Archive for November, 2022

ஸ்ரீ அருளிச் செயல்களில் பண் -இராகங்கள் -தாளங்கள் -இசைக் கருவிகள் -நைவளம்-நுடங்கு கேள்வி இசை–

November 30, 2022

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்-22-

நைவளம் –
கேட்டாரோடு சொன்னாரோடு வாசி அற -நைவிக்கும்படியான
அழகை உடைத்தான பண்ணை நுணுக்கி
நட்ட பாஷையை -குண யோகத்தால் –நைவளம் –என்று பேரிடுகிறது –
நுடங்கு கேள்வி இசை -என்னக் கடவது இறே –

பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6-

ஓன்று –
அல்லாத இசைகளில் காட்டிலும் பிறரை வசீகரிக்க வற்றாய் இருக்கையும் –
இதுக்கு வசீக்ர்தராகா விட்டால் வேறு கதி அற்று இருக்கையும் -பற்ற அத்விதீயம் -என்கிறது –

(‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தை யுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற் காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படா விட்டால் வேறு கதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப் பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ் நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம் தெரி பாலை கைவல் பாண் மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினை யொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையை யுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலை யாழில் வாசிக்கப் பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப் பண்கள், பகற் பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.)

நைவளம் என்னும்-குறிஞ்சி  யாழ்ப்  பண்ணின்   வகையாகிய   நட்டபாடைப்பண்  போல

நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு சிறுபாணாற்றுப்படை , பரிபாடல் களில் குறிப்புகள் உள.
இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும்,
பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
நம் சங்கத் தமிழர்கள் மிகச்சிறந்த இசை வல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர்.
நிலமும் நிலம் சார்ந்த பண்கள், பொழுதுகள் சார்ந்த பண்கள் எனப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
பாலை யாழில் வாசிக்கப்படும் சிறந்த இன்னிசைப் பண்ணான நைவளம் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் வழி நமக்குக் கிடைக்கின்றன.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,

“நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…” (146-147)

நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும் யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.

“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ

நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)

பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.

மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப் பெறும் இராகமாகும். பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.

பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள் எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும், இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.

சங்க இலக்கியங்களில் பண்கள்

சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன.

ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள.

 • ஆம்பல்பண்

    ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.

இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன.

கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர்.     

தட்டை,     தண்ணுமை    போன்ற இசைக் கருவிகளுடன்     மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.

ஆம்பலங் குழலின் ஏங்கி          (நற்றிணை : 123: 10)
 • காஞ்சிப் பண்

    காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டு்ள்ளது.

விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.

 • குறிஞ்சிப் பண்

    மலையுறை    தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.

 • நைவளம்

    நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு(146), சிறுபாணாற்றுப்படை(36-38),பரிபாடல்(18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப்     பற்றிய குறிப்புகளும்     காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

வ. எண்
பண்
காலம்
நிலம்
உணர்வு
1.
ஆம்பல்
மாலை, முன்னிரவு
முல்லை
ஏக்கம்
2.
காஞ்சி
—-
—-
துன்பம்
3.
காமரம்
—-
மருதம்
இன்பம்
4.
குறிஞ்சி
நள்ளிரவு
குறிஞ்சி
அச்சம்
5.
செவ்வழி
மாலை
முல்லை, நெய்தல்
இரக்கம்
6.
நைவளம்
பகல்
—-
இன்பம்
7.
பஞ்சுரம்
—-
பாலை
அச்சம்
8.
படுமலை
—-
—-
இன்பம்
9.
பாலை
நண்பகல்
பாலை
இன்பம்
10.
மருதம்
காலை
மருதம்
இன்பம்
11.
விளரி
—-
நெய்தல்
ஏக்கம்

.

1150.
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்.
வையம் நுகர் கொற்றவனும். மா தவரும். அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ?
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்-நைவளம் என்னும்
குறிஞ்சி  யாழ்ப்  பண்ணின்   வகையாகிய   நட்டபாடைப்பண்  போல
இனியமொழிபேசும்  பிராட்டி. அருகே  நெருங்கி  வருகின்ற  அளவில்;
வையம்   நுகர்  கொற்றவனும்   மாதவரும்  அல்லார்   கைகள்
தலைபுக்கன 
-பூவுலகை ஆண்டு. அதன் (இன்பதுன்பங்களை) நுகர்கின்ற
தசரத வேந்தனும் (வசிட்டன். விசுவாமித்திரன்)  ஆகிய முனி  சிரேட்டர
களும் அல்லாத அனைவர்  கரங்களும்  (பிராட்டியை  வணங்குமுகமாக)
அவரவர்   தலைகளின்  மேலே   (இயல்பாகவே)  சென்று   குவிந்தன;
கருத்து. உளதும் எல்லாம்  தெய்வம்  என  உற்ற  
–  ஏன் எனில்.
அனைவரது   மனமும்.   மற்றும்   உள்ள   புத்தி  முதலிய   அந்தக்
கரணங்கள்  யாவையும்   (பிராட்டியைத்)   தெய்வம்  என்றே  கருதின;
உடல்  சிந்தை   வசம்  அன்றோ?  
–  (செயல் கருவியாகிய)  உடல்
(எண்ணுதற் கருவியாகிய) மனத்தின் வசப்பட்டுச் செயல்படுவதன்றோ?
வையம்  நுகர்  மாதவர் என்பதில். இரட்டுற மொழிதலாகக் கொண்டு
இராமனையும்   சனகனையும்  அடக்குவர்.  கருத்தும் (மற்றும்)  உளதும்
எல்லாம்  எனற்பாலது  உம்மை   விகாரத்தால்  தொக்கு  கருத்துளதும்
எல்லாம்  என்றாகியது.  பிராட்டியைத்  தெய்வம் எனத்  தான்  கருதும்
கருதுகோளை.  இடம்  அறிந்து   ஏற்றி.  வணங்குவித்த  கவிஞர்பிரான்
திறம்  உணர்க.  உளதும் எல்லாம் – ஒருமை பன்மை  மயக்கம்.  சீதை
வணங்குரியார்  சிலர்  தவிர. அவையிருந்த  ஏனையோர்  அனைவரின்
கரங்களும்   சிரமேற்  குவிந்தன   என்பதற்கு.  உளநூல்   அறிஞரான
கவிஞர் பிரான் கூறும் காரணம்: உடல்  சிந்தை  வசம் என்பது.  சிந்தை
சீதையைத்   தெய்வம்   என   நினைக்க.   கடையுடைக்   காவலாளர்
(மெ.நா.9)    அனைவோர்   கரங்களும்    தெழுது    செயற்படுத்தின.
மனந்தூயதாயின்.  ஒழிந்த  மொழியும்  செயலும்   தாமே   தூயவாகும்
எனும்  அடிப்படையில்  “மனத்துக்கண்  மாசிலன் ஆதல்”  (திருக். 34)
என மொழிந்தமையும் இங்கு நினைக.                           34

சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும்

காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.

————————————————————————————————————————–

பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.
தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்
1. நட்டபாடை (நைவளம்) – நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.
திருத்தாண்டகம்’ இருவகையாகும்.
எண்சீர் விருத்தத்தில் அமைந்தது ‘நெடுந்தாண்டகம்’ எனும் இசைப் பாடலாகும்.
குறைந்த சீர்கள் உள்ள தாண்டகப் பாடல்கள் ‘குறுந்தாண்டகம்’ எனப்படும்.

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஏழு தாதுக்கள் என்பது எதனால்?-பித்தம் கபம் வாயு –

November 29, 2022

சப்த தாதுக்கள் என்பவை ரச, ரக்த, மாமிசம், மேதா, அஸ்தி, சுக்கிலம் என்ற ஏழாகும்.

இந்த ஏழுமே சித்த ஆயுர்வேத தத்துவத்தின் படி உடலில் அடிப்படை கட்டமைப்பு அலகாகும்.

சித்த ஆயுர்வேத தத்துவங்களின் படி நாம் உண்ணும் உணவு பிராணனின் உதவியுடன் முதலில் ரச தாது வாகிறது,
இது உணவு உடலுக்குள் அகஞ்சுரிக்கும் நிலை, இப்படி உறிஞ்சப்பட்டு உருவாகிய தாது இரத்தமாக மாறுகிறது,
பின் இரத்தம் சுத்தியாக வலிமையாக இருக்க அது மாமிசம் எனும் சதைத் தொகுதியாக மாறுகிறது,
இப்படி வலிமைப் படுத்தப்பட்ட சதைத் தொகுதி மேதா எனும் ஹர்மோன் தொகுதியாக வலுப்படுத்துகிறது,
அதன் பின்னர் அது எலும்பாக மாறி இறுதியாக இவை எல்லாம் சரிசெய்யப் பட்ட பின்னர் மிகுதியே சுக்கிலம் எனும் விந்தாக மாறுகிறது.
சுக்கிலம் என்பது உடல் பரிபூரண ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மேற்குறித்த
ஒழுங்கினூடாக உணவும் பிராணனும் பிரயாணித்து சாரமாக இறுதியில் உருவாகும்.
இதனாலேயே ஆணிற்கு உடல் பரிபூரண வளர்ச்சி ஏற்படும் வரை, பருவம் அடைதல் என நாம் கூறும் வயது வரும் வரை சுக்கில சுரப்பு ஏற்படுவ்தில்லை. பால்ய வயதில் உடலின் மற்ற ஆறு தாதுக்களை பூர்த்தி செய்வதிலேயே உடலின் ஆற்றல் செயற்படுத்தப்படுகிறது.
இது பூர்த்தியாகும் போது அடுத்த உயிரை உருவாக்கும் ஆற்றல் மனித உடலுக்கு தரப்படுகிறது.
சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்
1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந்  நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல் முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி,
கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,
ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும்.
ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும் பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப் பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த எலும்புச் சட்டகம் தான் —
மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது ,
மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்-சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை .
இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால்
இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும்.
இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.
—————–
ஏழு தாதுக்கள் என்பது எதனால்?

உணவிலிருந்து, ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து
எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள்

அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம்
இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து
வாயுவும் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.

ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள்
உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.

————-

எலும்பின் அமைப்பை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்படுகின்றன.

அவை கபாலத்தில் இருக்கக்கூடிய எலும்பு, பல், குருத்தெலும்பு வளைந்திருக்கிற எலும்பு(மார்புக்கூட்டில் இருக்கக்கூடிய எலும்பு), நீண்ட எலும்பு (கை, கால்களில் இருக்கக்கூடிய எலும்பு.)

எலும்பின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஆயுர்வேத மருத்துவத்துறைக்கும் நவீன மருத்துவத்துறைக்கும் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும் அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் என்ற மகரிஷியின் எண்ணிக்கை தற்போதுள்ள நவீன மருத்துவத்தின் எண்ணிக்கைக்கு ஓரளவுக்கு ஒத்துப் போகிறது.

அடிபடுவது, அதிக வாகனப் பிரயாணம். வறட்சி தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைவு, அஜீரணம், வயது முதிர்வால் ஏற்படும் தாதுக்கள் குறைபாடு போன்றவற்றுக்கான சிகிச்சைகளையும் மூலிகைகளையும், உணவுகளையும் ஆயுர் வேதம் விளக்கிக் கூறியுள்ளது.

தாதுக்கள் குறைந்தால் அதன் குணத்திற்கு இணையான குணங்கள் கொண்ட உணவினை மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் எலும்புகள் குறைந்தால் குருத்தெலும்புகளை உணவுக்காகவும், மருந்தாகவும் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

குருத்தெலும்பை ரசம் வைத்தோ, சூப் செய்தோ உணவாக எடுத்துக் கொள்ளலாம். பிரண்டையை துவையலாக வற்றலாக எடுத்துக்
கொள்ளலாம்.

மருதமரப்பட்டை சிறிதளவு எடுத்துக்கொண்டு நான்கு மடங்கு அதிகமாக பால் கலந்து அதற்கு சரியான அளவு தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பாலின் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி காலை, மாலை இருவேளை உணவுக்கு முன் பயன்படுத்த வேண்டும்.

இதனால் எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி போகும். இது இருதயத்திற்கும் மிகச் சிறந்த மருந்து என்று ஆயுர்வேதம் மருத்துவ புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருதமரப்பட்டையில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதாக நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.

கொம்பரக்கு என்ற மரத்தினையும், முட்டையின் ஓட்டைக் கொண்டும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையும் எலும்பை உறுதிப்படுத்த ஏதுவான மருந்தாகயிருக்கும்.

சிகிச்சை முறையை பொறுத்தவரை பஞ்சகர்மா என்ற சிகிச்சையில் பால் மற்றும் நெய்யில் கசப்பான மருந்துகளை கலந்து வஸ்தி என்ற சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பேர்கள் அறு சுவை உணவு என்றால் மிகுந்த சுவையான உணவு என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இதன் உண்மையான பொருள் துவர்ப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு,இனிப்பு, கார்ப்பு ஆகிய ஆறும் கலந்த உணவு.

நாம் ஒவ்வொரு வேளையிலும் சாப்பிடும் உணவிலேயே இந்த ஆறு சுவைகளும் அடங்கியுள்ளன.

மனித உடலில் இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ் நிர், மூளை என்று ஏழு தாதுக்கள் உள்ளன.

இவ்வேழு தாதுக்களால் கட்டப்பட்டிருப்பதால்,யாக்கப்பட்டிருத்தலால் மனித உடலுக்கு யாக்கை என்று பெயர்.

ஆறு தாதுக்கள் உடலில் சரியாக இருந்தால் ஏழாவதான மூளை சரியாகவே இருக்கும்.

ஆறு சுவைகளில், இரத்தத்தை உண்டாக்க துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பைத் தர புளிப்பும், நரம்பைப் பலப்படுத்த கசப்பும், உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய காரமும் உதவியாக உள்ளன.

அதிக காரம் உண்டால் வயிற்று வலி, நீர்ச் சுருக்கு, சீத பேதி உண்டாகும்.

காரம் குறைந்தால் நாவறட்சி, மலச் சிக்கல், அஜிரணம், மந்த பேதி முதலியன உண்டாகும்.

இந்த உமிழ் நீர் சுரந்தால்தான் கடினத் தன்மையுள்ள உணவு மிருதுவாக மாறும். உணவும் உமிழ் நீரோடு கலப்பதால், உணவும் தொண்டைக் குழி வழியே எளிதில் வயிற்றை சென்றடைவதுடன் உணவும் நன்கு சீரணம் அடைகிறது.

கசப்புச் சுவை அதிகமானால் தூக்கமின்மை, அரிப்பு, சொறி சிரங்கு முதலியன தலை காட்டும்.

கசப்புச் சுவை குறைந்தால், அஜீரணம், சோம்பல், பலக்குறைவு, அபான வாயு அதிக அளவில் பிரிதல் ஆகியவை உண்டாகும்.

நரம்பின் பலத்தால் தான் நம் உடல் இயங்குகிறது.போதிய நரம்பு பலம் உள்ளதால்தான் நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது

————

தினமும் பழம் சாப்பிடுவது, வேக வைத்த உணவை சாப்பிடுவது, கேரட்,பீட்ரூட், இஞ்சி, மணத் தக்காளி கீரை அடிக்கடி சேர்ப்பது போன்றவற்றால் வாதம் பித்தம்கபம் மூன்றையும் சமன் படுத்தலாம்.

வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள்.

உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.

இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர் வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான்

`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
– என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.

———

வாதம், பித்தம், கபம்

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணி புரிந்தால் தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும்.

மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும்.

வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.

* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். .

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பது கூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது… ஆனால் கைக் குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி… இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

* சளி இருமல்  ஆஸ்துமா, மூக்கடைப்பு… என கபத்தால் வரும் நோய்கள் பல.

பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும்

காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம்.

மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை யெல்லாம் கபம் போக்க உதவும்.

அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக் கொண்டே வரும் வாழ்க்கைத் துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

வாதம், பித்தம், கபம் – இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல் கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்.

ஒவ்வொரு நபரும் ஒரு சில கூறுகளால்  அவர்களின் இயல்பான அமைப்பின்  (பிரகிருதி) காரணமாக பாதிக்கப் படுகின்றனர். இது மூன்று தோஷங்களாக வகைப்படுத்தப்படுகிறது:

 • வாத தோஷம்  – காற்று மற்றும் விண்வெளி கூறுகள் ஆதிக்கம் செலுத்து கின்றன
 • பித்த தோஷம்  – நெருப்புக் கூறு  ஆதிக்கம் செலுத்துகிறது
 • கப தோஷம்  – பூமி மற்றும் நீர் கூறுகள்  ஆதிக்கம் செலுத்துகின்றன

தோஷம் ஒருவரின் உடலின் வடிவத்தையும், உடல் போக்குகளையும் (உணவு விருப்பத்தேர்வுகள் மற்றும் செரிமானம் போன்றவை) மற்றும் ஒருவரின் மனதையும் உணர்ச்சியையும் பாதிக்கிறது.

உதாரணமாக, கப தோஷம்  உள்ள மக்களில் பூமிக்கூறு திடமான உறுதியான உடல் வகை, மெதுவாக செரிமானம், சிறந்த  நினைவுத்திறன் , மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றில் வெளிப்படையாகத் தெரிகிறது.

பெரும்பாலான மக்களின் பிரகிருதி இரு தோஷங்களின் கலவையாகவே இருக்கும்.

வாதம், பித்தம், கபம் ஆகியவை தங்களின் உகந்த அளவில் செயல்படாத நிலையில், சமநிலையின்மை தோஷத்திற்குத்  தகுந்தபடி அறிகுறிகளால் குறிக்கப்படுகிறது.

———

வாத சமநிலையின்மை:

மூன்று தோஷங்களில் வாத தோஷம்   இரண்டு காரணங்களால் மிக முக்கிய மானதாகும்.

முதலாவதாக, வாத தோஷம்  நீண்ட காலத்திற்கு போதிய அளவு சமநிலையற்று இருந்தால்  மற்ற இரு தோஷங்களும்  (பித்தம் மற்றும் கபம் ) சமநிலையற்றதாக மாறலாம்.

வாதம்  காற்று மற்றும் விண்வெளி கூறுகளின் கலவையாகும்.

வாத  சமநிலை இன்மையின்  அறிகுறிகள் & விளைவுகள்

அறிகுறிகள்

உடல் அளவில் :

 • மலச்சிக்கல்
 • வயிற்றில் வாயு உருவாக்கம் அல்லது விலகல்
 • உடல் வறட்சி
 • உலர் மற்றும் கடினமான தோல்
 • வலி மற்றும் பொதுவாக உடல்முழுவதும் வலி
 • வாயில் அதிக உமிழ்நீர்
 • பலமின்மை, களைப்பு, சத்துக் குறைவு
 • தூக்கமின்மை
 • நடுக்கம் மற்றும் தசையிழுப்பு
 • மயக்க உணர்வு
 • குளிர் மற்றும் வெப்பத் தேவை

நடத்தை அளவில்:

 • பகுத்தறிவற்ற நடத்தை , படபடப்பு,  ஆவேசம், பொறுமையின்மை
 • பணிகளைத் தவிர்த்து ஓடும் விருப்பம்
 • குழப்பம், பயம் மற்றும் நடுங்கும் உணர்வுகள்
 • உறுதியின்மை
 • அதிகமான இயக்கம் அல்லது பேச்சு

விளைவுகள்:

 • தசைகள் வீணடிக்கப்படுகின்றன
 • மூட்டு  வலிகள்
 • விறைப்பு தன்மை
 • தலைவலி
 • தேக்கம்
 • மலச்சிக்கல்
 • எடை இழப்பு
 • தசைப் பிடிப்புகள்
 • வலிப்பு , நடுக்கம், முடக்குவாத தாக்குதல்கள்
 • பெருங்குடல் பாதிப்பு
 • உலர் நிலை,  அடைப்பு
 • பயம்

பித்த சமநிலை யின்மை

பித்த தோஷம்  நெருப்பு  அல்லது வெப்பத்துடன் தொடர்புடையது.  எங்கு மாற்றம் ஏற்பட்டாலும், அங்கு பித்த பிரகிருதி வேலை செய்கிறது. இரைப்பை குடல்  பாதை, கல்லீரல், தோல், கண்கள் மூளை ஆகியவை பித்தம்  வேலை செய்யும் இடங்களாகும்.

பித்த சமநிலைஇன்மையின்  அறிகுறிகள் மற்றும்  விளைவுகள்-அறிகுறிகள்

உடல் அளவில்:

 • அதிகமான தாகம் அல்லது பசி
 • நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை
 • கண்கள், கைகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் எரிச்சல்
 • உடலில் சூடு
 • தோல் தடித்தல், முகப்பரு, மற்றும் கட்டிகள்
 • பித்த வாந்தி  (மஞ்சள் நீர்)
 • வெளிச்சத்திற்கு கண்கூசுதல்
 • வலுவான உடல் நாற்றங்கள்
 • குமட்டல் மற்றும் தலைவலி
 • வயிற்றுப் போக்கு
 • வாய்க் கசப்பு
 • குளிர் சூழலுக்கு விருப்பம்;  வெப்ப பாதிப்பு

நடத்தை நிலையில்:

 • கடினமான பேச்சு மற்றும் செயல்கள்
 • தீர்ப்பு அல்லது விமர்சிக்கும்  போக்குகள்
 • கோபம், எரிச்சல், விரோதம்
 • வாக்கு வாதம், ஆக்ரோஷ அணுகுமுறை
 • பொறுமை மற்றும் அமைதியின்மை
 • விரக்தி

விளைவுகள்

 • அமிலம் மிகுதல்
 • வீக்கங்கள்
 • இரத்தப்போக்கு
 • உயர் இரத்த அழுத்தம்
 • எரிச்சல் உணர்வுகள்
 • அதிகமான கழிவுகள்
 • தோல் தடிப்புகள், பருக்கள், கட்டிகள்
 • வெறி

கபம் சமநிலை யின்மை:

மூன்று தோஷங்களில் கப தோஷம்  மிகப்பெரியது. இது உடல் அமைப்பு களுக்கு தேவையான கட்டமைப்புக்களை  வழங்குகிறது.

இவை வாதத்தின் இயக்கம் மற்றும் பித்தத்தின்  வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

ஒரு பெரிய, கனகச்சிதமான கால்பந்து வீரர் அல்லது மல்யுத்த வீரர் கபத்தின்  மேலாதிக்கம் கொண்டவர்.

கபம்  என்பது பூமி மற்றும் நீர் ஆகிய கூறுகளின் கலவையாகும்.

கப சமநிலை இன்மையின்  அறிகுறிகள் & விளைவுகள்

அறிகுறிகள்

உடல் நிலையில்

 • சோம்பல்
 • குறைந்த அல்லது பசியின்மை, குமட்டல்
 • நீர் தேக்கம்
 • வெடிப்பு, சளி உருவாக்கம்
 • வாயில் அதிக உமிழ்நீர்   சுரப்பு
 • சுவாசத்தில் சிரமம்
 • அதிக தூக்கம்
 • வாயில் இனிப்பு சுவையுணருதல்

நடத்தை நிலையில்:

 • கனமாக உணருதல்
 • மன அழுத்தம், சோகம்
 • மந்தமான, செயலற்ற தன்மை
 • ஆதரவு அல்லது அன்பின் பற்றாக்குறையை உணருதல்
 • பேராசை, சிக்கிக்கொள்ளுதல், உடைமையுணர்வு

விளைவுகள்

 • உடல்பருமன்
 • வீக்கங்கள்
 • நீர் தேக்கம்
 • அதிகமான சளி உற்பத்தி
 • கூடுதல் வளர்ச்சி
 • மன அழுத்தம்

நம்முடைய தோஷங்கள் மற்றும் சமநிலையின்மைகள்  ஆகியவற்றின் இயல்புகளைப் புரிந்து கொள்வது சமநிலையை மீண்டும் பெறத்  தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

————

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—25-29–

November 29, 2022

ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற  பகுதி

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

—————-

(‘மெய்யெற்கே மெய்யனாகும்’-15-)–26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள
சந்தேகங்களை திருஅரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான்.

(“சூதனாய் கள்வனாய்“-16-)–ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்பு வெள்ளம் பெருக வைத்தான்.
தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு
அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான்

(விரும்பி நின்று) பல காலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான்

(‘இனித்திரை திவலை மோத “)நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து,
அதைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான்.

(குடதிசை முடியை வைத்து‘) திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும்,
அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான்.

(“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“) திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம்
பகவத் அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான்.

(“பணிவினால் மனம் அது ஒன்றி“) வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே
நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும்,
நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான்.

(பேசிற்றே பேசல் அல்லால்) சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து
ஆழ்வாரை வாழ முடியாதபடிச் செய்தது.

(கங்கையில் புனிதமாய) சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று
ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான்.

(வெள்ளநீர் பரந்து பாயும்) இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3),
தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14),
மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற
முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இதனை நம் சம்பிரதாயத்தில் நைச்சானுசந்தானம் என்று கூறுவார்கள்.
மோக்ஷம்
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதையே குறிக்கோளாக் கொண்டு
தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறுகிறோம்.
அதை அடைவதற்கு சிலவழிகள் பற்றி சுருக்கமாக,

கர்ம யோகம் (தவம் போன்ற நடவடிக்கைகள், சாஸ்திரம் நமக்கு விதிக்கும் கடமைகள்)
ஞான யோகம் (அறிவு மூலம் பரமாத்மாவை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வது)
பக்தி யோகம் (பரமாத்மாவின் மேல் தூய்மையான அன்பு செலுத்துதல் )

இவற்றில் எதன் மூலமும் மோக்ஷம் அடையலாம் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன
மூன்று ஸ்லோகங்களை இப்பொழுது காண்போம்.
முதலில், ஜனகன் முதலானோர் கர்மயோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தான் என்று கூறுகிறார் (3.20).
கர்மயோகத்தைவிட அதில் உள்ள ஞான பாகமே முக்கியம் என்றும்,
எல்லா கர்மங்களும், எல்லா சாதனங்களும் ஞானத்திலேயே முடிவு பெறுவதாக கண்ணன் சொல்கிறார். (4.33).
ஒரு பயனையும் எதிர்பாராத பக்தியினாலேயே தன்னை உண்மையாக அறியவும், பார்க்கவும், உட்புகவும் முடியும்
என்று கண்ணன் கூறுகிறார். (11.54).
இப்படி, மூன்று யோகங்களும் தனித்தனியே மோக்ஷத்தை அளிக்க வல்லன என்பதே ஆகும்.

மேலும் மூன்று யோகங்களில் ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் கலந்தே உள்ளன என்றும்
இந்த மூன்று யோகங்களிலும் ஒன்று பிரதானமான சாதனமாகவும்,
மற்ற இரண்டும் ஆதரவு சாதனங்களாவும் இருக்கும் என்றும் நம் ஆச்சார்யர்கள் கூறுவர்.

அப்படி இரண்டினை ஆதரவாக கொண்டு கொண்டு மூன்றாவதை சாதனமாக்கி மோக்ஷத்தை
அடைந்தவர்களுக்கு உதாரணங்களை பார்ப்போம்.
ஜனகர், ஞான யோகத்தையும், பக்தி யோகத்தையும் கொண்டு கர்ம யோகத்தை சாதனமாக்கி சாதித்தவர்.
ஜடபரதர், கர்ம யோகத்தையும், பக்தி யோகத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஞான யோகத்தை சாதனமாகக் கொண்டவர்.
பிரஹ்லாதன், கர்ம, ஞான யோகங்களை ஆதாரமாகக் கொண்டு பக்தி யோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தவர்.
இப்படி இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லன.

கர்ம யோகம் மூலம் தொடங்கிய சில காலத்திலே ஞான யோகம் ஏற்படக் கூடியது.
ஞான யோகம் தொடங்கியவுடன் உணர்வது பரபக்தி.
கர்மயோகம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்றும் வீணாவதில்லை.
அதாவது, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகம் செய்து, அது முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து விட்டால்,
அந்த கர்மயோகத்தின் பலன்கள், அந்த ஜீவாத்மாவை அதன் அடுத்த பிறவியில் வந்து அடையும்.
பொதுவாக, கர்ம, ஞான யோகங்கள் தொடங்கிய பின்னர் ஒரு ஜீவாத்மா பக்தி யோகம் அடைவது என்பது சாத்தியமாகிறது.

பக்தி யோகம் நமக்கு பிறக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள விரோதிகள் நாம் செய்த பாவங்களே ஆகும்.
பற்பல பிறவிகளில் நாம் செய்த கர்ம, ஞான யோகங்கள், நம் பாவங்களை நீக்கி, நம்மை,
கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆக்கி, நாம் பக்தி யோகம் செய்ய உதவுகின்றன என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.

நாம், நான்கு யுகங்கள் உள்ளன என்றும்,
அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்றும் பார்த்து உள்ளோம்.
கர்ம, ஞான, பக்தி யோகங்களை பின்பற்ற வேண்டிய திறமைகளும், அவகாசமும், ஆயுளும், சூழ்நிலைகளும்
முதல் மூன்று யுகங்களுக்கு அதிகம் என்றும், கலியுகத்தில் அது கடினம் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறோம்.
அதனால், நமக்காகவே, சரணாகதி என்ற மோக்ஷம் செல்லும் வழி உள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

அவன் மூலம், அவனை மட்டுமே அடைவது என்பது சரணாகதி என்று சுருக்கமாக கொள்ளலாம்.
அவன் திருவடிகளே சரணம் என்று வேறு எந்த வித உபாயமும் இன்றி அவனை அடைவது;
அப்படி அவனை அடைந்தபின், அவனை தவிர வேறு எதுவும் அவனிடம் வேண்டுவதில்லை என்பதே இதன் உட்கருத்து.
இவ்வாறு வேண்டுபவர்களை பகவத்லாபார்த்தி என்று கூறுவார்கள்.
இவ்வுலக இன்பங்களை வேண்டுபவர்கள் ஐஸ்வர்யார்த்தி என்றும்,
இவ்வுலக இன்பத்தைத்தாண்டி, பரமாத்மாவிடம் செல்லாமல் கைவல்யம் என்ற விருப்பத்தை வேண்டுபவர்கள் கைவல்யார்த்தி.

மோக்ஷம் என்பதை விரும்பாமல், கைவல்யம் என்பதை விரும்பும் சில ஜீவாத்மாக்கள் உள்ளன என்று நாம் பார்த்து உள்ளோம்.
அப்படி கைவல்யத்தை வேண்டுபவர்களுக்கு இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியே சாதனமாக கூடும் என்று
ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் அருளிச்செய்து உள்ளார்.

பரமாத்மா கைவல்யார்த்திகளுக்கும் அவனை வந்து அடைய, இறுதிவரை அந்த ஜீவாத்மாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறார்.
தன்னுடைய இறுதி மூச்சின் போது, ஒரு கைவல்யார்த்திக்கு பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டால்,
பரமாத்மா அந்த கைவல்யார்த்திக்கு மோக்ஷத்தை அளித்து விடுவார்.
இத்தனையும் அருளி செய்தவர் ஆளவந்தார் என்ற ஆச்சார்யர்.

வராக சரமச் ஸ்லோகத்தில் “நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை
ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல்
ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்” என்று சொல்வதில்
இருந்து எந்த வழியில் சென்றாலும் இறுதி மூச்சின் போது அவனை நினைக்கவேண்டும் என்றும்,
நாமாக நினைக்கலாம், அல்லது அவன் நமக்காக நினைக்கிறான் என்றும் கொள்ளலாம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால்,
ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும்,
முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது
எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும்
எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும்,
தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும்,
அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு
இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ள வேண்டும். ,

————————-

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை)
ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும்

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யா விட்டாலும்,
பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு
சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா
என்று எம்பெருமான் கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக் கொண்டு
சேவை செய்து இருக்கிறீர்களா என்றும்,
உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

————-

குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை,
ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன்,
களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன்,
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே (திருமாலை 25)

ஆழ்வார், பிராம்மணன் என்ற குலத்தில் பிறந்திருந்தும்,
அது கர்மயோகம் செய்வதற்கு தரும் தகுதிகளை தான் இழந்துவிட்டதாகவும்,
தனக்கு ஆத்ம ஞானம் இல்லை என்றும்,
தான் பரமாத்மாவிடம் உண்மையான பக்தி உடையவன் இல்லை என்றும்
அதனால், தான் மகிழ்வதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று கதறுகிறார்.
அரங்கன் தனக்குத் தகுதி முதல் தொடங்கி எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.

இதற்கு முன் உள்ள பத்து பாசுரங்களில் எம்பெருமான் தனக்கு செய்த பேருதவிகளை சொன்னார்.
சென்ற பாசுரத்தில், தனக்குள்ள பக்தி கள்ளத் தனமானது என்றார்.
இந்த உடலோடு சம்பந்தம் நீங்கி, பரமபதம் அடைந்து நித்யமும் அவனை அனுபவிக்க தனக்கு ஒரு சாதனமும் இல்லை,
அதனால் இந்த பகவத்விஷயத்தை இழந்து விடுவோமோ என்று ஆழ்வார் தவிக்கிறார்.

இதைக் கண்ட பெரியபெருமாள், பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் இவர்கள் பின்பற்ற வேண்டிய
கர்ம, ஞான பக்தி வழிமுறைகள் சாஸ்திரங்களில் உள்ளன என்றும்,
மற்றவர்கள், விலங்குகள் எல்லாவற்றிக்கும் வழிமுறைகளான சரணாகதி, திருநாம சங்கீர்த்தனம்
போன்றவைகளும் உள்ளனவே என்றும் ஆழ்வாரிடம் கூறுகிறார்.
இந்த உபாயங்களை பின்பற்ற தனக்கு தகுதி தொடங்கி ஒன்றும் இல்லை என்றும்
தம்மிடம் கர்ம, ஞான பக்தி யோகங்களில் எதுவும் இல்லை என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

இதற்கு முன் பாசுரங்களில் தனக்கு பக்தி மற்றும் ஞானம் இருப்பதாக ஆழ்வார் சொன்னது,
எம்பெருமானை இந்த உலகில் அவனை அனுபவிக்க அவன் அருளியவையே தவிர,
அவை பரமபதம் சென்று அவனை அனுபவிக்கவல்ல சாதனம் அல்ல என்றும் கூறுகிறார்.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை
குளித்து-ப்ராஹ்மணனாக பிறந்தவன் மூன்று விதமான குளியல் செய்யவேண்டும் என்றும் ,
மூன்று அக்னிகளை வளர்க்க வேண்டும், என்றும் வேதசாஸ்திரங்கள் சொல்லும் எதையும் பிறந்த நாளில் இருந்து
தாம் செய்ததில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

மூன்று விதமான குளியல் என்பது, தினமும் மூன்று வேளைகளில் செய்யும் ஸ்னானம்,
கிரஹண காலங்களில் செய்யும் ஸ்னானம்,
மற்றும் பிராயச்சித்தம் செய்யும் முன் செய்ய வேண்டிய ஸ்னானம் ஆகும்.
இந்த மூன்று விதமான ஸ்னானங்களில் ஒன்றை செய்து மற்றதை செய்யாமல் இருக்க முடியாது.
இவை அனைத்தும் பலவித கர்மங்களை செய்வதற்கான தகுதியை கொடுக்கும். (கர்ம யோகத்திற்கான தகுதி).
ஆழ்வார் சாஸ்திரங்கள் சொல்லும் கர்மங்களை பின்பற்றுவது ஒருபுறம் இருக்க அவைகளுக்கு உண்டான தகுதியை கொடுக்கும்
குளிப்பது போன்ற செயல்களை பின்பற்றுவதே ஒரு அரியதான செயலாக உள்ளது என்கிறார்.
ஸ்னானம் போன்று உயரிய சொற்களை சொல்வதற்கும் தகுதி இல்லை என்பதை தெரிவிக்கவே
ஸ்னானம் என்று சொல்லாமல் குளித்து என்று ஆழ்வார் சொல்கிறார்.

மூன்று அனலை ஓம்பும்
சாஸ்திரம் மூன்று அக்னிகளை ஆராதிக்க வேண்டும் என்று சொல்கின்றது.
இங்கும் ஆழ்வார் அக்னி என்ற உயர்ந்த வார்த்தையை கூறாமல், அனல் என்ற சாதாரணமான வார்த்தையை கையாள்கிறார்.
இப்படி ஆழ்வார் அனல், குளித்து என்று சாதாரண நடைமுறை வார்தைகளை சொல்வது,
அவர் தூய்மையான வார்த்தைகள் கூட அறிந்தவர் அல்லர் என்பதை எம்பெருமானுக்கு தெரிவிக்கவே ஆகும்.

ஒரு அனலை ஆராதிப்பதே அரிது ஏனெனில், போதும் என்ற நிலை எதற்கு கிடையாதோ அதற்கு அனல் என்று அர்த்தம்.
அதாவது எவ்வளவு ஆராதித்தாலும் போதாது, மேலும் மேலும் ஆராதிக்க வேண்டும் என்ற தன்மை உள்ள
ஒரு அனலை ஆராதிப்பதே அரிது என்று ஆழ்வார் சொல்கிறார்.
அதுவும் மூன்று அனல்களை ஒரு அந்தணன் ஆராதிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுவது
மிக கடினம் என்பது ஆழ்வார் வார்த்தைகளால் தெரிகிறது. குழந்தைக்கு சோறும் நீரும் கட்டிக்கொண்டு
செல்லும் தாயை போல் அந்தணன் அனலை ஆராதிக்க உமியும் சமித்தும் (தீயில் இட குச்சிகள்)
சுமந்து கொண்டு எப்பொழுதும் திரிய வேண்டி உள்ளது என்கிறார்.

குறிகொள் அந்தணமை
உச்சரிக்கும் மந்திரத்தின் பலன் கிடைக்க மிகவும் ஜாக்கிரதையாக செயல் படுத்தவேண்டியது
அந்தண்மை என்ற ப்ராஹ்மண்யம். இதில்
மந்திரங்களை உச்சரிப்பதில் தவறு செய்வது,
மந்திரங்களை சொல்லும்போது செய்யும் செயல்களில் தவறு செய்வது,
பயன்படுத்தும் பொருள்களில் அளவு மற்றும் குணத்தில் உள்ள குறை,
செய்ய வேண்டிய காலத்தில் உண்டான மாற்றத்தினால் ஏற்படும் குறை,
ஆராதிக்கப்படும் தேவதையை மாற்றுவதால் உண்டான குறை
என்று ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் மந்திரத்தின் பலன் கிடைக்காமல் போகும்.
இது அஞ்சலி செய்தால் மன்னிப்பது போன்று எளிமையான ஒன்று அல்ல என்பதால்
இதனை பின்பற்றுவதும் ஆழ்வாருக்கு சிரமம் என்று அவர் கூறுவது தெரியவரும்.

தன்னை ஒளித்திட்டேன்
அப்படிப்பட்ட ப்ராஹ்மண்யம் தன்னிடம் இல்லை என்பதை ஒளித்திட்டேன் என்று கூறும் ஆழ்வார்,
இவரால் அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்க்கும் அவப்பெயர் உண்டாகும்படி தான் இருப்பதாகவும் கூறுகிறார்.
இதனால் ஆழ்வார் பெரியபெருமாளுக்கு தெரிவிக்கும் விஷயம் , கர்மயோகத்திற்கு தகுதியான ப்ராஹ்மண்யமே தன்னிடம் இல்லை,
அதனால் கர்மயோகம் என்பது தன்னிடம் ஏற்பட வழியே இல்லை என்பதே ஆகும்.

என் கண் இல்லை
கர்ம யோகம் ஏற்பட வழி இல்லை என்றால், ஞான யோகத்திற்கு முயற்சி செய்யலாமே என்று
பரமாத்மா -பெரியபெருமாள் ஆழ்வாரிடம் வினவிய போது, ஞான யோகத்திற்கு தகுதியான, தன்னை (ஜீவாத்மா / ஆத்மாவை)
பற்றிய உண்மையான அறிவு தன்னிடம் இல்லை என்பதை என்கண் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன்னிடம் ஞான யோகத்திற்கு தகுதி இல்லை என்பதால், தன்னிடம் ஞான யோகத்திற்கான வழியும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

கர்மயோகம் இல்லை என்ற போதே அதனால் ஏற்படக்கூடிய ஞான யோகம் கிடையாது என்று ஆகிவிட்ட பிறகும்
ஆழ்வார் ஏன் மீண்டும் தனியாக ஞான யோகம் ‘என்கண் இல்லை‘ என்று சொல்ல வேண்டும் என்று
கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை உரையாசிரியர் கூறுகிறார்.
சென்ற பிறவியில் கர்மயோகம் செய்து அதனால் ஏற்படக்கூடிய ஞானயோகம் பிறப்பதற்கு முன்னால்
மரணம் ஏற்பட்டு அதனால் அடுத்த பிறவியின் ஆரம்பத்திலேயே ஞானயோகம் ஏற்பட்டு இருக்கலாம்
என்ற ஒரு சாத்திய கூற்றினையையும் ஆழ்வார் மறுக்கிறார்.

நின் கணும் பத்தன் அல்லேன்
கர்மயோகம், மற்றும் ஞானயோகம் இவற்றிற்கு தகுதி இல்லை என்றால் பக்தியோகம் செய்வது தானே
என்று பெரியபெருமாள் கேட்டபோது அதற்கு தகுதியான பரமாத்மாவின் மேல் அன்பு தனக்கு சிறிது கூட இல்லை
என்பதை நின் கணும் பக்தன் இல்லை என்று சொல்லி பக்தியோகத்திற்கும் வழி இல்லை என்று கூறுகிறார்.

முன்பு போல், கர்மயோகம் மற்றும் ஞான யோகம் இவை இரண்டும் இல்லை என்றால் அவற்றினால் ஏற்படும்
பக்தியோகம் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டுமோ எனில்,
பற்பல பிறவிகளில் கர்ம, ஞான யோகங்களை செய்தவர்களுக்கு, பக்தியோக ஆரம்ப விரோதிகளான
பாவங்கள் நீங்கப்பட்டு கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆவார்கள் என்று
நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன என்பதை முன்பு பார்த்தோம். ஆழ்வார் அதுவும் தனக்கு இல்லை என்கிறார்.

இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லனவாகையால்,
ஆழ்வார் இந்த மூன்றுக்கும் தேவையான தகுதிகளே தன்னிடம் இல்லை என்பதை தனி தனியாக கூறி உள்ளார்.

மற்றவர்கள் கர்ம, ஞான பக்தி யோகங்கள் பற்றி
“குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை,
நின் கணும் பத்தன் அல்லேன் ” என்ற இந்த முதல் இரண்டு வரிகளால் தொண்டரடிப்பொடி ஆழ்வார்
தனக்கு கர்ம, ஞான பக்தி மார்க்கங்களில் ஒரு சிறிது தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.
இனி மற்ற ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சுவாமி நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் ” (திருவாய்மொழி 5.7.1) என்பது
கர்மயோகமும், ஞான யோகமும் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக தெரிகிறது.

“கறவைகள் பின் சென்று” என்ற திருப்பாவை (28) பாசுரத்தில் ஆண்டாள்
“அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்” என்று சொல்வதை,
‘அறிவு இல்லாத”, “அறிவு ஒன்று இல்லாத ” மற்றும் “அறிவு ஒன்றும் இல்லாத” என்ற பிரித்து
கர்ம,ஞான மற்றும் பக்தி மார்க்கங்கள் ஒன்றும் தனக்கு இல்லை என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார்.

ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் தன்னுடைய ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில் (22) ஸ்லோகத்தில்
‘ந தர்ம நிஷ்டோஸ்மி, நசாத்மவேதி, ந பக்திமான்” என்று சொல்வதின் மூலம்
‘கர்மயோகத்தில் நிலை நின்றவன் இல்லேன், ஆத்ம ஞானமும் உடையவன் இல்லேன்,
உன்னுடைய திருவடித்தாமரைகளில் சிறிதும் பக்தி உடையவன் இல்லேன்’ என்று சொல்லி,
ஒரு சாதனமும் இல்லை, உன்னுடைய திருவடித் தாமரைகளே சாதனம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவே
தன்னிடம் கைமுதல் ஒன்றும் இல்லை அல்லது ஆகிஞ்சன்யம் என்ற வைஷ்ணவ தத்துவத்தை விளக்குகிறார்.

களிப்பது என் கொண்டு
சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதற்கு பெரியபெருமாள்,
அறிவாளிகள் செய்வதுபோல், ஒரு சாதனமும் இல்லை என்ற வெறுமையை, ஆகிஞ்சன்யத்தை, சொல்வதும் மிகவும் அரிது,
அப்படி ஆழ்வார் சொன்னபடியால், தம்மை அடைவதில் ஒன்றும் குறை இல்லையே என்று சொன்னார்.

அதற்கு ஆழ்வார், தன்னிடம் கர்ம, ஞான பக்தி யோகங்கள், இல்லையே என்ற வருத்தமும் இல்லை,
கீதையில் (18.66) ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனையே பற்றும்படி
சொன்னதற்கும் தன்னிடம் உள்ள ஆகிஞ்சன்யமும் ஒரு அனுதாபமும் இல்லாத ஒன்றாக இருப்பதால்,
தான் எதை கொண்டு ஆனந்தப்படுவது என்று கலங்குகிறார்.

நம்பீ
அப்படியானால் ஆழ்வாரை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பெரியபெருமாள் உரைத்தபோது,
ஆழ்வார், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும், அவனிடம் எல்லா கல்யாண குணங்களும் இருக்கின்றன என்றும்
அவற்றைக்கொண்டு தனக்கு பேற்றை அருளலாமே என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்தில் என்று சொன்ன பிறகு,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் திருப்பாவை (28) பாசுரத்தில் சொன்னாற்போல்,
எம்பெருமானின் குண பூர்த்தியை, நம்பீ என்று தன்னுடைய வெறுமையை சொன்னபின் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.

கடல்வண்ணா
அவனுடைய உயர்ந்த, சீலம் போன்ற குணநலன்கள் தேவையில்லை என்றும்
அவனுடைய வடிவழகே தனக்கு பரமபதம் அளிக்க போதும் என்பதை கடல்வண்ணா என்பதால் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

கம்பராமாயணம் யுத்த காண்டம், (6718) பாடலில்,
“கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி ” என்று சொல்லி, ஒரு கடலோடு மற்றொரு கடல் போட்டி போட்டு
சாய்ந்தாற்போல் பெரியபெருமாள் சயனித்து இருப்பது என்கிறார்.
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன், (15), என்றும்
ஆதரம் பெருக வைத்த அழகன் (16) என்றும் பாடிய ஆழ்வார் தனக்கு சரணாகதி அளிக்கும் பெரிய பெருமாளுக்கு
வடிவழகும் குணங்களும் குறைவின்றி இருப்பதால் தான் இழக்க வேண்டியது இல்லை என்பதை சொல்வதாக பொருள்.

கதறுகின்றேன்
ஆழ்வார் இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்

தன்னிடம் கர்ம ஞான பக்தி மார்கங்களுக்கு தேவையான தகுதிகள் இல்லாது இருப்பதும்,
பெரியபெருமாளுக்கு குணங்களும், வடிவழகும் நிறைந்து இருப்பது தெரிந்தும்,
கர்ம ஞான பக்தி யோகங்களில் நின்றவர்கள் தங்களுக்கு பலன் கிடைக்காத போது
கதறுகின்ற மாதிரி கேட்பவர்கள் காதுகளுக்கு கர்ணகொடூரமாக சப்தம் செய்வதாகவும்,
சிறிய பக்தி செய்பவர்களுக்குக்கூட கருணை காட்டும் எம்பெருமான் ஆழ்வாருக்கு கருணை காட்ட வில்லையே என்று
பெரியபெருமாளுக்கு அவப்பெயர் அல்லது தாழ்வு வருமாறு செய்து விட்டதாகவும்,
தான் எம்பெருமானுக்கு பல்லாண்டு மட்டுமே பாடி இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை
இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

அளித்து எனக்கு அருள் செய் கண்டாய்
ஆழ்வார் பெரியபெருமாளிடம், தனக்கு அவரிடம் அனுதாபம் முதல் எல்லாம் பிறக்க அருள் செய்யவேண்டும் என்பதை
‘அளித்து‘ என்பதால் தெரிவிக்கின்றார்.
அதற்கான கருணை அவனிடம் இருப்பதால் அவன் அருள் பொழிய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

அரங்க மா நகருளானே
தான் ஏன் ஆழ்வாருக்கு, தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று பெரியபெருமாள் கேட்டதற்கு,
குறையற்றவர்களை மட்டும் அருள்வது என்று இருந்தால் அவன் பரமபதத்தில், முக்தர்களையும் நித்யர்களையும்
அருள் செய்து கொண்டு அங்கேயே இருந்து இருக்கலாம்,
திருவரங்கத்திற்கு வந்து சயனித்து இருக்கும் கிடையழகையும், சீல குணங்களையும் காட்டுவது,
தன் போன்றவர்களுக்கு அருள் பாலிக்கவே என்று சொல்லி, ஆழ்வார் இந்த பாசுரத்தை நிறைவு செய்கிறார்.

———-

ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதைப் பார்த்தோம்.

ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக் கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரிய பெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம்.

பூக்களைக் கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது,
மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும்,
எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.

போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே,
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26

எல்லாக் காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும்,
குற்றமற்ற வார்த்தைகளைக் கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும்,
உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி,
தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால்,
தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.

இங்கு பூதத்தாழ்வார் பாடிய
“போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த,
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது,
மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.

திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும்
பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது.
ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது.
போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.

போதெல்லாம் போது கொண்டு
எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று,
அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அவனைத் தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம்.
முன்பு சொன்னது போல் விஷ்ணு தர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு
எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.

இந்த சொற்தொடரில்,
முதல் போது, என்பது காலத்தையும்,
இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.

போதெல்லாம் உன் பொன்னடி புனைய மாட்டேன்
எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை.
எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே
ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள்
செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது.
கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை
நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான்.
ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும்
அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும்
இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.

இப்படி, ஒரு காலத்தில்-ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன்.
அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பூக்களைக் கொண்டு சேவை செய்தவர்கள்
எம்பெருமானுக்கு பூக்களைக் கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால்
விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு
வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு.
அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான
மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.

ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள்.
தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால்,
எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும்,
திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு
அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.

கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி
அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக் கொண்டு
ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர்.
அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.

நம்மாழ்வார் புஷ்ப கைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய
திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம்.
காலை மாலை கமல மலர் இட்டு என்றும்,
கள் அவிழும் மலர் இட்டு என்றும்,
விண்டு வாடா மலர் இட்டு என்றும்,
தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.

தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்
இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும்,
குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று
பெரியபெருமாள் சொல்லிய போது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்த போதிலும்,
அவை அழகானவைகளாக இருந்த போதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக
இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் விஷ்ணு தர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு,
மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும்
எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்
உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்ய முடியாவிட்டாலும், நெஞ்சத்தைக் கொண்டு எம்பெருமானிடம்
அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவிய போது,
ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார்.
விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும்
பகவத் கீதை (2.62) சொன்னபடி,
ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும்,
அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.

இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் -62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன்,
தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன்,
பொறாமையின் பிறப்பிடம்,
எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிட வேண்டிய கர்வத்தை உடையவன்,
காமத்துக்கு வசப்பட்டவன்,
ஏமாற்றுபவன்,
க்ரூரமான செயல்களில் ஈடு பட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கி யுள்ளவன்.
நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக் கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்? என்று கூறுகிறார்.

அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து,
எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்,
தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ
அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அது தன்னாலே, ஏதிலேன்
மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள்
போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக,
ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.

ஏதிலேன் அரங்கற்கு
இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 18 வது பாடலை எடுத்துக் கொண்டு
எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார்,
இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை,
கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன்.
உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி,
நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய பெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல்,
ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.

எல்லே
எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும்,
தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ,
தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும்,
தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார்.
எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார்.
மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார்.
பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய,
மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.

என் செய்வான் தோன்றினேனே
விஷ்ணு தத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை
அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார்.
தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்.
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று
ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

————

ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான
தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும்,
இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும்
இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும்,
நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி,
தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன்,
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27

வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால்,
மலைகளை தள்ளிக் கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி,
அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப் போலவும்,
தான் இல்லை என்றும்,
மரங்களைப் போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய்
எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு
நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற் செயல்களையும்
ஆழ்வார் செய்யா விட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரிய பெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.

குரங்குகள் மலையை நூக்க
குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது,
எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும்
ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும்,
மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன
என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.
மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக் கொண்டு,
சேவையை ஏற்றுக் கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும்,
அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல்
சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.

மலையை நூக்க
மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக் கொண்டு வருவது என்று சொல்வது,
முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக் கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக் கூட்டம் மலையை பெற்றுக் கொண்டு
அப்படியே அடுத்து வரும் வானரக் கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கை மாறி மாறி,
கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.

குளித்து
இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும்,
தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது
ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார்.
எம்பெருமான் சீதா பிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானர வீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு,
மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.

குளித்து …. அணிலம் போலேன்
இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூச வேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போட வேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி
மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன.

(குளித்து)
இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும்,
அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டி முடிக்க முடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல்,
இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
குரங்குகளால் பூச முடியாமல் போன, ராம காரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன்
அணில்கள் ஓடி ஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
தாம் என்பதற்கு
சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில்
ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு,
பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன.

(புரண்டிட்டோடி )
அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு,
இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான்,
அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டன.
இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல்,
அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன.

(தரங்க நீரை அடைக்கல்)
தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும்,
தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின.

(உற்ற)
அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை

(சலம் இலா அணிலம் )
அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும் போது
அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால்,
அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத் தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார்.
எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.

சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு,
ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல்,
குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள
நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.

எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து
எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத
ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாது தான்.
அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது
பாக்கியம் இல்லாதவன் செய்வது.
பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று
எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே.
அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

அணை கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்,
தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)

மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலைகட்டி மறு
கரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)

மரங்கள்போல் வலிய நெஞ்சம்
இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார்,
இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார்.
இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும்,
ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது.
மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும்,
ஆழ்வார் தன் நெஞ்சம் அதை விட வலியது, எதனாலும் அசைக்க முடியாது என்று கொள்ளலாம்.

வஞ்சனேன்
இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து
இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார்.
உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல்,
ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.

நெஞ்சு தன்னால்
அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து,
அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.

அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே
ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால்,
அது ஆட்செய்தல் என்று ஆகாது.
அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால்
அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக் கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

அளியத்தேன்
இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில்
ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும்
அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல்,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ,
என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.

அயர்க்கின்றேனே
இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும்,
தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2),
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

——–

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி,
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்,
நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா,
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.– திருமாலை –28

பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி,
தேஜோ மயமான பரம பதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக,
சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலை மேல், கோபித்துக் கொண்டு வந்து அருளினான்.
இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ?
நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல்,
எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.

குரங்குகள், அணில்கள் சிறு கைங்கர்யங்கள் செய்த போது, அவைகளிடம் இருந்த நல்ல எண்ணம் கூட தங்களிடம் இல்லையாகில்,
கஜேந்திர ஆழ்வான் என்ற யானை பொய்கையில் இறங்கிய போது, அதன் காலை, முதலை பிடித்துக்கொண்டதால்,
தளர்வுற்று, எம்பெருமானை தன்னை காப்பாற்றுபவனாக நினைத்தது போல் தாங்கள் நினைத்தது உண்டா என்று
எம்பெருமான் கேட்டதற்கு சென்ற பாசுரங்களில் சொல்லியது போல், இங்கும் அது தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

திருமாலையில் ஒரு சில பாசுரங்களில் திருவரங்கன் திருநாமம் நேரடியாக வருவது இல்லை,
அது போல் அமைந்த ஒரு பாசுரம் இது.

ஆழ்வார், கஜேந்திர மோக்ஷம் என்ற இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு பிரித்துப் பார்த்து
எம்பெருமானின் பெருமையை விளக்குகிறார்.

உதவி செய்த எம்பெருமான் எப்படிப்பட்டவர்
உயர்ந்த பரமபதத்தில் இருப்பவர்; யாராலும் அறிய முடியாதவர்;
எவருக்கும் உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எந்த நிர்பந்தம் எதுவும் இல்லாதவர்.
நித்ய ஸூரிகளால் ஆராதிக்கப்பட்டு வருபவர்

உதவி பெற்ற கஜேந்திரன் என்ற யானைக்கும், உதவி செய்தவருக்கும் உள்ள சம்பந்தம்
ஸ்ரீதேவி தாயாருக்கோ, பூமி பிராட்டிக்கோ, அனந்தாழ்வாருக்கோ, விஷ்வக்ஸேனருக்கோ, கருடனுக்கோ இருக்கும்
சம்பந்தம் போல் இந்த யானைக்கு எம்பெருமானிடம் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் கிடையாது

உதவி பெற்றவரின் எதிரியின் (முதலையின்) பலம் -திறமை
இராவணன், ஹிரண்யகசிபு, சிசுபாலன் போன்ற பலமான எதிரி இல்லை, முதலையை வெறும் நீர்ப்புழு என்கிறார்.

உதவி செய்த எம்பெருமான் இந்த தருணத்தில் எப்படி இருந்தார்
எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் எம்பெருமான், கோபத்தை தன் மேல் ஏற்றிக் கொண்டு வந்தார்

உதவி எங்கே செய்யப்பட்டது
பரமபதத்தில் இருந்து, அதாவது இருந்த இடத்தில இருந்தே சக்கரத்தாழ்வாரை அனுப்பி உதவி செய்து இருக்கலாம்;
ஆனால், எம்பெருமான் மடுக்கரைக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து உள்ளார்.

உதவி ஏன் அப்படி, அப்பொழுது செய்யப்பட்டது
எம்பெருமானிடம் தனக்கு உள்ள சம்பந்தத்தை ஒப்புக்கொள்ளும் தன்மை உடைய,
தன்னை தன்னால் காத்துக்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்த,
ஆபத்தில் அல்லது அபாயத்தில் உள்ள தம் அடியவர்களை காப்பதில் உள்ள அவசரம், அன்பு,
அவர்களுக்கு காட்டும் பாரபட்சம், அவர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் உள்ள பிரியம்.
இந்த கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

உம்பரால் அறியலாகா ஒளியுளார்
உம்பர் என்று சொன்னது சத்திய லோகம் முதலிய மேல் உலகங்களில் வாழும் பிரம்மன் போன்ற தேவர்களை குறிக்கும்.

அறியலாகா என்பது
மிகுந்த ஞானம் பெற்ற பிரம்மன் சிவன் போன்றவர்களும் அறிய முடியாதது என்று சொல்கிறது.
பகவத் கீதை (16.14), ‘நானே ஈஸ்வரன், நானே எல்லா போகத்தையும் அடைபவன், இயற்கையாகவே சித்தனாக இருப்பவன்,
இயற்கையிலேயே பலவான் ஆகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பவன் நானே” என்று சொல்கிறபடி,
தானே ஈஸ்வரன் என்ற நினைப்பிலுள்ள பிரம்மன், சிவன் போன்றவர்களும் அடைய முடியாததாக மட்டும் இல்லாமல்,
அறிய முடியாததாகவும் உள்ளது பரமபதம் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு அதிகமான ஞானம் இருந்தாலும், தங்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை என்ற
ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பதும்,
ஆணவத்துடன் உள்ளவர்களுக்கு பரமபதம் இடம் இல்லை என்பதுமே காரணம் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.

அடுத்து விஷ்ணு புராணம் 1.9.55ல்
பிரம்மா, தேவர்களாலும், முனிவர்களாலும், சங்கரனாலும், தன்னாலும்
யாதொன்றை அறிய முடியாத இருக்குமோ அதுவே பரமேஸ்வரனான விஷ்ணுவின் பரமபதம்
என்று சொல்வது எடுத்துக் காட்டப்படுகிறது.

ஒளியுளார் என்று சொன்னதில்
உள்ள ஒளி என்பது பரமபதத்தையும் ஒளியுளார் என்பது அங்கு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானை குறிக்கும்.
சந்தோபநிஷத் (3.13.7)ல், பரமபதத்தில், எம்பெருமானால் படைக்கப்பட்டவை மற்றும் அவரின் படைப்புகளால் படைக்கப்பட்டவை
என்ற எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளதும், தனக்கு மேற்பட்டது ஒன்று இல்லாததுமான இடத்தில் இருந்து ஒளிவிடும் பரஞ்சோதி என்றது,
ஒளி என்ற சொல்லுக்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.

மஹாபாரதத்தில் ஆரண்ய-வன பர்வத்தில், (136.18.23),
மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் இடம், சூர்யன், அக்னி இவைகளில் ஒளியை விட மிக அதிகமானதும்,
அந்த ஒளியின் தேஜஸால், தேவர்களும், அசுரர்களும் கூட அதைக் காண முடியாததாக உள்ளது என்றும்,
அங்கு போனால் மறுபடி இந்த உலகிற்கு திரும்புவதில்லை என்றும் சொல்கிறது.

ஒளியுளார் , என்றது
மூன்றாம் திருவந்தாதியில் (51) சொன்ன கலங்காப் பெருநகரம் என்று சொல்லப்பட்ட பரமபதத்தில்,
நித்ய ஸூரிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவன், சம்சாரத்தில், துன்புற்று இருக்கின்ற
ஒரு அடியானை காப்பாற்றுவதற்காக வந்தார்.

ஆனைக்காகி
இப்படி எல்லை இல்லாத மேன்மை உடையவர், அரைகுலைய, தலைகுலைய (அவசரமாக) காரியம் செய்ய வந்தது,
பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான், போன்ற உயர்ந்தவர்களுக்காகவோ என்று பார்த்தால்,
அது இல்லை என்றும், ஒரு விலங்கிற்காக இப்பாட்டு பட்டார் என்கிறார்.
உதவின எம்பெருமானின் உயர்வையும், துன்புற்ற யானையின் தாழ்வையும் ஒப்பிட்டால்,
மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியும் என்பது கருத்து.

ஒரு அடியானை காப்பாற்ற வேண்டும் என்றால், எம்பெருமான் தன்னுடைய மேன்மையையோ,
அடியானின் தாழ்ச்சியையோ பார்ப்பது இல்லை.
அவர்களுடைய ஆபத்தையும், அவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒழிக்க முடியாத சம்பந்தத்தையும் மட்டுமே
பார்க்கிறான் என்பது இந்த கஜேந்திர வரலாற்றில் இருந்து தெரிய வரும்.

செம்புலால் உண்டு வாழும் முதலை மேல்
அடியவரின் தாழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அவன் எதிரியையாவது யார் என்று பார்த்தால்,
அது தன்னை விட தாழ்வான மீன்களை உணவாக கொண்டு
‘வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல ‘ (திருவாய்மொழி 4.5.1) என்கிறபடி,
எல்லா உலகங்களையும் ஆழ்கின்ற எம்பெருமானை போல தனக்கு நிறைவு வந்துவிட்டதாக நினைக்கும்
ஒரு நீர்ப்புழுவை எதிர்த்து அல்லவோ வந்தார் என்கிறார்.

விஷ்ணுபுராணம் (1.9.35)ல் பிரம்மன் சொல்வதாவது,
தேவர்களுக்கு துன்பம் வந்தபோது, மேலானவர்களுக்கும் கீழானவர்களுக்கும் என்று எல்லோருக்கும் ஈஸ்வரனாகவும்,
அசுரர்களுக்கு சத்ருவாகவும் இருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை சரண் அடையுங்கள் என்பதாகும்.
பிரம்மன் தனக்கும் மற்ற தேவர்களுக்கும் அசுரர்களாலும் அரக்கர்களாலும் துன்பம் வரும் போது,
அந்த துன்பங்களைப் போக்க வேறு புகல் இடம் இல்லாமல், எம்பெருமானை சரண் அடைந்தபோது,
அவர், ஹிரண்யகசிபு, இராவணன் போன்ற வலிமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை
அழியச்செய்தான் என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை.
ஒரு ஆனை கூப்பிட்டதால், ஒரு முதலைமேல் கோபம் கொண்டு மிகத் தாழ்மையான அதனை ஒரு எதிரியாக
கருதிக் கொண்டு அவசரமாக ஓடி வந்தது ஆச்சரியமே என்று உரை ஆசிரியர் சொல்கிறார்.

சீறி
எம்பெருமான் எப்போதும் சாந்தமானவர்.
இதை தன் விஷயமாக இருந்தால் எம்பெருமான் சாந்தம் உடையவராக இருப்பர்
என்று இராமாயணம், அயோத்தியா காண்டம், 1-10ல் சொல்லப் படுகிறது.
ராமாயணம், ஆரண்ய காண்டம், (34-24)ல்,
இராமன், அரக்கர்களைக் கொல்வதற்காக கடும் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் என்றும்,
அப்படி கோபம் கொண்டவர், பிரளயத்தில் வரும் கோபாக்னியைப் போல் காண வொண்ணாதவராக இருந்தார் என்றும் சொல்கிறது.
தன் இயல்பான சாந்தியை மாற்றிக்கொண்டு, தன்னிடம் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு, இராமாயணம் யுத்த காண்டத்தில், (59-136)ல்
இராவணனால் காயப்படுத்தப்பட்ட வானரர்களில் சிறந்தவரான ஹநுமானை பார்த்தபோது,
இராமன் கோபத்திற்கு வசப்பட்டான் என்று கூறுகிறது.
அதாவது
அடியார்களிடத்தில் யாராவது அபசாரத்தைக் கண்டால்,
எம்பெருமான் கோபத்திற்கு வசப்பட்டு விடுவான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி கோபத்திற்கு வசப்படும் போது, எதிரி எவ்வளவு தாழ்ந்தவன் என்பதை பார்க்க முடியாது என்பது
உண்மை என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

கொடியவாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு என்று திருமங்கையாழ்வார்
தன் பெரிய திருமொழியில் (5.8.3) சொன்ன இந்த பெருங்குணத்தை தங்களுக்கு தஞ்சமாக கொண்டார்கள்.

வந்தார்
இருந்த இடத்தில இருந்து சங்கல்பத்தால் எதிரியை அழிக்கக்கூடிய சக்தியை பெற்ற எம்பெருமான்
அவசரம் அவசரமாக மடுக்கரைக்கு ஓடி வந்தது, ஆச்சர்யமே என்று ஆழ்வார் சொல்கிறார்.
உலகத்தை அழிப்பதாக இருந்தால், இருந்த இடத்தில இருந்து சங்கல்பித்து அழிக்கலாம்,
ஆனால் அடியவர் ஒருவரின் துயரை துடைக்க, தான் நேரடியாக வந்து தன் கையாலேயே அழிக்காத போது,
அவன் சீற்றம் – கோபம் தணியாது என்பது கருத்து.
அன்றைக்கு யானைக்கு ஓடி வந்து உதவியது தனக்கே உதவியது போல் ஆழ்வாருக்கு இருந்தது.

முதலையின் வாயில் தானே அகப்பட்டது போல், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 5.8.3ல்
கொடியவாய் விலங்கு, என்று சொன்னதும் இன்னொரு மேற்கோள் ஆகும்.
திருமங்கை ஆழ்வாருக்கு வலிக்காவிட்டால், அவர் கொடிய வாய் விலங்கு என்று பாடி இருக்க மாட்டார்.
அதே போல் தான் தொண்டரடிபொடி ஆழ்வாரும் எம்பெருமான் யானைக்கு உதவியது தனக்கே உதவியது போல் பாடி உள்ளார்.
அதாவது
அடியார்களில் ஒருவருக்கு உதவியது தமக்கு உதவியது போல் என்று எண்ணிக் கொள்ளாவிட்டால்
அது வைஷ்ணவம் ஆகாது என்பது இதில் இருந்து வரும் கருத்து.
எம்பெருமான் ஆற்றங்கரைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் அவன் வந்தான்.
அதேபோல், அவனிடம் சரண் அடைந்தவர்க்கு துயரம் என்றால் நிச்சயம் வருவான்.

நம் பரமாயது உண்டே
மேலே சொன்னவை, எம்பெருமானுக்கு அடியார்களிடத்தில் எப்பொழுதும் அதீத பிரியமும், கருணையும் இருப்பதும்
அவன் அவர்களுக்காக ஒரு தலை பட்சமாகவும் நடப்பான் என்பதும் புரியும்.
அப்படி நம்மை காப்பாற்ற அவன் இருக்கும்போது நாம் ஏன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கேட்பதாக
இந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன.

மேலும் உரையாசிரியர், எம்பெருமானின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்து சொல்கிறார்.

எம்பெருமான் தன்னுடைய மேன்மையை பார்ப்பவனாகவோ
அடியார்களின் சிறுமையைப் பார்ப்பவனாகவோ
நம்முடைய பாவங்களின் அதிகமான அளவைக் கண்டு, இன்னும் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று
கால தாமதம் செய்வதனாகவோ இருந்தால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும்
அவன் அப்படி இல்லை என்றும் கூறுவது தான் இந்த ‘நம் பரமாயது உண்டே“.

நாய்களோம்
ஆழ்வார் நம்முடைய தாழ்வான நிலையை பார்க்கையில், கஜேந்திரன் என்ற அந்த யானை மிக உயர்ந்த இடத்தில,
அதாவது, சனகர் போன்ற ரிஷிகள் ஸ்தானத்தில் வைக்கும்படி அல்லவோ இருக்கிறது என்கிறார்.
திறந்து கிடைக்கும் வீட்டில் நுழைந்தாலும் விரட்டி அடிக்கும் நாயின் நிலையில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
நாயின் உரிமையாளன் தொட்டாலும் உடனே குளித்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று
நினைக்கும் அளவில், நாம், நாயை போன்ற தாழ்வை உடைய நீசர்கள் என்பது கருத்து.

சிறுமை ஓரா எம்பிராற்கு
நாம் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் நம்முடைய தாழ்ச்சியை பார்க்க கண் இல்லாதவன் என்று
எம்பெருமானை ஆழ்வார் கூறுகிறார்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவிஞ்ஞாதா சஹஸ்ராம்ஸு என்ற இரண்டு திருநாமங்கள் வருகின்றன.
அவைகளுக்கு அர்த்தம் சொல்லும் போது,
அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
குணங்களை ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வார்கள்.

இதையே சற்று மாற்றி அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
அந்த குற்றங்களையே குணங்களாக மாற்றி, அதையும் ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும்
சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வதுண்டு.
எல்லாம் அறிந்தவன் என்று அறியப்படும் எம்பெருமானை எதற்காக தோஷங்களை அறியாதவன் என்று
ஆழ்வார் சொல்கிறார் என்று கேட்டு கொண்டு,
முண்டகோபநிஷத் (1-1-10) சொல்வதை முதலில் சொல்லி உரையாசிரியர் கீழ்கண்ட விளக்கம் தருகிறார்.
எந்த பரம புருஷன் எல்லா பொருள்களுடைய ஸ்வரூபத்தையும், குணத்தையும் (ஸ்வாபம்) அறிகிறானோ,
எவனுடைய சங்கல்பம் ஞானமயமாக இருக்கிறாதோ என்று சொல்வதன் மூலம்,
பரம்பொருள் எல்லாவற்றையும் அறிகிறான் என்பதே முண்டகோபநிஷத் 1.1.10ல் சொல்லப்பட்டது.
எம்பெருமான் அடியவர்களின் தோஷங்களை கண்டு கொண்டு, அவற்றை பொறுத்து உதவி செய்வபனாக
தன்னை நினையாமல், தோஷங்களை காண கண்ணிட்டு அவற்றை பாராமலோ,
அவற்றை நன்மைகளாக – குணமாகக் கொண்டோ அருள் பாலிக்கிறான் என்று பொருள்.

எம்பிராற்கு
எம்பிராற்கு என்பதை தனியாக எடுத்துக் கொண்டு விளக்கத்தை காண்போம்.
இப்படி நம் குற்றத்தை கண்டுகொள்ளாமல், ஆபத்தையே காரணமாகக் கொண்டு நம்மை காப்பது என்று
நமக்காக வகுத்த எம்பெருமான் என்பதை எம்பிராற்கு என்று சொல்கிறார்.
எம் என்பது தன் ஸ்வரூபத்திற்கு தகுந்த ஸ்வாமியாக இருப்பதையும்,
பிராற்கு என்பது உதவி செய்பவன் என்றும் கொள்ளலாம்.

ஆட் செய்யாதே
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்வது அல்லவோ தகுந்தது.
நம்முடைய காரியத்தை எம்பெருமான் தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்ட பின்னர்,
நாம் நம்முடைய சரீரம், உடம்பின் உறுப்புகள் (இந்திரியங்கள்) நமக்கு என்று விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யத்திற்கு
உட்படுத்துவது அல்லவோ தகுந்த செயல். அப்படி செய்யாமல், இருக்கிறேனே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

என் செய்வான் தோன்றினேனே
இங்கு, ஆழ்வார், பயனற்ற பிறப்பை உடையவன் ஆனேன் என்று சொல்கிறார்.
பிறவி எடுத்த பயன் எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே, ஆனால், தான் அதை செய்யாமல்,
தன்னுடைய பிறப்பு வீணானதே என்று சொல்கிறார்.

இதற்கு மேற்கோளாக,
“லக்ஷ்மணன் வனவாசத்திற்கே பிறந்தவன் என்றும், இராமனுக்கு சேவை செய்யவே பிறந்தவன்” என்றும்,
லட்சுமணனுக்கு சுமித்ராதேவி சொன்ன வார்த்தைகள் (இராமாயணம் அயோத்திய காண்டம் 40.5) சொல்லப்படுகின்றன.

அதே போல் (இராமாயணம் அயோத்திய காண்டம் 31.25) லக்ஷ்மணன் இராமனிடம்
“தேவரீர் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தங்களுக்கு எல்லாவிதமான தொண்டுகளும் செய்வேன்” என்று
சொன்னவற்றை ஆழ்வார் நினைவு படுத்தி, அப்படி லக்ஷ்மணனைப்போல் எம்பெருமானுக்கு சேவை செய்ய
ஆசை கொண்டு இருந்தால் பிறந்தேன் என்று சொல்லலாம்.
தம்முடைய பிறப்பு உயிர் இல்லாத, அறிவு இல்லாத ஜடபொருட்கள் போல் ஆனதால், தோன்றினேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

முன் பாடலில் சொன்ன மாதிரி, தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்,
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், எம்பெருமானுக்கு சேவை செய்யாமல்
வீணாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

———–

பாசுரம் 29
ஊரிலேன் காணி யில்லை உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்று இலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்,
ஆர் உளர் களை கண் அம்மா அரங்கமா நகரு ளானே. (29)

ஆனைக்கு துன்பம் வந்தபோது, அது தனக்கு உதவுவதற்காக எம்பெருமானைப் பற்றி நினைத்த நினைப்பு ஆழ்வாருக்கு இல்லையாகில்,
எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்களாவது உண்டா என்று எம்பெருமான் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கும் பாசுரம்.

சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற திவ்யதேசங்களில் பிறப்பு, திருப்பல்லாண்டு பாடுதல் போன்ற
கைங்கர்யம் செய்யும் காணியாட்சி இருந்தால், எம்பெருமான் அவர்களை ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால்,
அது போல் உண்டா என்று எம்பெருமான் கேட்க,
அவை இல்லை என்று ஆழ்வார் இந்த பாடலில் மறுக்கிறார்.

எம்பெருமான் நித்ய வாஸம் செய்யும் திருத்தலங்களில் பிறக்கவோ, வாசம் செய்யவோ இல்லை;
அவைகளில் கைங்கர்யம் செய்யும் பாக்கியமும் தனக்கு இல்லை; அந்த திவ்யதேசங்களில் உறவுக்காரர்கள் இல்லை;
வேறு எவரையும் தெரியாது; இந்த பூமியில், புகல் அற்றவர்களுக்கு தஞ்சமான எம்பெருமானின் திருவடிகளையும் சரணாகதியாக பற்றவில்லை;
எல்லோருக்கும் தலைவனானவனே, கார்மேகம் போன்ற நிறம் உடையவனே, எனது கண்ணனே, உன்னை கதறி கூப்பிடுகிறேன்,
உன்னைத் தவிர வேறு யார் என்னுடைய குறையை தீர்க்க உள்ளார் என்பது பாடலின் பதவுரை ஆகும்.

ஊரிலேன்
இங்கு ஊர் என்று குறிப்பிடுவது, சாதாரண ஊர் இல்லை; சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் ஆகும்.
இதற்கு பின் வரும் வார்த்தைகளில் ஆழ்வார் சொல்லும் காரணமே இது சாதாரணமான ஊர் இல்லை என்பதை தெரிவிக்கும்.
ஆழ்வார் தான் பிறந்த மற்றும் வசிக்கும் ஊர் மோக்ஷ உபாயம் தருவதாக இல்லை என்று சொல்கிறார்.
எல்லா ஊர்களும் மோக்ஷம் தரும் என்றால் எல்லா மக்களும் மோக்ஷம் அடைவார்கள்.
அதற்கு எந்த விதமான ஆதாரங்களும் (பிரமாணங்கள்) இல்லை.

ஆனால் திவ்யதேசங்களுக்கு அந்த சிறப்பு உள்ளது என்பது,
வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில், (1.20) இராமபிரானிடத்தில் “நாங்கள் உங்கள் பிரதேசத்தில் வசிப்பவர்கள்
என்பதால் உங்களால் பாதுகாக்கப்படுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். நீங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, காட்டில் வாழ்ந்தாலும் சரி,
நீங்கள் மக்களுக்கு எஜமானன், எங்கள் அரசன்” என்று தண்டகாரண்ய முனிவர்கள் சொல்வது.
உத்திர காண்டத்தில், (109.22) அயோத்தியில், ஒரு உயிரும் காணப்படவில்லை, எல்லா உயிர்களும் இராமனை பின் தொடர்ந்தனர்
என்று குறிப்பிடப்பட்டு உள்ளதும் இது போலவே;
கருட புராணம், 11 ஸ்லோகத்தில், இந்த தேசம், மிக புனிதமானதாகவும், மனிதர்களை நற்கதிக்கு அழைத்து சொல்வதாகவும்
அவர்களுடைய எல்லா இஷ்டங்களையும் நிறைவேற்றி தருவதாகவும் உள்ளது என்று கூறுவதும்
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் மோக்ஷ உபாயம் என்று நிரூபிக்கின்றன.

மேலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடலான கற்பார் ராமபிரானை அல்லால் என்ற பதிகத்தில், முதல் (7.5.1) பாசுரத்தில்,
“புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன்” என்று
சொல்லி அயோத்தியில் வாழும் அத்தனை ஜீவராசிகளையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதாக சொல்கிறது.
அதே போல், குலசேகராழ்வார் தனது பெருமாள் திருமொழியில், (10.10) “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று
ராமபிரான் அயோத்தியில் உள்ள அனைத்தையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதை பாடி உள்ளார்.
ஆக, திவ்யதேச வாசம் மோக்ஷம் கொடுக்கும் என்பது திண்ணம். ஆகையால் இங்கு ஊர் என்று சொன்னது திவ்யதேசமே.

காணி யில்லை
திவ்யதேசங்களில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு பல்லாண்டு பாடுதல், நந்தவனம் கட்டி, திருமாலை தொடுத்து
எம்பெருமானுக்கு சமர்ப்பித்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்வதற்காக உரிமை நிலமாக, காணியாட்சி நிலங்கள் பெற்றதுண்டோ;
தானமாகவோ அல்லது சொந்தமாக வாங்கியோ சில சிறு நிலங்கள் திவ்ய தேசங்களில் உள்ளனவோ;
அதன் பொருட்டு திவ்யதேசம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்தது உண்டோ என்று
திவ்யதேச சம்பந்தம் பற்றி எம்பெருமான் வினவ
அதற்கும் தன்னை உய்விக்க வழி இல்லை என்ற கருத்தில், காணி இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

உறவு மற்றொருவர் இல்லை
ஊரும் இல்லை, காணியும் இல்லை என்றால், உறவு மனிதர்களாவது ஒரு திவ்யதேசத்தில் இருக்கிறார்களா
அல்லது திவ்யதேசத்தில் உள்ளவர்களுடன் மந்திரம் சொல்லி கொடுத்தல் அல்லது கேட்டு கொள்ளுதல் அல்லது
பெண் கொடுத்தல், பெண் கொள்ளுதல் மூலம் உண்டான தொடர்போ இருந்தால்,
அது கொண்டு எம்பெருமான் ஆழ்வாரை ரக்ஷிக்கலாம் என்று சொல்ல, ஆழ்வார் அவைகளும் இல்லை என்கிறார்.
உறவு இல்லை என்பதால், நெருங்கிய உறவினர்கள் இல்லை என்றும், மற்றொருவர் இல்லை என்பதால்,
தூரத்து உறவினர்களோ, நண்பர்களோ, பார்த்து பேசிய நபர்களோ திவ்யதேசங்களில் தமக்கு இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

பாரில்
அப்படியானால் எங்கு வசிக்கிறீர்கள் என்று எம்பெருமான் கேட்க, எல்லையற்ற துன்பங்கள் கொடுக்கும்,
ஒருவர் உண்ணும் உணவை எழுவர் பறித்துக் கொள்ளும் கொடுமையுடன், ஒருவர் உடையை எழுவர் கவர்ந்து
கொள்ளும் இந்த பூமியில் வசிக்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மூன்றாம் திருவந்தாதியில்(51), பரமபதத்தை பேய்ஆழ்வார், கலங்கா பெருநகர் என்று வர்ணிக்கிறார்.
காமம், க்ரோதம் போன்ற கலக்கங்கள் இல்லாத பெரு நகரம் என்றும் அங்கு கவலையே இல்லாமல் இருக்கலாம் என்றும்
அவர் பரமபதத்தைப் பற்றிச் சொல்கிறார்.
ஆக பரமபதத்தை தவிர அத்தனை இடங்களும், மனிதர்களை கலங்கும்படி செய்யும் ஊர் ஆகும் என்பது ஆழ்வார் சொல்லும் கருத்து.

நின் பாத மூலம் பற்று இலேன்
வேறு கதி அற்றவர்களுக்கும் துணையாய் இருக்கும் எம்பெருமானின் திருவடிகளுக்கும் தனக்கும்
எவ்வகையிலும் தொடர்பு இல்லை என்கிறார்.
இங்கே உரையாசிரியர் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் (38-33) இருந்து காகாசுரன் சரித்திரம் சொல்லப் படுகிறது.
காகாசுரன் தந்தையாலும், தாயாலும், மஹரிஷிகளாலும் தேவர்களாலும் கைவிடப்பட்ட போது, மூன்று உலகங்களையும் சுற்றி திரிந்து
பிறகு ராமபிரானையே சரண் அடைந்தான். அபச்சாரம் செய்து பிரம்மாஸ்திரத்திற்கு இலக்கான காகாசுரனுக்கும்
சரணாகதி அளித்த எம்பெருமானின் திருவடிகளுக்கு ஆகாதவன் ஆகிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி எல்லா வழிகளிலும் நன்மை இல்லாத வகையில் ஆழ்வார் இருப்பதால், எம்பெருமானின் திருவுள்ளமும் அவரை
பெறும் பேற்றை ஆழ்வார் இழந்து விட்டதாக நினைக்க அதற்கு பதில் கூறும் வகையில் அடுத்த பதம் உள்ளது.

பரமமூர்த்தி
ஆழ்வார் தன்னை ரக்ஷித்துக் கொள்ள தன்னிடம் ஒரு உபாயமும் இல்லை என்று சொல்லி, ஆனால் எம்பெருமானிடம்
ஏராளமாக உபாயங்கள் இருக்கிறன என்றும் கூறுகிறார்.
பரம என்றால், அனைவரிலும் உயர்ந்தவராக உள்ளவர் என்று பொருள். மூர்த்தி என்றால் விக்ரஹம்.
அனைவர்க்கும் ஸ்வாமியாக (தலைவராக) எம்பெருமானே உள்ளார் என்று கூறி, அவனுக்கு அடியவனான ஆழ்வாரை ரக்ஷித்தால் தானே,
அவன் அனைவரையும் காக்கும் பரமமூர்த்தி என்று அறியப்படுவார் என்றும், மேலும், அடியவர்களை ஏற்றுக் கொள்ளா விட்டால்,
அவனுடைய தலைமை மாண்புக்கு ஒரு குறை வந்து விடுமோ என்ற கேள்வியையும்
எம்பெருமான் முன் ஆழ்வார் வைப்பதாக உரை ஆசிரியர் சொல்கிறார்.
அதற்கு எம்பெருமான் அடியவர்களும் தாங்கள் எம்பெருமானுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்பதை
உணர வேண்டாமா என்று பதில் உரைக்க,
ஆழ்வார், அடியவர்கள் தாங்கள் எம்பெருமானுக்கு அடிமை என்பதை மறந்து இருந்த காலத்திலும்,
பிரளய காலத்தில் ஒரு பொருளாக இவர்களை தன்னுள் அடக்கி வைத்து இருந்ததையும் யாராலும் மாற்ற முடியாது என்றதாலும்,
எம்பெருமான், இவர்களிடம் தான் அறிந்த உறவு முறை காரணமாக இவர்களை திருத்தி இவர்களுடன் உள்ள உறவு முறையை
உணர வைப்பான் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

காரொளி வண்ணனே
எம்பெருமான் ஆழ்வாரின் வார்த்தைகளை கேட்டு, அவரிடமே அவர் சித்தி பெற என்ன வழி என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார் எம்பெருமானின் அழகே வழி என்கிறார்.
திருமாலை 16ம் பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ சொன்னபடி முதலில் ஒரு அடியவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கி,
ஆர்வம் பிறந்த பின் அவனை அடைய வழியாகவும் இருப்பது அவன் அழகு என்கிறார்.
அந்த வடிவழகு அவனிடம் இருக்கும் போது தான் கைங்கர்யசித்தி பெற குறையில்லை என்கிறார்.

கண்ணனே
அப்படிப்பட்ட அழகு எட்டா கனியாக பரமபதத்தில் இருக்காமல், ஆழ்வார் போன்ற அடியவர்களுக்காக பல அவதாரங்கள் எடுத்து,
தன்னுடைய எளிமை, நீர்மை போன்ற நற்குணங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பரம மூர்த்தி என்று ஆழ்வார் கூறுகிறார்.
காரொளி வண்ணன் ஆகையால், அடியவர்களுக்கு ஆர்வம் தொடங்குவது முதலாக,
உபாயம் வரை எல்லாமாக இருக்கும் எளிய கண்ணன் என்கிறார்.
மேலும், ஆழ்வார் எம்பெருமானை தங்களுடைய ஸ்வரூபத்திற்கு தகுந்தவராகவும் உள்ளார் என்று கூறி,
எளிமை நீர்மை போன்ற கல்யாண குணங்களுடன், வடிவழகும் சேர்ந்து இருப்பதால் ஆழ்வாரின் கைங்கர்ய சித்திக்கு
ஒரு குறையும் இல்லை என்கிறார்.
என் கண்ணனே என்றும் ஒரு பாடம் உண்டு. இரண்டிற்கும் அர்த்தத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

கதறுகின்றேன்
எம்பெருமானுடைய இந்த பெருமைகளை எண்ணி பக்தி முதலிய மற்ற சாதனங்களை பின்பற்றியவர்கள் அவர்களுக்கு
பலன் கிடைக்க தாமதம் ஆகும் போது எப்படி கதறி எம்பெருமானை கூப்பிடுவார்களோ
அது போல் தானும் கதறி கூப்பிடுவதாக ஆழ்வார் கூறுகிறார்.

ஆர் உளர் களைகண்
ஆழ்வார், தாம் இப்படி கதறி கூப்பிடும்போது, எம்பெருமான் ரக்ஷிக்காமல் காலம் தாழ்த்துவது,
வேறு யாராவது ஆழ்வாரை ரக்ஷிப்பார் என்று எம்பெருமான் நினைப்பதாலா, ஒன்றும் இல்லாத ஆழ்வார் தான்
தன்னை ரக்ஷித்துக்கொள்ள முடியுமா, தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை தன்னைவிட அறிந்தவர் யாரும் இல்லாதபோது,
அவர்கள் தாம் வந்து ஆழ்வாரை காப்பாற்ற முடியாமா என்று பலவாறாக ஆழ்வார் கேட்பது ஆர் உளர் களைகண் என்பதில் விளக்கப்படுகிறது.

அம்மா
எம்பெருமானின் உடமைப் பொருள் அழிந்தால் அது அவருக்குத் தானே நஷ்டம் என்று ஆழ்வார் கலங்கி,அம்மா என்கிறார்.

அரங்கமா நகர் உளானே
உடையவனாக எம்பெருமான் தனக்கு அருகில் இல்லாமல் இருந்தாலாவது தான் கதறி அழாமல் இருக்கலாம்,
ஆனால் அவன் அருகிலேயே, இந்த பூவுலகத்தில் எம்பெருமானை பெற வேண்டும் என்ற ஆசையோடு
யாராவது வருவார்களா என்று திருவரங்கத்தில் (கோவிலில்) காத்துகொண்டு இருக்கும் போது,
தான் எப்படி கதறி அழாமல் இருக்க முடியும் என்று ஆழ்வார் வினவுகிறார்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ திருக் கடிகை என்னும் ஸ்ரீ சோளசிம்மபுரம் —

November 28, 2022
மூலவர்– யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)

உற்சவர்–  பக்த வத்ஸல பெருமாள் (தக்கான்)-பக்தோசித பெருமாள்

தீர்த்தம்–   அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்

விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)-ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.

நாமாவளி – ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ

காட்சி கண்டவர்கள்–ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற  பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

 ——————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை யிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. –பெரிய திருமொழி -8-9-4-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.–பெரிய திருமொழி -8-9-9-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

——————————————————————

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–108 திருப்பதி அந்தாதி-பிள்ளைப் பெருமாளையங்கார்.-

———
 
வழித்தடம்:–அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும் கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.
———
யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது.
குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப்
பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம்.
அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம்.
திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம்.
இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம்,

என் கண்கள் கடாட்சம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட உயர்ந்தது என்று.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாள் பாடியபடி

நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை  நாமும் பெறுவோமாக.
————
 
முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
பாசுரம்:
 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே – பெரிய திருமொழி (1731)
 
பாசுரம் பதவுரை:
 
மிக்கானை – சிறந்தவனும்
மறை ஆய் விரிந்த விளக்கை – வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை – என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர் – கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன் மலையை – ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை – தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த – கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை – அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
 அடைந்து உய்ந்து போனேன்-.
 
மிக்கான் – மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. 
“மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு;
“வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது;
ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். 
இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. 
ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. 
அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. 
(எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. 
ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகார வாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்;
வாச்ய வாசக பாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். 
ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன.
பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும்.
தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம்.  பரமதயாளு என்றபடி.
கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. 
ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். 
இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். 
சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.
————-
இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.
சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக்
காண வேண்டுமென்ற ஆவலால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர்.
அவர்கள் ஏன் இம்மலையைத் தேர்ந்தெடுத்தனர் என்றால்
முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக்
குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம்.
எனவே கடிகை நேரத்தில் தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால்
இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில்
கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார்.காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க
அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க,
அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார்.இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக

மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம்.எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்.
1) சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது.
2) இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம்
கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி
கண்கொள்ளாக்காட்சியாகும்.3) தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.4) சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.5) சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

6) இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.
7) ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார்.
அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய,
துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து
தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும்.
8) ஸ்ரீ  தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள்  பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம்.
இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார்.
ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார்.
இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது
கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது.
இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
 
இவரைப் போன்று ஸ்ரீ  எறும்பியப்பா  ஸ்வாமிகள்  என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

9) முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

10) ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாள மாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

11) கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும்
அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை.

12) அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே
மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும்.

13) ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில்
இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.

14) இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர். ஏனெனில்
முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில் கொண்டிருந்தாராம்.

இப்போது சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது. தொட்டாச்சார்யார் தான் ஒரே

கோவிலில் இருந்த சிவனைப் பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று கூறுவர்.

15. இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.- பெரிய மலையில் திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 1305 படிகள் ஏறிச் சென்று தான், யோக நரசிம்மர் அருளைப் பெற முடியும். வடக்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டு மிக அழகாக கோவில் அமைந்துள்ளது. –இவரைத் தரிசித்து விட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

16-யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் இவருக்கே சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 
17-சிறிய மலைக் கோவில்:- சிறிய மலையில் அஞ்சனையின் மைந்தனான அருள்மிகு ஆஞ்சநநர் சுவாமி திருக்கோவில் கொண்டுள்ளார்.
இம்மலை 350 அடி உயரமும், 406 படிகளைக் கொண்ட மலைக் கோவிலாகும்.
மலையின் மீது அரங்கநாதர், இராமர், சக்கரத்தாழ்வார்ஆகியோர் சன்னதிகளும், தக்கான் தீர்த்தக்குளமும் அமைந்துள்ளது.
இராம பக்தரான அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமாள் யோகாசனத்தில் யோக ஆஞ்சநேயராக நான்கு கரங்களில், சங்கு சக்கரங்களுடன் மேற்கு நோக்கி யோக நரசிம்ம சுவாமியை சேவித்தவாறு அருள்கின்ற காட்சியானது வேறு எங்குமே காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
 
18-சிறிய மலை : பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது
எழில்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு கைகள் உள்ளன.
ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இருகைகளில் ஜபமாலை உள்ளது.
சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.
பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம்.

19. பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல் போடுவது. சில
தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட
முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது)

20. மலை மேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர்.
தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

21- அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)

22) ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

23) கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என
நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து
நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் – இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
 
———-

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ வரதேஸிக பௌத்ர ரத்னம் *

ஸ்ரீனிவாஸ ஸூரி பதபங்கஜ  ராஜஹம்ஸம் *

ஸ்ரீமத் வாதூலகுலவாரிதி பூர்ண சந்த்ரம் *

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ  குருவர்யம் அஹம் ப்ரபத்யே **

பக்தர்களுக்கு அருள் பாலிப்பதன் மூலம் பல வித விந்தைகளைச் செய்வது பெருமாளின் திருக்குணம். ஸ்ரீநரசிம்ம அவதாரத்தினை நிகழ்த்தி பக்தனுக்கு அருளியவர். இந்தக் கலியுகத்திலும் பக்தனுக்குக் காட்சி அளிப்பதில் பெருமாள் சளைத்தவரல்லர் என்பதற்கு வைணவ குரு, ஆசார்யன் ஸ்வாமி தொட்டாச்சாரியாருக்கு சோளிங்கரில் அளித்த காட்சியே சாட்சி. தொட்டாச்சார்யார் வம்சாவளியில் 23ஆவது பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ கே.கே.சி.பி. ஸ்வாமி சிங்கராச்சார், வழிவழியாக வழங்கிவரும் அந்த நம்பிக்கையைச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்.

ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் வரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். கருடனோ இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதைத் தன் கையில் உள்ள ஞான முத்திரையால் அறிவிக்கிறார்.

மூலவராகவும், உற்சவராகவும் இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. சோளிங்கரில் இந்தப் பெருமாளை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண பாக்கியம், சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆகிய நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் திருப்பணியை ஸ்வாமி தொட்டாச்சார்யார் வம்சத்தினர் தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகளாகச் சிறப்புறச் செய்துவந்ததாகத் தெரிவித்த இப்பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி, செண்டை மேளம் முழங்க பெருமாள் திருமாசி உத்ராட உற்சவத்தைத் தற்போது இளைஞர்கள் பங்கு கொண்டு செவ்வனே நிகழ்த்துகிறார்கள்” என்றார்.

இதில் நிறைவு நாளான அன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஸ்வாமி தொட்டாச்சாரியார் திருக்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருளி திருமலைக்கு (பெரியமலை) எழுந்தருளித் தாயார், பெருமாள் சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்தருளி- பெருமாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

பின்னர் பெருமாளுடன் அலங்காரத் திருமஞ்சனம், திருமொழிச்சாற்று, தீர்த்த விநியோகம் ஆகியவை நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதக்கானுடன் நான்கு வீதிப் புறப்பாடும், இரவு ஆஸ்தான மண்டபத்தில் திருவாய்மொழிச் சேவை, சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமந்திரமும் நவவித ஸம்பந்தமும்–

November 24, 2022

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தனியன்.

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யகளுக்குள், ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்ற வடக்குத் திருவீதிப்பிள்ளை திருக்குமாரர் பிள்ளை உலகாசிரியர், ஆசார்யர் நம்பிள்ளை அனுக்ரஹத்தால் ஸம்சாரம் (போகி) என்ற பாம்பில் கடியுண்ட நம்போன்ற ஜீவர்களுக்கு மருந்தாக, ஜீவன் ஜீவித்து உஜ்ஜீவனம் அடையவேண்டும், எம்பெருமானது திருவடிகளை அடையவேண்டும், நல்வழியில் நடக்கவேண்டும் என்ற ஒரே பிரயோஜனத்தை திருவுள்ளத்தில் கொண்டு 18 ரஹஸ்ய க்ரந்தங்களை அநுக்ரஹித்தார்.

பலர் பல பல பாசுரங்களை இயற்றலாம். ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்தோத்திரங்களும் எழுதலாம். ஸ்லோகங்கள் பல. இதிகாச புரணங்களும் பல. அதற்குண்டான வியாக்யானங்களும் பல. ஆனால் புராணங்களைச் சொல்வதைக் காட்டிலும், ஆழ்வார்கள் தாங்கள் தங்கள் பாசுரங்களைப் பாடினதைக் காட்டிலும், திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம் என்ற மூன்று ஆகியவற்றை ரஹஸ்யத்ரயம் என்பர். அதையே தன் கருத்தில் கொண்டு, அதற்காகவே முமுக்ஷுப்படி போன்ற பல அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்த பிள்ளை உலகாரியனுக்கு தனிச் சிறப்பு.

 அதற்கு வியாக்யானம் அருளிச்செய்த விஸதவாக் சிகாமணியான பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் தனி இடம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்துக்கு அனுகுணமான பல அர்த்தங்களை சொல்வதாகவே அமைந்துள்ளது. தத்வத்ரயத்தை என்னவென்று காட்டுவதற்காக சில கிரந்தங்கள். ரஹஸ்யத் த்ரயங்கள் என்னவென்று சொல்வதற்கு சில க்ரந்தங்கள் ஸாதித்தார்.. அதற்குமேலே நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யரின் வைபவம் என்ன என்று சொல்வதற்காக ஸ்ரீவசனபூஷணம் என்ற சிறந்த க்ரந்தம். அந்த கிரந்தம்தான் தலையாய க்ரந்தம். அந்த தலைக்கு  அங்கங்கள் போலே பதினேழு ரஹஸ்ய க்ரந்தங்கள்.

இப்பொழுது நாம் பார்க்கப் போவது நவவித ஸம்பந்தம் ஒன்பது விதமான உறவு எனும் அழகான கிரந்தம். எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கக்கூடிய  ஒன்பது வித ஸம்பந்தங்கள் உறவுகளைச் சாதிக்கிறார் அந்த உறவுகளை எதை வைத்துச் சொல்கிறார் என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும்.

திருமந்திரம்:

மூன்று ரஹஸ்யகளுக்குள் ப்ரதம ரஹஸ்யம் அஷ்டாக்ஷரம் – திருமந்திரம்.  ஓம் நமோ நாராயணாய! எட்டு எழுத்துமந்திரம்.  மூன்று பதங்கள். ஓம் என்று ஒரு எழுத்து, நம: என்று இரண்டு எழுத்து. நாராயணாய என்று ஐந்து எழுத்து.

ஓமித்யக்3ரே வ்யாஹரேத் நம இதி பஶ்சாத் |

நாராயணாயேத் யுபரிஷ்டாத்।  ஓமித்யேகாக்ஷரம் ।
நம இதித்3வே அக்ஷரே
 ।  நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி ।
ஏதத்3வை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பத3ம்
।–என்று திருமந்திரத்துக்குத் தனிச் சிறப்பு.

அந்த எட்டு எழுத்து, மூன்று பதங்களுக்குள் எத்தனை அர்த்தம் இருந்துவிடமுடியும் என்று நமக்குத் தோன்றலாம். அதில் இல்லாத அர்த்தங்கள் ருக், யஜுர், ஸாம வேதத்திலோ மற்று எதிலும் தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் அவைகளில் உள்ள அர்த்தங்கள் இந்த மூன்று பதங்களுக்குள்ளே அடக்கம். அந்தர்கதம். உள்ளேயே இருக்கிறது என்கிறார்கள் பூர்வர்கள்.

ருஜ: யஜூகும்சி ஸாமாநி ததைவ அதர்வணானி ச ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் … வாங் மய…  அனைத்தும் அந்த எட்டெழுத்துக்குள் அடக்கம்.  அனேக ஸாஸ்திரங்களும், மூன்று வேதங்களும் சொல்லிய அர்த்தங்கள் எல்லாம் இதில் உள்ளது. அப்போழுது இந்த எட்டெழுத்துக்கு எவ்வளவு சீர்மை இருக்கவேண்டும். திருமந்திரத்தை அலகலாகப் பிரித்து.  ஒவ்வொரு எழுத்தும் பகவானுக்கும் நமக்கும் உள்ள ஒவ்வொரு உறவைச் சொல்வதை விவரிக்கிறார்..

நம் சொந்த பந்தங்கள், பெற்றோர், பிள்ளை ஆகிய அனைத்து உறவுகளும் நிலையில்லாதது. இன்றைக்கு இருக்கும், நாளைக்குப் போகலாம்.  புதுப்புது உறவுகள் ஏற்படலாம். பிரியலாம். அதோடு உறவுகளுக்குள் சண்டை இல்லாமல் இருந்ததில்லை. பிதாவுக்கும் புத்திரனுக்கும் கூட பிரச்சினை இல்லாமல் இருந்ததில்லை. தாய்க்கும் தனயனுக்கும் அப்படியே.

ஒழிக்கவொண்ணா உறவு–இப்படித்தான் நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவா?. ஒரு உறவு இரண்டு உறவைப் போலேயா. நிலையில்லாததா என்ற சந்தேஹம் வரலாம். இதைப் போக்கிவிடவேண்டும் என்பதற்காக நம் பூர்வாசார்யர்கள் பகவானுக்கும் நமக்கும் இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாத ஒன்பது ஸம்பந்தம் என்று சொல்வர்கள். ஒரு நாளும் யார் எந்த முயற்சி எடுத்தாலும் இந்த உறவை அறுக்க முடியவே முடியாது.

பத்தன், முக்தன், நித்தியன் இம்மூவருக்கும்–பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாவான ஸம்ஸாரிகளுக்கும் ஒன்பது உறவுகள்.. ஜீவாத்மாவில் மூன்று வகை:

 1. பத்தன், (ஸம்ஸாரத்தில் தளையுண்டு நிற்பவர்)
 2. முக்தன், (ஸமாஶ்ரயணம் செய்துகொண்டு ஆசார்யன் க்ருபையால் பகவத் திருவடி ஸம்பந்தம் பெற்று மோக்ஷம் அடைந்து பரமபதம் சேர்ந்தவர்கள்)
 3. நித்தியர்,பெரியவரான திருவனந்தாழ்வான், பெரிய திருவடியான கருத்மான் எனும் கருடன், விஷ்வக்ஶேனர் ஆகிய இவர்கள் வைகுண்டத்தில் பெருமாளோடுகூட எப்போதும் இருப்பவர்கள்.  (நித்திய ஸூரிகள் அஸ்ப்ருஷ்ட ஸம்சாரகர்கள்) – ஸம்ஸாரத் தொடர்பே இல்லாமல் இருப்பவர்கள்).

பத்தர், முக்தர், நித்தியர் ஆகிய மூவருமே ஜீவாத்மாக்கள். இம்மூவருக்கும் பகவானுக்கும் உள்ள நவவித ஸம்பந்தம் எவை என்பதை பார்க்க இருக்கின்றோம்.

நித்தியர்களும் நாமும்:–ஸ்ரீ பிள்ளைலோகசாரியார் இந்த ஒன்பது வித ஸம்பந்தம் சொல்கிறார் என்றால் அது பத்தர்களான ஸம்சாரிகளுக்கு மட்டுமல்ல. முக்தர், நித்தியர் ஆகிய மூவருக்குமே இந்த நவவித ஸம்பந்தம் உண்டு. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் நித்தியர்களும் நாமும் பகவானோடு ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அவர்கள் அதிக நெருக்கம் என்றோ, நாம் குறைவான நெருக்கம் என்பதில்லை.

நித்தியர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் எத்தனை உரிமை பகவானிடம் உண்டோ அத்தனை உரிமையும் ஸம்ஸாரிகளான பிரம்மா முதல் எறும்பு வரை  அதே ஒன்பதுவித உறவுகளும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் உண்டு. நவவித ஸம்பந்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள ஏற்ற தாழ்வே வித்யாஸம்..

விலக்கமுடியாத உறவு:–யாராலும் இந்த உறவை விலக்க முடியாது. ஸம்சாரி பகவானின் உறவு வேண்டாம் என்று விலகிப் போகப் பார்ப்பான். ஆழ்வார் பாசுரத்தில் சாதிதார்:

“யானொட்டி  என்னுள் இருத்துவமென்றிலன்*

தானொட்டி வந்து எந்தனிநெஞ்சைவஞ்சித்து*

ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து* இயல்

வானொட்டுமோ? இனி என்னை நெகிழ்க்கவே.”–திருவாய் 1-7-7-

“நான் உன்னிடம் நெருங்கி, நெருங்கி வந்து உன்னோடு சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டாமல் மட்டும் இல்லை. விலகி, விலகிப் போனேன். வெட்டிக் கொண்டு போனால் போகட்டும் என்று நீ விடவில்லை. எவ்வளவோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள், இவன் என்னத்துக்கு என்று நினைத்து விடாமல்  பகவான் நெருங்கி, நெருங்கி வந்து என்னை சேர்த்துக் கொண்டானே.” ஏன்கிறார் ஆழ்வார்.

நாஸ்திகர்களும் பகவானுடையவர்களே:-உலகில் ஆஸ்திகர்களும் இருக்கின்றனர், நாஸ்திகர்களும் இருக்கின்றனர். எம்பெருமான் உண்டு, உலகம் உண்டு, வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவர்கள் ஆஸ்திகர்கள். இவை எல்லாம் இல்லை இல்லை என்பவர்கள் நாஸ்திகர்கள். இந்த ஸம்பந்தம் ராவணனுக்கும் உண்டு, சிசுபாலனுக்கும் உண்டு. அறிவுடையவர்களுக்கும் உண்டு. அறிவேயில்லாத மரத்துக்கும் உண்டு. எதிர் அறிவு படைத்தவனான ரவணனுக்கும் உண்டு. விபரீத அதிகாரி ராவணன்.

விபரீத அதிகாரிகளுக்கும் இந்த ஒன்பது உறவு உண்டு. அனுகூலர்களுக்கும் உண்டு. பிரஹலாதனுக்கும் அதே ஒன்பது. இரண்யகசிபுவுக்கும் அதே ஒன்பது உறவு உண்டு. ஆத்திகனுக்கும், நாத்திகனுக்கும் இந்த ஒன்பது உறவும் உண்டு. அனைவருக்கும் நவவித ஸம்பந்தமும் உண்டு.இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வெட்டினோம் என்பதற்காக இந்த உறவை வெட்டி விடமுடியாது.  எம்பெருமான் யாரையும் விலக விட மாட்டார்.

நிரந்தரமான உறவு:-சரி நம்மால் விலக்க முடியாது. ஆனால் பகவானே பார்த்து இந்த ஹிரண்யகசிபோடு நமக்கு உறவு வேண்டாம் என்று வெட்டிவிடுவாரா? என்றால் இல்லை. பகவானும் இந்த ஒன்பது ஸம்பந்தங்களை வெட்ட மாட்டார். ஜீவனுக்கோ வெட்டத் தகுதியில்லை. பக்கத்திலிருக்கும் புருஷாகார பூதையான பெரியபிராட்டியும் விலக்க மாட்டாள். ஏனெனில் பத்தனை பகவானிடம் சேர்த்து வைப்பதற்காகவே பாடுபடுகிறவள் பெரிய பிரட்டியார். நம்மாலும் வெட்ட முடியாது. வேறு யாராலும் முடியாது. ஒழிக்க ஒண்ணாத ஒன்பது வித உறவுகள் என்றார்கள் பூர்வாசாரியர்கள்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

ஆகவே ஒழிக்க ஒண்ணா உறவு நவவித ஸம்பந்தம். ஸ்ரீய:பதியான ரமாபதியுடன் உள்ள ஸம்பந்தம்:

 1. ஸ்ரீயப்பதி  தந்தை   – குழந்தைகள்  (சிருஷ்டிப்பவன்)

பிதா – புத்ர ஸம்பந்தம். நம் ஸம்ப்ரதாயத்தில் சிஷ்டிப்பவர் பெருமாள்.

 1. காப்பாளன் (ரக்ஷ:) – ரக்ஷ்ய: காக்கப்படுபவன் அவன் நம்மைக் காப்பவன், நாம் காக்கப்படுபவர்கள். வேறு உறவுகளோ செல்வங்களோ எதுவும் நமக்குப் பாதுகாப்பில்லை. அவனே ரக்ஷகன். ஏனெனில் அவனே நமக்குப் பிதா.
 2. ஶேஷி (ஆண்டான்)         – ஶேஷன் (அடிமை)  [என்றென்றும் (ஶேஷியின் நன்மைக்கே இருக்க வேண்டும். அவர் பெருமைக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.ஶேஷன். அத்தனையும் அவனுக்கு அடிமை]
 3. பர்த்தா                     – பார்யை (மனைவி)

அனைவரும், புருஷர்கள் கூட பகவானுக்கு பார்யைதான். (ஜீவாத்மவர்க்கம் மூன்றுக்கும்) பகவான் பர்த்தா.   எங்கு திருமணம் நடந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் சைவர்களானாலும், காணாதிபத்தியர்களானாலும் மணமகன் விஷ்ணுவே தான். அழகிய மணவாளன் மாப்பிள்ளை. நாம் எல்லோரும் அவன் பத்தினி – திருமாங்கல்யம் எது?  திருமந்திரமே! ”ஓம் நமோ நாராயணாய” மூன்று பதம் எட்டெழுத்துக் கொண்ட, சரடு  எட்டிழையாய், மூன்று சரடாய் திருமாங்கல்யம். அஷ்டாக்ஷரம்,

பர்த்தா – பார்யை என்பது இன்றுதானே ஏற்படுகிறது. என்றென்றைக்கும் இருப்பது என்று எப்படிச் சொல்வது என்றால் ஸ்ரீராமனுக்கும் (12 வயது) சீதைக்கும், (6வயது) கல்யாணம். ஆனால் இப்பொழுதுதான் திருமணமா?  நாமும் பலபிறவிகள் எடுத்து வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பகவான் விஷ்ணுதான் மணமகன். ஆக என்றென்றைக்கும் இந்த உறவும் உண்டு. (என்றென்றைக்கும் எல்லா ஸம்பந்தமும் உண்டு)

 1. ஞேய: (அறியப்படுகிறான் பகவான்) – ஞாத்ரு  (ஜீவாத்மா- அறிபவன்)       

 ஞாதா – அறிபவர், ஞானம் – அறிவு , ஞேயம் – அறியப்படும் வஸ்து. நாம் அறிவை வைத்து இது புஸ்தகம் என்று  தெரிந்து கொள்கிறோம்.  தெரிந்து கொள்ளப்பட்ட புஸ்தகத்தை ஞேயம் (அறியப்படும் வஸ்து) என்று  சொல்வர். அறிய உதவி பண்ணியது எது? அதற்கு ஞானம் என்று பெயர். தெரிந்துகொண்டது யார்?. நாம். நமக்கு ஞாதா என்று பெயர். இங்கு எம்பெருமான் ஞேய: (அறியப்படுகிறார்). அறியப்படுகிறார் என்றால் யாரால் என்ற கேள்வி வரும். அவர்தான் ஞாதாவாகிற ஜீவாத்மா.

 1. ஸ்வ – ஸ்வாமி ஸம்பந்தம்.

ஸ்வாமி – உடையவன்   (ரமாபதி: – ஸ்ரீமன் நாராயணன்)                     – சொத்து ஜீவாத்மா விலிருந்து அனைத்தும். இந்த வீடு நமக்கு சொந்தம் என்றால் அது நமக்கு சொத்து. அதை உடையவன் நான். அதைப்போல பகவானுக்கு அவனைத் தவிர இந்த ப்ரபஞ்சத்தில் அனைத்தும் அவனுக்குச் சொத்து. சொத்து என்றால் அஃறிணைப் பொருள் அல்லவோ என்ற சந்தேஹம் வரும்.  அஃறிணையாய் இருந்தாலும் உயர்திணைப் பொருளாய் இருந்தாலும் எந்த திணையாக இருந்தாலும் அனைத்தும் அவனது சொத்துக்களே. இப்படி ஜீவாத்மாவையும் அசித்துக்களையும் சமமாகச் சொல்லலாமா என்றால் பரதன் அதற்கு விடையளித்துள்ளான்.

ராஜ்யமும் நானும் ராமனின் சொத்து:–பரதனுக்குக் கைகேயி வரத்தின் மூலம் ராஜ்யத்தை வாங்கி வைத்தாள். கேகய தேசத்திலிருந்து நாடு திரும்பினான். அழுது கொண்டே யிருந்தான் கைகேயி பட்டாபிஷேகம் செய்து கொள் என்றாள். பரதன் சொன்னான், “என்றென்றைக்கும் ராமன் தான் ஸ்வாமி. நானும் ராஜ்ஜியமும் ராமனுடைய சொத்துத் தான், இதை மட்டும் மாற்றவே முடியாது”

ராமனைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வர பரதன் காட்டுக்குச் செல்கிறான். அங்கு பரதன் ஸ்ரீராமனிடத்தில் தெரிவிக்கிறான்,”யவர்தா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரம் தாவத்துவமிக லோகஸ்ய ஸ்வாமித்வம் அநுவர்த்தய“ ராமா உலகில் இமாலயம் இருக்கிற வரைக்கும், கடல்கள் எல்லாம் அலையோடு இருக்கிற வரைக்கும் பூமி இருக்கிற வரைக்கும்,மலை இருக்கிற வரைக்கும், ஜ்யோதிஷ் சக்கரம் சுற்றுகிற வரைக்கும் நீதான் ஸ்வாமி, நான் உன் சொத்து..ராமா நீயும் இதை மாற்ற முற்படாதே. நானும் மாற்ற மட்டேன். இரண்டு பேராலும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டான் பரதன்.

ஏனெனில் நீ ஸ்வாமி நான் தாஸன். “ராஜ்யம்ஸ் ச அஹம் ச ராமஸ்ய.” இந்த ராஜ்யமும் நானும்  உன் சொத்துத்தான். என்றான் பரதன். இதற்கு பூர்வாசார்யர்கள் அதை எந்த விதத்தில் சேர்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். தாயும், தந்தையும், பிதாவும் புத்திரனும் என்றெல்லாம் சேர்க்கலாம். ராஜ்யம் என்பதையும் நான் என்பதையும் எப்படிச் சேர்க்கலாம். ராஜ்யம் என்பது அறிவற்றது. அசித். ‘நான்’ அறிவுள்ளது.  சித்தான பரதனையும் அசித்தான ராஜ்யத்தையும், அறிவுடையதையும், அறிவற்றதையும் எப்படி ஒரே மேடையில் சேர்க்கலாம். இரண்டு பேரும் பகவானுக்கு சொத்து என்ற நிலையிலே தான் சேர்க்க முடியும். பரதனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவ்வளவு சிறப்பு பாரதந்த்ரியத்துக்கென்றே நின்று காட்டினவன் அதனால் அவனுக்குச் அவ்வளவு ஒரு சிறப்பு. . ஸ்வாமி தாஸன் என்ற உறவு எல்லோருக்கும் உண்டு. ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் .

 1. ஆதார: (தாங்குபவர்)      – ஆதேயம் (தாங்கப்படுபவர்கள்). பூவை எடுத்து கூடையில் வைக்கிறோம். பூவைக் கூடை தங்குகிறது. கூடை ஆதரம்.  பூ ஆதேயம். அதுபோல எம்பெருமான் தாங்குகிறார். நாம் தாங்கப்படுகிறோம். இதற்கு ஆதார-ஆதேய ஸம்பந்தம் என்று பெயர்.
 1. ஆத்மா (ஶரீரி)                  – ஶரீரம் (பகவான் – உடல், ப்ரகாரி – ப்ரகார)

 ஶரீர – ஶரீரி ஸம்பந்தம். எம்பெருமான் ஆத்மா. நாம் அனைவரும் எம்பெருமானுக்கு ஶரீரங்கள். இந்த என் ஶரீரத்தை நான் தான் தாங்குகிறேன். இந்த ஶரீரத்துக்கு ஆத்மா தான் சகலமும். இந்த ஆத்மா நினைக்கிறபடி யெல்லாம் இந்த ஶரீரம் நினைக்கும் அல்லவா? ஆத்மாவுக்காகவே இந்த ஶரீரம் இருக்குமல்லவா? ஆத்மாவையும்  ஶரீரத்தையும்  பிரிக்கவே முடியாதா!  உடல் நலிந்தால் பிரியும்.

அனைத்தும் பகவானுக்குச் ஶரீரம்–எம்பெருமான் ஆத்மா. நாம் எல்லோரும் உடல். இதைத்தான் “மமஆத்மா” என்று ஸாதிக்கிறார். ஶரீர ஆத்ம ஸம்பந்தம் என்று பெயரிடுவர்கள். ஶரீர – ஶரீரி ஸம்பந்தம் என்றும் ப்ரகார ப்ரகாரி ஸம்பந்தம் என்றும் சொல்லலாம். அவன் ஆத்மா நாம் அத்தனைபேரும் ஶரீரம்.

இதையும் ராமாயணம் சொல்லிற்று. ஜகத் ஸர்வம் ஶரீரம் தே ப்ரஹ்மம். நாராயணனை அதாவது ராமனைப் பார்த்து உலகில் எல்லோரும் கொண்டாடினார்கள், “ஜகத் அனைத்தும் உனக்கு ஶரீரம் ராமா!  நீதான் ஆத்மா!

இதை வேதாந்தங்கள் எல்லாம் சொல்லிற்று. யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ரித்வீ ஶரீரம் யஸ்ய ம்ருத்யு ஶரீரம். ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்ய ஏக: ஸ; நாராயண: உலகத்தில் அத்தனைக்குள்ளும் தான் ஆத்மாவாக மற்ற அத்தனையையும் தனக்குச் சரீரமாகக் கொண்டுள்ளான்..

ஆழ்வார் சொல்கிறார் – உடன்மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன். உடலுக்குள் உயிர் இருக்கிறாப் போலே ஜகத் அத்தனையும் எம்பெருமான் வியாபித்து இருக்கிறான் ஆத்மாவாக. ஶரீர ஆத்ம ஸம்பந்தம்.

 1. போக்த்ரு       (அனுபவிக்கின்றவன்)         – போக்யம்   (அனுபவிக்கப்படுவது)

நாம் அவனை அனுபவிக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். ஒருவருக்கொருவர் அனுபவிக்கப் படுபவர்களாக இருக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். அவன் போக்தா. நாம் போக்யம்.

எப்படி சந்தனமும் பூவும் போக்யம்.  பூவைத் தலையில் வைத்து நாம் அனுபவிக்கிறோம் அல்லவா. சந்தனத்தை எடுத்துத் தடவிக் கொள்கிறோம். நாம் போக்தா. சந்தனமும் பூவும் போக்யம். ஜீவாத்மா போக்தா. நம் ஆனந்தத்துக்காக அதை எடுத்து அனுபவிக்கிறோம்.

இப்பொழுது கொஞ்சம் இடத்தை மாற்றுங்கள்–பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே–இங்கு போக்யம் ஜீவாத்மா. பூவையும் சந்தனத்தையும் போலே ஜீவாத்மா. இதை எடுத்து தலையில் சூடிக் கொண்டு அனுபவிப்பவர் எம்பேருமான். அவர் போக்தா.. ஜீவாத்மா போக்யம். இங்கும் சந்தேஹம் வரும். பூவும் சந்தனமும் அசித். ஜீவாத்மா சித். எப்படி என்று கேள்வி?பூவை நான் தலையில் சூடிக் கொண்டால் பூ என்றைக்காவது சந்தோஷப் படுமா? படாது. பூவும் சந்தனமும் மற்றவருக்கென்றே  பிறத்தியாரோட சந்தோஷத்துக்கென்றே இருக்கிறதல்லவா?. அதைப்போல ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே இருக்க வேண்டும்.. அதற்குத்தான் இந்த போக்தா – போக்ய ஸம்பந்தம் சொல்லப்பட்டது. அவன் ஆனந்தத்துக்காக, இஷ்ட விநியோகத்துக்கு அநுகுணமாக ஜீவாத்மா இருக்கவெண்டும்.

அஹமன்னாதோ(2) அஹமன்னாதோ(2) ஹமன்னாத: அஹகும் ச்லோகக்ரு– தஹகும் ச்லோகக்ரு- தஹகும் ச்லோக்ருத்  அஹமஸ்மி ப்ரதமஜா ருதா(3) ஸ்ய பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நா(3) பாஇ।–என்று தைத்ரீய உபனிஷத் சொல்லும்.

நான் அன்னம், அவன் அன்னத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆனந்தப்படுகின்றவர். அன்னம் என்பது போக்யம். அன்னாத: என்பது போக்தா. ஜீவாத்மா அன்னத்தினுடைய ஸ்தானம். அன்னாதன் – பகவான் போக்தா. அன்னத்தை அநுபவிப்பவர். அதையே இங்கு ஒன்பதாவது போத்ரு – போக்ய ஸம்பந்தமாக ஸ்தாபித்தார்.

நித்ய ஸூரிகள் கோஷ்டியில் சேரவேண்டுமா:–ரமாபதி: ஸ்ரீமன் நாரயணனை ஒவ்வொரு ஸம்பந்தத்துடன் சேர்த்துக் கொள்க.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

இந்த ஒன்பது வித ஸம்பந்தத்தை மனப்பாடம் செய்து காலையில் எழுந்தவுடன், ஒன்பது உறவுகளையும் ஒரு நாளும் ஒழிக்கமுடியாது என்ற  நினைவோடு தினந்தோறும் சொல்லிச் சொல்லி ஞாபகத்தில் கொள்ளவும். அப்படிச் சொல்லி வந்தோமானால் இந்த எறும்பு கோஷ்டியை விட்டு நாம் நிச்சயம் நித்ய ஸூரிகள் கோஷ்டிக்குப் போகலாம். தைரியம் மனதுக்கு வரும். அவன் ஒருநாளும் கைவிடமாட்டான்.

ஒரு நிச்சயபுத்தி, விஶ்வாஸம் ஏற்படும். சரணாகதியில் மஹாவிஶ்வாஸம் ஒரு அங்கம். எப்ப விஶ்வாசம் வரும் இத்தனை உறவு நமக்கு அவனுக்கும் இருக்கிறது என்பது உறுதியானாலே மஹா விஶ்வாஸம் வரும். மோக்ஷத்தில் ஆசை படைத்த முமுக்ஷுவான ஒவ்வொருவரும் இந்த ஒன்பது ஸம்பந்தத்தைக் கண்டிப்பாக சொல்லி கொள்வர். இந்த ஒன்பதும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரத்தில் இந்த ஒன்பது உறவுகள்–திருமந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒன்பது உறவை  எங்கு எங்கு எப்படிச் சொல்கிறது என்பதை அழகாக ஸாதிக்கிறார். ஒன்பது ஸம்பந்தத்தின் ஞானம் முக்கியம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸூகாசாரியார் கேட்டுக்கொண்டார் “தத்  பாதம் ஸலிலம் யதா வாஸுதேவ கதா ப்ரஶ்ந: பும்ஸாம் திரிம் புநாதிவை” வாஸுதேவனுடைய கதையைப் பற்றி யாரெல்லாம் பேசுகிறார்களோ, பேசுன்னு சொன்னார்களோ, கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் புண்யம் மூவேழு தலை முறைகளுக்கும் புண்ணியம்.

திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம்–எதேபோல என்பதற்கு அவரே ஒரு உதாரணம் சொல்கிறார். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் கங்கை. பார்த்தாலும் புண்யம், தீர்த்தமாடினாலும் புண்யம். அருந்தினாலும் புண்யம். மூவேழு தலைமுறைகளுக்கும் புண்யம்.

பூர்வர்கள் கேள்வி கேட்டனர், “அந்த கங்கைக்குள் நிறைய மீன்கள், திமிங்கிலங்கள், ஜந்துக்கள் இருக்கின்றனவே அவைகளுக்கெல்லாம் புண்யம் வந்து மோக்ஷத்துக்குப் போய்விடுமா? நல்ல கேள்வி. அதுக்குள் வாழ்ந்ததற்காக புண்யம் வராது. மோக்ஷம் கிடைக்காது. கங்கைக்கும் மீனுக்கும் ஸம்பந்தம் இருக்கிறது. ஞானம் வேண்டும். என்ன ஞானம்: இது திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் என்பது ரொம்ப பாவனத்துவமும்,போக்யத்துவங்களும் கூடியது.

ஆகவே கங்கையைப் பார்த்தாலோ, குடித்தாலோ, தீர்த்தமாடினாலோ எனக்கு மோக்ஷம் கிடைக்கும் என்ற ஞானம், அந்த  ஞானத்தோடு தீர்த்தமாடினால் பலன் உண்டு. பகவானுக்கும் கங்கைக்கும் உள்ள உறவை உணர்ந்து குளித்தால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். ஸம்பந்த ஞானம் வேண்டும்.

ஸம்பந்த ஞானம் வேண்டும் என்பதற்காகவே இந்த க்ரந்தத்தை பிள்ளை லோகாசாரியார் ஸாதிக்கிறார். இல்லை யென்றால் இருக்கவே இருக்கிறது ஒன்பது ஸம்பந்தம் என்று கேட்டு விடுவோம் அல்லவா? ஒன்பது ஸம்பந்தத்தை உணர்ந்து அதை அனவரதமும் சிந்தனம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்கும் என்பதில் சந்தேஹம் இல்லை.

இந்த ஒன்பது ஸம்பந்தத்தை திருமந்திரத்தில் இருந்து எடுத்து விளக்குகிறார்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

கடுகைத் துளைத்து எழு கடலை புகட்டி–மேலே ஒவ்வொரு இடமாக இந்த ஸம்பந்தத்தைத் திருமந்திரத்திலே எங்கெங்கு வைக்கிறார் என்பது முக்யம். இருக்கிறதே எட்டெழுத்து அதற்குள் எப்படி ஒன்பது ஸம்பந்தத்தை புகுத்தினார் என்ற சந்தேஹம் வரும்.

ஒரு வரிக்கு ஒரு அர்த்தம் சொல்லலாம், ஒரு பதத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னாலே கிறப்பு. அதற்கு மேலும் ஒரு எழுத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னால் அவரைவிடச் சிறந்தவரில்லை. ஆனால் எட்டெழுத்துக்கு  ஒன்பது அர்த்தம் சொல்லிவிட்டார் ஸ்வாமி பிள்ளை உலகாசிரியர்.

திருக் குறளின் பெருமையைச் சொல்லும்போது “கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பெருமை சொல்வர். இரண்டுவரி, ஏழு பதத்திற்குள் அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.

இரண்டு வரிக்குள் அவ்வளவு அர்த்தம் வைத்தது அங்கு பெருமை. அதுபோல திருமந்திரமான எட்டெழுத்துக்குள் இந்த ஒன்பது ஸம்பந்தம் காட்டியது இவருக்கு அதைவிட பெருமை. வரியே கிடையாது. மூன்று பதங்கள். எட்டெழுத்து. ௐ நமோ நாராயணாய.

திருமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும்:

அகாரத்தால்                       பிதா              – புத்திர ஸம்பந்தம்

அவரக்ஷணே (தாது)        ரக்ஷ:             – ரக்ஷி:

லுப்த சதுர்த்தி                    ஶேஷி          – ஶேஷ

உகாரத்தால்                        பத்ரு              – பார்யா

மகாரத்தால்                        ஞேயம்        – ஞாத்ரு

நம:                                        ஸ்வாமி        – சொத்து

நார ஸப்தத்தால்               ஶரீரி              – ஶரீர

அயன                                   ஆதார           – ஆதேயம்

ஆய:                                      போக்த்ரு     – போக்யம்

ௐ நம: நாராயணாய     ௐ என்பது ஒரு எழுத்து. நம: எனபது இரண்டு எழுத்து. நாராயணாய என்பது ஐந்து எழுத்து. ஆக மூன்று பதம் எட்டு எழுத்து, ஒன்பது ஸம்பந்தம்.

ௐ என்ற ஒரு பதம்

ஓம் – அ+உ+ம (மூன்று எழுத்து)

அ                               – பரமாத்மா

ம                                – ஜீவாத்மா

உ                                -பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கும் ஒழிக்க வொண்ணத ஸம்பந்தத்தைச் சொல்லும். (பரமாத்மாவுக்கே        ஜீவாத்மா)

தமிழில் வேற்றுமை உருபு:–அ, உ, ம என்றால் அது ஒரு முற்றுப்பெறாத சொல். ‘அ’ – பரமாத்மா, ‘ம’ –ஜீவாத்மா, ‘உ’ – அந்த பரமாத்மவுக்கே ஜீவாத்மா என்று சொல்கிறது. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் உறவைச் சொல்ல தமிழ் பாஷைப்படி ஒரு வேற்றுமை உருபு வேண்டும்.

என்னுடைய புஸ்தகம். என்னோடு வந்தார். கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.  இந்த புஸ்தகம் இவரால் தூக்கப்பட்டது. என் உடைய, ஓடு, ஐ, ஆல்  என்று சேர்க்கிறோம். உடைய என்பது நாலாவது வேற்றுமை உருபு.  உறவைச் சொல்ல நாலாவது(விபக்தி) வேற்றுமை உருபு வேண்டும். ஆல், ஓடு, உடைய, இன் ஐ போல. ஓம் என்பதற்குள் பரமாத்மாவுக்கும் ஜீவத்மாவுக்கு உறவு சொல்கிறது அல்லவா. வேற்றுமை உருபு இருந்தால்தானே உறவே வரும்.

ஒன்றை ஒன்று சேர்ப்பதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மரத்தில் கண்ணாடியை ஒட்டவேண்டுமானால் அதாற்கு ஒரு விதமான் பசை வேண்டியிருக்கிறது. சொற்களைச் சேர்ப்பதற்கு வேற்றுமை உருபு வேண்டும். இங்கு பரமாத்மா வையும் ஜீவாத்மாவையும் சேர்க்கவேண்டும். கண்ணாடி வேற ஜாதி, மரம் வேறு ஜாதி. அதுபோல பரமாத்மா ஆள்கின்ற ஜாதி, ஜீவாத்மா அடிமை (ஆளப்படுகிறவன்) என்ற வேறு ஜாதி. இந்த இரண்டையும் ஒட்டுவது அவ்வளவு ஸுலபமில்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிரிவதே இல்லை::–ஆனால் ஆச்சர்யம் என்னெ வெனில் யாரும் ஒட்ட வைக்கவே யில்லை. பிரித்தால்தானே ஒட்ட வைக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தே தான் இருக்கிறது.

நாலாம் வேற்றுமை உருபு:–ஆனால் இலக்கணப்படி ‘அ’ வையும் ‘ம’  வையும் சேர்க்கவேண்டுமானால் ஒரு வேற்றுமை உருபு, நாலாம் (விபக்தி)வேற்றுமை உருபு வேண்டும். (உ.ம்) இருக்கு, பரமாத்மாவுக்கு ஜீவத்மா அடிமை என்று சொல்லவேண்டும். நாலாம் வேற்றுமை உருபு வேண்டும்.

ராமன்,(முதல் வேற்றுமை)  ராமனை(2), ராமனால்(3), ராமனுக்கு(4), ராமனின்(5), ராமனது(6), ராமனின் கண்(7), ஹே ராமா(8).ஆக எட்டு வேற்றுமை உருபுகள்.  4 வது வேற்றுமை உருபு  ‘க்கு’ என்பது ஸம்ஸ்க்ருத்த்தில் ‘ஆய’ என்று வரும்.

அச்சுதாய நம: அச்சுதனுக்கு. அனந்தாய, கேசவாய, அச்சுதனுக்கு, கேசவனுக்கு, என்று வரும்.ஸம்ஸ்க்ருதத்தில் “க்கு” என்பது “ஆய” என்று வரும்.  வேற்றுமை உருபு இருந்தால்தான் உறவு. ஓம் என்ற ஸப்தத்தில் தேடிப்பார்த்தால் இந்த வேற்றுமை உருபு இல்லை. அதனால் இதை லுப்த சதுர்த்தி என்று சொல்வர். லுப்தம் என்றால் ஏறிக்கழிந்தது என்று பொருள். இருந்தது, விழுந்துவிட்டது, கழிந்தது.வியாகரணத்தின்படி விழுந்ததாகக் கொண்டு  ‘அ’  என்ற எழுத்தால் சொல்லப்பட்ட பரமாத்மாவுக்கு, ‘ம’ என்ற எழுத்தால் சொல்லப்படுகிற ஜீவாத்மா, “ஆய“என்ற நாலாம் வேற்றுமை உருபால் அடிமை.என்பது ஓம் என்கிற சப்தத்தின் அர்த்தம்.

ௐ அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. நான்கு எழுத்துக்கள்–இன்னும் கொஞ்சம் பிரித்தால்: ஓம் என்பது அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. இதைக் கொண்டு நான்கு அர்த்தம் சொல்லிவிடுவார் ௐ என்ற பதத்துக்கு. மேலும் நம: என்பதும் நாராயணய என்பதும் இருக்கிறது. அதைப் பிரிக்கப் போவதை பின்னால் பார்க்கலாம்.

திருமந்திரத்தில் ஓம் என்ன ஸம்பந்தங்களைச் சொல்கிறது:என்று பார்க்கலாம்:

 1. அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி

அ – பிதா புத்ர ஸம்பந்தம்.-‘அ’ காரத்தின் மூலம் ஜகத் காரணத்துவ சொல்லிற்று. எம்பெருமான். முதல் எழுத்தான ‘அ’ என்பதில் இருந்து அனைத்து எழுத்துக்களும் பிறக்கும். , சொற்களும் ஸப்தங்களும் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் தோன்றின. ஸமஸ்த ஸப்தங்களுக்கும்  காரணம் , முழு முதற்காரணம், வேர், விதை  “அ”காரம். அது போல எம்பெருமான் இந்த ஜகத்துகெல்லாம் காரணம்  அவனிடத்திருந்துதான் எல்லாம் தோன்றின.

எல்லாம் அவனிடமிருந்தே:–“யதோவா இமானி பூதானி ஜாயந்தே | யேன ஜாதானி ஜீவந்தி | யத்பிரந்த்-யபிஸம்விஸந்தி .. | (தைத்ரீய உபனிஷத்) இது எல்லாம் அவனிடத்திருந்துதான் தோன்றியது.. ‘அ’ இடம் இருந்துதான் எல்லா ஸப்தங்களும் தோன்றின. பகவானிடத்திருந்துதான் உலகம் அத்தனையும் தோன்றியது. அப்பொழுது ‘அ’ என்பது பகவானைக் குறிக்கும். அ காரத்துக்கும், பகவானுக்கும் ஒரு ஸாம்யம் பார்க்கலாமில்லையா? அதனால் தான் ‘”அகார: விஷ்ணு வாச்ய: “அ’ என்பதை ஒற்றை எழுத்துச் சொல் என்பர். அதைச் சொல் என்றும் எழுத்து என்றும் சொல்லலாம். அது விஷ்ணுவையே சொல்லும். அகாரம் என்ன சொல்கிறது. எப்படி ஸப்தங்களுக்  கெல்லாம் நான் காரணமோ அப்படி உலகத்துகெல்லாம் எம்பெருமான் காரணம். என்கிறது.‘

‘அ’ காரம் காரணத்வம்:–அ’ காரத்தைப் பார்க்கும் போதே காரணத்துவம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா? காரணத்துவம் என்பது என்ன? நமக்கும் நம் பிதாவுக்கும் உள்ள உறவு. அவர் பிதா காரணம். நான் பிள்ளை காரியம். அவராலே பிறந்தேன், அவராலே படைக்கப்பட்டேன். ஆக காரணத்தை வைத்து முதல் எழுத்து பிதா – புத்ர ஸம்பந்தம் சொன்னார். அவன் தந்தை என்றும் நான் புத்ரன் என்றும் பிதா புத்திர சம்பந்தம் சொல்லிற்று.

 1. அவ -ரக்ஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி–ஏற்கனவே அ வுக்கு ஒருவிதமாக அர்த்தம் பார்த்தோம். ‘இப்பொழுது இன்னொரு விதமாக அர்த்தம் சொல்கிறார். முதலில் அர்த்தம் பார்த்து ‘அ’வை ஒரு சொல்லாகக் கொண்டு.’அ’ என்ற சொல் அனைத்து ஸப்தங்களுக்கெல்லாம் காரணம். அகார வாச்யனான எம்பெருமான் ஜகத்துக்கெல்லாம் காரணம். காரணத்துவமிருக்கிறதாலே பிதா-புத்திர ஸம்பந்தம் என்று பார்த்தோம்.

‘அ’ வின் தாது ‘அவரக்ஷணே’–ஸம்ஸ்க்ருதத்திலே தாது என்று சொல்லுவர். 2000 தாதுக்கள் உண்டு. அந்த தாதுவைக் கொண்டு ஒரு சொல் எந்த வினையை ‘செயலைக்’. குறிக்கிறது என்று சொல்லப்படும். கச்ச – போகிறேன் ஒரு தாது, வத – பேசுகிறேன் ஒரு தாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தாது இருக்கிறதல்லவா?.. அ என்ற சொல்லுக்கு அவ ரக்ஷணே என்ற தாது. ரக்ஷிக்கிறான் என்ற வினையைச் சொல்கிறது.

அ வில் இரண்டாவது அர்த்தம் ரக்ஷிக்கிறான். உலகனைத்தையும் எம்பெருமான் ரக்ஷிக்கிறான் என்று பொருள். முதலில் ‘அ’ என்பதற்கு காரணத்துவம் சொல்லி எம்பெருமான் உலகனைத்துக்கும் காரணன் என்று பிதா – புத்திர ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

இப்பொழுது இரண்டாவதாக   ‘அ’ வுக்குள்ள அவரக்ஷணே என்ற தாதுவால் ரக்ஷகத்வம் சொல்லி ரக்ஷ: – ரக்ஷ்ய  ஸம்பந்தம் சொல்லியாயிற்று. அவன் காப்பவன். நாம் காக்கப்படுகிறோம்.

 1. லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி–லுப்த சதுர்த்தி – ஏறிக் கழிந்த நான்காவது வேற்றுமை உருபு என்பர். ‘க்கு’ ‘ஆய’ என்ற நாலாவது வேற்றுமை உருபு. மறைந்துள்ளது. அகார வாச்யனான பரமாத்மாவுக்கு ‘மகார’ வாச்யனான ஜீவாத்மா எல்லா விதத்தாலும் அடிமை என்று சொல்லிற்று. ‘க்கு’ என்கிற 4 ம் வேற்றுமை உருபு பகவானுக்கு (ஶேஷி) ஜீவாத்மா (ஶேஷ்ன்) அடிமை என்கிறது. ஆக லுப்த சதுர்த்தி ஶேஷி – ஶேஷ ஸமந்தம் சொல்லிற்று

கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன்–ஆய  – க்கு, ராமனுக்கு: அவனுக்கே இருக்கிறேன் என்று சொல்லுமல்லவா? ஶேஷி – ஶேஷ ஸம்பந்தம். அப்படியென்றால் என்னுடைய ஶேஷிக்கு நல்லதைச் சேர்க்கிறதுக்காகவே நான் இருக்கவேண்டும். ‘க்கு’ என்று சொல்லும் போதே அவனுக்கென்றே இருக்கிறேன் என்றாகின்றது அல்லவா. ராமனுக்கு சீதா ஸர்வ ப்ரகாரத்தாலும் அவனுக்கென்றே இருக்கின்றாள்.

ஶேஷ-ஶேஷி ஸம்பந்தம். ஸம்பந்தத்தை லுப்த சதுர்த்தியாலே சொல்லி. –

ஆழ்வார் “கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ’

‘கோவிந்தா உனக்கே நாம் ஆட்செய்வோம்” ஆண்டாள்.

கோவிந்தா என்பது ‘அ’,  ‘நாம்’ என்பது ‘ம’,  ‘க்கே’ என்பது ஆய என்ற லுப்த சதுர்த்தி. அதையே தான் திருமங்கை ஆழ்வாரும் பாடினார்  திருக்கண்ணபுரம் சவரிப்பெருமாள் விஷயமாக நூறு பாசுரங்கள். பெரிய திருமொழியில் எட்டாம்பத்து முழுமையும் சவரிப் பெருமாளுக்குத்தான் பட்டியுள்ளார். அதில் கடைசியில் சாதிக்கிறார்:

“நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே” கற்றுக் கொண்டது என்ன?

“கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ?’ கண்ணபுரம் பெருமாளுக்கே நான் உரியவன்.  “சவரிப் பெருமான் திருவடிகளில் பணிந்தவன், உன் அடியார் வசலில் நிற்பேனே தவிர கண்டபேர் வாசலில் நிற்கமாட்டேன்.

“உற்றதும் உன் அடியார்க்கு அடிமை”  உனக்கே உரியவன், “மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பரோடுற்றிலேன்” (பெரிய திருமொழி 8-10-3) மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்று சொன்னாலே அவன் வாசலில் நிற்க மாட்டேன் என்கிறார்.

அப்படிச் சொல்பவனுக்கு எனக்கும் உறவே யில்லை என்று அறுத்துக் கொண்டார்..

‘க்கு’ என்பதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம் அவன் ஶேஷி நாம் ஶேஷர்கள். என்று ஶேஷ – ஶேஷி ஸம்பந்தத்தைச் சொல்லியாயிற்று.

 1. உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லிஅநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம்– ‘ உ’ காரம் – அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம். பர்த்தா – பார்யா ஸம்பந்தம்.  ‘

அ’கார வாச்யனான எம்பெருமானுக்கே  ‘ம’கார வாச்யனான ஜீவாத்மா அடிமை. நடுவில் இருக்கும் ‘உ’ ரொம்ப முக்கியம் நம் ஸம்பிரதாயத்திலே. ஏவாகாரம் தான் ‘உ’காரத்தின் பொருள். ‘உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: பராசாபட்டர் அழகாக ஸாதித்தார் உகார: அநந்யார்ஹ ஸம்பந்தம்.. அநந்யார்ஹ ஸம்பந்தம் என்றால் அகார வாச்யனுக்கு மகார வாச்யன் அடிமை என்று பார்த்தோம்.

அடுத்து ஒருவன் சொல்லுவான். மனித மூளை எந்தவிதத்திலும் பாயும். அதுக்குக் குறைச்சலே இல்லை. வேணுங்கிறதுக்கு மட்டிலும் வேலை செய்யாதே தவிர, வேண்டாங்கிறதில் நன்றாகவே வேலை செய்யும். ஒருவன் சொல்லுகிறான், “ஸ்ரீமன் நாராயணனுக்கு நான் அடிமை” நான் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் வேறு எங்கோ நிற்கிறான். என்ன நாராயணனுக்கு என்று சொன்னாயே, இங்கு நிற்கிறாயே என்று கேட்டால் அவன், நான் நாராயணனுக்கு என்று சொன்னேன், ஆனால் அவனுக்கே என்று சொல்லவில்லையே என்றான்.

லுப்த சதுர்த்தி மூலம் பரமாத்மாவுக்கு என்று உள்ளது. அது பரமாத்மாவுக்கும் அடிமை. மற்றவர்களுக்கும் அடிமையாயிருப்பது என்றும் சொல்லலாம். அதில் உள்ள குறையைப் போக்கி உறுதி செய்ய “உ” காரத்தால் எம்பெருமானுக்கே என்று “ஏவா காரத்தால்” உறுதி செய்யப்படுகிறது. பரமாத்மாவுக்கே இந்த ஜீவாத்மா அடிமை என்று ‘உ’காரம் உறுதி செய்கிறது. மற்ற தெய்வத்தையும் தொழான். அரசனையும் தொழான்.  அவனுக்கே என்றதிலிருந்து பர்த்தா – பார்ய ஸம்பந்தம் சொல்லிற்று.

ஸ்வாமி தேஶிகனின் வைராக்ய பஞ்சகம்–வைராக்ய பஞ்சகம் என்று ஐந்து ஸ்லோகம். ஸ்வாமி தேஶிகன், தேவப்பெருமாள் விஷயமாக அருளியுள்ளார். அதில் “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

வேதந்த தேஶிகன் மகாசாரியார். அந்த ஆசார்யரிடத்தில் சின்ன வயதிலிருந்தே ஒரு நண்பர், ஸ்நேஹம். அவர் நல்ல நிலைமையில் ஒரு அரசனிடம் பணிபுரிந்து நல்ல நிலையில் இருந்தார்.

ஸ்வாமி தேஶிகனோ கிழிந்த உடையும், உஞ்ச விருத்தியுமாக இருந்தார். அந்த நண்பர், “நீ என்னிடம் வந்துவிடு. அரசனிடம் வந்தால் பட்டும், பொன்னாடையுமாக வசதியாக வாழலாம்” என்றார். நல்ல சம்பாவனை கிடைக்கும் வந்துவிடு என்று மறுபடி, மறுபடி சொல்லிப் பார்த்தார். அங்கிருந்து ஒரு ஆளை அனுப்பி நிர்பந்தப் படுத்தினார்.

வந்தவரை ஸ்வாமி, நீர் போய் தேவப் பெருமாளை சேவித்து வாரும் என்று அனுப்பிவைத்தார். அவன் பெருமாளை சேவித்துவிட்டு திரும்பி வந்தான்.என்ன பார்த்தாய் என்று கேட்டார். பெருமாள் சேவை ஸாதிக்கிறார். ஸேவித்தேன் என்றார்.

அதற்கு பதில் சொன்னார் ஸ்வாமி, “அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம். நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்” “எனக்குத் தந்தை சம்பாதித்து வைத்த செல்வம் ஒன்றுமில்லை. நானாகவும் ஒன்றும் ஸம்பாதிக்கவில்லை. ஆனால் உலகத்துகே பாட்டனார் ஹஸ்திகிரியின் உச்சியில் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வம் எனக்கு உள்ளது. அதாவது ப்ரம்மதெவன் அசுவமேத யாகம் செய்து ஹஸ்திகிரியின் உச்சியில் ஸம்பாதித்து வைத்த செல்வம் உள்ளது” என்றார்.

உலகத்துக்கே பாட்டனார். தேவப் பெருமாள். எனக்கும் பாட்டனார். இது உன் சொத்துமில்லை, என் சொத்துமில்லை எல்லோருடைய சொத்து. இந்த சொத்திருக்கும் வரையில் வெறு தனமே வேண்டாம்.என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

அப்பொழுது சொல்கிறார், நீங்களெல்லாம் ஏதோ ஸம்பாதித்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எதுக்காகத் தெரியுமா? “அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்” உள்ளே ஜாடராக்நி என்று ஒன்று எரிந்து கொண்டிருக்கும். உள்ளே போடுவதை எல்லாம் அதுதான் ஜரித்துக்கொண்டே இருக்கும். அந்த ஜாடராக்நி எத்தனை போட்டாலும் கொண்டா, கொண்டா என்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

அக்நிக்கு ‘அநல:’ என்று பெயர். போறும் என்ற எண்ணமே அதற்குக் கிடையாது. அதனால் ‘அநல:’ அந்த தீக்கு விறகுக் கட்டை போடுவதற்காக கண்ட பேர் கால் கழுவுகிறீர்கள். நான் அதைச் செய்வதில்லை என்றார் ஸ்வாமி தேஶிகன். உள்ளுக்குள் இருக்கும் நெருப்புக்கு அது விறகு. சோறு தான் விறகுக் கட்டை. “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

இந்த தனத்தை நான் விரும்பமாட்டேன். கோவர்த்தனம் போதும் கோவர்த்தனத்தைத் தூக்கிய கண்ணன். அவன்தான் எனக்குத் தனம் அவனே எனக்குப் போதும். அர்ஜுனனுடைய தேருக்குச் சாரதியான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளாக இருக்கும் கண்ணனே தனம். அவன் கொடுத்த தனம் கீதைதான். இதுதான் எங்களுக்குத் தனமே தவிர வேறு தனம் வேண்டியதில்லை

உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம்.-உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம். இன்னொருத்தர்.  வீட்டு வாசலில் நிற்க மாட்டேன். எந்த தெய்வத்தையும் தொழோம், பிரபுக்களையும் தொழோம். யாரையும் தொழோம். யாரையும் திரும்ப பாரோம் என்று இருக்கிறார்களல்லவா. அந்த வைராக்யத்தோடு வாழ்வதுதான் ‘உ’ என்ற லுப்த சதுர்த்திக்குப் பொருள். மேலிருக்கிற அவதாரணம் என்று சொல்லுவர். அவனுக்கே. அற்றுத் தீர்ந்தது. இவன் மற்றப்பேருக்கு ஆளாக மாட்டான். அவனுக்கே. அப்படின்னு சொல்கிறது ‘உ’.

கனவன் – மனைவி உறவு-அவனுக்கே என்றவுடன் நமக்கு என்ன ஞாபகம் வரும். . கணவன் மனைவி உறவுதானே. உலகில் மற்ற எல்லா உறவுகளையும் விட இந்த மனைவி கணவனுக்கென்றே தான் இருக்கப் போகிறாள். அடுத்த வீட்டுக்காரனையோ, எதிர்த்த வீட்டுக்காரனையோ திரும்பி பார்க்கமாட்டாள். அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கட்டும், எவ்வளவு படித்தவனாக இருக்கட்டும் என் கணவன் எனக்குக் கணவன். அதில் தான் இவளுக்கு உயர்த்தி.

தேவாதாந்தரங்களைத் தொழோம்:-ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றி சொல்லிகொண்டே இருப்பர். இவர்கள் எல்லாம் மற்ற கோவிலுக்குப் போவதில்லை. ஆனால் மற்றபேர் மட்டும் விஷ்ணு கோவிலுக்கு வருகிறார்களே என்று கேட்பர். குறுகிய கண்ணோட்டம். அவர்களுக்குப் பரந்த நோக்கம் இல்லை என்றெல்லாம் குறை சொல்லுவர். ஒரு மனைவி தன் கணவனுக்காகவே இருந்தாள். இது என்ன குறுகிய கண்ணோட்டம் என்றா சொல்வர். அப்படிக் கேட்டால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவர்.

அதுபோலத்தான் வேறு கோயிலுக்கு போகமாட்டேன் என்கிறார்களே என்ற கேள்வியும்.கணவனுக்கு மட்டுமே இருக்கிறாள் மனைவி என்பது குறுகிய கண்ணோட்டம் என்றால் அதுவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் பரந்த கண்ணோட்டம் யாருக்கும் தேவையில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷ்ணு கோவிலுக்கு மட்டுமே போவதும். குறுகிய கண்ணோட்டமாகாகவேதான்  இருந்துவிட்டுப் போகட்டும்.

அனைவருக்கும் அவனே கணவன்:-கணவன் நாராயணன் என்று புரிந்துகொண்டுவிட்டால், மனைவி ஜீவாத்மா என்றால் அந்த வட்டம் குறுகிய வட்டம். அதில் வேளிலே யாருக்கும் இடம் கிடையாது. அதில் அவனுக்கும் அவளுக்கும் மட்டும் இடமே தவிர, வேறு யாருக்கும் இல்லை. இதுல போய் இவங்கிட்டையும் திருமங்கல்யம் கட்டிக்கிறேனே,  மற்றவனிடமும் தாலி கட்டிக்கிறேனே என்று சொல்லுவதற்கு வழியே கிடையாது. .

‘உ’ காரம் என்ற நடு எழுத்தை, உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: அவனுக்கென்றே தீர்ந்திருக்கிற ஸம்பந்தத்தைச் சொல்லுமாம். பர்த்ரு – பார்யா உறவைச் சொல்லுகிறது. அவனுக்கே உரியவன்.

 நம்பெருமாளும் திருவானைக் காவலும்:-திருவானைக்காவல் என்று ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஜம்புகேஸ்வரர் க்ஷேத்ரம். பெரிய சிவ ஸ்தலம்.. அந்த ஸ்தலத்தின் பக்கத்தில் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு காண்கையில் திடீரென்று மழைவந்துவிட்டது..  ஸ்ரீரங்கம் போகமண்டபம். பெருமாள் போகி. எங்கோ மழைபெய்கிறது என்றவுடன் மணியக்கார ஸ்வாமி அக்கோவிலில் புறப்பாட்டை நிறுத்திவிடுவர்.

புறப்பாடு கண்டருள்வதில் ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிர் தேவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்  பெருமாள் கோவில்.. அது மழையோ வெயிலோ காற்றோ எது அடிச்சாலும் அந்த மூன்றரையும் மூன்றரையும் ஏழு மைல் புறப்பாடு நடந்தே தீரும். ஸ்ரீரங்கத்திலோ எங்கேயோ மழை அடிக்கிறது என்றால் புறப்பாடு நின்றுவிடும். பெருமாள் சுக போகி. தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் அல்லவோ. அவர் திருவானைக்காவல் வாசல் வழியாக ஏழிண்டிருக்கிறார். திடீரென்று மழை வந்து விட்டது. பெருமாளை ரக்ஷித்தாகணுமே.  திருவானைக்காவல் கோவிலுக்குள் கொண்டுபோய் ஏழப்பண்ணிவிட்டார்கள்.  அது சிவ க்ஷேத்ரம்.

ஸ்ரீ ராமானுஜரும் திருவானைக்காவலும்:-ஸ்ரீ ராமானுஜர் பின்னால் கோஷ்டியுடன் போய்க் கொண்டிருந்தார். அவர் உள்ளே போகாமல் வாசலிலேயே திரிதண்டத்தோடே, எழுபத்திநாலு சிம்மாஸனாதிபதிகள், எழுநூறு ஸந்யாசிகளோடே,பன்னிரண்டாயிரம் க்ரஹஸ்தர்களோடு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

தீக்ஷிதர்கள் வாசலில் வந்து கேட்டார்களாம், என்ன ஸ்வாமி உள்ள ஏழலாமே, மழைபெய்கிறதே, நனையவேண்டாமே, மழை நின்னப்புறம் புறப்படலாமே  என்று உள்ளே  அழைத்தார்கள். இல்லை இல்லை வேண்டாம், .அடியேன் இங்கேயே இருந்துகொள்கிறேன் என்றார் ராமானுஜர்.

மறந்தும் புறந்தொழா மாந்தர் அல்லவோ. “திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” திருமழிசை ஆழ்வார் அழகாக ஸாதித்துப் போந்தார். “அரவணைமேல் பேராயர்க்காட்பட்டார் பேர்” இந்த ஸ்ரீவைஷ்ணவர்களை எமன் மறந்தும் பார்க்கவே மாட்டனாம். எனெனில் புறந்தொழா மாந்தர். திரும்பியே பார்க்கிறதில்லை. எமனையும் இவர்கள் திரும்பி பார்க்கிறதில்லை. ராமானுஜர் வாசலிலே நின்றுவிட்டார்.

நம்பெருமாளும் யதிராஜரும்:-தீக்ஷிதர்கள் எல்லாம் வந்து ராமானுஜரிடம் கேட்டார்கள், பெருமாள், உங்கள் தெய்வம் அரங்கனே உள்ளே வந்துவிட்டார். அதுக்குமேலே உங்களுக்கு என்ன இப்பொ, நீரும் வரலாமே” என்று கேட்டனர் உடையவரிடம். .

அதற்கு ஸ்வாமி பாஷ்யகாரர், அழகாக பதில் சொன்னார், “கணவன் அப்படி இப்படி வாசலில் போய் திரிந்தார் என்பதற்காக மனைவி தானும் தேடிண்டு போய் நான் பார்த்தது கிடையாது.  பெருமாள் கணவன், பர்த்தா, எதுவும் அவனுக்கு ஒக்கும். நான் மனைவி எனக்கு அவன் மட்டுமே ஒக்கும்.மற்ற ஒன்றையும் நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

நம் பாரத்தேசத்துப் பெண்கள் எல்லாம் கணவன் தவறிழைத்தான் என்பதற்காக தானும் தவறிழைக்கலாம் என்று நினைக்கிற அன்று நானும் இந்த கோயிலுக்குள் வருகிறேன். அது வரை வருவதாயில்ல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாமி.  பழையபடி அந்தக் குறுகிய கண்ணோட்டம் என்பர். “எம்பெருமானே அந்த  கோவிலுக்குள் போனாலும் அவன் அடியார்கள் அதற்குள் போவதில்லை. எம்பெருமான் போவதற்குக் காரணம் என்ன? எல்லாமே அவர்க்கு ஒக்கும். ஏனெனில் எல்லாமே அவருக்குச் சரீரம், சிவனும் அவருக்குச் சரீரம், பிரம்மாவும் அவருக்குச் சரீரம்.

அக்னி:-அக்னி இருக்கிறது. எந்த ஒசந்த பதார்த்தைப் போட்டலும் எரித்துவிடும். எந்த தாழ்ந்த குப்பை செத்தையைப் போட்டாலும் எரிக்கும். குப்பை செத்தையைப் போட்டு எரித்தது என்பதற்காக அக்னியை யாராவது குறை சொல்வார்களா? சொல்லமாட்டார்கள். அக்னியுடைய தூய்மை என்னிக்குமே தூய்மைதான். அதேசமயம் குப்பை செத்தையை வீட்டில் கோண்டுவந்து வைக்கலாமா. நாறிவிடும்.

ஏன் ஸ்வாமி இப்படி. அக்னி மட்டும் குப்பை செத்தையுடன் சேர்ந்தால் நாறவில்லையே என்று கேட்டால் என்ன வித்யாசமோ அந்த வித்யாசம்தான் பகவான் எங்கும் போவதற்கும் நாம் போவதற்கும். அவன் அக்னியைப் போலே. அவர் பிரபு. எதுவும் அவனுக்குத் தகும். நமக்கு அவன் மட்டுமே தகும். வித்யாஸத்தை நன்கு அடியார்கள் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். “எம்பெருமான் கோவிலுக்குள் போகலாம். அவன் பர்த்தா, ஒதுங்கலாம், நான் பார்யை, பத்தினி எங்கும் ஒதுங்கக் கூடாது” என்றார். அவனுக்கே ஆட்பட்டவள். இது பர்த்தா – பார்யா ஸம்பந்தம். உ காரத்தாலே பர்த்தா பார்யா ஸம்பந்தம் சொல்லிற்று..

 1. மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி-மகாரத்தால் ஞேய – ஞாத்ரு ஸம்பந்தம்.

இப்பொழுது ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லப்போகிறார். என்னத்துக்காக இந்த ஜீவாத்மா  ஞானத்தோடு இருக்கிறார். ஞானத்துக்கு ஒரு விஷயம் வேண்டும். இது புஸ்தகம் என்று தெரிந்துகொண்டாலோ, இது கடிகாரம் என்று தெரிந்துகொண்டாலோ ஞானமா? ஞானம்தான். இந்த ஞானம் எல்லாம் மோக்ஷம் வாங்கிக் கொடுக்கப்பொவதில்லை. பின் எந்த ஞானம் மோக்ஷத்தைக் கொடுக்கும். . அர்த்தபஞ்சக ஞானம். இந்த ஐந்தைப் பற்றிய ஞானம் இருந்தேயாகவேண்டும்.

மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *

தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும்

குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான

ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகாமுநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஐந்தைப் பற்றிய ஞானம். அதில் பரமாத்ம ஞானம் முதல்.அவனைப் பற்றிய ஞானம் நமக்கு முதலில் இருக்கவேண்டும். இந்த ஜீ(வாத்மா ஞாதா.கீழேயே மூன்று சொல்லப்பட்டதல்லவ? ஞானம், ஞாதா, ஞேயம் – அறியப்படுபவன் பரமாத்மா. அறிபவன் ஜீவாத்மா. அறிவிப்பது ஞானம். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்த்தோம் இல்லையா?

உலகில் எதைச் சொன்னாலும் மூன்று உண்டு.அதேபோல்தான் இங்கு ஞாதா, ஞானம், ஞேயம். இந்த ‘ம’ காரத்தாலே ஞாத்ரு – ஞேய ஸம்பந்தம். ஜீவாத்மாவால் பரமாத்மா அறியப்படுபவன். என்று இந்த எழுத்துச் சொல்லும்.

எங்கிருந்து இந்த விவரணம் கிடைத்தது. ம என்ற எழுத்தாலே இந்த பொருள் வருமா என்று தோன்றும். இருக்கு. ‘மனஜ்ஞானே’ – ‘மனு அவ போதனே’ கீழே அ காரத்துக்கு அவ ரக்ஷணே  என்ற தாது.பார்த்தோமில்லையா? அதுபோல மகாரத்துக்கு மன ஜ்ஞானே என்பது தாது.  ஞானம் படைத்தவன் ஜீவாத்மா. அவ போதனே – இவன் ஆராய்ச்சி பண்ணி, ஆராய்ச்சி பண்ணி ஞானத்தை சம்பாதிப்பவன் ஜீவாத்மா.. இந்த இரண்டு அர்த்தமும் மகாரத்துக்கு உண்டு.

அப்ப ஞானத்தைச் சம்பாதிப்பவன் என்றால் ஜ்ஞாதாவாகிறான் ஜீவாத்மா. அறிவாளி. எதைப் பற்றிய ஜ்ஞானம்? பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை சம்பாதிக்கிறான். வேறு எதைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் அது ப்ரயோஜனமில்லை. ஐந்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் முதல் பரமாத்மாவைப் பற்றிய ஞானமே

‘ம’ என்ற எழுத்தால் ஞாத்ரு – ஞேய – ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

பிதா ச ரக்ஷ:ஶேஷி, பர்த்தா, ஞேய: என்று 5 ஸம்பந்தம். ஜீவாத்மா அறிவாளி. பரமாத்மாவை வேதத்தைக் கொண்டு அறிகிறான். ஞாதா – ஞேயம் என்ற ஸம்பந்தத்தை மகாரம் சொல்லும். ‘ஓம்’ என்பதில் ஐந்து ஸம்பந்தம் முடிந்தது

 1. நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி–நம:    ம: மு , ந – ம: எனக்கு, மு – நான், ந அல்லேன், நம: எனக்கு நான் அல்லேன். எனக்கு நான் அல்லேன். அப்ப நீ யாருக்கு ஸ்வாமிக்கு. ஸ்வாமி சொத்து ஸம்பந்தம் கிடைக்கிறது. பூ (புஷ்பம்) எனக்கு நான் என்று சொல்லிக்காது. என் வீடு எனக்கு நான் என்று சொல்லிக்கொள்ளாது. எதுவும் எனக்கு நான் என்று சொல்லிக்காது. அர்ச்சனை செய்கிறோம். ராமாய நம: என்கிறோம். ஸ்ரீ ராமனுக்காகவே நான். எனக்கு நான் அல்லேன். நான் கண்ணனுக்காக எனக்கு அல்லேன். ஸ்ரீ ராமானுஜருக்கே நான். எனக்கு அல்லேன். இவர்களுக்காகவே நான், எனக்கு அல்லேன் என்று சொல்வது தான் நம: என்பதின் பொருள். எனக்கு அல்லேன் என்று சொல்லிவிட்டால் அவன்தான் என்றாகிறது அல்லவா? இதிலிருந்து அவன் தான் ஸ்வாமி – நான் சொத்து என்றாகின்றது.

ஸ்வாமி (ப்ரஹ்மம்) – சொத்து .(ஜீவாத்மா). ஸ்வாமி தான் சொத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டும். சொத்து தனக்காகத் தான் கவலையே படாது. நாமல்ல. ஸ்வாமிதான் நமக்காக கவலைப் படுவார்.

ஸ்வாமி – சொத்து என்றால் வீடு, கார்  போலவா?–ஒரு வீடு. யாரோ ஒருவரை குடித்தனம் வைத்தேன். வீடு குடியிருக்கறவருக்கே சொந்தம் என்று சொல்லி,  காலி செய்யமாடேன் என்று.  நீதிமன்றம் போய்விட்டார்.. வக்கீலைவைத்து நான் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். வீடு கவலையே படாது. எங்கிட்ட இருந்தாலும், குடித்தனக்காரரிடம் இருந்தாலும் கவலைப் படாது. நான் ஜயித்து வீடு என் கைக்கு வந்தபிறகு நல்ல வேளை, நாம் முதலாளி கையில் சேர்ந்துவிட்டோம் என்று சந்தோஷப் படுமா? இல்லை. பிறத்தியாரிடம் இருக்கும்போது அது அழவும் இல்லை. என்கிட்ட வந்ததால் அது சிரிக்கவும் இல்லை. வந்து சேருவதற்கு அது முயற்சியை எடுக்கவும் இல்லை. சொத்து என்பது தனக்காக இருக்காது.பிறருக்காகவே இருக்கும்.

அதே போல இந்த ஜீவாத்மாவும் ‘நம:’ தனக்காக இல்லை. என்றால் ஸ்வாமிக்காகவே இருந்தாக வேண்டும் அல்லவா? அதைத் தான் அழகாகச் சொல்லும் சாஸ்திரம், “ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்”-சொத்தாக இருக்கும் தன்மை ஜீவாத்மாவுக்கே உரியது. ஸ்வாமியாக இருக்கும் தன்மை ப்ரஹ்மத்துக்கே உரியது.. ஜீவன் ஒரு நாளும் ஸ்வாமி ஆகாது. அவன் ஒருநாளும் சொத்து ஆக மாட்டான்.

பகவான் சொத்தாவான். யாருக்கு?  அடியார்களான பாகவதர்களுக்கு அவன் சொத்தாகிறான். ஸ்வாமி தேஶிகனின் திருவாக்கு பார்த்தோம் அல்லவா? தேவ பெருமாள்தான் தன் சொத்து என்றார்.. ஸ்வ- ஸ்வாமி – எது நியாயம். அடங்கினவனுக்கு அவன் சொத்தாக இருக்கிறான். அடங்காதவனுக்கு நெருங்கமாட்டான். ஆழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில்;

அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

நான் பிரிந்து பிரிந்து போனால் அவன் விலகி விலகிப் போவான். நாம் கிட்டக்க போனால் அவனும் கிட்டக்க வருவன். வெட்டிண்டு போனால் வருத்த்த்தோடே விலகி இருப்பன். நாம் அவனை நெருங்குகையில் நம்முடையவன் என்று அவன் நினைக்கிறான். நாம் சொத்து – அவன் ஸ்வாமி.

நமஸ் ஸாலே ஸ்வாமி – சொத்து ஸம்பந்தம் சொல்லிற்று, ஆறாவது அர்த்தம் சொல்லப்பட்ட்து..

ஏழாவது ஸம்பந்தம்:

நாராயணாய – மூன்றாகப் பிரித்தால்::-நார + அயன + ஆய – நாராயணாய, நாராயணாய என்ற பதம் மூன்றாகப் பிரிக்கப் படுகிறது. மூன்று சம்பந்தங்கள் சொல்கிறது.

‘அ’காரம் = நாராயணாய என்று சொல்கிறது. ஆகவே ‘அ’ காரத்தில் ‘ஆய’ லுப்த சதுர்த்தி. சம்ஸ்க்ருத இலக்கணத்தின்படி இருந்தாகணும். “நாராயணாய”வில் உள்ள ஆய என்ற விபக்தி ஸ்தானப் ப்ரமாணத்தால் ஓம் இல் உள்ள ‘அ’ காரத்தில் லுப்த சதுர்த்தியாக, (ஏறி கழிந்த சதுர்த்தியாக) எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று முமுக்ஷுப்படியில் பிள்ளைலோகாசாரியார் வியாக்யானம் பண்ணியுள்ளார். அ என்பது நாராயணாய வின் சுருக்கம்.

ஆனையாட்டம் பெரிய நாராயணாய பின்னால் வரும். அதற்கு மணியோசைபோல ‘அ’காரம் வருகிறது. அ முதலிலே, நாராயணாய பின்னால் வருகிறது. பின்னாடி வரும் ‘நாராயணாய’வில் நான்காம் வேற்றுமை உருபு இருக்கிறதல்லவா? சம்ஸ்க்ருத வியாகரணத்தின் படி முதலில் இருக்கும் ‘அ’ காரத்தில் நான்காம் வேற்றுமை உருபு இருந்தே ஆக வேண்டும். அது ஏறிக் கழிந்துள்ளது, லுப்த சதுர்த்தி என்று பார்த்து விட்டோம்.

நார – நித்ய வஸ்துக்களின் திரள்:-நார – ஸ்ரீமன் நாராயணனைத் தவிர இதர நித்திய வஸ்துக்களின் திரள். தன்னைக் காட்டிலும் வேறுபட்ட நித்திய வஸ்துக்கள் அவரைத் தவிர அனைத்தும் நார ஸப்தத்தால் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர் விடாமல் “ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண:” தன்னைத் தவிர உள்ள அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன் என்கிறார்.

ரிங் க்ஷயே என்பது தாது.  ர – என்றால் அழிவது ந என்றால் இல்லை.  நார என்றால் அழியாததுகளின் கூட்டம். நித்ய வஸ்துக்களின் திரள். எது அழியாது. பெருமாளின் திருமேனி அழியாது. பெருமாளின் குணங்கள் அழியாது. பிராட்டி அழிய மாட்டார். ஏன்? நான் அழிய மாட்டேன், நீங்களும் அழிய மாட்டீர்கள். பூமியும் அழியாது. எதுவுமே அழியப் போவதில்லை. சேதனாசேதனங்கள் அத்தனையும் அழியாது. சித் – அசித்  இது இரண்டின் மொத்தக் கூட்டமும் நார ஸப்தத்துக்குள் அடக்கம்.

அயன = ஆதாரம்-அயன – ஆதாரம்.  இங்கு அமர்ந்திருக்கிறோம். அது ஆதாரம், தரை ஆதாரம், தரைக்குத் தூண் ஆதாரம். தூணுக்கு ஆதாரம் அடித் தளம். அடித் தளத்துக்கு ஆதாரம் பூமி தேவி. ஒரு வஸ்து என்று இருந்தால் அதைத் தாங்குவதற்கு ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது நாரங்கள் என்ற நித்திய வஸ்துக்களின் திரளுக்கு ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அயனம் என்றால் ஆஶ்ரயம். அவர் தான் நாராயணன். அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்துக்கும் ஆதாரம்.

கைங்கர்யமே பரம ப்ராப்தி:-ஆய – அந்த நாராயணனுக்காகவே கைங்கர்யம் பண்ணுவது எனக்கு ஸ்வரூபம். நான் தொண்டு புரிய வேண்டும். “தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க” என்று முக் கரணங்களாலும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணணும். அதைப் பார்த்து அவர் ஆனந்தப்பட வேண்டும்.   கைங்கர்யத்தின் மூலம்  அவனது முக மலர்த்தி பெறுதல். நார – அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்கள். அயன – இருப்பிடம். ஆய – அவனது முக மலர்த்திக்காகவே கைங்கர்யம் செய்தல். அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிற அனுபவம் ‘ஆய’ பதத்தால் சொல்லப் படுகிறது.

 1. நார பதத்தாலே -ஶரீர ஶரீரி சம்பந்தம் சொல்லி   —நார என்றல் நித்ய வஸ்துக்களின் கூட்டம் என்று பார்த்தோம். இது இத்தனையும் ஶரீரம். அப்பொழுது பெருமாள் ஶரீரி. என்பதால் ஶரீரி – ஶரீர  ஸம்பந்தம்., ஶரீர ஆத்ம ஸம்பந்தம். ‘மம ஆத்மா’ என்று சொல்லி இருக்கிறார் அல்லவா? பகவான் ஆத்மா, ஜீவன் உடல். அவனைத் தவிர அனைத்தும் ஶரீரம். அவனது திருமேனி மட்டும் அவனுக்குச் சரீரம் அல்ல. பிராட்டிமார் மட்டுமல்ல. உலகத்தில் இருக்கும் சித் அசித் கூட்டங்கள் அனைத்தும் அவனுக்குச் ஶரீரம். நித்ய வஸ்துக்களின் திரள் அனைத்துக்கும் ஶரீரம். அனைத்தும் பிரஹ்மத்துக்குச் ஶரீரம். ஶரீர – ஆத்ம ஸம்பந்த்த்தை நார பதத்தில் சொல்லியாயிற்று.
 1. அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி–அயனம்- ஆஶ்ரயம்,  இருப்பிடம் என்றலே ஆதாரம், தாங்குவது என்று பொருள். அவன் ஆதாரம். எது ஆதேயம் அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்களின் திரள் ஆதேயம். ஆக ஆதார – ஆதேய ஸம்பந்தம்.–ஆதாரம் பகவான் (தாங்குபவர்) – நாரம் ஆதேயம் ( தாங்கப்படுகிறோம்)  ஆதார ஆதேய ஸம்பந்தத்தை அயன பதத்தால் சொல்லியாயிற்று.
 1. ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி–ஆய –  போக்த்ரு  – போக்யம். இது வ்யக்த சதுர்த்தி.

ஆய என்பது நாம் செய்யும் கைங்கர்யம். அதனால் அவர் கொள்கிற ஆனந்தம். நாராயணனுக்காக. அவன் முக மலர்த்திக்காகவே. அனுபவிக்கிறான். எனக்காக புஷ்பம், எனக்காக சந்தனம். இது இத்தனையும் போக்யம். நான் போக்தா.

அதேபோல நாராயணாய – நாராயணனுக்காக என்று சொன்னால் நாரயணனுக்காக பிரம்மா. நாரயணனுக்காக சிவன், ராமாநுஜர், நான் அசித் அத்தனையும் நாராயணனுக்காகவே. இவை அத்தனையும் போக்யம்.  நாராயணன் போக்தா. இந்த .போக்த்ரு –போக்ய ஸம்பந்த்த்தை “ஆய” பதத்தால் ஸாதித்தார்.

நார என்பதால் ஶரீர – ஶரீரி ஸம்பந்தம், –அயன பதத்தால் ஆதார – ஆதேய ஸம்பந்தம், –ஆய பதத்தால் போக்த்ரு – போக்ய ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

ஆக -ப்ரதம ரஹஸ்யம் -திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

ஓம் நமோ நாராயணாய, மூன்று பதம் எட்டெழுத்துக்கள். ஓம் – அ+உ+ம, நம:, நார+ஆயனம்+ ஆய. அவ ரக்ஷணெ என்ற தாது அ காரத்தில் ஏறிக் கழிந்துள்ளது.

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி

திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.

நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் 

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

November 24, 2022

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

ஸ்ரீ திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்–

November 22, 2022

ஸ்ரீ:ரியப் பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!” என்று கொண்டாடியருளுகிறார்.

கவி என்று பேர் கொண்டவர்கள் ஆழ்வார் திருவவதாரத்திற்குப் பின்பு தோன்றியுள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவிகளை நம் பூர்வர்கள் கைக்கொள்ளுவதில்லை.

ஆனால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் இல்லை என்றால் உற்சவங்களும் விழாக்களும் பொலிவிழந்து போகும் என்று வியந்து கம்பர் தம்முடைய சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது – அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச் செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களுந் தந்தம்விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14)

[அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும் அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார்.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார் என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் – அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

ஆழ்வார்களில் வேதம் தமிழ் செய்த மாறன், ஶடகோபன் – அஜ்ஞானத்திற்குக் காரணமான ஶடம் என்னும் வாயுவை நிரஸித்தவர், மற்றைய ஆழ்வார்களைத் தனக்குத் அங்கங்களாகக் கொண்டவர் என்ற பெருமைகள் உடையவர் நம்மாழ்வார்.

இவர் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழிக்கு மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்தவைகள் அங்கங்களாகவும் உபாங்கங்களாகும் உள்ளன.

இது “வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது.

இவருடைய அருளிச்செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான ஸ்ரீரங்கநாதன் வேத ஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான். இதுதன்னை கோயில் ஒழுகிலும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம்.

இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள். வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல், இருந்தமிழ்நூல் (45) என்னும் சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது. இதற்கு த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும். மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும்,  வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று. ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம், (5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும். இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]-என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது.

இதன் திரண்ட பொருள் – அடையத்தக்க பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, அடையும் வழி, அடைந்து பெறும் பயன், அடைவதற்குத் தடை ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களோடு கூடிய வேதங்களும் வேதஶப்தார்த்தங்களையறியும் மஹாபுருஷர்களான முனிவர்களும் ஆழ்வார்களும் உரைக்கின்றனர்.

இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச்செய்யுமிடத்து பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார். அதற்கு அரும்பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

இதன் ஏற்றத்தை பூர்வாசார்யர்கள் பலபடிகளாலும் பேசியுள்ளார்கள்.

 1. ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு. முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும், ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும், மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும், அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும், அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.
 2. அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
 3. இதனை “ஞாதவ்ய பஞ்சக ஜ்ஞானம்” என்கிறார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம் என்கிறார். மேலும் அதனை அறிகையே பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், அதனை அறிந்து கொள்ளாமையே பிறப்பு இறப்பு சுழியில் சிக்கிக் கொள்வதற்கும் காரணம் என்கிறார்.
 4. ஸப்த காதையில் இதனை “அஞ்சுபொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம். திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது. அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஆழ்வார். இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:

பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான) பராத்பரனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

 1. உயர்வற உயர்நலம்
 2. திண்ணன்வீடு
 3. அணைவதரவணை
 4. ஒன்றுந்தேவும்

உயர்வறயுயர்நலம் உடையவன் என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில் பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள். இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம் உயர்வறவுயர்நலம் *உயர்வறவுயர்நலம் உடையவன்* என்பதினால் கல்யாணகுண யோகத்தையும், *அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதியோகத்தையும், *சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச்செய்கிறார். திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை. இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள். இதனை அஸங்கேய (கணக்கற்ற) அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன் என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் மனனகமலமற எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த் தட்டாகவும் எல்லையில்லாத திருக்குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் – சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்
மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்
நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில், (1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான், (2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநுப்ரவேஶித்ததும் அவன்தான், (3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன்தான்.
ஐந்தாம் பாசுரம் அவரவர் இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார். அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.
ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர் இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன. அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.
ஏழாம் பாசுரம் உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச்செய்கிறார். *சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார். இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம் லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.
எட்டாம் பாசுரம் பரபரன் பரபரன் என்பதே உயிரான பதம். ஸர்வஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்), ஸர்வஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்) ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான), ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.
பரபரன் – பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10) (மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும் தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.
பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே * அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பரதத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய் எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று
பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன் பஞ்சபூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில். அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார். அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார். இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1)  என்றருளினார்.

உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும், உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும், மயர்வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும் இப்பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார். முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே, இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்) இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

 • மாபாவம் விட அரற்குப் பிச்சைபெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
 • தேவனெம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும்தகுமே (2-2-4)
 • தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் (2-2-5)
 • புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே (2-2-10)

இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற்கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டும் பரத்வம் சொல்லுவதைப் பார்க்கலாம்.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம். ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள் * திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும். ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன. முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள * பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம்.

அர்ஜுனன் தினமும் பரமஶிவனுக்கு ஒரு புஷ்பம் ஸம்ர்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு தினம் ஸமர்ப்பிக்க முடியாமல் போகவே – அன்று கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கவே மறுநாள் பரமஶிவனின் முடியில் அந்த புஷ்பத்தைக் கண்டான்.

இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான் நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு – அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார்.

ஆழ்வார் இப்படி மோக்ஷப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை அடியொற்றியே யாமுநமுனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில் மோக்ஷப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் – * ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது. * ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி, அனுப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

 • நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
 • நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்

ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமானுஜபதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது – “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”. ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்தபின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு – மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது மோக்ஷம் பராத்பரனாலேயே கொடுக்க முடியும். எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

—————

ஜீவாத்ம ஸ்வரூபம்:

பரமாத்ம ஸ்வரூபத்தைப் பார்த்த அநந்தரம் ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகளைப் பார்க்கலாம். ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

 1. பயிலுஞ் சுடரொளி (3-7)
 2. ஏறாளும் இறையோனும் (4-8)
 3. கண்கள் சிவந்து (8-8)
 4. கருமாணிக்க மலைமேல் (8-9)

ஸ்ரீவசனபூஷணதிவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாசார்யர் அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே *  என்றருளுகிறார். அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு – ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும். ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து.

அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக, அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை * பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

 • எம்மையாளும் பரமர் (3-7-1)
 • எம்மையாளுடை நாதரே (3-7-2)
 • எம்மையாளுடையார்களே(3-7-3)
 • சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
 • எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)

என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத்தக்கது. இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில், அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும். இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார். ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி.

இதனால் தேறுவது என் என்னில் – எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத்தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார்.

இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் * [ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம், பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன். இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்] என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.

இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும் * ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். –

இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால் ஆத்மவஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார்.

அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார்.

இது * தாஸபூதா ஸ்வதஸ்ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந: * (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம்.

* சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய் அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார்.

*  நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது; நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று.

இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது. அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும் திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இது தானும் அறிதியிடுவது * படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *, * திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் * *திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் *

இவை கொண்டு .  ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை – * திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் –

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி (ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி) சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் – என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

—————

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

 • வீடுமின் முற்றவும் (1-2)
 • சொன்னால் விரோதம் (3-9)
 • ஒருநாயகமாய் (4-1)
 • கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள்  வீடுமின் * பதிகத்தில் எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட, நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார். மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது) ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என அவற்றை அடியோடு விடச் சொல்கிறார்

இத்திருவாய்மொழியில்.  இங்கு * அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: | அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11) என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது. [தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்யகர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் – மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும் (செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன. இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்), அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது – மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

ஒரு புருஷனால் வேண்டப்படுவது புருஷார்த்தமாகும். அது நான்கு வகைப்படும். ஐச்வர்யம் (இது இரு பிரிவு – இழந்த செல்வம், புதிதாக வேண்டும் செல்வம்), கைவல்யம் (ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒழித்து பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்தல்) மற்றும் பகவல்லாபம். இவற்றுள் ஐச்வர்யம், கைவல்யம் இரண்டும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விட வேண்டியது.

இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார்.

அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை – * பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார்.

இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி * (புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார். இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம்.

இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும் தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில் சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார்.

சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை. * கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார்.

நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன் * அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

——————–

உபாயஸ்வரூபம்:

உபாயமாவது இவ்வாத்ம வஸ்துவின் ஸ்வரூபத்திற்குச் சேர செய்ய வேண்டியது ஆகும். இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

 • நோற்ற நோன்பிலேன் (5-7)
 • ஆராவமுதே (5-8)
 • மானேய் நோக்கு நல்லீர் (5-9)
 • பிறந்தவாறும் (5-10)
திருவாய்மொழி தெரிவிக்கும் கருத்து
நோற்ற நோன்பிலேன் கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை. ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் – நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும், இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார். சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என எம்பெருமானே உபாயம் என்றபடி. மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை). எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)
ஆராவமுதே கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார். இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி * களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் * (எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்) என அநந்யகதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும் 1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள். இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும். 2) அநந்யகதித்வம் – உன்காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் என்னுடைய  * நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் *  என்னும் நிஷ்டை (இருப்பு) குலையமாட்டேன். இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *  – கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.
மானேய் நோக்குநல்லீர் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களையெல்லாம் வைக்கையும், அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள் *எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,  *என்னையுன் செய்கை நைவிக்கும்*  *வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

———————————–

புருஷார்த்த ஸ்வரூபம்:

புருஷார்த்தம் என்பது – புருஷனால் அர்த்திக்கப்படுவது. இதுவும் கீழே நிருபித்த அத்யந்த பாரதந்த்ரயனான ஜீவாத்மாவின் தன்மைக்குச் சேர இருக்க வேண்டும். இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது. நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள். இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோக்ஷப்ரதன் (மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் – ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான்.

அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம், அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார். கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை * ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

 • * சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது – “எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார்கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;” என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • * ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான * நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய் அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,

இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று. இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம* (ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால் தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும், * சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால் அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று. இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல், அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார். இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது * தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.

*சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் * (ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி) * அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே * (ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்) * கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! * (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்கவேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ” (அவனுடைய திருமுகமலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில் * உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது.

ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில் * நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார்.

இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான். அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்;

உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு, அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்; உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

ஆக இதுவரையில், கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய், அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1), தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய், பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2), அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம், எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3), ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4), * ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5) ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம். மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது.

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஜயது யஶஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணாஸார்த்தம் தஸ்மை ஶுபாந் யபி வர்த்தயந்
வரவர முநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்; அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்; அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் அருள் பத பிரயோகங்கள் –

November 21, 2022

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.–10-5-11-

“நெடியானருள் சூடும்படியான் சடகோபன்” என்று தமக்கு நிரூபகமருளிச் செய்கிறார்போலும்.

திருவாய் மொழி தொடங்குபோதே *மயர்வற மதிநல மருளினன்* என்றார்

இடையில் *திருமாலாலருளப்பட்ட சடகோபன்* என்றார்.

இப்போது *நெடியானருள் சூடும்படியான் சடகோபனென்கிறார்.

—————

ஸ்ரீ திருவாய் மொழியிலே -அருள் பத பிரயோகங்கள்

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/3,4

சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/1,2

மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/2,3

மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே – நாலாயி:2936/4

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1

அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2

அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3

அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2

வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3

மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:2953/2

அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/4

ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3

செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் – நாலாயி:3101/1

எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4

அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – நாலாயி:3120/4

வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4

கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/2

நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1

சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:3197/1,2

வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் – நாலாயி:3200/1

ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2

வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/4

நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/2,3

என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4

ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே – நாலாயி:3349/4

தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/2

சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே – நாலாயி:3408/4

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4

இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4

எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே – நாலாயி:3424/2,3

சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4

தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் – நாலாயி:3438/1

தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2

நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் – நாலாயி:3438/3

நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4

திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே – நாலாயி:3446/4

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1

தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3

மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3

கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4

ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/2

வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் – நாலாயி:3546/1

ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/1,2

சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3

வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2

கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் – நாலாயி:3574/3

பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4

முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1

மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/3,4

ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1

மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் – நாலாயி:3638/1,2

அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/1,2

சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/1,2

கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/1,2

வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய் காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ – நாலாயி:3642/2,3

மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் – நாலாயி:3643/1,2

துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/1,2

பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2

ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1

காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/3

பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2

வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4

உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை – நாலாயி:3703/1

அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/4

நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் – நாலாயி:3726/2

நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான் அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/2,3

பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் – நாலாயி:3738/3

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1

அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1

வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து – நாலாயி:3744/2

உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் – நாலாயி:3750/1

உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் – நாலாயி:3750/2,3

அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3

அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2

அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/4

திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3

அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4

வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1

அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4

தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3

அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் – நாலாயி:3793/2

தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/2,3

தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப – நாலாயி:3795/2,3

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – நாலாயி:3816/4

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/1,2

தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை – நாலாயி:3835/2

திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3

ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4

அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4

ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை – நாலாயி:3929/2

நெடியான் அருள் சூடும் – நாலாயி:3945/1

அடியார்க்கு அருள் பேறே – நாலாயி:3945/4

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே – நாலாயி:3946/2

அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் – நாலாயி:3946/1

நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4

அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1

ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே – நாலாயி:3976/4

——————–

அருள் (93)
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த - நாலாயி:312/2
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:481/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:496/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:499/8
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/4
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ - நாலாயி:727/4
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் - நாலாயி:904/3
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற - நாலாயி:944/1
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே - நாலாயி:944/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
 அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1052/3,4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1073/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து - நாலாயி:1151/2
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் - நாலாயி:1238/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை - நாலாயி:1251/3
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி - நாலாயி:1267/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு - நாலாயி:1371/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து - நாலாயி:1418/1
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் - நாலாயி:1422/3
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் - நாலாயி:1423/3
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் - நாலாயி:1425/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1456/5
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:1461/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே - நாலாயி:1549/4
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் - நாலாயி:1550/1
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:1554/1
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு - நாலாயி:1563/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள்
 தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை - நாலாயி:1638/1,2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் - நாலாயி:1703/3
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் - நாலாயி:1707/2
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு - நாலாயி:1781/2
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் - நாலாயி:1838/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
 விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே - நாலாயி:1851/3,4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:2029/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி - நாலாயி:2057/2
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து - நாலாயி:2096/3
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து - நாலாயி:2240/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் - நாலாயி:2280/1
அஞ்சாது இருக்க அருள் - நாலாயி:2299/4
அருள் முடிவது ஆழியான்-பால் - நாலாயி:2383/4
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக - நாலாயி:2388/2
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருள் என்னும் தண்டால் அடித்து - நாலாயி:2610/4
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே - நாலாயி:2832/4
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை - நாலாயி:2867/1
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/3
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:2883/3
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ - நாலாயி:2894/3
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று - நாலாயி:2937/2
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2937/3
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே - நாலாயி:2937/4
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் - நாலாயி:3438/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் - நாலாயி:3438/2
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் - நாலாயி:3438/3
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே - நாலாயி:3438/4
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் - நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ - நாலாயி:3463/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் - நாலாயி:3466/3
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு - நாலாயி:3568/3
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் - நாலாயி:3569/2
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் - நாலாயி:3582/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ - நாலாயி:3672/2
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை - நாலாயி:3703/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே - நாலாயி:3738/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் - நாலாயி:3739/1
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் - நாலாயி:3744/1
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/4
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே - நாலாயி:3816/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் - நாலாயி:3876/4
நெடியான் அருள் சூடும் - நாலாயி:3945/1
அடியார்க்கு அருள் பேறே - நாலாயி:3945/4
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே - நாலாயி:3949/4

  அருள்-தன்னாலே (1)
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
 காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் - நாலாயி:881/1,2

  அருள்கள் (2)
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய - நாலாயி:3080/3
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் - நாலாயி:3726/2

  அருள்கொடுக்கும் (1)
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும்
 படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் - நாலாயி:3560/1,2

  அருள்கொண்டு (1)
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் - நாலாயி:944/3

  அருள்செய் (5)
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே - நாலாயி:440/4
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:896/4
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு - நாலாயி:1085/3
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் - நாலாயி:1742/3
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே - நாலாயி:3101/4

  அருள்செய்கின்ற (1)
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் - நாலாயி:1640/1

  அருள்செய்த (11)
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
 அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/3,4
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
 கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:177/3,4
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
 அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/3,4
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் - நாலாயி:313/3
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் - நாலாயி:646/1
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை - நாலாயி:1601/2
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் - நாலாயி:1973/2
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் - நாலாயி:3165/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
 நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் - நாலாயி:3197/1,2
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் - நாலாயி:3738/3
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை - நாலாயி:3835/2

  அருள்செய்தது (1)
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து - நாலாயி:1421/2

  அருள்செய்தமையால் (1)
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
 எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் - நாலாயி:423/2,3

  அருள்செய்தான் (1)
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2

  அருள்செய்தானால் (1)
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் - நாலாயி:220/4

  அருள்செய்தானை (1)
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை
 எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட - நாலாயி:1140/2,3

  அருள்செய்து (11)
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து
 கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே - நாலாயி:601/3,4
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட - நாலாயி:1122/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று - நாலாயி:3171/1
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே - நாலாயி:3349/4
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் - நாலாயி:3350/2
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே - நாலாயி:3409/4
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் - நாலாயி:3535/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே - நாலாயி:3714/4
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1

  அருள்செய்ய (1)
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே - நாலாயி:3976/4

  அருள்செய்யும் (10)
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் - நாலாயி:1043/2
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1085/4
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட - நாலாயி:1569/2
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி - நாலாயி:1571/2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் - நாலாயி:3101/1
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை - நாலாயி:3186/2
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் - நாலாயி:3200/1
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
 மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை - நாலாயி:3362/1,2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும்
 நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் - நாலாயி:3823/1,2
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை - நாலாயி:3929/2

  அருள்செய்வதே (1)
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் - நாலாயி:2860/2

  அருள்செய்வர் (2)
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால் - நாலாயி:1976/2
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து - நாலாயி:3744/2

  அருள்செய்வாய் (1)
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய்
 சந்தோகா தலைவனே தாமரை கண்ணா - நாலாயி:2030/2,3

  அருள்செய்வான் (2)
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/4
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான்
 அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/2,3


  அருள்செயும் (1)
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4

  அருள்தந்தவா (2)
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1785/2
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1786/2

  அருள்புரிந்தான் (1)
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
 அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/2,3

  அருள்புரிந்து (2)
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
 இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ - நாலாயி:1195/1,2
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல் - நாலாயி:2114/1

  அருள்புரியாயே (2)
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1041/4
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1311/4

  அருள்புரியும் (1)
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை - நாலாயி:1146/2

  அருள்புரியே (8)
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
 மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி - நாலாயி:1368/2,3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே
 உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய் - நாலாயி:1369/2,3
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே
 மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் - நாலாயி:1370/2,3
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே
 கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற - நாலாயி:1372/2,3
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே
 மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த - நாலாயி:1374/2,3
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே
 மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் - நாலாயி:1375/2,3
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
 ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி - நாலாயி:1376/2,3
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4

  அருள்பெற்றதே (1)
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே - நாலாயி:2509/4

  அருள்பெற்றமையால் (1)
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் - நாலாயி:1575/1

  அருள்பெற்றவன் (1)
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் - நாலாயி:3181/2

  அருள்பெற்றாள் (1)
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் - நாலாயி:2178/2

  அருள்பெற்று (2)
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே - நாலாயி:2011/4
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் - நாலாயி:3774/1

  அருள்பெறும் (3)
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே - நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2

  அருள்பெறுவார் (1)
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் - நாலாயி:3946/1

  அருள (2)
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:925/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3758/3

  அருளா (2)
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே - நாலாயி:714/3
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே - நாலாயி:2546/3
  அருளாத (3)
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு - நாலாயி:2938/2

  அருளாது (2)
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று - நாலாயி:2300/1
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1

  அருளாய் (29)
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
 என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/1,2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் - நாலாயி:1218/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1236/2
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று - நாலாயி:2081/1
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு - நாலாயி:2475/3
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
 எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே - நாலாயி:2505/3,4
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே - நாலாயி:2557/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் - நாலாயி:2947/3
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே - நாலாயி:3135/4
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று - நாலாயி:3300/2
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே - நாலாயி:3344/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே - நாலாயி:3415/4
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே - நாலாயி:3446/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் - நாலாயி:3546/1
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் - நாலாயி:3574/3
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே - நாலாயி:3577/4
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
 தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் - நாலாயி:3638/1,2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
 திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் - நாலாயி:3639/1,2
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய்
 எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் - நாலாயி:3640/1,2
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
 உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் - நாலாயி:3641/1,2
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
 காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/2,3
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
 அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் - நாலாயி:3643/1,2
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
 துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் - நாலாயி:3644/1,2
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் - நாலாயி:3672/1
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே - நாலாயி:3672/3

  அருளாயே (11)
அலங்கல் துளப முடியாய் அருளாயே - நாலாயி:1039/4
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1040/4
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே - நாலாயி:1313/4
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1315/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:1316/4
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே - நாலாயி:2936/4
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே - நாலாயி:3408/4
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:3864/4

  அருளார் (1)
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார்
 சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே - நாலாயி:2496/3,4

  அருளால் (11)
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
 இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் - நாலாயி:459/1,2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் - நாலாயி:1137/3
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால்
 அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/2,3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால்
 வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே - நாலாயி:2806/3,4
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
 தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து - நாலாயி:2859/2,3
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் - நாலாயி:2953/2
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் - நாலாயி:3021/2
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே - நாலாயி:3322/4
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் - நாலாயி:3750/1
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் - நாலாயி:3764/3

  அருளாலே (1)
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
 மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே - நாலாயி:2222/2,3

  அருளாள் (1)
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் - நாலாயி:1109/1

  அருளாளர்-கொல் (1)
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1

  அருளாளன் (5)
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை - நாலாயி:1268/1
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி - நாலாயி:1791/3
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச - நாலாயி:1797/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் - நாலாயி:1886/1

  அருளானே (1)
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
 சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் - நாலாயி:1200/2,3

  அருளானை (1)
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2

  அருளி (28)
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
 மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே - நாலாயி:71/2,3
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை - நாலாயி:125/3
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
 ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே - நாலாயி:723/1,2
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
 மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே - நாலாயி:984/3,4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி - நாலாயி:1328/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் - நாலாயி:1369/1
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே - நாலாயி:1415/3
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
 அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/3,4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி
 அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/1,2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று - நாலாயி:1835/1
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் - நாலாயி:2010/2
கடல் ஆழி நீ அருளி காண் - நாலாயி:2236/4
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி
 தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை - நாலாயி:2700/1,2
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
 வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் - நாலாயி:2932/2,3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே - நாலாயி:3536/4
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
 ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே - நாலாயி:3624/3,4
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் - நாலாயி:3758/2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே - நாலாயி:3758/4
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் - நாலாயி:3792/3
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் - நாலாயி:3793/2
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
 தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/2,3
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
 நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப - நாலாயி:3795/2,3

  அருளிச்செய்த (2)
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3

  அருளிய (3)
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் - நாலாயி:1619/2
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2

  அருளிலே (1)
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே - நாலாயி:3773/4

  அருளின் (5)
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி - நாலாயி:1820/1
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு - நாலாயி:2815/2
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் - நாலாயி:2828/3
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி - நாலாயி:2838/1
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே - நாலாயி:3016/4


  அருளினன் (1)
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் - நாலாயி:2899/2

  அருளினாய் (1)
வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே - நாலாயி:913/4

  அருளினான் (3)
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
 குன்ற மாட திருக்குருகூர் நம்பி - நாலாயி:942/2,3
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
 எண் திசையும் அறிய இயம்புகேன் - நாலாயி:943/2,3
அருளினான் அ அரு மறையின் பொருள் - நாலாயி:944/2

  அருளினானே (1)
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே
 சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை - நாலாயி:1301/2,3

  அருளினை (1)
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே - நாலாயி:1272/2

  அருளினோடு (1)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4

  அருளீர் (1)
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் - நாலாயி:3850/3

  அருளு (3)
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:509/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:511/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே - நாலாயி:3679/4

  அருளுடையவன் (1)
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே - நாலாயி:3120/4

  அருளுதியேல் (9)
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1448/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1449/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1450/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1451/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1452/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1453/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1454/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1455/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1456/5,6

  அருளும் (15)
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் - நாலாயி:908/3
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து - நாலாயி:966/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை - நாலாயி:1296/2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம் - நாலாயி:1853/3
பல்லார் அருளும் பழுது - நாலாயி:2096/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் - நாலாயி:2205/1
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
வைகுந்தம் என்று அருளும் வான் - நாலாயி:2637/4
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் - நாலாயி:2784/5
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து - நாலாயி:3625/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1

  அருளே (17)
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே - நாலாயி:463/4
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே - நாலாயி:691/4
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே - நாலாயி:716/4
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
 நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:951/3,4
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் - நாலாயி:2401/1
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று - நாலாயி:2504/1
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே - நாலாயி:2866/4
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
 கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3337/2,3
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
 பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே - நாலாயி:3424/2,3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே - நாலாயி:3437/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே - நாலாயி:3476/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
 உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் - நாலாயி:3750/2,3

  அருளை (3)
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் - நாலாயி:3963/1

  அருளையே (1)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே - நாலாயி:943/4

  அருளொடு (1)
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2

  அருளொடும் (1)
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பங்குனி உத்திர திரு நாள்–

November 21, 2022

12 வது ராசி மீன ராசி.
12 வது மாதம் பங்குனி மாதம்.
அது போல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம்.

எனவே, இந்த மூன்றும் ஒன்றாக இணைகின்ற நாள் பங்குனி உத்திர நாள்.

(12வது ராசி, 12வது மாதம், 12 வது நட்சத்திரம்)

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம்.

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.

பங்குனி உத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த திருமால், தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது விஷ்ணு புராணம்.

பல்குணன் -வடமொழியில் உத்தர நக்ஷத்ரத்தின் பெயர் -அர்ஜுனனுக்கும் பல்குணன் என்ற பெயரும் உண்டு

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

பங்குனி உத்தரம் திரு நாள் காஞ்சியில் தேவப்பெருமாள்- 7 நாள் -ஸ்ரீ மலையாள நாச்சியார் உடன் சேர்த்தி-உத்சவம் கண்டு அருளுகிறார்

ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸந்நிதியில் ஸ்ரீ தேவி பூ தேவி ஸ்ரீ மலையாள நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸஹிதமாக ஸ்ரீ தேவப்பெருமாள் ஸேவை ஸாதித்து அருளுகிறார் –

மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும்.

வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு சில பண்டிகைகள் உற்சவங்கள் உண்டு.
வைகாசி விசாகம், ஆடிப் பூரம் ,ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம்,மாசி மகம் ,பங்குனி உத்தரம்.
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான்.
ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து,
ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான்.
அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும்.
எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பூர்வ தினச்சர்யா–ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பயங்கார் ஸ்வாமி வியாக்யானம் தழுவி – ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

November 21, 2022

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன்

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞாந ப்ரதம் ஶுபம் ||

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின்,

சரணாம் புஜ ஷட் பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,

திவ்ய ஜ்ஞாந ப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்,

ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,

தேவராஜ குரும் – தேவராஜ குரு என்ற எறும்பி யப்பாவை,

வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.

————

இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வ திநசர்யை, யதிராஜ விம்ஶதி, உத்தர திநசர்யை என்பன அப்பிரிவுகள்.

ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வ திநசர்யையும், உத்தர திநசர்யயும் ஆகும்.

எம்பெருமானாரைப் பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாள மாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால்

பெரியோர்கள் மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜ விம்ஶதியையும்

பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.

இம் முன்று பகுதிகளைக் கொண்ட ஸ்ரீ வரவர முநி திநசர்யை என்னும் நூலுக்கு

ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில்  எழுதப்படுகிறது.

———–

பூர்வ தினச்சர்யா – 1
அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வர வரம் முநிம்||

துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேர கந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கே தாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கிய மணவாளப் பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.

“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல் கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது.

இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது.

இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லை யல்லவா?

‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும்.

‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப்பின்பு துலுக்கர் முதலியோரால் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது.

எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும், பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல் மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.

‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல், உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு,

இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால், பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.

———————-

பூர்வ திநசர்யை – 2
மயி ப்ரவிஶதி ஸ்ரீமந் மந்திரம் ரங்க ஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்த மவிதூரத: ||

பதவுரை: –

ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும்.

(இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம்.

இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)

‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம்.

அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும்.

முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல், அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது, எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார். இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார்

இதனால். ‘ ஆசார்ய கடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று, ‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று.

பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச் சென்ற  போது ஆசார்யர் எதிர்பட்டமை, விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச் செலும் போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக் கூறுவர் உரையாசிரியர்.

எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம். அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்ய நிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவே யன்றி, ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று.

‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய், ‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம் ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்ய வேணும்) என்று நினைப்பவன் பரமை காந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமை காந்தி யாகையால் என்க.

——————–

பூர்வ திநசர்யை – 3
ஸுதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||

பதவுரை :-

ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ர விக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,

ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,

ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …

‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும், ‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.

மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால், மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார்.

ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘ தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள்.

அப்படி ஒரு ஸூரியன் உண்டானால் அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது.

—————-

பூர்வ திநசர்யை – 4
பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியௌ |
விந்யஸ் யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீ தலே ||

பதவுரை:-

பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும்,

பவத் – தேவரீருக்கு,

ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும்,

பாணி பத்மாப்யாம் – தாமரை மலர் போன்ற திருக்கைகளால்,

பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு,

ம்ருதுளௌ – ம்ருதுவான,

அங்க்ரீ – திருவடிகளை,

மேதிநீதலே – பூதலத்தில்,

ஸனை: – மெல்ல, மெல்ல,

விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய

இரண்டு கைகளையும் கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை.

இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும்.

ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால் அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.

(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது – திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும்.

‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத் பக்தர்களின் பாததூளி படுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார்.

—————–

பூர்வ திநசர்யை – 5
ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜ பூஷணம் ||

பதவுரை:-

ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,

ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்,

ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும்,

ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…

திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும், ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும், மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால்.

(அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம்.

அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல. திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி. திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள்.

சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர். வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது.

திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது.

(ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தம புருஷ லக்ஷணமாகும்.

(ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும்.

அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக் கொண்டு நடந்தருளும்போது முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க.

அல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால், அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால் அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும்

——————

பூர்வ திநசர்யை – 6
ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா|
சோபிதம் யக்ய ஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||

பதவுரை: 

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா – தாமரைத் தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும்,

நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான)

யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால்.

சோபிதம் – விளங்குமவருமாகிய

திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால்.

‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும்.

மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார்.

‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள்.

‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது.

‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல், ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல், க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர்.

இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி.

‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும். ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

—————–

பூர்வ திநசர்யை – 7
அம்போஜ பீஜ மாலாபி: அபிஜாத புஜாந்தரம்|
ஊர்த்வ புண்ட்ரைருபஸ் லிஷ்டம் உசித ஸ்தாந லக்ஷணை:||

பதவுரை :-

அம்போஜ பீஜ மாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால்,

அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும்,

உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய,

ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்)

உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…

திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு, திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால்.

“ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும், விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும்,

“பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும்.

‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது.

பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும். புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும். அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது.

‘விஷ்ணு க்ஷேத்ரத்திலிருந்து வெண்மை நிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து, அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து, அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி (பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்;

‘ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க.

———————

பூர்வ திநசர்யை – 8
காஷ்மீர கேஸர ஸ்தோம கடார ஸ்நிக்த ரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்த மூலா வலம்பிநா||

பதவுரை:-

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய்,

ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற,

கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால்,

மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….

ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால்.

பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது.

ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது.

பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க.

இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது.

இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது.

‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க.

இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே.

—————————

பூர்வ திநசர்யை – 9
மந்த்ர ரத்நாநு ஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம் |
ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலகோத்கமம் ||

பதவுரை:-

மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும்,

ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….

அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா.

மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும், அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.

முற்கூறியபடியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர்.

‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் | தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: ||

[விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்). நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார், அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார். குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது. வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே,

பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம். அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல; பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி.

யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும் ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும்.

த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன் உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே மணவாளமாமுனிகளைக் கண்ணாரக் காண எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது

——————————-

பூர்வ திநசர்யை – 10
ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாத ப்ரவணம் மதுரோதார பாஷணம் ||

பதவுரை:-

ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும்,

தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும்,

மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில், 

ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய்,

மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….

அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும் அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும் ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார்.

இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத் தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்;

ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது.

இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல்.

‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே, ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க.

இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்; தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது.

இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும்.

‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி, ‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று, அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும்.

மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும்.

‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும்,

‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க.

இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின் ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும்.

————————

பூர்வ திநசர்யை – 11
ஆத்ம லாபாத் ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||

பதவுரை:-

ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,

அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,

பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,

இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,

அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,

இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),

அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று,

ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் –

அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்;

அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார்

இதனால். ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன்.

இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க.

இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால்.

ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும். ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.

————————

பூர்வ திநசர்யை – 12 &13
பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ் த்வாமேவ கீர்த்தயந் || 12

த்வதந்ய விஷய ஸ்பர்ஸ விமுகைர  கிலேந்த்ரியை:|
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாம நாஸ்பதம் || 13

பதவுரை:-

ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே!

முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே!

பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே,

நீரந்த்ரம் – இடைவிடாமல்,

பஸ்யந் – கண்டுகொண்டும்,

வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன்,

த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே,

முஹூ – அடிக்கடி, 

கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)

த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட),

அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே

அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத,

பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு,

அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)

விஷயமாகக் கொள்ளாமையினால் பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும்.

இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.

கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்ய ஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.

இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை.

இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது.

இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல்.

இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப் பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு, அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக் கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால், மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது.

ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல்.

இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் ஸ்புரித தசைகிற அதரத்தை யுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும்.

இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க.

ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘

எம்பெருமானை எதிர் கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும், ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும் இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.

—————-

பூர்வ திநசர்யை – 14
பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ் ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குரு பரம்பராம் ||

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு ஸர்வதர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்யகர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரம காருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத் கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது – பங்க்தி பாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத் தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குரு பரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது – பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும், ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும்.

————–

பூர்வ திநசர்யை – 15
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச ||

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன – ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை, அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை, அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை – த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள் பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று.

————

பூர்வ திநசர்யை – 16
தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா ||

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள எம்பெருமானுடைய திருமுக மலர்ச்சிக்காகவே நித்ய நைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால், மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது.

————–

பூர்வ திநசர்யை – 17
அத ரங்க நிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோத யித்வா பத த்வயம் ||

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

சாண்டில்ய ஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண் காப்புகளை யணிந்து, கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப் பொழுதுகளிலும், தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும் மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டே யிருந்து அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதி வசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல் தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்க நகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும், தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க.

———–

பூர்வ திநசர்யை – 18
ததஸ்தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாத மதுரஸ்மிதம் ||

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷண வகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்த பிறகு, சோம்பலில்லாதவனாய்க் கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள் அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன், தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்க வேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில் ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க.

மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால், அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது.

——-

பூர்வ திநசர்யை – 19
ப்ருத்யை: ப்ரிய ஹிதைகாக்ரை: ப்ரேம பூர்வ முபாஸிதம் |
தத் ப்ரார்த்தநா நுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே ||

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

முறைப்படி திருவாராதனம் செய்து, தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்யக் கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவ பூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும், புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண் காப்புக்களை அணிதலும், ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதி பெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம். ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல்.

—————

பூர்வ திநசர்யை – 20
அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம ||

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து பக்திப் பெருக்கினால் அப்படியே வெகு நேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்கா நிற்க, அது கண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது. தயை யென்பது இதன் பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமர கோஸம் காணத் தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும் அது பத்து அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும். பத்துத் தடவைகள் அஸ்வமேத யாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்க போகத்தை அநுபவித்துவிட்டு மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால் பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத் தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட, மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்ய ஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசந பூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத் தக்கது

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –சூரணை-433-

———–

பூர்வ திநசர்யை – 21
ஸாக்ஷாத் பலைக லக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ர ரத்நம் ப்ரயச் சந்தம் வந்தே வர வரம் முநிம் ||

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து, ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குரு பரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால் ‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்ய பரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று, அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று, எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில் ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது

————————–

பூர்வ திநசர்யை – 22
ததஸ் ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர் நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் ||

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக் காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்க நகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை. பின்னையோவென்னில் எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமை வாய்க்கப் பெற்றது அரங்கநகரமென்பது இவ் வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’ (எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்ய மண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றை விட அதிகமான ஆசையைப் பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத் தக்கதாகும்.

இக் கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக – பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப் பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரக மநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால் அப்பெருமானுக்கு உண்டான ஜகத் காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி. ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதய குகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால் அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால், கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லாவபேக்ஷிதங்களையும் தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதி ஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷ ஸப்த வாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி.

ஒரு மனிதனை விட்டு நீங்காதது அவனுடைய நிழலே யன்றி வேறொன்றில்லை யென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் ஸ்ரீ  அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது.

———–

பூர்வ திநசர்யை – 23
மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்த மாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும்.

இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது.

தெண்டன் ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது

————-.

பூர்வ திநசர்யை – 24
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணௌ ரங்க ஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குரு ஜந வ்ருத: புருஷச் சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே ||

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

 – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார் இவர்களையும்,

பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார்.

ஏன்? அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால் அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும் பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார் தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும், அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குரு ஜந ஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும் தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று.

———–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க.-

——————-

பூர்வ திநசர்யை – 26
அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் ||

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித் தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி அதில் சித்ர வுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில்.

இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது – பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ? அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிச் சாயையின் நடுவில் (தம்மைப்போல்) எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’ (திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம் மாமுனிகளை வணங்குகிறேன்) என்றதனோடு அந்வயம் கொள்ள வேண்டும்.

————

பூர்வ திநசர்யை – 27
தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் ||

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

திவ்ய ப்ரபந்தங்கள் ஸரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11) முதலிய பல ஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்ய த்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ர ப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால், அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத் தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரே யாகையால், அதற்காக அடையத் தக்க (ப்ராப்யரான) வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்ற வேணுமென்பது ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாள மாமுனிகளுக்குத் தலை யல்லால் கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க.

—————-

பூர்வ திநசர்யை – 28
தத: ஸ்வ சரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநை ரர்த்திநஸ் தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால் தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால் ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாத தீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத் தக்கது.

சிலர் ஸ்ரீபாத தீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்த பாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’ என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்த பாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால் அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்ய ப்ரபந்த ஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு இதில் ஸ்ரீபாததீர்த்த பாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர், இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க.

—————-

பூர்வ திநசர்யை – 29
ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் ||

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும் எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதி விரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும், ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும் எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று சாண்டில்ய ஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும், பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல் (உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும் நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே) மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும் நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத் தூய்மையை உண்டாக்குமதும் பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தி யடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில் குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது, ‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து, இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ? என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை, தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது – அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும்.

———–

பூர்வ திநசர்யை – 30
தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே ||

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை, அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால் திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்ய மண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை) சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷ ஸப்தம் பரமபுருஷனாகிய விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்ம த்யாநத்தைத் தெரிவிக்கிறது.

—————–

பூர்வ திநசர்யை – 31
அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி ||

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில் முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும், அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து

பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இரு கண்களாலும் பார்த்துக் கொண்டு யோகம் செய்ய வேண்டுமென்று தர்ம ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும், பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய) யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று கூறுகிறபடியினால்,

ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க.

—————–

பூர்வ திநசர்யை – 32
தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் ||

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும் மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை ‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும், அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து அவரை வணங்கினால்,

தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்