எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார்.
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
பதவுரை
திருமாலதிருஞ் சோலை மலை என்றேன் என்ன |
– |
திருமாலிருஞ் சோலையென்று சொன்னே னென்பதையே நிமித்தமாகக் கொண்டு |
திருமால்வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் |
– |
எம்பெருமான் வந்து என்னெஞ்சினுள்ளே நிறையப் புகுத்தான்; |
திருமால் சென்று சர்வு இடம் |
– |
இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்) |
குரு மாமணி உந்து புனல் |
– |
மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற |
பொன்னி |
– |
காவிர் யாற்றினுடைய |
தென்பால் |
– |
தென்பக்கத்திலுள்ளதான் |
தென் திருப்பர் |
– |
அழகிய திருப்பர் நகராம். |
தீருமாலிஞ் சோலைமலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறைப்புகந்தான் – என்னுற்ரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்று மடிமாங்காயிட்டு விஷயீகாரிக்குமவனான எம்பெருமாளுக்கு என் பக்கலிலே ஒரு பற்றாசு கிடைத்தது;
அது ஏனென்னில், என்வாயில் திருமாலிருஞ்சோலைமலை யென்று ஒரு சொல் யாத்ருச்சிகமாக வெளிவந்தது; மற்ற மலைகளிற் காட்டிலும் திருமாலிருஞ்சோலைமலைக்கு ஒரு வைலகூஷண்யமுண்டென்று கொண்டு புத்தி பூர்வகமாகச் சொன்னனல்லேன்;
பலமலைகளையும் சொல்லிப்போருகிற வாரிசையிலே திருமாலிருஞ்சோரைiலையென்று இதனையும் சொன்னேனத்தனை; இவ்வளவே கொண்டு அவன் பிராட்டியோடுங் கூடவந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தோனாயிற்ற.
விபீஷ்ணாழ்வான் பக்கலிலே மித்ரபாவமே அமையுமென்றவனன்றோ இப்பெருமான். அஹ்ருதயமாகச் சொன்னதையும் ஸஹ்ருதயமாக்கிக் கொடுக்க வல்லவளான பிராட்டி அருகே யிருக்கையாலே மலையைப்பற்றின என்வாக்கு அவருக்கு மலையாகவே ஆய்விட்டதென்கிறார்.
எம்பெருமாளுக்கு நீற்வண்ணனென்றொரு திருநாமமுண்டு; நீர்ன் தன்மைபோன்ற தன்மையையுடையவன் எம்பெருமான்; மிகச் சிறிய த்வாரமொன்று கிடைத்தாலும் நீர் உள்ளே புகுந்து நிறைந்து விடுமே; அப்படியே நீர்வண்ணான எம்பெருமானும் உள்ளே புகுவதற்கு ஸ்வல்பத்வாரம் பெற்றால் போதுமே; திருமாலிருஞ்சோலைமலை யென்ற ளுக்திமாத்ரமே ஸ்வல்பத்வாரமாயிற்றென்க.
இப்படி தம் நெஞ்சு நிறையப்புகுந்த பெருமான் எவ்விடத்திலுள்ளானென்ன அவ்விடம் சொல்லுகிறது பின்னடிகளால்.
குருமாமணியுந்து புனல் பொன்னித் தென்பால் தென் திருப்பேர் -சிறந்த ரத்னங்களைக்கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைத்தாகையாலே பொன்னி யென்றும் கநகநதி யென்றும் பேர்பெற்றிருந்திருக்கிற திருக்காவோரியின் தென்கரையிலள்ற்ன திருப்பேர் நகர்-அப்பக்குடத்தான் ஸன்னிதி
திருமால் சென்று சேர்விடம் -பரமரஸிகனானவன் தானும் பிராட்டியுமாய் விரும்பிச்சென்று சேரும் தேசம் அதுவாயிருக்கச் செய்தே கிடீர் என்னுடைய அஹ்ருதயமான ளுக்திமாத்ரத்தைக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்;
இதென்ன நிர்ஹதுகவிஷயீகாரம்! என்று உள்குழைத்து பேசுகிறபடி.
மூன்றாமடியி;ல் குரு என்றது வடசொல் விகாரம்; சிறந்த வென்றபடி. ஒளினிக்கு விலையுயர்ந்தமணிகளை யென்றவாறு.
———-
இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார்.
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-
பதவுரை
பேரே உறைகின்ற பிரான் |
– |
திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான் |
இன்று வந்து பேரேன் என்று |
– |
இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று |
என் நெஞ்சு நிறைய புகுந்தான் |
– |
என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்; |
(ஆகவே) |
||
ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும் |
– |
ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும் |
ஆரா வயிற்றானை |
– |
நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை |
அடங்க பிடித்தேன் |
– |
பரிபூர்ண விஷயீகாரம செய்தானாகப் பண்ணிக் கொண்டேன். |
காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டு மாராவயிற்றான் என்று பின்னடிகளிலுள்ளது இப்பாட்டுக்கு உயிரானது.
புஷ்கலாவர்த்தகம் முதலான மேகங்களேழையும் கடல்களேழையும் குலபர்வதங்களேயுமுடைத்தான லோகத்தையெல்லாம் ரகூஷித்துங்கூட என் செய்தோமென்று குறைபட்டிருந்தானும் ஆவ்வார் திருவுள்ளத்தல் வாஸம் கிடைக்கப் பெறாமையினாலே; அக்குறை தீர்ந்தாயிற்று
இப்போது இக்குறை தீருகைக்காகத் திருப்பேர் நகாரிலே வந்து ஸன்னதி பண்ணியிருந்து ஸ்வல்ப வியாரிஜமாத்திரமே கொண்டு ஆழ்வார் திருவுள்ளத்திலே புகுந்தான்.
தாமரைப்பூவைவிட்டுத் தன்னுடைய திருமார்பிலே வந்து சேர்ந்த பிராட்டி ‘அகலகில்லேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததுபோல, தானும் பேரேன், பேரேன்,
(அதாவது, ஆழ்வாருடைய இத்திருவுள்ளததை விட்டுப் பேர்ந்து செல்லமாட்டேன், அகன்று போகமாட்டேன்) என்று சொல்லிக்கொண்டே புகுந்தானாம்.
பிரானே! நீ இங்கேயிருக்கப் போகிறாய்? புறப்பட்டுப் போகிறாய? என்று கேட்பாரு மின்றிக்கே யிருக்கச்செய்தே தானே ஆணையிட்டுப் பேரேன் என்கிறானாயிற்று.
(என்னெஞ்சு நிறையப் புகுந்தான்) ‘நிறைய என்பது நெஞ்சிலே அந்வயிப்பதன்று; புகுந்தவனிடத்தே அந்வயிப்பது. என்னெஞ்சு நிறையும்படி புகுந்தானென்று பொருளன்று; என்னெஞ்சிலே புகுந்தான்; (எப்படி புகுந்தானென்னில்;) நிறைய -இதனால் தான் பூர்ணனாம்படி புகுந்தான என்கை.
————
எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார்.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-
பதவுரை
கொடி கோபுரம் மாடங்கள் சூழ் திரு பேரான் |
– |
கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேர் நகரை உறைவிடமாகவுடைய பெருமானுடைய |
அடி சேர்வது |
– |
திருவடிகளை சேருகையாயானது |
எனக்கு எளிது ஆயின ஆறு |
– |
எனக்கு எளிதான விதம் என்னே! |
பிடித்தேன் |
– |
அவன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்; |
பிறவி கெடுத்தேன் |
– |
(அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்; |
பிணி சாரேன் |
– |
பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்; |
மனை வாழ்க்கையுள் |
– |
ஸம்ஸாரத்தில் |
நிற்பது ஒர் மாயையை |
– |
நிற்கையாகிற அஜ்ஞானத்தை |
மடித்தேன் |
– |
நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன். |
பிடித்தேன்-எம்பெருமானை இனியொரு நாளும் பிரியாதபடி சிக்கெனப்பிடித்தேன்.
(பிறவி கெடுத்தேன்) திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோல இதுவரையில் எத்தனையோ யோன்கிளில் நுழைந்து புறப்பட்;ட யான “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே பதநம்” என்னும்படியான நிலைஇனி நேராதபடி செய்துகொண்டேன்.
(பிணிசாரேன்) பிறவியைக் கெடுத்த பின்பு, பிறவியைத் தொற்றிவரும் பிணிகளையும கெடுத்தேனானேன்.
(மனைவாழ்க்கையுள் நிற்பதோர்மாயையை மடித்தேன்) அநாதிகாலந் தொடங்கி இன்றருளவுஞ் செல்லுகிற இந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும் நிவர்த்திப்பித்தேன். ஸம்ஸாரத்தில் நிற்கைக்கடியான மூலப்ரக்ருதியை உருவழித்தேனென்கை.
இங்கே ஒரு ஐதிஹ்யமுள்ளது ஈட்டில்: “எம்பெருமானார் உலாவியருளுகிறவர் முடியப்பொகாதே நடுவே மீண்டருள, எம்பார் கதவையொரச்சாரி;த்து திருமாலிருஞ்சோலை யாகாதே திருவுள்ளத்திலோடுகிறது? என்ன; ஆம் அப்படியே யென்றரளிச்செய்தார் என்பதாக.
இதைச் சிறது விவரிப்போம்; புக்தவா சதபதம் கச்சேத் (போஜனம் செய்தவுடனே நுற்றடி நடந்து உலாவவேண்டும்) என்று சாஸ்த்ரமாகையாலே; இதையநுஸாரித்து எம்பெருமானார் பிiகூஷயானவுடனே மடத்திற்குள்ளே உலவாவாநின்று அப்போது திருமாலிருஞ்சோலை வாய்மொழியை அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கையாலே
இப்பாட்டில் மடித்தேன் என்ற விதற்குச்சேர, மேலே போகாமல் திரும்பியருளினார். இதைக் கதவின் புரையாலே எம்பார் கண்டு அஹே பாதம் அஹிரேவ ஜாநாதி என்கிற ர்தியில் தத்துவாமறிந்து, இப்போது இன்ன திருவாய்மொழி யஎஸந்தானமன்றோ திருவுள்ளத்திலோடுகிறது! என்றாராம். ஆம் என்று விடை யிறுத்தராம் எம்பெருமானார்.
கொடிக் கோபுர மாடங்கள் சூழ்திருப்பேரானடிச் சேர்வது எனக்கு எலிதாயினவாறே!-கொடிகளணிந்த கோபுரங்களையும் மாடங்களையு முடைத்தான திருப்பேர் நகாரிலே நித்ய வாஸ்செய்தருளு மெம்பெருமானுடைய அடி சேருயைற்கிற விது எனக்கு எளிதாயினவாறு என்னே!.
இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி -“அறுகம் புல்லையிட்டுக் கண்ணைப் புதைத்துக்கொள், சாணகச் சாற்றைக்குடி, தலையைக் கீழே நடு, காலை மேலேயெடு என்று அருந்தேவைகளை சாஸ்த்ரம் சொல்லாநிற்க, எனக்கு இங்ஙனே யிருப்பதொரு மூலையடிவழி உண்டாவதே.” என்று.
திருப்பேரான் என்ற விடத்து ஈட்டில் “திருப்பேரிலே நிற்கிறவன்” என்றருளிச் செய்திருப்பதைக் காண்பவர்கள் ‘திருப்பேரிலே சயனத்திருக்கேரலமன்றொ? நின்ற திருக்கோலமாக அருளிச்செய்தபடி யெங்ஙனே? என்று சங்கிப்பர்கள்.
நிற்கிறவன் என்றது ஸ்தாவர ப்ரதிஷ்டையாகக் கிடப்பவன் என்ற பொருளிலே பணித்ததாகை யாலே சங்கைக்கு இடமில்லை.
————–
தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-
பதவுரை
கிளி தாவிய |
– |
கிளிகள் தாவம்படி செறிந்த |
சோலைகள் சூழ் |
– |
சோலைகளாலே சூழப்பட்ட |
திரு பேரான் |
– |
திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான், |
தெளிது ஆகிய |
– |
தெளிந்த நிலமான |
சேண் விசும்பு |
– |
பரமாகாச மென்னும் திருநாட்டை |
தருவான் |
– |
தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி) |
என் கண்கள் |
– |
(விடாய்த்த) எனது கண்கள் |
எளிது அயின ஆறு என்று களிப்ப |
– |
இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக |
களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன் |
– |
பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன். |
“கிளி தாவிய சோலைகள் சூழ்திருப்பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவான்” என்ற பின்னடிகளை முன்னம் யோஜித்துக்கொள்வது.
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள் கிளியோடொக்கச் சொல்லப்படுவர்கள்;
அத்தகைய ஸத்புருஷா;கள் வாழுமிடமான திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இருள் தருமா ஞாலம்போலன்றியே எப்போதும் தெளிவையே பண்ணக்கடவதான திருநாட்டை எனக்குத் தருவதாகத் துணிந்திருந்தான்;
துர்வலபமான விஷயம் நமக்கு இங்ஙனே எளிதானபடி என்னே! என்று, முன்பு விடாய்த்திருந்த எனது கண்கள் களித்தன; சிந்தையுங் களித்தது என்றாராயிற்று.
————–
திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார்.
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-
பதவுரை
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரான் |
– |
வண்டுகள் செறிந்த சோலைகளையுடைய திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் |
எனக்கு வானே தருவான் |
– |
எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு |
என்னோடு ஒட்டி |
– |
என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி |
ஊன் ஏய் குரம்பை இதனாள் |
– |
மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே |
இன்று தானே புகுந்து |
– |
இன்று தானே வந்து புகுந்து |
தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான் |
– |
தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான். |
வானே தருவானெனக்காய் -எனக்கு வானே தருவானாய் என்று இயைத்துக்கொள்வது. என்னை இங்கே வைத்து, தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்குஞ் காரியம் தலைக்கட்டு கையாலே இங்குநின்றுங் கொண்டுபோய்த் திருநாட்டிலே வைப்பதாகக் கருதினான்.
அநாதிகாலமாக ஸம்ஸாரியாய்ப் போந்தவெனக்கு நிதய ஸூரிகளிருப்பைத் தருவானாக ஸங்கல்பித்ருளினான்.
என்னோடு ஒட்டி-என்னோடே சபதம்பண்ணி யென்றபடி. எவ்விதமான சபதமென்னில்; இன்று ஆழ்வார்க்குத் திருநாடு கொடுப்பதோ, அல்லது திருநாட்டுக்குத் தலைவனென்னும் பெயரை நானிழப்பதோ இரண்டத்தொன்று செய்யக்கடவேன் என்ற சபதமாகக் கொள்ளலாம்.
இவ்விடத்து இருப்பத்துநாலாயிரப்படியிலும் ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் அராவணமராமம் என்று என்னோடு ஸமயம்பண்ணி என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது.
இதனால் கீழே முதற்பத்தில் யானொட்டி யென்னுள என்கிற பாட்டில் அத்யமே மரணம் வாபி தரணம் ஸாதரஸ்ய வா என்கிற ஸ்ரீராமயண ச்லோவில்லை” என்று அருளிச்செய்திருந்த ஸ்ரீஸூக்திப ற்டஸ்கலனத்தாலே “இத்தை முடித்தல் கடத்தல்” என்று விழுந்திட்டு விபாரிதார்த்ப்ரத்யாயகமாய் விட்டதென்று நாம் மிக விர்வாக நிருபணம் பண்ணியிருந்தது நன்றேயென்று ஸ்தாபிதமாயிற்று.
எங்ஙனே யென்னில்; அராமண மராம் வா என்ற இந்த ப்ரதிஜ்ஞையும் அத்ய மே மரணம் வாபி தரண்ம் ஸாகரஸய் வா என்ற அந்த ப்ரதிஜ்ஞையும் ஒத்திருக்க வேணுமென்பது சொல்லாமலே விளங்கும்.
‘இராவணணையாவது தொலைக்கிறேன், அல்லது இராமனாகிற நானாவது தொலைந்து போகிறேன்’ என்று இவ்விடத்து ப்ரமாணத்திற்குப் பொருளாவது போல. ‘கடலையாவது கடக்கிறேன், அல்லது நானாவது முடிந்துபோகிறேன்’ என்றே அவ்விடத்திற்குப் பொருளாவது தான் பொருத்தமென்பதை மத்யஸ்த த்ருஷ்டிகள் உணர்வார்கள்.
ஊனெய் குரம்பை இத்யாதியின் கருத்தாவது-ஆழ்வீர்ளும்மை இவ்வுடம் போடே கொண்டுபோவதாக விளம்பித்தோம்; ஆனாலும் ளும்முடைய நிர்ப்பந்தத் தாலே இவ்வுண்டம்பை யொழியவே கொண்டுபோவதாக முடிந்தது;
இனி ஆறியிருப்பேனோ வென்று சொல்லி, மாம்ஸாதிமாய் ஹேயமான இந்த சாரிரத்தினுள்ளே புகுந்து, தன்னைப் பிரிந்து தடுமாறுகைக் கடியான புண்ய பாபரூப கருமங்களைத் தானே தவிர்த்தருளினானென்கை.
————-
எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார்.
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
பதவுரை
திருப் பேர் நகரான் |
– |
திருப்பேர் நகாரிலே வர்த்திப்பவானாய் |
திருமாலிருஞ் சோலை பொருப்பே உறைகின்ற பிரான் |
– |
திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணுமவனால் இப்பா பரமபோக்யமான பல தலங்களையுடையனான எம்பெருமான் |
இன்று வந்து |
– |
இன்று என்பாலெழுந்தருளி |
இருப்பேன் என்று |
– |
ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி |
என் நெஞ்சு நிறைய புகுந்தான் |
– |
என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்; |
விருப்பே பெற்று |
– |
அவருடைய அபிமானத்தைப் பெற்று |
அமுதம் உண்டுகளித்தேன் |
– |
அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன். |
திருப்பேர் நகரானென்றும் திருமாலிரஞ்சோலையுறை கின்ற பிரானென்றும் இரண்டு திவ்ய தேசங்களை யிங்குச் சொன்னது சீரார் திருவேங்கடமே திருக்கோவலுற்ரே மதிட்கச்சியூரமே என்றோதப்படுமெல்லாத் திருப்பதிகளையுஞ் சொன்னபடி.
இப்படி அளவுகடந்த தேச விசேஷங்களைத் தனக்கு இருப்பிடமாக வுடையவன், இன்று வந்து -இப்படி வரவேணுமென்கிற நினைவு நேற்று இன்றியே யிருக்க இன்று வநததாகச் சொல்லுகையாலே நிர்ஹேதுகமாக வந்தமை தெரிவித்தபடி. வரும்போது ‘இருப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே வந்தானாயிற்று.
பெருமாள் அரண்யத்திலே ஜடாயு மஹாராஜரைக் கண்டபோது இளையோனே நோக்கி இஹவத்ஸ்யாமி ஸெமித்ரே! ஸாரித்த மேதேநரைக் பகூஷிணா என்று இவர் சிறிகின்கீழே வர்த்திக்கப் பாரா நின்றோ மென்றாப்போலே.என்னெஞ்சு நிறையப் புகுந்தான் –
‘நம்முடைய ஹ்ருதயத்திலே இருக்கவேணுமென்று இவனாசைப்பட்டால் இருந்துபோகட்டுமே என்று இசைவு காட்டாதிருந்த என்னெஞ்சிலே நிறையப் புகுந்தானென்கை.
விருப்பேபெற்று அமுதமுண்டு கஸித்தேன் கம்ஸ சிசுபாலாதிகளின் நெஞ்சிலும் எம்பெருமானிருப்பதுண்டு;
அப்படி யின்றிக்கே அபிமாந பஹூமானங்களோடே இருக்கப்பெற்றேனாதலால் இதுவே அம்ருதபானமாகப் பெற்றே னென்றவாறு.
————-
கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-
பதவுரை
வண்டு களிக்கும் பொழில் சூழ் |
– |
வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட |
திரு பேரான் |
– |
திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான் |
கண்டு களிப்ப |
– |
தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு |
கண்ணுள் நின்று அகலான் |
– |
என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான் |
உண்டு களித்அதற்கு கு |
– |
இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு |
ளும்பர்என்குறை |
– |
மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ? |
மேலைத் தொண்டு உகளித்து |
– |
மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து |
அந்தி தொழும் சொல்லு பெற்றேன் |
– |
அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன். |
உண்டு களித்அதற்கு கு ளும்பர்என்குறை?- இங்கிருந்தே இப்படிப்பட்ட அநுபவம் பெற்றுக் களிப்பதைவிட பரமபதாநுவத்தில் என்ன விசேஷமுள்ளது?
அதில் அவேiகூஷயுடையோமல்லோம் என்பது கருத்து. மேலைத் தொண்டு உகளித்து-மேலான தொண்டு-திருவாய்மொழி பாடுகை;
அதனால்லுண்டான உகப்பானது தலைமண்டையிட்டு (அதாவது) அதிசயித்து. அந்தியாலே தொழுஞ் சொல்லுப்பெற்றேன் -முமுகூஷூப்படியில் “அந்திதொழுஞ் சொல்லென்கையாலே பலஞ் சொல்லிற்று” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம்.
கைங்கரிய தொழுஞ்சொல் நமச்சப்தம்; இதுதான் முடிவான பேறு; அதனையும் இங்குப் பெற்றேன் என்றாராயிற்று. நம இத்யேவ வாதிந:
(வண்டு களிக்கும் இத்யாதி) -வண்டுகள் மதுபானம் பண்ணிக் களிக்கிற போழில்காளலே சூழப்பட்ட திருப்பேர் நகாரிலே வர்த்திக்கிற பெருமான் உன்னை மெய்கொள்ளக் காண விருன்பு மென் கண்களே என்று விடாய்த்த எனது கண்கள் கண்டு களிக்கும்படியாகக் கண்ணுக்கே இலக்காயிரா நின்றான்;
போகச் சொல்லிடும் கண்வட்டத்தில் நன்றும் அகலுகிறானல்லன். இப்படி அவழன யநுபவித்துக் களிக்கப்பெற்றவெனக்கு மேலொரு குறையுண்டோ? என்றதாயிற்று.
—————
பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
பதவுரை
கண்ணுள் நின்று அகலான் |
– |
என் கண்ணைவிட்டு அதலாதிருக்கின்றான்; |
கருத்தின் கண் பெரியன் |
– |
என்னைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதில் விசேஷமான பாரிப்பு உடையனாயிராநின்றான்; |
எண்ணில் நுண்பொருள் தானே |
– |
எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே; |
ஏழ் இசையின் சுவை |
– |
ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்; |
வண்ணம் நல்மணிமாடங்கள் |
– |
பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் |
இன்று என் மனத்து செறிந்து புகுந்தான் |
– |
இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான் |
திண்ணம் |
– |
இது ஸத்தியம் |
(கண்ணுள் நின்று அகலான்) ஸதா பச்யந்தி ஸூரய என்கிற படியே ஸதாதர்சனம் பண்ணுவதற்கு இடமாக ஒரு திருநாடு இருப்பதாக நினையாதே இங்கேயே ஸதாதர்சனமாம்படி யிராநின்றான்.
(கருத்தின்கண் பெரியன்) கருத்தாவது மனோரதம்; அதில்பெரியனம என்றது-பெரிய பெரிய மனோரதங்களைப் பண்ணா நின்றானெ;னறபடி.
தம்மைப் பரமபதற்தெறக் கொண்டு போவதிலும், ஆதிவாஹகரை நியமிப்பதிலும், தான் முன்னே துரந்தரனாய்க் கொண்டுபோமதிலும் அவன் பார்க்கிற பாரிப்பு தம்;மாலெண்ணி முடிக்குந் தரமன்று என்றவாறு.
(எண்ணில் நுண்பொருள்) எத்தனை தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இது புரிந்துகொள்ள முடியாத ஸூகூஷ்ம விஸயமென்பது கருத்து.
அவருடைய பாரிப்பு நம்மால் வாய்கொண்டு சொல்லவெண்ணாத மாத்திரமன்று; நெஞ்சுக்கும் எட்டாதபடி கஹனமானது என்கை.
(பழிசையின் சுவைதானே) பரமரஸிகன் என்னலாமத்தனை, ஸப்தஸ்வரங்களுக்கு மேற்பட்ட போக்யமான வஸ்து இல்லை;
அந்த ஸப்தஸ்வரங்களின் சுவையே வடிவெடுத்தவெனன்று அவருடைய ராஸிக்யத்தைக் குலாவாமேயொழிய ஆழ்வாரளவிலே அவன்கொண்ட பாரிப்புகளை நெஞ்சாலும் நினைக்கப்போகாது என்றதாயிற்று.
—————
இப்பதிகத்திற்கு இதுதான் உயிரான பாட்டு. அடியனை இன்று இவ்வளவாக விஷயீகாரிக்கைக்கும் முன்பு நெடுநாள் உபேகூஷித்திருந்ததற்கும் காரணமருளிச்செய்யவேணுமென்று தமக்குண்டான ஜிஜ்ஞாஸையை வெளியிடுகிறாராயிற்று.
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
பதவுரை
என்னை இன்று பொருள் ஆக்கி |
– |
அநாதிகாலம் உபேகூஷிக்கப்படி;டிந்தவென்னை இன்று ஒரு வஸ்துவாகக் கொண்டு |
தன்னை என்னுள் வைத்தான் |
– |
பரம போக்யனன தன்னைமஹேயமான என்னெஞ்சிலே தானே கொண்டு வைத்தான்; |
(இன்று இப்படிச் செய்தவனானவிவன்) |
||
அன்று என்னை புறம்போக புணர்த்தது |
– |
அநாதிகாலம் நான்கை கழிந்துபோம்படி என்னை உபேகூஷித்திட்டுவைத்தது |
என்செய்வான் |
– |
எதற்காக? |
குன்று என்ன திகழ்மாகங்கள் |
– |
குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால் சூழப்பட்ட |
திருபேரான் |
– |
திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான் |
ஒன்று |
– |
இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை |
எனக்கு அருள் செய்ய |
– |
எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று |
உண்ர்த்தல் உற்றேன் |
– |
விஞ்ஞாபிக்கின்றேன். |
எம்பெருமான் தம்மைத் திருநாட்டிலே கொண்டுபோவதாக விரைகிறபடியைக் கண்டு, ‘இன்று என்னளவல்லாதபடி த்வாரிககின்ற தேவாரிர் இதற்கு முன்பு நெடுநாள்விட்டு ஆறியிருந்தபடி எங்;ஙனே?’ என்று அவன்றன்னைக் கேட்கிறார்.
கீழே இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்றாரே; அப்படி எம்பெருமான் விரையத்தொடங்கின நாளை இப்பாட்டில் இன்று என்கிறார்;
கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ என்றும், கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கேவரும் பாரிசு தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய் சாமாறே என்றும் தாம் கதறியழுத காலத்தை அன்று என்கிறார்.
அன்றிக்கே மயாவறமதி நலமருளினன் என்ற தம்வாயாற்பேசலாம்படி விஷயீகாரிக்கப்பெற்ற நாள் தொடங்கியுள்ள காலத்தை இன்று என்றும், அதற்கு முற்பட்ட காலத்தை அன்று என்றுஞ் சொல்லுகிறார் என்பதும் பொருந்தும்.
ஆழ்வார் எம்பெருமானை நோக்கி இப்படி கேள்வி கேட்டாரே, இதற்கு எம்பெருமான் என்ன மறுமொழி கூறினான்? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டாராம்;
அதற்கு பட்டர் அருளிச் செய்தாராம் – அவன் பதில் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? ‘இவர் தலையிலே ஒரு பழியை யேறிட்டு நெடுநாள் இழந்து கிடந்த நாம் என்ன சொல்லுவது?’ என்று வெள்கி, காலாலே தரையைக் கீறி நிற்பது தவிர வேறுண்டோ? என்று.
எம்பெருமான் பதில் சொல்லுவதாயிருந்தால் எவ்விதமாகச் சொல்லலாம்? என்று பாரிப்போம் ‘ஆழ்வீர்முன்பு உமக்கு ருசியில்லாமையாலே நாம் உபேகூஷித்திருந்தோம்; இன்று நீர் ருசிபெற்று ஸதாநுஷ்டாநமும் பணிணனீராகையாலே ஆத்ரம் செய்தோம்; என்று ஒரு பதில் சொல்லலாம்;
ஆனால் அப்படி சொல்வதற்கு இங்கு விஷயமில்லை. இவர் தலையிலே ஒரு ஸாதனாநுஷ்டானம் காணாமையாலே. ஆனாலும் ஒரு பதில் சொல்லலாம்-“என்;னுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியிலே நீர் இதுவரையில் ஊன்றியிருந்தீர்; அது என்னை விலக்கின படியாயிருந்தது; விலக்காத ஸமய்ம் எதிரிபார்த்திருந்தேன்; அது இப்போது கிடைத்தமையாலே ளும்மை யாதாரித்தேன்;
அன்றியும், என்னைத் தவிர்நத மற்றவற்றில் ஸாதநத்வ புத்திபண்ணிப் போந்தீர் இதுகாறும்; இப்போது அது தவிர்ந்து என்னையே உபாயமாகக் கொண்டீர்; ஆதலால் ஆதாரித்தேன்” என்று சொல்லலாம். ஏன் இந்த பதிலை எம்பெருமான் சொல்லவில்லையென்னில்;
இதுவொரு பதிலாகுமோ? அசட்டுத்தனமான பதில்றோவிது; சைதந்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷயபரியாயமான ருசியை ஸாதநமென்ன வொண்ணுமோ? உபாயத்வத்தை பேறிட்டுச் சொல்ல எப்படி முடியும்!
நம்முடைய ஸ்வாதந்திரியத்தாலேயே உபேகூஷித்திருந்தோம், ஸ்வாதந்திரியத்தாலேயே ஆதாரித்தோம்; இதை ஆழ்வார் நன்கு தெரிந்துகொண்டு கேள்வி கேட்கிறாராகையாலே இவர்க்கு நாம் ஒரு பதிலும் சொல்லிப் பிழைக்க முடியாதென்று பேசாதே கிடந்தான்.
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில்
(102) “இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி
(113) “வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணையளவும்;
மேலே நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க …… இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க” என்றருளிச் செய்ததும்
மணவாள்மாமுன்கிளின் வியாக்கியானத்தோடும் நம்முடைய விசேஷ விவரணங்களோடும் இங்கே அநுஸந்தேயம்.
நாஸெவ புருஷகாரேண நாசாப்யந்யேந ஹேதுநா கேவலம் ஸ்வேச்சயைவாஹம் பிரேNகூஷ ஞ்சித் கதாச்ந என்றவனிறே அவன்தான்.
————–
கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
பதவுரை
எத்தாய் |
– |
எம்பெருமானே! |
உற்றேன் |
– |
(உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்; |
உகந்து பணி செய்து |
– |
திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து |
உன் பாதம் பெற்றேன் |
– |
உன்திருவடிகளை அணுகினவானனேன்; |
ஈதே இன்னம் வேண்டுவது |
– |
இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்; |
கற்றார் |
– |
குரு முகமாகக் கற்றவர்களாயும் |
மறைவாணர்கள் |
– |
வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் |
வாழ் |
– |
வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும் |
திருப்பொராற்கு அற்றார் |
– |
பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான் |
அடியார் தமக்கு |
– |
பாகவதர்களுக்கு |
அல்லல் நில்லா |
– |
அநுபவ விரோதிகள் நில்லாது போம், |
திருவாய்மொழி பாடுகையாகிற இக்கைங்காரியத்தைப் பரமானந்தமாகச் செய்யப்பெற்ற வெனக்கு வேறு என்ன அபேiகூஷயுளது? என்கிறார்.
இப்பாட்டில் முன்னடிகள் முன்னிலையாயும் பின்னடிகள படர்க்கையாயுமுள்ளது. முன்னடிகள் எம்பெருமானை நேராக நோக்கிச் சொன்னது; அதற்கு எம்பெருமான் தலைதுலுக்கி உகப்புக் காட்டியருள, அனைவர்க்கும் தெரியச் சொல்லுகிறது பின்னடி.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் சாஸ்த்திரார்த்தமே வடிவெடுத்தவை காணீர்;- “அவன் தானே செய்தானென்எமன்று அவருக்கு வைஷம்யமும் நைர்க்ருண்யமும் ஸர்வ முக்தியும ப்ரஸங்கியாதோவென்னில், இத்தலையதில் ருசியையபே கூஷித்துச் செய்கையாலே அவருக்கு அவை தட்டாது. அது ஹேதுவென்று ஈச்வரனுக்கு உத்தரமானாலோ வென்னில்; அது உபாயமாக மாட்டாது, பலவியாப்தமான திறே உபாயமாவது. இந்த ருசி அதிதார்ஸ்வரூபமாகையாலே தத்வதிசேஷணமாமித்தனை. உபாயம் ஸஹகாரிநிரபேகூஷமாகையிலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது. இது உபாயமாகாமையாலே இவர்க்கு இல்லையென்னலாம்; ஸர்வமுக்தி ப்ரஸங்க பாரிஹாரர்த்தமாக அவருக்கு உண்டென்னவுமாம்” என்று.
சாஸ்த்ரார்த்த நற்றெளிவை நன்கு பிறப்பிக்க வல்ல இந்த ஸ்ரீஸூக்திகளைக் கண்டுவைத்தும் சிலர்இத்திலையிலுள்ள ஸ்வல்பத்தை உபாயமென்று கூறி முஷ்டி பிடிப்பது வியப்பே.
உற்றேன்- நிமஜ்ஜதோந்த பவார்ணவாந்தச் சிராய மே கூலமிவாஸி லப்த: என்ற ஆளவந்தர் ஸ்ரீஸூக்தியை இதற்குச் சந்தையாக அநுஸந்திப்பது. உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் -இங்குப் பணி செய்தலாகச் சொல்லுகிறது திருவாய்மொழி பாடுகையை. உகந்து பணிசெய்கை ஸாதனமாய், அதற்கு ஸாத்யம் வேறொன்று இருப்பதாக ஆழ்வார் திருவுள்ளமன்று; உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றேயாகக் கொள்க. ஈதே யின்னம் வேண்டுவது என்பதனால் இது விளக்கப்பட்டதென்க.
இனி பின்னடிகள் பொதுவான லோகோக்தியாகச் சொல்லுகிறபடி. (கற்றார் மறை யித்யாதி.) குருகுலவாஸம் பண்ணிப் போது போக்கினவர்களாய் வேதத்துக்கு வ்யாஸபதம் செலுத்தவல்லவர்களான மஹான்கள் அநுபவித்து வர்த்திக்குமிடமாம் திருப்பேர்நகர்;
அவ்விடத்து உறையும் பெருமாளுக்கு அற்றுத்தீர்ந்த வடியார் களுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்றாராயிற்று
“திருப்பேராற்கு” என்றதை முன்னிலையில் வந்த படர்க்கையாகக்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கியே சொல்லுகிறதென்று கொள்ளலும் நன்றே. திருப்பேராற்கு-திருப்போரிலே வர்த்திக் கிறவுனக்கு என்றபடியாம்.
அற்றாரடியார் தமக்கு – அற்றவாகளான அடியவாரானாக்கு என்று இருவகையாகவும் பொருள் கொள்வர்.
———–
இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
பதவுரை
அல்லல் நில்லா |
– |
துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய் | |
நீள் வயல் சூழ் |
– |
பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான | |
திருப்பேர் மேல் |
– |
திருப்பேர் நகர் விஷயமாக | |
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் |
– |
நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான | |
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் |
– |
தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான | |
தொண்டர் ஆள்வது |
– |
பாகவதர் களானவர்கள் ஆளுமிடம் | |
சூழ்பொன் விசும்பு. |
– |
பரமபதமாகும் |
திருப்பேர் நகர்க்கு ‘நீள்வயல்சூழ்’ என்பது போல ‘நில்லா வல்லல்’ என்பதும் ஒரு விசேஷணமாயிருக்கிறது. துக்கங்களானவை
‘இது நமக்கு உறைவிடமன்று’ என்று தானேவிட்டு ஓடிப்போம்படியான இடமாம் திருப்பேர் நகர்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தலத்தையுத்தேசித்து ஆழ்வாரருளிச்செய்த இப்பதிகம் வல்லார் யாவரோ அவர்களிட்டது சட்டமாயிருக்கும் திருநாடு என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 16, 2022 at 12:37 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply