ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்–

உண்டோ வைகாசி விகாசத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் –

இன்று முதல் ஸ்ரீநம்மாழ்வார்
திரு அவதார உத்சவம்🙏

இன்று முதல்
ஸ்ரீ பார்த்தசாரதி வசந்த உத்சவம்

ஏழு நாள்கள் உத்சவம்
கடைசி நாளில் வாஸூ தேவ புரம் எழுந்து அருளுகிறார் 🙏

———-

ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்

திரு முளைச் சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து
மாலை விருச்சிக லக்கினத்தில் 4.30-மணிக்கு மேல் 5-30-மணிக்குள் தேங்காய் சாற்றுதல்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் தங்க தோளுக்கு இனியான் –

முதல் உத்சவம் –
காலை 7.00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் துவஜாரோஹணம்
ஸ்ரீ அஹோபில மடத்தில் விடாயாற்று மண்டகப்படியும்
ஸ்ரீ திருக்குறுங்குடி மடத்தில் மண்டகப்படி -திரு மஞ்சனம் கோஷ்ட்டி

மாலை 6-00 மணிக்கு இந்திர விமானம்
உபாயம் -ஸ்ரீ அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

இரண்டாம் உத்சவம் –
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
மாலை 6.00 மணிக்கு புஷ்ப்ப பல்லாக்கு
அலங்கார உபாயம் -ஸ்ரீ மத் ஆத்தான் வடக்கு திருமாளிகை ஆதீன சிஷ்யர்
திரு விழா உபயம் -திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

மூன்றாம் உத்சவம்
காலை 6-30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ வான மா மலை மடத்தில் விடாயாற்று
கிளி குறட்டில் திரு மஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணி புன்னை மர வாஹனம்

நான்காம் உத்சவம்
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
கிளி குறட்டில் திரு மஞ்சனம்
மாலை 6.00 மணிக்கு -தங்கத் திருப்புளி வாஹனம்
உபயம் -ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

ஐந்தாம் திரு நாள்
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் மங்களா ஸாஸனம் -பூப்பந்தல் மண்டபம்
ஸ்ரீ நவ திருப்பதி எம்பெருமான்கள்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ உத்திராதி மண்டபத்தில் விடாயாற்று பந்தல் மண்டபக் குறட்டில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
இரவு ஒன்பது கருட ஸேவை
ஸ்ரீ கள்ளபிரான்
ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
ஸ்ரீ அரவிந்த லோசனன்-ஸ்ரீ தேவர் பிரான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
ஸ்ரீ எம் இடர் கடிவான்
ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம்

ஆறாம் நாள்
மாலை தண்டியலில் திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ பராங்குச மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை 6.30 மணிக்கு திருவீதிப்புறப்பாடி
ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் எழுந்து அருளி
சேர்த்தி திருமஞ்சனம்
மாலை திரு வீதிப்புறப்பாடு -வெள்ளி சந்த்ர பிரபை
உபயம் -ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ ஆதி நாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா

எட்டாம் நாள்
காலை 7.00 மணிக்கு ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு எழுந்து அருளி
மாலை ஸ்ரீ தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்
இரவு கோயிலுக்கு எழுந்து அருளுதல்
8.00 மணிக்கு குதிரை வாஹனம்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

ஒன்பதாம் நாள்
ஸ்ரீ கோரதம் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருளி மங்களா சாசனம் கோஷ்ட்டி
உபயம்-ஸ்ரீ ஆத்தான் கீழத் திரு மாளிகை ஸ்வாமிகள்
மாலை 45.00 மணிக்கு உத்திராதி மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்

பத்தாம் நாள் -ஸ்ரீ திரு விசாகம் ஸ்ரீ திரு நக்ஷத்ர திரு நாள்
காலை மாட வீதிப்புறப்பாடு
ஸ்ரீ சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம்
ஸ்ரீ தாமிர பரணி நதியில் தீர்த்த வாரி
சந்நிதிக்கு எழுந்து அருளி அட்ச்சதை ஆசீர்வாதம்
பெரிய சந்நிதிக்கு எழுந்து அருளி கோஷ்ட்டி தீர்த்த விநியோகம்
மாலை 6.00 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் -வெள்ளி தோளுக்கு இனியான்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ உடையவர் கோஷ்ட்டியுடன்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

அடுத்து ஐந்து நாள்கள் விடாயாற்று உத்சவம்
அதில் முதல் நாள் ஸ்ரீ மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி கந்தப்பொடி உத்சவம் -திருமஞ்சனம் -கோஷ்ட்டி –
நான்காம் நாள் -ஸ்ரீ அஹோபில மேடம்
ஐந்தாம் நாள் -ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமம்

————-

நம்மாழ்வார் வைபவம்.
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ——பெரியமுதலியார்🙏

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||🙏

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு

அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது ..
(கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை.

இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி *என்றார் ஆழ்வாரும்.

இனி *
கோதிலவாம்…. என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. . .🙏🙏🙏🙏

———–

பெருமாள் திருமொழி…

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி Object
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே.. 🙏

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை புல் பூண்டு முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்அளித்தனர். .🙏🙏


நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபூதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.

இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🙏🙏🙏


இரண்டாம்-பத்து…..

கீழ்த்
திருவாய் மொழியில்..

நிஷ்கர்ஷிக்கப் பெற்ற பேற்றை பெறுவதற்கு திருமால் இரும் சோலையை ஆஸ்ரயிக்கிறார்
என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
அத்தை எம்பெருமானார் மேலும் இனிமை படுத்தி -அருளிச் செய்வர்
கீழ் ஒல்லை ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று பகவத் கைங்கர்யத்தில் தமக்கு உண்டான பதற்றத்தை வெளியிட்டு அருள
அத்தைக் கண்ட எம்பெருமான் இவள் இந்த சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய துடிக்கிறார் என்று எண்ணி
அதற்கு ஏகாந்தமான ஸ்தலம் இந்நிலத்தில் ஏது என்று கடாஷித்து வருகையில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை யைக் கண்டு
ஆழ்வீர் உமக்கு முகம் தருகைக்கு இங்கே வந்து நின்றோம்
நீர் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கலாம் –
என்று தென் திருமலையைக் காட்டிக் கொடுத்து அருள
ஆழ்வாரும் அதை அனுசந்தித்து
எம்பெருமான் உபேயன் ஆனால் அவன் எழுந்து அருளி இருக்கும் இடமும் உபேயம் தானே
ஆகவே திருமலையோடு
அதனோடு சேர்ந்த தொரு மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போவோம்என்கிற அத்யாவசாயத்தோடு*
வாசி அற நமக்குஎல்லாம் பிராப்யமே -என்று கொண்டு அனுபவித்து இனியர் ஆகிறார் …..
என்று காட்டி அருளினார்…

வாயும் திரையுகளும்….
க்ஷணம் காலம் விச்லேஷம் பொறுக்க முடியாதவன் …

திண்ணன் வீடு..
மனுஷ்ய சஜாதீயனாய் திருவவதரிக்கச் செய்தே பரத்வம் பொழிய நிற்பவன்…

ஊனில்வாழ்உயிர்
மதுர பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்தால் போல் போக்யன்….

ஆடி ஆடி அகங்குழைந்து…

ஆஸ்ரிதர்களின் துயர் தீர்க்கும் தன்மையன்…

அந்தாமத்தன்பு…
ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அத்தாலே ப்ரீதன் ஆனவன்….

வைகுந்தா…..
ஆஸ்ரிதர்கள் நம்மை விட்டால் ஏன் செய்வோம் அதி சங்கை தீர்த்தது…

கேசவன் தமர்….
ஆஸ்ரிதர் உடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் விஷயீ காரம் உண்டே…

அணைவது அரவணை மேல்…
மோஷம் அளிப்பவன்

எம்மா வீடு…
கைங்கர்ய பிரதிசம்பந்தி என்றது….
கிளரொளிஇளமை..
அழகிய திருப்பதியை உடையவன்….. …..
என்று அருளிச் செய்கிறார்….

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி) 🙏🙏🙏🙏


மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி –

முடிச்சோதியாய்….

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன் என்று
அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை என்றார் ….
கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற –படியைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி,
விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி *யாங்காண
வல்லமே யல்லமே*
மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

ஸ்வரூப அனுபந்தியாய் – -ஸம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
வடமாமலையுச்சியை*’ என்னுமாறு போன்று, திருமலையில்-
(ஏக தேசம் )– ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸௌந்தர்யத்தை – அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று –
ஜென்ம வ்ருத்தாதிகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –ஈடு..


ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கட்கும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, ஸ்ருதி ஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்….🙏

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்…

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள்,

ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை.

இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார்

இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார்.

அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம்.

அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை.

(கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு* எனப் படுகிறது.

புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் வைபவம்……. 🙏

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள் அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே,
மாற்றங்களாய்ந்து கொண்டு(6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் என்கிறார். அதாவதுதிருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள்

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்று * பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழர் இசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”

இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய்* இருக்கும்.

இதனை ஆழ்வார் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்….

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும் மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும் வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தெனா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே. (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி
🙏🙏🙏🙏
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-
ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
*அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண* லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த குழாங்களைக் கண்டு காப்பிட்டு.–நாயனார் –

————

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம்.

உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் ….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில்* அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா* என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கண்வளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
🙏🙏🙏🙏
வைகல் பூங்கழிவாய்………

.ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய்-வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ– பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
*மறப்பித்த
க்ஷமா தீக்ஷா ஸாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்*
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்–

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் உத்சவம்-7………………

.உண்ணிலாவிய ஐவரால்………….

ஸ்ரீ கீதாசார்யன்…….

தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்…..
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி……..– –
முனிவர்கள் கூடி யதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தித் துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்-என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே-யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்,
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே…
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே.
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்..
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்து நோவு படுவதைக் கண்டார்.
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-
[

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –


ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம் இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள்* தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் *எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்*
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)-என்று ஸங்க்ரஹித்தார்.

இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி….

இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள்.

* ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * ….

இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய்,

இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

*புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம்* வகுளதரதாமேத்ய ஸ புந: |
*உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||*

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார் …..

ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை
ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம்
விம்ஶதிர் வக்தி ஸாக்ரா ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள் அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது….


திருவாய்மொழி எட்டாம் பத்து…….
அடியேனுள்ளான் உடலுள்ளான்……

ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?

இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.

ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், அடியேனுள்ளான் உடனுள்ளான் என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்

ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் அடியேன் என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.

திரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்… 🙏🙏
[4:21 PM, 6/10/2022] +91 72995 10125: பாகவதசேஷத்வம்
அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார் ‘அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும்’ என்று!. பட்டர் ‘நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். மேலும், ”எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும்’ என்று பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.
ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!
ஆலம் விதையில் ஆலமரம் போலவும், ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும் பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின் (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன.🙏🙏
நெடுமாற்கடிமை…….. ……
பகவத் கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை நெடுமாற்க்கடிமை (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
தனிமாத் தெய்வமான எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள்
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)
அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)
கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.🙏🙏🙏🙏


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே P.B.A- ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: