கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரஸூநார்பணம் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மநிசம் ஸ்ரீதன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தனயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3
ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.
அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.
- ‘கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
- ‘தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
- ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.
ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,
- தூமலர் தூவித்தொழுது
- வாயினால் பாடி ️
️
- மனத்தினால் சிந்திக்க
என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!
- திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
- 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
- 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.
“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!
கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!
—————————
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்
—————-
மார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.
பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.
அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.
பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.
பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:
பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.
ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.
இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.
இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.
வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து- மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.
மூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள் அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.
மூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.
தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.
பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின் கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.
பாவை நோன்பு செய்யும் முறை
மார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரை தோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக் காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.
இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.
“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.
அது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.
இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
கதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.
அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
இவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.
அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.
“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.
சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.
தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.
பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.
‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்பர் அங்குக் கூடியுள்ள மகளிர். காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த ஆற்று நீர், மார்கழி மாதம் தெளிந்து, முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். அதுவே தக்க நீர். எதற்குத் தக்கது என்றால், தங்கள் மன விருப்பங்களையும், தவத்தையும் அந்த நீரிடம் கூறும்பொழுது, கண்ணாடி போல் தெளிந்த அந்நீர் அவற்றைத் தைத்துக் கொள்ளும். அதுவே ‘தைந் நீர்’. தெளிந்து இருக்கும் அந்நீர், அந்த மகளிரின் தவத்தை அப்படியே வாங்கிகொண்டு, நிறைவேற்றிக் கொடுக்கும்.
அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை அடுத்த வரிகளில், புலவர் கூறுகிறார். இங்கேதான் அக வாழ்வின் வேண்டுதல்களைப் பொது நலம் கொண்ட பாவை நோன்புடன் தைக்கும் அருமையான கருத்துகள் புலனாகின்றன.
‘ “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்
“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”
இப்படி வேண்டிக் கொண்டு, பரிபாடல் இசைத்துப் பாடி இறுதியாக அவர் வேண்டுவது இது.
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!
“நாங்கள் முன்பிறப்பில் செய்த தவத்தாலே, இப்பிறவியில் நின்பால் இத் தைந் நீராடலாகிய தவத்தைப் பெற்றோம். அத்தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் நாங்கள் பெறுவோமாக,” என்று பிறவி தோறும் தொடரும் தவமாக, இந்த வேண்டுதல் நடப்பதே பாவை நோன்பின் அகத் திறமும், தைந் நீராடலின் மகத்துவமும் ஆகும்.
இந்த வர்ணனைகள் பாவை நோன்பின் முதல் நாளான மார்கழி பௌர்ணமியன்று நடப்பவை. அதன் பின்னரும் என்ன ஆயிற்று, எவ்வளவு நாட்கள் இந்த நோன்பு தொடர்ந்தது என்று பார்க்கும் முன், இந்நோன்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
பிள்ளைப்பருவத்தின் ஐந்து முதல் ஒன்பது வரையிலான வயதுச் சிறுமியர் செய்வது என்று கூறப்படும் இந்தப் பாவை நோன்பில், முது பெண்டிர் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்யும்முறை சொல்லிக் கொடுக்கின்றனர். கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதே பாடலில் ஓரிடத்தில், பாவை ஆடிய கன்னிப் பெண்ணைக் கண்டு மயங்கின இளமகனைப் பற்றிய விவரங்கள் வருகின்றன. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டும் இள மங்கையர் கலந்து கொள்கின்றனர். ஆக, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் இந்த நோன்பை மேற்கொண்டுள்ளனர். வருடம் தோறும் செய்திருக்கின்றனர்.
ஹோமம் செய்யும் ஆண் மக்கள் அங்கே இருக்கின்றனர். பெண்கள் பாடுவதையும், ஆடுவதையும் வேடிக்கை பார்க்கும், இளம் பருவ ஆண்கள் அங்கே நீராடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நோன்பில் கலந்து கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க வகையில், இளம் சிறுவரும் அங்கே இருந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடலுக்கு மாறாக, சிறுமியர் அபிநயித்துள்ளனர் என்று புலவர் கூறுகிறார்.
மறுநாள் முதல், ஆற்றங்கரைக் காட்சியாக இந்தச் சிறுவரும், சிறுமியரும் ஆற்றில் நீராடி, சிறுமியர் பாவை சமைக்க, அவர்களோடு சேர்ந்து சிறுவர்களும் விளையாடுவர். இந்த வர்ணனையை புற நானூறு 243 -இல் காணலாம்.
தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர், தான் போகும் வழியில், ஆற்றங்கரையில் பாவைப் படிமங்கள் செய்யும் சிறுமியரையும், அவர்களோடு கைகோத்து, நீரிலும், மணலிலும் குதித்து, கள்ளமில்லாமல் விளையாடும் சிறுவர்களையும் பார்த்து, அவர்களைபோன்ற இளமைக்காலம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்.
“திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை”
என்னும் இவ்வரிகளில் சிறுவர்- சிறுமியர் ஒன்றாகப் பாவை ஆடி விளையாடியமை தெரிகிறது.
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து”
என்னும் புறநானூறு 11-இன் மூலம் இள மங்கையரும் மணலில் பாவை செய்து, மலர் சொரிந்து வழிபட்டனர் என்று தெரிகிறது.
நோன்பின் காலம்
ஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.
நாச்சியார் திருமொழி அடிப்படையில் நோக்கும் போது, மார்கழியில், மணலில் பாவை சமைத்தாலும், தையில் சிற்றில் இழைத்தலும் இருந்திருக்கக்கூடும். திருக்கூடல் போன்ற பிற மணல் விளையாட்டுகளையும், சிறுமியர் பிற மாதங்களில் விளையாடியிருக்கின்றனர்.
திருக்கூடல் என்பது, மணலில் வட்டமாக வரைந்து, கையை எடுக்காமல் அப்படியே அந்த வட்டத்தின் உட்புறம் சுழிகள் பல வரைய வேண்டும். பிறகு, இரண்டிரண்டாக சுழிகளை என்ன வேண்டும். கடைசியில் இரட்டைபடையில் கூடினால், நினைத்தது நடக்கும். ஒற்றைப்படையில் கூடினால், நினைத்தது நடக்காது. ஆண்டாள் நினைத்தது, நாராயணனே தன்னிடம் வரவேண்டும், தன்னை மணம் புரிய வேண்டும் என்பது. நோன்பின் தொடர்ச்சியான இந்த விளையாட்டுகளிலும், வரப்போகும் கணவனைப்பற்றியே வேண்டுதல்கள் இருந்திருக்கின்றன.
அதன் ‘க்ளைமாக்ஸ்’ பங்குனித் திருநாள்! அதுதான் பங்குனி உத்திரம் என்னும், பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரம சிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.
பாவை நோன்பின் ஒரு பகுதியாக காமதேவனைத் தொழுவர். பரிபாடலில் மங்கையர் தெரிவிக்கும் விருப்பங்களைப் பார்த்தால், கணவன் அன்பு குறையாமல், தம்மை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்னும் காமதேவன் அருளும் வரங்களே. சிவனை நோக்கியே மலர்க்கணை தொடுத்தவன் காமதேவன் என்னும் மன்மதன். அவன் தமக்கும் அருள் புரிய வேண்டும். தாம் விரும்பும் மணவாளனை அடைய உதவ வேண்டும். அடைத்த கணவன் என்றும் அன்புடனும், பிரியாமலும் இருக்க வேண்டும் என்பது பாவையாடும் பெண்டிர் விருப்பம். இதை ஆண்டாளும் தெரிவிப்பதை நாச்சியார் திருமொழியில் காணலாம்.
ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.
பாவை உருவம்
மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் மண்ணில் என்ன செய்திருப்பார் என்று ஆராய்வோம்.
வெளிப்படையாகத் தெரிவது, பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம். பாவைப் பாட்டு என்பது முன்பு இருந்தது என்று தொல்காப்பிய உரையில் காணப்படுகிறது. அதுபோல பாவைக் கூத்து அல்லது பாவை ஆட்டம் என்பதும், பதினோரு கூத்து வகைகளுள் ஒன்று. இதை ஆடியவள் செய்யோள் என்னும் செந்நிறம் கொண்ட திருமகள். அவளுக்குக் கொல்லிப் பாவை என்று பெயர் உண்டு. போருக்கு வந்த அசுரர்கள் மோகித்து, மெலிந்து விழும்படி அவள் புனைத்து கொண்ட உருவம், கொல்லி மலையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதை காண்போர் அப்பொழுதே மோகிப்பர் என்று சொல்லப்படுகிறது. மோகத்தைத் தரும் காமதேவன் போல, இவள் பாவை உருவமே மோகத்தைத் தரும். எனவே இவள் உருவைப் பாவையாக அமைத்திருக்கலாம்.
“முன்னிக்கடலை” என்னும் திருவெம்பாவையிலும், சக்தியின் உருவாக வருணிக்கப்பட்டு, மழை பொழிதலுடன் பாவை நோன்பு சொல்லப்படுகிறது. எனவே, பராசக்தி என்னும் பெண் தெய்வத்தையே வடித்திருக்கலாம்.
ஆனால் சிலப்பதிகாரத்தில் வஞ்சின மாலையில், புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று சொல்லப்படுகிறது.
இங்கே இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, இப்படிப்பட்ட உருவம் கொண்டவன்தான் தன் கணவனாக வரவேண்டும் என்று அவ்வுருவைப் பாவையாக அமைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.
மற்றொன்று, அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று மெய்ப்பிப்பது போல ஆற்று நீரும் நடந்து கொண்டிருக்கின்றது. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் இனி வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர், ஆமோதிக்கும் வண்ணம் அந்தப் பாவையை சிதைக்காமல் சென்றது. அவள் கணவன் யார் என்பதை அவளது பல பிறவிகளிலும், அந்த ஆற்றங்கரையில் அவள் நோன்பிருந்தமையால், ஆற்று நீர் தெரிந்து கொண்டிருக்கிறது.
இதற்கு மாறாக, சிறுமியர் வடித்த பாவையை, வைகை நீர் சிதைத்தது. அதனால் அவர் அழுவர் என்னும் வருணனையும் பரிபாடல் -7 இல் வருகிறது. தாங்கள் வடித்த பாவை சிதைந்து விட்டதே என்னும் துக்கம் இருக்கலாம். அல்லது, மேற்கூறிய வகையில் தன் கணவன் உருவம் என்று சமைத்த உருவம் சிதைந்ததே என்றும் அழுதிருக்கலாம்.
இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்கலாம்.
பின்னாளில் பாவை நோன்பு
பாவை நோன்பு விவரிக்கும் பரிபாடல், அப்பாடல் எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கும் விதமாக கோள்களின் நிலையைக் கூறுகிறது. நான் தேடின வரையில் கி.மு. 1042, ஆவணி மாதம் இருந்த கோள் நிலை அதை ஒட்டி வருகிறது. பரிபாடல்கள் முதல் சங்கக் காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்திருக்கின்றன. பிறவி தோறும் பெண்டிர் பாவை நோன்பு நோற்றமை பற்றிக் கூறவே இந்நோன்பும், அது பற்றி விளக்கும் இப்பாடலும் மிகப் பழமை வாய்ந்தவையாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம்.
பிற்கால வழக்கிலும் இந்நோன்பு இருந்திருக்குமா என்று தேடினால், சிலப்பதிகாரத்தில் இதை ஒத்த ஒரு நோன்பு சொல்லப்படுகிறது. கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியைப் பார்த்து, பார்ப்பனப் பெண்ணான அவள் தோழி தேவந்தியும் வருந்துகிறாள். தீய கனவு கண்டு வருந்தும் கண்ணகியிடம், கணவனைப் பிரியாமல் இருக்கச் செய்யும் நோன்பினை முன்பிறவியில் கண்ணகி செய்திருக்க மாட்டாள். அதனால்தான் இத்துன்பம் வந்திருக்கிறது. இருந்தாலும், இப்பிறவியில், அந்த நோன்பைச் செய்ய காவிரி நதியானது கடலில் சங்கமிக்கும் புகார்த் துறையில், சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு துறைகளில் நீராடி, காமதேவனைத் தொழுதால் இப்பிறவியிலும் கணவனைப் பிரியாது இருக்கலாம். மறு பிறவியிலும் போக பூமியில் பிறந்து கணவனைப் பிரியாது இருக்கலாம் என்கிறாள். ஆனால் கண்ணகி தங்களுக்கு அது வழக்கம் இல்லை என்கிறாள்.
(கனாத்திறம் உரைத்த காதை)
கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்’
பாண்டிய நாட்டில் வைகை நதி தைந் நீராக – தக்கதாக இருந்தது போல, சோழ நாட்டில், காவிரி ஆறு இருந்திருக்கின்றது. சோம குண்டம் என்பது சந்திரன் துறை. சந்திரனும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் மார்கழித் திருவாதிரையில் பாவை நோன்பு ஆரம்பித்தார்போல, இவை இரண்டும் எதிர்நோக்கும் துறைகளாக இருந்திருக்கலாம். அங்கே நீராடி, காமதேவனைத் தொழுதல், பாவை நோன்புக்கு இணையாக இருக்கிறது.
பின்னால், கோவலனுடன், கண்ணகியும் மதுரை புறப்பட்ட போது, இதே சங்கமத் துறைக்கு வருவது சொல்லப்படுகிறது. ஆனால், காமதேவனைத் தொழும் நேரமல்ல அது. அவ்விடத்தில் மணிவண்ணன் கோட்டத்தை வலம்வந்து, பயணத்தைத் தொடர்கின்றனர். மணிவண்ணன் என்பது திருமால். காமதேவன் திருமாலின் மைந்தன். சங்கமிருந்து காமதேவன் தொழுது, அருகில் திருமாலை வணங்கிச் செல்லும் வழக்கம், அந்நோன்பு நோற்றாரிடை இருந்திருக்க வேண்டும். அந்தணர்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும். பாவை நோன்பிலும், அந்தணப் பெண் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பாள் என்று வருகிறது. சிலம்பிலும், அந்த நோன்பைப் பற்றிக் கூறுபவள் ஒரு அந்தணப் பெண்.
சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிற்பட்டு, ஆண்டாள் காலத்திலும் இந்த வழக்கம் இருந்திருக்கலாம். கண்ணனை அவள் அடைய விரும்பவே, தான் இருக்கும் இடமே ஆயர்பாடி என்று அவள் உருவகித்து, திருப்பாவை அமையும் களம் ஆயர்பாடி எனப் பாடியிருக்கலாம்.
‘அங்கண் மா ஞாலத்து’ எனத் தொடங்கும் பாசுரத்தில், அரசர்களும் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்’ என்று சொல்வதன் மூலம், புகாரின் கண் உள்ள சங்கத் துறையைக் கோடிக் காட்டியிருக்கலாம். சோம குண்டம், சூரிய குண்டம் போல, அந்தப் பாடலில் ‘திங்களும், ஆதித்யனும்’ பற்றிய குறிப்பும் வருகிறது.
பாண்டிய, சோழ நாட்டில் மட்டுமல்ல, சேர நாட்டிலும் இந்த வழக்கம் இருந்திருக்கின்றது என்று கோபால பணிக்கர் என்பவர் எழுதிய புத்தகம் கூறுகிறது.
தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.
பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.
இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார். அந்த இந்திரனுக்கு எடுக்கப்படும் விழவு என்பதால், சேடி நாட்டு தம்பதியர் புகார் வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.
மாறுபாடு உடையது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒன்றே மதம், ஒரே வித வழக்கம் என்று இந்த பாரதப் பெரு நிலம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவையெல்லாமே சாட்சி.
தெய்வம் என்பதே இல்லை என்பதுதான் பகுத்தறிவு என்று கூறும் இன்றைய தமிழர் வாழும் இந்நாட்டில், இயற்கையும், மானுடமும் ஒத்து வாழ்ந்த இயல்பினைக் காட்டுவது பாவை நோன்பாகும். இயற்கையைப் பேணுங்கள், இயற்கை உங்களைப் பேணும் என்னும் உயரிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது இந்நோன்பு. அறிவியலும், ஆன்மிகமும் கலந்த பண்பாட்டினைப் பேசுவதுதான் இந்நோன்பு. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘தங்களுக்கு வழக்கம் இல்லை’ என்று கூறிய கண்ணகியே, தெய்வமான பிறகு, இளங்கோ அடிகளிடம் சொன்னாளே அதை மறவாமல் இருக்க வேண்டும்..
“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்:
….தானம் செய்மின்: தவம் பல தாங்குமின்.”
கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!
இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்
—————
ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —
ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்
ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்
ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்
ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்
அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்
கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை
மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்
காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம
அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்
இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ
இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்
பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்
நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-
தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –
கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்
தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்
பேணும் சிறப்பில் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழ மணை மொழிதலும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமோடு போற்றுதலும் பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் பிங்கலந்த நிகண்டில் -1369-
ஐங்கணைக் கிழவனை-மன்மதனை கால் பிடித்தாள் அன்றோ கேசவ நம்பியைக் கால் பிடிக்க
பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன,
அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது.
மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.
அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல்.
காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.
இந்த நீராட்டம் -ஆதிரைத் திரு நாளாக மலையாளத்தில் -திருவாதிரைக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி
பெண்டிர் கூட்டமாகச் சென்று நீராடி திருவாதிரை அன்று புதிய ஆடை ஆபரணங்கள் சூடி
விசேஷ பாயாசம் கூடாரை வெல்லும் சீர் -போல் கொண்டாடுகிறார்கள் –
பத்ம புராணத்தில் ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்
மார்கழி சுக்ல பக்ஷ நவமி தொடங்கி ஏழு நாள்கள் பவ்ர்ணமி வரை
ஸ்ரீ மத் பாகவதம் சப்தாகம் பாராயணம் ஸ்ரேஷ்டம் என்கிறது
ஸ்ரீ மத் பாகவதத்தில் காத்யாயினி விரதம் அனுஷ்ட்டித்து வஸ்த்ர சோரம் நடந்து பின்பு கோவிந்தா பட்டாபிஷேகம் செய்தால் போல் இங்கும் உண்டே
————-
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல் -ஸ்ரீ வராஹ நாயனார் விதைத்த வித்தே கோல் தேடி எழும் கொழுந்தாக ஆண்டாள்
நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது
நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம்–மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் -பாசுரக் கருத்தும்(மாரி -ஆண்டாள் கூந்தல் -மலை -ஸ்தனம் -முழைஞ்சு குகை -ஹ்ருதய குஹரம்-ஹார்த்த விக்ரஹம் -யஸீதை இளம் ஸிம்ஹம் -ந்ருஸிம்ஹ குட்டி )
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேலும் வைத்துக் கிடந்த மலர் மார்பா -பாசுரக் கருத்தும்
ஆஸ்ரிதர்களுடைய வளர்ந்து -பருத்து -உயர்ந்து -நிமிர்ந்து நிற்கும் பக்தியே மலை -முலை
இவன் தூக்கமே-பரமனின் பையத்துயில் -எழுப்புவது -விசேஷ பக்திக்கு பரவசனாகி இருப்பவனை எழுத்து அத்வேஷ மாத்திரம் உள்ளோர்க்கும்
அருளி ஸூ முகனாகி அவர்கள் பக்தியையும் வளர்க்கத் தூண்டுவதே ஆகும்
அத்4யாபயந்தீ |-நினைவூட்டுகிறேன் -ஞாபயே ந சிஷயே -கண்டிக்கிறேன் இல்லை
இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய-இதம் இதம் பூய பூய -நான்கு தடவை -ஸ்லோகத்தில் உள்ள (நீளா-க்ருஷ்ணம்-ஶ்ருதி ஶத ஶிரஸ்-கோ3தா3)நான்கு தத்துவங்களையும் வணங்குகிறேன்
————
ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்தவை
அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
அன்ன வயல் -சரீரத்தை வளர்க்கும் நெல் வளரும் இடம் -நினைவுகள் முளைத்து எழுந்து வளரும் மனம்
அன்னம் -சாரப் பொருளை விவேகிக்கும்
மார்கழி நீராட்ட நோன்பு -பகவத் ப்ரீதி யர்த்தம் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஸ்ரேயஸை அருளும் ப்ரஹ்ம வித்யை –
இதில் பகவத் அர்ப்பணம் ஆனால் தான் வேத வித்யை ஆகும் என்பதால் அரங்கற்கு இன்னிசையால் கொடுத்தாள்
பூ மாலை -நற் சித்தம் -ஸூ மனஸ்ஸூ
சூடிக் கொடுத்த பூ மாலையில் -பூமிக்கு உரிய மணங்கள் -க்ராண இந்திரிய இன்ப ஹேது
பாடிக் கொடுத்த பா மாலையில் வேத மணம் கமழும் -ஞான அனுஷ்டான அபி விருத்திக்கும் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஆத்ம ஸூ கத்துக்கும் ஹேது
———–
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு
சுடர் கொடியே –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
வெளிச்சம் இல்லா விடில் சூர்யன் வெறும் தோசைக் கல்லு தானே
தொல் பாவை
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் -பரிபாடல்
————–
பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது.
—————-
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.–1-இப் பாசுரம் பர அவதார அனுபவம்
ஹார்த்த விக்ரஹத்தையே பாவ -என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 7 திருநாமம்
மதி நிறைந்த அளவைக்காட்ட -ஆல் -கார்த்திகை நக்ஷத்ரம்
சுக்ல பக்ஷ த்ரயோதசை -13 கலைகள் நிறைந்த சந்திரன் ஸூசிதம்
இரவில் 26 நாழிகை வெளிச்சம் -மீதி உள்ள 4 நாழிகை அடுத்த நாள் உஷஸ் காலம் என்பதால் வெளிச்சம் –
திரயோதசி சதுர்த்தி பவ்ர்ணமி -மூன்று நாள்களுக்குமாக 30 பாசுரங்கள் –
சீர் -வைதிக ஸ்ரீ ஆத்ம உத்கர்ஷம் அடைய ஸ்ரீ -பகவத் ப்ரீதி யர்த்தமாக இந்த நோன்பு
நேரே நடக்கும் செங்கோல் வளைந்து கொடுங்கோல்
யசோதா பிராட்டிக்கு உபாஸனா தெய்வம் நரஸிம்ஹன் -ஆகவே இவன் இளம் சிங்கம்
ஏல் ஓர் எம்பாவாய் -உணர்ந்து ஏற்றுக் கொள்வாய் -என்று கார்த்த விக்ரஹத்துக்கு அர்ப்பணம்
நீராடுதல் -பகவத் ஆஞ்ஞா ரூபம் படி -வகுத்து வைத்த நீர்மை யாகிற அனுஷ்டானம் –
ஸூத்தாந்த ஸித்தாந்தி -அந்தப்புர-மறந்தும் புறம் தொழா தவர்கள் –
ஆய்ப்பாடியை” இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் “சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்” எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த “ப்ரபத்தி உபாயம்” அனுஷ்டிக்க அழைப்பதுவே “நீராடப் போதுவீர்…. நேரிழையீர்” என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
“ஏரார்ந்த….பறை தருவான்” என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.
———–
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.–2-இப்பாசுரம் வ்யூஹ அவதார அனுபவம்
வையம் -மிக உயர்ந்த வண்டி -சொல் பொருள் -அனைத்து ஆத்மாக்களுக்கு உரிய ப்ரஹ்ம வித்யை இதுவே
பூணி இன்றி பொறியின் இயங்கும் மானமே வையம் -பெரும் காதை
மாடு குதிரை பூட்டாமல் இந்த்ரியங்களால் இயங்கும் உயர்ந்த வண்டி
பையத்துயின்ற -காளிதாசன் ஸ்வ பதோ ஜாக ரூகஸ்ய -உன்னைப் போல் விழித்துக் கொண்டே தூங்குபவன் இல்லையே –
ஐயம் -விதி வழி கொடுத்தல்
பிச்சை -இஷ்டப்படி கொடுத்தல்
நாட் காலே -பொழுது புலரும் வேளை -நாள் கால் வைத்திடும் நேரம்
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை “உய்யுமாறு” என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம்.
“நாமும் நம்பாவைக்கு….பாடி”—
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச் சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
முடிந்த வரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.
———-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.-3-இப்பாசுரம் விபவ – அவதார அனுபவம்
முதல் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு -உலகளந்த-உலகு அளவு கோலாக அவனை அளந்து –தனது சிறுமையையும் அவனது பெருமையையும் உணர்ந்ததே
பரத்வத்துக்கும் வ்யூஹத்துக்கும் மேல் உயர்ந்த விபவம் அன்றோ
அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹ்ருஷ்யத் யநுரஜ்யதே ச.–
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த ஸங்கா—৷৷11.36৷৷
அர்ஜுனன் கூறுகிறான் -இந்திரியங்களை நியமிக்கும் தலைவனே -உன்னுடைய புகழைக் கண்டு இப்போரைக் காண
வந்து இருக்கும் தேவர் கந்தர்வர் முதலிய உலகு அனைத்தும் உன்னை மிகவும் உகக்கின்றது -ஈடுபடவும் செய்கின்றது –
அரக்கர்கள் பயந்தவர்களாய் எல்லாத் திக்குகளிலும் ஓடுகிறார்கள் –
சித்தர் கூட்டங்கள் அனைவரும் வணங்கவும் செய்கின்றார்கள் -இவை அனைத்தும் பொருத்தமே
ஓங்கு பெரும் செந்நெல் -அவனது அருளால் இவர்கள் நெஞ்சில் பக்தி பெருகி
ஊடு கயல் உகள -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் இவர்கள் மனத்தில் ஓடி ஒளி வீச
குவளைப் போது -மலராத மனஸ்ஸூ
பொறி வந்து -சங்கு சக்கரங்கள் ஒற்றிக் கொண்ட ஆச்சார்யர்கள்
கண் படுப்ப -சிஷ்யர்கள் மனஸ் மலரும் அவகாஸம் பார்த்து இருக்கும் ஆச்சார்யர்கள் –
இவர்களையே வள்ளல் பசுக்கள் என்கிறாள்
ஞானம் அனுஷ்டானம் நிறைந்து -கிருபை சுரந்து -அர்த்த ஞானம் அருளி -இவர்களுக்காக தானே பிரபத்தி பண்ணி
அபிமானத்தால் பாதார விந்தங்களிலே சேர்த்துக் கொள்ளுமவர்கள்
மோக்ஷ பர்யந்தமாக அருளும் செல்வமே நீங்காத செல்வம்
சிஷ்யன் கார்யம் இவர்கள் அருளிச் செய்வதை வாங்கும் பாத்திரமாக இருப்பதே –
பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-14-
இப் பாடலில் பக்தன் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்படுகிறது. கழனியில் தலை சாய்ந்து நிற்கும் கதிர்போலப் பக்தன் அடக்கத்துடன் தலைக்கனமின்றி இருக்க வேண்டும். அக் கழனியின் தண்ணீரில் வாழும் கயல் மீன்களைப் போல் (அறியாமை, தீவிரம் நீங்கிய) விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கரு நெய்தல் மலர் போல இல்லறத்திலிருப்பினும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.
அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப் பொன் போல எம்பெருமான் பணிப் பொன் போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்ய போக்யத்வம் என்ற மும் மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந் நெல் உயர்வது போல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும் பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்கு அளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
“ஓங்கி உலகளந்த……தீங்கின்றி”-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய “யத் ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்ய மாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:”—என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம் மாயத் திரை விலக, அர்ஜூனன் தேர் தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப் பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்ய சேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.
—————-
ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.—4-அந்தர்யாமி -பரமான பாசுரம் –
முதல் மூன்றும் பர வ்யூஹ விபவ -வாழ்த்துப் பாசுரங்கள்
அடுத்து வான் சிறப்பு பாசுரம் -மேகமே நாராயணன் -அந்தர்யாமி -பரமான பாசுரம் –
வலம்புரி போல் நின்று அதிர்ந்து-என்பதையே விவரித்து
மேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியம் -26-
ஊழி முதல்வன் –ஊழியான் முதல்வன் -ஸம்ஹார கர்த்தா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா இரண்டும் இவனே
மழையே இறைக் கருணையாவது பாடலின் சிறப்பு. மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக்
கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத்
தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே
பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர்கிறான்.
மேகங்கள் உப்பு நீரை மதுரமாக்கித்
தருவது போல் ஆசார்யன் வேதார்த்ங்களை நமக்களித்து ஞானம் பெறச் செய்கிறார்.
ப்ரத்யுபகாரம் எதிர் பார்க்காத மழை போல் ஆசார்யனும் எந்த லாபமும் எதிர்பார்ப்பதில்லை.
மேகங்கள் போல ஆசார்யனும் சஞ்சாரம் செய்து ஞான மழை பொழிகின்றார்.
மழை மேகம் மின்னுவது போல ஆசார்யன் ஞானத்தால் ப்ரகாசிக்கிறார். சங்க முழக்கம் போல தம் கருத்தை ஸ்தாபிக்க ஆசார்யனும் சிம்ஹ கர்ஜனை செய்கிறார்.
மேகம் வர்ஷிக்கும் மழை போல் ஆசார்யனும் வாதங்களை வர்ஷித்து எம்பெருமானை ஸ்தாபிக்கிறார்.
————
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.–5-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –
தூய பெருநீர் யமுனைத் துறைவனை–உபாயாந்தரங்கள் -பக்தி -பிரபத்தி -இவற்றிலும் வ்யாவ்ருத்தமான ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
அணி விளக்கு -ஸம்ஸார ஆரணவத்துக்கு கலங்கரை விளக்கு –
அக்கரை சேர போதம் -நாவாய் -நயாமி பரமம் கதிம் –
மனம் மொழி செயல்கள் -பெரிய திருமொழி -1-6-7 தொடக்கி மூன்று பாசுரங்களால்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-
- மாயன் —பரரூபம்
- மதுரை மைந்தன் —விபவம் (திருப்பாற்கடல்)
- துறைவனை —வ்யூகம்
- விளக்கு —அந்தர்யாமி
- தாமோதரன் —அர்ச்சை
———-
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–6-
ப்ரஹ்ம முஹுர்த்தே உத்தாய -ஸூர்ய உதயத்துக்கு முந்திய 2 ஹோரை 5 நாழிகைப் பொழுது தான் ப்ரஹ்ம முஹூர்த்தம்
மெய், மனம், ஆன்மா என்ற மூன்றையும் எழுப்பும் விதத்தில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.
ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வ குணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்க வில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச் செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.
——
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.-7-
கிளியும் பூவையும் பேசும் பறவைகள்
பூவை -நாகணை வாய்ப்புள் –நார்த்தம் பிள்ளை -கறுப்பும் மஞ்சளு மான இறக்கைகள் -குருவிகளைக் காட்டும் பெரியவை
கீசு -க ஈசு -ஈஸாவாஸ்ய உபநிஷத் ஸித்தமானவன் -எவன் என்று பக்ஷிகள் கேட்க ஹரி என்று ரிஷிகள் பதில் –
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும் -அலகை -பேய்
காசு -பொன்னாலான அணிகலன்
பிறப்பு -சிப்பிகளில் தானாக விளையும் முத்து -கடலில் விளையும் பவளம் பொருள்கள் –
மலை சுரங்கம் இவற்றில் உள்ள ரத்னம் வைரம் கோமோதகம் போல்வன
ஆனைச் சாத்தன் என்ற பறவை கரிக்குருவி என்றும் செம்போத்து என்றும் பலவாகக் கூறுவார்கள். கரிக்குருவி கதிரவன் எழும் காலையிலும் கதிரவன் மறையும் மாலையிலும் ஜிவ்வென்று மேலெழும்பிச் செங்குத்தாகக் கீழே பாய்ந்து வானத்தின் குறுக்கே பறந்து மீண்டும் மெலெழும்பிப்
பறக்கும் இயல்புடையது. மேலேறும் போது சீச்சென்ற குரல் உயர்ந்தொலித்துக் கீழே விழும் போது மெல்ல மறைந்து பறக்கும் போது இல்லாமல் போய் மீண்டும் ஒலித்துக் குறைந்து தேயும். எனவே இந்தப் பாடல் குறிப்பது கரிக் குருவியைத் தான் என்பது தெளிவு. எனினும் கரிக் குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே பறக்கும் என்றும் சொல்வார்கள். அதுவன்றியும் கரிக் குருவிக்குத் தமிழில் கஞ்சனம் என்றே பெயர் என்பதையும் சுட்டிக் காட்டுவார்கள். செம்போத்து என்று சொல்வாரும் உண்டு. ஆனால் செம்போத்து கீசு கீசென்று ஒலி
எழுப்புவதில்லை. பொதுவாகக் காலை நேரத்துப் பறவைகளின் ஒருமித்த ஒலிகளின் சங்கமம் என்று கொள்வது
பொருத்தமாக இருக்கும். ஆயினும் ஆனைச் சாத்தன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் அப்படிக் கொள்வதும்
சரியெனத் தெரியவில்லை.
“கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா” “காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர் சொல்லும் அழகைக் காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள்.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர் ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும் ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள்.
———
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–8-
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் போல் புல் விட்ட தளிரை -விடு என்னும் பகுதி அடியாக வீடு -சிறு வீடு -என்கிறாள்
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை “எருமை சிறுவீடு” எனக் காட்டுகிறார்.
பக்தி யோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் – “போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்று.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச் செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.
————–
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.–9-
ஊமையோ -மௌன விரதம் -செவிடோ -ப்ரத்யாஹாரம் -ஸ்ரோத்ரிய இந்திரிய அடக்கம் —
அனந்தலோ –
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்,
புயல் மே ம் போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக் கீழ்,
சயமே யடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான் பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?—போல்
அவனே “மாமாயன்” அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். “லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:” என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.
“சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி” என்றால் “சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மா மாயன்”.
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கை வைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணை மேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார்.
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே “ஊமையோ அன்றிப் செவிடோ” என்பது.
———
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.–10-
ஆழ்வார்களின் இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்படுவது கண்ணன் அவதாரம்தான் .–முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடல்களிலேயே பேசப்படும் அவதாரங்களின் எண்ணிக்கை பின் வருமாறு அமைந்துள்ளது.
கண்ணன் = 60, வாமனன் = 51, நரசிம்மன் = 19, ராமன் = 15, வராகம் = 12, கூர்மம் = 1.
“நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்நெறிமென் குழல் மேல் சூட்டீரே” என்கிறாள். கண்ணன் வரவை எதிர்நோக்கி பதட்டத்துடனிருந்த ருக்மிணி பிராட்டியின் மனதுக்கு ஶாந்தி அளித்தது க்ருஷ்ணன் சூடி வந்த துளசி கந்தமே.
பெரிய மாலையானால் – “தோளிணைமேலும்”
உதிரியாயிருப்பின் –“தாளிணைமேலும்” புணர்ந்த தண்ணந்துழாய் அம்மான் என்கிறார் நம்மாழ்வார்.
—–
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.–11-
இந்தப் பாடல் முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரைக் குறிப்பதாகச்
சம்பிரதாய விளக்கங்கள் காண்கின்றன. முதலாழ்வார்கள் மூவரும் ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவர்களாக
எங்கும் திரிந்து யோகியராக இருந்தவர்கள். தமது பாடல்கள் வழியாக அறியாமையையும் இறைத் தொடர்பு உணர்வு இல்லாமையையும் நீக்க எங்கும் திரிந்தவர்கள் இந்த ஆழ்வார்கள். அதனாலேயே எங்கும் தேடிப் போய் ஆணவத்தை அடக்கியதாகக் கூறுவது இவர்களுக்கு மிகவும்
பொருத்தமாக அமைகிறது. இம் மூவரும் பெண் வழியாகப் பிறந்தவர்களாக அன்றிப் பொய்கையிலிருந்தும்
பூவிலிருந்தும் கிணற்றிலிருந்தும் தோன்றி வந்தவர்கள் என்பதால் எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். தவிரவும்
எந்த வித உலகப் பந்தத்தோடும் தம்மைப் பிணைத்துக் கொள்ளாதவர்கள். துறப்பதென்பது கூட இவர்களைப்
பொறுத்த அளவில் எந்தப் பொருளுமில்லாதது. ஏனென்றால் ஏதாவது இருந்தால்தானே அதைத் துறக்க முடியும்?
எனவே குற்றமொன்றில்லாதவர்கள் என்ற விளக்கம் முதலாழ்வார்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது.
“முகில் வண்ணன் அடி அடைய”,
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன”
“முகில் வண்ண வானத்து இமையவர்” என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே “செல்வ பெண்டாட்டி” என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக் கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக் கணங்கள் போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக் காட்டுபவன் எம்பெருமான். தன் மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.
——–
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.–12-
தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின் கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் கீதையில் கண்ணன் தானாக முன்வந்து உபதேசம் அளித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.
நற் செல்வன் என்பதால் பாகவத கைங்கர்யம் கொள்ளப்படுகிறது.
பரதன், ஶத்ருக்னன், லக்ஷ்மணன், விபீஷணன் ஆகியோர் கைங்கர்ய செல்வர்களாகிறார்கள். ராவண பாணம் ஹனுமானைத் தாக்கியதால் சினம் கொண்டான் ராமன். ஸீதா பிராட்டியைப் பிரிந்து வருந்தி அவள் மனத்துக்கினியானாகினான்.
கன்று நான்கு காம்பு மூலம் சுரப்பது போல் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு நான்கு விதமாக விஷயங்களை சாதிக்கின்றனர்.
- கருணையுடன் தானாகவே உகந்து உபதேசித்தல்
- தான் பெற்ற ப்ரும்ஹானுபவத்தை பகிர்தல்
- சிஷ்யன் ப்ரார்த்திப்பதைச்சொல்வது.
- பரமத நிரஸனம் செய்து நம் ஸம்ப்ரதாயத்தின் மேன்மை சொல்வது.
ஈரச் சொற்களைச் சில தார்மிகர்கள் வைத்துப் போந்தார்களே” என்று ஈடு வ்யாக்யானம் காட்டுகிறது.
——–
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.–13-
உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –ஸ்ரீ அமிருத ரஞ்சனி –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர்-5–
போதரிக் கண்ணினாய் என்கிறார்கள். செவ்வரி ஓடிய அழகிய கண்கள். உணர்வின் முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.
அரி என்றால் மான். துள்ளித் திரியும் மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.
போது என்றால் மலர்; அரி என்றால் மான்.
பாவையின் கண்கள் குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.
போது என்றால் மலர்: அரி என்றால் வண்டு என்றும் பொருள்.
மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி சுழல்கிறதாம்.
போது என்றால் மலர்; அரி என்றால் போட்டி என்றும் பொருள்.
அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லாம்.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் “கீர்த்தி” என்கிறாள் ஆண்டாள்.
பின்பும் “திருவணை (ராம சேது), கீதை” இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.
“பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்”—ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.
“குள்ள குளிர…..கள்ளம் தவிர்ந்து”—மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.
—————
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.–14-
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்னும் சொற்றொடரால், உணர்வின் மிகுதியால்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக் காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்து விடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப் படுத்தப் படுகிறது.
இறைவனிடம் கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. அதையே, “ஆம்பல் வாய் கூம்பின காண்” என்றாள் ஆண்டாள். இப் பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனுடன் கூடும் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாக வில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்துக் குறிக்கிறது.
சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் – காவி உடை, வெண்பற்கள் – வெள்ளைச் சங்கு, தீயெனச் சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிப் பாடல் முழுவதும் வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண் தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள் கூர்ந்து நோக்க, வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது
சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை “செங்கழுநீர். …கூம்பினகாண்” என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நா வன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும் போது நாபிக் கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார்.
அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.
—-
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.–15-
பாகவதர்களின் பேச்சு ரஸமானதாயிருக்கும் என்பது “வல்லை உன் கட்டுரைகள்” என்பதன் பொருளாகிறது. திருமங்கையாழ்வார் நான்கு கவிகளில் (ஆசு கவி, சரள கவி, மதுர கவி, சித்ர கவி) வல்லவர் திரு எழுகூற்றிருக்கை (ரத பந்தம்) சித்ரகவிக்கு உதாரணம்.
நம்மிடம் உள்ள மாயயைத் தன் வசமாக்குபவனும் ஆகிய பகவானை துதிக்க வருவாய் என்று கூப்பிடுகின்றனர்.
———
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.–16-
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –நான்முகன் -81-
நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாந சக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாயக்
கருணை யம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான் -கம்பர் அடைக்கலப் படலம் -47-நேய நிலைக் கதவம்
கண்ணன் உள்ளே உறங்குவதால் நந்தகோபன் மாளிகையைக் கண்ணும் கருத்துமாய் காவல் காக்கின்றனர்.
நித்யசூரிகள் ஶ்ரீ வைகுண்டத்தைக் காக்குமாப்போல ஶ்ரீரங்கத்தைப் பஞ்சாயுதங்களும் காக்கின்றன என்கிறார் குலசேகராழ்வார்.
அறவெறிநாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே” – என்கிறார் பெரியாழ்வார்.
ததைவ குமுதாதயோ நகர கோபுர த்வாரபா:”—என்று அபீதிஸ்தவத்தில் ஸ்வாமி தேஶிகன், நித்யசூரிகள், கோபுரம் காப்போர், வாயில் காப்போர் எல்லோரும் விழித்திருந்து இந்த பூமியயையும் ஶ்ரீரங்கத்தையும் காப்பாற்றுங்கள் என்கிறார்.
(நேராக பகவானை அடைய நினைத்த ஸூர்ப்பநகாவின் மூக்கும் காதும் அறுபட்டது) என்பது திருக்குடந்தை ஆண்டவன் நிர்வாகம்.
நாயகானாகிய ஆசார்யன் கோயில் காப்பானாக ப்ரணவத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் உபதேசிக்கும் பொருட்டு, வாயில் போன்ற “நம:” ஶப்தத்தின் பொருளைச் சொல்லி நம்மைத் தயார் செய்கிறார். ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன். அகிஞ்சனன் என் உணர்த்தி மோக்ஷவாயிலைத் திறக்க உதவுபவராக ஆசார்யனை “மணிக் கதவம்” என்பதன் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.
———-
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.–17-
ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் -மூன்றைச் சொல்லி
அன்பு ஆர்வம் இடு திரி இன்புருகு சிந்தை -மூன்றும் போல்
நந்தகோபன் யசோதை நம்பி மூத்த பிரான் இங்கும்
க்ருஷ்ண ஸ்பர்சம் பட்டதால் கோகுலமே புனிதமாகியது. த்ரௌபதிக்கு வஸ்த்ர தானம் செய்த க்ருஷ்ணன் கோகுலம் பசுக்களுக்கு நீர் தானம் செய்தான்.
அம்பரமாய், (ஆகாசம்) நீராய், உணவாய் இருக்கும் க்ருஷ்ணனை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஶரீரத்தை வஸ்த்ரம் மறைத்து வ்யக்தியைக்காண்பிப்பது போல
எம்பெருமான் இந்த ப்ரபஞ்சத்தை யோகிகளின் உணர்வுகளிலிருந்து மறைக்கிறான் என்பது ஸ்வாபதேசம்.
———
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–18-
புருஷாகாரம் செய்யும் பிராட்டி அருகே இருந்ததால் காகாசுரன் உயிர் பிழைத்தான். ராவணன் எம்பெருமான் கோபத்துக்கு ஆளானான். நம் குறைகளைப் பிராட்டி கேட்டு, பெருமானையும் கேட்கச் செய்வதால் அவளை முன்னிட்டுக் கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்.
ஶரணாகதி என்று வந்த ஜீவனின் குற்றங்களுக்கேற்ப தண்டனை
அளிக்க முன்வரும் பகவானிடம் பரிந்துரை செய்து பிராட்டி ஶரணாகதனுக்கு மோக்ஷமும், அல்லாதவர்களுக்கு தண்டனையும் அளித்தால் லோக நிர்வாகம் பாதிக்காது என்று அவனுக்கே உபதேசம் செய்பவள்.
க்ருஷ்ணனை மகனாயடைந்த நந்தகோபனுக்கு வஸுதேவர் யானைகளையும், வஸுதேவர்ருக்கு வேண்டிய பசுக்களை நந்தகோபரும் அளிப்பார்களாம்.
நித்ய விபூதி, லீலா விபூதி என இரண்டையும் நிர்வகிக்கும் செல்வாக்கு உடையவள். ராமானுஜர் இந்த பாசுரத்தைப்பாடி பிக்ஷை கேட்டு கதவைத் தட்ட, வந்து திறந்த அத் துழாயை (பெரிய நம்பியின் திருக் குமாரத்தி) ஆண்டாளாக நினைத்து மயங்கி வீழ்ந்ததாக வரலாறு.
ஸாரமான தானியங்களை மட்டும் கொத்தும் கோழிகள் போல (ஸார க்ராஹிகள்) எம்பெருமானிருக்குமிடம் சென்று ப்ரபத்தி செய்யும் பாகவதோத்தமர்களைக் குறிக்கிறது. (ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களாக கொக்கு போல் இருப்பான், கோழி போல் இருப்பான், உப்பைப் போலிருப்பான், உம்மைப் போலிருப்பான் என்பது ப்ரஸித்தம்)
பந்து போன்ற எங்களை லீலோபகரணமாக்கி விளையாடும் எம்பெருமானுக்கு நாங்கள் போகோபகரணமாக வேணும். அதற்கு பிராட்டியின் வளை யோசை துணையாயிருந்து சீற்றத்தைத் தணிக்க வேணும் என்பது உட்பொருள்.
——–
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.–19-
ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும் போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி” – என்கிறாள்.
மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையும் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித் தர வேணும் என்கின்றனர்.
———
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.–20-
முப்பத்து மூவர்…அமரர்க்கு”— எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.
செப்பமுடையாய்–தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!
திறலுடையாய்—தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.
செற்றார்க்கு—–விமலா – ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப் பண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்கா விடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை “பற்றலர் வீயக் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை”–என்கிறார் கலியன்.
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.
“பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை” எனகிறார் பெரியாழ்வார்.
- சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது.
- மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால்.
இவை யிரண்டையும் ப்ரபன்னனுக்கு ஆசார்யன் திருவாக்கால் (செவ்வாய்) சொல்லித் தெளிய வைக்கிறார் சரம ஶ்லோகமாக.
———–
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.–21-
“ஆற்றப் படைத்தான்…….துயிலெழாய்”…. இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.
——–
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.–22-
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
——–
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–23-
இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை “வேரிமயிர் பொங்க” என்கிறாள்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரண களேபரங்களுடன், முக் குணங்களையும் அளித்து மூரி நிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.
இவனது நடையழகாகிய “ஸஞ்சாரம்” ஸேவித்தால் நமக்கு
“ஸஞ்சாரம்” (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.
———
அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.–24-
- ஓங்கி உலகளந்த
- அம்பரம் ஊடறுத்து
- அன்றிவ்வுலகமளந்தாய் – என
“கன்று…..கழல் போற்றி“—கன்று போல் விரும்பக் கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.
ஏக சக்ராதிபதியாக வெண் கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.
வென்று…வேல் போற்றி”…. மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.
“என்றென்றும்…..இரங்கேலோரெம்பாவாய்”—-இவ்விதமாக உன் திருக் கல்யாண குணங்களைப் பாடி பரம பதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.
———
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–25-
அதனைத்தரும் தாய் “மூலமந்த்ரம்”. இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள்
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.
———-
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.–26-
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!
“மேலயார் செய்வனகள்”–பெரியோர்கள் அனுஷ்டித்த படியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.
“ஞாலத்தை எல்லாம்….கொடியே விதானமே”–அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். “ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்” என்கிறாள் நப்பின்னை.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாத க்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.
————-
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–27-
- ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
- சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
- தோள்வளை என்பது சங் கு சக்ரப் பொறி.
- தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
- பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
- த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
- மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.
———–
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.–28-
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் “குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா” என்கிறாள். இதனையே “தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே”—
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை “உன்னோடுறவேல் .. ..ஒழியாது” என்கிறாள்.
- இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
- எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
- இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
- இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
- இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
- ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
- எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.
———-
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.–29-
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, “பெற்றம் மேய்த்துண்ணும்” என்ற வரிதெரிவிக்கிறது.
மற்றும் ஒரு விளக்கம்.
- ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
- சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
- சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
- ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
- விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
- பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)
30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.
———–
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.–30-
இழை -இழைதல் -நடந்து கொள்ளுதல் -ப்ரபந்ந நிஷ்டை -அபய பிரதானம் பெற்றவர்கள் -ந்யாஸ வித்யை ஸர்வ உப ஜீவ்யம்
பாற்கடலில் பையத்துயின்ற பரமனை!
ஓங்கி உலகளந்த உத்தமனை!
பத்மநாபனை!
மாயனை!
ஹரியை!
கேசவனை!
தேவாதி தேவனை!
வைகுந்தனை!
அருங்கலத் தை!
முகில் வண்ணனை!
மனத்துக்கினியானை!
புள்ளின் வாய் கீண்டானை!
பங்கயக்கண்ணனை!
வல்லானை!
மணிவண்ணனை!
குல விளக்கை!
ஓடாத தோள்வலியனை!
மலர் மார்பனை!
விமலனை!
சுடரை!
அபிமானனை!
பூவைப்பூவண்ணனை!
குன்றைக்குடையாக்கினானை!
நெடுமாலை!
கோல விளக்கை!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை!
குறையொன்றுமில்லாத கோவிந்தனை!
அன்று காண் கோவிந்தனை!
செல்வத்திருமாலை!
சேதனர்களாகிய நாமனைவரும் கரணத்ரயம் படைத்ததன் பயனாக உள்ளத்திருத்தி, வாயினால் பாடி, செவியால் கேட்டு அனுபவித்து மகிழ்வோம்!
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply