ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்
ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .
———
ஸ்ரீ பால காண்டம்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் ஆர் துணை என்று துளங்கும்
நல் அமரர் துயர்தீர
வல்லரக்கர்
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
அயோத்தி என்னும் அணிநகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்
கௌசலை தன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி
வல் அரக்கர் உயிர் உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொரு கால் அரசு களை கட்ட
மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க;
————-
ஸ்ரீ பால காண்டம் .
25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –
குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்
குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-
———-
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்
மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –
———–
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது
அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –
பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
————
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.
அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-
அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –
அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –
————-
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.
துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.
—————–
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-
நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-
——————–
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –
குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்.
————–
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –
———
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து
————
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க
———–
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –
—————-
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே
————-
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை
——————
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார்
குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான
குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து–கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர்
ராமானுஜரை அடைந்து குணங்கள் பெருமை பெற்றன
அவர் குணமும் இவனுக்கும் உண்டு என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இங்கு
—————
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப் பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி
——-
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–
வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –
தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து
————
கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்
அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*
அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்
கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்
இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…
“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அ + ஹல்யா = மாசு அற்றவள்!
கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை
—————–
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-
மைதிலியை மணம் புணர்வான் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இறுத்து
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து
இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம்
அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும்
இதுவரை சொன்னதுக்கு எல்லாம் சீதா கல்யாணத்துக்காக என்றே அத்தை நேராக குறைவாக சொல்கிறாள்
அவள் தன்னை ஏற்றுக்கொள்ள அடியவர் ரக்ஷணம் -அகல்யா சாப விமோசனம் -தாடகா நிராசனம் இவற்றால் அவளை மகிழ்விக்கவே செய்தான்
——————
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-
இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே
———-
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-
மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி
இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை
—————
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்
————-
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–
அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து
அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து
———-
வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே—- 9-1–
மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை
அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply