ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –
————-
சூரணை -159-
அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –
சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –
அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து
ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –
நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே
தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –
———-
சூரணை -161—
அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப் போல —
அது என் -சேஷத்வத்தாலே அன்றோ ஆத்மாவை ஆதரிக்கிறது
இப்படி அவனுக்கு ஆதரணீயமாம் படி அலங்காரமான சேஷத்வம் அனுபவ விரோதியாம் படி எங்கனே என்ன
அழகுக்கு -என்று தொடங்கி த்ருஷ்டாந்த முகத்தாலே சொல்லுகிறது –
சூரணை -162–
ஹாரோபி—
ஹாரோபி நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்றார் இறே
இவ்வர்த்த விஷயமாகப் பெருமாளும் –சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,
பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள் –
————-
சூரணை -163–
புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு விலக்கு –
புண்யம் போலே -இத்யாதி -இப்படி இருக்கிற சேஷத்வத்தைப் பற்ற இட்டு வைத்த இடத்தே இருக்கும் படியான பாரதந்தர்யம் நன்று இறே -என்ன
ஸாஸ்த்ரங்களிலே நிஷேதிக்கிற பாபங்களில் காட்டில் அவற்றிலே அநுஷ்டேயமாக விதிக்கிற புண்யம் நன்றே யாகிலும்
மோக்ஷ விரோதித்வாத் -புண்ய பாப விதூய -என்கையாலே புண்யமும் த்யாஜ்யம் ஆகிறாப் போலே
அவன் இட்டு வைத்த இடத்தே இருக்கும்படியான பாரதந்தர்யமும்
கட்டை போலே எதிர் விழி கொடா விடில் அவனுக்குப் போக விரோதமாகையாலே த்யாஜ்யம் -என்கிறார் –
——————
சூரணை -164–
குணம் போலே சேஷ நிவ்ருத்தி –
குணம் போலே -இத்யாதி -கீழ் லோக வேத ஸித்தமான த்ருஷ்டாந்தங்களாலே அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்குப் புறம்பான
சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஸ்வரூப விருத்தம் என்று -குணம் போலே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு அந்தரங்க குணமான அவை விருத்தமானாப் போலே
அவித்யாதி தோஷத்தைப் போக்கி அவன் நம்மை விநியோகம் கொள்ள வேண்டாவோ என்னுமதுவும் தோஷாவஹம் என்று
அவை தன்னையே தோஷ நிவ்ருத்திக்கு த்ருஷ்டாந்தம் ஆக்குகிறார் –
————–
சூரணை -165–
ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே –
ஆபரணம் -என்று தொடங்கி -இவ்வர்த்தம் லோக ப்ரஸித்தம் என்கிறார் -அதாவது
ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு இவளை அந்தப்புரத்து ஏற அழைப்பியுங்கோள் என்று
அந்தரங்கரை நியமிக்க அவர்கள் பய அதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கன் வந்தாள் என்று அநாதரிக்க -அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்துப் புஜித்தான் என்று பிரசித்தம் இறே –
———
சூரணை -166–
ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது –
இவ் வர்த்த விஷயமாக ராவண வத அநந்தரம் திருவடி பெருமாள் பக்கல் ஏறப் பிராட்டியை எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிற தசையிலே
இவருடைய இந்த வேஷத்தைக் கண்டால் அவர் ஸஹிக்க மாட்டார் என்று திருமஞ்சனம் பண்ணி வைக்காத தேட
அவனைப் பார்த்து -ஸ்நாநம் ரோஷ ஜனகம் கிடாய் -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார்
அதுக்கு ஒக்கப் பெருமாளும் -தீபோ நேத்ரா துரஸ் யேவ ப்ரதி கூலாசி மே த்ருடம் -என்றார் இறே
த்வயி ப்ரசன்னே கிமாஹா பரைர்ந த்வய்ய ப்ரசன்னே கிமாஹா பரைர் ந -ரக்தே விரக்தேபி வரே வதூ நாம் நிரர்த்தக குங்கும பத்ர பங்க -என்றார் இறே ப்ரஹ்லாதனும் –
—————
சூரணை -167–
வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —
இப்படி தோஷமே போக்யமாக அவன் தான் விரும்பக் கண்ட இடம் உண்டோ என்ன
உண்டு என்னும் இடத்துக்கு உதாஹரணமாக
வஞ்சக்கள்வன்
மங்க வொட்டு -என்று எடுக்கிறார் –
நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இறே
மங்க வொட்டு -என்று கால் கட்டிற்று –
————
சூரணை -168–
வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —
ஹேயமான ப்ரக்ருதியை அவன் இப்படி ஆதரிக்கிறது தான் என் என்ன
வேர் சூடுமவர் -இத்யாதியாலே அத்தை த்ருஷ்டாந்த முகேந ப்ரகாசிப்பிக்கிறார் –
————
சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு ஹேது
கேவல பகவத் இச்சை இறே –
ஆனால் -ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா -என்னா நிற்க -இப்படி ஞானாதிகராய் அத்யந்தம் ஆர்த்த அதிகாரியானவர்களுக்கு
இஸ் ஸரீரத்தோடே இருக்கிற இருப்புக்கு ஹேது என் என்ன -பரம ஆர்த்தனான இவனுடைய -இத்யாதியாலே சொல்லுகிறது –
ஆர்த்தன் என்பது -ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
கேவல பகவத் இச்சை என்றது
கர்ம ஆராப்த சரீரமே யாகிலும் கர்ம சேஷத்தால் அன்றிக்கே -மோக்ஷயிஷ்யாமி என்று
ஸர்வ சக்தி தன் கேவல வாஞ்ச அதிசயத்தாலே வைத்தான் அத்தனை -என்கிறார் –
————
சூர்ணிகை -170-
திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –
இப்படி இவ்விஷயத்திலே பண்ணும் அபி நிவேசத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஆழ்வார்கள் விஷயமாக
அவன் பண்ணின அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் -திருமாலிருஞ்சோலை மலையே -என்று தொடங்கி
இதில் ஆழ்வாருடைய ஒரோ அவயவங்களிலே இவ்விரண்டு திவ்ய தேசத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணும் என்கையாலே
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்தில் பண்ணும் என்கிறார் –
————-
சூரணை -171-
அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –
அங்குத்தை வாஸம் -இத்யாதி -அவ்வுகந்து அருளின நிலங்களில் வாஸம் தானும்
நாகத்தணைக் குடந்தை
நின்றது எந்தை ஊரகத்து
நிற்பதும் ஓர் வெற்பகத்து –இத்யாதில் படியே
அணைப்பார் கருத்தானாகைக்காக வாகையாலே
அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -என்கிறார்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தான் -என்றார் இறே-
————
சூரணை -172-
கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –
கல்லும் கனை கடலும் இத்யாதி -இந்த ஞானாதிகனுடைய சாத்தியமான நெஞ்சு நாடு நிலமானவாறே இதுக்கு சாதனமான
உகந்து அருளின நிலங்களில் ஆதரம் அற்பமாய் இருக்கும் என்கிறார் –
————–
சூரணை -173-
இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –
அது அப்படியாகக் கூடுமோ என்ன -இளங்கோயில் இத்யாதி –
என் நெஞ்சம் கோயில் கொண்ட -என்கிறபடியே
மூல ஆலயமான பெரும் கோயிலுக்குள்ளே ப்ரதிஷ்டித்து உன்னை அனுபவித்தேன்
இனி இதுக்குப் பாலாலயமான ஷீராப்தியையும் கை விடாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து வைக்கையாலே
அது கூடும் இறே என்கிறார் –
————
சூரணை -174-
ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய் இருக்கும் —
அங்கனே யாகில் ஆறு ஏறினார்க்குத் தெப்பம் வேண்டாவோ பாதி அவனுக்கு அபேக்ஷிதம் கிட்டின பின்பு
அவ்வோ தேச வாஸத்தை இவர்கள் அபேக்ஷிக்கிறது என்
அவன் தானும் அத்யாபி ஆதரிக்கிறதும் என் என்ன -ப்ராப்ய ப்ரீதி இத்யாதியாலே சொல்லுகிறது –
அவனுக்குப் ப்ராப்யராய் -கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -என்று
இருக்கும்படியான ஆழ்வார்களுடைய உகப்புக்கு விஷயமாகையாலும்
இவ்விடங்களில் நிலையாலே இறே இவர்களை பெற்றோம் என்று இருக்கும் க்ருதஜ்ஞதையாலும்
அந்தப் ப்ராப்யம் கை புகுந்த பின்பும் அவ்வோ தேசங்கள் அபிமதமாய் அவன் வர்த்திக்கும் என்கிறார் –
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றது
அத்தேச விசேஷத்தில் க்ருதஜ்ஞதையாலே இறே –
——–
சூரணை -175–
ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே-ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –
ஆகையாலே -இத்யாதி -இப்படி இவ்வதிகாரி யுடைய தோஷமே போக்யமாக அவன் ஆதரிக்குமது உண்டாகையாலே
இவன் தன் தோஷத்தைப் போக்கி விநியோகம் கொள்ள வேணும் என்னுமது தோஷா வஹம் என்னும் இடம் ஸித்த மாகையால்
இது போலே அவன் விநியோகத்துக்குப் புறம்பாய் வரும் ஆந்தரமான சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஸ்வரூப விரோதியாய் இருக்கும் என்று
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்களை அந்யோன்ய த்ருஷ்டாந்த முகத்தாலே த்ருடீ கரிக்கிறார்
கீழே குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றார் இறே –
—————-
சூரணை -176–
தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —
தோஷ நிவ்ருத்தி தானே -இத்யாதி -ஆந்தர குணம் தோஷா வஹம் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆக்கின
இந்த தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம்-என்னும் இடம் இவ்வளவாக ஸாதித்தோம் இறே என்கிறார் –
———-
சூரணை –177-
தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை-
இப்படி தன் நினைவால் வருமது புருஷார்த்த விரோதியாம் அளவன்றிக்கே சமுசித ஸ்வரூப உபாயாதி ஸகலங்களிலும்
தான் தேடுமது துர்லபமுமாய் -ஸாவதியுமாய் -சோபாதிகமுமாய் -ஸ்வரூபத்துக்கு அநநு ரூபமாயும் இருக்கும்
என்னும் இடத்தை -தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே என்றும் –
நிருபாதிகனான -அவன் அடியாக வரும் நன்மை முலைப் பால் போலே ஸூ லபமுமாய் -நிருபாதிகமுமாய் -எல்லா அவஸ்தையிலும்
தாரகமாகையாலே ஸ்வரூபத்துக்கு அநு ரூபமுமாய் இருக்கும் என்று பிள்ளான் அருளிச் செய்வர் -என்கிறார் –
———————–
சூரணை -178-
அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே-காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று –
அவனை ஒழிய -இத்யாதி -இப்படிப் ப்ராப்தனானவனை ஒழிய எல்லா வழியாலும் அப்ராப்தனான தான் தனக்கு ஸ்வரூப உஜ்ஜீவனம் தேடுகை
ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை -காதுகனான -என்று தொடங்கி -த்ருஷ்டாந்த முகேந அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
முலை பிரியில் முடியும் ஸ்நந்தயம் போலே -நான் உன்னை அன்றி அறியிலேன் – என்னும் படி நித்ய ஸ்தநந்த்யமான ஆத்மாவை
மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்குகையாவது -ஸ்ரீ யபதியே இதுக்கு அவஸ்த அநு ரூபமாக நன்மை ஆசா சிப்பான் என்று இராமை –
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே யாவது -இது நெடும் காலம் தன்னை
அஸத் சமானாக்குகைக்கே வழி பார்த்து போந்த தானே தன் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கை –
அத்தால் வரும் ஹானி யாவது -அவ்வாட்டு வாணியன் அதன் காலை அறுத்து அடையாளமாகத் தூக்கி வைத்து – அப்பிரஜையை அறுத்து
அம்மாம்சத்தோடே கலந்து கூறு செய்து விற்று வயிறு வளர்க்குமா போலே இவனும் தன்னை ஆத்ம வித்தாகவும்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு யத்னம் பண்ணுகிறானாக நினைத்தானே யாகிலும்
அநாதி வாஸனையாலே தேஹமே ஆத்மாவாக நினைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து அத்தால் வந்த அநேக பாப சஞ்சயங்களாலே
அந வரதம் ஸம்ஸரிக்கையே பலமாய் விடும் என்கிறார் –
————
சூரணை -179-
தன்னை தானே இறே முடிப்பான் –
ஆத்மைவ ரிபுராத்மந -என்கிறபடியே தனக்கு இப்படி பாதகனாவானும் தானே யாகையாலே –
தன்னைத் தானே இறே முடிப்பான் -என்கிறார் –
————–
சூரணை -180-
தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி இவ்வளவான அர்த்தத்தைத் அருளிச் செய்து மேல்
தன்னைத் தான் முடிக்கை யாவது -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கி
ம -என்கிற ஷஷ்ட் யர்த்தமான அஹம் -மமதா தோஷங்களை அருளிச் செய்கிறார் –
——————
சூரணை -181-
அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –
அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –என்று அதில் பிரதமோ பாத்தமான அஹங்கார தோஷத்தை அருளிச் செய்கிறார் –
அத் தோஷமாவது ஸ்மஸ அக்னி கிளம்பினால் மருங்கடைந்து தூற்ற வளவிலே சுடும்
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்நீ பாத்ரங்கள் எல்லாவற்றையும் தக்தமாக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனனான இவ்வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் –
——————
சூரணை -182–
ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –
இவ்வர்த்தத்தில்-ந காம கலுஷம் சித்தம் –
என்றது கைங்கர்யத்தில் ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரஸத்வங்கள் இவனுக்கு ஸ்வரூப ஹானி என்னும் இடத்தில் பிரமாணம்
ந ஹி மே -என்று தொடங்கி -எம்மா வீட்டு திறமும் செப்பம் -என்னும் அளவாகவும்
ஸ்வ அஹங்கார ஸ்பர்சம் உள்ளவை அடங்க துஷ்டம் என்னும் இடத்தில் பிரமாணம் –
————-
சூரணை -183–
பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே-
இனி -பிரதிகூல விஷய ஸ்பர்சம் –என்று தொடங்கி -கீழே விஷயங்களையும் விரும்புகை -என்று ப்ரஸ்தாவித்த மமதா விஷய
ஸ்பர்சத்தால் வரும் தோஷத்தை விஸ்தரேண அருளிச் செய்தார்
பிரதிகூல விஷய ஸ்பர்சம் -என்றது -சாஸ்திரங்களிலே இவனுக்கு பிரதிகூலங்களாக நிஷேதிக்கப் பட்ட பர தாராதிகளை –
விஷ ஸ்பர்சம் போலே-என்றது அது ஸரீரத்திலே ஸ்பர்சித்த மாத்ரத்திலே பிராண ஹானியாமாப் போலே
அவை இவனுக்கு ஸ்வரூப நாஸகம் ஆகையாலே –
அனுகூல விஷய ஸ்பர்சம் -என்றது -ஸாஸ்த்ரங்களிலே
இவனுக்கு அனுகூலங்களாக விதிக்கப் பட்ட ஸ்வ தாராதிகள் –
அவை -விஷ மிஸ்ர போஜனம் போலே-என்றது -கேவல விஷம் ஸ்பர்சித்தால் மணி மந்த்ர ஒவ்ஷதாதிகளாலே
அறிந்து மாற்றலாய் இருக்கும் –
இது அங்கன் அன்றிக்கே அபிமதமான போஜனத்திலே அஞ்ஞாதமாய்க் கலசின விஷம் ஆரோக்ய கரமுமாய் போக ரூபமாய்
இருக்கும் என்றே புஜிக்கையாலே படுக்கையோடே பிராணன் போய்க் கிடக்கைக்கு ஹேதுவாமோ பாதி
அத்யந்தம் ஸ்வரூப நாஸகம் -என்கிறது –
————–
சூரணை -184—
அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் ஸூகிக்க நினைக்கை —
அக்னி ஜ்வாலையை -இத்யாதி -இப்படி உபய ஆகாரேண சொன்ன விஷய அனுபவ ஸூகம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை
பிரமாண ப்ரஸித்தமான திருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாம் து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நஸ் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே கர்ம காலத்தில் பெரு விடாய்ப் பட்டவன் நெருஞ்சிப் பழம் போலே சிவந்து குளிர்ந்த
தண்ணீராகப் பிரமித்து அக்னி ஜ்வாலையை விழுங்கி த்ருஷார்த்தி தீர நினைக்குமா போலேயும்
மத்யாஹ் நார்க்க மரீசி தப்தனானவன் தன்னுடைய தாப ஸ்ரமம் ஆறுகைக்கு ப்ரக்ருதியாப்ரகுபித புஜங்க பணா மண்டலச் சாயையைப்
பணைத்து ஓங்கின மர நிழலாக நினைத்து அதிலே ஒதுங்க நினைப்பாரைப் போலேயும் இறே
விஷய ஸூகத்தாலே இவன் ஸூ கிக்கப் பார்க்குமது -என்கிறார் –
அங்கார ஸத்ருஸா நாரீ க்ருத கும்ப சம புமான் தஸ்மான் நாரிஷு ஸம் சர்க்கம் தூரத பரிவர்ஜயேத் -என்றும்
விஷஸ்ய விஷயாணாம் து தூர மத் யந்த மந்தரம் உப யுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி -என்றும் சொல்லக் கடவது இறே –
—————
சூரணை -185–
அஸூணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–
அஸூணமா -இத்யாதி -இத்தால் இவ்வதிகாரிக்கு இப்படிப்பட்ட விஷய ஸ்பர்சம் வேண்டா –
அதனுடைய தர்சன மாத்ரம் அமையும் ஸ்வரூப ஹானிக்கு -என்கிறார் -அதாவது
அஸூணமா-என்பதொரு பக்ஷி விசேஷத்தை அகப்படுத்தி ஹிம்சிக்க நினைத்தான் ஒருவன் அவை உள்ள இடத்திலே இருந்து –
அதி மிருதுவாய் பாடினவாறே ஸூக ஸ்ரவண ஏக தத் பரங்களானவை அங்கேற வரும்
அவ்வளவிலே அவன் அருகே இருந்த முரசை அடிக்க அக்கடின த்வனி செவிப்பட்ட அளவிலே அவை கலங்கி முடியுமா போலே
பகவத் குண அனுபவ ஆனந்த ஏக தத் பரனாய் அவ்வனுபவ அதிசயத்தாலே மெல்கி அதி மிருது ஸ்வ பாவனாய் இருக்கிற இவ்வதிகாரி
இன்னமுது எனத் தோன்றும் விஷய தர்சன மாத்ரத்தாலே மயங்கி ஸ்வரூப ஞானம் ,அறைந்து முடியும் படியும் –
—————-
சூரணை -186–
காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—
காட்டிப் படுப்பாயோ -என்று விஷய தர்சன மாத்ரமே நாஸகம் என்றார் இறே
உழைக் கன்றே போல நோக்கமுடையவர் வலையில் பட்டு -என்றும்
மாத் யந்தி ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸூராந் பீத்வாது மாத் யந்தி தஸ்மாத் த்ருஷ்ட்டி பதான் நாரீம் தூரத பரி வர்ஜயேத்-என்றும்
கௌளீ மாத்வீ ச பைஷ்டீ ச விஜ்ஜேயாஸ் த்ரி விதாஸ் ஸூரா -என்றும்
சதுர்த்தா ஸ்த்ரீ ஸூரா ப்ரோக்தாஸ் தஸ்மாத் தாம் பரி த்யஜேத் -என்றும் சொல்லக் கடவது இறே –
———–
சூரணை-187–
அஜ்ஞனான விஷய பிரவணன்-கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்-ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –
சூரணை -188-
கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை-ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –
பகவத் ப்ரபாவத்தாலே ஞானாதிகனான இவனுக்கு இவ்விஷய அனுபவ ருசி இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்ன
அல்லாதாரைப் பற்ற -விதுஷோதி க்ரமே தண்ட பூயஸ் த்வம் -என்கிறபடியே அவனுக்கு அது தோஷா வஹம் என்னும் இடத்தை
அஜ்ஞனான விஷய பிரவணன் என்று தொடங்கிச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
இப்படி யுக்தமான விஷய தோஷத்தில் அஞ்ஞனாய்க் கொண்டு அவ்விஷயத்தே ப்ரவணனாய் இருக்குமவன்
உதர பரண மாத்ர கேவல இச்சோ புருஷப ஸோஸ் ச பஸோஸ் ச கோ விசேஷ -என்னும்படியான
முதலிலே அத்ருஷ்ட ருசி இல்லாத ஸூத்த நாஸ்திகனோடு ஒக்கும் –
இதில் விஷய தோஷத்தை உள்ளபடி அறிந்து வைத்து -இவ்விஷய அனுபவத்தாலே ஸூ கிக்க நினைக்கிற இவ்வதிகாரி
காண்கிற தேஹாதி ரிக்தரான ஆத்ம ஈஸ்வர ஞானம் யுண்டாய் வைத்தே அவற்றில் தாத்பர்யம் அற்று ஸ்வைர சஞ்சாரியாய்த் திரியுமவனோடே ஒக்கும் என்கிறார்
ஆனால் இவற்றில் சொன்ன தாத்பர்யம் என் என்ன
அஜ்ஞஸ் ஸூக மாராத்யதே ஸூக தர மாராத்யதே விசேஷஜ்ஞ -ஞான லவ துர் விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஞயதி-என்கிறபடியே
கேவல நாஸ்திகனானவனை அஞ்ஞாத ஞாபன முகத்தாலே திருத்தலாம் –
அறிந்து வைத்தே அதில் நிஷ்ணாதன் அல்லாத ஆஸ்திக நாஸ்திகனானவனை எத்தனையேனும் அதிசயித ஞானராலும்
யாவஜ் ஜீவம் திருத்த ஒண்ணாமையாலே இவன் ஈஸ்வரனுக்கு தண்ட்யனேயாம் அத்தனை -என்றபடி
அநு பதன் நபி விஸ்வப்ரே கேவலம் அநு கம்ப்யதே கர்ணாந்த லோசந கூபே பதம் கைர்ந வித்பயதே-என்னக் கடவது இறே –
ஆக கீழ் ப்ரபன்னனுக்கு -விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-என்ற இடத்தில் இவ்விஷய ப்ராவண்யம்
உபாய அதிகாரிக்கு த்யாஜ்யம் என்கையிலே
ஊற்றமாகையாலே இங்கே உபேய அதிகாரிக்குத் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி நின்றது –
———–
சூரணை -189-
இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –
இனி இவை இரண்டும் -என்று தொடங்கி -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்ற
அஹங்கார மமதா ரூபமான விஷயப்ப்ராவண்யமும் என்ற
இவை இரண்டும் ஸ்வயமேவ நின்று இவ்வாத்மாவை நசிப்பிக்கையே அன்றிக்கே
பாகவத அபசாரமாகிற மஹா அநர்த்தத்தையும் உண்டாக்கி நசிப்பிக்கும் என்று
இவ் வஹங்கார விஷய ப்ராவண்யம் அடியாக வருகிற
பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –
இதில் ஸ்வரூபேணே என்றது -ஸ்வேந ரூபேண -என்றபடி –
—————–
சூரணை-190-
நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்-தக்த படம் போலே –
நாம ரூபங்களை -இத்யாதி -இப் பாகவத அபசார பலம் அல்லாதார்க்கும் ஒத்து இருக்க -நாம ரூபங்களை உடையராய் -என்று விசேஷித்து
கீழில் ப்ரகரண பலத்தாலே வைஷ்ணவத்வ சிஹ்னமான நாம ரூபங்களை உடையராய் வைத்து பாகவத அபசாரத்தைக் கூசாதே பண்ணி தத் பயத்தால் வரும் அனுதாப ஸூ ன்யராய்க் கொண்டு திரியுமவர்கள்
தக்த படம் போலே என்றது -நேய மஸ்தி புரீ லங்கா -இத்யாதி வத்-அஸத் சமராய்க் கொண்டு சஞ்சரிக்கிறார் இத்தனை என்றபடி –
——————
சூரணை -191–
மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்
காற்று அடித்தவாறே பறந்து போம் –
அது எங்கனே என்ன -மடிப்புடவை -இத்யாதியாலே சொல்லுகிறது –
கேவலம் புடவை வெந்தால் என்னாதே -ஒரு ஸம்ஸ்கார விசேஷம் தோற்றும் படி -மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும் -என்றது
புஜ யுகமபி சிஹ்நை ரங்கிதம் -இத்யாதி க்ரமத்திலே ஸாத்விக லக்ஷண ஸம்ஸ்க்ருத வேஷராய் வைத்தே பாகவத அபசாரத்தாலே
————-
சூரணை -192-
ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்-
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் இவர்கள் பக்கல் இப்படி சீறக் கூடுமோ என்ன
அச் சீற்றத்தின் மிகுதியாலே அன்றோ அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களும் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படியை இவ் வர்த்தத்துக்கு உதாஹரிகிறார் -ஈஸ்வரன் அவதரித்து -இத்யாதி –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தாலே அழியச் செய்கை யன்றிக்கே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்துத் தானே
கை தொடானாய்ச் செய்த அதிசயித சக்தித்வாதிகள் தோற்றும் படியான அகில வியாபாரங்களும் அபிமதரான பாகவத விஷயத்தில்
அபசாரமும் அஸஹ்யமாய் இறே அருளிச் செய்வர் அல்லது அவனுக்கு விரோதிகள் ஒருவரும் இல்லை இறே –
யத் அபராத ஸஹஸ்ரம் அஜஸ் ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்-வரத
தேந சிரம் த்வம விக்ரியோ விக்ருதி மர்ப்பக நிர்ப்பஐநாதகா -என்றார் இறே கூரத்தாழ்வானும்-
———-
சூரணை -193–
அவமாநக்ரியா–
(அவமாந க்ரியா -என்று அவ்வீஸ்வர வசனம் எடுக்கிறார் –
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே )
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே
சூரணை -194-
பாகவத அபசாரம் தான் அநேக விதம் –
இப்படி அஹம் மமதை களாலே ஆரப்தமாம் பாகவத அபசாரம் தான் உத்பத்தி நிரூபணம் -வாஸ நிரூபணம் –
ஆலஸ்ய நிரூபணம் -அவஸ்தா நிரூபணம் -முதலானவை
அநேகமாகையாலே -பாகவத அபசாரம் தான் அநேக விதம் என்கிறார்-
———
சூரணை -195-
அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –
அதிலே இத்யாதி -அவற்றில் ஜென்ம நிரூபணம் கொடியதாகையாலே
அத்தை விசேஷித்து எடுக்கிறார் –
———–
சூரணை –196–
இது தான் அர்ச்சா அவதாரத்திலும் உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-
அதில் க்ரவ்ர்யம் எவ்வளவு என்ன –
அர்ச்சா அவதாரத்திலும் உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் அதி க்ரூரம்-என்கிறார் –
———-
சூரணை -197–
அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-
அதிலும் குரூரமான படி என் -என்ன -அத்தை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யாஸ் துல்யம் ஆஹூரேவம் மநீஷிண –என்று
மாத்ரு யோநி பரிக்ஷையை ஸாஸ்த்ரம் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிற இடத்தில் அர்ச்சாவதார உபாதான ஸ்ம்ருதி ரூபமான அபசாரத்தை
அந்த மாத்ரு யோநி பரிக்ஷையில் அபசார துல்யமாகச் சொல்லி –
வைஷ்ணவ உத்பத்தி ரூபமான அபசாரம் வாக்குக்கு நிலம் அல்லாமை தோற்ற –
ஏவமாஹு -என்று அவ்வபசாரத்தை அதி தேசித்து விடுகையாலே என்கை –
ஆகை இறே -ஸாஸ்த்ரம் அத்தைச் சொல்லிற்று என்று விசேஷித்தது –
அது தான் மாத்ரு யோநி பரீஷையோடு ஓக்கை யாவது -கீழே -இது தான் -ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே -என்று தொடங்கிச் சொன்ன க்ரமத்திலே
அநாதி காலம் விஷய ப்ரவணனாய்க் கொண்டு நாஸ்திகனாய் -அசன்னேவ-என்னும் படி போந்த இவனை
பொருள் அல்லாத என்னை -இத்யாதிப்படியே –
ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் முடிவாக உண்டாக்கி –
ஸ்வரூபா பத்தியையும் பிறப்பிக்குமது அர்ச்சாவதாரமாகையாலே அதனுடைய வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம் பண்ணுமது
அல்லாத ஸ்த்ரீகளுடைய யோநி வை லக்ஷண்ய நிரூபண வாஸனையாலே தனக்கு உத்பாதகையாய்
மாத்ரு தேவோ பவ -என்று பிரதமத்திலே பூஜ்யையாக விதித்து இருக்கிற மாத்ரு யோநி வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம்
பண்ணுமோ பாதி மஹா பாதகமாகையாலே –
————-
சூர்ணிகை -198-
திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —
ஆனால் காற்று அடித்தவாறே பறந்து போம் -என்கையாலே சரீர அவஸ அநந்தரம் இப்படி ஸ்வரூப ஹானி வரும் அத்தனையோ என்னில் -அங்கன் அன்று
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் ஸத்யஸ் சண்டாள தாம் வ்ரஜேத் -என்றும்
நுமர்களைப் பழிப்பராகில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இஜ்ஜன்மத்திலே அதிலும் -அபசாரம் பண்ணின நிலையிலே -ஸ்வரூப ஹாநியாம் -என்னும் இடத்தை -த்ரி சங்குவைப் போலே -என்று தொடங்கிச் சொல்லுகிறது
அதாவது – ஸ ஸரீர ஸ்வர்க்கம் யுண்டாம் படி தன்னை யஜிப்பிக்க வேணும் என்று ஸ்வ ஆச்சார்யனான வஸிஷ்டனை அபேக்ஷிக்க
அவன் அது அப்ராப்தம் என்று நிஷேதித்தது பொறாமல் அவ்வஸிஷ்ட புத்திரர்கள் பக்கலிலே சென்று அவன் இவ் வ்ருத்தாந்த கத நத்தைப் பண்ண
அவர்கள் ஆச்சார்ய வாக்ய அதி லங்கனம் பண்ணின அப்போதே நீ சண்டாளன் என்று சபிக்க
அநந்தரம் அவனுடைய ஷத்ரிய வேஷ உசிதமான ஆபராணாதிகள் எல்லாம் நிஹீந த்ரவ்யங்களாய்க் கொண்டு
நீ ச வேஷோ சிதமாய் விட்டாப் போலே பாகவத உத்பத்தி நிரூபணம் அடியாக சண்டாளனாய் உத்தம வர்ணனான தன் மார்பில் இட்ட ப்ரஹ்ம வர்சஸ்ஸூக்கு
ஹேதுவான யஜ்ஜோ பவீதம் தானே -அவர்கள் தாம் புல்லியர் -என்கிற ஜன்மத்துக்கு உறுப்பான வாராய்
அபசாரம் பண்ணின வாக்கில் த்ருபிசம் தானே அபேயமுமாய் விடும் என்கிறார் –
————
சூர்ணிகை –199-
ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –அதுவும் இல்லை இவனுக்கு –
சூர்ணிகை –200-
ஆரூட பதிதனாகையாலே-
இங்கனே யாகில் லோகத்தில் சண்டாளர்களுக்கும் ஒரு கால் உஜ்ஜீவனம் உண்டாகிறவோ பாதி இவனுக்கும் ஒரு காலாந்தரத்திலே யாகிலும்
உஜ்ஜீவனம் உண்டாமோ என்னில் -இல்லை என்னும் இடத்தை -ஜாதி சண்டாளனுக்கு -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
அதாவது வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வத ஆரோஹணம் பண்ணுமோ பாதி
ஜாதி சண்டாளனுக்கு ஸத்ய ஆர்ஜவாதி
தர்ம அனுஷ்டானத்தாலே ஸத்வ உத்ரேகம் யுண்டாய் அத்தாலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு
உயர ஏறினவன் விழுந்தால் உருக் காண ஒண்ணாத படி உடைந்து போமா போலே உத்தம வர்ணத்தில் நின்று உத்பத்தியிலே
அபசாரம் பண்ணிய அப்பதித்வமே ஸ்வரூபம் என்னும் படி அத பதிக்கையாலே அவனுடைய யோக்கியதையும் இவனுக்கு இல்லை என்கிறார் –
———-
சூர்ணிகை –201-
இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –
சூர்ணிகை -202-
தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே-
இது தனக்கு இத்யாதி -இவ் வபசாரம் இதர விஷயங்களில் ஒழிந்து ஞானாதிக விஷயத்திலும் இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்னில்
இவ் வபசாரம் பலிக்கும் இடத்தில் அவ்வதிகாரி நியமம் இல்லை என்று இதுக்குப் பிரமாணமாக
தமர்களில் தலைவராய -என்று அருளிச் செய்கிறார் –
———-
சூர்ணிகை -203-
இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-
இவ் விடத்திலே என்று தொடங்கி அதுக்கு ஐதிஹ்யங்களை ஸ்மரிப்பிக்கிறார் -அவை எங்கனே என்னில் –
பெரிய திருவடி விநதா ஸூதனாய் வந்து அவதரித்த தசையிலே -இவனுக்கு பால்ய மித்ரனாய் இருப்பான் ஒரு ப்ராஹ்மண புத்ரன்
வேத அத்யயனம் பண்ணின சமயத்திலே குரு தஷிணைக்கு பஞ்ச வர்ணமான பஞ்ச சத அஸ்வம் தரச் சொல்லி அவனை ஆச்சார்யன் அருளிச் செய்ய
ஆஸ்திக்யத்தாலே அப்படிச் செய்கிறோம் என்று அவ் வை நதேயனையும் ஸஹ கரிப்பித்துக் கொண்டு போகா நிற்க
பர்வத பார்ஸ்வத்திலே வர்த்திப்பளாய்-
சாண்டில்யை என்ற பெயரை யுடையாள் ஒரு பாகவதை யானவள் நீங்கள் ஏதேனும் அபசாரத்தைப் பண்ணினது உண்டோ இப்படிக்கு கிடப்பான் என் என்ன
இவ்வளவுண்டு -விலக்ஷணையான இவளுக்கு வாஸம் ஒரு திவ்ய தேசமாகப் பெற்றது இல்லையே என்று இருந்தோம் என்ன –
அங்கன் இருந்தால் உங்கள் இளைப்பில் இவ்வாதித்யம் எனக்குக் கூடுமோ -தப்ப நினைத்தி கோள் என்று கையாலே தடவி அவர்களைத் தரிப்பிக்க
அநந்தரம் அவர்கள் தரித்து எழுந்து இருந்து சிறகும் எழுந்து போனார்கள் என்று ப்ராமண ஸித்தமாகையாலும்
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனான பிள்ளைப் பிள்ளை ஆழ்வானைக் குறித்து அவர் அதற்குப் பதறி இருக்கையாலே
இவருக்கு இது பாகவத அபசார பர்யந்தமாகப் பலிக்கில் செய்வது என் என்று த்ரிவித கரணங்களையும் தமக்குத் தக்ஷிணையாகத் தா என்று வாங்கிப்
பின்பு உடையவர் அருளிச் செய்த வார்த்தைக்காக
உமக்கு மற்றை மானஸ காயிகங்கள் இரண்டும் மீளத் தந்தோம்
வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்கையாலும்
அபசாரத்துக்கு அதிகாரி நியமம் இல்லாமைக்கு வை நதேய வ்ருத்தாந்தத்தையும் -பிள்ளைப்பிள்ளான் ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-என்கிறார் –
——————–
சூர்ணிகை -204-
ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –
அது எங்கனே என்னில் -ஞான அனுஷ்டான ஹீநோபி ததா பாகவதேஷணாத் -ஜீவேத் ததா தத் யுக்தோபி நஸ்யேத் ததந பேஷணாத் – என்கிறபடியே
எத்தையேனும் மோக்ஷ ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் அன்றியிலே இருந்தார்களே யாகிலும்
அந்தோ நந்த க்ரஹண வச த -இத்யாதிப்படியே
அப் பேற்றுக்கு அத் தேசிகரான பாகவதர்களுடைய ஸம்பந்தமே போருமோ பாதி –
அப் பல ஹாநிக்கும் ஸ்வரூப ஹாநிக்கும் அவர்களுடைய அந பேஷண ஹேதுவாக அபசாரமே போரும் -என்கிறார் –
—————–
சூர்ணிகை -205-
இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-
இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-என்றது -உத்க்ருஷ்டமான ஜென்ம வ்ருத்த ஞானங்களை
யுடையாருடைய ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவனமும் அவர்கள் பக்கல் இழவுமாக வேணும் என்கிற நியமம் இல்லை
இவற்றால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் நேரே பாகவதர்கள் ஆகில் அவர்களுடைய சம்பந்தமே உஜ்ஜீவன ஹேதுவாய்
அவர்கள் பக்கல் அபசாரமே இழவுக்கு ஹேதுவாம் என்றபடி –
—————-
சூர்ணிகை –206–
இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –
இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -அத்தைச் சொல்லுகிறது -இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்-என்று தொடங்கி –
கைசிக வ்ருத்தாந்தத்திலே சரக வம்சஜனாய் -உத்க்ருஷ்ட ஜன்மாவான ஸோம சர்மாவினுடைய யஜ்ஞ சாபம் எத்தனையேனும்
அபக்ருஷ்ட ஜென்ம வ்ருத்தங்களை யுடையரான ஸ்வ பாகருடைய ஸம்பாஷண ஸஹ வாஸாதி களாலே
யஜ்ஞ ஸாபாத் வி நிர்முக்த ஸோம சர்மா மஹா யஸா -என்கிறபடியே அவனுக்குப் போகக் காண்கையாலும்
உபரிசரவ ஸூ வ்ருத்தாந்தத்தாலே ஆகாஸ ஸாரியான ரதத்தை யுடையனாய் – ஷத்ரியனுமாய் இருக்கிற உபரிசரவஸூ ஸகல தர்ம ஸூஷ்ம ஜ்ஞானனுமாய்-அத்யந்தம் ஞானாதிகனுமாய் இருக்கையினாலே
பிஷ்ட பஸூக் கொண்டே யஜிப்புதோம் என்ற ருஷிகளுக்கும்
யதாவான பஸூக் கொண்டே யஜிக்க வேணும் என்கிற தேவர்களுக்கும் விவாதம் ப்ரஸ்துதமாய் -அவர்கள் ஞானாதிகனானவனைக் கேட்க வர
அத்தை நாம் எல்லாரும் கூட விசாரிக்கும் அத்தனை அன்றோ என்று அவர்கள் பொருந்தச் சொல்லாதே
சேஷிகள் உகந்ததே சேஷ பூதங்கள் இட வேண்டாவோ என்று சிவிட்கெனச் சொல்ல
அத்தாலே ரிஷிகளும் த்வம்ஸ -என்று சபிக்க
அவர்களிலும் ஞானாதிகனான உபரி சரவஸூ அதிபதிக்கக் காண்கையாலும்
இவை இரண்டிலும் காணலாம் -என்கிறார் –
—–
சூரணை -207-
பிராமணியம் விலை செல்லுகிறது-வேதாத்யய நாதி முகத்தாலே–பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –த்யாஜ்யமாம் இறே —
ஆனால் அபிமத வித்யா வ்ருத்தங்களுடைய உத்க்ருஷ்டதையால் வரும் பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்ன –
ப்ராஹ்மண்யம் விலைச் சொல்லுகிறது -இத்யாதியாலே அவை பகவத் ப்ரத்யா சத்தி ஹேதுவாம் என்று இறே உத்தேஸ்யமாவது –
அவை தானே நாஸ ஹேதுவாமாகில் த்யாஜ்யமாம் அத்தனை இறே என்கிறார் –
அதாவது –
உத்க்ருஷ்ட ஜன்மா வாகையால் வருகிற வை லக்ஷண்யம் ஸர்வ ஸாமான்யமாக உத்தேஸ்யமாய்க் கொண்டு போருகிறது
பிரதமத்திலே சாங்கமான வேத அத்யயனம் என்ன -அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிறபடியே -அந்த ஞான அநு ரூபமான நிஷ்டை என்ன –
அவைகளால் -அல்லாதாரைப் பற்ற ஸூ கரமாக பகவத் பிராப்தி ஹேதுவாம் என்று இறே –
அந்த ப்ராஹ்மண்யத்தால் வந்த உத்தேஸ் யதை -தானே பாகவதர் பக்கல் அப க்ருஷ்ட புத்திக்கு ஹேதுவாய் ஸ்வரூபத்தை நசிப்பிக்குமாகில் அது தானும் த்யாஜ்யம் இறே -என்கிறார் –
————-
சூரணை -208-
ஜன்ம விருத்தங்களினுடைய-உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம் –
ஜென்ம வ்ருத்தங்களினுடைய -இத்யாதி -ஆகக் கீழே ப்ரதிபாதிதமான அர்த்தம்
ஜென்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்குப் பிரயோஜகம் அன்று
அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜகம் அன்று –
—————
சூரணை-209–
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்- தத் அசம்பந்தமும் –
இனி -உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு -கார்யகரமாவது
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கையாலே பகவத் சம்பந்த ஞானம் உண்டாகையும்
அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கையாலே நாஸ ஹேதுவாயத் தலைக்கட்டுவதும்
அப் பகவத் ஸம்பந்த ஞானம் இல்லாமையும் என்றதாயிற்று –
——–
சூரணை -210-
பகவத் சம்பந்தம்-உண்டானால்-இரண்டும் ஒக்குமோ என்னில் –
சூரணை -211-
ஒவ்வாது –
பகவத் ஸம்பந்தம் உண்டானால் -இத்யாதி -இப்படி உஜ்ஜீவன ஹேதுவான பகவத் சம்பந்த ஞானம்
கீழ்ச் சொன்ன உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்கள் இருவருக்கும் உண்டானால் தான்
அவை இரண்டு ஜென்மமும் தன்னில் ஒக்குமோ என்று நிரூபித்து -அவ்வளவிலும்
ஒன்றினுடைய தோஷா வஹத்வ புத்யா ஒன்றுக்கு உதகர்ஷம் தோற்றுகையாலலே இரண்டும் ஒவ்வாது -என்கிறார் –
———
சூரணை -212-
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-பிரசம்ச சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –
சூரணை-213-
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –
இதில் இப்படி தோஷா வஹமான ஜென்மம் ஏது -அத்தைப் பற்ற அதிகமான ஜென்மம் ஏது என்ன -உத்க்ருஷ்டமாக பிரமித்த -என்று தொடங்கிச் சொல்லுகிறது
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ப்ரகாசகமான திரு மந்திரத்தில்
ப்ரணவத்தாலே ஆபி ஜாத்யமும் –
நமஸ்ஸாலே வித்யையும்
சரம பதத்தில் சதுர்த் யர்த்தமே வ்ருத்தமும்
தனக்கு நிலை நின்ற அபிஜன வித்யா வருத்தங்களாய் இருக்க
அஸ்த்திரமான தோல் புரையே போம் அபிஜன வித்தா விருத்தங்களாலே தான் உத்க்ருஷ்டனாக பிரமித்த
உத்தம ஜென்மம் யதாவான அபிஜன விருத்தங்களை யுடைய ததீய சேஷத்வ பர்யந்தமான அத்யந்த பாரதந்தர்ய விருத்தமாய்க் கொண்டு
ஸ்வரூப நாஸகம் ஆகையாலே
ஸரீரே மஹத் பயம் வர்த்ததே -என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப விருத்தமான உபாயாந்தர அனுஷ்டான யோக்கியமான உத்க்ருஷ்ட ஜென்மத்தில்
சரீரம் ஸ்வரூப அனுரூபமான பாகவத அனுவர்த்தனத்துக்கும் விரோதியாய் இருக்கையாலும்
மிகவும் பயாவஹமாய் இருந்த உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு
தம் அடியார் அடியோங்கள் -என்கிற நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப அனுரூபமான தாழ்ச்சியை நினைத்த படி வாராமையாலே பாவிக்க வேண்டுகையாலும்
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜென்மம் தோஷாவஹம் என்கிறார் –
———–
சூரணை -214-
அபக்ருஷ்டமாக பிரமித்த-உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-
இனி -அபக்ருஷ்டமாக -இத்யாதி -ஸ்வரூப ஸ்பர்ஸி களாய்க் கொண்டு நிலை நின்ற ஆபி ஜாத்யாதிகளால் அவன் அதிக ஜன்மாவாய் இருக்கக் காண்கிற
சரீரத்தை இட்டு இவன் தன்னை உத்க்ருஷ்டமாக பிரமித்தால் போலே -தான் அபக்ருஷ்டனாக பிரமித்தவனுடைய
உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு பய ஜனகன் என்றும் சோக ஜனகன் என்றும் பாவிக்க வேணும் என்கிற
யுக்தமான உபய தோஷமும் இல்லை –
———
சூரணை -215-
நைச்சயம் ஜன்ம சித்தம்-
நைச்சயம் ஜன்ம சித்தம்–என்கிற இத்தால் ஸ்வரூப அனுரூபமான பாகவத அநு வர்த்தனத்துக்கும்
ஸ்வரூபத்துக்குச் சேராத உபாயந்தரங்களினுடைய அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாமைக்கு
நைச்யம் பாவிக்க வேண்டாத படி -அது அவனுக்கு ஜன்ம ஸித்தம் –
———
சூரணை -216–
ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-
ஆகையால் -இத்யாதி -இப்படி இவனுக்கு இரண்டு தோஷமும் இல்லாமையாலே
வந்தேறியான உத்க்ருஷ்ட ஜென்மமும் இன்றிக்கே
நிலை நின்ற உத்க்ருஷ்ட ஜென்மமே ஸ்ரேஷ்டம் என்று நிச்சயித்து அருளிச் செய்கிறார் –
—————-
சூரணை-217–
ஸ்வசோபி மஹீ பால-
ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்று இவ்வர்த்தத்தில் பிரமாணம்
அவைஷ்ணவோ வேதவித் யோ வேத ஹீநோ ஹி வைஷ்ணவ -ஜ்யாயாம் சம நயோர் வித்தி யஸ்ய பக்திஸ் ஸதா மயி -என்னா நின்றது இறே
————-
சூரணை -218–
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-
நிக்ருஷ்ட ஜென்மத்தால் -இத்யாதி -ஆனால் உத்க்ருஷ்ட ஜன்மாவாக பிரமித்தவனுடைய அபக்ருஷ்ட ஜென்மம்
அடியாக வந்த கீழ் யுக்தமான தோஷங்கள் நிலை நின்றே விடுமத்தனையோ என்ன –
அது போவது உத்க்ருஷ்ட ஜன்மாவாக நிச்சயித்த விலக்ஷணனுடைய அபிமான விசேஷத்தாலே -என்கிறார் –
—————
சூரணை -219–
சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –
ஸம்பந்தத்துக்கு -இத்யாதி -அவர்களுடைய அபிமான அந்தர் பூதனாகைக்கு அதிகாரம் யுண்டாகும் போது
இவன் உத்க்ருஷ்டனாக பிரமித்த வந்தேறியான ஜன்ம வ்ருத்த அபிமான தோஷம் போக வேணும் –
—————–
சூரணை -220–
ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-
ஜன்மத்துக்கு -இத்யாதி -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மத்துக்கு ஆபி ஜாத் யாதிகள் வந்தேறி என்னும் இடத்தையும்
அதுக்குப் பரிஹாரம் அந்த விலக்ஷண அபிமானம் என்னும் இடத்தையும்
பழுதிலா ஒழுகல் -என்ற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் -என்கிறார் –
————–
சூரணை -221–
வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-
வேதகப் பொன் -இத்யாதி -இப்படி அபக்ருஷ்ட ஜன்மாவானவன் -அவ் விலக்ஷண ஸம்பந்த மாத்ரத்தாலே
விலக்ஷணனாகக் கூடுமோ என்னில் –
ரஸ குளிகை யானது விஸஜாதீய த்ரவ்யங்களையும் விலக்ஷண த்ரவ்யம் ஆக்குமா போலே
இவர்களும் நச்சு மா மருந்தான கேவல பகவத் ப்ரபாவம் அடியாக வந்த பாக விசேஷத்தாலே
அவனையும் விலக்ஷணன் ஆக்கக் குறையில்லை -என்கிறார் –
——————-
சூரணை -222–
இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —
இவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படி ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே ஸ்வரூப உஜ்ஜீவனம் உண்டாக்குமவர்கள் பக்கலில்
அவர்கள் பிரதிபத்தி பண்ணும் படி தான் எங்கனே என்ன –
ஸமராகவும் அதிகராகவும் பிரதிபத்தி பண்ண வேணும் -என்கிறார் –
——————-
சூரணை-223–
அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும்
சம்சாரிகளிலும்
தன்னிலும்
ஈச்வரனிலும் அதிகர் என்றும் நினைக்கை-
அதாவது -இத்யாதி -அவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும் -ஆதிக்ய புத்தியும் -நடக்கை யாவது -ப்ரத்யஷிதாத்ம நாதராய் பகவத் அநுபவ ஏக போகராய்
ஸ்ரீ காஞ்சீ பூர்ண ஸத்ருசரான அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் -ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்கிறபடியே
ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே உஜ்ஜீவிப்பிக்கிற -விப்ரஸ் ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிற ஸ்வா சார்ய ஸத்ருசர் என்றும்
அதிகாரம் இடத்தில் ஸ்வ ஜாதி ஸம்பந்த ருசி பின்னாட்டாத படி பரமை காந்திகளான வர்களுடைய ப்ரக்ருதி பந்துக்களான ஸம்ஸாரிகளிலும்
தேஹ யாத்ராபராவஸ் யாதிகளை யுடைய தன்னிலும்
வாய் திறந்து க்ருத்யா க்ருத்யங்களை விதிக்கை முதலானவற்றாலே அர்ச்சாவதார ரூபியான
ஸர்வேஸ்வரனிலும் அவர்கள் அதிகர் என்றும் ஸ்மரிக்கை –
—————–
சூரணை -224-
ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –
ஆச்சார்ய ஸாம்யத்துக்கு -இத்யாதி -ப்ரத்யுபகார விஸத்ருசமாக உபகாரகனான ஆச்சார்யனோடு சம புத்தி பண்ணுகைக்கு அடி
அவன் உபதேச காலத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காண் என்று உபதேசிக்கையாலே -என்கை –
——————–
சூரணை -225-
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –என்றது அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் இவ்வநு ஸந்தான விசேஷங்கள் நடையாடா விடில்
கீழ்ச் சொன்ன பாகவத அபசாரத்திலே இதுவும் ஓன்று என்றதாயிற்று –
——————-
சூரணை -226-
இவ் அர்த்தம்
இதிகாச புராணங்களிலும் –
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் –
நண்ணாத வாள் அவுணரிலும் –
தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –
கீழே விசதமாகச் சொன்ன பாகவத வைபவம் பிரபல ப்ராமண ஸித்தமுமாய்-ப்ராமாணிக வசன ஸித்தமுமாய் இருக்கும் என்னும் இடம்
விசதமாகக் காணலாம் என்கிறார் -இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –என்று தொடங்கி -எங்கனே என்னில்
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
(மத் பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி நகதிஸ் தஸ்ய வித்யதே -என்றும் )
ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம் ததா வீக்ஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -என்றும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா –ஸர்வ வர்ணே ஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்தனே -இத்யாதி களாலே இதிஹாச புராணங்களிலும்
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை -திருவாய் மொழி களிலே -நம்மாழ்வாரும்
கண் சோர வெங்குருதி –
நண்ணாத வாள் அவுணர் -என்கிற திரு மொழிகளிலே திருமங்கை ஆழ்வாரும்
தேட்டரும் திறல் தேன் -என்கிற திருமொழியிலே பெருமாளும்
மேம் பொருளுக்கு மேல் அஞ்சு பாட்டுக்களிலே ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
விஸ்தரித்து அருளிச் செய்கையாலே விசதமாகக் காணலாம் -என்கிறார் –
————–
சூரணை-227-
ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .
ஆனாலும் இப்படி இஜ் ஜென்மம் தன்னிலே இந்த ஹேய ஸரீரத்தோடே இருக்கிறவர்கள் உத்தம ஜென்மாவினுடைய தோஷ நிவ்ருத்தி பூர்வகமாக
அவனை உஜ்ஜீவிக்கும் படி உத்க்ருஷ்டரானவர்கள் என்றால் இது கூடுமோ என்ன
ஒருவனுக்கு வந்தேறியான தொரு உபாதி விசேஷமான தபோ பலத்தாலே ஒரு உத்க்ருஷ்டம் உண்டான படி கண்டால்
நிருபாதிகமான பகவத் சம்பந்தம் அவர்களுக்கு அவ் வுத்கர்ஷத்தைப் பண்ண மாட்டாதோ என்னும் அர்த்தத்தை
ஷத்ரியனான விஸ்வாமித்ரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விஸ்வாமித்ரனுக்கு அடியில் ஷத்ரிய ஜென்மமாய் இருக்க வந்தேறியான தொரு தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷித்வம் ஆகிற
உத் கர்ஷத்தை அடைந்த பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டித்து இல்லை இறே –
————–
சூரணை -228-
ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –
பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்கிறார் –
விபீஷணனை -இத்யாதி -ஸோ பாதிக பந்துவான ராவணன் -விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்னும் படியான
ஸ்ரீ விபீஷணப் பெருமாளை -த்வாம் து திக் குல பாம்ஸநம் -என்று இக்குலத்துக்கு அழுக்காய்ப் பிறந்தாய் நீ போ என்று உபேக்ஷித்தான்
பெருமாள் இத்யாதி -நிருபாதிக பந்துவான பெருமாள் -ந த்ய ஜேயம் கதஞ்சந -என்று இவனை விடில் நாம் உளோம் ஆகோம் -என்று கைக்கொண்டு
ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலா பலம் -என்று தம் பின் பிறந்த இளைய பெருமாளோ பாதியாக இவரையும் நினைத்து
ராக்ஷஸருடைய பலா பலங்கள் இருக்கும் படி சொல்லிக் காணீர் -என்றார் இறே என்கிறார் –
—————–
சூரணை -229-
பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –
பெரிய உடையார் என்று தொடங்கி -இந் நிருபாதிகமான பகவத் ஸம்பந்தமே பிரபலமாய்க் கொண்டு கார்யகரமாவது என்னும் இடத்தைப்
பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார் -எங்கனே என்னில்
சர்வாதிகராய் ஆசார பிரதானரான பெருமாள் திர்யக் ஜாதீயராய் மாம்ஸாசியுமான ஜடாயு மஹா ராஜரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார் -என்றும் –
—————–
சூரணை -230-
தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–
தர்ம தேவதா ஸ்வரூபமான தர்ம புத்திரர் பூஜ்யரான ஸ்ரீ விதுரருடைய ஸம்ஸ்கார சிந்தா வ்யாகுலிதரான தசையிலே
அசரீரி -உமக்கு ப்ரஹ்ம மேத ஸம்ஸ்கார யோக்யர் இவர் என்று சொல்லுகையாலும்
ஸம் ப்ரதி பன்னமான அவருடைய ஞானாதிக்யத்தாலும்
ஹீந ஜன்மாவான அவரை ப்ரஹ்ம மேதத்தால் ஸம்ஸ்காரம் பண்ணினார் என்றும் –
———–
சூரணை-231-
ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –
மஹ ரிஷிகள் தர்ம ஸூஷ்ம விசேஷஞ்ஞன் யாகையாலே தர்ம வ்யாதன் என்று ப்ரசித்தனான வேடனுடைய வாசலிலே
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி யர்த்தமாக வந்து அவன் வேட்டையாடி வரும் அவஸர ப்ரதீ ஷிதராய்க் கொண்டிருந்து
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு போனார்கள் என்றும் –
—————
சூரணை-232-
கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு-ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-
ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளின மத்யாஹன வேளையிலே மீண்டு எழுந்து அருளா நிற்க
பீஷ்ம த்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மது ஸூதந -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி
ஆபி ஜாத்யத்தாலும் -வித்யையிலும் -வ்ருத்தத்திலும் -இவை ஓர் ஒன்றிலே விசேஷித்து துரபிமானம் பண்ணி இருக்கிற
துரியோதனையும் -ஸ்ரீ பீஷ்மரையும் -துரோணாச்சார்யரையும் அதிக்ரமித்துப் போந்து
இத்துரபிமானங்களாலே துஷ்டம் இல்லாத ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
புக்த வத்ஸூ த்வி ஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸனே விதுராந்நாநி புபுஜே ஸூ சீநி குணவந்தி ச -என்று
பக்தி ரசத்தாலும் பாவநாத்வத்தாலும் போக்யத்வங்களோடே கிருஷ்ணன் அமுது செய்தான் என்றும் –
———-
சூரணை -233-
பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –
சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்கிற படியே சக்ரவர்த்தி திரு மகனான பெருமாள்
வேடுவச்சியான ஸ்ரீ சபரி கையாலே திருந்தத் திருவாராதனம் கொண்டு அருளினார் -என்றும்
இப்படி இதிஹாஸ புராண யுக்தங்களான உதாஹரணங்களை அருளிச் செய்து –
——————————-
சூரணை -234-
மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
மேல் -மாறநேர் நம்பி -இத்யாதியாலே
நம் தர்சன ப்ரவர்த்தகரான பாஷ்யகாரருக்கும் -பிரதம ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய அனுஷ்டானத்தையும்
பிரகாசிப்பிக்கிறார் -அதாவது
மாறநேர் நம்பி தம்முடைய அந்திம தசையில் ப்ரக்ருதி பந்துக்களுடைய ஸ்பர்சம் வரில் செய்வது என் என்று அதி சங்கை பண்ணி
ஸ ப்ரஹ்ம சரியான பெரிய நம்பியைப் பார்த்து
ஆளவந்தார் அபிமானித்த சரீரமான பின்பு இப்புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் -என்ன
அவரும் அத்தசையிலே உதவித் தாமே அத்திரு மேனிக்கு வேண்டும் ஸம்ஸ்காரம் எல்லாம் பண்ணித் திரு முடியும் விளக்கி மீள எழுந்து அருளி இருக்க
இச்செய்தியை உடையவர் கேட்டருளி -ஸ்ரீ பாதத்தில் சென்று கண்டு லோக உபக்ரோசம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினால் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆசார ப்ரதாநரான பெருமாள் பெரிய யுடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வைதர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜரும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை களுக்கு நான் பொருள் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார் –
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையாலே நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் இத்தனை
நான் பெருமாளில் அதிகனாய்த் தவிரவோ –
இவர் அப்பஷியில் தண்ணியராய்த் தவிரவோ -என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் -என்று ப்ரஸித்தம் இறே –
————-
சூரணை -235-
ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-
மேல் -ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –என்று
உத்தமமான அனுஷ்டானத்துக்கு விஷய பூதரானவர்களுடைய அவதாரம்
ஸர்வேஸ்வரனுடைய ஸூர நர திர்யக் ஸ்தாவர அவதாரங்கள் போலேயான பின்பு
இவ்வநுஷ்டானங்கள் உண்டானால் லோக கர்ஹை இல்லை என்றும்
இவ்வதிகாரம் இன்றிக்கே ஜகாத் ஸ்ருஷ்டிகளை யுடையவன் பக்கல் விமுகரானவர் பக்கல் யுண்டான
வித்யா வ்ருத்த பாஹுள்யமும் விதவாலங்காரம் போலே என்றும் சொன்ன
ஸ்ரீ ஸூக வாக்கியத்தை -ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-என்று ப்ரசங்கிக்கிறார் –
——————–
சூரணை -236-
பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –
பாகவதன் அன்றிக்கே -இத்யாதி -இப்படி பகவத் சம்பந்தம் அடியாக வந்த வை லக்ஷண்யம் இன்றிக்கே இருக்க
வேத அத்யயனம் என்ன
அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஞான அனுரூபமான அதில் அனுஷ்டானம் என்ன –
இவை இத்தனைக்கும் தாங்கள் நிர்வாஹகராய் இருக்குமவர்
விலக்ஷண போக ஏக தத் பரரானவருக்கு போக உபகரணமான குங்குமப் பாரத்தை பூதி கந்த
தத் பரமான கர்த்தபம் பூர்ணமாக வஹிக்குமோ பாதி என்றும் பிரமாண சித்தம் இறே என்கிறார் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை ப்ராஹ்மண கர்த்தப-என்று
ஸ்ம்ருதி ப்ரஸித்தமாகையாலே
——————
சூரணை-237-
ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –
ஆக நிஹீன ஜன்மாவானவன் இஜ் ஜென்மம் தன்னிலே பகவத் ப்ரத்யாசத்தியாலே இப்படி உத்தேச்யமான அளவே அன்று
அந் நிக்ருஷ்ட ஜென்மம் தன்னை உத்க்ருஷ்ட ஜன்மாக்களானாரும்
ஆசைப்பட்டும்
ஆஸ்தாநம் -பண்ணியும் போரும்படி இறே
அந்த பகவத் ப்ரத்யா சத்தியால் வரும் வை லக்ஷண்யம் என்கிறார் -ராஜாவானவன் என்று தொடங்கி -அவை எங்கனே என்னில்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவர தாம் நர -என்கிறபடியே
பாப பலமாய் வரும் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை த்வதீய வர்ணரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –என்றும்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –என்றும்
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –என்றும்
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்றும்
இத்யாதிகளாலே ஆசைப்பட்டார் –
—————–
சூரணை -238-
ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்- கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –
பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்
ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே-
பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்
ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே
——————-
சூரணை -239-
கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –
கந்தல் கழிந்தால் -இத்யாதி -இத்தால் கீழ்ச் சொல்லிக் கொடு போந்த உத்கர்ஷ அபகர்ஷ வைஷம்யம் தான்
இவர்களுடைய கர்ம தாரதம்யத்தால் வந்த சரீர வைசிஷ்டியிலே வருமவை யாகையாலே
அக் கந்தல் கழிந்த நிஷ்க்ருஷ்ட வேஷத்தைப் பார்த்தால் ஸகல ஆத்மாக்களுக்கும் அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே
அவனுக்கு அத்யந்த அபிமதையான பிராட்டி தசை பிறக்கக் காட்டுவதாய் இருக்கும் -என்கிறார் –
—————–
சூரணை -240-
ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –
ஆறு பிரகாரத்தாலே இத்யாதி -ஈஸ்வரீம் ஸர்வ பூதா நாம் -என்கிறவளுடைய அவஸ்த்தை இவர்களுக்கு வருகையாவது என் என்ன
பரி ஸூத்தமான நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஞான ஆனந்தங்களும்
சேஷத்வ பாரதந்தர்யங்களும்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையுமாகிற
அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே
அவளோடே ஸர்வ ஸாம்யம் இல்லையே யாகிலும் இவ்வாறு பிரகாரத்தாலே தத் ஸாம்யம் உண்டு என்கிறார் –
ஆனால் இவளுக்கு இவற்றில் அதிகமான பிரகாரங்கள் எவை என்னில்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ ஸம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூர கத்வம் –முதலானவை இறே –
————-
சூரணை -241-
த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –
ஆக -கீழே -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கிச் சொன்ன அஹம் மமதைகளையும்
அவ் வஹம் மமதா கார்யமான பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்ய ப்ரதிபாதன அர்த்தமாக ப்ரஸ்துதமான
பாகவத வைபவத்துக்கு மூலமான பகவத் சம்பந்த யாதாத்ம்யத்தையும் -த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் அஹங்காரத்தாலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது -குக்ராம நியாமகனைத் தொடங்கி ஸர்வ நிர்வாஹகரான பிரம்மா அளவாக
அஹங்கார மமகாரங்களினுடைய அதிசயம் எவ்வளவு உண்டு அவ்வளவும் த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாய் இருக்கும் என்றும்
பகவத் சம்பந்தம் அடியாக உத்தேஸ்யமான பாகவத விஷயத்தில் எத்தனையேனும் ஜென்ம ஞான வ்ருத்தங்களால் குறைய நின்றவர்கள் பக்கலிலும்
அவ் வஹங்கார மமகார ராஹித்யத்தாலே அத்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாம் என்றும் நிகமிக்கிறார் –
—————-
சூரணை -242-
ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –
இவ் வஹங்காரம் உண்டானதாலும் இல்லை யானதாலும் வரும் பிரயோஜனம் ஏது என்னச் சொல்லுகிறது -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் -இத்யாதி
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வஹங்காரத்தில் அதிகனான பிரம்மாவாய் -த்வி பரார்த்த அவசானே மாம் ப்ராப்தும் அர்ஹஸி பத்ம ஜ -என்று
இவ்வஹம் மமதை உள்ள அளவும் ஈஸ்வரனாய் இழந்து போதல்
ஜென்ம ஞான வ்ருத்தங்களால் அவ்வஹங்கார ரஹிதை யான சிந்தயந்தி யாகிற இடைச்சியாய் அவனை லாபித்துக் கொள்ளுதல்
செய்யும் படியாய் இருக்கும் -என்று –
———————-
சூரணை-243-
இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-
இவ்வளவாக -தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கின நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்தார் –
இனி ஸ்வரூப அனுரூபமாக சோதிதமான உபாய உபேயங்களில் நிஷ்ணாதரான அதிகாரிகளுடைய அனுசந்தான பிரகார விசேஷங்களை
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வரூப தசையோடு
உபாய தசையோடு
புருஷகார தசையோடு
வாசியற ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்வரூப நாசகமாகச் சொன்ன அஹங்காரத்துக்கும் அது அடியாக வரும் மமக விஷயமான
இஸ் ஸப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கும் ஜென்ம பூமி சரீர விசிஷ்டனான தானாகையாலே அந்த சரீர விசிஷ்டமான ஸ்வ விஷய ஞானம் பிறந்தால்
தன்னை ஸ்வ அநர்த்த கரரான சத்ருக்களைக் கண்டால் போலேயும்
அவ்வஹங்கார மமகாரங்களை அதிசயிப்பிக்கிற ஸம்ஸாரிகளை அனுசந்தித்தால் அணுகில் அள்ளிக் கொள்ளும் என்று அஞ்ச வேண்டும்படியான ஸர்ப்பத்தைக் கண்டால் போலேயும்
மத்யம பத நிஷ்டராகையாலே அவ்வஹம் மமதா நிவர்த்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்தித்தால் தன்னுடைய அர்த்த ப்ராமண அபிமானங்களுக்கு அபிமானிகளான ப்ராண பந்துக்களைக் கண்டால் போலேயும்
ஸர்வ பிரகார ரக்ஷகனாய் நிருபாதிக சேஷியான ஈஸ்வரனை அனுசந்தித்தால் தன்னுடைய அநவதானத்தாலே வரும் அக்ருத்யங்களை அறிந்து
ஹித பரனாகையாலே ஸிஷித்துக் கொண்டு போரும் பிதாவைக் கண்டால் போலேயும்
ஸ்வரூப உத்பாதகனுமாய் -ஸ்வரூப வர்த்தகனுமாய்த் தன்னை ஆதரித்தார்க்கு எல்லாம் சத்தையை நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்ய விஷயத்தை அனுசந்தித்தால் பெறில் தரித்தல் பெறா விடில் முடியும்படியான பெரும் பசியனானவன்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே -இத்யாதிகளில் படியே ஸர்வ ஒவ்ஷதமான அன்னத்தைக் கண்டால் போலே அபி நிவிஷ்டனாய் இருக்கை –
அதாவது –
ஆச்சார்ய சங்கம்
ஆச்சார்ய விக்ரஹ சங்கம்
ஆச்சார்ய கைங்கர்ய சங்கம்
ஆச்சார்யனுடைய வார்த்தையிலே இன்ன இடத்திலே இன்னபடி அருளிச் செய்தான்
என்று இருக்கும் அதிசங்கம் யுடையவனாகை –
அத்யந்த பாரதந்தர்யத்தையே வடிவாக யுடையராய் அத ஏவ அபிமத ரூபமான சிஷ்யர்களைக் கண்டால்
அவர்களுக்கு சேஷத்வமாகிற சட்டையை இட்டு ஆத்ம குணங்களாகிற ஆபரணங்களை பூட்டி பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் அபிமான
அந்தர்ப்பூதனாக்குகை ஆகிற அந்தப்புரத்தில் வைத்து
தேவதாந்தர ப்ரயோஜனாந்தர நிவ்ருத்தி சாதனாந்தர நிவ்ருத்தி முதலான கல் மதிளை இட்டு வைத்து ரஷிக்கையாலே அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து என்கிறது –
மண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றம்பாலை இட்டுத் தேற்றி -அது தெளித்தால் பாத்ராந்தத்திலே சேர்க்கும் தனையும்
காற்று அடிக்கில் கலங்கும் என்று நோக்குவாரைப் போலே ஞான அஞ்ஞான மிஸ்ரமான தேஹத்திலே இருக்கிற ஆத்மாவைத்
திருமந்திரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்றி -அப்ராக்ருதமான தேஹாந்தரத்திலே வர்த்தித்த போது காண்
ஸ்வரூப சித்தி உள்ளது என்றார் இறே ஆச்சான் பிள்ளையும்
இனி அஹங்கார -அர்த்த காமங்கள் மூன்றும் -என்று தொடங்கி
அஹங்காரமானது அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே பிரயோஜனம் கொள்ள வேணும் என்னும் ருசியைப் பிறப்பிக்கையாலே
அவர்கள் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்கும் என்றும்
அர்த்த ஸ்ரத்தை யானது பிரதிகூலரான சம்சாரிகள் பக்கலிலே ப்ராவண்யத்தை விளைக்கும் என்றும்
காம ஸ்ரத்தை யானது -ஈஸி போமின் -என்று உபேக்ஷிக்கும் விஷயங்களிலே -பல்லே ழையர் தாம் இழிப்பச் செல்வர் -என்னும்படியான அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்றும்
அடைவே இவற்றுக்கு அஞ்சி -சம தம நியதாத்மா -இத்யாதியாலே சொல்லப்படுகிற ஆத்ம குணங்கள்
அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கே வழி பார்த்துப் போந்த நம்மாலும் –
இஸ் ஸம்ஸார வர்த்தகராயப் போந்த பிறராலும் உண்டாக்கிக் கொள்ள ஒண்ணாது
ஸப்த பூருஷ விஜ்ஜேயே சந்தத ஏகாந்த்ய நிர்மலே குலே ஜாதோ குணைர் யுக்தோ விப்ர ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிறபடியே
விலக்ஷண அதிகாரியாய் -ஆத்ம குணங்களால் பரிபூர்ணனாய் -பரம கிருபாவானான ஸதாசார்ய அங்கீ காரம் அடியான
பகவத் கடாக்ஷத்தாலே பிறக்கும் என்று அத்யவசித்து
அது எங்கனே என்னில்
அபிஷிக்த க்ஷத்ரியர்அதிக குல அபிமானத்தாலே பிறந்த கன்யகைக்குப் பிறந்த வன்றே தொடங்கி அறைப்பத்திட்டு அங்க மணி செய்து அது பக்வமானவாறே
அவஸர ப்ரதீஷனாய்க் கொண்டு அங்கீ கரிக்குமா போலே ஸதாச்சார்ய அபிமானம் அடியான பகவத் ப்ரஸாதத்தாலே ஆத்ம குணங்கள் யுண்டாய்
அங்கீ க்ருதனாம் என்றபடி –
ஆக -தன்னைக் கண்டால் என்று தொடங்கி -இவ்வளவும் வர -இவ்வதிகாரியுடைய அனுசந்தான பிரகாரங்களை சொல்லி
மேல் தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -என்று தொடங்கி -மங்களா ஸாஸனம் அளவும்
இவனுடைய திநசர்யை இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –
அதில் கர்ம ஆரப்தமான தேஹ யாத்ரை கர்ம அனுரூபமாக ஸ்வயமேவ வருகையாலே
யோ மே கர்ப்ப கதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவான் ப்ரபு –
சேஷ வ்ருத்தி விதாநே ஹி கிம் ஸூப்தஸ் ஸோதவா கத -என்று அதில் தனக்கு உபேக்ஷையும்
சேஷத்வ ஸ்வரூபமான ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே அபேக்ஷையும்
அக் கைங்கர்ய ஏக போகனான தனக்கு ஹேயமான பிராகிருத வஸ்துக்களில் வாசனையால் வரும் போக்யதா புத்தியால்
பஞ்ச பூதாத்ம கைர் த்ரவ்யை பஞ்ச பூதாத்மகம் வபுஸ் ஆப்யாயதே யதி தத பும்சோ போகோத்ர கிம் குத -என்று நிவ்ருத்தனாகையும்
இனி -ஆமின் சுவை யவை ஆறோடு அடிசிலை -அத்ய சனமாம் படி புஜித்துக் கிடந்து புரளாதே தேகம் தரித்து இருக்கைக்கு வேண்டும் அளவே
பரமாத்ம ஸமாராதனத்தினுடைய பூர்த்தி ரூபமான ப்ரஸாத ப்ரதிபத்தி பண்ணும் இடத்தில் பதி விரதைக்கு பர்த்துர் உச்சிஷ்ட போஜனம்
பாதி வ்ரத்ய ஹேதுவாமோ பாதி ஸ்வரூப அனுரூபம் என்கிற புத்தியாலே தேஹ தாரணம் பண்ணுகையும்
ஏவம் வித அனுஷ்டானங்களை யுடைய தனக்கு ப்ராரப்த சரீரம் அடியாகச் சில துக்க அனுபவம் உண்டானால்
இச்சரீரத்தோடே அநுபாவ்யமாம் அவற்றில் அச்சுமை கழிந்தது இறே என்று ப்ரீதனாதல்
அன்றிக்கே
ஹரீர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும்
யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்கிறபடியே
சரீர க்ரந்தியால் வருகிற துக்கம் மீளவும் கர்ஹியாத படி பண்ணுகிற பகவத் கிருபையினுடைய பலம் என்றாதல்
அகிலேசத்தில் உண்டாம் உகப்பும் ஏவம் விதமான தன்னுடைய அனுஷ்டானங்களைத் தன் பேற்றுக்குக் கைம்முதலாக நினையாது ஒழிகை யும்
இவற்றை கேவலம் உபேய தயா அனுஷ்டித்துப் போருகிற விலக்ஷணரான பூர்வர்களுடைய ஞான அனுஷ்டானங்கள் நமக்கு உண்டாக வேணும் என்கிற ஆசையும்
ந கந்தைர் ந அநு லேபைஸ் ச நைவ புஷ்பைர் மநோ ஹரை ஸாந்நித்யம் குருதே தத்ர யத்ர சந்தி ந வைஷ்ணவா -என்கையாலே
விலக்ஷணரான ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு ஆதரணீய ஸ்தலம் என்று ஸர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களில் நித்ய வாஸ நித்ய கைங்கர்யம் தொடக்கமான வற்றில் அத்யந்த ஆதரமும்
அத் தேச விசேஷங்களிலே உகந்து அருளின அர்ச்சாவதார வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு -இத்யாதியில் படியே
வெளி விழுங்குகிறதோ என்று நித்ய ஸூரிகளும் அஞ்சி அனுபவிக்கும் படியான விலக்ஷண விஷயம் இந் நிலத்திலே நிரந்தர வாஸம் பண்ணுவதே
என்று இவ்விஷயத்தில் பரிவாலே வரும் மங்களா ஸாஸனமும்
அவ்விலக்ஷண விஷய வியதிரிக்தங்களான ஸப்தாதி விஷயங்களில்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -என்கிற அருசியும்
இப்படியே இவற்றில் அருசி உண்டானாலும் –
பா மாரு மூவுலகில் படியே இருந்ததின் நடுவு நின்றும் அக்கரைப் படப்பெறாத ஆர்த்தியும்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -இத்யாதியில் படியே பகவத் பாகவத வ்யதிரிக்த விஷயங்களில் த்ரி கரண வ்யபிசாரமும் வாராத படியான அநு வர்த்தன நியதியும்
யுக்தமான
அனுசந்தான
அனுஷ்டான
அநு ரூப
ஞான ஹேதுவுமாய்
ஸாஸ்த்ர அவிருத்தமுமாய்
ததீய அபிமான அந்தர் கதமுமான ஆகாரத்தில் நியதியும்
அவ்வாஹார நியதி முதலானவற்றிலே நிரதரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசமாகிற அநுகூல ஸஹ வாஸமும்
அவ்வனுகூல ஸஹ வாஸத்துக்கு எதிர் தட்டாய்
ந சவுரி சிந்தா திமுக ஜன ஸம் வாஸ வைச ஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதிதி -என்கிறபடியே
ஹுத வஹ ஜ்வாலா பஞ்சர வாஸமே ஸ்ரேஷ்டம் என்னும்படி கொடியராய் பகவத் விமுகரான பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும்
இப்படி இவை இத்தனையும்
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களுக்கு அடியான அந்த ஸதாசார்யருடைய ப்ரஸாதத்தாலே அபி வ்ருத்தமாம் படி
அனுஷ்டித்துக் கொண்டு வர்த்திக்கக் கடவன் -என்று
இவ் வதிகாரிக்குக் கர்தவ்யமான தின சரிதத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-