ஸ்ரீ திருவடி மாலை -ஸ்ரீ கழல் கோவை -ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் –ஸ்ரீ துரை ஸ்வாமி ஐயங்கார் —

நிரபாய தேசிகாய நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணாதி ரோஹணீம்
க்ரம சோதி ருஹ்ய க்ருதி நஸ்ஸ மிந்ததே பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே

நித்யமான ஆச்சார்யரால் காட்டப் பெற்ற ஸ்ரீ யபதியின் தயையாகிற படியை முறைப்படி ஏறி
க்ருதார்த்தரானவர்கள் ஸுத்த ஸத்வத்தினால் அலங்கரிக்கப்பெற்ற பரம பதத்தில் பிரகாசிக்கிறார்கள்

இப்பிரபந்தம் இரட்டைக் கழல் ஒலியாய் நவ ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது

அந்தமிலா மறை அன்பர் அடியார்க்கும் அடியேன்
அதின் கருத்தை ஆய்ந்து அளித்த ஆழ்வாருக்கும் அடியேன்
செந்தமிழால் அருள் செயலின் அடியார்க்கும் அடியேன்
சிந்தனை செய் தொண்டர்களின் அடியார்க்கும் அடியேன்
எந்தையிடம் சரண நெறி புகுந்தார்க்கும் அடியேன்
சந்தமிகு தமிழ் மறையோன் தேசிகனார்க்கு அடியேன்

ப்ரஸித்த நெடியோன் ஸ்ரீ நிவாஸன்
அருள் நெடுமையே ஸ்ரீ நிவாஸனின் நெடுமை
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பு
கோமின் துழாய் முடி ஆதி யஞ்சோதி குணங்களே
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உப நிஷத் துக்த ஸிந்தும் விமத்னன் க்ரத் நாதி ஸ்வாது காதா லஹநி தசசதீ நிர்கதம் ரத்ன ஜாதம் என்று
எழில் குருகை வரு மாறன் திருவாய் மொழி ஆயிரம் குணம் கொண்டு
தாத்பர்ய ரத்னாவளிக் கோவையை அரங்க நகர் அப்பனுக்கு ரஞ்ச நிதியாக சாத்தி மகிழ்ந்தார்
பேசு உபய வேதாந்த வள்ளலாருக்கு இக்குணக் கழல் கோவையை இட்டு மகிழ்கிறார் இவர்

அந்தணர் அந்தியூர் எல்லையில் நின்ற அனைத்துலகும் –வந்தடையும் வகை அன்பர் அறிந்து அறிவித்தனரே என்று
மெய்யுணர்வு வூட்டி -ஸரணாகதியில் மூட்டி -ஸ்ரீ நிவாஸன் பொன்னடியைப் பூட்டி –
அன்னவன் பொன்னடி யாயிரம் -பாதுகா ஸஹஸ்ரம் -பாடி அருளிய வள்ளல் பெரும் கடலின் திருக் குணக் கோவை 25 பாக்களாகக் கோக்கப்பட்டது

————————

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா விபூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே –2-

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்–3-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே –9-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே –23-

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

————–

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா வி பூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

உயர்வற உயர் நலம் யுடையோன் -திருவாய் மொழிக்கு எல்லாம் ஸங்க்ரஹம்
மங்கள உபக்ரமம்
உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே –கோல மலர்ப்பாவையின் அன்பின் அன்பு
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
மயர்வற மதி நலம் பெற்ற -அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவை அனைத்தும் வாஸனையோடே போம்படி
மதி -பகவத் விஷய ஞானமாகிய மதியையும்
நலம் -பக்தி-தலைவன் -ஸமஸ்த இறைவன் -ஸர்வ உபகாரகன்
அகணித குண வித்யா விபூஷணா-அநந்த கல்யாண குண கண மஹோ ததி
அகணித-எண்ணிக்கை இன்மை
வித்யா-வித்யை கல்வி ஞானம் தந்த்ரத் தொழில்
விபூஷணம் -ஆபரணம்
இக பர பலஸா தன தாரகனே –
இகம் -இப் பிறப்பு
பர -உயர்வு பர ப்ரஹ்ம அனுபவம்
பல -பயன்
ஸாதன -உபாயம்
தாரகனே -நடத்துவோன் -தரிப்பவன் -கொடுப்பவன்

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
ஸம்ஸார சேதனர்களை உஜ்ஜீவிக்கவே பகவத் அனுக்ரஹமே வடிவாக வந்தவர்
ஸ்ரீ ராமானுஜர் பகவத் விஷயத்தில் வைத்த ப்ராவண்யமே உருவாக்க ஸ்வாமியாய் திருஅவதாரம்

மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
தெருள் தர நின்ற தெய்வ நாயக -என்று இவரே அருளிச் செய்தபடி அடியவருக்கு மெய்யனால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
பூதத்தாழ்வாரைப் போல் ஞானத்தமிழ் புரிந்து ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய பிரான்
ஆச்சார்ய கிருபா மூலமான பகவத் கிருபையால் அருளப் பெற்றவர்
ஸ்ரீ ஹயக்ரீவரின் லாலா ஸூ தாபான லப்த ஸர்வஞ்ஞன்

வித்யா வி பூஷணா
யதிராஜரைப் போல் ஐவரும் வித்யா வாஹினி -உத்பத்தி ஸ்தானம்
யதிராஜரின் பரிபூர்ண கிருபா விசேஷத்துக்குப் பாத்திரமானவர்
அடியார்களுக்கு பரம பாக்யத்தைக் கொடுக்கும் விசுத்த வித்யா விபூஷணம்

அகணித குண
கல்யாண குணங்களே வடிவானவர் -ஸர்வ குண நிதி –

இக பர பல ஸாதன தாரகனே
பக்தர்களே தனக்குத் தாரகமாக யுடையவர்
குருவாய் நின்று திகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்ந்தனனே –

அகில புவன ரஷா சாதநாய அவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக் மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தவ் வேத ஸூடா குரவ்மே
பவது பரம பக்தி ஸ்ரீ நிதவ் வேங்கடேச

———————————-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே–2-

தாதை -தகப்பன்
குசிக குல -கௌசிக குலம் -விச்வாமித்ர குலம்
வாரிய ஸூரியின்-அநந்த ஸூரி –
மாதவர் புகழும் வேத மா மூர்த்தி என்ன விளங்கும் அவ் வனந்த ஸூரி ஓதிடாது ஒழிந்த நூல் இங்கு ஒன்றும் இல்லை என்பராம்
தோதை -தோதாரம்மையார்
மணி வயிறு வாய்த்தவனே-தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனைப் போலவும்
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனைப் போலவும்
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே-ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் -விருது பெற்றவர்
அகடி கடநா சாமர்த்தியம் பெற்றவர்
மந்திர -மறை மொழி தானே மந்த்ரம் என்ப
எம்பார் த்வய அனுசந்தானம் செய்ய பட்டர் குழந்தை மனம் வீசப் பெற்றது கண்டு மகிழிந்தாரே உடையவர்
மணம் கமழ் மாலையனே-நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
த்ரி ஜகத்தும் உஜ்ஜீவிக்க பகவான் பிரத்யேகமாக அளித்த பேறே இவர் அவதாரம்

தீப ப்ரதீபமாய் வந்த தேஜஸ் அன்றோ
கண்டா கரேஸ் ஸமஜ நிஷ்டய தாத்ம நேதி -என்று இவரே ஸங்கல்பஸூர்யோதயத்தில் அருளிச் செய்தபடி
மநோ கதம் பஸ்யதி யஸ்ஸ தாத்வம்
மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்ஸம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ
கிம் குர்வதே தஸ்ய கிரோய தார்ஹம்–ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் –

எவன் ஒருவன் ஞானி கள் மனத்தினில் ஹம்ஸம் போல் விளங்கும் தேவரீரை தன் மனத்தில் இருப்பவனாகக்
காண்கின்றானோ அவனுக்கு வாக்குகள் நான் முன்னே நான் முன்னே என்று வந்து ஏவல் புரியுமே –
ஸர்வ வித்யைகளும் இவர் இட்ட வழக்கு ஆகுமே
மந்த்ர உபதேஷ்டாவான பெரிய திருவடி நாயனார் ப்ரஸாதம் அருளப் பெற்றவர்

———————————–

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்-3-

வாழி வியாக்யான முத்திரைக்கை -பிள்ளை யந்தாதி
உன்னித்ர பத்ம ஸூபகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் -பிள்ளை யந்தாதி
வாதியார் மூலம் அற நாவின் முழக்கொடு விளங்கிய வித்தகன்
செம்பொன் மேனி மாறாத தூப்புல் மாலே
உத்தமநேயா -கண்ணன் கழல் தொழும் உற்றவரையே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
மற்ற ஒரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –

—————-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

ஸ்ரீ செல்லப்பிள்ளை -யதிராஜ வீஷா பாத்ரம் -திருநாமம் சூட்டியுகந்தார் -இதுவே யதிராஜ அருட்கலம் -என்கிறார் இங்கு
ஸ்ரீ தெய்வ நாயகன் -கவி தார்க்கிக ஸிம்ஹம் விருத்தி சாற்றி அருளினார்
திருவுடன் வந்த செழு மணி போல்-பகவத் ப்ரீதிக்கு விஷயமானவர்
விச்வாமித்ர பவித்ர குல சோததி கௌஸ்துபன் -என்று அழைக்கப் பெறுபவர்

———————-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

புத்துயிர் அளித்த நாதன் -நாதமுனிகள்
நாதேந முனி நாதேந பவேயம் நாத வாநஹம்
யஸ்ய நைக மிகம் தத்வம் ஹஸ்தா மலகதாம் கதம் –யதிராஜ சப்ததி
ஆரப்பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப்பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனி
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி -அதிகார ஸங்க்ரஹம்
நாத உபஞ்ஞம ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம்
யாமுநேய பிரபந்தை ஸ்த்ராதும் ஸம்யக்
யதீந்த்ரை ரிதமகிலதம கர்சனம் தர்சனம் ந -ஸ்ரீ தத்வ முக்தா கலாபம்

——————-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
காரணந்து த்யேய
வாரண மலை யுறை பேர் அருளாளன் -கரிகிரி யம்மான் –பேராத அருள் பொழியும் பெருமாள் –
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரான் -பெரிய திருமொழி -4-3-1-
ஹஸ்தீஸ ஸர்வ வஸசாமவஸான ஸீமாம்
த்வாம் ஸர்வ காரண மு சந்தி அநபாய வாஸ -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திரு மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும் படி கரை புரண்ட
கருணைக் கடலை இவ்வண்ணம் பேசுவீர் தென்ன பாங்கே –மெய் விரத மான்யம்
நித்யா வாஸம் வ்ருஷபமசலம் ஸூந்தராக் யஸ்ய விஷ்ணோ
ப்ரத்யா ஸீதந் ஸபதிவிநமத் பாக தேயம் நதஸ்யா -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்
ஸூத்த ஸத்வ குண மயமானதும் ப்ரணவ ஸ்வரூபமானதுமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானத்தில்
சுயமாய் உதித்து விளங்கும் ஜோதியைப் பற்றி மொழியுங்கால்
பெட்டியுள் வைத்த மரகத மணி போல் அவ்விமானத்துள் ஓங்கி பிரகாசிப்பவனும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டு அருளுபவனும்
பாற்கடல் புதல்வியின் ஆருயிர் காதலனுமான
அவ்வாஸூ தேவன் இடமே என் மனம் தாவி ஓடுகிறது -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்

——————-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

தமிழ் வேதத்தை முன்னே சொன்னது
மங்கையர் கோன் என்ற இவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலை கணாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –அதிகார ஸங்க்ரஹம்
குரு மா மணியே –ஆச்சார்ய குண பூர்த்தி யுடையவர்
நம்மாழ்வார் ஆச்சார்ய தத்வம்
யதிராஜர் -ஆச்சார்ய ரஹஸ்யம்
தேசிகன் -ஆச்சார்ய ரத்னம்
மறை விளக்கி மறை புகட்டி மறையின் நீதி ஓதினாய்
மறை விளக்கும் மெய்ப்பொருளை வாரமாக நல்கினாய்
மறை கடைந்து எழில் மணம் மிசைத் தமிழ் இயற்றினாய்
மறை முடிப்பெயர் புனைந்து உதவ நெறி யுணர்த்தினாய்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல் எட்டு மூன்று மூடறுத்த எந்தை மால் இரக்கமே
என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளே மணியே சரணம்

—————

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

பற் பல் கலை வல்ல பாவலனே
வியாஸர் வால்மீகி போல் இவரும் கவிச் சக்கரவர்த்தி

—————

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே–9–

மறையின் குருத்தின் பொருளையும் -செந்தமிழையும் கூட்டி ஒன்றத் திரித்ததே தேசிக பிரபந்தங்கள்
திருவாய் மொழியின் பத்துப்பத்தின் அர்த்தங்களும் மும்மணிக்கோவையில்
பயின் மதி நீயே வெளியும் நீயே
தாயும் தந்தையும் நீயே
உறவு உற்றதும் நீயே
ஆறு அறமும் நீயே
துணைவன் துய்யனும் நீயே
காரண கற்பகம் நீயே
இறைவன் இன்பனும் நீயே
யானும் எனதும் நீயே
நல்லதாய் வல்லாய் நீயே –என்று குண தசாக வடிவு அடைவு காணலாம்
அடைபவர் தீ வினை மாற்றி அருள் தரும் தூப்பூல் ஐயா-

—————-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

ராமாநுஜப்பிள்ளான் மா தகவால் உண்டான வண்மை
இவருடைய உண்மை ஞானத்தின் திண்மை
மெய்யனைப் போற்றிய மெய்யன்
உண்மைப் பொருளை யுண்மையாகவே காட்டிக் ஸத்ய வாதி
பகவத் ஆச்சார்யர் திருவடிகளிலே மெய்யன்பு கொண்ட மெய்யன்
மெய்யானான தேவ நாதப் பெருமாளின் செல்லப்பிள்ளை
கொடுத்த
மெய்ய நின் வியப்பே -வாதிகளை வென்ற விதத்தின் வியப்பின் ஆழ்மையை அனுபவிக்க வல்லார் யார் –

————————

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

ஸ்ரீ வராஹ நாயனார் திருவாயால் குரு குரு சப்தித்து குருவானவர் -குருபிஸ் கோணார வைர்க் குர் குரை -தசாவதார ஸ்தோத்ரம்
இரண்டு உறையாத நம் ஏனத்தின் இரண்டு உரையான சரம ஸ்லோக பலத்தை நம் ஸ்வாமி காட்டி அருளுகிறார் ரஹஸ்ய சிகாமணியில்
காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
ஸ்ரீ யபதிக்கும் யதிபதிக்கும் நடந்த ஸம்வாத மகிமையையும் சாற்றி அருளி உள்ளார்
தஞ்சப் பர கதியைத் தந்து அருளிய தயா நிதி

எல்லாருக்கும் எளிதான ஏற்றத்தாலும்
இனி உரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைதலாலும்
துணி வரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும்
கண்ணன் உரை முடி சூடி உரைத்தலாலும்
நல்லாருக்கும் தீயாருக்கும் இதுவே நன்றா
நாரணற்கே அடைக்கலமாய் நணுகுவீரே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கு அடிமை ஆகிறேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும்
இவை யறிவார் செயலுடன் என்னிசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே —அபய பிரதான சாரம்

இப் பாசுரத்தில் தேசிகன் ஸித்த ஸாத்ய உபாயமாக அமைந்து இருப்பது காண்க –

——————-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

கடலிப்பியலே-கடலில் இருக்கும் முத்துச் சிப்பியிலே
யொளி நித்திலம் என -ஒளி வீசும் நல் முத்துப் போலே
சிப்பியைப் போல் உள்ள ஜீவாத்மாக்கள் அந்தராத்மா
இருந்தாலும் வியாப்த கத தோஷம் தட்டாத அமலன் -குண மாயா ஸமாவ்ருதா

குடன் மிசை ஒன்றியும் கூடியும் நின்று கொடும் துயரு
முடன் மிசை தோன்றும் உயிரும் உயிர்க்கு இரா இறையும்
கடன் மிசை கண்டவை தானது திரளவை போர்த்த பொன்னூல்
மடன் மிசை வார்த்தை யதன் பொருள் யன்ன வகுத்தனமே -ஸ்ரீ தத்வ த்ரய சுலளகம்

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இலை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்ப்பொருளே -அதிகார ஸங்க்ரஹம்

தாரகன் -நியந்தா -சேஷி -சரீராத்மா பாவம் -பிரதான பிரதிதந்தரம்
ஜகத் ஸர்வம் சரீரம் தே

நின் திரு தனக்கு நீ திருவாகி
துய்யனும் நீயே செய்யாள் யுறைதலின்

வஜ்ராயுதம் போல் நா வீறு படைத்த ஸிம்ஹம் –

————————

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

சிறு வேதத்தை-ப்ரணவம் -வேதக்குறள் -ப்ராஹ்மண கோசோஸீ

நின்னால் அன்றி மன்னார் இன்பம்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்
நின் பால் அன்றி யன்பால் உய்யார்
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார் -மும்மணிக்கோவை –

———————-

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

முதல் ஆறு பாக்கள் -ஸ்ரீ மான் தனியனுக்கு வியாக்யானம் -இதுவே திருமந்திரம் போல் -தாரகம் -அவதார வைலக்ஷண்ய பெருமையைக் காட்டும்
7-13-பாக்கள் ராமானுஜ தனியனுக்கு வியாக்யானம் -இதுவே த்வயம் போல் -போக்யம் -ஆச்சார்ய அனுக்ரஹ விஷய மஹிமையைக் காட்டும் –
14-21-சீர் ஓன்று தனியனுக்கு வியாக்யானம் -சரம ஸ்லோகம் போல் போஷகம் -ஸ்ரீ ஸூ க்திகளின் மஹிமையைக் காட்டும் –

இவை தத்வ ஹித புருஷார்த்தங்களை நிரூபிப்பத்தில் பிரதான நோக்கு கொண்டவை

பகவான் தாரகத்தில் மேம்பட்டவர்
ஆழ்வார் போஷகத்தில் மேம்பட்டவர்
ஆச்சார்யர்கள் போக்யத்தில் மேம்பட்டவர்

——————–

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

நாதன்-குலதெய்வம் -குல தனம் -அனைத்துமே நீரே
த்வயி ரக்ஷதி ரஷகை கிம் அந் யை
த்வயி ச அரஷதி ரஷகை கிம் அந் யை–காமாஸிகாஷ்டகம்
க்யாதி லாப பூஜா ஸூ விமுகோ வைஷ்ணவே ஜனே
வியன் கலைகள் மொய்த்திடும் நா வீறு படைத்தவர்

——————–

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ–கீதை
பிதா த்வம் மாதா தவம் –ஸ்தோத்ர ரத்னம்
தந்தை என நின்ற தனித்திருமாள் -அம்ருதாஸ்வாதினி
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின் -மும்மணிக்கோவை
ஹயக்ரீவன் ஞானப்பாலூட்ட தெய்வ நாயகன் ப்ரேமையுடன் வளர்த்து அருளிய ஸ்வாமி –
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோம் வாழியே

—————

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

ஏத்தி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தையும் மாற்றினவர்
உணர்ந்தார் தங்கள் கற்பகம்
ஸ்ரீ ரெங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸம்
தமிழ் வேதத்தை இந்த வள்ளலான ஆராவமுதத்தையும்
நாள் வேதப் பண்ணகத்தான -அளவரிய வேதத்தான் வேங்கட வேதியன் -சேர்ந்து அனுபவம்
ஆராவமுதக்கடலையே உண்ட முகில் அன்றோ
கண்ணே மணியே -கண்ணினுள் மணியே -உபாய உபேயம் –
தொண்டர் உகக்கும் துணை அடி வாழியே

பிரபதன ஸூ லபனான் திருவேங்கடமுடையானின்
பத்து திருக்குணங்களையும்
1-ஆச்சார்யர்கள் மூலமாக எளிதில் அடையப்படுபவன்
2-தானாகவே ஆச்சார்யர்கள் இடம் வரும் ஸூலபன்
3-அகடி கடநா ஸமர்த்தன்
4-ஆஸ்ரிதர்களை மகிழ வைப்பதே குறிக்கோலாகக் கார்யங்கள் செய்பவன்
5-ஆபாஸ பந்துக்களை வடஜனம் பண்ணும்படி செய்து அருளுவான்
6-ஆஸ்ரிதர்களுடைய அஹங்கார மமகாரங்களை அபஹரித்து அருளுபவன்
7-தார்யாதி குணங்களை அளிப்பவன்
8-உபய விபூதிகளையும் ஆஸ்ரிதர் இட்ட வழக்காகக் கொண்டு அருளுபவன்
9-ஆஸ்ரிதர் பிரிவை க்ஷண காலமும் ஸஹியாதவன்
10-உபாயமாக இருக்கும் ஸமஸ்த கல்யாண குண பூர்ணன்

முதல் இரண்டு அடிகள் பகவானையும் அடுத்த இரண்டும் ஆச்சார்யரையும் காட்டும் பாசுரங்கள்

இந்த பத்து குணங்களையும் 15-16-17 பாசுரங்கள் காட்டும்
நந்தா விளக்காக திருவவதரித்து
நிகரில் புகழாய் வைபவத்துடன் வாழ்ந்து
தீரா வினை தீர்க்கும் ஸ்வாமியாக திகழ்ந்தவர் அன்றோ

—————

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

மதீய சிரஸி த்வத் பாத பத்ம நிவேசமே
அத்ர பரத்ர ஸாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்
யதி சக்ரவர்த்தி பத பத்ம பந்தனம்

நியத புளகி தாங்கீ நிர்ப்பர ஆனந்த பாஷ்பா
கலித நிகில சங்கா கத்கத ஸ்தோத்ர கீதி
அம்ருத லஹரி வர்ணா ஹர்ஷந்தோப பன்னா
விகித நரக பீதி விஷ்ணு பக்திர் விபாதி -ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

இந்த விஷ்ணு பக்தி என்பவள்
எப்பொழுதும் மயிர்க்கூச்சோடு கூடிய சரீரத்தை யுடையவளாயும்
பரிபூர்ண ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டும்
விஷயாந்தர பற்றுக்களை சவாசனமாக அற்றுத் தீர்ந்தவளாயும்
தழு தழுத்த குரலோடு ஸ்தோத்ர ரூபமான நாதத்தை யுடையவளாயும்
அம்ருதப்பெருக்கான வாக்கு சாதுர்யம் யுடையவளாயும்
ஸந்தோஷ பரிவாஹ நர்த்தனம் யுடையவளாயும்
நரக பயம் இல்லாதவளாயும்——–பிரகாசிக்கிறாள் என்றபடி

பெருகிய நலநிலை பெருமையின் மிகுமயல்
உருகிய நிலை மணமுயர் முகிழ் எழும் உடல்
சொருகிய விழி திகழ் சுடர் மதி புகுமிறை
கருகிய வுரு திகழ் கரி கிரி யரியே -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி

—————————–

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

வன மத கரி -வனத்தில் எத்தேச்சையாக மதம் கொண்டு திரியும் யானை
மாய வாதக்கவிகளை மாய்த்த வேழம்
இவருக்கு மாதங்கள் ஞான பக்தி வைராக்யங்களே
ஆரணங்களிலே சஞ்சாரம் செய்து விசிஷ்டாத்வைத ப்ரவர்த்தகரானவர்
ஸ்ருதிகள் இவர் இடம் இளைப்பாறலாமே

அரு கணை இறை–அடியார்கள் பக்கல் ஸூ லபனாய் எழுந்து அருளி இருக்கும் பகவானைப் போலே

வருவதோர் உறவு என வளர் இளவரசு என
மருவு நன் மகன் என வன மத கரி என
வரு விலை மணி என வடிவவர் யடைபவர்
அருகு அணை இறைவனை அருகு அணை யுடன் -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி-

மாசின் மனம் தெளி முனிவர் வகுத்தது எல்லாம் மால் உகந்த ஆசிரியர் வார்த்தைக்கு ஒவ்வாதே
தமிழ் மறை ஈன்ற தாய் ஆழ்வார்
வளர்த்த இதத்தாய் ராமானுஜர்
காதலோடு போற்றிப் பெருமை வளர்க்கச் செய்த தாய் ஸ்வாமி

கிம் விஞ்ஞானை கிம் தபோ தான யஜ்ஜை கிம் வா அந்யை த்வத் பக்தி பரித்யாக தீநை-ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

ஞானம் தபஸ்ஸுக்கள் போன்ற பல இருந்தாலும் பக்தி -ப்ரீதி -ஹீனமாய் இருந்தால் பயன் இல்லையே

பகவத் வந்தனம் ஸ்வாத்யம் குரு வந்தன பூர்வகம்
ஆச்சார்ய தேவோ பவ
தேவம் இவ ஆச்சார்யம் உபா ஸீத
குரு பரம்பரா த்யானம் பூர்வகமாகவே அனைத்தும் செய்தால் தானே பலன் பெறுவோம் –

——————

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

ந தேஹம் ந பிராணன் ந ச ஸூகம் –ஸ்தோத்ர ரத்னம்

—————–

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம் ஸமயாசிரியர் சத்திற்கும் தனி நிலை தந்தனரே

எட்டில் ஆறு இரண்டில் ஒன்றில் எங்கும் ஆறு இயம்புவார்

மூன்றில் ஒரு மூன்று மூ விரண்டும் முன் நான்கும் தோன்றத் தோலையும் துயர்

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து

நீ நற் பதம் தருதலால் கற்பகம் ஆகிறாய் -தம்மையே ஓக்க அருள் செய்யும் கற்பகம் –

——–

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

செம் போன் மேனி மாறாத தூப்புல் மாலே மறவேன் இனி
நின் பதம் ஒன்றிய அன்பரிலும் நேசம் இல்லை

————

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே–23-

————

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

ஸ்ரீ ரெங்கநாதன் வேதாந்தாச்சார்யார் என்ற விருதும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற விருதும்
ஸ்ரீ தெய்வ நாயகன் கவி தார்க்கிக ஸிம்ஹம் என்ற விருதும்

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மா நகரின் மாறன் மறை வாழ -ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்பூல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

————-

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

சேதுவான கழல் -அக்கரை சேர்த்து அருளும் திருவடி
திருமகளோடும் ஒரு காலும் பிரியா நாதன்
திண் கழலே சேது வெனச் சேர்கின்றேனே
பக்தி நயநா -பகவானைக் காட்டும் மாலை

அன்பே என்று உபக்ரமித்து
அன்பர் என்று உப ஸம்ஹாரம்
சாந்தி ரஸமுள்ள இவற்றைப் படிப்பவர்
அன்பையே அணிகலமாகக் கொண்ட தேசிகர் கிருபையால் ஸதாசார்ய அனுக்ரஹமும்
ஸத் ஸம்ப்ரதாய ஸித்தியும் பெற்று
ஸ்ரீ யபதியின் அன்புக்குப் பாத்ரமாவார் என்பது திண்ணம் –

————————————–

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதைப் போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானை மேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழி காட்டுபவன் ஆசார்யன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரே
நிகமாந்த தேசிகன் என்றும்
சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

ஶ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனாகப்பட்டவர்
அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கை யாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரத்ரம கூடிய
புதன் கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய் மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம் புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணி ப்ரவாளத்தில் :
அம்ருத ரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குரு பரம்பரா சாரம்,
முனி வாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுத சதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்க வில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ரங்கத்தில் ஆழ்வார்களின் விக்ரஹ பூஜை கூடாது அவர்களில் பலர் பிராமணர்களே அல்ல, என்றும் திவ்ய பிரபந்தம் சமஸ்க்ருதம் அல்ல அதை ஓதக்கூடாது”
என்றும் பத்தாம் பசலிகள் சிலர் தடுக்க அனைவருக்கும் ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று நிருபித்து இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே என்று முன் யோசனையாக கல்வெட்டுகளில் பதித்து
ராப்பத்து
பகல் பத்து உத்சவ மகிமையை இன்றும் நமக்கு விளங்கச் செய்தவர் நம் தேசிகர்.
ஸ்ரீ ரங்கநாதன் இதனால் மனமுவந்து
‘இனி ஒவ்வொரு நாளும்
இந்த ஆலயத்தில் சுவாமி தேசிகனை நினைவு கூர்ந்து ” ராமானுஜ தயா பாத்ரம்” எனும் தனியனை சொல்லி விட்டு பிறகு திவ்ய ப்ரபந்தம் ஓத வேண்டும்” என்று வழக்கப் படுத்தினார்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப் பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்ட போது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலை ஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணை புரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வ பக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டே வாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ”
……………………………………

நராயண பலத்தை
பாமரனுக்கும் தெளியவைத்த
13வது ஆழ்வாரே

நிகமாந்த மஹா தேசிகரே !

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: