Archive for October, 2022

ஸ்ரீ திருவாய் மொழி -5-3–மாசறு சோதி–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 31, 2022

***-பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து

‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின

நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

 

பதவுரை

மாறு அறுசோதி

அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய்

சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை

மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை

குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை

முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை
நாடி

தேடி
பாக அறவு எய்தி

உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து
அறிவு இழந்து

அறிவும் இழக்கப்பெற்று
ஏனை நானையம்

எத்தனை காலமிருப்போம்?
தோழி

தோழியே!
ஏசு அறும்

ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த
ஊரவர்

ஊராருடைய
கவ்வை

பழிமொழி
என் செய்யும்

யாது செய்யும்?

முதலடியினால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகு பேசப்படுகிறது.

“மடலெடுக்கை மாசு என்றிருக்கிறாள் தோழி; மடலெடாதொழிகை மாசு என்றிருக்கிறாளிவள்.

வ்யதிரேகத்தில் இப்படி. ஆற்றாமை விளையாததாகில் நாம் காண்கிற விஷயங்களேபாதியாமே- வடிவிலே யணைந்த வளாகையாலே முற்பட வடிவிலே மண்டுகிறாள்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க.

வெறும் வடிவழகு மாத்திரத்தைக்கண்டு துடிக்கிறேனல்லேன்; அகவாயில் சில குணங்களையுங் கண்டு துடிக்கிறேன் காண் என்கிறாள்-

ஆசறு சீலணை என்பதனால், ஆசு என்றாலும் மாசு என்றாலும் குற்றம் என்பதே பொருள்; குற்றமற்ற சீலமானவது, கலக்கும்போது தன்பேறாகவே கலந்தபடி.

பாசறவெய்தி = இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர்.

(1) பாசறவு என்று துக்கத்திற்குப் பெயர்; அதை எய்தி.

(2) பாச அறவு – என்று பிரித்து, பாசு – பசுமைநிறமானது, அறவு- அழிந்துபோவது; ஸவவர்ணியமடைந்து என்றபடி.

(3) பாசு என்று பாசமாய். (அதாவது பற்று) பந்துக்கள் பக்கல் பாசம் நீங்கி.

(4) அற என்பதற்கு ‘முழுவதும்’ என்றும் ‘மிகவும்’ என்றும் பொருளுண்டாகையாலே ஸ்நேஹம் முழுவதையும் அவன் பக்கலிலேயடைந்து என்னவுமாம்.

எம்பெருமான் நம்மை நாடிக்கொண்டு வரவேணுமேயன்றி நாமாக அவளை நாடுவது ஸ்வரூப ஜ்ஞானத்திற்குப் போராதேயென்று சிலர் சொல்ல, அறிவிழந்து எத்தனையோ நாளையும் என்கிறான். அறிவு (ஸ்வரூப ஜ்ஞானம்) அடியோடே தொலைந்து எத்தனையோ நாள் ஆயிற்றே என்றபடி.

இங்கே நம்பிள்ளை யீடு:-மயர்வற மதிநலமருளப் பெற்றவன்றே போயிற்றில்லையோ நம்முடைய அறிவு; திர்யக்கின் காலிலே விழுந்து தூதுவிட்டவன்று அது ஞாநகார்யம் என்றிருந்தாயோ இன்றிருந்து கற்பிக்கைக்கு, அன்றே *மதியெல்லாமுள் கலங்கிற்றில்லையோ? தன் பக்கலிலே கை வைத்தால் மற்றென்றறியாதபடி பண்ணும் விஷயமிறே. ‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்’ என்னக்கடவதிறே. *** என்று ப்ராப்தி ஸமயத்தில் இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி பண்ணுகையே யன்றிக்கே ஜ்ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமே பண்ணவல்ல விஷயமன்றோ. தன்னையுமநுஸந்தித்து லோகயாத்ரையையு மநுஸந்திக்கும்படியோ அவன்படி.” என்பதாம்.

ஆனாலும்  ஊரார் சொல்லும்படிக்கு அஞ்சவேண்டாவோ வென்ன, ஏசறு முரவர்கவ்வை தோழியென் செய்யுமே என்கிறான்.

ஏசு அறும் ஊரவர் = ஏசுகையிலே அற்றுத் தீர்ந்திருக்கிற ஊரார் என்றபடி.

ஏசுவதற்கென்றே பிறந்திருக்கிற ஊராருடைய பழிமொழிகள் நமக்கு அவத்யமோ? அதுவே நமக்குத் தாரகமன்றோ வென்கை.

மடலெடுக்கிற ப்ரஸ்தாவம் இங்கு இல்லாமற் போனாலும் மேலே “மடலூர்துமோ” என்றும் “யாமடலூர்ந்தும்” என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லுகையாலே மடலூரும் நோக்கத்தை யுட் கொண்டே இவை யருளிச் செய்வதாகக் கொள்கை.

—————–

***கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்;

‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன,

நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

 

பதவுரை

என் செய்ய தாமரை கண்ணன்

சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை

என்னுடைய
நிறை

அடக்கத்தை
கொண்டான்

கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன்

முதன் முதலாக
செய்ய மாமை இழந்து

விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று
மேனி மெலிவு எய்தி

சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும்

எனது சிவந்தவாயும்
கரு கண்ணும்

கறுத்தகண்ணும்
பயப்பு ஊர்ந்து

பாலை நிறம் படரப் பெற்றன.
தோழீ

தோழியே!
இனி

இந்நிலைமையானபின்பு
நம்மை

நம் விஷயத்திலே
ஊரவர் கவ்வை

ஊராருடைய பழிமொழி
என் செய்யும்

என்ன பண்ணும்?

என்செய்யுமூரவர்கவ்வை தோழி! இனி நம்மை என்று தன் வடிவைக் காட்டுகிறாள் போலும்.

இனி என்கிறாயே, இதற்கு என்ன அர்த்தம்? என்ற கேட்க, மேல் மூன்றடிகளும் அவ்வர்த்தம் கூறுவன.

தோழீ! நான் இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே என்னை நீ இதில் நின்றும் மீட்டிருக்கலாமாயிற்று; எல்லை நடந்து விட்டதே யென்கிறாள்.

“இனி என்னை” என்னாதே “இனி நம்மை” என்கிறது தோழியையும் தன்னோடு கூட்டிக்கொண்டு.

நிறவேறுபாடு தனக்குப்போலவே அவளுக்குமுள்ளதென்று இத்தால் கட்டப்பட்டதாகும்.

“யாமுடைந்துணையென்னுந் தோழிமாரும் எம்மில்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றது இங்கே அநுஸந்தேயம்.

தோழியானவள் ‘மடலெடுக்க வேண்டா’ என்று வாயாலே நிஷேதிக்கிறாளே யல்லது

மடலெடுக்க வேண்டும்படியான நிலமை அவளுக்கும் உள்ளதேயென்று காட்டுதற்கே நம்மை’ என்றது.

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் = எம்பெருமான் தனது திருக்கண்ணாலே குளிரநோக்கி என்னை ஸ்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறாள்.

அவனது திருக்கண்ணழகிலே தோற்று நிறையிழந்த நான். ஊரவர் சொல்லும் பூமியைப் பரிஹரிக்கு மெல்லையிலே நிற்கிறேனோ?

நிறைகொள்ளுகையாவது- நாண் மடம் அச்சம் முதலிய ஸ்த்ரீத்வ குணங்களை இழக்கச் செய்கை.

‘நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப்போக வேண்டியது தவிரவேறில்லை’ என்றிருந்த என்னுடைய

ஸ்த்ரீத்வத்தை  ஒரு புருஷோத்தமன் புண்டரீகாயனத்தைக் காட்டிக் கொள்ளை கொண்டுபோய் விட்டனென்கிறாள்.

நிறைகொண்டான் என்று ஸமுதாயமாகச் சொன்னதை மற்றையிரண்டிகளால் விவரிக்கின்றாள்.

* முந்நுறமுள்ளம் மாமை யிழந்தேன். (மாமை – மேனிநிறம்.)

இழந்த நிறம் திரும்பி வந்தாலும் தங்குகைக்கு ஆச்ரயமில்லாதபடி மேனி சருகாகப்பெற்றேன்;

கலக்கிறபோது ‘இதொரு செய்யவாய் இருந்தபடி என்!’ இது ஒரு கருங்கண் இருந்தபடி என்! என்று

அவன் வாய்வெருவும்படியிருந்த வாயும் கண்ணும் விவர்ணமாகப் பெற்றேன்!

இத்தகைய நிலைமையான பின்பு ஊரார் பழி பரிஹரிக்கை யென்றோர் பொருளுண்டோ?

——————

***எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த  என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

பதவுரை

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்

(நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்
பேய்முலை

பூதனையின் முலையை
சார்ந்து

மனம் பொருந்தி
சுவைத்த

பசையறவுண்ட
செம் வாயன்

செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)
என்னை நிறைகொண்டான்

என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;
தீர்ந்த என் தோழீ

எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!
போர்ந்தும பெயர்ந்தும்

எந்தவிதத்திலும்
அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்

அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;
ஊரவர் கவ்வை என்செய்யும்

ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?

கண்ணபிரான் சகடாஸுரநிரஸனம் பண்ணினதும் பூதநா ஸ்தந்ய பானம் பண்ணி அவளை மாய்த்ததும்

கம்ஸன் வரவிட்ட விரோதி வர்க்கங்களை மாய்த்தபடி என்று தோழி நினைத்திருந்தாள்.

இப்போது பராங்குசநாயகி சொல்லுகிறாள்- சகடாஸுரபஞ்ஜநாதிகள் என்னைத் தன் பக்கலிலே

ஈடுபடுத்திக் கொள்ளுகைக்காகச் செய்தனவேயன்றி வேறில்லையென்கிறாள்.

பருவம் நிரம்பிய பின்பு செய்திருந்தானாகில் இங்ஙனே சொன்னாலும் சொல்லலாம்;

மிக்க இளம்பிராயத்திலே செய்த இவை இவளை யீடுபடுத்துகைக்கு உடலாவது எங்ஙனேயென்று

நம்பிள்ளை சங்கித்துக்கொண்டு ஸமாதானமருளிச் செய்யுமழகு பாரீர் –

“இவளுக்குத் தன் பக்கல் ப்ராவண்யத்தை விளைக்கை அவனுக்கு ஸத்தா ப்ரயுக்தமென்கை ” என்று

நந்தகோப கிருஹகத்தில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி யசோதை யமுனை நீராடப்போனான்;

கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீகிருஷ்ண சிசுவின் மேலே விழுந்து

கொல்ல முயன்றதை அறிந்த அப்பகவான், பாலுக்கு அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள,

அவ்வுதை பட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்தது என்பது ஊர்ந்த சகடமுதைத்த வரலாறு.

க்ருஷ்ண சிசுவை நாடி யுணர்ந்துகொல்லும்பொருட்டுக் கஞ்சன் ஏவின அசுரர்களின் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல, பகவானாகிய குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலூண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் இறக்கும்படி செய்தருளினனென்பது பேய்முலை சுவைத்தவராõறு.

“பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்” என்றவிடத்து செவ்வாயன் என்ற பதஸ்வாரஸ்பத்தை நோக்கி நம்பிள்ளை யருளிச் செய்கிறார்- “பிள்ளை நன் முலையுண்ணப்புக்கால்- தாய்மார் முலைக்கீழே முழுகினவாறே பால் சுரக்கும்; பிள்ளைப் பாலையுண்டு உபகார ஸ்ம்ருதியாலே முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ணுமாயிற்று. அப்படியே அவளும் (பூதனையும்) தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக் கீழே முழுசி முலை யுண்டு உபகார ஸ்மிகுதியாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற ஸ்மிதம் பண்ணியாயிற்று முலையுண்டது.”

என்னை நிறை கொண்டான் = “ஒரு வ்யாபாரத்தாலே இரண்டு ஸ்த்ரீவதம் பண்ணினான். தன்னை யாசைப் பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று. அவளை  நற்கொலையாகக் கொன்றான்; என்னை உயிர்க் கொலையாகக் கொல்லா நின்றான்.” என்பது மிக ஆச்சரியமான நம்பிள்ளையீடு.

இப்படி உயிர்க்கொலையாகக் கொல்லும் விஷயத்திலே மேன்மேலும் வாஸநை பண்ணிப்போருவானேன்?

அவ்விஷயத்தைவிட்டு வேறு விஷயங்களிலே  போது நோக்கிக் களிக்கலாகாதோ வென்ன,

போந்தும் பெயர்த்தும் அவனோடன்றி ஓர் சொல்லிலேன் என்கிறாள்.

போயும் வந்தும் அவன் திறமான சொற்களால்லது போது போக்குகைக்கு வேறு சொல்லுடையேனல்லேன்.

இவள் இப்படிச் சொன்னவாறே நிஷேதிக்கிற தோழி தானும் மிக உகந்தாள் .

‘நாம் இவளை அவனோடே சேர்ப்பதற்குப் பட்டபாடுஸாமான்யமன்றோ;

அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயன்றாலும் மறவாதபடி இவள் ஆழ அவகாஹிப்பதே!” என்று உகந்தாள்.

அவ்வுகப்பைக் கண்ட பராங்குச நாயகி தீர்ந்த என் தோழி! என்று கொண்டாடி அணைக்கிறாள்.

தாய்மார் சொல்லும் ஹித வசனத்தையே நீயும் சொல்லுகையாலே நீயும் அவர்களைப் போலே நிஷேதிப்பவள் என்று வெறுத்திருந்தேன்;

உன் நினைவு இதுவாயிருந்ததே! இப்படி வா- என்று உகந்து கூறுகின்றாள் போலும்.

பிராட்டி, திருவடியை இராவணன் வரவிட்ட ஆள் என்று சங்கித்திருந்தது தவிர்ந்து

‘பெருமாள் பக்கலில் நின்றம் வந்தவள்’ என்றறிந்த பின்பு அவனைக் கொண்டாடினாப்போல இவளும் கொண்டாடுகிறபடி.

———————

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

 

பதவுரை

தோழீ

தோழியே!
ஊரவர்

ஊராருடைய
கவ்வை

பழமொழிகளை
எரு இட்டு

எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து

தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி

ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த

முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்

நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்

பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய

கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த

பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி

கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே

கடியனோ? (கடியனல்லன்)

***தோழியானவள் தலைவியை நோக்கி, ‘அம்மா! ஊரவர் சொல்லும் பழிமொழிகளை நாம் பொருள் படுத்தமாலிருப்பதும் நன்றுதான்;

ஆனால் எம்பெருமானால் உனக்கு ஏதேனும் லாபமுண்டாயிருந்தால் ‘ஊரவர் கவ்வை கிடக்கட்டும்’ என்றிருக்கலாம்:

எம்பெருமானோ உன்னை ஒரு சரக்காகவும் மதிக்கவில்லை; ஊரார் பழி சொல்வதொன்றுதானே மிகுகிறது;

ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனான அவனை விட்டிடதலே நலம்’ என்று சொன்னாள்.

அது கேட்டதலைவி, “தோழீ நீ சொல்லும் வார்த்தையா இது? நன்று சொன்னாய்; எம்பெருமான் எனக்கு என்ன குறை செய்தான், சொல்லிக்காண்” என்றாள்.

அதற்குத் தோழியானவள் “அம்மா! ஊரவர் எவ்வளவு பழமொழிகள் சொல்லிலும் அவற்றை லக்ஷியம் பண்ணாதபடியான ப்ராவண்யம் உனக்கு இருக்கச் செய்தேயும் இந்நிலையிலும் அவள் வந்து உனக்கு முகங்காட்டவில்லையே! இதைவிட வேறு என்ன குறைவேணும்” என்றாள்.

அதற்குத் தலைவி ‘அவன் இப்போது வந்து முகங்காட்டாவிட்டாலும்,  தன்னையொழிய நமக்கு மற்றொன்றால் பொருந்தாதபடி பண்ணினானே! அவனையா பொல்லாதவனென்று சொல்லுகிறது? என்கிறாள்.

எம்பெருமான் இப்பராங்குச நாயகிக்கு ப்ரேமத்தை விளைவித்தவாறு இப்பாட்டில் விசதமாகச் சொல்லப்படுகிறது.

(ஊரவர் கவ்வை எருவிட்டு) ஒரு வயலிலே பயிர் செழிபுற்றோங்கி விளங்கவேணுமானால் முன்னம் நல்ல எருவிடவேணும்; தண்ணீர் பாய்ச்சவேணும்; நெல் விதைக்கவேணும்; இத்தனை செய்தால் அது முளைத்துச் செழிப்பான பயிராய் வளர்ந்து விளங்கும்.

அதுபோல இங்கு ஆழ்வாருடைய நெஞ்சாகிற பெரிய வயலுள் காதலாகிய பயிர் நன்கு வளர்வதற்கு *பத்தியுழவனென்று ப்ரஸித்தனான எம்பெருமான் செய்த காரியங்கள் இதில் ரூபக மரியாதையிலே கூறப்படுகின்றன.

பகவத் விஷயத்தில் அத்வேஷமுண்டான காலமே தொடங்கி ஊரார் பழிசொல்லத் தொடங்கினார்கள்.

அந்தப் பழியையே ப்ரேமத்திற்கு எருவாக இட்டான் எம்பெருமான். ஊரார் பழிக்கப் பழிக்க, அதுவே காரணமாக ப்ரேமம் வளரத் தொடங்கிற்றென்படி.

ஊரார் பழிசொல்லா திருந்தார்களாகில் இத் தலைவி பகவத் விஷயத்தை உபேக்ஷித்திருப்பன போலும்.

“எனக் குற்றசெல்வ மிராமானுசனென்றிசையகில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்” என்ற இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

அன்னை சொல் நீர்படுத்து = ஊரவர் பழிச் சொல்வதுகொண்டே  இவ்வளுடைய பகவத் விஷய ப்ராவண்யத்தைத் தாயாரும் அறிந்து ஹித வசனங்கள் சொல்ல ஆரம்பித்தால்; அந்த ஹிதவசனமே தண்ணீர் பாய்ச்சினபடியாயிற்று.

எருவாவது அடியிலே ஒருகாலே யிட்டுவிடுவது; நீர் மாறாமல் பாய்ச்சப்படுவது;

இத்தால், ஊரார் ஒருகால் பழிசொல்லி விடுமித்தனை; தாயார் உடனிருந்து எப்போதும் பொடிந்துகொண்டே யிருப்பவள் என்பது பெறப்படும்.

ஈரநெல் வித்தி = ஈரமென்று அன்புக்குப் பெயர்; அன்பாகிற நெல்லை விதைத்து என்றபடி. விதைத்தவன் எம்பெருமானென்க.

முளைந்த நெஞ்சப் பெருஞ் செயுள் = இங்கு ‘முளைத்த’ என்றதை ‘முளைப்பித்த’ என்றதாகக் கொள்ளவேணுமென்று நம்பிள்ளை திருவுள்ளம்.

எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்குமிடத்தும் அவனருள் இன்றியமையாததாகையாலே இங்ஙனே கொள்ளத் தகுதியுண்டு.

(நெஞ்சப் பெருஞ்செயுள்) செய் என்று பயிர் விளையும் நிலத்திற்குப் பெயர்; ‘பெருஞ்செயுள்’ என்று பெருமையை யிட்டு விசேஷித்ததற்கு நம்பிள்ளை யருளிச் செய்தது காணீர்- “ஸம்ச்லே விச்லேஷங்களாலே புடை படுத்தி நித்ய விபூதியோபாதி பரப்புடைத்தாம்படி பெருக்கினானாயிற்று” என்று.

ஆக, ஊரவர் கவ்வை யாகிற எருவையிட்டு, தாயாருடைய நிரந்தர ஹித வசனமாகிற நீரை நிறுத்தி

ஆசையாகிற நெல்லை வித்தி முளைப்பித்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே,

பேரமர் காதலை கடல்போல் விளைவித்தானாயிற்று.

பேர்- பெரியதாய், அமர்- அர்ந்ததான, காதல் என்று பொருள். அமர் என்று பூசலுக்குப் பெயராகக் கொண்டால் பெரிதான பூசலை விளைத்த காதல் என்று கொள்ளலாம்.

இப்பொருளில் “பேரமர்க்காதல்” என்று ககரவொற்று மிக்குப் பாடமிருக்கவேணும்.

அமர்ந்த காதல் என்னும் பொருளிற் வினைத்தொகையாலே இயல்பாம்.

விளைவித்த காரமர்மேனி = அடியிலே எருவுமிட்டு நீரும் பாய்ச்சினாலும் மேலே மழை பெய்தல் இல்லையாகில் அப்பயிர் தலை குளிர்ந்திராதே;

காளமேகத் திருவுருவைக் காட்டிக்காட்டி இக்காதலை வளர்த்திக்கொண்டு போனானென்பது தோன்ற “விளைவித்த காரமர்மேனி” என்றது.

தோழீ! நம் கண்ணன் கடியனே? = இவ்வளவு மஹோபகாரம் செய்தருளினவனையே கடியனென்பது.

நீதான் தோழியாயிருந்து வைத்து இங்ஙனே சொல்லத்தருகுமோ?

நீர்மையையுடையவன் என்று சொல்லி முதலிலே பொருந்தவிட்ட நீயே இப்போது நிர்த்தயன் என்னத் தகுமோ? என்கிறாள்.

திருவள்ளுவர் குறளில் “ஊரவர் கவ்வை யெருவாக அன்னை சொல் நீராக நீளுயிந்தோய்” என்றொரு குறள் உள்ளது காண்க. கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய்” என்கிற ஆச்சரியமான சூர்ணிகை இப் பாசுரத்தையே முக்கிய லஷ்யமாகக் கொண்டு அவதரித்தமையுணர்க.

———————

***தோழி! நான் சொல்லுகிறபடியே எம்பெருமான் குணசாலியாகவன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும்

என்னெஞ்சம் அவனையல்லது அறியாது; இவ்விஷயத்தில் நின்றும் என்னை மீட்கைக்காகவன்றோ நீ அவனை குண ஹீந னென்பது; குணஹாநியையிட்டே நான் அவனை விரும்பி மேல்விழுகிறேனாகக் கொள்ளாய்;

ஆகவே உன்னுடைய சொல்லுக்கு ஒரு ப்ரயோஜனமில்லைகாண் என்கிறாள்.

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

பதவுரை

கடியன்

தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்

போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன்

உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான்

நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன்

அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;
ஆகிலும்

இங்ஙனே யானாலும்
கொடிய என் நெஞ்சம்

கொடிதான என்னுடைய மனமானது
அவனே என்று கிடக்கும்

அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;
எல்லே

என்னே!
துடிகொள் இடை

உடுக்கை போன்ற இடையையும்
மடம்

மடப்பத்தையுமுடைய
தோழீ

தோழியே!
அன்னை

என் தாய்
என் செய்யும்

என்ன செய்யக்கூடும்?

கடியன் = ஸ்வகார்யத்திலே எனவேக முடையவன் என்கை. தனக்கொரு காரியமுண்டானால் தானே வந்து மேல்விழுந்து சடக்கெனக் கலக்குமவன் என்றபடி. கொடியன் = இத்தலையில் நோபுபாராதே பிரியுமவன் என்கை.

நெடியமால்- மிகவும் பெரியவன்; அதாவது- கைபுகுந்திருக்கச் செய்தேயும் அளவிட வொண்ணாதபடி யிருக்குமவன் என்கை.

இதனுடைய கருத்தாவது- மேல்விழுந்து கலவா நிற்கச் செய்தே பிரியவேணுமென்று நினைப்பன்;

அப்படி அவன் நினைத்ததையறிந்து, பிரியலாகாதென்று மடிபிடித்துக் கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே;

அப்படி விலக்குவதற்குக் கூசிநடுங்கி அஞ்சியிருக்கவேண்டும்படி திடீரென்று பரத்வம் பாராட்டியிருப்பவனென்றவாறு.

உலகங் கொண்டவடிவன் = பிறருடைமையைத் தனக்காக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் சேஷியாதபடிபண்ணி அவர்களைப் பாதாளத்தில் தள்ளுமவன்.

அறிவருமேனி மாயத்தன் = வடிவைக்கண்டால் ‘ஸர்வஸ்வதானம் பண்ணவிருக்கிறானோ? ஸர்வஸ்வாபஹாரம் பண்ணவிருக்கிறானோ? என்று தெரியாதபடி ஆச்சரியமான தன்மையையுடையவள்.

மாயத்தன் என்பதற்கு நம்பிள்ளையீடு;- “நானும் என்னுடைய நீ யீட்டவழக்கு என்ற இவ்வுக்தியை அநுஸந்தித்து அதிலே நெஞ்சு அபஹ்ருதமாயிருக்க, அவ்வளவிலே கண்ணிலே மணலைத்தூவி அகலவல்லவன்” என்பதாம்.

இப்படிப்பட்ட குணஹாநிகளைக் கோடிக்கணக்காகச் சொல்லவேணுமானாலும் நானன்றோ சொல்லவல்லேன்;

தோழீ! இவை உன்னாலும் சொல்லப்போகாது; இதற்கென்றே இட்டுப்பிறந்த சிசுபாலாதிகளாலும் சொல்லப்போதாது;

இவ்வளவு குணஹாநிகளையும் நான் அறிந்துவைத்தேயன்றோ இவ்விஷயத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறது. ஆகிலும் என்றதனால் ஏற்படுகிற கருத்து இது.

கொடிய என்னெஞ்சம் = லோகவிலக்ஷணமாயன்றோ என்னுடைய நெஞ்சு இருப்பது, குணம்கண்டு பற்றுவதும்,

குணஹாநிகண்டு கைவிடுவதும் நாட்டார் படியாயிருக்க, குணஹாநிதானே பற்றுகைக்கு உடலாயன்றோ எனக்கிருக்கிறது என்கிறாள்.

அவனென்றே கிடக்கும் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் நிர்வஹிப்பர்கள். இவை தோஷங்களே யானாலும் அவனுடைய தோஷங்களாகையாலே தத்ஸம்பந்தத்தையிட்டு இவை நமக்கு உபாதேயங்களே யென்று நெஞ்சு கொள்ளுவதாக ஒரு நிர்வாஹம்,

கீழ்ச்சொன்ன குணஹாரிகளில் நோக்கு இன்றிக்கு தர்மியான எம்பெருமானை மாத்திரமே என்னெஞ்சு பற்றியிருக்கின்றது- என்பதாக மற்றொரு நிர்வாகம்.

“நிர்விசேஷ சிங்மாத்ரம் ப்ரஹ்ம” என்று மாயாவாதிகள் விசேஷணமற்ற விசேஷ்யம்ஸத்தை மாத்திரமே அங்கீகரிக்கிறாப்போலே, குணமோ குணஹாநியோ அந்த விசேஷணாம்ஸத்தில் தாத்பர்ய மின்றிக்கே விசேஷ்ய பூசனான எம்பெருமானளவிலே ஊன்றியிருக்கின்றதாகச் சொன்னபடி.

ஸ்ரீவசநபூஷணத்தில்- “பகவத் விஷயத்தில் இழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூபப்ராப்தமென்று. இப்படி கொள்ளாதபோது குணஹீநமென்று நினைத்த தசையில் பகவத் விஷயப்ரவ்ருத்தியும் தோஷாது ஸந்தாநதசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியும் கூடாது. * கொடியேவென்னெஞ்ச மவனென்றே கிடக்கும். *அடியேன் நான் பின்னுமுன்சேவடியன்றி நயவன். * என்னா நின்றார்களிறே. குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யம் இறே ப்ரதாநம். அநஸூயைக்குப் பிராட்டி யருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.” என்றுள்ள திவ்ய ஸூக்திகள் இங்கே அநுஸந்தேயங்கள்.

தலைவி சொன்ன வார்த்தையைக் கேட்ட தோழியானவள் “அம்மா! நீ சொல்லுவதை நான் அறியேனோ? நான் விலக்குகிறேனல்லேன்; தாயார் வெறுக்கும் என்று சொல்லுகிறேன்” என்ன;

அன்னை என்செய்யுமே என்கிறாள்;- உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்பேன்? அந்நிலை கழிந்ததில்லையோ வென்கிறாள்.

————–

***-நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல,

கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார்  என் செய்தாலென்ன என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

பதவுரை

தோழிமீர்

தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்

நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்

அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்

நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்

கண்ணபிரானாகிற
வலையுள்

வலையினுள்ளே
அகப்பட்டேன்

சிக்கிக் கொண்டேன்;
இனி

ஆன பின்பு
என்னை

என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை

நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்

தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்

என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?

அன்னை என்செய்யில் ஏன்? = “தாயார் பொறாள், தாயார் பொறாள்’ என்று தோழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்;

தலைவி அவளை நோக்கி ‘தாயார் பொறாமல் என்ன செய்துவிடுவள்’ என்று கேட்டாள்;

‘உயிர் மாய்ந்து போவள்’ என்று தோழி விடை கூறினாள்.

அதற்குத் தலைவி சொல்லும் விடை இது, ‘தாயார் ஜீவித்தாலென்ன? முடிந்தாலென்ன?’ என்றவாறு.

‘தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகனுடைய வடிவழகிலேயீடுபட்டாள்’ என்று ஊரார் பழி சொல்லுவர்களே! என்ன;

ஊரென் சொல்லிலென்? என்கிறாள்.

இப்படி உதறிச் சொல்லுகைக்குக் காரணம் என்ன? என்று கேட்க; முன்னை யமார் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், (ஆகையாலே) என்னை (ப் பற்றி) இனி உமக்கு ஆசையில்லையென்கிறாள்.

“வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது- வாசுதேவனாகிற வலையிலேயகப்பட்டேன் என்றும், வாசுதேவனுடைய வலையிலே யகப்பட்டேன் என்றும் பொருள் பெறும்.

வலையாவது தன் பக்கலில் அகப்பட்டாரை வேறு இடத்திற்குப் போகவொட்டாமல் செய்வதாதலால் எம்பெருமானை வலையாகக் கூறுதல் பொருந்தும்.

“பாலாலிலையில் துயில் கொண்டபரமன் வலைப்பட்டிருந்தேனை” என்றாள் ஆண்டாளும்.

எம்பெருமானுடைய வலை என்று பொருள் கொள்ளும்போது திருக்கண்களை வலையாகக் கொள்ளலாம்.

“உசுவையால் நெஞ்சமுள்ளுருகி உன் தாமரைத்தடங்கள் விழிகளின் அக வலைப் படுப்பாள்” என்பர் மேலே.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; “ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, திருக்கண்களைக் காட்டியருளினாரெம்பெருமானார். ‘கார்த்தண் கமலக்கண்ணென்னும் கயிறு’ என்னக்கடவதிறே. அநுகூலம் போலேயிருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்.”

——————–

***-எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம்

அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

 

பதவுரை

கலைகொள்

சேலை யணிந்ததும்
அகல்

அகன்றதுமான
அல்குல்

நிதம்பத்தையுடைய
தோழீ

தோழியே,
என்னை

என்னை
வலையுள்

(தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே
அகப்படுத்து

சிக்கிக்கொள்ளும்படி செய்து
நல் நெஞ்சம்

(எனது) நல்ல நெஞ்சையும்
கூவிக்கொண்டு

அடியறுத்து அழைத்துக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை

அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.
ஆழி பிரான் தன்னை

திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை
நம் கண்களால் கண்டு

நமது கண்களாலே பார்த்து
தையலார் முன்பே

(பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்
தலையில்

தலையாலே
வணங்கவும் ஆம் கொலோ

வணங்கவும் கூடுமோ?

என்னைத் தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற வலையில் அகப்படுத்திக்கொண்டு *காற்றிற் கடியனாயோடித் திருப்பாற்கடலிலே புக்கொளித்த பெருமானைத் தோழீ! அவனுக்கு குண ஹாநி சொல்லுகிற இந்தப் பெண்டுகள் கண்ணெதிரே நம் கண்ககளால் கண்டு தலையாலே வணங்கப்பெறுவோமே என்றாளாயிற்று.

“தலையில் வணங்கவுமாங்கோலோ” என்றவிடத்து ஈட்டில் சுவைமிக்க ஓர் ஐதிஹ்யமுள்ளது. ராஜேந்த்ரசோழன் என்கிறவிடத்தில் கூரத்தாழ்வான் இப்பாசுரத்தை உபந்யஸித்தருளாநிற்கையில் ஆமருவிநிரை மேய்த்தான் நம்பியாரென்று நூறு பிராயம் போந்திருப்பாரொரு பெரியவர் நடுங்க நடுங்க எழுந்திருந்து நின்று “ஸ்வாமி! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வான் ‘இதில் என்ன  ஸந்தேஹம்? சிஷ்டாசாரமுண்டு காணும்; ஸ்ரீநாகராஜன் திருமகள் அநுஷ்டித்தான்காணும்’ என்று சொல்லி ***•••••••••••••••••••••••••• =கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவேயம் மகஸ்விநீ, தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச திரஸா சாபிவாத* என்கிற (ஸுதையின் வாக்காகிய) ஸ்ரீராமாயணச்லோகத்தையெடுத்து விரியவுயந்யஸித்தருளினாராம்.

பிராட்டி பெருமாளைத் தான் தலையாலே வணங்கினதாகச் சொல்லும்படி திருவடியிடத்துக் கூறியிருக்கின்றாள். இங்கே ஒரு ரஹஸ்யார்த்தம் பெரியார் அருளிச்செய்வதுண்டு பெருமாள் நாட்டுக்குப் புறப்படும்போது பாதுகையும் கூடவந்தது, பிராட்டியும் கூடவந்தாள். பாதுகை பெருமாளைப் பிரிந்து வடக்கே சென்றது; பிராட்டி அதற்குப் பிறகு பெருமாளைப் பிரிந்து தெற்கே செல்ல நேர்ந்தது. பெருமாளை விட்டுப்பிரிந்ததென்னுமிடம் பாதுகைக்கும் பிராட்டிக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், பாதுகை ரஜ்யாபிஷேகம் பெற்று மிகுந்த செல்வச் சிறப்பை அநுபவியா நின்றது; பிராட்டி எழுநூறு ராக்ஷஸிகளினிடையே கிடந்து பலவகை வருத்தங்களும் பட நேர்ந்தது. இதைப் பிராட்டி ஆலோசித்துப் பார்த்தாள். “பாதுகை பரமானந்தத்திலிருக்கவும் நாம் பெரிய ஆபத்தில் விழுந்து கிடக்கவும் என்ன காரணம்?” என்று ஆராய்ந்து பார்த்தாள்; பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெற்ற பாக்கியம் பாதுகைக்கு இருந்ததனாலே அது சிறப்புப் பெற்றது; நாம் பத்தினியான முறைமையாலே *** வாணிநா பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா* என்கிற தந்தை கட்டளையின்படி கையைப் பிடிக்க நேர்ந்ததனாலே பாதுகைக்குண்டான சிறப்பு நமக்கு வாய்க்கவில்லை; இதுவரையில் பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெறாத குறை தீர இன்று ஆசார்யமுகேந அதனைப் பெற்றிடுவோம் என்று கருதியே *சிரஸ: சாபிவாத* என்று சொல்லியனுப்பினானென்று.

இவ்வர்த்தம் காட்டிலும் “இதுதான் ப்ரணய ரோஷம் தலையெடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ? அயேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ?” என்று தொடங்கியுள்ள ஸ்ரீஸூக்திகளிலும் உறைந்திருக்கும்.

————–

***மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார்

‘அந்தோ! இப்பெருமாளையோ நாம் குணஹீகனென்று குறைகூறின தாய்மார்

“அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக்

கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

 

பதவுரை

தோழீ

தோழியே!
பேண் முலை உண்டு

பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து

சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்

இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து

(அற்றை) வேரோடே தள்ளி
புள்வாய் பிளந்து

பகாசுரனுடைய வாயைக் கிழித்து
களிறு அட்ட

குவளையபீட யானையைக் கொன்று முடித்த
தூ முறுவல் தொண்டை வாய்பிரானை

பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை
அன்னையர் நாண

தாய்மார் தலைதொங்கும்படியாக
உரம் உறுகின்றது

நாம் கிட்டுவது
ஏ நான் கொலோ

என்றைக்கோ?

எம்பெருமானுக்குப் பரோபகார சீலத்வம் நேற்று இன்றைக்கு வந்ததன்றே,

ஜன்மஸித்தமாயிற்றேயென்று நிரூபிக்கிறான் பேய்முலையுண்டு இத்யாதியால்.

பூதனையால் வந்த ஆபத்தைப் போக்கி, சகடத்தினால் வந்த அனர்த்தத்தைத் தவிர்த்து,

இரண்டை மருத மரங்களால் வந்த தீமையைத் தொலைத்து, பகாஸுரனால் வந்த வாதையை நீக்கி,

குவலயாபீட யானையினால் நேர்ந்த விபத்தையும் தெலைந்து

இப்படி ஆச்ரித விரோதி நிரஸநம் பண்ணி உபகரிக்கப் பெற்றோமே! என்று தூமுறுவல் செய்து நிற்கும்

பெருமானை நம் தாய்மார் கண்டால் ‘இவனிடத்திலோ நாம் குணஹாநி சொன்னது’ என்று

நாணிக் கவிழ்ந்திருப்பார்களே; அன்னவனை நாம் கிட்டுவது எந்நாள் கொலோ! என்றாளாயிற்று.

ஈட்டுஸ்ரீஸூக்தி:- “இப்போது அவனை ஸ்பர்சித்து நம் ப்ரயோஜநம் பெற ஆசைப்படுகிறோமல்லோம்; (அன்னையர் நாணவே) ‘பிரிந்த வனந்தாம் அவன் தானே வருமளவும் ஆறியிருந்திலன், அவன் தானும் வரவு தாழ்ந்தான்’ என்று இரண்டு தலைக்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தனை மடலெடுக்குமளவாம்படி பிற்பாடரானோமாகாதே’ என்று ஹ்ரீரேஷாஹி மமாதுலா* என்கிறபடியே அவன் லஜ்ஜித்து வந்து நிற்கிறபடியைக் கண்டு ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொல்லிற்று!’ என்று அவர்கள் லஜ்ஜித்துக் கவிழ்தலையிடும்படியாக.”

—————–

***என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை

ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

 

பதவுரை

என் தோழி

எனது தோழியே!,
என்னை

என்பக்கலில் நின்றும்
நாணும்

நாணத்தையும்
நிறையும்

அடக்கத்தையும்
கவர்ந்து

கொள்ளை கொண்டு
நல் நெஞ்சம் கூய்க்கொண்டு

(எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு
சேண் உயர் நாளத்து இருக்கும்

மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற
தேவபிரான் தன்னை

நிதய் ஸூரிநாதனை
உலகு தோறு

ஒவ்வொருவலகத்திலும்
அவர் தூற்றி

பழிதூற்றி
ஆம் கோணைகள் செய்து

செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து
கு திரி ஆய்

அடங்காத பெண்ணாய்
மடல் ஊர்தும்

மடலூரக் கடவோம்;
ஆணை

இது திண்ணம்

வாசல் விட்டுப் புறப்பட மாட்டாதிருக்குமிருப்பு நாண்;

நெஞ்சினுள்ளேயோடுவது தாய்மார்க்கும் சொல்லவொண்ணாகபடியிருக்குமடக்கம் நிறை;,

இவ் விரண்டையும் கொள்ளை கொண்டானென்றது அதி மாத்ர ப்ராவண்யத்தை விளைத்தானென்றபடி.

நெஞ்சாவது ஸ்வாதீநமாக இருந்தால் குறையில்லையே,

அதனையும் தன் பக்கலிலே கொடித்துக் கொண்டவை சொல்லிற்று நன்னெஞ்சம்  கூவிக்கொண்டு என்றதனால்,

“முயற்சி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சு” என்கிறபடியே தன்னிற்காட்டிலும் அவன் விஷயத்திலே

ஊற்றம் முற்பட்டிருக்கையாகிற நன்மையை நோக்கி நன்னெஞ்சம் என்றது.

சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை = கீழே “என்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு அலைகடற் பள்ளியம்மானை” என்று திருப்பாற்கடலிலே சென்று ஒளிந்துக் கிடந்ததாகக் சொல்லிற்று. இப்போதிங்கு ஸ்ரீவைகுண்டத்திலே போய் இருப்பதாகச் சொல்லுகிறது;

கடலிலே கிடந்தால் பதற்றத்தினால் திரைமேலே அடியிட்டு கையும் மடலுமாய் க்ஷீரஸாநகரத்திலே இவள் வந்து நிற்கவுங்கூடும் என்று நினைத்து எட்டா நிலத்திலே போய் இருந்தாள்போலும்

அவன் எங்குச் சென்றால்தானென்ன? “ஊராதொழியேலுலகறியவொண்ணுதவீர்’ என்று சபதஞ் செய்து கிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்?

தோழி! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் கேள்; அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என் கையிலே படப்புகுகிறபாடு பாராய்;

இருந்தவிடத்தே இருக்க வொட்டுவேனென்றிருக்கிறாயோ? உலகமெங்கும் புக்குப் பழிதூற்றி அழிக்கக் கடவேன்.

என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமாகப் பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்கிறாள்.

கோணை- மீறுக்கு; ஆம் கோணை = எவ்வெவ்விதமாக மிறுக்குகள் செய்ய முடியுமோ அவ்வவ்விதமெல்லாம் செய்வேனென்கிறாள்.

குதிரி- நாணப்பெண், அடங்காப்பெண். ** (குஸ்த்ரீ) என்னும்  வடசொல் குதிரி யெனத் திரிந்ததென்னலாம்.

——————-

***மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

 

பதவுரை

யா மடம் இன்றி

ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு

வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார்

அயல் பெண்களும்
நாடும்

ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி

நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி
இரைக்க

இரைச்சல்  போடும்படி
யாம்

நாம்
மடல் ஊர்ந்தும்

மடலூர்ந்தாகிலும்
ஆழி அம் கை நம்பிரானுடைய

திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய
தூ மடல்

பரிசுத்தமான இதழ்களையுடைய
தண் அம் துழாய் மலர்

குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை
கொண்டு

அவன் தரப்பெற்று
சூடுவோம்

தலையில் அணிவோம்.

திருவடி அசோக வனத்தில் பிராட்டியை நோக்கி ‘தேவரீர் இவ்வளவு  அல்லல் படுவானேன்?

ஒருநொடிப் பொழுதில் அடியேன் தேவரீரைப் பெருமாள் திருவடிவாரத்திலே கொண்டு சேர்க்குமாறு இசைந்தருளலாகாதோ?’ என்று சொல்ல,

அதுகேட்ட பிராட்டி –சரைஸ் து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தாக:, மாம் நமேயத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம்பவேத் என்றாள்.

எம்பெருமானுடைய திருவுள்ளப்படியே என்ன ஆகிறதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு ஸ்வரூபமே யன்றி

நாமாக ஒரு அதி ப்ரவ்ருத்தி செய்யத்தகாது என்பது இப்பிராட்டி வசனத்தினால் சிக்ஷிக்கப்பட்டதாகிறது.

இப்படி யிருக்க வேண்டிய ஸ்வரூபத்தை யுடையேனான நான் என்று காட்டுகிறபடி.

ஆனாலும் பதறாதிருக்க முடியவில்லை யென்கிறாள் மடலூர்ந்தும் என்பதனால்.

மடலூர்தல் என்பதற்குத் தமிழர்கள் சொல்லுகிறபடி பனை மட்டையைக் கையிலே கொள்ளுதல் முதலான காரியங்கள் இங்கு விவக்ஷிதமல்ல; ஸாஹஸமாக அதி ப்ரவ்ருத்திகளைச் செய்தாகிலும் என்றபடி. அதாவது தன்னுடைய பதற்றத்தைக் காட்டுதல்.

எம் மாழி யங்கைப் பிரானுடைய என்ற விடத்திலே நம்பிள்ளை யீடு காண்பீன்; “அவன் கையுந்திருவாழியும் போலே யன்றோ நாள் கையும் மடலுமாய்ப் புறப்பட்டாயிருப்பது. நான்  கையும் மடலுமாகப் புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து தன் கையில் ஆபரணத்தை வாங்கி என் கையிலே யிட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே விட்டானாகில் குடி யிருக்கிறான்; இல்லை யாகில் எல்லாம் இல்லை யாகிறது.”

எம்பெருமான் பக்கலில் தான் பெற நினைப்பது திருத்துழாய் ப்ரஸாத மந்தனையே யென்பது தோன்ற இரண்டாமடியுள்ளது.

மூன்றாமடியில் “யாம், மிடமின்றி” என்று பிரித்துப் பொருள் காட்டப்படுகிறது ஒன்பதினாயிரப்படியில்,

“யாமடமென்றது ஏதேனுமொரு மடப்பமுமென்றயடி” என்பர் பன்னீராயிர வுரைகாரர்.

ஈற்றடியிலும், ‘நா, மடங்கா’ என்றும், ‘நாம் அடங்கா’ என்றும் கொள்வர்.

மடங்குகலாவது ஓய்தல்; நாக்கு ஓயாதே சொல்லும் பழிமொழி யென்க.

————–

***இத்திருவாய்மொழி சொல்லவல்லார் என்னைப்போலே  மடலூர்வேனென்ன வேண்டாதே.

தாங்களிருக்குமிடத்தே எம்பெருமான், தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

பதவுரை

இரைக்கும்

கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன்

கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை

கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில்

பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர்

திருநகரியில் அவதரித்த
சடகோபன்

ஆழியார்
சொன்ன

அருளிச் செய்த
நிரைகொள்

சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட
அந்தாதி

அந்தாதித் தொடையாமைந்த
ஓர் ஆயிரத்துள்

ஆயிரம் பாசுரங்களிலுள்ளே
இயற்றும்

இப்பதிகத்தை
உரைக்க வல்லார்க்கு

ஓதவல்லவர்களுக்கு
தம் ஊர் எல்லாம்

தம்தம் இருப்பிடமெல்லாம்
வைகுந்தம் ஆகும்

பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும்

“இரைக்குங் கருங்கடல் வண்ணன்” என்றதற்கு இரண்டுபடியாக அருவிச்செய்வார்கள்.

வண்ணமென்று நிறத்துக்கும் தன்மைக்கும் பெயர்;

நிறத்தைச் சொல்லும் போது மட அலர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவழகு சொல்லிற்றாகிறது.

தன்மையைச் சொல்லும்போது, ப்ரக்ருதத்தில் கடலுக்கும் எம்பெருமானுக்கும் துன்பமாகச் சொல்லக்கூடிய தன்னை யாதெனில்;

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “(இரைக்கும் கருங்கடல் வண்ணன்) அனந்தாழ்வான் பணித்தானாக நஞ்சீயர் வந்து பட்டருக்கு  என்றபோது கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாற்போலே யாயிற்று. இவள் மடலூர்வன் என்ற துணிவைக் கேட்டு அவன் தன் ஸர்வாதிகத்வம் கலங்கினபடி என்றருளிச்செய்தார்” என்று

ஸமுத்ர ராஜனை நோக்கிப் பெருமாள் சரணாகதி பண்ணச் செய்தேயும் அதன் முகங்காட்டாவிட்டவாறே இளையபெருமானை நோக்கி *** – சாபமாநய ஸௌமித்ரே!” (லக்ஷ்மணா! வில்லைக் கொண்டு வா) என்று நியமித்தருளினவுடனே கடல் கலங்கினது ஸ்ரீராமாயண ப்ரஸித்தம்.

ஸ்ரீராமன் அம்பு தொடுக்க நினைத்ததும் ஆழ்வார் மடலூர்வேன் என்றதும் துல்யமாகையாலே  (இப்போது ஸமுத்ர ஸாயி யான எம்பெருமான்) மடலூர்வேன் என்ற சொல்லைக் கேட்டவாறே கலங்கினானாயிற்று. ஆக இத்தன்மையிலே ஸரம்யம் என்று அனந்தாழ்வாள் திருவுள்ளம் பற்றின படி.

வைகுந்தமாகும் தம்மூரெல்லாம் = இத்திருவாய்மொழியைச் சொல்ல வல்லவர்களுக்கு உத்தேச்ய பூமி பரமபதமாகும் என்று ஒரு நிர்வாஹம்

இவர்கள் நாடறிய மடலெடுத்துக்கொண்டு புறப்படவேண்டா; இவர்களிருந்த விடங்களிலே அவன் தானே வந்து நித்ய ஸம்ச்லேக்ஷத்தைப் பண்ணுகையாலே அவர்களிருந்தவிடந்தானே பரமபதமாம் என்று மற்றொரு நிர்வாஹம்.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -5-2 –பொலிக பொலிக பொலிக –ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 31, 2022

***- (பொலிக பொலிக.) இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பதவுரை

பொலிக பொலிக பொலிக

வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர்

ஜீவராசிகளுக்குண்டான
வல்

வலிதான
நைந்த

அழிந்துபோன
இங்கு

இவ்விபூதியில்
நமனுக்கு

யமனுக்கு
யாது ஒன்றும் இல்லை

ஒரு காரியமுமில்லை.
கலியும்

கலிபுருஷனும்
நெடும்

(விரைவில்) தொலையக்கூடும்.
கண்டு கொள்மின்

(அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்;
பூதங்கள்

பக்தர்கள்
சாபம்

பாவமானது
போயிற்று

தொலைந்தது;
நலியும்

வருத்தத்தை விளைவிக்கக்கூடிய
நரகமம்

நகரலோகங்களும்
கடல் வண்ணன்

கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இந்நிலத்தில்
மலிய புகுந்து

நிரம்பி
இசை பாடி

இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு
ஆடி உழிதர கண்டோம்

இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம்.

வேதம் மும்முறை ஓதுமாபோலே இருக்கும் “பொலிக பொலிக பொலிக” என்று மும்முறை ஓதுகிறபடி.போயிற்று

வல்லுயிர்ச்சாபம் = சாபம் என்கிறது பாபத்தை; அவசியம் அனுபவித்தே தீரவேண்டுகையாலே. ஆத்மாவைப்பற்றிக் கிடந்த அவித்யை முதலானவை தொலைந்துபோயினவென்றபடி.

நலியும் நரகமும் நைந்த = இனி நரகங்களை யநுபவிக்க ஆளில்லாமையாலே அவை புல்லெழுந்தொழிந்தனவென்கை.

‘நைந்த’ என்றது நைந்தன என்றபடி; அன்சாரியை பெறாத பலவின்பால் இறந்தகாலவினைமுற்று.

நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை = யமன் ஆராய்ச்சி செய்வதற்கு இங்கு விஷயமொன்றுமில்லை.

யம லோகம் புகுவார் இருந்தாலன்றோ அவன் கணக்குப் பார்க்கவேண்டுவது. “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோள் பொறியொற்றி வைத்தவிலச்சினை மாற்றித் தூதுவரோடி யொளித்தார்” என்னும்படியாயிற்றென்கை.

கலியுங்கெடும் = கலிபுருஷனும் விரைவில் தொலைந்திடுவானென்கிறார்.

ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகாரத்தில் “தமிழ் மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே” என்கிற சூர்ணிகையில்

“கலியுங்கொடும்போல ஸூசிதம்” என்விடத்திற்கு வியாக்கியான மருளிச்செய்யாநின்ற மணவாளமாமுனிகள்

“இவர்தாம் மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே “கலியுங்கெடும்’ என்று- திருமங்கையாழ்வார் உடையவர் வோல்வார் அவதரித்துக் கலி யுக ஸ்வபாவமும் கழியுமென்று மேல்வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

கண்டுகொண்மின் என்பதனால் இதில் ஸர்தேஹமில்லாமை கக்டப்பட்டதாகும். அநுபவத்தாலே அறியுமனுக்கு உபதேசம் வேணுமோவென்கை.

இப்படிச் சொல்வதற்குக் காரணம் இன்னதென்கிற்று. மேல்- கடல் வண்ணனென்று தொடங்கி,

இதுவரையில் பாகவத ஸஞ்சாரமில்லாமையாலே வல்லுயிர்ச்சாபம் நிலைபெற்று, கலியும் நரகமும் மலிந்து, நமனுக்கும் விசேஷவிருந்து கிடைத்துக்கொண்டிருந்தது;

இப்போது பாகவத ஸஞ்சாரம் மிகமிக வுண்டானபடியாலே “போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த,நமனுக்கு யாதொன்றுமில்லை, கலியுங்கெடும்” என்று உறுதிகூறத் தடையில்லையென்றபடி.

பூதங்கள் = வடமொழியில் *** (பூ – ஸத்தாயாம்) என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ்சொல். ஸத்தை பெற்றது என்று பொருள்.

எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்தே ஸத்தை பெற்றவர்கள் என்றவாறு.

————————-

***ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

 

பதவுரை

வண்டு ஆர்

(மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான்

குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன்

திருமாலினது
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இந்நிலத்திலே
பண்

இராசங்களை
பாடி நின்ற ஆடி

பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு
பரந்து

எங்கும் பரவி
திரிகின்றன

எங்கும் பரவி உலாவுகின்றனர்;
கண்ணுக்கு இனியன

(இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்டோம்-;

தொண்டீர்  எல்லீரும்

பாகவதர்களான ஸகல பேர்களும்
வாரீர்

வாருங்கள்;
தொழுது தொழுது நின்று

நன்றாகவணங்கி
ஆர்த்தும்

ஆரவாரிப்போம்.

தம்மால் அழைக்கப்படுகின்றவர்கள் விரைந்து ஓடிவர ஆசைப்படுதற்குறுப்பாக. “கண்மோங் கண்டோங் கண்டோம்” என்று பெருமிடறு செய்கிறார்போலும்.

கீழே * நண்ணாதார் முறுவலிப்பவிலே “கொடுவுலகங் காட்டேலே” என்ற சொல்லும்படியாக அபகவதர்களைக் கண்ட கசப்புத் தீர ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் கண்ணாரக் காணப் பெறறோமென்கிறார் கண்ணுக்கினியன கண்டோம் என்று.

தொண்டீர்! எல்லோரும்வாரீர் = “மெய்யடியார்கள் தம் ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே” என்றும்

“பேராளன் பேரோலும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றும் பாகவத கோஷ்டியின் சுவடறிந்திருக்கு மவர்களே!

நீங்கள் ஒருவர் தப்பாமல் கடுக வாருங்கள்.

எதற்காக வென்ன;–தொழுது தொழுத நின்று ஆர்த்தும் = இத் திரளைத் தொழுகை தானே பரம ப்ரயோஜனமன்றோ? ப்ரயோஜனத்துக்கொரு ப்ரயோஜனம் பண்ணுவோம் என்றபடி.

யாரைத்தொழுவது? என்ன; பின்னடிகளினால் விவரிக்கின்றார்.

எம்பெருமான் * தோளிணைமேலும் நம்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் தண்ணந்துழாய் புனைந்திருக்கு மழகையும் அதிலே வண்டுகள் மதுப்பருக ஆர்ந்திருக்கும்படியையும்,

அப்பெருமான் தான் திருவின் மணாளனாயிருந்து அடியாரை நோக்குகிறபடியையும்

நல்ல இசைகளிலே இட்டுப் பாடித் தொண்டர்கள் ஸம்பிரம் பண்ணநின்றார்கள்; இக்காட்சியைக் காண வாருங்கள் என்றாயிற்று.

——————

***- (திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப்

பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

பதவுரை

திரியும்

தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம்

கலியுகமானது
நீங்கி

தொலையப்பெற்று
பெரிய

தருமந் சிறந்த
கிதயுகம்

கிருதயுகமானது
பற்றி

வந்து புகுந்து
தேவர்கள் தாமும் புகுந்து

தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி
பேர் இன்பம் வெள்ளம் பெருக

மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன்

காளமேகவண்ணனாயும்
கடல் வண்ணன்

கடல்வண்ணனாயுமுள்ள
எம்மான்

எம்பெருமானுடைய
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இவ்விபூதியிலே
இரிய புகுந்து

மிக்க கோலாஹலங்களுடன் வந்து
இசை பாடி

கீதங்களைப் பாடிக் கொண்டு
எக்கும்

எல்லாவிடங்களிலும்
இடம் கொண்டன

வியாபித்துவிட்டார்கள்.

திரியுங் கலியுகம் நீங்கி = கலி பிறந்த நாற்பத்து மூன்றாநாளிலே ஆழ்வார் அவதாரித்தாரென்று பெரியார் கூறுவர்;

இன்னமும் நெடுங்காலம் தான் செங்கோல் செலுத்துவதாக வந்துபுகுந்த கலிபுருஷன் சிதையும்படியாயிற்று ஆழ்வாருடைய பெருமை.

திரியுங் கலியுகமென்றது தரும மார்க்கம் ருஜுவாக இருக்கை யன்றிக்கே தலைகீழாக இருக்கும்படியான கலியுகமென்றபடி.

மஹாபாரதத்தில் மோக்ஷதர்மத்தில் – “*** =  ந ச்ருண் வந்தி பிது; புத்ரா ந ஸ்நுஷா ந ஸஹோதரர்ந ப்ருத்யா ந கலத்தராணி பவிஷ் யத்யதரோத்தரம்.” என்று சொல்லிற்று;

கலியுகத்தில் தகப்பன் பேச்சை மகன் கேளான்; மாமியார் பேச்சை மாட்டுப்பெண் கேளாள்; தமையன் பேச்சைத் தம்பி கேளான்;

ஸ்வாமியின் பேச்சை வேலைக்காரன் கேளான்; கணவன் பேச்சை மனைவி கேளாள்; எல்லாம் தலைகீழாகவே

ஆகப்போகிறது என்பது  அந்த சுலோகத்தின் பொருள். ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றித் திரியுங் கலியுக மென்கிறார்.

தேவர்கள் தாமும் புகுந்து – இங்குத் தேவர்கள் என்பது இந்திரன் முதலிய தேவர்களையன்று; அனந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது.

இந்தக் கொடு  வுலகத்திலலே அவர்கள் அடியிடுதற்கே ப்ரஸக்தியில்லை;

அப்படியிருந்தும், அவர்கள் இங்கே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியைக் கண்டு இத்திரளிலே நாமுங்கலந்து பரிமாறி ஸத்தை பெறவேணுமென நினைத்து அங்கே புகுந்தார்களாயிற்று.

பெரியகிதயுகம்பற்றி = பெரிய க்ருதயுகமென்றால் சிறிய க்ருதயுகமும் ஒன்றுண்டோவென்று சங்கிக்கவேண்டா;

த்ரோதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்றிப்படி வேறு யுகங்களாலே விச்சேதமின்றிக்கே ஒரு போகியான வளர்ந்த கிருதயுக மென்றபடி.

ஆதி ஸ்ருஷ்டியில் கிருதயுகத்தைச் சொல்லுகிறது என்பாருமுண்டு.

பேரின்பவெள்ளம் பெருக = ‘பரமபதத்தில் ஆனந்தமும் சிற்றின்பம்“’ என்று சொல்லும்படியாக,

பகவதநுபவ ஆனந்தம் இந்நிலத்திலே அதிசயித்ததாயிற்று. எதனாலே யென்ன;

(கரியமுகில் வண்ணனித்யாதி.) இராமபிரான் சித்திரகூடத்தில் எழுந்தருளி யிருக்கும் போது

அவனைக் காணப் புறப்பட்ட அயோத்யாவாஸிகள்-

மேக ஸ்யாமம்  மஹாபாஹும் ஸ்திரஸத்வம் த்ருடவ்ரதம், கதா த்ரக்ஷ்பாமஹே ராமம் ஜகதச் சோகநாசகம்” என்று

எழில் மேக வண்ணனான இராமபிரானை என்று காண்போம்! என்று காண்போம்!! என்று வாய் வெருவிக்கொண்டே வந்ததுபோல்

எம்பெருமானுடைய வடிவழகு தன்னிலேயே சபலர்களான பாகவதர்கள் இந்நிலத்திலே நிரம்பி விட்டார்கள்.

இரிய – ப்ரீதி கோலாஹலம் பிறக்கும்படி யென்கை இரிதலாவது – இருந்தவிடத்தில்லாமை.

———————–

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

 

பதவுரை

இடம் கொள்

எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்

துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே

வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்

ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்

படுத்துக்கொண்டும்
இருந்தும்

உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்

நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்

பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்

தரையில் கால் பாவாதபடி
குனித்தும்

கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன

களித்துத் திரியா நின்றார்கள்.

உலகத்திலே மிகச்சிறந்த வஸ்துக்கள் ஸ்வல்பமாகவும் உபயோகமற்ற வஸ்துக்கள் அபரிமிதமாகவும் விளைவது இயல்பு.

ஸங்கல்பஸூச் யோதயத்தில் தேசிகன் – ஸர்வத ; கரவீராதிந் ஸூதே ஸாகரமேகலா, ம்ருத ஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாணதசாம் கதா”. என்றொரு சுலோக மருளிச்செய்கிறார்;

இந் நிலத்தில் நச்சுப் பூண்டுகளான அலரி முதலியவை மிகை மிகையாக விளைகின்றன;

உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதி போல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி மிகவும் அருமைப்பட்டிருகின்றனவென்பது அந்த சுலோகத்தின் கருத்து.

இதுபோலவே இவ்வுலகில் பாஹ்யமதங்கள் குத்ருஷ்டிமதங்கள் என்று சொல்லப்படுகிற தீயமதங்கள் மலிந்தும்,

ஆஸ்திகமதம், வைதிகமதம் என்று உண்மையில் சிறப்பித்துக் கூறப்படுகிற மதம் மிக விரளமாயுமிருக்கும்.

அங்ஙனம் மலிந்து கிடக்கிற துஷ்ட மதங்களையெல்லாம் பறித்துப் பொகடுவாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்துவிட்டார்களென்கிறார்.

இதன் கருத்து என்னென்னில்;–யே கண்டலக்நதுலுஸீநலிநாக்ஷமாலா; யே பாஹுமூலபரிசிஹ்நிதசங்கக்ரா யே வா லலாடபலகே லஸதூர்த்வபுண்ட்ரர்தே வைஷ்ணவா புவகம் ஆசு பவித்ரயந்தி. * இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே

ஸ்ரீவைஷ்ணவ சிகாமணிகள் காணவினிய அழகிய லக்ஷணங்களில் குறைவின்றியே பளபளவென்று விளங்கும் படியைக் கண்டால்,

கண்ட காட்சியிலேயே அவைதிக மதங்கள் அவிந்துபோமத்தனை.

விளக்கு வரக் கண்டவாறே இருள் தன்னடையே சிதைந்தொழியுமா. போலே

ஸ்ரீவைஷ்ணவர்களின் லக்ஷண அமைதியைக் கண்டவாறே அவைதிக மதங்கள் அவிந்து போகத் தட்டுண்டோ?

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;? “போலே யென்பானென்னென்னில்; சாத்விகர்க்குப் பிறரை நலியவேணுமென்றோரு அபிஸந்தியில்லைறே; நெற்செய்யப் புல் தேயுமாப்போலே இவர்கள் ஊன்ற வூன்ற அவை தன்னடையே தேயுமத்தனை” என்பதாம்.

பரம் ஸாத்விகர்களான பெரியார்கள் பிறர்களது அர்த்தங்களையும் ஆசாரங்களையும் அழகுபடக்காட்டும் முகத்தாலேயே பிறர்களுடையவற்றைக் கண்டிகத்தார்களாவர்.

இப்படிப்பட்ட மஹா ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்நிலத்திலே மலிந்து பகவதநுபவத்தாலுண்டான மகிழ்ச்சியாலே பல பாட்டுக்களைப் பாடியும் மநோஹரமாக உலாவியும் துள்ளிக்குதித்தும் பண்ணுகிற ஸம்பிரமங்கள் என்னே! என்று ஈடுபடுகிறாராயிற்று.

“எம்பெருமானாருடைய ஸ்திதி  நாம் கொண்டாடுமாப் போலயும், ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடினாப் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்பது ஈடு.

இப்பாசுரத்தின் பின்னடிகளின் அமைப்பை நோக்கி இது அருளிச் செய்தபடி.

——————-

***-இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே

ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார்.

எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

 

பதவுரை

செய்கின்றது

இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு

நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது

ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து

இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே

பகவத்பக்தர்களே
மயாத்தினால்

யதேஷ்டமாக
எங்கும் மன்னி

எல்லாவிடங்களிலும் நிறைந்து
ஆய்

இருக்கின்றார்கள்
அரக்கர்

ராக்ஷசர்களாவும்
அசுரர்

அசுரர்களாகவும்
பிறந்தீர் உள்ளீர் ஏல்

பிறந்தவர்களாயிருப்பீர்களாகில்
தொண்டீர்

இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே!
கொன்று

உங்களைக் கொலைசெய்து
ஊழி பெயர்த்திடும்

யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்)

(ஆதலால் உங்களுக்கு)

உய்யும் வகை இல்லை

பிழைக்கும் வழிஇல்லை;
ஐயம் ஒள்று இல்லை

(இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை.

மாய்த்தினாலெங்கும் மன்னி = ஸ்ரீவைகுண்ட நாதனுடைய பக்தர்களான நித்யரும் முக்தரும் ஆச்சரியமாக எங்கும் புகுந்திருக்கிறார்கள் என்கை.

மாயம் என்று ஆச்சரியத்தைச் சொல்லுவதன்றிக்கே –ஸம்பவாமி ஆத்மமாயயா” இத்யாதி ஸ்தலங்களிற்போல இச்சையென்கிற பொருளையும் சொல்லுமாதலால் ‘இச்சையாலே’ என்று நம்பிள்ளை யருளிச்செய்யும்படி — உபநிஷத்தின்படி திருநாட்டிலுள்ளவர்கள் இந்நிலத்திற்குத் திரும்புதல் இல்லையாயிருக்க, அவர்கள் இங்கு எப்படி வரக்கூடும்? என்று சங்கிக்க வேண்டா; கருமமடியாகத் திரும்புதல் இல்லையென்றதே தவிர, இச்சையாலே திரும்புதலும் இல்லையென்று சொல்லிற்றில்லை;  என்று உபநிஷத்து தானே ஓதிற்றுண்டே. இது தோன்றவே மாயத்தினால் என்பதற்கு “இச்சையாலே” என்று பொருள் பணித்தது.

ஐயமொன்றில்லை = இது நடுநிலைத் தீபகமாக இருந்து முன்னடிகளிலும் அந்வயிக்கும், பின்னடிகளிலும் அந்வயிக்கும்.

வைகுந்தன் பூதங்களே எங்கும் மன்னியிருக்கிறார்களென்பதில் ஐயமொன்றில்லை;

ராக்ஷஸ ப்ரக்ருதிகளாயும் ஆஸுர ப்ரக்ருதிகளாயும் இங்கே யிருப்பவர்கள் இனித் தொலையவே போகிறார்களளென்பதில் ஐயமொன்றில்லை. –

“ஸ்ரீவாநர ஸேகையின் நடுவே சுக ஸாரணர்கள் புகுந்தாப் போலே புகுரப் பார்த்தாருண்டாகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை” என்பது ஈடு.

கொன்று ஊழி பெயர்த்திடும்=வைகுந்தன் பூதங்கள் உங்களையுங்கொன்று ஊழியையும் பெயர்த்திடுவார்கள் என்கை .

ஊழியைப் பெயர்த்திடுகையாவது காலத்தையே மாற்றி விடுகை.

————————

***இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள்,

அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

பதவுரை

கொன்று

கொலைசெய்து
உயிர் உண்ணும்

பிராணனைமுடிக்குமதான
விசாதி

வியாதியும்
பகை

துவேஷமும்
பசி

பசியும் (முதலான)
தீயன எல்லாம்

மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும்
இ உலகில் நின்று கடிவான்

இவ்விபூதியலே தொலைப்பதற்காக
நேமி பிரான் தமர்

சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள்
போந்தார்

வந்துள்ளார்கள்;
இசை

இசைகளை
நன்று பாடியும்

நன்றாகப்பாடியும்
துள்ளி ஆடியும்

துள்ளிக்குதித்தும்
ஞாலம்

இந்நிலத்திலே
தொண்டீர்

இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே!
சிந்தையை

உங்களது நெஞ்சை
செம் நிறத்தி

செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து
சென்று

அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய்
தொழுது

வணங்கி
உய்ம்மின்

உஜ்ஜீவியுங்கோள்.

விசாதியென்ற வியாதியைச் சொல்லுகிறது.

வியாதியென்றும் பகையென்றும் பசியென்றும் சில கெடுதல்களைத் தனித்தனியே பிரியச்சொல்லிவந்து,

தீயனவெல்லாம் என்று ஸமுதாயமாக அருளிச்செய்கிறார்.

இவ்வுலகில் கெடுதல்களாக எவ்வெவையுண்டோ அவையெல்லாவற்றையும் என்றபடி.

யத்ராஷ்டக்ஷரஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதோ, ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்வாதி துர்ப்பிக்ஷதஸ்கரர்* (

திருவஷ்டாக்ஷாஸித்தியுடைய மஹாபாகவதர் ஒருவர் வாழுமிடத்தில் வியாதியோ பஞ்சமோ கள்வரோ தலைகாட்ட நேராது. என்கிற பிரமாணத்தின்படியே இப்பாட்டின் முன்னடிகள் அமைந்திருக்கின்றன.

நேமிப்பிரான் தமர் என்கையாலே – திருவாழியாழ்வான் பகைவர்களைப் படுத்துகிறபாடு இவர்களும் படுத்தவல்லார்களென்பது விளங்கும்

அங்ஙனம் போந்த நேமிப்பிரான் தமருடைய சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது மூன்றாமடி.

அவர்களைச்சென்று ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள்;

அல்லது, அவர்களிடம் சென்று அவர்களைத் துணைகொண்டு எம்பெருமானை ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள் – என்கிறது ஈற்றடி.

சிந்தையைச் செவ்வையாக நிலைநிறுத்தித் தொழவேணுமென்றது – பிரயோஜநாந்தரத்திற்கு மடியேற்காதே அநந்ய ப்ரயோஜநமாகத் தொழ வேணுமென்றபடி

———————

***-எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார்

காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்;

அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்;

அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

பதவுரை

நும் உள்ளத்து

உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி

வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும்

சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள்

தேவதைகள்
உய்யக்கோள்

உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்
அவனோடே

அந்த எம்பெருமான் தன்னோடே
மறுத்தும் கண் கூர்

மீண்டு சென்று கிட்டிக்கிடீர்;

(இவ்விஷயத்தில்)

மார்க்கண்டேயனும்

மார்க்கண்டேயனும்
கரி

ஸாக்ஷியாவன்;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா

(உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை;
கண்ணன் அல்லால்

ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது
தெய்வம் இல்லை

பரதெய்வம் வேறுகிடையாது;

(ஆன பின்பு)

இறுப்பது எல்லாம்

நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம்
அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்

அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள்.

உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் கஷ்டப்பட்டு நிறுத்திக்கொள்ளுகிற தெய்வங்களானவை

உங்களை அடியோடு ரக்ஷிக்கமாட்டா என்று நாம் சொல்லுகின்றிலோம்.

அவை செய்யும் ரக்ஷணம் நாராயணன் வழியாகவே யன்றி தாமாகவேயல்ல என்கிறோமத்தனை;

இவ்விஷயத்திற்கு மார்க்கண்டேயனே ஸாமியாயிரா என்கிறார் முன்னடிகளில்.

கீழ் * ஒன்றுந்தேவில் “புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை, நக்கயிரானுமன் துய்யக் கொண்டது நாராயணனருகே” என்றவிடத்து யாம் உரைத்தவை இங்கு அறியத்தக்கன.

“மார்க்கண்டேயனும் கரியே” என்றவிடத்து ஈடு- “இவ்வர்க்கத்துக்கு ஸாக்ஷி மார்க்கண்டேயன்; அவன் நெடுநாள் தேவனை ஆச்சரயிக்க அவனைப் பார்த்து ‘நெடுநாள் நீ நம்மை ஆச்ரயித்தாய்; இவ் வாச்ரயணம் பாழே போகவொண்ணாது; உன்னோடு என்னோடு வாசியில்லை. உனக்கொரு புகல் காட்டித் தரப் போகிறோம்’ என்று பக்கலிலே கொண்டு சென்று அவனபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தாள்; ஆனபின்பு இதில் ஸாஷி அவனே” என்பதாம்.

“உய்யக்கொள்” என்றே பலரும் ஓதிவருகிறார்கள்; “உய்யக்கோள்’ என்பதே பொருத்தமான பாடம் என்பர் பெரியோர்.

ஆழ்வார் இப்படிச் சொல்லக் கேட்டவாறே; தேவதாந்தர பஜனம் பண்ணித் திரிவாருடைய முகம் கறுத்துவிட்டது;

நம் தெய்வத்திற்கு இங்ஙனே குறை சொல்லுகிறாரேயென்று அவர்களுக்கு மனமும் கறுத்து முகமும் கறுத்தபடியைக் கண்ட ஆழ்வார் “கறுத்த மனமொன்றும் வேண்டா” என்று அவர்களுடைய கண்ணைத் துடைக்கிறார்.

“க்ஷுத்ரதேவதைகள் பக்கலிலே பரத்வ ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் தண்ணிய நெஞ்சு உங்களுக்கு வேண்டா!’ என்று பொருள் கூறப்பட்டது.

ஸித்தாந்தத்தைக் கையோலைசெய்து கொடுக்கிறார்- கண்ணனல்லால் தெய்வமில்லை என்று.

(இறுப்பதெல்லாம் இத்யாதி) இறுப்பதாவது செலுத்துவது நீங்கள் இடுகிற பூஜைகளையெல்லாம் என்ற படி.

நித்ய கருமம் நைமித்திக கருமம் காம்ய கருமம் ஆகிய இவற்றை யனுட்டிப்பதும் ‘இறுப்பதெல்லாம்’ என்பதனால் விவக்ஷிதம்.

அக்கருமங்களை யனுட்டிக்கும்போது ‘அக்னீயே ஸ்வாஹா’ என்றும், இந்த்ராயஸ்வாஹா’ என்றும் ‘வருணாயஸ்வாஹா’ என்றுமிப்படி பலபல தேவதாந்தரங்களின் பெயர்களை உச்சரித்து அவர்களுக்கு ஆராதனை செய்வதாகத்  தோற்றும்படியிருந்தாலும் உபநிஷத் ஸித்தாந்தத்தின்படி எம்பெருமானை உயிராகவும் அந்த இந்த்ராதி தேவதைகளை உடலாகவும் ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு அனுட்டியுங்கோள் என்றதாயிற்று.

உலகத்தில் உடலுக்குச் செய்யும் காரியங்களாலே உயிரே த்ருப்தியடையக் காண்கிறோம்;

அதுபோல சரீர பூதங்களான தேவதைகளுக்குச் செய்யும் காரியங்களாலும் ஸர்வாந்தர்யாமியான எம்பெருமானே த்ருப்தியடையக் குறையில்லை என்று நிரூபித்ததாயிற்று.

“நீங்கள் தேவதாந்தரங்களை உத்தேசித்துச் செய்கிற ஸமாராதனங்களை வேண்டாவென்று மறுக்கவில்லை; தராளமாகச் செய்யுங்கள்;

ஆனால் அந்த தேவதாந்தாங்கள் எம்பெருமானுடைய மூர்த்தியாக (சரீரமாக) உள்ளவர்கள் என்கிற ப்ரதிபத்தியோடே செய்யுங்கள் என்றதாகிறது.

———————

***-தேவதாந்தரங்களை ஆச்ரயித்து அபேக்ஷிதங்களைப் பெற்றவர்கள் இல்லையோவென்ன,

அந்தத் தேவைகள் ஆச்ரிதர்களின் அபேக்ஷிதங்களைக் கொடுக்க சக்தர்களாம்படி பண்ணி வைத்தவன்

எம்பெருமானே, ஆதலால் அவனை ஆச்ரயித்து உஜ்ஜீயுங்கோளென்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

 

பதவுரை

இறுக்கும் இறை

அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து

செலுத்தி
உண்ண

அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும்

வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி

தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக

அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக
நிறுத்தினான்

ஏற்பாடு பண்ணினவன்
அத்தெய்வநாயகன் தானே

ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்)
மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்

ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள்
கீதங்கள் பாடி

பலவகைப் பாட்டுக்களைப்பாடி
வெறுப்பு இன்றி

(இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல்
ஞானத்து

இந்நிலத்தில்
மிக்கார்

சிறப்புற வாழ்கின்றார்கள்
நீர்

நீங்கள்
மேவி

அவர்களைச்சிட்டி
தொழுது

வணங்கி
உய்மின்

உஜ்ஜிவித்துப்போங்கள்

உலகத்தில் சக்கரவர்த்திக்கு நாம் செலுத்த வேண்டிய கப்பங்களை நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லை,

ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்;

ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல; அவரவர்கள் செலுத்தும் கப்பங்களை வாங்கிக்கொள்வதற்காக

அரசர் பெருமானால் அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிற தத்துவத்தை உலகில் நாம் எளிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வண்ணமாகவே கைல தேவதா நாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய ஆராதனைகளைச் செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான்.

அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதீர்கள்.

சரீர பூதர்களான அந்தத் தேவதைகளின் வழியாக எம்பெருமானை ஆச்ரயிப்பதிற்காட்டிலும் ஸா

க்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் அழகியது. அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்போது இவ்வுலகில் நிரம்பியுள்ளார்கள்.

நீங்களும் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரவித்து உஜ்ஜீவியுங்கோள் என்றாராயிற்று.

ஞாலத்து வெறுப்பு இன்றி = “இருள் தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்” என்றும்

“ஆதலால் பிறவிவேண்டேன்” என்றும் கொடுவுலகம் காட்டேன்” என்றும் இவ்வுலகில் வெறுப்புத் தோன்றப் பேசுமவர்கள் தாமே

“எம்மாவீட்டுத் திறமும் செய்யும்” என்றும் “

இச் சுவைதவிர யான் போய் இந்திரலோகமாளுமச்சுவை பெரினும் வேண்டேன்” என்றும்

சொல்லும்படியிருக்கையாலே ஞாலத்தில் வெறுப்பு இல்லாமை யுண்டு.

—————–

***-பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும்,

குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்;

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

பதவுரை

வேதம் புனிதம் இருக்கை

வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு

நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே

பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில்

மலரோடு கூடின
புகையும்

தூபமும்
விளக்கும்

தீபமும்
சாந்தமும்

சந்தனமும்
நீரும்

திருமஞ்சனமும்
மலிந்து

பூர்ணமாகக்கொண்டு
அச்சுதன் தன்னை

எம்பெருமானை
மேவி

அடைந்து
தொழும்

ஸாங்கரியம் செய்கிற
அடியாரும்

அடியார்களையும்
பகவரும்

குணாநுபவ ரிஷ்டர்களையும்
உலகு மிக்கது

இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு)
நீங்கள்

நீங்கள்
மேவிதொழுது.

(அவர்களை) விரும்பி வணங்கி
உய்ம்மின்

உஜ்ஜீவியுங்கள்.

* வேதப்புனிதவிருக்கையென்று தொடங்கி * மேவித் தொழுமடியாகும் என்னுமளவும் கைங்கரிய நிஷ்டர்களைச் சொல்லுகிறது.

பகவரும் என்று குணாநுபவ நிஷ்டர்களைச் சொல்லுகிறது.

(வேதப்புனித விருக்கை) வேதங்களுள் புனிதமான  ருக்குகளென்று புருஷ ஸூக்தம் நாராயணாநுவாகம் முதலியவற்றைச் சொல்லுகிறது.

ஞான விதியென்று பகவத் கீதையைச் சொல்லுகிறதாக ஸம்பிரதாயம்,

ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் பிரகரணத்தில் “பகவன் ஞான விதி பணி வகையென்று இவரங்கீகரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்” என்ற சூர்ணிகை காண்க.

“தொடர்ந்து அடிமை செய்யும் இளையபெருமாளையும், கிடந்த விடத்தே கிடந்து குணாநுபவம் பண்ணும் ஸ்ரீபரதாழ்வானையும் போலே யிருப்பாரே யாய்த்து லோகமடைய” என்ற நம்பிள்ளை யீடுகாண்க.

——————

***நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்;

நீங்களும் அவர்களைப் போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார்.

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

 

பதவுரை

நக்கன் பிரானோடு

சிவபிரானும்
அயனும்

பிரமனும்
இந்திரனும்

தேவேந்திரனும்
முதல் ஆக

முதலாக
தொக்க

திரண்ட
அமரர் குழாய்கள்

தேவவர்க்கங்கள்
கண்ணன் திருமூர்த்தி

எம்பெருமானது திருவடிவத்தை
மேவி

ஆசிரயித்து
மிக்க உலகுகள் தோறும்

பரம்பின் லோகங்கள் தோறும்
எங்கும்

எவ்விடத்தில்
பரந்தன

நல்ல பதவிகளைப்பெற்று வாழ்ந்தான்;
தொண்டீர்

தொண்டர்களே!
ஒக்க

(நீங்களும்) அவர்களோடொக்க
தொழ சிற்றிர் ஆகில்

(எம்பெருமானைத்) தொழவல்லீர்களாகில்
கலியுகம்

கலியுகதோஷம்
ஒன்றும்

சிறிதும்
இல்லை

உங்களுக்கு இல்லாதபடியாரும்.

: (நக்ந:) என்னும் வடசொல் நக்கனெனத் திரிந்து, அரையில் ஆடையில்லாதவனென்று பொருள்படும்;

இது சிவபிரானுக்கு வழங்கும் நாமங்களுள் ஒன்றாகும்.

சிவனும் பிரமனும், இந்திரனும் முதலாகத் திரண்ட தேவஸமூஹங்களானவை கண்ணபிரானான ஸ்ரீமந்நாராயணனுடைய

அஸாதாரண விக்ரஹத்தை ஆச்ரயித்து, அதன் பலனாக லோகங்கள்தோறும் பரந்த செல்லமுடையா யிருக்கிறார்கள்.

அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவியிலேயிருக்கின்றார்களென்றவாறு.

தொண்டீர்! ஒக்கத் தொழகிற்றிராகில் = தேவதாந்தா சேஷபூதரான நீங்களும் அவர்களைப்போலே

எம்பெருமானையே தொழவல்லீர்களாகில், கலியுக மொன்றுமில்லையாகும்;

அதாவது – உங்களுக்கு தேவதாந்தர ப்ராவண்யமாகிற நீசத் தனத்திற்கு ஹேதுமான கலியுக தோஷம் தொலையுமென்கை.

—————-

***-இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

 

பதவுரை

தன் அடியார்க்கு

தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே

கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும்

கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி

மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம்  பிரான்.

வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான
கண்ணன் தன்னை

எம்பெருமானைக் குறித்து
கலி வயல்

நிறைந்த வயல்களையுடைய
தென் திசை

தென் திசையிலுள்ள
குருகூர்

திருநகரிக்குத்தலைவரான
காரி மாறன் சடகோபன்

ஆழ்வார்
புகழ்

கீர்த்திமிக்க
ஆயிரத்து பத்து

ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி
உள்ளத்தை

(கற்பாருடைய) நெஞ்சை
மாசு அருக்கும்

கல்மஷமற்றதாகச் செய்

தேவதாந்தரங்களிலுண்டான பரத்வ ஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப் பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மாசு ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது.

கலியுகமொன்று மின்றிக்கே – . எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம்,

அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி.

கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -5-1 -கையார் சக்கரத்து-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 29, 2022

***- (கையார் சக்கரத்து) நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து,

பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல,

அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

பதவுரை

கைஆர் சக்கரத்து

‘திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும்
என் கரு மாணிக்கமே

எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!
என்று என்று

என்று பலகாலும்
பொய்யே கைம்மை சொல்லி

பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி

(அந்த  வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி)

புறமே புறமே ஆடி

விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்
மெய்யே பெற்றறோழிந்தேன்

மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;
விதி வாய்க்கின்று

பகத்திருபை பலிக்குமிடத்தில்
காப்பர் ஆர்

அதைத் தடுக்கவல்லார் யார்?
கண்ணபிரான்

ஸ்ரீக்ருஷ்ணனே!
இனி

உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு
போனால்

என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில்
அறையோ

தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.)
ஐயோ

சந்தோஷக்குறிப்பு

(இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.)

எம்பெருமான் கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்பு உண்மையிலே நெஞ்சை உருக்குமதாயிருந்தாலும்

இரும்புபோல் வலிதான என்னுடைய நெஞ்சம் அதிலே ஈடுபட்டிலது;

ஆனாலும் ஈடுபட்டவர்கள் பேசுகிற பாவனையிலே “கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே” என்ற பேசினேன்;

இப்படி ஒரு தடவை சொல்லி நிற்காதே பலதடவை சொன்னேன்;

பல்லாயிரந்தடவை சொன்னாலும் உள்கனிந்து சொன்னால் அழகியதே;

அப்படியன்றிக்கே எம்பெருமானையும் வஞ்சிப் பதற்காகச் சொன்னேனத்தனை.

வாயாற்சொல்லுவதோ இது; நடத்தையோ விஷயப்ராவண்யமேயாயிற்று.

அப்படியிருந்தும் மெய்யன்பர் பெறும் பேற்றை நானும் பெற்றுவிட்டேன்;

பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் பேற்றை நானும் பெற்றுவிட்டேன்.

பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் எங்ஙனம் பெறமுடியும் என்று சிலர் சங்கிக்கக்கூடும்;

(விதிவாய்க்கின்று காப்பாரார்?) எம்பெருமானுடைய அருளிவெள்ளம் கரையுடைந்து பெருகப் புகுந்தால்

எம்பெருமானறன்னாலும் அணை செய்ய முடியாதன்றோ.

ஆக மூன்றடிகளைத் தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு, நான்காமடியை எம்பெருமான்றன்னையே நோக்கிச் சொல்லுகிறார்,

“கண்ணபிரானே! இனி நீ என்னைவிட்டுப்போகத் திருவுள்ளமாகில் விட்டுப் போ  பார்ப்போம்” என்று வீரவாதம் பண்ணுகிறார்.

இனி உன்னாலும் விட்டுப் பெயர முடியாதென்றவாறு.

அறையோ வென்பது தம்முடைய வெற்றியைக் காட்டுகிறது.

வீரவாதத்தைத் தமிழர்கள் அறை கூவுதலென்றும் நாவலிடுதலென்றும் சொல்லுவர்.

***  – மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சக * என்ற உனக்கு இனி

என்னை விடப்போகாதென்பது திண்ணம் என்று காட்டினபடி.

இப்பாசுரத்தினால் எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபை நிரூபிக்கப்பட்டதாயிற்று.

ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில் “இவன் நடுவே அடியானென்ன, ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி

ஸாக்ஷி வன்களவிலநுபவமாக இந்திரஞாலங்கள் காட்டிக்கொள்ளக் காப்பாரற்று விதி சூழ்ந்தது” என்றருளிச்செய்த

சூர்ணிகை இங்க அநுஸந்திக்கத்தக்கது.

விதியென்று பகவத்க்ருபையைச் சொல்லுகிறது. விதி எப்படித் தப்ப வொண்ணாததோ

அப்படி க்ருபையும் எம்பெருமானாலே தப்ப வொண்ணாத தாயிருக்கையாலே விதி யென்றது.

இனிமேல் எம்பெருமான் தம்மை விட்டுப் பெயர்ந்து போக முடியாதென்கிற உறுதியைக் காட்டுவது ஈற்றடி.

கண்ண பிரானால் இனி எங்ஙனம் போக முடியுமென்கை.

—————————

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

பதவுரை

மா மருதிந் நடுமே

பெரிய மருதமரங்களினிடையே
போனாய்

தவழ்ந்து சென்றவனே!
என்

எனக்கு விதேயமான
பொல்லா மணியே

துளைபடாத ரத்தினம் போன்றவனே!
தேனே

தேன்போன்றவனே!
இன் அமுதே

இனிமையான அம்ருதம் போன்றவனே!
என்று என்றே

என்று இவ்வண்ணமாகவே
சில கூத்து சொல்ல

சில பொய்யுரைகளைச் சொல்ல
எம்பெருமான் அவன் தான்

அவ்வெம் பெருமானானவன்
என் ஆகி ஒழிந்தான்

எனக்கு விநேயனாய்விட்டான்;

(அன்றியும்)

வான் மா நிலம் மற்றும் முற்றும்

அவனடைய விபூதிகளெல்லாம்
என் உள்ளன

என்னுள்ளே நடத்தும் படியாயின.

***- (போனாய்) கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றில் கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே யெழுந்தருள, அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினால் அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தனவென்பது யமளார்ஜுனகதை. அக்காலத்திலலே  யசோதைப் பிராட்டிக்கண்டு, ஐயோ! பிள்ளைக்கு ஏதோ அநர்த்தனம் வந்துவிட்டதென்று அஞ்சி “என்னப்பா! மாமருதின்நடுவே போனாயே!” என்று வயிரெறிந்து பேசினள்; உண்மையில் அவள் பரிவு உடையவளாகையாலே அங்ஙனம் பேசத் தகும்; அவளுடைய பரிவில் ஆயிரத்திலொன்று கூட இல்லாத நான் அப்படிப் பட்ட பரிவு எனக்கு மிருப்பதாகப் பாவனைகாட்டி, “என்தேனே! என் இன்னமுதே! என் பொல்லாமணியே! மாமருதின் நடுவேபோனாயே!” என்று நானும் பேசினேன்; இது கபடமான உத்தியாயிருக்கச் செய்தேயும் இதையும் நெஞ்சு கனிந்துசொன்ன சொல்லாக்கொண்டு எம்பெருமான் என்னுள்ளே ஸபரிகரமாக வந்து புகுந்தருளினானே! இது என்ன ஆச்சரியம்! என்று உள்குழைகின்றார்.

இரண்டாமடியில் ‘கூற்று’ என்பது பன்னிராயிரப்படியின் பாடம்; ‘கூத்து’ என்பது மற்ற வியாக்கியானங்களின் பாடம். கூறப்படுவது கூற்று; என்றபடி. ‘கூத்து’ என்னம் பாடத்தில். சிலருடைய செயலை வேறு சிலர் அநுகரிப்பது கூத்தாகையாலே கபடமென்றவாறு.

எம்பெருமானவன்றான் என்னாகியொழிந்தான் – எனக்கு ஸ்வாமியான அவன் எனக்கு ஸ்வம்மாயினான்  என்றபடி. வானே மாநிலமே மற்றுமுற்றுமென்னுள்ளனவே -உபயவிபூதிநிர்வாஹமும் அவன் என்பக்கலிலேயிருந்து பண்ணுமத்தனையாய்விட்டது என்கை.

—————

***- முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக் கொண்டிருந்த வாற்றைச்சொல்லி,

பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடு கூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

 

பதவுரை

வெள்ளத்து

திருப்பாற்கடலிலே
அணை

(திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது
கிடந்தாய்

பள்ளிகொள்ளும் பெருமானே!
உள்ளன

எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன்
மற்று உள் ஆ

உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும்
புறமே

வெளிவேஷமாக,
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே

வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும்
சில மாயம் சொல்லி

சில பொய்யுரைகளைச் சொல்லி
உன்னையும் வஞ்சிக்கும்

(ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான
கள்ளம் மனம் தவிர்த்து

கபடமான நெஞ்ச தவிரப்பெற்று
உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்

உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்;
இனி

இனிமேல்
உன்னை விட்டு

பரமயோக்யனான உன்னைவிட்டு
என் கொள்வன்

வேறு எதைக் கைக் கொள்ளுவேன்?

மனத்தினுள் நடையாடுகின்ற எண்ணங்களோ வேறுபட்டவை;

வெளியே வாயாற் சொல்லுகிறவாசகங்களோ புறப்பூச்சான பொய்யுரைகளேயாம்;

எம்பெருமானுடைய ஔதார்யம் முதலிய குணங்களிலும் வடிவழகிலும் மிக ஈடுபட்டவன்போல ‘வள்ளலே! மணிவண்ணனே!’ என்று பலகாலுஞ்சொல்லி * உள்ளவாருள்ளிற்றெல்லா முடனிந்தறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படியான கள்ளமனமுடையவனானகவே யிருந்தேன்;

அப்படிப்பட்ட நான் அந்தக் கள்ளமனம் தவிரப்பெற்ற உஜ்ஜீவிக்கவல்லவனாயினேன்.

இனி வேறுவழிகளிலே செல்ல ப்ரஸக்தியில்லை என்றாயிற்று.

“வஞ்சக் கள்வன் மா மாயன்” என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிற எம்பெருமானையும் வஞ்சிக்க வல்லவனாயினேன் என்பது தோன்ற ‘உன்னையும்’ என்று உம்மை கொடுத்துப் பேசினார்.

——————

***-இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால்

அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார்.

(இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;)

கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது;

காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார்.

கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம்

தேஹ ஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயே போக்கி

உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் – என்று சில ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள்.

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

 

பதவுரை

கண்ணனே

எம்பெருமானே!
வன் கள்வனேன்

பஹாரக்கள்வனாகிய நான்
உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்

‘உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும்
மனத்தை வலிந்து

விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு
கண்ண நீர் சுரந்து

அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி
நின் கண்

உன்னிடத்திலே
நெருங்க வைத்து

மனத்தை ஊன்றவைத்து
எனது ஆவியை

என் ஆத்மாவை
நீக்க கில்லேன்

ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்;
என் கண்

என் பக்கலிலுள்ள
மலினம்

அவித்யா தோஷத்தை
அறத்து

போக்கி
என்னை கூசி அருளாய்

என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும்.

உன்னை விட்டு என்கொள்வனென்னும் வாசகங்கள் சொல்லியும் = சிறந்த பரமைகாந்திகளன்றோ இவ்வார்த்தை சொல்லத் தகுந்தவர்கள்;

உன்னைத் தவிர மற்ற வஸ்துக்களிலேயே காலாழ்ந்து திரிகின்றயான் “உன்னையொழிய வேறு எதைக்கொள்வேன்?” என்று சொல்லத் தகுந்தவனோ? அல்லனாயினும், வாயாலே இங்ஙனம் பச்சைப்பசும்பொய் பேசிக்கொண்டு திரிந்தேனென்கிறார்.

அதற்கு இப்போது அநுதபித்து வன்கள்வனேன் என்கிறார்.

என்னுடைய பொருளைத் திருடுகிறோமோ அவனைப் பற்றவும், அந்தப் பொருளைத் திருடுகிறோமோ அந்தப் பொருளைப் பற்றவும் கனவு வலிமை பெற்றிருக்கும்;

இங்கு ஆத்ம வஸ்துவோ ஸர்வேச்வரனான எம்பெருமானுடையது; வஸ்துதானும் கௌஸ்துபம்போலே மிகச் சிறியது; ஆக இரண்டாலும் இதனின் மிக்க களவில்லை யென்று துணிந்து வன் கள்வனே என்கிறார்.

மனத்தை வலித்து = விஷயாந்தரங்களிலே சென்ற மனத்தை அவற்றில் நின்றும் மீட்டு என்றபடி,

மனத்தை மீட்பதிலுள்ள அருமை தோன்ற வலிந்து என்கிறார்.

கண்ணீரில் சுரந்து = விஷயாந்தரங்களிலே ஊன்றிக்கிடந்த காலத்தில் அவற்றின் அநுபவம் யதேஷ்டமாகக் கிடையாதபோது கண்ணீர் பெருகுமே, அதைச் சொல்லுகிறது இங்கு;

அந்தக் கண்ணீரையும் மாற்றவேணுமே இப்போது, இவையெல்லாம் கில்லேன் என்பதிலே அந்வயிப்பன;

அதாவது மனத்தை வலிக்ககில்லேன், கண்ணநீர் காக்க (மாற்ற) கில்லேன்; (மனத்தை) நின்கண் நெருங்க வைக்கில்லேன்; எனதாவியை நீக்கில்லேன்- என்று ஒவ்வொன்றும் மாட்டாமை கூறியவாறு.

எனதாவியை நீக்ககில்லேன் = இந்த ஸ்தூல தேஹத்தை விட்டு ஆத்மாவைப் பிரிக்க முடியவில்லை யென்கை. அதாவது – ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுக்கமாட்டிற்றிலே ளென்றவாறு.

என்கண் மலினமறுத்து – இங்கு மலினுமென்கிறது ப்ரக்ருதி ஸம்பந்தத்தை; அத்தை யறுத்து உன் திருவடிகளிலே என்னை யழைத்துக்கொண்டருள வேணுமேன்கை.

இரண்டு வகையான அவதாரிகைகளுக்கு இணங்க, இரண்டாமடி மூன்றாமடிகளுக்கு இரண்டுவகையான பொருள்கள் காணத்தக்கன.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்; “அதவா, (என்கொள்வனித்யாதி) ஸ்வரூபாநுரூபமான பாகரத்தை வாயாலே சொல்லி நிற்கச்செய்தேயும். (வன்கள்வனேன்) உத்தேச்ய வஸ்துவைக் கடுக லிபிக்கப் பெறாத இன்னாப்பாலே ‘மஹாபாபி” என்பாரைப்போலே சொல்லுகிறார். (மனத்தை வலிந்து இத்யாதி) பக்தி பாரவச்யத்தாலே சிதிலமாகிற மநஸ்ஸைத் திண்ணிதாக்கி, “தன கேழிலொன் கண்ண நீர் கொண்டாள்* என்கிற கண்ண நீரையும் மாற்றி, (நின்கண் நெருங்க வைத்தே) *காலாழும் நெஞ்சழியும்* என்கிறபடியே உன்னைக் கிட்டினவாறே யுடைகுலைப் படுகிற மநஸ்ஸைத் தரித்து நின்ற உன்னை யநுஸந்திக்கும்படி பண்ணி இச் சரீரத்தில் நின்றும் ஆத்மாவைப் பிரிய வநுஸந்திக்க க்ஷமனாகிறிலேன்” என்பதாம்.

————–

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

பதவுரை

கண்ணபிரானை

ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்
விண்ணோர் கருமாணிக்கத்தை

நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும்
அமுதை

அமிருதம்போன்றவனுமான உன்னை
எண்ணியும்

கிட்டியிருக்க செய்தேயும்
நன்னகில்லேன்

கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)
நடுவே

இடைச்சுவராக
ஓர் உடம்பில் இட்டு

ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து
பல செய்வினைகள் கயிற்றால்

பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே
திண்ணம் விழுந்த கட்டி

மிகவும் திடமாகக்கட்டி
புண்ணை

ஹேயதோஷங்களை
மறைய வரிந்து

தெரியாதபடியாகப் பண்ணி
என்னை

அசந்தனான என்னை
பதமே

உனக்குப் புறம்பான விஷயங்களிலே
போர வைத்தாய்

தள்ளிவைத்தாய்.

***- (கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.

மிகவும் ஹேயமாய் ஜுகுப்ஸிக்கத் தகுந்ததான அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னே நெஞ்சு குளிர பகவத் விஷயத்தைப் பேசுகிறார்- கண்ண பிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை என்று.

‘விண்ணோர் கருமாணிக்கத்தை’ யென்பதை முந்துற அந்வயித்துக் கொள்ள வேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம்.

“ஸ்ரீவைகுண்ட நிலயனாய் *அபர்வறுமமரர்களதிபதியாயிருந்து வைத்து ஸர்ய போக்யனாம்படிவந்து வஸுதே க்ருஹே அவதீர்ணனான வுன்னை” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.

“சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே யங்கு, ஓர் மாயையினாலீட்டிய வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து” (திருவிருத்தம்) என்றகிறபடியே

விண்ணோர்களை வஞ்சித்து வந்து கண்ணபிரானாகத் திருவவதரித்து, அப்போதைய அதி மாநுஷ சீல வ்ருந்த வேஷங்களை யெல்லாம் ப்ரத்யக்ஷமாநாகாரமாக எனக்கு ஸேவை ஸாதிப்பித்து ஆராவமுதமாயிருக்குமெம்பெருமானை என்றபடி.

நண்ணியும், நண்ணகில்லேன்- பெற்று வைத்தும் பெறாதார் கணக்கானேன்.

ஞான லாபம் பெற்றது கொண்டு ‘நண்ணியும்’- என்றார்;

சரீர ஸம்பந்தத் தோடேயிருக்கிற விருப்பைப்பற்ற ‘நண்ணகில்லேன்’ என்றார்.

அது தன்னைத் தாமே விவரித்தருளுகிறார் நடுவேயோருடம்பிலிட்டு என்று தொடங்கி,

நடுவே என்பதனால், இந்த அழுக்குடம்புகான் அநுபவ விரோதியாய் நின்கிறதென்று காட்டியவாறு,

இருவர்க்கு நடுவிலே ஒரு சுவர் இருந்தால் அது விரோதியாகிறாப்போலே ஜீவாத்ம பரமாத்மாக்களின் அநுபவத்திற்கு இவ்வுடலே காணும் இடைச்சுவராயிருக்கின்றது.

கழித்துக்கொள்ளப் பார்த்தாலும் ஸாத்யமாகாதபடி புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களை விட்டுக் கட்டி வைத்திருக்கின்றாயே! என்கிறாய்.

புண்ணை மறைய வரிந்து என்ற விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “தோலை மேவிக் கைப்பாணியிட்டு மெழுகுவாசியிலே ப்ரமிக்கும்படி பண்ணின வித்தனையொழிய, அகவாய் புறவாயிற்றாகில் காக்கை நோக்கைப் பணி போருமத்தனையிறே” என்பதாம்.

“தீண்டாவபம்புஞ் செந்நீரும் சீயும் நரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிரு முடல்” என்று ஐயங்கார் பணித்தபடி

மிகவும் ஆபாஸமான இந்தவுடல், மேலுக்கு ஏதோ சிறிது மயக்கத்தை விளைப்பதாயினும் உள்ளே கிடக்கிற

கச்மலங்கள் வெளியே தெரியுமாயின் காக்கை குத்தவும் அதையோட்டவுமன்றோ வேலை போந்திருக்குமென்றபடி,

***   – யதி நாமாஸ்ய காய்ஸ்ய யதந்தஸ் தத் பஹிர் பலேத்ர தண்டமாதாய லோகோயம் சுந; காகசம்பந்த வாரயேத்” என்ற சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது.

—————–

***கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி

எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார்.

இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.

*நிலமுடை கால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் அறமுயலாழி யங்கை கருமேனி யம்மான்

தன்னையே கண்டு கொண்டொழிந்தேன். * என்று பெருங்களிச்சியாகக் கூறுகின்றார்.

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

பதவுரை

இரு

புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர்

பிரபல கருமங்கள்
புறம் அற

புச்சம் தோன்றாதபடி
முறை முறை

தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய

புகுவது தவிரும்படியாக
நிறம் உடை நால் தட தோள்

அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
செய்ய வாய்

சிவந்த திருப்பவளத்தையும்
செய்ய தாமரைகள்

செய்தாமரைக் கண்களையும்
கட்டிக்கொண்டு

ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு
குமைக்கும்

நலிவதற்கு இடமான
ஆக்கை

சரீரத்தில்
அறம் முயல் ஆழி அம் கை

ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய
கரு மேனி

கரிய திருமேனியை யுடையவான
அம்மான் தன்னை

எம்பெருமானை
கண்டு கொண்டு ஒழிந்தேன்

ஸேவித்து அநுபவித்து விட்டேன்.

முடிபோட்ட விடத்தையறிந்து அவிழ்த்துக் கொள்ள முடியாதபடி புச்சத்தோற்றாமே உள் முடியாக

முடித்து வைக்கப்பட்ட இரண்டு மஹாநுபாவர்கள் உண்டே; புண்யம் பாபம் எனப்படுமவர்கள்;

அந்த முதலியார்கள் பீடிப்பதற்கிடமான சரீரங்களிலோ, திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோலே

புகுதல் தவிரும்படியாகக் கருமேனியம்மான் தன்னைக் கண்டு கொண்டேனென்கை.

முந்துற முன்னம் எம்பெருமான் ஆழ்வாரைத் தோள்களாலே அணைக்க வந்தது பற்றி ‘நிறமுடை நால் தடந்தோள்’ என்கிறார்.

உடனே சில அமுத மொழிகளைப் பேசத் தொடங்கினனாதலால் செய்யவாய் என்றார்.

உடனே குளிரக் கடாக்ஷிக்கையாலே செய்ய தாமரைக்கண் என்றார்.

*இன்னரென்றறியேன் அன்னேயாழியொடும்பொன்னார் சாரிங்கமுடையவடிகளை இன்னாரென்றறியேன்* என்று

மதி மயக்க வல்ல திருவாழி திருச்சங்குகளைக் காட்டி யருளித் திருமேனியையும் முற்றூட்டாகக் காட்டினது

பற்றி -அறமுய லாழி யங்கைக் கருமேனி யம்மான் தன்னையே என்றார்.

*அருளர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்’ என்கிற படியே

திருவாழியைக் கொண்டே எம்பெருமான் லோக ரக்ஷணமாகிற தருமத்தை கையாலே அறமுயலாழி என்றார்.

—————-

***தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து

அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி யுண்டு! என்று பிற்காலிக்க வேண்டி யிருக்கச் செய்தேயும்

அவனுடைய க்ருபா ரஸம் கரை யழியப் பெருகின படியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

பதவுரை

ஆழி பிரான் அம்மான் அவன்

திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான்
எளவிடத்தான்

எவ்வளவு பெரியவன்!
யான் ஆர்

நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க)
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று

கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று
கை தலை பூசல் இட்டே

சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி
மெய் மால் ஆய் ஒழிந்தேன்

ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்!
எம் பிரானும்

ஸர்வேசுவரனும்
என் மேலான்

என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்)
எம்மா பாவியர்க்கும்

எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும்.
விதி வாய்க்கின்ற

தப்பவொண்ணாத  அருளாகிற விதி வலிப்பதாமளவில்
வாய்க்கும் கண்டீல்

பலித்தேவிடும்.

ஆழிப்பிரான் என்பதற்கு- திருவாழி யாழ்வானைக் கையிலேந்திய பெருமாள் என்றும்,

திருப்பாற்கடலிலே பள்ளிகொண்ட பரமபுருஷன் என்றும் பொருள் கொள்ளலாம்.

எவ்விடத்தான் என்றது- அவனுடைய பெருமை எப்படிப்பட்டது. வாசாமகோசரமன்றோ என்றபடி.

யானார் என்றது- என்னுடைய தாழ்வு பேச்சுக்கு நிலமோ என்றபடி.

ஆக முதலடியினால்- எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலையிட்டாராயிற்று.

ஆனாலும் ஒரு குறையில்லையென்கிறார் இரண்டாமடியினால்

எல்லா வழியாலும் மஹா பாவங்களைப் பண்ணினவர்கள் திறத்திலும் எம்பெருமானுடைய பரம க்ருபை பெருகப் புக்கால் தடையுண்டோ என்கிறார்.

பெரும்பாலும் இப் பாசுரத்தைத் திருவுள்ளத்திற்கொண்டே வேதாந்த தேசிகள் தயா சதகத்தில்  — நிஷர்தாநாம் நேதா கபிருலபதி: காபி சபரீ குசேல: ரூப்ஜா ஸா வ்ரஜ யுவதையோ மால்ய க்ருதிதி, அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதேயரே ப்ரபை  மநுகம்பே! ஸமபஹி· என்கிற ச்லோகத்தை அருளிச் செய்தார்.

குஹப் பெருமாள். ஸுக்ரீவ மஹாராஜர், சபரீ, குலேசலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப் பட்டவர்களின் தாழ்வும் எம் பெருமானுடைய மேன்மையும் நிரவி ஒரு ஸமமாகக் கலந்து பரிமாறினபடி புராணங்களிலுள்ளது;

மேடும் பள்ளமுமான நிலத்திலே பெருவெள்ளம் பெருகினால் மேடுபள்ளங்கள் நீங்கி ஸமநிலைமாக ஆகும்படியைக் காணாநின்றோம். அவ்வண்ணமாகவே அருள் வெள்ளம் பெருகியதனாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டதாகிறதென்றவாறு.

கைம்மாழதுன் பொழித்தாயென்று = தன் பெருமேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது கஜேந்திராழ்வானை ரக்ஷித்த சரிகையிலே நன்கு விளக்காநின்றது.

ஒரு களிறு ஒரு மடுவிலே ஒரு நீர்ப்புழுவாலே னாதிப்புண்டால், இதைப் பரிஹரிக்க  அரைகுலையத் தலைகுலையத்  திருநாட்டில் நின்று ஓடிவந்து,

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுவார் வியப்பவந்து ஆனைக்கன்றருளியீந்த” என்றும்,

***-  ஸ்ரக் பூஷாம்பரமயதாயகம் ததாந: திங் மாமித்யநுகஜகர்ஜமாஜகந்த. * என்றும் பெரியார் ஈடுபடும்படியாக அருள் செய்தபடியை நோக்குங்கால் அஸம்பாவிதமாக தொன்றுண்டோ? என்று காட்டுகிறார்.

கைம்மாநுன்போழிந்தாய்! என்று மெய்யன்புடையார் நெஞ்சுகனிந்து சொல்லும் சொல்லை நான் கபடபக்தியோடே சொன்னேன்;

அது மெய்யான பக்தியாகவே பரிணமித்து எம்பெருமானுடைய விஷயீகாரம் பெற்றுவிட்டேனென்றாராயிற்று.

—————–

***-எம்பெருமான் தன்னை ஆதரிப்பாரில்லாமே என்னை விஷயீகரித்தானல்லன்;

பரம விலக்ஷணரானவர்கள் தன்னை அநுபவியா நிற்கச் செய்தேயும் அவர்களிடத்திற் காட்டில் அதிகமான விருப்பத்தை

என் பக்கலிலே பண்ணி வந்து என்னுள்ளே புகுந்தானாகையால்

அவனையே நான் ஸகலவித போக்ய வஸ்துவாகவும் கொண்டேனென்கிறார்.

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

 

பதவுரை

மேல் ஆம் தேவர்களும்

மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும்
நிலத் தேவர்களும்

இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும்
மேவி தொழும்

விரும்பி வணங்கிநின்ற
மானார்

எம்பெருமான்
நினநாள்

இப்போதும்
வந்து

என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து
அடியேன் மனத்தே

எனது நெஞ்சினுள்ளே
மன்னினார்

பெருந்தினார்;
இனி

இது முதலாக
சேல் எய் கண்ணியரும்

மீனோக்குடைய மாதர்களும்
பெரு செல்வமும்

மஹத்தான ஜச்சரியமும்
நல் மக்களும்

குணம்மிக்க பிள்ளைகளும்
மேல் ஆம் தாய் தந்தையும்

மேம்பட்ட மாதாபிதாக்களும்
அவரே ஆவார்

(எனக்கு) அப்பெருமானேயாவர்.

மேனாத் தேவர்களென்றது- சுவர்க்கத்திலுள்ள தேவர்களினும் மேம்பட்டவர்களான நித்யஸூரிகளென்றபடி.

நிலத்தேவர்-பிராமணர்கள். *** என்பது வடமொழி வழக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களை விவக்ஷிப்பதாக்க் கொள்க.

“மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்” என்ற சொற்சேர்க்கையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும்படி;- “இளைய பெருமாளும் இடக்கை வலக்கை யறியாத குரங்குகளும் ஒக் கவடிமை செய்தாப்போலே இரண்டு விபூதியிலுள்ளாரும் ஒருமிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் ஸர்வாதிகனானவன்.” என்று

இப்படிப்பட்ட எம்பெருமான் “மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே

திருப்பாற்கடலையும் பெரிய பிராட்டியார் திருமுலைத்தடத்தையும் விட்டு இங்கே வந்து

நித்யஸம்ஸாரியான என்னெஞ்சிலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தனன்.

[சேலேய் கன்ணியரும் இத்யாதி.] பெருமானைப் பின் தொடர்ந்த இளைய பெருமாள் *** – ப்ராதாபர்த்தா ச பந்துச் ச பிதா ச ம்ம ராகவ:” என்று பெருமாளையே எல்லாவுறவுமுறையாகக் கொண்டிருந்த்துபோல,

நானும் அப்பெருமாளையே ஸகலவித பந்துவர்க்கமுமாக்க் கொள்ளாநின்றேனென்கிறார்.

சேல்ஏய் கண்ணியர்-சேல் என்று மீனுக்குப் பெயர்; மீன் போன்ற கண்களையுடையவர்களென்று ஸ்த்ரீகளைச் சொல்லுகிறது.

உலகத்தார் ஒவ்வொரு வஸ்துவைப்பற்றி நின்று ஒவ்வொரு இன்பம் அடைவர்கள்;

நான் எம்பெருமானொருவனையே பற்றி நின்று எல்லா வகையான இன்பங்களையும் பெற்றேனாகிறேன் என்றதாயிற்று.

—————–

***- (ஆவாரார் துணை.) இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான்

தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

 

பதவுரை

துணை ஆவார் ஆர் என்று

காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு
அலை நீர் கடலுள் அழுந்தும்

அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற
நாவாய் போல்

படகுபொலே
நான்

அடியேன்
பிறவி கடலுள்

ஸம்ஸாரக்கடலினுள்ளே
நின்று துளங்க

நின்று சிரமப்படா நிற்கையில்

(எம்பெருமான்)

தேவு ஆர் கோலத்தோடும்

திவ்யமான வடிவோடும்
திருசக்கரம் சங்கினோடும்

திருவாழி திருசங்குகளோடும்கூடி
ஆ ஆ என்று

ஐயோ ஐயோ வென்று
அருள் செய்து

க்ருபைபண்ணி
அடியேனோடும் ஆனான்

என்னோடும் கூடினான்

நாவாய் என்று கப்பலுக்குப் பெயர்; இங்குக் கப்பலையே பொருளாகக் கொள்ளலாம்;

இலக்கணையால் கப்பலுள்ளவர்களையும் பொருளாகக்கொள்ளலாம்.

கப்பலையே பொருளாகக் கொள்ளும்போது, கரையிலுள்ளவர்கள் ஆவுரார் துணையென்று கதறும்படியாக ஒரு கப்பல் கடலுள்ளே அழுந்துமாபோலே என்றதாகக் கொள்க.

இப்பொருளில், துணையென்று என்றது ‘துணையென்ன’ என்றபடி,

ஒரு கப்பல்  கடலுக்குள்ளே அழுந்திப் போருங்காலத்தில் அதைக் காணும் தடஸ்தர்கள் ‘ஐயோ! இப்படி நீரினுள்ளே அழுந்துகின்ற இக் கப்பலுக்குக் கைகொடுப்பார் யாருமில்லையே!’ என்று கதறுவார்கள்;

அவ்வண்ணமாக அழுந்துகின்ற கப்பல்போலே என்றபடி.

நோவு படுகிறோமென்கிற உணர்த்திகூட இல்லாமைக்காக இந்த த்ருஷ்டாந்தம்.

இனி, நாவாயிரத்திலுள்ளாரை கொள்ளும் பக்ஷத்தில் ஆவாரார் துணையென்கிற வாக்கியம் அவர்களுடையதே  யாகக்கடவது.

இப்படி நான் பிறவிக் கடலுள் துளங்கா நிற்கையில், எம்பெருமான் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்தோடும் அவ்வடிவுக்குச் சேர்ந்து திவ்யாயுதங்களோடுங்கூட வந்து ஐயோ! ஐயோ!! என்று என் பக்கலிலே கருணை புரிந்து என்னோட வந்து கலந்தான் என்றதாயிற்று.

“தேவார் கோலத்தோடும் திருசக்கரம் சங்கினோடும் அடியேனொடுமானானே” என்பதற்கு- திருவாழி திருச்சங்குகளோடே பொருந்துமாபோலே அடியேனோடு பொருந்தினான் என்பதாகப் பொருள் நிர்வஹிப்பராம். எம்பெருமானார்,

“கூராராழி வெண்சங்கேந்திவாராய்” என்கிற ஆழ்வாருடைய விருப்பத்தின்படியே, கையுந்திருவாழியுமான கோலத்தோடே வந்து கலந்தானென்று நிர்வஹிப்பாராம்.

———————

***இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத்

திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-

 

பதவுரை

மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்

மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்
கான் ஆர் எனமும் ஆய் இன்னம்

வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி
கற்கி ஆம்

கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்
கார்வண்ணன்

காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு

என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு
உகந்து வந்து

உகப்போடோளந்து
தானே இன் அருள் செய்து

தானாகவே இனிய கிருபையைப் பண்ணி
என்னை முற்றவும் தான் ஆனான்

எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான்.

‘என்றஃதே’ என்றவிடத்து, ‘என்ற அஃதே’ என்று பிரிக்க வேணும்; தொகுத்தல் விகாரம்;

‘என்றவஃதே’ என்றாக வேண்டுமிடத்துத் தொக்கது.

‘எம்பெருமான் என்னை ஆட்கொண்டான்’ என்று நான் நன்றி பாராட்டிச் சொன்னதுண்டு;

அவன்தானே நெடுநாள் பண்ணின க்ருஷி பலித்து என்னை அடிமைகொண்ட சிந்தனையொழிய நான் ஒரு க்ருக்ஷி பண்ணிற்றிலேன்;

உபகார ஸ்மிருதியாக நான் ‘ஆளுடையனானான்’ என்று ஒரு வார்த்தை சொன்னேனே.

இவ்வளவையே எம்பெருமான் பற்றிக் கொண்டு, நான் அபேக்ஷியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபையைப் பண்ணிவந்து கலந்தான்.

என்னை முற்றவும் தானானான்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; (1) உள்ளோடு புறம்போடு வாசி  யறக் கலந்தான். (2) எனக்கு ஸகல வித போக்யமுமானான்.

இக்குணம் அவனிடத்து ஆச்சரியமன்று என்பதைப் பின்னடிகளாலே நிரூபிக்கிறார்போலும்.

மத்ஸ்ய கூர்ம வராஹாவாதிகளான அவதாரங்களைச் செய்து ஆட்படுத்திக் கொள்ள வழி தேடுவதையே இயல்வாக வுடைடியவனன்றோ என்கை.

இன்னங்கார்வண்ணனே- நீர் கொண்டெழுந்த காளமேகமானது மேன் மேலும் வர்ஷிக்க எழுச்சி கொண்டிருக்குமா போலே

எம்பெருமானும் பண்ணின அவதாரங்களில் த்ருப்தி பெறாதே இன்னமும் அவதரிக்கவே திருவுள்ளம் பற்றி யிருக்கிறபடியைச் சொன்னபடி.

————————

***இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீமிக்கவர்களாய்க் கொண்டு

எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

பதவுரை

கார் வண்ணன்

மேகவண்ணனும்
கண்ணபிரான்

ஸர்வஸுலபனும்
கமலம் தட கண்ணன் தன்னை

தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து.
ஏர் வளம் ஒண் கழனி

எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய
குருகூர்

திருநகரிக்குத்தலைவரான
சடகோபன்

ஆழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்

சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான

இவை ஆயிரத்துள்  இ பத்தும்-;

ஆர் வண்ணத்தால்

அமிருதபானம் பண்றுமாபோலே
உரைப்பர்

ஓதுமவர்கள்
பொலிந்து

ஸம்ருத்தியோடே யிருந்து
அடிகீழ்

அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே
புகுலார்

புகப்பெறுவர்கள்.

காளமேக ச்யாமளனாய்ச் செந்தாமரைக் கண்ணனாய் ஆச்ரித ஸுலபனான எம்பெருமானைக் குறித்துக்கொள்ள

இத்திருவாய்மொழியை அம்ருத பானம் பண்ணுவாரைப்போலே சொல்லவல்லவர்கள்
“எம்பெருமானாரைப் போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடேமிருந்து” பின்பு தாய் நிழலிலே யொதுங்குவாரைப்போலே
அவள் திருவடிகளிலே புகப்பெறுவர் என்றதாயிற்று.

ஆர்வண்ணத்தால் = ஆர் தலாவது பானம் பண்ணுதல்;

பட்டர் ஸ்ரீகுணரத்ன கோளத்திலே “ஸூக்திம் ஸமக்ரயது… யாம் கண்டூல கர்ண குஹரா: கவயோ யயஸ்ரீ” சொற்களைச் சொல்லும் போது

ஏனோ தானோ என்று சொல்லுகை யன்றிக்கே நெஞ்சு கனிந்து சொல்ல வேணும்; அம்ருத பானம் பண்ணுவதாகவே நினைக்க வேணும்.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -4-10-ஒன்றும் தேவும் -ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 28, 2022

***- ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளா நிற்க,

வேறு தெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

பதவுரை

தேவும்

தேவர்களும்
உலகும்

அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும்

மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும்

மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று

சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே
நான்முகன் தன்னொடு

பிரமனையும்
தேவர்

தேவதைகளையும்
உலகு

உலகங்களையும்
உயிர்

பிராணிகளையும்
படைத்தான்

படைத்தவனும்
நின்ற

சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான
ஆதி பிரான்

ஆதிநாதனென்றும் எம்பெருமான்
குன்றம் போல் மணிமாடம் நீடு

மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற
திருகுருகூர் அதனுள்

திருநகரியிலே
நிற்க

காட்சிதந்து கொண்டிருக்கும் போது
மற்றைதெய்வம்

வேறுதெய்வங்களை
நாடுதிர் ஏ

தேடியோடுகின்றீர்களே.

எம்பெருமானுடைய ஜகத்காரணத்வத்தை மூதலிப்பன முன்னடிகள்.

ஒன்றும் என்பதை மேலுள்ள தேவும் இத்யாதிகளுக்கு விசேஷணமாக அந்வயிப்பதும்,

“தேவுமுலகு முயிரும் மற்றம்யாதும் ஒன்றும் இல்லாவன்று” என்று அந்வயித்து உரைப்பதும் பொருந்தும்.

விசேஷணமாக அந்வயிப்பதனால், ஒன்றுதல்-பொருந்துதலாய், அதாவது லயிப்பதாய், என்கிறபடியே,

கார்யத்திற்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே காரண பூதனான தன்பக்கலிலே சென்று ஒன்றுகிற (அதாவது, லயமடைகிற)

தேவும்-தேவஜாதியும்,

உலகும்-அத்தேவர்களின் இருப்பிடங்களும்,

உயிரும்-மனிசர் முதலிய பிராணிவர்க்கமும்,

இப்படி பிரித்துப் பிரித்துச் சொல்லவேண்டாதபடி எதுவுமே இல்லாமலிருந்த ஊழி காலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப் படைத்து,

அவன் வழியாக தேவ ஜாதியையும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும்

இவ்வருகே சேதந வர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தானாயிற் எம்பெருமான் என்று கொள்க.

இங்கே நம்பிள்ளையீட்டில் விநோமாக அருளிச்செய்வதொரு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஸர்வேச்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; ஆக இதுதான் பஹூமுகமாயிற்றுக் காணும்.”

ஆக இப்படிபட்ட ஸர்வேச்வரன் உங்களுக்குக் கண்ணாலே கண்டு ஆச்ரயிக்கலாம்படி, மலை போன்ற மணிமாடங்கள்

உயர்ந்திருக்கிற திருநகரியிலே ‘நம்மைக் காணவருவார் ஆரேனுமுண்டோ?’ என்று நின்று நின்று எதிர்பார்த்திருக்க,

வேறேயொரு தெய்வத்தை அந்தோ! தேடித்திரிகின்றீர்களே!

“***”= வாஸூதேவம் பரித்யஜய யோந்யம் தேவமுபாஸதே.  த்ருஷிதோ ஜாஹ்நீதீரே கூபம் கநதி துர்மதி’ என்கிற ச்லோகம் இவ்விடத்திற்குப் பொருந்த அநுஸந்திக்கத்தகும்.

தாஹித்தவன், கங்கை பெருகியோடுமிடத்திலே அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே

அதன் கரையிலே குந்தாலிகொண்டு கிணறுகல்ல முயலுமா போலே இருந்தது இவர்களுடையபடி.

திருமாலையில் “கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்கச், சேட்டைதன் மடியகயத்துச் செல்வம்பார்த் திருக்கின்றீரே.” என்ற பாசுரமும் இங்கு நினைக்கத்தகும்.

திருக்குருகூர்-இது பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று; ஆழ்வார் திருநகரியென வழங்கப்படுமது.  குருகாபுரி என்பது வடமொழிவழக்கு.

——————–

***- உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை;

நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்;

ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம்.

உங்களைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவே யல்லது வேறொரு வாசி யில்லை கிடீர்;

உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான

ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

பதவுரை

பல் உலகீர்

பலவகைப்பட்ட உலகர்களே!
நீர்

நீங்கள்
நாடி

தேடி
வணங்கும்

வணங்கும்படியாகவுள்ள
உம்மையும்

உங்களையும்
முன் படைத்தான்

முன்னம் படைத்தவனும்
வீடு இல் சீர்

நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான
புகழ்

புகழையுடையனுமான
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில்

ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை

மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை
பாடி ஆடி

பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு
பரவி

துதித்து
பரந்து செல்மின்கள்

எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.

நீர்நாடிவணங்கும் தெய்வமும்-நாடுதலாவது தேடுதல்; உங்களால் தேடிவணங்கப்படுகிற தெய்வங்களையும் என்றபடி.

சாஸ்த்ரங்களானவை என்று பரமபுருஷனைத் தேடவேண்டு மென்று சொல்லா நிற்க

அந்தோ! நீங்கள் காபுருஷர்களைத் தேடி யோடுவதே! என்று கர்ஹிக்கிறபடி.

எம்பெருமான் உங்களைத் தேடா நிற்க நீங்கள் நீசர்களைத் தேடி யோடாநின்றீர்களே! என்றுமாம்.

இங்கே நம்பிள்ளையீடு;-“கள்ளரைத் தேடிப் பிடிக்குமா போலே தேடிப் பிடிக்க வேண்டி  யிருக்கிறபடி; ஆடு திருடின கள்ளாரிறே இவர்கள் தாம்;. -ஜீவ ஹிம்ஸையையே ஆராதனமாகக்கொண்டிருக்கிற ஷூத்ர தெய்வங்களென்று காட்டினபடி.

வீடு இல் சீர்புகழ்=சீர் என்பதற்குச் செல்வம் என்கிற பொருளும் குணம் என்கிற பொருளும் உண்டு.

ஒருநாளுங் குறையாத செல்வங்களையுடையவன் என்றும், நித்ய ஸித்தங்களான திருக் குணங்களையுடையவன் என்றும் கொள்க.

அவன்மேவியுறை கோயில் என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“அவன் பரம பதத்தில் உள்வெதுப்போடே போலே காணுமிருப்பது; ஸம்ஸாரிகள் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து ‘இவை என்படுகிறனவோ’ என்று திருவள்ளத்தில் வெறுப்போடேயாயிற்று அங்கிருப்பது…….

‘பரமபத்திலும் படுகிற க்லேசத்தை யநுஸந்தித்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிப்பது என்று பட்டர் அருளிச்செய்ய •••

ஆச்சானும் பிள்ளை யாழிவானும் இத்தைக்கேட்டு பரமபதத்திலே ஆஙந்த நிர்ப்பானாயிருக்கிற விருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வ்யஸகத்தோடே யிருந்கானென்கை ஒசிதமோ?” என்றார்கள் -என்று பண்டிதரென்கிறவர் வந்து விண்ணப்பஞ்செய்ய

என்றது குணப்ரகரணத்திலேயோ தோஷ ப்ரகரணத்திலேயோ வென்று கேட்கமாட்டிறடறிலீரோ? இது குணமாகில் குணமென்று பேர் பெற்றவற்றில் அங்கில்லாததொன்றுண்டோ என்றருளிச்செய்தார்.”

இந்த ஐதிஹ்யம் இங்கு அருளிச்செய்ய ப்ரஸக்தி ஏதென்னில் மூலத்தில் “அவன் மேவியுறைகோயில்” என்றுள்ளது

மேவியுறைதலாவது ஆசையோடு வாழ்தல் பரமபதத்தில்பட்ட துக்கம் இங்குத் தீரப்பெறுவோமென்று ஆசைப்பட்ட வாழ்தலென்றே பொருள் சொல்லவேண்டியிருத்தலால்;

பரமபதத்திலும் பெருமானுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்று சங்கை யுண்டாகுமாதலால் அதைப் பரிஹரிக்க ஐதிஹ்யமருளிச் செய்தபடி.

எம்பெருமானை ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்றும் உயர்வற வுயர் நலமுடையவன் என்றும் கூறுகின்றவர்கள்

ஒன்றெழியாமே ஸகல குணங்களும் அப்பெருமானிடத்தே ஸமஸ்த கல்யாண குணாம்ருதோதி என்று சொல்வதற்குக் குறை நேர்ந்ததாகும்.  துக்கப்படுவதென்பது கல்யாணகுணமன்றே  அது ஹேய குணமாயிற்றே என்று சிலர் கலங்குவர்கள்

ஸ்வார்த்தமான சோகம் ஹேயமேயன்று அதுதான் சிறந்த குணமெனப்படும்.

ஆனதுபற்றியே இராமபிரானுடைய சுப ப்ருசம் பவதி துஃக்கித என்கிறார்கள் .

எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யத்தில் •••   என்றருளிச் செய்தார்.

ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் பாஷ்யத்திலே இதன் கருத்து )

தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர்

இந்த விகாரம் பிறாரிடத்திலுள்ள அன்புபற்றியதாதலால் ஈச்வரனுக்குக் குற்றமாகாது என்று ஸ்பஷ்டமாகவே அருளிச்செய்தார்.

எம்பெருமான் அனுபவிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற துக்கம் மெய்யானதா பொய்யானதா என்கிற விசாரமே அவசியமற்றது.

எம்பெருமானென்று ஒருவனுளனென்றும் அவன்றன் சமஸ்த கல்யாணகுணநிதியென்றும் இசைகின்றவர்கள்

அப்பெருமானைப் பாதுக்க துக்கியாக இசைந்தேதீரவேணும்.

இக்குணம் அவனுக்குப்பொருந்தாது என்பவர்கள் நிர்க்குணப்ரஹ்மவாதிகளேயாவர்.

முதற்பாட்டில் “திருக் குருகூரதனுள்; நின்றவாதிப்பிரான்” என்று எம்பெருமானளவுஞ்சென்று பேசின ஆழ்வார்

இப்பாட்டில் “திருக்குருகூரதனைப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்” என்கிறார்

எம்பெருமானிற்காட்டிலும் அவன் உகந்தருளினவிடமே பரமப்ராயம் என்று காட்டினபடி.

திவ்யதேசத்திலே சென்று சேர்ந்து சேவிப்பதிலுங்காட்டில் வழிப்போக்குத்தானே மிக இனிதாகையாலே பாடியாடிப் பரவிச்சென்மின்கள் என்கிறார்.

பரந்தே என்றவிடத்து ஈடு “பெரிய திருநாளுக்கு —(ஸர்வதோதிக்க) மாக வந்தேறுமா போலே  பாடி யாடிப் பரவிச்சென்மின்கள்”.

—————

***- உலகங்களை ரகூஷித்தருள்வதற்காக எம்பெருமான் செய்து போரும் செயல்களை

ஆராய்ந்து பார்த்தாலும் இவனே பரம புருஷனென்று அறியப்போது மென்கிறார்.

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பதவுரை

பரந்த

விஸ்தீர்ணமான
தெய்வமும்

தேவதாவர்க்கங்களையும்
பல் உலகம்

(அவர்களுக்குப்) பல உலகங்களையும்
படைத்து

ஸ்ருஷ்டித்தும்
அன்று

பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி
கரந்து

உள்ளே யொளித்து வைத்தும்
உமிழ்ந்து

பிறகு வெளிப்படுத்தியும்
கடந்து

(மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும்
இடந்தது

(மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை
கண்டும்

பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும்
தெளிய கில்லீர்

தெளியமாட்டாத
பல் உரலகீர்

பலவகைபட்ட உலகத்தவர்களே!
அமரர்

தேவர்கள்
சிரங்களால் வணங்கும்

தலையால் வணங்கப் பெற்ற
திருகுருகூர் அதனுள்

திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
பரன்

பரம புருஷனுக்கு
திறம் அன்றி

பிரகாரமாயல்லது
மற்று

வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு
தெய்வம் இல்லை

தேவதை கிடையாது
பேசுமின்

அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள்.

தேவ வர்க்கம் முதற்கொண்டு பூவுலகங்களையும் படைத்ததும்

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணா பெருவெள்ள முண்ணுமல் தான்விழுங்கி உய்யக் கொண்டதும்,

பிறகு வெளிநாடுகாணப்புறப்படவிட்டதும்,

வாமனவதாரம் பண்ணி மூவடி நீரேற்றுப்பெற்று அளந்து கொண்டதும்,

மஹாவராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதுமாகிய இத்தகைய செயல்களைக் கொண்டே

இவனே பர தேவதை என்று திண்ணமாக எண்ணலாயிருக்க, அந்தோ! தெளிவுபெற மாட்டிற்றிலீரே என்கிறர் முன்னடிகளில்.

எந்த தெய்வங்களை நீங்கள் சென்று பணிகின்றீர்களோ அந்த தெய்வங்களும் வந்து தலையாலே வணங்கும் திருக்குருகூரில்

பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்குச் சரீரமல்லாத தெய்வம் ஒன்றுண்டோ? ***  என்னும்படியாக வன்றே ஸகல தெய்வங்களுமிருக்கின்றன.

ஸ்ரீமந் நாராயணனைப் போலே ஸ்வதந்த்ரமான தெய்வம் ஒன்றுண்டாகில் எடுத்துப் பேசுங்களென்களென்கிறார்.

—————

***- அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கவிரும்புமவர்களும்

பசுபதியே ஸர்வேச்வரனென்று கூறுபவர்களுமான சிலரை இப்பாசுரத்தாலே நிராகரித்தருளுகிறார்.

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

பதவுரை

பேசநின்ற

உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும்

ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும்

(அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும்

மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே

தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை
கபாலம் நல் மோக்கக்து

கபாலமோக்ஷக்கதையினால்
கண்டுகொண்மின்

தெரிந்துகொள்ளுங்கள்
தேசம்

தேஜஸ்ஸுபொருந்திய
மா

சிறந்த
மதிள் சூழ்ந்து

மதில்களால் சூழப்பட்டு
அழகு ஆய

அழகு பெற்றதான
திரு குருகூர் அதனுள்

திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
ஈசன் பால்

ஸர்வேச்வரன் விஷயத்திலே
ஓர் அவம் பறைதல்

தப்பான பேச்சுக்களைப் பேசுவது
இலிங்கியர்க்கு

லிங்கப்பிரமாண வாதிகளுக்கு
என் ஆவது

என்னபலனைத்தரும்!

இலிங்கியர்க்கு என்றது ஹேதுவாதிகளுக்கு என்றபடி, அநுமானத்தைக் கொள்பவர்களே ஹேதுவாதிகளாவர்கள்.

சப்த ப்ரமாணமான அந்த சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந்த ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே

அந்த சாஸ்த்ரப்ரமாண விருத்தமாக இலிங்கியர் பேசுவது பொருளற்றது என்று நிரூபிக்கிறார்.

இலிங்கியர் – லிங்கவாதிகள், லிங்கமாவது ஹேது, அநுமாநமென்கை.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி “அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட,

தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்க வேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க,

சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக் கபாலம் நீங்காதாக,

பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்த போது

அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது கபாலநன்மோக்க வரலாறு.

கொலை யுண்பவனும் கொலை செய்பவனுமான பிரமனும் உருத்திரனும் பரதெய்வமாக இருக்கத் தகுதியுடையரல்லரென்பது இக்கதையினால் தெற்றெனவிளங்கும்.

சிலர் சிவனுக்குப் பராம்யத்தையும் சிலர் பிரமனுக்குப் பாரம்யத்தையும் பேசுவதுண்டாதலால் ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றிப் “பேசநின்ற சிவனுக்கும் பிரமன்றனக்கும்“ என்கிறார்.

‘பேசநின்ற‘ என்பது சிவனுக்குப் போலவே பிரமனுக்கும் அடைமொழியாகத்தகும்.

சில மூலைகளிலே இவர்களுக்குப் பரத்வம் தோன்றும்படியான வசநவ்யக்திகள் இருந்தாலும்

ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூர்யஸமப்ரபம், நாப்யாம் விநிஸ்ஸ்ருதம் பூர்வம் தத்ரோத்பந்ந, பிதாமஹ, * என்றும்,

யத் தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத, ப்ரஹ்மணச் சாபி ஸம்பூதச் சிவ இத்யவதார்யதாம் * என்றும்,

ப்ரஹ்மண, புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய * என்றும்,

மஹாதேவஸ் ஸர்வமேதே மஹாத்மா ஹுத்வா ஆத்மாநம் தேவதேவோ பபூவ*. என்றுமுள்ள நூற்றுக்கணக்கான பிரமாணங்களுக்குச் சேர நிர்வஹிக்கவேண்டுகையாலே

அப்படி நிர்ணயித்தருளின பரம வைதிகரான ஆழ்வார்  “சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே“ என்று துணிந்து அருளிச் செய்கிறார்.

இங்கே நம்பிள்ளையீட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மீன்-

“நீங்கள் ஈச்வர்ர்களாக சங்கித்தவர்களிருவரும் நின்ற நிலை கண்டதே,

ஒருவன் தலைகெட்டு நின்றான், ஒருவன் ஒடுகொண்டு ப்ராயச்சித்தியாய் நின்றான்.

ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறைதீரப் பற்றுகிற நீங்ள் உங்களிலும் பெருங்குறை வாளரையோ பற்றுவது?

‘பாதகியாய் பிக்ஷைபுக்குத் திரிந்தான்‘ என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்குப் பரத்வத்தைச் சொல்லவோ?

ஒருவனுடைய ஈச்வரத்வம் தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கையோடேயென்று காட்டிக்கொடுக்கிறார்

(கண்டு கொண்மின்) உத்தம் அகங்களிலே நீங்கள் எழுதியிட்டுவைத்த க்ரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டிகோளோ முன்னே நின்று பிதற்றாதே யென்கிறார்.“

தேசம் – சேஜஸ் என்ற வடசொல்திரிபு. தேசு பொலிந்த திருமதிளாலே சூழப்பட்டு அழகாய திருநகரிலே நிற்கிற ஸர்வேச்வரன் பக்கலிலே குறை கூறும்படியான தௌர்ப்பாக்யமுண்டாயிற்றே! என்று வெறுக்கிறார்.

——————-

***- லைங்க புராணம் முதலாகச் சில குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளையும்

பாஹ்ய ஸ்ம்ருதிகளையும் பிரமாணமாக்க் கொண்டு பேச வந்தவர்களை நிராகரித்தருளுகிறார்.

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

பதவுரை

இலிங்கத்து இட்ட புராணத்தீரும்

லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும்
சமணரும்

ஜைநர்களாயும்
சாக்கியரும்

பௌநர்களாயும்
வலிந்து வாது

விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும்
மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்

தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான)
பொலிந்து நின்ற பிரான்

பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை,
செந்நெல்

செந்நெற்பயிர்களானவை
மலிந்து

ஸம்ருத்திபெற்று
கவிரி வீசும்

சாமரை வீசப்பெற்ற
திரு குருகூர் அதனுள்

திருநகரியிலே
கண்டீர்

ஸேவியுங்கோள்
ஒன்றும்

எள்ளளவும்
பொய் இல்லை

அஸத்யமில்லை,
போற்றுமின்

துதியுங்கோள்

புராணங்களானவை ராஜஸங்களென்றும் தாமஸங்களென்றும் ஸாத்விகங்களென்றும் பாகுபாடுற்றிருக்கின்றன.

அக்நேச்சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரதீர்த்திதம், ராஜஸேஷு சமாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோவிது, ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரோ ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா, பித்ரூணாம் ச நிகத்யதே.

(தாமஸகல்பங்களில் அக்நியினுடையவும் சிவனுடையவும் மாஹாத்மிபத்தையும், ராஜஸகல்பங்களில் நான்முகனுடைய மாஹாத்மியத்தையும், ஸாத்விககல்பங்களில் பித்ருக்களினுடையவும் ஸரஸ்வதியினுடையவும் மாஹாத்மியத்தையும் பேசியிருப்பதாக மஹர்ஷிகளே கூறிவைத்தார்கள்.

ஸ்ரீவிஷ்ணுபுராணம் எப்படி அவதரித்திருக்கின்றதென்பதைச் சிறிது உற்றுப்பார்க்கவேணும்,

யந்மயம் சஜகத் ப்ரஹ்மந் யதச்சைதச் சராசரம், லீநமாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச. * என்று பொதுவிலே கேள்விகேட்க,

விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் த்த்ரைவ ச ஸ்திகம், ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ப ஜகச் ச ஸ. * என்று விடை அழகாக அவதரித்திருக்கின்றது.

இப்படி யல்லாமல், எருமையை யானையாக்க் கவிபாடித்தரவேணு மென்பாரைப் போலே

லிங்கத்துக்குப் பெருமையிட்டுச் சொல்லவேணுமென்று கேள்வியாய், அதன்மேற்பிறந்த்து லிங்கபுராணமாகையாலே

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் என்று ஆழ்வார் மருமத்தை வெளியிட்டுப் பேசியிருளினாராயிற்று.

வேதபாஹ்யா, ஸ்ம்ருதயோ யாச் ச காச் ச குத்ருஷ்டய, ஸர்வஸ் தா நிஷ்பலா, தமோநிஷ்டாஹி தா, ஸ்ம்ருகா. * என்று மநு மஹர்ஷி சொல்லிவைத்ததும் அறியத்தக்கது.

இப்படிப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத நிஷ்டர்களை விளித்து, ‘நீங்களும் நீங்கள் தொழுகிற தெய்வங்களும் அவனேயாகி நின்றான்‘ என்று இங்கு ஆழ்வார் அருளிச்செய்வது “***“ – இத்யாதி ப்ரமாணங்களை உட்கொண்டாம்.

சிவபிரான் திரிபுரமெரித்த வரலாற்றை நன்குணர்ந்தால் ஒவ்வொரு தேவதைக்கும் எம்பெருமானே உயிராகி நிற்பவன் என்பது புலனாகும்,

இப்படி ஸர்வாந்தராத்மாவாக இருக்கும் ஸர்வேச்வரன் ப்ரத்யக்ஷபூதனல்லன் என்று கண்ணழிவு சொல்லவொண்ணாதபடி

திருநகரியிலே ஸந்நிஹிதனாய், பரமபத்த்திலுங்காட்டில் இங்கே தன் திருக்குணங்கள் நன்கு விளங்கப் பெற்றதனால்

பொலிந்து நின்ற பிரானென்று திருநாமம் அணிந்து விளங்கும் பெருமானை ஸேவித்து, நாம் உபபாதிக்கும் எல்லாக்

குணங்களையும் அந்த்த் திருமூர்த்தியிலே அநுபவித்து மங்களாசாஸநம் பண்ணுங்கோளென்கிறார் பின்னடிகளால்.

——————

***- ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல்

இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு

அவர்களுக்கு உத்தரமளிக்கும் பாசுரம் இது. உங்கள் பாபந்தான் அதற்குக் காரணம் என்று விடை கூறிற்றாகிறது.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

பதவுரை

மற்று ஓர் தெய்வம்

வேறோரு தேவதையை
போற்றி பேண

துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு

வேறுபடுத்தி
உம்மை

உங்களை
இன்னே

இப்போதுநீங்களிருக்கிற விதமாக
தேற்றி வைத்தது

தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது
எல்லீரும்

எல்லாரும் (எதற்காகவென்றால்)
வீடு பெற்றால்

முக்தியுடைந்தால்
உலகு இல்லை என்றே

புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்;
சேற்றில்

சேற்றுநிலத்தில்
செந்நெல்

செந்நெற்பயிர்களும்
கமலம்

தாமரையும்
ஓங்கி

ஓங்கி வளரப்பெற்ற
திரு குருகூர் அதனுள்

திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆற்றல் வல்லவன்

பரமசக்தியுக்தனான பெருமானுடைய
மாயம் கண்டீர்

மாயையேயாமத்தனை;
அது

மாயையென்பதை
அறிந்து

தெரிந்துகொண்டு
அறிந்து

அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு
ஓடுமின

திருவடியே சென்று சேரப் பாருங்கள்.

இப்பாசுரத்தில் எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்பது தான் மருமமாகவுள்ளது.

ஆபாத ப்ரதீதியில் இதற்கு என்னபொருள் தோன்று மென்றால், எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனையே தொழப்பெற்றால்,

எல்லாருமே வீடுபெற்றுவிட்டால் லீலா விபூதி அடியற்றுப்போய்விடும்;

அங்ஙனம் போகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதாபஜநம் பண்ணி

ஸம்ஸாரிகளாய்த் தொலைந்துபோம்படி செய்துவைத்தான்-என்பதாகப் பொருள்தோன்றும்.

இப்படிப்பட்ட பொருள் எம்பெருமானுக்கு மிக்க அவத்யத்தை விளைக்குமதாகையாலே ஆழ்வார் இப்பொருள்பட அருளிச்செய்ய பரஸக்தியில்லை;

ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இங்ஙனே பொருள் நெஞ்சாலும் நினைக்கப்படவில்லை.

ஆனால், திருவாயமொழிக்கு ஸம்ஸ்க்ருதப் பதவுரையிட்டு (ஒன்பதாயிரப்படி இயற்றிய) தசோபநிஷத்பாஷ்யகாரரான ஸ்ரீரங்கராமாநுஜஸ்வாமி இப்பொருளையே பணித்து வைத்தார்; அவருடைய வாக்கியம் வருமாறு;-…..” என்பதாம்.

பிள்ளான் முதலிய ஸகலபூருவாசாரியார்களும் திருவுள்ளம்பற்றின பொருள் யாதெனில்;

உலகில்லையென்ற என்ற விடத்தில் உலகு என்பதற்கு சாஸ்த்ர மர்யாதை என்று பொருள்.

அவரவர்கள் பண்ணின புண்ய பாப ரூப கருமங்களுக்குத் தக்க படி பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்ர மரியாதை ஏற்பட்டிருக்கின்றது;

நீங்கள் முற்பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருந்தபடியால் அவற்றின் பலனாக இப்பிறவியில்

உங்களை கூஷூத்ரதேவதாபஜனம் பண்ணும்படியாக உபேஷித்திடலாயிற்று

கொடிய பாவங்கள் செய்த உங்களை புண்யாத்மாக்களைப்போலே ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணமே செய்யும்படி பண்ணி

விடுவதானால் அப்போது முன்சொன்ன சாஸ்த்மரியாதை அழிந்துவிடுமன்றோ.

அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனே நிறுத்திவைத்தது-என்கை.

வேதாந்ததேசிகனும் தார்பர்ய ரத்நாவளியில்; ….: என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினார்.

*மம மாயா துரத்யயா* என்று அவன்தானே கீதையில் சொல்லிவைத்தபடி தப்பவொண்ணாத இந்த மாயையை

அவன் திருவடிகளைக் கட்டியே தப்பப் பாருங்களென்கிறார் பின்னடிகளில்.

—————-

***- தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதனால் என்னபலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரையில் தெரியாமையில்லை;

இந்நாள் வரையிலே கைகண்ட பலன்தானே இனிமேலும் காணக்கடவதாயிருக்கும்;

ஆனபின்பு கருளக்கொடியுடையானுக்கு அடிமை புகுவதுவே உறுவ தென்கிறார்.

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

பதவுரை

ஓடி ஓடி

ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி
பலபிறப்பும். பிறந்து

பலபல யோனிகளிலே பிறந்து
பல் படி கால்

வம்ச பரம்பரையாக
மற்று ஓர் தெய்வம் வழி ஏறி

தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பாடி ஆடி பணிந்து

பலபடியாக வழிபட்டு
கண்டீர்

பலன் கைபுகுந்தமை கண்டீர்களே;
வானவர்

தேவர்கள்
கூடி

திரண்டு
ஏத்த நின்ற

துதிக்கும்படி நின்ற
திரு குருகூர் அதனுள்

திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு

ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு
அடிமை புகுவது

அடியராயிருந்த தகுதி

தேவதாந்தரபஜனத்தின் பலனை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

மற்றோர் தெய்வம் பாடியாடிப்பணிந்ததற்குப் பலன் ஓடியோடிப் பல பிறப்பும் பிறப்பதேயத்தனை என்றாராயிற்று.

…. ஸ்ரீப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச் சாந்யா தேவதா: ஸ்ம்ருதா:இ ப்ரதிபத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்*

(பிரமன் சிவன் முதலிய தேவதைகளைச் தொழுவதனால் அற்பபலனே கிடைக்குமாதலால் விவேகிகள் அத்தெய்வங்களைத் தொழுவதில்லை) என்கிற பிராமாணத்தை அடியொற்றி ஆழ்வார் அருளிச்செய்கிறபடியால் இங்கே ஒரு ஆக்ஷேபமும் இடம்பெறாது.

நீங்கள் தொழநிற்கிற தெய்வங்களும் வந்து தொழுது தத்தம் வாய்படைத்த பலன் பெறுமாறு தோத்திரம் செய்யுமிடமான திருக்குருகூரிலே ஸேவை ஸாதிக்கின்ற பறவை யேறு பரம் புருடனுக்கு அடிமை செய்வதே ஸ்வரூப ப்ராப்த மென்றாராயிற்று.

ஆடுபுள்= ‘ஆடு’ என்று வெற்றிற்க்கும் பெயராதலால் வென்றிக் கருடன் என்னவுமாம்.

—————

***- மார்க்கண்டேயன் ருத்ரனை ஆராதித்துத் தன் அபேகூஷிதம் பெற்றானே யென்று

சிலர் சொல்ல, அந்தக் கதையின் மருமமும் கேட்கலாகாதோ வென்கிறார்.

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

பதவுரை

அடிமையினால்

அடிமைசெய்து
புக்கு

உள்புகுந்து
தன்னை கண்ட

தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை

மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று

அக்காலத்தில்
நக்கபிரான்

திகம்பரச்சாமியான ருத்ரன்
உய்யக்கொண்டதும்

ரகூஷித்ததும்
நாராயணன் அருளே

நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற
தட தாழை

பெரியதாழைகளை
வேலி

வேலியாகவுடைய
திருகுருகூர் அதனுள்

திருநகரியிலே
மிக்க

மேம்பாடுடைய
ஆதி பிரான் நிற்க

ஆதிநாதப்பெருமாளிருக்க
மற்ற எ தெய்வம்

வேறு எந்த தேவதைகளை
விளம்புதிர்

பேசுகிறீர்கள்?

மருகண்டு வென்னும் முனிவர் பி;ள்ளை யில்லாக் குறையினால் பிரமனைக் குறித்துத் தவஞ் செய்தபோது, பிரமன் ப்ரத்யக்ஷமாகி ‘முனிவரே! அறிவில்லாமையும் அங்கஹீநத்வமும் பெரும் பிணியும் தீயகுணங்களுமுடையவனாய் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? அன்றி, கூர்மையான புத்தியும் அழகு பொலிந்தவடிவமும் ஆரோக்கியமும் நற்குணமுமுடையவனாய்ப் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? சொல்லும்’ என்ன,

முனிவர், ‘ஆயள் சிறிதேனும் அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலானாகும் ஸத்புத்ரனையே வேண்டுகின்றேன்’ என்று தம் கருத்தைக்கூற,

நான்முகக்கடவுள் அவ்வாறே அநுக்ரஹித்தனர்.  :

(புராண பேதத்தால்இக்கதை சிறிது பேதப்படுவதுண்டு, பிராமனுடைய அநுக்ரஹத்தினால் ம்ருகண்டு முனிவதற்குப் பிள்ளை பிறந்த்தாகவும், அப்பிள்ளை ஒருநாள் வீதியில் விளையாடிக்கொண்டிருக்கிற்று, என்று ஆகாசவாணியொன்று செவிப்பட, அதனால் அத்தாய் தந்தையர் மிக்க வருத்தங்கொண்டதாகவும், அதுகண்ட மார்க்கண்டேயன்  இதற்கு நீங்கள் வருந்தவேண்டா, இவ்வாபத்தை நானே போக்கிக்கொள்ளுகிறேன் என்று அவர்களைத் தேற்றித் தான் சிவபூஜை செய்யத் தொடங்கினென்பதாகவும் சில புராணங்கள் கூறும். )

அங்ஙனம் ஊழ்வினையாற் பதினாறுயிராயம்பெற்றுப் பிறந்த புத்திரனான மார்க்கண்டேயன் தனது அல்பாயுஸ்ஸைக்குறிதது வருந்திய தாய் தந்தையரைத் தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச்சொல்லி, தீர்க்காயுஸ்ஸூ பெறுதற் பொருட்;டுத் தினந்தோறும் சிவபூஜை செய்துவருகையில்

ஒருநாள் யமன் துர்தரையனுப்ப, அவர்கள் மார்கண்டேயனது தவக்கனலால் அவனை அணுகமாட்டாது அவன் செய்யும் சிவபூஜைச் சிறப்பைக்கண்டஞ்சி வெருண்டோடி யமனிடம் செய்திசொல்ல,

யமனும் கோபித்துத் தனது மந்திரியான காலனை ஏவ, அவன் வந்து நயபயங்களாவழைக்கவும் மார்க்கண்டேயன் வரமாட்டேனென்று சொல்லிவிட,

பிறகு யமன் சிவலிங்கமுட்பட வலித்திழுக்கும்போது சிவபிரான் ஸ்ரீமந்நாராயணனைத் சிந்தைசெய்து அவனது திருவருள்பெற்று அங்குநின்று வெளிப்பட்டு யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு பிராயமாகவே அனேக கல்பகாலமாகவும் இனிது வாழும்படி தீர்க்காயுஸ்;ஸைக் கொடுத்தருளினன் என்பது வரலாறு.

இங்ஙனம் சிவபிரான் மார்க்கண்டேயனுக்கு அருள்செய்து திருமாலினருளால் தான் பெற்ற சந்தியினாலேயென்பதும், அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்தவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயனனே என்பதுமாகிய உண்மை உணரத்தக்கது.

சில புராணங்களில் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்ததாகக் காணப்படினும், மஹபாரதத்தில் ஆரண்யபருவத்தில் நூற்றுத்தொண்ணுர்ற்றிரண்டாமத்யாயத்தில் மார்கண்டேயன் தரும்புத்திரரை நோக்கிச் சொல்லுமளிவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து, … ஸ்ரீ பித்ருபத்தோஸி விப்ரர்ஷே! மாஞ்சைவ சரணம் கத: *என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந்நாராயணனை சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.

ஸ்ரீ பாகவதத்திலும பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்தியாயத்தில் … -ஆராதயந் ஹ்ருஷீகேசம் ஜிக்யே ம்ருத்யும் ஸூதுர்;ஜயம்* (ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வெல்ல வொண்ணாத யமனை வென்;றொழிந்தான்) என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிற்று.

மார்கண்டேயன் இங்ஙனம் நெடுநாள் வாழ்ந்து வருகையில், மஹா ப்ரளயத்தைத் தான் காண வேணுமென்று ஆசை கொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும் போது, மஹாப்ரளயத்தில் திருமாலொருவனை யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங்கண்டு, முடிவில் தான் நற்கதி பெறுதற்பொருட்டுத் திருமாலையே சரணமடைய, அப்பெருமான் அவனைத் தனது திருவடிகளிற்சேர்த்துக்கொண்டருளினன் என்பதும் அறியத்தக்கது,

இதைத் திருவுள்ளம்பற்றியே பன்னீர்யிரப்படியுரையில் “அன்று உய்யக் கொண்டதும்” என்பதற்கு -“ப்ரளயதசையிலே பிழைப்பித்து பகவத்பானாக்கி உஜ்ஜூப்பித்தது” என்று உரை கூறப்பட்டது.

நாராயணனருளே என்றவிடத்து ஈடு;-“நீ நெடுநாள் பச்சையிட்டு ஆச்ரயித்தாய்; அவ்வாச்ரயணம் வெறுமன் போயிற்றதாக வொண்ணாது-என்று அவனை யழைத்து ‘நானும் உன்னோபாதி ஒருவனை ஆச்ரயித்துக் காண் இப்பதம் பெற்றது; இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலிறே என்று சொல்லி அவனைக் கொண்டு போய் ஸர்வேச்வரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தானாயிற்று.

ஆதலால் இப்படி ஸர்வேச்வரனான நாராயணனை யொழிய மற்று எந்தத் தெய்வத்தைக் கொண்டாடுகிறீர்களென்பன பின்னடிகள்.

—————

***- வேத பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ் தர்க்கங்களால் அழிக்க வொண்ணாத ஐச்வர்யத்தை யுடையனான

எம்பெருமானெழுந்தருளி யிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்க வேண்டியிருந்தீர்களாகில் என்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

பதவுரை

விளம்பும்

கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான
ஆறு சமயமும்

ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்
அவை ஆகிய

அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான
மற்றும்

குத்ருஷ்டி மதங்களும்
தன் பால்

தன் விஷயத்திலே
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய

எல்லைகாணவொண்ணாதனாயிருக்கிற
ஆதி பிரான்

ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன்
அழகும்

நித்யவாஸம் பண்ணுமிடமாய்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய

வளம்மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான
திருகுருகூர் அதனை

திருநகரியை

(நீங்கள்)

உம்மை

உங்களை
உய்யக் கொண்டு போகுறில்

உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில்
உளம் கொள் ஞானத்து

அந்தரங்கஜ்ஞானத்துக்குள்ளே
வைம்மின்

வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.

வேதம் முதலிய சாஸ்த்ரங்களை ப்ரமணமாக இசையாதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர்; அவற்றை ப்ரமாணமாக இசைந்துவைத்தும் அவற்றுக்குத் தவறான அர்த்தங்களைப்; பண்ணுமவர்கள்

(அதாவது) எம்பெருமானொருவன் தவிர மற்ற தத்துவமொன்றுமேயில்லையென்றும், அவனுக்குத் குணமில்லை, நிக்ரஹமில்லை யென்றும் சொல்லுமவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவார்;

இவ்விருவகுப்பினரையும்பற்றிக் கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ஒரு ச்லோக மருளிச்செய்கிறார்; அதாவது-

*…- பாஹ்யா: குத்ருஷ்டய இதித்விதயேப்பாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந், ஜக்தஸய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வநிஹதஸ்ய ச கோ விசேஷ:?* என்பதாம்.

இதன் பகவத் கடாக்ஷத்திற்கு இலக்காகமாட்டாமல் நசித்துப்போவர்கள்.

வேதத்தை அடியோடே ப்ரமாணமாக அங்கீகரியாதே துர்ஷிக்கின்ற பாஹ்யர்கள் நசித்துப்போவது யுக்தம்;

அப்படியல்லாமல் வேதத்தை ப்ரமாணமாக அங்கீகரித்து வைதிகர்களென்று பேர்பெற்றிருக்கின்றவர்களும் நசித்துப்போவர்களென்னலாமோ என்ன;

இருவகுப்பினரும் துல்ய யோகக்ஷேமர்களேயென்பது ஒரு த்ருஷ்டாந்த முகத்தாலே மூதலிக்கப்படுகிறது;

விடாய்மிகுத்துத் தண்ணீரைத் தேடியோட இரண்டு ம்ருகங்கள் புறப்பட்டன;

அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்தில் புகாதே கானலைக்கண்டு தண்ணீர்ப்பெருக்காக மயங்கி ஓடிக் கொண்டேயிருக்கையில்

வழியிடையிலே நேர்பட்ட புலி முதலிய கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப்பட்டதாயிற்று.

இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்த்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது;

ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பி யிழியவே

அங்குக் கிடந்த வொரு கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப் பட்டதாயிற்று.

இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது;

ஆக இரண்டு மிருகங்களும் தடாகப்ரவேச-அப்ரவேசங்களாலே சிறிது வாசி பெற்றிருந்தாலும் விநாசத்திலே வாசியற்றவர்களேயாவர்.  என்றதாயிற்று.

கானலிலே மயங்கியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்தில் பாஹ்யர்கள்;

தடாகத்திலே யிழந்து துறைதப்பியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்திலே குத்ருஷ்டிகள் என்றுணர்க.

விளம்பும் ஆறுசமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்ய ஸமயங்களாம்;

சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிக வைசேகூஷிகர்களை நினைக்கிறது. க்ஷபணர்-ஜைநர்.

அவையாகிய மற்றும்–மற்றும் அவற்றோடொத்த குத்ருஷ்டிகளும் என்றபடி.

“அவையாகியும்” என்பது பன்னீராயிரப்படி யுரைக்.கு மாத்திரம் பாடம்.

மற்றும் என்பதற்கே குத்ருஷ்டிவர்க்கமெனப் பொருள்கொண்டு,

அவையாகியும் என்பதற்கு ‘ஸபையாகத் திரண்டாலும்’ என்று பொருள் கூறினர் பன்னீராயிரவுரைகாரர்.

அவை-ஸபை; பாஹ்யர்களும் ருத்ருஷ்டிகளும் பெருந்திரளாகக் கூடினாலும் பரிச்சோதித்து அறிய முடியாதவன் எம்பெருமான் என்றபடி.

ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.

ஆக, பாஹ்யர்களாலும் குத்ருஷ்டிகளாலும் சலிப்பிக்க வொண்ணாது ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடைய ஸர்வேச்வரன் எழுந்தருளி யிருக்குமிடமாய், வளம் மிக்க நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருநகரியை, உளங் கொள் ஞானத்து வைம்மின்-மாநஸ ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குங்கள் என்றபடி.

இது யாரைநோக்கி யுரைக்கிற தென்னில்; உம்மில் உய்யக்கொண்டு போகுறில்= உஜ்விக்க விருப்பமுடையீராகில்.

போக +  உறில், போகுறில்; தொகுத்தல்.

—————–

***- தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளின

பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கை தானே ஸ்வரூபாநுரூபமென்கிறார்.

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

 

பதவுரை

எத்தேவும்

எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும்

எல்லாவுலகங்களும்
மற்றும்

மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும்

இவையடங்கலும்
தன் பால்

தன்னுடையதான
மறு இல் மூர்த்தியோடு ஒத்து

நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி)
நின்ற வண்ணம் நிற்க

குறையற நிற்குமிருப்பிலே
செறுவில்

விளை நிலங்களில்
செந்நெல்

செந்நெற்பயிர்களும்
கரும்பொடு

கருப்பஞ்சோலைகளும்
ஓங்கு

வளரும்படியான
திருகுருகூர் அதனுள்

திருநகரியிலே
குறிய மாண் உரு ஆகிய

வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும்
நீள் குடக் கூத்தனுக்கு

(க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு
ஆள் செய்வதே

அடிமை செய்வதே

உறுவது ஆவது உற்றதாம்.-

பாட்டினடியிலுள்ள உறுதாவது என்பதை, முடிவிலுள்ள ஆட்செய்வதே என்பதனோடு கூட்டுக; ஆட்செய்வதே உறுவதாவது என்றபடி.

எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் இத்தனையும் தன்பால் மறுவில் முர்த்தியோடொத்து இத்யாதி.

இந்திரன் சந்திரன் குபேரன் என்று சொல்லப்படுகிற ஸகல தேவதாவர்க்கமும், ஸமஸ்த லோகங்களும்,

மற்றுமுண்டான சேதநாசேதவர்க்கமுமான இவையாகப் பெற்ற எம்பெருமான்

திருக்குருகூரிலே நின்றருளிகிறானாகையாலே அவனுக்கு ஆட்செய்வதே உறுவது என்றபடி.

மறுவின் மூர்த்தி யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்;

மறு என்று ஸ்ரீவத்ஸத்திற்கும் பெயராகையாலே அதனையுடைத்தான திருமேனி;

(அல்லது) மறு என்று அவத்யமாய், அஃதில்லாத (ஹேயப்ரத்யநீகமான) திருமேனியென்னுதல்.

எவ்வுலகங்களும் மற்றும் தன்னுடைய மூர்த்தியோடொத்திருக்கையாவது என்னெனில்;

சரீரத்தினுடைய லக்ஷணம் இன்னதென்று அறிந்தால் இது அறிந்ததாகும்; …-

யஸ்ய சேதநஸ்ய யத் த்ரவ்யம ஸர்வாத்மநா ஸவார்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தச சேஷதைக ஸ்வரூபஞ்ச தத் தஸ்ய சரீரம்.* என்பது சரீர லக்ஷணம்.

ஆத்மாவுக்கு ஸகல ப்ரகாரங்களாலும நியாம்யமாய் ஸேஷப் பட்டிருக்கையே சரீரத்வமாதலால் ஸகல தேவதைகளும் எம்பெருமானுக்கு இங்ஙனே யிருக்கும்படியைச் சொன்னவாறு.

செறு-விளைநிலம்.

குடக்கூத்தன்-அந்தணர்க்குக் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.

தலையிலே அடுக்குமிடமிருக்க இரு தோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது.

————-

***- இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

 

பதவுரை

ஆள் செய்து

(உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி
ஆழி பிரானை சேர்ந்தவன்

ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்
வண் குருகூர் நகரான்

திருநகரிக்குத் தலைவரும்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்

பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான
மாறன் சடகோபன்

ஆழ்வார்
வேட்கையால்

ஆதரத்தோடு
சொன்ன பாடல் ஆயிரத்துள்

ஆயிரம்பாட்டினுள்ளே
இ பத்தும்

இப்பதிகத்தை
வல்லார்

ஓதவல்லவர்களுக்கு
மீட்சி இன்றி

மீண்டும் திரும்பிதலில்லாத
வைகுந்தம் மாநகர் மற்றது

ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம்
கையது

கரஸ்தம்.

(ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்) ஆட்செய்கையாவது கைங்கரியம் பண்ணுதல்

இது மாநஸிகமென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூவகைப்பட்டிருக்கும்; இங்கு வாசிகைங்கரியம் கொள்ளத்தகும்.

எம்பெருமான் கையுந் திருவாழியுமான அழகைக்காட்டித் தம்மை ஆட்படுத்திக் கொண்டானென்பது தோன்ற ஆழிப்பிரானை என்றார்.

முதலடிக்கு ஈட்டு ஸ்ரீஸுக்திகள் பரமபோக்யங்களாயிருக்கையாலே அவை ஈண்டுக் குறிப்பிடப் பெறுகின்றன;-

“அடிமைதான் த்ரிவிதம்-மாநஸ வாசிக காயிகங்கள். இவற்றில் மாநஸ காயிகங்களுக்கு ஆளல்லர்; என்றிய வென்னில்,

*காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்* என்கையாலே.  இனி வாசிகமொன்றுமே யானால்

வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்தாரென்கிறதோ வென்னில்; அன்று;

அப்படியாமன்று இப்பாசுரம் *முனியே நான்முகனிலே யாக வேணும்.

இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்த *புகழுநல்லொருவனிலேயாகப் பெறில் முக்க்யம்;.

ஆனால், தேவதாந்தரபரத்வ நிரஸந பூர்வகமாக ஸர்வேச்வரனுடைய பரத்வத்தை யருளிச் செய்கையாலே யானாலோவென்னில;

அதுவாகில் முதல் திருவாய்மொழியிலே யாகவமையும்.

பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமு மாகை யாலே யானாலோவென்னில்,

அதுவாகில் *திண்ணன் வீட்டிலேயாதல்* அணைவதரவணையிலே யாதலாகவமையும்.

ஆனால் அர்ச்சாவதாரத்திலே பரத்வமருளிச் செய்கையாலே யானாலோவென்னில்; அதுவுமொண்ணாது.

அது *செய்யதாமரைக் கண்ணனிலே யாகவமையும்.

பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்றானாலோவென்னில், அதுவுமொண்ணாது;

*வீடுமின் முற்றவும் தொடங்கிப் பல விடங்களிலும் பரோபதேசம் பண்ணினார்; அவற்றிலுமாகப் பெற்றதில்லை;

ஆனால் எதாவதென்னில்; இவ்வொன்றுந்தேவிலே

*பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே* என்று பொலிந்து நின்ற பிரானே ஸர்வஸ்மாத் பரனென்று இவரருளிச்செய்யக் கேட்டு

*கபாலநன்மோக்கத்துக் கண்டு கொண்மின்* என்னக்கண்டு ஜகத்தாகத் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்களாயிற்று.

இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாஸநம் பண்ணும்படியிறே அவர்கள் தாம் திருத்தினபடி.

*பொலிகபொலிக என்று இதுக்கென்ன வொரு திருவாய்மொழி நேருகிறாரிறே.

ஸர்வேச்வரன் அவதரித்துத் திருத்தப் பார்த்தவிடத்தும் திருந்தாத ஸம்ஸாரத்திலே இவர் திருத்தத்திருந்தினபடி.

இனி இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி *இடங்கொள் சமயத்தை யெல்லாமெடுத்துக் களைவன போலே தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாம்படி திருத்துகையாலே ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன் என்கிறார்.

இந்த நன்மைக்கு அடி நல்லார் நவில் குருகூரிலே பிறப்பு, என்பது தோன்ற வண்குரு கூர்நகரான் என்கிறார்.

நாட்கமழ்மகிழ்மார்பினன் ஆழ்வார் தாம் வகுளமாலையை அணியாகக் கொண்டவராதலால் வடமொழியில் ‘வகுளாபரணர், வகுளபூஷணர் என்றும், தென்மொழியில் ‘மகிழ்மாலைமார்பினர்’ என்றும் வழங்கப்படுவர்.

ஸ்ரீமத்வேதாந்ததேசிகன் யதிராஜஸப்ததியில்

—ஸ்ரீ யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம்இ ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே. என்றருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

ஆழ்வார் அணிந்து கொண்டிருக்கும் வகுளமாலையின் நறுமணம் திருவாய்மொழியிலும் வீசிக் கிடப்பதாக அருளிச்செய்கிறார்.

இத்தகைய நறுமணம் வடமொழி வேதத்திற்கு இல்லாமையாலே அதற்கொரு குறையுண்டு என்பதையும் காட்டியருளினார்.

வேட்கையால் சொன்னபாடல் = உலகத்திலே கவி சொல்லுவார் பலருண்டு; அவர்கள் பெரும்பாலும் தம்தம் கவித்திறம் காட்டுவதற்கே பாடல்கள் பாடுவர்; ஆழ்வார் அங்ஙனமின்றி பக்தி பலாத்காரத்தாலே பரவசமாகத் திருவாய்மொழி பணித்தாரென்று அறியத்தக்கது.

ஆசார்யஹிருதயத்தில்-“நீர் பால் செய்யமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமதாபோலே பரபச்த்யாதிமயஜ்ஞாநாம்ருப்தி நிமிகிற வாய்கரைமிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதியென்று பேர்பெற்றது.” என்ற சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்.

“வைகுந்தமாநகர்மற்றது” என்ற விடத்தில் மற்று என்பது அசையச் சொல்லாய் வைகுந்தமாநகராகிற அவ்விடம் என்று பொருள்படும்;

அன்றியே, வைகுந்தமாநகரமாகிய நித்ய விபூதியும் மற்றதாகிய லீலாபூதியும் என்றும் பொருள்கொள்ளலாம்.

உபய விபூதி ஸாம்ராஜ்யமுண்டாகுமென்று பலன் சொல்லிற்றாயிற்று.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம் —

October 27, 2022

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம்

ஸ்ரீ உத்தம நம்பி பரம்பரைக்கு கூடஸ்தர் ஸ்ரீ பெரிய திருவடி ஐயன் உத்தம நம்ப ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருப்பேரானார்
ஸ்ரீ பெரியாழ்வார் முதல் 90 தலைமுறையில் இருந்த உத்தம நம்பிகளின் வைபவம் காணப்படுகிறது

பெரியாழ்வார் தம்முடைய திரு மகளாரான ஆண்டாளை ஸ்ரீ ரெங்கநாதனுக்கு பாணி கிரஹணம் பண்ணிக் கொடுத்து
ஸ்ரீ ராமாண்டார் என்னும் திருக்குமாரரும் தாமுமாக அவளை திரு ஆபாரணங்கள் முதலிய வரிசைகளுடன் ஸ்ரீ கோயிலிலே கொண்டு விட
அவள் பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாக –பெரிய பெருமாள் திரு உள்ளம் உகந்து அவளது ஐயரான பெரியாழ்வாரை ஐயன் என்றும்
அவரது திருக் குமாரரான ராமாண்டானை பிள்ளை ஐயன் என்றும் அருளப்பாடிட்டு அழைத்து தீர்த்தம் பறியாட்டங்களை ப்ரஸாதித்து அருளி
தம்முடைய ஆதீனங்களை நிர்வஹித்துக் கொண்டு சொத்துக்களுக்கு எல்லாம் கருட முத்ரை இடச்சொல்லி ஸ்ரீ ரெங்கத்திலேயே நித்ய வாஸம் பண்ணும்படி நியமித்து அருளினார் –

பெரியாழ்வார் பெரிய திருவடி நாயனார் குலத்திலே முகுந்த பட்டருக்கு திருக்குமாரராக
கலி பிறந்த 46 மேல் செல்லா நின்ற க்ரோதன நாம ஸம்வத்சரத்திலே -ஆனி மாஸம் -9 தேதி ஸ்வாதி திரு நக்ஷரத்திலே திரு அவதரித்தார்
கலி -105-ஸம்வத்ஸரத்தில் -அரங்கன் ஆண்டாள் திருக்கல்யாணம் -அதுக்கு எழுந்து அருளப் பண்ணி வந்த
பெரிய திருவடியும் ஆண்டாளும் அரங்கனுக்கு சேர்ந்தே இன்றும் ஸேவை ஸாதித்து அருளுகிறார்
ஆகவே தான் கருட முத்ரை இலச்சினை செய்ய அரங்கன் அருளிச் செய்தார்
இன்றும் கோயில் கருவூல அறைக்கும் திரு ஆபரண பெட்டிகளுக்கும் உத்தம நம்பியை முத்ர அதிகாரியாக்கி கருட முத்ரையே வைக்கப்படுகிறது

பெரியாழ்வார் திருக்குமாரரான ராமாண்டரான பிள்ளை ஐயன் அவர்களின் திருக்குமாரர் பெரிய திருவடி ஐயன் –
இவரைப் பெருமாள் உத்தம நம்பிள்ளை என்று அருளப்பாடிட்டு அழைத்தார்
பிள்ளை ஐயன் திருக்குமாரரான உத்தம நம்பிள்ளைக்கு -பிள்ளை ஐயன் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
அவரது திரு மாளிகை ஐயன் திருமாளிகை என்று வழங்கப்பட்டு வருகிறது –

———————————

வம்ஸ பரம்பரை

1-பெரியாழ்வார் -ஐயன் -110 வருஷங்கள்
2-ராமாண்டார் -பிள்ளை ஐயன் -70 வருஷங்கள்
3-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பிள்ளை -(1)-பிள்ளை ஐயன் உத்தம நம்பி-60 வருஷங்கள்
4-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்களுக்கு 4 மாதங்களும் 16 நாள்களும்
5-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(2)-65-வருஷங்கள்

6-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்கள்
7-பெரிய ஐயன் உத்தம நம்பி -(1)-40 வருஷங்கள் 2 மாதங்கள் -14 நாள்கள்
8-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(3)-50 வருஷங்கள்
9-சின்ன ஐயன் உத்தம நம்பி -(1)-69- வருஷங்கள்
10-அநந்த ஐயன் உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்

11-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
12-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(1)-70-வருஷங்கள்
13- வரதராஜ உத்தம நம்பி -(1)-60 வருஷங்கள் -1 மாதம் -15-நாள்கள்
14-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(3)-60-வருஷங்கள்
15-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்

16-பெரிய ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
17-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-99-வருஷங்கள்
18-அநந்த ஐயன் உத்தம நம்பி -(2)-70-வருஷங்கள்
19-ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
20-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(3)-56-வருஷங்கள் -3 மாதங்கள் -3 நாள்கள்

21-வரதராஜ உத்தம நம்பி -(2)-57-வருஷங்கள்
22-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி -(2)-67-வருஷங்கள்
23-அநந்த ஐயன் உத்தம நம்பி -(3)-62-வருஷங்கள்
24-சின்ன ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
25-திருமலை நாத உத்தம நம்பி -(1)-65-வருஷங்கள்

26-முத்து ஐயன் உத்தம நம்பி என்கிற ரெங்கராஜ உத்தம நம்பி -(2)56-வருஷங்கள்
27-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி -(1)-70 வருஷங்கள்
28-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி -(3)-66-வருஷங்கள்
29-வரதராஜ உத்தம நம்பி -(3)-59 வருஷங்கள் -ஐந்து மாதங்கள் 4 நாள்கள்
30-அநந்த ஐயன் உத்தம நம்பி -(4)-55 வருஷங்கள்

31-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(3)-65 வருஷங்கள்
32-பெரிய பெருமாள் உத்தம நம்பி -70 வருஷங்கள் -9 மாதங்கள் -25 நாள்கள்
33-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(4)-60 வருஷங்கள்
34-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(4)-61 வர்ஷன்கள் -7 மாதங்கள் -1 நாள்
35-ரகுநாத உத்தம நம்பி -(1)-55 வருஷங்கள் -3 மாதங்கள் -12 நாள்கள்

36-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி -(1)-53 வருஷங்கள் -2 மாதங்கள்
37-அனந்த ஐயன் உத்தம நம்பி -5-60 வருஷங்கள்
38-வரதராஜ உத்தம நம்பி–(4-)49 வருஷங்கள்
39- ஸ்ரீ ரெங்க உத்தம நம்பி -61- வருஷங்கள் -3 மாதங்கள் -9 நாள்கள்
40-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி -(1)-61 வருஷங்கள்

41-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி -(1)-57 வருஷங்கள் -2 மாதங்கள் -8 நாள்கள்
42-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (5)–30 வருஷங்கள்
43-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (5)–44 வருஷங்கள்
44-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி (4)–30 வருஷங்கள் 3 மாதங்கள் 3 நாள்கள்
45-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி (4)-40 வருஷங்கள்

46-குமார வரதராஜ ஐயன் உத்தம நம்பி (5)-50 வருஷங்கள் -9 மாதங்கள் –
47-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (2 )-49 வருஷங்கள்
48-ரெங்கநாத உத்தம நம்பி (5)–59 வருஷங்கள்
49-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (2)-42 வருஷங்கள் -6 மாதங்கள் -9 நாள்கள்
50-பெருமாள் ஐயன் உத்தம நம்பி -58 வருஷங்கள் -3 மாதங்கள் -13 நாள்கள்

51-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (6) –47 வருஷங்கள் -2 மாதங்கள் -5 நாள்கள்
52-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (@) 49 வருஷங்கள்
53-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி (5) 56 வருஷங்கள் நான்கு மாதங்கள் 7 நாள்கள்
54-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (3) 57 வருஷங்கள்
55-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (6)-37 வருஷங்கள் 10 மாதங்கள்

56-திருவடி ஐயன் உத்தம நம்பி -62 வருஷங்கள்
57-சொல் நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (7)-53 வருஷம் -237 நாள்கள்
58-சின்ன ஐயன் உத்தம நம்பி (3)-37 வருஷங்கள்
59-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (7)-49 வருஷங்கள்
60-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (4) 61 வருஷங்கள் 2 மாதங்கள் 3 நாள்கள் –

61-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (3) 55 வருஷங்கள்
62-ரகுநாத உத்தம நம்பி (2) 38 வருஷங்கள்
63-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (8) 50 வருஷங்கள்
64-கோவிந்த ஐயன் உத்தம நம்பி -39 வருஷங்கள்
65-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி (2) 66 வருஷங்கள் 3 மாதங்கள் 7 நாள்கள்

66-வரதராஜ உத்தம நம்பி (6)–59 வருஷங்கள்
67-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி (9) 50 வருஷங்கள்
68-அநந்த ஐயன் உத்தம நம்பி (6) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 10 நாள்கள்
69-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (3) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 17 நாள்கள்
70-பெரிய ஐயன் உத்தம நம்பி (3)60 வருஷங்கள்

71-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (10)-52 வருஷங்கள்
72-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (5)63 வருஷங்கள்
73-பெரிய ஐயன் உத்தம நம்பி (5) 67 வருஷங்கள் 1 மாதம் 1 நாள்
74-மஹா கவி ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (4)-கருட வாஹந பண்டிதர் -கவி வைத்ய புரந்தரர் -69 வருஷங்கள்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (1)43 வருஷங்கள்

76-வரதாச்சார்ய உத்தம நம்பி –40 வருஷங்கள்
77-ராமாநுஜர்சார்ய உத்தம நம்பி -53 வருஷங்கள் இ மாதம் 7 நாள்கள்
78-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (1)-31 வருஷங்கள்
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ண ராய உத்தம நம்பி –79 வருஷங்கள்
80-வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி(2) -68 வருஷங்கள்

81-ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி -72 வருஷங்கள்
82-திருமலை நாத உத்தம நம்பி (2) 67 வருஷங்கள்
83-குடல் சாரவாளா நாயனார் என்கிற சின்ன க்ருஷ்ணராய உத்தம நம்பி –52 வருஷங்கள் 1 மாதம் 8 நாள்கள்
84-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (6) 53 வருஷங்கள்
85-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்கராஜா உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்

86-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
87-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (8) 45 வருஷங்கள் 7 மாதங்கள்
88-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (3)
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (3) 18 வருஷங்கள்
90-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -ஸ்வீ காரம்

91- உத்தம நம்பி ஸ்ரீ நிவாசார்யர்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யர்
93-உத்தம நம்பி தாதாச்சாரியர்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்

——————-

இவர்கள் செய்து அருளின கைங்கர்யங்கள்-

3-முதல் முதலாக ஸ்ரீ ரெங்க ஸ்ரீ நிர்வாஹம்
4- தேவராஜ மஹா ராஜர் மூலமாய் -முத்துக்குடை தங்க ஸிம்ஹாஸனம் போன்றவை சமர்ப்பித்தார்
11- நவரத்ன அங்கி சமர்ப்பித்தார்
13– நவரத்ன கிரீடம் சமர்ப்பித்தார்
15- தங்க வட்டில்கள் சமர்ப்பித்தார்
21- வெள்ளிக்குடம் சமர்ப்பித்தார்
27- கோபுர மண்டப பிரகார ஜீரண உத்தாரணம் பண்ணினார்
28- ஸ்தலத்துக்கு வந்த இடையூறுகளைத் தீர்த்தார்
35-த்வஜ ஆரோஹண மண்டப ஜீரண உத்தாரணம் பண்ணினார்
39- திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
47-திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
54- பெருமாள் உபய நாச்சிமார்களுக்கு தங்கக் கவசங்கள் கிரீடங்கள் சமர்ப்பித்தார்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கும் கவசம் கிரீடம் சமர்ப்பித்தார்

57-இவர் காலத்தில் தேசாதிபதியான பிரபு ஸ்ரீ ரெங்க நாச்சியாரைத் திரு வீதி எழுந்து அருளப் பண்ணி உத்சவம் நடத்த வேணும் என்று சொல்ல
இவர் கூடாது என்ன
பிரபுவும் அப்படியே நடத்த வேணும் என்று பலவந்தம் பண்ண
கழுத்தை அறுத்துக் கொண்டார்
உடனே தாயார் அர்ச்சக முகேந ஆவேசமாகி தமக்கு விருப்பம் இல்லாமையை அறிவித்து தடை செய்தாள்
நாச்சியாரால் இவரது சொல் நிலை நாட்டப்பட்டது படியே இவருக்கு இது பட்டப்பெயர் ஆயிற்று

63- நாச்சியார் கோயில் சந்தன மண்டபம் முதலியவற்றை ஜீரண உத்தாரணம் பண்ணினார்
64- பெருமாள் சந்நிதி வாசலுக்கும் அதற்கு உட்பட்ட திரு அணுக்கன் திரு வாசலுக்கும் தங்கம் பூசவித்தார்
70-ஆதி சேக்ஷனுடைய சிரஸ் ஸூ க்களுக்கு தங்கக் கவசம் சமர்ப்பித்தார்

74- கருட வாஹந பண்டிதர்
இவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர்
ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி இவர் திரு நாமம்
இவர் சிறந்த கவியாய் இருந்ததால் ஸ்ரீ நிவாஸ மஹா கவி என்றும்
சிறந்த வைத்தியராயும் இருந்ததால் கவி வைத்ய புரந்தரர் என்றும் சொல்லப் படுபவர்

உடையவரை பெரிய பெருமாள் நியமனப்படி எதிர்கொண்டு அழைத்து -வரிசைகளை சமர்ப்பித்தார்
அவருக்கு அந்தரங்க கைங்கர்ய பரராயும் இருந்தார்

இவரையே பெரிய பெருமாள் பெரிய அவஸர அக்கார அடிசிலை கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு கொண்டு கொடுக்க நியமித்து அருள
அதில் இரண்டு திரளை ஸ்வீ கரித்து ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் அவதரித்தார்கள்

முதலியாண்டான் தத்தியானத்துடன் நாவல் பழம் சமர்ப்பிக்க -இவரைக் கொண்டே தன்வந்திரி சாந்நித்தியை ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்

இவரே திவ்ய ஸூரி சரிதம் பிரசாதித்து அருளினார்

75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி

கருட வாகன பண்டிதருக்குப் பின்பு ஸ்ரீ ரெங்க ஸ்ரீ கார்யம் நிர்வஹித்தவர்-உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது இவர் காலத்திலேயே –
உடையவர் இருக்கும் பொழுதே கருட வாஹந பண்டிதர் திரு நாட்டுக்கு எழுந்து அருளி விட்டார்
ஆகவே திவ்ய ஸூரி சரிதம் உடையவர் திரு நாட்டை அலங்கரித்தது பற்றிக் குறிப்பிட வில்லை
உடையவரின் சரம கைங்கர்யங்களை செய்தவர் இவரே

79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற கிருஷ்ண ராயர் உத்தம நம்பி

இவர் காலத்துக்கு முன் கி பி 1310 ல் மாலிக் கபூர் படை எடுத்து ஸ்ரீ ரெங்கத்தைப் பாழ் படுத்தினான் –
செஞ்சி ராஜா கொப்பண உடையார் திருமலையில் இருந்து எழுந்து அருளப்பண்ணி செஞ்சியிலேயே பூஜை பண்ணிக் கொண்டு இருந்தார்
கிபி 1371ல் இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜயநகர ராஜாவைக் கொண்டு துலுக்கப் படையை ஜெயித்து விரட்டிவிட்டு
விஜய நகர இரண்டாம் அரசரான புக்க ராயர் -அவரது குமாரரான ஹரிஹராயர் இருவரையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அழைத்து வந்தார்
செஞ்சி ராஜா கொப்பண உடையாரும் இவருக்கு உதவியாய் இருந்து துலுக்கர்களை வென்று பெருமாளை ஸ்ரீ ரெங்கத்துக்கு எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு வந்தார்
புக்கராயர் காலத்தில் கன்யாகுமரி வரை ராஜ்ஜியம் பரவி இருந்தது
சோழ பாண்டிய மன்னர்கள் இவருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்

இந்த கிருஷ்ண ராய உத்தம நம்பியால் மேல் உள்ள அரசர்களால் தாராதத்தமாக 17000 பொன் தானம் பெற்று கோயிலுக்கு 106 கிராமங்கள் வாங்கப் பட்டன
மேலும் சகாப்தம் 1304-கிபி 1382-மேல் -ருதி ரோத்காரி வருஷம் முதல் ஈஸ்வர வருஷம் வரையில்
ஹரிஹர ராயர் மஹா ராயர் -விருப்பண உடையார் -கொப்பண உடையார் -முத்தய்ய தென்நாயகர் -தம்மண்ண உடையார் -பிரதானி சோமப்பர் -காரியத்துக்கு கடவ அண்ணார்
முதலானார்கள் இடம் 5000பொன் வாங்கி அதன் மூலம் 13 க்ராமங்கள் வாங்கப்பட்டன –
சகாப்தம் 1207-கிபி 1375-ல் திருவானைக் காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் எல்லைக் சண்டை உண்டாகி -விஜய நகர மன்னர் அறிந்து அவர் தம் குருவான வ்யாஸ உடையார் முதலானவர்களை மத்தியஸ்தம் பண்ண அனுப்பினார்
பெருமாளுக்கு ஸ்தான அதிபதியான உத்தம நம்பி ஈரப்பாவாடை உடுத்தி கையில் மழு ஏந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு எந்த வழி போகிறாரோ அந்த வழியே பெருமாளும் எழுந்து அருள வேண்டியது என்று மத்யஸ்த்தர்கள் நிச்சயித்தார்கள் –
திருவானைக்காவலாரும் அதை சம்மதிக்க அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு எல்லை ஓடியதால்
இவருக்கு எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
தான் எல்லை ஓடி நின்ற இடத்தில் 16 கால் மண்டபமும் இரண்டொரு சிறு மண்டபங்களும் இவர் கட்டி வைத்தார்
பெருமாள் நாச்சிமார்களுடைய ஒவ்வொரு உத்சவத்தின் கடைசி நாளில் இன்றைக்கும் திருத்தாழ்வாரை தாசர் விண்ணப்பம் செய்யும் திருப்பணிப்பு மாலையில் உத்தம நம்பிக்க ஏற்பட்ட
மல்ல நிலையிட்ட தோள் அரங்கேசர் மதிளுள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போல் அல்ல -நீதி தன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தம நம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கும் எட்டு எழுத்தே –என்ற பாசுரத்தில்
எல்லை நிலை இடுகைக்கு ஆதாரமாய் இருந்த அஷ்டாக்ஷரத்தின் சிறப்பும்
59 வது உத்தம நம்பி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அனுக்ரஹத்தால் தம்முடைய சொல்லை நிலையிட்ட விவரமும் தெரிகிறது

இப்போது உள்ள ஸ்ரீனிவாச நகர் பள்ளிக்கூடமே முன்பு 16 கால் மண்டபமாக இருந்த இடம் –
பங்குனி 8 நாள் எல்லைக்கரை நம்பெருமாள் எழுந்து அருளும் போது
இப்போதும் அங்கே வெறும் தரையில் உத்தம நம்பி ஐயங்கார் வ்யாஸ ராய மடத்தார் முதலானோர் பெற்றுக் கொள்கிறார்கள் –

இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜய நகர அரசர் புக்க உடையார் உதவியுடன் துலா புருஷ மண்டபம் கட்டி வைத்தார்
ஹரிகர ராயர் விருப்பண்ண உடையார் துலா புருஷன் ஏறிக் கொடுத்த பொன்னைக் கொண்டு ரெங்க விமானத்தைப் பொன் மேய்ந்தார்
நம்பெருமாளும் அப்போது செஞ்சியில் இருந்து எழுந்து அருளினார்
விருப்பண்ண ராயர் பெயரில் சித்திரை திரு நாள் நடத்து வைத்து ரேவதியின் திருத்தேர் -செய்ததும் இந்த உத்தம நம்பியே

துலுக்கர் கலஹத்தில் யானை ஏற்று மண்டபம் ஜீரணமாக இந்த உத்தம நம்பி ஜீரண உதாரணம் பண்ணி வைத்தார்
யானை மேல் வைக்கப்படும் பூ மாங்குத்தி -என்ற புஷ்ப அங்குசம் உபஹார ஸ்ம்ருதியாக வாஹந புறப்பாடுக்குப் பின் இன்றும் உத்தம நம்பி பரம்பரையில் உள்ளாருக்கு அனுக்ரஹிக்கப் படுகிறது
இவர் ஹரிஹர ராயர் பேரால் திருப்பள்ளிக்கட்டில் என்னும் திவ்ய ஸிம்ஹாஸனம் சமர்ப்பித்தார்
இப்போதும் திருக் கார்த்திகை அன்று திருமுகப் பட்டயம் செல்லுகையில் –நாம் –ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டிலின் மேல் வீற்று இருந்து -என்றே பெருமாள் அருளிச் செய்கிறார்
இவர் கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டு 99 வருஷங்கள் இருந்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————

80- வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பியின் திருக்குமாரர்
சகாப்தம் -1329-கிபி 1406 மேல் ஸர்வஜித்து வருஷம் முதல் பிரமோதூத வருஷம் வரையில்
44 வருஷங்களில் நான்கு தடவை விஜய நகரம் சென்று பெருமாளுக்கு திருவிடையாட்ட கிராமங்கள் வாங்க -18000 பொண்ணுக்கு 101 கிராமங்கள் வாங்கினார்
இவர் காலத்தில் பெரிய ஜீயர் -மணவாள மா முனிகள் சன்யாசித்து கோயிலுக்கு எழுந்து அருள
பெருமாள் நியமனப்படி பல்லவ ராயன் மடத்தில் எழுந்து அருளப் பண்ணினார்
இவர் ஜீயருடைய வெள்ளை திருமேனியை தரிசித்து தேற மாட்டாமல் பெருமாளை சேவித்துப் பரவசராய் இருக்க
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் அணையான் திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி
இவர் கிடீர் ஜீயராக அவதரித்து அருளினார் – அவர் வண்ணம் வெளுப்பு என்று விஸ் வசித்து இரும் என்று அருளிச் செய்தார்
இவரும் பீத பீதராய் கோயில் அன்னான் உடன் ஜீயர் இடம் சென்று தெண்டம் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க
அப்பொழுது சாதித்த சேவை இன்றும் ஒரு கம்பத்தில் மேற்கு முகமாக சித்திர ரூபமாகவும் இரண்டு பக்கமும் உத்தம நம்பியும் கோயில் அண்ணனும் எழுந்து அருளி உள்ளார்கள்

ஜீயரின் நியமனம் படி அண்ணனுக்கு ஆச்சார்ய புருஷ வரிசையாக பெரிய நம்பிக்குப் பிறகு தீர்த்தமும் -கந்தாடை அண்ணன் என்ற அருளப்பாடும் உத்தம நம்பியால் ஏற்பட்டது
திருக்கார்த்திகை அன்று ஆழ்வாருக்கு திருமுகப்பட்டயம் கொண்டு போகும் தழை யிடுவார் கைங்கர்யம் -தம்முடையதாய் இருந்ததை உத்தம நம்பி அண்ணனுக்கு கொடுத்தார்
பூர்வம் வல்லப தேவன் கட்டி வைத்த வெளி ஆண்டாள் சந்நிதியையு ம் -தம்முடையதாய் இருந்ததை -அண்ணனுக்கு கொடுத்தார்
இன்றும் அண்ணன் வம்சத்திலேயே இருந்து வருகிறது –

சகாப்தம் 1354-கிபி 1432-பரிதாபி வருஷம் -அனுமந்த தேவர் கோயில் -திருப்பாண் ஆழ்வார் உள்ள வீர ஹனுமான் கோயில் தக்ஷிண சமுத்ராதிபதி தென்நாயகன் கைங்கர்யமாக கட்டி வைத்தார்
கிபி 1434-திருவானைக்காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் இடையில் மதிள் கட்டி வைத்தார்
இந்த உத்தம நம்பி காலம் வரையில் வசந்த உத்சவம் திருக்கைவேரிக்கரையிலே நடந்து வந்தது
ஒரு வைகாசியில் வெள்ள ப்ரவாஹத்தால் இது நடவாமல் போக கோயிலுக்கு உள்ளே ஒரு பெரிய குளம் வெட்டி -கெடாக் குழி – அதில் மய்ய மண்டபம் சுற்று மண்டபம் பெரிய மண்டபமும் போடுவித்து
இப்பொழுதும் அந்த வம்சத்தார் கைங்கர்யமாகவே நடைபெற்று வருகிறது
இவர் 68 திரு நக்ஷத்திரங்கள் எழுந்து அருளி இருந்தார்
தம்முடைய தம்பிக்கு சக்ர ராயர் பட்டப்பெயர் வாங்கிக் கொடுத்து தனியாக அவருக்கு ஆதீனம் மரியாதை ஏற்படுத்தினார்

————-

பூ சக்ர ராயர்
சக்ர ராயருடைய பாண்டித்யத்துக்கு ஏற்க பூ மண்டலத்துக்கே ராயர் என்னும் படி பூ சக்ர ராயர் என்று முடி சூட்டி ஸ்ரீ ரெங்கத்தில் தனி ஆதீனமும் உண்டாக்கினார் அரசர்
பிள்ளை ஐயன் என்ற பேராய இருந்த உத்தம நம்பி கோசம் இவர் காலத்துக்குப் பின்னர் இரண்டாக்கப் பிரிந்து பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -என்று தேவ ஸ்தான கணக்குகளில் முறை வீதம் இரண்டாக இன்றைக்கும் எழுதப்படுகிறது –

சகாப்தம் 1337-கிபி 1415-மன்மத வருஷத்தில் -பெரிய திரு மண்டபத்தில் -கருட மண்டபத்தில் -கருடன் கலஹத்தில் பின்னமான படியால்
அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சந்நிதி கருடனை ஏறி அருளப் பண்ணினார்
மன்மத வருஷே ஜ்யேஷ்ட்ட்டே ரவி வாரசே ரேவதீ தாரே
ஸ்ரீ சக்ர ராய விபுநா ஸ்ரீ மான் கருட ப்ரதிஷ்டிதோ பூத்யை -என்று தர்மவர்மா திரு வீதியிலே இந்த வ்ருத்தாந்தம் சிலா லிகிதம் பண்ணப்பட்டது –

பூர்வம் சோழன் ப்ரதிஷ்டையான சக்ரவர்த்தி திரு மகனையும் ஜீரண உத்தாரணம் பண்ணி வைத்து
அதிலே உள்ளாண்டாள் நாச்சியார் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் – ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்-

————

திம்மணார்யர்
இவரும் வழி யடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பிக்கு திருத்தம்பி
இவர் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஸ்ரீ ராமானுஜ பீடமான ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டத்தில் எழுந்து அருளி இருந்தார் –

————

51- ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி
இவர் நிர்வஹித்த காலத்தில் பங்குனி ஆதி ப்ரஹ்ம உத்சவம் 3 நாள் ஜீயர் புரத்துக்குப் போக வர குதிரை வாஹனம் ஏற்பட்டு இருந்தது
மழை பெய்ததால் மேல் உத்தர வீதியில் உத்தம நம்பி திருமாளிகையிலே நம் பெருமாள் எழுந்து அருளி இருந்தார்
ஆ வ்ருஷ்டி பாத விரதே -மழை ஓயும் வரையிலே –
இனி தூர புறப்பாட்டுக்கு வாஹனம் கூடாது என்றும் பல்லக்கு தான் உசிதம் என்றும் ஏற்பாடு செய்தார்
இவரே நான்கு பக்கங்களிலும் நான்கு நூற்று கால் மண்டபங்களைக் கட்டி வைத்தார்
அக்னி மூலையிலே ஸ்ரீ பண்டாரம் -நைருதியில் கொட்டாரம் -வாயுவில் முதல் ஆழ்வார் வாஸூ தேவன் சந்நிதி -ஈஸான்யத்தில் ராமர் சந்நிதி கட்டப் பட்டன
இந்தக் கைங்கர்யத்தை பெரிதும் உகந்து -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று அவருக்குப் பட்டப்பெயரும் அருளினார்
அத்யயன உத்சவ மேலப்படி மரியாதை உத்தம நம்பிக்கு நடக்கையில் இந்த அருளப்பாடு வழங்குகிறது

இவ்வாறு பல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு 72 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்

———–

82- திருமலை நாத உத்தம நம்பி
இவர் லஷ்மீ காவ்யம் அருளிச் செய்துள்ளார்
பெரிய திரு மண்டபத்துக்கு கிழக்கே கிளி மண்டபம் என்னும் நூற்றுக் கால் மண்டபம்
இவரது முன்னோர் 81 உத்தம நம்பி தொடங்கியதை பூர்த்தி செய்தவராவார் –
இதில் ஜ்யேஷ்டாபிஷேகமும் ஸஹஸ்ர கலச அபிஷேகமும் -பகிரங்கமாக நடைபெற்று வந்தது
இப்பொழுது பரம ஏகாந்தமாய் விமான ப்ரதக்ஷிணத்தில் நடைபெறுகிறது
ப்ரஹ்ம உத்சவம் 8 திரு நாள் எல்லைத்த திருநாளாகவே நடைபெறுகிறது
இவர் 37 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார் –

————–

83-குடல் சார வாளா நாயனார் என்கிற சின்ன கிருஷ்ண ராய உத்தம நம்பி
இவர் கோயில் நிர்வகிக்கும் பொழுது கர்ணாடக நாயகர்கள் மதுரையில் அரசாண்டு இருந்தார்கள்
1534-ஜய வருஷத்தில் ஷாமம் வரவே கோயில் திருக்கொட்டாரத்தில் இருக்கும் நெல்லைக்கு கொடுக்க கேட்டார்கள்
உத்தம நம்பி -அரங்கன் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று ஹிதம் சொல்லியும் நாயகர் பலவந்தம் பண்ணினார்
நீர் கூடை பிடித்தால் நான் மரக்கால் பிடித்து அளக்கிறேன் என்று சொல்லி
முதல் மரக்காலுக்கு திருவரங்கம் என்று அளந்து மறு மரக்காலுக்கு -பெரிய கோயில் -என்று சொல்லி
தம் குடலை அளந்து பிராண தியாகம் பண்ணினார்
ராஜாவும் வெளியே வந்து -குடல் சாரா வாளா நாயனார் -என்ற பட்டம் சூட்டினார்
அது முதல் வேறே காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நிஷ்கர்ஷம் ஆயிற்று
த்ரவ்யம் அளக்கும் பொழுதும் திருவரங்கம் -பெரிய கோயில் -மூன்று என்று சொல்லியே அளக்கும் வழக்கமும் வந்தது
கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த செங்கமல வல்லித்தாயார் -தான்ய லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திரு மதிள் கட்டினார்
இவர் 32 திருநக்ஷத்ரம் 1 மாதம் 8 நாள்களுக்குப் பின் திருநாட்டை அலங்கரித்தார் –

——————

86- ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
கிபி 1662-1692- வரை ஆண்ட நாயக்கர்களின் ஏழாமவரான கர்ணாடக ஷோக்கா நாத நாயகர் பெருமாள் உத்சவங்களுக்காக பல கிராமங்களை சமர்ப்பித்து தம்மை ஆசீர்வதிக்க சாசனம் இவருக்கு தெலுங்கில் எழுதிக் கொடுத்தாட்ர்

————

88- ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் காலத்தில் ஸ்ரீ ரெங்கம் மஹாராஷ்டிரர்களுக்கு அதீனமாயிற்று -திருச்சியில் முராரிராவ் நீதி செலுத்தி வந்தார்
கிபி 1748க்கு மேல் திருச்சிராப்பள்ளி நவாப் ஷீரஸ்வதீன் தேவுல்லா மஹம் மதலிகான் பஹதூர் வசமாயிற்று

———–
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
இவர் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பியின் திருக்குமாரர் –
இவர் நிர்வாகத்துக்கு வரும் பொழுது அதி பால்யமாய் இருந்தார்
அப்போது அமீர் முறாம் பகதூர் நவாப் நிர்வாகத்துக்கு ஒரு அமுல்தாரனையும் நியமித்தார்

18 திரு நக்ஷத்ரத்திலேயே இவர் ஆச்சார்யர் திருவடி சேர ஸ்வீ காரம் மூலம் 90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி நிர்வாஹத்துக்கு வர
அப்பொழுது ஆங்கிலேயர் வசமாயிற்று

இவர் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அவருடைய தாயாதியான சக்ரராய ஸ்ரீ ரெங்க ராஜருக்கும் விவாதம் உண்டாகி நியாய ஸ்தலம் போக வேண்டிற்று
அதுக்கும் மேலே 1830க்கு மேல் உத்தம நம்பி திரு மாளிகையில் தீப்பற்றி ஓரந்தங்களும் சொத்துக்களை பற்றிய ஆவணங்களும் எரிந்து போயின
இவ்வாறு பல காணி பூமி சந்நிதி மிராசுகளை இழக்க வேண்டிற்று
இவ்விதமாக குடும்பம் சோர்வுற்றது
1842 வரை சர்க்கார் நிர்வாகத்திலே கோயில் இருக்க பரம்பரை தர்மகர்த்தாவாக 90 உத்தம நம்பி நியமிக்கப் பட்டார்
1859 திரு நாடு எழுந்து அருளினார்

90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பிக்கு ஐந்து திருக் குமாரர்கள்
ஜ்யேஷ்டர் சிங்கு ஐயங்கார்
இவர் சந்ததி விருத்தி யாகவில்லை
இவர் தம்பி உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர் -உத்தம நம்பி ரெங்க ஸ்வாமி ஐயங்கார் சந்ததியார்களே இப்பொழுது உள்ளார்கள்

91-உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர்–1872 திருநாடு அலங்கரித்தார்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -67 திரு நக்ஷத்திரங்கள்
92-உத்தம நம்பி தாத்தாச்சாரியார் -61 திரு நக்ஷத்திரங்கள்

94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
1898-கார்த்திகை பூரம் ஜனனம்
93-உத்தம நம்பி தாதாச்சார்யருக்கு சந்ததி இல்லாமையால் இவர் 1903 ஸ்வீ காரம்
தர்ம கர்த்தாவாக ஆறு தடவை 1924 முதல் 1949 வரை இருந்தார்
இவர் திருத்தமையானாரான ஸ்ரீ நரஸிம்ஹா சார்யர் இந்த வம்சப் ப்ரபாவம் அருளிச் செய்துள்ளார்

அத்யயன உத்சவம் இராப்பத்தில் மேலப்படியில் -உத்தம நம்பிள்ளை -பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று
அருளப்பாடு சாதித்து தொங்கு பட்டு பரிவட்டம் சாதிக்கப்படுகிறது

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவாய் மொழி -4-9-நண்ணாதார் முறுவலிப்ப -ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 25, 2022

***- எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க,

இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை;

இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ,

அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

பதவுரை

கண்ணதார்

பகைவர்கள்
முறுவலிப்ப

மகிழ்ந்து சிரிக்கவும்
நல் உற்றார்

நல்ல உறவினர்கள்
தரைந்து ஏங்க

மனமுருகிவருந்தவும்
எண்ஆரா துயர் விளைக்கும்

எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான
இவை உலகு இயற்கை

இந்த லோகயாத்ரைகள்
என்ன

என்ன!;
கண் ஆளா

தாயாளுவே!
கடல் கநை;தாய்

(தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே!
உன கழற்கே

உனது திருவடி வாரத்திலேயே
வரும் பரிசு

நான் வந்து சேரும்படி
தண்ணாவாது

காலதாமதமின்றியில்
அடியேனே

அடியேனே
சாம்ஆறு

மரணமடையும் படி
பணி

அருள் செய்யவேணும்;
(கண்டாய்

முன்னிலையசை)

உலகத்தில் ஒவ்வொருவர்க்கும் பகைவர் என்று சிலரும் நண்பர் என்று சிலரும் நண்பா சிலரும் இருப்பர்களே;

ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே!’ என்று அனைவரும் கூடி வயிறு பிடிக்கவேண்டியிருக்க,

சிலர் உகந்து சிரிக்கும்படியும் சிலர் வருந்தும்படியுமாவதே!  என்று லோக யாத்திரைக்கு வருந்துகிறராழ்வார்,

இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“ஒருவனுக்கு ஒர் அநர்த்தம் வந்தவாறே அற்றைக்கு முன்பு வெற்றிலே தின்றறியார்களேயாகிலும் அன்றாக ஒரு வெற்றிலே தேடித்தின்பது, ஒர் உடுப்பு வாங்கி யுடுப்பது, சிரிப்பதாகா நிற்பர்களாயிற்று.”

எண்ணாராத் துயர்விளைக்குமிவை-நண்ணாதார் முறுவலிப்பதும் நல்லுற்றார் கரைந்து எங்குவதுமாகிய எல்லாம்

ஆழ்வார்க்கு எண்ணராத் துயரமாகத் தோற்றா நின்றது.

எல்லாரும் எம்பெருமானையே பரம பந்துவாகக் கொண்டு அவனுக்கு ஒரு துன்பம் வந்தால் கரைந்தேங்கவும்,

அவனுக்கு இன்பம் மிகுந்தால் குதுகலிக்கவும் ப்ராப்தமாயிருக்க,

ஆபாஸ பந்துக்களுக்காகச் சிலர் வயிறு பிடிப்பதும் பகைமை பாராட்டிச் சிலர் முறுவலிப்பதும் ஆழ்வார்க்கு அஸஹ்யமாயிருக்கிறது.

ஸதைகரூபரூபாய என்கிறபடியே எப்போதும் ஒருபடிப்பட்டிருக்கிற எம்பெருமானுக்கும் துன்பம் விளைவதும் இன்பம் மிகுவதும் உண்டோவென்னில்; மங்களாசாஸந பரர்களுடைய கருத்தாலே உண்டென்க.

அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்று ஆழுமென்னாருயிர்” என்றும்

“அவத்தங்கள் விளையும் என் சொற்கொறந்தோ!” என்றுமுள்ள பாசுரங்களே நினைப்பது.

இவையென்னவுலகியற்கை! ஸ்ரீ  அவரவர்களக்கு லாபநஷ்டங்கள் உன்னளவிலேயாகாதே புறம்பேயாம்படி

இப்படியொரு லோக யாத்ரையைப் பண்ணி வைப்பாயோ பெருமானே! என்கிறார்.

நான் பண்ணிவைத்ததுண்டோ? அவரவர்கள் பண்ணின் கருமங்களின் பலன் தொடந்து வருகிறவித்தனையன்றோ;

நம்மால் வந்தது ஒன்றுமில்லை காணும்” என்று எம்பெருமான் திருவுள்ளமாக;

கண்ணளா! கடல்கடைந்தாய்! என்று அவன் நெஞ்சிலேபடும்படி விளிக்கிறார்.

அவரவர்கள் பண்ணின கருமங்களின் பலனை அவரவர்கள் அநுபவித்தே தீர வேணுமாகில்

உன்னுடைய க்ருபை யுடையவனைக் கண்ணுடையவனென்பர்களே.

உன்னுடைய க்ருபைக்கு இலக்காக்க வேண்டியவர்களே லீலைக்கு விஷயமாக்கலாமோ பிரானே! என்கிறார்.

(கடல் கடைந்தாய்) உன்வடிவழகிலே சிறிதும் கண்செலுத்தமாட்டாதவர்களும், ப்ரயோஜநாந்தரமே கண்ணாயிருப்பவர்களும், காரியம் தரைக்கட்டினவாறே உன்னோடே எதிரம்பு கோப்பவர்களுமான தேவர்களுக்கும் சாவமருந்து கொடுப்பதற்காகத் திருமேனி நோவக் கடல் கடைந்கவனல்லையோ நீ.

“ஆமாம்; தேவர்களுக்கு நாம் காரியம் செய்ததுண்டு; அவர்களுக்கு  இச்சையாவது இருந்தது; அதுவுமில்லாதவர்களுக்கு என்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லையே!” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,

ஆகில் இவர்கள் நடுவேயிராதபடி என்னை உன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளவேணுமென்றார்;

‘உனகழற்கே வரும்பரிசு’ என்னும்போதே, அப்படியே செய்கிறோமென்று எம்பெருமான் தலைதுலுக்க,

ஆகட்டுமாகட்டுமென்று தலையாட்டும்படியாயோ என் நிலைமையுள்ளது; இனிக்காலதாமதம் செய்யலாகாது என்கிறார். தண்ணாவாது-விளம்பம் செய்யமால்; தண்ணாத்தல் -தாமத்தித்தல்.

சாமாறுபணி =  சரீரம் முடிந்ததாம்படி பார்த்தருள் என்கை.

சரீரவியோகந்தானே மோக்ஷமென்று சொல்லுகிற மதாந்தரஸ்தர்களைப் போலன்றியே,

நித்யகைங்கர்யம்பண்ணி ஆனந்திப்பதே மோக்ஷமென்று உறுதிகொண்டிருக்கிற ஆழ்வார்

இப்போது சரிர்வியோக மாத்திரத்தைப் பண்ணிக்கொடுக்கும்படி பிரார்த்திப்பது ஏனென்னில்;

இக்கொடியவர்களின் நடுவேயிருக்கிற இருப்புத் தவிர்ந்தால் போதும் என்பது இப்போதைய நினைவு போலும்.

————–

***- கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து,

இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில்,

என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

பதவுரை

சாம் ஆறும்

திடீரென்று மரண மடைவதும்
கெடும் ஆறும்

பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக)
தமர்

தாயாதிகளும்
உற்றார்

உறவினர்களும்
தலைத்தலைப்பெய்து

ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து
நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி

நண்ணுதாத்முறுலலிப்ப
ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன

ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே!
அரவு அணையாய் அம்மானே!

சேஷசாயியான ஸ்வாமியே!
நான்

அடியேன்
ஆம் ஆறு ஒன்று அறியேன்

உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்;
அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு

இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி
விரை

விலைந்தருயவேணும்.

சாமாறும்-வெகுநாளைக்கு ஜீவித்திருக்கப் போகிறதாகப் பாரித்திரா நிற்கையில் இடி விழுந்தாற்போலே திடீரென்று ஸம்பவிக்கிற மரணமும்.

இவ்விடத்தில் “***” = ராத்ரிர் கமிஷ்யதி பவிஷ்;யதி ஸீப்ரபாதம் பாஸ்வாநுதேஷ்யதி ஹஸிஷ்யதி பங்கஜஸ்ரீ:இ இத்தம் விசிந்தயதி கோகதே த்விரேபே ஹாஹந்த! ஹந்த! நலிநீம் கஜ உஜ்ஜஹார.” என்கிற ச்லோகம் காணத்தக்கது.

(இதன் கருத்து.) ஒரு வண்டானது மாலைப் பொழுதில் ஒரு தாமரை மலரினுள்ளே புகுந்து மதுப் பருகத் தொடங்கியது;

ஸூரியன் அஸ்தமித்தலாறே மலர்மூடிக் கொண்டது; இரவெல்லாம் வண்டு அதனுள்ளேயே கிடக்கவேண்டியதாயிற்று;

கிடக்கும்போது, இரவுகழிந்து பொழுது விடியப் போகியதென்றும் தாமரை மலரப் போகிறதென்றும்,

உடனே கிளம்பிச்சென்று குடும்பங்களோடே சேர்ந்து களிக்கப்பெறலாமென்றும் பாரித்துக்கொண்டிருந்தது;

இருக்கையில், ஒரு காட்டானை திடீரென்று அத்தாமரையோடையிலிறங்கி அனைத்தையும் வேர் பறியாகப் பறித்துக் கபளீகரித்திட்டது என்கை. இந்தக்கணக்கிலே மனிசர்களுக்கு  நேரும் மரணத்துன்பங்களும் பலபல.

கெடுமாறும் = பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலியிருக்குமவர்கள் தாங்களே கெட்டுப்போகிற விதங்களும் பலபல.

ஒரு கள்வன் பிறர் மனையிலே புகுந்து திருடுவதாகச் சென்றன்; அங்கே அகத்துக்குடையார் கையிலே பிடியுண்டு பரிபவஙகள் பட்டுக்கிடக்கின்றன; அதுவுமன்றியில் மற்றெரு கள்வன் இவன்றன் வீட்டிலே புகுந்து ஏற்கனவே இவன் பலகாலமாகக் களவு கண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெ;லாம் கவர்ந்து சென்றான். இப்படியாக உலகர் கெடுமாறுகள் வாசாமகோசரம்.

(தமருற்றர்இத்யாதி.) ஆழ்வார்க்குத் தமர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களேயாயிருப்பர்கள்.

உலகர்கள் சரீர ஸம்பந்தத்தைப் பற்றிச் சிலரை ஞாதிகளென்றும் ஸம்பந்திகளென்றும் குலாவிப்போருவர்கள்.

அப்படிப்பட்ட உறவினர்கள் கீழ்ச்சொன்ன சாவுகளிலும் கேடுகளிலும் மேல்விழுந்து கிடந்து கூப்பாடு போடுவர்கள்.

ஆக இப்படிப்பட்ட உலரியற்கை என்னை! நெடுக ஜீவிக்க மநோ ரதியா நிற்கையில் முடிவது,

நாலுகாசு கையிலேயுண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்றிருக்க அது கெட்டுப்போவது,

தேஹபந்துக்களேயே தமக்கு ஸகலவித பந்துவுமாக நினைத்து இவற்றுக்கு ஒன்றுவந்தவாறே ‘பட்டேன்! செட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுகிறது,

ஆகிய இவையுமொரு லோக யாத்ரையே! என்று ஆச்சரியப் படுகிற்ராயிற்று.

இப்படிப்பட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! இவ்வுலகு எக்கேடு கெட்டால் உமக்கென்ன?

அவர்களேப்போல் அலற்றும்படியான நிலைமையில் ; உம்மை நான் வைத்திருக்கவில்லையே!;

என்னைச் சொல்லியலற்றும்படியாகவன்றே உம்மை நான் வைத்திருப்பது; தளராதே கொள்ளும்” என்றருளிச்செய்ய;

ஆமாறு ஒன்றறியேன் நான் என்கிறர்.

இந்த ப்ரக்ருதி மண்டலத்திலே என்னை வைத்திருக்கிறயாகையாலே’ இது என்னை இனி எப்பாடு படுத்துமோவென்று மிக அஞ்சுகின்றேனென்கை.

இந்த ஸம்ஸாரிகளுக்கும் உன்னேடு உறவு குறையற்றிருக்கவும் ப்ரக்ருதிக்கு வசப்பட்டிருத்தலாலன்றே உன்னேயிழந்து படுகிறர்கள்;

அந்த ப்ரக்ருதியில்தானே நீ என்னையும் வைத்திருக்கிறது;

“ஆற்றங்கரை வாழ்மரம்போல் அஞ்சுகின்றேன்” என்றும்,

“காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல் ஆற்றத்துளங்காநிற்பன்” என்றும்,

“பாம்போடொரு கூரையிலே பயின்றற்போல் தாங்காதுள்ளம் தள்ளும்” என்றும்

“இருபாடொரி கொள்ளியினுள்ளெறும்பேபோல் உருகா நிற்குமென்னுள்ளம்” என்றும்

ஞானிகள் கதர வேண்டும்படியான நிலத்திலே என்னை வைத்திருக்கையாலே

இந்த ஸம்ஸாரிகளைப்போலே எனக்கும் என்ன ஆகுமோ! என்று அஞ்சவேண்டும்படியாயிராநின்றதே! என்றவாறு.

“ஆமாறென்று அறியேன் நான் என்ற விடத்தில்

இன்னாருக்கு என்றில்லாமையாலே, இந்த ஸம்ஸாரிகளுக்கு ஆமாறு ஒன்று அறியேன் என்றுமுரைக்கலாம்.

இவர்களுக்கு இத்துயரம் நிங்கும் வழி அறிகின்றிலேன் என்க.

அரவு அணையாய்! திருவனந்தாழ்வானொருவனையே சென்றற்குடையாமிருந்தால் சிங்காசனமாம் இத்யாத்ப்படியே

ஸகங்கர்யங்களுக்கும் உரியவனாகக் கொள்ள வேணுமென்றெரு நிர்ப்பந்த முண்டோவென்று கேட்கிறபடி.

கூமாறு-கூவுமாறு என்றபடி. என்;னை நீ அழைத்துக் கொள்ளும்படியாக என்கை.

இவ்விபூதியிலே இங்ஙனே கதறுகிறவன் நானொருவனே யல்லது வேறெருவருமில்லை;

ஆகையாலே என்னைப் பற்றி விசேஷித்துத் திருவுள்ளம் பற்ற வேணுமென்கிறார் அடியேனைக் குறிக்கொண்டே என்று.

—————

***- இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.

ஆசார்யர்களுக்கு சாஸ்த்ரார்த்த  வர்ணநங்களைப் போலவே லோக ரிதி வர்ணநங்களிலும் வல்லமை வியக்கத்தக்கதென்று

அஸ்மதாசார்யரான அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்யும்படி.

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

பதவுரை

கொண்டாட்டும்

(புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும்
குலம் புனைவும்

இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும்
தமர்

தாயாதிகளும்
உற்றர்

உறவினரும்
விழு நிதியும்

அளவற்ற செல்லமும்
வண்டு ஆர் பூ குழலாளும்

வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும்
மனை

வீடும் (ஆகிய இவை)
ஒழிய

தன்னைவிட்டு நீங்க
உயிர் மாய்தல்

(தீடீரென்று) இறந்து போவதாகிற
உலகு இயற்கை கண்டு

இந்த லோகயாத்திரையைக்கண்டு
ஆற்றேன்

ஸஹிக்கமாட்டேன்;
கடல் வண்ணு

கடல் வண்ணனான எம்பெருமானே!
அடியேனை

அடியனான என்னை
பண்டே போல் கருதாது

இத்தனை நாளும்போல் நினைத்திராமல்
உன் அடிக்கே கூய் பணி கொள்

உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும்.

கொண்டாட்டும் முன்பு இன்னானென்று தெரிந்துகொள்ள முடியாதபடி அபதார்த்தமாய்க் கிடக்க

வொருவன் நாலுகாசு கைப்பட்டவாறே நாலு பேர்களால் கொண்டாடப்படுவனும்; அப்படிப்பட்ட கொண்டாட்டமும்.

குலம்புனைவும் நாலுபேர்கள் கொண்டாடத் தொடங்கினபோதே தாம் அநாதியாகவே பெரிய நற்குடிபபிறபுடையார் என்ற காட்டிக்கொள்வதற்காக

‘இன்ன  திருவம்சம்’ என்று ஏறிட்டுக் கொள்ளப் புகுவர்களாம்; அங்ஙனே யொரு குலத்தைத் தொடுத்துக் கொள்வதும்.

தமர்-ஏற்கனவே தாயாதிகளாயிருந்தாலுங்கூட ‘இவனுடைய தாயாதியாக நம்மைச் சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு’ என்று விட்டுத் தொலைவர்கள்; அப்படி விடப்பட்டவன்தானே சிறிது செல்வம் பெற்றவாறே தாயாதிகளல்லாதாருங்கூட

‘இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து

‘இவரும் நாங்களும்  ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகிப் போருவர்கள்.

உற்றார்-=பெண்கொடுத்தல் கொள்ளுதல்  முதலிய ஸம்பந்தங்கள் செய்து கொள்வதற்குத் தகுதியற்றவன் என்று முன்னம் கைவிடப்பட்டிருந்தாலும் இப்போதாக உறவுக்கு மேல் விழா நிற்பர்களாம்.

விழுநிதியும் நாலுகாசு சேர்ந்தவிடத்தே பின்னையும் பத்தெட்டு காசுகள் வந்து சேருமே; அப்படியே சேர்ந்து சீரிய செல்வமாகும்.

அந்தச் செல்வத்விற்கு ஒரு விநியோகம் வேணுமே. (

இங்கே நம்பிள்ளையீடு;-) “நினைவின்றிக்கே யிருக்கச் செய்தே சருகிலை திரளுமாப்போலே சீரிய நிதி வந்து கைப் புகுருமே;

அதுக்குப் போக்கடிகாணாமையாலே செய்வதறியாமை அத்தையிட்டு ஒரு ஸ்த்ரீயை ஸ்வீகரிக்கும்; அவள் தான் வண்டார் பூங்குழலாளாயிற்று;

இவள் செவ்வியை வண்டே புஜித்துப் போமித்தனை போக்கித் தான் புஜிக்கமாட்டான். யோக்யதை யில்லாத பருவத்திலேயாயிற்று ஸ்வீகரிப்பது.”

மனையொழிய உயிர்மாய்தல் கண்டு அவளும் தானுமாய் ஏகாந்தமாக இருக்கைக் கென்று ஒரு மாடமாளிகையைப் பல நிலமாகக் கட்டுவிப்பன்;

ஆக இவை யெல்லாவற்றையும் விட்டு ஒருநாள் திடீரென்று மரணம் நேர்பட. அப்போதைய நிர்வேதங்கள் கண்டு பொறுக்க வொண்ணுதவையாயிருக்கும். இதுவரையில் ஒருவாறு இவ்விளிம்புகளை யெல்லாங்கண்டு பொறுத்திருந்தேனுகிலும்

இனி ஒரு நொடிப்பொழுதும் ஆற்றகில்லேனாதலால் விரைந்து அடியேனைத் திருவடி சேர்ந்துக்கொள்ளவேணு மென்றராயிற்று.

——————–

***- (கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்த ஹேது என்பதைக் கட் கூடாகக் காணா நிற்கச்செய்தேயும்,

பின்னையும் மேல் விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோக யாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார்.

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

பதவுரை

கொள் என்று கிளர்ந்து எழுந்த

‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற
பெரு செல்வம்

பெரிய செல்வமானது
நெருப்பு ஆக

நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும்

(அதில் நசை யொழியாமல்)

கொள் என்று

அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக
தமம் மூடும்இ இவை உலகு இயற்கை என்ன

தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!
வள்ளலே

மஹாதாரனே!
மணி வண்ணா

நீலமணிவண்ணனே;
உன கழற்கே வரும் பரிசு

உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி
அடியேனே

அடியேன் விஷயத்தில்
வள்ளல் செய்து

ஔதார்யத்தைக் காட்டி
உனது அருளால்

உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும்.

நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு;

அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து.

செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச் செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும்.

நெருப்பாக என்றவிடத்தில் தொக்கி யிருப்பதாகக் கொள்ளவேணும்.

கொள்ளென்று தமமுடும் =  “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு;

அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும்

இரவில் இருளிலே செல்லும் போது ஸ்பஷ்டமாகக் காணா நிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்;

ஒரு தமோ குணம் வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.

வள்ளலே மணிவண்ணா =  வள்ளல் என்றால் தாராளமாகக் கொடுப்பவன் என்று பொருள்; எதைக்கொடுப்பவனென்னில்,

மணிவண்ணா! என்கிற பதச் சேர்த்தியினால் தனது திருமேனியையே முற்றுட்டாக அநுபவிக்கக் கொடுப்பவனென்பது பெற்ப்படம்.

“மாணிக்கப் பண்டாரத்தையிறே ஔதார்யம் பண்ணிற்று” என்பது நம்பிள்ளையீடு.

——————

***- பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும்

இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

பதவுரை

வாங்கும்

உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான
நீர்

நீரிலே
மலர்

மலர்ந்த
நிற்பனவும்

ஸ்தாவரங்களும்
திரிவனவும்

ஜங்கமங்களுமான
ஆங்கு

அவ்வவ்விடங்களிலுள்ள
உயிர்கள்

பிராணிகள்
ஈங்கு

இப்புவியில்
பிறப்பு இறப்பு  பிணி மூப்பால்

பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே
தகர்ப்புண்ணும்

வருந்திக்கிடக்கும்;
இதன் மேல்

இறந்தொழிந்தபின்போ வென்னில்
வெம் நரகம்

கொடிய நரக வேதனையாம்;

இவை என்ன உலகு இயற்கை!;

நீ

நீ
எனை

இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை
வாங்கு

அங்கீகரித்தருளவேணும்
அடியனே

உன்னடியனான என்னை
மறுக்கேல்

கலங்கப் பண்ண வேண்டா.

வாங்கு நீர்மலருலகில் என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர்;

(வாங்குதல் சூழ்தலாய்) நீர்வாங்கு-கடல் சூழ்ந்த, மலர்-விஸ்தீர்ணமான, உலகில், என்று ஒரு பொருள்.

மற்றொரு பொருளாவது, காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணப் பொருளிலேயே லயமாகையாலேயே,

முழு முதற்காரணமான நீரிலேயே காரியப் பொருள்களெல்லாம் லயமடைய வேண்டுகையாலும்,

மீண்டும் அதிலிருந்தே உத்பத்தியாகவேண்டுகையாலும்,

வாங்கும் நீர்-காரியப் பொருள்களையெல்லாம் தன்னிடத்தே சுருக்கிக் கொள்ளுமதான நீரில்நின்று,

மலர்-மறுபடியும் உத்பவித்த, உலகில்; என்பதாம்.

இப்படிப்பட்ட வுலகத்திலே ஸ்தாவர ஜங்கமாத்மகங்களான ஸகல ப்ராணிகளும் அநுபவிக்கும் துயரங்கள் கண் கொண்டு காணவொண்ணாதவை;

இதற்கு மேல் கும்பீபாகம் முதலிய நகரங்களில் படும் யாதனைகளும் அளவிலாதவை;

“நாமடித்தென்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்” என்றும்,

“நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும்போது” என்றும்,

நயன்தமர் பற்றி யெற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினாலியன்ற பாவையைப் பாவீதழுவென மொழிவதற்கஞ்சி” என்றும் மஹான்கள் கூறுவர்கள்.

இவை யெல்லாம் படும்படியாயோ என்னை நீ இங்கு வைத்திருக்கின்றது?

அந்தோ! இப்படி யென்னைக் கலங்கப்பண்ணாதே சடக்கென திருவடி சேர்த்துக் கொள்ள வேணும்.

——————-

***-பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார்.

ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும்

லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

பதவுரை

மறுக்கி

பயமூட்டி
வல் வலைபடுத்தி

தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து
குமைத்திட்டு கொன்று

சித்ரவதம் பண்ணி
உண்பர்

தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்;
அறம் பொருளை அறிந்து ஓரார்

தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை;

இவை என்ன உலகு இயற்கை!

வெறி துவளம் முடியானே

பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே

(இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி)

வினையேனை

பாவியான என்னை
உனக்கு அற

உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி
அடிமை கொண்டாய்

ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே!
என் ஆர் அமுதே

எனக்கு பரிபூர்ணமான அமுதமே!
இனி

உடனே
கூய் அருளாய்

அழைத்துக் கொண்டருள வேணும்.

கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்க வெண்ணிச் சில உபாயங்கள் செய்வர்கள்;

‘உன்னை இன்னாரும் இன்னாருமாக இன்னபடி செய்யக் கோலியிருக்கிறார்கள்.  என்று சில பொய்களைச் சொல்லி

அச்சமுறுத்தித் தங்களிடத்தே நம்பிக்கையுண்டாயப் பொருள்களையெல்லாம் தங்களிடத்திலேயே கொண்டுவைக்கும் படியாகச் செய்து

இப்படியாக வலையிலே அகப்படுத்திக்கொண்டு மரணாந்தமான ஹிம்சைகளையும் பண்ணி வயிறு வளர்ப்பர்கள் ஸம்ஸாரிகள்;

தேஹத்திற்காட்டில் வேறுபாட்டான ஆத்மவஸ்து ஒன்று இருக்கின்றதே; அது படும்பாடு என்னாகுமோ! என்று சிறிதும் ஆராய்வாரில்லை;

இப்படி ஒரு லோக யாத்ரை யுண்டாயிருப்பதே! பிரானே. இக் கொடிய ஸம்ஸாரிக்ள நடுவே யிருக்கிற வென்னை

உன்னுடைய பரம யோக்யதையைக் காட்டி ஏற்கனவே அடிமை கொண்டிருக்கிறாய்;

இருந்தாலும். இந்நிலத்திலேயே இன்னமும் வைத்திடுவாயாகில் என்னை நீ அடிமை கொண்டதெல்லாம். பழுதாயொழியுமத்தனை;

சப்தாதி விஷய ப்ரவணராயிருக்கிற இவர்களிலே நானுமொருத்தனாய்த் தொலைந்து போவேனத்தனை;

அங்ஙனம் போகாதபடி விரைந்து திருவடி சேர்த்துக் கொண்டருள வேணுமென்றாராயிற்று.

——————

ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ?

பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு,

ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

 

பதவுரை

இ உலகத்து

இந்த லோகத்தில்
நிற்பனவும்

ஸ்தாவரப் பொருள்களும்
திரிவனவும்

ஜங்கமப் பொருள்களும்
நீயே ஆய்

நீயாகவே யிருந்து
மற்று ஒரு பொருளும் இன்றி

நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி
நீ நின்றமையால்

நீயிருப்பதனாலே
நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய

மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி
அடியேனை

அடியனான வென்னை
கூயே கொள்

அழைத்துக் கொண்டருள வேணும்;
கொடு உலகம்

கொடிய இவ்வுலகத்தை
காட்டேல்

இனிமேலும் காட்டவேண்டா.

ஆயே! என்பதற்கு மூன்று படியாகப் பொருள் கொள்ளலாம்; தாயே! என்று எம்பெருமானை விளிக்கிறபடி; அந்தோ! என்றபடி;

“இவ்வுலகத்து நிற்பனவுந் திரிவனவும் நீயே ஆய்” என்று மேலே கூட்டுகிறபடி.

“தேந லிநா த்;ருணாக்ரமபிந சலதி” என்கிறபடியே ஸகல ஜங்கம ஸ்தாவரங்களையும் அநுப்ரவேசித்து ஆட்டி வைப்பவன் நீயேயான பின்பு

எனக்கு நான் ஒரு நன்மை தேடிக் கொள்வதுண்டோ?

பத்த ஸம்ஸாரிகளில் நின்றும் என்னை வேறுபடுத்தி முமுக்ஷவாக ஆக்கிவைத்த நீயே

முக்தனுமாக்கி வைத்தருளவேணும் என்றாராயிற்று.

மூப்பு பிறப்பு-முப்புப்பிறப்பு என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘மூப்பிறப்பு’ என்றானது தொகுத்தல் புண்ர்ச்சி.

“ஒண் சங்கதை வாளாழியான்” என்றவிடத்தறிபோல.

பிணி-தாரித்ரியமுமாம்.

கொடுவுலகம் காட்டேல்=இவ்வுலகத்தின் கொடுமையைத் தவிர்த்து இவ்விபூதி தன்னையே நித்ய விபூதியாக்கிக் காட்டித் தர வல்லையேல் காட்டுவாயாக, என்பது உட்கருத்து.

—————-

***- ‘ஆழ்வீர்! நீர்  விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

பதவுரை

(எம்பெருமானே)

நீ

நீ
காட்டி

படைக்கும்போது பிரகாசிப்பித்து
கரந்து

(பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து
உமிழுத்

மறுபடியும் வெளிப்படுத்துகின்ற
நிலம் நீர் தீ விசும்பு கால்

பஞ்ச பூதங்களையும்
ஈட்டி வைத்து

ஒன்றாகத் திரட்டி வைத்து
அமைத்த

ஒழுங்கு படுத்திய
இமையோர் வாழ தனி முட்டை

பிரமாண்டமாகிற
கோட்டையினில்

கோட்டையில் நின்றும்
என்னை கழித்து

என்னை அப்புறப்படுத்தி
உன்

உன்னுடைய
கொடு சோதி உயரத்து

மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே
கூட்டு அரிய

கூடுதற்கரியான
திருவடிக்கண்

திருவடிகளிலே
எஞ்ஞான்று

என்றைக்கு
கூட்டுதி

கூட்டிக்கொள்வாய்!

இப்போது ஆழ்வார் தாம் இருக்கப்பெற்ற பிரகிருதி மண்டலத்தின் தன்மையை முன்னிரண்டடிகளால் கூறுகின்றார்.

ஒரு காலத்திலே ஸ்ருஷ்டித்தும், ஒரு காலத்திலே பிரளயம்கொள்ளாதபடி உள்ளடக்கியும்,

மற்றொரு காலத்திலே மறுபடியும் வெளிப்படுத்தியும் போருகிற ஐந்து பூதங்களையும் பஞ்சீகரண ப்ரகாரத்திலே திரட்டி,

இவை கொண்டு நீ சமைத்து வைத்த ப்ரஹ்மாண்டமாகிற கோட்டையில் நின்றும் என்னைப் புறப்படவிட்டு,

ஸம்ஸார நாற்றம் தொட்டறியாததும் சுத்த ஸத்வ மயமானதும் நிரவதிக தேஜோ ரூபமுமான

பரம பதத்திலே திருவடிகளோடே சேர்த்துக்கொள்வது என்றைக்கோ?

ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஒரு நாளிட்டுக் கொடுத்தது போலே அடியேனுக்கும் கொடுத்தால் ஆறியிருக்கத் தட்டில்லையே;

இன்ன நாளிலேயென்று ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.

இப்பாட்டினீட்டிலே ஒரு வார்த்தை: -“பிள்ளை திருநறையூரரையர், ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க வொண்கிறதில்லை;

ஒரு ஸர்வசக்த, கர்மாநுகூலமாகப்  பிணைத்தபிணையை அவனைக் கால்காட்டாதே

இவ்வெலியெலும்பனான ஸம்ஸாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ வென்று பணிப்பர்” என்பதாம்.

இமையோர்வாழ் தனிமுட்டை= பிரமன் முதலிய க்ஷேத்ர;ஜ்ஞ வர்க்கங்கள் நிறைந்த அண்டம் என்றபடி.

—————-

***- ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

பதவுரை

அரவு அணையாய்

சேஷசாயியான பெருமானே!,
நீ

நீ

(அபிமதரான சிலரை)

நின் குரை கழல்கள்

ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே
கூட்டுதி

சேர்த்துக்  கொள்ளுகிறாய்;

(திருவுள்ள மில்லையாகில்)

இமையோரும்

(ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து

கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி

அலைக்கின்றாய்;
அஃது

இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும்

நானும்
அறிவன்

அறிந்தேயிருக்கின்றேன்;
என்னை

எனக்குண்டான
வேட்கை எல்லாம் விடுத்து

விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து
உன் திரு அடியே

உனது திருவடிகளையே
சுமந்து உழல

நான் தலையால் சுமந்து திரியும்படி
கூட்ட அரிய திரு அடிக்கண்

துர்லபமான திருவடிகளிலே
கூட்டினை

சேர்த்துக் கொண்டாய்;
நான் கண்டேன்

இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்.

கூட்டுநின் குரை கழல்கள்=சிலரைத் திருவடி சேர்த்துக் கொள்ளத் திருவுள்ளம் பற்றினால், அவர்கள் எவ்வளவு

தண்ணியர்களாயிருந்தாலும் தன்னுடைய சக்தியே காரணமாக அவர்களைத் திருவடி சேர்த்துக்கொள்ளுகிறாயென்கை.

இன்னாரினையாரென்று பாராமல், உகந்தாரைத் திருவடி சேர்த்துக்கொள்ளுதல் உன்னுடைய இயல்வு என்றபடி.

இமையோரும் தொர்வகைசெய்து ஆட்டுதி=பிரமன் முதலிய பெரியோர்களேயாகிலும் உகப்புக்கு இலக்கு ஆகாதவர்களை

வந்து கிட்டாதபடிபண்ணி அலைக்கின்றா யென்றபடி.

அடியேனும் அது அறிவன்-விருப்பமுண்டானால் சிலர்க்கு எளியனாகியும்,

விருப்பமில்லையாகில் சிலர்க்கு அரியனாகியும் போருகின்றா யென்கிற இந்த உன்படியை நான் அறிந்து கொண்டே யிருக்கின்றேன் என்று கூறின ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்போது நீர் அறிந்துகொண்டது என்ன?’ என்று கேட்க;

இப்போது என்னை நீ விஷயீகரிக்கத் திருவுள்ளம்பற்றினபடியாலே திருவடியோடே என்னைச் சேர்த்துக்கொண்டாயே!

இதுதான் நான் கண்டது என்கிறார்.

வேட்கையெல்லாம் விடுத்து=இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.; அந்த ஆசைகளையெல்லாம் விடுவித்தருளினாய்.

அதுவன்றியும், (உன் திருவடியே சுமந்துழல) பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்து உபச்சந்தனம் பண்ணினாய் போலன்றிக்கே ஸாகஷாத் திருவடிகளையே என்தலைமீது வைத்தருளினாய்;

இதைக் கேட்;டார் வாய்க் கேட்கையன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேனாகையாலே அறிந்தேன்-என்றாராயிற்று.

—————

கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

பதவுரை

ஒண் தொடியாள்

அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும்

பெரிய பிராட்டியாரும்
நீயுமே

அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர்

களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு

இப்போது காணப்பெற்று
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்

காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும்
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்

கைவல்ய ஸூகத்தையும்
ஒழிந்தேன்

தவிர்க்கப் பெற்றேன்;
உன் திரு அடியே அடைந்தேன்

உனது திருவடிகளை அடையவும் பெற்றேன்.

ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்கண்ட சதிர்கண்டு-கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங் கருவிகண்ட வின்பமும் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பமும் ஒழிந்தேன், உன்; திருவடியே அடைந்தேன்-என்று அந்வயிப்பது.

*** = வைகுண்ட து பரே லோக ச்ரியா ஸார்த்தம் ஜகத் பதி:இ ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா.” என்கிறபடியே

தன் திருமாதுடனே தான் தனியரசாயுறைகின்ற விருப்பை எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுத்தருளினனாதலால்

“ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர்கண்டு” என்கிறார்.

தொடி என்று கைவளைக்குப்பெயர்; ஒளிபொருந்திய கைவளைகளையுடையவள் என்று பிராட்டிக்கு இவ்வடைமொழி கொடுத்ததனால். க்ஷணகாலமும் விட்டுப் பிரியாதவள் என்பது பெறப்படும்.

இவ்விடத்தில் *** = யாமி ந யாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா:. களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தவீதாநி,” என்ற சுலோகத்தின் தாற்பரியம் நினைக்கத்தகும்.

அதாவது, தலைமகன் தலைமகளை நோக்கி, ‘என் கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று சொன்ன நொடிப்பொழுதிலேயே அவளது கையில் அணியப்பட்டிருந்த வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே விழ்ந்தன.

அதனைக்கண்ட கணவன் ‘இவள் நமது பரிவைப் பொறுத்திருக்க மாட்டாதவளாகையாலே இவளைப் பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நயாமி’ என்றான்;

இதற்கு இரண்டுவகையான பொருள்; ந, யாமி என்று இரண்டு பதமாகக்கொண்டால் ‘நான்போகிறதில்லை’ என்று பொருள்படும்;

‘நயாமி’ என்று ஒரு சொல்வடிவமாகவே கொண்டால் உன்னையும் உடனழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று பொருள்படும்.

இரண்டு வகையான பொருளும் இங்குத் தலைமகனுக்கு விவஷிதமே.

நாயகிக்கு அச்சொல் செவிப்பட்ட நொடிப்பொழுதிலேயே, கையில்நின்றும் கழன்றவைபோக நின்ற வளைகள் படீல் என்று வெடித்துத்துகளாய் விழுந்தன என்பது மேற்காட்டி சுலோகத்தின் கருத்து.

நாயகனுடைய பிரிவு ப்ரஸ்தாவத்தில் வந்த மாத்திரத்திலேயே உத்தம நாயகியினது உடல் மெலிந்துபோகும் என்பதும், அந்த விச்லேஷவார்த்தை மாறினவாறே உடம்பு பூரிக்குமென்பதும் உள்ளுறை.

பெரிய பிராட்டியார்க்கு ஒருபோதும் பிரிவைப்பற்றின ப்ரஸ்தாவமேயில்லாமலிருக்கு மாதலால் ஒண்தொடியாள் திருமகள் எனப்பட்டது.

“திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறது பொருந்துமோ?

பல கோடி நூறாயிரம் நித்ய முக்தர்களும் அங்கு இருக்கும்போது “திருமகளும் நீயுமே” என்று பரிநிலையேகாரம் இட்டுப்பேசுவது கூடாதே என்று சங்கை பிறக்கும்;

இதற்குப் பரிஹாராமாக நம்பிள்ளை யருளிச் செய்வது காண்மின்;-

“இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே த்ரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்; வாசல்தோறும் ஈச்வரர்கள் இங்கேயிறே.” என்பதாம்.

அங்கு நித்ய முக்தர்கள் சேஷத்வாநுஸந்தான வுறைப்பினால் தனிப்பட்டுத் தோன்றாமே திவ்யதம்பதிகளின் அபிமானத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றமையாலே அவர்களைப் பிரித்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை;

இந்நிலத்தில் மனைதோறும் ‘நானே கடவுள், நானே கடவுள்’ என்றிருப்பதுபோல,

திருநாட்டில் அஹம்பாவமடித்துத் திரிகிறவர்; ஒருவருமில்லையாதலால் திவ்யதம்பதிகளைச் சொன்னதுவே போதுமென்றபடி.

நிலாநிற்ப=அழகுற நிற்ப.  இந்த திவ்யஸேவையை இங்கே காட்டிக்கொடுக்கக் கண்டதனால் இந்நிலத்து விஷயபோகங்களையும் கைவல்ய மோக்ஷமென்கிற அல்பானந்தத்தையும் காரியுமிழ்ந்தேனென்கிறார்.

கண்ணாலே சில ரூபங்களைக் கண்டும், காதாலே சில சப்தங்களைக்கேட்டும்இ த்வகிந்திரியத்தாலே சிலவற்றைக் தொட்டும், மூக்காலே சிலவற்றை மோந்தும், நாவினால் சிலவற்றை உட்கொண்டும் இங்ஙனே பஞ்சேந்திரியங்களாலும் பெறப்படுகிற இஹலோக விஷய ஸூகங்களில் வெறுப்படைந்தேன்.

தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் என்பது கைவல்ய ஸூகத்தை.

கீழ்ச்சொன்ன கண் முதலிய இந்திரியங்களினால் க்ரஹித்து அநுபவிக்க அரிதாகையாலே தெரிவரி என்றது.

நித்யமோக்ஷமாகையாலே அளவில்லா என்றது.  பகவதனுபவத்தை யபேகூஷித்து அற்பமாகையாலே சிற்றின்பம் என்றது.

——————–

***-இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும்  என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

பதவுரை

திரு அடியை

ஸர்வாமியாய்
காரணனை

நாராயணானாய்
கேசவனை

பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை
திரு அடி சேர்வது கருதி

கிட்டியநுபவிக்க விரும்பி

செழு குருகூர் சடகோபன்;

திரு அடி மேல்

அவனது திருவடிகளின் மீது
உரைத்த

அருளிச்செய்த

தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;

திரு அடியே

அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும்

அடையப்பண்ணும்;

(ஆதலால், நீங்கள்)

திரு அடி சேர்ந்து

அந்தத் திருவடிகளைக் கிட்டி
ஒன்றுமின்

பொருந்தியிருக்கப் பாருங்கள்

முதலடியில் திருவடி யென்றது ஸர்வஸ்வாமி யென்றபடி.

கேசவன் என்ற திருநாமம் மூன்று வகையான பொருள்களைக் கொண்டிருக்கும்.

1. சிறந்த மயிர்முடியையுடையவன்.

2. கேசியென்னும் அசுரன் (ஸ்ரீ க்ருஷ்ணவதாரத்தில்) வதஞ்செய்தவன்.

3. பிரமனுக்கும் சிவபிரானுக்கும் நியாமகன்-என்பன மூன்று அர்த்தங்கள்.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்று கிட்டவேணுமென்கிற மனோரதத்தையுடையவராய ஆழ்வார்

அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பத்துப்பாசுரமும் சடக்கென பகவத் பாதாரவந்த ப்ராப்தியைப் பண்ணுவிக்கும்;

ஆகையால், பக்தர்காள்! நீங்கள் இங்குள்ளவளவும் இத்திருவாய்மொழியைக் கொண்டு

அவனது திருவடிவாரத்திலே கைங்கரியம் பண்ணிப் போருங்கோள்-என்றதாயிற்று.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் –முதல் அங்கம் —

October 24, 2022

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மினியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————–

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-
சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் –
உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே
இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா
விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

———————-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||–சங்கல்ப சூர்யோதயம்-

வேதம் முழங்கும் தன் திருநாவில் நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால் சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||–யதிராஜ சப்ததி

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

————-

பத்து காட்சிகள் கொண்ட நாடகம்
சம்சாரத்தில் மாறி மாறி பிறந்து உழன்று உள்ளவர்கள் அத்தை விடுத்து மோக்ஷம் பெறுவதை உணர்த்துவதே
இதன் மையக் கருத்தாகும்–
இரண்டு கதா பாத்திரங்கள் – -விவேகன் என்றும் மஹா மோகன் என்றும் இரண்டு அரசர்கள் –
ஜீவாத்மாக்களைக் காத்து மோக்ஷம் பெற்றுத்தருவதை குறிக் கோளாக விவேகனும் பரிவாரங்களும் இருக்க
சம்சாரத்தில் மூழ்கும்படி செய்வதையே குறிக் கோளாக மஹா மோகனும் அவனது பரிவாரங்களும் இருக்கும்

கதா பாத்திரங்கள் –
விவேக அணி
விவேகன் -அரசன் -நல்லது தீயது பிரித்து அறியக் கூடிய ஞானம்
ஸூ மதி –விவேகனின் மனைவி
சமன் தமன் ஸ்வாத்யாயன் தோஷ -விவேகனின் மந்திரிகள்
விவசாயன் -விவேகனின் சேனாதிபதி -ஜீவாத்மாக்கள் முயற்சி
தர்க்கன் -விவேகனின் தேரோட்டி
ஸம்ஸ்காரன் -விவேகனின் சில்பி
அநுபவன் -ஸம்ஸ்காரனின் தந்தை
ஸங்கல்பன்- விஷ்ணு பக்தி –பகவானுடைய பரிவா ரங்கள்-
சித்தாந்தி -ஆச்சார்யர் -பகவத் ராமானுஜர்
வாதம் -சிஷ்யன் -ஸ்வாமி தேசிகன்
நாரதன் -தும்புரு -மைத்ரி -கருணை -முதிதா –ஸூ மதியின் தோழிகள்
ஷாந்தி விரக்தி ஜூகுப்ஸை திதிஷை துஷ்டி–ஸூ மதியின் பணிப்பெண்கள் –

மஹா மோஹன் அணியினர் –
மஹா மோஹன்–அரசன் -அஞ்ஞானம் மற்றும் மயக்கம் உண்டாக்குபவன்
துர்மதி -மஹா மோகனின் மனைவி
காமன் க்ரோதன் -படைத்தளபதிகள் –
ராகன் த்வேஷன் டம்பன் லோபன் தரப்பன் -கர்வன் -ஸ்தம்பம் -மந்திரிகள் -சிலரை சிஷ்யர்கள் என்றும் கூறுவர்
சம்வ்ருத்தி சத்யன் -தூதுவன்
வசந்தன் -காமனின் நண்பன்
அபி நிவேசன் -பொருளாதாரன்
திருஷ்ணை ஆசை லோபனின் மனைவி
குஹனை -வஞ்சனை -டம்பனின் மனைவி
அஸூயை பொறாமை -தர்ப்பனின் மனைவி
துர்வாசன் -அபிநிவேசனின் மனைவி
விக்னன் ஒற்றன்
மனன் மத்சரன் -ஆலோசகர்கள்
ஸ்ருங்காரன் -காமனின் சிஷ்யன்
ப்ரமன்-நண்பன் –

——-

உபோத்காதம் -முன்னுரை
யத் பக்தி பிரசயாத்மகே திந முகே த்ருஷ்ட்டி ஷம ஷேத்ரிண
க்ஷிப்ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிபதி யத் சங்கல்ப ஸூர்யோதயம்
தத்வை ரஸ்தா விபூஷணை ரதிகத ஸ்வாதீந நித்யோந்நதி
ஸ்ரீமா நஸ்து ச மே ஸமஸ்த விபதத்தாராய நாராயண -1-

சம்சாரம் என்னும் இரவில் ஜீவாத்மா உறங்கியபடி இருக்க -பக்தி யோகம் விடியற்காலை உண்டாக –
ஸ்ரீ மந் நாராயணனின் சங்கல்பமே ஸூர்ய உதயம்
ஜீவாத்மா அனைத்தையும் தெளிவாக காண உதவும் -இதன் மூலம் சம்சாரம் என்னும் இருள் விலகும் –
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் திவ்ய ஆயுதங்கள் -திவ்ய ஆபரணங்களாக அவன் திரு மேனியில் உள்ளன
அவனே அனைத்துக்கும் காரணம் -அப்படிப்பட்ட அவன் எனக்கு சம்சாரத்தால் உண்டாகும் தீங்குகளைக் கிடைக்கும்படி செய்வானாக –

லஷ்யே யத்ர சுருதிமிதகுணா க்ருஷ்ட்டி லப்தா வதாநை
ப்ரத்யக் பாண பிரணவ தனுஷா சத்த்வ வத்பி ப்ரயுக்த
மத்யே வஷஸ் ஸ்புரதி மஹசா பத்ரல கௌஸ்து பாத்மா
பத்மா காந்தா ச பவது தயா துக்த சிந்து ஸ்ரியை வ -2-

ஜீவாத்மா இறகுகள் உடன் கூடிய அம்பு போலே -சத்வ குணத்தில் நிலைத்து நின்று –
ஸ்ருதியின் படியே பகவத் த்யானத்தில் ஆழ்ந்து வில்லாளி -வில்லில் உள்ள நாண்-என்றுமாம் –
ஜீவாத்மா என்னும் அம்பை -பிரணவம் வில்லில் தொடுத்து -பகவானுடைய திரு மார்பில் எய்கிறான்
அப்படிப்பட்ட ஜீவாத்மா கௌஸ்துபம் ஸ்தானம்
தயை என்னும் குண பாற் கடலாக உள்ள ஸ்ரீ யபதி அனைத்து செல்வங்களுக்கும் நன்மைகளுக்கும் துணை நிற்பானாக –

இந்த இரண்டு ஸ்லோகங்களும் நாந்தி-இஷ்ட தைவ நமஸ்காரங்கள் -பக்தியையும் பிரபத்தியையும் குறிக்கும் ஸ்லோகங்கள் -இவை இரண்டும்

அங்கம் -1-காட்சி -1-
ஸூத்ரதாரர் –
சர்வேஸ்வரன் -அனைத்து தேவர்கள் அஸூரர்கள் உடைய கோடிக் கணக்கான க்ரீடங்களுடைய ஒளிக் கிரணங்கள் கொண்டு
ஆலத்தி வழிக்கப்படும் திருவடிப் பீடம் கொண்டவன்–தன்னைச் சரணம் அடைந்தவர்களை ரஷிக்க விரதம் பூண்டவன் –
தாமரையில் அவதரித்தவளுடன் சேர்ந்து நின்று தர்மம் செய்பவன் –
சம்சாரம் என்னும் காட்டுத்தீயை அணைக்க வல்ல மழை மேகமாக உள்ளவன் –
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனின் தோற்றத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் திவ்ய தேசங்களாக
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் பூரி ஜகந்நாதர் கோயில் பாண்டுரெங்கம் போல் பலவும் உள்ளன

ஆங்கு ஆங்கு உள்ள எம்பெருமானை அவனுடைய உத்சவத்தின் பொழுது சேவிக்க ஆசை கொண்டு அந்த அந்த
திவ்ய தேசங்களுக்கு பலரும் செல்கிறார்கள் –
இப்படிப்பட்ட அடியவர்களின் பாத தூளிகளால் இந்த பூ மண்டலமே தூய்மை யாகிறது –
அவர்கள் இப்பொழுது திருக் காவேரியால் சூழப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் உள்ளனர் –
அவர்களுக்கும் பெரிய திருவடி போன்ற நித்ய ஸூரிகளுக்கும் வேறுபாடு இல்லை –
அவர்கள் அனைவராலும் போற்றப்படுபவர்களாயும் -தோஷம் இல்லாதவர்களாயும் –
தங்கள் குலத்துக்கு ஏற்ற ஞானம் உள்ளவர்களாயும் -அதற்கு ஏற்ற அனுஷ்டானங்களை உடையவர்களாயும் –
குணங்களும் கொண்டவர்களாயும் உள்ளனர் –
எல்லையற்ற காலமாக தொடர்ந்தபடி உள்ள பிரகிருதி என்னும் பெரும் சூழலில் அகப்பட்டு -வேதங்களுக்கு புறம்பாக
பொருள் உரைத்து இருப்பவர்களை மதம் கொண்ட யானைகள் வாழை மரத்தைச் சாய்த்து போன்று இவர்களை வீழ்த்துகிறார்கள்-
இவர்கள் இப்பொழுது மோக்ஷ மார்க்கத்தை விரும்பியபடி உள்ளனர் –இவர்கள் அனைத்து திசைகளிலும் ஒளிரும் ரத்னங்களாயும் –
உபநிஷத்துக்களில் பொதிந்து உள்ள ஆழ்ந்த பொருள்களை மற்றவர்களுக்கு விளக்க வல்ல ஆச்சார்யர்களாகவும் உள்ளனர் –
இவ்விதமாக அனைத்துக் கலைகளிலும் தெளிந்த இவர்களால் ஸூத்ரகாரனான நான் உத்தரவு இடப்பட்டுள்ளேன் –

லலித மனஸாம் ப்ரீத்யை பிப்ரத் ஸாந்தர பூமிகாம
நவம குணோ யஸ்மின் நாடயே ரஸோ நவமஸ் ஸ்திதஸ்
ஜநந பதவீ ஐங்கால திச்சிதா ந்ருகுணீ பவந்
நடபரிஷதா தேநாஸ் வாதம் சதாமுபசிந்விதி –3-

எனக்கு –ஸூத்ரதாரனுக்கு -இடைப்பட்ட உத்தரவு என்னவென்றால் –
தாழ்ந்த விஷயங்களில் எப்போதும் மனசைச் செலுத்தும் மக்கள் இன்பம் அடையும்படி
மற்ற ரசங்கள் அனைத்து இடத்தைப் பிடிப்பதும் குறையற்ற குணமும் கொண்ட ஒன்பது ரசம் நிறைந்த சாந்தி ரசம் நிறைந்த
நாடகம் நடத்துவாயாக -வேதனைகளை நீக்க வேண்டும்
அதில் ஜீவாத்மாவுக்கு வேண்டிய குணங்களே நாடக பாத்திரங்கள் –

சன்மார்க்க வர்த்தகர் -பரத ஸாஸ்த்ர உபாத்தியாயர் -அவருடைய சிஷ்யர் நாட்டிய சக்ரவர்த்தி சந்தோஷ பாலகர் –
அவர் புத்ரன் நான் -வைகுண்ட விநோதிந் -என்ற பெயர் –
சிங்கத்தைக் கண்ட யானை போலே மற்ற நடிகர்கள் என்னைக் கண்டு ஓடுவார்கள்
நான் மேலே சொன்னபடி சான்றோர்கள் உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளேன்
இத்தை பார்க்க வித்வான்கள் பலர் கூடியுள்ளனர்

அவதாரித நாட்ய தேசி மார்க்கை ரஸமீசீ பராங்முகைரமீபி
பரதாகம தைவதைரிவைஷா பரிஷத் ஸம்ப்ரிதி பாஸதே மஹத்பி -4-

இந்த நாடக அரங்கம் பாவனை -இசை -நடனம் -இவற்றை நன்கு அறிந்தவர்களால் நிறைந்துள்ளது
வேறே விஷயத்தில் முகம் திருப்பாதவர்கள் –
பரத ஸாஸ்த்ர தேவதைகளோ இவர்கள் என்னும் படி உள்ளதே

ஆகவே நான் அனைத்து சாஸ்திரங்களை நன்கு அறியச் செய்வதும் -எண்ணிறந்த அவதாரங்களை தனது மேன்மை குறையாமல்
அவதரித்ததும் -அஞ்ஞான சமுத்திரத்தை வற்றச் செய்பவனும் -மனத்திலே பக்தியை மட்டுமே வளரச் செய்பவனுமான
முதன்மையான தேவதையை ஆடுகிறேன் –

ப்ராஸீ சந்த்யா காசித் அந்தர் நிசாயாஸ் பிரஞ்ஞா த்ருஷ்டே அஞ்சனஸ் ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –5-

ஸூத்ர தாரன் தொடர்ந்து உரைக்கிறான் –
அஞ்ஞானத்தை போக்க வல்ல அதி காலைப் பொழுது -ஞானக் கண்ணுக்கு தீட்டப்படும் அஞ்சனம் –
நான்முகனுக்கு வேதத்தை அளிப்பவன் -குதிரை முகன் -வாகீசன் -வாஸூ தேவ மூர்த்தி
எனது மனக்கண் முன்னே தோற்றுவானாக –

தேவோ ந சுபமாதநோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைரத்யஷிதோ பாவுகைஸ்
யத் பாவேஷு ப்ருதக் விதேஷு அநு குணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர் மைரிஹ தர்மிநீ விஹரதே நாநா க்ருதிஸ் நாயிகா –6-

ஸூத்ர தாரன் அஞ்சலி ஹஸ்தத்துடன் பணிவாக மேலும் கூறுகிறான் –
நாடகத்தில் பத்து வித வேஷங்கள் போல தச அவதாரங்கள்-திருவரங்கம் மேடையில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்குத் தக்க
துல்ய சீல வயோ வ்ருத்தையாய் – காண்பவர் ரஸ அனுபவம் பெறும்படி -ஸ்ரீ ரெங்கநாதன் நமக்கு
அனைத்து விதமான நன்மைகளையும் பெருக்கும் படி இருப்பானாக –

இவ்வாறு இறை வணக்கம் செய்து பராத்பரன் கடாக்ஷம் பெற்று மேலும் தொடர்கிறான் –

சுருதி கிரீட விஹார ஜூஷா தியா ஸூரபிதாம் இஹ நாடக பத்ததிம்
முஹுர வேஷ்ய விவேக முபக்நயந் மதமபச்சிமாமி விபச்சிதாம் –7-

வேதாந்த க்ரீடமே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-இதனுடன் புத்தியின் திருமணம் அடையப் பெற்றதாக நாடகம் –
இதில் விவேகன் கதா பாத்திரம் கொண்டு ஞானிகளின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிப்பேன் –

ஸூத்ர தாரன்-நாடகக் கலைஞ்சர்கள் வேடம் புனையும் அறையின் பக்கம் முகத்தைத் திருப்பி உரைக்கிறான் –
மரியாதைக்கு உரிய நடியான -நடிகை -தங்களால் இந்த நாடக அரங்கம் மகிழ்வுடன் ஏற்கப்பட வேண்டும்

நடியானவள் மிகவும் பவ்யத்தையுடன் வந்து
இதோ நான் வந்தேன் -உங்கள் உத்தரவை மிகவும் விருப்பத்துடன் ஏற்கும் எனக்கு நீங்கள் உத்தடவு இடுங்கள் –

ஸூத்ர தாரன் -நடியிடம்
சிறந்தவளே -இந்த அரங்கத்தில் சாத்விகர்களால் உத்தவிடப்பட்ட நாடகம் நடைபெற உள்ளது
இதில் நடிக்க வேடங்கள் புனைந்து சிறந்த நம் நடிகர்கள் தயாராக உள்ளார்களா –

நடி-ஸூத்ர தாரன் இடம்
இவர்கள் உங்களுக்கு கை கால் போன்றவர்கள் அன்றோ -உங்கள் எண்ணப்படியே செய்வதில் வேகம் காட்டாமல் இருப்பார்களோ
இந்த நாடகத்தின் பெயர் தன்மை இவற்றை உங்கள் இடம் இருந்து அறிய விரும்புகிறேன் –

ஸூத்ரதாரர்
இது சங்கல்ப ஸூர்யோதயம்–விவேகம் கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டது

பாவம் விதந்தி பரமத்ர பரா வரஞ்ஞா ப்ராஞ்சா தநா
ப்ரகுண நூதன சம் விதாநம் நே
யஸ்மின் குணஸ் தனுப்ருத சதா சத் பிரகார
பத்ரீ பவந்த் யனு குணைரதி தைவதைஸ் ஸ்வை -8-

நாடகத்தின் மையக் கருத்து சாந்தம்
சரியான விவேகம் கொண்டவர்களும் -ஞானத்தை சொத்தாகக் கொண்டவர்களும் அறிவாளிகள்
நல் குணம் தீய குணம் இந்த நாடக கதா பாத்திரங்கள்

விவேக ப்ராகல்ப்ய ஸ்புரித ரண வீரப்யதிகர பர ப்ரஹ்மோ
தந்த பிரகடித தயா வீர விபவ
பிரபுத்த ஷேத்ரஞ்ஞ ஸ்திதி கடித சாந்தா க்ருதிரபூத்
பிரயோகச்சித்ர அயம் பவ ரஸ பூஜாம் அபி அபிமத–9-

இந்த நாடகத்தில் விவேகம் -என்பவனுடைய யுத்தத்தின் காணும் வீர ரசம் பல இடங்களில் உண்டு
இந்த வீரம் தயை கருணை உள்ளடக்கியதாக உள்ளது –
இதில் பர ப்ரஹ்மத்தின் லீலைகளை லீலைகளை தெளிந்த ஜீவாத்மாவின் சாந்தி ரசமும் வெளிப்படுத்தப் படுவதால்
சம்சாரத்தில் உள்ளோருக்கு விருப்பமாய் இருக்கும்

இந்த நாடகத்தின் பெருமை எல்லை அற்றது -உலகில் சங்குகள் எண்ணற்றவை -பங்கை ஜன்யத்துக்கு ஈடாகாதே

ஏ லோகான் இஹ வஞ்சயந்தி விரலோ தஞ்சன் மஹா கஞ்சுகா
தே திஷ்டந்து மஹத் க்ருஹேஷு மாணயஸ் கிம் தைரிதம் சிந்த்யதாம்
ஸ்ரீ வத்ச பிரதி வேஸதீ பரூஸினா சார்தம் கிமா பாஷ்யதே
பத்ம உல்லாசந தர்பனேந மணிநா ப்ரத் நேஷு ரத்நேஷ்வபி –10-

ஒரு சிலர் ரத்ன கற்களை ஆடைகளில் பதித்து மயக்குகிறார்கள் -எதுவும் ஸ்ரீ கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே
ஸ்ரீ தாமரையாளை விளக்கு -கண்ணாடி போலே உல்லாசமாகக் காட்டும்

இந்த நாடகத்துக்கு மேலும் ஒரு காரணத்தாலும் மேன்மை உண்டே

அப திஸ்ய கிமப்ய சேஷ குப்த்யை நிகாமந்தேஷு நிரூட கௌரவேண
ப்ரவிபக்த ஹித அஹித பிரயோக கவிநா காருணிகேந கல்பித அசவ் -11-

உலக நன்மைக்காக உபாதேயம் த்யாஜ்யம் பகுத்து அறிய ஸ்ரீ வேதாந்தசசார்யனான அடியேனால் இது இயற்றப்பட்டது

நடி ஸூத்ர தாரனிடம்
இந்த நாடகத்தை உருவாக்கிய கவியின் பெயர் என்ன
அவரிடம் உள்ள மரியாதை காரணமாக இங்கு உள்ளவர்கள் நம் மேல் அன்பு காட்டுகிறார்களா –

ஸூத்ர தாரர் நடியிடம்
நீ கேள்விப்படவில்லையா
புண்டரீகாக்ஷர் என்னும் சோமயாஜியின் புத்ரரும் -உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமாயும் –
விச்வாமித்ர கோத்ரத்துக்கு அணிகலனும் அனந்த ஸூரி என்பவரின் புத்ரருமான வேங்கடநாதரே இத்தை இயற்றினர்
ஸ்ரீ ரெங்கநாதர் ஆணையால் இவருக்கு வேதாந்தச்சார்யார் என்னும் விருது கிடைத்தது
அனைவராலும் கவி தார்க்கிக்க சிம்மம் என்றும் போற்றப் பெறுபவர்

கௌட வைதர்ப பாஞ்சால மாலாகாராம் சரஸ்வதீம்
யஸ்ய நித்யம் பிரசம் சந்தி சந்த ஸுவ்ரபவேதிந –12-

கௌடம் வைதர்பம் பாஞ்சாலம் சொல்லமைப்புகள் உள்ள சொல் தொடர்கள் ரசங்கள் இருப்பதாக
கவிகள் கொண்டாடுவார்கள்

அந் யேந்த்ரகம் புவனமந்யத நிந்த்ரகம் வா கர்தும் ஷமே கவிர பூதயமந்வ வாயே
ஜென்ம த்விதீயம் ருஷிபி கதிதம் யதஸ் சா தேவீ ச விஸ்வ ஜெநநீ யதநந்யகோத்ரா –13-

இந்த லோகத்துக்கு வேறே ஒரு இந்த்ரனையோ இந்த்ரன் இல்லாத லோகத்தையோ படைக்க வல்ல வம்சத்தில் அவதரித்த கவி இவர்
காயத்ரி உபதேசம் பெற்று இரண்டாம் பிறப்பு அடைவது போலே இவருடைய மண்தக்ராமும் கோத்ரமும் –

விசித்ராசிநீ விபுகவைரி வரூதிநீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜனைர் உபபத்தி பூம்நா
கண்டா ஹரே சமஜ நிஷ்ட யதாத்மாநேதி –14-

அஸூரர்களை விரட்டவும் -நான்குமானால் ஆராதனத்தில் உபயோகிக்கப்பட்ட திருமலையில் உள்ள திரு மணி
இவர் ரூபம் என்று பல பிரமாணங்கள் கொண்டு சான்றோர்கள் நிர்மாணித்தார்கள்

விம்சப்யதே விஸ்ருத நாநாவித வித்யஸ்
த்ரிம் சத்வாரம் ஸ்ராவித சாரீர பாஷ்ய
ஸ்ரேயஸ் ஸ்ரீ மாந் வேங்கட நாத சுருதி பத்யம்
நாத ப்ரீத்யை நாடகமர்த்யே வ்யதிதைதம்-15-

தமது இருபது வயதுக்குள் பல வித்யைகளைக் கற்றார் -முப்பது முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் செய்தார் –
ஸ்ரீ பகவத் ப்ரீதிக்காக மோக்ஷ புருஷார்த்தத்தைக் குறித்து புகழ் பெற்ற இந்த நாடகத்தை இயற்றினார் –

நடி ஸூத்ரதாரன் இடம்
இவர் மனம் பகவத் விஷயமாக வேதாந்தத்தில் ஈடு பட்டுள்ளது
இவர் வாக்கு வேதாந்த விரோதிகளை நிரசிக்க வல்லதாயும் கடினமான தர்க்கம் உள்ளவையாயும் உள்ளது
நம்மால் பிறருக்கு இன்பம் கொடுக்கும் படி எவ்வாறு இந்த நாடகமாக இவர் வாக்கு அமையும்
ஸூத்ரதாரர் பதில் -புன்னகையுடன்
இவர் பகவத் ப்ரீத்திக்கு மட்டும் கருத்து கொண்டவராக மற்ற சிந்தனைகளுக்கு இடம் அளிக்காதவராக உள்ளார்
என்று எண்ணுகிறாயா

மநு வ்யாஸ ப்ராசேதச பரிஷதர்ஹா க்வசி தியம்
ஸூ தா ஸிக்தா ஸூ க் தி ஸ்வயம் உதயம் அந்விச்சதி ஜநே
நிருந்தியு ஸ் கே விந்த்யாசல விகட சந்த்யா ந ட
ஜடா பரிப்ராந்தா பங்கோ ருபரி யதி கங்கா நிபததி –16

மநு இத்யாதிகள் நிறைந்த சபைக்கு ஏற்ற ஸூக்தி தாமாகவே வெளிப்பட்டுள்ளது –
கங்கா நீர் முடவன் மீதி விழுந்தால் யாரால் தடுக்க முடியும் –

அந்யத பி நித்யா யது பவதி
கம்பீர பீஷண கதிர் கிரி கண்ட நாதவ் சூடா பதம்
பசுபதேரபி கூர்ணயந்தி
ஸ்வாது ப்ரசன்ன ஸூபகாநி வஸூந்தராயாம் சோதாம் ஸி தர்சயதி கிம் ந ஸூரஸ்ந வந்தீ -17-

மலைகளையும் பிளந்து பசுபதியையும் மயக்கம் அடையும்படி பெருகும் கங்கை தெளிவாக
இனிய வெல்லத்துடன் பிரவாகித்து போலே கரடுமுரடாக இருந்தாலும் மென்மையான
இனிய பொருள்களைக் கூடியவை

நடி ஸூத்ர தாரனிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஐயா நீங்கள் உரைத்தது மிகவும் பொருத்தமே
சங்கீத ஸாஸ்த்ர ஆச்சார்யர்கள் சாந்தி என்னும் ரசம் இல்லை என்கிறார்களே -இந்த நாடகத்தில் அது உள்ளதை
எவ்விதம் சரி என்று சொல்ல முடியும்

இதுக்கு ஸூத்ர தாரன்
அவர்களை நான் பரத சாஸ்திரம் அறிந்தவர்களாக நான் ஏற்க வில்லை
அதவா தாத்ருஸாந் மத்வா ஜகதி துர்லபாந் சங்கே சாந்திர ஸோல்லா சம ஸக்ய மபி மே நி ரே -18-
சாந்தி ரசம் அனுபவிப்பவர்கள் துர்லபம் என்று எண்ணி வெளிப்படுத்துவது அரிது என்று சொல்லி இருப்பார்கள்

அசப்ய பரி பாடி காம் அதி கரோதி ஸ்ருங்காரிதா
பரஸ்பர திரஸ் க்ருதம் பரிசி நோ தி வீரா யிதம்
விருத்த கதிரத்புதஸ் ததல மல்பஸாரைஸ் பரை ஸ்
சமஸ்து பரி சிஷ்யதே சமித சித்த கேதோ ரஸ –19-

ஸ்ருங்கார ரஸம் சபைக்குத் தகாதவர்களுக்கே இன்பம் அளிக்கும்
வீரம் ஒருவரை ஒருவர் ஒப்புமை செய்து அவமானம் செய்வதை வளர்க்கும்
உண்மையான அனுபவங்களுக்கு முரண்பட்ட இவற்றால் என்ன பயன்
மனத்துக்கு அமைதி அளிக்க வல்ல ஒரே ரஸம் சாந்தி ரஸமே

நடி ஸூத்ர தாரனிடம்
ஐயா அப்படியே இருக்கலாம் -இந்த சாந்தி ரசமானது சநகாதி முனிவர்களால் ஏற்கப்பட்டதாக உள்ளது –
இத்தகைய ரசம் அனைத்து இந்திரியங்களையும் வசப்படுத்தி தகுந்த யோகத்தின் மூலமே அடையப்படும்
இப்படி இருக்க அனைவராலும் காணப்படும் இந்த நாடகத்தின் மூலம் அடையப்படுவது எவ்வாறு

ஸூத்ர தாரன் நாடியிடம்
அறிந்தவளே -அப்படி உரைக்க வேண்டாம்
அனைத்து விதமான வர்ணாஸ்ரம தர்மங்களைத் துறந்தாலும் ஆத்மாவுக்கு எந்தவித தோஷமும் ஏற்படுவது இல்லை
என்று கூறும் அலேப மத வாதி வாதங்கள் இந்த நாடகத்தில் கூறப்படுவது இல்லை
ஆகவே நீ சந்தேகம் கொள்ள வேண்டாம் -ஆயிரக்கணக்கான கர்மங்கள் -எந்தவித பலன்களுக்காக இல்லாமல் செய்யவே
அவை மோக்ஷத்துக்கு இட்டுச் செல்லும் என்றானே ஸ்ரீ கீதாச்சார்யர்
இவை அனைவருக்கும் இன்பம் அளிப்பதாகவும் நம் போல்வாருக்கு வாழ்வு ஆதாரமாகவும் உள்ளன

மேலும் கீழே கூறப்படும் விஷயமும் கூறப்படுவதையும் காணலாம்
ந தத் சாஸ்திரம் ந சா வித்யா ந தத் சில்பம் த நா கலா
நாசவ் யோகோ ந தஜ் ஞானம் நாடகே யன்ன த்ருச்யதே –20-

நாடகம் மூலம் கூறப்பட முடியாத சாஸ்திரமோ வித்யையோ சிற்பக்கலையோ யோகமோ ஞானமோ
ஏதும் இங்கு காணப்படுவது இல்லை

ஸூத்ரகாரர் நடியிடம்
அச்சம் கொள்ள வேண்டாம்
நம்மிடம் பாக்யம் உள்ளது

லக்ஷண ஸம்ருத்திரநகா ரஸ பரி போஷச்ச ஸஹ்ருத்ய க்ராஹ்ய
சம்பததி நாடகே அஸ்மின் ச ஏஷ சைலூஷ ஸூ க்ருத பரிபாக –21-

இந்த நாடகத்தில் அனைத்துவித லக்ஷணங்களும் நன்றாக உள்ளன
சிறந்த மனம் உள்ளவர்கள் நன்றாக அனுபவிக்கும் படி ரசம் மிக்கு உள்ளது
இது நாடகத்தில் நடிப்பவர்களின் பாக்யமே ஆகும்

வித்யா சம்பந்நி திர வஹிதோ வேங்கடேச கவீந்த்ர
சித்தாரம்பச் சிரமபிநயே மாமக ஷாத்ர வர்க
ப்ரக்யா தேயம் பரிஷத நகா பக்ஷ பாதா நபி ஜ் ஞ
ராமா தீநாம் குல தனமிதம் ரங்கதா யாதி ரங்கம் –22-

வித்யை என்னும் செல்வத்துக்கு நிதியாக கவிகளின் அரசர் வேங்கடேசர் கவனமாகவே உள்ளார்
இங்குள்ள நாடகக் கலைஞர்களும் பலகாலம் தங்கள் உள்ளதை பலவிதங்களிலும் நிரூபிக்கிறார்கள்
இங்கு கூடி உள்ளவர்கள் பார பக்ஷம் காணாதவர்கள் தோஷங்கள் அற்றவர்கள்
ஸ்ரீ ராமன் முதலானவர்களுடைய குலதனமான ஸ்ரீ ரெங்க விமானமே இந்த நாடக அரங்கம்

ஸூத்ர தாரன் நடியிடம்
சமதன நிதிம் சத்த்வ ப்ராயம் ப்ரயோக மயோகித
ஸ்வ குண வசத ஸ்தோதும் யத்வா வரீவ்ரது நிந்திதும்
கிமஹ பஹுபி கிம் நிச்சின்னம் ந விஸ்வ மனீஸ்வரம்
ததுப நிஹிதா ஜாக்ரத்யேவம் சதுர்தச சாக்ஷிண –23-

சம தமாதி ஆத்ம குண புதையலான சத்வ குணமே ரூபமாக உள்ள இந்த நாடகம் லௌகிகரராலே
இகழவும் செய்தாலும் நமக்கு நஷ்டம் இல்லையே
ஈஸ்வரனும் -14=சாட்சிகளும் உலகில் உண்டே
ஸூர்யன் சந்திரன் காற்று அக்னி ஸ்வர்க்கம் பூமி நீர் இதயம் யமன் பகல் இரவு
விடியற்காலை ஸந்த்யாகாலம் தர்மங்கள் ஆகியவை

மேலும் விவேகம் நிறைந்தவர்களுக்குப் பொறாமை முதலிய நிலைகள் அவர்கள் அறியாமல் உண்டானாலும்
மின்னல் போன்று உண்டாகும் பொழுதே அழிந்து விடும்

மவ்னம் விப்ரது மத் சரேண நமிதாஸ் தூர்ணே தா ஏவ த்ருவம்
காலோந் நித்ர கதம்ப கோல வபுஷஸ் கம்பஸ் புரந் மௌலயஸ்
கிஞ்சித் வ்ரீடித குஞ்சதாஷ மவஸாதுத்தாந தத்தா நநா
ப்ரஸ் தோஷ் யந்த்ய வதிம் ப்ரயோக பதவீ ஸாரஸ்ய ஸாரஸ்ய –24-

அவர்கள் பொறாமை காரணமாக எதுவும் பேசாமல் மவ்னமாகவே இருக்கட்டும் –
வெகு விரைவில் ரோமங்கள் அனைத்தும் கதம்ப மர மலர்கள் கார் காலத்தில் போல் சிலிர்த்த படி நிற்கும்
அதைத் தொடர்ந்து தங்கள் தவறை நினைத்து இந்த நாடகத்தை உயர்வாகவே பேசுவார்கள்

உபவேத முதாரதீ ஸ்வ நாம் நா பரத ஸூ சித பாவாரக தாளம்
யமுதா ஹரதி ஸ்ந விஸ்வ குப்தயை போக்யம் தத பிஜ்ஜை ரவ ஹிஷ்க்ருதா வயம் ஸ்ம -25-

ப ர த –பாவம் ராகம் தாளம் காண்பித்து அருளிய பரதர் -உப வேதம் அறிந்தவர்களால்
நாம் இந்தக்கலையை விடாமல் ஆள் படுத்தப் பட்டோம் –

நடி ஸூத்ரதாரனிட ம்-
நன்கு அறிந்தவர்களும் குறை கூற வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பார்களே
நம்மால் இந்த நாடகத்தை எவ் விதமான குறை இல்லாமல் முடிக்க இயலுமா -என்று கேட்டான் –

ஸூத்ரதாரன் நடியிடம்
மற்றவர்களுடைய நற் குணங்களை எப்போதும் கொண்டாடுபவளே
சிலருக்கு சாஸ்த்ர ஞானம் தெளிவாக இருந்தாலும் மீண்டும் கேள்விகளை எழுப்பி சங்கைகளை தெளிவு படுத்தவே
கலக்கம் இல்லாமல் இருக்கும் ஞானவான்களை நாம் மதிக்க வேண்டும் –

பூய ஸீ ராபி கலா கலங்கிதா ப்ராப்ய கிஞ்சித பஸீ யதே சநை
ஏகயாபி கலயா விசுத்தயா யோ அபி கோ அபி பஜதே கிரீஸதாம் –26-

ஒருவனிடம் பல கலைகள் இருந்தாலும் களங்கம் இருந்தால் சந்திரன் போல்
நாள் தோறும் தேய்ந்து கொண்டே இருப்பான்
ஒரே கலை இருந்தாலும் தெளிவாக இருப்பான் ஆகில் சிவன் சிரஸா வஹிப்பான் –

நடி ஸூத் ரதாரன் இடம்
இனி இங்கு கூடி உள்ளவர்களை இந்த நாடகத்தைக் காணும் படி செய்வேனாக
இது பராசரர் வியாசர் போன்றவர்களால் கொண்டாடத் தக்கது –
தத்வ ஞானம் போதிக்கும்படியாகவும்
சங்கீதம் மூலம் பரம புருஷனை கடாக்ஷிக்க செய்யும் படியாகவும் உள்ளது

விவேக ப்ரா ரம்பே விமத மத பங்க ப்ரயதநே
முமுஷா ஸம் ஸித்தவ் முர மதந யோகே ச சபலே
முகா தீன் நித்யாதும் நிப்ருதும் இஹ நாடயே க்ருத முகை
பவத்பி ஸ்தா தவ்யம் பரத மத தைரேய மதிபி –27-

ஸூத்ர தாரன் தனது கைகளைக் குவித்தபடி கூறுவது
பரதமுனிவருடைய சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்களே -உங்களுடைய கவனம் முழுவதும்
நாடகத்தின் லக்ஷணமாக உள்ள சந்திகளில் வைப்பீர்களாக -அவை யாவன –
விவேகன் என்னும் அரசன் ஜீவாத்மாவுக்கு மோக்ஷம் அடையும்படி செய்தல்
மற்ற மாதங்களில் கூறப்பட்ட கருத்துக்களை மறுத்தல்
ஜீவாத்மா மோக்ஷத்தில் விருப்பம் கொள்ளுதல்
யோகம் என்னும் உபாயத்தைக் கைக் கொள்ளுதல்
மற்றும் பலனைப் பெறுதல் என்பவை ஆகும்
இவை முறையே
முகம் -பிரதிமுகம் -கர்ப்பம் -அவமர்சம் -மற்றும் நிர்வஹணம்-எனப்படும் –

ஸமய நியதை ப்ரயாகை ஸத் பத ஸீ மாம் அநு ஞாதோ விதுஷ
கிரணை ரிவ திவ ஸக்ருத ஷிப் யந்தே தாம ஸாரம்பா –28

திரையின் உட் புறத்தில் இருந்து எழும் குரல்
நக்ஷத்ர பாதையில் செல்லும் சூரியனின் கதிர்களால் சரியான நேரத்தில் இருளானது விரட்டப் படுகிறது
இதே போன்று நல் மார்க்கத்தில் செல்லும் ஞானிகளால் தாமஸம் நிறைந்தவர்கள் செய்யும்
அனைத்து முயற்சிகளும் விலக்கப் படுகின்றன –

நம்முடைய நாடகத் தொழில்களின் செய்கைகள் மற்றும் முமுஷுக்களின் செய்கைகள் ஆகியவற்றை
ஒரே போன்ற சொற்களைக் கொண்டு இந்த நாடகத்தின் தொடக்கத்தில் சுருக்கமாகக் கூறுவதை
நன்றாகக் கவனித்துக் கேட்ப்பாயாக -அதாவது

துர்ஜனம் பிரதிபக்ஷம் ச தூரத் யஷ்டி ரயம் ஜன
விவேகச்ச மஹா மோஹம் விஜேதும் பிரப விஷ்யத–29-

ஸூத்ர தாரன் கூறுவது -தனது விரோதியான மஹா மோஹனை எவ்விதம் விவேகம் என்னும் அரசன்
வென்றானோ அது போன்று நானும் என்னுடைய விரோதிகளை வெல்வேன் என தீர்க்க தரிசனமாகக் கூறுகிறேன்

திரையின் உள்ளே இருந்து எழும் குரல் –கைகளிலே கூடியதாகவும் இனிமையாகவும் உள்ள வில்லை —
காமனுடைய கரும்பு வில் ஏந்தியபடி – மென்மையானதும் நறு மணம் வீசுவதாயும் ஆகிய மலர்க் கண்களைக் கொண்ட படி –
எனது அனைத்து விரோதி களுக்கும் அச்சத்தை உண்டாக்கும் நான் உள்ள போது நாடகக் கலைஞர்களின்
குலத்துக்கு அனல் போன்று உள்ள அவன் யார்
எங்களுடைய அரசனும் துர்மதி என்பவளுடைய கணவனும் நாடக மேடை என்னும் யுத்த களத்தில் உள்ள
பெரிய கலைஞனும் ஆகிய மஹா மோஹன் என்ற எங்கள் அரசனின் இந்த அவையில் எங்களுடைய
விரோதிகளுக்குச் சார்பாகக் குரல் எழுப்புபவன் யார் –

ஸூத்ர தாரன் -பயத்துடன் பரபரப்புடன் சுற்றிலும் நோக்கி -கோபத்தினால் அக்னி போன்று
சிவந்த கண்களுடன் தனது நண்பன் ஒருவன் இடம் யாரோ ஒருவர் வருகிறார் –
ஆஹா அவர் யார் என நான் காண்கிறேன் -அவர்

அபவர்க்க விருத்தேஷு த்ரிஷு வர்க்கேஷு திஷ்டதாம்
ப்ரதான புருஷார்த்தஸ்ய பச்சி மஸ்ய அதி தைவதம் –30-

மோஷத்துக்கு எதிர் தட்டாய் உள்ள மூன்று புருஷார்த்தங்களை எப்பொழுதும் நாடிய படி உள்ளவருக்கு
முதன்மையான முடிவாக உள்ள அபிமான தேவதை யாவான் –

அர்த்தா வ சேஷித மஹேஸ்வர பவ்ருஷ அயம்
வர்க்கே த்ருதீயம் அவதீர யதாம் விநேதா
ரத்யா ஸலீல பரி ரம்பண லோக கத்யா
புஷ்ணா யுத புல கிதை குபுஜ அப்யுபைதி –31-

ஸூத்ர தாரன் கூறுவது
மேலும் இவன் பரமேஸ்வரனுடைய ஆண்மையைப் பாதியாகக் குறைத்தவன் ஆவான்
மூன்றாவது புருஷார்த்தம் ஆகிய காமம் என்பதை முடிக்க முயலுபவர்களை மலர்க்கண்
மற்றும் கரும்பு வில் கொண்டு தண்டிப்பவன் ஆவான்
அழகான நடையைக் கொண்ட ரதியால் நன்கு அணைக்கப் பட்டவனாக ஒரு கரத்தில் முடிகள் சிலிர்த்தபடி
உள்ளவனாக வருகிறான்
ஸூத்ரகாரன் கூறுவது –
ஆகவே அவனை விட்டு நாம் விலகுவோம்
இந்தப் பருவத்துக்கு உரிய காம விழாவில் பலரும் தங்களை மறந்து ஈடுபட்ட படி உள்ளனர்
அவர்களுடன் கலந்து நமது நிலையை மறைத்த படி நாம் அடுத்து செய்ய வேண்டியத்தைச் செய்வோம்
இவ்விதம் உரைத்து விட்டு இருவரும் அகன்றனர்

ப்ரஸ்தாவனை -அறிமுக பாவம் சம்பூர்ணம் –

விஷ்கம்ப -நாடக விஷயங்களை கதா பாத்திரங்கள் மூலம் அறிதல்
காமன் தனது மனைவி உடன் வசந்தனின் கையைப் பிடித்து வருதல்
காமன் கூறுவது -யார் அவன் -ஹே ஹே -நாடகக் கலைஞர்கள் குலத்துக்கு இழிவாக உள்ளவனே

தர நமித மநோஜ்ஜே ப்ரூலதா சாப பாஜாம்
தரல ஹ்ருதய லஷ்யே தாத்ருஸ ஸ்நேஹ திக்தே
குவலய நயனநாம் கூணிதே லோச நாஸ்த்ரே
சரண யது விவேக காம் திசம் காம்தி சீக –32-

காமன் கூறுவது -குவளை மலர் போன்றதும் -காதல் பார்வை வீசுவதும் -சற்றே வளைந்த புருவங்களின் கீழே
உள்ள பெண்கள் கண்கள் காதல் என்னும் தைலம் பூசப்பட்டு -எனது வில்லில் இருந்து வரும் பொழுது
விவேகம் எந்த திசையில் அச்சம் கொண்டு ஓட இயலும் –

வசந்தன் -தனது மனத்தில் எண்ணுவது
விஷம் நிறைந்த அம்புகள் கொண்ட பேராசை கொண்ட மன்மதன் உள்ளான் –
அர்ச்சிராதி மார்க்கம் காட்டும் குழுவில் நான் உள்ளேன்
மன்மத சம்பந்த ருசி வாஸனை எளிதில் விலக்க முடியாது
உரத்த குரலில் மன்மதன் இடம் கூறத் தொடங்கி
மஹா மோஹனின் புகழ் பாடவும் விவேகனை அச்சம் கொண்டு ஓட வைக்கவும் இந்த விழாவை மங்களமாகத் தொடங்குகிறேன்

சூடா வேல்லித சாரு ஹல்ல கபர வ்யாலம்பி லோலம்பக
க்ரீடந்த் யத்ர ஹிரண் மயாநி தகத ஸ்ருங்காணி ஸ்ருங்காரிண
தந் வங்கீகர யந்த்ர யந்த்ரண கலா தந்த்ர ஷரத்பிஸ் த்ரிகா
கஸ்தூரி பரிவாஹ மேதுரமிலத் ஜம்பால லம்பாலகா –33-

வசந்தன் கூறுவது
இளைஞர்கள் தலையில் செங்கழு நீர் மலர் சூடி -அதில் வண்டுகள் ஆடிப்பாட
பெண்டிர் கஸ்தூரி கலந்த நீரை பீச்சாங்குழல் கொண்டு தெளித்த நீர் சேறு போல் படிந்துள்ளது –

காமன் உரைப்பது –
மிகவும் நல்லது வஸந்தா -தீயவனாகிய அந்த விவேகன் தோற்கடிக்கப் பட்டவனே ஆகிறான் –
எப்படி என்றால் –
காவேரிக் கரையில் நடைபெறும் இந்த மஹா உத்சவத்தின் தொடக்கம் என்பது சுவர்க்கத்தில் உள்ள நந்தவனங்களையும்
தோற்கடிக்கச் செய்வதாகவே உள்ளதால் ஆகும்
இங்கு

உந் நித்ராம் புஜ வாடிகாம் உபய தோரோதோ நிரோதோல்லத்
ஸ்ரோதஸ் ஸ்ம்ருத ஸாரணீ சத க்ருத ஸ்வச் சந்த கந்தாப்லவாம்
கேலச் சோல வதூ விதூத கவரீ சைவாலிதாம் அன்வஹம்
பஸ்யமே ப்லவமாந ஹம்ஸ மிதுனஸ்மேஸாம் கவரோத்மஜாம் –34-

காமன் கூறுவது -ஒவ்வொரு நாளும் நன்கு மலர்ந்த தாமரைகளால் நிறைந்த கரைகளைக் கொண்டதாக நாம் காவேரியைக் காண்கிறோம்
இரண்டு கரைகளுக்குள் அடங்கி ஓடும் காவேரியின் வெள்ளமானது நூற்றுக்கணக்கான வாய்க்கால்கள் வழியே வெளியேறி
சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையுமே ஈரமாக வைத்துள்ளது –
இதில் விளையாடி மகிழ்கின்ற சோழ தேசத்துப் பெண்களின் மிதந்தபடி உள்ள கூந்தலானது கறுத்த கொடிகள் போன்று உள்ளன –
ஜோடியாக நீந்தும் அன்னப் பறவைகள் சிரித்தபடி உள்ள தோற்றத்தை உண்டாக்குகின்றன –

காமனின் மனைவியாகிய ரதி உரைப்பது
இந்த மஹா உத்ஸவம் மிகவும் அழகாக உள்ளது – ஆனால் நமது மன்னராகிய மஹா மோஹனுடைய தடை படாத தலைவிதி
காரணமாக விவேகம் செல்ல இயலாத விரோதியாக உள்ளான் என்பதை எண்ணும் போது என் மனம் தடுமாறுகிறது –

காமன் ரதியிடம் உரைப்பது
ஏதும் அறியாத குழந்தை போன்று உள்ளவளே -எனது பிராணன் போன்றவளே -பெண்ளுடைய தேவதையே –
நமக்கு வேண்டப்பட்ட ஒருவன் கிட்டினான் என்பதை எண்ணி மகிழ வேண்டிய இந்தத் தருணத்தில்
குழந்தையைப் போன்ற மநோ பாவத்தை வெளிப்படுத்தி விவேகனுடைய பெருமையை ஏன் வர்ணிக்கிறாய் –
நீயே காண்பாயாக –

கர த்ருத லலிதே சஷு தன்வனோ மே ப்ரமர குணார்பித புஷ்ப மார்கணஸ்ய
மருத நல சர அபி மேரு தந்வா க்ஷணம் அதி லங்கித ஸாஸன கதம் ஸ்யாத் –35-

காமன் கூறுவது
எனது கையில் இளைய கரும்பு வில் உள்ளது –எனது பாணங்கள் மலர்களால் ஆனவை ஆகும் –
அந்த மலர்களில் அமர்ந்துள்ள வண்டுகளே இந்த வில்லின் நாணாக உள்ளன -இவ்விதம் உள்ள எனது கட்டளையை
திரிபுரம் எரிக்கச் செல்லும் போது மேரு மலையை வில்லாகக் கொண்டு காற்றுடன் கூடிய நெருப்பைக்
கணையாகத் தொடுக்கும் சிவன் கூட ஒரு நொடியாவது மீற இயலுமோ

வசந்தன் ரதியிடம் உரைப்பது
தோழியே காமன் உரைப்பது சரியே யாகும் -இது வெறும் தற் புகழ்ச்சியே அல்ல –
இந்த உலகில் ஒரு கொசு வானத்து யானையை எதிர்த்து நிற்குமா -இந்த உலகின் வரலாற்றை நீ அறியவில்லை –
உனது கணவனுடைய வீரச் செயல்களை நீ கண்டது இல்லை -அதாவது –

வஹதி மஹிளாம் ஆத்யோ வேதாஸ் த்ரயீ முகரைர் முகைர்
வர தநு தயா வாமோ பாக சிவஸ்ய விவர்த்ததே
ததாபி பரமம் தத்துவம் கோபீ ஜனஸ்ய வசம் வதம்
மதந கதநைர்ந க்லிஸ் யந்தே கதம் ந்வி தரே ஜநா –36–

வசந்தன் கூறுவது
முதலில் வெளிப்பட்ட நான்முகன் மூன்று வேதங்களை ஓதும் தனது முகங்களில் தனது மனைவியை வைத்துள்ளான்
சிவனது இடது பாகம் பெண் வடிவாகவே மாறி உள்ளது -யாருக்கும் வசப்படாத பரம தத்துவமான நாராயணனும்
கோபிகளுக்கு வசப்பட்டான் இவ்விதம் உள்ளபோது மற்றவர்கள் எவ்விதம் மன்மதனுக்கு வசப்படாமல் இருப்பர் –

காமன் உரைப்பது
சரியாக உரைத்தாய் வசந்தா -உனது சொற்கள் அப்படியே அந்த அந்த காலத்துக்கு ஏற்றபடியே உள்ளன

விஸ்வம் யுவதி ஸாத் க்ருதம் பவதா தத்த சாயகே
விவேக கிம் நு வர்த்ததே விபக்ஷ அபி மயி ஸ்திதே –37-

காமன் கூறுவது –
இந்த உலகம் முழுவதும் பெண்கள் வசம் ஆக்குவதற்காக உன்னுடைய அம்பை எனக்கு நீ கொடுத்துள்ளாய் –
இவ்விதம் நான் முன்பாக நிற்கும் போது விவேகம் நிலைப்பானோ –

ரதி காமனிடம் கூறுவது –
எஜமானரே இது உண்மையே ஆகும் -ஆனால் வைராக்யம் என்பதான -யாராலும் புக இயலாத கோட்டையில் விவேகன் உள்ளான் –
அவனுக்குக் காவலாக -தமம்-புலன் அடக்கம் -மற்றும் சமம் -மன அடக்கம் -ஆகிய மந்திரிகள் உள்ளனர் –
,அவன் யாருடைய துணையாக வேண்டாத வீரனாக உள்ளான் –
இயலாத செயல்களையும் எந்தவித அபாயமும் இன்றியே செய்ய வல்லனாக உள்ளான் –
ஆகவே அவன் எத்தை எப்போது செய்வான் என்ற கலகத்துடனே நான் உள்ளேன் –

ரதியிடம் காமன் கூறுவது
அச்சம் கொண்டவளே -அஞ்ச வேண்டாம் -நீ நம்முடைய விரோதிக் கூட்டத்தில் பற்றுக் கொண்டவர்களால் ஏமாற்றப் பட்டுள்ளாய்
ஆகவே நம்முடைய கூட்டத்தின் திறனையும் மேன்மையையும் நீ அறியவில்லை
இந்த உலகம் முழுவதையும் வெல்லக் கூடிய உனது கணவனுக்கு உள்ளதான வெற்றி அளிக்கக் கூடிய கருவிகளைக் காண்பாயாக –

வபுர ப்ரதிமம் நிதம்பிநீநாம் த்ருட ஸுந்தர்ய குணம் தரவா நம்ரம்
ஸ்ரவண அவதி நேத்ர சித்ர ப்ருங்கம் தனு ராத்யம் மம முஷ்டி மேய மத்யம் –38-

காமன் கூறுவது –
ஈடில்லாத அழகான பெண்களுடைய உருவம் எனக்கு வில்லனாகும் -இந்த சில சற்றே வளைந்து உள்ளது –
அதனுடைய நாண் என்பது வலிமையாகவும் பெண்களுடைய அழகாகவும் உள்ளது –
அதனுடைய அம்புகளானவை அவர்களுடைய காதுகள் முடிய நீண்டுள்ள கண்களே ஆகும் –
பிடித்துக் கொள்ள ஏற்றதாக உள்ள வில்லின் நடுப்பகுதி யானது அவர்களது இடுப்பாகும் –

சைலீம் விலோ பயதி சாந்தி மகா கரோதி வ்ரீடாம் வ்யுதஸ்யதி விரக்திம் அபஹ்ருதே ச
கர்ணாம்ருதம் கமபி தத் கலமா ஷிணீ நாம் நாமாபி கிம் ந விகரோதி நிசம்யமாநம் –39–

காமன் கூறுவது -மேலும் இனிமையான குரல் கொண்ட இந்தப் பெண்களுடைய பெயர் மட்டும்
செவிக்கு அமிர்தமாகவும் -ஒருவருடைய அனைத்து உடைமைகளையும் குலைக்கும் படியாயும் இருக்கும் –
அவர்களுடைய குரல் மன அமைதியைக் குலைப்பதாக உள்ளது -ஒருவருடைய வெட்கத்தை விலக்கி
அவர்களுடைய வைராக்யத்தை அழிக்கும்
எந்த மாறுதல்களைத் தான் அவர்கள் குரல் ஏற்படுத்துவது இல்லை

வசந்தன் கூறுவது
இப்படி உள்ள போது பெண்களைக் குறித்து புகழ்ந்து பேசும்போது கேட்பது -அவர்களைக் குறித்துப் பேசுவது
முதலானவற்றால் மனம் கலங்கும் என்பது உறுதியே யாகும் –

திஷ்டது குணா வமர்ச ஸ்த்ரீ குணாம் ஆலோக நாதிபி சார்தம்
தோஷ அநு சிந்த நார்த்தா ஸ்ம்ருதிரஷி தூரி கரோதி வைராக்யம் –40-

வசந்தன் கூறுவது –
பெண்களுடைய குணங்கள் குறித்து அதிகமாகப் புகழ்தல்
மற்றும் அவர்களைக் காணுதல் போன்றவை ஒரு புறம் இருக்கட்டும் –
அவர்களுடைய தோஷங்களைக் குறித்துச் சிந்திக்கும் நேரத்தில் கூட பெண்களைக் குறித்த எண்ணங்கள்
மனத்தை வைராக்யம் என்ற நிலையில் இருந்து மாற்றி விடும் –

அபிச ப்ரபூத மத மேதுராத் மநோ விஷயாட வீஷூ விவிதா ஸூ தாவத
ஸ்வ பலேந ஹந்த மநஸோ நிவர்த்தநம் பிச தந்து நேவ ஸூர தந்தி யந்த்ரணம் –41-

வசந்தன் கூறுவது
மிகுந்த வலிமையுடன் மதம் பிடித்து பலவகையான உலக விஷயங்கள் என்னும் காட்டிலே
எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி திரியும் மனசை ஒருவன் தனது முயற்சியால் கட்டுப்படுத்த முயலுதல்
என்பது ஐரா வதம் என்ற யானையை தாமரை நூல் கொண்டு காட்டுவதுக்கு சமானம் ஆகுமே –

ரதி கூறுவது
எஜமானரே மனதை உறுதியாகப் பற்றுகின்ற வலிமையான மயக்கங்கள் எதுவாக இருந்தாலும்
அதனைப் போக்க வல்லவர்களாக யோகிகள் உள்ளனர் –
அவர்களை அணுகாமல் தங்கள் இருத்தல் வேண்டும்

காமன் சிரித்த படி உரைத்தல் –
அன்பானவளே -உனது கண்களில் உள்ள தடுமாற்றத்தை -உனது மனதிலும் நான் காண்கிறேன்
யோகிகளின் முதன்மையானவர்களைக் கூட -இளம் பெண்கள் என்னும்
யோகிகளுடைய கால்களில் விழும்படி நான் செய்ய வில்லையா –

ஸூபக பருஷைர் மதஸ்த்ரைஸ் கீலிதம் அந்யோன்ய கவசிதைர் காதம்
கிம் ந விதிதம் பவத்யா கிம் அபி பிதஸ் ஸ்யூத ஜீவிதம் மிது நம் –41-

காமன் கூறுவது
அழகானதும் கொடியதாக உள்ளதுமாகிய எனது அம்புகளால் ஒன்றாக இணைக்கப் பட்டு
ஒருவருடைய உடல் கொண்டு மற்ற ஒருவருடைய உடல் மூடப்பட்ட படி ஒன்றுடன் ஓன்று பின்னிய நிலையில்
உள்ள ஒரு ஜோடியை -(இது அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கும் ) நீ அறியவில்லை போலும் –

ரதி காமனிடம் உரைத்தல்
உயர்ந்தவர் உம்முடைய மேன்மையைக் குறித்து நான் நன்றாக அறிவேன்–
ஆனால் தற்போது பலத்த சூறைக்காற்றால் அடிபட்ட வாழை மரங்கள் போன்று நான் ஆட்டம் காண்கிறேன்
ஏன் என்றால்
நல்ல ஆலோசனைகளால் திறன் அடைந்தவனும் -தகுந்த தெய்வத்தால் உதவப் பெற்றவனும்
விதியானது உதவும்படி உள்ளவனும் -யமம் நியாமாதிகளால் உதவப் பெற்றவனும் –
மேலும் பல உபாயங்களைக் கொண்ட வானுமாக உள்ள நம்முடைய சத்ரு
எப்போது வேண்டுமானாலும் எதையாகிலும் செய்யக்கூடும் என்பதை எண்ணுகிறேன்
ஞானமானது மோக்ஷத்தைத் தவிர மற்ற அனைத்துப் பலன்களையும் அளிக்க வல்லது என்பதை அனைவரும் அறிவார்

காமன் கோபம் கலந்த சிரிப்புடன் உரைத்தல்
பேதையே
நீ இனிமையாகப் பேசினாலும் உனது அச்சமானது பேதமையே யாகும் –
ஒலிக்கும் வண்டுகள் என்பதான நாணில் கோர்க்கப் பட்டதும் அனைத்து உலகங்களும் இலக்காகக் கொண்ட
அம்புகள் கொண்டதுமாகிய வில்லைக் உடையவனும் -எப்போதும் வெற்றியிலே மட்டுமே
கவனம் கொண்டவனுமாக உனது அன்பனான நான் உள்ளேன்
இப்படி உள்ள என் முன்பே அறிவு என்ன செய்ய இயலும் -யார் எதன் மூலம் மோக்ஷம் பெற முடியும்
உனது இடைப்பகுதியில் உள்ள நுண்மையானது உனது மனத்தில் காணப்பட வில்லையே –
கெட்டாய் -உனது ஸ்தனங்களில் உள்ள காடின்யமும் பருமனும் உனது மனத்தில் புகுந்தது போலும் –
அல்லது இயல்பாகவே உள்ள பெண்மையிடம் முதலில் காணப்படும் தன்மையானது உன்னிடம் உள்ளது எனலாம் –

மயா அதிஷ்ட க்ரோத ப்ரயாதி கிம் அப்யாந்த்யமத ச
ஸ்ம்ருதி பிரம்ச சேத்தா விகடயதி புத்திம் சபதி ச
தயா முக்த ஷேத்ரீ தமஸீ ஜஹனே விந்ததி லயம்
ததா பூதே கிம் வா ஜனயது (தி ) விவேகோ ஜடமதி — 43-

காமன் கூறுவது
நான் ஆணை இட்டால் கோபம் என்பவன் முதலில் அஞ்ஞானம் என்னும் இருளை உண்டாக்குவான் -தொடர்ந்து மறதி உண்டாக்கும் –
அதன் பின்பு புத்திக்கு அழிவு உண்டாகும் -புத்தியைஇழக்கும் ஒருவன் சம்சாரம் என்னும் அடர்ந்த இருளில் லயிக்கிறான்
இப்படிப்பட்ட ஒருவன் இடம் விவேகம் என்ன செய்ய இயலும் -அவனுடைய பத்னியும் ஜடமாகிறாள் –

காமன் ரதியிடம் உரைத்தல்
நம்முடைய விரைவுடன் கூடிய சேனையை விவேகனின் அமைச்சர்களான சமம் தமம் போன்றவர்களால் தடுக்க இயலாது –
தேவர்கள் அசுரர்கள் தலையில் இடது காலை வைத்த மஹா மோஹன் யாராலும் வெல்ல ஒண்ணாதவன்
சிங்கத்துக்கு முன்பாக அல்ப விலங்கு என்ன செய்ய இயலும் –

பரஸ்ய புருஷஸ் யேவ பஞ்ச பிச்ச மம ஆயுதைஸ்
சமயே ஷு விமத் யந்தே ஸத்வந்தஸ் அபி சத்ரவ–44-

காமன் கூறுவது -பரம புருஷன் போலவே நானும் ஐந்து ஆயுதங்கள் கொண்டவன் –
ஸாத்விகர் களையும் கூட அழிக்க வல்லவை -மேலும்

அலமிஹ விபுதாத்யை ஆகம க்ராஹ்ய வாசோ
முனி பரிஷிதி தர்மான் காயதோ முக்தி ஹேதூன்
தபஸி நியத வ்ருத்தேஸ் தஸ்ய தேவஸ்ய சாந்தி
ஜெனித யுவதி ரத்னம் தர்ச யத்யூரு காண்டம் –45–

காமன் கூறுவது -தேவர்கள் ஒரு புறம் இருக்கட்டும் -வேதங்களைப் போன்ற பேச்சு கொண்டவனும் –
முனிவருடைய சபையில் – மோஷத்தைப் பற்றி உரைப்பவனும் -ஆன
நாராயணனுடைய தொடையில் இருந்து உண்டானவள் ஊர்வசி அல்லவா –
ரதி -உமது சக்தி அறிவேன் -எனக்கு அறியாத ஒன்றை நீங்கள் கூற வேணும் –
-சிங்கம் யானை -பகை போல் விவேகன் மஹா மோஹன் -இடையில் உள்ள பகைக்குக் காரணம் என்ன
காமன் -அன்பாளவளே -இத்தை நான் முதலில் இருந்து கூறுகிறேன் –

த்ரி குண கடிதாத் போக்த்ரு புத்திஸ் ஸதீ ததநு வ்ரதா
ஸமய நியதோஸ் ஸ்ராயம் த்ரேதா குலம் சமஜீ ஜனத்
ப்ரதமம் இஹ தத் போக த்வேஷ்யம்விவேக புரஸ் சரம்
த்விதய மிதரஜ் ஜுஷ்டம் ராக ப்ரமோஹ முகம் மித –46-

காமன் கூறுவது
ஜீவாத்மாவின் பத்தினியான புத்தி என்பவள் -முக்குண மயத்தாலே ஓன்று ஓன்று அதிகமாக உள்ள போது மூன்று குலங்களைப் பெற்று எடுக்கிறாள்
ஸத்வ குணத்தால் விவேகமும் -இன்பங்களை அனுபவிப்பதை ஜீவாத்மாவை வெறுக்கப் பண்ணும்
ராஜஸம் தாமசம் ஆகியவற்றின் கூடிய ராகம் -மஹா மோஹம் -இரண்டு குலங்களும் ஓன்று சேர்ந்து நிற்கின்றன –
காமன் -இந்த இரண்டு பிரிவினர்கள் -விவேகன் மற்றும் மஹா மோஹன் ஆகியோர்களைத் தங்கள் குல அரசர்களாக ஆக்கினார்கள் –

மோஹஸ்ய தர்ம பத்நீ துர் மதி அபவர்க்க தோஷ த்ருஷ்டி மயீ
விஷய ரஸ தோஷ த்ருஷ்டி ஸூமதி அநந்யா விவேகஸ்ய –47-

காமன் கூறுவது -மோஹனுடைய தர்ம பத்னி துர்மதி –இவள் மோக்ஷ தோஷமே பார்ப்பவள்
விவேகன் தர்ம பத்னி ஸூமதி -உலக விஷய தோஷங்களையே பார்ப்பவள் –

ரதி -அதன் பின்னர் -அதன் பின்னர்

காமன் –அதனைத் தொடர்ந்து ரஜோ குணத்தின் மூலமாக உள்ள ராகம் -ஆசை -முதலானவர்கள் –
தமோ குணத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற ஸம்ஸார சக்கரவர்த்தியான மஹா மோஹனுக்கு
அசுரர்கள் ராக்ஷஸர்களுக்கு உதவின்படி உதவுகிறார்கள் –
ஆனால் சத்வத்தில் இருந்து பிறந்த விவேகனின் குலமானது குறைந்த துணையுடன் பலம் அற்று இருந்தது –
நம்முடைய தந்தையாகிய ஜீவாத்மா பொதுவான -நடுநிலைமையான -உள்ளவர் என்றாலும் –
தமது தர்ம பத்தினியான -புத்தி -தர்ம பூத ஞானம் -உடன் நம்மிடமே அன்புடன் உள்ளார் –
தங்களுடைய கருத்துக்களுக்கு தாங்களே ஆஷேபம் கூறுபவர்களும் -ஜாதிவாதிகள் என்று கூறப்படுபவர்களும் –
ஆகிய சிலரைப் போன்று எப்போதும் சூழ்ச்சியுடன் உள்ள விவேகன் முதலானவர்கள் நம்முடைய தந்தையான ஜீவாத்மா
நம்முடன் நெருக்கமாக உள்ளதை விரும்பவில்லை -ஆகவே ஜாவாத்மாவின் இன்பங்களை அழித்து எண்களையும் அழிக்க முயல்கிறார்கள் –
தந்தையை அழிப்பவர்கள் தாங்களும் அழிவார்கள் என்று தெரிந்தே இவ்விதம் செய்கிறார்கள் –

இவர்கள் செய்வது என்ன வென்றால் நம்முடைய தந்தை எல்லையற்ற காலமாக அனுபவித்தபடி உள்ள ப்ரக்ருதியில்
பல்வேறு தோஷங்கள் உள்ளதாகக் கூறி -அவருக்கு பிரகிருதியின் மீது வெறுப்பை உண்டாக்கி –
மீண்டும் சம்சாரம் என்ற நம்முடைய குடும்பத்துக்குத் திரும்பாமல் -மஹா ப்ரஸ்தானம் என்பதைச் செய்யும் படி தூண்டுகிறார்கள்
ஆனால் நம்முடைய குலத்தை நாமே அழிக்கலாமோ என்பதற்கு
வானவர் அரசன் சுக்ரீவன் ராக்ஷஸ அரசன் விபீஷணன் செய்வதைக் கூறுகிறார்கள் –

இதன் மூலம் நம்முடைய தந்தையான ஜீவாத்மா அடையும் துயரங்களைக் காண இயலவில்லை –
இவர்கள் செய்கின்ற இந்தச் செயல்களால் – ஜீவாத்மா பல விஷயங்களிலும் வீணாகிறான் –
மற்றவர்கள் தோஷங்களைக் காண குருடன் ஆகிறான் -மற்றவர்களை பழிப்பதில் ஊமை ஆகிறான் –
மற்றவர்களை பழிக்கும் விஷயங்களில் கேட்பதில் முதல்தர செவிடன் ஆகிறான் –
பரதாரம் விரும்பும் விஷயத்தில் பெண் ஆகிறான் –
பெண்களை வசப்படுத்தும் வழிகளை ஆராயாமல் உள்ளான் –
புலன்களை இழந்த ஒருவன் போன்று பெண்கள் விஷயத்தில் உள்ளான் –

ஆகவே இவர்கள் விஷயத்தில் சகோதரத் தன்மையை விட்டுவிட்டு அவர்களை அழிக்க விரும்புகிறோம் –
எனவே நாங்களும் அவர்களும் முறையே பிறவிருத்தி -சுய நலம் விரும்பும் செயல்கள் –
மற்றும் நிவ்ருத்தி -சுய நலம் அற்ற செயல்கள் -தர்மங்களைக் கைக்கொள்ள வேண்டும் –
இதன் மூலம் ஸத்வ குணத்தை முதன்மையாகக் கொண்ட அவர்களுடைய குலமானது
ஸூர்யன் முன்பாக அழியும் மின்மினிப் பூச்சிகளின் ஒளி போல் ஆகும் –

ஸுஹார்த்த மித்த மந வாப்ய ஸஹோ த ராணாம் ஆஸீத்
ஸ்வ மூல குண பேத வசாத் விரோத
ஏக பிரஜாபதி புவா மபி வைர பந்த
ஸ்வாத் மாவதி ஸ்வய முதேதி ஸூ ரா ஸூ ராணாம் –48–

காமன் கூறுவது
இப்படியாக எங்களுக்கு உரியதான பிறவிக் குணங்களில் வேறுபாடு உள்ளதால் எங்களுக்கு இடையே உள்ள
சகோதரத் தன்மை மறைந்து பகைமையே மேல் ஓங்கி உள்ளது –
கஸ்யப பிரஜாபதி என்னும் ஒரு தந்தைக்கே பிறந்துள்ள போதிலும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கும் இடையே
எப்பொழுதும் பகையே உள்ளது அல்லவா –

ரதி
இத்தகைய பாபமானது அழிய வேண்டும் -தந்தையுடைய இன்பத்தை அவருக்குப் பிறந்தவர்களே அழிக்க முயல்கிறார்களே
அது மட்டும் அல்லாமல் தங்களுடன் பிறந்தவர்களுக்கே அழிவை ஏற்படுத்த எண்ணுகிறார்களே
நாதனே உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே போர் மூளாதபடியாக இருப்பதற்கு ஒரு வழி இல்லையா

காமன் – நீ ஏதும் அறியாதவளாக உள்ளாய்
அவ்விதம் எங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட வழி இல்லையே

ஸ்வத சதஸ் ஸத்வ விஹிநாநாம் சத்தயைவா பராத்யதாம் த
கதம் காரம் ப்ரதீ கார கல்ப கோடி சதைரபி –49–

காமன் கூறுவது
நல்ல தன்மைகள் சிறிதும் அற்றவர்களாயும் -மற்றவர்கள் இருப்பையே தோஷமாக எண்ணுபவர்களாயும்
உள்ளவர்களுக்கு எத்தை கோடி கல்பங்கள் உண்டானாலும் அமைதி ஏற்படுமா

அபி ச
பிரதி புருஷ விபக்த மூர்த்தி பேதா வயமிதரே ச மிதி ப்ரதீப வ்ருத்தா
க்வசித் அதி கரணே ஸமாப தந்த ஸூ தனு ததீ மஹி வத்ய காத கத்வம்–50–

காமன் கூறுவது
மேலும் -ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு உருவத்தில் உள்ள நாங்களும் எங்கள் விரோதிகளும்
ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல் படுவோம்
ஒரே இடத்தில் நாங்கள் இருந்தால் ஒருவர் அழிபவராகவும் – மற்ற ஒருவர் அழிப்பவராகவும் இருப்போம் —

காமன் -நாங்கள் செல்வம் சற்று இன்பங்களில் ஆசை கொண்டவர்கள் ஆவோம் –
எங்கள் விரோதிகளோ நாராயணன் இடம் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்கள் –
இவ்வாறு இருக்க பேச்சுக்காகவாகவும் எங்களுக்குள் சேர்த்தி கிடையாது –
அவ்விதம் சேர்ந்து இருக்க இடம் இருந்தாலும் பகைவர்களை அழிக்க வல்ல மஹா மோஹன் அவ்விதம் செய்ய அனுமதிக்க மாட்டார் –
மேலும் யாருடைய உதவியையும் இல்லாமல் அனைவரையும் வீழ்த்த வல்ல வீரனான நான் அதற்கு எவ்விதம் இசைவேன்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதே

ரதி -ஐயனே -தங்களுடைய குலத்தை தாங்களே அழிக்கக் கொடிய அந்தக் கொடியவர்களாலே
பலம் பொருந்திய உங்களை அழிக்க எத்தகைய சதித்திட்டம் தீட்டப் பட்டுள்ளதோ

காமன் -அச்சம் நிறைந்தவளே -அது ராஜ குல ரஹஸ்யம் -அத்தை வெளியிடுதல் தகாது -குறிப்பாக பெண்கள் இடம் கூறுதல் ஆகாதே

ரதி -காமனுடையை கைகளை பிடித்த படியே –என் மேலும் எனது தோழனாகிய வஸந்தன் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்
அந்த ரஹஸ்யத்தைக் கூறுவீராக –

வஸந்தன் தனது மனதில் நினைத்தல் –எத்தனை உரைப்பது -விதியின் விளையாட்டுக்காகக் காலம் உரைக்க இயலுமோ –
அல்லது அதனைத் தடுக்க இயலுமோ –
தொடர்ந்து உரத்த குரலில் -தோழனே மகரக் கொடி கொண்டவனே

மநோ ரத ஸமர்த்தா நாம் மஹா மோஹ விகோதி நாம்
மந்த்ர பேத நமஸ் மாபி கார்யே தத் பரி பந்திபி –51-

வஸந்தன் கூறுவது -ஆசை கொள்வதில் சிறந்தவராகிய மஹா மோஹனுடைய பகைவர்களுடைய
சதித் திட்டங்களை வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது –

காமன் -பிரியமானவளே -அப்படியானால் உனக்கு நான் கூறுவேன்
அந்த மூடர்களுடைய அரசனாகிய விவேகன் நிவ்ருத்தி மார்க்கம் என்னும் தர்மத்தை உரைக்கிறான்
இதனை ஏதும் விளையாமல் உள்ளதான உபநிஷத் என்னும் பூமியில் வசிக்கும் சில க்ரூரமானவர்கள் ஏற்கிறார்கள்
அவர்கள் நம்முடைய குலத்துக்குத் தகாத வழியில்
அழிவை உண்டாக்க எண்ணுகிறார்கள்
இத்தகைய நிவ்ருத்தி தர்மமானது -எனது எந்த ஒரு செயலையும் நான் செய்ய வில்லை –என்னும்
கொள்கையைக் கொண்டதாக உள்ளது –
இத்தகைய வழியைக் கடைப்பிடிப்பவர்கள் குருடர்கள் செவிடர்கள் ஊமைகள் பேடிகள் என்பதான நிலையில் இருந்தபடி
மற்றவர்களுடைய தவறுகளையே மட்டும் காண்பவர்களாக உள்ளனர் –
இவர்களுடைய கருத்தின் படி புத்தியானது தவிர்க்க முடியாததும் குணப்படுத்த இயலாததும் ஆகிய
தர்மத்துடன் தொடர்பு கொண்டு புருஷருக்குள் பிசாசு புகுந்தது போன்று ஆகிறது –
அத்தகைய சேர்க்கையால் நம்முடைய குலத்தின் மீது ஆழ்ந்த த்வேஷத்தை மட்டுமே நெஞ்சகத்தில் கொண்டபடி –
மேலும் இனிமையான வேஷம் பூண்ட படி பரபக்தி என்னும் ப்ரஹ்ம ராக்ஷஸி தோன்றுகிறாள்
இவள் சம்சார இன்பங்களுக்கு பீமரதி என்னும் காள ராத்ரி போன்றவள் ஆகிறாள்
பீமரதி –77 வருஷம் 7 மாதம் 7 வது நாள் இரவு

குண த்ரேத உன்மேஷ க்ரம பரிணத அநந்த விக்ருதி
க்வசித் காலே புத்தி குல யுகல கூடஸ்த க்ருஹிணீ
அதி க்ரூராத் யந்த பிரளய விதிது மந்த்ர புருஷாம்
புரா பீமா காராம் ஸ்ருஜதி பர பக்திம் பர வதீ –53-

காமன் கூறுவது -நம்முடைய குலங்களுக்குத் தாயாக உள்ள புத்தி என்பவள் மூன்று குணங்களுடைய
ஏற்றத் தாழ்வு வரிசை காரணமாக பலவிதமான எண்ணற்ற மாறுதல்களை அடைகிறாள்
அவள் ஒரு கால கட்டத்தில் வேறு ஒருவருக்கு வசப்பட்டு அழிவு என்பதான மோக்ஷத்தை நடக்கும்படி
செய்த மந்த்ர ஆலோசனைகளின் பலனை அடைந்து
தனது சுதந்திரம் இல்லாத காரணத்தால் பரபக்தி என்னும் குரூரமான உருவத்தைப் பெற்று எடுக்க வேண்டும் –

ப்ர வ்ரஜ்யாதி யுதா பரத்ர புருஷே பாதி வ்ரதீம் பிப்ரதீ
பக்தி ஸா ப்ரதிருத்த ஸர்வ காரணாம் கோரம் தபஸ் தப்யதா
துஷ்டா தேந ஜனார்த்தநஸ்ய கருணா குர்வீத தத் கங்கரம்
க்வசித் கைடப கோடி கல்ப மஸூ ரம் –54-

காமன் கூறுவது –
அதன் பின்னர் அந்த பரபக்தி என்பவள் பதிவிரதை என இருந்து ஸந்யாஸம் போன்ற பலவற்றைக் கைக்கொண்டு
பரமபுருஷன் மட்டுமே நோக்கம் கொண்டவளாக இந்த்ரங்களை அடக்கி கடுமையான தவம் இயற்றுவாள் –
அவளுடைய பக்தியைக் கண்டு மகிழும் ஜனார்த்தனன் தனது கருணை காரணமாக
கோடி கைடப அஸூரர்களும் ஈடாக முடியாதபடியான அஸூர குணம் கொண்ட ஒரு பணியாளை அவனுக்கு நியமனம் செய்கிறான் –
கூற வாதத்தை பாதியில் நிறுத்துகிறான்

வசந்தன் தனக்குள் கூறுகிறான்
அந்த அஸூரன் -ஸங்கல்ப ஸூர்ய உதயமே ஆவான்
மேலே கூறப்பட்ட ஸ்லோகத்தை –அவன் நம்மை முடியுடன் அளிப்பவன் ஆவான் – என்று முடிக்க வேணும்
ஆனால் அதற்கு முன்பாக நாம் வேறு விதமாக முடிப்போம்
இவ்விதம் எண்ணியபடி உரத்த குரலில் இதுக்கு மேலே ஏதும் கூற வேண்டாம் என்றான்

ரதி மிகவும் பரபரப்பாக
நாதனே என்னைக் காக்க வேண்டும் -என்னைக் காக்க வேண்டும் -என்று
உரைத்த படி தனது கணவனை அழைத்துக் கொள்கிறாள் –

காமன் -அவளை அணைத்துக் கொண்டு
இதற்கு முன்பு இது போன்ற சுகத்தை அனுபவித்தது இல்லை என்னும்படியாக நின்று தனக்குள் கூறுவது

ஜெனித வலய மங்கே தத்த ஹாராவ மர்தே
முஷித நிகில கேதே மோஹ ஸந்தோஷ ஹே தவ்
ஸ சகித பரி ரம்பே ஸாம் ப்ரதம் -ஸ ஆதரம் -காத ராஷ்யா ஸ்த்யஜதி
யுகல சிந்தாம் அங்கயோ அந்தராத்மா –55–

காமன் -மனத்தில் சிந்திப்பது –
பரபரப்பாக அலைகின்ற கண்களுடன் இவள் நம்மை அணைத்துக் கொள்கிறாளே -இந்த அணைப்பால் இவள் வளைகள் உடைந்தன
ஹாரத்தின் முத்துக்கள் நசுங்கின -இவளுடைய வலிகள் குறைந்தன -இது மோஹனுக்கு மகிழ்வை அளிக்கும்
நாங்கள் இருவரும் இரண்டு சரீரங்கள் என்னும் எண்ணமே எனக்கு மறைந்தது
எங்களுடைய மனம் மற்றும் எங்கள் அந்தர் யாமியான சர்வேஸ்வரனை கூட இவ்விதம் இரண்டாக எண்ணக் கூடுமோ –

காமன் உரத்த குரலில் பிரகாசத்துடன்
தோழியே நீ அச்சம் கொள்ள வேண்டாம் -நீ மஹா மோஹனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவனாகிய எனது மனைவி அல்லவோ
சாந்தம் கொள்வாயாக -நான் கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல
அவை தனது இந்த்ர ஜால வித்யை மூலம் ஒரு ஊரையே தன் வாயாலே விழுங்குவது போலே ஆகும்
அவை வேதங்களை கண் மூடித்தனமாக நம்பியபடி தெருவில் உலவும் ஒரு வழிப்போக்கனுடைய சொற்கள் போலே ஆகும் –

குவ்ருத்தம் இதி கௌக்குடம் வ்ரதம் அதி ஷிபத்பிஸ்ததா
ஸூதா கர சதருது ப்ரப்ருதிபி ஸ்வயம் சரஸ்வலே
நதத் பிரமர பங்க்திகே நமதி கார்மகே மாமகே
விரக்தி க்ருஹ தேஹ லீம் க இஹ தோஹலீ வீக்ஷதே –56-

காமன் கூறுவது -சேவல் ஓன்று தன் பேடையைப் பலாத்காரமாக ஆக்ரமிப்பது போன்ற செயல்களை
சந்திரனும் இந்திரனும் கண்டிக்கிறார்கள்
ஆயினும் அவ்வழி தவறியே அவர்கள் நடக்கிறார்கள்
வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற எனது வில்லானது வளைக்கப்படும் போது
வைராக்யம் என்னும் வீட்டின் அருகில் செல்லக் கூட யார் தான் விரும்புவார்கள் –

காமன் -மஹா பலம் பொருந்திய நம்முடைய மந்திரிகள் ஒரு புறம் இருக்கட்டும்

ப்ரமாதா லஸ்ய நித்ராதி விவித வ்யூஹ விக்ரஹ
ப்ரஜ்ஞா வரண கோராத்மா மோஹ கேந விஜேஷ்யதே –57-

காமன் கூறுவது
பக்தி ஞானம் என்பதை மறைப்பதையே வடிவம் கொண்டவனாகவும்
கவனக்குறைவு சுறுசுறுப்பின்மை உறக்கம் போன்ற வ்யூஹமான பல படைகளைக் கொண்டவன் மோஹன் ஆவான்
இப்படிப்பட்ட அவனை யாரால் வெல்ல இயலும்

ரதி தனக்குள் பேசுகிறாள்
விதி காரணமாக நம்முடைய கணவன் முரணாகப் பேசுகிறார்
அதாவது கேந -யாரால் எதனால் -மோஹனை வெல்ல முடியும்
பின்பு உரத்த குரலில்
மோகனுக்கு மங்களம் உண்டாகட்டும் –

அயி மன்மத பத்தி மா ஸ்ம சபஷீர் நநு மோஹாதீஷு ஸம்ஸ்திதேஷு ஸத் ஸூ
ப்ரக்ருதிம் புருஷ ப்ரபித் ஸமாந பிரதிபத்யதே விரக்திதோ விமுக்தம் –58–

வசந்தன் ரதியிடம் கூறுவது
தோழியே -மன்மதனின் பத்னியே -அச்சம் கொள்ள வேண்டாம்
மோஹன் போன்ற பலரும் உயிருடன் உள்ள போது -புருஷன் என்னும் ஜீவாத்மா
ப்ரக்ருதியை அடைந்து வைராக்யத்தைச் சார்ந்த விடுதலை அடைவான்

இதற்கு மற்ற ஒரு பொருளும் சொல்லலாம்
மோஹன் போன்ற பலரும் இறந்த பின்னர் புருஷனாகிய ஜீவாத்மா தனது தூய்மையான நிலையை அடைந்து
வைராக்யத்தின் துணையுடன் மோக்ஷத்தை அடைவான்

ரதி தனக்குள் கூறுவது
வசந்தனின் இந்தப் பேச்சானது அவன் கூற வருவதற்கு மாறான பொருள் தருவதாகத் தோன்றுகிறது
பின்னர் உரத்த குரலில்
விவேக்குக்கு விவேகம் இல்லையே
அவனுடைய மந்திரிகளாகிய சமன் தமன் இவர்களுக்கும் விவேகம் இல்லையா –
புருஷனாகிய ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை விட்டு அகன்றால் நம்மைப் போன்றே
எந்தவிதமான வேறுபாடும் இன்றி அழிவு அன்றோ உண்டாகும்

காமன் கூறுவது -நீ கூறியது சரியே –
புருஷனாகிய ஜீவாத்மா தனது ஞானம் என்ற கண்ணைக் கொண்டு அனைத்தையும் காண்கிற சாக்ஷியாக உள்ளான்
நம்முடைய மேன்மைகளை இந்தப் பாபிகளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை
ஆகவே நம்முடைய இரண்டு குலங்களும் அழிவதற்கான வழியைக் குறித்து ரஹசியமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்
தங்களுடைய இந்த முயற்சிகள் வீணாகப் போவதை இந்த மூடர்கள் நிச்சயமாக அறிவார்கள்

ப்ரஸூப்தா நபி யுத்தேந ஸூக்ரீவ ஸூபடாநிவ
கர்ம சக்திர நுச் சேத்யா புநருத்தோ த்ஸே தயிஷ்யதி –59–

காமன் கூறுவது -ஸூ க்ரீவனுடைய வானரர்களைப் போன்ற வீழ்ந்த வீரர்களைப் போன்று
மஹா மோஹன் மற்றும் அவனுடைய சேனைகள் அனைவரும்
தங்களுடைய பூர்வ கர்ம வினையின் சக்தியால் எழுவார்கள் —

திரையின் பின்னால் இருந்து
கண்கள் கெட்டுப்போன அவன் யார்
அனைவருடைய அனுகூல்யத்திலேயே நோக்கம் கொண்ட படி உள்ள நம்மை பாபிகள் என்று அழைப்பது யார்
தாழ்ந்த ஒழுக்கம் கொண்டவனே -எங்களுடைய பிறப்புக்கு காரணமாக உள்ளவனை விலங்கி பூட்டி அழிக்கும்
உங்களை அழிப்பதிலும் அவனுடைய துக்கங்கள் அனைத்தையும் நீக்கி அவனுக்குப் பேரானந்தம் அடைய வைப்பதிலும்
அஸூரர்களுடைய குலத்துக்கு விரோதியான பகவானுடைய கருணைக்கு உட்பட்டு நாங்கள் முயல்கிறோம்
அடுத்து உள்ள சொற்கள் உபநிஷத்தில் கூறப்பட்டவை –

ஸ்வாதீன ஸம் சாரண நாட்ய நிரூட வ்ருத்தே
சந்தோஷித ப்ரணத பூமிக யாஸ்ய பும்ஸ
ஸ்தாநே விதாஸ்வதி விபுஸ் ஸ்திர சிஹ்ன மேதம்
க்ரீட நடஸ் ஸ டஸ்ய பகவான் க்ருபயா பரமம் ஸ்வ ஸாம்யம் —-60-

ஒரு நடிகன் போன்று பகவானுடைய நாடக லீலைகளில் பங்கு பெறுகிறான்
அவனது ஆஜ்ஜைக்கு இணங்க ஸம்ஸாரம் என்னும் நாடகத்தில் பல வேடங்களைப் பூணுகிறான்

இறுதியாக சரணாகத்தான் என்னும் பாத்திரத்தை ஏற்று பகவானை மகிழும்படி செய்கிறான்
இப்படிப்பட்ட ஜீவாத்மா பரமபதத்தில் உள்ள போது பரமாத்மாவாகிய தனக்கு மட்டுமே
அசாதாரணமான அடையாளங்கள் செயல்பாடுகளைத் தவிர்ந்து
தன்னை ஒத்த நிலை ஜீவாத்மாவும் அடையும் படி செய்து அருளுகிறார்

ரிபு மதந க்ருதம் யசோ மஹீய பித்ரு பரி ரக்ஷண சம்ம்ருதச்ச தர்ம
அபிமத கட நோத் பவச்ச ஹர்ஷ சபதி விதாஸ்யதி சந்நிதிம் ஸ்வயம் ந –61-

அந்த வேளையில் நம்முடைய விரோதிகளை வென்றதன் விளைவாக நமக்குப் புகழ் கிட்டும்
நம்முடைய தந்தையைக் காப்பாற்றிய கடமையை செய்தவர்கள் ஆவோம்
நாம் எண்ணியது தானே நடந்தது என்பதால் உண்டாகும் மகிழ்ச்சி நம்முடைய இதயங்களில் நிறைந்து நிற்கும் –

காமன் தன் அச்சத்தை மறைத்துக் கொண்டு தன் மனைவியை நோக்கியபடி
பிரியமானவளே மோஹனுடைய விரோதிகளுக்கு அரசனாகிய விவேகன்
தனது மனைவியான ஸூ மேதி யுடன் கூடியவனாக நம்மிடம் வருகிறான் –

முகுலயதி விவித் ஸாம் மோஹ வித் வம்சம் இச்சன்
விம்ருசதி நிகமாந்தான் வீக்ஷதே மோக்ஷ தர்மான்
நிச மயதி ச கீதம் நித்ய போகாந்த பக்த்யா
குண பரிஷத வேஷீ குப்த மந்த்ரோ விவேக –62-

இந்த விவேகம் ஐயங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவனாக உள்ளான்
மோஹனை அழிக்க விருப்பம் கொண்டவனாக வேதாந்தங்களை நன்றாக ஆராய்கிறான்
மோக்ஷ மார்க்கம் கூட்டிச் செல்லும் கர்மங்கள் குறித்துப் படிக்கிறான்
சமநிலை உள்ளவனாய் திரு அஷ்டாக்ஷரத்தை பிறர் அறியாதபடி உச்சரிக்கிறான்
ஸ்ரீ கீதையை பக்தியுடன் எப்போதும் அறிகிறான் –

ப்ரதயங் முகீம் ஸூமதி தீப்தம் இஹ பிரசிந்வந்
ப்ராப்தோதய அப்ய மித ராக பலோ பபந்ந
ஷாம்யந் அஹங்க்ருதி மயீ மவஸோ ஹிமாநீம்
பாஸ்வா நசவ் பஜதி விஷ்ணு பதம் விவேக –62-

உதய ஸூர்யன் தனது கிரணங்களுடன் மேரு நோக்கி வானத்தில் நகர்ந்து பணியை நீக்கி செல்வது போல்
விவேக்கும் தனது மனைவி ஸூ மதியுடன் ஒளியைப் பெருக்கிய படி உள்ளான் –
வேறே பற்றுதல் இல்லாமல் பரமாத்மாவிடம் ஆழ்ந்த பற்றுதலையே வளர்த்து
அஹங்காரத்தைத் தன் வசப்படுத்தி
விஷ்ணுவின் உயர்ந்த திருவடிகளையே நாடியபடி உள்ளான்

காமன் தொடர்ந்து
நம்முடைய விரோதி வரும் பொழுது நாம் இங்கு இருப்பது சரி இல்லை
மேலும் நாம் இப்போது அவனை சந்திக்கும் தருணமும் இல்லை –
நமக்கு இப்போது துணை யாரும் இல்லை
என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்

மிஸ்ர விஷ்கம்பம் ஸம்பூர்ணம் –

——-

அரசன் விவேகனும் அரசி ஸூ மதியும் அரங்கத்தில் வருதல்
விவேகன் தனது மனைவியுடன் மிக சிந்தனையுடன்
பிரியமானவளே முடிவில்லாத வினைகள் என்னும் விஷக் காட்டின் வேராக உள்ளவனும்
கர்வம் கொண்டவனுமாகிய காமனின் பேச்சைக் கேட்டாயா
அனைவருடைய பாபங்களையும் நீக்க முயன்று வரும் நம்மை அவன் பாபி என்று பழித்துக் கூறுகிறான்
அல்லது
பஸ்யதி பரேஷு தோஷான் அஸத அபி ஜன சத அபி நைவ குணான்
விபரீதம் இதம் ஸ்வஸ்மிந் மஹிமா மோஹாஞ் ஜனஸ் யைஷ –63-

விவேகன் கூறுதல்
மற்றவர்கள் இடத்தில் இல்லாத குற்றங்களைக் காண்பதையும்
அவர்கள் இடம் உள்ள நல்லவற்றைக் காணாது இருத்தலையுமே பொதுவாக அனைவரும் செய்கிறார்கள்
ஆனால் அவர்கள் தங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தன்மையை நேர் மாறாகக் கொள்கிறார்கள்
இது அவர்களுடைய கண்களில் தடவப்பட்ட மோகம் என்னும் மையின் மகிமை ஆகும்

ஸூமதி
அனைத்தும் அறிந்தவரே தங்களுடைய முகத்தில் தென்படும் விகாரத்தைக் கூட
மாசு இல்லாத கண்ணாடியின் தோஷமாகவே கூறுவார்கள் அல்லவோ

விவேகன்
நீ உரைப்பது சரியே ஆகும்
நீ எப்போதும் உண்மையை மட்டும் காண்கிறாய்
அவற்றை உள்ளது உள்ளபடி உரைக்கிறாய்
மேலும்

நிர்தூத நிகில தோஷா நிரவதி புருஷார்த்த லம்பந பிரவணா
ஸத் கவி பணிதி இவ த்வம் ஸ குண அலங்கார பாவ ரஸ ஜூஷ்டா –64-

விவேகன் கூறுதல்
ஒரு சிறந்த கவிஞனால் படைக்கப்பட்டதும் -எவ்விதமான தோஷமும் அற்றதும் –
உயர்ந்த புருஷார்த்தத்தை அடையும்படிச் செய்வதில் நோக்கம் என்பதாக உள்ள
கவிதையின் மொழி போன்று நீ உள்ளாய்
அதாவது சிறந்த குணம் அலங்காரங்கள் பாவம் மற்றும் ரஸம் பொருந்தியவளாக நீ உள்ளாய் —

விவேகம் ஸூ மதியிடம்
பிரியமானவளே ஹா -நற் குணங்களில் எந்தவிதமான மாற்றமும் அடையாத மனிதர்களை பீடித்து
அவர்கள் அடையும் துன்பத்தைக் கண்டு ரசிக்கும்
இந்தக் காமம் க்ரோதம் மற்றும் லோபம் போன்றவர்கள் நல்ல வழியில் நடப்பவர்கள் எனக் கூறப் படுகிறார்கள்
ஆனால் நாம் அந்த மனிதனுக்குப் பெரும் பேறு உண்டாக்க எண்ணுகிறோம்
அவனுக்கு அனைத்து உயிர்களுடைய நண்பனாக எப்பொழுதும் திகழ் பவனும்
அனைவரையும் தாபத்த்ரயங்களில் இருந்து காப்பவனும் ஆகிய பகவானுடைய கருணையைப் பெற்றுத்தர முயல்கின்றோம்
இப்படிப்பட்ட நாம் தகாத வழியில் செல்பவர்களாகக் கூறப்படுகிறோம்
மனநிலை குன்றிய இவர்களுடைய பேச்சு எவ்விதமாக உள்ளது
இவர்கள் அனைவரும் பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெரும் பொருட்டு
உன்னுடன் இணைந்து மேற் கொள்ள இருக்கின்ற நோன்பை நோக்குவாயாக –

மஹத் யாரம்பே அஸ்மின் மதுரிபு பதயா ஸம் ப்ருதத் ருதிர்
பஹிஷ் க்ருத்யாராதீந் ஸூ முகி பஹிரந்தச்ச பவத
சமாதா வாயாதா ஷபிதவ் ருஜிதம் ஷேத்ரிண மகம்
பர ப்ராப்தயா தன்யம் பரிணமயிதம் ப்ராப்த நியம —-65-

விவேகன் கூறுதல்
அழகான நெற்றியை யுடையவளே -இந்தப் பெரும் தொடக்கத்தில் மது என்ற அசுரனை அழித்த
பகவானுடைய கருணையால் தூண்டப்பட்டு எனது உள்ளும் புறமும் உள்ள விரோதிகளை
விரட்டிய பின்னர் செய்வது என் என்றால்
பகவானைத் த்யானிப்பதன் மூலமாக அந்தப்புருஷனுடைய அனைத்துப் பாபங்களையும் விலக்கி
அவன் பகவானை அடையும்படி செய்து அவனை மகிழ வைப்பதே ஆகும் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -ஜீவாத்மா என்பவன் தனது இயல்பாகவே எப்போதும் உள்ளவனாக-
தோஷம் அற்றவனாக -ஆனந்தம் நிறைந்தவனாக –
அமைதி நிறைந்தவனாக -தானாகவே தன்னை வெளிப்படுத்த வல்லவனாக –
அனைவருக்கும் இனிமை யானவனாக உள்ளவன் ஆவான்
இப்படிப்பட்ட அவன் மஹா மோஹனால் கர்வம் மற்றும் வெறுப்பு என்பது போன்ற தீயவர்கள் மூலமாக
எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உள்ள
அஹங்காரம் என்னும் காற்றால் கிளர்ந்து எழுகின்ற வினைகள் என்னும் அலைகள் ஓங்குவதால்
பயங்கரமாக உள்ள துன்பம் என்ற சமுத்திரத்தில் எவ்வாறு தள்ளப்பட்டான்

அரசன் –
அன்பானவளே -அனைத்தையும் நுட்பமாகக் காண்பவளே -நாம் நேரடியாகக் காண்பதை எவ்விதம் நிராகரிக்க இயலும்
வேதங்கள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியுமா நீயே காண்பாயாக –

ஸ்வத பிராப்தம் ரூபம் யத் இஹ கில பாவேஷு
தத் அபி த்யஜந்தஸ்தே த்ருஷ்டா நியதி கடித உபாதி வசத
ப்ரக்ருதியா திஷ்டந்தி ஹி உபாதி விகமே தே ச
ஸதசா வநாதி சம்சார புருஷ முப ருந்தே கலாதி ச –66-

விவேகன் கூறுதல்
ஒவ்வொரு வஸ்துவும் தனது இயல்பான தன்மையை விட விதி மூலமாக உண்டாகின்ற சேர்க்கை –
உபாதி -காரணமாக் கை விடுகின்றன
அந்த உபாதியானது மறைந்தவுடன் அவை தங்கள் இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்புகின்றன
இதனைப் போன்றே புருஷனாகிய ஜீவாத்மா எல்லையற்ற காலமாக உபாதியுடன் கூடியவனாக இருந்து
ஒளி வீசாமல் உள்ளான்
தகுந்த வழியால் அந்த உபாதி விலகும் –

ஸூ மதி
உண்மையே ஆகும் -ஆனால் மிகுந்த கருணை கொண்டவனும் மஹா லஷ்மி நாதனுமான
பகவானால் இத்தனை காலமாக மிகவும் கொடியதான துன்பங்களிலே சிக்கித் தவித்தபடி
உள்ள இந்தப் புருஷன் எவ்வாறு நிராகரிக்கப் பட்டான் –

அரசன்
அதை நீ அறியவில்லையா –எல்லை யற்ற காளான்களாகத் தொடர்ந்து வரும் கர்மங்கள்
என்னும் அவித்யையால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழல்கிறான்
தகுந்த காலத்தில் அவன் இதில் இருந்து மீட்கப்படுகிறான்

மித கலஹ கல்ப நா விஷம வ்ருத்தி லீலா தயா
பரி க்ரஹண கௌதுக பிரதித பரா வஸ்ய ப்ரபு
ஸ்வ லஷித ஸமுத் கமே ஸூஹ்ருத லக்ஷணே குத்ர சித்
குண க்ஷதலி பித்ரு மாதுபநிபா திநஸ் பாதிஸ் ந –67-

விவேகம் கூறுதல்
பிரபுவுக்கு -லீலை தயை என்று இரண்டு தேவிமார்கள் உள்ளனர்
இருவருக்கும் இடையே எப்போதும் கலகம் உண்டாகி விரோதம் ஏற்பட்ட படி உள்ளது
ஆகவே தான் செய்யும் செயல்களுக்குத் தன்னை மட்டுமே நம்புவது இல்லை
ஜீவாத்மாவிடம் ஏதேனும் நற்செயல் உள்ளது போன்று காணப் பட்டால் -தோற்ற அளவில் மட்டுமே உள்ளதான
அந்தச் செயலின் விளைவாக அவன் ஜீவாத்மாவுக்கு உதவுகிறான்
பனை ஓலையில் உள்ள புழுவின் மூலமாக அவற்றில் உண்டாகும் துளைகள் எழுத்துக்கள் போலே
தோன்றுமா போலே இதுவும் ஆகும் –

ஸூக துக்க வாஹி நீநாம் வ்யத்யய விநிமய நிவர்த்த நாநர்ஹே
நியத க்ரம ப்ரவாஹே நிபதி தம் உத் ஷிப்ய மோததே தேவ –68–

விவேகம் கூறுதல் -இன்ப துன்பங்கள் என்பவை வெள்ளம் போன்று வருகின்றன -இதில் ஜீவாத்மா விழுகிறான்
இவற்றின் போக்கானது முன்பே தீர்மானிக்கப் பட்டதே ஆகும் -இவற்றை நிறுத்துவது மாற்றுவதோ இயலாது
ஆனால் இவ்விதம் விழுந்தவனை தகுந்த நேரத்தில் பகவான் மேலே உயர்த்தி மகிழும்படி செய்கிறான்

ஸூ மதி -எல்லையற்ற காலமாக இந்த ஜீவாத்மாவால் மோக்ஷம் அடையப்பட வில்லை –
எதிர் காலம் என்பதும் எல்லையற்றதாகவே உள்ளது
இவ்விதம் உள்ளபோது எவ்விதம் யாரால் மோக்ஷம் பெறுவான் என்பதை
எண்ணும் போது எனது இதயம் துடிக்கிறது

அரசன் -தேவி விவேகனின் பத்னியே -தகுந்த பிரமாணங்களையும் நியாயங்களையும்
அறியாதவள் போல் கேட்க்கிறாயே –

கால ஸ்வ பாவ நியதி யத் ருச்சா திஷு வஸ்துஷு
காரணம் கிமி வாத் ரேதி தாபஸை ரபி தர்கிதம்–69-

விவேகன் கூறுகிறான்-அனைத்திற்கும் காரணமாக உள்ள ப்ரஹ்மமானது –
காலமா -இயற்கையா -வினைகளா -தற்செயலாக நேரும் செயல்களா என்பது போன்ற கேள்விகளை
தவங்கள் பல புரிகின்றவர்களே கேட்க்கின்றார்கள் –

விவேகன் -இது மட்டும் உறுதியானது –

கர்ம அவித்யாதி சக்ரே ப்ரதி புருஷம் இஹ அநாதி சித்ர ப்ரவாஹே
தத் தத் காலே விபக்திர் பவதி பஹு விதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல் லப்த ஸ்வா வகாச ப்ரதம குரு க்ருபா க்ருஹ்ய மாண கதாசித்
முக்த ஐஸ்வர்யாந்த சம்பந் நிதி ரிபி பவிதா கச்சித் சித்தம் விபச்சித் –70-

விவேகன் கூறுகிறான்
கர்மங்கள் அஞ்ஞானம் போன்ற பலவும் சக்கரம் போன்று சுழன்றபடி உள்ளன
இவை எல்லையற்ற காலமாக சம்சாரத்தில் உள்ள ஒவ்வொரு புருஷனுக்கும் பிரவாகமாக வருகின்றன
அந்த அந்த கால கட்டத்தில் பூர்வ கர்மங்கள் அந்த அந்த பலன்களை அளிக்கின்றன
இந்தக்கருத்தானது அனைத்து மதங்களினுடைய சித்தாந்தங்களிலும் உள்ளது –
குறிப்பிட்ட பலன் அளிக்கும் நேரத்தில் முதல் ஆச்சார்யனாக உள்ள பகவான் அதற்கான தருணத்தை
எதிர்பார்த்து நின்றவன் போன்று அந்த அந்த ஜீவாத்மாக்களுக்குத் தனது கருணையைப் பொழிகிறான்
அந்த ஜீவாத்மா விவேகம் போன்றவை அடையப்பெற்று முக்தி அளவான செல்வங்களைப் பெறுகிறான் —

விவேகன் -நான் இருக்கின்ற நேரத்தில் ஜீவாத்மாவானது இவ்விதம் மோக்ஷம் பெற்றது ஆகும்

தர்போ தக்ர தச இந்த்ரியாநந மநோ நக் தஞ்சர அதிஷ்டிதே
தேஹே அஸ்மின் பவ ஸிந்துநா பரிகதே தீ நாம் தசாம் ஆஸ்தித
அத்யத்வே ஹநுமத் ஸமேந குருணா ப்ரக்யாபி தார்த்தஸ் புமான்
லங்கா ருத்த வைதேஹ ராஜ தநயான் யாயேந லா லப்யதே –71-

விவேகன் கூறுதல் –மனமானது கர்வம் கொண்ட பத்து தலைகளை யுடைய இவனைப் போன்று
பத்து இந்த்ரியங்களாலே அலைக்கழிக்கப் படுகிறது
இது ஸம்ஸாரம் என்னும் கடலால் சூழப்பட்ட உடலிலே தங்கி உள்ளது
கடலால் சூழப்பட்ட இலங்கையிலே சிறைப்பட்ட வைதேஹ அரசனுடைய புத்ரியான சீதா பிராட்டியைப் போல்
தீனமான நிலையில் ஜீவாத்மா உள்ளது
அவளுடைய இருப்பானாது திருவடியால் உணர்த்தப்பட்டது போல் ஆச்சார்யனால்
இந்த ஜீவாத்மாவுக்கு அனைத்தும் உணர்த்தப்படுகின்றது –
அதன் பின்னர் தெளிவடைந்து ஜீவாத்மா அவனை அடைவது உறுதி என்று உள்ளான் –
விவேகன் மேலும்

பஹுல துரித த்வாரே ப்ராஹ்ம புரே பர ஸம்மத
ஸ்வ மதி கடித ஸ்வா தந்தர்யத்வாத் அயந்த்ரித சேஷ்டித
விஷம ச சிவைர் ஸ்வே ஸ்வே கார்யே விக்ருஹ்ய விக்ருஷ்யதே
நர பதி ரிவ ஷீ போ நாநா விதை அயம் இந்த்ரியை –72-

விவேகன் கூறுவது -ப்ரஹ்மத்துக்கே உரியதான சரீரம் என்னும் நகரத்தில் ஒன்பது வாசல்கள் வழியே
பாபங்கள் உள்ளே செல்கின்றன
இதனால் அந்த நகரத்துள் இருக்கும் ஜீவாத்மா தான் ஸ்வதந்த்ரமானவன் என்று மனதில் எண்ணுகிறான்
இதனாலேயே யாராலும் அடக்க இயலாத பலவற்றையும் செய்கிறான் -பல்வேறு இந்த்ரியங்களால்
பல திக்குகளிலும் அலைக்கப் படுகிறான்
தகாத செயல்கள் கொண்ட அமைச்சர் ஒருவரால் தவறான வழிகளில் நடத்தப்படும் அரசனைப் போல் உள்ளான் –

ஸூ மதி -ஆர்ய புத்ரரே -நெருப்பினால் சூலப்படும் ஒரு வீட்டில் இருப்பதற்கு ஒப்பான நிலையில் உள்ள புருஷன்
தன்னைக் கவனத்துடன் காப்பாற்றிக் கொள்ள மாட்டானோ

ராஜா -விவேகன் -பிரியமானவளே -அனைத்தும் அறிந்தவளே -எல்லையற்றதான ஆசை என்னும் சமுத்ரத்தைக் கடப்பது இயலாத ஒன்றாகும்

ஸ்திரத்ர சவி பக்திமத் த்ரிவித ராக த்ருஸ் யோதயம்
ஸூம் ருஷ்ட மணி பித்திவத் ஸ்வயம அபித்யமாந புமான்
த்ரி யுக்ம குண சில்பநா த்ரி குண தூலிகா தாரிணா
விவிஸ்ய விநிவேசிதம் வஹதி சித்ரம் அத்யத்புதம் –73-

விவேகன் கூறுதல் -எந்தவிதமான களங்கமும் இன்றி காணப்படும் அழகான சுவர் ஓன்று பல சித்ரங்களைக் கொண்டு உள்ளது போன்று
பிரதானம் என்பதில் தனது லீலை என்னும் தூரிகையால் ஆறு குணங்களைக் கொண்ட தெய்வீகமான ஓவியன்
அசைகின்ற மற்றும் அசையாமல் உள்ள சரீரங்களை ஓவியமாகத் தீட்டுகிறான்
அந்த ஓவியங்களை -மூன்று வர்ணங்கள் -ஸத்வம் -வெண்மை ராஜஸம் -சிகப்பு -தாமஸம் -கறுப்பு -கொண்டு அமைக்கிறான்
இவையே மூன்று விதமான ராகங்களாக -செல்வ ஆசை -இன்ப ஆசை -மக்கள் ஆசை -என்று அமைகின்றன
இந்தச் சரீரங்களான சித்தரத்தை இதுவே நான் என்று கொண்டாடியபடியே புருஷன் பிரியாமல் இருக்கிறான் –

ஸூ மதி
இவ்விதம் மனநிலை சரியாக இல்லாதபடி மாறிய தனது கணவனை
அவனுடைய பத்னி புத்தி திருத்த வில்லையா

ராஜா -விவேகன்
பிரியமானவளே -நுட்பமாகப் பேசுபவளே -தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வல்ல
அந்த புத்தியும் உறங்கிய படியே உள்ளாள்

பத்யவ் தூரம் கதவதி ரவவ் பத்னி நீவ ப்ரஸூப்தாம்ல
நாகாரா ஸூ முகி நிப்ருதா வர்த்ததே புத்தி ரம்பா
மாயா யோகான் மலிநி தருசவ் வல்லபே துல்ய சீலா
ராஹு க்ரஸ்தே துஹிந கிரணே நிஷ் ப்ரபா யமி நீவ –74-

விவேகன் கூறுதல்
சூரியன் தனது கணவன் தூரமாகச் செல்ல -தாமரைக் குளமானது உறங்குகிறது
இதே போன்று நமது தாயாகிய புத்தியும் அசையாமல் உறங்குகிறாள்
அழகான நெற்றி கொண்டவளே தனக்கு மிகவும் பிரியமான சந்திரன் ராகுவால் விழுங்கப்படும் போது
இறைவனது ஒளி யற்று உள்ளது
அதனைப் போன்று பிரக்ருதியுடன் சம்பந்தம் கொண்டதால் ஒளி இழந்த கணவனைப் போன்றே புத்தியும் உள்ளாள் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -இந்தப் புருஷனுக்கு அவனுடைய பத்தினியான புத்தி யுடன் உள்ள
இந்த நிலையை வருந்தத்தக்கதாகவே யுள்ளது
இப்படிப்பட்ட புருஷன் இந்தத் துக்கம் நீங்கி மோக்ஷம் அடையும் நிலையை விரித்துக் கூற வேண்டும்

ராஜா -விவேகன்
தேவீ அடுத்தவருடைய நன்மையைக் குறித்து எப்போதும் சிந்தித்தபடி உள்ளவளே
நான் இது பற்றி முன்பு அறிந்தவற்றை நினைவு கூர்ந்து உரைக்கிறேன்

துராஸே தஸ்தேம்நா துரித பரிபாகே ந பவிந
ப்ரமாதீ ஸம்ஸார ப்ரசம ரஹித அயம் ப்ரபவதி
நிரோதே தஸ்யை கா நிரூ பாதிக காருண்ய கடித
ஸ்வ தந்த்ர இச்சா சக்தி ஸ்வயம் உபதிம் ஆஸ்தாய -தாய -ரமதே –75-

விவேகன் கூறுதல்
ஒருக்காலும் விலக்க ஒண்ணாத வினைப்பயனால் சம்சாரம் வருத்துவதாயும்
மேன்மேலும் துக்கம் வளர்க்குமாயுமே இருக்கும்
ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரனுடைய இச்சை -நிர்ஹேதுக கிருபை ஒன்றாலே
நல்ல சூழ்நிலையை உண்டாக்கி நன்மையை உண்டாக்கி மகிழும்

ஸூமதி –
அத்தகைய தகுந்த சூழ்நிலையை உண்டாக்குதல் என்பது என்ன வென்று எனது செவிகளிலே
நான் கேட்கலாம் என்றால் அதனைத் தங்கள் கூற வேண்டும்
ராஜா -விவேகன்
எந்தக்கபடமும் இல்லாமல் பேசுகின்ற பிரியமானவளே
அந்த உண்மையை நான் சுருக்கமாக உரைக்க நீ கேட்ப்பாயாக

மதநமத்ஸர மாந மய புமான் பஹு பிசாச க்ருஹீத இவார்பக
நிகம ஸித்த நரேந்திர நிரீக்ஷயா ணாத் நிபுண பத்திம் அப்யவபத்யதே –76-

விவேகன் கூறுதல் –
பலவிதமான பிசாசுக்கள் இடம் அகப்பட்ட குழந்தை போன்று புருஷனானவன்
கர்வம் கோபம் விருப்பு போன்றவற்றின் பிடியில் சிக்கியுள்ளான்
வேதம் என்னும் உயர்ந்த இடத்தின் மூலம் அனைவராலும் அறியப்படுபவனும்
அனைத்து ஜீவர்களுடைய ஈஸ்வரனாகவும் உள்ள வைத்யனால் நோக்கப்படும் பொழுது நேர் வழிக்குத் திரும்புகிறான் –

அநக தேசிக த்ருஷ்டி ஸூதா ப்லவே விதி வஸாத் உப ஸேதுஷி தேஹிந
விமல போதமுக விவிதா குணா பரிண மந்த்ய பவர்க தாசங்குரா –77-

அதன் பின்னர் அந்தப்புருஷன் எந்தவித தோஷங்களும் அற்ற ஒரு சான்றோனுடைய கடாக்ஷம் என்னும்
அம்ருதத்தில் விதி வசத்தால் மூழ்குகிறான்
அப்போது மோக்ஷம் என்பதற்கான முளைகளான ஞானாதி குணங்கள் உண்டாகின்றன –

ஸ்வாதீநே தர பாத பீதி பருஷ ஸ்வர்வாஸ துர் வசநா
பாச கர்ஷண யந்த்ரணாபி அபித ஷிப் தாத்மந ஷேத்ரிண
நிஷ் ப்ரத்யூஹ விஜ்ரும்பமாண கருணா துக்த அர்ணவே நிர்பரா
பக்தி சேத்ஸ்யதி பாகதேய வசன ப்ராப்யே பர ப்ரஹ்மணி –78-

விவேகன் கூறுதல்
துர்வாசனையால் ஜீவாத்மாஸ அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் படுகிறான்
ஸ்வர்க்கம் கிட்ட வேணும் என்னும் ஆசை உண்டாகிறது
மேலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தனக்குத் தானே எஜமானன் என்னும் நிலையில் இருந்து
கீழே விழுவோம் என்னும் அச்சமும் அவனுக்கு எப்போதும் உண்டாகியபடியே உள்ளது
அப்போது பாக்யத்தால் எந்தவித தடையும் இல்லாமல் பெருகுகின்ற தயைக்குப் பாற்கடலாக உள்ளதும்
நம்மால் அடையப்பட வேண்டியதுமாகிய பர ப்ரஹ்மத்தின் இடம் ஜீவாத்மாவுக்கு பக்தி உண்டாகிறது –

விவேகன் –
இதற்கு இடையில் தன்னிடம் உள்ள அனைத்துச் செல்வங்களையும் தக்ஷிணையாக அளித்து
ஒரு யஜ்ஜம் நடத்தப்பட வேண்டும்

அந்த யஜ்ஜத்தில்
த்வயா ஜூஷ்ட பத்ந்யா பிதி வதிஹ யஷ்டா ஸ்வயமஹம்
விதத்தே சார்த்விஜ்யம் சம தம முகோ அயம் குண கண
அகஸ்மாத் உத்தேச்யோ பவதி பகவன் ஆத்ம ஹவிஷ
பசுர் பத்தோ முக்திம் பஜதி விகலத் கர்ம நிகில –79-

விவேகன் கூறுதல்
எனது தர்ம பத்னியாகிய உன்னுடன் இணைந்து அந்த யஜ்ஜத்தின் எஜமானன் ஆவேன்
சமம் தமம் முதலான குணங்கள் ருத்விக்குகள் ஆவர்
அந்த யஜ்ஜத்தில் எந்தவிதமான பலனும் எதிர்பார்க்கப் படாமல் ஆத்மா வானது
பகவானுக்கு ஹரிர்பாவமாக அளிக்கப் படும்
இதன் விளைவாக வினை என்ற விலங்கு நீங்குகிறது
ஆகவே அந்த யஜ்ஜத்தின் பசுவாகிய ஜீவாத்மா முக்தி அடைகிறான் –

விவேகன் மேலும் -இத்தனையும் நீ அறிய வேண்டும்

ஸ்வ ரக்ஷண பரார்பண க்ஷணிக சத்ரிணா ஷேத்ரிண
ப்ரவர்த்ய க்ருபயா ஸ்திதம் ப்ரபுர பூதுர் வோதயாம்
ஜகத் விபரி வர்தந ப்ரதிந நித்ய சக்தி ஸ்வயம்
ஷி பத்ய புநரங்குரம் துரிதம் அஸ்ய லஷ்மீ பதி –80-

விவேகன் கூறுதல்
தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை பகவானிடம் சமர்ப்பித்தலாகிற பிரபத்தி என்னும் யஜ்ஜத்தை ஒரு நொடியில் செய்யலாம்
அப்படிப்பட்ட ஜீவாத்மாவுக்கு இங்கு உள்ள போது அந்த ஜீவாத்மா உட்பட வேறே யாருக்கும் உண்டாக்காத நிலையை
ஸ்ரீ யபதி தானாகவே தனது கிருபையால் அளிக்கிறான்
இந்த ஜகத்தை அழிக்க வல்ல அவன் அந்த ஜீவாத்மாவின் அனைத்து பாபங்களையும் அழிக்கிறான்

ஸூ மதி
அனைத்தும் அறிந்தவரே -தங்கள் கூறும் இந்த நிலையை ஜீவாத்மா எப்போது அடைகிறான்

விவேகன்
மூன்று உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவளே -பொறுத்துக்க கொள்ள இயலாத கடுமையான துக்கம்
என்னும் சமுத்ரத்திலே மூழ்கியபடி உள்ள ஜீவாத்மாவுக்கு
ஸாஸ்த்ரம் மற்றும் யுக்தி இரண்டுக்கும் ஏற்றபடியாக -கரை ஏறுவதற்கு வழியானது நிச்சயம் உண்டாகும்
என்பதை எண்ணி மகிழ வேண்டும் –
இது மட்டுமே தற்காலத்தில் செய்யக் கூடியதாகும் –

நிரபாய தேசிக நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணா திரோ ஹணீம்
க்ரமச அதிருஹ்ய க்ருதிந சமிந்தத பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே –81- விவேகன் மேலும் கூறுதல்

ஸ்ரீ யபதி -எப்போதும் மறையாத தனது தயை என்னும் ஏணியை வைத்துள்ளான்
தக்க செயல் கொண்ட பாக்யசாலிகள் தங்களுடைய ஆச்சார்யனால்
அந்த ஏணியைக் காண்பிக்கப் படுகிறார்கள்
அவர்கள் படிப்படியாக அதிலே ஏறிச் சென்று தூய்மையான ஸத்வம் மட்டுமே கொண்ட
ஸ்ரீ பரமபதத்தை அடைகிறார்கள்

ஸ்வயம் உப ஸமயந்தீ ஸ்வாமி ந ஸ்வைர லீலாம்
ஸ்வமத மிஹ பஹுநா ஸ்வாது பத்யம் பிரஜா நாம்
நியத மிய மிதா நீம் அந்யதா வா பவித்ரீ
நிரவதி ஸூக ஸித்யை நிஷ் ப்ரகம்பாநு கம்பா –82-விவேகன் மேலும் கூறுதல்

ஜீவாத்மாவைத் தண்டித்தல் என்பதான அவனுடைய லீலைகளைத் தானே தணித்து
தனக்கு விருப்பமானதாகவும்
பிரஜைகளுக்கு நன்மை அளிக்க நல்லதாகவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும்
உள்ளதை தயா தேவி அளிக்கிறாள்
இப்படியாக ஜீவாத்மாவின் அளவற்ற ஸூ கத்துக்கு அவளே காரணமாக இருக்கிறாள் –

விவேகன் மேலும்
அவிரல குணச்சாயா மாயா தமஸ் ப்ரதிரோதி நீ
பரிஹ்ருத ரஜஸ் பங்கா தோஷைர சங்கடிதா த்ரிபி
மதுரிபு தயா மூர்த்திர் திவ்யா நிராக்ருத கண்டகா
வஹதி நிகமான் வர்த்தன்யேஷா புரீம் அபராஜிதாம் –83-

விவேகன் கூறுதல்
இங்கிருந்து ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் அபராஜிதம் என்னும் இறுதியான இடத்துக்கு ஒரு பாதை அமைந்துள்ளது
அது மது என்னும் அசூரனை வதைத்த ஸர்வேஸ்வரனுடைய தயை என்பதே யாகும்
அந்தப் பாதையில் அவனுடைய குணங்கள் நிழலாக உள்ளன
அந்த நிழலானது மாயை என்னும் இருளை விளக்குவதாகும்
அது ரஜஸ் மூலம் உண்டாக்க வல்ல பாபம் என்னும் சேறு இல்லாதது ஆகும்
அதில் மூன்று விதமான துக்கங்கள் இல்லை
முட்கள் போன்ற இடையூறுகள் யாதும் இல்லை

ஸூ மதி
அளவற்ற வினைகள் என்னும் சுமைகளை சுமந்தபடி ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தில் உள்ள
ஜீவாத்மா காப்பாற்றப்படுகிறான் என்னும் இந்தச் சொற்களானவை
குழந்தைகளை மகிழவைக்கும் போலியான சொற்களோ என நான் அச்சம் கொள்கிறேன்

விவேகன்
உள்ளதை உள்ளபடி காண்பவளே நீ தவறான கண்ணோட்டத்தில் நோக்காமல் இருப்பாயாக-
ஸூமதி உண்மையை மட்டும் உரைக்கும் ஸாஸ்த்ரங்கள் தவறாக உரைப்பதைக் கண்டுள்ளாயா-
உனக்கு நான் மேலும் நம்பிக்கை ஊட்டுவேன்

சபே தைஷிடிக்யேந ஸ்வயம் இஹ பவத்யா ச ஸூமதே
த்வயைவ த்ரஷ்டவ்ய ஸ்வபநவிகம உன்மீலித தியா
அஹங்கார க்ராஹ க்ரஹ கதந சாக்ரந்ததநு ப்ருத்
முமுஷா ஸம்ரப்தோ முர மதந ஸங்கல்ப மஹிமா –84-

விவேகன் கூறுதல்
எனக்கு ஸாஸ்த்ரங்களின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் உன் ஆணை வைக்கிறே
ஸூ மதி
நான் கூறும் பகவத் ஸங்கல்பத்தையே நீயே காண இயலும்
உறக்கம் நீங்கிக் கண் வேண்டும்
சரீரத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பு முதலான அஹம் நான் என்பது போன்ற எண்ணங்களே
ஸம்ஸாரத்தில் முதலைகள் ஆகும்
இது பீடித்ததே -என்று கதறியபடி அழைக்க வேண்டும் படியாக ஒருவனுக்கு மோக்ஷத்தில் விருப்பம் ஏற்பட் டால்
முரன் என்னும் அஸூரனை வதைத்த பகவானின் ஸங்கல்ப வேகமானது கண் கூடாக அறியலாம் படி உள்ளது –

விவேகன்
பொதுவாகவே பகவத் ஸங்கல்பமானது தன்னைச் சரணம் புகுந்தவன் விஷயத்தில் தப்பாது
மேலும்

தீநோ த்ருப்யது வாபராத்யது பரம் வ்யாவ்ர்த்ததாம் வா தத
ஸ்வா தவ்ய சரணாகத சாக நத ஸத் பிஸ்ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத ராகவ ரகு வ்யோ மாக்வகப்ரே யஸீ
நாலீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதி பிர்நத்வேஷ கண்டா பத –85-

விவேகன் கூறுதல்
சக்தி நிறைந்தவனைச் சரணம் புகுந்தால் அவன் காப்பாற்றுவான் என்பது பொதுவான ஒன்றாகும்
உடனேயே பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
தாமதம் ஆயினும் பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
குற்றங்களை செய்பவன்
குற்றங்கள் அற்றவன்
என எவ்விதமாக இருந்தாலும் இது பொருந்தும்
இந்தக் கருத்தானது
விசுவாமித்திரர்
புறா
இராமன்
ரகு
நாலீ ஜங்கன்
ப்ருஹஸ்பதி
போன்ற பல உத்தமர்கள் விஷயத்தில் நிலை நாட்டப் பட்டது –

ஸூ மதி –
நான்முகன் முதலான பெரிய தேவதைகளும் அவர்களுடைய பக்தர்களால் மோக்ஷத்திற்காக உபாசிக்கப் படுகிறார்கள்
இவ்வாறு இருக்க ஸ்ரீ யபதியை மட்டுமே மோக்ஷம் அளிப்பவன் என்று ஏன் கூறுகிறார்கள்

ராஜா -விவேகன்
பிரியமானவளே உனது நுட்பமான கேள்வியானது உனது மதி நுட்பத்தை உணர்த்துகிறது
நீ அறியவில்லையா =மது ஸூதனனுடைய மஹாத்ம்யம் அசாதாரணமானதாகும்

புரா வேதஸ் ஸ்தம் வாவித புருஷ ஸ்ருஷ்டே ஸ்திதி மதி
ஸ்திரா பக்தி ஸூதே விபது பரதிம் பும்ஸி பரமே
ததன்யான் அம்யச் சத் அபி லஷித முக்தி ஸூர கணான்
உதன்யாம் ப்ராலே யை ரூப சமயிதும் வாஞ்சதி ஜட

விவேகன் கூறுதல் -அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனும் காப்பவனுமாகிய பரமபுருஷன் இடம் உண்டான நிலையான பக்தி மட்டுமே
நான்முகன் தொடக்கமாக புல் பூண்டு உள்ளிட்ட அனைத்தையும் அவற்றின் ஆபத்துக்களில் நின்றும் விடுவிக்கும்
அவனை விடுத்து மோக்ஷத்தை விரும்பி மற்ற தேவதைகளை அர்ச்சிப்பவன் பனித்துளி கொண்டு தனது தாக்கத்தைத் தீர்க்க முயலும் முட்டாள் ஆகிறான்

விவேகம் -ஓவியத்தில் தீட்டப்பட்ட ஆயிரம் ஸூர்யன்கள் ஒன்றாக நின்றாலும் அவை இருளைப் போக்காது -எனவே

அபத்தவ் விகத சந்திம் அநாதி நித்ரம்
சேதஸ் விநஸ் த்ரி குண சக்தி மயீ த்ரி யாமா
நாதஸ்ய கேவல மாசவ் நரகாந்த கர்த்து
ஸங்கல்ப ஸூர்ய விபவேந ஸமாபநீயா –87-

இடைவிடாமல் எல்லையற்ற காலங்களாக சேதனர்களுக்கு அஞ்ஞாத்தைத் தருவதாக முக்குண மாயம் எனும் சக்தி கொண்ட இரவு உள்ளது
இது நரகாசுரனை அழித்தவனும் அனைத்துக்கும் நாதனான ஸூர்யனுடைய வைபவத்தாலே மட்டுமே விலகும் –

ஸூ மதி
இந்நாளில் உயர்ந்த புருஷன் யார் என்னும் உண்மையை அறியும் விஷயத்தில் தேவர்களும் ரிஷிகளும் கூட தடுமாறியபடியே உள்ளனர்
இவ்விதம் உள்ள போது உம்முடைய பக்தியை எப்படி ஒரே புருஷோத்தமன் இடம் வைக்கிறீர்கள்

விவேகன்
தேவீ அப்படி அல்ல -இந்த முடிவானது ஸ்ம்ருதி மற்றும் புராணங்கள் வாயிலாக உபநிஷத்துக்களை ஆராய்ந்து அறியப்பட்டதாகும்
வேதங்கள் அந்தணர்கள் மற்றும் கேசவன் ஆகியோர் ஒரே வகுப்பினரே ஆவர்

மேயம் விஷ்ணுர் வேத வாதாச்ச மாநம்
மாதாரச்ச ப்ரஹ்மண சத்துவ நிஷ்டா
சித்தம் தோஷாமைகராஸ்யம் ப்ரதீய கீட பிராயைர்
துர் விதக்தை கிம் அந்யை –87-

விவேகன் கூறுதல்

உயர்ந்த புருஷனே விஷ்ணு என அனைவராலும் அறியப்படுகிறான்
இவ்விதம் அறிவதற்கு பிரமாணமாக வேதங்கள் உள்ளன
இந்த உண்மையை அறிபவர்கள் ஸத்வ குணத்தில் எப்போதும் நிலை நிற்கும் அந்தணர்கள் ஆவர்
இதனால் தான் இம்மூவரும் ஒரே வகுப்பினர் எனப்பட்டது
இவ்விதம் உள்ள போது எந்தவிதமான திறனும் அற்ற புழுக்கள் போன்ற மற்றவர்களால் என்ன ஆகப்போகிறது –

சாஸ்த்ராண்ய லோஜ்ய சர்வாண்ய சிதில கதிபிர் யுக்தி வர்கைர் விசார்ய
ஸ்வாந்தர் நிர்தார்ய தத்வம் ஸ்வ புஜமபி மஹத் யுத்தரன் ஸூரி சங்கே
ஸத்யம் ஸத்யம் ச ஸத்யம் புநரிதி கதயன் சாதரம் வேத வாதீ
பாராசர்ய ப்ரமாணம் யதி க இஹ பரஸ் கேசவாதா விரஸ்தி –88 –

விவேகன் கூறுதல் –
பராசரருடைய புத்திரரான வேத வியாசர் அனைத்து வேத சாஸ்திரங்களையும் நன்றாக ஆராய்ந்து அசைக்க இயலாத பழக்க யுக்திகளைக் கொண்டு விசாரித்து
உறுதியான ஒரு முடிவு எடுத்து ஞானிகள் நிறைந்த சபையிலே தனது புஜத்தை உயர்த்தி -ஸத்யம் ஸத்யம் ஸத்யம் -என உரைத்தார் –
இப்படிப்பட்ட வேத வியாசர் அனைத்தையும் அறிந்தவர் என்னும் போது கேசவனைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் உள்ளனர் –

விவேகன் -சான்றோர்கள் செல்லும் வழியே செல்ல வேண்டும் என்று மஹ ரிஷிகள் கூறுவர் -இதனை நீயே இங்கு காணலாம்-

தர்கோ ந ப்ரதிதிஷ்டதி ப்ரபவதி த்ரய்யாபி வையாகுலீ
ஷேபம் யாந்தி மிதஸ் ஷதா ருஷிகிரஸ் ஷு தோக்தய கிம் புந
இத்தம் தத்த்வ வி நிச்சயோ நிதிரிவ ஷிப்தோ குஹாப் யந்தரே
பந்தாநம் து மஹா ஜநஸ்ய விஷ்ணு ப்ரத்யஞ்ச மத் யஞ்சதி –89-

விவேகன் கூறுதல் -தர்க்கம் என்பது தனியாக நிலைத்து நின்று இதனை உரைக்க வல்லது அல்ல –
வேதங்களும் தகுந்த விசாரம் இல்லை என்றால் குழப்பமாக உள்ளன –
ரிஷிகளுடைய வாக்கானது ஒன்றுடன் ஓன்று முரண்பாடாகவே உள்ளன –
இவ்விதம் உள்ள போது சாதாரணமானவர்களுடைய பேச்சு குறித்து என்ன கூறுவது
ஒரு குகைக்குள் மறைந்துள்ள புதையல் போன்று தத்வ ஞானம் மறைந்து உள்ளது –
ஆகவே விஷ்ணுவின் பெருமையை உணர்ந்த பராசரர் நம்மை நல் வழிப்படுத்துகிறார்

விவேகன் கூறுதல் -வியாஸர் -வால்மீகீ -மநு -ப்ருஹஸ்பதி -ஸூகர் -ஸுநகர் போன்ற பல சான்றோர்கள் நமக்கு அந்த வழியைக் காண்பிக்கட்டும்
இவ்விடம் உள்ள பல பிரமாணங்கள் இருக்கட்டும் -நான் மீண்டும் கூறுகிறேன் –

அப ஜந்ம ஜராதிகாம் ஸம்ருத்திம் க்ருபயா சம்முகயன் அசேஷ பும்ஸாம்
பர தைவத பாரமார்த்யவேதீ பரி க்ருஹணாதி பராசர ஸ்வயம் ந –90-

விவேகன் கூறுதல் -பராசரர் தனது கருணை காரணமாக எந்த ஒரு மனிதனையும் விடாமல்
பிறப்பு மற்றும் வயோதிகம் போன்றவை இல்லாத அந்த முழுமையான தத்வத்தைக் கூறட்டும் –
பர தேவதையின் உண்மையை அறிந்த பராசரர் நம்முடைய கையைப் பிடிக்கட்டும் –

ஸூ மதி -தாங்கள் கூறுவதை மறுக்க இயலாது -பல இன்றி ஜீவாத்மாவால் உபநிஷத்துக்கள் திரண்ட கருத்தை அறிய இயலாது
ஆயினும் அவற்றின் உண்மையை அறிய அவன் ஆவலாக இருக்கிறான் –
ஆகவே அனைத்து ஸாஸ்த்ரங்களுடைய ஸாரத்தை தாமதம் இன்றி கூறுபடியாக உங்களை நான் வேண்டுகிறேன்

அரசன் -விவேகன் -நீ எண்ணியது நல்லதே ஆகும் -நான் கூறுகிறேன் –

ஸ்வ ஸங்கல்ப உபக்ந த்ரிவித சித் அசித் வஸ்து விததி
புமர்த்தா நாமேக ஸ்வயம் இஹ சதுர்ணாம் ப்ரஸவ பூ
சுபஸ்த்ரோதோ பாஜாம் ஸ்ருதி பரிஷதாம்
ஸ்ரீ பதிரஸாவ நந்தஸ் ஸிந்தூ நாமுததிரிவ விஸ்ராந்தி விஷய –91-

விவேகன் கூறுதல் -மூன்றுவிதமான சேதனங்களும் -மூன்று விதமான அசேதனங்களும் -ஸுத்த ஸத்வமும்
மஹா லஷ்மியின் பதியுடைய ஸங்கல்பத்தில் அடங்கி நிற்கின்றன
அவன் மட்டுமே நான்கு புருஷார்த்தங்களை அளிக்கிறான்
அனைத்து நதிகளும் சென்று சேரும் சமுத்திரம் போன்று அனைத்து ஸ்ருதிகளும் சென்று கலக்கும் இடமாக அவனே உள்ளான் –

பர பத்மா காந்த ப்ரணிபதநம் அஸ்மின் ஹித தமம்
சுபஸ்தத் ஸங்கல்பச் சுலகயதி ஸம்ஸார ஜலிதம்
ஜடித்யேவம் ப்ரஞ்ஞாம் உப ஐநயதா கேந சித்சவ்
அவித்யா வேதாலீ மதி பததி மந்த்ரேண புருஷ –92-

விவேகன் கூறுதல் -மஹா லஷ்மியின் நாதனே புருஷோத்தமன் ஆவான் –
அவனிடம் செய்யப்படும் ஸரணாகதியே அனைத்திலும் உயர்ந்த நன்மை ஆகும் –
ஸுபமான அவனுடைய ஸங்கல்பமானது ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தை உள்ளங்கை அளவு நீராக்கும்
இப்படிப்பட்ட உயர்ந்த அறிவை அளிக்க வல்ல மந்திரத்தின் -அஷ்டாக்ஷரத்தின் -பலம் மூலமாக
புருஷனானவன் அஞ்ஞானம் என்னும் வேதாளத்தின் பிடியில் சிக்காமல் விரைவில் மீள்வான் –

விவேகன் -பிரியமானவளே -குறைந்த அறிவு கொண்டவர்களுக்கும் கூட மன ஆறுதல் அளிக்க வல்ல வற்றை நான் கூறினேன் -ஆனாலும்

த்ருத நிகம கவச மூடா கஷ்டம் ஸம் ப்ரதி குத்ருஷ்டய கேசித்
சலயந்தி ஸுகதாதீந் ஸ்யா லோபா லம்ப துல்யயா வாசா -93-

விவேகன் கூறுதல் -தவறான பார்வை கொண்ட சிலர் வேதங்களைத் தங்கள் போர்வையாக அணிந்த படி
தம்மை மறைத்துக் கொண்டு பவுத்தர் முதலானவர்களைக் கண்டிப்பது போன்று பாவனை செய்கிறார்கள்
அதாவது -மருமகன் மைத்துனனைக் கண்டிப்பது போன்று போலியாக உள்ளனர் –

விவேகன் -வேதாந்தத்தில் வல்லவர்கள் -இவர்களுக்கான பதில்களை விரிவாக அளித்து உள்ளனர் –
சான்றோர்கள் சுருக்கமான வடிவில் உள்ள பதில்கள் மூலம் விரிவான கருத்துக்களை உரைக்க வல்லவர்கள் அல்லவோ

ஸூ மதி –நீங்கள் சரியாக உரைத்தீர்கள் -ஆனால் திருடர்களால் கைப்பற்றப் பட்ட பசுக்கள் போன்று அவர்களுடைய தவறான கருத்துக்களால்
உபநிஷத்துக்களில் தவறாகப் பொருள் அளிக்கப் படுமோ என்னும் அச்சம் எனது மனதில் உண்டாகிறது –

விவேகன் -அச்சம் கொள்ள வேண்டா
அவிப்லுத பரிக்ரஹ ஸ்ம்ருதி சதைக கண்டீ ஸ்ருதி
ஸ்வ பக்த விகல ஸ்ம்ருதீ ஸ்வ பநத அபி ந ப்ரேஷதே
ஸ்வத ப்ரமித ஸாதிநீ ஸூ த்ருட தர்சு குப்தா ச ஸா
ருணத்தி புநத ப்ரதிஷ்டதி க்ருதர்க கோலாஹலம் –94-

விவேகன் கூறுதல் -எந்த விதமான விவாதமும் இன்றி ஏற்கப்பட்ட மஹரிஷிகளுடைய நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகளுடைய
கருத்துடன் ஒத்துப் போகும் ஸ்ருதியானது தனது பொருளை உணர்த்தும்
வேதங்களுடன் ஒத்துப் போகாத ஸ்ம்ருதிகளுடைய ஆதரவை அவை கனவிலும் எதிர்பார்ப்பது இல்லை –
அந்த வாதங்கள் அனைத்தும் தங்களுடைய விருப்பம் போன்று -எந்தவிதமான அடிப்படையும் இன்றி உரைக்கும் தவறான பொருளாகும்
ஆனால் அனைத்து ஞானங்களையும் உள்ளடக்கிய ஸ்ருதியானது தகுந்த தர்க்கத்தின் துணை யுடன் அந்தக் கருத்துக்களைத் தள்ளுகின்றன –

திரைக்கு பின்னால் இருந்து எழும் குரல்
மூலச்சேதப யோஜ்ஜிதேந மஹதா மோஹேந துர் மதஸா
கம்ஸேந ப்ரபு ருக்ரசேந இவ நஸ் காராக்ருஹ ஸ்தாபித
விக்யா தேந விவேக பூமிபதி நா விச்வே பகாரார்த்திநா
க்ருஷ்ணே நேவ பலோத்தரேண க்ருணிநா முக்தஸ் ஸ்ரியம் ப்ராப்ஸ்யதி –95-

தனது வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளது என தனது தந்தையான உக்ரசேனனை கம்சன் சிறையில் அடைத்தான் –
நம்முடைய யஜமானனாகிய ஜீவாத்மாவை ஸம்ஸாரமாகிய சிறையில் அடைத்தான்
தனது தமையனான பலராமனுடைய உதவியுடன் உக்ரசேனனை கிருஷ்ணன் விடுவித்தான்
இதனைப் போன்றே நம்முடைய ஜீவாத்மாவும் இந்த உலகுக்கு நன்மை செய்யும் அரசனாகிய விவேகனால் விடுவிக்கப் படுவான்
அதன் பின்னர் முக்தர்களுடைய ஐஸ்வர்யத்தை ஜீவாத்மா அடைவான் –

விவேகன் மிகுந்த உவகையுடன் -அதனைக் கேட்டவனாக –

ப்ரியே யாராலும் உண்டாக்கப்படாத வேதங்களின் ஒலி போன்று உண்மையை விளம்புகின்ற
இந்த அசரீரி கூறுவதைக் கேட்டாயா

ஸூமதி -மிகுந்த ஆனந்தம் கொண்டவளாக
எனது எஜமானரே இது தேவர்களுடைய வாக்கு அல்லவோ -இது பொய்யாகாது

விவேகன்
அன்பானவளே உன்னை எனது துணையாகக் கொண்டுள்ளேன்
உனது துணையுடன் வெற்றியானது எனது கைகளிலே வருவது உறுதியாகும் –

ரிபு குண விஜி கீஷா பிந்து லேசஸ் அபி அசவ் மே
மது ஜித நுஜி க்ருஷா வாஹிநீ வர்த்தி தாத்மா
சபலயிது மதீஷ்டே ஸாது சம்ப்லா வயிஷ்யன்
கதி கண பஹு மான்யம் யத்ந ஸந்தான வ்ருக்ஷம் –96–

விவேகன் கூறுவது
எனது விரோதிகளை வெல்ல வேண்டும் என்று எனக்குள்ளே இருக்கும் ஆசையானது இப்பொழுது சிறு துளியாகவே உள்ளது
ஆயினும் அது மது ஸூ தனின் கிருபை என்னும் வெள்ளத்தால் பெருகி
ஸாதுக்களால் கொண்டாடப்படும் மோக்ஷத்திற்கான முயற்சி என்பதான கற்பக மரத்துக்கு என்றும் பாய்ந்த படி இருந்து
நல்ல பயனை அளிப்பதாக இருக்கும் –

———————————————378–

அங்கம் -2-விசாரணை
இவள் ஸூ மதியின் பணிப்பெண் -ஒன்றைச் செய்தல் ஏற்புடையதா ஏற்புடையது ஆகாதா என்னும் ஆய்வு
இவள் ஸ்ரத்தை என்னும் மற்ற ஒரு பணிப் பெண்ணிடம் உரையாடுகிறாள்
தோழியே களைப்பு காரணமாக உனது நெற்றியில் வியர்வைத் துளிகள் காணப்படுகின்றன
தனது கன்றைக் காண ஆவலாக உள்ள பசு போன்று நீ உள்ளாய்

முஹ சந்த சந்திஅ ஸூஹா ஸூஹ ஆ சவி புள்ள மள்ளி ம அரந்த ணிஹா
ணவ ஸோம்ம ஜோவ்வண களிஆ ஸூரி முவ்வ ஹந்தி துஹ ஸே அகணா –98-

———————-380

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி -4-8–ஏறாளும் இறையோனும் -ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 24, 2022

***- ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

 

பதவுரை

ஏறு ஆளும் இறையோனும்

விருஷபவாஹனனான சிவபிரானும்
திசைமுகனும்

நான்முகனும்
திருமகளும்

பெரியபிராட்டியாரும்
கூறு ஆளும்

‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற
தனி உடம்பன்

விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,
அசுரர்களை

அசுரர்களை
குலம் குலம் ஆ

கூட்டங் கூட்டமாக
நீறு ஆகும்படி ஆக

சுடநீறாகி யொழியும்படியாக
நிருமித்து

ஸங்கல்பித்து

(அவ்வளவேயன்றிக்கே)

படை தொட்ட

ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த
மாறு ஆளன்

எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
மணி மாமை

அழகிய நிறத்தில்
குறைவு இலம்

அபேஷையுடையோமல்லோம்.

ஆரம்பிக்கும்போதே “ஏறாளுமிறையோன் கூறாளாந் தனியுடம்பன்” என்றது

ஒரு தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிவாதே! என்ற வருத்தத்தைக் காட்டுமென்க.

“வேதாத்மா விஹகேச்வர:” என்கிறபடியே வேதஸ்வரூபியான பக்ஷிராஜனை  வாஹநமாகக்கொண்ட எம்பெருமான்முன்னே

மூடஜந்துவானவொரு எருதை வாஹநமாகக்கொண்டு திரிகின்ற உருத்திரனும், நான்முகனும், ஸ்ரீ மஹாலக்ஷ்;மியும்

ஆகிய இவர்கள் கூறிட்டு ஆளும்படி அத்விதீயமான திருமேனி படைத்த பெருமான் என்றது-அ

வனுடைய ஸௌசீல்யமென்னும் மஹாகுணத்தை யநுபவித்துப் பேசினபடி.

“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம் எம்மாவியீரும்” என்கிறார் மேல் ஒன்பதாம் பத்திலும்.

அங்கு உரைத்ததெல்லாம் இங்கும் அறியத் தக்கது.

குலங்குமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட = சீலகுணம் சொல்லிற்றுகீழ்;

வீர்யகுணம் சொல்லுகிறது இதனால்.

தான் நினைத்தால் விரோதி வர்க்கங்களைக் கிழங்கறக் களைந்து தொலைப்பதில் ஓர் அருமை யுண்டோ?

சக்தி யுக்தன் உபேக்ஷித்தால் உயிர்தரிக்க வழியுண்டோவென்கை.

நிருமித்து என்றது-ஸங்கல்பித்து என்றபடி.

ஜகத் ஸ்ருஷ்டி முதலிய அரிய பெரிய தொழில்களை யெல்லாம் ஸங்கல்ப மாத்ரத்தாலே செய்து போருகின்றவன்

பாகவதவிரோதிகளான அசுரர்களை ஸங்கல்ப மாத்ரத்தாலே தொலைத்திடாமல் படைதொட்டு நீறாக்குகின்றனனாம்;

இஃது ஏன்? என்னில்; “ஈச்வரன் அவதரித்துப்; பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்ற ஸ்ரீவசந பூஷண திவ்ய ஸூக்தி அறியத்தக்கது.

இங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-“ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன், தன்னை யழிய மாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபங்களான அதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்த தமரான நஞ்சீயரருளிச் செய்வரென்கை”

மாறாளன் = ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாகக் கொண்டு அவர்களோடு மாறுபட்டிருப்பவன் என்பது பரம தாற்பரியம்.

கவராத மணிமாமை-அப்படிப்பட்ட பெருமான் ஓடிவந்து மேல் விழுந்தாலன்றோ இவ்வழகிய நிறம் எனக்கு உத்யேச்யமாவது; அல்லாதபோது இது எனக்கு ஹேயமேயாகும்.  இந்த நிறமில்லையென்று நான் அழுகிறேனோவென்கை.

குறைவு என்பதற்கு லக்ஷ்ணையால் அபேக்ஷிதம் என்று பொருளாகும்.

குறைவிலும்-அபேக்ஷை யுடையோமல்லோம்; வேண்டியதில்லை என்றவாறு.

—————-

***-பிராட்டியோடே கூடியிருக்குமழகைக் காட்டி என்னை யடிமை கொண்டவன்  விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள்.

குற்றங்களையும் நற்றமாக உபபாதித்து அருள் புரிவிக்கின்ற பெரிய பிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே

என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத் தான் ப்ரயோஜனம் என்?  என்கிறாள்.

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

பதவுரை

மணி மாமை குறைவு இல்லா

அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற
மலர்மாதர்

பூமகளான பெரியபிராட்டியார்
உறை

நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பன்

திருமார்பையுடையவனும்
அணிமானம் தட வரை தோள்

அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும்
அடல் ஆழி தடகையன்

தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும்
பணி மானம் பிழையாமே

கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி
அடியேனை

அடியேனை
பணிகொண்ட

கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும்
மணி மாயன்

நீலமணிவண்ணனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
மட நெஞ்சால் குறைவு இலம்

விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல்.

 

“மணிமாமை குறைவிலமே” என்று நான் வெறுத்ததுபோலே வெறுக்கவேண்டாமல் நித்ய  ஸம்ச்லேஷம் பெற்றிருக்கிறவளும்,

புஷ்பத்தில் பரிமளத்தையே வடிவாக வகுத்தாற்போலே ஸௌகுமார்யத்தில் சிறந்திருக்கிறவளுமான பெரியபிராட்டி

நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பையுடையவனும், அழகிய பருத்த திருத்தோள்களையுடையவனும்,

பிராட்டியும் தானுமான சேர்த்திக்கு அஸ்தாநே பய ஸங்கை பண்ணி மங்களாசாஸந பரனாயிருக்கும் திருவாழி யாழ்வானைக் கையிலேந்தினவனும்,

இளைய பெருமாளை அடிமை கொண்டாப்போலே ஏற்கனவே என்னையுமடிமைகொண்டவனும்,

நீலமணிபோன்றழகிய வடிவுபடைத்தவனுமான பெருமான் விரும்பாத நெஞ்சு எனக்கும்வேண்டா.

பணிமானம் பிழையாமே என்றவிடத்து ஒரு ஜதிஹ்யம்:-

எம்பெருமானார் மடத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, அவர்களுக்குத் தீர்த்தம் பரிமாறுகின்ற கிடாம்பியாச்சான்

நேரே நின்று பரிமாறாமல் ஒரு பக்கமாயிருந்து பரிமாறினாராம்;  அதைக் கடாக்ஷித்த எம்பெருமானார் ஓடிவந்து முதுகிலே யடித்து

‘உடோஇ இப்படியா பரிமாறுவது? நேரேநின்றன்றோ பரிமாறவேணும்’ என்று சிக்ஷிக்க,

அப்போது ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்டருளிற்றே!” என்று உகந்தாராம்.

ஆழ்வார் தாம் செய்து பொருகிற வாசிக கைங்கர்யத்தைப்பற்ற “பணிமானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட” என்கிறாரென்றுணர்க.

“கவராத மடநெஞ்சால் குறைவிலமே” என்ற விடத்தில் நஞ்சீயர் அருளிச்செய்வராம்; *கோவைவாயாளென்கிற திருவாய்மொழியில் ‘பூசுஞ்சாந்து என்னெஞ்சமே’ என்னும்படி அப்போது அப்படி விரும்பினவன் இன்று இப்படி உபேக்ஷிக்கையாலே, நாயகன் தாமதித்து வந்தானென்று அவன் முன்னிலையில் சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே என்னெஞ்சு எனக்கு வேண்டா வென்கிறாள் என்று.

————————-

***- (மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.

மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

பதவுரை

மடநெஞ்சால் குறைவு இல்லா தாய் மகள் செய்த ஒரு பேய்ச்சி

நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட
தாய் மகள் செய்த

யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட
ஒரு பேய்ச்சி

பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய
விடம் நஞ்சம்

கொடிய விஷம்பொருந்திய
முலை

முலையை
சுவைத்த

உறிஞ்சியுண்டவனும்
மிகு ஞானம் சிறு குழவி

மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்
படம் நாகம்அணைகிடந்த

படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்
பரு வரை தோள்

பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்
பரம்புருடன்

புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்
நெடு மாயன்

எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
நிறைவினால் குறைவு இலம்

அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.

பூதனையென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து

அங்குத் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீக்ருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கொல்ல முயல,

பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே

அவளுயிரையும் உறிஞ்சி அவளை முடித்திட்டனன் என்கிற வரலாறு முன்னடிகட்கு அறியத் தக்கது.

ஆஸூர ப்ரக்ருதியான பூதனைக்கு “மடநெஞ்சால் குறைவில்லா” என்று விசேஷணமிட்டது ஏன்? என்னில்;

அப்பூதனை தன்னுருவத்தை மறைத்து யசோதைப் பிராட்டிபோல் பாவனை காட்டி வந்தாளாகையாலே தாய்போலப் பரிவை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றவாறு.

“பெறற்தாய்போல் வந்தபேச்சி பெருமுலையூடு உயிரை வற்றவாங்கியுண்டவாயன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

பூதத்தாழ்வாரும் “மகனாகக்கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, அகனாரவுண்பனென்றுண்டு, மகனைத் தாய் தேறாதவண்ணம் திருத்தினாய்” என்றார்.

(இதன் கருத்து:-நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்து உன்னைக ;கொல்ல வந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி உன்னை வாரி யெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனை காட்டி அம்முலையைச் சுவைத்துண்பவன்போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்.   அதுமுதலாக உனது மெய்த் தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று; ‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத் துணுக்கென்று அவன் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றவாறு.)

செய்தொரு என்றிவிடத்தில் தொகுத்தல் விகாரம்; ‘செய்தவொரு’ எனவிரியும்.

விடநஞ்ச முலைசுவைத்த-விஷம் என்றும் நஞ்சம் என்றும் பர்யாயமாயிருக்க, இரண்டு சொற்களையும் சேர்த்துச் சொன்னதனால் விஷத்தின் கொடுமை காட்டப்பட்டதாகும்.   நாட்டில் விஷங்களெல்லாம் அம்ருதம் என்னலாம்படியான விஷம் என்பர்.

மிகுஞானச் சிறுகுழவி=பாகவதர்கள் சிறுமாமனிசர் என்று பெயர் பெற்றது போலப் பகவானும் மிகுஞானச் சிறுகுழவி யென்று பெயர் பெற்றனாயிற்று. ஸர்வஜ்ஞசிசு என்றபடி.

வயிறாரப் பாலுண்ட படியாலே குழந்தைக்குப் படுக்கை தேட்டமாயிற்று; படுத்துக் கொண்டது என்கிறார் போலும் படநாகத்தணைக்கிடந்த என்பதனால்.

நிறைவினால் குறைவிலம்–நிறைவு என்பது பூர்த்தி; இங்கு ஸ்த்ரீத்வ பூர்த்தியைச் சொல்லுகிறது. அதாவது அடக்கம்.

எம்பெருமானாகவே வந்து திருவுள்ளம் பற்றுவனென்று எண்ணி இதுவரை அடக்கத்தோடிருந்தேன்;

இனி அதை விட்டுத் தொலைக்க வேண்டியதே போலும் என்றவாறு.

————–

***- நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

பதவுரை

நிறைவினால் குறைவு இல்லா

குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்
நெடு பணை தோள்

நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்
மடம்

அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான
பின்னை

நப்பின்னையினுடைய
முலை அணைவான்

திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக

(மணப்பதற்காக)

பொறையினால்

வருத்தங்களைப் பொறுத்திருந்து
பொரு விடை ஏழ் அடாத்து உகந்த

கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும்
கறையின் ஆர் துவர் உடுக்கை

(நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும்
கடையா

பால்கறக்கும் முங்கிற்குழாயையும்
கழிகோல்

கையிலேஉடையவனும்
சறையினார்

தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
தளிர்நிறத்தால் குறைவு இலம்

தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம்

கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ஸமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருமவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸூராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் எழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அவளை மணஞ்செய்து கொண்டானென்றவரலாறு முன்னடிகட்கு அறியத்தக்கது.

பொறையினால்=நப்பின்னையை எப்படியாவது பெற்றுவிட வேணுமென்கிற ஆசையினால், பொறுக்கவொண்ணாத வ்யஸநங்களையும் பொறுத்துக்கொண்டமை தெரிவித்தவாறு.

“எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட வித்தை அவள் முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்திருந்தான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க.

பெரியதிருமொழியில் “மின்னினன்ன நுண்மருங்கல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம்” என்றவிடத்து வியாக்கியானத்தில்-“கருமாறிபாய்ந்தும் அணையவேண்டுமாய்த்து நப்பின்னைப் பிராட்டியின் வடிவழகு” என்றருளிச் செய்ததும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

கருமாறிபாய்த வென்பது, கச்சிமாநகரில் காமாகூஷியம்மனாலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களிடையே உயரத்தில் நின்றும் குதிப்பதாம்.

பண்டைக் காலத்தில் ஏதேனும் இஷ்ட ஸித்தி பெற வேண்டுவார் இவ்வருந்தொழிலை வெகு சாதுர்யமாகச் செய்து அபாமொன்றுமின்றியே உயிர்தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர்.

மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்களென்றால் இதனால், அவர்கள் பெறவிரும்பியே வஸ்து மிகச்சிறந்ததென்பது விளங்குமன்றோ.

அப்படியே நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்ததாகும் இவ்வாக்கியம்.

கறையினார் துவருடுக்கை இத்யாதி. “ஆநிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட” என்கிறபடியே ஸ்ரீகோபால க்ருஷ்ணன் காடுகளிலே திரியுங்கால் கொள்ளுங் கோலம் இவ்வடியில் வெகு அழகாக வருணிக்கப்படுகிறது.

பலபல காட்டுப்பழங்களைப் பறித்துத் துணியிலே கட்டிக்கொண்டு தின்பனாதலால் கறையினார்துவருடுக்கை எனப்பட்டது.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“இடையர் காட்டுக்குப் போம்போது முள்கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது. ……காட்டில் பழங்களைப் பறித்திடுகையாலே கறை மிக்கிருக்கும்; அத்தாலே கறை மிக்க துவராயிற்று உடுக்கை.”

கடையாவின கழிகோல்-கடையாவோடு சேர்ந்த கழிகோல் என்றபடியாய் கடை யாவும் கழிகோலும் என்றதாம்.

பால் கறப்பதற்குக் கொள்ளும் மூங்கிற் குழாய்ப்பாத்திரம் கடையா எனப்பெயர் பெறும்.

கழிகோல்-ஸ்வாதீனப்படாத பசுக்களை நியமிப்பதற்காக வைத்துக் கொள்ளும் கோல் அன்றிக்கே, முன்னணைக் கன்று பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்கு, சொறுக்கோலென்று அதன் மூஞ்சியிலே கட்டி விடுவர்கள்;–அதைச் சொன்னதாகவுமாமம.

தங்களக்கென்று ஓர் இருப்பிடமில்லாத ஸந்நியாஸிகள் தங்களுடைய பிஷா பாத்திரமான சிக்கம் முதலானவற்றைக் கையோடே கொண்டிருக்குமாபோலே இடைச்சாதியில் மெய்ப்பாடனான கண்ணபிரான் கடையாவும் கழிகோலும் கையிலே கொண்டு திரிவானாயிற்று.

சறையினார்=இடையர்கள் அரையிலே கட்டிக்கொள்வதொரு மணியுமுண்டு; சறைமணியென்று அதற்குப்பெயர்.  “இடையர் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த த்வனி வழியே பசுக்களெல்லாம் ஒடி வரும் படியாயிருப்பதொன்று”.  என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் காண்க.

அந்த மணியையடையவன் என்கை. அன்றிக்கே, சறை என்று தாழ்வு;

இடக் கை வலக்கையறியப் பெறாமே தாழ்ந்த இடைக்குலத்திலே பிறந்தவன் என்றதாகவுமாம்.

அன்றிக்கே, சறையென்று சறாம்பியிருக்கையாய், உடம்பைப் பேணாதிருக்கிறவன் என்றதாகவுமாம்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-

“அல்லாத இடையர் விஷூஅயந ஸங்க்ரமணங்களுக்கு உடம்பிருக்கத் தலை குளித்தல் உடம்பிலே துளிநீர் ஏறிட்டுக் கொள்ளுதல் செய்வீர்களாகில், இவனுக்கு அது செய்யவும் அவஸரமற்றிருக்குமாயிற்று பசுக்களின் பி;ன்னே திரிகையாலே. -ரக்ஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைக்கைக் காயிற்று இவள் ஆசைப் படுகிறது.”

ஸ்ரீராமாயண-அயோத்யா காண்டத்தில், பட்டாபிஷேகார்த்தமான சில நியமங்களோடே கூடியிருக்கின்ற ஸ்ரீராமபிரானைக் குறித்துப் பிராட்டி யருளிச் செய்ததான “…. = தீகூஷிதம் வ்ரத ஸம்பந்நம் வராஜிநதரம் சுசிம், குரங்கச்ருங்கபாணிஞ் ச பச்யந்தீ த்வா பஜாம்ய ஹம்.”  என்கிற ச்லோகத்தை நம்பிள்ளை இங்கு ஈட்டில் வியாக்கியானித்தருளுமழகு வாசா மகோசரம். ரஸிகர்கள் விரும்பி நோக்கத்தக்கது.

—————–

***- (தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

பதவுரை

தளிர் நிறத்தால் குறைவு இல்லா

தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்
தனி சிறையில் விளிப்புற்ற

தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்
கிளி மொழியாள் காரணம்; ஆ

கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக
கிளர் அரக்கன் நகர் எரித்த

செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்

தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்
கடல் ஞாலத்து

கடல்சூழ்ந்த மண்ணுலகில்
அளிமிக்கான்

மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
அறிவினால் குறைவு இலம்

அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.

ஸீதாபிராட்டியைக் குறிக்க வேண்டுமிவ்விடத்தில் தனிச் சிறையில் விளப்பற்ற என்றருளிச்செய்தது

அப்பிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற பிரபாவாதிஸயத்தை வெளியிடுதற்கேயாம்.

தேவதேவ திவ்ய மஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதே

தேவ ஸ்த்ரீகளின் சிறையை விடுக்கைக்காகப் பிராட்டி தான் சிறை யிருந்தது கருணையின் மிகுதியாலாகுமத்தனை.

குழந்தை கிணற்றில் விழுந்தால் உடன் குதித்தெடுக்கும் தாயைப்போலே,

இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானுமொக்க வந்த பிறந்து இவர்கள் பட்டதையெல்லாம் தானும் பட்டு ரகூஷித்தருளுகையாலே

நிருபாதிகமான மாத்ருத்வமும் வாதஸல்யமும் இச்சிறையிருப்பினால் விளங்குமென்பர்.

ஆச்ரிதரான தேவர்களுடைய ஸ்த்ரீகளின் சிறையை விடுவிக்கைக்காகத்தன் அநுக்ரஹத்தாலே

தானே வலியச் செய்துகொண்டதாகையாலே பிராட்டிக்குச் சிறையிருப்பு ஏற்றத்திற்கு உறுப்பாமித்தனை.

உலகத்தவர்கட்குக் கர்ம நிபந்தனமாக நேர்கின்ற சிறையிருப்பே ஹேயமாகும்.

பிள்ளை லோகசார்யரும் ஸ்ரீ வசநபூஷணத்தில் “இதிஹாஸ ச்ரேஷ்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றம் சொல்லுகிறது” என்றருளிச்செய்தது இவ்வாழ்ர்ர் பாசுரத்தை அடியொற்றியேயாம்.

விளப்புற்ற என்றது, ப்ரஸித்திபெற்ற என்றபடி.

பிராட்டியை இலங்கையிற் கண்டு பெருமாளிடம் சென்ற அனுமன்

“விற்பெருந்தடந்தோள் வீர! வீங்குநீரிலங்கை வெற்பில், நற்பெருந்தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லன், இப்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும் கற்பெனப்படுவதொன்றுங் களிநடம் புரியக்கண்டேன்” (கம்பராமாயணம்) என்றனன்.

இப்படிப்பட்ட பலவகை ப்ரஸித்திகள் இங்கு விவகூஷிதம்.

“மதுரா மதுராலாபா” என்று ஸ்ரீராமபிரானும் வாய்வெருவும்படியான பேச்சினிமைபெற்றவளாதலால் கிளிமொழியாள் எனப்பட்டது.

(நகரொரித்த-கமழ்முடியன்) இராவணனைக் கொன்று லங்கைச்வர்யத்தை விபீஷணனுக்காக்கினபின் தன்னுடைய முடிதரிக்கப்பெற்றதுபோலும். “…. = அபிஷிச் ச லங்கார்ம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வா: ப்ரமுமோதஹ.” என்ற வான்மீகி வசனமுங் காண்க.

அடியவர் முடிசூடப்பெறுவது தன் பேறாயிருக்கை.

கடல் ஞாலத்து அளிமிக்கான் = இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன் என்கை.

பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.

‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி காண்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?

“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு;  என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-என்பதும் ஸித்தாந்தமாகிறதிங்கு.

—————

***-தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத்

தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

பதவுரை

அறிவினால் குறைவு இல்லா

‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத
அகல் ஞாலத்தவர் அறிய

விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக
நெறி எல்லாம்

(கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்
எடுத்து உரைத்த

ஸாரமாகவெடுத்தருளிச்செய்த
நிறை ஞானம்

பரிபூர்ண ஞானத்தையுடைய
ஒரு மூர்த்தி

விலக்ஷணஸ்வாமியாய்,
குறிய மாண்உருஆகி

வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய்
கொடு கோளால்

(மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால்
நிலம் கொண்ட

பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட
கிறி

உபாஜ்ஞனான
அம்மான்

எம்பெருமான்
கவராத

விரும்பாத
கிளர் ஒளியால் குறைவு இலம்

மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.

“அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர்” என்பதற்கு அறிவினால் பரிபூர்ணர்களான இவ்வுலகத்தவர்கள்’ என்று பொருளன்று.

‘நமக்கு அறிவு இல்லையே!’ என்று குறைபட அறியாதவர்கள் என்றபடி.

‘நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவர்கள்;

அறிவு இல்லையே’ என்றுமாத்திரம் குறைவுபடுவதில்லை ஸம்ஸாரிகள்.

இங்கே நம்பிள்ளையீடு;-“நாட்டார் அந்ந பாநாதிகறெல்லாவற்றாலும் கார்யமுடையராயருப்பார்களிறே; அறிவொன்றிலுமாயிற்று குறைவுபடவறியாதது.  அறிவால் கார்யமின்றிக்கேயிருப்பாராயிற்று.

பகவத்கீதை அர்ஜூநனை நோக்கி அவதரித்ததாயினும், அவனை ஒரு வியாஜமாக நிறுத்தி அஸ்மதாதிகளுக்குமாக அது அருளிச் செய்யப்பட்டதாகையாலே “அகல்ஞாலத்தவரறிய நெறியெல்லாமெடுத்துரைத்த” என்றார்.

கர்மஜ்ஞான பக்திப்ரபத்திகளும், அவதாராஹஸ்யஜ்ஞானம், புருஷோததமவித்யை முதலானவைகளுமான உபாயங்களெல்லாவற்றையும் திருவுள்ளம்பற்றி “நெறியெல்லாம்” என்கிறார்.

(குறியமாணுருவாகி இத்யாதி,) உபதேசத்தாலே திருந்தாதாரை வடிவழகாலே திருத்துவதொருமுறை உண்டாதலால் அது இங்கு விவகூஷிதம்.

கொடுங்கோள்=கோள் என்று ப்ரதிக்ரஹத்தைச் சொல்லுகிறது; முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.

கொடிய கோளாவது கடினமான ப்ரதிக்ரஹம், சிறிய காலைக் காட்டிப் பெரிய காலாலே கொண்ட வஞ்சனையைச் சொன்னபடி.

கொடுங்கோளால் நிலங்கொண்ட என்ற இவ்விடத்து “… ஸ்ரீகஸ்த்வம் ப்ரஹ்மந்! அபூர்வ: க்வ ச தவ வஸதி:  யாகிலா ப்ரஹ்மஸ்ருஷடி: கஸ் தே த்ராதாஸ்தி அநாத: க்வ ச தவ ஜநக: நைவதாதம் ஸ்மராமி, கிம் தே அபீஷ்டம் ததாநி, த்ரிபதபரிமிதா பூமி: அத்யல்பமேதத், த்ரைலோக்யம் பாவகர்ப்பம் பலமிதி நிகதந் வாமநோ வஸ் ஸ பாயாத்.” என்கிற ச்லோகம் அநுஸந்திக்கத்தகும்.

இது மாவலிக்கும் வாமநமூர்த்திக்கும் ஸம்பாஷயைர்ன ச்லோகம். இதன் மிகவினிய பொருளைக் கேண்மின்-;

மாவலி:-(ஹே ப்ரஹ்மந்! த்வம் க:?) ப்ராஹ்மணகுமாரனே! நீ யாவன்? என்று கேட்க;

வாமனன்:-(அபூர்வ) என்கிறான். இதற்கு இரண்டு பொருள்; இதுவரையில் ஒரு நாளும் நான் இரப்பாளனாக வந்தவனல்லேன் என்றும் ஒருபொருள்: “….” என்கிற வ்யுத்பத்தியினால் ‘எல்லார்க்கும் முற்பட்டவன் நான்’ என்பது மற்றொரு பொருள்.

மாவலி:-(தவ வஸதி: க்வ) உனது இருப்பிடம் யாது? என்று கேட்க,

வாமனன்:-(யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி:-ஸா மம வஸதி:) என்கிறான். யாசகனாகையாலே பிரமன் படைத்த உலகமெங்கும் திரிபவன் நான் என்பது ஒருபொருள். கருதரியவுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையுமொரு தனிநாயகனாயிருப்பவன் யான் என்பது மற்றொரு பொருள்.

மாவலி:-(தே த்ராதா க:?) நீ யாருடைய ஸம்ரக்ஷணையில் இருந்து வருகிறாய்? என்று கேட்க,

வாமனன்:-(அநாதா) என்கிறான், எனக்கு யாரும் நாதனில்லை என்கை.  புகலற்றுத் திரிகிறனென்பதும், உலகுக்கெல்லாம் நானே நானாதலால் எனக்கு யாரும் நாதரில்லை என்பதும் கருத்து.

மாவலி:-(தவ  ஜநக: க்வ) உன்னுடைய தகப்பனார் எங்கே? என்று கேட்க;

வாமனன்:-(தாதம் நைவ ஸ்மராமி) என்கிறான்.  தகப்பனார் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை யென்கிறவிது மிகவும் சாதுர்யமான பேச்சு.  மிக்க இளம்பிராயத்திலேயே தகப்பனாரை யிழந்துவிட்டேனென்பதும், உலகுக்கெல்லாம் நானே பிதாவாகையால் எனக்கொரு பிதா இருக்க நியாயமில்லையென்பதும் கருத்து.

மாவலி:-(தே கிம் அபீஷ்டம் ததாநி?) உனக்கு நான் கொடுக்கவேண்டியதாக நீ விரும்பும் பொருள் என்? என்று கேட்க;

வாமனன்:-(த்ரிபதபரிமிதாபூமி:) என்றான்; என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் வேண்டுமத்தனை யென்கை.

இப்படிப்பட்ட வாக் சாதுர்யத்தை நினைத்துக் கொடுங்கோளால் நிலங்கொண்ட என்றதாகவுமாம்.

கிறி-உபாயம்; அவன் தரும் விரகு அறிந்து வாங்கவல்ல பெருவிரகன் என்கை.

இப்படிப்பட்ட பெருமான் விரும்பாத லாவண்யத்தில் எனக்கு அபேக்ஷயில்லை யென்றாளாயிற்று.

——————

***-ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

பதவுரை

கிளர்ஒளியால் குறைவு இல்லா

கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற
அரி உரு ஆய்

நரசிங்கமூர்த்தியாய்
கிளர்ந்து எழுந்து

சீறிக்கொண்டு தோன்றி,
கிளர் ஒளிய இரணியனது

மிக்கதேக பொருந்திய இரணியனுடைய
அகல் மார்பம்

விசாலமான மார்பை
கிழித்து உகந்த

இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும்,
வளர் ஒளிய

வளர்கின்ற ஜ்வாலையையுடைய
கனல்

நெருப்புப் போலேயிருக்கிற
ஆழி

சக்கரத்தையும்
வலம்புரியன்

சங்கையுமுடையவனும்,
நீலம் மணி வளர் ஒளியான்

நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான்
கவராத

விரும்பாத
வரி வளையால் குறைவு இலம்

அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம்.

கிளர்ந்த வொளி குறைவின்றிக்கேயிருக்கிற நரஸிம்ஹமூர்த்தியாய்ச் சீறிக்கொண்டு தோற்றி

இரணியனுடைய அகன்ற மார்வைக் கிழித்து ‘சிறுக்கனுடைய விரோதி தொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள மூவந்தவன்.

வளரொளிய கனலாழி வலம்புரியன்-இரணியனது உடல் நலஸிம்ஹனுடைய திருநகருங்களுக்கே இரைபோரப்

பெறாமையாலே திவ்யாயுதங்களுக்கு இங்குக் காரியமேயில்லையாயிற்று:

‘இங்கு நமக்கு ஒன்றும் இரைகிடைக்கவில்லையே!’ என்கிற சீற்றத்தினால் சங்கும் சக்கரமும் வயிறெரிகிறபடி.

அப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத-(அதாவது) அவன் வாங்கித் தன் கையில் இட்டுக்கொள்ளாத வளை எனக்கு வேண்டா என்றாளாயிற்று.

—————

***மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து

அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.

வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

பதவுரை

முன்

முன்பொரு காலத்தில்
வாவளையல்

வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான
குறைவு இல்லா பெருமுழக்கால்

மிக பெரிய கோஷத்தினலே
எரி அழலம்

கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது
அடங்காரை புக

பகைவர்களிடத்துப் புகும்படியாக
ஊதி இரு நிலம்

(சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய
துயர்

(பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை
தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்;

(இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள்
பணிந்து

வணங்கி
ஏத்தும்

துதிக்கப்பெற்ற
விரி புகழான்

பரந்த புகழையுடையனுமான எம்பெருமான்
கவராத

விரும்பாத
மேகலையால்

அரைவடத்தில்
குறைவு இலம்

அபேக்ஷையுடையோமல்லோம்.

வரிவளையால் என்கிற பதம் ‘குறைவில்லா’ என்பதில் அந்வயிப்பன்று, பெருமுழக்கால்’ என்பதில் அந்வயிப்பதாகும்;

ஸ்ரீபாஞ்சஜந்யத்தாலுண்டான மஹாகோஷத்தாலே’ என்றபடி.

“படைபோர்ப்புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியம்” என்கிறபடியே பாஞ்சசன்னியம் முழங்கின்னவளவிலேயே

எதிரிகள் குடல் குழம்பிக் குமுழறிபோவர்கள். பாரத யுத்தம் பிரகரணங்களில் இதன் பெருமை அறியத்தக்கது.

கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப் பிராட்டியை

சிசுபாலனோடு விவாஹம நடத்துவதாகக் கோடித்து வித்தமாயிருந்த ஸமயத்தில்

கண்ணவிரானது வரவை யெதிர்பார்த்திருக்க அப்பிராட்டியின் நெஞ்சு முதிந்துபோய்

இனி நாம் உயிர் துறப்பதே நல்லுபாயம் என்று நிச்சயித்திருந்த க்ஷணத்தில் கண்ணவிரான் மிகவிரைந்து எழுந்தருளிப்

புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்த்தைத் திருப்பவளத்திலே வைத்து ஊத,

அவ்வோசை ருக்மிணிப்பிராட்டியை மகிழ்வித்தளவேயன்றி,

சிசுபாலனையும் அவனைச்சார்ந்தவர்களையும் எரியழலம் புகழ்செய்தமை ப்ரஸித்தம;

இப்படிப்பட்ட இதிஹாஸங்கள் இங்குக் கொள்ளத்தக்கன.

(தெரிவரிய இத்யாதி.) எம்பெருமான் எங்கெங்கு வெற்றிபெற்று நிற்கின்றனோ

அங்கங்கெல்லாம் சிவனும் பிரமனுமிந்திரனும் முதலானவர்கள் பணிந்து ஏத்துவர்கள்;

அப்படி அவர்கள் ஏத்துவது பாபரனான எம்பெருமானுக்கு ஒரு பெருமையன்றாகிலும்,

துர்மானங் கொண்டாடித் திரியும் அத்தெய்வங்கள் அந்த துர்மானந் தவிர்ந்து காலவிசேஷங்களிலே எ

ம்பெருமானைப் பணிந்தேத்துகை அவர்களுக்கும் ஸ்வரூபலாமாய் எம்பெருமானுக்கும் ஒருவாறு ஸந்தோஷதரமாயிருக்கையாலே

ஆழ்வார்கள் அதனை ஒரு பொருளாக எடுத்துக் கூறுவர்கள்.

மேகலை-நெவநா என்ற வடசொல் திரிபு.

————–

*** வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.

மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

பதவுரை

மே கலையால்

உடையழகினால்
குறைவு இல்லா

குறையற்றவளும்
மெலிவு உற்ற

ஸூகுமாரத்தன்னை பெருந்தியவளும்
அகல் அல்குல்

அகன்ற சிதம்ப ப்ரசேதத்தை யுடையவளும்
போதன்

போகத்திற்கு யெனளுமான
மகள்

உஷையென்னும் பெண்ணுக்கு
தந்தை

புகழையுடையனாய்
புகழ்

புகழையுடையனாய்
விறல்

பலிஷ்டனான
வாணன்

பாணாஸூரனுடைய
புயம்

தோள்களை
துணித்து

அறுத்தொழித்தவனாய்,
நாகம் மிசை

ஆதிசேஷன்மீது
துயில்வான் போல்

உறங்குவான் போலே
உலகு வல்லாம்

ஸகலலோகமும்
நன்கு ஒடுங்க

நன்மையிலே சேரும்படி
யோகு அணைவான்

உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான்
கவராத

விரும்பாத
உடம்பினால்  குறைவு இலம்

உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம்.

“மேகலையால் குறைவில்லா” என்பது பாணா ஸூரபுத்ரியான உஷைக்கு அடையொழி.

மேகலை என்பதைக் கீழ்ப்பாசுரத்திற்போலே என்னும் வடசொல்லன் திரிபாகக்கொள்;ளவுமாம்;

அன்றி, ‘மேகலையால்’ என்று இரண்டு சொல் வடிமாகக்கொண்டு, விரும்பத்தக்க (கலை) வஸ்த்ரத்தினால் என்று கொள்ளவுமாம்.

“நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம். மேம்பாடுடைய கலையினால் என்னவுமாம்.

“உஷைக்குக் கூறை யுடை அழகியதாயிருக்கும் போலே காண்” என்பராம் வங்கிப் புரத்து நம்பி.

அல்குல்-மத்யப்ரதேசம். அல்குமென்று பெண்குறியையே சொல்லுவதாகப் பலர்பிரமித்திருப்பதுண்டு.

திருக்கோவையர் முதலிய நூல்களில் சிற்சிலவிடங்களில் அப்பொருளில் பிரயோகம் கண்டாலும்

அருளிச்செயல்களில் காண்கிற பிரயோகம் அப்பொருளில் அல்ல.

“திருமலிந்து திகழ்மார்வு தேக்கந்தென்னால்குலேறி” என்ற பெரியாழ்வார் திருமொழியும்

“பூந்துகில் சேரல்குல்” என்ற பெருமாள் திருமொழியும் முதலாயின காண்க்.

———————-

உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

பதவுரை

உடம்பினால் குறைவு இல்லா

பெரிவுடம்பு படைத்த
அசுரர் குழாம்

அசுரக்சுட்டங்களை
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல்

உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே
பல துணி ஆ

பலபல கண்டங்களாம்படி
துணித்து

துண்டித்து
உகந்த

(ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே,
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும்

பரந்த  கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற
உடம்பு உடையான்

திருமேனியை யுடைவனான எம்பெருமான்
கவராத

விரும்பாத
உயிரினால்  குறைவு இலம்

ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம்.

***- (உடம்பினால் குறைவில்லா.) முன்னடிகளால் எம்பெருமானுடைய விரோதி நிரஸந ஸாமர்ததியம் பேசப்படுகிறது.

“உடம்பினால் குறைவில்லா” என்கிற அடைமொழி அசுரர்குழாத்திலே அந்வயிக்கும்.

“ஊன்மல்கிமோடு பருப்பார்” என்கிறபடி கண்ட பொருள்களையும் தின்று உடம்பை வளர்த்திருப்பர்கள் அசுரர்கள்.

ஆத்மாவைப் போஷியாதே தேஹ போஷணத்திலேயே நோக்குடையவர்கள் என்றபடி.

பண்டொருகாலத்தில் மலைகளெல்லாம் இறகுகளோடு கூடி வானத்திலெழுந்துதிரிந்து நாடுநரங்களுக்கு விநாசங்களை விளைத்திட்டனவென்றும், அப்போது தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அம்மலைகளின் இறகுகளைத் துணித்து வீழ்த்தனன் என்றும் இதிஹாஸங்கள் கூறும்.

எம்பெருமானால் துணித்து வீழ்த்தப்பட்ட அசுரர்கள் அம்மலைக்களோடு ஒப்பிடத்தக்கவர்களெனக் கொண்டு “உயிர்பித்த மலைத்துண்டம் கிடந்தனபோல்” எனப்பட்டது.

“ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரித்த பர்வதங்கள் இந்த்ரன் கையில் வஜ்ராயுகத்திலே பல கூறும்படி துணியுண்டு

கிடந்தாப்போலே அஸூர வர்க்கத்தைப் பல கூறாம்படி துணித்துகந்தானாயிற்று” என்பது நம்பிள்ளையீடு.

தடம்புனால்சடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையு முடம்புடையான்=தன்னுடைய சேஷத்வத்தைச் சிலகாலங்களிலே மறந்து

தன்னையே சச்வரனாத அபிமானிக்கும் குர்மானியான ருத்ரனுக்கும் உடம்புகொடுக்குமெம்பெருமான்

எனக்கு உடம்பு கொடுத்தில்னென்றால் பின்னை இந்த உயிர் எனக்கு எதுக்கு? என்கிறார்.

“உயிரினால் குறைவிலம்” என்றது இந்த ஆத்மா தொலைந்து போகட்டுமென்றபடி.

நித்யமான ஆத்மவஸ்து எங்ஙனே தொலைந்து போகுமென்று குசோத்யம் செய்யவேண்டா

எம்பெருமானுடைய விருப்பத்திற்கு உடலாவதே ஆத்மாவுக்குச் சிறந்த  ஸ்வரூபம் என்று காட்டினபடி.

ஆசார்ய ஹ்ருதயத்தில் ‘சேஷத்வ பஹர்ப் பூத ஜ்ஞாநந்த மயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே” என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தியும்,

முமுஷுப்படியில்  “உயிரினால் குறைவிலமென்கிறபடியே த்யாஜ்யம்” என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தியும் இங்கு உணரத்தக்கன.

————

***-இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு

இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

பதவுரை

உயிரினால் குறைவு இல்லா

எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய
ஏழ் உலகு

ஸமந்த லோகங்களையும்
தன்னுள்; ஒடுக்கி

தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து
தயிர் வெண்ணெய் உண்டானை

தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக

(தடம் குருகூர் சடகோபன்;

செயிர் இல்

குற்றமற்ற
இசை

இசையோடு கூடின
சொல்மாலை

சொல்மாலையாகிய
ஆயிரத்துள்

ஆயிரம் பாட்டினுள்ளே
இபத்தால்

இந்தப்பதிகத்தினால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து

உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து
வைகுந்தம்

பரமபதத்தை
நண்ணுவர்

கிட்டப்பெறுவர்.

உயிரினால் குறைவில்லா என்றது ஒரு ஜீவாத்மாதவும் தப்பாதபடி என்றவாறு.

“நெற்றி மேற்கண்ணாலும் நிறைமொழிவாய் நான்முதனும் நீண்ட நால்வாய் ஒற்றைக்கை

வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமரரோடும் வெற்றிப்போர்க்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கியய்யக்கொண்ட” என்றும்

“மண்னாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட” என்றும் திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே

இந்திரன் பிரமனீசனென்றிவர்களில் ஒருவரும் தப்பாமல் என்றதாயிற்று.

உலகேழ் தன்னுள்ளொடுக்கித் தயிர்வெண்ணெயுண்டானை = இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;-

“தயிரும் வெண்ணெயும் மகளமமுவுகாண்ப்புகுகிறபோது ‘செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே அந்யபரதைக்கு உடலாகவொண்ணது’ என்று எல்லாலோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானம் தன் ஸங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெயமுதுசெய்தது.” என்பதாம்.

“உலகேழ் தன்னுள் ஒடுக்கித் தயிர்வெண்ணெயுண்டான்” என்கிற சொற்செறிவின் அழகை நோக்கி நம்பிள்ளை இங்ஙனே யருளிச்செய்தது இன்சுவைமிக்கது.

காலில் செருப்போடே கோவிலுக்குச் செல்பவர்கள் கோபுரவாசற்புடையிலே செருப்பை விட்டிட்டு உள்ளேபுகுந்து பெருமாளை ஸேவிக்குமளவிலும செருப்பிலே நினைவு இடையறாமல் செல்லுகின்றபடியாலே “ஸ்வாமிந்! தீர்த்தம் ஸாதிக்க, திருத்துழாய்ஸாதிக்க” என்னவேண்டும்போதும் ‘செருப்புஸாதிக்க’ என்பர்களாம்;

எம்பெருமானும் உலங்களுக்குச் செய்யவேண்டிய ஸம்விதானங்களைச் செய்யாமல் நெய் தயிர் வெண்ணெய் களவுகாணப்புகந்தால் இடையிடையே அந்த உலகநினைவும் உண்டாகி, செருப்பை வைத்துத் திருவடிதொழுத கதையாக ஆய்விடுமென்றெண்ணி, எல்லா லோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானங்களைத் தன் ஸங்கல்பத்தாலே செய்துமுடித்து அந்யபரதைக்கு இட மறுத்துக்கொண்டு வெண்யெயமுதுசெய்யப் புகுந்நானென்று ரஸோக்தியிருக்கிறபடி.

“கர்ப்பிணிகள் வயிற்றில் பிள்ளைக்கீட்டாக போஜநாதிகள் பண்ணுமா போலே உள்விழுங்கின  லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர்வெண்ணெயுண்டான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் பரம போக்யம்.

இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துளிப் பத்தால் ஸம்ஸாரத்தை அடியறுக்கலாமென்றதாயிற்று.

வயிரம்சேர் பிறப்பு  ஸ்ரீ  வேண்டாவென்று கழித்தாலும் விடாதபடிகாழ்ப்பு ஏறிக்கிடக்கிற ஸம்ஸாரம்.

செயிர் இல்  =  சொற்குற்றமும் பொருட்குற்றமும் இல்லாத என்றபடி.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -4-7–சீலம் இல்லாச் சிறிய னேலும் -ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 23, 2022

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

 

பதவுரை

சீலம் இல்லா

நன்மை யொன்று மில்லாத
சிறியன் ஏலும்

சிறியவனா யிருந்தேனாகிலும்
செய் வினையோ

செய்த பாபமோ
பெரிது

பெரிதாயிருக்கின்றது;
ஆல்

அந்தோ!;
ஞாலம் உண்டாய்

(பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே!
நாராயணா

நாராயணனே!
என்று என்று

என்றிப்படிப் பலகாலும் சொல்லி
காலம் தோறும்

எல்லாக்காலத்திலும்
யான் இருந்து

நான் ஆசையோடிருந்து கொண்டு
கை தலை பூசல் இட்டால்

கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால்,
கோலம் மேனி

அழகிய திருமேனியை
காண

நான் ஸேவிக்குமாறு
வாராய்

வருகிறார்யில்லை;
கூவியும் கொள்ளாய்

கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை.

***- ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று  அருளிச்செய்வதுண்டு;

வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது.

இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும்.

நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்.

சீலமாவது நன்னடத்தை.  அஃதில்லாமைபற்றித் தம்மை நீசராக அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.

செய் வினையோ பெரிதால் என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு;- “பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே சிதசிதீச்வரதத்வத்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும் படி பெருத்திருந்தது.  ஸம்ஸாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கு மீச்வரனுடைய குணங்களிலும், அவன் தந்த பக்தி ரூபாபந்ந ஜ்ஞானத்திலுங் காட்டில் பெரிதாயாயிற்றிருக்கிறது.”

நல்ல காரியங்களைச் செய்யாமற்போனாலும் செய்ய வேணுமென்று நெஞ்சினால் நினைத்தாலும் பலனுண்டு;

தீய காரியங்கள் விஷயத்தில் அப்படியல்ல;

தீயன செய்யவேணுமென்று நெஞ்சினால் நினைத்திருந்து அப்படியே செய்யாதொழிந்தால் குற்றமில்லை என்று நூற்கொள்கையுண்டு.

நான் அப்படியல்லாமல் தீயன செய்து தலைக்கட்டினே னென்கிறார் செய்வினையோ என்பதனால்.

தாம் செய்த பாவங்கள் மிகப்பல என்பதை மேலே முதலிக்கிறார்.

எம்பெருமானை நான் விரும்பினபடியே அநுபவிக்கப்பெறாமல் இழந்திருக்கினன்றேனாதலால்

செய்வினை பெரிதென்னுமிடத்தில் ஸந்தேஹமுண்டோவென்கிறார்.

அசோக வனத்தில் பிராட்டியும் “மமைவதுஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ” என்றாள்.

விரோதிகளைத் தொலைத்து என்னை ரக்ஷிக்கைக்குறுப்பான ஆற்றல் படைத்த அவ் விரண்டு ஆண் புலிகளும்

என்னைக் கடாக்ஷியாதே யிருந்தார்களாகில் இது என்னுடைய பாபத்தின் பலனேயன்றோ என்றாள் பிராட்டி.

இங்கு * துஷ்க்ருதம் கிஞ்சித்மஹத் * என்கிறாள்.  கிஞ்சித் என்றால் சிறிது என்றபடி; மஹத் என்றால் பெரிது என்றபடி.

சிறிதாயும் பெரிதாயுமிருக்கிற பாபம் எனக்கு உண்டென்று சொல்லுகிற பிராட்டியின் திருவுள்ளம் யாதெனில்;

பகவத் விஷயத்திலே பட்ட அபசாரத்தைச் சிறிய பாபமென்றும் பாகவத விஷயத்திலே பட்ட அபசாரத்தைப் பெரிய பாபமென்றும் கருதினபடி,

காட்டுக்குப் புறப்படும் ஸமயத்திலே தன்னை உடன் கொண்டு சொல்ல மாட்டேனென்ற பெருமாளை நோக்கி

“ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்று பழித்துக்கூறினது பகவத் விஷயாபசாரம்.

மாரிச மாயமான் பின்னே பெருமாள் எழுந்தருளியிருந்தபோது கபடமான கூக்குரலைக் கேட்ட பிராட்டி

இளைய பெருமாளை நோக்கிப் பல வார்த்தைகள் சொல்லியிருக்கையில்

“-அநார்யகருணாம்ப ந்ருசம்ஸ! குலபாம் ஸந!*என்று தொடங்கி

** ஸ்ரீமமஹேதோ: ப்ரதிச்சந்ந: ப்ரயுக்தோ பரதேந வா தந்நஸித்யதி ஸௌமித்ரே தவ வா பரதஸ்ய வா.” என்று

மிகவும் கடுமையாகப் பழித்துக் கூறினது பாகவதாபசாரம்.

இவற்றுள் பகவதபசாரம் அவ்வளவு கொடிதன்றாகையாலே கிஞ்சித் எனப்பட்டது;

பாகவதாபசாரம் மிகக் கொடியதாகையாலே மஹத் எனப்பட்டது.

ஆழ்வார் தாம் கதறிக் கூவியழைக்கிற படியை அருளிச் செய்கிறார் ஞாலமுண்டாய்! என்று தொடங்கி.

விசாலமான பூமிப் பரப்பை யெல்லாம் பிரளய வெள்ளம் கொள்ளை கொள்ளப்புகுந்த காலத்திலே

“மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம், உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கியுய்யக்கொண்ட” என்கிறபடியே திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்தவனே! என்று கூப்பிடா நின்றேன்.

ஆபத்துக்கு வந்து உதவுமவனல்லையோ நீ; பிரளயாபத்து வந்தால்தான் ரக்ஷிப்பதென்று ஒரு விரத முண்டோ?

ஞானமூர்த்தி=சேதநகோடியிலே சேர்ந்த எனக்கும் ஞானமுண்டு;

ஆகிலும் என்னுடைய ஞானம் என்னை நித்ய ஸம்ஸாரியாக்கிக் கொள்வதற்கன்றோ உதவுகின்றது.

இந்த ஸம்ஸாரத்தைக் கழித்து என்னைத் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுகைக்கீடான ஞானமன்றோ உன்னுடையது.

“ஆமாறொன்றறியேன் நான்” என்றிருக்கும்மடியேனுக்கு “ஆமாறறியும் பிரானே!” என்னப்படுகிற நீ உதவித் தீர வேண்டுமே;

நீ செய்யமாட்டாதது ஒன்றுமில்லை.  ஒருவனுக்கு; கண்ணும் தெரியாதே காலும் நடைதாராதேயிருந்தது;

மற்றொருவனுக்குக் கண்ணும் தெரிந்து காலும் நடைதருவதாயிருந்தது;

இப்படியிருக்குமானால் ஆர்க்கு ஆர் வழிகாட்டிக்கொண்டு போவார் என்பதை நான் சொல்ல வேணுமோ?

ஞானமும் சக்தியுமுள்ளவர்களெல்லாரும் அஜ்ஞரம் அசந்தருமாயிருப்பாரை ரக்ஷித்தேயாக

வேணுமென்று ஒரு நிர்ப்பந்தமுண்டோவென்று எம்பெருமானுக்குத் திருவுள்ளமாக, நாராயணா என்கிறார்.

ரக்ஷிக்கவேண்டிய ப்ராப்தியில்தையாகில் நிர்ப்பந்தமில்லைதான்;

ப்ராப்தியுள்ள விடத்திலே உபேக்ஷித்திருந்தால் பழிப்பாகுமன்றோ.

“உன்றன்னோடுவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியான குடல்துடக்கு இருக்கும்போது கைவாங்கியிருக்கவல்லையோ?

சரீரத்திற்கு ஆகவேண்டிய நன்மையை சரீரியன்றோ நோக்கக்கடமைப்பட்டவன்.

உடையவன் உடமையைப் பெறுகைக்கு வியாபரிக்க வேண்டாவோ? என்பதான கருத்துக்கள் நாராயணா ! என்பதில் உய்த்துணரத்தக்கன

என்றென்று என்கையாலே இப்படியே பலகால் கூப்பிட்டுக் கொண்டே யிருக்கின்றமை காட்டப்பட்டது.

இவர்தாம் கூப்பிடுவது ஒரு ப்ரயோஜனத்திற்காகவாகில் அது கிடைத்த தென்று வாய் ஓயலாம்;

கூப்பிடுகைதானே ப்ரயோஜநமாகையாலே ஓவாதுரைக்கு முரை இதுவேகாணீர்.

காலந்தோறும் யானிருந்து என்றவிடத்தில் நம்பிள்ளையீடு:-“படுவதெல்லாம்பட்டு நூறே பிராயமாக இருக்கவேணுமோ? குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் முடியவொட்டாது ‘இன்னமும் காணலாமோ’ என்னும் நசை.”

கைதலைபூசலிடுவதாவது-“மத்தகத்திடைக் கைகளைக்கூப்பி” என்றும்  …

சிரஸ்யஞ்ஜலிமாதாய” என்றும் சொல்லுகிறபடியே தலைமேல் கரங்குவிக்கை

ஆற்றாமையினால் தலைமேல மோதிக் கொள்ளும்படியைச் சொல்லுகிறதென்றுங் கூறுவர்.

கோலமேனி காணவாராய் = ஆசைப்பட்டவர்கள் கண்டு அநுபவிப்பதற்காகவன்றோ இத்திருமேனி படைத்தது.

“பக்தாநாம் த்வம் ப்ரகாசஸே” என்று சொல்லியிருக்க இப்படி யும் உபேக்ஷிப்பதுண்டோ?

“வாசிவல்லீரிந்தளுரிர்! வாழ்ந்தேபோம் நீரே !’ என்று வயிறெரிந்து சொல்லும்படியாக வைத்துக்கொள்வது தகுதியோ?

பரிமள ப்ரசுரமான தீர்த்தத்தைச் சேகரித்துவைப்பது விடாயர்விடாய் கெடுவதற்காகவன்றோ;

அதனை அவர்கட்கு எட்டாதேவைப்பது முண்டோ? என்கிறார்.

காணவாராய் என்றது காண வரவேணு மென்றபடி யன்று; காணவருகின்றிலையே! என்றபடி.

நித்ய விபூதியிற்சென்று ஸேவிப்பதிலுங்காட்டில் இவ் விபூதியிலேயே ஸேவிக்கப்பெறுதல்

பரமோத்தேச்யமாகையாலே இக்கருத்துத் தோன்ற “கூவியுங்கொள்ளாயே” என்கிறார்.

——————

***- ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி

‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2-

பதவுரை

கொள்ள

அநுபவிக்கவநுபவிக்க
மாளா

எல்லைகாணவொண்ணாத
இன்பம் வெள்ளம்

ஆனந்தப்பெருக்கை
கோது இல

குறையற
தந்திடும்

உபகரிக்கின்ற
என் வள்ளலே

என் உதாரனே!
வையம் கொண்ட

(மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட
வாமனா

வாமன்மூர்த்தியே!
ஓ ஓ என்று

என்று ஆர்த்தியோடே சொல்லி
நள் இராவும் நன் பகலும்

இரவும் பகலும்
நான் இருந்து ஓலமிட்டால்

நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால்
கள்ளம் மாயா

க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே!
உன்னை

உன்னை
என் கண் காண

என் கண்கள் காணுமாறு
வந்து ஈயாய் ஏ

வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!,

* தீர்ப்பாரையாமினிக்குமுன்னே * வீற்றிருந்தேழுலகில் “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்” என்று சொல்லும்படியாக

அப்போது எம்பெருமான் தந்த பரமாநந்த ஸந்தோஹத்தைத் திருவுள்ளம்பற்றிக்

“கொள்ளமாளா வின்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலே!” என்கிறார்.

கொள்ளக் கொள்ள மாளாத இன்ப வெள்ளமாவது மேன்மேலும் பெருகிச்செல்கின்ற இன்பவெள்ளம்.

அதனைக் கோதில்லாதபடி தருகையாவது என்னென்னில்; பகவத் விஷயத்தை அநுபவித்துக் கொண்டே வரும்போது

‘அநுபவித்தது போதும்’ என்று தோன்றினாலும்,

‘இதைவிட்டு இன்னொரு விஷயத்தை அநுபவிப்போம் என்று  ஆசை பிறந்தாலும் அது இன்பத்திற்குத் கோது;

அத்தகைய கோது இல்லாதபடி தந்தனனென்றது “எப்பொழுதும் நான் திங்களாண்டூழியூழிதொறும்

அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே’ என்னும்படியாகத் தந்தருளினனென்றபடி.

என் வள்ளலே! என்று சொல்லி ஓ! என்கிறார்,

இப்படி இப்போது கூப்பிடப்பண்ண நினைத்திருந்தால் வீற்றிருந்தேழுலகிலே அப்படியென்னை அநுபவிப்பிக்கவேணுமோ? என்கைக்காக.

வையங்கொண்ட வாமனாவோ! ஸ்ரீ ப்ரயோஜநாந்தர பரனான வொருவனுக்குக் காரியஞ் செய்ய நினைத்து

அழிய மறின வுனக்கு அநந்யப்ரயோஜநனான என் விஷயத்திலே இரங்குகை அரிதோ என்று கூறியவாறு.

வையத்தை இரந்த காலத்தில் வாமநவேஷமிருந்ததேயல்லது,

வையங்கொண்ட காலத்தில் அஃது இல்லையே; த்ரிவிக்ரம வேஷமன்றோ அப்போது இருந்தது;

அப்படியிருக்க ‘வையங்கொண்ட வாமனா!, என்றது என் என்னில்;

ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் வாமந வேஷமொன்றே அழகின் மிகுதியால் நிலைத்திருக்கிறபடி.

இந்திரனைப்போலே ராஜ்யம்பெற்று மீள வேண்டியவரல்லாமையாலே

இங்ஙனே கூப்பிடுவதே இவர்க்குப் போது போக்கென்று “என்றென்று” என்பதனால் தெரிவிக்கப்படும்.

இப்படிப் பல திருமாங்களைச் சொல்லி இரவும் பகலும் நான் கூப்பிட்டால்

என் கண்கள் விடாய் கெடும்படி நடையழகு காட்டி என் முன்னே வந்து நிற்கின்றிலையே! என்கிறார்.

————–

***- நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும்

‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது

என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

பதவுரை

தீ வினைகள்

பாவங்களை
ஈவு இலாத

முடிவில்லாதபடி
எத்தனை செய்தனன் கொல்

எவ்வளவு செய்தேனோ!
தாவி

திருவடிகளாலே வியாபித்து
வையம்

உலகங்களை
கொண்ட

ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தாய்

ஸ்வாமியே!
தாமோதரா

தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே!
என்று என்று கூவி கூவி

என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு
நெஞ்சு உருகி

நெஞ்சு நீராயுருகி
கண் பனி சோர நின்றால்

கண்ணீர் பெருக நின்றால்,
பாவியேன்

பாவியான நான்
காண

கண்ணாலே ஸேவிக்ககும்படியாக
வந்து

எழுந்தருளி
நீ பாவி என்று

‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று
ஒன்று சொல்லாய்

ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை.

அவனோட்டைக் கலவியையே அல்லும் பகலும் ஆசைப்பட்டுக்கொண்டு கிடக்கிற ஆழ்வார்

‘பாவி   ‘பாவி நீ யென்றொன்று சொல்லாய்’  என்கைக்குக் கருத்து யாதெனில்;

‘ஆழ்வீர்! நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று

சொல்லுகிற இந்த வார்த்தையாவது தமது முகத்தை நோக்கி அவன் சொல்லுவானாகில்

அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும்

கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமென்றும் நினைத்துச் சொன்னதத்தனை.

ஆண்டாளும் “மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே” என்றது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

“அவச்ய மநு போக்வத்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்” என்றும்

“ நாபுக்தம் க்ஷியதே கர்ம கல்பகோடிசதைரபி” என்றுமுள்ள பிரமாணங்களை நோக்கினால்

தீ வினைகள் அநுபவித்துத் தீர்க்கமுடியும் என்று ஏற்படுகிறது;

அப்படியும் தீராத எத்தனை பாவங்களைப் பண்ணினேனோ! என்கிறார் முதலடியில்.

“மதியிலேன் வல்வினையே மாளாதோ” என்றதும் காண்க.

தாவியித்யாதி. * தன்னுருவமாரு மறியாமல் தானங்கோர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்மன்னை மனங்கொள்வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால்; யானளப்ப மூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப, மற்றவனுமென்னால் தரப்பட்டதென்றலுமே, அத்துணைக் கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்காலேழுலகும் போய்;க்கடந்த பரத்வத்தைச் சொல்லுவேன்;

* உறியார்ந்த நறுணெ;ணெயொளியால் சென்று அங்குண்டானைக்கண்டு ஆய்ச்சியுரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போல நின் தடங்கண்கள் பனிமல்குந் தன்மையாகிய ஸௌலப்யத்தைப்பேசுவேன்;

இங்ஙனே பரத்வ ஸௌப்யங்களை மாறிமாறிப்பேசிக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றக்கால் கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ?

அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ?

என்னை நீ பாக்கியன் என்றாலும் பாவியென்றாலும் அதில் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை;

உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்;

கண்ணுக்குத் தோற்றாதே நின்று மிடற்றோசையைக் காட்டி விட்டாலும் த்ருப்தியடையேன்;

என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்ல வேணும்.

————-

***- பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண

விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

பதவுரை

வானோர்

பிரமன் முதலிய தேவர்கள்
பேணி

விரும்பியும்
காணமாட்டா

காணமுடியாதபடி
பீடு உடை

பெருமை வாய்ந்த
அப்பனை

ஸ்வாமியை நோக்கி,
ஆணி செம் பொன் மேனி எந்தாய்

“மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே!
தாமரை கண் பிறழ

தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி

(என்னைப் பார்த்துக் கொண்டு)

காணவந்து

நான் காணுமாறு வந்து
என் கண் முகப்பே

என் கண் முன்னே
நின்றருளாய்

நின்றருளவேணும்
என்று என்று

என்று ஓயாதே சொல்லி
சிறு தகையேன் நான்

நீசனாகிய நான்
நாணம் இல்லா

வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு
இங்கு அலற்றுவது என்

இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!.

ஆணி செம்பொன் மேனி ஸ்ரீ ஆணிப்பொன்னாவது மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்.  இதுக்குமேலே மாற்றமில்லை யென்னும்படியான சிறந்த பொன் என்றும் கொல்லுவர்.  எம்பெருமானுடைய திருமேனி கருமுகில் திருநிறத்ததாயிருக்க, செம்பொன்மேனி என்றது என்? என்னில்; செம்பொன் நிறத்திற்கு உவமையாகக் கூறப்பட்டதன்று: ஸ்ப்ருஹணீயத்தைக்குக் கூற்றினென்க; அதுபோல விரும்பத்தக்க திருமேனி என்றபடி.  “… ஸ்ரீப்ரசாஸிதாரம் ஸர்வேஷரம் அணீயாம் ஸமணீயஸாம், ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத்து புருஷம்பரம்.” என்றும், “….” என்றுமுள்ள பிரமாணங்களைக்கொண்டும் நிர்வஹிக்கலாம்.  ஹிரண்யவர்ணையான பிராட்டியின் சேர்க்கையாலுண்டான நிழலீட்டாலே எம்பெருமானும் ஹிரண்மயனாகத் தோற்றலாம்.  இப்படிப்பட்ட திருமேனி படைத்தவனே! என் கண் முன்னே வந்து நிற்கவேணும்; என்று பலகால் சொல்லியழைக்கின்றேனே! இதற்கு ஒரு பலன் கிடைக்கப்போகிறதோ?

மேம்பட்டவர்களாய்ப் பிரசித்தி பெற்றிருக்கின்ற தேவர்களுக்கும் காணக் கிடைக்கமாட்டாத பெருமானைத் தாம் காண ஆசைப்பட்டது வெட்கமில்லையாயின் காரியமென்று காட்டதற்காக நாணமில்லா என்கிறார்.

——————

***- பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு

‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பி

வரும் போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

பதவுரை

அப்பனே

உபகாரம் செய்யுமியல்வினனே!
அடல் ஆழியானே

வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!
ஆழ் கடலை

ஆழமான கடலை
கடைந்த

கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த
துப்பனே

ஸமர்த்தனே!
உன் நான்கு தோள்களும்

உனது திருத்தோள்கள் நான்கையும்
கண்டிட கூடும் கொல் என்று

ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி
எப்பொழுதும்

எப்போதும்
கண்ணநீர் கொண்டு

கண்ணீரோடிருந்து
ஆவி துவர்ந்து துவர்ந்து

பிராணன் மிகவும் உலர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று

உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து
ஏழையேன்

சபலனான நான்
நோக்குவன்

சுற்றும் பாராநின்றேன்.

அப்பன் என்று உபகாரம் செய்பவனைச் சொல்லுகிறது.

நீ முகங்காட்டாதபோதும் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படியாக இவ்வளவு மஹோபகாரம் பண்ணினவனே!என்றபடி.

எனக்கு நீ அருள்செய்ய நினைத்தால் என்னுடைய பாபங்கள் குறுக்கே நிற்கவற்றோ?

“எப்போதுங் கை கழலா நேமியான்  நம்மேல் வினை கடிவான்” என்றபடியே

என் வினைகளைத் துணிக்க திருக்கையிலே திவ்யாயுதமுண்டே யென்பார் அடலாழியானே! என்கிறார்.

கையுந் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டன்றோ நான் கூப்பிடுகிறது என்றவாறுமாம்.

ஆழ்கடலைத் கடைந்த துப்பனே! = உன்னளவிலே பல்லாண்டு பாடாதே உன் திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொள்ள

நினைப்பார்க்கும் காரியம் செய்து தலைக்கட்டுகின்ற வுனக்கு என்னெதிரேவ்நது நின்று காட்சி தருகைக்குத் திருவுள்ளமுண்டாகாதது என்னோ?

‘நம் உடம்பை நோவுபடுத்துகின்றவர்களுக்குத் தான் நாம் காரியம் செய்யக் கடவோம்’ என்று ஏதேனும் நியமம் கொண்டிருப்பதுண்டோ?

“கடலைக்கடைந்த துப்பனே!” என்ற இவ்விடத்தில் விவக்ஷிதமான துப்பாவது –

“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!” என்கிறபடியே

தேவர்களுக்கு உப்புச்சாறு எடுத்துக் கொடுக்கிற வியாஜத்தாலே தான் பெண்ணமுதாகிற ஸ்ரீ மஹாலக்ஷ்மியை லபித்த ஸாமர்த்தியம்.

உன் தோள்கள் நான்கும் கண்டிட = கடல்கடைந்த காலத்திலே தேவர்கள் எப்போது நம் உணவு கடலில் நின்றும் கிளரப்போகின்றதோ என்று கடலைக்கவிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்களே யல்லது தோளழகிலே துவக்குண்டு காப்பிட்டார்களில்லை;

அக்குறைதீர “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா! பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று திருத்தோள்களுக்கு மங்களாசாஸநம் பண்ணவேணு மென்றதன்றோ நான் பாரித்திருப்பது.

கண்ணபிரானாய் வஸூதேவ க்ருஹத்திலே அவதரித்தபோது “ஜாதோஸி தேவ தேவேஸ! ஸங்க சக்ர கதாதர!” என்ற நான்கு திருத்தோள்களோடே அவதரித்தாயென்றும்,

பிறகு மாதா பிதாக்கள் “உபஸம்ஹர விச்வாத்மந்! ரூபமேதத் சதுர்ப்புஜம்” என்று, நான்கு திருத்தோள்களோடு கூடின இத்திருவுருவத்தை மறைத்திடாய் என்று வேண்டிக்கொள்ள, அப்படியே மறைத்திட்டதாகவும்,

உகவாதார்க்குக் கூசி மறைத்திட்ட அதனை உகந்த பெண்களுக்குக் காட்டிக்கொடுத்தாயென்றும் கேள்விப்படுகிறேன்;

அவ்வண்ணம் எனக்கும் நீ காட்டிக் கொடுக்க நேர்ந்து நான் காணப்பெறலாகுமோ வென்று பாரித்துக் கிடக்கின்றேனென்பது உள்ளுறையும் கருத்து.

கண்ண நீர் கொண்டு = ஆனந்தாச்ரு, சோகாச்ரு என்று இருவகையான கண்ணீர்கள் உண்டு.  அவ்விரண்டும் இங்கு விலக்ஷிதமாகலாம்; அத்திருவுருவத்தை நினைத்தவளவிலேயே ஒரு ஆனந்தம் பெருகிச் செல்லுமாகையாலே ஆனந்தாச்ருவாகும்.

‘நாம் பாரிக்கிறபடி நமது கண்களுக்குப் புலப்படவில்லையே!’ என்று வருத்தமுமாகையாலே சோகாச்ருவமாகும்.

ஆவி துவர்ந்து -பிராணன் பசையற உலர்ந்து என்றபடி.

ஆவி அடியோடு தொலையமாட்டெ னென்கிறது என்கிற வருத்தத்தைக் காட்டினபடி.

இப்பொழுதே வந்திடாயென்று = தாமதித்து வந்தாயாகில்; திருப்புளியாழ்வாரைக் கட்டிக்கொண்டு அழவேண்டியதாகு மத்தனை யுனக்கு;

இப்பொழுதே வந்தாயாகில் என் கண்ணிலே விழிக்கப்பெறுவாய் என்றவாறு.

ஏழையேன நோக்குவனே! = இங்ஙனே சொன்னவளவிலும் ஸர்வஜ்ஞன் நினைவறிந்து வாராதிருப்பனோ?

அவசியம் வந்தே தீருவேன்; ஆபத்து மிகுந்தவாறே தவறாது வந்து தோன்றுகிற வழக்கத்தை

கஜேந்திராழ்வான் ப்ரஹ்லா தாழ்வான் போல்வார் பக்கலிலே கண்டிருக்கிறோமாகையாலே

வந்தே தீருவேன் என்று நிச்சயித்து சாபலத்தாலே திசையெங்கும் நோக்குகின்றேன் என்கை.

ஏழையேன் நோக்குவனே யென்றவிடத்தில் ஒரு ஐதிஹ்யமுண்டு;

சோழராஜஸதஸ்ஸிலே திருக்கண்களையிழந்த கூரத்தாழ்வானை உடையவர் வரதராஜன் விஷயமாக ஒரு ஸ்தலம் பணிக்கும்படி நியமித்தார்; பேரருளாளன் வரந்தரும் பெருமாளென்று பேர்பெற்றிருக்கையாலே திருக்கண் தந்தருள்வன் என்று திருவுள்ளம் பற்றி அப்படி நியமித்தருளினார்.

ஆசார்ய நியமனத்தை யடியொற்றி ஆழ்வானும் வரதராஜஸ்தவ மருளிச்செய்து அதை உடையவர் திரு முன்பே விண்ணப்பம் செய்து வருகையில் “நீலமேகநிபம் அஞ்ஜநபுஞ்ஜச்யாம குந்தலம் அநந்தவயம் த்வாம்.  அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத்குரகரிஸ! ஸதா மே.” என்கிற ச்லோக ரத்நத்தைத் திருச்செவி சாத்தின உடையவர்

“ஆழ்வான்! இப்பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமையில்லை; உன்முகத்தைக்காட்டு பார்ப்போம்” என்றாராம்.

கனிந்த சொற்களுக்கு எம்பெருமான் காட்சிதந்தே தீருவன் என்று அன்பர்கள் நம்புவதற்குறுப்பான ஐதிஹ்யம் இது.

————-

***- எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது

திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும்

அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

பதவுரை

நாள் தோறும்

ஸர்வகாலத்திலும்
என்னுடைய

என்னுடைய
ஆக்கை உள்ளும்

சரீரத்தினுள்ளும்
ஆவி உள்ளும்

ஆத்மாவினுள்ளும்
அல் புறத்தின் உள்ளும்

மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்
நீக்கம் இன்றி

நீங்காமல் (ஒன்றையும் விடாமல்)
எங்கும் நின்றாய்

எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே!
நின்னை

உன்னை
அறிந்து அறிந்தே

(அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும்
யான்

நான்
உன்னை காண்பான்

உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி
நோக்கி நோக்கி

எல்லாத் திசைகளிலும் பார்த்து
எனது ஆவி உள்ளே

எனது நெஞ்சுக்குள்ளே
நாக்கு நீள்வன்

நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்)
ஞானம் இல்லை

இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை.

இறைப்பொழுதும் ஓயாதே எட்டி யெட்டிப் பார்க்கின்றேன்;

எந்தத் திசை வழியாக வருவாயென்று தெரியாமையாலே நாற்புறமும் விழித்துப் பார்க்கிறேன்; எதற்காகவென்னில்;

உன்னைக் காண்கைக்காகவத்தனை.

காண்பதற்கு மேலே வேறொரு ப்ரயோஜனத்தைக் கனவிலும் கருதாத குடியிலே யன்றோ பிறந்திருப்பது.

‘இப்படி எனக்கு ஆசை’ என்று வாய்விட்டுச் சொல்லமாட்டாதே நாக்கை நீட்டியிருக்கின்றேன்.

நாக்கை நீட்டுவானேன் என்னில்; “கன்னலங்கட்டி தன்னை; கனியை யின்னதமுதந் தன்னை

” என்றும் எனக்குத்தேனே பாலே கன்னலே யமுதே” என்றும்

“விழுமியமுனிவர் விழுங்குங் கோதிலின் கனியை” என்றும் சொல்லுகிறபடியே

பகவத்விஷயமென்பது பரம போகய் வஸ்துவாகையாலே “தூவமுதைப் பருகிப்பருகி”

“அடியேன் வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே” என்கிற கணக்கிலே நாவுக்கும் விஷயமுண்டே.

நாக்கு நீட்டினவளவில் விரும்பின பொருள் கிடையாதொழிந்தவாறே

‘இதில் நாம் நசை வைப்பது தகுதியன்று’ என்று கைவாங்கி நிற்பதன்றோ ப்ராப்தம்.

அரிதென்னுமிடம் அறியாதே சிறு குழந்தைகள் நாக்கை நீட்டினபடியே யிருப்பதுண்டு;

அதுபோலவே நானும் என்று காட்டுகிறார் ஞானமில்லை என்பதனால்.

ஞானமில்லை என்றதை உபபாதிக்கிறது மேலுள்ளதெல்லாம்.

என்னுடைய சரீரத்திலும் ஆத்மாவிலும் மற்றும் இந்த்ரியாதிகளிலும் ஒன்றையும் விடாதே எல்லா ஸ்தலத்திலும் வியாபித்து நின்றாய் நீ என்பதை அறியேனோ?

இப்படிப்பட்ட நீ என் கண்ணுக்குத் தோற்ற வேணுமென்று திருவுள்ளம் பற்றியானாகில் உடனே தோற்றியிருக்கலாமே;

“வாசி வல்லீர்” என்கிறபடியே இன்னாருக்குத்தான் தோற்றவேணும் இன்னாருக்குத் தோற்றலாகாது என்று ஒரு நிர்ப்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாயென்று நான் தெரிந்துகொண்டு வாய் மூடியிருக்கை  அழகியது.  அப்படியிருக்கின்றிலேனே;

உன் கருத்தையறிந்து வைத்தும் ஆறியிருக்கின்றிலேனாகையாலே எனக்கு ஞானமில்லை யென்னுமிடம் ஸித்ததேயன்றோ என்றாராயிற்று.

ஞானமில்லை என்றதற்கு ஒரு உள்ளுறை பொருளுண்டு; மற்றையோருடைய ஞானம் போன்றதன்று என்னுடைய ஞானம்;

“மயர்வற மதிநலமருளினன்” என்றபடி பக்திரூபாபன்ன ஜ்ஞானத்ததைத் தந்தருளினாயாகையாலே

“அத்யந்த பக்தி யுக்தாநாப் ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:, என்ற கட்டளையிலே துடிக்கின்றேன் என்பதாம்.

“காற்றும் சுழியும் கட்டி அழக்கொண்ட பெருங் காதலுக்குப் பத்திமை நூல்வரம்பில்லையே” என்ற ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தியும் இதற்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம்.

“நீக்கமன்றி யெங்கும் நின்றாய்” என்றவிடத்திலே நம்பிள்ளையீடு; -“கிழிச்சீரையிலே தனங்கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர்படி” என்று

(அதாவது) உள்ளே நிதி கிடக்கச்செய்தேயும் சிலர்வெளியிலே செல்வம்பெற வேணுமென்று பாரிப்பர்;

அதுபோலே ஆழ்வார் தம்மிடத்திலே அந்தர்யாமியாய்ப் பூர்ணனாயிருக்கின்ற பரம புருஷனை அநுபவித்து

த்ருப்தி பெற மாட்டாதே பாஹயாநுபவத்திலே மநோரதத்தைப் பெருக்கித் துவள்கின்றார் என்கை.

————-

***- ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது

என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே;

நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய,

‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்;

பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி,

பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பதவுரை

நறுதுழாயின் கண்ணி அம்மா

பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!
நான் உன்னை கண்டுகொண்டு

நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று
அறிந்து அறிந்து

உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து
தேறி தேறி

மிக்க தெளிவையுடையேனாகி
யான்

இப்படித் தெளிவுபெற்ற நான்
எனது ஆவி உள்ளே

என் நெஞ்சுக்குள்ளே
நிறைந்த ஞானம் மூர்த்தியாயை

பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை
நின்மலம் ஆக வைத்து

விசதமாக அநுபவித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்

பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்.

இப்பாட்டில், “நறுந்துழாயின் கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டு பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றருளிச்செய்வதைப் பார்த்தால், * கோலமேனி காண வாராய்* என்று அபேக்ஷித்தபடியே எம்பெருமான் வந்து காட்சி தந்துவிட்டதாகத் தோன்றும்.

உண்மை அப்படியில்லை;

அடுத்தபாட்டில் “கண்டுகொண்டு பாடியாட-வந்திடகில்லாயே” என்றிருக்கையாலே இன்னமும் காணப்பெற்றிலர்என்றே கொள்ளவேணும்.

ஆனால், இப்பாட்டில் நானுன்னைக் கண்டுகொண்டே என்கிறாரே; இதற்குப்பொருள் என்? என்னில்;

மாநஸ சாஷாத்காரம் என்றும் பாஹ்ய சாஷாத்காரம் என்றும் காண்கை இரண்டு விதம்;

*முனியே நான்முகனுக்கு உட்பட்டதெல்லாம் மாநஸ சாஷாத்காரமே யாகும்.

ஆகவே இப்பாட்டில் சொன்னது மாநஸ சாஷாத்காரம் என்றும் ,  மேற்பாட்டில் விரும்புவது பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் அறிக.

ஆசார்யஹருதயத்தில் (முடிவில்) “கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதிகண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய்” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம்.

அறிந்தறிந்து என்றும், தேறித் தேறி என்றும் இரட்டித்துச் சொன்னதன் கருத்தாவது,

எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தையும் தாம் அறியப் பெற்ற படியை அறிந்தறிந்து என்று கூறி,

அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றபடியைத் தேறித்தேறி யென்று கூறினாரகை.

(அது எங்ஙனேயென்னில்;

1. எம்பெருமானுடைய பரத்வத்தை யறிதல் பரஸ்வரூபஜ்ஞானம்,

‘அவன் ஆச்ரித பாரதந்த்ரியமே வடிவாக வுடையவன்’ என்று அறிதல் அந்த ஜ்ஞானத்தின் தெளிந்தநிலை

2.  நாம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்று அறிதல் ஸ்வஸ்வரூபஜ்ஞானம்;

பாகவத சேஷத்பர்யந்தமாக அறிதல் அந்த ஞானத்தின் தெளிந்தநிலை.

3. எம்பெருமானுடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றுகை உபாய ஸ்வரூப ஜ்ஞானம்.

அவனை நாமாகப் பற்றுகிற பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷ்கமென்றிருக்கை அந்த ஞானத்தின் தெளிந்தநிலை.

4. * ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம்.

கைங்கரியம் செய்வதனால் உண்டாகிற ஆனந்தம் எம்பெருமானுடையதேயாகும்;

அந்த ஆனந்தத்தைக்கண்டு சைதந்ய கார்யமாக ஆனந்திப்பதே நமக்கு  உற்ற ஆனந்தம் என்றிருக்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை

5. அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யமென்றிருக்கை விரோதிஸ்வரூப ஜ்ஞானம்.

கைங்காரியத்தை நான் செய்கிறேன், எனக்காகச் செய்கிறேன் என்று செய்கை பரமவிரோதியென்றுணர்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை.

ஆக விப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்ய ரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை

அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் அருளிச்செய்தாராயிற்று.

இப்படி நீ அறிவிக்க அறிந்த யான் பரிபூர்ண ஜ்ஞாநஸ்வரூபனான உன்னை என்னுடைய நெஞ்சினுள்ளே மிக விசதமாக அநுஸந்தித்து, சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவுகேடு தவிரப்பெற்றேன்.  இதில் த்ருப்திபெற முடியுமோ? என்கிறார்.

மூன்றாமடியில் ‘இடரும்’ என்று பல பிரதிகளிலும் காண்கிறது;  ‘இடறும்’ என்று வல்லின றகரமான பாடமே யுக்தம்.

“ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவர்”  (4-1-7) என்று கீழேயும் ;அருளிச்செய்தார்.

ப்ரஜை தெருவிலே யிடறி” என்ற ஸ்ரீவசநபூஷணமும் காண்க.  இடறுதல் – கிலேசப்படுதல்.

நறுந்துழாயின் கண்ணி யம்மா என்ற விடத்திற்கு ஈடு;-“இவ்வறிவு பிறக்கைக்கு  அவனிட்ட பச்சையிருக்கிறபடி; வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுல வாஸத்தைப் பண்ணுவித்து  அறிவு பிறப்பித்தாயிற்று தனக்காக்கிக் கொண்டது.”

ஆக இப்பாட்டால் ஆழ்வார் தாம் பெற்ற அளவைச் சொன்னாராயிற்று.

———————

 

***- பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில்.

இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து

உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

பதவுரை

வண் துழாயின் கண்ணிவேந்தே!

அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே!
கண்டுகொண்டு

(நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு
என் கைகள் ஆர

எனது கைகள் ஆவல் தீரும்படி
நின் திருபாதங்கள் மேல்

உனது திருவடிகளின் மீது
எண் திசையும் உள்ள பூ கொண்டு

எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு
ஏத்தி

தோத்திரஞ்செய்து பரிமாறி
உகந்து உகந்து

மிகவும் உகந்து
தொண்ட ரோங்கள்

அடியோரமான நாங்கள்
பாடி ஆட

பாடுவதாடுவதாம்படி
கடல் சூழ் ஞாலத்துள்ளே

கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே
வந்திடகில்லாயே

(என் கண்முகப்பே)  வந்து நிற்க மாட்டேனென்கிறாயே

காணப்பெறாமல் பட்டினி கிடக்கின்ற கண்கள் பட்டினி தீரும்படி காணவேணும்.

கைகளின் விடாய்தீர உன் திருவடிகளிலே எண்டிசையுமுள்ள பூக்களையுங் கொண்டு தூவ வேணும்;

அத்தாலே உன்னுடைய திருவுள்ளம் உகக்க, அவ்வுகப்புக்கண்டு அடியோங்கள் உகந்து, அவ்வுகப்புக்குப் போக்குவீடாகப் பாடவும் ஆடவும் வேணும்.  இப்பரிமாற்றங்களுக் கெல்லாம் ஏகாந்தமாகத் திருநாட்டிலே கொண்டு போகிறனென்ன வொண்ணாது;

இப்பேறு கடல் சூழ்ஞாலத்துள்ளே யாகவேணும்.  அங்கு நித்ய ஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்கிறபடியே

*தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையோடே வந்து காட்சி தந்தருளவேணும்;  இப்படி எத்தனை நாள் பிரார்த்தித்த விடத்திலும் வந்தருள்கின்றிலையே; நான் பெறாதது இத்தனையே யென்றாராயிற்று.

—————-

***- எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்?  அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான

சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான்

கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

பதவுரை

ஒன்று இடகிலேன்

(இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்;
ஒன்று அட்டகில்லேன்

(தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்;
ஐம் புலன்

இந்திரியங்களைந்தையும்
வெல்லகில்லேன்

பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்;
கடவன் ஆகி

நியதியுடையவனாகி
காலம் தோறும்

உரிய காலங்களிலே
பூ பறித்து ஏத்தகில்லேன்

புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்;

(இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்)

மடம் வல் நெஞ்சம்

மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது
காதல் கூர

ஆசை விஞ்சிவரப்பெற்று
வல் வினை யேன்

மஹாபாபியான நான்
அயர்ப்பு ஆய்

அவிவேகியாய்
சக்கரத்து அண்ணலை

சக்கரபாணியான எம்பெருமானை
தடவுகின்றேன்

காணத்தேடுகின்றேன்;
எங்கு காண்பன்

எங்கே காணக்கடவேண்?

இடகிலேன் என்றது.  “ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங்கைகாட்டி” என்கிறபடியே ஒருவர்க்கு ஒரு பிச்சையிட்டறியேன் என்றபடி.

அட்டகில்லேன் என்றது தாஹித்து வந்தவர்களுக்குத் தண்ணீர் வார்த்தறியேன் என்றபடி.

இங்ஙனே சில காரியங்கள் செய்திருந்தால் கர்மயோகத்திலே கணக்கடைக்கலாம்; அதற்கு வழியில்லையாயிற்று என்கை.

ஐம்புலன் வெல்லகில்லேன்–செவிவாய் கண் முதலிய இந்திரியங்கள் பட்டிமேயாதபடி நோக்கினேனாகில் ஞானயோகத்திலே சிறிது அடியிட்டதாகக் கணக்கிடலாம்; அதற்கும் வழியில்லையாயிற்று.

கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன்= திருவாராதனத்திற்கு யோக்யதையுள்ள காலங்களிலே புஷ்பங்கள் சேகரித்துமறியேன், ஸமர்ப்பித்துமறியேன்.

இவை செய்தால் பக்தியோகத்திலே சிறிது அந்வயமுள்ளதாகக் கணக்கிடலாம்; அது தனக்கும் வழியில்லையாயிற்று.

கடவனாகி-ஒரு நியமத்தோடே கூடினவனாகி என்றபடி.

ஆகவிப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும் ஏதோ நப்பாசையினால் அறிவு கெட்டவனாய்க் கொண்டு சக்கரபாணியான எம்பெருமானைத் தேடாநின்றேன்; காண வழி ஏது?

“சக்கரத் தண்ணலையே” என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாப்போலே கையும் * நெய்யாராழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது” என்பதாம்.

——————

***- நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே;

அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ;

அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே!

இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

பதவுரை

சக்கரத்து அண்ணலே என்று

கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி
தாழ்ந்து

அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து
கண்நீர் ததும்ப

கண்ணீர்மல்க
பக்கம் நோக்கி நின்று

சுற்றும் பார்த்து நின்று
அலந்தேன்

தளர்ந்தவனான
பாவியேன்

பாவியானநான்
காண்கின்றிலேன்

காணப்பெறுகின்றிலேன்:

(காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ)

மிக்க ஞானம் மூர்த்தி ஆய

மிகுந்த ஞானஸ்வரூபனாய்
வேதம் விளக்கினை

வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை
என் தக்க

எனக்கேற்ற
ஞானம் கண்களாலே

ஞானமாகிற கண்ணாலே
கண்டு தழுவுவனே

கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே!
(எப்படி மறக்கமுடியும்?)

கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திக் கொண்டவனே! என்று சொல்லித்

தரைப்பட்டுக் கண்களில் நீர் பெருகப்பெற்றேன்; எந்தப் பக்கமாக வருகின்றானோ வென்று பக்கந்தோறும் நோக்கினேன்;

மஹாபாபியாகையாலே காணப்பெற்றிலேன்.

காணாவிட்டால் மறந்து பிழைக்கலாமே; நெஞ்சில் பிரகாசியாமலிருந்தாலன்றோ மறக்கலாம்;

பரிபூர்ணமான ஞானத்தையே வடிவாகவுடையனாய் வேதவேத்யனாயிருக்கிற அப்பெருமானை மறவாமலிருப்பதற்குறுப்பாக

எனக்குத்தகுந்தாப்போலே ஒரு ஜ்ஞான த்ருஷ்டியுண்டாகி அத்தாலே கண்டுதழுவும்படியாயேயுள்ளது;

மறக்கவும் வழியில்லை- தரிக்கவும் வழியில்லை என்றாராயிற்று.

ஆழ்வார்க்கு ப்ரேமம் ஞானம் என்று இரண்டுண்டு;

கண்ணாரக்காணப் பெறாமையாலே ப்ரேமம் க்லேச ஹேதுவாயிற்று;

மறந்து பிழைக்கவும் முடியாமையாலே ஞானமும் க்லேசஹேதுவாயிற்று என்று தளருகிறபடி.

கண்டுதழுவுவனே என்னுமிடம் களித்துக் கூறுவதுபோலத் தோற்றினாலும் பிரகரணத் திற்குச் சேரவேண்டுகையாலே

க்லேசோக்தியாகவே பூருவர்கள் வியாக்கியானித்தருளினார்கள்.

இரண்டாமடியில் “அலர்ந்தேன்” என்கிற பாடம் பிழையுடைத்து; ‘அலந்தேன்’ என்றே யிருக்கத் தக்கது.

பெரிய திருமொழியில் “அலந்தேன் வந்தடைந்தேன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.  அலமந்தேன் என்றவாறு.

—————–

***- (தழுவிநின்ற.)  இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று

நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

பதவுரை

தழுவி நின்ற

விட்டு நீங்காத
காதல் தன்னால்

(பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே
தாமரை கண்ணன் தன்னை

செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து
குழுவு மாடம் தென்குருகூர்

திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான
மாறன் சடகோபன்

ஆழ்வார்
சொல்

அருளிச்செய்த
வழு இலாத

குறையற்ற
ஒண் தமிழ்கள்

அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய
ஆயிரத்துள்

ஆயிரம் பாட்டினுள்
இ பத்தும்

இத்திருவாய்மொழியை
தழுவ

கருத்தோடுகூட
பாடி

இசைபாடி
ஆட வல்லார்

களித்துக் கூத்தாடவல்லவர்கள்
கைகுந்தம் ஏறுவர்

திருநாட்டில் ஏறப்பெறுவர்கள்.

திருத்துழாய் பரிமளத்தோடு கூடவே அங்குரிக்குமாபோலே ஆழ்வார்

“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து”  என்றபடியே

பகவத் விஷயமானகாதலோடு கூடவே அவதரித்தவராதலால் “தழுவிநின்ற காதல் தன்னால்” என்றார்.

* ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:இ ஸாத்விகஸ்ஸ து விஜ்ஙேய: ஸ வை மோக்ஷ்ர்ர்த்தசிந்தக.” என்கிறபடியே

எம்பெருமான் தனது செந்தாமரைக் கண்களால் கருவிலே கடாக்ஷித்தருளியே இந்தக் காதலை உண்டு

பண்ணினானென்பது தோன்றத்  தாமரைக்கண்ணன்தன்னை என்கிறார்.

“மறக்குமென்று செந்தாமரைக்கண்ணெடும், மறப்பறவென்னுள்ளே மன்னினான்” என்றார் தீழும்.

குழுவுமாடத்தென்குருகூர் என்றவிடத்திற்கு ஈடு;-“*ஸர்வஞ்ச குசலம் க்ருஹே* என்னுமாபோலே ஆழ்வார்க்கு ஆர்த்தி மிகமிக ஸர்வேச்வரன் வரவு தப்பாது என்று திருநகரி குடிநெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.” என்பது.

இதன் கருத்து யாதெனில்; -பெருமாள் ராவணவதம் செய்தருளித் திருவயோத்யைக்கு மீண்டெழுந்தருளும்போது

பரத்வாஜமஹர்ஷி பக்கலிலே போந்து தெண்டனிட்டு

“அயோத்தியில் பரதன் முதலிய யாவரும் ஸௌக்கியமாக இருக்கிறார்களா?  அவ்விடத்துச் செய்தி ஸ்வாமிக்கு ஏதேனும் தெரியுமோ?” என்று கேட்க.

அதற்கு விடை கூறுகின்ற முனிவர்  “… ஸ்ரீ பங்கதிக்தஸ் து ஜடிலோ பரதஸ் த்வாம் பரதீக்ஷ்தே.  பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ் ச குசலம் க்ருஹே.” என்றார்.

*கங்கலும் பகலும் கண் துயிலறியாமே கண்ணநீர் கைகளாலிறைத்துச் சேற்றிலே அழுந்திக்கிடக்கிறான் பரதாழ்வான் என்று சொல்லிவிட்டு ‘க்ருஹத்தில் எல்லாரும் குசலந்தான்’ என்றார் முனிவர்.

பரதாழ்வான் வாசாமகோசரமாகத் துடித்துக்கொண்டிருக்கும்போது “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்று சொல்லக்கூடுமோ?  என்கிற சங்கைக்குப் பரிஹாராமாக நம்பிள்ளை யருளிச் செய்கிற அர்த்தம் பரம யோக்யமானது:

‘ஆர்த்தி பொறுக்கவொண்ணாதபடி மிகுந்தவாறே எம்பெருமான் சடக்கெனவந்து முகங்காட்டியே தீருவன்’ என்பதை நன்கு உணர்ந்தவர்களாகையாலே பரதாழ்வானுடைய அதிமாத்ரமான ஆர்த்தியைக கண்டவர்கள் ‘ஸ்ரீராமபிரான் அடுத்த க்ஷ்ணத்தில் அவசியம் வந்தேதீருவன்’ என்று திண்ணமாக நம்பி வெகு ஸந்தோஷத்துடனே குழுமியிருந்தார்களாம்.

ஆனது பற்றியே முனிவர் “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்றார்.

அதுபோலவே இங்கும் ஆழ்வாருடைய ஆர்த்தியின் கனத்தைக்கண்ட குருகூர்வாழும் நல்லார்கள் ‘இப்போது எம்பெருமான் வருகை தப்பாது’ என்று தேறிக் குழுமியிந்தார்களாம்:

ஆகவே குழுவுமாடத் தென்குருகூர் எனப்பட்டது-என்பது இன்சுவை மிக்கபொருள்.

மாறன்-ஸம்ஸார நிலைக்கு மாறாக இருந்தவர்; அல்லது ஸம்ஸாரத்தை மாற்றினவர்.

இப்படிப்பட்ட ஆழ்வார் பகவத் குணங்களிலொன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்துள் இப் பத்தையும் ஸார்த்தமாகப் பாடியாட வல்லார் வைகுந்தமேறுவர் என்றாராயிற்று.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -4-6–தீர்ப்பாரை யாமினி–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

October 22, 2022

***- பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக

வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

அன்னை மீர்

தாய்மார்களே!
இனி

இப்படிப்பட்ட நிலைமையான பின்பு
தீர்ப்பாரை

இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை
யாம் எங்ஙனம் நாடுதலும்

நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)
ஓர்ப்பால்

நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல்

அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது

அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய்

விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம்

திண்ணமாக அறிந்தோம் ;
அன்று

முன்பொருகாலத்திலே
போர்

பாரதப்போரிலே
பாகு

பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை
தான் செய்து

தானே முன