ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி —

ஸ்ரீமத் பாகவதம்–

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்

எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள்,

எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார்.

அப்பொழுது ஸாதிக்கிறார்:

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

“அரசே! ஸத்ய யுகம் மற்றும் பிற யுகங்களின் வாசிகள் இந்தக் கலியுகத்தில் பிறவியெடுக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
ஏனெனில் இந்த யுகத்தில் நாராயணின் பக்தர்கள் பலர் இருப்பார்கள்.
இவர்கள் பல்வேறு இடங்களில் தோன்றி ஹரியிடம் அளவில்லா பக்தி கொண்டிருப்பார்கள்.
வேந்தே! இவர்கள் பலவிடங்களில் தோன்றினாலும் குறிப்பாக வளங்கள் நிறைந்த த்ராவிட தேசத்தில் பாய்ந்தோடும் புண்ய நதிகளான
தாம்ரபர்ணி,
க்ருதமாலா,
பயஸ்வினி,
மிகவும் புண்யம் வாய்ந்த காவேரி,–கங்கையின் புனிதமாய காவிரி 

பிரதீசி,
மஹாநதி ஆகிய நதிகளின் கரைகளிலும்
மற்றும் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் கரைகளிலும் அநேகமான பேர்கள் தோன்றுவார்கள்.
அப்புண்ய நதிகளின் தீர்த்தத்தைப் பருகுபவர்கள்
வாசுதேவனின் பரம பக்தர்களாக இருப்பார்கள்” என்று தலைக் கட்டுகிறார்.

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

————-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்

ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள்

ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள்

———————–

ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்

—————————————————————————————————————————————–

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா —ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெறுகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அசூத்திகளையும் மதியாதே பால்ய தசையில் ஆதரித்து வளர்த்து
பக்வனானால் பின்பு ப்ருஷ பாஷணம் பண்ணினாலும் அவற்றைப் பொறுத்து
அகல இசையாதே
இவன் பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை –

பிதா –
அவன் பாத்ர மாத்ரம் என்னும்படி உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹிதைஷியான பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
கரியான் ப்ரஹ்மத பிதா –

யுவதயஸ் –
இவ் விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே
நெஞ்சுக்கு இனியராய் இருக்கை –

தனயா-
அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய்
பால்யத்தில் ஸூக கரராய்
பக்வ தசையில் ரஷகராய்
நிரய நிஸ்தாரகரான புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை

விபூதிஸ் –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமம் ஆகையாலே
இவை எல்லா வற்றையும் நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் -என்கை –

சர்வம்-
அனுக்தமான சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை –
அதாவது மோஷ உபாயமும்
முக்த ப்ராப்யமும் –

யதேவ —
அவதாரணத்தால்-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே –

நியமேன –
என்றும் ஒக்க –
அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும்
புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை –

மத் அந்வயாநாம் –
வித்யயா ஜன்மனா வா -என்ற உபய சந்தான ஜாதர்க்கு –

ஆத்யஸ்ய ந –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் -என்கை –

குல பதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷியும் அவரே –

வகுளாபிராமம் –
திரு மகிழ் மாலையால் அலங்க்ருதமாய் உள்ளத்தை
இத்தால் -திருவடிகளில் பரிமளத்தால் வந்த போக்யதையை சொல்லுகிறது
திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது –
நல்லடி மேலணி நாறு துழாய் –

ஸ்ரீ மத் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
அந்தரீஷகத ஸ்ரீ மான்
ச து நாகவரஸ் ஸ்ரீ மான்
என்று பகவத் ப்ரத்யா சத்தியை ஐஸ்வர் யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு ஊற்றான ஐஸ்வர் யத்தை யுடையவர் என்னவுமாம் –

தத் அங்க்ரி யுகளம் –
அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது -என்கை

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை   யுடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா —
ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே
நம-என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது ஆயிற்று –
முமுஷூவுக்கு உபகாரகர் சேஷித்வ பிரதிபத்தி விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லுகிறது
ஒருவனுக்கு சேஷிகள் இருவராம்படி எங்கனே என்னில் –
க்ருதி சேஷித்வம் யாகாதிகளுக்கும் புரோடாசாதிகளுக்கும் உண்டாமா போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-பாகவதர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை –
அதவா –
ஈஸ்வரன் நிருபாதிக சேஷியாய் -தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையால் பாகவத சேஷத்வம் ஒவ்பாதிகம்  -என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்த தனம் –என்கைக்காக
முதலிலே பெரிய முதலியாருடைய ஜ்ஞான பக்திகள் உடைய ஆதிக்யம் சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –

அக்ர்யம் யதீந்திர சிஷ்யாணாம் ஆதயம் வேதாந்த வேதி நாம் -என்று ஆழ்வான் அக்ர கண்யர் ஆகையாலே –அஸ்மத் குரோர் என்றார் –
அப்படிப் பட்ட பாரதந்த்ர்யத்தை -இவ் வாத்ம வஸ்து அவர்க்கு சேஷம் ஆகில் அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
ஏவம் வித ஸ்வரூபர் ஆகையால் உடையவரும் -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார்
இப்படி ஸ்வாச்சார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யத்தாலும்
நான் பெற்ற யோகம் நாலூரானும் பெற வேணும் -என்று பிரார்திக்கையாலும்
சிஷ்யாச்சார்யா க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் ஆழ்வான் -என்றார்கள்
ஆச்சார்யா வர்வ விபவச்ய ச சிஷ்யஸ் வ்ருத்தேஸ் சீமேதி தேசிகவரை பரிதுஷ்யமாணம்-என்னக் கடவது இறே –
அத்தைப் பற்ற உடையவரும் –யத் சம்பந்தாத் –என்று பிரார்த்தித்து அருளினார்
நூற்றந்தாதியிலும் மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அடியாக விரும்பி அருளினார்
மற்றையரான இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது அவர்களாலே இறே
அவர்கள் தான் –யோ நித்யம் -த்ரைவித்யாதிகள் அடியாக அடியுடையராய் இருப்பார்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
ராமானுஜ அங்க்ரி சரணஸ்மி இத்யாதி
மதுரகவிகள் அடிப்பாட்டில் நடக்கிற க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர்கள் ஆழ்வார் அடியாய் இருப்பார்கள்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதி -இத்யாதி
ஆரியர்காள் கூறும் -என்கிற எழுபத்து நான்கு முதலிகளும் உடையவர் அடியான ஆசார்யத்வம்
அதில் முக்கியம் ஆழ்வார் சம்பந்தம் –
பட்டர் அடியாக இறே அஷ்ட ஸ்லோகீ முகேன ரஹச்ய த்ரய அர்த்த சம்பந்தம் –
திருவாய்மொழியும் அடியாய் இருக்கும்
ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்தில் பர்யவசித்தது
பெரிய பட்டர் உடைய பிரசிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலே இறே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் ஆஸ்ரயித்தது
அவரும் ராமானுஜ நாமா விறே
அஷ்டாஷர தீபிகை அவர் அடியாக இருக்கும்
நம்பிள்ளை குமாரரும் ராமானுஜன் இறே
அவரும் சார சங்க்ரஹம் அருளிச் செய்து அருளினார்
தத் வம்ச்யரும் கோயில் யுடையவருக்கு சிறிது கைங்கர்யங்களும் செய்தார்கள்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை குமாரரான பிள்ளை லோகாச்சார்யரும்
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷ்ணாதி ரகஸ்ய பிரபந்த கர்த்தாவாய்
தம்முடைய பிரதான சிஷ்யரான – கூர குலோத்தம தாசர் -என்று திரு நாமம் சாத்தினார்
என்னாரியனுக்காக எம்பெருமானாருக்காக -என்று இறே அக் கோஷ்டியில் பரிமாற்றம் இருப்பது –

—————

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெற மாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுள மாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே
இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்–மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே

யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 2-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருண ரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சார தமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சார தமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-6-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பெருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான-திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை  சாஷாத்கரித்தாரோ,ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

இத்தால் ஸ்ரீ பட்டருக்கு
ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும்
ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4-

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அக விருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப் பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

—————

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

——–

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே–யதிராஜ சப்ததி 

திரு மேனி மட்டும் இல்லை ஸ்ரீ ஸூக்திகளும் மகிழம் பூ மணக்கும் படி வெள்ளம் இட்டு வர வேதங்கள் ஒய்வு எடுத்து கொண்டபடி ஆயின –
அப்படிப் பட்ட நம் ஆழ்வாரை நாம் உபாசிப்போம்-

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தனம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

————-

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–அம்ருதாஸ்வாதினி – 28

“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து,
ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான்.
மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற
ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும்
அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்.
இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான்.
அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.

—————-

த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்‌
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்‌ |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥ –ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று
திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார்.
இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை.
அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து
அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று,
அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று
ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று
அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

—————

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

—————–

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

—————

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

————

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

——————–

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே||–2-

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

———————————————

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

—————

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—திருவாய் மொழி நூற்றந்தாதி -1-

வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து——2-

மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-

நாடறிய ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

திறமாகப் பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-

அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து –11-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் —-12-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்—16-

மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை—17-

மிக மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—-18-

வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி—-20-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்—-21-

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன் இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-எனக்கு என்று தன்மையீ பாவத்தில் மா முனிகள் இத்தை அருளிச் செய்கிறார் –

வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——27-

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—28-

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —32-

கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன் பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான் சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

நன்றாக மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை—40-

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —–41-

உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு—42-

ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

திடமாக வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

சாற்றுகின்றேன் இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் —48-

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற—49-

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் —51-

உன்னுடனே கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

ஆராத காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-

மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என குன்றி விடுமே பவக் கங்குல்—61-

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

ஊழிலவை தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல் பன்னுவரே நல்லது கற்பார்——64-

உற்று உணர்ந்து மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல் பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

தூ மனத்தால் நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

நன்று கவி பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன் பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

துன்பமறக் கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

எங்கும் பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

பாரும் எனத் தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல் மானிடவரைச் சார்ந்து மாய்—74-

தூய புகழ் உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் அற்ற பொழுதானது எல்லியாம்–75-

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

பொருந்தக் கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-

நிறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-

அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

நீ செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

பேர் உறவைக் காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

பின்னை யவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-

மருவுகின்ற இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

அறப் பதறிப் செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88-

ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

மண்ணவர்க்குத் தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-

இரு விசும்பில் இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

வாஞ்சை தனில் விஞ்சுதலைக் கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட திண் திறல் மாறன் நம் திரு—97-

நீ இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

———

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

————————————————————————————–———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: