Archive for June, 2022

ஸ்ரீ பத்ரி விஷால் மஹாத்ம்யம் –

June 30, 2022

உத்தராகண்ட் ராஜ்யத்தில் – எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில் – நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் – மேலும் கேதார்நாத் மலைச் சிகரங்களின் மத்தியில், கேதார்நாத் ஆகிய இரண்டு தீர்த்த ஸ்தானங்களும் / புண்ய க்ஷேத்ரங்களும், வெகுகாலமாக கடவுள் பற்றுள்ள பக்தர்களை கவர்ந்து வருகிறது.

மூலவர் -ஸ்ரீ பத்ரி நாராயணன்
தாயார் -ஸ்ரீ அரவிந்த லஷ்மீ -ஸ்ரீ மஹா லஷ்மீ
தல வ்ருக்ஷம் -பத்ரி -இலந்தை மரம்
தீர்த்தம் -தப்த குண்டம்
விமானம் -தப்த காஞ்சன விமானம்
மாநிலம் -உத்தராஞ்சல்

இலந்தை மரமே ஸ்ரீ லஷ்மி -ஆச்சார்யர் சிஷ்யர் இருப்பை நாட்டார் அறிகைக்காக நர நாராயணன் –

12 வருஷங்கள் மாறி மாறி தவம் புரிந்து டம்பாசூரன் சஹஸ்ர கவசங்களை யுடைக்க –
ஒரு கவசம் இருக்க ஓட-புறமுதுகு இட்டு ஓட அடிக்க கூடாதே –
சூர்யன் இடம் அடைக்கலம் புக-பாத்ம புராணம் -நாராயணீய ஸ்லோகம் சொல்லும்
த்வாபர யுகம் குந்தீ தேவி பிரார்த்தனை -அவனே கர்ணன் -சூர்யன் குந்தி மகன் -கவச குண்டலத்துடன் –
அவனை அழிக்க நாராயணன் கண்ணனாக அவதாரம்

மங்களா சாசனம் -ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்-

இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை சிருஷ்டித்து தானே ஆதி குருவாக தோன்றி மக்களை உய்விக்கும் பொருட்டு, நரநாராயணனாக இமாலயத்தில் திருஅவதாரம் எடுத்து தவக்கோலம் பூண்டார். அது சமயம், லட்சுமி தேவியானவள் பத்ரி (இலந்தை மரம்) – யாக உருவெடுத்து மகா விஷ்ணுவிற்கு நிழல் கொடுத்து நின்று அவருடைய தவம் பூர்த்தியடைய உதவி செய்தாள். இதன் காரணமாகவே இவ்விடத்திற்கு பத்ரிகாஸ்ரமம் என்ற பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணன் தவம் பூர்த்தியான பின் மனிதனுக்கு முதலில் இங்கு தான் தாரக மந்திரரோபதேசம் செய்ததாக கூறுவர். உலகில் தோன்றிய ஞானம் அனைத்திற்கும் ஆரம்ப இடம் இதுவே.

மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள இறைவன் குபேரனை அழைத்து மிக ஆடம்பரமான முறையில் திருமணம் ஏற்பாட்டை செய்த தலம் இது என்றும் கூறப்படுவதுண்டு.

ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி (முதல் யுகம்) சத்ய யுகத்தின் ஆரம்ப காலத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு தனது திவ்ய தரிசனத்தை சுலபமாக்கி அனுக்கிரகிக்க, பத்ரிநாத் / பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட் – சமோலி மாவட்டம்) அர்ச்சாரூபமாக எழுந் தருளியுள்ளார். பத்ரி நாத் க்ஷேத்ரம் – ரிஷீகேசிலிருந்து 300கி.மீ.(பஸ் மார்க்கத்தில்) உள்ளது. உயரம் 10,350அடி.

இமாலய மலைப்பகுதியான கந்தமாதன மலையின் மத்தியில், அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. குளுமை மிக்க அழகான கந்தமாதன மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம் (மலை) என்றும் விளங்குகிறது. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும், எதிரே நாராயண மலையும், வலப்புறத்தில் நீலகண்ட மலையும் உள்ளன

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் கண்ணன், பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி தனது அன்பான தோழன் உத்தவரை அங்கு சென்று, தனது தலைசிறந்த திருவடி தீர்த்தமான அலக்நந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய உபதேசித்தார்.

இங்கு பகவான் (கோயில்), பாகவத புருஷர்கள், புண்ய தீர்த்தம் ஆகிய எல்லா மகிமைகளும் போற்றப்படுகின்றன.

உத்தராஞ்சல் மாவட்ட மலைச்சிகரங்களில் உற்பத்தியாகும் ஆறுகள், அருவிகள், புஷ்கரிணி ஆகியவைகள் புனிதமானவை. இது தவம் புரியத் த்குதியான இடம்.

கந்தமாதன பர்வதம் உள்ள பகுதியில்தான், பகவான் நாராயணனே மனிதனுக்கு, ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரத்தை உபதேசம் செய்தார். இதனால் இந்த இடம் “அஷ்டாக்ஷர க்ஷேத்திரம்” என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பத்ரி வனத்தில், மணிபத்ரபூர் (மாணாக்ராம்) மாணாகிராமத்தில் ஒரு குகையில் அமர்ந்து பூஜ்ய பகவான் பாதராயண வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். இது வியாச குகைக்கு எதிரில் உள்ளது.

இலந்தைப் பழம் சம்ஸ்கிருதத்தில் பதரி என்று சொல்லப்படுகிறது.

காலப்போக்கில் பகவானின் தரிசனத்திற்காக பிரம்மா உட்பட பல முனிவர்கள் பகவானை வேண்டினார்கள். அப்பொழுது பகவான், அசரீரி வாவிலாக,”வரப்போகும் கலியுகத்தில் பாச உணர்வு இல்லாத கல்நெஞ்சம் கொண்ட பெரும்பாலான மக்கள் எனது தரிசனம் பெற இயலாதவர்களாக இருப்பார்கள். அப்போது, நாரத குண்டம்(நீர் நிலை) – அலக்நந்தாவில் இருக்கும் எனது பாஷாண மூர்த்தியை அங்கிருந்து எடுத்து வந்து, பிரதிஷ்டை செய்யுங்கள். என்னைத் தரிசிக்க விரும்பும் பக்தி சிரத்தை மிகுந்த பக்தர்களுக்குக் காட்சி தருவேன்” கூறினார். பகவானின் உத்திரவின்படி பிரம்மா முதலிய தேவர்கள், அலக்நந்தா நாரத குண்டத்தில் இருந்த பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வருகிறார். இப்படி பத்ரிநாத்தில் வழிபாடு துவங்கியது.

கொஞ்ச காலம் கழித்து, புத்தர் அவதரித்தார். அவர் மூலம் பௌத்த மதம் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவர் உருவ வழிபாட்டை ஒப்புக் கொள்ள வில்லை. அந்த சமயம் அவரைப் பின்பற்றுபவர்களான பௌத்த பிக்ஷுக்கள் கோவிலில் இருந்த பத்ரி நாராயண மூர்த்தி விக்ரகத்தை எடுத்து நாரத குண்டத்தில் (அலக்நந்தா) போட்டுவிட்டனர்.

பின்னர், காலடி கிராமத்தில் ஜகத்குரு சங்கராசாரியார் அவதரித்தார். சனாதன தர்மத்தின் வளர்ச்சியின் பொருட்டு, தேசம் முழுவதும் பிரசாரத்திற்காக பாத யாத்திரை செய்து பத்ரிநாத் அடைந்தார்.

காலடி, இந்தியாவின் தென்கோடியில் உள்ளது. பத்ரிநாத் பாரதத்தின் வடஎல்லையில் உள்ளது. வெகு நாட்களுக்கு முன்பு, பக்தர்களால், ஆராதிக்கப் பட்ட பகவான் நாராயணனின் விக்ரஹம் (சாளக் கிராமமூர்த்தி) நாரத குண்டத்தில் இருக்கிறது என்பதை ஸ்ரீசங்கரர் அறிந்தார்.

அவர் நாராயணின் மூர்த்தியை நாரத குண்டத்திலிருந்து வெளியில் எடுத்து, மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்தபடி கோயிலில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் தற்போதுள்ள இடத்தில் காஞ்சிபுரம் வரதாசாரியார் என்பவர் இந்தக் கோவிலை புணர் நிர்மாணம் செய்தார்.

தற்சமயம் ஆதி ஜகத்குரு சங்கராசாரியார் அவர்களால் பரம்பரையாக ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி, நம்பூதிரிகளால் மூலம் பகவான் ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.

பத்ரிநாத் சென்று அடைந்து பக்தர்கள் – கோயிலின் ராஜகோபுரம் முன்பு இருக்கும் தப்த குண்டத்தில், நீராடி, மேலும் நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு, சிம்ம துவாரத்தில் இருக்கும் கருட பகவானை தரிசித்துவிட்டு, பத்ரி விசால் பகவானை தரிசிக்க, கோவிலின் பிரகாரத்தை அடைகின்றனர். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் இதமான சூடாக உள்ளது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு பகவானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, பூசை செய்ய வசதியாக அமைந்துள்ளது.

கோயிலின் கருவறையில் எழுந்தருளி இருக்கும் சிலை பகவானாகவே வணங்கப்படுகிறார். பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு. தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேகத்தின் சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாலக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார்.

பத்ரிகாச்ரம புராணத்தில் “பஞ்ச பத்ரி” (5பத்ரி க்ஷேத்ரங் கள்) குறிப்பிடப்பட்டுள்ளன.

1. யோகபத்ரி, 2. வ்ருத்தபத்ரி, 3. த்யான பத்ரி, 4. தபோ பத்ரி (பத்ரி விசால்), 5. பவிஷ்ய பத்ரி

பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி – சாளக் கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து, தரிசனம் அளிக்கிறார். பகவானின் ஜடா மண்டல் (ஜடை விழுது) மேலும் கம்புக்ரீவா (மூன்று கீறுள்ள கழுத்து) நன்றாகக் காணப்படுகிறது. பகவானின் நான்கு கரங்கள் தெரியும். சங்கு சக்ர கதாதாரியாக சதுர்புஜ பகவான் பத்ரிநாராயணன் மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன் (விஷ்ணு) நாராயண சொரூபமாக சேவை சாதிக்கிறார்.

பகவானின் கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரண பாதுகை முதலியவைகளையும் தரிசிக்கிறோம். பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. (குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்).

தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில், மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.

மே மாதம் (சித்திரை மாதம், அக்ஷய திருதியை மறுநாள்) கோயில் கதவுகள் திறந்தது முதல், நவம்பர் மாதம் (ஐப்பசி– தீபாவளி) மூடப்படும்வரை, இங்கு நித்ய ஆராதனம் நடை பெறுகிறது. கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் (குளிர்காலம்) சமயத்தில் மகாலக்ஷ்மியின் ஸ்ரீமூர்த்தியை கோயிலின் கருவறையில் எழுந்தருளச் செய்கிறார்கள். கோயில் கதவுகள் திறந்த பின் (மே மாதம்) எப்பொழுதும்போல் மகாலக்ஷ்மி தாயார், தனது சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நித்ய ஆராதனை நடைபெறுகிறது. பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது. அப்படியே வந்து கோயிலின் முகமண்டபம் வாசல் வழியாக, சோபா மண்டபம், தரிசன மண்டபம் அடைந்து மூலவரை, பத்ரிநாராயணனை தரிசிக்கிறோம்.

குளிர்காலத்தில், சுமார் 6மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, பாண்டுகேச்வர் – ஜோதிர்மட் (ஜோஷீமட்) கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனை நடை பெறுகிறது. மறுபடியும் அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன. பத்ரிவிசால் கோயிலில் இந்த 6மாத காலம் தேவர்கள் ஆராதனம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

தரிசன நேரம் : காலை 5.00மணி முதல் 6.00வரை அபிஷேகம் – தரிசனம் – பக்த யாத்ரிகர்கள் அபிஷேக தரிசனம் செய்யலாம். காலை 9.00மணி – பாலபோக் (காலசந்தி)

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தபின், பிண்டப் பிரதானம் அளிக்க கோயிலில் பிரசாதம் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு சிறிது வடக்கே அலக்நந்தா நதிக்கரையில், பிரம்ம கபால தீர்த்தம்(பிரம்ம கபாலம் என்ற பாறை) சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலிய பித்ரு கர்மாக்கள் செய்து பிண்டப்பிரதானம் அளிக்கிறார்கள். இது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பிரம்ம கபாலம் பிரம்மாவின் புனிதத் தலம் என்று கூறப்படுகிறது.

மதியம் 12.00 – ராஜபோக் (உச்சிகாலம்)

இதற்குப் பிறகு மதியம் 3.00மணி வரை சந்நிதிக் கதவு மூடப்பட்டிருக்கும்.

மாலை 3.00மணிக்கு சந்நிதி திறக்கப்படும். இரவு 9.00மணிவரை தரிசனம் செய்யலாம். உரிய கட்டணம் செலுத்தி அர்ச்சனை, கற்பூர ஆரத்தி முதலியன செய்யலாம்.

மாலை தரிசனத்தின் சமயம் கற்பூர ஆரத்தி, (தீப ஆராதனை) ரஜத (வெள்ளி) ஆரத்தி தரிசனம் செய்யலாம்.

இரவு 9.00மணிக்கு சயன ஆரத்தி சேவிக்கலாம். ஆரத்தி (தீப ஆராதனை) சமயத்தில் பகவானின் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் : விவரம்

1. தப்த குண்டம் : இது வஹ்நி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இது அக்னியின் வாசஸ்தானம்.

2. பிரகலாத குண்டம் : தப்த குண்டம் பக்கத்தில் பிரகலாத குண்டம் (தாரா) அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியில் மிக வெப்பமான நீர் உள்ளது.

3. நாரத குண்டம் : தப்த குண்டம் பக்கம் அலக்நந்தா நதிக் கரையில், நாரத குண்டம் உள்ளது. ஒரு பாறைப்பகுதியின் மறைவில், பாறையின் ஆதாரத்தைக் கொண்டு பக்தர்கள் வசதியாக பயமில்லாமல் ஸ்நானம் செய்யலாம்.

4. கூர்ம தாரா : ஒரு குளிர்ந்த நீர்த்தாரையின் (அருவி) பெயர் கூர்ம தாரா. கூர்மாவதார காலத்தில் நாரதர் இந்த நீர்த்தாரையில் ஸ்நானம் செய்து விஷ்ணு பகவானை ஆராதித்தாக வரலாறு.

5. ரிஷிகங்கா : இந்த தீர்த்தம் (நதி) நீலகண்ட மலையின் பள்ளத்தாக்கில் பெருகிப் பாய்ந்து அலக் நந்தாவில் சங்கமம் ஆகிறது.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் புஷ்கரிணி உள்ளது. (14,440அடி உயரம்) இதற்கு அப்பால் சோம குண்டம், சூர்ய குண்டம் (விஷ்ணு குண்டம்) உள்ளன. இவைகளில் உள்ள நீர் வெப்பமுடையது. இதைத்தவிர இந்தப் பகுதியில் பல புண்ய நீர்நிலைகள் உள்ளன.

ஐந்து சிலைகள்

1. நாரத சிலை : தப்த குண்டம் – நாரத குண்டத்திற்கு நடுவில் நாரத சிலை இருக்கிறது. குளிர்காலத்தில் நாரத மகரிஷி பத்ரி நாராயணனுக்கு ஆராதனை செய்கிறார் என்று நம்பப்படுகிறது.

2. வராக சிலை : வராக சிலை, நாரத சிலை பக்கத்தில் அலக்நந்தா நதிக் கரையில் உள்ளது. வராக பகவான் இந்த இடத்தில்தான் பத்ரிநாத் பகவானை ஆராதித்தார் என்று நம்பப்படுகிறது.

3. கருட சிலை : கருட சிலை ஆகியவை கேதாரீச்வர் மந்திரின் அருகாமையில் உள்ளது. கருடன் தனது மாதாவை, அடிமை வேலையிலிருந்து விடுவித்து, இங்கு விஷ்ணு பகவானின் வாகனமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

4. மார்கண்டேய சிலை : தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. இரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, ரிஷிகளின் ப்ரார்த்தனையை ஏற்று பகவான் நரசிம்மன் இங்கு தனது நிறைவான தரிசனம் அளித்தார்.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்

நந்தாதேவி மந்திர், சேஷ நேத்ரம், சேஷ தாரா, ப்ருகுதாரா, மாதா மூர்த்தி மந்திர், வஸோதாரா மேலும் லக்ஷ்மீ வனம், ப்ருஹ்ம நதி, ஸரஸ்வதி – அலக்நந்தா புனித சங்கமம், கேசவ ப்ரயாக் முக்கியமானவை.

பத்ரிநாத் அருகில் ரிஷிகங்கையின் வலது பக்கத்தில், லீலாதகீ (சிலாகண்டம்) நந்தாதேவி கோயில், மேலும் நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது. இங்கு (கல்லில் செதுக்கப்பட்ட) பகவானின் சரணபாதுகையை தரிசனம் செய்யலாம்.

அலக்நந்தாவின் அக்கரையில், கொஞ்ச தூரத்தில், சேஷ நேத்ரம் உள்ளது. ஒரு கல்லின்மேல் பாகத்தில் சேஷநாகத்தின் கண்களும், மறுபக்கத்தில் சரண பாதுகையும் காணப்படுகின்றன.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை முக்கியமான புனித இடங்கள்.

பத்ரிநாத்திலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்தில் வசோதாராவும், இதைத் தாண்டி லக்ஷ்மீ வனம் உள்ளது. இதற்கு அப்பால் சகஸ்ரதாரா, பஞ்சதாரா, துவாதசாதித்ய, சதுஸ்ரோத், தீர்த்தங்கள் தாண்டி, சக்ர தீர்த்தம் உள்ளது. சக்ர தீர்த்தத்தைக் கடந்து, பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் மேலும் ஸதோபந்த் என்ற பெயருடைய தீர்த்தங்கள் உள்ளன.

சுமார் 3 – 4கி.மீ. தொலைவில் மாணா கிராமம் பகுதியில் பத்ரி நாத்தினுடைய மாதாவின் கோயில் (மாதா மூர்த்தி) உள்ளது. மாணா கிராமத்திற்குப் பக்கத்தில் மாணா கணவாய் வழியாக திபத் செல்லும் வழி உள்ளது. மாணா கிராமத்திற்கு கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதிக்கரை – வேத சாத்திரங்களில் கலாசார மையமாகக் கருதப்படுகிறது.

அலக்நந்தா – சரஸ்வதி நதியின் சங்கம ஸ்தானம், கேசவ ப்ரயாக் என்று அழைக்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரும், விசுவாமித்ர முனிவரும் இந்த புனித இடத்தில் தவம் புரிந்ததாகவும், மேலும் வேத ருக்குக்களை கண்டதாகவும் கூறப்படுகிறது.

கோவிந்த காட் (மலைத்தொடர்)

ஜோஷிமட் – பத்ரீநாத் பஸ் தடத்தில், ஜோஷீமடத்தி லிருந்து 20கி.மீ. தொலைவில் (அலக்நந்தா நதிக்கரை) குருகோவிந்தஸிங் பெயரில் (அவரது ஞாபகார்த்தமாக) கோவிந்தகாட் (மலைத்தொடர்) அமைந்துள்ளது.

குரு கோவிந்தஸிங் பூர்வஜன்மத்தில் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. ராவண யுத்தத்திற்குப் பிறகு இலட்சுமணன் இங்கு தவம் புரிந்ததாகவும், அதன் ஞாபகார்த்தமாக லோகபால் மந்திர் (கோயில்) நிர்மாணிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

ஹேமகுண்ட் சாஹிப்பிற்கும் (கங்காரியா) புஷ்பப் பள்ளத் தாக்கிற்கும் இங்கிருந்துதான் கால்நடையாகச் செல்லவேண்டும். கங்காரியா வரை (15கி.மீ.) இரண்டு இடத்திற்கும் செல்ல ஒரே பாதைதான். இங்கு ஹேமகுண்ட சாஹிப் குருத்வாரா உள்ளது. இந்தப் புனித இடம் இந்துக்கள், சீக்கியர்கள் இருவருக்கும் புண்ய க்ஷேத்ரமாக விளங்குகிறது.

கங்காரியாவிலிருந்து வேறு வழியில் 4கி.மீ. கால்நடை யாகச் சென்று 10கி.மீ. நீளம், 2கி.மீ. அகலமுள்ள புஷ்பப் பள்ளத்தாக்கை அடையலாம். இந்தப் பகுதி தெய்வீக இயற்கை அழகுடன் விளங்குகிறது.

கண்ணுக்கு எட்டியவரை வண்ண வண்ணமான பலவித அழகான வன மலர்களின் வரிசை கண்களுக்கு குளிர்ச்சியையும், மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஜூலை – ஆகஸ்ட் மாதங்கள் பூக்கள் மலரும் சமயம்.

விருத்த பத்ரி – ஜோதிர்மடம் – பீபல்கோட் பஸ் சாலையில் ஜோதிர்மட்டிலிருந்து 10கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது.

அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில், இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இது பிரசித்தமான தீர்த்தம். நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராசாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

த்யான பத்ரி : பீபல்கோட் – ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹைலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் – கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு மந்திரில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

யோக பத்ரி : (ஜோஷிமட் – பாண்டுகேச்வர்) ஜோஷிமட் பத்ரிநாத் – பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில் பாண்டு கேச்வரர் புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். குளிர்காலத்தில் பத்ரிநாத் பகவானின் கோயில் கதவுகள் மூடப்பட்டதும், சுமார் 6மாத காலத்திற்கு பத்ரிநாத் பகவானின் உற்சவ மூர்த்தி இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

சிலர் த்யான பத்ரி – யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதி  பத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபாதையாக ஆதி பத்ரி சென்றடையலாம்.

பவிஷ்யபத்ரி : ஜோஷிமட் – மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது.

வரும் காலத்தில், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகுமெனவும், அது சமயம் பத்ரிநாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது.

“சுவர்க்கம், பூமி, பாதாள லோகத்தில் அனேக திவ்ய க்ஷேத்ரங்கள் / தீர்த்த ஸ்தானங்கள் உள்ளன. ஆனால் பத்ரி திவ்ய க்ஷேத்ரத்துக்கு சமமாக, கடந்த காலத்திலும் இருக்கவில்லை. இனி வருங்காலத்திலும் இருக்கப் போவதில்லை.”

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ குருஷேத்ர மஹாத்ம்யம் –

June 30, 2022

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே சம வேதா யுயுத்சவ
மாமகா பாண்டவஷ் சைவ கிம் குர்வத ஸஞ்சய-

குரு க்ஷேத்ர கமிஷ்யாமி குரு க்ஷேத்ரே வசாம் யஹம்
அப்யகா காசம் ருத் ஸ்ருஜ்ய ஸர்வ பாபே ப்ரமுச்யதே-

ஸ்ரீ குருஷேத்ரத்தை, தர்ம ஷேத்ரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில்அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

பாண்டவர் – கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது

வாமன புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது.[1] யக்ஞம்தானம்தவம்வாய்மைதியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ‘குரு’வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

  • பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
  • கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம் 
  • பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
  • சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
  • பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
  • குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்
  • கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்
  • பிர்லா மந்திர் 

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்:

  1. நாரை வியூகம்
  2. முதலை வியூகம்
  3. ஆமை வியூகம்
  4. திரிசூலம் வியூகம்
  5. சக்கர வியூகம்
  6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்
  7. கருட வியூகம்
  8. கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. வான் மண்டல வியூகம்
  10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
  11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம்
  13. தேவ வியூகம்
  14. ஊசி போன்ற வியூகம்
  15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. பிறை சந்திர வடிவ வியூகம்
  17. பூ மாலை போன்ற வியூகம்

 

  1. பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி.–பகவத் கீதை பிறந்த பெருமையுடைய தலம்.தீர்த்த விசேஷம் உள்ள இடம். இந்தியாவிலேயே பெரிய குளம் / தீர்த்தம் – ‘பிரமசரஸ்’; 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது.இத்தலத்திற்கு தர்மக்ஷேத்ரம், பிரம்ம க்ஷேத்ரம், ஆர்யாவர்த்தம், உத்தரவேதி முதலிய வேறு பெயர்களுண்டு.

    சரஸ்வதி, திருஷத்வதி ஆகிய நதிகளுக்கு இடையில் இத்தலம் உள்ளது.

    மாபெரும் ரிஷிகளும், மகான்களும் இங்குத் தவம் செய்து வாழ்ந்துள்ளனர்.

    வியாசர் பாரதத்தையும், மனு, மனுஸ்மிருதியையும் இங்கிருந்து தான் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

    ததீசி முனிவர் தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் தர, அதைக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனைக் கொன்றதும்; பரசுராமர் பீஷ்மர் யுத்தம் நடந்ததும் இத்தலத்தில் தான்.

    குந்தி தேவி வழிபட்ட சிவாலயம் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

    கீதோபதேசம் நடைபெற்ற இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    அருச்சுனன் தன் அம்பினால் – பாணத்தால் உண்டாக்கிய தீர்த்தக் கிணறு – ‘பாண கங்கா’ உள்ளது.

  2. பீஷ்ம பர்வம்

    குருச்சேத்திரப் போர்

    குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது. பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

    இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

    போர் நாள் 1

    போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனு– கங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

    போர் நாள் 2

    பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.

    போர் நாள் 3

    பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

    போர் நாள் 4

    துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான்.

    போர் நாள் 5 முதல் 9 முடிய

    ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

    போர் நாள் 10
    அம்புப் படுக்கையில் பீஷ்மர்

    பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப் படுக்கையில் கிடத்தினான்.

    பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு இச்சை மரணம் (“Ichcha Mrityu” (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர்.

    துரோண பர்வம

    பகதத்தனை அருச்சுனன் வீழ்த்துதல்

    துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.

    போர் நாள் 11

    குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

    போர் நாள் 12

    தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான்.

    போர் நாள் 13
    அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.

    கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

    துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன்கர்ணன்துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

    போர் நாள் 14

    அருச்சுனன் ஜயத்திரதனை கொல்தல்

    அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

    கர்ணன் கடோற்கஜனை கொல்தல்

    14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

    போர் நாள் 15

    துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர்.

    15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.

    கர்ண பர்வம்[தொகு]

    போர் நாள் 16

    துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான்.[7] கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

    பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி

    அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன்.

    போர் நாள் 17

    கர்ணன் – அருச்சுனன் போர்

    கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

    ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

    போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

    சல்லிய பர்வம்[தொகு]

    போர் நாள் 18

    பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான்.[8] இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது.

    சௌப்திக பர்வம்[தொகு]

    வீமன் – துரியோதனன் கதாயுதப் போர்

    தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த சமந்தபஞ்சகம் எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார்.

    பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன்சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகியுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே.[9]

    குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்[தொகு]

    கௌரவர் தரப்பில் கிருபர்அசுவத்தாமன்கிருதவர்மன்கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

    பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர்சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

    குருச்சேத்திரப் போருக்குப் பின்[தொகு]

    அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும்இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.

    துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது.

    அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

    திருதராட்டிரன்காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர்.

    தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு– உத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

    பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

    ஹஸ்தினாபுரம் என்பது என்ன. ஹஸ்தி என்றால் எலும்பு, புரம் என்றால் வீடு. எலும்புகளால் கட்டப்பட்ட வீட்டை தான் ஹஸ்தினாபுரம் என்று சொல்லப்படுகிறது.கௌவரவர்களின் அரசனாக துரியோதனனும் அவனின் தம்பிகளையும் மனிதர்களின் மனதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துர்குணத்தை குறிக்கிறது. பாண்டவர்கள் ஐந்து பேரையும் அவர்களுக்கு ஒரு மனைவியையும் மனிதனுக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் ஒரு சக்தியையும் குறிக்க கூடியது. துர்குணங்கள் ஒரு மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பொழுது அவனுடைய சக்தி பல வழிகளில் செல்வாகிகொண்டே இருக்குறது. தெய்வ குணங்கள் நோக்கி செல்லும் பொழுது சக்தி பாதுகாக்கிறது. யோகம் செய்யும் பொழுது உடலும் மனமும் ஆடாமலும் அசையாமலும் இருக்க வேண்டும். அப்படி செய்வதற்க்கு பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் ஆகும். மனம் நல்ல கருத்துகளை விட தீய கருத்துக்களையும் தீய செயல்களையும் தான் விரும்பும். அந்த மனதை தூய்மை படுத்துவதற்க்கு உடலையும் மனதையும் பழக்க வேண்டும். தவம் செய்யும் பொழுது மனம் தன்னுல் ஆழ்ந்த அனுபவங்களும் சொந்த பந்தங்களும் அவர்களின் நல்ல தீய நினைவலைகள் ஆகிய அனைத்தும் நம்மை தியானம் செய்ய விடாமல் நம்மை எதிர்க்கும். துர்குணம் மீது அதிகம் பற்றிருந்தால் தவம் செய்யும் பொழுது கோபம், காமம், பேராசை போன்ற குணங்களினால் இழுத்து செல்லும்.

மனமே கிருஷ்னன். அவன் உடுத்திய உடைய சற்று ஆய்வு செய்வோம். ஒரு கையில் சங்கும், ஒரு கையில் சக்கரமும், ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் தாமரையும், வாயில் புல்லாங்குழலையும் வைத்திருப்பார். அவர் உறங்கும் இடம் ஆதிசேசனாகிய சற்பமாகும். மனிதர்களின் ஐந்து புலண்களை பார்ப்போம். கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், மூக்கால் நுகர்வதும், நாக்கால் சுவைப்பதும் , தோலினால் தொடு உணர்வை அனுபவிப்பது ஆகும். மனம் இந்த ஐந்து புல்ன்-கலால் உள்வாங்கும். சங்கும் காதும் ஒரே மாதிரி இருக்கும். சங்கு ஒலியை குறிப்பிடுகிறது. மூக்கும் கதையும் ஒரேமாதிரி இருக்கும். வாசனையை நுகர்வது. மூக்கிற்க்கும் ஜீவனுக்கும் இடையில் கதாகதம் செய்தால் உள்ளொளி பிறக்கும். சக்கரம் என்பது சுதர்ஷனத்தை குறிப்பதாகும். சுதர்ஷனம் என்பது பார்வை. ஒரே நேரத்தில் தூரத்திலிருக்கும் பொருளையும் அருகிலுள்ள பொருளையும் மிக வேகமாக கண்ணால் உள்வாங்க முடியும். அதனால் சக்கரத்தை ஏவினால் பல தலைகள் ஒரே நேரத்தில் வெட்டிவிடும். இப்படிபட்ட கண்ணை பக்குவபடுத்தவில்லை என்றால் சக்தி நாசமாகி சீக்கிரமாக உடல் அழிந்து விடும். தவம் செய்யும் பொழுது உடல் அழியாது ஆனால் தீவிர தவத்தினால் மனம் உடலின் மீதுள்ள பற்றை விட்டு விடும். சற்பமாகிய ஆதிசேசன் மூச்சுகாற்றை குறிப்பதாகும். அதவாது சுழிமுனையை குறிப்பதாகும். பாம்பு விசத்தை கொடுப்பதா அல்லது அமிர்தத்தை கொடுப்பதா என்பது மனதின் ஆளுமையை பொருத்துள்ளது. தாமரை என்பது ஞானம் அல்லது நெற்றிகண்ணை குறிப்பதாகும். மனதின் மூலம் யோகா செய்யும் முறையை உள்வாங்கி, புலன்-கள்லால் வெளியே செல்லும் மனதை ஜீவன் நோக்கி திருப்பினால் ஞானஒளியை அல்லது உள்ளொளியை பெறலாம்

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆயன் அன்று ஓதிய வாக்கு –ஸ்ரீ உ வே ஸ்ரீ வத் ஸாங்க தாசன் ஸ்வாமிகள் —

June 15, 2022

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற-மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலாராம் மெய்ஞ் ஞானமில் -ஸ்ரீ நான்முகன் -71-

ஸர்வ உபநிஷதோ காவ தோக்தா கோபால நந்தன
பார்த்தோ வத்ஸ ஸூ தீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் –

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -திருவாய் -4-8-6-

ஸ்ரீ மஹா பாரதம் சம்சார விமோசகம்
அதுவே கோது என்னும்படி ஸ்ரீ கீதை
வேதேஷு பவ்ருஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரே ஷு மாநவம்
பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்

பர ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனான நாராயணனே பரதத்வம்
ப்ரஸாத விஸிஷ்டனான அவனே பரம ஹிதம்
போக்யதா விஸிஷ்டனான அவனே பரம புருஷார்த்தம் -ப்ராப்யம்
கர்மா ஞான பக்திஉபாயங்களாலே அடையப்படும் பரம் பொருள் அவனே

கேஸவ அர்ஜுன ஸம்வாதத்தை உள்ளடக்கிய சஞ்சயன் த்ருதராஷ்டன் ஸம்வாதம்

கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ

ஸ்ரீ கீதா ஸங்க்ரஹம் -ஸ்ரீ ஆளவந்தார்
மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தாத்பர்ய சந்திரிகை

வில்லை பொகட்டு நின்றதில் இராவணனுக்கும் அர்ஜுனனுக்கும் சாம்யம் உண்டே யாகிலும் -நெடு வாசி உண்டே
அவன் ஓய்ந்தது அசக்தியினால்
இவன் ஓய்ந்தது தர்மத்தில் அதர்ம புத்தியால்
அர்ஜுனனை ரதியாக்கி தன்னை சாரதியாக அமைத்து ஆஸ்ரித வாத்சல்யம் விவஷிதம்
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -அவனுக்காக அம்புகளுக்கு தன்னை இலக்காக்கிக் கொண்டானே –


1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —

த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி
யுயுத்ஸவ: = யுத்தம் செய்ய வந்திருக்கும்
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள்

————–

2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

 

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷

தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவதைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம் மயக்கம் அடைவது

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமே யஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷

ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது

உத்பத்தி விநாசம் -அவஸ்தா விசேஷங்கள்
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -கலியன்
கிழிந்த வஸ்திரம் கைவிடுவது போல் சரீரம் கைவிடுவது –
சீர்யதே இதி சரீரம் -அழிவதையே இயற்கையாகக் கொண்டது

நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது

ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
அதற்குக் காரணமான
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்-விரும்பிய பொருள் கிடைப்பதாயும் கிடைக்காமலும்
அதற்குக் காரணமான
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்-முயல்வாய்
ஏவம் = இவ்வாறு-இவ்வண்ணமாகப் போர் புரிந்தால்
பாபம் = பாவம்-துன்ப மயமான ஸம்ஸாரத்தை
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷

த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி

யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷

யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி-நீர் நிலையில்
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு-வைதிகனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (விஞானத் )-அறிவாளியான முமுஷுக்கு

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

கர்மணி = வேலை செய்வதில்-நித்ய நைமித்திக கர்மங்களில் மட்டும்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
ஸ்வர்க்காதி பலங்களிலே ஆசை கொள்ளாமல்
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி -மோக்ஷ சாதனா கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில்

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ராக த்வேஷ -எனது அருளாலே ராகமும் த்வேஷங்களும் -ஆசையும் வெறுப்பும்
வியுக்தைஸ்து –நீங்கப் பெற்றவையாய்
ஆத்ம வஸ்யைர் -தனக்கு வசப்பட்டு இருப்பவையான
இந்த்ரியைஸ் -இந்த்ரியங்களால்
விஷயாந் -சப்தாதி விஷயங்களை
சரந்.–கடந்தும் நிற்பவனாய்
விதேயாத்மா -மனத்தை அடக்கியவனான புருஷன்
ப்ரஸாம் -மனத் தெளிவை
அதி கச்சதி–அடைகிறான்

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷

யத்வத்–எப்படி
ஆபூர்யமாணம் –தானே நிறைந்து இருப்பதாய்
அசல ப்ரதிஷ்டம் -ஒரே நிலையில் இருப்பதான
ஸமுத்ரம் -கடலை
ஆப ப்ரவிஸந்தி .–நதீ ஜலங்கள் பிரவேசிக்கின்றனவோ
தத்வத் -அப்படியே
ஸர்வே காமா -ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தும்
யம் ப்ரவிஸந்தி -எவனைப் பிரவேசிக்கின்றனவோ
ஸ -அவனே
ஸாந்திம் ஆப்நோதி-விஷய அனுபவங்கள் நீங்கப் பெறுகை யாகிற சாந்தியை அடைகிறான்
காமகாமீ ந ஆப்நோதி —ஸப்தம் முதலான விஷயங்களை விரும்பி விகாரம் அடைபவன் சாந்தியை அடைவது இல்லை-

————

3-ஸ்ரீ கர்ம யோகம் –

ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்ம க்ருத்—
கார்யதே ஹ்யவஸ கர்ம ஸர்வ ப்ரகரிதி ஜைர்குணை—৷৷3.5৷৷

ந = இல்லை
ஹி = அதனால்
கஸ்சித் = ஒருவன்
க்ஷணம் = ஒரு நொடி கூட
அபி = இப்போது
ஜாது= ஒருபோதும்
திஷ்டதி = நிலையாக இருத்தல்
அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்
கார்யதே = செயல் என்பது
ஹி = அது
அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக
கர்ம = செயல்
ஸர்வ: = அனைத்து
ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்
குணை: = குணங்களில் இருந்து

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக
குரு = செய்தல்
கர்ம = கர்மங்களை
த்வம் = நீ
கர்ம = செயல்களை
ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக
ஹி = அதனால்
அகர்மண: = செயலன்றி இருப்பது
ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம்
அபி = இருந்தும்
ச = மேலும்
தே = உன்
ந = இல்லை
ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது
அகர்மண: = செயலன்றி இருந்தால்

கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்
அந்தச் சிறந்தவன் அக்கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது

சிஷ்டாச்சரமே ஸ்ரேஷ்டம்
மேலையார் செய்வனகள் கேட்டியேல்
தர்மஞ்ஞய சமய
க்ரியமாணம் ந கஸ்மை சித் யதர்த்தாய பிரகல்ப்யதே அக்ரியாவத் அநர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –
யே தத்ர ப்ராஹ்மணா ஸம் மர்ஸிந யுக்தா ஆயுக்தா அலூஷா தர்ம காமா ஸ்யு யதா தே தத்ர வர்த்தேரன் ததா தத்ர வர்த்தேதா -வேத
விதிப்படி ஆராய்ச்சியில் வல்லவர்களாய் -ஸாஸ்த்ரஞ்ஞர்கள் -காம க்ரோதாதிகள் அற்றவர்கள் -அறத்தில் விருப்பமுள்ள வைதிகர்கள் -நடக்கிற வழியிலே நீயும் நடப்பாய் –

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத்தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்

பகவானும் வர்த்த ஏவச கர்மணி -கர்ம அனுஷ்டானம் விடாமல் செய்து காட்டி அருளுகிறான்

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பர தர்மாத் ஸ்வநுஷ்டிதாத்—
ஸ்வ தர்மே நிதநம் ஸ்ரேய பர தர்மோ பயாவஹ—-৷৷3.35৷৷

இயற்கையில் உரியதாய் இருக்கும் உபாயமான கர்ம யோகம் அங்கங்களில் குறையுடையதாக அனுஷ்ட்டிக்கப் பட்ட போதிலும்
குறைவற அனுஷ்ட்டிக்கப்பட்ட -பிறர்க்கு உரிய -ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
தனக்கு உரிய உபாயமான கர்ம யோகத்தை அனுஷ்டித்துக் கொண்டு-அந்தப் பிறப்பில் பலன் அடையாமல் மரணம் அடைவதும் சிறந்தது –

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷

பகவான் கூறினான் -நீ கெட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்
இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும்
கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக

நம் தரிசனத்தில் காமமும் க்ரோதமும் ஆத்ம தர்மமான ஞானத்தின் பரிணாம விசேஷமே
மஹாஸந ந ஜாது காம காமாநாம் உப போகே ந ஸாம்யதி
ஹவிஷா கிருஷ்ண வர்த்மேவ பூய ஏவாபி வர்த்ததே -பாரதம்
காமிகளின் காமம் அனுபவித்து அடங்காது -விரகிட விரகிட மென்மேலும் எரியும் அக்னி போலே அனுபவிக்க அனுபவிக்க மென்மேலும் வளரும் –

—————-

4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷

ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
ஆத்மாநம் மானுஷம் மன்யே
அஹம் வோ பாந்தவ ஜாத -அவதாரத்தில் மெய்ப்பாடு

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம்
வ்யக்தமேஷ மஹா யோகீ பரமாத்மா ஸநாதன
அநாதி மத்யே நிதநோ மஹத பரமோ மஹான் -யுத்த -பரமேஸ்வரேஸ்வரத் தன்மை பேசப்பட்டதே –

ந பூத சங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந -பாரதம்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம் சமேதோ அஸ்தி ஸம்பவா -வாயு புராணம்
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய அம்ருதோ ஹிரண்மய
மாயா வபுநம் ஞானம்
மாயயா ஸததம் வேத்தி பிராணி மாம் ச ஸூபா ஸூபம்
பிதா புத்ரேண பித்ரு மான் யோநி யோநவ் -ஸ்ருதி
ஸமஸ்த சக்தி ரூபாணி தத் கரோதி ஜனேஸ்வர
தேவ திர்யங் மனுஷ்யாக்யா சேஷ்டா வாந்தி ஸ்வ லீலயா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.-தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

பிராமண தூஷகர் பாஹ்யர்
பிரமேய தூஷகர் -குத்ருஷ்டிகள்
த்ரிணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்யா அதோ தர்மாணி தாரயன் -உலகு அளந்து தர்மங்களை நிலை நிறுத்தினான் –
ததா ஆத்மாநம் ஸ்ருஜாம் யஹம் -ஞானீ து ஆத்மைவ மே மதம் -ஞானிகளையே ஆத்மா என்கையாலே ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்கிறான்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆளாயினரே
பீதகவாடைப்பிரானார் பிரம குருவாக வந்து
சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தனும் மக்நாத் உத்தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா

தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந—৷৷4.34৷৷

நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை
ஞானிகள் இடம் அறிவாயாக –
ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்காய் இந்நிலத்தில் தோன்றுவதால்
யார்க்கும் அவன் தாளிணையை உண்ணுவதே சால உறும் -ஞான சாரம்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவோ வகுளமோ தோள் இரண்டோ
நான்கும் உளவோ பெருமான் உனக்கு –

ந சலதி நிஜ வர்ண தர்மதோ ய சம மதிராத்ம ஸூ ஹ்ருத் வி பக்ஷ பக்ஷே
ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சி துச்சை ஹித மநஸம் தமவேஹி விஷ்ணு பக்திம்-என்றும்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தாந அந்யஸ் தத் தோஷ காரக -என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை யோதி யோதிவித்து ஆதியார் வரும் அந்தணாளர்
வைஷ்ணவ உத்தமர்கள் -ஸா தவ -யுக்த லக்ஷண தர்ம ஸீலா வைஷ்ணவ அக்ரேஸரா
மத் ஸமாஸ்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம குண கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸா கோசர தயா
மத் தர்சனேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதி கம் அலப மாநா க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மன்வாநா
பிரஸி தில ஸர்வ காத்ரா பவே யுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித அவ லோகநா லாபாதி தாநேந தேஷாம் பரித்ராணாய
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன்
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் கால் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புள கீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய ஸர்வ தேஹி பி
உன் தாளிணைக்கீழ் வாழ்ச்சி என்று இருப்பவர்கள்-

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

————

5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—
ஷுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஸிந—-৷৷5.18৷৷

அறிவாளிகள் கல்வியும் அடக்கமும் உடைய அந்தணர் இடமும் அவை அற்ற அந்தணர் இடமும்
உருவத்தால் சிறிய பசுவின் இடமும் உருவத்தால் பெரிய யானையின் இடமும் –
கொன்று தின்னப்படும் நாயிடமும் அதைக் கொண்டு தின்னும் சண்டாளனிடமும் கூட
ஆத்மா ஒரு படிப் பட்டு இருக்கையாலே சமமாகப் பார்ப்பவர்களாய் இருக்கின்றனர்-

யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷

குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ –
அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ –
அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷

யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்

—————

6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)

உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷

விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் –
தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் –
விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் –
விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாய விஷயீ சங்கீ முக்த்யை நிர்விஷயம் மன

 

கைவல்யம் -அளவில் சிற்றின்பம் -விடை கொள்வார் –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிவை பற்றே
யோகிக்கு நான்கு வகைப்பட்ட ஸாம்ய புத்தி
ஸர்வத்ர சம தர்சன-6-29- -தன்னை அறிந்து மற்ற ஆத்மாக்களும் ஞான ஸ்வரூபத்தில் சாம்யம் -முதல் நிலை
யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வத்ர மயி பஸ்யதி -6-30-
முக்தி நிலையில் விபு வாய் பரமாத்மாவோடு ஒற்றுமை அறிவது -6-31-மூன்றாம் நிலை
நான்காம் நிலை ஸூகம் துக்கம் அற்ற நிலை -6-32-

ஸர்வ பூதஸ்த மாத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி.—
ஈக்ஷதே யோக யுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந—৷৷6.29৷৷

யோக அப்யாஸத்தில் ஈடுபட்ட நெஞ்சை உடையவன் -ப்ரக்ருதி சம்பந்தம் அற்ற -எல்லா ஆத்மாக்களையும்
சமமாகக் காண்பவனாய் -எல்லா ஜீவர்களோடும் சமமான ஸ்வரூபத்தை உடையவனாகத் தன்னையும் –
தன்னோடு சமமான ஸ்வரூபத்தை உடையவர்களாக மற்ற எல்லா ஜீவர்களையும் காண்கிறான் –

யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி—-
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி–৷৷6.30৷৷

எவன் ஒருவன் என்னை எல்லா ஆத்ம வஸ்துக்களிலும் -என் தன்மை இருப்பதை இட்டுக் காண்கிறானோ –
எல்லா ஆத்மாக்களையும் என்னிடம் -அவர்கள் தன்மை விருப்பத்தை இட்டுக் காண்கின்றானோ –
அவனுக்கு நான் காட்சி அளிக்காமல் போவது இல்லை -அவனும் எனக்கு காட்சி அளிக்காமல் போனது இல்லை –

ஸர்வ பூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வ மாஸ்தித—
ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷

யோக தசையில் முன் கூறிய ஒற்றுமையை முன்னிட்டு எல்லா ஜீவர்களிலும் இருக்கும் என்னை –
ஞான சங்கோசம் அற்று இருக்கை யாகிற -ஒற்றுமையை அனுசந்திப்பவனாய் எவன் ஒருவன் காண்கிறானோ
அந்த யோகீ -யோகத்தில் இருந்து எழுந்த நிலையில் -எப்படி இருந்தாலும்
என்னோடு ஒப்புமையை அனுசந்திப்பவனாக வாழ்கிறான் –
அனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோர்ஜுந.—
ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷

அர்ஜுனா எவ்விடத்திலும் ஆத்மாக்கள் முன் கூறிய ஒப்புமையை உடையவர்களாக இருப்பதால்
தன்னிடமும் மற்றவர்கள் இடமும் உள்ள இன்பத்தையும் துன்பத்தையும் எவன் ஒருவன் சமமாகக் காண்கிறானோ
அந்த யோகியானவன் அனைவரிலும் சிறந்தவனாகக் கருதப்படுகிறான் –

அர்ஜுந உவாச
யோயம் யோகஸ் த்வயா ப்ரோக்த ஸாம்யேந மதுஸூதந–.-
ஏதஸ் யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்—৷৷6.33৷৷

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

அர்ஜுனன் கேட்டான் -மது என்னும் அசுரனை அழித்த கண்ணனே -யாதொரு சமதர்சன ரூபமான இந்த யோகம்
உன்னால் உபதேசிக்கப்பட்டதோ-இந்த யோகம் நிலையாக நிற்பதை மனம் நிலை நில்லாமல் இருக்கும்
காரணத்தால் நான் காணவில்லை -ஏன் என்னில் மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்
ஸ்திரமான ஸ்தியை நான் காண வில்லையே என்கிறான் –நீ சொல்வது நடக்குமோ –
சஞ்சலம் தானே எங்கும் -எல்லா இடத்திலும் பேதங்கள் பார்க்கிறேன்

ஸ்ரீ பகவாநுவாச-
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ் தஸ்ய வித்யதே.–
நஹி கல்யாண க்ருத்கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷

ஸ்ரீ பகவான் சொன்னார் -குந்தீ புத்திரனே -யோகத்தைத் தொடங்கி அதில் நின்றும் நழுவிய மனிதனுக்கு
பிராகிருத போகங்களிலோ -மோக்ஷ அனுபவத்திலோ -விரும்பியது கிடைக்காமல் இருத்தல் –
விரும்பாததை அடைதல் ஆகிய -விநாசம் ஒரு போதும் ஏற்படாது -அப்படி நல்ல கார்யமான
ஆத்ம சாஷாத்காரத்தைச் செய்யும் ஒருவன் விரும்பாத கதியை அடைய மாட்டான் அன்றோ –

யோகிநாமபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தராத்மநா—
ஸ்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத—৷৷6.47৷৷-மேலே அருளிச் செய்யப் போகும் பக்தி யோகத்தை அறிமுகப் படுத்துகிறான்

முன் கூறிய யோகிகளைக் காட்டிலும் தபஸ்விகள் முதலான அனைவரைக் காட்டிலும் என்னிடம் ஈடுபட்டு இருக்கும்
நெஞ்சினால் என்னை அடைவதில் த்வரை உடையவனாய் எவன் என்னை உபாசிக்கிறானோ
அவன் மிக உயர்ந்தவனாக என்னால் எண்ணப் படுகிறான்

—————–

7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

அத்வேஷம்
ஆபிமுக்யம்
ஆச்சார்ய உபதேசம்
கர்ம அனுஷ்டானம்
ஸித்த ஸூத்தி
சரீர ஆத்ம விவேகம்
கர்மா யோகம்
ஞான யோகம்
ஆத்ம தர்சனம் –இவற்றை கீழ் ஷட்கத்தில் உபதேசித்து அருளி
இதில்
பகவத் பக்தி உபதேசித்து அருளுகிறான்

மஹநீய விஷயே ப்ரீதி பக்தி -பக்தி ரூபமான உபாஸனம்
நாய மாத்மா ப்ரவசநேந லப்ய -ந மேதயா ந பஹுதா ஸ்ருதேந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -கட உபநிஷத்
ஸ்நேஹ பூர்வ தியானமே பக்தி

வேறே ஒருவன் கடைத்தலை நிற்கை அவனுக்கு தேஜோ ஹானி
நின் சாயை அழிவு கண்டாய்

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும்
மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி
என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி கணா இவ৷৷—-7.7৷৷

அர்ஜுனா என்னைக் காட்டிலும் வேறு பட்டு இருப்பவற்றில் ஓன்று கூட மிகவும் மேலானதாக இல்லை –
இந்த எல்லாப் பொருள்களும் நூலில் மணிகள் கோர்க்கப்பட்டு இருப்பது போலே
என் இடத்திலேயே கோர்க்கப்பட்டு இருக்கின்றன

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக்குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –
புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –
ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வசக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–
ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-

இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று
என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ஜரா மரண மோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–
தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–29-

கிழத்தன்மை மரணம் முதலான ஆறு ஊர்மிகளும் அடியோடு கழிந்து பிரகிருதி சம்பந்தம் அற்ற
ஆத்ம அனுபவ ரூப மோக்ஷம் கிடைப்பதற்காக என்னை அடைந்து எவர்கள் முயற்சி செய்கிறார்களோ –
அவர்கள் ப்ரஹ்மம் எனப்படுவதையும் அத்யாத்மம் எனப்படும் முழுவதையும்
கர்மம் எனப்படுவது அனைத்தையும் அறிய வேண்டும் –

————-

8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலய மஸாஸ்வதம்.–
நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷

மேலான சம்சித்தி ரூபமான என்னை அடைந்தவர்களான மஹாத்மாக்களான ஞானிகள் என்னை அடைந்த பின்
எல்லா துன்பங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பதாய் நிலை நில்லாததான தேகத்தை மறுபடியும் அடைகிறது இல்லை –
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –

ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்திநோர்ஜுந.–
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே—৷৷8.16৷৷

அர்ஜுனா ப்ரஹ்மாண்டத்தினுள் இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரையில் உள்ள எல்லா உலகங்களும்
அழிவை உடையவை குந்தீ புத்திரனே என்னை அடைந்த பின்போ எனில் மறு பிறப்பு இல்லை
ஐஸ்வர்யார்த்தி எங்கு போகிறான் எதனால் திரும்ப வருகிறான் -அழிவுடைய லோகம் போகிறான் –
அதனால் அனுபவமும் அழியும் –
படைக்கப்பட்டு அழிக்கப் படுபவை -ப்ரஹ்ம லோகம் வரை அஸ்திரம் -லீலா விபூதி –
நித்ய சங்கல்பம் அடியாக நித்ய விபூதி -அநந்ய பிரயோஜனர்க்கு
தன்னையே ஓக்க அருள் செய்யும் பரம காருணிகன் அன்றோ –

நைதே ஸருதீ பார்த்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந.-
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுந—8.27৷৷

குந்தீ பிள்ளையான அர்ஜுனா இந்த அர்ச்சிராதி தூமாதி மார்க்கங்கள் இரண்டையும் அறிகிற
எந்த ஞானியும் மயங்க மாட்டான்
ஆகையால் தினம் தோறும் அர்ச்சிராதி கதியை சிந்திப்பதாகிற யோகத்தோடு கூடியவனாக ஆவாயாக
எல்லா காலத்திலும் யோகத்துடன் இரு -அர்ச்சிராதி மார்க்க சிந்தனை வேன்டும் என்றவாறு –

—————-

9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

அவஜாநந்தி மாம் மூடா மானுசிம் தநும் ஆஸ்ரிதம்
பரம் பாவம் அஜா நந்தோ மம பூத மஹேஸ்வரம் –9–11–

அவஜாநந்தி = அறியாமல்
மாம் = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம்
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருட வ்ரதா-
நமஸ் யந்தஸ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே৷৷—9.14৷৷

ஸததம் = எப்போதும்
கீர்தயந்தோ = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா: = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்—৷৷9.22৷৷

அநந்யா = வேறு ஒன்றிலும்
சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்
மாம் = என்னை
யே = அவர்கள்
ஜநா: = மக்கள்
பர் உபாஸதே = முறையுடன் உபாசித்து
தேஷாம் = அவர்களின்
நித்யா = எப்போதும்
அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்
யோக³ = தேவைகளை
க்ஷேமம் = பாதுகாத்து
வஹாம்ய = பொறுப்பு
அஹம் = நான்

அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச.–
ந து மாமபிஜாநந்தி தத்த்வே நாதஸ் ச்யவந்தி தே—৷৷9.24৷৷

அஹம் = நான்
ஹி = நிச்சயமாக
ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி = அளிக்கிறார்களோ
தத் = அதை
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.–
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்—৷৷9.27৷৷

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
த³தா³ஸி = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

ஸமோ = சமமாக
அஹம் = நான்
ஸர்வபூ⁴தேஷு = அனைத்து உயிர்களுக்கும்
ந = ஒருவரும் இல்லை
மே = எனக்கு
த்³வேஷ்யோ = பகைவர்கள்
அஸ்தி ந ப்ரிய: = நண்பர்கள்
யே = எவர்
பஜந்தி = தொழுகிறார்களோ
து = ஆனால்
மாம் = என்னை
பக்த்யா = பக்தியுடன்
மயி = என்னுள் இருக்கிறார்கள்
தே = அப்படி பட்டவர்களில்
தேஷு = அவர்களில்
சா = மேலும்
அபி = நிச்சயமாக
அஹம் = நான்

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக –
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ்வண்ணமாக
நெஞ்சை பழக்பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

நஞ்சீயர் உபாசகருக்குச் சொன்ன கிரமம் அடைய பிரபன்னருக்கு தேஹ யாத்ரா சேஷமாக ரஹஸ்யத்திலே உண்டு
திருமந்திரத்தை இடக்கை பத்துக்கொண்டு என்னுகை கர்மயோகம்
அதனுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுகை ஞான யோகம்
அவ்வர்த்தம் இருக்கை பக்தி யோகம்
பக்தி பரவசராய் எம்பெருமானை நிர்வாஹகன் என்று துணிகை பிரபத்தி

————

10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமந்விதா—–৷৷10.8৷৷

நான் எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணம் ஆகிறேன் -என்னாலேயே பொருள்கள் அனைத்தும் செயல் படுகிறது
என்கிற இந்த என்னுடைய இயல்வான தடை அற்ற செல்வத்தையும் கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்தே
தலை சிறந்த ஞானிகள் பேர் அன்புடையவர்களாய் எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை உபாசிக்கிறார்கள் –

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷

மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி
மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து
பரஸ்பரம் = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்

தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷

தேஷாம் = அவர்களுக்கு
ஸததயுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்

அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸயஸ்தித-
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷

அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்
கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)
ஸர்வ = அனைத்து
பூ⁴தாஸ²= பூதங்களின்
யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே
அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்
ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )
ச = மேலும்
பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி
ஏவ ச = நானே

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம் ஸேந ஸ்திதோ ஜகத்—-৷৷10.42৷৷

அத = மேலும்
வா = அது, அதைப் பற்றி,
ப³ஹுன = பலப் பல
ஏதேந = அதன் மூலம்
கிம் = எதற்கு ?
ஜ்ஞாதேந = அறிவு, அறிவது
த்வா = நீ
அ ர்ஜுந = அர்ஜுனா
விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்
அஹம் = நான்
இதம் = இதை
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்
ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து
ஜக³த் = உலகை

————-

11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –

ஏவமேதத் யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர.–
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புருஷோத்தம–৷৷11.3৷৷

ஏவம் = அப்படியே
தத் = இருக்கட்டும், உள்ளது
யதா = அது
அத்த = கூறியது
த்வம் = நீ
ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )
பரமேஸ்²வர = பரமேஸ்வர
த்ரஷ்டும் = காணும்படி
இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்
தே = உன்னுடைய
ரூபம் = வடிவை
ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான
புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ–நமோஸ்து தே தேவவர ப்ரஸீத—
விஜ்ஞாது மிச்சாமி பவந்தமாத்யம் -ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்–৷৷11.31৷৷

தேவர்களில் தலை சிறந்தவனே -மிகக் கடுமையான உருவத்தை உடைய தேவரீர் என்ன செய்ய விரும்புகிறீர் –
என்று ஆதி காரணனான தேவரீரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் –
நீர் செய்ய விரும்புவற்றை அறிகிறேன் அல்லேன் -எனக்கு அதைச் சொல்லுவீராக
உமக்கு எனது வணக்கம் உரித்தாகுக -அருள் புரிவீராக

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷

ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷

முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
அதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் —

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா–.
ஸக்ய ஏவம் விதோ த்ருஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா—৷৷11.53৷৷

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

ஸம்ஸார ஸர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்
கிருஷ்ணேதி வைஷ்ணவம் மசந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத் நர

————–

12– ஸ்ரீ பக்தி யோகம்:

ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே.–
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷

ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
மயி = என்னில்
ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து
மநோ = மனம்
யே = அவர்கள்
மாம்= என்னை
நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து
உபாஸதே = உபாசனை செய்து
ஸ்ரத்தயா = சிரத்தையுடன்
பரயோ = உயர்ந்த
உபேதாஸ்தே = கூடியவர்களாக
மே யுக்ததமா மதா: =என்னால் யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்—-
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேஸித சேதஸாம்—৷৷12.7৷৷

தேஷாம் = அவர்களை
அஹம் = நான்
ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்
ம்ருத்யு = மரணம்
ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்
ஸாகராத் = விழுங்கும், கடல்
பவாமி = நான்
நசிராத் = வேகமாக
பார்த்த = பார்த்தனே
மய்யா = என்னை
அவேஸித = அடைகிறார்களோ
சேதஸாம் = மனதால்

யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷

யே = அவர்கள்
து = மேலும்
தர்ம்யாம்ருத = தர்மம் என்ற அமிர்தத்தை
இதம் = இந்த
யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட
பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன்
மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு
பக்தாஸ் = பக்தர்கள்
தே = அவர்கள்
அதீவ = மிக அதிகமான
மே = அவன்
ப்ரியா: = பிரியமானவன்

———-

சரம ஷட்கம்

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி —
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது –
இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் அறியாத சோகம் அங்கு -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

——————————————

13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

 

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஸரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷

குந்தியின் செல்வனான அர்ஜுனா -வெளியில் காணப்படும் இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப் பெறுகிறது –
இந்த சரீரத்தை எனது என்று எவன் அறிகிறானோ அவனை ஷேத்ரஞ்ஞன் என்று
ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரேஷு பாரத–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத்தஜ் ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷

க்ஷேத்ரஜ்ஞம் = க்ஷேத்ரம் பற்றிய ஞானம்
சா = மேலும்
அபி = அது அன்றியும்
மாம் = நான்
வித்தி = அறிவாய்
ஸர்வ க்ஷேத்ரேஷு = அனைத்து க்ஷேத்ரங்களிலும்
பாரத = பரத வம்சத்தவனே
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஓர் = க்ஷேத்ரம் மற்றும் அதை அறிபவனும்
ஜ்ஞாநம் = ஞானம்
யத் = அந்த
தஜ் = அது
ஜ்ஞாநம் = ஞானம்
மதம் = கொள்ளப்பட்டது
மம = என்னால்

ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் –
1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-
கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து
2-அடம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் –
4-ஷாந்தி-கலங்காமல் பொறுத்து –
5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை –
6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம்
7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் –
8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் –
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–
11-அஹம் அல்லாத தேகத்தை அஹமாக நினைக்காமல் —
12-ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை
14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்-இவை அநித்தியம் –
நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே
ஆத்ம சிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து – கர்ணன் விபீஷணன் வாசி உண்டே –
15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல்
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி
17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே
19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு
20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை –
இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–
மத் பக்த ஏதத் விஜ்ஞாய மத் பாவா யோப பத்யதே–৷৷13.19৷৷

இதி = இதுவே
க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்
ததா = அதே போல
ஜ்ஞாநம் = அறிவு
ஜ்ஞேயம் = அறியப்படுவது
ச = மேலும்
உக்தம் = சொல்லப்படுவது
ஸமாஸத:= தொகுத்து கூறினேன்
மத் பக்த = என் பக்தன்
ஏதத் = இந்த
விஜ்ஞாய = அறிந்த பின்
மத்³பா⁴வாய = என் தன்மையை
உபபத்யதே = அடைகிறான்

அநாதி த்வாந் நிர் குணத்வாத் பரமாத்மாயமவ்யய–
ஸரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷

அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்
நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்
பரமாத்மா = பரமாத்மா
அயம் = அவன்
அவ்யய: = மாற்றமில்லாமல்
ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்
அபி = மேலும்
கௌந்தேய = குந்தி மைந்தனே
ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை
ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை

யதா ஸர்வ கதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷

யதா = அப்படி
ஸர்வகதம் = எங்கும் இருந்தாலும்
ஸௌக்ஷ்ம்யாத் = சூக்க்ஷுமமாய் இருப்பதால்
ஆ காஸம் = ஆகாசம்
ந பலிப்யதே = கரை படாமல் இருப்பது போல
ஸர்வத்ர = எங்கும்
ஆவஸ்தித = இருப்பினும்
தேஹே = தேகத்தில்
ததா = அதே போல
ஆத்மா = ஆத்மாவும்
ந பலிப்யதே = கரை படிவது இல்லை

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோரேவம் அந்தரம் ஜ்ஞாந சக்ஷுஷா–
பூத ப்ரக்ருதி மோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ = க்ஷேத்ரம் மாறும் க்ஷேத்ரன்ஞன்
எவம் = அப்படியாக
அந்தரம் = வேறுபாடுகளை
ஜ்ஞாந சக்ஷுஷா = ஞானக் கண்ணால் காண்பார்களோ
பூத ப்ரக்ருதி மோக்ஷம் = பிரக்ரிதியில் இருந்து மோக்ஷம் அடைகிறார்கள்
ச = மேலும்
யே = அவர்கள்
விது= அறிகிறார்கள்
யாந்தி = அடைகிறார்கள்
தே = அவர்கள்
பரம் = உயர் நிலையை

————–

14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா–
ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷

ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப்
பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் –
எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ –
சொல்லபோகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர்
ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று
சிரமப்படவும் மாட்டார்கள் –
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே
எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம்
அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷

ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது

அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷

ஸம துக ஸுக = துக்கத்தையும் இன்பத்தையும் சுகமாக பார்ப்பான்.
ஸ்வஸ்த = தன்னிறைவு கொண்டான்
ஸம லோஷ்டாஸ்ம காஞ்சந: = மண்ணாங் கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்
துல்ய ப்ரிய அப்ரியோ = மனதிற்கு பிடித்ததையும் பிடிக்காததையும் ஒரே அளவாக பார்ப்பான்
தீர = உறுதியுடன் இருப்பான்
துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி: = நிந்தனையையும் புகழ்ச்சியையும் ஒன்றாகப் ஏற்றுக் கொள்வான்

மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷

மாநாபமாநயோஸ்துல்ய = மான அவமானங்களை ஒன்றாகக் கருதுவான்
ஸ்துல்யோ = ஒன்றாகக் கருதுவான்
மித்ராரிபக்ஷயோ: = நண்பனுக்கும் பகைவனுக்கும் இடையில்
ஸர்வாரம்பபரித்யாகீ = அனைத்து தொழில் முயற்சிகளையும் விடுத்து
குணாதீத: ஸ உச்யதே = குணங்களை கடந்தவனென்று கூறப்படுகிறான்

—————

15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–

13 அத்தியாயத்தில் சரீரம் ஆத்மா ஸ்வரூப ஸ்வ பாவங்கள்
14-அத்தியாயத்தில் முக்குண வசத்தால் ஜீவனைக் கட்டி வைக்கின்றன -கடப்பது எவ்விதம்
தன்னிடம் பக்தி செய்து பரிசுத்த ஆத்மாவை அடைகிறான்
15-அத்தியாயத்தில் –புருஷோத்தம வித்யை உபதேசம்

சம்சார மரம் வெட்ட அஸங்கம்-நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்க்க அவனையே கால் கட்டி அவன் அருளாலேயே பெற வேண்டும் –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

மேல் ஐந்து ஸ்லோகங்களால் புருஷோத்தம வித்யை உபதேசம்

யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷

யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத்தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

—————

16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —

தைவ ஸம்பத் உள்ளவனுக்கு 26 குணங்கள் முதல் மூன்று ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறான்
அஹிம்ஸா பிரதமம் புஷ்ப்பம் புஷ்ப்பம் இந்திரிய நிக்ரஹ ஸர்வ பூத தயா புஷ்ப்பம் ஷமா புஷ்ப்பம் விசேஷத
ஞானம் புஷ்ப்பம் தபஸ் புஷ்ப்பம் த்யானம் புஷ்ப்பம் ததை வ ச ஸத்யம் அஷ்டவித புஷ்ப்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத்
ஸத்யம் -விகாரம் இன்றி இருப்பவன்

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

முன் கூறியபடி என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் –
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
7- அத்யாயம் ஆஸூரம் பாவம் நால்வர் பற்றி சொன்ன நால்வரையே இங்கும்

 

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில்
வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து
இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –
ஆகையால் சாஸ்திரம் பிரமாணம் -ப்ரஹ்மம் உள்ளபடி -தெரிவதற்கும் உபாயம் அனுஷ்ட்டிக்கவும்
சாஸ்த்ர தத்வம் நானே உபாயமும் நானே -கர்மங்களை சாஸ்திரம் படி செய்ய யோக்யதை பெற்று
உயர்ந்த ப்ராப்யமான என்னை அடைவாய்

ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோகீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

————–

17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

ஸாஸ்த்ர விஹித கர்மங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் -மூன்று குணங்களுக் சேர மூன்று விதமாய் இருக்கும் –
அன்ன மயம் ஹி சோம்ய மனம்
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி
ஸாத்விக ஆகாரத்தால் -ரஸம் ரத்தம் -மாம்சம் -மேதஸ் எலும்பு மஜ்ஜை ஸூ க்லம்-ஏழு தாதுக்களும் நிலை பெற்று விளங்கும்

காயிக வாசக மானஸ தபஸ்ஸூக்களை யும் பற்றி அருளிச் செய்கிறான்

தத் -ப்ரஹ்மம்
சத் -உள்ளது
சாது -மங்களம்
ப்ரணவத்துக்கு எல்லாவற்றுக்கும் தொடர்பு உண்டே

ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே–
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த பார்த்த யுஜ்யதே–৷৷17.26৷৷

குந்தீ புத்திரனே சத் என்னும் இச்சொல் இருக்கும் பொருள் என்னும் அர்த்தத்திலும் – நல்ல பொருள் என்னும் அர்த்தத்திலும்
உலகிலும் வேதங்களிலும் வழங்கப்படுகிறது – அவ்வண்ணமே நல்ல லௌகிக கர்மா விஷயங்களிலும்
சத் என்னும் சொல் வழங்கப் படுகிறது
சத் சப்தம் -லோகத்தில் சத் உணவு சத் பிள்ளை இருக்கிறது -சத் நன்றாக இருக்கிறது என்ற அர்த்தமும் உண்டே –
நல்ல லௌகிக கர்மங்களும் சத் சப்தம் சொல்வர் -சத் பிரயோகம் எதற்கு இந்த ஸ்லோகம்

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி ஸதிதி சோச்யதே–
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபி தீயதே–৷৷17.27৷৷

யாகத்திலும் தவத்திலும் தானத்திலும் மூ வர்ணத்தவர்கள் நிலை நிற்பதும் சத் என்று சொல்லப்படுகிறது –
அந்த மூ வர்ணத்தவர்களுக்காகவே ஏற்பட்ட யஜ்ஞம் தானம் முதலான கர்மமும் சத் என்றே சொல்லப்படுகிறது
யஜ்ஜம் தானம் தாபஸ் -சத் சொல்லி செய்கிறார்கள் சத் ஓம் சேர்ந்தே -ஓம் பொது தானே -கர்மத்தை –
லௌகிக பலத்தை ஆசைப்பட்டு ஓம் சத்

அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ் தப்தம் க்ருதம் ச யத்–
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத் ப்ரேத்ய நோ இஹ–৷৷17.28৷৷

குந்தீ புத்திரனே -ஸ்ரத்தை இல்லாமல் செய்யப்படும் யாதொரு ஹோமமும் தானமும் யாதொரு தவமும் அனுஷ்ட்டிக்கப்படுகிறதோ –
அது – அசத் -என்று சொல்லப்படுகிறது – மோக்ஷத்தின் பொருட்டும் ஆவது இல்லை –
இவ்வுலகப் பலங்களின் பொருட்டும் ஆவதில்லை
அஸ்ரத்தையால் -இங்கு தான் இவன் கேள்விக்கு நேராக பதில் -சாஸ்த்ர விதி -இருந்தும் ஸ்ரத்தை இல்லா விடில் பலன் இல்லையே –
இது வரை ஸ்ரத்தையால் பண்ணினாலும் சாஸ்திரம் விதிக்கா விடில் வீண்
ஸ்ரத்தை இல்லா விடில் சத்தாகும் -மோக்ஷம் கொடுக்காது இந்த லோக ஐஸ்வர்யமும் கிடையாது -நோ இஹ -பிரத்ய –

—————-

18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஸாத்விக ராஜஸ தாமஸ தியாகங்கள்
ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவாலேயே நியமனம்
பராத்து தச் ஸ்ருதே -2-3-40-
ஸாத்விக ராஜஸ தாமஸ புத்திகள்
வர்ணாஸ்ரம தர்மங்கள்

நாராயண ஏக நிஷ்டஸ்ய யாயா சேஷ்டா தத் அர்ச்சனம்
யோ யோ ஜல்பஸ் ஸஜபஸ் தத் த்யானம் யன் நிரீக்ஷணம்
தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் தச் உச்சிஷ்டம் ஸூ பாவனம்
தத் யுக்தி மாத்ரம் மந்த்ர அர்க்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்–
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வந் நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷

சரீரத்தோடு கூடிய மனிதனுக்கு இயற்கையில் கை வரக்கூடிய உபாயமாய் இருக்கும் கர்ம யோகம் குறையுடையதாய்
இருந்தாலும் சில காலம் தனக்கு அனுஷ்ட்டிக்கப்பட்ட பிறருக்கு உரிய உபாயமான ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
இயல்பாகவே பொருந்தி இருக்கும் கர்மத்தைச் செய்பவன் பாபத்தை பலமான சம்சாரத்தை அடைய மாட்டான்
வர்ணாஸ்ரமமே கர்ம யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன -பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
தன் கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது –
பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷

புத்த்யா விஸூத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச–
ஸப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷

விவிக்த ஸேவீ லக்வாஷீ யத வாக் காய மாநஸ–
த்யாந யோக பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித–৷৷18.52৷

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–
விமுச்ய நிர்மமஸ் ஸாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷18.53৷৷

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

குந்தீ புத்திரனே த்யான சித்தியை அடைந்தவன் எந்த உபாயத்தால் ப்ரஹ்மம் எனப்படும்
ஆத்ம ஸ்வரூபத்தை அடைவானோ
அந்த உபாயத்தை சுருக்கமாக என்னிடம் இருந்து கேட்பாயாக -அந்த ப்ரஹ்மம் எத்தகையது என்றால்
த்யான ரூபமான ஞானத்திற்குப் பரம ப்ராப்யமாய் இருப்பது அந்த ப்ரஹ்மமே

ஆத்ம தத்வ விஷயமான உண்மை அறிவோடு கூடியவனாய் – முன் கூறிய சாத்விக த்ருதியாலே
நெஞ்சை விஷயங்களில் இருந்து மீட்டு -சப்த ஸ்பர்ச ரஸ ரூப கந்தங்கள் ஆகிற புலன்களை விட்டு –
விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டு – த்யான விரோதிகளோடு தொடர்பு இல்லாத ஏகாந்தமான இடத்திலே
இருப்பவனாய் -அளவோடு உண்பவனாய் -மநோ வாக் காயங்களை தியானத்தில் ஈடுபடுத்தினவனாய் –
இறுதி வரையில் தினம் தோறும் த்யான யோகத்தை அனுஷ்டிப்பவனாய் –
ஆத்மா தவிர்ந்த விஷயங்களில் வைராக்கியத்தை வளர்ப்பவனாய் -தேகத்தில் ஆத்மா என்னும் அபிமானத்தையும்
அவ்வபிமானத்தை வளர்க்கும் வாசனா பலத்தையும் -அது காரணமாக வரும் கர்வத்தையும் -பேராசையையும் கோபத்தையும் –
உறவினரையும் கை விட்டு தன்னது அல்லாதது அனைத்திலும் தன்னது என்னும் நினைவு அற்றவனாய் –
ஆத்ம அனுபவத்தையே இனியதாகக் கொண்டவனாய்-த்யான யோகத்தைச் செய்பவன்
ஆத்மாவை உள்ளபடி அனுபவிக்கிறான் –

ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி கண்டவன் கலங்காத மனத்தை உடையவனாய் –
என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –

ஆத்மதியானத்துக்கு -சுருக்கமாக சொல்கிறேன் கேள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை –
கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து –
மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-
1-ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே —
2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா –
3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாண ஏக குணாத்மகம்-
பரம பாவ்யம் பவித்ராணாம் -மங்களங்களுக்கு இருப்பிடம்
4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் –
5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்ய சாகரம் அன்றோ
6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா
8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —

ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா–৷৷18.61৷৷

வாஸூ தேவன் எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில்
ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும்
சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்
நானே செய்வேன் என்றால் நீ தூண்டுகிறாய் என்று எதனால் சொன்னாய் -ஈஸ்வரன் -நியமிக்கிறவன் –
சர்வ ஜீவ ராசிகளுக்கு ஹிருதய பிரதேசம் -சிந்தனம் உதயம் ஆகும் இடம் -நானே உள்ளேன் —
இருந்து ஞானம் ஸ்மரணம் மறதி மூன்றையும் நானே செலுத்துகிறேன் முன்பே சொன்னேன் —
யந்த்ரம் -பிரகிருதி கார்யமான சரீரம் -அதில் ஏற்றி வைத்த ஆத்மா -மாயா சக்தியால் -முக்குணங்களில் ஈடுபடுத்தி –
முக்குணம் தகுந்த படி நடத்துகிறேன் -எத்தை செய்தாலும் என் ஆட்சியால் -சாமான்ய காரணம் பகவான் தான் –
விசேஷ கார்யம் கர்மா அன்றோ

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே
சோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -என்னை ஒருவனையே பற்று-
சர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிப்பேன் சோகப் படாதே –
பாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -ஆரம்ப விரோதிகள் இருக்குமே
ஆரம்பிக்கவே முடியாதே –அதைக் கண்டு பயந்து சோகம் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணிக் கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் -என்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந–
ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷

பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே
தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது
என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது
கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது
எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது
தபம் இல்லாதவனுக்கு சொல்லாதே –பக்தி இல்லாதவன் -ஆசை இல்லாதவன் -சொல்லாதே
அஸூயை உள்ளவனுக்கு சொல்லாதே –
திரௌபதி விரிந்த குழல் முடிப்பதே இவனுக்கு லஷ்யம் -அதனால்
ரஹஸ்யம்-ரத்னத்தை- முற்றத்தில் கொட்டி விட்டு பதண் பதண் என்கிறான் –

யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர–
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம–৷৷18.78৷৷

எவ்விடத்தில் சிறப்புகளை எல்லாம் ஆளுபவனான கண்ணன் இருக்கிறானோ –
எவ்விடத்தில் வில்லை ஏந்திய அர்ஜுனன் இருக்கிறானோ -அவ்விடத்திலேயே
எல்லாச் செல்வமும் வெற்றியும் வைபவங்களை தர்மமும் நிலையாக உள்ளன -என்பது
எனது கருத்தாகும் என்று சஞ்சயன் கூறினான் –
முதல் கேள்விக்கு இங்கு பதில் -யார்க்கு வாழ்ச்சி -நேராக சொல்லாமல் எங்கு கண்ணனோ அர்ஜுனனோ அங்கே வெற்றி
காண்டீபம் தரித்த -யோகேஸ்வரன் சேர்த்தி இங்கு தான் வெற்றி நிச்சயம்
தர்மங்கள் வெற்றி வைபவம் செல்வம் இங்கு தான் இது என்னுடைய அபிப்ராயம் –
ஸ்ரீ கிருஷ்ண அனுக்ரஹம் தான் வெற்றி கொடுக்கும்
அது இல்லாமல் நீ கெட்டே போகிறாய் என்று த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்லி நிகமிக்கிறார்

ப்ரபன்னனுக்கு இருக்க வேண்டிய ஏழு லக்ஷணங்கள்
தேஹாத்ம அபிமான நிவ்ருத்தி
ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி
ஸ்வ யத்ன நிவ்ருத்தி
அபந்துஷு பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி
விஷய நிவ்ருத்தி
நமஸ்ஸின் யாதார்த்யமான பாகவத சேஷத்வம்

ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரம் இதம் புண்யம் ய படேத் ப்ரயத புமான்
விஷ்ணோ பதம் அவாப்நோதி பய சோகாதி வர்ஜித

ஸ்ரீ கீதா சாஸ்திரம் கேட்டால் தேர் கடாவிய கனை கழல் பெறப் பெறுவோம்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ த்வயமும் ஸ்ரீ திருவாய் மொழியும் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்–

June 14, 2022

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹி -முதல் வியாக்யானம்
தத்வ ஞானான் மோக்ஷம்
ரஹஸ்ய த்ரயங்கள் -திருமந்திர விவரணம் த்வயம் -அதன் விவரணம் சரம ஸ்லோகம்
த்வயம் -இரண்டு வாக்கியங்கள் -ஆறு பதங்கள் -பத்து அர்த்தங்கள்

————–

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————————————————————————————————————————————————

ஸ்ரீ சார ஸங்க்ரஹம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –
பூர்வ வாக்யம் உபாயத்தையும் -உத்தர வாக்கியம் உபேயத்தையும் –
இப்படி இரண்டு அர்த்தங்களை அறிவிக்கும் என்பதால் த்வயம்
பிராட்டி பெருமாள் இருவரையும் காட்டுவதால் த்வயம்
இரண்டு திருவடிகளைக் காட்டுவதால் த்வயம்-
பூர்வ வாக்கியம் ஐந்து அர்த்தங்கள் -உத்தர வாக்கியம் ஐந்து அர்த்தங்கள் -என்பர் பிள்ளை லோகாச்சார்யார்
திருவாய் மொழி த்வயார்த்த ப்ரதிபாதகம்
முதல் ஐந்து பத்துக்கள் பூர்வ வாக்ய விவரணம்
அடுத்த ஐந்தும் உத்தர வாக்ய விவரணம்

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
ஸ்ரீ பதி சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திம் ச குருதே ஸ்வயம்
பர ஸ்வரூபம் முதல் இரண்டு பத்துக்கள்
ஸ்வ ஸ்வரூபம் அடுத்த இரண்டும்
உபாய ஸ்வரூபம் -அடுத்த இரண்டும்
அநிஷ்ட நிவ்ருத்தி அடுத்த இரண்டும்
இஷ்ட பிராப்தி -கடைசி இரண்டும்

இவரே வேறே ஒரு நிர்வாகம்
முதல் நான்கும் ஸித்த வஸ்துக்களான பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் அருளிச் சொல்லி
கடைசி நான்கு பத்தும் ஸாத்ய வஸ்து-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
இடையில் இரண்டு பத்துக்கள் ஸித்த ஸாத்ய பரங்கள்-சித்தஉபாய ப்ரதிபாதிகம் ஐந்தாம் பத்து -சித்த உபாயமான அவனை அறிந்துபற்றுதல் ஆறாம் பத்து –

திராவிட உபநிஷத் சாரத்தில்-முதல் பத்தில் எம்பெருமானே உபாயம் என்றும்
‘இரண்டாம் பத்தில் அவனே ப்ராப்யம் என்றும்
மூன்றாம் பத்தில் அவன் திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன் என்றும்
நான்காம் பத்தில் அவனைத்தவிர வேறே பலம் கிடையாது என்றும்
மேல் ஆறு பத்துக்களால் அத்தையே விஸ்தீ கரிக்கிறார் என்பர்

————

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் த்வய மஹா மந்த்ர ரத்னத்தை பிராட்டிக்கு உபதேசம் பண்ணி அருளினான்

ஸ்ரீயப்பதித்வத்தையும் அதனால் அவனுக்கு உண்டான ஏற்றத்தையும் முதல் பத்து விவரிக்கிறது –
உயர்வற -திருவாய் மொழி -ப்ரஹ்ம ஸப்தார்த்தம்
அந்த ப்ரஹ்மமே நாராயணனே -வண் புகழ் நாரணன் -இத்யாதிகளால் அருளிச் செய்து
அவனே ஸ்ரீ மன் நாராயணன் -என்று அடுத்த திருவாய் மொழியால் காட்டி அருளுகிறார்

இத்தை அடி ஒற்றியே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறருக்கு அரிய வித்தகன் -மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
ஸுலப்ய பரத்வங்களுக்கு ஹேது ஸ்ரீயபதியாய் இருப்பதே-

———–

என் அமுதம் -சுவையன் திருவின் மணாளன் -1-9-1-ரஸ் யத்வ -ராஸிக் யங்களுக்கு ஹேது பிராட்டி சம்பந்தமே

மலராள் மைந்தன் -1-5-9-
திருமகளார் தனிக்கேள்வன் -1-6-9-
மலராள் மணவாளனை -1-10-4-
இவ்வாறு முதல் பத்தால் ஸ்ரீ யபதித்தவம் தெரிவிக்கிறது

————-

இரண்டாம் பத்தாலே நாராயண ஸப்தார்த்தம்

தோற்றோம் மட நெஞ்சம்  எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

நாரங்களுக்கு இருப்பிடமாக -பஹு வ்ரீஹி ஸமாஸம் -வாத்சல்யம காட்டும் தாய் -ஸ்வாமி சொத்தை விடான் –
அவன் எங்கு இருக்கிறான் -எங்கும் உளன் கண்ணன் –

விண்ணோர் நாயகன்  எம்பிரான் எம்மான் நாராயணனாலே -2-7-1-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா –
இவை அனைத்தும் நாராயணனாலேயே -ஏவகாரம் -ஸ்வாமி செய்ததாலேயே -தாம் செய்தது ஒன்றுமே இல்லையே –

நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-

நாரணன் ஸப்தம் சொல்லி அதன் அர்த்தமான முழு ஏழு உலகுக்கும் நாதன் என்று அசேஷ சித் அசித் வஸ்து சேஷித்வத்தையும்
பின்பு வேதமயன் என்று இவ்வர்த்தம் வேதங்களால் ப்ரதிபாத்யன்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர என்றும்
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண -என்றும்
ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ் ச நாராயண -என்றும்
ஸம்புஸ் ச நாராயண –சிவஸ் ச நாராயண -என்றும்
எல்லா சப்தங்களோடும் சாமானாதி கரண்யேந நாராயண சப்தத்தை வேதாந்தங்கள் கோஷிக்குமே

ஆக இரண்டாம் பத்து முழுவதும் நாராயண ஸப்தார்த்தை ஆழ்வார் ப்ரதிபாதித்தார் ஆயிற்று –

————–

மூன்றாம் பத்தில் -உபாய உபேய த்வங்கள் -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் ஆனவனுக்கே

முடிச்சோதியாயினது முகச்சோதி -இத்யாதி
நலமுடையவன் என்றும் அருளினான் என்றும் குண யோகத்தையும்
அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று நித்ய விபூதி யோகத்தையும் –
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -என்று லீலா விபூதி யோகத்தையும் –
துயரறு சுடர் அடி -என்று திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் -ஸங்க்ரஹமாக அருளிச் செய்தார் கீழே –

சரணவ் திருவடிகளை -சேர்த்தி அழகையும் உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாய் இருக்குமே
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை -பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே
இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் -குண ப்ரகாசகமுமாய் – சிசுபாலனையும் அகப்படடத் திருத்திச் சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது –
முழுதும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியாய் வந்து இறைஞ்ச இராதே
கமல பாதம் வந்து என்னும்படி நீள் கழலாய்ச்
சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடி யாகையாலே
யாவருக்கும் வன் சரணாய்
அழும் குழவிக்கும் பேதைக் குழவிக்கும் தாரகமுமாய் போக்யமுமாய்
இணைத்தாமரை என்னும்படி சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளைச் சொல்லுகிறது –

அவன் மாம் -என்று தன்னைப்பற்றிச் சொன்னாலும்
சேஷபூதர்
கண்ணன் கழலிணை பணிமின்
ஆயனடி அல்லது
நின்னடி யன்றி மற்று அறியேன் -என்று பற்றுவார்கள் அன்றோ
ருசி ஜனகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டு இறே

இத்தால்
புருஷகாரமான பனிமலராள் வந்து இருக்கும் இடமாய்
சுடர் வான் கலன் பெய்த மாணிக்கச் செப்பு போலே ஸ்வரூப குணங்கள் நிழல் எழும்படியாய்
திருமேனி கிடந்ததுவே என்னும்படி அவை ஒழியவும் தானே கார்யம் செய்யவற்றாய்
ஸி ஸூ பாலனோடு சிந்தயந்தியோடு வாசியற ஸித்த ஸாத்ய ரூபமான உபாயங்களால் செய்யும் கார்யத்தைத் தானே செய்து அலவலைமை தவிர்த்த
காதல் கடல் புரைய விளைவித்த என்னும்படி
அத்வேஷத்தையும்
பரபக்தியையும் உண்டாக்கி
தன்னோடு சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது –அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –

சரணவ்-
இணைத்தாமரை அடி
இரண்டு தாமரைப்பூவை நிரைத்து வைத்தால் போலே இருக்கிற சேர்த்தி அழகையும்
த்வி வசனம் இரண்டுக்கு மேல் மற்ற ஓன்று புகுர ஸஹியாமல்
ஸஹாயாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது –

ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாகச் சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும்
என்னடியார் அது செய்யார் என்னும்படி நாராயண பதத்தில் சொன்ன குண விசிஷ்டனான அவனும் கைவிடிலும்
திருவடிகள் தன் வை லக்ஷண்யத்தாலே துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்கிறபடியே
பற்றினாரை நழுவ விடாதே திண்மையை யுடைத்தாய் இருக்கும்

நாராயண பதத்தில் கூறப்பட்ட குணங்களுக்கு இருப்பிடமான பரமாத்ம ஸ்வரூபம்
ந க்ராஹ்ய
ஸ்வப்னதீ கம்யம்
ஊனக் கண்களுக்கு அவிஷயமாகக் கூறப்படுவதாலும்
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க விரகு இல்லாமையாலும்
கண்டு பற்றுகைக்காக திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது –

ஆஸ்ரயணத்துக்கு திருமேனி -விக்ரஹம்-அபேக்ஷிதம் ஆகில் வாத்சல்யாதிகள் செய்கிறது என் என்னில்
குற்றம் கண்டு கை விடாமைக்கும்
அங்கீ காரம் தன் பேறாகைக்கும்
அங்கீ கார விஷய பூத சேதனர் சிறுமை பாராமைக்கும்
வாத்ஸல்யாதிகள் உண்டானாலும் இவை ஆஸ்ரயண உன்முகனைக் குறித்தாகையாலே
ஆஸ்ரயணம் சஷுர் இந்திரிய க்ராஹ்யமான விஷயத்தில் அல்லது கூடாமையாலே
அந்த வாத்ஸல் யாதிகளாலே பிரகாசிதமாய்
ஸுலப்ய குண கார்யமாய்
மூர்த்தம் ப்ரஹ்ம -என்னும்படி குளங்களிலும் அந்தரங்கமாய்
அபிமதோரு தேஹ -என்கிறபடி அபிமதமாய்
ஷாட் குண்ய விக்ரஹம் -என்கிறபடி மாணிக்கச் செப்பில் பொன் போலே அகவாயில் ஆத்ம குணங்களைப் பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது –

ஏக அவயவ மாத்ரமான திருவடிகளை சொல்லுவான் என் என்னில்
சேதனன் அநந்யார்ஹ சேஷத்வத்தை அறிந்தவன் ஆகையாலும்
ஸ்வாமித்வ சேஷித்வங்களுக்கு எதிர் தட்டான ஸ்வத்வ சேஷத்வங்களை அறிந்தவனாகையாலும்
ஸ்தானத்திலே விசேஷ பிராப்தி உண்டாம் போலே அடியேன் சேவடி அன்றி நயவேன் -என்று ஸ்வரூபத்துக்கு அனுரூபமான அம்ருதத்தை
விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ
உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே
என்கிறபடியே ப்ரவஹிக்கையாலும்
சேஷபூதனுடைய உக்தியாகையாலும்
கையைபிடித்துக் கார்யம் கொள்ளுமத்திலும் காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமவன் பக்கலிலே கிருபை அதிசயித்து இருக்கையாலும்
சொல்லிற்று

உபாய வரணத்துக்கு சரணாகதிக்கு
வாத்சல்ய முகேந நம்முடைய பயத்தை ஒழித்து
ருசியைப் பிறப்பித்து
ஞான சக்த்யாதி முகேந கார்யகரனாகுமா போலே
திரு மேனி முகமாகவும்
ருசி ஜனகனுமாய்
உபாயபூதனாகையாலே
அந்த உபாயத்வ ப்ராதான்யத்தைப் பற்றியே சரணவ் பத பிரயோகம் –

தெரிவைமார் உருவமே மருவி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய்
என்கிறபடியே நாசகரமான நாரீ ஜனங்களுடைய நயனங்களில் அகப்பட்டு நாரகிகளாய்ப் போருகிற நார ஜனங்களை
தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்கிறபடியே தன் பக்கலிலே ப்ரவணமாம் படி பண்ணி
ஜிதம் தே புண்டரீகாக்ஷ நமஸ்தே -என்று தோற்றுத் திருவடிகளில் விழும்படி பண்ணி –
ஸர்வதா சரண த்வந்தம் வ்ரஜாமி சரணம் தவ -என்று பின்னை தன்னையே உபாயமாகப் பற்றி –
பாஹி மாம் புண்டரீகாக்ஷ ந ஜாநே சரணம் பரம்
த்வத் பாத கமலா தந்யத் ந மே ஜன்மாந்தரேஷ் வபி
நிமித்தம் குசலஸ் யாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம் -என்றும்
ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்த்திதம் -என்றும்
ஆக இப்படி
ருசி ஜனகமுமாய்
ருசி பிறந்தால் உபாயமுமாய்
இதர விஷயத்தில் சங்கத்தைப் போக்க வற்றாய்
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி –
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி
என்கையாலே ஸர்வ அபாஸ்ரயமாய்
திரு மா நீள் கழல்
திருக்கமல பாதம் வந்து -என்கையாலே ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே தானே சென்று அங்கீ கரிக்கக் கடவதாய்
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் -என்று ஞான விஷயமாய்
உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது –
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்று பக்தி விஷயமாய்
அந்த பக்தியால் கலங்கி
உபாயம் வாப்யபாயம் வா ஷமோன் யன் நாவலம்பிதும் –
என் நான் செய்கேன் -என்கிறபடியே உபாய அனுஷ்டானம் பண்ண ஸக்தர் அல்லாதார்க்கு
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்று உபாயமாய்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
கற்றினோம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் -என்று உபதேச சமயத்திலும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணனைத் தாள் பற்றி
வேங்கட மா மலை மேய ஆயன் அடி யல்லது மற்று அறியேனே -என்று ஸ்வீ கார சமயத்திலும் வியதிரிக்தங்களில் செல்லாதபடி பண்ணக் கடவதாய்
செய்ய நின் திருப்பாதத்தை யான் என்று கொல் சேர்வது
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல்
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
த்வச் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி கதா புந –என்று ப்ராப்யமாகப் பிரார்திக்கப் படுவதாய்
நான் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் சரணங்கள் என்கையாலே ப்ராப்யத்வேந லப்தமாய்
நலம் கழல் அவனடி நிழல் தடம்
ஆத்தன் தாமரை யடி -என்று நிழல் கொடுத்து ஆப்தமாக வழி நடத்தி
தாளின் கீழ்ச் சேர்த்து
பாத பற்புத் தலை மேல் சேர்த்து
பொன்னடிச் சேர்த்து வேறே போக விடல் -என்று நிஷ்கர்ஷித்துப் பிரார்த்திக்க
பிராத்தனைக்கு அனுகுணமாய் அருளி
அடிக்கீழ் இருத்திக் கொண்டு
இறப்பவை பேர்த்து
அடிக்கீழ் குற்றேவல் –
என்கிற கைங்கர்யத்தில் மூட்டி முடிய நடத்தக் கடவதாய் இறே சரண உப லஷிதமான விக்ரஹம் இருப்பது –

ஆகையால் இறே
ஸ்வரூப குணங்களில் ஓர் அறிவும் இன்றிக்கே விக்ரஹ அனுபவ ஏக பரையாய் இருக்கிற சிந்தயந்தீ
சின்யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்மண ஸ்வரூபிணம் நிருச்ச்வாஸதயா முக்திம் கதான்யா கோப கன்யகா
தச்சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா ததா
தத் பிராப்தி மஹா துக்க விலீநா சேஷ பாதகா -என்றும்
கதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஸாம்யம் உபைதி என்கிறபடியே
நிரதிசய ஆனந்த ரூபமான ஸாம்யா பத்தி ரூப மோக்ஷத்தை கேவல விக்ரஹ த்யானத்தாலே பெற்றாள் என்று எழுதுகிறதும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்று விக்ரஹ தர்சனத்தாலே
பரத்வம் ஸ்வரூபமாகையாலே கழற்ற ஒண்ணாமை கிடக்கிறது அத்தனை -தண்ணளியே விஞ்சி இருப்பது
இவ்வர்த்தம் ராஜ மார்க்கத்தில் போய் கம்ஸ க்ருஹத்திலே புகாதே
நம் தெருவே நடுவே வந்திட்டு -என்னும்படி
நான் இருந்த முடுக்குத் தெருத் தேடிக்கொண்டு வந்த போதே தெரியாதோ
நான் க்ருதார்த்தனானேன் -தரித்ரனானவன் நிதி எடுத்தால் போலே
வைத்த மா நிதி
வைப்பான் மருந்தாம்
என்கிற ஆயர் கொழுந்தாகிற நிதியைப் பெற்று அழித்துக் கெடுத்து உஜ்ஜீவிக்கப் பாரா நின்றேன் -என்று சொல்லும்படி
ருசியே தொடங்கி
மோக்ஷ பர்யந்தமான பேற்றுக்கு எல்லாம் விக்ரஹமே ஹேதுவாக எழுதிற்றும் –

விக்ரஹமே உபாயபூதமாகில் விபவ அர்ச்சாவதார ரூபங்களைக் கண்டவர்கள் பகவத் விஷயத்தில் பிரவணராகாது ஒழிவான் என் எனில்
எல்லாருக்கும் ஒக்கக் காட்சி உண்டே யாகிலும் விஷயம் தான் சவுந்தர்யாதிகளை ஆவிஷ் கரியாமையாலே அந்நிய பரர்கள் ஆகிறார்கள் அல்லது விக்ரஹத்துக்கு அந்த ஸ்வ பாவம் இல்லாமை அன்று –
ஆகை இறே பாஷ்யகாரர்
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலா காரா தீன் பரம பாக்வதான் க்ருத்வா -என்று அருளிச் செய்ததும்-

இளைய பெருமாள் -ந ச அஹம் அபி ராகவ-என்று அவனை விட்டுத் தனக்கு ஸ்வரூபம் இல்லை என்றால் போலே
ஆழ்வாரும் மாறாமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ என்றார்

ப்வாஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -போலவே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட -என்று அருளிச் செய்கிறார்

ச ப்ராது சரணவ் காடம் நிபீட்ய-என்று அவன் திருவடிகளையே உபாயமாகப் போற்றுகிறார்
இது இறே சரண ஸப்தார்த்தம்

ஆக ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று
திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்
சீலம் எல்லை இல்லான் அடி
திருக்கமல பாதம் வந்து
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
நம்பி தன் மா மலர்ச் சேவடி
உன் பொற்றாமரை அடி
அருளுடையவன் தாள்
என்று வாத்சல்யம் தொடங்கி கிருபா பர்யந்தமான குண விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரகாசகமான திருவடி களைச் சொல்லிற்று ஆயிற்று –

இவ்விஷயங்களைத் திரு உள்ளம் பற்றியே பிள்ளை லோகாச்சார்யார் சார ஸங்க்ரஹத்திலே
மூன்றாம் பத்தால்
நாண் மலராம் அடித்தாமரை -என்று-நாட் பூ மலர்ந்தது என்னலாம் படி ஸூகுமாரமான திருவடித் தாமரைகள்
இது இறே துக்க நிவ்ருத்திற்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-பரம போக்யம் என்று வாஸ்தவ அர்த்தம் –

அங்கதிர் அடியன் -என்று அழகிய ஒளி விடுகிற திருவடிகளை யுடையவன் -என்றபடி
பங்கயக்கண்ணன் என்று கூறப்பட்ட நோக்கும்
பவளச் செவ்வாயன் என்று கூறப்பட்ட மந்த ஹாஸத்துக்கும்
தோற்றார் விழும் திருவடிகள் –

அவன் பாத பங்கயம் -என்று-சேஷியான அவனுடைய பாதபங்கயம் -நிரதிசய போக்யமான திருவடிகள்

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -என்று-சேநா தூளியும் உழவு கோலும் சிறுவாய்க் கயிறும்
தேருக்குக் கீழே சாற்றின திருவடிகளும் அதிலே சாத்தின சிறுச் சதங்கையுமான சாரத்ய வேஷத்தோடே நின்ற நீர்மை -என்றபடி –

மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -என்று குணாகுண நிரூபணம் பண்ணாதே அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யமான திருவடி என்றபடி

ஆக மூன்றாம் பத்தால் நாராயணனுடைய ஸர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் ப்ரதிபாதிதம் ஆயிற்று –

———————–

நான்காம் பத்தில் சரண சப்தார்த்தம்
சரணம் -உபாயமாக-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உடலாக –
உபாயே க்ருஹ ரஷித்ரோ ஸப்த சரணம் இத்யயம் வர்த்ததே ஸாம் பிரதம் ஸைஷ உபாயர்த்த ஏக வாசக
உபாயம் க்ருஹம் ரக்ஷிதா மூன்றையும் காட்டுமே யாகிலும் இங்கே உபாயமே -விவஷிதம்
ரக்ஷகம் என்றும் உபாயம் என்றும் பர்யாயம் -உபாயம் பிரபன்னனுக்கு ரக்ஷகம் என்பது அசாதாரணம் –

அநிஷ்ட நிவ்ருத்தி
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
அநாத்மத் யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வமிதி யாமதி -என்கிற அவித்யையும்
அவித்யா கார்யமான ராக த்வேஷாதிகளும்
கர்ண த்ரயத்தாலே செய்யப்படும் புண்ய பாப ரூப கர்மங்களும்
போக அர்த்தமாக பரிக்ரஹிக்கும் தேவாதி சரீரங்களும்
அவற்றால் அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் –

இஷ்டமாகிறது
கர்ம விதூ நந பிரகாரமும்
ஹார்த்த மார்க்க விசேஷ பிரகாரமும்
ஹ்ருதய குஹா நிர்க் கமனமும்
அர்ச்சிஸ் வாஸர உத்தராயண ஸூக்ல பஷாத் யாதி வாஹிக ஸத் காரமும்
சலில தஹன பவநாத் யாவரண ஸப்த காதி லங்கனமும்
த்ரிகுணாதி க்ரமணமும்
விரஜாக்ய -அப்ராக்ருத நதீ விசேஷ அவகாஹனமும்
ஸூஷ்ம சரீர விமோசனமும்
அமானவ கர ஸ்பர்சமும்
அபஹத பாப் மத் வாதி குண கண தத் ஆஸ்ரய ஸ்வரூப ப்ரகாஸமும்
பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும்
ஐரம்

மதீய திவ்ய சர பிராப்தியும்
திவ்ய அப்சரஸ் சங்க ஸத் காரமும்
ப்ரஹ்ம அலங்கார அலங்கரணமும்
ப்ரஹ்ம கந்தராய தேஜஸ் ப்ரவேஸமும்
திவ்ய மண்டப பிராப்தியும்
திவ்ய பர்யங்க நிரீக்ஷணமும்
ஸ பத்நீக ஸர்வேஸ்வர தர்சனமும்
ஆனந்தமய பரமாத்ம ஸமீபஸ்த்தியும்
பாத பீட பர்யங்க உத்ஸங்க ஆரோஹணமும்
ஆ லோகந -ஆலாப -ஆலிங்கநாத் யநுபவமும்
ஸ்வரூப குண விக்ரஹாத் யநுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷமும்
நாநா வித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்த உசித ஸர்வ பிரகார கைங்கர்ய கரணமும்

இப்படிப்பட்ட அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயத்தைச் சொல்லுகிறது
சரண ஸப்தம் என்றபடி –

ஸ்ரீ மன் நாராயண சரணவ்-ஏக பதமாகக் கொண்டு நிர்வகித்தார் பராசர பட்டர் அஷ்ட ஸ்லோஹியில் -ஷட் பதோயம் த்வி கண்ட -என்று
கமல நயன வாஸூ தேவ பாவ சரணம் -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்றும்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்றும்
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும் உள்ள பிராமண ஜாலங்களை ஆராய்ந்தால் ஸ்ரீ மன் நாராயண -இரண்டையும் விளியாக்கி
தவ என்ற ஒரு பாதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பர்கள் –
இதம் அஷ்ட பதம் வ்யாஸே ஸமாஸே ஷட்பதம் விது -தேசிகன்
ஸ்ரீ மத்வமும் குண யோகமும் திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் -இம்மூன்றுக்கும் சேஷித்வ அனுகுணமாக சம்பந்தம் உண்டு

1-கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4-2-8-
கொம்பு வஞ்சிக்கொம்பு என்றும் ஏகதேச மான கொம்பு என்றும் இரண்டு நிர்வாஹங்கள்
இலங்கை நகர் -இரு சுடர் மீதினில் இயங்கா –
அங்கு அன்றோ சர அக்னியைப் பிரவேசிக்க விட்டான் சக்கரவர்த்தி திருமகன்
இத்தால் ஜனகராஜன் திருமகள் விரோதியைப் போக்கி அருளின படி -அநிஷ்ட நிவ்ருத்திக்குத் தப்பாத உபாய பூதன்

2- வல்வினை தீர்க்கும் கண்ணனை –தொல் வினை தீர-4-4-11-
என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேன் –
ஆழ்வான் திரு நயனங்கள் நோவு பட்ட பின்பு எம்பெருமானார் திரு உள்ளம் நோவு பட்டால் போலே காணும் திருத்தாயார் திரு உள்ளம் படுகிறது-
பெற்றவர்கள் கை விட்டால் பிடித்தவர்கள் கை விடார்கள் இறே -கைப்பிடித்த அழகிய மணவாளன் கை விடான்

3-வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-

4- மேவி நின்ற தொழுவார் வினை போக –
தேஹி மே ததாமி தே -என்று ப்ரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்றுக் கொண்டு போகை அன்றிக்கே
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் -என்பவர்
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் -என்று தொழுபவர்கள் –

5- பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்

6- நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்ற இவை ஒழிய –

7- வேட்கை எல்லாம் விடுத்து கூட்டரிய திருவடிகள் கூட்டினை –4-9-9-
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -நாள் வீடு செய்யும் -போக்கி அருளும் தாய் தந்தை திருமால் -வணங்குவனே
இதுவே கர்தவ்யம்

திருநாரணன் தாள் -அஃதே உய்யப்புகும் ஆறு -4-1-11-
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-

வேதமே ப்ரஹ்மம் அறிய பிரமாணம்
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித்
பராஸ்ய ஸக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிக ஞான பல கிரியா ச
ஸாஷாத் ச உபாயம் நாநாத் -1-4-25-
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ நிமித்தத்வ உபாதாநத்வ உபயோகி நீ -ஸ்ருத ப்ரகாஸர்
ஸங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் உபாதானம் –
ஸங்கல்பம் நிமித்தத்தா அவச்சேதகம்
சேதன அசேதன வை சிஷ்ட்யம் உபாதானதா அவச்சேதகம்
ப்ராப்ய ப்ராபக ஐக்யம்
நெறி வாசல் தானே யாய் நின்றான் -பொய்கையார்
கருணா விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாய பூதன்
போக்யதா விஸிஷ்ட ப்ரஹ்மம் உபேய பூதன்
உபாயம் ஸ்வீ கார காலத்தில் புருஷ ஸா பேஷமாயும் புருஷகார ஸா பேஷமாயும் இருக்கும் –
கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் –
கார்ய காலத்தில் ஸஹ கார்ய அபேக்ஷத்வம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைர பேஷியத்துக்கு ஹானி வரும் என்று கருத்து -மா முனிகள் –

—————-

ஐந்தாம் பத்து -ப்ரபத்யே ஸப்தார்த்தம்

நோற்ற நான்கிலும் இருந்து பிரமாணங்களை எடுத்துக் காட்டி அருளுகிறார் சாரா ஸங்க்ரஹத்தில்
1- தமியேனுக்கு அருளாய் -5-7-2-
தமியேன் -என் பக்கலிலே ஸத்தாத்திரேகியாய் இருப்பது ஒன்றும் இல்லை
அருளாயே -ருசிக்கு பண்ணின கிருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை -பெரியவாச்சான் பிள்ளை
தமியேன் -பிராட்டியை வ்யாவ்ருத்தி -அங்கு திரிஜடை யாகிலும் உண்டே
இங்கு ஆவாரார் துணை என்னும்படி இறே தனிமை
இத்தலையும் குறைவற்றது என்கிறார்
அங்கு பிரியாது தரித்து இருக்கிறவர் படியும் அல்லேன்
இங்கு பிரியாது தரித்து இருக்கிறவர் படியும் அல்லேன்
பிரிந்து இருக்கிற எனக்கும் என்றும்
உபாய ஸூ ன்யனான எனக்கும்
ஸம்ஸாரிகள் துணை இல்லாத எனக்கும் -மூன்று அர்த்தங்கள்
ஆற்றாமையை ஸாதனம் என்று பழி இட்டு விலக்கப் பார்த்தால் நித்ய ஸூரிகளை அன்றோ முற்பட விடப்போவது
உபாய ஸ்வீ காரமும் உபாயம் அன்று அன்றோ
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார்
அவன் அடியாக -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது

2- ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-
ஏக பதம் வ்ரஜ -என்கிற ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறதே
ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணின கிருஷி பலம் -அதுவும் அவனது இன்னருளே
பாதமே சரணாக்கும் ஒவ்தார்யம் வான மா மலையிலே கொழுந்து விடும் –

3- உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-
நானும் எனக்கு கடவனாய் பிறரும் சக்தரான அன்றும் உன்னால் வரும் நீ ஒழிய என்னால் வரும் நீயும் வேண்டா
பிறரால் வரும் நெடியும் வேண்டா என்கை
த்வமேவ உபாய பூதோ மே பவ

4- கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11-
அவதாரணத்தாலே ஸஹ காரி நைர பேஷ்யம் சொல்லுகிறது -மாம் ஏகம்

5-அடி மேல் சேமங்கள் -5-9-11-
பிராட்டி ஆற்றாமை மிகு இருந்தாலும் ராவணனை சபியாதே பெருமாள் வரவையே எதிர்பார்த்து இருந்தால் போல்

6- நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11-
சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது ஒழிய வேறே ஒன்றிலே கால் தாழாது ஒழிகை மஹா விஸ்வாசம் ஆகிறது –

ஆக ஐந்தாம் பத்தால் அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் கூறப்பட்டது

ஆக பூர்வ வாக்யார்த்தம் அருளிச் செய்யப்பட்டது –

—————

திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52-
அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை -1-5-7-ஐஸ்வர்யா கைவல்யங்களைக் கொண்டு அகலாதே
ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியிலே அடிமையே பேறு என்று இருக்கவே அமையும்
அநந்ய சாதனத்வ ஸித்திக்கு உபாய அத்யவசாயம் வேணும்
அநந்ய போகத்வ ஸித்திக்கு உபேய அத்யவசாயம் வேணும்
முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -உபாயாந்தர வைராக்யம்
உத்தர வாக்கியம் நாம் அவனுக்குச் சொல்லும் மாஸூச –
நான் உன்னைப் பிடித்தேன் கொள் சிக்கனவே -ஆழ்வார் திரு வாக்கு கேட்டு சோக நிவ்ருத்தன் ஆனான் –

தாவதார்த்தி ததா வாஞ்சா தாவந் மோஹஸ் ததா ஸூகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே

உத்தர வாக்கியம் ஸ்ரீமதே நாராயணாய நம -மூன்று பதங்கள் -ஐந்து பாகன்களாகப் பிரித்து ஐந்து அர்த்தங்கள் -சார ஸங்க்ரஹம்

முதல் பாகம் -ஸ்ரீ மத் ஸப்தம் -இருவருமாக சேர்த்தியில் கைங்கர்யம் -நித்ய சம்பந்தம் ப்ரதிபாதிதம் ஆயிற்று
இதுக்குப் பிரமாணம் ஆறாம் பத்து

1- திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் -6-5-8-
வேதம் கட்டளைப்பட்டு உள்ளது திருத் தொலை வில்லி மங்கலத்துள்ளார் பரிகரித்த பின்பே
இதை சர்வம் சமஞ்ஜஸம்
ஆராத்யமான திவ்ய மிதுனம்

2-அடிமைசெய்வார் திருமாலுக்கே -6-5-11-

3- ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-திருமகளார் கேள்வன் என்பதாலேயே பெருமை

4- என் திரு மார்வற்கு -6-8-10-

5- கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-
ரக்ஷிக்கும் இடத்தில் ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூட வாயிற்று -ஸ்ரீ யபதியே ப்ராப்யம்
ஞாலத்தூடே -ஸர்வ பிரகார ரக்ஷகத்வம்
சாலப்பல நாள் -ஸர்வ கால ரக்ஷகத்வம்
ஸ்ரீ ஸத்வம் ஸர்வத உத்கர்ஷாத் உபேயத்வம் அபூரயத்

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி
தயா சஹா ஸீநம்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
அடிமை செய்வார் திருமாலுக்கே

ப்ரகர்ஷயந்தம் மஹிஷீம் மஹா புஜம் -என்றும்
ஸ்ரீய ஸ்ரீயம் என்றும் –விஸிஷ்ட வேஷத்தை அருளிச் செய்து
ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -தத் விஷயமான வ்ருத்தி விசேஷ பிரார்த்தனை

ஸ்ரீ வல்லப -என்று விஸிஷ்ட வேஷமே ப்ராப்யம் -பாஷ்யகாரர்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ
த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரி பிதா

ஆஸ்ரயண வேளையில்
ஸூ மஜ்ஜாநயே விஷ்ணவே ததா ஸதி
அனுபவ வேளையில்
ஸ்ரீய ஸாரத்தம் ஜகத் பதி

மிதுன பரம் ப்ராப்யம் ஏவம் ப்ரஸித்தம் -பட்டர்

ஆக ஸ்ரீ மத் பதார்த்தம் கூறப்பட்டது –

————-

கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு நாற்றங்காலான ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியைச் சொல்கிறது நாராயண பதம்
அஸ்னுதே காமான்
லப்தவா ஆனந்தீ பவதி
இமான் லோகான் அநு சஞ்சரன்
ஸதா பஸ்யந்தி
அநுபாவ்ய விஷய பூர்த்தியைக் காட்டுகிறது நாராயண பதம் –
ஸ்வரூபத்தைப் பார்த்தால் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அத்யந்த வியாவ்ருத்தமாய் இருக்கும்
ரூபத்தைப் பார்த்தால் – ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -அப்ராக்ருதமாகையாலும் –
ஸகல ஜகதாரமாகையாலும் -வியாவ்ருத்தமாய் இருக்கும்
குணங்களை பார்த்தால் அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை குண ஏகமுமாய் நிஸ் ஸீமமுமாய் அபரிச்சின்னமுமாய் இருக்குமே
விபூதியும் பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரி பாதஸ்ய அம்ருதம் திவி
இப்படி ஸர்வ பிரகாரங்களிலும் சர்வாதிகனாய்
பதிம் விஸ்வஸ்ய
பதிம் பதீ நாம்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த
பிணங்கி அமரர் பேதங்கள் சொல்லும் படி
எழில் கொள் சோதி
மலர் புரையும்
ஸ்வாமித்வ போக்யதைகளில் நோக்கு

பூர்வ வாக்யத்திலம்நாராயண பதத்துக்கு ஸுலபயத்தில் நோக்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்வாமித்வ போக்யதைகளிலே நோக்கு
தத்வ பிரகரண உசிதமாய் இருக்குமே

நிரதிசய போக்யதையை ஏழாம் பத்தாலும்
ஸ்வாமித்வத்தை எட்டாம் பத்தாலும் சார ஸங்க்ரஹத்தில் பாசுரங்களைக் காட்டி அருளுகிறார் –

—————–

1- கன்னலே அமுதே -7-1-2-ஸர்வதோ முகமான ஸாரஸ்யம்

2- கொடியேன் பருகு இன்னமுதே -7-1-7-தோளும் தோள் மாலையுமாய்க் கடலைக் கடைகிற -விஜாதீயமான அமுதம்

3-அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5-இவரது அமுதத்தைக் கொண்டு அன்றோ அவர்கள் கடல் கடைந்து

4-திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -7-9-9-நிரதிசய போக்யன்

5-இவ் வேழு உலகை இன்பம் பயக்க -7-10-1-
இப்படி ஏழாம் பத்தில் போக்யதை கூறப்பட்டது

——-

இனி எட்டாம் பத்தில் ஸ்வாமித்வம்

1-அடியனேன் பெரிய அம்மான் -8-1-3-நான் முறையிலே நின்றவாறே நீயும் முறையிலே நின்றாய்
ஸ்வத்மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் இறே

2- விண்ணவர் கோன் நாங்கள் கோனை –8-2-2-நித்யர்களைப் போலவே என்னையும் அநந்யார்ஹன் ஆக்கி அருளினவன்
ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை என்னை ஒருத்தியையுமே படுத்திற்று

3-அமர்ந்த நாதனை -8-4-10-
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாத் நாத வத்தரம் -ரஷ்யம் சுருங்கி ரக்ஷகத்வ துடிப்பே விஞ்சி இருக்கும்

4-முனைவர் மூவுலகாளி –8-9-5-ஸர்வ ஸ்வாமி

5- நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் -8-9-1-
அநு ரூப ஸ வை நாத -அனுகூலமான திருமேனியை யுடையவன் –
நிரதிசய ஆனந்த யுக்தன்
ஸர்வ வியாபகன்
பர வ்யூஹாதி பிரகார பஞ்சக விசிஷ்டன்
ருத்ராதி சரீர விலக்ஷண சரீரன்
கருட வாஹனன்
நிருபாதிக சேஷீ
ஸர்வ ஸ்வாமி

இப்படி போக்யதா ஸ்வாமித்வ ப்ரதிபாதக நாராயண சப்தார்த்தம் கூறப்பட்டது

———-

ஆய -விபக்தி -நான்காம் வேற்றுமை -கைங்கர்யத்தை பிரகாசிக்கிறது -பகவன் முக விகாஸ ஹேதுவான வியாபாரம்
ஏதத் ஸாம காயன் நாஸ்தே
நம இத்யே வாதிந
இரைத்து நல்ல மேன் மக்கள் ஏத்த
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி –
வாசிக
காயிக
ரூபமாய் இருக்கும்

சதுர்த்தி கைங்கர்யத்தில் இரப்பைக் காட்டுகிறது
எய்தியும் மீள்வர்கள்-என்கிற போகம் போலே அன்றிக்கே மீளா அடிமைப் பணியாய்
சிற்றின்பம் போல் அன்றிக்கே அந்தமில் அடிமையாய்
வந்தேறி அன்றிக்கே தொல் அடிமையாய் -ஸஹஜமாய் –
உகந்து பணி செய் என்னும்படி ப்ரீதியால் வரக்கடவதாய்
ஏவ மற்று அமரர் ஆட் செய்யார் -சொல் பணி செய்யுமா போல்
முகப்பே கூவிப்பணி கொண்டு அருள வேணும் -என்கிற இரப்போடே பெற வேணும்
பவாநி -என்று ஸ்ரீ பாஷ்ய காரரும்
அடிமை செய்ய வேண்டும் -என்று ஆழ்வாரும் பிரார்த்திகையாலே
ப்ரார்தனா பர்யந்தமாக அர்த்தம் என்னப் பட்டது –

இதுவே ஒன்பதாம் பத்தில் அருளிச் செய்யப்படுகிறது

1- பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1-
என்னடியார் அது செய்யார் என்கிற உன் கடாக்ஷமும்
ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று
க்ருபயா பர்யபாலயத் என்று கிருபா பரதந்த்ரனான உன் கடாக்ஷமும்
அப்பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் பெற்று
அவனுடைய பாரதந்தர்யம் பிரணயித்வம் அன்றோ நிலை நிற்குமோ ஸ்வா தந்தர்யம் அன்றோ பிரகிருதி என்று அஞ்ச வேண்டா
அவள் அருகே இருக்க ஸ்வா தந்தர்யம் ஜீவியாது -ஆகை இறே முற்கூற்றால் அவளைப் பற்றுகிறது
நின் கோயில் சீய்த்து -உகந்து அருளினை நிலங்களில் அசாதாரண பரிசர்யை பண்ணி
சரணாகதனுக்கு பரிசர்யை உபாயத்தில் அந்வயியாது ஸ்வயம் ப்ரயோஜனமாய் இருக்குமே
திருக்கண்ண மண்நகை ஆண்டான் திரு மகிழ மரம் அடியிலே பரிசர்யை -சருகைத் திரு அலகிட்டாரே –

2-நின் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து -9-2-2-

3- தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-

4- கொடு வினையேனும் பிடிக்க -9-2-10-

5- உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு -9-4-4-

6- ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-

7- நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-

சேஷத்வ ஞான அனந்தர பாவியாய்
சேஷத்வ உபபத்தி ஹேதுவாய்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று ஸ்வீ குறித்த உபாயத்தை பலமாக
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயாமி -என்று பெரிய முதலியாராலும்
அநந்ய சரண த்வத் யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
நித்ய கிங்கரோ பவாநி -என்றும் ஸ்ரீ பாஷ்ய காரராலும்
அடிமை செய்ய வேண்டும் நாம் என்று ஆழ்வாராலும்
ஸ்வரூப விகாஸ ஸூ சகமான கைங்கர்ய பிரார்த்தனை செய்யப்பட்டதே

—–

இனி முடிவான நம பதார்த்தம் -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
கைங்கர்ய பிரார்த்தனை போலவே இதுவும் அடிமைக்குக் களையான அஹங்கார மமகாரங்களைக் கழிக்கிறது –

ஊணிலே மயிரும் புழுவும் பட்டால் போல் அன்றோ இவை
ஆவி அல்லல் மாயத்தே
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அத்தலையில் உகப்பே பேறு -பரார்த்த கைங்கர்யம் பரமபுருஷார்த்தம் –

ஜிதந்தே புண்டரீகாக்ஷ –ஹ்ருஷீ கேஸ
பரவா நஸ்மி காகுத்ஸ்த –ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதை மாம் வத
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
மற்றை நம் காமன்கள் மாற்று
ஆம் பரிசு அறிந்து கொண்டி ஐம் புலன் அகத்து அடக்கி –

ப்ரபல தர விரோதி பிரஹாணம்-அஷ்ட ஸ்லோகி
அஹம் அன்னம் –முதலில் சொல்லி பின்னை அன்றோ அஹம் அந்நாத என்றது

அவன் ஆனந்தத்துக்காகவே கைங்கர்ய பிரார்த்தனை
பகவத் போகமே அவளுக்கு உள்ளது
அவளும் அவனுமான சேர்த்தி இவனுக்கு போக்யம்
மரவடிகளைப் போலே திருவடிகளில் கிடக்கவுமாய்
மாலையோ பாதி திரு முடியில் ஏறவுமாய்
இளைய பெருமாளை போலே உடன் போக்கவுமாம்
பரதாழ்வானைப் போல் தலையிலே முடி வைக்கவுமாய்
அத்தலையில் திருமுக மலர்த்திக்கு உருப்பாயே இறே அறுவது

ஆச்சார்ய ஸேவா பலம் அவதாரண த்ரயத்திலும் அர்த்த ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கை காண் -ஆச்சான் பிள்ளை வார்த்தை

இதுவே பத்தாம் பத்தில் ஆழ்வார் -பத்து -பாசுரங்களைஉதாஹரித்து விளக்கி அருளுகிறார் சார ஸங்க்ரஹத்தில்

1-துயர் கெடும் கடிது -10-1-8-அபேக்ஷிக்காமலேயே சடக்கென போமே -நீயும் வேண்டா நானும் வேண்டா அவை தன்னடையே விட்டுப்போம் –

2-கெடும் இடராய வெல்லாம் –10-2-1-அவன் ஒரு விரோதியைப் போக்கினை படியைச் சொல்ல விரோதி என்று பேர் பெற்றவை எல்லாமே நசிக்குமே

3- எழுமையும் ஏதம் சாரா -10-2-2-சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தன –ராஜ குலா ஸம்பந்தத்தாலே விட்டு ஓடிப்போம்

4-தீரும் நோய் வினைகள் எல்லாம் -10-2-3-துக்கங்களும் துக்க ஹேதுக்களும் -வசிக்கும்

5- இப்பிறப்பு அறுக்கும் -10-2-5-கண்டது இறே இதனுடைய இழை யீடு -நூலாலே தைத்தால் போல் அவயனங்களின் சேர்க்கையால் ஆன ஆக்கை
தோஷங்களைக் காணவே விரக்தி பிறக்கும் -இப்படி ஹேயமான பிறப்போம் அறுக்கும்

6-உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் -10-3-9-
தாதார்த்தத்தின் எல்லை பேசும் பாசுரம் –
‘உனது உகப்புக்குப் புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வமும் வேண்டோம் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி

7- பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7-

8- பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-

9- விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9-

10- அமரா வினைகளே -10-5-9-

11- கடு நரகம் புகல் ஒழித்த–10-6-11-

12- பிறவி கெடுத்தேன் –10-8-3-

13- தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-6-

14- அந்தி தொழும் சொல்லு –10-8-7-நம இத்யேவ வாதிந
ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை

15-அவா வற்று வீடு பெட்ரா –10-10-11-

ஸ்வரூப விரோதி
சாதனா விரோதி
பிராப்தி விரோதி
ப்ராப்ய விரோதி
சதுஷ்ட்யத்தின் நிவ்ருத்தி முக்யமாகக் கூறப்பட்டது
கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியைக் கழிக்கை

இப்படி
ஸ்ரீ யபதித்வ பிரமுகங்களாய்-
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள உபாதேய அர்த்தங்களை
பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்யத்வமும் –
திருவாய் மொழியும் –
பகவத் சரணார்த்தி களாய்-அநந்ய உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
போக ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் —என்று அருளிச் செய்து  ஸார சங்க்ரஹத்தை நிகமித்து அருளுகிறார் ஸ்ரீ பிள்ளை லோக்கலாச்சார்யார்   –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்–

June 13, 2022

உண்டோ வைகாசி விகாசத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் –

இன்று முதல் ஸ்ரீநம்மாழ்வார்
திரு அவதார உத்சவம்🙏

இன்று முதல்
ஸ்ரீ பார்த்தசாரதி வசந்த உத்சவம்

ஏழு நாள்கள் உத்சவம்
கடைசி நாளில் வாஸூ தேவ புரம் எழுந்து அருளுகிறார் 🙏

———-

ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்

திரு முளைச் சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து
மாலை விருச்சிக லக்கினத்தில் 4.30-மணிக்கு மேல் 5-30-மணிக்குள் தேங்காய் சாற்றுதல்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் தங்க தோளுக்கு இனியான் –

முதல் உத்சவம் –
காலை 7.00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் துவஜாரோஹணம்
ஸ்ரீ அஹோபில மடத்தில் விடாயாற்று மண்டகப்படியும்
ஸ்ரீ திருக்குறுங்குடி மடத்தில் மண்டகப்படி -திரு மஞ்சனம் கோஷ்ட்டி

மாலை 6-00 மணிக்கு இந்திர விமானம்
உபாயம் -ஸ்ரீ அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

இரண்டாம் உத்சவம் –
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
மாலை 6.00 மணிக்கு புஷ்ப்ப பல்லாக்கு
அலங்கார உபாயம் -ஸ்ரீ மத் ஆத்தான் வடக்கு திருமாளிகை ஆதீன சிஷ்யர்
திரு விழா உபயம் -திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

மூன்றாம் உத்சவம்
காலை 6-30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ வான மா மலை மடத்தில் விடாயாற்று
கிளி குறட்டில் திரு மஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணி புன்னை மர வாஹனம்

நான்காம் உத்சவம்
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
கிளி குறட்டில் திரு மஞ்சனம்
மாலை 6.00 மணிக்கு -தங்கத் திருப்புளி வாஹனம்
உபயம் -ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

ஐந்தாம் திரு நாள்
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் மங்களா ஸாஸனம் -பூப்பந்தல் மண்டபம்
ஸ்ரீ நவ திருப்பதி எம்பெருமான்கள்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ உத்திராதி மண்டபத்தில் விடாயாற்று பந்தல் மண்டபக் குறட்டில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
இரவு ஒன்பது கருட ஸேவை
ஸ்ரீ கள்ளபிரான்
ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
ஸ்ரீ அரவிந்த லோசனன்-ஸ்ரீ தேவர் பிரான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
ஸ்ரீ எம் இடர் கடிவான்
ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம்

ஆறாம் நாள்
மாலை தண்டியலில் திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ பராங்குச மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை 6.30 மணிக்கு திருவீதிப்புறப்பாடி
ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் எழுந்து அருளி
சேர்த்தி திருமஞ்சனம்
மாலை திரு வீதிப்புறப்பாடு -வெள்ளி சந்த்ர பிரபை
உபயம் -ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ ஆதி நாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா

எட்டாம் நாள்
காலை 7.00 மணிக்கு ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு எழுந்து அருளி
மாலை ஸ்ரீ தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்
இரவு கோயிலுக்கு எழுந்து அருளுதல்
8.00 மணிக்கு குதிரை வாஹனம்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

ஒன்பதாம் நாள்
ஸ்ரீ கோரதம் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருளி மங்களா சாசனம் கோஷ்ட்டி
உபயம்-ஸ்ரீ ஆத்தான் கீழத் திரு மாளிகை ஸ்வாமிகள்
மாலை 45.00 மணிக்கு உத்திராதி மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்

பத்தாம் நாள் -ஸ்ரீ திரு விசாகம் ஸ்ரீ திரு நக்ஷத்ர திரு நாள்
காலை மாட வீதிப்புறப்பாடு
ஸ்ரீ சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம்
ஸ்ரீ தாமிர பரணி நதியில் தீர்த்த வாரி
சந்நிதிக்கு எழுந்து அருளி அட்ச்சதை ஆசீர்வாதம்
பெரிய சந்நிதிக்கு எழுந்து அருளி கோஷ்ட்டி தீர்த்த விநியோகம்
மாலை 6.00 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் -வெள்ளி தோளுக்கு இனியான்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ உடையவர் கோஷ்ட்டியுடன்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

அடுத்து ஐந்து நாள்கள் விடாயாற்று உத்சவம்
அதில் முதல் நாள் ஸ்ரீ மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி கந்தப்பொடி உத்சவம் -திருமஞ்சனம் -கோஷ்ட்டி –
நான்காம் நாள் -ஸ்ரீ அஹோபில மேடம்
ஐந்தாம் நாள் -ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமம்

————-

நம்மாழ்வார் வைபவம்.
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ——பெரியமுதலியார்🙏

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||🙏

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு

அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது ..
(கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை.

இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி *என்றார் ஆழ்வாரும்.

இனி *
கோதிலவாம்…. என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. . .🙏🙏🙏🙏

———–

பெருமாள் திருமொழி…

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி Object
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே.. 🙏

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை புல் பூண்டு முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்அளித்தனர். .🙏🙏


நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபூதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.

இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🙏🙏🙏


இரண்டாம்-பத்து…..

கீழ்த்
திருவாய் மொழியில்..

நிஷ்கர்ஷிக்கப் பெற்ற பேற்றை பெறுவதற்கு திருமால் இரும் சோலையை ஆஸ்ரயிக்கிறார்
என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
அத்தை எம்பெருமானார் மேலும் இனிமை படுத்தி -அருளிச் செய்வர்
கீழ் ஒல்லை ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று பகவத் கைங்கர்யத்தில் தமக்கு உண்டான பதற்றத்தை வெளியிட்டு அருள
அத்தைக் கண்ட எம்பெருமான் இவள் இந்த சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய துடிக்கிறார் என்று எண்ணி
அதற்கு ஏகாந்தமான ஸ்தலம் இந்நிலத்தில் ஏது என்று கடாஷித்து வருகையில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை யைக் கண்டு
ஆழ்வீர் உமக்கு முகம் தருகைக்கு இங்கே வந்து நின்றோம்
நீர் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கலாம் –
என்று தென் திருமலையைக் காட்டிக் கொடுத்து அருள
ஆழ்வாரும் அதை அனுசந்தித்து
எம்பெருமான் உபேயன் ஆனால் அவன் எழுந்து அருளி இருக்கும் இடமும் உபேயம் தானே
ஆகவே திருமலையோடு
அதனோடு சேர்ந்த தொரு மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போவோம்என்கிற அத்யாவசாயத்தோடு*
வாசி அற நமக்குஎல்லாம் பிராப்யமே -என்று கொண்டு அனுபவித்து இனியர் ஆகிறார் …..
என்று காட்டி அருளினார்…

வாயும் திரையுகளும்….
க்ஷணம் காலம் விச்லேஷம் பொறுக்க முடியாதவன் …

திண்ணன் வீடு..
மனுஷ்ய சஜாதீயனாய் திருவவதரிக்கச் செய்தே பரத்வம் பொழிய நிற்பவன்…

ஊனில்வாழ்உயிர்
மதுர பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்தால் போல் போக்யன்….

ஆடி ஆடி அகங்குழைந்து…

ஆஸ்ரிதர்களின் துயர் தீர்க்கும் தன்மையன்…

அந்தாமத்தன்பு…
ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அத்தாலே ப்ரீதன் ஆனவன்….

வைகுந்தா…..
ஆஸ்ரிதர்கள் நம்மை விட்டால் ஏன் செய்வோம் அதி சங்கை தீர்த்தது…

கேசவன் தமர்….
ஆஸ்ரிதர் உடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் விஷயீ காரம் உண்டே…

அணைவது அரவணை மேல்…
மோஷம் அளிப்பவன்

எம்மா வீடு…
கைங்கர்ய பிரதிசம்பந்தி என்றது….
கிளரொளிஇளமை..
அழகிய திருப்பதியை உடையவன்….. …..
என்று அருளிச் செய்கிறார்….

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி) 🙏🙏🙏🙏


மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி –

முடிச்சோதியாய்….

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன் என்று
அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை என்றார் ….
கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற –படியைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி,
விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி *யாங்காண
வல்லமே யல்லமே*
மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

ஸ்வரூப அனுபந்தியாய் – -ஸம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
வடமாமலையுச்சியை*’ என்னுமாறு போன்று, திருமலையில்-
(ஏக தேசம் )– ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸௌந்தர்யத்தை – அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று –
ஜென்ம வ்ருத்தாதிகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –ஈடு..


ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கட்கும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, ஸ்ருதி ஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்….🙏

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்…

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள்,

ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை.

இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார்

இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார்.

அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம்.

அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை.

(கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு* எனப் படுகிறது.

புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் வைபவம்……. 🙏

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள் அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே,
மாற்றங்களாய்ந்து கொண்டு(6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் என்கிறார். அதாவதுதிருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள்

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்று * பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழர் இசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”

இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய்* இருக்கும்.

இதனை ஆழ்வார் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்….

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும் மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும் வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தெனா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே. (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி
🙏🙏🙏🙏
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-
ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
*அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண* லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த குழாங்களைக் கண்டு காப்பிட்டு.–நாயனார் –

————

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம்.

உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் ….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில்* அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா* என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கண்வளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
🙏🙏🙏🙏
வைகல் பூங்கழிவாய்………

.ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய்-வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ– பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
*மறப்பித்த
க்ஷமா தீக்ஷா ஸாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்*
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்–

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் உத்சவம்-7………………

.உண்ணிலாவிய ஐவரால்………….

ஸ்ரீ கீதாசார்யன்…….

தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்…..
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி……..– –
முனிவர்கள் கூடி யதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தித் துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்-என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே-யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்,
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே…
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே.
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்..
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்து நோவு படுவதைக் கண்டார்.
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-
[

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –


ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம் இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள்* தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் *எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்*
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)-என்று ஸங்க்ரஹித்தார்.

இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி….

இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள்.

* ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * ….

இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய்,

இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

*புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம்* வகுளதரதாமேத்ய ஸ புந: |
*உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||*

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார் …..

ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை
ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம்
விம்ஶதிர் வக்தி ஸாக்ரா ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள் அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது….


திருவாய்மொழி எட்டாம் பத்து…….
அடியேனுள்ளான் உடலுள்ளான்……

ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?

இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.

ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், அடியேனுள்ளான் உடனுள்ளான் என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்

ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் அடியேன் என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.

திரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்… 🙏🙏
[4:21 PM, 6/10/2022] +91 72995 10125: பாகவதசேஷத்வம்
அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார் ‘அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும்’ என்று!. பட்டர் ‘நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். மேலும், ”எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும்’ என்று பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.
ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!
ஆலம் விதையில் ஆலமரம் போலவும், ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும் பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின் (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன.🙏🙏
நெடுமாற்கடிமை…….. ……
பகவத் கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை நெடுமாற்க்கடிமை (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
தனிமாத் தெய்வமான எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள்
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)
அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)
கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.🙏🙏🙏🙏


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே P.B.A- ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 12, 2022

ஸ்ரீ எம்பெருமானார் பூர்வாச்சார்ய பரம்பரை யாகிற ரத்நாஹாரத்துக்கு நடுநாயக ரத்னம் என்பதை
ஸ்ரீ தேசிகன் யதிராஜ ஸப்ததியிலே

அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி–15-

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

ஸம்ஸாரிகள் துர் கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி கிருபை கரை புரண்டு இருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற ரஹஸ்ய த்ரய அர்த்தத்தை வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
இவருடைய பர ஸம்ருத்திக்கு உகந்து -இவரது ஆஜ்ஞா அதி லங்கனம் பண்ணி அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின
ப்ரபாவத்தைக் கண்டு ஸாத்தி அருளிய திரு நாமம் அன்றோ இது
காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில் யாரே அறிபவர் நின்னருளின் தன்மை –

தர்சனம் -மதம் -பார்வை -கண் -பல பொருள்களைக் குறிக்கும் பதம்

மதம்
தர்சனம் என்னும் பதம் மதம் என்னும் பொருளைக் குறிக்கும் -நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று -ஈடு மஹா பிரவேசம்

இதம் அகில தம கர்சனம் தர்சனம் ந -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே பேர் இட்டு நாட்டி வைத்தார் நம்பெருமாள் -அத்தை வளர்த்த அச்செயலுக்காக –

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57-

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

ஸம்ப்ரதாய பரிசுத்தி ஆரம்பத்தில் தேசிகன்
ஸர்வ லோக ஹிதமான அத்யாத்ம ஸாஸ்திரத்துக்கு பிரதம பிரவர்த்தகன் ஸர்வேஸ்வரன் -இந்த யுக ஆரம்பத்திலே ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகர் ஆனார் –

ஸ்வாமி எம்பெருமானார் தாமே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சி ஷுபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே -ஸ்ரீ பாஷ்யம்

பகவத் போதாயன டங்க த்ரமிட குஹ தேவர் கபர்தி பாருசி ப்ரப்ருதி அவி கீத சிஷ்ட பரிக்ருஹீத புராதன
வேத வேதாங்க வ்யாக்யா ஸூவ்யக்தார்த்த ஸ்ருதி நிகர நிதர்ச்சி தோயம் பந்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்

இம்மதம் அநாதி -எம்பெருமானார் பரம ரக்ஷகர் -ஸ்ரஷ்டா அல்லர்
நாதோ பஞ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹு பிரு பசிதம் யாமுநேய ப்ரபந்நை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை வளர்த்த அந்தச்செயல் அறிகைக்காக -மா முனிகள்
நாட்டி வைத்தார் -நம்பெருமாள் தானே நேராக இந்தத் திருநாமம் சாத்தி அருளினார் என்றும்
நாட்டு வித்தார் -திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் சாத்துவித்து அருளினார்

————–

இனி இதன் ப்ரமேயங்களைப் பார்ப்போம் –

பிரதிதந்தர சித்தாந்தம் -அசாதாரணம் -சரீராத்ம பாவம் -இதனாலேயே ப்ரஹ்ம விசாரம் -சாரீரிக மீமாம்ஸை –
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் -ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -உபநிஷத்
ச ஈஸ்வர வியஷ்ட்டி சமஷடி ரூப -ஸ்ரீ பராசர பகவான்
ஜகத் ஸர்வம் ஸரீரம் தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன -வேத வியாசர்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் நம்மாழ்வார்
யத் அண்டம் பராத்பரம் ப்ரஹ்ம சதே விபூதய -ஆளவந்தார்

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
ஹிதம் -கிருபா விசிஷ்டனானவனே பரம உபாயம்
புருஷார்த்தம் -அவன் திரு உள்ள உகப்பே பரம புருஷார்த்தம்
பரத்வ ஸ்தாபகம் காரணத்வம் -முதல் பத்தில் பரத்வம் -அருளிச் செய்து -அடுத்த பத்தில் காரணத்வத்தையும் –
தத் அநு குணங்களான வியாபகத்வாதிகளையும் அடைவே அருளிச் செய்கிறார் –

———

வேதாந்தங்கள் காரண வஸ்துவை
ஸத்
ப்ரஹ்ம
ஆத்மா
ஹிரண்ய கர்ப்ப
சிவ
இந்த்ர
நாராயண
ஸப்தங்களால் நிர்த்தேசித்து உள்ளன
முதலில் சொன்ன ஆறும் பொதுச் சொற்கள்
நாராயண ஸப்தம் விசேஷ ஸப்தம்
நாராயண ஸப்த கடித வாக்கியத்தில் மட்டும் நாராயணன் ஒருவனே இருந்தான் -ப்ரஹ்மாவும் இலன் சிவனும் இலன் என்று ஸ்பஷ்டமாக ஓதப்பட்டுள்ளது
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -உபநிஷத்

ஸத் ப்ரஹ்மாதி பரம காரண வாசிபி சப்தை நாராயண ஏவாபி தீயதே இதி நிச்சீயதே -வேதார்த்த ஸங்க்ரஹம்

ஸத் ப்ரஹ்மாத்ம பதை த்ரயீ சிரஸி

யோ நாராயண உக்த்யா ததா வ்யாக்யாதோ கதி ஸாம்ய லப்த விஷயான் அநந்ய த்வ போதோ ஜ்வலை -ஆழ்வான் ஸூந்தர பாஹு ஸ்தவம்

வாரணம் காரணன் என்று அழைக்க ஓடி வந்து அருள் புரிந்தவன் நாராயணன் ஒருவனே
ஆகவே நாராயணனே ஜகத் காரணன்

————

இனி ஸர்வ வியாபகத்வம்
உபாதானத்வமும் நிமித்தமும் -ஸஹ காரித்வமும் -ஆக – த்ரிவித காரணமும் அவனே அத்புத சக்தன்
அத்ரோச்யதே ஸகல இதர விலக்ஷணஸ்ய பரஸ்ய ப்ராஹ்மண ஸர்வ ஸக்தே சர்வஞ்ஞஸ்ய ஏக்ஸ்யைவ ஸர்வம் உபபத்யே -ஸ்ரீ பாஷ்யம்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வே நிமித்த உபாதானத உபயோகிநீ -ஸ்ருத ப்ரகாசிகா வாக்யம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ -ஸ்ருதி
ப்ரக்ருதிச்ச -என்றும்
சாஷாச்ச உபாயம்னானாத் – என்றும் வ்யாஸ ஸூ த்ரங்கள்
வேர் முதல் முத்து -த்ராவிட உபநிஷத்

வியாப்ய கத தோஷம் தட்டாமல் வியாபிக்கிறான்
நிர்விகாரத்வம் ஸ்வரூப நிஷ்டம் என்றும்
விகாரம் சரீர பூத சேதன அசேதன கதம்
அசேஷ ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீரதயா தத் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்ம ஸ்வ சரீர பூதே ப்ரபஞ்சே —
ஸ்வஸ் மின் ஏகதாம் ஆ பன்னே சதி –ஜகச் சரீர தயா ஆத்மானம் பரிண மயதீதி ஸர்வேஷு வேதாந்தேஷு பரிணாமம் உபதேச -ஸ்ரீ பாஷ்யம்

பரமாத்ம சித் அசித் சங்காத ரூப ஜகதாகார பரிணாமமே பரமாத்ம சரீர பூத சிதம் சகதா ஸர்வ ஏவ அபுருஷார்த்தா
ததா பூதா சிதம் ச கதாச்ச சர்வே விகாரா பரமாத்மனி கார்யத்வம் ததவாப்தயோ தயோ நியந்த்ருத்வேந ஆத்மத்வம் -ஸ்ரீ பாஷ்யம்

அவிகார ஸ்ருதயே ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்
என்றும் இறே எம்பெருமானார் நிஷ்கர்ஷம்

லோகத்தில் கார்ய காரணங்கள் போல் அன்றிக்கே உபாதான காரணமும் தானே யாகையாலே கார்ய பூத ஸமஸ்த வஸ்துக்களும் வியாபகனாய் -பெரிய ஜீயர் ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம்

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -என்பதே மூல பிராமண கோஷம் –

————-

நாராயணனே ஸர்வ நியந்தா –

கீழ் சொன்ன வியாப்தி நிறம் பெறுவது நியந்த்ருதவத்தாலே
ஆகாசத்துக்கு வியாப்தி உண்டு -அசேதனம் ஆகையால் நியமன ஸாமர்த்யம் இல்லை –
ராஜாவுக்கு நியமன ஸாமர்த்யம் உண்டு -அணு மாத்ர ஸ்வரூபன் -ஆகையால் வியாபகத்வம் இல்லை
பகவான் பராமசேதனனாயும் விபூவாயும் இருக்கிற படியால் வியாபகனாயும் ஸர்வ நியாந்தாவாகவும் உள்ளான்
அனேந ந்ருப நபோ வ்யாவ்ருத்தி ஸ்ருத ப்ரகாஸகர்
சாந்தோக்யம் ஸத் வித்யா பிரகரணத்தில் -ஆதேச -பதத்துக்கு எம்பெருமானார்
ஆதிஸ்யதே அனேந இத்யாதேச –ஆதேச ப்ரஸாஸனம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
ஆதிஸ்யதே –ஆதேச -இதி ப்ரத்யயார்த்த வியாக்யானம்
ஆதேச ப்ரஸாஸனம் -இதி ப்ரக்ருத்யர்த்த வியாக்யானம் என்று இறே தாத்பர்ய தீபிகா
ஸாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய -பள்ளிப்பிள்ளை வார்த்தை
ஈஸித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க -ஆளவந்தார்
வியாப்தி நிறம் பெற தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா –
அந்தப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா -வேத கோஷம்

————

நாராயணனே உபய விபூதி யுக்தன்

புகழு நல் ஒருவன் என்கோ -திருவாய் மொழி
ஸ்ரீ கீதை பத்தாவது அத்யாயம் -நாராயணன் விபூதி மான் என்று அறுதியிட்டார்கள்

தத் வ்யதிரிக்தஸ்ய ஸமஸ்தஸ்ய ததா யத்ததாம் தத் வியாப்யதாம் தத் ஆதாரதாம் தந் நியாம்யதாம் தத் சேஷதாம் தத் ஆத்ம கதாம்ச ப்ரதிபாத்ய -வேதார்த்த ஸங்க்ரஹம் –

ப்ரஹ்ம சிவயோரபி இந்த்ராதி சமானாகரதயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதித்தம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
அனேந த்ரி குணாத் மக்காத ஷேத்ரஜ்ஞஸ்ய போக்ய பூதாத் வஸ்துந ப்ரஸ்தாத் விஷ்ணோ வாஸஸ்தானம் இதி கம்யதே-வேதார்த்த ஸங்க்ரஹம்
த்வேவா ப்ரஹ்மணோ ரூபே -மூர்த்தம் சைவ அமூர்த்தம்ச இதி ப்ரக்ருத்ய –ஸமஸ்தம் ஸ்தூல ஸூஷ்ம ரூபம் பிரபஞ்சம் ப்ரஹ்மணோ ரூபத்வேந பராம் ருஸ்ய-ஸ்ரீ பாஷ்யம்
நிதித்யாஸனாய ப்ரஹ்ம ஸ்வரூபம் உபதிசத் த்வேவாவ ப்ரஹ்மண -இத்யாதி ஸாஸ்த்ரம் ப்ரஹ்மணோ மூர்த்தா மூர்த்த ரூபத்வாதி விசிஷ்டதாம் ப்ராக் அசித்தாம் நாநு வதிம் சமம் -ஸ்ரீ பாஷ்யம்
லோக்யத இதி லோக தத் த்ரயம் லோகத்ரயம் அசேதனம் தத் ஸம்ஸ்ருஷ்ட -சேதன முக்தச் சேதி பிரமாணாவ காம்யம் ஏதத் த்ரயம் ய ஆத்மதயா ஆவிஸ்ய பிபர்தி-கீதா பாஷ்யம் என்று
உபய விபூதி நாதத்த்வத்தை வெளியிட்டு அருளி உள்ளார்கள்
ஆக அவனே ஸர்வ ஸப்த வாஸ்யன் ஆகிறான் –

————-

திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்

அந்தராதித்யே ஹிரண்மய புருஷ –ஹிரண்மயஸ்மஸ்ரு –ஆ பிரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சுருதி
ராம கமல பத்ராஷ -ஸ்ரீ ராமாயணம்
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் –ஹிரண்மய இதி ரூப சாமான்யாத் -டங்காச்சார்ய வாக்யம்
யதா பூத வா திஹி ஸாஸ்த்ரம் –ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் –த்ரமிட பாஷ்யம்
துயர் அறு சுடர் அடி -திருவாய் மொழி

ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாயா ப்ரக்ருதி ஸ்வ பாவ ஸ்வ மேவ ஸ்வ பாவம் அதிஷ்டாய ஸ்வேநைவ ரூபேண ஸ்வ இச்சையா ஸம்பவாமி
இத்யர்த்த ஸ்வ ஸ்வரூபம் ஹி ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் —
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே –அந்தராதித்யே ஹிரண்மய புருஷ -இத்யாதி ஸ்ருதி ஸித்தம் -கீதா பாஷ்யம்

இதாநீம் விஸ்வ சரீரத்வேந த்ருஸ்ய மான ரூப த்வம் தேனைவ ரூபேண பூர்வ ஸித்தேந சதுர் புஜேந ரூபேண யுக்தோ பவ -கீதா பாஷ்யம்
நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -6-9-1-ஜெகதாகார அனுபவம் அனுவதித்திக் கொண்டு
கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் -என்று திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட அனுபத்தை – ஆசைப்படுகிறார் அன்றோ

—————–

உபய லிங்கம்

சத்ர சாமரங்கள் போல் அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகம்-கல்யாண குணை கதானத்வம் -என்று இது இறே பகவத் ஸப்த அர்த்தமாய்
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -ஸ்ரீ பராசரர் நிஷ்கர்ஷம்

ப்ரஹ்மம் ஸ குணம் என்பதை
ஈஷதே நா ஸப்தம்
ஆனந்த மய அப்யாஸத்
அந்த தத் தர்மோப தேசாத்
அத்ருஸ்யத்வாதி குணகஸ் தர்ம யுக்த
சாஸ ப்ரஸா ஸனாத்
அபித்யோ பதே சாச்ச
ஆனந்தா தய ப்ரதானஸ்ய -இத்யாதிகளால் வேத வியாஸரும்
யுக்தம் தத் குண கோபா ஸநாத் -என்று வாக்யகாரரான டேங்கர் என்ற ப்ரஹ்ம நந்தியும்
யத்யபி –ததாபி அந்தர் குணா மேவ தேவதாம் பஜதே –ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யகாரர்
அபவ்ருஷே யத்வ நித்யத்வங்களாலே வேதம் அகில பிரமாண விலக்ஷணமாய் இருப்பது போல்
இந்த உபய லிங்கத்தால் இவனும் அகில பிரமேய விலக்ஷணன் –
இவற்றையே தூயானைத் தூய மறையானை -11-7-3- கலியன்
நம்மாழ்வார் முதலடியிலே மாயாவாதிகள் மிடற்றைப் பிடிக்குமா போல் நலமுடையவன் -என்றார் போல்
மாறன் அடி பணிந்து உய்ந்தவரான எம்பெருமானாரும்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே -வேதார்த்த ஸங்க்ரஹம்
நிர்மல ஆனந்த உதன்வதே -வேதாந்த சாரம்
ஸ்ரீ யபதி நிகில ஹேயப்ரத்ய நீக கல்யாண குணை கதான -கீதா பாஷ்யம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை குணை கதான -சரணாகதி கத்யம்
கல்யாண குணங்களே உள்ளவன் என்பதை ஸ குண ஸ்ருதியும்
அபேகுணங்கள் கேசமும் கிடையாது என்பதை நிர்குண ஸ்ருதியும் என்றும் இந்த நிர்ணயத்தை
ந ச நிர்குண வாக்ய விரோத ப்ராக்ருத ஹேய குண விஷயத்வாத் தேஷாம்
நிர்குணம் இத்யாதீனம்
பரஸ்ய ஸக்தி –ஏஷ ஆத்மா –ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
இத்யாத்யா ஸ்ருதய ஞாத்ருத்வ பிரமுகான் கல்யாண குணான் -என்றும் அருளிச் செய்துள்ளார்

சங்க்யாதும் நைவ ஸக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கி ஆனந்த்யாத் -பிரதமோ ராசி அபாவதேவ பஸ்ஸிம -ஸாஸ்த்ர வசனம்

ஆழ்வானும் -தூரே குணா தவ து ஸத்வ ரஐஸ் தமாம் ஸி தேன த்ரயீ ப்ரதயதி த்வயி நிர்குணத்வம் நித்யம் ஹரே நிகில ஸத் குண சாகரம் ஹி த்வா மாமனந்தி பரமேஸ்வரம் ஈஸ்வராணாம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

உபய லிங்கம் -உபய லக்ஷணம் நிரஸ்த நிகில தோஷத்வ கல்யாண குணாகரத்வ லக்ஷணோபேதம் இத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யம்

அந்நியோன்ய பின்ன விஷயா ந விரோத கந்தம் அர்ஹந்தி -நடாதூர் அம்மாள் தத்வ சார வாக்யம்

கல்யாணை அஸ்ய யோக ததிர விரஹோபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -தேசிகன் -தத்வ முக்த கலாபம்

பதினாறு ஹேதுக்களைக் கொண்டு ஸத்ய கல்யாண குணாகரன் என்று ஸ்ருத பிரகாசிகர்

த இமே ஸத்ய காம -வேதாந்த கோஷம் –

—————

இவனே புருஷோத்தமன் –

பக்தனோடு முக்தனோடு நித்யனோடு வாசியற ஜீவ ஸாமான்யம் பகவத் பாரதந்த்ரம்
ஸ ஸ்வராட் பவதி
ஸ அக்ஷர பரம ஸ்வாட் -என்று ஸ்வா தந்தர்யம் ஓதப்பட்டு இருந்தாலும்
கர்மங்களைக் குறித்தே இந்த ஸ்வா தந்தர்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி -வேத வியாச ஸூத்ரம்
அவன் ஒருவனே ஸ்வ தந்த்ரன் -புருஷோத்தமன் -மற்ற அனைவருமே பரதந்த்ரர்கள் -நாரீ துல்யர்கள்
இது பற்றியே நேஹ நா நா -என்று த்வதீய நிஷேதம்
பரமாத்ம ஸத்ருச ஸ்வ தந்த்ரன் மற்று ஒருவன் அல்லன் என்றவாறு –
ஸ ஏவ வாஸூ தேவோயம் ஸாஷாத் புருஷ உச்யதே -ஸ்ரீ ராமாயணம்

புருஷாத் கைவல்யார்த்தி ப்ராப்யாத் ஸ்வாத்ம ஸ்வரூபாத் உத்தம அபரிச்சின்ன தயா ஸ்ரேஷ்ட -ஸ்ரீ வசன பாஷ்ய டீகை

ந ச தேன விநா நித்ராம் லபதே புருஷோத்தம -ஸ்ரீ வால்மீகி பகவான்

புருஷோத்தம க -ஆளவந்தார்

ப்ரஹ்ம சப்தேந புருஷோத்தமோ அபி தீயதே -ஸ்ரீ பாஷ்யம்

————–

இவனே ஸ்ரீ மான்

பரமாத்வாய் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -அத ஏவ ச ஸ ப்ரஹ்ம
மலர்மகள் விரும்பும் –அடிகள் -1-3-1-
அருளாத திருமால் -1-3-8-
நம் திருவுடை அடிகள் -1-3-8-
அருளாத திருமால் -1-4-7-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
மலராள் மைந்தன் -1-5-9-
திரு மகளார் தனிக்கேள்வன் -1-6-9-
திருவின் மணாளன் -1-9-1-
பூ மகளார் தனிக்கேள்வன் -1-9-3-
உடன் அமர் திருமகள் -1-9-4-
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-
செல்வ நாரணன் -1-10-8-
நீயும் திருமாலால் -2-1-1-
ஞாலம் படைத்தவனைத் திரு மார்வனை -3-7-8-
திரு நாரணன் தாள் -4-1-1-0
மைய கண்ணாள் –உறை மார்பினன் -4-5-2-
மணிமாமை குறைவில்லா மலர் மாதர் உரை மார்வன் -4-8-2-
குடந்தைத் திருமால் -5-8-7-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -6-10-10-
என் திருமகள் சேர் மார்பனே -7-2-9-
எழில் மலர் மாதரும் தானும் -7-10-1-

என் திரு வாழ் மார்பன் -8-3-7-
கமல மலர் மேல் செய்யாள் திரு மார்பினில் சேர் திருமாலை -9-4-1-
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -10-6-9-
உன் திரு மார்பத்து மாலை நான்கை -10-10-2-
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-
என்று த்வய விவரணமான திருவாய் மொழியிலே ஸ்ரீ மானாக அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
பாஷ்யகாரர் இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
புரா ஸூத்ரை வியாஸ –விவவ்ரே–வகுள தரதாம் ஏத்ய ஸ புன உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் ராமாவரஜ-ஆச்சான் பிள்ளை

பொய்கையார் பரனை உபய விபூதி உக்தன் என்றும்
பூதத்தார் -அவனை நாராயணன் -என்றும்
பேயார் -அவனை ஸ்ரீ மான் என்று நிர்ணயித்து அருளிச் செய்கிறார்கள்-பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரத்தயா தேவா தேவத்வம் அஸ்னுதே -என்றும்
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் வேத புருஷனும்

திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -என்று திருமழிசைப் பிரானும்
வேதாந்தா தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிந்ஹை தரந்தி -என்று பராசர பட்டரும்

கஸ் ஸ்ரீ ஸ்ரீய -என்று ஆளவந்தாரும்
ஸ்ரீ யபதித்வத்தைப் பரக்க அருளிச் செய்தார்கள் அன்றோ –

———————-

இவனே ஸகல பல பிரதன்

தத்வ த்ரயங்கள் -அசித் -சித் -ஈஸ்வரன்
புருஷார்த்த த்ரவ்யங்கள் -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பரம மோக்ஷம்
ஐம்கருவி கண்ட வின்பம் -தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் –திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் -4-9-10-
இதில் முதலாவது போகம் -மற்றவை இரண்டும் அபவர்க்கம் –
போக அபவர்க்க ஸகல பல பிரதன் நாராயணனே

இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே –
வீடு முதல் முழுவதுமாய் –
வீடு முதலாம் –
பரஸ்மா தேவாஸ்மாத் புருஷாத் தத் பிராப்தி ரூபம் அபவர்காக்யம் பலம் இதி ஸம் ப்ரதி ப்ரூதே துல்ய ந்யாய தயா
ஸாஸ்த்ரீயம் ஐஹிகம் ஆமுஷ்மிகம் அபி பலம் அத ஏவ பரஸ்மாத் புருஷாத் பவதி இதி சாமான்யேந பலம் அத இத் யுச்யதே -எம்பெருமானார்

————-

ஆக
1-அகில ஜகத் காரணன்
2- ஸர்வ வியாபகன்
3-ஸர்வ நியாந்தா
4-உபய விபூதி யுக்தன்
5-திவ்ய விக்ரஹ யுக்தன்
6-உபய லிங்கம்
7-புருஷோத்தமன்
8-ஸ்ரீ மான்
9-ஸகல பல பிரதன்–
நாராயணனே என்று எம்பெருமானார் தர்சனத்தில் பர தத்வம் பற்றிய விஷயங்களை அனுபவித்தோம் –

இத்தை அறிய ஸாஸ்திரமே பிரமாணம்
தர்க்கஸ்ய அப்ரதிஷ்ட்டி தத்வாதபி ஸ்ருதி மூல ப்ரஹ்ம காரண வாத ஏவ ஆஸ்ரயணீய -ஸ்ரீ பாஷ்யம்
அத அதீந்த்ரிய அர்த்தே ஸாஸ்த்ரம் ஏவ பிரமாணம் தத் உப பிரும்ணா யைவ தர்க்க உபாதேய-ஸ்ரீ பாஷ்யம்
ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விசிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதானத்வம் நிமித்தத் வம்ச நாநுமான கம்யம் இதி
ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் தஸ்ய -யதோவா இத்யாதி வாக்கியம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயதி இதி -வேதார்த்த சாரம் –

———

இனி பர தத்வ பிரசங்காத் அவர தத்வங்களான சேதன அசேதனங்களைப் பற்றிச் சிறிது அனுபவிப்போம்

ஜீவ தத்வம்

ஞாதாவாகையையாலே -தேஹாதிகளைக் காட்டில் வேறுபட்டவன் ஜீவாத்மா
பகவத் சேஷ பூதன் என்பதால் சேஷியான பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன் –
இதம் சரீரம் –ஏதத்யோ வேத்தி -ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் – கீதாச்சார்யன்

மூல மந்திரத்தில் மகாரமும் லுப்த சதுர்த்தி விஸிஷ்ட ஆகாரமும் -ஜீவனை ஞாதா சேஷன் -என்று கூறும்
பிறர் நன் பொருள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு

ஞாத்ருத்வம் பஹிரங்கம்
சேஷத்வம் அந்தரங்கம்
தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்-ஸ்ரீ வசன பூஷணம்
அகாரத்தாலே சேஷத்வத்தைச் சொல்லி –
பின்பு இறே மகாரத்தாலே ஞாத்ருத்வத்தைச் சொல்லிற்று
மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம்

ஸ்ரீ வேத வியாசர் முந்துற சேஷத்வத்தை முதல் அத்யாயம் அந்தர்யாம் யதிகரணாதிகளில் சொல்லி
பின்பு இறே இரண்டாம் அத்தியாயத்தில் ஞாத்ருத்வத்தை அருளிச் செய்கிறார் –

அத ஏவ பாஷ்ய காரைர் -சேஷத்வே சதி ஞாத்ருத்வம் சேதன லக்ஷணம் ஸம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தம் க்ருதம் என்றும்
அஹம் ப்ரத்யய வேத்யத்வாத் மந்த்ரே ப்ரதமம் ஈரணாத் பாஷ்ய காரஸ்ய வஸனாத் –சேஷத்வ முக்யதா ஸித்தே -ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா வாக்கியம்

ஞாத்ருத்வ விஸிஷ்ட சேஷத்வமே தாஸ்யம்
இது இறே அசித் ஈஸ்வர உபய வை லக்ஷண்ய ஸாதகமாய் இருப்பது
ஏதத் விஷய ஞானம் இல்லாத போது சத்தான ஜீவனும் அசித் ப்ராயன் அன்றோ என்று உபநிஷத் அசன்னேவ-பவத் என்கிறது
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹி ஆத்மாந பரமாத்மந -ஸாஸ்த்ர வசனம்
தாஸ்யேந லப்த சத்தாகா தாஸ பூதா –பூ சத்தாயாம் -என்று இறே தாது
தாஸ ஸப்தம் சேஷத்வத்தையும்
ஆத்ம ஸப்தம் ஞாத்ருத்வத்தையும் காட்டுவதைக் காணலாம்

ஆக பகவத் தாஸ்யத்தாலே லப்த சத்தாகும் ஜீவா தத்வம் என அறிந்தோம் –

———

அசித் தத்வம்

அசித் தத்வம் அறிவில்லாதது
பிரகிருதி காலம் சுத்த சத்வம் தர்ம பூத ஞானாமியென்ற நான்கு வகை
பிரகிருதி தத்வம் விரோதி -அர்த்த பஞ்சக ஞானத்தில் ஓன்று விரோதி ஸ்வரூபம் -இத்தையே மாயா என்பர்
அர்த்த பஞ்சக ஞானமே நிரதிசய ஆனந்த -பரம மோக்ஷ -ஹேது
அர்த்த பஞ்சக அஞ்ஞானம் அனந்த கிலேச -ஸம்ஸார ஹேது
அநாத்மாவான தன்னை ஆத்மாவாகவும்
அபோக்யமான தன்னை போக்யமாகவும்
அஸ்திர மான தன்னை ஸ்திரமாகவும்
காட்டும் விசித்திர சக்தி மாயா -பிரக்ருதிக்கு உண்டே

மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் -உபநிஷத்
மம மாயா துரத்யயா -கீதா உபநிஷத்
இத்தை கழித்துக் கொள்ளவே பக்தி ப்ரபத்திகள் –

ஆக
அசேஷ சித்த அசித் வஸ்து சேஷீ நாராயணன் பரதத்வம் என்றும்
அவன் திருவடிகளில் தாஸ பூதன் ஜீவாத்மா என்றும்
கர்ம அனுகுண ப்ராக்ருத அசித் சம்பந்தம் விரோதி என்றும்
தத்வ த்ரயங்கள் பற்றி அறிந்தோம்

இனி
ஹிதம்
புருஷார்த்தம் பார்ப்போம்

—————-

பரம ஹிதம்
ஆத்ம க்ஷேமம் அடைய உபாயம் கிருபா விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயம் இஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி தேசிகன்
உப பத்தே ச -வியாசர்
ப்ராப்யஸ் யைவ பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ் யைவ உபாயத்வ ப்ரதீதே -நாயமாத்மா -இதி அநன்ய உபாயத்வ ஸ்ரவணாத் -ஸ்ரீ பாஷ்யம்
ப்ராப்யஸ் யைவ பரமாத்மந ப்ராபகத்வ உப பத்தே யதாஹ –நாயமாத்மா -இதி –வேதாந்த ஸாரம்

புல்லைக்காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்குப் பேதம் இல்லை
ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே -ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
நல்குரவும் -6-3- அவதாரிகையில் ஈட்டில் இவ்விஷயம் வியக்தம்

ஆக பகவானே உபாயம்
உபாயத அவச்சேதகம் காருண்யம் –

———

பரம புருஷார்த்தம்

பகவன் முகோலாசமே ஜீவாத்மாவுக்கு பலம் -ப்ராப்யம்
பர்த்ரு பார்யா பாவ சம்பந்தம் அடியாக -உகாரார்த்த நீர்ணீதம்
ஜீவனான பார்யையைப் பார்த்து
இச்சிப்பான்
அடைவான்
அனுபவிப்பான்
நிறைந்த அனுபவம் பெறுவான்
ஆனந்திப்பான்
பகவானாக பர்த்ருவான பரமாத்மாவின் ப்ரிய மோத ப்ரமோத ஆனந்தங்கள் இருக்கும் படி –
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –பரஸ்மை பத நிர்தேசம் -ப்ராப்தி கிரியா பலம் ஆனந்தம் பரஸ்மை -அந்நியனான பகவானுக்கே சேரும்
ஆப்நோதி -அத்யர்த்த ஞானினம் லப்தவா –
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இளைய பெருமாள்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே -ஆழ்வார்
மற்றை நம் காமன்கள் மாற்று -ஆண்டாள்
ஆம் பரிசு அறிந்து கொண்டு ஐம் புலன் அகத்து அடக்கி -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

ஆக பகவானே உபேயம் என்றும்
அவன் உகப்பு உபேயத அவச்சேதகம் என்றும் அறிந்தோம் –

ஆக
எம்பெருமானார் தர்சனத்தில்
தத்வ
ஹித
புருஷார்த்த
நிஷ்கர்ஷம் இருக்கும் படி அறிந்து
இனி இவற்றின் படி இருக்க வேண்டிய அனுஷ்டானம் பற்றியும் அறிய வேண்டுமே –

———–

அனுஷ்டானம் –

ஸ்ரீ கீதையில் சரம ஷட்கத்தில் முதல் மூன்று அத்யாயங்களால் தத்துவத்தையும்
அடுத்த மூன்றால் அனுஷ்டானத்தையும் நிரூபித்து அருளுகிறார் -தேசிகன்

ஆழ்வார் -உயர்வற திருவாய் மொழியால் தத்துவத்தையும்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியால் அனுஷ்டானத்தையும் அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை

இத்தை ஹிதத்திலும் சேர்ப்பார்கள் நம் பூர்வர்கள்

தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக அறிந்த அதிகாரி
ஐஸ்வர்ய கைவல்ய -ப்ராப்ய ஆபாசங்களிலே நசையற்று
கர்ம ஞான பக்தியாதிகளான ப்ராபக ஆபாசங்களை அடியோடு கைவிட்டு-
ஸ்வரூப அனுரூபமான திவ்ய தம்பதி கைங்கர்யங்களிலே ஆசைப்பட்டு
ஸ்வரூப அனுரூபமாக பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி
பகவானை உபாயமாகப் பற்றக் கடவன்
இதுவே உயர்ந்த தவமான பிரபத்தி மார்க்கம்
தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஸ்ருதி

——–

இந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ரபன்னன் சரணாகதி செய்த பின்பு மோக்ஷம் அடையும் வரை நடந்து கொள்ள வேண்டும் படியை

உத்தர க்ருத்யத்தை ஸாஸ்த்ரம் விளக்கும்

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்டு
மங்களா ஸாஸனமும்
ஆர்த்தியும்
அணுவார்த்தன நியதியும்
ஆகார நியமமும்
அனுகூல ஸஹவாஸமும்
பிரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும்
வர்த்தித்துக் கொண்டு போகக் கடவன்

இவனுக்கு ஐந்து ஸ்பர்சம் பரிஹார்யங்கள் -அவை
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம்

அவனுடைய பரத்வத்தை அனுசந்தித்தவாறே சைவ ஸ்பர்சம் அகலும்
அவனுடைய உபய லிங்கத்தை அறியவே மாயாவதி ஸ்பர்சம் அகலும்
ஸ்ரீ யபதித்வத்தை அனுசந்திக்கவே ஏகாயன ஸ்பர்சம் அகலும்
அவனுடைய நிரபேஷ உபாயத்வத்தை அறியவே உபயாந்தர ஸ்பர்சம் அகலும்
அவனது திவ்ய மங்கள போக்யதையை அறியவே விஷயாந்தர ஸ்பர்சம் அகலும்

தேஹ தாரணமான தள்ள அளவு போஜனமும்
பரமாத்மா ஸமாராதன சமாப்தியான ப்ரஸாத பிரதிபத்தி என்கிற புத்தியோடு வர்த்திக்கக் கடவன்- பிள்ளை
லோகாச்சார்யார்
பிரதிபத்தி கர்மம் இடா பஷணாதி உபையுக்த ஸம்ஸ்காரம் என்பர் மீமாம்ஸகர்
ப்ரபன்னன் ஆஸனாதி அனுயாக அந்தமான் பகவத் ஆராதனத்தை பரம ப்ரேமத்தோடே செய்து கொண்டு
பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரங்களை நெஞ்சாலும் நினையாதவனாய்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்கிறபடி
கரை குறுகும் காலம் எதிர்பார்த்து இருப்பன் –
இதுவே இவன் அனுஷ்டானம்

இப்படி
தத்வ பரமாக ஐந்து கிரந்தங்களையும்
அனுஷ்டான பரமாக நான்கு கிரந்தங்களையும்
நவரத்னங்களாக எம்பெருமான் அருளிச் செய்து ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸம் ரக்ஷணம் செய்து அருளினார்

ஆகவே இறே நம்பெருமாள் அபிமானித்து எம்பெருமானார் தர்சனம் என்று பேர் இட்டு நாட்டுவித்து அருளினார் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

காசும் பொன்னும் மணியும் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 10, 2022

வேதாதிகளிலே பவ்ருக்ஷ மானவ கீதா வைஷ்ணவங்கள் போலே திருவாய் மொழியும் அருளிச் செயல்களின் சாரம் -நாயனார்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ திருவாய் மொழிக்கு ஒப்பு –
ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போரும் உண்டாய்த்து -அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியில்லை -ஈட்டு ஸ்ரீ ஸூக்தி
பெருமான் அடி சேர் வகுளாபரணன் ஓர் ஆயிர மறையின் தமிழில் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே
‘குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் -திருக்குறள்
எங்கள் தென்குருகூர்ப் புனிதன் கவி ஓர் பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே -கம்பர்
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே

ஆடியாடி -2-4- அவதாரிகையில்
காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் ரத்னத்தை இழந்தவனுக்கும் துக்கம் ஒத்து இராது இறே -நம்பிள்ளை ப்ரஸாதித்து அருளிய சீரிய அர்த்தமாகும்

காசு -விபவ அவதாரம்
பொன் -அர்ச்சாவதாரம்
மணியாவது -விபவ அவதாரத்தையும் -தத் பிரதிநிதியான அர்ச்சாவதாரத்தையும் அனுபவிக்கும் பாகவதர்கள் –

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி–7-10-4-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–ஸ்ரீ திருவாய் மொழி–5-8-9-

ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே இவ்விஷயம் அறியலாமே-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் -என்று விபவ அவதாரமான ஸ்ரீ த்ரிவிக்ரமனை அனுபவிக்க ஆசைப்பட்டார்
அது கழிந்த கால வ்ருத்தாந்தம் -அவ்வனுபவம் கிடைக்காமை யாலே துக்கம் தலை எடுத்து நாயகா பாவம் தலை எடுத்து
அஞ்சிறைய மட நாராயில் பக்ஷிகளைத் தூது விட்டார்
நாரை போன்ற பதார்த்தங்களும் பெருமானை விட்டுப் பிரிந்து
தம்மைப் போலவே நோவுபடுகின்றனவாகக் கொண்டு அவற்றுக்குமாகத் தான் நோவு படுகிறார் வாயும் திரை யுகளிலே
இது அர்ச்சாவதார அனுபவ அலாபத்தால் வந்த கிலேசம்
ஆய அறியாதவற்றோடு அணைந்து அழுத மாறன் -காற்றும் கழியும் கட்டி அழுதார் –

ஊனில் வாழ் உயிரே நல்ல போ -என்னம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் என்று
பகவத் பரிபூர்ண அனுபவம் பெற்று எல்லை நிலமான பாகவத அனுபவத்தை
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ஆசைப்பட்டார்
நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக அனுபவிளக்கப் பெறுவது தேசாந்தத்தில் காலாந்தரத்தில் தானே
ஆகவே கிலேசம் மிக்கு அருளிச் செய்கிறார்

முதலில் அஞ்சிறைய மட நாராயில் தூது விட ஷமரானார்
அடுத்து வாயும் திரை யுகளிலே அவற்றுக்குமாகத் தான் அழுதார்
இதில் தானாகப் பேச மாட்டாமல் தாய் பாசுரமாகச் செல்லுகிறது-

இப்படி மூன்று இடங்களிலே துக்க தாரதம்யம் -இதுக்கு அடி இழந்த வஸ்துக்களின் தாரதம்யம் இறே
காசும் பொன்னும் இரண்டும் ஒன்றேயாயினும் உத்கர்ஷ அபகர்ஷ ஹேதுவான மாற்றில் தாரதம்யம் உண்டு –
காசு அல்ப காலீனத் வத்தைப் பற்றியதாம் -விபவம் காதாசித்கம்-
அர்ச்சாவதாரம் ஸர்வ காலீனம் இறே -ஸர்வருக்கும் ஸர்வதா முகம் கொடுக்கும் இடம் இறே –

செழு மா மணிகள் ஆகிறார் திரு மழிசைப் பிரான் போல்வார் -பெருமான் தனக்கும் பிராண பூதர் இறே -நித்ய ஸூ ரிகள் –
பிராண பூதர் என்றது
ஞானீது ஆத்மைவ -என்றும்
அறிவார் உயிரானார் -6-9-8- என்றதை பற்ற இறே
என்னது உன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும் –

பாகவத அனுபவம் பரம ஸ்ரேஷ்டமாய் ஸீமா பூமியாய் இருக்கும் என்று நாம் அறிந்தோம் –
பயிலும் சுடர் ஒளி -ஜீவாத்ம ஸ்வரூப பரம்
நெடுமாற்கு அடிமை -ப்ராப்ய பரம்
இரண்டு திருவாய் மொழிகளும் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீத அர்த்த ப்ரதிபாதகமாய்க் கொண்டு சரம பர்வ நிஷ்டரானது
ஆக பாகவத அனுபவமே பரமப்ராப்யம் என்றபடி –

——————–


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ வசன பூஷண சீர்மை –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 4, 2022

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
-திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற /ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

முன்பே பேர் அருளாள பெருமாள்-கிருபா மாத்திரை ப்ரசன்னாசார்யர்களையும் அனுக்ரஹிப்பதால் பேர் அருளாளர் -என்ற திரு நாமம் –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு நம்பியாரை -இவரும் ஒரு அர்ச்சகர் ஸ்வாமி -திருச்சானூர் கைங்கர்யம் –
பிராட்டிக்கு செய்யும் கைங்கர்யம் காரணமாக விசேஷ கடாக்ஷம் – விசேஷ கடாஷம் பண்ணி அருளி
-தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை
தாமே அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே
சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –
அவர் இங்கே வந்து-ஸ்ரீ ரெங்கம் வந்து – பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -தமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு கோவிலிலே வர்த்தியா நிற்க செய்தே –
பல மண்டலப் பெருமாள் என்ற காட்டு அழகிய சிங்கர் கோயிலிலே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை–பிள்ளை லோகாச்சார்யார் – ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்விடம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க -அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவது என் -என்று பிள்ளை கேட்டு அருள -பேர் அருளாள பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே -பெருமாள்–அரும் பதத்தில் பெரிய பெருமாள் என்பர் – அவருக்கு ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளமாக –
அவர் இப்படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய -ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –
பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று-

இதுக்கு திருமழிசை அண்ணாவாப்பங்கார் ஸ்வாமிகளின் அரும்பத விளக்கம்
இங்கே சமாக்யையை விவரிக்கிறார் -ரத்ன பிரசுரமான -என்று தொடங்கி -திருநாமம் ஆயத்தகு -என்னும் அளவாக –
ரத்னம் ச தத் பூஷணம் ச ரத்ன பூஷணம் என்று கர்ம தாரயனை ஆஸ்ரயிக்கும் அளவில் கனக -கந்தலே நைவ ரத்னம் உன்மீல்யதே -என்கிறபடியே
பொன் சேராத ரத்னம் ஒளி யுடைத்தல்லாமையாலே அது பூஷணமாகா மாட்டாது -என்று
கர்ம தாரயனை விட்டு -ரத்னை ப்ரசுரம் ரத்ன ப்ரசுரம் ரத்ன பிரசரம் ச தத் பூஷணம் ச ரத்ன ப்ரசுர பூஷணம் -என்றாய்
சாக பிரிய பார்த்திவ சாக பார்த்திவ -என்றுமா போலே உத்தர பத லோபத்தாலே ப்ரசுர பதம் லுப்தமாய் ரத்ன பூஷணம் என்கிறது –
அதில் பிராஸுர்யத்துக்கு ஸ்வ ஆஸ்ரயம் பிரதி விசேஷ்ய தயா பான ஸ்தானத்தில் ஸ்வ ஆஸ்ரய ஸாமாநாதி கரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றும் என்னும் நியமத்தாலே
இங்கும் பிராஸுர்ய ஆஸ்ரய ரத்ன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றக் கடவது –
ரத்ன பிரசுர பூஷணத்தில் ரத்ன விஜாதீயம் தான் பொன்னே யாகை யுசிதம் என்று திரு உள்ளம் பற்றி
-ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப்போலே -என்று அருளிச் செய்கிறார்

சப்தத்துக்கு விஜாதீயமாவது அர்த்தமாய் -அர்த்தம் அற்பமாய் -சப்தம் பிரசுரம் என்று சித்தித்ததாக பிரசங்கிக்கும் ஆகையாலே
வசன பூஷணம் என்ற திரு நாமத்தில் வசன சப்தம் பூர்வாச்சார்ய வசனமாய் –
பிராஸுர்யம் தத் அபேக்ஷயா விசேஷ்யமாய்த் தோற்றும் அளவிலே
பூர்வாச்சார்ய வசன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ பிரதி யோகிகமாய்த் தோற்றக் கடவது
அதில் பூர்வாச்சார்ய வசன விஜாதீயமாவது ஸ்வ வசனம்
ஸ்வ வசனம் ஸ்வல்பமாய் ஓர்வாச்சார்ய வசனம் பிரசுரமாய் இருக்கை
ஸ்வ கபோல கல்பிதத்வ சங்கா வ்யுதசன த்வாரா ப்ராமாண்யத்துக்கு அத்யந்த அவஸ்யகம் என்று திரு உள்ளம் பற்றி அருளுகிறார் -பூர்வாச்சார்யர்களுடைய வசன பிரசுரமாய் -என்று

——————-

இனி பூர்வாச்சார்கள் வசனங்களை உதாஹரித்த இடங்கள் –
1-அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –69-ஜீயர் -நஞ்சீயர்

2-திருக் குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–122-

3-பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –126-
இவ்வாக்கியம் பிள்ளான் வாக்கியம் என்று வியாக்யானம்

4-தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை–177-ஜீயர் -நஞ்சீயர்

5-ஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-192-

6-ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –443-பிள்ளை வடக்குத் திருவீதிப்பிள்ளை

———-

இனி பூர்வர்கள் வார்த்தைகளை வசன அநு பூர்வீ நிர்த்தேசம் பண்ணாமல் வார்த்தை என்றே எடுத்த இடங்கள் –

1-இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-31-

வார்த்தை–யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை —

2-அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது–112-

வார்த்தை-அவர் குண ஹீநருமாய்-விரூபருமான அன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது -என்று அருளிச் செய்த வார்த்தை –

3-இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-203-

வார்த்தை-மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே
ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –
ஆனபின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் –
இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

4-மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-234-

வார்த்தை-ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க
வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

5-பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–385-

வார்த்தைகளை–யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஞ்ஞாத ஸூஹ்ருதம் என்ன பிறந்ததாய்-
அவ்வளவிலே கிடாம்பி பெருமாள் இருந்தவர் -நமக்கு பகவத் விஷயம் போல ஸூஹ்ருத தேவர் என்னும் ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயர் என்ன –
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது – நினைக்கிற விஷயம் தன்னைக் காண் -என்று அருளிச் செய்ய –
ஆக -இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பது -என்றபடி –

6-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –166-

ஸ்ரீ ராம வார்த்தை -ஸ்ரீ சீதா வார்த்தை -இருவர் அபிப்ராயப்படி அருளிச் செய்த ஸ்லோகங்கள் உண்டே-

————-

இனி பூர்வர் வசனங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸூத்ரங்கள்-

1-அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –73-

இதுக்கு மூலம் நம்பிள்ளை ஈடு -8-7-11-அடிச்சேர் வகை -ஞான ஆனந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம் -சேஷத்வம் ஆயிற்று –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

அடியேன் உள்ளான் -8-8-2-என்னுள்ளான் என்ன வேண்டும் இடத்தில் அடியேன் உள்ளான் என்கையாலே ஞான ஆனந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் என்கை –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

2-இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —40-

இதுக்கு மூலம் -நம்பிள்ளை ஈடு -10-2-அவதாரிகை
உகந்து அருளின நிலங்களில் நிலை தான் முதலிலே பகவத் விஷயத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலாய்
ருசி பிறந்தால் -யே எதா மாம் பிரபத்யந்தே என்கிறபடியே ஸுலப்யத்துக்கு நிலமுமாகையாலே உபாய பாவமும் பூர்ணமாய்
ப்ராப்ய பூமியில் கொடு போம் இடத்தில் ஆதி வாஹிக கணத்தில் பிரதானனான தானே ஹார்த்த அநு க்ருஹீத -என்கிறபடியே வழியில் பிரதிபந்தகங்களைப் போக்கிக் கொடு போகைக்கும் முற்பாடனாகைக்கும் உடலாய்
ஸம்ஸார சம்பந்தம் அற்று அவ்வருகே போனால் செய்யும் அடிமையை விரோதி கிடக்கச் செய்தே காதா சித்கமாகச் செய்கைக்கும் உடலாய்  இருக்கும் இறே

ஆக -ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய்
ருசி பிறந்த போதே உபாயம் ஆகைக்கும் உடலாய்
ஞான பக்தி வர்த்தகங்களுமாய்
விரோதியும் கிடக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே
திரு அநந்த புரமே பரம ப்ராப்யம் என்றதாயிற்று –

———-

3-ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப்  போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —413-

(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே சரம பர்வம் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தே –
இது வருகிற வழி தான் என்-என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

இதற்கு மூலமான நம்பிள்ளை ஈடு -7-10- அவதாரிகை –
இனித் தான் வேத வாக்யங்களும் -ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூப பிராப்தி அளவும் சொல்லவே
அதுக்கு அவ்வருகில் கைங்கர்யமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்ம பிராப்தி அளவும் சொல்லி விடும் –
ஆழ்வார்கள் -வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று அது தன்னையே சொல்லா நிற்பர்கள்
பிராப்தி பலமான கைங்கர்யத்தில் ருசியாலே ஸம்ஸாரம் த்யாஜ்யம் -ஸர்வேஸ்வரன் உத்தேச்யன் என்ற ஞானம் பிறந்து
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் -பேஷஜம் பகவத் பிராப்தி -என்று பகவத் பிராப்தி அளவிலே நின்றார்கள்
அவர்களில் காட்டில் மயர்வற மதிநலம் அருளினன் என்று பகவத் ப்ரஸாத லப்தமான ஞானத்தை யுடையரான இவர்களுக்கு வாசி இது வாயிற்று –

———–

4-பிரஜை தெருவிலே இடறி –தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –அப்படிச் சொல்லாம் -இறே –370-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –371-

இதற்கு மூலமான பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-பெரிய திருமொழி -11-8-5-
தள்ளி –
எல்லாவற்றுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே ஸம்பந்தம் இருப்பது –
தான் இடறித் தாய் முதுகிலே குத்தும் பிரஜையைப் போலே
அத்தலையாலே வந்ததுக்கு அவனை இன்னாதாமோ பாதி
இத்தலையாலே வந்ததுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே

————–

4-ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –242-

இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி -11-5-5-
இடைச்சிக்குப் பரிச்சின்னனாய் இருந்தானே யாகிலும்
ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்குமே –

———–

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –147-

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் –
அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –

இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை சரணாகதி கத்ய வியாக்யானம்
தஸ்மாத் ப்ரணம்ய -இத்யாதி
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது
யாருடைய ஹ்ருதயத்தாலே என்னில் -ஸ்வ ஹ்ருதயத்தாலே
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபி முக்யம் பண்ணினானே யாகிலும்
ரிபூணம் அபி வத்ஸல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் –
என்கிற அவன் படி பார்த்தால் இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒருங்குறையும் இல்லை
ஆகிலும் பதி விரதையாய் இருப்பவள் நெடு நாள் வியபசரித்துப் பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரக்ஷிக்க வேணும் என்று முன்னே நின்றால்
வருகை தானே அபராதமாய்
அதுக்கும் மேலே
என்னை ரக்ஷிக்க வேணும் என்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹானியுமாயும் இருக்கும் இறே –

——————–

இனி பூர்வர்களின் பாசுரங்களைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்த ஸூத்ரங்கள் –

1-ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –432-

இதுக்கு மூல ஸ்லோகம்

யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –

———-

2-தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —439-

இதுக்கு மூல ஸ்லோகம்

நாராயணா அபிவிக்ருதம் யாதி குரோ பிரஸ்யுதஸ்ய துர்புத்தே- கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-

————

3-கைப் பட்ட பொருளை கைவிட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்க
கடவன் அல்லன் –448-

இதுக்கு மூல பிரமாணம்

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே
லப்ப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தம் அந்வேஷதி ஷிதெவ்-என்றும் –

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழி படுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டார் யேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று -என்றும் சொல்லக் கடவது -இறே- ஞான சாரம் -34-

—————-

4-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –449-

இதுக்கு மூல பிரமாணம்

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா
சாஸ்திர கம்யந்து ய ஸ்மரேத்
ஹஸ்தஸ்த்த முதகம் த்யக்த்வா
கநஸ்த்தம் ஸோ அபிவாஞ்ச்சதி-என்றும் –

எட்ட இருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விரும்புறுதல் -பொட்டெனத்தன்
கண் செம்பளித்து இருந்துக் கை துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று (ஒத்து )ஞான சாரம் -33-
-என்று சொல்லக் கடவது இறே – இது வ்யூஹாதிகளுக்கும் உப லஷணம்-

————–

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —450-

இதுக்கு மூல பிரமாணம்

ஏனைவ குருணா யஸ்ய ந்யாச வித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்த்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்றும் –

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ்த் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்றும் சொல்லக் கடவது இறே–ஞான சாரம் -36-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் வைபவம்– ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 3, 2022

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி

அவதார ஸ்தலம்:ஸ்ரீ மதுர மங்கலம்

ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்)

சிஷ்யர்கள்: பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீ பெரும்பூதூர் 

இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.(1834-ஜய வருஷம் என்றும் சொல்வர் )

அவருடைய பெற்றோர்கள் (ராகவாச்சார்யர் -ஜானகி அம்மாள் )தக்க வயதில் அந்தந்த வயதிற்குரிய வைதீக ஸம்ஸ்காரங்களை கிருஷ்ணமாசார்யருக்கு செய்து வைத்தனர். சிறு வயது முதற்கொண்டே இவர் எம்பெருமானிடத்தில் மிகுந்த பற்றுதல் உடையவராய் விளங்கினார். எப்பொழுதும் எம்பெருமானின் விக்ரஹங்களை வைத்துக்கொண்டு விளையாடுவார். மேலும் பகவத் விஷங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஒரு நாள் இவர் விஸ்மயப்படும்படி திருவேங்கடமுடையான் திரு மேனி ஒன்றுமே சேவை சாதித்து மற்ற திருமேனிகள் எல்லாம் மறைய
நிலை நின்ற திருவேங்கடத்தாயன் நாண் மலர்த்தாமரை அடிகளை மனத்தாலும் வாயாலும் போற்றி மகிழ்ந்து வந்தார் –

உரிய வயதில் இவருக்கு மணம் முடித்து வைக்க விரும்பிய இவருடைய தந்தையார், பெண் பார்க்கும் படலத்தை துவக்கினார். ஒருசமயம் பெண் தேடும் நிமித்தம் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணமாசார்யரும் வெளியூர் புறப்பட்டனர். பிரயாணத்தின்போது, ஒரு தம்பதியினர் தங்களுடைய குழந்தையுடன் பயணித்ததை கவனிக்க நேர்ந்தது. அதில் கணவன் அதிகப்படியான சுமைகளுடன் குழந்தையையும் சுமந்தபடி தன் மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவதும் பின்னர் அவ்வப்போது அவள் மீதுள்ள மோகத்தின் காரணமாக அமைதியடைவதுமாய் இருப்பதை காணமுடிந்தது. இதைக் கண்ணுற்ற கிருஷ்ணமாசாரியர் அதிர்ந்து போனார். உடனே -விஹித போகம் ஸ்வரூப விருத்தம் -ஸிஷ்ட கர்ஹிதம் -பிராப்தி பிரதிபந்தகம் -என்று தெளிந்தவராய் தன்னுடைய தந்தையாரிடம் தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

இச்சம்பவத்திற்கு பிறகு, ஒரு சமயம் கோயில் கந்தாடை ரங்காசார்யர் அவருடைய கப்பியாமூர் கிராமத்திற்கு வந்திருந்தபோது ஆசார்ய ஸம்பந்தம் கிடைக்கப்பெற்றார். ஆசார்யர் இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கிய தத்துவார்த்தங்ளைப் போதித்தார். திருவாராதனப் பெருமாளும் எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்து அருளினார்
பாலப்பருவத்தில் சேவை சாதித்து அருளின திருவேங்கடத்துறை திருமாலே இங்கும் சேவை ஸாதிக்கக் கண்டு ஆனந்த பரவசரானார் -இதனைத் தொடர்ந்து ஆசார்ய கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன் ஆசார்யருடன் இணைந்தே பல திவ்ய தேசங்களுக்கும் யாத்திரைகள் சென்றுவந்தார்.

ஒரு சமயம் அவர் திருவேங்கடத்தில் தங்கி இருந்தபோது, எம்பார் அவருடைய கனவில் தோன்றி மதுரமங்கலம் வரும்படி அழைத்து தனக்கு குளிராக இருப்பதாகவும் அதனால் ஒரு சால்வை கொண்டுவரும்படியும் பணித்தார். கிருஷ்ணமாசார்யர் திருவேங்கடமுடையானிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உத்தரவு வேண்டி நின்றார். திருவேங்கடமுடையானும் தன்னுடைய சால்வையையே கொடுத்து ஆசீர்வத்து விடை கொடுத்தனுப்பினார். கிருஷ்ணமாசார்யர் அந்த சால்வையை மதுரமங்கலம் எடுத்துச் சென்று எம்பாரிடம் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எம்பாரின் ஆசீர்வாதத்தினால் கிருஷ்ணமாசார்யருக்கு சன்னியாசத்தில் தீராத விருப்பம் மேலிட்டது.

திருவேங்கடத்திற்கு திரும்பிய அவர் வகுளாபரண ஜீயரிடம் (பெரிய ஜீயர்) தனக்கு சன்னியாஸாச்ரமத்தை அளிக்கும்படி வேண்டினார். கிருஷ்ணமாசார்யர் இன்னும் வயதில் மிகவும் இளையவராக இருப்பதாக நினைத்த வகுளாபரண ஜீயர் சில காலம் பொறுத்திருக்கும்படி கூறினார். ஆனால், கிருஷ்ணமாசார்யர், எம்பாருடைய அருளினால் தான் பற்றற்ற நிலையை எட்டிவிட்டதாகவும் தன்னால் தொடர்ந்து ஸம்ஸாரத்தில் நீடிக்க இயலாது என்று கூறியும் தனக்கு உடனே ஸன்யாஸத்தை அளிக்கும்படி வற்புறுத்தினார்.

வகுளாபரண ஜீயர், எம்பெருமான் ஆணை அதுவானால் தனக்கு சித்தம் எனச் சொல்லிவிட்டு திருமலைக்குச் சென்று விட்டார். வழியில் முறையாக தயார் செய்யப்பட்ட த்ரிதண்டம் ஒன்றை கண்டார். அதையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். இரவு நித்திரையில் எம்பெருமான் அவர்முன் தோன்றி கிருஷ்ணமாசார்யருக்கு அந்த த்ரிதண்டத்தை அளித்து ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். மிக்க மகிழ்ச்சி அடைந்த பெரிய ஜீயர், கிருஷ்ணமாசாரியாரை அழைத்து அவர்க்கு ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து செய்து வைத்தார்.

கிருஷ்ணமாசார்யருக்கு திருவேங்கடமுடையானிடம் இருந்த பக்தியை அறிந்த வகுளாபரண ஜீயர் அவருக்கு திருவேங்கட ராமானுஜ ஜீயர் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஸ்ரீ மதுர மங்கலம்  திரும்பிய திருவேங்கட ஜீயர், சில காலம் அங்கேயே தங்கியிருந்து எம்பாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அது முதல் மதுரமங்கலம் எம்பார் ஜீயர் என அன்புடன் எல்லோராலும் அழைக்க்ப்பட்டார்.எம்பார் ஜீயர் சமீபத்தில் எப்போதும் ஸர்ப்ப ஸஞ்சாரம் கண்டு ஸமீபஸ்தர் பயப்பட்டார்கள் –

அவர் பல திவ்யதேசங்களுக்கு விஜயம் செய்தபின் இறுதியாக
எம்பார் ஸ்வாமி ஒரு சமயம் திருக்குருகூர் எழுந்து அருளி ஆழ்வாரை சேவித்துக் கொண்டு இருக்க
திருவரங்கத்தில் பெரிய பெருமாளை சேவித்து இருக்கத் திரு உள்ளமாய்
அன்று இரவு இவர் ஸ்வப்னத்தில் திருநாராயண புரம் தொட்டாச்சார்யார் சேவை சாதித்து
நம் வார்த்தைகளைக் கேட்பீராக

மஸ்தகம் ஸ்ரீ சடாராதிம் நாதாக்யம் முக மண்டலம்
நேத்ர யுக்மம் ஸரோஜாஷம் கபோலவ் ராகவன் ததா

வக்ஷஸ் ஸ்தலம் யாமு நாக்யம் கண்டம் ஸ்ரீ பூர்ண தேசிகம்
பஹு த்வயம் கோஷ்டி பூர்ணம் ஸைல பூர்ணம் ஸ்தந த்வயம்

குஷிம் து வர ரங்கார்யம் ப்ருஷ்டம் மாலா தரம் ததா
கடிம் காஞ்சீ முனிம் ஜ்ஜேயம் கோவிந்தார்யம் நிதம்பகம்

பட்ட வேதாந்தி நவ் ஜங்கே ஊருயுக்மம் மதாத்மஜம்
கிருஷ்ணம் ஜானு யுகம் சைவ லோகம் ஸ்ரீ பாத பங்கஜம்

ரேகாம் ஸ்ரீ சைல நாதாக்யாம் பாதுகாம் வர யோகிநம்
புண்ட்ரம் ஸேநா பதிம் ப்ரோக்தம் ஸூத்ரம் கூர பதிம் ததா

பாகி நேயம் த்ரி தண்டஞ்ச காஷாயஞ் சாந்த்ர பூர்ணகம்
மாலாஞ்ச குருகே சார்யம் சாயாம் ஸ்ரீ சாப கிங்கரம்

ஏவம் ராமாநுஜார்யஸ் யாவயவாந கிலாந் குரூன்
அவயவிநம் மஹாத்மா நம் ராமானுஜ முனிம் பஜே

இப்படி சர்வ ஆச்சார்யர்களும் அவயவங்களாய் தான் அவயவியாய்
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய் -பொன்னரங்கம் எண்ணில் மயலே பெருகுமவராய்
உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ சம்பன்னராய்
எழுந்து அருளி இருக்குமவரான நம் இராமானுசன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றி ஸ்ரீ பெரும்பூதூரிலே நித்ய வாஸமாக இரும் என்று அருளிச் செய்தார்-

ஸ்ரீ எம்பெருமானாரின்  அவதார ஸ்தலமான  ஸ்ரீ பெரும்பூதூர்  வந்தடைந்தார். அங்கேயே தங்கி எம்பெருமானாருக்கு சேவை செய்யவும் தீர்மானித்தார். அவருடய சீடர்கள் அவர் தங்குவதற்கேற்ப கோயிலுக்கு தெற்கே ஒரு மடத்தையும் நிறுவினர்.

ஒரு நாள் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ பகவத் விஷய காலஷேபத்துக்கு ஸ்வாமிகள் காத்து இருக்க
ஜீயர் ஸ்வாமி ஓர் மண்டபத்தின் மண்ணை இருந்து துழாவி இது வாமனன் மண் என்று கூறி மண்ணை எடுத்து சிரம் மேல் கொண்டார் –
முதலிகள் என் என்று வினவ
ஆதி கேசவப் பெருமாள் குதியுரை நம்பிரான் மீது ஆரோஹித்து மண்டபத்தைச் சுற்றி எழுந்து அருளிக் கோயிலுக்குள் பிரவேசித்தார்
அந்த அடிச் சுவட்டைக் காண ஆசைப்பட்டுத் தேடிக் கண்டு களித்தேன் என்றார் –

அவர் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்த காலங்களில் பல ஸ்ரீவைஷ்ணர்கள் அவரை அணுகி அவரிடம் நம்முடய ஸத் ஸம்ப்ரதாயத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கற்று அறிந்தனர். அவரும் நமது பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளையும் அவற்றில் அடங்கியுள்ள தத்துவார்த்தங்களையும் விளக்கியதோடு அவருடய காலத்தில் பல வித்வான்களையும் உருவாக்கினார்.

அவர் இந்த லீலா விபூதியில் குறுகிய காலமே வழ்ந்து தன்னுடைய 77 வது வயதில் விஷு வருடம் தை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதியில் பரம பதத்திற்கு எழுந்தருளினார்.

அவர் இயற்றிய பல நூல்களில் தலை சிறந்ததாக போற்றப்படுவது பிள்ளை லோகாசார்யர் இயற்றிய ஸ்ரீவசனபூஷணத்திற்கு மணவாள மாமுனிகள் அருளிச்செய்த வ்யாக்யானத்திற்கான அரும்பதம் (விளக்க உரை நூல்). ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு மிக உன்னதமான விளக்க உரை எழுதியதோடு நில்லாமல், ஸ்ரீவசனபூஷணத்தின்படி தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பகவத் மற்றும் பாகவத கைங்கர்யத்திற்கே அர்ப்பணித்தார். ஸத் ஸம்ப்ரதாயத்தின் தத்துவங்களை நிலை நிறுத்தக்கூடிய பல கிரந்தங்களையும் இவர் சாதித்துள்ளார்.

விஷ்ணுபுராணம், தத்வ த்ரயம், யதீந்த்ர மத தீபிகா போன்ற நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக்கொண்ட தன்னுடைய நூலில் ப்ரஹ்மாண்டம், அதன் வடிவம் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார். இந்த விளக்கம் ஒரு சித்திர வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீ ரவி எனப்படும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் மறுபதிப்பீடாக வெளியிடப்பட்டது.

அவருடைய படைப்புகளில் சில:

  1. ஸ்ரீவசனபூஷணம் அரும்பதம்
  2. ஸித்தோபாய ஸுதரிசனம்
  3. ஸத் தரிசன ஸுதரிசனம்
  4. துத் தரிசன கரிஸனம்
  5. விப்ரதிபத்தி நிரஸனம்
  6. நம்மாழ்வாரின் “செத்தத்தின் …” ஸ்ரீஸூக்தி வ்யாக்யானம்
  7. சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
  8. ஜ்யோதிஷ புராணங்களுக்கு ஐக கண்ட்ய ஸமர்த்தனம்
  9. துருபதேஸதிக்காரம்
  10. சரண சப்தார்த்த விசாரம்
  11. ச்ருத ப்ரகாசிகா விவரநம்
  12. முக்தி பதசக்தி வாதம்
  13. ப்ரஹ்மபத சக்தி வாதம்
  14. பூகோள நிர்ணயம்
  15. த்யாக சப்தார்த்த டிப்பணி
  16. கீதார்த்த டிப்பணி
  17. கைவல்ய ஸத தூஷணி
  18. ஸ்ரீராமானுஜ அஷ்டபதி
  19. ஸித்தாந்த தூளிகை
  20. ஸித்தோபாய மங்கள தீபிகை
  21. தர்மக்யா ப்ராமாந்ய ப்ரகாசிகை
  22. ஸித்தாந்த பரிபாஷை
  23. ஸ்ரீராமானுஜரின் தெய்வீக வடிவத்தில் மூழ்குதல் – திருமஞ்ஞன கட்டியம், மற்றும் பல.

இவரே ஸ்ரீ பெரும்பூதூரில் நம்பிள்ளை லோகாச்சார்யார்களை எழுந்து அருளப் பண்ணுவித்து உத்ஸவம் கண்டு அருளப் பாரித்து செய்து அருளினார் –
உடையவர் திருவரங்கச் செல்வத்தைத் திருத்தினால் போலே -எம்பார் ஜீயர் ஸ்வாமியும் உடையவருடைய செல்வத்தைச் சீர் திருத்தி
ஸ்ரீ ராமானுஜ முக்ய தேசிக லஸத் கைங்கர்ய ஸம் ஸ்தாபராக எழுந்து அருளி இருந்தார்
உடையவர் திருமஞ்சனக் கட்டியம் அருளிச் செய்தார்
ஸ்ரீ பெரும் பூதூரில் வசந்த மண்டப கைங்கர்யம் -கோதா விலாசம் நந்தவனம் -வன போஜன உத்ஸவம் நடத்தி அருளினார் –

இவ்வாறாக, அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அவர்களின் புகழ்மிக்க வாழ்வில் சில துளிகளை அனுபவித்தோம். அவர் ஒரு தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர். நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில் அவரைப்போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:

ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

 

————————————————

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ தேவாதி ராஜனும் ஸ்ரீ வேதாதி ராஜனும் -சம்பிரதாய பேத மர்ம உத் காடநம் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 3, 2022

இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ஸஹோம்

அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி சமநு ப்ரவிஷ்ட ப்ரஜாபதி சரதி கர்ப்பே அந்தஸ் –

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்

ஏவம் பஞ்ச ப்ரகாரோஹம் ஆத்மநாம் பததாமத பூர்வஸ் மாதபி பூர்வஸ் மாத் ஜ்யாயாந் சைவ உத்தர உத்தர -ஸ்ரீ பாஞ்சராத்ரம்

ஆவரண ஜலம் போலே பரத்வம் பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள் -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதார ஸ்ரீ வசன பூஷணம்

உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே

அர்ச்சாவதாரமே ஷேமங்கரம் –

கோயில் திருமலை பெருமாள் கோயில் ப்ரஸித்தம்

நாகரீணாம் ச ஸர்வாஸாம் புரீ காஞ்சீ விஸிஷ்யதே கிரீணாம் ஸாபி ஸர்வேஷாம் ஸ்ரேஷ்டோ ஹஸ்தகிரி ஸ்ம்ருத

வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரி ஸ்வயம் வரத ஸர்வ பூதாநாம் அத்யாபி பரி த்ருஸ்யதே –புராண பிரஸித்தம்

தேவாதி ராஜன் –
தேவ ராஜன் –
வரத ராஜன் –
அருளாழி அம்மான் –
அருளாளப் பெருமாள் –
பேர் அருளாளன் –
இமையோர் தலைவன் –
அமரர்கள் அதிபதி –
வானவர் கண்ணன் –
வரம் தரும் மணி வண்ணன் –
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் –
வானவர் கோன்
திரு மா மகளைப் பெற்றும் ஏன் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் –
என்னை மனம் கவர்ந்த ஈசன் வானவர் தம் முன்னவன்
ஆழியான் அத்தியூரான் புள்ளை யூர்வான் -என்று திவ்ய ஸூ ரிகளால் கொண்டாடப்படுபவன்

திருமங்கை ஆழ்வாருக்கு நிதி காட்டிக்கொடுத்த பெருமாள்
விந்த்யா டவியிலே வழி திகைத்து அலமந்த இளைய பெருமாளுக்கு மார்க்க தர்சி
ஆளவந்தார் இளைய ஆழ்வாரைக் கடாக்ஷித்து ஆ முதல்வன் இவன் என்று தர்சன ப்ரவர்த்தகராக ஆக்கி ஆறுல அருளிய பெருமாள்
யஜ்ஞ மூர்த்தி வாதம் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு மண்டபத்தில் -ஸ்வாமி ராமானுஜருக்கு உதவி அருளிய பெருமாள்
இதனால் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் சாத்தப் பெற்றார்
ஈடு பிரசாரத்துக்கு அருளிய பெருமாள்
ஸ்ரீ பிள்ளை உலகாச்சார்யாராக இவரே திரு அவதரித்து ஸ்ரீ வசன பூஷணம் அருளிய பெருமாள்
அவர் திரு அவதார திருவோணத்தையும் தான் நேராக திரு அவதரித்த ஹஸ்தத்தையும் திரு நக்ஷத்ரமாகக் கொண்டு உத்சவம் கண்டு அருளுகிறார்

————–

வேதாந்த தேசிக பதே விநி வேஸ்ய பாலம் -தயா சதகம் -வேதாதி ராஜனாகக் கொண்டாடப்படுபவர்

ஆழ்வாரை
யுக வர்ண க்ரம அவதாரமோ -வ்யாஸாதிவத் ஆவேசமோ -மூத்தவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ -அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று சங்கிப்பர்

எம்பெருமானாரை
சேஷோ வா ஸைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர்வேதி ஸாத்விகை விதர்க்யாய மஹா ப்ராஜ்ஜை யதிராஜாயா மங்களம்

தேசிகரையும்
வேங்கடேச அவதாரோ அயம் தத் கண்டாம் ஸோ தவா பவேத் யதீந்த்ராம் ஸோ தவ இத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் -என்னும்படியாய் இருக்கும்

பாத்ர பதமா சக்த விஷ்ணு விமலர் ஷே வேங்கட மஹீத்ர பதி தீர்த்த திந பூதே ப்ராதர பவத் ஜகதி தைத் யரிபு கண்டா ஹந்த கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்தயா -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவ நக்ஷத்ரமாகிய திரு வோணத்தில் புரட்டாசியில் காஞ்சியில் திரு அவதாரம் –

காஞ்சீ புரீ யஸ்ய ஹி ஜென்ம பூமி விஹார பூ வேங்கட பூதேந்த்ர வாஸஸ்த்தலீ ரங்கபுரி தமீட்யம் ஸ்ரீ வேங்கடேசன் குரும் ஆஸ்ரயமா –

வேதாந்த தேசிக பதம் யஸ்மை ஸ்ரீ ரெங்க ஸாயிநா தத்தம் தஸ்மை நமஸ் குர்ம வேங்கடேச விபச்சித –

பொன்னை மா மணியைஅணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை எம்பிரான் தன்னை யான் சென்று காண்டம் தண் காவிலே என்று -இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூ சிதம்

இவரது ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தை அனுபவிப்போம் –
ஸகல வேதாந்த சாரார்த்த கர்ப்பிதம்
வவந்தே வரதம் வந்தீ -என்று சுமந்திரன் உஷஸ் காலத்தில் ஸ்ரீ ராமனை சேவித்தான் -என்று வால்மீகி பகவான்
இருவரும் பெருமாள் என்றே பிரசித்தம் அன்றோ

இந்த ஸ்துதியில் ஆதிம ஸ்லோகம் -தவி ரத சிகரி ஸீம்நா -என்பது ஸ்வாமி திருக்கோவலூரில் எழுந்து அருளி இருந்து தேஹளீசனை மங்களா ஸாஸனம் செய்து அங்கு நின்றும் காஞ்சிக்கு எழுந்து அருளுகிறார்
வரும் வழியில் தேவராஜன் கல்யாண குண கீர்த்தனம் -பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்தன அம்ருதம் –
தான் உகந்த வூர் எல்லாம் தன் தாள் பாடி -என்னக் கடவது இறே
கோ அபி காருண்ய ராசி ந குசலம் கவயது -என்று பரோக்ஷ நிர்தேசமே இப்படிக் கூறக் காரணம் ஆகிறது
இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி அபரோக்ஷ நிர்த்தேசம் -ஆறாவது ஸ்லோகம் வரை உபோத்காதம்
ஸ்துதிக்க இழிந்த சாஹாசத்தை க்ஷமித்து அருள வேணும் -ஸ்துதிக்கைக்கு ஈடான ஞான சக்திகளைத் தந்து அருள வேணும்
அடியேனுடைய இந்த ஜல்பனத்தை ஸூக பாஷணமாகக் கொண்டு கடாக்ஷிக்கப் பிரார்திக்கிறார்

ஏழாவது ஸ்லோகம் தொடங்கி ஸ்துதி முகேந தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிடுகிறார் –

யம் சஷூசாம் அவிஷயம் ஹயமேத யஜ்வ
த்ராஹி யஸா ஸுகரிதேந ததர்ச பரிணாம தஸ்தே
தம் த்வாம் கரீச காருண்ய பரிணாமாஸ்தே
பூதாநி ஹந்த நிகிலானி நிசாம்யந்தி -7-

ஸத்ய வ்ரத ஷேத்ரத்தில் சகல மனுஷ நயன விஷயமாக்கிக் கொண்டு -தன்னுடைய ஆராதனத்திலே ஸந்துஷ்டானாய்
ஆவிர் பூத ஸ்வரூபியாய் -ஹிதார்த்தமாக -சர்வ பிராணி சம்பூஜிதனாய்-சர்வ அபீஷ்ட பிரதனாய் –
சர்வ யஞ்ஞந சமாராதனாய் -நித்ய வாசம் பண்ணி அருளுகிறார்

அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து,
பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால்
ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.

கேவல கருணாதி ரேகத்தாலே- ஸகல மனுஷ நயன விஷயதாம் கதன் அன்றோ இவன் -பேர் அருளாளன் தானே –

இந்தப்பிரபந்தத்தில் திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமே இறே நடப்பது –
உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் -உப பத்தேச் ச –
ப்ராப்யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ் யைவ உபாயத்வோப பத்தே
நாய மாத்ம ப்ரவசநேந லப்ய ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவ ஏஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே த நூம் ஸ்வாம் –
இத்ய நந்ய உபாயத்வ ஸ்ரவணாத் -ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார்

நாராயண ஸப்தார்த்தம்
ஸ்வாமித்வம் -வாத்சல்யம் -உபாயத்வம் -உபேயத்வம் -நான்கையும்

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-ஸ்வாமித்வம்-

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-வாத்சல்யம்-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-வாத்சல்யம்

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-உபாயத்வம்

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-உபேயத்வம்

———

உபாய உபேயத்வங்கள் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனான ப்ரஹ்மமே
நம்மாழ்வார் முதல் பத்தால் உபாயத்வத்தையும்
இரண்டாம் பத்தால் உபேயத் வத்தையும்
மூன்றாம் பத்தால் திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் அருளிச் செய்கிறார்

ஆத்யே பஸ்யன்நுபாயம்
பிரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதீயே
கல்யாண உதார மூர்த்தே த்விதயமி தமிதி ப்ரேஷமாண த்ருதீயே -தேசிகன் –

இந்த ப்ராதான்யத்தைப் பற்றியே கல்யாண குணங்களுக்கு முன்பே திவ்ய மங்கள விக்ரஹத்தை கத்யத்திலே அருளிச் செய்கிறார் –

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் பிரியதரம் ரூபம் யதத் யத்புதம் -அவனுக்கும் போக்யதமம்

திருமங்கை ஆழ்வார் தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வர்

சித்தா லம்பந ஸுகர்ய க்ருபோத்தம்ப கதாதிபி
உபாயத்வம் இஹ ஸ்வாமி பாதயோர் அநு ஸம்ஹிதம் -திருவடிகளுக்குச் சொன்னது திருமேனிக்கு உப லக்ஷணம்

ஸ்தோத்ர ஆரம்பம் போலே முடிவிலும் -46-49-50-திவ்ய மங்கள விக்ரஹ அனுபத்தோடே தலைக் கட்டுகிறார் –

வரத தவ விலோகயந்தி தன்யா
மரகத பூதர மாத்திரகாயமானம்
வியாபகத பரிகர்ம வாரவானம்
ம்ர்கமத பங்க விசேஷ நீல மஞ்சம் –46-

அந்தரங்க அணுக்கர்கள் என்ன பாக்ய சாலிகள் -உனது ஏகாந்த திருமஞ்சன சேவையிலும் –
ஜ்யேஷ்டா அபிஷேகமும் சேவையிலும் முற்றூட்டாக அவர்களுக்கு காட்டி அருளுகிறாயே –
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –
மின்னும் நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே –

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும்,
மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நிறம் உள்ளதான
உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு.
அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும்.
அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும்.
அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும்.
கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும்.
இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.

—————-

நிரந்தரம் நிர்விசாதா த்வதீயம்
அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம்
சத்யம் சபே வாரண சைல நாத
வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா-49-

த்வதீயம் அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம் -மனசுக்கும் எட்டாத உன்னுடைய ஸுந்தர்ய திவ்ய மங்கள விக்ரஹத்தை
யாதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா –
அடியேனுடைய ஊனக் கண்-மாம்ச சஷூஸ் – கொண்டே -நிரந்தரம் பருகும்படி அருளிச் செய்த பின்பு
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா –மோக்ஷ அனுபவ ஆசை அற்றதே -இது சத்யம் –
இன்று வந்து உன்னைக் கண்டு கொண்டேன் -உனக்குப் பனி செய்து இருக்கும் தவம் உடையேன் -இனிப் போக விடுவதுண்டே-

வ்யாதன்வன தருண துளசி தாமபி ஸ்வாமபிக்யாம்
மாதங்காத்ரவ் மரகத ருசிம் பூஷணாதி மானஸே நா
போக ஐஸ்வர்ய ப்ரிய ஸஹசரை கா அபி லஷ்மி கடாஷை
பூய ஸ்யாம புவன ஜனனி தேவதா சந்நி தத்தாம்-50-

மரகத மணி குன்றமான பேர் அருளாளனை பெரும் தேவி தாயார் உடன்
மானஸ சாஷாத்கார சேவை தந்து அருள நமக்காக பிரார்த்தித்து அருளுகிறார் –

————————————

சத்யா த்யஜந்தி வரத த்வயி பத்த பாவ
பைதாமகாதிஷு பதேஷ்வபி பாவா பந்தம்
கஸ்மை ஸ்வேதேத ஸூக்த சஞ்சாரன உத்ஸுகாய
காரா க்ருஹே கனக ஸ்ருங்கலயா அபி பந்தா -29-

திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் பெற்றவர்கள் ப்ரஹ்ம லோகாதிகளையும் புல்லை போலே துச்சமாக அன்றோ தள்ளுவார்கள் –
பரமாத்மனி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மனி -என்று இருப்பவர் இங்கேயே முக்த பிராயர்-
புண்யமான கனக விலங்காலும் சம்சார சுழலில் கட்டுப் படாமல் ஸூக மயமாகவே உத்ஸாகமாக சஞ்சாரம் செய்வர் –

வைராக்கியத்துடன் ஐஸ்வர்யாதிகளை த்யஜித்தது வியப்பு அன்று –

பேர் அருளாளன் பெருமை பேசும் அடியவர் உடன் கூடும் இதுவே பரம புருஷார்த்தம் என்கிறார் -43 ஸ்லோகத்தில்

த்வம் சேத் ப்ரஸீதசி தவாம்ஸி சமீபதஸ் சேத்
த்வயாஸ்தி பக்தி அநக கரீசைல நாத
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ –43-

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
இச்சுவை தவிர யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
த்வம் சேத் ப்ரஸீதசி-உனது அனுக்ரஹ சங்கல்பமும் –தவாம்ஸி சமீபதஸ் சேத் -உன்னை விட்டு பிரியாத நித்ய வாசமும் –
த்வயாஸ்தி பக்தி அநக -வழு விலா அடிமை செய்யும் படி நீ கடாக்ஷித்து அருளின பின்பும்
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய -உன் அடியார் குளங்கள் உடன் கொடியே இறுக்கப் பெற்ற பின்பும்
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ —சம்சாரமே பரமபதம் ஆகுமே நாமங்களுடைய நம்பி –
அத்திகிரி பேர் அருளாளன் கிருபையால் இங்கேயே அடியார்கள் உடன் கூடி
கைங்கர்ய அனுபவம் பெறலாய் இருக்க மற்று ஓன்று வேண்டுவனோ -முக்த அனுபவம் இஹ தாஸ்யதி மே முகுந்தா –

—————

ஓவ்தன்வதே மதி சத்மநி பாசமாநே
ஸ்லாக்யே ச திவ்ய சதநே தமஸா பரஸ்மின்
அந்த காலே பரம் இதம் ஸூஷிரம் ஸூஷூஷ்மம்
ஜாதம் கரீச கதம் ஆதாரண ஆஸ்பதம் தே -21-பேர் அருளாளன் வாத்சல்யம் அருளிச் செய்யும் ஸ்லோகம் -நிகரில் புகழ் வண் புகழ்

அப்ராக்ருத நித்ய விபூதி திரு மா மணி மண்டபம் -திருப் பாற் கடல் -ஸ்ரீ தாயார் திருவவதார ஸ்தானங்களை எல்லாம் விட்டு
கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும் புல் என்று ஒழியும் படி அன்றோ வாத்சல்யம் அடியாக மனத்துள்ளான்

பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது,
ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு.
நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய்.
மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய்.
அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.


சர்வ ஸப்த வாஸ்யன் என்பதை புகழு நல் ஒருவன் என்கோ
சராசர வ்யபாஸ்ரயஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்தஸ் தத் பாவபா வித்வாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-17-
இத்தையே ஸ்லோகம் -12 ஸ்லோகம் 15 -அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மேதி சங்கர இதீந்த்ர இதி ஸவாராதிதி
ஆத்மேதி ஸர்வமிதி சர்வ சர அசராத்மன்
ஹஸ்தீஸ சர்வ வச சாம வசனா சீமாம்
த்வாம் சர்வ காரணம் உசந்தி அநபாய வாகா –12-

சர்வ அந்தராத்மத்வம் -சர்வ காரணத்வம் -சர்வ சப்த வாச்யத்வம் -வாக்யத்வம் –
அனைத்தும் அநபாய வாக்கான வேதங்கள் கோஷிக்குமே

சாமான்ய புத்தி ஜனகாஸ் ச ஸதாதி சப்தாத்
தத்வாந்தர ப்ரஹ்ம க்ருதாஸ் ச ஸிவாதி வாகா
நாராயணே த்வயி கரீச வஹந்தி அநந்யம்
அன்வர்த்த வ்ருத்தி பரி கல்பிதம் ஐக காந்தியம் -15-

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா -சிவா -ஜிரண்ய கர்ப்ப -இந்திரா -அனைத்து சப்தங்களும் நாராயணன் இடமே பர்யவசிக்கும்
மங்கள பரம் -ஐஸ்வர்ய பரம் -உபய விபூதி நாதத்வம் -ஆதி –
வேத ப்ரதிபாத்யன் இவனே -ஐக காந்தியம் -சர்வ சப்த வாச்யன் -சர்வ லோக சரண்யன்

அவனே உபாய பூதன் -ஸ்லோகம் -31-
அவனது கடாக்ஷ பிரார்த்தனை -ஸ்லோகம் -32-
அவனது ஸ்வா பாவிக தயா சிசேஷம் -ஸ்லோகம் -33-
ரஷா பரம் அவனுடையதே என்று ஸ்லோகம் -34
ரக்ஷிக்காமல் போனால் சரணாகத ஸம் ரஷகம் பிருதம் என்னாவது -ஸ்லோகம் -35-
தேவ மனுஷ்ய மிருகம் வாசி இன்றி அடியேனையும் ரக்ஷிக்க வேண்டும் என்பதை ஸ்லோகம் -40-
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் -அது ஸ்வாபா விகம்-என்பதை ஸ்லோகம் -42-

 

த்வத் பக்தி போதம் அவலம்பிதம் அக்ஷமாநாம்
பாரம் பரம் வரத கந்துமணீஸ் வரானாம்
ஸ்வைரம் லிலாங்கயிஷாதாம் பவ வாரி ராஸீம்
த்வாமேவ கந்தும் அஸி சேது அபாங்குரா த்வம் –31-

நீயே உன்னை பெற உபாயமாகிறாய் அபாங்குர-சேதுவை போலே சம்சார ஆர்ணவம் கடக்க –

ஆஸ்ராந்த சம்சரண கர்ம நிபீதிதஸ்ய
ப்ராந்த்ஸ்ய மே வரத போக மரீசிகாசு
ஜீவாது அஸ்து நிரவக்ரஹ மேதா மான
தேவ த்வதீய கருணாம்ருத த்ரஷ்ட்டி பாதா-32-

லோக ஸூகங்களான கானல் நீரிலே அல்லாடி திரியும் அடியேனுடைய தாப த்ரயங்கள் தீர
தேவரீருடைய கடாக்ஷ கருணாம்ருதமே ஒரே மருந்து -ஜீவாது –

அந்த ப்ரவிஷ்ய பகவான் அகிலஸ்ய ஐந்தோ
ஆ ஸேதுஷ தவ கரீச ப்ர்ஸாம் தவியான்
சத்யம் பவேயம் அதுனா அபி ச ஏவ பூயக
ஸ்வாபாவிக தவ தயா யதி ந அந்தராயா -33-

ஸ்வாபாவிக தயை அடியாகவே தானே மனத்துள்ளானை அறியலாம் –
அத்தை கொண்டாடுகிறார் இதில் –

அஞ்ஞானதா நிர்கமம் அநாகம வேதினாம் மாம்
அந்தம் ந கிஞ்சித் அவலம்பனம் ஆஸ்னு வானம்
எதாவாதிம் கமயிது பதாவிம் தயாளு
சேஷாத்வ லேசா நயனே க இவ அதி பார -34-

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்–இது வரை சதாசார்யர் மூலம் அஞ்ஞானம் போக்கி
யாதாத்ம்ய ஞானம் உண்டாக்கி பர ந்யாஸம் பண்ணுவித்து அருளினாய்
அழியாத அருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் யாரே –
இன்னும் சேஷமாக உள்ள சரீர சம்பந்தத்தையும் ஒழித்து பரம புருஷார்த்தமாகிய
ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுத்து அருளுவது உனக்கு பரமோ –

பூயா அபி ஹந்த வசதி யதி மே பவித்ரி
யாமயாசு துர் விஷக வ்ரத்திஷூ யாதனாஸு
சம்யக் பவிஷ்யதி ததா சரணாகதானாம்
சம்ரஷிதேதி பிருதம் வரத த்வதீயம் –35-

-சரணாகத ரக்ஷகனை அண்டி –ஆத்ம சமர்ப்பணம் செய்த பின் -சரணாகதன்-நிர்பயம் -நிர்பரம்–
அனுஷ்டான பூர்த்தி அடைந்து க்ருதக்ருத்யன் -ஆகிறான்
இனி அர்ச்சிராதி கதி வழிய பரம புருஷார்த்தம் -நித்ய -நிரவதிக ப்ரீதி காரித கைங்கர்யம் –
நமன் தமர்களுக்கு அஞ்ச வேண்டாமே –

ச த்வம் ச ஏவ ரபஸோ பவ தவ்ப வாஹ்ய
சக்ரம் ததேவ சிததாரம் அஹம் ச பாலயா
சாதாரணே த்வயி கரீச ஸமஸ்த ஐந்தோ
மதங்க மாநுஷாபீத ந விசேஷ ஹேது -40-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு த்வரித்து வந்து ரஷித்து அருளினாயே-உன் கருணைக்கு குறையும் இன்றிக்கே இருக்க
உன் வாகனமான ஸ்ரீ கருடாழ்வான் உன்னை வேகமாக கூட்டி வரும் சக்தியும் குறைவற்று இருக்க
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானும் அப்படியே சித்தமாக இருக்க
அடியேனும் சம்சாரத்தில் உழன்று இருக்க -சர்வ ஐந்து ரக்ஷகனான நீ த்வரித்து வந்து ரஷிக்காததன் காரணம் என்னவோ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டனை தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
திரு வைகாசி ப்ரஹ்மோத்சவம் மூன்றாம் திரு நாள் இன்றும் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் ஸ்ரீ வரதன் காட்டி அருளுகிறார் –

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய்.
உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய்.
அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய்.
ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை.
ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே.
யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் –

—————

முக்த ஸ்வயம் ஸூக்ருத துஷ்க்ருதா ஸ்ருங்கலாப்யாம்
அர்ச்சிர் முகை அதிக்ரதை ஆதி வாஹிக அத்வா
ஸ்வ சந்த கிங்கரதயா பவத கரீச
ஸ்வாபாவிகம் பிரதி லபேய மஹாதிகாரம் -42-

இரு விலங்கு விடுத்து -இருந்த சிறை விடுத்து -ஓர் நாடியினால் கரு நிலங்கள் கடக்கும் —-
தம் திரு மாதுடனே தாம் தனி அரசாய் உறைகின்ற அந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச் சேர்த்து
முந்தி இழந்தன எல்லாம் முகிழ்க்கத் தந்து ஆட் கொள்ளும் அந்தமிலா அருளாழி அத்திகிரித் திரு மாலே

—————–

அநிப்ர்த பரிரம்பை ஆஹிதம் இந்திராயா
கனக வலய முத்ராம் கண்டதேச ததான
பணிபதி சயனியாத் உத்தித த்வம் ப்ரபாதே
வரத சததம் அந்தர் மானஸம் சந்நிதேய–47-

சயன பேர மணவாள பெருமாள் உடன் நித்ய சேர்த்தி சேவை பெரும் தேவி தாயார் –
பங்குனி உத்தரம் மட்டும் பேர் அருளாள உத்சவர் உடன் சேர்த்தி சேவை –
உபய நாச்சியார் -ஆண்டாள் -மலையாள நாச்சியார்களுடனும் அன்று சேவை உண்டு
நவராத்ரி உத்சவத்தில் கண்ணாடி அறையிலே சுப்ரபாத சேவை உண்டே
சயன பேரர் ஸ்ரீ ஹஸ்திகிரி படி ஏரி மணவாளன் முற்றம் திரு மஞ்சனம் சேவை நித்யம் உண்டே
காலை விஸ்வரூப சேவையில் தானே பெரிய பிராட்டியாருடைய கனக திரு வளைகளுடைய தழும்பை சேவிக்க முடியும் –

நாச்சிமார் சாபரணமான தங்கள் திருக்கைகளால் அணைக்கையாலே –

அவ்வாபரணங்கள் அழுத்த அவற்றாலே முத்ரிதமான ம் கண்டமே முற்றும் உண்ட கண்டம் -நாயனார்

இதே போல் ஸ்ரீ வரதராஜ பஞ்சா சத்திலும் -ஸ்லோகம் -28- அருளிச் செய்கிறார் –

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே
தவத் காந்தி மே ஸஹித ஸங்காநிபே மதிர்மே
வீஸ்மேர பாவ ருசிரா வனமாலி கேவ
கண்டே குணீ பவதி தேவபதே தவ தீயே –28-

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே- ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி தாயார் திருக் கை வளையல் முத்திரை
நீல மேக நிப ஷ்யாம வர்ணம் -திருமேனி திருக் கண்டத்தில் இருந்து வெண்மையான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் தெளிக்கக் கண்டு அனுபவம்

நம் தேவாதிராஜனே பரத்வம்
நம் வேதாதி ராஜனே பரம ப்ரமாதா
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஆதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -அவர் பிரமானமாகக் கொண்ட -அருளிச் செயலே பரம பிரமாணம்-

———–

சம்பிரதாய பேத மர்ம உத் காடநம்

ஜீவாத்மா
பகவச் சேஷ பூதனாயும் ஞாதாவாயும் –
பரதந்த்ரனாயும் -அத்யந்த பரதந்த்ரனாயும்
போக்தாவாகவும் போக்ய பூதனாகவும் உள்ளான்
இவ்விரண்டு இரண்டு ஆகாரங்களிலே எது முக்யம் எது அமுக்யம் என்னும் அம்சத்தில் அபிப்ராய பேதம் உள்ளது

ஞாத்ருத்வம் ஜீவ தர்மி க்ராஹகமான சித்தமாகையால் தத் அநு குணமான கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவ ஸ்வரூபமாகக் கொள்ளலாம் என்பர் சிலர்
ஆகையால் ஞான ஸ்வரூபனுமாய் ஞான குணகனுமான ஆத்மா
பகவான் தந்த ஸாஸ்த்ரத்தைக் கொண்டும் அவன் தந்த சரீரத்தைக் கொண்டும் அவனுக்கு அதி பரதந்த்ரனாய் பக்தியோகாதிகளை அனுஷ்ட்டித்து
ஒரு தேச விசேஷத்திலே கால விசேஷத்திலே கிட்டி
ஒரு தேஹ விசேஷ விஸிஷ்டனாய் அவனை அனுபவித்து தான் ஆனந்தபாக்காய் போக்தாவாய் ஆகிறான் என்பது இவர்கள் கூற்று
திருமந்திரத்தில் மகாரமும்
சரம ஸ்லோகத்தில் வ்ரஜ விதியும்
த்வயத்தில் ப்ரபத்யே -அனுஷ்டானமும்
ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி -உபநிஷத் வாக்கியமும் பிரமாணங்கள்

சேஷத்வம் பிரணவத்தின் பிரதம அக்ஷர ஸித்தம் ஆகையாலும்
மகர யுக்த ஞாத்ருத்வத்துக்கு மேலே நமஸ் பதத்தில் அத்யந்த பாரதந்தர்யம் உதிதம் ஆகையாலும்
த்ருதீய பதத்தில் யுக்தமான போக்த்ருத்வத்தை தத் அநந்தரம் அநு ஷக்தமான நமஸ் பதம் கழித்து போக்யத்வத்தை சித்தாந்ததீ கரிக்கும் படியாலும்
ஜீவ ஸ்வரூபம் பகவத் சேஷ பூதமாய் -பகவத் அத்யந்த பரதந்தரமாய் பகவத் போக்யமாய் இருக்கும் என்பர் வேறு சிலர்
ஆகையால் ஸ்வரூபத்திலோ உபாயத்திலோ பலத்திலோ அகங்கார லேச ப்ரசங்கமும் நடையாடாமல்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிஓராப்திக்கு உகப்பானும் அவனே -என்னலாய் இருக்கும் என்பது இவர்கள் கூற்று
இவர்களுக்கு
திருமந்திரத்தில் அகாரமும் நமஸ்ஸும்
சரம ஸ்லோகத்தில் ஏக சப்தமும்
த்வயத்தில் சரணவ் என்கிற த்வி வசனமும்
என் உணர்வினுள் இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
பருப்பயத்துக் கயல் பொறித்த –பொறித்தாய் -பாசுரமும்
த்வமேவ -பிரபத்தி தர்மோ க்ராஹக வசனம் இத்யாதிகள் பிரமாணங்கள்

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத–ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி –2-

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்ததான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜ ரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

——————————

ஸாஸ்த்ரிகள் தெப்பக் கரையரைப் போலே இரண்டையும் இடுக்கி -பிறவிக்கடலை நீந்த –
ஸாரஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற யூர மிக யுணர்வு யுண்டாம்
வர்ண தர்மிகள் தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்தது –

அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும்படி இறே தாஸ்யம் அந்தரங்க நிரூபனம்
அது தோல் புரையே போம்
இது மர்ம ஸ்பர்ஸீ

அதுவும் அவனது இன்னருளே

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன்
இல்லாதபோது உபாய நைரபேஷ்யம் ஜீவியாது –

——————–

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -24 -சாத்ய உபாய சோதன அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

யதாதிகரணம் ப்ரபுர்யஜன தான ஹோமார்ச நா
பரந்யசன பாவநா ப்ரப்ருதிபி சமாராதித
பலம் திசதி தேஹி நாமிதி ஹி சம்ப்ரதாய ஸ்திதி
சுருதி ஸ்ம்ருதி குரு உக்திபி நயவதீபி ஆபாதி ந

இப்படி சர்வஜ்ஞமாய் -சர்வ சக்தியாய் -பரம காருணிகமாய்-சர்வ சேஷியாய்-ச பத்நீகமாய் -சர்வ லோக சரண்யமான
சித்தோபாய விசேஷம் தெளிந்தாலும்
ஆரோக்யம் இந்த்ரியௌல் பண்யம் ஐஸ்வர்யம் சத்ருசாலிதா
வியோகா பாந்தவை ராயு கிம் தத் யே நாத்ர துஷ்யதி -என்கிறபடியே
விவேகம் இல்லாதார்க்கு குணமாய் தோன்றினவையும் தோஷமான படி கண்டு சம்சார வைராக்கியம் பூர்ணம் ஆனாலும்
பரமாத்மினி யோ ரக்த -என்கிறபடியே பிராப்ய ருசி உண்டானாலும்
மஹதா புண்யே புண்யேன க்ரீதேயம் காயநௌ ஸ்த்வயா
ப்ராப்தும் துக்க வோததே பாரம் த்வர யாவந்த பித்யதே -என்கிறபடியே
த்வரை பிறந்தாலும் அநாதியாக அனுவ்ருத்தமான ஆஜ்ஞாதி லங்கனம் அடியாக பிறந்து நிற்கிற
பந்தகமான பகவத் நிக்ரஹத்துக்கு பிரசம நமாக
மாமேகம் சரண்யம் வ்ரஜ -என்று விதி வாக்யத்தாலும்
ப்ரபத்யே -என்ற அனுஷ்டான வாக்யத்தாலும்
சொல்லப்பட்ட சாத்ய உபாய விசேஷம் தெளியாத போது
சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை வசீகரிக்க விரகில்லை
ஆகையால்-அதின்
அதிகாரத்திலும்
ஸ்வரூபத்திலும்
பரிகரங்களிலும்
வரும் கலக்கங்களை சமிப்பிக்கிறோம் –

இப் பிரபத்தியும் ஒரு வைதிக தர்மம் அன்றோ -இதுவும் ஒரு யாக விசேஷம் அன்றோ நியாச வித்யையில் ஓதப்படுகிறது —
ஆகையால் இது சர்வாதிகாரமாகக் கூடுமோ -என்று சிலர் விசாரிப்பார்கள் –
இது சர்வேஸ்வரனை சர்வருக்கும் சரணம் என்று ஓதுகிற ஸ்வேதாஸ்வதர சுருதி பலத்தாலே பரிஹ்ருதம் –
இவ் வர்த்தம் -சர்வலோக சரண்யாய -சர்யா யோக்யம நாயாசம் அப்ரபாவமநூபமம் பிரபன்நார்த்தி ஹரம் விஷ்ணும்
சரணம் கந்து மர்ஹசி -இத்யாதி உப ப்ருஹ்மணங்களாலும்
த்ரயாணாம் ஷத்ரியாதீனாம் -என்று தொடங்கி சூத்ர பர்யந்தங்களான வர்ணங்களை எடுத்து
பிரபன்னானாம் ச தத்த்வத -என்று சொல்லுகிற ஸ்ரீ சாத்த்வத வசனத்தாலும்
குயோ நிஷ்வபி சஞ்ஜாதோ ய சக்ருச் சரணம் கத
தம் மாதா பித்ரு ஹந்தாரம் அபி பாதி பவார்த்திஹா -என்று
சொல்லுகிற சனத்குமார சம்ஹிதா வசனத்தாலும் த்ருடீ க்ருதம்
ஆகையால் உபாசனம் த்ரைவர்ணிக அதிகாரமாக அப சூத்ர அதிகரணத்திலே சமர்த்திதம் ஆனாலும்
வைதிகங்களான சத்ய வச நாதிகள் போலே பிரபத்தியும் சாமான்ய தர்மம் ஆகையாலே
யதாதிகாரம் வைதிக மந்த்ரத்தாலே யாதல் -தாந்தரிக மந்த்ராதிகளாலே யாதல்
சர்வருக்கும் பிரபத்தியநுஷ்டானத்துக்கு விரோதம் இல்லை

காகாதிகளும் பிரபன்னராக சாஸ்த்ரங்களில் கேளா நின்றோம் –
மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாபயோ நய
ஸ்தரீயோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்த அபி யாந்தி பராம் கதிம் -என்று
பகவத் ஆச்ரயண மாத்ரம் சர்வ சாதாரணமாக சரண்யன் தானும் அருளிச் செய்தான் –
உபாசனத்துக்கும் ப்ராரம்பம் த்ரை வர்ணிக சரீரத்திலே யானாலும் அவசானம் சர்வ சரீரத்திலும் கூடும் என்னும் இடம்
தர்ம வ்யாதாதய அப்யந்தே பூர்வாப்யா சாஜ் ஜூ குப்சிதே
வர்ணாவரத்வே சம்ப்ராப்தா சம்சித்திம் ஸ்ரமணீ யதா -என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே சொல்லப் பட்டது –
இப்படி உபாசனம் த்ரை வர்ணிகர்க்கே ஆரம்பணீயம் ஆனால் போலே பிரபத்தியில் ஒரு நியாமகத்தாலே
சாமான்ய வசனத்துக்கு சங்கோசம் இல்லாமையாலும்
விசேஷ வசன ப்ராபல்யத்தாலும் இப் பிரபதனம் சர்வர்க்கும் யோக்யம்-ஆன பின்பு
இது தனக்கு விசேஷித்து வேண்டும் அதிகார அம்சம் முன்பே சொன்னோம்
அதஸ் த்ரைவரணி கத்வாதி பாவ அபாவ அபி கச்யசித்
நாதிகார பிரபத்தேஸ் ஸ்யாத் ஆகிஞ்சன்யமநாஸ்ரித —
இவ்வர்த்தத்தை -குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிற பாட்டிலும்
ஜனித்வாஹம் வம்சே-ஸ்தோத்ர ரத்னம் -61– என்கிற ஸ்லோகத்திலும் கண்டு கொள்வது –
ஆகையால் சரண்ய சரணா கதி ஞானமும் ஆகிஞ்சன்யாதிகளும் உடைய சர்வ ஜாதியர்க்கும் பிரபத்தி அதிகாரம் சித்தம் –

இவ் உபாய ஸ்வரூபத்தைப் பற்ற
நாராயணம் ச லஷ்மீகம் ப்ராப்தும் தச் சரணத்வம்
உபாய இதி விஸ்வாசோ த்வயார்த்த சரணாகதி -என்கிற அபியுக்தர் பாசுரமும்
அதிகார கோடியிலும் அங்க கோடியிலும் நிற்கிற விஸ்வாசத்தின் உடைய ப்ரதான்யம் சொல்லுகைக்காக அத்தனை –
அப்படியே பிரபத்திர் விஸ்வாச சகருத் பிரார்த்தனா மாத்ரேண அபேஷிதம் தாஸ்ய நீதி விஸ்வாச பூர்வகம்
பிரார்த்தநாமிதி யாவத் என்கிற வாக்யமும்
பிரதான விவஷிதை யாலே முதல் விச்வாசத்தைச் சொல்லி
அநந்ய சாத்யே-என்கிற பரத முனி ப்ரணித லஷண வாக்யத்தின் படியே
விஸ்வாச பூர்வகம் பிரார்த்தனம் என்று நிஷ்கர்ஷித்தது –
இவ் வாக்யம் தானும் ஆத்ம நிஷேபம் அங்கி இதரங்கள் அங்கங்கள் என்று சொல்லுகிற
நியாச பஞ்சாங்க சம்யுக்த இத்யாதி வசனங்களாலே
பிரார்த்தனையும் அங்கம் ஆகையால் ரஷாபேஷம் ப்ரதீஷதே -என்கிறபடியே
ஈஸ்வரன் அபேஷா மாத்ர சாபேஷன் என்று இவ் வங்கத்தின் பிரதான்யத்தை விவஷித்துச் சொன்ன படி —
சிறிய கத்யத்திலும்-ஸ்ரீ ரெங்க கத்யத்தில் – விஸ்வாச பூர்வக பிரார்த்தனையைப் பண்ணி
நமோ அஸ்து தே -என்று முடிக்கையாலும்
உபாய சரண சப்த சாமர்த்யத்தாலும் நிஷேபமும் சித்தம்-
நமஸ் ஸூ ஆத்ம நிஷேப பரம் என்னும் இடம் -நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம் -இத்யாதிகளிலே பிரசித்தம் –

ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் பிரார்த்தனா பூர்வக ஆத்ம நிஷேபம் கண்டோக்தம் ஆயிற்று –
ஆகையால் அநேனைவ து மந்த்ரேண ஸ்வாத்மானம் மயி நிசஷிபேத் ஆத்மாத்மயி பரந்யாச -இத்யாதிகளிலே அங்கி விதானம்-
இப்படி அல்லாத போது ஷட் விதா சரணாகதி -என்கிற வாக்யத்தில் ஆபாத ப்ரதீதியைக் கொண்டு
ஸ்நானம் சப்தவிதம் ஸ்ம்ருதம் இத்யாதிகளில் சொன்ன
ஸ்நா நாதி பேதங்கள் போலே தனித் தனியே பிரபத்தி விசேஷங்களாக பிரசங்கிக்கும் –
பிரபத்திம் தாம் பிரயுஞ்ஜீத ச்வாங்கை பஞ்ச ப்ராவ்ருதாம் -இத்யாதி வசநாந்தர பலத்தாலே நியமிக்கப் பார்க்கில்
அப்படியே பிரார்த்தனா விச்வாசாதிகளை பிரபத்தி என்று சொல்லுகிற வசனங்களை நியமித்து
நியாச பஞ்சாங்க சம்யுத-இத்யாதிகள் படிய நிஷேபம் ஒன்றுமே அங்கி -இதரங்கள் அங்கங்கள் என்கை உசிதம் –
பூயஸாம் நியாயத்தைப் பார்த்தாலும் சாத்யகி தந்திர லஷ்மீ தந்திர அஹிர் புத்ன்ய சம்ஹிதாதிகளில்
பிரபத்தி அத்யாயங்களில் நிஷேபம் அங்கி என்றே பிரசித்தம்
த்வமே உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி ரித்யுக்தா -என்கிறதவும்
தத் பிரகரணத்திலே பிரதானமாக சொன்ன பர ந்யாச பர்யந்தம் என்னும் இடம் அவதாரண சஹக்ருத உபாய சப்தத்தாலே வ்யஞ்ஜிதம்-
ஒரொரு விவஷைகளாலே அங்கங்களை பிரதானமாகச் சொல்லுகை லோகத்திலும் உண்டு –
ஆலம்ப சப்தம் யாக பர்யந்தம் ஆனால் போலே -சரணம் வ்ரஜ இத்யாதிகளின் தாதுக்கள்
நியாச நிஷேப த்யாகாதி சப்தங்களால் சொல்லப்பட்ட ஆத்ம த்யாகத்தை சொல்லுகை வைதிக மரியாதைக்கு அனுகுணம்-
யாகமாவது இன்ன தேவதைக்கு இன்ன ஹவிஸ்ஸூ -என்று இங்கனே ஒரு புத்தி விசேஷம் –
இப்படி என் ஆத்மாவாகிற ஸ்வாதுதமான ஹவிஸ் ஸ்ரீ மானான நாராயணன் பொருட்டு -என்று
இங்கனே இருப்பதொரு புத்தி விசேஷம்
இவ் விடத்தில் ஆத்ம யாகம் இவ் வாத்ம நிஷேபத்தில் சகல பலார்த்திகளுக்கும் சாதாரணமான
கர்த்தவ்ய ஸ்வரூபம் -ரஷா பரந்யாசம் என்னும் இடம் முன்பே சொன்னோம்

ஹவிஸ் சமர்ப்பணா தத்ர பிரயோக விதி சக்தித
ஆத்ம ரஷா பரந்யாச அகிஞ்சனஸ் யாதிரிச்யதே
அத ஸ்ரீ ராம மிச்ராத்யை பரந்யாச விவஷயா
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்யம்ச்ச ப்ரபத்திரித லஷித
அக்ருதே து பரந்யாசே ரஷாபேஷண மாத்ரத
பச்சாத் ஸ்வ யத்ன விரதி ந ப்ரசித்தயதி லோகவத்
ஆகிஞ்சன்ய பரந்யாச உபாயத்வ ப்ரார்த்த நாத்மநாம்
த்ரயாணாம் சௌஹ்ருதம் ஸூ ஷ்மம் ய பச்யதி ச பச்யதி -என்று
இப்படி அங்க பஞ்சக சம்பந்தமான ஆத்ம ரஷா பர ந்யாசமே பிரபத்தி சாஸ்திரம் எல்லாவற்றிலும் பிரதானமான
விதேயம் என்று ஸ்ரீ விஷ்ணு சித்த வாதி ஹம்சாம் புவாஹ வரதாசார்யாதிகள் சங்க்ரஹித்தார்கள்–
இவ்விடத்தில் சிலர் சாஸ்த்ரார்த்த தத்வம் தெளிந்த போதே சேஷத்வ அனுசந்தானம் பண்ணினான் அன்றோ –
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவம் ச சதா ஸ்மர-என்றதுவும்
பரம புருஷார்யா தத் உபாயங்களை வேண்டி இருந்தாயாகில் -நீ தாசனாய்
ஈஸ்வரன் ஸ்வாமியாய் இருக்கிறது ஸ்வபாவம் சித்தம் என்று
தத்வத்திலே தெளிவோடு வர்த்தி என்ற படி அன்றோ –
ஆனால் இப்போது ஆத்ம சமர்ப்பணம் என்று ஒரு விதேயம் உண்டோ என்று சொல்லுவார்கள் –

இதுவும் வாக்ய ஜன்ய ஞான மாத்ரத்தாலே மோஷம் என்கையாலே அநாதரணீயம்-
ஜித கௌஸ்துப சௌர்யஸ்ய சம்ராஜ சர்வ பாப்ம நாம்
சிஷ்டம் ஹ்யாத்ம அபஹாரஸ்ய நிஷ்க்ருதி ஸ்வ பரார்ப்பணம்
பர சேஷத்வ தீ மாத்ரம் அதிகாரி விசேஷகம்
பச்சாதாத்ம அபராஹஸ்ய நிரோதாய ச கல்பதே-
சேஷத்வாதி விசிஷ்டமான ஆத்ம தத்தவத்தை சாஸ்த்ரத்தாலே தெளிந்தவனுக்கு
அதிகார விசேஷத்தோடும் பரிகர விசேஷத்தோடும்-பல சங்கல்ப விசேஷத்தோடும் கூடி
சேஷத்வ ப்ரதி சந்தான கர்ப்பமான ஸ்வ ஆத்ம ரஷா பர ந்யாசம் இறே-
அநாத்யபராத மூலே நிக்ரஹ நிவ்ருத்திக்கு உபாயமாக விதிக்கப் படுகிற ஆத்ம சமர்ப்பணம் –
தத்வ ஞானத்தாலே மோஷம் என்கிற இதுவும் ஒரு உபாய அனுஷ்டானத்தை முன்னிட்டு என்னும் இடம்
பஜஸ்ய மாம் -மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதி விதி பல பிராப்தம்
ஜ்ஞானான் மோஷ உபதேசோ ஹி தத் பூர்வோபாச நாதி நா
உபாச நாதி ரூபத்வா ஞானான் மோஷோ விவஷித -என்றபடி
சாஸ்திர ஜன்யமான சேஷத்வ ஞான மாத்ரம் நிவ்ருத்தி தர்மங்களான நியாச உபாச நாதிகள்
எல்லா வற்றுக்கும் பொதுவாய் இருக்கும் –

சேஷ வ்ருத்தி ரூபமான கைங்கர்யமே முமுஷூவுக்கு புருஷார்த்த காஷ்டை ஆகையாலே
சேஷத்வம் அறியாதே மோஷ உபாயம் அனுஷ்டிக்கை கடியாது இறே –
சேஷத்வ ஞானம் இன்றிக்கே மோஷ அர்த்தமாக சாஸ்த்ரத்தில் விதித்த தர்மங்களை அனுஷ்டித்தான் ஆகிலும்
இந்த தர்மங்கள் தாமே சேஷத்வ ஞானத்தையும் உண்டாக்கி பூர்ண அனுஷ்டான முகத்தாலே இறே மோஷ ஹேது வாவது
ஆகையால் இங்கே விதேயமான சமர்ப்பணம் சேஷத்வ ஞான மாத்ரம் அன்று -மற்று எது என்னில் –
சேஷத்வ ஞானாதி யுக்தமான ஸ்வ ரஷா பர ந்யாசம்
வாக்ய மாத்ரேண சித்தத்வாத் சித்தோபாய இஹோச்ச்யதே
பிரபத்திரிதி வாத அபி விதி நாத்ர விஹன்யதே -சரணம் வ்ரஜ -என்கிற இது
இமமர்த்தம் ஜா நீஹி -என்கிற மாத்ரமாய் -ஒரு கர்த்தவ்ய உபாய விதியரம் அன்றிக்கே ஒழிந்தாலோ என்னில் –
இது சப்த ஸ்வ ராச்ய வ்ருத்தம்-
பிரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை பஞ்சபிராவ்ருதம் -இத்யாதிகளான சபரிகர ச்புடதர பிரபத்தி விதிகளோடும் விரோதிக்கும் –
ஈஸ்வரன் மோஷம் உபாயம் என்கிற இவ்வளவே இங்கு வக்தவ்யமாய் மோஷ அதிகாரிக்கு விதேயாந்தரம் இன்றிக்கே ஒழிந்தால்
இவ் விடம் பிரசஸ்துதமான பக்தி யோகத்துக்கு அபேஷிதமான தத்தவ உபதேச மாத்ரம் –

இங்கு தத்தவ ஞானம் உடையவனுக்கு ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபார நிவ்ருத்தியே பிரபத்தியாய்
சர்வ தர்ம ஸ்வரூப த்யாக மாத்ரம் சாத்தியமாக விதிக்கப் படுகிறது என்பார்க்கு
நிவ்ருத்தி ரூபமே யாகிலும் சாத்யமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் தான் ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபாரம் ஆகையாலே
ஸ்வ வசன விரோதமும் சாங்க பிரபத்தி விதாயகமான வாக்ய விரோதமும் வரும் –

பிரபத்திக்கு சாதனத்வம் ஆதல் -சித்த சாதன சஹ காரித்வம் ஆதல் -கொள்ளில் சித்த உபாயனான ஈஸ்வரனுடைய
ஏகத்வம் -சித்தித்வம் -பரம சேதனத்வம்
பரம காருணிகத்வம்-சர்வ சக்தித்வம் -நிரபேஷத்வம்-முதலான ஸ்வபாவ விசேஷங்களுக்கு விருத்தமாம் என்னும் பிரசதங்கள்
சுருதி ஸ்ம்ருதி விரோத வ்யாப்தி சூன்யத்வாதி தோஷங்களாலே தர்க்க மாசங்கள் –
இவற்றை சத் தர்க்கங்களாக நினைக்கில் உபாசனத்துக்கு இசைந்த சாதனமாவாதிகளிலும் இப் பிரசதங்கள் வரும் –
உபாசனம் தானும் சாதனம் அன்று என்னில் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற இடத்தில்
உபாசனத்தையும் தர்ம சப்தார்த்தமாக வியாக்யானம் பண்ணுகையாலே ஸ்வ வசன விரோதம் உண்டாகும்
செருக்கு அடக்குகைக்காக வேண்டாச் சுமைகளை எடுப்பிக்கையாலே
அந்ய பரமான உபதேசத்தாலே பிறந்த அர்ஜூனன் புத்தியாலே
தர்மம் என்று தோன்றினவற்றை சர்வ தர்மான் என்று அனுவதிக்கிறது என்னில்
இஜ்யாசார தமா ஹிம்சா தான ஸ்வா த்யாய கர்மணாம்
அயம் து பரமோ தர்மோ யத்யோகே நாத்ம தர்சனம்
சர்வேஷாமேவ தர்மாணா முத்தமோ வைஷ்ணவோ விதி
ந விஷ்ணு வாராத நாத் புண்யம் வித்யதே கர்மம் வைதிகம் -இத்யாதிகளாலே
பரம தர்மங்களாக பிரசித்தங்களான நிவ்ருத்தி தர்மங்களை தர்மங்கள் அல்ல என்றால்
கைமுதிக நியாயத்தாலே பிரவ்ருத்தி தர்மங்களும் தர்மங்கள் அன்றிக்கே சர்வ சாஸ்த்ரங்களுக்கும்
பிரமாணம் இல்லாத படியாய் பர வாஹ்ய குத்ருஷ்டி பஷங்களிலே பிரவேசமாம்

ஆனாலும் உபாசநாதிகள் போலே சரண வரணமும் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே
இங்கு சர்வ சப்த வாச்ய சங்கோசம் வாராமைக்காக இதுவும் சாதனத்வ வேஷத்தால் த்யாஜ்யம் அன்றோ
ஆகையால் பிரபத்திக்கும் சாதனத்வமாதல் -சித்த சாதன சஹகாரித்வமாதல் கொள்ளுகை
இவ் வசனம் தனக்கும் விருத்தம் அன்றோ என்னில்
இங்கு சாஷாத் சாதனத்வ புத்தியை விட வேணும் என்னும் போது பக்தி யோகாதிகளிலும் துல்யம் –
பிரசாத நத்வ வேஷத்தாலும் தர்மத்வம் இதுக்கு விட வேணும் என்னில் சர்வ சப்த சங்கோசம் வாராமைக்காக
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -இத்யாதிகளின் படியே தர்மமான சித்த உபாயத்திலும் சாதனத்வ புத்தியை விடப் பிரசங்கிக்கும்
இவ் வாக்யத்தில் பிரதிபாத்யமான தர்மத்தை ஒழிய தர்மங்கள் அல்லவோ த்யாஜ்யங்கள் ஆவன என்னில்
இங்கு விஹிதையான சரணாகதியிலும் துல்யம் –
உபாசநாதிகளைப் போலே தனக்கு உத் பாதகமாக வாதல் -வர்த்தகமாதவாதல் -சஹகாரியாக வாதல் -த்வாரகமாக வாதல்-ஒன்றால்
அபேஷை அறும்படி நித்யமாய்-உபசயாபசய ரஹிதமாய்-சர்வதா பரிபூரணமான சஹஜ காருண்யாதிகளை உடைத்தாய்-
சங்கல்பம் உண்டான போது த்வார நிரபேஷமாக கார்யம் பிறக்கும் படி சத்ய சங்கல்பமாய் இருக்கிற
சித்தோபாயத்துக்கு பக்தி பிரபத்திகள் எவ் வாகாரங்களால் உபகாரங்கள் ஆகின்றன என்னில் –
இவை அநாதியான அபசார பரம்பரையாலே உத்பன்னமாய் சம்சார ஹேதுவாகாய் கிடக்கிற
நிக்ரஹத்தை சமிப்பித்துக் கொண்டு உபகரிக்கின்றன –
இவை பலாந்தரங்களுக்கு உபாயங்களாம் போது ஜ்யோதிஷ்டோமாதிகளைப் போலே
தத்தத் அனுகுண ப்ரீதி விசேஷங்களை உத்பாதித்துக் கொண்டு அம்முகத்தாலே உபகாரங்களாம்-

முமுஷூவுக்கு சாத்ய உபாயங்கள் ஆகிற வியாஜ்ய மாத்ரத்தாலே சாந்த நிக்ரஹமான சித்தோபாயம்
நிக்ரஹ பலமான ஞான சங்கோசாதிகளைக் கழித்து
பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த பலத்தைக் கொடுத்து யாவதாத்மா பாவியாக உபகரிக்கும்
ஆகையால் முமுஷூவினுடைய சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாய் பரிபூர்ண கைங்கர்ய பர்யந்தமான
பல பரம்பரை எல்லாம் சித்தோபாய கார்யம் என்றும்
பிரசாதமான சாத்தோபாயம் அடியாக வருகிறது என்றும் சொல்லுகிற பிரமாணங்கள் இரண்டும் ஸூ சங்கதங்கள்-
ஆனாலும் இப்பிரபத்தி யாகிற உபாய விசேஷத்தை சாஸ்திரம் விதிக்க வேணுமோ —
லோகத்தில் தன்னை ரஷித்துக் கொள்ள விரகில்லாதே அழுந்துவான் ஒருவன்
அப்போது சந்நிஹிதனான ரஷண சமர்த்தனைப் பற்றுமா போலே
தன்னையும் ஈஸ்வரனையும் சித்த பரமான சாஸ்த்ரத்தாலே தெளிந்தால் தானே அவனை சரணமாகப் பற்றானோ-
ஆகையால் அகிஞ்சனனுக்கு பக்தி ஸ்தானத்தில் பிரபத்தியை விதிக்கக் கூடாதே என்றும் சிலர் சொல்லுவார்கள் –
இதுவும் ஔசித்ய மூலமான அதிவாதம் -எங்கனே என்னில்

லோகத்தில் ராஜ சேவாதிகளும் தத் பலங்களும் காணச் செய்தே மாலாகரண தீபா ரோபண ஸ்துதி நமஸ்காராதிகளை
சாஸ்திர நிரபேஷமாக அனுஷ்டித்தால் அபசாரங்கள் வரும்படியாய் இருக்கையாலே
பரிகர நியமங்களோடு கூடின பகவத் சேவாதி பிரகாரங்களும் தத் பலங்களும் நியதங்களாய் சாஸ்திரம் கொண்டு அறிகிறாப் போலே
இங்கும் லோகத்தில் பிரபத்தியும் தத் பலங்களும் கண்டு போந்தாலும்
சதாசார்யா உபதேச சாபேஷ மந்திர விசேஷாதிகளோடு கூடின பிரபத்திக்கும்
பல விசேஷங்களுக்கும் சாத்ய சாதன பாவம் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டுகையாலே
அவ்வோ பலங்களுக்குகாக ஸ்வா விசேஷங்களை விதிக்கிறாப் போலே பிரபத்தியையும் விதிக்கிறது –
இங்கன் அல்லாத போது ராஜ சேவையைப் போலே பகவத் சேவையும் விதிக்க வேண்டாது ஒழியும்-
பிரபத்திக்கும் சதாசார்ய உபதேச பூர்வக மந்திர க்ரஹணாதிகள் அநபேஷிதங்களாகப் பிரசங்கிக்கும் –
மந்த்ராத்ய நர்ஹர்க்கும் சரண்ய விசேஷ பல விசேஷ அனுபந்தியான அந்யூ நாநாதிக கர்த்தவ்ய விசேஷத்தின் உடைய
அத்யவசாயத்துக்கு அனந்யதா சித்தமான அனுமானம் கிடையாது –
ஆகையால் ச பரிகர சேவா விசேஷங்கள் போலே ச பரிகர பர சமர்ப்பணமும் இங்கு விதேயமாக குறை இல்லை –
இப்படி யதா விகாரம் சாஸ்திரம் விதித்த வற்றிலும் உபாச நாதிகள் ஸ்வரூப விருத்தங்கள் என்று சிலர் சொல்லுவார்கள் –
இதுவும் பிரபத்தியை ஸ்துதிக்கைக்காக அதிவாதம் பண்ணினார்களாம் அத்தனை -எங்கனே என்னில் –

1-நித்யமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாசங்களாகக் கொண்டு ஸ்வரூப விருத்தங்கள் என்ன ஒண்ணாது –
2-பிரபத்திய நுஷ்டானத்திலும் கைங்கர்யத்திலும் மேலே பக்த்யாதிகளிலும் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-2-3-33-
பரார்த்து தச்ச்ருதே -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-2-3-40–என்கிறபடி –
பகவத் அதீன கர்த்ருத்வம் உண்டாகையாலும் -ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த நிர்வ்யாபாரம் என்னும் போது
சத்வ லஷணமான அர்த்தக்ரியா காரித்வம் இல்லாமையாலே துச்சத்வம் பிரசங்கிக்கையாலும்
ஜ்ஞான சிகீர்ஷ்ணா ப்ரயந்த ஆச்ரத்யவ ரூபமான கர்த்ருத்வம் இல்லை யாக்கி ஆத்மாவுக்கு
சந்நிதி மாத்ரமே வியாபாரம் என்னில் போக்த்ருத்வாதிகளும் இன்றிக்கே
இவனுக்கு சம்சாரமும் மித்யாவாய் மோஷோபாய நைர பேஷ்யாதி பிரசங்கம் வருகையாலும்
சாங்க்யாதிகள் சொல்லுமா போலே ஸ்வரூபத்தில் கர்த்ருத்வம் இல்லாமையாலே
உபாச நாதிகள் ஸ்வரூப விருத்தங்கள் என்று சொல்லவும் ஒண்ணாது

அசேஷ்ட மாந மாஸீநம் ஸ்ரீ கஞ்சிதுபாதிஷ்டதி
கர்மீ கர்மா நுஸ் ருத்யான்யோ ந ப்ராயச்மதிகச்சதி -என்றதுவும்
சாஸ்திர சோசித பாயங்களினுடைய நைரர்தக்யம் சொன்னபடி அன்று –
பூர்வா நுஷ்டித கர்ம விசேஷங்களினுடைய பல விசேஷம் சொன்னபடி இத்தனை –
மோஷ பிரதிகூலங்களான ராகாத்யுபாதிகளாலே வந்த காம்ய நிஷித்தங்கள் போலே பந்தகங்கள் அல்லாமையாலும்
மோஷார்த்தி தனக்கே விதிக்கையாலும் –
உபாச நாதிகளுக்கு சாஸ்திர முகத்தாலே அனர்த்தா வஹத்வ ரூபமான ஸ்வரூப விரோதம் சொல்ல ஒண்ணாது –
ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்ற உபாச நாதிகளுக்கு நாசகத்வ அசம்பாவிதத்வ அனர்த்தா வஹத்வங்கள் இல்லாமையாலே
ஒருபடியாலும் ஸ்வரூப விரோதம் பிரசங்கிக்க வில்லை

ஆனாலும் ஆத்மா தேஹாதி விலஷணன் ஆகையாலே ஸ்வரூபத்தில் வர்ணாஸ்ரமாதிகள் இல்லை என்று தெளிந்தவனுக்கு
ப்ராஹ்மணோஹம்-ஷத்ரியோஹம் -என்றால் போலே வரும் அபிமானங்கள் அடியாக கர்தவ்யங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்களும்
அவற்றோடு துவக்குண்ட உபாயாந்தரங்களும் அனுஷ்டேயங்கள் அல்லாமையாலே
இவ் வர்ணாஸ்ரமாதி நிபந்தங்களான தர்மங்கள் ஸ்வரூப விருத்தங்கள் என்னக் குறை என் என்னில்
இதுவும் அனுபபன்னம் -எங்கனே என்னில் –
ஸ்வரூபத்தில் கர்ம விசேஷங்கள் அடியாக ப்ராஹ்மணத் வாதிகள் இல்லை என்று தெளிந்தானே யாகிலும்
கர்ம விசேஷங்கள் அடியாக ப்ராஹ்மணத் வாதி விசிஷ்ட சரீரத்தோடு சம்பத்தனாய் இருக்கையாலே –
அச் சரீர சம்பந்தமே அடியாக வருகிற ஷூத் பிபாசாதிகளுக்கு பரிஹாரம் பண்ணுகிற கணக்கிலே அச்சரீரம் விடும் அளவும்
அவ்வோ வர்ணாஸ்ரமாதிகளுக்கும் தன் சக்திக்கும் அனுரூபமாக
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்திகளைப் பற்ற சாஸ்திரங்கள் விதித்த தர்மங்களை விட ஒண்ணாது-
ஆகையால் இத் தர்மங்களை தேகாத்ம விவேகம் அடியாக ஸ்வரூப விருத்தங்கள் ஆக்கி
இவற்றுக்கு த்யாஜ்யதை சொல்ல ஒண்ணாது –

தேகாத்ம விவேகம் உடையவனுக்கே பார லௌகிக போக சாதனமான தர்மத்தில் அதிகாரம் ஆகையாலே
இத் தர்மங்களுடைய அனுஷ்டானத்துக்கு ஸ்வரூபத்தில் ப்ரஹ்மண்யாதி பரமம் அதிகாரம் அன்று –
ப்ரஹ்மண்யாதி விசிஷ்ட சரீர சம்பந்தமே அதிகாரம்
ஆகையால் சர்வ தர்ம அனுஷ்டானத்துக்கும் உபயுக்தமான பிரகிருதி ஆத்ம விவேகம் அடியாக உபாச நாதிகளுக்கு விரோதம் கண்டிலோம் –
உபாச நாதிகள் அஹங்காராதி கர்ப்பங்கள் என்னும் இடம் சாஸ்திரம் இசையாது இருக்கச் செய்தே ஆரோபித்தார்கள் அத்தனை –
கர்மோபார்ஜிதங்களான கரண களேபரங்கள் ஆகிற உபாதிகளைக் கொண்டு அனுஷ்டிக்கையாலே
கர்ம யோகாதிகள் நிருபாதிக ஸ்வரூப விருத்தங்கள் என்பார்க்கும் ஸ்வரூப ஜ்ஞான த்வய ஸ்ரவணாதிகளும்
மன ப்ரப்ருதி சாபேஷங்கள் ஆகையாலே துல்ய தோஷங்கள் ஆகும்
ஆனாலும் சேஷ பூதன் ஆகையாலே தன்னைத் தானே ரஷித்துக் கொள்ள ப்ராப்தனும் அன்றிக்கே -அத்யந்த பரதந்த்ரன் ஆகையாலே
தன்னைத் தானே ரஷித்துக் கொள்ள சக்தனும் அன்றிக்கே இருக்கிற இவனுக்கு
ஸ்வ ரஷணார்த்தமாக கர்த்தவ்யம் என்று ஒரு உபாயத்தை விதிக்கையும்
அது இவனுக்கு சாத்யமாய் சாத்ய உபாயம் என்று பேர் பெறுகிறது என்று சொல்லுகையும் உபபன்னமோ –
ஆன பின்பு பக்தி யோகாதிகள் சேஷத்வ அனுரூபங்கள் அல்லாமையாலே ஸ்வரூபத்துக்கு அநிஷ்டா வஹங்கள் என்றும்
அத்யந்த பாரதந்த்ர்ய விருத்தங்கள் ஆகையாலே அசம்பாவிதங்கள் என்றும் சொல்ல ஒண்ணாதோ என்னில்
இது சர்வ மோஷ பிரசங்காதிகளாலே முன்பே பரிஹ்ருதம் –

இவன் செய்த ஒரு வியாஜ்யம் கொள்ளாதே முக்தனாக்கில் அநாதியாக முக்தனாகப் பிரசங்கிக்கும்
ஈஸ்வரன் கேவல ஸ்வா தந்த்ர்யத்தாலே நினைத்த போது முக்தனாக்கில் வைஷம்ய நைர்குண்யாதி தோஷங்களும் வரும்-
மோஷோபாய விதாயங்களான சாஸ்திரங்களும் எல்லாம் நிரர்த்தங்களுமாம்-
ஆகையால் இச் சேஷத்வத்தால் வகுத்த விஷயத்தை பற்றுகையில் ஔசித்யமும் -உடையவன் உடைமையை ரஷிககையில் ஔசித்யமும் உண்டாம் –
அத்யந்த பாரதந்த்ர்யத்தால் அவன் கொடுத்த ஸ்வா தந்த்ர்யத்தை சுமந்து அவனுக்கு அபிமதங்களான உபாயங்களை அனுஷ்டிக்கையும் –
பலம் பெறுகைக்கு அவன் கை பார்த்து இருக்க வேண்டுகையும் சித்திக்கும் –
இச் சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டும் பல தசையில் அவன் உகந்த கைங்கர்யத்தை அவன் இட்ட வழக்காக நடத்துகைக்கும் உறுப்பாம் –
இவையடியாக ஸ்வ ரஷண அர்த்தமாக ஸ்வ வியாபாரம் ஆகாது என்பார்க்கு
தாங்கள் யதா சாஸ்திரம் பகவத் ப்ரீத்யாதி பலத்தைக் கோலி அனுஷ்டிக்கிற கைங்கர்யத்திலும்
சாத்யமாக விதிக்கப் படுகிற பிரபத்தி தன்னிலும் ஸ்வரூப விரோத புத்தியாலே அதிகாரம் இல்லையாம் –
வாக்ய ஜன்யமான சம்பந்த ஞானாதி மாதரத்தில் காட்டில் அதிரிக்தமாக சரணம் வ்ரஜ -என்று விதேயம் ஆகையால்
சாத்யமாய் இருக்கும் பிரபத்தி ஸ்வரூபம் என்னும் இடம் முன்பே சொன்னோம் ஆகையால்
சேஷபூதனுமாய் பரதந்த்ரனனுமான இவனுக்கு யதாதிகாரம் ஸ்வ ரஷணார்த்த வியாபாரம் பண்ணக் குறை இல்லை –

ஆனாலும் அனன்யார்ஹ சேஷ பூதனாய்-தன்னைத் தெளிந்து பரமைகாந்தியாய் இருக்கிற இவனுக்கு
தேவதாந்திர த்வாரங்களான வர்ணாஸ்ரம தர்மங்களும்
அவற்றை இதி கர்தவ்யதையாக உடைத்தான பக்தி யோகாதிகளும் ஐ காந்த்ய விருத்தங்கள் அன்றோ –
சுத்த யாஜிகளுக்கு அன்றோ பரமைகாந்தித்வம் கூடுவது என்னில்
இது பாஷ்யாதிகளின் நிஷ்கர்ஷம் தெளியாமை அடியாக வந்த சோத்யம்-எங்கனே என்னில் –
பிரதர்த்த நாதி வித்யைகளில் பரமாத்மா இந்திராதி சரீரனாக முமுஷூக்கு உபாஸ்யன் என்று அறுதி இட்டார் –
வித்யாங்கமான வர்ணாஸ்ரம தர்மங்களிலும் அவ்வோ தேவதைகளைச் சரீரமாகக் கொண்டு நிற்கிற
பரமாத்மாவே ஆராத்யன் என்று நிஷ்கர்ஷித்தார்
ஆகையால் ஸ்வ தந்தரமாக சில தேவதைகளைப் பற்றினாலும் பலாந்தர காமனையாலே
தன்னுடைய நித்ய நைமித்திகங்களுக்கு புறம்பான தேவதாந்திர அந்வயம் வரிலும் பரமை காந்தித்வத்துக்கு விருத்தமாம் –
பலாந்திர சங்கமும் இன்றிக்கே பரமாத்மாவுக்கு விசேஷணங்களாக தேவதைகளை வைத்து
அக்னயாதி சப்தங்களை விசேஷ்ய பர்யந்தமாக அனுசந்தித்தும் –
சாஷாதப்ய விரோதம் ஜைமினி -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-2-29-என்கிற ந்யாயத்தாலே
அக்னி இந்த்ராதி சப்தங்களை சாஷாத் பகவத் வாசகங்களாக அனுசந்தித்தும்
சர்வ தர்ம அனுஷ்டானம் பண்ணும் இடத்தில் விதி பலத்தாலே பரமை காந்தித்வ விரோதம் இல்லை

ஆனாலும் அபிசாராதிகளை விதித்த கட்டளையில் சாஸ்திர ப்ரரோச நாதிகளில் அபிசந்தியாலே
அதிகாரி விசேஷத்திலே உபாச நாதிகளை விதித்தது அத்தனை அன்றோ –
முமுஷூவுக்கு பிராப்ய பிராபகங்கள் ஏகம் ஆகையாலே ப்ராப்ய அனுரூபமான உபாயம் சர்வேஸ்வரன் ஒருவனுமே –
ஆகையால் அன்றோ –
அதபாதக பீதஸ்த்வம் சர்வ பாவேன பாரத –விமுக்தான்ய சமாரம்போ நாராயண பரோ பவ –என்று
தர்ம தேவதை தன் புத்திரனுக்கு உபாச நாதிகளை ப்ராப்ய விரோதிகள் என்று நினைத்து நிந்தித்தது என்னில் –
அதுவும் அத்யந்த அனுப பந்தம் -எங்கனே என்னில்
அபிசாராதிகள் பல விசேஷம் அடியாக இறே அனர்த்த ஹேதுக்கள் ஆயின –
இங்கு பலம் மோஷம் ஆனபடியாலே அம்முகத்தாலே அனர்த்த பிரசங்கம் இல்லை
ஏக அதிகாரி விஷயத்தில் ஏக பலத்துக்கு குருவாய் இருப்பதொன்றை உபாயமாகக் காட்டி
இலகுவாய் இருப்பது ஒன்றில் ருசியைப் பிறப்பிக்கிறது என்கை விவஷித விபரீதம் –
அங்கத்திலே அங்கி பல நிர்தேசமாய் ஸ்துதி மாத்ரமாய் இறே அப்போது பலிப்பது –

பிராப்யத்துக்கு இன்னது அனுரூபம் என்னும் இடம் சாஸ்திர வேத்யம் ஆகையாலே
யுக்தி மாத்ரத்தாலே பிராப்ய விரோதம் சொல்ல ஒண்ணாது
ஆகம சித்தங்களிலே ஒன்றை ஆகம சித்தங்களில் ஒன்றை விருத்த தர்க்கங்களாலே பாதிக்கில் துல்ய நியாயத்தாலே
சர்வ சாஸ்திரங்களும் பிரபத்தி சாஸ்திரம் தானும் பிரமாணம் அன்றிக்கே ஒழியும் –
அத பீதக பீதஸ்த்வம் -என்கிற இடத்திலும் பாதக சப்தத்தாலே உபாச நாதிகளை நிந்திக்கிறது என்கைக்கும் பிரமாணம் இல்லை –
ஆகையால் முமுஷூ வுக்கு விஹிதங்களான பக்தி பிரபத்தி இரண்டும் யதாதிகார பரிக்ராஹ்யங்கள் –
விஹிதங்களே யாகிலும் ஆசார்ய ருசி பரிக்ருஹீதங்கள் அல்லாத படியாலே
அதிதி சத்காராதிகளிலே விஹிதங்களான கவாலம்பாதிகள் போலே
உபாச நாதிகள் சிஷ்ட பரிக்ருக வருத்தங்கள் ஆகையாலே அநாதரணீயங்கள் அல்லவோ என்கையும் நிரூபக வாக்யம் அன்று –
சதாசார்ய பரிக்ரஹம் இல்லாத போது அன்றோ அச்வர்க்யம் லோக வித்விஷ்டம் தர்ம்யமப்யாசரே ன்னது -என்று கழிக்கல் ஆவது –

இங்கு தஸ்மை முனிவராய பராசராய-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -4- என்னும்படி ஸ்லாக்யமான
பராசராதி பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டிக்கையாலே சர்வ சிஷ்ட பஹிஷ்காரம் சொல்ல ஒண்ணாது –
இப்படி யுகாந்தரங்களில் இவை தர்மங்கள் ஆனாலும் கலியுகத்தில் யதோக்தமான பரமாத்மா உபாச நாதிகளுக்கு
அதிகாரிகள் துர்லபர் ஆகையாலே இவை இக்காலத்துக்கு
பொருந்துபவை அல்ல -ஆகையால் அன்றோ
கலௌ சங்கீ ர்த்ய கேசவம் -என்றும் –
கலேர் தோஷ நிதே ராஜன் நாஸ்தி ஹ்யோகோ மஹான் குண-கீர்த்த நாதேன கிருஷ்ணச்ய முக்த பந்த பரம் வ்ரஜேத் -என்றும்
சொல்லுகிறது -என்னவும் ஒண்ணாது –
கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய க்ருதே யுகே -யஸ்ய சேதசி கோவிந்தோ ஹ்ருதயே தஸ்ய நாச்யுத-என்கிறபடியே
இக் காலத்திலும் உபாச நாதிகளுக்கு அதிகாரிகள் ஸ்வயம் பிரயோஜன யோக நிஷ்டரான பூர்வாச்சார்யர்கள் போலே சம்பாவிதர் இறே-
இங்கன் அல்லாத போது சங்கீ ர்த்தன வ்யதிரிக்தையான பிரபத்திக்கும் –
கிம் நு தஸ்ய ச மந்த்ரச்ய கர்மண கமலாசன — ந கப்யதே அதிகாரீ வா ஸ்ரோது காமோ அபி வா நர -இத்யாதிகள் படியே —
மகா விச்வாசாதி யுக்தரான அதிகாரிகள் தேட்டம் ஆகையாலே இவ்விடத்திலும் இப்பிரசங்கம் வரும்
ஆன பின்பு உபாச நாதிகளுக்கு வேறொரு விரோதம் இல்லாமையாலே யதா சாஸ்திரம் ஆதுராதிகளுக்கு அவகாஹ நாதிகள் போலே
இவை அகிஞ்சன -அநந்ய கதி -என்று இருக்கும் அதிகாரிக்கு ஸ்வ அதிகார விருத்தங்கள் என்ன பிராப்தம் –
இவ் வதிகார விரோதம் அறியாதே உபாச நாதிகளிலே பிரவர்த்திக்குமவனை பற்ற –
நரச்ய புத்தி தௌர்பல்யாத் உபாயாந்தர மித்யதே -என்றது –
ஆகையால் இவ் உபாச நாதிகளும் அதிகார்யந்தரத்துக்கு யதாதிகாரம் அனு குணங்கள் –

அவற்றுக்கு சாமர்த்தியம் இல்லாமை யாதலால் -விளம்ப ஷமன் அல்லாமை யாதலால் –
இப் பிரபத்தியை ஸ்வ தந்திர உபாயமாக பற்றினவனை -செய்த வேள்வியர் -என்றும்
க்ருதக்ருத்யன் -என்றும் -அனுஷ்டித க்ரதுசதன் -என்றும்
இவனுக்கு மரணாந்தமாக நடக்கிற வியாபாரங்களை அவப்ருத பர்யந்த கர்தவ்ய கலாபங்களாக ஸ்துதித்தும்-
க்ரத்வந்தர அனுஷ்டானம் பண்ணினவனுக்கு மேலுள்ள நித்ய நைமித்தங்கள் போலே இவனுக்கு
ஸ்வ தந்திர விதியாலே வர்ணாஸ்ரம தர்மங்கள் நடவா நிற்கச் செய்தேயும்
அனுஷ்டிதாத்மயாக பலத்தைப் பற்றி கர்த்தவ்யாந்தர நிரபேஷனாகவும்
ஆழ்வார்களும் மகரிஷிகளும் பகவச் சாஸ்திரங்களும் வேதங்களும் கோஷியா நின்றன -ஆகையால்
தபஸ் விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக
கர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜூன -இத்யாதிகளாலே
பிரவ்ருத்தி தர்மங்களில் காட்டிலும் நிவ்ருத்தி தர்மங்கள் ஸ்ரேஷ்டங்கள் ஆனால் போலேவும்
அவை தம்மில் ஆத்ம விஷயமான யோகம் ஸ்ரேஷ்டமானால் போயும்
ஆத்ம விஷய யோகங்களில் காட்டிலும் யோகிநாம் அபி சர்வேஷாம் -என்கிறபடியே
வஸூ தேவ நந்தன விஷயமான யோகம் ஸ்ரேஷ்டமானால் போலேயும்
பரமாத்மா விஷய வித்யா விசேஷங்கள் எல்லாவற்றிலும் நியாச நிஷேபாதி சப்தங்களாலே சொல்லப்பட்ட
வித்யா விசேஷமே ஸூ கரத்வ-சக்ருத் கர்தவ்யத்வ -சீக்ர பல ப்ரதத் வாதிகளாலே ஸ்ரேஷ்ட தமம் –

நியாச வித்யையிலே கண்டோக்தமான இவ்வர்த்தத்தை
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தப ஸ்ருதம் -சத்கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா —
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீ மபி -என்று பகவச் சாஸ்திரம் உப ப்ரும்ஹித்தது –
அவகாஹ நாதிகளிலே சமர்த்தன் அல்லாதவனுக்கு மா நசம் விஷ்ணு சிந்தனம் என்று பகவச் சிந்தனத்தை
ஸ்நானமாக விதித்தால் -அது ஸ்நானா நந்தரங்கள் பண்ணும் சுத்தியையும் பண்ணி –
பாபாந்தரங்களையும் சமிப்பித்து அப்போதே பகவத் அனுபவ ரசத்தையும் உண்டாக்குமா போலே
உபாச நாதிகளில் சமர்த்தன் அல்லாதவனுக்கு ப்ரபத்தியை விதித்தாலும்
இப் பிரபத்தி தானே அவை கொடுக்கும் பலத்தையும் அவை தம்மையும் கொடுக்க வற்றாய்
அகிஞ்சனுக்கு உத்தாரகமாய் அவன் அபேஷித்த காலத்திலே பாலாவி நாபாவத்தையும் உடைத்தாய் இருக்கையாலே
அதிக பிரபாவமாய் இருக்கும் –
இப்படி உபாயத்தின் அதிகாரத்திலும் -ஸ்வரூபத்திலும் -வரும் கலக்கங்கள் சமிப்பித்தோம் –

இனி மேல் பரிகாரங்களில் வரும் வ்யாமோஹம் சமிப்பிக்கிறோம் –
இவ் உபாயத்துக்கு ஆநுகூல்ய சங்கல்பாதிகள் வேணுமோ —
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -தோஷோ யத்யாபி ஸ்யாத் சதா மேததகர்ஹிதம் -என்றும்
யதி வா ராவண ஸ்வயம் -என்றும் சொல்லுகிற ரிபூணாமபி வத்சலனான சரண்யன்
சரண்யகதனுடைய தோஷங்களைப் பார்க்குமோ –
அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் என்று அன்றோ பூர்வர்கள் பாசுரம் -ஆகையால்
இவை சம்பாவித ஸ்வ பாவங்கள் இத்தனை அன்றோ என்று சிலர் சொல்லுவார்கள் –

இதுக்கு பிரபத்தி உத்தர காலத்தில் ஆனுகூல்யாதிகள் அனுவர்த்தியாது ஒழியிலும்
ப்ரதி சமாதானம் சிறந்து பிரபத்தி பலமும் குறைவற்று இருக்கும் என்கையிலே தாத்பர்யம் கொள்ளலாம் –
இங்கன் அல்லாத போது -ஷட்விதா சரணாகதி -என்றும் –
நியாச பஞ்சாங்க சம்யுத -என்றும் –
ஸ்வ அங்கை பஞ்சபிராவ்ருதாம் -என்றும்
அங்க அங்கிகளை விபஜித்து சொல்லுகிற பல பிரமாணங்களுக்கும் விருத்தம் –
லோகத்தில் ரஷ்யத்ரவ்ய சமர்ப்பண மரியாதைக்கும் பொருந்தாது என்றும் –
இவ் வங்கங்களுடைய சக்ருத் கரணாதி பிரகாரங்களுக்கும் முன்பே சொன்னோம்
ப்ரஹ்மாஸ்த்ரமும் ஸ்வ அங்க சாபேஷமாய் இறே இருப்பது -ஆகையால்
பிரபத்தே க்வசிதப்யேவம் பராபேஷா ந வித்யதே -ஸா ஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பலப்ரதா -என்றதுவும்
தர்மாந்தர நைரபேஷ்யம் சொன்னபடி –
இப்படி அல்லாத போது இவர்கள் இசைந்த மகா விச்வாசத்தையும் இக் கட்டளையிலே சம்பாவித ஸ்வ பாவம் ஆக்கலாம்
இவ் வகாசத்தில் வேறே சிலர் ஆஸ்திகனுக்கு சாஸ்த்ரார்த்த விஸ்வாசம் பிறக்குமதுக்கு மேற் பட
மஹா விஸ்வாசம் என்று ஓன்று உண்டோ –
ஆகையால் இதுவும் சர்வ சாஸ்த்ரார்த்த சாதாரணமாம் அத்தனை போக்கி
பிரபத்திக்கு விசேஷித்து அங்கமாக ஆகவற்றோ என்று சிலர் நினைப்பார்கள்
அதுவும் ந விச்வசே த விச்வச்தே விச்வச்தே நாதி விச்வசேத்-இத்யாதிகளிலே
விஸ்வாச தாரதம்யம் பிரசித்தம் ஆகையாலும்
இவ்விடத்தில் அதிசய விஸ்வாசம் அங்கம் என்கிற வசனத்தாலும் பரிஹ்ருதம்

இப்படி புருஷ விசேஷங்களிலே விஸ்வாச தாரதம்யம் உண்டு என்னும் இடத்தை –
ஸ்ரீ மத் அஷ்டாஷர ப்ரஹ்ம வித்யையிலே
யஸ்ய யாவாம்ச்ச விஸ்வாச தஸ்ய சித்திச்ச தாவதீ –ஏதாவா நிதி நை தஸ்ய பிரபாவ பரிமீயதே –என்று
ஸ்ரீ நாரத பகவான் அருளிச் செய்தான் –
மந்த விச்வாசரான ப்ரபன்ன ஆபாசரையும் முடிவிலே சர்வேஸ்வரன் ரஷிக்கும் -எங்கனே என்னில்
சக்ருதுச் சரிதம் யேன ஹரிரித்யஷர த்வயம் –பத்த பரிகரஸ் தேன மோஷாய கமனம் ப்ரதி -இத்யாதிகளிலும்
இவற்றை அடி ஒற்றின த்வத் அங்க்ரிமுத்திச்ச்ய உதீர்ண சம்சார -என்கிற ஸ்லோகங்களிலும்
மொய்த்த வல் வினையுள் நின்று -இத்யாதிகளிலும்
அபிப்ரேதமான படியே இவன் பல சித்திக்கு கோலின காலத்துக்குள்ளே உபாய பூர்த்தியை உண்டாக்கி
ரஷிக்கும் என்னும் இடத்தை நினைத்து
வ்ருதைவ பவதோ யாத பூயஸீ ஜன்ம சந்ததி -தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்று
தேவலனைக் குறித்து ஸ்ரீ சாண்டில்ய பகவான் அருளிச் செய்தான்

சரண்யம் சரணம் ச த்வமாஹூர் திவ்யா மஹர்ஷயா-என்றதுவும் மகாரிஷிகளுக்கே விஸ்வாசம் கூடுவது –
இவர்கள் வாக்யத்தை இட்டு மந்த விச்வாசரை தெளிவிக்க வேண்டும் என்றபடி –
இப்படி விசுவாச தாரதம்யம் உண்டாகையாலே யதா சாஸ்திரம் மஹா விஸ்வாசம் பிரபத்யங்கமாக குறை இல்லை –
சிலருக்கு இவற்றில் விசுவாசம் குலையும் படியும் அதுக்கு பரிகாரமும் சொல்லுகிறோம்
1- பக்தி பிரபத்திகள் புத்தி பேதத்தாலே ஐஸ்வர்யம் மோஷங்கள் ஆகிற விருத்த பலன்களைக் கொடுக்கக் கூடுமோ –
விதைக்கிறவனுடைய அபிசந்தி பேதத்தாலே ஒரு விதை வேறொரு பலத்தைக் கொடுக்கக் கண்டோமோ என்று சிலர் பார்ப்பார்கள் –
இதுக்கு பரிஹாரம்
நியாயங்களால் பாதிக்க ஒண்ணாத படி பிரத்யஷ்யாதிகளை போலே ஸ்வ விஷயத்தில்
பிரமாணமான சாஸ்திரம் காட்டுகையாலே இப்படிக் கூடும்
லோகத்திலும் தர்ம சீலனும் உதாரனுமான ராஜாவுக்கு விலையாக ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால்
ஓன்று கிடைக்கவும் அது தன்னையே உபஹார புத்தியால் கொடுத்தால் வேண்டுவது எல்லாம் கிடைக்கவும் காணா நின்றோம்
இப் பக்தி பிரபத்திகள் பிரயோஜனாந்த பரரக்கு பிரவ்ருத்தி தர்ம கோடியிலே நிற்கும் –
பகவத் சரணார்த்திகளுக்கு நிவ்ருத்தி தர்மங்களாம்-இவ்வர்த்தம் நித்ய நைமித்திகளாதி களிலும் ஒக்கும் –
2- இப்படியே ஆவ்ருத்தி அநாவ்ருத்யாதிகளாலே விஷம ஸ்வ பாவங்களான உபாசன பிரபதனங்கள் ஏக பல
சாதனமாகக் கூடுமோ என்னில்
இதுக்கு உத்தரமும் அதிகாரி விசேஷத்தாலே லோக வேதங்களின் படியே சித்தம் –
3- முமுஷூக்களாய் ஸ்வ தந்திர பிரபத்தி பண்ணினவர்களுக்கு உபாயமும் மோஷமும் ஏக ரூபமாய் இருக்கச் செய்தேயும்
சம்சாரத்தில் அடிச் சூட்டால் வரும் த்வரையின் தாரதம்யத்துக்கு ஈடாக தத்தம் இச்சையாலே காலம் குறிக்கிறதில்
ஏற்றச் சுருக்கதாலே பலத்தில் விளம்ப அவிளம்பங்கள் கூடும்
4- ஆழ்வார்கள் நாத முனிகள் உள்ளிட்டார்க்கு பகவத் சாஷாத் காராதிகள் உண்டாய் இருக்க
சிலருக்கு இவை இன்றிக்கே ஒழிகைக்கு காரணம் -பிரபத்தி காலத்தில் பல சங்கல்பத்தில் வைஷம்யம் –
பிராரப்த ஸூஹ்ருத விசேஷ்ம் ஆகவுமாம் –முன்பு கோலின பலாம்சம் சக்ருத் பிரபத்தியாலே சித்தம் ஆனாலும்
கோலாத அம்சத்தைப் பற்ற பின்பு தீவர சம்வேகம் பிறந்தார்க்கு புன பிரவ்ருத்தி பண்ணவுமாம்-
5-வேறே சிலர் த்ருஷ்டார்த்த பிரபத்திகளிலே சில பலியாது ஒழியக் கண்டு சகல பல சாதனமான பிரபத்தியில்
அதி சங்கை பண்ணுவார்கள் –
அவர்களையும் அல்லாத சாஸ்த்ரார்த்தங்கள் படிகளிலே கர்ம கர்த்ரு சாதன வைகுண்யத்தை வெளியிட்டு தெளிவிக்க வேணும் –
இங்கு கர்ம வைகுண்யமாவது மஹா விஸ்வாசாதிகள் குறைகை–
கர்த்ரு வைகுண்யம் ஆவது பிரபத்திக்கு சொன்ன அதிகாரம்
ந்யூனமாகை -சாதன வைகுண்யமாவது யதா சாஸ்திரம் ப்ரபத்ய நுஷ்டானத்துக்கு மூலமான சத் உபதேசாதிகள் இன்றிக்கே ஒழிகை –
இவ் வைகுண்யங்கள் அற பிரபத்தி பண்ணின போது தத் பலன்களாக கோலின த்ருஷ்டங்களும் சித்திக்கக் காணா நின்றோம் –

வேறே சிலர் பிரபத்தி சாஸ்த்ரத்தோடு-சாஸ்திரங்கள் உடன் -வாசி அற சர்வ சாஸ்த்ரங்களுக்கும் பிரவர்தகரான வ்யாசாதிகள் –
ஆலோடய சர்வ சாஸ்த்ராணி விசார்யா ச புன இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணா சதா -என்றும்
ஹரிரேக சதா த்யேயோ பவத்பி சத்த்வ சம்ச்திதை -என்றும்
ஸ்மர்த்தவ்யஸ் சத்தம் விஷ்ணு -என்றும்
இப்படி நிஷ்கர்ஷியா நிற்க சக்ருத் பிரபத்தி மாத்ரத்தாலே மோஷமாகக் கூடுமோ –
மாமேவ யே பிரபத்யந்தே -இத்யாதிகள் அங்கப் பிரபத்திகள் ஆனால் போலே
சரம ஸ்லோகாதிகளும் சபரிகர பிரபத்தியை பக்த்யங்கமாக விதிக்கின்றனவாக வேண்டாவோ -என்று சொல்லுவார்கள் –
இதுவும் அனுபபந்தம் –
சரணாம் த்வாம் பிரபன்னா யே த்யான யோக விவர்ஜிதா –தே அபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத் வைஷ்ணவம் பதம் -என்றும்
யத் யேன காம காமேன ந சாத்யம் சாதாநாந்தரை–முமுஷூ ணா யத் சாங்க்யேன யோகேன ந ச பக்தி –
ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி-தேன தேனாப்யதே தத்தத் நியாசே நைவ மஹா முனே –
பரமாத்மா ச தேநைவ சாத்யதே புருஷோத்தமே -என்றும் சொல்லும் வசனங்களாலே
ஸ்வ தந்திர பிரபத்தி சித்தித்தால் இந்நிஷ்டை உடையவனுக்கு
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் படியே ஸ்வயம் பலமாக த்யேயோ நாராயணஸ் சதா -என்கிற அர்த்தத்திலே
தன விழுக்காடு அன்வயத்துக்கு விரோதம் இல்லை –
இது அரோகனுக்கும் ஆரோக்யார்த்திக்கும் ஷீரம் சேவ்யம் என்றதோடு ஒக்கும் –

சாங்கமான த்யான விஷயம் சர்வாதிகாரம் அன்றே யாகிலும் பகவத் விஷயத்தில் அதிகார அனுரூபமாக அறியலாம் அளவும் –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -இத்யாதிகளில் படியே அனுசந்திக்கவும் குறையில்லை
ஸ்ரீ பாஷ்யகாரரும் இவ் உபாய நிஷ்டையை சிறிய கத்யத்திலும் பெரிய கத்யத்திலும் அருளிச் செய்து
ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் சுருக்கிக் காட்டி அருளி
இருந்த நாள் பிராப்ய ருசி கலையாதே வளர்ந்து போகும்படிக்கு ஈடான அனுசந்தான விசேஷத்தை
ததச்ச பிரத்யஹம் ஆத்ம உஜ்ஜீவனாய எவம் அனுஸ்மரேத்-என்று தொடங்கி அருளிச் செய்தார் –
இப் பிரபன்னனுக்கு பூசித்தும் போக்கினேன் போது -என்கிற அநந்ய பிரயோஜனமான பூஜா விஷயத்தை
அத பரமை காந்தி நோ பகவத் ஆராதன பிரயோஜகம் வஷ்யதே பகவத் கைங்கர்யைகரதி பரமை காந்தீ பூத்வா -என்று தொடங்கி –
நித்யத்திலே அத்யர்த்த ப்ரியா வ்ரத விசததம ப்ரத்யஷ ரூபா நுத்யநேந த்யாயன் நாசீத-என்று அருளிச் செய்தார்-

இப்படி அநந்ய பிரயோஜன நிரந்தர பகவத் அனுசந்தான பரீவாஹமான கைங்கர்யத்திலே பகவச் சாஸ்திர உக்தமாய்
வியாச தஷாதி மஹர்ஷி மதங்களோடும் சங்கதமாய்
மறம் திகழும் -என்கிற பாட்டிலும் –
இரு முப்பொழுது ஏத்தி-என்ற பாசுரத்துக்கு விவஷிதமாக ஆசார்யர்கள் வியாக்யானம் பண்ணின கால விபாகத்தை
அபிகச்சன் ஹரிம் ப்ராத பச்சாத் த்ரவ்யாணி சார்ஜயன்
அர்ச்சயம்ச்ச ததோ தேவம் மந்த்ரான் ஜபன் நபி
த்யாயன் நபி பரம் தேவம் காலே ஷூக் தேஷு பஞ்ச ஸூ
தர்மா நஸ் சதா சைவம் பாஞ்ச காலிகா வர்த்தம நா
ஸ்வா ர்ஜிதை கந்த புஷ்பாத்யை சுபைச் சத்யனுரூபத
ஆராதயன் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாசரான்–என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்யக் கேட்டு
வங்கி புரத்து நம்பி நித்யத்திலே சங்க்ரஹித்தார்-
இப்படி நஞ்சீயர் உள்ளிட்டார் நித்யங்களிலே கண்டு கொள்வது –
இவற்றில் உள்ள வைஷம்யங்கள் அவ்வோ சம்ஹிதா விசேஷங்களிலே சொல்லும் விகல்பங்களாலே சங்கதங்கள்-

இப்படி யாகையாலே
ந தேவ லோகா க்ரமணம் பவாம்ச்து சஹ வைதேஹ்யா-என்றும்
யத்ர குத்ர குலே வாசோ யேஷூ கேஷூ பவோஸ்து மே
தவ தாச்யைக போகே ஸ்யாத் சதா சர்வத்ர மே ரதி
கர்மணா மநஸா வாஸா சிரஸா வா கதஞ்சன்
த்வாம் வி நா நான்ய முத்திச்ச கரிஷ்யே கிஞ்சித் அப்யஹம் -என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடியே பகவத் ப்ரீதி மாதரம் பிரயோஜனமான கைங்கர்யத்திலே
ஸ்வ ஆசார்ய உபதிஷ்டமாய் இருப்பதொரு சாஸ்த்ரீய பிரக்ரியை கொண்டு யதா காலம் அந்வயிக்க பிராப்தம்
இப்படி நித்யமாக விதிக்கிற பகவத் அபிகம நாதிகளிலே லோகாயதிகரைப் போலே க்யாதி லாப பூஜைகளுக்காக யாதல்
தத்வ ஜ்ஞான வைராக்யாதிகள் இல்லாதாரைப் போலே பிரயோஜனாந்தரதுக்காக யாதல்
பூர்ண உபாயம் இல்லாதாரைப் போலே மோஷார்த்தமாக ஆதல் அன்றிக்கே
முக்தரைப் போலே ஸ்வாமி அபிமதத்தை நடத்த வேணும் என்கிற ருசியாலே யதா சாஸ்திரம் ஸ்வயம் பிரயோஜனமாக இழிந்தால்
இவ் அபிகம நாதிகள்-அந்ய அபிகமனமும் -அன்யார்த்த பிரவ்ருத்தியும் -அந்ய யஜனமும் -அந்ய சப்தங்களும் -அந்ய சிந்தையும்
ஆகிற சித்திரங்கள் புகாமைக்கு கடகமாய் இருக்கும் –
அந்ய அபிகமனம் ஆகாது என்னும் இடத்தை –
இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார் –

அன்யார்த்த பிரவ்ருத்தி ஆகாது என்னும் இடத்தை –
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -என்று அருளிச் செய்தார்
அந்ய யஜனம் ஆகாது என்னும் இடத்தை -உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் என்றும் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -என்றும்
மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாய் இருக்க
மணை வெந்நீர் ஆட்டுதீரோ -மாட்டாத தகவற்றீரே -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்தார்கள்-

சப்த ரிஷி சம்வாதத்திலும்
விஷ்ணும் ப்ரஹ்மண்ய தேவசம் சர்வ லோக நமஸ்க்ருதம்
த்ரை லோக்ய ஸ்திதி சம்ஹார சிருஷ்டி ஹேதும் நிரீஸ்வரம்
ஆதா தாரம் விதா தாரம் சாந்தாராம் ஜகத் குரும்
விஹாய ச பஜன்வந்த்யம் பிசஸ் தைந்யம் கரோதி ய-என்றும்
விஷ்ணும் தர்ம பரோ ந ஸ்யாத் விஷ்ணு தர்ம பராங்முக
குதர்ம வ்ரதசீலஸ் ஸ்யாத் பிசஸ் தைந்யம் கரோதி ய -என்றும் சொல்லப்பட்டது –
அந்ய கீர்த்தனம் -ஆகாது என்னும் இடத்தை -வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்றும்
சொன்னால் விரோதம் -இத்யாதிகளாலே அருளிச் செய்தார்கள் –

அந்ய சிந்தனம் ஆகாது என்னும் இடத்தை –
சிந்தை மன்று ஒன்றின் திறத்து அல்லா தன்மை தேவபிரான் அறியும் -என்றும்
வருதேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் கருதேன் -என்றும் அருளிச் செய்தார்கள்-
இச் சமாராதானாதி கிரமங்களில் அநதிக்ருதர்க்கும் இக்காலங்கள் எல்லாவற்றிலும் தங்களுக்கு
யோக்யமான நித்ய நைமித்திகங்களாலும் சங்கீர்த்த நாதிகளாலும்
சமாராதனாதி யோக்யரான பரம பாகவத்ர்க்கு பரதந்த்ரராய் -யதாதிகாரம் வல்ல தேவை செய்து
இக்கைங்கர்யம் இழவாது ஒழியலாம்-
இவ்வர்த்தத்தை
ஆராதநாநாம் சர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததி யாராதனம் பரம் -என்றும்
குன்று எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் -என்றும்
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –என்றும் அருளிச் செய்தார்கள் –

இக் கைங்கர்யங்களை அனுஷ்டித்து உகப்பாருக்கும் இது கண்டு உகப்பாருக்கும் ஜகத் வியாபாரம் பண்ண
அதிக்ருதனான ஈஸ்வரனுக்கும் முக்தருக்கும் போலே போகம் ஏக ரூபம்
தர்ம ஸ்ருதோ வா த்ருஷ்டோ வா ச்ம்ருதோ வா கதிதோபி வா
அநு மோதிதோ வா ராஜேந்திர புநாதி புருஷம் சதா -என்கிற
பாவ நத்வம் போலே போக்யத்வமும் ஏக ரூபமாகக் குறை இல்லை-
அப்படியே -தஸ்மாத் ச பிரணவம் சூத்ரோ மன்நா மாநி ந கீர்த்தயேத்-என்று மஹா பாரதத்திலும்
அஷ்டாஷர ஜப ஸ்த்ரீ ணாம் பிரக்ருத்யைவ விதீயதே ந ஸ்வர பிரணவ
அங்கா நாப் யன்ய விதயஸ் ததா ஸ்த்ரீணாம் து சூத்திர ஜாதி நாம் மந்த்ரமாத்ரோக்தி ரிஷ்யதே -என்று நாரதீ யாதிகளிலும்
நமோ நாரயணேத் யுக்த்வா ஸ்வ பாக புநராக மத -என்று ஸ்ரீ வராஹ புராணத்திலும்
வாயினால் நமோ நாராயணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -என்றும்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே-என்றும் சொல்லுகிற திரு மந்த்ரமாகிற
எட்டுக் கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றையும் தலையாடையும் கழிந்தால் நடுவுள்ள அம்சம் சர்வ உபஜீவ்யம் ஆகிறாப் போலே
பிரபத்தி நிஷ்டர் எல்லாருக்கும் சர்வ காலத்துக்கும் பகவத் அநு ஸ்மரண ரசத்துக்கும் விரோதம் இல்லை-

ச பரிகரமான விலஷண பக்தி யோகமாகில் இறே சிலருக்கு விரோதம் உள்ளது –
ஷண மாத்ர சாத்யமான பிரபதனம் சித்தமான அளவிலும் –
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ சதைவம் வக்தா -என்று சரண்யன் அருளிச் செய்தான் இறே
ஆகையாலே த்யேயோ நாராயண சதா -என்றதுவும்
யதாதிகாரம் சிலருக்கு உபாயமாகவும் சிலருக்கு பலமாகவும் கொள்ளுகையாலே
இது ஸ்வ தந்திர பிரபத்திக்கு விருத்தம் அன்று
இப் பிரபத்தி அங்கமான வேஷத்தை ஸ்ரீ பாஷ்யாதி களிலே உதாஹரித்து அருளினார் –
ஸ்வ தந்த்ரமான வேஷத்தை ஸ்ரீ கத்யத்திலே அருளிச் செய்தார்
க்லேசா நாம் ச ஷய கரம் யோகா தன்யன்ன வித்யதே ந கர்மாணாம் ஷயோ பூய ஜன்ம நாம யுதைரபி ருதே
யோகாத்கர்ம கஷயம் யோகாக் நி ஷப யேத் பரம் -இத்யாதிகளும்
ஸ்வதந்திர பிரபத்தி விதி பலத்தாலே அதிகாரி அந்தர விஷயங்களாகக் கடவன –

இப்படி சாத்ய உபாய விஷயமாக மற்றும் பிறக்கும் கலக்கங்களுக்கு பரிஹாரம் நிஷேப ரஷையில் கண்டு கொள்வது

இஸ் சாத்ய உபாயம் இங்கு சோதிதமான கட்டளையில் ரகஸ்ய த்ரயத்தில் யதா ஸ்தானம் அநு சந்தேயம் –

வரிக்கின்றனன் பரன் யாவரை என்று மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை யாதலினாம்
உரைக்கின்ற நன்னெறி யோறும் படிகளிலே ஓர்ந்து உலகம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே –

தத் தத் ஹைதுக ஹேதுகே க்ருததீய தர்க்க இந்த்ரஜால க்ரமே
விப்ராணா கதக பிரதான கணேந நிஷ்டாம் க நிஷ்டாஸ்ரயாம்
அத்யாத்ம சுருதி சம்பிரதாய கதைகரத்தா விசுத்தாசய
சித்தோபாய வசீக்ரியாமிதி ஹி ந சாத்யாம் சமத்யா பயன் –

—————

இந்த துறை வேறுபாடு என்கிற அடிப்படையிலே ஸம்ப்ரதாய பேதம் ஏற்பட்டு உள்ளது –
இந்தத்துறை வேறுபாட்டுக்கு அனுகுணமாக அசார அல்ப சார சார சாரதர சார தமங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்
எத்தனை துறை வேறுபாடு உள்ளதானாலும் நாமும் விசிஷ்டராகவே வாழலாம்
நாம் எல்லாருமே விசிஷ்டாத்வைதிகளே -ராமானுஜ சம்பந்திகளே –

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–