ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-
இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்தமய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –
பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –
அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும்
கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-
அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-
கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ரா ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது –

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரணர்த்தம் –

இப்பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ
கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலேலக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகாத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந்யதி கரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது ஏழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீலம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பாரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகாரங்களில் ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தொற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்
ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ்வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவா வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –
சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்மவஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்மக்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்மக்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அச்சித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் உடையன் அல்லன் என்றும்
நிஸ்ஸமாப்யதிகன் என்றும் அருளிச் செய்கையாலே

புண்டரீகாக்ஷத்வ அபஹத பாப்மத்வாதி தர்ம யோகத்தால் நிஸ்சமாப்யதிகனான ஆதித்ய மண்டல அந்தரவர்த்தியான
புருஷன் விலக்ஷண ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்தித்த அந்தராதிகரணார்த்தம் இச்சந்தையிலே ஸூசிதம் –

ஆனால் ஈஷத் யதிகரண ப்ரமேயமான அசித் வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்யாதே ஆனந்த மயாதிகாரண ப்ரமேயமான
ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்கைக்கு அடி என் என்னில் –

பிரதான ஜீவா வ்யாவ்ருத்திகளில் பிரதான வ்யாவ்ருத்தி ஸூஷ்ம புத்திகளுக்கு எளிதாய்
அறியப்படும் ஆகையால் அவர்களுக்கு அறிக்கைக்கு அரிதான ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்தார் –

ஆனால் ஸூத்ர காரர் பிரதான வ்யாவ்ருத்தியை முந்துறச் சொல்லுவான் என் என்னில்

அசித் வ்யாவ்ருத்தியையும் அறிய மாட்டாத எளியரானவர்களுக்கு முந்துற தத் வ்யாவ்ருத்தியைக் காட்டி அவ்வளவு தெளிவு பிறந்தவனுக்கு அநந்தரம் அதிலும் ஸூஷ்மாமா சேதன வ்யாவ்ருத்தியைக் காட்டினார் –
ஆகையால் ஆழ்வார் அருளிச் செய்கைக்கு ஒரு க்ரமமும் ஸூத்ரகாரருக்கு மற்றப்படி ஒரு க்ரமமும் விவஷிதம் ஆகையால் இவ்விரண்டுக்கும் விரோதம் இல்லை –

ஆனால் அசித் வ்யாவ்ருத்தி ஸ்புடமாய் இருந்ததாகில் பொறி யுணர்வு அவையிலன் -என்று ஆழ்வார் அசித் வ்யாவ்ருத்தியை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஷ்டாந்த ரூபேண அருளிச் செய்தாராம் அத்தனை –
ஆகையால் இறே பிள்ளை -அசேதன வ்யாவிருத்தியோ பாதியும் சேதன வ்யாவ்ருத்தி என்கைக்காக பொறி  யுணர்வு அவையிலன் -என்று அருளிச் செய்தார் என்று த்ருஷ்டாந்த பரமாக வ்யாக்யானம் செய்து அருளினார் –
ஆகையால் மனனகம் என்கிற பாட்டும் இவ்வதிகரண த்வயமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

இலனது உடையனிது என்கிற மூன்றாம் பாட்டு ஆகாசாதிகரணம் தொடங்கி அதிகரண சதுஷ்டய சமாநார்த்தம் என்னுமிடத்தை தெளிய அறிவிக்கிறோம் –
ஆகாசாதிகரணத்தில்-சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஆகாச சப்தமாய்த் தோற்றுகிற
ஜகத் காரண வஸ்து பிரசித்த ஆகாசமேயாக வேணும் –

ஆகாச சப்தம் பிரசித்த ஆகாசத்தில் ரூடமாகையாலும் பரமாத்மாவினிடத்தில் ஆகாச சப்த வாச்யத்வம் அப்ரஸித்தமாகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்-சர்வ சப்தத்தால் சொல்லப் படுகிற சேதன அசேதன க்ருத்ஸ்ன பிரபஞ்ச காரணத்வம் என்ன -பாராயணம் என்று சொல்லப்படுகிற ப்ராப்யத்வ ப்ராபகங்கள் என்ன – இவை இத்தனையும் பிரசித்த ஆகாசத்துக்கு கூடாமையாலும் பரமாத்மாவுக்கே இது உள்ளது ஓன்று ஆகையால் ஆகாசதே ஆகாசயதி-என்கிற வ்யுத்பத்தியாலே ஆகாச சப்தம் பரமாத்மாவினிடத்திலும் கூடுகையாலும் ஆகாச சப்த வாஸ்யம் பிரசித்த ஆகாசம் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பிராணாதிகரணத்திலே-சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -இத்யாதி வாக்கியத்தில் பிராண சப்த வாஸ்யமான
ஜகத் காரண வஸ்து பிரசித்த பிராணனாக வேணும் -சர்வ வஸ்துவும் பிராணாதி நஸ்திதிகமாககே காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சிலாகாஷ்டாத்ய சேதனங்களிலும் சேதன ஸ்வரூபத்திலும் பிராணாதி நஸ்திதிகத்வம் கூடாமையாலே சர்வ ஜகத் காரணத்தையா நிர்திஷ்டமான பிராணன்
பிரசித்த பிராணன் அல்லன் -பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஜ்யோதிர் அதிகரணத்தில் -அத யதத பரோதிவோ ஜ்யோதிர் தீப்யதே -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாக வேணும்
ஸ்வ வாக்கியத்தில் பரமாத்மா வ்யாப்த லிங்க விசேஷம் காணாமையாலும் கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசத்தாலும்-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சர்வ பூதங்களும் த்யுசம்பந்தியான ஜ்யோதிஸ் ஸூக்குப் பாதமாக வ்யபதேசிக்கையாலும் -கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசம் பளார்த்தமாக தாதாத்மகத்வ
அநுசந்தான விதி பரமாகையாலும் நிரதிசய தீப்தி யுக்தமான ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்த ஜ்யோதிஸ் ஸூ அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

இந்த்ர பிராணாதிகரணத்தில் –பிரானோஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாமாயுரம் ருதமித்யுபாஸ்வ-இத்யாதி வாக்கியங்களில் ஹித தமோபாசன கர்மதயா நிர்திஷ்டனான இந்திரன் ஜீவனாக வேணும் –

இந்த்ர பதம் ஜீவ விசேஷத்திலே ரூடமாகையாலும் மாம் உபாஸ்வ என்று ஸ்வ ஆத்ம உபாசனத்தை அம்ருதத்வ பிராப்தி சாதனமாக
உபதேசிக்கையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டன் இடத்தில்
ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யம் அந்வயிக்க வேண்டுகையாலும் –
மாம் உபாஸ்வ என்று ஸ்வ சரீரக பரமாத்மா உபாசனத்தை விதித்தது ஒழிய கேவல ஜீவ உபாசனை விதி இல்லாமையாலும் ஹித தம உபாசன கர்மத்தயா
நிர்திஷ்டனான சேதனன் இந்திரன் அல்லன் – ஜகத்காரண பூதனான பரமாத்மா என்று நிர்ணயிக்கப் பட்டது –

இனி இலனது உடையனது என நினைவரியவன் -என்று தூரஸ்தமாய் இருப்பது ஒன்றைக் காட்டி
அத்தை உடையன் அல்லன் -சன்னிஹிதமாய் இருப்பது ஒன்றைக் காட்டி இத்தை யுடையவன் என்று நினைக்கவும் கூட அரியன் என்று சொல்லி –
நிலனிடை விசும்பிடை உருவினன் -என்று பூமி அந்தரிஷாதி சர்வ தேச வர்த்திகளான சர்வ சேதன அசேதனங்களையும் உடையவன் என்று அருளிச் செய்கையாலே
சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி –என்றும்
சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -என்றும்
பாதோஸ்ய சர்வா பூதாநி -இத்யாதி வாக்கியங்களில் உள்ள பிரசித்த ஆகாச பிராண ஜ்யோதிஸ் ஸூக்களுக்கு கடியாதபடியான
நிகில சேதன அசேதன காரணத்வ பிரகாரித்தவாதிகளை இவரும் வெளியிட்டு அருளினார் –

உருவினன் அருவினன் -என்று சித் அசித்துக்களுக்கு சேஷி என்று அர்த்தம் ஒழிய பிரபஞ்ச காரகத்வம் அர்த்தம் அன்றே என்னில்-
கார்யத்வமும் தத் சேஷத்வ பிரகாரமாகையாலே சேஷத்வ கதனத்தாலே ஜகத்துக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சித்திக்கும் என்று உபஸர்ஜனத்வ ரூப சேஷத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனால் கார்ய காரண பாவேந சொல்லாமல் சம்பந்த சாமான்யாவ லம்பனம் பண்ணுவான் என் என்னில்
பாதோஸ்ய சர்வா பூதாநி -என்று ஜ்யோதிரதிகரண யுக்தமான ஜகாத் சேஷித்வமும் சங்க்ருஹீதமாக வேணும் என்னும் கருத்தாலே அருளிச் செய்தார் –

ஆகையால் இவ்வதிகரண த்ரயத்துக்கும் இச்சந்தைக்கும் சமா நார்த்தவம் சித்தம்

அஅந் நலனுடை ஒருவனை -என்று அந்த ஆனந்த குணத்தையுடைய அத்விதீயன் என்கையாலே ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டனுக்கு ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யத்தாலே பரமாத்மாவை சாதித்த அர்த்தம் இச்சந்தையிலே ஸூசிதமாகையாலே இச்சந்தை இந்த்ர பிராணாதிகரண அர்த்தம் ஆகலாம் –

கிஞ்ச–நணுகினம் நாமே -நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று உபாசன பலமான ப்ராப்யத்வ கதந முகேந பரமாத்மாவினுடைய உபாஸ்யத்வத்தை ஸூசிப்பிக்கையாலே –
தம்மாமாயுர அம்ருதம் இத்யுபாஸ்வ-என்கிற இந்த்ர பிராண சப்த வாச்யனுக்குப் பரமாத்மத்வ சாதகமான உபாஸ்யத்வ ப்ரதிபாதக வாக்ய சமா நார்த்தகம்
இச்சந்தை என்று அறியலாம் -இப்படி மூன்று பாட்டும் அந்நாலதி கரணமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

ஆம்னாய மௌளி யுகளீ விஹாராணாம் சதாம் முதே நிரூபிதாஸ் அத்ய பாதஸ்ய காதாத்ரய சாமார்த்ததா —

இதி ஆத்யபாதகா தாத்ராயைக கண்ட்யம்-

நாலாம் பாட்டு தொடங்கி மேல் மூன்று பாட்டுக்களுக்கும் த்ரிபாதிக்கும் ஐகார்த்யம் உபபாதிக்கப் படுகிறது –
அதில் முதலிலே த்வதீய பாதமும் நாலாம் பாட்டும் ஏக கண்டமான படியை உபபாதிக்கப் படுகிறது –
த்வதீய பாதத்துக்குப் பொருளான ஜகத் சரீரத்வத்தை இப்பாட்டிலும் ஆழ்வார் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் உண்டு –
த்வதீய பதார்த்தம் ஜகத் சரீரகத்வம் என்னும் இடத்தை -த்வதீயே ஜகத் சரீரகத்வம் என்று ஸ்ருத பிரகாசிகையிலும் –
ஸ்ரஷ்டா தேஹி ஸ்வ நிஷ்டோ நிரவாதி மஹிமா -என்று பிரதம அத்யாய பாத சதுஷ்ட்யத்துக்கும் அடைவே பொருள் சொல்லும் இடத்தில்
த்வதீய பாதத்தின் பொருளை தேஹீ என்று சாராவளியிலும் ஸ்ரீ மத் ஸூதர்சன பட்டரும் ஸ்ரீ மத் வேங்கட நாதரும் அருளிச் செய்தார்கள் –

இனி த்வதீய பாத பிரதம அதிகரணத்திலே –
சர்வம் கல்விதம் பிரம்மா தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -என்கிற சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் உபதிஷ்டமான
ப்ரஹ்மம் ஜீவனாக வேணும் –

நிர்துஷ்டனான பரமாத்மாவுக்கு ஹேயாகரமான சித்த அசித் ரூபா சர்வ பாவம் கூடாமையாலும் தேவ மனுஷ்யாதி ரூபேண
கர்மக்ருதமாக ஜீவனுக்கு சர்வாத்ம பாவம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சர்வ வேதாந்த பிரசித்தமான சர்வ ஜகத் காரணத்வத்தை உபதேசிக்கையாலும் –
தஜ்ஜத்வ தல்லத்வ ததன்வங்களாலே ப்ரஹ்மத்துக்கே தாதாம்யம் உபபன்னம் ஆகையால் -தேவ மனுஷ்யாதி பாவேந ஜீவனுக்குத் தாதாம்யம் உண்டானாலும் அவனுக்கு ஜகத் காரணத்வம் கூடாமையாலும்

ப்ரஹ்ம சப்த வாச்யன் ஜீவன் அல்லன்-சர்வ ஜகத் சரீரதயா சர்வ சப்த வாச்யனான பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்வதீய அதி கரணத்திலே —
ஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந –ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஓதந உபசேசன ஸூ சிதனான அத்தா ஜீவனாக வேணும் –
போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் ஆகையாலும்-ஜீவனுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும் என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சராசர ரூப க்ருத்ஸ்ன ஜகதத்ருத்வம் ஜகத் சம்ஹார கர்த்ருத்வம் ஒழிய கர்ம நிமித்த போக்த்ருத்வம் அல்லாமையாலும்

தாதருச சம்ஹார கர்த்ருத்வம் பரமாத்மா தர்மமாகையாலும்
இவ்வாக்கிய ப்ரதிபாத்யன் ஜீவன் அல்லன் –பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில்–
ய ஏஷோ அந்தரஷிணி புருஷ த்ருஸ்யதே-என்கிற சாந்தோக்யத்தில் அக்ஷய ஆதாரதயா நிர்திஷ்டனான புருஷன் ப்ரதிபிம்ப ஜீவா தேவதா விசேஷங்களில் அந்நிய தமனாக வேணும் –
ப்ரஸித்தவ நிர்தேசத்தாலும்-த்ருஸ்யதே -இதய ப்ரோஷ அபிதானத்தாலும் பிரதிபிம்பம் ஆகலாம் –
ஜீவனுக்குச் சஷூஸ்சிலே விசேஷ ஸந்நிதானம் உண்டாகையாலே ஜீவன் தான் ஆகலாம் – ரஸ்மிபி ரேஷோ அஸ்மின் ப்ரதிஷ்டித என்கிற ஸ்ருதி பிரசித்தியாலே
சஷூஸ் ப்ரதிஷ்டித தேவதா விசேஷம் தானாகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹமேத்யாசஷதே -இத்யாதி வாக்யத்தால் ப்ரதிபன்னமான கல்யாண குணங்கள் பரமாத்மாவுக்கே யுள்ளது ஒன்றாகையாலும்
யஸ் சஷூஷி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதி பிரசித்தமான சஷூர் வர்த்தித்வத்தை -ஏஷோ அஷிணி என்று பிரசித்தவந் நிர்தேசிக்கையாலும் –
த்ருஸ்யதே இத்ய அபரோக்ஷ அபிதானம் யோகி த்ருஸ்யத்வ அபிப்பிராயம் ஆகையாலும் ப்ரதிபிம்பாதிகளுக்கு நியமேந சஷூர் வர்த்தித்தவம் இல்லாமையாலும்
அஷி புருஷன் ப்ரதிபிம்பத்திகளில் அந்நிய தமன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருதிவீ சரீரம் -இத்யாதி வாஜசநேயக வாக்ய ச்ருதனான அந்தர்யாமி ஜீவனாக வேணும் –
வாக்ய சேஷத்திலே கரணாயத்த ஞானம் அந்தர்யாமிக்கு ச்ருதமாகையாலே -என்று பூர்வபக்ஷம் வருமளவில்
ஒருவனே சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் நியமிக்கிறார் என்கிற இது பரமாத்மா அசாதாரண தர்மமாகையாலும் -த்ரஷ்டா ஸ்ரோதா என்று ரூபாதி சாஷாத்காரத்தைச் சொல்லுகிறது ஒழிய கரணாயத்த ஞானவத்தைச் சொன்னது அல்லாமையாலும் அந்தர்யாமி ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஐந்தாம் அதிகரணத்தில் –
யத்த தத் ரேஸ்யமக்ராஹ்யம் -இத்யாதி வாக்யத்திலும் -அஷராத் பரத பர-என்கிற வாக்யத்திலும் ப்ரதிபன்னமான அத்ருஸ்யத்வாதி குணகமும் அஷராத் பரத பரனும் பிரகிருதி புருஷர்கள் ஆகவேனும் -அசேதன ப்ருதிவ்யாதிகதமான த்ருஸ்யத்வாதி ப்ரதிஷேதம் தத் சஜாதீய பிரதானத்தில் உசிதம் ஆகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு உசிதம் ஆகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதி வாக்கியங்களில் அத்ருஸ்யத்வாதி குணக வஸ்துவுக்கு சர்வஞ்ஞத்வாதி குணங்கள் ஸ்ருதமாகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு கடியாமையாலும் இவ்விரண்டு வாக்யத்திலும் ப்ரக்ருதி புருஷர்கள் ப்ரதிபாத்யர் அல்லர் பரமாத்மாவே ப்ரதிபாத்யன் என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் —
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் யேஷி -இத்யாதி வாக்கியத்தில் ச்ருதனான வைச்வா நரன் பரமாத்மா என்று நிர்ணயிக்க ஒண்ணாது –
வைச்வா நர சப்தத்தை ஜாடராக்னி என்ன பூத த்ருதீயம் என்ன தேவதா விசேஷம் என்ன இவைகளில் பரமாத்மாவிலும் வேதம் பிரயோகிக்கையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்று உபக்ரமத்திலே சர்வாத்ம பூத பர ப்ரஹ்ம ஜிஜ்ஞாசயா உபசன்னரான ஓவ்ப மன்யவாதி முமுஷூக்களைக் குறித்து உபதேசிக்கப் படுகையாலும்
பரமாத்ம தர்மமான த்யுப்ரப்ருதி ப்ருதிவ்யந்த ஜகச் சரீரத்வம் ஸ்ருதம் ஆகையாலும் ஜாடராக்னியாதிகளில்
இஸ் சப்த பிரயோகம் உண்டானாலும் இவ்விடத்தில் வைச்வா நரன் பரமாத்மாவே என்று நிர்ணயிக்கப் பட்டது –

இப்பாத அர்த்தமான ஜகச் சரீரத்வம் பிரதம அதிகரணத்திலே -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்கிற விஷய வாக்யத்திலே காணலாம் –

த்வதீய அதிகரணத்தில் -குஹாம் ப்ரவிஷ்டவ் -இத்யாதி ஸூத்ர விஷயமான -தம் துர்தர்சம் கூடமநு ப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் இத்யாதி வாக்யத்திலே ஸுபரியைப் போலே ஜகத்து ஞானா திஷ்டித சரீரம் அன்று -ஸ்வரூபத்தாலே சர்வ சரீரங்களிலே ஹ்ருதய குஹ ப்ரவிஷ்டனான பரமாத்மாவுக்கு சரீரம் என்று சொல்லப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் -ய ஏஷோ அஷிணி புருஷ த்ருஸ்யதே -என்கிற விஷய வாக்யத்திலே இந்திரியங்களுக்கும் பரமாத்மா சரீரத்வம் சொல்லப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் -கேவலம் இந்த்ரியங்களே அல்ல ப்ரத்யேகம் சர்வ தத்துவங்களும் பரமாத்மா சரீரம் என்று சொல்லப் பட்டது

பஞ்சம அதிகரணத்தில் சர்வ தத்துவங்களும் சமுதாய ரூபத்தாலும் ப்ரஹ்ம சரீரம் என்று ரூபோபந் யாசாத் -என்கிற ஸூத்ரத்திலே சொல்லப் பட்டது

ஷஷ்ட்டி அதிகரணத்தில் ஜகச் சரீரத்வம் முமுஷூ உபாஸ்யம் என்று பிரபஞ்சிதம் –

இப்படி ஷட் அதிகரணியான இப்பாதத்தில் சொல்லப்பட்ட ஜகச் சரீரத்வத்தை ஆழ்வாரும்
நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் அவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது எது வீமவை இவை யுவை
அவை நலம் தீங்கவை ஆமவையாயவை ஆய் நின்ற அவரே -என்று -தம்தாமாயும்-அஸந்நிஹிதனாயும்-சந்நிஹிதனாயும்-அதூர-விப்ர க்ருஷ்டனாயும் இருந்துள்ள புருஷன் என்ன –
தூர வர்த்திநியாயும்-சந்நிஹிதையாயும்-அதூர-விப்ர க்ருஷ்டையாயும் -வினவப் படுகிறவளாயும் இருந்துள்ள ஸ்த்ரீ ஜாதி என்ன –
பஹுமந்தவ்யரில்-அவர் என்றும் இவர் என்றும் உவர் என்றும் சொல்லப் போடுகிறவர்கள் என்ன அது இது உத்து எது என்று நபும்சக லிங்க நிர்திஷ்டமான வஸ்துக்கள் என்ன –
நச்வர பதார்த்தங்கள் என்ன -நல்லதாயும் தீயதாயும் இருந்துள்ள வஸ்துக்கள் என்ன இவை இத்தனையுமாய்
காலத்ரய வர்த்தியான பதார்த்தங்களுமாய் இருக்கிற பூர்வோக்தரானவர் -என்று சாமாநாதி கரண்யத்தாலே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் யுண்டான சரீராத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே இப்பாட்டுக்கு த்விதீய பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம் –
————-
அவரவர் தமதமது -என்கிற ஐந்தாம் பாட்டுக்கு த்ருதீய பதைகார்த்யம் உண்டான படி என் என்னில்
த்ருதீய பாதத்தில் ப்ரதிபாத்யமான சர்வாத்மத்வ பிரகாரத்தை இதிலும் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு –

இப்பாதார்த்தம் சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடத்தை –த்ருதீயே சர்வாத்மத்வ பிரகார -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –

இப்பாதத்தில் பிரதம அதிகரணத்திலே —
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனாஸ் சக பிராணைஸ் ச சர்வை -இத்யாதி அதர்வணிக வாக்கியத்தில் ஸ்ருதனான த்யுப்வாத்யாயதநன் ஜீவனாக வேணும்
மன பிராண சம்பந்த நாட்ய ஆதாரத்வ பஹுதா ஜாயமானத்வாதிகளாலே -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அம்ருத ஹேதுத்வ ஆத்மத்வ சர்வஞ்ஞத்வாதி தர்ம வாசக பரமாத்மா அசாதாரண சப்தங்களாலே நிர்தேசிக்கையாலும்
சர்வ ஆதாரனுக்கு மன பிராண நாட்ய ஆதாரத்வம் கூடுகையாலும்
ஜச்சமான பஹுதா ஜாயமானத்வம் இவனுக்கும் உண்டாகையாலும் த்யுதிவாத்யாயதனன் ஜீவன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்விதீய அதிகரணத்தில் –
யத்ர நான்யத் பஸ்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான பூம குண விசிஷ்டன் ஜீவனாக வேணும்
தரதி சோகமாத்மவித் -என்று ஆத்ம ஜிஜ்ஞாசயா உபசன்னனான முமுஷூவுக்கு பிராண ஸஹ சாரித்த்வ நிபந்த நேந பிராண சப்த நிரதிஷ்டனான ஜீவனிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தமாகையாலும்
அந்த ஜீவனுடைய முக்த அவஸ்தையில் ஆனந்த வைப்புலயத்தை பூமா சப்தத்தால் நிர்தேசிக்கையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யஸ் சத்யே நாதிவததி -என்கிற வாக்கியத்தில் சத்யா சப்தத்தாலே ஸ்ருதனான பரமாத்மாவினிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தம் ஒழிய
பிராண சப்த வாஸ்ய ஜீவ உபதேசத்தில் ஸமாப்த்தம் இல்லாமையாலும் -பரமாத்மாவினுடைய ஆனந்த வைபுல்யத்தை பூம சப்தத்தால் சொல்லுகையாலும்
பூம குண விசிஷ்டன் ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் —
ஏதத் வை ததஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி –இத்யாதி வாஜசநேய வாக்கியத்தில் ச்ருதமான அக்ஷரம் பிரதான ஜீவர்களாக வேணும்
அஷராத் தமஸி லீயதே –இத்யாதி ஸ்ருதிகளிலே பிரதான ஜீவர்களிலும் அக்ஷர சப்த பிரயோகம் காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
த்ரை கால்ய வர்த்தி விகார ஜாதாத ஆதார பூத ஆகாச சப்த வாஸ்ய பிரதான ஆதாரத்வத்தாலும்
பிரசாசன ஸ்ரவணத்தாலும் அக்ஷர சப்த நிர்திஷ்டம் பிரதானமும் அன்று ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் –
பரம் புருஷன் அபித்யாயீத-என்று தொடங்கி -புரிசயம் புருஷம் ஈஷதே-என்கிற வாக்கியத்தில் த்யாய ஈஷதி கர்மதயா நிரதிஷ்டனான பரம புருஷன் சதுர்முகனாக வேணும் –
மனுஷ்ய லோகத்துக்கும் அந்தரிக்ஷத லோகத்துக்கும் உபரிதனமான ப்ரஹ்ம லோகத்தில் -ஈஷணீ யத்வாதி லிங்கத்தாலே என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யத்தச்சாந்தம் அஜ்ரமம் அம்ருதம் அபயம் –இத்யாதி வாக்கியத்தில் சாந்தத்வ அஜரத்வ அம்ருதத்வாதி தர்மங்கள் ச்ருதமாகையாலும்
சர்வ பாப நிர்முக்தனான முக்தனுக்கு ப்ராப்யதயா யுக்தமான ப்ரஹ்ம லோகம் சதுர்முக ஸ்தானம் இல்லாமையாலும்
யத்தத் கவயோ வேத யந்தே-என்று கவி சப்த வாஸ்யரான நித்ய ஸூரி களாலே துருஸ்யமான வைஷ்ணவ பதத்தை ப்ரஹ்ம லோக சப்தத்தாலே நிர்தேசிக்கையாலும்
தத்ரயனானவன் சதுர்முகன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பஞ்சம அதிகரணத்தில் –
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச -இத்யாதி சாந்தோக்ய வாக்ய ஸ்ருதமான ஹ்ருதய புண்டரீக மத்திய வர்த்தி தகர ஆகாசம் பூத ஆகாசமாதல் ஜீவன் ஆதலாக வேணும்
பூத ஆகாசத்தில் ஆகாச சப்த பிரசித்தி பிராஸுர்யத்தாலே பூத ஆகாசம் ஆகலாம் -பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்ருதமாகையாலும்
ப்ரகாசாதி யோகத்தால் ஆகாச சப்தம் ஜீவன் இடத்தில் கூடுகையாலும் ஜீவன் தான் ஆகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அபஹத பாப்மாத்வாதிகள் பூத ஆகாசத்துக்கு கடியாமையாலும் -பிரஜாபதி வாக்கியத்தில் ஸ்ருதமான பரமாத்ம சம்பத்தி லப்த அபஹத பாப்மத்வாதிகள் ஜீவனுக்கு உண்டானாலும்
தஹர வாக்ய யுக்த அதிரோஹித நித்ய சித்த அபஹத பாப்மத்வாதி வைசிஷ்ட்யம் ஜீவனுக்கு கூடாமையாலும்
பரமாத்மாவினிடத்திலும் ஆகாச சப்த பிரயோகம் சுருதியந்தர சித்தமாகையாலும் தஹர ஆகாசம் பிரசித்த ஆகாசமும் அன்று -ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட அதிகரணத்தில் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்திய ஆத்மநி திஷ்டதி -இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஸ்ருதனான அங்குஷ்ட பிரமித்தான் ஜீவனாக வேணும் –
அங்குஷ்ட ப்ரமிதத்வம் ஜீவனுக்கு சுருதியந்தர சித்தமாகையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
பூத பவ்ய ஈஸா நத்வம் ஜீவனுக்கு அநு பன்னம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கே உள்ளது ஓன்று ஆகையாலும் அங்குஷ்ட பிரமிதன்
ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது

சப்தம அஷ்டம நவம அதிகரணங்களில் –
ப்ரஹ்ம வித்யையிலே அதிகார அநதிகார விசாரம் ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தம் ஆயிற்று –

தசம அதிகரணத்தில் –
ஆகாசோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான ஆகாச சப்த வாச்யன் முக்தாத்மாவாக வேணும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்-இத்யாத்ய அனந்தர வாக்யத்திலே முக்தன் ப்ரக்ருதன் ஆகையாலும்
முக்தனுக்கும் பூர்வ அவஸ்தையில் கர்மக்ருதமாக நாம ரூப நிர்வாஹம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சகல ஜெகன் நிர்மாண துரந்தரனான பரமாத்மாவுக்கே நாம ரூப நிர்வோ ட்ருத்வம் ஸ்ருதி சத சமதிகதம் ஆகையாலும்
ப்ரஹ்ம லோக சப்த வாச்யனான பரமாத்மாவும் அனந்தர ப்ராக்ருதன் ஆகையாலும் ஆகாச சப்த நிரதிஷ்டன் முக்தன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சர்வாத்மத்வ பிரகாரத்தில் ஹேய அஸ்ப்ருஷ்டத்துவம் பிரதம அதிகரண யுக்தம் –
த்வதீய அதிகரணத்தில் நிரதிசய ஆனந்த யோகம் சொல்லப்பட்டது -இதுவும் சர்வாத்மத்வ பிரகாரம் இறே-
த்ருதீய அதிகரணத்தில் பிரசாசித்ருத்வம் பிரபஞ்சிதம் -இது சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடம் ஸ்புடம் இறே –
சதுர்த்த அதிகரணத்தில் முக்த ப்ராப்யத்வம் நிரூபிதம்-இதுவும் சர்வம் ஹா பஸ்ய பஸ்யதி–இத்யாதி படியே
சர்வ சரீரியான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே சர்வாத்மத்வ பிரகாரம் என்னகே குறையில்லை –
பஞ்சம அதிகரணத்தில் நிரதிசய பாக்ய குணத்வம் நிரூபிதம் -இதுவும் அபஹத்தை பாப்மாத்வாதி குணவத்தம் ஆகையால் சர்வாத்மத்வ பிரகாரம் என்னலாம் –
ஷஷ்ட அதிகரணத்திலே மாதாவைப் போலே அந்தரவர்த்தியான எம்பெருமானுக்கு ஜூகுப்சை இல்லாமையும் பிதாவைப் போலே சிஷகத்வேந பய ஹேதுத்வமும் சொல்லிற்று –
இதுவும் அந்தர்யாமித்வ பிரகாரம் என்னுமிடம் சித்தம் –
அதிகார அநாதிகார விசாராத்மக அதிகரண த்ரயமும் ப்ராசங்கிகம் ஆகையால் இதில் சர்வாத்மத்வ பிரகார ப்ரதிபாதனம் பண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சரம அதிகரணத்தில் ஸூ ஷூப்த்யாதி சர்வ அவஸ்தைகளிலும் பரமாத்மா சம்பந்தம் ப்ரோக்தம் -இதுவும் சர்வாத்ம பிரகாரம் என்னுமிடம் ஸ்பஷ்டம் இறே –

இப்படி த்ருதீய பாதத்தால் நிரூபிதமான சர்வாத்மத்வ பிரகாரத்தை –
அவரவர் தமதமது அறிவகை வகை அவரவர் இறையவர் என அடி யடைவர்கள் -அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-
தத்தத் அதிகாரிகள் தந்தாமுடைய ருசி பேதத்தாலே ராஜசராயும் தாமஸராயும் மிஸ்ர ஸத்வராயும் இருந்துள்ள தேவதைகளை ஆஸ்ரயிப்பார்கள் –
அந்தந்த தேவதைகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு அத்தேவதைகள் தத் தத் பல பிரதானத்தில் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி சர்வ சரீரியான சர்வேஸ்வரன் தத் தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் ஆஸ்ரயித்த மனுஷ்யர்க்கு
தத் தத் பலம் பெறும்படி இருக்கையாலே என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

அதில் பாதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தில் -பிரதம அதிகரண ப்ரமேயமான
ஹேய அஸ்ப்ருஷ்டத்வ ரூபா பிரகாரத்தை இறையவர் என்கிற பதத்தாலே பிரகாசிப்பித்து அருளினார் -அது எங்கனே என்னில்
இறையவர் என்று ஈஸ்வரத்வம் சொல்லுகையாலே சகல ஹேய அஸ்ப்ருஷ்டன் என்று சித்திக்கும் –
த்வதீய அதிகரண ப்ரமேயமான
நிரதிசய ஆனந்தயோகம் சேஷித்வ வாசியான அந்தப்பதத்தாலே தானே ஸூசிதம் -சர்வ சேஷிக்கு இ றே நிரதிசய ஆனந்தத்வம் உள்ளது -ஆகையால் இறே ஆனந்த வல்லியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் -இத்யாராப்ய வித்த பூர்ணையான சர்வ பிருத்வியுமுடையனாய் இருக்கையை மனுஷ்ய ஆனந்தமாகச் சொல்லிற்று –
இனி சர்வத்தையும் உடையவன் என்று சொல்லவே சர்வ சேஷித்வ ப்ரயுக்த நிரதிசய ஆனந்த யோகமும் தன்னடையே வரும் –
த்ருதீய அதிகரண பிரமேயமான பிரசாசித்ருத்வமும்
நியந்த்ரு ரூப சேஷிவாசி யாகையாலே அப்பத்தத்தாலே தானே ஸூசிதம் -இன்னமும் -அவரவர் விதிவழி யடைய நின்றனர் -என்று
தேவதை அந்தர்யாமித்வ கதந முகத்தாலும் பிரசாசிச்ருத்வம் யுக்தமாகலாம் –
சதுர்த்த அதிகரண ப்ரமேயமான முக்த ப்ராப்யத்வமும் –
இறையவர் -என்று -இன்நானுக்கு இறையவர் என்று விசேஷியாதே சாமாந்யேன சர்வ சேஷி என்று சொல்லுகையாலே –
இப்பத்தத்தாலே சொல்லப் பட்டது என்று அறியலாம் -ஆகையால் இறே ப்ராப்ய பாரமான உத்தர வாக்கியத்தில் நாராயண பதத்துக்கு
சேஷித்வத்திலே நோக்கு என்று முன்புள்ள முதலிகள் வ்யாக்யானம் செய்து அருளிற்று –
இந்த இறையவர் என்கிற பதம் சாமாந்யேன சர்வ சேஷித்வ வாசி என்னும் இடத்தை கலிவைரி தேசிகர் -பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடு அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு தம்மோடு வாசியற எல்லார்க்கும் ஓக்க இறையவர் ஆகையால் -என்று பகவத் விஷயத்திலே வெளியிட்டு அருளினார் –
பஞ்சம அதிகரண ப்ரமேயமான நிரதிசய போக்ய குணத்வமும்
தேவதை அந்தர்யாமித்வ கதனத்தாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -யாவாந் வா அயம் ஆகாசா -என்றும் -உப்பிய அஸ்மின் த்யாவா ப்ருதிவீ –
உபாவக் நிஸ்ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம சாவுபவ் வித்யுந் நக்ஷத்ராணி -என்கிற வாக்யத்திலே
பிரக்ருத தஹர ஆகாசத்தை -அஸ்மின் -என்று பராமர்சித்து அந்த பிரம்மா உபாசனம் பண்ணுகிறவனுக்கு இஹ லோக லப்யமாயும் பரலோக லப்யமாயும்
மநோரத மாத்ர வர்த்தியாயும் இருந்துள்ள சர்வ போக்ய ஜாதமும் இந்த தஹர ஆகாசத்தில் உண்டாய் இருக்கும் என்று சொல்லிற்று –
இவ்விரண்டு வாக்யத்திலும் பூர்வ வாக்கியத்தில் சொன்ன அக்னி வாயு ஸூர்ய சந்த்ர ப்ரப்ருதி சர்வ ஆதாரத்வ ரூபமான சர்வ சரீரத்வத்தை –
இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனர் -என்று அருளிச் செய்கையாலே
தத் வ்யவஹிதாநந்தர த்விதீய வாக்கியத்தில் சொன்ன சர்வ ஆதார வஸ்துவினுடைய நிரதிசய போக்யத்வம் இச்சந்தையிலே ஸூசிதமாகலாம் –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான மாத்ருத்வத் ஜூகுப்சா ராஹித்யமும் பித்ருவத் சிக்ஷகத்வேந பய ஹேதுத்வமும்
அந்தர்யாமித்வ கதனத்தாலே தானே சித்திக்கும் -கிஞ்ச -தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின அதி ஹீநரையும் விட மாட்டாதே ஜூகுப்ஸை யற்று
தத் தத் தேவதா முகேந ரஷிப்பான் என்று இச்சந்தையால் அருளிச் செய்கையாலும் ஷஷ்ட்டி அதிகரண பிரமேயம் இது என்று அறியலாம் –
அதிகார அநதிகார விசாராத்மகமான சப்தம அஷ்டம நவம அதிகரண ப்ரமேயமும் –
அவரவர் தமதமது -இத்யாதியாலே அதிகாரி வைவித்ய கதனத்தாலே ஸூசிதம் –
தசம அதிகாரண ப்ரமேயமான ஸூஷூப்த் யாதி சர்வ அவஸ்தாஸூ அப்ரஹாணமும்
ஸ்வேந ரூபேண நின்று ரசிக்கும் அளவன்றிக்கே தேவதாந்த்ர முகேநவும் ரஷித்து அருளும் என்கிற இப்பாட்டாலே ஸூசிதமாகலாம் –
இப்படி த்ருதீய பதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தை
இப்பாட்டாலே வெளியிட்டு அருளுகையாலே இப்பாட்டுக்கும் த்ருதீய பாதத்துக்கு ஐகமத்யம் சித்தம்
———————————
சதுர்த்த பாதத்துக்கும் -நின்றனர் இருந்தனர் -என்கிற ஆறாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில்
சர்வ வஸ்துவும் ப்ரஹ்ம கார்யமுமாய் -ப்ரஹ்ம சரீரமுமாய் -ப்ரஹ்ம ஆத்மகமுமாய் இருக்கையாலே
தத் கார்யமும் அன்றிக்கே தத் சரீரமும் அன்றிக்கே தத் ஆத்மகமும் அன்றிக்கே இருக்கிற வஸ்து இல்லை என்று
அப்ரஹ்மாத்மக வஸ்து நிஷேதம் இப்பாத ப்ரதிபாத்யர்த்தமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தையே இப்பாட்டில் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு -இப்பாதார்த்தம் இது என்னும் இடத்தை
அதத் கார்ய -அதச் சரீர -அததாத்மக வஸ்த்வ சம்பவ ப்ரதிபாத்யதே -என்று ஸ்ருதி பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –
இத்தை முகாந்தரேண-நிரவதி மஹிமா -என்று சாரா வழியிலே வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இதில் பிரதம அதிகரணத்திலே
ஜகத்தினுடைய அதததீ நத்வம் -தததீ நத்வாதர்த்த வத் -என்கிற ஸூத்ரத்திலே ப்ரஹ்மாத்மகத்வம் ஜகத்துக்கு சாதிக்கையாலே நிரஸ்தமாயிற்று –
த்வதீய அதிகரணத்தில் –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் -இத்யாதி ஸ்வதாஸ்வதர மந்திரத்தில் ஜகத்தினுடைய அப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகிறது என்று சங்கித்து
தைத்ரீயத்தில் -அஜா மேகாம் -இத்யாதி வாக்ய அநுகுண்யேந ப்ரஹ்ம கார்யத்வத்தை சாதித்து அதத்கார்யத்வத்தை நிரசித்தார் –
த்ருதீய அதிகரணத்தில் –
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா -இத்யாதி வாக்கியங்களில் சொல்லுகிற படியே சாங்க்ய ப்ரக்ரியையாலே ஜகத்து அப்ரஹ்மாத்மகம் என்று சங்கித்து
ப்ரஹ்மாத் மகத்வத்தை ஜகத்துக்கு சாதித்து அததாத் மகத்வத்தை நிரசித்தார் –
தமேவம் மந்ய ஆத்மாநம் -என்று இ றே அந்தப் பிரகரணத்திலே வாக்யம்-
சதுர்த்த அதிகரணத்தில் -சதவ்யா க்ருதாதி சப்தத்தால் பிரதிபன்னமான வஸ்துவுக்கு அத தாத் மகத்வத்தை சங்கித்து அதுவும் ப்ரஹ்மாத்மகம் என்று பரிஹரித்து ஜகத்தினுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார்
பஞ்சம ஷஷ்ட அதிகரணங்களில்
விசேஷித்து சேதனன் அத தாத்மகன் என்று சங்கித்து ப்ரஹ்மாதிமகத்வத்தை சாதித்து ஜீவனுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார் –
சப்தம அதிகரணத்திலே சேஸ்வர சாங்க்ய யுக்தமான ஜகத்தினுடைய அப்ரஹ்மாத் மகத்வத்தை சங்கித்து ப்ரஹ்ம உபாதாநத்வ சமர்த்தந முகேந
ப்ரஹ்மாதி மகத்வத்தை சமர்த்தித்து அப்ரஹ்மாத் மகத்வத்தை நிரசித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்
சமர்த்தித்த அர்த்தத்துக்கு சார்வத்ரிகத்வம் சொல்லப் பட்டது –

இப்படி ஸூத்ரகாரர் ஜகத்தினுடைய ப்ரஹ்ம அதீ நத்வ ப்ரஹ்ம கார்யத்வ ப்ரஹ்ம ஆத்மதத்வ பிரசாதந முகேந
அதாத் அதீந்ய -அதத் காரயத்வாதி நிராசனம் பண்ணி -ப்ரஹ்ம காரணத்வ ஸ்திரீ கரணம் பண்ணின அர்த்தத்தை ஆழ்வார் –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற வெந்திடரே-என்று
நிற்றலை யுடையவர் -இருத்தலை யுடையவர் -கிடைத்தலை யுடையவர் -திரிதலை யுடையவர்கள் இவை இல்லாதவர்கள் என்று சொல்லப் படுகிற
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் வஸ்துக்களையும் ஸ்வ அதீனமாக உடையவராய் என்றும் ஒரு படிப்பு பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று
நினைக்கவும் கூட அரியராய் இப்படி துர்ஜ்ஜேயராய் இருக்கும் இருப்பு என்றும் ஒருபடிப் பட்ட ஸ்வ பாவமாக யுடையராய் இருக்கிற என்னுடைய ஸ்வாமியாய்
த்ருட பிரமாணமாக வேதைக சமதிகம்யரானவரே -என்று
பிறவிருத்தி நிவ்ருத்தி மத் சர்வ வஸ்துக்களினுடையவும் ப்ரஹ்ம அதீனத்தவ ப்ரஹ்ம காரியத்த வாதிகளை சாமாநாதி கரண்யேந அருளிச் செய்கையாலே
இப்பாட்டுக்கும் சதுர்த்த பாதத்துக்கு ஐக மத்யம் ஸ்புடம் –
இங்கே எந்திடரே-என்று சாமாநாதி கரண ஸித்தமான பிராமண-தார்ட் யத்தோடே பிரதம அத்யாய அர்த்தத்தை நிகாமித்தார் ஆயிற்று –
இப்படி முதல் ஆறு பாட்டுக்கும் பிரதம அத்யாயத்துக்கும் ஐகமத்யம் வேதாந்தத்வயா சம்ப்ரதாயம் யுடையவர்களுக்கு திக் பிரதர்சனம் பண்ணப் பட்டது
அநேக உபபத்திகளை உபபாதிக்கும் அளவில் கிரந்தம் விஸ்திருமாம் என்று ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

சாரீரக அத்யாயேந காதா ஷட்க சாமார்த்ததா
யதிராண் மத நிஷ்டாநாம் திங்மாத்ரம் தர்சிதா முதே-

இதி சாரீரக அத்யாத்யாய பிரதம காதா ஷட்கைக கண்ட்யம்-

———————————–

த்வதீய அத்யாய பிரதம பாதத்துக்கும் –ஏழாம் பாட்டுக்கும் ஐக மத்யம் உண்டாம் படி எங்கனே என்னில்
பிரதம பாதார்த்தமான பரோத்பாவித தோஷ பரிஹாரத்தை இப்பாட்டில் சொல்லுகையாலே ஐகமத்யம் உண்டு –
பரோத்பாவித தோஷ பரிஹாரம் இப்பாதார்தம் என்னும் இடத்தை -தத்ர பரை ருத்பாவி தாஸ்ச தோஷா பரிஹ்ருதா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் –

இப்பாதம் தான் தச அதிகரணாத்மகமாய் இருக்கும் -இப்பத்து அதிகரணங்களிலும் பிரதம அதிகாரணம் தொடங்கி அடைவே –
1-சாங்க்ய ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
2–சதுர்முக வக்த்ருகமான யோக ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
3–கார்ய காரணங்களான ஜகாத் ப்ரஹ்மங்களுக்கு ம்ருத் கடாதிகளைப் போலெ சா லக்ஷண்யம் இல்லாமையாலும் –
4–அநேக தந்த்ர யுக்தமான பரமாணு ஜகத் காரணத்வ நிரூபணத்துக்கு ப்ராபல்யம் சொல்ல வேண்டுகையாலும் –
5–சித் அசித் ரூப கார்யகதமான பரிணாமித்வ-ஸூகித்வ -துக்கித்வாதி தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு பிரசங்கிக்கையாலும் –
6–கார்ய உபாதானங்களுக்கு நையாயிக மதரீத்யா பேதம் சொல்ல வேண்டுகையாலே நிமித்த உபாதான ஐக்யம் கூடாமையாலும் –
7–ஜீவன் ஸ்வ அபின்நனாகில் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கிக்கையாலும் –
8–லோகத்தில் தத் தத் கார்ய ஜனக சக்தி யுக்தனுக்கும் உபகரண அபேக்ஷை காண்கையாலே சர்வ சக்தி யுக்தமான பர ப்ரஹ்மமும் உபகரணம் இல்லாத போது காரணமாக மாட்டாமையாலும் –
9–ப்ரஹ்மம் கார்யமாகப் பரிணமிக்கும் போது நிரவயமான க்ருத்ஸ்ந ப்ரஹ்மமும் கார்யமாய் பிரசங்கிக்கையாலும்
10–பரிபூர்ண ப்ரஹ்மத்துக்கு -ஸ்ருஷ்டியாலே பிரயோஜனம் இல்லாமையாலும்
ஜகத் காரணத்வம் கூடாது என்று பூர்வ பக்ஷம் -ப்ராப்தமாம் அளவில் –

1–வேத விருத்த சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் பாதகம் இல்லாமையாலும்
2–யோக ஸ்ம்ருதியும் விலஷணனான சதுர்முக வக்த்ருகமாகிலும் வேத விருத்ததயா பிரமாணம் இல்லாமையாலும் –
3—கோமய வ்ருஸ்ஸிகாதி விலக்ஷண வஸ்துக்களுக்கும் கார்ய காரண பாவம் காண்கையாலே ச லக்ஷண நியமம் இல்லாமையாலும் –
4–அநேந மத நிரூபித பரமாணு காரணத்வம் கேவல தர்க்க மூலமாகையாலே வேத ப்ரதிபாத்ய ப்ரஹ்ம காரணத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் –
5–பிரளய காலத்தில் ஸூஷ்ம சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரணமாய் ஸ்தூல சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரியமாய் இருக்கையாலே
சித்த அசித் ரூப கார்யகத தோஷங்கள் விசேஷ்யமான ப்ரஹ்மத்தில் பிரசங்கியாமையாலும்
6—கார்ய உபபாதன ஐக்யம் சுருதி சத சமதிகதமாகையாலும்-
7–ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் விஸிஷ்ட ஐக்யம் ஒழிய ஸ்வரூப ஐக்யம் இல்லாமையால் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கியாமையாலும் –
8–ஷீராதிகளில் உபகரண நிரபேஷமாக தத் யாதி பாவேந பரிணாமம் காண்கையாலே பர ப்ரஹ்மத்துக்கு உபகரண நைரபேஷ்யேண காரணத்வம் கூடுகையாலும்
9—ஸ்ருதி சித்த அர்த்தத்திலே லௌகிக பிராமண ஸித்தார்த்த சாம்யம் பிரசங்கியாமையாலும்
10–பரிபூரணமான ஜகத் ஸ்ருஷ்ட்டி கேவல லீலார்த்தமாக கூடுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தில் பரோத்பாவித தோஷங்கள் பிரசரிக்காமையாலே ஜகத்துக்கு ப்ரஹ்மம் காரணம் ஆகலாம் என்று சித்தாந்திக்கப் பட்டது –

இப்பாதத்தில் பத்து அதிகரணத்திலும் சொன்ன பரோத்பாவித தோஷங்களையும் தந்நிரசனத்தையும்-
சாங்க்ய ஸ்ம்ருதயா விரோதாத் விதிமத விஹதே கார்ய வைரூப்யதோ அஸ்மின் நேகார்த்தே அநேக தந்த்ரோதித விஹதிதயா தேஹ போகா வியுக்த்யா –
கார்ய உபாதான பேதாத் ஸ்வஹித விஹிதிதி காரகஸ்தோம ஹாநே க்ருத்ஸ் நாம் சாத்யூஹ பாதாத் க்ருதி விபலதயா வ்யர்த்திதம் ப்ரத்யவித்யத் –என்கிற
ஸ்ரக்தரையாலே சாராவளியிலே வேதாந்தச்சார்யார் ஸங்க்ரஹித்து அருளினார் –

இப்பாத அர்த்தமான பரோத் பாவித தோஷ பரிகாரத்தை –
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்று த்ருடமான ஆகாசம் தேஜஸ் ஸூ வாயு ஜாலம் பிருத்வி தொடக்கமாய் விஸ்திருதமாய் இருந்துள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் காரணமாய் -அந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் சரீரங்கள் தோறும் ஆத்மா பிரவேசித்து இருக்குமா போலே அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் –
அவைகளால் தர்சிக்கப் படாதவனுமாய் -சர்வ பதார்த்தங்களில் பிரத்யேக ப்ரத்யேகம் பரிபூர்ண வர்த்தியாய்-அபவ்ருஷேயத்வ நித்ய நிர்தோஷத்வாதி குணங்களால் உஜ்ஜ்வல்யத்தை யுடைய வேதைக சமதி கம்யனாய் சராசராத்மக க்ருத்ஸ்ன பிரபஞ்ச ஸம்ஹாரியான தேவன் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

இதில் பிரதம த்விதீய சதுர்த்த அதிகரண யுக்தமான
சாங்க்ய யோக ஸ்ம்ருதயாத் அநு ரோதம் பண்ணி பிரம்மா காரணத்வத்தைச் சலிப்பிக்க ஒண்ணாது என்கிற அர்த்தத்தை
சுடர் மிகு சுருதியுள் உளன் -அப்ருஷேயத்வாதி உஜ்ஜவல்யாதிக்யத்தை யுடைய வேத ப்ரதிபாத்யன் -என்கிற இச்சந்தையாலே வெளியிட்டு அருளினார் –

த்ருதீய அதிகரண சா லாஷ்ண்ய நியமா பாவமும் –
திட விசும்பு எரி வளி- என்று தொடங்கி-விலக்ஷணமான ஆகாச வாயு வாதிகளுக்கும்
ப்ரஹ்ம காரணத்வம் ப்ரதிபாதிதம் ஆகையால் சித்திக்கிறது -கிஞ்ச -திட விசும்பு என்று காரணத்தவத்தால் வந்த தார்டயத்தை ஆகாசத்துக்கு அருளிச் செய்தார் –
ஆகாசாத் வாயு -என்று வாயு வாதி காரணத்வம் ஆகாசத்துக்குச் சொல்லப் பட்டது –
சாங்க்யாதிகளும்-ஆகாச வாயுக்களுக்கு சாரூப்பியம் இன்றிக்கே ஒழிந்தாலும் கார்ய காரண பாவத்தை அங்கீ கரித்தார்கள் –

அப்படியே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ச லக்ஷணம் இல்லாவிடிலும் கார்ய காரண பாவம் கூடும் என்று ஸூ சிப்பித்து அருளினார் -திட விசும்பு -என்கிற இச்சந்தையாலே –

ஆனால் ஸ்ரீ பாஷ்யகாரர் சா லக்ஷண்ய நியமாபாவத்துக்கு கோமய வ்ருஸ்ஸிகாதி திருஷ்டாந்தத்தை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஸ்யதே என்கிற சவ்த்ரபாதம் சாஸ்த்ர ப்ரத்யக்ஷ சித்தார்த்தங்களுக்குப் பொதுவாய் இருக்கிறது –

தர்சநாத் ஸ்ம்ருத்ஸ் ச -என்றும் -த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் -இத்யாதி ஸூத்ரங்களில் தர்சன த்ருஷ்ட சப்தங்கள் சுருதி பரமாகக் காண்கையாலே
த்ருஸ்யதே என்கிற இப்பதான் சுருதி சித்தார்த்தத்தைக் காட்டுகிறது –
அதிகரணாந்தரே —
உப சம்ஹார தர்சனான் நேதி சேந்ந ஷீரவத்தி –என்றும் -தேவாதிவதபி லோகெ -என்கிற ஸூத்ர த்வயத்தாலே லௌகிகமான
ஷீரத்வத்தையும் வைதிகரான தேவர்களையும் ப்ரஹ்மத்துக்கு சாமக்ரீ நைரபேஷயேண காரணத்வம் கூடும் என்னும் இடத்தை த்ருஷ்டாந்தமாக ஸூத்ரகாரர் உதாஹரித்தார் –
லௌகிக த்ருஷ்டாந்தத்தில் வைதிக த்ருஷ்டாந்தம் மிகவும் அலௌகிகமான ப்ரஹ்ம விஷயத்தில் பரிக்ராஹ்யம் என்னும் இடத்தை –
தேவாதீநாம் வேதாவகத சக்தீ நாம் த்ருஷ்டாந்த தயா உபாதா நாம் ப்ரஹ்மணோ வேதாவகத ஸக்தேஸ் ஸூக க்ரஹணாயேதி பிரதிபத்தவ்யம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப்படி லோக வேத சித்தங்களில் த்ருஷ்டாந்த கதநம் காண்கையாலே -திட விசும்பு -என்கிற இச் சந்தைக்கு கார்ய காரண சா லக்ஷண்ய நியமாபாவ ஸூசகத்வம் சித்தம்

பஞ்சம அதிகரண யுக்தமான சித் அசித் ரூப ஜகத்கத தோஷம் ப்ரஹ்மத்தில் பிரசங்கியாது என்கிற அர்த்தமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற சந்தையிலே சரீரங்களில் ஜீவாத்மாவைப் போலே சகல பாதாரத்திலும் வியாபித்து
அந்யைர த்ருஸ்யனாய் இருப்பன் என்று ஸ்புடமாகச் சொல்லப் பட்டது –

ஷஷ்டி அதிகரண யுக்தமான கார்ய உபாதான ஐக்யம் –
திட விசும்பு எரி வளி நீர் நிலமிவை மிசை படர் பொருள் முழுவதுமாய் -என்று ஜகத் ப்ரஹ்மணோஸ் சாமாநாதி காரண்ய கதநத்தாலே அதி ஸ்புடமாக அறியலாம் –

சப்தம அதிகரண யுக்தமான ஹிதா கரண -அஹித கரணாதி தோஷ பிரசங்க பரிஹாரமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து -என்று ஜீவ ஈஸ்வரர்களுக்கு சரீராத்ம பாவேந பேதத்தைச் சொல்லுகையாலே ஸ்புடமாக அறியலாம் –

அஷ்டம அதிகரண ப்ரமேயமான சாமக்ரீ நைர பேஷ்யமான ப்ரஹ்ம காரணத்வம் கூடும் என்கிற இதுவும்
இவை யுண்ட சுரனே -என்கிற இடத்தால் ஸூசிதம் –அது எங்கனே என்னில் -சூரன் -என்று ஆச்சர்ய சக்தி யோகம் சொல்லப்பட்டது –
சுரருக்கு இறே காரகா பேஷை இன்றிக்கே சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்ட்டி கூடுவது –
யதா தேவா தய ஸ்வே லோகே சங்கல்ப மாத்ரேண ஸ்வ அபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி ததா அசவ் புருஷோத்தம க்ருத்ஸ்னம் ஜகத் சங்கல்ப மாத்ரேண ஸ்ருஜதி -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் தேவாதி வதபி லோகே -என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே அருளிச் செய்தது –
ஆக -சுரர் -என்கிற இப் பதத்தாலே சாமக்ரீ நைரபேஷ்யேண காரணத்வ ப்ரசாதனம் பண்ணின அஷ்டம அதிகாரண ப்ரமேய ஸூசகம் சித்தம் –

எங்கும் பரந்து –சுடர் மிகு சுருதியுள் உளன் -என்கிற இவ்வளவாலே நவம அதிகரண யுக்தமான
யதா சுருதி அ லௌகிக அர்த்த ஸ்வீகாரம் பண்ண வேணும் -என்கிற அர்த்தம் சொல்லப் பட்டது -இவையுண்டா சுரனே -என்கிற இச்சந்தையாலே
பரிபூர்ணனுக்கும் லீலா ரஸா நிஷ்பாதந அர்த்தமாக ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்தார் -அது எங்கனே என்னில்

அமரா நிர்ஜரா தேவாஸ் த்ரிதசா விபுதாஸ் ஸூ ரா -என்று ஸூரா சப்தத்துக்கு தேவ சப்தம் பர்யாயமாக நாம அநு சாணம் இருக்கையாலே ஸூரன்-என்றால் தேவன் என்று சொல்லிற்றாம் –

தேவ சப்தத்துக்கு -தீவு கிரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷூ -என்று தாது பாடம் உண்டாகையாலே
க்ரீடாவத்தவமும் தேவ சப்தார்த்தம் என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆகையால் இறே வேத புருஷன் ஜகத் சம்ஹாராதிகள்
கேவல லீலா ரூபம் என்கிற கருத்தால் ஸூபால உபநிஷத்தில் -தம பரே தேவ ஏகி பவதி -என்று காரண வஸ்துவில் தேவ சப்த பிரயோகம் பண்ணினான் –

ஆகையால் இச்சந்தை பரிபூர்ணனுக்கு லீலா ரூபேண ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்று சொல்லுகிற தசம அதிகரண அர்த்தம் என்னக் குறையில்லை –
இப்படி த்வதீய லக்ஷண பிரதம பாதத்துக்கு ஏழாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம்
————————–
தர்க்க பாதத்துக்கும் அஷ்டம நவம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில் –
தர்க்க பாதத்தில் பரபஷ ப்ரதிஷேபம் பண்ணப் படுகிறது –ஸ்வ பஷ ரக்ஷணாய பரபஷா பிரதி ஷிப்யந்தே -என்று இறே இப் பாத அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையால் பரபஷ ப்ரதிஷேப பரமான இவ் விரண்டு பாட்டுக்கும் தர்க்க பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு –

அதிகரண அஷ்டகாத்மகமாய் இருக்கிற இப் பாதத்தில்
பிரதம அதிகரணம் தொடங்கி -க்ரமமாக அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதிகளான சாங்க்யர்களுடைய
மத ப்ரக்ரியையையும் பரம அணு காரண வாதிகளான வைபாஷிகருடைய மத ரீதியையும்
புத்த மதஸ்தர்களில் வைத்துக் கொண்டு பாஹ்யார்த்தா ஸ்தித்வ வாதிகளான வைபாஷிக சவ்த்ராந்திகர்களுடைய ஜகத்தினுடைய
க்ஷணிகத்தவ வாதத்தையும் ஞான மாத்ரா ஸ்திதவ வாதியான யோகாசாரனுடைய ஞானாகார வ்யதிரிக்தமான அர்த்தாகாராபாவ ப்ரதிபாதனத்தையும்
மாத்யமிகனுடைய சர்வ ஸூந்யா உபபாதன பங்கியையும் -ஜைனர்களுடைய அநைகாந்திகத்வ ப்ரதிபாதன பிரகாரத்தையும்
பாஸூபதர்களுடைய வேத விருத்தச்சார தத்வ உபபாதனத்தையும் பல படிகளாலே நிரசித்து பஞ்சம வேத பாராதாதி ப்ராசஸ்தமாய்
பரம புருஷ பிரணீதமாய் இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தினுடைய நிராங்குச ப்ராமாண்யத்தையும் ஸூத்ரகாரர் சாதித்தார்

இப்பாத அர்த்தத்தை –
பாதே அஸ்மின் காபிலஸ்தை கணபு கபி மதைர் புத்த வைபாஷிகாத் யைர் யோகாசாராபிதா நைஸ் ஸூகத மத ரஹஸ் ஸூந்யா வாத ப்ரசக்தை அர்ஹத்சித் தாந்த பக்தை பஸூபதி சமயஸ்தாயிபிஸ் சாவரோதம் ஷிப்த்வா அதோ பஞ்ச ராத்ரம் சுருதி பதமவதத் பஞ்சமாம் நாய தர்சீ -என்று ஸ்ரீ சாராவளியிலே ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இம்மதங்களில் சாங்க்ய வைசேஷிக பாஸூ பதர்கள்-
கபிலாகம அநுமாந பாஸூபாத சாஸ்திரங்களை வேதங்கள் அநுக் ராஹாகங்கள்-என்று அப்ரதானம் ஆகிலும் வேதத்தையும் அங்கீ கரித்தார்கள் –
தத் வ்யதிரிக்த மதஸ்தர்கள் வேதத்தை உபஸர்ஜன ப்ரமாணமாகவும் அங்கீ கரியாதே வேத அப்ராமாண்ய ப்ரசாதன பூர்வகமாக ஸ்வ மத உபாதானம் பண்ணுவார்கள் –

இப்படி இரண்டு வர்க்கமாய் இருந்துள்ள பாஹ்ய மாதங்களில் பிரதம வர்க்கத்தை நிரசித்தமையை எட்டாம் பாட்டாலே ஸூசிப் பிக்கிறார் –

த்வதீய வர்க்கத்தை நிரசித்தமையை ஒன்பதாம் பாட்டாலே ஸூசிப் பித்து அருளுகிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அளித்து அமைத்து உளனே -என்று ப்ரஹ்மாதி களாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவத்தை யுடைய மூல ப்ரக்ருதி தொடக்கமான
சகல ஜகத்துக்கும் வரிஷ்ட காரணமாய் –அவற்றை எல்லாம் சம்ஹரித்து அருளின பராத்பரனான ஈஸ்வரன் ருத்ரன் அந்தர்யாமியாய்க் கொண்டு
திரிபுரத்தை சம்ஹரித்து ஜகத் சம்ஹாரமும் பண்ணுகிறான் -சதுர்முக அந்தர்யாமியாய்க் கொண்டு இவ்வருகு உள்ள ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து
தேவர்களுக்கு ஞான பிரதானத்தையும் பண்ணுகிறான் -என்று இப்பாட்டாலே
ஜகத்தினுடைய ப்ரஹ்மாத் மகத்துவத்தையும் ஷேத்ரஞ்ஞர்களான ப்ரஹ்ம ருத்ரர்களுடைய
ஸ்ருஷ்ட்ருத்வ ஸம்ஹ்ருத் வாதிகள் பகவத் அதீனம் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்கையாலே அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதியான சாங்க்ய மத ப்ரக்ரியையும்
ருத்ர பாரம்யா உப பாதகம் பண்ணுகிற பாஸூபத ப்ரக்ரியையும் பரம அணு காரண விதியையும் நிரசித்து அருளினமை ஸூசிதம் –

அது எங்கனே என்னில்
சாங்க்ய யுக்தமான அப்ரஹ்மாத்மக பிரதான நிரசனம் –சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் -என்று –
பிரகிருதி மஹத் அஹங்காராதி தத்துவங்களுக்கும் பரமாத்தவே காரணம்-என்று அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

அவை முழுதுண்ட பரபரன்-என்று சர்வ ஜகத் ஸம்ஹாரி என்கையாலே சாணக்யா மாதத்தில் ஈஸ்வரனை
அங்கீகரியா விடில் கேவல பிரதானம் ஸ்வ தந்திரமாய்ப் பரிணமிக்கும் போது ஸ்வர்க்க வ்யதிரேகேண ப்ரதிஸர்க்க அவஸ்தை இன்றிக்கே ஒழிய
வேணும் என்று உபபாதனம் பண்ணுகிற -வ்யதிரேகாந அவஸ்தி தேஸ்சாந பேக்ஷத்வாத்-என்கிற ஸூத்ரா யுக்த தூஷணம் ஸூசிதம் –

நிரவயவமான பரம அணுக்களுக்கு ஜகத் காரகத்வம் கூடாது என்கிற நையாயிக தூஷணமும்
ப்ரக்ருதி மஹத் அஹங்காராதிகளுக்கும் ஈஸ்வரனே வரிஷ்ட காரணம் என்று அருளிச் செய்த இச்சந்தையாலே தானே ஸூசிதம் –

பாஸூபத யுக்தமான ருத்ர பாரம்ய ப்ரதிஷேதமும்-ருத்ரனுடைய சம்ஹர்த்ருத்வ திரிபுர தஹநாதிகளும்-அரன் எனப் புரமொரு மூன்று எரித்து உலகு அழித்து உளன் -என்று
பகவத் அந்தர்யாமித்வ க்ருதமாக அருளிச் செய்கையாலே வ்யக்தமாகச் சொல்லப் பட்டது -ஸூத்ரகாரர் பண்ணின ருத்ர பாரம்ய நிஷேததக்கும் உப லக்ஷணம் என்னும் கருத்தாலே
சதுர்முகனுடைய ஸ்ரஷ்ட்ருத்வ ஞான ப்ரதத்வாதிகளும்பகவத் அனுபிரவேச க்ருதம் என்று ஆழ்வார் சதுர்முக பாரம்யத்தையும் நிஷேதித்தார் –
ஸூத்ரகாரர் சதுர்முக பாரம்ய நிஷேதம் பண்ணாமைக்கு அடி மஹா மல்ல நிராசன ந்யாயேன ருத்ர பாரம்ய நிஷேதம் பண்ணவே
சதுர்முக பாரம்ய நிஷேதமும் தன்னடையே வரும் என்று கருத்து -ஆழ்வார் மந்த விஷ ந்யாயேன சதுர்முக பாரம்யத்தையும் எடுத்து நிஷேதித்தார் –
———————————–
இனி இரண்டாம் வர்க்கத்தை
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குணமுடைமையில் உளன்
இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே -என்று ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ உளன் என்கிற சொல்லாலே சாதித்தாயாகில் உண்மையே சித்திக்குமது ஒழிய
உன்னுடைய மதமான இல்லாமை சித்தியாது –

உளன் அலன் என்கிற சொல்லாலே இல்லாமையை சாதித்தாயாகில் லோகத்தில் இல்லை என்கிற சொல்லுக்கு ஸ்தூல அவஸ்தை போய் ஸூஷ்ம அவஸ்தா பன்னமாய்
இருக்கின்றமை அர்த்தமாம் ஒழிய உன்னபிமதமான ஸூந்யத்வம் சித்தியாது –

இப்படி உண்மையும் இன்மையும் ஆகிற குண த்வய யுக்தமாக ஸ்வ பக்ஷ பர பக்ஷ ரீத்யா
சித்திக்கையாலே அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப குண விசிஷ்டமாக பர ப்ரஹ்மம் சித்திக்கும்

இப்படி அநபிமதமான அர்த்தம் அங்கீ கரிக்க வேண்டுகையாலே அனந்த குண விபூதிமானாகவும் எம்பெருமானையும் அங்கீ கரிக்கலாம் என்று நிரசித்து அருளினார் –

அதில் இந்த மதங்களில்
புத்த மதத்தில் ஜகத் க்ஷணிக வாதிகளான வைபாஷிக மதஸ்தர்கள் -பார்த்திப ஆப்ய தைஜஸ வாயவீய பரம அணுக்கள்
பிருதிவி அப் தேஜோ வாயு ரூபேண சம்ஹதங்களாகும் -அதில் நின்றும் சரீர இந்த்ரிய விஷய சங்காதங்கள் உண்டாம் -அதிலே
சரீர அந்தர்வர்த்தியாய் க்ராஹகாபிமாநா ரூடமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மா வென்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று உபபாதித்த அர்த்தத்தை
சமுதாய உபய ஹேதுகே அபி தத பிராப்தி -என்கிற ஸூத்ரத்திலே யாதொரு பரம அணு ஹேதுக ப்ருதிவ்யாதி பூத சமுதாயம் யுண்டு
யாதொரு ப்ருதிவ்யாதி ஹேதுக பூத இந்திரியாதி ரூப சமுதாயம் யுண்டு இவ்விரண்டு சமுதாயத்தின் நின்றும் ஜகத் ஆத்மக சமுதாய உத்பத்தி கூடாது
பரம அணுக்களும் ப்ருதிவ்யாதி பூதங்களும் க்ஷணிகம் என்று அங்கீ கரிக்கையாலே ஷணத்வம் சிகளான பரம அணுக்களும் பூதங்களும் எப்போதான் சம்ஹதங்களாகப் போகிறது –
எப்போதான் ஞான விஷயீ பூதங்களாய் ஹாந உபாதா நாதி வ்யவஹாராஸ் பதமாகப் போகிறது என்று இத்யாதி யுக்தியாதிகளாலே சாரீரகத்தில் சொன்ன க்ஷணிகத்தவ வாத நிரசன க்ரமத்தை-ஆழ்வாரும் அஸ்தி நாஸ்த்ய உபய வ்யவஹார தசையிலும் ஸ்தூல ஸ்ஷ்ம உபய அவஸ்தா விசிஷ்டமாக வஸ்துவினுடைய ஸ்திரத்தவ ப்ரதிபாதகமாய் இருக்கிற
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்கிற இச்சந்தையாலே ஸூசிப்பித்து அருளினார் –

பிரதி சங்க்யா அபிரதி சங்க்யா நிரோத அப்ராப்திர விச்சேதாத் -என்கிற ஸூத்ர ஸ்ரீ பாஷ்யத்திலே
சத உத்பத்தி விநாசவ் நாம அவஸ்தாந்தராபத்திரேவ அவஸ்தாயோகி து த்ரவ்யமேகமேவ ஸ்திரமிதி காரணாத நந்யத்வம் கார்யஸ்யோப பாத யத்யபி ரஸ்மாபி –
தத் அந்நயத்வம் இத்யத்ர ப்ரதிபாதிநம் நிர்வாணஸ்ய தீபஸ்ய நிரன்வய விநாச தர்சநாத் அந்யத்ர அபி விநாசோ நிரன்வய அநுமீயத இதி சேந்ந –
கட சரவாதவ் ம்ருதாதி த்ரவ்ய அநு வ்ருத்தியுபா லப்தயா சதோ த்ரவ்யஸ்ய அவஸ்தாந்தரா பத்திரேவ விநாச இதி நிஸ்சிதே சாதி ப்ரதீபாதவ்
ஸூஷ்மத சாபத்த்யாப் யநுபலம் போப்பத்தேஸ் தத்ராபிய வஸ்தாந்தரா பத்தி கல்ப நஸ்யைவ யுக்தத்வாத் -என்று
உளன் எனில் உளன் -என்கிற இப்பாட்டுப்பாத்தியை உட்க்கொண்டு வ்யாக்யானம் செய்தமை ஸ்பஷ்டமாய் இருக்கையாலே இவ்வதிகரண பிரமேயம் இதிலே உண்டு என்னும் இடம் சித்தம் –

இனி சவ்ராந்திக மாதத்தில் ஞான உத்பத்தி காலத்திலேயே அர்த்தம் இல்லாமையால் ஞான விஷயத்வம் இல்லை என்ன ஒண்ணாது
ஞான விஷயத்துவமாவது -ஞான உத்பத்தி ஹேதுத்வம் இறே-ஆனால் சஷூராதிகளுக்கும் ஞான விஷயத்வம் வாராதோ என்னில் ஸ்வாகார சமர்ப்பணேன ஞான ஹேதுவுக்கே
ஞான விஷயத்வம் ஆகையாலே வாராது -அர்த்தமானது ஞானத்திலே ஸ்வாகாரத்தை சமர்ப்பித்து நஷ்டமாய்ப் போனாலும் ஞானகதமான நீலாத்யாகாரத்தாலே அநு மிக்கப் படும் –
ஆகையால் அர்த்த க்ருதமே ஞான வைச்சித்ர்யம் என்று உபபாதித்த பிரமேயத்திலே தர்மி நஷ்டமானால் தத் தர்மங்களுக்கு அந்யத்ர ஸங்க்ரமணம் கண்டது இல்லை –
அப்படியே அர்த்தம் நஷ்டமாய் தத் ஆகாரம் ஞானத்திலே ஸங்க்ரமிக்கிறது என்ன ஒண்ணாமையாலே ஞானத்தாலே அர்த்தம் அநு மிக்கப் படுகிறது என்ன ஒண்ணாது
என்று சாரீரிகத்திலே சொன்ன தூஷணமும்
அவனுருவம் இவ்வுருவுகள் என்று ஐந்த்ரியிகத்வத்தை விஷயங்களுக்கு அருளிச் செய்கையாலே விஷயங்கள் அநு மேயங்கள் என்று புலிக்கையாலே ஸூசிதமாயிற்று –

யோகாசார மதஸ்தர்கள் -விஞ்ஞான மாத்திரமே யுள்ளது -அர்த்தத்வம் இல்லை -அர்த்தத்துக்கும் வ்யவஹார யோக்யத்வம் ஞான ப்ரகாசாயத்தம் என்று கொள்ள வேணும் –
அந்யதா ஸ்வ பர வேத்யங்களுக்கு அதிசயம் அற்றுப் போம் -பிரகாசமான ஞானத்துக்கு நிராகாரத்துக்கு பிரகாசம் கூடாமையாலே சா காரத்வம் அங்கீ கரிக்க வேணும் –
இனி தோற்றுகிற ஆகாரம் என்று ஞானத்தினுடையது ஒழிய அர்த்தத்தினுடையது அன்று -இந்த ஆகாரத்துக்கு பஹிரவபாசம் பிரமக்ருதம் -இத்யாதி யுக்திகளாலே
அர்த்த ஸூந்யத்வ உபபாதனம் பண்ணினத்தை
ஞாதாவுக்கு விஷய வ்யவஹார ஹேதுவான ஞானத்தவம் முதலிலே நிர்விஷயமாகில் இல்லையாயே விடும் -இத்யாதி யுக்திகளாலே சாரீரகத்திலே நிரசித்தமையை –
அவனுருவம் -அவனருவம்- பரந்தே ஒழிவிலன்-என்கிற சந்தைகளாலே அர்த்த தத்வ அங்கீகார முகேன ஸூ சிப்பித்து அருளினார் –

இன்னமும் -நா பாவ உப லப்தே -என்கிற ஸூத்ரத்தில் -அர்த்த தத்வம் இன்றிக்கே ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாதந ஸ்வபாவமான ஞான தத்துவமும் சித்தியாது
என்று சொன்ன யுக்தியும் – உருவம் -என்கிற பாதத்தால் சித்திக்கிறது -அது எங்கனே என்னில் -உருவம் -என்கிற சப்தம் -ஸ்தூல பதார்த்த வாசி என்னும் இடம் சம்பிரதிபன்னம்
ஐந்த்ரியிகத்தவம் உள்ளதுக்கு இறே ஸ்தூலத்வம் உள்ளது -இந்த ஐந்த்ரியிகத்வ ப்ரதிபாதனத்தாலே -அது ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாவந
ஸ்வபாவமான ஞானத்தவம் இல்லாதே ஒழியும் என்கிற யுக்தியை ஸூசிப்பிக்கையாலே அது சித்திக்கிறது –
மாத்யமிக பஷ நிரஸா க்ரமம் இப்பாட்டு என்னும் இடம் சர்வ ஸம்ப்ரதிபன்னம் ஆகையாலே அதி ஸ்புடமாய் இருக்கும் –
ஜைன மதஸ்தர்கள் சொல்லுகிற ஜகத் அநைகாந்திகதவை நிராசமும் சத்தாயாகிலும் அசத்தாயாகிலும் இருக்கும் ஒழிய சத் அசத்தாய் இராது என்று –
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள் -என்கிற பாட்டுப் பாதியாலே அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

ஆனால் பிள்ளை -சர்வ ஸூந்யவாதியை நிரசிக்கிறார் இப்பாட்டாலே என்றும் -ஸர்வதா அநு பபத்தே என்கிற ஸூத்ர பாஷ்யம் இப்பாட்டை யுட் கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று என்றும்
மாத்யமிக மத மாத்ர நிராச பரமாக வ்யாக்யானம் செய்து அருளுகையாலே இது அவருக்கு அநபிமதம் அன்றோ என்னில்-இப்பாட்டில் பாதங்களில் மாத்யமிக நிராசனம்
நேரே தோற்றுகையாலே தாமத நிராச பரமாக யோஜித்து அருளினார்
வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே -முதல் திருவாய்மொழி பூர்வத்விக அர்த்தம் -என்று அவர் தாமே அருளிச் செய்கையாலே இந்த பிரதம தசகத்திலே தத் ஸூசநம் ஆவஸ்யகம்
காதாந்தரத்திலே வைபாஷிகாதி மத நிராசம் அநவசரக்ரஸ்தமாய் இருக்கும்

இப்பாட்டில் பாதங்களும் பூர்வ யுக்த ப்ரக்ரியை யாலே வைபாஷிகாதி மத நிராச ஸூ சகங்கள் என்னும் இடம் ஸ்வரசதா ஸம்ப்ரதிபன்னம்
வைபாஷிக மத நிராச ஸூத்ர பாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளை உட் கொண்டு ப்ரவ்ருத்தம் என்னும் இடம்
பூர்வமேவ உபபாதிதம் ஆகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை –

பாஞ்ச ராத்ர ப்ராமாண்ய சமர்த்தந சாரீரக அம்சம் ப்ராசங்கிகம் ஆகையாலும்-வேத பாஞ்சராத்ரங்களுக்கு அபவ் ருஷேயத்வ நித்ய நிர்துஷ்டத்வ பரம புருஷ வக்த்ருகத்வங்கள்
நிரங்குச ப்ராமாண்ய ஹேதுக்களாய் இரண்டுக்கும் பாத்தாலே வந்த பேதம் ஒழிய பாஞ்சராத்ரத்துக்கும் வேத துல்ய ப்ராமாண்யத்தில் தட்டில்லாமை யாலே –
சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -என்று அபவ் ருஷேயத்வாதி உஜ்ஜ்வல்யவத் வேத ப்ராமாண்ய ப்ரதிபாதனத்தாலே தந் ந்யாயேந
பாஞ்சராத்ர ப்ராமாண்யம் சித்திக்கும் என்கிற கருத்தாலும் ஆழ்வார் உபேக்ஷித்து அருளினார்

ஸூத்ரகாரர் தந்த்ர சாமான்ய ப்ரயுக்தமான ம்ருது ப்ரபஞ்சர்களுக்கு உள்ள காலுஷ்ய சாந்த்யர்த்தமாக வேத துல்ய ப்ராமாண்யம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
தத் ப்ராமாண்ய சமர்த்தனம் பண்ணினார் -ஆக அஷ்டம நவம காதைகளுக்கும் தர்க்க பாதத்துக்கு ம் ஐகமத்யம் சித்தம் –

பத்தாம் பாட்டுக்கும் நிகமனப் பாட்டுக்கும் த்ருதீய துரீய பாதங்களுக்கு ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில் –
ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை இப்பாட்டுக்களாலே அருளிச் செய்கையாலே ஐக்யம் உண்டு –

வியத்பாத பிரதம அதிகரணத்திலே –
சாந்தோக்யத்தில் வியதுத்பத்த்ய ஸ்ரவணத்தாலே வியத்து ப்ரஹ்ம கார்யம் அன்று என்று சங்கித்து
தைத்ரீயத்தில் வியதுத் பத்தி ஸ்ருதமாகையாலும் சாந்தோக்யத்திலும் சர்வ சாகா ப்ரத்யய ந்யாயேந வியதுத் பத்தி வருகையாலும் வியத்து ப்ரஹ்ம கார்யம் என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யவிஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகிறது என்று சங்கித்து
ஆகாசாதி சரீரக பரமாத்மாவின் இடத்தில் நின்றும் வாயுவாதி உத்பத்தி ஒழிய கேவல பூர்வ தத்துவத்தில் நின்றும் வாயவாதி யுத்பத்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
தோயேந ஜீவான் வ்யஸஸர்ஜ -இத்யாதி ஸ்ருதிகளாலே ஜீவனுக்கும் உத்பத்தி யுண்டு என்று சங்கித்து
ந ஜாயதே ம்ரியதே-இத்யாதி ஸ்ருதிகளாலே நித்யத்வம் ஸ்ருதமாகையாலும் உத்பத்தி சுருதி ஞான சங்கோச விகாசத்தைச் சொல்லுகிறது ஒழிய
ஸ்வரூப அநித்யத்தைச் சொல்லாமையாலும் -ஜீவனுக்கு உத்பத்தியில்லை என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் —
ப்ராசங்கிகமாக– யோ விஞ்ஞாநே திஷ்டன் -இத்யாதி ஸ்ருதிகளாலே ஆத்மா கேவல ஞான ஸ்வரூபன் என்று சங்கித்து –
விஞ்ஞா தாரம் இத்யாதி ஸ்ருதிகள் ஜீவனை ஞாதா வென்று ப்ரதிபாதிக்கையாலும் ஸ்வரூபத்தை ஞானம் என்கிறது ஸ்வயம் பிரகாச த்ரவ்யத்வ ப்ரயுக்தமாய்
ஞாத்ருத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் ஆத்மா ஞாதாவே என்று பரிஹரித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் -ஹந்தா சேத் -இத்யாதி ஸ்ருதிகளாலே நிஷித்தமாகையாலே ஸ்வரூபம் அன்று என்று சங்கித்து
ஸ்வர்க்க மோஷாதி பல சாதன போதக சாஸ்த்ர ப்ரயோஜன சித்த்யர்த்தமாக கர்த்ருத்வம் அங்கீ கரிக்க வேண்டுகையாலும்
கர்த்ருத்வ நிஷேத சுருதி சாம்சாரிக கிரியைகள் சத்வ ரஜஸ் தமோ குண சம்சர்க்க க்ருதங்கள்-ஸ்வரூப ப்ரயுக்தங்கள் அன்று என்று
சொல்ல வந்தது ஆகையாலும் கர்த்ருத்வம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
பூர்வ அதிகரண சித்த கர்த்ருத்வம் பராதீனம் என்று நிர்ணயித்தார்

சப்தம அதிகரணத்தில் –
ஜீவன் ப்ரஹ்மத்தோடு அத்யந்த பின்னனும் அன்று –ப்ராந்தப் ப்ரஹ்மமே ஜீவனாய் நிற்கிறதும் அன்று -சத்யோ பாத்யவச் சின்ன ப்ரஹ்மமே ஜீவனாய் இருக்கிறதும் அன்று –
வஸ்துதோ ப்ரஹ்ம அபின்னமாய் ப்ரஹ்மாம்சம் ஆகையாலே அத்யந்த பேதம் இன்றிக்கே இருக்கிறான் ஜீவன் என்று ஜீவ ஸ்வரூபத்தை நிர்ணயித்தார் –

துரீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவ உபகாரணங்களான இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந பிரதி பாதந ஸ்ருதியாலே சித்தம் என்று சங்கித்து –
அந்த சுருதி சர்வஞ்ஞனான ஜகத் kaarana ப்ரஹ்மத்தை ப்ரதிபாதிக்கிறது ஒழிய இந்திரியங்களை சொன்னது அல்லாமையாலும்
சுருதியந்தரத்தில் இந்திரிய உத்பத்தி கண்ட யுக்தமாகையாலும் நித்யத்வம் கூடாது என்று பரிஹரித்தார் –
த்வதீய அதிகரணத்தில் –
ப்ராசங்கிக்கமாக இந்த்ரியங்களினுடைய சங்க்யா நிர்ணயம் பண்ணினார் –
த்ருதீய அதிகரணத்தில் –
இந்திரியங்கள் விபுக்களாக சுருதி பிரபன்னங்கள் என்று சங்கித்து உத்க்ரந்தி ஸ்ரவணத்தாலே-விபுக்கள் அல்ல அணு பரிமாணங்கள் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
ப்ராசங்கிகமாகவே முக்கிய பிராணன் கேவல வாயு மாத்ரமும் உசுவாச நிச்வாசாதி கிரியையும் அன்று -வாயுவே அவஸ்தாந்த்ர பன்னமாய்
பிராணன் என்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
உதக்ரந்யாதி ஸ்ரவணத்தாலே பிராணனுக்கும் விபுத்வம் கூடாது -அணுத்துவமே முக்கிய பிராண பரிமாணம் என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஜீவனுக்கும் அக்னியாதி தேவதைகளுக்கும் இந்த்ரியாத் யதிஷ்டானம் ஸ்வா தந்தர்யேண உண்டு என்று சங்கித்து
பரமாத்மா அதீன அதிஷ்டானமே அவர்களுக்கு உள்ளது என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
பிராணசப்த நிர்திஷ்டங்கள் எல்லாம் இந்திரியங்கள் என்று சங்கித்து ஸ்ரேஷ்ட பிராண வ்யதிரிக்த ப்ராணன்கள் இந்திரியங்கள் என்று நிர்ணயித்தார்
அஷ்டம அதிகரணத்தில் –
பிரபஞ்ச வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகமாக வேணும் என்று சங்கித்து அதுவும் தச்சரீரக பரமாத்ம கர்த்ருகம் என்று நிர்ணயித்தார் –

இப்படி பாத த்வயத்தாலே நிர்ணயித்த அர்த்தத்தை
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த வண்டம் இது என நில விசும்பு ஒழிவறக் கரந்த சில இடம்தோறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -என்று -விஸ்திருதமாய் சைத்திய ஸ்வபாவமான சமுத்திர ஜல பரமாணுக்கள் தோறும் பரிசமாப்ய வர்த்தியாய்
விஸ்திருதமான அண்டம் என்னும்படியாய் பூமியாகாச விபாகம் இன்றிக்கே அத்யல்ப சரீரங்களிலும் அந்த அந்த சரீரங்களில் ஸ்வயம் ப்ரகாசத்வேந மிளிர்ந்து கொண்டு
இரா நின்றுள்ள ஆத்ம வஸ்துக்களிலும் அந்யைர த்ருஷ்யனாய் சர்வ பதார்த்தங்களில் ப்ரத்யேகம் பரிசமாப்ய வர்த்தியாய்
இந்த ஜகத்தை ஸ்வோதரஸ்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறான் த்ருட பிராமண வேதைக சமதி கம்யனே -என்றும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிர நிறை யாயிரத்து இவை பத்தும் வீடே
என்று -த்ருடமான ஆகாச தேஜோ வாயு ஜல ப்ருத்வீ கதமான வரிஷ்ட சப்த தாஹ கத்வ கமன சாமர்த்திய சைத்திய ஷமா ரூப ஜெகதாகாரனாய் இருக்கிற
சர்வ ஸ்மாத் பிறனுடைய திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த சப்தார்த்த புஷ்கல்யத்தை யுடைய ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இத்திருவாய் மொழி மோக்ஷ ப்ரதம்-என்றும்
ஆழ்வார் இதில் ஒன்றரைப் பாட்டாலே ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை வெளியிட்டு அருளி மேல் பாட்டுப் பாதியாலே –
வீடுமின் முற்றத்தாலே வெளியிடப்படுகிற உத்தர தவிகார்த்தமான பரதவ ஞானத்தினுடைய மோக்ஷ சாதனத்வத்தையும் உப ஷேபித்து அருளுகிறார் ஆதல் –
பூர்வ த்விக ப்ரதிபாத்யமான பரத்வ விஷயம் இத்திருவாய் மொழி என்று பிரதிபத் யார்த்தத்தை புத்தி சவ்கர்ய அர்த்தமாக ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் ஆதல் –

இனி வியத்பாத பிரதம அதிகரண நிர்ணீதாகா சோத்பத்தி –
நில விசும்பு ஒழிவறஎன்று பிருதிவ்யாதிகள் போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று அருளிச் செய்கையாலே சித்திக்கிறது –
இன்னமும் -ஆகாசஸ் ஸம்பூத என்கிற தைத்த்ரீய ஸ்ருதியிலே ஆகாச உத்பத்தி சொல்லி இருக்கையாலே
சாந்தோக்யத்திலும் வியதுத்பத்தி சர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே வரும் என்கிற அர்த்தமும்
பூமி ஆகாசம் என்கிற விசேஷம் இன்றிக்கே பூமி போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று சொல்லுகிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது –
அது எங்கனே என்னில்-ஆகாச உத்பத்தி கதனத்தாலே தைத்ரீய ஸ்ருத்யர்த்தம் தோற்றி அம்முகேந வியதுத் உத்பத்திய வசன சுருதி நிர்வாகமும் தோற்றுகையாலே ஸூசிதம் –

ஆக இவை எல்லாவற்றாலும் இச்சந்தை பிரதம அதிகரணார்த்தம் என்னக் குறையில்லை –

த்விதீய அதிகரண யுக்தமான
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகமாட்டாது என்று நிர்ணயித்த அர்த்தமும்
சர்வ தத்துவங்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வ ப்ரதிபாதனம் பண்ணுகிற -பரந்த தண் பரவையுள் -என்று தொடங்கி முழுக்க இப்பாட்டாலே அறிவிப்பித்தமை அதி ஸ்புடமாய் இருக்கிறது –

த்ருதீய அதிகரண யுக்தமான ஜீவ உத்பத்தி நிஷேதமும் –
இடம் திகழ் பொருள்தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -இடம் திகழ் -என்று ஆத்ம தத்துவத்துக்கு வ்யாபகத்வம் சொல்லுகையாலே
வியாப்பிய பதார்த்தங்களினாலே நசிப்பிக்கப் படாது என்று சித்திக்கும் -இவ்வர்த்தத்தைப் பரமபுருஷன் தானே –
அவிநாசிது தத் வித்தி யேந ஸர்வமிதம் தத்தம் -விநாசமவ்ய யஸ்யாஸ்ய ந கஸ்ச்சித் கர்த்துமர்ஹதி-என்று வெளியிட்டு அருளினான் –
இந்த ஸ்லோகத்தை –ஆத்ம நஸ்த்வ விநாசித்வம் கதமித்ய த்ராஹ– அவிநாசிது-இதி–தத் ஆத்ம தத்வம் அவிநாசீதி வித்தி –
யேந -ஆத்ம தத்வேந சேதநேந தத் வ்யதிரிக்தமித்தம் அசேதன தத்வம் சர்வம் தத்தம் வ்யாப்தம் -வ்யாபகத் வேந நிரதிசய ஸூஷ்மதவாத்
ஆத்மநோ விநாசா நர்ஹஸ்ய தத் வ்யதிரிக்தோ ந கஸ்ச்சித் பதார்த்தோ விநாசம் கர்த்துமர்ஹதி -தத் வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூலத்வாத்
நாஸகம் ஹி சஸ்த்ர ஜலாக்னி வாய்வாதிகம் நாஸ்யம் வ்யாப்ய சிதிலீ கரோதி முத் கராதயோ அபி ஹி வேக வத் சம்யோகேந
வாயுமுத்பாத்ய தத் த்வாரேண நாசாயந்தி அத ஆத்ம தத்வம் அவிநாசி -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் வ்யாக்யானம் செய்து அருளினார் –
இப்படி ஜீவனுடைய வ்யாபகத்வ கதனத்தாலே ஜீவனுடைய நித்யத்வம் சித்திக்கையால் த்ருதீய அதிகரண ப்ரமேயம் இச்சந்தை என்னக் குறையில்லை –
சதுர்த்த அதிகரண நிர்ணீதமான ஜீவனுடைய ஞாத்ருத்வமும் –
திகழ் பொருள் தொறும்-என்கிற சந்தையாலே தானே ஸூசிதம் ஆகலாம் -அது எங்கனே என்னில் -திகழ் பொருள் -என்கிற இதுக்கு -ஞானத்தவ ஆஸ்ரயமான வஸ்து என்று
இறே அர்த்தம் -இனி சாஷாத் பரம்பரவ் தாஸீந்யேந ஞானத்தவ ஆஸ்ரயம் என்னும் போது-ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சித்திக்கும் –
ஆனால் ஞாதா என்று அருளிச் செய்யாதே திகழ் பொருள் -என்று ஞான த்ரவ்யம் என்று அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
ஞாதா என்றால் ஞான குணகத்வ மாத்ரம் தோற்றும் ஒழிய ஞான ஸ்வரூபத்வம் தோற்றாமையாலே -உபயமும் தோற்றுகைக்காக இங்கனே அருளிச் செய்தாராம் அத்தனை –
ஞான பதத்துக்கு உபய பரத்வம் உண்டு என்னும் இடம் ஜென்மாதி கரணத்தில்-சத்யம் ஞானம் -என்கிற சுருதி வ்யாக்யான ஸ்ருத பிரகாசிகையிலே
ஸூதீக்களுக்கு ஸூ வ்யக்தமாக அறியலாம் -ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னும் இடம் சித்தம்
தத்வ த்ரயம் -29-என்று ஜகத் குருவான பிள்ளை அருளிச் செய்த க்ரமத்திலே ஞாத்ருத்வ கதனத்தாலே கர்த்ருத்வமும் ஸூசிதம் ஆகையால்
ஜீவ கர்த்ருத்வ ப்ரசாதனம் பண்ணின பஞ்சம அதிகரண பிரமேயமும் –
திகழ் பொருள் தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான ஜீவனுடைய பகவத் அதீன கர்த்ருத்வ ப்ரசாதனமும்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்று ஜீவனுடைய பர அதீன உபயுக்த -அந்த பிரவேச உப லஷிதா நியமன கதனத்தாலே ஸூசிதமாகிறது –
ஜீவனுடைய கர்த்ருத்வம் பர அதீனம் ஆகிறது -பரமாத்மாவினுடைய அந்த ப்ரவிஸ்ய நியமனத்தாலே என்று ஹ்ருதீ கரித்து
பராத்து தச் ஸ்ருதே -என்கிற ஸூத்ரத்தத்தில் உள்ள சுருதி பதத்துக்கு அந்த ப்ரவிஷ்டா இத்யாதி ஸ்ருதிகளை ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக உதாஹரித்து அருளினார் –

சப்தம அதிகரண யுக்தமான
ஜீவ வஸ்து ப்ரஹ்ம விசேஷண த்வேந ப்ரஹ்ம பின்னமுமாய் ஸ்வ நிஷ்டம் இன்றிக்கே ஒழிகையாலே அத்யந்த பின்னமும் அன்றிக்கே இருக்கும் என்கிற பொருள்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் என்று வ்யாப்ய வியாபக பாவ ரூப சரீராத்மா பாவ ப்ரதிபாதநத்தினாலே ஸ்புடமாக அறியலாம்-
துரீய பாத த்ருதீய சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்த அதிகரணங்களில் இந்திரிய சங்க்யாதி நிரூபணம் ப்ரசக்த அநு பிரசக்தமாகையாலே அத்தை உபேக்ஷித்து
அவசிஷ்ட பிரதம அஷ்டம அதிகரண நிரூபிதார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார் –

பிரதம அதிகரணத்தில் –
இந்த்ரியங்களுடைய நித்யத்வம் இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந ப்ரதிபாதந ஸ்ருதியாலே என்று சங்கித்து அந்த சுருதி பரமாத்மாவினுடைய
பிரளய கால அவஸ்தையைச் சொல்ல வந்தது ஒழிய இந்த்ரியங்களுடைய நித்யத்வத்தைச் சொல்ல வந்தது அன்று -என்று நிர்ணயித்த அர்த்தம் –
பரமாத்மாவினுடைய பிரளய கால ஸ்திதியை ப்ரதிபாதிக்கிற -இவையுண்ட கரனே –என்கிற சந்தையாலே சொல்லப்பட்டது என்று அறியலாம் –

அஷ்டம அதிகரணத்தில் –
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தா சதுர்முகன் அல்லன்-சமஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான பரமாத்மாவே என்று நிர்ணயித்த அர்த்தமும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரன்-என்று வ்யஷ்டி சமஷ்டி ஸாதாரணயேந
சர்வ ஜகாத்தும் பிரம்மா கார்யம் என்கிற இச்சந்தையாலே அதி ஸ்புடமாக அறியலாம்

ஆனால் இச்சந்தைகளில் அநு ப்ரவேச கதனத்தாலும் சாமாநாதி கரண்ய நிர்தேசத்தாலும் சரீராத்மா பாவம் தோற்றும் ஒழிய கார்ய காரண பாவம்
தோற்றாமையால் இச்சந்தைகள் வியதாதிகளினுடைய ப்ரஹ்ம கார்யதா பிரகார சோதந பர அதிகரணங்களுக்கு ஸங்க்ராஹங்கள் ஆனபடி எங்கனே என்னில்-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய -என்றும் -தத் ஸ்ருஷ்வா ததேவ அநு ப்ராவிஸத்-இத்யாதி ஸ்ருதிகளில் அநு பிரவேச பூர்வகமாக ஸ்ருஷ்ட்டி உக்தையாகையாலே
கேவல ஸ்ருஷ்ட்டி ப்ரதிபாதந ஸ்தலங்களில் அநு பிரவேசமும் கேவல அநு பிரவேச ப்ரதிபாதன ஸ்தலங்களில் ஸ்ருஷ்டியும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலே
விவஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யாதிகளில் நீர்ணீதம் ஆகையாலே அநு பிரவேச உக்தயா ஸ்ருஷ்டியும் சித்தம் என்று இச்சந்தைகள் ஸங்க்ராஹகங்கள் ஆகலாம் –
ஆகையாலே பத்தாம் பாட்டுக்கும் நிகமன பாட்டுக்கும் த்வதீய லேசான த்ருதீய துரிய பாதங்களோடே ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

இப்படி பூர்வ த்விக ப்ரதிபாத்யமான ப்ரஹ்ம காரணத்வ –அபாத்யத்வங்களை –
ஆழ்வாரும் முதல் திருவாய் மொழியாலே வெளியிட்டு அருளினமை வேதாந்த த்வய சம்ப்ரதாயம் யுடையவர்க்குத் தெளியலாம் படி திங்மாத்ரேண தர்சித்தம் ஆயிற்று –

—————————–

சாரீரக உத்தர த்விகத்துக்கும் வீடுமின் முற்றத்துக்கும் ஐகமதியம் உண்டாம் படி எங்கனே என்னில்
உத்தர த்விக்கத்தில் ப்ரதிபாத்யமான சாதன தத் பலங்களை இத்திருவாய் மொழியிலும் பர உபதேச முகேந வெளியிட்டு அருளுகையாலே ஐகமத்யம் உண்டு –
ஆனால் நம்பிள்ளை இத்திருவாய் மொழி த்ருதீய அத்யாய ப்ரதிபாத்யமான உபாசன பரம் என்று அருளிச் செய்தாரே ஒழிய -த்ருதீய துர்ய அத்யாய ப்ரதிபாத்யமான
உபாய உபேய பரம் என்று அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில் -உபாசன சப்தம் பலத்துக்கும் பர தரிசன அர்த்தம் என்று அருளிச் செய்தார் –
யத்வா-இந்த உபாசன சப்தம் லக்ஷணையாலே ஞான சாமான்யத்தைச் சொல்லுகிறது – மோக்ஷ சாதநீ பூத உபாயமும் பல ரூப ப்ரஹ்ம அனுபவமும்
ஞான அவஸ்தா விசேஷம் ஆகையாலே இரண்டையும் இச்சப்தத்தாலே ஸங்க்ரஹித்து அருளினார் என்றும் காணலாம் –
இவ்விரண்டும் ஞான அவஸ்தா விசேஷம் என்னும் இடத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்திலே-இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது -ஒரு ஞான விகாச விசேஷம் -இத்தாலே
சாத்யமாய் பிராப்தி ரூபமான உபேயமாவதும் ஒரு ஞான விகாச விசேஷம் -இவற்றில் உபாயமாகிற ஞான விகாச விசேஷம் -கரண சாபேஷமாய் -சாஸ்த்ர விஹிதமுமாய் –
ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூபிக்க தர்மங்களோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ பிரதிநியத குணாதிகளினாலே நித்ய ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயமாகிற ஞான விகாச விஷயம் கரண நிரபேஷமுமாய்-ஸ்வபாவ பிராப்தமுமாய் குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
என்று உபாய விபாக அதிகாரத்தில் ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

அதவா -வீடு செய்ம்மினே -என்று தொடங்கி-திண் கழல் சென்றே -என்னும் அளவும் மோக்ஷ உபாயத்தை பாட்டுக்கள் தோறும் வாக்யார்த்த தயா பிரதானமாகவும்
ததங்க தத் பலங்களை பதார்த்த தயா அப்ரதானமாகவும் ஆழ்வாரும் அருளிச் செய்கையாலே -ஸ்வர்க்க காமோ யஜேத-என்கிற விதத்தில் ஸ்வர்க்க சாதனம்
வாக்யார்த்த தயா பிரதானமாய் சுவர்க்கம் பதார்த்த தயா அப்ரதானமாய் இருக்கிறதைப் பற்ற இவ்வாக்கியத்தை ஜ்யோதிஷ்டோம ரூப சாதன பரம் என்று
அபியுக்தர்கள் வ்யவஹாரிக்கும் க்ரமத்திலே ஸ்ரீ நம்பிள்ளையும் வ்யவஹாரித்து அருளினார் –
ஆகையாலே பல ப்ரதிபாதனம் உபஸர்ஜனதயா ஆழ்வார் அருளிச் செய்தமை நம்பிள்ளைக்கும் விவஷிதமாகையாலே உபாசன பரம் வீடுமின் முற்றவும் -என்கிற
ஸ்ரீ ஸூக்தி யோடு உபாய உபேய ப்ரதிபாதக சாரீரக உத்தர த்விக சமா நார்த்தம் இத்திருவாய் மொழி என்கிற பிரமேயத்துக்கு விரோதம் இல்லை –

இதில் முதல் பாட்டு -த்ருதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
இரண்டாம் பாட்டும் மூன்றாம் பாட்டும் -த்வதீய பாதார்த்தமாகவும்
நாலாம் பாட்டு தொடங்கி மேல் நாலு பாட்டுக்களும் குண உப சம்ஹார பாதார்த்தமாகவும்
எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் சதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

இதில் வைராக்ய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவன் ஸூக்ருத கர்மா பல அனுபவார்த்தம் தேஹாத் தேஹாந்த்ர பிரவேசம் பண்ணும் போது அவ்விடங்களில் தேஹாரம்பக பூத ஸூஷ்மங்கள் லபிக்கையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் போக வேண்டினமை இல்லையென்று சங்கித்து பஞ்சாக்கினி வித்யோக்த ப்ரக்ரியையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் தேஹாத் தேஹாந்தர பிரவேசம் பண்ணுகிறான் என்று நிர்ணயித்தார் –
இந்த அதிகரணத்தில் காதா சித்கமாயாகிலும் பூத ஸூஷ்ம பரிஷ்வங்கம் இன்றிக்கே நிர்த்துக்கனாய் இருக்கைக்கும் அவகாசம் இல்லை என்று
வைராக்ய ஜனன அர்த்தமாக யாவன் மோக்ஷம் ப்ரக்ருதி சம்பந்தம் அவர்ஜனீயம் என்று நிஷ்க்ருஷ்டமாயிற்று –
கிஞ்ச -பாக்தம் வா அனாத்மா வித்த்வாத்-என்கிற ஸூத் ரத்தாலே தேவ ப்ருத்ய பாவத்தை அவலம்பித்து தத் ப்ரயுக்த கிலேச கரம்பிதமாய் இருக்கிற
ஸ்வர்க்க போக அனுபவத்தினுடைய ஷயிஷ்ணுத்வம் சாதிசயத்வமும் ஆவிஷ்க்ருதம்-
த்விதீய அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அனுபவ அனந்தரம் ஜீவனானவன் க்ருத்ஸ்ன கர்மபலமும் புக்தமாகையாலே கர்ம சம்பந்தம் அற்றே இழிகிறான் என்று சங்கித்து –
ரமணீய சரணர்கள் ரமணீய யோனியை அடைவர்கள் -கபூய சரணர்கள் குத்ஸித யோனியை அடைவார்கள் என்று சுருதி சொல்லுகையாலே
கர்ம சம்பந்தம் உடையனாயே இழிகிறான் என்று நிர்ணயித்தார் -இதிலும் ஸூஷ்ம தேஹத்துக்கும் காரணதயா சகல சம்சார நிதான கர்ம சம்பந்தம்
முக்தி பர்யந்தம் அனுவ்ருத்தமாய் இருக்கிறது என்று சம்சார தோஷம் யுக்தமாயிற்று –
த்ருதீய அதிகரணத்தில் –
அநிஷ்ட அதிகாரிகளான பாப கர்மாக்களுக்கும் சந்த்ர பிராப்தி உண்டு என்று சங்கித்து இஷ்டா பூர்த்தாதி சத்கர்ம ரஹிதர்களுக்கு
பித்ருயான மார்க்கத்தாலே கைமணம் இல்லாமையால் சந்த்ர பிராப்தி இல்லை என்று நிர்ணயித்தார் -இதிலும் -க்ராமம் கச்சன் வ்ருஷ மூலான் யுபசர்ப்பதி-என்ற
நியாயத்தாலே யாகிலும் ஸ்வர்க்க பிராப்தி இல்லை -யமசத நத்திலேயும் ரவ்ரவாதி நரகங்களிலும் மிகவும் யாதநாநுபவமும் கீடாதி ஜென்ம பிராப்தியும் யுண்டு
என்று சம்சார தோஷம் வ்யக்தமாகக் கீர்த்திதமாயிற்று –
சதுர்த்த அதிகரணத்தில் –
சுருதி ஸித்தமான ஆகாசாதி பாவம் ஜீவனுக்கு தேவ மனுஷ்யாதி பாவம் போலே தச் சரீரத்வ ரூபம் என்று சங்கித்து
ஆகாசாதி ப்ராப்தியிலே ஸூக துக்க அனுபவம் இல்லாமையால் தத் சாம்யா பத்தி ஒழிய தச் சரீரத்வம் இல்லை என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுமவர்களுக்கு ஆகாசாதி பாவ ஸ்ரவணத்தாலே தத் அபிமானி தேவதைகளை போலே ஆகாசாதி சரீரத்வ ப்ரயுக்தமான
சில திவ்ய போகங்கள் உண்டு என்கிற சங்கா நிவ்ருத்தி யர்த்தமாக ஆகாசாதி சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று சொல்லுகையாலே தோஷ கீர்த்தனம் ஸ்புடம் –
பஞ்சம அதிகரணத்தில் –
ஆகாச வாயு தூமா பிரமேக வர்ஷா பிராப்தி யுண்டாம் போது அவ்வோ இடங்களிலே அதி சீக்கிரமாக ஜீவனுக்கு கைமணம் உண்டு என்கிற நியமம் இல்லை –
தத் தேது இல்லாமையாலே என்று சங்கித்து உத்தர த்ர வ்ரீஹ்யாதி ப்ராப்தியிலே -அதோ வை துர் நிஷ் ப்ரபதரம் -என்று விசேஷித்து க்ருச்ச்ரா நிஷ் க்ரமணம்
சொல்லுகையாலே ஆகாசாதி ப்ராப்தியிலே அசிர நிஷ் க்ரமணமே உள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஆகாசாத் யவஸ்தாந விளம்ப நியம நிரசன வ்யாஜேந வ்ரீஹ் யாதிகளில் ஸூக போகம் அற்று அசிராவஸ்தாந ரூப தோஷம் த்ருடமாயிற்று –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுகிற ஜீவர்கள் வ்ரீஹ்யாதி சரீரதயா ஜனிக்கிறார்கள் என்று சங்கித்து வ்ரீஹ்யாதி ஜென்ம ஹேது பூத கர்ம விசேஷம்
அஸ்ருதமாகையாலே அந்நிய ஜீவ அதிஷ்டித வ்ரீஹ்யாதிகளில் சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் வ்ரீஹ் யாதி பாவேந ஜனனம் என்னும் போது தல்லவந பயந்த மாத்திரமே துக்கம் யுக்தமாம் -அங்கன் அன்றிக்கே சம்ச்லேஷ மாத்திரம் என்று நிர்ணயித்த இத்தாலே
சோஷன குஸூலா வஸ்தாபந அவஹநந பலீ கரண பாக்க பஷணாதி தசைகளிலும் அனுவ்ருத்தி சித்திக்கையாலும் பஷண விஷயம் அன்றிக்கே இருக்கிற
வ்ரீஹ் யாதிகளிலும் பரிணாம பரம்பரையா சம்ச்லேஷம் சித்திக்கையாலும் தோஷ கீர்த்தனம் அதி ஸ்புடம் –

இப்படி சாரீரகத்தில் ஷட் அதிகரணியான இப்பாதத்தாலே பகவத் ஆஸ்ரயண உபயுக்த வைராக்ய சித்த்யர்த்தமாக நிரூபித்த அர்த்தத்தை -ஆழ்வார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்று ஐஹிக ஆமுஷ்மிக சகல விஷயங்களையும் அதி ஹேயம் என்று
அத்யவசித்து அதில் போக்யதா புத்தியை விடுங்கோள்-
இப்படி விட்டுப் பரமபத நிலயனான சர்வேஸ்வரன் விஷயத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுங்கோள் -என்று பரப்பற்று ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும்
மந்த மதிகளுக்கும் தெளியலாம்படி ஒரு சொல்லாலே அருளிச் செய்தார் –
இனி ஸூத்ரகாரர் பரக்கத் சொன்னத்தை இவர் ஒரு சொல்லாலே அருளிச் செய்வான் என் என்னில்-ஏ பாவம் பரமே -என்கிறபடி
நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிற இவருக்குப் பறக்க சம்சார தோஷ கீர்த்தனமும் அஸஹ்யமாய்த் தோற்றுகையாலும்
நல்குரவும் செல்வமும் என்கிற திருவாய் மொழிப்படி சர்வ பதார்த்தங்களும் ப்ரஹ்மாத்மகதயா போக்யமாய்த் தோற்றச் செய்தேயும் சம்சாரிகள் பக்கல் கிருபையால்
அவர்கள் பாக அனுகுணமாகத் தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையாலும் -முற்றவும் விடுமின் -என்று அக்ராமயமாக
பஹ்வதி கரண சித்தார்த்தையும் சாதுர்யத்தாலே அருளிச் செய்ய வந்தவராகையாலும் இப்படி ஒரு சொல்லாலே வெளியிட்டு அருளினார் –
ஆனால் இப்பாத அர்த்தமான வைராக்ய மாத்ரத்தை விதிக்க வேணும் ஒழிய பாதாந்த்ர அர்த்தமான உபாய ஸ்வீகாரத்தை விதிப்பான் என் என்னில்
பக்தி உபாயத்துக்கு விஷய வைராக்கியமும் பிரபத்தி யுபாயத்துக்கு உபாயாந்தர வைராக்கியமும் அங்கம் இறே –
இதுக்கு உள்ள அங்க அங்கி பாவத்தை வீடு செய்து -என்று ல்யப்பாலே அருளிச் செய்தார் –
ஆகையால் இப்பாட்டுக்கும் இப்பாதத்துக்கும் ஐகமத்யம் சித்தம் –

த்விதீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் ஜீவன் ஸந்நிஹிதன் ஆகையாலே-தத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று சங்கித்து சம்சார தசையில் ஸ்ரஷ்ட்ருத்வ உபயுக்த
சத்யசங்கல்பாதிகள் கர்ம திரோஹித்த ஸ்வரூபனான ஜீவனுக்கு கூடாமையாலே ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று பரமாத்மா கர்த்ருகை என்று நிர்ணயித்தார்
த்வதீய அதிகரணத்தில் –
நாடிகள் என்ன புரீதத் பிரதேசம் என்ன ப்ரஹ்மம் என்ன இவை மூன்றும் நைரபேஷ்யேண ஸூஷூப்தி ஸ்தானத்வேண ஸ்ருதமாகையாலே தத் ஸ்தானத்வம்
விகல்பேந வருகிறது என்று சங்கித்து பிராசாத கட்வா பர்யங்கங்கள் போலே கார்ய பேதேந சமுச்சயமே கூடும்படியாய் இருக்க
பாஷிக பாத கர்ப்ப விகற்பம் அயுக்தமாகையாலே சமுச்சயமே யுக்தம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
ஸூப்தனே ப்ரபோத காலத்திலே உத்திதனாகிறான் என்ன ஒண்ணாது -ஸூஷூப்தனுக்கு சர்வோபாதி விநிர்மோக பூர்வக ப்ரஹ்ம ஸம்பத்தி வருகையாலே-
என்று சங்கித்து ஸூஷூப் திக்கு முன்னே ஆரப்தமான கர்மம் உத்திதனாலே சமாபனம் பண்ணப் படுக்கையாலும் ஸோ அஹம் என்று
ஸூப்தனே உத்திதன் என்று ப்ரத்யபிஜ்ஜை வருகையாலும் — இத்யாதி உக்திகளாலே ஸூப்தனுக்கே உத்திதத்வம் சமர்த்தித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில்
மூர்ச்சை சர்வ இந்திரிய பிராண வ்யாபாரோ பரதி தசையாய் இருக்கையாலே மரணம் என்று சங்கித்து ஆகார வைரூப்யத்தாலே
ஸூஷ்ம பிராணா ஸ்தித்வம் அவகதம் ஆகையாலே மரணாய அர்த்த ஸம்பத்தி -மூர்ச்சை என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
ஜீவனுக்குப் போலே பரமாத்மாவுக்கு ஜாகராதி சர்வ அவஸ்தைகளிலும் அவஸ்தானம் யுக்தமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவிக்கும் என்று சங்கித்து
சர்வ அவஸ்தா வஸ்திதமான ப்ரஹ்மத்துக்கு அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வமாகிற உபய லிங்கம் சுருதி சமதி கதமாகையாலே
தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவியாது என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில்
அசித் வஸ்து ரூபேண பரிணதம் ப்ரஹ்மம் தானாக வேணும் -அன்றிக்கே -ப்ரஹ்மத்திலும் அசித் வஸ்துவிலும் ஏக ஜாதி யோகத்தாலே ஐக ஜாதிக வாஸ்து தானாக வேணும் –
பின்ன அபின்னத்வ உபய வ்யபதேசம் கூட வேண்டுகையாலே என்று சங்கித்து அம்சோ நாநா வ்யபதேசாத்-என்கிற அதிகரண ந்யாயேந
ஜீவனுக்குப் போலே சரீராத்மா பாவம் யுண்டாய் பாத்தாலே பின்ன அபின்னத்வ வ்யபதேசம் கூடுகையாலே அசித் வஸ்து பிரம்மா சரீரம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
ஜகஜ் ஜென்மாதி காரண தயா த்ருஷ்ட பர ப்ரஹ்ம வஸ்துவிலும் பர வஸ்து சேதூந்மான சம்பந்த பேத வ்யபதேசங்களாலே உண்டு என்று
சங்கித்து காரண வஸ்துவில் காட்டில் வஸ்வந்தரத்துக்குப் பரத்வம்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -இத்யாதி சுருதி நிஷித்தம் ஆகையால் சேது த்வயபதேசம் சர்வ லோகா அசங்கர்ய ஹேதுத்வ ப்ரயுக்தமாகையாலும்
அபரிச்சின்ன வஸ்துவுக்கு உன்மான வ்யபதேசம் உபாசன அர்த்தமாகையாலும் சம்பந்த வ்யபதேசம் தனக்கே ப்ராப்யத்வ ப்ராபகத்வ ப்ரயுக்தமாகையாலும்
ததோ யதுத்தர தரம் -என்கிற ஸ்ருதிக்கு பேத வ்யபதேசம் அர்த்தம் இல்லாமையாலும் ஜகாத் காரண வஸ்துவிலும் பர வஸ்து இல்லை என்று நிர்ணயித்தார் –
சரம அஷ்டம அதிகரணத்தில் –
யாக தான ஹோம உபாசனாதி வைதிக கர்மங்கள் ஷணத்வம்ஸிகள் ஆகிலும் தஜ் ஜன்யா பூர்வ த்வாரா போக அபவர்க்க ரூப சர்வ பல சாதனங்கள் என்று சங்கித்து
கர்தவ்யதயா அவகதயா கோபாசனாதிகளுக்கும் பலப்ரதன் பரம புருஷனே என்று சுருதி ஸ்ம்ருதி சித்தமாகையாலே பரம புருஷனே பல ப்ரதன் என்று நிர்ணயித்தார்
இப்பாதத்தில் முந்துற அதிகரண சதுஷ்டயத்தாலே-
ஏதத் தேஹ மாத்ர அநுபத்த ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வ ஸூஷூப்தி ஸ்தாநாதி நிரூபண முகேந பிரதம பாத நிரூபித்த இஹா முத்ர சஞ்சார
தச அநு வ்ருத்த தோஷ வ்யதிரிக்த தோஷங்கள் வைராக்ய சித்த்யர்த்தம் யுக்தமாயிற்று –
உத்தர அதிகாரண சதுஷ்டயத்திலும் –
பரமாத்மரக்தி ஜனன அர்த்தம் பகவத் கல்யாண குணங்கள் ப்ரதிபாதிதமாயிற்று-ஆனால் கல்யாண குண ப்ரதிபாதகமான இப்பாதத்தில்
நிரூபிக்க வேண்டிய தோஷங்கள் சங்கதமானபடி எங்கனே என்னில்-தோஷ கீர்த்தன பரமான இவ்வதிகரண சதுஷ்டயமும் பூர்வபாதம் போலே
நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரம் அன்றிக்கே கல்யாண குண ப்ரதிபாதகமும் ஆகையால் இப்பாதத்தில் சங்கதமாயிற்று
ஆகையால் இறே அதிகரண சாராவளியிலே –
பூர்வபாதம் நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரமாகவும் இப்பாதம் கல்யாண குண ப்ரதிபாதன பரமாகவும்
பாதே த்வர்த்தாஷ் ஷடஸ்மிந் வபுரிஹ விஜஹத் பூத ஸூஷ்மைஸ் சஹேயாத் புக்த ஸ்வர்க்க அவரோஹ அப்யநுசய சஹிதோ மாத்ரயா பின்ன மார்க்க
சந்த்ர ப்ராப்த்யாதி ந ஸ்யாந் நிரயபத ஜூஷாமம் பராதவ் சத்ருக்த்வம் தஸ்மாச் சீகே ராவரோஹ பரவபுஷி சிரம் வ்ரீஹாய் பூர்வே அபி யோக -என்றும் –
பாதே ஸ்வப்ன அர்த்த ஹேதுஸ் ததயமிஹ ஸூஷூப்த்யாத் ருதிஸ் ஸூப்த கோப்தா முக்தே போதாதிகர்த்தா த்வநக ஸூய குணோஸ் சித்பி ரம்சீ சதேஹ
பாரம்யஸ்யைக சீமா சகல பலத இத்ச்யுயதே பக்தி பூம்நே சத்யே ஹ்யேவம் குணா தாவத பர பஜநே ரூப பேதாதி சிந்த்யம் -என்றும்
இரண்டு ஸ்ரக்தரையாலே ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் வகுத்து அருளிச் செய்தார் –

இனி இரண்டாம் பாட்டு பூர்வ அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும் மூன்றாம் பாட்டு உத்தர அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும்இருக்கும் –
இதில் பூர்வ அதிகரண சதுஷ்டய நிரூபித வர்த்தமான தேஹ மாத்ர அநு பத்த ஸ்வப்னாத் யவஸ்தா அநு வ்ருத்த தோஷங்களை ஆழ்வாரும்
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே -என்று மின்னொடு ஒத்த ஸ்வபாவத்தையும் யுடையது அல்ல -ஆத்மவஸ்து
பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்கிற இடத்தில் நீங்களே அல்பம் சிந்தியுங்கோள்-என்று
ஸ்வப்ன கல்ப தடிச் சஞ்சலமாய் இருந்துள்ள வர்த்தமான தேஹ தோஷ கீர்த்தன முகேந ஸூசிப்பித்து அருளினார் –
சரீராதி பதார்த்தங்களுக்கும்-ஸ்வப்நாத்ய அநு பூத பதார்த்தங்களுக்கும் ப்ரமக்ருத வைலக்ஷண்யம் ஒழிய நிரூபகர்க்கு வைலக்ஷண்யம் தோற்றாது இறே –
இன்னமும் ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாமைக்கு ஹேது -ஸத்யஸங்கல்பத்வ திரோதானம் -அதுக்கும் ஹேது பரமாத்மா நிக்ரஹம் –
அது தானும் தேஹத்தோடே சம்பந்திப்பித்து விட்டுத் திரோதானத்தைப் பண்ணும் -ஆகையால் ஸ்வப்ன கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாது என்கிற
பிரதம அதிகரண அர்த்தம் -மன்னுயிர் ஆக்கைகள் -என்று ஸத்யஸங்கல்பத்வ திரோதி ஹேது பூத தேஹ சம்பந்த ப்ரதிபாதனத்தாலே விசேஷித்து ஸூசிதமாயிற்று –
சதுர்த்த அதிகரண யுக்தமான ஸூப்தஸ்யைவ உத்திதத்வ நிரூபண முகேந நித்யத்வ சாதனமும் -மன்னுயிர் -என்கிற சந்தைக்கு நித்தியமான ஆத்மவஸ்து -என்று
வ்யாக்யாதாக்கள் ஒருபடி வ்யாக்யானம் பண்ணி இருக்கையாலே இச்சந்தையாலே யுக்தமாயிற்று –
இவ்வதிகரண சதுஷ்டயத்துக்கும் பகவன் மஹிம ப்ரதிபாதகத்வ ஆகாரமும் உண்டாகையாலே
அவ்வம்சத்தையும் நியந்த்ருத்வ ரூப மஹிமவாசியான இறை என்கிற பதத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
முன்புள்ள முதலிகள் அனைவரும் இறை உன்னுமின் என்கிற சந்தைக்கு அல்பம் விசாரியுங்கோள் என்று அர்த்தம் விட்டார்களே யாகிலும் உரையில்
ஜீயர் ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் என்று ஒரு பொருள் இடுகையாலே
முன்புள்ள முதலிகளுக்கு அவிருத்த அர்த்தாந்தர கதனம் அபிமதம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-
இனி இப்பதத்துக்கு ஸ்வாமித்வ நியந்த்ருத்வங்கள் இரண்டும் அர்த்தம் என்னும் இடம் வ்யுத்பத்தி சித்தமாகையாலே இப்படியும் ஓர் அர்த்தம் சொல்லத் தட்டில்லை-
இனி உத்தர அதிகரண சதுஷ்டயர்த்தத்தையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை-என்று நீங்கள் என்றும் உங்களது என்றும் சொல்லுகிற அஹங்கார மமகாரங்களை
சவாசனமாகப் போக்கி ஈஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு இத்தோடு ஒத்த அதிசயம் இல்லை என்று வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில்
பஞ்சம அதிகரண யுக்தமான
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வ ரூப உபய லிங்கத்தை -இறை என்று சித் அசித் வ்யாவ்ருத்த ஈஸ்வர ப்ரதிபாதனத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
பரமாத்மாவினுடைய சித் அசித் வ்யாவ்ருத்தி உபய லிங்கத்தாலே இறே -ஈஸ்வரனுக்கே இறே உபய லிங்கத்தவம் உள்ளது –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான –
அசித் த்ரவ்யம் ப்ரஹ்ம பரிணாமம் அன்று — ப்ரஹ்ம சஜாதீய த்ரவ்யமும் அன்று –ஜீவனைப் போலே ப்ரஹ்ம பிரகாரம் என்கிற அர்த்தமும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை -என்கிற அளவாலே ஸூசிதம் -எங்கனே என்னில்
ப்ரக்ருதி சம்சாரக்க க்ருத அஹங்கார மமகாரங்களினுடைய த்யாஜ்யத்வ உக்தியாலே ப்ரக்ருதியும் த்யாஜ்யம் என்றதாய் பாத்தாலே அசித் த்ரவ்யம்
உபாதியமான ப்ரஹ்ம பரிணாமம் அன்று ப்ரஹ்ம சஜாதீயமும் அன்று என்கிற அம்சம் ஸூசிதமாகையாலும்
சித் அசித் நியந்த்ருத்வ வாசியான இறை என்கிற பதத்தாலே அசித்துக்கும் நியாம்யத்வ ரூப சரீரத்வ அபர பர்யாய அம்சத்வமே யுள்ளது என்கிற அர்த்தமும் ஸூசிதமாகையாலும்
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான அசித் த்ரவ்ய ஸ்வரூப நிரூபணமும் ஸூசிதமாயிற்று –
சப்தம அதிகரண யுக்தமான
ஜகத் காரண வஸ்து உத்தீர்ண தத்வ ஸத்பாவ நிஷேத நிர்ணயமும் –இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை -என்று
ஜகத் காரண பூத ஈஸ்வர ஸமாச்ரயண உத்கர்ஷ ப்ரதிபாதனத்தாலே ஆஸ்ரணீய ஜகத் காரண வஸ்துவினுடைய நிஸ் சமாப்யதிகத்வம் யுக்தமாய்
பாத்தாலே தத்வாந்தர நிஷேதம் பலிக்கையாலே ஸூசிதம் –
கிஞ்ச-இறை -என்கிற பதம் ஈசான சப்த பர்யாயம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் -ஜகத் காரண வஸ்து உத்தீர்ணத்வேந சங்க்யமான தத்வ வாசக சப்தத்தை
ஜகத் காரண வாஸ்துவில் இறை என்று இவர் நிர்தேசிக்கையாலே தத் உத்தீர்ண வஸ்து நிஷேதமும் ஸூசிதமாகலாம்
அஷ்டம அதிகரண யுக்தமான
தேவதா ஆராதன ரூப யாக தான ஹோம உபாஸநாதிகளுக்கு பகவத் பிரசாத த்வாரா பலசாதனத்வம் ஒழிய அபூர்வத்வாரா பலசாதனம் இல்லை என்கிற அர்த்தமும்
இறை சேர்மினே -என்று பகவத் ஆராதனை ரூபமான ஆஸ்ரயணத்தை விதிக்கையாலே ஆராத்யனுடைய ப்ரீதியே பலப்ரதம் –
மற்றொரு அபூர்வாதிகள் பலப்ரதம் அன்று என்று சித்திக்கையாலே ஸூசிதமாகலாம்-
ஆகையால் த்ருதீய லக்ஷண த்வதீய பாதத்துக்கும் த்விதீய த்விதீய த்ருதீய காதைகளுக்கும் ஐகமத்யம் சித்தம் –

குண உபஸம்ஹார பாதத்துக்கும் சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில்
இப்பாதத்தில் நிரூபித்த உப சம்ஹார அநுப சம்ஹாரங்களை இவர் இப்பாட்டுக்களாலே ஸூசிப்பிக்கையாலே ஐகமத்யம் உண்டு –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
அநேக சாகாதீத வைச்வாநர வித்யாதிகள் சோதநாத்யா விசேஷத்தாலே ஏகம் என்று சாகாந்த்ர அதிகரண நியாயத்தை
வஹ்ய மாணார்த்த உபயுக்தமாக வித்யையிலும் காட்டினார் –
த்விதீய அதிகரணத்தில்
சாந்தோக்ய வாஜச நேயங்களில் சிறுத்தையான உத்கீதா வித்யையில் பிராண த்ருஷ்ட்யுபாஸ்தி சோதணாத்ய விசேஷத்தாலே ஏகம் என்று சங்கித்து ஒரு ஸ்தலத்தில்
உத்கீத அவயவமான ப்ரணவத்தில் ப்ராணதிருஷ்டியும் ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்ன உத்கீதத்தில் பிராணாதிருஷ்டியுமாய் இருக்கையாலே
ரூப பேதாத் வித்யா பேதம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
வாஜச நேய சாந்தோக்யங்களிலும் கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலும் ச்ருதமான பிராண உபாசனம் ரூப பேதத்தாலே பின்னமாக வேணும் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்ய குணகமான பிராணனுக்கு வாகாதி கத வசிஷ்டாத்வாதி குண சம்பந்தித்தவம் ச்ருதமாகையாலும்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் அது ஸ்ருதம் இல்லாமையாலும் என்று சங்கித்து கௌஷீதகியில் ச்ருதமான ப்ராணனுடைய ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்யங்கள்
வாகாதி கத வசிஷ்டத்வாதி குண அனுசந்தானத்துக்கும் ஸூசகமாகையாலே அதிலும் வாகாதி கத வசிஷ்டத்வாதி குண சம்பந்தம்
ப்ராணனுக்கு சித்திக்கையாலே ரூப ஐக்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகையாலே சர்வவித்யையிலும் அநுப சம்ஹார்யங்கள்-என்று சங்கித்து
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகிலும் சர்வ வித்ய அநுயாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ச்ருதமான பிராண வித்யையில் ஸ்ம்ருதியாசார ப்ராப்தா சமனத்தில் காட்டிலும் வித்ய அங்கதயா ஆசமனாந்தரம்
விதிக்கப்படுகிறது என்று சங்கித்து ஆசமநீயாப்புக்களில் பிராண வாசஸ்த்வ அநு சந்தானம் அங்கதயா விதிக்கப் படுகிறது ஒழிய
ஆசமனாந்தர விதாந பரம் அன்று என்று நிர்ணயித்தார் –
ஷஷ்டா அதிகரணத்தில் –
வாஜச நேய அக்னி ரஹஸ்யத்திலும் ப்ருஹதாரண்யத்திலும் ஸ்ருதையான சாண்டில்ய வித்யை ஒரு ஸ்தலத்தில் ஸத்யஸங்கல்பம் ஸ்ருதமாய்
ஸ்தலாந்தரத்தில் வசித்வாதிகள் ஸ்ருதமாகையாலே ரூபா பேதாத் பின்னை என்று சங்கித்து வசித்வாதிகள் ஸத்யஸங்கல்பத்வ விச்சித்தியாய்
ரூபா பேதம் அல்லாமையாலே வித்யைக்யம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில் –
ஆதித்ய மண்டலத்திலும் அஷியிலும் ச்ருதமான ஸத்யஸப்த வாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி சரீரத்வ உபாசனம் துல்யமாகையாலே
அஹம்-ஆஹா -என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேந அணிவித்தனர் ஆகின்றன என்று சங்கித்து
அஷ்ய ஆதித்ய ஸ்தான சம்பந்தித்வாகர பேதத்தால் ரூபம் பின்னமாய் வித்யை பேதிக்கையாலே இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்-
தைத்ரீயத்தில் அநாரப்ய அதீதங்களான சம்ப்ருதி த்யுவ்யாப்த்யாதி குணங்கள் சர்வ வித்யைகளிலும் உப சம்ஹார்யங்கள் என்று சங்கித்து
அல்ப ஸ்தான கோசாரங்களான வித்யைகளில் த்யுவ்யாப்த்யாதி குணங்கள் உபசம்ஹரித்தும் அஸக்யங்கள் ஆகையாலே அல்ப ஸ்தான விஷயங்களான
தஹராதி வித்யைகளில் அநுப சம்ஹார்யங்கள் என்று நிர்ணயித்தார் –
நவம அதிகரணத்தில் –
தைத்திரீயத்திலும் சாந்தோக்யத்திலும் ஸ்ருதையான புருஷ வித்யை சம்ஞ்ஞ ஐக்யத்தாலே ஏகை என்று சங்கித்து
ஸ்வதந்த்ர யஜமான பத்ந்யாதி கல்பன பிரகார பேத ப்ரயுக்த ரூப பேதத்தாலும் சதாயுஷ்ட்வ மோக்ஷ பிராப்தி ரூப பல பேதத்தாலும் பின்னை என்று நிர்ணயித்தார்-
தசம அதிகரணத்தில் –
உபநிஷத் ஆரம்பத்திலே அதீதங்களான -சன்னோ மித்ரா -இத்யாதி மந்திரங்களும் ப்ரவரக்யாதி கர்மங்களும் வித்யா சந்நிதி சமாம்நாநத்தாலே
வித்யா அங்கங்கள் என்று சங்கித்து -அர்த்த சாமர்த்தத்தாலே அபிசாராத்யயநாதிகளில் விநியுக்தங்கள் ஆகையாலே வித்யா அங்கங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏகாதச அதிகரணத்தில் –
புண்ய பாபங்களினுடைய ஹானி சிந்தனமும் உபாயந சிந்தனமும் வித்யா அங்கத்வேந அந்வயிக்கும் போது விகல்பேந அந்வயிக்க வேணும் என்று சங்கித்து –
ஹானி உபாயங்கள் இரண்டும் ஏக விஷயங்கள் ஆகையாலே சமுச்சயிக்க வேணும் என்று நிர்ணயித்தார்
துவாதச அதிகரணத்தில் –
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
தேஹ வியோகாந்தர அநு பாவ்ய ஸூக துக்கங்கள் இல்லாமையாலே தேஹ வியோக காலத்திலேயே நியமேந வருகிறது என்று நிர்ணயித்தார் –
த்ரயோதச அதிகரணத்தில் –
எந்த உபாசன சந்நிதானத்திலே அர்ச்சிராதிகதி ஸ்ருதையாய் இருக்கிறதோ தன்நிஷ்டனுக்கே அர்ச்சிராதி மார்க்கம் நியதம் என்று சங்கித்து –
சர்வ உபாசன நிஷ்டர்களுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் சாதாரண தயா ஸ்ருதி விஹிதம் ஆகையாலே சார்வார்க்கும் நியதம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்தச அதிகரணத்தில் –
பிரபஞ்ச ப்ரத்யநீகதா ரூபங்களான அஸ்தூலத் வாதி தர்மங்கள் வித்யாந்தர ரூப பூத குணங்களுக்கு வித்யாந்தர ரூபத்வே பிரமாணம் இல்லாமையாலும்
ஆனந்தத்தவாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகங்கள் இல்லாமையாலும் சர்வ வித்யா அநுயாயி ரூபம் அன்று -அக்ஷர வித்யா ரூப மாத்ரமாக வேணும் என்று சங்கித்து
ஆனந்தத்தவாதிகள் போலே சித்த அசிதாத்மகா பிரபஞ்ச தர்மபூத ஸ்தூலாத்வாதி விபரீதமான அஸ்தூலத் வாதிகளும்
ஸ்வரூப நிரூபனம் ஆகையாலே சர்வ வித்யா அநு யாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்ச தச அதிகரணத்தில் –
உஷஸ்திக ஹோள ப்ரஸ்ன பிரதி வசனங்களில் பிராணநாதி ஹேதுத்வ அசனா யாத்யதீதத்வ ரூப உபாஸ்ய ஆகார பேதத்தாலே வித்யா பேதம் என்று சங்கித்து
உபய ப்ரஸ்னத்துக்கும் பரமாத்ம விஷயத்தில் பேதம் இல்லாமையாலும் பிரதி வசன த்வயகதமான ஆகார த்வயமும் பரமாத்மாவினிடத்தில் உபபன்னம் ஆகையாலும்
வித்யா பேதம் இல்லை என்று நிர்ணயித்தார் –
ஷோடச அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான தஹர வித்யை அபஹத பாப்மத்வ வசித்வாத் யுபாஸ்யாகார பேதத்தாலே பின்னை என்று சங்கித்து
வசித்வாதி குணங்கள் ஸத்யஸங்கல்ப த்வாந்தர்கதமாகையாலே உபாஸ்ய ஆகார பேதம் இல்லாமையாலே வித்யை அபின்னை என்று நிர்ணயித்தார் –
சப்த தச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாஸ்யங்கள் கர்மாங்க பூதோத் கீதாத் யாஸ்ரயங்கள் ஆகையாலே கர்மங்களிலே நியமேந உபஸம்ஹார்யங்கள் என்று சங்கித்து
கோதோஹ நாதிகளைப் போலே காம்யங்கள் ஆகையாலே நியமேந அனுப சம்ஹாரயங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டாதச அதிகரணத்தில் –
தஹர வித்யையில் குண சிந்த நத்திலே குணி சிந்தனா வ்ருத்தி வேண்டா -குணி சிந்தனம் ஸ்ருதம் ஆகையாலே என்று சங்கித்து
குணார்த்தமும் பிரதான ந்யாயேந குண்யா வ்ருத்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –
ஏகோந விம்ச அதிகரணத்தில் –
நாராயண அணுவாகம் பூர்வ ஸ்ருத தகர வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம் என்று சங்கித்து
பிரகரணாத் பலவத்தான லிங்க பூயஸ் த்வத்தாலே சர்வ வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாராம் என்று நிர்ணயித்தார் –
விம்ச அதிகரணத்தில் –
மனஸ் சிதாதிகளான சாம்பாதி காக்நிகள் க்ரியாமயக்ரது ப்ரக்ருதமாகையாலே தத் அந்வயிகளாய் கிரியாமயங்கள் என்று சங்கித்து
வித்யா மயக்ரதுவும் ப்ராக்ருதமாகையாலே வித்யாமயக்ர த்வன்வயித்வேந வித்யா மயங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏக விம்ச அதிகரணத்தில் –
பரவித்யைகளிலும் உபாஸ்ய கோட்யநு ப்ரவிஷ்டமான ஜீவ ஸ்வரூபத்தில் ஞாத்ருத்வ கர்த்ருத்வ அம்சம் உபாஸ்ய ஆகாரம் என்று சங்கித்து
ப்ராப்ய தசையிலுள்ளவை எல்லாம் அநு சந்தேயம் ஆகையாலே அபஹத பாப்மத்வாதிகளும் உபாஸ்ய ஆகாரம் என்று நிர்ணயித்தார் –
த்வா விம்ச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாசனங்கள் ஸ்வர பேதத்தாலே உத்கீதாதிகள் ப்ரதிவேதம் பின்னங்களாய் இருக்கையாலே வ்யவஸ்திதங்கள் என்று சங்கித்து
பின்ன ஸ்வர வத்துக்களான சர்வ உத்கீதங்களும் -உத்கீதம் உபாஸீத -என்கிற இடத்தில் சாமான்யாத உபாசன விஷயங்களாகச் சொல்லப் படுக்கையாலே
உபாசனங்களுக்கு வ்யவஸ்தை இன்றிக்கே சர்வ உத்கீதா சம்பந்தம் உண்டு என்று நிர்ணயித்தார் –
த்ரயோ விம்ச அதிகரணத்தில் –
வைச்வா நர உபாசனத்தில் ஸ்வர்லோகாதித்ய வாயு வாகாச பிருதிவி அவயவனான வைஸ்வாநரன் உபாஸ்யதயா ச்ருதனாய் இருக்கிறான் –
அவ்விடத்தில் ஒவ்பமந்யா வாதிகளைக் குறித்து கேகயன் ஸ்வர்லோகாதிகளில் ஏகை கத்தையே உபாஸ்யமாகச் சொல்லுகையாலே வ்யஸ்தமே உபாஸ்யம் என்றும்
ஸமஸ்த உபாசனத்துக்கும் சர்வாத்ம வர்த்தியான ப்ரஹ்ம அநு பவத்தைப் பலமாகச் சொல்லுகையாலே ஸமஸ்த வ்யஸ்தங்கள் இரண்டும் தான் உபாஸ்யங்கள் என்றும் சங்கித்து
உபக்ரம உபஸம்ஹாரங்களில் ஸமஸ்த உபாசனத்தை விதிக்கையாலும் வ்யஸ்த உபாசனத்தில் தத் விதிக்குத் தாத்பர்யம் இல்லாமையாலும் சமஸ்தமே உபாஸ்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்விம்ச அதிகரணத்தில் –
தஹர சாண்டில்யாதி வித்யைகளுக்கு பேதம் இல்லை -உபாஸ்ய ப்ரஹ்மமும் தத் பிராப்தி பலமும் ஏக ரூபம் ஆகையாலே என்று சங்கித்து
ஜகத் ஏக காரணத்வா அபஹத பாப்மத்வாத் யநு பந்த பேதங்களாலே வித்யை நாநா என்று நிர்ணயித்தார் –
பஞ்ச விம்ச அதிகரணத்தில் –
அக்னி ஹோத்ர தர்ச பூர்ணமா சாதிகள் ஸ்வர்க்க ஏகைக பலங்களாய் இருந்தாலும் தத் பூயஸ்த்தவ அபேக்ஷை யுள்ள புருஷன் இடத்தில் சமுச்சயம் உண்டாய் இருக்கிறாப் போலே
ப்ரஹ்ம அனுபவ பூயஸ்த அபேக்ஷை யுள்ள புருஷர் இடத்திலே ப்ரஹ்ம வித்யைகளுக்கு சமுச்சயம் கூடும் என்று சங்கித்து
ப்ரஹ்ம அனுபவித்திலே தாரதம்யம் இல்லாமையாலே தாரதம்யம் யுடைய ஸ்வர்க்க சாதனா பூத ஜ்யோதிஷ்டோம நியாயம்
இங்கே ப்ரசரியாமையாலே சமுச்சயம் கூடாது என்று பரிஹரித்தார் –
ஷட் விம்ச அதிகரணத்தில் –
சப்த தச அதிகரணத்தில் நிரூபித்த உத்கீதாத் யுபாசனங்களினுடைய காம்யதயா அநியதிக்கு அடியான பல சாதனத்வத்தை நிரூபித்தார் –

இப்படி ஷட் விம்சத்யதி கரணாத்மகமான இப்பாதத்தில்
1-த்விதீய த்ருதீய பஞ்சம சப்ததச விம்ச ஷட் விம்ச அதிகரணங்களிலே சங்கதி விசேஷத்தாலே ஷூத்ர உபாசனங்களை நிரூபித்தார் –
2-அவசிஷ்ட அதிகரண விம்சதியிலும் ப்ரஹ்ம உபாசன பிரகாரத்தை நிரூபித்தார் -இதிலும் தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபகங்களான
ஞானத்தவ ஆனந்த் வாதிகளும் பிரபஞ்ச ப்ரத்யநீ கதா ரூபமான அஸ்தூலத்வாதி குணங்களும் சர்வ வித்யா அநு யாயிகள் என்று சதுர்த்தத சதுர்த்த சாதி கரணங்களில் நிர்ணயித்தார் –
3-ஏகோந விம்சத்தில் லிங்க பூயஸ்த்வத்தாலே நாராயண அனுவாக ப்ரதிபாத்யனான தேவதா விசேஷமே தத் தத் வித்யா பிரதி நியதி குண விசிஷ்டானாய்க் கொண்டு
சர்வ வித்யா வேத்யனாகிறான் என்று நிர்ணயித்தார் –
4-அவசிஷ்ட சப்த ராசாத்தி கரணங்களிலும் குண உப சம்ஹார அனுப சம்ஹார பலக வித்யா பேதங்களை நிரூபித்தார் –
இப்படி நாலுவகையாக ஸூத்ரகாரர் நிரூபித்த அர்த்தத்தை ஆழ்வாரும் -நாலாம் பாட்டுத் தொடங்கி மேல் நாலு பாட்டாலே வெளியிட்டு அருளுகிறார் –
இந்நாலு பாட்டிலே நாலாம் பாட்டாலே தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபக தர்மம் சர்வ வித்யா அநு யாயி என்கிற அம்சத்தை வெளியிடுகிறார் –
அஞ்சாம் பாட்டாலே ஷூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஆறாம் பாட்டாலே வித்யா பேத அபேத நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஏழாம் பாட்டாலே தேவதா விசேஷ நிர்த்தாரான பாரமான அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் -அது எங்கனே என்னில்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்று அசித்தின் படியும் சித்தின் படியும் அல்ல அவன் ஸ்வரூபம் –
அபரிச்சின்ன ஆனந்த ரூபமாய் இருக்கும் அத்தை விஷய சங்கம் அற்று ஆஸ்ரயி -என்று ஆனந்தவல்லியிலும் ஆதர்வணிகத்திலும் யுக்தமான
ஆனந்தத்தவா ஸ்தூலத்வாதி தர்மங்களை தத் ப்ரகரணா சந்நிஹிதமான ந்யாஸ வித்யையிலும் வித்யா ஆகாரமாக அருளிச் செய்கையாலே
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யா அநு யாயிகள் என்கிற அர்த்த பிரகாசம் இப்பாட்டு என்னும் இடம் அதி ஸ்புடமாய் இருக்கிறது –

ஸூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சம் –
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே-என்று இதர விஷய சங்கம் அற்றது என்றால் ஆத்மா மோக்ஷ உன்முகமாய் இருக்கும் –
அத்யல்ப ஆனந்த ரூபமான ஆத்ம அனுபவ ரூப மோக்ஷத்தை ஹேயம் என்று அத்யவசித்து நிரதிசய புருஷார்த்த லாபத்தாலே புருஷாந்தர ருசி அற்று
நிலை யுண்டாக வேண்டில் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள்-என்று ஆத்ம உபாசன பலமான ஆத்ம அனுபவத்தை த்யாஜ்யமாக அருளிச் செய்கையாலே ஆத்ம உபாசன
உபலஷித்தமாய் அப்ரஹ்ம உபாசனமாய் இருந்துள்ள உத்கீதாத் யுபாசனங்களுடைய ஸ்வரூப பலங்களும் த்யாஜ்யத்வேந யுக்தமாகையாலே ஸூசிதமாயிற்று –
அப்ரஹ்ம உபாசனங்களும் ஸ்ரீ கீதா பாஷ்யாதி யுக்த ரீதியா ப்ரஹ்ம உபாசன நிர்வ்ருத்த யுபயுக்த தேஹ தாரண த்வாரா மோக்ஷ பழத்தில் அந்தரபாவிக்கையாலே
உபாதியம் என்று அறிய வேண்டுகையாலும் ஸ்வாதந்தர்யேண தூஷகர்மம் போலே த்யாஜ்யமாகையாலே அனுபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும்
ஸூத்ராகாரர் இப்பாதத்தில் நிரூபித்தார்
ஆழ்வாரும் இப்பாட்டால் அப்ரஹ்ம உபாசனங்கள் ஸ்வாதந்தர்யேண பரித்யாஜ்யங்கள் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார்
இறை பற்று -என்று ஆஸ்ரயண விதானத்தாலே உபாசன நிர்வர்த்த கதயா உபாதேயம் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார் –

பரவித்யா பேத அபேத நிரூபணம் –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே-என்று சங்கை காஸ்ரயனாய் ஈஸ்வரனுமான எம்பெருமான்
ஆஸ்ரயணீயத்வே சர்வசமனாகிறான் -நீயும் தத் விஷய சங்காதிக்யத்தை யுடையனாய் அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலேயும் அன்வயி -என்று
ந்யாஸ வித்யா வித்யாகாரமான வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்யங்களையும் ஸ்வாமித்வத்தையும் சங்க ஸ்வ பாவந் என்கிற பற்றிலன் -என்கிற பதத்தாலும் –
ஸ்வாமித்வ வாசியான -ஈசன் -என்கிற பதத்தாலும் அருளிச் செய்கையாலே ந்யாஸ வித்யை வித்யாந்தரத்தில் காட்டில் பின்னை என்கிற அர்த்தம் ஸூசிதமாய்
மற்றும் உள்ள தஹர சாண்டில்ய உபகோஸல வித்யாதிகளிலும் இந்த ந்யாயத்தாலே பேதம் யுண்டு என்று ஸூசிதமாகையாலும்
தைத்ரீய ஸ்வேதாஸ்வதராத்ய நேகோபநிஷச் ஸ்ருதையான ந்யாஸ வித்யை ரூப ஐக்யத்தால் ஏகை என்று சித்திக்கையால் மற்றும் உள்ள வித்யைகளிலும்
ரூப ஐக்யம் உண்டானால் வித்யை ஐக்யமே உள்ளது என்று பலிக்கையாலும் ஸூசிதமாயிற்று –
அவன் முற்றில் அடங்கே -என்று சர்வ கைங்கர்யத்தையும் தாம் விதித்த ந்யாஸ வித்யைக்குப் பலமாக அருளிச் செய்கையாலே
வித்யாந்தர ஸாத்ய பலா அவிசிஷ்ட பலத்வாத் விகல்ப-என்கிற விகல்ப அதிகரணார்த்தம் யுக்தமாகிறது –
ஸூத்ராகாரர் அனந்த சாகா ஸ்ருத்தங்களான அநேக வித்யைகளில் பேத அபேத நிரூபணம் பண்ண வேண்டி இருக்கப் பண்ணாது ஒழிந்தது நியாய பிரதர்சன
த்ருஷ்டியாலேயாமா போலே இவரும் ந்யாஸ வித்யைக்கு வித்யாந்தரத்தில் காட்டில் பேதத்தையும் தன்னில் பேதம் இல்லாமையையும் அருளிச் செய்து
ஏதந் ந்யாயேந வித்யாந்தரங்களிலும் பேத அபேதம் தன்னடையே சித்திக்கும் என்று திங்மாத்ர பிரதர்சனம் பண்ணினார் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற இவ்வாழ்வாருக்கு அநிதர லப்யமாய் ஒரு சாதுர்யம் யுண்டு -வேதாச்சார்யரான பாதராயணர் வேதார்த்தங்களை விசாரித்து
அடைவே தாமும் ஸூசிப் பித்துக் கொண்டு வருகிற இடங்களில் அவர் விஸ்தரித்த இடங்களிலே தாம் ஸங்க்ரஹித்து அருளுகையும் –
அவர் ஸங்க்ரஹித்த இடங்களில் ஈஷத் விஸ்தரிக்கையும் -அது எங்கனே என்னில்
ஸ்வர்க்க ஆரோஹ அவரோஹ மாத்ரு பித்ரு கர்ப்ப அந்வய ரௌரவாதி நன்றாக அனுபவ வாதிகளான சம்சார தோஷங்களை ஸூத்ராகாரர் பரக்கச் சொன்னத்தை –
வீடுமின் முற்றவும் -என்று ப்ரயோஜகத்திலே அக்ராம்யமாக அருளிச் செய்கையாலும்
பாஸூபாதாதிகரணத்தில் பஸூபத்தி பாரம்ய நிஷேதம் பண்ணினத்தை உப லக்ஷணம் ஆக்கி -புரமொரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் -என்று பஸூபத்தி ஹிரண்ய கர்ப்பர்களுடைய பாரம்யத்தை நிஷேதிக்கையாலும்
ஸூத்ராகாரர் விஸ்தரித்த அர்த்தத்தை ஸங்க்ரஹிக்கையும் தத் சங்கரஹீத அர்த்தத்தை விஸ்தரிக்கையும் இவருக்கு நியாமாய் இருக்கும் –
இதுக்கு அடி இவருக்கும் அவருக்கும் உள்ள ஐகமத்யம் –

சர்வ வித்யா வேத்யன் ஸ்ரீ மன் நாராயணாய தேவதா விசேஷம் என்று நிர்ணயித்த அர்த்தம் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக யுள்ளே -என்று கார்த்ஸ்ந்யேந நன்றான விபூதி விஸ்தாரத்தைக் கண்டு
அவை எல்லாம் சர்வேஸ்வரனுடைய கட்டடங்க நன்றான சம்பத்து என்று அத்யவசித்து நீயும் தத் ஐஸ்வர்ய அந்தர்பூதனாய் அடங்கு -என்று
ப்ரஹ்ம ருத்ர இந்திராதி ஸமஸ்த விலக்ஷண புருஷர்களும் பகவத் விபூதியாகவும் எம்பெருமான் விபூதிமானாகவும் இருக்கையாலே
வித்யாந்தரங்களிலே ஸ்ருதமான சம்பு சிவாதி சப்தங்கள் அபர்யவசான வ்ருத்த்யா நாராயண பர்யந்தமாக -ச ப்ரஹ்மா இத்யாதி வாக்கியத்தில் சொன்ன
அர்த்தம் ஸூசிதமாய் இத்தாலி சர்வ வித்யைகளிலும் நாராயண ரூப தேவதா விசேஷம் உபாஸ்யமாய் சொல்லிற்றாய் இருக்கையாலே ஸூசிதமாயிற்று –

இப்படி நாலு பாட்டுக்கும் குண உப சம்ஹார பாதத்துக்கும் ஐகமத்யம் கண்டு கொள்வது –

எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் வதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

————————

எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் உண்டான படி –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
வித்யை கர்ம கர்த்ரு பூதாத்ம ஞான ரூபதயா கர்மாங்கம்-கர்ம மோக்ஷ சாதனம் என்று சங்கித்து

கர்த்ரு பூதாத்மா ஞானம் கர்மாங்கமே ஆகிலும் தத் விலக்ஷண பரமாத்மா ஞான ரூப வித்யை கர்ம அங்கம் இல்லாமையாலும்

யஞ்ஞ தாநாதி கர்மங்கள் வித்யா அங்கதயா ஸ்ருதி சித்தமாகையாலும் வித்யை கர்ம அங்கம் அன்று –
கர்மமே வித்ய அங்கமாகையால் வித்யை மோக்ஷ சாதனம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
கர்ம அங்க உத்கீதாதிகளில் ரசதமத்வாதி ப்ரதிபாதக வாக்கியங்கள் ஜூஹ்வாதிகளை ப்ருத்வீத்வாதிநா ஸ்துதிக்கும் கணக்கிலே உத்கீத ஸ்துதி பரங்கள் என்று சங்கித்து –
ஜூஹ்வாதி விதி போலே உத்கீதாதி விதி சந்நிஹிதம் இல்லாமையாலும் –

உத்கீதாதி களுக்கு ரசதமத் வாதிகள் பிரமணாந்தரா ப்ராப்தங்கள் ஆகையாலும்
ஸ்துதி பரங்கள் அன்று –ரசதமத்வாதி த்ருஷ்ட்டி விதாயங்கள் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வேதாந்தங்களில் ஸ்ருதமான ஆக்யாநங்கள் பாரிப்லவே விநி யுக்தங்கள் என்று சங்கித்து –

சில ஆக்யா நங்களை பாரிப் லவத்திலே விசேஷிக்கையாலே
வேதாந்த சித்த ஆக்யானங்கள் வித்யா விசேஷ ப்ரதிபாதநார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
க்ருஹிவ்யதிரிக்தாஸ்ரமிகளில் யஜ்ஞ தாநாதிகள் இல்லாமையாலே தத் அங்க வித்யா அனுஷ்டானம் அவர்களுக்கு கூடாது என்று சங்கித்து
யஜ்ஞ தாநாதி ரூப அங்கங்கள் இல்லா விடிலும் தத் தத் ஆஸ்ரம உசித கர்மங்கள் அங்கமாய் தத் ஸாத்ய வித்யை கூடும் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
க்ருஹிகளுக்கும் யஞ்ஞாதி நிரபேஷமாகவே வித்யா அனுஷ்டானம் என்று சங்கித்து –

யஞ்ஞாத் யங்கத்வம் ஸ்ருதி சித்தமாகையாலே யஞ்ஞாத் அபேக்ஷம் வித்யா அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
க்ருஹி களுக்கு கரண வியாபார ரூபமான கர்ம அனுஷ்டானமும் தத் உபரதி ரூபமான சமதாதிகளும் விருத்தமாகையாலே
அவர்களுக்கு சமதாதிகள் வித்யா அங்கதயா அனுபாதேயங்கள் என்று சங்கித்து –

நிஷித்த விஷய நிவ்ருத்தி ரூபமான ஸமதாதிகளுக்கும் விகித விஷய ப்ரவ்ருத்தி ரூபமான கர்மங்களுக்கும் விரோதம் இல்லாமையாலே

சமதாதிகள் வித்யா அங்கதயா உபாதேயங்கள் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
பிராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வதா சர்வாந் நாநுமதி என்று சங்கித்து

சர்வாந்நாநுமதி ப்ராணாத்ய யாபத்தியிலே ஒழிய ஸர்வதா கூடாது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில் –
வித்யா அங்கங்களான கர்மங்கள் கேவல ஆஸ்ரம அங்கங்கள் அன்று -நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கையாலே -என்று சங்கித்து –
ஏக விநியோகத்தாலே உபய அங்கத்வம் உண்டாகில் நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கும் –

இவ்விடத்தில் விநியோக ப்ருதக்த்வேந ஜீவனாதிகார காமனாதிகாரம் போலே விரோதம் இல்லாமையாலே கேவல ஆஸ்ரம அங்கமும் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு ஆஸ்ரம தர்மேதி கர்த்த வ்யதாகமான ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அநாஸ்ரமிகளான ரைக்வ பீஷ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் காண்கையாலும் விதுராதிகளுக்கு தானாதிகளான
வித்யா சாதனங்களாக சில கர்மங்கள் உண்டாகையாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில் –நைஷ்டிக வைகானச பரிவ்ராஜ காத்ய ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கும் விதுராதி ந்யாயேந ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று சங்கித்து
ஆஸ்ரம தர்ம பஹிஷ்க்ருதர்களுக்கு பிராயச் சித்தா பாவ ஸ்ரவணத்தாலும் சிஷ்டப் பஹிஷ்காரத்தாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
உத்கீதாத் யுபாசனம் வீர்ய வத்தரத்வ பல காமனான யஜமானனாலே தஹராத் யுபாசனம் போலே அநுஷ்டேயம் என்று சங்கித்து
கோதோஹநாதி களைப் போலே இந்த உபாசனம் கர்ம அங்க ஆச்ரயமாகையாலே கர்மங்களை போலே ருத்விக் கர்த்ருகம் என்று நிர்ணயித்தார்

துவாதச அதிகரணத்தில்
பால்யங்க பாண்டி த்யஞ்ச நிர்வித்யாத முநி -என்கிற இடத்தில் முநி சப்த யுக்தமான மௌனம் மனன ரூபம் ஆகையாலே

மந்தவ்ய என்கிற இடத்தில் போலே மனனம் அநு வதிக்கப் படுகிறது என்று சங்கித்து

ஸ்ரவண ப்ரதிஷ்டார்த்தமான மனனம் ப்ராப்தமானாலும் ஸூபாஸ்ரய சமசீலந ரூப மனனம் பிராப்தம் இல்லாமையால்
ஏவம் வித மனனம் வித்யா சஹகாரித்வேந விதிக்கப் படுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ரயோதச அதிகரணத்தில்
பால்யேந திஷ்டா சேத்-என்கிற இடத்திலும் உபாசகனுக்கு விதிக்கப் படுகிற பால கர்மம் காமசாராதிகள் ஆகையால் அவைகளும் வித்யா மஹாத்ம்யத்தாலே உபாதேயம் என்றுnசங்கித்து –

துஸ்சரிதம் வித்யோத்பத்தி விரோதி த்வேந ஸ்ருதமாகையாலும் பாண்டித்ய ப்ரயுக்த ஸ்வ மஹாத்ம்யா அநா விஷ்கரணம்
பால்ய சப்தார்த்தம் ஆகையாலும் கர்மசாராதிகள் அனுபாதேயம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில்
அநாமுஷ்மிக பல உபாசனங்கள் ஸ்வ சாதனா பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியதி உத்பன்னங்கள் ஆகின்றன வென்று சங்கித்து

பிரதிபந்தகம் உண்டாகில் -விளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன பிரதிபந்தகம் இல்லையாகில் அவிளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யைகள் மஹாதிசய சாலிகளாகையாலே ஸ்வ சாதநீ பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியம உத்பன்னங்கள் ஆகின்றன என்று சங்கித்து அவைகளுக்கும் ப்ரஹ்ம விதபஸாராதி களான அதி க்ரூரமான பிரதிபந்தகங்கள் சம்பாவிதங்கள் ஆகையாலே அநியமேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

இதில் த்விதீய –த்ருதீய ஏகாதச அதிகாரணங்கள் ப்ராசங்கிகங்கள்–அவசிஷ்ட துவாதச அதிகாரணந்த்தில் –பத்து அதிகாரணத்தாலே
வித்யையே மோக்ஷ சாதனம் என்றும் -தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்களே தத் தத் ஆஸ்ரமிகளுடைய வித்யைகளுக்கு நியதி அங்கங்கள் என்றும்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு தபோ தாநாதிகளான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் –சமதாதிகள் வித்யா அங்கங்கள் என்றும் –
சம விசேஷ ரூபமான துஷ்ட அன்ன பரிஹாரமும் வித்யா அங்கம் என்றும் –வித்யா அங்கங்களுக்கே ஆஸ்ரம அங்கத்துவம் உண்டு என்றும்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்குக் கேவல தபோ தாநாதிகள் வித்யா அங்கம் இல்லாமையால் வித்யையில் அன்வயம் இல்லை என்றும் –
ஸூபாஸ்ரய சமசீலந ரூபமான மனனம் என்ன பாண்டித்யா அநாவிஷ்கரண ரூபமான பால்யம் என்ன இவைகள் அங்கம் என்றும் அங்கங்களை நிரூபித்து –
அவசிஷ்ட சதுர்த்தச பஞ்ச தச அதிகரணங்களால் பிரதிபந்தகம் அற்ற தசையில் அங்கங்களால் அங்கியான உபாசன நிஷ்பத்தி என்று நிர்ணயித்தார் –

இப்படி நிரூபித்த அர்த்தத்தில் ப்ராசங்கிகமான அதிகரண த்ரயத்தையும் உபேக்ஷித்து அவசிஷ்ட துவாதச அதிகரண அர்த்தத்தை
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே–என்று மனனாதி ஹேதுவான மனஸ்ஸூம்
ஸ்துத்யாதி ஹேதுவான வாக்கும் -பிரணாமாதி கரணமான கார்யமுமாய் இருந்துள்ள இம்மூன்றையும் இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தையும் நிரூபித்து
இதர விஷய அன்வயத்தை தவிர்த்து ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே ஒதுக்கு -என்று அங்க ஸ்வரூபத்தையும்
அங்கங்களாலே அங்கி சித்தி தசையையும் அருளிச் செய்து இப்பாட்டாலே வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில் –

வித்யையே மோக்ஷ சாதனம் என்று பிரதம அதிகரணத்தில் நிரூபித்த அர்த்தம் -இறை யுள்ளில் ஒடுங்கே-என்று அவன் விஷயத்தில் ந்யஸ்த பரனாய் இரு என்று சித்த உபாய சுவீகார ரூபமான ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கையாலே யுக்தமாயிற்று –

சதுர்த்த பஞ்சம நவம அதிகரணங்களில்
வானப்ரஸ்த பரிவ்ராஜகர்களுக்கு தத் தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் க்ருஹிகளுக்கு ஸ்வ ஆஸ்ரம உசிதமான யஞ்ஞாதிகள் அங்கம் என்றும்
விதுராதிகளுக்கு தாநாதிகம் வித்யா அங்கம் என்றும் -நிர்ணயித்த அர்த்தம் -அகிஞ்சனான ந்யாஸ வித்யா நிஷ்டனுக்கு ப்ரயோஜனாந்தர சாதனாந்தர வைமுக்யத்தை –
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று அங்கமாக விதிக்கையாலே தன முகேந தத் தத் அதிகார அநு குண அங்க அனுஷ்டானத்தாலே வித்யா நிஷ்பத்தி வரும் என்று சொல்லிற்றாய் அத்தாலே ஸூசிதமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான கர்ம சமாதிகளுக்கு விஹித நிஷித்த பேதேந விரோதம் இல்லை என்று நிர்ணயித்த அர்த்தமும் –
உள்ளம் உரை செயல் -இத்யாதியாலே பிரதிகூல விஷய நிவ்ருத்தியையும் அனுகூல விஷய ப்ரவ்ருத்தியையும் விதிக்கையாலே வ்யக்தமாக ஸூசிதம் –

மநோ வாக் காயங்களை அனுஷிதா விஷயங்களில் நின்றும் மீட்க வேணும் என்று விதிக்கிற இச்சந்தையாலே தானே
சப்தமாதி கரண யுக்தமான நிஷித்த பாஷாணம் பரிஹார்யம் என்கிற அர்த்தமும் ஸூசிதமாயிற்று –

அஷ்டம அதிகரணத்தில்
ஒரு தர்மத்துக்கே வித்யா அங்கத்தவமும் ஆஸ்ரம அங்கத்தவமும் கூடும் என்று நிரூபித்த அர்த்தம் -இதர விஷயங்களில் உள்ள
மநோ வாக் வ்ருத்திகளையே பகவத் விஷயத்திலும் ஒடுக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதமாகலாம்-

தசம அதிகரணத்தில்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கு வித்யா அதிகாரம் இல்லை என்று நிரூபித்த அர்த்தம் –உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று
நிஷித்த விஷயங்களை அவஸ்ய பரிஹரணீயன்கள் என்று தத் க்ரூர்யம் யுக்தமாய் அத்தாலே ஸூசிதம் –

துவாதச அதிகரணத்தில்
நிர்ணீதமான ஸூபாஸ்ரய சம்சீல நத்தினுடைய கர்த்தவ்யத்வமும்-இதர விஷய நிஷ்டமான
மநோ விருத்தியை பகவத் விஷயம் ஆக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதம் என்று காணலாம் –

த்ரயோதச அதிகரணத்தில் –
காமசாரம் பால்ய சப்தார்த்தம் அன்று -ஸ்வ மஹாத்ம்யா நாவிஷ்கரணமே பால்ய சப்தார்த்தம் என்று நிரூபித்த அர்த்தமும் கை வந்த படி செய்ய ஒண்ணாது
என்று நிஷித்த நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகலாம் –

சதுர்தச பஞ்ச தசங்களில் நிரூபித்தமான அங்க நிஷ்பத்த்ய நந்தரமே பிரதிபந்தகம் உண்டாகில் அங்கி நிஷ்பன்னமாக மாட்டாது –
பிரதிபந்தகம் அற்றால் அங்கி நிஷ்பன்னமாம்-என்கிற அர்த்தமும் -நிஷித்த விஷய நிஷ்ட மநோ வாக் வ்ருத்தி ரூப பிரதிபந்தகம் அற்றே
பகவத் ஆஸ்ரயணம் பண்ண வேணும் என்று சொல்லுகையாலே ஸூசிதம் –

ஆக இப்படி எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் யுண்டு என்று ஸூஷ்ம தர்சிகளுக்கு ஸூக்ரகமாக அறியலாம் படி ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

———————-

இனி மேல் சதுர்த்த அத்யாயத்துக்கும் மேல் இரண்டு பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டான படி –
இதில் ஒன்பதாம் பாட்டு பிரதம த்விதீய பாதார்த்தமாகவும்
பத்தாம் பாட்டு த்ருதீய சதுர்த்த பாதார்த்தமாகவும் இருக்கும் –

இதில் பிரதம பாத பிரதம அதிகரணத்தில்
மோக்ஷ சாதநீ பூத ஞானம் சக்ருதா வ்ருத்தம் என்று சங்கித்து நிரந்தர த்யான ரூபமான ஞானமே மோக்ஷ சாதனம் என்று
ஸ்ருதி சித்தமாகையால் அஸக்ருத் கர்த்தவ்யம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
ஆத்மேத்யேவோபாஸீத-இதி வாக்ய விசேஷ பிரதிபன்னமான உபாசன விசேஷத்திலே அந்யத்வேண ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அவ்விடத்திலும் ஆத்மத்வேந உபாஸ்யம் என்று நிர்ணயித்தார்

த்ருதீய அதிகரணத்தில்
மநோ ப்ரஹமேத் யுபாஸீத -இத்யாதி ப்ரதிகோபாசனங்களில் ப்ரஹ்ம உபாசனத்தவ சமயத்தாலே உபாசித்துராத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அந்த உபாசனங்களில் ப்ரதீகமான மந ப்ரப்ருதிகள் உபாஸ்யமாகையாலும் ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லாமையாலும்
இவ்விடங்களில் ஆத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் அன்று என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
பல சாதனத்வேந உத்க்ருஷ்டமான உத்கீதாதி த்ருஷ்ட்டி ஆதித்யாதிகள் என்று சங்கித்து ஆதித்யாதிகளே பல ப்ரததயா உத்க்ருஷ்டங்கள் ஆகையாலே
உத்கீதாதிகளிலே ஆதித்யாதி த்ருஷ்டியே உள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உபாசனை அனுஷ்டானம் ஆஸீ நத்வ சாயா நத்வ ஸ்திதி கமணாத்ய வஸ்தைகளிலும் விசேஷா பாவாத் உபபன்னம் என்று சங்கித்து
சயா நாத்ய வஸ்தைகளில் ஏகாக்ரத்வ சம்பவம் அனுபன்னம் ஆகையால் ஆஸீநத்வ அவஸ்தையில் ஒன்றிலுமே கடிக்கும் ஒன்றாகையாலும்
தத் அவஸ்தையிலேயே உபாசன அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பூர்வம் நிர்ணீத உபாசனம் ஏகாஹ மாத்ர சம்பாத்தியம் என்று சங்கித்து –
ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் -என்கிற ஸ்ருதியின் படியே –ஆப்ரயாணம் அனுவர்த்த நீயம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
வித்யா பலத்வேந ச்ருதங்களான பூர்வ உத்தராகங்களினுடைய அஸ்லேஷ விநாசங்கள் -ந புக்தம் -இத்யாதி வசன விரோதத்தாலே
வித்யா ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று சங்கித்து -அஸ்லேஷா விநாசங்கள் வித்யா பலத்வேந சுருதி பிரதிபண்னங்கள் ஆகையாலும்-
ந புக்தம் -இத்யாதி வசனங்கள் பல ஜனன சக்தி த்ரடிம ப்ரதிபாதன பரங்கள் ஆகையாலும் ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸூக்ருதம் சாஸ்த்ர சித்தமாகையாலே வித்யா விரோதி அன்று என்று சங்கித்து ஸூக்ருதமும் அதிகாரி பேதேந வித்யா விரோதி என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
சர்வ பூர்வாகங்களும் வித்யா மஹாத்ம்யத்தாலே வினாசயங்கள் என்று சங்கித்து அநாரப்த கார்யங்களுக்கே அது உள்ளது என்று என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில்
அக்னி ஹோத்ராதி நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம தர்மங்களும் தத் பலன்களும் அஸ்லேஷோக்த்யா அனுஷ்டானம் அப்ராப்தம் என்று சங்கித்து
வித்யா உத்பாதகங்களான ஸ்வ வர்ணாஸ்ரம உச்சித கர்மங்களுக்கு பாலாஸ்லேஷம் இல்லாமையால் அனுஷ்டானம் பிராப்தம் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
பிராரப்த கர்ம விநாசம் வித்யா யோனி சரீராவஸாநத்திலே நியமேந வருகிறது என்று சங்கித்து தச் சரீர அவசானத்திலே யாகிலும்
சரீராந்தர அவசானத்திலே யாகிலும் அநியமேந வரும் என்று நிர்ணயித்தார் –

த்வதீய பாத -பிரதம அதிகரணத்தில்
வாங்மனசி சம்பத்யதே -என்று வாக்குக்கு மனஸ் சம்பத்தியை ப்ரதிபாதிக்கிற சுருதி வாக்கு மனா உபாதாநகம் அல்லாமையாலே மனசிலே
வாக் ஸ்வரூப சம்பத்தியைச் சொல்லுகிறது அன்று -வாக் வ்ருத்தி மநோதீநை யாகையாலே தத் வ்ருத்தி சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து –
மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தில் ப்ரதிபாதனமானாலே ஸம்பத்தி சுருதி ஸ்வாரஸ்யம் சித்திக்கையாலும்

வாக்குக்கு மனஸ் ஸூ உபாதானம் அல்லாமையாலே லயம் கூடாதே இருந்தாலும் மனஸோடு வாக் சம்யோகத்தைச் சொல்ல வந்தது ஆகையாலும் மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தியை ப்ரதிபாதிக்கிறது என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில்
மன ப்ராணே-என்கிற இடத்தில் அன்ன ப்ராக்ருதமாகச் சொல்லப் படுகிற மனஸூக்கு அன்ன ப்ரக்ருதிக பூதாப் ப்ரக்ருதிகமான பிராணன் காரணமாக் கூடுகையாலே பரம்பரையா ஸ்வ காரணே லயரூப சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து
மன ப்ராணன்கள் அகங்கார ஆகாச விகாரங்கள் ஆகையாலும் அந்நாப் விகாரங்கள் இல்லாமையாலும் பரம்பரையா காரண லய ஸம்பத்தி ப்ரதிபதன பரம் அன்று –பூர்வ உக்தரீத்யா சம்யோக மாத்ரத்தைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
பிராணாஸ் தேஜஸி -என்கிற இடத்தில் கேவல தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று சங்கித்து ஜீவனோடே கூட தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தி அதிகரணத்தில் –
தேஜஸ் சப்த மாத்ர ஸ்ரவணத்தாலே ஜீவ சம்யுக்த ப்ராணனுக்கு கேவல தேஜஸ் ஸம்பத்தி என்று சங்கித்து தேஜ உபலஷித சர்வ பூதங்களிலும் ஸம்பத்தி என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அத்ரைவ அம்ருதத்வ வசனத்தாலே உதக்ராந்தி இல்லாமையால் அப்ரஹ்ம நிஷ்டனுக்கே உதக்ராந்தி என்று சங்கித்து

ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் நாடீ விசேஷத்தாலே உதக்ரமணம் சுருதி சித்தமாகையாலே அவனுக்கும் அது உண்டு என்று நிர்ணயித்தார் –

ஷஷ்டா அதிகரணத்தில்
ஜீவ பரிஷ்வக்தங்களான பூத ஸூஷ்மங்களில் ஸூக துக்க உபபோக ரூப கார்யம் காணாமையாலே அவற்றுக்குப் பரமாத்மா ஸம்பத்தி இல்லையென்று சங்கித்து
ஸூஷூப்தி பிரளய தசைகளில் போலே பரமாத்மா சம்பத்தியால் ஸூக துக்க உபபோக ஆயாச விஸ்ரம ரூப கார்யம் உதக்ரமண தசையிலும் உண்டாகையாலே
தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -என்று சுருதி ப்ரதிபன்னமான ஜீவ சம்யுக்த பூத ஸூஷ்மங்களுக்கு உள்ள பரமாத்மா சம்பத்தியை இல்லை செய்ய ஒண்ணாது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பூர்வ யுக்தமான பரமாத்மா ஸம்பத்தி காரணா பத்தி ரூபை என்று சங்கித்து
வாங்மனசி சம்பத்யதே -என்கிற இடத்தில் சம்பத்யதே -என்கிற பதம் சம்சாரக்க விசேஷ வாசியாகையாலும்

அநு ஷக்தமான அந்தப் பதத்துக்கு அபிதான வை ரூப்யத்தில் பிரமாணம் இல்லாமையாலும் சம்சர்க்க விசேஷாபத்தியைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸதாதிகையான மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்கிற நியமம் இல்லை -தோன்றிற்று ஒரு நாடியாலே நிஷ் க்ரமணம் உள்ளது என்று சங்கித்து
தயோர்த்வ மாயன்னம்ருதத்வமேதி -என்று மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று சுருதி சொல்லுகையாலே நியமேந மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
உதக்ரமண அனந்தரம் ரஸ்ம்யநு சாரேண கத்தி என்கிற நியமம் இல்லை -நிசிம்ருதனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அது கிடையாமையாலே என்று சங்கித்து
நிசியிலும் ரஸ்மி சம்பவ ப்ரதிபாதக சுருதி இருக்கையாலே நிசிம்ருதனாகிலும் ப்ரஹ்ம நிஷ்டனுக்கு ரஸ்ம்யநு சாரேண கமனம் நியதம் என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில்
நிசா மரணம் சாஸ்த்ர கர்ஹிதம் ஆகையால் அப்போது ம்ருதனுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

கர்ம சம்பந்தம் யாவது தேஹ பாவியாகையாலே கர்ம விநாச அனந்தரம் சம்சாரம் கூடாமையாலும்

நிசா மரண க்ரஹை அவித்வத் விஷயை யாகையாலும்

நிசா ம்ருதனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
தஷிணாயன ம்ருதனுக்கு சந்த்ர பிராப்தி ஸ்ரவணத்தாலும்-சந்த்ர பிராப்தி யுடையவர்களுக்குப் புநரா வ்ருத்தி ஸ்ருதை யாகையாலும் அக்காலத்தில்
ம்ருதர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

பித்ருயாண பதத்தால் சந்த்ர பிராப்தி உடையவர்களுக்கே புநரா வ்ருத்தி ஒழிய சந்த்ர பிராப்தி
உடையவர்களுக்கு எல்லாம் புநரா வ்ருத்தி உண்டு என்கிற நியமம் இல்லாமையால் ப்ரஹ்ம பிராப்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

இதில் பிரதம பாதத்தில்
முதல் அதிகரண ஷட்கத்தாலே உபாசன ஸ்வரூப சோதனத்தைப் பண்ணி

ஏழாம் அதிகரணம் தொடங்கிnமேல் உள்ள அதிகரண பஞ்சகத்தாலே -ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலத்தை நிரூபித்தார்

த்வதீய பாதத்தில் –
உத்க்ராந்தி நிரூபணம் பண்ணினார்

இப்படி பாத த்வயத்தாலே நிரூபித்த அர்த்தத்தை –
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்று ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தர்பவிக்கவே
ஆத்மாவினுடைய அஞ்ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும் தத் தேதுவான அவித்யாதிகளும் எல்லாம் விட்டுக் கழியும் –
பின்னையும் ஆரப்த சரீர விசேஷத்தினுடைய முடிவைப் பார்த்து அத்தை விடும் பொழுது எண்ண வேணும் -என்று ஆழ்வாரும் வெளியிட்டு அருளினார் –

அது எங்கனே என்னில்
ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகார தயா அந்தர்பவித்து பஜிக்கவே என்று சொல்லுகிற –ஒடுங்க அவன் கண் -என்கிற முதல் அடியாலே
பிரதம பாத அதிகரண ஷட்க நிரூபிதமான உபாசன ஸ்வரூப சாதனம் பண்ணின அம்சம் ஸூசிதமாயிற்று –
ஒடுங்கே -என்கிற அம்சத்தை உரையில் பஜன பரமாகவும் யோஜித்தமை ஸ்பஷ்டமாய் இருக்கும் –

ஈடு சதுர் விம்சதி சஹஸ்ரம் முதலான வியாக்யானங்களிலும் –
பஜநம் எளிதானாலும் -என்றும் –

பஜனமாவது தான் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு கொடுக்கை -என்றும் யுக்தமாகையாலே

இச்சந்தை பஜன பரமாகவே முன்புள்ள முதலிகளும் வ்யாக்யானம் பண்ணினமை ஸித்தமாய் இருக்கும்

வீடுமின் முற்றவும் -பிரபத்தி பரம் -பத்துடையடியவர் -பக்தி பரம் என்கிற வ்யவஸ்தைக்கு இது விருத்தம் அன்றோ என்னில்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு முன்புள்ள முதலிகள் இப்படி நிர்வகித்தார்களே யாகிலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு இவ்வருகுள்ள முதலிகள் இரண்டும் பக்தி பரம் என்று
நிர்வஹிக்கையாலும் வ்யாக்யாதாக்கள் அனைவரும் பஜன பரம் என்று தோற்றும்படியே வ்யாக்யானம் பண்ணுகையாலும் விரோதம் இல்லை –

ஆனால் வீடுமின் முற்றவும் -பக்தி பரமாயும் இச்சந்தை பஜன பிரகார ப்ரதிபாதன பரமாயும் இருந்ததே யாகிலும் ஸாத்ய பக்தி ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி என்று வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே க்ரந்தக்காரர் தாமே நிர்ணயம் பண்ணுகையாலே இச்சந்தை
சாதன பக்தி பிரகார ப்ரதிபாதன பர அதிகரண ஷட்க அர்த்த ஸூசகமான படி எங்கனே என்னில் –
நாதமுனி ப்ரப்ருதிகளான நம் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டித்த ஸாத்ய பக்திக்கும் உபாசகன் அனுஷ்டிக்கிற சாதன பக்திக்கும் சாதனத்வ புத்தி ராஹித்ய சாஹித்யங்களால்
வந்த பேதம் ஒழிய ஸ்வரூப வைலக்ஷண்யம் இல்லாமையாலும் யம நியம பிராணா யாமாதிகள் என்ன-கீர்த்தன யஜன நமஸ்காராதிகள் என்ன –
ஸூ சிதேசா வஸ்தாபித சேலா ஜின குசோத்தர ரூப ஆசனம் என்ன -ஏகாக்ர சித்ததா வஸ்தானம் என்ன -இவை முதலான அனுஷ்டானமும்
இரண்டுக்கும் ஒத்து இருக்கையாலும் இச்சந்தை ஸாத்ய பஜனத்தைச் சொன்னாலும் சாதன பஜன பிரகார ஸூசகத்வம் யுண்டாகத் தட்டில்லை-

இனி ஏழாம் அதிகரணம் தொடங்கி மேலுள்ள அதிகரண பஞ்சகத்தாலே நிரூபித்த ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலாம்சமும்
ஒடுங்கலும் எல்லாம் விடும் -ஆகந்துகங்களாய் ஸ்வரூப ப்ரயுக்தம் அன்றிக்கே இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்கள் எல்லாம் விட்டுப் போம் -என்று
வித்யா பலமான சகல விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ப்ரகாசிதம் என்னும் இடம் ஸ்புடமாக அறியலாம் –

சரீர விஸ்லேஷ தசையை எண்ணுங்கோள்-என்று விதிக்கிற –ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்கிற சந்தையாலே உத்க்ராந்தி பாதார்த்தம் கார்த்ஸ்ந்யேந ஸூசிதமாயிற்று –

இதில் பிரதம அதிகாரணம் தொடங்கி அஷ்டம அதிகரண பர்யந்தம் நிரூபித்த
சர்வ இந்திரிய பூத ஸம்பத்தி ரூப உதக்ரண அம்சம் -ஆக்கை விடும் -என்கிற அளவால் யுக்தமாயிற்று –

நவம அதிகரணம் தொடங்கி மேல் மூன்று அதிகரணத்தால் பிராரப்த கர்ம அவசான காலமே மோக்ஷ காலம் என்று நிர்ணயித்த அம்சமும்
க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு சரீர விஸ்லேஷ காலத்தை விசேஷம் இன்றிக்கே எப்போது வருகிறதோ என்று சிந்தி -என்கிற
விடும் பொழுது எண்ணே -என்கிற அளவால் ஸூசிதமாயிற்று –

இப்படி ஒன்பதாம் பாட்டுக்கும் சதுர்த்த அத்யாய பிரதம த்விதீய பாதங்களுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடத்தை உபபாதித்தோம் –

——————————-

இனிமேல் த்ருதீய துரீய பாதங்களுக்கு பத்தாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படியை -தெரிவிக்கிறோம் –
த்ருதீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம பிராப்தியில் அர்ச்சிராதி மார்க்கமும் -பின்னையும் சில மார்க்காந்தரங்களும் நைரபேஷ்யேண சாந்தோக்ய வாஜசநே யாதிகளிலே ச்ருதங்களாகையாலே -மார்க்கங்கள் விகல்பேந வருகிறது என்று சங்கித்து –

சர்வ அவஸ்தலங்களிலும் அர்ச்சிராதி பூதங்களான ஆதித்யாதி புருஷர்கள் வழி நடத்துகிறவர்களாகக் காண்கையாலே
அர்ச்சிராதி மார்க்கமே ப்ரத்யபிஞ்ஞாதம் ஆகையால் மார்க்கம் ஏகம் என்று சித்திக்கையாலும்

அத்தால் அந்நியத்ர உக்தங்களுக்கு அந்நியத்ர உபஸம்ஹாரம் ப்ரமாணிகம் ஆகையாலும்

அர்ச்சிராதி மார்க்க ஏணைவ முக்தஸ்ய ப்ரஹ்ம ப்ராப்யர்த்த கமனம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
பாட க்ரமத்தாலே வருண இந்திர ப்ரஜாபதிகளுக்கு வாயு வனந்தரம் நிவேசம் யுக்தம் என்று சங்கித்து பாட க்ரம அபேக்ஷயா அர்த்த க்ரமம் பலிஷ்டமாகையாலே மேகோதா வர்த்தித்தவ ரூப சம்பந்தத்தால் வித்யுத் உபரி வர்ண இந்த்ராதிகளுக்கு நிவேசம் யுக்தம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
அர்ச்சிராதிகள் மார்க்க சிஹ்னங்கள் என்று சங்கித்து கமயித்ருத்வம் ச்ருதமாகையாலே அர்ச்சிராதிகள் ஆதி வாஹிக புருஷர்கள் என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம உபாசகனுக்குப் பரிபூர்ண ப்ரஹ்ம ப்ராப்த்யர்த்தம் தேசாந்தர கமனம் அநபேஷிதம் ஆகையால் ப்ரஹ்ம உபாசகர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை –ப்ரதீக உபாசகர்களுக்கே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று சங்கித்து
தேச விசேஷ அவச்சின்ன ப்ரஹ்ம பிராப்தி யுடையவனுக்கே அவித்யா நிவ்ருத்தி சுருதையாகையாலே

நிஷ்க்ருஷ்ட ப்ரஹ்ம சரீர ஜீவ உபாசகர்களுக்கும்
ஜீவ சரீர ப்ரஹ்ம உபாசகர்களுக்குமே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று நிர்ணயித்தார் –

முக்த ஐஸ்வர்ய பிரகார சிந்தனம் பண்ணுகிற துரீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம ஸம்பத்தி யுடையவனுக்கு ஸ்வரூபம் நித்யாவிர்பூதமாய் இருக்கையால் அதுக்கு ஆவிர்பாவம் சொல்ல ஒண்ணாது –
அபூர்வமாய் இருபத்தொரு ஆகார நிஷ்பத்தியே உள்ளது என்று சங்கித்து -அபஹத பாப்மத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபம் அவித்யா திரோஹிதமாகையால்
தந் நிவ்ருத்தயா எப்போதும் உள்ள ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
முக்தன் ப்ரஹ்ம அனுபவ தசையில் ப்ரஹ்மத்தை விபக்தமாக அனுபவிக்கிறான் என்ன வேணும் -சுருதி சதங்களாலே தத் திசையிலும் பேதம் காண்கையாலே -என்று சங்கித்து -பிரகார பிரகாரி பேதத்தால் வந்த பேதத்தை சுருதி சதங்கள் சொல்ல வந்தது ஒழிய –

தத்வம்ஸயாதி சுருதி சித்த விஸிஷ்ட ஐக்யத்தை பாதிக்க வந்தது அல்லாமையாலே
தத் பிரகார தயா அவிபக்தமாயே அனுபவிக்கிறான் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
முக்தனுக்கு அபஹத பாப்மாத்வாதி குணவத்த்வந்தான் ஞானத்வந்தான் ஸ்வரூபம் என்று மத பேதத்தாலே சங்கித்து
உபயமும் சுருதி சித்தமாகையால் உபயமும் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
முக்தனுக்கு ஸ்ருதையான ஞாத்யாதி ப்ராப்தியில் ப்ரயத்தனாந்தர சாபேஷதை உண்டு என்று சங்கித்து
ஈஸ்வரனைப் போலே பிரயத்தன நிரபேஷமாகவே-ஞாத்யாதி பிராப்தி யுள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
கர்ம சம்பந்தம் இல்லாமையால் முக்தன் அசரீரனாய் இருப்பன் என்றும் -கர்ம சம்பந்தம் இல்லாவிடிலும் கேவல இச்சையா சரீரனாயே இருப்பன் என்றும் சங்கித்து –
சங்கல்பம் யுண்டாகில் ச சரீரனாய் இருக்கிறான் -அது இல்லையாகில் அசரீரனாய் இருக்கிறான் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பரம சாம்யா பத்தி ஸ்ருதியாலே ஜகத் ஈஸ்வரத்வமும் முக்தனுக்கு யுண்டு என்று சங்கித்து -அது உள்ளது ஜகத் காரண பூத ப்ரஹ்ம மாத்ரத்துக்கே யாகையாலே-போக மாத்ர ஸாம்யமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

சரம ஸூத்ரம் -அதிகரண அந்தரமான பக்ஷத்தில் சப்தம அதிகரணமான அதில் –
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் கதாசித் புநரா வ்ருத்தியையும் பண்ணக் கூடும் என்று சங்கித்து –

அநா வ்ருத்தி சுருதி சித்த மாகையாலும் ஸத்யஸங்கல்பனான ஈஸ்வரன்
ஸ்வ சங்கல்ப விருத்தமாகப் புநரா வ்ருத்தியைப் பண்ணாமையாலும் புநரா வ்ருத்தி வாராது என்று நிர்ணயித்தார் –

இப்படி இவ்விரண்டு பாதத்தாலேயும் நிஷ்கர்ஷித்த
அர்ச்சிராதி மார்க்கம் தொடங்கி பரம வ்யோம பிரவேசாநந்தரபாவி ப்ரஹ்ம அனுபவ பர்யந்தமாய் யுள்ள பலத்தை -ஆழ்வாரும் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் தின் கழல் சேரே  -என்று ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே
எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருப்பதாய்

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய அகாமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய்
ஆவீர்பூத ஸ்வ ரூபமான விலக்ஷண ஆத்மவர்க்கம் என்ன –

அஸங்க்யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையவனாகையாலே
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய ஆஸ்ரிதரைக் கைவிடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி -என்று வெளியிட்டு அருளினார் –

இதில் நலம் என்று ஈஸ்வரனோடு ஒத்த ஆனந்தத்தை யுடையனாக முக்தனைச் சொல்லுகையாலே

சர்வ ஸத்காரத்தால் வந்த ஈஸ்வர ஆனந்த சாம்யம் யுக்தமாய் –
அத்தாலே அர்ச்சிராதி புருஷ சதிகார ப்ரயுக்த ஆனந்தமும் சொல்லிற்றாக லபிக்கையாலே இச்சந்தையாலே அர்ச்சிராதி பாதார்த்தமும் ஸூசிதமாகலாம்

சரம பாத பிரதம அதிகரணத்தில்
ஸ்வரூப ஆவிர்பாவமே முக்த தசையில் உள்ளது என்று நிர்ணயித்த அர்த்தம் –

ஆவிர்பூத அபஹத பாப்மாத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிற
ஒண் பொருள் -என்கிற சந்தையாலே ஸ்புடமாக ஸூசிதமாயிற்று-

நாரணன் -என்கிற சப்தம் -சர்வ காலத்திலும் சேதன ஈஸ்வரர்களுக்குள்ள அப்ருதக் சித்த சம்பந்தத்தைக் காட்டுகையாலே
முக்த தசையில் அவிபாகேந ப்ரஹ்ம அனுபவமே உள்ளது என்று நிர்ணயித்த த்வதீய அதிகரண அர்த்தம் ஸூசிதமாயிற்று –

ஒண் பொருள் -என்கிற இடத்தில் ஆத்ம வஸ்துவுக்கு ஒண்மையாவது

அசங்கோசாத் அபஹத பாப்மத்வாதிகளும் ஞான ஸ்வரூபத்வமும் ஆகையால் உபயம் ஸ்வரூபம்
என்கிற த்ருதீய அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம்

இது உரையில் சப்தார்த்த நிர்வாஹ பிரகாரத்தில் கண்டு கொள்வது –

ஈடு முதலான வ்யாக்யானங்களில் -நலத்து ஒண் பொருள் -என்கிற பாதங்களுக்கு ஞானாதி குணகத்வமும் ஞான ஸ்வரூபமும் அர்த்தம் என்று வ்யாக்யானம்
பண்ணுகையாலே இப்பத த்வயத்தாலும் உபயமும் ஸ்வரூபம் என்கிற அதிகாரண அர்த்தம் சொல்லப் பட்டது என்று ஸ்புடமாக அறியலாம் –

ஒண்மைக்கு அபஹத பாப்மாத்வாதி குண அஷ்டக அந்தரகதமான ஸத்யஸங்கல்பத்வம் அர்த்தமாகையாலே
சங்கல்பாதேவ ஞாத்யாதி பிராப்தி என்கிற சதுர்த்த அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம் –

ஒண் பொருள் –என்கிற சப்தத்தாலே அபஹத பாப்மாத்வாத் யந்தரகதமான சத்யகாமத்வம் யுக்தமாயிற்று –
சத்யகாமத்துவமாவது -இச்சை யுண்டாகில் அவ்ப்ரதிஹதமாய் இருக்கை-

இப்படி சத்யகாமாத்வ உக்த்யா ஐச்சமாக சரீரத்வ அசரீரத்வங்கள் முக்தனுக்கு கூடும் என்கிற பஞ்சம அதிகாரண அர்த்தமும் –
ஒண் பொருள் –என்கிற சந்தையாலே தானே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட அதிகரண நிரூபிதமான ஜகத் வியாபாரம் இன்றிக்கே போக மாத்ர ஸாம்யமே உள்ளது -என்கிற அர்த்தம் –

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு ஒத்த ஆனந்தத்தை உடையவன் என்று ஆனந்த மாத்ர சாம்யத்தைக் காட்டுகிற –அந்நலம்-என்கிற பதத்தால் ஸூசிதம் –

சரம ஸூத்ரம் அதிகாரணாந்தரம் என்கிற பக்ஷத்தில் ஆஸ்ரிதரை ஒரு நாளும்  விடாத திண்மையை யுடைய திருவடிகள் என்று சொல்லுகிற –
திண் கழல் -என்கிற பதத்தாலே -ஈஸ்வர ஸ்வா தந்தர்ய சங்கீத புநரா வ்ருத்தியை
ஸத்ய ஸங்கல்ப காருண்யாதி குணவதீஸ்வர ஸ்வ பாவத்தாலே இவ்வதிகரண அர்த்தம் ஸூசிதம்

இப்படி பத்தாம் பாட்டுக்கும் இப்பாத த்வயத்துக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

——————————————–

இனி நிகமத்தில்
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த இப்பத்தே -என்று தடாகங்கள் சேர்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ உபயோகங்களான கல்யாண குணங்களால் தொடுக்கப் பட்டு இருந்துள்ள
ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு இப்பத்தை நிரூபியுங்கோள் -என்று
உத்தர த்விக ப்ரதிபாத்யமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ ப்ரதிபாதனம் இத் திருவாய் மொழி என்று தலைக்கட்டி அருளினார் –

ஈட்டிலே உபாஸக அனுக்ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த என்று இறே-
சீர்த் தொடை -என்கிற சந்தைக்கு வ்யாக்யானம் செய்து அருளினது –

இப்படி வீடுமின் முற்றத்துக்கு உத்தர த்விகத்துக்கும் ஐகமத்யம் யுண்டு என்னும் இடம் சித்தம்

ஆக அத்யாய சதுஷ்ட்யாத்மகமாய் –
ஷோடச பாதாத்மகமாய் –
ஷாட் பஞ்சாசததிகசத அதிகரணாத் மகமாய்
இருந்துள்ள சாரீகாதாத்மகமாய் இருந்துள்ள பிரதம த்விதீய தசகங்களுக்கும் –
கலிவைரி நிகமாந்த தேசிக ப்ரப்ருதிகளான பூர்வாச்சார்யர்களுடைய ப்ரதிஞ்ஞா வாக்கியங்களின் படியே ஐகமத்யம் அநதி ஸங்க்ரஹ விஸ்தரேண உபபாதிதம் ஆயிற்று –
இனி பத்துடை அடியவர் -தொடங்கி -முனியே நான்முகன் அளவும் -இவ்விரண்டு திருவாய் மொழிக்கும் விவரணம் என்னும் இடம் ஸூதீக்களுக்கு ஸூவ்யக்தமாக அறியலாம்

—————————————————————————-——————————-

பாரம்பரீ பவபயோ நிதி பாத்ர பாத்ர சிஷ்டேதரேஷ்வ ஸூலபம் மம தேசிகா நாம்
தே யாத தயா நிதி ரமாசக பாத யுக்ம ருக்மாதி பாவந வி ஸூத்த ஸமஸ்த போதம்
ஜெயது வகுளதாரீ தேசிகோ தேசிகா நாம் ஜெயது யதி வரார்யோ மாயி மத்தேப சிம்ஹா
ஜெயது கலி ஜீதார்யோ வ்யாஸ சம்ஜ்ஜோ விபஸித் ஜெயது ஜெயது நித்யம் வேங்கடாசார்ய யுக்மம்
இதி-ஸ்ரீ மத் வாதூல குல திலகயோ காஞ்சீயதீசஜநீ பூமி க்ருதாவதாரயோ
ஸ்ரீ மத் வேங்கட தேசிகயோ அஹேதுக க்ருபாலப்தோபய வேதாந்த ஹ்ருதயேந ஸ்ரீ காஞ்சீ வர வர யோகிநா
ஸ்ரீ ராமாநுஜா தாஸேந விலிகிதம் சாரீரக த்ரமிடோபநிஷதைக கண்ட்யம் –

———————–

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: