ்திரங்களையும்‌ பார்த்து, மறுபடியும்‌ மறுபடி 
யும்‌ விசாரம்‌ செய்தால்‌ நாராயணனே எப்போதும்‌ 
தியானிக்கத் தக்கவன்‌ '' என்னுமிது ஒன்றே நன்றாகத்‌ தேறி  நிற்கும்‌.] என்றும்‌, 

“யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ரஹ்மஹத்த்யாதி,தோஷஜம்‌। 
ஈாமாயேத்‌ பாதகம்‌ ஸத்‌,ய: இம்‌ புக: கத்‌,யதே பரம்‌ |” 
[எவனை தியானிப்பதில்‌ ஈடுபட்டிருக்கும்‌ மனிதன்‌ ப்ரஹ்ம 
ஹத்தி முதலிய தோஷங்களாலேற்படும்‌ பாபத்தை உடனே 
போக்கடிக்கிறானோ, (அவன்‌ விஜயத்தில்‌) மற்ற பாபங்களைப்‌ 
பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?] என்றும்‌, 

“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | 
அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” 
[கெட்ட மனமுடையவர்களாலும்‌ நினைக்கப்பட்ட ஹரி 
பாபங்களைப்‌ போக்கடிக்கிறான்‌. இஷ்டப்படாமல்‌ தொடப்‌ 
பட்டபோதிலும்‌ நெருப்பு தஹித்தே தீருமன்‌றே. ] என்றும்‌, 

“ருக் யஜூம்ஷி ஸாமாதி யோ தீ,தே ஸக்ருத;ஞ்ஜஸா | 
ஸக்ருந் நாராயணம்‌ ஸ்ம்ருத்வா பலம்‌ தஸ்ய ஸமந் நுதே |” 
[ எவனொருவன்‌. ருக்‌. யஜுஸ்‌ ஸாம வேதங்களைப்‌ பலதடவை 
நன்றாக அத்யயனம்‌ செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு 
தடவை நாராயணனை நினைப்பதினால்‌ அடைகிறான் ] என்றும்‌, 

“வ்ரஜந்த்யகந்ய மநஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம்‌ | 
யே பஹந்தி து மாம்‌ ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம்‌ |॥'” 
[வேறொன்‌றிலும்‌ செல்லாத மனமுடையவர்களரய்‌. என்னை 
பூதங்களுக்குக்‌ காரண பூதனாகவும்‌. அழிவறவனாயும்‌ அறிந்து 
எவர்கள்‌ பக்தியுடன்‌ ஆராதிக்கிறார்களோ. அவர்கள்‌ 
என்னிடத்திலிருக்கிறார்கள்‌; நனும்‌ அவர்களிடத்திலிருக்‌ 
கிறேன்‌.] என்றும்‌ சொல்லப்பட்ட தன்றோ. 
இந்த விதி  வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நாம்‌ பஜனம்‌
செய்யவேண்டுமென்றும்‌. தியானம்‌, மனனம்‌. பஜனம்‌. 
ஸ்மரணம்‌ முதலிய பதங்களினால்‌ சொல்லப்படும்‌ பக்தி 
அவனை அடைவதற்கு உபாயமென்றும்‌ ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம்‌ கர்மமே என்று 
ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. மநோ வாக்‌ காய 
கர்மங்களால்‌ அந்த பகவானுக்கு ஆராதனம்‌ செய்ய வேண்டுமென்பது 
“தஸ்மாத் அநந்ய ப௱வஸ்த்வம்‌ தே,வதே,வம்‌ | 
ஆராதயாந்‌ ஹ்ருஷீகேஸ மாம்‌ மநோ வாக் காய கர்மபி,:॥  
[ ஆகையால்‌. நீ வேறொன்றிலும்‌ நினைவில்ல: கவனாய்‌ தேவ 
தேவனும்‌.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. 
 வாக்‌ காய கர்மங்களால்‌ ஆராதித்துக் கொண்‌டிருப்பாயாக.] என்றும்‌. 

“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச்சித்தம்‌ யத்‌ ததர்ப்பிதம்‌| 
தாவேவ = கரெள ங்லாக்‌,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” 
. [எது ஹரியைத்‌ துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம்‌ 
எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்‌; எக்கை 
கள்‌ அந்தப்‌ பரமாத்மாவைப்‌ பூஜிப்பதில்‌ ஈடுபட்டிரறாக்‌ 
கின்‌றனவோ, அக்கைகளே சிறந்தவை] என்றும்‌. 
“ஸ்ருதி ஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ நித்யமாசாரமாசரேத்‌ |” 
[ஸ்ருதி ஸ்ம்ருதிகளிற்‌ சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக 
எப்போதும்‌ அநுஷ்டிக்க வேண்டியது.] என்றும்‌. 
“ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" 
[ஆசாரத்தைக்‌ காரணமாகக் கொண்டது தர்மம்‌; தர்மத்திற்கு 
அச்யுதனே ஸ்வாமி.] என்றும்‌ சொல்லப்பட்ட து.
நாராயண பரம்‌ ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | 
நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” என்று வேதம்‌ 
நாராயணனையே- ப ப்ரஹ்மமாகவும்‌. பர் தத்வமாகவும்‌. 
பரஞ்சோதி யாகவும்‌ பரமாத்மாவாகவும்‌ ஸந்தேஹத்‌திகு இடமில்லாமல்‌ நிர்ணயித்தது.

ப்ரஹ்மமாகிற நாராயணனைப்‌ பற்றிய உபதேசத்தைப்‌’ பெறுவதற்குத்‌ தகுந்த யோக்பதையையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாக்குகின்றன.
பாஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல்‌
மநோ வாக் காயங்களாகிற
த்ரிகரணங்களின்‌’ சித்தியையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ கொடுக்கின்‌ றன.
மேலும்‌ அவைகள்‌ படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக ஆக்குகின்‌றன.
“* லரநபஷி இவாண்டஹ: ” என்கிறபடி
சிறகொடிந்த பக்ஷி போல்‌ சரீரம் யில்லாமல்‌
திண்டாடித்‌ திரியும்‌ ஜீவனுக்கு சரீரத்தைக்‌ கொடுப்பது
கர்ப்ப ஆதரத்தின்‌ நோக்கமாகும்‌.
° சரிரமாத்யம்‌ கலு தர்ம ஸாதநம்‌ ” [சரீர
மன்றோ முதலாவதான தர்ம ஸாதனம்‌.] என்கிறபடியே
சரீரமில்லாமல்‌ மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து.
வைஷ்ணவத்வம் உண்டாகவேண்டுமென்று பகவான்‌
விஷ்ணுவிடம்‌ விஜ்ஞாபனம்‌ செய்வதே
கர்ப்பதாந மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும்‌ பொருளாகும்‌.

அப்படி: உண்டான கர்ப்பம்‌ புருஷ ப்ரஜையாக வேண்டு
மென்பதற்காக, புருஷா ஸூக்த உத்தரா நுவாகத்தின்‌ முதல்‌ ருக்கும்‌.
“ ஸாபர்ணோ அஸி கருத்மாக்‌ ‘ என்று தொடங்கும்‌
வேதமந்திரங்களும்‌ பும்ஸவநத்தன் போது அநுஸந்திக்கப்‌
படுகின்றன.
வேத ஸ்வரூபனான கருடனையும்‌. கருட (வேத ) வாஹனனான நாராயணனையும்‌
வேதாந்த வித்தான வைஷணவ புருஷ ப்ரஜை உண்டாக வேண்டு மென்று பிரார்த்திப்பதே இதன்‌ ரஹஸ்யார்த்தம்‌.
விஷ்ணு பலியாகிற பாயஸ ப்ரதானத்தினாலும்‌. ஸீமந்த மந்த்ரங்களாலும்‌. `
கர்ப்பத்தைக்‌ கடாக்ஷித்துக்‌ காப்பாற்ற வேண்டு
மென்று எம்பெருமானும்‌,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியும் ஸ்துதிக்கப் படுகிறார்கள்‌.
இந்த ஸமயத்திலிருந்து ஜனனம்‌ வரையில்‌ ஸாத்விகனான வைஷ்ணவ ப்ரஜைக்கு
எம்பெருமான்‌ ஸேவை ஸாதிப்பதை
“கருக்‌ கோட்டியுள்‌ கிடந்தது கை தொழுதேன்‌ கண்டேன்‌
திருக்கோட்டி யெந்தை நிறம்‌ என்று பூதத்தாழ்வார்‌ பாடினார்‌.

ஜாயமாநந்து புருஷம்‌ யம்‌ மது,ஸூதந ; |
ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக:।|
பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன்‌ கடாக்ஷிக்‌
கிறானோ அவன்‌ ஸத்வ குணத்தை யுடையவனென்று அறியத்‌ தக்கவன்‌.
மோக்ஷத்தை அடைய வேண்டுமென்ற சிந்தனை
யுடையவன்‌ அவனே. ] என்றும்‌ சொல்லப்பட்டது.
குழந்தை பிறந்தவுடன்‌
“விஸ்வஸ்ய கேதுர்‌ பு,வநஸ்ய நாத ஆப்ருணாத்‌ ஜாயமாந ;”’ முதலிய மந்திரங்களாலும்‌.
“ஓம்‌ ஸத,ஸஸ்பதிமத்‌,பு,தம்‌ ப்ரியமிர்த்‌,ஸ்ய காம்யம்‌
ஸநிம்‌ மேதாமயாஸிஷம்‌ ஸ்வாஹா”‘ என்னும்‌ மந்திரத்தாலும்‌
ஞான மயனும்‌. ஜ்யோதிஸ்‌ ஸ்வ ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக்‌ கொடி போன்‌றவனாகவும்‌,
மால்‌ சமயத்திற்கோர்‌ மாலையிட்ட தீபமாகவுமாகி, பரம
புருஷனுடைய அன்புக்குப்‌ பாத்ரமாகி
நித்யஸுரிகளின்‌ கோஷ்டியில்‌ சேரக் கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது.
ரூபமற்றவனாயிருந்‌து. சரீரத்தைப்‌ பெற்று ரூபமடைக்த
ஜீவனை அடையாளம்‌ கண்டு பிடிப்பதற்காக நாம கரணம்‌
செய்யப்படுகிறது.

“ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: |
விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச தஸ்ய ஸர்வம்‌ ஸ ஏவஹி ||”

பரமை காந்தியானவன்‌. க்ராமம்‌. குலம்‌ முதலியவைகளால்‌
பெயரிடத்தக்கவனல்லன்‌ ;
விஷ்ணுவின்‌ பெயரினாலேயே
சொல்லத்தக்சுவன்‌;
வனுக்கு (உண்ணும்‌ சோறு பருகு
நீர்‌ தின்னும்‌ வெற்றிலை முதலிய) எல்லாம்‌ அப்பெருமானே யன்றோ.] என்று
பகவானுடைய பெயர்களை வைஷ்ணவனுக்கு வைக்க வேண்டுமென்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இப்படிப்‌ பெயர்‌ வைப்பது பாபம்‌ போவதற்கும்‌,
வைஷ்ணவத்வ ஸித்திக்குமேயாகும்‌.
“நாம மே தேஹி பாப்மகோ அபஹத்யை ”
எம்பெருமானுடைய ) பெயர்களை
என்னுடைய பாபங்கள்‌ போவதற்காகக்‌ கொடுப்பீராக. ]
என்று ருக்ரன்‌ பிரமனைக்‌ கேட்டதாகவும்‌,
அவன்‌ நாராயணனுடைய எட்டு பெயர்களைக்‌ கொடுத்ததாகவும்‌
வேதத்தில்‌ உத்கோஷிக்கப்பட்டது.
இப்படி நாம கரணம்‌ செய்வது தானும்‌ தன்னை அழைக்கும்‌ மாதா பிதாக்களும்‌, மற்றவர்களும்‌ உஜ்ஜீவிக்க ஹேதுவாகிறது .
நாராயண நாம ஸ்மரணம்‌, உச்சாரணம்‌. கேட்பது முதலியவையும்‌ உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ.
மாதவன்‌ மாதா கொடு உலகம்‌ புகாள்‌; நாரணன்‌ தமப்பன்‌ நரகம்‌ புகான்‌ என்று
நாம கரணத்தின்‌ மற்ற விசேக்ஷங்கள்‌ பெரியாழ்வார்‌
ப்ரபாவத்தில்‌ விஸ்தாரமாகக்‌ காணலாம்‌.
“அந்நம் ப்‌ரஹ்மேதி . வ்யஜாநாத்‌” எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந ப்ராணனமும்‌ பகவானை அடைவதற்கு ஒரு படியாகும்‌.
செளளம்‌ எனப்படும்‌ ஸம்ஸ்காரம்‌ மூன்றாவது வருஷத்தில்‌
செய்யப்படுகிறது;
ப்ரஹ்மம்‌ ப்ரவேசிப்பதும்‌. ஜீவன்‌ முக்தியடையும்‌ காலத்தில்‌ சிரஸ்ஸை பேதித்துக் கொண்டு
போவதுமான இடம்‌ ப்ரஹ்மரந்த்ரமெனப்படுகிறது,
ஊர்த்‌வ க,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்‌,ரத்தைப்‌
போன்ற ஊர்த்‌வ சிகை ப்ரஹ்மரந்த்த்தில்‌ வைக்கப்பட
வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது.
மற்ற சிகை களுக்கும்‌ ஸ்லோகங்கள் விதிக்கப்பட்டிருக்கின்‌றன.

------------

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

—————

அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2

அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2

அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4

அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4

அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2

—————-

அச்யுதன்‌, அநந்தன்‌ முதலிய திருநாமங்களின்‌ சப்தத்தின்‌ சீர்மையும்‌. 
அர்த்தத்தின்‌ பெருமையும்‌ விவரிக்கப்படுகின்‌ றன.

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாக அபிரமேயாத்மா சர்வ யோக விநிஸ் ஸ்ருத –11-

101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –

தேப்ய ப்ரபன்நேப்யோ நாபகத
அச்யுத

யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
நான் எப்போதும் என் பக்தர்களைக் கை விடுவது இல்லை
இதனால் அச்யுதன் எனப்படுகிறேன்

தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
யார் என்னை எங்கும் காண்கிறானோ அவன் பார்வையில் இருந்து நான் மறைவது இல்லை

நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-நண்பன் என்று வந்தவனை நான் கை விட மாட்டேன்

தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –தோஷமே இருந்தாலும் மித்ர வேஷம் பூண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்

ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம்
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் —மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்

————–

“அச்யுதா அநந்தா கோவிந்தா , நாம உச்சாரண பேஜாத்‌ | 
நமங்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம்‌ ஸத்யம்‌ வதாம்யஹம்‌ |!" 
அச்சுதன்‌. அநந்தன்‌. கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களை உச்சரிப்பதாகிற மருந்தினால்‌. 
எல்லா வியாதிகளும்‌ நாசமடைகின்‌றன. 
உண்மை உண்மை' என்று இரு கால்‌ ஸத்யம்‌ செய்து சொல்லுகிறேன்‌ நான்‌.என்று 
அச்யுதன்‌. அனந்தன்‌ , கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களின்‌ பெருமை 
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில்‌ உத்கோஷிக்கப்படுகிறது .

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸங்கீர்த்தன பல ஸ்ருதி

ஆத்யாத்மிகம்‌, ஆதி பவ்திகம்‌, ஆதிதைவிகம்‌ என்னும்‌ தாபங்களினால்‌ தபிக்குமவர்களும்‌.
பயந்தவர்களும்‌. கோரமான வியாதிகளினால்‌ துன்பமடைபவர்களும்‌
நாராயணன்‌ என்னும்‌ சப்தத்தை மட்டும்‌ கீர்த்தனம்‌ செய்வதாலேயே
எல்லா துக்கங்களும்‌ நீங்கப் பெற்று, மோக்ஷ ஸுகத்தையும்‌ அடைகிறார்கள்‌
என்று பாரதத்தில்‌ பேசப்பட்டது.

 “நாராயணேதி ஸாப்‌தம் அஸ்தி வாக் அஸ்தி வமவர்த்திநீ | 
ததராபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்‌ ॥'' 
நாராயணன்‌ என்னும்‌ சப்தமிருக்கிறது; 
வாயும்‌ வசத்திலிருக்கிறது. 
அப்படியும்‌ கோரமான நரகத்தில்‌ பலர்‌ விழுகின்றனர்‌ என்பது என்ன ஆச்சரியம்‌!
என்று புராணங்‌களில்‌ பேசப்பட்டது.

பொய்கையாழ்வாரும்‌ இதையே ` 
“நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று 
ஓவா துரைக்கும்‌ உரை யுண்டே-— மூவாத 
மாக் கதிக் கண்‌, செல்லும்‌ வகை யுண்டே என்னொருவர்‌ 
தீக் கதிக் கண்‌ செல்லும் திறம்‌.”' —என்று அருளிச்செய்தார்‌.

*“அவமேநாபி யந் நாம ஸங்கீர்த்திதே ஸர்வ பாதகை: | 
புமாந்‌ விமுச்யதே ஸத்‌ய: ஸிம்ஹத்ரஸ்தைர்‌ ம்ருகை,ரிவ |) 
யந் நாம கீர்த்தநம்‌ ப,க்த்யா விலாயநமநுத்தமம்‌ | 
மைத்ரேயாபமோஷபாபாநாம்‌ த, தூ௩காமிவ பாவக: |" (ஸ்ரீ விஷ்ணு பு. (6-8)] 
அந்த பகவானுடைய திருநாமம்‌ யதேச்சையாக கீர்த்‌திக்கப்பட்ட போதிலும்‌. 
ஒரு மனிதனுடைய பாபங்கள்‌ ஸிம்ஹத்தினால்‌ பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள்‌ 
விலகிப்‌ போவது போல்‌, விட்டோடிப் போகின்‌றன. 
மைத்ரேயரே! ஸுவர்ணம்‌ முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு போக்குவது போல்‌, 
பக்தியுடன்‌ அப் பெருமானுடைய திரு நாம ஸங்கீர்த்தனம்‌ செய்வது 
எல்லாப் பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ ஒப்பற்ற ஸாதனமாகும்‌.என்றும்‌.

“த்‌யாயாந்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞைஸ் : த்ரேதாயாம்‌ த்‌,வாபரே அர்ச்சயந்‌ |
யத் ஆப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம் ॥ [ஸ்ரீ வி. பு. (6-2-17)] 
பகவானை தியானிப்பதால்‌ க்ருத யுகத்திலும்‌, 
யஜ்ஞங்களைக்‌ கொண்டு ஆராதிப்பதால்‌ த்ரேதா யுகத்திலும்‌. 
அர்ச்சனை செய்வதால்‌ த்வாபர யுகத்திலும்‌ 
எதை அடைகிறானோ அதைக்‌ கலியுகத்தில்‌ 
கேசவனை ஸங்கீர்த்தனம்‌ செய்வதாலேயே அடையலாம்‌.] என்றும்‌

“கிம்‌. சித்ரம்‌ தத,க,ம்‌ ப்ரயாதி விலயம்‌ தத்ர அச்யுதே கீர்த்திதே'' 
அச்யுதனுடைய நாமம்‌ கீர்த்திக்கப்பட்டவுடன்‌ அவ்‌ விடத்திலேயே பாபங்கள்‌ நாசமடைகின்‌றன 
என்னுமிவ்‌ விஷயத்தில்‌ ஆச்சரியம்‌ என்ன? என்றும்‌ 
ஸ்ரீ விஷ்ணு புராணத்‌தில்‌ உரைக்கப்பட்டது

“அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத்‌ | 
தத் ஸர்வம்‌ விலயம்‌ யாதி தோயஸ்த,ம்‌ லவணம்‌ யத |” 
அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய திரு நாமத்தைச்‌ சொன்னானாகில்‌ 
அவனுடைய பாபமெல்லாம்‌ 'தண்ணீரினுள்ளிருக்கும்‌ உப்பைப் போல்‌ 
கரைந்துவிடுகின்றன.] என்றும்‌,


“முமாயாலம்‌ ஜலம்‌ வந்ஹேஸ்‌ தமஸோ பாஸ்கரோதவ: | ` 
ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாம ஸங்கீர்த்தகம்‌ ஹரே: ॥” 
நெருப்பை அணைப்பதற்கு நீரும்‌. இருட்டைப்‌ போக்கடிக்க ஸூர்யோதயமும்‌ போதுமானவை. 
(௮து போலவே ) கலி கோலாஹலத்தினால் உண்டாகும்‌ அஞ்ஞானங்களைப் போக்கடிப்பது 
ஹரியின்‌ திரு நாம ஸங்கீர்த்தனமே,] என்றும்‌.

“ஸங்கீர்த்தநதோ விமுச்யதே”
[எவனுடைய திரு நாம ஸங்கீர்‌த்தனத்தினால்‌ மோக்ஷம் அடையப் பெருகிறது ] என்றும்‌.

‘யந் நாம ஸங்கீர்த்த கதோ மஹாபயாத்‌,; விமோக்ஷமாப்நோதி ந ஸம்மாயம்‌ நர: ‘
எவனுடைய திருநாம ஸங்கீர்த்தனத்தால்‌ மனிதன்‌ மஹா பயத்தினின்‌றும்‌ ஸந்தேஹயில்லாமல்‌
விடுதலை யடைகிறானோ — என்‌றும்‌,

“ஹக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ர த்‌வயம்‌ | பத்த, பரிகரஸ்தேர மோஷ தாயகமம்‌ ப்ரதி” 
ஹரி என்னும் இவ்விரண்டெழுத்‌தும்‌ எவனால்‌ ஒருதடவை உச்சரிக்கப்பட்டதோ. 
அவன்‌ மோஷத்துக்குப்‌ போவதற்‌காகச்‌ செய்ய வேண்டியவைகளைச்‌ செய்து விட்டான்‌ ]என்றும்‌,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ்‌ ஸமுத்க்ராங்தேரந்தரம்‌ ! 
ப்ராப்நோதி வைஷ்ணவம்‌ ஸ்தாநம்‌ புநராவ்ருத்தி வர்ஜிதம்‌ |!” 
எவனுடைய திருநாமத்தை நினைத்த மனிதன்‌ இறந்த பின்பு: திரும்பி வருகை யற்றதான 
விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறானோ-
என்றும்‌ விஷ்ணு தர்மத்தில்‌ பலவிடங்களில்‌ பேசப்பட்டதன்றோ

“ஸர்வாந்‌ காமாந்‌ ப்ராப்நுவந்தே வியாலாந் த்ரைலோக்யே அஸ்மிந்‌ க்ருஷ்ண நாம அபிதாநாத்‌ ” [
இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்ட வஸ்‌து க்கள் எல்லாவற்றையும்‌ கிருஷ்ணனென்னும்‌
திருநாமத்தைச்‌ சொல்லு வதன்‌ மூலமாகவே அடைகிறார்கள்‌] என்று கோஷிக்கப்‌ பட்டது.

“ஸங்கீர்த்தயேஜ் ஜகந்நாதம்‌ வேதம்‌ வாபி ஸமீரயேத்‌”
ஜகந் நாதனான பெருமானை ஸங்கீர்த்தனம்‌ செய்ய்க் கடவன்‌;
அல்லது வேதத்தையாவது ஒதக் கடவன்‌ என்று
நாராயண நாம ஸங்கீர்த்தனம்‌ வேதாத்யனத்தைக் காட்டிலும்‌ மேல் என்று உணர்த்தப்பட்டது,

இவையெல்லாவற்றிற்கும்‌ மூலமான வேதத்திலும்‌ – த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ: ”
இவனைக்‌ கீர்த்திக்கும்‌ ஜனங்கள்‌ நிலையான மோஷஸ்தாநத்தை அடைகிறார்கள்‌
என்‌று உத் கோஷிக்‌ கப்பட்டது.

“கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ 
கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ 
என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌. 

“காவலிற்‌ புலனை வைத்துக்‌ கலி தன்னைக்‌ கடக்கப் பாய்ந்து 
நாவலிட்டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே 
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்‌ நாமங்கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! | என்றும்‌,

“பச்சை மா மலை போல்‌ மேனிப் பவளவாய்க்‌ கமலச் செங்கண்‌ 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்‌ கொழுந்தே! என்னும்‌ 
இச் சுவை தவிர மான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச் சுவை பெறினும்‌, வேண்டேன்‌ அரங்கமா நகருளானே!'' _என்றும்‌, 

“மொய்த்த வல்‌ வினையுள்‌ நின்று மூன்றெழுத்துடைய பேரால்‌ 
கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான்‌ "என்றும்‌, 

“நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க 
நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய நம்பி'” 
என்றும்‌ தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திரு நாம ஸங்கீர்த்‌தன 
ப்ரபவத்தைப்‌ பலகால்‌ அருளிச் செய்தருளினார்‌. 

திருமங்கையாழ்வாரும்‌ முதல்‌ திருமொழியில்‌ நரராயண 
திரு நாமப்ரபாவத்தைப்‌ பலபடியாகப்‌ பேசியருளினார்‌. 

” இத் திரு நாமந்தான்‌ ப்ரயோஜநாந்தர பரர்க்கு ப்ரயோஜனத்தைக்‌ கொடுக்கும்‌;
உபாயார்தர நிஷ்டர்க்குப்‌ பாவநமாயிருக்கும்‌;
ப்ரபந்நர்க்கு தேஹ யாத்ர சேஷேமாயிருக்கும்‌;
முத்துப்படும்‌ துறையில்‌ முழுகுவார்‌ முத்தைக்‌ கொடுத்துப்‌ பலங்கொள்ளுவர்கள்‌;
செழு முத்து வெண்ணெற் கெனச்‌ சென்று’ மாறுவர்களிறே.
விலையறியும்‌ செட்டிகள்‌ பக்கல்‌ புகுவார்களிறே
பெரு விலையனாம்‌ செருக்கரானார்‌ இத்தைப் பூண்டு அதுபவிப்பார்கள்‌;
அப்படியே ப்ர யோஜநார்‌தர பரர்க்கும்‌ உறுப் பாய்‌, ஸாதநாந்தர நிஷடரர்க்‌கும்‌ உறுப்பாய்‌,
ப்ரபநர்க்கு ஸ்வயம் ப்ரயோஜாமுமாயாய்த்து இத் திருநாமமிருப்பது ‘” என்றும்‌.
“ இப்படிச்‌ சேதனன்‌ தான்‌ மூலையடியே திரிந்தாலும்‌,
அவன்‌ தோஷங்களைப்‌ போக்கி,
மேல்‌ செல்லுகிற நன்மைகளைக்‌ கொடுக்கும்படி யாய்த்‌து
திரு நாமத்தினுடைய ப்ரபாவமிருப்பது ” என்றும்‌, “

பக்தியினுடைய துஷ்கரதையோபாதி ப்ரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விஸ்வாஸமும்‌
சிலர்க்குக்‌ கிட்டுகை அரிதாகையாலே இதில்‌ இழியக்‌ கூசினவர்களுக்கு
ஸர்வாதிகாரமான யாத்ருச்சிக பகவந் நாம ஸங்கீர்த்தனமே
சேதநருடைய பாபத்தைப்‌ போக்கி
ஸா க்ருத அனுகூலமாகக்‌ கர்ம யோகாதிகளிலே கூட்டுதல்‌.
ப்ரபத்தியிலே மூட்டுதல்‌, விரோதியைப்‌ போக்கி ப்ராப்யத்தைக்‌ கொடுக்கைக்குத்‌
தானே நிர்வாஹக மாதலாம்படியான வைபவத்தை உடைத்‌ தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது”
என்‌றும்‌ பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்‌ செய்தார்‌.

இவையெல்லாவற்றையும்‌ வேதாந்தாசார்யரர்ன பட்டரும்‌ ஸ்ரீ ஸஹஸ்ர நாமபாஷ்யத்திலே
பர பக்ஷ நிரசன பூர்வகமாகப்‌ பரக்க அருளிச் செய்தார்‌.

அபியுக்த அக்‌ரேஸரரான பிள்ளைலோகாசார்யரும்‌,
“ வாச்ய ப்ரபாவம்‌ போலன்று வாசக ப்ரபாவம்‌.
அவன்‌ தூரஸ்த்தனானாலும்‌ இது கிட்டி நின்று உதவும்‌.
த்‌ரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே.
சொல்லும்‌ க்ரமமொழியச்‌ சொன்னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெட நில்லாது.
இதுதான்‌ “குலந்தரும்‌’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்‌ கொடுக்கும்‌.
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களை ஆசைப்‌ பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌.
கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி,
அவற்றைத்‌ தலைக் கட்டிக்‌ கொடுக்கும்‌.
ப்ரபத்தியிலே இழிந்‌தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப்‌ பிறப்பித்துக்‌ கால ஷேபத்துக்கும்‌
போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌” என்று
முமுஷுப்படியில்‌ அருளிச் செய்தார்‌.

இனி. அமுதிலும்‌ இனியவையான அச்யுதாதி நாமங்களின்‌ அரும் பொருள்கள்‌ அறிவிக்கப்படுகின்‌ றன.

(அச்யுதன்‌) ** யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற படியே 
அடியவர்களை நழுவவிடாதவன்‌; 
எல்லாரையும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ரக்ஷிக்குமவன்‌ °

“யஸ்மாந் அச்யுத பூர்வோ அஹம் அச்யுதஸ்தேந கர்மணா”
அடியவர்களிடமிருந்து நழுவாமல் இருக்கறேனாகையால்‌ நான்‌ அச்சுதனெனப் படுகிறேன்‌
என்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.

( அச்யுதன்‌ )
ப்ரளய காலத்தில்‌ இவர்கள்‌ படும்‌ நோவு பொறுக்க மாட்டாமல்‌. தன்‌ வயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவன்‌;
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அசித் ஸமராய்க்‌ கிடக்குமிவர்‌களைக்‌ கண்டு இரங்கிக்‌
கரண களேபரங்களைக்‌ (சரீர இந்தரியங்களைக்‌) கொடுக்குமவன்‌.

“ஆதுமில்‌ காலத்தெந்தை அச்சுதன்‌ ” என்று இவ் வர்த்தத்தை ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தார்‌.
(அச்யுதன்‌ )
தமர்கள்‌ நெருப்பிலே விழுந்தாலும்‌. அவர்களைத்‌ தீங்கு வாராதபடி காப்பாற்றுமவன்‌.
“அறியும்‌ செந்தீயைத்‌ தழுவி அச்சுதன்‌ என்னும்‌ மெய்‌ வேவாள்‌” என்றார்‌ ஆழ்வார்‌.
(அச்யுதன்‌)
தன்னடியார்களை நமன்‌ தமர்‌ கையிலே காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌;

“அயர வாங்கும்‌ நமன்‌ தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்‌ தன்னை '' என்றார்‌ ஆழ்வார்‌. 
( அச்யுதன்‌ ) 
சேதனர்களைத்‌ தங்கள்‌ கையில்‌ காட்டிக் கொடாமல்‌ ரஷிப்பதற்காக அவர்‌களோடு ஓருவனாகத்‌ தோன்‌றுமவன்‌. 
“தேவகி தன்‌ வயிற்றில்‌ அத்தத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ தோன்றிய அச்சுதன்‌'' என்று பெரியாழ்வாரும்‌,

“'அச்யுத பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம் ஆவிர்ப்பூதம்‌ 
அச்சுதனாகிற ஸூர்யன்‌ தேவகியாகிற ப்ராத:ஸந்த்‌,யா காலத்தில்‌ தோன்றினான்‌. “ 
என்று அருளிச் செய்தனர்‌. 
(அச்யுதன்‌ ) 
தன்னிடம்‌ அன்புள்ளவரைக்‌ கை நழுவ விடாதவன்‌. 
“'அரிமுகன்‌ அச்சுதன்‌ கை மேல்‌ என்‌ கை வைத்து” என்று ஆண்டாள்‌ அருளிச் செய்தாள்‌. 
( ௮ச்யுதன்‌ ) 
“சங்கு ,சக்ர க,தாபாணே! த்‌வாரகா நிலய அச்யுத!'” 
சங்க சக்ர கதைகளைக்‌ கையில்‌ கொண்டவனே! 
த்வாரகா வாஸியே! 
அடியாரை நழுவ விடாத அச்சுதனே! என்றழைத்த த்ரெளபதிக்குத்
துகிலளித்ததும்‌ இத் திரு நாமமேயன்றோ. 
(அச்யுதன்‌) 
“மித்ர பாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந''
நண்பனென்‌ற வேஷத்துடன்‌ என்னை ,அடைந்தவனையும்‌ நான்‌ 
ஒரு போதும்‌ விடமாட்டேன்‌-- என்றும்‌,
“ஆநயைநம்‌ ஹரி ஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாப,யம்‌ மயா | 
விபீஷணோ வா -- யதி, வா ராவண: ஸ்வயம்‌ |'' 
வாநரத் தலைவனான ஸாக்ரீவனே! இவன்‌ வீபீஷணனாயிருந்‌தாலும்‌, 
ராவணன்‌ தானேயாயிருந்தாலும்‌ இவனுக்கு நான்‌ அபயமளித்து விட்டேன்‌. 
நீ இவனை அழைத்து வா | என்றும்‌, 
“ஸக்ருதேவ ப்ரபந்நாய த்வாஸ்மீதி ௪ யாசதே | 
அபயம்‌ ஸர்வ பூ,தேப்‌யோ யேதத்‌, வ்ரதம்‌ மம।॥'' 
ஓரு தடவை சரணமடைந்தவனுக்கும்‌ 'உன்னடியேன்‌ நான்‌' என்று யாசிப்பவனுக்கும்‌ 
எல்லா பூதங்களினின்‌ றும்‌ அபய மளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய விரதம்‌.என்று
அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட சக்கரவர்த்தித் திருமகனாய்‌ 
அவதரித்தவன்‌, 
'' அச்சுதன்‌ தன்னைத்‌ தயரதற்கு மகன்‌ தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்ச மாகவே '' 
என்‌று சடகோபன்‌ அருளினாரல்லவா.
(அச்யுதன்‌ ) 
பாநுநா ஆவிர்ப்பூதம்‌ '' 
"தேவகி தன்‌ வயிற்றில்‌ தோன்‌றிய அச்சுதன்‌” என்‌கிறபடியே 
சேதனர்களை நழுவ விடவொண்ணாமையாலே கிருஷ்ணனாய்‌ அவதரித்து, 
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மரணம்‌ வ்ரஜ । 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:।?' 
எல்லா மோக் ஷஸாதனங்களையும்‌ வாஸனையுடன்‌ விட்டு என்னையே சரணமடை. 
நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்‌களினின்றும்‌ விடுவிக்கறேன்‌; வருந்தாதே.] என்று அருளிச்செய்தவன்‌. 
(அச்யுதன்‌ ) 
ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாந அந்யதா அஜ்ஞாந விபரித அஜ்ஞாநங்களின்‌ 
கையில்‌ காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌. 
“நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌தா த்வத் ப்ரஸாதராந்‌ மயா 
அச்சுதனே! 
வீபரித ஜ்ஞானமாகிய மோஹம்‌ நசித்தது;
உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்பட்டது என்பதல்லவோ அர்ஜுனன்‌ வார்த்தை.
(அச்யுதன்‌) 
இவ்‌ வுலகிலிரு்து மோக்ஷமடைந்த முக்தரையும்‌. நித்ய ஸுரிகளையும்‌ -
'புணை கொடுக்கிலும்‌ போக வொட்டார்‌?' என்கிற படியே 
அங்கிருந்து நழுவ விடாதவன்‌. 
௮ச்சுதனை........ அநந்தன்‌ தன் மேல்‌ நண்ணி நன்குறைகின்றானை '' என்று 
நம்மாழ்வாரும்‌, 
“அச்சம்‌ நோயோடல்லல்‌ பல்‌ பிறப்பவாய மூப்பிவை 
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானி லேற்றுவான்‌ 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி ஆதியந்தமில்லவன்‌ 
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌'' என்று திருமழிசையாழ்வாரும்‌ 
“ அச்சுதா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடிகளும்‌ 
இவ் வர்‌த்தத்தை அநுஸந்தித்‌த்ருளினார்கள்‌. 
(அச்யுதன்‌) 
இத்தால்‌ அடைந்தவர்களுக்கு அல்லல்‌ வந்தபோது அவர்‌ களை விட்டகலும்‌ 
ருத்ராதிகளைக்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி ( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. 
இதனாலேயே யன்றோே “ஸிவம்‌ '' என்று சொன்ன நாராயணானுவாகமும்‌. 
இது ருத்ரனைக்‌ குறிக்கும்‌ பதமல்ல என்று தெளிவிப்பதற்காக “அச்யுதம்‌ என்று படித்தது. 
“பரிவின்றி வாணனைக்‌ காத்துமென்றன்று படையொடும்‌ வந்தெதிர்ந்த 
திரிபுரம்‌ செற்றவனும்‌ மகனும்‌ பின்னும்‌ அங்கியும்‌ போர் தொலைய 
பொரு சிறைப்‌ புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப்‌ 
பொற் சக்கரத்‌ தரியினை அச்சுதனைப்‌ பற்றி யான்‌ இறையேனும்‌ இடரிலனே,”' என்று 
வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ இவ்விஷயத்தை உணர்த்தினார்‌. 
(அச்யுதன்‌ ) 
அடியவர்களை நழுவ விடாதவன்‌” என்னுமிந்த மஹா குணத்தைத்‌ தெரிவிக்கும்‌ 
திருநாம மாகையாலே, 
இதை வேதமும்‌. 
வைதிகர்களும்‌, 
பக்தர்களும்‌ மிகவும்‌ ஆதரிப்பர்கள்‌. 
ஆழ்வார்கள்‌ இத்திருநாமத்தை அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்தோம்‌.

“யந்நாயம்‌ ப,க,வாம்‌ ப்ரஹ்மா ஜாநாதி பரமம்‌ | 
தந்ததா: ஸ்ம தவ ஸர்வ கதாச்யுத ॥" 
௮ச்சுதனே! ஸர்வ வ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை பகவானான பிரமனும்‌ அறியானோ. 
உலகிற்கெல்லாம்‌ இருப்‌பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌. 
என்று ப்ரயோஜனாந்தர பரரான தேவர்களும்‌,
“ ஸர்வேஸ்வர ஸர்வ பூ,தாத்மந்‌ ஸர்வ ஸர்வஆஸ்ரய யச்யுத ”' என்று 
அவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌,

“அவலோகந ததாநேக ப,யோ மாம்‌ பாலயாச்யுத'' என்று 
அநந்ய ப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும்‌. `
" த்வாரகா நிலயாச்யுத” என்‌று க்ருஷ்ணையும்‌. 
த்வத் ப்ரஸாதநமயாச்‌யுத” என்று நரனாகிய அர்ஜுனனும்‌.
“ஹத வீர்யோ ஹத விஷோஹம்‌ த்வயாச்யுத "" என்று காளியனும்‌ 
இத் திரு நாமத்தை அநுஸந்தித்தார்‌களன்‌றோ . 
இது வரையில்‌ அச்யுத சப்தத்துக்கு அடியவர்களை நழுவ விடாதவன்‌' என்னும்‌ பொருள்‌ விவரிக்கப்பட்டது. 
இனி நழுவாத ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவன்‌ என்னும்‌ அர்த்தம்‌ விளக்கப்படுகிறது,

(அச்யுதன்‌)
” ச்யவதே இத்‌ யச்யுத:’ என்றபடியே, ப்ரஹ்ம ருத்ராதிகளைப்‌ போலின்‌றியே ஒருபடியாலும்‌ அழிவில்லாதவனாயிருப்பவன்‌ .
“ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்‌,ரஹ்மேந்த்‌,ரவருணாதிஷு |
யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத்‌ தஸ்மாத்‌ ஸங்கீர்த்யஸே அச்யுத; ॥”
நழுவுதலென்னும்‌ மரணம்‌, பிறப்பு ஆகிய இவற்றுடன்‌ கூடிய பிரமன்‌ . இந்திரன்‌, வருணன்‌ முதலிய தேவர்கள்‌,
போல் இன்றிக்கே தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால்‌ நீ அச்யுதனெனப்படுகிறாய்‌–
என்று ஸாஸ்த்ரம்‌ சொல்லிற்று.
“ஜாயதே அஸ்தி வர்த்‌,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி இதி ஷட்‌,பாவ விகார ரஹிதத்வாத,ச்யுத: ”
பிறக்கிறான்‌. உயிர் வாழ்கிறான்‌, வளருகிறான்‌. பரிணாமமடைகிறான்‌, குறைவடைகிறான்‌ ,
நாசமடைகிறான்‌ என்னும்‌ ஆறு விகாரங்‌ களும் அற்றவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்‌-
என்று சங்கரர்‌ பாஷ்யம்‌ செய்தபடியே இங்கு விநாசத்தைச்‌ சொன்னது ஷட்‌பாவவிகாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌.

ஆழ்வார்களும்‌ இவ்வர்த்தத்தைப்‌ பலவிடங்களில்‌ அநுஸந்தித்‌ தருளினார்கள்‌.
“பச்சை மா மலை போல்‌ மேனி பவள வாய்‌ கமலச் செங் கண்‌ அச்சுதா” என்று தொண்டரடிப் பொடியாழ்‌வார்‌
அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனென்‌ பதை உணர்த்தினார்‌.
“` அச்சுதன்‌ அநந்த மூர்த்தி” என்று திருமழிசையாழ்வாரும்‌. “ ஆர்ந்த புகழச்சுதன்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
அழியாத புகழுடையவன்‌ என்று அச்யுத சப்தத்துக்கு வியாக்யானம் செய்தார்கள்‌.
சங்க,சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத” என்ற துரெளடதியும்‌
ஸர்வேங்வரன்‌ நித்யவிபூ,தியோடும்‌ லீலாவீபூ,தியோடும்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்புக்கு
என்‌றும்‌ அழிவில்லை என்று உணர்த்தினாள்‌.
(௮ச்யுதன்‌ )
ஸகல சேதநாசேதனங்களையும்‌ விடாமல்‌ வியாபித்தும்‌ தரித்தும்‌ நிற்பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
இத்தால்‌
ஸர்வ வ்யாபகத்வமும்‌,
ஸர்வ தராரகத்வமும்‌
சொல்லப்பட்டதாகிறது.
‘ அடியவர்‌ களை நழுவ விடாதவன்‌ ” என்னும்‌ பொருளைத்‌: தெரிவிக்கை யாலும்‌,
மற்றும்‌ பல அரும்பொருள்களையும்‌ உடைத்தாயிருக்‌ கையாலும்‌,
வேதத்தாலும்‌,
இதிஹாஸபுராணாதிகளாலும்‌,
ஆம்வார்களாலும்‌
மிகவும்‌ ஆதரிக்கப்படுகையாலும்‌ இக்திரு நாமம்‌ ஆசமனத்தின்‌ ஆரம்பத்தில்‌ அநுஸந்திக்கப்படுகிறது.

நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஸ்ரீ பெரிய வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால்‌
விவரிக்கப்‌ படாத சில அர்த்தங்கள்‌ இங்கு கொள்ளப் பட்டிருக்கின்‌றனவே;
அவை எப்படிப்‌ பொருந்தும்‌ என்று சிலர்‌ சங்கிக்கக்‌ கூடும்‌. அவர்களுக்குச்‌ சொல்லுகிறோம்‌:
ஆழ்வார்களின்‌ ஆழ்கடல் போன்‌ற அருளிச் செயல்களின்‌ அர்த்தங்களாகிய ரத்னங்களையெல்லாம்‌
நமக்கு ஆக்குவது முடியாத காரிய மாகையாலே, நம்மாசார்யர்கள்‌ அவைகளின்‌ ஸாரமான பொருளை
ஏடுபடுத்தியருளினார்கள்‌.
ஆகையால்‌ அவ்வாழ்வாராசாரியர்களுடைய ஸ்ரீஸூக்திசளுக்கு அவிருத்தமாயும்‌,
ப்ரகரணந்திற்குப்‌ பொருந்தியவையாயுமுள்ள பொருள்களையும்‌ கொள்வதில்‌ தவறில்லை.
ஆழ்வார்களின்‌ அமுதினுமினிய அருளிச் செயல்களின்‌ ஆழ்பொருன்களையெல்லாம்‌ ஆரே அள விட்டு அறியவல்லார்‌? –

————————————

இனி அநந்தன்‌” என்னும்‌ நாமத்தின்‌ அரும் பொருள்‌ அறிவிக்கப்படுகிறது. 
இத் திரு நாமமும்‌ அச்யுத நாமத்தைப்‌ போல்‌ அரு மறையால்‌ ஆதரிக்கப்பட்டது. 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி” என்று அச்யுத நாமத்திற்கு அர்த்த மருளிய திருமழிசை யாழ்வார்‌ 
* ஆதியந்தமில்லவன்‌ ” என்று அநந்த நாமத்தை அடுத்த படியாக விவரித்தருளினார்‌. 
நம்மாழ்வரும்‌ “அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று
இத் திருநாமங்‌கனைச்‌ சேர்த்துப்‌ படித்தார்‌. 
'அச்யுதன்‌” என்னும்‌ திருநாமம்‌ " அடியவர்களை நழுவ விடாதவன்‌ ' என்று உரைக்கிறது, 
தமர்களைக்‌ கைவிடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத்‌தும்‌,
அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும்‌ 
எல்லாவற்றையும்‌ வியாபித்‌தும்‌ விளங்குமவன்‌ என்பதை அநந்த நாமம்‌ அறிவிக்கின்‌றது. 
“கந்தர்வ அப்ஸரஸஸ்‌ ஸித்‌தாஸ் : கிங்கரோரக,சாரணா: | 
நரந்தம்‌ குணாநாம்‌ க,ச்ச;ந்தித அநந்தோயம் அவ்யய: |!” (2-6-24) 
கந்தர்வர்கள்‌, அப்ஸரஸ்ஸூகள்‌, ஸித்தர்கள்‌. கின்னரர்கள்‌, நாகர்கள்‌, சாரணர்கள்‌
ஆக எல்லாரும்‌ இவனுடைய குணங்களை முடிவு காண்பதில்லை. 
ஆகையால்‌ இவன்‌ அநந்தனெனப்படுகிறான்‌ என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌
அநந்த சப்தார்த்மும்‌ சொல்லப்பட்டது. 
இத்தால்‌ குணங்‌களாலும்‌. சரீரங்களாலும்‌, ஐஸ்வர்யத்தாலும்‌ அளவற்றவன்‌
அநந்தன்‌ எனப்பட்டதாகிறது.

“நமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே ஸஹஸ்ர பாத;அக்ஷி மிரோருபாஹவே | 
ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே ஸஹஸ்ர கோமீயுக,தாரிணே நம: |!" 
கணக்கற்ற சரீரங்களை உடையவனும்‌. அளவற்ற பாதங்‌ களையும்‌. கண்களையும்‌.
தலைகளையும்‌. தொடைகளையும்‌.கைகளையும்‌ உடையவனும்‌,
கணக்கற்ற திரு நாமங்களை உடையவனும்‌ நித்ய புருஷனும்‌. அளவு கடந்த யுகங்களை தரிப்பவனுமான 
அநந்தனுக்கு நமஸ்காரம்‌--என்று பிரமனால்‌ அநந்தனென்‌னும்‌ திருநாமத்தின்‌ அர்த்கம்‌ அநு ஸந்திக்கப்பட்ட து, 
( அநந்தன்‌ ) காலத்தாலும்‌. தேசத்தாலும்‌, வஸ்துவாலும்‌ அளவு பட்டிராத ஸ்வரூபத்தை உடையவன்‌. 
ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம "` 
ப்ரஹ்மம்‌ விகாரமற்றதாகவும்‌, ஞான ஸ்வரூபமாகவும்‌. -
கால தேச வஸ்து ஆகிய மூன்று விதமான அளவுமற்றதாக வும்‌ உள்ளது] 
' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத்‌, ப்‌,ரஹ்ம'' 
ப்ரஹ்மமென்று யாதொன்றுள்ளதோ அதற்கு முடிவில்லை ' 
அநந்தம்‌....ஸமுத்‌,ரேந்தம்‌ 
'' பாற்கடலில்‌ தயிலும்‌ அநந்தன்‌ |. என்று வேதங்களிலும்‌. “ 
நாஸ்த்‌- யந்தேச விஸ்தரஸ்ய மே'' என்னுடைய ஐஸ்வர்யத்துக்கு அளவில்லை.-என்று கீதையிலும்‌, 
“ஆதியந்த மில்லவன்‌'' 
“அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வார்களாலும்‌ சொல்லப்‌ பட்டவை 
இவ் விஷயத்தில்‌ ப்ரமாணங்கள்‌.
----------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

———-

அனந்த (2)
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
அனந்தம் (1)
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1
அனந்தன் (5)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் – நாலாயி:670/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
அனந்தன்-தன் (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
அனந்தன்-பாலும் (1)
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
அனந்தனை (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

——————–

அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்தம்‌ விவரிக்கப்படுகிறது. 
“அநந்தன்‌' என்று புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது. 
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக. 
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ 
ஒரு நீராகக் கலந்து  பரிமாறுமவன்‌' என்னும்‌ பொருளை யுடைய 
கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது. 
“அச்சுதா! அமரரேறே!' என்று அச்யுத அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த 
தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌. 
“ஆயர்தம்‌ கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை 
அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ ) 
“ காவ: விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே, 
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான 
பசுக்களை அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,
“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:। 
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||." 
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌. 
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌. 
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌--
என்று ஹரிவம்‌சத்தில்‌ கோவர்த்தனதாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ. 
கோவிந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌ 
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ " என்றும்‌ 
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி. 
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌. 
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே 
தனக்கு ப்ராண பரமாகக்‌ கொண்டிருந்தாள்‌. 
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌ 
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றும்‌, 
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே 
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌'' என்‌றும்‌, 
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா'' என்றும்‌. 
சொல்லும்படி யன்‌றோ 
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌. 
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போதும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ '' என்று 
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது. 
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று 
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

“கேளவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ | 
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* 
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌று த்ரெளபதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த 
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று-- அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌ 
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே. 
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னி யுரைக்குங்கால்‌ பாரதமாம்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌ 
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
'மஹா வராஹோ கோவிந்த,: "என்று ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது . 
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ | 
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ' 
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ 
தேடி யடைந்கதேனாகையால்‌.  தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது. 
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து. 
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! 
நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌ 
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌ 
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ 
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ 
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே' 
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌ 
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!'' —என்‌றும்‌, 
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌ 
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌றியாம்‌ 
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ 
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌ 
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“'கெளரேவைஷா ததா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ | 
கோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌ 
கோ சப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிறது. 
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ 
சொல்லப்படுகிறீர்‌.  என்கிற நிர்வசன த்தின்‌ படியே 
ஸர்வ சப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌. 
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ'' என்று 
திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அனுஸந்தித்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ சப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு 
வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. 
அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌ நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ '' என்று 
அச்சுதன்‌. அநந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -'
வேத கதனே ”' என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌ 
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌ 
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌
(கோவிந்தன்‌) 
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
நம்மாழ்வாரும்‌
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற 
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே '' என்று இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌. 
“நாராயண பரோ ஜ்யோதி:'' என்றும்‌. 
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய '' என்றும்‌. 
ˆ" ஆதித்ய வர்ணம்‌ '' என்றும்‌, 
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: | 
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமிதம்‌ ॥” 
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை; 
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை. 
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ? 
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌றன. 
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌ 
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா | 
யதி, ஸத்‌ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥” 
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. 
அவ்வொளி அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று 
கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ. 

-------------------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் 
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

-----------

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் - நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: