Archive for May, 2022

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -91-100–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 31, 2022

அவதாரிகை

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன

ஆஸ்ரித வ்யாமுக்தனாய்

ஆபத் சகனாய்

ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –

இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை  யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை

இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்

பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –

(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய

பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்

இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை

அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது

அறத்தொடு நிலை

தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று

வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )

மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்

வியாக்யானம்

சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று

வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த

கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –

———————————————————————

அவதாரிகை

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க

வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க

உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே

சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்

இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து

நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை

விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்

தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்

(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –

போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து

வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு

வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று

வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்

நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்

நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே

வைகலும்
எப்போதும்

தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே

நீள் நகருக்கு விசேஷணம்

பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை

வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

———————————————

அவதாரிகை

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்

அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று

அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்

அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்

காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து

கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து

மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்

நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து

நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்

நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்

ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே

அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே

காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே

நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே

துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-

என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–

————————-

அவதாரிகை

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்

வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே

மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே

உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க

கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்

அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்

அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்

மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்

அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

————-

அவதாரிகை

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம்

யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை

ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை

ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை

புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது

அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்

ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –

மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்

உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்

அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை

நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான

மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை

வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்

திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி

வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்

கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –

(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்

இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய

ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன

அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன

எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –

வியாக்யானம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று

ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது

புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை

அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்

——————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று

நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

வியாக்யானம்

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு

அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்

அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்

முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே

அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்

நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான

மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை

வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்

தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

————————————

அவதாரிகை

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

வியாக்யானம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே

அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி

அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி

பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –

அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக

நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே

இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வியாக்யானம்

நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

———

அவதாரிகை

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு

அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –

(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

பதவுரை

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–

தொழுவதும் வணங்குவதையும்–

சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்

உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

வியாக்யானம்

எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்

இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது

கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற

தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை

மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ

பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

——————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம் –

எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்

மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே

படுவதும்
அஸ்தமிப்பதும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்

கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்

இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது

தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி

கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்

திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-

சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு

கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

————–

அவதாரிகை

இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான

போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

பதவுரை

துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்

அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்

தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்

இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்

(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)

தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது

அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –

(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே

அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்

அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்

மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்

தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்

கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ

நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ

வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –

——————-

அவதாரிகை

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே

ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

வியாக்யானம்

ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு

ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –

எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்

இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய

செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்

(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)

அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்

மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்

ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை

நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

—————————–

அவதாரிகை

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

பதவுரை

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான  ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

வியாக்யானம்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்

அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-

திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்

வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று

விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –

சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி

இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –

வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்

அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்

பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்

பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

வியாக்யானம்

நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்

தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்

திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்

ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்

விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று

சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்

இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை

வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்

அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற

பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம மீமாம்ஸை -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரமும் ஸ்ரீ எம்பெருமானாரும்-விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 30, 2022

ஸ குணமான ப்ரஹ்ம விசாரம்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம்
ஹிதம் -அவன் கிருபையே பரம ஹிதம்
புருஷார்த்தம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
ஸ்ரீ பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் திரு அவதரித்த -வேத வியாஸர் -ஞான மார்க்க ப்ரவர்த்தனத்துக்கு ஆவேச அவதாரம் –
ஸூசநாத் ஸூத்ரம் -அநேக அர்த்தங்களை ஸூசனம் பண்ணும் –
வேதாந்தார்த்த கு ஸூம க்ருதனார்த் தத்வாத் ஸூத்ரம் -அழகானப் பூக்களைத் தொடுப்பது போல் –
ச விசேஷம் ப்ரஹ்மம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குண மயன் -ஸர்வாத்மா –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –
பூர்வ பாக கர்ம பலன் அல்பமாயும் அஸ்திரமாயும் இருப்பதை அறிந்து -அதனாலேயே ப்ரஹ்ம விசாரம்
பரீஷ்ய லோகான் – ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

ப்ருஹதி ப்ரஹ்மயதி தஸ்மாத் உச்யதே பரம் ப்ரஹ்ம –

ப்ருஹத்வாத் ப்ரும்ஹணாத் வாச் ச தத் ப்ரஹமேத் யபி தீயதே

ஸ்வரூப ப்ருஹத்வமாவது -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபம் -தன்னை ஒழிந்த ஸமஸ்த பதார்த்தங்களிலும் பூர்ணமாய் இருக்கும் இருப்பு –

குண ப்ருஹத்வமாவது -முக்கால ஸகல பதார்த்தங்களையும் அறிதல் முதலானவை –

யோ வேத்தி யுகபத் ஸர்வம் பிரத்யஷேண ஸதா ஸ்வத -நாத முனிகள்

ப்ருஹ்மணத்வமாவது -நாம ரூப ஸ்தூல அவஸ்தா ஜனக ஸங்கல்ப விசேஷமும்-

ஒரு கால விசேஷத்தில் ஆத்மாவுக்கு ஞான சங்கோசம் நீங்கப்பெற்று ஸ்வரூப ஆவிர்பாவமும்

யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோ வாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
எந்த ஞானத்தால் ஸ்வரூப விகாரமும் ஸ்வ பாவ விகாரமும் அற்ற புருஷனை அறிய முடியுமோ -அந்த ப்ரஹ்ம வித்யையை
தன்னைச் சரண் அடைந்த சிஷ்யனுக்கு ஆச்சார்யன் உபதேசிக்கக் கடவன் –
புருஷ ஸப்த வாஸ்யனும் ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனும் ஒன்றாகவே நிர்த்தேசித்துச் சொல்லும் ஸ்ருதி வாக்கியம் இது
நாராயண மாத்ர ப்ரதிபாதகமான ஸூக்தமே புருஷ ஸூக்தம் ஆகும் –

—————-

முதல் நான்கு ஸூத்ரங்களும் உபோத்காதம்

ஐந்தாவது ஈஷத் அதிகரணம்-சத் ஏவ சோம்ய இதம் அக்ரே –இத்யாதி
சத்தானதே காரண வஸ்து-என்பது நிர்விவாதம் –
அது ஆனுமானிக பிரதானமா -அசித் தத்துவமா -அல்லது ஸர்வஞ்ஞாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமா –
காரியமும் காரணமும் பிரதானம் தான் பூர்வபக்ஷம்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஞ்ஞாதம் பவதி -த்ருஷ்டாந்தம் ஸ்பஷ்டம் என்பர்
இத்தை வேத வியாசர் ஈஷதேர் நா ஸப்தம் -என்கிற ஸூ த்ரத்தால் கண்டிக்கிறார் –
பஹுஸ்யாம் என்று ஸங்கல்பித்து -ஸ்ருஷ்டித்து -அனுபிரவேசித்து-சத்தா தாரகனாய் இருப்பது வேதாந்த விஷயம் –
இத்தால் சங்கல்பத்தைக் குணமாகச் சொல்லி ப்ரஹ்மம் ச குண விசிஷ்டம் என்று தேறும் அன்றோ –

————

ஆனந்தமய அதிகரணம்
ஸங்கல்ப விசிஷ்டமே ஜகத் காரணம் –
அசித்துக்குக் கூடாமையால் சித் -சேதனனான ஜீவனே ஜகத் காரணம் என்று கொள்ளலாம்
அதீந்த்ரமான பகவான் காரணம் அல்லன் என்று பூர்வ பக்ஷம்
இத்தை ஆனந்தமய அப்யாஸத் -என்று வேத வியாசர் கண்டிக்கிறார்
அதிக ஆனந்தம் உள்ளவன் பரமாத்மாவுக்கே புஷ்கலம்-அல்ப ஆனந்தமயமான ஜீவாத்மா காரணம் ஆகமாட்டான் –
வேதாந்தம் ஸைஷா நந்தஸ்ய மீமாம்ஸா -என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக பெருமையைப்பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று அபரிச்சின்ன த்வத்தைச் சொல்லுகையாலே
ஆனந்தம் என்கிற குண விசேஷ விஸிஷ்ட ப்ரஹ்மமே விஷயம் –

————-

அந்தர் அதிகரணம்
ப்ரஹ்ம உபாசனம் செய்யும் அதிகாரிக்கு தேச விசேஷத்தில் ப்ரஹ்மத்தையும் ப்ரஹ்ம குணங்களையும் அனுபவிப்பதே புருஷார்த்தம்
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
ஆத்ம பதார்த்தம் என்பதை ஸ்தூல அருந்ததீ நியாயத்தால் உபநிஷத் தெரிவிக்கிறது –
அன்ன ரசமான சரீரத்துக்கு ஆத்மவத்தைச் சொல்லி -பிறகு பிராணமயம் -மநோ மயம் -விஞ்ஞான மாயம் -ஆனந்த மயம் -சொல்லி பரமாத்வாவுக்கு ஆத்மத்வத்தை ஸ்தாபிக்கிறது –
அவ்விடத்திலேயே -ஸ யஸ் சாயம் புருஷே யஸ் ஸாசா வாதித்யே -என்று
யத் தத் சப்தங்களால் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தியான புருஷனுக்கும் ஹ்ருதய குஹ வாஸியான புருஷனுக்கும் ஐக்யம் தெரிகிறது

சாந்தோக்யம் -தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேஸ –
இதில் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தி புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் சொல்லிற்று –
கர்மானுகுணமான ஸூக துக்கம் அனுபவிப்பதற்கே சரீர ஸம்பந்தம்
ந ஹ வை ஸ சரீரஸ்ய சத ப்ரீய அப்ரீயயோ அபஹரதிஸ்தி
பரமாத்வாவுக்கு இது கூடாதே என்பதால் இவன் ஜீவனே இவனே ஜகத் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத் என்றும்
பேத வியபதே சாச்ச அந்நிய -என்றும்
உள்ள ஸூத்ர த்வயத்தாலே கண்டிக்கிறார்
அபஹத பாப்மத்வாதிகளான சில தர்ம விசேஷங்களை வேதாந்தம் சொல்லுகையாலும்
ஆதித்யாதி தேவதைகளைக் காட்டிலும் ப்ரஹ்மதுக்கு பேதத்தை
ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்ய சரீரம் -இத்யாதி வாக்யங்களால் பேதம் சொல்லுகையாலும்
புண்டரீகாக்ஷத்வம் பகவத் அசாதாரணம் ஆகையால்
இச்சா க்ருஹீதா பிமதோரு தேஹ -அனுக்ரஹ அதீனமான சரீரம் கொண்டவன்
ஆக காரணத்வமும் பரத்வமும் உபாஸ்யத்வமும் நாராயண அசாதாரணம்
ப்ரஹ்ம ச குணத்வமே தேறும்

———–

ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
அநா வ்ருத்தி சப்தாத்
ந ச புனரா வர்த்ததே
வாஸூ தேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
உயர்வற உயர்நலம் உடையவன்
வண் புகழ் நாரணன்
நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

——————

வேத அபஹாரிணாம் தைத்யம் மீன ரூபி நிராகரோத்
ததர்த்த அபஹாரிணஸ் ஸர்வான் வ்யாஸ ரூபீ மஹேஸ்வர –

வேதத்தை சோமுகன் அபஹரிக்க மத்ஸ்யமூர்த்தி திரு அவதாரம்
வேதார்த்தங்களை வைசேஷிக பவுத்த ஜைன பாசுபதாதி மதஸ்தர்கள் அபஹரிக்க ஸ்ரீ வேத வியாஸர் திரு அவதாரம் –

ப்ரஹ்ம ஸூ தர கிரந்தம் சாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -எனப்படும் –
தஸ்யைஷா ஏவ சாரீர ஆத்மா -பரமாத்மாவே சாரீரன்
ஜகத் சர்வம் சரீரம் தே
ஸம்ஹிதம் ஏதச் சாரீரகம் -ஸ்ரீ போதாயன மகரிஷி

இதன் அர்த்தங்களை விஸ்தரேண ஸங்க்ரஹ பாவத்தால் ஸ்ரீ பாஷ்ய வேதாந்த தீபம் வேதாந்த சாரம் –

—————–

மூலமாக வெளியிட்டு அருளினார்

திருமந்திரம் மூன்று பதங்களால் சகல ஜீவாத்மாக்களுடைய

அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -மூன்று ஆகாரங்களும்
பரமாத்மாவினுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் கிடைக்கும்
சாரீரகத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பர ப்ரஹ்மம்

ஜகத் ஏக காரணமாயும் சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் அறுதியிடுகின்றன
இதுவே ப்ரணவார்த்த நிரூபணம்
மூன்றாம் அத்யாயம் ப்ரஹ்மம் உபாயம் -என்று அறுதி இடுகிறது -இதுவே நமஸ் ஸப்தார்த்தம்
நான்காம் அத்யாயம் பரம ப்ராப்யம் என்று அறுதி இடுகிறது -இதுவே நாராயணாய நிரூபணம்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம் -எகிற நான்கு அர்த்தங்களும் நான்கு அத்தியாயங்களின் சாரமாகும் –

வேதாந்தங்களிலே ஜகத் காரண வஸ்துவே த்யேயம் -சரண்யம் -ப்ராப்யம் என்று காட்டப்பட்டுள்ளத்து
காரணந்து த்யேய
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -தம் ஹ தேவம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –என்று இறே வேதாந்த கோஷம்
தாபத்ரயாதுரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாஸ்ய -ஸ்ரீ பாஷ்யகாரர்
இந்த வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபிக்கவே வேத வியாசர் திரு அவதாரம் –


 

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதிக்ருத கணநா சின்மயீ ப்ரஹ்ம காண்டே என்கிறபடியே
545-ஸூ த்ரங்கள்
156-அதிகரணங்கள்
16-பாதங்கள்
4-அத்தியாயங்கள்

ஜைமினி அருளிச் செய்த பூர்வ மீமாம்ஸை -கர்ம மீமாம்ஸை -முதல் 12 அத்தியாயங்களில் ஜ்யோதிஷ்டோமோதி கர்மங்கள் விசாரம்
மேல் நான்கு அத்யாயங்களின் கர்ம ஆராத்யா
தேவதைகள் விசாரம் -ஆக மீமாம்ஸா சாஸ்திரம் 20 அத்தியாயங்கள் கொண்டது –
ஸர்வ கர்ம ஸமாராத்யம் -ஸர்வ தேவதா அந்தராத்ம பூதம் -பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் என்று வேதாந்த ஸித்தம்
ஐக அர்த்யம்
பூர்வ காண்ட யுக்த கர்மங்கள் அங்கங்கள்
உத்தர காண்ட யுக்த ஞானம் அங்கி
கர்ம அங்கமான ஞானம் உபாயம் -ஐக ஸாஸ்த்ர்யம்
கர்த்ரு பேதமும் விஷய பேதமுமே உண்டு

விஷய த்விகம்-அல்லது ஸித்த த்விகம் என்றும்
விஷயி த்விகம் -அல்லது ஸாத்ய த்விகம் -என்றும் இந்த நான்கு அத்தியாயங்களை பிரிப்பர்
திருவாய் மொழியையும்
முதலிட்டு ஐந்து பத்துக்கள் ஸித்த பரங்கள்
மேலிட்டு ஐந்து பத்துக்கள் ஸாத்ய பரங்கள் -என்று பிரிப்பர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயர் ஸ்வாமிகள் –

அது பக்தாம்ருதம்
இது பராசர்ய வசஸ் ஸூதா

16 பாதங்களும் 16 திருக்கல்யாண குணங்களைக் கூறும்
அமலனாதி பிரான் -க குணவான் கஸ் ச வீர்யவான் போலே


விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய–ஸ்ரீ அதிகரண சாராவளி

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –அந்யாதாரன்
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்-பஞ்சகால பராயண ஆப்தன்
7-காத்மாதே –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்-உசித ஜனன க்ருத -ஆகாச ஜீவர்களுக்கு ஸ்வரூப விகார ஸ்வாஸ் பாவ விகார ரூப ஜனனங்களுக்குக் கர்த்தா
8-தேகேந்திரியாதே – –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்-உசித ஜனன க்ருத்

மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்-ஜாக்ரதாதி அவஸ்தா நிர்வாஹகன்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண ஏக நாதன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்-நாநா வித வித்ய உபாஸ்யம்
12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்-வர்ணாஸ்ரம ஆசாரத்தாலே திரு உள்ளம் உகக்குமவன் –

நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்-உபாஸகர்களின் உத்தர பூர்வ பாபங்களினுடைய அஸ்லேஷ விநாஸ கர்த்தா
14-ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்-ஸ்தூல தேஹ யுக்தனுக்குப் பலம்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்- ஸ்தூல தேஹாத் உதகராந்தனுக்கு ஏற்படும் பலன்கள்
16-சாம்யதச் ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி
முக்திம் ததோ ஹி பரமம் தவ ஸாம்யம் ஆஹு த்வத் தாஸ்ய மேவ விதுஷாம் பரமம் மதம் தத -ஆழ்வான்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதிகாரித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தித உசித -அசேஷ சேஷ விருத்தி தானே மோக்ஷம் -ஸாம்யா பத்தி

—————————–

முதல் அத்யாயம் -35 அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸ அதிகரணம் -ப்ரஹ்ம விசாரம் கர்த்தவ்யம் -கர்ம விசார அநந்தரம் கர்த்தவ்யம் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கிறது
35 வது அதிகரணம் -வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த நியாய அதிதேசம் பண்ணுகிறது
இடையில் 26-அதிகரணம் -அப ஸூத்ராதிகரணம் -ப்ரஹ்ம வித்யா அதிகார பரம் –
மற்ற அதிகரணங்கள் -பரமாத்மா சேதன அசேதன விலக்ஷணன் -ஜகத் ஏக காரண பூதன் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கின்றன –

ஸாஸ்த்ர உபோத்காதம் -முதலிட்டு நான்கு அதிகரணங்கள்
ஈஷத் அதிகரணம் ஐந்தாவது-அசேதன வைலக்ஷண்யத்தை ஸ்தாபித்து -இது தொடங்கியே ஸாஸ்த்ர ஆரம்பம்
ஆனந்தமய அதிகரணத்தில் சேதன வைலக்ஷண்யம் ஸ்தாபித்து
இவற்றின் விவரணம் மேலுள்ள அதிகரண விஷயங்கள்
ஈஷத் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தின் உபாயத்வமும்
ஆனந்தமய அதிகரணத்தில் ப்ரஹ்மத்தினுடைய உபேயத்வமும்
இவ்விரண்டும் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே யாகையால் அந்தர் அதிகரணத்தில் பரமாத்மா திவ்ய மங்கள விஸிஷ்டன் என்றும் ஸ்தாபித்தார்

இந்த அடைவே திருவாய் மொழியின் மூன்று பத்துக்களின் அடைவாகும் -இதின் விவரணமே மேல் பிரபந்த சேஷம் –

காரண வாக்கியங்கள் சேதன அசேதன விலக்ஷண விசிஷ்ட ப்ரஹ்மத்தின் இடத்தில் அந்வயம் என்பதால் முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் எனப்படுகிறது –

இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -ஜகத் ப்ரஹ்ம கார்யம் -என்பதில் விரோதம் இல்லை என்று ஸ்தாபிக்கிறார்
முதல் இரண்டு பாதங்கள் காரணத்வ விசார பரம்
அடுத்த இரண்டு பாதங்கள் கார்யத்வ விசார பரம்

ப்ரஹ்ம காரணத்வத்தை அங்கீ கரியாமல்
பிரதான -ப்ரக்ருதி தத்வ -காரணத்வத்தையும்
பரமாணு காரணத்வத்தையும் கூறும்
சாங்க்ய -வைசேஷிக -பவ்த்த -ஜைன -சைவ மதங்களைக் கண்டித்து
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்ம காரணத்வத்தைத் தழுவிய பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்

இரண்டாம் பாதத்தில் ஸாங்க்யாதி பஞ்ச மதங்களைத் தூஷித்து பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்
பஞ்சே தராணி சாஸ்த்ராணி ராத்ரீ யந்தே மஹாந்த்யபி -பாத்மதந்திர வசனம்

மூன்றாம் பாதமான வியத் பாதத்திலும்
நான்காம் பாதமான ப்ராண பாதத்திலும்
ஸர்வம் ப்ரஹ்ம கார்யம் என்பதை ஸ்த்ரீ கரணம் செய்து ஸ்தாபிக்கிறார்

ஆகாசத்துக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ப்ரஹ்ம காரியத்தை உபபாதிக்கிறார்
அசித்துக்குக் கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்குக் கார்யத்வம் ஸ்வ பாவ அந்யதா பாவம் என்று ஸித்தாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா –

அசித்து போக்யமாக ஸ்வரூப விகாரம் அடைய வேணும் -மாம்பூ மாம்பிஞ்சு மாவடு மாங்காய் மாம்பழம் போல் ஆக வேண்டுமே –
அதே போல் பிரகிருதி -மஹான் -அகங்கார பூத பஞ்ச காதிகளாகப் பரிணமிக்க வேண்டுமே
அவ்வாறு பரிணமிக்கும் படி சங்கல்பிக்கிறான் காரணபூதனான ஸர்வேஸ்வரன்
ஜீவன் இவற்றுக்குப் போக்தா
ஸ்வரூபத்தால் நிர்விகாரன்
ஸ்வ தர்மபூத பெற்று அனுபவிக்கிறான் –
இவற்றுக்கு நியாந்தா ஸர்வேஸ்வரன்
ஜீவாத்மா வேறு அவனது தர்மபூத ஞானம் வேறு -ஓன்று தர்மி -மற்ற ஓன்று தர்மம் –
தத்வத்ரயமும் ச விசேஷமே
வைலக்ஷண்யம் கூற ஓரோர் அதிகரணத்திலும் ஒரு விசேஷம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –
ஸங்கல்பம் ஆனந்தம் முதலான விசேஷ குணங்களோடு ப்ரஹ்மம் என்று ஸ்தாபிக்கிறார் –

மூன்றாம் அத்தியாயத்தில்
உபபத்தேச்ச -என்று உபாய பூதன் என்று கூறுகிறார்
வ்யாஜங்களாக பக்த்யாதிகள்
பக்தி விளையும் போது விஷயாந்தர வைராக்கியமும் -பகவத் விஷய ராகமும் வேண்டுமே –
முதல் பாதம் வைராக்ய பாவம் -இரண்டாம் பாதம் உபாயலிங்க பாதம் –
மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்ம உபாஸ்ய குணங்கள் விசாரம்
நான்காம் பாதம் ப்ரஹ்ம வித்யா அங்க பாதம்

நான்காம் அத்யாயம் பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய பலம் –
இதில் முதல் முன்னமே வித்யா ஸ்வரூப சோதனம் செய்து மேலே வித்யா பலத்தைக் கூறுகிறார்
கர்ம விநாசம் அஸ்லேஷம் தூநநம் -உதறுதல் -உபாயனம் -வேறே ஒருவன் இடம் சேர்த்தால் இவன் எல்லாம் சொல்லப்படுகின்றன –
இப்படி சரீரத்தோடு கூடி இருக்கும் காலத்தில் வித்யா பலம் கூறப்பட்டு மேல் –
மூன்றாம் பாதத்தில் அர்ச்சிராதி கதி
நான்காம் பாதம் பிராப்தி பாதம் -பரமபதபிராப்தி
அனைத்துலகும் யுடைய அரவிந்த லோசனனைத் தினைத்தனையும் விடாதே அனுபவிக்கும் அனுபவம்
அபுநா வ்ருத்தி -பலமும் கூறப்படுகிறது –

ஆக
ஜகத் ஏக காரணமாய்
ஸர்வ சேஷியாய்
சேதன அசேதன விலக்ஷணமாய் உள்ள
ப்ரஹ்மமே
உபாஸ்யம்
முக்த ப்ராப்யம்
முக்தி பிரதம்
பரம போக்யம்
என்று சாரீரகத்தில் ஸ்ரீ வேத வியாஸ பகவான் அறுதியிடுகிறார்

இவை இத்தனையும்
ஸ்ரீ பாஷ்ய
வேதாந்த தீப
வேதாந்த சார
வேத்யங்கள் ஆகும் –

————-

விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது

ஸ்ரீ வாஸூதேவனையே விஷயமாகக் கொள்ள வேண்டும்
ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்ற புருஷார்த்தங்களாவன சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்கள் -நஞ்சீயர்

தரதி சோகம் ஆத்மவித் -சாந்தோ -7-1-3-என்று சோக நிவ்ருத்தியும்
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே நூ நுதே -கௌ -2-1-4- என்று புண்ய பாப கர்ம நிவ்ருத்தியும் –
சோத்வ ந பரம ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்று தேச விசேஷ பிராப்தியும்
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்று ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவமும்
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபையதி -முண்ட -3-1-3- என்று பரம சாம்யா பத்தியும்
ஆனந்தமயம் ஆத்மானம் உப ஸங்க்ராமதி -தைத்ரியம் ஆனந்த -8- என்று பகவத் ஸாமீப்யமும்
சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா -தைத்த-ஆனந்த -1- என்று பகவத் குண அனுபவமும்
ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி -தைத்ரியம் -என்று பகவத் அனுபவ ஜெனித ஆனந்தமும்
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதா -என்று பகவத் அனுவ்ருத்தி ரூபமான கைங்கர்யமும்
ஞான பலமாக உபநிஷத்துக்கள் கோஷிக்கும் –
பக்திக்கும் பிரபதிக்கும் விஷய நியமம் பரம அவஸ்யகம் என்று நம் முன்னோர் அறுதியிட்டுள்ளனர் –

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை விஷய நியமமே உள்ளது -பிள்ளை லோகாச்சார்யார்-

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

——–

மூன்றாம் அத்யாயம் மூன்றாவது பாதம் -26 அதிகரணங்கள் கொண்டது
பர வித்ய அனுபந்தி விஷயங்கள் விசாரம் சில அதிகரணங்கள்
த்ருஷ்ட உபாஸன விஷயங்கள் விசாரம் பல அதிகரணங்கள் –
உபாஸன பேத அபேத விஷய விசாரம் சில அதிகரணங்கள்

இதில் 19 அதிகரணத்தில் -லிங்க பூயஸ்த்வ அதிகரணத்தில்
நாராயண அநுவாகம் ஸர்வ பர வித்ய உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம்-என்று அறுதிப்படுகிறது –
ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் -தைத்ரியம் -தஹர வித்யா ப்ரகரணம் -ஆரம்பித்து
ஸோஷர பரம ஸ்வராட் -என்று முடிவாக ஓதப்பட்டதே இவ்வதிகரணத்துக்கு விஷய வாக்கியம் –
இந்த நாராயண அனுவாகம் -தஹர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா –
ஸர்வ பர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா என்பது சம்சயம்
தஹ்ரம் விபாப்மம் -என்று முன்னுக்கும் பத்மகோச ப்ரதீகாசம் என்றும் பின்னும் தஹர வித்யா பிரஸ்தாபம் உள்ளபடியால்
நடுவே உள்ள நாராயண ஸப்த கடித வாக்கியங்கள் தஹர வித்யா உபாஸ்யம் என்று பூர்வ பக்ஷம்
இத்தைக் கண்டிக்கிறார் -லிங்க பூயஸ்த்வாத் தத்தி பலீய ததபி -3-3-43-இது ஸித்தாந்த ஸூத்ரம்-

லிங்க ஸப்தம் வாக்ய பரம்
இந்த அனு வாகத்தில் பிரதி ஸ்லோகம் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும்
நான்காவது ஸ்லோகத்தில் பதம் தோறும் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும் உள்ளது
பரவித்யைகளில் அக்ஷரம் என்றும் சம்பு என்றும் சிவன் என்றும் பரப்ரஹ்மம் என்றுமாம் பரஞ்சோதி என்றும் பரதத்வம் என்றும் பரமாத்மா என்றும்
நிர்தேசிக்கப்பட்ட உபாஸ்ய வஸ்துவை தத் தச்சப்தத்தாலே இங்கு -நாராயண அனுவாகத்தில் -அனுவதித்து அந்த உபாஸ்ய வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது –
ஆக இது ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமே
வாக்ய பஹுத்வத்தைக் கொண்டு பூர்வ பக்ஷம் நிரஸனம்

தத்தி பலீய -என்று மேலே ஸ்ருதி லிங்க வாக்யாதி பிராமண உபந்யாஸம் தோற்றுகிறபடியால் லிங்க ஸப்தம் ஹேது பரம் அன்று -சிஹ்ன பூத வாக்ய பரம் என்று கொள்ளப்பட்டது –
ப்ரகரணத்தை விட வாக்யம் பலிதம் என்பதே சித்தாந்தம் –

இதற்கு பூர்வபஷி மீண்டும் -எங்களுக்கு சாதகமாக லிங்கம் உள்ளது -முடிவில் பத்மகோச ப்ரதீகாசம் -என்று தஹர வித்யா சேஷத்வ உபபாதக லிங்கம் உள்ளதே
பிரகரணத்தை விடப் வாக்யம் பலிதமானாலும் லிங்கம் வாக்யத்தை விட பலிதம் ஆகுமே –

இதுக்கு லிங்க பூயஸ்த்வாத் -பரிஹார ஸூத்ரம்
இங்கே வாக்ய பூயஸ்தம் இருக்கிறபடியால் வாக்யங்களுக்கே பிரா பல்யம் –
மேலும் ஸஹஸ்ர ஸீர்ஷம் தேவம் -உபக்ரம லிங்கம் புருஷ ஸூக்த ப்ரத்யபிஜ்ஞ்ஞாபகம்
ஆகையால் உப சம்ஹாரகத லிங்கம் உபக்ரம லிங்கத்தை விட துர்லபம்
இந்த ப்ராபல்ய துர்லபத்வத்தை ததபி சப்தத்தால் பூர்வ காண்டத்தில்
ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான ஸமாக்யானம் சமவாயே பரா துர்பல்யம் அர்த்த விப்ர கர்ஷாத் -என்றே சொல்லிற்றே –

தஹர வித்யா ப்ரகரணத்தில் நாராயண அனுவாகம் படிக்கப்படுவான் என் என்னில்
உத்தாலகரான தகப்பனார் –
ஜகதாத்ம்யமிதம் ஸர்வம் -என்றும் –
ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் என்றும் பொதுவாகச் சொல்லி
பிறகு தத்வமஸி ஸ்வேதகேதோ -என்று பிள்ளை இடத்தில் விசேஷித்து உப ஸம்ஹரித்தால் போலே
பொதுவான விஷயத்தை தஹர வித்யா ரூப ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் காட்டி அருளுகிறார் வேத புருஷன் –
தஹர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று அறுதிப்படுமே யானால்
விகல்ப அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற ஸூத்ரத்தின் படியே
ஸர்வ பர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று நியாய பூர்வகமாக அறுதிப்படும் –
நியாய நிரபேஷமாகவே ஸ்ருதியைக் கொண்டே இவ்வர்த்தத்தை அறுதியிட வேண்டி
நாராயண அனுவாகத்துக்கு தஹர வித்யா மாத்ர சேஷத்வத்தைக் கண்டித்து

ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணார்த்தத்வத்தை ஸ்ரீ வேத வியாசர் நிர்ணயித்தார் –

இந்த அநுவாகத்தில் -நாராயண பரம் ப்ரஹ்மா என்ற இடத்தில் நாராயணாத் பரம் -என்று பஞ்சமி ஸமாஸம் கொண்டு
சிலர் நாராயணனைக் காட்டிலும் மேம்பட்டது ப்ரஹ்மம் என்று வாதம் செய்தார்கள் –
இதுக்கு பூர்வ அபர விரோதமும் ஸ்ருத்யந்தர விரோதமும் வரும்
தத்வம் நாராயண பர -என்று இறே மேல் வாக்யம்
ஸமஸ்த பதமாகக் கொண்டால் லக்ஷனை ப்ரசங்கிக்கும்
லக்ஷணை இல்லாத வ்யஸ்த நிர்தேச நிர்வாகமே யுக்தம்
பற்றிற்று விடாமல் நாராயண பரம் என்றதனை ஸமஸ்த பதமாகக் கொண்டாலும்
நாராயண பர என்ற மஹா உபநிஷத்தில் பிரதம விபக்தியந்த நிர்த்தேசம் காணப்படுவதால்

இங்கும் -நாராயண பரம் என்னும் இடத்தில் -நாராயண பரம் ப்ரஹ்ம -என்று கொள்வதே யுக்தம்
தத் விருத்தமாகப் பஞ்சமீ ஸமாஸம் கொள்வது யுக்தம் அன்று –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

பராவரன் -நூல் வாசியும் கால் வாசியும் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 29, 2022

பரப் ப்ரஹ்மம் .–முழுதுண்ட பரபரன் ( திருவாய்.1, 1, 8)

ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்-

தன் ஒப்பார் இல்லப்பன் -முனியப்பன் முத்தப்பன் —

பித்யதே ஹ்ருதய க்ரந்தி சித்யந்தே ஸர்வ சம்சயா
ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -முண்டக -2-2-9-
பகவானைப் பராவரன் என்று கொண்டாடுகிறது
தத்வ டீகையில் வேதாந்த தேசிகன் இதற்கு நான்கு அர்த்தங்கள் அனுக்ரஹித்துள்ளார்-

பராவர -என்பதை -பர என்றும் அவர என்றும் இரண்டாகப்பிரித்து
பரத்வ ஸுலபயங்களைச் சொல்லுகிறது -பரத்வ ஸுலப்ய பரிபூர்ணன் என்றபடி

லோகத்தில் பரர்களாகக் காணக்கூடியவர்களும் இவனைக் குறித்து தாழ்ந்தவர்களாவாரே
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாக விளங்குபவனே பராவரனான ஸர்வேஸ்வரன்

பர -ஞான விசிஷ்ட ஜீவாத்மா
அவர =ஞான சூன்யமான அசித்
இரண்டையும் சரீரமாகக் கொண்டவன் பராவரனான பகவான் -பராவர சரீரிகன் -இது மூன்றாவது வியாக்யானம் –
ஜகத் ஸரீரி விஷ்ணு -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
நமது ஸித்தாந்த பிரதான பிரதிதந்தர அர்த்தம் இதுவே –
தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் –
ஜகத் ஸர்வம் சரீரம் தே
ச ஈஸ்வர வயஷ்டி சமஷ்டி ரூப -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸந -வேத வியாசர்
ய தண்டம் –பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதயே-ஸ்தோத்ர ரத்னம் -17-

நான்காவது வியாக்யானம்
தஸ்மிந் த்ருஷ்டே அபராவரே என்று கொண்டு பகவான் அபராவரன் -பர அவர விலக்ஷணன் -சேதன அசேதன விலக்ஷணன் என்றபடி
இவனே புருஷோத்தமன்
ப்ரஹ்ம சப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண புருஷோத்தம அபிதீயதே -ஸ்ரீ பாஷ்யம் –

அபுருஷ -புருஷ -உத்புருஷ -உத்தர புருஷ – விலக்ஷனான் அன்றோ புருஷோத்தமன் –
ஸ்வ இதர ஸமஸ்த வாஸ்து விலக்ஷணன்
அசித் தத்வ -சம்சாரி ஜீவாத்ம -முக்த ஜீவாத்ம -நித்ய ஜீவாத்ம விலக்ஷனான் என்றபடி –
நித்ய ஸங்கல்ப அனுகுணத்தாலே நித்யர்கள் –


வார்த்தை -பெரு வார்த்தை -மெய்ம்மைப் பெரு வார்த்தை -என்று நாச்சியார் கொண்டாடும் சரம ஸ்லோகம்
மாம் -அஹம் -இரண்டாலும் ஸுலப்ய பரத்வ பரிபூர்ணன்

மாம் -கண்ணன் கழல்கள் நினைமினோ -4-1-3-
அஹம் -பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -4-1-4-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னை -திருவல்லிக்கேணிக் கண்டேனே
கவள மால் யானை கொன்ற கண்ணனை -திருமாலை -45-
வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகனுயிர் செங்குத்து -8-4-1-

ஸுலபயத்தையே இரண்டாக பிரித்து அனுபவிப்பர் -அவதார ஸுலப்யம்-அதுக்கும் மேலாக தேர் முன் நின்று காட்டிய ஸுலப்யம்
மாம் -உனக்கு சாரதியான என்னை

தனக்காகக் கொண்ட சாரதியை வேஷத்தை அவனை இட்டுப் பாராதே தன்னை இட்டுப் பார்த்து அஞ்சின அர்ஜுனனுடைய
அச்சம் தீரத் தானான தன்மையை அஹம் என்று காட்டுகிறான் –

எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும்படி -அந்தமில் -ஆதியம் -பகவானான தன் நிலையை –

நான் -என்று வெளியிடுகிறேன் -அருளிச் செயல் ரஹஸ்யம் -நாயனார் –

சர்வாதிகனான அவன் இப்படித் தாள நின்றது தனது குணத்தாலே இறே என்று அவனை இட்டுப் பாராதே
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிற வன்றோ என்று தன்னை இட்டுப் பார்த்து
சர்வ தர்மங்களையும் விட்டு எண்ணெய் பற்று என்னா நின்றான்
இது என்னாகக் கடவதோ என்று அஞ்சின அச்சம் தீர
ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகனாய்க் கொண்டு
நிரங்குச ஸ்வ தந்திரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை அஹம் என்று தர்சிப்பிக்கிறான் -என்கை -மா முனிகள்

மாம் -ஆஸ்ரய ஸுகர்ய ஆபாதக கல்யாண குண விசிஷ்டன்
அஹம் -ஆஸ்ரய கார்ய ஆபாதக கல்யாண குண விசிஷ்டன்
கார்யம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
ஸர்வஞ்ஞத்வம்-ஸர்வ சக்தித்வம் -பிராப்தி- பூர்த்தி –

பரத்வ ஸுலப்ய பரிபூர்ணனான பகவானை இக்காரணத்தாலேயே வேதாந்தம் பராவரன் என்று கொண்டாடுகிறது –
இப்படி ஸங்க்ரஹமாக அறியப்பட்ட வைபவத்தை
பின்பு விஸ்தாரமாக அனுபவித்து ஆனந்திக்க வேண்டும் –

————-

நூல் வாசியும் கால் வாசியும் –

அவன் திருவடிகளே ஆறும் பேறும்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான கீதாச்சார்யனுடைய கீதா நிஷ்கர்ஷமும் இதுவே யாகும்
உறுவதாவது -நீள் குடல் கூத்தனுக்கு ஆட் செய்வதே -4-10-10-
ஆட் செய்வதே உறுவதாவது -உறுவதுவும் இது -ஆவதும் இது -சீரியதும் இது -ஸூ சகமும் இது –

அருள் கொண்டாடும் அடியவர் -என்பதுக்கு நாயனார் வியாக்யானத்தில்
கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்கும் அவர்கள் –
சரணாகதி செய்து அபேக்ஷிக்க வேண்டியது கைங்கர்யம் தானே இதுவே சீரிய பலன்

சரணாகதிக்கு பல நியமம் இல்லை -தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –

திரௌபதிக்கு பலம் வஸ்திரம் –

பெருமாளுக்குப் பலம் சமுத்திர தரணம்

இவ்வர்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
ஸித்தித்த பலம் என்ற அர்த்தம் சொல்லில் வைகளையம் வரும் –
பிராபத்தாக்களுக்கு தத் தத் உத்தேஸ் யத்தவம்-என்றே அர்த்தமாகக் கடவது –

திரௌபதி வஸ்திரம் உத்தேசித்து சரணாகதி செய்தமையை

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –2-3-6-

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதம் –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார் -4-3-6-
துரியோதனன் ராஜாதிராஜன் என்று அஹங்காரம் கொண்டு இருந்ததால்  அரசர்தம் அரசன் -என்கிறார் –
எம்தமக்கு உரிமை செய் -துச்சாச நச்சாபி சமீஷ்ய கிருஷ்ணாம் அவேஷமாணான் க்ருபணான் பதீம்ஸ்தான்
ஆதூய வேகேன விசம்ஜ்ஞ கல்பாம் உவாச தாஹீதீ ஹசன் ச சப்தம் –சபா பருவ   ஸ்லோகம் -89-56
ரஜஸ்வலையாய் இருக்கும் தன்மையையும் கணிசியாமல் தலை மயிரைப் பிடித்து மான பங்கம் செய்தானே
சந்தம் அல் குழலாள் -அழகு இருள்
அலக்கண் -மன வருத்தம்
இந்த்ரன் சிறுவன் -அர்ஜுனன் -யுதிஷ்ட்ரன் -யம தர்ம ராஜ புத்திரன் -பீமசேனன் -வாய் தேவ புத்திரன்-

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

————————————————————————–

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4- 3-6 –

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
இவர்களைப் பாண்டவர்கள் என்கையாலே
அவளையும் பாஞ்சாலி என்று
ஆபி ஜாத்யம் சொல்லுகிறது –

தம்முடைய -என்கையாலே
இவர்களுடைய அபிமானத்திலே அவள் ஒதுங்கி
புருஷணாம் அபாவேந ஸர்வா நார்யா பதி வ்ரதா -என்கிற
பட்டாங்கில் பார தந்தர்யமும் ஸஹ தர்ம சாரித்வமும் தோற்றுகிறது

மறுக்கம் எல்லாம்
துரியோத நாதிகள் ஸபா மத்யத்திலே கொடு போய் துஸ் ஸாதனன் பரிபவிக்க
அத்தாலே ஈடுபட்டு க்ருத்யக்ருத்ய விவேக ஸூன்யையாய்
நெஞ்சு மறுகி அந்த சபையில் இருந்தவர்கள் எல்லாரையும் தனித்தனி முறைமை சொல்லி
சரணம் புக்க அளவிலும்

இவன் சோற்றை யுண்டோமே -என்று வயிற்றைப் பார்ப்பார்
துரியோதனுடைய மாத்சர்யத்தைப் பார்ப்பார்
தர்ம புத்ரனுடைய தர்ம ஆபாச ப்ரதிஜ்ஜையைப் பார்ப்பார்
மற்றும் தம் தாம் கார்யம் போலே தோற்றுகிற அஞ்ஞான பிரகாசத்தை ஞானமாக நினைத்து நிலம் பார்ப்பாராய்

இவளை அபிஜாதை யானாள் ஒரு ஸ்த்ரீ என்றும்
பதி வ்ரதை -என்றும்
ஸஹ தர்ம ஸாரி -என்றும் பாராமல்
துஸ்ஸாதனன் நலிவதைப் பார்த்து இருக்க

இவளும் தன்னுடைய அகதித்வத்தை அனுசந்தித்து
சங்க சக்ர கதா பாணே –நீயும் என்னைப் போலவோ –
துவாரகா நிலயா -பெண் பிறந்தார் வருத்தம் அறிந்து ரஷித்த பிரகாரங்களை மிகையோ
அச்யுத -ஆஸ்ரிதர் தங்கள் நழுவிலும் கை விடான் என்கிறது -வடயஷ ப்ரசித்தியோ
கோவிந்த -ஸர்வஞ்ஞராய் ஸர்வ ஸக்தர்களையோ ரஷித்தது
புண்டரீகாக்ஷ –அக வாயில் கிருபை காணலாம் படியாய் யன்றோ திருக் கண்களில் விகாஸம் இருப்பது –
உனக்கும் ஏதேனும் ஸ்வப்னம் முதலான சங்கோசங்களும் உண்டோ என்றால் போலே சொல்லி
ரக்ஷமாம் சரணாம் கத -ரஷக அபேக்ஷை பண்ணின அளவிலும்

ருணம் ப்ரவ்ருத்தம் இவ -என்றால் போலே
சில கண் அழிவுகளோடே ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ரக்ஷக அபேக்ஷையை நினைத்து வந்தால் போலே
வந்து முகம் காட்ட ஒரு வழியும் காணாமல்

அவன் பட்ட மறுக்கம் அறியாதே
அவனும் இவர்களைப் போலே கை விட்டான் ஆகாதே என்று
இவள் நினைத்து முன்பு கேட்டு வைத்த சுருசுருப்பையும் காற்கடைக் கொண்டு
லஜ்ஜா நிபந்தனமான சக்தியால் வந்த அசக்தியையும்
அந்த லஜ்ஜையையும் மிடுக்கலோடே கை விட்ட அளவிலே
(இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே )

எல்லா அவஸ்தையிலும் தியாக விசிஷ்ட ஸ்வீகாரம் ஆகையால்
கழித்து உடுத்தமை தோன்றாமல் உடுத்துக் கழித்தால் போலே நிற்கும்படி
திரு நாம பிரபாவம் உதவும்படியான
சங்கல்ப மாத்ரத்தாலே வஸ்திரம் மாளாமல்
மறுக்கம் எல்லாம் மாண்டு –(துச்சானாதிகளும் )மாண்டு இவளை மயிர் முடிப்பித்து
வதார் ஹரையும் கரிக் கட்டையையும் மன்னரும் பிள்ளையும் ஆக்கும் அளவாக நினைத்து இறே
எல்லா மாண்டு -என்கிறது

ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த
இவ்வளவிலும் பர்யவசியாமல் நூற்றுவர் தம் பெண்டிர் மேலே இம்மறுக்கம் எல்லாம்
வாங்கி வைத்தால் இறே இவள் மறுக்கம் மாண்டது என்னாலாவது

அன்றியே
இவள் மறுக்கம் எல்லாம் தான் ஏறிட்டுக் கொண்டு ருணம் ப்ரவ்ருத்தம் என்று தான் மறுகையாலே
வ்யாதி யுடையவனை வியாதியாளன் என்னுமா போல் இன்றிக்கே
தானே பூண்டு கொள்கையாலே ஆண்டு என்கிறது
அந்த ஆட்சி முடிவது அவர்கள் மேல் வைத்தால் இறே என்னவுமாம்

(நோய் உடையவன் நோயாளி போல் மறுக்கம் ஆளி ஆண்டு என்கிறது )

அன்றிக்கே
மாண்டு அங்கு என்றது
மாண் தங்கு என்று என்று பதமாய்
மாட்சிமை தகுகிற ஸ்த்ரீகள் என்னுதல் –

ஆண் தங்கு -என்று பதமாய்
ஆண்மை அமர்ந்த நூற்றுவர் என்னவுமாம்
யுத்த உன்முகராய் படுகையாலே ஆண்மை அமருகையும் குறை இல்லை இறே
அங்கு அங்கு வைத்த என்னவுமாம்

அப்பன் மலை
ஸ்வ ஸங்கல்பத்தாலே அந்யோன்ய தர்சனம் இன்றிக்கே இருக்கச் செய்து இறே இது எல்லாம் செய்தது
இது எல்லாம் திரு நாமம் தானே இறே செய்தது
இவ் வுபகாரம் எல்லாம் தோற்ற அப்பன் என்கிறார் –
திரு நாம பிரபாவம் தானே அவனையும் ஸ்வ ஸங்கல்ப பரதந்த்ரன் ஆக்கும் போலே காணும்
தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் இவள் சொன்ன திரு நாமத்துக்காகவே என்னுதல்
திரு நாமம் சொன்ன இவள் தனக்காக என்னுதல் –

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
பண்ணைப் பாண் என்று பண்ணிலே பாடத் தகுதியான வண்டினங்கள் என்னுதல்
திருப் பாண் ஆழ்வார் போல் பண்ணிலே பாடுபவர் போல் என்னுதல்

பருக என்றது
வர்த்தமானமாய்
பருகப் பருக ஊற்று மாறாதே செல்லும் நீர் நிலமாய்
பூக்களை யுடைத்தான சோலையே நிரூபகமான மலை

தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே
தோண்டல் உடைய-ஊற்று மாறாதே
இம் மலைக்குப் பழைமை யாவது

அநாதியான திருமலை ஆழ்வார் தாமே திருவனந்த ஆழ்வான் என்னும் இடம் தோற்றுகிறது –

—————–

அந்தகன் சிறுவன் -அறிவு கேடு வழி வழியாக வந்தது என்பதைக் காட்ட
அரசர் தம் அரசன் -அஹங்காரம் தலை மண்டின படி

ஆண்பிள்ளைகளான பார்த்தாக்கால் சந்நிஹிதராய் இருக்க தூரஸ்தனான கிருஷ்ணனைச் சொல்லுவான் என் என்று எம்பாரைக் கேட்க
முன்பே வசிஷ்டர் மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -சபா பர்வம் -90-41–என்று அருளிச் செய்தார்

இது தன்னை பட்டரைக் கேட்க
நாயகன் கைபிடித்து நாயகி செல்லும் கால் இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் செய்தார்
அவ்வண்ணமே எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் கண்ணனான பகவானைப் பற்றினாள்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
திரௌபதி நூல் தங்கினபடியும்
மற்றையோர் நூல் இழந்த படியும்
இவள் நூலுக்கு -மங்கள ஸூ த்ரத்துக்கு வாசி என் என்னில்
கோவிந்தா என்று நாக்கு வேரூன்றின கழுத்துக்கு ஒரு குண ஹானி இன்றிக்கே

ப்ரதிஜ்ஜையாலே குழல் விரித்து இருந்த இவள் குழலை முடிப்பித்தவாறே அவர்கள் குழல் விரித்தார்கள்

நூல் வாசி இவளுக்கு உண்டாய்த்து -கால் வாசி இருந்தபடியால் என்றபடி
அவன் காலைப்பற்றி இறே இவள் நூல் கழுத்திலே தங்கியது என்றபடி
இந்திரன் சிறுவன் -திரௌபதிக்கு பர்த்தாக்கள் ரக்ஷகர் அல்லாதாப் போல் அர்ஜுனனுக்கு இந்திரன் ரக்ஷகன் ஆக வில்லையே
ஸர்வ ரக்ஷகனான அகார வாஸ்யனான கிருஷ்ணனே ரக்ஷகன் ஆனான் இருவருக்கும் –

நூல் என்று ஸாஸ்த்ரமாய் -அதற்கு வாசி -அவன் கால் வாசியே -சரணாகதியே -இதுவே பரம தர்மம்-சகல ஸாஸ்த்ர ஸம்மதம்

ஆக
திருவல்லிக்கேணியான் ப்ரமேய பூதன்
ஆழ்வார் ப்ரமாதா
அருளிச் செயல் பிரமாணம்
இம்மூன்றுக்கும் பல்லாண்டு பாடுவதே ஸ்ரீ வைஷ்ணவ கிருத்யம்

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வதும் இல் குரவர் தாம் வாழி ஏழ் பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –


———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் — ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

நம் ராமானுஜ தரிசனத்தில் ப்ரஹ்மம் ச குணன் -ப்ரஹ்மம் நித்யம் அநந்தன் -விபு -தேச கால வஸ்து பரிச்சேத ராஹித்யன்
ஸகல வாஸ்து அந்தராத்மா -ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -ஸ்ரீ மத் பகவத் கீதா
அவனது கல்யாண குணங்களும் அநந்தம்
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோயம் உச்யதே -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்
ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா
ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
ந ஹி தஸ்ய குணா ஸர்வே ஸர்வை முனி கணைரபி வக்தும் சக்யா வியுக்தஸ்ய சத்வாத்யை அகிலை குனை
வர்ஷாயுதை யஸ்ய குணா ந சக்யா
சதே குணா நாம் அயுதைகதேசம் என்று
ஸ்ம்ருதிகளும் பரமாத்வாய் ஸ்வா பாவிக அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண விசிஷ்டானாயே கூறுகின்றன

விரோதி அதிகரண நியாய உபக்ரம அதிகரண நியாயங்களைக் கொண்டு ச குண வாக்யமே பிரபலம் என்று ஸ்தாபித்துள்ளார் ஸ்ரீ பாஷ்யகாரர் –
ச குணம் -கல்யாண குண விசிஷ்டம்
நிர்குண -அபகுணம் இன்மை
இரண்டுக்கும் விரோதம் இல்லையே
ஆக இப்படி
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹ அப்யேக வாக்ய ஸ்ருதவ் ச -என்று விஷய விபாகம் செய்து
ப்ரஹ்மம் ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் என்று ஸ்தாபித்து அருளி உள்ளார் –

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் யசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேய குணாதிபி -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பகவத் கல்யாண குணங்கள்
ஸத்யங்கள்
நித்யங்கள்
மங்களங்கள்
ஸ்வா பாவிகங்கள்
அநாதி சித்தங்கள்
அநந்ய ப்ரயோஜ்யங்கள்
அநவதிக அதிசயங்கள் அஸங்க்யேயங்கள் –

———–

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்-27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஸங்க்யாதும் நைவ ஸக்யந்த குணா தோஷா ச ஸார்ங்கிணா -ஆனந்த்யாத் பிரதமோ ராசி அபாவாதேவ பச்சிம –
தோஷங்களையும் குணங்களையும் என்ன இயலாதே

ஈறில வண் புகழ் நாரணன்

அவற்றில் ஒன்றான ஒவ்தார்யத்தைக் காட்டிக்கொடுத்தது வானமா மலையிலே –

ஆஸ்ரிதர்களுடையாபேஷிதங்களைத் தானே இரந்து கொடுக்கையும்
தன்னிடம் பலத்தைப் பெற்றுப் போவார்களையும் உதாரர்கள் என்கையும்
பெருமவனுடைய நைச்யத்தையும் கொடுக்கப்படும் வஸ்துவினுடைய கௌரவத்தையும் பாராதே
தாய விபாக நியாயத்தாலே பிரதியுபகார நிரபேஷமாகக் கொடுக்கையும் –
நிறைய வாரி வழங்கியபின்பும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருக்கையும்

கன்னலே அமுதே கார்முகிலே -2-3-7-
ஒரு வகையால் வந்த போக்யம் அன்று
ஸர்வ கந்த ஸர்வ ரஸ
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கார்முகில் என்று தனது பேறாக சர்வத்தையும் கொடுக்கை

உபாயமாகத் தன்னையே காட்டிக்கொடுக்கும் குணம்

————

ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -163-

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள்
பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் –
மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை
ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே
அருளி செய்கிறார் மேல் —

ருசி விவசர்க்குப்
பாதமே சரணம் ஆக்கும்
ஒவ்தார்யம்
வானமா மலையிலே
கொழுந்து விடும் —

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள்-ஒவ்தார்யம் தொடங்கி ஸ்வாமித்வம் வரை )

அதாவது
கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே
பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு (பாதமே ஏவகாரம்)
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-திருவாய்-5-7-10- -என்னும்படி
திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம்

ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று
ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -)
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–
( ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -பட்டர் -ஐதிக்யம்-வந்து அருளி -தாளம் தட்டி மேலே போகாமல் -)

(உபாயம் உபேயம் ஐக்யம்-ப்ராப்யம் பிராபகம் -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -பஹுஸ்யாம் ப்ரஜாயேய–
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -உபாதானம் நிமித்த -அபின்ன நிமித்தம் -சகல குண விசிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி –
பாதமே -உபபதயேச் ச–பொருந்தும் -பிள்ளான் நிர்வாகம்
பத்தும் உபாயபரம் –நான்கும் பிராபகம் தானே -எது உபாயம் என்று காட்டும் பிரகரணத்தில் –
நின் பாதமே சரணாகக் காட்டி அருளினீர் -பல நீ காட்டிக் கெடுக்காமல் நெறி காட்டி விலக்காமல் -பட்டர் நிர்வாகம் –
ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -சரணை-திருவடிகளை ஆறாக தந்து ஒழிந்தாய்-
நின் பாதமே -வெளியில் எடுத்து -ப்ரதிஜ்ஜை -ஆணை -இப்படி மூன்று நிர்வாகங்கள் உண்டே -)

——————————————–

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
உனக்கொரு கைம்மாறு நான் ஓன்று இலேன் எனது ஆவியும் உனதே –திருவாய்-5-7-10- -உயிர்ப்பாசுரம்
ஆறு என்று உபாயம்
சரண் என்று உபேயம்
உபாய உபேயங்கள் இரண்டுமே உனது திருவடிகளே யாம்படி பண்ணினாய் -பிள்ளான் நிர்வாஹம்
ப்ராப்ய ப்ராபக ஐக்யம் ஸம்ப்ரதாயிகம்
இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்
எனக்கு உபாயம் உனது திருவடிகளே யாம்படி பண்ணித்தந்தாய்
ஆறு உபாயம்
சரண் என்றும் உபாயம் -எனக்கு என்று உபாயாந்தர நிஷ்டரில் காட்டில் தமக்குள்ள வேறுபாடு –
நோற்ற நோன்பிலேன் தொடங்கி உபாயாந்தர சூன்யதையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய் மொழி

————–

அர்ச்சாவதாரம் தான் ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராயப் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைவிக்கக் கடவதாய்
ருசி பிறந்தால் உபாயமாய்
உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமாய் இருக்கும் -பிள்ளை லோகாச்சார்யார் -ஸ்ரீ வசன பூஷணம்

ஆழ்வாரும்
ருசி ஜனகத்வத்தை திருக்குறுங்குடியிலே அனுபவித்து
மாதுர்யமாகிற உபேயத்வத்தைத் திருக்குடந்தையிலே அனுபவிக்கப் போகிறவராய்
உபாயத்வத்தை வானமா மலையிலே அனுபவிக்கிறார் –

ஆண்டாளும் புண்ணியன் என்று அவன் உபாயத்தைக் கூறி
முகில் வண்ணன் என்று அடியாருக்குத் தன்னை உபாயமாகக் காட்டிக்கொடுக்கும் ஒவ்தார்யத்தை அருளிச் செய்கிறார் –

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
–திருவாய்-5-7-10- -என்று முந்துற முன்னம் அருளிச் செய்து
பின்பே
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -5-8-11-என்று அருளிச் செய்கிறார்
இத்தால் பரகத ஸ்வீ காரம் முற்பட்டது -ஸ்வ கத ஸ்வீ காரம் பிற்பட்டது என்றதாயிற்று
திருக் கமல பாதம் வந்த பின்பு அன்றோ சென்றதாம் என சிந்தனையே –
அவனுடைய ஒவ்தார்யம் முந்துற பிரவஹிக்க பின்பே இவர்கள் பற்றுகிறார்கள்
கமலபாதம் வந்து என் கண்ணனினுள் உள்ளன -முற்பாடானாய் விஷயீ கரித்து சாதனா பாவம் சொல்லி
சென்றதாம் -என்று தன் திரு உள்ளம் மேல் விழுந்த- அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது –


நெறி நாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -நெறி காட்டுகையும் நீக்குகையும் ஒன்றே –
மத்யாஜீ மாம் நமஸ்குரு -என்ன அர்ஜுனனுக்கு சோக விஷயம் ஆயிற்றே
உபாயாந்தரங்கள் உபாயங்கள் அல்லா எண்பதுக்கும் மேலே அபாயமும் ஆகுமே –
அவன் அகற்ற நினைப்பாருக்கு உபாயாந்தர அனுஷ்டானத்திலே மூட்டி அசலாக்கி
அந்தரங்கர்களுக்குத் தன் திருவடிகளையே உபாயமாகக் காட்டுகிறான்
இந்த ஒவ் கார்ய குணம் கில்லுந்து விடுவது வானமா மலையிலே –
மோக்ஷத்துக்கு ஹேதுவாக செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்னில் ஸாஸ்த்ர விஹித கர்ம க்ரியா கலாபங்கள் அனுஷ்டிப்பது
தெருள் கொள் நான்மறை வல்லார் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீ வர மங்கல நகர்
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
அனுஷ்டானம் சாதகம் ஆகாதே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் ஸர்வ யஜ்ஜா ஸமாப்த்தா –
இவ்வளவு பிறந்தவன் இவற்றை விட்டால் குற்றம் வராது
இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் -கர்மம் கைங்கர்யத்தில் புகும் -முமுஷுப்படி

உதாரனான பகவானும்
உதாரரான ஆழ்வாரும்
உதாரரான நம் பூர்வர்களும்
உதாரரான நம் வானமா மலை ஸ்வாமியும்
வாழி வாழி வாழி -என்று பல்லாண்டு பாடுவதே நம் கர்தவ்யம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -சொல்லுவோம் இராமானுசன் திரு நாமங்களே -ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் -நம்மாழ்வார் நம் இராமானுசன் -நம் மணவாள மா முனிகள்
மூவரும் திருவாவதரித்தது ஆழ்வார் திருநகரியிலேயே –

அஷ்டதிக் கஜங்கள் எண்மர்-
1- அழகிய வரதர் எனப்படும் ராமானுஜ ஜீயர் எனப்படும் வானமா மலை ஜீயர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் பிரியாது அடிமை செய்து போருவர்
2-பட்டர் பிரான் ஜீயர் -பூர்வாஸ்ரமத்தில் கோவிந்த தாஸப்பர் -எம்பாரைப் போல் பதச்சாயை –
3-திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4-கோயில் அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டானைப் போல் பாதுகா ஸ்தாநீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -ஆழ்வானைப் போல் உஸாத் துணை
6- எறும்பி அப்பா -எம்பெருமானாருக்கு வடுக நம்பி போல் தேவு மற்று அறியாத அத்யந்த அபிமதர்
7-அப்பிள்ளை -உறங்கா வல்லி போல் மடத்தின் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டே போருவர்
8-அப்பிள்ளார்

இவர்களைத் தவிர நவ ரத்ன சிஷ்யர்களும் உண்டு
1-சேனை முதலியாண்டான் நாயனார்
2-சடகோப தாஸரான நாலூர் சிற்றாத்தான்
3-கந்தாடை போரேற்று நாயனார்
4-ஏட்டூர் சிங்கராசார்யர்
5-கந்தாடை அண்ணப்பன்
6-கந்தாடை திருக்கோபுரத்து நாயனார்
7-கந்தாடை நாரணப்பை
8-கந்தாடை தோழப் பரப்பை
9-கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள்

இவரது பூர்வாஸ்ரமத்து திருக்குமாரர் -ராமானுஜாச்சார்யர்
திருப்பேரர் ஜீயர் நாயனார் -இவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் போல் அத்ய ஆதரணீயர் –

ஸ்ரீ மான் ஸூ ந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத்
பாஷ்யம் வ்யாகுர்வதஸ் தஸ்ய ஸ்ரோத்ரு கோடவ் மம அந்வய -என்கிறபடியே
புனர் அவதாரமான பெரிய ஜீயர் பூ ப்ரதக்ஷிணம் பண்ணி அநேக ஸ்தலங்கள் ஜீரண உத்தாரணம் பண்ணி அருளினார்
பரமத நிரசன ஸ்வமத ஸ்தாபனம் பண்ணி அருளினார்
சர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் மோக்ஷம் சாதித்து அருளினார்

ஈடு காலஷேபம்-இது ஸ்ருதி ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை
இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை -இது ஸ்ரீ இராமாயண பிரகிரியை
இது மஹா பாரத ப்ரக்ரியை -இது ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியை -இது ஸ்ரீ மத் பாகவத பிரகிரியை
இது பதார்த்தம் -இது வாக்யார்த்தம் -இது மஹா வாக்யார்த்தம் -இது வ்யங்க்யார்த்தம் -என்று
அற்புதமாய் விசத வாக் சிகாமணி என்கிற தமது விருது நிறம் பெரும்படியும்
சர்வஞ்ஞ ஸார்வ பவ்மர் என்கிற பட்டம் பொலியவும் பிரவசனம் செய்து அருளினார்

ஆழ்வார் துவலில் மா மணி மாடம் -திருவாய் மொழியிலே தமது பெருமைகளை தாமே வெளியிட்டு அருளினால் போல்
இவரும் ஆர்த்தி பிரபந்தத்தில் வெளியிட்டு அருளுகிறார்

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

இதுவே நமக்கு நித்ய அனுசந்தேயம்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்று ஆண்டு இரும் –

இவரது ஸாத்விக பாவம்
இவரது பெருமையைப் பொறாத சிலர் மடத்தில் நெருப்பு வைக்க
ஆதி சேஷ ரூபம் கொண்டு இவர் வெளியேற
அந்நாட்டு மன்னன் இதை அறிந்து அவர்களைத் தண்டிக்க முற்பட
பிராட்டி ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளியது போல் பரம கிருபையால் வாத்சல்யத்தாலும் அவர்களை ரக்ஷித்து அருளினார்
தேவீ லஷ்மீர் பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -என்று கொண்டாடும் படி அன்றோ இவர் ஸாத்விக பாவ வைபவம் –

————-

சொல்லுவோம் ஸ்ரீ ராமானுஜன் திரு நாமங்களே-

தஸ்மை ராமாநுஜார்ய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீச மத்

பெரிய திருமுடி அடைவு எம்பெருமானாருடைய திருநாமங்கள் அடைவு காட்டப்பட்டுள்ளது –

1-இளையாழ்வார்
பிங்கள வருஷம் சித்திரை திருவாதிரை திரு அவதாரம் பண்ணின காலத்தில் மாதுலர் சாற்றினை முதல் திரு நாமம்

ஆளவந்தார் ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து அருளினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன்
ஆளவந்தார் திருவடிகளையே விசேஷ தனமாக கதியாக நிதியாகக் கொண்டார்

2-இராமனுஜன்
பெரிய நம்பிகள் மூலமாகப் பெற்ற தாஸ்ய திருநாமம்
பஞ்ச ஆச்சார்யர்கள் -பெரிய நம்பி பெரிய திருமலை நம்பி -திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் –
இவர்கள் அனைவரும் இவருக்கு ஐந்து திருநாமங்கள் சாற்றி அருளினார்கள் –

3- யதிராஜர் –
திருவனந்த ஸரஸ்ஸிலே நீராடி ஆஸ்ரம ஸன்யாஸ ஸ்வீ காரம் பண்ணி அருள தேவப்பெருமாள் அவருக்கு சாற்றிய திரு நாமம் யதிராஜர் –

4- உடையவர் –
தென் அத்தியூரர் கழல் இணை அடிக்கீழ் பூண்ட அன்பாளனை
தன்னிடம் சேர்த்து தன்னையும் தனது சர்வத்தையும் கொடுத்து அருளி உடையவர் என்ற திருநாமம் சாற்றி அருளினார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்-

5-லஷ்மண முனி
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சாத்தி அருளிய திரு நாமம்
திரு மிடற்று ஆசைக்காக வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பண்ணுவாராம்
லஷ்மண லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மி –

6- எம்பெருமானார்
திருக்கோஷ்டியூர் நம்பிகள் சாத்தி அருளிய திருநாமம்
எம்பெருமான் காருணீகர் இவரோ பரம காருணீகர் -அவனிலும் அதிசயித்தது அன்றோ
காரேய் கருணை இராமானுச இக்கடல் இடத்தில் ஆறே அறிபவர் நின் அருளின் தன்மை

7-சடகோபன் பொன்னடி
திருமாலை ஆண்டான் சாத்தி அருளிய திருநாமம்
ஆழ்வார் திரு உள்ளக் கருத்துப்படி வியாக்யானம் காட்டி அருளியதால் பெற்ற திரு நாமம்
ஆழ்வார் திருநகரியில் இன்றும் ஆழ்வார் திருப்பாதுகைக்கு இராமானுசன் என்றே பெயர் -மற்ற இடங்களில் தான் மதுரகவி –

8-கோயில் அண்ணர்
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -ஆவதற்காக
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களை உபதேசித்து அருளிய பொழுது
பெரிய திருமலை நம்பி சாத்தி அருளிய திரு நாமம்
ஆண்டாள் பாரித்த படி அழகருக்கு நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் சமர்ப்பித்ததற்கு உக்காந்து நாச்சியார் அழைத்த திருநாமம்

9- தேசிகேந்த்ரன்
திருவேங்கடமுடையான் சாத்தி அருளிய திருநாமம்
அப்பனுக்கும் சங்கு ஆழி கொடுத்தவர் அன்றோ
தேசிகனான பகவானுக்கும் தேசிகர் -தேசிகோ தேசிகா நாம் –

10- பூத புரீசர்
ஆதிகேசவப்பெருமாள் சாத்க்தி அருளிய திரு நாம கரணம்

11- பாஷ்யகாரர்
சாரதா தேவி உகந்து சாத்தி அருளிய திரு நாம கரணம்

12-ஸ்வாமி தகப்பன்
உலகுக்கு எல்லாம் தகப்பனாக செல்வப்பிள்ளை -தனக்கு ஸ்வாமியை தகப்பனாக அபிமானித்து சாத்தி அருளிய திருநாம கரணம்

13-ஸ்வாமி
ஸ்ரீ வைஷ்ணவ வாமன க்ஷேத்ர -திருக்குறுங்குடி நம்பி சாத்தி அருளிய திரு நாம கரணம்

————-

ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம்

லஷ்மீ நாத ஸமா ரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஸ ச ஆச்சார்யவம் சோ ஜேய ஆச்சார்யாணாம் அசவ் அசவ் இதி ஆபகவத்த -ரஹஸ்ய ஆம்நாய ஸ்ருதி
ஆரோஹண அவரோஹண கிரமங்களாலும் அனுசந்திக்கப்பட வேண்டும் –
சரம ஆச்சார்யர் -அத ஏவ பரமாச்சாரியார் -ஸ்ரீ மணவாள மா முனிகள்
பரம ச அசவ் ஆச்சார்ய -பரமாச்சார்ய என்றும்
பரமஸ் யாபி ஆச்சார்ய பரமாச்சார்ய -என்றும் பொருள் கொள்ளத் தகும் –
நம் பூர்வாச்சார்ய பரம்பரை மண்டலாகாரமாக அன்றோ அமைந்துள்ளது –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் வைபவம் ஸூ ப்ரஸித்தம் –
நம்பெருமாள் எந்தப் புறப்பாட்டிலும் மா முனிகள் ஈடு கால ஷேபம் செய்து அருளிய பெரிய திரு மண்டபத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாவரும் அறிந்ததே –
பரமாச்சார்யருக்கு தனது சேஷ பீடத்தையும் பஹு மணமாகப் பிரஸாதித்து அருளினான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன் –

பரோ மா யஸ்மாத் ஸ பரம –
ஆனித்திருமூல ஸ்ரீ சைல வைபவம் நாடும் நகரமும் நன்கு அறியக் கொண்டாடுவதும்
பிரதி ஸம்வத்ஸரம் மாசி சுக்ல துவாதசி இவரது திரு அத்யயனத்தை மிகவும் கோலா ஹலமாகத் திருவரங்கத்தில் நடப்பதும் ஸூ ப்ரஸித்தம்
விஷ்ணு பரம சேஷீ -இவரை தனக்கு சேஷீயாகக் கொண்டானே

————-

ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரே ஸ்தா பயத் அபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆச்சார்ய உச்யதே

கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் குரு ஸப்த தன் நிரோதக-அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே

ஆச்சார்யன் ப்ரஹ்ம வித்ய உபதேஷ்டா
குரு வேத அத்யாபகன்
ஸ்ரீ நாரத பகவான் -ஸ்வாத் யாய நிரதம்–வாக்விதாம் வரம் -முனி புங்கவம் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை -ஸ்ரீ வசன பூஷணம் -315-
திருமந்த்ரத்தைச் சொன்னது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம் –

ஜீவ பர ஸம்பந்த பிரகாசம் இறே திருமந்திரம்
அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம் உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் -ப்ரமேய சாரம்
அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க ஸம்பந்தம் காட்டும் அவன் அன்றோ ஆச்சர்யம் -ஸப்த காதலி

பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச புண்டரீக ச புண்ய க்ருத் ஆச்சார்யவத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -புராண வசனம்
ஆச்சார்யாத் ஹைவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் பிராபத் -என்றும்
ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்றும் வேதாந்த வாக்கியங்கள்

தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆச்சார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் -439-

நாராயணோ அபி விக்ருதிம் குர்யாத் குரோ ப்ரச்யுதஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவி ந தோஷ யதி -புராண வாக்கியம்

இத்தையொழிய பகவத் விஷயம் துர்லபம் -ஸ்ரீ வசன பூஷணம் -440-
அநாதி ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஆச்சார்யன் உணர்த்துவதற்கு முன்பு அஸத் கல்பமாய் –

அவன் உணர்த்தின பின்பே கார்யகரமாகக் கடவதாய் இருக்குமது –
உஜ்ஜீவன உபதாய கதாவச்சேதகம் ஸம்பந்த ஞானம் -தத் ஹேதுத்வம் ஆச்சார்யனுக்கு என்றபடி –
உஜ்ஜீவனம் மோக்ஷம் -தத் உபதாயகம் ஞாயமான பகவத் சம்பந்தம் -தத் அவச்சேதகம் -ஞாயமானத்வம் –
தத் அவச்சின்ன -தத் விசிஷ்ட-பகவத் ஸம்பந்தம் மோக்ஷ ஹேது என்றபடி -சம்பந்த ஞானம் அவஸ்யகம் என்றபடி –
ஸம்பந்தம் ஆச்சார்யனாலே என்றபடி
பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள் -1-4-8- ஈடு –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -45-

ஏகாந்தீ வியபதேஷ்டவ்ய நைவ க்ரம குலாதிபி
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய தஸ்ய ஸர்வம் பி ச ஏவ ஹி

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இஇராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சக்கரத்தையும் திராவிட வேத சக்கரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப்பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ தெளி விசும்பு திருநாடும் -தேசமும் -தேஹமும் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 28, 2022

ஸ்ரீ தெளி விசும்பு திருநாடு அடைந்து வாழ்ச்சி பெற காருணிகனான சர்வேஸ்வரன் நமக்குத் தேஹத்தைத்யும் சாஸ்திரங்களையும் தந்து அருளி
அவை கொண்டு நல்லது தீயது அறிந்து -அது அடியாகத் தீயவை அகற்றி -நன்மையைச் செய்து -திவ்ய தேசம் அடைந்து
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்து வாழ்வதே உஜ்ஜீவனம் -பரம புருஷார்த்தம்

தேசமாவது அவன் உகந்து அருளினை திவ்ய தேசங்கள் -அர்ச்சா ஸ்தலங்கள் -தேஹம் -ஞானியான சம்சாரியுடைய சரீரம்

ஸ்ரீ ராமாயணம் திருவாய்மொழி -இரண்டும் த்வயதார்த்த விவரண வ்யுத்க்ரம வியாக்யானம்
ஸ்ரீ சரணாகதி கத்யமும் ஸ்ரீ வசன பூஷணமும் த்வயார்த்த விவரண சக்ரம வியாக்யானம்

திருவாய் மொழியிலே முதல் இட்டு மூன்று பாத்தாலே த்வய பூர்வார்த்த விவரணம் பண்ணுகிறார்
உபதேச தஸா யாம் பலம் பூர்வ பாவி -ஸாதனம் பஸ்ஸாத் பாவி –

சரணாகதி கத்யத்திலும் ஸ்ரீ வசன பூஷணத்திலும் ச கிராமமாக த்வயம்ன் வியாக்யானம் -உபாய உபேய பரம் த்வயம் விஸதீ க்ரியதே
ப்ரபத்யே இத் யந்தேந பூர்வ கண்டோ வியாக்யாதா
அத உத்தர கண்டம் விவ்ருண்வந் –

தனக்குத் தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் -என்று ஆரம்பித்து உத்தர வாக்ய அர்த்தம் அருளிச் செய்பவர்
ச க்ரம வியாக்யானம் செய்யாதே -நம ஸ்ரீ மதே நாராயணாய -என்று வ்யுத்க்ரம வியாக்யானம் செய்து அருளுகிறார்
இதற்கு காரணம் சரணாகதி கத்ய ப்ரக்ரியை -நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக அருளிச் செய்தது போலவே இங்கும் –
இஷ்ட ப்ராப்தே அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ கத்ய ரூபா அர்த்த க்ரமாத் பிரமம் நமஸ் ஸப்தார்த்த மாஹ-

நமஸ் -அநிஷ்ட நிவ்ருத்தி வாசகம் அன்றோ
அநிஷ்டமாவது எது என்னில்
இஷ்டா நிஷ்டங்கள் பகவானைப் பற்றிப் பார்க்க வேண்டும் -நம்மைக் குறித்துப் பார்க்கக் கூடாதே –
தன்னால் வரும் நன்மை விலைப்பாலைப் போலே -அவனாலே வரும் நன்மை முலைப்பாலைப் போலே -திருக்குருகைப் பிரான் பிள்ளான்
விலைப்பால் -ஒவ் பாதிகமாயும் விரசமும் அப்ராப்தமுமாய் இருக்கும்
முலைப்பால் -நிருபாதிகமாய் -ஸ ரஸமுமாய் -ப்ராப்தமுமாய் இருக்கும்

தனக்குத் தானே தேடும் நன்மை உபாய திசையிலும் உபேய அனுபவ திசையிலும் பிராப்தி தசையிலும் ஆகலாம்
இவை இத்தனையும் அவன் திரு உள்ளத்துக்குப் பொருந்தா விடில் இவை எத்தனையும் விரோதிகளே

ஏதன் நிவ்ருத்தி பிரார்த்தனையை நமஸ்
1-ஸ்ரீ பரதாழ்வானுக்கு நன்மை தானே தீமை யாயிற்று
2- தனக்குத் தானே தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும்
3-குணம் போலே தோஷ நிவ்ருத்தி
மூன்று ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரங்கள்
முந்தியது உபாய தசையில் விரோதியையும்
இடையது உபேய தசையில் விரோதியையும்
பிந்தியது பிராப்தி தசையில் விரோதியையும் கூறும்

பிராப்தி தசை -சரணாகதி செய்த பிறகு இவ்வுலகில் இருக்கும் நாள்
ஸகல வேத ஸங்க்ரஹம் திருமந்திரம்
ருச யஜும் ஷி சாமானி தந்தைவ அதர்வணாநி ச
சர்வம் அஷ்டாக்ஷர அந்தஸ் ஸ்த்தம் யச்சான்யதபி வாங்மயம்
நாராயணாயா -பர அனுபவம் -ஜீவனைப் பரன் அனுபவிக்கிற அனுபவம் -அவன் போக்தா இவன் போக்யன்
ஸ்வா தந்தர்யம் நிஜ ரக்ஷணம் சமுசிதா வ்ருத்திஸ் ச நான்ய உசிதா -தஸ்யை வேதி ஹரேர் விவிச்ய கதிதம் -ஸ்வஸ் யாபி நார்ஹம் தத -அஷ்ட ஸ்லோஹி

பெண் பிள்ளைகளையோ க்ருஹ ஷேத்ராதிகளையோ பிரார்த்திப்பது கூடாது போலவே பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்குத் தடையான
தேஹ நிவ்ருத்தியையும் ஞானி பகவான் இடத்தில் பிரார்த்திக்கலாமா -என்ற விசாரம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே –
குணம் போலே தோஷ நிவ்ருத்தி

பகவான் விரும்புகிறான் ஞானியை -ஞானி விரும்புகிறான் பகவானை –
ஸ்வரூபம் வேறே ரூபம் வேறே
ஞானிகளான ஆழ்வார்கள் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்ரஹத்தையே ஆதரிப்பார்கள்

பகவானும் ஆழ்வார்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் அவர்கள் திருமேனியையே போர உகப்பன்
இருவரும் தேஹாத்ம அபிமானிகளே
பொய் கலவாது என் மெய் கலந்தானே -1-8-5-
அவனும் என்னை விட்டு என்னுடைய தேஹத்தையே விரும்பி நின்றான் -ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
ஈஸ்வரன் தனக்கும் போக்ய தமமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கை ஆழ்வார் தம்மை
ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வார் -தேசிகன் -த்வய அதிகாரம் –
ஆக ஞானியினுடைய தேகம் பரமனுக்கு பரம அனுபாவ்யம் என்றது ஆயிற்று –
இத்தைக் கழித்து விடு என்ற பிரார்த்தனை அவன் விருப்பத்துக்கு மாறாக உள்ளதாகையாலே

சரீர நிவ்ருத்தி பிரார்த்தனை அநிஷ்டம் என்றதாயிற்று –

ஞானியினுடைய ஹ்ருதய வாச ப்ராப்திக்காகவே உகந்து அருளினை திவ்ய தேசங்கள் வாசம்-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -36–

மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே –திருவாய் -10-4-4–

இதில் நின்று -த்வா -ப்ரத்ய யாந்த நிர்த்தேசம் -திவ்ய தேசத்தில் இருப்பு -அங்கம் –
மனத்துள் இருந்தான் -ஹ்ருதய வாஸம் அங்கி –ஸாத்ய -ஸாதக பாவம் –

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்து
என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ -பெரியாழ்வார் -5-4-7–அவனுடைய அத்ய ஆதாரம் தெளிவு

அங்குத்தை வாஸம் ஸாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -ஞான ஹ்ருதய வாசம் ப்ராப்யம் -பேறு -ஸாத்யம்

ஞானி விக்ரஹம் பெற்ற பின்பு திவ்ய தேசங்களில் பகவானுடைய ஆதரம் தாழ்ந்து இருக்குமே

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–ஸ்ரீ பெரிய திருவந்தாதி -68-

———

வைவாஹிக க்ருஹாஸக்தனுக்கு ஸ்வ க்ருஹத்தில் ஸ்திதி போலவாம் –

ஸாத்யத்தின் போக்ய அதிசயம் காணக் காண அதிசயித்து இருக்கிற சாதன ஆதார அதிசயம் என்றும்
இவருடைய ஸாத்யம் அவனுக்கு ஸாதனமாய்
அவனுடைய ஸாத்யம் இவருக்குத் த்யாஜ்யமாய் இருக்கிறது -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானம் –

நீள் நகரம் அதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன் விளை –வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -7-10-7-என்று
திவ்யதேசம் பிராப்யம் என்றும் பகவான் ப்ராபகம்
ப்ராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்
அருளிச் செய்த ஆழ்வார் தாமே எட்டாம் பத்தில் திவ்ய தேசமே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று ஸித்தாந்தீ கரித்து அருளிச் செய்கிறார்

திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடர் -8-6-6-
இரு கரையர் ஆக்காமல் –ப்ராப்ய ஏக பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில்

ஆக -சரீரத்தைக் கழித்து விடு என்கிற தோஷ நிவ்ருத்தி தானே காமினியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
தோஷமே அபிமதமாய் இத்துடன் தன்னைப் புஜிக்க ஆதரிக்கும் அவனது போகத்தை விலக்கக் கூடாதே

அவனது உடைமையானபடியாலே இதுவும் ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேச்யம்
மதீயம் என்னில் விட்டு அகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -149-
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -திருவாய் 3-4-1-

பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையாரின் ஒரு திரு நாமம் ருத்ர -ரோத யதீதி ருத்ர -ஸ்ரீ பட்டர் பாஷ்யம்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் ஸதா பரகுண ஆவிஷ்ட த்ரஷ்டவ்ய சர்வ தேஹி பி -ஸ்ரீ விஷ்ணு தத்வ ஸ்லோகம்

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-3-
ஆனந்தக்கண்ணீர் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் அருளிச் செய்கிறார் -அடியார்களை அழச்செய்பவன் -ஆகையால் ருத்ரன் என்று அவன் திருநாமம்

ஸதா -த்ரஷ்டவ்ய -பதத்தோடே சேர்த்து நம்பிள்ளை
உண்ணும் சோறு –6-7-1-
கண்கள் நீர் மல்கி -இவர்களுடைய உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் இருக்கிற படி —
ஒருவண்பகவத் குண வித்தகனாய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்க –
அவனைக் கண்டு கொண்டு இருக்க வாகாதே யடுப்பதே
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -என்று சேதனராகில் மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது –

நஞ்சீயர் பிள்ளை திரு நறையூர் அரையரோடே மூன்று திருவாய் மொழி கேட்டேன் -அதில் எனக்கு ஒரு வார்த்தைகளும் போகாது –
ஒரு திருவாய் மொழியை பிரஸ்தாவியா அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை நினைத்து இருப்பன் -என்று அருளிச் செய்வர்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு -ஸதா த்ரஷ்டவ்ய-ஸதா தர்சனம் பண்ணுகைக்கு ஒரு தேச விசேஷம் தேடிப்போக வேணுமோ –

இதுவே பரம புருஷார்த்தம் -த்ரஷ்டவ்ய -தவ்ய ப்ரத்யயம் -விதி ப்ரத்யயம் -இத்தால் இது ஸித்தம்
பார்க்க வேண்டியவன் எவன் என்னில் -ஸர்வ தேஹி அபி -தேஹம் படைத்த ஒவ்வொருவனுக்கும் இதுவே பலம் –
நாமும் தேஹிகளே –
பகவானும் தேஹியே –
ஆக ஸ்ரீ வைஷ்ணவ விக்ரஹ அனுபவம் பகவானுக்கும் பாகவதருக்கு பலம் -என்றதாயிற்று –
த்ரஷ்டவ்ய-என்கிற இத்தால் நது வக்தவ்ய -என்பதும் கிடைக்கும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி மீண்ட பகவத் விஷயத்தைப் பேசினாலும் பேசலாம்
ஸ்ரீ வைஷ்ணவனுடைய வைபவத்தைப் பேச இயலுமோ -இயலாது -என்றபடி –

ஆக தேசம் -திவ்யதேசம் -திருவரங்கம் தொடக்கமானவை
அவற்றில் எம்பெருமான் எழுந்து அருளி இருப்பதே ஒரு ஞானி விக்ரஹ வாஸத்தை ஆசைப்பட்டே –
இவனுடைய தேஹத்தை அவன் மிகவும் ஆதரிக்கிறேன் -என்றபடி –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன் னெல்லாம்–
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –

ஹிருதயம் தத் விஜா நீயாத் விஸ் வஸ்ய ஆயதனம் மஹத் -ஸ்ருதி கோஷிக்குமே
ஞானி ஹிருதயம் பகவானுக்கு மஹா ஆயதனம் -பெரிய கோயில் என்றபடி
பெரிய கோயில் தொடக்கமான திவ்ய தேசங்கள் எல்லாம் இளங்கோயில்கள்
வெள்ளத்து இளங்கோயில் -பூதத்தாழ்வார்
இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டும்படி அன்றோ இவை –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தின் சிறப்பு -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 28, 2022

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-

நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இறே

நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இறே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –

அந்த நாதமுனி அருளாலே இறே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே

அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இறே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இறே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இறே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —

இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது


மந்த்ராணாம் பரமோ மந்த்ர -என்று கொண்டாடப்படும் திருமந்திரம் மந்த்ர ராஜம்
இதன் விவரணம் த்வயம் மந்த்ர ரத்னம்
ராஜா ரத்னத்தை விரும்புவான் -திருமந்திரமும் ஸ்வ அர்த்த ப்ரகாஸனத்தில் மந்த்ர ரத்னத்தை அபேக்ஷிக்கும்
ஸ்ரீ ரெங்கராஜ யதிராஜ சம்வாதம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா –
மந்த்ர ரத்ன அநுஸந்தான சந்தத ஸ்புரிதா தரம் -திநசர்யை –
வளம் கொள் மந்திரமும் மெய்ம்மைப் பெரு வார்த்தையும் அருளிச் செய்த வாயாலே -த்வயவக்தா -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ -என்று
இரண்டின் ஏற்றமும் வெளியிடப்பட்டது இறே என்று அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –
ஏகம் த்வயம் த்ர் யவ யவம் ஸூக லப்ய துர்யம் வ்யக்தார்த்த பஞ்சகம் உபாத்த ஷட் அங்க யோகம்
ஸப்த அர்ணவீ மஹிமவத் விவ்ருதாஷ்ட வர்ணம் ரெங்கே ஸதாம் இஹ ரஸம் நவமம் ப்ரஸூத -தேசிகன்

ஜகதி விததம் மோஹநம் இதம் தமோ யேநா பாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி -வேதார்த்த ஸங்க்ரஹம்

மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸ தாத்தா நிர்ணய திஸ்ர சித்தய
ஆத்ம ஸம்வித கிலாதீ சார தத்வாஸ்ரயா கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹம் ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோ
இத்யமூன் அனுசந்ததே யாதிபதி தம் யாமுநே யம் நம-தேசிகன்

ஆளவந்தார் அருளிச் செய்தவை
ஆகம ப்ராமாண்யம்
புருஷ நிர்ணயம்
ஸித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோகீ
ஸ்தோத்ர ரத்னம் -எனப்படுபவைகள் –

—————

திருப் பாட்டனாரும் திருப் பேரனாரும் திரு அவதரித்தது திரு காட்டு மன்னார்குடி என்னும் திவ்ய ஷேத்ரத்திலே –
திருவடி உத்தராடம்-கடக உத்தராடம் – -சூன்யமான ஆடி மாதத்தை அசூன்யமாக ஆக்கி அருளினார் இவரும் நாச்சியாரும் -திருவாடிப்பூரத்தில் திரு அவதரித்து –
ஆ முதல்வன் இவன் என்று இவரது கடாக்ஷ வீசாணத்தாலேயே எம்பெருமானார் ஜெகதாச்சார்யராக ஆனார் –
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே –
இவரது ஸ்ரீ ஸித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு மூலம்
இவரது ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹமே ஸ்ரீ கீதா பாஷ்யத்துக்கு மூலம்

பகவத் பரங்களான பூர்வாச்சார்ய ஸ்தோத்ரங்களுக்கு எல்லாம் மூலம் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –
மந்த்ர ரத்னம் போல் இதுவும் புராண ரத்னமும் ஸ்ரேஷ்டங்கள் –

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரமேயம் -ஆழ்வாருடைய திருவாய் மொழி -த்ராவிட உபநிஷத் –
இதன் ரஹஸ்யம் -பகவத் கைங்கர்யமே மேலான புருஷார்த்தம் -என்னும் அர்த்தம்
இதனை ஆழ்வாருடைய நிர்ஹேதுக கிருபையால் அருளப் பெற்றார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -ஆச்சார்ய பரம்பரயா பெற்று ஆளவந்தார் இங்கு அருளிச் செய்கிறார்

அன்றிக்கே
சகல வேதாந்த ஸாரார்த்தங்களான ப்ராப்ய ப்ராபகங்களை அறுதியிட்டு இத்தாலே பிராபகத்தை -உபாயத்தை -அத்யவசித்து

ப்ராப்யத்தை -புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிறார் என்றுமாம் –
ஆழ்வார் திருவாய் மொழி ப்ராப்ய பரம் என்றும் ப்ராப்ய ப்ராபக பரம் என்றும் ஈட்டில் காட்டப்பட்டது போலே

இத்தையும் பலபடிகளாலே நிர்வஹிப்பர்கள் நம் பூர்வர்கள் – –


நம என்று தொடங்கி உபகாரகர்களை வணங்கி
யன் மூர்த்தி என்று தொடங்கும் ஸ்லோகத்திலே –
மே மூர்த்நி பாதி என்று அவனுடைய உபாயத்வத்தையும்
ஸ்ருதி சிரஸ்ஸூ பாதி -என்று அவனுடைய ப்ராப்யத்வத்தையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் இ-
இந்த ஸ்லோகம் இறே கிரந்த ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||-ஶ்லோகம்–6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

————-

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய || -ஶ்லோகம்7-என்று தொடங்கி

பகவத் விஷயத்தை ஸ்தோத்ரம் செய்ய தான் அயோக்யன் என்று நைச்யம் பாவித்து

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் என்கிறபடியே அவரவர் அறிந்தவாறு ஏத்தலாம் என்று அறுதியிட்டு
ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

———-

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் || -ஶ்லோகம்7-10-என்று தொடங்கி
அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை பரக்க அருளிச் செய்து

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

———-

ந தர்ம நிஷ்டோஸ்மி -என்று உபாயாந்தர தியாக பூர்வமாகச் சரணாகதி செய்கிறார் –

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||-ஶ்லோகம்-22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

————

விராஜமாந -என்று தொடங்கி
திவ்ய மங்கள விக்ரஹ
திவ்ய ஆபரண
திவ்ய ஆயுத
திவ்ய மஹிஷீ
நித்ய முக்த விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தையும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும்
அதுவும் பரார்த்தம் என்னும் அத்தையும் வெளியிட்டு
ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார் –

————–

ஆழ்வார் வள வேழுலகு தலை எடுத்து அகலப் பார்த்தது போலவே
இவரும் திக் அசுசிம் என்று அகல நினைத்தார்-

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

ருசியின் மிகுதியால் அகலமாட்டாது நிற்கிறார்
அத்தலையின் பெருமையின் எல்லையைப் பார்த்து அகலுவதும்
அத்தலையின் நீர்மையின் எல்லையைப் பார்த்து அணுகுவதும் உசிதம் இறே
இதுவே வள வேழுலகு-திருவாய் மொழியின் சாரம் –

——————–

கண்கள் சிவந்து -திருவாய் மொழியிலே ஜீவாத்ம ஸ்வரூபம் பகவத் சேஷ பூதம் என்று நிரூபித்து
கரு மாணிக்க மலையிலே -அது அநந்யார்ஹம் என்று நிரூபித்து
நெடுமாற்கு அடிமையிலே பகவத் சேஷத்தளவு அன்று -பாகவத சேஷத்தளவு செல்ல வேணும் என்று அருளிச் செய்தார்
இது இறே சத்ருன ஆழ்வான் படி –

அவ்வோபாதி ஆளவந்தாரும் -தவ தாஸ்ய ஸூக ஏக சங்கி நாம் -என்று ததீய சேஷத்வத்தைப் பிரார்திக்கிறார் –

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

ப்ரஹ்ம ஜென்மமும் இழுக்கு என்பாருக்கு பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இறே

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வேணுமே –
பதிவிரதைக்கு பார்த்தாவினுடைய தேஹாம்சம் உத்தேச்யமான காலத்தில் பாதி வ்ரத்ய பங்கம் இல்லை
அவ்வோபாதி பகவானுக்கு சரீர பூதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கிஞ்சித்கரித்ததால் இவனுக்கு ஸ்வரூப ஹானி இல்லை இறே

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவானுக்கு ஜங்கம ஸ்ரீ விமானங்கள் இறே
நெஞ்சமே நீண் நகராக
எனது உடலே ஒரு மா நொடியும் பிரியான் –என்னா நின்றது இறே

ஆழ்வாரும் -ஊனில் வாழ் உயிரிலே -பகவத் அனுபவத்தைச் செய்து -ஹ்ருஷ்டராய்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பாகவத அனுபவத்தை ஆசைப்பட்டு
நெடுமாற்கு அடிமையிலே -பெற்று பரமானந்த பரிதரானார்
பாகவத அனுபவம் இல்லாத அன்று ஏற்பட்ட பகவத் அனுபவமும் அபூர்ணம் இறே –

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தையே இதில் அருளிச் செய்கிறார் –

————

ஸ்வ பிதா மஹரான ஸ்ரீ மன் நாதமுனிகள் சம்பந்தத்தை நிர்தேசித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

—————-

ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் அல்ல
பகவத் அனுபவ கைங்கர்யங்களே ஸ்வரூப அனுரூப பலம் என்றும்
கர்ம ஞான பக்திகள் ஸ்வரூப விருத்தங்கள் என்றும்
பகவானே உபாயபூதன் என்றும் ஆழ்வார் அறுதியிட்டார்
ஒரு நாயகம் திருவாய் மொழியில் ஐஸ்வர்ய கைவல்ய ப்ராவண்யம் த்யாஜ்யம் என்று உபதேசித்து
நண்ணாதார் -திருவாய் மொழியிலே
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சற்று இன்பம்
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்று ஸ்வ அனுஷ்டானத்தைக் காட்டி அருளினார்
புருஷார்த்த பல அந்நிய ருசி ஒழிகை இறே நாலாம் பத்தின் ப்ரமேயம்

நோற்ற நோன்பிலேன் இத்யாதியால் கர்ம ஞானாதிகளைக் கழித்து
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஸர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றினார் ஆழ்வார்

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை இறே வெளியிட்டு அருளுகிறார் –
பகவத் கைங்கர்யமே ப்ராப்யமாயினும் தத் பிரதிசம்பந்தி தயா பகவான் ப்ராப்யனாகிறான்
தத் வர்த்தக தயா திரு நாடும் ப்ராப்யம் ஆகிறது
தத் விரோதியான ப்ரக்ருதி சம்பந்தினுடைய நிவ்ருத்தியும் ப்ராப்யம் ஆகிறது
இவை இத்தனையும் கைங்கர்யத்துக்காகவே இறே
இவை கைங்கர்ய உபயோகி இல்லாத போது த்யாஜ்யம் இறே

இது தன்னை
ந தேஹம் -என்கிற ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
ஏறாளும் இறையோனில் ஆழ்வார் நிரூபித்த அர்த்தமே இது இறே –

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

————

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க உயிர் தேருங்கால் என் தனக்கும் வேண்டா என்றபடி
ந ஹி மே ஜீவிதே ந அர்த்தா விநா ராமம் மஹா ரதம் -என்றாள் இறே பிராட்டியும்
ஜீவிதாதிகளால் குறைவின்றி -என்று நாயனார் சங்கலநம் செய்து அருளிச் செய்தார்
ஆகையால் சேஷத்வமே புருஷார்த்தம் என்றதாயிற்று –
லுப்த சதுர்த்தியிலும்
வியக்த சதுர்த்தியிலும் யுக்தங்களான சேஷ தர்ம சேஷ விருத்திகளான நிரூப்ய நிரூபாக பாவம் இறே ஸம்ப்ரதாய ஸித்தம்
குருஷ்வ மாம் அநு சரம் -என்றார் இளையபெருமாள்
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் இறே
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்கிற இத்தால் ப்ரணவ யுக்த சேஷத்வம் ஜீவாத்ம ஸ்வரூப நிரூபகம் –
த்ருதீய அக்ஷர யுக்த ஞாத்ருத்வத்தில் காட்டில் ஸ்ரேஷ்டம் என்றதாயிற்று –

————-

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரமபுருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதியிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

காட்டுமன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக்கட்டுகிறார்

தனமாயதானே கைகூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பகவத் குணங்கள் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

வைதிக மத ப்ரவர்த்தலரில் அக்ரேஸர் ஸ்ரீ பராசர பகவான்
அவரை உதாரர் என்று கொண்டாடுகிறார் நம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்
அவர் அருளியச் செய்த ஸ்ரீ விஷ்ணு புராணமே புராண ரத்னம் என்று கொண்டாடப்படுகிறது –
அதில் பகவச் சப்தார்த்தத்தையும்-அந்த ஸப்தம் இன்னாரைத் தான் முக்கியார்த்தமாகக் குறிக்கும் என்பதை

ஸூத்தே மஹா விபூத் யாக்யே பரே ப்ரஹ்மணி ஸப்தயதே
மைத்ரேய பகவச் ஸப்த ஸர்வ காரண காரணே
ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யஸசஸ் ஸ்ரீய
ஞான வைராக்ய யோஸ் ஸைவ ஷண்ணாம் பக இதீரணா
ஏவமேஷ மஹான் ஸப்த மைத்ரேய பகவா நிதி
பரம் ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நாந்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரி பாஷா ஸமந்வித
சப்தோயம் நோப சாரேண த்வன் யத்ர ஹ்யுபசாரத
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத
பகவச் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -என்று அருளிச் செய்துள்ளார்

பகவச் ஸப்தத்தாலே வாஸூ தேவன் உபய லிங்க விஸிஷ்டனாகக் கூறப்படுகிறான் -அதாவது
அகில ஹேய ப்ரத்யநீக னாகவும் கல்யாண குணாகரனாகவும் கூறப்படுகிறான் என்றபடி

நிகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகத் வம்ஸ உபய லிங்கம்

க்ருத்ஸ்னம் பகவத் ஸப்த வாக்யம் இதி அனுசந்தேயம்-என்று

எங்கள் ஆழ்வான் வியாக்யானம் இட்டு அருளுகிறார் –

பராசர்யரான ஸ்ரீ வேத வியாஸரும்
ந ஸ்தாந தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி -என்று சாரீரகத்தில் அருளிச் செய்தார்
ச குண நிர் குண வாக்யங்களுக்கு விரோதம் இன்மையை
ச குணம் -நித்ய கல்யாண குண விசிஷ்டம் -அபஹத பாப்மா –ஸத்ய காம ஸத்ய சங்கல்பம்
நிர்குணம் -ப்ரக்ருதி குணம் இன்மையால்
தூரே குணா தவ து சத்த் வரஜஸ் தமாம் ஸி தேந த்ரயீ நிர்குணத்வம் -ஆழ்வான்
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹோ அபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -என்று தேசிகனும் அருளிச் செய்தார்கள் இறே
கல்யாண குண ரஹிதம் ப்ரஹ்மம் என்பார்க்கு சாரீரகத்தில் உபயலிங்க பாதமும் குண உப ஸம்ஹார பாதமும் பாதகமாம்
இத்தம் ஜீவேச பூமா பஹரண குஹனா வாத மோமுஹ்யமாநான் ஷேப்தும்
ந ஸ்தானதோ அபி
இத்யதிகரணமதாரப்யதே அநேக ஸ்ருங்கம் -என்றும் அதிகரண சாராவளியிலே தேசிகன் அருளிச் செய்து உள்ளார் –

தோஷோ பதாவதி ஸமாதி சயநா சங்க்யா நிர்லேப மங்கள குணவ் கதுகா ஷடேதா
ஞான ஐஸ்வரீ சகந வீர்ய பாலார்ச்சிஷஸ் த்வாம் ரங்கேச பாச இவ ரத்ன மநர்க்க யந்தி -என்று ஸ்ரீ பராசர பட்டரும் அருளிச் செய்துள்ளார்
க குணவான் -என்று ஸ்ரீ இராமாயண உபக்ரமத்திலும்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் என்று திருவாய் மொழி உபக்ரமத்திலும் உள்ளனவே –
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் இரு கண்கள் -பகவத் விஷயமாம் பர வஸ்துவைக் காண்போர்க்கு –
ஸ்ரீ கீதை ஆறாம் அத்தியாயத்தில் பஜதே யோ மாம் -என்று அருளிச் செய்ய
மாறன் அடி பணிந்து உய்ந்த -எம்பெருமானார் கீதா பாஷ்யத்தில்
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய ஒவ்தார்ய மஹோ ததிம் ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதிம்

பகவத் கல்யாண குணங்களை பரத்வ -ஸுலப்யம் -என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்
அதவா
ஸ்வரூப நிரூபக குணங்கள் என்றும் நிரூபித ஸ்வரூப விசேஷண குணங்கள் என்றும் இரு வகைகள்
அதவா
ஸ்வரூப குணங்கள் என்றும் திருமேனி ரூப குணங்கள் என்றும் இரு வகைகள் –

ஈறில வண் புகழ் –
வண் புகழ் நாரணன்
வாழ் புகழ் நாரணன்
பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி என்று பஞ்ச பிரகாரங்கள்
அர்ச்சை நீர்மைக்கு எல்லை நிலம் -திரு ஆராதனம் செய்து பரம ஷேமத்தைப் பெறலாம் –

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ஸூ வர்ண ரஜதாதிபி -தாம் அர்ச்சயேத் தாம் ப்ரணமேத் —

விசத்ய பாஸ்த்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணிம் -ஸ்ரீ ஸுநக பகவான் அருளிச் செய்கிறார்

அர்ச்சையிலே கீழ் சொன்ன ஸமஸ்த குணங்களும் புஷ்கலம்-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மா முனிகள் கண்ட வேதாந்த சார நிஷ்கர்ஷம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் முதலாக -ஸ்ரீ எம்பெருமானார் நடுவாக -ஸ்ரீ மா முனிகள் ஈறாக -பூர்வாச்சார்ய குரு பரம்பரை
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் திருமந்திரத்தை ஸ்வ அம்ச பூதனான நரனுக்கு நாராயணன் பிரகாசிப்பித்தான்
அவனே த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு பிரகாசிப்பித்தான்
அவனே சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனுக்குப் பிரகாசிப்பித்தான்

அவனே தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியிலே கோயில் கொண்டு

தெளி விசும்பு திருநாட்டை விடத் திரு உள்ளம் உகந்து பெரிய பெருமாளாய்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனான திருமேனியோடே கூடியவனாய்

ரஹஸ்ய த்ரயத்தையும் ஒரு சேர ஸ்வ மஹிஷியான பெரிய பிராட்டியாராம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேஸிக்க
தத் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாக நம் அளவும் ரஹஸ்ய த்ரயம் வர பிராப்தம் ஆகிறது –

இவ்வர்த்தம்
புனரபி ச ஏவ பகவான் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வ மஹிஷீ விஷ்வக்ஸேனஸ்ரீ பராங்குச நாத யமுனா ப்ரப்ருதி பூர்வாச்சார்ய முகேந
ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்த நிஷ்ணா தேஷு ஸூத்தம் ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாயம் அவதாரயாமாஸ -ரஹஸ்ய த்ரய மீமாம்ஸ பாஷ்யத்தில் வியக்தம் –
நாயக ரத்னம் போல் எம்பெருமானார் ஸோபா வஹாராக பிரகாசிக்கிறார்

அமுநா தபநாதி ஸாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகி ஸ்ரீ -தேசிகன் திருவாக்கு

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி ஜத்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்திமாபு பூர்வார் திருவாக்கு –

இந்தப்பரம்பரையில் சரம ஆச்சார்யர் மா முனிகள்-பெரிய ஜீயர் -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் ஸிகா மணி –

ஈடு கால ஷேபம் பெரிய பெருமாளுக்கு அருளினார் அன்றோ –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றார் அன்றோ-

மாநா தீநா மேய ஸித்தி -என்பர் பெரியோர் –
நம் தர்சனத்துக்கு பிரமாணங்கள் மூன்று -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ஸப்த பிரமாணமும் ஸ்ருதி ஸ்ம்ருதி மீமாம்ஸை கள் என்று மூன்று வகைப்படும் –
வேதத்தில் பூர்வபாகம் வேதம் என்றும் உத்தரபாகம் உபநிஷத் என்றும் ரஹஸ்ய த்ரயம் வேதாந்த ஸாரம் என்றும் கூறப்படும்
அந்த வேதாந்த சார நிஷ்கர்ஷம் பற்றிப் பார்ப்போம்-

—————-

அசாரம்-அல்ப ஸாரம்- ச ஸாரம் – சார தரம் த்யஜேத்
பஜேத் சார தமம் ஸாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீஷிதீயோபாத்த வசனம் ப்ராமண பாவத்தை வஹிக்கும் –
சமுத்திரத்தில் அடங்கியுள்ள அசாராதி சதுஷ்ட்யம் த்யாஜ்யம்
சார தமம் பஞ்சமம் அம்ருதம் உபாதேயம்

ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் -சார நிஷ்கர்ஷ அதிகாரத்தில் -தேசிகன் இந்த ஸ்லோக அர்த்த விவரணம் செய்து அருளுகிறார் –
பாஹ்ய குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்கள் -அசாரம்
வேத பூர்வ பாக ஐஹிக பல -தத் சாதன ப்ரதிபாதிக பாகம் அல்ப ஸாரம்
ஆமுஷ்மிக பல தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் ஸாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் சார தமம் -இதுவே விவேகிக்கு உபாதேயம்-

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —

பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத் சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

ஆயினும் ஆராய்ந்தால் அசார பதத்துக்கு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ர பரத்வம் கொள்ளுகை உசிதம் அன்று என விளங்கும்
பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வமே இல்லையே அன்றோ
அலௌகிக பலத்தையும் தத் சாதநாதி களையும் ப்ரதிபாதிக்குமது அன்றோ ஸாஸ்த்ரம் –
சாஸநாத் ஸாஸ்த்ரம் இறே
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்யா
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா -என்று இறே மநு பகவான் அருளிச் செய்தார்
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி -என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷித்தம்
இவ்விடத்தில் பர ஸப்தம் உத்க்ருஷ்ட பரம் அன்று -பர ஸப்தம் அந்நிய வாஸி எனக்கொள்ள வேண்டும் –
வேத பின்னத்துக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷேதிக்கப் படுகிறது –

த்யாஜ்ய உபாதேய விபாகம் ஏக அவயவியிலே அன்றோ செய்யப்படுகிறது -சமுத்திரம் -த்ருஷ்டாந்தம் –

இனி வாஸ்த்வ அர்த்தம் பார்ப்போம்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய ப்ரதிபாதக பாகம் அசாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் அல்ப ஸாரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன பக்தி ப்ரதிபாதிக பாகம் ஸாரம்
பகவத் அனுபவ பரீவாஹ ஸ்வார்த்த கைங்கர்ய தத் சாதன பூதாத்ம சமர்ப்பண ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரார்த்த கைங்கர்ய தத் சாதன ஸித்த உபாய ப்ரதிபாதக பாகம் சார தமம்
என்றே வாஸ்தவார்த்தம்
ஆக
வேதாந்த பின்னமாய் -சாரத்வேந ப்ரபலமாய் -சார தமமுமான ஸாஸ்த்ரமாம் ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸாரம் எனத் தேறியது –

————

இனி மா முனிகள் கண்ட இதனுடைய நிஷ்கர்ஷத்தை நிரூபிக்கிறோம் –

வைதிகர்கள் வேதார்த்தங்களை நிர்வஹிக்கும் கட்டளைகள் வெவ்வேறு பட்டு இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் ஜ்யோதிஷ்டோமாதி கர்மங்களைப் பிரதானமாகத் தெரிவிக்கிறது
வேதாந்த விஷயமான ப்ரஹ்மம் ஜீவ பின்னமானதோர் தத்வம் அல்ல
யுகாதி கர்மங்களை செய்கிற ஜீவாத்மாவையே வேதாந்தங்கள் கொண்டாடுகின்றன –
ஆக கர்மபரம் வேதம் -கர்ம கர்த்ரு ஜீவ ப்ரஸம்ஸா பரம் வேதாந்தம் -என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் சில வைதிகர்கள் –

வேதாந்தம் பக்தி ப்ரபத்திகளான பற்பல உபாயங்களை ப்ரதிபாதிக்கிறது –
நாநா ஸப்தாதி பேதாத்
விகல்ப
அவி ஸிஷ்ட பலத்வாத் -என்று இறே ஸூத்ர காரர் அருளிச் செய்தார் –
ரஹஸ்ய த்ரயமும் வேதாந்தத்தில் அடங்கியதே-பின்ன ஸாஸ்த்ரம் அல்ல –
பூர்வ பாகமான வேதத்தில் சொல்லப்பட்ட கர்மம் பகவத் கைங்கர்ய ரூபமாகும்
அதுவும் ஸ்வார்த்தம் -நம் ஆனந்ததுக்கு உறுப்பாகச் செய்யப்படுமது
பக்தியும் ப்ரபத்தியும் பகவத் ப்ராப்தி உபாயங்கள் -அதாவது பகவத் ப்ரஸாத ஜனகங்கள்
நம்முடைய பக்தி ப்ரபத்திகளாலே பகவானுக்கு அருள் பிறக்கிறதாகையாலே பகவத் ப்ரஸாதம் ஸ ஹேதுகம் என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவார் சில வைதிகர்கள் –

ஸித்த உபாய பூதன் ஸர்வேஸ்வரன்
அவன் ஸஹாயாந்தர நிரபேஷ உபாய பூதன்
இவன் பண்ணும் பக்தி ப்ரபத்திகள் -தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஸம் -என்கிறபடி பகவத் ப்ரஸாத ஜன்யங்கள்
அவன் அருளாலே விளைந்தவை
பல பூதங்கள் உபாயம் அல்ல என்றபடி
ஆத்ம புத்தே ப்ரகாஸ யஸ்மாத் ஸ ஆத்ம புத்தி ப்ரகாஸ
தத் விஷய புத்தி ஸ்புரணஸ்ய தத் அநு க்ரஹாயத் தத்வாத் -என்ற ஸ்ரீ ரெங்க ராஜ முனி பாஷ்யம் காணத் தக்கது –
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே -என்ற ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் திருவாக்கும் –
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -என்ற ஆள வந்தார் திருவாக்கும்
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணமிதி வஸோ அபி மே நோதியாத் -என்ற ஆழ்வான் திருவாக்கும் இவ்விடம் அநுசந்தேயங்கள்

ஆக பக்தி ப்ரபத்திகள் ஈஸ்வர கிருபா பலம் எனத் தேறியது –
பூர்வ பாக யுக்த கர்மம் பகவத் கைங்கர்ய ரூபம் -அதுவும் பரார்த்தமே -அவன் முக மலர்த்திக்கு உறுப்பானது –
உத்தர பாக யுக்த பக்தி ப்ராப்ய ருசி ஆகலாம் -பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ரூபமாகலாம்
ப்ரஸாத விசிஷ்டனே உபாய பூதன் -அவன் ப்ரஸாதம் நிர் ஹேதுகம் –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் பரம வைதிகரான நம் பூர்வர்கள் –

இவ்வர்த்த நிஷ்கர்ஷம் வேதாந்த சார லப்தம்
வேத பூர்வ பாகத்தில் ப்ரதிபாதிதமான கர்மங்களுடைய யாதாத்ம்யம் -வாஸ்த்வ ரூபம் -பகவத் கைங்கர்யத்வம் ஆகும் –
வேதாந்த ப்ரதிபாத்யமான பக்தியினுடைய உண்மை நிலை ப்ராப்ய ருசித்வம் -அதாவது
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் விஷயமான ப்ரீதி ரூபமாய் இருக்கை –
வேதாந்த ப்ரதிபாத்ய ப்ரபத்தியினுடைய உண்மையான ஆகாரம் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்வம் -அதாவது
ஜீவாத்மாவின் இயல்பான நிலையான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை விஷயமாக யுடைய ஞானமாய் இருக்கை –
இவையும் இவ்வதிகாரிக்கு ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தினுடைய பாராரத்வம் முதலானவையும் வேதாந்த சார வேத்யங்கள் ஆகும்
அதாவது ரஹஸ்ய த்ரய வேத்யம் என்றபடி –

———-

இவ்வர்த்தத்தை சில உதாஹரணங்களாலே விளக்குகிறார்
1-கட படாதி பேதம் ப்ரத்யக்ஷ ஸித்தம்
அப்ராப்தே ஹி ஸாஸ்த்ரம் அர்த்தவத் -என்கிற நியாயத்தாலே பேதம் வேதாந்த வேத்யம் அன்று
ஜீவ பரா பேதமே வேதாந்தார்த்தம் என்பர் ம்ருஷ வாதிகள்
இக்கூற்றுக்கு சமாதானம் அருளிச் செய்கிறார் தத்வ சாரத்தில் நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரஸித்தரான வாத்ஸ்ய வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
ப்ரத்யஷாதி தரஸ்து ஸாஸ்த்ர விஷய பேத த்வதத் வைதவத்-என்று
அதாவது
ப்ரத்யக்ஷ ஸித்த பேதம் ஸ்வ தந்த்ர பேதம்
பொருள்கள் பகவத் சேஷம் யுடையவை என்று அறியப்படாதே ஸ்வ தந்த்ரங்களாகவே அறியப்படுமவையாய் இருக்கும்-
இது ப்ரத்யக்ஷ ஸித்தம்
இனி ஸாஸ்த்ர ஏக வேத்யமான அர்த்தம் என்ன வென்றால்
இவை எல்லாம் பகவத் விபூதிகள் -பகவத் பரதந்த்ரங்கள் -பகவானுக்கு சொத்தாய் இருக்குமவை என்பதேயாம்
ஆக பிரத்யஷத்தால் இவற்றின் ஸ்வா தந்தர்யம் ஞானமானாலும் ஸாஸ்த்ரம் கொண்டே இவற்றினுடைய பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூப யாதாத்ம்யம் அறியப்படுமா போலேயும்

2- கட படாதி ஸப்தங்கள் -வ்யுத்புத்தி நிகண்டு ப்ரப்ருதிகளாலே குடம் வஸ்திரம் முதலான வஸ்துக்களுக்கு மாத்ரம் வாசகங்களாகத் தோற்றுகின்றன
ஆயினும் ஸகல ஸப்தங்களும் பகவத் பர்யந்தமாகச் சொல்லி அல்லது நில்லாது என்னும் அர்த்தம்
வஸஸாம் வாஸ்யம் உத்தமம் -இத்யாதி ஸாஸ்த்ரம் கொண்டே அறிய வேணும் –
அது போலவும்
பக்தி ப்ரபத்திகள் உபாயம் இத்யாத் யர்த்தங்கள் வேதாந்தங்களைக் கொண்டு நாம் அறிந்து இருந்தாலும் பக்தி ப்ரபத்திகளின் யல்பான ஸ்வரூபத்தை வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரயம் கொண்டே அறிய வேணும் என்றபடி –


கர்ம ப்ராதான்ய வாதிகள் வேத பூர்வ பாக அர்த்த நிஷ்டர்கள்
அவர்களை -பக்தி ப்ரபத்திகள் உபாயம் -ஸ்வார்த்த கைங்கர்யம்புருஷார்த்தம் -என்று சொல்லி வேதாந்த வித்துக்கள் கண்டித்தார்கள்
அந்த வேதாந்திகளையும் பக்தி ப்ரபத்திகள் அதிகாரி விசேஷணங்கள் -பகவத் கிருபா பல பூதங்கள் -பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்று
சொல்லி வேதாந்த சார நிஷ்டர்கள் கண்டிக்கிறார்கள்
ஆக வேதாந்தங்களைக் காட்டிலும் பின்னமாயும் உயர்ந்ததாயும் -உள்ள வேதாந்த ஸாரமான ரஹஸ்ய த்ரயம்
பரார்த்த கைங்கர்யம் பலம்
பக்தி ப்ரபத்திகள் பகவத் ப்ரஸாத பலம் -என்று செய்யும் நிஷ்கர்ஷமே வேதாந்த சார நிஷ்கர்ஷம்
இவ்வர்த்தமே பஞ்சமம் சார தமம்
இதுவும் இதற்கு ப்ரதிபாதிக வேதாந்த ஸாரமுமே உபாதேயம் என்றதாயிற்று –

அர்த்த தத்வம் இப்படி இருக்க -ஸ்ருதி பத விபரீதம் -என்று தேசிகன் அருளிச் செய்ய ஹேது என் என்ன
வீத ராக வ்யதிரிக்தாநாம் கர்மணி அஸ்ரத்தா நிவாரணர்த்தம் அன்வாருஹ்ய வாத -என்கிறபடியே
சில அதிகாரிகளுக்கு கர்மங்களில் அஸ்ரத்தையைத் தடுக்க ஜைமினி
ப்ரஹ்ம ஸாஸ்த்ரத்தை கர்ம ஸாஸ்த்ர சேஷமாக வர்ணித்தது எப்படி அன்வாருஹ்ய வாதமோ
அப்படியே ஆத்ம யாதாத்ம்ய ஞான விரஹிகளுக்கு ஸாத்ய உபாய ஸாஸ்த்ரத்தில் அஸ்ரத்தையைத் தடுக்க
ஸித்த உபாய ஸாஸ்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் -அதிரிக்தமாய் இருக்கச் செய்தேயும்
சாதன பக்தி பிரபத்தி ஸாஸ்த்ர ரூப வேதாந்தங்களில் அந்தர்பூதம் என்று அன்வாருஹ்ய வாதமாக அருளிச் செய்தார் தேசிகன் என்று கொள்ள வேண்டும்

இங்கே
விஷய சார பாகோ அயம் வேதாந்தாத் பர இஷ்யதே
பரத்வம் சார ஸாஸ்த்ரஸ்ய ஹி அஸாரம் இதி மாநத -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –
இதனால் தேறிய பொருளாவது
வேதத்தை வேதாந்த அனுகுணம் நயனம் செய்யுமா போலே
வேதாந்தத்தை வேதாந்த சார அனுகுணம் நயனம் பண்ண வேணும் என்று
ஆகையால் சாரீரக ஸாஸ்த்ர அனுகுணம் ரஹஸ்ய த்ரய நயனம் என்கை உசிதம் அன்று
ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீரக பாஷ்யாதி நயனம் உசிதம் என்றதாயிற்று
ரஹஸ்ய த்ரய ப்ரஸ்தானம் சார தமம் ஆகையாலே என்றபடி –


ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண பாஞ்சராத்ர ரூப ஸகல சாஸ்த்ரார்த்த நிர்ணாயகம் சாரீரகம் என்று கூறவும் முடியாது
ஸ்ருத்யர்த்த நிர்ணாயகம் சாரீரகம் ஆயினும் ஸ்ம்ருதி யாதி யர்த்தம் சாரீரகம் என்ன ஒண்ணாது
வேத வியாசர் ஓர் அதிகரணத்தில் ஸ்ருதி அர்த்தங்களில் ஓர் அர்த்தத்தை நியாய மார்க ஸஞ்சாரம் செய்து அறுதியிட்டு அதற்கு ஸம்வாத பிரமாணமாக
ஸ்ம்ருதேஸ் ச
ஸ்மரந்தி ச-என்று ஸ்ம்ருதி யாதிகளை உதாஹரிக்கிறார்
ஸுத்ரீ தர்க்கா ப்ரதிஷ்டா -என்ற தேசிகன் திருவாக்கையும்
த்வயம் கலு தர்க்க ஜாதம் ஸ்ருதி விருத்தம் அவிருத்தம் சேதி -தேந தர்க்கா ப்ரதிஷ்டா வசனம் -என்றும்
ஆர்ஷம் தர்மோபதே சஞ்ச இத்யாதி பிரகாரேண வேத விருத்த தர்க்க விஷய தயா யோஜ்யம்
ந புந வேத இதி கர்த்தவ்யதா ரூப தர்க்க விஷயம் -என்ற தேசிகன் திருக்குமாரர் திரு வாக்கையும் இங்கே அனுசந்திப்பது –
அதீத சாகார்த்த நிர்ணா யகம் நியாயம்
அந தீத சாகார்த்த நிர்ணா யகம் ஸ்ம்ருதியாதி என்று இறே நிஷ் கர்ஷம்
ஸ்ருதியிலும் சார்வத்ரிகமாக நியாய சஞ்சாரம் இல்லை
அஸ்பஷ்ட ஸ்தல மாத்ரத்திலே இறே நியாய சஞ்சாரம்
நியாய நிரபேஷமாக ஸித்தம் -என்ற ரஹஸ்ய த்ரய சார பரிகர விபாகாதிகார வாக்கியத்தையும் காணலாம்
ஸ்ருதிகளில் போலே ஸ்ம்ருதிகளிலும் நியாய ஸஞ்சாரம் கொண்டால் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹண பேதமே அற்றுப் போம்
நியாயங்களைக் கற்றுத் தெளிந்த ஸ்ரீ மைத்ரேயன் ஸ்ரீ பராசர பகவானைக் கிட்டினார் புராண ஸ்ரவணம் செய்ய என்று இறே ஸ்ரீவிஷ்ணு புராண உபக்ரமம் –
பாஷ்யகாரர்

இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் -என்று நாயனாரும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -என்று தேசிகனும் அருளிச் செய்தவை அனுசந்தேயம்
அருளிச் செயல்களைக் கொண்டு அன்றோ சரீரக அர்த்த நிர்ணயம் என்று அருளிச் செய்யப்பட்டது
சாரீரகத்தைக் கொண்டு அருளிச் செயல் அர்த்தங்களை அறுதியிடுவது என்று அருளிச் செய்திலரே
ஆகையால் உப ப்ரும்ஹணங்களுக்கு சாரீரக நியாய அபேக்ஷை பொருந்தாது

ஆக வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீர காதி நயநம் கார்யம் என்றதாயிற்று

ஆக வேதாந்த சாரீரகாதி ப்ரதிபாத்ய பக்தி ப்ரபத்திகள் பலம்
ப்ரஹ்மம் ஒன்றே உபாயம்
பூர்வ பாக உதித கர்மம் பரார்த்த கைங்கர்ய ரூபம் -என்று
வேதாந்த சார நிஷ் கர்ஷம் -என்றதாயிற்று

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பகவத் விஷய சாரம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 25, 2022

ஸ்ரீ பகவத் விஷயம் –
ஸ்ரீ பகவானை விஷயமாகக் கொண்டது ஸ்ரீ பகவத் விஷயம் -ஸாதாரண பொருளில்
ஸாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -ஸ்ரீ ராமாயணமும் -ஸ்ரீ மத் பாகவதமும் -அருளிச் செயல்களும் இதுவே

ஸம்ப்ரதாயத்தில் கிரந்த சதுஷ்டய கால ஷேபம் –
1-ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம்
2-ரஹஸ்ய கால ஷேபம்
3-ஸ்ரீ இராமாயண கால ஷேபம்
4-பகவத் விஷய கால ஷேபம் -திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்தாம்பு -திருவாய் மொழி –

ஆக
பகவத் விஷயம் திருவாய் மொழியையும்
அதன் சாரம் பெரிய பெருமாளையும் குறிக்கும்-

நம் ஸ்வாமி எம்பெருமானார் திருமாலை ஆண்டான் இடம் இந்த பகவத் விஷய கால ஷேபம் கேட்டு அருளினார் –
பகவத் விஷயத்தை அந்தரங்கமாக நிரூபிக்கும் கிரந்தமாகையாலும்
அங்கியான ப்ரபந்தமாக இருக்கும்படியாலும்
ஸ்ரீ நாயனார் ஆச்சார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் –

இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்- –

ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,
கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம் பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,
திரு மால் அவன் கவி என்றே , வாயோலை படியே மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது
வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்-சூரணை-63-

( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் –
மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் )
என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,
தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-

இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே ,
ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் ,பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே ,
பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று
இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

—————

வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரேஷு மாநவம் பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம் –
புருஷ ஸூக்தத்துக்கும் பகவானுக்கும் உள்ள ஸாம்யத்தை

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் -ஸர்வ ஸ்ருதிஷ் வநு கதம் –யம் பூத பவ்ய -என்று
ஸர்வ ஸ்ருதி வாக்யங்களிலும் அவனும் புருஷ ஸூக்தமும் அந்தர் கதம் என்று அருளிச் செய்கிறார் –

சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-

எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது

பகவத் பரதவ ப்ரதிபாதங்களுக்கும் புருஷ ஸூக்தமே பிரதானம் -என்று அருளிச் செய்து
எம்பெருமானுக்கு புருஷ ஸூக்தத்துக்கும் ஆறு விசேஷணங்களால் சாம்யா நிர்வாகத்தையும் அருளிச் செய்கிறார்

1-சர்வ ஸ்ருதிஷு அநுகதம்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே –சகல வேதங்களிலும் எம்பெருமான் திகழ்வது போலே
புருஷ ஸூக்தமும் ஒவ் ஒரு வேதத்திலும் உண்டாய் இருக்கும்
ருக்வேதே ஷோடசர்ச்சம் ஸ்யாத் -யஜுஷி அஷ்டா தச ர்ச்சகம் –சாம வேதே து சப்தர்ச்சம் ததா வாஜச நேயக-
ஆகவே -சர்வ ஸ்ருதிஷு அநுகதம் -என்றது உபயத்துக்கும் சாதாரணமாய் இருக்கும்

2-ஸ்திரம்
நிலை நிற்கும் தன்மையும் சாதாரணம்
ப்ரமேய பூதனான எம்பெருமானும் பிரமாண மூர்த்தன்யமான புருஷ ஸூக்தமும்
நித்யஸ்ரீர் நித்ய மங்களமாய் விளங்கத் தட்டில்லையே

3-அப்ரகம்ப்யம்
இல்ல செய்ய குதர்க்கிகள் திரண்டாலும் அசைக்க ஒண்ணாதே –
அதே போலே புருஷ ஸூக் தத்தையும் அந்ய பரமாக்க ஒண்ணாதே

4-நாராயணாஹ்வயதரம்
அவனுக்கு நாராயண திரு நாமம் போலே புருஷ ஸூக்தமும்
நாராயண அநு வாகம் என்ற சிறப்பு பிரசித்தி பெற்று இருக்கும்

5-த்வாம் இவ அந வத்யம் -ஸூக்தம் து பவ்ருஷம்
அவன் அகில ஹேயபிரத்ய நீகனாய் இருப்பது போலே இதுவும் ஹேயபிரதி படம் –
தேவதாந்த்ர பாராம்யா சங்கைக்கு அல்பமும் அவகாசம் தாராதே
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷு மானவம்-பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்

6-அசேஷ ஜகத் பவித்ரம்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -அசேஷ ஜகத் பவித்ரனாப் போலே இதுவும் தன்னை அனுசந்தித்தாரை
மனன் அகம் மலம் அறக் கழுவி பரம பரிசுத்தராக்கும்

ஆக இப்படிப்பட்ட புருஷ ஸூக்தமானது வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் -என்று தொடங்கி
தேவரீருடைய புருஷோத்தமத்தை முறையிட நின்றது
இந்த ஸ்லோகத்தில் உள்ள ஒவ் ஒரு விசேஷணமும் எம்பெருமானுடைய பரத்வத்தை நிலை நாட்டை வல்லது
என்னும் இடம் குறிக் கொள்ளத் தக்கது

—————-

ப்ரஹ்ம ஸூத்ரங்களிலே பல உபநிஷத்துக்கள் விசாரங்கள் இருந்தாலும்

வேத வியாசர் ஸ்ரீ புருஷ ஸூக்த விசாரம் பண்ண தேவை இல்லாமலே இருந்ததே –
அதில் அபிப்ராய பேதத்துக்கு இடமே இல்லையே

திராவிட வேதம் தமிழ் மறை போல் நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு பிரபந்தங்களும்
குருகூர் சடகோபன் சொன்ன என்று இருந்தாலும் அது த்ரஷ்டாவாய்ப் பார்த்துச் சொன்னதே தானே அன்று

அவரால் உண்டாக்கப் பட்டவை அல்லவே

இதற்கு திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் அங்கங்கள்
மற்ற எண்மர் பிரபந்தங்களும் உப அங்கங்கள்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-(இருமை -பெருமை -)–சூரணை-43-

ஸ்ரீ பீஷ்மாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் கண்ணபிரான் தானும் ஒருவனாக அமர்ந்து கேட்டு அருளுகிறான்
இதே போல் திருவாய் மொழித் திருநாள் அன்று திவ்ய ஸ்தானத்தில் அமர்ந்து கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்று சொல்லப்படும் கண்ணன் தானே

வேதத்துக்கு ஓம் என்னுமது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் ஓங்கார ஸ்தானத்திலே திருப்பல்லாண்டும்
வாய்த்த திருமந்திரத்தின் மத்யமாம் பதம் போலே நமஸ் ஸப்த ஸ்தானத்திலே சீர்த்த மதுரகவி செய்த கலையான கண்ணி நுண் சிறுத்தாம்பு
27 நக்ஷத்திரங்களில் நடுவானது தானே சித்திரையும்
நாராயண ஸப்தத்திலே கொண்டாடப்பட்ட அர்த்த விசேஷங்களை திருவாய் மொழி அருளிச் செய்யுமே
மற்ற திவ்ய தேசங்களில் முதலில் திருப்பல்லாண்டு பின்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு பின்பு திருவாய் மொழி பகவத் விஷய கால க்ஷேபமாகும்
ஆழ்வார் திரு நகரியிலும் திரு நாராயண புரத்திலும் மட்டும் கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரபந்தம் முதலிலே எடுப்பார்கள்
திருவாய் மொழியைக் காத்த குணவாளர்கள் திருக்குருகைப் பிரான் பிள்ளான் நஞ்சீயர் நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஆவார்கள்

விஷயம் என்றால் ராஜ்யம் என்ற பொருளில் உபய விபூதியும் அவனுக்கு உடைமையாக இருந்தாலும் அவன் அபிமானித்து ராஜ்யமாகக் கொள்ளுவதும் திருவாய் மொழியே

—————

இனி பகவத் விஷய சாரத்தைப் பார்ப்போம்
திருவாய் மொழியில் சொல்லப்படுவது உயர்ந்த த்வயார்த்தம்
திருமந்த்ரத்துக்கு விவரணம் த்வயம் –
த்வயத்துக்கு விவரணம் சரம ஸ்லோகம்
மூன்றையும் உபதேசிப்பவனே ஆச்சார்யன் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசிப்பவனையே -என்று ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்

இதற்கு ஸ்ரீ மா முனிகள் –

ஸர்வ மந்த்ர உத்க்ருஷ்டமான பெருமை யுடைத்தான திருமந்திரத்தை ஸம்ஸார நிவர்த்தகத்வ ப்ரபத்தியோடே உபதேசிப்பவன் என்கை
த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே திருமந்திரத்தில் மத்யம சரம பத விவரணமாய்
சரம ஸ்லோகம் பூர்வ உத்தர அர்த்தங்களாலே திரு மந்திரத்தில் பூர்வ உத்தர வாக்ய விவரணமாய் இருக்கையாலே
மற்ற ரஹஸ்ய த்வயமும் பிரதம ரஹஸ்யத்தோடே அநந்யமாய் இருக்கையாலே
இத்தைச் சொல்லவே அவற்றினுடைய உபதேசமும் தன்னடைவே சொல்லிற்று ஆயிற்று
ஆகையால் இது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம்
-என்று அருளிச் செய்துள்ளார்

————

ஸ்ரீ தேசிகனும்
வ்யங்யந்தம் மநும் தத் ப்ராயஞ்ச த்வயம் அபி விதன் ஸம்மதஸ் ஸர்வ வேதீ -என்று
ஸர்வ வேதீ -எல்லாம் அறிந்த வித்வான் என்று யாரைச் சொல்லலாம் என்னில்
வ்யங்யந்தம் மநும்-அர்த்த பஞ்சகத்தை நன்றாகத் தெரிவிக்கிற மந்த்ர ராஜமான திருமந்திரம்
தத் ப்ராயஞ்ச த்வயம் -அந்தத் திருமந்த்ரத்துக்கு அனுகுணமான த்வயம்
த்வயம் அபி விதன்ந -அபி ஸப்தத்தாலே சரம ஸ்லோகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமே –

—————

நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் -என்பதற்கு
சாதாரணமாக நம் பெருமாள் என்பர் நம்மாழ்வார் என்பர் நஞ்சீயர் என்பர் நம் பிள்ளை என்பர் என்று கொண்டு
இவை எல்லாம் அவரவர் ஏற்றத்தால் சாற்றும் திருநாமங்கள் என்று கொள்ளுவர்
ஆனால் வேறுவிதமாக -நம்மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்று எல்லாம் நம் பெருமாள் சொல்லிக்கொண்டே இருப்பர்
ஏன் என்றால்-நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்ய
நஞ்சீயரும் நம் பிள்ளையும் அதற்கு வியாக்யானம் செய்து அருள
மற்ற வியாக்கியானங்கள் இவற்றுக்கு விஸ்தார ஸங்க்ரஹ பாவமாகையாலே இவையே பரம சாரபூதம் என்று அபிமானித்து இருப்பாரே

————

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் –
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் ராமானுஜன் -ஸ்ரீ பராசர பட்டர்

உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலே நிரூபகமான பெரியபெருமாளுடைய

ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய்
விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும் -என்றும்
ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே யாயிற்று

எம்பெருமான்களிலே நம் பெருமாள் அதிகராய் இருப்பாரே –

அத்தைப் பற்றியும் சொல்லிற்று -என்பர் பிள்ளை லோகம் சீயர்
கண்ணனுக்கு தேவகிப்பிராட்டியும் யசோதை பிராட்டியும் போலே திருவாய் மொழிக்கு நம்மாழ்வாரும் ராமானுஜரும்

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் –7-2-11-என்னக் கடவது இறே

அது தான்
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா –என்னக் கடவது இறே —
அத்தாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் –
சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

ஆகிற அதில் பத்து அர்த்தமும்
பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற
கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே –

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –

தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து

அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

—————

திருவாய் மொழியிலே பல திவ்யதேசத்து எம்பெருமான்களும் மங்களா ஸாஸனம் செய்யப்பட்டுள்ளார்களே என்னில்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
திரு மோகூருக்கு ஈத்த பத்து -என்றும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்தை ஆழ்வார் -எடுத்துக் கொடுத்ததாக அனுபவம்

ஆக
திருவரங்கத்து எம்பெருமானான பெரிய பெருமாளே பகவத் விஷய சாரம் என்பதே

முன்னோர் மொழிந்த முறையிலே நிரூபித்தமாயிற்று –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–