ஸ்ரீ திவ்ய தேச மஹாத்ம்யம் —

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

————————

ஸ்ரீ திருமந்திரம் – நாராயண மந்திரம் -மூன்று பதங்களாயிருப்பதைப் போல
இந்த திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை மூன்று திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது
1-கோவில் திவ்யமாகிறது.
2-பெருமாள் ஒரு திவ்யம்,
3-மங்களாசாசனப் பாசுரம் திவ்யப் பிரபந்தமாகிறது.

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

இம்மட்டுமன்றி, இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள
விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும்.
மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர
விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும்.

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும்,
ஆகமம் கூறிப்போகிறது.

———–

1. பொய்கையாழ்வார்– 6 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
2. பூதத்தாழ்வார் –13 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
3. பேயாழ்வார் –15 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
4. திருமிழிசையாழ்வார் –17 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் 
5. நம்மாழ்வார் –37 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
6. குலசேகராழ்வார் –9 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
7. பெரியாழ்வார் –18 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
8. ஸ்ரீ ஆண்டாள்-11 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

9. தொண்டரடிப் பொடியாழ்வார் –1 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

10. திருப்பானாழ்வார்   -3 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

11. திருமங்கையாழ்வார்  — 86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

—————

ஸ்ரீ ரெங்கம் –11 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருமலையும் திருப்பாற் கடலும் -10 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
பரமபதம் -8-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருக்குடந்தை -7-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருமாலிருஞ்சோலை -6-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
ஐந்து திவ்ய தேசங்கள் -6 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
நான்கு திவ்ய தேசங்கள் -3 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
ஐந்து திவ்ய தேசங்கள் -3 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
21 திவ்ய தேசங்கள் -2- ஆழ்வார்களால் மங்களா சாசனம்
67 திவ்ய தேசங்கள் -ஒரே ஆழ்வாரால் மங்களா சாசனம்

—————

நின்ற திருக்கோலம் -67 திவ்ய தேசங்கள்
இருந்த திருக்கோலம் -17 திவ்ய தேசங்கள்
சயனத் திருக்கோலம் -24-திவ்ய தேசங்கள்

கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலம் –39-திவ்ய தேசங்கள்
மேற்கு நோக்கி நின்ற திருக் கோலம் -12-திவ்ய தேசங்கள்
தெற்கு நோக்கி நின்ற திருக் கோலம் -14 திவ்ய தேசங்கள்
வடக்கு நோக்கி நின்ற திருக் கோலம் -2-திவ்ய தேசங்கள்

கிழக்கு அமர்ந்த திருக்கோலம் –13 திவ்ய தேசங்கள்
மேற்கு அமர்ந்த திருக்கோலம் –3-திவ்ய தேசங்கள்
தெற்கு அமர்ந்த திருக்கோலம் -இல்லை
வடக்கு அமர்ந்த திருக்கோலம் -1 திவ்ய தேசம்
கிழக்கு நோக்கி சயனம் –18 திவ்ய தேசங்கள்
மேற்கு நோக்கி சயனம் –3 திவ்ய தேசங்கள்
தெற்கு நோக்கி சயனம் –3 திவ்ய தேசங்கள்
வடக்கு நோக்கி சயனம் –இல்லை

ஜல சயனம்
தல சயனம்
புஜங்க -சேஷ -சயனம்
உத்தியோக சயனம்
வீர சயனம்
போக சயனம்
தர்ப்ப
பத்ர -ஆலிலை மேல் – சயனம்
மாணிக்க சயனம்
உத்தான சயனம்

திருநீர்மலை -திருக்கோட்டியூர் -கூடல் அழகர் -திருவல்லிக்கேணி -போன்ற திவ்ய தேசங்களில் நின்ற இருந்த சயன திருக்கோலங்களில் ஸேவை

——–

ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

கடல் கிழக்கு தெற்கு கரை பொறு வெள்ளாறு
கூட திசையில் கோட்டைக் கரையான் வடதிசையில்
வோனாட்டுப் பண்ணை இருபது நாற்கதஞ்
சோனாட்டுக்கு எல்லை எனச் செப்பு –பெரும் கதை

————

உயர் திருவரங்கம் உறையூர் தஞ்சை
அயர் யகற்றிடும் அன்பில் கரம்பனூர்
புகழ் வெள்ளறை புள்ளம் பூதங்குடி
அந்தமில் பேர் நகர் ஆதனூர் அழுந்தூர்
போதமருள் சிறு புலியூர்ச் சேறை
மாதலைச் சங்க நாண் மதியம் குடந்தை
விரவு கண்டியூர் விண்ணகர் கண்ண
புரமுடன் ஆலி பொன்னாகை நறையூர்
நத்து நந்தி புர விண்ணகரம் இந்தளூர் திருச்
சித்ர கூடம் சீ ராம விண்ணகரம்
கூடலூர் கண்ணங்குடி கண்ண மங்கை
வீடருள் கவித்தலம் வெள்ளியங்குடி
வண்ண மணி ,மாடக் கோயில் வைகுந்த
விண்ணகரம் அரி மேய விண்ணகரம்
திருத்தேவனார் தொகை சிறந்த நதாய வண்
புருடோத்தமம் செம் பொன் செய் கோயிலே
பாவணத் தெற்றி யம்பலம் பல மணிக்கூடம்
கா வளம் பாடிக் கவின் வெள்ளக் குளம்
துதி பார்த்தன் பள்ளி சேர் சோழ நாட்டுப்
பதியதோர் நாற்பதும் பணிந்து போற்றுவோம் –

——————-

நீல மேகம் நெடும் பொற் குன்றத்துப் பால் விரித்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை யாரும் திறல் பாயல் பள்ளிப் பலர் தொழுது ஏத்த
விரி திரைக் காவிரி வியன் பெருந்துருத்தி திரு வமர் மார்பன் கிடந்த வண்ணம் –இளங்கோவடிகள்

iii) கி.பி. 10ம் நூற்றாண்டு – இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.

கி.பி. 953 முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு அளித்ததையும்
அதற்கு கற்பூரம், பட்டுத்திரி, நூல், வாங்குவது உட்பட அதன் நிலையான செலவினங்கட்கு 51 பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.
ஏறத்தாழ 400 சோழர் கல்வெட்டுகள் உண்டு.
கி.பி. 1060-1063 இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான்.
எனவே அது இராசமகேந்திரன் திருவீதி என்றே வழங்கப்பட்டுள்ளது.
கி.பி.1017-1137 இது இராமானுஜரின் காலமாகும். இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.
கி.பி. 1120-1170 முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்தான்.
இதனால் ராமானுஜர் சிலகாலம் ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில்-மேல்கோட்டையில் – தங்கியிருந்தார்.
கி.பி.1178-1218 மூன்றாம் குலோத்துங்க சோழன். இவன் காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப் பட்டது.
இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.
கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.
கி.பி.1216-1238 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக் கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.
கி.பி.1234-1262 ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம் உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.
கி.பி.1251-1268 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான்.
திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.பொற்கருட வாகனம் வழங்கினான்.
இவன் கடக அரசை (கட்டாக், ஒரிசா)போரில் வென்று கைப்பற்றிய பொன்னில் திருவரங்கனுக்கு மரகதமாலை,பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன வழங்கினான்.
இவன் காவிரி நதியில் தெப்ப உற்சவத்தின் போது இரண்டு படகுகள் கட்டினான்.
அதில் ஒன்றில் தனது பட்டத்து யானையை இறக்கித் தானும் அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
மற்றொரு படகில் ஏராளமான அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும்,
கோவிலுக்கு வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் நிரப்பி தன்னுடைய படகில் நீர் மட்டத்தின் வரையில் இன்னொரு படகின் நீர்மட்டம் வரும் வரை தானம் வழங்கினான்.
அப்பொருட்களை இத்திருக் கோவிலுக்கு வழங்கினான்.
கி.பி.1263-1297 ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார்.
இத்திருக்கோவிலில் உள்ள பேரழகு பொருந்திய வேணு கோபால கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும்.

கி.பி.1268-1308 மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலம். இவன்
காலத்தில் இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ
இங்கு வந்து இத்தலம்பற்றியும் இதைச் சுற்றியுள்ள செழிப்பைப் பற்றியும்
வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார்.

கி.பி. 1311 முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.இக்கோவிலில் கொள்ளையிட்டான்.

கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான்.
அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும்,
ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேறவிடாமல் தடுத்தனர்.
எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர்.
பாண்டியர்களும்., ஒய்சாளர்களும் முடக்கப்பட்டதாலும் சோழவரசு இந்திய வரைபடத்தில் கொஞ்சம் கூட இடம்பிடிக்க முடியாது இருந்த இந்த
காலக்கட்டத்தில்
வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து
இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும்,
வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப்
பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி
பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப்
பலவிடங்களிலும் மறைத்து
இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து
வைத்தனர். கி.பி. 1371 வரை திருப்பதியிலேயே இருந்தன. இவ்விதம் திருவரங்கத்திலிருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் நடந்த நிகழ்ச்சிகளை
“திருவரங்கன் உலா” என்னும் நூல் தெளிவாகவும் விரிவாகவும் வரலாற்று நாவல் போன்று சிலாகித்துப் பேசுகிறது.

—————–

பகவான் எழுந்தருளியிருக்கும் விமானங்கள் 96 வகையென்று ஆகம சாஸ்திரங்கள் கூறும்.
அவற்றுள் மிக அருமையானது அஷ்டாங்க விமானம்.
திருக்கோட்டியூர், கூடல்மாநகர், உத்திர மேரூர் போன்ற ஸ்தலங்களில் விமானங்கள் அஷ்டாங்க அமைப்புடன் கூடியவை. இவை 8 அங்கம் 3 (தளம்) அடுக்கு உடையது.
அதாவது திருமந்திரமானது எட்டெழுத்துக்களாகவும், மூன்று பதமாகவும் இருப்பதைப் போல திருவஷ்டாச்சர மந்திரத்தின் ஸ்தூல வடிவமாக இவைகள் திகழ்கின்றன.
ஸ்ரீமந் நாராயணன் திருமேனி இந்த மந்திரத்தில் அடங்கி 8 அம்சங்களாக விமானத்தில் நிறைந்திருக்கின்றன என்பது பொருள்.

—————

அகால மிருத்யு ஹரணம் ஸர்வ வியாதி விநாசனம் விஷ்ணோ பாதோதகம் பீத்வா புனர் ஜன்ம ந வித்யதே
துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை.
அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது ஆயுர்வேதம்.

துளசி எடுப்பதை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருத்துழாய் எழுந்தருளப்பண்ணுதல் என்பர்.
துளசியை எடுக்கும்போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தையும் கூறுவர்.
விருந்தாயை துளசி தேவ்யை பிரியாயை கேசவஸ்யச கேசவார்த்தே சினோமி த்வாம் வரதா பவ சர்வதா
“திருமாலுக்கு உகந்த ஒளஷதியே, விருந்தா, துளசி என்றெல்லாம் போற்றப்படும் தேவியே உன்னை வணங்குகிறேன்.
ஸ்ரீமந் நாராயணனை ஆராதிக்க உன்னைத் தொழுகின்றேன்.
எனக்கு என்றும் அருள் பாலிப்பாயாக” என்பது இதன் பொருள்.

————

ராமாவதார ஸு ர்யஸ்ய சந்தர்ஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸெம்ய, ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸு கர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்யேபி கேசரா-தசாவதார ஸ்தோத்திரம்- – சுவாமி வேதாந்த தேசிகர்

ஸ்ரீராமவதாரம் – சூர்யன்
ஸ்ரீகிருஷ்ணவதாரம் – சந்திரன்
ஸ்ரீநரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீகல்கி அவதாரம் – புதன் (சோமபுத்ரன், சந்திரனின் மகன்)
ஸ்ரீவாமன அவராரம் – வியாழன்
ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன்
ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி (பாஸ்கர புத்திரன்,- சூரியனின் மகன் சனி)
ஸ்ரீவராஹ அவதாரம் – இராகு
ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது
ஸ்ரீபலராம அவதாரம் – குளிகன் (சனியின் மகன்)

————–

மகா விஷ்ணுவைக் குறித்து தவம் செய்து அருள் பெற்ற அஷ்ட நாகங்கள்
1. சேஷன் 2. வாஸு கி 3. தகஷகன் 4. சங்கபாலன் 5. கார்க்கோடகன் 6. குளிகன் 7. பதுமன் 8. மகாபதுமன்

—————–

திருப்பாற்கடலைக் கடையும்போது வைகுண்ட ஏகாதசியன்று விஷம் தோன்றியது. மறுநாள் துவாதசியன்று அமிர்தம் தோன்றியது.
துவாதசி அன்று பக்தர்கள் அகத்திக் கீரை செய்து சாப்பிடுவார்கள்.
அகத்திக் கீரைக்கு அமிர்தபிந்து என்ற ஒரு பெயர் உண்டு. அமிர்தபிந்து என்றால் அமிர்தத்துளி என்று பொருள்.
இதை அகத்திய முனிவன் மூலிகை என்றும் கூறுவர்.
அகத்தியை துவாதசியன்று சாப்பிடுதல் திருப்பாற்கடல் அமுதத்தை (விஷ்ணு தேவர்கட்கு கொடுத்தது போல்) சாப்பிட்டதற்கு ஒப்பாகும்.

———————

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம்

காஷாயாம்பர கவிசத சாத்ரம் கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம் வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (பஜ யதி ராஜம்)

காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும்,
திரி தண்டத்துக்கு மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும்,
மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும் த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான
வ்யாசர் அருளிய ப்ரஹ்ம ஸூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான
எதிராஜரை ஜெபியுங்கள் என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுனகால இராமவாசியான ரங்காச்சாரியார்
தாம் அருளிச்செய்த பஜ யதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்

——————

2. உறையூர் என்னும் திருக்கோழி

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா (1762)–பெரிய திருமொழி -9-2-5-

ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்
திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார்.
கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே
“ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும் சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள்.

——–

பஞ்ச ரங்க ஷேத்ரங்கள்
1. ஆதிரங்கம் – -ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
2. அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்
3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்
4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம்
5. பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)

———-

கம்பர் பெருமானும் இந்த வல்வில் ராமன் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார்.
சீதையின் அழகைப் பற்றி சூர்ப்பனகை சொல்லக்கேட்ட இராவணன் அவள் அழகு எத்தகையது என்றான்.
சீதையின் அழகை ராவணனுக்கு சொல்வதை விடுத்து தான் இராமபிரானின் அழகுப் போதையில் மயங்கிக் கிடப்பதை,

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார்ந்த தடந்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவன்ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்
என்று இப் பெருமானின் பெயரையே சூர்ப்பனகை வாயிலாய் கம்பர் தெரிவிக்கிறார்.

திருஎவ்வுள் கிடந்தானை “தம்மன்யே ராகவம் வீர” என்று ராவணன் போற்றியுள்ளதாக பூர்வாச்சாரியர் கூறுவர். இங்கு சூர்ப்பனகை வல்வில்ராமன் என்கிறாள்

—————

ஸ்ரீ புள்ளம் பூதங்குடி

நான்கு கரங்களுடன் சங்கு சக்ர தாரியாக ராமன் சயன திருக் கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 இல் இது ஒன்றுதான். இராமாயணத்தில்
இத்தலம் பற்றி,
பூத்புரி ஷேத்ர வந்தே புன்னைவந ஸம்ஸ்திதம்
ஸௌமித்ரே சார சாஷ்டாநி நிர்மதிஷ்யாம பாவகம்
க்ருத்ராதம் திஷாஷாமி மத்க்ருதே நிதநம்கரம்- – ஆரண்யகாண்டம் 68-27-
வைம் முத்தவா சிதலம் தீப்தா மரோப்ய பதகேச்வரம்
ததாளைராமோ தர்மாத்மா ஸ்வபந்து பிவ துக்கித்-ஆரண்யகாண்டம்-68-31-
விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ ஸீஸ மக்ரதம்
க்ரூத்ராஜண் புஷ்கரணித்தீரே லஷமனோலஷ்மி ஸம்பன்ன”

————-

ஸ்ரீ திரு ஆதனூர்
ஆ -காமதேனு தவம் புரிந்த திவ்ய தேசம்
ஆதி ரெங்கேஸ்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
பிருகு அக்னி காம தேனுப்யோ தத்தா பீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸூ ஸமாஸ்ரிதம் ஸூர்ய
புஷ்கரணி தீரே சேஷஸ்யோ பரி ஸாயிநம் –

திருவரங்க கர்ப்ப க்ருஹத்தில் உள்ள திருமணத் தூண்கள் போல் இங்கும் உண்டே

என்னை மனம் கவர்ந்த ஈசனை -வானவர் தம் முன்னவனை -மூழிக் களத்து விளக்கினை அன்னவனை
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –பெரிய திருமடல்
என்னை மனம் கவர்ந்த ஈசனை
என்று ஆதனூர் பெருமாளை திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் போலவே
நம்மாழ்வார் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்துறையும் துளிவார் கட்குழலார் -9-7-5-

ஓடி வந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை,எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு திருமங்கை ஆழ்வார்  ஓடி வரும்போது ஆதனூருக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும்,
ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர் வைகாவூர், என்றும்
புகுந்தது பூங்குடி என்றும்,
அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்
ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றது.
இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது.
“ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளான்.
இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும்.
இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.
இங்கு ஸேவை சாதிக்கும் அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர்.
. ஒரு காலத்தில் மிகச் சிறப்புடன் நடந்துவந்த இத்தலத்தின் பரிபாலனத்திற்கு நித்யபடி, தளிகை வந்ததாகவும்,
அந்த இடம் இப்போது கிராமமாகி அந்தப் பழைய பெயரிலேயே (தளிகையூர்) தளியூர் என்று வழங்கி வருகிறது

—————–

முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி உயரம் ஆகும்.
இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும்.
150 அடிஉயரமுள்ள திருக்குடந்தையில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.
150 அடி உயரமுள்ள ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும்.
மூலவருக்கு உத்சவருக்கும் சமமான பிரதானம் என்பதால் -108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான
திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர் எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.
இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார்.
அழகிய சித்திரங்களும், நுண்ணிய வேலைப்பாடும் நிறைந்தது இத்தேர்.
இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.
இங்குள்ள சிங்கச் சின்னம் பொறித்த மண்டபம் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாகும் (7ம் நூற்றாண்டு)
வைணவ மத வளர்ச்சிக்கு ஒரு பெரிய மலைபோன்று விளங்கிய கிருஷ்ணதேவராயரால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.
முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு அழித்துவிட எத்தனித்து விடுங்கால்
நெய்வாசல் உடையார் என்னும் பக்தர் தமது பக்தி மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி
மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து திருப்பியனுப்பினார்.
நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும்,மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது.
தூணிலா முற்றம் என்று பெரியாழ்வாரின் பாசுரத்தில் கூறப்படும் இடம் இக்கோவிலின் வடக்குப் பிரகாரமாகும்.

—————-

திரு விண்ணகர்
இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.
அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன்,திருவிண்ணகரப்பன்,
இவ்வைந்து பெயரிட்டு,
என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே–6-3-9-

——————

திருநறையூர்

இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது.
திருநறையூர்தான் கிருஷ்ணாரண்யத்தின் துவக்கமாகும்.
கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில் ஆரம்பித்து திருச்சேறை,திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது
ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும்.
மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள விமானமும், கோபுர வடிவிலேயே அமைந்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பினை வேறு திவ்ய தேசங்களில் அதிகமாக காணமுடியாது.
கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே.-
இவ்வூரில் வாழ்ந்த ஒரு வைதீகப் பிரம்மச்சாரிக்கு 108 திவ்ய தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது.
ஆனால் காலச் சூழ்நிலையால் அது இயலவில்லை. 108 எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும் இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார்.
இந்த பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில் வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்கிரகங்களைக் கொடுத்ததாகவும்,
நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து பூஜித்த இவைகளை தமது அந்திம காலத்தில் இத்தலத்தில் ஒப்படைத்ததாகவும் கூறுவர்.
இந்த 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம்.

————–

மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர்
திருச்சேறைப் பெருமானை வணங்கி புத்திரப் பேறு பெற்று
இத் தலத்திற்கு பூமி தானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

———–

திருக்கண்ண மங்கை
ஸ்ரீ லட்சுமி தவமியற்றியதால் “லட்சுமி வனம்” என்றும்
இவ்விடத்தே திருமணம் நடை பெற்றதால் கிருஷ்ணமங்கள ஷேத்ரம் என்றும்
விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களால் அமையப் பெற்றதால்
“ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” என்றும் ஸப்தாம்ருத ஷேத்ர மென்றும் இதற்குப் பெயர்.

இப்பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர்
“நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ”
கோலம் சுமந்தெழுந்த கொண்டலோ – நீல நிறக்
காயா மலரோ களங்கனியோ கணமங்கை
மாயா உனது வடிவு-என்று பாடியுள்ளார்.

வடலூர் இராமலிங்க அடிகளார் இந்த தாயாரின் மீது
உலகம் புரக்கும் பெருமான்றன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகையளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
திலகஞ் செறி வாணுதற் கரும்பே தேனே, கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே தித்தித்தெழுமோர் தெள்ளமுதே
மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே
வருத்தந் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
சலகந்தரம் போல் கருணை பொழி தடங்கண் திருவே கண்ணமங்கை
தாயே சரணஞ் சரணமிது தருணங் கருணை தருவாயே” — என்று பாடிப்பரவுகிறார்.

எங்கும் 4 கரங்களுடன் விளங்கும் விஸ்வக் சேனர் இங்கு இரண்டு கரங்களுடன் தோன்றுகிறார்.

———-

முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம்,தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில்
ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள்
திருக்கண்ண புரத்தில் திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார்.
இதைப் பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம்
ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம்
நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ
ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம்
திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத
அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம்.
இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்”நிலையில் மஹா விஷ்ணுவாகவும்,
இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும்,
அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம்செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

————

திருக்கண்ண மங்கை

கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும்.
1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம் 4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி.

இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம்,ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று.

திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயணஸ்தலம் என்றும் வழங்குவர்.
1. தெற்கில் – ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன்
2. தென்மேற்கில் – பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
3. தென்மேற்கில் – தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
4. தென்மேற்கில் – கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
5. தென்மேற்கில் – திருக்கண்ணங்குடி என்ற பதியில்
இவ்வைந்தும் சுமார் 6 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன.

மற்றெல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் நிலையில் உள்ள கருடாழ்வாரைத்தான் காண முடியும்.
ஆனால் இங்கு இரண்டு கைகளையுங் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார்.
இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
இங்குள்ள அழகிய சிரவண புஷ்கரணியின் தெற்கு கரையில் உள்ள கோவிலில் ஆதிப் பெருமாள் வீற்றிருந்த நிலையில் உள்ளார்.
இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா”என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த விழாவில் பெருமாள் விபூதி அணிந்துகொள்கிறார்.
இந்நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும் அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம்.
உபரிசரவஸு மன்னனுக்காக இவ்விதம் செய்யப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்நிகழ்ச்சி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

காயாமகிழ், உறங்காப்புளி,ஊராக்கிணறு, தோலா வழக்கு திருக்கண்ணங்குடி என்பது அவ்வூரைப் பற்றிய பழமொழியாகும்

இவரது சீடர்கள் தெரிவிக்க உடனே நாகப்பட்டினஞ் சென்று அச்சிலையைப் பார்த்து
உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும் வேண்டுமோ என்று
அறம் பாடின மாத்திரத்தில் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் மட்டும் பிதுங்கிக்கொண்டு வந்து விழுந்ததாம்.
இதோ அப்பாடல்
ஈயத்தா லாகாதோ இரும்பினா லாகாதோ பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
பித்தளை நற்செம்புக ளாலா காதோ மாயப் பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே.

——————-

தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான பாடல் ஒன்று காணப்படுகிறது.
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்புங் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச்சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச்சங்க நாண் மதியத்தான்.

————–

1. மணிமாடக்கோவில் – நாராயணப்பெருமாள்- – பத்ரி
2. அரிமேயவிண்ணகரம் – குடமாடு கூத்தர் – கோவர்த்தனகிரி
3. வைகுந்தவிண்ணகரம் – ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
4. வெண்புருடோத்தமம் – அயோத்தி
5. செம்பொன்செய் கோயில் – அழகிய மணவாளன்- – உறையூர்
6. திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில்- – திருப்பதி
7. திருதெற்றியம்பலம் – பள்ளிகொண்ட பெருமாள்- – ஸ்ரீரங்கம்
8. திருத்தேவனார்த் தொலை – கீழச்சாலை – திருவடந்தை
9. திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன்- ருக்மணியுடன் – துவாரகை
10. திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள் – கச்சி
11. பார்த்தன்பள்ளி – பார்த்தசாரதி – குருசேஷ்த்திரம்

சிவன் பதினொரு வடிவம் கொண்டதை-
ஸ்வமயம் பூதஸத் யானே- த்வாதச விபத்வானே- ஏகாதசனாம் ருத்தரனாம்- பூதஸ் ஸண்யானே. – என்று வடமொழி கூறும்.

—————–

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும்.
இதனைத் திருமங்கையாழ்வார்,
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே–என்று அருளிச் செய்கிறார்

—————–

6) மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்- தா(அ)யது எல்லாம் ஒருங்கு – திருக்குறளின் 610ஆம்பாடல் –
ஸ்ரீ காழிச் சீராம விண்ணகர் -தாடாளன் -பெருமானையே குறிக்கின்றது
தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
திருமாலின் காலடிக் கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை–
திருமங்கை ஆழ்வார் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள்
1.ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார் சீயம் 5.கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான் 8. கலியன்.
திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள் என்பது வரலாறிந்தார் கூற்று.
மதத்தால் இருவரும் வேறு பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்” என்பதற்கொப்ப
ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல் பூண்டவராயிருந்தனர் என்பதும்
ஒருவருடன் ஒருவர் கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர் என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும்.
கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே– என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு
அதாவது தன்னைத் தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.
ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
உமது பவனியைக் காண என் மகள் ஒருநாள் வந்த போது அவள் உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர்.
இதுமுறையோ, எனது ஒரே மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று கூறும் வகையில்
திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர் கூறினார்.

இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப் பேசுகிறார்-
திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.
இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.
ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை என்பர்
பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன்.
தாங்கள் மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை பிழைக்கச் செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட இதனைச் செய்ய முடியுமன்றோ,
ஆனால் தங்களைக் காண விரும்பி நிலவில் வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை
நிலைக்கும் என்றார்.
இதோ அப்பாடல்

வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப் பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே

————–

திருமங்கையாழ்வார் குடமாடு கூத்தன் என்ற சொல்லை இரண்டு தலங்கட்கு மங்களாசாசனம் செய்யும்போது இரு வேறுபட்ட பொருளில் எடுத்தாள்கிறார்.
1) நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது
தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட மார்வர் தகைசேர் ………………….. என்று குடங்களில் தயிருண்டதை கூறுகிறது
திருஅரிமேய விண்ணகரம் -இத்தலத்திற்கு அளித்த பாடலில்,
காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம்
என்று குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல கூத்தனல்ல “குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்”
குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலா விநோதம்
குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம்.
எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும் ஐயமில்லை.

————

திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான்.

அந்த அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளியமையால் புருடோத்தம திருநாமம் உண்டாயிற்று.

———

திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின்(திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார்.
இவரே பேரருளாளன் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.
எனவேதான் உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு பிராட்டிகள்
உறையூரில் கமலவல்லி நாச்சியார்,பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்
இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும் பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர்.

——————

திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்)
வேத புருஷன் ‘ஸ்தயம் ஞான மநந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம்ம ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான்.
அதை அப்படியே தமிழில்- நந்தா விளக்கே, அளத்தற் கரியாய் என்று மங்களாசாசனம்
பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலை.
இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர்.
திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு முன்புதான் நடை பெறுகிறது

—————-

திருவாலி – திருநகரி
ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும்,சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது திருவாலியில் உள்ள அடையாளங்களாகும்.
இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும் வழங்கப்படுகின்றன.
1. குறையலூர் – உக்கிர நரசிம்மன்
2. மங்கை மடம் – வீர நரசிம்மன்
3. திருநகரி – யோக நரசிம்மன்
4. திருநகரி – ஹிரண்ய நரசிம்மன்
5. திருவாலி – லட்சுமி நரசிம்மன்
பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து
திருமந்திர உபதேசம் செய்ய எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது.
திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு
இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.
திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து
தான் அப்பிம்பத்தின் நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும்,
அப்பிம்பத்தில் செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார்.
இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய பூஜைகளும் நடைபெறுகின்றன.

நம்மாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆழ்வார் திருநகரியாயிற்று
இவரின் அவதாரஸ்தலம் திருவாலி திருநகரியாயிற்று.
ஆண்டாள் மனத்துக்கினியானிடம் ஈடுபட்டார். இவரோ சிந்தனைக்கினியானிடம் ஈடுபட்டார்.

————————-

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்)
இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர் – 2) உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது.
வழங்கப்படுகிறது. மேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையும் தமது பாசுரத்தில் தடமண்ணி தென்கரைமேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
மூலவருக்குண்டான தெய்வநாயகன் என்னும் திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான் திருவஹிந்திரபுரத்துக்கும்
பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.
கடல் மகள் நாச்சியார் என்று அழகிய செந்தமிழ் சொல்கொண்ட நாச்சியார் ஆவார், இத்தலத்துப் பிராட்டி.

திருநாங்கூருக்கு எழுந்தருளின 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை (திருவடந்தை) எம்பெருமான் ஆனார்.

————–

திருத் தெற்றி யம்பலம் (திருநாங்கூர்)
பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.

————

திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)
கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா, அடியேனிடரைக் களையாயே – 1038- என்று
திருப்பதி வேங்கடவனை அண்ணா என்றழைத்து தன் துன்பத்தைப் போக்குமாறு வேண்டுகிறார்.

திருவெள்ளக்குளத்துப் பெருமாளை வேண்டும்போது கண்ணார் கடல் போல் என்ற சொற்றொடராலேயே மங்களாசாசனத்தை ஆரம்பித்து
இப்பெருமாளையும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என்கிறார்.
கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா, அடியேனிடரைக் களையாயே – 1308

————-

திருப்பார்த்தன் பள்ளி
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார்.
இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.
இங்கு மூலவர் திரு நாமம் – தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உத்சவர் -பார்த்தசாரதி
ஓண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் திருவந்தாதி-67)
இதில் திவ்ய தேச திரு நாமம் இல்லை என்பதால் இத் திவ்ய தேச மங்களா சாசனப் பாடலாகக் கொள்ள வில்லை

பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்தவரென்றும்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர்.
திருவல்லிக்கேணியில் இருப்பவர் குருஷேத்ர போரை நடத்திய பார்த்த சாரதியல்லவா?
17) மூலவர், உற்சவர், இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவி மார்கள் புடை சூழ இருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான்.
இவர் பார்த்தசாரதியான கண்ணபிரானல்லவா? எனவே தேவிகள் புடைசூழ இருப்பதில் அதிசயமென்னவுள்ளது.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்ற ஒரு பெயரும் உண்டு. (திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவர் போல் )
சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும்,கொண்டு திகழ்கிறார் இவர்.
இவருக்கும் ஒரு தனி மூலவர் இருக்கிறார்.
அவரது கோவில் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோப்பில் இருக்கிறது.
தை மாதம் பூச நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி மிகச்சிறப்பான விழாவாகும்.
சரம சுலோகார்த்தம் விளங்கிய இடமும் இதுதான்.

——————-

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாடு 12 பிரிவுகளாக இருந்ததெனக் கூறப்படுகிறது.
தென்பாண்டிக் குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு – நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டென்
1. தென்பாண்டி-
2. குடநாடு- குடகு மலைப்பகுதி
3. குட்ட நாடு- தற்போது கேரளத்தில் உள்ள குட்ட நாட்டுப் பகுதி, குட்டநாட்டுத் திருப்புலியூர் என்ற மலைநாட்டுத் திவ்ய தேசம் இந்நாட்டின் பெயரோடு சேர்த்து வழங்கப்படுகிறது.
4. கற்கா நாடு– கன்னடம் அல்லது கன்னடத் தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி.
5. வேணாடு– தொண்டை நாடு. தொண்டை நாட்டின் இதுவும் தென்பகுதியையும்,ஒய்மாநாட்டு நல்லியக் கோடானும் அவன் பின் தோன்றல்களும் ஆண்டு வந்தனர்.
இங்கிருக்கும் கோடை மலையை பொருணனும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கை மா என்னும் பகுதியை வேள் நன்னனும் ஆண்டு வந்தனர்
6. பூழி நாடு– தேனி, சின்னமனூர், கம்பம் அடங்கிய பகுதி.
7. பன்றி நாடு– திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள பன்றிமலைப் பகுதி
8. அருவா நாடு- தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி.
9. அருவா வடதலை நாடு- அருவா நாட்டின் வடபகுதி
10. சீத நாடு- கோவை மண்டலம்
11. மலை நாடு– சேர நாடு (இன்றைய கேரளா)
12. புனல் நாடு- சோழநாடு

“பொன்னுடை யயிந்தரபுரம் திருக்கோவலூர்– இந்நடு நாட்ட திரண்டையும் சேவித் தேத்துவோம்”
ஒன்று மூவுலகையும் அளந்த பராக்கிரமம் பொருந்திய எம்பெருமானைப் பெற்றது.
மற்றொன்று நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.
இது ஒன்றே இந்நடு நாட்டு ஸ்தலங்கட்கான தனிச் சிறப்பாகும்.

திருவயிந்திரபுரம்
இப்பெருமானுக்கு 1) தாஸ ஸத்யன் 2) அச்சுதன் 3) ஸ்த்ரஜ்யோதிஷ்4) அனகஞ்யோதிஷ் 5) த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி மகிழ்கிறது.
இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும்
ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும்
த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை எடுத்தாண்டுள்ளார்.
வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம பிரானுடன்)
நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.
இங்குள்ள ராமபிரான் தமது இடது கரத்தில் வில்லேந்தி காட்சி தருகிறார்.
இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள் இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும் சொல்வர்

————

ஆறோடு ஈரெட்டு தொண்டை எனப்பட்ட 22 தொண்டை நாட்டுத் திருப்பதிகள் –
அந்தமா மத்தியூர் அட்டபுயக் கரம் விந்தை தன்கா வேளுக்கை பாடகம்
நீரகம் புனித நிலாத்திங் கட்த்துண்டம் ஊரகம் வெஃகா வுடனே காரகம்
வந்துலாவுங் கார்வானங் கள்வனூர் பந்த மகற்றிடும் பவள வண்ணமே
தொன்மை யாம்பர மேச்சுர விண்ணகரம் நின்மலப் புட்குழி நின்றவூ ரெவ்வுள்ளூர்.
நீர்மலை இடவெந்தை நீர்க்கடன் மல்லை சீர்மிகு மல்லிக்கேணி சிறந்ததாங் கடிகை
எண்டிசை புகழுமிவ் விருபத்தி யிரண்டு தொண்டை நாட்டுப் பதி தொழுது போற்றுவோம்.

இந்த 22 இல் காஞ்சி மாநகரில் மட்டும் 14 திவ்ய தேசங்கள் உள்ளன.

——————

திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)
3) சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12 மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக ஐதீஹம்.
இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள்.
ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் வைபவமாகும்.
சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன் மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள்
மூலவரின் திருமுகத்தில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும்.

இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர் கோன் திருமுற்றமென்றும்,
மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார் பிரகாரமென்றும்,
நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும்,
5வதுபிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர்.
இந்த பிரகாரத்திற்குள்தான் ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன் என்றருளினார்.
இன்றளவும் சாலைக் கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது.
பெருமாள் இராமானுஜரை மீட்டுக் கொணர்ந்த நாள் இன்றும் உற்சவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன் இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார்.
இதனால் இக்கோவிலின் நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா தோடர்மாலுக்கும் சிலை உண்டு.
இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது.

‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்’– பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர்,

—————-

திரு அட்டபுயக்கரம்
தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது.
இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு அஞ்சி சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான் இச்சன்னதியில்
வாயு மூலையில் உள்ளயாக சாலையைக் காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற பெயரில் இன்றும் காவல் காப்பதாக ஐதீஹம்.

————–

திருப்பாடகம்- பாடு – மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம்

———–

திருவெஃகா
திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக நடைபெறுகிறது.
அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர்.

————

காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி அடையாமல்
காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்று கொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று
இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும்

—————–

ஸ்ரீ முதலியாண்டான் உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்
ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.

————-

திருவள்ளூர் (திரு எவ்வுள்)
வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்தி கொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.
‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதி நல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர் வாழ் வீர ராகவனே போற்றி’

——————–

திருவிடவெந்தை
இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும்.
இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

——

திருக்கடல் மல்லை
நீர்ப்பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –திருமழிசை ஆழ்வார்

——————

மாவனந்த புரம் வண் பரிசாரம் காவலுள்ள காட்கரை மூழிக்கழம்
இலகிடு புலியூ ரெழிற் செங்குன்றூர் நலமிக வளித்திடும் நாவாய் வல்லவாழ்
மற்றும் வண்வண்டூர் வாட்டாருடனே வித்துவக் கோடு மேலாங் கடித்தானம்
மதிளாறன் வினை மலைநாட்டுப் பதி பதிமூன்று மவைப் பணிந்து போற்றுவோம்.

————–

திரு அநந்த புரம்
கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில் அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர பிறவெல்லாம் பழுதுற்றது.
கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு
12000, சாளக்கிராமத்தினாலும்,கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம் பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து
தன் உடைவாளையும் அவரின் திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே அழைக்கப்பட்டனர்.
தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.
இன்றும் ராஜா திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத் தொட்டுத்தொட்டுத் தன் மார்பில்
பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை வரவழைக்கிறது

———

திருவட்டாறு
இத்தலம்பற்றிப் பல நூல்கள் உண்டு. ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.
மலையாளத்தில் வி.ஆர். பரமேஸ்வரன் பிள்ளை என்பார் இத்தலம் பற்றி நூலொன்று யாத்துள்ளார்.
கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது.
இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள் முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.
மாலை முடி நீத்து மலர்ச் செம் பொன்னடி நோவ பாலை வனம் நீ புகுந்தாய் …. கேசவனே பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில் கொள்பவனே

கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ

வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,
ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.

‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்

‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த’- என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது.

————-

பாண்டி நாடு என்றால்
வடிவேல் எறிந்த வான்பகை பொறாஅது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”
என்று சிலம்பு காட்டும் பாண்டிய நாடு தற்போதுள்ள குமரியிலிருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் வரை பரவியிருந்த லெமூரியாக்கண்டம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
அந்த மாபெரும் நிலப்பரப்பில் தற்போதைய வைகை நதி போன்று பன்மடங்கு நீண்டதாயிருந்த, பஃறுளியாறு என்னும் நதியும்
அடுக்கடுக்கான பல மலைகளும், குமரி எல்லையும் கடல்வாய்ப்பட்டு அழிந்தது என்று சங்க நூல்கள் செய்தி கூறுகின்றன.

வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் – உள்ளார்
ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
பாண்டிநாட் டெல்லை பகர்– பெருங்கதை 2098

துய்ய மாலிருஞ்சோலை கோட்டியூர்
மெய்யம் புல்லாணி விளங்குதன் காளூர்
குளிர்க்கு மெழின் மோகூர் – கூடலூர் வில்லிபுத்தூர்
மிளிர்க குருகூர்த் தொலைவில்லை மங்கலம்
ஸ்ரீவரமங்கை ஸ்ரீவைகுண்டம் தென்பேரை
மாவளப் புளிங்குடி வரகுண மங்கை
கோன்தவிர் குளந்தை குறுங்குடி கோளூர்
பாண்டி நாட்டுப்பதி பதினெட்டு மேத்துவம்”

————

திருக்குறுங்குடி
இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருமங்கை ஆழ்வாரின் திருவரசு எனப்படும் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம் திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.

பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும் விற்பனமாய் நீங்காத மேன்மையான்”– என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால்
உதயமார்த்தாண்டர் என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல்
திருக்குறுங்குடி நம்பி எழுந்தருளியிருந்தார்.
இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே

இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள்.
அவர்கள் தமது வீட்டின் பின்னால் உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம்
இந் நம்பியே ஒரு வைணவன் வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.
“வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’- என்ற பாடலால் உணரலாம்.

திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்) திருநாராயணபுரத்தில் இன்றும் செய்து வருகின்றனர்.

புகழேந்திப் புலவர் கூட இத்தலம் பற்றி பின்வருமாறு பாவிசைத்துள்ளார்.

எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.

—————-

திருவரமங்கை என்னும் வானமாமலை
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள்
அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார்.

————-

ஸ்ரீவைகுண்டம்
இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.
இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி.
இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது

—————

திருக்குளந்தை

இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள்.
அதே போல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள்.
அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார்.
இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.

————

திருக்கோளுர்
மதுரகவி ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும்.
நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம்

————

திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி
நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல் திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு கொண்டு விட்டது.
இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த திவ்ய தேசத்துக்கு வெகுதொலைவில் வரும்போதே
தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,
இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்– என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இது பரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.
இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது.
இது கருங்கல்லில் குடைந்த அதிசய இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.
இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது.
இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது.
இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு.

“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”- என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச் சொல்லப்படுகிறது.

———

கூடலழகரை வேண்டிப் பேறு பெற்றவர்களை
வில்லாண்ட வடவரையான் மணம் புணர அட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்.– என்ற பாடலால் தெரியலாம்

வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு.
விண்ணின்று வையம்நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர் பெற்றதென்பர்.
இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்

வேகமாதலின் வேகவதி என்றும் மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் –
தார் ஆகலால் கிருதமலையதாம் என்றும் நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது.
சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப் பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் -என்பதை
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத் தூவித் துறை படியப் போயினாள்.– என்று இளங்கோவடிகள் பகர்கிறார்.
இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
“உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”
மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் – பலராமனின் கோவிலுமிருந்த வெள்ளை நகரம் –
அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பரிபாடல்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம் நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம் அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது

சிலப்பதிகாரமும்
“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”– என்று திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.

“அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற்
சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று-சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.

————

சித்தர்களில் ஒருவராகிய போகர் என்னும் முனிவர் சிலம்பாற்றைப் பற்றியும், இம் மலையைப் பற்றியும் கூறியுள்ள பாடல்கள்
ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாக உள்ளன.
“காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணும் பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”
என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார்.
இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருபாடலில்,
“தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம்.– -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)

———-

திருமோகூர் பற்றி குறிப்பிடும் சங்ககாலப் பாடலொன்று இவ்வூரின் தொன்மையை எடுத்தியம்பும்
….வேல் கொடித் தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
துனைக்காலன்ன புனைதேர் கோசர் தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த மாகெழுதானை வம்ப மோரியர்- -அகம் 251
நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர்.
அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.
பொதியமலைவரை சென்றனர்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.

———-

திருக்கோட்டியூர்
திருக்கு -பாவங்கள் -ஒட்டியூர்
மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும்
திருக்கூடல் என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.
முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல்
கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும்,
அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
3வது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும்,
ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்-திருப்பெயர்கள் உண்டாயிற்று.

—————

திருப்புல்லாணியின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூற்றின் 70வது பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் ராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற
துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

“மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”
ஐயனே குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப் படைக்கப்பட்டேன். பின்பு உனது தவமகிமையால் ராவணன் வந்து குடியேறினான். நெடிது வாழ்ந்தான்.
நாளடைவில் அரக்கர்கள் பல கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை பெருகிவிட்டது.
இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. நீ விரைவில் வந்து தீமை போக்கி என்னைப் புனிதமாக்கி அருள் என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி
நின்றது போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றதென்பதைக் கம்பன் தன் இராமாயணத்தே காட்டுகிறான்.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு
அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி,
வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது.
இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

————

திகழ் திருவேங்கடம் சிங்க வேழ் குன்றம் நகரமாம் அயோத்தி நைமிசாரண்யம்
தன்னிகர் இல்லாச் சாளக்கிராமம் மன்னிய புகழுடை வதரியாஸ்ரமம்
காவல் கங்கைக் கரை கண்டம் பிரீதி தூ வடமதுரை துவரை யாயப்பாடி
படர் பாற் கடல் இப் பன்னிரண்டுமே அவ் வடநாட்டுப் பதி என வணங்கிப் போற்றுவோம் –

—————–

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.
இளங்கோவடிகள்

தாதை ஏவலின் மாதுடன் போகி காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது நீ யறிந்திலையோ நெடுமொழி யன்றோ – என்கிறார்.

—————

பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம்.
உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி பொருள் கொள்ள இடமளிக்கிறது.
மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.

————–

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம்
சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட்(AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்– என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியிருக்கிறார்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்– என்கிறார் இளங்கோவடிகள்.

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: