ஸ்ரீ கோதா ஸ்துதி அனுபவம் —

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-ஸ்ரீ பூர்வாச்சார்யர்களின் ஸூ க்தி நடையை அநு சரித்தல்

முதல் ஸ்லோகம் -ஐந்தாம் ஸ்லோகம் -இவற்றில் காணலாம்

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–ஸ்ரீ குணரத்னகோசம் 3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

தேவேந்த்ரனுடைய உத்யான வனத்துக்கு -நந்தனம் -என்ற பெயர் உண்டு -அங்கு கற்பகக் கொடி படரும்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் குடியாகிற நந்தவனத்தில் தோன்றிய ஆண்டாளும்
தனது திவ்ய ஸூ க்திகள் மூலம் சகல வேதார்த்தங்கள் எல்லாம் விளக்கி அருளுகிறாள்
பெரியாழ்வார் குலம் ஆண்டாள் திருவவதரித்ததால் பெருமை மிக்கு விளங்கியதே
கொடி கொள் கொம்போடே அணைந்து அல்லால் நிற்காதே
எனக்கே தன்னைத் தந்த கற்பகமான எம்பெருமானான பெரிய பெருமாளாகிய கற்பகத் தருவை அணைந்து விளங்கா நிற்கும்

பஞ்சைதே தேவ தரவோ மந்தார பாரிஜாதக சந்தான கல்ப வ்ருஷச் ச பும்ஸி வா ஹரி சந்தனம் -அமர கோசம்
ஐந்து வ்ருக்ஷங்கள் தேவ வ்ருக்ஷங்கள்

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ கல்ப வ்ருஷ தேந ஸஹ யோகேந -த்ருஸ்யாம் ரமணீயாம் இத்யர்த்த
மானிடவர்க்கு என்று பேச்சுப்பதில் வாழகில்லேன்

ஆக பட்டரை அடி ஒட்டி ஆண்டாளை கற்பக வல்லியாக அருளிச் செய்கிறார் –

———

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

அன்ன வயல் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பூ மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு -தனியனைப் பின்பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா -ஸர்வாத்மநா விதேயனாக ஆக்கிக் கொண்டவள் அன்றோ

————————

2- இந்த ஸ்துதி அவதரித்த வரலாற்றை விலக்ஷணமாக அருளிச் செய்தல்

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

ஸ்வாமி மவ்வ்ன வரத்துடன் எழுந்து அருளி இருக்க
ஆண்டாள் திரு வீதிப் புறப்பாட்டில் -வீதியில்
ஏதோ அனுபபத்தி விளைய -அதன் வழியாக எழுந்து அருள முடியாமல்
இவர் விரதத்தை ஸஹஸா விஸர்ஜனம் செய்து அருளி இந்த ஸ்துதியை விஞ்ஞாபிக்க உபக்ரமித்தார் –

—————

3- அநித அஸாதாரணமான கவித் திறமை

இதற்கு எல்லா ஸ்லோகங்களுமே லஷ்யமானாலும்
ஆறாவது பதினாறாவது ஸ்லோகம் அதி அசாதாரணம்

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

இதற்கும் மேல் அபி சப்தத்தை ஐந்து தடவை பிரயோகித்து

சோணா அபி துங்க‌ப‌த்ரா-
துங்க‌ப‌த்ரா அபி ஸரஸ்வதீ
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி விரஜா
விரஜா அபி கோதா –கோதாவரீ
கோதாவரி அபி நர்மதா
என்று இங்கனம் வாக்ய விந்யாஸம் ஸ்வாமிக்கு விவஷிதம்

——–

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

இந்த ஸ்லோகத்தில் பிரயோகித்த பதங்கள் யாவுமே மங்களகரமாக அமைந்து உள்ளன
விவாஹ காலங்களிலே பூச்சூடுதல் –மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே-
குழாம் கூடி யுண்ணுதல் –ஸ பீதி ரஸ
சந்தோஷமாக அனுபவித்தல் -ப்ரமோதா|-
மங்கள ஒலி மல்குதல் –மஞ்ஜு ஸ்வநா-
இனிய உணவுகளை அனுபவித்தல் –மதுலிஹோ விதது:-
மங்கள வாத்தியங்கள் முழங்குதல் -மங்கள தூர்ய கோஷம்
இவை அனைத்துமே சொல் நடை நயத்தில் அமைந்துள்ள
அழகு அனுபவிக்கத் தக்கது

வஸ்ய வாக்த்வ பிரபாவம் இது

———————-

4- வேதத்தில் உள்ள திறமையைக் காட்டுதல்

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

உமது காதின் பெருமையோ லோக விலக்ஷணம்
அரவிந்தத்தில் மகரந்தம் ஸ்ரவிப்பது ஸஹஜமே
வால்மீகி கோகிலத்தில் சொற்களின் இனிமையை விட கிளி மொழி கோதையின் சொற்களே அது மதுரம் என்கிறார்
ஆசிரியரின் இந்த நிரூபணத்துக்கு வேத பாண்டித்யமே உதவிற்று –

—————-

5- ஆழ்வார்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்றம் கூறுதல் –

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

இவளுக்கு ஸ்த்ரீத்வத்வம் ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே –
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்றும்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்றும்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு
அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே -என்றும்
கொங்கை முலைகள் இடர் தீர இத்யாதி
பாசுரங்களால் ஸ ஹ்ருதய ஹ்ருதயங்கம் -விளங்குமே
அநுராக ரீதியில் உள்ள ஆழ்வார்கள் பாசுரங்கள் போல் அன்ரிக்கே இயற்கையாகவே அமைந்த பகவத் அனுபவ ரஸவத்தரம் விளங்குமே

குரவஸ்த்வதீயா:-அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி அன்றோ இவள் -அஞ்சுகின்ற குடி என்றுமாம்

———————-

6-ஆண்டாளுடைய திருக்குறளின் மேன்மை

இது பல பாசுரங்களிலும் பேசப்பட்டு இருந்தாலும் பத்தாவது ஸ்லோகம் மிக விலக்ஷணம்

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

கர்ணாம்ருதை: ஸ்துதி-புராதன பாதாம் அன்று -வியஸ்த பாடம் அங்கதம் ஆகும்
கர்ணாம்ருத: ஸ்துதி-என்று ஸமஸ்தமாகவே பாடம் கொள்ள வேண்டும்
கர்ணாம்ருத மான ஸ்துதி ஸதஸ் பாடின ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அனுக்ரஹம்
பெற்றுத் தந்ததே இவள் சூடிக் களைந்த மாலையின் பயனாகவே-

————-

7-விரோத ஆபாஸம் காட்டுதல்

சோணா தரேபி -10 பாசுரத்தில் விரோத ஆபாஸம் உண்டாய் இருந்தாலும்
அடுத்த பாசுரம் மிக விலக்ஷணம்
மேல் எழப்பார்க்கும் போது விரோதம் உள்ளது போல் தோன்றி
ஆழ்ந்து பார்க்கும் இடத்து விரோதம் காணாமல் பேசுவதே விரோதி ஆபாஸ லஷ்யம்

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

உத்தர -வட திசைக்கும் உத்க்ருஷ்டமாக இருபதுக்கும்
முந்தின பொருளில் விரோதி உத்பாவநமும்
பிந்தின பொருளில் அதற்குப் பரிஹாரமும்

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி -என்றும்
மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்து -என்றும்
இருந்தாலும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் உள்ள அபி நிவேசத்தாலே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிறார் என்றபடி –

———————–

8-விலக்ஷணமான உல்லேகம் காட்டி அருளுதல்

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

ஏகதேசம் தனது திருநாமம் வகிப்பதாலேயே இழந்த தூய்மை பெற்றது என்று சமத்காரமாக அருளிச் செய்துள்ளார் –

—————-

9- ஸாஸ்த்ரார்த்தங்களை விநோதமாகக் காட்டி அருளுதல்

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

நம்பியைக் காண நம்பிக்கு ஆயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்

எம்பெருமானுக்கு சேஷித்வமும் ஸகல ஜகத் பதித்தவ ப்ரயுக்தமான ஏற்றமும் பிராட்டிக்கு
ஞானீ து ஆத் மைவ மே மதம் -என்பதால் பிராட்டிக்கு ஏற்றமும் உண்டே
ரசிகா -விநோத வார்த்தைகள் இவ்வாறு உண்டே
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் ஸமத்வத்மமும் வேதார்த்த -சாஸ்த்ர -அர்த்தங்களே

————-

10-அதி லலித வாக் விந்யாஸ வைதக்த்யம்

செவிக்கு இனிய செஞ்சொற்கள் அனைத்துமே –

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

இது அதி விலக்ஷணம்
நித்தியமாக ஸூ ப்ரபாதத்தில் இந்த ஸ்லோகம் அனுசந்தேயம் –

 

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: