நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
பதவுரை
முனியே |
– |
படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே! |
நான்முகனே |
– |
நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே! |
முக்கண் அப்பா |
– |
ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே! |
கனிவாய் தாமரை கண் |
– |
கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய |
என் பொல்லா கருமாணிக்கமே |
– |
துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே! |
என் கள்வா |
– |
என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே! |
தனியேன் ஆர் உயிரே |
– |
என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே |
என் தலை மிசை ஆய் வந்திட்டு |
– |
என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு |
இனி நான் போகல் ஒட்டேன் |
– |
இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்: |
என்னை |
– |
ஆர்த்தி மிகுந்த என்னை |
ஒன்றும் மாயம் செய்யேல் |
– |
ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது. |
(முனியே நான்முகனே முக்கண்ணப்பர்.) ஆழ்வார் திரிமூர்த்திகளிலே ஸாம்ய ப்ரமமோ ஜக்கிய ப்ரமமோ உடையவரல்லர்.
திண்ணன் வீடு ஒன்றுந்தேவுமுலகும் முதலான திருவாய்மொழிகளிலே நன்கு பரத்வஸ்தாபனம் பண்ணியருளினவருடைய திருவாக்கானவிதி;ல் வேறுவகையான பொருள் காணப்ரஸக்தியில்லை.
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனானாய் என்பது முதலான விடங்களிற்போல சாரிராத்மபாவநிபந்தனமான ஜக்யவ்யபதேசமென்று உணர்க.
நான்முகனையும் முக்கண்ணப்பனையும் அநுப்ரவேசித்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நடத்திப் போரும் முனியே என்றபடி.
எந்தக்காரியத்திற்கும் மாநஸமான ஸங்கல்பத்தைப்; பண்ணுமவன் என்ற பொருளில் முனி யெனப்பட்டது.
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே!-கீழ் முதலடியில் ஸர்வஸா காரணமான ஸ்வரூபத்தை யநுஸந்தித்து இப்போது அஸாதாரண திவ்ய மங்கள விக்ரஹவைலகூஷண்யத்தை யநுபவித்துப் பேசுகிறார்.
இப்படிப்பட்ட வடிவழகைக் காட்டித் தம்மைக் கொள்ளை கொண்டபடியைக் கூறுகிறார் என் கள்வா! என்று. என் இசைவின்றிக்கே என்னை யபஹாரித்தவனே! என்றபடி
தனியேனாருயிரே!-வேறொன்றால் தாரிக்க வொண்ணாதபடி என்னைப் பண்ணினவனே! என்கை.
ஸம்ஸாரிகளோடு பொருந்தாமையை யிட்டுத் தன்யேன் என்கிறார்
என் தலைமீசையாய் வந்திட்டு இனி நான் போக லொட்டேன் – நித்யஸம்ஸாரியாயிருந்த வென்னை விஷயீகாரித்த வளவேயன்றிக்கே நான் பாரிபூர்ணாநுபவம் பண்ணும்படியாகவும் வந்திட்டு இன்னமும் உபேகூஷிக்கப் பார்த்தாயாகில் ஒட்டுவேனோ?
சேஷ்யே புரஸ்தாத் சாலாயாம் யாவந்மே ந ப்ரஸீததி என்ற பரதாழ்வான் வார்த்தை போலே யிருக்கிறதாயிற்று இது.
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அநாதிகாலம் அகற்றி வைத்தாப் போலே இன்னமும் அகற்றப் பார்க்க வேண்டா வென்றபடி.
————-
தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாரியஞ் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில்
சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்
அதிகப்படியாக ஆணையுமிடுகிறார். உன்மேலாணை! உன்பெண்பெண்டாட்டிமேலாணை! என்கிறார்.
உனது திருமார்வுக்கு அலங்காரமாயிருப்பவளும் ஸர்வகந்த: என்கிற வுனக்கும் பரிமளங்கொடுக்குங் கூந்தலை புடையவஉமான பிராட்டியின் மேலாணை. அவளுக்கு வல்லபனான உன்மேலுமாணை.
பெரியாழ்வார் வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் உன்றனிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின்திரு வாணை கண்டாய் என்று பிராட்டியாணை மட்டு மிட்டார்
இவர் இருவர் மேலுமிடுகிறார். என் காரியம் செய்து தலைக்கட்டி யல்லது நீங்கள் இட்டவடி பெயரவொண்ணா தென்றபடி.
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-
பதவுரை
என்னை மாயம் செய்யேல் |
– |
என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்; |
உன் திருமார் வத்து மாலை |
– |
உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய் |
நங்கை |
– |
ஸகல குணபாரிபூர்ணையாய் |
வாசம் செய்; பூ குழலாள் |
– |
பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான |
திரு ஆணை |
– |
பெரியபிராட்டியாணை: |
நின் ஆணை |
– |
உன் ஆணை |
நேசம் செய்து |
– |
தானாகவே ஸ்நேஹித்து |
உன்னோடு |
– |
உன்னோடே |
என்னை |
– |
நீசனான என்னை |
உயிர் வேறு அன்றி |
– |
ஆத்மபேத மில்லாமல் |
ஒன்று ஆகவே |
– |
ஏக வஸ்துவாகவே |
கூசம் செய்யாது |
– |
எனது தண்மையைப் பார்த்துக் கூசாமல் |
கொண்டாய் |
– |
அடியேபிடித்து அங்கீகாரித்தருளினாய்; |
(ஆனபின்பு) |
||
என்னை வந்து கூவி கொள்ளாய் |
– |
இனி உபேகூஷியாதே என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளவேணும். |
இப்படி ஆணையிட்ட ஆழ்வாரை நோக்கி ‘சேஷயான நாம் செய்தபடி கண்டிருக்கையே சேஷதபூதரான வுமக்கு ஸ்வரூபமாயிருக்க, இங்ஙனே நீர் ஆணையிடுவது ஸ்வருபவித்தங்காணும், என்று எம்பெருமானருளிச் செய்ய
தாம் ஆணையிடத் தகுமென்பதை மேல் முழுதுங்கொண்டு உபபாதிக்கிறார். ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி அதனால் ஆணையிடத்தகுமென்று காட்டுகிறபடி.
(நேசஞ்செய்து உன்னோடென்னை இத்யாதி) பெரியபிராட்டியர் பக்கலிலும் பண்ணாத ஸ்நேஹத்தை என்பக்கலிலே பண்ணி, ஆத்மபேதமில்லாதபடியன்;றோ என்னைக் கொண்டது.
இரண்டு தத்வமென்று பிரித்துக் காண வொண்ணாதபடி யன்றோ கலந்து பாரிமாறிற்று.
கூசஞ் செய்யாது கொண்டாய் என்பக்கலிலுள்ள அயோக்யதைகளைக் கண்டால் கூசிக் காதவழிக்கப்பால் செல்ல வேணுமே.
சிறிதும் கூசாமலன்றோ பாரிக்ரஹித்தாய். ஆனபின்பு என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ-உன்னைக் கிட்டியநுபவிக்கும்படி பண்ண வேணும்.
————-
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
பதவுரை
என் பொல்லாக் கருமாணிக்கமே!; |
||
மேவி தொழும் |
– |
விரும்பித் தொழுகின்ற |
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் |
– |
பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும் |
முதல் |
– |
மூலநாரணமான |
நாவி கமலம் |
– |
திருநாபிக்கமலத்திற்கு |
கிழங்கே |
– |
இருப்பிடமானவனே! |
ளும்பர்அந்ததுவே |
– |
அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே! |
ஆவிக்கு |
– |
ஆத்மாவுக்கு |
ஒர் பற்று கொம்பு |
– |
ஓர் கொள்கொம்பு |
நின் அலால் |
– |
உன்னைத் தவிர |
யான் அற்கின்றிலேன் |
– |
நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) |
அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய். – |
————-
ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
பதவுரை
உம்பர்அம் தண் பாழேயோ |
– |
மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே! |
அதனுள் மிசை நீயேயோ |
– |
அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே! |
அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ |
– |
ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ; |
உம்பரும் |
– |
மேலான தேவர்களையும் |
யாதவரும் |
– |
மநுஷ்யாதி ஸகலசேதநரையும் |
படைத்த முனிவன் அவன் நீ |
– |
அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ; |
(இப்படியாயிருக்க) |
||
எம் பரம் சாதிக்கல் உற்று |
– |
என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு |
(இவ்வளவும் வர நிறுத்தி) |
||
என்னை போர விட்டிட்டாயே |
– |
என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே. |
ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.
உம்பரந்தண் பாழேயோ என்பதனால் மூலப்ரக்ருதிநிர்வாஹத்வம் சொல்லுகிறது.
பாழ்நிலமாயிருக்குமதிலே எதையும் பயிர் செங்துகொள்ளலாமாப் போலே சேதநா;க்கு போகமோகூஷங்களை விளைவித்துக் கொள்ளலாம் நிலமாயிரா நின்ற மூலப்ரக்ருதியைப் பாழ் என்ற சொல்லாற் சொல்லுகிறது.
உம்பர்என்றும் அம்தண் என்றும் அதனுடைய மேன்மை சொல்லும் விசேஷணங்கள்.
அதனுள் மிசைநீயே-உம்பரந் தண் பாழ் என்று கீழே சொல்லப்பட்ட ப்ரக்ருதியிலே கட்டுப்பட்டு நிற்கிற ஆத்மவர்க்கங்களுக்கும் நிவாஹகனானவனே! என்றபடி.
ஆக முதலடியால் சேதநாசேதநங்களை சாரிரமாகக் கொண்டவனே! என்றதாயி;ற்று.
————-
ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார்.
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
பதவுரை
இரும்பு |
– |
காய்ச்சின இரும்பானது |
தீர உண்ட |
– |
தன் காய்ச்சல் தீரும்படி உண்ட |
நீர் அது போல |
– |
நீர் போல |
என் ஆர் உயிரை ஆர பருக |
– |
என் ஆத்மாவின் விடாயெல்லாம் தீரப் பருகுகைக்கு |
எனக்கு ஆரா அமுது ஆனாயே |
– |
எனக்கு ஆராவமூதமா யிருக்கின்றாயே; |
(இப்படியிருக்க) |
||
நீ என்னை போர விட்டிட்டு |
– |
நீ என்னை அநாதாரித்து |
புறம் போக்கல் உற்றால் |
– |
உபேகூஷித்துப் பொருட்டால் |
பின்னை |
– |
ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு |
யான் |
– |
அசக்தனான நான் |
ஆரை கொண்டு |
– |
எந்த உபாயத்தைக் கொண்டு |
எத்தை |
– |
எந்த புருஷார்த்தத்தை (ஸாதிப்பேன்!) |
அந்தோ |
– |
ஜயோ! |
எனது என்பது என் |
– |
என்னுடையதென்கைக்கு என்ன இருக்கிறது. |
யான் என்பது னுள் |
– |
நான் என்கைக்கு ஒரு ஸ்வதந்த்ர கர்த்தாவுண்டோ? |
என்னைப் போரவிட்டிட்டு நீ புறம் போக்கலுற்றால்-வேறு புகலற்ற வென்னை உன் பக்கலிலே நின்றும் பிரித்து உபேகூஷித்து உனக்குப் புறம்பான விஷயாந்தரத்தில் போக்க நினைத்தாலென்றபடி. என் காரியம் நானே செய்துகொள்வேனாகப் பார்த்துக் கைவிட்டாலென்பது பரமதாற்பாரியம்.
பின்னை யான் ஆசைக்கொண்டு எத்தை யந்தோ-ஸர்வசக்தியான நீ அநாதாரித்த பின்பு அசக்தனான நான் எந்த வுபாயத்தைக்கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? ‘ஆரைக் கொண்டு எத்தை” என்றவிடத்து வினைமுற்று ஒன்றுமில்லாமை அவாய்நிலை.
எனதென்பதென்? யானென்பதென்?-‘முடிந்தேனத்தனைக் என்பது இதன் கருத்து.
தீரவிரும்புண்ட நீரது போல என்னாருயிரை ஆரப்பருக எனக்கு ஆராவமுதானாயே-பழுக்கக் காய்ச்சின இரும்பானது காய்ச்சல் தீர நீரை நிச்சேஷமாகப் பருகுமா போலே என் ஆத்ம வஸதுவைப் பாரிபூர்த்தியாக புஜிக்கைக்காகவன்றே எனக்கு உன்னுடைய போக்யதையைக் காட்டி என்னை யகப்படுத்தினாய் என்றபடி.
அன்றியே, என்னாருயிரை என்றவிடத்து ஜகாரத்தைத் தள்ளி (என்னாருயிர் என்றதாகக் கொண்டு) என்னாருயிரானது உன்னை ஆரப்பருகும்படியாக எனக்கு நீ பரம போக்யனானவ னல்லையொ வென்று முரைப்பர்.
———-
பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்.
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-
பதவுரை
புணம் க்ற்யா நிறத்த |
– |
தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய் |
புண்டாரிகம் கண் செம் கனி வாய் |
– |
தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான |
உனக்கு |
– |
உனக்கு |
ஏற்கும் |
– |
ஏற்றிருக்கின்ற |
கோலம் |
– |
வடிவு படைத்தவளான |
மலர்பாவைக்கு |
– |
பெரிய பிராட்டிக்கு |
அன்பா |
– |
அன்பனே! |
என் அன்பே |
– |
என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே! |
எனக்கு ஆரா அமுது ஆய் |
– |
எனக்குப் பரம போக்யனாய் |
எனது ஆவியை இன் உயிரை |
– |
என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும் |
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் |
– |
இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்: |
இனி உண்டொழியாய் |
– |
குறையும் புஜித்தேயாக வேணும். |
இப்பாட்டுக்கு “கோமலரிப்பாவைக் கன்பா! என்னன்பேயோ” என்ற ஈற்றடி உயிராயிருக்கும். ‘அன்பன்’ என்ற சொல்லின் மேல் விளியுருபு ஏற்று அன்பா! என்று கிடக்கிறது; அன்பு என்ற சொல்லின் மேல் விளியுருபு ஏற்று அன்பே! என்று கிடக்கிறது;
இதனால், எம்பெருமான் பிராட்டி பக்கலிலே அன்பையுடையவன், ஆழ்வார் பக்கலிலே அன்பே வடிவெடுத்தவனாயிருப்பவன் என்பது தெரிவிக்கப்படும். பிராட்டியிற் காட்டிலும் அதிகமாக என் பக்கலிலே ஸ்நேஹித்தவனா யிருந்துவைத்து இப்போது உபேகூஷிப்பது தகுதியோ? என்றவாறு.
எனக்கு ஆரரவமுதாய்-தேவர்களுண்ணும் அமிருதம் போலன்று ஆழ்வாருடைய ஆராவமுது எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழி தொறும் அப்பொழுதுதைக் கப்பொழுது என்னாராவமுதமே என்னும்படியான அமுதமன்றோ.
எனதாவியை இன்எயிரை மனக்கு ஆராமை மன்னி யுண்டிட்டாய்-இங்கு ஆவியென்று உடலைச் சொல்லுகிறது. என்னுடம்பையும் என்னுயிரையும் எவ்வளவதுநுபவித்தாலும் த்ருப்தி பிறவாமே உண்டிட்டாய்.
இனி யுண்டொழியாய்-நீயே முடிப்பதன்றோ அழகு, நடுவே குறை கிடக்க விடுவதுண்டோ? புக்த சேஷத்தைப் பிறர் புஜிப்பாருண்டா? நீயே புஜித்துப் பூர்த்திசெய்யுமத்தனை யென்கிறார்.
மூன்றாமடியினால் திவ்விய மங்கள விக்ரஹ ஸௌந்தாரியத்தைப் பேசுகிறார்; உன் வடிவழகும் கண்ணழகும் வாயழகும் பிராட்டி யோட்டைச் சேர்த்தியழகு மன்றோ என்னை விஷயீகரித்தன.
உனக்கேற்குங் சோல மலரிப் பாவை துல்ய சீலவயோவ்ருத்தாம் துல்யாபிஜந லகூஷணாம், ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸிதேகூஷணா என்று திருவடி சொன்னது காண்க.
‘உனக்கேற்கும்’ என்கிற இந்தச் சந்தையை யடியொற்றியே எம்பெருமானார் கத்யத்தில் பகவந் நாராயணாபி மதாநுரூப என்றருளிச் செய்தது.
————–
பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்.
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-
பதவுரை
கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ |
– |
பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே! |
நீலம் வரை |
– |
நீலமணி மலை யொன்று |
இரண்டு பிறை கவ்வி |
– |
இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு |
நிமிர்ந்தது ஒப்ப |
– |
எழுந்திருந்தாற் போலே |
கோலம் வராகம் ஒன்று ஆய் |
– |
எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய் |
நிலம் |
– |
பூமியை |
கோடு இடை கொண்ட |
– |
எயிற்றிலே கொண்டெடுத்த |
எந்தாய் |
– |
எம்பெருமானே!ஸ |
நீலம் கடல் உடைந்தாய் |
– |
உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே! |
உன்னை பெற்று |
– |
உன்னைப் புகலாகப் பெற்று வைத்து |
இனி போக்குவனோ |
– |
கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ! |
(கோலமலரிப் பாவைக் கன்பாக்ய என்னன்பேயோ) கீழ்ப்பாட்டின் ஈற்றடியும் இப்பாட்டின் இந்த முதலடியும் ஒன்று போலே மயங்கக்கூடியதாயிருந்தாலும் ஒன்றன்று, சிறிது வாசியுண்டு; “கோல மலரிப்பாவைக்கு அன்பா! என்னன்பேயோ” என்றுள்ளது கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்; ‘கோல அன்பாகிய என்னன்பேயோ” என்றுள்ளது. பெரிய பிராட்டியார்டத்தி;ல் அன்பின் மிகுதியாலே அவ்வன்பே அடியாக அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்பு கொண்டிருப்பவனே! என்றபடி.
கீழ்ப்பாட்டில் இரண்டு விளிகள்; இப்பாட்டில் ஒரே விளி என்பது முணரத்தக்கது.
(நீலவரை பிரண்டு இத்யாதி.) ஆழ்வார் முதற்பிரபந்தமான திருவிருத்தத்தில் பெருங்கேழலார் தம்பெருங்கண்மலரிப்புண்டாரிகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார் என்று ஸ்ரீ வராஹப்பெருமாஉடைய கடாகூஷ விசேஷமே தமக்கு நிதியானதென்று அருளிச்செய்து,
அப்பிரபந்தத்தின் முடிவிலும் ஏனத்துருவாயிடந்த ஞானப்பிரானையல்லாலில்லை நான் கண்டநல்லதுவே என்றருளிச்செய்திருக்கையாலே
அவற்றுக்குச்சேர, திருவாய்மொழி தலைக்கட்டுமிப்போதும் வராஹாவதாரப்ரசம்ஸையேயாகிறது.
மாறன் பணித்த தமிழ்மறைக்கு ஆறங்கங்கூற அவதாரித்த மங்கையர்கோஎம் ஸ்வப்ரபந்தத் தொடக்கத்தில் பன்றியாயன்று பாரகங்கீண்ட பாழியானாழியானருளே நன்று என்று இவற்றைப் பின்பற்றியே அருளிச்செய்தாரென்பர் ஸம்பிரதாயம் வல்ல பெரியார்.
இரண்டு பிறையைக் கவ்விக்கொண்டு அஞ்சனமலை நிமிர்ந்தாற்போலே கோலவராகமாகி நிலத்தை எயிற்றிடையிலே கொண்ட பெருமானே! என்கிறார்.
நீலமணிபர்வதத்தின் ஸ்தானத்திலே கோலவராஹமும் இரண்டு பிறைகளின் ஸ்தானத்திலே இரு கோரப்பற்களும் கொள்க.
கோரப்பற்களிலே ஏந்திக்கொண்ட நிலத்திற்கு ஒருபமானம் சொல்லப்படாதது ஏனென்னில் பூமி தனிப்பட ஒரு வஸ்துவாகவே தெரியாமலிருந்தமைதான் இங்குத் தெரிவிக்கப்படுகிறது.
“பிறையில் மறுவோபாதியாய்த்து திருவெயிற்றில் கிடந்த பூமி” என்ற ஈட்டு ஸ்ரீஸீக்தியின் சுவையறிக.
பிரளயங்கொண்ட பூமியை அண்டபித்தியிலேபுக்கு எயிற்றிலே கொண்டெடுத்தாப்போலே ஸம்ஸாரப்ரளயங்கொண்ட என்னையெடுத்தவனே! என்பது இவ்விடத்து உள்உறை பொருள்.
நீலக்கடல் கடைந்தாய்-பிராட்டியைப் பெறுதற்காகக் கடைந்த கடல் பாற்டலாயிருக்க, நீலக்கடலென்றது-கடைகிற பெருமான் காளமேக நிறத்தனாகைனாலே அவனது திருமேனியின் நிழலிட்டாலே கடலும் கறுத்ததாகத் தோன்றிற்று என்று காட்டுதற்காக.
ஷீராம்போதேர் ஜடரமபிதேச தேஹபாஸாம் ப்ரரோஹை: காலோந் மீலத் குவலயதளாத்வைத மாபாதயந்தம் என்ற சம்பூராமாயணமும் காண்க.
ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் அபி பணிபதிபாவாத் இத்யாதியான ஸ்ரீ ரங்கவிமாந வர்ணன ச்லோகமும் இங்கே அநுஸந்திக்கத்தகும். உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ பூமிப்பிராட்டியைப் பெறுகைக்கும் பெரியபிராட்டியைப் பெறுகைக்கும் பாடு பட்டாப்போலே என்னைப் பெறுகைக்கும் பாடுபட்டவனாயிருந்துவைத்து இப்போது உபேகூஷீத்தால் விடுவேனோ வென்றபடி.
————
மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-
பதவுரை
உற்ற இரு வினை ஆய் |
– |
ஆத்மாவைப்பற்றின புண்ய பாப ரூப கருமங்களுக்கு நிர்வாஹகனாய் |
உயிர் ஆய் |
– |
கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் |
பயன் அவை ஆய் |
– |
கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு |
இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய் |
– |
இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய் |
தூற்றில் புக்கு |
– |
இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து |
முற்ற கரந்து ஒளித்தாய் |
– |
ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய் |
என் முதல் தனி வித்தே ஓ |
– |
எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே! |
என் தனிபேர் உயிரை உன்னை |
– |
எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை |
பெற்று இனி போக்குவனோ |
– |
பெற்று வைத்து இனி விடுவேனோ! |
இப்பாட்டில் ‘என் தனிப் பேருயிரை” என்பது உயிரானது. உற்ற இருவினையாய்-உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வதந்த்ரமாக நினைத்திருந்தே னாகிலன்றோ உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வாந்த்ரமாக நினைத்திருந்தே கிடக்கிற புண்யபாபங்களாகிற கருமங்கள் நீயிட்ட வழக்கன்றோவென்கை.
உயிராய்-கருமங்களை யஎஷ்டிப்பவர்களான சேதநா;களும் நீயிட்டவழக்கன்றோ. பயனாயவையாய்-கருமபலன் உன்னையொழிய ஸித்திக்குமென்றிருந்தேனோ வென்கை.
இப்போது இவை யெல்லாஞ் சொல்லுகிறது எதற்காக வென்னில்; தம்மிடத்தில் ஒன்றும் எதிரிபார்க்க நியாயமில்லை யென்கைக்காக.
முற்றவிம் மூவுலகும் பெருந்தூறாய்-மூவுலகங்களுமாகிற இந்த ஸம்ஸாரம் புதர் போன்றது, இதை யுண்டாக்கினவனும் நீயே.
தூற்றில் புக்கு முற்றக் கரந்தொளித்தாய்-இங்ஙனே புதராயிருக்கின்ற ஸம்ஸார நிலமெங்கும் வியாபித்து ஒருவருமறயாதபடி நின்றாய். என் முதல் தனிவித்தே!-எனக்கு ப்ரதமஸீக்ருத மானவனே! என்றபடி.
நானாக ஒரடிவந்திலேன்; முதலே பிடித்து க்ருஷிபண்ணினவன் நீயேயன்றோ வென்றபடி. ஆக இவ்வளவு ஹேதுக்களாலே உன்னை இனிப்போக்குவனோ வென்றாராயிற்று.
————
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-
பதவுரை
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம |
– |
மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும் |
முதல் தனி வித்தே ஓ |
– |
முவகைக் காரணமுமானவனே! |
அங்கும் இங்கும் முழு முற்று உறு |
– |
எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய் |
முதல் தனி |
– |
அத்விதீய காரணமாய் |
வாழ் |
– |
போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு |
பாழ் ஆய் |
– |
விளை நிலமான முல ப்ரக்ருதிக்கு நியாமகனாய் |
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து ஒயர்ந்த முடிவு இலீ ஓ |
– |
பு;ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு நியாமகமாய் ஒப்பற்றதாய் தர்ம பூதஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்ததாய் நித்யமான ஆத்மவர்க்கத்துக்கு நியாமகனானவனே! |
முதல் தனி உன்னை |
– |
முதல்வனாயும் அத்விதீயனாயுமிருக்கிற உன்னை |
உன்னை |
– |
அஸாதரணனானஷன வுன்ளை |
நான் என்னை நாள் வந்து கூடுவன் |
– |
நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்! |
எம்பெருமான் உலகங்களையெல்லாம் தனக்கு சாரிரமாகக் கொண்டு எங்கும் பரந்தவனாயிருப்பது ஸாதாரணாகாரு மெனப்படும்;
திருநாட்டிலே திவ்யமங்கள விக்ரஹத்தோடே எழுந்தருளியிருப்பது அஸாதரணாகார மெனப்படும்.
தீயெம்பெருமான் நீரெம்பெருமான் திசையு மிரு நிலனாமாய்எம்பெருமானாகிநின்றால் அடியோங் காணோமால் (பெரிய திருமொழி 4-9-5) என்று திருமங்கை யாழ்வாரருளிச் செய்தபடியே ஆழ்வார்கள் ஸர்வஸாதாரணாகாரங் கொண்டு த்ருப்தி யகைரிறவர்களெல்லர்.
ஏனென்னில்; ஜகதாகாரனாயிருக்கு மிருப்பு உகந்தார்கு;கும் உகவாதார்க்கும் பொதுவாயிருந்தது; அஸாதாரணாகாரம் அப்படிப்பட்ட தன்று. ஆகவே அதனைக் கண்டே திருப்திபெறவேண்டி யிருப்பர்கள். அப்படிப்பட்ட தன்று. ஆகவே அதனைக் கண்டே த்ருப்திபெறவேண்டி யிருப்பர்கள். அப்படிப்பட்ட த்ருப்தியைத் தந்தருள வேணுமென்கிறாரிப்பாட்டில்.
முழு மூவுலகாதிக்கெல்லாம் முதல் தனிவ்த்தேயோ-மூவுலகு தொடக்கமாக ஒன்றொழியாமல் எல்லா வற்றுக்கும் மூவகைக் காரணமுமானவனே! என்றபடி.
நீ ரகூஷக்க வென்று புக்கால் ரகூஷ்யவர்க்கம் ஸஹகாரிக்க வேண்டாதபடி அஸஹாயனாய் நின்று ரகூஷிக்க வென்று புக்கால் ரகூஷ்யவர்க்கம் ஸஹகாக்க வேண்டாதபடி அஸஹாயனாய் நின்று ரகூஷிப்பவன்ன்றோ என்பத பரமதாள்பாரியம்.
முதல் தனியுன்னை உன்னை -முதல்வானாய் ஒப்பில்லாதவனாயிருக்கிற வுன்னை. ‘உன்னை உன்னைக் என்று இரட்டித் திருப்பதன் கருதத்தை நம்பிள்ளை காட்டுகிறார்
‘நீயான வுன்னைக் என்று; நீயான வுன்னை யென்றால் ‘இது அந்வயிக்கவில்லையே’ யென்று தடுமாறுவர் சிலர், அஸாதாரணாகாரத்ததோடு கூடிய வுன்னை என்பத தாற்பாரியம். நான் எனைநாள் ந்து கூடுவன்-திருநாட்டில் சுவடறிந்தவனும் அஸாதாரண் விக்ரஹ ஸேவையை யாசைப்பட்டபவனுமான நான் என்று வந்து கூடுவன்?
மூன்றாமடியினால் அசேநதத்வத்திற்கு நிர்வாஹகனாயிருக்கிறபடியும். நான் காமடியினால் சேதநத்தவத்;திற்கு நிர்வாஹகனாயிருக்கிறபடியும் சொல்லப்பட்ன். பாழ் என்று ப்ரக்ருதிதத்வத்திற்குப் பெயர்;
இஷ்டமானபடி போகங்களையும் மோகூஷத்தையும விளைத்துக் கொள்ளலாம் நிலமாகையாலே. எம்பெருமாளையே நோக்கிப் பாழே’ என்கிறது நிர்வாஹ்ய நிர்வாஹகபாவஸமபந்த நிபந்தநமான அபேதோபசாரம். முடிவிலியென்று -பரக்ரதிபோலே நச்வாமன்றிககே நித்தியமான ஆத்மதத்வத்தைச் சொல்லுகிறது. இங்கும் சொல் ஆத்மதத்வத்தோடு நிற்காமல் அதற்கு நிர்வாஹகனான எம்பெருமானளவுஞ் செல்லுகிறது.
——————–
பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
பதவுரை
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த |
– |
பத்து திக்கிலும் வ்யாப்தமாய் |
முடிவு இல் |
– |
நித்யமாயிருக்கிற |
பெரு பாழே ஓ |
– |
ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே! |
சூழ்ந்து |
– |
(தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து |
அதனில் பெரிய |
– |
அதற்காட்டிலும் பெரியதாய் |
பரம் |
– |
மேற்பட்டதாய் |
நல்மலர்சோதீ ஒ |
– |
வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே! |
சூழ்ந்து |
– |
கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய் |
சுடர் ஞானம் இன்பமே ஓ |
– |
ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே! |
சூழ்ந்து |
– |
அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு |
அதனில் பெரிய |
– |
அதிலும் மிகப் பெரிதான |
என் அவா |
– |
என் அபிநிலேசமானது |
அற |
– |
தீரும்படியாக |
சூழ்ந்தாயே |
– |
வந்து ஸம்ச்லேஷித்தாயே! |
ஆழ்வார் தம்முடைய அபிநிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக மூன்றடிகளில் தத்த்ரயத்தினுடைய பெருமையை அருளிச்செய்கிறார்.
அசித்தத்வத்தினயை பெருமையைச் சொல்லுகிறது முதலடி;
சித் தத்வத்தினுடைய பெருமையைச் சொல்லுகிறது. இரண்டாமடி;
ஈச்வர ததத்தினுடைய பெருமையைச் சொல்லுகிறது மூன்றாமடி.
இப்படி தத்வத்ரயத்தை ஒன்றுக்கொன்று பெரிதாகச் சொல்லிக்கொண்டு போந்து இவற்றிற்காட்டிலும் பெரிது தம்முடைய அவர் என்று ஈற்றடியிலேயருளிச் செய்து, அது அறச் சூழ்ந்தாயேயென்று தலைக்கட்டுகிறார்.
என்னவாவற என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் திருவுள்ளம்பற்றுவர் ஆசிரியாரிகள்.
என்னுடைய அவர் தீரும்படியாகப் என்பது ஸாமாந்யமான பொருள்.
நையாயிகர்கள் “இச்சாயா விஷ்ய ஸிதத்யா ற்நச:’ எனபர்கள். ஒரு விஷயததிலுண்டான இச்சையானது அந்த விஷயம ஸித்தித்வாறே நசிக்குமென்பது இதன் பொருள்.
தீர்த்தம் பருகினவாறே பிபாஸை சமிக்கிறது; சோறுண்டாவாறே நசிக்கும்மென்பது இதன் பொருள். தீர்த்தம் பருகினவாறே பிபாஸை சமிக்கிறது; சோறுணடவாறே புபுiகூஷசமிக்கிறது. ஆகவே இச்சா விஷய ஸித்தியாலே இச்சைக்ஃக நாசமென்று தேறுகையாலே ஆழ்வார் தம்முடைய அவாவுக்கு விஷயமான பகவதநுபவம் இப்போது ஸித்தித்துவிடுகையாலே அவா அற்றதென்று கொள்வது.
இங்ஙனே கொள்ளும் பொருளிற்காட்டிலும் மிகச சீரிய பொருள் மற்றொன்று கேளீர். அற என்பது வடமொழியில் நஞ்ஞின ஸ்தானத்திலே வந்துள்ளது. அந்த நஞ்ஞக்கு ஆறு பொருள்கள் சாஸ்த்ரஜ்ஞா;களால் சொல்லப்பட்டுள்ளன; அவற்றுள் அல்பத்வம் என்பதும் பொருள் தோன்றும், ஆனால் அதுவன்று பொருள்;
(அல்போதரா கந்யா) மிகச்சிறிய வயிற்றையுடையவள் இப்பெண் என்பதே பொருள். அதுபோலவே இங்கு ‘என் அவா அற’ என்பதற்கு என்னுடைய அவா சிறிதென்னும்படி என்று பொருள்கொள்வது சிறக்கும்.
இதுவரையில் ஆழ்வார் தம்முடைய அவாவே பெரிதென்றிருந்தார்; இ;ப்போது தம்மையநுபவிக்கப் பதறிவந்த எம்பெருமானுடைய அமாவின் மிகுதியைப் பார்த்தவாறே அது கடலாயும். தம் அவா குளப்படியாயும் தோன்றிஇங்ஙனேயருளிச் செயகிறாரென்க.
இங்கே ஈடு காண்க;- “தத்வத்ரயத்தையும விளாக்குலைகொண்டு அவை குளப்படியாம்படி பெரிதான என்னுடைய அபிநி
—————
பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
பதவுரை
அவா அற |
– |
அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி |
சூழ் |
– |
ஸம்ச்லேஷிப்பவனாய் |
அர்யை |
– |
இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய் |
அயனை |
– |
பிரமனுக்கு அந்தரியாமியாய் |
அரணை |
– |
ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை |
அலற்றி |
– |
கூப்பிட்டு |
அவா அற்று வீடு பெற்ற |
– |
ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன |
குருகூர் சடகோ பன் |
– |
நம்மாழ்வார் |
சொன்ன |
– |
அருளிச் செய்ததாய் |
அவாவில் |
– |
பக்தியினா லுண்டானதான |
அந்தா திகளால் |
– |
அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த |
இவை ஆயிரமும் |
– |
இவ்வாயிரத்தினுள்ளே |
முடிந்த அவாவில் |
– |
பரம பக்தியாலே பிறந்ததான |
அந்தாதி |
– |
அந்தாதியான |
இப்பத்து |
– |
இப்பதிகத்தை |
அறிந்தார் |
– |
அறியக் கற்குமவர்கள் |
பிறந்தே உயர்ந்தார் |
– |
ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர் |
கீழ் முதற்பத்திலே அஞ்சிறையமட நாரையில் எம்பெருமாளுக்கு ‘அருளாத நீர் என்று திருநாமஞ் சாத்தின ஆழ்வார்தாமே இப்போது “அவாவறச் சூழாரி”
அலற்றி அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன – கூப்பிட்டு அவனைப் பெற்று ஸமஸ்தப்ரதிபந்தகங்களும் தொலைந்து அந்தமில்பேரின்ப மெய்தின ஆழ்வாரருளிச் செய்த.
(அவாவிலந்தாதி) இத்திவ்வியப் பிரபந்தத்திற்குத் திருவாய்மொழியென்று திருநாமம் ப்ரஸித்தமாயிருந்தாலும் ஆழ்வாருக்கு திருநாமம் அவாவிலந்தாதி யென்பதே. அவாவினால் அவதரித்த அந்தாதித் டிதாடையான திவ்யப்ரபந்தமென்றபடி.
தங்களுடைய கவித்வத்தைக் காட்டுதற்கென்று க்யாதிலாப பூஜா பேக்ஷையாலே பிரபந்தங்கள் இயற்றுவார் பலருண்டு. அப்படியல்லாமல் பக்தி பலாத்காரத்தாலே பிறந்ததாயிற்று இவ்வாயிரம்.
ஆசார்ய ஹ்ருதயத்தில் (188) “நீர்பால் நெய்யமுதாய் நிரம்பினவேரி நெளிக்குமாபோலே.. அவாவிலந்தாதியென்று பேர் பெற்றது“ என்ற சூர்ணையின் மணவாளமாமுனிகள் வியாக் நியானம் இங்கு ஸேவிக்கத்தக்கது. “அவர் உபாத்தியாராக நடத்த நடந்த ஆயிரம்“ என்றும், “ஆழ்வார்க்குப் பின்பு நூறாயிரங் கவிகள் போருமுண்டாயிற்று, அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற்று அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கடி இவருடைய பக்தியபிநிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகையிறே“ என்றுமுள்ள ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க.
முடிந்த அவாவிலந்தாதியிப்பது – இதற்குமேல் அவா இல்லையென்னும்படியானது பரமபக்தியாகையாலே அதனை முடிந்தவவா வென்னுஞ் சொல்லாலே அருளிச் செய்தபடி. பக்தியினுடைய சரமாவதியான பரமபக்தி யென்கை.
ஆக இப்படிப்பட்ட பரமபக்தியின் பரீவாஹரூபமாகத் தோன்றின இப்பதிகத்தை யறிந்தவர்கள், பிறந்தாருயர்ந்தே – பிறந்தே உயர்ந்தாரென்று விகுதி பித்துக் கூட்டிப் பொருள் கொள்ளவேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம். ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்யஸூரிகளோ டொப்பர் என்றபடி.
எம்பெருமான் இந்நிலத்தில் பிறந்திருக்கச்செய்தேயும் உயர்த்தியில் குறையற்றியிருப்பது போலவே திருவாய்மொழி வல்லார்களும் ப்ராக்ருதர்களின் கருத்தாலே ஸம்ஸாரிகளாய், தத்வஞானிகளின் திருவுள்ளத்தாலே நித்யமுக்தர்களாய் விளங்குவர்களென்றதாயிற்று.
———————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 16, 2022 at 7:24 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
November 18, 2022 at 10:22 am |
தேவரீர் கைங்கர்யம் இன்னும் சிறக்க நம்பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்