ஸ்ரீ ஹநுமான் காயத்ரி
ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்
ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!
ஓம் தத்புருஷாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: ஹநுமத் ப்ரசோதயாத்!
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி.
————
தர்ப்போதேக்ரத சேந்த்ரியா ந நமநோ நக்தஞ்சரா திஷ்டிதே
தேஹேஸ்மின் பவ ஸிந்து நா பரிகதே தீ நாம் தசமாஸ்திதஸ்
அத்யத்வே ஹனுமத் ஸமேந குருணா சம்போதிதார்த்தஸ்
ஸூ தீ லங்காருத்த விதேஹ ராஜ தநயா ந்யாயேநலா லப்யதே —சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்
முதலியாண்டான் வார்த்தை -சிறை போல் சம்சாரம் -ஆச்சார்யனே திருவடி
அந்தத் திருவடியின் தன்மையும் ஆச்சார்ய லக்ஷணமும்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது,
பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் –
இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
ஐந்து–நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள்
ஐந்து(பஞ்ச)பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,…
ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,…..
ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாக, ஸ்ரீராமனுக்காக,
ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,…
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை அயல் தேசமான இலங்கையில் வைத்தான்,
அஞ்சிலே ஒன்று (*வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்(*நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாறாக(*ஆகாயம்) ஆரியர்க்காக(*இராமனுக்காக) ஏகி
அஞ்சிலே ஒன்று (*நிலம்) பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்(*இலங்கையில்)
அஞ்சிலே ஒன்று(*நெருப்பை) வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான்
அத்தகைய அனுமன், நமக்கு வேண்டியன எல்லாம் அளித்து காப்பான்-
பஞ்சபூத தத்துவம்
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர்
சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர்
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர்
வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர்.
இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை.
ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்.
உள்ளுறை பொருள் –
முதல் அஞ்சு –பஞ்ச ஸம்ஸ்காரம்
இரண்டாம் அஞ்சு —அர்த்த பஞ்சகம்
மூன்றாம் அஞ்சு —உபாய பஞ்சகம்
நான்காம் அஞ்சு —பரத்வாதி பஞ்சகம்
ஐந்தாம் அஞ்சு —லோக பஞ்சகம்
பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாத்ம வஸ்துவை ஜனிப்பித்து
தாய் தந்தையர் உடலை மட்டுமே பிறப்பிக்கின்றனர்
ஆச்சார்யர் ஞானத்தினால் ஆத்மாவைப் பிறப்பிக்கின்றார் -அழுக்கை நீக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவிக்கின்றார்
தாப ஸம்ஸ்காரத்துக்குப் பிறகே மந்த்ர ஸம்ஸ்காரத்துக்கு ப்ரஸக்தி யாதலால்
முதலான அந்த ஸம்ஸ்காரத்தையே கொள்ளுதல் தகும் –
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிரதராய் ஆவீர் -என்று அனுக்ரஹத்து அருளுவார் அன்றோ
வித்யைத் தாயாகப் பெற்று , பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல் விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக் கவரி செய்ய நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —
வித்யையைத் தாயாகப் பெற்று-
அதாவது —
சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே
ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே ,
வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-
பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –
அதாவது
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற
போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த-
அதாவது —
திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி –
அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே-(ஆறு குண சாம்யம் மேலே வரும்) ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-
தஞ்சமாகிய தந்தை-
அதாவது
தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய
தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே
ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –
பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க –
பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே –
ஸ்வரூப உத்பாதகனாய் (திரோதானமாய் இருந்ததை தெளிய விட்ட – தீர்க்க பந்து -தயாளுவான)-
ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் –
உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே
ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-
மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –
அதாவது –
மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,
மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற
அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —
விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –
பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,
கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று
பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் (ரஷிக்கிற படியால் பதி– தரிக்கிற படியால் பர்த்தா)-
சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற
மணவாளரை –
பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6-
என்கிற அழகிய மணவாளரை
நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற
மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே
பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –
பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –
பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே
பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –
சதுர்தியுள் புக்கு –
அதாவது –
விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,
அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப்
பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு செல்லும் (பிரார்த்தனா சதுர்த்தி) சரம சதுர்த்தியிலே உள் புக்கு –
(நான்கு பதிகம் கழித்து -2-9-எனக்கே ஆக -பிரார்த்தனை –
புகழும் என்கோ -3-3- நான்கு திருவாய் மொழி -சதுர்த்தி தானாகே அமைந்ததே)
நான்கு நாள் கழித்தே சேஷ ஹோமம் நடக்கும்
முதல் நாள் சோமன் -அடுத்து கந்தர்வர் -அடுத்து அக்னிக்கும் -அடுத்து இவனுக்கு
நாராயண ஆய -நடுவிலும் நான்கு அக்ஷரங்கள் உண்டே )
இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –
அதாவது –
தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை
இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே –
சேஷத்வ ஞானமும் சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே ,
இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி –
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே
அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –
நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –
ஜன்ம பூமியை விட்டு அகன்று –
அதாவது –
முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற
செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே
ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு
ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..
அன்றிக்கே-
(ஜென்ம பூமி ஞானம் பெற்ற பூமி என்ற நிர்வாகம்-மிகவும் சேரும் )
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு
ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை
பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே -இத்யாதி படியே –
முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு
இது மிகவும் சேரும் இறே-
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-
அதாவது –
சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க –
அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி-
நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –
குடைந்து நீராடி- –
அதாவது –
குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு
போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே
அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –
அதாவது –
குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –
வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,
மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,
பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே
அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –
தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே
போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-
பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –
அதாவது –
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே
இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-
நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –
அதாவது –
அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே –
அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே
மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு ,
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –
வைகுந்தம் புக்கிருந்து –
அதாவது –
உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே –
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே –
ஸ்ரீய பதியானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –
வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-
அதாவது –
பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும்
மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே –
நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து –
அதாவது –
பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே –
கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே –
தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –
பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –
அதாவது –
தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -என்றும்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா
சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா
மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட –
மணி மிகு மார்பு-10-3-5– -என்று
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..
குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –
அதாவது –
குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு
(திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)
மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல –
அதாவது –
வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று
உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி
அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும்
கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது –
மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி -என்றால்
சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே —
இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-
—————————————-
இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்த்துச் ச ப்ரத்யகாத்மநா
ப்ராப்தயுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராண கா
மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேந நமஸா
அஹங்கார மமகார ஸ்பர்சம் அற்று
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய ரஹிதராய்
எம்பெருமானுடைய போகத்துக்கு காணியை விளைவிப்பாதவராய் -இருக்கும் இருப்பு
-
- ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
-
- நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
- முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
- பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
- கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
- முமுக்ஷுக்கள் – ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
-
- புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
- தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
- அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
- காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
- ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
- பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
- விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
- ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
- பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
- புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
- உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
- ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம் முதலியவை.
- ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
————–
மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
- உபாயம் – வழி – ஐந்து வகை உண்டு:
- கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
- ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
- பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
- ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும் இதுவே நெறி. இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
- ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -427-
அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ
நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே
இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான
ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –
ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –
———-
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-
ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –
———–
—————-
நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்
- ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
-
- பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
- வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
- விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
- அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இருத்தல்
- அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
- கண்டு -பிற வினையில் வந்த தன் விபினை -காணச் செய்து என்றபடி
நாம் உஜ்ஜீவனம் அடைய தமர் உகந்த உருவம் கொண்டு இருக்கும் அர்ச்சாவதார எளிமையைக் காட்டிக் கொடுத்த படி
-
———————–
ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்
இருள்தரும் மா ஞாலம் மண்ணுலகம் ஹேயம்
ஸ்வர்க்காதி போகமும் கைவல்யமும் வேண்டேன்
இனிப்பிறவி யான் வேண்டேன் என்றபடி
பரமபதத்துக்கு ஆளாக்கித் திருத்திப் பனி கொள்வதே ஆச்சார்ய க்ருத்யம் என்றபடி
ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று –
————–
பஷீ ச ஸாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட
ஸூ ப சகுனமாக ஆச்சார்யர் கிடைத்தமை பற்றிய ஸ்லோகம்
பஷீ
ஞான அனுஷ்டானம் இவை நன்குடைய குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும்
உபாப்யாமேவ பஷாப்யாம் யதா கே பஷீணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -பிராமண வசனம்
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஞான கர்மாக்களை சிறகு என்று
குரு ஸ ப்ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -3-1-
ஸாகா நிலய
சாகை என்று கிளைக்கும் வேத பாகத்துக்கும் பெயர்
யஜுஸ் ஸாகாத்யாயீ -ஸாம ஸாகாத்யாயீ
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
வேதம் ஓதாதவன் பரம புருஷனை அறியாதவனாவான்
ப்ரஹ்ருஷ்ட
ஆச்சார்யன் எப்போதும் பகவத் சிந்தையனாக இருப்பதால் மிக்க மகிழ்ச்சி யுடையவனாயே எப்போதும் இருப்பான்
ஆனந்த மயனான எம்பெருமானை அநவரதம் சிந்தை
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்க்கு எங்கே வரும் தீ வினையே -திரு விருத்தம்
தேஹ யாத்திரையிலும் ஆத்ம யாத்திரையிலும் கவலை அற்று ஆனந்தம் ஒன்றே கொண்டு இருப்பார்கள்
புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
சிறந்த ஹித உபதேசங்களுக்கு ஸாந்த்வ வாதம் என்று பெயர்
க்யாதி லாப பூஜா ஹேது அன்றிக்கே
சிஷ்யர்கள் பிரார்த்திக்காமலேயே
தனது பேறாக அடுத்து அடுத்து ஹித உபதேசம் பண்ணும்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றதாயிற்று –
ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந
ஸ் வாகதாம்-என்றது ஸ்வஸ்மை ஆகதாம் -என்றபடி
ஸூஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்–ஸூஸ் வாகதாம்-
ஸ்வ கபோல கல்பிதமான அர்த்தங்களை மனம் போன படியே சொல்லுகை அன்றிக்கே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவரே உத்தமமான ஆச்சார்யர் –
புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்றபடிக்கும்
ஸ் காலித்யே ஸாசீ தாரம் -ந்யாஸ விம்சதி ஸூ க்தியின் படிக்கும்
நிர்தாஷிண்யமாக சிஷிப்பவரே ஆச்சார்யர்
ஆகவே இந்த ஸ்லோகம் உத்தம ஆச்சார்யர் படியைச் சொல்லிற்று ஆயிற்று –
———-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply