Archive for May, 2023

பல சதுர் விதமான அர்த்த விசேஷங்கள் —

May 30, 2023

சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப

பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

————

அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த

——–

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

——————————————-

ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –

ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.

‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.

ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.

தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .

ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.

நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

———————-

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

———————————————————-

இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது

கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன

இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –

அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்

பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்

விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

———-

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –

இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்

கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர்வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி

த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

———————

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா

சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்

வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

—————–

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்

ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ 

சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்

தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்

புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்

ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

————

139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்

140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்

———

தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
ராமர்-சீதை
லெட்சுமணர்-ஊர்மிளை
பரதர் – மாண்டவி
சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
ருக் – பைலர்
யஜூர் – ஜைமினி
சாம – வைசம்பாயன
அதர்வண – சுமந்து

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
பிரம்மசர்யம் (மாணவன்)
கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
சந்யாசம் (துறவு)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
வெண்பா (4 வரிகள் உடையது),
இரண்டு வரிகளை உடையது குறள்.

பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
சநகர்
சநாதனர்
சநந்தனர்
சனத் குமாரர்

நான்கு வகைப் பூக்கள் யாவை
கோட்டுப் பூ, கொடிப் பூ,
நிலப் பூ, நீர்ப் பூ

க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
கங்கை
கோவிந்தன்
கீதா
காயத்ரி

கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
ஹரித்வார்
அலகாபாத் (பிரயாகை திரிவேணி
த்ரிவேணி
சங்கமம்)
நாசிக்
உஜ்ஜையினி.

ரத, கஜ, துரக, பதாதி
(தேர், யானை, குதிரை,
காலாட் படைகள்)

உபநிஷத்தில் கூறப்படும் நாலு
மஹா வாக்யங்கள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
தத்வம் அஸி
ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
அயமாத்ம ப்ரஹ்ம

———————–———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -பாசுர அவதாரிகை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

May 29, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –

ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார்.
தமது நெஞ்சானது தம்மை விட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு;
அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

————-

நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்

கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

நற்பூவைப் பூவின்ற வண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்”
என்று கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானைத் துதித்துக் கவி பாடுவதாகத் தொடங்கின ஆழ்வார்
“இப்போது நாம் எடுத்துக் கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்;

எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்;
ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ?
எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ?
வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக் கடவோம்!
ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து,
மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது;
எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்?
சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!;

கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக் கட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
“பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?”
என்று பலரும் இழிவாக நினைக்க வன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி
அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

——————–

இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று

(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் -ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )

சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-,
“ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதி தான்’ என்று கொண்டீரா?
அல்லது புகழத் தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்;

அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்;
எம்பெருமானே! இது யுத்தம், இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமை யில்லை;
அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுக்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை;

ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால்,
உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்ற வேணுமிறே இந்த வீடு பற்றுக்கள் என்னால் செய்யப் போகாது.
(உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

—————-

நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –

முதற் பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி,
இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின் வாங்கி,
மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார்.

அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின் வாங்க நினைத்தாலுங்கூட
ஏதேனுமொருபடியாலே
அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே!
ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்?
எம்பெருமானுடைய சில திருக் குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்ல காலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

————

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

(இல்லை என்று அறிந்தவன் இல்லை யாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )

எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதை யற்றவன் என்று
பின் வாங்கப் பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே;
இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு?
தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரே யாயிற்று! என்று
எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

————

நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்

(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப் பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ் வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்த விட்டுக் கொண்டோம்;
இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்;
அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்;
நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய
ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றி யிருப்பதாகத் தெரிந்துகொண்ட
ஆழ்வார் அப் பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; –

பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக் கூடும்.
சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்;
சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலு கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய்.
இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய்.

இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திரு வுள்ளம் பற்றியிருப்பது எது?
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப் பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லி விட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

———-

அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ஸ்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )

கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப் பாட்டில்.
ஆழ்வீர்! இதோ என்னுடைய கரு மா முறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறானென்றும்
திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்;
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

———

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

எம்பெருமான் நெஞ்சுக்கு மாத்திரம் விஷயமானானே யன்றி,
கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது
விஷயமாகவில்லை என்றார் கீழ்ப் பாட்டில்.
அப்படி கண்ணால் காணப் பெறாதிருக்கச் செய்தேயும்,
கண்ணால் கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்?
சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார்.

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

———-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே
அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்பு வஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார்
‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று
பலகாலும் சொல்லுவதில் என்ன ப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம் பண்ணுகிறதில்லை;
ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்தி விட வேண்டியது- எனக் கருதி
அக் கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார்.

அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்;
க்ஷண காலமும் இப்படி யிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி
‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்:
திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-

———-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )

எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக் கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து
‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவை ஸாதிப்பிக்க வில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று
திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதா அநு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில்.

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

—————-

அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –

அநந்ய ப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வது தான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக் கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்க வொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டி விட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பர வசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய் பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்க வேணுமென்று ஆராய்ந்தார்;

”***- தோ விநா த்ருணாக்ரமபி ***- (அவ் வெம்பெருமானை யொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவே மாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப் பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறக்கப் பண்ணா நின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

————

கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்

(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )

கீழ் பத்தாம் பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன் நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின் வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்ட காலம்!;
ஏகஸ்மிந்நப்யதி க்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனை யில்லாமல் ஒரு க்ஷண காலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்த வந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக் கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே யன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யா விடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சு தான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்-

நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று
அதாவது-
திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக் கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப் பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.

யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-

நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி
 என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-

பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்

நெஞ்சு விநேதயமாக நின்று  ஸ்வாமி என்ன நியமனம் என்ன-
உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

—————-

அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)

கீழ்ப் பாட்டில் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்று கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்ன வென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டி யருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

————

காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –

(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )

கீழ்ப் பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம் பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடி யன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூதனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

———–

(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )

கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-

——-

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப் பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக் குணங்களை ஓதத் தொடங்குகிறார்;
ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் இது.

சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

———–

அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது

(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )

தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகி விட்டால்
லீலா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-

————-

உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது

(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )

ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்க மாட்டான் என்றது கீழ்ப் பாட்டில்;
அவ்வளவேயன்று;
ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–

————–

கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )

பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

———–

நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி

(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )

ஸ்வத ஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப் படும்.
எம்பெருமானை நாம் சென்று பற்றுகிற பற்று ஸ்வத ஸ்வீகார மெனப்படும்.
அவன் தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகத ஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான் தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளை யுலகாசிரியரும்,

கீழ்ப் பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன் தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கை யன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப் பாட்டால் வெளியிடுகிறார்.

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

—————

ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)

(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-
எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-
நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் –
திருவடிகளை என்  நெஞ்சினுள் அமைத்தான்-என்னவுமாம்

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

———-

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்.
அவயவியான வ்யக்தியை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில்
வந்து சேர்ந்தமையைக் கூறினபடி யாய்த்து.
அதை இப்பாட்டில் “மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்ய வாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

—————

இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )

(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )

எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்;
சில ஸமயங்களில் உதாஸீநனைப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன்.
அவன் எப்படி யிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது;
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விஸ்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

—————

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க,
அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலை நாட்டிப் பேசுகிறாரிதில்.

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

————

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸர்வ ரக்ஷகனாயிருக்கவும்
இதனைப் பலர் தெரிந்து கொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார்,
இவ் வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்;
கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாந கடாக்ஷமில்லாதார் பலருளராகையால்
அவர்கள் திருந்தி வரக் கண்டிலர்;
சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி
உபதேசித்த விடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்?
அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ?
நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்;
பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்ப துர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்;
யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில்,
ஸம்ஸாரிகள் மேல் வெறுப்புத் தோற்ற அருளிச் செய்கிறார்.

இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப் போல் தான் கெட்டுப் போகாமல்
எம்பெருமானை யடி பணிந்து வாழப் பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில்
வழிப் போக்கர்களின் கைப் பொருள்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறி கொடுத்து நிற்க,
ஒன்றும் பறி கொடாமல் தப்பிப்போன வொருவன் “தெய்வாவாதீனமாய் நாம் தப்பப் பெற்றோமே!” என்று உகப்பது போல,
ஆழ்வாரும், எல்லாரையும் மதி கெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே
முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

———

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

கீழ்ப் பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார்;
ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமான தல்ல வென்றும்
தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி
ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்ல வேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி,
கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

————

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

கீழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத்தைத்
திருச் செவி சாத்தின எம்பெருமான் “இவ் விபூதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுண்டாவதே!;
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு காண்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன ஸாமானாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பர ஞானம்
முனியே நான் முகனே-பரம பக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பர பக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

கீழ்ப்பாட்டில் உலகளந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே.
ஓங்கி யுலகளந்த உத்தமனுடைய அந்த விலக்ஷணமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணு மென்று ஆழ்வார்க்கு ஆசை கிளர்ந்தது.
கிளர்ந்தாலும் பரம பக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்க மாட்டானாகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது
விகஸிக்கக் கூடியதான நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவதான பரம்பொருள் நமது புறக்கண்ணாகிய
மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில் தாமே ஸமாதானப்படுகிறார் போலும்.

பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரஸ்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-
தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –

கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் –
மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-

கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும்
உட் கண்ணாலேயே
 -ஆச்சார்ய ஹிருதயம்-
அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக் கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-
அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும்
திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம்  பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-
திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது என்பர் பெரியோர்-அகக் கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

———-

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு
எம்பெருமானது திருச் செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திரு வாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப் பட்டிருக்கலாமோ?
‘நான் காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் *
உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளே யொழிய,
*உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ் வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ?
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்ய குணத்தை அநுஸநதித்தார்;
அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்க முடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே,
அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத் குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை;
அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?;
ஒரு மூலையில் சுருங்கிக் கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக் கூடும்;
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்க வேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

———-

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி –நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

கீழ்ப்பாடடில்
வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றோ அழகு” என்று பாவங்களை யெல்லாம் துரத்தித் தள்ளுபடியானார்.
“நெடுநாளாகப் பாவங்களின் கீழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்ஙனே உண்டாயிற்று?’ என்று யாராவது கேட்கக் கூடுமே;
அவர்களுக்கு ஸமாதாநமாம்படி இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

வல்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்;
அஃது என்னென்னில்;
எம்பெருமானுக்குத் திருவடி நிழல் போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானோம்.
ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் -என்றபடி-
திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

———-

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –

(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )

கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே;
உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின் வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்;
‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும் போது எம்பெருமான் அருமைப் படுகிறான்,
எம்பெருமான் எளியனாம் போது நெஞ்சு பின் வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார்.
பாயை விரித்து விட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்;
மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப் போவானாம்.
பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம்.
அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப் போகிறது போலும்.
இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற
யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீந ஸ்வரப் பாசுரம் பேசுகிறபடி காண்மின்.

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

———

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

நைச்சியம் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது போலேயிருக்கிறது இப்பாட்டு.
நெஞ்சு என்றும் ஆத்மா என்றும் பர்யாயம் போலோ கொள்ளுங்கள்.
ஜ்ஞாநாநந்த மனஸ்த்வாத்மா” என்று ஞானமும் ஆந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதைப் பிடித்துக்கொண்டு அருளிச் செய்கிற பாசுரம் இது.
இந்த நெஞ்சு அசேதநப் பொருளல்ல; சேதநப் பொருள்; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள்.
இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை.
எப்போது அறிவுடையதாயிற்றோ அப்போதே எம் பெருமானைப் பற்றினதாகவே ஆய்விட்டது.
ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கையாலே ஞானமாகில்
பகவத் விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத் விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும்?
அது கிடக்கட்டும் ஞானம் போலே ஆநந்தமும் ஒரு தன்மையாக இருக்கிறது இதற்கு.
ஆநந்தமுண்டாகில் பகவத் விஷயத்தைப் பற்றாமல் எப்படி ஆநந்தம் ஸித்திக்கும்? ஸித்திக்க மாட்டாது.
ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுக மாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.

ஆழ்வார் ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

—————

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப் பாட்டில் அருளிச் செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

—————

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான
சரிதைகளைக் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்ய வேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறாரிதில்

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

————-

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

சில சமயங்களில் எம்பெருமான் ஸுலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் துர்லபன் என்று தோற்றும்;
மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸுலபனுமல்வன், துர்லபனுமல்லன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும்.
பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றம்.
ஆக இப்படியெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப்பெருமானுக்கு ஸௌலப்யமொன்றே
அஸாதரணமான வடிவு என்று தெளிந்த ஞானத்தைப் பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால்
அவன் நமக்கு ஸகலவித பந்துவமாய் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறார்.

இவனாம் -என்ற இடத்தில் சந்தேக நிவ்ருதியை சொல்லி சொல்லி அருளுகிறார் -அவன் சுலபனே -திட விசுவாசம்-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

———–

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்

(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ பூதராக அற்றுத் தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப் பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் –முந்துற்ற நெஞ்சு அன்றோ )

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது.
அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி
“இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ;
இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

————

தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்

(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )

அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்.
அவனுடைய ஸௌலப்பத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமே;
‘வெண்ணெய் திருடினான், இடைச்சி கையில் அகப்பட்டுக் கொண்டான். தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பிணிப்புண்டான்.
அடி யுண்டு அழுது ஏங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவது தானே ஸௌலப்ய குணத்தை வாழ்த்துகையாவது;
இவை பேசினால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்றோ; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இறாய்க்க அதனை ஸமாதாகப்படுத்துகிறார் இதில்.

பரத்வம் அனுசந்திக்க -அந்த பெரியவன் எங்கே
நான் நீசன் -நைச்யம் பண்ணி விலகப் பார்க்க
சௌலப்யம் அனுசந்திக்க அபசாரம் ஆகுமே என்று இறாய்க்க
எம்பெருமான் பற்றிய பேச்சு ஏதாகிலும்
ஏத்துதலோ ஏசுதலோ ஏதாயினும் ஆயிடுக
எம்பெருமான் விஷயம் எனபது ஒன்றே போதும் பேசாய் என்கிறார்

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

———-

பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்ய வில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –

(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )

ஈன் துழாய் மாயனையே ஏசியே யாயினும் பேசியே போக்காய் பிழை” என்று
பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

———

எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில். நெஞ்சே! இப்படிப்பட்டதொரு வாய்ப்பு நமக்கு வேறொன்றில்லை;
இவ்வுலகத்திலுள்ளாரெல்லாரும் தங்கள் தங்கள் வாய் வந்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க,
நாம் மாத்திரம் அப்படியிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ்விருள் தருமாஞாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல;
ஆயினும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர் ” என்னுமா போலே தெய்வ யோகத்தாலே நமக்கு இப் பெரும் பாக்கியம் வாய்த்தது.
ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நாவின் எச்சில் தன்மையையும் நோக்கும் போது
வாக்குத் தூய்மையிலாயினாலே மாதவா வுன்னை வாய்க்கொள்ளமாட்டேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றாற்போலே
இறாய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சியம் பாவித்து பகவத் குணங்களைப் பேசாதிருப்பதானது சாஸ்த்ரங்களில்
ப்ரஸித்தமான நரகங்களிற் காட்டில் மிகக் கொடிய நரகமேயாம் என்று கருதவேண்டும்.
அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப் பாராமல் அவனுடைய சரிதைகளில் ஏதேனுமொன்றைச் சொல்லிக் கொண்டே யிருக்கப்பார்;
கஞ்சனாலேவப் பட்டுக் கண்ணபிரானைக் கொல்லக் கருதி முலையில் விஷந்தடவிக் கொண்டு பேய் வேஷத்தை மறைத்துத்
தாய் வேஷத்தோடு வந்து முலை கொடுத்த பூதனையைப் பாலுண்கிற பாவனையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்;
அவளுயிரை முடித்தாற்போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு
அவ்வரலாற்றைச் சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

—————

பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –

(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
பரம ஸூகுமாரமான திருக் கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் –
என்று மூன்று நிர்வாகங்கள்)

பூதனையை முடித்த விஷயத்தைக் கீழ்ப் பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார்.
முரட்டு மல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸூகுமாரமான திருக் கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில் கண் இருந்த படுபாவி ஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

———

ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –

(கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ
இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே
முன் படைத்தான் –பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மஹா பிரளயம் -அவாந்தர பிரளயம் இல்லை )

கீழ்ப் பாட்டில் இப் பார் என்ற இவ் வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்வ ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ தாமஸப் பிராணிகள் விஞ்சி யிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.

வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

————–

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது

ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி
மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார்.
ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடி பணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-

———–

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும்
பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷ்டிதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும் ஸகல சரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேஸ்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க,
அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோ குணமும் தமோ குணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்த வில்லையே யாகிலும்,
‘நம்மை ஈஸ்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கை கால் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இது வரையில் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழி போகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

————

நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்

(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன்
 என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )

————-

கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –

(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே

(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

—–

நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –

(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )

கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமே யன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ர புருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக் கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்க வில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க;
அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

———-

எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான் யத்ர கச்சதி –
அச்சுவை பெறினும் வேண்டேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

———

அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது

(இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதில் அனுபவம் சொல்கிறது
யுக்த க்ருத்யம் ரஹஸ்ய த்ரய சாரத்தில் தேசிகர் )

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

————–

உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்

அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே

(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
வீடு திருத்தவும் கால விளம்பம் வேண்டுமே -ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )

எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்ட போதெல்லாம் தாம்
பாவநா ப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிற படியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே
(அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமே யன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்க மாட்டாவே;

“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப் பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதா ஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,

‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப் படுத்தி வருகிறானே யொழிய ஒரு காலும் அவன் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல் நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-

—————–

(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )

சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-

———

(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத் தவிர வாழ்த்தாது போல் இங்கும் )

பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –

மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

———–

(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )

என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –

கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;

அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

————

உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –

கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதிபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

————

(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )

எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

————

(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )

எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –

எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

———–

இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்

அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;

அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–

கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–

வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

———

இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )

கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;

அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.

நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;

உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.

ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

————

(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே –தத் அபிஷந்தி விராத மாத்ராத்
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.

கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;

திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப் பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார்

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

————-

(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )

வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.

நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விஸ்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் –என்றராயிற்று.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–

———–

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிற போது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
நலத்தால் மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ர மயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமே யன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-தூவினது போலே-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

———–

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

————

(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத் திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேய வாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேய வாக்கியம்;
பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமான வாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்து முடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத் தள்ளத் தள்ள மேலே நடந்து கொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்து விடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்ல முடியாமல் அந்தக் கடலிலேயே வந்து விழுந்திடுமே; அது போலே யிரா நின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல் தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராய வேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்ற பதத்தோடு ‘டி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-

கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

——————

(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்ய ஸஜாதீயனாய்ப் பிறந்து “உங்களைப் போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

—————-

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப் பாசுரம் –கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள் செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

————-

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூதர்சன அம்சம் தானே )

நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

———-

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாத காரியம்; எம் பெருமானுக்கோ அது பரம ஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

————

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரியவராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

———–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்தே -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன்
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக் குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

———-

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

————

(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –

எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

———-

(சாம்யாவாதி மூவரும் சமம் என்பர்
ஏகத்துவ வாதி -ஐக்ய வாதி -உப லக்ஷணம் முறையில் இத்தையும் சொன்னதாக கொள்ள வேண்டும்
மூவருமே ப்ரஹ்மம் இல்லை நாலாவது உத்தீர்ண வாதி
பரா அஸ்ய சக்தி விவிதையா ஸ்ரூயதே –இவனது சக்தி அளவிடமுடியாதே -என்பதை
பராசக்தி வேறே ப்ரஹ்மம் என்று எல்லாம் சொல்வார்கள் உண்டே
மூவரையும் நிரஸித்து
தனது சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
உந்தித் தாமரையே இத்தைக் காட்டுமே
காரணம் வேறே கார்யம் வேறே )

(பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதிமுகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–2-)

கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்

கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

———–

இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது

கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலி கண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போது மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

———-

சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )

கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

————

(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ
நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )

உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

———–

ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –

கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.

உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ஸ்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-

ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

————-

அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –

எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

———-

(முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )

கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –

ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக் கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப் பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப் பிறவியே நச்சுத் தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமே யன்றி இன்பமாகத் தலைக் கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்ப மயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால் தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

———-

எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப் போக்கித்
தொண்டர் குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாள குலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

———–

(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்
அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )

ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

———

வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினது போலத் தாமும் கதறுகின்றார்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

————

நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்கிறார்

கீழ்க்கழிந்த காலம் போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

——–

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

————

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப் பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-

இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

———–

கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள்

உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்க வேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

————-

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்தது போலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீஅதர்வண வேதம்

May 27, 2023

ஸ்ரீ பெரிய திருவந்தாதி-ஸ்ரீ அதர்வண வேத சாரமாகும் –

(ஸ்ரீ அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –

தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்

ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185

பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும்.
இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.
இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீய சக்திகளையும் எதிரிகளையும் வென்று
உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.
சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

அதர்வண வேதத்தின்   கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன.

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில்  ஸூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

முதல் துதி ஸூரியனைப் போற்றுகிறது. இதில் ஸூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays)  போன்றவர்களாக இருக்கலாம் . இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .

கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS  — என்ற கதையை சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன் பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.

சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL  செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு  வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர் தம் துணிபு. ஆனால் நாம்,  அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.

பகவத் கீதையின்   விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்,  அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்போவதை அறிந்து,  எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை   உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச  குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப்      பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின்  பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின்  பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.

அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.

நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .

எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.
சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.
வேத விற்பன்னர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று அகத்தியர் சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் அரிதானவை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்ற இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே நம் முன்னோர்களின் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
1-ம் காண்டம்:-
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்
வெற்றிக்கான மந்திரங்கள்
எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்
நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்
தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்
வரங்களைப் பெறும் மந்திரங்கள்
தர்மம் தொடர்பான மந்திரங்கள்
இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட
35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.
—-
2-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்
ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்
இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
————
3-ம் காண்டம்:-
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.
எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்
தேச ஒற்றுமைக்கான மந்திரம்
பட்டாபிஷேக மந்திரம்
பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
——-
4-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.
இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்
எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்
பலத்தை அதிகரிக்கும் மந்திரம்
தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்
சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்
மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்
புழுக்களை அகற்றும் மந்திரங்கள்
சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
————-
5-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.
வெற்றிக்கான மந்திரங்கள்
பிரம்மன் பற்றிய மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்
ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்
டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்
ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,
பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி
பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை
ஆகியனவும் உள்ளன.
போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.
————
6-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.
அமைதிக்கான மந்திரங்கள்
வளையல்கள் பற்றிய மந்திரங்கள்
‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்
சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்
————-
7-ம் காண்டம்:-
இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.
நீண்ட ஆயுளைத் தரும் மந்திரங்கள்
தாய் நாடு பற்றிய மந்திரங்கள்
தாய் மொழி பற்றிய மந்திரங்கள்
ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்
ஆத்மா பற்றிய மந்திரங்கள்
சரஸ்வதி மந்திரங்கள்
கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்
————-
8-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
பேயை ஓட்டும் மந்திரங்கள்
ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்
விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்
இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்
———–
9-ம் காண்டம்:-
ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.
இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.
அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.
இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்
நோய்களைத் தடுக்கும் மந்திரம்
பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்
ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
——–
10-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்
பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்
பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்
விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன
——–
11-ம் காண்டம்:-
பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.
மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.
எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.
ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.
பிரம்மசர்யத்தின் சிறப்பு
உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை
பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்
இந்தக் காண்டத்தின் சிறப்பு
———
12-ம் காண்டம்:-
தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை
காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு
பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்
இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.
———–
13-ம் காண்டம்:-
பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்
சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.
அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்
——–
14-ம் காண்டம்:-
இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.
———
15-ம் காண்டம்:-
இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!
பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு
———–
16-ம் காண்டம்:-
இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.
———–
17-ம் காண்டம்:-
ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!
வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.
———-
18-ம் காண்டம்:-
நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.
முதல் துதி யமா-யமி உரையாடல்.
———-
19-ம் காண்டம்:-
72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.
நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்
28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்
அமைதி, சமாதான மந்திரங்கள்
இதன் சிறப்பு அம்சங்கள்
————-
20-ம் காண்டம்:-
இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புகள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.
இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரத சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக் காட்டும்.
அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன.  உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.  ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர்.  எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன.  இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.

அதர்வண வேதம் சொல்லும் காரணம்

சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார்  இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை  அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .

அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம் இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து  ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM

உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM  என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்

இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ;  அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்

முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும்

இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக் கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.

இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி

முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.

அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால்  பார்க்கிறான்;அவன் தூரம்  பார்க்கிறான்;அவன்  பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.

அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!

அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண்  192

1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!

மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!

உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத்  தூய்மைப் படுத்தட்டும்!

தூய்மை செய்பவன் / பவமானன்  என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

2.விவேகம் பெறவும்சக்தி பெறவும்நீண்ட ஆயுள் பெறவும்அசைக்கமுடியாத பாதுகாப்பு பெறவும் என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

3.ஸவித்ரு தேவனே சோம ரஸத்தை நசுக்கிப் பிழிவதாலும் வடிகட்டுவதாலும் சுத்தப்படுத்துமாறு   தூய்மைப்  படுத்துக

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்-ஸ்ரீ பாஷ்ய கட்டமைப்பு –அதிகார பாத அதிகாரண விவரம் -உபோத்காத சதுர் அதிகரணம் —

May 27, 2023

ஶ்ரீராமானுஜர் காயத்ரி

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)

ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).

ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)

ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)

நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)

மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்

ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு

இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –

உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது

பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-

பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்

அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –

2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –

கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –

3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன

4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன

அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்

இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு

1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்

1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்

1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்

1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்

————

இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –

ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-

2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –

2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –

2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –

————–

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –

1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –

1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்

1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –

1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்

1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

——-

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்

1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்

———

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்

2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்

2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்

2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்

————–

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்

2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்

2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்

2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்

2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –

2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –

ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –

3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –

———

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –

கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்

3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

———–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –

பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்

3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

 

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-

————

நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்

3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்

3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

———-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–

4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—

4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–

4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-

4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –

4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –

4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–

4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–

4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-

4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-

4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–

———–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-

————–

நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-

——–

அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-

அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு

ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்

ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷

மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்

————–

அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி

இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –

ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து

என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்

பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன

இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே

2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது

இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-

ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்

ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்

ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே

குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை

ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே

2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே

2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி

ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்

பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்

ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்

ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –

ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன

2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன

2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்

ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்

ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்

இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்

சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா

ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை

சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை

ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்

தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-

சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்

——–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது

———-

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

May 24, 2023

ஸ்ரீ  பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

ஸ்ரீ விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டல கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.

1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.

இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.

நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம  வாயில் வழியாக நுழைந்தால்
கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் :
கணபதி,
தத்தாத்ரேயர்,
கருடன்,
மாருதி என்னும் அ
கருட கம்பம் ,
நரசிம்மர்,
ஏகமுக தத்தாத்ரேயர்,
ராமேஸ்வர லிங்கம்,
கால பைரவர்,
லெட்சுமி நாராயணன்,
காசி விஸ்வநாதர் ,
சத்ய பாமா,
ராதிகா,
சித்தி விநாயகர் ,
மஹா லெட்சுமி,
கண்டோபா ,
அமிதா பாய் ,
சனைச்சரன் ,
குப்த லிங்கம்,
கனோபத்ர சந்நிதிகள்.

ஸ்ரீ விட்டல் சந்நிதி

இதுதான் பிரதான கோவில்;
நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.
கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர்.
அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின் பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட
இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .
அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.
அங்கே மூன்று அறைகள் உண்டு.
பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.;
அடுத்தது 16 கம்பங்களை-தூண்களை உடைய சோல் கம்ப ;
அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்

இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.

பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டல் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார்
அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
விட்டல் ,
விட்டோபா,
விட்டல் நாத் ,
பண்டரிநாதன் ,
பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில்
அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் .
பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது.
அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.

பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்

ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம்.
விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு.
இந்த சம்பிரதாயத்தை வேறு    எந்தக் கோவிலிலும் காணமுடியாது
இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
விழாக் காலங்களில் 5 மணியும்
ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும்
காத்திருக்க நேரிடலாம் ;
இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!

முக தரிசனம்

கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம்.
இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம்.
ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் .
தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும்
அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்

நகரிலுள்ள ஏனைய கோவில்கள் :
பத்மாவதி கோவில்,
லகுபாய் அம்பா பாய்,
கோபால்பூர்,
விஷ்ணு பாத,
புண்டரீக ,
நாமதேவ்,
ஞான தேவ் ,
துகாராம் ,
கால மாருதி,
தம்பத மாருதி,
வியாச நாராயண,
யாமை துர்கா ,
கஜான மஹராஜ்,
ராம் பாக் ,
லக்ஷ்மண் பாக் கோவில்கள் .

அருகிலுள்ள முக்கிய இடங்கள்

கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.

வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள்,
கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும்
மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும்
தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள்.
பிற இடங்களில் மேலும் எட்டு லட்சம் பேர் சேருவர் .
இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது
ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப் பெரியது
சித்திரை,
ஆடி,
கார்த்திகை,
மாசி ஆகிய நாலு மாதங்களில்
இந்த பவனிகள் நடைபெறுகின்றன.

 

வாரி என்பது கால் நடையாக பவனி வருதல்,
வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்..
பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.

காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல்
வியாச பூஜை காலத்தில்  சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.

ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது .
சுவாமிகளின் திட்டத்தைக்  கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும்
காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா ,
தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார்.
அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன.
கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது.
தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .

சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது
கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது.
சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
அதன்படி இப்போதும்
ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக் கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.

மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-

1.சித்தி விநாயகர் கோவில்

2.மகாலெட்சுமி கோவில்

3.மும்பாதேவி கோவில்

4. குட்டி சபரிமலை கோவில்

5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்

6.வைஷ்ணவ தேவி கோவில்

7.பாபுல்நாத் சிவன் கோவில்

8.வாகேஸ்வரர் சிவன் கோவில்

9.ராதா கோபிநாத் கோவில்

10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்

11.சுவாமிநாராயண் கோவில்

12.பிரபாதேவி கோவில்

13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்

14.இச்சாபுரி கணேஷ் கோவில்

15.ஆர்ய சமாஜ் கோவில்

16.சிருங்கேரி மடம் கோவில்

17.சுவர்ணா கோவில்

 18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்

19.BAPS சுவாமிநாராயண கோவில்

20.சமணர் கோவில் (Jain Temple)

மும்பா தேவி கோவில்

மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது.
துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி.
மதுரைக்கு மீனாட்சி,
காஞ்சிக்குக் காமாட்சி,
காசிக்கு விசாலாக்ஷி என்பது போல
ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு.
அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி .
விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் .
தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை.
ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன.
கருங்கல்லிலான  தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது
கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு
செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

சித்தி விநாயகர் கோவில்

பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும்.
வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும்.
மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால்
பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ;
எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள்.
1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார்
இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று.
அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய்
கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் .
தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.

மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர்
சித்தி விநாயகர் கோவிலையும்
மஹா லக்ஷ்மி கோவிலையும்
தரிசிக்காமல் வர மாட்டார்கள்.
உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று.
இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும்
மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை
இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார்
இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர்.
மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்;
மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் .
மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்
வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும்
ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும்
(தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி)
மிகப் பெரிய பண்டிகைகள் .
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன.
பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க
ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற
தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார்.
ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன.
ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,
தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள்.
முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை
ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் .
பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது .
ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,
இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது.
ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது .
Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில்,
பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும்.
தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன
60 அடி  உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .

ஸ்வாமி நாராயணர் கோவில்

ஸ்வாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர்.
அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர்.
இந்த ஸ்வாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது
ஸ்வாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது
ஸ்வாமி நாராயணனுடன்,
கிருஷ்ணா,
லட்சுமி நாராயணன்,
ராதா,
கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன
ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

மாதா வைஷ்ணவ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் .
அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது .
நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில்
மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது

————–

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது.
மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி
இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் .
ஆனால் பல தடைகள் ஏற்பட்டன.
பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம்.
அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது.
தாயாரை அணைத்த வண்ணம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து ,
அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்,
திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம்.
மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன்  ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார்.
அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான்.
கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார்.

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !-
இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும்
அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள்
பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை.
அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த
பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி
பரகால  என்றும்
பரிக்கல் என்றும்
மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய
பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் .
பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

விபரீதானி நிமித்ததானி  —

May 24, 2023

ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி  என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.

இதோ வால்மீகி எச்சரிக்கை:

அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி

ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே

ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி

தாவதே வாபி ஷிஞ்சஸ்வ  சலா ஹி ப்ரா ணி நாம் மதி

ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச்  சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .

ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.

புறநானூற்றிலும் இதே காட்சி :

புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.

புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்

ஒருநாள் எரிகல் METEOR  ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.

அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும்  ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.

அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான்  என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.

புறநானூறு 229

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்,

முடப் பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய,

பங்குனி உயர் அழுவத்து,                    5

தலை நாள்மீன் நிலை திரிய,

நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,

தொல் நாள்மீன் துறை படிய,

பாசிச் செல்லாதுஊசித் துன்னாது,

அளக்கர்த் திணை விளக்காகக்    10

கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;

அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,

‘பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்

நோய் இலனாயின் நன்றுமன் தில்’ என 15

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,

அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,     20

கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு        25

அளந்து கொடை அறியா ஈகை,

மணி வரை அன்ன மாஅயோனே?— 229

பொருள்

மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளின் KRITHIKA NAKSHATHRA முதற்காலின்கண்

நிறைந்த இருளை உடைய பாதி இரவின்கண்

முடப்பனை போலும் வடிவுடைய அனுட ANUSHA NAKSHATRA நாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக்,

கயமாகிய குளவடிவு போலும் வடிவமைவுடைய புனர்பூசத்துக் PUNAR PUSA கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப்,

பங்குனி FALGUNA MONTH  மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,

அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,

கீழ்த்திசையிற் போகாது, வடதிசையிற் போகாது,

கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப் பரக்கக்,

காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து ஒரு மீன் விழுந்தது, வானத்தினின்றும்;

அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்

எம்முடைய பறையொலி போலும் ஒலியை உடைய அருவியை உடைய நல்ல மலைநாட்டு வேந்தனாகியவன்

நோயை உடையன் அல்லன் ஆகப்பெறின் அழகிது என

இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்;

அஞ்சினபடியேஏழாம் நாள் வந்தது ஆகலின், இன்று,

BAD OMENS – BAD NIMITTAS

வலிமையுடைய யானை கையை நிலத்தே இட்டுத் துஞ்சவும்,

திண்ணிய வாரால் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்,

உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக் குடை கால் துணித்து உலரவும்,

காற்றுப் போலும் இயலை உடைய மனம் செருக்கிய குதிரைகள் கதி இன்றிக் கிடக்கவும்,

இப்படிக் கிடக்கத்,

தேவர் உலகத்தை அடைந்தான்; ஆகையாலே,

ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித், தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ?

பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலிமையும், நச்சினோர்க்கு அளந்து கொடுத்தல் அறியாத வண்மையும் உடைய நீலமலை போலும் மாயோன்.

இந்தப் பாடலில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன

1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.

2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.

3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.

4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை )ஊசி (உதீச்யை )  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.

5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக

6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான்  தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.

7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம்  சொல்லுவார்கள்..

8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை  இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.

9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.

10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப்  பற்றிப்  பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதாபிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.

ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம்  மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே  முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —

May 24, 2023

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்-1-

கௌசல்யா தேவி திருக்குமாரா -ஸ்ரீ ராமா -புருஷோத்தமா –
காலைப் பொழுது புலர்கிறது –
நாம் செய்ய வேண்டிய நித்ய வர்ணாஸ்ரம கர்மங்களை செய்ய வேண்டும்
எழுந்திராய்

———-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருட த்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்களம் குரு–2-

ஆநிரை மேய்த்து மகிழ்பவனே
கருடக்கொடியை யுடையவனே
எழுந்திராய்
செந்தாமரையில் வளர் ஸ்ரீ லஷ்மீ தேவியின் நாயகனே
எழுந்திராய்
மூ உலகங்களிலும் -நித்ய முக்த பத்த -க்ருத்ய -அக்ருத்ய -க்ருத்யக்ருத்ய -ஸமஸ்த உலகங்களுக்கும்
நன்மைகள் -மங்களம் நிலவும்படியாகச் செய்வதற்காக
எழுந்திராய்

———-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்–3-

ஸமஸ்த உலகங்களுக்கும் தாயைப் போன்றவளே
மது கைடபர் என்னும் அரக்கர்களை அளித்த ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு மார்பில் விளையாடுபவளே
மனம் கவரும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவளே
தெய்வத் தாயே
ஆஸ்ரிதர்களின் ஸமஸ்த அபேக்ஷித்ங்களையும் அளித்து மகிழ்பவளே
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் தயா தேவியே
உனக்கு நல்ல காலைப் பொழுதாகுக –

———-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே–4-

தாமரை மலர்களை போன்ற குளிர்ந்த திருக்கண்களை யுடையவளே
பூர்ண சந்திரன் போல் பொலியும் திரு முக விலாஸம் யுடையவளே
ப்ரஹ்மாதி தேவர்களின் பத்னிகளால் பூஜிக்கப்படுபவளே
கருணையின் உறைவிடம் போன்றவளே
விருஷாசல பதியான ஸ்ரீ திருவேங்கட நாதனின் அன்புக்கு உரியவளே
உனக்கு நல்ல காலைப் பொழுது ஆகுக

————–

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

அத்ரி முதலான ஸப்த ரிஷிகளும் காலைக்கடன்களை ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மங்களையும்
முடித்துக் கொண்டு நின் திருப்பாத கமலங்களை அரசிப்பதற்காக
மனத்தைக் கவரக் கூடிய ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களை
சேகரித்துக் கொண்டு வந்து நிற்கின்றனர்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

தேவர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளும் சுப்பிரமணியனும் ஞானிகளுமானவர்கள்
ஓங்கி உலகளந்த சரித்திரங்கள் முதலான உனது திவ்ய சேஷ்டிதங்களைப் புகழ்ந்து நிற்கின்றனர்
பாஷா பதி -சொல்லுக்கு அரசனான -தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி
தூரத்தில் வணக்கத்துடன் நின்று கொண்டு நாட்களுக்குப் பறி ஸூத்தி அளிக்கக் கூடிய
பயன்களைக் கூறும் பஞ்சாங்கம் படிக்கிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

சற்றே மலர்ந்த தாமரை மலர்கள் -தென்னை பாக்கு மரங்களின் மிகவும் மனத்தைக் கவரும்
இளம் பாளைகளுடைய திவ்யமான நறு மண வாசனையை எடுத்துக் கொண்டு
குளிர்ந்த காலைக் காற்று மெதுவாக வீசுகிறது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8–

இரு கண்களையும் திறந்து
கலசங்களில் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் பாயாசம் முதலிய சுவை அமுதுகளை புஜித்து விட்டு
சிறந்த கூண்டுகளில் இருப்பவையும்
கேளிக்கையான விளையாட்டு இன்பத்தை உண்டு பண்ணக் கூடியவையுமான
கிளிகள் மனக்களிப்புடன் உன்னுடைய திரு நாமங்களைப் பாடுகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

நல்ல தந்திகளை உடையபடியால் இனிய நாதமுடைய வீணையுடன் நாரதரும்
அழிவற்ற வனான உன்னுடைய திவ்ய சரிதங்களை
காவிய நயம் மிக்க மொழி வண்ணம் தோன்றும்படியாக
வேகமாக மீட்டிப் பாடுகிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

இரவு முழுவதும் மகரந்த ரஸம் கலந்த தேனைப் பருகிவிட்டு ரீங்காரம் இடும் வண்டுகள்
அருகில் உள்ள பூம் புனல்களில் இருந்து தங்கள் மது அருந்திய தாமரை மலர்களின்
உள் புறத்தில் இருந்து வெளிப்பட்டு உன்னைத் தொழுவதற்காக வருகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

இடையர்களின் குடிசைகளில் ஆய்ச்சிகள் மத்தினால் பானைகளில் சிறந்த தயிரைக் கடையும் போது
உண்டாகும் உரத்த ஒலியை எண் திசைகளும் பொறுக்க மாட்டாமல் எதிர் ஒலிக்கின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

——-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸூர்யனிடம் அன்புடைய தாமரை மலர்களில் தங்கி இருந்த வண்டினங்கள்
தங்களுடைய கருமையான அங்கங்களில் அழகினால் செருக்கடைந்து
கரிய நிறம் படைத்த பூக்களின் அழகை எதிர்பார்ப்பது போல் உரத்த ரீங்காரம் செய்வது முரசு கொட்டுவது போல் உள்ளது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13-

திருமகள் கேள்வனே
பக்தர்கள் விரும்பிய பலன்களை அளிக்கும் பேர் அருளாளனே
ஸர்வ லோகத்தார்களுக்கும் ஸமஸ்த பந்துவாக உள்ளவனே
அழகிய ஸ்ரீ நிவாஸப் பெருமானே
உலகத்தோர் இடம் கருணை ஒன்றையே கொண்ட பெருமானே
இரண்டு தோள்களின் நடுவில் மஹா லஷ்மியின் வாஸஸ் ஸ்தானமாய் அமைந்த அழகிய திரு மார்பை யுடைய அழகிய பெருமானே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–14-

அழகிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடியதால் உள்ளும் புறமும் அழுக்கு நீங்கிய மேனி உடையவர்களாய்
உலகில் சிறந்து விளங்கும் மேன்மையை விரும்பும் அரனும் அயனும் ஸநகாதி முனிவர்களும்
உனது திருக்கோயிலின் வாசலிலே வாசல் காப்பவர்களால் அடி பட்ட சிற்பங்களுடன் காத்து நிற்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15-

அழகிய
சேஷ மலை
கருட மலை
வேங்கட மலை
நாராயண மலை
விருக்ஷ மலை
என்று நீ வஸிக்கும் திருமலையின் முக்கியமான திரு நாமங்களை எப்பொழுதும் கூறியபடி
அத் தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பாடி நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–16-

சிவ பெருமான்
தேவர்கள் தலைவனான இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வர்ணன்
வாயு ன் குபேரன்
என்ற அஷ்ட திக் பாலர்களும் பக்தியுடன் கர மலர்கள் சிரம் மிசைக் கூப்பி
அஞ்சலி செய்தவர்களாய் உனது ஸேவைக்காகக் காத்து இருக்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17-

புள்ளரையனான கருடனும்
மிருக ராஜாவான ஸிம்ஹமும்
நாக ராஜாவான ஆதி சேஷனும்
யானைகளுக்கு அரசனான ஐராவதமும்
குதிரைகளுக்கு அரசனான உச்சைஸ் சிரவஸூம்
உனது திருக்கோயில் நடை பாதைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்ற பெருமையைக் காட்டிலும்
அதிகமாக விரும்புபவர்களாய் உன்னைத் தரிசிக்க நான் முந்தி நீ முந்தி என்று
போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

ஸூர்யன்
ஸந்த்ரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
என்று தேவ சபையில் முக்யம் பெற்ற வர்களான நவக்ரஹங்களும்
உன்னுடைய அடியார் அடியார் அடியார் என்று மிகவும் கீழ் நிலையில் உள்ள அடியவர்களாய் நிற்கும்
விருப்பம் யுடையவர்களாய் உனது திருக்கோயிலின் வாசலில் நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-19-

ஸூர்யன் முதலான நவக்ரஹ நாயகர்கள் உன்னுடைய திருப்பாத தூளிகள் பட்டு
நிறைந்து விளங்கும் சிரங்களை யுடையவர்களாய்
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலான பேற்றுக்களையும் விரும்பாதவர்களாய்
இந்த யுக கல்பங்கள் முடிந்து விட்டால் தங்களுடைய வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணத்தால்
மனம் கலங்கி நிற்கின்றனர்
அவ்வாறு வேறு கல்பம் வந்து விட்டால் உனது திருப்பாத ஸேவையை இழந்து
உனது திருப்பாத தூளியைத் தலையால் தரிக்கும் பாக்கியமும்
இழந்தே போவோமே என்ற பயத்துடன் இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!-20-

உனது திருக்கோபுர முனையில் உள்ள கலசங்களைக் கண்டவுடன் வாழ்வின் இறுதி
லஷ்யமான ஸ்வர்க்கம் மோக்ஷம் பதவி அடைந்து மேல் உலகம் செல்பவர்களும்
அவ்வின்பங்களை வெறுத்தவர்களாய் மீண்டும் மனித லோகத்தில் வாழ்ந்து
உன்னைத் தரிசித்து இருப்பதையே விரும்புகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

திருமகள் நில மகள் நாயகனே
அருள் முதலான கல்யாண குணங்கள் எனும் அமுதம் விளையும் கடல் போன்றவனே
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவனே
சர்வ லோகங்களுக்கும் ஒரே புகலிடமாக விளங்குபவனே
பெருமானே
ஆதி சேஷன் கருடன் விஷ்வக் சேனர் போல்வரால் மலர்கள் தூவி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகள் யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–22-

ஸ்ரீ பத்மநாப
புருஷோத்தம
வாசுதேவ
வைகுண்ட வாஸீ
மாதவ
ஜனார்த்தன
சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறு அடையாளம் சிஹ்னம் உள்ளவனே
சரணாகதர்களுக்கு பாரிஜாதம் போல் ஸமஸ்த அபீஷ்ட ப்ராதனானவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–23-

மன்மதனின் செருக்கை ஒடுக்கக் கூடிய மிக அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனே
திருமகள் மருவும் ஆசை மிக்க திருக்கண்களை யுடையவனே
மங்கள கரமான குற்றம் அற்ற குணங்களுக்கு உறைவிடம் போன்றவனே
நல்ல பெருமை வாய்ந்த புகழை யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24-

ஸ்ரீ மத்ஸ்ய
ஸ்ரீ கூர்ம
ஸ்ரீ வராஹ நாயகனாக
ஸ்ரீ நரசிம்ஹ வபுவாக
ஸ்ரீ வாமனனாக
ஸ்ரீ பரசு ஏந்திய ரிஷி புத்திரனாக
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாக
ஸ்ரீ ஆதி சேஷ அம்சமான ஸ்ரீ பலராமனாக
யாதவ குலத்தில் உலகோர் அனைவரையும் மகிழ்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணனாக
திரு அவதரித்தவனே
ஸ்ரீ கல்கியாக திரு அவதரிக்கப் போகும் இறைவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25-

ஏலக்காய் -லவங்கம் -பச்சைக் கற்பூரம் முதலியவற்றின் நறு மணம் கலந்ததும்
மிகச்சிறந்ததுமான ஆகாஸ கங்கையின் தீர்த்தத்தைத் தங்கக்குடங்களில்
நிரப்பிக் கொண்டு தங்கள் தலைகளில் சுமந்தபடி வைதிக நெறிகளில் சிறந்தவர்கள்
மன மகிழ்ச்சியுடன் உனது திருக்கோயில் திருவாசலில் இப்பொழுது நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———-

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26-

கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான்
மது விரிந்து ஒழுகின மா மலர்கள் எல்லாம் -கமல மலர்கள் விகசிக்கின்றன
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் உனக்கு எப்பொழுதும் நன்மை தரும் மங்களங்களை வேண்டிக் கொண்டு
உன்னுடைய திருக்கோயில் திருவாசலை வந்து அடைகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27-

ப்ரஹ்மாதி தேவ ஸ்ரேஷ்டர்களும்
மிகச் சிறந்த முனிவர்களும்
ஸாதுக்களான சநந்தர் முதலான யோகிகளும்
மங்கள உபகரணங்களைக் கையில் ஏந்திக் கொண்டு
உனது திருக்கோயில் திருவாசலிலே வந்து நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு நிவாஸமானவனே
குற்றம் அற்றவனே
நற்குண சாகரம் போன்றவனே
பிறவிக்கடலைக் கடக்க நிகரற்ற பாலம் போன்றவனே
வேத வேதாந்தங்களால் அறியத்தக்க உண்மையான சிறப்பை யுடையவனே
பக்தர்களுக்கு இனியவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

இந்த வ்ருஷாசல நாதனான திருமலை நாதனைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை
தினம் தோறும் அதிகாலை வேளையில் பாராயணம் செய்பவர்கள்
தங்களைப் பற்றிய நினைவு துன்பம் அகன்றவர்களாய்
பரம் பொருளையே பரம புருஷார்த்தமாகக் கருதும் பரம பக்தர்கள்
மாத்ரமே அடையக்கூடிய நல்ல அறிவை -பர ஞானத்தை -அடைவார்கள் –

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்
————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்
————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்
———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

May 17, 2023

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை
                                         

திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம்

அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)

ஆசார்யன்–நம்மாழ்வார்

ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வான மா மலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான்.

அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :-

1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
2. குருகைக் காவலப்பன்
3.கீழையகத்தாழவான்
4.மேலையகத்தாழ்வான்
5. திருகண்ணமங்கையாண்டான்
6. பிள்ளை கருணாகர தாசர்
7.நம்பி கருணாகர தாசர்
8. ஏறு திருவுடையார்
9 வான மா மலை தெய்வ நாயக ஆண்டான்
10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
11.சோகத்தூர் ஆழ்வான் .

ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

திருஅவதாரம்–முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்ய ஸூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈஸ்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்ட பிறகு, நாதமுனிகள் ஆனார்.

ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.

திருமணம்:-
ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார்.

நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார்.

ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச் செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார்.

நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார்.

நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப் பேரனாருக்கு “யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வர முனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத் துறைவருக்குக் கற்றுக் கொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார்.

நாத முனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாத முனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.

மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடி விட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள்.

நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார்.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

——–

மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம்.

ஆளவந்தார் அவதாரம்:-

யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு
“ யமுனைத் துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர்.

யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று,
ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார்.

பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.

ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:-

இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன்.
ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர்.

கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார்.

இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது..

இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர்.

இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர்.

இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார்.

கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார்.

ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது.

ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம்
மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.

ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம்.

நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

———

வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை
வைணவம்
சைவம்
சாத்தமம்
காணா பத்த்யம்
ஸுரவம் கௌமாரம்
வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை
நியாயம்
வைசேஷிகம்
சாங்க்யம்
யோகம்
மீமாம்ஸை
வேதாந்தம்
அவைதிக தத்வம்
சாருவாகம் உலோகாயதம்
புத்த
ஜைன மதங்கள்

————–

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருநாம ஸங்கீர்த்தன மஹிமை -பிரமாணங்கள் –

May 17, 2023

தத் அஸ்ம-ஸாரம் ஹৃদயம் படேதம் ய
দ் গৃஹ்யமாநைர் ஹரி-நாம-தேயைঃ
ந விக்ரியேதথ யதா விகாரோ
நேத்ரே ஜலம் গத்ர-ருஹேஷு ஹர்சঃ(பக. 2.3.24)

“நிச்சயமாக அந்த இதயம் எஃகு கட்டமைக்கப்பட்டுள்ளது, ஒருவர் இறைவனின் புனித நாமத்தை ஒருமுகத்துடன் உச்சரித்தாலும், அது மாறாது மற்றும் பரவசத்தை உணராது, அந்த நேரத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்கும் மற்றும் முடிகள் முடிவடையும்.”

——————

தர்மா ப்ரோஜ்ஜித-கைதவோ ‘த்ர பரமோ நிர்மத்சரணம் ஸதம் வேத்யம் வஸ்தவம்
அத்ர வஸ்து சிவதம் தப-த்ரயோன்மூலானாம்
ஸ்ரீமத்-பகவதே மஹா-முனி-கৃதே கிம் வா பரைர் ஈஸ்வரঃ
ஸத்யோ ஹৃদி ஆவருத்யதே’ த்ர கிருதிபிঃ ஸ்ருத்ஸுபிঃ ஸுஸ்ருʼத்ஸுபிஹ் ஸ்.(SB 1.1.2)]

[“உடல் உந்துதல் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து, இந்த பகவத் புராணம் மிக உயர்ந்த உண்மையை முன்வைக்கிறது, இது முழு மனத்தூய்மை உள்ள பக்தர்களால் புரிந்து கொள்ள முடியும். உயர்ந்த உண்மை என்பது மாயையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட உண்மை. மும்மடங்கு துன்பங்கள்.மகா முனிவரான வியாசதேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான பாகவதம் கடவுளை உணர போதுமானது, வேறு எந்த வேதத்தின் தேவை என்ன? பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனமாகவும் பணிவாகவும் கேட்டவுடன், இந்த அறிவுப் பண்பாட்டின் மூலம் பரம பகவான் அவரது இதயத்தில் நிலைபெற்றுள்ளார்.”

—————-

பக்தி-யோகேன மனஸி
ஸம்யக் ப்ராணிஹிதே ‘ஆண்
அபஸ்யத் புருசம் பூர்ணம்
மயம் ச தத் அபாஸ்ரயம்(SB. 1.7.4)

“பக்தி-யோகத்தின் சக்தியால், ஸ்ரீல வியாசதேவர், தூய்மையான மனதுடன் தியானத்தில் உறுதியாக ஒருமுகப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரை முழுவதுமாக ஆன்மிகப் பிரகாசமும், முழுப் பகுதியும், மற்றும் ஸ்வரூப-சக்தியின் உள்ளார்ந்த ஆற்றலும் கொண்டதைக் கண்டார். அவரது வெளிப்புற ஆற்றல் மாயா, ஒரு கீழ்த்தரமான இயல்பு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் பின்னணியில் காணப்பட்டது.”

————–

தக்தஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ
நைவாத்மனோ பஹிர் அந்தர் விகாஸ்தே
பரத்மநோர் யத்-வ்யவதானம்
புரஸ்தத் ஸ்வப்நே யதா புருஷஸ் தத்-விநாஸே(SB 4.22.27)]

“ஒருவன் எல்லாப் பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, எல்லாப் பௌதிகக் குணங்களிலிருந்தும் விடுபடும்போது, ​​அவன் வெளி மற்றும் அகச் செயல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து செல்கிறான். அப்போது ஆன்மாவிற்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு, சுய-உணர்தல் முன் இருந்த, அழிகிறது. ஒரு கனவு முடிந்ததும், கனவுக்கும் கனவு காண்பவருக்கும் இடையே வேறுபாடு இருக்காது.

————-

ஸங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலநம் ஏவ வா
வைகுந்த-நாம-க்ரஹணம் அஸேசஹ-ஹரம் விதுঃSB 6.2.14)]

“ஒருவர் வேறு எதையாவது (சங்கேத), நகைச்சுவையாக (பரிஹாச), விரோதமாக (ஸ்தோபா) அல்லது அவமரியாதையாக (ஹேல) குறிக்க ஸ்ரீ-கிருஷ்ண-நாமாவை உச்சரிக்கலாம். இந்த நான்கு வகையான நிழல் நாமபாசங்கள் வரம்பற்ற பாவங்களை அழிக்கும் என்பதை கற்றறிந்தவர்கள் அறிவார்கள்.”

——–

யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சன
ஸர்வைர் ​​குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரஹ்
ஹரவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குண
மனோரதேநாசதி தவதோ பஹிஹ்–

[“அனைத்து தேவர்களும், மதம், அறிவு, துறவு போன்ற அவர்களின் உயர்ந்த குணங்களும், பரம புருஷ பகவானான வாசுதேவரிடம் கலப்படமற்ற பக்தியை வளர்த்துக் கொண்டவரின் உடலில் வெளிப்படுகின்றன. மறுபுறம், பக்தித் தொண்டு இல்லாதவர் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நல்ல குணங்கள் இல்லை.அவர் மாய யோகப் பயிற்சியில் வல்லவராக இருந்தாலும் அல்லது குடும்பம் மற்றும் உறவினர்களைப் பராமரிக்கும் நேர்மையான முயற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் தனது சொந்த ஊகங்களால் உந்தப்பட்டு இறைவனின் சேவையில் ஈடுபட வேண்டும். ‘வெளி ஆற்றல். அப்படிப்பட்ட ஒருவரிடம் எப்படி நல்ல குணங்கள் இருக்க முடியும்?

——

நௌமித்ய கே ப்ரா வபுஸே ததித் அம்பராய
குஞ்ஜவதம்ஸ-பரிபிச்ச லஸன் முகயா
வண்யா ஸ்ரஜே காவல வேத்ர விசானா வேணு
லக்ஷ்ம ஶ்ரீயே மৃது-பதே புஷ்பானங்கஜய (SB 10.14.1)

[“ஓ ஆண்டவரே, முழு உலகிலும் எங்கள் பிரார்த்தனைகளுக்குத் தகுதியானவர் நீங்கள் மட்டுமே. ஓ வ்ரஜேந்திரநந்தனா, உங்கள் உடல் ஒரு புதிய மழை மேகம் போன்றது, மிகவும் நேர்த்தியாகவும், பீடம்பரத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது உங்கள் காதுகள் மற்றும் உங்கள் தலையில் ஒரு மயில் இறகு, உங்கள் தாமரை முகம் பிரகாசமான பிரகாசத்தை வெளியிடுகிறது, மேலும் பல வண்ண வன மலர்கள் மற்றும் இலைகள் கொண்ட மாலை உங்கள் கழுத்தில் தொங்குகிறது. மாடு மேய்க்கும் குச்சியும் எருமைக் கொம்பும் உங்கள் கமர்பண்டில் ஒட்டிக்கொண்டது. உன்னுடைய மென்மையான தாமரை கையில் சாதம் மற்றும் தயிர் துண்டுகள் உள்ளன, மாடு மேய்ப்பவரின் இந்த இனிமையான உடையில் தோன்றி, அனைவரையும் கவர்ந்திழுக்கிறாய், தாமரை மலர்களை விட மென்மையான உன்னுடைய மென்மையான தாமரை பாதங்கள், மங்கள சின்னங்களால் குறிக்கப்பட்டுள்ளன. இந்த தாமரை பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் மீண்டும் தண்டவத் பிராணங்கள்.” ]

———

தத் தே ‘நுகம்பம் ஸு-ஸமீக்ஸமாநோ
புஞ்ஜந ஏவாத்ம-கৃதம் விபாகம்
ஹৃத்-வாக்-வபுர்பிர் விததாந் நமஸ் தே
ஜீவேத யோ பக்தி-பதே ச தயா-பக்(SB 10.14.8)]

[“உன் கருணையை நாடி, தன் கடந்தகால செயல்களின் கர்மாவின் காரணமாக அனைத்து வகையான பாதகமான நிலைமைகளையும் பொறுத்துக்கொள்பவன், எப்போதும் உனது மனத்தாலும், வார்த்தையாலும், உடலாலும் உனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்பொழுதும் உனக்கே வணக்கம் செலுத்துபவனே. உங்களின் அன்பற்ற பக்தராக மாறுவதற்கு ஒரு நேர்மையான வேட்பாளர்.”

————-

தத் அஸ்து மே நாத ச பூரி-பாகோ பாவே ‘த்ர வன்யத்ர து வா திராஶ்சம் யேனாஹம்
ஏகோ ‘பி பவஜ்-ஜனனம் பூத்வா நிசேவே தவ பத-பல்லவம் (SB 10.14.30)

[“என் அன்பான ஆண்டவரே, இந்த ஜென்மத்தில் பிரம்மாவாகவோ அல்லது வேறொரு பிறவியிலோ, நான் எங்கு பிறந்தாலும், உமது பக்தர்களில் ஒருவனாக எண்ணப்படுவதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க பிரார்த்திக்கிறேன். நான் எங்கிருந்தாலும், விலங்கு இனங்களில் கூட, உனது தாமரை பாதங்களுக்கு நான் பக்தி சேவையில் ஈடுபட முடியும்.” ]

———–

அலব்தே வா விநஸ்தே வா பக்ஷ்யச்ছாதந-ஸா
ধநே அவிக்லவ-மதிர் பூத்வா ஹரிம் ஏவ தியா ஸ்மரேத்(பத்ம புராணம்)

“உணவும் வஸ்திரமும் எளிதில் கிடைக்காவிட்டாலும், அல்லது கிடைத்தாலும், தொலைந்தாலும், புனித நாமத்தை அடைக்கலம் புகுந்தவனின் மனம் கலங்குவதில்லை. எல்லாப் பௌதிகப் பற்றுகளையும் விட்டு, கோவிந்தனிடம் பூரண தஞ்சம் அடைகிறான்.”

————

சோகமர்ஸாதிபிர் ভவைர் அக்ராந்தம் யஸ்ய
மாநஸம் கதம் தஸ்ய முகுந்தஸ்ய ஸ்பூர்த்திঃ ஸம்ভவநா ভவேத் ॥(பத்ம புராணம்)]

[“கோபம் அல்லது பெருமை, அல்லது தனது மனைவி அல்லது மகன்களின் நிலையைப் பற்றிய புலம்பல் நிறைந்த ஒருவரின் இதயத்தில், கிருஷ்ணர் வெளிப்படுவதற்கான சாத்தியம் இல்லை.”

————–

இடம் ஶரீரம் ஸத-ஸந்தி-ஜரிஜ்ஜரம்
படடி-அவஸ்யம் பரிணாம-பேசலம்
கிம்-ஔசதிம் ப்ருச்சஸி மூதா துர்மதே
நிராமயம் கிருஷ்ண-ரசாயனம் பிபா(முகுந்த-மாலா ஸ்தோத்ரம், 37, ஸ்ரீமத் குலசேகரரால்)]

[“முட்டாள்! மந்தமான தலைப் பிராணியே! எண்ணற்ற பற்றுதல்களால் பீடிக்கப்பட்ட இடைவிடாமல் மாறக்கூடிய இந்த உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும். இந்நிலையைப் போக்க என்ன மருந்து தேடுகிறாய்? ஸ்ரீ என்ற திருநாமத்தின் மருந்தை இடைவிடாமல் குடியுங்கள். மற்ற எல்லா நோய்களுக்கும் மூலமான இந்த ஜட வாழ்வின் நோயை அழிக்கும் கிருஷ்ணர்.”

(பத்ம புராணம்)]

பக்திঃ பரேசாநுভவோ விரக்திர்
அந்யத்ர சைசா த்ரிகா ஏக-காலঃ
ப்ரபத்யமானஸ்ய யதாஸ்நாதঃ ஸ்யுஸ்
துஸ்திঃ புஸ்திঃ க்ஷுத்-அபயோ ‘நு-காசம்-(SB 11.2.42)]

[“பக்தி, பரமாத்மாவின் நேரடி அனுபவம், மற்ற விஷயங்களிலிருந்து பற்றின்மை – இவை மூன்றும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன, பரம புருஷ பகவானிடம் அடைக்கலம் பெற்றவருக்கு, இன்பம், போஷாக்கு மற்றும் பசி நிவாரணம் ஒரே நேரத்தில் வருவது போல. பெருகிய முறையில், உண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு ஒவ்வொரு கடிக்கும்.”

———-

அர்ச்சயம் ஏவ ஹரயே பூஜாம் யஹ் ஸ்ரத்தாயேஹதே
ந தத்-பக்தேஷு கன்யேஷு ச பக்தா ப்ரகரிதா ஸ்மிருதா (SB 11.2.47)]

“பகவானின் அர்ச்ச மூர்த்தியை ஸ்ரீ ஹரியாக ஏற்றுக்கொண்டு, அவரை நம்பிக்கையுடன் வணங்கினால், கிருஷ்ணரின் பக்தர்களையோ அல்லது பிற ஜீவர்களையோ உண்மையாக வழிபடாமல் இருந்தால், ஒருவன் ஜட பக்தன் (கனிஸ்த) ஆவான்.”

—————–

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நமைவ கேவலம்
கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அந்யதா

“சண்டை மற்றும் கபடம் நிறைந்த இந்த யுகத்தில், இறைவனின் சக்தி வாய்ந்த திருநாமங்களை உச்சரிப்பது மட்டுமே விடுதலைக்கான ஒரே வழி. வேறு வழியில்லை; வேறு வழியில்லை; வேறு வழியில்லை

—————-

நமঃ சிந்தாமணிঃ கிருஷ்ணஸ்
சைதன்ய-ரஸ விக்ரஹ
பூர்ணঃ ஸுத்தோ நித்ய முக்தோ
பிந்நத்வாந் நாம-நாமினோঃ

[“கிருஷ்ணரின் புனித நாமம் ஆழ்நிலை பேரின்பமானது. இது அனைத்து ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரே, எல்லா இன்பங்களுக்கும் நீர்த்தேக்கம். கிருஷ்ணரின் பெயர் முழுமையானது மற்றும் அது அனைத்து ஆழ்நிலை மெல்லிசைகளின் வடிவம். இது ஒரு பொருள் பெயர் அல்ல. எந்த நிலையும், அது கிருஷ்ணரை விட சக்திக்குறைவானது அல்ல, கிருஷ்ணரின் பெயர் ஜடக் குணங்களால் மாசுபடாததாலும், மாயாவுடன் தொடர்பு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாலும், கிருஷ்ணரின் பெயர் எப்போதும் விடுதலை மற்றும் ஆன்மீகம்; அது ஒருபோதும் பொருள் விதிகளால் மாசுபடுவதில்லை. ஏனெனில், கிருஷ்ணரின் பெயரும், கிருஷ்ணரின் பெயரும் ஒரே மாதிரியானவை.”

————–

நிகில-ஸ்ருதி-மௌலி-ரத்ன-மாலா-
த்யுதி-நிரஜித-பதா-பங்கஜந்த
ஆயி முக்த-குலைர் உபஸ்யமானம்
பரிதஸ் த்வம் ஹரி-நாம ஸம்ஸ்ரயாமி

[“ஓ ஹரி-நாமா! அனைத்து வேதங்களின் மணிமகுடங்களான உபநிடதங்கள் என்று அழைக்கப்படும் ரத்தினங்களின் சரத்திலிருந்து வெளிப்படும் ஒளிரும் பிரகாசத்தால் உமது பாதங்களின் கால்விரல்களின் நுனிகள் தொடர்ந்து வணங்கப்படுகின்றன. நீங்கள் முக்தியடைந்த ஆத்மாக்களால் நித்தியமாக வணங்கப்படுகிறீர்கள். நாரதர் மற்றும் சுகதேவர் போன்றவர்கள். ஓ ஹரி-நாமா! நான் உன்னிடம் முழு அடைக்கலம் பெறுகிறேன்.”

———

தன்-நாம-ரூப-சரிதாதி-சுகிர்தநநு-
ஸ்ம்ருத்யோஹ் க்ரமேண ரஸந-மானஸி
நியோஜ்ய திஸ்தான் வ்ரஜே தத்-அநுராகி-ஜாநனுகாமி
கலாம் நயேத் அகிலம் இத்ய உபதேச-சாரம்

[“ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ளார்ந்த தன்னிச்சையான அன்பைக் கொண்ட வ்ரஜாவின் நித்திய குடியிருப்பாளர்களைப் பின்பற்றுபவர்களாக வ்ரஜத்தில் வசிக்கும் போது, ​​ஒருவர் தனது முழு நேரத்தையும் நாக்கையும் மனதையும் வரிசையாக உன்னிப்பாக உச்சரிப்பதிலும், வ்ரஜந்திரநந்தனான ஸ்ரீ கிருஷ்ணரின் நாமங்களை நினைவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். , வடிவம், குணங்கள் மற்றும் பொழுதுகள். இதுவே அனைத்து அறிவுறுத்தலின் சாராம்சம்-

——————–

மதுரம் அதாரம் ஏதன் மங்களம் மங்களம்
ஸகல-நிகம-வல்லி ஸத்-பலம் சித்-ஸ்வரூபம்
சக்ருத் அபி பரிகீதம் ஸ்ரத்தாய ஹேலய வா
ப்ருகுவரா! நர-மாத்ரம் தாராயேத் கிருஷ்ணாமா

[“கிருஷ்ண நாமம் இனிமையானது மற்றும் மங்களகரமான அனைத்திலும் மிகவும் மங்களகரமானது. இது செழித்து வளரும் கொடியும், பாகவதத்தின் நித்தியமான, முழுமையாக பழுத்த பழம், மற்றும் அறிவின் உருவகம், சிட்-சக்தி. ஓ சிறந்தது. ப்ருகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள், நம்பிக்கையுடன் அல்லது அலட்சியத்துடன் (ஹேலா) புனித நாமத்தை ஒருமுறை மட்டுமே உச்சரித்தாலும், அவர் இந்த பிறப்பு மற்றும் இறப்புக் கடலில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

—————

அனுகுல்யஸ்ய ஸங்கல்ப ப்ரதிகுலஸ்ய வர்ஜநம்
ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸோ கோப்த்வৃத்வே வாரணம் ததா

[“சரணாகதியின் ஆறு பிரிவுகள்: பக்தித் தொண்டிற்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது, பாதகமான விஷயங்களை நிராகரிப்பது, கிருஷ்ணர் பாதுகாப்பைத் தருவார் என்ற நம்பிக்கை, இறைவனை ஒருவரின் பாதுகாவலராக அல்லது எஜமானராக ஏற்றுக்கொள்வது, பணிவு மற்றும் முழு சுயம். -சரணடை

————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் பொன்னின்வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!’

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மனமே தனம் —

May 17, 2023

செல்வ நாராயணன் -திரு நாராயணன் -திருவுக்கும் திருவாகிய செல்வா
தானம் மதீயம் தவ பாத பங்கஜம்
அவனும் அவளும் விட்டாலும் விடாத திண் கழல்கள் தனம்

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.–மூன்றாம் திருவந்தாதி –4-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -பசிக்கு விருந்தும் நோய்க்கு மருந்தும் இதுவே

வெங்கடாஜலா பாதி– காலோபதி வைத்தியம் —

அடி உதவுமாறு அண்ணன் தம்பியும் உதவ மாட்டானே -நம்பி மூத்த பிரானும் கிருஷ்ணனையும் விட திருவடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்தியும் அளிக்க வல்லது

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாதமாநம் அவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை
பற்றற்ற மனமாகிய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டுமே

உள்ளம் நெஞ்சம் அகம் மனம் சித்தம் சேதஸ் ஹ்ருதயம் ஸ்வாந்தம் ஹ்ருத் மாநஸம் மநஸ் பர்யாய சொற்கள்
ஆத்மா இதயம் உயிர் மூச்சு இவற்றை விட வேறுபட்டது
மந்யதே அநேந இதி மந –மனனம் நினைக்க உதவும் உபகரணம் கருவியே மனஸ்
அறிவுப்பதிவுகளைக் காட்டும் திரையே மனஸ்

மாயவனையே மனத்து வை -பொய்கையார்

மனஸா து விஸூத் தேந -பராக்கைப் பார்க்காமல் ப்ரத்யக்க்கை நோக்கித் திருப்பா எம்பெருமான் அருள் புரியட்டும்

———-

மனம் புத்தி ஆத்மா -சித்தம்-கடஉபநிஷத் தேர்
தேர் ஒட்டி பார்த்தசாரதி –

அந்தக் கரணம் இருப்பிடம் ஹ்ருதயம் ஆத்மா பரமாத்மாவைப் போலவே

பஞ்ச பிராணன் போல் மனத்தின் வெளிப்பாடு 10 வகை ராமானுஜர்
காமம் –ஆசை -விருப்பம் -தூண்டும் கருவி
சங்கல்பம் -செய்ய வேணும் என்னும் உறுதியைத் தூண்டும் கருவி
விஜிகித்சா –ஐயத்தை அறிய ஆவலைத் தூண்டும் கருவி
ஸ்ரத்தா -முனைப்பு ஆர்வம்
அஸ்ரத்தா -ஆர்வம் இன்மை
த்ருதி -உறுதி
அத்ருதி –உறுதி இன்மை
ஹ்ரீஹீ –வெட்கம்
தீ -புத்தி
பீ -பயம் நாளை வரும் பிரதிகூலம் பற்றிய எண்ணம் -முன்பு நடந்தது போல் நடக்குமோ என்ற எண்ணமே பயம்

நல்ல சங்கல்பம் எடுத்து
ஸ்ரத்தையுடன் தொடங்கி
உறுதியுடன் இறைவனை அடைய
நம் மனம் துணை நிற்க அவன் அருளட்டும்

தேவ ஹூதி -ஒன்பது பெண்கள் -ரிஷிகளுக்கு கல்யாணம் பிள்ளையான கபிலர் இடம் ஸாஸ்த்ர அர்த்தம் கேட்க ஆசை
மோக்ஷம் அறிய ஆர்வம் -ஸ்ரத்தை -த்ருதி -கடைப்பிடித்து பேறு பெற்றாள்

ஸூஷ்மம் -பஞ்ச பூதங்களால் செய்யப் பட்ட சரீரம்
இயற்க்கை யெய்தல் காரியப் பொருள்கள் காரணத்தில் லயம் அடைதல்
இந்திரியங்கள் -பாஹ்ய- அந்தக் கரண -ஜீவன் உடனே சென்று மீண்டும் சேரும்

பிராகிருதம் -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவானவை-த்ரிகுண மயம் -ஜடப்பொருள் –

ஹ்ருதயம் வேறே மனஸ் வேறே

அறிவு நித்யம் அப்ராக்ருதம் -முக்குணங்கள் பீடிக்காததே ஞானத்துக்கு -உருவாக்கப்படாதது -புத்தி

மனம் மொழி வாக்கு -பிரதானம் மூன்றுமே –
காரண கார்ய பாவம் -சங்கிலி தங்கம் போல் -காரணம் பிரதானம் -நினைத்தால் தானே பேசவும் செய்யவும் முடியும்

ஆத்மா கர்மா- வாசனா- மனசில் பதிக்கும்-மோக்ஷ பந்த ஏக ஹேது -மனமே -முந்துற்ற நெஞ்சே -நெஞ்சமே நல்லை நல்லை –

கர்த்தா -பிரதம வேற்றுமை -ஆத்மா
காரணம் -ஆசையால் செய்கிறான்
காரியம் -நடை
கரணம் -ஆல் -இத்தால் -கருவி -கால்
நான்கும் அறிய வேண்டும்
மனம் நினைவுக்கு கருவி -காரணமாக ஆகுமோ -மனமே பந்த மோக்ஷ காரணம் சொல்லலாமோ

கர்த்தா தனது தலையில் ஏற்றுக் கொள்ளாமல் இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்

காமம் க்ரோதம் லோபம்  மோகம் மதம்  மாத்சர்யம்-அஸூயை-பொறாமை -மனதின் நிலைமைகள்

மயக்கம் ஸம்மோஹ-அஞ்ஞானத்தால் மனம் மயக்கம்
மனம் குழப்பம் -இதுவோ அதுவோ சந்தேகம்
தப்பானதை இது தான் முடிவு மன மயக்கம்
மயர்வு –
ஞானத்தால் மனத் தெளிவு —
மன அழுத்தம்-

மஹா கல்பம் தொடங்கி –இன்று வரை நம் மனம் அழியாமல் –
அடுத்தடுத்த பிறவியில் தொடர்கிறது
ஆனால் முன் பிறவிகளின் நினைவுகள் தொடராது
இறுதியில் அவன் அருளால் ஸ்ரீ வைகுந்தம் அடையும் போது தான் அப்ராக்ருதமான வேறு மனம் கிடைக்கும்
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளுவான் –

இந்த்ரியங்களுக்குத் தலைவன் -மனம்
மனத்துக்குத் தலைவன் ஆத்மா
ஆத்மாவுக்குத் தலைவன் பரமாத்மா
அவன் அருளால் உட் புலனும் வெளிப்புலன்களும் சரியாக இயங்கட்டும்

மனஸ் த்ரவ்யம்-கண்ணுக்குத் தெரியாத ஓன்று -இருந்தாலும் நம்ப வேண்டும்
த்ரவ்யம் என்பது -அவஸ்தாச்ரயம் -வெவ்வேறே அவஸ்தைகளுக்கு இருப்பிடம்
விதை காய் பழம் போல் அவஸ்தைகள் மாறலாம்
விருப்பம் கோபம் பேராசை மயக்கம் ஆணவம் பொறாமை போன்ற தீட்ட அவஸ்தைகளையும்
அஹிம்ஸை ஸமத்வம் திருப்தி புலன் அடக்கம் போன்ற நல்ல அவஸ்தைகளையும் அடையும்

மனம் ப்ராக்ருதம் -அறிவற்ற ஓன்று
எனது மனம் சிந்திக்கிறது -விரும்புகிறது என்பது பொருந்தாது
ஆத்மாவின் செயல்களை இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அறிவுக்கு இருப்பிடம் -ஆத்மா வாக்கிய வீட்டிலே தான்
மனஸ் வீட்டின் வாசல் தான்
கர்மத்தால் பாதிக்கப்பட்ட அறிவுப் -காமம் கோபம் போன்ற அழுக்குகளால் பாதிக்கப்பட்ட மனம்
நோயால் பாதிக்கப்பட்ட கண் போன்ற புலன்கள்
இவை ஒவ்வொன்றும் பொருளை பற்றிய உண்மை அறிவை ஏற்படுத்தாதே

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்தஸ் ஸ்ம்ருதி அபோஹநம் ச
நினைப்பதும் மறப்பதும்-அவனாலே தானே ஒழிய மனஸால் அல்லவே
மனம் வலிமையோடு இறைவனிடம் ஈடுபட்டு இருந்தால் அறிவும் நினைவும் வரும் -மறதி விலகும் –

யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி
யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி

மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏக்கம் மஹாத்மா நாம்
மனஸ் அந்யத் வசஸ் அந்யத் கர்மண் யன்யத் துராத்ம நாம்
முதலில் சிறிது சிந்தித்து -எதைச் செய்ய இயலுமோ அதை மட்டும் பேசி
எதைப் பேசினோமோ அதைப்பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்க வேண்டும்
செய்ய இயலாததை பற்றித் தொடர்ந்து சிந்திக்கவோ பேசவோ கூடாது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுவோம்
இம்முறையை கடைப்பிடித்தால் பெருமானைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் நமக்கு நிறைய நேரம் கிட்டும்

கீழே மனசால் உயர்த்திக் கொள் -இங்கு மனசை வெல்வாய் -விஷயாந்தரங்களில் போகாமல் தடுப்பாய் என்கிறான்-அநாத்மா வெல்லப்படாத மனஸ் கொண்டவன் -புலன்கள் ஐந்தையும் வென்றிலேன் –அளப்பில் ஐம் புலன் அடக்கி -என் மனஸ் என்று கொள்ளாமல் பகவத் விஷயத்தைக் காட்டிக்கொடுக்கும் உபகரணம் என்று கொள்ள வேண்டுமே -ராமம் மே அனு கச்சதி-சக்ரவர்த்தி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாவ

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

யேந –எந்த மனத்தினால்
ஆத்மா -தன் மனம்
ஆத்மநா ஏவ -தன்னாலேயே
ஜித -விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ
தஸ்ய ஆத்ம ந -அம் மனிதனுக்கு
ஆத்மா பந்துர் -அம் மனம் உறவினன் ஆகும்
ராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்மநஸ் து -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ என்னில்
ஆத்மா ஏவ -தன் மனமே
ஸத்ருவத்-தனது எதிரியைப் போலே
ஸத்ருத்வே -நன்மைக்குத் தடையாய் இருப்பதில்
வர்த்தேத —ஈடுபடும்

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்

பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் –
ஒரே மனசே மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்

மனம் மொழி காயம் மூன்றிலும் முதலான மனமே ஏக பந்த மோக்ஷ ஹேது வாகும்

நமது அறிவுக்கு முக்குண பாதிப்பு கிடையாது
ஆனால் அறிவு மனம் வழியாகவே பயணிக்கிற படியால்
மனத்தில் உயர்ந்து இருக்கும் குணம் அறிவையும் பாதிக்கும் –

உடலும் மனமும் முக்குண வசப்பட்டு இருக்கும்
தேவ