Archive for December, 2022

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–நாயகனாய் நின்ற —

December 31, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –
கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப
எல்லாரும் கூடி வந்து -ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –

செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை-அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –
ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை –

வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும்-
பெரியாழ்வார் திருமகள் இறே இவள்-

முதல் ஐந்து பாட்டாலே
பகவத் அனுபவ உபகரணங்கள் அருளிச் செய்யப் பட்டன

ஆறாம் பாட்டாலே –
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய பிரயோஜனராய் -இவ்விஷயத்தில்
தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே
தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வ லக்ஷணம் என்று அவர்களுடைய ஸ்வ பாவத்தை சொல்லுகிறது –

ஏழாம் பாட்டாலே –
பகவத் விஷயத்திலே ஞாதமான அர்த்தம் ஒருத்தனுக்கு விஸ்திருதம் ஆனால்
தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் என்கிறபடியே அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

எட்டாம் பாட்டில் –
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பாரைக் குறித்து சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைப் பற்றுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

பத்தாம் பாட்டில் –
ஞாநித்வாத்மைவமே மதம் -என்றும் –
அஹம் சச மம ப்ரிய என்றும் –
அவன் பக்ஷபதித்து இருப்பார் பக்கல் நித்ய சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

11-பாட்டில் –
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது

12-பாட்டில்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார்கள் நமக்கு உத்தேச்யராம் அளவு அன்றிக்கே
தத் சம்பந்தி சம்பந்திகளும் உத்தேசியர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
13-பாட்டில்
பகவத் அனுபவ பரிகரமான ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருப்பார் திறத்து
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர் சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது

14-பாட்டில்
பகவத் விஷயத்திலே மூட்டுகையாலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் செய்கை ஸ்வரூபம் என்கிறது –

15-பாட்டில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமூஹம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகத்தல் ஸ்வரூபம் என்கிறது –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் தனித்தனியே எழுப்பின படிக்கு உப லக்ஷணம் –
இப் பத்து பெண்களையும் எழுப்பினது –

முற்பட உணர்ந்த பெண்கள் உறங்குகிறவர்களையும் எழுப்பி –
எல்லாரையும் கூட்டி பெரும் கூட்டமாகத் திரண்டு
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும்
திரு வாசல் காக்கும் முதலிகளையும்
திருவாசல் திருக் காப்பு நீக்க வேணும் என்று இரக்கிறார்கள்-

செய்யாதன செய்யோம் -என்று
பண்ணின ப்ரதிஞ்ஜையை அனுஷ்டான பர்யந்தம் ஆக்க வேணும் இறே –

உகந்து அருளின நிலங்களில் உள்ளுப் புகும் போது
ஷேத்ராதிபதிகளையும்
த்வாராத்யஷர்களையும் அனுமதி கொண்டு
புக வேணும் என்று ஸ்ரீ பகவத் சாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தம்
இவர்கள் ஆயர் சிறுமியர்களாய் அறிந்திலர்களே ஆகிலும்
உள்ளே புகுர விட வேணும் என்னும் ஆசை யோடே இருக்கையாலே
ஞானாதிகருடைய அனுஷ்டானமும் கோல் விழுக்காட்டாலே பலிக்கிறது –

ஜனபத சரி தந்த ரீப–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
ஸ்மேராநநா ஷிக மலை–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
த்வதீய கம்பீர மநோ நு சாரிண (ஸ்ரீ ஆளவந்தார் )-என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரத்தை வைதிக விதிகள் பின் செல்லும் அத்தனை இறே

ராகத்தால் ஸ்வயம் ஏவ ப்ரவ்ருத்தாராம் இடத்தில் ராகத்துக்கு விதி முற்பட மாட்டாது

ராகம் தனக்கும் விதி அடி ஆகாதே –
அருளினன்(1-1-1 ) என்கிற பகவத் பிரசாதம் அடி யாய்த்து இறே

இனி ஓர் அடி இட வேண்டினாலும் ருசி கார்யம் ஆகையால்
ருசி உத்பாதகனான அவன் தானே அடியாம் அத்தனை இறே

இது தான் இதர விஷயத்திலே ருசி அன்றே –
வகுத்த விஷயத்திலே ருசி இறே –
காம்ய கர்மாதிகாரிகளுக்கும் த்யாஜ்யமாய் இறே இது இருப்பது

தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -என்கிறது ஜென்மமாய்-
சா வித்யா யா வி முக்தயே–என்கிறது வித்யையாய் –
யன்ன பந்தாய -என்கிறது கர்மமாய் –
வரும் வழி அறியும் போது
சாஸ்த்ர சங்கத்தை வரியடைவே கற்று அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்

அத்தை அப்யசித்தவர்கள் அதனுடைய தாத்பர்யத்தை கேட்ட அநந்தரம் அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்

குளிகை கைப் பட்டால் இரும்பு பொன்னாமா போலே பலிப்பதும் செய்யும்

நஞ்சீயர் நம் பிள்ளைக்கு -ரச வாதம் கைப்பட்டவன் இருந்த இடம் எல்லாம் பொன்னாமா போலே
ப்ரமேயம் கைப் பட்டவனுக்கு சொல்லிற்று எல்லாம் வார்த்தையாம் -என்றார் –

முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய
உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே
நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில்
அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை
இப் பாட்டாலே சொல்லுகிறது –

இப் பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி
பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே –

(வேதம் வல்லார்கள் -ஸ்தானம் -6-10-பத்து பெண்கள் -கண்ணனே அவர்கள் வசம் –
சொல்லும் அவிடு ஸ்ருதியும் -வேதமே இவர்கள் கைப்பட்டு பின் தொடரும்
இனி விண்ணோர்கள் ஸ்தானம் -கோயில் காப்பான் வாசல் காப்பான் க்ஷேத்ர பாலகர் -த்வார பாலகர் –
18-19-20-நப்பின்னைப் பிராட்டி திருவடிகளில் சரணம் புக்கு புருஷகாரமாக
மேலே -21 -29–நேராக-பிரதான சேஷி – அவனைப் பிரார்த்தித்து
30-தானான தன்மையுடன் அருளிச் செய்கிறாள் -)

(வானர முதலிகள் புருஷகாரமாக விபீஷணன் பெருமாளை பற்றியது போலவும்
ஆழ்வாரும் வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )

(அவனே இவர்கள் கை புகுந்த பின்பு ஸாஸ்த்ர விஷயம் இவர்கள் அறிந்து பின் தொடர வேண்டாமே -)

(எம்பெருமானார் செல்லப்படுகிறார் -இவரே குரு பரம்பரையில் நாயகக்கல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -உத்தார ஆச்சார்யர் -)

(வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )

(ச பூஜ்யவா யதாஹ்யயம் -என்னை பூஜிக்கும் அளவாவது பாகவதரை பூஜிக்க வேண்டும் -பகவத் வசனம்
உபகரித்த வஸ்துவின் பெருமையால் உபகாரகர் மஹிமை
சமுத்திர இவ காம்பீர்யம் -அவன் சங்கல்பித்து இப்படி ஆச்சார்ய பாகவத வைபவம் வைத்து அருளுகிறார் )

நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –

—————————–

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –

இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன –

பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு
சேஷிகள் என்கிறார்கள் –

நாயகனாய் நின்ற –
நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஸ்ரீ நந்த கோபர்க்கு விசேஷணம் ஆகவுமாம் –
உத்தேச்யமாய் பாவிக்கிற கிருஷ்ணன் பக்கல் சொல்லாது (செல்லாது )ஒழியும் அத்தனையே வேண்டுவது
(நாயகனாய் நின்ற மணி வண்ணன் மாயன் சேராதே இப்பொழுது )
கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –

ஆளவந்தார் எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ண என்று புக்கு ஆச்சார்ய ஸ்தோத்ரத்திலே இழிந்தார் –
அதுக்கு அடி –
ஒருத்தன் ரத்னத்தைக் கொடுத்தால் அதன் விலை அறிய -அறியக்
கொடுத்தவன் பக்கல் விருப்பம் பிறக்குமா போலே
சாஸ்திரங்கள் எங்கும் அப்யஸித்து பார்க்கும் இடத்து
உபாயமாகத் தோற்றுகிற கர்ம ஞான பக்திகள் பேற்றுக்கு சாதனமாக மாட்டாது –

பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று
ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும்
பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –

த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று
தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

பிரபத்தி பண்ணுகிறவன் இவன் ஆகில் –
பேறு அவனாலே யாகில் –
இவர்களை முன்னிடுகிறது என் என்னில்

சாபராதனான இவன் பிரபத்தி பண்ணுகிறான் என்று இவனுடைய பூர்வ அவஸ்தையை நினைத்து
ஈஸ்வரன் சிவிட்க்கு என்னவும் கூடும்
அது செய்யாத படி மறுக்க ஒண்ணாத மனிசரை இட்டுப் பொறுப்பிக்கவும் வேணும் –

இவனுக்குப் பிறக்கும் அத்யவசாயமும் போட்கனாகையாலே
மெய்யான வியவசாயம் யுடையாரை முன்னிட்டு அல்லது கார்யகரம் ஆகாது என்று முன்னிடுகிறது

பாபிஷ்ட -க்ஷத்ர பந்துச் ச புண்டரீகச் ச புண்யக்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –

உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –
செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது

பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகன் முழு வேழ் உலகுக்குமாய் (6-4 )-என்றும் –
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும் –
சகல லோகங்களுக்கும் சகல தேவதைகளுக்கும் நாயகனான சர்வேஸ்வரன் நம்முடை நாயகன் என்று
யசோதை பிராட்டி உட்பட சொல்லும் படி ஆயர் நாயகனாய் நிற்க

உந்தம் அடிகள் முனிவர் -என்று
பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால்
உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்
ஸ்ரீ நந்த கோபரை-
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்கிறார்கள் –

நாயகனாய் நின்ற-
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக
தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை தேடித் போக
வேண்டி இருக்கை அன்றிக்கே-
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –

நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்-
சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய

——–

நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன்
தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –

நந்த கோபனுடைய கோயில்
கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்
நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால்
அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே
நந்த கோபனுடைய கோயில் என்கிறது

யுவராஜா மம அந்நிய -என்று சக்கரவர்த்தி ஆசைப்பட்டு பெறாத போனதை –
நந்தகோபன் இளவரசு என்கையாலே
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் –

வாசுதேவன் மதுரை மன்னன் -என்கையாலே –
இப் பேறு ஸ்ரீ வாசுதேவர்க்கும் இல்லை

நந்தன் பெற்றனன் வாசுதேவன் பெற்றிலன் -என்று
ராஜ குலங்களில் பிரசித்தம் இறே

பரம பதம் தன்னிலும் வான் இளவரசு இறே –
அதுவும் வானவர் நாடாய் –
கடவர்கள் முடியுடை வானவராய்-
அவர்கள் தான் (மூத்தவராய் )மூதுவராய் -(ஸாத்ய சந்தி தேவர் )
இவன் அவர்கள் மடியிலே கிடப்பது –
சிறகில் ஒதுங்குவது –
பிரம்புக்கு அஞ்சி சொன்னதுக்கு எல்லாம் அப்படி அப்படி என்னும் இளவரசாய் இறே வளருவது –

தத்ர காஷாயிநோ வ்ருத்தான் —
மேலாப்பின் கீழ் வருவான் –
அனந்த போக பர் யங்கே நிஷண்ணம் -என்றும் சொல்லக் கடவது இறே –

பக்வனான பின்பு ஸ்ரீ சத்ய பாமை பிராட்டி பக்கலிலே ராஜ்ய தூரை ( பொறுப்பை ) வைத்து
தூதுவ சாரத்யங்களிலே இறே அதிகரித்தது –

நந்த கோபனுடைய கோயில் –
ராஜ தாநீ பிதுர் மம(பெருமாள் சீதா பிராட்டி இடம் திரும்பி வரும் பொழுது சொன்னது )

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகனாய் நின்ற கோயில் காப்பானே என்னவுமாம்
எங்களுக்கு நாயகனான நந்த கோபனுடைய கோயில் காப்பானே என்னவுமாம்
இவர்களால் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே

(நந்தகோபன் -ஸ்பஷ்டம் மூன்று பாசுரங்களில் -ஆற்றப் படைத்தான் மகனே -21 பாசுரம்)

பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் –
தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும்
புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

(அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதா மஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்த யித்வா ||-ஶ்லோகம் 65 –

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)

(பராங்குச பாத பத்மம் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -குறையல் பிரான் அடிக் கீழ் இன்றும் சேவிக்கிறோமே -அனுஷ்டித்துக் காட்டினார்)

(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று பெரியாழ்வாராலே பெருமத்தனையே -என்று
அறுதியிலிட்டால் போலே
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ்ச புண்டரீகஸ்ச புண்ய க்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ்
தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் (சத்திர பந்துவும் பாரங்கதி கண்டு கொண்டானே )-என்னுமா போலேயும்

பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள்

நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே -ஸ்ரீ நந்தகோபருடைய கோயில் என்கிறார்கள்
பரமபதத்தில் அப்படியே -அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே(திருவிருத்தம் )-அங்கு வான் இளவரசு (வைகுந்தக் குட்டன் -அங்கு ஈர் அரசு படாதே இங்கு ஆழ்வார் ஆதி நாதர் )
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழும் -திருவனந்த ஆழ்வான் மடியிலும் -திருவடி சிறகின் கீழும் வளரும்
இத்தனை இத் தத்துவம் போலே

யுவராஜ மம ந்யத -என்று சக்கரவர்த்தி பாரித்துப் போனான்(யுவராஜ  வான் இளவரசு-பாரித்தே இழந்தே போனான் அன்றோ )
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் -நந்த கோபாலன் கடைத் தலைக்கே (நாச்சியார் -12)-(எடுத்த பேராளன் )
ஒரு தண்ணீர் பந்தலைக் கண்டால் இது வைத்த ஸ்ரீ மான் ஆர் என்னக் கடவது இறே
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இறே
தங்களை சேஷியாக வைக்க இசைவாரோடே பரிமாற இறே இங்கு வருகிறது
இங்குத்தைக்கு ஸ்ரீ சத்யபாமை பிராட்டியை நாடாள விட்டு தான் பாண்டவர்களுக்கு சொல்லிற்று செய்து திரியும்

—————–

கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே
அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –

இத்தால் –
சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே
இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-

கோயில் காப்பானே
தங்களுடைய மவ்க்த்யத்தாலும்-
அவன் உகக்குமதாகையாலும் அவன் தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள்

கோயில் காப்பானே
இத்தால்
சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது
யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் –
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே

கோயில் காப்பானே
தான் காக்கும் இயல்வினன் ஆகையால் –
பொழில் ஏழும் காவல் பூண்டு சகல லோக ரக்ஷணம் பண்ணுகிற எங்கள் நிதியை
செப்போடே நோக்குகிறவன் அன்றோ –

ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –
கம்சன் வெட்டியன் –
காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –
எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –

கோயில் காப்பானே –
ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்த்தி -என்று
சம்சாரிகள் பக்கல் உணர்த்தி பெறுவதற்கு முன்பு தான் உணர்ந்து இருக்கும்

இவர்கள் அனுமதி பெற்ற பின்பு
நிஸ் ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச (ஸ்ரீ இராமாயண யுத்த காண்டம் )-என்று
தன்னுடைய ரக்ஷகத்வத்தை இவர்கள் தலையில் வைத்து
தான் உறங்கா நிற்கும் –
மஹேந்திர கல்பம் பரிபாலயம்ஸ் ததா -என்னக் கடவது இறே
(குகன் மஹேந்திரனைப் போன்று இருந்த பெருமாளை நானும் லஷ்மணனும் ரஷித்தோம் என்று பரதன் இடம் )

காப்பானே –
இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப-என்று
பலர் நோக்கும் இடத்தில் ஆறில் ஓன்று கொள்ளாதே எல்லாருடைய காவலும் நீ ஒருவனே கொள்ளுகிறவனே –
(கோலார்ந்த நெடும் சங்கம்-பஞ்சாயுதம் கருடன் ஆறும் அங்கு )

கோயில் காப்பானே
உன்னைக் காவலாக வைத்தது
உகவாதார் புகுராமைக்கும்
உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ –
ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –

அவன் கண்ணாலே போங்கோள்-என்று சொல்ல –
திரு வாசல் காக்கும் முதலியை எழுப்புகிறார்கள் –

கோயில் காப்பானே –
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்
அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –

கோயில் காப்பானே
சேஷத்வ ப்ரயுக்தமான பேர் –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் -யதோசிதம் சேஷ இதீ ரிதே ஜநை
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –
இன்னது (சுந்தர பாண்டியன் )பிடிப்பான் என்னுமா போலே அவன் உகக்கும் பேராலே சொல்லிற்று ஆகவுமாம் –

(நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||ஶ்லோகம் 40-அநந்தன் இயல் பெயரைச் சொல்லாமல் ஆதி சேஷன் என்றே )

—————–

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல
திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் -கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் –
ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
இரண்டும் ஒருவனையே சொல்லிற்று ஆகவுமாம் –
கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –

சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ

கொடித்  தோன்றும
அல்லாத மாளிகைகள் எல்லாம் தன் மாளிகையோடு ஒத்து இருக்கையாலே
பெண்கள் மத்திய ராத்திரியில் வந்தால் தடுமாற ஒண்ணாது
அவற்றில் காட்டில் நம் மாளிகைக்கு வாசி தெரிய வேணும் என்று கொடியும் தோரணமும் நட்டு வைத்தார் –

பெருமாளைக் காணப் பெறாதே ஆர்த்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராம ஆஸ்ரம ஸூ சகமான தூம வல் கலங்களைக் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்காக வாய்த்து நட்டு வைத்தது

தண்ணீர் பந்தல்கள் தடாகங்கள் சமயத்தவர்கள் த்ருஷார்த்தற்கு தூரத்திலே தோற்ற வேணும் என்று
கொடியும் தோரணமும் நட்டு
தண்ணீர் பந்தலையும் கடையையும் காட்டுமா போலே அன்றோ
அடையாளங்களையும் பண்ணி எங்களுக்காக அன்றோ உன்னை இங்கு வைத்தது

வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது –
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு
கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று
கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும் –

வாசல் காப்பானே
கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –
உள்ளுக் கொண்டு புகாது –
நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –

அர்ஜுனன் ஸூபத்ரையைக் கொண்டு போகக் கடவன் என்று
வாசல் காக்கும் முதலைகளை அனுமதி பண்ணி இருங்கோள் என்று அருளிச் செய்து வைத்தால் போலே
இவனுக்கும் பெண்கள் புகுரக் கடவர்கள் என்று கிருஷ்ணன் சொல்லி வைக்கும்
அத்தாலே இவன் நம்மை உள்ளும் புக அனுமதி பண்ணும் என்று இருக்கிறார்கள் –

கொடித் தோன்றும் தோரணவாசல் காப்பானே –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-

இவர்கள் இப்படி தன்னை ஸ்தோத்ரம் பண்ணினவாறே கண்ணாலே உள்ளே புகுருங்கோள்-என்றான்
கொடித் தோன்றும் தோரண-வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே—
ஷேத்ராதிபதிகளை கோயில் காப்பானே என்று சொல்லி – வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
திருத் தோரண வாசல் காக்குமவன் பக்கலிலே சென்று –
ஆர்த்த த்ராணத்துக்காக தோரணமும் கொடியும் நட்டு வைத்தால் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கு வைத்தது

————-

மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே
புகுவாரை தன் அழகாலே கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது
அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –

தாள் திறவாய் -என்றவாறே

அவன் பயமுள்ள தேசத்தில்
மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன –

இருந்த இடத்தில் பயம் என் என்ன –

காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய்
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய்
பயம் அற்று இருக்கிறதோ –

காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம்
தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் –
இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி
கம்சன் சத்ரு
எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள்
பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –

பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன

சூர்பணகை -பெண் அன்றோ என்ன –

அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு
பிறந்த வர்கள் அன்றோ -என்ன –

பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன

ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் -என்ன-வார்த்தையிலே அறியலாம்
வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –

மணிக் கதவம்
மாமன் மகளே மணிக் கதவம் -என்று
பெண்கள் மாளிகை எல்லாம் மணிக் காதவமாம் படி சாதரம்யம் கொடுக்கிற
கிருஷ்ணன் மாளிகை வாசல் மணிக் கதவமாகச் சொல்ல வேணுமோ

மணிக் கதவம்
பூவியில் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு-(திருவாய் -6 -7) புற வாயில் போக்யதை வாசலில் வர ஒட்டாது –
கார்ய வசத்தால் வருந்தி வாசலில் வந்தவர்களை –
சதத் அந்தப்புர துவாரம் என்று வாசல்
தன் அழகால் உள்ளுப் புகுவாரைக் காற்கடைக் கட்டும் –

அவன் புக்காரை புறப்படாத படி நுழையும் சிந்தையராக்கி-(திருவாய்- 6-5-5) கால் கட்டும் தன் போக்யத்தையாலே –
உள்ளுப் புகும் போது ஒரு வண்ணம் சென்று புக வேணும் -(திருவாய் -6-1 )
உள்ளுப் புக்கால் –
மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் –

மணிக் கதவம் தாள் திறவாய்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு (பெரிய திருமொழி )-என்னுமா போலே
கதவில் போக்யதையில் நெஞ்சும் கண்ணும் பிணிப்பு உண்ணாமல் திறந்து உள்ளே விடுகிறிலையே –

தாள் திறவாய் -என்றவாறே –
மத்திய ராத்திரியிலே வந்து திறக்க அழைக்கிறவர்கள் தான் யார் பயம் மிக்க தேசத்திலே என்ன

பயாநாம அபஹாரி இருந்த தேசத்தில் பயம் என் என்ன –

த்ரேதா யுகம் ஆகையால் காலமும் நல்லடிக் காலமுமாய் –
தமப்பனார் ஸம்ப்ராந்தகனுமாய்
பிள்ளைகள் தாமும் ஆண் புலிகளாய் –
அவர்கள் தான் வழியே போய் வழியே வருமவர்களாய்-
ஊரும் திரு அயோத்யையாய் –
அஞ்சாதே பாலில் உண்டு பனியில் கிடக்கிறதோ

காலம் கலிக்குத் தோள் தீண்டியான த்வாபராந்தமாய் –
தமப்பனார் சாது ஸ்ரீ நந்தகோபராவது –
இவர்கள் சிறு பிள்ளைகளாவது –
அதிலே தீம்பாராவது –
ஊர் இடைச்சேரி யாவது –
அது தான் கம்சன் படை வீட்டுக்கு அணித்தாய் –
அவனுக்கு இறை இறுக்கும் ஊராவது
கம்சன் தான் சத்ருவாவது –
எழும் பூண்டு எல்லாம் அசுர மயமாவது –
ஆன பின்பு பயம் கெட்டோ இருக்கிறது

பயப்பட வேண்டும் இடத்தில்
மத்திய ராத்திரியில் கதவு திறக்கச் சொல்லுகிறவர்கள் தான் யார் என்றான் –
எங்களுக்கு அஞ்ச வேணுமோ -நாங்கள் பெண் பிள்ளைகள் அல்லவோ என்ன –

சூர்ப்பணகை ஸ்த்ரீ அன்றோ –
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்-(பெரிய திருமொழி 3-7)என்று
பிற்பாடாரும் (பரகால நாயகி )கூட அஞ்சும் படியாக அன்றோ அவள் நலிந்தது-
ஒரு மாளிகையும் வாசல் காப்பாரும் இல்லாமை அன்றோ என்ன –

அவள் ராக்ஷஸி -நாங்களோ இடைப்பெண்கள் அன்றோ என்ன

பூதனை இடைச்சி அன்றோ -இடைச்சிகளுக்கு அன்றோ மிகவும் அஞ்ச வேண்டுவது என்றான்

ஆயர் சிறிமியரோமுக்கு
இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த க்ருத்ரிமம் அறியாத கன்னிகைகள் அன்றோ –
எட்டும் இரண்டும் அறியாத எங்கள் பருவத்தைப் பாராய் –
பூதனையைப் போலே தனித்து வந்தோம் அல்லோம்
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் கூடி அன்றோ வந்தது -என்று -ஆயர் சிறுமியரோம் -என்கிறார்கள்

பாலைகள் என்ன ஒண்ணுமோ –
கன்றாய் அன்றோ வந்து நலியப் பார்த்தது –
பருவம் கொண்டு விசுவசிக்க ஒண்ணாது
உங்கள் வார்த்தையிலே அறியலாம் -வந்த கார்யம் சொல்லுங்கோள் என்றான் –

மணிக் கதவம் தாள் திறவாய்-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-

பயமுள்ள தேசத்தில்-அர்த்த ராத்ரியில் வந்து எழுப்புகிறவர்கள் யார் என்ன

ஆயர் சிறிமியரோமுக்கு-
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று-அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே-
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதர்களான நமக்கு –

நீங்கள் வந்த கார்யம் ஏது என்

மணிக் கதவம் தாள் திறவாய்
என்கிறார்கள்

மணிக் கதவம்
கதவில் அழகு உள்ளுப் புகுவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு –
ச ததந்தா புரத்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் -(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் இடம் -ஜன சமுத்திரம் தாண்டி போனானே )
ஒரு வண்ணம் சென்று புக்கு

(என்னுறு நோய் யானுரைப்பக் கேள்மின்,* இரும்பொழில்சூழ்- மன்னு மறையோர் திருநறையூர் மா மலை போல்,*
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு,*என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,* – பெரிய திருமடல்)

(ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திரு வண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.-6-1-7)

மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும்

ஆயர் சிறிமியரோமுக்கு
திருவாசல் காக்குமவன் -கோயில் காப்பானே கொடுத்த தோன்றும் தோரண வாசல் காப்பானே என்று நம்மை —
இம் மத்திய ராத்ரிப் போதிலே யார் -திறக்க அழைக்கிற நீங்கள் யார் -பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன

பயம் என் என்ன
காலமும் நல்லடிக் காலமுமாய் தமப்பனாரும் சக்கரவர்த்தியாய் –
ஊரும் திரு அயோத்யையாய் -தாங்களும் ஆண் புலி களாய் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் –
தீம்பர்களாயும் – இடைச் சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே கம்சன் சத்ருவாயிற்று –
எழும் பூண்டு எல்லாம் அஸூரப் பூண்டாவது
ஆன பின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன –

எங்களுக்கு பயப்பட வேணுமோ-நாங்கள் இடைச்சாதி அன்றோ என்ன

சுக சாரணர்கள் ஸ்ரீ சேனையோடே கலந்து புகுந்தால் போலே
இடையயரே அஸூரர்கள் கலந்து புகுரிலும் தெரிய ஒண்ணாது என்ன
அது உண்டோ நாங்கள் பெண்கள் அன்றோ என்ன –
சூர்பணகி பெண் பெண்டாட்டி அன்றோ என்ன
அவள் ராக்ஷஸி –
நாங்கள் இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்குப் பிறந்த இடைச்சிகள் அன்றோ என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன
நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் -நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன

————

அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்
அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –

அறை பறை
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்

பறை வேண்டி வந்தோம் என்றவாறே –
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்த வாறே விண்ணப்பம் செய்து தருகிறோம் நில்லுங்கோள் என்றான்

அறை பறை-
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன
புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன

ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து
தருவிக்கிறேன் -என்ன

அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –

அது வாகில் திருப் பள்ளி உணர்ந்தவாறே விண்ணப்பம் செய்து கேள்வி கொள்கிறோம் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
அது வேண்டா
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்

———–

மாயன் –
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று பரிமாறின படி –

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நீ இன்று அறிவிக்க வேண்டாத படி நென்னேற்றே தருவதாக அருளிச் செய்தான்

மாயன் –
பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி

மாயன்
எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்

மாயன்
எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி

————-

மணி வண்ணன் –
தாழ நில்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை ஒஷ்ட ஸ்புரணம் -பிரகாசம் -என்னவுமாம்-
வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே

மணி வண்ணன்
தாழ நில்லாதே அபவ்யனாய் காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

மணி வண்ணன்
இவர்களைக் கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாதே இப்படி படுத்துகிற வடிவு அழகு

மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிறக்கும் செவ்வி போலே வார்த்தை செய்யும் போதை அழகு –
வாக்மீ ஸ்ரீ மான் -என்னக் கடவது இறே

———–

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்
ஒரு நாளே -என்றார்கள் –
ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –

நென்னலே –
இப்படி நிவாரகர் இன்றிக்கே கிட்டி அனுமதி கொள்ளப் பெற்ற நென்னேற்றும் ஒரு நாளே
இன்று உன்னை அனுமதி கொள்ளுகைக்கு உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ
அவன் காலைக் கையைப் பிடிக்க இருக்கும் நென்னேற்று நாள்
எங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின நாள்

நென்னலே
திரு முளை யன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே

நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்

———–

வாய் நேரந்தான் –
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்
மெய்யாக வேணுமோ -என்ன

ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில்
பழுதாய்த்தாகில் அன்றோ
இவ்வார்தையும் பழுதாவது -என்ன –
சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –

வாய் நேரந்தான்
நென்னலே வாய் நேரந்தான்
திருமூளையினன்று நென்னேற்றை கையார் சக்கரமும் ஒரு நாளே என்னுமா போலே

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
சோதி வாய் திறந்து –(9-2 )

நேர்ந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை அருளிச் செய்தானாகில் -அத்தை மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாவோ -என்றான்

சொல்லாது ஒழிந்தவன்-செய்யலாவது இல்லை –
இத்தனை சொன்ன பின்பு அவன் வார்த்தையில் பழுது உண்டோ
ராமோ த்விர் நாபிபாஷதே —
அன்ருதம் நோக்த்த பூர்வம் மே —
ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
செய்ய நினைக்கிலேன் ஆகில் சொல்லான் –
சொன்னான் ஆகில் தப்பாது –

அவன் உங்கள் கார்யம் செய்கிறோம் என்றான் ஆகிலும் எங்களை இங்கு வைத்ததுக்கு பிரயோஜனம் வேண்டாவோ
பத்து எட்டு திரு முகம் மறுக்கப் பெற்று உடையோம் அன்றோ நாங்கள் –
எங்கள் பணிக்கு அவனோ கடவான்-
ஆராய இருக்கிற எனக்கு உங்களுடைய அகவாய் அறிய வேண்டாவோ
உங்கள் நினைவு தெரியாதே ஆராய்ந்து அன்றி விடேன் என்றான்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரனாய்
சுலபனாய்
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான்
நென் நேற்றே பறை தருகிறேன் என்று
மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –
ஆகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர அன்றோ என்ன –

வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக்கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

————-

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய
தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-

வந்தோம் –
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை-
நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு
அடையாளம் என் என்ன –

தூயோமாய் வந்தோம்
நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

தூயோமாய் வந்தோம்
தூய்மை யாவது தான்
சிலவற்றை ஏறிட்டுக் கொள்ளாதே நம்முடைய ரக்ஷை அவனாலேயே என்று இருக்கை
ராவண பவனத்தை விட்டுப் போந்தவன் வழியிலே முழுகி வந்தான் என்று இல்லையே –
தூசி ஏறின படை நடுவே நின்று இறே பரம ரகஸ்யம் கேட்டது

தூயோமாய் வந்தோம்
திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
ஹனுமான் விலலாபஹ –
உவாஸ பிராணா தச்ச மஹா நேஷ –ஸ்வ ரேண மஹாதா மஹான் -என்று ஆர்த்த நாதம் கேட்டவாறே
ஆநயைநம் -என்றும்
அஸ்மாபிஸ் துலயோ பவது -என்னவும் பண்ணிற்று இறே

(அவனிலும் தண்ணியன்-அவன் பிறந்த வயிற்றில் பிறந்தேன் என்று சொல்லிக் கொண்டான் விபீஷணன்
இவர்கள் தூயோமாய் வந்தோம்
அவன் அசுத்தியும் இவர்கள் சுத்தியும் கார்யகரம் இல்லை
அவன் நினைவே கார்யகரம் ஆகும் )

வந்தோம் –
எங்கள் வரவிலே தெரியாதோ பாவ சுத்தி –
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமை இல்லையே
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம் –
எங்களை ஒத்த ஆர்த்தி உடையார் இருந்த இடத்திலே அவன் சென்று
கார்யம் செய்ய வேண்டி இருக்க நாங்கள் அல்லவோ வந்து கொடு நின்றோம் –

உங்கள் தூய்மை நாடி அறியும் படி நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் சொல்லுங்கோள்-
உங்கள் ஆற்றாமை வந்த போதே பறையின் அளவுள்ள வென்றான் –

தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்
நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –
அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –

—————–

துயில் எழ பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்
பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்
அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் –
அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –
பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –

துயில் எழப் பாடுவான்
ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று
பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்-
இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் –

உறகல் உறகல் -என்று உணர்ந்து இருப்பாரையும் உணர்த்தி அசிர்க்கும் பெரியாழ்வார்
பெண் பிள்ளைகள் உன்னையும் அசிர்ப்போம் சிலர் –
மடியாது இன்றே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -என்றும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்றும்
எழுப்புமவர்களோட்டை வாசனையால் இப்போது பள்ளி உணர்த்த வந்தோம் –

இவர்கள் பாவ சுத்தியை அறிந்து குணக்ரஹணம் பண்ணி வைத்தே
இவர்கள் பேச்சு கேட்க்கைக்காக இன்னமும்
ஒரு நிலை நின்று புகுர விட வேண்டும் என்று நினைக்குமே-
அத்தை இவர்கள் பாவஞ்ஞஜை களாகையாலே அறிந்தார்கள்

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
பத்து எட்டுத் திரு முகம் மறுக்கப் பெற்றுடையோம் –
எங்கள் பணிக்கு அவனோ கடவன் -நாங்கள் ஆராயக் கடவோம் என்ன
உனக்கு ஆராய வேண்டும் பயம் இல்லை -நாங்கள் தூயோமாய் வந்தான் என்கிறார்கள்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் –
அவன் பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னம் -ஸ்வ பிரயோஜனம்-இல்லாமல் இருக்கை
திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விஸ்வசிப்பித்தால் போலே தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட-என்னப் பண்ணிற்று இறே
பண்டு சொன்ன தூயோமில் -(5-பாசுரம் -)வார்த்தை யடைய இவ் விடத்துக்கு ஆகரம்

வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை –
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம்-என்கை
இப்படி பிரமாணம் என் என்று அவன் கேட்க

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் -உங்கள் ஆற்றாமை -பறையின் அளவள்ள- இன்னம் சொல்லுங்கோள் -என்ன
உறகல் உறகல்-என்று உணர்ந்து இருப்பாரையும் அசிர்க்கும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள்
உன்னையும் அசிர்ப்போம் சிலர் என்கிறார்கள்
ச மயா போதித-என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
இவர்கள் உணரும்படி காண ஆசைப் படுகிறார்கள் –
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –
ஆகில் விடிந்தவாறே பார்த்துக் கொள்கிறோம் இப்போது போங்கோள்-என்றான் –

—————

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –
அவன் கையது இறே வாழ் நாள்
அவன் சத்தை பெற

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் சில நல்லது நினைத்தாயாகிலும்
வாயாலே நெருப்பைச் சொரிந்தால் போலே நிஷேதியாது ஒழிய வேணும்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள் –
வாசா தர்மம் அவாப்னுஹி-என்று ஒரு வாய்ச் சொல்லாலே
தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏன் தான் இழக்கிறாயே

மாற்றாதே –
என்று நிஷேதிக்கிறது என்ன பிராப்தி கொண்டு என்ன –
சேஷ பூதராய் இருப்பாரை முட்டத் தொடரலாமா பிரானே -என்கிறார்கள்

துயில் எழப் பாடுவான்-
திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –

ஆகில் நில்லுங்கோள் திறக்கிறேன் என்ன
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா-
வாக்காலே முந்துற முன்னம் எங்களை நிஷேதியாதே கொள்-
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் —
ஆகில் கதவைத் திறந்து கொண்டு புகுருங்கோள் என்ன –

————

அம்மா –
பச்சை இடுகிறார்கள்
உள் இருக்கிறவனோ நாதன்
நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –

அம்மா –
பிரதான சேஷிகளை நாங்கள் அறிந்தோமோ –
த்வார சேஷிகள் அன்றோ எங்களுக்கு கடவர்கள்-
அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் காட்டித் தருவாய் நீ அன்றோ-
வத்யதாம் என்றவர்களே
அஸ்மா பிஸ் துல்யோ பவது-என்ன வேண்டிற்று இறே
தாநஹம் த்விஷத -என்றவன் –
ததாமி -என்றாலும் -நீங்கள் வேண்டாத இடத்தில் ந ஷமாமி -என்னும்

(அசுரர் யோனியில் தள்ளுவேன்
சரண் அடைந்தால் புத்தி யோகம் தருவேன்
அவனும் பாகவத அபசாரம் செய்தால் பொறுக்க மாட்டேன் என்றானே )

அம்மா
தாரா பித்ரு க்ருதா இதி -என்று நீ புக விட்டால் அன்றோ எங்களை உகப்பது
இவர்கள் அர்த்தித்தவத்தையும்-
தனக்கேற பாவ சுத்தியையும் கண்டவாறே
நான் நிஷேதிக்கிறேன் அல்லேன் –
தள்ளிக் கொண்டு புகுருங்கோள் என்றான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா –
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்

யம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்ய கரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
தா நஹம் த்விஷத-என்றவனே
ததாமி என்றாலும் இவர்களுக்கு வேண்டாவிடில்
ந ஷமாமி கதாசன -என்னும் அத்தனை
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத

கோயில் காப்பானே
ஏஷ ஸூப் தேஷூ ஜாகர்த்தி என்கிறபடியே இவன் இசைவதற்கு முன்பு அவன் உணர்ந்து இவனை நோக்கும் –
இவன் இசைந்த பின்பு இவன் உணர்ந்து அவனை நோக்க அவன் உறங்கும்

(கட வல்லி -நாம் தூங்கும் பொழுதும் அவன் விழித்து நாம் விரும்புவதை நிறைவேற்ற)

—————–

நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு
எங்களால் தள்ளப் போகாது
நீயே திறக்க வேணும் –
என்கிறார்கள்

சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –
கம்சன் படை வீட்டில் எல்லாம் பிரதிகூலமாய் இருக்குமா போலே –

நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –

நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் –

நீ-நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
அது உன்னிலும் பரிவுடைய கதவு -எங்களால் தள்ளப் போகாது –
நீயே திறக்க வேணும் –
இவன் விலக்குகிறது ஸ்நேஹத்தாலே யானால் தள்ளப் போகாதே இருக்கிறது ஸ்நே ஹத்தாலே என்று இருக்கிறார்கள்
திறந்து கொள்வார் முகத்திலே அறையும் போலே –

கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே
திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
அகால பலிநோ வ்ருஷா–அபி வ்ருஷா பரிம்லாநா –என்று அன்வய வியதிரேகங்களில்
ஹர்ஷ சோகம் உண்டானால் ஸ்நேஹம் உண்டாக்காத தட்டில்லை-

சகடத்திலே அசுரன் கிடந்தவோபாதி-
அனுகூலரும் சேதன சமாதியில் அங்குத்தைக்கு உறுப்பாவாறே

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்னும் படியாய் கிடக்கிறாரோபாதி
நிலையும் கதவுமாய் நிற்பாரையும் கிடக்கும் இறே

நேச நிலைக் கதவம்
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் ஆகவுமாம் –
ஆன பின்பு நீயே திறந்து புகுர விட வேணும் என்கிறார்கள் –

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய்

நீ எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே
ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை
மறைக்கக் கடவதாய் இறே இருப்பது-

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
நாங்கள் த்வார சேஷியை ஒழிய பர சேஷியை உடையோம் அல்லோம்
நீ அன்றோ எங்களுக்கு நிர்வாஹகன் –
ஆன பின்பு வாசா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ -என்று இவர்கள் அர்த்திக்க
இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-எங்களால் தள்ள ஒண்ணாது -நீயே திற -என்கிறார்கள்

நேச நிலைக்கு கதவம்
கதவும் நிலையும் செறிந்த செறிவாகவுமாம்

கம்சன் படைவீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –

அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை பெருமக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ

————

ஸ்வா பதேசம்

கோயில் காப்பான் -திருமந்திரம் காப்பான்-ப்ரணவாரா ஆகாரம் -ஸ்ரீ பாஷ்யம் -திருக்கோயில்
சங்கு -சாவி -திருமந்த்ரார்த்தம்
தோரண வாசல் காப்பான் த்வயம் -காப்பான்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்த சரம ஸ்லோகம் காப்பான்
ஆச்சார்யர் பரம்
நாங்கள் துயில் எழ -ஆச்சார்யரைப் பாட அஞ்ஞானம் போகுமே-அனந்த மாயயா ஸூஸூப்த்த –

வாய் பேசும் நங்காய் -வியாக்யானம் செய்து அருளும் ஆச்சார்யர்-ஆடிப்பாடி துள்ளி -நாணாதாய்

(உபகார ஆச்சார்யர் உத்தாரக ஆச்சார்யர் போல் இங்கும் இரண்டு காப்பான் )

நேச நிலைக்கதவம் -திரு உள்ளம் உகந்து
குரு பரம்பரை சஜாதீய தலைவர் நாதமுனிகள் -நாயகன் –
மன்னார் கோயில் நந்த கோபன் கோயில்
நாலாயிரம் காத்து அருளி
வாய் திறந்து தாளத்துடன் -தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல் -தாள் திறவாய்
பவிஷ்ய ஆச்சார்யர் அவதாரம் பற்றி நென்னலே வாய் நேர்ந்தாரே ஆழ்வார் –

—————————————————————————————————————————————————-

16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.

பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும், உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.

விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ –
நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.
மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.

தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற ஆழ்வார் ஆசார்யர்கள் கைக்கொள்ளாத
உபதேசங்களை கழித்து, எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.

இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித்த தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.

நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .

தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.

நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.

நாயகனும் எம்பெருமானும்-எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே-எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை

கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது

மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்

நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்

நின்றான் -யாத்ரை போகாமல் நின்றார் ராமானுஜர்
தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ –
யதிராஜ சம்பத் குமாரா செல்வ பிள்ளை -நந்த கோபன் கண்ணனை -பெயர் தகும்
ஆனந்தப் படுத்தியவர் –
உடைய கோயில் -உடைய பதம் இந்த பாசுரத்தில் மட்டுமே -உடையவர் –
கோயில் காப்பான் திருவரங்கா -புரி மாமலை மற்றும் உவந்திடும் நாள் -திருத்தி பணி கொண்டார்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –
கடல் வண்ணன் கோயிலே என்னும் –
மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்

கோயில் காப்பான் -எம்பெருமானார்
உடையவர் உபய விபூதியும் கையிலே உடையவர்
கொடி தோன்றும் தோரண வாயில் -நித்ய விபூதி
கோபுரம் -நடுதோரணம் நிறைத்து -கொடி அணி
எம்பெருமானார் சம்பந்தமே கொடுக்கும்

மணிக்கதவம் ரத்னம் நவ ரத்னம் -அருளி தாள் திறவாய் –
அனந்த- பிரதம ரூபம்–லஷ்மனச்து பல பத்ரன் கலௌ கச்சித் பவிஷ்யதி -அவதரிக்கப் போகிறார் –
சேஷாம் -யாதவ பிரகாசர் இடம் பிரம்ம ரஜஸ் சொல்லி -ராமானுஜா நீ சொல் –
நென்னலே வாய் நேரந்தான்
தர்மஸ்ய கிலாது ததா ஆத்மாநாம் -ஞானி து ஆதமைவ மே மதம்
சம்பவாமி ஆத்மா மாயா சொல்லாமல் ஆத்மாவை உண்டு பண்ணுகிறேன்
ஆத்மா யார் ஞானி
கீதையிலே சொல்லி அருளி
தூயோமாய் வந்தோம் -சாஷாத் நாராயணன் நினைக்கிறோம்
நமக்கு துயில் எழ பாடுவான் -சம்சார நித்தரை
பாடுவான் ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னாதோ பாட்டு கேட்கும் இடம் -கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்
நேசக் கதவு இரட்டை–பிரணவம் -மந்திர சேஷம் -திரு மந்த்ரம்–பூர்வ கண்டம் உத்தர கண்டம் -த்வயம்–பூர்வார்த்தம் உத்தரார்தம் சரம ஸ்லோகம்

நேய மாலை –
நேச நிலைக்கதவம் நீக்கேலோ
நடு நாயகம் -எம்பெருமானார் -யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இ றே
கோயில் காப்பான் -தென்னரங்கள் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன ஸ்ரீ ரெங்க ஸ்ரிய மனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பவர்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
பரமபத வாசலையையும் தமது ஆளுக்கைக்க் கீழ் வைத்து இருக்கும் ஸ்வாமி

மணிக்கதவம் தாள் திறவாய்
மணி ரத்னம் -நவ கிரந்தங்கள் -அறிவிலி ஆயர் சிறிமியோர் எமக்கு மணிக் கதகம் தாள் திறவாய்
நென்னலே வாய் நேரந்தான் -கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத -என்றும்–கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தர்சின –
நேய மாலை
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு

கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நேசக்கதவம்

——————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் -எல்லே இளங்கிளியே-

December 30, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை-
எல்லாருடைய திரட்சியையும்-காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை-எழுப்புகிறார்கள்-

(அத்யாபயந்தி -அவனும் இவள் வாயால் சொல்லக் கேட்டு நடக்கும் படி வைத்த சீர்மை
கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறும் உபதேசித்தார் அன்றோ நம்மாழ்வார்
இப்பாசுரம் பாகவர் நடக்க வேண்டியவை
சிற்றம் சிறு காலை பகவான் நடக்க வேண்டியவை
ஆகவே இப்பாசுரங்கள் திருப்பாவை ஆகிறது -என்பர் )

பெண்கள் எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
கீழ்ப் பத்துப் பட்டாலும் சொன்ன யுக்தி ப்ரத்யுக்தியை முக்த கண்டமாகச் சொல்லுகிறது இப்பாட்டில் –
(மாயனை பாசுரத்தில் யுக்தி ப்ரதி யுக்தி உண்டே
ராமர் பட்டாபிஷேகம் நின்றதே என்ற கோபிக்குப் பதில் தானே அது
அன்றிக்கே இப்பாசுரம் சேர்த்தே பத்து என்கிறார் )

அன்விதாபிதானம் பண்ணி இறே கிடக்கிறது –

(அபிஹித அபிதானம் –பட்டர் மீமாம்சகர்
பானையைச் செய்கிறான் -பானை -செய்தல் செய்யும் அவனையும் இது குறிக்கும் –
பானையை செய்யும் தொழிலுக்கு ஆஸ்ரயம் குயவன்
க்ருதி ஆஸ்ரயம்
செய்யப்படுவது -தன்மை -சப்தத்தால் போதிக்கப்படும்
கீழ் பாட்டைப் பார்த்தால் தெரியாது -அபிஹித அபிதானம்
இப் பாட்டு அன்விதாபிதானம்-பிரபாகர் மீமாம்சகர் –
சொல்லிலே இருக்கும் பொருள் )

திருப்பாவை யாகிறது இப் பாட்டு இறே-
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையிலே சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப் பாட்டில் சொல்லுகிறது –

பங்கயக் கண்ணானைப் பாட -என்று
அசலத்தில் பெண் பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவர்கள் பாசுரத்தை
தன் மிடற்றிலே இட்டு நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
த்வனி வழியே சென்று
பேச்சில் இனிமையாலே எல்லே -இளங்கிளியே -என்கிறார்கள் –

(பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே–திருவாய்மொழி -3-4-6-)

இப் பாட்டில் பாகவத கோஷ்டியைக் காண-ஆசைப்பட்டு இருப்பாரை-எழுப்பு கிறார்கள்

உக்தி ப்ரத்யுக்தி இரண்டும் சாப்தமாக இதிலே மட்டும் உள்ளது –
கீழே ஒன்பது பாசுரங்களிலும் அர்த்தமாக அனுமானித்துத் தான் கொள்ள வேண்டும் –
பிரமாதா பிரமாணம் ப்ரமேயம் மூன்றுமே பத்து -உண்டே –

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டைக் கொண்டு அசல் திரு மாளிகையிலே
கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளையை
தன்னிலே நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
(நுடங்கு கேள்வி இசை என்கோ -உள்ளே வைத்து பாடும் இசை –
குயில் தானாகப் பாடும் -முன்னோர் மொழிந்த முறை ஓர்ந்து தான் பேச வேண்டுமே ஆகவே கிளி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே )

திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் –
(திருவான பேச்சு–வாக்மீ ஸ்ரீ மான் சொல்லின் செல்வன் -)
யாழியிலே இட்டுப் பாடி இனிதானவாறே
மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

(திருப்பாவை ஆகிறது இப்பாட்டும் சிற்றம் சிறு காலை பாசுரமும்
இரண்டாலும் பாகவதர் நடக்க வேண்டிய முறையும் பகவான் நடக்க வேண்டிய முறையும் அறிவிக்கும் பாசுரங்கள்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை – -5 தொடங்கி-மாயனை தாமோதரனைச் செப்பு-9- -இதில் மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-அங்கு ஏஷ நாராயணன் -இங்கு ஆகாதா மதுரா புரிம் -அங்கும் வடமதுரை அவதாரம் -இங்கும் வடமதுரையில் விரோதி நிரஸனம்
உக்திகளும் பிரதி உக்திகளும் வியக்தம் இதில் மட்டும் -கீழே அவ்யக்தமாக இருந்தது அன்றோ)

ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

பாகவத விஷயத்திலிருக்கும்படி இப்பாட்டில் கூறியவாறென்? எனில்,
“சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே அவர்களை மை கொள்ளுகிற முகத்தாலே
ஈஸ்வரனை மைகொள்ள வேணுமென்னுமிடம் –
“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்” என்று ரஹஸ்யத்ரய ஸாரத்தில்
அபராத பரிஹாராதிகாரத்தில் தூப்புற்பிள்ளை அருளிச் செய்தபடி –
பாதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து,
‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால்,
அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று –
பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.
“திருப்பாவையாகிறது இப்பாட்டிறே” என்றதும் இவ்வர்த்த விசேஷத்தில் ஊற்றத்தினாலேயென்பது அறியத் தக்கது.

———–

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனை பாட -என்று
அசல் அகத்து பெண்பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு-
இவள் அந்த பாசுரத்தை தன மிடற்றிலே இட்டு பாட
எழுப்புகிறவர்கள் -அந்த த்வனி வழியே கேட்டுச் சென்று
இவள் பேச்சின் இனிமையாலே -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது -கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை –
பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை

எல்லே இளங்கிளியே
யாழில் இட்டுப் பாடி –
அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு

எல்லே இளங்கிளியே
திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் –
பேச்சில் இனிமை இருந்தபடி –
எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ –
பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்

எல்லே
சம்போதனை ஆகவுமாம்

இளங்கிளியே –
என்று கிளியை வியாவ்ருத்திக்கிறது-
பசுமைக்கும் பேச்சுக்கும் கிளி ஒப்பாம் அத்தனை -பருவத்துக்கு ஒப்பாக மாட்டாது –
ஒக்கிலும் பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பாம் அத்தனை –

இவர்கள் கீழ் -தாம்
இளங்கிளி –
மென் கிளி போலே மிக மிழற்றும் –
அணி மழலைக் கிளி மொழியாள்-என்னக் கடவது இறே –

கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே!என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-

நாணாதாய் நா உடையாய் -என்று கீழ் பாட்டிலே அவளை உட்பட வெறுத்தவர்கள்-
அவளிலும் பிற்பாடையாய்
சாபரதையாய் கிடக்கிற நம்மை ஸ்லாகிக்கக் கூடாது –

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து (1-8 )-என்னும் படியே
தங்கள் உடம்பு விவர்ணமாய் வாயும் வெளுத்து இருக்க
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே உடம்பு பசகு பசகு என்று
வாயும் சிவந்து நாம் குறி அழியாது இருந்தோம் என்று நம்மை நிந்திக்கிறார்கள்
இவ்வளவில் இவர்களுக்கு வாய் திறக்கில் வெறுப்பாம் என்று பேசாதே கிடக்க

எல்லே –
அசல் அகத்து பிள்ளையை எழுப்பு கிறவர்கள்
சங்கோடு சக்கரம் இத்யாதியைப் பாட –
அப்பாசுரத்தை தம் மிடற்றிலே வைத்து பாடுகையாலே
அது தானும் இவர்களுக்கு அத்யந்தம் ஆகர்ஷகமாய் இருக்கையாலே
அவரை கொண்டாடுவதற்கு முன்பே -எல்லே-என்று
ஆச்சர்யப் படுகிறார்கள் –

இளங்கிளியே –
கிளி பேச்சுக்கு ஒப்பாம் அதனை அல்லது பருவதுக்கு ஒப்பாமோ –
இவ்விடத்தில் பருவம் எனபது அபிநிவேசத்தை
அவற்றுக்கு அபிநிவேச பூர்வகமாக வார்த்தை சொல்ல வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே –

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டான –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்ற பாட்டைக் கேட்டு
அசல் திருமாளிகையிலே கிடந்தாள் ஒரு பெண் பிள்ளை தன்னிலே கிடந்தது நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
எல்லே இளங்கிளியே
திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் -(நுடங்கு கேள்வி இசை என்கோ -ஆழ்வார் )

யாழியிலே இட்டுப் பாடி -இனிதானவாறே-மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே- முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

(குயில் போல் தனக்குத் தோன்றியதைப் பேசாமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -பொருளிலும் மதிப்பிலும் இனிமை கிளிக்கே)

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
எல்லே என்றது -என்ன ஆச்சர்யம் என்றபடி -சம்போதனம் ஆகவுமாம் –
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையால் உறங்கி இவள் பேச்சு கிடையாது என்னும்படி இருக்கை – –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —

(கிளியும் இளம் கிளியும் கால ஷேப தலைப்பு -கார்ப்பங்காடு ஸ்வாமி
வேளுக்குடி வரதாச்சார்யரை முதலில் செய்ய சொல்லி அருளினாரே )

இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை தன் -பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும்
வெளுத்து இருக்க -கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே -தன் உடம்பு பசுமை யுண்டாய் வாயும் சிவந்து இருக்கிறது என்கிறார்கள்-
இவ்வளவில் வாய் திறக்கில் பழி இடுவார்கள் என்று நினைத்து நான் இங்கனே பசுகு பசுகு என்று
சிறகுகளும் தானுமாய் இருந்தேனோ என்று ஒன்றும் பேசாதே கிடந்தாள்

உணர்த்த வந்தவர்கள் உறங்குமவளை, ‘இளங்கிளியே!’ என விளித்ததும் அவள் நினைத்தாள்;
நம் அயலகத்துப் பெண்ணை ‘நாணாதாய்!’ என வெறுத்துரைத்தவிவர்கள்
நம்மை நோக்கி ‘இளங்கிளியே!’ என்றால், இதை நாம் மெய்யே புகழ்ச்சியாகக் கருதலாகாது.
உறக்கத்தில் அவளிலும் மேற்பட்டவளாயிராநின்ற நாம் நிந்தைக்கு உரியோமத்தமையன்றிப் புகழ்தற்கு உரியோமல்லோம்;
ஆனபின்பு, இப்போது இவர்கள் புகழ்ச்சி தோன்ற விளித்தமைக்குக் கருத்து வேறாக வேணும்?
“மாசுடையுடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து” என்னும்படி
எங்களுடம்பு வைவர்ணியமடைந்து வாயும் வெளுத்திருக்க, உன் உடம்பு கிருஷ்ண ஸம்ச்லேஷத்தினால் பசுகுபசுகென்று,
வாயும் சிவந்து குறியழியாமே கிடக்கிறபடி வெகு அழகிதாயிராநின்றது! என்ற கருத்துப்பட;
‘இளங்கிளியே!’ என்ற மெல்லிய பேச்சினால் நிந்திக்கின்றனரே யன்றி வேறில்லை;
இவ்வளவில் இவர்களுக்கு நாம் ஒரு மறுமாற்றந் தந்தால் வெறுப்பா” மென்று பேசாதே கிடந்தாள்;

——————–

எல்லே -என்னே –
எல்லே என்று பேச்சின் இனிமையாலே ஆச்சர்யப் படுகிறார்கள் –

இன்னம் உறங்குதியோ –
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க –

இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் –
கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே-
உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும்-உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் –
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன –

இன்னம் உறங்குதியோ-
என்கிறார்கள் –
நாங்கள் வருவதற்கு முன்பு உறக்கத்தை பொறுத்தோம் ஆகிலும்
நாங்கள் வந்தால் உறங்கக் கடவதோ

இன்னம் உறங்குதியோ-
கிருஷ்ண விரஹத்தாலும்
உன் கடாக்ஷம் படாமையாலும்
துவண்ட எங்கள் ஆர்த்த த்வனி கேட்டும் கண் உறங்குவதே உனக்கு

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தால் உறங்குவார் உண்டோ –
கிருஷ்ண அனுபவத்துக்கு ஏகாந்தம் பெற்றாலும் உறங்கக் கடவதோ

தான் அனுபவிக்கிற பங்கயக் கண்ணனுடைய அனுசந்தானத்துக்கு –
இளங்கிளியே -என்பது –
இன்னம் உறங்குதியோ -என்பது –
இவர்கள் சொல்லுகிறவை விக்னம் ஆகையால் சிலுக்கிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ(கண்கள் துஞ்சுதலே முன்பு -பெற்ற பின்பு ஸதா பஸ்யந்தி – -ப்ராப்யத்திலே கண் வைக்க வேண்டுமே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் )
எங்களுக்கு கிருஷ்ண விரஹத்தாலே தளர்வதுக்கு மேல் உறக்கம் இல்லை –
அதுக்கு உன் கடாக்ஷமும் பெறாது ஒழிவதே
உன் பாட்டுக் கேட்கப் பெறாது ஒழிவதாய் உயிர்க் கொலையாக்கி இட்டு வைத்தால் தரிக்க ஒண்ணுமோ –

—————-

சில்லென்று அழையேன்மின் –
தன் அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிறது விக்நம் ஆகையாலே
சிலுகிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அசஹ்யமோ -என்னில் –
திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அசஹ்யமாம் போலே –

சில்லென்று அழையேன்மின்
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாம் போலே –
(கூட்டம் கலக்கியவர் என்று சொல்வார்களே செல்வரை )
பிராட்டிமாரும் சர்வேஸ்வரனும் கூட எழுந்து அருளி இருந்தால்
ஒட்டு வட்டில் காளாஞ்சியோ பாதி பிரியாதே இருக்கக் கடவ – ஸ்ரீ நாரத பகவானையும்
ஸ்வேத தீபத்திலே எழுந்து அருளுகிற போது
உன் வன்மை யவர்கள் பொறாதே இருக்கக் கூடும் என்று –
நான் வரும் அளவும் இங்கேயே இரு என்று அருளிச் செய்து எழுந்து அருளினார் இறே

(ஸ்வேத தீப வாசிகள் ஸநகாதிகள் பரம மென்மை என்று நாரதரை நிற்க வைத்து போனார் அன்றோ )

தன்னால் அல்லது செல்லாத எங்களை சிவிடக்கு என்பதே -என்று இன்னாதாய் –
நாங்களும் –
எங்கள் தரிசனமும்
எங்கள் பேச்சும்
அஸஹ்யமாம் படி உன்னுடைய பூர்த்தி இருந்த படி என் என்ன

சில்லென்று அழையேன்மின் –
பிராட்டிமாரோடே கூட எழுந்து அருளி இருந்தாலும் படிக்கத்தோபாதி அந்தரங்கனாய்
இருக்கக் கடவ ஸ்ரீ நாரத பகவானை(ஜிதந்தேயில் இந்த சரித்திரம் உண்டே )
ஸ்வேத த்விபத்துக்கு எழுந்து அருளினை போது உள்ளே புகப் புக்கவாறே-
இவன் வெட்டத்தனம் அவர்களுக்குப் பொறாது என்று –
நீ இங்கே நில்லு -என்று எழுந்து அருளினால் போலே( அசுணமா முடியுமா போல் லௌகிக சப்தம் )
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அஸஹ்யமோ என்னில் திருப் புன்னை கீழே
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் (கூட்டம் கலக்கி )எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே –

————–

நங்கைமீர் போதர்கின்றேன் –
நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்த படி என் -என்ன
சிவிட்கென்ன கூசி –
நங்கைமீர் போதர்கின்றேன் —
நீங்கள் வாய் திறவாது இருக்க வல்லிகோள் ஆகில்-நான் புறப்படுகிறேன் -என்ன

நங்கைமீர் போதர்கின்றேன்
என் பிரகிருதி அறியாதே -இளங்கிளியே என்று என்னை பாதிக்கின்ற நீங்களே
அன்றோ பூர்ணைகள்-
வாய் திறவாது இருக்க வல்லி கோள் ஆகில் –
நான் புறப்படுகிறேன் என்ன

நங்கைமீர் போதர்கின்றேன்-
நாங்களும் நம் பேச்சும் போராதபடி உன் பூர்த்தி என் -என்ன
நம் பாசுரத்தை மிடற்றிலே வைத்துப் பாடுகிற இவ் வனுபவதிற்கு விரோதம் பண்ணலாகாதே-என்று
எழுப்பாதே இருக்க வேண்டி இருக்க
அது பொறாதே எழுப்புகிற நீங்கள் அன்றோ பூரணைகள் –
நீங்கள் வெறுமனே இருந்தி கோள் ஆகில்-நான் புறப்பட்டு வருகிறேன் -என்ன –

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் -படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன

—————–

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும் –
நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம்
சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
சொல்லிற்றைச் சொல்லி
எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்

வல்லை யுன் கட்டுரைகள்
எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி
உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே

பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
பண்டே அறியோமோ –

குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –
நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –
உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன

வல்லை யுன் கட்டுரைகள் பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை
என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன

(உன்னுடைய சுண்டாயம் நாம் அறிவோம் -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
பெருமாள் விஷயம் அங்கு -இங்கு பாகவத விஷயம் )

——————-

பண்டே அறியோமோ -என்றுமாம் —

வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –
வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன
உன் வாசலில் வந்து எழுப்ப
சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன

அது என் குற்றம் அன்று –
அதுவும் உங்கள் குற்றமே
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள்-நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க
அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –

அது கிடக்க-ஸ்வரூபம் இருப்பதால்

வல்லீர்கள் நீங்களே –
உங்கள் வாசலிலே நான் வந்து துவளப்
பேசாதே கிடந்து வெட்டிமை சொல்லிப் படுத்த வல்லி கோளே நீங்கள் அன்றோ –
உங்கள் வாசலிலே வந்து எழுப்ப நான் எத்தனை பண்ணைக் கேட்டேன் என்ன –

அது சாத்தியம் –
இது சித்தம் –
ப்ரத்யக்ஷம் கிடக்க அனுமானத்தைக் கொள்ளவோ என்ன –

பதகம் மூட்டினவாறே

வல்லீர்கள் நீங்களே –
உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு
விரோதியைப் பண்ணி
அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல
நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன –

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ வல்லை யுன் கட்டுரைகள் -என்னும் வெட்டிமை உங்களதே —
நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

————–

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –

பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நானே தான் ஆயிடுக
பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது

இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால் இல்லை செய்யாதே இசைகை இறே வைஷ்ணவ லக்ஷணம் –

மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று
பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக
ராம பக்தன் -விரல் விட ஒருவனே ப்ராதா என்பதால் அல்ல பரதன் என்பதால் -பாதுகா சஹஸ்ரம் )

ஸ்வ குண அபதானத்துக்காக கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணலாகாது என்றும் வேதார்த்தம் பிரகாசிக்கிறது –

இப்படி தோஷ துஷ்டையான நான் உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

நானே தான் ஆயிடுக
பதகம் மூட்டினவாறே (பதக முதலை வாய் களிறு )சிறிது போதாகிலும் பேசாதே இருப்பார்கள் இறே என்று –
நானே தான் ஆயிடுக -என்கிறாள் –
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

(துளஸீ மாலையும் பன்னிரண்டு திரு நாமங்களும் ஸ்ரீ வைஷ்ணவத்வ லக்ஷணம் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே
உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்)

ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே வாத்ர -நிமித்தம் ஆஸீத் வன பிரவேச ரகு நந்தனஸ்ய -என்றான் –

பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் –
அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

—————–

ஒல்லை நீ போதாய் –
எங்களுக்கு ஒரு ஷணமும் உன்னை ஒழியச் செல்லாமையாலே-
எங்கள் திரளிலே சடக்கென புகுந்து கொடு நில்லாய் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே -என்று-அவர்களுக்கும் இத் திரள் இறே பிராப்யம்

ஒல்லை நீ போதாய்
உன் குற்றத்துக்கு இசைந்த பின்பு சடக்கென புறப்பட்டு இத் திரளில் புகுந்து பொருப்பித்துக் கொள்ளாயோ-
(அபராத ஷாமணம் -பாகவதர்கள் இடம் தான் பெற வேண்டும் )

ஒல்லை
ஒல்லைக் கூடுமினோ -என்றார் இறே –
சாதி கோட்டியுள் கொள்ளப்படுவார்(பெரியாழ்வார் – 3-6-10 )-என்று
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியுள் புகுருகை ஏற்றம் என்று அருளிச் செய்தார் இறே

ஒல்லை நீ போதாய் –
உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி –
புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்
ஆகில் புறப்பட நின்றேன் என்ன

துடித்துக் கொண்டு புறப்பட்டு நின்று நாங்கள் பட்டது படாமையாலே
சிவிட்க்கு என்று

ஒல்லை நீ போதாய்
உன் படுக்கையிலே கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய்
அரை க்ஷணம் வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய –
என்கிற ஸூப்ராஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது -(பிணக்கு வர மத்யஸ்த்யம் நடுநிலை பண்ண வரச் சொல்ல -அவர் சொன்ன பதில் )

—————

உனக்கென்ன வேறுடையை-
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய-
தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே-உனக்கு வேறு சில உண்டோ –
வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும்
பாகவத விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –
நீ ஒருவருக்கு விரோதி அல்லை
நீ புக்குத் திருவடி தொழு -என்ற ஆழ்வான் வார்த்தையை நினைப்பது –

உனக்கென்ன வேறுடையை
என்கிறார்கள் –
இவள் ஒரு சற்று விளம்பித்து புறப்படும் காட்டில் அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களுக்கு ஒழிய
உனக்கு என்ன ஒரு ஸ்வயம் பாகம் வேணுமோ –
உன் ஸ்வயம் பாகம் தவிர்ந்திலையோ பெருமானைக் கண்ட பின்பும்
வைஷ்ண விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பகவத் விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –

இளைய பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வானுடைய விரோதம் என்கிற அதி சங்கையால் உத்தியோகித்து –
வில்லிலே நாண் ஏறிடுவது -அம்பைத் திரிப்பது ஆகிற படியைக் கண்டு
பெருமாளுக்கு அஸஹ்யமாய்
அவனுக்கு ராஜ்யத்தில் ஸ்ரத்தை இல்லை –
உனக்கு அபேக்ஷை உண்டாகில் வாங்கித் தருகிறோம் என்று
அருளிச் செய்த போது
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே இவளும் –
உனக்கு என்ன வேறுடையை -என்றது பொறுக்க மாட்டாமே

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை-எங்கள் -பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –

சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்னக் கடவது இறே
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் (5-8-ஸஹ போஜனம் )-என்னுமா போலே
இளைய பெருமாள் கைகேயின் மகன் வருகிறான் என்று ஸ்ரீ பரத ஆழ்வானைச் சீறி –
வில்லையோட்டிக் கொல்ல என்ன –
பெருமாளுக்கு அது அஸஹ்யமாய் -(போர் பெரும் கோலம் என்றாயே நீர்ப் பெரும் கோலம் பார் )பிள்ளைக்குச் சொல்லிக் கொள்கிறோம்
நீ இங்கண் அலமாக்கிறது ராஜ்யத்தை ஆசைப்பட்டு அன்றோ
நீ ராஜ்யத்தைப் பண்ணு-என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே -இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-

ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய – ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்- ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா(மூன்றுக்கும் பிரமாணங்கள் )
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் (பெரியாழ்வார் -3-6)என்று -புருஷார்த்தமான
இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம்
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –

(சைன்யம் உடன் கூடிய பரதன் இடம் சென்று வெல்வேன்
ராஜ்ஜியம் உனக்கு விருப்பமானால் பரதன் இடம் சொல்லிக் கொடுக்கச் செல்வேன்
பாஷம் -அப்படியே -ஓரே வார்த்தை மட்டுமே பதில் சொல்லுவான்
வெட்க்கி உடம்பு சுருங்கினானே -ராமன் நலத்திலே விருப்பம் –
பாகவத அபசாரம் கூடாது என்பதற்கு அன்றோ இச்சுடு சொல் )

————-

எல்லாரும் போந்தாரோ –
எனக்கு உங்களை ஒழிய சுகம் உண்டோ
உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்பட இருந்தேன் –
எல்லாரும் போந்தாரோ -என்ன –

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –
உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் -இத்தனை –
எல்லாரும் போந்தார்கள் ஆகில் புறப்படுகிறேன் -என்றாள்-

———–

போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன
ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –

போந்து எண்ணிக் கோள் –
புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-
மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்
தனித் தனியே பார்க்கையும்
அனுபவிக்கையும் –

நாம் எல்லாம் கூடினால் செய்வது என் என்ன –

எல்லாரும் போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடக்கிறது

நான் எழுந்து இருக்கைக்காக ஒன்றைச் சொல்லுகிறீர்கள் அத்தனை அன்றோ –
வந்தார்கள் யாகில் உள்ளே புகுரா விடுங்கோள்-என்ன

வந்தமை நிச்சிதம் –
புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-
மெய்க் காட்டு கொள்ளுகைக்கு பிரயோஜனமாக இவர்கள் நினைக்கிறது –
தனித் தனியே பார்க்கையும் –
பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்-
ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்-
பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –

நாம் எல்லாரும் கூடிச் செய்யப் பார்த்தது என் என்ன –

கிருஷ்ணனுடைய விஜயங்களை நீ பாட நாங்கள் கேட்க வேணும் என்கிறார்கள்

எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க் காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும்

(அவனே உகந்து நெருங்கி வந்தானே இடை கழியிலே
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே
புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ )

————-

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தைக் கொன்று-நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தை கொன்று நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –
பெரு மிடுக்கு உண்டாம் படி மதப் படுத்தி நின்ற குவலயா பீடத்தை கொன்று –
ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வந்து நம்மோட்டை பெண்களை வாழ்வித்தவனை –
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்று இறே பெண்கள் வாய் வெருவுவது

கவள மால் யானை கொன்ற கண்ணன் -(பெரிய திரு மொழி 4-8-1/திருமாலை -45)-என்று
ஆண்களை எழுதி முடிக்கப் பண்ணினது –
பெண்களை எழுத்து வாங்குவிக்கச் சொல்ல வேணுமோ –

வெஞ்சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்-(9-2 )என்னக் கடவது இறே
வாரணத்தை மருப்பு ஒடித்த பிரான் மாதவனே –
பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன்-
பின்னை மணாளனாகி கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தான்-
என்று பிரதான மஹிஷிகள் மூவரும் இவ்வாபத்தானத்துக்கு இறே தோற்றுக் கிடப்பது –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்த்திலும் காட்டிலும்
இத்தை குணமாக
ஓர் ஆனை காத்து ஓர் ஆனை கொன்று (திருச்சந்த )-என்று அருளிச் செய்தார் இறே –

வல்லானை கொன்றானை
எல்லாரும் வந்தாராகில்
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –வேறு உண்டோ –
உன் அழகிய மிடற்றாலே -ஒரு கால் -வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –

வல்லானை கொன்றானை
ஒரு நாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-(பெரிய திருமொழி -6-5)என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

————

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
எதிரிட்ட கம்சாதிகளை அனாயேசேன நசிப்பித்து-அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
சக்கரவர்த்தி திருமகனைப் போலே -கச்ச -என்று விடாதே –
குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி –
மல்ல ரங்கத்திலே புக்கு
சாணூர முஷ்டிகர் தொடக்கமான மல்லரைக் கொன்று –
உயர்ந்த மஞ்சத்தில் இருந்த கஞ்சனை மயிரைப் பிடித்து இழுத்து
பூதலத்திலே புரட்டி –
திருவடிகளாலே உதைத்து –
மதிப்பு அறுத்து –
குஞ்சி பிடித்து அடித்து -தன்னை உபகரித்து
நசமம் யுத்தம் இத்யாஹு -என்று அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை

வார் கடா வருவியில் செய்தவற்றை எல்லாம் நினைத்து சொல்கிறார்கள் –

வார் கடா வருவி யானை மா மலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக் கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–(திருவாய் -8-4-1)

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்று விடாதே அக் கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தம்மப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

————-

மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை-பெண்கள் கையில் படுமவனை –

மாயனைப்
தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று –
அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

——–

வல் ஆனை கொன்றானை –
அங்கே குவலயா பீடத்தை கொன்றாப் போலே-
நம்முடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தைப் போக்கினவனே-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை —
சாணூர முஷ்டிகாதிகளை நிரசித்தாப் போலே-
நம்மை தம்மோடு சேர ஒட்டாத இடையர் உடைய-சங்கல்பத்தை போக்கினவனே –

எதிரிகளை தான் தோற்பிக்குமா போலே-
நம் கையிலே தோற்ற ஆச்சர்ய பூதனை –

பாட –
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்கு தோற்றுப் பாட –

வல்லானை கொன்றானை மாயனை
குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –
மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி
எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே
நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –

பாடேலோ ரெம்பாவாய்-
நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

1-எல்லே இளங்கிளியே -என்று பகவத் விஷயத்திலே ருசி உடையார் பேச்சும் உத்தேச்யம் என்கிறது –

2-இன்னம் உறங்குதியோ -என்று பாகவத ஸஹவாசம் சித்தித்தால் புறம்பு அந்நிய பரதை பண்ணும் இடம் தப்பு என்கிறது –

3-சில்லென்று அழையேன்மின் -என்றதால் ருசி உடையார்க்கு எல்லாம் சொன்னாலும் பொறுக்க வேணும் என்னும் இடம் சொல்லுகிறது

4-நங்கைமீர் போதர்கின்றேன்-என்கிறதால் சாபலத்தால் சில பிறந்தாலும் பகவத் விஷயத்திலே அவகாஹித்தவர்களை
சாபலத்தால் பிறந்தவற்றை நினையாதே கௌரவதை தோற்றச் சொல்ல வேணும் என்கிறது –

5-வல்லையுன் கட்டுரைகள்-என்றதால் -சில்லென்று அழையேன்மின்-என்றது இவர்களுக்கு உத்தேசியமானவோ பாதி
உன் வெட்டிமை அறிந்தோம் என்றதும் அவளுக்கு உத்தேச்யமாகக் கடவது என்கிறது

6-வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக-என்கிற இத்தால் பர தோஷத்தையும் ஸ்வ தோஷமாகக் கொள்ளவும்
கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணக் கடவது அல்ல என்னும் இடத்தையும் சொல்லுகிறது

7-ஒல்லை நீ போதாய் -என்கிற இத்தால் -பாகவத சம்ச்லேஷம் சத்தா சித்தி என்கிறது –

8-உனக்கென்ன வேறுடையை-என்கிற இத்தால் –
யதா தேத தத்ர வர்த்தேர தன்-என்கிற வேதாந்த பிரகிரியையாலே
ஸ்ரேஷ்டர் வர்த்தித்தபடி வர்த்தியாது ஒழிகை தப்பு என்கிறது

9-எல்லாரும் போந்தாரோ -என்கிற இத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் உத்தேசியர் என்கிறது

10-போந்து எண்ணிக் கோள்-என்கிற இத்தால் ஒருவர் குறைந்தாலும் பகவத் அனுபவத்துக்கு குறை என்கிறது

11-வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-என்று
திரண்ட பாகவதர்களுக்கு உஜ்ஜீவனம் -உண்ணும் சோறு இத்யாதி படியே பகவத் விஷய அனுபவமே என்கிறது

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட
ஸ்வ யத்னத்தால் கடக்க அரிதாய்-பிராயச்சித்த விநாச்யமுமாய் இன்றிக்கே இருக்கிற
அஹங்கார நிவர்தகனாய்-மற்றும் உள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகனாய்
ஆஸ்ரித பரதந்த்ரனைப் பாட-ஒல்லை நீ போதாய் – இத் அந்வயம்-

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

(சோழ ஸிம்ஹ புரத்தில் பக்த உசிதன் -=பக்த லோசனன் கிடந்தவாறு எழுந்து இருந்து வாழி கேசனே
சொன்ன வண்ணம் செய்து அருளி –ஆஸ்ரித பாரதந்தர்யம் காட்டி நம்மை எழுதிக் கொள்கிறானே)

எல்லே இளங்கிளியே —
பண்டே யுன் வாய் அறிதும் —
மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாட
வாக் பாணிதி யுடையாரையும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர
நாம சங்கீர்த்தனத்திலே சஹகாரிகளாக்கிக் கொண்டபடியைச் சொல்கிறது
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருப்பவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது —

ஏவம்வித சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும்
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷித்ங்களை விண்ணப்பம் செய்து அடிமை செய்யும் படியையும்
அவன் அடிமை கொள்ளும் படியையும்
அவனுக்கு அறிவித்துத் தலைக் கட்டுகிறது
மற்று எல்லாம் –

வாக் பணிதி யுடையாராயும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே
சஹகாரிகள் ஆக்கிக் கொண்ட படியைச் சொல்லுகிறது –

————

சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில்,

“ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப் பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.”–என்ற நான்காம் பாட்டு,
“எல்லேயிளங்கிளியே” என்னும் இப்பாட்டின் பொருள் நடையை அடியொற்றியதென்பதை இங்கு உணர்க.

——

(ஸ்வாபதேசம்.)

எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை-அது எங்கனே என்னில் –

அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்

பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக –

ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் –
பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –

நீராடப் போதுவீர் -என்றத்தை –
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் –

சந்த மலர்க குழல் –பூம் கோதை –
எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –

பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி –
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் –
இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –

வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் –

இப் பாட்டில்
வல்லானை கொன்றானை என்கிற வித்தை
ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

——————

பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

குமுதவல்லித்தாயார் மேல் இருந்த காமத்தால் பக்தரான திருமங்கை ஆழ்வார் -மங்கையர் தோள் கை விடாமலேயே -எல்லே -என்ன ஆச்சரியம்
வயலாலி மணவாளன் திருமந்திரம் சொல்லி அருள
இளம் கிளி போல் தானும் பத்து தடவை சொல்லி நானும் சொன்னேன் நீரும் சொல்லும் என்றாரே
ஆண் பாவத்தில் ஊடி -உனக்கு வேறுடையை

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —உங்கள் புழைக்கடை—

December 29, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
இவை எல்லாவற்றுக்கும் தானே கடவளாய்-
எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாய்ச் சொல்லி வைத்து
அது செய்யாதே உறங்குகிறாள் ஒருத்தியை
எழுப்புகிறார்கள் –

இத் திரளுக்கு எல்லாம் நிர்வாஹகையாய் –
எல்லார்க்கும் முன்னே உணர்ந்து
எல்லாரையும் எழுப்பக் கடவேன் என்று சொல்லி வைத்து
அத்தை மறந்து
சுருக்கம் ஒழிய உணர்ந்து கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(பாசுரத்தில் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதாக இல்லையே –
எழுந்திராய் என்பதால் தூங்கிக் கொண்டு இருப்பது ஸூசகம்
சுருக்கம் ஒழிய -குறை இல்லாமல் )

இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

உங்கள் பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
இவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே பூரணரான
பாகவதரை எழுப்புகிறார்கள் –

பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –

ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் சத்வ உத்ரிக்த்தர் சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின —
சங்கிடுவான் போதந்தார் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சவ்கந்த்ய சாரஸ்யா யுக்தர் விகாசத்தையும் –
சத்வோத்ரிகர் சமாராதான சம்விதான தத் பரராகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது
எல்லார்க்கும் தானே நிரவாஹகையாய் –
எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாகச் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

ஆய்ச்சியர் திரளுக்கெல்லாம் தலைவியாய்,
‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும்
உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து,
அதனை மறந்து உறங்குவாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

————

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி
போது விடிந்தது
உறங்குவதே இன்னம் -என்ன –

நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன –
புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –

அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
எங்களுக்கு புகுர ஒண்ணாதே
அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே
கால பாகத்தாலே -என்கை –

இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச்  சொல்கிறார்கள்

அலரப் புகுகிற அளவிலே
கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறி கோள்
வேறு அடையாளம் உண்டோ என்ன –

நாங்கள் வந்து உன் வாசலிலே நிற்க எழுந்து இராதே ஒழிவதே என்ன –

விடிவுக்கு அடையாளம் என் –
எழுந்து இருக்கும் போது விட வேணுமே என்ன

(செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி ஒவ்வொன்றாகக் கூட்டி வியாக்யானம் )

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-

செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டிக்குமது அடையாளம் அன்றோ -என்ன

நீங்கள் இவ் வாசலிலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே உங்கள் கண்கள் அலர்ந்து –
நான் வார்த்தை சொல்லா விட்ட வாறே நீங்கள் வெறுத்து லஜ்ஜித்து வாய் மூடினதும்-
செங்கழு நீர் அலர்ந்ததாகவும் ஆம்பல் மொட்டிட்டதாகவும் தோற்றுகிறது என்ன –

அது ஊரிலது இறே-
வாவியுள் செங்கழு நீர் காண் என்ன —

வயல் எல்லாம் உலாவி -அலருவன அலர்த்தி
மொட்டிப்பன மொட்டுவிக்கை யன்றோ உங்களுக்கு இரவு எல்லாம் பணி என்ன

தோட்டத்து வாவியுள்
தடமணி வயல்களிலும் -(திருவாய் 10-1-1-திரு மோகூர் வயல்)
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனிகளிலும் (பெரிய திருமொழி 7-5-10-தேரழுந்தூர் கழனி )உள்ளவை அல்ல –
தோட்டத்தில் அவை காண் என்ன —

அவ்விடங்களிலும் நீங்கள் உலாவினி கோளாம் அத்தனை என்ன

புழக்கடை தோட்டங்காள்–என்ன –

அத்தனை இடம் போக வேண்டாதே
அணித்தான அத்தனை அன்றோ என்ன –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-என்கிறார்கள் –

அஸூர்யம் பஸ்யமான உன்னுடைய தோட்டத்தில் வெய்யில் பட அன்றிக்கே –
கால பாகத்தாலே அலர்ந்தவையும் மொட்டைத்தவையும் அடையாளம் அன்றோ –
சோலைச் செறிவாலே உச்சிப்பட்டாலும்
ஆதித்ய ரஸ்மி காண ஒண்ணாத உன்னுடைய புழக்கடையில் அவை அன்றோ –

தாங்கள் புறம்பே உள்ளுப் புகுரப் பெறாதே நிற்கிறவர்கள் –
இவள் புழக்கடையில் அவை அலர்ந்தவை அறிந்தபடி என் என்னில்

புறம்பு உள்ளவை அலர்வன மொட்டிப்பன வானபடியைக் கண்டு
அநு மித்திச் சொல்லுகிறார்கள்

இவள் எழுந்து இராத இன்னாப்பாலே உங்கள் புழக்கடை -என்று
வேறு கூறிட்டுச் சொல்கிறார்கள் – –

நீர் நுமது -என்றும்
யானே என் தனதே -என்றும்
அஹங்காரம் மமகாராம் த்யாஜ்யமாக உணர்ந்தவர்கள் –
உங்கள் எங்கள் -என்கை விருத்தம் அன்றோ என்னில்

தேஹாத்ம அபிமானத்தால் வரும் அஹங்காரம் த்யாஜ்யம் ஆவதும்
பகவத் சம்பந்தத்தால் வரும்து உபாதேயம் ஆவதும் –

அச்யுத அஹம் தவ அஸ்மி சம்சார பேஷஜம் -என்றும் –
அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்றும் –
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -என்றும் -சொல்லிற்று இற்று இறே
(ஆத்மஞானம் கை வந்த தால் -நீர் உன்னுடையது – அதுவே எனக்கு உத்தேச்யம்
என்றானே மின்னுடைய மடவார் பதிகத்தில்
சாத்விக அஹங்காரம் உபா தேயம் உத்தேச்யம் என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

பதார்த்தங்கள் ஆகின்றன –
கால க்ருத பரிணாமியாய் யன்றோ இருப்பது என்ன –

(ப்ராத)சந்த்யா சமயத்தில் படியாய் அன்றே
மத்திய ராத்திரியில் படி இருப்பது –

அலர உபக்ரமித்த மாத்திரமே கொண்டு கழிய அலர்ந்ததாகவும் –
மொட்டிக்கத் தொடங்கின போதே மொட்டித்ததாகவும்
உங்கள் த்வரையாலே பிரதம தசையில் இப்படியே தோற்றுகிறது –
இது ப்ராதர் லக்ஷணம் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து -போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாரும் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல

உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன

வயலில் அவையும் அப்படியே -என்ன

நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள் -என்ன

தோட்டத்து வாவியும் அப்படியே என்ன

வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன

புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன

அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன

அஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத (உங்கள்) புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன

(அபிசந்தி விராத மாத்திரம் -குற்றங்களை செய்யாமல் இருக்க சங்கல்பம் கொள்ள
சிந்திக்கும் பொழுதே எல்லாமே செய்ததாக அவன் கொள்ளுமா போலே)

(நாம் அவனை நோக்கி அத்வேஷம் மாறின உடனே ஆபி முக்கியாதிகளை தானே உண்டு பண்ணி
அருளி கைக்கொள்ளும் அவனைப் போலவே இவர்களும் அலரத் தொடங்கியதுமே -என்றவாறு )

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய
விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய
மத்யே வர்த்திக்கிற நமஸிலே
பாரதந்த்ர்யம் பிரகாசமாய்
ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

————–

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி
ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவத்விஜரும் கூட
தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலம் ஆய்த்து-

திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -என்றது ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் –
குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –

சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து
என்றுமாம் –

தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன
தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே-என்கிறார்கள்

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அளற்றுப் பொடியில் புடைவையைப் புரட்டி –
இரவு எல்லாம் வெற்றிலை தின்று கிடந்து
ப்ரஹ்மசர்யமும் விரக்தியும் தோற்ற பல்லை விளக்கி
சபையார் பெரியவர்கள் கோமுற்றவர் தண்டம் கொள்வார் என்று
தபோ வேஷத்தை யுடையரான சிவ த்விஜரும் கூட பயப்பட்டு
உணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாய்த்து

திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் படி —

சங்கு -என்று பரிகரத்துக்கும் கொத்துக்கும் உப லக்ஷணம்

சங்கிடுவான் என்றது குச்சி இடுவான் என்றுமாம்

தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –

தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று
சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –

யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று
பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று
பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய்
சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆயத்து என்ன

சததம் கீர்த்த யந்தோமாம்–நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே -என்றும்
அநவரதம் ஸ்நேஹத்தோடே உபாசிப்பவர்கள் என்றும் சொல்லப் படுபவர்கள்
விடிவோரே ஒருக்கால் சமாராதானம் பண்ணி
அல்லாத போது பேசாதே இருப்பார்களோ
இது விடிவுக்கு அடையாளம் அன்றே –
இது தான் பிரமாணமும் அன்றே -என்ன –

சாத்விகாரோடே தமோ அபி பூதரோடே வாசியற உணர்ந்தது பார் என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் (காவி)பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று போது வைகிற்று என்று
அஸூசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்(பிரியமாக போவான் சாத்விகன் -இவர்கள் பயத்தால் போகிறார்கள் )

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —

சிறு பதத் தூற்றத் துறையிலே ஒரு தபசி பரிசிலே ஏறி ஆற்றினுள்ளே புக்கு
காவேரி தேவிக்குச் சங்கு ஊதுகிறேன் என்று அங்கே ஊத-
பரிசிலே போகிற குதிரை மிதித்து அதில் ஏறின மனிச்சர் அடைய செத்துப் போச்சுது -என்று
எம்பார் அருளிச் செய்த வார்த்தை-

சங்கு என்று குச்சியை (சாவியை )சொல்லுகிறது -என்றுமாம்

வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்

(வேதம் அறிந்தவர்கள் அனுஷ்டானம் பிரமாணம் வேதமும் பிரமாணம் அடுத்தது
பெரிய ஜீயர் -இன்றும் -காண்கிறோமே -தங்கள் திருக்கோயில் என்று
திருமலையைச் சொன்னவாறு என்பாராம் பெரிய திருமலை நம்பி -)

சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்

தம பிரசுரர் லக்ஷணத்தையோ சத்வஸ் த்தரான நமக்குச் சொல்லுவது
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று சத்வஸ்த்தர் படியைச் சொல்ல வேண்டாவோ -என்ன

சத்வ ஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை என்கிறார்கள் –

நான் செய்தது என் என்ன

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-
ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான
பிரபன்ன அதிகாரிகள்
தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

இவ்வடையாளங் கூற, உள்ளுள்ளவள் கேட்டு,
“தோழிகாள்! ‘ஸததம் கீர்த்த யந்தோமாம்’ என்றும்,
‘தெரித்தெழுதி, வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றுமுள்ள பிரமாணங்களை மறந்தீர்களோ?
பரமை காந்திகளான பாகவதர்கள் ஒருகால் பகவதாராதநம் பண்ணி மற்றைப் போது கிடந்துறங்குவரென்று நினைத்தீர்களோ?
எப்போதும் அவர்கள் பகவதாராதநத்திலேயே ஊன்றியிருப்பர்களாதலால் அவர்களுடைய பணி விடிவுக்கு அடையாளமாகாது” என்ன;

மேல் அதற்கு உத்தரமாகச் சொல்லுகிறார்கள், எங்களை என்று தொடங்கி;

—————

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது
உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –

அதுக்கு உத்தரமாகச் சொல்லுகிறது மேல் –
எங்களை முன்னம் எழுப்புவான்-
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாச் ச –யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட
(வேதமும் பிரமாணம் என்று இவர்கள் செயல்களே முக்ய பிரமாணம்-)என்றும் –
மேலையார் செய்வனகள் -என்னுமது பிரமாணமாக நீ சொன்னாயே

சாத்விக அக்ரேசசரையாய் இருக்கிற நீ எங்களை எழுப்புவதாகச் சொல்லி வைத்து
அத்தை மறந்து கிடந்து உறங்குகிறாய் அன்றோ
தர்மஞ்ஜையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே என்கிறார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் –
எல்லாரையும் நா

———–

வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை –
கிருஷ்ணன் உடன் பழிகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –

வாய் பேசும்
ஹிருதயத்தில் இல்லாதது வாயாலே பேசலாமோ தான் –
யுக்தி மாத்ரமேயாய் அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை
நினைவும் சொல்லும் விபரீதமாய் இருக்கும்
கிருஷ்ணனோடு பழகிச் சேர்த்தியாய் இருக்கிற உனக்கு பொய் சொல்லுகை வம்போ –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்நங்காய் எழுந்திராய் –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி
ஸ்ரீ சூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

—————

நங்காய் –
பூரணை இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இறே –
சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

நங்காய் –
உன்னுடைய லாபத்துக்கு நாங்கள் வேண்டாத படியாய் இருந்ததே இறே –
எங்களை ஒழிய நீ நிரபேஷையாய் இருந்தாய் இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது -என்று இருந்தது எல்லாம் கண்டோம் இறே
சொல்லும் செயலும் சேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –
இரண்டும் சேர்ந்த இடத்தில் அன்றோ பூர்த்தி உள்ளது
அது இல்லாத இடத்தில் ஆதித்யர்கள் பக்கல் ஒவ்பசாரிகமாகச் சொல்லும் பகவத் சப்தம் போலே அன்றோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை

(பேச்சு மட்டும் இருந்து அனுஷ்டானம் இல்லா விடில் நாய் வால் போலே வீணாகுமே )

ஒரு காலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி – 7-4 )என்றதும் பொருள் இதுவோ

————–

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

———

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும்
இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை –
பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –

நாணாதாய்
நீ தான் எழுந்து இருக்க வேணுமோ –
நாம் பிற்பாடார் ஆனோமே என்று கிடந்த இடத்தே கிடந்து
சொன்ன படி செய்யப் பெற்றிலோமே என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
நீ இருந்த ஊரிலே பூசணியும் காயாதோ –
ஹ்ரீ ரேஷா ஹி மமாதுல-(ராமபிரானே ரிஷிகள் இடம் வெட்கப்பட்டாரே )-என்னுமவனோடே அன்றோ உனக்கு வாசனை
எங்களை லஜ்ஜிப்பிக்கத்தான் பெற்றோமோ –
நாட்டார் அளவோ உனக்கு நாக்கு

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு -எங்கள் குறையையும் தீராய்-
இப்படிச் சொல்லி வைத்துச் செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் கூட இன்றிக்கே இருப்பதே

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை(வெறும் வாய்ப்பந்தல் என்றபடி )

(தொட்டால் சுணை -அரிக்கும் சூடு சுரணை இல்லை -கொண்டு லஜ்ஜை இல்லை என்கிறாள்)

நாணாதாய் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு
நாணமும் இன்றிக்கே ஒழிவதே
இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என்பக்கல் சாபேஷராய் வருவது என்ன –

—————-

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன
உன் பேச்சின் இனிமை கேட்க
இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீருடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நாவுடையாய்
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என் என்ன –

நாவுடையாய்
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

நான் உங்களுக்குத் செய்ய வேண்டுவது என் என்ன

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது(ஆர்ஜவம் இல்லையே மனஸ் வாக்கு செயல் மூன்றும் ஒன்றாக இருக்காமல் )
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

————

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து
அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்
அல்லாதார்க்கு தோற்றாது
இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்
ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி —
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை –
ஆசைப்படப் பண்ணுமதுவும்
அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –
ஆங்கு மலரும் குவியும் என்கிற
திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் –
எப்போதும் உண்டு –
அது பெண்களுக்குத் தோற்றும் –
ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்
கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே –
இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,
‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை
உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க,
இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி
ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

—————————————————

(ஸ்வாபதேசம்)

ஒன்பதாம் பாட்டில் –
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் -என்கிறது
நம்மாழ்வாரை -அது எங்கனே என்னில் –

திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்னும் படியான சேஷத்வ பூர்த்தியை யுடையவராய் –
அவன் அடியராய் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்னும்படி
பாகவத ஸம்ருத்தியைக் காண்கையிலே-அபிவ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் –
அனயாப தேசத்திலும் -அடிச்சியோம் என்கையாலும் –

பின்னை கொல்-என்கிற ஒப்பனையாலும் –

சூட்டு நன் மாலைகள் -என்று தொடங்கி –
அடலாயர் தம் கொம்பினுக்கே -என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் விடை யடர்த்த வியாபாரத்தை பேசியும் –

பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலான -என்றும்
என்னை நெகிழ்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்றும் –
வேயின் மலி யுரை தோளி பின்னைக்கு மணாளனை -இத்யாதியாலும் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -என்றும் –
எருது ஏழ் தழி -என்றும் -சடையினார் -என்றும் -இத்யாதியாலே
பல படியாக அவள் புருஷகார வைபவத்தை ஆதரித்து –

மற்றும் எத்திறம் என்று பிறந்த வாற்றிலே கிருஷ்ண சேஷ்டிதங்களிலே ஈடுபட்டு

குரவை ஆய்ச்சியரிலே நண்ணி வணங்கி அனுபவித்தும்

எல்லாம் கண்ணன் -என்றும் –

நீராடப் போதுவீர்-என்றத்தை -கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -என்கையாலும் –

மந்தாதிகாரிகளை -என் நெஞ்சால் நோக்கிக் காணீர்-என்று உணர்த்தியும் –

சகோதரிகளை உயிராகத் தேடி -இசைமின் என்று போதிக்கையாலும்-

நீராட -என்றத்தை -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினன் -என்கையாலும் –

இதில் நாணாதாய் என்றத்தை -நாணும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்

நா உடையாய் என்றத்தை -என் நா -என்றும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்குடை நாவுடையேன் -என்கையாலே
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -என்கிறது நம்மாழ்வாரை –

இப்பாட்டில் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதையே
பங்கயக் கண்ணனையே -என்றும்-பங்கயக் கண்ணன் என்கோ-என்றும்
வீவில் சீரன் மலர்க கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி -என்றும் பேசினார் இறே –

—————————

தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குண பூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குண பூர்த்தி,

அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)

‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துற முன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக் கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

———————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —புள்ளின் வாய் கீண்டானை—

December 28, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில்-தானே வருகிறான்
என்று கிடக்கிறாள் ஒருத்தியை-எழுப்புகிறார்கள்-

(இதிலும் அடுத்த பாசுரத்தில்
போதரிக் கண்ணினாய் –ஞானம் -தனக்கு உஜ்ஜீவனம்
நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க
இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே
கள்ளம் தவிர்ந்து கலக்க வேண்டும் என்கிறார்
பாகவதர் கோஷ்ட்டியில் கலக்காமல் கண்ணனை அனுபவிக்காதே என்றவாறு –
ராவல் வர்ஸானா -சங்கேத்- ராதா தேவி பிறந்த இடம் என்பர் –
சங்கேத ஸ்தலம் -அதுவே இங்கு பாவைக்களம்
நன்னாளால் இதிலும் -முதல் பாட்டில் போல் )

தன் கண் அழகை நினைத்து –
இக் கண் அழகு உடைய நான் இருந்த இடத்தே எல்லாரும் வரும் அத்தனை அன்றோ
நானோ போவேன் என்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் —

மனத்துக்கு இனியானைப் பாடவும் என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை
அசல் திரு மாளிகையில் கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளை –
நம் அபராதம் தீர –
இவர்களுக்கு வார்த்தை சொல்வோம் என்று
பெண்காள் இங்கே ராம விருத்தாந்தம் சொன்னார் உண்டோ என்ன –

ராம விருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும்
ஸ்ரீ பாரதமும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்படச் சொன்னோம் -என்கிறார்கள் –
(இத் திருப் பாவையில் இல்லாததே இல்லையே )

(ராம் காட் காத்யாயனி கோயில் இன்றும் சேவிக்கலாம் கோபிகளுடைய -நோன்பு நடந்த இடம்

விடிந்தமை அடையாளம் -6-7-8-13-14-பாசுரங்களில் உண்டு -)

(அடியார்களுக்கு தன்னைக் காட்டாமல் மறைந்து இருப்பது பகவத் கள்ளத்தனம்
பகவானை தனியாக அனுபவிப்பது பாகவதர்களது கள்ளத்தனம் )

(போதரிக் கண்ணாய் இந்தப் பெண்ணின் விழிச் சொல் -ஞான சீர்மை -போதரிக் கண்ணி-பூவை வெல்லும் -உலாவும் மான் போன்ற கண் -பூவிலே வண்டு இருந்தால் போலே- அடுத்த பாசுரம் – நாவுடையாய் -பேச்சு வன்மை – வாக்கு வன்மை – ஆச்சார்ய வைலக்ஷண்யங்கள் இவை இரண்டும்)

இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தி-
தன் அபராதத்தை தீர உணர்ந்தாளாய்-
பெண்காள் இங்கும் ராம வ்ருத்தாந்தம் சொல்லி எழுப்பினி கோளோ-என்ன
ராம வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
ஸ்ரீ இராமாயண மஹா பாரதங்கள் இரண்டும் சொன்னோம் –
என்று கண் அழகியாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

இப் பாட்டில்-
நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில்
அவன் தானே வருகிறான் என்று
நிர்ப்பரராய் இருக்கும்வரை
எழுப்புகிறார்கள் –

பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்தனத்திலே
பிரவணர் ஆக்கும் படி சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எட்டாம் பாட்டில்
கீர்த்திமை பாடிப் போய் –
போதரிக் கண்ணினாய் –
பாவாய் –
கள்ளம் தவிர்ந்து
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்த நத்திலே
பிரவணராக்கும்படி சொல்லுகிறது
நம் கண் அழகு உண்டானால் தானே வருகிறான் -என்று
அவயவ சோபையை மதித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் அனுபவ பரிகாரமாக ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்த்தமாக
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

கண்ணபிரான் பிறந்து வளருமூரான் திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க
அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,
அவனை மனத்துக்கினியானென்பதும்
க்ருஷ்ண பக்தர்களுக்கு அஸஹ்யமாகையாலே ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.
உடனே சில பெரியார்கள் புகுந்து கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே யென்கிற தத்துவத்தை விளக்கி
ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள்.

———–

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பள்ளத்தில் மேயும் -இத்யாதி -பகாசுரனைப் பிளந்தபடி –

புள்ளின் வாய் கீண்டானை
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –
மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –
பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –

புள்ளின் வாய் கீண்டானை
இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –

இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை
(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )
கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-
அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு
அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –

கீழில் பாட்டிலும்
இப் பாட்டிலும் ராம விருத்தாந்தத்தைச் சொன்னால் –
ஒருகால் சொன்னதையே சொல்லா நின்றார்கள் என்று
நினைக்கக் கூடும் என்று
தங்கள் பாழியான கிருஷ்ண விருத்தாந்தத்தையும் கூட்டிச் சொல்கிறார்கள் –

தங்களுக்கு பள்ள மடையான கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லிற்றாகில் –
பின்னை ராம விருத்தாந்தம் என் என்னில்
தங்களோடு ஒரு கோவையான பிராட்டி பிரிவு பொறுக்க மாட்டாதவன்
விருத்தாந்தம் என்று சொல்கிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்த படி -(பிருந்தாவனம் 12 காடுகளில் ஓன்று இது நடந்த இடம் )
பள்ளத்தின் மேயும் –

(பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 
புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!)

இத் தலைக்கு இசைவே இறே வேண்டுவது –
விரோதி போக்குகை அவன் படி என்று இருக்கை

நம்முடைய அநீதிகளுக்கு ஈஸ்வரன் பண்ணும் அனுமதி
வைஷம்ய நைர் க்ருண்யத்தில் புகாதாப் போலே இவ் வனுமதி உபாயத்தில் புகாது –
இருவர்க்கும் இரண்டு அனுமதிகளும் ஸ்வரூபத்திலே கிடக்கும் அத்தனை –

புள்ளின் வாய் கீண்டானை –
ஸ்வ ஆஸ்ரிதருக்கு
ஸ்வ அனுபவ விரோதியான
காமாதி தோஷ நிவர்தகனாய்

————-

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும்
உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –

பொல்லா அரக்கனைக்
உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –

முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி
அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –
துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே

இத் தண்மையை பிராட்டியும் –
த்வன் நீச -என்றாள் இறே
(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )

பொல்லா அரக்கனை-
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே

பொல்லா அரக்கனை
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி
தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி

(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன்
என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )

அரக்கனை-
மாயா மிருகத்தைக் காட்டுவார் –
மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய்
ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

பொல்லா அரக்கனைக்
தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்

(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –

(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)

பிராட்டி -த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் -அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை

சீதாயாஸ் சரிதம் மஹத் -என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஸ்ரீ ராமாயணம் ஆனபடி என் என்னில் -(பவ்லஸ்ய வதம் என்னும் பெயரும் வால்மீகி சூட்டுகிறார் )
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –

——————

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக்
பொகடுமா போலே
தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

கிள்ளிக் களைந்தானைக்
வீர பத்னி யாகையாலே
கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –

திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே
ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான
அஹங்காரத்தை

அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும்
ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹந்காரத்துக்கு நன்மை யாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது –

அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

“கிள்ளிக் களைந்தானை”
என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.
ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.

ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் -தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில்

புள்ளின் வாய் கீண்டானை -இனிய வாய் ஜடாயுவைக் கொன்றவன் -மந்த்ரம் சொன்னதும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

————

கீர்த்திமை –
எதிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –
உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –
ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்
தங்கை அழகிலே கண் கலங்கினாள்
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

கீர்த்திமை
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய -என்னும்படியான வீர்யம் –
சத்ருக்களும் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும் வீரம் –

க இதி ப்ரஹ்மணோ நாம -என்று பரரானவர்கள் (தஸ்மாத் கேசவ நாம என்று ருத்ரன் பார்வதிக்குச் சொன்னது )பகவத் பரத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக்
கொடுக்குமா போலே ஆத்ம அபஹாரிகள் எதிர் அம்பு கோக்கை தவிர்ந்து –
நமோ நாராயணாய -என்று அவனுடைய சேஷத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக் கொடுக்குமா போலே

(ராவணன் பெருமாள் இடம் மேல் எழுத்து -சிவன் கேசவன் இடம் மேல் எழுத்து -நாம் நாராயணன் இடம் மேல் எழுத்து)

ரஞ்ச நீயஸ்ய
தோளாலே நெருக்குண்ட பிராட்டிமார் சொல்லுமா போலே சொல்லுவதே –
உகவாதார் க்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்கு விட ஒண்ணாமைக்குச் சொல்ல வேணுமோ –

ராவணன் பெருமாள் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி ஸுசீல்யத்துக்கு இலக்கானான்
தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –

கர்ம ஞான பக்திகள் உபாயமாம் இடத்தில் இவனும் கூட வேணும் -(பிரயத்தனம் சேதனன் செய்ய அவனே பல பிரதன் )
பரம சேதனன் இவன் தானே உபாயமாம் இடத்தில் -பாபிய சோ பீத்யாதி –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ -என்று
ஞான சக்தி கிருபையே சஹகாரம் ஆகையாலே -அவற்றை அனுசந்தித்து
மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள் -(வாழும் சோம்பாராக கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும் )

(பாபிய சோ பீத்யாதி (சரணாகத சொன்ன என்னை நீ தள்ளுவது சரியில்லை ) –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ
கர்மம் ஞானம் உதவும் பக்திக்குப் பத்தி உனது ஞானம் சக்தியால் வரும் கருணையே எனது பாபங்களை வெல்லும் -கூரத்தாழ்வான்)

————–

பாடிப் போய் –
இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –
வழிக்கு தாரகம் இறே திரு நாமம்
தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –

————

கீர்த்திமை பாடிப்
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று
எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

எதிர் அம்பு கோத்த சம்சாரிகள் –
நமோ நாராயணாய -என்று
தங்களுடைய தோல்விக்கும்
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும்
மேல் எழுத்து இட்டுக் கொடுத்தால் போலே

ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகிலே கலங்கினாள் –
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

விரஹ துர்ப் பலைகள் ஆனவர்கள் போன படி என் என்னில்

பாடிப் போய்
பாட்டே தாரகமாகப் போனார்கள் –
கால் நடை தருகைக்கு தாரகம் திரு நாமம் இறே
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம்
சாஷாத் பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் —
தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் -6-)-என்னக் கடவது இறே

பாடிப் போய் –
பகவதோ பலேன -என்கிறபடியே

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
நாம் சென்று எழுப்பிக் கொண்டு போக வேண்டும் படி பாலைகளான பெண்கள்
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டு
கிருஷ்ணன் பெண்களை மெய்க் காட்டுக் கொள்ளும் சங்கேத ஸ்தலத்தே ஏறப் போனார்கள் –

பாடிப் போய்
இவர்களுக்குக் கால் நடை தருகைக்கு மிடுக்குக் கால் (காலுக்கு மிடுக்கு கொடுக்கும் உபகரணம் )கொண்டு போகை
ஸூ குமாரரான பிள்ளைகள் உண்டு உண்டு வழி போய் என்னுமா போலே —
பரஸ்பரம் தத் குணவாத ஸீது பீயூஷா நிர்யாபி ததேஹ யாத்ரா -(கல்யாண குணாம்ருதம் சொல்லிக் கொண்டே போகும் )
பாதேயம் இத்யாதி –
போழ்து போக உள்ள நிற்கும் புன்மை இல்லாதவர்கள் இவர்கள் –
அவர்களுக்கு வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் அன்றோ -(9-1-8-)இவர்களுக்குச் சொல்ல வேணுமோ –

(வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-)

கீர்த்திமை பாடிப் போய்-
கல்யாண குணங்களை
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
அதுவே தாரகமாய் போய் –

விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு
வழி கடந்தன ரென்றவாறு
“பாதேயம் புண்டரி காக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்” என்றது முணர்க. (பாதேயம் = வழிச்சோறு.)

——

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும்
உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் –
சங்கேத ஸ்தலம் புக்கார்கள் –
அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

பாவைக் களம் என்று –
இந்திராணியை- ரதியை -நோற்கைக்கு பெண்கள் திரளும் இடம் –
திரளும் இடத்தை
நெற் களம்
போர்க்களம் என்னுமா போலே

பாலைகள் ஆகையால் அவர்கள் காலம் அறியாமே போகக் கூடும் –
அறிந்த நாம் அகாலத்தில் போக ஒண்ணாது இறே
சுக்ரன் உதித்தான் ஆகில் பாருங்கோள் என்ன

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க் காட்டுக் கொள்ளும் இடம் (attendance)புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக் களம்-
போர்க் களம் -நெற் களம் -என்பாரைப் போலே

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக் களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக் காலத்திலே போக ஒண்ணாது –
வெள்ளி எழுந்ததோ பாருங்கோள் என்ன –

பிள்ளைகள் எல்லோரும் –
நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்-
அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் –
அதாவது காலஷேப கூடம்

———–

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
வெள்ளி உச்சிப் பட்டது
வியாழம் அஸ்தமித்தது
உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இறே இருப்பது என்ன
அதுவே யன்றி –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
சுக்ர பகவானும் மத்யகதனானான்-
ப்ரஹஸ்பதியும் அஸ்தமித்தான் –

நீங்களும் அபி நிவிஷ்டைகள் ஆகையால் நக்ஷத்ர சாத்ருஸ்யத்தைக் கொண்டு
நக்ஷத்ரம் எல்லாம் சுக்ர ப்ருஹஸ்பதிகளாய் இறே தோற்றுவது-
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே (திருவாய் -4-4-4 ) என்னுமவர்கள் அன்றோ –
ஆகையால் இது விடிவுக்கு உடல் அன்று
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

நாங்கள் இத்தனை பேர் திரண்டு வந்தது அடையாளம் அன்றோ என்கிறார்கள் –

பிரிந்தார் திரளில் அன்றோ திரட்சி யாவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்றும் ஒரு காலும் பிரிகிலேன் என்றும் திரியுமவர்கள் அன்றோ நீங்கள்
உங்கள் திரட்சி விடிவுக்கு உடல் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
நீ நினைக்கிற அளவு தப்பி வெள்ளி யுச்சிப் பட்டு
வியாழனும் அஸ்தமித்தது -என்ன

நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்(திருவாதிரை பெரிய நக்ஷத்ரம் -சூரியனும் நக்ஷத்ரம் என்பர் -)

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன –

நீங்கள் பிரியில் அன்றோ திரள வேண்டுவது -மற்ற அடையாளம் உண்டோ என்ன

நீங்கள் “பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று திரியுமவர்களாகையால்
உங்கள் திரட்சி பொழுது விடிவுக்கு அடையாளமாகமாட்டாது; வேறுண்டாகிற் சொல்லுமின்’ என்ன;

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்-
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்
அஞ்ஞானம் தலை மடிந்தது –

—————

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே
இரை தேடி சிலம்பி போயிற்றன –

புள்ளும் சிலம்பின காண்
கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –
அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று
இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –

திர்யக்குகளினுடைய விருத்தாந்தம் கொண்டோ கால நியதி பண்ணுவது
என்று அவள் பேசாதே கிடந்தாள்-

நாங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு எல்லாம் விபரீதம் சொல்லுகிறது
உன் கண் அழகை நினைத்து இறே

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன
பண்டு ஒரு கால் புள்ளும் சிலம்பின் காண் -6-பாசுரத்தில் -என்றது –
அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று–
இப்போது பறந்து போகத் தொடங்கிற்று -என்கை –

போதரிக் கண்ணினாய்
உங்கள் வார்த்தை பழகிறிலன்-என்று பேசாதே கிடக்க
இக் கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –

என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ

புள்ளும் சிலம்பின காண் –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –

————

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும்
மான் போலேயும்
இருந்துள்ள கண்
அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்
பூவோடு சீ பாறு என்னும் கண் என்னவுமாம் –

போதரிக் கண்ணினாய்-
உபாஸ்யம் இருந்த இடத்தில் உபாசகன் வரும் அத்தனை அன்றோ –
அஸி தேஷணை–புண்டரீகாக்ஷன் இருந்த இடத்திலே போகக் கடவளோ-என்கிறார்கள் –

நெடும் கண் இள மான் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் (6-7)-என்று
அவனுடைய விபூதியும் இவள் கண்ணில் பரப்பில் ஒரு மூலைக்கும் போராது என்றது இறே –

போது அரிக் கண்ணி
1-பூவும் மானும் போன்ற கண் –
2-பூவில் படிந்த வண்டு போன்ற கண் என்னவுமாம் –
3-பூவோடு சீறு பாறு என்ற கண் என்னவுமாம்
4-உலாவுகின்ற மான் போலே இருக்கிற கண் என்னவுமாம் –
5-அரி என்று -மான் -வண்டு -சத்ரு -என்னக் கடவது இறே

போது அரி
பூவும் மானும் போன்ற கண்
வண்டு-பூவிலே வண்டு இருந்தால் போலே என்றுமாம் –
பூவோடு சீறு பாறு என்றுமாம்–
அஸி தேஷ்ணை யாகையாலே புண்டரீ காக்ஷன் பக்கல் போக வேணுமோ -என்னும்

தான் – நெடும் கண் இள மான் –
அவன் அனைத்துலகமுடைய அரவிந்த லோசனன் –
அவனும் அவன் விபூதியும் (இவள் )கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-

(நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10)

போதரிக் கண்ணினாய் -இத்யாதி
இக் கண்ணாலே அவனைக் குமிழ் நீரூட்டி
அவன் கண்ணிலே நாம் குமிழ் நீருண்ணப் பாராய் -என்கை –

போதரிக் கண்ணினாய்-
ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய்
சாராஹ்ராஹியான
ஞானத்தை உடையவரே –

இந்த ஸம்போதனைக்கு நால் வகைப்பொருள்கள் கூற இடமுண்டு; –
போது – உலாவுகின்ற, அரி கண்ணினாய் – மானினுடைய கண் போன்ற கண்ணையுடையவளே! என்பது ஒரு பொருள்;
(பல பொருளொரு சொல்லாகிய ஹரி என்ற வட சொல், அரி எனத் திரிந்தது.)

போது – என்று புஷ்பமாய், குவளைப் பூவையும் மான் கண்ணையுமொத்த கண்ணை யுடையவளே! என்கை இரண்டாம் பொருள்.

அரி என்று வண்டாய் பூவிற்படிந்த வண்டு போன்ற கண்ணுடையவளே!’ என்கை மூன்றாம் பொருள்.

அரி என்று சத்ருவாய், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண்ணழகுடையவளே! என்கை நான்காம் பொருள்.

———–

குள்ளக் குளிரக் –
ஆதித்யத்து நீர் கொதிப்பதற்கு முன்னே –

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதுக்கு முன்னே ஆழ முழுகினாலும்
விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்கள்

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே புறப்பட்டு –
பெண்களும் புறப்பட்டு நீர் வெதும்புவதற்கு முன்னே என்னவுமாம்

———-

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே
நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே

குடைந்து நீராடாதே
சரயூமவகாஹதே-என்னுமா போலே
(பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –
கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –
தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –
அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )
கிருஷ்ண விரஹ தாபம் அற நீராடப் போராதே-

1-நமக்குச் செல்லும் கிருஷ்ண விரஹ தாபம் சமிக்கைக்கும் –
2-இனி ஒருக்காலும் கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களை அவகாஹித்து அனுபவிக்கப் போராதே –

உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் போராதே
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே நாங்கள்-
உன்னுடைய ஸுந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கனம் அன்றோ

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்

குள்ளக் குளிரக் –
அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாய் போம்படி –

குடைந்து –
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து

நீராடாதே-
பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

———–

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து
அவன் கண்ணாலே குமிழி நீர் உண்ணப் பண்ணாதே
நெடுங்கண் இள மான் இவள்
அணைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை
மோந்து கொடு கிடக்கிறாயோ
விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

பள்ளிக் கிடத்தியோ
நாமும் அவனுமாய் அவன் முழுக்கூட்ட அவனோடே ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயக் கடவ –
அத்தை விட்டு –
அவன் ஒருக்கால் கிடந்த படுக்கை என்று அத்தை மோந்து கொண்டு கிடக்கிறாயோ —
தவாஙகே சமு பாவிசம்-
(சீதா வார்த்தை -ஜலக்ரீடை பண்ணி உனது மடியில் படுத்து இருந்தேனே -என்று நினைத்து வருந்திய இடம் )
பார்த்த பார்த்த இடம் எங்கும் விளைந்து கிடவா நிற்க உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரைப் போலே

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்க என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி (உஞ்ச விருத்தி செய்து )ஜீவிக்கிறாயோ

——–

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ –

பாவாய் நீ
கிருஷ்ணனுடைய கண்ணுக்கு இலக்காம் படியான நிருபாதிக ஸ்திரீத்வத்தை யுடைய நீ
தனிக்கிடை கிடக்க வில்லையோ

பள்ளிக் கிடத்தியோ –
தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

பாவாய் நீ –
தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ

————-

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து
அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து
படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –

நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இறே

நன்னாளால்
காலம் பரிணாமி -என்னும் இடம் அறி கிலையோ-
அநந்தரம்
வ்யோஸ்யா ஹயதி வர்த்ததே -என்று சோகிக்கும் படி யன்றோ இருப்பது
(சீதா பிரிந்தாளே –இவை எல்லாம் கவலை இல்லை –
பிரிந்த பத்து மாதங்களை மீண்டும் பெற முடியாதே என்று சோகித்த ராமன் வார்த்தை )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளவர்களும் ஆறி இரா நின்றார்களோ –

அன்றிக்கே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்கிற நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ -ஆறி இருக்கிறது என்

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந் நாளிலே-
இந் நாலு நாளும் போனவாறே பெண்களும் கிருஷ்ணனும் என்று புகுகிறார்கள் கிடாய்
இந் நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள் –

ஆண்டாள் திரு ஏகாதசி பட்டினி விட்டு பட்டரை தீர்த்தம் தாரும் என்ன–
இப் பெரிய திரு நாளிலே இது ஒரு திரு ஏகாதசி
எங்கனே தேடி எடுத்துக் கொண்டி கோள்-என்று அருளிச் செய்தார்

நன்னாளால்-
சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –

———-

கள்ளந் தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண செஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை
அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற
ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்
சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –
குற்றம் நின்றே போம் இத்தனை –

கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்-

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்
கள்ளமாவது (அடியார்கள் உடன் சேராமல் )தனியே கிருஷ்ணன் குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை –
அத்தைத் தவிர்ந்து எங்களோடு கலந்து

கள்ளம் தவிர்ந்து
அவனோடே கலந்து யுடம்பு காண உகக்குமவர்கள் அன்றோ நாங்கள் –
எங்களுக்கு மறைக்கிறது என்
அந்த ஆத்ம அபஹாரத்தைத் தவிர்ந்து எங்களோடு கலக்கப் பார்

சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி
பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்
அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

ஆன் பின்பு எங்களுடைய குற்றம் போல் அன்று காண்
அவனோடே கலந்த உடம்பைக் காட்டாத உன்னுடைய குற்றம் –

கள்ளம் தவிர்ந்து கலந்து -குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -பாவாய் நீ நன்னாளால் –
பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம் –

கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
ததீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு

என்னுடை நாயகனே (5-4)-என்னும்படியே ஸ்வாமித்வத்தைச் சொல்லி
சேஷ பூதனுக்கு சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ளலாம்
சேஷிக்குத் தன் சேஷித்வத்தை அபஹரித்தால் க்ஷமை கொள்ளுகைக்குப் பொறுத்தோம் என்பாரும் இல்லையே
குற்றம் நின்றே போம் அத்தனை(உள்ளே இருப்பவள் தானே சேஷி இவர்களுக்கு )

(எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் -5- 4-3 –)

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை-
தஸ்ய உபவந ஷண்டேஷூ -இத்யாதி –

(மந்தாகினியில் ஜ க்ரீடை செய்து பெருமாள் மடியில் சீதை சாய்ந்து இருந்தது போல் நாங்களும் உன் மடியில் கிடைக்க வேண்டாமோ)

கள்ளந்தவிர்ந்து –
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற-களவை விட்டு

கலந்து –
எங்களோடு ஒரு நீராக கலந்து
எங்கள் சத்தையை உண்டாக்காய்-

இராமபிரான் தந்தை சொற்கொண்டு வநவாஸஞ் சென்ற பின்னர் நந்திக்ராமத்தில் ராஜ்ய காரியங்களை
நிர்வஹித்துப் போந்த பரதாழ்வான், நாம் பொழுது விடிந்த பின்னர் ஸரயுவில் முழுக்கிடச் சென்றால்
நம்மைக் கண்ணுறுவாரனைவரும் “அண்ணரைக் காடேறத் துரத்தின பாவி போகின்றான்” என
விரல் சுடுக்கி வைவர் கொல், என்றஞ்சி அபரராத்ரியிற்றானே சரயுவிற்சென்று நீராடி வருவதுபோல்,
இவ்வாய்ச்சிகளும் சிலர் கண்பட யமுனையிற்சென்று நீராடில் ‘உபாயாநுஷ்டாநம் பண்ணி
ஸ்வரூப நிறத்தைக் குலைத்துக்கொள்ளும் பாவிகள் போகின்றனர்’ என்று கண்டாரனை வரும் வைவர் என அச்சமுற்று,
ஒருவர் கண்ணிலும் படாதபடி நீராடி வரவேணுமென்பார்,
“குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ?” எனப் பொடிகின்றனர்.

——————————————

கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய் (சாமகானம்) பாடுகையே பிரயோஜனம்.

————–

ஸ்வாபதேசம்.)

எட்டாம் பாட்டிலே –
போதரிக் கண்ணினாய் -என்கிறது
திருப் பாண் ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

தொண்டர் அடிப் பொடியாரோபாதி –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
எண் கண்ணின் உள்ளன -என்றும் –
கொண்டல் வண்ணன் கோவலனாய் என்று தொடங்கி -எண் அமுதினைக் கண்ட கண்கள் என்கையாலே
போதரிக் கண்ணினாய் -என்கிறது திருப் பாண் ஆழ்வாரை –

மெய்ம்மையை மிக உணர்ந்து -என்று ததீய சேஷத்வ பர்யந்தமான ஞானம் இறே ஞானமாவது

ததீயருக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் அனுபவம் இறே இவரது –

ஸ்த்ரீத்வ பாவனையில் யுண்டான பக்தி பத்தும் பத்தாக
அடி தொடங்கி முடி அளவுமாய் மேலாய் இருக்கும் –

இப் பாட்டில்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்றத்தை –
இவரும் -சதிர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்
தலை பத்து உத்திர ஓட்டியோர் வெங்கணை உய்த்தவன் -என்றார் இறே –

———

இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.

(போது அரிக் கண்ணினாய்!)
புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.
“துளபத் தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி”
“தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.

பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதி வ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.
இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொரு திருப்பதி யெம்பெருமானை
நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக் கொள்ளத்தக்கது.
திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த,
அதைக்கேட்ட பெரிய கேள்வி ஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்;
அந்த ஏற்றம் நம் பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்)
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.
தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களே யாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ?

(கள்ளந் தவிர்ந்து)
‘சூதனாய்க் கள்வனாகி’ என்றும்;
‘கள்ளமே காதல் செய்து’ என்றும்;
‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.
இவரது சரிதையிலும் பொன் வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.
அது தவிர்ந்து பகவத் பாகவத கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.

பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால்
அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.

(குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து
சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.

புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும்
கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில்
‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று
கண்ணபிரானுடைய கீர்த்திமையையும்,
திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று
இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.

‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.

———————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கனைத்திளம் கற்று எருமை—

December 27, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரியாமல்-இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன்
தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்-இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

ஆண்டாளுக்கும்
ஆழ்வாருக்கும்
தசாரதாதிகளுக்கும் –
குகாதிகளுக்கும்
சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் –

(பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஸ்ரீ ராமாவதாரம் -சார்ங்கம் உதைத்த 4- அவ்யக்தம்
இங்கு தென் இலங்கை கோமானைச் பெற்றவன் -பெயர் சொல்லாமலே -மேல் –22-தென் இலங்கை செற்றான் போற்றி
ஓங்கி -உம்பர் கோமான் –17-உலகம் அளந்தாய் போற்றி –
பத்து பத்தாக பிரித்து பார்த்து ஒவ் ஒன்றிலும் ஒரு தடவை இரண்டு அனுபவம் –
மத் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -திரு நெடும் தாண்டகம் மூன்று பத்தாக பிரித்து அனுபவிப்பது போல் இங்கும்
அனந்தலோ –9- பெரும் துயில் -10- இங்கு பேர் உறக்கம் -அவளைப் போல் கும்பகர்ணனை வென்று வாங்காமல் –
எல்லாமே சரணாகதி -ஸூவ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிவது -அவனே கொள்ளுவது பேர் உறக்கம் –
காம்பற தலை சிறைத்து -பரகத ஸ்வீ காரம் -தன்னேற்றம்
கீழே செல்வப் பெண்டாட்டி-பொற் கொடி யானவள் கோவலனைப் பற்றி அங்கு –
இங்கு நற் செல்வன் தங்காய் -அவன் உகப்புக்குக்காக செய்யும் கைங்கர்யமாகிய நற் செல்வம் –
அவனாகவே கைக் கொண்ட இவளது ஏற்றம்
கீழே செல்வம் -இங்கு நல் செல்வம் –
அது ஆஜ்ஜா கர்ம யோக ரூபா பகவத் ஆராதனம் –
இது அநு ஜ்ஜா விதி ப்ரேரித கைங்கர்யம் )

கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே இவனைக் காக்கைக்கு
இவனைப் பிரியாதே போகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –
(இளைய பெருமாளைப் போலவும் நம்பி மூத்த பிரானைப் போலவும் உடையவரைப் போலவும்
உள்ள நற் செல்வன் -இப்பாசுரம் ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்களே )

(ஸ்ரீ விபீஷணனுக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் கிடைத்தது போல் திரிஜடை –இவளே நற் செல்வன் தங்காய் -பிராட்டிக்கு கைங்கர்யம்
நற் செல்வன் ஸ்ரீ விபீஷணன் உடைய தங்கை தாரம் மகள் மூவரும் பிராட்டிக்கு கைங்கர்யம் உண்டு

(திரிஜடை -விபீஷணன் உடன் பிறந்தவள்
அநலா -பெண்
சரபா -மனைவி -மூவரையும் பிராட்டிக்கு கைங்கர்யம் செய்ய வைத்து அன்றோ வந்தான் )

ஸ்ரீ ராமாவதா பிரஸ்தாபம் இதில் -மனத்துக்கு இனியன் -பெயர் சூட்டுகிறாள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணுக்குப் பட்டம்
திரிவிக்ரமன் வியக்தமாக திருப்பாவையில் உண்டே)

(அனைத்து இல்லத்தாரும் அறிந்து – உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாரணற்கு ஆளாயினரே)

(மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)

(விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே -)

(அனந்தல்
ஆற்ற அனந்தல்- பெரும் துயில் -உபாயத்தில் விஸ்வாஸம் -பெரும் துயில் -மார்பில் கை வைத்து துயில்-பரகத ஸ்வீ காரம் -அங்கு கைங்கர்ய பிரஸ்தாபம் இல்லை
பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள் -)

கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே —
ஸ்ரீ நந்தகோபர் வ்ருத்தராகையாலும் –
நம்பி மூத்த பிரான் விலக்க மாட்டாதே அவன் வழியே போகையாலும் –
இவனைக் காக்கைக்கு இளைய பெருமாளை போலே இவனைப் பிரியாதே போகிறான்
ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –

(பரதனும் தம்பி சத்ருக்கனனும் -இலக்குவனோடு மைதிலியும் -அங்கே சேர்த்தால் போல் இங்கும் பிரியாதே -பதம்
இளைய பெருமாள் ஊர்மிளை உடன் அக்னி கார்யம் செய்த போது இவனும் பால் கறப்பான்)

இப் பாடலில்-பாகவத அபிமான நிஷ்டரை-எழுப்புகிறார்கள்

ஏழாம் பாட்டில்
நற் செல்வன் தங்காய் –
மனத்துக்கு இனியானைப் பாடவும்
பகவத் ப்ரத்யா சந்தரோடு ஆசத்தி யுடையாரையும் மநோபி ரமமான நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் தத் யுக்தி பரராக்கும்படி சொல்லுகிறது
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேசியர் என்றும்
அவர்களடியாக பகவத் ஸமாச்ரயணீயம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் -என்கிறது –

பகவத் ப்ரத்யாஸன்னரோடு ஆசத்தி யுடையாரையும் மநோ ராபிமான திரு நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் ததுக்கி பரராம் படி சொல்லுகிறது

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிற

நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு
திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல்
என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து
அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச்
சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–

———

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே-முலை கடுத்து கதறுகை –

கனைத்து
உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே –
ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –

ப்ராப்த காலத்திலேயே கறப்பார் இல்லாமையாலே முலை கடுத்து –
இவ் வாசலிலே கன்று காலியாய் நாம் பட்டதோ என்று குமுறி
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே
காற்கடைக் கொள்ளுவான் என் என்னில்

இளைய பெருமாளுக்கு அக்னி காரியத்தில் அந்வயம் உண்டாம் அன்று
இவனுக்கு இவற்றினுடைய ரக்ஷணத்தில் அந்வயம் உள்ளது –

இளைய பெருமாளுக்கு பெருமாளை பிரிய மாட்டாமையாலே –
இவன் கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே –
(சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே )
இப்படி பகவத் விஷயத்தில் ப்ரேமத்தாலே பிரிய அவசரம் இல்லாமை –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை –

விடுகை யாவது -அல்லது –
ஆலஸ்யத்தாலே(சோம்பலால் ) விடுமது விடுகை என்று –
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும் படியே –

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் தொழில் எனக்கு -நான்முகன் திருவந்தாதி–85–

ஸ்வாசார்யன் தனக்கும்
ஸ்வ சந்தானத்துக்கும்
பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –

கனைத்தல் – குமுறுதல்;
இடைவீடின்றித் தானஞ் செய்தலையே தொழிலாக வுடைய உதார சிகாமணிகள் ஒரு கணப் பொழுது
கொடாதொழியில் மனந்தளும்புமாறு போலவும்,
எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாதொழியில்
“ருணம் ப்ரவ் ருத்தமிவ மே ஹ்ருதயாந்நாபஸர்ப்பதி” என்று திருவுள்ளந் தளும்புமாறு போலவும்,
பசுக்கள் கிரமமான காலத்திற் கறக்கப் பெறாதொழியில் முலைக் கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பென்க.

————

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே-பாடாற்றாமை –

இளம் கற்று எருமை
இளம் கன்றான எருமை என்னுதல்-
இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –
இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி

கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே-(7-1) என்னக் கடவது இறே
(அங்கு கன்று தாயை உள்ளினது
இங்கு எருமை கன்றை உள்ளினது )

பால சந்தானமுடைய சிஷ்யர் –

————-

கன்றுக்கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால்-அவை படும் பாட்டை-
நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை

கன்றுக்கிரங்கி
தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று
அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –

அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை –
நாங்கள் உன் வாசலிலே வந்து நின்று புகுரப் பெறாமையாலே படா நின்றோம்

எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

——————

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர –
நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே
பால் மாறாதே சொரிகை

இவன் எருமை கறவாமை ஒழிவது என் என்னில்
இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில்
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே-
பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-

நினைத்து
மனஸா சிந்த யத்தரிம் -என்று (கஜேந்திரன்)நினைத்த அநந்தரம் –
த்வராயை நம -என்னும் படி திரு உள்ளம் அங்கே ப்ரவணம் ஆனால் போலே
(கஜேந்திர வரதன் நிலை போல் அன்றோ இந்த எருமை பாடு )

நினைத்து முலை வழியே நின்று பால் சோர–
கன்றை அகல கட்டி வைப்பார்கள் -அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே –
கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு
கை வழியும் அன்றிக்கே –
கன்றின் வாய் வழியும் அன்றிக்கே
முலை வழியே பால் சொரியா நிற்கும் –

ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு
ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாய்க் கொண்டு பால் சொரியா நிற்கும்–நினைவு மாறில் இறே பால் சொரிவது மாறும்

—-

நின்று பால் சோர
மேகங்களுக்கு கடலிலே புக்கு முகந்து கொண்டு வர்ஷிக்க வேணும் —
அவ் வருத்தமும் இவற்றுக்கு இல்லை –
நினைவு ஊற்றாக சொரிகிற பால் ஆகையால் –
(அவன் சங்கல்பத்தாலே அனைத்துமே பண்ணுமா போல் )
நினைவு மாறாமையாலே –
திரு மலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே செல்லும்

பால் சோர-
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே –
அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போலே

(பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா-ஸ்ரீ பகவத்கீதை–10-1-

ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந்தோளுடையாய்,
ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான,
தே அஹம்-உனக்கு நான்,
ஹிதகாம்யயா-உன் நலம் கருதி,
யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ,
மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை,
ஸ்ருணு-கேள்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்;
நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே )

முலை வழியே
கன்றின் வாய் வழியாதல் -கறக்கிறார் கை வழியாதல் அன்றிக்கே முலை வழியே

நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க -ஆற்றாமையால்-விம்மலாலே- பகவத் குணங்களைச் சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் தான் இந்த சிறப்பு உள்ளது)

பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக
பகவத் குணங்கள் சுரக்க –

“பகவத் விஷயப் பொருள் கூற வேணும்” என்று ஒருவர் கேளாதொழியினும் கற்றுணர்ந்த ரஸிகர்
தமது செல்லாமையாலே தாமே பகவத் விஷயார்த்தங்களை எடுத்துரைக்குமாறு போலவும்,

அர்ஜுநன் கேளாதேயிருக்கக் கண்ணபிரான் கீதையில்
“பூய ஏவ மஹா பாஹோ! ச்ருணு மே பரமம் வச:” என்று கூறத்தொடங்கினாற்போலவு மாயிற்றுக் கறவைகளின்படி.

—————-

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் -அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால்-
சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை

நனைத்தில்லம் சேறாக்கும்
பால் வெள்ளம் இருக்கையாலும் –
எருமைகள் துகைக்கையாலும் சேறாய்க் கிடக்கும்-

இல்லம் சேறாக்கும்-
எத்தனையேனும் ஏறிப் பாயாதே மேடும் பால் வெள்ளத்தால் சேறான படி
கடலை அகழ் செய்து கொண்டு கிடந்தால்-
ஓடம் ஏறிப் புகுதல் –
சேற்றுக்கு அளற்றுப் பொடி இட்டுப் புகுதல் செய்ய வேண்டும் படி இருக்கை –

ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை
சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

(மேல் பனி வெள்ளம்
கீழே பால் வெள்ளம்
நடுவில் மால் வெள்ளம்
உபய காவேரி வெள்ளம் -குண வெள்ளம் மூன்றையும் தவிர
பெரிய பெருமாள் திருக் கண்கள் கருணை வெள்ளம் தடுமாறாமல் இருக்கவே திரு மணத் தூண்கள்
இவர்கள் இவளது வாசல் கடை பற்றி -பாகவதர் பற்றி உஜ்ஜீவனம் நிச்சயம் அன்றோ )

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-அவற்றின் காலிலே துகை யுண்டு சேறாகும்-சேறாய் புகுர ஒண்கிறது இல்லை என்ன
அளற்றுப் பொடியிட்டுப் புகுருங்கோள் -அவ்வளவு இன்றிக்கே மேலே மேலே வெள்ளம் இட்டதாகில் ஓடம் ஏறிப் புகுருங்கோள் –

——————-

நற்செல்வன் –
தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –
அதாகிறது –
கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-
லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-
கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

லஷ்மி சம்பன்ன -என்றது
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி
தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

நற் செல்வன்-
கர்மத்தாலே யாதல் –
தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்
பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே
அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –

லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சம்பத் இறே
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

நதேவ லோகாக்ரமணம் -என்னும் படியே
ப்ராப்ய விரோதிகளில் நசை அற்ற படியால் தோற்றி மாயும் சம்பத் அன்றியிலே இருக்கை –

லஷ்மீ சம்பன்ன –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ
விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –
இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –

நற் செல்வன்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து

சம்பன்ன -(அனந்தம் பிரதம யுகம் தோறும் உண்டே )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -(6-7)
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவஸ்ரீ யாலே
ஜகத்துக்கள் அடைய வைஷ்ணவத்வம் உண்டாம் படி இருக்கை –

(ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குரு கூர்ச் சட கோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11)

சவ்மித்ரே புங்ஷ்வ போகாம் சத்வம் –
யத் விநா பரதம் த்வாம் சத்ருக்நம் சாபி மாநந-(உங்களை விட்டு நான் இல்லையே பெருமாள் )

ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய

————

தங்காய்-
குணத்துக்கு தமையனில்-தன்னேற்றமுடையவள் -என்கை –

தங்காய்-
உங்களுக்கு ரஷ்ய வர்க்கத்தை நோக்காமை ஜென்ம சித்தம் இறே

நற் செல்வன் தங்காய் –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்று
தமையனுடைய தண்மை சொல்ல வேண்டாத ஏற்றம் உண்டு இறே உனக்கு –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானிலும்
அவன் மகளான த்ரிஜடை
பிராட்டிக்கு அடிமை செய்தது போலே
கிருஷ்ணனை நோக்கின தமையினில் காட்டிலும் எங்களை நோக்க வேண்டாவோ
கிருஷ்ணன் ரஷ்யமான போதே நாங்களும் அந்தர் பூதைகள் அன்றோ –

தங்காய்
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னுமா போலே
குண ஹானிக்கு ராவணனைப் போலே குணத்துக்கு அவனில் இவளுக்குத் தன்னேற்றம்-
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு மகளான த்ரிஜடை போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே இவளுக்கு –
அப்படியே இங்கு தமையன் கிருஷ்ணனுக்கு துணையாக திரிய இவள் நப்பின்னைப் பிராட்டிக்கு அடிமை செய்யப் பிறந்தவள்

—————

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட –
கீழ் பால் வெள்ளம் இட –
நடுவு மால் வெள்ளம் இட
நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில்
தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –

இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்
என்று பேசாதே கிடக்க

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
ஆழி மழைக் கண்ணனில் வர்ஷிக்க நியமிக்கையாலே-மேல் வர்ஷமாக-
கீழ் பால் வெள்ளம் இட நின்று அலைகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே தண்டியத்தைப் பற்றிக் கொண்டு நின்றோம் –

ப்ராப்ய பூமியில் ஐஸ்வர்யம் இங்கே கை புகுரச் செய்தே
அவ் வருகே போகத் தேடுகிறது எங்களுடைய அபி நிவேச அதிசயம் இறே
ஈஸ்வரன் அபிநிவேசம் அறிந்து –
விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு (1-6-5 )தன்னைக் கொடுக்குமா போலே
இவர்கள் அபி நிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடக்க
அவள் நினைவு அறியாதே தங்கள் செல்லாமையாலே சொல்லுகிறார்கள்

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —-திருவாய்மொழி-1-6-5-

பனியானது தலை மேல் சொரிய-
அதாவது-
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற
ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –

நின் வாசற்கடை பற்றிச்-
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்-
பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –

பனித் தலை வீழ
மேலே பனி வெள்ளம் -கீழே பால் வெள்ளம் இட நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

(மாயோனை மணத் தூணைப் பற்றி நின்று-கருணா ப்ரவாஹம் சிக்கி விழாமல் இருக்க மரக்கலம் போல் )

நின் வாசற்கடை பற்றிச்
மேலப் படியையும் தண்டியத்தைப் பற்றி நாலா (தொங்கி )நின்றோம் –
இத் தர்ம ஹானியை அறிகிறிலை-என்கிறார்கள் –

இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க –
தீரா மாற்றமாக நெஞ்சாரல் பண்ணி முகம் காட்டாத கிருஷ்ணன் என்றால்(கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் )
பெண்கள் சிவிட் க்கென்று இதொரு பித்து என்பார்கள் என்று பார்த்து
கிருஷ்ணனால் பட்ட நெஞ்சாரல் அடையத் தீர்ந்து நெஞ்சுள் குளிரும்படி பெண் பிறந்தார்க்கு தஞ்சமான
சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுவோம் -இவர்கள் எழுந்திருக்க என்கிறார்கள் –

இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே
த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற
நகாரத்தைப் பற்றி என்றபடி –

————

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய
பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை
சொல்லுகிறார்கள் –

சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்
அவர் அழுத போது கூட அழுதார் இறே –

சினத்தினால்
பெண்களுக்காகில் சேர்க்கைப் பல்லி போலே கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுகை பணி இறே
அதவா கிம் ததா லாபை-என்று
பெண்களை தீரா மாற்றமாக நெஞ்சாரல் படும் படி பண்ணுமத்தை நினைத்து கிடக்கிறாள்

உண்ணாது உறங்காது –
அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று
பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே
பெண் பிறந்தார்க்கு தஞ்சமான சக்கரவர்த்தி திருமகனை சொல்லுவோம் இவள் எழுந்து இருக்கைக்காக என்று
ராம விருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –

உண்ணாது உறங்காது* ஒலிகடலை ஊடறுத்துப்*
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்*
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்*
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே*

விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –
ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

தண்ணீர் போலே இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சினம் உண்டோ என்னில் –
தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –
திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –

ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வசமே இவான்

ததோ ராமோ மஹா தேஜோ -திருவடி மேல் அம்பு பட்ட அநந்தரம்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே பெருமாள் அநபிபவ நீயரானார்

ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா -தான் பருவம் நிரம்பாத காலத்தில் பண்ணிக் கொண்டது அன்றிக்கே
தரம் அல்லாத ராவணனால் நோவு படக் கண்டவாறே

ப்லவக சார்த்தூலம் -திருவடி தன் மேல் அம்பு படப் பட
வர்ஷம் காணப் பணைக்கும் பதார்த்தங்கள் போல்
மேநாணித்து கொடுத்தான் –

கோபஸ்ய வசமே இவான்-திருவடி -தரம் அல்லாத ராவணன் கையிலே புண் பட்டவாறே

க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்

ஆஸ்ரித கார்யம் என்றும் தம் கார்யம் என்றும் இரண்டு அன்று –
மஹா ராஜர் சீற்றம் பிறந்து வாலியைக் கொல்ல வேணும் என்ற போது எய்தார்
அவனுக்கு ஸவ்ப்ராத்ரம் பின்னாட்டி கண்ண நீர் பாய்ந்த வாறே தாமும் கூட அழுதார் –

சினத்தினால் மனத்துக்கு இனியான் –
அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று

சினத்தினால்
ஆஸ்ரிதர் கார்யம் செய்யாதானாய் இரான் கிருஷ்ணனைப் போலே -இவன் தன் கார்யம் தானாய் இருக்கும் –

(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப் புரக்காரியமும் செய்வார் பெருமாள் )
தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

த்விஷ தன்னம் ந போக்த்வயம் –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே தனக்கு சத்ருக்கள் –
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் என்று இரண்டு இல்லை போலே இருந்தது(மம பிராணா பாண்டவ -)
மம பக்த பக்தேஷூ ப்ரீதிரப் லத்திகா ந்ருப -என்று ஆஸ்ரிதற்கு நல்லவர்கள் தனக்கு நல்லவர்கள் என்று இருக்கும்(அருள் பெறுவார் அடியாருக்கு அருள் ஸ்ரேஷ்டம்)
மஹா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் -அவர் அழுத போது கூட அழுதார்
சஞ்ஜாத பாஷ்ப(அடியார் அழ இவரும் அழுகிறார் )

————–

தென்னிலங்கை கோமானைச்
திருவடி மதித்த ஐஸ்வர்யத்தை உடையவனை –

செற்ற –
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே
படையைக் கொன்று
தேரை அழித்து
ஆயுதங்களை முறித்து
தான் போலும் -இத்யாதி -கோன் போலும் என்று எழுந்து
கிளர்ந்து வந்த
மானத்தை அழித்து
நெஞ்சாரல் பண்ணிக் கொன்ற படி –

தென்னிலங்கை
பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –
அத் திக்குக்கும் அஸஹ்யமான படி

தென்னிலங்கை கோமானைச் செற்ற
யத் யதர்மோ ந பலவான்-என்றும் –
அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே

ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
படையைக் கொன்று –
புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து
ஆயுதங்களை முறித்து –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-
பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

மனம் ராவணன்- விவேகம் சரம் -பத்து தலை பத்து இந்திரியங்கள்

யோ வஜ்ரா பாத அசனி சந்நிபா தான் நசு ஷூ பே நாபி சசால ராஜா -ச ராம பாணாபிஹதோட் ரு சார்த்தச்-
சசால சாபஞ்ச முமோச வீர மாதங்க இவசிம் ஹேந கருடே நேவ பன்னக
அபிபூதோ பவத் ராஜா ராகவேண மஹாத்மனா -கச்சா நுஜானா மிரனார்த்தித்த ஸ் த்வம் பிரவிசய ராத்ரிஞ்ச ரராஜா லங்காம்
ஆசுவாஸ்ய நிர்யாஹிர தீச தன்வீத தா பலம் த் ரக்ஷ யசி மே ரதஸ்த

(சசால சாபஞ்ச முமோச வீர-ராமன் முன் கதி அற்று வில் இல்லாமல் வெறும் கையாக இருந்தால் வீரன்
சிங்கம் யானை -கருடன் பாம்பு போல்
இன்று போய் நாளை வா )

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –
கோபத்தினாலே
யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான
அஹங்காரத்தை நசிப்பித்து
அத ஏவ மனத்துக்கு இனியானை –
சக்கரவர்த்தி திருமகனை –

அவன் செய்த அநீதியை நினைத்து -பறைச் சேரி என்பாரைப் போலே-
அத் திக்கும் காண வேண்டாதே இருக்கிற படி
ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி
கொலைக் காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதயம் ராஷேஸ்வர ஸ்யாதயம் ஸூரா லோகஸ்ய
ச சக்ரஸ் யாபி ரக்ஷிதா -என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே–மொட்டும் நெம்பும் பாறும் கலங்கும் படி –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை அறுத்து –
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் -என்று கிளர்ந்து எழுந்த அபிமானத்தையும் அழித்து-நெஞ்சாரல் படுத்தி
கச்சா நுஜா நாமி என்கிறபடியே படையைச் சிரைத்து விட்ட படியான எளிவரவு மூதலிக்கைக்கு
ஆள் இல்லையாம் என்று கொல்லாதே விட்டார் –

மாதங்க இவ -(ஸிம்ஹம் யானையைப் பிடித்தால் போல் நன்கு பரிபவப்பட்டு )
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசா நாம் என்று – தஸ்யாபி சங்க்ரம்ய ரதம் ச சக்ரம் சாச்வத்வஜச்ச தர மஹா பதாகம்-
ச சாரதிம் சாஸ நி ஸூல கட்கம் ராம பிரசிச்சேத சரைஸ் ஸூ புங்கை
ச ஏவ முக்தோ ஹத தர்ப்பை ஹர்ஷ நிக்ருத்த சாப நிஹாதாஸ்வ ஸூத சரார்த்தித க்ருத்த மஹா கிரீட விவேச லிங்கம் ஸஹஸா ச ராஜா –

——————-

மனத்துக் கினியானைப் –
வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக
பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே
ஏகதார வ்ரதனாய் இருக்கை –

பெண்களை ஓடி எறிந்து துடிக்க விட்டு வைத்து
பின் இரக்கமும் இன்றிக்கே இருக்கும்
கிருஷ்ணனை ஒழிய
சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாயுமவனை என்றுமாம் –

மனத்துக் கினியானைப்
அர்த்திகள் ஒருத்தன் பக்கல் பெறா விட்டால் –
சொல்லாய் சீமான் என்னுமா போலே பெண்களை ஓடி இருந்து துடிக்க இட்டு வைத்து
பின் இரக்கம் இன்றிக்கே துடிப்பைக் கண்டு இத்தனை கண்ண நீரும் விழ விடாதே
படு குலை படிக்கும் தீம்பனான கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே

ரீபூணாம் அபி வத்சலனாய் சத்ருக்களுக்கும் கூட கண்ண நீரை விழா விடுபவனை அன்றோ பாடுகிறது

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு
இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக
சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

உயிர்க்கு அது காலன் என்று* உம்மை யான் இரந்தேற்கு நீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்*
தயிர்ப் பழஞ்சோற்றொடு* பால் அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்* பண்பு உடையீரே! –9-5-8-

வேம்பேயாக வளர்த்தாள்-என்று
பெற்ற தாயையும் குற்றம் சொல்லும் படி இறே இவன் படி
கௌசல்யா லோக பார்த்தாராம் -என்று
பெற்றவளையும் கொண்டாடும் படி இறே அவன் படி –

வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே–நாச்சியார்

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே
வேம்பேயாக வளர்த்தாள்-என்னும் கிருஷ்ணன் அல்லவே –
பெண்களைக் கொன்று துடிக்க விட்டு வைத்துத் துளி கண்ண நீரும் விழ விடாதே நிற்கும் கிருஷ்ணனை ஒழிய
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்

கண்ணபிரான் பெண்களைப் படுத்தும்பாடுகளை நினைத்தால்
“வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே” என்னும்படியிருத்தலால்,
அவன் மனத்துக்கு இனியனல்லன் போலும்.

————–

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு
பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை -ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

பாடவும் நீ வாய் திறவாய்
பிறர் அநர்த்தத்துக்காக நீ விசேஷஞஜை யாவதே –
எங்களுக்காக அன்றிக்கே
உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ

பாடவும் நீ வாய் திறவாய்
இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டாவோ -தங்கள் ஒருதலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –
இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே
அகம்பனன் சூர்ப்பணகை உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

————

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ –
எழுந்திராய் –

இனித் தான் எழுந்திராய்
எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால்
உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –
எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே

இனித்தானெழுந்திராய் –
எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி;
மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.

——————–

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து
இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே
இருப்பதே உன்னுறக்கம் –

யீதென்ன பேருறக்கம்
வைதிகமும் இன்றிக்கே
லௌகீகமும் இன்றிக்கே இருபத்தொரு உறக்கம் உண்டாவதே –

பரார்த்தமாக
உலகு எல்லாம் நன்கு ஒடுங்க உறங்கும்
ஈஸ்வரன் உறக்கமும் இன்றிக்கே
தாபார்த்தராய்
தமோ குண அபிபூதராய் கிலேசம் போக உறங்கும்
சம்சாரிகள் படியும் இன்றிக்கே
இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ

பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவன் உடன் பழகி வைத்தும்
இங்கனம் உறங்குவதே

யீதென்ன பேருறக்கம்-
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே
சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம்
ஆகையாலே
பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள்
இது ஒரு படியும் அன்று -ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே

பையத் துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால் அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே

ஈதென்ன பேருறக்கம் –
உறக்கம் இருவகைப்படும் – லௌகிகமும் வைதிகமும்.
தமோ குணத்தின் பிராசுர்யத்தினால் உறங்குகின்ற ஸம்ஸாரிகளின் உறக்கம் – லௌகிகம்.
அனைத்துலகங்களினுடையவும் காவலைச் சிந்தனை செய்து கொண்டு உறங்குவான்
போல் யோகு செய்யும் எம்பெருமானுடைய நித்திரை வைதிகம்.
இவ்விரு வகையிலுஞ் சேராதே யிருப்பதொரு விலக்ஷண நித்திரையாயிராநின்றது உன் உறக்கம் என்கிறார்களென்
அக் குணங்கள் தானே உன்னை உறங்குகிறதோ

—————–

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில்
எல்லாரும் அறிந்தது –

அனைத்து இல்லத்தாரும்
பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –
அது எல்லாம் செய்தற்றது –

நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –
இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

———–

இனி எழுந்திராய்
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –
புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் –

எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்-

(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

இனித் தான் எழுந்திராய்-
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –

புறம்பு இதுக்கு ஆள் உண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து என்றுமாம்

எம்பெருமானார் அவதரித்தது போலே காணும் இப் பெண் பிள்ளையும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து –
நாங்கள் உன்னை எழுப்பு கிறது எல்லாரும் அறிய வேண்டும்
என்று இருந்தாய் ஆகில்
அது எல்லாரும் அறிந்தார்கள் -எழுந்திராய் என்கிறார்கள்
பகவத் விஷயம் ரகஸ்யம் என்று இருந்தாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தமாய்த்து -எழுந்திராய் -என்கிறார்கள் –

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று
ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப்பாட்டில் சொல்லாமையாலே
அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி
ஸ்வரூப விரோதம் என்கிறது

இவன் எருமை கறவாமைக்கு
இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து
உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு
தத் சாதன அனுஷ்டானத்தில்
அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே-

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது ஒழிந்தாய்-என்கிற வேண்டற்பாடு (உனக்கு இருந்ததாகில் )எல்லாரும் அறியும்படி யாய்த்து-
அதுவும் செய்தது காண் -இனி உணராய் என்ன

கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாத ஊரிலே- பதினைந்து நாழிகையில் வந்து- எல்லாரும் கேட்க –
மனத்துக்கு இனியான் என்பது- கிருஷ்ணன் என்பது- எழுந்திராய் என்பதாய்க் கூப்பிட்டால் நம்மை என் சொல்வார்கள் என்ன

நீ நீ யாக நாங்கள் நாங்களாக வந்து போய் ப்ரஸித்தமாயிற்று -இனி அத்தை விடாய் என்கிறார்கள்
ரஹஸ்யமாக பகவத் விஷயம் அனுபவிக்கும் அத்தனை ஒழிய புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று இருக்கிறாயாகில்
நீ பிறந்த பின்பு இது ஒரு வ்யவஸ்தை யுண்டோ

எல்லாரும் உன்னைப் போலே யாம்படி அது போய் ப்ரஸித்தமாயிற்றுக் கிடாய் என்றுமாம்

எம்பெருமானார் திரு அவதரித்ததால் போலே காணும் இந்த நாச்சியார் திரு அவதரித்த பின்பு
எல்லாரும் பகவத் விஷயம் அறிந்தது –

“அனைத்தில்லத்தாருமறிந்து” என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்கலாம்;
நீ பரஸம்ருத்தியையே பிரயோஜநமாகவுடையையாதலால், ‘இப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல்
அனைத்தில்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக்கிடக்கிறாயாகில்,
அங்ஙனமே அனைத்தில்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து;

பாடியிலுள்ள பெண்களெல்லாருந் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட,
நீ சிறிது பொழுது உணராமற் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறிய வேண்டுமென்று கிடக்கிறாயாகில்,
அங்ஙனும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து.
இவ்விரண்டினு ள் பின்னருரைத்த கருத்து சிறக்குமென்க.

———————

மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.

மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன் திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.

சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும்,
அநுஷ்டான பிரதராய் கர்ம யோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.

அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.

சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவ பரகாசன், யஞ்ஞ மூர்த்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.

————–

ஸ்வாபதேசம்)

ஏழாம் பாட்டில் –
நற் செல்வன் தங்காய் -என்கிறது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக -தம் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றும் –
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் –
கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு உதிருமாலோ -என்றும் -தம்முடைய பக்தியைப் பேசுகையாலும் –

கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் உற்ற திரு மாலைப் பாடுகையாலும் –

மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -என்று குன்று குடையாக எடுத்த படியைப் பேசுகையாலும்

கவள மால் யானை கொன்ற கண்ணனை என்கையாலும்

ஸ்ரீ மாலாகாரரைப் போலே செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்து சாற்ற-
அத்தால் வந்த கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய -பெரியாழ்வாருக்கு பிற்பாடராய்
அவர் கைங்கர்ய ஸ்ரீ யை அநு விதானம் பண்ணுகையாலே
அவருக்கு அநுஜர் என்னும் படியாய் –
திருப் பள்ளி உணர்த்துவதிலும் வந்தால் விஷ்ணு சித்த துளஸீ ப்ருத்யர் -என்று ஸஹ படிதர் ஆகையாலும்

நற் செல்வன் தங்காய் என்கிறது ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -என்கை –

இவரும்-இதிலே -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றத்தை –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-என்றும்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -என்றும் -அருளிச் செய்தார் இறே –

——————

பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளா நின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறு போல் வருங் கண்ண நீர் கொண்டு
அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ் வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும் போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப் பேசத் தொடங்கினவரென்பது இவ்வினை யெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூசகம்.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலை வழியே நின்று பால் சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினால் இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு
நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

———————

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கற்றுக் கறவைக் கணங்கள்—

December 26, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
எல்லாவற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-

ஸ்ரீ கிருஷ்ணன் ஊருக்காக ஒரு பிள்ளையாய் எல்லாராலும் கொண்டாட வளர்ந்தால் போலே –
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாய் –
பதி சம்யோக ஸூலபம் -என்னும் படி பருவத்தை உடையளாய்
அவனைப் பெறுகைக்கு நோற்பேன் நானோ
அவன் தானே வேணுமாகில் நோற்று வருகிறான் என்று
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

பதி சம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-

பதி அமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து – அம்
கோல் தேடி ஓடும் கொழுந்து – அதே போன்றதே ,
மால் தேடி ஓடும் மனம் ! இரண்டாம் திருவந்தாதி -27

இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு
மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்
விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம் )

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய் ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
அரியதைச் செய்ய வல்ல குடியிலே பிறந்து வைத்து (பாகவத சமாஹம் கூடாமல் இருப்பதால் )அரியதைச் செய்யாதே கொள் -என்கிறார்கள்
எளியராக வேண்டும் இடத்திலே அரியராக ஒண்ணாதே -(கண்ணன் அஹம் வோ பாந்தவ ஜென்மம் என்று இருக்கும் போல் இல்லையே நீ )

(தந்தை மகள் ஆய்ப்பாடி கோபி போல் இறுதியில் தந்தை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் மூன்றும் உண்டே

குணக் கடல் கூட்டங்களையும் கூட எண்ண முடியாது போல் இங்குள்ள கற்றுக் கறவை கணங்கள் பல-

ஸ்வ பா விக –அஸங்கயேய குண கணவ் மஹார்ணவ் )

கண்ணபிரான் ஊருக்காக ஒரு பிள்ளையாய் அனைவராலுங் கொண்டாடப்பட்டு வளர்ந்தருளுமாறுபோல,
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாயிருப்பாளாய்,
கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவமுடையளாய்,
அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன்?
வேணுமாகில் அவன்றானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

அபிஜாதமும் ஆஹ்வாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிக்கும் படி சொல்கிறது –

பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

புலன்கள் பட்டி மேய்வதே தூக்கம் -ஐந்து பாசுரங்களால் அவற்றைத் திருப்பி அவன் இடம் செலுத்துகிறான்
அரவு -செவி -சஷுஸ் ஸ்ருதி
தங்காய் -மெய்
கண்ணினாய்
நா உடையாய்
இளம் கிளியே மூக்கு

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (ஸ்ரீ கோதா ஸ்துதி -1)-பொற் கொடியைக் கண்டு அருளிச் செய்கிறாள்

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

————–

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கற்றுக் கறவைக் –
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை –
இதுக்கு ஹேது
நித்ய ஸூரிகள் பகவத் ஸ்பர்சத்தாலே பஞ்ச விம்சதி வார்ஷிகராய்
இருக்குமா போலே
இப் பசுக்களும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கிப் பிராயம் புகுகை
பகவத் ஸ்பர்சம் இளகிப் பதிக்கப் பண்ணும் இறே –

கற்றுக் கறவைக்
கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய்
கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே
இவையும் இளகிப் பதித்து இருக்கும் –
அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே

முலை சரிந்தாரைப் பாராத ராஜ குமாரனைப் போலே
கன்று மேய்க்கப் பெற்றால்
பசுக்களை பாரான் –

கன்று மேய்த்து இனிது உகந்த —
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்று பசு மேய்த்து உகக்கும் –
கன்று மேய்த்து இனிது உகக்கும் –
ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்ட மாட்டாதவர்களை இறே உகப்பது –
கன்று மேய்க்கை ஒரு தலை யானால் பசுக்களும் நித்ய ஸூரிகள் ஸ்தானேயாம் அத்தனை –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (திருநெடும் தாண்டகம் -2)

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே–திருவாய்

(ரோகிணி தோறும் ராஜ ராஜன் திருக்கோலம் மன்னார்குடி கோபால வேஷம் சேவிக்கலாம் )

காளாய்-
அவற்றை இளகிப் பதித்து அவற்றோடு சம்பந்தத்தால்
தானும் இளகிப் பதித்து இருக்கும் –
வத்ஸ மத்திய கதம் பாலம்-(கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும் )
(கன்றுகள் சூழ இருக்க பார்த்தார் அக்ரூரர் தேடிப் போனவர் )-என்னும் படியே –

கற்றுக் கறவை –
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று
சக்கரவர்த்தி இளகினால் போலே

(சக்கரவர்த்திக்கு இளகிபிப் பதித்ததே
வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே–தேவ குமார ரூபம் என்று ரிஷி கரி பூசுகிறார் )

இவனுக்கு கண் அழிக்கலாம் படி
புக்க இடத்தே புக்கு
புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
இவனுக்கு முன்னோட்டுக் கொடுக்க வற்றாய்
இவனுக்கு ஒதுங்க நிழலாய் இறே இருப்பது –
இட்டமான பசுக்கள் இனிது மறித்து நீரூட்டி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–நாச்சியார்

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
(வா -முன் அழகு சேவித்து -போகு -பின் அழகு சேவித்து -இத்யாதி -வயஸ்ஸூ கீழ் நோக்கி போனால் போல்
கன்றுகளைப் பிரியாதே இருக்கும் கறவைகள் என்றுமாம் )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்–(திரு நெடும் தாண்டகம் -16-இவனும் கரியான் ஒரு காளை )என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி 10-3-10 -என்றும் –
(உகந்த -மாடுகள் இடம் -இனிது உகந்த இங்கு
பிரதமம்-நித்ய ஸூரிகள் ரக்ஷணம் மத்யமம்-பசுக்கள் ரக்ஷணம் சரமம் -கன்றுகள் ரக்ஷணம் )
நித்ய ஸூரிகளிலும் பசு மேய்க்க உகக்கும்

அவன் சரணாகத வத்சலன் ஆனால் (இவையும் )சரணாகத வத்சலமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா (நிழல் போல் பெருமாளைத் தொடர்ந்து போவது போல் இவனும் இவற்றின் பின் போவான் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போல் -( 7-1-1-)
சரணாகத வத்சலா (சீதா பிராட்டி ராவணனுக்கு உபதேசம் )
த்வயி கிஞ்சித் கிம் கார்யம் சீதையா மம (சுக்ரீவன் ராவணன் கிரீடம் பிடுங்கி வந்ததும் பெருமாள் வார்த்தை
(சுக்ரீவனுக்கு கொஞ்சம் அவமரியாதை கூட பொறுக்க ஒண்ணாதவன் -யுத்தம் -41-4–
எனது சரீரத்தாலும் பிரயோஜனம் இல்லை -வாத்சல்யம் )

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-(பிஞ்சாய் பழுத்த அவளைப் போலவே )
அவர்கள் இப்படி இருக்கிறது எம்பெருமானை அனுபவித்து அன்றோ
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
ஸ்பர்சத்தால் வந்த தன்னேற்றம் பார்த்துக் கொள்ளுவது –
திருவாய்ப்பாடியிலே கன்றுகளுக்கு வாசி தெரியாது -பசுக்களுக்கும் வாசி தெரியாது

கற்றுக் கறவை –
பவாமி த்ருஷ்ட்வா ச புனர் யுயேவா(தசரதன் வார்த்தை )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

(வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–)

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும் –
நித்ய ஸூரி களிலும் பசு மேய்க்க உகக்கும்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–16-

அவத்தங்கள்  விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

கன்று மேய்க்கப் போனால் பசுக்களும் நித்ய ஸூரிகளோடு ஓக்க தள்ளுண்ணும் அத்தனை
பசு மேய்க்க உகக்கும் –
கன்று மேய்க்க இனிது உகக்கும் –
அதாவது ஸ்வ ரக்ஷணத்திலே அந்வயம் இல்லாதவரை இனிது உகக்கும் என்றபடி

காளாய்
அவை இளகிப் பதிக்கத் தானும் இளகிப் பாதிக்கும்
யா பூர்வ்யாய வேதஸே நவீயசே ஸூமஜ் ஜாநயே விஷ்ணவே ததா சதி —
யோ ஜாநமஸ்ய மஹதோ மஹிப்ரவத் சேது ஸ்ரவோபிர் யுஜ்யம் சிதப் யசத் –

(பழைய -ஆனால் நவோ நவோ -விஷ்ணு -சித்ரை ரேவதியின் இருந்து வைகாசி ரேவடிஜிக்கே ஒரு வயசு குறையும்)

மைந்தனை மலராள் மணவாளனை –

(நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.)

அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலாமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்துவம் அநு கச்சேத்(ஸ்ரீ பாகவத மங்கள ஸ்லோகம் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-(7-1-நாகை -கன்று -அந்வயித்து-பட்டர் )
அபித்வா ஸூர நோநுமோ துக்தா இவ தேநவ

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

சரணாகத வத்சலா(சீதாபிராட்டி வாக்கியம் )
கன்று இடுகின்ற முன்னாள் கோ மூத்ரமாதல் சாணமாதல் புல்லிலே பதில் மோந்து பார்த்து காற்கடைக் கொள்ளும் –
பிற்றை நாள் கன்றிடில் அக்கன்று சாணத்திலும் கூ மூத்ரத்திலும் புரண்டாலும் அது தன்னையே போக்யமாகக் கொண்டு நக்கா நிற்கும்
முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலே சூடும்
த்வயி கிஞ்சித் சமா பன்ன கிம் கார்யம் சீதயா மம(சுக்ரீவன் இடம் பெருமாள் )
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி

(சீதாபிராட்டி -சுக்ரீவன் -விபீஷணன் -நாம் -அன்று ஈன்ற கன்று போல் நமக்கும்
சர்வ பூதேப்யோ-அனைத்தும் முன் ஈன்ற கன்று – ததாமி-நமக்கு)

(அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –ஞானசாரம் 25-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே – இராமானுச நூற்றந்தாதி –260 )

ராஜகுமாரன் முலை சரிந்த பெண்டிரைப் பாராதவாறு போலக் கண்ணபிரான் கன்றுகளை யன்றிப்
பசுக்களைப் பெரும் பான்மையாகக் காணக் கடவனல்லனாதலால்,
இவன் தனது கர ஸ்பர்சத்தினாற் பசுக்களையுங் கன்றாக்கி யருள்வனென்க.

———–

கணங்கள் பல –
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே
சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை
ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இறே
பசுக்களுக்கு தொகை உள்ளது –

கணங்கள் பல –
தனியே எண்ண முடியாமை அன்றிக்கே
சமூகங்களும் எண்ண முடியாது
ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்- என்னுமா போலே
பல என்னும் அத்தனை –

கணங்கள் பல
நாரா என்று -ஆத்ம சமூகங்கள் பல –
பஹு நாம் –
பற்பல்லாயிரம் உயிர் (3-2)-என்று ஆத்மாக்களுக்கு ஸங்க்யை யுண்டாகிலும்
பஹுவோன் ரூப கல்யாண குணான் புத்ரஸ்ய –(அயோத்யா வாசிகள் சக்கரவர்த்திக்கு சொன்ன வார்த்தை )
பாஹ்வோ துர்லபாச்சைவ –(நாரதர் வால்மீகி சம்வாதத்தில் )
எண்ணில் பல் குணங்கள்(பெரிய திருமொழி -5-7-2)-என்றும் சொல்கிற
பகவத் குணங்களுக்கு எல்லை உண்டாகிலும் இப் பசுக்களுக்கு எல்லை இல்லை

கணங்கள் பல
நம்முடைய அனாத்மா குணங்களுக்கும்
அவனுடைய ஞான சக்த்யாதி குணங்களும் –
(அசங்க்யேய நிஸ்ஸீம நிரவதிக நிரதிசய கல்யாண குண கணங்கள் )
நார சப்தத்தில் சொன்ன நாரங்களினுடைய சமூகமானாலும் எண்ணலாம்
இவை எண்ணப் போகாது –
ரத குஞ்ஜர வாஜிமாந் (தேர் யானை குதிரைப்படைகள் )-என்னுமா போலே

————

கறந்து –
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்
நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலெ அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்
பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி
சம்ருத்தம் ஆகையாலே
முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –

பல கறந்து –
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை
அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும்
ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி
நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும்
பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் –
ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும்
ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –

ஸத் சந்தானரான சிஷ்யர்-அவர்கள் உடைய பலவான சமூகங்களை-
அவர்களுடைய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி-

அரியது செய்ய வல்ல குடியிலே பிறந்தோம் என்னா –
உன்னை அல்லது அறியாத எங்களுக்கு அரியையாக ஒண்ணாது காண் –

கணங்கள் பல –
நாரா என்னுமா போலே ஸமூஹங்கள் பல வென்னும் அத்தனை

பல
நார சப்தத்தில் நாரங்களினுடைய ஸமூஹங்களையும் –அஸங்கயாதமான பகவத் குணங்களையும்–
அவற்றையும் கூட வெல்லும்படி
மலிவான நம்முடைய அநாத்ம குணங்களையும் எண்ணிலும் எண்ணப் போகாது
சொல்லும் போது ரத குஞ்ஜர வாஜிமாந் -(சக்கரவர்த்திக்கு குதிரை யானை தேர்ப்படைகள் போல்)
என்றால் போலே பல வென்னும் அத்தனை
கழியாரும் கன சங்கம் இத்யாதி(திரு நறையூர் -சங்கங்களால் நடை பாவாடை )

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –
(நித்யோ நித்யானாம் ஏகோ பஹுனாம் -இத்யாதி –
பர ப்ரஹ்மம் பரமாத்மா பரஞ்சோதி ஒருவனாய் செய்வது போல் )

——-

செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்
கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –

செற்றார்
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் –
சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று
ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே
நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –

பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் –
பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –

இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு –
தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி –
சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-

பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று
த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று
செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்

எம்பெருமானது மேன்மையைப் பொறாதார் எம்பெருமானடியார்க்குப் பகைவர்
எம்பெருமானடியாரின் மேன்மையைப் பொறாதார் எம்பெருமானுக்குப் பகைவர்.
இவ் விருவகைப் பகைமையுங் கம்ஸனுக்கு உண்டென்பது,
தீய புந்திக் கஞ்சனுன்மேற்சினமுடையன் என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும்,
சாது சனத்தை நலியுங்கஞ்சனை என்ற திருவாய்மொழியினாலும் விளங்கும்.

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம் ப்ராப்த(சத்ரு பக்ஷத்தில் இருந்து வந்ததால் இவனும் சத்ரு என்று சங்கை ) -என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம்ப்ராப்த -(சத்ருக்கள் பக்கல் வந்த விபீஷணன் -)என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

————

திறலழியச் –
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு
புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –

செற்றார் திறலழியச்
பஸ்மதாரியான ருத்ரன் –
ப்ராஹ்மணரைப் போலே ஒத்துச் சொல்லித் திரியும் ப்ரஹ்மா –
அப்சரஸ் ஸூக்களை மெய்க்காட்டுக் கொள்ளும் இந்திரன்
அந்நிய பரனாய்க் கொண்டு உறங்கும் ஈஸ்வரன் –
இவர்கள் அடங்கலும் நமக்கு எதிரோ-என்று இருக்கும் கம்சனுடைய மிடுக்கு அழிய –

செற்றார் உண்டு-உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்-
அவர்களுடைய திறல் உண்டு -ஸ்வார்த்த பரதை-அழிய-நசிக்கும்படி

திறலழியச்
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி எலும்பைப் பூண்டு திரியும் ருத்ரனும் –
ஒத்துப் போம் ப்ரஹ்மாவும்
அந்நிய பரனாய் இருக்கிற எம்பெருமானும்
சாது இந்திரனும் எனக்கு எதிரே என்று இருக்கும்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

திறலழியச்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

———-

சென்று செருச் செய்யும் –
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே
இருந்த இடங்களிலே சென்று பொருகை –
சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –
எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே
நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –
ராஜாக்கள் எதிரிகளைத் தோற்பிக்கும் படி வியாபாரித்தார்களே யாகிலும் அந்த புரத்தில் வந்தால் எளியராய் அன்றோ இருப்பது –

தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி-அவர்களோடு வர்த்திக்கிற

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபி யாதா ப்ரஹர்த்தா ச

சென்று
சக்ரவர்த்தித் திருமகனைப் போலே ஊராகச் சக்ரவர்த்தி திருமகனோடு ஒப்பார்கள் வீரத்துக்கு –

சென்று செருச் செய்கை எங்கே கண்டோம் என்னில் –
பசு மேய்க்கிறார் இரண்டு இடையர் (பெயர்களே சொல்லாமல் இடையர்கள் உடன் புரையறக் கலந்தார்களே )குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி
விளையாடா நின்றார்கள் என்று கண்டோம் இறே

————–

குற்றமொன்றில்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்

அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்

அவன் படி அறிந்து நடப்பவர்கள் –

குற்றம் ஓன்று இல்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குறை இல்லை –
2-எதிரிகள் கையில் ஆயுதத்தை பொகடக் கொன்றார்கள் என்னும் குறை இல்லை –

3-அழியச் செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால் –
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படி பிறந்தவர்கள்

குற்றம் ஓன்று இல்லாத கோவலர் –
அபிசேத் ஸூதுராசாரோ பஜதே மாம் அநந்ய பாக் –சாது ரேவ சமந்தவ்யஸ் சம்யக்வ்ய வசிதோ ஹிஸ (கீதை )-என்று இறே அவன் படி
நிர்த் தோஷம் வித்திதம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மன-(சாத்விக சம்ஹிதை )

பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –அவனே உபாய உபேயம் என்று-அத்யவசித்து இருப்பவர்களுக்கு

குற்றமொன்றில்லாத
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே
கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

குற்றமொன்றில்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
2-கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
3-இப்படி அழியச் செய்தார்கள் என்று எம்பெருமானுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் என்னும்படி பிறந்தவர்கள் என்னவுமாம்

1-சாது ரேவ ச மந்தவ்ய-(கீதா ஸ்லோகம் )என்றும்
2-மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றும்
3-குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்-(முதல் திருவந்தாதி )என்றும் —

1-பகவத் அனுபவமே தேஹ யாத்ரையாய் இருப்பார்க்கு (உண்ணும் சோறு இத்யாதி)அநீதிக்குப் பெரு நிலை நிற்கும் –
2-வஸ்திர அன்ன பானாதிகளோடே ஓக்க பகவத் குணங்களும் கலசி தாரகமாய் இருப்பார்க்கு அநீதி பொறுக்கும்
3-அல்லாதார் அநீதி எம்பெருமானுக்கு அஸஹ்யமாய் இருக்கும்

நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மந
பகவத் விஷயத்தில் ஓரடி புகுர நிற்கை இறே ஒருவனுக்கு ஸூத்தி யாவது என்கை -(தீர்த்தன் -உலகு அளந்த திருவடி )

1-ஆஸ்ரிதருடைய தோஷத்தை கடலுக்குத் தொடுத்த அம்பை மிருகாந்தரத்திலே விட்டால் போலே அசல் பிளந்து ஏற்றல்
2-பகதத்தனுடைய அம்பை மார்விலே ஏற்றால் போலே தான் அனுபவித்தல் –
3-அது தன்னையே புண்யமாகக் கொள்ளுதல் செய்யுமவன்

குற்றம் ஓன்று இல்லாத
அத்தியைவ த்வாம் ஹ நிஷ்யாமி–(சுக்ரீவன் இடம் அபசாரம் வாலி-பாகவத அபசாரம் )

ஹந்யா மஹாம்யமாம் பாபாம்-(கைகேயி தாயைக் கூட கொல்லுவேன்-பரதன் -பகவத் அபசாரம் )என்று சொல்லுகிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை
அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

(வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் போல் -செற்றார் திறல் அழியச் செற்றாலும் குற்றம் இல்லாதவர்கள்)

———

கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை –
பொற் கோடி தர்சநீயமாய் இருக்கையும்
பார்த்தா வாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இறே இருப்பது –

கோவலர் தம் பொற் கொடியே
சீதா தேவி ஜனகாநாம் குலே கீர்த்தி –ஊருக்காகாக ஒரு பெண் பிள்ளை என்கிறபடியே இவளும்
தர்சநீயமாய் உபகனத்தோடே சேர்க்க வேண்டிய படியான அவஸ்தை – கொள் கொம்பு
பதி சம்யோக ஸூ லபம் -(தந்தை கவலைக் கடலில் ஆழ்ந்தார் சீதா தேவி அனசூயை இடம் )
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் 10-10-3-
அவனை ஒழிந்தாலும் உங்களை ஒழிய நிற்க மாட்டேன் என்று சொல்லி வைத்தே
உபக்னத்தை விட நிற்க வல்லதோ கொடி
எங்களையும் கூட்டிக்கொண்டு கிருஷ்ணனை அனுபவிக்கப் பாராய்

ஸ்ப்ருஹணீயமான பொற்கொடி போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம்-
பக்தியை சொல்லி மேலே

கோவலர் தம் பொற் கொடியே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை
(கர்ம யோக நிஷ்டர் ஜனக மஹா ராஜர் போல் இந்த கோவலர்
ஞான யோகத்தால் ஜட பரதர் -பக்தி யோகத்தால் -பிரகலாதன் )

பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்
கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ –
எங்களோடு கூடி நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் (திருவாய் -10-10-3-)

கோவலர் தம் பொற் கொடியே
ஜனகாநாம் குல கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூதா -என்னுமா போலே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை

பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்

கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ -(கோல் தேடி ஓடும் கொழுந்து )
எங்களோடு-பெண்களோடு – கூடிக் கொண்டு நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் -(10-10-3)

(கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-)

கோவலர் தம் பொற்கொடியே என்ற விளியினால்,
ஜநக ராஜன் திருமகள் ஜநகா நாம் குலே கீர்த்திமாரிஷ்யதி மேஸுதா என்றபடி
ஜநககுலத்திற்குப்புகழ் படைத்தாற்போல,
இவள் கோவலர் குடியை விளக்கஞ்செய்பவளென்பதும்,
ஒரு கொள் கொம்போடு அணைந்தன்றி நிற்கமாட்டாத கொடி போல
ஒரு கணவனோடு புணர்ந்தன்றித் தரிக்க மாட்டாதவளென்பதும் போதருமென்க.
இத்தால், எங்களோடு கூடி, உனக்கு; கொள் கொம்பான திருஷ்ணனைச் சேரப்பாராய் என உணர்த்தியவாறாமென்க.

———-

புற்றரவல்குல்-
தன்னிலத்தில் சர்ப்பம் போலே
ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்
பெண்களை ஆண்களாக்கும் அழகு இறே
அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை

இத்தனை சொல்லலாமோ என்னில் பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத் யஸ்தா பும்பாவம் மனசா யயு -(திரௌபதி தோழிகள் ஆணாக மனசால் அடைந்து பேச்சு)
என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே -(ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய் )
ஆண்களை பெண்களாக்கும் இவள் பெண்களை ஆண்களாக்கும்

———–

புன மயிலே –
தன்னிலத்திலே மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அளகபாரத்தை உடையாளாகை-
பொற் கொடியே -என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று
மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் -கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அனகபாரத்தை உடையளாய் இருக்கை

——–

புற்று அரவு அல்குல் புன மயிலே
புறம்பே புறப்பட்டு-தன்னிலத்திலே வர்த்திக்கும் சர்ப்பம் போலே -ஒளி படைத்த கழுத்தும்
சுருக்கமான இடையும் -ஊகித்தே இருப்பதை அறியும்படி
பும்பாவாம் மனஸா யயியு -பெண்கள் ஆணாகும் தன்மை
கம்பர் ஆண்கள் பெண்ணாக அவாவும் தோளினான் –
பாஞ்சாலியா –இடை பார்த்து மனசால் சஜாதீயைன பெண்களும் நாயக சமாதியால்
கண்டவர்கள் மனம் வழங்கும் –
பெண்களை ஆண்களாக ஆசைப்படும்படும் இவளது அல்குல்
தன்னிலத்தில் இருக்கும் மயில் தோகை போல் தலைக் குழல்
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
தோகை மா மயிலார்கள் –6-2-

பொற் கொடி சமுதாய சோபை -லாவண்யம்
புற்றரவல்குல்-அவயவ சோபை -சவுந்தர்யம்

புற்றரவல்குல் –
ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது

புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே-
வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக-
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே-
புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

புற்று அரவு அல்குல் –
புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதிபடைத்த உடம்புடைத்தாயிருக்கை யன்றியே
தன் இருப்பிடந் தன்னிலே கிடக்கும் அரவரசின் படமுங்கழுத்தும் போல
ஒளியையும் அகலத்தையுமுடைய நிதம்பத்தை யுடையவளே! என்றபடி.

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை-

இத்தனை சொல்லலாமோ என்னில்
பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத்யஸ் தா பும்பாவம் மனசா யயு -என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே
(ஆடவர் பெண்ணினை அளாவும் தோளினான் -இடை அழகு ஆசை சுருங்கி வைராக்யம் மிக்கு –
கண் -ஞானம் -முலை -பக்தி )

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல அனகபாரத்தை உடையளாய் இருக்கை
(அனகபாரம் குழல் -வாசனை -கந்தம் -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டை )

இவர்கள் தானும் பெண்டிராயிருக்கச் செய்தே இவளுடைய அல்குலை வருணித்தது நெஞ்சினால் ஆண்மை பூண்டமையாலென்க.
பெண்டிருமாண்மை வெஃகிப்பேதுறு முலையினாள் (சீவக சிந்தாமணி) என்றது காண்க.

இனி, கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய், (கம்பராமாயணம்.)
வராக வாமனனே அரங்காவட்ட நேமிவல வாராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ் செய்வேன் (திருவரங்கத்தந்தாதி.)
என்பவாதலால், ஆண் பெண்ணாகு மிடமு முண்டென்று உணர்க.

பும்ஸாம் த்ருஷ்டி சித்நாபஹாரிணம் என்று பெருமாள் ஆண்களையும் பெண்ணுடை உடுக்கப் பண்ணுமாபோலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் என்ற ஆறாயிரப்படி அருளிச்செயல் இங்கு அறியற்பாலது.

புற்றுக்குள்ளே யடங்கின பாம்பு போலே நுட்பமான இடையை யுடையவளே! என்னவுமாம்.

—————

போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்-
நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –

போதராய்
எங்களை அவன் இடம் சேர்க்க வேண்டாம்
எங்களுக்குத் தாரகமாக நீ நடக்க நாங்கள் பின் பற்றி வர வேண்டுமே
இவளது ஆச்சாரம் பக்தி தானே உத்தேச்யம் இவர்களுக்கு
சோபயன் தண்டகாரண்யம் நீலமானது போல் நாங்கள் நிறக்கும் படி புறப்பட்டு
புனத்தை மயில் சிறப்பிக்குமா போல் இந்த ஸ்த்ரீதவத்தையும் -நம் கோஷ்ட்டியை நீயே சிறப்பிக்க வேண்டும்

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்கப் பண்ணாய் என்கை
(பெருமாள் நுழைந்ததும் ரிஷிகள் ஆனந்தப்பட்டால் போல் )

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்க-உள் தளிர்க்கப் பண்ணாய் என்கை –

போதராய்
உன்னுடைய அழகைக் காட்டி எங்களை உண்டாக்காய்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து பகவத் ஸ்பர்சம் உடையாருடைய
தேஹ குணத்தோடு
ஆத்ம குணத்தோடு வாசியற எல்லாம் ஆகர்ஷகமாய் இருக்கிறது என்கிறது –

—————

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது
இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே

நாம் புறப்பட எல்லக்காரும் வந்தீர்களோ என்ன
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து-
இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம்
இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய்
அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி
எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல்
நீயே பிரயோஜனம்

உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரான-பாகவதர் எல்லாரும் வந்து –

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன
உத்தரம் தீரமா ஸாத்ய (விபீஷணன் வந்து ஆகாசத்தில் நின்றால் போல் )-என்னும்படியே
எல்லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர் (பெரிய திருமொழி -10-8-5)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து -(நாச்சியார் )-என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு பிராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன
(அரங்கன் திரு முற்றம் போல்
நீணிலா முற்றம் போல் –
திருக்கோவலூர் இடைகழி முற்றம் போல் )

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன

உத்தரம் தீரமா ஸாத்ய -என்னும்படியே எல்-லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர்(பெரிய திருமொழி 10-8)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து(-நாச்சியார் திருமொழி 2) -என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு ப்ராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது  என்னோ –10-8-5-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-

———-

நின் முற்றம் புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –
இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் –
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே
சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன –

நின் முற்றம்
திரிபாதி விபூதியை விட விசாலம்

புகுந்து
ப்ராப்ய ஸ்தலத்தே புகுந்து
உத்தரம் தீரமாஸ்ய -ராமன் இருக்கும் இடம் விபீஷணன்

இவர்களுக்கு ப்ராப்யம் ஆனபடி என்
சிற்றில் கட்ட ஸங்கேதம் பேசி புகுந்த முற்றம் அன்றோ
முற்றத்தோடு புகுந்து முகம் காட்டி –சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -10-8-கலியன்
சேஷிக்கு ப்ராப்யமாகும் போது சேஷ பூதருக்கு சொல்ல வேண்டுமோ

பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –

முறுவல் செய்து
ஏக ரூபனாய் இருப்பவனையும் விகாரம் செய்ய வைக்கும் முற்றம்

முற்றும் புகுந்து செய்ய வேண்டியது என் என்ன
முகில் வண்ணன் பேர் பாட
மேகம் போல் பொழியும்
ச சர்வா நர்த்திநோ த்ருஷ்ட்வா —
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
முகில் வண்ணன் -நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –
நீ பாட

எனக்கே தன்னைத் தந்த -என்று உதார குணத்தையும் சொல்லி நீ பாட –
நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-
நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாடச் செய்தேயும்

————-

முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்
அவன் அழகிலும்
ஔதார்யத்திலும் ஈடுபட்டு
அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –

பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை
நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட –
நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற –
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட –
உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

(பெரிய பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் சீதாபிராட்டி போல்)

———-

சிற்றாதே பேசாதே
முகில் வண்ணன் என்றவாறே
அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்

சிற்றாதே -சிற்றுதல் -சிதறுதல் –
உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே
இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் போக்கியம் ஆகையாலே
இன்னாதாகிறார்கள்

சிற்றாதே பேசாதே
அவ்வடிவை நினைத்து அங்கங்களை பரிஸ்பந்திப்புதல் (புரண்டு படுத்தல் )
வார்த்தை பேசுதல் செய்யாதே கிடக்க –
இவள் சேஷ்டிதமும் வார்த்தையும்
கண்ணுக்கும் செவிக்கும் போக்யமாகையாலே
கண்ணையும் செவியையும் சேர பட்டினி கொள்ள வேணுமோ என்று இன்னாதாகிறார்கள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே-வார்த்தையும் சொல்லாதே –

சிற்றாதே
முகில் வண்ணன் என்றவாறே வடிவை நினைத்து விடாய் கெட பேசாதே கிடந்தாள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

——–

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ
கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –
இல்லையாகில் –

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-
உன்னோடே கூடுவதே எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ –
உன்னுடைய உத்தேச்யம் நீ கூடு பூரித்து வைத்தால் எங்களுக்கு உத்தேச்யம் பெற வேண்டாவோ
இங்கு கூடு பூரித்து கிடக்கிறதோ என்ன

பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-
நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ –

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே–உன் கைங்கர்யம் -உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

——–

எற்றுக்குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு
கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்

எற்றுக்குறங்கும் பொருள்-
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உள்ளு கூடு பூரித்த தில்லை யாகில் எங்கள் ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகிற இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இருக்கும் படி அழகிதாய் இருந்தது –
அவனைத் தனியே அனுபவிக்கை கைவல்ய மோஷத்தோடே ஒக்கும் அத்தனை –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்று இருக்க வேண்டாவோ –

(கேவலம் -ஓன்று மட்டும் -பாகவதர் இல்லாமல் பகவானையே அனுபவித்தாலும் கைவல்யம் போல் ஆகுமே )

எற்றுக்கு உறங்கும் பொருள்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே –
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
ஏதுக்காகக் கிடக்கிறாய் –

எற்றுக்கு உறங்கும் பொருள் –
அவனை உகப்பிக்கப் பார்த்தாய் ஆகில் அவன் உடையாரையும் உகப்பிக்க வேணும் காண்
ஸ்வ பிரயோஜனமாக கைங்கர்யத்தில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோமே உனக்கு

1-உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேணும்
2-அவனைப் பிரிந்த அன்று -வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கைக்கு நாங்கள் வேணும்
3-நீயும் அவனும் அனுபவியா நின்றால்–எடுத்துக் கை நீட்ட நாங்கள் வேணும் –

ஆன பின்பு எங்களை ஒழிய உனக்கு விரகு உண்டோ –

எற்றுக் குறங்கும் பொருள் –
உறங்கும் பொருள் எற்றுக்கு-
உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது –
எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா-சொல்லாய் -என்கிறார்கள் –

இப்பாட்டில்
ஜாதி உசிதமான தர்மத்தை-
சாதனா புத்தி அன்றிக்கே-
கைங்கர்ய புத்யா -அனுஷ்டித்தால்-குற்றம் இல்லை என்கிறது
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
அடியார்கள்  குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி

எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன

இல்லை யாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –

புனமயிலே! முகில் வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என இயைத்து,
மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டியிருக்க,
நீ இங்ஙனே கிடந்துறங்குவது என்றிய? என க்ஷேபிக்கின்றனரெனக் கருத்துக் கூறுக.

————————————————

பொற் கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கான கூட்டு மாலடியார் மாட்டு.

——————–

(ஸ்வாபதேசம்)

ஆறாம் பாட்டில் –
கோவலர் தம் பொற் கொடியே-என்கிறது
பெரியாழ்வாரை -எங்கனே என்னில் –

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான இவளை போல கோவலப் பட்டம் தவிக்கும் படி
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினவர் ஆகையாலும்

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை -என்னும் படி –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் என்று தொடங்கி –
பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம் என்கிறபடி
ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அனுபவிக்கையாலும்

நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே -என்றும்
ஐய புழுதி -நல்லதோர் தாமரை -இவைகளில் திருத் தாயார் பேச்சாக பேசுகையாலும்

தழை களும் இத்யாதி அளவாய் கன்னிமார்கள் காமுற்ற மாற்றத்தைப் பேசுகையாலும்

இதிலே முகில் வண்ணன் -என்றத்தை —
விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை -என்கையாலும்

கோவலர் தம் பொற் கொடியே -என்கிறது பெரியாழ்வாரை –

—————————

பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல் தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —நோற்றுச் சுவர்க்கம் —

December 25, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
பெண்கள் எல்லாரும் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை அவன் தான் பட்டு
தண்ணீர் தண்ணீர் -என்னும்படி வீறு உடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(அருங்கலமே -நாயகக்கல் போலே என்றாதல்–நல்ல பெண் -என்றாதல் –
வேதனம் சாதனம் என்று இராதே-ஈஸ்வரனே சாதனம் என்று-
கிருஷ்ணன் அசல் திருமாளிகையாய்-நடுவிட்ட வாசல் ஆகையாலே-ஒரு போகியாக அனுபவிக்கிறாள் -என்றுமாம்-
புகுகின்ற -வர்த்தமானம் -கிருஷ்ண அனுபவம் கை புகுந்தவள் என்ற கருத்து-)

ஒரு கிடையிலே பல பிள்ளைகள் ஓதா நின்றால் –
ஒருவனுக்கு ஒத்துப் போய் சமர்த்தனும் ஆனால் அவனே
அவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகன் ஆமா போலே –

இவ்வூரில் பெண் பிள்ளைகள் எல்லாரிலும் கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் விதக்தையாய்
எல்லாப் பெண்களையும் கிருஷ்ணன் படுத்துமத்தை கிருஷ்ணன் தன்னைப் படுத்துவாள் ஒருத்தியாய்
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் வீறுடையாள் ஒருத்தியாய் –
இவர்கள் தாழ்த்ததுக்கு அவளை இட்டு பொறுப்பிக்கும் படி அவன் பக்கலில் பேர் முகமுடையாளுமாய்
கிருஷ்ணன் திரு மாளிகைக்கு அசல் திரு மாளிகையுமாய்
நடுவு இடைச் சுவர் தள்ளி -தண்ணீர் துரும்பு -பிரதிபந்தகம் – பொகட்டு-ஒரு போகியாக தண்ணீர் துரும்பும் அற்று
ஒரு படுக்கையில் அவனும் தானுமாக எப்போதும் அனுபவிப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -என்னாதே-
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று
அவன் ஆனந்திப்பிக்க இருப்பாள் ஒருத்தி –

(ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்
தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ந பிபேதி கதாசனேதி தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய
“ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி” – ப்ரம்ஹத்தின் ஆனந்தத்தை உணர்ந்தவருக்கு பயம் ஏது?

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

(இந்த்ர லோகம் ஆளும் -ஸ்ரீ வைகுண்டம் போல் இங்கும் ஸ்வர்க்க சப்தம்

கிருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
(நித்ய விபூதிக்கு தானே கூட்டிச் செல்வான்
ஸித்த உபாயமே நமக்கு என்று -நாம் பற்றினோம் என்ற எண்ணமும் இல்லாதவள் )

தேக யாத்திரை வேறே ஆத்ம யாத்திரை வேறே -அறிந்து –
தேக யாத்திரையும் பெருமாளை சார்ந்தே ஆழ்வார்களுக்கு –
அவனாலே இதற்காகவும் நிர்வஹிக்கப்படுகிறோம் என்ற எண்ணமும் வேண்டுமே –
வாழ்க்கைப்பட்டாள் -என்றாலே இதுவே -ஆத்மாக்கள் அனைவரும் பெண் பிராயர் தானே -)

பகவத் குண வித்தரான பாசுரம் கேட்க்கையிலே அபேக்ஷிக்கும் படி சொல்கிறது –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

ஞானீ த்வாத்மைவ மே மதம்
அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

(கீழேயும் அனந்தல் -இங்கும் ஆற்ற அனந்தல் -வாழும் சோம்பர் -நிஸ் சிந்தையாய் -மார்பில் கை வைத்து உறங்குவது
ஆனந்தம் ப்ரஹ்மண வித்வான் -அறிந்து அடைகிறான் -ஸ்வ கத ஸ்வீ காரம்
ஏஷ ஹ்யேவா -ஆனந்தம் ஊட்டுகிறான் -நாம் அனுபவிக்கிறோம் -அவனே கைக்கொள்ள்ளும் பாசுரம் இது-
பரதன் குகன் போல் இரண்டும்
வந்து உன் மனம் புகுந்தேன் -திருக்கமல பாதம் வந்து போல் இது –
அடியார் குழாங்கள் உடன் கூட அன்றோ அனுபவித்தால் அன்றோ சிறக்கும் –
எம்பெருமானார் போல் அனைத்து உலகும் வாழ அன்றோ இருக்க வேண்டும்
பறை அந்தரங்க கைங்கர்யமாகிய புருஷார்த்தம் -புண்ணியனால்-கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் -உபாய உபேயம் இவனே -)

————

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

வியாக்யானம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்-
வைகின பின்பும் எழுந்திராமையாலே-
அம்மே அழகியதாக நோற்று சுகம் பெறக் கோலினாய்-என்று-ஸ்தோபிக்கிறார்கள் -என்றுமாம்
நோற்க வேண்டாதபடி நோன்பின் பலம் கை புகுந்தவள் இறே இவள் என்றுமாம் –

நோற்று –
சித்த சாதனை யாகையாலே-உபாய அம்சத்தில் நிர்பரையாய் இருந்தாள் –
அவனுடைய ரஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
தன் சேஷத்வத்தை உணர்ந்தாலும் பிராப்தி இல்லை இறே-

எழுப்புகிறவர்களுக்கும் இது வன்றோ ஸ்வரூபம் என்னில்-
சித்த உபாய நிஷ்டருக்கு விளம்ப ஹேது இல்லாமையாலே
பிராப்யத்தில் த்வரையாலே பதறுகிறார்கள்-

சித்த உபாய நிஷ்டருக்கும் கர்ம ஞான பக்திகள் உண்டு-
இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்திலே அந்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்தில் அந்விதம்
பக்தி பிராப்ய ருசியிலே அந்விதம்

ஸ்வர்க்கம் புகுகின்ற –
சுகத்தை இடைவிடாதே அனுபவிக்கிற-இவர்களுக்கு கிருஷ்ண அனுபவம் இறே சுகம் –
சவர்க்க சப்தம் சுக வாசி

நோற்றுச்
கிருஷ்ணனைப் பிரிந்த போதே பிடித்துக் குளிப்பது நோற்பதாகா நிற்க –
இவள் படி பத்தொன்பதாம் பாஷையாய் இருப்பாள் ஒருத்தி
(செப்பு மொழி 18 உடையாள் -இல்லாத ஒன்றை 19 பாஷை)
ஓக்க நோற்கக் கடவோம் –
ஒக்கக் குளிக்கக் கடவோம் –
கிருஷனோடே ஓக்க அனுபவிக்கக் கடவோம் என்று சொல்லி
நோன்பின் பலம் கை புகுந்து
கிருஷ்ண அனுபவம் பண்ணிக் கரச்சல் அற்று கிடந்து
உறங்க அமையுமோ –

சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி –
சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்
யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-
ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —
க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –
செய்த வேள்வியர் -என்றும்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே–5-7-5-

பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
சித்த சாதனை யாகையாலே உபாயாம்சத்திலே நிர்ப்பரையாய் இருந்தாள்
சித்த சாதனராய் இருப்பிற்கு கர்த்தவ்யம் ஒன்றும் இன்றிக்கே ஒழிகிறபடி
எங்கனே என்னில் –

அவனுடைய ரக்ஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ணப் பிராப்தி இல்லை –
தன் சேஷத்வத்தை யுணர்ந்தாலும் பிராப்தி இல்லை –
விரோதி பிராபல்யத்தை யுணர்ந்தாலும் ஒன்றும் செய்ய பிராப்தி இல்லை –
இதர உபாயங்களுக்கும் அவன் பிரசாதம் வேண்டி இருக்கையாலே ஒன்றும் செய்யப் பிராப்தி இல்லை

ஆன பின்பு நாராயணனே என்று அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து வைத்து
விடிவாறே எழுந்து இருந்து குளிக்கக் கடவதோ என்று இருக்கிறாள்-

புறம்பு நின்று எழுப்புகிறவர்களுக்கும் இப்படி இருக்கை அன்றோ ஸ்வரூபம்
என்னில்
அவர்களுக்கு நினைவு உபாயம் என்னும் சப்தத்தை விஸ்வஸித்து இருக்கவோ –
உபேயத்துக்காக வன்றோ உபாய ஸ்வீகாரம் –
சித்த உபாய நிஷ்டருக்கும் ப்ராப்யத்தில் த்வரை இல்லை யாகில் சேதனன் இன்றிக்கே ஒழியும் அத்தனை என்று –
விளம்ப ஹேது இல்லாமையாலே ப்ராப்யத்தில் த்வரையால் பதறுகிறார்கள் –

(சம்பந்தம் உணர்ச்சி தோழி
உபாய துணிவு தாய் நாராயணனே நமக்கே பறை தருவான்
புருஷார்த்த நாராயணா-தலைவி பதற்றம் -இங்கு போற்றப் பறை தருவான் – பதற்றம் –
உபேயத்துக்காகவே தான் உபாயம் பற்றுகிறோம்
உபாயம் அவனே என்று இருந்தாலும் விளம்பம் பொறுக்க மாட்டாமல் பதற்றம் வருமே
அதுக்கும் மேல் உபேயம் நினைக்க பதற்றம் மிக்கு இருக்குமே )

சித்த உபாய நிஷ்டருக்கும் கர்மா ஞான பக்திகள் உண்டு –
இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்தில் அன்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்திலே அன்விதம்-
பக்தி ப்ராப்ய ருசியில் புகும் –

ஆன பின்பு
பிராப்யத்தில் த்வரை இல்லை யாகில்
அசித்தோடு ஒக்கும் அத்தனை என்கிறார்கள்

சுவர்க்கம் புகுகின்ற-
ஸூகத்தை விடாதே அனுபவிக்கிற -ஸ்வர்க்கம் -என்று ஸூகத்தைச் சொல்கிறது
சாஷாத் ஸூக சப்த வாச்யனாகையாலே கிருஷ்ணனை சுவர்க்கம் என்கிறது –

யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்னக் கடவது இறே
(நின் பிரிவினும் சுடுமோ காடு கம்பர் )

(பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றவனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டுடையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடென்றாள்

பரிவு இகந்த – இரக்கம் இல்லாத
பற்றில்லாது- விருப்பம் இல்லாது
ஒருவு கின்றவனை – போகிறவனை
ஊழி – அழிவு
அருக்கன் – சூரியன்
யாண்டுடையது – எத்தன்மையானது
ஈண்டு – இங்கு
பிரிவினும் சுடுமோ – உன் பிரிவை விட சுடுமோ
பெருங்காடென்றாள் – நீ போவதாகச் சொல்கிற பெருங்காடு!

பெரும் ஊழியில் சூரியன் சுடுவதா பிரச்சினை எனக் கேட்கிறாள் ஜானகி. நானும் வருவேன் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறாள்.)

(நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –ஞான சாரம் -2-)

ஆனந்த ரூபனாய் –
ஆனந்த குணகனாய்
ஆனந்தாவாஹனாய இருக்கிற கிருஷ்ணனுடைய அனுபவம் இறே சாஷாத் ஸூகமாகிறது –
(ஸ்வரூபமும் ஆனந்தம் குணமும் ஆனந்தம் -இரண்டையும் கொண்டால் அத்வைதம் போகுமே )

புகுகின்ற-
(வர்த்தமானம் நிகழ் கால வினை )அனுபவத்தில் விச்சேதம் இல்லாமை சொல்லுகிறது –
உபாசன வேளையில் ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய அனுசந்தானத்தாலே வருவதொரு சாரஸ்யம் உண்டு –
அது தான் காதா சித்கம் ஆகையால் ஹேய சம்பந்தம் அற்று அவ்வருகே போனால்
அவிச்சின்னமாக அனுபவிப்பதொரு அனுபவம் உண்டு –
அது இங்கேயே கை புகுந்து இருக்கை

இவள் நோற்ற நோன்பாவது –
ஸித்த ஸதாந ஸ்வீகாரமென்க.
க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோயே தேஷாம் ராஜந்! ஸர்வயஜ்ஞாஸ் ஸமாப்தாழூவிது- என்ற மஹாபாரதங்காண்க.

நோற்றுச் –
நோற்கக் கடவ நோன்பும் இவ்விரவிலே நோற்று நோன்பின் பலமான கிருஷ்ணனாகிற
ஸ்வர்க்கமும் உன் கை புகுந்தது ஆகாதே செல்லுகிறது
கிருஷ்ணன் தர்மம் சநாதநம் -என்னுமா போலே
ஆபாச தர்மங்கள் இவளுக்கு அஞ்சிக் கைவிட்டது அத்தனை இறே
இவளுக்கு சாதனமான தர்மம் எம்பெருமானே இறே -(இவள் பரித்யஜிக்க வெண்டாதே ஸாஷாத் தர்மம் கை புகுந்தவள் )

(கிருஷ்ணனை அனுபவிக்கும் ஸூகம் என்று கூடச் சொல்லாமல் -கிருஷ்ணன் வேறே ஸூகம் வேறே என்று எண்ணாதவர்கள்

கோல மலர்ப்பாவைக்கு அன்பாவியா என் அன்பேயோ குணம் குணி வேறுபாடு இல்லையே)

சாதன அனுஷ்டானம் பண்ணாதே இவனே உபாயம் என்று அறுதியிட்டால் பலத்தில் அந்வயிக்கும் அத்தனை இறே
1-அவனுடைய ஸ்வரூபம் (ஸ்வாமித்வம் )உணர்ந்தார்க்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை –
2-தன் ஸ்வரூபம் (பாரதந்தர்யம் )உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
3-விரோதிகளுடைய பாஹுல்யத்தை (இரு வல் வினைகள் ) உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
4-ப்ராப்தியினுடைய சீர்மையை உணர்ந்தார்க்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
5-இதர உபாயங்களுக்கும் அவனே வேண்டுகையாலே யத்னம் பண்ண பிராப்தி இல்லை என்று இருந்தாள்

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
1-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மா ஸூச
2-மாம் ஏகம் வ்ரஜ மா ஸூச
3-அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச)

விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா -(ஸர்வே வேதா  -யஜ்ஜம் ஹோம குண்டம்-எல்லாம் கண்ணனே -அறிந்தவன் அனைத்தையும் செய்தவன் ஆகிறான் )
செய்த வேள்வியர் –
யே ச வேத விதோ விப்ரா -கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
யோ மாம் அபி ஜானாதி ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேந பாரத(கீதை )
க்ருத க்ருத்யா -ப்ரதீ ஷந்தே(மிருத்யுவை பிரியமனான அதிதியாக பார்ப்பான் -இதிஹாச சமுச்சயம் )
ரஷ்ய ரஷக பாவம் வியவசிதமானால் ஞானமே இறே வேண்டுவது

(எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-)

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள் -(நிர்ப்பரோ நிர்பயோஸ்மி )

இவர்களுக்கு உபாயம் என்கிற சப்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கலாமோ
உபேயத்துக்கு அன்றோ உபாயம் -சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –

சித்த உபாய நிஷ்டர்க்கு கர்மம் கைங்கர்யத்தில் புக்குப் போம் –

ஞானம் ஸ்வரூபத்திலே புக்குப் போம் –
பக்தி ப்ராப்ய ருசியில் புக்குப் போம்

பேசாதே இருக்க உபாயம் உண்டோ –
சிலர் முழுகி நோற்கவும் சிலர் பலம் அனுபவிப்பதாயேயாய் இருப்பது –
அழகியதாய் இருந்தது உன்படி -என்கிறார்கள்

அவர்கள் கிருஷணனோடு பலம் புக்கு இருக்கிலும்
இக் கோஷ்ட்டியில் உள்ளார்க்குத் தனியே அனுபவிக்கை கைவல்யத்தோபாதி குடிப் பழி –

(குரு பரம்பரையை முன்னிட்டு சொல்லாத த்வயம் கூட மந்த்ராந்தங்களுக்கு சமம் ஆகுமே)

புருடன் மணி வரமாக -கௌஸ்துபம் -பரமாத்மா தானே ஜீவனை கூட்டிக் கொண்டு அனுபவிப்பான் அன்றோ )

நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் —
(ஸூ ந்தர –31-திருவடி பேச பிராட்டி மதுரம் வாக்கியம் என்றாளே -செவிக்கு இனிய செஞ்சொல் )
பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

நோற்று -நோற்காமலேயே விபரீத லக்ஷணை-இடைச்சுவர் -தாய்ச்சுவர் -பள்ளி அறைகளுக்கும் -நோற்காமலேயே கிருஷ்ண அனுபவம் –

————

அம்மனாய் –
ரஷகை ஆனவளே-
நீ ரஷகையாக-நாங்கள் உனக்கு குழைச் சரக்கு ஆனபடி அழகியதாய் இருந்ததே-

அவள் பேசாதே கிடப்பான் என் என்னில்
திருவடிவாரத்தில் பிராட்டி இருந்தாப் போலே
இவர்கள் பேச்சே அமையும் என்று கிடக்கிறாள் –
தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை அம்மனாய் என்பதே -என்று கிடக்கிறாள் ஆகவுமாம் –

வம்மனாய்
அழகிதாக இது திரளுக்கு ரஷகை யானாய் –
நீ ரக்ஷகை யாக நாங்கள் குழைச் சரக்கான படி என் —
எங்களை கிருஷ்ணனோடு அனுபவிப்பித்து –
அவ்வனுபவம் உன் முலையோடும் தோளொடும் அணைத்தால் போலே இருக்க வேண்டாவோ

1-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே
இவர்கள் பேச்சில் இனிமையாலும் –

2-ப்ரகர்ஷேண அவ்ருத்தாச என்று
இவர்களைக் கண்ட ஹர்ஷத்தாலே விக்கி வார்த்தை சொல்ல மாட்டாமையாலும்

3-தங்கள் அடியேனான என்னை –
தாய் -என்று பழி விடுவதே -என்று ஸ்வரூபத்தை அனுசந்திக்கையாலும்

4-இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணுகிறோம் என்று பழி இடா நின்றார்கள் –
இவ்வளவிலே ஓன்று சொல்லுவோமாகில் –
இவர்கள் சொன்னதுக்கு இசைந்து மதியாமல் உத்தரம் சொன்னோம் ஆவுதோம் என்று பேசாதே கிடந்தாள் –

இவள் நினைவு அறியாதே
தாங்கள் புறம்பே நின்று துவழுகிற துவட்சி பொறுக்க மாட்டாமையாலே

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்-
சித்த சாதனத்தை-பரிக்ரஹம் பண்ணி –சுக ரூபமான பிராப்யத்தை அனுபவிக்கிற –ஸ்வாமிநி யானவளே

“ப்ரஹர்ஷேணாவருத்தா ஸா வ்யஜஹார ந கிஞ்சந” என்றபடி ஒன்றும் பேசாதே திடுக்கிட்டுக் கிடந்தாற் போல,
இவளும் இவர்களது மதுரமான வாய் மொழியைக் கேட்டுப் பரமாநந்தத்திற்கப் பரவசப் பட்டிருந்தமையாலும்,
‘இவர்களுக்கு அடிச்சியாகிய என்னை இவர்கள், ‘தாயே!’ என்று விளித்துப் பழியிடுகின்றனரே’ என்ற உள் வெதுப்பினாலும்,
‘நாம் கிருஷ்ணாநுபவம் பண்ணுவதாக இவர்கள் பழியிடா நின்றார்கள்;
இத் தருணத்தில் நாம் இவர்கட்கு மறு மொழி கூறுதல் தகாது’ என்ற நினைவினாலும் அவள் பேசாதே கிடந்தாள்;

அம்மனாய் –
என்பதே -தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை –என்று பேசாதே இருந்தால் ஆகவுமாம்
ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -என்று ப்ரீதியாலே விக்கிப் பேசாதே இருக்கிறாள் ஆகவுமாம்-
(பாகவத சம்பந்தம் கிட்டிற்றே நமக்கு கிருஷ்ண அனுபவம் சித்தம் என்ற ஆனந்தம் ப்ரீதி மண்டுமே
இனிமை
குற்றம்
தலைவி என்பதே
இவர்கள் வாய்ந்ததே இப்படி நான்கு காரணங்கள் )
இவர்கள் பொறுக்க மாட்டாமை

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

(இதே போல் இது தான் பாகவதருக்கு இரண்டாவது முக்கிய கர்தவ்யம்)

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை -யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க –(சீதாபிராட்டி பெருமாள் இடம் சுவர்க்கம் நரகம் விளக்கியது-கச்ச ராம மயா சஹா )
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
அனுபவிப்பார் அனுபவிப்பது இடையும் முலையும் ஒழியவோ-

(“யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா”
(உன்னுடன் கூடி யிருத்தல் – சுவர்க்கம்; உன்னைப் பிரிந்திருத்தல் – நரகம்) என்ற ஸ்ரீராமாயணம்)

இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் –பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

இவர்கள் பொறுக்க மாட்டாமை -பாடு ஆற்றாமை

————

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே –
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -என்கிறார்கள் –

வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ –
உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ –
மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது –

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-
என்கிறார்கள் –

வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ –
கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –
ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ-
படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –

மாற்றமும் தாராரோ-
உன் உடம்பைக் கிருஷ்ணனுக்கு கொடுத்தால்
எங்களுக்கு பேச்சாகிலும் தந்தால் ஆகாதோ –
கிருஷ்ணனை அருக்கினால் உன்னையும் அருக்க வேணுமோ

உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ
உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ

(திருக்கோளூருக்கு தனது ஜீவனம் தேடிப் போன பராங்குச நாயகி என் ஜீவனம் பரிக்க வேண்டுமோ
ராமனை அன்றி மற்று ஓன்று அறியாத பரதனை அன்று மற்று ஓன்று அறியாத
சத்ருக்கனன் நிலை தானே இவர்களது )

மாற்றமும்
மதுரா மதுரா லாபா -என்று
இவள் பேச்சுக்கு அவனும் தோற்று இறே இருப்பது –
இப்படி இவர்கள் பழி இடா நின்றால் ஒரு உத்தரம் சொல்லி யாகிலும் பிழைப்போம் என்று
நீங்கள் சொல்லுகிற பழிக்கு அவன் இங்கு உண்டோ என்ன

வாசல் திறவாதார் -மாற்றமும் தாராரோ-
த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும்
நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –

அவனை எழுந்து இருக்க ஒட்டா விடிலும்-
இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –

மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
படுகொலை யடித்தால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் இடவும் ஆகாதோ
வாசலைச் செம்பினால் வாயையும் செம்ம வேணுமோ

துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –
ஆசயா யதி வா ராம புநஸ் சப்தா பயேதி தி -(சுமந்திரன் பெருமாள் வார்த்தை சொல்லுவார் என்று காத்து இருந்தா)
இவர்களுக்குப் புகுருங்கோள்-என்னவுமாம் –
போங்கோள் என்னவுமாம் –

(துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-)

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்த மத்யத்திலே –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே இவர்களுக்கு இவள் பேச்சு-
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ

மதுரா மதுரா லாபா(தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்)
நீயும் அவனும் வாழ்ந்து எங்களுக்குப் பரிவட்டம் தருகிறபடியோ இது
நாங்கள் செய்தபடி செய்ய உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு தரிக்க வேண்டாவோ
ஸூ க மாஸ்ஸ்வ
ரமஸ்வ ச(சுமந்திரன் பெருமாளை சக்ரவர்த்தி கூப்பிட சென்ற பொழுது சீதாப்பிராட்டிக்குப் பெருமாள் சொல்லிப் போன வார்த்தை )
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –

இவளுடைய பேச்சு உஜ்ஜீவனமாய் தாரகமாய் இறே இருப்பது

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்தத்தில்
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே
இவர்களுக்கு இவள் பேச்சு
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமிநீ இறே அங்கு செல்லுகிறது –
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –
(சீதை என்ன சொன்னாள் அங்கு பெருமாள் கேட்டார் -இவர்களுக்கு இவள் வார்த்தை கேட்க பிரார்தனை )

—————

நீங்கள் பழி இடுகிறது ஏன் -அவன் இங்கே உண்டோ -என்ன –

நாற்றத் துழாய் முடி –
கோயில் சாந்தை உன்னால் ஒளிக்கப் போகுமோ-

இப்போது உண்டாக வேண்டா
அவனை ஒரு கால் அணைத்து விட்டால் அது அஞ்சு ஆறு குளிக்கு பரிமளம் நிற்குமே —
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு -என்ன

நாற்றத் துழாய் முடி
நீயும் மறைத்து உன் களவுக்கு அவனும் பெரு நிலை நின்றால்
கோயில் சாந்தை உன்னால் ஒளிக்கப் போமோ –
அன்றி மற்றோர் உபாயம் என் (குட்ட நாட்டுத் திருப்புலியூர் மேல் இவள் நேர் பட்டதே )-என்னும் படி
மாளிகைச் சாந்தை மறைக்கப் போமோ –

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

இப்போது அவன் உண்டாக வேணுமோ -அவன் ஒருக்கால் அணைத்து விட்டால் நூறு குளிக்கு நிற்கும்
நாம் எல்லாரும் ஓக்க இப்போதே எழுந்து இருந்து போந்த பின்பு படுக்கையிலே சாய்ந்தேன்
அந்தியம் போதே பிடித்து வாசலைப் பற்றிக் கொண்டு நின்றி கோளே-
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு என்ன –

————

நாராயணன் –
அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –
வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ –
உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –

நாராயணன்
எங்களை போலே கதவு திறக்கும் தனையும் பார்த்து இருக்க வேணுமோ அவனுக்கு
அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –

நாராயணன்
ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –
விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது
உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –
ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும்
எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )

நாற்றத் துழாய் முடி நாராயணன்
ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ
(தீஷிதம் விரதம் சம்பன்னம் )

பேசாதே கிடக்கில் வாய் திறந்திலள் -என்னா நின்றாள்
வாய் திறக்கில் உத்தரம் சொல்லிற்று என்பார்கள் என்று சொல்லி
உறங்குவாரைப் போலே கிடந்தாள்

நாராயணன் -இங்கு மூன்றாவது -நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் -அழியாத குணக்கடல் நிறைந்தவன்
ரம் -அழிய வைக்கும்
கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

————-

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் –
வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-
ருசியாலே-

புண்ணியன் –
இவர்கள் உபாயம் அவன் தானே இறே –
சிநேக உக்தியாகவுமாம் –

நம்மால்
வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )

நம்மால்
அவனுக்கு ஆகாதார் உண்டாய் முடிந்தான் அல்ல கிடீர்-
ஜென்ம விருத்தாதிகள் ஏதேனும் அமையும் கிடீர்

போற்ற
இவர்கள் குடிப் பிறப்பு இருக்கும் படி –
பல்லாண்டு என்று இருக்குமவர்கள் இறே –
இவர்கள் ஆஸ்ரயணம் உபாயம் அன்று

போற்ற
செய்ய வேண்டுவது பெரிதாய் முடிந்தான் அல்லன் (கும்ப கர்ணன் )கிடீர்

பறை தரும்
உக்கமும் தட்டொளியும் உன் மாணாளனையும் தந்து

புண்ணியனால்
தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியில் தலை கீழாக விழுந்து சாவாரைப் போலே

புண்ணியனால்
1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்
2-ருசி ஜனகனும்
3-உபாயமும்
4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —ஆச்சார்ய ஹிருதயம்–162
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம்
வானமா மலையிலே கொழுந்து விடும் —ஆச்சார்ய ஹிருதயம்-163
களை கண் அற்றாரை உருக்கும்மாதுர்யம்
குடமூக்கிலே பிரவஹிக்கும்–ஆச்சார்ய ஹிருதயம்-164)

ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்றது புறம்பாம் படி
யதிவா ராவண ஸ்வயம் -என்கிறபடி
ரீபூணாம் அபி வத்சலரானவராலே கிடீர் முடிந்தது

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
நாற்றத் துழாய் முடி –
உன்னைப் போலே புறப்படாத தத்துவமோ அவன் சூடின தத்வம்
விரை குழுவு நறும் துளவம்
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ -என்ன –
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

(குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே-10-6-7-)

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ–
புகுகிற வழி தேட வேணுமோ -புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ(அனைவர் உள்ளும் அவனே இருக்க அத்வேஷம் செய்து தள்ளப் பார்க்கிறோம் அன்றோ )
விடாதார்க்குப் பேர் அன்றோ இது(நாரங்களுக்கு எல்லாம் உள்ளே இருப்பதால் தானே நாராயணனன் பெயர் பெற்றான் )-

யுகாவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ -நீ விலக்கிடாய்
பதிம் விஸ்வஸ்ய  ஆத்மேஸ்வர -என்று அவன் அழகிதாகப் பொதுவாய் இருந்தான் –
நாராயண தத்துவத்துக்கு இன்று தொடங்கி நமஸ்காரம்(குத்தல் பேச்சு )
கௌசல்யா லோக பர்த்தாரம்-
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று துணிந்தார்க்கு இப்படியோ-
ரக்ஷகனாக வேண்டாவோ -பறை தரும் என்று க்ஷேபம்

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ -போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம் –
புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –

உன் படிகள் அழகிதாய் இருந்தது -என்ன –
பின்னையும் அவன் பாசுரமாக ஓன்று பிறக்கக் காணாமையாலே (இவனும் உள்ளே இருக்க -விண்ணோர்களை எழுப்பிய பின்பு தானே இவர்கள் என்னிடம் வர வேண்டும் என்று இவனும் பேசாமல் இருந்தானே )அவனை விட்டு

இவள் நம்மில் ஒருத்தியாய் (பிராட்டியாரும் உபேயத்தில் அவனை அனுபவிக்க நம்முடன் சேருவாளே )ஓக்க நோன்பு நோற்று ஓக்க அனுபவிக்க இருந்து
நம் திறத்தில் செய்தபடி செல்லாதே மாற்றாராய்ச் செல்வதே -என்று அவளைத் திரிய எழுப்ப

திரியவும் நம்மைப் பிரித்தார்கள் ஆகில் நாம் பேசாதே கிடப்போம் என்று   அவள் வாய் திறவாதே கிடக்க
உறக்கத்துக்குக் கும்ப கர்ணனையும் ஜெயித்ததாய் இருந்ததீ -என்கிறார்கள் –

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்
இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே

(போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –
அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)

பரித்ராணாய ஸாது நாம் ஏவ உத்தேச்யம் -மற்றவை தன்னடையே ஆனு ஷங்கிகம்-

முடியில் துழாய் அவனுக்கு மட்டும் அசாதாரணம் -நாற்றம் முடி நாற்றமும் துழாய் நாற்றமும்-சேது அணையில் அர்ஜுனன் ராமனின் நாற்றத்துழாய் முடி பார்த்ததாக வில்லிபுத்தூர் மஹா பாரதம் -யுகம் கடந்து இருக்கும் -மங்கள குணம் நீங்காமல் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் நாராயணன் இதில் –

நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ

குழல் இனிது யாழ் இனிது -தம் மக்கள் அழு குரல் இனிது –
கண்ணன் தனது புல்லாங்குழலை விட பக்த நாரதர் வீணை ஒலியை மிக இனியது என்றும்
நம் போல்வார் அழுகையையும் ஸ்தோத்ரமாகக் கொள்ளும் மால் அன்றோ

————

இவனால் -பண்டு -ஒரு நாள் –
முன்பு உன்னைப் போலே உணராதே படுத்தினார் உண்டு காண் என்கை-

பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே-
ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –

கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –
உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ –
அவனது -துயில்
உன்னது -பெரும் துயில்
அவன் ஒருத்தியை இறே பிரித்தது
நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-

பண்டொருநாள்
முன்பு உன்னைப் போலே உணராதே நோவு படுத்தினான் ஒருவன் உண்டு காண்

ஒரு நாள்
உணர்ந்திலன் என்று ஒரு கால் கேட்டு இருந்தோம் –
இன்று அனுபவியா நின்றோம்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த
தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே-
வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே
இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

கும்பகர்ணனும்
உறக்கத்தில் தலையானவனும் உனக்குத் தோற்று தன் உறக்கத்தையும் தானே தந்து போனானோ –
நீயும் அவனுமாக சமயம் பண்ணி உறங்கப் புக்கு நீ ஜெயித்த பின்பு
நான் இதைக் கைக் கொள்ளுவன் அல்லேன் என்று விட்டானோ –
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –
நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ –

பெரும் துயில் –
அவன் அளவோ உன்னுடைய நித்திரை –
அவனதோ துயில் -உன்னதோ பெரும் துயில் –

அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்
ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே

அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு –
நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –
இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு

அவன் ஒருத்தியினுடைய பிரிவுக்கு ஹேது பூதனனாம் அத்தனை இறே
நீ ஓர் வூராகப் பிரிக்கைக்கு ஹேது பூதையாய் உறங்குகிறாய் இறே

ந ஷமாமி என்கிற அஸஹ்ய அபசாரம் பண்ணினவனை அரை க்ஷணம் உணராதே இருக்கிற
நமக்கு ஒப்பாகச் சொல்லா நின்றார்கள் என்று
இவர்களுக்குச் சென்று முகம் காட்ட வேணும் என்று துணுக் என்று தான் உணர்ந்தமை தோற்ற –
கிருஷ்ண கிருஷ்ண என்றாள்

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை
தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு
இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று
தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்

சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-
ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –

புண்ணியனால் பண்டொருநாள் கூட்டத்தின் வாய் வீழ்ந்த
எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் –
விளக்கு வீட்டில் போலேயும் சாவுகை

பண்டு ஒரு நாள் –
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

(விழித்து இருக்காமல் தூங்கிக் கொண்டே படுத்தினான்
இவளும் பாகவத சமாஹம் தான் ப்ராப்யம் என்று உணராமல் படுத்துகிறாள் )

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
கொடுவினைப் படைகள் வல்லையாய்-
ததோ ராமோ மஹா தேஜா –கோஸ்ய வசமே -என்று நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

(நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்)

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ

(எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே
ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே)

புண்ணியனால் -வீழ்ந்த -வீழ்க்கப்பட்ட இல்லையே -வீட்டில் பூச்சி போல் -வீழ்ந்தான் அன்றோ
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரத மரகத மணித்தடம் –

ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –

—————–

ஆற்ற அனந்தல் உடையாய் –
இப்படி சொல்லக் கேட்டு பெரிய ஆனந்தலோடே -கிருஷ்ணா கிருஷ்ணா -என்ன
எங்களுக்கு அங்கே போய்-துயில் எழப் பாட வேண்டுமோ -நீ உணரும்படி காண அமையாதா –

ஆற்ற வனந்தல் உடையாய்
இது ஒரு உணர்த்தி இருந்த படி என் –
எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ –
நீ உணரும் படி காண அமையாதோ –

ஆற்ற அனந்தல்
ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –
ஜாலக ரந்தரத்தாலே (ஜன்னல் ஓட்டை வழியே ) இவள் உணர்ந்த படியைப் பார்த்தார்கள்
தங்கள் கோஷ்ட்டிக்கு நாயக ரத்னம் போலே இருந்தாள் –

சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –

அஸஹ்யாபசாரிகளில் அக்ரேஸரனான இராக்கதப் பையலோ டொக்காம்மைச் சேர்க்கின்றனரே இவர்கள்!
இஃது என்ன கொடுமை! இனி வெளியிற் சென்று முகங்காட்டுவோம்’ என்று எண்ணி,
தான் உணர்ந்தமை தோற்றச் சோம்பல் முறித்தாள்;

அதனை உணர்ந்த இவர்கள், ‘ஓ! உறக்க மிருந்தபடி யென்!’ என வியந்து,
“ஆற்ற அனந்தலுடையாய்!” என விளிக்கின்றனர்.
பின்பு சாலக வாசலாலே அவளுணர்ந்தபடியை உற்று நோக்கினார்கள்; அவள் தங்கள் திரளில் வந்து கூடினால்
நவரத்நமாலையில் நாயகக்கல் அழுத்தினாற்போலாமெனக் கருதி, அருங்கலமே! என்கிறார்கள்.
நாயகமணி இல்லாத ஹாரம் போல் இத்திரள் இருள் மூடிக்கிடக்கிறது; இதனை நீ விளக்கவாராய் என விளித்தவாறாம்.

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடக்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம் என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-

எங்களுக்கு அங்கே போய்த் துயில் எழப் பாட வேணுமோ
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

———

அருங்கலமே –
எங்களுக்கு எல்லாம் சிரோ பூஷணம் அல்லையோ
ஹாரத்தைப் பண்ணி அதுக்கு கல் அழுத்தினாப் போலே
நீ புகுந்து இக் கோஷ்டியை ஸ்நாதமாக்காய்-என்கிறார்கள்
எங்களுக்கு பெறுவதற்கு அரியவள் அல்லையோ நீ என்னவுமாம் –

அருங்கலமே
என்கிறார்கள் –
எங்களுக்கு எல்லாம் ஸீரோ பூஷணம் அல்லையோ நீ –
ஒரு ஹாரத்தைப் பண்ணி அதிலே ஒரு ரத்னத்தை அழுத்தினால்
அந்த ரத்னம் அந்த ஹாரத்தை விளக்குமா போலே
இத் திரளை (ச தனம் )ச நாதம் ஆக்கப் பாராய்

அரும் கலமே
எங்களுக்கு பெறுதற்கு அரியவள் அல்லையோ நீ –
அவள் புறப்பட
அவனும் ஒக்கப் புறப்பட்டு
தங்களைத் தலை மேலே கொள்ளும் என்று இருக்கிறார்கள் –

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே -என்கையாலே-
சோம்பல் முறிக்கையும்
துர்லபமான ஆபரணம் போலே-அத்யாகர்ஷகமாய் இருக்கிறது -என்றுமாம்-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் -ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

(இது தானே பாகவதர்களை எழுப்புவதில் நடுப் பாட்டு -கீழ் நான்கும் மேல் ஐந்தும் உண்டே)

(1-பிள்ளாய் –2-பேய்ப் பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)3-கோது கலமுடைய பாவாய் –4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-இப் பெண் பிள்ளை
6-புன மயிலே –7-நற் செல்வன் தங்காய் –8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )- 9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய் 10-இளங்கிளியே )

அரும் கலமே
எம்பெருமானாரைப் போலே -(குரு பரம்பரை ஹார நாயக ரத்னம் அன்றோ )
மஹாதா தபஸா (பெரும் தவம் புரிந்து கௌசல்யை ராமனைப் பெற்றாள் )-(அவ்வாறு பெரும் தவத்தினால் )பெறலாமவள் அல்லள்-
தானே தன்னைப் பெறுமத்தனை-ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே (சீதா லங்கனா உத்பவ –கோதா துளஸீ கான உத்பவ போல்)

(அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-ஸ்ரீ யதிராஜ சப்ததி-15-)

———–

இவர்கள் ஆர்த்தியைக் கண்டு துணுக் என்று வரப் புக்காள்-

தேற்றமாய் வந்து திற –
இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே-
தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –

தேற்றமாய் வந்து திற-
ஊராகத் திரண்டு கிடக்கிறது-படுக்கையில் கிடந்தபடி வாராதே
சதஸ்தையாய் வந்து திற

இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்-

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
பயப்பட்டு மேல் நிலங்களில் நின்று தடுமாறாதே வந்து இழிஞ்சி திற

அங்கன் அன்றிக்கே
வூராகத் திரண்டு கிடக்கிறது –
அவர்களில் உன்னையும் நியமிக்க வல்லார் உண்டு —
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்த படியே வராதே –

உன்னைப் பேணிக் கொண்டு ஸதஸ்யையாய் வந்து திற –

சாப்ரஸ் கலந்தீ –ஜகமா தாரா லஷ்மண சன்னிதானம் -என்னும் படி வராதே கொள்-

தேற்றமாய் வந்து திற-என்கையாலே-
இவ்வதிகாரிக்கும் லோக கர்ஹை வாராமல்
லௌகிக அனுவர்த்தனம் கார்யம் என்றது ஆய்த்து –

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி-தள்ளம் பாறி – விழாதே தெளிந்து திற –
ஊராகத் திரண்டு வந்து கிடக்கிறது -படுக்கையிலே கிடந்தபடியே வராதே -சதஸ்யை யாய்த் திற -என்றுமாம் –

தேற்றம்
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்-

(ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன … சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதிப்படியே
ஸ்ரீ இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த தாரை போல் இல்லாமல்)

——————————

ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு

———————-

(ஸ்வாபதேசம்)

அஞ்சாம் பாட்டில்
அம்மனாய் என்கிறது -குலசேகர பெருமாளை-அது எங்கனே என்னில் –
குலசேகரன் ஆகையாலும்

எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனன் ஆகையாலும் –

அல்லிமலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து
இள யாய்ச்சியார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த யுரையதனை ஸ்த்ரீத்வ பாவனயா பேசுகையாலும்

ஏறு அடர்த்ததும் -என்றும்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் -என்று நப்பின்னை விஷயமாக வியாபாரித்த
வியாபாரத்தில் தோற்று-அடிமை அல்லது -என்கையாலும் –

ஆலை நீர் கரும்பன்னவன் -என்று தொடங்கி –
மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்தி என்னும் அளவும்
கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கையாலும் –

இதிலே நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றதை –
வண்டு கிண்டு நாறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை என்றும் –

அந் நாரணனை-நலம் திகழ் நாரணன் என்று பேசுகையாலும்

இவருக்கு அசல் உணர்த்தி அனுபவம் போலே
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் அனுபவம் நடந்து செல்லுகையாலே

பிரபன்ன குல சேகரரான குலசேகர பெருமாளை –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்கிறது என்கை –

————————————————————————–

திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இரு விளக்கேற்றி யிருளை யகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
அவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

14 பாசுரங்கள் திருத்துழாய் பற்றி மூன்றாம் திருவந்தாதியில் உண்டே

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

அம்மனாய் -முதல் நாயகி பாசுரம் –வெற்பு என்று வேங்கடம் பாடும்-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

கும்பம் -கர்ண -அகஸ்தியர் -பெரும் தமிழன் நான்

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈஸாவாஸ்யம் உபநிஷத் -ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

ஈஸாவாஸ்யம் உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
மீமாம்ஸ என்கின்ற பூஜ்ய விசாரமானது வணங்கத்தக்கதும், போற்றுதலுக்கு உரியதான மேன்மையான விசாரம்.  வேதத்தை ஜெய்ம்னி மகரிஷியும், .வியாஸ பகவானும் விசாரம் செய்துள்ளார்கள்.  ஜெய்மினி வேதத்தின் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்துள்ளார்.  அதற்கு பூர்வமீமாம்ஸம் என்று பெயர். அதை பின்பற்றுபவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள் என்று கூறுவர். வியாஸ பகவான் வேதத்தின் இறுதிபகுதியான வேதாந்தத்தை விசாரம் செய்துள்ளார். வேதாந்தம் என்பதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இதற்கு உத்தரமீமாம்ஸ என்ற பெயரும் பிரம்மசூத்திரம் என்ற பெயரும் உண்டு.  உபநிஷத்திலுள்ள வாக்கியங்களுக்கு அர்த்தத்தை நிர்ணயம் செய்துள்ளார்.  உபநிஷத் கருத்துக்களுக்கு முரண்பாடாக உள்ள மற்ற மதங்களின் கருத்தை நிராகாரம் செய்துள்ளார். நான் மூன்று காரணங்களினால் இந்த விசாரம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அவைகள்.

 1. பரமாத்மாவை பற்றிய ஸ்வரூபத்தை உபநிஷத் விளக்குவதாலும்
 2. இந்த அறிவினால் மோட்சம் என்று பலன் கிடைப்பதாலும்
 3. இந்த அறிவையும், மோட்ச பலனையும் நாடும் சாதகர்களுக்காகவும்

இவைகளெல்லாம் ஏற்கனவே பூர்வ மீமாம்ஸத்திலேயே இருக்கின்றதே என்று கேட்கும் போது

 1. பூர்வமீமாம்ஸையில் விதவிதமான கர்மங்கள், யாகங்கள் கூறப்படுகின்றது. ஏதாவது ஒரு தேவதையைக் குறித்தும், பலனுக்காகவும் யாகங்கள் செய்வதால் ஈஸ்வரனைப்பற்றி ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது.
 2. தியாகம், உபாஸனை, யாகங்கள் மூலமாக சொர்க்கத்திற்கும்,பிரம்ம லோகத்திற்கும் செல்வதே மோட்சத்தை அடைவதாகும்
 3. இவைகளை நாடும் சாதகர்கள் எங்களிடத்தில்தான் இருக்கிறார்கள்

இதற்கு வியாஸ பகவான் அளிக்கும் பதில்:

 1. ஈஸ்வரன் என்ற சொல்லில் இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. அவரோடு மாயை சேர்ந்திருக்கின்றது. இந்த ஈஸ்வர தத்துவம் விசாரம் செய்யப்படுவதில்லை.  ஈஸ்வர நிர்குண ஸ்வரூபம், ஜீவனின் ஸ்வரூபம் உபநிஷத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. எனவே இதை விசாரம் செய்கின்றேன்.
 2. சொர்க்கம், பிரம்மலோகம் இறுதி லட்சியமல்ல, இவைகளுக்கு அப்பால் அடைய வேண்டியது ஒன்று இருக்கிறது. பிரம்மத்தை அடைதலே மோட்சமாகும்.  பரம்பொருள் ஸ்வரூபமே நான் என்ற அறிவை அடைவதே பிரம்மத்தை அடைவதாகும்.  அதனால் சம்சாரம் முழுவதுமாக நீங்கிவிடும்.  ஆகவே உபநிஷத்துக்கு விளக்கம் எழுத வேண்டியதாக இருக்கிறது.  ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்றுதான் என்ற அறிவை அடைந்தவுடன் மனநிறைவை அடைகிறான்.  துயரங்களிலிருந்து விடுபடுகிறான்.
 3. இந்த பயனை அடைவதில் ஆசையுள்ளவர்களும் இருக்கிறார்கள். சொர்க்கலோக இன்பங்களில் வைராக்கியம் அடைந்தவர்களுக்காக இந்த விசாரம் செய்யப்படுகிறது.  வைராக்கியமானது இந்த உலகத்தை விசாரம் செய்வதினால் வருவது.

பூர்வமீமாம்ஸாவில் கூறப்பட்டுள்ள விதவிதமான உபாஸனைகள் யாகங்கள் விதவிதமான பலன்களில் வைராக்கியம் உடையவர்கள். உத்தரமீமாம்ஸாவிற்கு வருவான்.  மோட்சத்தை அடைய உதவும் சாதனம் பிரம்மஞானம் அதை அடைய விரும்புகின்றவனே அதிகாரியாக இருக்கின்றான்.  சாதன-சதுஷ்டய சம்பத்தி இந்த ஞானத்தை அடைவதற்கான தகுதிகளாகும்.  ஞானத்தை அடைய விரும்புபவனை முமூக்ஷு என்று அழைப்பர்.

இந்த உபநிஷத் ஶுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது. உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்ற அர்த்தமாகின்றது.
உப – மிக அருகில் இருக்கின்றது; அபே4தம் – வேறில்லாதது
நி – நிச்சயமானது, உறுதியான அறிவு
ஷத் – சம்சாரத்தை நாசம் செய்தல்
உபநிஷத் – ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றுதான் என்ற உறுதியான அறிவு. இந்த அறிவு சம்சாரத்தை நாசம் செய்கின்றது..
ஶாந்தி – நீங்குதல், நமக்கு வரும் தடைகளிலிருந்து நீங்கி இருத்தல்

சாந்தி பாடம்
ஓம் பூர்ணமத3 பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஶிஷ்யதே ||
ஓம் ஶாந்தி! ஶாந்தி!! ஶாந்தி!!!

பூர்ணம் அத3:: – ஈஸ்வரன் வரையறுக்கப்படாத பூரண ஸ்வரூபமாக இருக்கிறார்
பூர்ணம் இதம் – இந்த ஜீவன் பூரண ஸ்வரூபமாக இருக்கிறான்
பூர்ணாத்      – பூரணமான ஈஸ்வரனிடமிருந்து
பூர்ணமுதச்யதே – பூரணமான ஜீவன் தோன்றுகிறான்
பூர்ணஸ்ய      – பூரணமான ஜீவனுடைய
பூர்ணமாதாய   – பூரண ஸ்வரூபத்தை எடுத்துவிட்டால்
பூரணமேவ     – பூரண ஸ்வரூபம் மட்டும்
அவஶிஷ்யதே  – எஞ்சியிருக்கின்றது

விசாரம்
பூரணம் என்றால் வரையறுக்கப்படாதது.  கால,தேச,வஸ்து, குணம் இவைகளால் வரையறுக்கப்படாதது.  பூரணம் என்ற சொல் பிரம்மனையும் குறிக்கும்.  எனவே பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகின்றது.  மற்றவைகள் எல்லாம் மித்யா, அபூரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நமக்கு ஈஸ்வரன், ஜீவன், ஜகத் என்கின்ற மூன்று தத்துவங்கள் தோன்றுகிறது.  இவைகளின் உண்மையான ஸ்வரூபம் சாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

பூரணமான பிரம்மத்திற்கு பொய்யான “காரணம்” என்ற தன்மையை தற்காலிகமாக கொடுக்கிறது.  காரண பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது.  இதையே ஈஸ்வரன் என்றும் கூறப்படுகிறது.  பிரம்மன் + காரணம் = ஈஸ்வரன்.  இதிலிருந்து பூரணத்திலிருந்து வந்த ஈஸ்வரன் பூரணமானவர். பூரணத்திற்கு காரியம் என்ற தன்மையும் கொடுக்கப்படுகிறது.  எனவே பூரணம் + காரியம் = ஜீவன் என்ற சமன்பாடு கிடைக்கின்றது.  காரணத்திலிருந்து வரும் காரியத்திற்கு காரணத்தின் தன்மை நிச்சயமாக இருப்பதைப்போல, பூரணமான ஈஸ்வரனிடமிருந்து வந்த காரியமான ஜீவன் பூரணமானவனே என்று அறிந்து கொள்ளலாம். கடலிலிருந்து அலைகள் தோன்றின என்ற வாக்கியத்தில் அலைகள் வெறும் நாம-ரூபம்தான்.    இரண்டிலும் பொதுவக இருப்பது நீர்தான்.  நாம-ரூபத்திற்கு வேறொரு பெயர் உபாதி.  அலைகளில் உள்ள நீரை நீக்கிவிட்டால் அலைகள் இருக்காது.  நாம-ரூபத்துடன் கூடிய ஜீவனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை எடுத்து விட்டால் பூரணம் மட்டும் இருக்கும்.  நாம-ரூபம் வெறும் தோற்றம் பொய் என்று சொன்னால் காரணம் பொய்யாகிவிடும். எனவே காரியமும், காரணமும் நீங்கி விட்டதால் எஞ்சியிருப்பது பிரம்மன், பூரணம் மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

ஈஶா வாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்கிஞ்ச ஜக3த்யாக் ஜக3த் |
தேன த்யக்தேன பு4ஞ்ஜீதா2 மா க்3ருத4: கஸ்ய ஸ்வித்3த4னம் ||

இத3ம் ஸர்வம் – நம்முடைய அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரனால்,  பரமாத்மாவினால்
வாஸ்யம் – வியாபிக்கப்பட்டுள்ளது
யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் – இந்த பிரபஞ்சத்தில் உலகம் போன்ற எவைகள் உண்டோ அவைகள் அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரன் என்கின்ற அறிவினால்
வாஶ்யம் – மறைக்கப்பட வேண்டும்
தேன த்யக்தேன – தியாகத்தினால் உன்னை
புஞ்ஜீதா – காப்பாற்றிக் கொள்
கஸ்யவித் – யாருடைய
த4னம் – பொருட்களையும், செல்வத்தையும்
மா க்3ருத4: – அபகரிக்காதே, ஆசைக் கொள்ளாதே

களிமண்ணால் பானைகள் வியாபிக்கப்பட்டிருக்கிறது.  இந்த வாக்கியத்தில் களிமண் பானைகளுக்கு உபாதான காரணமாக இருப்பதைக் காணலாம்.  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது உபாதான காரணம் என்று கூறுவர். நிமித்த காரணம் ஸ்ருஷ்டிக்கு மாத்திரம் காரணமாக இருப்பது. குயவன் பானை உற்பத்தி செய்வதற்கு நிமித்த காரணமாக இருக்கிறன்.  ஈஸ்வரனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அவர் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

களிமண் பானையை வியாபித்திருக்கிறது என்பது களிமண்ணே வெறும் நாம-ரூபமாக இருக்கும் போது அதற்கு பானை என்று கூறுகிறோம்.  உண்மையில் பானை என்ற ஒன்றுமில்லை.  அதேபோல இந்த ஜகத்தை ஈஸ்வரன் வியாபித்திருக்கிறார் என்றால் அவரேதான் நாம-ரூபங்களாக காட்சியளிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். பூரண ஸ்வரூபமான பரமாத்மா நாம-ரூபங்களாக தோன்றும்போது அவரே பரமேஸ்வரனாக உலகமாக காட்சியளிக்கின்றார்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புக்களையும் ஈஸ்வரன் என்ற அறிவைக் கொண்டு மறைத்துவிட வேண்டும் என்று சங்கரர் வலியுறுத்துகிறார்.  பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் வெறும் நாம-ரூபங்கள்தான் என்ற அறிவுடன் பார்க்கும் போது ஜகத் மறைந்து பரமேஸ்வரன் தெரிவார்.  நாம-ரூபத்தில் திருஷ்டியை வைத்தால் உபாதானம் தெரியாது. அதை மறைத்து விட்டால் உபாதானத்தை உணர முடியும். கண் வழியே பார்க்கின்ற அனைத்துமே ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, மனதால் பார்ப்பவைகள் அனைத்தும் ஜீவன் ஸ்ருஷ்டி. நாம் மனதிலுள்ள ராக-துவேஷங்களினால் நாம் ஒரு உலகத்தையே படைத்து அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனிடம் இருக்கும் ஆசைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் மகன், சொத்து, உலகம் அதாவது தன்னுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இவைகளை துறப்பதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள். தியாகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதுதான் இதை தியாகம் செய்தல் இங்கு குறிப்பிடப்படுகிறது. நம்மிடம் இருக்கும் செல்வம், பொருட்கள் மீது ஆசைக் கொள்ளாதே. மற்றவர்கள் பொருட்கள் மீது ஏன் ஆசைப்படக்கூடாது என்ற கேள்வி வரும்போது இவ்வாறு எண்ணிப்பார்த்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாமும் ஈஸ்வரனுடையதாக இருக்கும் போது நானே ஈஸ்வரன் என்ற அறிவுடன் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்துப் பொருட்கள் என்னுடையதாக நினைத்துக் கொள்வோம். இதுவே ஈஸ்வர திருஷ்டி. அனைத்தும் மித்யா என்ற அறிவுடன் இருத்தல்.

குர்வன்ன ஏவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா: |
ஏவம் த்வயி நான்யதே2தோSஸ்தி ந கர்ம லிப்யதே நரே || 2 ||
 பிரவிருத்தி, நிவிருத்தி என்ற இரண்டுவிதமான வாழ்க்கைப் பாதைகள் உண்டு.  பிரவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் அறியாமையில் இருக்கின்றோம் என்பதே தெரியாது.  நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தன்னிடத்தில் இருக்கின்ற அறியாமையை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் இருப்பவர்கள். இந்த ஸ்லோகத்தில் பிரவிருத்தி மார்க்கத்திலிருப்பவர்கள் எப்படி வாழ்ந்தால் நிவிருத்தி மார்க்கத்திற்கு செல்ல முடியாது என்பதை கூறுகிறது.

குரவன் ஏவ இஹ – நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது
கர்மாணி – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடமைகளை செய்து கொண்டு,
ஶதம் ஸமா: – நூறு வருடங்கள் அதாவது எவ்வளவு வருடங்கள் வாழ்வதற்கு பிராரப்தம் இருக்கின்றதோ அவ்வளவு நாட்கள்
ஜிஜீவிஷேத் – வாழ்வதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.
ஏவம் – இப்படி வாழ விரும்புகின்ற
த்வயி நரே – மனிதனாகிய உனக்கு
இதஹ – இவ்விதம் செயல்பட்டு கொண்டிருப்பதை தவிர
அன்யதா ந அஸ்தி – வேறு வழி கிடையாது
கர்ம லிப்யதே – இவ்விதம் செயல் செய்து வாழ்வதினால் அந்த செயல்களினால் பந்தப்படாமல் இருக்கலாம்.
அதாவது கர்மயோகப்படி செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அஸுர்யா நாம தே லோகா அந்தே4ன தமஸாவ்ருதா: |
தாம்ஸ்தே ப்ரேத்யாபி4க3ச்ச2ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: || 3 ||

அஸுர்யா நாம – அஸுர்யா என்ற பெயருடைய
தே லோகோ – எந்த லோகங்கள் உண்டோ அவைகள்
அந்தே4ன தமஸ – ஆத்மஞானம் இல்லாத அறியாமை என்ற அடர்ந்த இருளால்
ஆவ்ருதா – மூடப்பட்டுள்ளது
இங்கே லோகங்கள் என்பதற்கு சரீரங்கள் என்று பொருட் கொள்ளப்படுகிறது. அக்ஞானிகளுக்கென்று படைக்கப்பட்ட சரீரங்கள். இந்த உடலின் மீது அதிகப்பற்று கொண்டு வாழ்பவர்களே அசுரர்கள் என்று கூறப்படுகின்றனர்.
யே தே ஆத்மனஹ – எந்த மனிதர்கள் ஆத்மாவான தன்னை அழித்துக் கொள்கின்றார்களோ
தான் தே – அவர்கள் மேலே சொல்லப்பட்ட சரீரங்களை
ப்ரேத்ய அபி கச்சந்தி – இந்த சரீரத்தை விட்ட பிறகு அடைகிறார்கள்

ஆத்மாவை அழித்து கொள்வது என்பது அனாத்மாவை அதன் மீது ஏற்றி வைத்துக் கொள்வது என்று பொருட் கொள்ள வேண்டும். இதனால் சம்சாரத்தில் சிக்கி தவிப்பதையே ஆத்மாவை அழித்துக் கொள்பவர்கள், தன்னையே அழித்துக் கொள்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அனேஜத்3 ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்3தே3வா ஆப்னுவன்பூர்வமர்ஷத் |
தத்3தா4வதோSன்யானத்யேதி திஷ்ட2த் தஸ்மின்னபோ மாதரிஶ்வா ததா4தி || 4 ||
எப்படிபட்ட அறிவினால் ஒருவன் தன்னை அழித்துக் கொள்வதில்லையோ அப்படிபட்ட அறிவை இங்கு உபநிஷத் கொடுக்கிறது. இது இந்த ஞானத்தை நேரடியாக விளக்கவில்லை.  ஏனென்றால் அது ஒரு பொருளாக இல்லாமல் இருப்பதால் அதை மறைமுகமாக புகட்டுகிறது. அதாவது அத்யாரோப – அபவாதம் என்ற முறையில் ஆத்ம ஞானத்தை நமக்கு உபதேசிக்கிறது.
அத்யாரோபம் என்பது ஒரு பொருளின் மீது அதற்கப்பாற்பட்ட வேறொரு பொருளை தெரிந்தே ஏற்றி வைத்தலாகும்.  தெரியாமல் ஏற்றி வைத்தால் அதற்கு அத்யாஸம் என்று பெயர். அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை நீக்கி விடுதலாகும்.

அக்ஞானிகள் உண்மையான வஸ்துவின் மேல் அனாத்மா வஸ்துவை பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் உபநிஷத் இந்த முறையை கையாண்டு உபதேசிக்கிறது.  எனவே முதலில் ஜீவனின் பார்வையை, அவஸ்துவை இருப்பதாக ஏற்றுக் கொண்டு பிறகு அதனுடைய மித்யா தன்மையை உபதேசிக்கிறது.  அதன் மூலம் அவனிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி ஆத்ம தத்துவமானது விளக்கப்படும்போது நன்கு புரிந்து விடுகிறது. பிரம்மனான ஆத்மாவின் மீது நம்முடைய மூன்று சரீரங்களும் ஏற்றி வைக்கப்படுகிறது. அறியாமையில் இருப்பவர்கள் இந்த மூன்று சரீரங்களைத்தான் நான் என்று சுபாவமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

தத்3- அந்த ஆத்மா
அனேஜத் – சலனமற்றது, அசைவற்றது, தன்னுடைய நிலையிலிருந்து என்றும் மாறாமல் இருப்பது
ஏகம் – ஒன்றாகவே இருக்கிறது
மனஸ: ஜவீயஹ – மனதைக்காட்டிலும் வேகமானது.
இவ்விதம் கூறி ஆத்மாவானது எல்லாவிடத்திலும் வியாபித்திருப்பதைக் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஏனத் – இந்த ஆத்ம தத்துவத்தை
தேவா: – நம்முடைய இந்திரியங்களால்
ந ஆபுனுவன் – அடைய முடியாது, அறிந்துக் கொள்ள முடியாது. இது புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அவைகளால் கிரகிக்க முடியாது
பூர்வம் அர்ஷத் – மனதுக்கு முன்னாடியே சென்றுவிடுவதால் புலன்களால் அறியப்பட முடியவில்லை. புலன்கள் மனதைச் சார்ந்திருப்பதால்தான் இந்த நிலை
தத்3 – இந்த ஆத்மா
தா4வத் அன்யானதஹ – ஓடுகின்ற மற்றவைகளையும்
அத்யேதி – கடந்து சென்று கொண்டிருக்கின்றது
திஷ்டத் – நின்று கொண்டிருக்கிறது. ஆத்மாவானது எங்கும் வியாபித்திருப்பதால் இதை தாண்டி வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிடப்படுகிறது
தஸ்மின் – ஆத்மா இருக்கின்ற காரணத்தால்
அபஹ – எல்லா செயல்களையும்
மாதரிஶ்வா ததா4தி – ஹிரண்யகர்ப்பன் பிரித்துக் கொடுக்கிறார்

ஈஸ்வரனே ஹிரண்யகர்ப்பனாக தோன்றி அனைத்து செயல்களையும் விதவிதமான தேவதைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றார்.  தானே விதவிதமான தேவதைகளாக தோன்றி கொண்டுமிருக்கிறார்.

தத்3 ஏஜதி தன் நைஜதி தத்3 தூ3ரே தத்3வந்திகே |
தத3 அந்தர அஸ்ய ஸர்வஸ்ய தத்3 உஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத: || 5 ||

இதில் ஆத்மாவை உபாதியுடனும், உபாதியை நீக்கியும் பார்க்கப்படுகிற்து
தத்3 ஏ3ஜதி – இந்த ஆத்மாவானது அசைகின்றது, செயல்படுகின்றது
தத்3 ந ஏஜதி – செயல்படாமலும், அசையாமலும் இருக்கின்றது
ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருப்பதால் அசையாது, நகராது. அனாத்மாவானது ஜட ஸ்வரூபம் எனவே செயல்படும் சக்தியற்றது, இதுவும் நகராது. ஆனால் உடலோடு சிதாபாசனும் இருந்தால் அங்கே செயல்படும் தன்மையை பார்க்கலாம். அசைகின்ற தன்மையுடையதாக இருக்கும். நம்முடைய மனமும்,புலன்களும் செயல்படுவதற்கு காரணம் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான். செயல்படும் பொருட்களுக்கு ஆத்மாதான் காரணம்.  ஆனால் அது செயலெதுவும் செய்யாமல் இருந்து கொண்டிருக்கின்றது

தத3 தூ3ரே – மிகவும் தொலைவில் இருக்கிறது
தத்3 அந்திகே – மிகவும் அருகிலும் இருக்கிறது
ஆத்மாவை பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது. அறிந்தவர்களுக்கோ மிகவும் அருகில் இருக்கிறது.
பத்தாவது மனிதனான தன்னை தேடுபவனுக்கு மிக தொலைவில் இருக்கிறது. அவனே தான்தான் அவன் என்று அறிந்தபிறகு மிகவும் அருகில் இருக்கின்றான்.  இதிலிருந்து அவன் தொலைவிலும் கிடையாது, அருகிலும் கிடையாது. ஏனென்றால் அவனே பத்தாவது மனிதானாக இருக்கின்றான். அதுபோல ஆத்மாவையும் புரிந்து கொள்ளலாம்.

தத்3 அந்தரஸ்ய ஸர்வஸ்ய – இது அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறது. அதே சமயம் அனைத்திற்கும் வெளியேயும் இருக்கிறது.
இதிலிருந்து நாம் ஆத்மா எங்கும் இருக்கின்றது என்ற அறிவை அடையலாம்.  பானைக்கு உள்ளேயும் ஆகாசம் இருக்கிறது வெளியேயும் இருக்கிறது என்று சொல்லும் போது பானையை உபாதியாக கொண்டு ஆகாசம் எங்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்வது போல ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சரீரங்களை உபாதியாகக் கொண்டு உள்ளே, வெளியே என்று கூறப்படுகின்றது.

யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
ஸர்வபூ4தேஶு சாத்மானம் ததோ ந விஜுகு3ப்ஸதே || 6 ||

யஹ து – யாரொருவன்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளையும், பூதங்களையும்
ஆத்மனி ஏவ – தன்னிடத்திலேயும்
ஸர்வ பூ4தேஷு – எல்லா பூதங்களிடத்திலும், ஜீவராசிகளிடத்திலும்
சாத்மானம் – தன்னை பார்க்கின்றானோ
தத3 – இப்படிபட்ட பார்வையினால்
ந விஜுகு3ப்தஸதே – யாரையும் நிந்திக்கவோ, வெறுக்கவோ மாட்டான், யாரிடத்திலும் பரிதாபப்படவோ மாட்டான் கருணையே கொள்வான்

யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
தத்ர கோ மோஹ:: க: ஶோக ஏகத்வம் அனுபஶ்யத: || 7 ||
விஜானத: – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஏகத்வம் அனுபஶ்யதஹ – ஒன்றையே பார்ப்பவனாக இருப்பதால்
தத்ர – அந்த காலத்தில்
கஹ மோஹ கஹ ஶோக – மோகமும் இல்லை, சோகமும் இல்லை

ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது.  எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது.  எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில் தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.

மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஶோகம் – விக்ஷேபம் – பொய்யானவை தோற்றுவிக்கும், மனம் கொந்தளிப்பை கொடுப்பது.
ஆத்மாவைப்பற்றிய அக்ஞானம் இல்லை, தன்னைக் குறித்து எந்த சோகமும் இருக்காது. மோகத்துக்கும், சோகத்துக்கும் அனுபவங்கள், சம்பவங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அதை பொருட்படுத்துவதும் விதத்தில் அவைகளில் இல்லாமை உணரப்படும்.  அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்போம்.  சோகத்திற்கு காரணம் மோகத்தினால்தான் என்று சொல்லப்படுகிறது.

ஸ பர்யகா3ச சு2க்ரம் அகாயம்
அவரணம் அஸ்னாவிரம் ஶுத்3த4ம் அபாபவித்3த4ம்  |
கவிர்மனீஷீ பரிபூ4; ஸ்வயம்பூ4ர யாதா2தத்2யதோர்Sதா2ன்
வ்யத3தா4ச்சா2ஶ்வதீப்4ய: ஸமாப்4ய: || 8 ||

ஸஹ – மேற்சொன்ன ஆத்மதத்துவம்
பர்யகாத்3 – எல்லா இடத்திலும் பரவியிருப்பது, வியாபித்திருப்பது
ஶுக்ரம் – பிரகாச ஸ்வரூபமானது, சைதன்ய ஸ்வரூபமானது அறிவு ஸ்வரூபமானது
அகாயம் – சூட்சும சரீரங்களற்றது, மனது, புத்தி இவைகள் கிடையாது
அவரணம் – காயப்படுத்த முடியாதது
அஸ்னாவிரம் – நரம்புகள் கிடையாது
இவையிரண்டும் கிடையாது என்று சொல்வதிலிருந்து ஸ்தூல சரீரமும் அற்றது என்று புரிந்து கொள்ளலாம்
ஶுத்தம் – தூய்மையானது, காரண சரீரமற்றது.
மேற்கூறியதிலிருந்து மூன்று சரீரங்களும் கிடையாது என்பதை அறியலாம்.
அபாபவித்3த4ம் –  பாவ-புண்ணியங்களற்றது, தர்ம-அதர்மங்கள் இல்லாதது
கவி – அனைத்தையும் அறிந்தவன், எல்லோருடைய மனதிற்குள்ளேயும் இருப்பதால் அனைத்தையும் அறிந்ததாகிறது.
மனீஷீ – மனதை ஆள்வது, மனதை செயல்படுத்துவது
பரிபூ4 – எல்லாவற்றிற்கும் மேலானது, எல்லாமாகவும் இருக்கின்றது
ஸ்வயம்பூ4: – தானாகவே இருக்கிறது, தனக்கு காரணாமாக எதுவும் இல்லாதது
யாதா2தத்2யத: – அவரவர்கள் செய்த கர்ம உபாஸனைகளுக்கு தக்கபடி
அரா2ன் – ஆற்ற வேண்டிய கடமைகளை
ஶாஶ்வதிப்4ய ஸமாப4ய: வ்யத3தாத் – அதிக காலம் இருக்கின்ற தேவதைகளுக்கு, பிரஜாபதிகளுக்கு பிரித்துக் கொடுத்தார்
இயற்கை சக்திகள் நியமப்படி ஒழுங்காக இயங்குவதற்கு காரணமாக யாரோ ஒருவன் ஈஸ்வரன் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த4ம் தம: ப்ரவிஶந்தி யேSவித்3யாம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உவித்3யாயாம் ரதா: || 9 ||

கர்மங்கள் என்று சொல்வது வைதீக கர்மங்கள். உபாஸனா வேதத்தில் சொல்லப்பட்ட வைதீக தியானங்கள். கர்மத்தின் பலனில் ஆசைப்பட்டு செய்வது சகாம கர்மங்கள், இவைகளை செய்வதால் பித்ரு லோகத்தை அடையலாம்.  கர்மம் செய்பவர்களின் மனம் பரபரப்பாகவே இருக்கும்.  உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செயல்களையும், மனதால் செய்யப்படும் தியானம், போன்றவற்றையும் ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான். அசுவமேத யாகத்தை செய்வதால் சொர்க்க லோகத்தை அடைகிறார்கள். இதே யாகத்தை பிராமணன் உபாஸனையாக செய்தாலும் அதே பலனை அடைகிறான்.

ஸமுச்சயஹ – சேர்த்தல் – கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்பவன் அடையும் பலன் பிரம்மலோகத்தை அடைவது கர்மத்தை நிஷ்காமமாக செய்தால் மனத்தூய்மை அடையலாம். நிஷ்காம உபாஸனையின் பலனாக அடைவது மன ஓருமுகப்பாடு.

யஹ – எவர்கள்
அவித்யாம் உபாஸதே – கர்மத்தை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்களோ
அந்தம் தம: – அவர்கள் அடர்ந்த இருளை, சொர்க்கலோகத்தை
பிரவிஶந்தி – அடைகிறார்கள்
சொர்க்கலோகத்கில் ஆத்ம வித்யாவை படிக்கமுடியாது. ஆத்ம ஞானத்தை அடைய முடியாத அறியாமையுடன் கூடிய உலகம் நான், என்னுடைய என்கின்ற அபிமானம் மட்டும் உடைய இருள் நிறைந்த உலகத்தை அடைகிறார்கள்.
ய உ – யார்
வித்யாயாம் ரதா – உபாஸனையை மட்டும் செய்து கொண்டு மகிழ்ந்திருக்கிறார்களோ
தத்2 பூ4ய இவ தே தம் – அவர்கள் அதைவிட அதிகமான அடர்ந்த இருளை அடைவார்கள்.
அதிகமான சுகத்தையும், மமகார, அகங்காரத்தையும் கொண்ட உலகத்தை அடைகிறார்கள்.

அன்யத்3 ஏவாஹுர் வித்3ய்யான் யத்3 ஆஹுர் அவித்3ய்யா |
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ் தத்3 விச்சக்ஷிரே || 10 ||

அன்யத்3 ஏவ ஆஹு வித்யயா – .உபாஸனை செய்வதினால் ஒரு வகையான பலன் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்
அனய்த்3 ஆஹு: அவித்3யயா – கர்மத்தை செய்வதனால் வேறொரு பலன் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்
தீராணாம் – கற்றறிந்தவர்களுடைய வார்த்தைகளாக
இதி ஶுஶ்ரும – இவ்விதம் நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்
யே தத் விச்சக்ஷிரே – அவர்கள் எங்களுக்கு எடுத்து சொன்னார்கள்

வித்யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதம் அஶ்னுதே || 11 ||

யாரொருவன் தியானத்தையும், கர்மாவையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியவை என்று புரிந்து கொள்கின்றானோ அவன் செயல் செய்வதனாலேயே மரணத்தையும் வென்று தியானத்தினாலேயே அழிவற்ற நிலையை அடைகின்றான். இங்கே ம்ருத்யு என்ற சொல்லானது நமக்கு இயல்பாகவே எந்த செயல்களை செய்ய விரும்பி செய்கின்றோமோ அதைக் குறிக்கிறது.  இதையே ஸ்வாபீக கர்மம் என்றும்  கூறப்படுகிறது.  நமக்கு என்ன செயல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது. இந்த கர்மத்தின் பலனாக சுபாவமாக செய்யும் நிலையிலிருந்து விடுபட்டு சாஸ்திர தர்மப்படி இயல்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  உபாஸனையின் மூலம் தேவதையை தியானித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்வரூபமாகவே உயர்ந்து விடுகின்றான். இதையே அம்ருதம் என்று கூறப்படுகிறது.

அந்தம் தம: ப்ரவிஶந்தி யேSஸம்பூ4திம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உ ஸம்பூ4த்யாம் ரதா: || 12 ||

எது தோன்றியுள்ளதோ அதை ஸம்பூதி என்று பொருட் கொள்ள வேண்டும்.. எது வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கிறதோ அதை அஸம்பூதி என்று பொருட்கொள்ள வேண்டும். இங்கே ஸம்பூதி உபாஸனம் என்பது ஹிரண்யகர்ப்ப உபாஸனம் என்று பொருட் கொள்ள வேண்டும்.  அஸம்பூதி என்பதை ப்ரகிருதி உபாஸனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

யார் பிரகிருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள்.  யார் ஹிரண்யகர்ப்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக அதை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மேற்சொன்ன இருளை காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்

அன்யத்3 ஏவாஹு: ஸம்ப4வாத்3 அன்யத்3 ஆஹுர் அஸம்ப4வாத் |
இதி ஶுஶ்ரும தீராணாம் யே நஸ் தத3 விச்சக்ஷிரே || 13 ||

ஸம்பூதி உபாஸனையை செய்வதால் ஒருவகையான பலன் கிடைக்கின்றது.  அஸம்பூதி  உபாஸனை செய்வதால் வேறுவகையான பலன் கிடைக்கின்றது.  இது கற்றறிந்தவர்கள் எங்களுக்கு கூறியதையே நாங்கள் கேட்டிருக்கிறோம்.  இவ்விதம் எங்களுக்கு யார் சொன்னார்களொ அந்த தீரர்களுடைய வார்த்தையை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
ஸம்பூதி உபாஸனையின் பலன் – அஷ்டமகா சித்திகளை அடைவது
அஸம்பூதி உபாஸ்னையின் பலன் – பிரகிருதியுடன் லயத்தை அடைவது

ஸம்பூ4திம் ச வினாஶம் ச யஸ் தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
வினாஶேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூ4த்யாம்ருதம் அஶ்னுதே || 14 ||

யார் பிரகிருதி உபாஸனையையும், ஹிரண்யகர்ப்ப உபாஸனையும் சேர்த்து செய்கின்றானோ, அனுஷ்டிக்கின்றானோ அவர் ஹிரண்யகர்ப்ப உபாஸனையின் பலனாக மரணத்தை தாண்டி, பிரகிருதி உபாஸனையின் பலனாக பிரகிருதியுடன் லயமாகின்ற அடைகின்றார்.

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் |
தத். த்வம் பூஷன்ன அபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே || 15 ||

இந்த பிரார்த்தனை உபாஸனை செய்பவர்களால் செய்யப்படுகிறது. நல்ல உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காக செய்வது.  முமூக்ஷூவின் பிரார்த்தனையாகவும் இவைகளை விசாரம் செய்தால் அவன் மோட்சத்தை அடைவதற்காக செய்கின்றான் என்று புரியும்.

முமூக்ஷுவின் பிரார்த்தனை
உலகத்தில் இருக்கின்ற புலனுகர் போகப் பொருட்களால் பரபிரம்மத்தினுடைய உண்மையான இருத்தல் மறைத்திருக்கின்றது.  மாயையின் சக்தியால் மனதை கவர்ந்திழுக்கும்படி தோன்றியிருக்கின்ற பொருட்களின் மாயையில் விழுந்து விடாமல் என்னை பாதுகாப்பீர்களாக. நற்பண்புகளை பின்பற்றி கொண்டிருக்கும் முமுஷுவான என்னிடத்திலிருந்து மாயையை நீக்கி விடுவீர்களாக.

ஸத்யஸ்ய முக2ம் – ஹிரணயகர்ப்பனுடைய லோகத்தின் வாயில், பிரம்மத்தை அடைவதற்கான நுழைவாசல்
அபிஹிதம் – மூடப்பட்டிருக்கிறது
ஹிரண்மயேன பாத்ரேண – தங்கம் போன்ற ஓளிமயமான மறைப்பானால்
பூஷண் – சூரியதேவரே!
தத் த்வம் – அதை நீங்கள்
அபாவ்ருணு – நீக்கிவிடுங்கள், விலக்கி விடுவீர்களாக
ஸத்யதர்மாய – உண்மையான பிரம்மத்தை உபாஸிக்கின்ற,
திருஷ்டயே – என்னுடைய பார்வைக்காக
பிரம்ம லோகத்திற்கே சுக்லகதியாக செல்லும்போது தடையாக இருக்கும் ஒளிமயமான மறைப்பை எடுத்து வழி விடுவீர்களாக இது உபாஸனின் பிரார்த்தனை.

பூஷன்ன ஏகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய
வ்யூஹ ரஶ்மீன் ஸமூஹ தேஜ: |
யத் தே ரூபம் கல்யாணதமம்.தத் தே பஶ்யாமி
யோSஸாவ் அஸௌ புருஷ: ஸோSஹம் அஸ்மி || 16 ||

உபாஸகனின் பிரார்த்தனை ( கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்து கொண்டிருப்பவர்கள், பிரம்மலோகத்தை அடைவதற்காக உபாஸனை செய்பவர்கள் )
பூஷன் – சூரியதேவனே! உலகத்தை போஷிப்பவரே!
ஏகர்ஷே – ஒருவராகவே இருந்து செய்பவரே!
யம – எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே
ஸூர்ய – சூரிய பகவானே! எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டவரே!
ப்ரஜாப்த்ய – பிரஜாபதியின் புதல்வரே
ரஶ்மின் வ்யூஹ – உங்களின் ஒளிக்கதிர்களை விலக்கி கொள்வீர்களாக
தேஜ: ஸமூஹ – உங்களுடைய உஷ்ணமான ஓளியை ஒடுக்கிக் கொள்வீர்களாக
யத் தே கல்யாண தமம் ரூபம் – எந்த உங்களுடைய மங்களகரமான ரூபம் உண்டோ
தத் தே பஶ்யாமி – அதை உங்களுடைய அருளால் பார்க்க விரும்புகிறேன்
ய:: அஸௌ புருஷ: – யார் இந்த புருஷனோ, ஆதித்ய மண்டல தேவதையோ
ஸஹ அஹம் அஸ்மி – அவரே நானாக இருக்கிறேன்

உலகத்தில் மனதை கவர்ந்திழுக்கும் பொருட்களை நீக்கிக் கொள். மோட்சத்தை அறிய வேண்டும். அந்த ஆதித்ய மண்டலத்திலிருக்கின்ற பிரம்ம தத்துவம் நானாக இருக்கிறேன் என்ற அறிவை உடையவனாக இருக்கிறேன்

வாயுர் அனிலம் அம்ருதம் அதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர || 17 ||

அக்னிதேவனை குறித்து, மனதிடமே பிரார்த்தனை. இப்பொழுது இறக்கும் தறுவாயில் இருக்கும் எனக்கு பிராணனானது.
அம்ருதம் – என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனான
அனிலம் – சமஷ்டி பிராணனுடன் கலந்து விடட்டும்.
அத இத3ம் – பிறகு இந்த உலகமானது
பஸ்மாந்தம் – அக்னியில் சாம்பலாகட்டும்
ஓம் க்ரதோ = ஹிரண்யகர்ப்பனே, அக்னிதேவனே
ஸ்மர க்ருதம் – நீங்கள் என்னால் செய்யப்பட்ட நற்காரியங்களை நினைத்துப்பார்த்து தகுந்த கதியை அடைய உதவ வேண்டும்
க்ரதோ க்ருதம் ஸ்மர – ஏ மனமே! இதுவரை செய்த நல்ல காரியங்களை, உபாஸனையை நினைத்துப் பார்ப்பாயாக
க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர – அக்னிதேவன், நான் செய்த உபாஸனைகளை, நற்காரியங்களை வைத்துக்கொண்டு நற்கதியை அடைய உதவி செய்வீர்களாக. ஏ மனமே நீயும் இதையே நினைப்பாயாக

அக்3னே நய ஸுபதா2 ராயே அஸ்மான் விஶ்வானி தே3வ வயுனானி வித்3வான் |
யுயோட்4ய அஸ்மஜ் ஜுஹுராணம் ஏனோ பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதேம || 17 ||

ஓ அக்னிபகவானே எங்களை நற்கதியை அடையக் கூடிய நல்ல மார்க்கத்தில் அழைத்து செல்ல வேண்டும்.  திரும்பி வராத உலகமான பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
ராயே – செய்த கர்மபலன்களின் போகத்திற்காக
தேவ – அக்னிபகவானே
வஶ்வானி வ்யுனானி – நாங்கள் செய்த அனைத்து கர்மங்களையும், உபாஸ்னைகளையும்
வித்வான் – அறிந்துள்ள நீங்கள்
அஸ்மாத் – எங்களிடமிருந்து
ஜுஹுராணம் ஏனம் – கீழான பாவங்களை
யுயோதி4 – நீக்கிவிடுவீர்களாக
தே பூ4யுஷ்டாம் – உங்களுக்கு பலமுறை
நம: உக்திம் விதே4ம – நமஸ்காரத்தை சமர்ப்பிக்கின்றோம்
தொகுப்புரை

01-08   வேதாந்த கருத்துக்கள் உடையது

01-01:  இதில் வேதாந்தத்தின் மையக்கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் உள்ள படைக்கப்பட்ட அனைத்திலும் ஈஸ்வரனே வியாபித்திருக்கிறார். இந்த உலகத்திற்கு அவரே உபாதான காரணமாக இருக்கிறார். இந்த உலகத்தை ஈஸ்வரனைக் கொண்டு மூடி விடவேண்டும். இருமையை நீக்கி அனைத்திலும் ஈஸ்வர ஸ்வரூபத்தையே பார்க்க வேண்டும். இந்த அறிவை தியாகத்தினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தியாகம் என்பது அகங்காரம், மமகாரம் இவைகளை நீக்கிவிடுவதையே குறிக்கின்றது.  யாருடைய பொருளையும் அபகரிக்க கூடாது.

02-02   மேற்சொன்ன அறிவை அடைய தகுதியில்லாதவர்களுக்கு மனதிலுள்ள ராக, துவேஷங்கள் தடையாக இருந்தால் கர்மயோகத்தை செய்து தகுதிபடுத்தி கொள்ள வேண்டும்.  சாஸ்திர விதித்த கடமைகளை செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இப்படி வாழ்வதால் கர்மத்தால் பந்தப்படாமல் ராக, துவேஷங்கள் நீங்கி எது உண்மை எது பொய் என்று பிரித்தறியும் அறிவை அடைவோம்.  மேற்சொன்ன அறிவை அடைய தகுதிப்படுத்தும்

03-03   அறியாமையில் உள்ளவர்களை நிந்தனை செய்கின்றது.  இத்தகையவர்கள் தன்னைத்தானே கொலை செய்வது போன்ற நிலைக்கு சமானமாகும் என்று கூறுகிறது

04-05   ஆத்ம தத்துவத்தை அத்யாரோப அபவாதம் முறையில் உபதேசிக்கின்றது. இருப்பதை, அனுபவித்துக் கொண்டிருப்பதால் அவைகளை முதலில் ஏற்றுக் கொண்டு பிறகு அவைகள் மித்யா என்று நீக்கி பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறது. பிரம்மத்தின் லட்சணங்களான அசைவற்றது, வேகமாக செயல்படக் கூடியது போன்றவற்றை எடுத்துக் கூறி பிரம்மத்தின் துணைக் கொண்டுதான் பிரபஞ்சம் செயல்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது

06-07   இதில் பிரம்ம ஞானத்தினுடைய லட்சணங்களும், பலனும் கூறப்பட்டுள்ளது. யார் எல்லா ஜீவராசிகளையும் தன்னிடத்திலேயும், அவைகளில் தன்னையும் பார்ப்பதே ஞானபலன் லட்சணம்.  எந்த காலத்தில் இந்த அறிவு நிலைபெறுகின்றதோ அப்போதே அவனிடத்திலிருந்து மோகமும், சோகமும் விடைபெற்று சென்றுவிடும்

09-14   கர்ம-உபாஸனம்

 

ஓம் தத் ஸத்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்- -முதல் நான்கு ஸூ த்திரங்கள் ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்–

December 25, 2022

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்-முதல் நான்கு ஸூ த்திரங்கள் 

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

முகவுரை
தத்துவம்
எந்த தத்தவமும் கீழ்கண்ட நான்கு விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

 1. Metaphysics (Ontology)
 2. Study of Knowledge (Etymology)
 3. Ethics
 4. Aesthetics

Meta physics (Ontology)  ஸத்தா விசாரம்
பொருளினுடைய இருப்பைப் பற்றிய விசாரம். மூன்று வகையான ஸத் இருக்கிறது. அவைகள் பாரமார்த்திக ஸத், வியாவகாரிக ஸத், பிராதிபாஸிக ஸத் ஆகியவைகளாகும். கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்தாகும்.
Study of Knowledged (Etymology) – ஞான விசாரம்; பிரமாண விசாரம்
நமக்கு அறிவு எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றிய விசாரம்.

Ethics – Study of Morality –  நீதிநெறி, ஒழுக்கவியல், நன்னெறி விசாரம்,  நல்லது-கெட்டது விசாரம்
தர்ஷணம்:

 1. நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், இறைவனைப்பற்றியும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள்.
 2. எதன் வழியாக இந்த நிச்சயத்தை அடைவோமோ அதையும் இவ்வாறாக அழைக்கப்படுகிறது.

 

மதம் வரையறை (Definition)
இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியிருப்பது. இறைவனைப் பற்றியும், இறை நம்பிக்கையை அடிப்படையில் சில மகான்களின் உபதேசத்தை மையமாகவும் கொண்டிருக்கும். இறைவனைப்பற்றிய நூல்களின் அடிப்படையில் பின்பற்றுகின்ற கருத்துக்கள். இதில் நம்பிக்கைதான் அச்சாணியாக இருக்கிறது. கடவுளைப் பற்றியும், தர்ம-அதர்மத்தைப் பற்றியும் பேசுவது. இதில் தத்துவத்தில் கூறப்படுகின்ற கருத்துக்களும் அடங்கியிருக்கிறது.
விசாரம்

*  மதத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்.

*  இதற்கெதிராக இருக்கின்ற கருத்துக்களை விசாரம் செய்தல்

*  இது அடிப்படைத்தேவைக்கு உருவாக்கப்பட்டதா அல்லது வசதிக்காக உருவாக்கப்பட்டதா?

*  மத நம்பிக்கை ஆன்மீக வளர்ச்சிக்கு, மனவளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறதா அல்லது தடையாக இருக்கிறதா என்ற ஆராய்ச்சியின் முடிவில் இரண்டும் சமவிகிதத்தில் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*  மத நம்பிக்கையினால் நல்லதை அடைவோமா அல்லது கெட்டதை அடைவோமா என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

*  மதம் மனிதனுக்கு அடிப்படைத் தேவையா அல்லது வசதிக்காக இருக்கிறதா என்று பார்க்கும் போது, அவசியமானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மனப்பக்குவத்துடன் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

*  சாத்விக நம்பிக்கையுடையவர்கள் நன்மையை அடைவார்கள். ராஜஸ, தாமஸ நம்பிக்கை உடையவர்கள் தீமையை அடைவார்கள். எனவே மனப்பக்குவத்தின் அடிப்படையில்தான் நன்மை, தீமை கிடைக்கின்றது.

மனிதர்களில் மூன்று வகையாக இருக்கிறார்கள். அவைகள்,

 1. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கையுடையவர்கள், சுயமாக சிந்திப்பவர்கள்.
 2. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கை மட்டும் உடையவர்கள்
 3. நன்னெறிவாதிகள் – மதநம்பிக்கையற்றவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள், நல்லொழுக்கமாக வாழ்பவர்கள்.

இவை மூன்றையும் சமமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்ததாகும்.

தத்துவம் என்று சொல்லும்போது அது ஆறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அவைகள்,

 1. ஜீவனுடைய தன்மை:
  2.    ஜகத் விசாரம்
  3.    ஈஸ்வரன்
  4.    பந்த ஸ்வரூபம்
  5.    மோட்ச ஸ்வரூபம்
  6.    சாதனங்கள்.-ஆகியவைகளாகும்.

————————–

ஜீவனுடைய தன்மை:

நாம் யார்? உடலழிந்துவிட்டால் ஜீவன் இருக்கின்றதா என்றெல்லாம் நம்மைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உடல் மட்டும்தான் ஜீவனாக இருக்கிறதா வேறெதாவது அதற்கப்பால் இருக்கின்றதா என்றும் விளக்கமாக பேசியிருக்க வேண்டும்.

ஜகத் விசாரம்
உலகத்தினுடைய தன்மையைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உலகத்திலுள்ள பொருட்களின் இருப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் இந்த உலகம் சத்தியமானது என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த உலகத்தை நாம் கண்ணால் பார்த்து அனுபவிக்கின்றோம். அத்வைதம் இந்த உலகம் பொய்யாக காட்சியளிக்கின்றது என்று உபதேசிக்கிறது. புத்தமதம் உலகம் சத்தியமென்றும், சூன்யமானதென்றும் கூறுகிறது.

3.   ஈஸ்வரன்
ஈஸ்வரன் என்கின்ற தத்துவத்தைப்பற்றி பேசியிருக்க வேண்டும். ஜீவ, ஜகத்திற்கு காரணமாக ஈஸ்வரன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஈஸ்வரனின் லட்சணங்களைக் கூறியிருக்க வேண்டும்.

 1.  பந்த ஸ்வரூவம்
  ஜீவன் மனநிறைவின்மையோடு இருப்பதைப் பார்க்கிறோம். சம்சாரத்திலிருப்பதைப் பார்க்கிறோம். எனவே பந்தத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும். பந்தத்தினால் சம்சாரத்தில் இருக்கின்றான். ஏன் இவ்வாறு பந்தப்படுகிறான் என்பதையும் பேசியிருக்க வேண்டும்.
 2. மோட்ச ஸ்வரூவம்
  எது மோட்ச நிலை என்பதைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் மரணமே மோட்சமென்றும், வேறுசிலர் உயர்ந்த லோகத்திற்கு செல்வதே மோட்சம் என்று கூறுகிறார்கள்.
 3. சாதனங்கள்
  ஜீவன் கடைபபிடிக்க வேண்டிய சாதனங்களைக் கூறியிருக்க வேண்டும். இவைகளை பயன்படுத்தி பந்தத்திலிருந்து விடுதலையடைந்து மோட்சத்தை அடைய முடிய வேண்டும்.

வேதாந்திகளின் தர்ஷணம் உத்தரமீமாம்ஸம் (அ) அத்வைதமாகும். இதன் மூலம் வேதாந்தம் (அ) உபநிஷத் ஆகும். அத்வைத தத்துவத்தை கற்க மூன்று நூல்களை படித்திருக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்படுகிறது. அந்த மூன்று நூல்களாவது, உபநிஷத், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவைகளாகும். இவை மூன்றையும் படித்து முடித்துவிட்டால் சாஸ்திரத்தை முழுவதுமாக படித்துவிட்டோம் என்றாகின்றது.

அத்வைத தத்துவத்தை புரிந்துக் கொள்வதற்கு மூன்று நூல்களின் வழியே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மூன்று நூல்கள் காட்டுகின்ற பாதையில் செல்ல வேண்டும்.
1வது பிரஸ்தானம்: உபநிஷத்- ஸ்ருதி பிரஸ்தானம், சப்தபிரமாணம், வேதாந்தம்

2வது பிரஸ்தானம்: பகவத்கீதை – ஸ்மிருதி பிரஸ்தானம் வேதத்தில் சொல்லப்பட்ட கருத்தை விளக்கியிருப்பது. உபநிஷத் மட்டும் போதாதா?  ஏன் ஸ்ம்ருதி பிரஸ்தானமான பகவத்கீதை படிக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே வரும். உபநிஷத்தில் முக்கியமான தத்துவத்தைப் பற்றிதான் விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். பகவத்கீதையில் இதையும் சேர்த்து அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கும்.

3வது பிரஸ்தானம்: பிரம்ம சூத்திரம் – இது நியாய பிரஸ்தானம். இதை வியாசபகவான் எழுதி இருக்கிறார். நியாயம் என்பது தர்க்கபிரதான பிரஸ்தானம். தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்காக தர்க்கமுறையை பயன்படுத்தியிருக்கிறார்.

முதலில் பிரம்ம சூத்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் பார்க்கப்படுகிறது. சூத்திரம் என்று சொல்லுக்கு நூல், புத்தகம், ரகசியம், உபாயம் மற்றும் தீர்ப்பு என்ற அர்த்தங்களும் உண்டு. இந்த இடத்தில் நூல் என்ற அர்த்தம் எடுத்துக் கொண்டால், எப்படி நூலானது மலர்களைச் சேர்த்து மாலைகளை உருவாக்க உதவுகிறதோ, அதுபோல பிரம்மத்தைப் பற்றிய விஷயங்களை மாலைப் போல் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார்.

 

 1. பிரஹ்ம பிரதிபாதகம் சூத்திரம் – பிரம்மத்தை விளக்குகின்ற புத்தகம்.
 2. பிரஹ்ம விஷயஹ சிந்தா சூத்ரியதே அனேன – பிரம்மத்தைப் பற்றிய கருத்துக்கள் கோர்வையாக தொகுக்கப்பட்ட நூலாகும்.

பிரம்ம சூத்திரத்தில் மூன்றுவகையான காரியங்கள் செய்துள்ளார். அவைகள்,

 1. ஸ்ருதி வாக்ய ஸமன்வயம் – ஸமன்வயம் என்ற சொல்லுக்கு ஒத்துப்போகுதல் என்ற அர்த்தம் உண்டு. உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப் போகின்றது என்பதை நிலைநாட்டியிருக்கின்றார். மேலும் சந்தேகத்தைக் கொடுக்கின்ற வாக்கியங்களையும், முரண்பாடுவது போல உள்ள வாக்கியங்களையும் எடுத்துக் கொண்டு அவைகளும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப்போகின்றது என்பதை  நிலைநாட்டுகின்றார். உதாரணமாக பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள வாக்கியமான ‘ஸத்யஸ்ய ஸத்யம்” என்ற வாக்கியம் சத்தியமான இந்த உலகத்திற்கு சமமாக பிரம்மம் இருக்கிறது என்று தப்பாக புரிந்து கொள்ளும் வாக்கியங்களுக்கு சரியான அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
 2. மற்ற மதங்களை நிராகரணம் செய்திருக்கிறார்.
 3. அத்வைத தத்துவத்தில் குறை சொல்பவர்களின் கருத்தை நீக்கி விடுகின்றார்.

அதிகாரி:

 1. வியாச பகவான் மீது முழு சிரத்தை வைத்திருப்பவர்கள், அடைந்த ஞானத்தில் நிலைப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இதுவொரு மனன கிரந்தமாகும். ஐந்தாவது சூத்திரத்தில் ஆரம்பித்து இறுதி சூத்திரம் வரை மனனத்திற்கு பயன்படும். முதல் நான்கு சூத்திரங்களும் அத்வைத தத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
 2. உபநிஷத்தை முழுவதும் படித்திருப்பவர்கள்தான் அதிகாரி.  மனனம் செய்ய விரும்புவோர்களும் இதை படிக்கலாம்.

இனி விதவிதமான பூர்வபட்ச தர்ஷணங்கள் சிலவற்றை முகவுரையாக பார்க்கப்படுகிறது. இவைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் 1. நாஸ்திக தர்ஷணம், 2. ஆஸ்திக தர்ஷணம் ஆகும்.

நாஸ்திக தர்ஷணம்

 1. சார்வாக்க மதம் – சாரு – அழகான, வாக் – பேச்சு. இவர்களுக்கு பிரத்யக்ஷம்தான் பிரமாணம் வேறெதுவும் பிரமாணமல்ல. மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது இவர்கள் கொள்கை. இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால்தான் உருவாக்கப்பட்டது. ஆகாசம் என்றவொரு பூதமே கிடையாது. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை ஒன்று சேர்த்து சாப்பிடும் போது அந்தக் கலவை சிவப்பு வர்ணத்துடன் இருக்கிறது. இது எப்படியோ வந்திருக்கிறது. அதுபோல இந்த உடலுக்கு உணர்வு எப்படியோ வந்திருக்கிறது.

இவர்கள் ஆத்மாவை ஏற்றுக் கொள்வதில்லை. வேத சாஸ்திரத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்கள். கண்ணால் பார்த்து அனுபவிப்பதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். மூன்றுவிதமான சரீரங்கள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உணர்வு என்பது தற்காலிகமான விஷயம் என்பது இவர்கள் கொள்கை. உணர்வை மட்டும்தான் நம்புவார்கள்.

 1. ஜைனமதம்

இந்த மதத்தை தோற்றுவித்தவர் ரிஷபதேவர் ஆவார். மகாவீரர்தான் இரண்டாவது ஆச்சாரியாவார். இவர்களும் வேதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. குருதான் கடவுள் என்ற கொள்கையுடையவர்கள். ஈஸ்வரனின் லட்சணத்தையெல்லாம் குருவுக்கு கூறுவார்கள். ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்ற இரண்டு வகையினர் உள்ளார்கள். முதல்வகையினர் வெண்மை உடை அணிந்திருப்பார்கள். இரண்டாவது வகையினர் காட்டில் வசித்து கடுமையான தவம் செய்பவர்கள்.

இவர்களுடைய தத்துவத்திற்கு ஹயாத் என்று பெயர். இந்த உலகில் எந்த முடிவெடுத்தாலும் அவைகள் முழுவதுமாக இருப்பதில்லை. எல்லா முடிவுகளும் ஏதொவொரு கோணத்தில்தான் சரியாக இருக்கும். முடிவுகள் கால, தேசத்தால் வரையறைக்கபட்டவைகள். புத்தகம் இருக்கிறது என்ற வாக்கியத்தில் உள்ள இருக்கிறது என்பது தற்போது இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வேறொரு காலத்தில் அது இல்லாமல் போகலாம் என்பது அவர்களுடைய கொள்கையாகும். எல்லா உயிரினங்களையும் ஜீவன் என்று அழைக்கிறார்கள். இந்த ஜீவனை முக்தன், பத்தன் என்று மேலும் இரண்டாக பிரிக்கிறார்கள். அஜீவன் என்பது ஜடமானது என்பார்கள். அகிம்சையை முக்கியமாக பின்பற்றுபவர்கள். சிரத்தை, ஒழுக்கம் இவைகளை பின்பற்றுகிறார்கள். இவர்கள் 10 பண்புகளை பின்பற்றுகிறார்கள். அகிம்சையை பிரதானமாக பின்பற்றுகிறார்கள்.

2.1.        க்ஷமா – பொறுமையாக இருத்தல்

2.2.        வினய – பணிவு

2.3.        ஆர்ஜவம் – நேர்மை (சொல், செயல், மனம்)

2.4.        சத்யம் – உண்மை பேசுதல்

2.5.        சௌசம் – தூய்மை

2.6.        ஷம – மனக்கட்டுப்பாடு

2.7.        தப: – தவம், உபவாசம்

2.8.        த்யாக – விட்டுக் கொடுத்தல், தியாகம் செய்தல்

2.9.        வைராக்கியம் – போகப்பொருட்களுக்கு அடிமையாகமால் இருத்தல்

2.10.    ஷீலம் – ஒழுக்கமாக இருத்தல்

 

 1. புத்தமதம்

புத்தருடைய உபதேசத்தின் அடிப்படையில் பல பிரிவுகள் தோன்றியது. முதலில் 18 பிரிவுகள் இருந்தது. இறுதியில் இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கிறது. அவைகள் மஹாயானம், ஹீனயானம் ஆகும். ஹீனயான பிரிவினர் உலகத்தை சத்யம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாயான பிரிவினர் ஷணிகவாதியினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சூன்யம்தான் ஜகத் என்றும், மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் தோன்றி அழிவது போல இந்த உலகமும் தோன்றி, தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றது என்ற கொள்கை உடையவர்கள்.

நான்கு உண்மைகளை புத்தரின் உபதேசத்திலிருந்து பின்பற்றுகிறார்கள்.

3.1.     துக்கம் – இந்த உலகம் துக்கமயமானது. நாம் எப்போதும் துயரத்தில்தான் இருக்கிறோம்

3.2.     துக்க சமுதாயம் – இந்த துக்கத்திற்கு காரணம் இருக்கிறது.

3.3.     துக்க நிரோதஹ – துக்கத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

3.4.     துக்க நிரோத மார்க்கம் – துக்கத்தை நீக்கிக் கொள்ளும் வழி.

துக்கத்திற்கு காரணம் அறியாமைதான் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் வாசனைகள்தான் என்று கூறுகிறார்கள். உலகத்தோடு சம்பந்தம் வைப்பதாலும், ஆசைகளினாலும் துன்பத்தை அனுபவிக்கின்றோம். துயரத்திலிருந்து விடுதலை அடைவதுதான் மோட்சம் என்று கூறுகிறார்கள். 8 வகையான பண்புகளைக் கூறுகிறார்கள். அவைகள்,

 1. சம்யக் திருஷ்டி – சரியான கொள்கை, சரியான நோக்கு
 2. சம்யக் சங்கல்பம் – சரியான உறுதி, சரியான முடிவுகள்
 3. சம்யக் வாக் – சரியான பேச்சு
 4. சம்யக் கர்ம – சரியான நடத்தை
 5. சம்யக் ஜீவஹ – சரியான, சாமான்ய தர்மத்தை பின்பற்றி வாழ்தல்
 6. சம்யக் வ்யாயாபஹ – சரியான முயற்சி
 7. சம்யக் ஸ்ம்ருதி – நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருத்தல், கவனமாக இருத்தல்
 8. சம்யக் சமாதி – சரியான மனவொருமுகப்பாடு.

ஆஸ்திக தர்ஷணம்
ஆறுவகையான தர்ஷணங்கள் இருக்கிறது. அவைகள்,

 1. சாங்கிய மதம் – உருவாக்கியவர் கபில முனிவர்
 2. யோக மதம் – உருவாக்கியவர் பதஞ்சலி முனிவர்
  3.    நியாய மதம் – உருவாக்கியவர் கௌதம முனிவர்
  4.    வைஷேஷிக மதம் – உருவாக்கியவர் கனாத முனிவர்
  5.    பூர்வ மீமாம்ஸம் – வேதத்தின் முதல்பாகத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
  6.    உத்தர மீமாம்ஸம் – வேதத்தின் இறுதிபாகமான உபநிஷத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்

முதல் நான்கு வகையினர் வேதத்தை ஏற்றுக் கொண்டாலும் தர்க்கத்திற்குத்தான் அதிக முக்கியத்வம் கொடுக்கின்றனர்.

 1. சாங்கிய மதம்
  பிரகிருதி, புருஷன் என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றுக்கொன்று நிகராக இருக்கிறது. இவைகள் அறிவு ஸ்வரூமாக இருக்கின்றது. ஸ்ருஷ்டியைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஜகத்தும் உண்மை, புருஷனும் உண்மை என்று சொல்கிறார்கள்.
 2. யோக மதம்
  இதில் மனவொழுக்கத்தைப் பற்றி மிக நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. சித்திகள் மோட்சத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
 3. நியாய மதம்
  4.   வைஷேஷ மதம்
  இந்த இரண்டு மதங்களும் ஒன்றாகி தர்க்க சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனுமான பிராப்தி பற்றி நன்கு பேசியுள்ளார்கள்.
 4. பூர்வ மீமாம்ஸா பிரிவு
  ஜெய்மினி மகரிஷி பூர்வ மீமாம்ஸத்திற்கு சூத்திரங்கள் எழுதியிருக்கிறார்.
  அதா2தோ தர்ம ஜிக்ஞாஸா – கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள யாகங்களை, தர்ம-அதர்மத்தை சரியாக விசாரம் செய்துள்ளார்.
  குமாரபட்டர், பிரபாகர் என்பவர்கள் தனித்தனியாக இரண்டு மதங்களை தோற்றுவித்தனர். கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களை செய்து சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அடையலாம். இதுவே மோட்சமாகும் என்று கூறியுள்ளனர். இந்த மதங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. யாரும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
 5. உத்தர மீமாம்ஸா பிரிவு
  உபநிஷத் உபதேசங்களைக் கொண்டது. வியாகபகவான் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு சூத்திரங்களின் மூலம் விசாரம் செய்துள்ளார். இதற்கு பிரம்ம சூத்திரம் என்று பெயர். இதை ஶாரீர சூத்திரம் என்றும், வேதாந்த சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசபகவான் பாதராயனர் என்றும் அழைக்கப்படுவதால் அவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு பாதராயண சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.இதற்குள்ளேயே அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று மதங்கள் தோன்றி இருக்கிறது. சங்கரர் எழுதிய பாஷயத்திற்கு சங்கர பாஷ்யம் என்றும், ராமானுஜர் எழுதிய பாஷ்யத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறது. மாத்வர் என்பவரும் இதற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகளை அத்வைத தத்துவத்தை அடைவதற்கு படிகளாக எடுத்துக் கொள்ளலாம்.பிரம்ம சூத்திரத்தை படிப்பதற்கு முன்னே 10 சாந்தி பாடங்களை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 6. ஷன் நோ மித்ர: ஷன் வருண:      – தைத்திரிய உபநிஷத்
  2.     ஸஹ நாவவது                   – தைத்திரிய உபநிஷத்
  3.     யஹ சந்தஸாம் ரிஷபோ          – தைத்திரிய உபநிஷத்
  4.     அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா       – தைத்திரிய உபநிஷத்
  5.     பூர்ணமத பூர்ணமிதம்              – ஈஸாவாஸ்ய உபநிஷத்
  6.     ஆப்யாந்து மமாங்கனி              – கேனோ உபநிஷத்
  7.     வாங்மே மனஸி பிரதிஷ்டா        – அய்தரேய உபநிஷத்
  8.     பத்ரங் கர்ணேபி                   – அதர்வன உபநிஷத்
  9.     பத்ரம் நோ அபிவாதய             – ரிக்வேதம்
  10.  யோ பிரஹாமானாம்              – யஜுர், ஸ்வேதாஸ்வர உபநிஷத்

மேலே கொடுத்துள்ள சாந்தி பாடங்களில் முதல் 8 சாந்தி பாடங்களின் விளக்கத்தை அந்தந்த உபநிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம். கடைசி இரண்டிற்கு மட்டும் இங்கே விளக்கம் காணலாம்.

சாந்தி பாடம் – 9
பத்ரம் நோ அபிவாதய மனஹ
இறைவா எங்களுடைய மனதை மோட்சத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்வீராக. இன்னொரு பொருள்: ஏ மனமே! எனக்காக மோட்சத்தில் நாட்டம் கொள்வாயாக என்பதாகும்.

சாந்தி பாடம் – 10
யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம்
யோ வை வேதாந்த ப்ரஹினோதி தஸ்மை
தம்ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாஸம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே.

யஹ                        – எந்த இறைவன்
ப்ரஹ்மானாம்      – ஹிரண்யகர்ப்பன்
பூர்வம்                      – முதன்முதலாக
வித3தா4தி                   – தோற்றி வைத்த
யோ வை                   – அந்த ஈஸ்வரன்
வேதாந்த                    – வேதாந்தத்தை
தஸ்மை                     – ஹிரண்யகர்ப்பனுக்கு
ப்ரஹினோதி       – உபதேசிக்கின்றாரோ
ஆத்மபுத்தி ப்ரகாஸம் – ஆத்மஞானத்தை எனக்கு அருள்கின்ற, பிரகாசிக்கும்படி செய்கின்ற
தம் தேவம்                 – அந்த இறைவனை
முமுக்ஷு: வை          – முமுக்ஷுவாக இருக்கின்ற
அஹம் சரணம் ப்ரபத்யே – நான் சரணடைகின்றேன்

இந்த பத்து சாந்திபாடத்தை படித்துவிட்டு இறுதியில் குரு சம்பிரதாய ஸ்துதி சம்பிரதாயத்தில்  படிக்கப்படுகின்றது.
நமோ ப்ரம்மாதி3ப்4யஹ – முதன்முதலில் பிரம்மவித்யாவை உபதேசித்த பிரம்மாவுக்கு நமஸ்காரம்.

ப்ரஹ்மவித்யா கர்த்ருப்4;யஹ –  இந்த பிரம்மவித்யாவை குரு-சிஷ்ய சம்பிதாயமாக வளர்த்து காத்த அனைவருக்கம் நமஸ்காரம்.
வம்ஸரிஷிப்4;யஹ – வம்சாவளியாக வருகின்ற அனைத்து ரிஷிகளுக்கும் நமஸ்காரம்.
மஹதப்4;யஹ           – ஞானநிஷ்டையடைந்த மகான்களுக்கு நமஸ்காரம்
நம: குருப்4;யஹ      – அனைத்து குருமார்களுக்கும் நமஸ்காரம்.
ப்ரக்ஞான கண        – பூரணமான அறிவு ஸ்வரூபமான
ப்ரத்யக் கர்த்தஹ     – என்னுடைய ஸ்வரூபமாக இருக்கின்ற
ப்ரஹ்ம ஏவ                – பிரம்மனாகவே
அஹம் அஸ்தி          – நான் இருக்கிறேன்.
ஸர்வ உபப்லவ ரஹித: – எந்தவிதமான துயரங்களும் இல்லாதவன்.

பிரம்ம சூத்திரம் தர்க்க பிரதானமான நூலாக இருப்பதால் இந்த நியாய பிரஸ்தானத்தை சுருக்கமாக பார்ப்போம். அனுமான பிரமாணத்தைத்தான் நியாய பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அனுமானம் இரண்டு வகையாக இருக்கின்றது. ஒன்று லௌகீக அனுமானம், மற்றொன்று வைதீக அனுமானமாகும்.

அந்த மலையில் நெருப்பு இருக்கிறது காரணம் அங்கிருந்து புகை வந்து கொண்டிருக்கிறது. நாம் சமையலறையில் நெருப்புடன் கூடிய புகையைப் பார்த்த அனுபவத்தினால் இவ்வாறு கூறுகிறோம்.
பக்ஷம்               – மலை
சாத்தியம்        – நெருப்பு
ஹேது               – புகை
வியாப்தி           – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் உள்ள மாறாத சம்பந்தம். அதாவது புகைக்கும், நெருப்புக்கும் சம்பந்தம் இருக்கின்றது.

லௌகீக அனுமானம் : நம் அனுபவத்திலிருந்து யூகிப்பது
வைதீக அனுமானம் : வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹேதுவை எடுத்துக் கொண்டு சொல்வது
பக்ஷம்      மகத்
சாத்தியம்    மாயை (வெறும் தோற்றம்)
ஹேது      இது வேதத்தினால் நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது. கயிற்றில் தோன்றும் பாம்பைப் போல இது நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது.
வேதத்தில் சிரத்தையற்றவர்கள் இந்த அனுமானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வியாசபகவான் இரண்டு அனுமானங்களையும் பிரம்ம சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த நூலை படிக்க வருபவர்களுக்கு வேதாந்தத்தின் மீதும், வியாசர் மீதும் சிரத்தை உடையவர்களாக இருப்பார்கள். வைதீக அனுமானத்தை பயன்படுத்தி உபநிஷத் உபதேசங்களான ஜகத் மித்யா, பிரம்ம சத்தியம் ஆகியவற்றை நிலைநாட்டியிருக்கின்றார். லௌகீக அனுமானத்தை பயன்படுத்தி அத்வைதத்தை நிராகரிப்பவர்களின் காரணத்தை நீக்குவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.

சூத்திரங்கள் பெரும்பாலும் ஹேதுவாக அமைந்திருக்கும். இந்த நூல் நான்கு அத்தியாயங்களை உடையது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிளும் அதிகரணங்களாக பிhpக்கப்பட்டிருக்கும். இந்த அதிகரணத்தில் சூத்திரங்கள் இருக்கும். முதல் அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகரணங்கள் இருக்கும். அந்த அதிகரணத்தை விளக்குவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேலாக பல சூத்திரங்கள் இருக்கலாம். மொத்தம் 555 சூத்திரங்கள் இருக்கிறது. இவைகள் நான்கு அத்தியாயங்களாக பிரித்து, 16 பகுதிகள், 192 அதிகரணங்கள் இருக்கின்றது.

முதல் நான்கு அத்தியாயங்களைப் படித்தாலே முழு பிரம்ம சூத்திரத்தை படித்ததைப் போலாகும் என்று சம்பிரதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நாம் முதல் நான்கு சூத்திரங்களை மட்டும்தான் பார்க்கப் போகிறோம்.

1.   ஸமன்வய அத்தியாயம் – ஒத்துப் போகுதல்
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரம்மன் அத்வைதம் என்ற விஷயத்தில் ஒத்துப் போகின்றன என்பதை உபதேசிக்கும்.

 1. அவிரோத அத்தியாயம் – விரோதமில்லைமுரண்பாடில்லை

*  உபநிஷத்துக்குள் பரஸ்பர வேற்றுமையுடன் இல்லை.
*  அத்வைத தத்துவத்திற்கு ஸ்ம்ருதியும் விரோதமில்லை.
*  யுக்தி விரோதமும் கிடையாது.
*  வேற்று மதங்களின் அத்வைதத்திற்கு எதிரான கருத்துக்களை நிராகரித்து விடுவது
*  வேற்று மதங்களின் கருத்துக்களும் தவறானது என்று நிலைநாட்டப்படுகிறது.

 1. சாதனா அத்தியாயம் – மோட்சத்தை அடைவதற்கான சாதனங்கள் பேசப்படுகிறது.

மோட்சம், சொர்க்கம், பிரம்மலோகம் இவைகளை அடைவதற்கான சாதனங்களை கூறியிருக்கிறார். அந்தரங்க, பகிரங்க சாதனம் என்று இரண்டாக பிரித்து விளக்கி இருக்கிறார். ஸர்வாபேக்ஷ நியாயம் என்ற நியாயத்தை பயன்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 1. பல அத்தியாயம் – பலனைப் பற்றி விளக்கப்படுகிறது.
  பிரம்ம வித்யாவினால் அடைகின்ற பலனை விளக்கியிருக்கிறார்.

*  ஜீவன் முக்தனாக எப்படி மனநிறைவுடன் இருக்கிறான்.
*  விதேக முக்தியைப் பற்றி விளக்கப்படுகிறது.
*  கிரம முக்தியைப் பற்றியும் விளக்கப்படுகிறது.
*  கர்மத்தினால் அடைகின்ற பலன்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
சூத்திர அமைப்பின் இலக்கணம்.
ஓரு வாக்கியம் சூத்திரமாக இருபபதற்கு 6 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவைகள்,

 1. அல்பாக்ஷரம் – குறைந்த எழுத்துக்கனோடு இருக்க வேண்டும். மிக மிக சுருக்கமாக இருக்க வேண்டும்.
 2. அஸந்திக்தம் – சந்தேகமில்லாமல் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும். தெளிவாக அர்த்தம் புhpயும்படி இருக்க வேண்டும்.
 3. ஸாரவத் – பிரயோஜனம் இருக்க வேண்டும். மையக் கருத்து இருக்க வேண்டும்.
 4. விஸ்வதோமுகம் – பல கோணங்களில் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும்.
 5. அஸ்தோபம் – அர்த்தமில்லா சொற்கள் இருக்கக்கூடாது. ஸ்துதி இருக்கக்கூடாது.
 6. அனவத்யம் – தெளிவாக இருக்க வேண்டும். பொருள் குற்றம் இருக்கக்கூடாது. உண்மைக்கு புறம்பாக இருக்கக்கூடாது.

அதிகரண லட்சணம்
ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
1.    விஷய: – எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
2.    ஸம்ஸய: – சந்தேகம்
3.    பூர்வபக்ஷம் – சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
4.    உத்தரம் – பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
5.    சங்கதி – சம்பந்தம் – அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.
இவைகள் சரியாக இருக்கின்றதா என்பதை சோதிக்க 5வது அதிகரணத்தை எடுத்து இந்த நிபந்தனைகள் பொருந்தி வருகின்றதா என்று பார்க்கலாம்.

விஷய:       ஸதேவ ஸோம்ய இதம் அக்ர: ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் (சா.உ). ஸத் தான் முதலில் இருந்தது.

ஸம்ஸய:     இது சேதனமான பிரம்மத்தைக் குறிக்கிறதா அல்லது அசேதனமான மாயையைக் குறிக்கிறதா என்பது சந்தேகம்.

பூர்வபக்ஷம்   சாங்கியர்கள் கொள்கை – இது அசேதனமான, ஜடமான பிரகிருதியைத்தான் குறிக்கிறது என்பதாகும்.

உத்தரம்      ஸத் என்பது பிரகிருதியும் அல்ல, பிரதானமும் அல்ல பிரம்மன்தான்.

சங்கதி        இந்த அதிகரணத்திற்கும் இதற்கு முன்னேயுள்ள அதிகரணத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம். நான்காவது சூத்தரத்தில் பிரம்மன்தான் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அதிகரணத்தில் அதை மறுப்பதால் அந்த மறுப்பை நீக்குவதற்காக இந்த அதிகரணம் எழுதப்பட்டிருக்கிறது.

பாஷ்யம் – உரைநடை விளக்கம்
உபநிஷத், பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநடை விளக்கங்களுக்கு பாஷ்யம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எதற்கு விளக்கம் எழுதப்படுகிறதோ அதற்கு மூலம் என்று பெயராகும். பாஷ்யத்திற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டீகா என்று பெயர். டீகாவிற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டிப்பனி என்று பெயர்.

பாஷ்யத்தின் லட்சணம்:
சூத்திரத்தினுடைய அர்த்தமானது சூத்திரத்தில் உள்ள சொற்கள் எந்த வரிசையில் உள்ளதோ அதே வரிசையில் இருக்க வேண்டும். விளக்கத்தில் உள்ள கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
வியாக்யானத்தின் லட்சணம்:

ஒரு ஸ்லோகத்தை எடுத்து விளக்கும் முறைக்கு வியாக்யானம் என்று பெயர். இதில் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும்.

 1. பதஸ்சேதம் – சேர்ந்துள்ள இரண்டு சொற்களை சரியாக பிரிக்க வேண்டும்.
 2. பதார்த்த உக்தி – ஒவ்வொரு சொல்லுக்கான அர்த்தத்தை சொல்ல வேண்டும்.
 3. விக்ரஹ – எந்த அர்த்தத்தோ சேர்ந்துள்ளதோ அதே அர்த்தத்தோடு பிரித்த சொற்களுக்கு பொருள் கொடுக்க வேண்டும்.
 4. வாக்ய யோஜனா – எந்தச்சொல்லை எதனோடு சேர்த்து பொருள் சொல்ல வேண்டும்.
 5. ஆக்ஷேப: – கொடுக்கப்பட்ட பொருளுக்கு எதிர்க்கருத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
 6. சமாதானம் – ஆட்சேபத்திற்கு பதில் கொடுக்க வேண்டும்.

சது சூத்ரி அமைப்பு

நான்கு சூத்திரங்களுடைய அமைப்பு. ஒவ்வொரு சூத்திரமும் ஒரேயொரு அதிகரணத்தை உடையதாக இருக்கும். முதல் சூத்திரம் பிரம்மத்தைப் பற்றிய விசாரம் செய்ய வேண்டுமா?  வேண்டாமா?  என்பதாகும்.

முதல் சூத்திரம்
இது அனுபந்த சதுஷ்டயத்தை பூர்த்தி செய்கிறது. இதற்கு விஷயாமாக இருப்பது பிரம்ம விசாரம். இதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பலனும் அடையப்படுகிறது. இவைகளை நிலைநாட்டி பிரம்ம விசாரம் செய்துதான் ஆக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.

2வது சூத்திரம் – பிரம்மத்தின் லட்சணம் கூறப்படுகிறது.
3வது சூத்திரம் – பிரம்மத்தை போதிக்கின்ற பிரமாணம் கூறப்படுகிறது
4வது சூத்திரம் – பிரம்ம விசாரம் – பிரம்மன்தான உபநிஷத்தின் மையக்கருத்து.

சது சூத்ரி ஒன்பது வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்பது முக்கிய கருத்துக்கள் இந்த நான்கு சூத்திரத்திற்குள் இருக்கிறது. வர்ணகம் (தலைப்பு) என்பது ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றது.

 1. அத்3யாஸ பாஷ்யம்
 2. அக3தார்த்த2 வர்ணகம் – முதல் சூத்திரம்
 3. அதி3காரி வர்ணகம்     – முதல் சூத்திரம்
 4. ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3த4 வர்ணகம் – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.        – முதல் சூத்திரம்
 5. ப்3ரஹ்ம லக்ஷண வர்ணகம் – 2வது சூத்திரம்
 6. ப்3ரஹ்மன: ஸர்வக3த வர்ணகம் – பிரம்மன் அனைத்தையும் அறிந்தவர்; – 3வது சூத்திரம்
 7. ப்3ரஹ்மன: வேத3 ஏக பிரமாண தத்துவ வர்ணகம் – இந்த பிரம்மத்தை வேதம் என்ற ஒரு பிரமாணத்தின் மூலம்தான் அறிந்துக் கொள்ள முடியும். ; – 3வது சூத்திரம்
 8. ப்3ரஹ்மன: சாஸ்திர தாத்பர்ய தத்துவ வர்ணகம் – உபநிஷத்தின் உபதேசம் ஆத்மஞானத்தை கொடுப்பதுதான் முக்கிய நோக்கம். பிரம்மம் என்ற ஒன்றை விளக்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ; – 4வது சூத்திரம்
 9. ப்3ரஹ்மன: ஞான கம்பியத்வ வர்ணகம் – பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும். ; – 4வது சூத்திரம்

1.அத்யாஸ பாஷ்ய வர்ணகம்

முகவுரை

 1. அத்யாஸம்(Illusion) என்ற சொல்லுக்கு காட்சிபிழை என்று பொருட்கொள்ளலாம். கயிற்றில் பாம்பைப் பார்ப்பதுதான் அத்யாஸமாகும்.
 2. அத்யாஸம் எப்போது ஏற்படும்?
  அத்யாஸம் அரைகுறைவான வெளிச்சத்திலோ, மங்கலான வெளிச்சத்திலோதான் ஏற்படும். இதில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று சாமான்ய அம்சம், மற்றொன்று விசேஷ அம்சமாகும். இந்த உதாரண வாக்கியத்தில் உள்ள கயிற்றைப் பார்க்கும் போது “இது” என்ற அறிவு சாமான்ய அம்சமாகும். ஏதோவொன்று இருக்கிறது என்பது சாமான்ய அம்சமாகும். இது என்ற அம்சத்தில் கயிறு இருக்கிறது என்பது விசேஷ அம்சமாகும். அத்யாஸத்தினால் சாமான்ய அம்சத்தின் மீது சரியான விசேஷ அம்சத்திற்கு பதிலாக, தவறான விசேஷ அம்சமான பாம்பைப் பார்த்து விடுகிறோம். சாமான்ய அம்சத்தில் தவறான விசேஷ அம்சத்தை பார்ப்பதைத்தான் அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. சாமான்ய அம்சத்தில் தவறே ஏற்படாது. எனவே சாமான்ய அம்சம் சத்யம், விசேஷ அம்சம் மித்யா. இதிலிருந்து அறிந்து கொள்வது, அத்யாஸம் நடக்க வேண்டுமென்றால் சாமான்ய அம்சத்தை பற்றிய சரியான அறிவும், அதேசமயம் விசேஷ அம்சத்தில் அக்ஞானமும் இருக்க வேண்டும். கயிறே இல்லாத இடத்தில் பாம்பைப் பார்ப்பதற்கு மாயத்தோற்றம் என்பதாகும். அத்யாஸம் நடந்த இடத்தில் சரியான விசேஷ அறிவு வந்துவிட்டால் விசேஷ அக்ஞானம் சென்றுவிடும். அதனால் பாம்பு மறைந்து கயிறு காட்சியளிக்கும்.அதேபோல நான் என்ற சொல்லில் சாமான்யமாக நமக்கு தெரிவது பிரம்மன்தான். நான் இருக்கின்றேன்,   நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்று சொல்லம்போது  நாம் நம்மை அறியாமல் எப்போதும் இருந்துக் கொண்டிருக்கின்ற பிரம்மத்தை  நம்மையறியாமல் குறிக்கின்றோம். ஆனால் நம்முடைய விசேஷ ஞானத்தில்தான் தவறு நடந்திருக்கிறது,  அத்யாஸம் ஏற்பட்டுள்ளது. நான் அறிவற்றவன்,  நான் நோயுற்றிருக்கிறேன் என்ற விசேஷ ஞானம் இருக்கின்றது. இது கயிற்றில் பாம்பைப் பார்ப்பது போல உள்ள தவறான விசேஷ ஞானம். நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்கின்றோமோ அவைகளெல்லாம் அத்யாஸம். நம் உண்மை ஸ்வரூபத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டதாகும். இவைகளெல்லாம் ஸ்தூல, சூட்சும, காரண சரீரத்தின் தர்மங்கள், அம்சங்கள் ஆகும். பாம்பை எப்படி தவறென்று நீக்குகின்றோமோ அதேபோல மூன்று சரீரங்களையும் நீக்கி உண்மையான விசேஷ ஞானமான பிரம்மன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.நான் சம்சாரி என்ற வாக்கியத்தில் நான் என்பது சாpயான சாமான்ய அம்சம், சம்சாரி என்பது தவறான விசேஷ ஞானம். சாpயான விசேஷ அம்சமான பிரம்மமாக தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கயிறு என்ற சரியான விசேஷஞானம் வருவதும், தவறான விசேஷஞானம் செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கும். அதேபோல பிரம்மன் என்ற சரியான விசேஷஞானம் வந்தவுடன் சம்சாரி என்ற தவறான விசேஷஞானம் அதே நேரத்தில் சென்றுவிடும். மூன்று சரீரங்களில் உள்ள அபிமானம் சென்றுவிடும்.

விசாரம்:
பகவான் சங்கரர் அத்யாஸத்தை ஏன் முகவுரையாக கொடுத்துள்ளார் என்பது விசாரம் செய்யப்படுகிறது.
கேள்வி பிரம்ம சூத்திரம் அவசியமில்லை. அதனால் எழுத வேண்டிய அவசியமில்லை.

பதில்   முதல் சூத்திரத்தின் விளக்கம்தான் இதற்கு பதிலாகும்.

கேள்வி விசாரம் செய்வதினால் எந்தப் பலனும் அடையப் போவதில்லை. மேலும் நிர்குண பிரம்மத்தைப்     பற்றிய அறிவைக் கொடுத்து சம்சாரத்தை நீக்குகிறேன் என்று சொன்னால் அந்த நிர்குண பிரம்மமே கிடையாது என்று நான் சொல்கிறேன். எனவே அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பதில்   இந்த நிர்குண பிரம்ம அறிவை அடைந்து மோட்சத்தை அடைய விரும்புகின்ற தகுதியுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதை முதல் சூத்திரத்திலேயே வியாச பகவான் நிலைநாட்டியிருக்கிறார்.

அத்யாஸ பாஷ்யமானது அத்யாஸத்தை நிலைநாட்டுவதால் பலனையும், அறிவையும் அடைவோம். அத்யாஸத்திற்கும் மோட்ச பலன் அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. அத்யாஸம் என்பது காரணத்தை நிலை நாட்டுகிறது. இது சாத்தியமான மோட்சத்தைக் கொடுக்கிறது.

பொதுவாக ஞானத்தினுடைய தன்மையானது இருப்பதைப் காட்டிக் கொடுப்பதாகும். ஞானம் எதையம் உற்பத்தி செய்யாது, எதையுமே அழித்தும் விடாது. உதாரணமாக அறையில் உள்ள பாம்பை பார்க்கும் போது பாம்பு இருக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த ஞானமே பாம்பை விரட்டாது. ஏதாவது செய்துதான் அதை விரட்ட முடியும். மங்கலான வெளிச்சத்தில் கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிறு என்ற ஞானம் வந்தவுடன் மறைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது பொய்யாக காட்சியளிக்கும் மித்யா வஸ்து ஞானம் வந்தவுடன் சென்றுவிடும் என்பதாகும். இங்கே ஞானம் கயிற்றில் விசேஷ அறியாமையினால் தோன்றிய பாம்பை நீக்குகிறது. அதேபோல பந்தம் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பந்தம் உண்மையாக இருந்துவிட்டால் அதை ஞானத்தால் நீக்க முடியாது. ஆனால் மித்யாவாக, பொய்யாக இருந்தால் ஞானத்தினாலே நீக்கிவிடலாம். இது தெரியாமல் இருப்பதால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே பந்தம் என்பது மித்யா என்று நிலைநாட்ட வேண்டிய அவசியமாகிறது. பந்தம் என்பது அத்யாஸம் என்று நிலைநாட்டினால் அதை ஞானத்தினால் நீக்கமுடியும்.

சம்சாரம் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். உடலுக்கு வரும் கஷ்டங்கள் உடலுக்குத்தான் துன்பத்தைத் தருகிறது. இது சம்சாரமல்ல. மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை, மனம் அனுபவிக்கின்ற வேதனைகள், பயம், க்ரோதம், பொறாமை போன்றவைகள்தான் சம்சாரம். இந்த சம்சாரம் யாவும் மித்யாவாகும். இது மித்யாவாக இருப்பதால் அதை ஞானத்தினாலேயே நீக்கமுடியும்.

 

கேள்வி பந்தம் இல்லையென்று சொல்கிறீர்கள். இல்லாததை நீக்குவதற்கு ஞானம் தேவையில்லை. அதனால் பொய்யான பந்தத்தினால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. எனவே எதற்கு பொய்யான பந்தத்தை போக்குவதற்கு முயற்சி எடுக்கிறீர்கள். பொய்யான கோபம் நம்மை பாதிக்காது. அதேபோல பொய்யான பந்தமும் நம்மை பாதிக்காத போது அதை நீக்குவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்.

பதில்   உண்மையான பாம்பைப் பார்த்தால் எந்தளவு பயம் ஏற்படுகிறதோ,  அதேயளவு பயம் பொய்யான பாம்பைக் கயிற்றில் பார்க்கும் போது ஏற்படுகிறது. கயிற்றின் இருப்பு பாம்புக்குப் போயிருக்கிறது. எனவே கயிறுதான் உண்மையில் பயத்தைக் கொடுக்கிறது. கயிற்றின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டால் பாம்பின் இருப்புக் கயிற்றுக்கு சென்றுவிடுவதால் பயம் சென்றுவிடுகிறது. அதேமாதிரி மித்யாவாக இருக்கின்ற ஜகத் நிமித்தமாக நமக்கு பயம் ஏற்படுகிறது. சம்சார தாபம் ஏற்படுகிறது. இந்த உலகத்தின் மித்யத்தன்மையை உணர்ந்துக் கொள்ளாததனால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் பொய் என்ற அறிவை அடைந்வுடன் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சம்சாரம் சென்றுவிடுகிறது. எனவே இந்த உலகம் மித்யா என்பதை நிலைநாட்டு வேண்டுமென்றால் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். ஞானத்தினால் ஒன்று செல்கின்றதென்றால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.

கேள்வி நிர்குண பிரம்மன் என்பதே கிடையாது. ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணம். காரண-காரிய தத்துவத்தில் காரணத்தின் குணம் காரியத்தில் இருக்கிறது. எனவே ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணமாக இருப்பதால் சகுண பிரம்மன்தான் இருக்கமுடியும்.

பதில்   இந்த உலகம் அத்யாஸத்தினால் தோன்றிக் கொண்டிருக்கின்றது. பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் தன்மைகளை பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்றோம். பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டு உலகம் சகுணமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த பிரம்மத்தின் மீது உலகம் ஏற்றி வைத்திருப்பதனால் பிரம்மன் சகுணத்திற்கு அதிஷ்டானமாக இருக்கிறது. எனவே நிர்குணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. எந்தவொரு அத்யாஸத்திலும் விசேஷ அக்ஞானம் இருக்க வேண்டும், சாமான்ய ஞானமும் இருக்க வேண்டும்.

கேள்வி தெரிகின்ற பிரம்மத்தைப் பற்றி எதற்கு விசாரம் செய்ய வேண்டும்?

பதில்   பிரம்மத்தைப் பற்றிய விசேஷ அக்ஞானம் இருப்பதனால்தான் விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது விசேஷ அக்ஞானத்தை நிலைநாட்ட வேண்டும். எனவே விசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

அத்யாஸ பாஷ்யத்தில் ஆறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்,

 1. அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
 2. சந்தேகத்திற்கான பதில்
 3. அத்யாஸ லட்சணம்
 4. அத்யாஸ நடப்பதற்கான வாய்ப்பு
 5. அத்யாஸம் நடந்திருக்கின்றது என்று அறிய உதவும் பிரமாணம்
 6. முடிவுரை

ஆகியவைகளாகும்.

 

 1. 1.அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்

ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் இடையே உள்ள அத்யாஸத்தைப் பற்றிய விளக்கம் கூறப்படுகிறது. ஆத்மாவென்ற கயிற்றில் அனாத்மா என்ற பாம்பை ஏற்றி வைத்திருப்பதைப் பற்றி விளக்கப்படுகிறது.

ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.

ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.

 

 1. விரோதாத்– ஆத்மா-அனாத்மாவிடையே இயல்பாகவே விரோதம் இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது. இருள், ஒளி இவையிரண்டுக்கும் இடையே அத்யாஸம் நடைபெற முடியாது. இருள் மீது ஒளியோ அல்லது ஒளி மீது இருளோ அத்யாஸம் நடக்காது. அதுபோல ஆத்மாவிடத்தில் அனாத்மா அத்யாஸம் செய்ய முடியாது. இரண்டும் சத்யமாக இருப்பதால் சேர்ந்தேயிருக்கிறது. இந்த விரோதம் மூன்று வகையாக இருக்கிறது.

1.1.     இயல்பாக விரோதமாக இருத்தல். (உ-ம்) எலி-பூனை, நான்,நீ.அது என்று சுட்டிக் காட்டுகின்ற பொருட்கள் சுபாவமாகவே விரோதமாக இருக்கிறது.

1.2.     ஆத்மா சாட்சி; அறிபவன், அனாத்மா அறியப்படுவது என்ற வேற்றுமை இருத்தல். ஆத்மாவால் பிரகாசப்படுத்துகின்ற அனாத்மா எப்படி என்னுள்ளே செல்லும். நான் என்ற சொல்லுக்குள் போக முடியும்?

1.3.     விவகாரத்தின் அடிப்படையிலும் விரோதம் இருக்கிறது. நான் கர்த்தா, நான் போக்தா என்ற விவகாரம் இருக்கிறது. நான் என்கின்ற பிரம்மன் வேறுபட்டிருக்கிறது. எனவே கர்த்தாவும், பிரம்மமும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது. கர்த்தாவான நான் ஏதாவது கர்மத்தை செய்துதான் பிரம்மனாக உயர முடியும்.

இந்த காரணங்களால் அத்யாஸம் என்பது நடக்கவே முடியாது.

 1. பிரத்யக்ஷ விஷயத்தில்தான் அத்யாஸம் நடைபெறும். பார்க்கப்படும் பொருட்களுக்குள்தான் அத்யாஸம் நடைபெறும். ஆத்மா அபிரத்யக்ஷமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறவே முடியாது.
 2. ஆத்மா ஸ்வயம் பிரகாசமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறாது. ஆத்மாவை எதுவும் மறைக்க முடியாது.
 3. ஸாத்3ருஷ்யம் அபா4வாத்

சாதிருஷ்யம் இல்லாததால் அத்யாஸம் நடைபெறாது. சாதிருஷ்யம் என்பது ஒன்றைப் போல் வேறொன்று இருப்பதாகும். கயிற்றில் பாம்பைப் பார்க்கக் காரணம் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. எனவே அங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது. ஆத்மாவும், அனாத்மாவும் ஒரேமாதிரியாக இல்லாததால் அத்யாஸம் நடக்காது.

அவயவ சாத்ருஷ்யம் – உடலுறுப்புக்கள் ஒரேமாதிரியாக இருத்தல். நாட்டெருமை, காட்டெருமை உடலமைப்பில் ஒரேமாதிரியாக இருப்பதால் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.

குண சாத்ருஷ்யம் – குணத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம். சிங்கத்தைப் போலிருக்கிறான் அவன் என்ற வாக்கியத்தில் குணத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது. ஆனால் ஆத்மா-அனாத்மாவிடத்தில் சாத்ருஷ்யமும் இல்லாததால் அத்யாஸமே நடைபெறாது. அனாத்மா அவயவங்களை உடையது, ஆத்மா அவயவங்களற்றது என்பதாலும், குணங்களுடன் கூடிய அனாத்மாவுக்கும், ஆத்மா நிர்குணமாக இருப்பதாலும் இவைகளிடத்தில் அத்யாஸம் நடைபெறாது.

 1. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ:

அத்யாஸம் நடைபெறுவதற்கு ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் மனதில் பதிந்திருக்கும். இந்த மனப்பதிவுகள் அத்யாஸத்திற்கு அவசியம். இந்த வகையான மனப்பதிவு ஆத்மா-அனாத்மா விஷயத்தில் கிடையாது. கயிற்றில் தோன்றிய பாம்பானது நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட மனப்பதிவினால் காட்சியளிக்கிறது. பாம்பைப் பார்க்காதவனால் கயிற்றைப் பாம்பாக பார்க்க முடியாது. அதேமாதிரி  உண்மையான அனாத்மாவை பார்த்திருந்தால்தான் ஆத்மா மீது அத்யாஸம் செய்ய முடியும். அனாத்மா மித்யாவென்று சொல்கின்ற உங்களால் எப்படி அத்யாஸம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?

 

மேற்கூறிய 5 காரணங்களால் அனாத்மாவான 3 சரீரங்களை ஆத்மா மீது ஏற்றி வைக்க முடியாது. இவையிரண்டுக்குமிடைய அத்யாஸம் நடைபெறவே முடியாது. உடலும், ஆத்மாவும் சத்யமாக இருப்பதால் ஏதாவது கர்மத்தை செய்துதான் உடலைவிட்டு வேறொரு உயர்ந்த நிலைக்கு சென்று மோட்சத்தை அடைய முடியும். அதாவது பிரம்மலோகத்தையோ, வைகுண்டத்தையோ, சிவலோகத்தையோ அடைந்து அங்கிருந்துதான் மோட்சத்தை அடைய முடியும். இவையிரண்டும் கர்ம சம்பந்தத்தினால் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே கர்மகாண்டம் மூலமாகவே மோட்சத்தை அடையலாம். ஞானகாண்டமே தேவையில்லை, அதை விசாரம் செய்யவும் தேவையில்லை.

 1. சந்தேகத்திற்கான பதில்
  இந்த அத்யாஸம் யுக்திக்கு பொருந்தி வரவில்லையே என்றால், நீ சொல்வது சரிதான். உதாரணமாக இந்த உலகத்தை எந்த தர்க்க தோஷம் இல்லாமல் விளக்க முடியாது. ஏனென்றால் அது அனிர்வசனீயம். இதை விளக்க முடிந்தால் அது சத்யமாகிவிடும். இதுவே அத்வைதத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த அத்யாஸம் தர்க்கத்திற்கப்பாற்பட்டு இருப்பதனால் அது அப்படி இருப்பதுதான் அதன் இயல்பான தன்மையாகும்.இந்த அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று கூறமுடியாது. இது அனுபவத்தில் இருக்கிறது. அக்ஞானியின் அனுபவத்தில் கர்த்தா, போக்தாவாகவும், ஞானி அகர்த்தா, அபோக்தாவாகவும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவனுக்குத்தான் இது அனுபவத்திற்கு வரும். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவத்தை அடைகிறோம். இந்த நிலையில் சரீர அபிமானம் இல்லாததால் துயரமில்லாமல் சுகத்துடன் இருக்கிறோம். எனவே அபாவாத் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக ஒரு பொருளை அது என்றும், இது என்றும் சொல்கிறோம். ஆனால் நாம் நான் என்ற சொல்லால் ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் மாற்றி, மாற்றி சொல்கிறோம். உண்மையில் நான் என்ற சொல் ஒன்றை மட்டும்தான் குறிக்க வேண்டும். இந்த உடல் விஷயத்தில் நமக்கு குழப்பம் இருக்கிறது. எனவே அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று சொல்வது தவறு. இதிலிருந்து அத்யாஸம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.

அத்யாஸம் நடைபெற காரணமில்லையே என்ற காரணத்தினால் இதை மறுக்கிறாய். அதற்கு நீ கூறிய 5 காரணங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது.

 1. விரோதத்துடன் இருக்கின்ற இரண்டு பொருட்களுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதுதான் இயல்பாகும். கயிறும், பாம்பும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதனால்தான் அத்யாஸம் நடக்கிறது.
 2. அத்யாஸம் நடைபெறுவதற்கு பிரத்யக்ஷம் தேவையில்லை. நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. அது விளங்கிக் கொண்டிருந்தால் போதும் என்று பதிலளிக்கப்படுகிறது.
 3. தெரியாத விஷயத்தில் தவறு நடைபெற முடியாது ஆனால் ஆத்மா எபிபொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்ல முடியாது. ஆத்மா தெரிந்தும், தெரியாமலும் இருக்கிறது. ஆத்ம விஷயத்தில் சாமான்ய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறேன்; எந்த தன்மையுடன் இருக்கிறது என்கின்ற விசேஷ ஞானம் இல்லாத காரணத்தால் ஆத்மாவின் மீது சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
 4. ஸாதிருஷ்யம் அபாவாத் என்ற காரணத்தால் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்கிறாய். கயிற்றை பாம்பாக நினைப்பதற்கு இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியான தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மாவும், அனாத்மாவும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் போது எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பார்க்கும் போது இது சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஆகாசத்தில் நீல வர்ணத்தை ஏற்றி வைத்துப் பார்க்கிறோம். உருவமில்லா பொருளில் எப்படி வர்ணத்தை ஏற்றி வைக்க முடியும்! இங்கு ஸாத்ருஷயம் இல்லை. அதேபோல ஆத்ம-அனாத்மா விஷயத்தில் இருக்கிறது. வறண்ட நிலத்தில் கானல் நீரை பார்ப்பது இன்னொரு உதாரணம். சாதிருஷ்யம் இல்லாத போதிலும் இங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது.
 5. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ: பொய்யான அனாத்மாவை உண்மையாக முன்பே பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதனால் ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உண்மையான பாம்பைப் பார்த்ததினால் கயிற்றில் பாம்பை பார்க்க முடிந்தது.  ஏற்கனவே பார்த்த பொய்யான ஒன்றின் ஸம்ஸ்காரம் நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக இருட்டில் பார்த்த வழிகாட்டி தூணை பேய் என்று பயந்த சூழ்நிலையில் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் பேய் வழிகாட்டிதூணில் ஏற்றி வைக்க முடிகிறது. இந்த அத்யாஸம் அனாதியானது. அக்ஞானம் அனாதியாக இருப்பதனால் இதிலிருந்து தோன்றிய அத்யாஸமும் அனாதியாக இருக்கிறது.

பூ.ப    இந்த உடலினுடைய தன்மையாவது ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாமல்லவா?
பதில் உடலையும், அதனுடைய தர்மங்களையும் சேர்த்துத்தான் ஏற்றி வைக்க முடியும்.

3.அத்யாஸ லட்சணம்
நான்கு லட்சணங்கள் கொடுக்கப்படுகிறது. அவைகள்,

 1. ஸ்மிருதி ரூபஹ – ஞாபகத்தைப் போல. கயிற்றில் தோன்றும் பாம்பு ஞாபகத்தில் உள்ளதை போன்றது.
 2. பரத்ர –  வேறிடத்தில் (கயிற்றில்)
 3. பூர்வ த்3ருஷ்டா – ஏற்கனவே பார்த்தது.  (பாம்பு)
 4. அவபா4ஸக – தோற்றம்; காட்சி

 

லட்சணம்-1 (ஸ்மிருதி ரூபஹ)

*   சம்ஸ்கார ஜன்யம் : ஏற்கனவே பார்த்தவொன்று மனதில் பதிவாகியிருந்தால்  தான் நினைவுக்கு கொண்டு வரமுடியும்.

*   பிரமாண அஜன்யம் : நாம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர எந்த பிரமாணத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கயிற்றில் தோன்றிய பாம்பு நம் நினைவகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

*   தோஷ ஜன்யவாத் : பாம்பைப் பார்க்கும்போது பிரமாணத்தை தவறாக பயன்படுத்தி இருப்போம். இது நம் சம்ஸகாரத்திலிருந்து வந்திருப்பது, அதிஷ்டானத்தைப் பற்றிய சாமான்ய ஞானத்தினால் வருவது, அது வெளியே இருப்பது போல தோன்றுவது.

லட்சணம்2 (பரத்ர)
அதஸ்மின் தத் புத்தி:
அதஸ்மின் – அதில்லாத இடத்தில்
தத் புத்தி – அது இருப்பதாக பார்ப்பது, நினைப்பது
நான் ஒன்றைப் பார்த்தேன் என்று சொல்லும் போது எதைப் பார்த்தேன்,  எங்குப் பார்த்தேன் என்ற கேள்வி எழுகின்றது. எதைப் பார்த்தாய் என்ற கேள்விக்கு பாம்பின் உருவத்தைப் பார்த்தேன் என்றும், எங்குப் பார்த்தாய் என்று கேட்டால் கயிற்றில் பார்த்தேன் என்று பதில் சொல்வோம். எனவே அதஸ்மின் – கயிற்றில், தத் புத்தி – பாம்பைப் பார்த்தல்.

லட்சணம்-3 (பூர்வ த்3ருஷ்டா)
ஸத்யாநிருத மிதுனீ கரணம்
ஸத்ய அநிருத – உண்மை, பொய்
மிதனீ கரணம் – ஒன்றோடொன்று கலத்தல்
உண்மையும், பொய்யும் கலந்து விட்டோமேயானால் அதுவே அத்யாஸம். உண்மையான கயிற்றையும், பொய்யான பாம்பையும் கலந்து பார்க்கின்றோம்.

லட்சணம்-4 (அவபா4ஸக)
மித்யா ப்ரத்யய ரூபஹ – பொய்யான அறிவு வடிவம்
ப்ரத்யயம் – மனதில் தோன்கின்ற எண்ணம், அறிவு
பாம்பு என்ற அறிவிருக்கிறது, ஆனால் உண்மையில் பாம்பில்லை. இல்லாதவொன்று இருப்பது போன்ற எண்ணம் மனதில் தோன்றுவது.
விதவிதமான அத்யாஸங்கள் (பகவான் சங்கரர் பாஷ்யத்தில் இது குறிப்பிடவில்லை)

 1. அனாதி அத்யாஸம் (அ) காரண அத்யாஸம்

பிரம்மம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அது அனாதி என்று பதில் சொல்லி விடுவோம். அதேபோல மாயையும் அனாதி என்று சொல்லி விடலாம். இந்த மாயையை பிரம்மத்தில் ஏற்றிவைத்து அதன் தன்மையை பிரம்மத்திற்கு கொடுத்துவிட்டோம். இந்த அத்யாஸமும் அனாதி என்றாகி விடுகிறது. இதையே அனாதி அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது.

 1. ஸாதி அத்யாஸம் (அ) காரிய அத்யாஸம்

இந்த அத்யாஸத்திற்கு தோற்றமுண்டு. இந்த நேரத்தில்தான் அத்யாஸம் ஏற்பட்டது என்றும், இந்தக் காலத்தில்தான் அத்யாஸம் நடைபெற்றது என்றும் கூறிவிடலாம். இந்த ஸ்தூல சரீரமும் இந்த வகையான அத்யாஸத்தில் சேர்த்துவிடலாம்.

 1. தாதா3த்மிய அத்யாஸம் (அ) த3ர்மி அத்யாஸம்

சத்யமாக இருக்கின்ற ஒன்றின் மீது வேறொன்றை பார்ப்பது. கயிறு என்றவொன்றில் பாம்பு என்ற வேறொன்றை பார்ப்பது இதற்கு உதாரணமாகும்.

 1. ஸம்ஸர்க3அத்யாஸம் (அ) த3ர்ம அத்யாஸம்

ஸபடிகத்தின் பக்கத்திலுள்ள சிவப்பு மலர், தனது சிவப்பு நிறத்தை பொய்யாக ஸ்படிகத்திற்கு கொடுத்துவிடுவதால் அதுவும் சிவப்பாக தோன்றுகிறது. இங்கே மலரின் ஒரு தன்மையை மட்டும் ஸ்படிகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

 1. அர்த்த அத்யாஸம்

கயிறு-பாம்பு அத்யாஸத்தில், வெளியே தெரிகின்ற பாம்பு அர்த்த அத்யாஸமாகும்.

 1. ஞான அத்யாஸம்

பாம்பைப் பற்றிய எண்ணத்திற்கு ஞானாத்யாஸம் என்று பெயர்.

 1. ஸோபாதீக அத்யாஸம்

இந்த அத்யாஸம் நடைபெறுவதற்கு பார்க்கின்ற பொருளுக்கு பக்கத்தில் வேறொரு பொருள் இருக்க வேண்டும். (உ-ம்) ஸ்படிகத்திற்கு பக்கத்தில் மலர் இருந்தால்தான் இந்த அத்யாஸம் ஏற்படும்

 1. நிரூபாதி33அத்யாஸம்

கயிற்றை பாம்பாக பார்ப்பதற்கு வேறொரு பொருளோ, வேறெந்த நிபந்தனைகள் இல்லாமல் ஏற்படுவதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 

சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் சென்றுவிடும். உதாரணம்: கயிறு-பாம்பு. சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் இருக்கும். ஆனால் உண்மையென்ற புத்தி சென்றுவிடும். உதாரணம் கானல் நீர். அதேபோல பிரம்மஞானம் வந்தாலும் உலகம் மறைந்து விடாது. ஆனால் அது பொய்யானது என்ற புத்தியுடன் இருப்போம்.

 

க்2யாதி வாதம்

நாம் செய்கின்ற தவறு எப்படிபட்டது என்பதை விளக்குகின்ற முறையே க்யாதிவாதமாகும். கயிற்றை பாம்பாக பார்ப்பதுதான் க்யாதி என்ற கூறலாம். இந்த தவறின் தன்மை என்ன என்பதில் பல கருத்துக்கள் வந்துவிட்டது. ஐந்துவிதமான க்யாதி வாதங்கள் உண்டு. இவைகளில் முதல்  நான்கு தவறான கருத்துக்களை உடையது. இறுதியான ஒன்றுதான் சரியானது. சரியான முறையில் தவறை விளக்கினால்தான் சரியான நீக்கும் முறையை கண்டுபிடிக்க முடியும்.

 

 1. க்ஷணிக விக்ஞானவாதியின் வாதம்:

இதை ஆத்மக்யாதி என்றும் அழைக்கப்படுகிறது. வெளியே காட்சியளிக்கின்ற பொருட்கள் யாவும் நம்முடைய எண்ணங்கள்தான். மனதில் உள்ள எண்ணங்கள்தான் சத்யமானது. க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி மறைகின்ற எண்ணங்கள்தான் சத்யமானது. கயிறு-பாம்பு தவற்றில் இரண்டுமே தவறு என்று கூறுகிறான். வெளியே பார்ப்பதாக சொல்வது தப்பு. எல்லாமே மனதில் எண்ணங்களாக இருக்கிறது.

 1. சூன்யவாதம்.

அஸத்க்யாதி என்பது மற்றொரு பெயர். இல்லாத கயிற்றில் இல்லாத பாம்பைப் பார்க்கிறாய். எல்லாம் சூன்யமாக இருப்பதால் இந்த தவறு நடக்கவில்லை. இல்லாததற்கு எப்படி கயிறு, பாம்பு என்ற அடைமொழி கூறமுடியும்.

 1. அக்யாதி

ஏற்கனவே பார்த்த பாம்பைத்தான் இப்பொழுது கயிற்றில் பார்க்கிறாய். எங்கே பார்த்தாயோ அந்த தேச, காலம் இப்போது மாறியிருப்பதால் தவறு நடந்திருக்கிறது. பாம்பு சத்யம் என்பதும் தவறானது.

 1. அன்யதா வாதம்

உண்மையான பாம்புதான் பார்க்கப்படுகிறது. ஸமிருதி அல்லது பிரத்யக்ஷம் எது என்பதில்தான் தவறு நடந்திருக்கிறது. ஏதோ விளக்க முடியாத பிரத்யக்ஷத்தினால் பாம்பு தோன்றியிருக்கிறது.

 1. அனிர்வசனீய வாதம் – சரியான க்யாதிவாதம்

அந்த இடத்தில் ஸத்திற்கும், அஸத்திற்கும் வேறானவொன்று காட்சியளிக்கிறது. இருக்கிறது என்றோ இல்லையென்றோ சொல்லா முடியாததாக இருப்பதனால் இதை அனிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. மித்யா ஸ்ருஷ்டிதான் கயிற்றில் தோன்றும் பாம்பு. இது நம்மால் உருவாக்கப்பட்டதாகும். நாம் உருவாக்கிய பாம்பை நம்மால்தான் நீக்கமுடியும். வேறு யாராலும் விரட்டியடிக்க முடியாது. மனதில் உருவாகி இருப்பதை நாம்தான் அழிக்க வேண்டும், வேறுயாரும் அதை செய்ய முடியாது.

 

4.ஸம்பாவனா: அத்யாஸ வாய்ப்பு

 1. அக்ஞானம்      – முழுமையாக ஒன்றும் தெரியாத நிலை
 2. விபரீத ஞானம் – அறியாமை நீக்கி தவறான அறிவை அடைந்திருத்தல்
 3. சம்யக் ஞானம்  – அறியாமை நீக்கி சரியான அறிவை அடைந்திருத்தல்
 4. ஸம்பாவனா     – இருப்பதற்கு வாய்ப்பு
 5. சரியான அறிவை அடைதல்

 

இதுவே ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடையும் வழிமுறை. இதை ஆத்மஞானத்தை அடையும் விஷயத்தில் பொருத்திப் பார்ப்போம்.

 1. ஆத்மாவைப் பற்றிய அறியாமை
 2. உடல்தான் ஆத்மா என்ற தவறான எண்ணத்தை அடைதல்
 3. ஆத்ம விசாரம் செய்யும்போது உடலுக்கப்பால் நான் என்கின்ற ஆத்மா இருக்கலாம் என்ற சந்தேகம் வருவது
 4. ஆத்மாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
 5. இறுதியில் நானே ஆத்மா என்ற சரியான அறிவை அடைதல்.

மேற்கூறிய விசாரத்தைப் பார்க்கும்போது ஆத்ம-அனாத்மாவுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை பகவான் சங்கரர் கொடுக்கிறார்.
5.அத்யாஸ பிரமாணம்

5.1.     ஆத்ம-அனாத்மா விஷயத்தில் ஏற்பட்ட அத்யாஸத்திற்கு ஸ்ருதிதான் பிரமாணம். ஆத்மாவின் ஸ்வரூபம் அஸங்கமாகும. அனாத்மா விஷயங்கள் நீக்கப்படுவதாக இருப்பதால், அது மித்யாவாகும். இந்த ஜகத்தும், சரீரங்களும் நீக்கப்படுவதாக இருப்பதால், இவைகளும் மித்யாவாகும். சாட்சி பிரத்யக்ஷம் நம்முடைய மனதிலுள்ள உணர்வுகளை சாட்சியே விளக்குகிறது. அத்யாஸம் அனுபவத்திலே ஏற்படுகிறது. வெளி விஷயத்தை என்னுடையது என்று நினைக்கும்போது அதற்கு வருகின்ற நலம், கேடு அனைத்தும் தனக்கு வந்ததாகவும், உடலை அபிமானிக்கும்போது அதற்கு வருகின்ற கஷ்டங்கள் தனக்கு வந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இவைகள் நம் அனுபவத்திலேயே புரிந்து கொள்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் எதன் மீதும் அபிமானம் இல்லாததால் விவகாரம் எதுவும் நடக்கவில்லை. எனவே அத்யாஸத்திற்கு அபிமானம்தான் காரணமாகும்.

5.2.    அத்யாஸ பிரகாரம்

அத்யாஸம் படிப்படியாக எப்படி நடக்கிறது. நம்முடைய தேக விவகாரம் நடக்க வேண்டும் என்றால் உடல் மீது அபிமானம் இருக்க வேண்டும். நான் அறிய விரும்புவன் என்ற அத்யாஸம் இல்லாமல் எந்த விவகாரமும் நடக்காது என்று பகவான் சங்கரர் கூறுகிறார். இது மிருகங்களுக்கும் பொருந்தும். நம் சொந்த-பந்தங்களிடத்தில் அபிமானம் இருப்பதால் அவர்களுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் நம்மையும் பாதிக்கின்றது.

 

6.அத்யாஸ உபஸம்ஹாரம் (முடிவுரை)

இந்த அத்யாஸம் நம்முடைய சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் அத்யாஸத்தை முகவுரையாக கொடுத்து விளக்கப்பட்டிருக்கிறது. அத்யாஸத்தை நீக்கி ஆத்மா ஒன்றுதான் என்ற அறிவின் மூலமாக சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஞானம் அக்ஞானத்தை நீக்கிவிடுகிறது. இந்த அக்ஞானத்தினால் எவைகளெல்லாம் இருக்கிறதோ அவைகளெல்லாம் நீங்கிவிடுகிறது. கயிறு என்ற அறிவு வந்தவுடன் பாம்பு என்ற அபிமானம் சென்றுவிடுவதால் பாம்பின் உருவமும் மறைந்துவிடுகிறது. அத்யாஸமும் சென்றுவிடுகிறது.

பிரம்ம சூத்திரம்-பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஜிக்ஞாஸா அதிகரணம்-01

சூத்திரம்-1
अथातो ब्रह्मजिज्ञासा ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।

இந்த சூத்திரம் பிரம்மசூத்திரம் என்கின்ற நூலுக்குள் நுழைகின்ற வாயிலாக இருக்கிறது. இதற்கு அனுபந்த3 சதுஷ்டயம் என்ற வேறொரு பெயரும் உண்டு. அனுபந்த சதுஷ்டயம் என்பது நான்கு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவைகள் விஷயம், அதிகாரி, பலன், சம்பந்தம் ஆகியவைகளாகும். புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு இந்த புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை கூற வேண்டும். யாருக்காக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், படிப்பதனால் என்ன பலனை அடையலாம் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

வியாச பகவான் தான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதைக் கூறிவிட்டு, யார் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் கூறியிருக்கிறார். எனவே முதல் சூத்திரம் அனுபந்த சதுஷ்டயமாக அமைந்திருக்கிறது.

அதிகரணத்தின் அங்கங்களாவது விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் ஆகியவைகளாகும். இந்த முதல் சூத்திரமே ஒரு அதிகரணமாக இருப்பதால், இதற்கு அனுபந்த சதுஷ்டயம் இருக்கிறது.

 1. விஷயம்        – முழு வேதாந்த சாஸ்;திரமாகும்.
  2.    சந்தேகம்        – வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
  3.    பூர்வபக்ஷம்      – அனுபந்த சதுஷ்டயமே இல்லாததால் விசாரம் தேவையில்லை
  4.    சித்தாந்தம்      – வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.

கேள்வி  பிரம்ம சூத்திரத்தில் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்?

பதில்    உபநிஷத் வாக்கியங்களை எடுத்து பிரம்ம நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  அதைத்தான் கர்ம காண்டத்திலே சகுண பிரம்மனை நிச்சயம் செய்து விட்டதால் திரும்பவும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு நிச்சயம் செய்யத் தேவையில்லை.

பதில்    இதில் நிர்குண பிரம்மத்தைத்தான் நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  நிர்குண பிரம்மன் என்றவொன்றே இல்லாதபோது அதை நிச்சயம் செய்யப் போகிறேன் என்று சொல்வது தேவையில்லாதது. மேலும் யாருக்காக இந்த விசாரம் செய்யப் போகிறீர்கள்?

பதில்    சாதன-சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்கள்தான் இதற்கு அதிகாரி.

கேள்வி  வைராக்கியம் என்பது அடையவே முடியாது. எனவே அதிகாரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் யாரும் இல்லை. அப்படியே ஒருசிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் அதனால் அடையும் பலன்தான் என்ன?

பதில்    இந்த மூன்று கருத்துக்களையும்தான் முதல் சூத்திரத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த உபநிஷத்துக்கம் நுழைவாயிலாக இருக்கிறது. இந்த சூத்திரத்தில் மூன்று வர்ணகங்கள் இருக்கிறது. அவைகள்,

 

2வது வர்ணகம் – அக3தார்த்த2 வர்ணகம்

அக3தார்த்த2ம் – பேசி முடிக்காத விஷயம். அதாவது நிர்குண பிரம்மன் கர்ம காண்டத்தில் பேசப்படவில்லை.

3வது வர்ணகம் – அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.

4வது வர்ணகம் – ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
சூத்திரத்தின் அர்த்தம்:
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।


வேதாந்தத்தின் அனுபந்த சதுஷ்டயம்:
1.   விஷயம்  – ஜீவ-பிரம்ம ஐக்கியம்
2.   அதிகாரி    – சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்தவர்கள்
3.   பலன்      – மோட்சம்; ஜீவன் முக்தி; விதேக முக்தி
4.   சம்பந்தம் – அதிகாரிக்கும் அவன் அடையப்போகும் பலனுக்கான சம்பந்தம்.
முதல் மூன்று கருத்துக்களையும் நிலை நாட்டுவதுதான் இந்த சூத்திரத்தின் நோக்கமாகும்.
அத2     – பிறகு (thereafter)
அத:  – ஆகவே (therefore)
ப்3ரஹ்ம – நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா – அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.

எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.

பிறகு    சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா – பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.

விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
பூ.ப   வேதாந்த சாஸ்திரத்தை விசாரம் செய்யக்கூடாது? எல்லா விஷயத்தையும் கர்மகாண்டத்தில் பேசியாகி விட்டது. மேலும் உபநிஷத்தை படித்து அறிவை அடைந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இதைப் படிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆகவே விசாரம் செய்யத் தேவையில்லை.

பதில் விஷயம் உண்டு. அதிகாரியும் உண்டு. பலனும் உண்டு. இதைத்தான் இந்த சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.

 

அத2” சப்த விசாரம்:

இந்த சொல்லுக்கு 7 அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றுள் இந்த இடத்திற்கு பொருத்தமான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏன் மற்ற அர்த்தங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

 1. மங்கலம் – தெய்வீகமானது
  2.    அனந்தரம் – பிறகு
  3.    ஆரம்பஹ – தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
  4.    ப்ரஶ்னஹ – கேள்வி
  5.    கார்க்ஸயம் – முழுமையான
  6.    அர்த்தாந்தரம் – பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா – புதிய தலைப்பு; அடுத்தது
  7.    க்ரமஹ – வாpசைக்கிரமம்

பூ.பக்ஷி மங்கலத்தை இந்த இடத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எதை தொடங்கினாலும் மங்கலத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு இறைவணக்கம் எதுவும் இல்லாததால் இதை இறைவணக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   அத2 என்ற சப்தமே மங்கலத்தைக் குறிக்கிறது. ‘பிறகு”  என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். சாஸ்திரத்தில் ஓம், அத2 என்கின்ற சொற்களின் உச்சரிப்பே மங்கலமானது. அத2 சொல்லானது சப்தமாகவும், அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அத2 என்ற சொல்லின் சப்தமே மங்கலத்தை குறிப்பதால், அதை விட்டுவிட்டு ‘பிறகு” என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பஹ என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் பிரம்ம ஞானத்தை அறிய விருப்பம் ஆரம்பமாகிறது என்றாகிவிடும்.  ப்ரஶ்னஹ என்ற அர்த்தத்தமும், கார்க்ஸயம் என்ற அர்த்தத்தமும் பொருந்தி வராது.

 

6.அர்த்தாந்தரம் – புதிய தலைப்பு; அடுத்தது

பூ.பக்ஷி கர்மகாண்ட விசாரம் முடிந்துவிட்டது எனவே அடுத்ததாக ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பது சரியாக பொருந்தி வருகிறது. இதுவே சரியான அர்த்தமாக இருக்கிறது.

பதில்   பிறகு என்ற அர்த்தத்திற்குள்ளே அடுத்தது என்ற அர்த்தம் வந்துவிடுவதால் இந்த அர்த்தம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. மேலும் அடுத்தது என்று சொல்லும் போது இதற்கு முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிறகு என்று சொல்லும்போது முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த அர்த்தம்தான் பொருத்தமாக இருக்கும். இந்த அர்த்தம் பிரம்ம ஞான விசாரத்திற்கு அவசியம என்ற உறுதி கூறுகிறது.

 

2.அனந்தரம் – பிறகு

பூ.பக்ஷி பிறகு என்பது சாதன சதுஷ்டய சம்பத்திக்கு பிறகு என்று எடுத்துக் கொள்ளமுடியாது. கர்ம காண்ட விசாரத்திற்கு பிறகு ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

பதில்   கர்ம காண்டத்திற்கு செல்வதற்கு முன்பே வைராக்கியம் இருந்துவிட்டால் கர்மகாண்ட விசாரம் தேவையில்லை. நேரிடையாக ஞானகாண்ட விசாரத்திற்கு வந்துவிடலாம். சுகர், நசிகேதன் போன்றவர்கள் கர்ம அனுஷ்டானம் செய்யாமலே பிரம்மஞானத்தை அடைந்தவர்கள். பகவான் கிருஷணர் பகவத்கீதையில் யோகபிரஷ்டன் என்பவனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவன் முற்பிறவியிலே விவேக, வைராக்கியத்தை அடைந்திருப்பான். இவன் இந்த பிறவியில் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று குறிபபிட்டிருக்கிறார்.

 

7.க்ரமஹ – வரிசைக்கிரமம்

பூ.பக்ஷி அத2 என்ற சொல்லுக்கு வரிசைப்படி என்ற முறையில் முதலில் தர்மத்தைக் கடைப்பிடித்து மனத்தூய்மையடைந்து அடுத்ததாக பிரம்ம விசாரம் என்ற வரிசையை எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   வரிசைப்படி இல்லாமலும் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வரலாம். ஒருவன் பல கர்மங்களை செய்ய வேண்டுமென்றால் இந்த கிரமத்தைப் பற்றி பேசலாம். உதாரணமாக ஒருவன் குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அலுவலகம் செல்கின்றான். இந்த இடத்தில் கிரமத்தை கடைப்பிடிக்கலாம். இந்த பிரம்ம விசாரம் வைராக்கியம் அடைந்திருப்பவன் செய்கின்றான். வைராக்கியம் இல்லாதவன் கர்மகாண்டத்திற்கு சென்று அதையடைந்து பிறகு பிரம்ம விசாரத்திற்கு வருவான். கர்ம காண்டத்தில் கிரமமாக சில யாகங்களை செய்ய வேண்டும் என்ற நியதியிருக்கிறது.

பூ.பக்ஷி ஞான-கர்ம சமுச்சயவாதி இரண்டு காண்டத்தையும் சேர்த்து செய்து கொண்டிருப்பான். இரண்டு காண்டங்களும் மோட்சம் என்கின்ற ஒரே பலனைத்தான் லட்சியமாக கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் மோட்சம் என்கின்ற பலனை மறைமுகமாக பேசுகிறது. ஞானகாண்டம் நேரிடையாக மோட்சத்தைப் பற்றி பேசுகிறது. பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போல மோட்சத்தை அடைவதற்கு இரண்டு காண்டங்களும் தேவைப்படுகிறது.

பதில்   ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டு பொருட்களை கலக்கமுடியாது. கர்ம காண்டத்தில் இருக்கும்போது சரீரமே நான் என்ற எண்ணத்தில் செயல் செய்து கொண்டிருப்பான். ஞானகாண்ட சாதகன் சரீர அபிமானத்தை நீக்க முயற்சி செய்து கொண்டிருப்பான். எனவே இரண்டும் ஒன்றக்கொன்று எதிராக இருப்பதால் சமுச்சயம் சம்பவிக்காது. இவையிரண்டையும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியாது. மேலும் இரண்டுக்கும் இடையே மூன்று வேற்றுமைகள் இருக்கிறது.

 

 1. விஷய பே4தஹ – இரண்டு காண்டங்களின் மையக்கருத்து வெவ்வேறாக இருக்கிறது. கர் காண்டம் புண்ணியங்களைத்தான் முக்கிய விஷயமாகக் கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டிருக்கின்ற கர்மங்களை முறைப்படி செய்தால் புண்ணியத்தை அடையலாம். இந்த புண்ணியத்தால் சுகத்தை அனுபவிக்கலாம். சுகத்தை துறந்தால் மனத்தூய்மை அடையலாம். ஆனால் ஞானகாண்ட விஷயமானது ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைத்தான் பேசுகிறது.
 2. 2ல பே4தஹ –  இரண்டு காண்டங்களின் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றது. கர்ம காண்டத்தினால் அடையப்படுகின்ற பலன்கள் நிலையற்றது. ஞானகாண்டத்தினால் அடைகின்ற பலன் நிலையானது.
 3. ப்ரவிருத்தி பே4தஹ – கர்மகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும், ஞானகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும் வெவ்வேறானது. கர்மத்தை செய்வதனால்தான் பலனை அடையமுடியும். யாகம் செய்யும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதை முறைப்படி செய்தால்தான் பலனை அடைவோம். ஆனால் ஞானகாண்டத்தில் ஞானத்தை அடைவதும், பலனை அடைவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது.

அத2” சப்த முடிவுரை:
சாதன சதுஷ்டய சம்பத்திக்குப் பிறகு பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது. பரீக்ஷய லோகான் கர்மசிதான் நிர்வேதம் ஆயாத் என்று தொடங்கும் முண்டக உபநிஷத் உபதேசம் உரைப்பது, இந்த உலகத்தில் அடைகின்ற அனுபவங்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து அடைவது வைராக்கியம், விவேகமாகும். பிறகு பிரம்மத்தை அறிவதற்கு தகுதி வாய்ந்த குருவிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஆத்மனஸ்ய காமாய… என்று தொடங்கும் பிருஹதாரண்க உபநிஷத் உபதேசமானது, இந்த உலகத்திலுள்ள பொருட்களின் மீது ஆசை கொள்வது அந்தப் பொருட்களின் நிமித்தமாக அல்லவென்றும், நம் மனதில் அடைகின்ற ஆனந்தமும்,  ஆசைதான் காரணம்.

மேற்கூறிய உபநிஷத் உபதேகங்களைப் பார்க்கும்போது சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று இருப்பதால் “அத2” என்ற சொல்லுக்கு பிறகு என்ற அர்த்தமே சரியாக இருக்கின்றது. ஆகவே உபநிஷத் சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ஆத்ம விசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பதால் பிறகு என்ற அர்த்தம்தான் சரியாக இருக்கும்.

அத: – ஆகவே. இந்தப் பொருளுக்கு பல காரணங்கள் உண்டு. அவைகளை பார்க்கலாம்.

 1. கர்மனா மோக்ஷ அபா4வாத் – கர்மத்தினால் மோட்சத்தை அடையமுடியாது.
 2. ஞானாதேவ மோக்ஷ ஸம்ப4வாத் –  பிரம்ம ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைய முடிவதனால் விசாரம் செய்யப்படவேண்டும்.
 3. ஸாதன சதுஷ்டய ஸம்ப4வாத் – சாதன சாதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்து விட்டதால் விசாரம் செய்ய வேண்டும்.
 4. ஸம்ஸாரஸ்ய அத்யாஸ பூர்வத்வாத் –  சம்சாரம் அத்யாஸமாக இருப்பதனால், விசாரம் செய்யப்பட வேண்டும்.

ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – இந்த சொல்லுக்குப் பிறகு கர்த்தவ்ய  என்ற வினைச் சொல்லை சேர்த்து பொருட்படுத்த வேண்டும். அப்போது பிரம்ம ஞானத்திற்காக விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற அர்த்தம் கிடைக்கும். ப்3ரஹ்மஜிக்ஞாஸா என்ற சொல்லை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் ப்ரஹ்மன:+ஜிக்+ஞாஸா – பிரம்மத்தைப் பற்றிய விசாரம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. ஜிக்ஞாஸா என்பது ஞாதும் இச்சா – அறிவதற்க விருப்பம்; அறிய ஆவல் என்ற அர்த்தம் கொடுக்கின்றது.

ஞானம் என்ற சொல் எதை அடைய ஞானம் தேவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதே பதிலாகும். எனவே பிரம்ம என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
ஸா – விருப்பம்- எதைப்பற்றிய ஆசை இருக்கிறது? எதையறிய விருப்பம் கொள்கிறாய் என்ற கேள்வியெழும்போது அதற்கான விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த விருப்பத்தினுடைய விஷயம் ஞானமாகும்.
பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லின் பொருள் பிரம்ம ஞானத்தில் விருப்பம் என்பதாகும். நாம் இதனுடன் கர்த்தவ்ய என்ற வினைச்சொல்லை பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் சரியாக இருக்காது. அதாவது பிரம்ம ஞானத்தில் விருப்பம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் தவறாக இருக்கிறது. விருப்பம் என்பது செயல் செய்து அடைவதில்லை. அதனால் இச்சா என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அது சம்பந்தமான வேறொரு சொல்லை பயன்படுத்தி வாக்கியத்தை பூர்த்தி செய்கிறோம். ஒரு பொருள் மீது ஆசை வந்தால் அதை அடைவதற்கான சாதனத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல் பிரம்மஞானத்தில் ஆசை வந்திருப்பதால் அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்கு வேதாந்த விசாரம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். எனவே இச்சா என்ற சொல்லை விட்டுவிட்டு, இச்சையை பூர்த்தி செய்கின்ற விசாரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறோம். இப்போது அந்த பிரம்ம ஞானத்தை அடைய விசாரம் செய்யப்படவேண்டும் என்ற சரியான வாக்கியமாக இருக்கிறது.

 

பிரம்மன் என்ற சொல்லுக்கான அர்த்தம் அடுத்த சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆறாவது வேற்றுமை உருபு உடைய என்பது ஒன்றினுடைய சம்பந்தத்தைக் குறிக்கும். இங்கே இது சரியாக பொருந்தி வராததால் இரண்டாவது வேற்றுமை உருபான ஐ எடுத்துக் கொண்டு பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பது சரியாக இருக்கும்.
பூ.பக்ஷி பிரம்ம சம்பந்தமான விசாரம் என்று பொருட்படுத்த வேண்டும்.

பதில்   பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பதுதான் சரியான அர்த்தம். ஏனென்றால் இதுவே பிரம்மத்திற்கு சம்பந்தபட்ட விஷயங்களும் விசாரம் செய்ய வேண்டும் என்பதே சேர்ந்திருப்பதால் நீ சொல்வது சரியல்ல. பிரம்மத்தை தனியாக சொல்வதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக ராஜா செல்கிறார் என்றால் அவர் பரிவாரங்களுடன் செல்கிறார் என்றுதான் புhpந்து கொள்வோம்.

ஞானம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.    விசாரம் செய்வதனால் அடையும் இறுதி பலன் ஞானமாகும்.
2.    ஞானத்தை அடைவதற்கான வழிமுறை, சாதனம்.

பிரம்ம ஞானத்தை அடைவதற்கு எத்தனை காலம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வினவினால் இதற்கு காலவரம்பெல்லாம் கிடையாது. முழுமையான ஞானத்தை அடையும்வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
4வது வர்ணகம்:

ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3தி4 – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.

 

பூ.பக்ஷி நிர்குண பிரம்மன் ஏற்கனவே தெரிந்ததா அல்லது தெரியாததா?

பதில்   நிர்குண பிரம்மன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. அதாவது சாமான்யமாக தெரிகிறது. விசேஷமாக தெரியவில்லை. எனவே இதை விசாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நிலை நாட்டுவதற்கு பகவான் சங்கரர் விசாரம் செய்கின்றார். இதை நிலைநாட்டிவிட்டால் முதல் சூத்திரம் நிலைநாட்டப்பட்டதாகிவிடும்.

பூ.பக்ஷி எந்த பிரமாணத்தின் மூலமாக பிரம்மம் சாமான்யமாக தெரிகிறது?

பதில்1  இது வேதப் பிரமாணம் மூலமாக அறியப்பட்டிருக்கிறது. அழியாதவொரு வஸ்து இருக்கிறது என்ற வேத வாக்கியம் இருக்கிறது. இதைக் கேட்பதன் மூலமாக பிரம்மன் இருக்கிறது என்ற சாமான்ய ஞானம் வந்துவிட்டது. ‘ப்ரஹ்மனேஹ ஆப்னோதி பரம்”, ‘ஸத்யம், அனந்தம், நித்யம் பிரம்மன்”, ‘பிரம்மன் நிரதிசயமானது ( எல்லையற்றது )” என்று படிக்கும் போது பொதுவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இது கர்மகாண்டத்திலே விசாரிக்கப்படாததால் இப்போது விசாரம் செய்யப்படுகிறது.

 

பதில்2     இந்த பிரம்ம விஷயத்தில் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதனாலே இது சாமான்யமாக அறியப்படுகிறது, விசேஷமாக அறியப்படவில்லை என்று தெரிகிறது. சார்வாக்கர்கள் தேகம்தான் ஆத்மா என்கின்றார்கள். கர்மகாண்டம் யாகத்தின் மூலமாக சொர்க்கத்தை அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது ஸ்தூல உடல் ஆத்மாவல்ல சூட்சும உடல்தான் ஆத்மா என்று நம்புகிறார்கள். ஷணிகவாதிகள் க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி தோன்றி; மறைந்து கொண்டிருப்பதால் இதுதான் ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரே ஆத்மாதான் இறந்து பிறக்கிறது. சூன்யவாதிகள் சூன்யம்தான் பிரம்மம் என்ற கொள்கையுடையவர்கள். இந்த சூன்யத்தை பார்ப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற வாதத்தினால் இந்தக் கொள்கை நீக்கப்படுகிறது. நியாய மதக்காரர்கள் ஆத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சாங்கிய மதக்காரர்கள் ஆத்மா போக்தாவாக மட்டும் இருக்கிறது என்கிறார்கள். யோக மதக்காரர்கள் ஈஸ்வரனே ஆத்மா என்கின்றார்கள். அத்வைதிகள் இந்த ஆத்மாதான் நிர்குண பிரம்மம் என்ற கொள்மையுடையவர்கள்.

பிரம்மத்தை விசேஷமாக புரிந்து கொள்ளாதவரை இந்த குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும். பிரம்மமே ஆத்மாவாக இருப்பதனால் நாம் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவை அடைந்திட வேண்டும். சாமான்ய ஞானம் இருந்தால்தான் விசேஷஞானத்தை அடைந்திட முடியும். எனவே இந்த விபரீதஞானத்தை நீக்கி விசேஷ ஞானத்தை அடைந்திட வேண்டும். அஹம் என்ற விஷயத்தில் சாமான்யமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விசேஷஞானம் அடைவதற்கு விசாரம் தேவைப்படுகிறது.
இத்துடன் முதல் சூத்திரம் முடிவடைந்தது.—

2வது சூத்திரம் – 2வது அதிகரணம் – ஜன்மாத்3யதி4கரணம்

जन्माद्यस्य यतः ||2 ||
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.

பொருள்:

யத:                     – எதனிடமிருந்து யாரிடமிருந்து
அஸ்ய              – இதனுடைய;  இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3      – பிறப்பு முதலியன
இந்த மூன்று சொற்களுடன் மேலும் மூன்று சொற்களை சேர்த்தால்தான் சரியான அர்த்தம் கிடைக்கும். அவைகள்,
ப4வதி                 – உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத்                   – அது
ப்3ரஹ்    – பிரம்மம்

பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
விசாரம்
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அடைய முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யபப்டுகின்றது.

ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.

ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:

 1. விஷயம் – பிரம்ம லட்சணமாகும்.
 2. சந்தேகம் – பிரம்மத்திற்கு லட்சணம் இருக்கிறதா, இல்லையா
 3. பூர்வ பக்ஷம் – பிரம்மன் நிர்குண,  நிர்விசேஷமாக இருப்பதால் அதற்கு லட்சணம் சொல்ல முடியாது என்று பூர்வ பக்ஷி கூறுவதால் இதை விசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
 4. சித்தாந்தம் – ஏற்றி வைக்கப்பட்ட சில குணங்களின் மூலமாக பிரம்மத்திற்கு லட்சணம் கொடுக்க முடியும்.
 5. சங்கதி – சென்ற சூத்திரத்திற்கும் இந்த சூத்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்க வேண்டும். இதற்கு ஆட்சேப சங்கதியாகும். முதல் சூத்திரத்தில் பிரம்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதற்கான லட்சணத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தம்.

சாஸ்தர உபதேசமானது மூன்று படிகளாக இருக்கிறது. அவைகள்,

 1. உத்தேசம் – நாம் எதைப்பற்றி விளக்கப்போகின்றோமோ அதை சுருக்கமாக முதலில் சொல்லிவிட வேண்டும்.
 2. லட்சணம் – பிரம்மத்திற்கு லட்சணம் கொடுத்துவிட்டு அதை நிச்சயம் செய்ய வேண்டும். இதைத்தான் இரண்டாவது சூத்தரத்தில் செய்துள்ளார். மூன்றாவது சூத்திரத்தில் பிரம்மத்தை அறிய உதவும் பிரமாணத்தை கூறியுள்ளார். இதன் மூலம் பிரம்மன் என்ற ஒன்றிருக்கிறது என்று நிச்சயம் செய்துள்ளார்.
 3. பரீக்ஷா – விசாரங்கள் செய்திருக்க வேண்டும். நான்காவது சூத்திரத்திலிருந்து இறுதி சூத்திரம் வரை இதைத்தான் வியாச பகவான் செய்திருக்கிறார்.

 

ஏதாவது ஒன்றிற்கு லட்சணம் கொடுக்கவேண்டுமென்றால் எப்படிபட்ட லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்றும், எந்த வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இனி விளக்கப்படுகிறது.

 

 1. சஜாதீய விஜாதீய வியாவர்த்தக லட்சணம்:
  வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
  சஜாதீய – ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
  விஜாதீய – மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
  அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
 1. தூ4ஷண த்ரய ரஹித தர்மஹ

எந்த லட்சணமும் மூன்று குறைகளற்றதாக இருக்கவேண்டும்.

2.1.   அதிவியாப்தி – லட்சியத்திற்கப்பால் சென்று விடக்கூடாது. உதாரணமாக காளை மாட்டின் சரியான லட்சணம் கழுத்தில் தசை தொங்கிக்கொண்டிருக்கும் என்பதாகும். நான்கு கால்களையுடையது என்பது தவறான லட்சணம். ஏனென்றால் இது மற்ற விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

2.2.   அவியாப்தி – கொடுக்கின்ற லட்சணம் லட்சியத்தை குறைவாகத்தான் வியாபிக்கிறது. இந்தியாவிற்கு லட்சணம் கொடுக்கும் போது தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடு என்பது தவறானதாகும். இது இந்தியாவின் ஒரு பகுதியைத்தான் குறிக்கிறது.

2.3.   அஸம்பவஹ – தலைகீழாக லட்சணையை கொடுப்பது. காளை மாட்டைக் குறிக்க பால் கொடுக்கும் மாடு என்பது முற்றிலும் தவறானதாகும்.

எதனால் லட்சியமானது அடையப்படுகிறதோ அதுவே சரியான லட்சணமாகும். சரியான லட்சணம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள்,
1.    ஸ்வரூப லட்சணம்
2.    தடஸ்த லட்சணம்
ஆகியவைகளாகும்.
ஸ்வரூப லட்சணம்
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.

தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.

பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.

பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.

இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
ஜன்மாதி3 என்ற சொல்லின் விசாரம்
ஜன்மாதி3 – ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம – பிறப்பு, தோற்றம்
ஆதி3 – முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி அனாதியாக இருக்கும்போது முதல் ஸ்ருஷ்டியை பேசவே முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் ஜன்மாதி என்று சொல்லியிருக்கிறார். லயத்தையோ அல்லது இருத்தலையோ முதலில் சொல்லியிருக்கலாமே?

பதில்1  ஸ்ருதி வாக்கியத்தின் அடிப்படையில்தான் விசாரம் செய்யப்படுகிறது. ஸ்ருதியில் வாக்கியத்தில் ஜன்மம் முதலில் சொல்லியிருப்பதால் அதையே முதலில் விசாரம் செய்யப்படுகிறது.

பதில்2  நம் அனுபவத்தில் எந்தவொரு பொருளும் பிறப்பைத்தான் முதலில் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் இருத்தல், லயம் என்ற வரிசை கிரமமாக அதன் நிலைமாறுகிறது.

 

பூ.பக்ஷி யாஸ்கர் என்ற முனிவர் ஆறுவிதமான விகாரங்களைக் கூறியிருக்கிறார். அவைகள் 1. பிறத்தல், 2.இருத்தல், 3.வளர்ச்சி, 4.மாற்றம், 5.தேய்தல், 6.இறத்தல் ஆகியவைகளாகும். இவரும் பிறப்பைத்தான் முதலில் சொல்லியிருககிறார். எனவே ஆதி என்ற சொல்லுக்கு பொருளாக மற்ற ஐந்து விகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

பதில்1  யாஸ்கர் ஸ்தூல பூதத்தினுடைய விகாரங்களைத்தான் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே சூட்சும பூதங்களுக்கும் முன்னாடி உள்ள நிலையைத்தான் பேசுகிறோம். உதாரணமாக ஆகாசத்திற்கு இந்த விகாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.

பதில்2  ஸ்ருதி இந்த ஆறு விகாரங்களைப் பற்றி பேசவில்லை. பிறப்பு, ஸ்திதி, லயம் என்கின்ற மூன்றைப் பற்றித்தான் பேசியிருக்கிறது. ஆகவே ஜன்மாதி என்ற சொல்லுக்கு பிறப்பு, இருத்தல், ஒடுங்குதல் என்பதுதான் சரியான பொருளாகும்.

அஸ்ய” என்ற சொல்லின் விசாரம்
அஸ்ய – இதனுடைய; இந்த உலகத்தினுடைய
இந்த உலகத்தை பகவான் சங்கரர் நான்கு விதமாக வர்ணிக்கிறார். இந்த வர்ணனையே சில தத்துவங்களை உணர்த்துகின்றது. இந்த வர்ணனை ஜகத்திற்கு லட்சணமாகவும் இருக்கிறது.

 1. நாம-ரூபாப்4யாம் வ்யாக்ருதஸ்ய

வ்யாக்ருதஸ்ய – வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது

நாம ரூபாப்யாம் – நாம் ரூபங்களாக

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது

1.1.     இந்த உலகம் நாம-ரூபங்களை உடையதாக அறிவுள்ள ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

1.2.     இந்த உலகம் நாம-ரூபமாக இருப்பதனால் மித்யா ஸ்வரூபமாக இருக்கிறது.

 1. அனேக3 கர்த்ருபோ4க்த்ரு ஸம்யுக்தஸ்ய

இந்த உலகம் பலவிதமான கர்த்தாக்களும், போக்தாக்களும் கூடியுள்ளவர்களாக இருக்கிறது. ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஆரம்பித்து அனைத்து தேவதைகளும் இந்த உலகத்தை படைத்தவர்கள் அல்ல. அவர்களும் தோற்றுவிக்கப்பட்டவர்கள்தான் என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களும் கர்த்தாவாக, போக்தாவாக இருக்கிறார்கள்.

 1. ப்ரதிநியதி தேஸகால நிமித்த க்ரியாபல ஆஸ்ரஸ்ய

ஆஸ்ரஸ்ய – இப்படிபட்ட தன்மையுடையது

ப்ரதிநியதி  – விதிமுறை

தேசம், காலம், நிமித்தம், க்ரியா, பலன் என்கின்ற ஐந்தும் இந்த இடத்தில், இந்த காலத்தில் இதன் காரணமாக, இந்த செயலுக்கு இந்தப்பலன் என்ற நியதியுடன் கூடிய தன்மையுடையது இந்த உலகம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு நாம்தான் காரணம் என்பதாகும். மேலும் அவரவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கக்கூடிய ஸர்வக்ஞன் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸர்வக்ஞன் ஈஸ்வரனே ஆவார்.

 1. மனஸா அபி4 அசிந்த்ய ரசனா ரூபஸ்ய

மனதினாலும் கூட, கூர்மையான புத்தியாலும் கூட எட்டாதபடி இந்த உலகத்தின் அமைப்பு இருக்கிறது. யாராலும் புரிந்து கொள்ள முடியாததாக இந்த உலகம் இருக்கிறது. ஈஸ்வரன் அனைத்து சக்தியுடையவராக இருப்பதால் அல்ப சக்தியடைய ஜீவர்களை இந்த உலகத்தில் படைத்திருக்கிறார்.

இத்துடன் இரண்டாவது சூத்திரத்தின் இரண்டாவது சொல்லின் விசாரம் முடிவடைகிறது.

யத” என்ற சொல்லின் விசாரம்
யத:- யாரிடமிருந்து
இது காரணத்தை விளக்குகின்ற சொல்லாகும். அதாவது இந்த உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் பிரம்மன். பிரம்மனே உலகத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார். இங்கு உபாதான காரணம்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமாக இருப்பது உபாதான காரணம். களிமண் பானைக்கு உபாதான காரணம். ஸ்ருஷ்டிக்கு மட்டும் காரணமாக இருப்பது நிமித்த காரணம். குயவன் பானைக்கு நிமித்தக் காரணம். ஜன்மாதி என்ற சொல் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறார் என்பது உணர்த்துகிறது.

ஜன்மாதி என்ற சொல் பிரம்ம லட்சணையைத்தான் குறிக்கிறது. பிரம்மன் காரணம் என்றால் ஜகத் காரியாமாகும். காரியத்திற்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவைகள்,
1.    காரணம் சத்யம், காரியம் மித்யா
2.    காரணம் சேதனம், காரியம் ஜடம்
3.    காரணம் வரையறுக்கப்படாதது, காரியம் வரையறுக்கப்பட்டது.
ஆகியவைகளாகும். இந்த மூன்று லட்சணங்களும் ஜகத்திற்கு பொருந்தி வருகின்றது.
கேள்வி மாயையினுடைய மாற்றமே சூட்சம பிரபஞ்சம். பிறகு ஸ்தூல பிரபஞ்சமாக மாறுகிறது. மாயை உபாதான காரணமா அல்லது பிரம்மன் உபாதான காரணமா? மாயையின் மூன்று குணங்களும் உலகத்தில் இருப்பதால் மாயைதான் உபாதான காரணமாக கூறமுடியும். ஏன் பிரம்மனை உபாதானமாக கூறப்படுகிறது?

பதில்   உபநிஷத் பிரம்மத்தை உபாதான காரணமாக சொல்லியிருப்பதால், வியாச பகவான் இங்கே பிரம்மத்தை உபாதானமாக கூறியிருக்கிறார். மாயை பரிணாமி உபாதானம், பிரம்மன் விவர்த்த உபாதானமாகும். மாற்றத்தை அடைந்து உபாதானமாக மாறுவது பரிணாமி உபாதானமாகும். ஸ்வரூப தியாகமில்லாமல் உபாதானமாக இருப்பது விவர்த்த உபாதானமாகும்.

மேற்சொன்ன கருத்துக்களினால் நாம் தெரிந்து கொள்வது பிரம்மத்தைத்தான் வியாச பகவான் உபாதான காரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். சாஸ்திரத்தின் மூலம் அடைகின்ற அறிவு சாஸ்திரம், யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது.
—இத்துடன் 2வது சூத்திரம் முடிவடைந்தது.—

3வது சூத்திரம் – 3வது அதிகரணம்

शास्त्रयोनित्वात्  || 3 ||
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
6வது அதிகரணம் – ப்3ரஹ்மன: ஸர்வக்3ஞத்வ
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர – வேதம்
யோனி – காரணம்

பொருள்:
வேதத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன். பிரம்மத்தினிடமிருந்து வேதம் தோன்றியது. எனவே இவர் அனைத்தையும் அறிபவர் என்று அறிய முடிந்தது. யார் எதை படைத்துள்ளாரோ அவருக்கு அதைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பார். பானையை உருவாக்கிய குயவனுக்கு அதைப்பற்றிய அறிவை உடையவராக இருப்பார். அதேபோல எல்லாவற்றையும் படைத்தவர் எல்லாவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பூ.பக்ஷி ஈஸ்வரன் எல்லாம் அறிந்தவர் அல்ல. எல்லாவற்றையும் படைத்தவர் அல்ல. வேதம் என்பது அனாதி. இது அனாதியாக இருப்பதாலே, ஈஸ்வரன் வேதத்தை உருவாக்கியவர் அல்ல. அதனால் அவர் எல்லாவற்றை’யும் அறிந்தவர் என்ற சொல்லமுடியாது.

பதில்   ஜகத்தும் அனாதிதான் என்ற சொல்கிறோம். ஸ்ருஷ்டியும் அனாதிதான். ஜகத்தையும், வேதத்தையும் பிரிக்க முடியாது. ஸ்ருஷ்டி என்பது வெளிப்படுத்துவது என்று பொருட் கொள்ள வேண்டும். அதேபோல அனாதியான வேதத்தை வெளிப்படுத்துவது ஸ்ருஷ்டி.

பிருஹதாரண்ய உபநிஷத் 2.4.10 – “அஸ்ய மஹதோ பூ4த3ஸ்ய…” என்ற வாக்கியத்தின் அடிப்படையில் இந்த சூத்திரத்தை எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தின் பொருள் பிரம்மத்தினுடைய மூச்சுக்காற்றிலிருந்து வெளிவந்ததுதான் வேதம் என்பதாகும். புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த புத்தகம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகம் அறிவை உடையவராக இருப்பார் என்பது நியதி. உதாரணமாக சமஸ்கிருத இலக்கணத்தை எழுதிய பாணினிக்கு அதைத்தவிர மேலும் அதிகமான அறிவை உடையவராக இருப்பார். அதேபோல வேதத்தை வழங்கிய ஈஸ்வரனுக்கு வேதம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகமான அறிவை உடையவராக இருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

 1. நன்மையை உபதேசிப்பதனால் அதை சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்பது வெளிச்சத்தைப் போன்றது. இது நம் வாழ்க்கையை சாpயான முறையில் நடத்தி செல்ல உதவியாக இருக்கிறது.
 2. வேதம் எல்லாவிதமான அறிவையும் கொடுக்கக்கூடிய சாஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. பத்துவிதமான சாஸ்திர