Archive for August, 2022

பேரும் ஓர் ஆயிரம் பீடுடையான் —

August 30, 2022

ஸ்ரீ ஸ்ருதிகளில் ஸ்ரீ பகவத் ஸ்தோத்ர மஹிமை

1-யஸ் பூர் வ்யாய நவீயஸே -ருக் வேதம் -1-156-2-முன்னோர்களில் முன்னவனாய் உள்ளவனும் -ஸ்ருஷ்டியாதிகளைச் செய்பவனும் -ஸ்தோத்ரம் செய்யப்படுபவனுமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு

2-தமு ஸ்தோதாரஸ் பூர்வ்யம் யதாவித -ருக் வேதம் -1-156-3-அந்த மஹா விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்பவரே அவனை உள்ளது உள்ளபடி அறிந்தவராவார்

3-காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே –சாந்தி பாட மந்த்ரம் -யஜ்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவை யாகத்துக்குத் தலைவனான ஸ்ரீ மன் நாராயணனை
ஸ்துதித்துப் பாடுவதற்கு மங்களகரமான வாக்கு எங்களுக்கு ஏற்படட்டும் –

4- த்ரேதோருகாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -எல்லாராலும் அதிகமாக்க கானம் செய்யப்படுபவராகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவானவர் மூன்று அடி வைத்தார்

5- விஷ்ணுஸ் தவதே வீர்யாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -நமக்கு வீர்யம் அளிக்கும் பொருட்டு ஸ்ரீ விஷ்ணுவானவர் ஸ்துதிக்கப் படுகிறார்

6-த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இந்த விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்யும் மக்கள் நிலையான பரமபதத்தை இருப்பிடமாகக் கொள்வர்-

7- த்வேஷம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –ஸ்ரீ விஷ்ணு ஸூ க்தம் –இம்மாதிரிப் ப்ரகாஸமான அந்த முதியோனாகிய விஷ்ணுவின் திரு நாமங்கள்

8-விபன்யவோ ஜாக்ருவாம்ச -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் –ஸூரிகள் என்றும் விழிப்புடன் எப்போதும் ஸ்துதித்க்கொண்டே பரமபதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின் அருளி உள்ளனர் –

ஸ்ரீ மஹாபாரதத்தில் நிர்வசன அத்தியாயத்தில் திரு நாராயணீயம் என்கிறபெயரில் ஸ்ரீ வேத வ்யாஸரே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களுக்கு பாஷ்யம் அருளி உள்ளார்
இதே போல் ஸ்ரீ வாமன புராணம் ஸ்ரீ வராஹ புராணம் முதலியவற்றிலும் பகவத் நாமங்களுக்கு விளக்கம் கூறும் ஸ்லோகங்கள் உள்ளன
இவற்றை முன்னோர் பல இடங்களில் ப்ரமாணமாகக் காட்டி உள்ளனர் –
சாமவேதத்தில் விஷ்ணு நமக பாகத்திலும் பல நாமங்கள் விளக்கம் உள்ளன –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரெங்கம் பற்றி அறிய வேண்டியவை —

August 30, 2022

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.

ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

————

தாயார் சந்நிதியில் சேவை செய்து வைக்கும்போது மூன்று தாயார்கள் – ரெங்கநாயகி , ஸ்ரீதேவி , பூதேவி எனக் கூறுவார். ஆனால் மூலவர் இருவரும் ஒருவரே.

ஸ்ரீரங்கம் உலுஹ்கான் படையெடுப்பினால் கிபி 1323 இல் முழுவதுமாக சூறையாடப்பட்டு பெருமாளும் கோவிலைவிட்டு வெளியேறி கிபி 1371 மீண்டும் திரும்பினார். இந்த படையெடுப்பின்போது மூலவர் சந்நிதி கல்திரை இடப்பட்டது. இதனால் பின்னால் இருக்கும் தயார் மறைக்கப்பட்டுவிட்டார்

கோவிலை விட்டு துலுக்கர்கள் வெளியேறியபின் ( 20 – 30 ஆண்டுகள்) உள்ளூர் மக்கள் மூலவர் தயார் காணவில்லை என நினைத்து புதிதாக ஒரு மூலவரை ப்ரதிஷிட்டை செய்தனர். அவரே இப்போது முதலில் இருக்கும் மூலவர்.

பிற்காலத்தில் அரையர் ஒருவர் தாலம் இசைத்து பாசுரம் சேவித்தபோது ஜால்ராவின் ஓசை வித்தியாசமாக வருவதை உணர்ந்து மூலவருக்குப் பின்னால் ஏதோ ஒரு அரை உள்ளது எனக் கூறினார். இதன் பின்னர் அதைத் திறந்து பார்த்தபொழுது பழைய மூலவர் இருப்பது தெரிந்தது. அன்று முதல் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

————

காவேரி விராஜாசேயம் வைகுண்டம் ரெங்கமந்திரம் 

ஷ வாசுதேவோ ரங்கேஷயஹ ப்ரத்யக்க்ஷம் பரமம்பதம்

விமானம் ப்ரணவாகாரம் வேதஷ்க்ஷிரங்கம் மஹாத்புவம்

ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஷகஹா

ப்ரணவாகார விமானம் ஓம் என்னும் வடிவத்தில் இருக்கும்.ஓம் எனும் சப்தத்தில் 3 (அ ,உ,ம) எழுத்துக்கள் உள்ளன. உட்சாஹ சக்தி (அ) , ப்ரபூ சக்தி (உ), மந்திர சக்தி (ம) ஆகிய 3 சக்திக்களுடன் பெரியபெருமாள் பிரகாசிக்கிறார்.

இந்த விமானத்தில் கிழக்கு மேற்காய் 4 கலசங்களும், தெற்கு வடக்காய் 4 மற்றும் 1 கலசம் முன்னதாக மொத்தமாக 9 கலசங்கள் இருக்கும். இந்த 9 கலசங்களும் நவக்கிரகங்கள் ஆராதிப்பதாகக் கூறுவர்.

தர்மவர்மா திருச்சுற்று (முதல் பிராகாரம்/ திருவுண்ணாழி பிரதக்க்ஷணம்) இதில்தான் காயத்ரி மண்டபம் உள்ளது. ஏன் இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர்?

காயத்ரி மந்திரத்தில் 10 சப்தங்கள் – இந்த 10 சப்தங்கள்தான் விமானத்தின் 10 திக்குகள்

காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் – இந்த மண்டபத்தில் 24 தூண்கள்

இந்த மண்டபத்தின் 24 தூண்கள் – 24 தேவதைகள் ஆவாகனம் (கேசவாதி த்வாதச நாமங்கள் 12 தூண்களுக்கு,வாசுதேவ – சங்கர்ஷண – பிரத்யும்ன – அநிருத்த ஆகிய நால்வரின் 3 நிலைகள் = 12)

காயத்ரி மந்திரத்திற்குப் பின்னால் வரும் ஸ்லோகத்தின் 9 சப்தங்கள் 9 கலசங்கள்

உள்ளே உள்ள 2 திருமணத்தூண்கள் ஹரி எனும் 2 எழுத்துக்கள் ப்ரணவாகார விமானத்தைத் தாங்குகின்றது.

காயத்ரி மண்டபத்தின் நடுவில் இருப்பது அமுது பாறை. பெருமாள் மூலஸ்தானிலிருந்து புறப்பாடு கண்டருளும்போது இங்கிருந்துதான் கிளம்புவார். இந்தத் திருச்சுற்றின் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.

அமுதுபாறையின் இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. பெருமாளுக்கு அலங்காரம் சாற்றி அர்ச்சக்கரகள் இந்த கண்ணாடிகளில் பெருமாள் திருமேனி அழகைக் கூட்டுவர். அமுது பாறை பொதுவாக பெருமாள் அமுது செய்யும்போது பிரசாதம் வைக்கும் இடம்.

அடுத்தமுறை மூலவர் சேவித்தபின்னர் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் 2 நிமிடங்கள் நின்று தீர்த்தம் கொடுப்புவருக்கு பின்னால் சற்று பார்க்கவும். அப்போது 3 விஷயங்கள் தெரியும்:

1) பெருமாள் திருவடி வெளிப்புற தங்க கவசம்

2) மேலே ப்ரணவாகார விமானம்

3) கீழே சிறிய அகழி (3 அடி ஆழம்)

பெருமாளுக்குப் பின்னால் இருக்கும் இந்த பிரகாரம் யாருக்கும் அனுமதியில்லை. இந்தத் திருச்சுற்றின் 2 மூலைகளில் வராகரும், மற்ற மூலைகளில் வேணுகோபாலனும், நரசிம்மனும் சேவைசாதிப்பர். பெருமாளுக்கு வலதுபுறம் விஷ்வக்க்ஷேனரும் இடதுபுறம் துர்கையும் விமானத்தின் சுவற்றில் கீழே சுவற்றில் சேவைசாதிப்பர்.

விமானத்தின் கீழே இருக்கும் சிறிய அகழியின் சிறப்பு:

ராமானுஜர் பெரிய ஆசாரியன் மற்றும் இல்லை. அவர் தலைசிறந்த நிர்வாகி மற்றும் பெருமாளின் திருமேனியின் மீது பறிவுகொண்ட மகான். கீழ்வரும் கைங்கரியம் அவர் ஆரம்பித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது: (செவிவழி செய்தி)

கோடைக் காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்யப்பட்டதுதான் இந்த அகழி. கோடைக் காலத்தில் தினமும் இந்த அகழியில் தண்ணீர் நிரப்பினால் அது விமானம் மற்றும் பெருமாளை சுற்றியுள்ள சுவற்றின் வெப்பத்தை இழுத்து பெருமாளை குளிர்விக்கும் (இயற்கை குளிர்சாதனம்). ஆனால் தினமும் இங்கு அவ்வளவு தண்ணீர் எப்படி கொண்டுவருவது?

இரண்டாம் திருச்சுற்றில் விமானத்தின் பின்னால் ஒரு சிறிய கிணறு உள்ளது. அந்த கிணற்றிலினருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு குழாய் (உள்ளே செல்ல மற்றும் வெளியே வர ஒரே குழாய்) மூலம் விமானத்தின் கீழேயிருக்கும் அகழி தினமும் மதியம் நிரப்பப்பட்டு இரவு அரவணைக்கு பிறகு வெளியேற்றப்படும்.

இந்த கைங்கரியத்தின் பெயர் #கோடைஜலம்

இந்தக் கிணற்றில் கீழே ஒருவரும், நடுவில் ஒருவரும், மேலே ஒருவரும் மண் பானைகளில் தண்ணீர் எடுத்து (கயிறு இல்லாமல் கையில்) ஒரு அண்டாவில் தினமும் 1008 பானைகள் அளவு நிரப்புவர். அதை சிறுவர்கள் எடுத்து மேலேயுள்ள தொட்டியில் ஊற்றுவர். அந்தத் தண்ணீர் முதல் திருச்சுற்றின் அகழியில் நிரம்பும். இந்த கைங்கர்யம் பூச்சாற்று உற்ஸவம் தொடக்கத்தன்று (சித்ராபௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னால்) தொடங்கி 48 நாட்கள் நடக்கும்.

இந்த கைங்கரியம் சிறுவர்களுக்கு அரங்கனிடம் ஈடுபாட்டுக்கு ஆரம்பக்கட்டம். அடியேனுக்கும் இந்த கைங்கரியத்தை செய்ய ரெங்கன் அருளினார்.

—————-

அரங்கன் திருபாதரக்க்ஷையும் (செருப்பு) மற்றும் சக்ளியன் கோட்டைவாசலும்

கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்!!!

இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம்.

அடுத்தமுறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடதுபறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும்.

என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர்🙏

பக்தருக்க்கு அரங்கநாதன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:

1. பாதரக்க்ஷை அளவு-2. அதன் வர்ணம்3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்

மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.

எப்ரல் 2017ல ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டுவந்தாதாக சொல்லுகிறார்கள்.

இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும் செய்வார்.

நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குக் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது 

——————-

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்-யார் இந்த பரமன்?-எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?

பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.-

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம். எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது. அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும் நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார். கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை. இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள் (தங்கச் சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம். ஆகும சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.–

அழகியமணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம் ( நம்பெருமாள் கிழக்குக்கு / கீழ்ப்படி படியேற்ற சேவை காணொலியில் பரமன் மண்டபம் மற்றும் சந்தனு மண்டபத்தை காணலாம்)

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:-1) தீபாவளி-2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர். அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம்  இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

——————-

பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் உற்சவர் அழகிய மணவாளன். அடுத்த முறை ரங்கநாதரை சேவிக்கும் போது சற்று கூர்ந்து அவரின் திருவடியை சேவித்தால், அங்கே மற்றொரு உற்சவர் சேவை சாதிப்பார். இவர் உற்சவ காலங்களில் யாக சாலையில் எழுந்தருளி இருப்பார்.

பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் யாகபேரர் (யாக சாலை பெருமாள்) சிறிய மூர்த்தியாக இருப்பார். இங்கோ இவர் அழகிய மணவாளனின் நிகரான உயரத்தில் இருப்பார்.

யார் இந்த உற்சவர்? எப்போது திருவரங்கத்திற்க்கு எழுந்தருளப்பட்டார்?-இவரின் திருநாமம் திருவரங்கமாளிகையார்

இந்த சரித்திரத்தை அறிய நாம் 640 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். 1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்தபிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்யகலத்திற்க்கு சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக்கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு)

கல்கல்வெட்டில் கூறப்படும் சக ஆண்டு 1293. சக ஆண்டிற்க்கும் நம் நாட்காட்டிக்கும் 78 ஆண்டுகள் வித்தியாசம். எனவே 1293+78 = 1371.

கொடவர் (பெருமாளை பல ஆண்டுகளாக பாதுகாத்தவர்) அழகிய மணவாளனுடன் வந்தார். பெருமாளை மீண்டும் திருவரங்கம் எழுந்தருள செய்த முயற்சியில் கோபன்ன உடையார் பங்கு சிறந்தது.

இந்த 48 ஆண்டுகளுக்குள் அழகிய மணவாளன் உற்சவ மூர்த்தி என்ன ஆனார் என்று தெரியாததால் ஒரு புதிய உற்சவரை பிரதிஷ்டை செய்து விட்டனர்.(எந்த ஆண்டு என்று குறிப்பு இல்லை).

48 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் அழகிய மணவாளனை, சேவித்த குடிமக்கள் இறந்து போய்விட்டதாலும், அதற்குப் பிறகு வந்தவர்கள் திருமேனியைச் சேவித்து அறியாதவர்களானதாலும், அழகிய மணவாளனைக் கோயிலில் எழுந்தருள மறுத்து விட்டனர். பழைய அழகிய மணவாள பெருமாளை சேவித்தவர் யாரும் எஞ்சி இல்லாததால் இரண்டு உற்சவர்களுள் எவர் முன்னால் இருந்த அழகிய மணவாளன் என்று சர்ச்சை எழுந்தது.

அப்போது மிக வயதான ஒருவர் தான் பழைய அழகிய மணவாளனை சேவித்தது உண்டு என்றும் ஆனால் அவருக்கு கண் பார்வை போய் விட்டது என்றும் கூறினார்.

அழகிய மணவாளனும் புதிதாக எழுந்தருளப்பட்ட உற்சவரும் காண்பதற்கும் உயரத்திலும் அங்க முத்திரைகளிலும் ஒரே போல் இருப்பர் என்பது வியப்பான ஒன்று.இந்த முதியவர் தன்னை ஒரு ஈரங்கொல்லி (வணத்தான்) கண் பார்வை இல்லாமையால், திருமேனி சேவிக்கவில்லை என்றாலும், அழகிய மணவாளன் சாற்றியிருந்த ஈரவாடை தீர்த்தம் (திருமஞ்சனம் போது சாற்றப்படும் வஸ்த்திரம்) சாப்பிட்டுக் கைங்கர்யம் பண்ணி பழகி இருப்பதைச் சொல்லி, அதன்மூலம் அழகிய மணவாளனைக் கண்டறிய முடியும் என்றார். அதன்படியே, அழகிய மணவாளன் திருமேனிக்கும், திருவரங்கமாளிகையார் திருமேனிக்கும், திருமஞ்சனம் செய்து, ஈரவாடை தீர்த்தம் சாதிக்குமாறு சொன்னார்.

அதனால் இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து தமக்கு தீர்த்தம் தருமாறு வேண்டினார். ஊர் பெரியோர்களும் அவ்வாறே செய்தனர்.

அனுமன் சீதையை கண்ட பின்னர் “கண்டேன் சீதையை!!” என ராமரிடம் கூறியது போல் அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தம் பெற்றதும் “கண்டேன் பெருமாளை” என்றும் “இவரே நம்பெருமாள்” என்றும் கூறினார்.

அன்று முதல் அழகிய மணவாளன் என்ற திருநாமத்தை விட நம்பெருமாள் என்ற திருநாமமே பிரசித்தம் ஆனது. புதிதாக வந்த உற்சவருக்கு “திருவரங்க மாளிகையார் ” என்று திருநாமம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவ வன்னாத்தனுக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது.

————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட மந்த்ரம்–ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்-ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த –ஸ்ரீ கருட கவசம்–ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்

August 30, 2022

பாத்ர பதமா ஸகத விஷ்ணு விமலர்ஷே வேங்கட மஹீத்ரபதி தீர்த்த தின பூதே

ப்ராதுர பவஜ் ஜகதி தைத்யரிபு கண்டா ஹந்த கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா —

ஸ்ரீ ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்தோத்ரம் -ஸ்வாமி ஸ்ரீ கண்ட அவதாரம் என்பதைக் காட்டும்

——–

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————

ததஸ் ச த்வாதசே மாஸே சைத்ரே நாவமிகே திதவ்
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்ச ஸூ
க்ரஹே ஷு கர்க்கடே லக்நே வாக் பதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாநே ஜகந்நாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌசல்யா ஜனயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம் யுதம்–ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

———-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்

கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பஷிணாம் பதே
ந போகமாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாய கஸ்ய பஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

இதி கருட ஸ்தோத்ர ஸம் பூர்ணம் –

—————

ஸ்ரீ கருட மந்த்ரம்

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

————-

ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

—————-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட கவசம்

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
நாரத ருஷி
வைநதேயோ தேவதா
அனுஷ்டுப் சந்தஸ்
மமகாரா பந்த
மோசந த்வாரா வைநதேய ப்ரீத்யர்த்தே ஜபே விநியோகே

ஸிரோ மே கருட -பாத்து லலாடம் -விநதா ஸூதா
நேத்ர து ஸ்ர்பஹா பாது கர்ணவ் பாத்து ஸூ ரார்ச்சித–1-

நாசிகாம் பாது சர்பாரிர் வதனம் விஷ்ணு வாஹந
ஸூர ஸூத அநுஜ கண்டம் புஜவ் பாத்து மஹா பலவ்–2-

ஹஸ்தவ் ககேஸ்வர பாது கராக்ரே த்வ ருணாக்ருதி
நகான் நகாயுத பாது கஷவ் புக்தி பலப்ரத–3-

ஸ்தனவ் மே பாது விஹக ஹ்ருதயம் பாது ஸர்வத
நாபிம் பாது மஹா தேஜா கடிம் பாது ஸூதா ஹர –4-

ஊரூ பாது மஹா வீரோ ஜாநு நீ சண்ட விக்ரம
ஜங்கே துண்டாயுத பாது குல்பவ் விஷ்ணு ரத ஸூதா –5-

ஸூ பர்ணா பாது மே பாதவ் தார்ஷ்ய பாதங்குலீ ததா
ரோம கூபாணி மே வீர த்வசம் பாது பயாபஹ –6-

இத்யேவம் திவ்ய கவசம் பாபக்நம் ஸர்வ காமதம
யா படேத் ப்ராத ருத்தாய விஷ சேஷம் ப்ரணச்யதி –7-

த்ரி சந்த்யம் ய படேன் நித்யம் பந்த நாத் முச்யதே நர
த்வாத ஸாஹம் படேத் யஸ்து முச்யதே ஸத்ரு பந்த நாத் –8-

ஏக வாரம் படேத் யஸ்து முச்யதே ஸர்வ கில்பிஷை
வஜ்ர பஞ்ஜர நாமேதம் கவசம்ன் பந்த மோச நம் –9-

ய படேத் பக்திமான் நித்யம் முச்யதே ஸர்வ பந்த நாத் —

இதி ஸ்ரீ கவச ஆர்ணவ நாரத ப்ரோக்தம் கருட கவசம் ஸம் பூர்ணம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

——————-

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ருணு தேவி பரம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம் நாம் அஷ்டாம் சதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்

அஸ்ய ஸ்ரீ கருட நாம அஷ்டோத்தர சத திவ்ய மஹா மந்தரஸ்ய
ப்ரம்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா கருடோ தேவதா
பிரணவேதி பீஜம்
அவித்யா சக்தி வேதா பிராணா ஸ்ம்ருதி கீலகம் தத்வ ஞானம் ரூபம்
ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தம் வி நோத ஸர்வ ஆம்நாய
சதுஸ் ஷஷ்டி கலாதாநம் க்ரியா மம ஸர்வ அபீஷ்ட ஸித்த்யர்த்தே
கருட ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக அத த்யானம்-

அம்ருத கலச யுக்தம் காந்தி ஸம் பூர்ண காத்ரம்
ஸகல விபுத வந்த்யம் வேத ஸாஸ்த்ரை ரசிந்த்யம்

விவித விமல பஷைர் தூயமா நாண்ட கோளம்
ஸகல விஷ விநாஸம் சிந்தயேத் பக்ஷி ராஜம்

வைநதேய ககபதி காஸ்யபேயோ மஹா பல
தப்த காஞ்ஜன வர்ணாப ஸூ பர்ணோ ஹரி வாஹந

சந்தோ மயோ மஹா தேஜா மஹா உத்ஸாஹ க்ருபா நிதி
ப்ரஹ்மண்யோ விஷ்ணு பக்தஸ் ச குந்தேந்து தவளா நந

சக்ர பாணி தர ஸ்ரீ மான் நாகாரிர் நாக பூஷண
விஞ்ஞாநதோ விசேஷஞ்ஜோ வித்யா நிதி ரநாமய

பூதிதோ புவந த்ராதா பயஹா பக்த வத்ஸல
சத்யச் சந்தோ மஹா பக்ஷஸ் ஸூராஸூரா பூஜித

கஜபுக் கச்ச பாசீ ச தைத்ய ஹந்தா அருணா நுஜ
அம்ருதாம் சோ அம்ருத வபுஸ் ராநந்த நிதிர் அவ்யய

நிகமாத்மா நிராதாரோ நிஸ் த்ரை குண்யோ நிரஞ்ஜன
நிர் விகல்ப பரஞ்சோதி பராத்பர தர ப்ரிய

ஸூபாங்கஸ் ஸூபதஸ் ஸூர ஸூஷ்ம ரூபீ ப்ருஹத் தமஸ்
விஷாசீ விஜிதாத்மா ச விஜயோ ஜய வர்த்தந

ஜாட்யஹா ஜகத் ஈஸஸ் ச ஜநார்த்தன மஹா த்வஜ
ஜன ஸந்தாப ஸம்ச் சேத்தா ஜரா மரண வர்ஜித

கல்யாணத கலாதீந கலா தர ஸமப்ரப
சோமபா ஸூர ஸங்கேசோ யஞ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந

மஹா ஜவோ அதிகாயஸ் ச மன்மத ப்ரிய பாந்தவ
சங்க ப்ருச் சக்ர தாரீ ச பாலோ பஹு பராக்ரம

ஸூதா கும்ப தர ஸ்ரீ மான் துரா தர்ஷோ அமராரிஹா
வஜ்ராங்கோ வரதோ வந்த்யோ வாயு வேகோ வரப்ரதா

விநதா நந்தக ஸ்ரீ மான் விஜி தாராதி சங்குல
பத தவ்ரிஷட்ட ஸர்வேச பாபஹா பாச மோசந

அக்னிஜிஜ் ஜய நிர்க்கோஷ ஜெகதாஹ்லாத காரகா
வக்ர நாஸஸ் ஸூ வக்த்ரஸ் ச மாரக்நோ மத பஞ்ஜந

காலஞ்ஞ கமலேஷ் டச்ச கலி தோஷ நிவாரண
வித் யுந்நிபோ விசாலாங்கோ விநதா தாஸ்ய மோசந

ஸோம பாத்மா த்ரி வ்ருந் மூர்த்தா பூமி காயத்ரி லோசநா
சாம காந ரத ஸ்ரக்வீ ஸ்வச் சந்த கதிரக்ரணீ

இதீதம் பரமம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் வைநதேயாய நம
ஓம் ககபதயே நம
ஓம் காஸ்யபேயாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் தப்த காஞ்ஜன வர்ணாபாய நம
ஓம் ஸூபர்ணாய நம
ஓம் ஹரி வாஹநாய நம
ஓம் சந்தோ மயாய நம
ஓம் மஹா தேஜஸே நம
ஓம் மஹா உத்ஸாஹாய நம

ஓம் க்ருபா நிதயே நம
ஓம் ப்ரஹ்மண்யாய நம
ஓம் விஷ்ணு பக்தாய நம
ஓம் குந்தேந்து தவளா நநயாய நம
ஓம் சக்ர பாணி தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் நாகாரயே நம
ஓம் நாக பூஷணாயா நம
ஓம் விஞ்ஞாநதாய நம
ஓம் விசேஷஞ்ஞாய நம

ஓம் வித்யா நிதயே நம
ஓம் அநாமயாய நம
ஓம் பூதிதாய நம
ஓம் புவந த்ராத்ரே நம
ஓம் பயக்நே நம
ஓம் பக்த வத்ஸலாய நம
ஓம் சத்யச் சந்தஸே நம
ஓம் மஹா பஷாய நம
ஓம் ஸூராஸூரா பூஜிதாய நம
ஓம் கஜபுஜே நம

ஓம் கச்ச பாசிநே நம
ஓம் தைத்ய ஹந்த்ரே நம
ஓம் அருணா நுஜாய நம
ஓம் அம்ருதாம்சுவே நம
ஓம் அம்ருத வபுஷே நம
ஓம் ஆநந்த நிதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் நிகமாத்மநே நம
ஓம் நிராதாராய நம
ஓம் நிஸ் த்ரை குண்யாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் நிர் விகல்பாய நம
ஓம் பரஸ்மை ஜோதிஷே நம
ஓம் பராத்பர தர ப்ரியாய நம
ஓம் ஸூபாங்காய நம
ஓம் ஸூபதாய நம
ஓம் ஸூராய நம
ஓம் ஸூஷ்ம ரூபீணே நம
ஓம் ப்ருஹத் தமாய நம
ஓம் விஷாசிநே நம

ஓம் விஜிதாத்மநே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜய வர்த்தநாய நம
ஓம் ஜாட்யஹ்நே நம
ஓம் ஜகத் ஈஸாய நம
ஓம் ஜநார்த்தன மஹா த்வஜாய நம
ஓம் ஜன ஸந்தாப ஸம்ச் சேத்ரே நம
ஓம் ஜரா மரண வர்ஜிதாய நம
ஓம் கல்யாணதாய நம
ஓம் கலாதீதாய நம

ஓம் கலா தர ஸமப்ரபாய நம
ஓம் சோமபே நம
ஓம் ஸூர ஸங்கேசாய நம
ஓம் யஞ்ஞாங்காய நம
ஓம் யஞ்ஞ வாஹநாயா நம
ஓம் மஹா ஜவாய நம
ஓம் அதிகாயாய நம
ஓம் மன்மத ப்ரிய பாந்தவாய நம
ஓம் சங்க ப்ருதே நம
ஓம் சக்ர தாரிணே நம

ஓம் பாலாய நம
ஓம் பஹு பராக்ரமாய நம
ஓம் ஸூதா கும்ப தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் துரா தர்ஷாய நம
ஓம் அமராரிக்நே நம
ஓம் வஜ்ராங்காய நம
ஓம் வரதாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் வாயு வேகாய நம

ஓம் வர ப்ரதாய நம
ஓம் விநதா நந்தகாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் விஜி தாராதி சங்குலாய நம
ஓம் பத தவ்ரிஷட்டாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் பாபக்நே நம
ஓம் பாச மோசநாய நம
ஓம் அக்னிஜிதே நம
ஓம் ஜய நிர்க்கோஷாய நம

ஓம் ஜெகதாஹ்லாத காரகாய நம
ஓம் வக்ர நாஸாய நம
ஓம் ஸூ வக்த்ராய நம
ஓம் மாரக்சாய நம
ஓம் மத பஞ்ஜநாய நம
ஓம் காலஞ்ஞாய நம
ஓம் கமலேஷ்டாய நம
ஓம் கலி தோஷ நிவாரணாய நம
ஓம் வித் யுந்நிபாய நம
ஓம் விசாலாங்காய நம
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம
ஓம் ஸோம பாத்மநே நம
ஓம் த்ரி வ்ருந் மூர்த்நே நம
ஓம் பூமி காயத்ரி லோசநாய நம
ஓம் சாம காந ரதாய நம
ஓம் ஸ்ரக்விநே நம
ஓம் ஸ்வச் சந்த கதயே நம
ஓம் அக்ரண்யே நம

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சதா நாமாவளி ஸமாப்தம்
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————————

ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்-

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா விஷ்ணுர் கருடா தேவதா
ஓம் பீஜம் -வித்யா சக்தி -ஸ்வாஹா
கீலகம் -கருட ப்ரஸாத ஸித்த்யர்த்தே
ஜபே விநியோக

த்யானம்

ஆகுஞ்ச்ய ஸ்வயம பரம் ப்ரவிசார்ய பாதம் திர்யங்முகம் சலமசர்க்க விவ்ருத்த சங்கம்

அந்யோன்ய கட்டி தகரம் கலசப்தமோச முட்டீய மாந மநிசம் ஸ்மர துக்க சாந்த்யை–1-

மூர்த்தா நம் கருட பாத்து லலாடம் விநதா ஸூதா
நயநே காச்யப பாது ப்ருவவ் புஜக நாஸந–2-

கர்ணவ் பாது ஸூ பர்ணோ மே கபாலம் புஜ காதிப
நாஸி காம் பாது மே தார்ஷ்ய கருத்மான் வதனம் மம –3-

ரஸ நாம் பாது வேதாத்மா தச நாத் தைத்ய ஸூதந
ஓஷ்டவ் விஷ்ணு ரத பாது புஜவ் மே போகி பூஷண -4-

–பாது கரவ் கச்சப பஷண
–ரக்நிஜ பாது நகான் நக முகாயுத –5-

—ஹ்ருதயம் கேசவ த்வஜ
மத்யம் பாது விஷ ஹர –6-

குஹ்யம் குஹ்யார்த்த வேதீ ச பாது மே பச்சிமம் விபு
ஊரு ஸாஷ்ட புஜ பாது ஜாநுநீ சங்க சக்ர ப்ருத் –7-

வக்ர நாஸஸ் ததா ஜங்கே சரணவ் ஸூர பூஜித
ஸர்வாங்க மம்ருதாங்கோ மே பாது பக்த ஜன ப்ரிய –8-

புரத பாது மே வீர பச்சாத் பாது மஹா பல
தக்ஷிணம் பாது பார்ஸ்வம் மே மஹா காய விபீஷண –9-

பார்ஸ்வே முத்தர மவ்யக்ர பாதூர்த்வம் பாப நாஸந
அதஸ்தா தம்ருதா ஹர்த்தா பாது ஸர்வத்ர ஸர்வதா –10-

அஷ்டாபிர் போகிவர்யைர் த்ருத வர மணிபிர் பூஷிதம் சாத கும்பச்
சாயாபிர் தேஹ பாபிர் திவஸ சத கரம் த்ராகி வாதீப யந்தம்

சங்கம் சக்ரம் கரைஸ் ஸ்வைர் ததத மநு பமம் புஸ்தகம் ஞான முத்ராம்
வந்தே வேதாந்த தத்வம் ஸகல விஷ ஹரம் ஸர்வதா வைநதேயம் –11-

பல ஸ்ருதி

இதீதம் பரமம் குஹ்யம் ஸர்வ அபீஷ்ட ப்ரதாயகம்
காருடன் கவசம் கௌரி ஸமஸ்த விஷ நாஸநம் –12

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அத்புத ராமாயணம் -அகார வாஸ்ய தொகுப்பில் —

August 30, 2022

ஸ்ரீ ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவணைத்து அருளும் அருட் செல்வன்!

அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை
அடக்கி,அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.
அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து ,அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
அடுத்து,அரக்கர்களை அலறடித்து ,அவர்களின் அரண்களை ,அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் ,அசாத்தியமான அதிசாகசம்.
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையை அமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை
அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் .
அனந்த ராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.

—————

 

 

ஸ்ரீ முதல் திருவந்தாதி– -ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் –

August 29, 2022

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

யத் கடாஷா தயம் ஜந்துர் புனர் ஜென்மதாம் கத-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோம் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தோம் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் கச்சி
காசி முதலாய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சி நகருக்கு ஒவ்வா
ஸத்ய விரத ஷேத்ரத்தில் சொன்ன வண்ணம் செய்த -யதோத்தகாரீ ஸந்நிதியில் பொற்றாமரைக் குளத்திலே பதும மலரில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சமாக
ஐப்பசி திருவோணத் திரு நாளில் திரு அவதரித்தவர்

எம்பெருமானும் அவனுடைய பாரி ஷதர்களும் வருவதை படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச ஜன்யம் போல்
மற்ற ஆழ்வார்கள் திரு அவதரித்து அருளப் போவதை காட்டி அருளினார்

ஸ கோஷா தார்த்ரஷ்டாராணாம்

ஹ்ருதயாநி வயதாரயத் -பரமதஸ் தர்களின் ஹ்ருதயங்களைப் பேதித்து பரத்வ நிர்ணயம் செய்து அருளினார்

யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹ்ணோதி தஸ்மை -பத்மத்தில் அவதரிப்பித்து -தமிழ் மறைகளை உபதேசித்து அருள

பரகால கலியினால் -செந்தமிழ் பாடுவார் –
உலகம் படைத்தான் கவி -(திருவாய் -3-9-10-)படைத்தான் கவியாகிய நம்மாழ்வாரால் -செஞ்சொற் கவிகாள் -என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள் என்றும் பாடப்பட்ட பெருமையும்
முதல் ஆழ்வார்கள் மூவரில் முதல்வரான பெருமையும்

(முதலாவார் மூவரே -அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் போலவே பொய்கையை நிரூபகமாக உடையவர்)
திரு வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே -பெரியாழ்வார் -பெருமையும் கொண்டவர் –

ஓடித் திரியும் பரம யோகி –யோக அப்யாஸத்தால் நீண்ட காலம் எழுந்து அருளி –

மண்ணுய்ய -மண்ணுலகில் மனுஷர் உய்ய -வன் பெரு வானகமும் உய்ய -அமரர் உய்ய
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை பரவச் செய்து -ஞான பிரதமரான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலவே ஞானச் சுடர் விளக்கு ஏற்றி வாழ்வித்து அருளினார் –

அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து புலவர் நெருக்கு உகந்த அச்சுதன் திருமகளும் தானுமாகக் கூடி இருந்த பொழுது
அவர்கள் முன்னிலையிலே திருப்பல்லாண்டு போலவே பாடப் பெற்ற முதல் திவ்ய பிரபந்தம் அன்றோ

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டிய சொல்மாலை என்ற பெருமை -ஆராயும் சீர்மைத்தோ –
புற மதஸ்தர் பிடறியைப் பிடித்துத் தள்ளி ஜந்மாத் யஸ்ய யத -ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ குண பூர்ணன்
வையம் வார் கடல் இத்யாதியால் லீலா விபூதியும்
சுடர் ஆழியான் -இத்யாதியால் நித்ய விபூதியும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்வமும்
பா மாலை பாடிக் கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம்
நெறி வாசல் தானேயாய் நின்றான் -உபாய உபேயமும் அவனே
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான் -ஸர்வ ஸரீரியாய் இருப்பவனே பரம புருஷோத்தமன் –
வாய் அவனை அல்லாதது வாழ்த்தாது —காணா கண் கேளா செவி -என்றும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் -என்றும்
மறந்தும் புறம் தொழாமை யாகிய ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

ஸ்ரீ மன் நாராயணன் பெருமையையும் அதற்கு எதிர்த்தட்டாக எடுக்கப் படும் எருத்துக் கொடியானுடைய எளிமையையும்
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில்
வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஓன்று -என்று
ரூபமே வாஸ்யை தன் மஹிமா நம் வ்யாஸஷ்டே –உண்மையை உருவமே உணர்த்துமே
காணிலும் உருப்பொலார் -போல் அன்றே-

ரூபமே வாஸ்யை தன் மஹிமா நாம் வ்யாசஷ்டே -உண்மை மகிமைகளை உருவமே உணர்த்துமே
பச்சை மா மலை போல் மேனி இத்யாதி -விக்ரஹ வைலக்ஷண்யம்

கலி வைரி கிருபா பாத்ரம் காருண்ய ஏக மஹோ ததிம்
ஸ்ரீ கிருஷ்ண ப்ரவணம் வந்தே கிருஷ்ண ஸூரிம் மஹா குரும்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையே இதுக்கு இரண்டு வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளார் –

வையம் தகளியா -என்று தொடங்கி ஞானம் பிறந்த நிலையை வெளியிட்டு அருள
அன்பே தகளியா-என்று அந்த ஞானமே முற்றி பகுதியாகும் நிலையை அருளி –
அதுவே முற்றி அவனை விட்டு தரியாத பரமபக்தி விளைந்து இருக்கும் நிலையை வெளியிட்டு அருளினான்
மூன்றும் ஞான பக்தி சாஷாத்காரங்களை சொன்னவாறு –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —

August 29, 2022

ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில்இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஸ்ரீ வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஸ்ரீ ஜெகன்நாதர், ஸ்ரீ பலபத்திரர் மற்றும் ஸ்ரீ சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர்பலபத்திரர்சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்..

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.

சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.-

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.

பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.

அவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.

அன்றுமுதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா? காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே! என்றார்.

ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார். 

புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.

ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.

புவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பைதில்லிகொல்கத்தாசென்னைபெங்களூருஅகமதாபாத்ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளன.

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —

வர்ஷாணாம் பாரத சிரேஷ்ட தேஸாநாம் த்கால ஸ்ம்ருத

உத்கலஸ்ய சமோ தேச நாஸ்தி மஹீ தலே –வர்ஷன்களுக்குள் பாரதமும் தேசங்களில் உதகளமும் -ஒடிஷா -ஒப்பு உயர்வற்றவை –

உத்கல க்ஷேத்ரம் –சங்க க்ஷேத்ரம் –பூரி / பத்ம க்ஷேத்ரம் -கோனாரக் /சக்ர க்ஷேத்ரம் -புவனேஸ்வரம் /கதா க்ஷேத்ரம் -ஜாஜபுரா -ஆகியவற்றை உள்ளடக்கியது
இவை அனைத்தும் -100-சதுரமைல் பரப்பு -/பூரி -5-க்ரோசங்கள் -10-சதுரமைல் பரப்பு /
-6-சதுரமைல் கடலுக்குள்ளும் -4-சதுரமைல் நிலத்திலும் சக்ர வடிவத்தில் உள்ளது –20-கிலோ மீட்டர் சுற்றளவு –
சங்கம் தோன்றிய நாள் -மார்கழி தேய்பிறை பஞ்சமி -அன்று வளம் வருவது மரபு –
பாத்ம ப்ரஹ்ம ஸ்கந்த புராணங்கள் இதில் மஹாத்ம்யம் கூறும் –

சார்தாம் –ஸ்ரீ பத்ரீ/ஸ்ரீ பூரி/ ஸ்ரீரங்கம்/ஸ்ரீ த்வாராகா /நான்கு எல்லைகளில் -உள்ள புண்ய ஷேத்ரங்கள் /பரம பாவனம் இங்கு யாத்திரை செல்வது
ஸ்ரீ மன் நாராயணன் விடியற்காலையில் ஸ்ரீ பதரியில் நீராடி -ஸ்ரீ த்வாராகாவில் திருவஸ்த்ரம் தரித்து /ஸ்ரீ புரியில் திரு அமுது செய்து திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகிறார் –
ஸ்ரீ பூரி -பல பெயர்களுடன் விளங்குகின்றது –
1–ஸ்ரீ க்ஷேத்ரம் –ஸ்ரீ மஹா லஷ்மியின் கேள்வன் ஸ்ரீ புருஷோத்தமன் உறையும் தேசம் –
2–சங்க க்ஷேத்ரம் -சங்க வடிவில் இருப்பதால்
3—புருஷோத்தம க்ஷேத்ரம் -அபுருஷன் -அசேதனங்கள்-/புருஷன் பத்த -கட்டுண்ட ஜீவர்கள் /உத்புருஷன் -முக்த ஜீவர்கள் /உத்தர புருஷன் நித்ய ஸூ ரிகள்/
இவர்களை விட வ்யாவருத்தமானவன் புருஷோத்தமன் உத்தம புருஷன் -ஸ்ரீ கீதை -15-புருஷோத்தம வித்யை விளக்கும் –
4–நீலாஸலம் -நீலமலையில் உள்ளபடியால் இப்பெயர் -இதுவே புராதானப் பெயர்
5–பூஸ்வர்கம்–ஸ்வர்க்கம் போலெ மிதமான தட்ப வெப்பமும் இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் பூ லோக ஸ்வர்க்கம் –
6—நரஸிம்ஹ க்ஷேத்ரம் -இத் திருக் கோயில் கட்டிய பின்பு ப்ரஹ்மா ஒரு யாகம் செய்ய ஸ்ரீ நரஸிம்ஹர் உக்ர வடிவுடன் தோன்றி பின்பு சாந்தம் அடைந்ததால் இப்பெயர் –

ஸ்தல புராணம் –
க்ருத யுகத்தில் இந்த்ரத்யும்னன் என்னும் அரசன் — அவந்தி நகரை தலைநகரமாக கொண்ட மலேயா தேச அரசன் -தனது குல குருவினிடம்
பகவானை நேருக்கு நேர் தரிசிக்கும் பெருமையையுடைய புண்ய க்ஷேத்ரம் கண்டுபிடித்து கூற பிரார்த்திக்க -குருவும் ஷேத்ராடனம் போய்வரும் யாத்ரீகர்கள் இடம் வினவ
அதில் ஒருவர் -நான் அனைத்து புண்ய ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன் –
பாரத வர்ஷத்தில் உத்கல-ஒடிஷா தேசத்தில் கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தம க்ஷேத்ரம் -அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே நீலமலை உள்ளது –
அங்கு இருக்கும் கல்பவிடம் என்னும் ஆலமரத்தின் மேற்கே ரோஹிணி குண்டம் புண்ய தீர்த்தம் உள்ளது -அதின் கிழக்கே ஒளிவிடும் நீல மணியால் ஆன
ஸ்ரீ வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார் -தீர்த்தத்துக்கு மேற்கே சைபர் தீபக் என்னும் ஆஸ்ரமத்தில் இருந்து சற்று தொலைவில் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்
ஒரு முழு ஆண்டு கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றேன் -மன்னா தங்கள் அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம் -என்று கூறி மறைந்தார் –
அரசன் குலகுருவிடம் நீலாசலம் சென்று ஜெகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்ட –
குருவும் தன தம்பி வித்யாபதியை முதலில் அங்கு சென்று விபரம் அறிந்து வராகி சொன்னார் –
வித்யாபதியும் விரைவில் மஹா நதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவனேஸ்வரத்தை தாண்டி
நீலாத்ரியைக் கண்டு -மலை உச்சியில் கல்பவடத்தை தரிசித்தார் -இரவாகிவிட்ட படியால் இருட்டில் அடர்ந்த காட்டில் தங்கினார் –
சிலரின் குரல் கேட்டு தொடர்ந்து சென்ற பொது ஸபர் தீபக் –மலைவாசி -ஆஸ்ரமத்தை அடைந்தார் -அங்கு இருந்த விச்வா வசூ-இவரை வரவேற்று பிரசாதம் அளித்தார் –
இந்த்ரத்யும்னன் இங்கு வந்து தங்குவார் என்று கோபி பட்டு இருக்கிறேன் -போவோம் வாரும் என்று சொல்லி கூட்டிப் போக பாதை குறுகி முள் நிறைந்து இருக்க
விடியலில் புண்யமான ரோஹிணி குண்டத்தை தரிசித்தனர் -பின் கல்பவடத்தை வணங்கி இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேர் ஒளியுடன் உள்ள
பகவானை வியந்து வணங்கினார் -பின் வேகமாக மலை இரங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விச்வாவசூ அளித்த அமானுஷ்யமான சுவை கொண்ட மஹா பிரசாதத்தை உண்டார் –
இந்திரன் சமைத்து ஜெகந்நாதனை ஆராதித்து சேஷமான பிரசாதம் -இதை உண்டால் பாபங்கள் எல்லாம் தொலையும்-என்று ஜெகந்நாதனின் பிரசாத பெருமையை உரைக்க
வித்யாபதி -எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கோயிலை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார் -என்றார் –
ஆனால் விச்வாவசூ -மன்னார் வருவார் -ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடுவார் -மன்னர் உபவாசம் இருக்க
பகவான் வேறு மர உருவத்தில் தோன்றி ப்ரஹ்மாவால் ஸ்தாபிக்கப் பட்டு பின் நெடும் காலம் காட்சி கொடுப்பார் -ஆனால் இவற்றை மன்னன் இடம் அறிவிக்க வேண்டாம் என்றார் –

வித்யாபதியும் விடை பெற்று மீளவும் அவந்தி புரியை அடைந்து பிரசாதத்தை மன்னனுக்கு கொடுக்க உடனே அங்கு செல்ல விருப்பம் கொண்டான்
தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து மன்னனின் விருப்பம் ஈடேறும் என்று ஆசீர்வதித்தார் -ஜ்யேஷ்ட மாத பஞ்சமி திதி அன்று
நாரதர் ராணி பிரஜைகள் புடை சூழ தேரில் புறப்பட்டு மஹா நதி கரையை அடைந்து இருக்க உத்கல மன்னன் காண வர -இருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரிக்க
சூறாவளியால் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டதை தெரிவிக்க -நாரதர் அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடியே நடக்கிறது –
பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார் -நல்லதே நடக்கும் -என்று சொல்லி நீலாசலத்தை அனைவரும் அடைய
உக்ரமான நரஸிம்ஹ விக்ரஹத்தை கண்டனர் -நீல மாதவன் மண்ணால் மூடப் பட்டு இருப்பதையும் கண்டனர் -நரசிம்ஹ பெருமானை மேற்கு முகமாக எழுந்து அருள பண்ணி
யாக சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்ய
மன்னன் தியானத்தால் – -ஸ்வேத த்வீபத்தை கண்டு -அது ஸ்படிகக் கல்லால் ஆக்கப்பட்டு பாற் கடலால் சோள பட்டுள்ளதை கண்டான்
அங்கு ஆதிசேஷ பீடத்தில் ஸ்ரீ மன் நாராயணன் சதுர்புஜனாய் எழுந்து அருளி இருந்தான் -மன்னன் இந்த கனவை கூற நாரதர் –
பெருமாள் எழுந்து அருளும் தருணம் நெருங்கி விட்டது -அவர் தாரு-உரு விடுக்க இருக்கிறார் -கடற்கரைக்கு செல்வோம்-என்றார்
கிழக்கு கடலில் ஒளிவிடும் ஒரு மரம் உருவாக்கி மிதந்து வர -அவ்விடம் சக்ர தீர்த்தம் -எனப்படுகிறது -அதை ராஜா ராணி பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்
அசரீரி வாக்கு -இதை வஸ்த்ரத்தில் சுற்றி வையும் -ஒரு தச்சன் வந்து செதுக்குவார் -யாரும் உள்ளே செல்லக் கூடாது –
செதுக்கும் ஒலி வெளியில் கேட்க்காதபடி வாத்தியங்கள் முழங்க வேண்டும் -என்று சொல்ல
அரசனும் அதன் படியே செய்ய -தச்சன் வந்து செதுக்க -15-நாட்கள் கழிய ஒலி நிற்க -ராணி குண்டீஸா கதவைத் திறந்து பார்க்க விரும்ப அரசன் தடுத்தும் கேளாமல்
ராணி அறையைத் திறக்க ஆணை இட-திறந்த பொது தச்சன் அங்கு இல்லை -விக்ரஹங்கள் பாதி நிலையில் இருக்க -அசரீரி வாக்கியம் –
இந்த எளிய நிலையிலேயே தர்சனம் கொடுப்பார் என்று கூற -அன்று முதல் ஜெகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார் –

ஸ்ரீ புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம் –
கண்ணன் ஸ்ரீ மத் துவாரகையில் அஷ்ட மஹிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்ஜியம் ஆண்ட போதும் -கோகுல பெண்டிர்களையே திரு உள்ளத்தில் நிறைந்து இருக்க
அஷ்ட மஹிஷிகளும் ரோஹிணி தேவியை வினவ -ரசமான லீலைகளே காரணம் -என்று சொல்ல அவற்றை மஹிஷிகள் கேட்க விருப்பம் கொள்ள
ரோஹிணி மாதா -கூறுகிறேன் ஆனால் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கோள் -என்றார் –
காவலுக்கு ஸ்ரீ ஸூபத்ரா தேவியை நிறுத்தி விட்டு
அனைவரும் கதை கேட்டு லயித்து இருக்க
அருகில் இருவர் வந்து நிற்பதை உணராமல் இருக்க -கதை கேட்டு மூவரும் மெய் மறந்து கை கால்கள் சுருங்கி விழிகள் விரிய நின்று கொண்டு இருக்க
நாரதர் அந்த சேவையைக் கண்டு ஆனந்த கூத்தாட -மூவரும் உணர்ந்து இயல்வு நிலையை அடைய முயல நாரதர் தடுத்து
தேவர்ர்ர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் பாபங்கள் தொலைந்து முக்தி அடைவார்கள் –
இந்த எளிய திருக் கோலத்துடன் கோயில் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்திக்க
அதன் படியே பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –

கடைத் தலை சீய்த்த அரசன் –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே–ரத்த யாத்திரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்த ஐதீகம் –
தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு –காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வராத ராஜனை தரிசித்த மன்னன் காஞ்சி மன்னன் மகளைக் கண்டு மையல் கொண்டான் –
இரு மன்னர்களும் சம்மதிக்க புருஷோத்தமன் ஸ்ரீ பூரி திரும்ப -முறையாக பேச காஞ்சி மன்னன் மந்திரியை அனுப்ப
அன்று ரத்த யாத்ரையாய் இருக்க -மன்னன் துப்புரவு செய்ய பொறுக்காத மந்திரி திரும்பி மன்னன் இடம் கூற பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது –
இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி பூரி மன்னன் காஞ்சீ நகரின் மேல் படை எடுத்தான் -ஆனால் அவன் படை சிறியது –
இரு மன்னர்களும் பூரி படை தோற்றால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸூ பத்ரா மற்றும் ஸூ தர்சனர் விக்ரகங்களை காஞ்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும்
காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம் செய்தனர் –
புருஷோத்தமன் ஜகந்நாதர் இடம் தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும் -என்று பிரார்த்தித்தான் –
அரசன் புறப்பட்ட போது ஜகந்நாதர் கருப்புப் பிறவியிலும் பலராமர் வெள்ளைப் பிறவியிலும் ஆரோஹணித்து -இரு வீரர்கள் போல் காஞ்சிக்கு சென்று
வழியில் ஒரு கிராமத்தில் தாக்கத்துக்காக ஒரு முதிய இடைப்பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர் –
கையில் காசு இல்லாமல் மோதிரத்தை காட்டி பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள் –
புருஷோத்தமன் படையோடு அவ்வழியே வர முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து உருகினான்-
இரு வீரர்கள் உதவியால் வெற்றி பெட்ரா மன்னன் காஞ்சி இளவரசியை சிறையெடுத்து வந்து புரியில் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடிக்க சொன்னான் –
பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி -அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து
அவர்களை சேர்த்து வைக்கும் தருணத்துக்கு காத்து இருந்து அடுத்த ரத்த யாத்திரையின் போது இளவரசியை மணக்க கோலத்தில் தயார் செய்து
மன்னன் தங்கத் துடைப்பத்தால் பெருக்க -மன்னா இவளுக்கு ஏற்ற பேருக்கும் மணமகனைத் தேடினேன் -அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே -எனக் கண்டு கொண்டேன் –
ஆகவே ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் முன் நீரே மனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள –
அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி கல்யாணம் செய்து கொண்டான் –
ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினையும் களையலாம் -கல்யாணமும் செய்து கொள்ளலாம் –

புண்ய தீர்த்தங்கள் —
1–மஹா நதி -கிழக்கு சமுத்திரம் -ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதையில் ஸரஸாம் அஸ்மி சாகரம் -என்கிறான் –
அதன்படி இங்குள்ள கிழக்கு கடலே சக்ர தீர்த்தம் என்று கொண்டாடப் படுகிறது –
இங்கு தான் தாரு ப்ரஹ்மம் -சக்ர முத்திரையோடு தோன்றினார்
க்ருத யுகத்தில் பார்கவி என்னும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில் தான் பாங்கி முஹானா -பங்குனி சுக்ல துவாதசி அன்று தாரு ப்ரஹ்மம் தோன்றினார்
கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்னன் -ராஜா ராணி தாரு ப்ரஹ்மத்தைப் பெற்று பெருமானின் பிம்பத்தை வடிவு அமைக்க வேண்டினார்
கங்கா யமுனா கோதாவரி காவேரி தாமிரபரணி ஆகியவை இக்கடலிலே கலக்கின்றன –
2—இந்த்ரத்யும்ன சரோவரம் –இந்த்ரத்யும்ன மன்னன் பகவத் பிரதிஷ்டை செய்யும் போது ஆயிரம் பசுக்களை தானம் செய்தான் –
அவற்றின் குளம்பு பட்டு பள்ளம் ஏற்பட்டு மன்னம் தானம் கொடுத்த போது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது
3–மார்க்கண்டேய சரோவரம் -ரிஷியின் வேண்டுகோளின் படி பகவான் பிரளய கடலில் ஆலிலைத் தளிரில் சயனித்து இருப்பதைக் காட்டி அருள
அன்று முதல் அந்த தீர்த்தத்தின் கரையிலேயே ரிஷி தவம் செய்து வந்தார் –
4—ஸ்வேத கங்கா –இங்கு ஸ்வேதா மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது -இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னனால் தோற்றுவிக்கப் பட்டது –
5—ரோஹிணி குண்டம் -இது கோயிலுக்கு உள்ளே உள்ளது -கடந்த பிரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இங்கு உள்ளது -அடுத்த பிரளயமும் இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகுமாம்
ப்ரஹ்மா இங்கே வந்த போது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெற்று முக்தி அடைந்தத்தைக் கண்டார் –

ஜெகன்நாத் பூரி கோயிலின் அமைப்பு
இப்போது உள்ள கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப் பட்டு அநங்க பீமா தேவனால் -1200-ஆண்டு முடிக்கப் பட்டது
நில மட்டத்தில் இருந்து -214-அடி உயரத்தில் நீலாசலம் மலையில் உள்ள திருக் கோயில் –
-10.7-ஏக்கர் நிலப்பரப்பில் -20-அடி உயரமுள்ள செவ்வக வடிவில் -15-நூற்றாண்டில் கட்டப் பட்டு இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப் பட்டுள்ளது –
வெளி மதிள் -மற்றும் பிரகாரத்துக்கு மேக நந்த ப்ராசீரம் -665-.-640-அடி /உள் சுற்றுக்கு கூர்மபேதம் -420-.-315-அடி –
பிரதான கிழக்கு வாசல் -சிம்ம சிங்கம் துவாரம் / தெற்கு வாசல் அஸ்வ துவாரம் /மேற்கு வாசல் வ்யாக்ர துவாரம் /வடக்கு வாசல் ஹஸ்தி துவாரம் /
அந்த அந்த வாசல்களில் அவ்வவற்றின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன
கிழக்கு வாசலுக்கு வெளியே -36-அடி உயர அருணா ஸ்தம்பம் உள்ளது –
18-நூற்றாண்டில் கோனாராக்கில் இருந்து கொண்டு வந்து பிரதிஷடை செய்யப்பட இதன் உச்சியில் ஸூ ர்யனின் தேரோட்டியாக அருணன் அமர்ந்துள்ளார்
இத் திருக் கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது
1–போக மண்டபம் -பிரசாதம் கண்டு அருள பண்ணும் பெரிய மண்டபம் -60-/.-57-அடி -இதில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அழகான சித்திரங்களாக வரைய பட்டுள்ளன
2–நட மண்டபம் -பெருமாளை உகப்பிக்க இசை நாட்டியம் நடக்கும் -70-/67-அடி மண்டபம்
3–ஜெகன் மோஹன மண்டபம் -முக சாலா –இங்கு தான் பக்தர்கள் நின்று கொண்டு தரிசிக்கும் இடம் -இதில் கருட ஸ்தம்பம் உள்ளது –
4–விமான மண்டபம் -இதுவே கர்ப்பகிரகம் -ரத்ன சிம்ஹாசனத்தில் -16–13–4-அடி / பலதேவர் -6-அடி உயரம் வெள்ளை நிறம்
ஸூபத்ரா -4-அடி உயரம் மஞ்சள் நிறம் / ஜகந்நாதர் -5-அடி உயரம் கருப்பு நிறம் / ஸூ தர்சனர் லஷ்மீ நீல மாதவர் சரஸ்வதி ஆகியோர் எழுந்து அருளி உள்ளனர்
குறிப்பிட்ட நேரத்தில் ரத்ன வேதிகையில் ஏறி இவ்வனைவரையும் வலம் வரலாம் –
திருக் கோயிலின் கைங்கர்ய பூஜாரிகள் –சுமார் -1000-பேர் உள்ளனர் -36-வகையான கைங்கர்யங்களை செய்கின்றனர் –

திருக் கோயிலுக்குள் இருக்கும் மற்ற தரிசன ஸ்தலங்கள்
1–பைசா பஹாசா -கிழக்கு வாசலில் இருந்து உள்ளே எரிச் செல்லும் -22-படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது –
யமதர்மராஜனும் கூட சாஷ்டாங்கமாக பிராணாயாமம் செய்யும் பெருமை பெற்றது
2–கல்பவடம்-அபீஷ்டங்களை வழங்கும் ஆலமரம்
3–முத்தி மண்டபம் -வேத விற்பன்னர்களின் த்யான மண்டபம் -16-கால் மண்டபம் -ப்ரஹ்ம சபா என்றும் வழங்கப்படும்
4–நரஸிம்ஹர் சன்னதி -முத்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது –
5–ஸ்ரீ தேவி பூ தேவி சந்நிதிகள் -இங்கு இருக்கும் மூலிகைச் சாற்றினால் வரைய பெட்ரா சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் உள்ளனர்
6–கோய்லா மண்டபம் –ஸ்ரீ ஜெகந்நாதராது திருமேனி -12-ஆண்டுகளுக்கு ஒரு முறை புது தருவாள் செய்யப்படும் –
இந்த உத்சவம் நவ கலேவரம் எனப்படும் -பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படும் –
7–ஆனந்த பஜார் -மஹா பிரசாதம் விநியோகிக்கப் படும் இடம் –

திருக் கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள் –
1–குண்டீஸா மந்திர -ராணி குண்டீஸாவின் பெயரால் -படா தாண்டா சாலையின் -க்ராண்ட் ரோட் –
ஒரு கோடியில் ஸ்ரீ ஜகந்நாதர் திருக் கோயிலும் மறு முனையில் குண்டீஸா மந்திரம் உள்ளது -ஆசியாவிலேயே மிகப் பெரிய சாலை இது தான் –
இந்த கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்தில் இருந்து விக்ரஹங்கள் செதுக்கப் பட்டன -ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே –
இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தார் -ரத்த உத்சவத்தின் போது ஸ்ரீ ஜகன்னாநாதர் பலதேவர் ஸூ பத்ரா ஸ்ரீ ஸூ தர்சனர் ஆகியோர்
இங்கு தான் எழுந்து அருளி இருப்பர் –
2–யஜ்ஞ நரஸிம்ஹ தேவர் -குண்டீஸா மந்தரில் இருந்து இந்த்ரத்யும்ன சரோவர் போகும் வழியில் மஹாவேதி என்னும் இடத்தில் எழுந்து அருளி உள்ளார்
இங்கு தான் இந்த்ரத்யும்னன் மன்னன் இவரை பிரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பின்னரே ஜகந்நாதர் தோன்றினார் –
இவருடைய திருமுகம் முன்னர் தரிசிக்க சாந்தமாகவும் மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும் –
3–அலர்நாத் -20-மில் தூரத்தில் உள்ளது -ஆலால நாதன் -பெயருடன் -இவரே ஆழ்வார் நாதன் -ஆலங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர்
ஸ்ரீ கேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சக்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன்
பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல அந்த சிறுவனும் செய்ய பெருமானின் திரு விரல்கள் சிவந்து இருப்பதை இன்றும் காணலாம்
இங்கு சைதன்ய பிரபு தரிசிக்க வந்த போது ஆச்ரித பாரதந்தர்யத்தை கேட்டு உருகி மயங்கி விழுந்து கிடந்த சுவடே இன்றும் காணலாம் –
4–சாக்ஷி கோபால் -15-மைல் தொலைவில் உள்ள சந்நிதி -கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை -வ்ருந்தாவனத்தில் உள்ள மத மோஹனர் போலே-
ஐவரும் முதலில் பிரதான கோயிலில் இருக்க அனைத்து பிரசாதங்களை முன்னமேயே உண்டு முடிக்க -லீலா ரசமாக பிணக்கு ஏற்பட
பின்பு ஒரு முடிவுக்கு வந்து வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதிஹ்யம்
ஒரு அந்த இளைஞ்சனுக்கு பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர் பின்பு பானா வ்யவஹாரத்தால் மறுக்க அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் சாக்ஷி சொல்லி
கல்யாணத்தை நடத்தி வைத்த படியால் அன்று முதல் சாக்ஷி கோபால் என்று அழைக்கப் பட்டதாக வரலாறு-

ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் –இங்கே தரிசிக்க வர -இங்குள்ள பூஜா முறைகள் ஆகமத்தின் படி இல்லாததைக் கண்டு சரிப்படுத்த எண்ண
ஸ்ரீ ஜகந்நாதர் இங்கு தொண்டு புரியும் பூஜாரிகளை வீட்டுக் கொடுக்க திரு உள்ளம் இல்லாமல் அவர் அறியா வண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய் விட்டார்
ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார் -அவர் தங்கிய மடம் மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன –
இங்கு உள்ள சன்யாசிகளுக்கு இத் திருக் கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது –

ஸ்ரீ ஜெகந்நாதரின் மஹா பிரசாத மஹிமை –
முதலில் பிரசாதம் யாருக்குமே கிடைக்காமல் இருக்க -ஸ்ரீ மஹா லஷ்மியிடம் நாரதர் பிரார்த்திக்க -பிரசாதம் பெற்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று கூத்தாடினார் –
இதனைக் கண்டா பரமசிவனும் வேண்டி பெற்று ஆனந்த நர்த்தனம் ஆட மேருவும் கைலாசமும் நடுங்கின –
பார்வதி தேவி இனி உலகில் ஸ்ரீ ஜகந்நாதர் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வேன் என்று சபதம் செய்ய அவள் பக்தியை பாராட்டி
இனி அன்ன ப்ரஹ்மமாகவே இருப்பேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் அருளினார் –
பிரசாதம் உண்பதாலேயே பாபங்கள் அனைத்தும் விலகி நன்மைகளே விளையும் –
இங்கே அமர்ந்தே உண்ண வேண்டும் -விநியோகத்துக்கு கரண்டிகள் உபயோகிக்க கூடாது -இலைகளை உபயோகிக்கலாம் –
உண்டு முடித்து முதல் வாய் கொப்பளித்து துப்பாமல் விழுங்க வேண்டும் -அடுத்தவாய் மண்ணில் துப்ப வேண்டும் -சாப்பிட்ட இடத்தை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும் –

திரு மடப்பள்ளி மஹாத்ம்யம்
உலகிலேயே மிகப் பெரிய சமையல் கூடம் -தென் கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் திரு மடப் பள்ளி -752-அடுப்புக்கள் ஒவ் ஒன்றும் -3–4-அடி அளவு கொண்டவை
சட்டிப்பானைகள் தவிர வேறே யந்திரமோ உலகமோ இல்லை
20-படிக்கட்டுக்கள் இறங்கி கேணியில் இருந்து தாம்புக் கயிற்றால் கைகளால் இழுக்கப் பட்ட சுத்தமான தண்ணீரை -30-தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
மிளகாய் வெங்காயம் பூண்டு காரட் உருளை தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகப் படுவதில்லை
-400-கைங்கர்ய பரர்கள் -மேலும் -400-உதவியாளர்கள் –
ஒரு நாளைக்கு -72-குவிண்டல் –(சுமார் -5000 படி பிரசாதம் )/ விசேஷ நாட்களில் -92-குவிண்டல் –
-60-கைங்கர்ய பரர்கள் தொழில் சுமந்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்
ஒவ் ஒரு நாளும் -56-வகையான பிரசாதங்கள் -சப்பன் போக் -செய்யப் படுகின்றன /-9-வகை சித்தரான்னம் -14-வகை கறியமுது-9-வகை பால் பாயாசம்
-11-வகை இனிப்புக்கள் -13-வகை திருப்பி பணியாரங்கள்
காலை -8-மணி கோபால் வல்லப போகம்
காலை -10-மணி சகல போகம்
பகல் -11-மணி -போக மண்டப விநியோக போகம்
மதியம் -12–30-மத்யாஹ்ன போகம்
மாலை -7-மணி சயன போகம் –
இரவு -11-15-மஹா சிருங்கார போகம் –

தினம் நிகழும் கொடி ஏற்றம்
விமானம் -214-அடி உயரம் –அதன் மேலே நீல சக்ரம் ஸ்ரீ ஸூ தரிசன சக்ரம் பொருத்தப் பட்டுள்ளது -எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது -36-அடி சுற்றளவு கொண்டது
இதில் மேல் மஞ்சள் சிகப்பு வெள்ளை ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை-6–30- மணி அளவில் ஏற்றப்படுகின்றன
கருட சேவகர்கள் என்று அலைக்கும் தொண்டர்களில் ஒருவர் அனைத்து கொடிகளையும் சுமந்து -15-நிமிடங்களில் சர சர என ஏறி -10-நிமிடங்களில் கொடிகளை கட்டுகிறார்கள்
இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் -8-வயது முதலே இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது –

நவ கலேவர -புது திருமேனி உத்சவம் –
எந்த ஆண்டில் அதிக மாசமாய் ஆணி மாதத்தில் இரண்டு பவ்ர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு இந்த உத்சவத்துக்கு என்றே நியமனம் பெட்ரா பூஜாரிகள்
சுமார் -40-மில் தூரத்தில் ப்ராஸீ நதிக் கரையில் இருக்கும் காகாத்புர் எனும் உரின் காடுகளில் தகுந்த வேப்ப மரங்களைத் தேடுவர்
சில விசேஷ அடையாளங்கள் உடன் இருக்கும் மரத்தை எடுத்து வந்து பூஜித்து அதை கோய்லா வைகுண்டத்தில் இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் செதுக்குவார்கள் –
புதுத் திருமேனிகள் உருவானவுடன் அமாவாசை இரவு அவர்களை எழுந்து அருள பண்ணிக்க கொண்டு வந்து கர்ப்பக்கிருகத்தில் உள்ள பழைய திருமேனிகளை அருகே வைப்பர் –
அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் படும் -பூஜாரிகளில் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு கைகளிலும் துணி சுற்றிக் கொண்டு
இடையே நின்று பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்ம பதார்த்தத்தை எடுத்து புதுத் திரு மேனியில் பொறுத்துவார்
பின்பு பழைய திரு மேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படுபவர் –
சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இந்த உத்சவம் -பரம ரஹஸ்யமாக நடத்தப்படும் -பழைய திருமேனிக்காக தாயாதிகள் -தயிதர்கள் -13-நாட்கள் துக்கம் அனுஷ்ட்டிப்பார் –
கடந்த நவ கலேவர – உத்சவங்கள் நடந்த ஆண்டுகள் –1912-/-1931-/–1950 -/-1969-/-1977-/-1996-ஆகியவை –

ஜகம் புகழும் ரத யாத்திரை –
ராணி குண்டீஸாவின் வேண்டுகோளுக்கு இணங்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் -2-மைல் பவனி வந்து
குண்டீஸா மந்திர அடைவர் -ஆனி மாதம் பவ்ர்ணமியில் -ஸ்நான பூர்ணிமா தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்த்தசி அன்று நீலாத்ரியிலே முடியும் இத்தேர் திரு விழா –
ரத யாத்ரா குண்டீஸா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப் படும் –10-திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ வடமதுரை வந்ததை நினைவு கூறும்
தேர்களின் அமைப்பு
மூன்றுமே மரத்தால் கைகளாலேயே செய்யப்பட்டவை -இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாகவே –125-தச்சர்கள் -2188-மறதி துண்டுகள் இணைத்து செய்வர்
ஸ்ரீ ஜகந்நாதர் தேர் -நந்தி கோஷ் என்ற பெயருடன் -7-அடி உயரமுள்ள -16-சக்கரங்கள் -கலைகள் பொருத்தப்பட்ட இதன் உயரம் -45-அடி –
தேர்ச் சீலைகள் வர்ணம் மஞ்சள் –/சங்கிகா ரேஸிகா மோஷிகா மற்றும் த்வாலினி என்ற பெயர்கள் கொண்ட நான்கு குதிரைகள் பூட்டி இருக்கும் அடி நீளம் –
சக்கரங்கள் மன்வந்த்ரங்கள் பொருத்தப்பட்டு -இதன் உயரம் -44-அடி /தேர்ச் சீலைகள் வர்ணம் நீலம்
ருக் யஜுஸ் சாம அதர்வணம் பெயர்களுடன் நான்கு குதிரைகள் -மாதலி தேரோட்டி -வாஸூகி தெற்கை கயிறு
ஸூபத்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம் -தேவதாலனம் /-12-சக்கரங்கள் பொருத்தப்பட்டு -மாதங்களின் கணக்கு /உயரம் -43-அடி
தேர்ச் சீலைகள் வர்ணம் சிவப்பு /ப்ரஜ்ஞ்ஞா -அநுபா -கோஷா -அக்ரி -நான்கு குதிரைகள் அர்ஜுனன் தேரோட்டி -ஸ்வர்ண சூடன் தேர்க் கயிறு –
இத்தேரில் ஸ்ரீ ஸூதர்சனரும் எழுந்து அருளி இருப்பர் –

உத்சவத்தில் முக்கிய நாட்கள்
1 -ஆனி பவ்ர்ணமி -ஸ்நான யாத்ரா -தாரு ப்ரஹ்மத்தில் இருந்து ஸ்ரீ ஜகந்நாதர் தோன்றிய நாள் –
இன்று -108-குடம் பன்னீரால் திரு மஞ்சனம் -அதனால் ஜலதோஷம் பிடிக்க அடுத்த -15-நாட்கள் தனிமை -தர்சனம் இல்லை –
2-ஆனி சுக்ல த்விதீயை -முதலில் பலராமர்-அடுத்து ஸூ பத்ரா -கடைசியாக ஜகந்நாதர் -அலங்காரத்துடன் தேரில் எழுந்து அருள்வார்கள்
அரசன் தங்க துடைப்பத்தால் பெருக்க தேர்கள் புறப்பட்டு குண்டீஸா மந்திர் சென்று அடைவர் –
மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்து அருளி இருப்பர் -பிரசாதங்களை இங்கேயே தளிகை பண்ணப் படும்
3-ஆனி சுக்ல பஞ்சமி -ஹோரா பஞ்சமி –தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட மஹா லஷ்மீ பிரதான கோயிலில் இருந்து
பல்லக்கில் குண்டீஸா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக லீலா ரசம்
4—ஆனி சுக்ல தசமி -உல்டா ரத்தம் –மூர்த்திகள் திரும்ப எழுந்து அருள்வார் –
பிரணய கலகம் -மட்டையடி உத்சவம் -பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்து இருப்பர் –
5–ஆனி சுக்ல ஏகாதசி -ஸூனா வேஷ தர்சனம் –ஸ்வர்ண திரு ஆபரணங்கள் மூர்த்திகள் சாத்திக் கொள்வார்கள் –
மூலை மூட்டுக்களில் இருந்து மக்கள் வெள்ளம் பெருகி வருவர்
6—ஆனி சுக்ல துவாதசி -இன்று இரவு பெருமாள் உள்ளே எழுந்து அருள்வார் -வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும்
பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம் –

ஜெய் ஜெகன்நாத் புரி புருஷோத்தம் தாம் கீ ஜெய்
நீலாசல நிவாசாயா நித்யாய பரமாத்மனே ஸூபத்ரா ப்ராண நாதாயா ஜெகந்நாதாய மங்களம்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மனுக்களின் பெயர்கள் –

August 27, 2022

ஸ்ரீ பகவாநுவாச-

14 மனுக்கள் -71-3/7 சதுர் யுகங்கள் ஒவ்வொரு மனுவுக்கு ஆட்சி காலம்-

ஸ்ரீ பகவாநுவாச-
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்.-
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்—৷৷4.1৷৷

முதல் மனு ஸ்வாயம்பு மனு
அடுத்து ஸ்வ ரோசிச மனு
அடுத்து உத்தம மனு
அடுத்து தாமஸ மனு
அடுத்து ரைவத மனு
அடுத்து சாஷுச மனு
அடுத்து வைவஸ்வத மனு

இரண்டாவது பாதியில் -ஏழாவது மனு வைசஸ்வத மன்வந்தரம் -27 சதுர் யுகங்கள் முடிந்து -அடுத்ததில் -28வது சதுர்யுகத்தில் – கலியுகத்தில் உள்ளோம்
தொடக்கத்தில் விவஸ்வானுக்கு உபதேசம் -பழைமையானது -நல்ல வழி காட்ட -தத் பேஷஜம் -மனுவின் சொல் மருந்து

எட்டாவது மன்வந்தரம் ஸா வர்ணி மன்வந்தரம்
அடுத்து தக்ஷ ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து பிரம்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து தர்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ருத்ர ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ரவ்ஸ்ய தேவ ஸாவர்ணி மன்வந்தரம்
கடைசியில் 14-இந்த்ர ஸாவர்ணி மன்வந்தரம்

————

இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.

பகவத்கீதை  ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு. அதாவது வடமொழியில் ‘சதுர்யுகம்’ என்று வழக்கில் இருப்பது. இதன் அளவு கீழே காட்டியபடி:

ஆக ஒரு  சதுர் யுகம்- மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம்.

ஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு ‘மனு’க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். ‘மனு’ என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு ‘மன்வந்தரம்‘ என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை (‘ஸந்தியா காலம்’) நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.

14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.-

15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் — அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் — சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.

பிரம்மாவின் இரவில் இந்திரனோ, மனுவோ, பூலோகமோ எதுவும் இருக்காது. பிரம்மாவும் தூங்கும் நிலையில் இருப்பார். பிரம்மாவின் அடுத்த நாள் காலையில் அவர் மறுபடியும் முன்போல் படைப்பைத் தொடங்குவார். அந்த நாள் முடிவில் ஊழிக்கால சம்பவங்கள் நடந்து எல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கும். இப்படி ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். இதுதான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மாவின் வாழ்க்கை. இவ்விதம் 360 நாட்கள் கொண்ட ஆண்டுகளாக, நூறு ஆண்டுகள் இந்த பிரம்மா இருப்பார். அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு ‘பரார்த்தங்கள்’ என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் ‘பாத்ம’ கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் ‘பிராம்ம’ கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

‘பரார்த்தம்’ என்ற சொல் கணிதத்தில் 1017 என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.

ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.

ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.

ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்

இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்

இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
இது ஏறக்குறைய 1014 x 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படி பரார்த்தம் ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.

 • ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.
 •  ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: — பகவத் கீதை 8 – 17
 • ஸஹஸ்ர யுகபர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது–ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ ஜநா–৷৷8.17৷৷
 • குந்தீ புத்திரனே மனிதன் தொடக்கமான நான்முகன் ஈறாக உள்ள அனைவருக்கும் இரவு பகல்களை அறியும்-அறிவாளிகள் எவர்கள் உளரோ -அவர்கள் பிரமனின் பகலை ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் இரவையும் ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் பகல் தொடங்கும் போது உலகில் உள்ள எல்லா பொருள்களும் பிரமனின் தேஹமானஅவ்யக்தத்தின் நின்றும் உண்டாகின்றன -பிரமனின் இரவு தொடங்கும் போது அவ்யக்தம் எனப்படும் அந்த பிரமனின் தேகத்திலேயே அவை ஒடுங்குகின்றன
  கர்மத்துக்கு வசப்பட்ட அத்தகைய இந்த ஜீவ ஸமூஹம் ஒவ் ஒரு பகலின் தொடக்கத்திலும் உண்டாகி உண்டாகி–இரவின் தொடக்கத்தில் லயத்தை அடைகிறது -மறுபடியும் பகலின் தொடக்கத்தில் உண்டாகிறது
 • ——————————–
 • மனு என்பது ஒரு பட்டம். ராஜா, பெரியவர், சிறந்தவர், மனிதருள் மாணிக்கம் என்று பொருள்
 • மன்வந்திரம் மனு இந்திரர்-1 சுயம்பு, இந்திரன்-2 . ச்வாரோசிஷன்ரோசன்-3 . உத்தமன், சத்யஜித்-4 . தபாசன், திரிசிகன்-5 . ரைவதன், விபு-6. சாசூசன், மந்திரதுருமன்
 • 7 . வைவஸ்த மனு, புரந்தரன்
 • 8 . சாவர்ணி, மகா பலி-9 . தசாசாவர்ணி, சுரதன்-10 . பிரம்மா சாவர்ணி, சம்பு-11 . தர்மசாவர்ணி, வைதிருதி-12 . ருத்ர சாவர்ணி, ருது சாமவே-13 . தேவ சாவர்ணி, திவஸ்பதி-14 . இந்திரசாவர்ணி, சுகி
 • ————————–
  1.    ப்ரபஞ்சம் என்பது  அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும் மறு முறை அழியும். ஆக   இது ஒரு சுழற்சியே.
  ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு. ப்ரம்மாவின் பிறப்புஇறப்பு போன்ற காலத்தின் நடுவே  வருவது  “மஹாகல்பம்”;;  ப்ரம்மாவின் இறப்பிற்குப் பிறகு வரும் ப்ரளயம்தான்  “மஹாப்ரளயம்”. ப்ரம்மாவின் ஒரு வாழ் நாளை  “கல்பம்”  என்று அழைப்பர் ;; இந்தக் கல்பம் 14 மந்வந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு  மனு உண்டு. அந்த மனுவின் வாழ்நாள் ஒரு “மன்வந்திரம்”. என்று அழைக்கப் படுகிறது.
  இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன. ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவைக்ருதயுகம் த்ரேதாயுகம்,த்வாபரயுகம்,கல்கியுகம்  என நான்கு யுகங்கள்  ஆகும் . ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுகிறது.. அதைச் சிறிய ப்ரளயம் என்று கூறுவர். ப்ரம்மாவின் ஆயுட்காலம் 120 வருடங்கள்  ஆகும் . ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120X360).உருவாகின்றன.
  2.     மனுஷ்ய வருஷம் : இரண்டு இலைகளை ஒரு ஊசி துளைக்கும் நேரம் “அல்பகாலம்” எனப்படும் . .
  30 அல்பகாலம்- 1த்ருதி:  
  30 த்ருதி– காலம்;
  30 காலம்–கஸ்தா;
  30 காஸ்தா–1நிமிஷம்(மாத்ரை);
   4நிமிஷம் —கணித;
  10 கணித–நெடுவீர்ப்பூ;
     6 நெடுவீர்ப்பு–விநாழிகை;;
    60 விநாழிகை–கடிகை;
    60 கடிகை —நாள்;
  15நாள்–பக்ஷம்;
  பக்ஷம் —மாதம்;
  இந்த ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்:
  12 மாதம் –ஒரு வருஷம்;
  இந்த ஒருவருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;
  300வருஷம் தேவ வருஷம்;
   4800 தேவ வருஷம்–க்ருத யுகம்;
   3600 தேவ வருஷம்.–த்ரேதாயுகம்;
  2400 தே.வருஷம்—துவாபரயுகம்;
   1200 தே.வருஷம்–கலியுகம்;
  71 சதுர்யுகங்கள் முடிந்ததும் ஒரு மனு முடிவடைகிறது.
  அத்தோடு அந்தக் கடவுள் தேவர்கள் அழிகின்றனர். அக்காலம் ப்ரம்மாவின் ஒரு பகல். இரவில் படைப்பு கிடையாது. 120 ஆண்டுகள் வாழ்ந்ததும் ப்ரம்மாவும் அழிந்துவிடுகிறார்
  ஆக ஒரு ப்ரம்மாவின் வயது–முப்பது கோடியே,ஒன்பது லட்சத்து,பதினேழாயிரத்து,முன்னூற்று எழுபத்திஆறு மனித ஆண்டுகள். ஒரு மனுவின் வயது–  4,32,000 மனித வருடங்கள்.
  ஒவ்வொரு சதுர் யுகத்திலும் வேதங்கள் அழியும். ஸப்த ரிஷிகள் கிழே வந்து வேதங்களை புதுப்பிப்பர். க்ருத யுகத்தில்மறுபடியும் மனு உருவாவான்.ஆக ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனுதேவர்கள்,ஸப்த ரிஷிகள்இந்திரன் புதிதாக உருவாவார்கள். கல்பகாலத்தின் முடிவில் விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொள்கிறார். பிறகு மறுபடியும் படைப்பு துவங்குகிறது.
  க்ருத யுகத்தில் அவர் கபிலராக வந்து “பரமஞானத்தை” போதிக்கிறார். த்ரேதாயுகத்தில் பேரரசனாக வ்ந்து கொடியவர்களை அழிக்கிறார்.
  துவாபர யுகத்தில் வ்யாசராக வந்து வேதங்களை உருவாக்குகிறார்கலியுகத்தில்  நேர்மையை நிலை நாட்டுகிறார். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு,  இந்திரன்சப்தரிஷிகள்போன்றவர்கள் இருப்பர்;; மனுவின் மகன்களும் ஒத்துழைப்பார்கள்;
  14 மன்வந்திரங்கள்–ஸ்வாயம்புஸ்வரோசிசஉத்தமதாமஸரைவதசக்ஷூசவைவஸ்வதஸாவர்ணிதக்ஷ ஸாவ்ர்ணிப்ரம்ம ஸாவர்ணிதர்ம ஸாவர்ணிருத்ர ஸாவர்ணிரௌச்ய ஸாவர்ணிஇந்திர ஸாவர்ணி.
  1) ஸ்வாயம்பு மனுப்ரம்மாவின் மனதில் உதித்தவர்.தேவி சடரூபியை(ப்ரம்மாவின் மகள்) மணந்தார்;நூறு ஆண்டுகள் வாக்பவ மந்திரத்தை உச்சரித்துதேவியை நோக்கித் தவமிருந்து பல வரங்கள் பெற்றான்மனுஸ்ம்ருதியை உருவாக்கினான்ஸப்த ரிஷிகள்: மரீசிஆங்கிரஸ்,அத்ரி,புலஹ,க்ரௌதுபுலஸ்தயவசிஷ்ட. தேவர்கள் எமன் என்ற பெயர் உடையவர்கள்
  மனுவின் மகன்கள்; அகனிதாரா,அக்னிபாஹு,மேதா,மேதாதிதி,வஸு,ஜ்யோதிஷ்மான்த்யுதிமான்ஹவ்யஸாவனபுத்ர. இவர்கள் உலகை ஆண்டனர்.(ஹரிவம்ச்ம்-7). இந்த மனுவை “ப்ரஜாபதி” மனு என்று அழைப்பர்.இவன் விராட அண்ட/புருஷனிலிருந்து வந்தவன் என்பர்;; முனிவர் ஸ்யாவநர் இவனின் மகளை மணந்தான். மனுவின் மனைவியின் பெயர் சரஸ்வதி(ப்ரம்மாவின் சரஸ்வதி அல்ல);.
  2) ஸ்வரோசிச  மனு;; ஸ்வயம்பு மனுவின் மகன்கள் ப்ரியவ்ருதன்உத்தானபாதன். ப்ரியவ்ரதனின் மகனே இம்மனு. தாரிணி தேவியை ஆராதித்தவன். ஸப்தரிஷிகள்ஊர்ஜ்ஜஸ்தம்பப்ரானராமரிஷபநிராயபரீவான். மகன்கள்;; சைத்ரகிம்புருஷ,ஸங்கவதன
  இந்திரன்;; விபஸ்சித்.: தேவர்கள்:- பாராவதர்கள்துசிதர்கள் . ப்ரம்மா இம்மனுவிற்கு ஸாத்வத தர்மத்தை சொல்லிக் கொடுத்தார்.இவன் அதை தன் மகன்களுக்கு சொல்லி கொடுத்தான். ( விஷ்ணு புரா-1-3; ஹரிவம்சம்–7; சாந்தி–348)
  3)உத்தம (ஔத்தமி); உத்தமனும் ப்ரியவர்தனின் மகன். இவனும் வாக்பீஜ மந்திரம் கூறி தேவியின் அருள் பெற்றான். (தேவி பாக-10) ஸப்தரிஷிகள்;; வசிஷ்டரின் ஏழு மகன்களே–ரஜஸ்கோத்ரஊர்தவபாஹுஸாவனஅநங்கஸுடாபஸ்சுக்ரமகன்கள்;;; அஜபரஸுதீப்த. என்று மற்றும் பலர். இந்திரன்;;; ஸுசாந்தி;;தேவர்கள்:- ஸுதாமன்ஸத்யர்ஜபஸ்,ப்ரதர்தனசிவ;; ஒவ்வொரு பகுதியிலும் 12 தேவர்கள்.
  4) தாமஸ;; இவனும் ப்ரியவர்தனின் மகனே. இவன் காமராஜ மந்திரம் ஜபித்து தேவியின் அருள் பெற்றான். ஸ்பத்ரிஷிகள்;;;ஜோதிர்மான்ப்ருதுகாவ்யசைத்ரஅக்னிவனகபிவரநர;;
  இந்திரன்;; சிபி;; தேவர்கள்:-ஸுபார,ஹரிஸத்யஸுதீஒவ்வொரு கூட்டத்திலும் 27 தேவர்கள்.
  மகன்கள்;;; க்யாதிகேதுரூபஜானுஜங்க என்று பலர் உண்டு
  5) ரைவத;;இவன் தாமஸனின் கடைசி தம்பி.இவன் காமபீஜ மந்திரம் ஜபித்து தேவி அருள் பெற்ரான். ஸப்தரிஷிகள்;;;ஹிரண்யரோமவேதஸ்ரீஊர்தவபாஹுவேதபாஹுஸுதாமபரஞ்சயமஹாமுனி;; இந்திரன்;;;விபு;; தேவர்கள்:-அமீதாபர்கள்பூதரயஸ்வைகுந்தஸுமேத– ஒவ்வொரு கூட்டத்திலும் 14 தேவர்கள்மகன்கள்;;;; பாலபந்துஸம்பாவ்யஸத்யகஎன்று பலர்.சிறந்த அரசர்களாக இருந்தனர்;;
  6)சாக்ஷுச;;; அங்கனின் மகன். ராஜரிஷி புலஹரின் உபதேசத்தால்தேவியை உபாசித்து மனு பதவி பெற்றான். ஸப்தரிஷிகள்;; ஸுமேதவிரஜஸ்ஹவிஸ்மான்உத்தமமதுஅதிநாமன்ஸஹிஷ்னுஇந்திரன்;; மனோஜவ;; தேவர்கள்:-ஆக்யர்ப்ரஸுதர்பாவ்யப்ருதுகலேக;; ஒவ்வொரு கூட்டத்திலும் தேவர்கள். வம்சாவளி ;; துருவன் அவன் மனைவி ஸாம்பு இருவருக்கும் இரண்டு மகன்கள்;; ஸிஸ்டிபாவ்ய;; ஸிஸ்டியின் மனைவி சுச்சயாவிற்கு ஐந்து மகன்கள்ரிபுரிபுஞ்சயன்விப்ரவ்ர்கலவ்ர்கதேஜஸ்;;ரிபுவின் மனவி ப்ரகதியின் மகன் சாக்ஷுச;;விரான ப்ராஜபதியின் மகள் புஷ்கரணி இவனின் மனைவிஇவர்களின் மகன் மனுஇவன் வைராஜ ப்ரஜாபதியின் மகள் நட்வலாவை மணந்தான். இவர்களுக்கு குருபுருஸதத்யும்னன்தபஸ்விஸத்யவான்ஸுசிஅக்னிஸ்தோமன்அதிராத்ரஸுத்யும்னன்அபிமன்யு என10 மகன்கள்;;ஆக்னேயி (குருவின் மனைவி)க்கு அங்(ம்)கஸுமனஸ்க்யாதிக்ரௌதுஆங்கிரஸ்,சிபி என மகன்கள்சுனிதா(அம்கனின் ம்னைவி) வேனாவை பெற்றெடுத்தாள்.ப்ருது வேனாவின் மகன்;; வைன்ய எனவுமழைப்பர்;; இம்மனுவின் மகன்கள் “வரிஷ்டர்கள்” என புகழப்பட்டனர்.
  7) வைவஸ்வத;; சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால்( மத்ஸ்யாவதாரம்)
  காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானார்.இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். இவனும் தேவி உபாசகன். ஸப்தரிஷிகள்;;வசிஷ்டகஸ்யபர்அத்ரிஜமதக்னிகௌதமவிஸ்வாமித்ரபாரத்வாஜ;; இந்திரன்;;; புரந்தர;;;; தேவர்கள்:-ஆதித்யர்வஸுருத்ர–மகன்கள்;;; தார்மீக புத்திரர்கள்;;இக்ஷவாஹுந்ருகத்ருஷ்ட,ஸர்யாதிநரிஸ்யந்தநாபாகஅரிஸ்டகரூஸப்ரஸ்த்ர;;(யாவரும் மனுக்கள்)பிறந்தவர்கள்;;வேனாத்ருஷ்ணுநரிஸ்யந்தநாபாகஇக்ஷவாஹுகரூசஸர்யாதிஇலாப்ரஸ்த்ரநாபாகாரிஷ்டத்ரேதாயுகத்தில் சூர்யன் இம்மனுவிற்கு “ஸாத்வத தர்மம்” போதித்தான். இவன் அதை இக்ஷவாஹுவிற்கு உபதேசித்தான்.
  8) ஸாவர்னி;; முற்பிறவியிலேயே இவன் தேவி பக்தன். முற்பிறவியில் சைத்ர வம்சத்தில் பிறந்த சுரதாவே ஸாவர்னிமனு. ப்ரம்மாவின் மகன் அத்ரிஅத்ரியின் மகன்நிஸாகரன்;ராஜசூய யாகம் செய்தவன். இவனின் மகன் புதன்புதனின் மகன் சைத்ர( சைத்ர வம்சத்தின் முதல் அரசன்). இவனின் மகன் சுரத;இவன் போரில் தோற்று காட்டில் அலையமுனிவர் ஸுமேதஸி உபதேசத்தால் தேவி அருள் பெற்று அரசை மீட்டதோடுமறு பிறவியில் மனுவானான். சூர்ய வம்சத்தில் பிறந்தவன்.
  சூர்யனுக்கு ஸ்மஞா மூலம் யமாயமி,மனு என மூன்று மகன்கள். சூர்யனுக்கு சாயா மூலம்–ச்னீஸ்சர,ஸாவர்னிதபதீ என மூன்று குழந்தைகள். ஸப்தரிஷிகள்;;; தீப்திமான்காலவராமக்ருபஅஸ்வத்தாமவ்யாஸரிஷ்யஸ்ருங்கர்,;; இந்திரன்;;;மஹாபலி;; ஸுடாபஸ்அமீதாபர்முக்ய என தேவர்கள்–ஒவ்வொரு கூட்டத்திலும்12 தேவர்கள்;;
  மகன்கள்;;; விரஜஸ்உர்வரீயான்நிர்மோகஎன பலர்;
  9) தக்ஷஸாவர்னி;;; ஸப்தரிஷிகள்;; ஸாவனத்யுதிமான்பாவ்யவஸுமேதாதிதிஜ்யோதிஸ்மான்ஸத்ய;; இந்திரன்;;அத்பூத;;தேவர்கள்:- பாரஸ்மரீசிகர்பஸுதர்மன்;; இக்கூட்டத்தில் 12 தேவர்கள் (ஒவ்வொன்றிலும்)மகன்கள்;;; த்ருதகேதுதீப்திகேதுபஞ்சஹஸ்தநிராமயப்ருதுஸ்ரவஸ்,
  10) ப்ரம்ம ஸாவர்னி;; ஸப்தரிஷிகள்;; ஹவிஸ்மான்ஸுக்ருதஸத்யதபோமூர்த்திநாபாக,அப்ரதிமௌஜஸ்ஸத்யகேது இந்திரன்;;; ஸாந்தி;; தேவர்கள்:-ஸுதமன்விஸுத்தாஸ். ஒவ்வொரு கூட்டத்திலும் 100தேவர்கள். மகன்கள்;; பத்து பேர். அதில் ஸுக்சேத்ரஉத்தமௌஜஸ்பூதிஸேன இவர்களே அரசர் ஆவார்கள்.
  11) தர்ம ஸாவர்னி;; சப்தரிஷிகள்;;; வ்ரஜஅகனிதேஜஸ்வப்ஸ்மான்க்ருணிஆருனிஹவிஸ்மான்அநக;; இந்திரன்;;;; –; விகங்கமஸ்காமகநிர்வானரதி –ஒவ்வொரு கூட்டத்திலும் 30 தேவர்கள். மகன்கள்;;;; ஸர்வத்ரகஸுதர்மாதேவானிகஎன பலர்;
  12)ருத்ர ஸாவர்னி;; இவன் ருத்ரனின் மகன். ஸப்தரிஷிகள்;; தபஸ்விஸுடாபஸ்தபோமூர்த்திதபோரதிதபோத்ருதிதபோத்யுதிதபோதன;; இந்திரன்;; ருதுதாமன்;;தேவர்கள்:-ஹரிதரோஹிதஸுமனஸ்சுக்ரமன்சுபார–ஒவ்வொரு கூட்டத்திலும்10 தேவர்கள்.
  மகன்கள்;;; தேவவான்உபதேவதேவஸ்ரேஷ்டஎன பலர்.
  13) ரௌச்ய தேவ ஸாவர்னி (ருசி);;; ஸப்தரிஷிகள்;; நிர்மோகதத்வதர்ஸிநிஸ்ப்ரகம்யநிருத்ஸகத்ருதிமான்அவ்யயஸுடாபஸ்;; இந்திரன்;;; திவஸ்பதி;;தேவர்கள்:- ஸுத்ராமன்சுகர்மன்ஸுதர்மன்ஒவ்வொரு கூட்டத்திலும் 33 தேவர்கள் மகன்கள்;;; சித்ரஸேனன்விசித்ரன் என பலர்.
  14) இந்திர ஸாவர்னி (பௌமி);; சப்தரிஷிகள்;; அக்னிபாஹுசுசிசுக்ரமாகதஅக்னிதாரயுக்தஜித;; இந்திரன்;; சுசி;;தேவர்கள்:- சாக்ஷுசபவித்ரகனிஸ்தப்ராஜகவாசவ்ர்த்த;; இவர்களே தேவர்கள்மகன்கள்;;; உரூகம்பீரபுத்திஎன பலர் மற்றவைகள்:-ஒன்பதாவது மனுவிலிருந்து கடைசி மனுவரை உள்ள மனுக்கள்வைவஸ்வத மனுவின் மகன்களான கரூசப்ரஸ்தரநாபாகதிஸ்தஸார்யதித்ரிசங்கு.இவர்களின் மறு பிறப்பே.”ப்ரமராம்பிகாவின் ” அருளால் இவர்கள் மனு பட்டம் பெற்றனர். விஷ்ணுவின் சக்திகளாகிய ஆபூதிஅஜீதஸ்த்ய,ஹரிமாநஸஸம்பூதிரைவத,வாமன என்பவைகளே,மன்வந்திரங்களை ஆளுகின்றன
  ————————————————————-
  ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
  ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
   

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

August 14, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அது பல பர்யந்தமாமா போலே
விடை யடர்த்த பக்தி யுழவன் பழம் புனத்தில் வித்தும் இட வேண்டும் கொலோ-என்கிறபடியே
இந்த யாதிருச்சிகாதிகள் தான் பரபக்திக்கு கர்ஷகனான ஈசுவரனுடைய புத்தி பூர்வகமாகவும் வேண்டாதே
தானே விளையும்படி இறே பழம் புனமாகிற ப்ரக்ருத் யம்சமாய்
மன ஏவ மனுஷ்யாணாம்
யத்தி மனஸா த்யாயதி -இத்யாதி க்ரமத்தாலே
அந்த யாதிருச்சிகாதிகளுக்கு மூலமான மனஸ்ஸைத் தன் பால் மனம் வைக்கும் படி அந்த கர்ஷகன் திருந்த ஸ்ருஷ்டித்த க்ருஷிக் கட்டளை என்கிறார் –

———–

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அவை தான் எவை என்னில் -ஆத்மாக்கள் அநந்தமாகையாலே ஒரு சேதனனுக்கு புண்ய ரூபமாகவும் பாப ரூபமாகவும் உண்டான
ஸ்வயம் ஆர்ஜிதமான கர்மங்களினுடைய பலங்கள் நரகாதிகளிலே நெடும் காலம் நிஸ் சேஷமாக அனுபவித்து
இனி பவிஷ்யமான காலத்திலே அந்தப் புண்ய பாப ரூபங்களை பூர்வ வாஸனா ருசி மூலமாக ப்ரவர்த்திக்கும் அத்தனை என்னும் படி
கர்ம பல அனுபவத்தில் அவன் கை ஒழிந்து அச்ச பாபனாய் நிற்கிற தசையிலே
அபேஷேத கதிம் நிரூணாம் கர்மணோ கஹநாம் கதிம் -என்கிறபடியே
நாஹம் தேவோ ந மர்த்யோ வா -என்கிற க்ரமத்திலே நாம் தாம் ஆர் என்று தன் ஸ்வரூபத்தை உணர்ந்து நம் ஸ்வரூபம் இதுவான பின்பு
நாம் இப்போது நிற்கிற நிலை ஏது நமக்கு இனிமேல் கர்தவ்யமாவது ஏது என்று இவனுக்கு அபூர்வமாகப் பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு
அந்த ஆத்ம குணங்களாதல் -பூர்வ யுக்தமான யாதிருச்சிகளாதல் -என்கிறார் –

—————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை-பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

அசிந்திதமாக ஒரு சேதனனுக்கு யாதிருச்சிகாதிகள் சம்பவிக்கும் க்ரமத்தை
யதா ஹி மோஷகா பந்த்தே பரிபர்ஹமுபேயுஷி நிவ்ருத்த மோஷணோத்த் யோகாஸ் ததா சந்த உதாசதே-என்று தொடங்கிச் சொல்லுகிற
பகவச் சாஸ்திரத்தத்திலே ஒரு பாகவதன் உத்ஸவ அர்த்தமாக ஆபரணாதிகளிலே அலங்க்ருதனாய்க் கொண்டு வழி போகா நிற்க
அவன் பின்னே கார்ய பரனாய்க் கொண்டு வருகிறான் ஒரு ஆயுத பாணியைக் கண்டு அந்த பாகவதனைப் பறிக்க வந்த மோக்ஷகர்
அந்த மோக்ஷண வியாபாரத்தின் நின்றும் நிவ்ருத்தராக -அத்தாலே -அந்த பின் வந்த படனுக்குப் பெரியதொரு ஸூ ஹ்ருத பலமாய் வந்து பலித்த படி
யாதொரு படி அப்படி அல்லாதாருக்கும் இவை யுண்டாம் என்று சொல்லுகையாலே இவ்வர்த்தம் பிரபல ப்ராமண யுக்தம் என்கிறார் –

ஆக
த்ரி பாத் விபூதியில் என்று தொடங்கி
நிர் ணீதமான அர்த்தம் ஈஸ்வரன் சேதனனுக்குத் தன் நிர்ஹேதுக கிருபையாலே கரண களேபரங்களைக் கொடுத்து
யாதிருச்சிகாதிகளையும் இவனுக்கு யுண்டாக்கும் இடத்தில் இவற்றில் இவன் அறிய வருமவை ஒன்றும் இல்லாமையாலே
உஜ்ஜீவனம் யாதிருச்சிகாதிகளாலும் இன்றிக்கே கேவலம் நிர்ஹேதுகம் என்னும் இடம் நிச்சிதம் என்றதாயிற்று –

——————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் -இறே –

வெறிதே அருள் செய்வர் -இத்யாதி -அதுக்கடி-ப்ரமாணிகரில் ஆப்த தமரான ஆழ்வார்
வெறிதே அருள் செய்வர் -என்று விசேஷித்து இவ்வர்த்தத்தை வெளியிடுகையாலே இறே -என்கிறது –

—————-

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அவ்விடத்தில் தன் கைம்முதல் கொண்டு திரு உள்ளம் உகக்கும் படி -செய்வார்கட்க்கு அருள் செய்வர் -என்கையாலே
அவ்வருள்களுக்கு ஹேது ஸூ ஹ்ருதமாய்த்து இல்லையோ என்னில்
அங்கனே விவஷையாகக் கொள்ளும் இடத்தில் -வெறிதே -என்ற பாசுரம் ஸ்வ வசன விருத்தத்வேந அசங்கதமாம் என்கிறார் –
செய்வார்கட்க்கு என்று
தான் செய்ய நினைத்தவர்கட்க்கு என்ற போது
வெறிதே என்ற இடம் சங்கதமாம் இறே –

—————————–

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆகிடுமானாலும் இவனுக்கு பகவத் விஷயீ கார பூர்வ பாவியான அத் வேஷ ஆபி முக்யங்கள் மாத்ரம் ஸூ ஹ்ருதம் அடியாக வந்ததானாலோ என்ன
அத்தைத் துடைக்கிறார் மேல் -பகவத் ஆபி முக்யம் இத்யாதி -அதாவது
அத்வேஷ அநந்தர பாவியான பகவத் விஷயத்தில் இவனுக்கு யுண்டாம் ஆபி முக்யம் இவன் பண்ணின ஸூ ஹ்ருதம் அடியாக அன்றிக்கே
பகவத் கிருபையாலே வேணுமாகில் யுண்டாகிறது
ஏதத் பூர்வ பாவியாய் அகிலாத்ம குண ப்ரதானமான அத்வேஷ மாத்ரம் இத் தலையில் ஸூ ஹ்ருதம் அடியாக சம்பாவித்ததானாலோ என்னில்
அநாதி காலம் ஸம்ஸரித்து பகவத் விமுகனாய்ப் போந்த இவனுக்கு அவ்விஷயத்தில் அத்வேஷ யுக்தனாகை யாகிற இம்மஹா பலத்துக்கு
அஞ்ஞனாய் -அசக்தனாய் அஸ்வதந்த்ரனாய் இருக்கிற இவன் பண்ணும் ஸூ ஹ்ருதத்தைக் காரணம் ஆக்குகை
தூரதோ நிரஸ்தம் என்கிறார் –

——————

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

ஸாஸ்த்ரமும் விதியாதே -இத்யாதி -இப்படி பகவச் ஸாஸ்த்ர ப்ரஸித்தமான ஸூ ஹ்ருதங்களினுடைய அனுஷ்டான க்ரமத்தை
ஏஷ ஏவம் குர்யாத் -என்று ஒரு ஸாஸ்த்ரங்களும் விதியாதே –
அந்த ஸாஸ்த்ரங்களினுடைய விதி விஷயமான நாமும் அறியாதே வருமவையான பின்பு ஸூ ஹ்ருதம் என்ற ஒன்றை முதலிலே
அநபிஞ்ஞரான நாம் நாம கரணம் பண்ணும் படி எங்கனே என்று வ்யுத்பித் ஸூ க்களுக்கு சங்கையாக
தன் நிவ்ருத்யர்த்தமாக அதுக்கு நாமதேய கர்த்தாக்கள் நாம் அன்று
பிதா புத்ரஸ்ய நாமதா -என்ற ந்யாயத்தாலே
ஸர்வஞ்ஞனாய்-நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் என்று ஆச்சார்ய பரம்பரையை ஆஸ்ரயித்து
இவ்வர்த்தத்தை அத்யவசித்து இருக்கையாய் இருக்கும் என்று யுக்த அர்த்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

—————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இவ்வர்த்த விஷயமாக இத்யாதி -இந்த நிர்ஹேதுக ஸ ஹேதுக ரூபமான இவ்வர்த்தம் விஷயமாக மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பாசுரங்களிலேயும்
மாதவன் என்றதே கொண்டு
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன –
இத்யாதிகளாலும்
வெறிதே அருள் செய்வர்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்னும் இத்யாதிகளிலும்
ஸ ஹேதுகமாகவும்
நிர் ஹேதுகமாகவும்
அருளிச் செய்கையாலே -ப்ரதீதியில் அவை அந்யோன்யம் விருத்த யுக்திகள் போலே ப்ரதிபாஸிக்கும்
இனி அல்லாதவற்றைப் பற்ற இத்திரு நாமத்துக்கு வாசி அறியாது இருக்க வசன மாத்ரத்தைக் கொண்டு
அந்தப்புர பரிகரர் சொல்லும் அத்தை அன்றோ இவன் சொல்லிற்று என்றும்
ஆழ்வீர் திருமாலிருஞ்சோலை மலை என்றீரே என்ன
அவரும் நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேனோ என்ன
இப்போது இப்படிச் சொன்னீரே என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றும்
இப்படி அந்த ஸ ஹேதுக ப்ரதிபாஸ வாக்யங்களுக்குச் சொல்லும் பரிஹாரங்களும் இவ்வர்த்தத்துக்கு உபோத் பலகமாக ஸாஸ்த்ரங்களிலே
ஏவம் ஸம் ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேந மஹா மதே ஆச்சார்ய விஷயீ காரத் ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்றும்
நாசவ் புருஷகாரேண ந சாப்யன்யேந ஹேது நா கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -என்றும்
இத்யாதி வக்தவ்யங்களான பிராமண விசேஷங்களும்
இப்பிரபந்த விஸ்தர பீதயா பறக்க பரக்க அருளிச் செய்கிறிலோம் என்கிறார் –

————-

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆகையால் இத்யாதி -பிரதமத்திலே இவனுக்கு அத்வேஷ ஆபி முக்யங்கள் உண்டாய்த்தும் அத்தலையாலே யான பின்பு
கேவல பகவன் நிர்ஹேதுக கிருபையாலே உஜ்ஜீவனம் ஆகையாலே இச்சேதனன் தன் பக்கல் விமுகனான ஸம்ஸார தசையிலும் கூடக்
கீழ் யுக்தமான பிரகாரத்திலே உஜ்ஜீவிக்கைக்கு கிருஷி பண்ணின
காருண்யாதி குண விசிஷ்டனாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை அனுசந்தித்தால் முமுஷுவானவன் எப்போதும்
ஸம்ஸார துக்க நிமித்தமாக நிர்ப்பயனாய் நிர்ப்பரனாய்
இருக்கும் அத்தனை என்று கீழே -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்றத்தை நிகமிக்கிறார் –

————

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –வ்யாப்தியும் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

எதிர் சூழல் புக்கு இத்யாதி -இப்படி இவ்வதிகாரி தான் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே உஜ்ஜீவிக்கைக்குக் கிருஷி பண்ணின ஈஸ்வரன் அளவில்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -என்கிற படியே
த்ரி பாத் விபூதி -என்று தொடங்கிச் சொன்ன ஸ்ருஷ்டி மாத்ரத்தையே ஆஸ்ரித அர்த்தம் என்று அனுசந்தித்து
நிர்ப்பயனாய் இருக்கும் அளவே யன்று
சத்தா தாராகத்வேந ஸர்வ ஸாமான்யமாக உண்டான வியாப்தியையும்
முற்றுமாய் நின்ற எந்தாயோ என்கையாலே
கீழ்ச் சொன்ன ஸ்ருஷ்ட்டியையும்
எதிர் சூழல் புக்கு -என்ற இடத்தில் சொல்லுகிற அவதாரத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆழ்வார்கள் அனுசந்தித்தாப் போலே
ஸ்வார்த்தமாக என்று இறே இந்த ஞானாதிகரும் அனுசந்தித்து நிர்ப்பயராய் இருப்பது -என்கிறார் –

———————

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் –

கர்ம பலம் போலே -இத்யாதி -இத்தால் கீழ் அர்த்தமாக வந்த வியாப்திக்குத் த்ருஷ்டாந்தமாக அந்த அவதாரத்தைச் சொல்லுகிற
எதிர் சூழல் புக்கு -என்கிற ப்ரமாணத்திலே
விதி சூழ்ந்தது -என்று பகவத் கிருபையை விதி ஸப்தத்தாலே அருளிச் செய்வான் என் என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம்-என்கிற விதி ரூப கர்ம பல அனுபவம் அவர்ஜனீயம் ஆனால் போலே
அவனுடைய கிருபா பலமும் இவ்வதிகாரிக்கு அனுபவித்தே விட வேண்டும்படி இருக்கையாலே
கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்கிறார் –

———–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

சேதனன் கர்ம பரதந்த்ரனாகையாலே தத் பலம் அனுபவிக்கிறான் -அச்சேதனனுக்கு
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ் மதாதே கீடஸ்ய சக்திர் பத ரங்க பந்தோ
யத் த்வத் க்ருபா மப்யதி கோச கார ந்யாயா தசவ் நஸ்யதி ஜீவ நாஸம் -என்கையாலே
அக்கிருபையைத் தகைய வழி யுண்டே என்ன
இவனே யல்ல
ஸர்வ சக்தியான அவன் தானும் கூடத் தகைந்தாலும் இவ்விருவர் ஸ்வா தந்தர்யத்தாலும் தகைய ஒண்ணாத படி
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக கிருபை பெருகப் புக்கால் சேதனனுடைய ஸ்வா தந்தர்ய ரூபமான அஹம் மமதைகளாகிற கரையும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்ய ரூப தண்ட தரத்வமாகிற கரையும் இடியும்படி உத் கூலமாய்க் கொண்டு பெருகும் என்கிறார் –

—————-

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இனி பய ஹேது கர்மம் என்று தொடங்கி -கீழே ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது என்றஇரண்டையும் நிகமித்து
ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறார் –
இப்படி இவன் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து பயப்படுகைக்கு ஹேது
ந நிந்திதம் கர்ம ததஸ்தி -என்கிற ஸ்லோகத்தின் படியே
அந்த தோஷ ஹேதுக்களான துஷ் கர்மங்கள் பகவத் குண அனுசந்தானத்தாலே நிர்ப்பரனாய் இருக்கைக்கு ஹேது
அநுத்தமம் பாத்தரமிதம் தயாயா -என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீ நம் -என்றும் அருளிச் செய்கையாலே
அவனுடைய ஸகல குண ஸாகல்யமான நிர்ஹேதுக கிருபை
இந்த முமுஷு அதிகாரிக்கு அந்த கர்ம ஹேதுவான பயமும் காருண்ய ஹேதுகமான அபயமும்
முந்நீர் ஞாலம் சீலமில்லாச் சிறியேன் -துடக்கமானவற்றிலும்
வைகுந்தா மணி வண்ணன்
கேசவன் தமர் -தொடக்கமானவற்றிலும்
ஆழ்வாருக்கு பர்யாயேண அனுவர்த்தித்திக் கொண்டு போந்தாப் போலே
பேஷஜம் பகவத் ப்ராப்தி -என்கிற பகவத் பிராப்தி பலிக்கும் அளவும் பர்யாயேண ஸ்வயமேவ அனுவர்த்தித்து விடும் என்கிறார் –
தன்னை இட்டுப் பார்த்தால் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாகவும்
அவனை இட்டுப் பார்த்தால் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாகவும் நினைக்கை
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் ப்ராப்தம் இறே –

——————

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-

நிவர்த்ய ஞானம் இத்யாதி -இந்த பயா பயங்களினுடைய சரம அவதியான ஹேதுக்களாவது
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி
நிவர்த்யமான அவித்யாதி ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஞானமும் –
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -என்னும்படி
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கிற தந் நிவர்த்தகத்தினுடைய ஞான சக்த்யாதி கல்யாண குண யாதாத்ம்ய ஞானமும் -என்றதாய்த்து –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –7–ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –சூர்ணிகை–321–365—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்

இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –

———–

சூரணை -322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –

—————

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –

—————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –

————

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –

இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –

—————–

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

————-

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-

ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே

ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –

—————–

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –

——————

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே

————-

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-

ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –

——————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –

இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –

————

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்

————-

சூரணை -334-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –

————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –

இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –

சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –

அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –

ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –

——————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –

——————

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –

—————

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –

இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –

—————-

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –

———————–

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –

————-

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –

—————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –

———————-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –

————

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்

இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்

இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –

————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-

குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-

குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –

மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –

தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –

————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து

இனி

இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –

அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –

————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –

இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –

—————

சூரணை -351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –

—————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் உண்டு  என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –

—————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –

————-

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –

————-

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –

————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –

——————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –

ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –

————-

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –

கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –

———–

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –

———–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –

————-

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –

————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –

—————

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்

இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –

இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –

இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –

அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்

உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்

ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து

இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-