ஹஸ்த வகைகள் -முத்திரை (பரத நாட்டியம்)–

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்

1. அபய ஹஸ்தம்

பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார். இதற்கு பொருள் “அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்” என்பதாகும். இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம். திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.

இறைவனின் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி தன் எதிரில் நின்று தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, ‘‘நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், நான் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை; கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

2. வரத ஹஸ்தம்

பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார். இதன் பொருள், “தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்” என்பதாகும். திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.

வரத ஹஸ்தம் – இறைவனின் கை விரல்கள் கீழ் நோக்கி நீட்டியபடியும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

இறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளைச் சுட்டிக் காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸதம் அல்லது வரத முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி, ‘‘என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்; முழுமை பெறுவீர்கள்’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

3. ஆஹ்வான ஹஸ்தம்

பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார். இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.
திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் உற்சவர் ப்ரஹலாத வரதன் ஆஹ்வான ஹஸ்தம் வைத்துள்ளார்.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே எம்பெருமான் அழகியசிங்கராக சேவை சாதிக்கிறார்.  மூலவர் யோகநரசிம்ஹர்  – உத்சவர் தெள்ளியசிங்கர் அழைத்து, அருள் பாலிக்கும் பெருமாள் – ஒரு கை பக்தர்களை அழைக்கும் ‘ஆஹ்வான ஹஸ்தம்’ மற்றொன்று – பக்தர்களை பாதுகாத்து அரவணைக்கும் அபய ஹஸ்தம்.  ஸ்ரீநரசிம்மர் என்றால் உக்கிரம் .. அரக்கனை சிம்ம உருவாய் அழித்த அவதாரம் அல்லவா !

————

ஹஸ்த முத்திரைகள் மொத்தமாக 32 வகைகள் இருக்கின்றன.

அவற்றில் 24 முத்திரைகள் தொழிற்கை முத்திரைகள் ஆகும்.

மீதம் எழிற் கை முத்திரைகள் என நான்கும், இரட்டை கை முத்திரைகள் நான்கும் உள்ளன.

———-

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் ஸ்துதி மாலா

ஜிதந்தே மஹா ஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ
ஜிதந்தே ஜகத் ரக்ஷணார் தாவார
ஜிதந்தே ஹரே பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணு முராரே
நமஸ்தே ந்ருஸிம்ஹ அச்சுதானந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ர பாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதா

பர ப்ரஹ்ம ரூபம் ப்ரபுத்தாட்ட ஹாஸம்
கர ப்ரௌல சக்ரம் ஹர ப்ரஹ்ம ஸேவ்யம்
ப்ரஸன்னம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்

க்ரிஜ ந்ருஹரிமீஸம் கர்விதாராதி வஜ்ரம்
பரம புருஷ மாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேத தாநம்
ஸரண மிஹா பஜாம் ஸாஸ்வதம் ந்ருஸிம்ஹம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹாஸிம்ஹ திவ்யஸிம்ஹ
கிரி ஸம்பவ தேவேச ரக்ஷமாம் ஸரணாகதம்

இதி ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ ஸ்துதிமாலா ஸம்பூர்ணம் –

————

முத்திரை (பரதநாட்டியம்)

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரத நாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும்.

கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர்.

கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர்.

பரத நாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும்.

கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர்.

பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக்கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.

இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

ஒற்றைக்கை முத்திரைகள்–

ஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது.

இது சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.

முத்திரை கருத்து செய்முறை படிமம்
பதாகம் கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல். Hasthamudra1.JPG
திரிப்பதாகம் மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம் பதாகத்தில் மோதிர விரலை மடித்தல். Hasthamudra3.JPG
அர்த்தப்பதாகம் அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.
கர்த்தரீமுகம் கத்தரிக்கோல் திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல். Hasthamudra9.JPG
மயூரம் மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.
அர்த்தச்சந்திரன் அரைச்சந்திரன் பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.
அராளம் வளைந்தது சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
சுகதுண்டம் கிளி மூக்கு பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.
முட்டி(முஷ்டி) முட்டிகை அனைத்து விரல்களையும் பொத்துதல்.
சிகரம் உச்சி முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல். Hasthamudra2.JPG
கபித்தம் விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
கடகாமுகம் வளையின் வாய் நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல். Hasthamudra11.JPG
சூசி ஊசி முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல். Hasthamudra16.JPG
சந்திரகலா பிறைச்சந்திரன் சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல். Hasthamudra5.JPG
பத்மகோசம் தாமரை மொட்டு கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல். Hasthamudra17.JPG
சர்ப்பசீசம் பாம்பின் படம் பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல். Hasthamudra12.JPG
மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல். Hasthamudra6.JPG
சிம்மமுகம் சிங்கத்தின் முகம் நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
அலபத்மம் மலர்ந்த தாமரை சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல். Hasthamudra19.JPG
சதுரம் சாதூர்யம் மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
பிரமறம் வண்டு ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
கம்சாசியம் அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
கம்சபக்சம் அன்னத்தின் சிறகு மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல். Hasthamudra15.JPG
சம்தம்சம் இடுக்கி விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
முகுளம் மொட்டு விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
தாம்ரசூடம் சேவல் மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல். Hasthamudra7.JPG
திரிசூலம் சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல். Hasthamudra18.JPG

இரட்டைக்கை முத்திரைகள்–

இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது.

இது சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.

முத்திரை கருத்து படிமம்
அஞ்சலி வணங்குதல்
கபோதம் புறா
கர்கடம் நண்டு Hasthamudra13.JPG
சுவஸ்திகம் குறுக்கிட்டது Hasthamudra.JPG
டோலம் ஊஞ்சல்
புஸ்பபுடம் மலர்க்கூடை
உத்சங்கம் அணைப்பு
சிவலிங்கம் சிவலிங்கம் Hasthamudra14.JPG
கடகாவர்த்தனம் கோர்வையின் வளர்ச்சி
கர்த்தரீ ஸ்வஸ்திகம் குறுக்குக் கத்தரிக்கோல்
சகடம் வண்டி
சங்கு சங்கு
சக்கரம் சக்ராயுதம் ഹസ്തമുദ്ര3.JPG
சம்புடம் பெட்டி
பாசம் கயிறு
கீலகம் பிணைப்பு
மத்சயம் மீன்
கூர்மம் ஆமை
வராகம் பன்றி ഹസ്തമുദ്ര2.JPG
கருடன் கருடப்பறவை
நாகபந்தம் பாம்பின் கட்டு
கட்வா கட்டில்
பேருண்டம் பேருண்டப்பறவை
அவகித்தம் குறுக்கே மலர்ந்த தாமரை

——————-

லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை.

நம் வாழ்வில், நடக்கின்ற விஷயங்கள் அனைத்தும் ராசியால் நடக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில், நாம் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரம் தான், நம் வாழ்வின் செயல்கள் அனைத்திற்கும் காரணம்.

27 நட்சத்திரங்களையும் மூன்று வகையாக பகுத்துப் பிரித்திருக்கிறது ஜோதிடம்.

1. தேவ கணம்
2. மனுஷகணம்
3. ராஜஸ கணம்

தேவகண நட்சத்திரங்கள் :
1) அஸ்வினி
2) மிருகசீரிடம்
3) புனர்பூசம்
4) பூசம்
5) அஸ்தம்
6)சுவாதி
7) அனுஷம்
8) திருவோணம்
9) ரேவதி

இந்த ஒன்பதும்தேவ கண நட்சத்திரங்கள். .

மனுஷ கண நட்சத்திரங்கள் :
1) பரணி
2) ரோகிணி
3) திருவாதிரை
4) பூரம்
5) உத்திரம்
6) பூராடம்
7) உத்திராடம்
8) பூரட்டாதி
9) உத்திரட்டாதி
.

இந்த ஒன்பதும் மனுஷ கண நட்சத்திரங்கள்.

ராஜஸ கண நட்சத்திரங்கள் :
1) கிருத்திகை
2) ஆயில்யம்
3) மகம்
4) சித்திரை
5) விசாகம்
6) கேட்டை
7) மூலம்
8) அவிட்டம்
9) சதயம்

இந்த ஒன்பதும் ராஜஸ கண நட்சத்திரங்கள்.

தேவகண நட்சத்திரங்கள் என்றால் உயர்ந்தவை, மனுஷ கண நட்சத்திரங்கள் என்பவை மத்திமமானவை, ராஜஸ கண நட்சத்திரங்கள் என்பவை தாழ்ந்தவை என்பதான சிந்தனையும் சந்தேகமும்  வேண்டாம்

நட்சத்திரத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்பதெல்லாம் இல்லை. எந்த பேதங்களும் கிடையாது. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை.

வானம் தெளிவாகவும் இருக்கும்; மேகமூட்டத்துடனும் இருக்கும். கடல் அமைதியாகவும் இருக்கும்; கொந்தளிப்புடனும் இருக்கும். குளத்தில் நீர் நிறைந்திருக்கும்; வறண்டும் காணப்படும். அப்படித்தான்… நட்சத்திரங்களில் நிறை குறைகள் உண்டு.

தேவ கண நட்சத்திரக்காரர்களின் உடல் மெலிந்திருக்கும். மென்மையான தோலைக் கொண்டிருப்பார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எவரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.

எதிரிகளே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். கோபத்தை வெளிக்காட்டமாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்து கறுவிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டை நேர்த்தியாக அழகுடன் பளிச்சென்று வைத்திருப்பார்கள். அலுவலகத்தில் இவருடைய இடம் எப்போதும் சுத்தமாக, அழகாக இருக்கும். அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதனாலேயே எளிதில் ஏமாறுவார்கள். அதேபோல் யார், எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள். கொஞ்சம் நைஸாகப் பேசி, இவரிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம்.

தேவ கண நட்சத்திரக்காரர்கள், நோய் தாக்கினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். சீசன் நோய்கள் என அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். சின்ன மழையில் நனைந்தாலே காய்ச்சல், சளி வந்துவிடும் இவர்களுக்கு. மது, புகை முதலான கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அதற்குப் பழகினால், அதில் இருந்து மீள முடியாதவர்களாக இருப்பார்கள். உறவினர்களால் பாதிப்புக்கு ஆளாவார்கள். எது எப்படியோ, மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல், தேவ கண நட்சத்திரக்காரர்கள், பல திறமைகளைக் கொண்டிருப்பார்கள். இறை சக்தி மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர்கள். முயற்சிகள் தோற்றுப் போனால், சோர்ந்து போய் விடுவார்கள். பசி தாங்க மாட்டார்கள். அதே சமயம், இன்னன்ன உணவு வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்.

இவர்கள், குடும்பத்தின் மீது அதிக பாசமும் நேசமும் கொண்டிருப்பார்கள். குழந்தைகளை திட்டமிட்டு வளர்ப்பார்கள். அவர்களின் வளர்ச்சிக்காக, ரொம்பவே மெனக்கெடுவார்கள்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.எளிமையான உடற் பயிற்சிகளை மட்டும் மேற்கொள்வார்கள். நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பார்கள்.

அடுத்து… மனுச கண நட்சத்திரக்கார்கள்:

நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்கள். சராசரியான உயரம் உடையவர்கள். உழைக்கத் தயங்காதவர்கள். தனக்கு ஆதாயம் இருந்தால்மட்டுமே அடுத்தவருக்கு உதவுவார்கள். பொருள் தேட எந்த ஊருக்கும், இடத்திற்கும் செல்பவர்கள் இவர்கள்.

குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தனி மனித ஒழுக்கம் தவறுபவர்களாக சிலசமயங்களில் இருப்பார்கள். தீய பழக்கத்துக்கு எளிதில் வசமாவார்கள். அதேசமயம், விட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தகணமே விட்டுவிடுவார்கள்.

இவர்களுக்கு, எளிதில் நோய்தாக்கம் வராது, அப்படியே வந்தாலும் சிலநாளில் குணமாகிவிடுவார்கள். பயணங்களில் ஆர்வம் உடையவர்கள். சுற்றுலா ஆர்வம் உள்ளவர்கள். அதற்காகவே தனியாக சேமிப்பார்கள். எதிலும் திட்டமிடல் இருக்கும். குடும்பச் செலவுகளைக்கூட சரியாகத் திட்டமிட்டுக் கொள்வார்கள்.

ஆபரணங்களாக வாங்கி வைப்பவர்கள். தகுதிக்கு மேல் கடன் வாங்கமாட்டார்கள். அளவுக்கு அதிகமாக கடன்வாங்கினால் திருப்பிச் செலுத்தமுடியாமல் திண்டாடுபவர்கள்.

மனச்சோர்வு, மனசஞ்சலம் உடையவர்கள்.தோல்விகளில் பாடம் கற்பவர்கள். கடினமாகப் போராடி வாழ்வில் முன்னேறுபவர்கள். ஒருகட்டத்தில் சம்பாதிப்பது போதும் என்ற எண்ணம் வந்து வாழ்வை அமைதியாகக் கழிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இனி, ராஜஸ கண நட்சத்திரக்கார்கள் :

நெடிய உருவம் கொண்டவர்கள். தடித்த உடல்வாகு உடையவர்கள். அதேபோல தடித்த தோல் உடையவர்கள். தலைமுடி கோரை போல இருக்கும். முன்கோபம்கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். தோல்விகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றியடையும் வரை விடாமுயற்சியுடன் போராடுபவர்கள்.

பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காதவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். பொருள்தேடி உலகம் சுற்றுபவர்கள். பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். வேலை செய்துகொண்டிருந்தாலும் அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர்கள்.

நோய் பாதிப்பு குறைவாகக் கொண்டவர்கள். கெட்ட பழக்கங்கள் எளிதில் பற்றிக் கொள்ளும். அதிலிருந்து மீள மாட்டார்கள். ஆச்சரியம்… தீய பழக்கத்தால் குறைந்த பாதிப்புகளை மட்டுமே பெறுவார்கள்.

மன தைரியம் அதிகம் கொண்டவர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள். இறை நம்பிக்கை அளவோடு இருக்கும். முயற்சியே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள்.

குடும்பப் பாசம் அளவோடு இருக்கும். ஆனால் குடும்பத்தினரின் தேவைகளை மிகச் சரியாக செய்து கொடுப்பார்கள். அதிக பொருள் சேர்க்கும் ஆசை உடையவர்கள். அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள்.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: