மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே🙏🙏
அன்னத்தை ஆசார்யனோடு ஸாம்யம் சொல்லும் பூர்வாசார்யர்கள்….
செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம்…
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் –
அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் –
அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள்…
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே *
*அன்ன நடைய அணங்கானபிராட்டியின்* புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் ––
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும்
பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே
அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே
*அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்* என்னும்படி
பரிபக்குவ ஞானம் உடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் ….
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால்
சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் …
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம்🙏
*எம்பெருமானின் ஹம்ஸாவதாரம்*–பற்றி ஆழ்வார்கள்
அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய்!!🙏
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
*பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க* அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே!
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை!!
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை!
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்!!!!
🙏
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே!!
🙏
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான்!!
🙏
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட….!
அன்னமாய் நூல் பயந்தாற்கு……!!
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே !!
🙏
புள்ளாய் என்றும்
ஆழ்வார்கள்…!!🙏
ஸ்ரீகஜேந்த்ர வரதர்
ஹம்ச வாகனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்.. 🙏
———————
யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும்.
இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள்.
இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம்.
தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக் கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.
இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
பொதுவாக யாளி யானையைத் தாக்குவது-தூக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
யாளி வாஹனத்தில்
ஸ்ரீகஜேந்த்ர வரதர்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏
இரண்டாம் திருவந்தாதி
தொடர் எடுத்த மால் யானை* சூழ் கயம் புக்கு அஞ்சி*
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று,* இடர் அடுக்க-
ஆழியான்* பாதம் பணிந்து அன்றே,* வானவர் கோன்-
பாழி தான் எய்திற்று பண்டு?🙏
காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது
(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
அந்த கஜேந்திரன்
முற்காலத்தில்
தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
அடைந்தது…🙏
உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி
நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால்
எம்பெருமானை ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை;
பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக
ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்.
மஹாவிஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தபோது
அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும்
திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய்
அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்ஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ,
‘யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபிக்க,
அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனாயினும்
முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும்
ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாதகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று;
முன்பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த போது
அவனது காலைப்பற்றியிழுத்து அனாதற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற்
பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக்கௌவிக்கொள்ள,
அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல் கஜேந்திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க,
உடனே திருமால் கருடாரூடனாய் அப்பொய்கைக் கரையிலே அரைகுலையத் தலைகுலைய விரைந்தெழுந்தருளித்
தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடுவித்து
இறுதியில் அதற்கு முக்தியை அருளினன் என்ற வரலாறு உணர்க.
“தொடரெடுத்த” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதியியல்வைக் குறிப்பதாம். காலிலிட்ட விலங்கை
முறித்துக் கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மை யானைச்சாதிக்கு இயற்கை யென்க.
எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு இன்னார் ஆவார், இன்னார் ஆகார் என்கிற நியதியில்லாமை
இப்பாட்டால் வெளியிடப்பட்டதாயிற்று.-🙏🙏🙏🙏
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே 🙏
கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்
சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின்
ஆழ்துயரை என்நினைந்து போக்குவர் இப்போது ?🙏
ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை 🙏
எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே
இவ்வாழ்வார் தாம் மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே
உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப் பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி….
பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க.
உபாயமும் உபேயமும் எம்பெருமானே; சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே
நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்கிறார்🙏🙏
மன்னும் பவளக் கால் செம்பொன்செய் மண்டபத்துள்………..என்று
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த படி-பவளக் கால் விமானத்தில்
ஸ்ரீ கஜேந்த்ரவரதன் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களுடன் பரமபத திருக்கோலத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –…..
அர்ச்சாவதார ப்ராவண்யத்தை சிறப்பித்துச் சொல்வதில் நோக்கு இங்கு இவருக்கு
(திருமங்கையாழ்வாருக்கு)
மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் –……..
உசாவ யாருமே இல்லையே -உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்துக்கும்
உண்ணும் சோறு………..–எல்லாம் கண்ணன் -என்று
இருக்கும் எனக்கும்
என்ன சேர்த்தி யுண்டு -நெஞ்சமும் இழந்த பின்பு உசாத் துணை யாவார் உண்டோ
ஆத்மவஸ்துவும் சிதிலமாகா நிற்க -உறக்கமும் இல்லாமல் -முகம் காட்டி உதவாதவனை மறக்காமல்
வாய் மட்டும் அவன் திரு நாமங்களை வெருவா நிற்கிறதே
ஸ்வரூப ஹானியை நினைந்து ஆறி இருக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் போலே ஆறி இருக்க வல்லேன் அல்லேன் –
காரார்ந்த திருமேனியை காண ஆசை கரை புரண்டு இருக்க எவ்வாறு ஆறி இருப்பேன்…… 🙏
(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏
————–
எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும்…
முன்பொலா ராவணன் தன் முது மதிள் இலங்கைவேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-
நீராட்டுதல் பூச்சூடுதல்
யசோதை உகப்பித்து உய்ந்தாள்……
பெரியாழ்வார் அனுகரித்து பேசி உய்ந்தார்…
இவரும் மானசீகமாக நீராட்டி பூச்சூட்டி மகிழ்கிறார்
தீர்த்தத்துக்கு பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரம் ஆவது போலே
ஞான நீருக்கு அன்பு சம்ஸ்காரம்….
கண்டேன் சீதையை -திருவடி விண்ணப்பம் செய்த சமயத்தில்
ஆனந்த கடலில் அழுந்தி இருந்த பெருமாள் மேல் ஈடு பட்ட
நெஞ்சம் என்னும் அன்பினால் ஞானம் ஆகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் –
ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரம்…
சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த கொடுமையில் கடுமிசை அரக்கன்
பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லலாம் அத்தனை ஒழிய
பிரித்து பாசுரம் இடப் போகாதே. … 🙏
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-
முன் பாட்டிலே நீராட்டினார் ஸ்ரீ ராமவதாரத்தில்
இதிலே பூ மாலை சூடுகிறார்
நான்கு அவதாரங்களில்…
மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ ராமாவதாரம்……
மருதிற நடந்து -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்…
வையம் தாய -ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்…
அம் மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயும் -ஸ்ரீ கூர்மாவதாரம் /அம்ருதமதனம்
பொய்ம் மாய மருதான அசுரரை* -பெரியாழ்வார்..
வையம் தாய்* -தாவி என்றபடி……
பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாயோரடி* -திருவாய் மொழி போலே
(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)🙏🙏🙏🙏
இன்று ரோஹிணி….
ஸ்ரீ வத்சம் அம்சம்…
ஸ்ரீ
( திருப்பாணாழ்வார் கார்த்திகை ரோஹிணி)
மாத திருநக்ஷத்ரம்
🙏🙏
தென் திருக்கேவேரி தென் கரையிலே திரு முகத் துறையிலே
வீணையும்-யாழும்- கையுமாக
நம்பெருமாளை திசை நோக்கி தொழுது
திவ்ய கீதங்களை
கண்டமும் கருவியும் ஒக்க கேட்பவர் செவியும் மனமும் குளிர
எம்பெருமான் திரு உள்ளம் உகக்க
கின்னர கந்தர்வாதியர் வியப்புற பாடிக் கொண்டே இருக்க
பாண குல திலகர்,,
சில முரட்டு குணர் கல் வீச
இந்த்ரன் ஏக காலத்தில் பொழிவித்த சிலா வர்ஷத்துக்கு சற்றும் பின்னிடாத கோவர்த்தன மலைபோலே சிறிதும் சலியாது இருந்தார்-
அது கண்டு அமரர் கோன் போலே அஞ்சி அகன்றனர் பக்தர்கள் அந்தரங்கத்தில்
அமர்ந்து இருக்கும் அரங்கன் திரு உள்ளம் கலங்கி திரு நெற்றியும் இரத்தப் பெருக்குற்றது
பகவத் பக்திக்கு ஜாதி முக்கியம் அன்று பக்தியே அமையும்
சகல சாஸ்திர சாரப் பொருளை காட்டி அருள
திரு லோக சாரங்கர் திரு முதுகில் எழுந்து அருளப் பண்ண நியமிக்க
ஆதி வாஹகர் எழுந்து அருளிவித்துக் கொண்டு திரு மா மணி மண்டபத்துக்கு போவது போலே…
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்துள்
ஏற்றிவைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அரங்கன்
திவ்ய மங்கள விக்ரஹத்தை பாதாதி கேசம் நேத்திர அந்தமாக சேவித்து
அதிலே ஆழ்ந்து
அதன் அழகை அனுபவித்து
அந்த அனுபவ அதிசயத்தை பின்புள்ளார்க்கும் விசதமாக்கும் பொருட்டு
அமலனாதிபிரான் திவ்ய பிரபந்தத்தை திருவாய் மலர்ந்து அருளி
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
என்கிற தனது துணிவை
வெளியிட்டு உலகோரை வாழ்வித்து உகப்போடு நிற்கையில்
பெரிய பெருமாள் அத் திருமேனியுடன் அவரை அங்கீகரித்து அருள
அனைவரும் காண…அரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து
காய்ந்த இரும்பு உண்ட நீரானார்
கோபாலன் குழல் இசையால் கோக்களை மகிழ்வித்தது போலே
அக் கோவிந்தனை யாழ் இசையால் மகிழ்வித்த இவ் வாழ்வார்
இவ்வுலகில் வாழ்ந்தது ஐம்பது வருஷ காலம் என்பர்-🙏🙏🙏🙏
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் என்று காசினியீர்
வாய்த்த புகழ் பாணர் வந்துதிப்பால் ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதன் பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.. 🙏🙏🙏🙏
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply