***- எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க,
இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை;
இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ,
அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-
பதவுரை
கண்ணதார் |
– |
பகைவர்கள் |
முறுவலிப்ப |
– |
மகிழ்ந்து சிரிக்கவும் |
நல் உற்றார் |
– |
நல்ல உறவினர்கள் |
தரைந்து ஏங்க |
– |
மனமுருகிவருந்தவும் |
எண்ஆரா துயர் விளைக்கும் |
– |
எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான |
இவை உலகு இயற்கை |
– |
இந்த லோகயாத்ரைகள் |
என்ன |
– |
என்ன!; |
கண் ஆளா |
– |
தாயாளுவே! |
கடல் கநை;தாய் |
– |
(தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே! |
உன கழற்கே |
– |
உனது திருவடி வாரத்திலேயே |
வரும் பரிசு |
– |
நான் வந்து சேரும்படி |
தண்ணாவாது |
– |
காலதாமதமின்றியில் |
அடியேனே |
– |
அடியேனே |
சாம்ஆறு |
– |
மரணமடையும் படி |
பணி |
– |
அருள் செய்யவேணும்; |
(கண்டாய் |
– |
முன்னிலையசை) |
உலகத்தில் ஒவ்வொருவர்க்கும் பகைவர் என்று சிலரும் நண்பர் என்று சிலரும் நண்பா சிலரும் இருப்பர்களே;
ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே!’ என்று அனைவரும் கூடி வயிறு பிடிக்கவேண்டியிருக்க,
சிலர் உகந்து சிரிக்கும்படியும் சிலர் வருந்தும்படியுமாவதே! என்று லோக யாத்திரைக்கு வருந்துகிறராழ்வார்,
இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“ஒருவனுக்கு ஒர் அநர்த்தம் வந்தவாறே அற்றைக்கு முன்பு வெற்றிலே தின்றறியார்களேயாகிலும் அன்றாக ஒரு வெற்றிலே தேடித்தின்பது, ஒர் உடுப்பு வாங்கி யுடுப்பது, சிரிப்பதாகா நிற்பர்களாயிற்று.”
எண்ணாராத் துயர்விளைக்குமிவை-நண்ணாதார் முறுவலிப்பதும் நல்லுற்றார் கரைந்து எங்குவதுமாகிய எல்லாம்
ஆழ்வார்க்கு எண்ணராத் துயரமாகத் தோற்றா நின்றது.
எல்லாரும் எம்பெருமானையே பரம பந்துவாகக் கொண்டு அவனுக்கு ஒரு துன்பம் வந்தால் கரைந்தேங்கவும்,
அவனுக்கு இன்பம் மிகுந்தால் குதுகலிக்கவும் ப்ராப்தமாயிருக்க,
ஆபாஸ பந்துக்களுக்காகச் சிலர் வயிறு பிடிப்பதும் பகைமை பாராட்டிச் சிலர் முறுவலிப்பதும் ஆழ்வார்க்கு அஸஹ்யமாயிருக்கிறது.
ஸதைகரூபரூபாய என்கிறபடியே எப்போதும் ஒருபடிப்பட்டிருக்கிற எம்பெருமானுக்கும் துன்பம் விளைவதும் இன்பம் மிகுவதும் உண்டோவென்னில்; மங்களாசாஸந பரர்களுடைய கருத்தாலே உண்டென்க.
அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்று ஆழுமென்னாருயிர்” என்றும்
“அவத்தங்கள் விளையும் என் சொற்கொறந்தோ!” என்றுமுள்ள பாசுரங்களே நினைப்பது.
இவையென்னவுலகியற்கை! ஸ்ரீ அவரவர்களக்கு லாபநஷ்டங்கள் உன்னளவிலேயாகாதே புறம்பேயாம்படி
இப்படியொரு லோக யாத்ரையைப் பண்ணி வைப்பாயோ பெருமானே! என்கிறார்.
நான் பண்ணிவைத்ததுண்டோ? அவரவர்கள் பண்ணின் கருமங்களின் பலன் தொடந்து வருகிறவித்தனையன்றோ;
நம்மால் வந்தது ஒன்றுமில்லை காணும்” என்று எம்பெருமான் திருவுள்ளமாக;
கண்ணளா! கடல்கடைந்தாய்! என்று அவன் நெஞ்சிலேபடும்படி விளிக்கிறார்.
அவரவர்கள் பண்ணின கருமங்களின் பலனை அவரவர்கள் அநுபவித்தே தீர வேணுமாகில்
உன்னுடைய க்ருபை யுடையவனைக் கண்ணுடையவனென்பர்களே.
உன்னுடைய க்ருபைக்கு இலக்காக்க வேண்டியவர்களே லீலைக்கு விஷயமாக்கலாமோ பிரானே! என்கிறார்.
(கடல் கடைந்தாய்) உன்வடிவழகிலே சிறிதும் கண்செலுத்தமாட்டாதவர்களும், ப்ரயோஜநாந்தரமே கண்ணாயிருப்பவர்களும், காரியம் தரைக்கட்டினவாறே உன்னோடே எதிரம்பு கோப்பவர்களுமான தேவர்களுக்கும் சாவமருந்து கொடுப்பதற்காகத் திருமேனி நோவக் கடல் கடைந்கவனல்லையோ நீ.
“ஆமாம்; தேவர்களுக்கு நாம் காரியம் செய்ததுண்டு; அவர்களுக்கு இச்சையாவது இருந்தது; அதுவுமில்லாதவர்களுக்கு என்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லையே!” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
ஆகில் இவர்கள் நடுவேயிராதபடி என்னை உன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளவேணுமென்றார்;
‘உனகழற்கே வரும்பரிசு’ என்னும்போதே, அப்படியே செய்கிறோமென்று எம்பெருமான் தலைதுலுக்க,
ஆகட்டுமாகட்டுமென்று தலையாட்டும்படியாயோ என் நிலைமையுள்ளது; இனிக்காலதாமதம் செய்யலாகாது என்கிறார். தண்ணாவாது-விளம்பம் செய்யமால்; தண்ணாத்தல் -தாமத்தித்தல்.
சாமாறுபணி = சரீரம் முடிந்ததாம்படி பார்த்தருள் என்கை.
சரீரவியோகந்தானே மோக்ஷமென்று சொல்லுகிற மதாந்தரஸ்தர்களைப் போலன்றியே,
நித்யகைங்கர்யம்பண்ணி ஆனந்திப்பதே மோக்ஷமென்று உறுதிகொண்டிருக்கிற ஆழ்வார்
இப்போது சரிர்வியோக மாத்திரத்தைப் பண்ணிக்கொடுக்கும்படி பிரார்த்திப்பது ஏனென்னில்;
இக்கொடியவர்களின் நடுவேயிருக்கிற இருப்புத் தவிர்ந்தால் போதும் என்பது இப்போதைய நினைவு போலும்.
————–
***- கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து,
இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில்,
என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.
சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-
பதவுரை
சாம் ஆறும் |
– |
திடீரென்று மரண மடைவதும் |
கெடும் ஆறும் |
– |
பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக) |
தமர் |
– |
தாயாதிகளும் |
உற்றார் |
– |
உறவினர்களும் |
தலைத்தலைப்பெய்து |
– |
ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து |
நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி |
– |
நண்ணுதாத்முறுலலிப்ப |
ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன |
– |
ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே! |
அரவு அணையாய் அம்மானே! |
– |
சேஷசாயியான ஸ்வாமியே! |
நான் |
– |
அடியேன் |
ஆம் ஆறு ஒன்று அறியேன் |
– |
உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்; |
அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு |
– |
இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி |
விரை |
– |
விலைந்தருயவேணும். |
சாமாறும்-வெகுநாளைக்கு ஜீவித்திருக்கப் போகிறதாகப் பாரித்திரா நிற்கையில் இடி விழுந்தாற்போலே திடீரென்று ஸம்பவிக்கிற மரணமும்.
இவ்விடத்தில் “***” = ராத்ரிர் கமிஷ்யதி பவிஷ்;யதி ஸீப்ரபாதம் பாஸ்வாநுதேஷ்யதி ஹஸிஷ்யதி பங்கஜஸ்ரீ:இ இத்தம் விசிந்தயதி கோகதே த்விரேபே ஹாஹந்த! ஹந்த! நலிநீம் கஜ உஜ்ஜஹார.” என்கிற ச்லோகம் காணத்தக்கது.
(இதன் கருத்து.) ஒரு வண்டானது மாலைப் பொழுதில் ஒரு தாமரை மலரினுள்ளே புகுந்து மதுப் பருகத் தொடங்கியது;
ஸூரியன் அஸ்தமித்தலாறே மலர்மூடிக் கொண்டது; இரவெல்லாம் வண்டு அதனுள்ளேயே கிடக்கவேண்டியதாயிற்று;
கிடக்கும்போது, இரவுகழிந்து பொழுது விடியப் போகியதென்றும் தாமரை மலரப் போகிறதென்றும்,
உடனே கிளம்பிச்சென்று குடும்பங்களோடே சேர்ந்து களிக்கப்பெறலாமென்றும் பாரித்துக்கொண்டிருந்தது;
இருக்கையில், ஒரு காட்டானை திடீரென்று அத்தாமரையோடையிலிறங்கி அனைத்தையும் வேர் பறியாகப் பறித்துக் கபளீகரித்திட்டது என்கை. இந்தக்கணக்கிலே மனிசர்களுக்கு நேரும் மரணத்துன்பங்களும் பலபல.
கெடுமாறும் = பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலியிருக்குமவர்கள் தாங்களே கெட்டுப்போகிற விதங்களும் பலபல.
ஒரு கள்வன் பிறர் மனையிலே புகுந்து திருடுவதாகச் சென்றன்; அங்கே அகத்துக்குடையார் கையிலே பிடியுண்டு பரிபவஙகள் பட்டுக்கிடக்கின்றன; அதுவுமன்றியில் மற்றெரு கள்வன் இவன்றன் வீட்டிலே புகுந்து ஏற்கனவே இவன் பலகாலமாகக் களவு கண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெ;லாம் கவர்ந்து சென்றான். இப்படியாக உலகர் கெடுமாறுகள் வாசாமகோசரம்.
(தமருற்றர்இத்யாதி.) ஆழ்வார்க்குத் தமர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களேயாயிருப்பர்கள்.
உலகர்கள் சரீர ஸம்பந்தத்தைப் பற்றிச் சிலரை ஞாதிகளென்றும் ஸம்பந்திகளென்றும் குலாவிப்போருவர்கள்.
அப்படிப்பட்ட உறவினர்கள் கீழ்ச்சொன்ன சாவுகளிலும் கேடுகளிலும் மேல்விழுந்து கிடந்து கூப்பாடு போடுவர்கள்.
ஆக இப்படிப்பட்ட உலரியற்கை என்னை! நெடுக ஜீவிக்க மநோ ரதியா நிற்கையில் முடிவது,
நாலுகாசு கையிலேயுண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்றிருக்க அது கெட்டுப்போவது,
தேஹபந்துக்களேயே தமக்கு ஸகலவித பந்துவுமாக நினைத்து இவற்றுக்கு ஒன்றுவந்தவாறே ‘பட்டேன்! செட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுகிறது,
ஆகிய இவையுமொரு லோக யாத்ரையே! என்று ஆச்சரியப் படுகிற்ராயிற்று.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! இவ்வுலகு எக்கேடு கெட்டால் உமக்கென்ன?
அவர்களேப்போல் அலற்றும்படியான நிலைமையில் ; உம்மை நான் வைத்திருக்கவில்லையே!;
என்னைச் சொல்லியலற்றும்படியாகவன்றே உம்மை நான் வைத்திருப்பது; தளராதே கொள்ளும்” என்றருளிச்செய்ய;
ஆமாறு ஒன்றறியேன் நான் என்கிறர்.
இந்த ப்ரக்ருதி மண்டலத்திலே என்னை வைத்திருக்கிறயாகையாலே’ இது என்னை இனி எப்பாடு படுத்துமோவென்று மிக அஞ்சுகின்றேனென்கை.
இந்த ஸம்ஸாரிகளுக்கும் உன்னேடு உறவு குறையற்றிருக்கவும் ப்ரக்ருதிக்கு வசப்பட்டிருத்தலாலன்றே உன்னேயிழந்து படுகிறர்கள்;
அந்த ப்ரக்ருதியில்தானே நீ என்னையும் வைத்திருக்கிறது;
“ஆற்றங்கரை வாழ்மரம்போல் அஞ்சுகின்றேன்” என்றும்,
“காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல் ஆற்றத்துளங்காநிற்பன்” என்றும்,
“பாம்போடொரு கூரையிலே பயின்றற்போல் தாங்காதுள்ளம் தள்ளும்” என்றும்
“இருபாடொரி கொள்ளியினுள்ளெறும்பேபோல் உருகா நிற்குமென்னுள்ளம்” என்றும்
ஞானிகள் கதர வேண்டும்படியான நிலத்திலே என்னை வைத்திருக்கையாலே
இந்த ஸம்ஸாரிகளைப்போலே எனக்கும் என்ன ஆகுமோ! என்று அஞ்சவேண்டும்படியாயிராநின்றதே! என்றவாறு.
“ஆமாறென்று அறியேன் நான் என்ற விடத்தில்
இன்னாருக்கு என்றில்லாமையாலே, இந்த ஸம்ஸாரிகளுக்கு ஆமாறு ஒன்று அறியேன் என்றுமுரைக்கலாம்.
இவர்களுக்கு இத்துயரம் நிங்கும் வழி அறிகின்றிலேன் என்க.
அரவு அணையாய்! திருவனந்தாழ்வானொருவனையே சென்றற்குடையாமிருந்தால் சிங்காசனமாம் இத்யாத்ப்படியே
ஸகங்கர்யங்களுக்கும் உரியவனாகக் கொள்ள வேணுமென்றெரு நிர்ப்பந்த முண்டோவென்று கேட்கிறபடி.
கூமாறு-கூவுமாறு என்றபடி. என்;னை நீ அழைத்துக் கொள்ளும்படியாக என்கை.
இவ்விபூதியிலே இங்ஙனே கதறுகிறவன் நானொருவனே யல்லது வேறெருவருமில்லை;
ஆகையாலே என்னைப் பற்றி விசேஷித்துத் திருவுள்ளம் பற்ற வேணுமென்கிறார் அடியேனைக் குறிக்கொண்டே என்று.
—————
***- இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.
ஆசார்யர்களுக்கு சாஸ்த்ரார்த்த வர்ணநங்களைப் போலவே லோக ரிதி வர்ணநங்களிலும் வல்லமை வியக்கத்தக்கதென்று
அஸ்மதாசார்யரான அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்யும்படி.
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-
பதவுரை
கொண்டாட்டும் |
– |
(புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும் |
குலம் புனைவும் |
– |
இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும் |
தமர் |
– |
தாயாதிகளும் |
உற்றர் |
– |
உறவினரும் |
விழு நிதியும் |
– |
அளவற்ற செல்லமும் |
வண்டு ஆர் பூ குழலாளும் |
– |
வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும் |
மனை |
– |
வீடும் (ஆகிய இவை) |
ஒழிய |
– |
தன்னைவிட்டு நீங்க |
உயிர் மாய்தல் |
– |
(தீடீரென்று) இறந்து போவதாகிற |
உலகு இயற்கை கண்டு |
– |
இந்த லோகயாத்திரையைக்கண்டு |
ஆற்றேன் |
– |
ஸஹிக்கமாட்டேன்; |
கடல் வண்ணு |
– |
கடல் வண்ணனான எம்பெருமானே! |
அடியேனை |
– |
அடியனான என்னை |
பண்டே போல் கருதாது |
– |
இத்தனை நாளும்போல் நினைத்திராமல் |
உன் அடிக்கே கூய் பணி கொள் |
– |
உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும். |
கொண்டாட்டும் முன்பு இன்னானென்று தெரிந்துகொள்ள முடியாதபடி அபதார்த்தமாய்க் கிடக்க
வொருவன் நாலுகாசு கைப்பட்டவாறே நாலு பேர்களால் கொண்டாடப்படுவனும்; அப்படிப்பட்ட கொண்டாட்டமும்.
குலம்புனைவும் நாலுபேர்கள் கொண்டாடத் தொடங்கினபோதே தாம் அநாதியாகவே பெரிய நற்குடிபபிறபுடையார் என்ற காட்டிக்கொள்வதற்காக
‘இன்ன திருவம்சம்’ என்று ஏறிட்டுக் கொள்ளப் புகுவர்களாம்; அங்ஙனே யொரு குலத்தைத் தொடுத்துக் கொள்வதும்.
தமர்-ஏற்கனவே தாயாதிகளாயிருந்தாலுங்கூட ‘இவனுடைய தாயாதியாக நம்மைச் சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு’ என்று விட்டுத் தொலைவர்கள்; அப்படி விடப்பட்டவன்தானே சிறிது செல்வம் பெற்றவாறே தாயாதிகளல்லாதாருங்கூட
‘இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து
‘இவரும் நாங்களும் ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகிப் போருவர்கள்.
உற்றார்-=பெண்கொடுத்தல் கொள்ளுதல் முதலிய ஸம்பந்தங்கள் செய்து கொள்வதற்குத் தகுதியற்றவன் என்று முன்னம் கைவிடப்பட்டிருந்தாலும் இப்போதாக உறவுக்கு மேல் விழா நிற்பர்களாம்.
விழுநிதியும் நாலுகாசு சேர்ந்தவிடத்தே பின்னையும் பத்தெட்டு காசுகள் வந்து சேருமே; அப்படியே சேர்ந்து சீரிய செல்வமாகும்.
அந்தச் செல்வத்விற்கு ஒரு விநியோகம் வேணுமே. (
இங்கே நம்பிள்ளையீடு;-) “நினைவின்றிக்கே யிருக்கச் செய்தே சருகிலை திரளுமாப்போலே சீரிய நிதி வந்து கைப் புகுருமே;
அதுக்குப் போக்கடிகாணாமையாலே செய்வதறியாமை அத்தையிட்டு ஒரு ஸ்த்ரீயை ஸ்வீகரிக்கும்; அவள் தான் வண்டார் பூங்குழலாளாயிற்று;
இவள் செவ்வியை வண்டே புஜித்துப் போமித்தனை போக்கித் தான் புஜிக்கமாட்டான். யோக்யதை யில்லாத பருவத்திலேயாயிற்று ஸ்வீகரிப்பது.”
மனையொழிய உயிர்மாய்தல் கண்டு அவளும் தானுமாய் ஏகாந்தமாக இருக்கைக் கென்று ஒரு மாடமாளிகையைப் பல நிலமாகக் கட்டுவிப்பன்;
ஆக இவை யெல்லாவற்றையும் விட்டு ஒருநாள் திடீரென்று மரணம் நேர்பட. அப்போதைய நிர்வேதங்கள் கண்டு பொறுக்க வொண்ணுதவையாயிருக்கும். இதுவரையில் ஒருவாறு இவ்விளிம்புகளை யெல்லாங்கண்டு பொறுத்திருந்தேனுகிலும்
இனி ஒரு நொடிப்பொழுதும் ஆற்றகில்லேனாதலால் விரைந்து அடியேனைத் திருவடி சேர்ந்துக்கொள்ளவேணு மென்றராயிற்று.
——————–
***- (கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்த ஹேது என்பதைக் கட் கூடாகக் காணா நிற்கச்செய்தேயும்,
பின்னையும் மேல் விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோக யாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார்.
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-
பதவுரை
கொள் என்று கிளர்ந்து எழுந்த |
– |
‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற |
பெரு செல்வம் |
– |
பெரிய செல்வமானது |
நெருப்பு ஆக |
– |
நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும் |
(அதில் நசை யொழியாமல்) |
||
கொள் என்று |
– |
அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக |
தமம் மூடும்இ இவை உலகு இயற்கை என்ன |
– |
தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே! |
வள்ளலே |
– |
மஹாதாரனே! |
மணி வண்ணா |
– |
நீலமணிவண்ணனே; |
உன கழற்கே வரும் பரிசு |
– |
உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி |
அடியேனே |
– |
அடியேன் விஷயத்தில் |
வள்ளல் செய்து |
– |
ஔதார்யத்தைக் காட்டி |
உனது அருளால் |
– |
உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும். |
நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு;
அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து.
செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச் செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும்.
நெருப்பாக என்றவிடத்தில் தொக்கி யிருப்பதாகக் கொள்ளவேணும்.
கொள்ளென்று தமமுடும் = “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு;
அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும்
இரவில் இருளிலே செல்லும் போது ஸ்பஷ்டமாகக் காணா நிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்;
ஒரு தமோ குணம் வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.
வள்ளலே மணிவண்ணா = வள்ளல் என்றால் தாராளமாகக் கொடுப்பவன் என்று பொருள்; எதைக்கொடுப்பவனென்னில்,
மணிவண்ணா! என்கிற பதச் சேர்த்தியினால் தனது திருமேனியையே முற்றுட்டாக அநுபவிக்கக் கொடுப்பவனென்பது பெற்ப்படம்.
“மாணிக்கப் பண்டாரத்தையிறே ஔதார்யம் பண்ணிற்று” என்பது நம்பிள்ளையீடு.
——————
***- பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும்
இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-
பதவுரை
வாங்கும் |
– |
உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான |
நீர் |
– |
நீரிலே |
மலர் |
– |
மலர்ந்த |
நிற்பனவும் |
– |
ஸ்தாவரங்களும் |
திரிவனவும் |
– |
ஜங்கமங்களுமான |
ஆங்கு |
– |
அவ்வவ்விடங்களிலுள்ள |
உயிர்கள் |
– |
பிராணிகள் |
ஈங்கு |
– |
இப்புவியில் |
பிறப்பு இறப்பு பிணி மூப்பால் |
– |
பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே |
தகர்ப்புண்ணும் |
– |
வருந்திக்கிடக்கும்; |
இதன் மேல் |
– |
இறந்தொழிந்தபின்போ வென்னில் |
வெம் நரகம் |
– |
கொடிய நரக வேதனையாம்; |
இவை என்ன உலகு இயற்கை!; |
||
நீ |
– |
நீ |
எனை |
– |
இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை |
வாங்கு |
– |
அங்கீகரித்தருளவேணும் |
அடியனே |
– |
உன்னடியனான என்னை |
மறுக்கேல் |
– |
கலங்கப் பண்ண வேண்டா. |
வாங்கு நீர்மலருலகில் என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர்;
(வாங்குதல் சூழ்தலாய்) நீர்வாங்கு-கடல் சூழ்ந்த, மலர்-விஸ்தீர்ணமான, உலகில், என்று ஒரு பொருள்.
மற்றொரு பொருளாவது, காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணப் பொருளிலேயே லயமாகையாலேயே,
முழு முதற்காரணமான நீரிலேயே காரியப் பொருள்களெல்லாம் லயமடைய வேண்டுகையாலும்,
மீண்டும் அதிலிருந்தே உத்பத்தியாகவேண்டுகையாலும்,
வாங்கும் நீர்-காரியப் பொருள்களையெல்லாம் தன்னிடத்தே சுருக்கிக் கொள்ளுமதான நீரில்நின்று,
மலர்-மறுபடியும் உத்பவித்த, உலகில்; என்பதாம்.
இப்படிப்பட்ட வுலகத்திலே ஸ்தாவர ஜங்கமாத்மகங்களான ஸகல ப்ராணிகளும் அநுபவிக்கும் துயரங்கள் கண் கொண்டு காணவொண்ணாதவை;
இதற்கு மேல் கும்பீபாகம் முதலிய நகரங்களில் படும் யாதனைகளும் அளவிலாதவை;
“நாமடித்தென்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்” என்றும்,
“நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும்போது” என்றும்,
நயன்தமர் பற்றி யெற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினாலியன்ற பாவையைப் பாவீதழுவென மொழிவதற்கஞ்சி” என்றும் மஹான்கள் கூறுவர்கள்.
இவை யெல்லாம் படும்படியாயோ என்னை நீ இங்கு வைத்திருக்கின்றது?
அந்தோ! இப்படி யென்னைக் கலங்கப்பண்ணாதே சடக்கென திருவடி சேர்த்துக் கொள்ள வேணும்.
——————-
***-பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார்.
ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும்
லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-
பதவுரை
மறுக்கி |
– |
பயமூட்டி |
வல் வலைபடுத்தி |
– |
தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து |
குமைத்திட்டு கொன்று |
– |
சித்ரவதம் பண்ணி |
உண்பர் |
– |
தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்; |
அறம் பொருளை அறிந்து ஓரார் |
– |
தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை; |
இவை என்ன உலகு இயற்கை! |
||
வெறி துவளம் முடியானே |
– |
பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே |
(இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி) |
||
வினையேனை |
– |
பாவியான என்னை |
உனக்கு அற |
– |
உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி |
அடிமை கொண்டாய் |
– |
ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே! |
என் ஆர் அமுதே |
– |
எனக்கு பரிபூர்ணமான அமுதமே! |
இனி |
– |
உடனே |
கூய் அருளாய் |
– |
அழைத்துக் கொண்டருள வேணும். |
கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்க வெண்ணிச் சில உபாயங்கள் செய்வர்கள்;
‘உன்னை இன்னாரும் இன்னாருமாக இன்னபடி செய்யக் கோலியிருக்கிறார்கள். என்று சில பொய்களைச் சொல்லி
அச்சமுறுத்தித் தங்களிடத்தே நம்பிக்கையுண்டாயப் பொருள்களையெல்லாம் தங்களிடத்திலேயே கொண்டுவைக்கும் படியாகச் செய்து
இப்படியாக வலையிலே அகப்படுத்திக்கொண்டு மரணாந்தமான ஹிம்சைகளையும் பண்ணி வயிறு வளர்ப்பர்கள் ஸம்ஸாரிகள்;
தேஹத்திற்காட்டில் வேறுபாட்டான ஆத்மவஸ்து ஒன்று இருக்கின்றதே; அது படும்பாடு என்னாகுமோ! என்று சிறிதும் ஆராய்வாரில்லை;
இப்படி ஒரு லோக யாத்ரை யுண்டாயிருப்பதே! பிரானே. இக் கொடிய ஸம்ஸாரிக்ள நடுவே யிருக்கிற வென்னை
உன்னுடைய பரம யோக்யதையைக் காட்டி ஏற்கனவே அடிமை கொண்டிருக்கிறாய்;
இருந்தாலும். இந்நிலத்திலேயே இன்னமும் வைத்திடுவாயாகில் என்னை நீ அடிமை கொண்டதெல்லாம். பழுதாயொழியுமத்தனை;
சப்தாதி விஷய ப்ரவணராயிருக்கிற இவர்களிலே நானுமொருத்தனாய்த் தொலைந்து போவேனத்தனை;
அங்ஙனம் போகாதபடி விரைந்து திருவடி சேர்த்துக் கொண்டருள வேணுமென்றாராயிற்று.
——————
ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ?
பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு,
ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
பதவுரை
இ உலகத்து |
– |
இந்த லோகத்தில் |
நிற்பனவும் |
– |
ஸ்தாவரப் பொருள்களும் |
திரிவனவும் |
– |
ஜங்கமப் பொருள்களும் |
நீயே ஆய் |
– |
நீயாகவே யிருந்து |
மற்று ஒரு பொருளும் இன்றி |
– |
நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி |
நீ நின்றமையால் |
– |
நீயிருப்பதனாலே |
நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய |
– |
மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி |
அடியேனை |
– |
அடியனான வென்னை |
கூயே கொள் |
– |
அழைத்துக் கொண்டருள வேணும்; |
கொடு உலகம் |
– |
கொடிய இவ்வுலகத்தை |
காட்டேல் |
– |
இனிமேலும் காட்டவேண்டா. |
ஆயே! என்பதற்கு மூன்று படியாகப் பொருள் கொள்ளலாம்; தாயே! என்று எம்பெருமானை விளிக்கிறபடி; அந்தோ! என்றபடி;
“இவ்வுலகத்து நிற்பனவுந் திரிவனவும் நீயே ஆய்” என்று மேலே கூட்டுகிறபடி.
“தேந லிநா த்;ருணாக்ரமபிந சலதி” என்கிறபடியே ஸகல ஜங்கம ஸ்தாவரங்களையும் அநுப்ரவேசித்து ஆட்டி வைப்பவன் நீயேயான பின்பு
எனக்கு நான் ஒரு நன்மை தேடிக் கொள்வதுண்டோ?
பத்த ஸம்ஸாரிகளில் நின்றும் என்னை வேறுபடுத்தி முமுக்ஷவாக ஆக்கிவைத்த நீயே
முக்தனுமாக்கி வைத்தருளவேணும் என்றாராயிற்று.
மூப்பு பிறப்பு-முப்புப்பிறப்பு என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘மூப்பிறப்பு’ என்றானது தொகுத்தல் புண்ர்ச்சி.
“ஒண் சங்கதை வாளாழியான்” என்றவிடத்தறிபோல.
பிணி-தாரித்ரியமுமாம்.
கொடுவுலகம் காட்டேல்=இவ்வுலகத்தின் கொடுமையைத் தவிர்த்து இவ்விபூதி தன்னையே நித்ய விபூதியாக்கிக் காட்டித் தர வல்லையேல் காட்டுவாயாக, என்பது உட்கருத்து.
—————-
***- ‘ஆழ்வீர்! நீர் விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-
பதவுரை
(எம்பெருமானே) |
||
நீ |
– |
நீ |
காட்டி |
– |
படைக்கும்போது பிரகாசிப்பித்து |
கரந்து |
– |
(பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து |
உமிழுத் |
– |
மறுபடியும் வெளிப்படுத்துகின்ற |
நிலம் நீர் தீ விசும்பு கால் |
– |
பஞ்ச பூதங்களையும் |
ஈட்டி வைத்து |
– |
ஒன்றாகத் திரட்டி வைத்து |
அமைத்த |
– |
ஒழுங்கு படுத்திய |
இமையோர் வாழ தனி முட்டை |
– |
பிரமாண்டமாகிற |
கோட்டையினில் |
– |
கோட்டையில் நின்றும் |
என்னை கழித்து |
– |
என்னை அப்புறப்படுத்தி |
உன் |
– |
உன்னுடைய |
கொடு சோதி உயரத்து |
– |
மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே |
கூட்டு அரிய |
– |
கூடுதற்கரியான |
திருவடிக்கண் |
– |
திருவடிகளிலே |
எஞ்ஞான்று |
– |
என்றைக்கு |
கூட்டுதி |
– |
கூட்டிக்கொள்வாய்! |
இப்போது ஆழ்வார் தாம் இருக்கப்பெற்ற பிரகிருதி மண்டலத்தின் தன்மையை முன்னிரண்டடிகளால் கூறுகின்றார்.
ஒரு காலத்திலே ஸ்ருஷ்டித்தும், ஒரு காலத்திலே பிரளயம்கொள்ளாதபடி உள்ளடக்கியும்,
மற்றொரு காலத்திலே மறுபடியும் வெளிப்படுத்தியும் போருகிற ஐந்து பூதங்களையும் பஞ்சீகரண ப்ரகாரத்திலே திரட்டி,
இவை கொண்டு நீ சமைத்து வைத்த ப்ரஹ்மாண்டமாகிற கோட்டையில் நின்றும் என்னைப் புறப்படவிட்டு,
ஸம்ஸார நாற்றம் தொட்டறியாததும் சுத்த ஸத்வ மயமானதும் நிரவதிக தேஜோ ரூபமுமான
பரம பதத்திலே திருவடிகளோடே சேர்த்துக்கொள்வது என்றைக்கோ?
ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஒரு நாளிட்டுக் கொடுத்தது போலே அடியேனுக்கும் கொடுத்தால் ஆறியிருக்கத் தட்டில்லையே;
இன்ன நாளிலேயென்று ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.
இப்பாட்டினீட்டிலே ஒரு வார்த்தை: -“பிள்ளை திருநறையூரரையர், ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க வொண்கிறதில்லை;
ஒரு ஸர்வசக்த, கர்மாநுகூலமாகப் பிணைத்தபிணையை அவனைக் கால்காட்டாதே
இவ்வெலியெலும்பனான ஸம்ஸாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ வென்று பணிப்பர்” என்பதாம்.
இமையோர்வாழ் தனிமுட்டை= பிரமன் முதலிய க்ஷேத்ர;ஜ்ஞ வர்க்கங்கள் நிறைந்த அண்டம் என்றபடி.
—————-
***- ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
பதவுரை
அரவு அணையாய் |
– |
சேஷசாயியான பெருமானே!, |
நீ |
– |
நீ |
(அபிமதரான சிலரை) |
||
நின் குரை கழல்கள் |
– |
ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே |
கூட்டுதி |
– |
சேர்த்துக் கொள்ளுகிறாய்; |
(திருவுள்ள மில்லையாகில்) |
||
இமையோரும் |
– |
(ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும் |
தொழா வகை செய்து |
– |
கண்டு அநுபவியாதபடி பண்ணி |
ஆட்டுதி |
– |
அலைக்கின்றாய்; |
அஃது |
– |
இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை |
அடியேனும் |
– |
நானும் |
அறிவன் |
– |
அறிந்தேயிருக்கின்றேன்; |
என்னை |
– |
எனக்குண்டான |
வேட்கை எல்லாம் விடுத்து |
– |
விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து |
உன் திரு அடியே |
– |
உனது திருவடிகளையே |
சுமந்து உழல |
– |
நான் தலையால் சுமந்து திரியும்படி |
கூட்ட அரிய திரு அடிக்கண் |
– |
துர்லபமான திருவடிகளிலே |
கூட்டினை |
– |
சேர்த்துக் கொண்டாய்; |
நான் கண்டேன் |
– |
இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன். |
கூட்டுநின் குரை கழல்கள்=சிலரைத் திருவடி சேர்த்துக் கொள்ளத் திருவுள்ளம் பற்றினால், அவர்கள் எவ்வளவு
தண்ணியர்களாயிருந்தாலும் தன்னுடைய சக்தியே காரணமாக அவர்களைத் திருவடி சேர்த்துக்கொள்ளுகிறாயென்கை.
இன்னாரினையாரென்று பாராமல், உகந்தாரைத் திருவடி சேர்த்துக்கொள்ளுதல் உன்னுடைய இயல்வு என்றபடி.
இமையோரும் தொர்வகைசெய்து ஆட்டுதி=பிரமன் முதலிய பெரியோர்களேயாகிலும் உகப்புக்கு இலக்கு ஆகாதவர்களை
வந்து கிட்டாதபடிபண்ணி அலைக்கின்றா யென்றபடி.
அடியேனும் அது அறிவன்-விருப்பமுண்டானால் சிலர்க்கு எளியனாகியும்,
விருப்பமில்லையாகில் சிலர்க்கு அரியனாகியும் போருகின்றா யென்கிற இந்த உன்படியை நான் அறிந்து கொண்டே யிருக்கின்றேன் என்று கூறின ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்போது நீர் அறிந்துகொண்டது என்ன?’ என்று கேட்க;
இப்போது என்னை நீ விஷயீகரிக்கத் திருவுள்ளம்பற்றினபடியாலே திருவடியோடே என்னைச் சேர்த்துக்கொண்டாயே!
இதுதான் நான் கண்டது என்கிறார்.
வேட்கையெல்லாம் விடுத்து=இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.; அந்த ஆசைகளையெல்லாம் விடுவித்தருளினாய்.
அதுவன்றியும், (உன் திருவடியே சுமந்துழல) பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்து உபச்சந்தனம் பண்ணினாய் போலன்றிக்கே ஸாகஷாத் திருவடிகளையே என்தலைமீது வைத்தருளினாய்;
இதைக் கேட்;டார் வாய்க் கேட்கையன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேனாகையாலே அறிந்தேன்-என்றாராயிற்று.
—————
கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-
பதவுரை
ஒண் தொடியாள் |
– |
அழகிய கைகளையுடையளாகிய |
திரு மகளும் |
– |
பெரிய பிராட்டியாரும் |
நீயுமே |
– |
அவளுடைய நாயகனான நீயுமே |
நிலா நிற்ப கண்ட சதிர் |
– |
களித்து வாழ்கிற அழகிய இருப்பை |
கண்டு |
– |
இப்போது காணப்பெற்று |
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் |
– |
காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும் |
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம் |
– |
கைவல்ய ஸூகத்தையும் |
ஒழிந்தேன் |
– |
தவிர்க்கப் பெற்றேன்; |
உன் திரு அடியே அடைந்தேன் |
– |
உனது திருவடிகளை அடையவும் பெற்றேன். |
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்கண்ட சதிர்கண்டு-கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங் கருவிகண்ட வின்பமும் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பமும் ஒழிந்தேன், உன்; திருவடியே அடைந்தேன்-என்று அந்வயிப்பது.
*** = வைகுண்ட து பரே லோக ச்ரியா ஸார்த்தம் ஜகத் பதி:இ ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா.” என்கிறபடியே
தன் திருமாதுடனே தான் தனியரசாயுறைகின்ற விருப்பை எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுத்தருளினனாதலால்
“ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர்கண்டு” என்கிறார்.
தொடி என்று கைவளைக்குப்பெயர்; ஒளிபொருந்திய கைவளைகளையுடையவள் என்று பிராட்டிக்கு இவ்வடைமொழி கொடுத்ததனால். க்ஷணகாலமும் விட்டுப் பிரியாதவள் என்பது பெறப்படும்.
இவ்விடத்தில் *** = யாமி ந யாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா:. களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தவீதாநி,” என்ற சுலோகத்தின் தாற்பரியம் நினைக்கத்தகும்.
அதாவது, தலைமகன் தலைமகளை நோக்கி, ‘என் கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று சொன்ன நொடிப்பொழுதிலேயே அவளது கையில் அணியப்பட்டிருந்த வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே விழ்ந்தன.
அதனைக்கண்ட கணவன் ‘இவள் நமது பரிவைப் பொறுத்திருக்க மாட்டாதவளாகையாலே இவளைப் பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நயாமி’ என்றான்;
இதற்கு இரண்டுவகையான பொருள்; ந, யாமி என்று இரண்டு பதமாகக்கொண்டால் ‘நான்போகிறதில்லை’ என்று பொருள்படும்;
‘நயாமி’ என்று ஒரு சொல்வடிவமாகவே கொண்டால் உன்னையும் உடனழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று பொருள்படும்.
இரண்டு வகையான பொருளும் இங்குத் தலைமகனுக்கு விவஷிதமே.
நாயகிக்கு அச்சொல் செவிப்பட்ட நொடிப்பொழுதிலேயே, கையில்நின்றும் கழன்றவைபோக நின்ற வளைகள் படீல் என்று வெடித்துத்துகளாய் விழுந்தன என்பது மேற்காட்டி சுலோகத்தின் கருத்து.
நாயகனுடைய பிரிவு ப்ரஸ்தாவத்தில் வந்த மாத்திரத்திலேயே உத்தம நாயகியினது உடல் மெலிந்துபோகும் என்பதும், அந்த விச்லேஷவார்த்தை மாறினவாறே உடம்பு பூரிக்குமென்பதும் உள்ளுறை.
பெரிய பிராட்டியார்க்கு ஒருபோதும் பிரிவைப்பற்றின ப்ரஸ்தாவமேயில்லாமலிருக்கு மாதலால் ஒண்தொடியாள் திருமகள் எனப்பட்டது.
“திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறது பொருந்துமோ?
பல கோடி நூறாயிரம் நித்ய முக்தர்களும் அங்கு இருக்கும்போது “திருமகளும் நீயுமே” என்று பரிநிலையேகாரம் இட்டுப்பேசுவது கூடாதே என்று சங்கை பிறக்கும்;
இதற்குப் பரிஹாராமாக நம்பிள்ளை யருளிச் செய்வது காண்மின்;-
“இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே த்ரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்; வாசல்தோறும் ஈச்வரர்கள் இங்கேயிறே.” என்பதாம்.
அங்கு நித்ய முக்தர்கள் சேஷத்வாநுஸந்தான வுறைப்பினால் தனிப்பட்டுத் தோன்றாமே திவ்யதம்பதிகளின் அபிமானத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றமையாலே அவர்களைப் பிரித்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை;
இந்நிலத்தில் மனைதோறும் ‘நானே கடவுள், நானே கடவுள்’ என்றிருப்பதுபோல,
திருநாட்டில் அஹம்பாவமடித்துத் திரிகிறவர்; ஒருவருமில்லையாதலால் திவ்யதம்பதிகளைச் சொன்னதுவே போதுமென்றபடி.
நிலாநிற்ப=அழகுற நிற்ப. இந்த திவ்யஸேவையை இங்கே காட்டிக்கொடுக்கக் கண்டதனால் இந்நிலத்து விஷயபோகங்களையும் கைவல்ய மோக்ஷமென்கிற அல்பானந்தத்தையும் காரியுமிழ்ந்தேனென்கிறார்.
கண்ணாலே சில ரூபங்களைக் கண்டும், காதாலே சில சப்தங்களைக்கேட்டும்இ த்வகிந்திரியத்தாலே சிலவற்றைக் தொட்டும், மூக்காலே சிலவற்றை மோந்தும், நாவினால் சிலவற்றை உட்கொண்டும் இங்ஙனே பஞ்சேந்திரியங்களாலும் பெறப்படுகிற இஹலோக விஷய ஸூகங்களில் வெறுப்படைந்தேன்.
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் என்பது கைவல்ய ஸூகத்தை.
கீழ்ச்சொன்ன கண் முதலிய இந்திரியங்களினால் க்ரஹித்து அநுபவிக்க அரிதாகையாலே தெரிவரி என்றது.
நித்யமோக்ஷமாகையாலே அளவில்லா என்றது. பகவதனுபவத்தை யபேகூஷித்து அற்பமாகையாலே சிற்றின்பம் என்றது.
——————–
***-இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-
பதவுரை
திரு அடியை |
– |
ஸர்வாமியாய் |
காரணனை |
– |
நாராயணானாய் |
கேசவனை |
– |
பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை |
திரு அடி சேர்வது கருதி |
– |
கிட்டியநுபவிக்க விரும்பி |
செழு குருகூர் சடகோபன்; |
||
– |
||
திரு அடி மேல் |
– |
அவனது திருவடிகளின் மீது |
உரைத்த |
– |
அருளிச்செய்த |
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்; |
||
திரு அடியே |
– |
அந்தத் திருவடிகளையே |
அடைவிக்கும் |
– |
அடையப்பண்ணும்; |
(ஆதலால், நீங்கள்) |
||
திரு அடி சேர்ந்து |
– |
அந்தத் திருவடிகளைக் கிட்டி |
ஒன்றுமின் |
– |
பொருந்தியிருக்கப் பாருங்கள் |
முதலடியில் திருவடி யென்றது ஸர்வஸ்வாமி யென்றபடி.
கேசவன் என்ற திருநாமம் மூன்று வகையான பொருள்களைக் கொண்டிருக்கும்.
1. சிறந்த மயிர்முடியையுடையவன்.
2. கேசியென்னும் அசுரன் (ஸ்ரீ க்ருஷ்ணவதாரத்தில்) வதஞ்செய்தவன்.
3. பிரமனுக்கும் சிவபிரானுக்கும் நியாமகன்-என்பன மூன்று அர்த்தங்கள்.
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்று கிட்டவேணுமென்கிற மனோரதத்தையுடையவராய ஆழ்வார்
அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பத்துப்பாசுரமும் சடக்கென பகவத் பாதாரவந்த ப்ராப்தியைப் பண்ணுவிக்கும்;
ஆகையால், பக்தர்காள்! நீங்கள் இங்குள்ளவளவும் இத்திருவாய்மொழியைக் கொண்டு
அவனது திருவடிவாரத்திலே கைங்கரியம் பண்ணிப் போருங்கோள்-என்றதாயிற்று.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply