***- (கையார் சக்கரத்து) நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து,
பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல,
அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
பதவுரை
கைஆர் சக்கரத்து |
– |
‘திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும் |
என் கரு மாணிக்கமே |
– |
எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே! |
என்று என்று |
– |
என்று பலகாலும் |
பொய்யே கைம்மை சொல்லி |
– |
பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி |
(அந்த வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி) |
||
புறமே புறமே ஆடி |
– |
விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும் |
மெய்யே பெற்றறோழிந்தேன் |
– |
மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்; |
விதி வாய்க்கின்று |
– |
பகத்திருபை பலிக்குமிடத்தில் |
காப்பர் ஆர் |
– |
அதைத் தடுக்கவல்லார் யார்? |
கண்ணபிரான் |
– |
ஸ்ரீக்ருஷ்ணனே! |
இனி |
– |
உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு |
போனால் |
– |
என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில் |
அறையோ |
– |
தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.) |
ஐயோ |
– |
சந்தோஷக்குறிப்பு |
(இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.) |
எம்பெருமான் கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்பு உண்மையிலே நெஞ்சை உருக்குமதாயிருந்தாலும்
இரும்புபோல் வலிதான என்னுடைய நெஞ்சம் அதிலே ஈடுபட்டிலது;
ஆனாலும் ஈடுபட்டவர்கள் பேசுகிற பாவனையிலே “கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே” என்ற பேசினேன்;
இப்படி ஒரு தடவை சொல்லி நிற்காதே பலதடவை சொன்னேன்;
பல்லாயிரந்தடவை சொன்னாலும் உள்கனிந்து சொன்னால் அழகியதே;
அப்படியன்றிக்கே எம்பெருமானையும் வஞ்சிப் பதற்காகச் சொன்னேனத்தனை.
வாயாற்சொல்லுவதோ இது; நடத்தையோ விஷயப்ராவண்யமேயாயிற்று.
அப்படியிருந்தும் மெய்யன்பர் பெறும் பேற்றை நானும் பெற்றுவிட்டேன்;
பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் பேற்றை நானும் பெற்றுவிட்டேன்.
பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் எங்ஙனம் பெறமுடியும் என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
(விதிவாய்க்கின்று காப்பாரார்?) எம்பெருமானுடைய அருளிவெள்ளம் கரையுடைந்து பெருகப் புகுந்தால்
எம்பெருமானறன்னாலும் அணை செய்ய முடியாதன்றோ.
ஆக மூன்றடிகளைத் தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு, நான்காமடியை எம்பெருமான்றன்னையே நோக்கிச் சொல்லுகிறார்,
“கண்ணபிரானே! இனி நீ என்னைவிட்டுப்போகத் திருவுள்ளமாகில் விட்டுப் போ பார்ப்போம்” என்று வீரவாதம் பண்ணுகிறார்.
இனி உன்னாலும் விட்டுப் பெயர முடியாதென்றவாறு.
அறையோ வென்பது தம்முடைய வெற்றியைக் காட்டுகிறது.
வீரவாதத்தைத் தமிழர்கள் அறை கூவுதலென்றும் நாவலிடுதலென்றும் சொல்லுவர்.
*** – மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சக * என்ற உனக்கு இனி
என்னை விடப்போகாதென்பது திண்ணம் என்று காட்டினபடி.
இப்பாசுரத்தினால் எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபை நிரூபிக்கப்பட்டதாயிற்று.
ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில் “இவன் நடுவே அடியானென்ன, ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி
ஸாக்ஷி வன்களவிலநுபவமாக இந்திரஞாலங்கள் காட்டிக்கொள்ளக் காப்பாரற்று விதி சூழ்ந்தது” என்றருளிச்செய்த
சூர்ணிகை இங்க அநுஸந்திக்கத்தக்கது.
விதியென்று பகவத்க்ருபையைச் சொல்லுகிறது. விதி எப்படித் தப்ப வொண்ணாததோ
அப்படி க்ருபையும் எம்பெருமானாலே தப்ப வொண்ணாத தாயிருக்கையாலே விதி யென்றது.
இனிமேல் எம்பெருமான் தம்மை விட்டுப் பெயர்ந்து போக முடியாதென்கிற உறுதியைக் காட்டுவது ஈற்றடி.
கண்ண பிரானால் இனி எங்ஙனம் போக முடியுமென்கை.
—————————
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-
பதவுரை
மா மருதிந் நடுமே |
– |
பெரிய மருதமரங்களினிடையே |
போனாய் |
– |
தவழ்ந்து சென்றவனே! |
என் |
– |
எனக்கு விதேயமான |
பொல்லா மணியே |
– |
துளைபடாத ரத்தினம் போன்றவனே! |
தேனே |
– |
தேன்போன்றவனே! |
இன் அமுதே |
– |
இனிமையான அம்ருதம் போன்றவனே! |
என்று என்றே |
– |
என்று இவ்வண்ணமாகவே |
சில கூத்து சொல்ல |
– |
சில பொய்யுரைகளைச் சொல்ல |
எம்பெருமான் அவன் தான் |
– |
அவ்வெம் பெருமானானவன் |
என் ஆகி ஒழிந்தான் |
– |
எனக்கு விநேயனாய்விட்டான்; |
(அன்றியும்) |
||
வான் மா நிலம் மற்றும் முற்றும் |
– |
அவனடைய விபூதிகளெல்லாம் |
என் உள்ளன |
– |
என்னுள்ளே நடத்தும் படியாயின. |
***- (போனாய்) கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றில் கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே யெழுந்தருள, அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினால் அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தனவென்பது யமளார்ஜுனகதை. அக்காலத்திலலே யசோதைப் பிராட்டிக்கண்டு, ஐயோ! பிள்ளைக்கு ஏதோ அநர்த்தனம் வந்துவிட்டதென்று அஞ்சி “என்னப்பா! மாமருதின்நடுவே போனாயே!” என்று வயிரெறிந்து பேசினள்; உண்மையில் அவள் பரிவு உடையவளாகையாலே அங்ஙனம் பேசத் தகும்; அவளுடைய பரிவில் ஆயிரத்திலொன்று கூட இல்லாத நான் அப்படிப் பட்ட பரிவு எனக்கு மிருப்பதாகப் பாவனைகாட்டி, “என்தேனே! என் இன்னமுதே! என் பொல்லாமணியே! மாமருதின் நடுவேபோனாயே!” என்று நானும் பேசினேன்; இது கபடமான உத்தியாயிருக்கச் செய்தேயும் இதையும் நெஞ்சு கனிந்துசொன்ன சொல்லாக்கொண்டு எம்பெருமான் என்னுள்ளே ஸபரிகரமாக வந்து புகுந்தருளினானே! இது என்ன ஆச்சரியம்! என்று உள்குழைகின்றார்.
இரண்டாமடியில் ‘கூற்று’ என்பது பன்னிராயிரப்படியின் பாடம்; ‘கூத்து’ என்பது மற்ற வியாக்கியானங்களின் பாடம். கூறப்படுவது கூற்று; என்றபடி. ‘கூத்து’ என்னம் பாடத்தில். சிலருடைய செயலை வேறு சிலர் அநுகரிப்பது கூத்தாகையாலே கபடமென்றவாறு.
எம்பெருமானவன்றான் என்னாகியொழிந்தான் – எனக்கு ஸ்வாமியான அவன் எனக்கு ஸ்வம்மாயினான் என்றபடி. வானே மாநிலமே மற்றுமுற்றுமென்னுள்ளனவே -உபயவிபூதிநிர்வாஹமும் அவன் என்பக்கலிலேயிருந்து பண்ணுமத்தனையாய்விட்டது என்கை.
—————
***- முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக் கொண்டிருந்த வாற்றைச்சொல்லி,
பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடு கூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
பதவுரை
வெள்ளத்து |
– |
திருப்பாற்கடலிலே |
அணை |
– |
(திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது |
கிடந்தாய் |
– |
பள்ளிகொள்ளும் பெருமானே! |
உள்ளன |
– |
எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன் |
மற்று உள் ஆ |
– |
உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும் |
புறமே |
– |
வெளிவேஷமாக, |
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே |
– |
வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும் |
சில மாயம் சொல்லி |
– |
சில பொய்யுரைகளைச் சொல்லி |
உன்னையும் வஞ்சிக்கும் |
– |
(ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான |
கள்ளம் மனம் தவிர்த்து |
– |
கபடமான நெஞ்ச தவிரப்பெற்று |
உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் |
– |
உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்; |
இனி |
– |
இனிமேல் |
உன்னை விட்டு |
– |
பரமயோக்யனான உன்னைவிட்டு |
என் கொள்வன் |
– |
வேறு எதைக் கைக் கொள்ளுவேன்? |
மனத்தினுள் நடையாடுகின்ற எண்ணங்களோ வேறுபட்டவை;
வெளியே வாயாற் சொல்லுகிறவாசகங்களோ புறப்பூச்சான பொய்யுரைகளேயாம்;
எம்பெருமானுடைய ஔதார்யம் முதலிய குணங்களிலும் வடிவழகிலும் மிக ஈடுபட்டவன்போல ‘வள்ளலே! மணிவண்ணனே!’ என்று பலகாலுஞ்சொல்லி * உள்ளவாருள்ளிற்றெல்லா முடனிந்தறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படியான கள்ளமனமுடையவனானகவே யிருந்தேன்;
அப்படிப்பட்ட நான் அந்தக் கள்ளமனம் தவிரப்பெற்ற உஜ்ஜீவிக்கவல்லவனாயினேன்.
இனி வேறுவழிகளிலே செல்ல ப்ரஸக்தியில்லை என்றாயிற்று.
“வஞ்சக் கள்வன் மா மாயன்” என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிற எம்பெருமானையும் வஞ்சிக்க வல்லவனாயினேன் என்பது தோன்ற ‘உன்னையும்’ என்று உம்மை கொடுத்துப் பேசினார்.
——————
***-இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால்
அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார்.
(இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;)
கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது;
காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார்.
கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம்
தேஹ ஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயே போக்கி
உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் – என்று சில ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள்.
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-
பதவுரை
கண்ணனே |
– |
எம்பெருமானே! |
வன் கள்வனேன் |
– |
பஹாரக்கள்வனாகிய நான் |
உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும் |
– |
‘உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும் |
மனத்தை வலிந்து |
– |
விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு |
கண்ண நீர் சுரந்து |
– |
அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி |
நின் கண் |
– |
உன்னிடத்திலே |
நெருங்க வைத்து |
– |
மனத்தை ஊன்றவைத்து |
எனது ஆவியை |
– |
என் ஆத்மாவை |
நீக்க கில்லேன் |
– |
ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்; |
என் கண் |
– |
என் பக்கலிலுள்ள |
மலினம் |
– |
அவித்யா தோஷத்தை |
அறத்து |
– |
போக்கி |
என்னை கூசி அருளாய் |
– |
என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும். |
உன்னை விட்டு என்கொள்வனென்னும் வாசகங்கள் சொல்லியும் = சிறந்த பரமைகாந்திகளன்றோ இவ்வார்த்தை சொல்லத் தகுந்தவர்கள்;
உன்னைத் தவிர மற்ற வஸ்துக்களிலேயே காலாழ்ந்து திரிகின்றயான் “உன்னையொழிய வேறு எதைக்கொள்வேன்?” என்று சொல்லத் தகுந்தவனோ? அல்லனாயினும், வாயாலே இங்ஙனம் பச்சைப்பசும்பொய் பேசிக்கொண்டு திரிந்தேனென்கிறார்.
அதற்கு இப்போது அநுதபித்து வன்கள்வனேன் என்கிறார்.
என்னுடைய பொருளைத் திருடுகிறோமோ அவனைப் பற்றவும், அந்தப் பொருளைத் திருடுகிறோமோ அந்தப் பொருளைப் பற்றவும் கனவு வலிமை பெற்றிருக்கும்;
இங்கு ஆத்ம வஸ்துவோ ஸர்வேச்வரனான எம்பெருமானுடையது; வஸ்துதானும் கௌஸ்துபம்போலே மிகச் சிறியது; ஆக இரண்டாலும் இதனின் மிக்க களவில்லை யென்று துணிந்து வன் கள்வனே என்கிறார்.
மனத்தை வலித்து = விஷயாந்தரங்களிலே சென்ற மனத்தை அவற்றில் நின்றும் மீட்டு என்றபடி,
மனத்தை மீட்பதிலுள்ள அருமை தோன்ற வலிந்து என்கிறார்.
கண்ணீரில் சுரந்து = விஷயாந்தரங்களிலே ஊன்றிக்கிடந்த காலத்தில் அவற்றின் அநுபவம் யதேஷ்டமாகக் கிடையாதபோது கண்ணீர் பெருகுமே, அதைச் சொல்லுகிறது இங்கு;
அந்தக் கண்ணீரையும் மாற்றவேணுமே இப்போது, இவையெல்லாம் கில்லேன் என்பதிலே அந்வயிப்பன;
அதாவது மனத்தை வலிக்ககில்லேன், கண்ணநீர் காக்க (மாற்ற) கில்லேன்; (மனத்தை) நின்கண் நெருங்க வைக்கில்லேன்; எனதாவியை நீக்கில்லேன்- என்று ஒவ்வொன்றும் மாட்டாமை கூறியவாறு.
எனதாவியை நீக்ககில்லேன் = இந்த ஸ்தூல தேஹத்தை விட்டு ஆத்மாவைப் பிரிக்க முடியவில்லை யென்கை. அதாவது – ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுக்கமாட்டிற்றிலே ளென்றவாறு.
என்கண் மலினமறுத்து – இங்கு மலினுமென்கிறது ப்ரக்ருதி ஸம்பந்தத்தை; அத்தை யறுத்து உன் திருவடிகளிலே என்னை யழைத்துக்கொண்டருள வேணுமேன்கை.
இரண்டு வகையான அவதாரிகைகளுக்கு இணங்க, இரண்டாமடி மூன்றாமடிகளுக்கு இரண்டுவகையான பொருள்கள் காணத்தக்கன.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்; “அதவா, (என்கொள்வனித்யாதி) ஸ்வரூபாநுரூபமான பாகரத்தை வாயாலே சொல்லி நிற்கச்செய்தேயும். (வன்கள்வனேன்) உத்தேச்ய வஸ்துவைக் கடுக லிபிக்கப் பெறாத இன்னாப்பாலே ‘மஹாபாபி” என்பாரைப்போலே சொல்லுகிறார். (மனத்தை வலிந்து இத்யாதி) பக்தி பாரவச்யத்தாலே சிதிலமாகிற மநஸ்ஸைத் திண்ணிதாக்கி, “தன கேழிலொன் கண்ண நீர் கொண்டாள்* என்கிற கண்ண நீரையும் மாற்றி, (நின்கண் நெருங்க வைத்தே) *காலாழும் நெஞ்சழியும்* என்கிறபடியே உன்னைக் கிட்டினவாறே யுடைகுலைப் படுகிற மநஸ்ஸைத் தரித்து நின்ற உன்னை யநுஸந்திக்கும்படி பண்ணி இச் சரீரத்தில் நின்றும் ஆத்மாவைப் பிரிய வநுஸந்திக்க க்ஷமனாகிறிலேன்” என்பதாம்.
————–
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-
பதவுரை
கண்ணபிரானை |
– |
ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும் |
விண்ணோர் கருமாணிக்கத்தை |
– |
நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும் |
அமுதை |
– |
அமிருதம்போன்றவனுமான உன்னை |
எண்ணியும் |
– |
கிட்டியிருக்க செய்தேயும் |
நன்னகில்லேன் |
– |
கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்) |
நடுவே |
– |
இடைச்சுவராக |
ஓர் உடம்பில் இட்டு |
– |
ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து |
பல செய்வினைகள் கயிற்றால் |
– |
பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே |
திண்ணம் விழுந்த கட்டி |
– |
மிகவும் திடமாகக்கட்டி |
புண்ணை |
– |
ஹேயதோஷங்களை |
மறைய வரிந்து |
– |
தெரியாதபடியாகப் பண்ணி |
என்னை |
– |
அசந்தனான என்னை |
பதமே |
– |
உனக்குப் புறம்பான விஷயங்களிலே |
போர வைத்தாய் |
– |
தள்ளிவைத்தாய். |
***- (கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.
மிகவும் ஹேயமாய் ஜுகுப்ஸிக்கத் தகுந்ததான அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னே நெஞ்சு குளிர பகவத் விஷயத்தைப் பேசுகிறார்- கண்ண பிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை என்று.
‘விண்ணோர் கருமாணிக்கத்தை’ யென்பதை முந்துற அந்வயித்துக் கொள்ள வேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம்.
“ஸ்ரீவைகுண்ட நிலயனாய் *அபர்வறுமமரர்களதிபதியாயிருந்து வைத்து ஸர்ய போக்யனாம்படிவந்து வஸுதே க்ருஹே அவதீர்ணனான வுன்னை” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.
“சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே யங்கு, ஓர் மாயையினாலீட்டிய வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து” (திருவிருத்தம்) என்றகிறபடியே
விண்ணோர்களை வஞ்சித்து வந்து கண்ணபிரானாகத் திருவவதரித்து, அப்போதைய அதி மாநுஷ சீல வ்ருந்த வேஷங்களை யெல்லாம் ப்ரத்யக்ஷமாநாகாரமாக எனக்கு ஸேவை ஸாதிப்பித்து ஆராவமுதமாயிருக்குமெம்பெருமானை என்றபடி.
நண்ணியும், நண்ணகில்லேன்- பெற்று வைத்தும் பெறாதார் கணக்கானேன்.
ஞான லாபம் பெற்றது கொண்டு ‘நண்ணியும்’- என்றார்;
சரீர ஸம்பந்தத் தோடேயிருக்கிற விருப்பைப்பற்ற ‘நண்ணகில்லேன்’ என்றார்.
அது தன்னைத் தாமே விவரித்தருளுகிறார் நடுவேயோருடம்பிலிட்டு என்று தொடங்கி,
நடுவே என்பதனால், இந்த அழுக்குடம்புகான் அநுபவ விரோதியாய் நின்கிறதென்று காட்டியவாறு,
இருவர்க்கு நடுவிலே ஒரு சுவர் இருந்தால் அது விரோதியாகிறாப்போலே ஜீவாத்ம பரமாத்மாக்களின் அநுபவத்திற்கு இவ்வுடலே காணும் இடைச்சுவராயிருக்கின்றது.
கழித்துக்கொள்ளப் பார்த்தாலும் ஸாத்யமாகாதபடி புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களை விட்டுக் கட்டி வைத்திருக்கின்றாயே! என்கிறாய்.
புண்ணை மறைய வரிந்து என்ற விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “தோலை மேவிக் கைப்பாணியிட்டு மெழுகுவாசியிலே ப்ரமிக்கும்படி பண்ணின வித்தனையொழிய, அகவாய் புறவாயிற்றாகில் காக்கை நோக்கைப் பணி போருமத்தனையிறே” என்பதாம்.
“தீண்டாவபம்புஞ் செந்நீரும் சீயும் நரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிரு முடல்” என்று ஐயங்கார் பணித்தபடி
மிகவும் ஆபாஸமான இந்தவுடல், மேலுக்கு ஏதோ சிறிது மயக்கத்தை விளைப்பதாயினும் உள்ளே கிடக்கிற
கச்மலங்கள் வெளியே தெரியுமாயின் காக்கை குத்தவும் அதையோட்டவுமன்றோ வேலை போந்திருக்குமென்றபடி,
*** – யதி நாமாஸ்ய காய்ஸ்ய யதந்தஸ் தத் பஹிர் பலேத்ர தண்டமாதாய லோகோயம் சுந; காகசம்பந்த வாரயேத்” என்ற சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது.
—————–
***கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி
எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார்.
இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.
*நிலமுடை கால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் அறமுயலாழி யங்கை கருமேனி யம்மான்
தன்னையே கண்டு கொண்டொழிந்தேன். * என்று பெருங்களிச்சியாகக் கூறுகின்றார்.
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-
பதவுரை
இரு |
– |
புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட |
வல் விளையர் |
– |
பிரபல கருமங்கள் |
புறம் அற |
– |
புச்சம் தோன்றாதபடி |
முறை முறை |
– |
தோல் மாறுங் கணக்கிலே |
புகல் ஒழிய |
– |
புகுவது தவிரும்படியாக |
நிறம் உடை நால் தட தோள் |
– |
அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும் |
செய்ய வாய் |
– |
சிவந்த திருப்பவளத்தையும் |
செய்ய தாமரைகள் |
– |
செய்தாமரைக் கண்களையும் |
கட்டிக்கொண்டு |
– |
ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு |
குமைக்கும் |
– |
நலிவதற்கு இடமான |
ஆக்கை |
– |
சரீரத்தில் |
அறம் முயல் ஆழி அம் கை |
– |
ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய |
கரு மேனி |
– |
கரிய திருமேனியை யுடையவான |
அம்மான் தன்னை |
– |
எம்பெருமானை |
கண்டு கொண்டு ஒழிந்தேன் |
– |
ஸேவித்து அநுபவித்து விட்டேன். |
முடிபோட்ட விடத்தையறிந்து அவிழ்த்துக் கொள்ள முடியாதபடி புச்சத்தோற்றாமே உள் முடியாக
முடித்து வைக்கப்பட்ட இரண்டு மஹாநுபாவர்கள் உண்டே; புண்யம் பாபம் எனப்படுமவர்கள்;
அந்த முதலியார்கள் பீடிப்பதற்கிடமான சரீரங்களிலோ, திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோலே
புகுதல் தவிரும்படியாகக் கருமேனியம்மான் தன்னைக் கண்டு கொண்டேனென்கை.
முந்துற முன்னம் எம்பெருமான் ஆழ்வாரைத் தோள்களாலே அணைக்க வந்தது பற்றி ‘நிறமுடை நால் தடந்தோள்’ என்கிறார்.
உடனே சில அமுத மொழிகளைப் பேசத் தொடங்கினனாதலால் செய்யவாய் என்றார்.
உடனே குளிரக் கடாக்ஷிக்கையாலே செய்ய தாமரைக்கண் என்றார்.
*இன்னரென்றறியேன் அன்னேயாழியொடும்பொன்னார் சாரிங்கமுடையவடிகளை இன்னாரென்றறியேன்* என்று
மதி மயக்க வல்ல திருவாழி திருச்சங்குகளைக் காட்டி யருளித் திருமேனியையும் முற்றூட்டாகக் காட்டினது
பற்றி -அறமுய லாழி யங்கைக் கருமேனி யம்மான் தன்னையே என்றார்.
*அருளர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்’ என்கிற படியே
திருவாழியைக் கொண்டே எம்பெருமான் லோக ரக்ஷணமாகிற தருமத்தை கையாலே அறமுயலாழி என்றார்.
—————-
***தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து
அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி யுண்டு! என்று பிற்காலிக்க வேண்டி யிருக்கச் செய்தேயும்
அவனுடைய க்ருபா ரஸம் கரை யழியப் பெருகின படியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-
பதவுரை
ஆழி பிரான் அம்மான் அவன் |
– |
திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான் |
எளவிடத்தான் |
– |
எவ்வளவு பெரியவன்! |
யான் ஆர் |
– |
நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க) |
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று |
– |
கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று |
கை தலை பூசல் இட்டே |
– |
சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி |
மெய் மால் ஆய் ஒழிந்தேன் |
– |
ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்! |
எம் பிரானும் |
– |
ஸர்வேசுவரனும் |
என் மேலான் |
– |
என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்) |
எம்மா பாவியர்க்கும் |
– |
எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும். |
விதி வாய்க்கின்ற |
– |
தப்பவொண்ணாத அருளாகிற விதி வலிப்பதாமளவில் |
வாய்க்கும் கண்டீல் |
– |
பலித்தேவிடும். |
ஆழிப்பிரான் என்பதற்கு- திருவாழி யாழ்வானைக் கையிலேந்திய பெருமாள் என்றும்,
திருப்பாற்கடலிலே பள்ளிகொண்ட பரமபுருஷன் என்றும் பொருள் கொள்ளலாம்.
எவ்விடத்தான் என்றது- அவனுடைய பெருமை எப்படிப்பட்டது. வாசாமகோசரமன்றோ என்றபடி.
யானார் என்றது- என்னுடைய தாழ்வு பேச்சுக்கு நிலமோ என்றபடி.
ஆக முதலடியினால்- எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலையிட்டாராயிற்று.
ஆனாலும் ஒரு குறையில்லையென்கிறார் இரண்டாமடியினால்
எல்லா வழியாலும் மஹா பாவங்களைப் பண்ணினவர்கள் திறத்திலும் எம்பெருமானுடைய பரம க்ருபை பெருகப் புக்கால் தடையுண்டோ என்கிறார்.
பெரும்பாலும் இப் பாசுரத்தைத் திருவுள்ளத்திற்கொண்டே வேதாந்த தேசிகள் தயா சதகத்தில் — நிஷர்தாநாம் நேதா கபிருலபதி: காபி சபரீ குசேல: ரூப்ஜா ஸா வ்ரஜ யுவதையோ மால்ய க்ருதிதி, அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதேயரே ப்ரபை மநுகம்பே! ஸமபஹி· என்கிற ச்லோகத்தை அருளிச் செய்தார்.
குஹப் பெருமாள். ஸுக்ரீவ மஹாராஜர், சபரீ, குலேசலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப் பட்டவர்களின் தாழ்வும் எம் பெருமானுடைய மேன்மையும் நிரவி ஒரு ஸமமாகக் கலந்து பரிமாறினபடி புராணங்களிலுள்ளது;
மேடும் பள்ளமுமான நிலத்திலே பெருவெள்ளம் பெருகினால் மேடுபள்ளங்கள் நீங்கி ஸமநிலைமாக ஆகும்படியைக் காணாநின்றோம். அவ்வண்ணமாகவே அருள் வெள்ளம் பெருகியதனாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டதாகிறதென்றவாறு.
கைம்மாழதுன் பொழித்தாயென்று = தன் பெருமேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது கஜேந்திராழ்வானை ரக்ஷித்த சரிகையிலே நன்கு விளக்காநின்றது.
ஒரு களிறு ஒரு மடுவிலே ஒரு நீர்ப்புழுவாலே னாதிப்புண்டால், இதைப் பரிஹரிக்க அரைகுலையத் தலைகுலையத் திருநாட்டில் நின்று ஓடிவந்து,
“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுவார் வியப்பவந்து ஆனைக்கன்றருளியீந்த” என்றும்,
***- ஸ்ரக் பூஷாம்பரமயதாயகம் ததாந: திங் மாமித்யநுகஜகர்ஜமாஜகந்த. * என்றும் பெரியார் ஈடுபடும்படியாக அருள் செய்தபடியை நோக்குங்கால் அஸம்பாவிதமாக தொன்றுண்டோ? என்று காட்டுகிறார்.
கைம்மாநுன்போழிந்தாய்! என்று மெய்யன்புடையார் நெஞ்சுகனிந்து சொல்லும் சொல்லை நான் கபடபக்தியோடே சொன்னேன்;
அது மெய்யான பக்தியாகவே பரிணமித்து எம்பெருமானுடைய விஷயீகாரம் பெற்றுவிட்டேனென்றாராயிற்று.
—————–
***-எம்பெருமான் தன்னை ஆதரிப்பாரில்லாமே என்னை விஷயீகரித்தானல்லன்;
பரம விலக்ஷணரானவர்கள் தன்னை அநுபவியா நிற்கச் செய்தேயும் அவர்களிடத்திற் காட்டில் அதிகமான விருப்பத்தை
என் பக்கலிலே பண்ணி வந்து என்னுள்ளே புகுந்தானாகையால்
அவனையே நான் ஸகலவித போக்ய வஸ்துவாகவும் கொண்டேனென்கிறார்.
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
பதவுரை
மேல் ஆம் தேவர்களும் |
– |
மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும் |
நிலத் தேவர்களும் |
– |
இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும் |
மேவி தொழும் |
– |
விரும்பி வணங்கிநின்ற |
மானார் |
– |
எம்பெருமான் |
நினநாள் |
– |
இப்போதும் |
வந்து |
– |
என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து |
அடியேன் மனத்தே |
– |
எனது நெஞ்சினுள்ளே |
மன்னினார் |
– |
பெருந்தினார்; |
இனி |
– |
இது முதலாக |
சேல் எய் கண்ணியரும் |
– |
மீனோக்குடைய மாதர்களும் |
பெரு செல்வமும் |
– |
மஹத்தான ஜச்சரியமும் |
நல் மக்களும் |
– |
குணம்மிக்க பிள்ளைகளும் |
மேல் ஆம் தாய் தந்தையும் |
– |
மேம்பட்ட மாதாபிதாக்களும் |
அவரே ஆவார் |
– |
(எனக்கு) அப்பெருமானேயாவர். |
மேனாத் தேவர்களென்றது- சுவர்க்கத்திலுள்ள தேவர்களினும் மேம்பட்டவர்களான நித்யஸூரிகளென்றபடி.
நிலத்தேவர்-பிராமணர்கள். *** என்பது வடமொழி வழக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களை விவக்ஷிப்பதாக்க் கொள்க.
“மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்” என்ற சொற்சேர்க்கையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும்படி;- “இளைய பெருமாளும் இடக்கை வலக்கை யறியாத குரங்குகளும் ஒக் கவடிமை செய்தாப்போலே இரண்டு விபூதியிலுள்ளாரும் ஒருமிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் ஸர்வாதிகனானவன்.” என்று
இப்படிப்பட்ட எம்பெருமான் “மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே
திருப்பாற்கடலையும் பெரிய பிராட்டியார் திருமுலைத்தடத்தையும் விட்டு இங்கே வந்து
நித்யஸம்ஸாரியான என்னெஞ்சிலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தனன்.
[சேலேய் கன்ணியரும் இத்யாதி.] பெருமானைப் பின் தொடர்ந்த இளைய பெருமாள் *** – ப்ராதாபர்த்தா ச பந்துச் ச பிதா ச ம்ம ராகவ:” என்று பெருமாளையே எல்லாவுறவுமுறையாகக் கொண்டிருந்த்துபோல,
நானும் அப்பெருமாளையே ஸகலவித பந்துவர்க்கமுமாக்க் கொள்ளாநின்றேனென்கிறார்.
சேல்ஏய் கண்ணியர்-சேல் என்று மீனுக்குப் பெயர்; மீன் போன்ற கண்களையுடையவர்களென்று ஸ்த்ரீகளைச் சொல்லுகிறது.
உலகத்தார் ஒவ்வொரு வஸ்துவைப்பற்றி நின்று ஒவ்வொரு இன்பம் அடைவர்கள்;
நான் எம்பெருமானொருவனையே பற்றி நின்று எல்லா வகையான இன்பங்களையும் பெற்றேனாகிறேன் என்றதாயிற்று.
—————–
***- (ஆவாரார் துணை.) இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான்
தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
பதவுரை
துணை ஆவார் ஆர் என்று |
– |
காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு |
அலை நீர் கடலுள் அழுந்தும் |
– |
அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற |
நாவாய் போல் |
– |
படகுபொலே |
நான் |
– |
அடியேன் |
பிறவி கடலுள் |
– |
ஸம்ஸாரக்கடலினுள்ளே |
நின்று துளங்க |
– |
நின்று சிரமப்படா நிற்கையில் |
(எம்பெருமான்) |
||
தேவு ஆர் கோலத்தோடும் |
– |
திவ்யமான வடிவோடும் |
திருசக்கரம் சங்கினோடும் |
– |
திருவாழி திருசங்குகளோடும்கூடி |
ஆ ஆ என்று |
– |
ஐயோ ஐயோ வென்று |
அருள் செய்து |
– |
க்ருபைபண்ணி |
அடியேனோடும் ஆனான் |
– |
என்னோடும் கூடினான் |
நாவாய் என்று கப்பலுக்குப் பெயர்; இங்குக் கப்பலையே பொருளாகக் கொள்ளலாம்;
இலக்கணையால் கப்பலுள்ளவர்களையும் பொருளாகக்கொள்ளலாம்.
கப்பலையே பொருளாகக் கொள்ளும்போது, கரையிலுள்ளவர்கள் ஆவுரார் துணையென்று கதறும்படியாக ஒரு கப்பல் கடலுள்ளே அழுந்துமாபோலே என்றதாகக் கொள்க.
இப்பொருளில், துணையென்று என்றது ‘துணையென்ன’ என்றபடி,
ஒரு கப்பல் கடலுக்குள்ளே அழுந்திப் போருங்காலத்தில் அதைக் காணும் தடஸ்தர்கள் ‘ஐயோ! இப்படி நீரினுள்ளே அழுந்துகின்ற இக் கப்பலுக்குக் கைகொடுப்பார் யாருமில்லையே!’ என்று கதறுவார்கள்;
அவ்வண்ணமாக அழுந்துகின்ற கப்பல்போலே என்றபடி.
நோவு படுகிறோமென்கிற உணர்த்திகூட இல்லாமைக்காக இந்த த்ருஷ்டாந்தம்.
இனி, நாவாயிரத்திலுள்ளாரை கொள்ளும் பக்ஷத்தில் ஆவாரார் துணையென்கிற வாக்கியம் அவர்களுடையதே யாகக்கடவது.
இப்படி நான் பிறவிக் கடலுள் துளங்கா நிற்கையில், எம்பெருமான் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்தோடும் அவ்வடிவுக்குச் சேர்ந்து திவ்யாயுதங்களோடுங்கூட வந்து ஐயோ! ஐயோ!! என்று என் பக்கலிலே கருணை புரிந்து என்னோட வந்து கலந்தான் என்றதாயிற்று.
“தேவார் கோலத்தோடும் திருசக்கரம் சங்கினோடும் அடியேனொடுமானானே” என்பதற்கு- திருவாழி திருச்சங்குகளோடே பொருந்துமாபோலே அடியேனோடு பொருந்தினான் என்பதாகப் பொருள் நிர்வஹிப்பராம். எம்பெருமானார்,
“கூராராழி வெண்சங்கேந்திவாராய்” என்கிற ஆழ்வாருடைய விருப்பத்தின்படியே, கையுந்திருவாழியுமான கோலத்தோடே வந்து கலந்தானென்று நிர்வஹிப்பாராம்.
———————
***இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத்
திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-
பதவுரை
மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய் |
– |
மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும் |
கான் ஆர் எனமும் ஆய் இன்னம் |
– |
வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி |
கற்கி ஆம் |
– |
கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும் |
கார்வண்ணன் |
– |
காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான் |
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு |
– |
என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு |
உகந்து வந்து |
– |
உகப்போடோளந்து |
தானே இன் அருள் செய்து |
– |
தானாகவே இனிய கிருபையைப் பண்ணி |
என்னை முற்றவும் தான் ஆனான் |
– |
எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான். |
‘என்றஃதே’ என்றவிடத்து, ‘என்ற அஃதே’ என்று பிரிக்க வேணும்; தொகுத்தல் விகாரம்;
‘என்றவஃதே’ என்றாக வேண்டுமிடத்துத் தொக்கது.
‘எம்பெருமான் என்னை ஆட்கொண்டான்’ என்று நான் நன்றி பாராட்டிச் சொன்னதுண்டு;
அவன்தானே நெடுநாள் பண்ணின க்ருஷி பலித்து என்னை அடிமைகொண்ட சிந்தனையொழிய நான் ஒரு க்ருக்ஷி பண்ணிற்றிலேன்;
உபகார ஸ்மிருதியாக நான் ‘ஆளுடையனானான்’ என்று ஒரு வார்த்தை சொன்னேனே.
இவ்வளவையே எம்பெருமான் பற்றிக் கொண்டு, நான் அபேக்ஷியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபையைப் பண்ணிவந்து கலந்தான்.
என்னை முற்றவும் தானானான்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; (1) உள்ளோடு புறம்போடு வாசி யறக் கலந்தான். (2) எனக்கு ஸகல வித போக்யமுமானான்.
இக்குணம் அவனிடத்து ஆச்சரியமன்று என்பதைப் பின்னடிகளாலே நிரூபிக்கிறார்போலும்.
மத்ஸ்ய கூர்ம வராஹாவாதிகளான அவதாரங்களைச் செய்து ஆட்படுத்திக் கொள்ள வழி தேடுவதையே இயல்வாக வுடைடியவனன்றோ என்கை.
இன்னங்கார்வண்ணனே- நீர் கொண்டெழுந்த காளமேகமானது மேன் மேலும் வர்ஷிக்க எழுச்சி கொண்டிருக்குமா போலே
எம்பெருமானும் பண்ணின அவதாரங்களில் த்ருப்தி பெறாதே இன்னமும் அவதரிக்கவே திருவுள்ளம் பற்றி யிருக்கிறபடியைச் சொன்னபடி.
————————
***இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீமிக்கவர்களாய்க் கொண்டு
எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-
பதவுரை
கார் வண்ணன் |
– |
மேகவண்ணனும் |
கண்ணபிரான் |
– |
ஸர்வஸுலபனும் |
கமலம் தட கண்ணன் தன்னை |
– |
தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து. |
ஏர் வளம் ஒண் கழனி |
– |
எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய |
குருகூர் |
– |
திருநகரிக்குத்தலைவரான |
சடகோபன் |
– |
ஆழ்வார் |
சொன்ன |
– |
அருளிச்செய்த |
சீர் வண்ணம் ஒண் தமிழர்கள் |
– |
சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான |
இவை ஆயிரத்துள் இ பத்தும்-; |
||
ஆர் வண்ணத்தால் |
– |
அமிருதபானம் பண்றுமாபோலே |
உரைப்பர் |
– |
ஓதுமவர்கள் |
பொலிந்து |
– |
ஸம்ருத்தியோடே யிருந்து |
அடிகீழ் |
– |
அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே |
புகுலார் |
– |
புகப்பெறுவர்கள். |
காளமேக ச்யாமளனாய்ச் செந்தாமரைக் கண்ணனாய் ஆச்ரித ஸுலபனான எம்பெருமானைக் குறித்துக்கொள்ள
ஆர்வண்ணத்தால் = ஆர் தலாவது பானம் பண்ணுதல்;
பட்டர் ஸ்ரீகுணரத்ன கோளத்திலே “ஸூக்திம் ஸமக்ரயது… யாம் கண்டூல கர்ண குஹரா: கவயோ யயஸ்ரீ” சொற்களைச் சொல்லும் போது
ஏனோ தானோ என்று சொல்லுகை யன்றிக்கே நெஞ்சு கனிந்து சொல்ல வேணும்; அம்ருத பானம் பண்ணுவதாகவே நினைக்க வேணும்.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply