ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ஸ்லோகம்-
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸஸ் ததா நிர்ணய
திஸ் ரஸ் சித்தய ஆத்ம ஸம் வித கிலாதீ ஸாந தத்வாஸ்ரய
கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹ ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூந்
யத் க்ரந்த அநு சந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும
ஆகம ப்ராமாண்யம்
மஹா புருஷ நிர்ணயம்
ஆத்ம ஈஸ்வர ஸம் வித் ஸித்திகள்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோஹீ
ஸ்தோத்ர ரத்னம்
ஆகிய கிரந்தங்கள் எந்த ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டதாக ஸ்ரீ பாஷ்ய காரர் அனுசந்திக்கிறாரோ
பரமாச்சார்யராக விளங்கும் அந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கிறோம்
இதில் மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்துள்ள நியாய தத்வம் யோக ரஹஸ்யம் இவையும் இப்போது கிடைக்கப் பெற வில்லை
ஆகம ப்ராமாண்யம் பகவத் சாஸ்திரமான பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தைப் பஹு முகமாக நிலை நாட்டுகிறது
வேதம் போலவே ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் பிரபல பிரமாணம் என்று பரமாச்சாரியார் மூதலித்துப் பேசுகிறார்
ஸ்ரீ பாஷ்யகாரர் உத்பத்ய சம்பவாதிகரணத்தில் -2-2-8- இதை அடி ஒற்றியே
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ப்ராமாண்யத்தை ஸ்ரீ வியாஸ சித்தாந்தமாக நிர்ணயித்து அருளுகிறார்
கீதார்த்த ஸங்க்ரஹத்தைத் தழுவியே மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளை தெரியப் பாரினில் சொன்னார் (இராமானுச நூற்று -68-)
சதுஸ் ஸ்லோஹீ ஸ்தோத்ர ரத்தினங்களை அடி ஒற்றியே கத்யங்களையும் அருளிச் செய்தார்
சித்தி த்ரயத்தை அடியாகக் கொண்டே மஹா ஸித்தாந்த அர்த்த விசேஷங்களை அருளிச் செய்துள்ளார்
ஸித்தி -என்பது தத்வ நிர்ணயத்தைக் குறிக்கும்
ஜீவாத்மா பரமாத்மா பிராமண ஞானம் -இவற்றின் யாதாத்ம ஞானம் -நிர்ணயித்துத்
தருவதால் ஆத்ம ஸித்தி -ஈஸ்வர ஸித்தி -ஸம் வித் ஸித்தி
இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்
பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்
வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –
————-
விருத்த மதயோ அநேகாஸ் சந்தயாத்மா பரமாத்மநோ
அதஸ் தத் பரி ஸூத்தயர்த்தம் ஆத்ம சித்திர் வித்யதே
ஆத்ம பரமாத்மாக்களுடைய தத்வ ஞானம் முக்திக்கு இன்றியமையாத ஸாதனம் என்று
வேதாந்தமும் வேதாந்தம் அறிந்த சான்றோர்களின் நூல்களும் பறை சாற்றுகின்றன
இவ்விரு ஞானத்திலும் புறவாதிகளுடைய துர்வாதங்களை நிரஸித்து தத்துவத்தை உள்ளபடி அறிந்து
உஜ்ஜீவிக்கவே ஆத்ம ஸித்தி செய்யப்படுகிறது என்கிறார் ஆளவந்தார் –
நான் நான் என்று எப்போதும் தனக்குத் தான் தோன்றும் ஆத்ம விஷயத்தில்
தேஹமே ஜீவன் என்றும்
புலன்கள் ஜீவன் என்றும்
மனனே ஜீவன் என்றும்
பிராணனே ஜீவன் என்றும்
புத்தியே ஜீவன் என்றும்
சொல்லும் புற வாதங்களைக் கண்டித்து
ஜீவாத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும்
ஞான ஆஸ்ரயமாய்
நித்தியமாய்
அணுவாய்
அநேகமாய் இருக்கிறது
இப்படி இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்று
பரமாத்வுக்கே சேஷமாய் -பரதந்த்ரமாய் -சரீரமாய் இருக்கும்
என்று ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் ஆத்ம ஸித்தியில்
தேஹ இந்திரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதந
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூகீ –என்கிற ஸ்லோகத்தால் ஆத்மாவின் யாதாத்ம்ய ஸ்வரூபத்தைச் சொல்லி
மேலே யுக்திகளாலே விளக்கி அருளுகிறார்
இங்கு வ்யாபீ -எல்லா அசேதனப் பொருள்களிலும் இருக்கத் தக்கவன் -அணுவைப் போன்று ஸூஷ்மன் என்று பொருள் உரைத்தார் பாஷ்யகாரர்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -1-1-10-ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டி அருளிச் செய்தபடி
ஜீவாத்மா ஸ்வரூபத்தால் வ்யாபியாக இருப்பவன் என்று பிரமிக்க வேண்டாவே
தைத்ரியம்-அன்ன மய ப்ராண மய மநோ மயங்களுக்கு அவ்வருகே
சரீரம் பிராணன் மனம் இவற்றுக் காட்டிலும் வேறுபட்டு
விஞ்ஞான மய -என்று
வேத புருஷன் ஆத்மாவின் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறான்
சென்று சென்று பரம் பரமாய்–8-8-5-
என் ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே –8-8-4-என்று ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டியே
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் நிலை நாட்டி அருளுகிறார்
மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப் பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்
ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே
மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப்பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்
ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே
யஞ்ஞ மூர்த்தி வாதம் -17 நாள் இரவில் தேவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்வப்னத்தில்
ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம ஸித்தி அர்த்தங்களை -மாயாவாத நிரசனங்களை -பிரஸாதித்து அருள
தெளிந்து எழுந்து ஸந்துஷ்டாராக வாத சதஸ்ஸுக்கு எழுந்து அருள
அவரும் இவர் திருவடிகளிலே சரண் அடைய –
அருளாளப் பெருமாள் எம்பருமானார் திருநாமம் சாற்றப்பெற்று
ஸ்ரீ பாஷ்யகாரருடன் நம் தரிசனத்தை நிர்வகித்துப் போந்தார் அன்றோ
இவற்றால் ஆளவந்தாருடையா ஸ்ரீ ஸூக்திகளின் வீறுடைமை நன்கு விளங்கும் –
—————-
ஈஸ்வர ஸித்தியின் உள் பொருள்
வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டும்
வேத வேத்யனான பரம புருஷனை ஒத்துக் கொள்ளாமல்
யகாதி கர்மங்கள் அபூர்வத்தை உண்டு பண்ணி
அதன் வழியாக ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகிறார்கள் என்று நிரீஸ்வர வாதம் செய்யும் கர்ம மீமாம்ஸகர்களை நிரஸித்து
பிரளய காலத்தில் அழிந்து கிடந்த எல்லா லோகங்களையும் மறுபடியும் ஸ்ருஷ்டி காலத்தில்
படைத்துக் காத்து அருளும் சர்வேஸ்வரனை ஒருவன் உளன் என்று ஸ்ருதி கூறா நிற்கச் செய்தே
நிரீஸ்வர வாதம் பண்ணும் இவர்களை ஆஸ்திக நாஸ்திகர்கள் என்கிறார்
மேலும்
எவனுடைய திரு ஆராதனமாக யாகாதிகள் ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ
யாகாதிகளால் ஆராதிக்கப்பட்ட எவனுடைய அனுக்ரஹத்தினாலே பலத்தை அவர்கள் அடைகின்றனரோ
அந்தப் பரமன் இல்லாத போது கர்மமும் கர்ம பலனும் ஸித்திக்காது -என்கிறார்
மேலும்
அழிந்து
கிடந்த வஸ்துவுக்கு நாம ரூபங்கள் உண்டாவதற்கு ஒரு விதாதா வேணும்
ஆகவே
ஜகத் ஸ்ருஷ்டவாய்
ஸர்வ கர்ம ஸமாராதனாய்
ஸர்வ பல ப்ரதனான
பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியாலே அவஸ்யம் அங்கீ கரித்தே யாக வேண்டும்
என்று யுக்திகளாலே நிரூபித்து
கருமமும் கர்ம பலனுமாகிய காரணன் தன்னை -என்று
ஆழ்வார் பேணின காரணமான பரம் பொருளை
ஈஸ்வர ஸித்தியிலே நிலை நாட்டி அருளுகிறார் பரமாச்சாரியார்
இதன் இறுதியில்
ஏக ப்ரதான புருஷம் விவாதாத் யாஸிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதே ஸவத் –என்னும் ஸ்லோகத்தில்
உபய விபூதியிலும் உள்ள ஜீவ ராசிகளும்
அதிகாரி வர்க்கமான வானவர்களும்
ராஜாதி ராஜனான ஸ்ரீ மன் நாராயணனுடைய செங்கோலின் கீழ் இடரின்றி வாழ்கின்றனர்
என்னும் வேதாந்த ஸித்தாந்தத்தை ராஜ ராஷ்ட்ர த்ருஷ்டாந்தத்தாலே விளக்குகிறார்
வேதைக வேத்யன் பரம புருஷன் -என்பதே இவர் திரு உள்ளம்
ஆயினும் வேதார்த்த நிர்ணய ஸஹ காரியான தர்க்கங்களையே ஈஸ்வர ஸித்தியில் முக்யமாகக் காட்டி அருளுகிறார் –
——————
ஸம்வித் ஸித்தியில்
முக்கியமாக கேவல அத்வைத வாதத்தை நிரஸனம் பண்ணி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்
சத்தான -உளதான பொருள் ஒன்றே-அநேகம் இல்லை என்னும் வாதத்தையும்
ஞானம் -அறிவு -ஒன்றே உளது -ஜேயமும் -அறியப்படும் பொருளும் -ஞாதாவும் அறிகிறவனும் -இல்லை -என்னும் வாதத்தையும் கண்டித்து
சித் அசித் ஈஸ்வரன் என்ற தத்வ த்ரயம் -உண்மைப் பொருள்கள் மூன்றுமே உண்டு என்றும்
அப்படியே ஞானம் -ஜேயம் -ஞாதா -மூன்றும் உள்ளது என்றும் நிரூபிக்கிறார் –
மேலும்
ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -5-2-1- ஸ்ருதி வசனத்துக்கு
பரம் பொருளுக்கு குணம் ரூபம் ஐஸ்வர்யம் ஒன்றும் இல்லை என்னும் அபத்தப் பொருளை அத்வைதிகள் உரைத்தனர்
அத்தைத் தகர்த்து
பரம்பொருளான எம்பெருமானுக்கு
நற் குணங்களும்
திவ்ய ரூபங்களும்
வைபவங்களும்
பல பல உண்டு என்று நிரூபிக்கிறார் –
ஸத்யம் ஞானம் அநந்தம் -தைத்ரியம் ஆந -1-2-
விகாரம் அற்று இருப்பதால் ஸத்யமாயும்
ஞானமாகவும்
அளவற்றதாய் இருப்பதால் அநந்தமாயும் –இருக்கும் ப்ரஹ்மம்
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல கிரியா ச -ஸூவே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் –
ஸ்ருஷ்டித்தல் போன்ற பல செயல்களும் உண்டு என்று அறியப்படுகிறது
கந்தர்வ அப்சரஸஸ் ஸித்தாஸ் சகின்நர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே
கந்தர்வர்களும் அப்சரஸ் ஸுக்களும் கின்னர்களுடன் மஹா நாகங்களுடன் கூடிய சித்தர்களும்
இவனுடைய குணங்களின் எல்லையை அடைவது இல்லை
ஆகையால் இவன் அநந்தன் என்று சொல்லப்படுகிறான்
இத்யாதி பிராமண வசனங்களால்
எம்பெருமான் எல்லையில்லா நற் குணங்களையும் வைபவங்களை யுடையவன் என்று விளங்குகிறது
இவனே ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
பிரதானனன் -என்கிற பொருளையே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி சொல்கிறது
ஏக முக்யாந்ய கேவலா -என்கிற கோசத்தின் படி ப்ரதானன் -என்பதே ஏக பதார்த்தம்
மேலும்
சோழ மன்னன் ஒருவனே அத்விதீயனாக இப்போதும் உளன் -என்பதற்கு எப்படி
அவனே எல்லா மன்னர்களுக்கும் தலைவன்
அவனுக்கு சமானமாகவும் -அவனைக்காட்டிலும் உயர்ந்தவனாக இப்போதும் மற்றொரு மன்னன் இல்லை போல்
இங்கும் கொள்வது என்று மூதலித்துக் காட்டி அருளுகிறார்
யதா சோழ ந்ரூப ஸம் ராட் அத்விதீயோ அத்ய பூதலே
இதி தத் துல்ய ந்ருபதி –நிவாரண பரம் வசஸ்
ந து தத் ப்ருத்ய தத் புத்ர களத்ராதி நிஷேதகம்
ததா சுரா முர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட கோடயஸ்
க்லேச கர்ம விபாகாத்யை ரஸ ப்ருஷ்டஸ்யாகி லே ஸிதுஸ்
ஞாநாதி ஷாட் குண்ய நிதேர சிந்த்ய விபவஸ்ய தா
விஷ்ணோர் விபூதி மஹிம ஸமுத்ரத் ரப்ஸ விப்ருஷஸ் –என்னும் ஸ்லோகங்களால்
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களும் அதற்கு உட்பட்ட ஸகல தேவாதி சேதனர்களும்
எம்பெருமானுடைய விபூதியில் அடங்கியவை
ஸ்வ தந்திரமான மற்றொரு வஸ்து இல்லை -என்று நிரூபித்து
ப்ரஹ்மாத்ம நாத்மலாபோயம் ப்ரபஞ்சஸ் சித சின்மயஸ்
இதி பிரமீயதே ப்ராஹ்மீ விபூதிர் ந நிஷித்யதே -என்று
அத்விதீய ஸ்ருதியினால் புருஷோத்தமனுடைய விபூதிக்கு ஒருவிதமான இடரும் இல்லை என்று காட்டி அருளுகிறார்
இவ்வண்ணம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை
ஸம்வித் ஸித்தியில் நிலை நாட்டி அருளுகிறார் –
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-
இத்யாதியான ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை உட்க் கொண்டு
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி
வசனத்துக்குப் பொருத்தமான பொருளை விளக்கி அருள்கிறார் பரமாச்சாரியார் –
———————————————–—————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply