ஸ்ரீ திருமகள் கேள்வனான எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்,
தாங்கள் எம்பெருமானை அனுபவித்தபடியை அழகுதமிழ்ப் பாசுரங்களில் வெளியிட்டனர்.
வேதாந்தக் கருத்துகள் உட்பொதிந்துள்ள அப்பாசுரங்கள் திராவிட வேதம் என்று உச்சிமேல் வைத்துப் போற்றப் பெறுகின்றன.
ஆழ்வார்களுக்குப் பின்னர் அவதரித்த ஆசார்யர்கள் அப்பாசுரங்களை முக்கியமான பிரமாணங்களாகக் கொண்டு வைணவ சமயத்தைப் பரப்பினர். ஆழ்வார்கள் காலத்திற்குப் பின், மறைந்து போயிருந்த அப்பாசுரங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்தவர் நாதமுனிகள் என்னும் ஆசார்யர் ஆவார், திவ்யப்ரபந்தம் என்றும் அருளிச் செயல் என்றும் வழங்கப்படும் இப்பாசுரங்களுக்கு விளக்கங்கள் நாதமுனிகள் காலம் தொடங்கி ராமானுஜர் காலம் வரை வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வந்தன. முதன் முதலில் திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்களை எழுத்தில் வடிக்கச் செய்தவர் ஸ்ரீராமாநுஜரே ஆவார். அவர் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் ஒன்றினை எழுதத் தம் சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளானைப் பணித்தார். இவ்வாறு முதன் முதலில் தோன்றிய உரை, பிள்ளான அருளிய ஆறாயிரப்படி உரையேயாகும். பின்னர் பராசரபட்டரின் நல்லருளால் அவருடைய சீடரான நஞ்சீயர் திருவாய்பொழிக்கு உரை ஒன்றினை அருளிச் செய்தார். அதுவே ஒன் பதிலாயிரப்படி உரையாகும். (வடமொழியில் முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட ஒருதொகுதி ஒரு கிரந்தம் எனப்படும். அது தமிழில் படி எனப்படும். நஞ்சீயர் அருளிச்செய்த திருவாய்மொழி உரை, அளவில் ஏறக்குறைய ஒன்பதினாயிரம் படிகளை (முப்பத்திரண்டு எழுத்துக்ளை)க் கொண்டிருந்ததால் ஒன்பதினாயிரப்படி என்று வழங்கப்பட்டது.) நஞ்சீயர் வேறு சில பிரபந்தங்களுக்கும் உரைகளை அருளிச் செய்துள்ளார். நஞ்சீயரின் சீடரான நம்பிள்ளை வழங்கிய வாய்மொழிப் பேருரைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய சீடரான பெரியவாச்சான்பிள்ளை திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்கள் அனைத்திற்கும் அவர் வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார். நம்பிள்ளையின் மற்றொரு சீடரான வடக்குத் திருவீதிப்பிள்ளை, திருவாய்மொழிக்கு நம்பிள்ளை வழங்கிய வாய்மொழிப் பேருரைகளை அப்படியே ஏட்டில் வடித்து ஈடு முப்பத்தாறாயிரப் படி வ்யாக்யானத்தை அருளிச் செய்துள்ளார். பெரியவாச்சான் பிள்ளையின் சீடரான வாதிகேஸரி அழகிய மணவாளச் சீயர், திருவாய்மொழிக்குப் பன்னீராயிரப்படி உரை அருளிச் செய்துள்ளார். இவ்வாறு திருவாய்மொழி யானது ஐந்து வ்யாக்யானங்களுடன் திகழ்கிறது. அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் வைணவ உரையாசிரியர்கள் வைணவ சமயத்திற்கு ஆற்றியுள்ள பெருந்தொண்டுகள் நன்கு புலனாகும். மேற்கூறிய நூல்களுள், பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி வ்யாக்யானத்தைப் பற்றிப் பேராசிரியர் டாக்டர் ஜான் கார்மன் அவர்களும், டாக்டர் வசுதா நாராயணன் அவர்களும் சேர்ந்து, The Tamil Veda - Pillan's interpretations” என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ளனர். ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தைப் பற்றிய ஆய்வினை டாக்டர் இரா. அரங்கராஜன் அவர்கள், “திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறன் ' என்ற தலைப்பில் நிகழ்த்தியுள்ளார். டாக்டர். மா. வரதராஜன் அவர்கள் 'பன்னீராயிரப்படி - ஒர் ஆய்வு” என்ற தலைப்பில் பன்னீராயிரப்படி உரையைப் பற்றிய ஆய்வினைச் செய்துள்ளார். பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தைப் பற்றிய ஆய்வு தனியாக மேற்கொள்ளப்படவில்லை எனினும், டாக்டர். தெ. ஞானசுந்தரம் அவர்களின் ஆய்வேடான “வைணவ உரைவளம்” என்னும் நூலில் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தின் பெரும்பகுதிகள் பிற வ்யாக்யானங்களுடன் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளன. இவ்வாறு திருவாய்மொழிக்கு அமைந்துள்ள ஐந்து உரைகளுள், நான்கு உரைகள் ஏற்கனவே சீரிய முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளன. இதுவரை தனி ஆய்வுக்கு உட்படுத்தப் பெறாத நஞ்சீயர் அருளிச் செய்த வ்யாக்யானங்கள் பற்றிய ஆய்வு இவ்வாய்வேட்டில் இடம் பெறுகின்றது. நஞ்சீயர் பல நூல்களை அருளிச் செய்துள்ளார் என்று பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானம், ஆகிய இரண்டு நூல்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளன. மேற்கூறிய நூல்களைத் தவிர ஸ்ரீஸூக்த பாஷ்யம் என்கிற வடமொழி நூல் ஒன்றும், பெரியதிருமொழி வியாக்கியானம் ஒன்றும், திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம் ஒன்றும், ஆத்மவிவாஹம் முதலிய சிறிய நான்கும் நஞ்சீயர் இயற்றிய நூல்களாகக் கருதப்பெற்று அச்சிடப்பட்டுள்ளன. அவை பற்றிய ஆய்வு இவ்வியலில்மேற்கொள்ளப்படுகின்றது. பெரியதிருமொழி வ்யாக்யானம், ஸ்ரீஸூக்த பாஷ்யம் ஆகிய இரண்டு நூல்களும் நஞ்சீயர் அருளிச் செய்தவை அல்ல என்று அறுதியிடப்படுகிறது. ஆத்மவிவாஹம் முதலிய ரஹஸ்யங்கள், திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம் ஆகிய நூல்களை நஞ்சீயர் அருளிச் செய்துள்ளார் என்று பதிப்பாசிரியர்கள் கருதியமைக்குக் காரணம் இன்னதென்று காட்டப்பெறுகிறது. மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பிற்கு நஞ்சீயர் அருளிச் செய்துள்ள உரை பற்றிய ஆய்வு பிறகு மேற்கொள்ளப் பெறுகிறது, கண்ணிநுண்சிறுத்தாம்பிற்கு அமைந்துள்ள பிற உரைகளில் இல்லாத சிறப்புகள் நஞ்சீயர் உரையில் அமைந்துள்ளமை சுட்டிக் காட்டப்பெறுகிறது. பாசுரங்களில் உள்ள சொற்களின் நயங்களை விளக்குவதில் பிற உரைகளுக்கு முன்னோடியாக நஞ்சீயர் உரை அமைந்துள்ள சிறப்பு, நம்மாழ்வாருடைய பாசுரங்களை ஒப்பிட்டு நோக்கும் பாங்கு, வினாவிடை அமைப்பில் உரை வரையும் சிறப்பு, நீண்ட உரைத் தொடர்கள் மூலம் விளக்கம் கூறும் உத்தி, ஆசாரியர்களுடைய திருநாமங்களை உரைரில் இடம்பெறச் செய்தல் முதலியவை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப் பெறுகின்றன. நான்காம் இயலில் திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களுக்கும் நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி உரையைப் பற்றிய ஆய்வு மிக விரிவாக மேற் கொள்ளப்படுகிறது. ஒன்பதினாயிரப்படி உரையின் அமைப்பு முதலியவை விளக்கப்படுகின்றன. மிக விரிவான உரைகளான இருபத்துநாலாயிரப்படி, ஈடுமுப்பத்தா றாயிரப்படி முதலிய உரைகளிலும் குறிப்பிடப் பெறாத விளக்கங்கள் சில ஒன்பதினாயிரப்படியில் இடம் பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் ஒன்பதினாயிரப்படி உரையும், இருபத்துநாலாயிரப்படி உரையும் ஒன்றுபோல் அமைந்துள்ளன; ஈடு முப்பத்தாறாயிரப்படி மட்டும் சற்று வேறுவிதமாக அமைந்துள்ளது. சில இடங்களில் ஒன்பதினாயிரப்படியும், ஆறாயிரப்படியும் ஒன்று போல் அமைந்துள்ளன. ஒன்பதினாயிரப்படி உரை முதன் முதலில் பாசுரங்களின் உட்கருத்தை விளக்கும் வகையிலும், சொல் நயங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளது. பின்னர் எழுந்த உரைகளான இருபத்து நாலாயிரப்படி, ஈடுமுப்பத்தாறாயிரப்படி உரைகளும் ஒன்பதினாயிரப்படியை அடியொற்றியே இதே போன்ற விளக்கங்களை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. ஆழ்வாருக்கு அவ்வப்போது ஒடுகிற மன நிலைக்கு ஏற்ப அவரைச் சீதாப்பிராட்டி. பரதாழ்வான், இளையபெருபாள், சத்ருக்னாழ்வான், பிரஹ்லாதன், அர்ச்சுனன் முதலிய புராண புருஷர்களுடன் ஒப்பிடும் முறையும் முதன் முதலில் காணப் பெறுவது இவ்வுரையிலேயேயாம். ஒவ்வொரு புராணப் பாத்திரத்திற்கும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வழங்கப் படம் சிறப்புப் பெயர்களையும் நாம் முதன்முதலில் காண்பது ஒன்பதினாயிரப்படி உரையிலேயேயாம். இதுபோன்ற மேலும் பல செய்திகள் இவ்வியலில் ஆய்வுக்கு உட்படுத்தப் பெறுகின்றன. ஐந்தாவது இயலில், நஞ்சீயர் சுட்டிக் காட்டும் விசிஷ்டாத்வைத தத்துவக் கொள்கைகள் பற்றி விளக்கப்படுகின்றன. இத்தத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கமாக அமைந்த நஞ்சீயர் உரை, அதே அடிப்படையில்தான் தத்துவக் கொள்கைளை விளக்குகின்றது; இருப்பினும், மிகவும் தெளிவாக விளக்கும் முறையும், எழக்கூடிய ஐயங்களைத் தாமே குறிப்பிட்டு விளக்கமளிக்கும் பாங்கும் நஞ்சீயர் உரையில் சிறப்புற அமைந்துள்ளது. “மிக்க இறைநிலை, மெய்யாம் உயிர்நிலை, தக்கநெறி, தடை, வாழ்வு” ஆகிய அர்த்த பஞ்சகத்தை விளக்கவே திருவாய்மொழியை ஆழ்வார் அருளிச் செய்தார் என்று குறிப்பிடும் நஞ்சீயர், பற்பல பாசுரங்களை மேற்கோள்களாகக் காட்டி அவைகளை மிக அழகுற விளக்குகிறார். அவை பற்றிய ஆய்வும் இவ்வியலில் இடம் பெறுகிறது. ஆறாவது இயலில், வைணவ ஆசார்யர்களிடையே நஞ்சீயர் பெறும் சிறப்பிடம், அவருடைய சீரிய பணி, அவர் அருளிச் செய்த வார்த்தைகளைப் பின்னர் தோன்றிய ஆசார்யர்கள் ஆதாரமாகக் காட்டும் சிறப்பு, வைணவ சமயத்தில் நஞ்சீயர் பெற்றுள்ள சிறப்பு, நஞ்சீயர் உரையில் இடம்பெறும் சீரிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுப் பின்னர் எழுந்த நூல்கள் முதலியவை ஆய்வு நோக்கில் காணப் பெறுகின்றன. ஒவ்வோர் இயலின் இறுதியிலும் ஆய்வு முடிவுகள் தரப் பெற்றுள்ளன. நஞ்சீயர் உரைகளில் இடம்பெறும் அருஞ்சொற்பொருள்கள், அரிய தமிழ்ச் சொற்கள், மேற்கோள்கள், திவ்யப்ரபந்த உரைகளில் நஞ்சீயர் திருநாமம் குறிப்பிடப்படும் இடங்கள் ஆகியவைகளின் பட்டியல்கள் பின்னிணைப்பு களாகத் தரப்பெற்றுள்ளன. ------------------------ நஞ்சீயரின் நூல்கள் ஸ்ரீஸூக்த பாஷ்யம் ஆத்ம விவாஹம் பெரியதிருமொழி வியாக்கியானம் திருப்பள்ளியெழுச்சி வியாக்கியானம் கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானம் ------------- பின்னிணைப்புகள் ஆத்ம விவாஹம் 209 முழுக்ஷு க்ருத்யம் 210 ஸாமக்ரீபரம்பராநாதம் 213 அவஸ்தா த்ரயம் 215 ----------- இமல்- 1 தோற்றுவாய் ஸ்ரீவைஷ்ணவ மதம் திருமகள் கேள்வனான நாராயணன் என்னும் கடவுளையே பாம் பொருளாகச் கொண்ட மதம் ஸ்ரீவைஷ்ணவம் என்று வழங்கப்பெறுகிறது. விஷ்ணு; என்னும் பெயருடைய இறைவனே பரம்பொருள் என்னும் கருத்துடைய மதமே வைஷணவ மதமாகும். அத்வைதம், த்வைதம், வடநாட்டில் ப்ரரிம்பாலான இடங்களில் பரவியுள்ள வல்லபம், நிம்பார்க்கம், சைதன்யம், ராமானந்கம், ஸ்வாமி நாராயணம் போன்ற மதங்கள் அனைத்தும் வில்ணுவைமே பரம்பொருளாகக் கொண்டுள்ளபடியால் அவையும் மண வமதமெ. ஆனால் ஸ்ரீ" யோடு (திருமகளோடு) கூடிய விஷ்ணுவைப் படிம்பொருளாகக் கொண்ட மதமே ரா கழுணலவம் என்று வழங்கப்படுகிறது: இதை அழகு தமிழில் திருமால் நெறி என்பாரும் உளர். "திருவில்லாத் தேவரைத் தேறேல்ரின் சேவு" என்ப திருமழிசையாழ்வார் திருவாக்கு ஆகும்.' தமிழ் மண்ணில் திருமால் நேற பிய ஸ்ரீவைஷணைவ மதத்தைப் பரப்பியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். அஸ்ணார் பரப்பிய வைணவப் பயிருக்கு ரும் உரமும் இட்டு நன்றாக வார்க்குவர்கள் ஆசாரியர்கள் ஆவர். வதங்கள், இதிகா சங்கள், புர: ணங்கள், உபநிஷத்துக்கள் முதலிய வடமொழ்! நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை முதன் முதலில் அழகிய தமிழ்ப் பாக்களில் வடித்தவர்கள் ஆழ்வார்கள் ஆவர். சங்கநூலான பரிபாடலில் திருமாலையே பரம்பொருளாகக் கூறுகின்ற பாடல்கள் பல உள்ளன. ஆனால் பரிபாடல் பாடிய புலவர்களைக் காட்டிலும் ஆழ்வார்களுக்குத் தனிச் சிறப்புண்டு. திருமாலைப் பாடிய தமிழ்ப் புலவர்கள் பிற தெய்வங்களைப் போற்றியும் அரசர்களைப் போற்றியும் பாடல்களைப் பாடியுள்ளனர். உதாரணமாக மூன்றாம் பரிபாடலிலும் நான்காம் பரிபாடலிலும் திருமாலைப் பாடிய கடுவன் இளவெயினனார் ஐந்தாம் பரிபாடலில் செவ்வேள் (முருகன்) பெருமையைப் பாடியுள்ளார். இறைவனைத் தவிர பிற தெய்வங்களையோ, மானிடர்களையோ ஒரு போதும் பாடவில்லை. மாறாக, "நாக்கொண்டு மானிடம் பாடேன்"' என்றும், "வாய்க்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன் "” என்றும், தங்களைப் பற்றித் தாங்களே கூறியும் "ஓர் மானிடம் பாடல் என்னாவதே?"” என்று பிறர்க்கு அறிவுறுத்தியும் போந்தவர்கள் ஆழ்வார்களே ஆவர். ஆழ்வார்கள் அவதரிக்கக் காரணம் உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையவனான இறைவன், இவ்வுலகோர்கள் உய்வுபெறவேண்டும் என்பதற்காக சாத்திரங்களைத் தந்தான்., சாத்திரங்களில் கூறியுள்ளபடி நன்மை எது? தீமை எது? என அறிந்து கொண்டு, தீமைகளை விலக்கி, நன்மைகளையே செய்து, முடிவில் மக்கள் தன்னை வந்து அடையவேண்டும் என்பது அவன் விருப்பமாகும். இருட்டிலே தவிக்கின்ற ஒருவனுக்கு விளக்கைக் கொடுத்தால், அந்த விளக்கின் ஒளியால் இருட்டிலிருந்து வெளியே வரலாமன்றோ? அதுபோல எம்பெருமானும் பிறவியாகிய இருளிலே தவிப்பவனுக்குச் சாத்திரங்களாகிய விளக்கைக் கொடுத்தான். ஆனால் அது குருடனுக்குக் கொடுத்த விளக்கைப் போலே ஆயிற்று: அறிவாகிற கண் இல்லாமல் அறியாமையாகிற இருளிலே மூழ்கிக் கிடப்பவனுக்குப் பயன்படாமலேயே போயிற்று. எம்பெருமான் இவர்களைத் திருத்துவதற்காக இந்த உலகத்தில் தானே வந்து பல பிறவிகள் பிறந்தான். சாத்திரங்களில் கூறியுள்ளவற்றைத் தானே அநுஷ்டித்தும் காட்டினான். சாத்திரங்களைக் கொண்டு நன்மை, தீமைகளை அறியமுடியாத மக்கள், தன்னுடைய செய்கையைப் பார்த்து தரும நெறிகளை முறையாகப் பின்பற்றுவார்கள் என்று எம்பெருமான் கருதினான். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. மக்கள் அவனையும் ஒரு மனிதனாகவே கருதி அலட்சியம் செய்து விட்டனர். இனி இவர்களைத் திருத்தத் தன்னால் முடியாது என்கிற முடிவுக்கு வந்த எம்பெருமான், இவர்களைப் போன்றவர்களைக் கொண்டே இவர்களைத் திருத்த வேண்டும் என்று கருதினான். அதற்காகக் குறிப்பிட்ட சிலருக்குத் தன்னுடைய அருளைப் பொழிந்தான். இப்படி எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களே ஆழ்வார்கள் ஆவர்.” எம்பெருமானிடத்தில் பக்தியால் ஆழ்ந்தவர்கள் ஆதலின், அவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். வடமொழி வேதாந்தக் கருத்துகளை முதன் முதலில் தமிழ் மொழியில் தந்தவர்கள் ஆழ்வார்களே என்பதைத் திருவரங்கத்தமுதனார், வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்மையும் கூட்டி ஒன்றத் திரித்தன்றெரித்த திருவிளக்கை........... 1 -என்று வெகு அழகாகக் காட்டுகிறார். முதன் முதலில் தமிழில் வேதாந்தக் கருத்துகளை அருளிச் செய்யத் தொடங்கியவர் பொய்கையாழ்வார் ஆவார். எனவே இங்கு அமுதனார், மறையின் குருத்தின் (வேதாந்தத்தின்) பொருளையும், செந்தமிழ் தன்னையும் கூட்டியவர் பொய்கைப்பிரான் என்கிறார். பொய்கையாழ்வாரைத் தொடர்ந்து பிற ஆழ்வார்களும் இதேபோல் பாசுரங்களை அருளிச் செய்தனர். இதையே மணவாளமாமுனிகளும் "அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்" என்று அருளிச் செய்துள்ளார். ஆழ்வார்கள் எண்ணிக்கையில் பதின்மர் என்றும், பன்னிருவர் என்றும் கூறுவதுண்டு. எம்பெருமானுடைய அருளை நேரடியாகப் பெற்ற ஆழ்வார்கள் பதின்மர். மணவாள மாமுனிகள், பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை யைனருள் மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட நாதனன்பர்தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு.” 0என்று ஆழ்வார்களுடைய அடைவு முறையை அருளிச் செய்துள்ளார். அவர்களோடு நம்மாழ்வாரை ஆசாரியராகக் கொண்ட மதுரகவிகளையும், பெரியாழ்வாரை ஆசாரியராகக் கொண்ட ஆண்டாளையும் சேர்த்துப் பன்னிருவராகக் குறிப்பிடுவதுமுண்டு. அவ்வாழ்வார்கள் எம்பெருமானுடைய அருளைப் பெற்று அதனால் பக்தி மேலிட்டு எம்பெருமானை அனுபவிக்கத் தொடங்கினர். அவ்வனுபவம் உள்ளடங்காமல் அழகிய தமிழ்ப் பாசுரங்களாக வெளிப்பட்டன. அப்பாசுரங்களே "திவ்யப்ரபந்தம்" என்று வழங்கப் பெறுகின்றன. ஆசாரியர்கள் ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களுக்குத் தங்களுடைய ஞானத்தினால் விரிவுரை வழங்கியவர்கள் ஆசாரியர்கள் ஆவர். ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ள பாசுரங்களைப் பேணிப் பாதுகாத்து அவற்றுக்குத் தகை சான்ற உரைகளை எழுதி மெருகூட்டிய பெருமை ஆசாரியர்களையே சாரும். திருவாய்மொழிக்குப் பராசரபட்டர் அருளிச் செய்துள்ள தனியனில், நம்மாழ்வாரை ஈன்ற முதல் தாய்' என்றும், ஸ்ரீ ராமாநுஜரை வளர்த்த இதத்தாய்' என்றும் குறிப்பிடுவதிலிருந்து இதை நன்கு உணரலாம். நாதமுனிகள் திவ்யப்பிரபந்தங்கள் அனைத்தும் ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு மறைந்து விட்டிருந்தபோது, அவற்றை முதன்முதலில் வெளிக் கொணர்ந்தவர் நாதமுனிகள் என்னும் ஆசாரியர் ஆவார். திவ்யப்ரபந்தங்களை முதன் முதலில் தொகுத்தவரும், அவற்றை நான்கு ஆயிரங்களாக வகுத்தவரும் நாதமுனிகளே என்று கூறலாம். மேலும் திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு விரிவான விளக்கங்கள் அருளிச்செய்வதைத் தொடங்கி வைத்தவரும் அவரே என்றும் கூறலாம். ஒரு சமயம் காட்டுமன்னார் கோயில் வந்திருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மாழ்வார் அருளிச் செய்த "ஆராவமுதே"' என்னும் திருவாய்மொழிப் பதிகத்தை இசைக்க நாதமுனிகள் கேட்டமை, அப்பதிகத்தின் முடிவில் "குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப் பத்தும்"? என்றுள்ளதால் ஆயிரம் பாசுரங்களையும் பெற வேண்டும் என்று விரும்பியமை, அதற்காக ஆழ்வார் அவதரித்த திருக்குருகூருக்கு வந்தமை, பராங்குச தாஸர் என்பவர் சொற்படி "கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பிரபந்தத்தை நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த திருப்புளியமரத்தடியில் பன்னீராயிரம் முறை ஒருமனத்தோடு அனுசந்தித்தமை, நம்மாழ்வார் யோகதசையில் இவர் முன் தோன்றி நாலாயிரம் பாசுரங்களையும் வழங்கியமை முதலான செய்திகள் குருபரம்பரை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.” இவ்வாறு நாதமுனிகள் நம்மாழ்வாரிடத்திலிருந்து பெற்றவை வெறும் பாசுரங்கள் மட்டுமல்ல என்றும், அப்பாசுரங்களின் உட்கருத்தையும் சேர்த்தே பெற்றார் என்றும் சம்பிரதாயம் வல்ல பெரியோர் கூறுவர். "பெரியமுதலியார்க்கு 'ஸ மந்த்ராஜ த்யவமாஹ யஸ்ய” என்று த்வய பூர்வகமாயிறே ஆழ்வார் திருவாய்மொழி முதலான ப்ரபந்தங்களை ப்ரஸாதித்தருளினதும்"' என்று பிள்ளைலோகம் சீயரும் அருளிச் செய்துள்ளார். எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் நாதமுனிகள். அவர் ஆழ்வாருடைய அருளால் தாம் பெற்ற திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் உட்பொருள்களையும் உபதேசமார்க்கமாக வழங்கி வந்தார். அவரிடமிருந்து, அவருடைய சீடரான உய்யக் கொண்டாரும், அவரிடமிருந்து மணக்கால் நம்பியும், அவரிடமிருந்து நாதமுனிகளின் திருப்பேரரான ஆளவந்தாரும் திவ்யப்ரபந்தங்களையும், அவற்றின் உட்கருத்துகளையும் உபதேசமார்க்கமாகப் பெற்றனர். நாதமுனிகள் திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் கருத்துகளை விளக்கிக் கூறியுள்ளதாக திவ்யப்ரபந்த உரைகளில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. "என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ" என்கிற திருவாய்மொழித் தொடரின் உரையில், "கண்ட காட்சி புல்லெழுந்து போனபடியிறே இவள் இங்ஙன் சொல்லுகிறது என்று பெரிய முதலியார் வார்த்தை" என்றுள்ளது.” இங்கு, பெரிய முதலியார் என்று குறிப்பிடப்படுபவர் நாதமுனிகளா? அல்லது ஆளவந்தாரா? என்பதில் கருத்து வேற்றுமை உண்டு. திருவாய்மொழியின் ஒரு பாசுர உரையில் நம்பிள்ளை, 'பெரிய முதலியார்' என்று நாதமுனிகளையே குறிப்பிடுகிறார்.” ஆனால் நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஓரிடத்தில் “பெரிய முதலியார்' என்ற சொல்லால் நாதமுனிகளையும்' மற்றொரு இடத்தில் ஆளவந்தாரையும்” குறிப்பிடுகிறார். நம்பிள்ளையின் கருத்துப்படி பெரிய முதலியார் எனும் பெயர் நாதமுனிகளையே குறிக்கின்றதாதலின், நாதமுனிகள் திருவாய்மொழிக்கு முதன்முதலில் விளக்கம் அருளிச் செய்தவராக ஆகிறார். ஆளவந்தார் நாதமுனிகளுக்குப் பிறகு திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு ஆளவந்தார் அளித்த விளக்கங்கள் திவ்யப்பரபந்த உரைகளில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, திருவாய்மொழிப் பாசுரங்களின் சுவைப் பொருள்களை ஆளவந்தார், பலர் கூடியிருக்கும் கோஷ்டியில் எடுத்துரைப்பார் என்பது, "ஆளவந்தார் கோஷ்டியிலே........... "! என்றுள்ள தொடரால் அறியலாம். மேலும் பாசுரத்தின் சொல்நயங்களை ஆளவந்தார் விளக்கியுள்ள இடங்களும் ஒரு சில இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.” முதன்முதலில் ஸ்ரீராமாயணத்திலிருந்து உவமை காட்டி விளக்கும் உத்தியை தொடங்கி வைத்தவரும் ஆளவந்தாரே ஆவார்.” ஆகவே பின்னர் தோன்றிய உரையாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஆளவந்தாரே எனலாம். எம்பெருமானார் ஆளவந்தாருக்குப் பிறகு ஆளவந்தாருடைய சீடர்களில் முக்கியமானவர்களான பெரிய நம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் முதலியோர் அளித்த சிற்சில விளக்கங்கள் ஆங்காங்கே திவ்யப்ரபந்த உரைகளில் குறிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிய விளக்கங்களை எம்பெருமானார்க்கு உரைத்தவர் திருமாலையாண்டான் என்னும் ஆசாரியரே என்பது உரையில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ள செய்தியாகும்.“ ஆசாரியர்களிடம் உபதேசமார்க்கமாக திவயப்ரபந்தங்களின் உரைகளை அடிபணிந்து கேட்ட எம்பெருமானார், அவ்வுரைகளைப் பேணிப் பாதுகாத்தார். மேலும் அவைகளை வளர்க்கவும் பல ஏற்பாடுகள் செய்தார். எம்பெருமானார் அருளிய சில நயமான விளக்கங்கள் திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. அவ்விளக்கங்கள் எம்பெருமானார்க்கு முன்பிருந்த ஆசாரியர்கள் கூறிய பொருள்களைக் காட்டிலும் சுவை மிகுந்தனவாகவும், இடத்திற்குத் தகுந்தவாறு (ப்ரகரணத்திற்கு) மிகவும் பொருத்தமாக அமைந்தும் உள்ளன. உதாரணமாக, "துயரறு சுடரடி" என்ற இடத்தில் எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசாரியர்கள், "அடியவர்களுடைய துயர்களை அறுக்கும் சுடரடி" என்று பொருள் கூறியதாகவும், எம்பெருமானார், "அடியவர்களின் துன்பங்களைப் போக்குவதால், தான் துயரறும் சுடரடி" என்று விளக்கம் அருளியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.” கண்ணபிரானுடைய சரித்திங்களையே கூறுகின்ற "பிறந்தாவாறும் வளர்ந்தவாறும்" என்கிற திருவாய்மொழிப் பதிகத்தில் "நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்" என்ற சொற்றொடர்களுக்குப் பூர்வாசாரியர்கள் "திருமலையிலே நின்றபடியும், பரமபத்திலே இருந்தபடியும், திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளினபடியும்" என்றும், "திருவூரகத்திலே நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும், திருவெஃகாவிலே கிடந்தபடியும்" என்றும் பொருள் அருளிச் செய்தார்கள். ஆனால் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியதாகவே இருந்தால்தான் ப்ரகரணத்திற்கு நன்கு பொருந்தும் என்று கருதிய எம்பெருமானார், (கண்ணபிரான்) குழந்தைப் பருவத்தில் தொட்டிலிலே சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றவாறும், நிற்க முடியாமல் தளர்ச்சியுடன் தொட்டிலிலே அமர்ந்து இருந்தவாறும், அதுவும் முடியாமல் கிடந்தவாறும் என்று அழகிய பொருள் உரைத்ததாக குறிப்பிடப்படுகிறது.' எம்பெருமானார் ஆடற்கலையை அறிந்தவராகவும் இருந்தார். வாசுதேவன் வலையுள் அகப்பட்டதாகப் பராங்குச நாயகி கூறுவதை அபிநயம் பிடித்த ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் 'வலை' என்பதற்குக் கைகளால் வலைபோல் அபிநயித்துக் காட்டினார். எம்பெருமானார் இங்கு வாசுதேவன் வலை என்பது கண்ணபிரானுடைய திருக்கண்களையே குறிக்கிறது என்பது தோற்றக் கண்களைக் காட்டி அருளினாராம்.” "சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்தவன்" என்று திருவரங்கத்தமுதனாரால் போற்றப்படுகின்ற எம்பெருமானார் அருளிய எண்ணற்ற விளக்கங்கள் ஆங்காங்கே திவ்யப்ரபந்த உரைகளில் குறிப்பிடபட்டிருந்தபோ திலும், திவ்யப்ரபந்தங்களுக்கு முழுமையான உரை ஏதும் எம்பெருமானார் எழுதவில்லை. தாம் உரை எழுதினால் அதுவே முடிந்த கருத்தாக நிலைபெற்று விடும் என்றும், பிற்காலத்தில் பல்வேறு உரைகள் பிறக்க வாய்ப்பின்றிப் போய்விடும் என்றும் கருதியே எம்பெருமானார் உரை எழுதவில்லை என்று குருபரம்பரையில் காரணம் காட்டப்பட்டுள்ளது.” எம்பெருமானார் நேரடியாக உரை எழுதாமல் போனாலும் உரைகள் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு அடிப்படை அமைத்தவர் இவரே ஆவார். எம்பெருமானார் வைணவத்திற்கு ஆற்றிய எத்தனையோ சீரிய பணிகளில் இதுவே மிகமிக முக்கியமான பணியாகும் என்று மணவாள மாமுனிகள் கருதியிருந்தார் என்று கருத இடமுள்ளது. உபதேசரத்தினமாலை என்னும் நூலில் மணவாளமாமுனிகள் நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு இயற்றப்பட்டுள்ள அனைத்து உரைகளைப் பற்றியும் குறிப்பிடப் போவதாக முப்பத்துநான்காம் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். முப்பத்தொன்பதாம் பாசுரம் தொடங்கி நாற்பத்தொன்பதாம் பாகரம் வரை அனைத்து உரைகளைப் பற்றியும், பதினொரு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார். இடையில் முப்பத்தேழு, முப்பத்தெட்டு ஆகிய இரு பாசுரங்களில் அவர் குறிப்பிடும் செய்திகள் வியாக்கியானங்களைப் பற்றியனவாக அமையாமல், எம்பெருமானாரின் சிறப்புகளைப் பற்றியன வாக அமைந்துள்ளன. உரைகளைப் பற்றிக் குறிப்பிடுவதாகத் தொடங்கியவா இடையில் உரைகளை எதயும் நோடியாக அருளிச் செய்யாதவர:ன எம்பெருமானாரைப் பற்றிக் குறிட்பிடுவதற்குக் காரணம் என்ன என்பது ஆராயத்தக்கது. எம்பெருமானா ர் காலம் வரை, திவ்பப்ரபந்தங்களுக்கு உரைகள் வாய்மொழியாகவே (உபதேசமார்க்கமாகவே) அருளிச் செய்யப்பட்டு வந்தன. முதன்முதலிஃ எழுத்து வடிவில் உரைகளைக் கொண்டு வருவதற்கு அருளாணையிட்டவர் எம்பெருமானரே ஆவார். அவருடைய கட்டளைப்படியே திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதன்முதலில் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்கிற உரைலய அருளிச் செய்தார். வடமொழியும், தமிழும் விரவிய நடையில் முதன்முதலில் எழுதப்பட்ட மனரிப்பிரவாள உரைநூல் இதுவே ஆகும். திவ்யப்ரபந்தங்களின் பொருளை அறிந்து கொள்ள வேண்டும் ஈன்ற ஆசையையுடைய பிற்காலத்தவருக்கும் பயன்பட வேண்டும் என்கிற காரணத்தினால், வாய்மொழியாகவே உபதேசிக்கப்பட்டு வந்த உரைகளை எழுத்துவடிவில் கொண்டு வரச் செய்தவர் எம்பெருமானாரே என்ற கருத்தை வலியுறுத்தவே ஓராண் வழியாயபேதசித்தார் முன்னோர் ஏராரெஜிராச ரின்னருளால் - பாருலதில் ஆசையுடை யோர்க் கெல்லாமாரியர்காள் கூறுமென்று பேசி வரமபறுத்தார் பின். என்று அருளிச் செய்தார் எனலாம். மேலும் எம்பெருமானார் செய்த இவ்வரிய பணியே மிகவும் முக்கியமானது என்னும் கருத்தில் மணவாளமாமுனிகள், “எம்பெருமானார் தரிசனமென்றேயிதற்கு நம்பெருமான் பேரிட்டு நாட்டி. வைத்தார் - அம்புவியோர் இந்தத்தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலறிகைக்கா.”" --என்றும் அருளிச் செய்தார் எனலாம். மேற்கூறிய பாசுரங்களைத் தொடர்ந்து மணவாளமாமுனிகள் தமது உபதேசரத்தினமாலையில், நாலாயிர திவ்யப்ரபந்த உரைகளைப் பற்றியே பல பாசுரங்கள் அருளிச் செய்துள்ளார் எனபது: இக்கருகத்திற்கு வலிமை சேர்க்கிறது. எம்பார் எம்பெருமானா ௬டைய சீடர்களில் முக்கியமானவரும், அவரது திருத் தம்பியுமான எமபாரும் நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்கள் பல அருளிச் செய்துள்ளார். அவர் ஆடற்கலை அறிந்தவராகவும், பாசுரங்களின் கருத்திற்கும் பொருளுக்கும் ஏற்ப அபிநயம் பிடிப்பதில் வல்லவராகவும் திகழ்ந்தார் என்பது நாலாயிர திவ்யப்ரபந்த உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.” மேலும் திவ்யப்ரபந்தங்களில் இடம் பெறும் ஒரு பதிகத்திற்கும், மற்றொரு பதிகத்திற்கும் உள்ள தொடர்பு (சங்கதி) கூறுவதில் மிகவும் திறமை வாய்ந்தவராகவும் அவர் திகழ்ந்தார் என்பதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.” கூரத்தாழ்வான் பிரம்ம ஸுூத்ரபாஷ்யம் எழுதுவதற்கு எம்பெருமானாருக்கு உறுதுணையாக இருந்து உதவியவர் கூரத்தாழ்வான் ஆவார். அவர் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்திற்காக, ' தமது தரிசனத்தையே (கண்களையே) இழந்தும், எம்பெருமானாரைக் காப்பாற்றித் தந்தும் பெருந்தொண்டுகள் புரிந்தார். அவர் தமக்குக் கொடுமை இழைத்தவர்களுக்கும் நன்மையே புரியும் எண்ணமுடையவர்.” வாயில்லா ஜீவன்களிடத்தும் இரக்க குணம் கொண்டு, அவற்றிற்காக வருந்துவார்.” அவர் அருளிச் செய்துள்ள விளக்கங்கள் திவ்யப்ரபந்த உரைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.” மேலும் கூரத்தாழ்வானுடைய குணநலன்களைப் பற்றியும்,” ஸ்ரீராமாநுஜர் இவரிடம் கொண்டிருந்த பேரன்பு பற்றியும்' உரைகளில் பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. நஞ்சீயர் அருளிச் செய்துள்ள ஒன்பதினாயிரப்படி உரையில் வேறு எந்த ஆசார்யருடைய திருநாமமும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இரு இடங்களில் மட்டும் கூரத்தாழ்வான் நிர்வாஹங்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளன.” இது பற்றிப் பிறிதொரு பகுதியில் விளக்கமாக வரையப்படும். ஸ்ரீபராசரபட்டர் கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பட்டரும், ஸ்ரீராமப்பிள்ளையும் பிறந்த பிறகு, அவர்களை ஸ்ரீராமாநுஜரிடம் எம்பார் கொண்டு வந்து காட்டும் போது, குழந்தைகளுக்குத் தீங்கு ஏதும் நேராமல் இருப்பதற்காக, த்வய மந்திரத்தைக் கூறி கொண்டே குழந்தைகளைக் கொண்டு வந்தார். அதனால் எம்பாரையே அவர்களுக்கு ஆசாரியராக இருக்கும்படி நியமித்தார் ஸ்ரீராமாநுஜர். மேலும் திருவாய்மொழியின் பொருள்களைத் தந்தையிடமே பயின்றமையால்” கூரத்தாழ்வானும் பட்டருக்கு ஆசாரியராக விளங்கினார். பட்டர் அருளிச் செய்த நிர்வாஹங்களும், பட்டரைப் பற்றிய ஐதிஹ்யங்களும் நாலாயிர திவ்யப்ரபந்த உரைகளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. இடத்திற்கேற்பத் தகுந்த கதைகளைக் கூறிப் பொருள்களை விளங்க வைத்தல்,“ உதாரணங்கள் கூறிப் பொருள்களை விளக்குதல்,” தமிழிலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுதல்” முதலிய சிறப்புகளும், மிக நயமான விளக்கங்களும் பட்டருடைய நிர்வாஹங்களில் காணப்படுகின்றன. பட்டருடைய சீடரான நஞ்சீயர் கேட்ட நுண்ணிய வினாக்களுக்குப் பட்டர் அளித்த நயமான விடைகள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பற்றிப் பிறிதொரு இயலில் விளக்கப்படும். ஸ்ரீராமாநுஜர் தமக்குப் பிறகு தம்மிடத்திற்போலவே பட்டரிடம் அன்பு செலுத்தும்படி அனைவருக்கும் நியமித்ததாக ஓரிடத்தில் குறிக்கப்படுகிறது.” ஆயினும் நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்குப் பட்டர் உரை ஏதும் எழுதவில்லை. திருநெடுந்தாண்டகப் பாசுரம் ஒன்றிக்கு மட்டும் பட்டர் உரை எழுதியதாகக் கூறப்படுகிறது. அப்பாசுர உரை பட்டர் எழுதியதன்று என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். ' நஞ்சீயர் ஸ்ரீராமாநுஜர், பராசரபட்டர் ஆகிய இருவரும் திவ்யப்ரபந்தப். பாகரங்களுக்குப் பொருள் கூறுவதில் மிக வல்லவர்களாக இருந்த போதும், அவர்கள் இருவருமே திவ்யப் பிரபந்தங்களுக்குத் தாமே உரை எழுதாமல், தம்தம் சீடர்களைக் கொண்டு உரைகள் எழுதுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். 'ஸ்ரீராமாநுஜருடைய அருளாணையின் காரணமாகத் திருக்குருகைப்பிரான் பிள்ளானும், பட்டருடைய அருளாணையின் காரணமாக நஞ்சீயரும் திருவாய்மொழிக்கு உரைகள் எழுதினர்.' பிள்ளான், திருவாய்மொழிக்கு மட்டுமே உரை எழுதியுள்ளார். நஞ்சீயர் திருவாய்மொழிக்கும் வேறு சில திவ்யப்ரபந்தங்களுக்கும் உரைகளை அருளியுள்ளார். நஞ்சீயர், திருவாய்மொழிக்கு அருளிச்செய்துள்ள உரை, பிள்ளான் எழுதிய உரையைப்போல் பொழிப்புரையாக அமையாமல், முதன்முதலாகப் பாசுரங்களில் உள்ள சொல்நயங்களை விளக்கும் வகையில் சிறப்புரையாக அமைந்துள்ளது. இத்தகைய தனிச் சிறப்புகளைப் பெற்ற நஞ்சீயருடைய சீரிய பணிகளை விளக்குவதே இவ்வாய்வின் தலையாய நோக்கமாகும். முடிவுகள் 1 திருமகளோடு கூடிய எம்பெருமானான திருமாலையே பரம் பொருளாகக் கொண்டது ஸ்ரீவைஷ்ணவ மதம் ஆகும். 2. முதன்முதலில் வேதாந்தங்களில் கூறப்பட்டுள்ள விசிஷ்டாத்வைதக் கருத்துகளைத் தமிழ்ப் பாசுரங்களாக வெளியிட்டவர்கள் ஆழ்வார்களே ஆவர். 3. ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களுக்கு அழகிய விளக்கங்களை அளித்து ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களை வளர்த்த இதத்தாயராக ஆசார்யர்கள் பலரும் விளங்கினர். நாதமுனிகள், ஆளவந்தார் போன்ற ஆசார்யர்கள் முதன் முதலில் அழகிய விளக்கங்களை அளித்து திவ்யப்ரபந்தங்களை வளர்த்தனர். ஸ்ரீராமாநுஜர் ஆழ்வார் அருளிச் செயல்களுக்குச் சிறந்த விளக்கங்களைத் தாம் வாய்மொழியாக அருளினார்; முதன்முறையாகத் திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் ஒன்றினை ஏடுபடுத்தவும் திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு அருளாணையிட்டார். வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வந்த திவ்யப்ரபந்த விளக்கங்களை முதன் முதலில் எழுத்தில் வடிக்கச் செய்தமையே ஸ்ரீராமாநுஜர் செய்த பணிகளுள் சிறந்தது என்று மணவாளமாமுனிகள் கருதினார் எனலாம். எம்பார், கூரத்தாழ்வான் போன்ற ஆசார்யர்கள் பலரும் நயமான விளக்கங்கள் பல கூறி திவ்யப்ரபந்தங்களை மேலும் வளர்த்தனர். திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு மிகச் சிறந்த விளக்கங்களை அருளிய பராசரபட்டர், தாம் உரை ஏதும் எழுதவில்லை. பராசரபட்டரின் நல்லருளால், அவருடைய சீடரான நஞ்சீயர் திருவாய்மொழிப் பாசுரங்களின் சொல்நயங்களை விளக்கும் வகையில் ஒன்பதினாயிரப்படி உரை அருளிச் செய்தார். மற்றும் சில திவ்யப்ரபந்தங்களுக்கும் முதன் முதலில் உரை அருளிச் செய்தார். வைணவம் தழைக்க வந்த வள்ளலான ஸ்ரீராமாநுஜர் தமக்குப் பின்னும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகப் பற்பல ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மறைந்தார். அவற்றுள் ஒன்று தம்முடைய சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளானையிட்டுத் திருவாய்மொழிக்கு (மிகவும் சுருக்கமாக) ஒரு வியாக்கியானம் எழுதச் செய்தமையாகும். இப்பணி மேலும் தொடர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மேல்நாட்டில் வேதாந்தி எனும் பெயருடன் திகழ்ந்த அறிஞரைத் திருத்திப் பணிகொண்டு ஸ்ரீவைஷ்ணவராக்கும்படி பட்டரைப் பணித்தார். அந்த நியமனப்படி பராசர பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்ட வேதாந்தியே நஞ்சீயர் ஆவார். நஞ்சீயர் மேல்நாட்டில் (தற்போதைய கர்நாடக மாநிலம்) திருநாராயணபுரத்தில் அவதரித்ததாக பெரிய திருமுடியடைவு கூறுகிறது." ஆறாயிரப்படி குருபரம்பரையில் அவர் பிறந்த ஊர் குறிப்பிடப்படவில்லை. அவர் காங்கோரை என்னுமிடத்தில் வசித்து வந்ததாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.” நஞ்சீயர் பிறந்த வருடம் முதலான செய்திகள் இந்நூல்களில் இடம்பெறவில்லை. நஞ்சீயர் காலம் நஞ்சீயர் சுந்தரபாண்டியத் தேவர் என்னும் அரசனிடம் ஸ்ரீராமாயண சுலோகம் ஒன்றுக்கு விளக்கம் கூறியதாகப் பெரியதிருமொழி உரையிலும்” நாச்சியார் திருமொழி உரையிலும்” குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வரசன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்றும், கி.பி.1219ல் மூன்றாம் ராஜராஜ சோழனை வென்று, முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றிவிழாவைக் கொண்டாடினான் என்றும், அவனை ஸ்ரீசுந்தா பாண்டியத் தேவர் என்று கல்வெட்டுகள் குறிப்பதாகவும் டாக்டர். தெ. ஞானசுந்தரம் குறிப்பிடுகிறார். இதனால் நஞ்சீயர் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. நஞ்சீயர் கி.பி.1113 முதல் கி.பி.1208 (95 ஆண்டுகள்) வாழ்ந்திருந்ததாக ஸ்ரீ.உ.வே. எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கருதுகிறார்.” இவர் 95 ஆண்டுகள் வாழ்ந்திருந்ததாகப் பெரிய திருமுடியடைவும் கூறுகிறது.” ஆனால் குருபரம்பரையில் இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.” பட்டர் நஞ்சீயரை ஆட்கொள்ளல் பட்டர் நஞ்சீயரைத் திருத்திப் பணிகொண்ட செய்தி ஆறாயிரப்படி குருபரம்பரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.” நஞ்சீயருடைய இயற்பெயர் மாதவாசாரியர்; இவர் வேதாந்தங்களில் மிகவும் வல்லவராக இருந்தபடியால் வேதாந்தி என்றே அழைக்கப்பட்டார். இவர் முதலில் அத்வைதத்தில் சிறந்த அறிஞராய் விளங்கினார். ஸ்ரீராமாநுஜர் இவ்வுலகை நீத்துப் பரமபதம் அடைவதற்கு முன் பராசர பட்டரை அழைத்து, "மேல்நாட்டில் வேதாந்தி என்றொரு பெரிய வித்வான் இருக்கிறான் என்று கேட்டோம். நீர் அங்கேறப் போய் அவனை நம் தர்சனப்ரவர்த்தகனாம்படி திருத்தும்" என்று அருளிச் செய்தார். ஸ்ரீராமாநுஜர் திருநாடு அடைவதற்கு முன்பு பல முக்கியமான விஷயங்களைக் கூறியிருந்த போதிலும், கடைசியாகக் கூறிய இச்செய்தி மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீராமாநுஜரே மதிக்கும் வகையில் வேதாந்தி என்பவர் மிகச் சிறந்த வித்வானாக இருந்தார் என்பது இதனால் புலப்படுகிறது. இதற்கு முன் யஜ்ஞமுர்த்தி என்றொரு அத்வைதியை ஸ்ரீராமாநுஜர் தாமே திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானாராக ஆக்கினார். ஸ்ரீராமானுஜர் முதுமையடைந்தமையால் மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்திப் பணிகொள்ளமுடியவில்லை. எனவேதான் பட்டரிடம் அப்பணியை ஒப்படைத்தார். "வேதாந்தி" என்றே புகழ் பெற்ற மாதவாசாரியரைச் சந்தித்த ஒரு தீர்த்தவாசி அந்தணன், "வேதாந்திகளே! உம்மை விட பட்டர் மிகச் சிறந்த அறிஞர். அவர் அறியாத சாஸ்த்ரங்களே இல்லை" என்று கூறினான். அந்நாள் முதல் பட்டரைச் சந்திக்க வேண்டுமென்று வேதாந்தியும் ஆவலுடன் இருந்தார். ஸ்ரீரங்கத்திற்கு வந்த அந்தணன் பட்டரிடம் இது பற்றிக் கூற, பட்டர், "எனக்கு என்ன தெரியும் என்று அவரிடம் கூறினாய்?" என்று கேட்க, "உமக்கு எல்லாசாஸ்த்ரங்களும் தெரியும் என்றுகூறினேன்" என்று அந்தணன் பதில் கூறினான். ஆனால் பட்டர், "எனக்குத் திருநெடுந் தாண்டகம் தெரியும் என்று கூறாமல் இருந்து விட்டாயே" என்று கூற, அடுத்த முறை வேதாந்தியைச் சந்தித்தபொழுது அந்தணனும், "பட்டருக்குத் திருநெடுந்தாண்டக சாஸ்த்ரம் தெரியும்" என்று கூறினான். "திருநெடுந் தாண்டகம் என்றொரு நூலை இதுவரை கேள்விப்பட்டதில்லையே!" என்று வேதாந்தி வியப்படைந்தார் என்று குருபரம்பரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.' ஆனால், பெரியவாச்சான்பிள்ளையின் சிறியதிருமடல் உரையில் மற்றொரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. "வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் " என்கிற "சிறிய திருமடல்” அடிகளுக்குப் பொருளுரைத்த பட்டர், "கையும் வில்லுமாய் இராமபிரான் நின்ற நிலையினைக் கரன் கண்ட உடனே. இனிமேல் வேறு நரக வேதனை அனுபவிக்க வேண்டாதபடிக்கு எல்லா வேதனைகளையும் அப்போதே அனுபவித்து விட்டான்" என்று நயமாகப் பொருள் கூறினார். "பட்டர் இவ்விடத்துக்கு இவ்வார்த்தை அருளிச் செய்தார் " என்று சொல்ல, இவ்வார்த்தை அருளிச் செய்தவரைக் காண வேணும்' என்று காணும் பட்டர் ஸ்ரீபாதத்தில் நஞ்சீயர் ஆச்ரயித்தது" என்று தமது உரையில் குறிப்பிடுகிறார் பெரியவாச்சான் பிள்ளை. இதனால் நஞ்சீயர் மேல்நாட்டில் பிறந்திருந்தாலும் பட்டரை அடைவதற்கு முன்பே தமிழ்ப் புலமை உள்ளவராக இருந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது. நஞ்சீயரை பட்டருடைய திருவடிகளில் ஆச்ரயிக்கும்படி செய்தவர் பெயர் திருமழிசைதாசர் என்றும், அவரோடு சேர்ந்து நஞ்சீயர் திருவாய்மொழியோதுவதுண்டு என்றும் பெரியவாச்சான்பிள்ளை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.” குருபரம்பரையில் தீர்த்தவாசி அந்தணன் என்றுகுறிப்பிடப்படுபவர் திருமழிசைதாஸரே எனலாம். பட்டர் ஸ்ரீராமாநுஜருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக, மேல்நாட்டுக்கு யாத்திரை புறப்பட்டார். அவர் வேதாந்தியினுடைய ஊருக்குள் செல்லும்போது பெரும் பரிவாரங்களுடன் மணிப்பல்லக்கில் வாத்தியங்கள் அதிர, விருதுகள் முழங்க எழுந்தருளினார். அதைக் கண்டு, அங்கே இருந்த சிலர், "இப்படியெல்லாம் சென்றால் வேதாந்தியைப் பார்க்கவே முடியாது: அவர் தினந்தோறும் அந்தணர்களுக்கு விருந்தளிப்பார். நீரும் பிட்சைக்காகச் செல்லும் அந்தணர்போல் சென்றால்தான் அவரைப் பார்க்க முடியும்" என்று கூறினார்கள். அதன்படியே பட்டரும் பரிவாரங்கள் எலலாவற்றையும் துறந்து, ஓர் எளிய அந்தணனைப் போல் சென்றார். பிற அந்தணர்கள் அனைவரும் உணவு பரிமாறுமிடத்திற்குச் செல்ல, பட்டர் மட்டும் வேதாந்தி வீற்றிருந்த இடத்திற்குச் சென்றார். ஆறு சாஸ்த்ரங்களில் வல்லவரான வேதாந்தி ஆறு ஆசனங்களை அமைத்து அமர்ந்திருந்தார். "இங்கு எதற்கு வந்தீர்?" என்று அவர் பட்டரைக் கேட்க, "பிட்சைச்கு வந்தேன்" என்றார் பட்டர். "அப்படியானால் உணவு பரிமாறும் இடத்திற்கு செல்வதுதானே!" என்றா வேதாந்தி. "அந்த பிட்சைக்கு நான் வரவிலலை" என்றார் பட்டர். " பிள் என்ன பிட்சை வேண்டும்?" என்று கேட்க, "தாகக பிட்சை" என்றார் பட்டர். இதைக் கேட்ட வேதாந்தி வியப்புற்று, முன்பு தீர்த்தவாசி பிராம்மணானால குறிக்கப் பெற்றவர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து "நீர் பட்டரோ?" என்றார் பிறகு இருவருக்கும் வாதம் நடந்தத; ஒன்பது நாட்கள் வாதம் நடந்து முடிந்த பிறகு பத்தாம்நாள வேதாந்ழி (பிசிரூடாதலவைத மதமே சிறந்தது என ஒப்புக் கொண்டு பட்டர் திருவடிகளில் சடிணடை ந்தார். பட்டரும் அவருக்கு பஞ்சஸம்காரங்களைச் செய்து விட்டு, ஸ்ரீரங்கம் திரும்பினார்." நஞ்சீயர் துறவு மேற்கொள்ளல் வேதாந்தி முன்பு போலவே தொடர்ந்து அந்தணார்களுக்கு விருந்து படைத்து வந்தார். அவருக்கு மனைவியர் இருவர் இருந்தனர். ஒருநாள் ஏழை அந்தணர்கள் சிலர் வந்து பசிக்கு உணவு கேட்க, மனைவியர் இருவரும் அவர்களுக்கு உணவு இடாமலே இருந்து விட்டனர். பசித்தவாகளுக்கு உணவிடக்கூடத் தம் மனைவியருக்கு மனம் இல்லாததைக் கண்டு மனம் வருந்திய வேதாந்தி, இல்லறத்தைத் துறந்து விடுவது என்று முடிவு செய்தார். தம்முடைய அளவற்ற செல்வத்தை மூன்று பங்காகப் பிரித்து; இரு பங்குகளைத் தம் மனைவியர் இருவருக்கும் வழங்கிவிட்டு, மூன்றாவது பங்கைத் தம் ஆசாரியரான பட்டருக்கு ஸமர்ப்பிப்பதற்காக எடுத்துக் கொண்டார். இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டு, பட்டரை அடைவதற்காகத் திருவரங்கம் புறப்பட்டார். இதனால் ஏழைகளுக்கு உணவிடுதலே இல்லறத்தின் தலையாய அறம்; அதை செய்யத் தவறிய மனைவியரோடு வாழ்தல் தகாது என்னும் உயரிய கொள்கையை நஞ்சீயர் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது. துறவறம் மேற்கொடண்டபோது அவர் கூறிய அரிய கருத்து ஒன்று பெரியவாச்சான்பிள்ளையின் உரையில் குறிப்பிடப்படுகிறது. துறவறம் மேற்கொண்டு, முக்கோலைத் தரிக்கும்போது, "ஸகா மே கோபாய" (முக்கோலே! நீ எனக்கு நண்பனாய் என்னை எல்லாக் காலத்திலும் காப்பாற்றுவாயாக!) என்ற மந்திரத்தைக் கூறுவது மரபு. நஞ்சீயர் இதைக் கூறும்போது, "எல்லாமறிந்தவனும், எல்லாம் வல்லவனுமான பகவானை நோக்கி, ஒர் ஆசாரியனை முன்னிட்டுக் கொண்டு பற்றும்போது சொல்லுகின்ற இதே வார்த்தைகளை, அறிவற்ற ஜடப் பொருளான இக் கோலைப் பார்த்துக் கூறவேண்டியிருக்கிறதே!"" என்றாராம்." நஞ்சீயர் துறவறத்தை மேற்கொண்டு ஸ்ரீரங்கம் வருகிற பொழுது ஸ்ரீராமாநுஜருடைய சீடரான அனந்தாழ்வான் அவரைக் கண்டார். முன்பு பெரும் செல்வந்தராய் அவர் வாழ்ந்திருந்தமையை அனந்தாழ்வான் நன்கு அறிந்தவராதலால் "வேர்த்தபோது குளித்து, பசித்த போது உண்டு., பட்டர் திருவடிகளே சரணம் என்றிருந்தால் உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளி விடுவார்களோ? நீர் இப்படித் துறவு மேற்கொண்டிருக்க வேண்டாம். இருந்தாலும் செய்துவிட்டீர். திருமந்திரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வையைக நிஷ்டராவீர்!" என்று ஆசி கூறினார். (இச்செய்தி குருபரம்பரையில் மட்டுமல்லாது பெரியவாச்சான்பிள்ளை? பிள்ளைலோகாசாரியர்” ஆகியோருடைய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.) நஞ்சீயர் என்ற பெயர் வரக் காரணம் ஸ்ரீரங்கம் வந்து துறவுக் கோலத்துடன் தம்முடைய திருவடிகளில் விழுந்த வேதாந்தியைக் கண்ட பட்டர், "நம் சீயர் வந்தார்" என்று வாரி அணைத்துக் கொண்டார். அதுமுதல் நஞ்சீயர் என்ற திருநாமமே அவருக்கு நிலைத்துவிட்டது. (துறவிகளைச் சீயர் என்று அழைப்பது வைணவ மரபு.) கி.பி.1017ல் அவதரித்த ஸ்ரீராமாநுஜர் கி.பி.1137ல் பரமபதித்தார். அவர் பரமபதித்த பிறகுதான் பட்டர் நஞ்சீயரைத் திருத்திப் பணிகொண்டார். நஞ்சீயர் எம்பாரைத் திருவரங்கத்தில் கண்டதாக அருளிச் செய்வா என்று நம்பிள்ளை குறிப்பிடுகிறார்.' ஸ்ரீராமாநுஜர் பரமபதித்த பிறகு மூன்று வருடங்களுக்குள் அதாவது கி.பி.1140ல் எம்பார் பரமபதித்ததாக ஸ்ரீஉ.வே. எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கருதுகிறார்.? இஃது உண்மையாயின் பட்டர் நஞ்சீயரை கி.பி.1137-38ல் திருத்திப் பணி கொண்டிருக்க வேண்டும். இக்கருத்தை டாக்டர் இரா.அரங்கராஜன் ஆதரித்துள்ளார்.” இப்படி பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டுத் திருவரங்கம் வந்து சேர்ந்த நஞ்சீயர் பட்டருடைய அந்தரங்க சிஷ்யராய்த் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வரலானார். நஞ்சீயருக்கு, பட்டரிடத்திலிருந்த அளவற்ற பக்தியைப் புலப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் குருபரம்பரையில் இடம் பெற்றுள்ளன. நஞ்சீயரின் அளவற்ற ஆசார்யபக்தி ஒரு முறை பட்டர் பல்லக்கில் எழுந்தருளியபோது நஞ்சீயர் தாமும் பல்லக்கைத் தமது தோளிலே வைத்துச் சுமக்க முற்பட்டார். அப்போது பட்டர், "துறவியாகிய நீர் இப்படிச் செய்வது தகாது" என்று கூற, நஞ்சீயர், "தேவீ ருக்குக் கைங்கரியம் செய்வதற்குத் துறவறம் இடையூறு என்றால், துறவறத்தையும் துறந்து விடுகிறேன்" என்றாராம்." இதனால் துறவிகள் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யக்கூடாது என்கின்ற ஸாமான்ய தர்மத்தைவிட. எந்தநிலையிலும் ஆசார்யருக்குப் பணிவிடை செய்வது என்ற விசேஷ ஸ்ரீவைஷ்ணவ தர்மத்திலேயே நஞ்சீயர் ஊன்றியவர் என்பது புலப்படுகிறது. பட்டர் கூரகுலோத்தமன் என்கிற ஊரில் எழுந்தருளியிருந்தபோது அங்கு நஞ்சீயர் அமைத்திருந்த நந்தவனத்தில் பட்டருடைய வரவால் இடையூறு ஏற்பட்டது என்று அங்கிருந்த ஏகாங்கிகள் சிலர் கூறினர். இதைக் கேட்ட நஞ்சீயர், "நம்பெருமாள் திருகுழற்க்கற்றை சிக்கு நாறுகிறதென்றோ நான் நந்தவனம் அமைத்திருக்கிறேன்? அடியேனுடைய ஆசார்யரான பட்டருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விருப்பப்படி நந்தவனம் பயன்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்” என்று ஏகாங்கிகளைக் கடிந்துகொண்டார்.' நஞ்சீயருடைய மடத்திற்கு பட்டருடைய மூத்தபெண் வந்து, "இங்கு காய்ந்த சருகுகள் இருக்குமா?” என்று கேட்டுவர, நஞ்சீயர் தன் கண்ணுக்கு எதிரிலுள்ள சில இடங்களில் பார்த்து விட்டு இல்லையென்று சொல்லிவிட்டார். ஆனால் அப்பெண் சென்ற பிறகு பார்த்தபோது ஓரிடத்தில் சருகுகள் இருப்பதைக் கண்டு அவற்றைத் தம்மடியிலே கட்டிக்கொண்டு பட்டருடைய திருமாளிகைக்குச சென்றார். இதைக் கண்ட பட்டர், "இவற்றை நீரே கொண்டுவரவேண்டுமோ? யாரேனும் ஒருவரிடம் கொடுத்தனுப்பக் கூடாதோ?” என்று கேட்க,. நஞ்சீயர், "முதலில் இல்லையென்று சொல்லிவிட்ட பாவத்தை நானே போக்கிக் கொள்ள வேண்டாமோ?” என்று பதில் கூறினார்.” ஒருவர் செய்த தவற்றுக்குத் தாமே கழுவாய் தேடவேண்டும் என்பதையும், ஆசார்யருடைய குடும்பத்தினாமீதும் பக்தியுடன் இருக்கவேண்டும் என்பதையும் செயலில் காட்டினார் நஞ்சீயர். நஞ்சீயர்பால் பட்டர் காட்டிய பேரன்பு பட்டரும் நஞ்சீயரிடத்தில் மிகவும் அன்பு பூண்டவராக இருந்தார். அடிக்கடி திவ்யப்ரபந்தப் பாசுரங்களைச் சொல்லும்படி நஞ்சீயருக்கு நியமித்து, அவர் பாசுரங்களைச் சொல்லுமழகை பட்டர் ரசிப்பது வழக்கம்.” ஒருமுறை பட்டர் அமுது செய்து கொண்டிருந்தபோது நஞ்சீயரைப் பாசுரங்கள் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நஞ்சீயர், "என்திருமகள்சேர்மார்வனேயென்னுமென்னுடையாவியேயென்னும்" என்று சேர்த்து அருளிச் செய்ய, அதைக் கேட்ட பட்டர் கையை உதறி "்ஸ்ரீ ரங்கநாதா என்று அணையிலே சாய்ந்துவிட்டார். “என்திருமகள்சேர் மார்வனே என்றும் என்னுடையாவியே என்றும் பராங்குசநாயகி கூறுகிறாள்" என்றுதான் அந்நாள்வரை பொருள் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நஞ்சீயர், “என்திருமகள்சேர்மார்வனே என்று சொல்லப்படுகின்ற என்னுடையாவியே” என்கிறாள் (பராங்குசநாயகி) என்னும் பொருள்படும் வகையில் அருளிச் செய்தவுடன் பட்டர் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். அப்போது பட்டருக்கு ஏற்பட்ட மாறுதலைக் கண்ட நஞ்சீயர், பட்டருக்குப் பரமபதிக்கும்நேரம் வந்து விட்டதோ என்று அஞ்சி விட்டாராம்.' சிலசமயங்களில் தமக்குப் பதிலாக நஞ்சீயரையே விரிவுரைகளைக் கூறும்படியும் பட்டர் நியமித்ததுமுண்டு. திருக்கோட்டியூரில் ராமாநுஜதாஸர் என்பவருக்குத் திருவிருத்த விரிவுரை கூறும்படி நியமிக்க, நஞ்சீயரும் அப்படியே செய்ததாகப் பெரியவாச்சான்பிள்ளை குறிப்பிடுகிறார்.” பிள்ளை அழகிய மணவாள அரையர் என்பவருக்கு தவய மந்திரத்தின் உட்பொருளை (ரகசியமாக) உபதேசிக்க வேண்டும் என்பதற்காக பட்டர், அருகிலிருந்தவர்களையெல்லாம் வெளியே போகும்படி நியமித்தார். நஞ்சீயரும் எழுந்து வெளியே சென்றவர், நம்மையும் வெளியே போகும்படி கூறிவிட்டாரே! இரு என்று சொல்லவில்லையே என்று மனத்திற்குள் வெறுத்திருந்தபோது, பட்டர் “நஞ்சீயர் எங்கே?” என்று தேடியழைத்து அவரையும் வைத்துக்கொண்டு த்வயத்தின் பொருளை உபதேசித்தார். இதை நஞ்சீயரே கூறியதாக, நம்பிள்ளை குறிப்பிடுகிறார்” இதிலிருந்து பட்டருக்கு நஞ்சீயர் மீதுள்ள அன்பு புலனாகிறது. நஞ்சீயர் பட்டரை அடிபணிந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய நூல்களைக் கற்றார். அப்போது தம் மனத்தில் எழுந்த ஐயங்களையெல்லாம், சிறிதும் தயங்காமல் பட்டரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார். பின்னாளில் நம்பிள்ளை முதலானோர் கேட்ட வினாக்களுக்குச் சிறந்த விடைகளை நஞ்சீயர் பகர்வதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது. நஞ்சீயர் பட்டரிடம் கேட்ட கேள்விகளில் சில ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்துகளைப் பற்றியன; சில இதிகாசபுராணங்களைப் (பற்றியன; சில பகவான் பிராட்டியைப் பற்றியன; சில வைணவசமயத் தத்துவங்களைப் பற்றியன. அவை அனைத்தும் நாலாயிர திவ்யப்ரபந்த வியாக்கியானங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நஞ்சீயரின் வினாக்களும் பட்டரின் விடைகளும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் எம்பெருமானுடைய தன்மைகளை உள்ளபடி அறிந்து பாசுரம் அருளிச் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட பாசுரங்களின் உட்கருத்தை அறிந்து கொள்வது எளிதன்று. அவைகளில் ஆழ்ந்து, ஐயங்களை எழுப்புவதற்குக் கூரிய மதி வேண்டும். அத்தகைய மதிநுட்பம் வாய்ந்த நஞ்சீயர் மிகவும் நுண்ணிய கேள்விக் கணைகளைத் தொகுக்க, அதற்கு பட்டர் நயமான விடைகளை அளித்தார். அவற்றில் சிலவற்றைக் காணலாம். 1. நம்மாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டவர். "எத்திறம் உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே”' என்றும் “பிறந்தவாறும் வளர்ந்தவாறும் என்றும் கிருஷ்ணாவதாரத்தை நினைத்தே நம்மாழ்வார் மோகிக்கின்றார். மற்ற அவதாரங்களை விட, கிருஷ்ணாவதாரத்தில் இவர் மிகவும் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன என்று கேட்டார் நஞ்சீயர். அதற்கு விடையளித்த பட்டர், “ஒருவனுக்குத் துன்பம் பலநாள்கள் கழிந்தால் மறந்து விடும். கிருஷ்ணாவதாரம் முடிந்து சில நாள்களுக்குள்ளே நம்மாழ்வார் அவதரித்தபடியால், 'ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பிறந்திலோமே, பாவியேன், பல்லிலே பட்டுத் தெறிப்பதே! இவ்வளவு அருகில் வந்து பிறந்திருந்தும் கண்ணபிரானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே! என்ற வருத்தத்தினால்தான் அப்படி மோகிக்கிறார்" என்று உரைத்தார்.” 2. நம்மாழ்வார் மட்டுமன்றிப் பெரியாழ்வாரும் கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபாடுடையவர். அவரைப் பற்றியும் இதே கேள்வியை நஞ்சீயர் கேட்டார். திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு"! என்றும், “வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாயச் சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” என்றும், 'ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே என்றும் மூன்று முறை கண்ணபிரானுடைய சரித்திரங்களை நினைத்தே பரிவுகொண்டு பல்லாண்டு பாடுகிறார். “இராக்கதர் வாழ் இலக்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே“ என்று இராமாவதாரத்திற்கு ஒரேஒருமுறைதான் பல்லாண்டு பாடினார். இப்படி இராமாவதாரத்தைக் காட்டிலும், கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் பரிவுடன் ஈடுபட்டிருப்பதற்குக் காரணம் என்ன என்று நஞ்சீயர் கேட்டார். இதற்கு பட்டர் வேறுவிதமான விடை அளித்தார். ராமாவதாரத்தில் சகோதரர்கள் நால்வரும், உலகோர் அனைவரும் கொண்டாடும்படியான நற்குணம் பொருந்தியவர்கள்; அயோத்தியில் இருக்கும் புல்பூண்டுகளும் இராமனிடம் அன்புடையவை; அவர்களுடைய தந்தையோ இந்திரனுடைய விரோதியான சம்பராசுரனையும் வென்ற வீரமுடையவர்; மந்திரிகளோ அளவற்ற ஞானம் பொருந்திய வசிஷ்டர் முதலிய மகரிஷிகள்; இராமன் பிறந்தவூர் பகைவர்கள் எவரும் புகமுடியாத அயோத்தி; பிறந்த இடமும் அரண்மனை; பிறந்ததும் மிகவும் நல்ல காலமான திரேதாயுகம்; இப்படி எல்லாம் அந்த. அவதாரத்தில் பாதுகாப்பாக இருப்பதால் அந்த அவதாரத்தைப்பற்றி அச்சம் எதுவும் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ எல்லாமே இதற்கு நேர்மாறாகவன்றோ இருக்கிறது! கண்ணபிரான் தீம்பே வடிவெடுத்தவன். கண்ணன் வளர்ந்த திருவாய்ப்பாடியில் எழும் பூண்டெல்லாம் அசுரப் பூண்டுகள். அவன் தந்தையான நந்தகோபனோ ஒன்றுமறியாத சாது இடையன். கண்ணன் வளருகிற ஊரோ எந்தவிதப் பாதுகாப்புமில்லாத இடைச்சேரி. பிறந்த இடமோ கம்ஸனுடைய சிறைக்கூடம். சற்று அயர்ந்திருக்கும் நேரம்பார்த்து கண்ணனைக் கொன்றுவிடுவதற்காக அசுரர்களை ஏவிவிடும் கொடியவன் கம்ஸன். கண்ணன் அவரித்ததும் பொல்லாத காலமான கலியுகத்திற்கு மிகச் சமீபத்திலுள்ள துவாபரயுகத்தின் இறுதியில். எனவே கிருஷ்ணாவதாரத்தில் எதை நினைத்தாலும் அச்சப்படும்படியாக அன்றோ உள்ளது! எனவேதான் ஆழ்வார்கள் கிருஷ்ணாவதாரத்தை நினைத்தே அதிகம் பரிவு கொள்கிறார்கள்”! என்று விடையளித்தார் பட்டர். 3. பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாளுடைய திருவாக்கிலும் ஓர் ஐயத்தை எழுப்பினார் நஞ்சீயர். கண்ணபிரானைப் பிரிந்த வருத்தத்தில் இருக்கும் ஆண்டாள், “கண்ணபிரான் தன்னுடைய அரையில் (இடுப்பில்) அணிந்து கொண்ட ஆடையைக் கொண்டு வந்து என் வருத்தம் தீரும்படியாக என்மேல் வீசுங்கள்” என்கிறாள். “கண்ணபிரான் அணிந்து கொண்ட ஆடைதானே ஆண்டாளுக்கு வேண்டும். அது அவன் மேலே அணிந்து கொண்ட உத்தரீயமானால் ஆகாதோ? அரையில் அணிந்து கொண்ட ஆடை என்று ஆண்டாள் கூறுவதற்குக் காரணம் என்ன?” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்கு பட்டர், "உத்தம நாயகியான ஆண்டாள் தன்னுடைய நாய்கனுடைய வியர்வை மணத்தை நுகரவே ஆசைப்படுகிறாள். அது மேலிட்ட உத்தரீயத்தில் அதிகமாகக் கிடைக்காது. அரையில் அணிந்து கொண்ட ஆடையில்தான் அது ஆசைதீரக் கிடைக்கும் என்பதால்தான், அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு' என்கிறாள்” என்று பதிலளித்தார்.” 4. இறையுணர்வு பெற்ற மெய்ஞ்ஞானிகள் செல்வத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள். ஆழ்வார்களும் “பெரும் செல்வம் நெருப்பாக” என்றும், “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்” என்றும் “வேண்டேன் மனைவாழ்க்கையை”” என்றும் செல்வத்தைப் பயனற்றதாகக் கூறி, என்றும் இவ்வுலக வாழ்க்கையே வேண்டாம் என்று அருளிச்செய்துள்ளனர். திருமங்கையாழ்வாரும் பல பாசுரங்களில் அவ்வாறே கூறியுள்ளார். ஆனால் அவர் ஒருசில பதிகங்களைக் கற்பவர்களுக்குப் பயன் கூறும்போது அப்பதிகங்களைக் கற்பவர்கள் கடல்சூழ்ந்த இப்பூமியை ஆள்வதான செல்வத்தைப் பெறுவர்கள் என்று அருளிச் செய்துள்ளார். "செல்வத்தை நிலையற்றபயன் என்று வெறுத்து ஒதுக்காமல் இப்படிச் செல்வத்தையே பயனாக இவ்வாழ்வார் கூறுவதற்குக் காரணம் என்ன?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டார். அதற்கு பட்டர், “வெறுக்கத்தக்க செல்வமும்கூடத் திருமங்கையாழ்வார் அவதரித்தபின்பு மிகவும் விரும்பத்தக்கதாகிவிட்டது. எம்பெருமானுடைய செல்வமாக இருந்தாலும் சரி, நித்யசூரிகளுடைய செல்வமாக இருந்தாலும்சரி, அரசனுடைய செல்வமாக இருந்தாலும் சரி, அவற்றைப் பறித்து ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்யலாம் என்பதைச் செயலில் காட்டியவர் திருமங்கையாழ்வார். எனவே அச்செல்வங்களும் (பாகவத கைங்கர்யங்களுக்குப் பயன்படுகிறபடியால்) பயனுள்ளவையே என்பதுதான் திருமங்கை ஆழ்வாரின் கருத்தாகும்” என்று விடையளித்தார்." 5. திருமங்கயைழ்வார் திவ்யதேசங்களில் மிகமிக ஈடுபட்டவர். மிக அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாஸனம் செய்தவரும் அவரேயாவார். அவர் அருளிச்செய்துள்ள பெரிய திருமொழியில் ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு திவ்யதேசத்தை மங்களாசாஸநம் செய்துள்ளார். ஆனால் 'ஒருநல்சுற்றம்'” என்று தொடங்கும் திருமொழியில் பத்துப் பாசுரங்களிலும் பற்பல திவ்யதேசங்களைப் பற்றி அருளிச்செய்கிறார். இப்படிப் பல திவ்யதேசங்களை ஒரே பதிகத்தில் அருளிச்செய்வதன் கருத்து என்ன என்று நஞ்சீயர் கேட்டார். இதற்கு பட்டர், "புதிதாகத் திருமணமாகிய பெண் பிறந்தவீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது நெடுநாள் தன்னுடன் பழகியவர்களிடமும், உறவினர்களிடமும் தான் புகுந்தவீட்டிற்குச் செல்வதைச் சொல்லிக்கொண்டு செல்வது போல, ஆழ்வாரும் புக்ககமாகிய பரமபதத்திற்குச் செல்வதற்கு முன்னர் தான் மிகவும் ஈடுபட்ட திவ்யதேசங்களில் சொல்லிக் கொண்டு போகிறார்” என்று விடையளித்தார்.” 6. தன் மகளான பராங்குச நாயகியின் இளமையை வருணிக்கும்போது, “நாயகிக்கு இன்னும் முலைகள் முழுவதும் தோன்றவில்லை; தலைமுடி கூடாமல் குட்டையாகவுள்ளன; ஆடையும் இடையில் பொருந்துமாறு உடுக்கப்படவில்லை; வாயோ மழலைச் சொல் பேசுகின்றன; கண்களோ வெனில் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் விலையாகச் சொல்லும்படி மிளிருகின்றன” என்று பலவாறு வருணிக்கிறாள் தாயார். இப்பாசுரத்திற்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த நஞ்சீயர், “மற்ற அவயவங்களின் நிரம்பாமையைச் சொல்லிவிட்டு, கண்களுக்கு மட்டும் இவ்வளவு பெருமையைச் சொன்னால் அது பொருத்தமற்றதாக இராதோ?” என்று கேட்டார். அதற்கு பட்டர், “இதிலும் கண்களின் நிரம்பாமையே சொல்லப்படுகிறது. இப்படி மலர்ந்த விழிகளாக உள்ள தன்மையும் (சிறுபெண்ணாக உள்ள) இப்போதுதான் சொல்லமுடியும்; யெளவனம் குடிபுகுந்து விட்டால் கடைக் கண்களால் பார்ப்பது தவிர, இப்படி மலர்ந்த விழிகளால் பார்ப்பது இராதே! அதனால்தான் இப்படிச் சொல்லப் பட்டது” என்றார். 7. திருமங்கையாழ்வார் மானமருமென்னோக்கி என்ற பதிகத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களின் நிலையை அடைந்து, ஒரு பெண் எம்பெருமான் செய்த செயல்களைக் குறைத்துப் பேசுவதாகவும் மற்றொரு பெண் அதே செயல்கள் எம்பெருமானுடைய பெருமைகளைத்தான் காட்டுகிறது என்று கூறுவதாகவும் அருளிச்செய்கிறார். “ஒரே சமயத்தில் இரண்டு பேருடைய நிலையை ஆழ்வார் எப்படி அடையமுடியும்?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டார். அதற்கு பட்டர், “ஒருவன் பரமபதத்தை அடைந்தால் அங்கு எத்தனை உடல்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு பகவானுக்குக் கைங்கர்யம் செய்யலாம் என்று சாத்திரங்கள் கூறுகின்றனவே. அதுமட்டும் எப்படிக்கூடும்? அது எம்பெருமானுடைய அருளாலே கூடும் என்றுதானே சமாதானம் சொல்லப்படுகிறது. அதேபோல் எம்பெருமான் அருளினானாகில் இவ்வுலகத்திலேயே இருவருடைய நிலையை ஒரே சமயத்தில் ஆழ்வார் அடைய முடியாதோ?” என்று பதிலளித்தார்.” 8. ஆழ்வார்களுடைய திருவுள்ளக் கருத்து பற்றி மட்டுமல்லாமல், இதிகாச புராணங்களில் கூறப்பட்டுள்ள எம்பெருமானுடைய அவதார சரித்திரங்களைப் பற்றியும் நஞ்சீயர் நுட்பமான கேள்விகள் கேட்டிருக்கிறார். மஹாபலியிடம் மூன்றடி மண் பெறுவதற்கு வாமனன் வடிவத்தில் எம்பெருமான் வந்தபொழுது மஹாபலியின் குருவான சுக்கிரன் மஹாபலியைத் தடுத்தான். வந்திருப்பவன் உண்மையில் யாசகன் அல்லன் என்றும், இந்திரனுக்காக மஹாபலியை ஏமாற்றி அவனுடைய ராச்சியத்தைப் பிடுங்கிக் கொள்வதற்காகவே பகவான் வாமனனாக வந்திருப்பதாகவும் கூறி அதனால் தானம் கொடுக்கக் கூடாது என்றும் கூறினான். ஆனால் மஹாபலியோ பகவானே தன்னிடம் வந்திருக்கும்போது தானம் கொடுக்காமல் இருக்க முடியாது என்று கூறி முன்றடி மண் தாரை வார்த்துக் கொடுக்க, அதைச் சுக்கிரன் தடுக்க முயன்ற போது, கண்ணை இழந்தான். முடிவில் பகவான் மூன்றாவது அடிக்காக மஹாபலியின் தலையில் தன் திருவடியை வைத்து அழுத்தி அவனைப் பாதாள உலகில் சிறை வைத்தான். இந்தச் சரித்திரத்தைப் பற்றி நஞ்சீயர் பட்டரிடம் ஒரு கேள்வி கேட்டார். “மஹாபலியின் குருவான சுக்கிரன் உண்மையைத்தான் கூறினான். ஆனால் அவன் ஒரு கண்ணை இழந்து விட்டான். மஹாபலியோ தானம் கொடுத்தும் சிறையில் அடைக்கப்பட்டான். இப்படி நற்காரியங்களைச் செய்த இவர்களுக்குத் தண்டனை கிடைக்கக் காரணம் என்ன?” என்பது நஞ்சீயர் கேள்வி. இதற்கு மிகச் சுவையாக பதில் அளித்தார் பட்டர். “இருவருக்குமே இரண்டு குற்றங்கள் உண்டு. தானம் கொடுத்ததைத் தடுத்தது சுக்கிரன் குற்றம். அதற்காக அவன் கண்ணை இழந்தான். ஆசார்யன் சொல்லைக் கேட்காதது மஹாபலியின் குற்றம். அதற்காக அவன் ராச்சியத்தை இழந்தான்” என்பது பட்டரின் விடை.' 9. எம்பெருமானிடம் மிகவும் பக்தி கொண்ட ப்ரஹ்லாதனிடத்தில் வந்த அவனது பேரனான மஹாபலி, பகவானை நிந்தித்துப் பல வார்த்தைகளைக் கூறினான். அதைக்கேட்ட ப்ரஹ்லாதன், “என் முன்னே பகவானை நிந்திப்பதைக் காட்டிலும் என் தலையை நீ அறுத்து விட்டால், எனக்குப் பேருபகாரமாகும். நீ பகவானை நிந்தித்ததற்காக உன் ராச்சியத்தை இழக்கக் கடவாய்” என்று சபித்து விட்டான். இதை பட்டர் விரித்துரைப்பதைக் கேட்ட நஞ்சீயர், “பற்றற்றவனான ப்ரஹ்லாதன் ராச்சியத்தை ஒரு பொருட்டாக மதித்து அதை இழக்க வேண்டுமென்று மஹாபலியை சபித்தது ஏன்?” என்று கேட்டார். “நாயைத் தண்டிக்க வேண்டும் என்றால், அது விரும்பித் தின்கிற மலத்தைத் தானே விலக்க வேண்டும். சந்தனத்தை விலக்குவது நாய்க்குத் தண்டனையன்று. அதுபோல மஹாபலியைத் தண்டிப்பதற்காக, அவன் விரும்பிய ராச்சியத்தை இழக்க வேண்டும் என்று சபித்தான் ப்ரஹ்லாதன்” என்று பதில் அருளிச் செய்தார்.” 10. இதேபோல் இராமாயணத்திலும் சில ஐயங்களை எழுப்பி உள்ளார் நஞ்சீயர். “ராமபிரான் மீது அளவற்ற அன்புடையவன் தசரத சக்ரவர்த்தி, கைகேயியின் வரத்தினால் ராமபிரானைக் காட்டிற்கு அனுப்ப நேர்ந்தவுடன் அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் உயிரையே விட்டுவிட்டான். அப்படி உயிரிழந்த தசரதன் இந்திரலோகத்திற்குச் சென்றதாக ஸ்ரீ ராமாயணத்தில் கூறப்படுகிறது. “ஸ்ரீராமபிரானை விட்டுப் பிரிந்தவுடனே மூச்சு அடங்கும் படியான அன்பை உடையவனும், பகவானையே பிள்ளையாகப் பெற்றவனுமான தசரத சக்ரவர்த்தி ஏன் சுவர்க்கத்தைத்தான் அடைந்தான்? மோக்ஷத்தை அடையவில்லை?” என்பது நஞ்சீயருடைய கேள்வி. அதற்கு பட்டர், “ஸத்யம் என்ற போலி தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக தர்மமே வடிவெடுத்தவனான இராமபிரானைக் காட்டிற்கு அனுப்பியதனால் உண்மையில் தசரதன் அடைய வேண்டியது நரகம்தான். ஏதோ இராமபிரானின் கருணையால்தான் தசரதன் சுவர்க்கத்தையாவது அடைந்தான்” என்று பதில் கூறினார். 11. ஸ்ரீராமாயணத்தில் வரும் பாத்திரங்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் கேள்வி கேட்பதில் நஞ்சீயருக்கு நிகர் அவரேதான். இராமபிரானைச் சரணடைந்த விபீஷணனைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கடுமையாக ஆட்சேபித்தான் சுக்கிரீவன். அவனைத் தம் கோஷ்டிக்குள் புக அனுமதிக்கக்கூடாது என்றான் அவன். ஆனால் ஸ்ரீராமபிரானோ, "விபீஷணனை ஏற்றுக் கொள்ளாவிடில் நான் உளனாகவே ஆக மாட்டேன். என்னால் அவனைக் கைவிட்டு தரித்திருக்க முடியாது” என்றார். "இவ்விருவரும் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்த தற்குக் காரணம் என்ன?” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்குப் பட்டர், “இருவருமே தங்களைச் சரணமடைந்தவர்களைக் காப்பாற்றுவதிலேயே உறுதி உடையவர்களாக இருக்கின்றபடியால்தான் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது, சுக்ரீவன் தன்னைச் சரணமடைந்த இராமபிரானுக்கு யாதொரு ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தினால் இராவணனுடைய தம்பியான விபீஷணனைச் சேர்த்துக் கொள்ள அஞ்சினான். இராமபிரானோ, தன்னைச் சரணடைந்த விபீஷணனைக் கை விடமுடியாது என்ற காரணத்தினால்தான் அப்படி கூறினான் என்று பதிலளித்தார்.” 12. பாரதயுத்தத்தின்போது போர் செய்வதற்குத் தயங்கிய அர்ஜுனனைப் போர் செய்யும்படி தூண்டுவதற்காக ஸ்ரீமத் பகவத்கீதையை அருளிச் செய்தான் கண்ணபிரான். அவ்வாறு கீதையை அருளிச் செய்த கண்ணபிரான் பிரபத்தியைப் பற்றி உபதேசிக்கத் தொடங்கும்போது, “இதம் து தே குஹ்யதமம்ப்ரவக்ஷ்யாமி”." (இப்போது உனக்கு மிகவும் ரகசியமான ஒன்றைச் சொல்லப் போகிறேன்) என்று கூறி, எல்லாவற்றையும் உபதேசித்த பிறகு, இதம் தே நாதபஸ்காய'”.? (இதை நீ தவமில்லாதவனுக்குச் சொல்லி விடாதே) என்று கூறியுள்ளான். "மிகவும் ரகசியமானதும் உயர்ந்ததுமான ஒன்றைச் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கும் போதே இதை ஒருவருக்கும் சொல்லிவிடாதே என்றன்றோ கூறியிருக்க வேண்டும்? எல்லாவற்றையும் உபதேசித்த பிறகு, கடைசியில் இப்படிக் கூறுவதற்குக் காரணமென்ன?” என்பது நஞ்சீயருடைய கேள்வி. இதற்கு பட்டர், “கண்ணபிரானிடத்தில் மிகுந்த பக்தியுள்ளவளான திரெளபதி கெளரவர்களுடைய ரத்தத்தைப் பூசியல்லது தன் குழலை முடிப்பதில்லை என்று சபதம் செய்து விட்டாள். எப்படியாவது அவளுடைய சபதத்தை நிறைவேற்றித் தந்து விட வேண்டும் என்பதற்காக பாரத யுத்தத்தையும் மூட்டி விட்டான் கண்ணன். ஆனால் பாரதப்போர் தொடங்கும் சமயத்தில் அர்ஜுநன் தயங்கியபோது அவனை எப்படியாவது போரில் ஈடுபடுத்தி, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தான் கண்ணன். அப்போது அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மிகவும் உயர்ந்ததும், ரகசியமானதுமான பிரபத்தி யோகத்தை அர்ஜுநனுக்கு உபதேசித்துவிட்டான். எல்லாவற்றையும் உபதேசித்த பின்புதான் கண்ணன் யோசித்தான். 'ஐயோ! மிக ரகசியமான உயர்ந்த அர்த்தத்தை இப்படி நீசர் நடுவே அர்ஜுநனுக்கு உபதேசித்து விட்டோமே!' என்று கையிலே கிடைத்த அருமையான மாணிக்கத்தைக் கடலிலே எறிந்துவிட்டதுபோல அவனுடைய நெஞ்சு பதண், பதண் என்று அடித்துக் கொண்டது. எனவேதான் அவன் இப்படிப்பட்ட உயர்ந்த அர்த்தத்தை தாழ்ந்தவர்களுக்குச் சொல்லிவிடாதே என்று கடைசியில் கூறினான் ” என்று பதிலளித்தார்.” 19. வைதிகன் ஒருவனுடைய பிள்ளைகள் நால்வர் பிறந்த உடனே காணாமல் போய்விட, அவ்வைதிகன் கண்ணனிடம் வந்து முறையிட, கண்ணபிரான் அக்குழந்தைகளை மீட்டுக் கொடுத்தான் என்பது புராண வரலாறு. “வைதிகன் பிள்ளைகளை உடலொடுங் கொண்டு கொடுத்தவன்” என்று அருளிச்செய்கிறார் நம்மாழ்வார். இவ்விடத்திற்கு பட்டர் விளக்கம் அளித்த போது, “அக்குழந்தைகள் காணாமல் போனபோது பூசியிருந்த மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சாவடிப் பூணூலும் , இட்ட காதணிகளும் முதலிய ஒப்பனைகளில் ஒன்று கூடக் குறையாதபடி அப்படியே கண்ணபிரான் கொண்டு வந்து கொடுத்தான்” என்று அருளிச்செய்தாராம். “குழந்தைகள் பிறந்த அடுத்த கணத்திலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறதே! அப்போது இவ்வொப்பனைகள் உண்டோ?” என்று நஞ்சீயர் கேட்டார். “அக்குழந்தைகள் ரிஷியின் புதல்வர்களாகையால் பிறக்கின்ற போதே அவற்றுடன் பிறப்பார்கள்” என்று நயமாக பதிலளித்தார் பட்டர். ஆழ்வார்கள் திருவுள்ளக்கருத்து பற்றியும், எம்பெருமானுடைய அவதாரங்களைப் பற்றியும் பற்பல ஐயங்களை எழுப்பிய நஞ்சீயர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கூறப்படுகின்ற முக்கியமான சில கருத்துகளைப் பற்றியும் சிறந்த ஐயங்களை எழுப்பியிருக்கிறார். பிராட்டி புருஷகாரம், திருநாம வைபவம் முதலிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்குச் சுவையான விடைகளை பட்டர் அளித்துள்ளார். 14. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானைப் பலன் கொடுப்பவனாகவும், பிராட்டியைப் புருஷகார பூதையாகவும் கூறுவர். ஒரு சேதநன் எம்பெருமானைச் சரணம் புகுந்தால், அவ்வெம்பெருமான்தானே பலனைக் கொடுக்கிறான். இதற்கிடையில் பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டும் என்று கூறுவது எதற்காக என்பதுதான் நஞ்சீயரின் கேள்வி. இதற்கு பட்டர், “நாளும் நம் திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி” என்று ஆழ்வார் அருளிச் செய்வது கண்டீரே! ஒரு சேதநன் எம்பெருமானைச் சரணடையும்போது, இவனுடைய குற்றத்தைக் கண்டு எம்பெருமான் சீற்றம் கொண்டாலும் கொள்வான். இவனுடைய குற்றத்தைப் பாராமல், இவனைத் தன் நிழலிலே வைத்து, தகுந்த சமயத்தில் எம்பெருமான் முகம் பெற்றவாறே இவனுடைய குற்றத்தைப் பொறுக்கும்படி நல்வார்த்தை சொல்லிச் சேர்ப்பிப்பவள் பிராட்டியேயன்றோ! எனவேதான் அவள் முன்னாகவே பற்ற வேண்டும்” என்று அருளிச் செய்தார்." 15. “எம்பெருமான் ஆராதனைக்கு மிகவும் எளியவன்; ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் இட்டாலும் ஏற்றுக் கொள்வான்; சருகு முதலியவற்றை இட்டுக் கொளுத்தினால் உண்டாகும் புகையையும் ஏற்றுக் கொள்வான்: கண்டகாலிப்பூவை இட்டாலும் அணிந்து கொள்வான்” என்று ஒரு திருவாய்மொழிப் பாசுரத்திற்குப் பொருள் அருளிச் செய்யும்போது பட்டர் கூறினார். அதனைக் கேட்ட நஞ்சீயர், ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்” (கண்டகாலிப் பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கூடாது) என்று சாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளதே?” என்று கேட்க, அதற்கு பட்டர், “கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்கு இடக்கூடாது என்று சாஸ்த்ரம் கூறியுள்ளது மெய்தான். ஆனால், அது எம்பெருமானுக்கு ஆகாது என்ற காரணத்தால் அல்ல; கண்டகாலிப் பூவில் நிறைய முட்கள் இருக்குமாதலால், எம்பெருமானுக்காக அடியார்கள் அப்பூவைப் பறிக்கும்போது அவர்கள் கையில் முட்கள் பாயுமே என்ற காரணத்தினால்தான் எம்பெருமான் அப்பூவைத் தனக்கு இட வேண்டாம் என்று தவிர்த்துவிட்டான். எனவே எம்பெருமானுக்கு ஆகாதது எதுவுமே இல்லை” என்று விடையளித்தார்.” 16. ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தவன் எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லி உய்வு பெற வேண்டும். எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்வதற்குத் தகுதி வேண்டாமோ? தகுதியில்லாதவன் திருநாமத்தைச் சொல்லலாமோ?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, பட்டர், “தகுதியுள்ளவன் இருந்தபடியே திருநாமத்தைச் சொல்லலாம். தகுதி யில்லாதவன் திருநாமத்தைச் சொல்வதற்காக தகுதி எதுவும் உண்டாக்கிக் கொள்ளத் தேவையில்லை” என்றாராம். “திருநாமத்தைச் சொன்னால் இனிமேல் நமக்கு நன்மை ஏற்படும் என்று நம்புகிறவனுக்கு, அந்த திருநாமம் சொல்வதற்கு முன்னால் அவன் செய்த பாவங்களையும் அந்தத் திருநாமமே போக்கிவிடாதோ! எனவே பாவங்களைப் போக்கிக் கொண்டுதான் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்பதில்லை. தன் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காகக் கங்கையில் நீராடுவதற்குச் செல்பவன், அந்த கங்கையில் நீராடுவதற்குத் தகுதி உண்டாக்கிக் கொள்வதற்காக வேறொரு குளத்தில் நீராடிச் செல்ல வேண்டுமோ? இனிமேல் வரக்கூடிய பாவங்களைப் போக்குவது போலவே, இதுவரை செய்த பாவங்களையும் போக்கக் கூடியதாகையாலே திருநாமத்தைச் சொல்வதற்கு தகுதி எதுவும் தேடிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவே எல்லாத் தகுதிகளையும் உண்டாக்கிக் கொடுக்க வல்லது” என்று பட்டர் கூறினார். இப்படி நஞ்சீயர் பட்டரிடம் நுண்ணிய கேள்விகள் பல கேட்டுத் தம்முடைய அறிவை மேலும் கூர்மையாக்கிக் கொண்டார். இதனால் ஆசார்யரான பட்டரே சீடரான தம்மைப் பாராட்டும் அளவுக்குப் பெருமையும் பெற்றார். ஒருமுறை பட்டர், 'மைப்படி மேனியும்” என்ற பாசுரத்தை விளக்கிக் கொண்டிருந்தபோது, “காண்பவர்கள் நெஞ்சிலே இருள்படியும் படியான (பித்தேற்றவல்ல) திருமேனியை உடையவன் எம்பெருமான்” என்று விளக்கினார் பட்டர். இதைக் கேட்ட நஞ்சீயர், காண்பவர்கள் நெஞ்சைப் பித்தேற்றுகையாவது 'இன்னாரென்றறியேன்' என்னப் பண்ணுகையன்றோ?" என்றார். அதாவது, சங்கு சக்கரங்களோடு எம்பெருமானைக் கண்டபோதும் அவனை இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவ்வடிவு பித்தேற்றும்படி இருந்ததால் திருமங்கையாழ்வார், 'ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன் ” என்றருளிச் செய்கிறார். நெஞ்சை பித்தேற்றவல்ல திருமேனி என்ற தம்முடைய விளக்கத்திற்கு மிகச் சரியான மேற்கோளாக இப்பாசுரத்தைக் கூறக்கேட்ட பட்டர் மிகவும் மகிழ்ச்சி யடைந்து, “இப்பாசுரத்தை எடுத்துக்கூறியவர் யார்?” என்று வினவினார். அப்போது அங்கிருந்த பிள்ளை விழுப்பரையரும், ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் “இப்படிக் கூறியவர் நஞ்சீயர்” என்று கூறினர். இதைக்கேட்ட பட்டர், “பல நூறு காதங்களுக்கு அப்பாலுள்ள தேசத்திலே (கர்நாடகத்திலே) பிறந்திருந்தும், இவ்வளவுதூரம் வந்து, இன்று நமக்கு இப்பாசுரத்தை எடுத்துக் கொடுப்பதே!” என்று நஞ்சீயருடைய திறமையை மிகவும் வியந்து கொண்டாடினார். தம்முடைய மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் நஞ்சீயருக்குப் பரிசாக, தாம் அமுதுசெய்து மிகுந்த பிசாதத்தையும் வழங்கினார்.” இப்படியாகத் தம்முடைய ஆசார்யரிடத்தில் பற்பல கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற்ற நஞ்சீயர், இதேபோல் தம்முடைய சீடரான நம்பிள்ளை கேட்ட நுட்பமான கேள்விகளுக்கு மிகச் சிறந்த விடைகளை அளிக்க வல்லவரானார். பலசமயங்களில் தம்முடைய ஆசார்யரைப் போவே, தம்முடைய சீடரான நம்பிள்ளையைப் பாராட்டவும் செய்திருக்கிறார். ----------- நம்பிள்ளையின் வினாக்களும் நஞ்சீயரின் விடைகளும் 1. “பொலிக பொலிக பொலிக” என்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார் நம்மாழ்வார். முதலில் பகவானுக்கு மங்களாசாஸனம் செய்து விட்டன்றோ, பாகவதர்களுக்கு மங்களாசாஸனம் செய்யவேண்டும்? மங்களாசாஸனம் செய்வதில் புகழ் பெற்றவரான பெரியாழ்வாரும் அப்படியன்றோ செய்திருக்கிறார்? (முதலில் 'மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா, பல்லாண்டு' என்று பகவானுக்கு மங்களாசாஸனம் செய்து விட்டுப் பிறகன்றோ 'அடியோமோடும்....... பல்லாண்டு, சுடராழியும் பல்லாண்டு, பாஞ்சன்னியமும் பல்லாண்டு” என்று அவனுடைய அடியவர் களுக்கு மங்களாசாஸனம் செய்தார் பெரியாழ்வார்)” என்று நம்பிள்ளை கேட்க, அதற்கு நஞ்சீயர், “நம்மாழ்வாரும் பகவானுக்கு மங்களாசாஸனம் செய்த பிறகுதான் பாகவதர்களுக்கு மங்களாசாஸனம் செய்துள்ளார். கீழே 'வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை வெம்மா பிளந்தான் தன்னைப் போற்றி 2 என்று முதலிலேயே பகவானுக்கு மங்களாசாஸனம் செய்துவிட்டார். இங்கே பாகவதர்களுக்கு மங்களாசாஸனம் செய்கிறார். நம்மாழ்வாரைப் பின்பற்றியே பெரியாழ்வாரும் அப்படிச் செய்துள்ளார்” என்று விடையளித்தார்.” 2. எம்பெருமானோடு கூடப் பெறாத வருத்தத்தினால் தளர்ந்து மயங்கி விழுந்த (நாயகியின்) நிலையில் உள்ள ஆழ்வாருடைய நெஞ்சு, கண்ணபிரானிடத்தில் மயங்கிக் கிடந்ததாக ( மாயப் போர் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே”* என்று) 'தீர்ப்பாரை என்ற திருவாய்மொழியின் முதல் பாசுரத்திலேயே அருளிச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவளுடைய மயக்கத்தைத் தெளிவிக்கும் பரிகாரம் கூறும்போது “மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில்”' என்று எம்பெருமானுடைய அடியவர்களுடைய பாததூளியை அவள் மீது இட்டால் இவள் மோகம் தீரும் என்று கூறப்பட்டிருக்கிறதே! எம்பெருமானால் ஏற்பட்ட மயக்கத்தை எம்பெருமானையிட்டுப் பரிகாரம் செய்யாமல், வேறொன்றால் பரிகாரம் செய்வது சரியோ? நோய்க்குக் காரணம் ஒன்றும், பரிகாரம் வேறொன்று மாகவன்றோ கூறப்படுகிறது?” என்று நம்பிள்ளை கேட்டார். அதற்கு நஞ்சீயர், “மோர்க்குழம்பு குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மயங்கி விழுந்தவர்களுக்கு முதலில் சுக்குக் கஷாயம் கொடுத்து மயக்கத்தைத் தெளிவித்துப் பிறகுதானே அவர்கள் விரும்பிய மோர்க்குழம்பைக் கொடுப்பார்கள். அதுபோல எம்பெருமானைப் பெறாத வருத்தத்தால் தளர்ந்து மயங்கிய(நாயகி) நிலையிலிருக்கிற ஆழ்வாருக்கு முதலில் அடியவர்களுடைய பாததூளியால் மயக்கத்தைத் தெளிவித்துப் பின்னர் எம்பெருமானைக் கொண்டு வந்து காட்டுவதாக இருக்கின்றனர்” என்று விடையளித்தார்.” 3. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் (வடபெருங்கோயிலுடையான்) திருவடிகளைக் காண வேணும் என்கின்ற ஆசையினால் தனது கண்கள் உறங்குகின்றனவில்லை என்கிறாள்.” இதைப்பற்றி நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேள்வி கேட்டார், “கீழ்ப்பாசுரத்தில் ஆண்டாள், வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் * (்ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற தோணியை அடைய முடியாமல் வருந்துகிறேன்) என்றாள். ஸ்ரீவைகுண்டம் என்பது மிகவும் எட்டாத இடத்திலே அமைந்துள்ளதாகையால் அங்குள்ளவனை அடைய முடியாமல் ஆண்டாள் வருந்தியதாகக் கூறியது பொருந்தும். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே பிறந்து வளருபவளான ஆண்டாள் அவ்வூரிலேயே கோயில் கொண்டுள்ள எம்பெருமானது திருவடிகளைக் காண முடியாமல் வருத்தப்பட்டுக் கண்ணுறங்காமல் இருந்ததாகக் கூறுவது எப்படிப் பொருந்தும்?” என்பது நம்பிள்ளையின் கேள்வி. இதற்கு நஞ்சீயர், ' வடபெருங்கோயிலுடையானைச் சேவிப்பதற்காக ஆண்டாள் கோயிலுக்குள் புகுந்தாளானால், நம்மைப் போலே எந்தவித மாற்றமும் இல்லாமல், திரும்பி வரக்கூடியவளல்லள். ஆண்டாளை இவ்வெம்பெருமான் இங்கே வந்து பள்ளி கொண்டிருக்கிறான் என்று அவனுடைய எளிமைக் குணத்தை நினைத்து ஆண்டாள் அப்படியே மயங்கி விழுந்து விடுவாள். ஆண்டாளுடைய இத்தன்மையை உணர்ந்த எல்லோரும் 'கோமிலுக்குள் அழைத்துச் சென்றால் இவளை இழக்க நேரிடுமோ' என்றஞ்சி ஆண்டாளை ஒருவருமே கோயிலுக்குள் அழைத்துச் செல்ல மாட்டார்கள். எனவே ஆண்டாள் அப்படிக் கூறியது பொருத்தமே” என்று பதிலளித்தார். 4. நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும், நூறுதடா வெண்ணெயும் வாயால் சொல்லி ஸமர்ப்பித்தாள் ஆண்டாள். ஆனால் கண்ணனைப் பற்றிச் சொல்லும்போது, “அந்யத் பூர்ணாதபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரச்நாத் நசேச்சதி ஜநார்த்தந:” (ஒரு நீர் நிரம்பிய குடத்தைக் காட்டிலும் வேறொன்றையோ, திருவடி விளக்குவதைக் காட்டிலும் வேறொன்றையோ நலம் வினவுவதைக் காட்டிலும் வேறொன்றையோ கண்ணன் விரும்பமாட்டான்) என்று கூறப்பட்டிருப்பதால், குறைந்த பொருளை ஸமர்ப்பித்தாலும் திருப்தியடையும் கண்ணனுக்கு நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடாவில் அக்கார வடிசிலும் ஸமர்ப்பிப்பதாக இவ்வளவு மிகுதியாக ஆண்டாள் சொல்வதற்குக் காரணம் என்ன? என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்டார். அதற்கு நஞ்சீயர், "இப்போது ஆண்டாள் தன்னை ஒரு திருவாய்ப்பாடி கோபிகையாக நினைத்துக் கொண்டன்றோ பாசுரம் பாடுகிறாள். எனவே திருவாய்ப்பாடியின் செல்வத்தைப் பார்க்கும் போது நூறு தடா வெண்ணெய், நூறு தடா பால்சோறு என்பதெல்லாம் ஒரு பூர்ண கும்பத்திற்குச் சமம் என்று கூறலாம்படி மிகவும் அற்பமானவையே” என்று கூறினார்.” 5. “கெண்டையொண்கணுந்துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும், மிக்கசீர்த் தொண்டரிட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே” (மிக்கசீர்த் தொண்டர்கள் அவன் திருவடிகளில் இட்ட திருத்துழாயின் மணத்தை வண்டு கொண்டு வந்து என் மீது ஊதுமாகில் என் கண்ணும் துயிலும்; என் நிறமும் முன்பு போலாகும்) என்பது திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாசுரமாகும். “இங்கு 'திருத்துழாயின் மணத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்' என்று கூறினால் போதாதோ? மிக்கசீர்த் தொண்டரிட்ட' என்ற அடைமொழிக்குக் கருத்து என்ன?” என்று நம்பிள்ளை கேட்டார். அதற்கு நஞ்சீயர், “இப்பொழுது இவள் நோயால் வருந்துவது எம்பெருமானுக்குப் பரிவுடன் மங்களாசாஸனம் செய்பவர்கள் இல்லையே என்னும் நினைவால்தான். எனவே அங்கு வேறு பயன் எதையும் கருதாமல் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யக் கூடிய மிக்கசீர்த் தொண்டர் அடிமை செய்கிறார்கள் என்று அறிந்தால் உறங்காத கண்ணும் உறங்கும்; பழைய நிறமும் திரும்பும்” என்று விடையருளிச் செய்தார். 6. சீதாப்பிராட்டியைக் கவர்ந்து வந்த இராவணன் எப்படியாவது அவளைத் தன் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருதிப் பல முயற்சிகள் செய்து பார்த்தான். அதில் ஒரு முயற்சியாக மாயையினால் இராமபிரானுடைய தலை போலவே ஒன்றைச் செய்து கொண்டு வந்து சீதாப்பிராட்டி முன்காட்டி, இதோ உன் கணவனுடைய தலையை அறுத்துக் கொன்றுவிட்டேன். எனவே இனியாவது என் விருப்பத்தை நிறைவேற்று வாயாக!” என்று கூறினான். இதைக் கண்ட சீதாப்பிராட்டி உண்மையிலேயே அது இராமபிரானுடைய தலை என்று எண்ணி அழுது புலம்பினாள். இது பற்றி நஞ்சீயர் விளக்கிக் கொண்டிருந்தபோது நம்பிள்ளை, தன் கணவன் இறந்து விட்டான் என்று நினைத்தபோது சீதாப்பிராட்டியும் இக்காலத்துப் பெண்கள்போல் அழுது புலம்பியிருக்கிறாளே? சீதாப்பிராட்டிக்கு (இராம பிரான்மீதுள்ள அளவற்ற அன்பின் காரணமாக அவனுடைய தலையைக் கண்ட அடுத்த கணத்திலேயே உயிர் பிரிந்திருக்க வேண்டாமோ? அங்ஙன மல்லாமல் அவள் உயிர் தரித்திருந்து அழுதாள் என்று கூறினால், இராம பிரான் மீது கொண்டிருந்தது மெய்யான அன்பல்ல என்றாகி விடாதோ?” என்று கேட்டார். இக்கேள்விக்கு நஞ்சீயர், “பிராட்டி உயிர் தரித்திருந்தது இராமபிரானிடம் அன்பில்லாமையாலன்று. இராமபிரான் உண்மையில் உயிர் தரித்திருந்தபடியால்தான் பிராட்டிக்கு உயிர் போகவில்லை. நாயகன் உயிரோடிருக்கிறான் என்று நினைத்துக் கொள்வதும், உயிரிழந்துவிட்டான் என்று நினைத்துக் கொள்வதும் நாயகி உயிர் தரித்திருப்பதற்கோ உயிர் விடுவதற்கோ காரணமாகாது. உண்மையில் நாயகன் உயிரோடு இருந்தானானால், அது காரணமாகவே நாயகியும் உயிர் தரித்திருப்பாள். உண்மைக்கு மாறாக, ஒருவர் இறந்துவிட்டதாகப் பொய் சொன்னால் அதனை நம்ப நேர்ந்தாலும் துயர் உண்டாகுமே தவிர உயிருக்கு ஆபத்து விளையாது. இராவணன் மாயத்தினால் செய்த தலையைக் காட்டி வஞ்சித்தபோது, பிராட்டி அதை உண்மையென்றே நம்பியபோதும் உண்மையில் இராமபிரானுடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படாத காரணத்தாலேயே பிராட்டி உயிர் தரித்திருந்தாள் என்று விடை பகர்ந்தார். 7. கண்ணபிரானிடத்தில் கீதையை உபதேசம் கேட்ட அர்ச்சுனன் எம்பெருமானை அடைந்தானோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்டார். அதற்கு நஞ்சீயர், அதைப்பற்றி உமக்கென்ன விசாரம்? கீதையை உபதேசித்தவன் பகவான் என்கிற உறுதி உண்டானால் அவரவர்கள் தங்கள் தங்கள் செயல்களுக்கேற்பவும், விருப்பங்களுக்கு ஏற்பவும் பயனைப் பெறுகிறார்கள். மேலும் பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலேயோ நாமும் பகவானை அடையப் பார்க்கிறோம்? நம்முடைய ஈடுபாட்டினாலே யன்றோ நாம் எம்பெருமானைப் பற்றுகிறோம்! எனவே அர்ஜுனன் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் நமக்கு ஒரு கவலையுமில்லை'' என்று அருளிச்செய்தார்.” இவ்வாறு தம்மிடம் பல நுண்ணிய ஐயங்களை எழுப்பிய நம்பிள்ளைக்குத் தம் ஆசார்யரான பட்டரைப் போலவே தகுந்த விடைகளைப் பகர்ந்த நஞ்சீயர், தம் சீடருடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டவும் செய்தார். ஒருநாள் நஞ்சீயர் தம்முடைய காலக்ஷேப கோஷ்டியில் நம்பிள்ளையை மிகவும் புகழ்ந்து கொண்டாடினார். கோஷ்டியிலிருந்த மற்றவர்களைப் பார்த்து, “என்னுடைய சிஷ்யனை நானே கொண்டாடுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். இதேபோல் முன்பு கொண்டாடியவர்களும் இருக்கின்றார்கள். பரகால நாயகியின் திருத்தாயார் தன்னுடைய மகளை, கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்றெண்ணப் பெறுவரே' என்று கொண்டாடி யிருக்கின்றாள். அதேபோல்தான் நானும் என் சிஷ்யனைக் கொண்டாடுகிறேன்” என்று கூறினார்.” சில சமயங்களில் தம்முடைய விளக்கங்களைவிடச் சிறந்த விளக்கங்களை நம்பிள்ளை கூறியபோது அவையே சரியான விளக்கங்கள் என்று பாராட்டவும் செய்தார். இராமபிரானிடம் தோல்வியுற்ற அரக்கர்கள் பாவனையில் பாசுரங்கள் அருளிச்செய்யும் திருமங்கையாழ்வார், “அரக்கர் ஆடழைப்பாரில்லை” என்று அருளிச் செய்கிறார். இந்தப் பாசுரத்திற்குப் பொருள் உரைக்கையில் நஞ்சீயர், “அரக்கர்களில் இனி ஆடுபோலக் கூப்பிட வல்லவர் யாருமில்லை” என்று கூறினார். இதைக் கேட்ட நம்பிள்ளை, "ஆடு என்ற சொல்லுக்கு வெற்றி என்று பொருளுண்டு. எனவே ஆடு அழைப்பாரில்லை என்பதற்கு அரக்கர்களில் வெற்றி என்று சொல்ல வல்லாரில்லை. (தோற்றோம் என்று தோல்வியைச் சொல்ல வல்லவர் உளரே தவிர, வென்றோம் என்று கூற வல்லவர் எவரும் இலர்) என்று பொருள் கூறலாமே” என்று கூற நஞ்சீயர், “இதுவே சரியான பொருள்” என்று நம்பிள்ளையைக் கொண்டாடினார்." ஒருமுறை ஸ்ரீராமாயணம் வாசித்துக் கொண்டு வந்தபோது கைகேயியை நோக்கி, தசரதன் “நீ எந்த நரகத்திலே புகப் போகிறோயோ தெரியாது” என்று கூறுகிற இடம் வந்தது. அதைக் கேட்ட நம்பிள்ளை, “முன்பே உண்டாக்கி வைத்த நரகங்கள் போதாது; இவள் செய்துள்ள பாவங்களை அனுபவிப்பதற்கு இனிமேல் புதிதாக நரகங்களும் தண்டனைகளும் படைக்கப்பட்டால் தான் உண்டு என்று கூறுவதாகக் கொள்ளலாமோ?” என்று கேட்க நஞ்சீயர், மிக அழகாகக் கூறினீர்” என்று அவரைப் பாராட்டினார்.” “கரியமாமுகிற் படலங்கள் கிடந்தவை முழங்கிடக் களிறென்று பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு என்ற பாசுரத்தை விளக்கிய நஞ்சீயர், மலைப்பாம்புகளாவை யானைகளைக் கண்டால் அச்சம் கொள்ளுமாகையாலே இடியோசை எழுப்பிய மேகங்களை யானைகள் என்று நினைத்த மலைப்பாம்புகள் அவைகளுக்கு அஞ்சி, மலைகள் அசைந்தாற்போல் பெயாந்து வந்து புற்றிலே ஒளிந்து கொண்டன” என்றருளிச் செய்தார். இதற்குச் சான்றாக 'ஊரும் வரியரவம் ஒண்குரவர் மால்யானை பேரவெறிந்த பெருமணியைக் காருடைய மின் என்று புற்றடையும் வேங்கடம்” புனங்காக்கின்ற வேடர்கள் யானைகளை விரட்டுவதற்காக மாணிக்கக் கட்டிகளை அவற்றின் மீது எறிய, இதைக் கண்ட மலைப் பாம்புகளானவை யானைகளை மேகங்களாகவும், ஒளியுடைய மாணிக்கக் கற்களை மின்னலாகவும் நினைத்து பயந்து, தங்கள் புற்றை அடையும்படியான திருவேங்கடம்) என்ற பாசுரத்தை மேற்கோளாகக் காட்டி, பரந்த தலையுடைய நாகம் யானைக்கு அஞ்சி ஒளிந்து கொள்ளும்” என்ற வழக்கையும் எடுத்துக் கூறினார். : இதைக் கேட்ட நம்பிள்ளை, “இப்பாசுரத்திற்கு இதுவோ பொருள்?” என்று கேட்க, நஞ்சீயர், "இப்பாசுரத்திற்கு வேறொரு பொருள் உமது நெஞ்சில் இருந்தாலன்றி நீர் இப்படிக் கேட்கமாட்டீர். உமது நெஞ்சில் தோன்றிய பொருளைக் கூறும்'' என்று கூறினார். உடனே நம்பிள்ளை, “பெயருகை என்பது புற்றை விட்டு வெளியே வருவது, புற்றிற்குள்ளே போவது என்ற இரண்டிற்கும் பொதுவானது. மேலும் மலைக்குப் பெருமை கூறும் கவிகள், யானையை விழுங்கும்படியான பெரிய மலைப் பாம்புகளைக் கொண்ட மலைகள் என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு. எனவே கறுத்துப் பெரியதான மேகங்கள் பேரொலியெழுப்ப, அம் மேகங்களை யானைகள் என்றெண்ணிய மலைப் பாம்புகள், அந்த யானைகளை விழுங்குவதற்காக மலைகள் பெயர்ந்தாற்போல நகர்ந்தன என்றும் கூறலாமோ?” என்று கூறினார். இதைக் கேட்ட நஞ்சீயர், மிகவும் மகிழ்ந்து, நீர் கூறிய இந்தப் பொருள் மிகவும் பொருத்தமுடையது” என்று கூறி நம்பிள்ளையை மிகவும் கொண்டாடினார் என்று நம்பிள்ளை தாமே அருளிச் செய்துள்ளார் (என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை). பட்டர் தமது இருபத்தெட்டாவது வயதில் திருநாடு சென்று விட்டதாகக் குருபரம்பரை கூறுகிறது. இது பிழை என்றும் பட்டர் குறைந்தது 52 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் இரா. அரங்கராஜன் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.” பட்டருடைய மறைவிற்குப் பிறகு நஞ்சீயர் 34 ஆண்டுகள் வாழ்ந்திருந்து ஆசார்ய பீடத்தை அணிசெய்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.” அக்காலத்தில் நஞ்சீயர் நூறுமுறை திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்ததாகவும் நூறாம் முறை நஞ்சீயருடைய சிஷ்யரான நம்பிள்ளை தமது ஆசாரியருக்கு சதாபிஷேகம் செய்ததாகவும், குருபரம்பரை, பெரிய திருமுடியடைவு ஆகிய இருநூல்களுமே கூறுகின்றன." இப்படிப் பலமுறை நஞ்சீயர் அருளிச் செய்த காலக்ஷேபத்தைக் கேட்ட நம்பிள்ளை, பிற்காலத்தில் தாம் காலக்ஷேபம் சாதிக்கும் போது ஆங்காங்கே நஞ்சீயர் அருளிச்செய்யும் வார்த்தைகளையும் அவருடைய குணாதிசயங் களையும் பெரும் பூரிப்போடு கூற, அவற்றை நம்பிள்ளையின் சீடர்களான பெரியவாச்சான்பிள்ளையும், வடக்குத் திருவீதிப்பிள்ளையும், தம்தம் வியாக்கியானங்களில் பற்பல இடங்களில் குறித்துள்ளனர். அவை, நஞ்சீயரைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள உதவுகின்றன. --------- நஞ்சீயரின் சுவைமிகு கருத்துகள் நஞ்சீயர், பிரம்மத்திற்கு குணங்களோ, உருவமோ, உடைமைகளோ கிடையாது என்று கூறுகின்ற அத்வைதமதத்தைச் சார்ந்தவராக இருந்து, பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்டு விசிஷ்டாத்வைதியாக ஆனவர்; அப்படிப்பட்டவர், ஆழ்வார்களுடைய பாகரங்களை விளக்கும்போது, “எம்பொருமானுக்கு உருவமும் இல்லை, உடைமைகளும் இல்லை என்று கூறுகின்ற அத்வைதிகள் முன்பு ஆழ்வார் எம்பெருமானுடைய திருமேனியை வர்ணிக்கின்றாரே!” என்று ஈடுபட்டுக் கூறுவர் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.” | “ஈச்வரனுக்கு விக்ரஹமில்லை விபூதியில்லை என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர் (நம்மாழ்வார்) திருவுடம்பு வானசுடர் என்னப்பெறுவதே! ஈச்வரனுக்கு விக்ரஹமில்லை குணமில்லை என்கிறவர்கள் பண்ணிவைக்கமாட்டாத பாபமில்லை. அவர்களை அநுவர்த்தித்து (பின்பற்றி) அது கேட்க இராதபடி பெருமாள் நமக்குப் பண்ணின உபகாரம் என்!” என்றருளிச் செய்வர் சீயர்.” என்று நம்பிள்ளை விரிவாகவே காட்டுகின்றார்.” இப்படி அருளிச் செய்கின்ற நஞ்சீயர் தாமே ஒரிடத்தில் ஆழ்வாருடைய நெஞ்சே மாயாவாதத்தில் ஈடுபட்டுவிட்டதோ என்று சுவையாகக் குறிப்பிடுகின்றார். “கடியன் கொடியன்” என்று எம்பெருமான் மீது குற்றங்களைச் சொன்ன ஆழ்வார், “ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்” என்கிறார். அங்கு விளக்கமருளிச்செய்த நஞ்சீயர், அடைமொழிகளான (விசேஷணங்களான) இக் குணங்களில் நோக்கு எதுவும் இல்லாமல், விசேஷ்யமான எம்பெருமானிடத்திலேயே ஆழ்வாருடைய நெஞ்சு ஈடுபட்டுவிட்டது. விசேஷணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு, விசேஷ்யமான பரப்பரம்மத்தை மட்டுமே கூறுகின்ற மாயாவாத (அத்வைத) மதத்தில் ஆழ்வாருடைய நெஞ்சு சென்று விட்டதோ?” என்று சுவையாகக் கூறுவாராம்.' நஞ்சீயரின் அரிய விளக்கங்கள்: ஆழ்வாருடைய அருளிச் செயல்களை விளக்கும்போது ஆங்காங்கே மிகவும் சுவையாகவும் பிரகரணத்திற்குப் பொருத்தமாகவும் நஞ்சீயர் பற்பல விளக்கங்களைக் கூறியிருக்கிறார். “பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற சொற்றொடரை விளக்கும்போது - “முதல் முறை காணும்போது எங்கேயோ கண்டிருக்கிறோமே என்ற எண்ணத்தை விளைவிக்கும் என்றும், மறுமுறை காணும்போது முன்பு ஒரிடத்திலும் கண்டறியோம் என்னும் எண்ணத்தை விளைவிக்கும்” என்றும் நஞ்சீயர் விளக்குகிறார். பயபில்கின்றாளால் என்றுள்ள சொல்லைக் கருத்தில் கொண்டு இப்படி நயமான விளக்கமளித்தார்.” "கோழிகூ வென்னுமால், தோழி நானென் செய்கேன், ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்று, கோழி கூவென்னுமால்” - என்ற திருமங்கையாழ்வார் பாக்ரத்தை விளக்கும்போது பாசுரங்களிலுள்ள வரிகளை மாற்றி அந்வயித்து மிகவும் சுவையான பொருளைக் காட்டினார் நஞ்சீயர். “கண்ணன் வரவைத் தெரிவிக்கின்ற கோழி கூவுகின்றது; ஆழிவண்ணனான கண்ணன் வரும் நேரமாகி விட்டது; மீண்டும் கோழி கூவினவாறே கண்ணன் சென்று விடுவான்; தோழி நான் என்ன செய்வது?” என்று அழகாக இப்பாசுரத்தின் கருத்தை நஞ்சீயர் அருளிச் செய்ததாக நம்பிள்ளை அருளிச் செய்வாராம்.” அனுபவ விளக்கங்கள் சில சமயங்களில் விளக்கங்கள் கூறும் போது, தம்முடைய சொந்த அனுபவங்களையும் எடுத்துக் கூறி விளக்குகிறார் நஞ்சீயர். பராங்குசநாயகி நிலையில் நம்மாழ்வார் திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சென்று அடைய வேண்டும் என்று புறப்பட்டுச் சென்று, அவ்வளவு தூரம் செல்லமுடியாமல் நடுவே தளர்ந்து விட்டாள். திருவல்லவாழ் நகரில் எழும் ஆரவாரங்களையெல்லாம் செவிப்பட்டும் அங்கே போகமுடியாமல் தாம் வருத்தப்படுகிறபடியை அருளிச்செய்கிறார் ஒரு திருவாய்மொழியில். இப்பதிகத்தை விளக்கும்போது நஞ்சீயர், இதே போன்ற நிலையை ஒருமுறை நான் அனுபவித்தேன். பட்டர் திருவடிகளை அடைநத பின்பு ஒருமுறை மேலநாடடிற்குச சென்று விட்டு மறுபடியும் திருநாளிற்காகத் திருவரங்கத்திற்கு விரைவாக வந்தேன். திருக்கரம்பன் துறையருகில் வந்தபோது திடீரென்று ஆற்றில் வெள்ளம் புரண்டோட, இரவெல்லாம் இக்கரையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. அக்கரையில் நடைபெறுகிற திருநாளின் ஆரவாரமெல்லாம் காதில் விழச்செய்தேயும், அங்கே உடனே செல்லமுடியாமல் மிகவும் துன்பமடைந்தேன். அதே போன்ற நிலைதான் இங்குப் பராங்குச நாயகிக்கும்” என்று அழகாக விளக்கினார்." ஒரு திருவாய்மொழியைக் கற்பவர்களுக்குப் பயன் கூறுகின்ற ஆழ்வார் “வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணாடே” என்றருளிச் செய்கின்றார். இவ்வடிகளுக்கு விளக்கம் தரும்போது நஞ்சீயர் “நம்மைப் போலே வாயில் புகுந்த சோற்றைப் பறிகொடாமல் எம்பெருமானைரைப் போல் நெடுங்காலம் ஸ்ரீவைஷ்ணவ்ரீயோடு வாழப் பெறுவர்” என்று ஒவ்வோர் உருவிலும் அருளிச் செய்வாராம்.” எம்பெருமானார் நூற்றிருபது வருடங்கள் எழுந்தருளியிருந்ததுபோல் பட்டர் இவ்வுலகில் எழுந்தருளியிராத குறையினாலும், தாம் சீடரான பிறகு பட்டருடன் நீண்ட நாள்கள் சேர்ந்திருக்கப் பெறாத வருத்தத்தினாலும் நஞ்சீயர் இப்படி அருளிச் செய்தார் போலும்! ஸ்ரீவைஷ்ணவர்களிடம் ஈடுபாடு *ஸ்ரீவைஷ்ணவர்கள்பால் நஞ்சீயருக்குண்டான பெருமதிப்பைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றார் நம்பிள்ளை. “அடியாரடியார்தம் அடியாரடியார் தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே” என்றருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.' இப்படி எம்பெருமானுடைய அடியவர்களுடைய அடியவர்க்கு அடிவயர்களுடைய அடியவருக்கு அடியாரடியார்தம் அடியவராக இருத்தலை ஆழ்வார் விரும்புவது போல் உலகோர் எவரும் ஆசைப்படுவதில்லை. மற்றவர்களுக்கு மேலே மேலே தாம் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். இவ்விடத்தை நஞ்சீயர் அருளிச்செய்த போது, “இப்படி ஸ்ரீவைஷ்ணவர்களை விரும்புவது உலகோடு பொருந்தாது என்றாலும். ஆழ்வார் விரும்பியதை நாமும் விரும்பினோம் ஆகிறோம்” என்றருளிச் செய்தார். ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் மிகவும் ஈடுபாட்டுடனிருந்த நஞ்சீயர், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறுவார். நஞ்சீயருடைய சீடர்களான வீரப்பிள்ளை, பாலிகைப் பிள்ளை என்பவர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஏதோ காரணத்தினால் இருவருக்கும் பகை ஏற்பட்டுவிட, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும் தவிர்த்தனர். இதையறிந்த நஞ்சீயர், “பிள்ளைகாள்! பகவத் விஷயம் உயர்ந்ததன்றோ! பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர்மேல் ஒருவர் விரோதம் பாராட்டலாமோ?” என்று உபதேசம் செய்தார். அதுகேட்டு இருவரும் மனம் திருந்தித் தங்கள் விரோதத்தை மறந்து மீண்டும் நட்புடன் பழகத் தொடங்கினார்கள்.” நகைச்சுவை உணர்வு நஞ்சீயர் நகைச்சுவை உணர்வும் மிக்கவராகவும் திகழ்ந்தார். பட்டருடைய சீடரான பெரிய தேவப்பிள்ளை என்பவர் எல்லோரையும் கடுமையாகப் பேசிவந்தார். அவர் ஒரு சமயம் வெளியூருக்குச் சென்ற போது நஞ்சீயர், “நல்லவேளை, அவன் அகத்திலுள்ளவர் நான்கு நாள்களுக்காவது பிழைத்தார்கள்” என்றாராம்.” அம்மணியாழ்வான் என்பவர் தன் சீடரையும் வணங்குவாராம். “நாம் ஒருவனை வைஷ்ணவன் என்பதனால்தானே ஆதரிக்கின்றோம்! இச்சீடன் நானறிந்த வைஷ்ணவல்லவா?” என்பராம் அவர். அதற்கு நஞ்சீயர், “அது சிஷ்யனுக்கு அநர்த்தமன்றோ! ஆசாரியன் தன்னை வணங்காதவன்று சிஷ்யன் வருத்தப்படுவானே” என்றாராம். பிறவித் துன்பத்தின் கொடுமைகளைப் பேசுகின்ற திருமங்கையாழ்வார் பாசுரங்களை நஞ்சீயர் விளக்கும்போது, “இவ்வுலக வாழ்க்கையில் அரை நொடியும் பொருந்தாத திருமங்கையாழ்வார் போல்வாருக்கும், இவ்வுலக வாழ்க்கையையே பற்றித் திரிகிற நமக்கும் வித்தியாசமே தெரியாத மூடனாக எம்பெருமான் இருந்தால்தான் நமக்கு உய்வு கிடைக்கும்” என்றார். உடனே, “நண்பன் என்ற பாவனையோடு வருபவனையும் கைவிடமாட்டேன் என்று எம்பெருமான் கூறியிருப்பதனால் நம்மிடத்தில் உள்ள பக்தி வெறும் பொய்யானாலும் நமக்கு நிச்சயம் பேறு கிடைக்கும்” என்று கூறினாராம்.” ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் யார் என்ற ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்ணத்தை நஞ்சீயர் அருளிச் செய்துள்ளதாகப் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. உலகில் ஒருவன் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது, “ஐயோ பாவம்” என்று இரக்கப்படுபவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்: “நன்றாகப் படட்டும்; அவனுக்கு இத்தனையும் வேண்டும்” என்று நினைப்பவன் வைஷ்ணவனே அல்லன் என்பராம் நஞ்சீயர்.” நஞ்சீயர் எம்பெருமானுடைய அடியவர்களிடத்து பெருமதிப்புக் கொண்டிருந்தார். நம்பி ஏறுதிருவுடையார் தாஸர் என்பவர் பரமபதித்தபோது, அவர் திருவடிச் சார்ந்தார் என்று சிலர் நஞ்சீயரிடம் கூற, “அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தொண்டு செய்து வந்தவர். எனவே திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று கெளரவமாக அன்றோ கூறவேண்டும்” என்றார் நஞ்சீயர்.“ "மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தண்டனிட்டவன்று எனக்கு உண்டு பசிகெட்டாற் போலிருக்கும்” என்றருளிச் செய்வர் சீயர்" - என்று நம்பிள்ளை குறிப்பிடுவதிலிருந்து ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் நஞ்சீயருக்குள்ள மதிப்பை நன்கறியலாம். எம்பெருமான்மீது ஈடுபாடு எம்பெருமானுடைய அவதாரங்களைப் பற்றிப் பேசும்போது நஞ்சீயர் மிகவும் ஈடுபட்டுப் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வராஹபுராணம் வாசித்து வரும் போது அதில் வராஹப் பெருமானுக்கு முத்தக்காசு (கோரைக் கிழங்கு) அமுது செய்யப் பண்ணவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்ட நஞ்சீயர், “எம்பெருமான் பன்றியாக அவதரித்து, அப்பன்றிகள் விரும்பியுண்ணும் கோரைக் கிழங்கையும் விரும்பி அமுது செய்கின்றானே! இது என்ன மெய்ப்பாடு” என்று மனமுருகி விடுவாராம்.” என்றைக்கோ நடந்து முடிந்து விட்ட எம்பெருமானுடைய சரித்திரங்களை நினைத்துக் கொண்டு பிற்காலத்தில் மங்களாசாஸனம் செய்தவர்கள் பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஆவர். இதில் மிகவும் ஈடுபட்ட நஞ்சீயர், “வெள்ளம் சென்ற பின் அணை கட்டுவதே தகப்பனாருக்கும் மகளுக்கும் பணி” என்பராம்.” திருவரங்கம் பெரியகோயிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளுக்கு இடுப்பில் மேல்சாத்து சாத்துவதற்கும் கிருஷ்ணாவதார காலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியே காரணம் என்பர் நஞ்சீயர். "கிருஷ்ணாவதார காலத்தில் மரக்கிளையில் அமர்ந்திருந்த கண்ணன், மற்றொரு கிளைக்குத் தாவியபோது அவனுடைய உடை சற்று நழுவியது. அப்போது, யசோதைப் பிராட்டி அவனை உரலோடு கட்டியபோது வயிற்றில் ஏற்பட்ட தழும்பைக் கண்ட இடைச்சிகள் சிரித்தார்கள். அதனால் கண்ணன் மிகவும் வெட்கமடைந்தான். அதனால்தான் நம்பெருமாளுடைய திருவயிறு வெளியே தெரியாதபடி மேல்சாத்து சாத்துவது'' என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.“ கண்ணபிரானிடத்தில் மிகவும் ஈடுபாடுடைய நஞ்சீயர் தமது திருவாராதனப் பெருமானுக்கு “ஆயர்தேவு” என்று திருநாமம் சாத்தியிருந்தார்.் திருக்கோவலூர் என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள ஆயனுக்குக் காப்பாகத் துர்க்காதேவியும் கோயில் கொண்டிருக்கிறாள். இதைத் திருமங்கையாழ்வார் “கற்புடைய மடக் கன்னி காவல் பூண்ட. ...... பூங்கோவலூர்” என்கிறார். இங்கு நஞ்சீயர், “தம்பி வளைக்காரியன்றோ?” என்பராம்.' அதாவது கண்ணபிரான் பிறப்பதற்கு முன்னே யசோதையிடம் பிறந்தவளே யோகமாயை என்கிற துர்க்கை. எனவே அவள் கண்ணனுக்குத் தமக்கை. அவள் தன் தம்பியான கண்ணனுக்குக் காப்பாக இருக்கிறாள் என்று நஞ்சீயர் தரும் விளக்கம். வளை என்பது காப்பு. எனவே வளைக்காரி என்றால் காப்பிடுபவள் என்பது பொருள். ஆசார்யர்களைப் பற்றி இப்படி என்றைக்கோ நடந்துவிட்ட செயல்களைத் தம் மனக்கண் முன் கொண்டுவந்து நேரில் காண்பது போல் விளக்கங்களை அருளிச் : செய்த நஞ்சீயர், எம்பெருமானார் முதலிய ஆசாரியர்களுடை.ய செயல்களைப் பற்றியும் (பட்டரிடம் கேட்டபடியே) அருளிச் செய்துள்ளார். திருவரங்கத்திலே சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது மணலிலேயே பெருமாளையும் நாச்சிமார்களையும் மண்டபங்களையும் கற்பித்துப் பிரசாதமாகவும் மணலையே வைத்து, அமுது செய்யப் பண்ணினார்கள். அப்போது அவ்வழியாக எழுந்தருளிய எம்பெருமானார் தண்டனிட்டு வணங்கி அதைப் பெருமாளுடைய பிரசாதமாகப் பாத்திரத்திலே ஏற்றுக்கொண்டார் - என்கிற இச்சரித்திரத்தை நஞ்சீயர் அருளிச்செய்வர் என்று குறிப்பிடுகின்றார் பெரியவாச்சான் பிள்ளை.” ஸ்ரீராமாநுஜர் பரமபதித்த பிறகே நஞ்சீயர் பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்டவராதலின், இதைப் பட்டரிடம் கேட்டே நஞ்சீயா அறிந்து கொண்டிருக்க வேண்டும். எம்பெருமானாருடையவும், மற்றும் பூர்வாசாரியர்களுடையவும் பற்பல நிர்வாஹங்கள் ஈட்டில் இடம் பெற்றுள்ளன. அவையனைத்தும் பட்டரால் நஞ்சீயருக்கு அருளிச் செய்யப்பட்டுப் பின்னர் நஞ்சீயரால் நம்பிள்ளைக்கு அருளிச் செய்யப்பட்டவை. இதேபோல் பட்டரைப் பற்றிய ஐதிஹ்யங்களும் நஞ்சீயரால் நம்பிள்ளைக்கு அருளிச் செய்யப்பட்டுள்ளன. பிள்ளை திருநரையூர் அரையரும் பட்டரும் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தபோது தாம் பின்னே நின்று அவர்களைச் சேவித்துக் கொண்டு சென்றதாகவும், மற்றவர்களெல்லாரும், கடுங்குதிரைபோல வேக வேகமாக வலம் வந்து கொண்டிருக்க, இவ்விருவர் மட்டும் கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணால் பருகுவாரைப்போல் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வருகிறபடியைக் கண்டு மற்றவர்களுக்கும் இவர்களுக்கும்தான் எவ்வளவு வேறுபாடு என்று வியந்ததாகவும் நஞ்சீயர் நம்பிள்ளையிடம் கூறினார்.' பிள்ளை திருநரையூர் அரையர் ஒரு முறை பட்டரைப் பாராட்டியதையும் நேரில் கண்ட நஞ்சீயர் அப்படியே அதை நம்பிள்ளைக்குக் கூறினார்.” “பட்டர் அழகிய மணவாளப் பெருமாள் என்னும் போதும், அநந்தாழ்வான் திருவேங்கடமுடையான் என்னும் போதும் அவர்களுடைய ஈடுபாடெல்லாம் தோன்றும்படியிருக்கும்” என்றருளிச் செய்வராம் நஞ்சீயர்.” ஆசாரியர்களுடைய செயல்களை நேரில் கண்டும், திருவாக்குகளைக் கேட்டும் பொருத்தமான இடங்களில் அவற்றைக் கூறிய நஞ்சீயர், சாதாரணமானவர்களின் செயல்களையும் கூடக் கூர்ந்து கவனித்து, அவற்றையும் பொருத்தமான இடங்களில் கூறியுள்ளமை வியப்பான செய்தியாகும். நஞ்சீயர் ஒருமுறை திருமாலைப் பாசுரமொன்றை மனத்திற்குள் நினைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சேவகனும் ஒரு பெண்ணும் விவாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அந்தப் பெண் சேவகனை நோக்கி, உன்னால் என்னை என்ன செய்ய முடியும்? என்னைப் போன்ற ஏழைகளையும் பேதைகளையும் காப்பதற்கன்றோ அரசர் பட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார். குடிமக்களைக் காப்பவராக அரசர் இருக்கும் போது எனக்கென்ன கவலை?” என்றாளாம். இதைக் கேட்ட நஞ்சீயர் தாம் அநுஸந்தித்துக் கொண்டிருந்த பாசுரத்தில் நம் சேவகனார்” என்று ஆழ்வார் எம்பெருமானைப் பற்றி அருளியுள்ளமைக்கும், அப்பெண் அரசனைப் பற்றிக் கூறியதற்கும் உள்ள பொருத்தத்தை நினைத்து மிக வியந்தார்.” சாதாரண மக்களை மட்டுமின்றி அரசர்களையும் அதிகாரிகளையும் கூட நஞ்சீயர் சந்தித்திருக்கிறார். சுந்தர பாண்டியத் தேவர் என்னும் அரசன் நஞ்சீயருடன் ராமாயண விஷயங்களைப் பற்றி சர்ச்சை செய்துள்ளான்." கரிகால் சோழ ப்ரம்மராயன் என்கின்ற அதிகாரி திருவாய்மொழிக்கு வியாக்கியானம் ஒன்றை எழுதி, அதை நஞ்சீயரிடம் கொண்டு வந்து காட்டி அவருடைய மதிப்புரையையும் கேட்டிருக்கிறான்.” பிற ஆசார்யர்களிடத்தில் பெருமதிப்பையுடையவரான நஞ்சீயர் அவர்களுடைய நலன்களில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அம்மங்கியம்மாள் என்பவர் நோயுற்று மரணத் தறுவாயிலிருந்த போதும்? பிள்ளான் மரணத் தறுவாயிலிருந்தபோதும் நஞ்சீயர் சென்று அவர்களை நலம் விசாரித்திருக்கிறார். திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு நஞ்சீயர் அருளிச் செய்த நயமான பொருள்களை ஆசாரியர்கள் பலரும் வியந்து பாராட்டியிருக்கின்றனர். பெற்றி என்பவர் ஒரு பாசுரத்திற்கு நஞ்சீயர் அருளிச் செய்த விளக்கத்தை நம்பிள்ளையிடம் கேட்டறிந்தார்.” பற்பல இடங்களில் நஞ்சீயர் கூறிய விளக்கங்களை நம்பிள்ளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.” ------------ ஒன்பதினாயிரப்படி அருளல் பட்டருடைய நல்லருளால் நஞ்சீயர் திருவாய்மொழிக்கு ஒரு வியாக்கியானம் அருளிச் செய்தார். ஆறாயிரப்படியைச் விடச் சற்றுப் பெரியதாகவும், பாசுரங்களின் உட்பொருள்களை விளக்குவதாகவும் அமைந்த அது ஒன்பதினாயிரப்படி என்று பெயர் பெற்றது. தாம் எழுதிய உரையினை மிக நல்ல எழுத்தில் பிரதி எடுப்பதற்காக அவர் நன்றாகச் சுவடி எழுதவல்லவர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது சிலர் நம்பூர் வரதராஜர் என்பவரை நஞ்சீயருக்கு அறிமுகப்படுத்தினர். அவருடைய கையெழுத்து மிகவும் அழகாக இருந்தது. அவருக்குத் தம் வியாக்கியானத்தை ஓர் உரு காலக்ஷேபம் ஸாதித்து, தாம் எழுதிய உரையின் ஒரே பிரதியை அவரிடம் கொடுத்து மறு பிரதி எழுதச் சொன்னார். ஆனால் நம்பூர் வரதராஜர், காவிரியாற்றைக் கடந்து அக்கரையில் உள்ள தமது இருப்பிடத்திற்குச் செல்லும்போது வெள்ளப் பெருக்கில் நஞ்சீயா கொடுத்த சுவடியைத் தவற விட்டு விட்டார். இதனால் மனம் கலங்கினாலும், பிறகு ஒருவாறு தேறி, ஆசார்யரான நஞ்சீயருடைய திருவடிகளை மனத்தில் தியானம் செய்து கொண்டு, நஞ்சீயரிடம் கேட்டவற்றை மனதில் கொண்டுவந்து, தாமே உரையை எழுதி முடித்து நஞ்சீயரிடம் கொண்டு போய்க் காட்டினார். தாம் எழுதிய பொருள்கள் எல்லாம் அப்படியே அமைந்திருக்க, சொற் பிரயோகங்கள் சீரிய முறையில் அமைந்து இருந்ததைக் கண்ட நஞ்சீயர் இதுபற்றி வரதராஜரிடம் கேட்டார். அவரும் நடந்ததைக் கூறினார். உண்மையறிந்த நஞ்சீயர் சீடரை வாரியணைத்துக் கொண்டு, “நம்முடைய பிள்ளை திருக்கலிகன்றிதாசர் என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அது முதல் நம்பூர்வாதராஜருக்கு நம்பிள்ளை என்ற பெயரே நிலைத்து விட்டது.' இறுதிக்காலம் நஞ்சீயருடைய சரமதசையைப் பற்றிய குறிப்புகளும் வியாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.” நஞ்சீயர் நோய் வாய்ப்பட்டிருந்த போது பெற்றி என்பவர் நலம் விசாரிக்க வந்தார். நஞ்சீயருடைய விருப்பங்கள் என்னவென்று கேட்டார். நஞ்சீயர் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழியில் தூவிரிய மலருழக்கி” என்கிற பதிகத்தை அரையர் சேவிக்கக் கேட்க வேண்டும் என்றும், நம்பெருமாள் எழுந்தருள முன்னும் பின்னும் சேவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே வரந்தரும் பெருமாள் அரையர் என்பவரை அழைத்து, “தூவிரிய மலருழக்கி” என்ற பதிகத்தைச் சேவிக்கச் சொல்ல அவரும் அப்படியே செய்தார். அப்பதிகத்தில் நான்காவது பாசுரத்தை அரையர் சேவித்தபோது அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டுச் சில வார்த்தைகள் பேசிய நஞ்சீயர் அப்படியே பரமபதமடைந்து விட்டதாகக் கூறுவர். நஞ்சீயர் விரும்பியபடியே நம்பெருமாளை எழுந்தருள்வித்துக் கொண்டு வர, பெருமாளைச் சேவித்த நஞ்சீயர், நம்பிள்ளை உட்படத் தம் சிஷ்யர்களுக்கு நல்வார்த்தைகள் பல கூறித் திருநாடு சென்று விட்டதாகக் குருபரம்பரை கூறுகின்றது." முடிவுகள் 1. நஞ்சீயர் பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு விசிஷ்டாத்வைதியாவதற்கு முன்னர் ஸ்ரீராமாநுஜரே மதிக்கும் வகையில் வேதாந்தி என்னும் பெயருடன் சிறந்த அறிஞராக விளங்கினார். அவருக்கு பட்டரைப் பற்றி அறிவித்தவர் தீர்த்தவாசி அந்தணன் என்று குருபரம்பரையில் குறிப்பிடப்படுகிறார். இவருடைய பெயர் திருமழிசை தாஸர் என்பது பெரியவாச்சான் பிள்ளை உரையிலிருந்து அறியப்படும் செய்தியாகும். பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்படுவதற்கு முன்னரே நஞ்சீயர் தமிழ்ப்புலமை உடையவராக இருந்திருக்கலாம். ஏழைகளுக்கு உணவிடுதல் தலையாய அறமென்றும், அதை நிறைவேற்ற முடியாத இல்லறமும் துறக்கத் தக்கதே என்றும் செயலில் காட்டினார். துறவறம் மேற்கொண்டு பட்டரிடம் வந்து சேர்ந்தவுடன் நம் சீயர் என்று அவரால் கொண்டாடப்பெற்றபடியால் நஞ்சீயர் என்றே வழங்கப்படும் பெருமை பெற்றார். தாம் மேற்கொண்டிருந்த துறவறத்தையும் பொருட்படுத்தாமல் ஆசார்யரான பட்டருக்குக் கைங்கர்யம் செய்திலேயே ஊன்றியிருந்தார். ஆசார்யரான பட்டரும் தம்மீது அளவற்ற அன்பு பொழியும்படியான சிறப்படைந்தார். சாஸ்த்ரங்கள் பலவற்றையும் கற்றறிந்தவராக இருந்தபோதிலும் பட்டரை அடிபணிந்து ஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாய நூல்களை அவரிடம் காலக்ஷேபம் கேட்கலானார். தமக்கு எழுந்த ஐயங்களைத் தயங்காது அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார் தம்முடைய சீடரான நம்பிள்ளை கேட்ட நுண்ணிய கேள்விகளுக்கு நயமான விடைகளைப் பகரும் வல்லமையுடன் திகழ்ந்தார். தம்மைவிடச் சிறந்த கருத்துகளைச் சீடரான நம்பிள்ளை கூறியபோது அவையே சிறந்தவை என்று மனம் திறந்து பாராட்டவும் செய்தார். நூறு வயது வரை எழுந்தருளியிருந்து, நூறுமுறை பகவத்விஷய காலக்ஷேபம் (திருவாய்மொழிப் பேருரை) செய்து, சீடரான நம்பிள்ளையால் சதாபிஷேகம் செய்விக்கப் பெறும் பேறு பெற்றார். திவ்யப்ரபந்த விளக்கங்களை அருளிச்செய்யும்போது மிகச்சிறந்த கருத்துகளையும் அரிய விளக்கங்களையும், ஆசார்யர்களைப் பற்றிய செய்திகளையும் நம்பிள்ளைக்கு வழங்கினார். ஸ்ரீவைஷ்ணவ அடியார்களிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த நஞ்சீயர், உண்மையான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தைக் கூறியதோடு மட்டுமன்றி, செயலிலும் காட்டினார். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்த நஞ்சீயர், பிற ஆசார்யர்களின் நலன்களில் மிகவும் அக்கரை கொண்டவராக விளங்கினார். நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தையும், மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு ஒரு வியாக்கியானத்தையும் அருளிச்செய்து, பின்னர் தோன்றிய உரையாசிரியர்களுக்குச் சிறந்த முன்னோடியாக விளங்கினார். ----------- இயல் 3 நஞ்சீயரின் நூல்கள் வேதாந்தக் கருத்துகள் உட்பொதிந்த பாசுரங்களை அருளிச்செய்து வைணவப் பயிரை வளர்த்த ஆழ்வார்களைத் தொடர்ந்து அவதரித்த ஆசாரியர்கள் பற்பல நூல்களை அருளிச்செய்தனர். விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ மதத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அருளிச்செய்யப்பெற்ற அந்நூல்களனைத்தும் வடமொழியிலேயே அமைந்தன. தமிழும் வடமொழியும் கலந்த மணிப்ரவாள நடையில் நூல்களை அருளிச்செய்தவர்களுள் திருக்குருகைப்பிரான் பிள்ளானும் நஞ்சீயருமே முதலீரிடங்களை வகிக்கின்றனர். திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரையாக ஆறாயிரப்படி வ்யாக்யானம் ஒன்றை மட்டுமே அருளிச்செய்துள்ளார். நஞ்சீயர், திருவாய்மொழிக்கு உரையாக ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தினையும், வேறு சில நூல்களையும் அருளிச்செய்துள்ளார். அவற்றுள் ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தைப் பற்றிய விரிவான ஆய்வு அடுத்த இயலிலும், பிற நூல்களைப் பற்றிய ஆய்வு இவ்வியலிலும் இடம் பெறுகின்றன. மணவாளமாமுனிகள், “நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு, எஞ்சாமை யாவைக்கும் இல்லையே” ! என்று அருளிச் செய்துள்ளார். இதற்கு உரையிட்ட பிள்ளைலோகம்சீயர், நஞ்சீயர் அருளிச் செய்த வ்யாக்யானங்களாகத் (திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தைத் தவிர) திருப்பாவை ஈராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானம் எனும் இரண்டு நூல்களை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு, “பின்னையும் உண்டாகில் கண்டுகொள்வது'' என்றருளிச்செய்துள்ளார். பெரிய திருமுடியடைவு என்னும் நூலில், திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் ஒன்பதினாயிரம், திருப்பாவைக்கு வ்யாக்யானம் ஈராயிரப்படி, திருவந்தாதிகளுக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் திருப்பல்லாண்டுக்கும் உரை, ரஹஸ்யத்ரய விவரணமாக நூற்றெட்டு, சரணாகதி கத்ய வ்யாக்யானம் ஆகியவற்றை நஞ்சீயர் அருளிச் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.' பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் எனும் நூலிற்கு மணவாளமாமுனிகள் அருளிச்செய்துள்ள உரையில் நஞ்சீயர் அருளிச் செய்ததாக, கத்ய வ்யாக்யானம் என்றொரு நூலைக் குறித்துள்ளார்.” பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்ததாகக் கூறப்படும் ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் என்னும் நூலில், சரமகுரு நிர்ணயம் என்றொரு நூலை நஞ்சீயர் அருளிச் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” மேற்கூறிய நூல்களுள், திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானமும், கண்ணிநுண்சிறுத்தாம்புக்கு நஞ்சீயர் அருளிச் செய்த வ்யாக்யானமும் மட்டுமே கிடைத்துள்ளன. பிற நூல்கள் எவையும் கிடைக்கவில்லை. நஞ்சீயர் அருளிச்செய்ததாக வேறு சில நூல்களும் பற்பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை உண்மையில் நஞ்சீயர் அருளிச்செய்தவைதானா என்ற ஆராய்ச்சிக்கு உரியன. ஸ்ரீஸிக்தபாஷ்பம் மணிப்பிரவாள நடையில் நஞ்சீயர் எழுதியுள்ள நூல்களைத் தவிர வடமொழியில் நூல்கள் எதுவும் எழுதியதாக குருபரம்பரையிலோ பெரியதிருமுடி அடைவிலோ கூறப்படவில்லை. ஆனால் பேராசிரியர் ௮. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் ஸ்ரீஸிக்தபாஷ்பம் என்றொரு நூலை நஞ்சீயர் அருளியுள்ளதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.” அதற்கு வடமொழியில் முன்னுரை எழுதியுள்ள ஸ்ரீஸெளம்யநாராயணாசார்ய ஸ்வாமி என்பவர் அந்த நூலை இயற்றியவர் நஞ்சீயரே என்று தாம் கொண்ட கருத்திற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் பலவற்றைக் கூறுகிறார்: 1. வேதாந்த தேசிகர் தமது ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஸித்தோபாய சோதநாதிகாரத்தில் “ஸ்ரீஸூக்த பாஷ்யத்தில் பெரிய ஜீயரும் அபேக்ஷித்தார்த்தங்களெல்லாம் உபபாதித்தார்” என்றருளிச் செய்கிறார். அதே அதிகாரத்தில் மற்றோரிடத்தில், 'எம்பெருமானைச் சொன்ன இடத்திலே பிராட்டியையும் சொல்லிற்றாம் என்று தொடங்கி உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.” அதே நூலில் சரமச்லோக அதிகாரத்தில் “பெரிய ஜீயரும் பரீபராசரபட்டார்ய சரணெள ஸம்ச்ரயேமஹி இத்யாதியாலே ஸம்ப்ரதாய விசேஷ ஜ்ஞாபநார்த்தமாக குரு நமஸ்காராதிகளைப் பண்ணி....” என்று தொடங்கி அவர் அருளிச்செய்துள்ள சில சுலோகங்களைக் குறிப்பிடுகிறார்.” (இதனால் பெரிய ஜீயர் பராசர பட்டருடைய சிஷ்யர் என்பது புலப்படுகிறது.) இங்குப் பெரிய ஜீயர் அருளிச் செய்ததாகக் குறிப்பிடப்படும் சுலோகங்களை பாஞ்சராத்ர ரக்ஷை என்னும் நூலில் நாராயண முனி என்பவர் அருளிச் செய்ததாக வேதாந்த தேசிகர் தாமே குறிப்பிடுவதால்” இப் பெரிய ஜீயருக்கு நாராயண முனி என்ற பெயரும் உண்டு என்பது புலனாகிறது. பராசர பட்டரின் சிஷ்யரான நஞ்சீயரே இங்குப் பெரிய ஜீயர் என்று குறிப்பிடப்படுகிறார். மேலும் ஸ்ரீஸூக்த பாஷ்யத்தைத் தவிர வேறு எந்த நூலிலும் அவர் பிராட்டியைப் பற்றிய விஷயங்களை அருளிச் செய்யாமையால் இங்கு ஸங்க்ரஹித்தார் என்று குறிப்பிடப்படுவது ஸ்ரீஸூக்தபாஷ்யத்தில் உள்ளவற்றையே ஆகும். ஸ்ரீஸூக்த பாஷ்யத்தை இயற்றியவர் பெரிய ஜீயர் என்பதும் அவர் பராசரபட்டரின் சீடர் என்பதும் வேதாந்ததேசிகரால் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே ஸ்ரீஸூக்தபாஷ்யம் என்னும் நூலின் ஆசிரியர் நஞ்சீயரே ஆவார் என்கிறார் ஸ்ரீ ஸெளம்யநாராயணாசார்ய ஸ்வாமி. 2. இந்நூலின் முகவுரையில் இந்நூலை அச்சிடுவதற்கு அடிப்படையாக அமைந்த ஒலைச் சுவடிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது சென்னை அரசாங்க கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகள் இரண்டும் (0 25, 1) 26) திருக்கோட்டியூர் ஸ்ரீராமதேசிகாசாரியர் என்பவரால் கடலூரில் கருடநதியில் கண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சுவடியும் குறிப்பிடப்படுகின்றன. (இம் மூன்றாவது சுவடியின் அச்சுவடிவமே இந்நூல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) நூல் நிலையத்தின் சுவடி ஒன்றின் (1) 25) முடிவில் “இதி ஸ்ரீ கோமடரங்கநாத விரசிதம் ஸ்ரீஸூக்தபாஷ்யம் ஸமாப்தம்” (ஸ்ரீ கோமடம் ரங்கநாதரால் இயற்றப்பட்ட ஸ்ரீ ஸூக்த பாஷ்யம் முடிவடைந்தது) என்றுள்ளது. இரண்டாவது (௮ 26) சுவடியின் முடிவில் “ஸ்ரீரங்கநாத முனி விரசிதம் ஸ்ரீஸூக்த பாஷ்யம் ஸமாப்தம்” (ஸ்ரீரங்கநாத முனியால் இயற்றப்பட்ட ஸ்ரீஸூக்தபாஷ்யம் முடிவடைந்தது) என்றுள்ளது. கருடநதியில் கிடைத்த சுவடியின் முடிவில் “யதீந்த்ர மாஹாநஸிகாத் ப்ரணதார்த்தி ஹராத் குரோ:, ஸம்ப்ரதாய ஸித்தோர்த்த: ஸ்ரீஸூக்தஸ்ய விநிச்சித: (ஸ்ரீராமா நுஜரின் திருமடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவரான பிரணதார்த்தி ஹரர் (கிடாம்பி ஆச்சான்) என்னும் ஆசாரியரிடமிருந்து ஸத் ஸம்ப்ரதாயமாகக் கிடைத்த பொருள் ஸ்ரீஸூத்தத்திற்கு நிச்சயிக்கப்படுகிறது) என்றுள்ளது. உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார் என்று தேசிகன் பணித்துள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. 3. நஞ்சீயரும் ரங்கநாதமுனியும் ஒருவரே. எப்படியெனில் மாதவாசார்யர் என்ற இயற்பெயருடைய நஞ்சீயர் பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்டபோது ரங்கநாதன் என்ற தாஸ்ய நாமத்தைப் பெற்றார். மேலும் நஞ்சீயர் என்பதன் முழுவடிவும் நம்பெருமாள் சீயர் ஆகும். இத் திருநாமம் சுருங்கி நஞ்சீயர் என ஆயிற்று. நம்பெருமாள் என்பது ரங்கநாதனையும், சீயர் என்பது முனியையும் குறிக்குமாதலால் நம்பெருமாள் சீயர் என்ற தமிழ்ப் பெயர் வடமொழியில் ரங்கநாதமுனி என்றாகும். நஞ்சீயர் துறவறம் மேற்கொண்டவுடன் நாராயணமுனி என்ற பெயரைப் பெற்றார். எனவே ரங்கநாதமுனி என்றும் நாராயணமுனி என்றும் பெரியஜீயர் என்றும் குறிப்பிடப்படுபவர் நஞ்சீயரே. எனவே ஸ்ரீஸீக்தபாஷ்யத்தை இயற்றியவர் நஞ்சீயரே - இவை மேலே குறிப்பிடப்பட்ட நூலின் முகவுரையில் ஸ்ரீஸெயம்ய நாராயணாசாரியர் கூறும் கருத்துக்களாகும். ஆனால் இக்கருத்துக்கள் அறிஞர் பலராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை, ஸ்ரீஸூக்த பாஷ்யத்தை இயற்றியவர் நஞ்சீயர் அல்லர் என்பதைப் பற்பல காரணங்களைக் கொண்டு அறிஞர்கள் பவர் நிலைநாட்டியுள்ளனர். ஸ்ரீவைஷ்ணவ எருதர்சனம்' என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்த ஸ்ரீ கி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி, தமது பத்திரிகையின் பல இதழ்களில்' இது பற்றித் தமது கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்: 1. வேதாந்த தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸார ஸித்தோபாய சோதநாதிகாரத்தில் “ஸ்ரீஸூக்தபாஷ்யத்தில் பெரிய ஜீயரும் அபேசக்ஷிதார்த்தங்களெல்லாம் உபபாதித்தார்” என்று கூறிவிட்டு, அதே அதிகாரத்தில் மற்றோரிடத்தில் “.......நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார்'” என்று குறிப்பிடுகிறார். இப்படி ஒரே அதிகாரத்தில் இரண்டு பெயர்களைக் குறிப்பிடுவதிலிருந்தே இருவரும் வெவ்வேறானவர்கள் என்பது உறுதியாகிறது. இருவரும் ஒருவரேயாக இருந்தால் இரண்டாவது இடத்திலும் அவரைப் பெரியஜீயர் என்றேயன்றோ குறிப்பிட்டிருக்க வேண்டும்! இருவரும் ஒருவராகவே இருந்தால் வேதாந்த தேசிகன் ஒரே அதிகாரத்தில் இருவேறுபெயர்களால் குறிப்பிட்டிருக்கமாட்டார். 2. மேலும் இந்நூலை அச்சிடுவதற்கு அடிப்படையாக அமைந்த சுவடிகளில் அரசாங்க நூலகத்திலுள்ள சுவடியில் (0 25) 'இது கோமடம் ரங்கநாதரால் இயற்றப்பட்டது என்றுள்ளது. கோமடம் என்ற அடைமொழி நஞ்சீயருக்குப் பொருந்தாது. மேலும் இந்த (1) 25) சுவடியில் ரங்கநாதமுனி என்றும் குறிப்பிடப்படவில்லை. கருடநதியில் கிடைத்ததாகக் கூறப்படும் சுவடியின் கடைசியில் உள்ள "யதீந்த்ர மாஹாநஸிகாத்.......”. என்கிற சுலோகம் அரசாங்க நூலகச் சுவடி (0 25)ல் இல்லை. எனவே இது இடைச் செருகல் என்பது உறுதியாகிறது. மேலும் இந்த சுலோகத்திற்கு- ஸ்ரீஸூக்தத்திற்கு அர்த்தம் கிடாம்பியாச்சானிடமிருந்து நிச்சயிக்கப்படுகிறது என்றுதான் பொருள் கிடைக்கும். எனவே ஸ்ரீஸூக்த பாஷ்ய நூலை எழுதியவர் கிடாம்பியாச்சானிடம் ஸ்ரீஸூத்தத்திற்குப் பொருள் கேட்டார் என்று ஏற்படுமே தவிர அவர் நஞ்சீயர் தான் என்பதை உறுதிப்படுத்தாது. “எம்பெருமானைச் சொன்ன இடத்தில் பிராட்டியையும் சொல்லிற்றாம் என்று தொடங்கி உடையவர் அருளிச்செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார்'' என்று தேசிகன் அருளியுள்ளது மேற்குறித்த சுலோகத்தைக் கருத்தில் கொண்டே என்று கூறமுடியாது. ஏனெனில் 'எம்பெருமானைச் சொன்ன இடத்தில் பிராட்டியையும் சொல்லிற்றாம் என்று தொடங்கி உடையவர் அருளிச் செய்த வார்த்தைகள்” இந்நூலில் எங்கும் காணப்படவில்லை. எனவே அவற்றை ஸ்ரீஸூக்தபாஷ்யம் என்னும் நூலில் நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார் என்பது பொருந்தாது. 3. நஞ்சீயர் என்ற சொல்லின் முழுவடிவம் நம்பெருமாள் சீயர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நம்பெருமாள் சீயர் என்ற திருநாமம் நஞ்சீயருக்கு இருந்ததாக எந்த ஒரு நூலிலும் குறிப்பிடப்படவில்லை. ரங்கநாதர் என்ற தாஸ்ய நாமம் இருந்ததாகவோ அல்லது நாராயணமுனி என்ற திருநாமமும் நஞ்சீயருக்கு வழங்கப்பட்டதாகவோ குருபரம்பரை முதலிய எந்ந நூலிலும் கூறப்படவில்லை. மேலும் குருபரம்பரை, பெரியதிருமுடியடைவு முதலிய எந்த நூல்களிலும் நஞ்சீயர் ஸ்ரீஸூக்த பாஷ்யம் அருளிச் செய்ததாகக் குறிப்பிடப்படாததால் ஸ்ரீஸூக்த பாஷ்யத்தை இயற்றியவர் நஞ்சீயர் அல்லர் என்பது உறுதியாகிறது. இந்நூலை இயற்றியவர் கோமடம் ரங்கநாகன் என்பவரே. மேலும் இச்சுவடியின் (0 25) ஆரம்பத்தில் உள்ள இரண்டு சுலோகங்கள் வேதாந்த தேசிகரால் அருளிச் செய்யப் பட்ட ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் உள்ளவை. எனவே இந்நூல் தேசிகர் காலத்திற்குப் பிற்பட்டதே. வேதாந்த தேசிகரால் குறிப்பிடப்படும் பெரிய ஜீயர், பட்டருடைய சீடரான நலந்திகழ்நாராயண ஜீயர் எனப்படும் கூரநாராயண ஜீயரே ஆவார். அவர் அருளிச் செய்த ஸ்ரீஸூக்த பாஷ்யம் இப்போது கிடைப்பதில்லை. - இவை ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் பத்திரிகையின் ஆசிரியர் எழுதியுள்ள கருத்துகளாகும். புருஷஸிக்த பாஷ்யம் என்னும் நூலைப் பதிப்பித்துள்ள பண்டிட் ஸ்ரீ வீ. கிருஷ்ணமாசாரியர் அவர்களும் இதே கருத்துகளின் அடிப்படையில் ஸ்ரீஸூக்த பாஷ்யம் நஞ்சீயருடையதல்ல எனும் கருத்தையே (தமது வடமொழி முன்னுரையில்) குறித்துள்ளார்." ஸ்ரீமதுபயவேதாந்த மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியும் ஸ்ரீஸூக்த பாஷ்யத்தை இயற்றியவர் நஞ்சீயர் அல்லர் என்றே குறித்துள்ளார். அவர் தம் கருத்திற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தை எடுத்துக் காட்டியுள்ளார். மேற்கூறிய ஸ்ரீஸூக்த பாஷ்யப் பதிப்பில் (பக்கம் 48ல்) "ஸ்ரீவத்ஸசிந்ந மிச்ரைரபி ப்ரதிபாதிதம், ததாத்மஜைச்ச பட்டபராசரபாதை: .... இதி” (ஸ்ரீவத்ஸசிந்ந மிச்ரரால் கூறப்பட்டுள்ளது, அவர் மகனான பராசரபட்டராலும் கூறப்பட்டுள்ளது) என்றும், (பக்கம் 49ல்) “ஸ்தாபிதஞ்ச ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரை: பட்டபராசரபாதைச்ச” (ஸ்ரீவத்ஸசிந்ந மிச்ரராலும் பராசரபட்டராலும் நிலைநாட்டப்ட்டுள்ளது) என்றும், “ததைவபட்டபராசர பாதை: நிர்வ்யூடம்” (அவ்வாறே பராசரபட்டராலும் நிர்வஹிக்கப்பட்டுள்ளது) என்றும், பல இடங்களில் காணப்படுகிறது. நேர்ச்சீடர்கள் தங்கள் ஆசார்யர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடமாட்டார்கள். நஞ்சீயர் பட்டரிடத்தில் மிகமிக உயர்ந்த பக்தி கொண்டிருந்தவராதலின் கூரத்தாழ்வான் மகனாரான பட்டர் என்றும் குறிப்பிட்டிருக்கமாட்டார். இக் காரணம் ஒன்றைக் கொண்டே இந்த நூல் நஞ்சீயர் அருளிச் செய்தது அன்று என்று அறுதியிட்டுவிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.' ஸ்ரீஸூக்தத்தில் “ஈச்வரீம் ஸர்வ பூதாநாம்” என்கிற பகுதிக்குத் தற்போது அச்சிடப்பட்டுள்ள உரையில், பிராட்டி எம்பெருமானுக்கு இணையானவள் என்றும் உலகைப் படைப்பது மோக்ஷமளிப்பது முதலியவை களிலும் வல்லவள் என்றும் உரையிடப்பட்டுள்ளது. (இப்பகுதிகள் அரசாங்க நூலகச்சுவடியிலில்லை.) ஆனால், நஞ்சீயர் தம் ஒன்பதினாயிரப்படி உரையில் பிராட்டியை எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவள் என்றே குறிப்பிடுகிறார்.” எனவே ஒன்பதினாயிரப்படி உரைக்கு முரணான கருத்தைக் கொண்ட ஸ்ரீஸூக்த பாஷ்யம் நஞ்சீயர் இயற்றிய நூலாக இருக்க முடியாது என்றே முடிவு செய்யப்படுகிறது. ----------------- ஆத்ம விவாஹம் முதலிய ரஹஸ்யங்கள் நஞ்சீயர் அருளிச்செய்ததாக ஆத்ம விவாஹம், முமுக்ஷுக்ருத்யம், ஸாமக்ரீபரம்பராநாதம், அவஸ்த்தாத்ரயம் ஆகிய நான்கு ரஹஸ்யங்கள் (தெலுங்கு எழுத்தில்) அச்சிடப்பட்டுள்ளன. 1893ல் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தின் முகப்பில், "ஸ்ரீபட்டர் நல்லருளால் நஞ்சீயர் அருளிச்செய்த ஆத்ம விவாஹம், முழுக்ஷுக்ருத்யம், ஸாமக்ரீபரம்பராநாதம், அவஸ்தாத்ரயம் இந்த நான்கு க்ரந்தங்களும் ..... ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி வாதிகேஸரி அழகிய மணவாள ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் நியமனத்தின் பேரில் பெருமாள் கோவில் சதுச்சஷ்டி கலாவல்லப பரவஸ்து திருவேங்கடாசாரியராலேயும், காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அநந்தாசார்யரலேயும் திருவிந்தளூர் பரவஸ்து சேஷாத்ரியாசார்ய ராலேயும் அநேக ப்ராசீந ஸ்ரீகோசங்களைக் கொண்டு யதாமரத்ருகம் பரிசோதிக்கப்பட்டு, பல்லாரி நியூடரல் முத்ராக்ஷ சாலையில் தததிகாரிகளைக் கொண்டு அச்சிடப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் முமுக்ஷுக்ருத்யம் என்ற ரஹஸ்யத்தின் முடிவில் ". . . . முமுக்ஷுவுக்கு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் எனும் நூலில் நஞ்சீயருடைய வைபவத்தைக் கூறும்போது, அவர் தம்முடைய சீடர்களுக்கு அருளிச்செய்த பல வார்த்தைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றில், முமுக்ஷுக்கள் செய்ய வேண்டியவைகளாக நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகள், முமுக்ஷு க்ருத்யம் என்ற ரஹஸ்யத்தில் அப்படியே இடம் பெற்றுள்ளன. எனவே நஞ்சீயர் ரஹஸ்யங்களின் விளக்கமாக அருளிச்செய்ததாகப் பற்பல நூல்களில் இடம்பெற்றுள்ள தனித்தனி வார்த்தைகள், அந்நூல்களிலிருந்து தொகுக்கப் பட்டு அவர் அருளிச்செய்த ரஹஸ்யநூல்களாக வெளியிடப்பட்டிருக்கலாம். (இந்நான்கு ரஹஸ்யங்களைப் பின்னிணைப்பு எண் 1ல் காணலாம்.) ---- பெரிய திருமொழி வ்யாக்யானம் திருவல்லிக்கேணி ஸ்ரீஸரஸ்வதி பண்டாரம் முத்ராக்ஷ சாலையில் சிக்திர கூடம் கந்தாடை திருவெங்கடாசாரியர், அரசாணிபாலை கந்தாடை கிருஷ்ணமாசாரியர் ஆகியோர் 1891ல் பெரியதிருமொழி வ்யாக்யானங்கள் என்றொரு புத்தகத்தைப் பதிப்பித்துள்ளனர். திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழிக்கு நஞ்சீயர்படி வ்யாக்யானமும் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானமும் அந்நூலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் உள்ள குறிப்பில் நஞ்சீயர்படி வ்யாக்யானம் முதலில் அகப்படாமற் போனமையால் முதற்பத்து முழுவதும் பதவுரை, பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம், அரும்பதவிளக்கம் ஆகிய வற்றை முதலில் அச்சிட்டுவிட்டுப் பின்பு நஞ்சீயர் படி வ்யாக்யானம் முதற்பத்து முழுதும் அச்சிடப்பட்டிருக்கிறது - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்பத்து முடிந்தபின் அச்சிடப்பட்டுள்ள வியாக்கியானத்தின் அடிக்குறிப்பில் - இந்த வ்யாக்யானத்தில் நஞ்சீயரைப் பற்றிய ஐதிஹ்யமும் (1-1-2) அவருடைய சீடரான நம்பிள்ளையைப் பற்றிய ஐதிஹ்யமும்(1-1-1) இடம் பெற்றுள்ளதால் இந்த வ்யாக்யானம் நஞ்சீயர் அருளிச் செய்த வ்யாக்யானமாக இருக்கமுடியாது என்றும், வாதிகேசரி அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்ததாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் 'சீயர் திருவடிகளே சரணம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம்பத்து ஆரம்பத்தில் இந்த வ்யாக்யானத்தின் தலைப்பில் 'வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர் வ்யாக்யானம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பத்து எட்டாம் திருமொழி முடிய ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் இவ்யாக்கியானத்தின் அடியில் 'வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர் திருவடிகளே சரணம்' என்றே உள்ளது. ஒன்பதாவது பதிகத்தின் ஆரம்பத்தில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஒன்பதாவது பதிகத்தின் முடிவில் திடீரென்று நஞ்சீயர் திருவடிகளே சரணம்' என்று காணப்படுகிறது. இரண்டாம்பத்து எட்டாம் திருமொழி வரை வாதிகேஸரி அழகிய மணவாளச் சீயருடைய வ்யாக்யானம் என்று கருதிய பதிப்பாசிரியர்கள் ஒன்பதாம் திருமொழியிலிருந்து இந்த வ்யாக்யானத்தை நஞ்சீயருடையது என்று கருதியதற்குக் காரணம் என்ன என்பது புலப்படவில்லை. இப்படி அச்சிடப்பட்டுள்ள பெரியதிருமொழி வ்யாக்யானப் பதிப்பு ஆறாம் பத்து வரை மட்டுமே கிடைத்துள்ளது. மேலே ஒரு வ்யாக்யானமும் கீழே பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்கியானமும் அச்சிடப்பட்டுள்ளது. இரண்டாம் பத்து ஒன்பதாம் திருமொழி முதல், ஆறாம் பத்து முடிவு வரை மேலே அச்சிடப்பட்டுள்ள வ்யாக்யானம் நஞ்சீயர் அருளிச் செய்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப் பெரியதிருமொழிக்கு நஞ்சீயர் ஒரு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளதாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லையென்றாலும் பெரிய திருமொழிக்கு பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ள வ்யாக்யானத்தின் அரும்பதவுரையில் ஓரிரு இடங்களில் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “அமரர் என்றது நித்யஸூரிகளாக நஞ்சீயர்படி” என்றும், 'சந்தணி மென்முலை மலராள்'' என்றதற்கு சந்தனமணியப்பட்ட மிருதுவான முலையையுடைய அலர்மேல் மங்கை என்று நஞ்சீயர் படியில் சப்தார்த்தம் கண்டு கொள்வது” என்றும், “வாரமோத என்றதுக்குப் பரீக்ஷை சொல்ல என்று நஞ்சீயர்படி” என்றும், "கருமை பெருமையாக்கி நஞ்சீயர் வ்யாக்யானம் பண்ணியிருந்தாலும்....” என்றும்! மூன்றிடங்களில் பெரியதிருமொழி அரும்பத உரையில் நஞ்சீயர்படி என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. அவைகளுக்கு ஏற்றாற் போல் இவ்வரும்பத உரையில் நஞ்சீயர்படியில் உள்ளதாகக் கூறிய பொருள்களே மேலே குறிப்பிடப்பட்ட பெரியதிருமொழி வியாக்கியானப் பதிப்பில் நஞ்சீயருடைய வியாக்கியானமாக அச்சிடப்பட்டுள்ள உரையிலும் காணப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே அவ்வுரையைப் பதிப்பித்தவர்கள் அவ்வுரை நஞ்சீயருடையது என்று முடிவு கட்டினர் போலும். மணவாளமாமுனிகள், "நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு” என்று, நஞ்சீயர் மிகக் குறைந்த திவ்யப்ரபந்தங்களுக்கு மட்டுமே வ்யாக்யானம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிள்ளைலோகம் ஜீயர் அருளிச் செய்த உரையிலும் அப்பொருளே காட்டப் பட்டுள்ளது. ஆனால் பெரிய திருமொழி ஆயிரம் பாசுரங்களுக்கும் நஞ்சீயர் வியாக்கியானம் செய்திருப்பின் மாமுனிகள் நாலிரண்டுக்கு என்று அருளிச் செய்திருப்பாரா? மேலும் அங்குப் பிள்ளைலோகம்சீயர் '(நாலிரண்டுக்கு) என்று ஸங்க்யா நிர்த்தேசமன்று. ஒரு முழுச்சொல் இருக்கிறபடி. அதாவது அல்பத்திலே தாத்பர்யம். மேலும் சிலவென்றிறே அருளிச் செய்தது” என்று உரையிட்டுள்ளார். பெரியதிருமொழி ஆயிரம் பாசுரங்களுக்கு நஞ்சீயர் வ்யாக்யானம் அருளிச் செய்திருப்பின், அல்பத்திலே தாத்பர்யம்' என்று பிள்ளைலோகம் சீயர் குறிப்பிட்டிருப்பாரா? பெரியதிருமுடியடைவிலும் நஞ்சீயர் பற்பல திவ்யப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருவிச் செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பெரியதிருமொழிக்கு அவர் வ்யாக்யானம் அருளிச் செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. இவ்யாக்யானத்தை அச்சிட்டவர்களும் முதலில் இந்த வ்பாக்யானத்தை அருளியவர் வாதிசேஸ்ரி அழகிய மணவாளச்சீயராக இருக்கலாம் என்று பெரியதிருமொழி இரண்டாம் பத்து எட்டாம் திருமொழி வரை குறிப்பிட்டுவிட்டு, ஒன்பதாம் திருமொழியிலிருந்து இது நஞ்சீயடைய உரை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியாயின் இரண்டாம் பத்து எட்டாம் திருமொழி வரை நஞ்சீயர் வ்யாக்யானம் என்பது வேறு உளதா இல்லையா என்பதும் தெரியவில்லை. அரும்பத உரையில் நஞ்சீயர்படி என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அரும்பத உரைகாரர் காலத்தில் பெரிய திருமொழிக்கு நஞ்சீயர்படி வ்யாக்யானம் இருந்தது என்று கருத இடமேற்படுகிறது. ஆனால் ஆயிரம் பாசுரங்களுக்கும் உள்ள அரும்பத உரையில் மூன்றே இடங்களில் ம்ட்டும் அதுவும் தொடர்ச்சியாக உள்ள (பெரியதிருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி, மூன்றாம் பத்து முதல் திருமொழி ஆகிய) இரண்டே இரண்டு பதிகங்களின் அரும்பதவுரையில் மட்டும்தான் நஞ்சீயர்படி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறனவே தவிர வேறு எங்கும் இது பற்றிய குறிப்ப இல்லை. எனவே நஞ்சீயர் பெரிய திருமொழிக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார் என்னும் கருத்தை நிறுவ இது மட்டும் போதுமா என்னும் ஐயமும் எழுகிறது. மேலும் நஞ்சீயரருளிச் செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தின் மொழி நடையும் இத்திருமொழி வ்யாக்யானத்தின் மொழி நடையும் மாறுபடுகிறது. ஒன்பதினாயிரப்படியில் ஐதிஹ்யங்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால், இப் பெரியதிருமொழி வ்யாக்யானத்தில் பற்பல ஐதிஹ்யங்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. அவைகளுள் பல பெரியவாச்சான்பிள்ளையின் பெரிய திருமொழி வ்யாக்யானத்தில் இடம் பெற்றவையே. நஞ்சீயரைப் பற்றியே சில ஐதிஹ்யங்கள் இவ்யாக்யானத்தில் உள்ளன. இக்காரணங்களால் இவ்யாக்யானம் நஞ்சீயர் அருளிச் செய்தது அன்று என்று முடிவு செய்யப்படுகிறது. ---- திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம் ஸ்ரீவைஷ்ணவ கிரந்த முத்ராபக ஸபையார் 'திருப்பள்ளியெழுச்சி' என்னும் திவ்ய ப்ரபந்தத்திற்கு இரண்டு வ்யாக்யானங்களை ஒரே நூலில் அச்சிட்டுள்ளனர். அதில் ஒன்று நஞ்சீயருடைய வ்யாக்யானம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். குருபரம்பரை, பெரியதிருமுடியடைவு, உபதேசரத்தின மாலை வ்யாக்யானம் ஆகிய நூல்கள் எதிலும் திருப்பள்ளியெழுச்சிக்கு நஞ்சீயர் வ்யாக்யானம் அருளியுள்ளதாகக் குறிப்பிடப் படாமல் இருக்கும்போது எந்த ஆதாரத்தைக் கொண்டு திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தை நஞ்சீயர் அருளிச் செய்ததாக அச்சிட்டுள்ளனர் என்பது புலப்படவில்லை. இவ்யாக்யானத்தின் நடையும் ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தின் நடையைப் போன்றோ அல்லது கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானத்தின் நடையைப் போன்றோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்பதினாயிரப்படி உரையில் பெரும்பாலும் உரை முழுமையாக இல்லாமை, அவதாரிகையில் பாசுரங்களின் பாதி அடிகளுக்கு விளக்கம் இடம் பெற்றுள்ளமை, பிற திவ்யப்ரபந்தப் பாசுரங்களை மேற்கோள்களாக எடுக்காமை, ஐதிஹ்யங்கள் எவையும் குறிப்பிடப்படாமை முதலிய கூறுகள் காணப்படுகின்றன. நஞ்சீயர் தமது கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானத்தில், பாசுரங்களில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழமான நயவுரைகளை வழங்குகிறார். ஆனால் இத் திருப்பள்ளியெழுச்சி உரையில் பாசுரங்களில் உள்ள சொற்களின் பொருளை விரித்துக் கூறும் முறை மட்டுமே உள்ளது. ஒன்பதினாயிரப்படியைப் போலவோ கண்ணிநுண் சிறுத்தாம்பு உரையைப் போலவோ பாசுரங்களில் உள்ள சொற்களின் சுவைகளை விளக்கும் நயவுரைப்பகுதிகள் இடம் பெறவில்லை. ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தையும் கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்பாக்யானத்தையும் போலல்லாமல் பிற திவ்யப் பிரபந்தங்களிலிருந்து மிக அதிகமான மேற்கோள்கள் இந்த வ்யாக்யானத்தில் இடம் பெறுகின்றன, எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தும் இந்த திவ்யப் பிரபந்தத்தின் வ்யாக்யான அவதாரிகையில், "அநாதி காலமாக அஜ்ஞானத்தாலே உறங்கிக் கிடந்த இவரைப் பெரிய பெருமாள் உணர்த்தி அருள..... அத்தலை யித்தலையாய்ப் பெரியபெருமாளை உணர்த்தி அடிமை செய்யப் பாரிக்கிறார் (தொண்டரடிப் பொடிகள்)” என்னும் பகுதி சுவைமிக்கது. தொடர்ந்து, ஆண்டாள் “மாரிமலை முழஞ்சில்”! என்ற பாசுரத்திலும் நம்மாழ்வார் “கிடந்தநாள் கிடந்தாய்? என்ற பாசுரத்திலும் எம்பெருமானை உணர்த்தி எழுப்பி அடிமை செய்தது போலத் தொண்டரடிப் பொடிகளும் அடிமை செய்கிறார் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. பொழுது விடிந்ததற்கு அடையாளமாகச் சூரியன் கிழக்கில் உதித்ததைக் கூறுகிறார் தொண்டரடிப் பொடிகள்.” இங்கு அழகான விளக்கம் ஒன்று கூறப்பட்டுள்ளது. “அவனுக்கு (சூரியனுக்கு) அடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும். திருவடிகளும் அத்திக்கிலேயாகப் பெற்றது. அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்?” கிழக்கில் தம்முடைய திருவடிகளை நீட்டி இருக்கிறார் பெரிய பெருமாள். அடியிலும் முடியிலும் சூரியன் வந்து நிற்க நடுவே கண் வளர்ந்தருளுகிறார் பெரிய பெருமாள். முடியில் ஏது சூரியன் எனில் எம்பெருமானுடைய கிரீடம் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியுடையது என்னும் பொருளுடைய “கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியன்”” என்ற பெரியாழ்வாருடைய பாசுரம் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. இது போன்ற நயமான விளக்கங்கள் ஓரிரண்டு இடங்களில் காணப்பட்டாலும் பாசுரங்களில் உள்ள சொற்களுக்கு உரிய பொருளை மட்டுமே விளக்குவதாக இவ்வுரை அமைந்துள்ளது. ஒன்பதினாயிரப்படி உரையிலும் கண்ணிநுண்சிறுத்தாம்பு உரையிலும் காணப்படுகின்ற சிறப்புக்கள் இவ்வுரையில் இடம் பெறவில்லை. எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்துவதற்காகப் பல அடையாளங்களைக் கூறுகின்ற தொண்டரடிப் பொடியாழ்வார் “துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித் துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா” என்கின்றார்.” பெண்கள் நீராடிக் கரையேறினதைப் பொழுது விடிந்ததற்கு அடையாளமாக ஆழ்வார் கூறியதன் கருத்தை விளக்கும் இவ்வுரையில் “இத்தால் பெரிய பெருமாள் சிவிட்கென உணருகைக்காகப் பழைய யமுனை நீராட்டை ஸ்மரிப்பிக்கிறார். பெரிய பெருமாளாகிறார் கிருஷ்ணன், நம்பெருமாளாகிறார் சக்ரவர்த்தித் திருமகன் என்றருளிச் செய்வர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி அருளிச் செய்வர் என்று குறிப்பது யாரை என்று இங்கு குறிப்பிடப்படவில்லையென்றாலும் திருமாலைக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ள வ்யாக்கியானத்தில் இப்படி அருளிச்செய்தவர் பட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” எனவே திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “என்று அருளிச் செய்வர்” என்று தமது ஆசாரியரான பட்டரைப் பற்றியே நஞ்சீயர் அருளிச் செய்திருக்க வேண்டும் என்று கருதியே இவ்யாக்யானத்தை நஞ்சீயர் அருளிச் செய்ததாக முடிவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (ஒன்பதினாயிரப்படி உரையில் பட்டர் முதலிய பூர்வாசாரியர்களுடைய விளக்கங்களைக் குறிப்பிடும் போது நஞ்சீயர் பல இடங்களிலும் அவர்களுடைய திருநாமங்களைக் குறிப்பிடாமலே “என்றும் சொல்லுவர்” என்றே குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது). மேலும், இந்த வ்யாக்யானம் மிகவும் சுருக்கமாக அமைந்துள்ள படியால் திருவாய்மொழிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் சுருக்கமாக உரையருளிச் செய்த நஞ்சீயரே இதற்கும் வியாக்கியானம் அருளிச் செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் போலும். ------------ கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம் எம்பெருமானையே தமக்கு எல்லாமுமாகக் கொண்ட நம்மாழ்வார் அந்த எம்பெருமானைக் குறித்து திவ்யப் பிரபந்தங்கள் நான்கினை அருளிச் செய்துள்ளார். அவருடைய சீடரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமுமாகக் கொண்டு அவரைத் துதித்து திவ்யப்ரபந்தம் ஒன்றினை அருளிச்செய்தார். அதுவே "கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று வழங்கப் பெறுகிறது. “கண்ணிநுண் சிறுத்தாம்பினால்” என்று இப்பிரபந்தம் தொடங்குவதால் இந்நூலுக்கு இப்பெயர் அமைந்தது. திருவாய்மொழியை அநுசந்திப்பதற்கு முன்பும் பின்பும் இப்பிரபந்தத்தை அநுசந்திக்கும் நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது. எனவே திருவாய்மொழிக்கு உரையிட்ட நஞ்சீயர், திருவாய்மொழிக்கு முன் ஒதப் பெறும் இந்த திவ்யப்பிரபந்தத்திற்கும் உரையிட்டுள்ளார் எனலாம். நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தத்திற்கு உரையிட்ட நஞ்சீயர், நம்மாழ்வாரைப் பற்றிய திவ்யப் பிரபந்தத்திற்கும் உரையிட்டது மிகவும் பொருத்தமே. கண்ணிநுண் சிறுத்தாம்பிற்கு நஞ்சீயர் அருளிச் செய்த உரையைப் பின்பற்றி, நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோரும் உரையிட்டுள்ளனர். கண்ணிநுண்சிறுத்தாம்புக்கு முதல் உரை நஞ்சீயர் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கு உரை அருளிச் செய்துள்ளதாகப் பெரிய திருமுடியடைவு, உபதேசரத்தினமாலை வ்யாக்யானம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளபடியால் இவ்வுரை நஞ்சீயர் அருளிச் செய்தது என்பதில் எந்தவித ஐயமுமில்லை. திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு மட்டுமே உரை அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழியைத் தவிர மற்ற திவ்யப்ரபந்தங்களுக்கும் உரை அருளிச் செய்யும் அரிய பணியை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் நஞ்சீயரே எனலாம். கண்ணிநுண்சிறுத்தாம்பிற்கு முதன் முதலில் அமைந்த உரை இவ்வுரையேயாகும். இவ்வுரை பிற உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது மிகவும் சுருக்கமாகவே அமைந்துள்ளது. ஆயினும், திருவாய்மொழிக்கு நஞ்சீயர் அருளிய உரையை விட இது விரிவாகவே உள்ளது. திருவாய்மொழிக்கு நஞ்சீயர் அருளிச் செய்த ஒன்பதினாயிரப்படி உரைக்கும் இக்கண்ணிநுண் சிறுத்தாம்பு உரைக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. திருவாய்மொழி உரையில் பெரும்பாலும் பாசுரங்களினுடைய உரை முழுமையாக இல்லாமை, அவதாரிகையில் பாசுரங்களின் இரு அடிகளுக்கு விளக்கம் உள்ளமை, உரையில் பிற திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெரும்பாலும் மேற்கோள்களாகக் காட்டாமை, ஐதிஹ்யங்கள் எவையும் இடம்பெறாமை முதலியவை காணப்படுகின்றன. ஆனால் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு நஞ்சீயர் அருளிச் செய்த உரை மிகவும் சுருக்கமாக அமைந்துள்ள போதிலும் பாசுரத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் மிகவும் நயமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பாசுர உரையும் முழுமையாக உள்ளது. திருவாய்மொழிப் பாசுரங்களிலிருந்து பல மேற்கோள்களும் எடுத்தாளப் பெற்றுள்ளன. கூரத்தாழ்வான், அவருடைய தேவிகளான ஆண்டாள், பட்டர்” ஆகியோரைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பிற உரைகளைக் காட்டிலும் சிறப்பு சுருக்கமான உரையாக அமைந்த நஞ்சீயர் உரையில், பிற உரைகளில் இடம் பெறாத அரிய விளக்கங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். நம்மாழ்வாரையே தெய்வமாகக கொண்டு மதுரகவிகள் அருளிச் செய்துள்ள இந்த திவ்யப்ரபந்தத்திற்கு உரையருளியவர்கள் அனைவரும் தம்தம் உரைகளின் முன்னர் முன்னுரை (அவதாரிகை) ஒன்றினை அருளிச் செய்துள்ளார். நஞ்சீயரைத் தவிர பிற உரையாசிரியர்களின் அவதாரிகைகள் பெரும்பாலும் ஒரேவிதமாக அமைந்துள்ளன. நஞ்சீயரின் உரையவதாரிகை மட்டும் வேறுவிதமாக அமைந்துள்ளது. சித், அசித், ஈச்வரன் ஆகிய மூன்று புருஷார்த்தங்களில்(பேறுகளில்) ஆத்மாவிற்கு உயர்ந்த புருஷார்த்தம் ஈச்வரனே; அதிலும் கிருஷ்ணாவதாரமே புருஷார்த்தம்; அவனிடத்தில் ஈடுபட்ட ஸ்ரீவைஷ்ணவர்களே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் நம்மாழ்வார். மதுரகவியாழ்வார் இதைப் பூர்வபக்ஷமாக்கி (ஏற்றுக்கொள்ளாமல்) எம்பெருமானிடத்திலும் ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் ஆழ்வார் கொண்டிருந்த பக்தியைத் தமது ஆசார்யராகிற நம்மாழ்வாரிடத்திலே செய்கிறார் என்பது நஞ்சீயருடைய அவதாரிகை கூறும் கருத்தாகும். ஆக ப்ரதம பர்வமாக (முதல் நிலையாக) எம்பெருமானையும், மத்யம பர்வமாக (இடைநிலையாக) அடியவர்களையும், சரம பர்வமாக (கடைநிலையாக) ஆசாரியனையும் கொள்ளுகின்ற அடிப்படைத் தத்துவக் கொள்கையை முதன் முதலில் தெள்ளத் தெளிவாக எழுதி வழிவகுத்தவர் நஞ்சீயரே எனலாம். நஞ்சீயருடைய சீடரான நம்பிள்ளையும் அவருடைய சீடரான பெரியவாச்சான் பிள்ளையும் அருளிய கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியான அவதாரிகையில் நம்மாழ்வார் முதல் நிலையான எம்பெருமானைப் பற்றினார் என்றும், அந்த நம்மாழ்வார் “பயிலும் சுடரொளி” "நெடுமாற்கடிமை' ஆகிய திருவாய்மொழிகளில் அடியவர்களுக்கு ஆட்பட்டிருத்தலின் சிறப்பினைக் கூறியுள்ளபடியால் மதுரகவியாழ்வார் அதையே கடைநிலையாகக் கொண்டார் என்றும் அருளிச்செய்துள்ளனர். முதல்நிலை, கடைநிலை என்ற இரு நிலைகள் மட்டுமே அவ்வுரையாசிரியாகளால் கூறப்படுகின்றன. அதிலும், முதல்நிலையாக எம்பெருமானும் கடைநிலையாக அடியவர்களும் கூறப்படுகின்றனர். அழகியமணவாளப்பெருமாள் நாயனாருடைய வ்யாக்யான அவதாரிகையில் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை ஆசாரியராகவே பற்றினார் என்று ஒருவாறு காட்டப் பட்டிருந்தாலும் பிரதம பர்வம், மத்யம பர்வம், சரம பர்வம் ஆகிய மூன்று நிலைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளவர் நஞ்சீயரே ஆவார். “அருள் கொண்டாடும் அடியவர்” என்று தொடங்கும் பாசுரத்திற்குப் பிற உரையாசிரியர்கள் அனைவரும், எம்பெருமானுடைய அருளைக் கொண்டாடுகின்ற அடியவர்கள் மகிழும்படியாக அருமறையின் பொருளை நம்மாழ்வார் அருளிச் செய்தார். எம்பெருமானுடைய அருளாலே அவர் ஆயிரம் பாசுரங்களைக் கொண்ட திருவாய்மொழியாக அருளிச் செய்தார். அவருடைய அருள் உலகில் மிக்கு விளங்குவதன்றோ!' என்றே பொருள் விளக்கம் அருளியுள்ளார். ஆனால் நஞ்சீயர், எம்பெருமான், தன்னுடைய அருளைக் கொண்டாடும் அடியவர்கள் மகிழும்படியாக அரிய மறையின் பொருள்களை பகவத்கீதையாக வெளியிட்டான். ஆழ்வார், அப்பெருமான் அருளைக் கொண்டு அரிய மறைகளின் பொருளை இன்தமிழாலான ஆயிரம் பாசுரங்களாக அருளிச் செய்தார் ஆழ்வார். ஆழ்வாருடைய அருளன்றோ மிக்கு விளங்குகின்றது! என்று பொருள் அருளிச் செய்துள்ளார். இப்பாசுரத்தில் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே' என்றுள்ளதைக் கருத்தில் கொண்டே நஞ்சீயர் இப்படி உரை வரைந்துள்ளார். மிக்கது என்பது உயர்ந்தது என்ற பொருளைத் தரும். உயர்ந்தது என்றால் எதைக் காட்டிலும் உயர்ந்தது என்ற கேள்வி எழுமல்லவா? எனவே எம்பெருமானுடைய அருளைக் காட்டிலும் ஆழ்வாருடைய அருள்மிக்கது. எம்பெருமான் அருமறையின் பொருளை ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய வகையில் (வடமொழியில்) கீதையாக வெளியிட்டான். ஆனால் ஆழ்வாரோ அருமறையின் பொருளைப் பெண்ணும் பேதையும் அறியும்படியாக இனியதமிழில் ஆயிரம் பாசுரங்களாக வெளியிட்டார். எனவே ஆழ்வாருடைய அருளே எம்பெருமானுடைய அருளைக் காட்டிலும் மிக்கது என்று சுவையாக விளக்குகிறார் நஞ்சீயர். அருமறையின் பொருளை அருளியவர் நம்மாழ்வார் என்பது பிறவுரைகளில் உள்ள கருத்து. ஆனால் நஞ்சீயரோ அருமறையின் பொருளை அருளியவன் கீதோபநிஷத் ஆசாரியனான எம்பெருமான் என்று கூறுகிறார். மிகவும் விளக்கமாக அமைந்துள்ள பிற உரைகளில் இடம் பெறாத இக்கருத்து மிகச் சுருக்கமான நஞ்சீயர் உரையில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. சொல்நயம் காட்டூதல் இதேபோல் தொடர்ந்து பாசுரங்களில் அமைந்துள்ள சொற்களின் நயங்களை அழகாக விளக்குகிறார் நஞ்சீயர். “கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்னப்பன்”! என்னும் பாசுரத்தில் இடம்பெறும் 'என்னப்பன்' என்ற சொல்லுக்குப் பிற உரைகளில் விளக்கம் எதுவும் தரப்படவில்லை. நஞ்சீயர் உரையில் மட்டும் அழகிய விளக்கம் தரப்படுகிறது. வெளியூருக்குப் புறப்பட்டுச் செல்பவன் வழியில் ஒரிடத்தில் நீரும் நிழலும் நன்றாக இருக்கின்றன என்பதால் சிறிது நேரம் தங்கினால் அதுவே அவன் போய்ச் சேர வேண்டிய இடம் என்று ஆகிவிடுமோ? அதுபோல் ஆழ்வாரைக் குறித்துச் செல்கின்ற மதுரகவிகள் இடையில் எம்பெருமானிடம் என்னப்பன் என்று இளைப்பாறுகிறார் என்கிறார் நஞ்சீயர். ஆழ்வாருடைய நாமத்தைச் சொன்னால் “அண்ணிக்கும் அமுது ஊறும்” என்கிறார் மதுரகவிகள்.! இதை விளக்கப்போந்த நஞ்சீயர், பிற இனிமையான பொருள்களை நாவிலிட்டால் அப்பொருள் கரைந்த உடனே இனிமையும் மறைந்து விடும். ஆனால் ஆழ்வாருடைய திருநாமம் அங்ஙனமல்லாமல் ஒருகால் இட்டால் உள்ளதனையும் அமுதூற்று மாறாமல் நிற்கும் என்று விளக்குகின்றார். மதுரகவிகள், ஆழ்வார் திருநாமத்தைக் ' குருகூர்நம்பி” என்று அருளிச் செய்கிறார்.” நம்பி என்னும் சொல் எல்லாவற்றாலும் பூர்ணர் (நிறைந்தவர்) என்ற பொருளைத் தரும். இதைக் கருத்தில் கொண்டு நஞ்சீயர், நம்பி என்ற சொல்லுக்கு அழகிய விளக்கம் தருகிறார். எம்பெருமானைச் சொல்லுகின்றபோது என்னப்பன் என்று அரைவயிறாகப் பேசிய மதுரகவிகள் ஆழ்வாரைப் பேசுகின்றபோது நம்பி என்று பூர்ணராகப் பேசுகின்றார் என்று விளக்கமிட்டுள்ளார். “ஆசாரியர்களை நம்பி என்னக் கற்பித்தவர் ஸ்ரீமதுர கவிகளிறே என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்” என்று பெரியவாச்சான்பிள்ளை தம் உரையில் குறிப்பிட்டுள்ளமை ஒப்பு நோக்கத் தக்கது. “பெரிய வண்குருகூர் நகர் நம்பி”? என்ற பாசுர அடிகளில் “பெரிய வண்(மை)”” என்பதன் கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், “ஆழ்வார் ஒருவருக்குமிறே ஈச்வரன் மயர்வற மதிநலமருளிற்று. இவர் ஜகத்துக்காக மயர்வறமதிநலம் அருளினாரிறே. இவரையும் காட்டித்தரும் ஊராகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது” என்று உரையிட்டுள்ளார். ஆழ்வாருடைய திருவாய்மொழியை ''ஒண்டமிழ்”' என்கிறார் மதுரகவிகள்.” பெரிய ஆழத்தில் உள்ளே கிடக்கின்ற பொருள்களையெல்லாம் தரையில் காணுவது போல், வேதங்களாலும் அறியப்படாத எம்பெருமானை எல்லாரும் அறியும்படி அழகிய தமிழிலே அருளிச்செய்யப்பெற்றதாகையாலே ஒண்தமிழ் என்கிறார் என்று நஞ்சீயர் இதற்கு விளக்கம் தருகிறார். “திருக்குருகூர் நம்பிக்கன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே” என்கின்ற இடத்தில் சதிர்த்தேன்' (சாமர்த்தியமுடையவன் ஆனேன்) என்ற சொல்லின் நயத்தை விளக்கும் வகையில் “அபூர்ணமான பகவத் விஷயத்திலே அடியனாமவனாகாதே பூர்ணரான ஆழ்வார்க்கு அடியேனாய் சதுரனானேனென்கிறார் ' என்று உரையிட்டுள்ளார். இத்தகைய நயமான பகுதிகள் நஞ்சீயர் உரையில் மட்டுமே உள்ளனவாகும். உட்கருத்துக்கூறல் மதுரகவியாழ்வாருடைய திருவுள்ளத்தை அடியொற்றிச் சொற்களின் நயத்தை விளக்கிய நஞ்சீயர் பாசுரங்களின் அமைந்துள்ள சொற்களின் உட்கருத்தையும் அழகாக விளக்குகின்றார். “வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி? என்று நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறார் மதுரகவிகள். வேதத்தின் பொருள் திருவாய்மொழி. வேதத்தின் உட்பொருள் திருவாய்மொழியில் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” ஆகிய இரு திருவாய்மொழிகளில் கூறப்படுகின்ற பாகவத சேஷத்வம் என்று உட்கருத்தைக் காட்டுகிறார் நஞ்சீயர். “தேவுமற்றறியேன்'? நம்மாழ்வாரைத் தவிர வேறு தேவதையை அறியேன் என்கிறார் மதுரகவிகள். வேறு தேவதைகள் வேண்டாம் என்கிறார் அல்லர்; அவர்களைப் பற்றி ஒன்றுமே அறியேன் என்கிறார்; அப்படி விட்டவர்களின் பெயரையும் கூற விரும்பாமல் மற்று அறியேன் என்கிறார் என்று உரையிடுகின்றார் நஞ்சீயர். “மற்று” என்றும் “அறியேன்” என்றும் உள்ள சொற்களின் உட்கருத்தை இவ்வாறு விளக்குகின்றார். நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வத்தை அறியாதவரான மதுரகவிகள் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன் '“ என்கிறார். தமக்கு எம்பெருமானைக் காண்கை உத்தேச்யமன்றாகிலும் ஆழ்வாருடைய உகப்பிற்காக எம்பெருமானைக் காண்பதாகக் கூறுகிறார் மதுரகவிகள். இப்படிக் கூறுகின்றவர் எம்பெருமானுடைய திருமேனியை, “கரிய கோலத் திருவுரு” என்று வருணிப்பதற்குக் காரணம் என்ன என்ற உட்கருத்தை நஞ்சீயர் மிகவும் அழகாக விளக்குகின்றார். சூர்ப்பணகை தன்னுடைய காது மூக்குகளை அறுத்தவர்களைப் பற்றிக் கூறும் போதும் “தருணெள ரூபஸம்பந்நெள” (வாலிபர்கள், அழகுடையவர்கள்) என்றன்றோ கூறினாள். தனக்குப் பிடிக்காத விஷயமென்றாலும் விஷயம் இருக்கின்ற படியன்றோ பேச வேண்டும்! எனவேதான் மதுரகவியாழ்வாரும் எம்பெருமானை கரியகோலத்திருவுரு என்று உள்ளபடியே வருணிக்கின்றார் என்கிறார் நஞ்சீயர். “பண்டை வல்வினை பாற்றியருளினான்”' என்று தம்முடைய பழைய பாவங்களை நம்மாழ்வார் போக்கியதாகக் கூறுகிறார் மதுரகவிகள். கரியகோலத் திருவுருக் காண்பன் நான் என்று எம்பெருமானைப் பற்ற வேண்டிய நிலையையும் தவிர்த்தார் நம்மாழ்வார் என்கிறார் மதுரகவிகள் - என்று உரையிடுகின்ற நஞ்சீயர். அந்நிலையினைப் பாவம் என்று கூறலாமோ என்ற ஐயத்திற்கும் விடை தருகிறார். ஒன்றை அடைய வேண்டும் என்று விரும்பும்போது அதை அடைய முடியாமல் தடை செய்வது எதுவோ அதுவே பாவமாகும். (“உத்தேச்ய விரோதி பாபமாம் அத்தனையிறே” என்பது நஞ்சீயர் உரை). நம்மாழ்வாரையே பற்ற வேண்டும் என்ற மதுரகவிகளுடைய உததேச்யத்திற்கு எம்பெருமானைப் பற்றுவதும் தடையாக அமையும் ஆதலால் அதைப் பாவம் என்றே கொள்ளலாம் என்ற கருத்தில் இவ்வாறு உரையிடுகின்றார். இதை அப்படியே அடியொற்றி நம்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும் தமது உரைகளிலும் உத்தேச்ய விரோதி பாபம் என்று குறிப்பிடுகின்றனர். தம்மிடம் உள்ள தாழ்ச்சியைக் கூறும் மதுரகவிகள், “நம்பினேன் மடவாரையும்' என்கிறார். எம்பெருமானிடத்தில் இருக்க வேண்டிய நம்பிக்கையெல்லாம் மடவார்களிடத்தில் இருந்தது என்கிறார் என்றும், மடவார் என்று பன்மையில் கூறுவதால் ஒன்றிரண்டில் திருப்தியடையாமல் கண்டவிடமெங்கும் நுழைந்து பறப்பட்டபடியைச் சொல்லுகிறார் என்றும் சுவையாக உரையிடுகின்றார். நீண்ட உரைத் தொடர்கள் , சில இடங்களில் மிக நீண்ட உரைத் தொடர் மூலம் பாசுரத்தின் . உட்கருத்தை வெளிப்படுத்துகிறார். எம்பெருமான் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடி அகப்பட்டுக் கட்டுண்ட சரித்திரத்தை, “கண்ணிநுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்”' என்கிறார் மதுரகவிகள். இங்கு “பெருமாயன்'' என்ற சொல்லுக்கு மிகவும் ஆச்சர்யமானவன் என்ற பொருளைத் திருவுள்ளம் பற்றிய நஞ்சீயர், “அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தாநத்தை இதர ஸஜாதீயமாக்குகையும், அவனுக்கு க்ஷுத்து நலிகையும், நவநீதத்திலே ச்ரத்தை யுண்டாகையும், அத்தை இடுவாரில்லாதபோது களவு காண்கையும், அத்தைத் தலைக்கட்டமாட்டாதே வாயது கையதாக அகப்படுகையும், ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும், ஸம்ஸார பந்தத்தைத் தடுக்கவல்ல தான் இத்தை விட்டுக் கொள்ள மாட்டாதொழிகையும் இதென்ன ஆச்சர்யமோ என்கிறார்.” என்று மிக நீண்ட உரைத் தொடரால் விளக்கமிடுகிறார். "குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே -2 என்கிறார் மதுரகவிகள். இதற்கு நஞ்சீயர், "ஐச்வர்யத்தை அல்பாஸ்த்திரமென்று கழித்து, ஸ்த்திரமான ஆத்ம ப்ராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து, ஸ்திரமுமாய் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்பத்தில் ப்ரதமாவதி என்று கழித்து, இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்றென்று கழித்து, அவரோடு ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமென்று கழித்து, அத்தோடு ஸம்பந்தித்த இசையே எனக்கு உத்தேச்யமென்கிறார் -என்று அடுக்கிக் கொண்டே போகிறார். நம்மாழ்வார் க்ருஷ்ணாவதாரத்திலேயே மிகவும் ஈடுபட்டவர். அதிலும் வெண்ணெய் களவு கண்டு உரலோடு கட்டுண்டிருந்த சரித்திரத்தை நினைத்தவாறே மோகித்து விட்டார். அப்படிப்பட்ட நம்மாழ்வாரும், பாகவதர்களே இவ்வாத்மாவுக்குத் தலைவர்கள் என்று “பயிலும் சுடரொளி, “நெடுமாற்கடிமை” ஆகிய திருவாய்மொழிகளில் அருளிச் செய்கின்றார். இதை விவரிக்கின்ற நஞ்சீயர், "ஸர்வேச்வரன் புருஷார்த்தமென்னுமிடத்தில் கரும்பு தின்பார் வேர்ப்பற்றையும் நுனியையும் கழித்து நடுவைக் கொள்ளுமாபோலே ஸ்ரீவைகுண்டநாதனையொழிய கிருஷ்ணாவதாரமே புருஷார்த்த மாகவும், அதிலே கம்ஸவதத்துக்குப் பின்பாகக் கழித்து முன்பு வெண்ணெய் களவு கண்டு யசோதைப் பிராட்டி கையாலே கட்டுண்டு அவளுக்கஞ்சி நின்ற அவஸ்தையையுடைய க்ருஷ்ணனே உபாயமும் உபேயமும் விரோதி நிரஸநம் பண்ணுவானும் மற்றுமெல்லாமென்றும், அவனுடைய ஸெளந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்ட ஸ்ரீவைஷ்ணவர்களே இவ்வாத்மாவுக்கு நாதபூதரும் நிரதிசய புருஷார்த்தபூதரும் என்றும் ஆழ்வார் நிர்ணயித்தார்."' -என்று மிக நீண்ட விளக்கமிடுகிறார்.' ஒப்பிட்டு நோக்குதல் நம்மாழ்வாருக்கு அவ்வப்போது ஓடுகின்ற மனநிலைக்கேற்ப அவரைப் பிராட்டி, இளையபெருமாள், பரதாழ்வான், சத்ருக்னாழ்வான் முதலிய ஸ்ரீராமாயணப் பாத்திரங்களுடன் ஒப்பிடும் உத்தியை முதன் முதலில் தமது ஒன்ப்தினாயிரப்படி உரையில் கையாண்ட நஞ்சீயர் கண்ணிநுண்சிறுத்தாம்பு உரையிலும் அதே உத்தியைக் கையாள்கிறார். நஞ்சீயர் தமது அவதாரிகையில் மதுரகவியாழ்வாரை சத்ருனனோடு ஒப்பிட்டுள்ளதைப் பின்பற்றிப் பின்னர் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆகியோரும் தத்தமது உரைகளில் விரிவாக அருளிச் செய்துள்ளமை கருத்தில் கொள்ளத்தக்கது. மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி அருளிச் செய்துள்ள பாசுரங்களோடு நம்மாழ்வார் எம்பெருமானைப் பற்றி அருளிச் செய்துள்ள பாசுரங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார் நஞ்சீயர். கண்ணிநுண்சிறுத்தாம்பு 1. இன்பமெய்தினேன் (2) 2. மேவினேன் அவன் பொன்னடி (2) 3. மெய்ம்மையே (2) 4. பெரியவண்குருகூர்நகர்நம்பி (3) 5. நம்பினேன் மடவாரையும் (5) 6. இன்றுதொட்டும் எழுமையும் (6) 7. நின்றுதன் புகழேத்த (6) 8, கண்டு கொண்டென்னை (7) 9. காரிமாறப்பிரான் (7) 10. பாற்றியருளினான் (7) 11. அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே (8) 12. வேதத்தினுட்பொருள் (9) 13. அன்பனாய் மதுரகவி (10) திருவாய்மொழி சுழிபட்டோடும் சுடர்ச்சோதிவெள்ளத்து இன்புற்றிருந்தாலும் (8-10-5) கோலமாம் என்சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே (4-3-6) இமையோர் தலைவா மெய்நின்று (திருவிருத்தம் 1) பெரியவண்குருகூர் வண்சடகோபன் (8-11) சதிரிளமடவார் தாழ்ச்சி (2-10-2) வீவில்காலமிசை மாலைகளேத்தி மேவப் பெற்றேன் (4-5-3) மானிடம்பாடவந்தகவியேனல்லேன் (3-9-9) இருந்தான் கண்டுகொண்டு (8-7-2) பிரான்பெருநிலம் கீண்டவன் (1-7-6) மதிநலமருளினன் (1-1-1) பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் (1-5-11) தொண்டர்க்கமுதுண்ணச் சொல் மாலைகள் (9-4-9) பயிலும்சுடரொளி (3-7) நெடுமாற்கடிமை (8-10) முன்சொல்லும் (7-9-2) நம்மாழ்வாருக்கு எம்பெருமான் மீதுள்ள ஈடுபாடெல்லாம் மதுரகவிகளுக்கு நம்மாழ்வார் மீது அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இப்படி ஒப்பீடு செய்கிறார். இவ்வாறு நஞ்சீயர் மதுரகவியாழ்வாருடைய பாசுரங்களையும் நம்மாழ்வா ருடைய பாசுரங்களையும் ஒப்பிட்டுள்ளதை மற்ற உரையாசிரியர்களும் பின்பற்றி விரித்துரைத்துள்ளனர். வினாவிடை அமைப்பு பாசுரங்களின் உட்கருத்தை விளக்குகின்றபோது தாமே ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடையும் தரும் உத்தியைக் கையாளுகிறார். திருவாய்மொழிக்கு இவர் அருளிச் செய்த ஒன்பதினாயிரப்படி உரையிலும் இவ்வுத்தி பல இடங்களில் காணப்படுகிறது. நம்மாழ்வாரையே எல்லாமுமாகக் கொண்ட மதுரகவிகள் முதல் பாசுரத்திலேயே எம்பெருமானை “என்னப்பன்” என்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அதற்கு விடையும் தருகிறார். “அவனை என்னப்பன் என்பானென் என்னில் ஆழ்வார் அங்கீகரிக்கைக்காக அங்கே தமக்கொரு ஸம்பந்தம் சொல்லுகிறார். ”' எம்பெருமானாகிற படுகுழியைத் தப்பினால்தான் ஆழ்வாரை அடைய முடியும் என்று தமது உரையில் அருளிச் செய்கின்ற நஞ்சீயர் எம்பெருமானைப் பற்றுவதைப் படுகுழி என்னலாமோ என்ற கேள்வியை எழுப்பி விடையும் தருகிறார். "படுகுழி என்பானென்னில், பகவத் ப்ராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதியானாப் போலே ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதியென்றபடி. அவற்றுக்கு அல்பாஸ்த்திரத்வாதி தோஷங்கள் உண்டாகையாலே விடலாம். இங்கு அங்ஙனன்று. நிலைநின்ற ப்ரதிபந்தகம்”” கண்ணிநுண்சிறுத்தாம்பு என்கின்ற இந்த திவ்யப்ரபந்தத்தைக் கற்பவர்களுக்குப் பயன் கூறுகின்ற மதுரகவிகள், “நம்புவார்பதி வைகுந்தம்” என்று அருளிச் செய்கின்றார். இங்கும் ஒரு வினாவை எழுப்பி விடையும் தருகின்றார் நஞ்சீயர். “ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திருநகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோவென்னில் திருநகரியிலே பொலிந்து நின்ற பிரானாணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது. அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வாராணை ஒன்றுமேயாய்த்து அங்குச் செல்லுவது."' இப்படிப்பட்ட வினாவிடை அமைப்பைத் தவிர சில பாசுரங்களின் அவதாரிகைகளிலும் “உமக்கு இந்த நன்மைக்கு அடியென் என்னில்”? “நீரிட்ட பச்சை என்னென்னில்”” “ஸத்துக்களும் கைவிடும்படி உம்முடைய பக்கல் குற்றம் ஏதென்னில்”* “நீர் க்ருதக்ருத்யரானபடி எங்ஙனே என்னில்” என்று வினாக்களைத் தாமே எழுப்பி மதுகவியாழ்வாருடைய பாசுரங்களையே விடையாகத் தருகிறார். இவ்வாறு வினாவை எழுப்பி விடை தருகின்ற உத்தியைப் பிற்காலத்தில் ஆசார்யர்கள் பலர் தம்தம் நூல்களில் கையாண்டுள்ளார். இருபொருள் கூறுதல் பாசுரங்களிலுள்ள வரிகளின் பொருளைக் கூறும்போது முதலில் ஒரு கருத்தைக் கூறிவிட்டுப் பிரிதொரு கருத்தையும் “என்றுமாம்” என்று காட்டுவது ஒன்பதினாயிரப்படி உரையில் உள்ளதொன்றாகும். அவ்வாறே கண்ணிநுண்சிறுத்தாம்பு உரையிலும் ஒரே வரிக்கு இரண்டு கருத்துக்களைச் சில விடங்களில் காட்டுகிறார் நஞ்சீயர். “திருக்குருகூர் நம்பிக்கன்பனாய் அடியேன் சதிர்த்தேன்'' என்ற அடிக்கு “எம்பெருமானுக்கு அடியவனாகாமல் ஆழ்வாருக்கு அடியவனாய் சதுரன் ஆனேன் என்கிறார் (மதுரகவிகள்)' என்று உரையிட்டவர் உடனே - “ஸ்த்ரீகளை விச்வஸித்து (நம்பி) இளிம்பனான நான் ஆழ்வாரைப் பற்றி இன்று சதுரன் ஆனேன் என்றுமாம்'' - என்று இரண்டாவது பொருளாட்சியையும் காட்டுகிறார்." “அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”' என்றவிடத்தில் “பகவத்விஷயமும் ரஸித்து அதுக்கெல்லை நிலமான பாகவத விஷயத்தளவும் ரஸித்த என் நாவுக்கல்லது” என்று பொருள் காட்டிய நஞ்சீயர், உடனே "அதவா எது ரஸித்துப் போந்த நாவுக்கு எது ரஸிக்கிறதுதான்” - என்று இரண்டாவது பொருளையும் காட்டுகிறார்.” “நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே” என்றவிடத்தில் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கிற இப்பிரபந்தத்தைக் கற்பவர்களுக்கு இருப்பிடம் பரமபதம் என்று ஒரு பொருளுரைத்தவர் உடனே, 'அதவா நம்புவார் இருந்த விடமே வைகுந்தமென்னவுமாம்'” என்று இரண்டாவது பொருளையும் அங்கு உரைக்கின்றார்.” மறு வழக்குகள் அக்காலத்தில் இலங்கிய மரபு வழக்குகளைத் தம் வியாக்கியானத்தில் முதன் முதலில் பயன்படுத்திய உரையாசிரியர் நஞ்சீயரே ஆவார். “தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்னசொல்” என்னுமிடத்தை விளக்குகின்ற நஞ்சீயர், அன்பினாலே தூண்டப்பட்டு இப் பிரபந்தத்தை அருளிச் செய்தார் என்றும், எனவே அன்புதான் இப்பிரபந்தத்தைச் சொல்லுவித்தது, மதுரகவிகளும் வெறும் சாட்சியாக நின்று கொண்டிருந்தார் அவ்வளவே என்றும் இங்கு உரையிடுகின்றார். தாம் காண வந்த சோழரோபாதி” என்ற மரபுத் தொடரொன்றையும் இங்கு எடுத்துக் காட்டுகிறார்.” அக்காலத்தில் (சோழ) அரசர்கள் நாடகங்களைக் காண வருவர். ஆயினும் அரங்கத்தில் நடிக்கும் நடிகர்களே அங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பர். அரசராயினும் அவர்கள் நாடகம் காண வந்தவர்களே. அதேபோல் இங்கும் மதுரகவிகள் காணவந்த சோழரைப் போல இருக்கையில் அவருடைய அன்பு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்கிறார் நஞ்சீயர். செறிவுத் தொடர் சில அழகிய செறிவுத் தொடர்களையும் நஞ்சீயர் கையாளுகிறார். கண்ணபிரானைப் “பெருமாயன்” என்கிறார் மதுரகவிகள். இங்குப் பெருமாயன் என்பதற்கு மிகவும் ஆச்சரியமானவன் என்ற பொருளைக் கருத்தில் கொண்ட நஞ்சீயர், “இவருடைய எத்திறம் இருக்கிறபடி என்று உரையிடுகிறார்.' அதாவது கண்ணபிரான் வெண்ணெய்க் களவு கண்ட சரித்திரத்தை நினைத்த நம்மாழ்வார், 'எத்திறம் உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே என்று வியந்தார். தமது ஆசாரியர் வியப்புடன் பேசிய அதே சரித்திரத்தை நினைத்த மதுரகவியாழ்வாரும் “பெருமாயன்” என்று ஆச்சரியப்படுகிறார். இதைக் கருத்தில் கொண்ட நஞ்சீயர், “இவருடைய எத்திறம் இருக்கிறபடி” என்று உரையிடுகிறார். எம்பெருமானை “என்னப்பன்” என்றும் ஆழ்வாரைக் "குருகூர்நம்பி” என்றும் கூறுகிறார் மதுரகவி. இவற்றிக்கு முறையே 'உபகாரகன்” என்றும் 'பூர்ணர்' என்றும் பொருளுரைத்த நஞ்சீயர், எம்பெருமான் முதல் நிலை யாகையால் அறைவயிறாகப் பேசினார் என்றும், ஆழ்வார் கடை நிலை யாகையால் பூர்ணராகப் பேசுகிறார் என்றும் குறிப்பிடுகிறார். அறைவயிறாகப் பேசுதல் என்ற இத்தொடரை மற்றொரு பாசுர உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.” உவமைகள் தாம் கூறுகின்ற விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைப்பதற்காக உவமைகள் சிலவற்றையும் கையாளுகிறார் நஞ்சீயர். “ரஸாயன ஸேவை பண்ணித் திரிவாரைப் போலே'” “பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்களெல்லாம் தரையிலே காணுமா போலே “கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே” என்பன கண்ணிநுண்சிறுத்தாம்பு உரையில் நஞ்சீயர் கூறும் சில உவமைகளாகும். ஐதிஹ்யங்கள் பூர்வாசாரியர்களுடைய திருநாமங்களை எடுத்துக்காட்டாகவோ அவர்கள் உரைத்த கருத்துக்களை குறிப்பிடுவதற்காகவோ வ்யாக்யானங்களில் குறிப்பிடுவதை முதன் முதலில் , தொடங்கி வைத்தவர் நஞ்சீயரே எனலாம். கண்ணிநுண்சிறுத்தாம்பு உரையில் இரண்டிடங்களில் பூர்வாசாரியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்” என்ற மதுரகவிகளின் அருளிச் செயலுக்கு - பிறர் துன்பம் பொறாதவர்கள் என்று உரையிட்ட நஞ்சீயர் இதற்கு எடுத்துக் காட்டாக “கூரத்தாழ்வானும் ஆண்டாளும் பிராட்டியும் போல்வார்” - என்று குறிப்பிடுகின்றார்.' தம் கண்களை இழப்பதற்குக் காரணமான நாலூரானும் நற்கதியடையவேண்டும் என்று விரும்பிய கூரத்தாழ்வான், தாம் திருவரங்கத்தை விட்டு வெளியேறுவதற்குக் காரணமான அகளங்கன் மரணத்தைக் கேட்டு வருந்திய (கூரத்தாழ்வான் மனைவியான) ஆண்டாள், தன்னை இலங்கையில் பத்துமாதங்கள் துன்புறுத்திய அரக்கிகளையும் அனுமனிடமிருந்து காத்த சீதாப்பிராட்டி போன்றவர்களே நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் என்பது நஞ்சீயர் கருத்து. பின்னர் எழுந்த உரைகளில் கூரத்தாழ்வான் பிராட்டி ஆகியோர் திருநாமங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஆண்டாள் திருநாமம் நஞ்சீயர் உரையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. “நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே ' என்பதற்குக் கண்ணிநுண் சிறுத்தாம்பைக் கற்பவர்களுக்கு இருப்பிடம் பரமபதமே என்றுரையிட்ட நஞ்சீயர், “அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்” என்று இரண்டாவது விளக்கத்தையும் கூறி இதற்குப் பொருத்தமாக, “நம்பிதிருவழுதிவளநாடுதாஸர் வார்த்தை, கூரத்தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச்சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் என்று பணித்தான்” என்று ஆசாரியர் ஒருவர் கூறிய கருத்தையும் கூறுகிறார்.” அதாவது கூரத்தாழ்வான் மகனான பட்டர் அவதரித்த பின்பு பரமபதத்திற்கும் இவ்வுலகிற்கும் இடையிலுள்ள சுவர் நீக்கப்பட்டு ஒன்றாகிவிட்டது என்று நம்பி திருவழுதிவளநாடு தாஸர் கூறுவர் என்பது நஞ்சீயர் கூறும் கருத்தாகும். இப்படி முதன்முதலில் ஆசார்யர்களுடைய திருநாமங்களை உரைகளில் இடம்பெறச் செய்தவர் நஞ்சீயரே ஆவார். திருவாய்மொழியைத் தவிர பிற திவ்யப்ரபந்தங்களுக்கு உரையிடும் பணியை முதன்முதலில் தொடங்கியவர் நஞ்சீயரே ஆவார். நஞ்சீயர் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கு அருளிய உரை மேற்கூறியவாறு பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு பின்னர் எழுந்த உரைகளுக்கெல்லாம் வழிகாட்டியாக அமைந்துள்ளது. முடிவுகள் 1. நஞ்சீயர், திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவைக்கு ஈராயிரப்படி வ்யாக்யானம், சரமகுருநிர்ணயம் ஆகிய நூல்களை அருளிச் செய்துள்ளார் என்று பிள்ளைலோகம் சீயர் அருளிச் செய்துள்ள நூல்கள் மூலம் புலனாகிறது. மேற்கூறிய நூல்களுடன், திருவந்தாதிகளுக்கும் திருப்பல்லாண்டுக்கும் உரை, ரஹஸ்யத்ரய விவரணமாக நூற்றெட்டு, சரணாகதி கத்ய வ்யாக்யானம் ஆகிய நூல்களையும் நஞ்சீயர் அருளிச் செய்துள்ளதாகப் பெரியதிருமுடியடைவு என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்ய வ்யாக்யானம் என்றொரு நூலை நஞ்சீயர் அருளிச் செய்துள்ளதாக மணவாளமாமுனிகள் தமது தத்வத்ரய வ்யாக்யானத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய நூல்களுள் திருவாய்மொழி ஒன் பதினாயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம் ஆகிய இருநூல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஸ்ரீஸூக்தபாஷ்யம் என்னும் வடமொழி நூல் நஞ்சீயர் அருளிச் செய்ததாக அச்சிடப்பட்டுள்ளது. நஞ்சீயர் அருளிச் செய்த ஒன்பதினாயிரப் படியில் இடம்பெறும் கருத்துகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்ட அந்நூல் நஞ்சீயர் அருளிச் செய்தது அன்று என்று அறுதியிடப்படுகிறது. ஆத்மவிவாஹம் முதலிய ரஹஸ்ய நூல்களை நஞ்சீயர் அருளிச் செய்ததாக அச்சிடப்பட்டுள்ளது. ரஹஸ்யவிளக்கங்களாக நஞ்சீயர் அருளிச்செய்ததாகப் பற்பல நூல்களில் காணப்படும் தனித்தனி வார்த்தைகள் தொகுக்கப்பட்டு தனிநூலாக வெளியிடப் பட்டிருக்கலாம் என்ற கருத்து நிறுவப்பெறுகிறது. 7. நஞ்சீயர் அருளிச் செய்ததாகப் பெரியதிருமொழி வ்யாக்யானம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு நூலை நஞ்சீயர் அருளிச் செய்ததாக எந்த நூலிலும் குறிப்பிடப்படாததாலும், அந்நூல் ஒன்பதினாயிரப்படியின் மொழி நடைக்கு மாறுபடுவதாலும், மற்றும் பல காரணங்களாலும் அந்நூல் நஞ்சீயருடையதன்று என்று முடிவு செய்யப்படுகிறது. 8. நஞ்சீயர் அருளிச் செய்ததாகத் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது. அந்நூல் நஞ்சீயர் அருளிச் செய்தது என்று பதிப்பாசிரியர்கள் கொண்டதற்குக் காரணம் இன்னதென்று காட்டப்படுகிறது. 9. நஞ்சீயர், கணணிநுண்சிறுத்தாம்புக்கு உரை அருளிச் செய்தததன் மூலம், திருவாய்மொழியைத் தவிர, பிற திவ்யப்ரபந்தங்களுக்கும் உரை எழுதும் பணியைத் தொடங்கி வைத்தார் எனலாம். 10. நஞ்சீயர் அருளிச் செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், அந்நூலுக்குப் பின்னர் எழுந்த உரைகளைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் சிறப்புற அமைந்துள்ளது. விரிவான உரைகளிலும் இடம்பெறாத விளக்கங்கள் அவ்வுரையில் இடம்பெற்றுள்ளன. நஞ்சீயர் அவ்வுரையில் பல்வேறு புதிய உரை உத்திகளைக் கையாண்டுள்ளதன் மூலம், பின்னர் தோன்றிய உரையாசிரியர் களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தார். -------- இயல் -" 4 -ஒன்பதினாயிரப்படி ஓர் ஆய்வு நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழிக்கு ஐந்து வியாக்கியானங்கள் உள்ளன. அவற்றுள் முதன் முதலில் தோன்றிய வ்யாக்யானம் திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி ஆகும். மணிப்ரவாள நடையில் முதன் முதலில் தோன்றிய நூலும் அதுவேயாகையால், அவ்வுரையில் பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் அதிகமாகவும், தமிழ்ச் சொற்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. ஆறாயிரப்படிக்கு அடுத்தபடியாகத் தோன்றிய வ்யாக்யானம் நஞ்சீயர் அருளிச் செய்த ஒன்பதினாயிரப்படி ஆகும். அவ்வுரையில் பெரும்பாலும் வடமொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களும் சமமான அளவில் கலந்துள்ளன எனலாம். எடுத்துக்காட்டாகப் பாசுரம் ஒன்றிற்கு அமைந்துள்ள உரைகளைக் காணலாம்." ஆறாயிரப்படி: ஹிரண்ய விஷய நிரவதிக ரோஷத்தாலே அத்யந்தம் அநபிபவநீயமாய் அதிதுஸ்ஸஹமாய யுகபதுதித நகரசத ஸஹஸ்ர தேஜஸ் ஸத்ருசமாமிருந்த தேஜஸ்ஸை யுடையதொரு அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து, அதிபல பராகரமனான ஹிரண்யனைத் தன் திருவுகிராலே பிளந்தருளி! ப்ரஹ்ருஷ்டனா ய், நிஹத ஹிரண்யனா கையாலே ப்ரசாந்த அசேஷ ரோஷனாய் அதினாலே அதிசீதள ஸர்வாநுகூலநிரவதிகதேஜோ விசிஷ்டனாய், திருவுகிர்களாலே முந்துறவே ஹிரண்ய வக்ஷஸ்தலம் விதாரிதமாகையாலே ததர்த்தமான ஸ்வோத்யோகம் நிர்விஷயம் ஆதலால் அதிப்ரவ்ருத்த ரோஷாந்வித சங்கசக்ராதி திவ்யாயுதோபேதனாயிருந்தவன் கவராத வரிவளையால் குறைவிலம் என்கிறாள். ஒன்பதினாயிரப்படி: ஏழாம் பாட்டில் ஆச்ரித விரோதியான ஹிரண்ய நிரஸநம் பண்ணுமிடத்தில் அவனளவல்லாத படியாகச் சீறி அவனை முடிக்கும் ஸ்வபாவ னானவன் விரும்பாத வில்ஷணமான வளை கொண்டு காரியமுடையோ மல்லோம் என்கிறாள். கிளரொளி என்று தொடங்கி, பெருகா நின்றுள்ள ஒளியால் மிக்க ஸிம்ஹரூபியாய்ச் சீறிக்கொண்டு தோன்றி மிக்க தேஜஸ்ஸை யுடையவனாயிருந்துள்ள ஹிரணயனுடைய விஸ்த்ருதமான மார்பை அநாயாஸேந பிளந்து ஆச்ரித விரோதி போகப் பெற்றது என்று உகப்பதும் செய்து, திருவுகிர்களாலே முந்துற ஹிரண்யன் முடிகையாலே தங்களுக்கு இரை பெறாத சீற்றத்தின் மிகுதியாலே நெருப்பையுமிழா நின்றுள்ள சங்கசக்ராதி திவ்யாயுதோபேதனாய். மணி நீல வளரொளியான்) கோபமெல்லாம் தணிந்த சீதளமான நிரவதிக தேஜஸ்ஸை யுடையவன். நஞ்சீயர், தம் திருவாய்மொழி உரையில் ஒவ்வொரு பாசுரத்திற்கும் சிறிய அவதாரிகை ஒன்றினை எழுதும் மரபினையும், ஒவ்வொரு பாசுரத்தினுடைய உரையைத் தொடங்கும் போதும் "முதற்பாட்டு", "இரண்டாம் பாட்டு", "மூன்றாம் பாட்டு" எனப் பாசுர எண்ணைக் குறிப்பிடும் மரபினையும், ஒவ்வொரு பதிகத்தின் தொடக்கத்திலும் "முதல் திருவாய்மொழியில்", "இரண்டாம் திருவாய்மொழியில்" என்று குறிப்பிடும் மரபினையும், ஒவ்வொரு பத்தின் ஆரம்பத்திலும் "இரண்டாம் பத்தில்", "மூன்றாம் பத்தில்" என்று குறிப்பிடும் மரபினையும் முதன்முதலில் தோற்றுவித்தார். அவருடைய ஒன்பதினாயிரப்படிக்குப் பின்னர் எழுந்த வ்யாக்யானங்களான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்திலும், ஈடு முப்பத்தாறாயிரப்படி வயாக்யானத்திலும் அம்மரபுகள் பின்பற்றப்பட்டுள்ளன. நஞ்சீயர், "உயர்வற உயர்நலம்" என்று தொடங்கும் முதல் திருவாய்மொழியின் கடைசிப் பாசுர உரையில், அப்பதிகத்தில் உள்ள பத்துப் பாசுரங்களின் பொருள்களையும் தொகுத்துச் சுருக்கமாக அருளிச் செய்கிறார். தொடர்ந்து பிற திருவாய்மொழிகளுக்கும் அவர் அவ்வாறு அருளிச் செய்யவில்லையென்றாலும், ஈட்டில் ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசிப் பாசுரத்தின் உரையிலும் அத்திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாசுரங்களின் பொருள்களையும் சுருக்கமாகக் கூறுகின்ற முறைக்கு அவர் தோற்றுவித்த மரபே அடிப்படையாக அமைந்தது எனலாம். (ஈட்டிலும் அம்மரபு மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி வரையில் மட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது.) உரையின் முழுமையின்மை ஒன்பதினாயிரப்படி உரை, ஆறாயிரப்படி உரையைப் போல் பொழிப்புரையாக அமையவில்லை. ஆயினும் சுருக்கமாகவே அமைந்துள்ளது. பன்னீராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, ஈடு முப்பத்தாறாயிரப்படி முதலிய வ்யாக்யானங்கள் அனைத்தும் தொடக்கம் முதல் முடிவு வரை பெரும்பாலும் ஒரே விதமான அமைப்பில் எழுதப்பட்டுள்ளன. ஆனால், ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம் மட்டும் அப்படி அமையாதது வியப்பிற்குரியது. பெரும்பாலான பாசுரங்களின் உரையில், அவதாரிகையில் பாசுரங்களின் ஒரிரு அடிகளுக்கான விளக்கமும் பாசுர உரையில் எஞ்சிய அடிகளுக்கான விளக்கமும் காணப்படுகின்றன. உதாரணமாக, “எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்" என்று தொடங்கும் பாசுரத்திற்கு நஞ்சீயர் உரை பின்வருமாறு அமைந்துள்ளது: அவதாரிகை : அத்யந்த விலகூஷணனான எம்பெருமானை அத்யந்த நிக்ருஷ்டனான நான் வாங்மநஸங்களாலே நினைத்தும் பேசியும் தப்பச் செய்தேன் என்று அகலுகிறார். வ்யாக்யானம் : (எந்தையேயென்றுதொடங்கி) என்தனுக்குப் பரிவனென்றும் ஸ்வாமியென்றும் (எந்தையென்றுதொடங்கி) எம்பெருமானை நினைக்கவும் பேசவும் யோக்யராயுள்ள அயர்வறுமமரர்கள் ஸ்நேஹயுக்தராய்க் கொண்டு எம்பெருமானை நினைத்து அது உள்ளடங்காமையாலே எந்தை எம்பெருமான் என்றுசொல்ல அத்தாலே மதிப்பனானவனை, இங்கு வியாக்கியானத்தின் முடிவில், “.....மதிப்பனானவனை ' என்று வாக்கியம் முற்றுப் பெறாமலே உள்ளது. ......மதிப்பனானவனை - அத்யந்த நிக்ருஷ்டனான நான் வாங்மநஸங்களாலே நினைத்தும் பேசியும் தப்பச் செய்தேன் என்று அகலுகிறார் ' என்று அவதாரிகையில் உள்ளதையும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் விதத்தில் உரை அமைந்துள்ளது. பெரும்பாலும் ஒன்பதினாயிரப்படி உரை முழுவதும் இப்படியே அமைந்துள்ளது. சில பாசுரங்களுக்கு அவதாரிகை மட்டுமே உள்ளன; பாசுர உரைப் பகுதிகள் இல்லை.' சில பாசுரங்களுக்கு உரைப்பகுதிகள் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன.” சில பாசுரங்களுக்கு உரைப்பகுதிகள் முற்றுப் பெறாமலே நின்றுள்ளன. மிகுதியான பகுதிகள் கிடைக்கவில்லை என்று பதிப்பாசிரியர் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.” ஒரு சில இடங்களில் அதுவும் இல்லை. “உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்துண்ணும் அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்தே '* என்கிற பாசுரத்திற்குத் தற்போது அச்சிலுள்ள பிரதிகளில் ஒன்பதினாயிரப்படி உரை பின்வருமாறு அமைந்துள்ளது: "தன் திருவடிகளை ஆச்ரயித்தாரது ஏதேனுமொரு த்ரவ்யத்தாலல்லது தரியாத ப்ரக்ருதியாகையாலே உறிகளிலே வைத்த வெண்ணெயும் பாலுமெல்லாம் போக்கினேன்" இங்கு, "உறிகளிலே வைத்த வெண்ணெயும் பாலுமெல்லாம்" என்பதற்குப் பிறகு சில சொற்கள் விடுபட்டுள்ளன. "....பாலுமெல்லாம் களவு கண்டு அமுதுசெய்த க்ருஷ்ணனைப் பின் சென்று என்னுடைய ஸம்ஸார துரிதங்களையெல்லாம் போக்கினேன்" என்பன போன்ற வரிகள் இங்கு விடுபட்டுள்ளன. ஆனால் இங்கு அவ்வரிகள் விடுபட்டுள்ளது குறித்துப் பதிப்பாசிரியர் குறிப்பு ஏதும் இல்லாதது வியப்பை அளிக்கிறது. நஞ்சீயர் தம்முடைய உரையை ஏடுபடுத்துவதற்காக நம்பிள்ளையிடம் கொடுத்ததாகவும், அதை நம்பிள்ளை ஆற்றில் தவறவிட்டு விட்டதாகவும் குருபரம்பரையில் கூறப்பெற்றுள்ள செய்திகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது மேலே குறித்தபடி உரை முழுமையாக இல்லாமைக்கு அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்ற ஐயம் எழலாம். ஆனால், நம்பிள்ளை உரையை முழுமையாக எழுதினார் என்று குருபரம்பரை முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளபடியால், பிற்காலத்தில் ஒன்பதினாயிரப்படியை ஏட்டில் எழுதியவர்களுடைய கவனக் குறைவால் சில வரிகள் விடுபட்டிருக்க வேண்டும். ----------- ஆறாயிரப்படியும் ஒள்பதினாயிரப்படியும் ஒன்பதினாயிரப்படி உரையில் இடம்பெறும் உரைப்பகுதிகள் சில இடங்களில் சிறிதும் வேறுபாடின்றி ஆறாயிரப்படியின் உரைப்பகுதிகளை ஒத்து விளங்குகின்றன. பாசுரங்களுக்கு மட்டுமன்றி சில திருவாய்மொழிகளுக்கு அமைந்துள்ள உரைப்பகுதிகளும் ஆறாயிரப்படியிலுள்ள உரைப்பகுதிகளை ஒத்திருத்தலைக் காணலாம்.” ஆறாயிரப்படியில் பிரதீகம் (பாசுரங்களில் உள்ள சொற்கள்) எடுக்கப் படாமல் உரை மட்டும் உள்ளது. ஆனால் ஒன்பதினாயிரப்படியில் பாசுரங்களிலிருந்து பிரதீகம் (சொற்கள்) எடுக்கப்பெற்றுள்ளன என்பது மட்டும்தான் வேறுபாடு. உதாரணம்.: ஆறாயிரப்படி: வர்த்தமான க்ரியைகளும், மேல் வருவதான க்ரியைகளும் பண்டு செய்த க்ரியைகளும் க்ரியா பலம் புஜிப்பேனும், க்ரியாகர்த்தாக்களை அவற்றில் ப்ரவர்த்திப்பிப்பேனும் நானென்னும். இவள்கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தாற் போல இரா நின்றது. சிவந்த கனிபோலேயிருக்கிற வாயை உடையவளா யிருக்கிறசிறு பெண்பிள்ளை யிடையாட்டத்தில் ஆழங் காண மாட்டாதே படுபாடரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன் என்கிறாள். ஒன்பதினாயிரப்படி: (செய்கின்ற கிதி என்று தொடங்கி) வர்த்தமான க்ரியைகளும் பண்டு செய்த க்ரியைகளும் (செய்கை என்று தொடங்கி) க்ரியாபலம் புஜிப்பேனும் க்ரியாகர்த்தாக்களை அவற்றில் ப்ரவர்த்திப்பேனும் (செய்ய கமலக் கண்ணன் ஏறக்கொலோ) இவள் கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது. (செய்ய உலகத்தீர்க்கு என்று மேலுக்கு) ஆழங்காண மாட்டாதே படுபாடரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன், சிவந்தகனி போலலே இருக்கிற வாயையுடையளாயிருக்கிற சிறுபெண் பிள்ளை யிடை யாட்டத்தில்' -------- பிற உரைகளில் இல்லாத விளக்கங்கள் மேற்கூறியவாறு ஒரு சிலவிடங்கள் அமைந்திருந்தாலும் நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி உரை, வ்யாக்யானம் எழுதும் கலையில் ஒரு புதிய முறையை தோற்றுவித்தது என்றே சொல்ல வேண்டும். ஒன்பதினாயிரப் படிக்குப் பின்னர் எழுந்த உரைகளான இருபத்து நாலாயிரப்படி, ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களில் இடம் பெறாத விளக்கங்கள் பல இடங்களில் ஒன்பதினாயிரப்படியில் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கன. குறிப்பாக, "உளனெனில் உளன் "” என்கிற பாசுரத்திற்கு நஞ்சீயர் உரை மிகமிக விரிவாக அமைந்துள்ளது. ஒன்பதினாயிரப்படியுரையைப் போன்று நான்கு மடங்கு பெரிய வ்யாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையில், அப்பாசுரத்திற்கு அமைந்துள்ள உரைப் பகுதியின் அளவு, ஒன்பதினாயிரப்படி யில் அமைந்துள்ள உரைப்பகுதியின் அளவில் நான்கில் ஒரு பகுதியேயாகும். அது மட்டுமின்றி, அப்பாசுரத்தின் ஒன்பதினாயிரப்படி உரையின் பெரும் பகுதி எளிய தமிழிலேயே பின்வருமாறு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்: “சூந்யவாதியான உன்னைக் கேட்போம். ஈச்வரன் இல்லாமையை ஸாதிக்க நினைக்கிற நீ, நினைத்த பொருளை ஒரு வாக்யத்தாலே ப்ரதிஜ்ஞை பண்ணி, பின்னை ஹேதுவாலே அத்தை ஸாதிக்க வேணுரிறே; அவ்விடத்தில் நீ ஹேதுசொல்வதற்கு முன்பே உன் ப்ரதிஜளஞையைக் கொண்டு ஈச்வரனுளனென்னுமிடமே ஸாதிப்பன்: அதுக்காக ஈச்வரனுடைய இன்மையை ப்ரதிஜ்ஞை பண்ணுவது உளனென்ற சொல்லாலேயோ? இலனென்ற சொல்லாலேயோ? என்ன இப்படிக் கேட்கைக்குக் கருத்தென்? என்னில், உளனென்ற சொல்லால் இன்மையைக் காட்டவொண்ணாதாப்போலே இலனென்ற சொல்லால் நீ கிற்ற நினைத்த இன்மை காட்ட வொண்ணாதென்றவாறு. அது எங்ஙனேயென்னில் உண்டென்ற சொல்லாலும் இல்லையென்ற சொல்லாலும் லோகத்தில் யாதொரு பொருள் விளையக் கண்டோம், அப்பொருளே உன் சொற்களுக்கும் பொருளாக வேணுமிறே. கண்டறியாததொரு பொருளை இச் சப்தங்கள் காட்ட மாட்டாதிறே. லோகத்தில் 'குடமுண்டு என்றால் குடமென்று சொல்லப்படுகிற பொருள் உண்மையென்பதொரு தர்மத்தையுடைத்தென்று தோற்றா நின்றது. அவ்விடத்தில் குடமாவது மண்ணாலே பண்ணிற்றொன்று. அதினுடைய உண்மையாவது மண்ணும் உருளையுமன்றியே இரண்டுக்கும் நடுவில் அவஸ்தையாய் வயிறும் வாயும் உடைத்தான மண்ணாயிருக்கை. இப்படியால் ஈச்வரனுளனென்னில் உளனாய் வரும். இச்சொல்லால் அவனுடைய இன்மை காட்டவொண்ணாது. இப்படி ஈச்வரனுளனென்னவே ஐச்வர்யத்தை யொழிய ஈச்வரன் உளனாகக் கூடாமையால் அவனுடைய விபூதியான ஐகத்தும் உண்டாம். ஆமிடத்திலும் அவனுக்கு சரீரமாயே உளதாம். இப்பொருள் 'அவனுருவமிவ்வுருவுகள்' என்றவிடத்தாலே சொல்லப்பட்டது. இனி, ஈச்வரன் இலனென்ற சொல்லாலே அவனுடைய இன்மை காட்ட நினைத்தாயாகில் இல்லையென்ற பொருளிலும் லோகத்திற் கண்டபடி பொருள் கொள்ள வேணும். லோகத்தில் குடமில்லை என்றால், இங்கில்லையென்னுதல், இப்போதில்லையென்னுதல் மண்ணுருளையாய் இருந்து குடமாய்ப் பிறந்ததில்லை யென்னுதல் தளர்ந்து ஒடுகளாய்க் கிடந்ததென்னுதல் இவ்வனைத்திலொன்று பொருளாகக் கண்டோம். இப்படியன்றியே வெறுமனே குடமில்லையெனில் என்றும் எங்கும் எப்படியும் குடமில்லையென்று சொல்லிற்றாக வேணும். அப்படியாகில், எப்படியும் குடமென்றொன்று அறிய உபாயமில்லையாகையால் குடமென்று சொல்லவுங்கூடாது; நினைக்கவும் கூடாது. ஆதலால், ஒன்றில்லை யென்பானுக்கு ஒருபடியாயின்றியே மற்றபடியாலுண்டாக இசைய வேணும். ஆதலால் இங்கில்லையென்றது அப்பாலேயுண்டு என்றவாறு. இப்போதில்லை யென்று மற்றொருபோது உண்டு என்றவாறு. குடமில்லையென்றது மண்ணுருளையாயாதல், ஒடுகளாயாதல் இருந்ததென்றவாறு. இப்படியால் இன்மையாவது மற்றொருபடியால் உண்மையாய்த் தோற்றிற்று. இப்படியால் ஈச்வரன் இல்லையென்றானுக்கும் அவன் தன்னையும் அவனைச்வர்யங்களையும் ஒருபடிபால் உளவாகக் கொண்டு அப்படியால் உண்மையில்லையென்ற சொல்லாலே சொன்னானாக வேணும். ஆதலால் உளனென்ற சொல்லால் அவனும் அவனைச்வர்யமும் ஸித்தித்தாற்போலே இலனென்ற சொல்லாலும் அவன் தன்னுடைய உண்மையும் அவனைச்வர்யத்தின் உண்மையும் ஸித்தமாய் வந்தது இப்பொருள் உளனலனெனில் அவன ருவம் இவ்வருவுகள் என்றத்தால் சொல்லப்பட்டது. அவனருவமென்றது அபாவமென்ற சொல்லாலே சொல்லப்பட்டதான உளதாயிருந்த அது என்றவாறு. இப்படியால் உண்மையும் இன்மையுமாகிறன உள்ள வஸ்துவுக்கே இரண்டு குணமாய் வந்தன. ஆதலால் ஈச்வரனுளனென்றாதல், இலனென்றாதல் இரண்டுபடியாலுமுளனாம். இவ்வழியாலே வேதமுண்டாயிற்று. அதிற் சொன்னபடியே அவன்தான் எங்கும் பரந்துளனானான். இப்பொருள் இப்பாட்டில் மேலிரண்டடி யாலுஞ் சொல்லுகிறது. இப்பாட்டு ஆழ்வான் யோஜித்தபடி. இவ்வளவு விரிவாக ஒன்பதினாயிரப்படி உரை அமைந்துள்ளது. ஆனால் இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி உரை மிகவும் சுருக்கமாக (இதில் நான்கில் ஒருபாகமே) அமைந்துள்ளது. மேலும் இப்பாசுரத்திற்கு இவ்விளக்கத்தை அருளியவர் கூரத்தாழ்வான் என்பது ஒன்பதினாயிரப்படியில் மட்டுமே உள்ள செய்தியாகும். "இப்பாட்டு ஆழ்வான் யோஜித்தபடி" எனபது வேறு எந்த வ்யாக்யானத்திலும் குறிப்பிடப்படவில்லை. ------------- ஒன்பதினாயிரப்டியில் மட்டுமே உள்ள விளக்கங்கள் இப்படி நஞ்சீயர் உரையில் பொருள் கூறப்பட்டுள்ள வேறு சில இடங்களையும் காணலாம். 1. நம்மாழ்வார் இறைவனுடைய தன்மையைக் கூறும்போது அவன் அடியவர்களுக்கு எளியவனாகவும், அடியவர்கள் அல்லாதவர்களுக்கு அரியவனாகவும் இருக்கிறான் என்கிறார். அப்படிக் கூறும் பாசுரத்தில் "எம்பெருமான்" என்று மூன்று 'இடங்களில் அருளிச் செய்கிறார்.' இப்படி நம்மாழ்வார் அருளிச் செய்தமைக்குக் காரணத்தைக் கூறி விளக்கும் நஞ்சீயர், "பலகாலும் எம்பெருமான் என்று ஆச்ரிதருக்கு எளியவனாய் அநாச்ரிதருக்கு அரியனானபடியை அநுஸந்தித்திருக்கிறபடி'' என்று உரையிடுகிறார். இத்தகைய விளக்கம் பிற வ்யாக்யானங்களில் இல்லை. ஆனால் பெரியவாச்சான் பிள்ளையுரையில் இதைச் சற்று விரிவாக்கி, (எம்பெருமான்) உசுவாதார் கண்படாதபடி இருக்கிற இடம் தன்பேறாக உகக்கிறார். (எம்பெருமான்) ஆச்ரிதருக்குக் கை புகுந்திருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்" என்றருளிச் செய்கிறார். 2 அகதியோகத்தைத் "தவநெறி" என்று ஒரு பாசுரத்தில் அருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.” இங்குத் தவநெறி என்பது மிகவும் உடலை வருத்தி செய்யக் கூடிய தவத்தைக் குறிப்பதாகக் கொண்டு, நஞ்சீயர் இதற்குச் சுவையான பொருளை துருளிச்செய்கிறார். பக்தியோகத்தைச் செய்கின்ற அடியவருக்கு அது இனிதாகவே இருந்தாலும் அடியவர்கள் அப்படி உடலை வருத்திக் கொண்டு பக்தியோகத்தைச் செய்கின்றார்களே என்றுதான் எம்பெருமான் நினைப்பானாம். எனவே எம்பெருமானுடைய அபிப்ராயத்தால் அது தவநெறியே என்கிறார் நஞ்சீயர். இது நஞ்சீயர் மட்டுமே காட்டிய பொருளாகும். 3. "கண்டலங்கள் செய்ய கருமேனியம்மான்" என்றருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.” இதற்குப் பொருளுரைக்கின்ற பிற உரையாசிரியர்கள் பரந்து சிவந்த திருக்கண்களையும் கரிய திருமேனியையும் உடைய எம்பெருமான்" என்று மட்டுமே பொருள் உரைக்கின்றனர். ஆனால் நஞ்சீயர் மட்டும் இப்படிக் கண்கள் சிவப்படைந்ததற்கும், திருமேனி கருமை அடைந்ததற்கும் காரணத்தை வெகு அழகாகக் கூறுகின்றனர். ஆழ்வாரோடு கலந்தபடியால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால் எம்பெருமானுடைய திருக்கண்களும் சிவந்து திருமேனியும் நிறம் பெற்றது என்பது நஞ்சீயரின் நயவுரையாகும். 4. எம்பெருமானுடைய அடியவர்களே எல்லாக் காலத்திலும் என்னைக் காப்பவர்கள் என்கின்ற ஆழ்வார் "சலிப்பின்றியாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே" என்று அருளிச் செய்கிறார்." இங்கு 'சலிப்பின்றியாண்டு' என்பதற்கு "வேறே சில ப்ரயோஜனங்களில் சலிப்புடன் புகாதவாறு அடிமை கொண்டு" என்று பிற உரைகளில் பொருள் உரைக்கப்பட்டது. அதாவது எம்பெருமானுடைய அடியவர்களைப் பற்றினால் மட்டுமே மற்ற பயன்களில் ஈடுபடாமல் எம்பெருமானையே பற்றி நிலை நிற்கப் பெறுவர்கள் என்பது அவ்வுரைகளின் கருத்து. ஆனால் இங்கு நஞ்சீயர் மட்டும் வேறு பொருள் உரைக்கிறார். சலிப்பின்றி என்பதற்கு "சிறிதும் சலிக்காமல் என்று பொருள் கொண்டு, எம்பெருமானுடைய அடியவர்கள் பெரியபிராட்டியைப் போன்றவர்களாகையாலே எவ்வளவு குற்றம் கண்டாலும் சலிக்காமல் அவற்றைப் பொறுத்துக்கொண்டு அடிமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று பொருள் கூறுகிறார். 5. ஒரு திருவாய்மொழிக்குப் பயன் கூறுகிற நம்மாழ்வார் "வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே" என்றருளிச் செய்கிறார்.” இதற்கு உரையிடும் பிற உரையாசிரியர்கள் 'இத்திருவாய்மொழி கற்றாரைப் பிராட்டி தனக்கே பரமாகக் கொண்டு ஸமஸ்த துக்கங்களையும் போக்குவள் என்கிறார்' என்று உரையிட்டனர். மேலும் பிராட்டி பலன் கொடுக்க முற்படுவதன் காரணத்தையும் உரைக்கின்ற அவ்வுரையா சிரியர்கள் எம்பெருமானுடைய சீல குணத்தை ஆழ்வாரும் பிராட்டியும் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்றும் அப்படிப்பட்ட சீல குணத்தை அத்திருவாய் மொழியில் ஆழ்வார் அறிந்து கூறியபடியால் மகிழ்ந்து அவருக்குத் தானே பலனைக் கொடுக்க வேண்டும் என்று பிராட்டி முற்படுகிறாள் என்றும் உரை செய்தனர். "இதுக்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவானென்னென்னில்? தனக்கு முன்பே தான் காட்டிக் கொடுத்த ஸம்ஸாரிளை விரும்பும் சீலமாயிற்று, இதில் சொல்லிற்று. இந்த சீல குணம் ஒருவர்க்கும் நிலமன்று. தான் அறிதல். மயர்வறமதிநலம் அருளப் பெற்ற இவர் அறிதல் செய்யுமித்தனையாயிற்று. இப்ரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டாரென்னும் ப்ரஸாதாதிசயத்தாலே ஸர்வேச்வரன் பலம் கொடுக்கிற தசையிலே அவனை விலக்கி நானே இதுக்குப் பலம் கொடுக்க வேணும் என்று தனக்கு பரமாக ஏறிட்டுக் கொண்டு பலம் கொடுக்கும்." என்பது இருபத்துநாலாயிரப்படி உரை. ஈடுழுப்பத்தாறாயிரப்படியிலும் . இவ்வண்ணமே உள்ளது. ஏறக்குறைய, இக்கருத்தையே நஞ்சீயரும் அருளிச் செய்துள்ளாரென்றாலும், இக்கருத்தைப் பிற வ்யாக்யானங்களைக் காட்டிலும் மிகத் தெளிவாகவும் அதே சமயத்தில் சுருக்கமாகவும் அருளிச் செய்துள்ளார் என்பது கருதத்தக்கது. நம்மாழ்வார், இதே திருவாய்மொழியில் "நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை"' என்கிற பாசுரத்தில், எம்பெருமான் தன் திருவடிகளைப் பற்றின அடியவர் திறத்தில் பிராட்டிபக்கலிற் காட்டிலும் அதிகமான அன்பைப் பொழிவான் என்று அருளிச் செய்துள்ளார். தன்னைக் காட்டிலும் அடியவர்களை விரும்பும் இக்குணத்தில் பிராட்டி மிகவும் ஈடுபட்டு இருப்பாள். எம்பெருமானுடைய இச்சிறந்த குணத்தைப் பிராட்டி மட்டுமே அறிந்திருந்தாள். இதை ஆழ்வாரும் அறிந்து இத்திருவாய்மொழியில் வெளியிட்டுள்ளபடியால், எம்பெருமானுடைய இக்குணத்தின் சிறப்பை அறிந்த தனக்கு ஒரு துணையாக ஆழ்வாரைப் பெற்றோம் என்று மகிழ்ச்சி அடைகிறாளாம் பிராட்டி. அந்த மகிழ்ச்சியினால் இத்திருவாய்மொழியைக் கற்பவர்களைத் தனக்கே பொறுப்பாகக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பிராட்டி காத்தருள்வாள் என்கிறார் நஞ்சீயர். "நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் என்கிற இம் மஹாகுணத்திலே ஈடுபட்டிருக்கிற பெரியபிராட்டியார் இக்குணத்தியறிந்தருளின ஆழ்வாரைத் தமக்குத் துணையாகப் பெற்றோமென்னும் ப்ரீதியாலே இவர் அருளிச் செய்த இக்குண ப்ரதிபாதகமான இப்பத்தையும் கற்றவர்களைத் தனக்கே பரமாகக் கொண்டு ஸமஸ்த துக்கங்களையும் போக்கி ரஷித்தருளும் என்கிறார்." இவ்வாறு சுருங்கக்கூறி விளங்க வைத்தல் நஞ்சீயர் உரையின் தனிச் சிறப்பாகும். 6. இவ்வாறு, பிராட்டியே விரும்பிய பலனைக் கொடுத்துக் காப்பவளாயின் அவள் பகவானுக்கு இணையானவள் என்ற கருத்து உடையவரோ நஞ்சீயர் என்னும் ஐயம் உண்டாகிறது. நஞ்சீயர், பெரிய பிராட்டியும் எம்பெருமானுக்கு அடிமை செய்பவளே என்று ஓரிடத்தில் காட்டுகிறார். "பணியானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணிமாயன்"' என்றவிடத்திற்கு உரையிடுகின்ற நஞ்சீயர், பெரிய பிராட்டியாரை அடிமை கொள்வது போலவே தன்னையும் அடிமை கொண்டவன் என்று ஆழ்வாரருளிச் செய்வதாக உரையிடுகிறார். "(பணிமானம் என்று தொடங்கி) அடிமை கொள்ளுமிடத்தில் பெரியபிராட்டியாரோடு ஒக்க என்னை அடிமை கொள்ளுவதும் செய்து, இந்த்ர நீலம் போலே கறுத்த திருநிறத்தையுடையவன்." என்று ஒன்பதினாயிரப்படி உரையில் அருளிச்செய்யப்பட்டுள்ளதுபோல் இருபத்து நாலாயிரப்படியிலோ, ஈடுமுப்பத்தாறாயிரப்படியிலோ கூடக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7. மன்னா மனிசரைப் பாடாமல் எம்பெருமானைப் பாடினால் நிரந்தரமான பேறு கிடைக்கும் என்று உபதேசிக்கும் ஆழ்வார், "மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே"? என்றருளிச் செய்கிறார். இங்கு மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு' என்றருளிச் செய்ததன் உட்கருத்தை விளக்கும் நஞ்சீயர், "மின்னார் மணிமுடி விண்ணவர் தாதை என்றதுக்குக் கருத்து, கவினபாடினவர்கள் தலையிலே முடியை வைத்து அயர்வறும் அமரர்களும் தானும் கொண்டாடும்" என்று உரையிடுகிறார். விரிவான உரைகளான இருபத்துநாலாயிரப்படியிலும், ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் கவிபாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி' என்று சுருக்கமாகவே உரையிடப்பட்டுள்ளபோது சுருக்கமான உரையான ஒன்பதினாயிரப்படியில் இப்படி விரிவாக விளக்கமருளிச் செய்துள்ளது வியப்பிற்குரியதாகும். 8. எம்பெருமான் தன் திருவடிகளில் சேராதவண்ணம் இன்னும் இந்த்ரியங்களால் எத்தனை நாள் நலிவிப்பானோ என்று ஓலமிடும் ஆழ்வார், "ஐவர் திசைதிசை வலித்தெற்றுகின்றனர்"' என்கிறார். இங்கு இந்திரியங்களை ஐவர்' என்ற ஆழ்வாருடைய சொல்லாட்சிநயத்தை (ஐவர்) இந்த்ரியங்களைச் சேதநரைப் போலே பேசுவானென்னென்னில் சில சேதநர் வேணுமென்று கோலி பாதிக்குமாபோலே பாதகம் ஆகையால். --என்று நஞ்சீயா மட்டுமே விளக்கமுரைக்கின்றார். 9. "வண்தமிழ் நூற்க நோற்றேன்" என்று நம்மாழ்வார் அருளிச் செய்கிறார்.” இதற்குப் பொருளுரைக்கின்ற நஞ்சீயர், "வண்தமிழாகையாவது எம்பெருமானை உள்ளபடி காட்டவற்றாகை" என்று உரையிடுகிறார். ஆனால் ஈடு முதலிய உரைகளில் - "பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாயிருக்கை" என்று உரையிடப்பட்டுள்ளன. 10. சில பாசுரங்களின் திரண்ட கருத்தை நஞ்சீயா உரையில் தெளிவாகக் காணலாம். இவை பின்னர் தோன்றிய விரிவான உரைகளில் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதற்பாட்டில் பக்தியோகம் ஸ்வஸாத்யத்தோடே ஸந்தித்தபடியை ஸாக்ஷாத்கரித்து அருளிச் செய்தார். இப்பாட்டில் தம்முடைய உபாயமான ப்ரபத்தி தனக்கு ஸாத்யமான திருவடிகளோடே ஸந்தித்தமையை அநுஸந்தித்து அருளிச் செய்கிறார்." என்று நஞ்சீயர் மட்டுமே தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல அரிய விளக்கங்கள் மிக விரிவான பின்னோர் உரைகளில் கூட இடம் பெறாமையையும் மிகவும் சுருக்கமான உரையான ஒன்பதினாயிரப்படியில் மட்டுமே இடம் பெற்றுள்ளமையையும் உற்று நோக்கும்போது, சுருங்கக் கூறி விளங்க வைக்கும் நஞ்சீயருடைய திறன் நன்கு புலனாகிறது. ---- ஒன்பதினாயிரப்படியும் இருபத்துநாலாயிரப்படியும் நஞ்சீயரின் சீடரான நம்பிள்ளை திருவாய்மொழிக்கு அளித்த விளக்கங்களை அவருடைய சீடர்களான பெரியவாச்சான் பிள்ளையும் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஏட்டில் பொறித்து வைத்தனர். இதனால் அவர்கள் அருளிச் செய்த வ்யாக்யானங்களான இருபத்துநாலாயிரப்படியும், முப்பத்தாறாயிரப்படியும் பெரும்பாலும் ஒன்றோடொன்று ஒத்து விளங்குகின்றன. இருப்பினும் சில இடங்களில் இருபத்துநாலாயிரப்படி உரை நஞ்சீயருடைய ஒன்பதினாயிரப்படி உரையைப் பின்பற்றியே அமைந்துள்ளமையும், ஈட்டில் இடம்பெறாமல் ஒன்பதினாயிரப்படியில் மட்டும் இடம்பெற்றுள்ள விளக்கங்கள் அப்படியே இருபத்துநாலாயிரப்படியில் இடம்பெற்றுள்ளமையும் நோக்கத்தக்கன. அவற்றுள் சிலவற்றைக் கீழ காணலாம் . நின்றனர் இருந்தனர் கடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றுமோர் இயல்வினர் எனநினைவரியவர் என்றுமோரியல்வோடு நின்ற வெந்திடரே. --என்பது நம்மாழ்வார் அருளியபாகரம். ' நிற்பவர்கள், இருப்பவர்கள், கிடப்பவர்கள், திரிபவர்கள், நில்லாதவர்கள், இராதவர்கள், கிடவாதவர்கள், திரியாதவர்கள் (ஆகிய எல்லாருமாய்), என்றும் ஒருபடிப்பட்ட தன்மையை உடையவர் என நினைப்பதற்கும் அரியவராய், இப்படிப்பட்ட தன்மையானது என்றும் உடையவராய் இருப்பவர் எம் திடர் - திடமான (உறுதியான) பிரமாணமான வேதங்களினால் நிலைநாட்டப்பட்ட எம்பெருமானாவார் என்பது இப்பாசுரத்தின் பொருள். இப்பாசுரத்தில் முதலிரண்டு அடிகளால் எல்லா சேதநாசேதங்களினுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் (செயல்கள் செயலின்மை ஆகியவை) எம்பெருமானுடைய அதீநம் என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார். இதற்குக் கீழே "நாமவன்"” என்கிற பாசுரத்தில் எல்லாச் சேதநாசேதங்களினுடைய ஸ்வரூபமும் எம்பெருமானுடைய அதீநம் என்று ஆழ்வார் அருளிச் செய்துவிட்டபடியால் "நின்றனர் என்ற இப்பாசுரத்தில் சேதநாசேதனங்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் எம்பெருமானுடைய அதீநம் என்று கூறுவதில் மட்டுமே நோக்கு என்று உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகின்றனர். எனவே நின்றனர் இருந்தனர்... நின்றிலர் இருந்திலர்...' என்பதற்கு நிற்றல், இருத்தல் முதலிய ப்ரவ்ருத்திகளை (செயல்களை) உடையவர்கள்; நில்லாமை, இராமை முதலிய நிவ்ருத்திகளை (செயலின்மைகளை) உடையவர்கள் என்று பொருளாயினும் இங்கு நிற்றல், நில்லாமை முதலிய செயல்களையும் செயல்கள் இன்மையையும் மட்டுமே குறிப்பதாகக் கொள்ளவேண்டும் என்று உரையிடுகின்ற நஞ்சீயர், இதற்குச் சான்றாக அருணாதிகரண ந்யாயத்தையும் எடுத்துக் காட்டுகிறார். ஒரு யாகம் செய்யும்போது அதற்குச் சோமக் கொடியை வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "கவா ஸோமம் க்ரீணாதி" (பசுவினால் சோமத்தை வாங்கவேண்டும்) என்று கூறப்பட்டுள்ளபடியால் பசுவை விலையாகக் கொடுத்து சோமத்தை வாங்க வேண்டுமென்பது பெறப்படுகிறது. வேறோரிடத்தில் "அருணயா பிங்காக்ஷயா கரீணாதி"! (சிவந்ததாகவும் பொன்னிறக் கண்களை உடையதாகவும் உள்ள பசுவினால் வாங்க வேண்டும்) என்று கூறப்படுகிறது. பசுவை விலையாகக் கொடுத்து சோமத்தை வாங்கவேண்டும் என்பது முன்பே கூறப்பட்டுவிட்டபடியால் இங்கு அப்பசு எப்படி இருக்க வேண்டுமென்று கூறுவதில் மட்டுமே நோக்கு. குறிப்பிட்டுக் கூறுவதனால் பசுவின் சிவப்பு நிறமும் பொன்னிறக் கண்களும் மட்டுமே இங்கு கூறப்படுகின்றன. விசேஷ்யமான (அடைகொளியான) பசுவைக் குறிப்பிடுவது இங்கு நோக்கன்று. அதன் விசேஷணமான (அடைமொழியான) சிவப்பு நிறத்தையும் பொன்னிறக் கண்களையும் மட்டுமே இங்கு குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும். இப்படி விசேஷணத்தை மட்டும் குறிப்பிட்டுக் கூறும் முறையே அருணாதிகரண ந்யாயம் எனப்படும். இதே போல் "நின்றனர்" பாசுரத்திலும் விசேஷ்யமான சேதநா சேதநங்களைக் குறிப்பிடுவது நோக்கமன்று. விசேஷணமான நிற்றல், இருத்தல்... நில்லாமை, இராமை முதலிய செயல்களையும் செயல்களின்மையையும் குறிப்பிடுவதிலேயே நோக்கு என்று உரையிடுகிறார் -நஞ்சீயர். நாம் அவன் - கீழ்ப் பாட்டிலே, ஸ்வரூபதாததீந்யம் ஸித்தமாகையால் இப்பாட்டில் பரவ்ருத்தி நிவ்ருத்யம்சதாததீந்யத்திலே தாத்பர்யமாயிற்று. 'அருணயா பிங்காங்க்ஷ்யா ஸோமம் க்ரீணாதி' என்ற இடத்தில் ஆருண்யாதிகளே விதேயமானாற் போலே. -என்பது நஞ்சீயர் உரை. இதை அப்படியே பின்பற்றிப் பெரியவாச்சான் பிள்ளையும் தமது உரையில் "(நின்றனர் இத்யாதி) . . . . ஸகல சேதநாசேதநங்களுடைய ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விசேஷ்யபர்யந்தாபிதாநம் பண்ணா நிற்க, இங்ஙனே சொல்லுமதென்? என்னில் நாமவன் என்கிற பாட்டிலே ஸ்வரூபஞ் சொல்லுகையாலே இப்பாட்டில் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மாத்ரத்தையே நினைக்கிறது. அருணாதிகரணத்தில் ஆருண்யாதிகளே விதேயமானாற்போலே."' என்றருளிச் செய்கிறார், ஆனால் ஈடுமுப்பதாறாயிரப்படியில் இப்பகுதி வேறுவிதமாக விளக்கப்பட்டுள்ளது. இப்பாசுரத்தில் விசேஷ்யத்தைக் (அடைகொளியான சேதந அசேதநங்களைக்) கொள்ளாமல் விசேஷணத்தை மட்டுமே (அடைமொழியான நிற்றல் முதலிய செயல்களையும் நில்லாமை முதலிய செயல்களின்மையை மட்டுமே) குறிப்பதாகக் கொண்டால் ஸாமாநாதிகரண்யம் பொருந்தாமல் போய்விடும் என்கிறது ஈடு. "நின்றனர் இருந்தனர்... நின்றிலர் இருந்திலர் ..எம்திடர்" என்பது பாசுரம். எம்திடர் என்பதற்குத் திடமான பிரமாணமாகிய வேதத்தினால் நிலைநாட்டப்பட்டுள்ள எம்பெருமான் என்பது பொருள். இங்கு நின்றனர் முதலியவற்றிற்கு நிற்றல்... நில்லாமை.. என்று மட்டும் பொருள் கொண்டால் "நிற்றல்...எம்திடர்" என்று அந்வயம் கூறவேண்டி வரும். நிற்றல் என்பது தொழிற்பெயர். எம்திடர் என்பது எம்பெருமானைக் குறிக்கும் பெயர்ச்சொல். எனவே நிற்கை எம்திடர் என்று கூறினால் பொருள் பொருந்தாமல் போய்விடும். எனவே இங்கு நின்றனர் என்பதற்கு நிற்றல் முதலிய செயல்கள் மட்டுமே முக்கியமாகக் கொள்ளப்பட்டாலும் நிற்கையாகிற செயலை உடையவர் என்று பொருள் கொண்டால்தான் நின்றனர் எம்திடர் என்று பொருள் கொள்ளமுடியும். எனவே நின்றனர் என்பதற்கு நிற்கையாகிற செயலை யுடைய சேதநர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்கிறது ஈடு. " அருணயா பிங்காக்ஷ்யா ஸோமம் க்ரீணாதி' என்கிறவிடத்திலே குண விசிஷ்டவஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும் ஆருண்யாம்சத்திலே தாத்பர்யமாகிறாப் போல, ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஆச்ரயமான வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் அவனதீநமென்று முன்னே சொல்லுகையாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்யம்சத்திலே நோக்கென்று சொல்லுவாருமுண்டு. அப்போது ஸமாநாதிகரண்யம் ஸித்தியாது. ஆக ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச்சப்தம் அவற்றுக்கு ஆச்ரயமான சேதநனைக் காட்டி, அவன் தனக்கு ஈச்வரனை யொழிய ப்ருதக் ஸ்திதியாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே அவனளவுங் காட்டுகிறது. ஆக, விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது." -என்பது ஈடு. இங்கு மேலெழப் பார்க்கும்போது ஒன்பதினாயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி ஆகிய இரு வ்யாக்யானங்களும் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தோடு முரண்பட்டிருப்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவற்றினிடையே முரண் ஏதுமில்லை என்பது கீழ்க்கண்ட விளக்கங்கள் மூலம் தெரியவரும். சேதநாசேதநங்களின் செயல்களையும் செயல்களின்மையையும் மட்டுமே இப்பாசுரத்தில் குறிப்பதாகக் கொள்ளவேண்டும் என்பது முன்பு சுட்டிய இரு வ்யாக்யானங்களின் கருத்து. ஈட்டில் அக்கருத்து அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் பாசுரத்திற்குப் பொருள் உரைக்கும் போது, அத்துடன் நின்றுவிடாமல், நிற்றல் இருத்தல் முதலிய செயல்களைக் கூறி, அச் செயல்களை உடைய சேதனர்களைக் கூறி, அச் சேதநர்களுக்கு அந்தராத்மாவாகவுள்ள ஈச்வரன் வரையில் கூறினால் தான் பாசுரத்தில் உள்ளபடியே நின்றனர்.... எம்திடர் என்று பொருள் கொள்ள முடியும். நின்றனர் என்பதற்கு நிற்கை என்று மட்டும் பொருள் கொண்டால் "நிற்கை... எம்திடர்" என்று அந்வயம் கொள்ளமுடியாது என்று விளக்கப்படுகிறது. இதையே ஸாமாநாதிகரண்யம் ஸித்தியாது என்கிறது ஈடு. ஆகவே பாசுரத்தின் கருத்தை மட்டும் வெளியிடுவனவாக ஒன்பதினாயிரப்படியும் இருபத்துநாலாயிரப்படியும் அமைந்துள்ளன. அத்துடன் நின்று விடாமல் பாசுரத்தில் உள்ள சொற்களுக்குச் சரியான முறையில் அந்வயம் காட்டி, அதே கருத்தை விளக்குகிறது ஈடு. எனவே இங்கு முரண் ஏதுமில்லை. மேலும் "நின்றவொன்றை உணர்ந்தேனுக்கு"! என்ற பாசுரத்தின் ஈடு உரையில் "நின்றனர் இருந்தனரிற்போலே இஸ்ஸாமாநாதிகரண்யத்துக்கு விசேஷணாம்சமான யோக்யதையிலே தாத்பர்யம்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே நின்றனர் இருந்தனர் என்ற பாசுரத்திற்கும் விசேஷணாம்சத்தில்தான் நோக்கு என்பதை ஈடு மறுக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. நின்றனர் என்கிற பாசுரத்தில் உள்ள பதங்களுக்கு அந்வயம் காட்டும்போது நிற்றல் எம்திடர் என்றால் பொருள் பொருந்தாது. எனவே நிற்கையாகிற செயலை உடையவர் எம்திடர் என்று கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுவதில் மட்டுமே நோக்கமுடையது ஈடு என்பது தெளிவு. இவ்வாறு ஈட்டில் இடம்பெறாமல் ஒன்பதினாயிரப்படியிலும் இருபத்து நாலாயிரப்படியிலும் மட்டும் இடம்பெற்றுள்ள கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம். 1. எம்பெருமானைப்பற்றிக் கூறும் ஆழ்வார், "நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்” என்கிறார். தன்னாலே நினைக்கப்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் எம்பெருமான் வித்தாய் - காரணமாய் இருக்கிறான் என்பது இதன் கருத்து என்பதை மூன்று உரைகளுமே எடுத்துக் காட்டுகின்றன. எம்பெருமான் அப்பொருள்களைப் பற்றி நினைக்கும் நினைவு எது என்பதனை நஞ்சீயர் எடுத்துக் காட்டுகிறார். உலகங்களையெல்லாம் அழிக்கும்போது சேதநங்கள் தங்கள் கரணங்களை (இந்த்திரியங்களை)யும் களேபரங்களை (உடல்களையும் இழந்து நிற்கின்றன. மறுபடியும் அவற்றைப் படைக்கும் காலத்தில் அவற்றை நோக்குகின்ற எம்பெருமான் ஐயோ பாவம்! இவை தங்கள் கரணகளேபரங்களை இழந்து வருத்தப்படுகின்றனவே' என்று நினைக்கிறானாம். அந்த நினைவையே ஆழ்வார் நினைந்த என்று குறிப்பிடுகிறார் என்கிறார் நஞ்சீயர். "ஸம்ஹார ஸமயத்திலே புருஷார்த்த உபயோகியான கரண களேபரங்களை இழந்து நோவுபட்டன என்று ஸ்மரிக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் காரணமாய்." என்பது ஒன்பதினாயிரப்படி உரை. அதை அடியொற்றியே இருபத்து நாலாயிரப்படியிலும், "ஸம்ஹார ஸமயத்திலே புருஷார்த்த உபயோகியான கரணங்களை இழந்து கிடக்கிற தயநீய தசையைக் கண்டு ஐயோ என்று நினைப்பதொரு நினைவுண்டு அத்தைச் சொல்லுகிறது." என்றருளிச் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை. ஆனால், ஈடு முப்பத்தாறாயிரப்படியில் 'நினைந்த' என்பதற்கு வேறு இரண்டு பொருள்கள் காட்டப்படுகின்றன. பிள்ளை பேரர்களுடன் கூடி மகிழ்ச்சியாக இருந்த ஒருவன் அவர்களைப் பிரிந்திருக்கும் காலத்தில் தன்னுடைய தனிமையை நினைப்பது போலவும் வெளியூரிலிருக்கும், மகனை நினைத்து, அவனுடன் கூடியிருக்க முடியவில்லையே என்று வருத்தத்துடன் நினைப்பது போலவும் உள்ள நினைவுகளே இங்கு கூறப்படுகின்றன என்றுரைக்கிறது ஈடு. தொடர்ந்து நினைத்தல் என்பது கலத்தல், கூடல் என்ற பொருள்களையுமுடையதாகையாலே, தன்னுடனே கூடிக் கிடக்கின்ற பொருள்களுக்குக் காரணமாய் என்று பிள்ளையமுதனார் கூறிய பொருளையும் குறிப்பிடுகிறது ஈடு. ஆனால் ஒன்பதினாயிரப்படியில் உரைக்கப்பட்டு இருபத்துநாலாயிரப்படியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் ஈட்டில் குறிப்பிடப்படவில்லை. 2. அகங்கார மமகாரங்களை வேரோடு களையவேண்டும் என்ற கருத்தில் "நீர்நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து" என்கிறார் நம்மாழ்வார். அகங்கார மமகாரங்களை வேரோடு போக்குவது எப்படி என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறார் நஞ்சீயர். ஆசாரியருக்குப் பணிவிடைகள் செய்து அவருடைய அருளைப் பெறுவதன் மூலமும், சாஸ்த்ரங்களைத் தொடர்ந்து கற்பதன் மூலமும் இவற்றை வேராடு களையலாம் என்கிறார். " அஹங்கார மமகாரங்கள் செல்லாநின்றனவேயாகிலும், ஆசார்ய ஸேவாப்ராசுர்யத்தாலும், சாஸ்த்ர அப்யாஸத்தின் மிகுதியாலுமாக இவை அபுருஷார்த்தமென்று அத்யவஸிக்கை இவற்றினுடைய வேர் முதல் மாய்க்கையாவது. ஸவாஸநமாக இவற்றை விட்டு எம்பெருமானை ஆச்ரயிக்கை துஷ்கரமாகையால் இதுவே பொருளாகை உசிதம்." என்று உறுதிபடக் கூறுகின்ற ஒன்பதினாயிரப்படியை அடியொற்றியே, "ஆசார்ய ஸேவையாலும் சாஸ்த்ராப்யாஸத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவஸிக்கை." என்று இருபத்துநாலாயிரப்படியிலும் அருளிச் செய்யப்பட்டது. ஆனால் ஈடு முப்பத்தாறாயிரப்படியில் இது போன்ற விளக்கம் இல்லை. "இவை வேர்முதல் மாய்கையாவதென்னென்னில் இது அபுருஷார்த்தம் என்னும் ப்ரதிபத்தியைச் சொன்னபடி" என்றிவ்வளவே உள்ளது. 3. "ஈடுமெடுப்புமிலீசன் "" என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு உரையிடுகின்ற நஞ்சீயர், பிறப்பால் உயர்ந்தவன், பிறப்பால் தாழ்ந்தவன் என்று பாராமல் அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்பவன் என்று அருளிச் செய்கிறார். பெரியவாச்சான் பிள்ளையும் இக்கருத்தையே கூறுகின்றார். "ஆச்ரிதரை ஜாத்யாதிகளுடைய அபகர்ஷமும் உத்கர்ஷமும் நிபந்தனமாக விடுதல் பற்றுதல் செய்யக் கடவனன்றிக்கே நிருபாதிக சேஷியானவன். " என்பது ஒன்பதினாயிரப்படி. "ஜந்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டன் என்று ஸ்வீகரித்தல், அபக்ருஷ்டன் என்று உபேக்ஷித்தல் செய்யாத ஸர்வேச்வரன்." என்பது இருபத்துநாலாயிரப்படி. ஆனால் ஈடு முப்பத்தாறாயிரப்படியில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பற்றி ஒன்றும் கூறாமல், "சிலரை உபேக்ஷித்தல் சிலரை ஸ்வீகரித்தல் செய்யாத ஸர்வேச்வரன்" என்று மட்டுமே பொருள் கூறப்படுகிறது. 4. எம்பெருமானுக்கு இணையானவர்கள் கிடையாது - "இனனிலன் " அவனைவிட மேம்பட்டவர்களும் கிடையாது - "மிகுநரையிலன் " என்கின்றார் நம்மாழ்வார்.” அவனுக்கு இணையானவர்களே இலர் என்னும்போது மேம்பட்டவர்கள் இலர் என்பதைக் கூறவும் வேண்டுமோ? என்ற கேள்விக்கு நஞ்சீயர் மிக அழகான விடைதருகிறார். அவனுக்கு மேம்பட்டவர் எப்படி இருக்க முடியாதோ அப்படியே அவனுக்கு இணையானவர்களும் இருக்க முடியாது என்று காட்டுவதற்காகத்தான் ஆழ்வார் அப்படி அருளிச் செய்கிறார். இங்கு 'மிகுநரையிலன்' என்பது எடுத்துக்காட்டு என்பது நஞ்சீயர் கூறும் கருத்து. "ஒத்தாரை இல்லாத நிலத்திலே மிக்காரை இல்லான் என்கிறது மிக்கார் ஸம்பவியாதாப்போலே ஒத்தாரும் ஸம்பவியாது என்று தோற்றுகைக்காக." என்றருளிச் செய்துள்ளார். ஆனால் இவ்விஷயம் ஈட்டில் காட்டப்படவேயில்லை. 5. ஒரு சில பாசுரங்களில் உள்ள தொடர்களுக்கு நயமான கருத்தைக் கூறுவதிலும் நஞ்சீயரைப் பெரியவாச்சான்பிள்ளை பின்பற்றுகிறார். "வாய்த்த என் நான்முகனே!"! என்று ஆழ்வார் அருளிச் செய்கிறவிடத்தில் பிரமனை உண்டாக்கினவன் என்று பொருள் கூறும் நஞ்சீயர், "ப்ரஹ்மாவை உண்டாக்கின குணத்தை அநுஸந்தித்துப் ப்ரீதராய் என்னுடைய நான்முகனானவனே என்கிறார்." என்று உட்கருத்து உரைக்கின்றார். ஈட்டில் இடம் பெறாத இக்கருத்து இருபத்துநாலாயிரப்படியில் இடம்பெற்றுள்ளது. 6. "என்திருமார்வன்றன்னை "” என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். "தன்னுடைய மஹிஷீலாபம் ஸ்வாதீனமானாப்போலே ருத்ராதிகளுடைய மஹிஷீலாபமும் தன்னாலேயாம்படி இருந்தவனை " என்று, இங்கு நஞ்சீயர் உரையிட்டுள்ள கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளையும் பின்பற்றுகிறார். 7." அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்"* என்று எம்பெருமானை வேண்டுகிறார் நம்மாழ்வார். இங்கு நஞ்சீயர். " அறிவிலேனுக்கு அருளும் இதுவன்றோ உன் குணவத்தை. அறிவாரை உயிராக உடையனாயிருக்கை உனக்கு ஏற்றமோ? அறிவில்லையாகில் அருளக் கடவதோ என்னில், அறிவில்லாதார்க்கு அருளுகையன்றோ அருளுகையாவது, அறிவுடையார்க்கு அருளுகை ஏற்றமோ? என்றும் சொல்லுவர்." என்று பொருள் உரைக்கின்றார். பெரியவாச்சான் பிள்ளையும் இக்கருத்தைப் பின்பற்றி, "அறிவில்லையாகில் அருளக் கடவதோ என்ன, ஸர்வஜ்ஞரான நித்யஸூரிகளுக்கு க்ருபை பண்ணவோ? தளர்ந்தவிடமன்றோ க்ருபைக்கு விஷயம்" என்றருளிச் செய்கிறார். இவை ஈட்டில் இடம்பெறவில்லை. 8. "நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே"! என்று நம்மாழ்வார் தம்முடைய உடலை எம்பெருமான் உருக்குவதாக அருளிச் செய்கிறார். இங்கு "உருக்கின்ற நெடுமாலே" என்றுள்ள சொற்றொடர் நயத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "இப்படி சைதில்யத்தை எனக்குப் பிறப்பியா நின்று வைத்து எட்டாதிருக்கிறவன் என்றுமாம்" என்று உரையிடுகிறார். இங்கு "நெடுமால்" என்பதற்கு மிகப் பெரியவன் என்ற பொருளில் எட்டாதிருக்கிறவன் என்று நஞ்சீயர் கொண்ட பொருளையே பெரியவாச்சான் பிள்ளையும் கொண்டு உரைவரைந்துள்ளார். 9. "செந்தாமரைக் கண்ணா - தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்"* என்று வேண்டுகிறார் நம்மாழ்வார். " அழகிய கண்களாலே நோக்கி ஹேயனான (தாழ்ந்தவனான) என்னை உன் திருவடிகளிலே சேரும்படி பார்த்தருள வேணும். "செந்தாமரைக் கண்ணா" என்றது கண்களாலே நோக்க வேணுமென்ற கருத்தாலே." என்று விளக்கம் காட்டுகிறார். இக்கருத்தே இருபத்துநாலாயிரப்படியிலும் காட்டப்படுகிறது. 10. எம்பெருமானைப் போவே அநுகரிக்கின்ற பராங்குச நாயகியைக் கண்ட அவளுடைய தாயார் எம்பெருமான் இவள் மீது ஆவேசித்திருப்பதாகவே நினைத்து, "செய்ய கமலக் கண்ணன் ஏறக்கொலோ”” என்கிறாள். இதற்கு "இவள் கண்ணினழகாலும் அவன் ஆவேசித்தாப்போலே இரா நின்றது" என்றுரையிடுகிறார் நஞ்சீயர். இதேபோல் "உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ" என்றவிடத்திலும் "வார்த்தை சொல்லும் போதையழகைச் சொல்லிற்றாகவுமாம்" என்று உரையிடுகிறார். இக்கருத்துகள் இருபத்துநாலாயிரப்படியிலும் இடம்பெற்றுள்ளன. 11. "தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெறிவுற்றே"் என்றருளிச் செய்கிறார் ஆழ்வார். "அவன் செய்யும் சேமம்" என்று ஆழ்வார் அருளிச் செய்வதன் உட்கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "நித்யகைங்கர்யத்தைக் கொடுத்தருளி, இவனுக்கு ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருந்தபடியை. . . . " என்று உரையிடுகின்றார். இதைப்பின்பற்றிப் பெரியவாச்சான் பிள்ளையும், "இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்குமென்னுதல்" என்றருளிச் செய்கிறார். இப்படி எம்பெருமான் தன் அடியவர்களுக்கு எல்லாம் செய்தாலும், ஒன்றும் செய்யாதவனைப் போலே என்ன செய்யலாம்' என்றிருக்கின்றான் என்பதையே ஆழ்வார் அவன் செய்யும் சேமம்' என்று குறிப்பிடுகின்றார் என்று நஞ்சீயரும், அவரைப் பின்பற்றிப் பெரியவாச்சான் பிள்ளையும் காட்டிய பொருள் ஈட்டில் இடம் பெறவில்லை. சில பாசுரங்களில் ஆழ்வாருக்கு அப்போது ஒடுகின்ற தசைக்குப்(நிலைக்கு) பொருத்தமாக பாசுரங்களுக்கு விளக்கமளிப்பதிலும் நஞ்சீயரை அப்படியே பின்பற்றுகின்றார் பெரியவாச்சான்பிள்ளை. 12. பராங்குசநாயகியின் திருத்தாயார், தன்னை விட்டுப் பிரிந்து திருக்கோளூர் சென்ற தன் மகளின் நிலையினை விரித்துரைக்கும் "உண்ணும் சோறு" என்கிற திருவாய்மொழியில் "எம்மை நீத்த என் காரிகையே" என்கிறாள் தாயார். "இத்திருவாய்மொழியில் பலவிடத்திலும் என்பெண்பிள்ளை என்று சொல்லுகைக்குக் காரணம் அவள் நசையற்ற பின்பும் அவள்மேல் தனக்கு நசையறாமை." என்று உரையிடுகின்றார் நஞ்சீயர். தன்னை விட்டகன்ற பின்பும் தனக்கு அவள் மீது உள்ள அன்பு காரணமாக என் காரிகை என்கிறாள் தாயார் என்ற செய்தி இருபத்துநாலாயிரப்படியில் இடம்பெற்றுள்ளது. ஈட்டில் இடம் பெறவில்வை. 13. எம்பெருமானோடு கலந்து பிரிந்து அவனுக்குத் தூதுவிடுகின்ற பராங்குசநாயகி, தன்னை, "கொடிய வல்வினையேன்"' என்று கூறிக் கொள்கிறான். "அவன் உபேச்ஷித்தாலும்(கைவிட்டாலும்) அவனாலல்லது செல்லாத பாபத்தை உடையேன்" என்று பராங்குச நாயகி இங்குக் கூறுவதாக நஞ்சீயரும் பெரியவாச்சான் பிள்ளையும் மட்டுமே உரையிட்டுள்ளனர். 14. எம்பெருமானைப் பிரிந்திருக்கின்ற வருத்தத்தினால் பராங்குசநாயகி கதறிக் கூறுமவற்றைத் தாய் கூறும்போது "என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா" என்னும் என்கிறாள். இங்கு, "தாமரைக் கண்ணா" என்னும் சொல் நயத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "உன் கண்ணழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட நீ, என் ஆர்த்தி (துன்பம்) தீரக் கண்களாலே நோக்கியருளப் பார்த்தாயோ இல்லையோ என்னும்" என்று தன் மகள் கூறுவதாகத் தாய் கூறுகிறாள் என்றுரையிடுகின்றார். இதற்கு முன் பாசுரத்திலும் "தாமரைக் கண் என்றே தளரும்" என்றுள்ளதைக் கருத்தில் கொண்டு நஞ்சீயர் காட்டும் இவ்விளக்கம் இருபத்து நாலாயிரப்படியிலுமுள்ளது. 75. "மூவுலகாளியே என்னும், கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும், நான்முகக் கடவுளே என்னும், வடிவுடை வானோர் தலைவனே என்னும்" என்று மகள் வாய்புலற்றுவதாகத் தாய் கூறுகின்றாள். இங்கு "இந்திரனுக்கும் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவர்களுக்குத் தலைவனானவனே! நித்யசூரிகளுக்குத் தலைவனானவனே! என்கிறாள் பராங்குச நாயகி" என்று உரையிட்ட நஞ்சீயர், தொடர்ந்து, "அநந்யபரரோடு அந்யபரரோடு வாசியின்றிக்கே எல்லார்க்கும் நிர்வாஹகனான நீ உன்னாலல்லது செல்லாதிருக்கிற என்னை ரக்ஷியாதொழிவதே என்று கருத்து." என்றருளிச் செய்கிறார். அதாவது எம்பெருமானையே பற்றியிருக்கிற. நித்யசூரிகளுக்கும், எம்பெருமானை விரும்பாமல் செல்வம் முதலிய பயன்களையே விரும்பும் இந்திரன், சிவன், பிரமன் முதலியவர்களுக்கும் ஒரு வேறுபாடில்லாமல் தலைவனாக இருக்கின்றவன், தன்னை விட்டுப் பிரிந்தால் தரித்திருக்க முடியாத என்னைக் காப்பாற்றாமல் விடுகிறானே என்று ஆழ்வார் (பராங்குச நாயகி) கதறுகிறார் என்று நஞ்சீயர் உரைத்த இக்கருத்தை அப்படியே ஏற்று உரை வரைகிறார் பெரியவாச்சான் பிள்ளை. "அந்யபரரான ஈச்வராபிமானிகளோடு அநந்யபரராய் நிர்மமரானாரோடு வாசியற எல்லார் காரியமும் செய்கிற நீ உன்னாலல்லது செல்லாதிருக்கிற எனக்கு உதவாதொழிவதே என்கை." என்பது இருபத்துநாலாயிரப்படி உரை. இக்கருத்து ஈட்டில் இடம் பெறவில்லை, 16. எம்பெருமான் தன் திறத்துச் செய்த பேருபகாரத்தைக் கூறுகின்ற ஆழ்வார், "பிரியாதாட்செய் என்று பிறப்பறுத்து ஆளறக் கொண்டான்" என்றருளிச் செய்கிறார். இப்படி ஆழ்வார் அருளிச் செய்வதன் கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "உபயவிபூதியிலும் தம்மையொழியத் திருவாய்மொழி பாடப் பெற்றாரில்லை என்று இவர்க்குக் கருத்து." என்று உரையிடுகின்றார். இதையே பெரியவாச்சான்பிள்ளையும் தமது உரையில் காட்டியிருக்கிறார். இக்கருத்தும் ஈட்டில் இடம் பெறவில்லை. 17. திருவாய்மொழியின் கடைசிப் பாசுரமான "அவாவறச்சூழ்"” என்கிற பாசுரத்தின் உரையில் நஞ்சீயர், திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களிலும் நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துகளைச் சுருக்கமாகத் தொகுத்துக் காட்டுகிறார். முடிவில் நம்மாழ்வார் திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகத்தைப் பற்றி அருளிச் செய்துள்ள பாசுரங்களை எடுத்துக் கூறி, "இவ்வைந்து அர்த்தமுமே இப்ரபந்தத்துக்குப் ப்ரதாநார்த்தங்கள்" என்று குறிப்பிடுகிறார். இவற்றைப் பின்பற்றிப் பெரியவாச்சான்பிள்ளையும் தமது இருபத்துநாலாயிரப்படி உரையின் முடிவில் அர்த்தபஞ்சகத்தைப் பற்றிக் கூறி, "இவ்வர்த்தங்கள் இப்ரபந்தத்துக்கு ப்ரதாநார்த்தங்களென்று கருத்து" என்று கூறுகிறார். ஆனால் இக்கருத்துகள் ஈடுமுப்பதாறாயிரப்படியில் இடம் பெறவில்லை. இப்படிப் பல இடங்களில் நஞ்சீயருடைய நயவுரைகள் இருபத்து நாலாயிரப்படியில் இடம் பெற்றிருக்க, ஈடுமுப்பத்தாறாயிரப்படியில் இடம் பெறாமலே போயிருக்கின்றன. இனி, பிற உரைகளுக்கு முன்னோடியாக ஒன்பதினாயிரப்படியில் இடம்பெற்றுள்ள கூறுகளைக் காண்போம். பிரவேசம் (உரைப்பாயிரம்) திருவாய்மொழிக்கு முதன் முதலில் உரை எழுதியவரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் தம்முடைய உரைக்கு முன்னர் பிரவேசம் (பாயிரம்) எதுவும் எழுதவில்லை. நேரடியாகவே பாசுரத்திற்கு உரையைத் தொடங்கியுள்ளார். ஆனால் நஞ்சீயர் தமது ஒன்பதினாயிரப்படி உரைக்கு முன்னர் மிக மிக விரிவான முன்னுரை ஒன்றை அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழியை அருளிச் செய்த நம்மாழ்வாரின் பெருமை, திருவாய்மொழியின் பெருமை இவற்றை விளக்கி, நம்மாழ்வார் அருளிச் செய்த பிற திவ்யப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றின் திரண்ட பொருளைக் கூறி, திருவாய்மொழியின் கருத்தையும். இம்முன்னுரையில் சுருங்கக் கூறுகிறார். இவ்வுலகிலுள்ளோர்கள் உய்வு பெற வேண்டும் என்பதற்காகவே ஆழ்வார் திருவவதாரம் செய்தருளினார். ஒவ்வொரு வகையில் லக்ஷமணன், பரதன், அர்ஜுநன், தசரதன், பிரஹ்லாதன் ஆகியோருக்கு ஒப்பானவரான ஆழ்வார், வேதத்தின் உட்கருத்தை விளக்கும் வகையில் திவ்யப்ரபந்தங்களை அருளிச் செய்தார். எம்பெருமானை அனுபவிக்கத் தொடங்கிய ஆழ்வார் அவ்வனுபவத்தைப் பாசுரங்களாக வெளியிட்டார். மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆழ்வாருடைய அவா பாசுரங்களாக வெளிப்பட்டன. இவ்வாறு திருவாய்மொழி தோன்றிய முறையை விளக்குகின்ற நஞ்சீயர், பின்னர் பற்பல கேள்விக் கணைகளைத் தொடுத்து, அவற்றிற்குத் தாமே விடையும் பகர்கிறார். 1. எம்பெருமானுடைய அருளினால் திருவாய்மொழி அருளிச் செய்யப்பட்டது என்றால் திருவாய்மொழி இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு அமைந்தது எங்ஙனம்? 2. இவை என்ன கோடியிலே அமைக்கப்பட்ட பிரபந்தங்கள்? 3. இவற்றுக்கு மூலம் எது? 4. அது மூலம் என்று அறியும்படி எங்ஙனே? 5. திருவாய்மொழிப் பாசுரங்கள் பிரமாணம் என்று அறிவது எப்படி? 6. இவற்றில் தெரிவிக்கப்படுபவர் யார்? 7. இவற்றைக் கற்பதற்குத் தகுதியுடையவர்கள் யாவர்? 8. இவற்றை அனுபவிக்கத் தக்கவர்கள் எவர்? 9. இவற்றை ஆழ்வார் எதற்காக இயற்றினார்? என்று இப்படிப்பட்ட கேள்விகளைச் சில அறிவிலிகள் எழுப்பியதாகக கூறி ஒவ்வொரு கேள்விக்கும் முறையாக விடையும் தருகிறார். 1. பிரமனின் அருளால் வான்மீகி முனிவர் கூறிய சொற்கள் இலக்கண வரம்புக்கு உட்பட்ட சுலோகங்களாக வெளிப்பட்டாற் போலவே எம்பெருமானுடைய அருளினால் ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியும் இலக்கண நெறிப்படியே அமைந்த பாசுரங்களாக மலர்ந்தன. 2. இப்பாசுரங்கள் புருஷார்த்தங்களைத் தெரிவிக்கின்ற நூல்களில் முதன்மையானவை. 3. எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவித்து அதனால் எழுந்த மகிழ்ச்சியே இப் பாசுரங்கள் தோன்றுவதற்கு மூலமாக அமைந்தது. 4. பகவானுடைய அருளால் பெற்ற ஞானக்கண்ணைக் கொண்டு இப்பாசுரங்கள் பிறந்தன என்பதைப் பாசுரங்களில் உள்ள ஒசையின் சிறப்பாலும் சொற்களின் நயத்தாலும் நன்கறியலாம். 5. வேதத்தின் உட்பொருள் வல்ல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளமையாலும் உலக வாழ்க்கையில் வெறுப்புற்றவர்களுக்கு அறிய வேண்டிய வேதக் கருத்துக்களை இப் பாசுரங்களில் காண்கையாலும் இவை உயர்ந்த பிரமாண நூல்கள் என்றறியலாம். 6. எல்லோராலும் அடையத் தக்கவனான திருமகள் கேள்வனே இப்பாசுரங்களில் தெரிவிக்கப்படுபவன். 7. உலக வாழ்க்கையில் விருப்பத்தைத் துறந்து எம்பெருமான் திருவடிகளில் எல்லாவித கைங்கரியங்களையும் செய்ய வேண்டும் என்று விரும்புபவனே இவை கற்கத் தகுதியுடையவன். 8. மோக்ஷத்தில் விருப்பமுடையவர்கள் (முமுக்ஷுக்கள்), பரமபதத்தில் உள்ளவர்களான முக்தர்கள், நித்யசூரிகள், பகவான் ஆகியோர் இவற்றை அனுபவிக்கத் தக்கவர்கள். 9. பகவானுக்குச் செய்யக் கூடிய கைங்கரியம் என்கின்ற புருஷார்த்தம் இப்படிப்பட்டது என்று அறிவிப்பதற்காகவே இப்பாசுரங்கள் தோன்றின. இவ்வாறு அறிவுக் கேடர் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடைகளைப் பகர்ந்த நஞ்சீயர் தொடர்ந்து மேலும் சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். பெரியோர்களிடம் அடிபணிந்து கேட்காத சிலர் கீழ்க்கண்ட ஐயங்களை எழுப்பினர். 1. ஆழ்வாருடைய பாசுரங்கள் வைதிகர்களால் தாழ்ந்த மொழி என்று கூறப்படுகின்ற தமிழில் அமைந்தன. 2. இவற்றைப் பெண்களும், தாழ்குலத்தில் பிறந்தவர்களும் கற்கின்றனர். 3. நான்காம் வருணத்தில் பிறந்தவர் இயற்றியவை. 4. ஒரு குறிப்பிட்ட தேசத்தில் மட்டுமே (தமிழ்நாட்டில் மட்டுமே) வழங்கப்படுவது. 5. புறச்சமயிகளும் கற்கின்றனர். 6. வேதங்களிலும், தர்ம சாஸ்த்ரங்களிலும், இதிகாச புராணங் களிலும் விலக்கப்பட்டதான காமத்தைப் பலமுறை பேசுகின்றன. 7. அவற்றில் புருஷார்த்தங்களாகக் கூறப்பட்ட செல்வம், கைவல்யம் இவற்றை விலக்குகின்றன. இக்காரணங்களால் ஆழ்வாருடைய பாசுரங்களைப் பிரமாணமாகக் கொள்ள முடியாது என்று சிலர் ஆட்சேபித்ததாகக் கூறி, . இவற்றிற்கும் தக்க விடைகளை நஞ்சீயர் தருகிறார். 1. வடமொழி தவிர்த்த ஏனைய மொழிகளில் அமைந்த நூல்கள் கற்கத் தகாதவை என்ற விதி இறைவனைப் பற்றிய நூல்களைத் தவிர பிற நூல்களுக்கு மட்டுமே பொருந்தும். இறைவனைப் பற்றிய பாசுரங்களுக்கு அவை பொருந்தா என்று மாத்ஸ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. ஆழ்வார் தம்முடைய கருணையினால் வேதத்தைக் கற்க இயலாதவர்களான பெண்களும், தாழ்குலத்தவர்களும் வேதார்த்தங்களை அறிய வேண்டும் என்பதற்காகத் தமிழ்மொழியில் அருளினார். 3. எம்பெருமானே பல பிறவிகள் பிறந்து அருளும் பேற்றைப் பெற்றவரும், எம்பெருமானுடைய அருளை நிரந்தரமாகப் பெற்றவரும், மெய்யுணர்வுக்கு வேண்டிய தத்வம், ஹிதம் இவற்றில் வல்லவரும், அவற்றைத் தம்முடைய பாசுரங்கள் மூலமாக உலகிற்கு உணர்த்தத் தொடங்கியவருமான ஆழ்வார் தாழ் குலத்தில் பிறந்த பேரறிஞர்களான விதுரர், சபரி போன்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர். 4. தமிழ் மொழி நடையாடுகின்ற தேசங்கள் பலவிடங்களிலும் உள்ளன. மேலும் பிற மொழிகளையே அறிந்தவர்களும் கூட ஆழ்வார் பாசுரங்களின் பெருமையை உணர்ந்து ஆழ்வார் பாசுரங்களைக் கற்பதற்கு ஏற்ப தமிழ்மொழி நடையாடும் தேசத்தில் பிறந்திலோமே என்று மனம் வருந்துகின்றனர். 5. இவற்றின் நன்மையை அறிந்த புறச்சமயிகளும் இவற்றைக் கற்கின்றனர் என்பது பெருமையையே உண்டாக்கும். 6. உபநிஷத்துக்களில் வேதநம் என்றும் உபாஸநம் என்றும் கூறப்படும் பக்தியையே ஆழ்வார் காமம் என்று குறிப்பிடுகிறார். " 7. ஐச்வர்யம், கைவல்யம் ஆகியவை அளவில் குறைந்தவை, நிலையற்றவை என்கின்ற காரணத்தாலும் எம்பெருமானைப் பற்றுகை என்பது அளவில்லாத இன்பத்தைத் தருவதோடு நிலையானதும் கூட என்பதனால்தான் அவற்றை ஆழ்வார் விலக்கினார். ஆழ்வாருடைய பாசுரங்கள் எம்பெருமானை நன்கு காட்டுகின்றன. பக்தியைத் தோற்றுவிக்கின்றன. தோன்றிய பக்தியை வளர்க்கின்றன. கேட்கும் போதே செவிக்கு இனிய செஞ்சொற்களாக அமைந்துள்ளன. கூறப்படும் அர்த்தங்களுக்கு வேதங்களையே ஆதாரமாகக் காட்டுகின்றன. உலகின் தோற்றத்திற்குப் பரம்பொருளே காரணமென்றும், பரம்பொருளைப் பற்றிய அறிவே வீடு பேறு தரும் என்றும் கூறுகின்றன. இக்காரணங்களால் வேறு பிரமாண நூல்களைக் காட்டிலும் ஆழ்வாருடைய திவ்யப் பிரபந்தங்களே சிறந்த பிரமாண நூல்கள் என்று வைதிகர்களில் தலை சிறந்தவர்கள் கூறியதாக நஞ்சீயர் எடுத்துக் காட்டுகின்றார். தொடர்ந்து மேலும் சில ஐயங்களுக்கும் நஞ்சீயரே விடைதருகின்றார். ஐயம்: எம்பெருமானுடைய அருளாலே அவனை அனுபவித்துப் பூர்ணரான ஆழ்வார், அவனைப் பிரிந்து வருந்துவதாகப் பேசுவது எங்ஙனம்? விடை: எம்பெருமானுடைய அருளால் அவனை அனுபவிக்கத் தொடங்கிய ஆழ்வாருக்கு எம்பெருமானுடைய ஒரு குணத்தை அனுபவிக்கத் தொடங்கியதுமே தாழ்ந்த விஷயங்களில் வெறுப்பு பிறந்து எம்பெருமானுடைய எல்லாக் குணங்களையும் உடனே அனுபவிக்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. உடனே அந்த அவா நிறைவேறாதபடியால் ஆழ்வார் வருந்துகின்றார். எம்பெருமான் மீது அளவற்ற பக்தியை உடைய ஆழ்வார் அவனுடைய குணங்களை அனுபவிப்பதையே சுகம் என்றும் அவற்றை அனுபவியாத போது துக்கம் என்றும் கொண்டவர். தாம் அவனை அனுபவிக்கின்றபோது தம்மைப்போலவே எல்லாரும் இன்பமுற்றிருப்பதாகவும், தாம் துன்பப்படும் போது எல்லாரும் தம்மைப் போலவே துன்பப்படுவதாகவும் நினைப்பர். இப்படி இன்பமும் துன்பமும் மாறி மாறித் தொடர்ந்து வருவதனால் இவருக்கு சிந்தயந்தியின் தன்மை எப்பொழுதும் உள்ளதொன்றாகும். உலகிலுள்ளவர்கள் சோறு, தண்ணீர், பெண்கள் முதலிய வற்றையே தாரகம், போஷகம், போக்யம் என்று கொண்டிருக்கையில் ஆழ்வாருக்கு மட்டும் எல்லாம் எம்பெருமானே என்பது எங்ஙனம்? கோசல நாட்டிலிருந்த மனிதர்களும் செடிகொடிகளும் கூட ராமனுடைய குணங்களிலேயே ஈடுபட்டு அவனுக்குப் பட்டாபிஷேகம் என்ற போது தாங்கள் மகிழ்ந்தும், வனவாசம் என்றபோது வாடியும் இருந்ததைப் போலவே ஆழ்வாரும் இருந்தார். ஆழ்வாருக்கு எம்பெருமானோடு உண்டான ஸம்ச்லேஷம் (கலவி) என்பது யாது? விச்லேஷம் (பிரிவு) என்பது யாது? எம்பெருமானை அனுபவிக்கின்ற காலத்தில் அவனை நேரே கண்ணால் காண்பது போன்ற உருவெளிப்பாட்டின் தோற்றமே கலவி. இப்படி மனத்தினால் அனுபவித்த அனுபவத்தை உண்மையில் பெற வேண்டும் என்ற அவா ஏற்பட்டு அது உடனே பெறாமையால் வந்த கலக்கமே பிரிவு. எல்லாம் வல்லவனும் எல்லாமறிந்தவனும் கருணையுள்ளவ னுமான எம்பெருமான் ஆழ்வாருக்கு மாநஸ அனுபவமான கலவியையே தொடர்ந்து நடத்தாமல் அது இடையிடையில் தடைபடும்படி செய்தது ஏன்? ஏற்கெனவே அனுபவித்த அனுபவமானது தரிப்பதற்கும், மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் என்ற அவாவைத் தூண்டுவதற்குமே எம்பெருமான் அப்படிச் செய்தான். இவ்வாறாகப் பல கேள்விகளைப் பிறர் கேட்பதாகத் தாமே கேட்டும் அவற்றிக்குத் தகுந்த விடைகளை நஞ்சீயர் தமது உரையின் பிரவேசத்தில் தருகிறார். திருவாய்மொழி, அர்த்த பஞ்சகத்தை விளக்கவே அவதரித்தது; அதிலும் குறிப்பாக எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கரியமாகிய பலனைக் குறிப்பிடுவதிலேயே முக்கிய நோக்குடையது; அதற்காகவே மற்ற நான்கு அர்த்தங்களும் கூறப்படுகின்றன என்கிறார் நஞ்சீயர். தொடர்ந்து, ஆழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களின் கருத்துகளையும் ஒரே வரியில் சுருக்கமாகக் காட்டுகிறார். ஆழ்வார், திருவிருத்தத்தில், எம்பெருமானை அனுபவிப்பதற்கு விரோதியான இவ்வுலக வாழ்க்கையை அறுத்துத்தர வேண்டும் என்று எம்பெருமானை வேண்டுகிறார். திருவாசிரியத்தில், எம்பெருமானைப் பூர்ணமாக அனுபவித்து மகிழ்கிறார். பெரிய திருவந்தாதியில், எம்பெருமானை மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்து அவனை நினைத்தும் பேசியும் தரிக்கிறார். திருவாய்மொழியில், எம்பெருமானுடைய அருளாலே அவனைக் கண்டு அனுபவித்து உடல் தொடர்பாகிய தடையும் நீங்கப் பெற்று எம்பெருமானை அடைந்தபடியைப் பேசுகிறார் ஆழ்வார் என்று குறிப்பிடுகிறார் நஞ்சீயர். இவ்வாறு நஞ்சீயர் திருவாய்மொழிக்கு அருளியுள்ள பிரவேசமானது பின்னர் தோன்றிய வ்யாக்யான ப்ரவேசங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வ்யாக்யானம் அருளிச் செய்யும் போது பிரவேசம் என்ற முன்னுரையை அமைக்க வேண்டும்; நூலில் சொல்லப்பட்ட விஷயத்தின் சிறப்பு, நூலின் சிறப்பு, நூலாசிரியரின் சிறப்பு ஆகியவற்றை அம்முன்னுரையில் சுட்டிக் காட்ட வேண்டும்; நூல் முழுமையிலும் தோன்றக் கூடிய ஐயங்களை எழுப்பி அவற்றிற்குத் தக்க விடைகளைத் தொடக்கத்திலேயே கூறித் தெளிவுறுத்திட வேண்டும் என்பன போன்ற கோட்பாடுகளையெல்லாம் இம்முன்னுரையில் அமைத்து வ்யாக்யான பிரவேசங்கள் அனைத்திற்கும் இலக்கணம் வகுத்தவர் நஞ்சீயரே ஆவர். நஞ்சீயருடைய சீடரான நம்பிள்ளை திருவாய் மலர்ந்தருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியின் முதல் பிரவேசமும் நம்பிள்ளையின் சீடரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருபத்து நாலாயிரப்படியின் பிரவேசமும், நஞ்சீயர் அருளிச் செய்த பிரவேசத்தினை அடியொற்றிச் சிறிதும் வேறுபாடின்றி அமைந்துள்ளது கொண்டே இதை நன்குணரலாம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நம்பிள்ளையின் ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையே காலக்ஷேப கிரந்தமாகக் கொள்ளப்பட்டு வழக்கிலும் இருந்து வருகிறது. எனவே ஈடுமுப்பத்தாறாயிரப்படியின் பிரவேசமே அனைவராலும் நன்கு ஆராயப்பட்டு அப்பிரவேசத்திலுள்ள கருத்துக்கள் அனைத்தும் நம்பிள்ளையால் அருளிச் செய்யப்பட்டவை என்றே கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நஞ்சீயரின் ஒன்பதினாயிரப்படி உரையிலுள்ள கருத்துக்களே அடி பிறழாமல் இருபத்துநாலாயிரப்படி உரையிலும், ஈடுமுப்பத்தாறாயிரப்படி உரையிலும் இடம் பெற்றுள்ளதைக் காணும் போது இக்கருத்துக்கள் முதன் முதலில் நஞ்சீயராலேயே தமது சீடர்களுக்கு அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. நஞ்சீயர் உரைக்கு முன்னர் எழுந்த ஒரே உரையான ஆறாயிரப்படியில் பிரவேசம் எதுவும் இல்லாததும் இக்கருத்துகள் வேறு எங்கும் கூறப்படாததும் இங்கு குறிப்பிடத்தக்கன. ஆக, பிரவேசத்தினை முதன் முதலில் அருளிச் செய்தவர் நஞ்சீயரே என்பது உறுதியாகிறது. அவதாரிகைகள் (பதிக முன்னுரைகள்) தம்முடைய வியாக்கியானத்திற்கு மிகவும் விரிவான முன்னுரை வரைந்த நஞ்சியர் ஒவ்வொரு பதிகத்திற்கு முன்பும் ஒர் அழகிய முன்னுரையை அருளிச் செய்கிறார். ஒவ்வொரு பதிகத்தையும் திருவாய்மொழி என்றே குறிப்பிடுகிறார் அவர். முதல் திருவாய்மொழியில், இரண்டாம் திருவாய்மொழியில். . . . என்று ஒவ்வொரு பதிகத்தின் அவதாரிகையிலும் தவறாது குறிப்பிடுகிறார். அவ்வுரைக்கு முன்னர் எழுந்த உரையான ஆறாயிரப்படியிலும் அவதாரிகைகள் காணப்பட்டாலும் பல திருவாய்மொழிகளுக்கு அவதாரிகைகள் அருளிச் செய்யப்படவில்லை. ஒரு சில திருவாய்மொழிகளின் முன்னுரைகள் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் அமைந்துள்ளன.” சில அவதாரிகைகள் முற்றுப் பெறாத வாக்கியங்களாகவே அமைந்துள்ளன.” ஆனால் ஒன்பதினாயிரப்படியில் இக்குறைகள் இல்லாமல் எல்லாத் திருவாய்மொழிகளுக்கும் அவதாரிகைள் விளக்கமாகவே அமைந்துள்ளன. ஒரு திருவாய்மொழிக்கும் அதற்கு முன் திருவாய்மொழிக்கும் உள்ள (தொடர்பு) ஸங்கதி, அந்தந்தத் திருவாய்மொழியில் ஆழ்வாருக்கு ஓடுகின்ற மனநிலைக்குக் காரணம் முதலியவை அழகிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. 1 எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு அனுபவித்த ஆழ்வார் மிகவும் மகிழ்ச்சியுடன் எம்பெருமானைப் பெற்றவர்களில் எனக்கு நிகர் எவரும் இலர் "வீற்றிருந்து”* என்று தொடங்கும் திருவாய்மொழியில் தம்மைக்கொண்டாடிப் பேசுகிறார். ஆனால் உடனே அடுத்த திருவாய்மொழியில் ஆழ்வார் மிகவும் துன்பத்தை அடைந்து, தாமான தன்மையையும் இழந்து தம்முடைய நிலையைத் தோழிமார் தெரிவிப்பதாகப் பாசுரங்கள் அமைந்துள்ளன. முன் திருவாய்மொழியில் மிக்க மகிழ்ச்சியுடனிருந்த ஆழ்வார் அடுத்த திருவாய்மொழியில் அளவற்ற துன்பம் அடைந்ததற்குக் காரணம் என்ன என்பதை அழகாக அவதாரிகையில் விளக்குகிறார் நஞ்சீயர். முன்னர் ஆழ்வார் பெற்ற அனுபவமனைத்தும் மனதளவிலேயாய் நின்றது. உண்மையில் தம்முடைய வெளிப் புலன்களால் எம்பெருமானைக் காண வேணும் என்று ஆசைப்பட்ட ஆழ்வார் அதைப் பெறாமையால் துன்பக்கடலில் மூழ்கினார் என்கிறார் நஞ்சீயர். "ஆறாம் திருவாய்மொழியில், முன்பில் திருவாயமொழியில் தாம் அனுபவித்த அனுபவம் மாநஸாநுபவ மாத்ரமாய் பாஹ்யகரண யோக்யமல்லாமையாலே ஆழ்வார் அத்யந்தம் அவஸந்நராய் வேறே சிலர் அநுஸந்தித்துப் பரிஹரிக்க வேண்டும்படி தமக்குப் பிறந்த தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்." --என்பது ஒன்பதினாயிரப்படி உரை. 2. எம்பெருமானுடைய தன்மைகளை உள்ளபடி கண்ட ஆழ்வார் அவனுடைய பரத்வத்தை "உயர்வற உயர்நலம்" என்கிற முதல் திருவாய்மொழியில் அருளிச் செய்தார். அவனைப் பற்றுங்கள் என்று "வீடுமின் முற்றவும்" என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் அருளிச் செய்தார். மூன்றாம் திருவாய்மொழியில் எம்பெருமானுடைய எளிமையை நினைத்து உருகினார். நான்காம் திருவாய்மொழியில், ஒரு நாயகியின் நிலையில் நின்று பறவைகளை எம்பெருமானிடம் தூது விடுகிறார். அப்படிப்பட்ட நிலையை ஆழ்வார் அடைவதற்குக் காரணம் என்ன என்பதை உதாரணத்துடன் அத்திருவாய்மொழியின் அவதாரிகையில் விளக்குகிறார் நஞ்சீயர். எம்பெருமானுடைய அருளாலே அவனுடைய தன்மைகளை நன்கு கண்ட ஆழ்வார், அவனை உடனே அனுபவிக்க வேண்டுமென்று ஆசை கொண்டார். ஆனால் எம்பெருமானோ தன்னை உடனே ஆழ்வாருக்குக் காட்டவில்லை. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடனே உணவைக் கொடுக் காமல் நன்கு பசியெடுக்கும் வரை மருத்துவர்கள் உணவைத் தடை செய்வது போல எம்பெருமானும் ஆழ்வாருக்குத் தன் மீதுள்ள ஆசை நன்கு வளரவேண்டும் என்பதற்காகச் சிறிது தாமதித்தான். ஆனால் அந்தச் சிறிது தாமதத்தையும் பொறுக்க முடியாத ஆழ்வார் பிராட்டி ஒருத்தி நிலையை அடைந்து எம்பெருமானிடத்தில் பறவைகளைத் தூதுவிடுகிறார் என்று அவதாரிகையிடுகிறார் நஞ்சீயர்.' 3. முன் திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானுடைய குணங்களுக்கும் அடுத்த திருவாய்மொழியில் ஆழ்வார் அடையும் நிலைக்கும் உள்ள தொடர்புகளையும் அவதாரிகைகளில் காட்டுகிறார். முதல் பத்தின் கடைசித் திருவாய்மொழியில் "மணியை வானவர் கண்ணனைத் தன்னதோரணியை"* என்று எம்பெருமானுடைய குணங்களை அனுபவித்த ஆழ்வார் அடுத்ததான "வாயும் திரையுகளும்"” என்று தொடங்கும் திருவாய்மொழியில் பிராட்டி நிலையடைந்து வருந்துகிறார். இவ்விரண்டிற்கும் தொடர்பு கூறுகின்ற நஞ்சீயர் "மணியை வானவர் கண்ணனைத் தன்னதோரணியை" என்று எம்பெருமானுடைய ஸெளலப்யத்தையும், வேண்டற்பாட்டையும், அழகையும் அனுஸந்தித்த ஆழ்வார் உடனே அவனை அனுபவிக்க வேணுமென்ற பாரிப்பை அடைந்து அது கிடையாமையால் பிராட்டி நிலையடைந்து வருந்துகிறார் என்று குறிப்பிடுகிறார்." 4. சில திருவாய்மொழிகளின் அவதாரிகைகளில் அழகிய உரையாடல்களையும் அமைத்துள்ளார். முன் திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலைக்கும் அடுத்த திருவாய்மொழியில் ஆழ்வாருக்குள்ள நிலைக்கும் இடையில் சிலர் கூறிய சொற்களே ஆழ்வாரை அத்திருவாய் மொழியில் அப்படிப் பாசுரம் அருளிச் செய்யத் தூண்டிற்று என்று ஊகித்து, அச் சொற்களை உரையாடலாகவே அமைத்துத் தருகிறார். எம்பெருமானைப் பிரிந்த பிராட்டியின் நிலையில் மடலூரவும் தலைப்பட்ட ஆழ்வார், 'எங்ஙனயோ" என்கிற திருவாய்மொழியில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகில் ஈடுபட்டுப் பேசுகிறார். தோழிமார்களைக் குறித்துப் பராங்குச நாயகி கூறுவதாக அத் திருவாய்மொழி அமைந்துள்ளதால் அத்திருவாய் மொழியின் அவதாரிகையில் பராங்குச நாயகிக்கும் தோழிகளுக்கும் இடையில் நடைபெற்றதாக ஓர் உரையாடலைக் காட்டுகிறார் நஞ்சீயர்.” தோழிமார்: நீ இப்படித் துன்பப்படுவது உன் குடிப்பிறப்புக்கும் பெண்மைக்கும் தகுதியன்று. நாயகி: திருக்குறுங்குடிநம்பியின் வடிவழகில் நான் அகப்பட்டது தெரியாமையாலன்றோ நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். தோழிமார்: நாங்களும் தான் நம்பியைக் கண்டுவருகிறோம். எங்களுக்கு இப்படித் துன்பம் ஏற்படவில்லையே நீ இப்படிப் படுவதற்குக் காரணம் என்ன? நாயகி: அன்பில்லாதவர்களான உங்களுக்கு நம்பியின் வடிவழகும் திவ்ய அவயவங்களின் சேர்த்தியும் தோற்றுமோ? அப்படி அறிவதற்கு ஈடான அறிவையும் அன்பையும் அவன் எனக்குத் தந்தமையினால் அவனழகில் ஈடுபட்டுப் பேசுகிறேன். 5. "குரவையாய்ச்சியரோடு" என்கின்ற திருவாய்மொழியில் கண்ணபிரானுடைய திருவிளையாடல்களையெல்லாம் திரள அனுபவித்து, இனி என்ன குறை எனக்கே என்கின்றார் ஆழ்வார். இத்திருவாயமொழிக்கு அவதாரிகையிடுகின்ற நஞ்சீயர், கீழ்ப் பல திருவாய்மொழிகளிலும் ஆழ்வார் அருளிச் செய்தவைகளை நினைவு கூர்ந்து இத் திருவாய்மொழியோடு அவற்றை இணைத்துக் காட்டுகிறார்.' "மின்னிடை மடவாரில்"” எம்பெருமானோடு கூட மாட்டேன் என்று ஊடல் கொண்டார் ஆழ்வார். "நல்குரவு"? என்கின்ற திருவாய்மொழியில் அப்படிக் கூறியவரையும் தன்னுடன் கூடும்படி இசைவித்துக் கொண்ட எம்பெருமானுடைய உதவியைக் கொண்டாடினார். "மாசறுசோதி"” என்கின்ற திருவாய்மொழியில், "சேணுயர் வானத்திருக்கும்"* என்று அவன் வெகு தூரத்தில் எழுந்தருளியிருக்கிறான் என்று வருத்தப்பட்டார். "பிறந்தவாற்றில்"'” உடனே எம்பெருமான் தன்னுடைய எளிமைக்கு எல்லை நிலமான கிருஷ்ணாவதாரத்தைக் காட்டியருளக் கண்டு அனுபவித்தார். அங்குத் தமக்கு பலமின்மையால் பேசமுடியாத கிருஷ்ண சரித்திரங்களையும் சேர்த்து "குரவையாய்ச்சியர்" என்கிற இத் திருவாய்மொழியில் பேசுகிறார் - என்று பல திருவாய்மொழிகளிலும் ஆழ்வார் அருளிச் செய்தவைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். 6. ஒரு திருவாய்மொழியில் ஆழ்வாருக்கு ஓடுகின்ற மனநிலைக்குக் காரணம் என்ன என்பதை மனக் கண்ணால் காணுகின்ற நஞ்சீயர், அதை அப்படியே மிக நீண்ட அவதாரிகையில் விரித்துரைக்கிறார். "மின்னிடை மடவார்"! என்கின்ற திருவாய்மொழியில் எம்பெருமானோடு ஊடல் கொண்ட பராங்குச நாயகி அவனோடு கூட மாட்டேன் என்று கோபமுற்றுக் கூறுகிறாள். இங்குப் பின்புலத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல் மிக நீண்ட அவதாரிகையினை அருளிச் செய்கிறார் நஞ்சீயர்.” "மாசறுசோதி"? என்கின்ற திருவாய்மொழி தொடங்கி "வைகல் பூங்கழிவாய்"* என்கின்ற திருவாய்மொழி வரை தொடர்ந்து துன்பத்தையே அனுபவித்த ஆழ்வார் இனி எம்பெருமான் வரிலும் அவனோடு கூடுதல் முடிவில் பிரிவிலேயே முடியும் ஆதலால் கூடிப் பிரிந்து துன்பத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் கூடாமலே இருப்பது நன்று. அப்படிக் கூடாமலிருந்து விட்டால் துன்பத்தின் மிகுதியால் உயிர் பிரிந்து விடும்; உயிர் பிரிந்தால் பிறகு துன்பமும் இல்லை என்று முடிவு செய்தார் ஆழ்வார். ஆனால் எம்பெருமானோ, 'நம்மைப் பிரிந்து இவள் இப்படித் துன்பப்படும்படியாக விட்டு வைத்தோமே! இவளுக்கு உதவவில்லையென்றால் அது நமக்கன்றோ பழி!' என்று அச்சமும் வெட்கமும் கொண்டு அவளோடு கூடினாலல்லது தரித்திருக்க மாட்டாதவனாய் அருகில் வந்து நின்றான். ஆயினும் அவள் அவனோடு கூட விரும்பாத நிலையில் நேரே சென்று மேல் விழுந்து கூடினால் அது இன்பம் பயக்காது என்றும், அவளே விரும்பி வந்து தன்னோடு கூட வேண்டும் என்று ஆசைப்படும்படியாகச் செய்வதற்கு என்ன வழி? என்று ஆலோசித்து, பராங்குச நாயகிக்கும் அவளுடைய தோழிகளுக்கும் தெரியாதபடி மறைந்து நின்று கொண்டான். அவன் மறைந்து நின்றாலும், அவனுடைய திருமேனியின் ஒளி சோலையெங்கும் பரவியதாலும், குளிர்ந்த கடாக்ஷம் தங்கள் மேலே விழுந்ததாலும், அவன் அருகில் தானிருக்கிறான் என்று அனைவரும் உணர்ந்தார்கள். ஆனால் அவர்கள் அவன்மீது கோபம் மிகவும் கொண்டு பாராமுகமாக இருக்க அவன் தன் அழகையும், அவர்களைப் பிரிந்தால் தரித்திருக்க முடியாத தன்னுடைய ஆற்றாமையையும் காட்ட அதனால் ஊடல் தீர்ந்து அவனோடு கலந்து முடிக்கிறாள் என்று இப்படி நீண்டதொரு அவதாரிகையை அருளிச் செய்கிறார் நஞ்சீயர். 7. ஒரு திருவாய்மொழியில் அமைந்துள்ள ஒரு பாசுர அடியொன்றை மட்டுமே உயிரானதாகக் கொண்டும் அவதாரிகை அருளிச் செய்கிறார் நஞ்சீயர். "மாலை நண்ணி" என்கின்ற திருவாய்மொழிக்கு அவதாரிகை பிடுகின்ற நஞ்சீயர், எம்பெருமானைப் பெற வேண்டுமென்று வருந்தி யிருக்கின்ற ஆழ்வாருக்கு உடல் பிரிந்தவுடன் வீடு பேறு அருள்வதாகக் கூறியதாக அவதாரிகையிடுகிறார். "மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்"? என்ற பாசுர அடி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு இப்படி அருளிச் செய்துள்ளார். தொடர்ந்து பல ஐயங்களையும் தாமே எழுப்பி, விடைகளையும் இந்த அவதாரிகையில் தருகிறார் நஞ்சீயர். வேதாந்தங்களில் ப்ராரப்த கர்மத்தின் (ஊழ்வினையின்) முடிவிலேயே மோக்ஷம் பெற முடியும் என்று கூறியிருக்க, இவ்வுடலின் முடிவில் மோக்ஷம் (வீடுபேறு) தருவதாக எம்பெருமான் கூறியது எங்ஙனம் பொருந்தும்? என்ற கேள்வியை எழுப்புகிறார். தங்களுடைய முயற்சியினால் உபாஸனங்கள் செய்து மோக்ஷம் பெற விரும்புபவாகளுக்குப் பிராரப்த கர்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிடைக்கும்; ஆனால் எம்பெருமானுடைய அருளால் மோக்ஷம் பெறுபவர்கள் அவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை. உடலின் முடிவிலேயே மோக்ஷம் பெறலாம் என்று விடையும் தருகிறார். அப்படியாயின் எம்பெருமான் நம்மைக் காப்பவன் என்ற அறிவு பிறந்து அவனைச் சரணம் பற்றியவுடளே இவ்வுடல் நீங்கி அவனை அடையலாமே! அப்படி அடையாமல் உடல் நீங்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று மீண்டும் வினாவொன்றை எழுப்புகிறார். சரணாகதி செய்தவுடன் உடல் நீங்கி மோக்ஷம் கிடைத்துவிடும் என்றால் மரணத்திற்கு அஞ்சி ஒருவருமே சரணாகதி செய்ய மாட்டார்கள்; மேலும், உலகிலுள்ள மக்களுக்கு நல்லறிவைப் புகட்டுவதற்கு இவன் இன்னும் சிலநாள் இங்கிருக்க வேண்டும்: சரணாகதி செய்தவனுக்கு இதுவே கடைசி உடலாகையால் இவ்வுடலை எம்பெருமானும் சிலநாள்கள் கண்டு கொண்டிருக்க விரும்புகிறான். எனவே தான் சரணாகதி செய்தவுடனே உடல் நீங்கி மோக்ஷமடைவதில்லை என்று விடை தருகிறார். எம்பெருமானைச் சரணமடைந்தவன் இவ்வுடல் இருக்கும் வரைதான் உலகில் இருக்கப் போகிறான். அந்த சில நாள்கள் நோய்கள் முதலான துன்பங்கள் எதுவுமில்லாமல் சுகமாக இருக்கக் கூடாதோ? பிறரைப்போல இவனும் ஏன் துன்பப்படுகிறான் ? சரணமடைந்தவன் உடல் நீங்கும் வரை சுகமாகவே இருக்கட்டும் என்று அருள் செய்யக் கூடாதோ? என்று மீண்டும் ஒரு வினாவொன்றை எழுப்புகிறார். இதற்கு மிக அழகான விடையும் தருகிறார். உலகியல் வாழ்க்கையிலேயே பழகி வந்தவன் எம்பெருமானைச் சரணமடைந்த பிறகு துன்பங்கள் எல்லாம் விலகி இன்பங்களையே பெறுவானாயின் மீண்டும் உலக சுகங்களிலேயே ஈடுபட்டு எம்பெருமானை மறந்து விடுவான். எனவே சேதநர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு தன்னை வந்து அடையவேண்டும் என்ற காரணத்தினால் துன்பங்களையும் அனுக்ரஹத்தினாலேயே எம்பெருமான் அளிக்கிறான். எனவே இதில் யாதொரு குறையுமில்லை என்று அவதாரிகையை நிறைவு செய்கிறார். -------------- ஒப்பு நோக்குதல் பல்வேறு திருவாய்மொழிகளின் அவதாரிகைகளில் ஒத்த கருத்துடைய பிற திருவாய்மொழிகளையும் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளை அழகாக விளக்குகின்றார். 1. "பயிலும் சுடரொளி"! "நெடுமாற்கடிமை"* ஆகிய இரு திருவாய்மொழிகளிலும் எம்பெருமானுடைய அடியவர்களின் பெருமையை அருளிச் செய்கிறார் ஆழ்வார். "பயிலும் சுடரொளியில் இவ்வாத்மாவுக்கு நாதர் (தலைவர்கள்) ஸ்ரீவைஷ்ணவர்கள் என்கிறது. இத்திருவாய்மொழியில் நிரதிசய புருஷார்த்த பூதர் (அடையத் தகுந்தவர்கள்) அவர்கள் என்கிறது." 2. 'எம்மாவீடு" “என்கிற திருவாய்மொழியில் எம்பெருமானுக்கு அடிமை செய்தலைப் பற்றிக்கூறுகிறார் ஆழ்வார். "பயிலும் சுடரொளி" என்கிற திருவாய்மொழியில் எம்பெருமானுடைய அடியவர்களுக்கு அடிமைப் பட்டிருத்தலைப் பற்றக் கூறுகிறார். இவ்விரண்டு திருவாய்மொழிகளையும் ஒப்பு நோக்குகின்ற நஞ்சீயர், அது பேற்றின் முதல் நிலை என்றும், இது கடைநிலை என்றும் அருளிச் செய்கிறார். "எம்மாவீடு ப்ராப்யத்தின் ப்ரதமாவதி (பேற்றின் முதல் நிலை). இத் திருவாய்மொழி சரமாவதி(கடைநிலை)." என்று கூறுகிறார். 3. "ஏறாளும் இறையோனும்"' என்ற திருவாய்மொழியில் எம்பெருமானுக்கு உறுப்பல்லாத தாமும் தம்முடைமைகளும் வேண்டா என்கிறார். "மாசறுசோதி"* என்ற திருவாய்மொழியில் மடலெடுத்தாகிலும் எம்பெருமானை அடையப் பார்க்கிறார். இவ்விரு திருவாய்மொழிகளையும் ஒப்பிடுகின்ற நஞ்சீயர் அதில் தம்மை முடித்துக் கொள்ளப்பார்த்த ஆழ்வார் இதில் எம்பெருமானை அழிக்கப் பார்க்கிறார் என்று அருளிச் செய்கிறார். 4. திருக்குடந்தைக்குச் சென்றால் தம்முடைய விருப்பம் நிறைவு பெறும் என்றெண்ணி, அத்தலம் சென்று, அங்கே கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் எம்பெருமானைச் சரணடைந்தார். ஆழ்வார் விரும்பியபடி எம்பெருமான் அரவணையினின் று எழுந்து வந்து தம்மை நோக்கிப் பேசுதல், திருக்கண்களாலே நோக்குதல், தழுவிக் கொள்ளுதல் முதலியன செய்தருளாமையால் மிகவும் தளர்ந்து "ஆராவமுதே"” என்று தொடங்கும் திருவாய்மொழியை அருளிச் செய்தார். அவர், திருப்புளிங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானிடம் வந்து தாம் ஆசைப்பட்ட பரிமாற்றத்தைத் தாராமையினால் துன்புற்று, அழகிய திருக் கண்களாலே நோக்கியருள வேண்டும், திருவடிகளைத் தலையிலே வைத்தருள வேண்டும், எழுந்திருந்து எதிரே வரவேண்டும்' எனப் "பண்டைநாளாலே"* என்னும் திருவாய்மொழியில் வேண்டினார். ஆழ்வார், தாம் விரும்பிய பரிமாற்றத்தைப் பெறாமையால் உண்டான துன்பத்துடன் அருளிச் செய்கின்ற அவ்விரு திருவாய்மொழிகளையும் ஒப்பு நோக்கி, அவற்றிடையே உள்ள வேறுபாடுகளை கீழ்க் கண்டவாறு விளக்குகிறார் நஞ்சீயர்: "ஆராவமுதில் ஆர்த்தருடைய ஆர்த்தி தீர்க்கும் ஸ்வபாவனாயிருந்து வைத்து என்னுடைய ஆர்த்தி தீர்த்திலன் என்று இன்னாதானார். இங்கு பரமபந்துவாய் வைத்து என்னை அங்கீகரித்திலன் என்றும் ஏகரூபமாகக் கண்வளர்ந்தால் திருவுடம்பு அலசாதோ என்றும் இன்னாதாகிறார்."” எம்பெருமான் அடியவர்களின் துன்பத்தைப் போக்கும் தன்மை யுடையனாயிருந்தும் தம் துன்பத்தைக் களையவில்லையே என்று "ஆராவழுதே"" என்கிற திருவாய் மொழியில் வருந்துகிறார்; அவன் உற்ற உறவினனாக இருந்தும் தம்மை ஏற்றுக் கொண்டிலனே என்றும், ஒரே விதமாகப் படுத்துக் கொண்டிருந்தால் எம்பெருமானுடைய திருமேனிக்கு வருத்தமேற்படுமே என்றும் துன்பப்படுகிறார் "பண்டைநாளாலே"* என்கிற திருவாய்மொழியில் வருந்துகிறார் - என்று இவ்விரு திருவாய்மொழிகளையும் ஒப்பிட்டு அவற்றிடையே உள்ள வேறுபாடுகளையும் தெளிவாக விளக்குகிறார். இவ்வாறு, பற்பல திருவாய்மொழிகள் ஒப்பிடப்பெற்றும் அதன் வேறுபாடுகளும் மிக அழகாக விளக்கப்பெற்றும் திகழும் சிறப்பினை நஞ்சீயர் உரையிலேயே முதன் முதலில் காணலாம். இத்தகைய உரையால் பிற உரையாசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் நஞ்சீயரே ஆவார். ------------------------ இதிகாச புராண பாத்திரங்களுடன் ஒப்பீடு; எம்பெருமானை அனுபவிக்கின்ற ஆழ்வார், தமது அனுபவங்களைப் பாசுரங்களாக வெளியிடுகின்றார். அவ்வாறு அருளிச் செய்கின்றபோது ஆழ்வாரின் பல்வேறு மனநிலைகள் அவருடைய பாசுரங்களில் வெளிப் படுகின்றன. அவ்வப் பாசுரங்களில் ஓடுகின்ற ஆழ்வாரின் பல்வேறு மனநிலை களுக்கு ஏற்ப ஆழ்வாரை ஸீதாப்பிராட்டி, இளையபெருமாள், பரதாழ்வான் முதலிய புராணப் பாத்திரங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பாங்குடன் திகழ்வது வைணவ உரைகளின் தனிச் சிறப்பு ஆகும். இவ்வாறு ஆழ்வாரைப் புராண புருஷர்களுடன் ஒப்பிடும் முறை முதன்முதலில் காணப்படுவது நஞ்சீயர் உரையிலேயே ஆகும். அவரைப் பின்பற்றி பிற ஆசிரியாகளும் தம் தம் நூல்களில் ஆழ்வார்களைப் புராண பாத்திரங்களுடன் ஒப்பிடுகின்றனர். நஞ்சீயருடைய உரையில் அத்தகைய இடங்கள் சிலவற்றைக் காணலாம். 1. நம்மாழ்வார், "அஞ்சிறைய மடநாராய்" என்று தொடங்கும் திருவாய்மொழியில் பிராட்டியின் மனநிலையை அடைந்து எம்பெருமானிடம் பறவைகளைத் தூது விடுகின்றார். ஆழ்வாருக்குப் பிராட்டி மனநிலை ஏற்பட்டதற்குக் காரணத்தைக் கூறுகின்ற நஞ்சீயர், "அநந்யார்ஹ சேஷத்வத்தாலும் அந்த சேஷத்வ அநுபவத்தில் எம்பெருமானோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரஸம் பிறக்கையாலும் ததேக போகத்வத்தாலும் பிரிவில் தரியாமையாலும் தமக்குப் பிராட்டிமாரோடு ஸாம்யம் உண்டாகையாலே எம்பெருமானோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவுபடுகிறாள் ஒரு பிராட்டிதசையை ஆபந்நராய் அவள் பேச்சாலே தம்முடைய தசையை எம்பெருமானுக்கு அறிவிக்கிறார்." --என்று உரையிடுகிறார். தொடர்ந்து நம்மாழ்வாரை சீதைப்பிராட்டியுடன் ஒப்பிட்டு விளக்கம் தருகின்றார். ' அவ்விளக்கங்கள் இருபத்துநாலாயிரப்படி உரையிலும், ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையிலும் பின்பற்றப்பட்டுள்ளன. இவைபோன்று வேறு சில திருவாய்மொழிகளின் முன்னுரைகளிலும் நஞ்சீயர் ஆழ்வாரை சீதைப்பிராட்டியுடன் ஒப்பிட்டுள்ளார்.” 2. எம்பெருமானுடைய திருநாமங்களிலே மிகவும் ஈடுபட்ட பராங்குச நாயகி, தான் விளையாடும் பொருள்களான பூவை, பைங்கிளி, பந்து, தூதை, பூம்புட்டில்கள் ஆகியவைகளைக் கண்டாலும் வெறுக்கத் தொடங்கினாள். அங்கு நஞ்சீயர் இவளுடைய நிலையை பரதன் நிலையுடன் ஒப்பிடுகிறார்.” இராமபிரான் வனந்திற்குச் சென்றவுடன் பரதன் அரசைக் கண்டு வெறுத்ததைப் போள்று பராங்குச நாயகியும் அப்பொருள்களைக் கண்டு வெறுத்தாள் என்கிறார். இதேபோல் வேறு சில இடங்களிலும் ஆழ்வாரை பரதனோடு ஒப்பிட்டுள்ளார்.* 3. தன்சோடு கலக்க விரும்பிய ஆழ்வாருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக எம்பெருமான் வந்தான். அப்போது ஆழ்வார் எம்பெருமானுடைய பெருமையையும், தம்முடைய தாழ்வையும் நினைத்துத் தாம் எம்பெருமானுடன் கலந்து அனுபவித்து அவனுடைய பெருமைக்கு இழிவு உண்டாக்குவதைக் காட்டிலும், அவனைப் பிரிந்து தாம் முடிதலே நன்று என்று கருதினார். அவ்விடத்தில் ஆழ்வாருடைய அந்நிலையை இலக்குமணன் நிலையுடன் ஒப்பிடுகிறார் நஞ்சீயர். இராமாவதாரம் முடியும் தருவாயில் தேவதூதன் இராமனுடன் ரகசியமாகப் பேசுவதற்கு வந்த போது, இலக்குமணனிடம் எவரையும் உள்ளே விடக் கூடாது என்றும், அப்படி எவரையேனும் அனுமதித்து விட்டால் பிறகு தம்முடைய முகத்தில் விழிக்கவே கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாணையை நிறைவேற்றும் பொருட்டு இலக்குமணன் வாசலில் காவலிருந்தான். அப்போது துர்வாசமுனிவர் வந்து தம்மை உள்ளே விடாவிட்டால் இராமனுடைய குலமே நசித்துவிடும்படி சாபமிட்டு விடுவதாகச் சொன்ன போது முனிவரால் இராமபிரானுக்கு ஒரு கேடு ஏற்படுவதைவிட தாம் இராமபிரானைப் பிரிந்து முடிவதே நன்று என்று கருதி இலக்குமணன் அகன்று விட்டான். அதை அப்படியே ஆழ்வாருடைய நிலையுடன் ஒப்பிடுகிறார் நஞ்சீயர். இதே போல் மேலும் சில இடங்களிலும் இலக்குமணனோடு ஆழ்வாரை ஒப்பிட்டுள்ளார்.' ஆழ்வார், எம்பெருமானுடைய அடியவர்களின் பெருமையை "நெடுமாற்கடிமை" என்கிற திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். நஞ்சீயர் அங்கு இராமபிரானின் அடியவனான பரதனிடம் பெரும் ஈடுபாடு கொண்ட சத்ருக்னனுடன் ஆழ்வாரை ஒப்பிடுகிறார்.” 5. எம்பெருமானுக்கு யாரால் என்ன தீங்கு வருமோ என்று அஞ்சிய ஆழ்வாருக்கு எம்பெருமான் தன்னுடைய பெருமைகளைக் காட்ட, அதனால் ஆழ்வார் அச்சம் தெளிகிறார். அங்கு இராமபிரானுக்கு விபீஷணானால் என்ன தீங்கு வருமோ என்று அஞ்சிய சுக்ரீவனுக்கு இராமபிரான் தன் தோள்வலிமையைக் காட்ட அதனால் பயம் தெளிந்ததை ஒப்பிடுகிறார் நஞ்சீயர்.* வானமாமலைப் பெருமானிடம் சரணம் புகுந்த ஆழ்வாரை கடற்கரை வெளியிலே இராமபிரானிடம் சரணம் புகுந்த விபீஷணனோடு ஒப்பிடுகிறார்.” இதேபோல், பல்வேறு நிலைகளில் ஆழ்வாரை அருச்சுனன்,” பீஷ்மர்,” அக்ரூரன்,' திரெளபதி,” சிந்தயந்தி,” இடைப்பெண்கள் ” முதலியவர்களுடன் நஞ்சீயர் ஒப்பிடுகிறார். முதன்முதலில் எழுந்த உரையான ஆறாயிரப்படி உரையில் ஆழ்வாரைப் புராணப் பாத்திரங்களுடன் ஒப்பிடும் இவ்வுத்தி கையாளப்படவில்லை என்பதும், நஞ்சீயர் உரையிலேயே இவ்வுத்தி முதன்முதலில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன. நஞ்சீயருடைய உரையைப் பின்பற்றியே பிற உரையாசிரியர்களும் புராணப் பாத்திரங்களுடன் ஆழ்வாரை ஒப்பிடும் உத்தியைக் கையாண்டுள்ளனர். இவ்வுத்தியின் தாக்கம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய "ஆசார்யஹ்ருதயம்"" என்னும் நூலில் நன்கு புலப்படுகிறது. --------- நீர்வாஹங்கள் காட்டுதல் ஈடுமுப்பத்தாறாயிரப் படி உரையில் ஒரே பாசுரத்திற்கு ஆசாரியர்கள் பலர் அளித்துள்ள விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை நஞ்சீயர் உரையில்தான் முதன் முதலில் இடம் பெறுகின்றன. ஆனால் முக்கியமான வேறுபாடு ஒன்றும் உண்டு. ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் இருபத்துநாலாயிரப்படியிலும், வெவ்வேறு விளக்கங்களை எடுத்துக் கூறி 'இது இன்னார் அருளிச் செய்தது' என்று அவ்விளக்கங்களை அருளிச் செய்த ஆசாரியருடைய பெயர்களும் ஆங்காங்கே கூறப்பெற்றுள்ளன. ஆனால், ஒன்பதினாயிரப்படி உரையில் அவ்வாறு திருநாமங்கள் குறிப்பிடப்பெற வில்லை. ஒரே இடத்தில் இரண்டு வகை விளக்கங்கள் கூறப்பட்டிருந்தாலும் அது, என்றுமாம்' அல்லது என்றும் சொல்லுவர்' என்று மட்டுமே காட்டப்படுகிறது. இரண்டு பாசுரங்களின் உரைகளில் மட்டும் அப்பாசுரங்களின் விளக்கங்களை அருளியவர் ஆழ்வான் என்று ஒன்பதினாயிரப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளன.' ஆழ்வானுடைய திருநாமத்தைக் குறிப்பிடாமலும் அவருடைய விளக்கங்கள் பல இடங்களிவ் காட்டப்பட்டுள்ளன.” 1. "துயரறு சுடரடி"* என்னும் தொடருக்கு அடியவர்களுடைய துயர்களை அறுக்கும் சுடரடி என்று முன்புள்ள ஆசாரியர்கள் விளக்கமளித்தனர் என்றும், எம்பெருமானார் அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பதால் தான் துயரறும் சுடரடி என்று விளக்கமளித்தார் என்றும் ஈட்டில் கூறப்பட்டுள்ளது. எம்பெருமானார், அருளிய விளக்கம் மட்டுமே ஒன்பதினாயிரப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பற்பல பாசுரங்களுக்கு ஆளவந்தார் அருளிச் செய்ததாகச் சில விளக்கங்களைத் திருமாலையாண்டான் கூற, எம்பெருமானார் அப் பாசுரங்களுக்கு அளித்த வேறு விதமான விளக்கங்கள் ஈடு முப்பத்தாறாயிரப்படியில் பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலான பாசுரங்களின் உரைகளில் நஞ்சீயர் எம்பெருமானார் நிர்வாகத்தை மட்டுமே குறிப்பிடுகிறார். உதாரணமாக, "அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்"' என்கிற பாசுரத்திற்கு ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டான் அளித்த விளக்கம் கீழ்க் கண்டவாறு உள்ளது: 'அறிவு நடையாடாத காலத்திலேயே அறிவைப் பிறப்பித்து, பிறந்த அறிவை அழிக்கக் கடவதான உடலோடு இன்னும் வைத்திருக்கிறாயே என்ற வருத்தத்துடன் எம்பெருமானை நோக்கி அருளிச் செய்கிறார் ஆழ்வார்." அந்த விளக்கத்தைக் கேட்ட எம்பெருமானார், அதற்கு முன்னர் உள்ள பாசுரங்களும் பின்னர் உள்ள பாசுரங்களும் மகிழ்ச்சியுடன் அருளிச் செய்யப்பட்டிருக்க இப்பாசுரம் மட்டும் வருத்தத்துடன் அருளிச் செய்யப்பட்டதாகக் கூறுவது பொருந்தாது; எனவே, அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாயால்' என்று அந்வயம் கொண்டு அறியாக் காலத்திலேயே தமக்கு எம்பெருமான் செய்த உபகாரத்தை இப்பாசுரத்தில் மகிழ்ச்சியுடன் ஆழ்வார் அருளிச் செய்கிறார் - என்று பொருள் அருளிச் செய்தார். எம்பெருமானார் அருளிச் செய்த விளக்கம் மட்டுமே ஒன்பதினாயிரப்படியில் காணப்படுகிறது "மிகவும் அறிவுக் கேட்டைப் பண்ணவற்றான ஸம்ஸாரத்திலேயிருக்கிற என்னை அறிவு பிறக்கைக்கு ஸம்பாவனையில்லாத பால்யத்திலே அடிமையிலே ஸ்நேஹத்தைப் பிறப்பித்து வைத்தாய்." என்பது ஒன்பதினாயிரப்படி. வேறு பல பாசுரங்களுக்கும் ஆளவந்தார் அருளிச் செய்த விளக்கங்களும் எம்பெருமானார் அருளிச் செய்த விளக்கங்களும் ஈட்டுப் பேருரையில் உள்ளன. அவ்விடங்களில் எம்பெருமானார் அருளிய விளக்கங்கள் மட்டுமே ஒன்பதியாயிரப்படியில் இடம் பெற்றுள்ளன.” சில பாசுரங்களின் உரைகளில் மட்டும் ஆளவந்ததார் அருளிய விளக்கம், எம்பெருமானார் அருளிய விளக்கம் ஆகிய இரண்டுமே இடம் பெற்றுள்ளன.” 3. பல பாசுரங்களுக்கு அமைந்த உரைகளில் ஆசாரியர்கள் பலா அருளிச் செய்த நிர்வாகங்கள் நஞ்சீயர் உரையில் இரண்டாவது விளக்கமாக 'என்றுமாம்' - என்று குறிப்பிடப்படுகின்றன. "அவனாகும் நீள்கடல் வண்ணனே" என்பதற்கு, "அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள் என்று பணிக்கும் ஆண்டான்" என்று ஈட்டில் குறிப்பிடப்படுகிறது. "இங்கு உகந்தருளின இடத்தை நீள்கடல் வண்ணனான இடத்துக்கு விபூதியென்று நினையாதே உகந்தருளின இடத்துக்கு நீள்கடல் வண்ணனான இடம் விபூதியாகக் கொள்ளுங்கோள் என்றுமாம்." என்று ஒன்பதினாயிரப்படியிலும் இந்த நிர்வாகம் (ஆண்டான் பெயர் குறிப்பிடப்படாமல்) இடம் பெற்றுள்ளது. இதேபோல் என்றுமாம்? என்றும், 'என்றும் சொல்லுவர்” என்றும் சில இடங்களில் ஆண்டான் நிர்வாகங்களை நஞ்சீயர் குறிப்பிட்டுள்ளார். 4. நஞ்சீயருடைய ஆசாரியரான பட்டர் அருளிச் செய்த சுவைமிகு விளக்கங்களும் நஞ்சீயர் உரையில் இடம் பெற்றுள்ளன. அவ்விளக்கங்களும் பட்டரின் பெயர் குறிப்பிடப்படாமல்தான் வரையப் பெற்றுள்ளன. "பணிமின் திருவருளென்னும் அஞ்சீதப் பூம்பள்ளி அணி மென்குழலார் இன்பக் கலவியமுதுண்டார்"” என்ற பாசுரத்தின் ஈடு உரையில் இரண்டு வகை விளக்கங்கள் கூறப்படுகின்றன. பணிமின் திருவருள் என்று வேண்டுகின்ற பெண்களோடு இன்பத்தைத் துய்த்தவர்கள் என்று இதற்கு முன்புள்ள முதலிகள் பொருளுரைப்பர்கள் என்றும் 'பெண்களுக்குக் கீழே தாம் தாழ நின்று பணிமின் திருவருள் என்று அவர்களிடம் வேண்டி இன்பத்தைத் துய்த்தவர்கள்' என்று பட்டர் அருளிச் செய்வர் என்றும் ஈட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒன்பதினாயிரப்படியில் பட்டர் அருளிச் செய்த விளக்கம் (பட்டரின் திருநரமம் குறிப்பிடப்படரமலே) முதலில் கூறப்பட்டுள்ளது. பிறகு முன்புள்ள முதலிகளுடைய விளக்கம் "என்றும் சொல்லுவர்" என்று காட்டப்படுகிறது. இதேபோல் வேறு சில பாசுரங்களின் உரையிலும் பட்டர் அருளிச்செய்த விளக்கங்களும் பூருவர்கள் அருளிச் செய்த விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.” சில திருவாய்மொழிகளின் முன்னுரைகளிலும்,” சில பாசுரங்களின் சொல் நயங்களை விளக்குமிடங்களிலும்' பட்டர் நிர்வாகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒரு பாசுரத்திற்கு பட்டர் அருளிச் செய்த விளக்கம் ஒன்றும், வேறொரு விளக்கம் ஒன்றுமாக பாசுரம் முழுவதற்கும் இரண்டு விளக்கங்கள் ' ஒன்பதினாயிரப்படியில் காணப்படுகின்றன.” தம்முடைய ஆசாரியரான பட்டரின் திருநாமத்தையும் குறிப்பிடாமலே அவ்விளக்கங் களைத் தமது உரையில் நஞ்சீயர் காட்டியுள்ள செய்தி வியப்பிற்குரியது. 5. பிள்ளான் அருளிச் செய்த விளக்கங்கள் சிலவும் நஞ்சீயர் உரையில் இடம்பெற்றுள்ளன. எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் நாயகி நிலையை அடைந்து, தம் நிலைமையைத் தெரிவிக்கின்ற ஆழ்வார், "தவம் செய்தில்லா வினையாட்டியேன் " என்கிறார். எம்பெருமானைப் போல பிரிவுக்கு இளைக்காதபடியான உடலைப் பெறும் பாக்கியம் பெற்றிலேன் என்கிறாள் பராங்குசநாயகி என்று இதற்குப் பிள்ளான் கருத்துரைப்பர் என்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது. "விச்லேஷித்தாலும் அவனைப் போலே தரித்திருக்கைக்கு பாக்யம் பண்ணிற்றிலேன் " என்று ஒன்பதினாயிரப்படியிலும் அவ்விளக்கம் இடம் பெற்றுள்ளது. மேலும் சில இடங்களிலும் பிள்ளானுடைய விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.” சில இடங்களில் பிள்ளான், பட்டர் ஆகியோர் அருளிச் செய்த விளக்கங்கள் இடம் பெறாமலுமிருக்கின்றன.” 6. சில பாசுரங்களின் ஈட்டுரையில், "சீயா அருளிச் செய்வர்" என்று நஞ்சீயர் அருளிச் செய்த விளக்கங்கள் எடுத்துக் கூறப்படுகின்றன. அவற்றுள் பல ஒன்பதினாயிரப்படியில் இடம் பெற்றுள்ளன. பராங்குச நாயகி தன்னை எம்பெருமானாகவே அனுகரித்துப் பேசுவதாகவும் அதை அவளுடைய தாயார் கூறுவதாகவும் கூறும் திருவாய்மொழி ஒன்றுள்ளது. அதில் "கொடியான் இலங்கை செற்றேனே என்னும்" என்கிறார் தாயார். அதாவது 'கொடியவனான ராவணனை அழித்தவனும் நானே என்கிறாள் என்மகள்” என்கிறாள் தாய். இங்கு "இலங்கை செற்றேனும் யானே" என்பது மட்டும் தான் மகள் கூறியது. "கொடியான்" -ன்கிற அடைமொழி தாய் தானாகச் சொன்னது. காரணம் எம்பெரும.ன் எதிரிகளை ஒரு பொருட்டாக நினையாதவன் ஆகையால் அவன் ராவணனை அப்படிச் சொல்ல மாட்டான். அவ்வெம்பெருமானே தன் மகள் மீது ஆவேசித்து இச்சொற்களைச் கூறுவதாகத் தாய் கூறி வருகிற திருவாய்மொழி இதுவாகையால் இங்கு "கொடியான்" என்பது தாய் கூறுவது என்று நஞ்சீயர் விளக்கம் அருளிச்செய்வர் என்று ஈட்டில் கூறப்படுகிறது. இது ஒன்பதினாயிரப்படியிலும் இடம் பெறுகிறது. "கொடியான் என்கிற அம்சமத்தனையும் திருத்தாயார் வார்த்தை" என்பது உரை. இதே போல் மேலும் பல இடங்கள் உள்ளன. 7. ஒரு சில பாசுரங்களின் ஈட்டுரையில் பிள்ளான், நஞ்சீயர் ஆகிய இருவர் அருளிச் செய்த விளக்கங்களும் குறிப்பிடப்படுகின்றன. எம்பெருமானைப் போன்ற பொருள்களைக் கண்டு எம்பெருமானாகவே பராங்குச நாயகி நினைப்பதாகக் கருதும் திருவாய்மொழி. அதில் "நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்"? என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். 'பெரிய வடிவை உடைய மலையைக் கண்டவுடன், உலகளந்த திருமேனியை உடைய எம்பெருமான் என்று நினைத்து, வா என்று அழைக்கிறாள் பராங்குசநாயகி' என்று இதற்குப் பிள்ளான் பொருள் உரைத்ததாகவும் அங்ஙன் அல்லாமல் தன்னைப் பிரிந்த அபராதத்தினால் எம்பெருமான் வெட்கத்துடன் முட்டாக்கிட்டுக் கொண்டு நிற்கிறான் என்று நினைத்து வா என்றழைக்கிறாள்' என்று சீயர் அருளிச் செய்வர் என்றும் ஈட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒன்பதினாயிரப்படியில் முதலில் பிள்ளான் விளக்கத்தைக் குறிப்பிட்ட நஞ்சீயர் பிறகு "ஸாபராதனாய்க் கிட்ட வர அஞ்சி நிற்கிறானாகக் கொண்டு உன்னுடைய ஸ்நேஹாதிசயம் அறியோமோ? வாராய் என்று க்ஷேப பூர்வமாக அழைக்கும் என் றுமாம்" என்று இரண்டாவது பொருளாகத் தம்முடைய விளக்கத்தையும் குறிப்பிடுகிறார். தமகு விளக்கத்திற்கு முன்னால் பிள்ளான் விளக்கத்தைக் குறிப்பிட்டுப் பேசி அதில் நமக்குள்ள மதிப்பை வெளிப்படுத்துகிறார் நஞ்சீயர். ஒரு சில பாசுரங்களின் விளக்கத்தில் முதலில் தம்முடைய விளக்கத்தைக் கூறிவிட்டுப் பிறகு பிள்ளான் விளக்கம் கூறுவதுமுண்டு.” சில பாகரங்களுக்குச் சீயர் கூறியதாக ஈட்டில் காட்டப்படும் விளக்கம் ஒன்பதினாயிரப்படியில் இடம் பெறாமலும் போயிருக்கின்றன." எம்பார்,” பிள்ளை திருநறையூர் அரையர்,” ஆய்த்தான்,' அம்மங்கியம்மாள் ஆகியோர் நிர்வாகங்களும் நஞ்சீயர் உரையில் காட்டப்படுகின்றன. 8. இப்படி ஆசாரியர்கள் பற்பலருடைய நிர்வாஹங்களைத் தமது உரையில் காட்டியுள்ள நஞ்சீயர், தமிழ்ப் புலவர்கள் கூறிய விளக்கங்களையும் காட்டியுள்ளார். அற்பர்களான மனிதர்களைப் பாட வேண்டாம் என்று அறிவுறுத்துகின்ற ஆழ்வார் அவ்வற்ப மனிதர்களைக் குறிப்பிடும் போது "பாரிலோர் பற்றை"! என்கிறார். இதற்கு "த்ருணஸமாநனாயிருப்பான் ஒருவனாகிற க்ஷ£த்ர ஜந்து" (புல்லுக்குச் சமமானவனான அற்பன்) என்று உரையிட்ட நஞ்சீயர், தமிழன் ஒருவன் கூறிய பொருளையும் எடுத்துக் காட்டுகிறார். "பாரென்று நத்தமாய் அத்தால் ஒரு குடிப் பற்றின்றிக்கே இருக்கை. பற்றையை - கைப்பட்டதை இறுகப்பிடித்து ஒருவர்க்கு ஒன்று ஈயாதவர்களை என்று ஒரு தமிழன் வியாக்கியானம் பண்ணினான்" என்பது ஈடு. இதே பொருளை நஞ்சீயரும் "பாரிலோர் பற்றையை - குடிப்பற்றில்லாத அதிலுப்தனை என்றுமாம்" என்று எடுத்துக்காட்டுகிறார். எம்பெருமானைக் கவிபாடினால், "வீடும் தரும் நின்று நின்றே” என்ற ஆழ்வார் திருவாக்கிற்கு பூர்வாசாரியர்கள், மோக்ஷத்தைக் கொடுத்து பின்பும் இவனுக்கு ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று குறையோடிருப்பான் என்று பொருள் கூறுவர் என்றும், ஒரு தமிழன், அடைவடைவே தரும் சொன்னவற்றை என்று பொருளுரைத்தான் என்றும் ஈட்டில் இருவகை விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்விரு விளக்கங்களையும் நஞ்சீயர் தம் உரையில் காட்டுகிறார். ".... அந்த மோக்ஷத்தையும் தரும், பின்னையும் ஒன்றும் செய்யப்பெற்றிலோம் என்று மிறுக்குப் படாநிற்கும்: (நின்று நின்றே) கீழ்ச் சொன்னவை தருமிடத்து அடைவடைவே தரும் என்றுமாம்" என்பது ஒன்பதினாயிரப்படியுரை. இதேபோல் "இந்நின்ற நீளாவி காப்பார் ஆர்" என்பதற்கு "இத்தை முடித்து நம்மை நோக்குவார் ஆர் என்கிறதென்று இப்படி முறுகச் சொன்னது தன்னை ஒரு தமிழன் இச்சப்தத்துக்குத் தாத்பர்யமாக இட்டு வைக்கிறான். பிரிவிலும் முடியாத என்னுயிர்ப் பகையை நீக்கி என்னை நோக்குவார் ஆர் என்று" என்றும், "மாட்டிய வல்விளக்கு"” என்பதற்கு "ஏற்றிய பெரு விளக்கு என்று ஒரு தமிழன் இட்டு வைத்தான்" என்றும், "எனக்குச் செம்மாய் நிற்கும்" என்பதற்கு "எனக்குச் சேமமாயிருக்கும் என்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்" என்றும் ஈடுமுப்பத்தாறாயீரப்படியில் காட்டிய தமிழ்ப் புலவர்களுடைய விளக்கங்களும் ஒன்பதினாயிரப்படியில் இடம் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து நஞ்சீயர் காலத்திலேயே தமிழ்ப் புலவர்கள் பலர் திவ்யப்ரபந்த பாசுரங்களில் உள்ள சொற்களுக்கு அரிய விளக்கங்களைக் கூறியுள்ளனர் என்பதும் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களுடைய விளக்கங்களைப் போலவே அவ்விளக்கங்களும் பொருத்தமானவையாக இருப்பின் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன என்பதும் கருதத்தக்கன. சில பாசுரங்களுக்கு பூருவர்கள் அருளியதாகவும்,' ஆண்டான் அருளியதாகவும்” அம்மங்கியம்மாள் அருளியதாகவும்' பிள்ளான் அருளியதாகவும் ஈட்டில் காட்டப்படும் விளக்கங்கள் ஒன்பதினாயிரப்படியில் இரண்டாவது விளக்கமாக "என்றும் சொல்லுவர்" என்று குறிப்பிடப் பெறுகின்றன. எனவே "என்றும் சொல்லுவர்" என்று நஞ்சீயர் தமது உரையில் குறிப்பிடுவது குறிப்பிட்ட ஆசாரியர் ஒருவரை அன்று என்பது புலனாகிறது. பட்டருடைய விளக்கங்கள் பெரும்பாலும் முதல்வகை விளக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.” ஒரிரு இடங்களில் இரண்டாவது விளக்கமாக பட்டர் நிர்வாகங்கள் காட்டப்படும்போதும் "என்றுமாம்" என்றே குறிப்பிடப் பெறுகின்றன.” நஞ்சீயரைப் பின்பற்றி இருபத்துநாலாயிரப்படியிலும் இரண்டாவது விளக்கமானது "என்றும் சொல்லுவர்"” என்றும், ஈட்டில் "என்பாருமுண்டு"” என்று குறிப்பிடப்படுகின்றன. -------------- நீர்வாகங்களில் உள்ள சிக்கல்கள் பல நிர்வாகங்கள் ஒன்பதினாயிரப்படியில் இடம் பெற்றிருந்தாலும் அவற்றிலும் சில சிக்கல்கள் உள்ளன. ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, ஈடு ஆகிய மூன்று வியாக்கியானங்களுமே நம்பிள்ளையுடன் தொடர்புடையன என்றாலும் ஓர் உரையில் குறிப்பிடப்பட்டது மற்றோர் உரையில் மறுக்கப்பட்டுள்ளமையும், குறிப்பிடப்படாமலே விடப்பட்டுள்ளமையும் வியப்பைத் தருகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம். 1. நஞ்சீயரால் மறுக்கப்பட்டதாக ஈட்டுரையில் கூறப்படும் சில விளக்கங்கள் ஒன்பதினாயிரப்படி உரையிலேயே இடம் பெற்றுள்ளன. ஆழ்வார், "உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம் என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்"" என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். பெண்களுக்கும் அசுரர்களுக்கும் உய்விடம் எவ்விடம் என்று திருமகர குண்டலம் தளிர்க்கின்ற தளிரோ? என்பது பொருள். அசுரர்கள் மகரகுண்டலங்களின் அழகு கண்டு பொறுக்க முடியாமல் அழிவர். பெண்கள் அவ்வழகுடையவனை அடைய முடியாமல் அழிவர் என்று ஈட்டில் இதற்குப் பொருள் உரைக்கப்பட்டது. குண்டலங்களின் அழகு பெண்களை வருத்துவதைப் போலவே அசுர ராக்ஷஸர்களுக்கும் ஸ்நேஹத்தை விளைத்துப் பாதகமாகின்றது என்று ஒரு தமிழன் பொருள் கூற, அதை நஞ்சீயர் கேட்டு, "அஃது அழகிய பொருள்தான் என்றாலும் இவ்விடத்திற்குப் பொருந்தாது. பெண்களை வருந்தும்படி செய்கின்றது என்பதைக் கூறுகின்ற இவ்விடத்தில் அசுர ராக்ஷஸர்களுக்கும் ஸ்நேஹத்தை விளைவித்து பாதகம் ஆகின்றது என்று கூறுவது பொருந்தாது. எனவே அது வேண்டாம்" என்று மறுத்துக் கூறியதாக ஈட்டில் இடம் பெற்றுள்ள அதே பொருள் நஞ்சீயருடைய உரையிலேயே இடம் பெற்றிருப்பது வியப்பைத் தருகிறது. "காமினிகளான அபலைகளையும் சத்ருக்களான அசுரரையும் ஒக்க ஸ்நேஹத்தை விளைத்து அழிக்கையுமாம்" என்று ஒன்பதினாயிரப்படியில் காட்டப்பட்ட இவ்விளக்கம் இருபத்துநாலாயிரப்படியிலும் இடம் பெற்றுள்ளது. 2. இதே போல் "கள்ளவிழ் தாமரைக் கண்ணனே” என்ற இடத்தில் "கீழில் திருவாய்மொழியிலே சூழவும் தாமரைநாண்மலர்மேல் என்றத்தை ஸ்மரிக்கிறார் (நினைக்கிறார்) என்று பிள்ளான் பணிக்கும். அத்தை சீயர் கேட்டருளி கீழோடுகிற ரீதியின் படியே இதுவும் (இத் திருவாய்மொழியும்) ஆகப் பெற்றதானால் அழகிது. அங்ஙனன்றிக்கே இது ரஸாந்தரமாய் அறிவுண்டான பின்பு ப்ரகரணத்தோடு பொருந்த மாட்டாது என்று அருளிச் செய்தாராம்" என்பது ஈடு. இங்குப் பிள்ளான் கூறிய எந்த விளக்கத்தை நஞ்சீயர் மறுத்தாரோ அந்த விளக்கம் மட்டுமே நஞ்சீயர் உரையில் காணப்படுகிறது. "கீழில் திருவாய்மொழியில் தாமரைநாண்மலர் என்றனுபவித்த திருக்கண்களிலழகை அநுஸந்திக்கிறார்" என்பது ஒன்பதினாயிரப்படி உரை. 3. நஞ்சீயர் அருளிச் செய்ததாகக் குறிப்பிடும் விளக்கங்கள் ஒன்பதினாயிரப்படியில் இடம் 'பெறாமலும் போயிருக்கின்றன. உலகின் இயற்கையை இகழ்கின்ற ஆழ்வார், "பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றேற்றெழுவர் இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாருமில்லை"! என்கிறார். ஒருவனிடம் செல்வம் மிகுதியாக இருந்தால் அவனை எல்லோரும் போற்றுவர். அவனே துன்பத்தில் ஆழ்ந்திருந்தால் அவனை ஏன் என்பாரும் இல்லை என்னும் பொருள் தரும் இவ்வடிகளுக்கு நஞ்சீயர் அருளிச் செய்ததாகவும், பிள்ளை திருநறையூர் அரையர் அருளிச் செய்ததாகவும் இரண்டு விளக்கங்கள் இருபத்துநாலாயிரப் படியில் காணப்படுகின்றன. 'என்னே என்பாருமில்லை' என்னும் தொடருக்கு (துன்பத்தில் இருப்பவனைக் கண்டால்) ஐயோ என்னக் கடவாருமில்லை என்று நஞ்சீயர் பொருள் அருளிச் செய்தார். பிள்ளை திருநறையூர் அரையர், தானம் கொடுத்தே வறியவனாகிவிட்ட ஒருவனை அவனிடம் தானம் பெற்றே செல்வந்தர்களாக ஆனவர்கள் ஏன் என்று விசாரித்து விட்டால் அவர்களுக்கு இவன் வேண்டியவன் என்று அது கொண்டே முன்பு தானம் கொடுத்து வறியவனாகிவிட்டவனும் வாழலாமாயிருக்க அதையும் கூட அவனிடம் தானம் வாங்கிச் செல்வந்தர்களானவர்கள் கூறமாட்டார்கள் என்று பொருள் அருளிச் செய்தார். (இவ்விரு விளக்கங்களும் ஈட்டிலும் இடம் பெற்றிருந்தாலும் முதல் விளக்கத்தை அருளியவர் நஞ்சீயர் என்பது ஈட்டில் குறிப்பிடப்படவில்லை. இருபத்துநாலாயிரப்படியில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது). ஒன்பதினாயிரப் படி உரையில் "இப்படி அர்த்தித்தவர்களுக்கு இட்டே தரித்ரனாய் இவனுடைய ஸர்வஸ்வத்தையும் கொண்டு ஸம்ருத்தரானவர்கள் என்னே என்ற மாத்ரத்திலே இவனுக்கு உஜ்ஜீவிக்கலானால் அம்மாத்ரம் செய்வாருமில்லை" என்று பிள்ளைதிருநறையூரரையருடைய விளக்கம் மட்டுமே காணப்படுகிறது. நஞ்சீயர் விளக்கம் அவருடைய உரையில் இடம் பெறவில்லை. 4. "மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க"? என்ற ஆழ்வார் திருவாக்கில் "கொடுவினையேன் " என்னும் தொடரை விளக்கும்போது, 'கண்கள் சிவந்து' என்னும் திருவாய்மொழிக்குப் பிறகு ஆழ்வார் தமது தாழ்வைக் கூறிக் கொள்வதில்லையாகையால், இங்கு 'பிராட்டிமார் அருகே இருக்கவும் நான் இழந்திருப்பதே, பாவியேன் என்கிறார் ஆழ்வார்” என்று ஈட்டில் பொருளுரைக்கப்பட்டிருக்கிறது. (இருபத்துநாலாயிரப்படியிலும் அப்படியே உள்ளது). ஆனால் ஒன்பதினாயிரப்படியில், "திருவடிகளை அதில் போக்யதையை அறிந்து வைத்து இழக்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நானும் பிடிக்கும்படி" என்று ஆழ்வார் தம்முடைய தாழ்வைக் கூறிக் கொள்வதாக விளக்கம் உரைக்கப்பட்டுள்ளது. 5. சில இடங்களில் ஒன்பதினாயிரப்படியுடன், இருபத்துநாலாயிரப்படி இயைந்து நிற்கிறது. "வாழ்த்துவார் பலராக" என்பதற்கு ஈட்டில் 'வாழ்த்துவார் பலராயிடுக' என்றும் வாழ்த்துவார் பலர் ஆகைக்காக' என்றும் இரு பொருள்கள் கூறப்படுகின்றன. ஆனால் இருபத்துநாலாயிரப்படியில் (வாழ்த்துவார் பலர் ஆகைக்காக என்கிற) "இந்த நிர்வாஹம் ஸங்கதமேயாகிலும் (பொருந்துமென்றாலும்) சொல்லிப் போருவதொன்றன்று" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருபத்துநாலாயிரப்படியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் மட்டுமே ஒன்பதினாயிரப்படி உரையில் இடம் பெற்றுள்ளது. 6. சில இடங்களில் ஒன்பதினாயிரப்படியுடன், ஈட்டுரை இயைந்து நிற்கிறது. "என்னப்பன் எனக்காய் இகுளாய்'” என்ற விடத்தில் "இகுளாய் - தோழியாய். இது தமிழர் நிர்வாஹம். நம்முடையவர்கள் செவிலித்தாய் என்று நிர்வஹிப்பர்கள்" என்பது இருபத்துநாலாயிரப்படி உரை. ஒன்பதினாயிரப் படியில் இகுளாய் என்பதற்குத் தோழியாய் என்ற பொருள் மட்டுமே உரைக்கப்படுகிறது. ஈட்டிலும் இப்பொருள் மட்டுமே உள்ளது. "இகுளை என்று தோழிக்குப் பேராய் அத்தைக் குறைத்து இகுள் என்று கிடக்கிறது" என்பது ஈடு. (நம்) ஆசாரியர்கள் கூறிய பொருளான செவிலித்தாய் என்ற பொருள் இவ்விரு உரைகளிலுமே குறிப்பிடப்படவில்லை. 7 ஆழ்வார் திருவேங்கடத்து எம்பெருமானை 'இமையோர்கள் ஏத்துகின்றார்கள்' என்று ஒரு பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.” இங்கு "இமையோர்கள்" என்பதற்கு நித்தியசூரிகள் என்று இருபத்து நாலாயிரப்படியில் பொருளுரைக்கப்படுகிறது. அது மட்டுமன்று. "இப்பாட்டு ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது என்பாருமுண்டு. மேலே (எட்டாம் பாட்டில்) அவர்களைச் சொல்லுகையாலே அது உசிதமன்று (சரியன்று)" என்றும் அவ்வுரையில் கூறப்படுகிறது. ஆனால் ஒன்பதினாயிரப்படி உரையில் இமையோர்கள் என்பதற்கு நித்தியசூரிகள் தேவர்கள் என்ற இரு பொருள்களுமே காட்டப்படுகின்றன. (ஈட்டிலும் அவ்வாறே இரு பொருள்களும் காட்டப்படுகின்றன). 8. ஆழ்வார், "மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே"" என்கிறார். "மாலாய் நான் மயங்கும்படி மயக்கிக் கொண்டு வரவேணு மென்கிறார் என்றும் சொல்லுவர்கள்; அவையன்று பொருள்" என்று ஈட்டில் கூறப்படுகிறது. ஆனால் இருபத்துநாலாயிரப்படியில் "மாலாய் - மயங்கியிருக்கிற அடியேன் என்றுமாம்" என்று உரைக்கப்படுகிறது. ( ஆறாயிரப் படியிலும் இப்பொருளே கூறப்பட்டுள்ளது). ஒன்பதினாயிரப்படியில், ஈட்டில் கூறப்பட்ட பொருள் - மாலாய் - கறுத்த நிறத்தனனாய் அதாவது கண்ணனாய் என்ற பொருள் மட்டுமே உரைக்கப்பட்டுள்ளது. நஞ்சீயரால் மறுக்கப்பட்ட விளக்கங்கள் அவருடைய உரையிலேயே இடம்பெற்றுள்ளமை, அவரால் கூறப்பட்ட விளக்கங்கள் இடம் பெறாமலுமுள்ளமை, ஈட்டிலும் இருபத்துநாலாயிரப்படியிலும் மறுக்கப்பட்ட விளக்கம் இடம் பெற்றுள்ளமை, சில இடங்களில் ஈட்டுரையும் சில இடங்களில் இருபத்துநாலாயிரப்படியும் ஒன்பதினாயிரப்படியுடன் இயைந்து நிற்கும் தன்மை ஆகியவை, காரணங்கள் கூறமுடியாதபடி சிக்கல்களாகவே அமைந்துள்ளன. நஞ்சீயர் நூறுமுறை திருவாய்மொழி காலக்ஷேபம் ஸாதித்துள்ளார் என்று குருபரம்பரை வரலாறுகள் கூறுகின்றன. எனவே ஒருமுறை அவர் கூறியவை ஒன்பதினாயிரப்படியில் ஏடுபடுத்தப்பட்டிருக்கலாம். பின்னர், ஒரு முறை அவரே அவ்விளக்கங்கள் சுவையற்றதென்று கருதியிருக்கலாம்; அப்போது வெளியிட்ட கருத்துகள் ஈட்டில் இடம்பெற்றிருக்கலாம் என்று கொள்ளல் தகும். உட்கருத்து கூறல் ---------- ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களைப் பல கோணங்களில் ஆராய்ந்து அவற்றின் உட்கருத்தைக் கூறும் புதிய உத்தியை நஞ்சீயர் தோற்றுவித்தார் எனலாம். அவருடைய உத்தியை இருபத்துநாலாயிரப் டியையும் ஈடு முப்பத்தாறாயிரப்படியையும் அருளிய ஆசார்யர்கள் பின்பற்றி யுள்ளனர். அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம். 1. ஆழ்வார், "இருத்தும் வியந்து" என்கிற திருவாய்மொழியில் எம்பெருமானுக்குத் தம் மீதுண்டான ஈடுபாட்டை அருளிச் செய்கிறார். அத் திருவாய்மொழியின் உட்கருத்தை, "எம்பெருமானுக்கு ஈச்வரத்வமன்று ஸ்வரூபம். பாரதந்த்ர்யம் என்று இத்திருவாய்மொழிக்குக் கருத்து" என்று. ஒரே வரியில் நஞ்சீயர் அருளிச் செய்கிறார்." இதையே இருபத்துநாலாயிரப்படியும் ஈடும் விரித்துரைக்கின்றன. 2. நஞ்சீயர், பல இடங்களில் பாசுரங்களின் உட்கருத்தை எடுத்துக் காட்டுகிறார். "நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்" என்கிறார் ஆழ்வார். "நெஞ்சமே! நீயும் நானும் நம் தாழ்வை நினைத்து விலகாமல் இருந்தால் நம்மை ஒருநாளும் அவன் கைவிடான்" என்கிறார் ஆழ்வார். "பகவல்லாபத்துக்கு சேதநர் பக்கல் வேண்டுவது ப்ராதிகூல்ய நிவ்ருத்தியே என்று இப்பாட்டுக்குக் கருத்து" என்று உரையிடுகிறார் நஞ்சீயர். அதாவது எம்பெருமானை அடைவதற்கு இச்சேதநன் பிரதிகூலனாக இல்லாமல் இருந்தாலே போதும் என்பதே இப் பாசுரத்தின் உட்கருத்தாகும் என்கிறார் நஞ்சீயர். 3. பிரமன் முதல் எறும்பு வரை எல்லாமே எம்பெருமான் உண்டாக்கின சோலை என்னும் கருத்தில் "பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே "் என்கிறார் ஆழ்வார். இங்கு எல்லாவற்றையும் அசையாப் பொருளான தாவரமாகவே கூறியிருப்பதன் கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், எல்லாப் பொருள்களின் இயக்கங்களும் எம்பெருமானுக்கு உட்பட்டவையாகையால் அப்படியருளிச் செய்வதாகக் காட்டுகிறார். "எல்லாரையும் ஒக்க ஸ்தாவரமாகப் பேசுகையாலே தந்தாமுடைய ஸர்வ நிர்வாஹகத்வமும் பகவததீனம் என்று கருத்து" என்பது ஒன்பதினாயிரப்படியில் உள்ள செய்தியாகும். 4. "ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே" என்கிறார் ஆழ்வார். பாண்டவர்களுக்காக பாரத யுத்தத்திலே சேனைகளை அழித்து ஆற்றலுடன் (வலிமையுடன்) பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன் அரி என்று ஆழ்வார் இங்கு அருளிச் செய்துள்ளதன் உட்கருத்தை நஞ்சீயர் நன்கு விளக்குகின்றார். பரமபதம் சென்றடைந்த பின்னும் துரியோதனன் முதலானவர்கள் மீதுள்ள கோபத்தினால் ஆயுதத்தைக் கையிலே வைத்துக் கொண்டு எழுந்தருளியிருப்பான் என்பது ஆழ்வார் கருத்து என்று உரையிடுகின்றார் நஞ்சீயர். "ஸ்ரீவைகுண்டத்திலே புக்கருளின பின்பும் துர்யோதனாதிகள் பக்கலுள்ள கோபவாஸனையாலே ஆசிலே (ஆயுதப் பிடியிலே) கையை வைக்கும் என்று கருத்து" என்பது நஞ்சீயரின் நயமான உரை. 5. எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் துன்பத்தில் மூழ்கிக் கிடக்கின்ற தன் மகளைப் பற்றிக் கூறுகின்ற தாயார் "இராப்பகல் தன கேழில் ஒண் கண்ணநீர் கொண்டாள்" என்று, இரவு பகல் பாராமல் கண்களில் கண்ணீருடன் இருக்கின்றாள் என்கிறாள். இப்படி இவள் கூறுவதன் உட்கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "கண்ணநீராலே மிகவும் அழகிதான இவள் கண்ணை எம்பெருமான் காணில் என்படுமோ என்று கருத்து" என்று அருளிச் செய்வது சுவையானது. 6. "என்னமர் பெருமான் இமையவர் பெருமான்" என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். இங்கு எம்பெருமானை இமையவர் (நித்திய சூரிகள்) பெருமான் என்று அருளிச் செய்வதன் காரணத்தை விளக்குகின்ற நஞ்சீயர், எம்பெருமானுக்கு என் வருமோ என்று அஞ்சுகின்ற ஆழ்வாருக்கு எம்பெருமான் நித்திய சூரிகள் தனக்கு மங்களாசாஸனம் செய்வதைக் காட்டி ஆழ்வாருடைய அச்சத்தைப் போக்குகின்றான் என்று உட்பொருள் கூறுகின்றார். "நித்திய சூரிகள் மங்களாசாஸனத்தைக் கொண்டு எப்போதும் ஸேவித்திருக்கிற படியைக் காட்டித் தம்முடைய பயத்தைக் கெடுத்தான் என்று கருத்து" என்பது ஒன்பதினாயிரப்படியில் இடம் பெற்றுள்ள செய்தியாகும். 7. எம்பெருமானோடு கலக்கின்ற ஆழ்வார், எம்பெருமான் தம்மிடத்தில் கொண்ட அன்பைக் கூறும் போது அவனை "கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்" என்று அருளிச் செய்கிறார். இங்கு நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளைக் கொன்றதையும் ஏழு உலகங்களை உண்டதையும் ஆழ்வார் குறிப்பிடுவதன் காரணத்தை அழகாக விளக்குகின்றார். "இதுக்குக் கருத்து, தம்முடைய ஸம்ச்லேஷ விரோதிகளைப் போக்கி ஐகத்துக்குத் தன்னை யொழியச் செல்லாதாப் போலே தம்மை ஒழிய எம்பெருமானுக்குச் செல்லாதென்று. " 8. தம்முடைய தாழ்வை நினைந்து எம்பெருமானோடு கூடுவதற்கு இசையாமல் அகல நினைக்கும் ஆழ்வார், அவனைக் காண வேண்டும் என்று தம்மைப்போல் ஆசைப்படாமல் எம்பெருமானிடத்தில் கைவல்யம் முதலிய பயன்களைப் பெற்றுக் கொண்டு அகன்று போகின்றவர்களே உயர்ந்தவர்கள் என்கிறார். அப்படிப்பட்டவரைக் கூறும் போது "செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை...."' என்றருளிச் செய்கிறார். இங்கு, கைவல்யார்த்திகளை அடியார் என்று ஆழ்வார் அருளிச் செய்ததன் உட்கருத்தை அழகாக எடுத்துக் கூறுகின்றார் நஞ்சீயர். "கைவல்யார்த்திகளை அடியார் என்கிறது தம்மைப்போலே அவனோடே பரிமாறி அவனுக்கு அவத்யத்தை (குறையை விளையாதே ப்ரயோஜநாந்தரங்களை (கைவல்யம் முதலிய வேறுபயன்களைக்) கொண்டு அகலுகையால்" என்று அருளிச் செய்கின்றார். 9. எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்துடன் தன் தோழியரைக் குறித்துப் பேசுகின்ற பராங்குச நாயகி, "கனிவாய் மடவீர்" என்றும் "ஏலமலர்க்குழல் அன்னைமீர்காள் "* என்றும் இப்படிப் பல சொற்களால் தோழியரையும் அன்னையரையும் விளிக்கின்றாள். நாயகனைப் பிரிந்திருக்கின்ற வருத்தத்தினால் பராங்குச நாயகியின் வாய் வெளுத்திருக்கத் தோழியர்கள் கனிவாய் மடவாராகவும் அன்னையர்கள் மலர் சூடிய கூந்தலை உடையவர்களாகவும் இரார்கள் என்பதனால் நஞ்சீயர் இவ்விடங்களில் அழகாக வேறு கருத்து உரைக்கின்றார். "பண்டு போலே உங்களைக் காண வல்லேனே" என்று ஆழ்வார் (பராங்குச நாயகி) கருதுவதாகப் பொருளுரைக்கின்றார். அதாவது தான் இப்படிப்பட்ட துன்பத்தை அடைவதற்கு முன்னர் அவர்களும் கனிவாய் மடவாராகவும் மலர்சூடிய குழல்களை உடையவர்களாகவும் நன்றாக இருந்தனர் என்றும் அந்நிலையில் அவர்களை மீண்டும் காண வேண்டும் என்று ஆழ்வார் கருதியே அப்படி உரைப்பதாகவும் நஞ்சீயர் கூறுகிறார். 10. எம்பெருமானுடைய திருவடிகளில் சரணம் புகுந்தவர்களுக்கு எம்பெருமான் அளிக்கும் பேற்றினை அருளிச் செய்யும் ஆழ்வார், "மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்" என்றருளிச் செய்கிறார். அவர்களுக்கு உடல் நீங்கிய பின் மோக்ஷத்தைத் தருபவன் என்று பொருளுரைத்து அதன் உட்கருத்தையும் விளக்குகிறார். இதற்கு முன்னர் அவனிடமிருந்தவை உடலோடு போய் விடுகின்றன. இனி அவன் இன்னொரு உடலில் புகுந்து மீண்டும் விஷயங்களை ஆசைப்படுவதற்கு முன்பு, தன்னுடைய வடிவழகைக் காட்டி அவனை வசீகரித்து உடனே மோக்ஷத்தைத் தந்து விடுவான் என்கிறார். "பண்டு வாஸிதமான விஷயங்கள் இந்த சரீரத்தோடே போம். இனி ஒரு சரீரத்திலே ப்ரவேசித்து விஷயங்களில் நசை பண்ணுவதற்கு முன்பில் தசையிலே மிகவும் போக்யமான தன்னழகைக் காட்டி இவனை இசைவித்து அப்போதே விஷயீகரிக்கும் என்று கருத்து" என்பது நஞ்சீயர் உரையாகும். இப்படி ஆழ்வார் திருவுள்ளத்தை அடியொற்றியும் அவ்வப்போது ஆழ்வாருக்கு ஓடுகின்ற மனநிலையைக் கருத்தில் கொண்டும் முதன்முதலில் பாசுரங்களின் உட்பொருளை ஆய்ந்து உட்கருத்தை நஞ்சீயர் பலவிடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார். இதே போல் மேலும் பல இடங்களும் உள்ளன,” இவ்வாறு நஞ்சீயர் காட்டும் கருத்துகள் மேலும் விரிவாக இருபத்துநாலாயிரப்படியிலும், ஈட்டிலும் விளக்கப்பட்டுள்ளன என்பதைக் காணும் போது இத்தகைய உத்தியை முதன் முதலில் தமது உரையில் புகுத்தி முன்னோடியாகத் திகழ்ந்தவர் நஞ்சீயரே என்பது புலனாகிறது. -------------- வினாவிடை நடை நஞ்சீயர் தம் உரையைக் கற்பார்க்குத் தோன்றக்கூடிய ஐயங்களை வினாக்களாக்கி அவற்றிற்குரிய விடைகளையும் தந்துள்ளார். இந்த உத்தியை முதன்முதலில் கையாண்டவா நஞ்சியரே எனலாம். அவருக்குப் பின் உரை வரைந்த பெரியோர்களும் இவ்வுத்தியைக் கையாண்டுள்ளனர். பாசுரங்களில் உள்ள சொற்களுக்குப் பொருள் கூறும் போது மட்டுமல்லாமல், சில திருவாய்மொழிகளில் ஆழ்வாருக்கு ஓடுகின்ற மனநிலைக்கு ஏற்பப் பொருள் கூறும்போதும் இவ்வுத்தியை நஞ்சீயர் கையாண்டுள்ளார். 1. ஆழ்வார், எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிப் பிதற்றிக் கூத்தாடுகின்ற அடியவர்களைக் கொண்டாடியும் அப்படிச் செய்யாதவர்களை இகழ்ந்தும் திருவாய்மொழி ஒன்றில் பேசுகின்றார். அத் திருவாய்மொழிக்கு அவதாரிகை அருளிச் செய்கின்ற நஞ்சீயர், அங்கு ஒரு வினாவொன்றை எழுப்பி, அதற்கான விடையையும் தருகின்றார். பொதுவாக எவரையும் இகழக்கூடாது, புகழவும் கூடாது என்றன்றோ சாத்திரங்கள் கூறுகின்றன? அப்படியிருக்கும் போது ஆழ்வார் சிலரைப் புகழ்வதும் சிலரை இகழ்வதும் சரியாகுமா என்னும் வினாவை எழுப்பி அதற்கு விடையையும் தருகிறார். ஒருகாரணமும் இல்லாமல் மற்றவர்களை இகழ்வதும் புகழ்வதும் தவறு என்றுதான் சாத்திரங்கள் கூறுகின்றனவேயன்றித் திருமாலுடைய அடியவர்களைக் காண்பதால் உண்டாகும் மகிழ்ச்சி காரணமாக அவர்களைப் புகழ்வதும் அத்தகையர் அல்லாதவர்கள் செயல்களை இகழ்வதும் சாத்திரத்திற்கு முரணானது அல்ல என்பது நஞ்சீயர் தரும் விடையாகும்." 2. எம்பெருமானுடைய எளிமையை அனுபவிக்கின்ற ஆழ்வார், அவன் கண்ணபிரானாக அவதரித்து வெண்ணெய் திருடி அகப்பட்டும், கட்டுண்டும், அடியுண்டும் நின்ற நிலைகளை நினைந்து அவன் எளிமையின் உயர்நிலையில் நிற்பதைக் கண்டு மோகிக்கிறார். அதனைக் காட்டில் எம்பெருமானுடைய எளிமைக்கு மற்றோர் இருப்பிடமான அர்ச்சாவதாரத்தைப் பற்றி மற்றொரு திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். அத் திருவாய்மொழியின் முன்னுரையில் நஞ்சீயர், வெண்ணெய் திருடி உரலோடு கட்டுண்டபோது அவன் காட்டிய எளிமையை விட அர்ச்சாவதாரத்தில் காட்டும் எளிமை அதிகமென்றது ஏன் என்ற வினாவை எழுப்பி, விடையும் தருகிறார். விபவத்தில் எம்பெருமானுடைய எளிமை அவதாரகாலத்தில் இருந்தவர் களுக்கு மட்டுமே காட்டியதாகும். ஆனால் அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் காட்டும் எளிமையோ அதைவிடடச் சிறந்து நிற்கிறது. அடியவர்கள் விரும்பின பொருளையே தனக்குத் திருமேனியாகக் கொண்டும், உணவு, உடை, சயனம் முதலியவை அனைத்தும் அவ்வடியவர்களின் விருப்பப்படி தான் கைக் கொண்டும் இங்ஙனம் தன்னுடைய எல்லாச் செயல்களும் அடியவர்கள் இட்ட வழக்காகக் கொண்டு திகழ்வதால் அவதார காலத்தில் அவனிடம் வெளிப்படும் எளிமையைவிட அர்ச்சாவதாரத்தில் வெளிப்படும் எளிமையே உயர்ந்தது என்கிறார் நஞ்சீயர். அவர் உரை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது: "பத்துடை அடியவரில் காட்டிலும் ஆர்ச்சாவதார ஸெளலப்யமாவது என் என்னில் எல்லாக் காலத்திலும் அனுபவிக்கலாம்படி ஸன்னிதி யுண்டாகையும் ஆச்ரிதனானவன் ஏதேனும் த்ரவ்யத்தைத் திருவுடம்பாகக் கோலினால் அத்தையே மிகவும் விரும்பக் கடவனாகையும் எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கை வந்து, போஜன ஸம்பாஷண ஆஸந சயனாதிகள் தொடக்கமாக ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆச்ரித பராதீனமாகையும் இவை தொடக்கமான இப்படிகளை ச்ரிய:பதியான தான் ஒரு ஹேதுவாலன்றிக்கே நைஸர்க்கிகமாகவுடையனாயிருக்கை. "' 3. ஆழ்வார், திருவாய்மொழியொன்றில் எம்பெருமானுக்குத் தம்மிடம் உண்டான அன்பைப் பேசுகின்றார். அத்திருவாய்மொழிப் பாகரம் ஒன்றில் எம்பெருமான் தம்மோடு கலக்கவில்லை என்றாலும் அவனே தனக்கு தாரகம் முதலிய எல்லாம் என்று தமக்கு அவன் மீதிருக்கும் அன்பை வெளியிடுகின்றார். எம்பெருமானுக்குத் தம் மீதுள்ள அன்பைக் கூறுகின்ற ஆழ்வார் இப்பாகரத்தில் மட்டும் தமக்கு அவன் மீதுள்ள அன்பைக் கூறுவதற்குக் காரணம் என்ன என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் தருகிறார் நஞ்சீயர். எம்பெருமானுக்குத் தம்மிடம் உள்ள அன்பின் மிகுதி, தம்மையும் அவனிடத்தில் அன்புடையவராகவே ஆக்கிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகவே அப்படி அருளிச் செய்வதாகக் கூறுகிறார் நஞ்சீயர்.” 4. சில இடங்களில் ஆழ்வாருடைய பாசுரங்களில் அமைந்துள்ள சொல்லாட்சியை ஆய்ந்து வினாக்களை எழுப்பி விடைகளையும் தருகிறார். "பண்டு நூற்றுவர் அடவரும் படைமங்க அன்று தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்களே" என்பது ஆழ்வார் திருவாக்கு. முற்காலத்தில் தீங்கு செய்ய வந்த துரியோதனாதியர் படை அழியும்படியாக அன்று தேரைச் செலுத்தியவனுடைய திருவடிகளை என்று காணப்போகிறேன் என்கிறார் ஆழ்வார். அங்கு "பண்டு" என்றும் "அன்று" என்றும் (ஒரே பொருளில் இரண்டு சொற்களை) ஆழ்வார் அருளியிருப்பதற்குக் காரணம் என்ன என்பதை நஞ்சீயர் விளக்குகின்றார். "பண்டு என்னச் செய்தே திரியவூழ் அன்று என்பான் அன் என்னில் ஒன்று போன காலத்தில் இங்ஙன் வ்ருத்தமென்கிறது. ஒன்று அன்றைக்கு உதவாதே நான் இழந்தேன் என்கிறது." அதாவது 'பண்டு' என்பதனால் கடந்தகாலத்தில் எம்பெருமானுக்கு இப்படி ஒர் ஆபத்து வந்ததே என்றும், அன்று' என்பதனால் விரோதிகள் எம்பெருமானுக்கு தீங்கு செய்ய வந்த அன்றைக்கு நான் எம்பெருமானுக்கு உதவி செய்யாமல் இழந்தேனே என்றும் எம்பெருமானுக்கு வந்த ஆபத்தின் உறைப்பையும் தமது வருத்த மிகுதியையும் முறையே பண்டு, அன்று என்ற சொற்களினால் வெளிப்படுத்துகிறார் ஆழ்வார் என்பன நஞ்சீயர் தரும் விடைகளாக அமைகின்றன. 5. ஆழ்வார் தம்முடைய தாழ்வை நினைத்து எம்பெருமானோடு கூடுவதற்கு இசையாமல் பாசுரமருளிச் செய்யும்போது, "அடியேன் சிறிய ஞானத்தன்"' என்று தம்முடைய தாழ்வைக் கூறுகிறார். இங்கு எம்பெருமானோடு கூடுவதற்கு இசையாமல் அடிமையைத் தவிர்ந்திருக்கிறவர் அடியேன் என்று கூறுவதற்குக் காரணம் முன்பு அப்படிக் கூறியே பழக்கமாகி விட்டபடியால் என்று சுட்டிக் காட்டுகிறார். "அடிமை தவிர்ந்திருக்கிறவர் அடியேன் என்பானென்னென்னில் பூர்வ வாஸநையாலே" என்பது உரை. 6. எம்பெருமான் தமக்கு அருள் புரிந்தமையை அருளிச் செய்கின்ற ஆழ்வார் "மயர்வற மதிநலம் அருளினன்"? என்கிறார். இங்கு மதிநலம் எனக்கு அருளினன் என்று ஆழ்வார் கூறாமைக்குக் காரணம் என்ன என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் தருகிறார். எம்பெருமான் அருள் செய்வதற்கு முன் தம்மை உளராகவே ஆழ்வார் நினையாமையால் எனக்கு என்று கூறவில்லை என்கிறார் நஞ்சீயர். "எனக்குத் தந்தருளினான் என்னாதொழிவான் என் என்னில், அஸந்நேவ ஸ பவதி' என்று சொல்லுகிற கணக்காலே பகவத் விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை அஸத்கல்பராக நினைத்திருக்கையாலே" என்பது நஞ்சீயர் உரையாகும். 7. மேற்கூறிய பாசுரத்தில் "துயரறு சுடரடி தொழுதெழு"” என்று தம் மனத்தைக் குறித்து அருளிச் செய்கிறார். எம்பெருமானைத் தொழச் சொல்லாமல் அவனுடைய திருவடிகளைத் தொழச் சொன்னது ஏன் என்று வினாவை எழுப்பி, அவ்வினாவிற்குத் தாமே தகுந்த விடையும் தருகிறார் நஞ்சீயர்: "அவனைத் தொழுதெழு என்னாதே திருவடிகளைத் தொழுதெழு என்பாஸன் என் என்னில் ஸ்தநந்தயப்ரஜை (முலைப்பால் பருகும் குழந்தை) முலையிலே வாய் வைக்குமா போலே அடியவனானவனுக்குத் திருவடிகளிலே தலைமடுக்கை முறைமையா கையாலே." 8. எம்பெருமானுடைய திருநாமங்களையே கூறவேண்டும் என்று உபதேசிக்கின்ற ஆழ்வார் "எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே என்கிறார். நீங்கள் அனுசந்திக்க வேண்டிய திருநாமம் நாரணன் என்பதே என்று உரையிட்ட நஞ்சீயர் இதை மந்திரம் என்று கூறாமல் நாமம் என்று கூறிய காரணத்தைக் கீழ்க் கண்டவாறு உரையிடுகின்றார். "மந்த்ரமென்னாதே நாமம் என்றது நியமங்கள் வேண்டா என்னுமிடத்தை எமிசிக்கிறது" என்பது உரையாகும். 9. ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, "போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னையான் ஆரைக் கொண்டு ... " என்றருளிச் செய்கிறார். எம்பெருமானே நீ என்னை விலக்கி வைத்தால் பின்பு நான் யாரைக் கொண்டு எந்தப் புருஷார்த்தத்தைப் பெறுவது? என்று கேட்கிறார். நான் எந்த ஸாதனத்தைக் கொண்டு புருஷார்த்தத்தைப் பெறுவது? என்று கேட்காமல், ஆரைக் கொண்டு என்று அருளிச் செய்வானென்? என்று வினாவை எழுப்பி விடையும் தருகிறார். "என்ன ஸாதநத்திலே என்னாதே, ஆரைக் கொண்டு என்கிறது என்னென்னில், என்றும் புருஷார்த்தம் பெறுவது பரமசேதநனாயிருப்பான் ஒருவளாலே என்றிருக்கையால்" என்பது நஞ்சீயர் உரையாகும். 10. நஞ்சீயர், பாசுரங்களின் உரையில் அப்பாசுரங்களில் ஓடுகின்ற ஆழ்வாருடைய மனநிலைக்கேற்பவும் வினாவிடைப் பாங்கில் உரை வரைந்தார். தொலைவில்லிமங்கலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீது பராங்குச நாயகி கொண்ட ஈடுபாட்டைக் கூறுகின்ற தோழி, "தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே"” என்கிறாள். இங்குத் தோழி, தொலைவில்லி மங்கலம் என்று ஊரின் பெயரைச் சொல்லாமல் "அவ்வூர்" என்றமைக்குக் காரணம் என்ன என்று வினவுகிறார் நஞ்சீயர். "அவ்வூர்த் திருநாமம் என்பானென் என்னில் பெண்பிள்ளை திருத் தொலைவில்லி மங்கலம் என்றால் உள்ள இனிமை தன் வாயாலே சொன்னவிடத்திற் பிறவாமையாலே" என்று விடையும் தருகிறார். --------- சுவைமிகுவிளக்கம் (ரஸோக்தி) தருதல் பாசுரங்களில் அமைந்துள்ள சொல்லுக்கு சுவையான விளக்கம் தரும் ஸ்ரீ ஸூத்தி முதன் முதலில் ஒன்பதினாயிரப்படி உரையிலேயே இடம் பெற்றுள்ளது. அவ்வுரையைப் பின் பற்றி இருபத்துநாலாயிரப்படியிலும் ஈடுமுப்பத்தாறாயிரப்படியிலும் சுவையான விளக்கங்கள் வரையப் பெறுகின்றன. 1. ஆழ்வார், எம்பெருமானோடு கூடப் பெற வேண்டும் என்ற ஆசை மீதூர்ந்து உடனடியாக அது நிறைவேறாமையினால் ஆற்றாமை அதிகமாகி தாமான தன்மையை இழந்து, (பராங்குச) நாயகி நிலையை அடைகிறார். அப்போது கண்ணால் காணுகின்ற பொருள்கள் அனைத்தும் தம்மைப் போலவே எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினாலேயே துன்பப்படுவதாகக் கருதி அருளிச் செய்யும் திருவாய்மொழி ஒன்றுள்ளது. இரவெல்லாம் உறங்காதிருந்து (மீனை எதிர்பார்த்து நிற்கின்ற) வெளுத்த உடல் கொண்ட நாரை ஒன்றைப் பார்த்து நீயும் எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் தான் இப்படி உடல் வெளுத்து உறக்கமில்லாமல் இருக்கிறாயோ? என்கிறாள். இரவெல்லாம் கூக்குரலிடுகின்ற அன்றிலைப் பார்த்து எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால்தான் இப்படிக் கூக்குரலிட்டுக் கதறுகின்றாயோ என்கிறாள். ஒரு கலை மட்டும் உள்ள சந்திரனைப் பார்த்து எம்பெருமானுடைய பேச்சை நம்பி அவன் வருவான் என்று எதிர்பார்த்துத் தேய்ந்து உடல் இளைத்து விட்டாயோ என்ற கருத்தில், கீழ்க் கண்டவாறு அருளிச் செய்கிறார். ஐவாயரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே' என்கிறாள் பராங்குசநாயகி. ஐந்து வாய்களை உடைய ஆதிசேஷன் மேல் எழுந்தருளியிருப்பவனும், சக்கராயுதத்தை உடையவனுமான பெருமானுடைய சொற்களை நம்பி, நீ உடல் இளைத்து விட்டாயோ? என்பது இப்பாசுரத்தின் திரண்ட பொருளாகும். இப்பகுதிக்கு ஆறாயிரப்படி உரையில், "பேதை நின்னைப்பிரியேன் என்றும், ஏதத் வ்ரதம் மம' என்றும், மா சுச: என்றும் எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்டு, திருவனந்தாழ்வான் தொடக்கமாக உள்ள திவ்யபுருஷர்களோடே பழகி வர்த்திக்கிற இவன் மெய்யல்லது சொல்லான் என்று கொண்டு அவ்வார்த்தையை விச்வஸித்து அகப்பட்டாயாகாதே என்கிறாள்" என்று உரையிடப்பட்டுள்ளது. அதாவது, திருவநந்தாழ்வான், திருவாழி முதலிய நித்யசூரிகளோடு பழகுபவனான எம்பெருமான் மெய்யல்லது சொல்லமாட்டான் என்று கருதியிருந்ததைத் தெரிவிக்கவே "ஐவாயரவணை மேல் ஆழிப் பெருமானார்" என்று அருளிச் செய்ததாக ஆறாயிரப்படியின் கருத்து. ஆனால் ஒன்பதினாயிரப்படி உரையில் மிகவும் சுவையான வேறொரு விளக்கம் தரப்படுகிறது. "பல்வார்த்தை சொல்லுகைக்கு ஐந்து வாயையுடைய திருவனந்தாழ்வானோடும் ஜயத்ரதவதத்திலே பகலை இரவாக்கின பொய்க்குப் பெருநிலை நின்ற திருவாழியாழ்வானோடும் பழகி, அவர்களும் தன் பக்கலிலே பொய்யோத வேண்டும்படி பெரியனான எம்பெருமான் ஏதத் வ்ரதம் மம' என்ற பெரும் பொய்யை மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயாகாதே" என்பது நஞ்சீயர் உரையாகும். "ஐவாயவரவணையேல் ஆழிப் பெருமானார்" என்ற அடியிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் சுவையான விளக்கத்தைத் தந்துள்ளார். ஆதிசேஷனோடும், திருவாழியோடும் உள்ள பழக்கத்தினால் தான் எம்பெருமான் பொய்யனாகி விட்டான் என்று பராங்குச நாயகி கருதுவதாக உரையிடுகிறார் நஞ்சீயர். பொய் சொல்லுவதற்கு ஐந்து வாய்களை உடையவன் திருவனந்தாழ்வான். (இது ஐவாயரவணை என்ற சொல்லின் நயம்). ஜயத்ரதனை வதம் செய்தபோது சூரியனை மறைத்துப் பகலை இரவாக்கிய பொய்க்குத் துணை நின்றவன் திருவாழியாழ்வான். (இது ஆழி என்ற சொல்லின் நயம்). அவர்களோடு பழகிப் பழகிப் பொய்யனாகிவிட்ட எம்பெருமான், பின்னர் அவர்களும் பொய் பேச வேண்டும் என்றால் தன்னிடம் வந்து பொய் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் அளவுக்குப் பொய் பேசுவதில் வல்லவனாகி விட்டான். (இது பெருமானார் என்ற சொல்லின் நயம்.) இப்படிப்பட்ட எம்பெருமானுடைய வார்த்தைகளைக் கேட்டு உண்மை என்று நம்பி, உன் உடலிளைத்து விட்டாயோ? என்கிறாள் பராங்குசநாயகி என்று சுவையாக உரையிடுகிறார் நஞ்சீயர். இச்சுவை மிகு விளக்கமே பிற இரு வியாக்கியானங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளன. "(ஐவாய் இத்யாதி) பலவார்த்தை சொல்லுகைக்குப் பலவாயையுடைய திருவனந்தாழ்வானோடேயிறே பழக்கம். ஜயத்ரதவதத்தில் பகலை இரவாக்கின பொய்க்குப் பெருநிலை நின்ற திருவாழியாழ்வானோடே யிறே பழக்கம். பேறு அவர்களாலேயானால், இழவில் இன்னாதாகப் ப்ராப்தியுண்டாகை. (பெருமானார்) அவர்களும் தம் பக்கலிலே பொய்யோத வேண்டும்படி பொய்யாற் பெரியவர்." என்பது இருபத்துநாலாயிரப்படி உரை. "(ஐவாயித்யாதி)..... தம்பாம்பு போல் நாவுமிரண்டுளவாய்த்து என்கிறபடியே தமக்குப் பொய் சொல்ல ஒரு வாயுண்டாகில் தம் பரிகரத்துக்கு அஞ்சு வாயுண்டு. அவனுக்குப் பள்ளித் தோழமை பலித்தபடி. (ஆழிப் பெருமானார்) அல்லாத பரிகரமோதான் நன்றாயிருக்கிறது? தாம் பகலை இரவாக்க நினைக்கில், அதுக்குப் பெருநிலை நிற்கும் பரிகரம். பேறு அவர்களாலேயானால் இழவிலும் இன்னாதாகப் பிராப்தியுண்டென்கை. (பெருமானார்) அவர்களுக்கும் தம் பக்கலிலே பொய்யோத வேண்டும்படி பொய்யாற் பெரியவர்." --என்பது ஈடுமுப்பத்தாறாயிரப்படியுரை. 2. நம்மாழ்வார் தம்முடைய தாழ்வை நினைத்து எம்பெருமானோடு கூட மாட்டேன் என்று அகலுகின்ற போது "வளவேழுலகின் முதலாய வானோர் இறையை, அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் "'' என்கிறார். "வானோர் இரையைக் கள்வா என்பன்" என்று அருளிச் செய்ய வேண்டியிருக்க இடையில் "அருவினையேன்" என்று கூறியதன் காரணத்தை நஞ்சீயர் விளக்குகிறார். "தொடங்கின வாக்யம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மெளர்க்யத்தை (மூர்க்கத்தனத்தை) அநுஸந்தித்து அருவினையேன் என்கிறார். அநிஷ்டமான (விரும்பத்தகாத) பகவத் ஸம்ச்லேஷத்தை விளைக்கையாலே பக்தியை அருவினை" என்கிறது என்று இவ்விடத்திற்குத் தகுதியான பொருளுரைக்கின்றார். 3. எம்பெருமானை "நீர்புரை வண்ணன் "" என்கிறார் ஆழ்வார். "நீரை வருந்தி மேட்டிலே ஏற்றினாற்போலே ஸம்ஸாரிகள் விலங்கிப்போனது தனக்கு வழியாம்படி தான் செய்வியனாகை" என்று நீர்மைக்கு விளக்கம் தருகிறார். 4. எம்பெருமானோடு கூடப் பெறாத வருத்தத்தினால் பறவைகளைத் தூது விடுகிறார் ஆழ்வார். அத்திருவாய்மொழியின் முடிவில் எம்பெருமான் வந்து ஆழ்வாரோடு கலந்தமையை ஆழ்வார் "சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி" என்னும் சொற்றொடரினால் தெரிவிக்கிறார் என்று திருவுள்ளம் பற்றிய நஞ்சீயர், "ஆழவாரோடே ஸம்ச்கேவித்து அவரை உளராக்குகையாலே ஒன்றொழியாமே ஸகல பதார்த்தங்களுக்கும் ஈச்வரனானவன்..." என்று உரையிடுகின்றார். 5."திண்ணன் வீடு” என்கின்ற திருவாய்மொழியில் எம்பெருமான் நாராவணனே பரம்பொருள் எல்று நன்கு நிலைநாட்டுகிறார் ஆழ்வார். முடிவில் அத்திருவாய்மொழியைக் கற்பவர்களுக்கு, "இல்லை ஓர் ஊனமே"' என்று பயனும் அருளிச் செய்கிறார். இங்கு ஊனமாவது யாது என்று விளக்குகின்ற நஞ்சீயர், "எம்பெருமான் அநீச்வரன் என்று புத்தி பண்ணுதல், இதர தேவதைகள் ஈச்வரட்கட் என்று புத்தி பண்ணுதல் செய்யும் இல்வனாத்தங்கள் ஒன்றும் வாராதென்கிறார்" என்று உரையிடுகின்றார். 6. எம்பெருமானை "ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாவலியுமல்லன் "” உன்கிறார் ஆழ்வார். ஆண்களுக்கு ஒப்பானவனல்லன் என்றது போதாதோ? பெண்களுக்கும் அலிகளுக்கும் ஒப்பானவன் அல்லன் என்று கூற வேண்டுமோ என்ற கேள்விக்கு "ஸ்த்ரீ நபும்ஸகங்களிற் காட்டில் விலக்ஷ்ண£னென்று சொல்லிற்று, எம்பெருமானோடு ஒவ்வாமைக்கு ஸ்த்ரீ நபம்ஸகங்களேடடு புருஷர்களோடு வாசியில்லை என்று தோற்றுகைக்காக" என்று விடை தருகிறார். 7. எம்பெருமான் தன் ஸங்கல்பத்தினாலேயே உலகையெல்லாம் காக்கும் வல்லமை படைத்தவன் என்றாலும் அப்படி அவன் எல்லாவற் றையும் ஸங்கல்பத்தினாலேயே செய்து விட்டால் அவனது சுடர்ச் சோதி மறையாதோ? என்கிறார் ஆழ்வார்." அதற்கு விளக்கம் தருகிற நஞ்சீயர், "பெருமுதலியாயிருந்துத் வைத்து திருவடிகளை ஆச்ரயித்தார்க்குத் தானே தடுமாறிக் கொண்டு வந்து உதவும் என்னும் இவ்வழகிய தேஜேஸ்ஸை இழந்தாயாகாதே" என்று ஆழ்வார் கூறுவதாக அழகிய உரையிடுகின்றார். 8. எம்பெருமானைப் "புள்ளூர் கொடியானே”” என்கிறார் ஆழ்வார். கருனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பதற்குக் காரணத்தையும் நஞ்சீயர் விளக்குகிறார். "ஆச்ரிதர் இருந்த இடத்தில் செல்லுகைக்கும், செல்லுமதுக்கு முன்னே தூரத்திலே கண்டு வாரா நின்றானென்று உகக்கைக்கும் ஈடாகப் பெரிய திருவடியை வாஹனமாகவும் தவஜமாகவும் உடையையுமாய்...... என்பது நஞ்சீயர் உரை. 9. எம்பெருமானோடு தொடர்புடைய பொருள்களைக் கண்டு மயங்குகிற பராங்குச நாயகி, "விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்"" என்கிறாள் திருத்தாயார். இங்கு "கைகாட்டும்" என்றதன் நயத்தை விளக்கும் நஞ்சீயர், "அவன் நிரந்தர வாஸம் பண்ணுகிற வைகுந்தம் என்று சொல்லப்புக்கு பல ஹானியால் மாட்டாதொழிந்து ஹஸ்த சேஷ்டையாலே(கையாலே) காட்டாநிற்கும்" என்று உரையிடுகின்றார். இதே போல் வேறோரிடத்தில் "சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்"* என்று தெரிவிக்குமிடத்தில் "கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன் பால் வாராய் என்று சொல்லத் தொடங்கி, சங்கு சக்கரங்கள் என்ற மாத்ரத்திலே இளைத்து விடாய்த்தார் ஹஸ்த சேஷ்டையாலே தண்ணீர் வேண்டுமாபோலே தன் கருத்தைக் குறையும் அஞ்ஜலியாலே தெரிவியாநின்றாள்" என்று உரையிடுகின்றார். 10. அடியவர்கட்காட்பட்டிருத்தலே சிறந்தது என்றுபதேசிக்கின்ற ஆழ்வார், "கொடுமாவினையேன் அந்தோ" என்கிறார். இங்கு, "பாகவத சேஷத்வ புருஷார்த்தம் ஐச்வர்யத்தோடு ஒவ்வாது என்று பேசிக் கழிக்க வேண்டுவதே என்னும் வெறுப்பாலே அந்தோ என்கிறார் " என்பது நஞ்சீயரின் நயவுரை. இவ்வாறு நஞ்சீயர் அவ்வவ்விடத்திற்குத் தக்கவாறு உரைத்திருக்கும் சுவைமிகு பொருளையே பின்னர் எழுந்த உரைகளும் விரித்துரைக்கின்றன என்பதைக் காணும்போது இவ்வுத்திக்கு வித்திட்ட நஞ்சீயரின் திறன் கருதத் தக்கதாகிறது. --------------- தொடர்புரைகள் வரைதல் பாசுரங்களில் ஆழ்வார் அருளிச் செய்யும் அடுத்தடுத்த தொடர்களுக்குப் பொருத்தமான தொடர்பு காட்டி உரை வழங்குவதும் முதன்முதலில் நஞ்சீயரின் உரையில் காணலாம். பரவிவானவரேத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியை குரவைகோத்தகுழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை அரவமேறியலைகடலமரும் துயில் கொண்ட வண்ணலை இரவுநன்பகலும்விடாது என்றுமேத்துதல்மனம்வைம்மினோ.! என்பது ஆழ்வார் பாசுரம். இப்பாசுரத்தில் எம்பெருமானைக் குறிக்கும் அடைமொழிகள் அனைத்திற்கும் தொடர்பு காட்டி உரை வரைகிறார் நஞ்சீயர். ஒத்தாரும் மிக்காரும் இன்றிக்கே தன்னுடைய ஸெளந்தர்யாதி (அழகு முதலியவை)களுக்கு தோற்று அயர்வறுமமரர்கள் அக்ரமமாக ஏத்தும்படியை உடையனாய் (-இது பரவி வானவரேத்த நின்ற பரமனை என்பதன் பொருள்) அவர்கள் ஏத்துகையாலே தீப்யமாநனுமாய் (-இது பரஞ்சோதியை என்பதன் பொருள்) இங்ஙனே விலக்ஷணனாயிருந்து வைத்து ஸ்ரீ நந்தகோபர் திருமகனாய்க் குரவை கோத்தருளி அவர்களோடே கலக்கவல்லனுமாய் (-இது குரவை கோத்த குழகனை என்பதன் பொருள்) அத்தாலே பெருவிலையனான மாணிக்கம் போன்ற அழகை உடையனுமாய் (-இது மணிவண்ணனை என்பதன் பொருள்) பெண்களே வாழ்ந்து போகையன்றிக்கே எல்லாரும் கண்டு வாழும்படி குடமாடியருளுவதும் செய்து (-இது குடக்கூத்தனை என்பதன் பொருள்) அத்தால் உண்டான இளைப்பு ஆறும்படி திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளின நிரதிசய போக்ய பூதனை (-இது அரவமேறி...... அண்ணலை என்பதன் பொருள்) என்று இவ்வாறு இப்பாசுரத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தொடர்பு காட்டி உரை வரைகிறார். ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை“ --என்றருளிச் செய்கிறார் ஆழ்வார். "ஆயர்கள் உளராய்த் தானும் தன்மையை உடையனாய் அவர்களது ஏதேனுமொரு த்ரவ்யத்தாலல்லது தரியாமையாலே வெண்ணெய் களவு காணப்புக்கு அகப்பட்டுத் தாயிற்காட்டிலும் பரிவரான ஊரிலுள்ளார் எல்லாராலும் புடையுண்ணும் ஆச்சர்யத்தை உடையனாய் ஆச்ரிதராலே நெருக்குண்கையாலே பெருவிலையனான தன் திருவழகை எனக்கு அனுபவிக்கத் தந்தவனை" என்று இங்குத் தொடர்பு காட்டி உரையிடுகிறார் நஞ்சீயர். நாளிளந் திங்களைக் கோள்விடுத்து வேயகம்பால் வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர் தாயவனே...... என்பது ஆழ்வார் திருவாக்கு. இதற்குப் பொருளுரைக்கும் நஞ்சீயர், "இடையர்களுடைய மூங்கில் குடில்களில் வெண்ணெய் களவு காணப்புக்கு வெண்ணெயைப் பெற்ற மகிழ்ச்சியினால் புன்முறுவல் பூத்தபோது நாளால் இளையனான சந்திரனைப்போலே இருக்கிற திருமுத்தின்(பற்களின்) ஒளிபுறப்படும்படியாக புன்முறுவல்பூத்து வெண்ணெய் அமுது செய்து ஆனாயர் பக்கல் தாய்போல் பரிவனானவனே" ் என்று பொருள் காட்டுகின்றார். இவ்வாறு ஆழ்வார் அருளிச்செய்யும் தொடர்களுக்குப் பொருத்தமான தொடர்பு உரைகளை வழங்கும் பாங்கு முதன்முதலில் நஞ்சீயர் உரையிலேயே இடம்பெற்றுள்ளது. ----------------- கற்பனை நயம் ஒருநூலுக்கு உரையிடும்போது, மூல நூலாசிரியர் கூறும் கருத்துகளை மனக்கண்ணால் பார்த்து, கற்பனையில் அதை ஒரு நாடகமாகவே கண்டு அதை அப்படியே உரையாக வடிப்பது மிகவுயர்ந்த உரை உத்தியாகும். உரையைப் படிப்பவர்களுடைய மனத்தை இவ்வுத்தி நன்கு ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. மிகச் சுருக்கமான தமது உரையிலும் நஞ்சீயர் இவ்வுத்தியை ஆங்காங்கே கையாண்டுள்ளார். கண்ணபிரான் வெண்ணெய் களவுகண்ட சரித்திரத்தை நினைத்து உருகுகின்ற ஆழ்வார், "நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே "' என்று அருளிச் செய்கின்றார். இங்கு நஞ்சீயர், "நெய்யைக் களவுக்கண்டான் என்னும் இவ்வார்த்தா ப்ரஸங்கத்திலே ஸ்நேஹியான தாயார் கையிலே ஒரு துரும்பைக் கொள்ள அத்யந்த ஸுந்தரனான நீ உனக்குத் தகுதியாய்த் தாமரைபோலேயிருக்கிற கண்கள் அச்சத்தினாலே நீர்மல்கும்படி, அடிபடுகிறது என்று பேகணித்து நின்ற நிலையும் வந்து என்நெஞ்சை நீராக்கா நின்றன." என்று உரையிடுகின்றார். யசோதைப்பிராட்டி கண்ணனை அச்சமுறுத்துவதற்காகக் 'கையில் கோல் கொள்ள' என்று ஆழ்வார் அருளியதை நஞ்சீயர், யசோதை கண்ணன்பால் அன்புடையவள் ஆதலின் அவள் ஒரு துரும்பைத்தான் கையில் கொண்டதாகக் காண்கிறார். கண்ணனுடைய பையவே நிலை' என்று ஆழ்வார் அருளியதை, அழகான தாமரைக் கண்களிலிருந்து நீர்மல்க, எங்கே தன்மேல் அடிவிழுந்துவிடுமோ என்ற அச்சமெல்லாம் முகத்திலே பரவிநின்ற நிலையாகக் காண்கிறார் நஞ்சீயர். அப்படி ஆழ்வார் கண்டதை அவருடைய பாசுரத்தைக் கொண்டு தாமும் தம்மனக் கண்ணால் கண்டு உரையிடுகின்றார் நஞ்சீயர். கண்ணபிரான் மீது ஊடல் கொண்ட நாயகியின் நிலையில், "மின்னிடை மடவார்" என்று தொடங்கும் திருவாய்மொழியில் பாசுரங்களை அருளிச்செய்கிறார் ஆழ்வார். நஞ்சீயர் இப்பாசுரங்கள் அனைத்திற்கும் கற்பனை நயம் மிக உரையிட்டுள்ளார். முதல் பாசுரத்தில் ஈற்றில் "என்னுடைய பந்தும் கழலும் தந்துபோகுநம்பீ" என்று பராங்குச நாயகி கூறுவதாக உள்ளதைக் கருத்தில்கொண்டு அதற்கு முன்னர் நடந்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகளைக் கற்பனையில் கண்டு உரையிடுகின்றார். பராங்குச நாயகியும் தோழிமாரும் கண்ணபிரானிடம் ஊடல் கொண்டு அவனுக்கு முகம் கொடுக்காமல் இருக்கின்றனர். அப்போது கண்ணபிரான் அவர்கள் எடுத்துக்கொள்ள மறந்துவிட்ட அவர்களுடைய பந்தையும் கழலையும் கண்டான். அவர்களை அணைத்துக்கொள்ளாத குறை தீர அப்பந்தையும் கழலையும் அணைத்துக்கொண்டு நின்றான். ஆனால் பராங்குச நாயகி இதை கெறுவிதமாகக் கருதினாள். வேறு பெண்கள் சிலரிடமுள்ள அன்பினால் கலங்கி நம்மையும் அவர்களாகவே நினைத்துக்கொண்டு நம்முடைய பந்தையும் கழலையும் அவர்களுடையவைகளாகக் கருதியே இப்போது அவைகளை அணைத்துக்கொண்டு நிற்கிறான் என்றெண்ணிக் கோபம் கொண்டு, "அவை நீ உகந்திருக்கிற பெண்களினுடையவையல்வ. என்னுடையவை. எனவே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ" என்கிறாள் என்று கற்பனை நயம்பட உரையிடுகிறார். உரையாடல் பாங்கு கற்பனை நயத்தோடு ஆங்காங்கே உரையாடல் பாங்கில் உரை வரைதலும் நஞ்சீயர் உரையில் காணப்படுகிறது. “மின்னிடை மடவார்” திருவாய்மொழி முழுமைக்குமே உரையாடற் போக்கில் உரை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்ணபிரானிடம் ஊடல் கொண்ட பராங்குநாயகி "போகு நம்பீ"! என்கிறாள். அவனும் போகிறேன் என்று கூறி மேலும் அருகில் வந்தான். இங்கு நடைபெற்றவற்றை உரையாடலிலேயே நஞ்சீயர் காட்டுகிறார். நாயகி: உறவுடையவரைப்போலே எங்களைத் தொடவேண்டாம். கண்ணன்: என்னுடைய கண்களிலும் வடிவழகிலும் ஈடுபடுகிற நீங்கள் என்னோடு உறவில்லை என்று கூறுவது எங்ஙனம்? நாயகி: நாங்கள் உன் அழகைக் கண்டு ஈடுபட்டுக் கூடிக்களிக்கப் பிறந்தோமில்லை. உன் அழகைக் கண்டு ஈடுபட்டு மனமுடைவதற்காகவே பிறந்தோம். கண்ணன்: நீங்கள் யாராயிருந்தாலென்ன? எப்படி ஆனால் என்ன? உங்களுடைய கூந்தல்தான் மயில்தோகை போல் எவ்வளவு அழகாக இருக்கின்றது! நாயகி: இப்படி போலியைக் கண்டு பிரமிக்கும்படி உன்னை மயக்க வல்ல கூந்தலை உடைய அப்பெண்களிடமே சென்று கூடிக் களிப்பாயாக. கண்ணன்: அவர்களைச் சந்திக்கும் வழி கிடைக்கும் வரை இங்கேயே இருக்கின்றேனே. நாயகி: உன் மனத்திற்கு உகந்த பெண்களைச் சந்திப்பதற்கு வழியை நான் கூறுகிறேன் கேள். கண்ணன்: அது என்ன? நாயகி: நீ உன் குழலை ஊது. அவ்வோசையைக் கேட்டு நீ இருக்குமிடம் தேடி அப்பெண்கள் வருவார்கள். அவர்களோடு கூடிக் களிக்கலாம். கண்ணன்: அது சரியல்ல. கண்ணன் பெண்களை அழைக்க குழலூதுகிறான் என்று ஊரார் பழிப்பர்களே. நாயகி: நீ மேய்க்கிற பசுக்களைக் கடக்க விட்டுக் குழலூது. பசுக்களை அழைக்கத்தான் குழலூதுகிறாய் என்று ஊரார் நினைப்பர். ஆனால் உன் குழலோசை கேட்டு நீ விரும்பும் பெண்கள் உன்னைத் தேடி வருவர். அவர்களோடு கூடிக் களி. இவ்வாறாக இத்திருவாய்மொழியில் உள்ள பாசுரங்கள் அனைத்திற்குமே உரையாடற் பாங்கில் உரை வரைந்துள்ளார் நஞ்சீயர். ------- சொற்பெய்து விரித்துரைத்தல் பாசுரங்களில் உள்ள சொற்களுக்கு விளக்கம் கூறும் வகையில் தகுந்த சொற்களைப் பெய்து விரித்துரைக்கும் உத்தியை முதன் முதலில் கையாண்டவர் நஞ்சீயர் எனலாம். 1. எம்பெருமானைக் காண வேண்டும் என்ற அவாவின் மிகுதியினால் "அழுவன் தொழுவன்"' என்கிறார் ஆழ்வார். இதை விரித்துரைக்கின்ற நஞ்சீயர் "அதிபாலரைப் (சிறுவர்களைப்) போலே அழுவதும் செய்வன், போறிவாளர்களைப் போலே தொழுவதும் செய்வன்" என்று சொற்களைப் பெய்து உரையிடுகின்றார். 2. ஆழ்வார், "உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்"! என்று அருளிச் செய்கின்ற இடத்தில் "பசியில் உண்ணக்கடவ சோறும் தாஹித்தால் குடிக்கக் கடவ தண்ணீரும் தின்னாதொழியில் தரியாத தசையில் தின்னக் கடவ வெற்றிலையும்...” என்று சொற்பெய்து விரித்துரைக்கின்றார். 3. இராமபிரான் தன் அவதாரத்தின் முடிவில் பரமபதம் ஏகிய போது அயோத்தியிலுள்ள அனைவரையும் பரமபதத்திற்கு அழைத்துச் சென்றதைக் கூறுகின்ற ஆழ்வார் "புற்பா முதலாப் புல்லெறும்பாதியொன் றின் றியே... நற்பாலுக்குய்த்தனன் "* என்கிறார். இங்கு புல் எறும்பு முதலிய எல்லாவற்றையும் என்று ஆழ்வார் அருளிச் செய்ததை விளக்குகின்ற நஞ்சீயர், "ஸ்தாவரங்களில் கடையான த்ருணத்தையும் (புல்லையும்) ஜங்கமங்களில் (உயிரினங்களில்) கடையான சிற்றெறும்பும் (முதலாக) என்று தகுந்த சொற்களையிட்டு இவ்விரண்டை மட்டும் ஆழ்வார் குறித்தன் காரணத்தையும் விளக்குகின்றார். 4. "ஞானக்கலைகளுக்கெல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே" என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார். இங்கு வித்யைகளுக்கு அழிப்பு எது? அளிப்பு எது? என்பதையும் விளக்குகின்றார் நஞ்சீயர். கல்விகள் கெடாமல் காப்பது அளிப்பு என்றும், எழுத்துப் பிழை முதலானவற்றால் வரும் குற்றங்களால் தவறான பொருளைத் தரும் வகையில் நூல்கள் சிதைந்துவிட்டால் அவற்றை அழிப்பதுதான் அழிப்பு என்றும் உரையிடுகிறார். "அழிப்போடளிப்பாவது, வித்யைகள் கெடாமே காக்கையும், லேகக தோஷாதிகளாலே ஸ்வரூபம் அந்யதாபவித்தால் அத்தை ஸம்ஹரிக்கையும்" என்பது நஞ்சீயர் உரையாகும். "அமரரும் முனிவரும்"* என்பதற்கு "கைங்கர்ய தாரகரான அமரரும் அதுக்கும் க்ஷமரன்றிக்கே பகவத் குணங்களிலே ஈடுபட்டிருக்கும் ஸ்வபாவரான முனிவரும்" என்றும், "ஆயும் அமருலகும்"” என்பதற்கு "உறங்காத தாயும் உறங்காமையே ஸ்வபாவமான தேவலோகமும்" என்றும், "உண்மையோடின்மையாய்"' என்பதற்கு "ஆச்ரிதர்க்கு மெய்யனாய்த் தோற்றியும் அநாச்ரிதர்க்குப் பொய்யனாய்க் கை வாராதேயிருக்கிறபடியும்" என்றும் பல இடங்களில் நஞ்சீயர் தகுந்த சொற்களைப் பெய்து விரித்துரைத்திருப்பதையே அவருக்குப் பின் வந்த உரையாசிரியர்களும் தத்தம் உரைகளில் போற்றியேற்று உரை வரைந்துள்ளனர். ---- தொகுத்துப் பொருள் தருதல் நஞ்சீயருடைய உரை மிகவும் சுருக்கமாக அமைந்ததாதலின் ஒரு திருவாய்மொழியிலோ அல்லது ஒரு பாசுரத்திலோ ஒரே சொல்லானது பலமுறை பயன்படுத்தப்பட்டிருந்தால் ஒரிடத்திலேயே தொகுத்து எல்லாவிடத்திலும் குறிக்கப்படும் பொருளைக் காட்டி விடுகிறார். "எங்ஙனேயோ" என்கின்ற திருவாய்மொழியில், ஒவ்வொரு பாசுரத்திலும் 'நான் கண்டபின்” என்ற சொற்றொடர் உள்ளது. இதற்குத் தொகுப்புரையாக நஞ்சீயர் "பாட்டுத் தோறும் நான் என்கிறது சாபலாதிசயத்தாலே" என்று தொகுத்துப்பொருள் உரைத்துவிடுகிறார்.” "வீற்றிருந்து" என்கிற திருவாய்மொழியில், பல பாசுரங்களிலும் 'விண்ணோர் பெருமான்” என்று அருளிச் செய்கிறார். "பாட்டுத் தோறும் சொல்லுகிற விண்ணோராவார் - இவர்கள் (கருடன்) முதலானோர்" என்று தொகுத்துப் பொருள் வழங்குகிறார் நஞ்சீயர்.” "ஆழியெழ" என்கிற திருவாய்மொழியில் ஒவ்வொரு பாசுரத்திலும் "அப்பன்" என்று ஆழ்வார் அருளிச் செய்துள்ளதை விளக்கும் நஞ்சீயர், "எல்லாப்பாட்டிலும் அப்பன் என்று எம்பெருமானை உகந்து கொண்டாடினார்" என்று உரையிடுகின்றார்.” "உண்ணும் சோறு" என்கிற திருவாய்மொழியில் திருக்கோளூர் சென்ற பராங்குச நாயகியைத் திருத்தாயார் "என்பெண்" என்று பல பாசுரங்களிலும் கூறுகிறாள். "பலவிடத்திலும் என் பெண் பிள்ளை என்று சொல்லுகைக்குக் காரணம் அவள் நசையற்ற பின்னும் அவள் மேல் தனக்கு நசையறாமை" என்பது நஞ்சீயருரையாகும்.” "மாலைநண்ணி" என்கிற திருவாய்மொழியில் ஆழ்வார் பல பாசுரங்களில் "எல்லாம்" என்றருளிச் செய்கிறார். எப்படிப்பட்டவர்களுக்கும் எம்பெருமானே ரக்ஷகன் என்று பொருளுரைத்து, "மேலும் எல்லாம் என்றவற்றுக்குப் பொருள் இப்படியே" என்று உரை வழங்குகிறார். ஒரே பாசுரத்தில் ஒரு சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கும் இவ்வாறே தொகுத்துப் பொருள் வழங்குகின்றார். "நேர் சரிந்தான்"? "என் திருமார்வன்றன்னை "”, "கட்டெழில் சோலை"*, "யாருமோர் நிலைமையன் என"* போன்ற பாசுரங்களின் உரையில் இவ்வாறு பொருள் கூறியுள்ளதைக் காணலாம். சில பாசுரங்களில் உரையில் அப்பாசுரங்களிலிருந்து மேற்கோள் (பிரதீகம்) ஏதும் எடுக்காமல் மொத்தமாக "இப்பாட்டுக்கு" அல்லது "இப்பாட்டுக்கெல்லாம்" என்று அப்பாசுத்தின் திரண்ட பொருளை உரையாகத் தருகின்றார்.” -------------- நிதானப் பாட்டு ஒவ்வொரு திருவாய்மொழியிலும் அத் திருவாய்மொழியின் உயிரான கருத்தைக் கூறும் பாட்டு நிதானப்பாட்டு எனப்படும். பெரும்பாலும் நஞ்சீயர் உரையில் ஒவ்வொரு திருவாய்மொழியின் அவதாரிகையும், ஒரு நிதானப் பாட்டைக் கருத்தில் கொண்டே வரையப் பெற்றுள்ளது. "அஞ்சிறைய மட நாராய்" என்கிற திருவாய்மொழியின் அவதாரிகை "என்பிழை கோப்பது போல"? என்ற பாசுரத்தில் கருத்தை உட்கொண்டும் "மாலைநண்ணி" என்கிற திருவாய்மொழியின் அவதாரிகை "மரணமானால்"* என்ற சொற்றொடரின் கருத்தை உட்கொண்டும் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரு சில பாசுரங்களின் உரையிலேயே அது அத்திருவாய்மொழியின் நிதானப்பாட்டு என்று நஞ்சீயரே தெளிவாகக் குறிப்பிடுவதுமுண்டு.” --------- அடைமொழிச் சிறப்பு கூறுதல் ஆழ்வார் தம் பாசுரங்களில் அடைமொழியுடன் ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் அவ்வடைமொழிக்குச் சிறப்பான பொருளைக்கூறும் உத்தி நஞ்சீயர் உரை நெடுகிலும் காணப்படுகிறது. அவ்வவ்விடத்திற்குத் தக்கவாறு அடைமொழிக்குப் பொருள் கூறும் உத்தியைப் புகுத்தியமை நஞ்சீயருக்கே உரிய தனிச் சிறப்பாகும். 1 எம்பெருமானிடத்தில் பறவைகளைத் தூது விடுகின்ற பராங்குச நாயகி "சிறுகுறுகே"! என்று அழைக்கின்றாள். இங்கு 'சிறு' என்ற அடைமொழியின் கருத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "நினைத்த இடத்திலே போகலாம்படி நொய்தான சரீரத்தையுடைய குருகே" என்று மிகவும் பொருத்தமாக உரையிடுகின்றார். 2. எம்பெருமானோடு உடனே கூடப் பெறவேண்டும் என்ற துடிப்பினால் மடலூரவும் துணிந்த பராங்குசநாயகி, தோழியை நோக்கி "ஆணை என் தோழி” என்கிறாள். இங்கு 'என்' என்ற அடைமொழியின் கருத்தைக் கூறுகின்ற நஞ்சீயர், "வாயால் நிஷேதியா நின்று (தடுத்து) வைத்தே இவள் இத்தனையும செய்து முடிப்பது காண் என்று உகந்திருக்கிற தோழியை ப்ரீதியாலே என் தோழி என்று ஸம்போதித்து ....” என்று உரையிடுகின்றார். 3. இவ்வுலகத்தை "நல்லுலகம்" என்கிறார் ஆழ்வார். கொடிய ௨லகமான இவ்வுலகத்தை நல் உலகம்' என்று ஆழ்வார் குறித்ததன் கருத்தை நஞ்சீயர் "நல்லுலகமாவது எம்பெருமானுக்கு வந்து திருவவதாரம் பண்ணி ஆச்ரிதரோடே ஸம்ச்லேஷிக்கைக்கு (அடியவர்களோடு கூடுகைக்கு) ஈடான தேசம்” என்று விளக்கியருளுகிறார். 4. நம்மாழ்வார் வேறோரிடத்தில் இவ்வுலகை "வன்மாவையம்'' என்கிறார. அவ்விடத்திற்குத் தகுதியாகப் பொருளுரைக்கின்ற நஞ்சீயர் "உன்னழகைக் கண்டாலும் ஈடுபடக்கடவதன்றிக்கே இருந்துள்ள மஹாப்ருதிவி” (என்று ஆழ்வார் கூறுவதாக) உரையிடுகிறார். 5, இவ்வுலக வாழ்ச்சியெல்லாம் பெருமழைக்காலத்தில் எழும் நீர்க்குமிழி போன்றது என்ற கருத்தில் ஆழ்வார், "வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து”* என்கிறார். இங்கு மாமழை என்ற அடை மொழிக்கு "மாமழை மொக்குள் என்றது மஹாவர்ஷத்தில் குமிழி சடக்கென பாயும் என்னுமிடம் தோற்றுகைக்காக” என்று விளக்கம் தருகிறார். 6. ஆழ்வார் எம்பெருமானை "என் நான்முகனே'' என்கிறார். "ப்ரஹ்மாவை உண்டாக்கின குணத்தை அநுஸந்ததித்து ப்ரீதராய் என்னுடைய நான்முகனானவனே என்கிறார்” என்று அடைபொழிக்கு விளக்கம் தருகிறார். 7. சிலரைப் பற்றி ஆழ்வார் குறிப்பிடும் அடைமொழிக்கும் அவரவர்களுடைய தன்மைகளுக்கு ஏற்ப விளக்கம் தருகிறார். "படர் புகழ்ப் பார்த்தன்” என்று அர்ஜுனனைக் கூறுகின்றார் ஆழ்வார். பார்த்தனுடைய புகழாவது என்ன என்பதை நஞ்சீயர் அழகுற விளக்குகிறார். "தன்னையே (கண்ணனையே) நாதனாகவும் தோழனாகவும் தூதனாகவும் மற்றும் எல்லாப் பரிஜநமாகவும் உடையவனான பெரும்புகழையுடைய அர்ஜாநனும்” என்பது நஞ்சீயர் உரை. 8. "கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் ... சிசுபாலன்”? என்பது ஆழ்வார் திருவாக்கு. இங்கு 'கேட்பார்' என்பதற்கு மிகவும் புதுமையானதொரு விளக்கத்தைத் தருகிறார் நஞ்சீயர். பகவானைக் கொடும் சொற்களால் வையச் செய்து கேட்க வேண்டும் என்று ஆவலுடனிருக்கும் நாத்திகர்களும் கூடக் கேட்கக் கூசும்படியான வசவுகளைக் கூறுபவன் சிசுபாலன் என்று விளக்குகிறார் நஞ்சீயர். "இவனை வையக் கேட்க வல்லோமே என்றிருக்குமவர்களுக்கும் பொறுக்கவொண்ணாத தண்ணிய வசவு வையும் வழிப் பகைவனான சிசுபாலன்” என்பது நஞ்சீயர் உரை. ----- இடைச் சொற்களுக்குப் பொருள் நயம் கூறுதல் பன்மை விகுதி, வேற்றுமை உருபு, ஏகாரம் முதலிய இடைச் சொற்களுக்குச் சீரிய பொருளை முதன் முதலில் நஞ்சீயரே தமது உரையில் காட்டுகின்றார். 1. பன்மை விகுதி "மன்னுயிர் ஆக்கைகள்”* என்று ஆழ்வார் உயிரை ஒருமையிலும் ஆக்கைகள் என்று உடலைப் பன்மையிலும் கூறுகிறார். இதை விளக்குகின்ற நஞ்சீயர், ஒரு ஆன்மாவே வினையின் பயனாகப் பல உடல்களில் புகுந்து நலிவுபடும் என்று தெரிவிப்பதற்காக இப்படி ஆழ்வார் அருளிச் செய்வதாக உரையிடுகின்றார். "என்னுடை ஆருயிரார் எங்ஙனே கொல் வந்தெய்துவரே ' என்று தம்முடைய ஆத்மாவை ஆழ்வார் பன்மையில் கூறுவதன் காரணத்தை விளக்கும் நஞ்சீயர் ஆத்மாவின் தாழ்வைக் கருதி ஏளனமாக 'ஆருயிரார்' என்று பன்மையில் கூறுவதாக உரையிடுகின்றார். 2. வேற்றுமை உருபு இராமபிரானைத் "தயரதற்கு மகன் 2 என்கிறார் ஆழ்வார். இங்கு தயரதன் மகன் என்றே கூறாமல் "தயரதற்கு மகன்” என்று நான்காம் வேற்றுமையுருபைப் பயன்படுத்தியதன் காரணத்தை விளக்குகிறார் நஞ்சீயர், "தயரதற்கு மகன் என்று விதேயத்வம் சொல்லுகிறது” என்பது நஞ்சீயருரை. அதாவது தயரதனிடம் இராமனுக்கிருந்த பணிவைச் சுட்டிக் காட்டவே ஆழ்வார் அப்படியருளிச் செய்தார் என்பது நஞ்சீயர் தரும் விளக்கம். "மாலுக்கு வையமளந்த மணாளர்க்கு என்ற பாசுரத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் நான்காம் வேற்றுமை பயன்படுத்தியுள்ளதை விளக்கும் நஞ்சீயர், "விசேஷணந்தோறும் அவனுக்கு என்கிறது தனித்தனியே (அவ்விசேஷணங்கள்) ஈடுபடுத்துகையாலே” என்று உரையிடுகிறார். 3. கோரம் "அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான், அவனே அஃது உண்டுமிழ்ந்தான் * என்கிறார் ஆழ்வார். "அவனே என்றுள்ள ஏகாரத்திற்குக் கருத்து கூறுகின்ற நஞ்சீயர் அச்செயல்களைச் செய்வதற்கு எம்பெருமானுக்கு வேறு துணை எதுவும் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார். "தாலே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்”” என்பது ஆழ்வார் திருவாக்கு. இங்கு "தானே' என்ற ஏகாரத்திற்குப் பொருளுரைக்கும் போது, ஆழ்வார் வேண்டாமலிருக்கும் பொழுதே எம்பெருமான் தானாகவே வந்து அருள் செய்தான் என்று விளக்கம் தருகிறார். "கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய்' £* என்று கூனியினுடைய கூன் நிமிர்த்த சரித்திரத்தைக் கூறுகிறார் ஆழ்வார். கூனே' என்பதிலுள்ள ஏகாரத்திற்கு "கூனியினுடைய மற்றோர் அவயவத்துக்கும் வாட்டம் வாராமே கூனே நிமிரும்படி சுண்டுவில் தெறித்தாற்போலே அநாயாஸேந நிமிர்த்தவனே” என்று பொருள் கூறுகிறார். ஆழ்வார் "யானே என்னை அறியகிலாதே யானே என்தனதே என்றிருந்தேன்! என்கிறார். இங்கு 'யானே” என்ற ஏகாரத்தின் பொருளைத் தெளிவாகக் காட்டுகின்ற நஞ்சீயர், "யானே என்கிற இடத்தில் அவதாரணைக்குக் கருத்து இவ்வஜ்ஞானம் பகவத் க்ருதமன்று என் தோஷத்தாலே வந்தது என்று” என்றருளிச் செய்கிறார். -------- கட்டுச் சொற்களுக்குச் சிறப்புப் பொருள் கூறுதல் ஆங்காங்கே பாசுரங்களீல் உள்ள சுட்டுச் சொற்களுக்கு அவ்வவ்விடங் களுக்குச் தகுந்தாற்போல் பொருள் கூறுகிறார் நஞ்சீயர். 1. எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் மேகங்களைக் காண்பதும் பாாங்குசநாயகிக்குத் துன்பத்தை விளைக்கின்றது. எனவே "மேகங்காள் --காட்டேல்மின் நும்முரு, என்னுயிர்க்கு அது காலனே 2 என்கிறாள். இங்கு 'மேகங்காள்' என்றும் 'நும்முரு' என்றும் முன்னிலையில் அழைத்துவிட்டு 'அதுகாலனே ' என்று படர்க்கையில் கூறுவதன் காரணத்தை விளக்குகின்ற நஞ்சீயர், "அது வென்று மேகங்களுடைய வடிவைக் காணமாட்டாமை பராங்முகிபாயிருந்து (முகத்தைத் திருப்பிக் கொண்டு) சொல்லுகிறாள்” என்று சுவையான விளக்கம் தருகிறார். 2. எம்பெருமானைப் பிரியப் போகிற வருத்தத்தினால் குயில் மயில் முதலியவைகளும் தன்னை வருத்தும்படியைக் கூறும் பராங்குச நாயகி "கண மயில் அவை கலந்து ஆலுமாலோ”” என்கிறாள். இங்கு 'அவை' என்ற சுட்டுக்குப் பொருள் கூறுகின்ற நஞ்சீயர் "கண்டு தரிக்கமாட்டாமையாலே முகத்தைத் திரிய வைத்து அவை என்கிறாள் ” என்று உரையிட்டிருப்பது சுவை மிக்கது. 3. பராங்குச நாயகி கொண்ட நோயின் தன்மை அறியாமல் கட்டுவிச்சிகளைக் கொண்டு அவள் நோயைத் தீர்க்க முயன்ற தாய்மாரைக் குறித்து தோழி. "இது காண்மின் அன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளுமிறைச்சியும் தூவேல்மின் " என்கிறாள். இங்கு என்னவேண்டிய இவ்விடத்தில் அங்கு என்ற சுட்டிற்குப் பொருள் கூறும் நஞ்சீயர் "துர்த்ரவ்யங்களாலே இந்த வைஷ்ணவ க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள் என்று முகத்தைத் திரிய வைத்து நிஷேதிக்கிறாள் என்று உரையிடுகின் றார். உவமைகளைக் கையாளுதல் நஞ்சீயர், ஆழ்வாருக்கு அவ்வப்போது ஓடுகின்ற மனநிலைகளை விளக்கப் பொருத்தமான உவமைகளைப் பலவிடங்களில் கையாள்கிறார். நஞ்சீயர் கீழ்க் கண்ட உவமைகளைத் தம் உரையில் கையாண்டுள்ளார். (அ) ஸ்தலத்துக்கு நீர் அபேக்ஷையானால் விரகாலே நீரை மேட்டிலே ஏற்றுமாபோலே” (ஆ) கமர் பிளந்தவிடத்திலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே” (இ) சில தார்மிகர் ஏரியைக் கல்லினால் சிலர்க்கு ஜீவனஹேதுவாய்ச் சிலர்க்கு அநர்த்த ஹேது ஆமாபோலே" (ஈ) நீரேறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாமாப் போலே” (௨) பெருவிடாய்தட்டி நோவுபட்டவர்கள் நீரிலே முழுகித் தரித்தாப்போலே” ஊ) பெருவிடாய்ப் பட்டார்க்குத் தண்ணீர் குடித்தாறாதே அதிலே மிகவும் அபேக்ஷை பிறக்குமாபோலே” (௭) விடாய்த்தார் ஹஸ்த சேஷ்டையாலே தண்ணீர் வேண்டுமாபோலே” (ஏ) துர்பிகூஷகாலத்தில் தரித்ரனாய் பஹுப்ரஜனானவன் ப்ரஜைகளுடைய பசிக்கும் தன்பசிக்கும் ஆற்றாமே கூப்பிடுமாபோலே” (ஐ) ஸ்தநந்தய ப்ரஜை ஸ்தந்யார்த்தியாய் நோவுபட்டுத் தாய்காற் கீழே செல்ல, அவள் அங்கீகரியாதே உபேச்ஷித்தால் ப்ரஜை கதறுமாபோலே” (ஒ) விளக்கு முடியுமளவில் கிளம்பா அவியுமா போலே" என்பன நஞ்சீயர் உரையில் இடம் பெறும் சில உவமைகளாகும். சில இடங்களில் புராணப் பாத்திரங்களையும் ஆழ்வாரின் நிலைக்கு உவமையாகக் காட்டுகிறார். "பெருமாள் பிராட்டிக்குத் தாம் எதிர் கண்ட முதலிகளுடைய தூத ப்ரேக்ஷணம் பண்ணினாப்போலே " "விபீஷணாழ்வான் பெருமாளுடைய நீர்மையைக் கண்டு ஈடுபட்டாப் போலே” * "பரதாழ்வானுக்கு ராஜ்யம் கண்டாற்போலே”” "வைச்வரூப்யங் கண்ட அர்ஜுநன் அர்த்தித்தாப்போலே ” என்பன போன்ற உவமைகளை நஞ்சீயர் உரையில் பலவிடங்களிலும் காணலாம். ------------ பாசுரமேற்கோள்டீன் நஞ்சீயர் உரையில் மேற்கோள்கள் மிகவும் குறைவாகவே கையாளப் படுகின்றன. அதிலும் திவ்யப்ரபந்த பாசுரங்களைத் தவிர, மற்ற தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் எதுவும் கையாளப்படவில்லை. "மானிடவர்க்கென்றுப் பேச்சுப்படில் வாழகில்லேன்'' என்ற நாச்சியார் திருமொழிப் (1-5) பாசுரவரியை ஓரிடத்தில் மேற்கோளாகக் காட்டுகிறார்.” "காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்ற பெரியதிருவந்தாதிப் (34) பாசுர வரியை ஓரிடத்திலும்” “இன்னாரென்றறியேன்" என்ற பெரியதிருமொழிப் (10-10-9) பாசுரவரியை ஓரிடத்திலும்? "வடமாமலையுச்சி” என்கிற பெரிய திருமொழிப் (7-10-3) பாசுரவரியை ஓரிடத்திலும் மேற்கோளாகக் காட்டுகிறார். இப்படி ஒரிரண்டு இடங்களைத் தவிர, பெரும்பாலும் திருவாய்மொழியைத் தவிர்த்த பிற திவ்யப்ரபந்தப் பாசுரங்கள் எவையும் மேற்கோள்களாகக் காட்டப்படவில்லை என்பது காணத்தக்கது. திருவாய்மொழிப் பாசுரங்களும் ஒரு சில இடங்களிலேயே மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. "காராயின காள நன்மேனியினன் ” 9-3-1) என்ற தொடர் ஓரிடத்திலும்" 'தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்” (5-9-10) என்ற தொடர் ஓரிடத்திலும்” "தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” (2-9-4) என்ற தொடர் ஓரிடத்திலும்! மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. "பத்துடையடியவர் (1-3) என்னும் திருவாய்மொழிக்கும் "சார்வே தவநெறிக்கு”(10--4) என்னும் திருவாய்மொழிக்கும் ஒப்புமை காட்டும் போது "வணக்குடை தவநெறி”? "மலர்மகள் விரும்பும்” "பிறர்களுக்கரிய வித்தகன்" * ஆகிய அடிகள் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன.” நம்மாழ்வார் தம் திருவாய்மொழியின் முதற் பாசுரத்தில் எம்பெருமானை "அயர்வறும் அமரர்கள் அதிபதி * என்கிறார். அச் சொற்றொடரை நஞ்சீயர் நூற்றுக் கணக்கான இடங்களில் பயன்படுத்தியுள்ளது வியப்பான செய்தியாகும். எங்கெங்கெல்லாம் "வானோர் ” என்றும் "விண்ணுளார்'” என்றும் நித்திய சூரிகளைக் குறிக்கும் சொல்லை ஆழ்வார் பயன்படுத்துகிறாரோ அங்கெல்லாம் தவறாது நஞ்சீயர் "அயர்வறும் அமரரர்கள்” என்றே உரையிடுகின்றார். அதேபோல் "அமரர் பெருமான்” என்றும் "வானோர்கோன்” என்றும் "விண்ணவர் கோன்'" என்றும், "தெய்வக் கோமான்” £ என்றும், எம்பெருமானை நித்யசூரிகள் தலைவனாகப் பேசுமிடங்களிலெல்லாம் நஞ்சீயர் "அயர்வறுமமரர்களதிபதி'” என்றே உரையிட்டுச் செல்கிறார். "மன்னின்ற சக்கரத்து எம்மாயவன் £ என்னுமிடத்தில் "ஆச்ரித த்ராணார்த்தமாக எப்போதும் கைகழலா நேமியானாய்.....” என்று உரையிட்டுள்ளார் நஞ்சீயர். இங்கு மேற்கோளாகக் குறிக்கப்படாவிடினும் "எப்போதும் கை கழலா நேமியான் ' என்ற பெரிய திருவந்தாதிப் (87) பாசுரத்தின் சொற்றொடர் கையாளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களுக்கும் நஞ்சீயர் உரையருளியுள்ளதை நோக்கும்போது அவருடைய உரையில் மேற்கோள்கள் மிகக் குறைவு என்றே கூறவேண்டும். --------- வடமொழி மேற்கோள்கள் பயள்பாடு உபயவேதாந்தம் என்பது வைணவத்தின் தனிச்சிறப்பு ஆகும். வடமொழி வேதங்கள், தமிழ் மொழி வேதங்கள் இரண்டையுமே இரண்டு கண்களாகப் போற்றுகின்றபடியால் இச்சிறப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு விளக்கம் வரையும் போது வடமொழி நூல்களான வேதங்கள், உபநிஷத்துக்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலிய பல நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி விளக்குவது இன்றியமையாததாகி விடுகிறது. எனவே நஞ்சீயர் பாசுரங்களின் உரையில் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள்கள் பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார். "அஸந்நேவ ஸ பவதி! "ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்”? போன்ற உபநிஷத் வாக்யங்களையும் "அஹம் ஸர்வம் கரிஷ்யாமி”? "மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்''* போன்ற ஸ்ரீராமாயண சுலோகங்களையும் "பூதாநாம் ஈச்வரோபி ஸந்” "மம மாயா துரத்யயா”* போன்ற பகவத்கீதா சுலோகங்களையும் "க்ஷணேபிதே யத் விரஹோ அதிதுஸ்ஸஹ:” போன்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந சுலோகங்களையும் மேற்கோள்களாக நஞ்சீயர் கையாள்கிறார். (விரியவான பட்டியலைப் பின்னிணைப்பு எண் 2ல் காண்க.) வேதங்களும் உபநிஷதங்களும் கூறும் முறையிலேயே பகவானது தன்மைகளைத் திருவாய்மொழியும் விவரிக்கின்றது என்பதை நிலைநாட்ட இம்மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார். "ஒன்றும்தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று.... உயிர் படைத்தான்” "என்று ஆழ்வார் அருளிச் செய்வது, "ரகோ ஹ வை நாராயண ஆஸீத்” (நாராயணன் ஒருவனே இருந்தான்) என்ற உபநிஷத் வாக்கியத்தை அடியொற்றியது என்று குறிப்பிடுகிறார். "முனியே என்று ஆழ்வார் அருளிச் செய்வது, தன் நினைவினால் உலகைப் படைக்கும் எம்பெருமானைக் காட்டுகிறது என்று உரையிட்டு, உபநிஷத்தில் "பஹுஸ்யாம்” (நான் பல பொருள்களாக ஆகக்கடவேன்) என்று உலகைப் படைக்கும் காலத்தில் எம்பெருமான்கொள்ளும் நினைவைக் கூறியிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு வடமொழி தென்மொழி நூல்களின் கருத்தொற்றுமையைக் காட்டவே பற்பல வடமொழி மேற்கோள்களை எடுத்தாள்கிறார். ப திருவாய்மொழி முதற் பாசுரத்தில் ' அவன், அவன், அவன் என்று மும்முறை .அருளிச் செய்யப்பட்டிருப்பதை விளக்கும் நஞ்சீயர், "நமோ நம: இத்யாதி ச்லோகவத் ப்ரதி விசேஷணம் ஈடுபடுகையாலே'' என்று உரையிட்டுள்ளார். இங்கு குறிப்பிடப்படுகின்ற "நமோ நம:” என்ற ச்லோகம் எது என்பதை இருபத்துநாலாயிரப்படி ஒருவிதமாகவும், ஈடு முப்பத்தாறாயிரப் படி வேறு விதமாகவும் விவரிப்பது வியப்பிற்குரியது. "நமோ நமோ வாங்மநஸாதி பூமயே என்னுமாப்போலே தனித்தனியே ப்ரீதியாலே ஈடுபடுகையாலே” என்பது இருபத்து நாலாயிரப்படி. எனவே நமோ நம: என்று மேற்கோளாகக் காட்டப்பட்டது ஆளலந்தாரர் ஸ்தோத்ரரத்நத்திலுள்ள சுலோகம் என்பது பெரியவாச்சான் பிள்ளையின் கருத்து. ஆனால் ஈட்டில் "நம: புரஸ்தாத் அதப்ருஷ்டதஸ்தே என்னுமாபோலே” என்றுள்ளதால் "நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:” என்கின்ற பகவத் கீதா சுலோகமே(11-40) மேற்கோளாக எடுக்கப்பட்ட ச்லோகம் என்று கொள்ள இடம் ஏற்படுகிறது. இவ்விடத்திற்கு இவ்விரண்டு ச்லோகங்களுமே பொருத்தமான மேற்கோள்களாகவே அமைந்திருப்பதும் கருதத்தக்கது. ------------ நியாயங்கள் காட்டுதல் நஞ்சீயர் வடமொழி தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் வல்லவராக விளங்கியதால் தமது உரையில் (வடமொழி) மீமாம்ஸா ந்யாயங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ப்ரவேசத்திலேயே குறிப்பிடப்படுகின்ற கிம்புநர் ந்யாயம்' மற்றோர் இடத்திலும் குறிபபிடப்படுகிறது'. 'அருணாதிகரண ந்யாயம் ஒரு பாசுரத்தின் உரையிலும்” 'ஸாமாநாதிகரண்ய ந்யாயம்' ஒரு பாசுரத்தின் உரையிலும்” குறிப்பிடப்படுகின்றன. --------- பாடவேறுபாடுகள் மூலநூல் தோன்றிப் பல ஆண்டுகளாகிவிடின், பாடவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. முதன்முதலில் தோன்றிய உரையான ஆறாயிரப்படியில் பாடவேறுபாடுகள் எவையும் காட்டப்படவில்லை. நஞ்சீயர் உரையிலேயே முதன் முதலில் பாடவேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இவை பின்னர் எழுந்த உரைகளிலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1. "தேறேல் என்னை”* என்னுமிடத்தில் "தேறேன் என்று பாடமானபோது தரியேனென்கிறது” என்று மற்றொரு பாடமும் காட்டுகிறார். இது பிற உரைகளிலும் காட்டப்படுகிறது. 2. "ஈசனுடன் கொண்டுசாச் செல்ல" என்னுமிடத்தில் "உசாய்ச் செல்ல என்று பாடமாம்போது வாழுநாள் விசாரித்துச் செல்ல என்றுமாம்” என்று மற்றொரு பாடமும் காட்டுகிறார். இது இருபத்துநாலாயிரப்படியிலும் காட்டப் படுகிறது. ஆனால் ஈடுமுப்பத்தாறாயிரப்படியில் இப்பாட வேறுபாடு காட்டப்படவில்லை. 3. "கடல் வண்ணனென்னும் அன்னே” என்றொரு பாடமும் "கடல் வண்ணன் என்னும் மன்னே” என்றொரு பாடமும் கொள்ளப்பட்டிருக்கின்றது.” 4. "கொடைப் பெரும்புகழார் இனையர் தன்னானார்'” என்றவிடத்தில் இனையர் என்பதற்கு பதிலாக எனையர் என்றொரு பாடமும் காட்டுகிறார். "எனையர் என்று பாடமானபோது அனேகரென்று பொருள் என்று ஒன்பதினாயிரப்படியிலுள்ள பாடத்தை பிற உரைகளும் பின்பற்றுகின்றன. 5. "விரைவாரிசைமறை வேதியரொலி”* என்னுமிடத்தில் 'விரவார்' என்றொரு பாடமும் கொண்டு பொருள் உரைக்கின்றார். "விரவார் என்று பாடமானபோது "விரவியெழுகிற நாலு வேதங்களினுடைய த்வனியும்....” என்பது நஞ்சீயர் உரை. பிற உரைகளில் இப்பாடம் முதலிலும் "விரைவார்” என்ற பாடம் பின்னரும் காட்டப்படுகிறது. 6. "பண்புடை வண்டொடு தும்பிகாள்'” என்ற பாசுரத்தில் பண்புடை' என்பதற்கு பதிலாக 'பண்புரை' என்றொரு பாடம் காட்டப்படுகிறது. "பண்புரை என்று பாடமானபோது பண்ணை முரலா நின்ற வண்டோடு கூடின து” என்பது உரை. ஆசார்யஹ்ருதயம் என்னும் நூலில் திருவாய்மொழியை ஸாமவேத ஸாரம் என்று கூறவேண்டி, "பண்புரை இசைகொள் வேதம் போலே” என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்கிறார். அங்கு உரையில் மணவாளமாமுனிகள் பண்புடை வேதம் (திருவாய்மொழி 6-6-5) என்று பாடமுள்ளதே தவிர பண்புரை வேதம் என்ற பாடமில்லையென்றாலும் ஆசார்யரான நாயனார் அருளிச் செய்கிறபடியால் அப்படியும் ஒரு பாடமுண்டு என்று கொள்ளவேண்டும் என்றருளிச் செய்துள்ளார். இங்கு (9-5-9) 'பண்புடைவண்டொடு' என்ற இடத்தில் 'பண்புரை' என்றொரு பாடத்தை நஞ்சீயர் காட்டியுள்ளமையே அங்கும் (6-6-5) 'பண்புரைவேதம்' என்று நாயனார் பாடம் கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். 7. "நிற்பன பல்லுருவாய் நிற்குமாயற்கு! என்ற இடத்தில் "ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தைத் தனக்கு சரீரமாக உடைய க்ருஷ்ணனுக்கு” என்று உரையிட்டுள்ளார் நஞ்சீயர். எனவே நஞ்சீயர் "நிற்கும் ஆயற்கு” என்றே பாடம் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. பிற உரைகளில் "..ஆச்சர்யபூதனுக்கு” என்று உரையிட்டுள்ளதால் அவை "நிற்கும் மாயற்கு” என்ற பாடத்தையே கொண்டுள்ளன என்பது புலப்படுகிறது. நஞ்சீயர் உரையில் பாடபேதம் என்று குறிப்பிடாவிட்டாலும் 'ஆயற்கு' என்ற பாடமும் உண்டு என்பது தெளிவாகிறது. இது நஞ்சீயர் உரையில் மட்டுமே கொள்ளப் பெற்ற பாடமாகும். -------------- வைணவ சமய மரபு வழக்குகள் வைணவ சமயத்தில் இறைவனோடு தொடர்புடைய எல்லாவற்றையும் ஸ்ரீ அல்லது திரு என்ற அடைமொழியுடன் சேர்த்துக் குறிப்பிடுவதுதான் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு. இந்த மரபைத் தொடங்கி வைத்தவரும் நஞ்சீயரே எனலாம். முதன் முதலில் நஞ்சீயர் உரையிலேயே இம்மரபு எழுத்து வடிவில் இடம் பெறுகிறது. எம்பெருமானுடைய அவதாரங்களைக் குறிக்கும் போது ஸ்ரீநரஸிம்மம்,? ஸ்ரீ வராஹம்,” ஸ்ரீவாமனன்," என்றே குறிப்பிடுகிறார். அவனுடைய ஆயுதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போதும் ஸ்ரீபாஞ்சஜந்யம்,* ஸ்ரீசார்ங்கம்,” ஸ்ரீபஞ்சாயுதம்' என்று குறிப்பிடுகிறார். அவன் அருளிச்செய்த பகவத்கீதையை ஸ்ரீகீதை” என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீ மதுரை,” ஸ்ரீ பரதாழ்வான்,” ஸ்ரீநாரதபகவான்" என்று பல சொற்களுக்கும் ஸ்ரீ என்ற அடைமொழியைச் சேர்த்தே குறிப்பிடுகிறார். எம்பெருமான் அணியும் ஆபரணங்கள், அவனுடைய அவயவங்கள், மற்றும் அவனோடு தொடர்புடையவைகளைத் திரு என்ற அடைமொழியோடும் குறிப்பிடுகிறார். திருமேனி,” திருநாபிகமலம்,” திருவயிறு,“ திருவழகு,” திருயஜ்ஞோபவீதம், ” திருக்குழல் (முடி),” திருக்குழல் (புல்லாங்குழல்), “ திருநீர்” என்பன சில சான்றுகளாகும். எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திவ்ய தேசங்களைத் திரு என்ற அடைபொழியுடனே குறிப்பிடுகிறார். ஆழ்வார் பாசுரத்தில் வாட்டாறு என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும், நஞ்சீயர் தமது உரையில் "திருவாட்டாறு'! என்றே குறிப்பிடுகின்றார். இதேபோல் தொலைவில்லி மங்கலத்தைத் “திருத் தொலைவில்லி மங்கலம்”? என்றும், அனந்தபுரத்தைத் “திருவனந்தபுரம்? என்றும், அப்படியே பிற திவ்ய தேசங்களையும் குறிப்பிடுவதைக் காணலாம். “திருவனந்தபுரத்தில் திருவாசலிலே திருவலகு திருப்பணி”* என்று நஞ்சீயர் உரையில் அருளிச் செய்துள்ளமை இவ்வுத்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். (மேலும் சிலவற்றைப் பின்னிணைப்பு எண் 6ல் காணலாம்) ------- மரபுப்பெயர்கள் இதிகாச புராண பாத்திரங்களுக்கு வைணவ சமயத்தில் சிறப்புப் பெயா் வழங்கும் மரபு உள்ளது. அம்மரபும் முதன்முதலில் நஞ்சீயர் உரையிலேயே காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்: இராமன் பெருமாள்” சக்ரவர்த்தி திருமகன்” ஸ்ரீதசரத சக்ரவர்த்தி திருமகனார்.” சீதை பிராட்டி” ஸ்ரீஜநகராஜன் திருமகள்” ஐநகராஜபுத்ரி” பரதன் பரதாழ்வான் " இலக்குமணன் இளையபெருமாள் சத்துருக்கனன் சத்ருக்னாழ்வான்” தசரதன் சக்ரவர்த்தி” சுக்கிரீவன் சுக்ரீவ மஹாராஜர்” விபீஷணன் விபீஷணாழ்வான் " அனுமன் திருவடி' வானரர்கள் முதலிகள்” கண்ணன் ஸ்ரீவசுதேவர் திருமகன்” ஸ்ரீநந்தகோபர் திருமகன் கீதாசார்யன்” பலராமன் : நம்பி மூத்தபிரான்” எம்பெருமான் திருக்கையில் இருக்கும் ஆயுதங்களான சக்கரம், சங்கு இவற்றை ஆழ்வார்கள் என்று குறிப்பிடுகிறார்.” சக்கரத்தைத் திருவாழி ஆழ்வான் என்று குறிப்பிடுகிறார்.” விஷ்வக்ஸேரை (சேனை முதலியாரை) ஸ்ரீ ஸேநாபதியாழ்வான் என்று குறிப்பிடுகிறார்.” ப்ரஹ்லாதன், அநிருத்தன், கஜேந்திரன், திரு அனந்தன் (ஆதிசேஷன்) முதலியவர்களையும் ப்ரஹ்லாதாழ்வான்,” அநிருத்தாழ்வான்," கஜேந்த்ராழ்வான்,"” திருவனந்தாழ்வான்'* என்றே குறிப்பிடுகிறார். திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானான ஆராவமுதனையும் ஆராவமுதாழ்வார் என்றே குறிப்பிடுகிறார்.” கருடனைத் திருவடி என்றும்,” பெரிய திருவடி என்றும்” குறிப்பிடுகிறார். அனுமனையும் திருவடி என்றே குறிப்பிடுகிறார்.” ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் பெரியபிராட்டி என்றும்,” பிராட்டி என்றும்” குறிப்பிடுகின்றார். தலைமகளையும்,” ஸீதாபிராட்டியையும்” குறிப்பிடப் பிராட்டி என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். ருக்மிணி, பூமிதேவி, நப்பின்னை ஆகியோரை ருக்மிணிப்பிராட்டி,”* பூமிப்பிராட்டி,” நப்பின்னைப் பிராட்டி? என்றே குறிப்பிடுகிறார், திருவரங்கத்தைக் கோயில் என்றும்,” அங்கே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனைப் பெரிய பெருமாள் என்றும்” குறிப்பிடுகிறார். திருவேங்கடமலையைத் திருமலை என்றும், அங்கே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைத் திருவேங்கடமுடையான் என்றும் வழங்குகிறார்” திருமாலிருஞ்சோலை மலையையும் திருமலை என்றே குறிப்பிடுகின்றார்.' பரம பதத்தைத் திருநாடு என்றும்,” நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரைத் திருநகரி என்றும்” குறிப்பிடுகின்றார். (பின்னிணைப்பு எண் 3 காண்க.) பரமபதத்தில் உள்ள துவாரபாலகர்களைத் திருவாசல் முதலிகள் என்று குறிப்பிடுகின்றார். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசங்களை உகந்தருளின தேசம் என்றும்,” உகந்தருளின கோயில் என்றும்” குறிப்பிடுகிறார். வால்மீகி, நாரதர், பரத்வாஜர் போன்ற ரிஷிகளை வால்மீகிபகவான்,” நாரதபகவான்,” பரத்வாஜபகவான்” என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு வைணவ மரபுப் பெயர்களை முதன்முதலில் வழங்கிய பெருமைக்குரியவராகத் திகழ்பவர் நஞ்சீயரே ஆவார். ------------------ பேச்சுமொழிக் கூறுகள் வைணவ ஆசார்யர்கள் வரைந்துள்ள உரைகள் அனைத்திலும் “இறே'' என்ற இடைச்சொல்லை (அன்றோ! என்ற பொருளில்) வாக்கியங்களில் முடிவில் மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கின்றார். நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயானார், மணவாளமாமுனிகள் போன்றோரின் உரைகளில் “இறே” என்ற இடைச்சொல் பல இடங்களில் கையாளப் பெற்றிருப்பதைக் காணலாம். அவ்விடைச்சொல்லை முதன் முதலில் பயன் கொண்டவர் நஞ்சீயரே ஆவார். நஞ்சீயர் உரையில் “இவள் புக்கால் படும்படியை அநுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்றுபுக வல்லளாகிலிறே என்கிறாள்” என்னும் பகுதியை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வேறோரிடத்தில் "இவ்வுபாயம் (பகவானைப் பற்றுவது) அநர்த்தத்தை விளையாதிறே”" என்று உரையிட்டிருக்கின்றார். நஞ்சீயர் உரையிலும் மிகுதியான இடங்களில் “இறே” என்பது பயன்படுத்தப்படவில்லை என்றாலும் பின்னர் எழுந்த உரைகளில் அதை மிகுதியாகப் பயன்படுத்துவதற்கு வித்திட்டவர் நஞ்சீயரே ஆவார். அதேபோல் “கோள்” என்னும் விகுதியை இறுதியில் பெறும் (முன்னிலை) வினைச்சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார் நஞ்சீயர். கிடிகோள் ' என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. "பண்ணங்சோள் * 'நின்றிகோள்” 'வல்லிகோள்”* “பண்ணுகிறி கோள் போன்ற சொற்கள் பலவிடங்களில் இடம் பெறுகின்றன. சொல்லுவுதி கோளாகில்* “தோருவுதோமே”' என்ற சொற்களும் நஞ்சீயர் உரையில் காணப்படுன்றன. மொழியியலார் அவற்றைப் பேச்சுமொழிக் கூறுகள் என்பர். --------------- அரிய தமிழ்ச் சொற்கள் மேல்நாட்டில் (கர்நாடக மாநிலத்தில்) பிறந்தவரும் வடமொழி வேதாந்தங்களில் கரை கண்ட வேதாந்தியாகவும் திகழ்ந்த நஞ்சீயர் தமது உரையில் ஆரிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பது நஞ்சீயரின் தமிழ்மொழிப் புலமையைக் காட்டுகிறது. அகவாய்,” இட்டளம்,” உருவெளிப்பாடு,” எளிவரவு," தலைநீர்ப்பாடு,” பகைத்தொடை” முதலியன நஞ்சீயருரையில் காணப்படும் ஒருசில அரிய தமிழ்ச் சொற்களாகும். (அவைகளின் விரிவான பட்டியல் பின்னிணைப்பு எண் 4ல் காணலாம்). இவை தவிர இலையகலப்படுத்தல், ' * உடைகுலைப்படுதல்,'” செல்வப்பிள்ளைத்தனமடித்தல்,* மருந்தீபெடுதல்,” மெய்க்காட்டுக் கொள்ளுதல்,” விளாக்குலை கொள்ளுதல்,” விளைநீரடைத்தல்” போன்ற அரிய செறிவுத் தொடர்களும் நஞ்சீயர் உரையில் காணப்படுகின்றன. (அவை பின்னிணைப்பு எண் 5ல் தரப்பட்டுள்ளன). ------------------- வடசொல்லாட்சி மணிப்ரவாள நடையில் அமைந்த உரையாதலின் ஒன்பதினாயிரப் படியில் வடமொழிச் சொற்கள் மிகுதியான அளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட இடங்களில் பெரும்பாலும் வடமொழிச் சொற்களோடு தமிழ் வேற்றுமை உருபுகளை இணைத்து வாக்கியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (உதாரணம்) “அத்யந்த நிக்ருஷ்டனான நான் அத்யந்த விலக்ஷண£னான எம்பெருமானை என்னுடைய மநோவாக்காயங் களாலே தூவித்தேன் என்கிறார்”! என்றுள்ள உரைப்பகுதி போன்றவற்றைக் கொண்டு இதை அறியலாம். சில இடங்களில் மிக நீண்ட கூட்டுச் சொற்களை (ஸமஸ்த பதங்களை)யும் இவ்வுரையில் காணலாம். “கமலத் தடங் கண்ணன்”? என்ற சொற்றொடருக்கு "உத்புல்லபுண்டரீகதடாகம் போலே யிருக்கிற திருக்கண்களை உடையவன்...” என்றும், "'நன்னுதலீர்”? என்பதற்கு “ப்ரணாமபாம்ஸுலபரார்த்தலலாடைகளாக....” என்றும் உரையிட்டுள்ளார். இதுபோல் மிக நீண்ட வடசொற்கள் பல இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளன. --------- சொற்பொருள் கூறுதல் நஞ்சீயர் தமது உரை நெடுகிலும் பாசுரங்களில் உள்ள சொற்களுக்கு இணையான பொருள்களைக் காட்டிக் கொண்டே செல்கிறார். இது இரண்டு வகையாக அமைந்துள்ளது. 1. தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலேயே பொருள் கூறுதல் (உதாரணம்) அஃகாமை - தப்பாமை* இயலுதல் - பலிக்கை” புதா - பெருநூரை' புன்கண்மை - பேகணிப்பு' பொன்றுவிக்கை - முடிக்கை' (இவற்றின் விரிவான பட்டியல் பின்னிணைப்பு எண் 6ல் காணலாம்.) 2.. தமிழ்ச் சொற்களுக்கு வடமொழியில் பொருள் கூறுதல்: அண்ணல் - ஸார்வேச்வரன் அருகல் - க்ஷயிக்கை" ஆக்கை - சரீரம்" கனைக்கை - த்வனிக்கை” (இவற்றின் பட்டியல் பின்னிணைப்பு எண் 7ல் இடம்பெற்றுள்ளன.) இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களையே பொருளாகக் காட்டியும் வடமொழிச் சொற்களைப் பொருளாகக் காட்டியும் உரை வரைந்துள்ளமை இருமொழி வள்லுநர்க்கும் பெருவிருந்தாக அமைந்துள்ளது. முடிவுகள் 1.பெருமளவில் வடமொழிச் சொற்களைக் கொண்டுள்ள ஆறாயிரப் படியைப் போல் அமையாமல் சம அளவில் தமிழும் வடமொழியும் திகழும் உரையாக ஒன்பதினாயிரப்படி திகழ்கிறது. 2-ஒன்பதினாயிரப்படியில், பல பாசுரங்களுக்குரிய உரை முழுமையாக உரைப்பகுதியில் அமையவில்லை; பாசுரத்தின் ஒருபகுதிக்குரிய உரை, பாசுர அவதாரிகையிலும் எஞ்சிய பகுதிக்குரிய உரை பாசுர உரைப்பகுதியிலும் காணப்படுகின்றன. சில பாகரங்களுக்கு அவதாரிகைகள் மட்டுமே உள்ளன. சில பாசுரங்களுக்குரிய உரை முழுமையாகக் கிடைக்கவில்லை. நஞ்சீயர் உரையை ஏட்டில் எழுதியவர்களுடைய கவனக் குறைவால் சில இடங்களில் வரிகள் விடுபட்டுள்ளன. 3-சில இடங்களில் ஒன்பதினாயிரப்படி உரையில் ஆறாயிரப்படி உரைப் பகுதிகள் சொல் மாறுபாடின்றி இடம் பெற்றுள்ளன. 4-விரிவான உரைகளான இருபத்துநாலாயிரப்படி உரையிலும் ஈட்டுரையிலும் இடம் பெறாத விளக்கங்கள் ஒன்பதினாயிரப்படி உரையில் இடம் பெற்றுள்ளன. 5-சில இடங்களில் இருபத்துநாலாயிரப்படி உரை ஒன்பதினாயிரப்படி உரையைப் பின்பற்றி அமைந்துள்ளது. அவ்விளக்கங்கள் ஈட்டுரையில் இடம் பெறவில்லை. 6-முதன் முதலில் உரைக்கு முன்னர் பிரவேசம் எழுதும் மரபினை நஞ்சீயர் தொடங்கி வைத்தார். பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நடையில் அமைந்துள்ள அப்பிரவேசம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 7-ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் தொடர்பு காட்டும் வகையில் அழகிய அவதாரிகைகளை நஞ்சீயர் தம் உரையில் அமைத்துள்ளார். 8. - பல திருவாய்மொழிகளை ஒப்பு நோக்கி அவற்றினிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைத் தமது உரையில் நஞ்சீயர் திறம்பட விளக்கியுள்ளார். 9. ஆழ்வரை இதிகாசப் புராணப் பாத்திரங்களுடன் ஒப்பிடும் உத்தியை முதன்முதலில் கையாண்டவர் நஞ்சீயரேயாவார். 10-ஆசார்யர்கள் பலர் அருளிய பல்வேறு நிர்வாகங்களை முதன் முதலில் உரையில் இடம் பெறச் செய்தவரும் நஞ்சீயரே ஆவார். 11-நஞ்சீயரால் மறுக்கப் பெற்றவைகளாகப் பிற உரைகளில் கூறப் பெறும் கருத்துகள் நஞ்சீயருடைய உரையிலேயே இடம் பெற்றுள்ளமை வியப்பைத் தருகிறது. நஞ்சீயர் கூற்றாகப் பிற உரைகளில் இடம்பெறும் செய்திகள் நஞ்சீயர் உரையில் இடம் பெறவில்லை. சில இடங்களில் இருபத்துநாலாயிரப்படியும் சில இடங்களில் ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் நஞ்சீயர் உரையுடன் இயைந்து நிற்கின்றன. 12-ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களைப் பல கோணங்களில் ஆராய்ந்து அவற்றின் உட்கருத்தினைக் கூறும் புதிய உத்தியை நஞ்சீயர் தோற்றுவித்தார். 13-தாமே ஒரு வினாவை எழுப்பித் தாமே விடையையும் தரும் உத்தியைத் தமது உரையில் நஞ்சீயர் கையாண்டுள்ளார். ஆழ்வாருடைய பாசுரங்களுக்குப் பொருத்தமான சுவைமிகு விளக்கங்கள் (ரஸோக்திகள்) பலவற்றைத் தமது உரையில் பலவிடங்களில் அருளிச் செய்துள்ளார். 14-ஆழ்வார் பாசுரங்களில் அடுத்தடுத்து அமைந்துள்ள தொடர்களுக்கேற்ற பொருள்களைக் கூறும் வகையில் தொடர்புரைகள் வரைந்துள்ளார். 15-ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களுக்குப் பொருள் கூறும் போது பின்புலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தம் மனக் கண்ணால் கண்டு உணர்வுமிகு நடையில் உரை வரைந்துள்ளார். 16-ஆழ்வார் பாசுரங்களில் அமைந்துள்ள சொற்களைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் உரையாடற் பாங்கில் உரை வரைந்துள்ளார். 17-பாசுரங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளக்கம் கூறும் வகையில் தகுந்த சொற்களைப் பெய்து விரித்துரைத்துள்ளார். _ 18-ஒரு திருவாய்மொழியிலோ, ஒரு பாசுரத்திலோ ஒரே சொல் பலமுறை இடம்பெற்றிருந்தால் ஒரிடத்திலேயே அதற்குரிய பொருளைத் தொகுத்துக் கூறும் உத்தியைக் கையாண்டுள்ளார். 19-ஆழ்வார் பாசுரங்களில் அமைந்துள்ள அடைமொழிகள் பன்மை விகுதிகள், வேற்றுமை உருபுகள், ஏகாரம், சுட்டுச் சொற்கள் ஆகியவற்றிக்கு மிகவும் நயமான பொருள்கள் பலவற்றை உரையினிடையே கூறியுள்ளார். 20-அவ்வவ்விடங்களுக்குப் பொருத்தமான உவமைகளைத் தமது உரையில் கையாண்டுள்ளார். இதிகாச புராணநிகழ்ச்சிகளையும் ஆழ்வாருடைய நிலைக்கு உவமையாகக் காட்டியுள்ளார். 21-திவ்ய ப்பரபந்தங்களிலிருந்தும், வேதம் இதிகாசம் புராணம் முதலிய வடமொழிநூல்களிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டுள்ளார். 22-வட மொழியில் அமைந்த மீமாம்ஸா நியாயங்கள் சிலவற்றைத் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். 23-பாட வேறுபாடுகள் காட்டுதல், வைணவ மரபுப் பெயர்களைக் கையாளுதல், பேச்சு மொழிக் கூறுகளையும் அரிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் உத்தி முதன் முதலில் கையாண்டவர் நஞ்சீயரேயாவார். 24-இவ்வாறு பற்பல புதிய உத்திகளைத் தமது உரையில் முதன்முதலில் கையாண்டு பின்னர் எழுந்த உரையாசிரியர்களுக்கெல்லாம் சிறந்த முன்னோடியாக நஞ்சீயர் விளங்குகிறார். --------------- இயல் 2 நஞ்சீயர் காட்டும் தத்துவக் கொள்கைகள் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள், அவ்வெம்பெருமானின் தன்மைகளையும், பிற தத்துவங்களின் தன்மைகளையும் உள்ளபடி அறிந்தனர். அவர்கள் தாம் அருளிச் செய்த தேனும் பாலும் கன்னனலுமமுதுமாகித் தித்திக்கும் பாடல்களில் அனைத்துத் தத்துவக் கொள்கைகளையும் பொதித்தனர். அப்பாடல்களுக்கு உரையிட்டருளிய ஆசாரியர்கள் அனைவருமே அத்தத்துவக் கொள்கைகளுக்கு விரிவான விளக்கங்கள் தந்துள்ளனர். அவ்வாசிரியர்களுள், தத்துவக் கொள்கைகளை மணிப்பிராவாள நடையில் முதன் முதலில் விளக்கிக் கூறியவர் நஞ்சீயரே எனலாம். நஞ்சீயரின் ஒன்பதினாயிரப்படி உரைக்கு முன்னரே அருளிச் செய்யப் பெற்ற உரையான திருக்குருகைப்பிரான் பிள்ளானின் ஆறாயிரப்படி உரையில் தத்துவக் கொள்கைகள் எடுத்துக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலில் அவை மிகவும் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளன. ஒன்பதினாயிரப்படியுரையில் தான் தத்துவக் கொள்கைகள் முதன் முதலில் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. நஞ்சீயரின் ஒன்பதினாயிரப்படி உரைப் பிரவேசத்தில், சித், அசித், ஈச்வரன் ஆகிய தத்துவங்கள் மூன்று என்றும், உலகியல் இன்பங்களில் ஆழ்வது துன்பத்தையே விளைவிக்கும் என்றும், அவற்றிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதே சிறந்தது என்றும், பரமபதத்தில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்யும் பேறு சாலச் சிறந்தது என்றும் தத்துவக் கொள்கைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதத்தியல் என்று பட்டர் திருவாய்மொழிக்குத் தனியன் ஒன்றை அருளிச் செய்துள்ளார். அத்தனியனை அடியொற்றி அவருடைய சீடரான நஞ்சீயர் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கும் முக்கிய நோக்கு அர்த்த பஞ்சகத்தை விளக்குவதிலேயே உள்ளது என்னும் சீரிய கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார்." பரஸ்வரூபம், ஜீவஸ்ரூபம், உபாய ஸ்வரூபம், உபேய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் ஆகிவற்றின் தொகுப்பு அர்த்த பஞ்சகம் என அழைக்கப்படுகிறது. ஆழ்வார், அருளிச் செய்துள்ள பாசுரங்களுக்கு உரையிடும்பேசது நஞ்சீயர் ஆங்காங்கு அர்த்த பஞ்சகத்தை விளக்கிக் காட்டி உரை வரைகிறார். பரஸ்வரூபம் (இறைநிலை) நம்மாழ்வார், எம்பெருமானுடைய மேன்மையை "உயர்வற உயர்நலம்” என்று தொடங்கும் முதல் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். அத் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் "இலன் அது உடையன் இது என நினைவரியவன்” என்கிறார் ஆழ்வார். அப்பாடற்பகுதியை விளக்கும் நஞ்சீயர், "ஒன்றைச் சுட்டி அத்தை உடையவனல்லன் என்னில் ஐச்வர்யத்தில் சிறிது குறைந்து தோற்றும்: ஒன்றைச் சுட்டி இத்தை யுடையவன் என்னில் இதொழிய அல்லாததெல்லாம் இவனதல்லாமையாலே அத்யல்ப விபூதிகனாம். (மிகவும் குறைந்த செல்வத்தை உடையவனாம்.) இவ்விரண்டுபடியாலும் கருத முடியாதவன்." என்று எம்பெருமானின் மேன்மையை விளக்குகிறார். எம்பெருமான், சேதனப் பொருள்கள், அசேதனப் பெருள்கள் ஆகிய இரண்டு பொருள்களிலும் மேம்பட்டவன் என்கின்ற ஆழ்வார், எக்காலத்திலும் அவனுக்கு ஒத்தவர் எவரும் இலர் என்றும் அருளிச் செய்கிறார். சேதனங்களைக் காட்டிலும் மேம்பட்டவன் என்ற போதே அசேதநங்களைக் காட்டிலும் மேம்பட்டவன் என்பது பெறப்படாதோ என்னும் வினாவை எழுப்பி, "அவனோடு ஒவ்வாமைக்குச் சேதனங்களோடு அசேதனங்களோடு ஒரு வாசியில்லை” என்று விடையும் தருகிறார்.” எம்பெருமானைத் தவிர சேதநம், அசேதநம் என்கின்ற இரண்டு தத்துவங்களே உள்ளன. அவைகளைக் காட்டிலும் எம்பெருமான் மேம்பட்டவன் என்று கூறிவிட்ட பிறகு, அவனோடு ஒத்தவர்கள் எக்காலத்திலும் இலர் என்று கூறுவதன் கருத்தை விளக்கும் நஞ்சீயா, அவனோடு ஒப்பாகாது என்று சொல்வதற்கும் தகுதியுடைய பொருள் எதுவுமே இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே ஆழ்வார் அவ்வாறு அருளிச் செய்வதாகக் கூறுகிறார். எம்பெருமானுடைய தன்மைகள் எம்பெருமான், எண்ணிலடங்காத கல்பாண குணங்களையுடையவன்.' ஜ்ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்தவன்.” கீழ் உலகங்களிலும் மேல் உலகங்களிலும் உள்ள சேதநாசேதநங்கள் அனைத்தையுமுடையவன்; அவை எல்லாவற்றுக்கும் அவன் அந்தர்யாமியாக இருந்தாலும் அவற்றின் தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடியிருப்பவன்.” எல்லாப் பொருள்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்கள் பகவானுடைய அதீனம்.* அப்பொருள்களினுடைய ஸ்திதி அவனதீனம்; எல்லாத் தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து கொண்டு, அவர்களுக்குப் பலன் கொடுக்கக் கூடிய சக்தியையும் எம்பெருமானே தருகிறான்.” எல்லா வஸ்துக்களுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனதீநம். எனவே அவன் சரீரி; மற்றவை அனைத்தும் அவனுக்குச் சரீரம்” என்கின்றார் நஞ்சீயர். படைப்பு பற்றிய கொள்கை எப்பொருளும் இல்லாத காலத்தில் எம்பெருமான் முதன் முதலில் நீரைப் படைத்துப் பிறகு அனைத்துப் பொருள்களையும் தன் ஸங்கல்பத்தாலே படைத்தான் என்கிறார் நஞ்சீயர். "தேவமனுஷ்யாதி ரூபத்தாலே நாநாவாய்க் கொண்டு விஸ்தீர்ணமாயிருந்துள்ள பதார்த்தங்கள் ஒன்றும் இல்லாத காலத்திலே தன்னுடைய ஸங்கல்பத்தாலே, தனக்கு இப்பாலுண்டான கார்யத்தை அடையப் பிறப்பிக்கவற்றான ஜலத்தை ஸ்ருஷ்டித்து, அவ்வழியே ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து, பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்தங்களைப் பழையபடியே உண்டாக்கின விரகுகளைச் சிந்தித்து." என்பது நஞ்சீயர் உரை. இதை மேலும் விளக்குகின்ற வகையில் "சேதநாசேதநங்களை தேவ திர்யக் மனுஷ்யாதி விபாகங்களை ஒழிந்து ஒன்றாம்படி கலசி அழிந்தது, ஸ்ருஷ்டித்தது என்று தெரியாதபடி ஸம்ஹார காலத்துக்கு முன்பிருந்தபடிகளில் ஒரு வாசி படாதபடி ஸ்ருஷ்டித்தது."” என்று ஸ்ருஷ்டியின் க்ரமத்தை அருளிச் செய்கிறார். உலகில் ஒரு பொருள் உண்டாகக் காரணங்களாகத் திகழ்பவை மூன்று என்பர். குடத்தைக் குயவன் செய்கிறான். இங்குக் குயவன் நிமித்தகாரணம் (வினைமுதல்) ஆகிறான். மண்ணைக் கொண்டே குடம் உருவாக்கப்படுகிறது. ஆதலின் மண் உபாதாந காரணம் (முதற்காரணம்) ஆகிறது. மண்ணைக் குடமாக ஆக்குவதற்குப் பயன்படும் சக்கரம், தடி, நீர் முதலியவை ஸஹகாரிகாரணம் (துணைக் காரணம்) ஆகிறது. ஆனால் எம்பெருமான் உலகைப் படைக்கின்றபோது இம்மூன்று காரணங்களாகவும் தானே திகழ்கிறான் என்பது விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படைப் கொள்கையாகும். அக்கொள்கையைப் பல இடங்களில் நஞ்சீயர் எடுத்துக் காட்டுகிறார். "வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல் வண்ணன் ' என்று ஆழ்வார் அருளிச் செய்துள்ள பாடற்பகுதியை விளக்கும் நஞ்சீயர், "ஸகல பதார்த்தங்களுக்கும் த்ரிவித காரணமும் தானேயாய்” என்றருளிச் செய்கிறார்." "ஒரு தனி முதல்வன்” என்று ஆழ்வார் அருளிச் செய்கின்ற இடத்திலும் "ஜகத்துக்குத் த்ரிவித காரணமும் தானேயாய்” என்றே உரையிடுகின்றார்.” அம்மூன்று காரணங்களும் எவை என்பதையும் நஞ்சீயர் சுட்டிக் காட்டுக்கின்றார். "தானோருருவே தனிவித்தாய்” என்று ஆழ்வார் அருளிச் செய்யும் இடத்திற்கு உரையிடும்போது “நிமித்த உபாதாந ஸஹகாரிகளான மூன்று வகைப்பட்ட காரணமும் தானேயாய்” என்று அருளிச் செய்கிறார். அதை அடியொற்றியே ஈட்டுரையும் அமைந்துள்ளது. "த்ரிவித காரணமும் தானே என்கிறது. தான் என்கிற இத்தால், உபாதாநாந்தரமில்லை என்கை. ஓர் என்கிற இத்தால், ஸஹகார்யந்தரமில்லை என்கை. தனி என்கிற இத்தால், நிமித்தாந்தரமில்லை என்கை” - என்பது ஈடு. எம்பெருமானைப் போன்றே சித், அசித் ஆகிய இரு தத்துவங்களும் நித்யமானவையே. அப்படியிருக்கும்போது அவற்றை எம்பெருமான் படைத்தான் என்பது எவ்வாறு பொருந்தும் என்ற வினாவெழும். பிரளய காலத்தில் அசித்தைப்போன்றே மங்கிக் கிடந்த சித்தை, உடலோடும் இந்த்ரியங்களோடும் கூட்டுவதே படைப்பு என்கிறார் நஞ்சீயர். அப்படிப் படைக்கும் போது ஏற்றத் தாழ்வு பாராமல் படைக்கின்றான் என்பதை "ஸ்ருஷ்டி காலத்தில் தரதமபாவம் பாராதே ஸ்ருஷ்டிக்கும் பரமோதாரன்” என்று குறிப்பிடுகிறார். "பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா” என்னும் பாடற்பகுதிக்கு உரை வரையுமிடத்தில் "ப்ரளயகாலத்தில் மங்கி அஸத் கல்பராய், அஸங்கீயேயரான ஆத்மாக்களைக் கரணகளேபரங்களோடே கூட்டி உண்டாக்கின அபரிமித சக்திகனானவனே ” என்பது ஒன்பதினாயிரப்படியில் இடம் பெறும் செய்தியாகும்.' படைப்பும் ஒரு விளையாட்டு எம்பெருமான், சேதநாசேநங்களைப் படைக்கிறான். ஆன்மாக்கள் சுகதுக்கங்களை அனுபவிக்கும்படியும் செய்கிறான். படைப்பும் எம்பெருமானுக்கு ஒரு விளையாட்டு என்கிறார் நம்மாழ்வார். "இன்புறும் இவ் விளையாட்டுடையான் ”” என்பது ஆழ்வார் திருவாக்கு. தன்னைக் கிட்டாமல் அகன்று சேதநங்கள் துன்பப்படுவதைக் காண்பதும் எம்பெருமானுக்கு ஒரு விளையாட்டு என்றால், எம்பெருமான் கருணையற்றவன் என்றாகி விடாதா என்னும் ஐயத்தையும் எழுப்பி, அதற்குரிய விடையையும் தருகிறார். "பரமகாருணிகனான எம்பெருமானுக்குப் பிறருடைய துக்காநுஸந்தானம் ப்ரீதி ஹேதுவானபடி எங்ஙனேயென்னில் தன்னுடைய கருணையாலே அவற்றை ரக்ஷிக்க நினைத்தால் அந்த ரக்ஷணம் அவற்றுக்கு அநிஷ்டமாயிருக்கிற இருப்பு அவனுக்கு ஹாஸ்ய ஹேதுவாய் அவ்வழியாலே லீலாஸ ஸாதனமாய்விட்டன." என்பது நஞ்சீயர் உரையாகும். அவற்றைக் காப்பதற்காகக் கொடுக்கப்பட்ட சைதந்யம் (அறிவு) தன்னை வந்து அடைந்து மகிழ்வதற்குறுப்பாக அமையாமல், விலகிப் போவதற்கு வழியமைத்துக் கொண்டு அநர்த்தப்படுகிற படியைக் கண்டு, 'நாம் ஒன்றை நினைத்துச் செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக் கொண்டபடி கண்டாயே' என்று பிராட்டி முகத்தைப் பார்த்து ஸ்மிதம் (புன்முறுவல்) பண்ண, அது கோல்விழுக்காட்டாலே லீலா: ரஸமாய்த் தலைக்கட்டும் என்று நம்பிள்ளையும் நஞ்சீயரைப் பின்பற்றியே விளக்குகிறார். "இதுக்கு (ஸ்ருஷ்டிக்கு) ப்ரயோஜனம் கேவல லீலை”? என்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்துள்ளமைக்கும் இதுவே அடிப்படை எனலாம். உடையான்“ என்று கம்பராமாயணத்தில் கூறி யுள்ளமை கருதத்தக்கது. சரீர சரீரி பாவம் எல்லாப் பொருள்களுள்ளும் எம்பெருமான் அந்தராத்மாவாக இருக்கின்றான் என்கிற கொள்கை விசிஷ்டாத்வைத மதத்தின் உயிரான கருத்தாகும். இதுவே சரீர சரீரி பாவம் எனப்படும். நம்மாழ்வார், "உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் ”' என்கிறார். அப்பகுதியை விளக்குகின்ற அவ்வவ பதார்த்தங்கள் தோறும் சரீரத்தில் ஆத்மாவைப்போலே தாரகனுமாய், நியந்தாவுமாய்க் கொண்டு வ்பாப்ய பதார்த்தங்களுக்குத் தெரியாமே வ்யாபித்து, அவ்வளவன்றிக்கே அப்பதார்த்தங்களுடைய புறம்பும் வ்யாபித்து என்றருளிச் செய்கின்றார். எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் எம்பெருமான் பரந்திருக்கிறான் என்று நஞ்சீயர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். "ஸகல ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து அந்தர் பஹிச்ச வ்யாபித்து என்று நஞ்சீயர் குறிப்பிடுவது "அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:” என்கின்ற உபநிஷத்தை அடியொற்றியே ஆகும். ஐந்து நிலைகள் எம்பெருமான் ஐந்து நிலைகளில் எழுந்தருளியுள்ளான் என்பது வைணவ சமயக் கொள்கையாகும். பரமபதத்தில் எழுந்தருளியுள்ள நிலையைப் பரத்வம் என்றும், திருப்பாற்கடலிலே எழுந்தருளியுள்ள நிலையை வியூஹம் என்றும், ஒவ்வொரு வஸ்துக்களினுள்ளும் மறைந்து உறையும் நிலையை அந்தர்யாமித்வம் என்றும், இராமன், கண்ணன் முதலிய அவதாரங்களை விபவம் என்றும், கோயில்களிலும், இல்லங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை அர்ச்சை என்றும் வைணவர் குறிப்பிடுவர். இவற்றை நஞ்சீயர் விரிவாக விளக்குகிறார். பரத்வம் "ச்ருதீதிஹாஸாதிகளுக்குத் தாத்பர்யபூமியாய், ப்ரஹ்மாதிகளாலே அறியமுடியாதே சுபாச்ரய ப்ரகரணங்களிற் சொல்லுகிறபடிகளாலே எப்போதும் த்யானம் பண்ணப்படுவானுமாய், தனக்கே அஸாதாரணமான ஐச்வர்யத்தையுடையனாய், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திலே அயோத்யை என்றும் அபராஜிதை என்றும் ச்ருதிகளில் பேசப்படுகிற திருநகரியிலே, ஆனந்தமயமான திவ்ய ஆஸ்தானத்திலே, திவ்ய பர்யங்கத்திலே ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய், ஸர்வபூஷணபூவிதனாய், ஸர்வாயுதோபேதனாய் அயர்வறுமமரர்கள் நித்ய ஸேவை பண்ணப் பெரிய பிராட்டியாரோடு கூட வீற்றிருந்தருளி, அவ்விருப்பிலே உபயவிபூதியையும் நடத்துவதும் செய்து..." என்று எம்பெருமான் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள நிலையினை நஞ்சீயர் வர்ணிக்கின்றார். தேவதைகளுக்கு அந்தர்யாமி எம்பெருமான் எல்லா தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து அத் தேவதைகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறான். அக்கருத்தைப் பல இடங்களில் நஞ்சீயா வலியுறுத்துகின்றார். பிரம்மாவுக்கும், ருத்ரனுக்கும் அந்தாயாமியாக இருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைச் செய்பவனும் எம்பெருமானே என்பதை நஞ்சீயர், "ப்ரம்மாவுக்கும் ருத்ரனுக்கும் அந்தர்யாமியாய் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணி ஸ்வேநரூபேண ஐகத்ரக்ஷணம் பண்ணுகிற ஸர்வேச்வரன்' ? என்று அருளிச் செய்கிறார். இப்படி எம்பெருமான் அந்தராத்மாவாக இருக்கின்றபடியால் அத்தேவதைகள் அனைவரும் எம்பெருமானுக்குச் சரீர பூதர்களே என்கிறார்.” எம்பெருமானுடைய தன்மைகளை நஞ்சீயரே தொகுத்துக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "பப ச்ரியப்பதியாய் ஸமஸ்த கல்யாணகுணாத்மகனுமாய்த் தனக்குத் தகுதியான திவ்யமங்கள விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் உடையனாய் திவ்யபூஷண பூஷிதனுமாய் சங்கசக்ராதி திவ்யாயுத தரனுமாய் பரமவ்யோமத்தில் ஆநந்தமயமான திவ்யாஸ்தாநரத்ந மண்டபத்திலே "வைகுண்டே து” என்கிறபடியே பிராட்டிமாரோடே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்தருளி, அஸ்தாநே பயசங்கிகளான அயர்வறுமமரர்களாலே அநவரத பரிசர்யமாண சரணநளிநனாய்க் கொண்டு, அங்கு அங்ஙனே செல்லாநிற்க, ஸ்வஸங்கல்பாயத்த ஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்திகமான ஸ்வேதரஸமஸ்தத்தையும் தனக்கு சரீரதயா சேஷமாக வுடையனாய் அந்தராத்மதயா சேதநாசேதநங் களையடைய வ்யாபித்து, தககததோஷைர ஸம்ஸ்ப்ருஷ்டனாய், நாராயணாதி நாமங்களைத் தனக்கு வாசகமாகவுடையனாய், ஏவம் விதனாக உபநிஷத் ப்ரஸித்தனுமாய், இப்படி ஸர்வவிஸஜாதீயானா யிருந்து வைத்து அப்ராக்ருதமான தன்னுடைய திவ்ய விக்ரஹத்தை இதரஸஜாதீய மென்னாலாம்படியாக்கி ஆச்ரிதவாத்ஸல்யத்தாலே தேவ மநுஷ்யாதி ஸஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளும் ஸ்வபாவனுமாய், தன்னுடைய திருவவதாரங்களிலும் உதவப் பெறாத பாக்யஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி ஸர்வாபராதஸஹனாய், பத்ரபுஷ்பாதிகளாலே ஸ்வாராதனுமாய்க் கொண்டு ஆச்ரிதர்க்கு அத்யந்த பராதீநனுமாய், அவர்களுடைய இச்சாதீநமான போஜந சயநாதிகளை யுடையனுமாய், ஸமஸ்த கல்யாணகுணபரிபூர்ணனுமா யிருக்கிற தானே ஆச்ரித ஸுலபத்வார்த்தமாகக் கோயில் திருமலை தொடக்கமான திவ்யதேசங்களிலே வந்து நின்றருளியும், அவ்வளவு செல்லமாட்டாத ஸம்ஸாரிகளும் இழவாதபடி தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே க்ராமங்களிலும் க்ருஹங்களிலும் எழுந்தருளியும், விஷய பரதந்தரனான இவன் செய்தவற்றை ஸாங்கஸமாராதநமாகக் கைக் கொண்டருளி ருசியைப் பிறப்பித்து இவனுக்கு இவ்விடந்தன்னிலே யிருக்கச் செய்தே போக மோக்ஷங்களைக் கொடுத்தும், இப்படியுள்ள ஸர்வேச்வரன். ' என்று எம்பெருமானுடைய தன்மைகளனைத்தையும் நஞ்சீயர் குறிப்பிடுகிறார். வியூஹம் பெரியதான நீரையுடைய ஏகார்ணவத்தை (கடலைத் தோற்றுவித்து, இப்பாலுள்ள ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக (படைப்பு முதலியவற்றுக்காக) அதினுள்ளே கண் வளர்ந்தருளும் ஸ்வபாவனாய், ஆச்ரித விரோதி நிரஸ ஸ்வபாவமான திருவாழியை உடையவனான எம்பெருமான்."” என்பது வியூஹத்தைப்பற்றி நஞ்சீயர் அருளிச் செய்துள்ள கருத்தாகும். அந்தர்யாமி எம்பெருமான் உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளிலும் மறைந்து உறைகின்றான். "உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன் ” என்றும், "பரந்ததண் பரவையுள் நீர்தோறும் பரந்துளன் " என்றும் நம்மாழ்வார் அருளிச்செய்கிறார். "சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய், நியந்தாவுமாய்க் கொண்டு வ்யாப்ய பதார்த்தங்களுக்குத் தெரியாமே வ்யாபித்து, அவ்வளவன்றிக்கே அப்பதார்த்தங்களுடைய புறம்பும் வ்யாபித்து.....” என்றும், "எல்லா பூதங்களிலும் பெளதிகமான கூஷ£த்ர சரீரங்களிலும், ததந்தர்வர்த்தி களாய், ஸ்வயம் ப்ரகாசமாயுள்ள ஆத்மாக்கள் தோறும் அந்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு ஸமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்திருக்கும்" என்றும் அருளிச் செய்கின்றார் நஞ்சீயர். அப்படி வியாபித்திருக்கும் போது, அந்த வஸ்துக்களுக்குள்ள தோஷங்கள் எம்பெருமான் மீது தட்டாது என்றும் குறிப்பிடுகின்றார். இங்கு, ஜீவாத்மாக்களுக்குள்ளே அந்தர்வ்யாப்தி, பஹிர்வ்யாப்தி ஆகிய இரண்டையுமே நஞ்சீயர் உரையில் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபவம் நஞ்சீயர் உரைகளில் விபவம் பற்றிக் கீழ்க் கண்ட கருத்துகள் காணப்படுகின்றன: உலகத்தில் எம்பெருமானைக் காணவேண்டும் என்ற ஆசை எழுந்தால், அவர்களுக்குக் காணலாம்படி தன்னுடைய ஸெளசீல்யம் முதலிய குணங்களோடு கூடியவனாய், அப்ராக்ருத திவ்ய திருமேனியோடு கூடியவனாய், அடியவர்களைக் காப்பதற்கும், அவர்களுடைய விரோதிகளை அழிப்பதற்கும் தன்னுடைய ஸங்கல்பம் காரணமாக, மனிதர்களுக்குச் சமமாக ஒவ்வொருயுகத்திலும் ராமன், கண்ணன் முதலிய அவதாரங்களைச் செய்கிறான். பரமபதத்தில் பரத்வத்துடன் எழுந்தருளியிருக்கின்ற இருப்பில் அதைவிடச் சிறப்பாக, அவதாரங்களிலேயே அவனுடைய குணங்கள் நன்கு ஒளிவிடுகின்றன. அவ்வவதாரங்களின் சீர்மை ஒருவராலும் நன்கு அறிய முடியாதது; அறவோர் சிலர் ஏரி வெட்டினால், அது சிலருக்குக் குளிக்கவும், சிலருக்குக் குடிக்கவும் பயன்படுகிறது. ஆனால், சிலர் அந்த ஏரியில் விழுந்து தங்கள் உயிரை: மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல் எம்பெருமானுடைய அவதாரங்களும், சிலர் அடிபணிந்து உய்வதற்கும், சிலர் அவனை எதிரிட்டு அழிவதற்கும் உறுப்பாகின்றன.” அர்ச்சாவதாரம் கோயில்களிலும் இல்லங்களிலும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள நிலையே அர்ச்சை எனப்படும். எம்பெருமான் எழுந்தருளியுள்ள நிலைகளுள் மிகவும் எளிய நிலை இதுவே என்கிறார் நஞ்சீயர். எல்லாக்காலத்திலும் அடியவர்கள் வணங்கும்படி எழுந்தருளியிருக்கை, அடியவன் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அவனுக்குத் திருமேனியமைத்தாலும் ஏற்றுக் கொள்ளுகை, அடியவர்கள் விருப்பப்படி போஜனம். ஆஸனம், சயனம் முதலியவற்றைத் தனக்குக் கொள்ளுகை, ஆகிய எல்லா நிலைகளிலும் துடியவர்கள் இட்ட வழக்காக அவர்கள் விருப்பப்படியே தன்னை அமைத்துக் கொணடுள்ள நிலை அர்ச்சாவதார நிலை என்கிறார் நஞ்சீயர். மேற்கூறிய தன்மைகளும் ஒரு காரணம் பற்றியனவாக அமையாமல், இத்தன்மைகளை இயற்கையாகவே உடையவன் என்றும் அவர் கூறுகிறார்.' அவர் கருத்துக் களைப் பின்பற்றி நம்பிள்ளையும்.” பெரிவாச்சான்பிள்ளையும்” அர்ச்சாவதாரமே எம்பெருமானுடைய ஸெளலப்யத்தின் (எளிமையின்) எல்லைநிலம் என்று அறுதியிட்டுப் பேசிற்றே பேசும் ஏக கண்டர்களாகத் திகழ்கின்றனர். கல்யாண குணங்கள் எம்பெருமான் எல்லாக் கல்யாண குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன் என்றும், குற்றங்கள் அனைத்துக்கும் எதிர்த் தட்டாயிருப்பவன் என்றும் நஞ்சீயர் தம் உரையில் சுட்டிக் காட்டுகிறார்.” எம்பெருமானுடைய கல்யாண குணங்களில் ஒன்றான க்ருபை என்பது காரணம் ஒன்றினைப் பற்றி வருவதன்று என்பது நஞ்சீயரின் உறுதியான கொள்கையாகும். "வெறிதேயருள் செய்வர் செய்வார்கட்கு உகந்து” என்கின்ற ஆழ்வார் திருவாக்கிற்கு "தாம் விஷயீகரிக்க வேண்டுவார்க்கு நிர்ஹேதுகமாக உகந்து க்ருபை பண்ணுவர் ' என்று உரையிடுகின்றார்.” இப்படிப் பல இடங்களில் எம்பெருமானுடைய க்ருபை நிர்ஹேதுகம் என்றே உறுதிபடக் கூறுகிறார்." "இன்னருள் என்கிறது ஒரு காரணமறப் பண்ணும் க்ருபை” என்று தெளிவாகவே காட்டுகிறார். சேதநர்களின் விலக்காமையை மட்டுமே கொண்டு, அவர்களுக்கு அருள் செய்பவன்; அவர்களிடத்திலுள்ள குற்றங்களைக் கண்டு வெறுக்காமல் அவற்றைத் தன்னுடைய வாத்ஸல்ய குணத்திற்கு இலக்காக்கிக் கொள்பவன். சேதனர்களைப் பெறுவதற்கு நெடுங்காலமாக முயல்பவன்; சேதநரோடு கூடப்பெறவேண்டும் என்னும் பேரவாவுள்ளவன். சேதநரோடு கூடிவிட்டால், பெறாப்பேறு பெற்றாற்போல மகிழ்பவன் - என்று எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வர்ணிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறார் நஞ்சீயர்." இத்தகைய நஞ்சீயரின் அருளிச் செயல்களைப் பின்பற்றியே நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், மணவாள “மாமுனிகள் போன்ற பிற்கால ஆசாரியர்களும் சேதனனைப் பெறுவது எம்பெருமானுக்கே பேறு என்று தம்தம் நூல்களில் அருளிச் செய்துள்ளனர். ஜீவாத்ம ஸ்வரூபம் (உயிர்ரிலை) ஜீவாத்மா என்கிற தத்வமானது எம்பெருமானுக்கு அடிமைப்பட்டது.” அவனுக்குச் சரீர பூதமாக (உடலாக) அமைந்தது.” ஜ்ஞானம், ஆனந்தம் இவற்றை வடிவாக உடையது.” ஆத்மாவானது எம்பெருமானுக்கு மிகவும் இனிமையானது. தேஹம், இந்திரியம் முதலியவைகளுக்குத் தலைவனாக உள்ள ஆத்மாவின் வைலக்ஷண்யம் (சிறப்பு) எப்படிப்பட்ட அறிவுடையவராலும் அளவிட்டு அறியமுடியாது. அறிந்தாலும் அதன் பெருமையை முழுதும் உணரமுடியாது.” எம்பெருமானுக்கு மட்டுமல்லாமல், அவனுடைய அடியவர்களுக்கும் அடிமைப்பட்டது' என்பன ஆன்மாக்களைப் பற்றி நஞ்சீயர் அருளிச் செய்யும் கருத்துகளாகும். உபாய ஸ்வரூபம் (நெறி ) கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், பிரபத்தி ஆகியவை எம்பெருமானை அடைவதற்கு வழிகளாகக் கூறப்பட்டு வருகின்றன. நம்மாழ்வார் “வீடுமின் முற்றவும்” என்று தொடங்கும் திருவாய்மொழியிலும், “சார்வே தவநெறிக்கு ' என்று தொடங்கும் திருவாய் மொழியிலும் பக்தி யோகத்தைப் பற்றி அருளிச் செய்வதாக நஞ்சீயர் குறிப்பிடுகிறார். ஆனால் பிரபத்தி என்று சொல்லப்படுகின்ற சரணாகதி நெறி பிற நெறிகளைக் காட்டிலும் உயர்ந்தது என்றும் காட்டுகின்றார் நஞ்சீயர்.” ஆனால் உண்மையில் இப்படிச் செய்யப்படும் சரணாகதியும் எம்பெருமானைப் பெறுவதற்கு உபாயம் (வழி) அன்று; எம்பெருமானுடைய அருளே உபாயம் என்பதையும் உறுதிப்படக் காட்டுகின்றார். "நீயே விஷயீகரிக்கும் இத்தனை போக்கி நான் உன்னைப் பெறுகைக்கு ஈடான யத்னம் பண்ணுகை என்று ஒரு பொருளுண்டோ.”' என்னும் நஞ்சீயர் உரைப்பகுதியிலிருந்து இதை நன்குணரலாம். எம்பெருமானே உபாயம் என்றால், சரணாகதி என்பதன் நிலை என்ன என்ற வினா எழும். இது பற்றியே ஒர் ஐதிஹ்யம் ஈட்டில் இடம் பெற்றுள்ளது. நஞ்சீயருடைய சீடன் ஒருவன், எம்பெருமானே உபாயம் என்றால், ப்ரபத்தி கொண்டு இங்குச் செய்வது ஒன்றும் கண்டிலேன்” என்று கூற, இதைக் கேட்ட நஞ்சீயர் செவியைப் புதைத்துக் கொண்டு, நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரமரஹஸ்யமாக உபதேசித்து ஒராண் வழியாய்க் கொண்டு போந்த இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன், இத்தை வெளியிடுவதே'' என்று திருழுடியிலே அடித்துக் கொண்டு திருப்பள்ளியறையிலே புக்கருளினார். இதனால் சரணாகதி செய்ய வேண்டுவது அவசியம் என்று புலனாகிறது. ஆனால் அந்தச் சரணாகதி உபாயமன்று என்பதும், எம்பெருமானே உபாயம் என்பதும் நஞ்சீயருடைய கொள்கைகள் என்றும் புலனாகின்றன. இக் கொள்கைகளை வெகு அழகாக விளக்குகின்ற நஞ்சீயர், “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று அருளிச் செய்வாராம். அதாவது சரணாகதனிடத்தில் இரக்கத்தோடு கூடிய எம்பெருமானே உபாயம். அவ்வுபாயத்தால் அவனையே அடைந்து, அவனுடைய இனிமையைச் சேதநன் அனுபவிக்கின்றபடியால், இனிமையோடு கூடிய எம்பெருமானே உபேயம். எனவே எம்பெருமானே உபாயம் ( அடைவிப்பவன்) எம்பெருமானே உபேயம் ( அடையப்படுபவன்) என்பன அவர் கொண்டிருந்த கருத்துகளாக அமைகின்றன. விரோதி ஸ்வரூபம் (தடை) எம்பெருமானை அடைவதற்குத் தடையாக இருப்பன இவ்வுலகத் (ப்ரக்ருதி) தொடர்புகளே. அவற்றைக் கடந்து விட்டால் எம்பெருமானை அடைந்து விடலாம் என்று நஞ்சீயர் தமது உரையில் காட்டுகின்றார்.” நம்மாழ்வார், “சொன்னால் விரோதம்” என்னும் திருவாய்மொழியில்* மானிடர்களைப் போற்றுவது தகாது என்றும் "ஒருநாயகமாய்” என்னும் திருவாய்மொழியில்” செல்வத்தின் நிலையாமையையும், “கொண்டபெண்டிர்” என்னும் திருவாய்மொழியில்” உறவினர்களுடைய குற்றங்களையும் முறையே அருளிச் செய்கிறார். அத்திருவாய்மொழிகளின் உரையில் நஞ்சீயர் விரோதி ஸ்வரூபத்தை உணர்த்தும் வகையிலேயே உரையிடுகின்றார். உபேய் ஸ்வரூபம் (வாழ்வு) புருஷார்த்தம் என்று கூறப்படுகின்ற வாழ்வாவது, எம்பெருமானை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் அளவிலா இன்பத்தை எய்துவது. இதைத் தவிர பிற புருஷார்த்தங்கள் அனைத்தும் தள்ளத் தக்கவையே என்பது நஞ்சீயர் கூறும் கருத்து ஆகும். நஞ்சீயர், ஆத்மாவுக்கு அதம, மத்யம, உத்தம புருஷார்த்தங்கள் மூன்று உண்டு என்கிறார். நிலை நில்லாத பேறான இவ்வுலக மேலுக இன்பங்கள் அதம புருஷார்த்தம் என்றும், கைவல்யம் என்கின்ற ஆத்மானுபவம் மத்யம புருஷார்த்தம் என்றும், வீடு பேறடைந்து பகவானை அனுபவிப்பது உத்தம புருஷார்த்தம் என்றும் கூறுகிறார். அதிலும் பகவானுக்குத் தொண்டு செய்வது ப்ரதம பர்வம் (முதல்நிலை) என்றும், பாகவதர்களுக்குத் தொண்டு செய்வது மத்யம பர்வம் (இடைநிலை) என்றும், ஆசாரியனுக்குத் தொண்டு செய்வதே சரம பர்வம் (கடைநிலை) என்றும் அறுதியிடுகிறூர்.' அவர் கருத்துகளை அடியொற்றியே பிள்ளைலோகாசார்யரும் ஸ்ரீவசனபூஷணத்தில் ஆசார்ய கைங்கர்யமே உயர்ந்தது என்று பல ஸூத்ரங்களில் அருளிச் செய்துள்ளார்.” கைவல்யம் (மன்னுயிர்ப் போகம்) ஆத்மானுபவமான கைவல்யம் மிகவும் வெறுக்கத்தக்கது என்று நஞ்சீயர் பல இடங்களிலும் அருளிச் செய்கிறார். நம்மாழ்வாருடைய பாசுரங்களுக்கு உரையிடும்போது ஆங்காங்கே, ' 'கைவல்ய புருஷார்த்த நிஷ்டரை நிந்தித்து..." என்றும், "கைவல்ய புருஷார்த்த நிஷ்டரை இகழ்கிறார்”* என்றும், “கைவல்ய புருஷார்த்தம் துஸ்ஸாதமென்றும், அதுதான் அபுருஷார்த்தமென்றும் ப்ரதிபாதிக்கிறார்' என்றும் “கைவல்யத்தைப் புருஷார்த்தமாகப் பற்றினாலோ என்னில், பகவத் ஸமாச்ரயணத்துக்கு யோக்யமாய், சப்தாதி விஷயங்களை அனுபவித்து, ஸம்ஸாரத்திலே இருக்குமித்தையும் இழக்குமித்தனை, அதில் ப்ரயோஜனம்* அருளிச் செய்யப்பட்டுள்ள உரைப் பகுதிகளிலிருந்து கைவல்யத்தைப் பற்றி நஞ்சீயர் கொண்டிருந்த கருத்துகளை நன்கறியலாம். அர்த்த பஞ்சகத்தை வெளியிடவே நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்துள்ளதாகத் தமது உரையில் குறிப்பிடுகிறார் நஞ்சீயர். "முதலிலே “மயர்வற மதிநலம் அருளினன்” என்றார். நடுவு பலவிடங்களிலும் அவனே அபாச்ரயமென்றார். முடிவிலும் “இன்றென்னைப் பொருளாக்கி” என்றும். “என் தலை மிசையாய் வந்திட்டு” என்றும் எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷமீகாரத்தையே தமக்கு உபாயமாகப் பேசித் தலைக்கட்டினார். இங்ஙனே இருக்கிற நிர்ஹேதுக விஷமீகாரத்துக்கு அடியான ச்ரிய:பதித்வத்தை "மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்" என்று முதலிலே தொடங்கி, நடுவு பலவிட ங்களிலும் ப்ரஸ்தாவித்துக் கொண்டு போந்து, முடிவிலே “திருவாணை நின்லாணை ' என்றும், “கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ என்றும் தலைக்கட்டினர். ததீயருடைய ப்ராப்யதையையும் முதலிலே “அயர்வறுமமரர்கள்” என்று தொடங்கி, நடுவு பலவிடங்களிலும் “அடியார்கள் குழாங்களை - உடன் கூடுவது என்று கொலோ” என்றும் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” யகப்படப் பரக்கப்பேசிக் கொடு போந்து, முடிவிலும் "அந்தமில் பேரின் பத்தடியரோடிருந்தமை'' என்றும் தலைக்கட்டினார், எம்பெருமானுக்கு (ப்ரதானகுணம்) ஸெளசீல்யமென்று கொண்டு “உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவு-எத்திறம்” என்று தொடங்கிப் பலவிடங்களிலும் பேசினார். இவனுக்கு அஸாதாரணமான திருநாமம் நாராயணன் என்னுமிடம் “வண்புகழ் நாரணன்” என்று தொடங்கிப் பலவிடங்களிலும் பேசிக்கொடு போந்து, “வாழ்புகழ் நாரணன்” என்று தலைக்கட்டினர். ஆழ்வார் இப்படி இவ்வைந்து அர்த்தமுமே இப் பிரந்தத்துக்கு ப்ரதாநார்த்தங்கள் என்று கருத்து. என்று அருளிச் செய்து தமது ஒன்பதினாயிரப்படி உரையைத் தலைக் கட்டியுள்ளார். -------------- பிராட்டி நிலை சரணாகதி செய்பவர்களின் குற்றங்களை எம்பெருமான் பொறுத்தருளும்படி புருஷகாரம் செய்பவள் பிராட்டியாவாள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சமயத்தின முக்யமான கருத்துகளுள் ஒன்றாகும். பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைப் பற்ற வேண்டியதன் அவசியம் என்ன என்பதை நஞ்சீயர் பலமுறை பட்டரிடம் கேட்டறிந்திருக்கிறார். ஒரு முறை பட்டர், "நாளும் நம்திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்கி” என்று ஆழ்வார் அருளிச் செய்துள்ள பகுதியை எடுத்துக்காட்டி, சேதனர்கள் குற்றத்தை எம்பெருமான் மன்னிப்பதற்கு இவள் புருஷகாரம் மிகவும் அவசியம் என்று கூறினார். " மற்றொரு முறை, 'எம்பெருமான் சேஷி, ஜீவாத்மா அவனுக்குச் சேஷம்; நடுவில் பிராட்டி புருஷகாரம் எதற்கு?” என்று நஞ்சீயர் கேட்டபோது பட்டர், ஸ்ரீராமாயணத்திலிருந்து நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி விடை பகர்ந்தார். ஸீதாபிராட்டி அருகில் இருந்தபடியால், காகாஸாரன் பெருத்த தீங்கு செய்திருந்தும் தலை தப்பினான். ஆனால், அதைவிடக் குறைந்த தீங்கு செய்த ராவணன் மாண்டொழிந்ததற்குக் காரணம், பிராட்டி பெருமாளருகில் இல்லாமையேயாகும். எனவே பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானைப் பற்றினால் அபராதங்கள் எல்லாவற்றையும் எம்பெருமான் மன்னித்துவிடுவான் என்றார் பட்டர்.” பட்டருடைய வார்த்தைகளை அடியொற்றி நஞ்சீயர் பிராட்டியைப் புருஷகாரம் செய்பவளாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் செய்த சரணாகதியை விளக்கும் நஞ்சீயர், இளையபெருமாள் பிராட்டி முகமாகப் பெருமாளைச் சரணம் புக்காப் போலே தத் கைங்கர்ய ப்ரயோஜனராய்த் தம்முடைய ஆற்றாமையாலே அநந்யகதிகராய், பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு சரணம் புகுகிறார்.” என்று உரையிட்டுள்ளார். எம்பெருமானுடைய கடாக்ஷத்திற்கும் அடி பிராட்டியின் புருஷகாரமே என்பதையும் நஞ்சீயர் காட்டுகிறார்." “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” என்று ஆழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரப் பகுதியை விளக்கும் நஞ்சீயர், எம்பெருமான் பெரிய பிராட்டியை அடிமை கொண்டமை போலவே தம்மையும் அடிமை கொண்டான் என்று ஆழ்வார் அருளிச் செய்வதாக உரையிட்டுள்ளார்.” இதனால் பிராட்டி எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவள் என்பது நஞ்சீயர் கருத்து என்பது புலப்படுகிறது. --------- திருமந்த்ரம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் ஆகியவை மூன்றின் தொகுப்பினை ரஹஸ்யத்ரயம் என்று வழங்குவர். "ஓம் நமோ நாராயணாய” என்பது திருமந்த்ரம். "எம்பெருமானுக்கே உரியவனான நான், எனக்கு உரியவன் அன்றிக்கேயொழிய வேணும்; எல்லோருக்கும் தலைவனான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுபவனாக ஆக வேண்டும்” என்று வேண்டுதலை அது உணர்த்துகின்றது. ஆழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரங்களில் திருமந்த்ரத்தினுடைய பொருள் இடம்பெறுவதாக நஞ்சீயர் தமது உரையில் காட்டியுள்ளார்.' திருமந்த்ரத்தைச் சொல்லி, நல்ல செவ்விப்பூவைப் பணிமாறி நாள்தோறும் ஆச்ரயியுங்கோள் என்று ஆழ்வார் கூறுவதாகவும் அருளிச்செய்துள்ளார்.” திருமந்த்ரத்தில், எம்பெருமானுக்கே உரியவன் ஜீவாத்மா என்று சொல்லப்பட்டிருப்பதால், ஜீவாத்மாவின் அநந்யார்ஹத்வம் (வேறொருவர்க்கும் ஆட்படாத தன்மை) கூறப் பட்டுள்ளதாக நஞ்சீயர் அருளிச் செய்வர்.” நஞ்சீயர் திருமந்த்ரத்திலேயே கர்மயோகம், ஜ்ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தியோகம் ஆகிய நான்குமுண்டு என்பராம். 'திருமந்த்ரத்தை இடக்கை பத்துருக்கொண்டு எண்ணுகை கர்மயோகம். அதினுடைய அர்த்தாநுஸந்தானம் ஜ்ஞான யோகம். அவ்வர்த்தம் (அநுஷ்டித்து) இருக்கை பக்தியோகம். பக்திபரவசராய் எம்பெருமானே நிர்வாஹகனென்று துணிகை ப்ரபத்தி என்று நஞ்சீயர் அருளிச் செய்துள்ளார். த்வயம் "ஸ்ரீமந்நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம: என்பது த்வயம். “பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றுகிறேன். பெரிய பிராட்டியும் அவனுமான சேர்த்தியில் அவனுடைய மகிழ்ச்சிக்காக, எல்லா அடிமைகளும் செய்யப் பெறுபவனாக ஆக வேண்டும்” என்று ப்ரார்த்திப்பதை த்வயம் உணர்த்துகிறது. ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் மிகமிக முக்கியமான மந்திரமாகக் கொள்ள வேண்டியது த்வயத்தையே என்று ஆசார்யர்கள் அனைவரும் அருளிச் செய்துள்ளனர். நஞ்சீயர், த்வயம் தவிர்ந்த மற்ற அநுஸந்தானம் அனைத்தும் கடலோசைக்குச் சமம்” என்று கூறியுள்ளமை கொண்டு த்வயம் பற்றிய நஞ்சீயர் கருத்தை நன்கறியலாம். “வாச்யங்களில் ஸர்வேச்வரனுக்கு அவ்வருகு இல்லாதாப்போலே வாசங்களிலும் இதுக்கு (த்வயத்திற்கு) அவ்வருகில்லை. இதுவே ஸித்தாந்தம் என்று ஜீயர் அருளிச் செய்வர்" என்று பிள்ளைலோகாசார்யர் குறிப்பிடுகிறார். “த்வயத்தின் பொருளை நெஞ்சில் கொண்டு, வேறு சொற்களை எம்பெருமான் திருமுன்பே விண்ணப்பம் செய்யலாமோ?” என்று நம்பிள்ளை கேட்க, நஞ்சீயர், “கூடாது. இப்பாசுரத்திற்குச் சுரக்கும் பொருள் வேறு சொற்களுக்குச் சுரக்காது. எனவே இந்த சொற்களாலேயே கூறவேண்டும்” என்று கூறியுள்ளார்.” “மெய்க்கன்றுக்கு இரங்கிப் போந்த வாஸநையாலே தோற் கன்று மடுத்தாலும் ஸுரபியானது இரங்கிப் பால் சுரக்குமாபோலே, பொய்யான நமக்கும் இரங்குவது இச் சப்த விசேஷத்தைக் கேட்டாய்த்து. ஆகையாலே இதுவே அநுஸந்தேயம்” என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச்செய்தார். சரமச்லோகம் “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்பது சரமச்லோகம். “எல்லா தாமங்களையும் (உபாயம் என்கின்ற நினைவை) விட்டு என்னை ஒருவனையே சரணமாகப் பற்றுவாயாக. எல்லாப் பாவங்களிலிருந்தும் நான் உன்னை விடுவிக்கிறேன். வருந்தாதே ' என்று கண்ணபிரான் அர்ஜுனனுக்கு உபதேசித்த இச்லோகம் பகவத் கீதையில் (18-66) உள்ளது. "நாம் எதைக் குறித்தும் கவலை கொள்ள வேண்டாம் பெருமானுடைய இந்த வார்த்தை தப்பாது என்று நம்பிக்கையுடனிருப்பது ஒன்றே வேண்டுவது” என்று நஞ்சீயர் அருளிச் செய்துள்ளார். இந்த சரமச்லோகத்தைப் பற்றி நஞ்சீயர் தமது உரையிலும் குறிப்பிட்டுள்ளார்." இவ்வாறு தத்வத்ரயம், அர்த்தபஞ்சகம், ரஹஸ்யத்ரயம் முதலியவை பற்றிய பின்னோர் கருத்துகளுக்கு நஞ்சீயர் கால்கோளிட்டு, பெருந்தொண்டு புரிந்துள்ளார். அரிய கருத்துகள் பலவற்றை நஞ்சீயர் தெரிவித்துள்ளார். அக் கருத்துகள் அவர் அருளிச்செய்துள்ள நூல்களிலும், பின்னர் தோன்றிய ஆசாரியர்கள் அருளிச்செய்துள்ள நம்மாழ்வார் அர்த்த பஞ்சகத்தை வெளியிடவே திருவாய்மொழியை அருளிச் செய்ததாக நஞ்சீயர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். எம்பெருமானுடைய தன்மைகளை விரிவாகக் காட்டுகின்ற நஞ்சீயர், எம்பெருமான் உலகங்களுக்கு மூன்றுவித காரணங்களுமாய் இருக்கிறான் என்பதைப் பல இடங்களில் விளக்கிக் காட்டியுள்ளார். 1-உலகங்களைப் படைத்தலும் எம்பெருமானுக்கு ஒரு விளையாட்டே என்பதை அழகாக விளக்கியுள்ளார் 2-எம்பெருமானுடைய ஐந்து நிலைகளைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். பரஸ்ரவரூபம், ஜீவஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், உபேய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் ஆகிய அர்த்த பஞ்சகம் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். 3-பிராட்டி புருஷகாரம் செய்பவள் என்றும், அவள் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவள் என்றும் குறிபபிட்டுள்ளார். 4-திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் ஆகிய ரஹஸ்யத்ரயங்களைப் பற்றிய அரிய கருத்துகள் பலவற்றைக் கூறியுள்ளார். --------------- இயல் 6 வைணவ சமயத்தில் நஞ்சீயர் பெறும் சிறப்பிடம் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களிடையே நஞ்சீயர் பெறும் சிறப்பிடம் பற்றிய கருத்துகள் இவ்வியலில் காணப்பெறும். ஸ்ரீராமாநுஜர் திருநாடு அடைவதற்கு முன்னர் இவரைத் திருத்திப் பணிகொள்ளும்படி பட்டருக்கு நியமித்திருந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, ஸ்ரீராமானுஜரே மதிக்குமளவுக்கு மிகப் பெரிய அறிஞராக நஞ்சீயர் திகழ்ந்தார் என்பது புலனாகிறது. இவரைத் திருத்திப் பணிகொள்வதற்காக மேல் நாட்டிற்கு எழுந்தருளிய பட்டர், ஒர் எளிய யாசகன் போல் சென்று, பத்துநாள்கள் அவருடன் வாதப் போர் புரிந்தமையை நோக்கும் போது மிகச் சிறிய வயதிலேயே ஸர்வஜஞ்பட்டன் என்ற மகா பண்டிதனை வென்ற பராசரபட்டராலும் அப்போது வேதாந்தி எனற பெயருடன் திகழ்ந்த நஞ்சீயரை எளிதில் வெல்ல முடியவில்லை என்பதும் புலப்படுகின்றன. அதனால் நஞ்சீயரின் அறிவுத்திறனும் தெரியவருகின்றன. அத்தகைய பெருமைகள் வாய்ந்த நஞ்சீயர் ஆறு சாஸ்த்ரங்களிலும் வல்லவராக இருந்த போதும், சிறிதும் தற்பெருமை கொள்ளாமல் பட்டரை அடிபணிந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய நூல்களைக் கற்கத் தொடங்கினார் என்பதும் அவருடைய உயர்ந்த பண்பைக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், அன்றுதான் முதன்முதலில் பயிலும் மாணாக்கன் போல் தமக்கு எழுந்த ஐயங்களையெல்லாம் சிறிதும் தயங்காமல் பட்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பட்டருக்கும் பாசுரங்களை எடுத்துக் கொடுக்கும் வல்லமையையும் தாம் பெற்றார். “பலநூறு காதங்களுக்கு அப்பாலுள்ள மேல் நாட்டில் பிறந்திருந்தும், இவ்வளவு தூரம் வந்து இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே” என்று ஆசாரியரான பட்டரே தம்மைக் கொண்டாடுமளவுக்குப் பெருமையும் பெற்றார். ஸ்ரீராமானுஜரால் மதிக்கப் பட்டவராகவும், பட்டரால் கொண்டாடப் பெற்றவராகவும் பெருமை பெற்ற நஞ்சீயர், பட்டருக்குப் பின் ஒராண் வழி ஆசார்ய பரம்பரையிலும் இடம் பெறும் சிறப்பைப் பெற்றார். நஞ்சீயர், தமிழ் மொழி நடையாடாத மேல் நாட்டில் பிறந்தவர் எள்பதும், அத்வைத மதத்திலிருந்து திருத்திப் பணிகொள்ளப்பட்டவர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கன. அப்படியிருந்தும் அவர் ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில், ஸ்ரீராமா நுஜரும், எம்பாரும் பட்டரும் அணி செய்த ஸ்தானத்தை அவர்களுக்குப்பின் அணிசெய்தார் என்பதை நோக்கும் போது நஞ்சீயருடைய தனிச்சிறப்பு நன்கு புலனாகிறது. ஈட்டை ஈன்ற முதல்தாய் பட்டரிடம் நஞ்சீயர் அடிபணிந்து காலக்ஷேபம் கேட்டமையால், ஸ்ரீமந் நாத முனிகள் ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர் போன்ற பூர்வாசார்யர்கள் அருளிச் செய்த விசேஷார்த்தங்களும் அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் பட்டர் மூலமாக நஞ்சீயரை வந்தடைந்தன. பிற்காலத்தில் அவையனைத்தையும் நம்பிள்ளைக்கு வழங்கி, இன்றளவும் நாம் பற்பல விசேஷார்த்தங்களையும், பூர்வா சார்யர்களைப் பற்றிய ஐதிஹ்யங்களையும், அவர்களுடைய நிர்வாஹங்களையும் அறிந்து கொள்வதற்கு முதற் காரணமாக அமைந்தவர் நஞ்சீயரே ஆவார். பிள்ளைலோகம் சீயர் அருளிச் செயலாகக் கூறப்படும் “ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம்” என்னும் நூலில் கீழ்க்கண்ட செய்தி இடம் பெற்றுள்ளது: “எம்பெருமானாருடைய ஸ்திதி கமந சயநாதிகளை நாம் கொண்டாடுமாபோலேயும் ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடுமா போலேயும் இவர் கொண்டாடுகிறபடி என்றருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார்." இங்கு “அருளிச் செய்வர்” என்று அவர் குறிப்பிடுவது தமதாசார்யரான நஞ்சீயரையே ஆகும். நஞ்சீயர், எம்பெருமானார் காலத்திற்குப் பிறகே பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு ஸ்ரீவைஷ்ணவ மதத்திற்கு வந்தவர். அப்படியிருக்கும்போது எம்பெருமானா ருடைய செயல்களைப் பற்றியும், ஆளவந்தா ருடைய நடையைப் பற்றியும் அவர் எப்படி அறிந்து கொண்டிருக்க முடியும்? எனின், பராசரபட்டரை அடிபணிந்து காலக்ஷேபம் கேட்டபோது, அவர் எல்லா விசேஷார்த்தங்களையும் பட்டரிடமிருந்து பெற்றார். தம் பரம கருணையினால் இவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக நம்பிள்ளைக்கு வெளியிட அவரும் தமது நூலிலே பொறித்து வைத்துள்ளார் என்கிறது ஸ்ரீவைஷ்ணவஸமயாசார நிஷ்கர்ஷம்.' இதனால் பட்டருக்கும் நம்பிள்ளைக்கும் இடையே பாலமாக அமைந்து, ஸகல விசேஷார்த்தங்களையும் நமக்குக் கிடைக்கும்படி செய்தவரும், ஈடு முப்பத்தாறாயிரப்படியில் இடம் பெற்றுள்ள விசேஷார்த்தங்கள், செய்திகள் அனைத்தையும் ஈன்ற முதல் தாயாக விளங்குபவரும் நஞ்சீயரே என்பது உறுதியாகிறது. ------------- நஞ்சீயர் காட்டிய நல்லாசிரியரின் இலக்கணம் பட்டரிடம் அடிபணிந்து, காலக்ஷேபங்கள் கேட்டு, உண்மையான சிஷ்யன் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த நஞ்சீயர், நம்பிள்ளைக்கு ஆச"ஃயராக விளங்கி, சிறந்த ஆசார்யர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார். நம்பிள்ளை தம்மைக் கேட்ட வினாக்களுக்குத் தமது ஆசார்யரைப் போலவே முகம் சுளிக்காமல் சிறந்த விடைகளைக் கூறிய நஞ்சீயர், மேலும் ஒருபடி சென்று தம்முடைய சிஷ்யரைக் கோண்டாடவும் செய்தார். ஒரு சில இடங்களில் தாம் கூறிய பொருளைவிடச் சிறந்த பொருளை நம்பிள்ளைக் கூறியபோது, அதுவே சரியான பொருள் என்று ஏற்றுக்கொண்டார்; அவரை மனம் திறந்து பாராட்டவும் செய்தார். ஆறாயிரப்படி குருபரம்பரையில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது நஞ்சீயர் எழுந்தருளியிருந்த காலத்திலேயே நம்பிள்ளை பெயரும் பெரும்புகழும் பெற்றார் என்பது புலனாகிறது. நஞ்சீயர் காலத்திலேயே நம்பிள்ளையிடம் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப் பெருமாள் போன்ற பலர் நம்பிள்ளையின் சிஷ்யர்களாக வந்து சேர்ந்தனர்.” நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டி மிகவும் பெரியதாக இருந்தது. இதைக் காண்பவர்கள் “நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்யோ' என்று வியந்து பாராட்டுமளவுக்கு இருந்தது.” இதுவும் நஞ்சீயர் எழுந்தருளியிருந்த காலத்தில் நடந்ததே. இவ்வளவு சீருடனும் சிறப்புடனும் நம்பிள்ளை திகழ்ந்ததைக் கண்டு நஞ்சீயர் மிகவும் மகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருந்தார். நஞ்சீயர் இப்படித் தம் கண் முன்னால் தம் சீடர் தம்மைக்காட்டிலும் பெயரும் புகழும் பெறுவதைக் கண்டு மகிழும் உயர் பண்பும், நல்வாய்ப்பும் அமையப் பெற்றவராகத் திகழ்ந்தார் என்பதை நோக்கும்போது நஞ்சீயருடைய பெருமை மேலும் பன்மடங்காக உயருகிறது. நம்பிள்ளையின் சீடரான பின்பழகிய பெருமாள் சீயர் ஒரு நிகழ்ச்சியினைச் சுட்டிக் காட்டுகிறார். நஞ்சீயர் ஒருமுறை திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றிக்குப் பொருள் கூறினார். அப்போது பெரியகோயில் வள்ளலார் என்பவர் வேறு ஒரு பொருளைக் கூறி, “இப்படிப் பொருள் கொள்ளலாமே” என்றார். அதற்கு நஞ்சீயர், நான் சொன்ன பொருள் மிகவும் அழகியது என்று திருக்கலிகன்றி தாஸர் (நம்பிள்ளை) கூறுவர்” என்றார். அதைக்கேட்ட வள்ளலார், “உம்முடைய சிஷ்யர் கூறினார் என்பதைக் கொண்டோ இப் பொருளே சிறந்தது என்று முடிவு செய்யவேண்டும்? என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர், “அதில் தவறேதுமில்லை. நல்ல ஆசார்யன் மூலமாக நம்முடைய அறிவைத் திருத்திக் கொள்வது போலவே, நல்ல சிஷ்யன் மூலமாகவும் நாமறியாத பொருள் கிடைத்தால் திருத்திக் கொள்ளலாம். இதில் ஆசார்யன் சிஷ்பன் என்ற வேறுபாடு கிடையாது” என்று கூறினார்.' இதனால் சீடனையும் மதிக்கவேண்டும் என்னும் நஞ்சீயருடைய பரந்த நோக்கு புலப்படுகிறது. ---------- நஞ்சீயரின் சீரிய பணிகள் நஞ்சீயர் வைணவத்திற்குச் செய்துள்ள மிக முக்யமான பணிகளுள் இரண்டு சிறப்பாகக் கருதத்தக்கன. முதலாவது, பின்னாளில் தோன்றப் போகும் பேருரைகளுக்கெல்லாம் வழிகாட்டியாக, மிகச் சிறந்த வ்யாக்யானங்களை அருளிச் செய்தமை; இரண்டாவது, வைணவ சமயத்தின் மிகச்சிறந்த நூலாகக் கருதப்படும் ஈடுமுப்பதாறாயிரப்படியை அருளிச் செய்தவரான நம்பிள்ளையைத் தேடிக்கண்டு, உலகுக்கு அறிமுகப் படுத்தியமை; இவ்விரண்டு பணிகளாலும் அவர் வைணவ சமயக் கொள்ளைகளை அழியாமல் காத்தார். நஞ்சீயருடைய வ்யாக்யானங்களைப் பற்றிய சிறப்புகள் முந்தைய இயல்களில் கூறப்பெற்றன. ஆயினும், இங்கும் சில குறிப்பிட வேண்டுவன வாகின்றன. ஸ்ரீராமானுஜர் காலம் வரை வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வந்த உரைகள், அவர் காலத்தில் தான் எழுத்து வடிவம் பெறத் தொடங்கின. ஆனால் முதன் முதலில் எழுந்த உரையான பிள்ளானுடைய ஆறாயிரப்படி உரை மிகமிகச் சுருக்கமாக அமைந்து விட்டது. ஆனால் நஞ்சீயர் அருளிச்செய்த உரையில்தான் விசேஷார்த்தங்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. பாசுரத்தில் உள்ள அடிகளுக்குப் பல பொருள்கள் கூறுதல், உதாரணங்கள் கூறிப் பொருளை விளங்க வைத்தல், அழகிய தமிழ்ச் சொற்களைக் கையாளுதல், ஸ்ரீராமாயணம் முதலிய இதிகாசப் பாத்திரங்களுக்குச் சிறப்புப் பெயர்களைக் குறிப்பிடுதல், முதலிய பல உத்திகளை முதன் முதலில் நஞ்சீயருடைய வ்யாக்யானங்களிலேயே காண்கிறோம். பிற்காலத்தில், உரையாசிரியர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, வாதிகேஸரி அழகிய மணவாளச் சீயர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள், பிள்ளைலோகம் சீயர் ஆகியோர் அனைவரும் நஞ்சீயருடைய வ்யாக்யானங்களை மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். எனவே நஞ்சீயரே வைணவ உரையாசிரியர் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அருளிச் செய்துள்ள வ்யாக்யானங்களில். பூர்வாசார்யர்கள் அருளிச் செய்த விளக்கங்களும், அவர்களைப் பற்றிய செய்திகளும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. அத்தகைய ஐதிஹ்ய நிர்வாஹங்கள் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களுடைய வ்யாக்யானங்களைத் தவிர வேறு எந்த உரைகளிலும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் முதன் முதலில் வழிவகுத்தவர் நஞ்சீயரே ஆவார். கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானத்தில் ஈரிடங்களிலும்,' திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தில் ஈரிடங்களிலும்” ஆசார்யர்களுடைய திருநாமத்தை முதன் முதலில் குறிப்பிட்டுள்ளவர் நஞ்சீயரே ஆவார். பின்னாளில் நூற்றுக் கணக்கான ஐதிஹ்யங்களும் நிர்வாஹங்களும் நாலாயிர திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களிலும் பிள்ளைலோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்ற ஆசார்யர்கள் அருளிச் செய்துள்ள ரஹஸ்ய நூல்களிலும் இடம் பெற்றுள்ளமைக்கு அவர் செயலே வழிகாட்டியாக அமைந்தது. நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகள் நாலாயிர திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களிலும், ரஹஸ்ய நூல்களிலும், அவற்றின் வ்யாக்யானங்களிலும் இடம் பெற்றுள்ள நூற்றுக் கணக்கான ஐதிஹய நிர்வாஹங்களில் பட்டர், நஞ்சீயர், ஆகிய இருவர் அருளிச் செய்த வார்த்தைகளே மிக அதிகமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் யார் என்பதற்கு இலக்கணம் கூறும்போது நஞ்சீயருடைய வார்த்தைகள் ஒருமுறையன்றிப் பலமுறை எடுத்துக் காட்டப்படுகின்றன .' நம்பிள்ளையின் சீடரான பின்பழகிய பெருமாள் சீயர் தொகுத்த 'வார்த்தாமாலை' என்னும நூலிலும் அவர் தாம் அருளிச் செய்துள்ள ஆறாயிரப்படி குருபரம்பரை நூலிலும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் பற்றி நஞ்சீயர் அருளிச் செய்துள்ள வார்த்தைகள் பல இடங்களில் எடுத்துக்காட்டப்படுகின றன ” 1. ஒருவன் துன்பப்படும்போது ஐயோ என்று அவன் பால் இரக்கம் கொள்ளுதல். 2. ஸப்ர்வைஷணவர்களிடத்தில் அன்புடனிருத்தல் 3. மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னாலும் கோபப்படாமலிருத்தல். 4. பிறர் மனைவி, பொருள் இவற்றில் ஆசை வைக்காதிருத்தல் 5. பிறருக்குப் பெருமை ஏற்படும் போது அவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் மகிழ்ந்திருத்தல். 6. அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்குச் சக்தி உண்டு என்று நினைத்திருத்தல், ஆகிய உயரிய பண்புகளை ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாக நஞ்சீயர் கூறியுள்ளார். நஞ்சீயரின் சீடரான நம்பிள்ளை தமது ஈடுமுப்பத்தாறாயிரப்படியில் “சீயர் அருளிச் செய்வர்” என்றே மிகுதியான இடங்களில் குறிப்பிட்டு நஞ்சீயர் அருளிச்செய்துள்ள வார்த்தைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.” ஒரு சில இடங்களில் "ஒவ்வோர் உருவிலும் சீயர் அருளிச் செய்வர்” என்றும் சுட்டிக் காட்டுகின்றார்." கண்ணபிரானை யசோதைப்பிராட்டி உரலோடு கட்டிய சரித்திரத்தைப் பேசுகின்ற ஆழ்வார், “நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க” என்கின்றார். இவ்விடத்தில் வ்யாக்யானம் அருளிச்செய்கின்ற நம்பிள்ளை, "சீயர் இப்பாட்டை இயலருளிச் செய்யப்புக்கால் நோவ என்றருளிச் செய்யும் அழகு காணும். நோவவென்கிறார் காணும் ஆழ்வார் தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாப் போலே." என்று அருளிச் செய்துள்ளார்.” இவ்வாறு பல இடங்களில் தமதாசார்யர் அருளியுள்ளவற்றையே பிரமாணமாக நம்பிள்ளை எடுத்துக் காட்டுகிறார். நம்பிள்ளையின் சீடரான பெரியவாச்சான் பிள்ளையும் நஞ்சீயருடைய வார்த்தைகளைப் பிரமாணமாகப் பல இடங்களில் காட்டியுள்ளார்.” நம்பிள்ளையும் கூட நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகளைக் குறிப்பிடாமல் விட்ட ஒரு சில இடங்களில், பெரியவாச்சான் பிள்ளை நஞ்சீயருடைய வார்த்தைகளைச் சுட்டிக் காட்டுகிறார். “ஆடி ஆடி” என்கின்ற திருவாய் மொழியில் எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகின்ற நாயகி நிலையில் பேசுகின்ற நம்மாழ்வார் சுடர் வட்டவாய் நுதி நேமியீர் என்கிற இடத்தில் "உகப்பாரை அவ்வழகைக் காட்டி அவ்வழகைக் கொண்டு அகல நின்று முடிக்கும். உகவாதாரைக் கிட்டி நின்று அத் திருவாழியாலே அழியச் செய்து முடிக்கும் என்று சீயர்." என்று இங்கு பெரிவாச்சான் பிள்ளை மட்டுமே தமது உரையில குறிப்பிடுகின்றார்.* எம்பெருமானுடைய சக்கராயுதமானது தன் அழகாலே அடியவர்களை அழிக்கும் என்றும் விரோதிகளை ஆயுதமாக நின்று தழிக்கும் என்றும் நஞ்சீயர் கூறிய இவ்வார்த்தைகள் ஈடுமுப்பதாறாயிரபபடியில் கூட இடம் பெறவில்லை. இதேபோல் வேறு சில இடங்களிலும் பெரியவாச்சான் பிள்ளை மட்டும் நஞ்சீயருடைய வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்.” ஆச்சான் பிள்ளை அருளிச்செய்த மாணிக்கமாலை எனும் நூலில் நஞ்சீயர் அருளிச்செய்த பல வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்குத் திருவீதி பிள்ளையும் நஞ்சீயருடைய வார்த்தைகளைப் பல இடங்களில் ஆதாரமாகக் காட்டியுள்ளார். “எல்லா ஆசார்யர்களுடைய அபிப்ராயமும் எல்லா ஆழ்வார்களுடைய திருவுள்ளக்கருத்தும், எல்லா வேதங்களுடைய கதியும், எல்லா சாஸ்த்ரங்களுடைய நினைவும் நிரூபித்த அளவில், ஆசார்ய கைங்கர்யமே பரம ப்ரயோஜனம் என்று நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தாரென்று வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்வர்" என்று வார்த்தாமாலையில் கூறப்பட்டுள்ளது. நம்பிள்ளையின் சீடரான பின்பழகிய பெருமாள் சீயரும் நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகள் பலவற்றைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆறாயிரப்படி குருபரம்பரையில் நஞ்சீயருடைய வாழ்க்கை வரலாற்றினைத் தவிர, நஞ்சீயர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத் தத்துவக் கொள்கைகள் பற்றிக் கூறிய கருத்துகளும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.” நஞ்சீயர், தம்முடைய சரமதசையிலும் கூடத் தம்முடைய சிஷ்யர்களுக்கு நல்வார்த்தை கூறினார் என்பதற்குச் சான்றாக நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார். நஞ்சீயர் சரமதசையில் எழுந்தருளியிருந்தபோது, அவருடைய சீடரான குட்டிக்குறி இளையாழ்வார் என்பவர் அவருக்கு நன்மை கூறுவதாக நினைத்து, "இப்போது த்வயத்தை அநுஸந்திக்கலாமே” என்றார். எப்போதுமே த்வயத்தை அநுஸந்திப்பதை இயல்பாகக் கொண்ட நஞ்சீயர் இதைக் கேட்டவுடன்,, "உனக்கு அநுஸந்திக்கவேண்டாதே எனக்கு இப்போது இந்நிலையில்தான் த்வயம் அநுஸந்திக்க வேண்டுமோ? நடையாடித் திரிவார்க்கு வேண்டாமல் படுக்கையில் கிடப்பார்க்கு மட்டும் அநுஸந்திக்க வேண்டும்படியாகவோ த்வயம் இருப்பது?” என்றார். நஞ்சீயர் கூறிய இவ்வார்த்தைகள், த்வயத்தை எப்போதும் எல்லோரும் அநுஸந்திக்கவேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் குருபரம்பரை, வார்த்தாமாலை ஆகிய இருநூல்களிலுமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.” பன்னீராயிரப்படி குருபரம்பரையிலும் நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.” வார்த்தாமாலையிலும் நஞ்சீயர் அருளிச்செய்த நாலு வார்த்தை என்ற தலைப்பில் நஞ்சீயர் அருளிச்செய்த வார்த்தைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.” நஞ்சீயரின் இறுதிக் காலத்தில் நம்பெருமாள் நேரில் எழுந்தருளி அருள் புரிந்த பெருமை, நூறுமுறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து சதாபிஷேகம் கண்ட பெருமை, ஆசார்யரை அடைவதற்குத் தடையாக இருந்த குடும்பத்தினரையும் சொந்த ஊரையும் துறந்து, ஆசார்யன் எழுந்தருளியிருந்த தேசமே பரமப்ராப்யம் என்று வந்தமை, தம்முடைய செல்வங்களையெல்லாம் ஆசாரியருக்கே அர்ப்பணித்து, அவர் திருவடிகளில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தமை ஆகியவை நஞ்சீயரின் தனிச் சிறப்புகள் எனப் பின்பழகிய பெருமாள்சீயர் குறிப்பிடுகிறார்.' வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரான பிள்ளை லோகாசார்யர், தாம் அருளிச் செய்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்களில் கூறியுள்ள முக்கியமான கருத்துகளுக்கு ஆதாரமாக நஞ்சீயருடைய வார்த்தைகளைப் பல இடங்களில் காட்டியுள்ளார். எம்பெருமானே உபாயம் என்ற கருத்சை, நிலைநாட்டுவதற்கு, " அந்திமகாலத்திற்குத் தஞ்சம், இப்போது தஞ்சமென் என்கிற நினைவு குலைகை என்று சீயர் அருளிச் செய்வர் ' என்று நஞ்சீயருடைய வார்த்தைகளையே ஆதாரமாகக் காட்டுகிறார். அதாவது, நஞ்சீயர், நோயாளியாகப் படுக்கையில் கிடந்த சிஷ்யரொருவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது அவர், "அடியேனுக்கு அந்திமகாலத்திற்குத் தஞ்சமாக இருப்பதொன்றை அருளிச் செய்ய வேணும்” என்று வேண்டினார். அதற்கு நஞ்சீயர், "இப்போது நமக்குத் தஞ்சம் எது என்று விசாரம் கொள்ளாமல் இருப்பதே அந்திம காலத்திற்குத் தஞ்சம்” என்றருளிச் செய்தார். எம்பெருமானே நமக்குத் தஞ்சமாகையால், வேறு தஞ்சம் எது என்று விசாரம் கொள்ளாமலிருப்பதே எம்பெருமானுடைய அருளைப் பெற வழிவகுக்கும் என்ற கருத்தில் நஞ்சீயர் அருளிச் செய்த இவ்வார்த்தைகளைப் பிள்ளைலோகாசார்யர் மேற்கோளாகக் காட்டுகிறார்.” எம்பெருமானுடைய அடியவர்களுக்குத் தீங்கிழைப்பது பெரும் பாவமாகும், அது எம்பெருமானுடைய சீற்றத்தையே தூண்டும் என்பதற்கு, “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர்” என்று நஞ்சீயருடைய வார்த்தைகளையே பிள்ளைலோகாசார்யர் மேற்கோளாகக் காட்டுகிறார். பரந்தபடி, ச்ரியப்பதிப்படி, தனித்வய ரஹஸ்யம், தனி சரமம், தனிப்ரணவம் போன்ற ரஹஸ்ய நூல்களிலும் நஞ்சீயருடைய வார்த்தைகளைப் பலவிடங்களில் குறிப்பிட்டுள்ளார் பிள்ளைலோகாசார்யர்.” பிள்ளைலோகாசார்யரின் திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்த ரஹஸ்ய க்ரந்தங்களில் நஞ்சீயருடைய வார்த்தைகள் ஏதும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், அவர் அருளிச் செய்த திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களில் பல இடங்களில் நஞ்சீயருடைய வார்த்தைகள் மேற்கோள்களாக இடம் பெற்றுள்ளன.” வேதாந்த தேசிகர் தமது ரஹஸ்யத்ரயஸார நூலில் நஞ்சீயருடைய வார்த்தைகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். “எம்பெருமானைச் சொன்னவிடத்திலே பிராட்டியையும் சொல்லிற்றாம் என்று தொடங்கி உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்சீயர் ஸங்க்ரஹித்தார்”” --என்று ஸித்தோபாய சோதனாதிகாரத்திலும், “அபசாராநந்தரம் அநுதாபம் பிறந்ததில்லையாகில் ஜ்ஞானம் பிறந்ததில்லையாகக் கடவது என்று நஞ்சீயர் வார்த்தை........ * என்று சரமச்லோகாதிகாரத்திலும் வேதாந்த தேசிகன் நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார். மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள்ள உபதேசரத்தினமாலையில், “தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி நஞ்சீயர்” என்று சிறப்பித்துக் கூறுகிறார். மேலும் நஞ்சீயர் சில திவ்யப்ரபந்தங்களுக்கு மட்டுமே வ்யாக்யானம் செய்துள்ளார் என்றும் திவ்யப்ரபந்தங்கள் அனைத்திற்கும் வ்யாக்யானம் செய்யவில்லையே என்ற குறையையும் வெளிப்படுத்தியுள்ளார். உபதேசரத்தினமாலைக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ள பிள்ளைலோகம் சீயர், “வேதாந்தி நஞ்சீயர் என்கிற விசேஷணத்தாலே பட்டர் நெடுந்தூரம் எழுந்தருளித் திருத்துகைக்குப் போரும் பெருமையுடைவரென்று தோற்றுகிறது” என்று நஞ்சீயரைக் கொண்டாடுகிறார். மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள்ள உபதேசரத்தினமாலையில், நம்பெருமான் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம்மேற்றத்தால் - அன்புடையோர் சாத்து திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லி நீ யின்று. என்றும் போற்றியுள்ளார். ஈட்டுரையின் ஒராண்வழிச்செலவு பற்றி அருளிச் செய்தபின்னர், நம்பிள்ளையின் பெருமையைக் கூறுவதற்கு முன்னர் இப்பாசுரம் அமைந்துள்ளது. வான்திகழும்சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரம்' என்றபடி திருவாய்மொழியில் கூறப்படும் நம்பெருமாள், அத்திருவாய்மொழியை அருளிச்செய்த நம்மாழ்வார், அத்திருவாய்மொழிக்கு மிகக்சிறந்த விரிவுரையை அருளிச்செய்த நம்பிள்ளை ஆகியோரைப் பற்றி இப்பாசுரத்தில்அருளிச்செய்துள்ள மணவாளமாமுனிகள், நஞ்சீயரைப் பற்றியும் இங்கு அருளிச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஈட்டுப்பேருரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தையும் நம்பிள்ளை நஞ்சீயரிடமிருந்தே பெற்றார் என்பதனால் நஞ்சீயர் பெற்றுள்ள சிறப்பிடத்தைக கருத்தில் கொண்டே இப்பாசுரத்தில் மணவாளமாமுனிகள் அவ்வாறு அருளிச்செய்துள்ளார் எனலாம். பிரதிவாதிபயங்கரம் அண்ணன், மணவாளமாமுனிகளைப் பற்றி அருளிச் செய்துள்ள 'வரவரமுனி சதகம் எனும் வடமொழித் தோத்திர நூலில், நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் உட்கருத்தை நன்றாக வெளியிட்டவரும், சமம் தமம் முதலிய நற்குணங்களுக்குக் கடலாக இருப்பவருமான நஞ்சீயரிடத்தில் மணவாளமாமுனிகள் மிகவும் ஈடுபட்டவர் என்று குறிப்பிடுகிறார்.” இவ்வாறாக, ஸ்ரீராமானுஜர் முதலாக, பிள்ளைலோகம் சீயர் ஈறாக ஆசார்யர்கள் அனைவரும் நஞ்சீயரின் சிறப்பைக் கொண்டாடியுள்ளனர். நஞ்சீயருக்குப் பின்னர் அவதரித்த ஆசாரியர்கள் தம்தம் நூல்களில் நஞ்சீயருடைய வார்த்தைகளைப் பிரமாண வாக்கியங்களாகக் கொண்டும், நஞ்சீயருடைய பெருமைகளைக் குறிப்பிட்டும் போற்றியுள்ளனர். --------- நஞ்சீயரைப் பின்பற்றி எழுந்த நூல்கள் ஆசார்யர்களில் சிலர் நஞ்சீயர் அருளிச் செய்தவைகளைப் பின்பற்றித் தம்தம் நூல்களையும் அருளிச் செய்துள்ளனர்; முக்கியமாக நஞ்சீயர் அருளிச் செய்த ஒன்பதினாயிரப்படியைப் பின்பற்றிப் பெரிவாச்சான் பிள்ளை தம் உரைகளை அருளிச் செய்துள்ளார் என்பதும், நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படியை அருளிச் செய்துள்ளார் என்பதும் முந்தைய இயல்களில் விரிவாக கூறப்பெற்றுள்ளன. நஞ்சீயர் அருளிச் செய்த ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தைக்' கருத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யரும், தமது ரஹஸ்ய நூல்களில் ஸ்ரீவைஷ்ணவன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறுகிறார்.' கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யானப் பிரவேசத்தில் பிற உரையாசிரியர்கள், எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதை முதல் நிலை என்றும், அவன் அடியவர்களுக்குத் தொண்டு செய்வதை கடைநிலை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நஞ்சீயர், எம்பெருமானைப் பற்றுவது முதல் நிலையென்றும், அடியவர்களைப் பற்றுவது இடைநிலை என்றும், ஆசாரியனைப் பற்றுவது கடைநிலை என்றும் அருளிச் செய்துள்ளார். அவரைப் பின்பற்றியே பிள்ளைலோகாசார்யரும் ப்ரதம பர்வம், மத்யம பர்வம், சரம் பர்வம் ஆகிய மூன்று நிலைகளைத் தம் நூலில் காட்டியுள்ளார்.” அங்கு மணவாள மாமுனிகள் உரையும் நஞ்சீயர் உரையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. 'ஆசார்ய ஹ்ருதயம்' எனும் நூலை அருளிச்செய்துள்ள அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் நஞ்சீயருடைய கருத்துகளைப் பின்பற்றியே தமது நூலை வரைந்துள்ளார் எனலாம். நஞ்சீயர் தமது ஒன்பதினாயிரப்படி வ்யாக்யான ப்ரவேசத்தில் நம்மாழ்வாரின் சிறப்பு, திருவாய்மொழியின் தோற்றம், திருவாய்மொழி அர்த்தபஞ்சகத்தின் விரிவு ஆகியவை பற்றி மிகவும் விரிவாக அருளிச்செய்துள்ளார். மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் ஆசார்யஹ்ருதய நூலின் முன்பகுதியில் இடம்பெற்றுள்ளமை கருதத்தக்கனவாகும் “அஞ்சிறைய மடநாராய்” என்கின்ற திருவாய்மொழியில், நம்மாழ்வார் தாமான தன்மையை இழந்து ஒரு பிராட்டியின் நிலையை அடைகிறார். அங்கு வ்யாக்யான ப்ரவேசத்தில் நஞ்சீயர், “அநந்யார்ஹ சேஷத்வத்தாலும், அந்த சேஷத்வ அநுபவத்தில் எம்பெருமானோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரஸம் பிறக்கையாலும், ததேகபோகத்வத்தாலும், பிரியில் தரியாமையாலும், தமக்குப் பிரரட்டிமாரோடு ஸாம்யமுண்டாகையாலே .....'" என்று ஆழ்வாருக்கும் பிராட்டிக்குமுள்ள ஒப்புமைக்குப் பல காரணங்களாகக் காட்டுகிறார். இதை அப்படியே பின்பற்றி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் “கடிமாமலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே 2 என்றருளிச் செய்கிறார். “பிராட்டியோடு இத்தலைக்குள்ள ஸாம்யத்துக்குடலான அநந்யார்ஹ சேஷத்வம். அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம், ஸம்ச்லேஷத்தில் தரிக்கை, விச்லேஷத்தில் தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வ மாகிற ஆறு ப்ராகாரத்தாலே என்கை” என மணவாளமாமுனிகள் வ்யாக்யானமருளிச் செய்துள்ளமையும் நஞ்சீயருடைய கருத்தை அடியொற்றியே எனலாம்; தொடர்ந்து, நஞ்சீயர் ஆழ்வாரைச் சீதைப்பிராட்டி, இளையபெருமாள், பரதாழ்வான், சத்ருக்நாழ்வான், விபீஷணன், திருவடி, அர்ச்சுனன் முதலிய புராணப் பாத்திரங்களுடன் ஒப்பிட்டிருப்பதைப் பின்பற்றி நாயனாரும் தம் நூலில் ஆழ்வாரைப் புராண பாத்திரங்களுடன் ஒப்பிட்டுள்ளார்." ஈடுமுப்பத்தாறாயிரப்படியிலும் இக்கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆயினும், அந்நூல் மணவாளமாமுனிகள் காலத்தின்தான் பலரறியும்படியாக வெளிப்படுத்தப்பட்டபடியாலும், பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படியுரை பெரும்பாலும் நஞ்சீயர் உரையைப் பின்பற்றியே அமைந்துள்ளமையாலும், அழகியமணவாளப் பெருமாள் நாயனார், தம் திருத்தகப்பனாரும் ஆசார்யருமான வடக்குத் திருவீதிப் பிள்ளையின் பரமாசார்யரான நஞ்சீயரின் வ்யாக்யானத்தைப் பின்பற்றியே ஆசார்யஹ்ருதயத்தை அருளிச் செய்தார் எனலாம். இவ்வாறு நஞ்சீயரின் கருத்துகளைஅடிப்படையாகக் கொண்டு பல நூல்கள் தோன்றியுள்ளமை, அவருடைய சிறப்பை மேலும் உயர்த்துகிறது. பிள்ளைலோகாசார்யர் எடுத்துக்காட்டியுள்ள ஒரு நிகழ்ச்சி, நஞ்சீயருடைய மிகச் சிறந்த குணத்தையும், ஆசார்யர்களிடையே அவர் பெற்றுள்ள சிறப்பிடத்தையும் நன்கு புலப்படுத்துகிறது. வீராணத்து அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்பவர் நம்பிள்ளையை முன்னிட்டுக்கொண்டு நஞ்சீயரிடம் வந்தார். "இவனுக்கு நல்வார்த்தை கூற வேண்டும்” என்று நம்பிள்ளை நஞ்சீயரை வேண்டினார். நஞ்சீயர், “ஸம்ஸாரிகளில் ஒருவர்க்கும் நல்வார்.தை கூறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனவே நீரே உபதேசியும்' என்று கூறிவிட்டார். "தேவரீர் எழுந்தருளியிருக்கும்போது அடியேன் கூறுவதாவது? அவனுக்கு த்வயத்தை உபதேசிக்காவிட்டாலும் வேறு மந்த்ரத்தையாவது உபதேசித்து அனுப்பக் கூடாதோ?” என்றார் நம்பிள்ளை. நஞ்சீயர் வேறு வழியில்லாமல் அவனை அழைத்துக் கொண்டுபோய்க் குருபரம்பரையுடன் த்வயத்தையே உபதேசித்தார். இதைக்கண்ட நம்பிள்ளை, வேறு மந்த்ரத்தை உபதேசிப்பதாக அழைத்துக்கொண்டு போய், த்வயத்தையே உபதேசித்துவிட்டதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர், “நான் உபதேசம் செய்யாமல் தவிர்த்து விடலாம் என்று பார்த்தேன். ஆனால் நானே உபதேசிக்கவேண்டும் என்றான பின்பு நான் நம்பியிருப்பதையேயன்றோ அவனுக்கும் உபதேசிக்க வேண்டும். வேறொன்றை உபதேசித்தால், அவனை ஏமாற்றியதாகாதோ? " என்றார். இவ்வாறு, சிறந்த ஆசார்யருக்கு இலக்கணமாக அமைந்து, “உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்” எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப எல்லோர் நெஞ்சங்களிலும் என்றென்றும் திகழும் சிறந்த ஆசார்யராக நஞ்சீயர் விளங்குகிறார். மேல் நாட்டில் (கர்நாடகத்தில்) தோன்றும் காவிரியாறு திருவரங்கம் வந்துசேர்ந்து திருவரங்கன் தொடர்பு பெற்று, கங்கையில் புனிதமாய காவிரி? என்ற சிறப்பை அடைந்ததுபோல நஞ்சீயரும் மேல்நாட்டில் (கர்நாடகத்தில்) அவதரித்து, பட்டரால் திருத்திப்பணிகொள்ளப் பெற்றுத் திருவரங்கம் திருவரங்கம் வந்துசேர்ந்து, அரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறை ஆயிரமாம் திருவாய்மொழிக்குச் சிறந்த உரையொன்றினை அருளிச்செய்து தனிச்சிறப்புப் பெற்ற ஆசார்யராக விளங்குகிறார். கீழ்க்கண்ட வடமொழி சுலோகமானது வைணவர்கள் நாள்தோறும் ஒதும் தனியன் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நமோ வேதாந்த வேத்யாய ஜகத்மங்கள ஹேதவே யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவனத்ரயம் யாவரொருவருடைய சொல்லமுத வெள்ளத்தினால் மூவுலகும் நிறைந்ததோ, உலகுக்கெல்லாம் மங்களத்தை விளைக்கும் அந்த வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன். ----------- முடிவுகள் 1. நஞ்சீயர் ஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாயத்திற்கு வருவதற்கு முன்னரே ஸ்ரீராமா நுஜரும் மதிக்கும் போறிஞராகத் திகழ்ந்தார். 2. பராசரபட்டராலும் எளிதில் வெல்லமுடியாத அளவுக்குச் சிறந்த வித்வானாக இருந்த நஞ்சீயர், பின்னர் பட்டரே பாராட்டும்படி திவ்யப்ரபந்தங்களில் வல்லவரானார். பட்டருக்குப்பின் ஒராண்வழி ஆசார்ய பரம்பரையிலும் இடம்பெறும் சிறப்பைப் பெற்றார். 3. தம்முடைய விளக்கங்களைவிடச் சிறந்த விளக்கங்களைத் தம் சீடர் நம்பிள்ளை கூறியபோது அவற்றை ஏற்றுக்கொண்டு பாராட்டினார்; சிறந்த ஆசார்யருக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தார். 4. பட்டருக்கும் நம்பிள்ளைக்கும் இடையே பாலமாக அமைந்தார்: ஈட்டில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தையும் நம்பிள்ளைக்கு வழங்கியதன் மூலம் ஈட்டை ஈன்ற முதல் தாயாக நஞ்சீயர் விளங்கினார். 5. பின்னர் அவதரித்த ஆசார்யர்கள் அனைவரும் தம்முடைய வார்த்தைகளை பிரமாணங்களாகக் கொள்ளும்படி பல உயரிய கருத்துகளை அருளிச்செய்துள்ளார். ஸ்ரீவசநபூஷணம், ஆசார்யஹ்ருதயம் முதலிய நூல்களில் இடம்பெறும் கருத்துகள் பலவும் நஞ்சீயருடைய கருத்துகளைப் பின்பற்றியே அமைந்தவை எனலாம். 6-உள்ளத்தால் பொய்யாதொழுகும் சிறந்த ஆசார்யருக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, எல்லோர் நெஞ்சங்களிலும் என்றென்றும் நஞ்சீயர் விளங்குகிறார். நஞ்சீயர் வாழித் திருநாமம் தெண்டிரைசூழ் திருவரங்கம் செழிக்கவந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டைமறைத் தமிழ்ப்பொருளைப் பகரவந்தோன் வாழியே பங்குனியிலுத்தரநாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள்கலவிதனை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர்பட்டரிணையடியோன் வாழியே எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழிவாழியே. ----------------------- பின்னிணைப்பு-- 1 நஞ்சீயர் அருளிச்செய்த ரஹஸ்யங்களில் 1. ஆத்ம விவாஹம் ஸ்ரீயப்பதியாகிற காளமேகத்திலும் ஸெளஹார்த்தமென்கிறதொரு பாட்டம் மழை விழுந்து க்ருபையாகிற நிலத்திலே ஜீவனாகிற ஒஷதி முளைத்து, ஆசார்யனாகிற பிதா விரஹமென்கிற ஸங்கமத்தாலே ஜ்ஞானமாகிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து, ஜீவாத்மா என்கிற பெண்பிள்ளை பிறக்க, ருசியாகிற ஜீவனத்தையிட்டு வளர்த்துக் கொண்டு போந்து, விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே பரம சேஷிகளாகிற ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து, எம்பெருமானாகிற வரன் கையில் ஸ்வரூப ஜ்ஞானமென்கிற தாரை வார்த்துக் கொடுக்க, அவனும் சேஷத்வமாகிற மந்தர வாஸஸ்ஸை யுடுத்தி, சேஷவ்ருத்தியாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி, ரூபநாமங்களாகிய ஆபரணங்களையும் பூட்டிக் கையைப் பிடித்துக் கொண்டு போந்து, அத்யவஸாயமென்கிறதொரு ஆஸநத்திலே கொண்டிருந்து, வ்யாபகஜ்ஞான மென்கிற ஸமிதைகளையிட்டு, ஸித்தோபாய ஸ்வீகாரமென்கிற ப்ரதாநாஹுதியைப் பண்ணி, சாஸ்த்ரங்களாகிற பொரியைச் சிதறி, ஸம்பந்த ஜ்ஞானமென்கிற பூர்ணாஹுதியாலே ப்ராப்தி ப்ரதிபந்தகங்களை நிச்சேஷமாக்கி, நிர்ப்பரத்வா நுஸந்தாநம் பண்ணுவிக்கிற பூர்வாசார்யர்களாகிற பந்துக்கள் முன்னிலையாக மாதாபிதாக்களிருவரும் சேரவிருந்து காட்டிக் கொடுக்க, ஆழ்வார்கள் ஈரச் சொல்லாகிற மூப்போடே சேரவிட்டு, வாத்ஸல்யாதி குணயுக்தனானவன் தான் பர்த்தாவான ஆகாரம் குனிலயாதபடி அணைத்துக் கொண்டு போந்து, தானும் தன் ப்ரதாந மஹிஷிகளும் கூட அந்தப்புரக் கட்டிலிலே கொண்டு போய், அந்தமில் பேரின்பத்தடியராகிற பந்துக்களோடே கொண்டு சேர்த்து, ஹர்ஷ ப்ரகர்ஷத் தோடே அங்கீகரித்து, ப்ரீதி வெள்ளமாகிற படுக்கையிலே கொண்டு போய் விஷய வைலக்ஷண்யங்களாலே போக யோக்யங்களோடே ஸகலவித கைங்கர்யங்களாகிற் அநுபலத்திலே மூட்டி, ஆநந்தமாகிற பெருக்காற்றூடே ஆழங்கால் பட்டு, நம: என்பது, போற்றி என்பது, ஜிதம் என்பது, பல்லாண்டு என்பதாகா நிற்கும். ------------- 2. முமுக்ஷு க்ருத்யம் அஜ்ஞான ஸமயத்திலும், ஜஞான ஸமயத்திலும், ஜ்ஞானம் பக்வமான ஸமயத்திலுசம் ஜ்ஞான பலமான ப்ராப்தி ஸமயத்திலும் மாதாபிதாக்களோடு ரூபநாமங்களோடு, போஜநாதிகளோடு ப்ரவருத்தி நிவ்ருத்திகளோடு (வித்) நிஷேதங்களோடு, தேச வாஸங்களோடு, பந்து வர்க்கத்மதாடு ஐச்வர்யாதிகளோடு ப்ரார்த்தனைகளோடு வாசியற பேதித்கிருக்கும் யுடலடியான அஜ்ஞாந ஸுயத்தில் விவேகம் ஸஞ்சரியாமையாமையால் "சரீரமே மாதாபிதரேோஎ ஜநயத:" என்று கேவலம் சரீரத்கைப் பெர்றவர்களையே மாதாபிதாக்களாக அபிமானித்து, அவர்களிட்ட பேரூம, உவாகல் ஸிபாந்த ப்ரவருத்டி நில்ருச்திகளும் அவர்சலஉ அநுவர்க்திக்று அக்தாலே வந்தேறிள ரூபயாமங்களும அவர்கள் விரும்பின பட துவர்க்கமும், அலவாசள் வம்சாபிமால மாம் ஐச்வர்பமுர். அவர்கள கற்பித்த ஸமஸார வார்ததகமா யிருப்பன சில ப்டார்த்தனைகளுமாய் ஸம்ஸாரத்தில் என்னை கிஞ்பினாா இல்லை என்ட தன்னை ஸமாதிக தரித்ரனாக அபிமாளிர் ஆ கானத்து இழுமந்திருககும ஈழம் வந்த வத்தில், அஞ்சுசசாஈக்கையான சவம் சரீ மே யனறு, பரக்ருச பான ப, படிஉியசகனாய். ஸ்வவமை ஸ்வபம ப்ர சாசணாம ஏச ரூப, ஆடா நநந்ச ஸ்வரூபனாய் அச்சேத்யனாய், அதாஹ்பனாட, ஆகமலத்பனாம். ஆச்சாரிய பய, நந மானாதிகளினறிக்கே பூருபடடானாய நிபிரு! உரு உ உவாவுண ம, செடி சாஸ்தரஙகளு முண்்) ண்ட பாபங்களுடின் டு வ எஎாசாமங்களருமுணு, கிழ் நின்ற நவை விகாரத்காே பாம்தாவித்ரனை மயெனறு உணர்ந்து நெகிழ்ந்து 'ஸ ஹி வித்யாத தம் ஜநயதி" எனகிறபடியே வேத சாஸ்த்ரங்களை மாதாஹாச ஐ்த்ப்; தாநம் பண்ணிள வலை பிதாலாகவும அபிமானித்து அந்த சாஸ்த்ரம் விதித்தபடியே போஜநாதிகளும் பாவ்ருத்தி நிவ்ருத்திகளும, விதி நிஷேதங்களும், வேத சாஸ்த்ரம் சொன்னவர்களையே பந்துக்களாகவும், அந்த சாஸ்த்ராபிமானத்தாலே வந்தேறின ரூப நாமங்களும், சாஸ்த்ராப்யாஸம் பண்ணுவதான சேசம் தேசமாயும், சாஸ்த்ரத்தையே ஐச்வர்யமாகவும், ப்ரார்த்தனை களாகவும், அபிமானித்து ஆத்மாபிமாநிகளில் என்னை விஞ்சினார்கள் இல்லை யென்று தன்னை ஸமாதிக தரித்ரனாக அபிமானித்து மேனாணித்து இறுமாந்திருக்கும். ஜ்ஞாநம் பக்வமான ஸமயத்திலே ஸகல வேத சாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தால், ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ரியம் விநாசகமென்றும், ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ரியம் இவனைக் கரையேற்றுமென்னுமிடமும், "பரவாநஸ்மி" என்றும், "தாஸபூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மந; பரமாத்மந: நாந்யதாலக்ஷணம் தேஷாமே" என்றும், “ஆத்மதாஸ்யம் ஹரேஸ்வாம்யம்" என்றும் இத்யாதி ப்ரமாணங்களாலும் "ஆலோக்ய ஸர்வ சாஸ்த்ராணி" என்று பாமாணங்கள் சொல்லுகையாலும் கீழ் நின்ற நிலைகளையடைய நெகிழ்ந்து தத்வத்ரய ஜ்ஞாந விஷயத்தையும, தத்வத்ரய விஷய வைராக்யத்தையும், தத்வைகளிஷய பக்தியையுமுடையனாய் தத்வஹிதங்களை அறியும்போது கைப்பறி பறித்துக் கிடந்தானை கண்டேறியறியுமது அல்லாமையாலே லோகத்தில் அர்த்த காமோபஹதனன் றியிலே வேத சாஸ்த்ர நிதாநஜ்ஞாநளாய், லோக பரிக்ரஹமுடையனாயிருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே சென்று கணணும் கண்ணீ ருமாய், கீழ் தேஹாத்மாபிமானி யாயும், கேவலாபிமானிமாயும் தான் பட: அநர்த்தமெல்லாம நேராக விண்ணப்பம் செய்ய, ஆசார்யன் தன் நிரவதிக கருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே, ஈச்வா ஸ்வாதந்த்ரியத்துக்கும் ஆத்ம பாரதந்த்ரியத்துக்கும் வாசகமாய் "அகாரோவிஷ்ணுரித்யுக்தோ மகாரோ ஜீவ வாசக: தயோஸ்து நித்ய ஸம்பந்த; உகாரேண ப்ரகீர்த்தித:" என்று, இவ்வாத்மாவுக்கும், எம்பெருமானுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்துக்கு எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கள் ஸூத்ரம் உண்டென்று திருமந்த்ரத்தை ஆசார்யன் தன்னிரக்கத்தாலே அருளிச் செய்து, ஸ்வரூபத்தில் உணர்த்தியோடும் ஸ்வரக்ஷணத்தில் அசக்தியோடும் ஈச்வரனையே பேணிக் கொண்டு வர்த்தி என்றருளிச் செய்தருளினால் தான் நின்ற நிலைகளையடைய உணர்ந்து நெகிழ்ந்து பெற்றார் பெற்றொழிந்தார்' என்றும், 'பெற்றதாம் நீயே பிறப்பித்த தந்த நீ' என்றும், 'பெற்றாரும் சுற்றமுமென்றிவை பேணேன் நான்” என்றும் தாயே தந்தை என்று தொடங்கி நோயே பட்டொழிந்தேன்' என்னுமளவும் சொல்லுகிறபடியே திருமந்த்ரத்தை மாதாவாகவும், ஆசார்யனைப் பிதாவாகவும் அபிமானித்து, ஆசார்யன் திருவுள்ளமான ரூப நாமங்களும் போஜநாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும் ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசம் திவ்யதேசவாஸமாகவும் ஆசார்யன் திருவுள்ளத்தாலே ஸஹவாஸ யோக்யராக்த் கற்பித்த பர்மமத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களையே தனக்குப் “பந்துக்களாகவும் அவர்கள் தங்களுக்கு ஐச்வர்யமாக அபிமானித்திருக்கும் ஆசாற்ப கைங்கர்யமே தனக்கு ஐச்வர்யமாகவும் அந்த கைங்கர்யத்தின் மேலுண்டான ப்ரார்த்தநையே தனக்கு தேஹ யாத்ரையாகவும் நினைத்து 'குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்', 'நின்னிலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன்' என்றும், 'கற்றிலேன் கலைகள் - நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்' என்றும், போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனையமாட்டேன் - ஏதிலேனரங்கர்க்கு' என்றும், 'நாட்டாரோடியல்வொழிந்து' என்றும, நாட்டு மானிடத்தோடெனக்கரிது' என்றும் சொல்லுகிறபடியே தன் வேறுபாடு தோற்ற இந்நிலத்தில் பொருந்தாமையும், பொருந்தின நிலத்தில் புகப்பெறாமையுமாகிற பேகணிப்பு வடிவிலே தோன்றும்படி நிர்மமனாய் மோக்ஷப்ரதநனான எம்பெருமானைக் கிட்டி வாழுமளவும். ஜ்ஞாநப்ரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவன் ப்ரீ திக்கு வர்த்தகனாய் இருந்தவிடம் அறியாமலிருக்கும். a ஜ்ஞாந பல ரான பகவத்ப்ராப்தி ஸமயத்தில் தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து ஆசார்யன் கட்டின ஸூரூபாநுபந்தியான மங்கள எமித்ரத்தில் ஆ த்தாநுஸந்தா எத்தடனே வர்த்தியா நிற்கச் செய்தேயும் பகவத் ஸ்வரூப திரோதாநகரமாய் விபரீத ஜ்ஞாடந ஜநகமான சரீர ஸம்பந்தத்தை ருசி வாஸனைகளோடே விட்டு ஆற்றிலே குளித்து அக்கரையேறி புக்ககத்தில்லுள்ளா அலங்கரிக்கப் போய் வகுத்த தேசத்திலே முகம் பழகின திரளிலே சென்று புகுந்து தனக்கேன்ன ஒரு மாதா பிதரக்களாதல், ௬ூபழாமங்களாதல் போலநாதிகளாதல், ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாதல், விதி நிஷேதங்களாதல். பந்துக்களாதல், ஐச வர்யமாதல் ப்ரார்த்தனைகளாதலின்றிக்கே 'அஹமன்னமஹமன்னம்' என்னுதல், சூட்டு நன்மாலைகள் தூயனசேந்தி நிற்றல், ஸதா பச்யந்தி என்று வைத்த கண் வாங்காதே பார்த்திருத்தல், சாயா வாஸத்வமநு கச்சேத்' என்கிறபடியே சாயாவத் பரதந்த்ரனாய் வர்த்தித்தல் செய்வது எப்போதோவென்று த்வரை நடந்து செல்லுகை. இவ்வர்த்தம், ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுக்ஷுவுக்கு நாடோறும் ஆராய வேண்டுவதொன்று. எங்ஙனேயென்னில் ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே கையைப் பிடித்தால் பூர்வாவஸ்தைகளில் நிலைகளடைய நெகிழ்ந்து பர்த்தாவினுடைய அபிமானத்தில் ஒதுங்குகிறாப்போலவும் அநுபநீதனானவன் ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே ஸதா யஜ்ஞோபவீதத்தைத் தரித்தால் பூர்வாவஸ்தைகளில் நிலையடைய நெகிழ்ந்து த்விஜனென்று பேோகிறாப்போலவும், யஜ்சத்திலேயொருவன் கீக்ஷிக்கால் பட ர்வாவஸ்கைகளில் நிலையடைய நெகிழ்ந்து அவப்ருத ஸ்நானத்தளவும் யஜமான வேஷத்துக்குத் தக்க அனுஷ்டாநமாகிறாப்போலவும், ஸந்யாஸி கீழ் நின்ற நிலைகளையடைய நெகிழ்ந்து ஆச்ரமத்துக்குசிதமான வ்ருத்தியோடே வர்த்திக்கிறாப்போலவும், இந்த ஜீவந்முக்தனான முழமு௯ஜுவும் கீழ் நின்ற நிலைகளடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யமொன்றிலும் நிரதனாய் வர்த்திப்பதெப்பபோதோவென்று தன் நெஞ்சை இறுக்கித் தன் வேறுபாடு தோற்ற வர்த்திக்கையே முழுக்ஷுவுக்கு க்ருத்பம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர். ஜீயர் திருவடிகளே சரணம் முமுக்ஷுக்ருத்யம் ஸம்பூர்ணம் --------- 3. ஸாமக்ரீ பரம்பராநாதம் அநாத்யவித்யையடியாக அந்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞாநங்களுண்டாம். அவ்வந்யதாஜ்ஞாநங்களுண்டாக அப்ராப்த விஷயங்களிலே ராகத்வேஷ முண்டாம். அந்த ராகத்வேஷமடியாக ஸதஸத் ப்ராப்தியுண்டாம். அந்த ஸதஸத்ப்ராப்தியடியாக புண்யபாபரூபகர்மங்களுண்டாம். அக்காமங்களடியாக சதுர்வித தேஹஸம்பந்தங்களுண்டாம். தேஹஸம்பந்தமடியாக தேஹாநுபந்தியான ஸுகதுக்கங்களை ஆர்ஜிப்பது அநுபவிப்பதாகா நிற்கும். இச்சகம் செல்லா நிற்கச் செய்தே, 'நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதனை' என்கிறபடியே, யாத்ருசிக ஸுக்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாச்ரயணமுண்டாம். அந்த ஸதாசார்ய ஸமாச்ரயணத்தாலே ச்ராவணஜ்ஞாநம் பிறக்கும். அந்த ச்ராவண ஜ்ஞாநத்தாலே யதாஜ்ஞாநம் பிறக்கும். அது பரிணமித்து ஸம்யக் ஜ்ஞாநமாம். அந்த ஸம்யக் ஜ்ஞாநத்தாலே அந்யதா ஜ்ஞாந, விபரீத ஜ்ஞாநங்கள் நிவ்ருத்தமாம், அத்தாலே ராகத்வேஷங்கள் நிவ்ருத்தமாம்,. அத்தாலே துஷ்ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம், அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம், அத்தாலே சரீர விமோசனம் பிறக்கும், அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும், பின்பு ஈச்வரன் நயாமி' க்ரமத்தாலே 'ஆநந்தயாதி' என்னும்படியாக்குவிக்கும். ஸம்ஸாரத்திலிருக்கும் நாள் திருமந்திரத்திலே அர்த்தாநுஸந்தானமே யாத்ரை யாயிருக்கும், அர்த்தா நுஸந்தானம் பண்ணும் ப்ரகாரம், பகவதேகரக்ஷயன், ஈச்வரசேஷபூதன், அநந்யார்ஹசேஷன், ததீய பரதந்த்ரன், ஸம்பந்தயுக்தன் கைங்கர்யஸ்வபாவன் என்றித்தாலே சொல்லிற்றாயிற்று. ரக்ஷகத்வ ப்ரதிஸம்பந்தி பூர்வகமான ரக்ஷயத்வமும், சேஷித்வ ப்ரதிஸம்பந்தி பூர்வகமான சேஷத்வமும், அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வமும், அசேதந நிவ்ருத்தி பூர்வகமான சேதந வைலக்ஷ்யமும், ஸ்வாதந்த்ரிய நிவ்ருத்தி பூர்வகமான அத்யந்த பாரதந்த்ரியத்தினுடைய மேலெல்லையும், ஸோபாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக ஸம்பந்தமும். அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த வைலக்ஷண்யமுமிறே ஸகல சாஸ்த்ரங்களிலும ப்ரவ்ருத்தமாயிற்று. 'சொல்லினால் சொல்லப்படாத” என்றும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ என்றும், 'அரும்பொருளாதல்' என்றும் சொல்லுகிற ப்ரமாணங்களால், காணவரிய தனக்கன்று, அந்யபரரான ஸம்ஸாரிகளைக் குறித்தன்று, அநந்யபரரான நித்ய முக்தரைக் குறித்தன்று, (முழுக்ஷுவுக்கு) அசித்திலும் அசித்ப்ராயரான ஸம்ஸாரிகளிலும் நித்ய முக்தரிலும். எம்பெருமானிலும் வ்யாவ்ருத்தமாயும், இந்நிலத்தில் பொருந்தாமையும், பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையுமுடையனாய் ஆக்கை விடும்பொழுதெண்ணே' என்பது, 'பணிகண்டாய் சாமாறே' என்பது, அடைய வருளாய்' என்பது, கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ என்பதாய் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வேறுபட்டிருந்துள்ள முழுக்ஷுவுக்கே ப்ரமாண அபேக்ஷை உள்ளது. ஸகல சாஸ்த்ரங்களுக்கும் தாத்பர்யம் ஈச்வர ஸ்வாதந்த்ரியத்தையும் ஆத்ம பாரதந்த்ரியத்தையும் இசைவிக்கையாயிறே இருப்பது நஞ்சீயர் திருவடிகளே சரணம் ஸாமக்ரீ பரம்பராநாதம் ஸம்பூர்ணம் --------------- 4. அவஸ்த்தா த்ரயம் அநாதி மாயயா ஸுப்த: என்கிற அநாத்யவித்யையாலே ஜஞாநாநுதயமாய், அத்தாலே அந்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞாநமாய், அத்தாலே அஹங்கார மமகாரங்களாய், அத்தாலே ராகத்வேஷங்களாய், அத்தாலே புண்ய பாபரூப கர்மங்களாய், அத்தாலே சதுர்வித சரீரமாய், அத்தாலே 'பெருந்துயர் இடும்பையில் பிறந்து, 'சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து, 'உ எனாக எண்ணி, தந்தம் ஊனிடைக்குரம்பை வாழ்க்கைக்குறுதியே வேண்டி , 'கண்டவா தொண்டரைப்பாடி', விலைக்காட்பட்டு', 'வள்ளல் புகழ்ந்து, 'காசுங்கறையுடைக் கூறைக்குமங்கோர கற்றைக்கும ஆசையினால் அங்கவத்தப் பேரிட்டு', விசாதியேற்றுண்டி', தலைக்காட்பலிதிரிந்த:”, 'ஒருவன்றனக்குப் பணிந்து கடைத்தலை நின்று, 'சூதினைப் பெருக்கிக் களைவினை துணிந்து'. 'பெருநிலத்தாரும்ச்க ல்லாம் செற்றமே வேண்டி , ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்று, வென்றியே வேண. வீழ்பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, 'சிலம்படிபுருவில கருநெடுங்கண்ணா। திறத்தனாயறத்தையே மறந்து, அவர் தருங்கலவியே கருதியோடி , பண்டு காமரானவாதும் பாவை: வாயமுதழுண்டவாறும், வாழ்ந்தவாறுமெ-க்க உரைத்திருமி , அந்திம ஸபபத்திலும் அன்னையத்தன் என் புத்திரர் பூறி வாசவார் குழலாளெள்று ம.:௭கி', அதுக்கு மே நமன்ற பாசம் விட்டால் அலைப்பூணாூண்ணும் அவ்வல்லல் என்கிற உத்க்ராந்தி தசையிலே வேதவாநுபவம் பண்ணி, அதுக்கும் மேலே துஞ்சினார் செல்லும் தொன்னெறி என்று வழியிற்படும் வேதனாநுவம் பண்ணி, அதுக்கும் மேலே 'நமன்தமர் செய்யும் வேதனை' யென்கிற நரகவேதனா நுபவம் -பண்ணி அதுக்கும் மேலே, வயிற்றுக் குழியிலுழைக்கும்' என்கிற வேதனாநுபவம் பண்ணி, அதுக்கும் மேலே மக்கள் தோற்றக் குழி' யென்னும் வயிற்றில் நின்றும் புறப்படுகிற போதையில் வேதநா நவம் பண்ணி, இப்படியொரு ஜன்மத்திலே உத்க்ராந்தி மார்க்கம் நரகயோ நி கர்ப்ப ஸங்கடமென்று சொல்லுகிற நாலைந்து நரகத்தை அனுபவித்துப் போரக் கடவனான சேதநன் துஷ்கர்மத்திலே மூளக் கர்மம் ஜன்மத்திலே மூட்ட அந்தாதியாக, தேவனாவது, பனுஷயனாவது, திர்யக்காவது, ஸ்தாவரமாவதாய், யாதானும் ஓராக்கையில் புக்கு ஆங்காப்புண்டு மாப்ப விழுந்து மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே' என்கிற படியே, புக்க சரீரங்கள் தோறும் அதிப்ராவண்யம் பண்ணக் கடவனாய் அலைவாயில் அலை மாறுபோலே அம்மை வயிற்றோடும் எமன் கழுவோடும் போவது வருவதாய் இயக்கறாத பல்பிறப்பு' என் கிறபடியே, ஒழுக்கறாமல்பட்டது மறந்தான் என்று விடுதூதாய் அநாதி காலம் தேஹாத்மாபிமாநம் தலை மண்டையிட்டு, பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்' என்று ஒன்றும் மறவாமல் பிறந்து போருகிற நாட்டாரோபாதி பிறந்த ஜன்மத்தை 'அன்று நான் “ிறந்திலேன்' என்கிறார். பனிப் பீறக்கை: வது ஸதாசார்யோபதேச முகத்தாலே வாகாதி ஊரணங்களன் ர: ஆத்மா, இந்த்ரியங்களனறு ஆத்மா, மநஸ்ஸன்று ஆத்மா, ப்ராணனன்று ஆக்மா. அவித்யமன்று ஆத்மா, அக்நி இந்த்ராதி சேஷமன்று ஆத்மா, ப்ரஹ்மருத்ராதி தேவதாந்தா சேஷமன்று ஆத்மா, ஏகாயந வெம்பெருமானுக்கு சேஷமல் று ஆத்மா. ரிதுநசேஷத்தளவன்று ஆத்மா, ததீய சேஷத்வ பர்யந்தமாக:। பிறக்கப் பிறந்த இஜ்ஜன்மத்தை நான் பிறந்த பின் மறர்கிலேன் என் மார். இந்த ஜ்ஷூ.நத்தை யவன் மயர்வற மதிநலமருளிப் போன ன்ப 'பொருளல்லாத என்னைப் பொருளாக்கி என்றும், இன்றென்னைப் பொருளாக்கி என்றும், அறிந்தார் பிறந்தார் . என்றும், பெருமாள், உடற்பிறவி பபண்டேன் உயிர் பிறவி வேண்டுவேன்' என்றும், திருமங்கையாழ்வார், மற்றுமோர் ர தெய்வமா தெல் கிருப்பாரோடுற்றிலேன் உற்றதுமுன்னடியார்க்ம்; கடிமை' என்றுமிறே யிலர்கள் தங்களை நினைத்திருப்பது. க் மிர 60௪ கங்களானவிம்றையே ப்ரமாணமாகக் கொண்டு (ஒக க்களும் தந்த ஒஞாநம் பிறப்பதற்கு முன்பு ஒரு ஜன்மமும், பின்பு ஒரு ஐஸ் மமுய; & அ வ்திபபர்கள். முன்ப சரீரோத்பாதகன் பிதாவாயும், சுமந்து பெற்றறவள் மார: வாயம். வங்கள்