வேதாதிகளிலே பவ்ருக்ஷ மானவ கீதா வைஷ்ணவங்கள் போலே திருவாய் மொழியும் அருளிச் செயல்களின் சாரம் -நாயனார்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ திருவாய் மொழிக்கு ஒப்பு –
ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போரும் உண்டாய்த்து -அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியில்லை -ஈட்டு ஸ்ரீ ஸூக்தி
பெருமான் அடி சேர் வகுளாபரணன் ஓர் ஆயிர மறையின் தமிழில் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே
‘குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் -திருக்குறள்
எங்கள் தென்குருகூர்ப் புனிதன் கவி ஓர் பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே -கம்பர்
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே
ஆடியாடி -2-4- அவதாரிகையில்
காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் ரத்னத்தை இழந்தவனுக்கும் துக்கம் ஒத்து இராது இறே -நம்பிள்ளை ப்ரஸாதித்து அருளிய சீரிய அர்த்தமாகும்
காசு -விபவ அவதாரம்
பொன் -அர்ச்சாவதாரம்
மணியாவது -விபவ அவதாரத்தையும் -தத் பிரதிநிதியான அர்ச்சாவதாரத்தையும் அனுபவிக்கும் பாகவதர்கள் –
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி–7-10-4-
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–ஸ்ரீ திருவாய் மொழி–5-8-9-
ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே இவ்விஷயம் அறியலாமே-
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-
பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் -என்று விபவ அவதாரமான ஸ்ரீ த்ரிவிக்ரமனை அனுபவிக்க ஆசைப்பட்டார்
அது கழிந்த கால வ்ருத்தாந்தம் -அவ்வனுபவம் கிடைக்காமை யாலே துக்கம் தலை எடுத்து நாயகா பாவம் தலை எடுத்து
அஞ்சிறைய மட நாராயில் பக்ஷிகளைத் தூது விட்டார்
நாரை போன்ற பதார்த்தங்களும் பெருமானை விட்டுப் பிரிந்து
தம்மைப் போலவே நோவுபடுகின்றனவாகக் கொண்டு அவற்றுக்குமாகத் தான் நோவு படுகிறார் வாயும் திரை யுகளிலே
இது அர்ச்சாவதார அனுபவ அலாபத்தால் வந்த கிலேசம்
ஆய அறியாதவற்றோடு அணைந்து அழுத மாறன் -காற்றும் கழியும் கட்டி அழுதார் –
ஊனில் வாழ் உயிரே நல்ல போ -என்னம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் என்று
பகவத் பரிபூர்ண அனுபவம் பெற்று எல்லை நிலமான பாகவத அனுபவத்தை
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ஆசைப்பட்டார்
நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக அனுபவிளக்கப் பெறுவது தேசாந்தத்தில் காலாந்தரத்தில் தானே
ஆகவே கிலேசம் மிக்கு அருளிச் செய்கிறார்
முதலில் அஞ்சிறைய மட நாராயில் தூது விட ஷமரானார்
அடுத்து வாயும் திரை யுகளிலே அவற்றுக்குமாகத் தான் அழுதார்
இதில் தானாகப் பேச மாட்டாமல் தாய் பாசுரமாகச் செல்லுகிறது-
இப்படி மூன்று இடங்களிலே துக்க தாரதம்யம் -இதுக்கு அடி இழந்த வஸ்துக்களின் தாரதம்யம் இறே
காசும் பொன்னும் இரண்டும் ஒன்றேயாயினும் உத்கர்ஷ அபகர்ஷ ஹேதுவான மாற்றில் தாரதம்யம் உண்டு –
காசு அல்ப காலீனத் வத்தைப் பற்றியதாம் -விபவம் காதாசித்கம்-
அர்ச்சாவதாரம் ஸர்வ காலீனம் இறே -ஸர்வருக்கும் ஸர்வதா முகம் கொடுக்கும் இடம் இறே –
செழு மா மணிகள் ஆகிறார் திரு மழிசைப் பிரான் போல்வார் -பெருமான் தனக்கும் பிராண பூதர் இறே -நித்ய ஸூ ரிகள் –
பிராண பூதர் என்றது
ஞானீது ஆத்மைவ -என்றும்
அறிவார் உயிரானார் -6-9-8- என்றதை பற்ற இறே
என்னது உன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும் –
பாகவத அனுபவம் பரம ஸ்ரேஷ்டமாய் ஸீமா பூமியாய் இருக்கும் என்று நாம் அறிந்தோம் –
பயிலும் சுடர் ஒளி -ஜீவாத்ம ஸ்வரூப பரம்
நெடுமாற்கு அடிமை -ப்ராப்ய பரம்
இரண்டு திருவாய் மொழிகளும் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீத அர்த்த ப்ரதிபாதகமாய்க் கொண்டு சரம பர்வ நிஷ்டரானது
ஆக பாகவத அனுபவமே பரமப்ராப்யம் என்றபடி –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply