Archive for April, 2022

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -71-80–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 30, 2022

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே
பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து
வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார்
இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே

சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப்
பரிவாலே நியமித்த பாசுரத்தைத்
தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து
இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து
அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை

தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து
அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து
அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-

பாசுரம் -71-ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –
செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –
எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று
(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி)
சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு
இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் )
கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும்
பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்

பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு

அக்தே கொண்டு
அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு

அன்னை
எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்

நாழி வளோ வென்னும்
இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்

நாழ்-என்று
மேனாணிப்பு
நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்

ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
காளாம் பழ வண்ணத்துக்குக் கடலை ஒப்புச் சொன்ன போதே
எல்லாவற்றையும் தனக்குள்ளே அடங்கின ஈஸ்வரன் நிறத்தைச் சொல்லிற்று
என்னா நின்றாள்

தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்
நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்

தோழிகள் -என்ற
பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே –
உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று
இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்

களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே
பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே
உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி

நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே
பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி
(குகன் குகை பரிகரங்கள் சங்கித்தால் போல் )

தோழிகளோ உரையீர் -என்கையாலே
ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால்
நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே
பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று
ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன்
இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் –
சிலர் விற்பார்களாகப் பண்ண
இவளும் அத்தைக் கண்டு தரிக்க
அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத்
தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்
குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு
வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்
இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு
அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு
உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே
சேதனரானார் பேசாது இரார்கள் இறே
இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது
குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே

பழம் கண்டு
புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும்
படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே
பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாம் பழ வண்ணமானது –

அக்தே கொண்டு அன்னை

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்
லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான்
என்று சொல்லேன் அல்லேன்

பழம் கண்டு
களாம் பழத்தைக் கண்டு

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு

அக்தே கொண்டு அன்னை
அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்

நாழி வளோ வென்னும்
நாழ்-என்று நிறம் உடைமை
அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது
இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்
நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது

இவ்வளவு அன்றிக்கே
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
இந்தப் பெண் இந்நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய
வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ

தோழிகளோ உரையீர்
ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை
என்று சொல்லா நின்றாளே

அவளை நீ தூற்றாதே கொள் —
என்னுங்கோள்-

எம்மை யம்மனை சூழ் கின்றவே
என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான்
சூழ்ந்து கொண்டாடியும்
தூற்றியும்
என்னைக் கொல்லா நின்றாள்

ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு
என்கிற பஹு வசனம்
இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

———-

அவதாரிகை

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு
அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும்
பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து
அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை
இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த
தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-

பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சீலமில்லாச் சிறியன் -4-7

பதவுரை

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

வியாக்யானம்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற
அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக

திணும்பு -என்று செறிவு

பிள்ளையும் என்று
இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும்
ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது

துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –

மாமைக்கின்று வாழ்கின்றவாறு
ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்

இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று
இதுவும் போழ்க

வாலிமையாவது
சீர்மையாய்
கனத்தைச் சொல்லுகிறது

அன்றியே
பிறையின் வெளுப்பு ஆகவுமாம்

இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே
ராத்திரி வந்து இருளாய் நலிய
இத்தாலே வந்த நலிவைப் போக்கித் தந்து நம்மை ரக்ஷிப்பாரோ என்று இருக்கிற அளவிலே
சந்திரன் வந்து தோற்றினான்

இவ்விடத்தில் அமுதனார் ஒரு கதை சொல்லுவார்
ஒரு ஸாது ப்ராஹ்மணன் காட்டிலே தனியே வழி போனானாய் அங்கே ஒரு பசு தொடர்ந்து வந்ததாய்
ஒரு மரத்திலே ஏறி இருந்து
இத்தாலே வந்த நலிவைப் போக்கி நம்மை ரக்ஷிப்பாரோ என்கிற சமயத்திலே
ஒரு புலி வந்து தோற்றி பசுவையும் கொன்று அதனுடைய ரத்தத்தையும் பானம் பண்ணி
இவன் முன்னே வந்து தண்டையை முறிக்கு இட்டு இருந்ததாய்
அந்தபசுவே யாகில் ஒருபடி பிராண ரக்ஷணம் பண்ணிப் போகலாயிற்று
இனி இத்தை நம் சத்தையை நோக்குகை என்றதொரு பொருள் இல்லையாகாதே என்றான்
அது போலே இறே இங்கும் –

வியாக்யானம்
சூழ்கின்ற
பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஓக்க தானே வந்து சூழ்ந்தது
ஓர் இடத்திலே இதுவாய்
மற்ற ஒரு இடத்திலே ஒதுங்க நிழல் உன்படாம்படி இருக்கை அன்றிக்கே

கங்குல் சுருங்காவிருளின்
ராத்ரியினுடைய சுருங்காது இருள்
இன்னதனைப் போது இருள் செறிந்து வரக்கடவது
இன்னதனைப் போது சுருங்கி வரக்கடவது
என்ற ஒரு மரியாதை உண்டு இறே
அது இன்றிக்கே இரா நின்றது

கருந்திணிம்பை
கறுத்த நிறத்தை யுடைய
திணிம்பை என்று ஒரு சொல்லாய்
ஆத்தாள் திண்மையைச் சொல்லுகிறது
இருளினுடைய புற இதழைக் கழித்து
அகவாயில் திண்மையான வயிரத்தைச் சேரப் பிடித்தால் போலே இருக்கிறது

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
அவ்விருளைப் போழ்ந்து கொண்டு -பேதித்துக் கொண்டு -தோற்றுகிற சந்திரனும்
தனக்குப் புறம்பு பாத்யம் இல்லாத படியாலே
நம்மையே பாதித்திடுக

போழ்கின்ற
ஸஹஜ ஸாத்ரவத்தாலே அவன் ஸந்நிதியாலே இது போழ்கின்றது ஓன்று அன்றியிலே
கை தொட்டு அழிக்கிறாப் போலே யாயிற்று
இருளினுடைய திண்மையும்
சந்திரனுடைய பருவம் நிரம்பாமையும்

திங்களம் பிள்ளையும்
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
முந்துற அநுகூலரைப் போலே தோற்றிப்

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய

மாமைக்கின்று வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்றபிரகாரம்
என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து
அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று

வாலியதே
இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய்
நிராதாரமாகத் தொங்குமதாய்
தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது
இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

————

அவதாரிகை

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க
அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே
பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
நொந்து உரைத்த பாசுரத்தை

(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப
ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் –
இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று
மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு
இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-

பாசுரம் -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் –
துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –
வேய் மரு தோள் இணை -10 -3 –

பதவுரை

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய்
வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான
விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்
இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய்
ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய்
யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த்
தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்

பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே

தமியாட்டி தளர்ந்ததுவே
தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது
என்று நொந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக
ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க
அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று
ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நிலாவும் போய் முறுக நின்று பாதகமாய்
அத்தாலே இவளும் நோவுபட்டு மோஹித்துக் கிடைக்க இத்தைக் கண்ட திருத்தாயார்
தர்ம ஹாநி கிடீர் -என்று கூப்பிடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ
இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை
எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும்
இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே
தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று
தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி
உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை
என்று அந்வயம்
முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது
லோகங்கள் எல்லாம் நிறையும்படி
வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று
முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்
தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய்
யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும்
உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும்
ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம்
அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்

கொலோ
ஆமதோ

தமியாட்டி தளர்ந்ததுவே
தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே
ஜகாத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

———-

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவரை ஆஸ்வஸிப்பித்தாக ஈஸ்வரன் தன் கிருபையாலே
சேஷித்வ
போக்யத்வங்களினுடைய
மிகுதியைப் பிரகாசிப்பிக்க

ஆஸ்வஸ்தரான ப்ரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாயோடே
சீலித்த (ஸஹ வாஸம் பண்ணிய )தென்றல் உலாவுகிற படியைக் கண்டு
ஆஸ்வஸ்த்தையாய்
நாயகி தோழிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

பாயில் -ஷீராப்தி யாகிற படுக்கையிலே —
மறிதர -கீழ் மேலாக-
பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-
துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும்
தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த
தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால்
அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –
தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்
செய்ய தாமரை -3 -6 –

பதவுரை

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

வியாக்யானம்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய்
பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
ஸ்ரீ மத்தாய்
அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்

அழகிய
நெடும் கண் என்றுமாம்

அறிவுற்றும்
அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே
அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்

வையம் விழுங்கியும்
ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே
திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே
வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே
பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய

முடி சூடு துழாய்
இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே
சாத்தின திருத்துழாயை

அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி
முழுசி
அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே
ஐயோ வந்து உலவா நின்றது என்று
தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று

அன்னோ -என்ற பாடமாய்
உலவா நின்றதீ என்றுமாம்

இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே

இத்தால்
தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே
தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி
தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய்
ஆபத் சகனாய்
விரோதி நிவர்த்தன சீலனான
கிருஷ்ணனுடைய நிரவதிக
சேஷித்வ
போக்யத்வங்களானவை
அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று
ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று

(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஒரு தென்றல் வந்து உலாவிற்று ஆயிற்று
அத்தென்றல் வந்தது -அவனை வரக்கண்டிலோம் என்று தலைமகள் தளர்ந்தாள்
அத்தைக்கண்ட தோழியானவள்
வெறும் தென்றல் என்று இருந்தாயோ
மாளிகைச் சாந்து நாறி இரா நின்றாள் ராஜபுத்ரன் வர அணித்து என்று இருக்க வேண்டாவோ
இது அவன் நல் வரவுக்கு ஸூசகம் காண்
நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வஸிப்பிக்கிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தானா படுக்கையிலே
இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய்
பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்

அறிவுற்றும்
பிரளயம் வந்து நலியப் புக்கவாறே
இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே
இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்

வையம் விழுங்கியும்
பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது
கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி
கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று
அவன் இருந்தாலும்
கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள்
அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது
இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ

அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க
கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு
ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை

இத்தால்
அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பொடியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின பொடியையும்
ஆக இக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும்
ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க
இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின
திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய்
அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும்
புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்

அறிவுற்றும்
மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்

வையம் விழுங்கியும்
மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து
மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண்
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி
தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்

சிறு பசுந்தென்றல்
சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே –
இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று
ஆஸ்வஸிக்கிறார் –

———–

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார்
இவர் திவ்யராய் இருக்கிறாரோ
இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று
விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை
தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –

பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –
துறையடைவு-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
சன்மம் பல பல -3 -10 –

பதவுரை

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

வியாக்யானம்
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்
கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை
என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே
உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற
கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்
குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான
திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய
ஸ்வாமி யானவனுடைய

வேலை -என்று
கரை யாகவுமாம்
(அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ
சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள்
நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ

வையமோ
அவனுடைய லீலா விபூதியோ

வையம் என்று
விபூதிக்கு உப லக்ஷணம்

நும் நிலை இடமே
உங்களுடைய வாஸஸ்தானமானது

வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது
இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –

இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற
வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி )
சீதள ஸ்வபாவமாய்
பிரகாசத்தையும்
கூர்மையையும் உடைத்தாய் இருக்கும்
ஞானம் என்றபடி

எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே
இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில்
ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது

(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் –
ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே
நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது இதே
திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம்
என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே
சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி
தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான
மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று
லீலா விபூதி யோகம் சொன்னபடி

(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும்
இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று
அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒருவகை யாதல்
இயற்கையிலே ஐயமாதல்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை
உலாகின்ற கெண்டை போலே யாயிற்றுக் கண்களின் மௌக்த்யம் இருக்கிற படி

யொளியம்பு
இவன் பார்த்த போதே பாராதே —

எம்மாவியை யூடுருவக்

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால்
முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய்
ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை
ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல
ஒள்ளிய அம்பாயும்
ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே

கிஞ்ச

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
வேலையில் -கரையிலே
குனிந்து இருக்கும் சங்குகளை
புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால்
அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம்
உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ
இவ்வையம் தானேயோ
சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

——————————–

அவதாரிகை

இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்
இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே
தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை
தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி
சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த்
தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 –வடம் போதில் -பாட பேதம்

பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –
துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
ஓராயிரமாய் -9 -3-

பதவுரை

இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி
இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட
செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே
சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே

வடம் -என்று தொடை

நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே –
வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்
நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே
என்று அந்வயம்

பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது
மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன்
நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று
நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஸர்வ ஸூலபனாய்
ஸூ சீலனான
ஸர்வேஸ்வரனுடைய
சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து
நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து
அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற
இது ஆச்சர்யமோ
என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து
இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண்
இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து
பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே
அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்

இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய
எழிலார் தண் துழாய் யுண்டு
இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமாவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே
அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்

வடம் போதினையும் மட நெஞ்சமே
வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில்
செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய்
அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே

நங்கள் இத்யாதி
நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ

வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே
தானும் வெண் திங்களாய்
இதுவும் வெள் வளையாகையினாலே
நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்
விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும்
ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான

வெண் திங்களே –
வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே

ஸ்வாபதேசம்
இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே
அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம்
பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க
அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க
அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க
அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு
ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா

அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று
விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு
அருளிச் செய்கிறாள் இதில்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட
அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்கு
அழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு
அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே
அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –
இந்த வெளுத்த சந்த்ரனான இவன்
விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி
அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ

ஏவம் பூதன்
நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே
விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ

ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்
அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால்
நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —

————————-

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு
போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-

பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப –
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-

பதவுரை

திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம் செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது
என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்
இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே
சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே
ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய

துழாய் துணையா
வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே
நலிகைக்குத் துணையாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன்
தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி
அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது
அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்
சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று
தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஸந்த்யையிலே நோவு படுகிறாள் ஒரு தலை மகள்
வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
மஹதா தபஸா -ஆரண்ய -66-13- என்கிறபடியே
வருந்திப் பெற்ற பிள்ளை இறே

புலம்பத்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே
விம்மல் பொருமலாய் இருக்கும் கடலோசை ஆதல்
அக்காலத்திலே பக்ஷிகளுடைய ஆரவாரமாதல் இறே

தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
தன்னுடைய ஆஜ்ஞா ப்ரதானனான ராஜாவானவன் பட்ட யுத்த பூமியைப் பற்றி நின்று
ஈடுபடுகிற புல்லிய மாலை
ருதிர வெள்ளத்தாலே சிவந்த பூமியைப் போலே இருக்கும் இறே அப்போதை ஆகாசம்
ராவணன் பட்ட களத்திலே மந்தோதரி கூப்பிட்டால் போலவும்
வாலி பட்ட களத்திலே தாரை அங்கதப் பெருமாளைக் கொண்டு நின்று கூப்பிட்டால் போலவும் ஆயிற்று
ஆதித்யனை இழந்த அந்த ஸந்த்யையும் அப்பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி

பகல் கண்டேன் -இரண்டாம் திரு -31-என்கிற
வஸ்துவை இழந்து இறே இவள் நோவு படுகிறது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச தேசமான தெற்குத் திக்கில்
அறிவுடையார் நடையாடாத லங்கையை வெவ்விய களமாம் படி
ஸ்மசாந கல்பமாம்படி பண்ணின

நம் விண்ணோர் பிரானார்
ராவண வத அநந்தரம்
பவான் நாராயணோ தேவ -யுத்த -120-13-என்று
ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற

துழாய் துணையா
அவர் தோளில் மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்ட
இதுவே பரிகாரமாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே இது
நம் இழவுக்குக் கூப்பிடுகிறதாய் இருக்கிறது

நங்களை மாமை கொள்வான்
நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ
தன் இழவும் கூப்பிடும் கிடக்கச் செய்தே
பண்டே குறைபட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்குப் பாரிகிற படியாய் இருந்ததீ –

ஸ்வா பதேசம்
கீழ்
திரு அளந்து அருளினை பொது இட்ட மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக்
கிடையாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று
இதில்
ராவண வத அநந்தரம் இட்ட வெற்றி மாயையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக் கிடையாமை
நோவு படுகிறபடியைச் சொல்லுகிறது

—————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை
இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய
அம்மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே
தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த
ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி
அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு

புன்மாலை
புன்னிய -ஏழைத்தனம் பெற்று
மாலை -ஸந்த்யையானது
வந்து தோன்றி நலிகின்றது
என்று அந்வயம்

அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்
தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி
தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய்
இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய
துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே
தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு
எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது

வந்து தோன்றி நலிகின்றதே
புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி
பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர்
திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று
தன் தைன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –

———————

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –
விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி
அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே
நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-

பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –
இன்பம் பயக்க-7-10-

பதவுரை

(எமது நாயகனார்)
நலியும் நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண் தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக் காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரை போல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தை யுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப் பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதை நெஞ்சு
தந்து போயின–(தான் எம்மை விட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்து விட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

வியாக்யானம்

நலியும் நரகனை வீட்டிற்றும்
மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக
விழப் பண்ணினதும்

வாணனை திண் தோள் துணித்த வலியும்
உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய
யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட
ஆயுத பலமும்

பெருமையும்
அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட
சர்வேஸ்வரத்வமும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள்
அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல

மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்
அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்

புனை பூம் துழாய் மலர்க்கே
வெற்றிக்கும்
அழகுக்கும்
சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக

மெலியும் மட நெஞ்சினார்
ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்

தந்து போயின வேதனையே –
அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது
நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே
என்று
அழிந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி
அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே
அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும்
என்றதாயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம் –

நலியும் நரகனை
ஸர்வேஸ்வரன் பரிக்ரஹிகைக்கு யோக்யர்களாய் இருக்கிறவர்களைக் கொண்டு வந்து சிறை செய்தான் இறே

நலியும்
அந் நலிவு தம்மதாய் இருந்தபடி

வீட்டிற்றும்
வீழ்த்ததுவும் -முடித்ததுவும்

வாணனை திண் தோள் துணித்த வலியும் பெருமையும்
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் சேர ஒட்டாதே சிறை செய்த

வாணனை திண் தோள்
தேவதாந்த்ர சமாஸ்ரயணத்தைப் பண்ணி
பகவத் சமாஸ்ரயணத்தைப் பண்ணினாரைப் போலே திண்ணிய தோளை யுடையனாக நினைத்து இருந்தான்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன்
நபி பேதிரு தச்சந -தைத்ரியம் -ஆனந்த -2-7-
ஏஷ ஹ்யேவ ஆனந்த யாதி இறே

அத்தால் வந்த தைர்யத்தாலே தான் புத்தி பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே

துணித்த வலியும் பெருமையும்
அவன் திண்ணிய தோளைத் துணித்த வலியும் பெருமையும் என்னுதல்
வலியின் பெருமை என்னுதல்

மிடுக்கும் மேன்மையும்
அன்றிக்கே
வழியினுடைய பெருமையும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
நாம் இப்போது இருந்து சொல்லும் அளவோ

நீர்த்தல்ல

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால்
தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு
கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு
அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள்
என்கிறாளாய் அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர்
இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்
இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79

பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை –
துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –
மொய்ம்மாம் பூம் பொழில் –3 –5-

பதவுரை

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீத முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வியாக்யானம்

வேதனை
வேதங்களால் சொல்லப் படுமவனை

வெண் புரி நூலனை
வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான
ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை

விண்ணோர் பரவ நின்ற நாதனை
வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள்
தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி
அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை

ஞாலம் விழுங்கும் அநாதனை
அத் தேவதைகளோடு
அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு
வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை

ஞாலந்தத்தும் பாதனைப்
அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை

பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால்
ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே
பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை

சீதனையே
அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்

விண்ணுளாரிலும் சீரியரே –
நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

இவ்விடத்தில் சீதன் என்றது
தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று
அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

————-

அவதாரிகை

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர்
அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து
மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை
பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –
துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
முடிச் சோதியாய் -3–1-

பதவுரை

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது

வியாக்யானம்
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு
அழகிய ராஜ்யத்தைப் பண்ணி
தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில்
ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி
ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்

பாரளந்த பேரரசே
ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே

எம் விசும்பரசே
அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே
எங்களையும் அநந்யார்ஹ மாக ஆண்டு கொண்டவனே

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க
அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி
வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே

அருளாய்
இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்

இருளாய் வந்து உறுகின்றதே –
தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை
ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று

இத்தால்
ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற
தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே
ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை
இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு
இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஆதித்யனும் போய் அஸ்தமித்து
இருளும் வந்து
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி சார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்

சீரரசாண்டு
குணமாக ஆண்டு
தர்ம புத்ரன் ராஜ்ஜியம் பண்ணா விடில் நாங்கள் ராஜ்யத்திலே இரோம் என்று
அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடே புறப்பட்டுப் போனார்கள் இறே
அப்படியே சீரியதாக ராஜ்யத்தை நடத்தில்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
அது தான் அல்ப காலத்தோடே

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால்
இருளுக்கு அஞ்சின நாயகியாய்
அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

வியாக்யானம்

சீரரசாண்டு
இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி

கழிந்த பார் அரசு ஒத்து
கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்

மறைந்தது ஞாயிறு
மறைந்தான் ஆதித்யன்

பாரளந்த பேரரசே
இந்தப்பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே

எம் விசும்பரசே
எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி
எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே

அருளாய்
அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்

இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன
இருளாய் வந்து உறுகின்றதே –
அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது

ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து
தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம்
ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாறன் பாப்பாவினம்-ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் —

April 30, 2022

ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ்ப்படுத்த மாறன்’ எனப் போற்றுவது வழக்கம்.
இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார்.

மாறன் அலங்காரம் [1], (அணி)
மாறன் அகப்பொருள் [2],(பொருள்)
மாறன் பாப்பாவினம்,(யாப்பு)-என்னும் இலக்கண நூல்களும்,
திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. [3]

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும்
(நம்பெருமாள் என்பது திருவரங்கப் பெருமான்) இவரால் பாடப்பட்டுள்ளது. [4]

குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது.

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது.
இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது.
இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது.
மாறனலங்காரம் (அணி),
மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1].
நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.
இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு,
வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து
அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

வெண்பா,
ஆசிரியப்பா,
கலிப்பா,
வஞ்சிப்பா
என்னும் பாவகைகள் நான்கு,

வெண்பாவினம்,
ஆசிரியப்பாவினம்,
கலிப்பாவினம்,
வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து
அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகும்[2].

6.2 இலக்கணம்
வைணவப் புலவர்கள் இலக்கணம் எழுதித் தமிழ் இலக்கிய உலகத்தோடு இலக்கண உலகத்தையும் வளப்படுத்தியுள்ளனர்.
ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

6.2.1 மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.
இந்நூலின் உரை ஆசிரியர் பேரை காரி ரத்தினக் கவிராயர்.

கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.

6.2.2 மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில் சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.

இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.

6.2.3 மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை; சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.

இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும்
என்பதற்குச் சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.

6.2.4 திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய
தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.

அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

• மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன்
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன்
வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மறன் பாப்பாவினம்-பா.குப்புசமி-உதவிப்பேராசிரியர்
தமிழ்ப்பிரிவு-தொலைதூரக் கல்வி இயக்ககம்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கணத்தை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவற்றுள் யாப்பிலக்கணமும் ஒன்று.
பிற இலக்கணம் போன்று யாப்பிலக்கண நூல் தமிழில் அவ்வளவாகத் தோன்றவில்லை
தொல்காப்பியர் செய்யுளியலில் தொடங்கிவைத்த யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி என்று
தனி இலக்கண நூல்கலாக உருவானது. பின்னர் வந்த பாட்டியல் நூல்கள் சில யாப்பிலக்கணத்தைக் கூறியுள்ளன.
அதன் பிறகு எந்த இலக்கணமும் யாப்புக்குத் தோன்றவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டில் மாறன் பாப்பாவினம் என்ற நூல் தோன்றியது.
இந்நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இதை இயற்றியவர் திருக்குருகை பெருமாள் கவிராயராவார்.
திருக்குருகை பெருமாள் என்பது நம்மாழ்வாருடைய வேறு பெயர்களுள் ஒன்று அவர் மீதுள்ள பற்றினால்
சடையன் என்ற தனது இயற்பெயரை திருக்குருகை பெருமாள் என்று மாற்றிக்கொண்டார்.

அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்புக்கு ‘மாறன் பாப்பாவினம்’ அமைந்துள்ளது.
இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன.
யாப்பிலக்கணம் கூறும் வரிசப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன.
இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.

140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர்.
பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில்
இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் ஒரு முழுமையான வைணவ இலக்கியம்
எனவே பின் வந்த இலக்கணிகள் இந்நூல் பாடல்களையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.
இந்நூலைப் பயின்ற சைவ சமயத்தினர், சைவத்திலும் இப்படியொரு சான்றிலக்கியம் வேண்டுமென எண்ணி
குமர குருபரரின் துணை கொண்டு ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்ற நூலை உருவாக்கியுள்ளார்.
இதேபோல் தற்காலத்தில் இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்
விதமாக ‘அரங்கன் செய்யுள் அமுதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் கவிஞர் சக்தி சரணன் அவர்கள்.

நூல் பொருள்
மறன் என்ற சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும் இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன.
நம்மாழ்வாரைப்பற்றிய படல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது.
முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம் என்பதால்
நான்கு வகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாப்பாவினம் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இந்த நூலில் நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது.

இலக்கணச் சான்று
இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள்
அகத்திணைக்கும்,
புறத்திணைக்கும்,
அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன.
இக்கூற்றினை நிறுவும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
இனி இந்த மூன்று இலக்கணங்களுக்கும் ஒவ்வொரு சான்று பாடல்களையும்
அவை அவ்விலக்கணப்படி அமைந்துள்ள பாங்கினையும் ஆராயலாம்.

அகப் பொருள்
இந்த நூலில் வரும் 42 ஆம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது.
துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்பதாகும். பாடல் வருமாறு,

காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
கொளத்தகு மரபின் குன்ற வான!
வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இப்பாடல் அகத்திணையில் அமைந்துள்ளது. தலைவனிடம் தலைவியை மணக்கும்படி தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
தலைவியோடு பொருந்தாத மனம் கொண்டால் மட்டுமே திருமணத்தைத் தள்ளிப் போடமுடியும்
எனவே அத்தகு மனத்தினை ஒரு உவமை மூலம் விளக்குகிறார் கவிஞர்.
மாறனது அருளுக்கு ஆட்படாத உள்ளத்தினை எடுத்துக் காட்டுகிறார்.
உள்ளுறை உவமமும் இப்பாடலில் பயின்று வந்துள்ளது.
தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால்
அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

புறப் பொருள்
இந்நூலில் வரும் 18 ஆம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும்.
துறை மாறாயம் பெற்ற நெடுமொழி ஆகும். பாடலடிகள் வருமாறு,

நாராய ணாய நம என்றே நாவீறன்
ஓரா யிரம் என்று உரைத்த கவிப் பாவமுதம்
ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான் இங்கு
என்பால் ஒருநாள் யமன்.

இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இன்னிசை வெண்பா நான்கடியில் அமைந்து மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று வரவேண்டும் என்பது இலக்கணம்.
இந்த இலக்கணம் பொருந்தி இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் புறத்திணைக்குரிய வஞ்சித்திணைக்கும் உதாரணப்பாடலாக அமைந்துள்ளது.
இதனை ‘மாறாயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையின் மூலமாக தொல்காப்பியம் விளக்குகிறது.
இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் முழுமையும் திருமாலின் புகழைப் பாடக்கூடிய நெடுமொழிப் பாடலாக அமைந்து
தொல்காப்பியர் சுட்டிய புறத்துறையோடு பொருந்துமாறு அமைந்துள்ளது.

நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன்
அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான் என்பது பொருள்.

திருமாலைப் பாடிய நம்மாழ்வாரது பாடல்களுக்கே அவ்வளவு வலிமை என்றால்
திருமாலது வலிமையை உய்த்துணர முடியாது என்பதை விளக்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது.

இதே போன்று காஞ்சித்திணையில் அமைந்த மற்றொரு புறத்திணைப்பாடல் வருமாறு,

பெருநூல் பிறபல கற்பதின் மாறன்
ஒருநூல் கற்பது ஊதியம் உயிர்க்கே

இப்பாடல் குறள் வெண்பாவுக்கு இனமான குறள்வெண்செந்துறைக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
குறள் வெண்பாவுக்குரிய இலக்கணம் பொருந்தி இரண்டு அடியும் நான்கு சீர்களாக வரவேண்டும் என்பது
குறள் வெண்செந்துறைக்குரிய இலக்கணமாகும். அவ்விலக்கணம் இப்பாடலில் நன்கு பொருந்தியுள்ளது.
காஞ்சித்திணையில் அமைந்த இப்பாடல் முதுமொழிக்காஞ்சி என்னும் துறையில் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நூல்கள் பலவற்றைக் கற்பதைக் காட்டிலும்
நம்மாழ்வார் அருளிய ஒருநூலைக் கற்பதே உயிருக்கு மேன்மைதருவது என்ற பொருள்பட இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

அணி
இந்நூலில் வரும் 25 ஆம் பாடல் அணியிலக்கணம் பொருந்திய பாடலாகும்.
சொல்பின்வரு நிலையணியில் அமைந்த அப்பாடல் வருமாறு,

மாதங்கம் மூலமெனும் வண்குருடர் மால்வரைஓர்
மாதங்கம் அஞ்ச வருபோழ்துஇம் – மாதுஅங்கம்
மாதங்குஅவ் வாகுவல யத்தணைத்து வல்விரைந்துஅம்
மாதங்கம் வெண்றான்ஓர் மன்.

இப்பாடல் இருகுறள் நேரிசைவெண்பாவுக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு குறள் வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்று வருவதைப்போல இந்த யாப்பு அமைந்திருக்கும்;
இடையில் தனிச்சொல் பெற்றுவரும் என்பது யாப்பிலக்கணம் கூறும் விளக்கம்.
இந்த விளக்கத்துக்கேற்ப இப்பாடல் அமையப்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி அணியிலக்கணத்துக்குரிய எடுத்துக்காட்டாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் ‘மாதங்கம்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளில் வந்தமையால் இது சொல்பின்வரு நிலையணியாகும்.
இப்பாடலின் முதல் அடியில் திருமால் புகழ் பேசப்படுகிறது.
அதாவது ‘கஜேந்திரன் ஆதிமூலமே என அழைத்த குருகூரில் வாழும் திருமாலினது மலையிலே’ என்ற பொருள்பட பாடல் அமைந்துள்ளது.
அதன்பின் வரக்கூடிய அடிகளில் அகத்துறையில் வரும் பொருள் பிரிவு எனும் பகுதிக்குள் அடங்கக்கூடிய
தலைவன் தலைவியை மணக்க பொருள் ஈட்டச் செல்லும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்பிலக்கணத்துக்கு மாறன் பாப்பவினம் என்ற இந்த நூல்
யாப்பிலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இந்த நூலின் சிறப்பு இதில் இயற்றப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் வைணவம் சார்ந்த கருத்துக்களும்;
திருமால், நம்மாழ்வாரது புகழும் பாடப்பட்டுள்ளமையாகும்.
பின்வந்த யாப்பு சான்றிலக்கிய நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலில் யாப்புக்குச் சான்றுகள் அமைந்துள்ளது மட்டுமின்றி அகப்பொருள், புறப்பொருள், அணியிலக்கணம்
போன்றவற்றுக்கும் சான்றுகள் அடங்கியுள்ளன என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது.

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–நான்காவது எச்சவியலுரை–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

300.மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து,
ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப்
பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த
வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி – இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று.
அவையெல்லாம் மேற்காட்டுதும்.

301.அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒரு
பொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.

* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை – கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா–நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி. (813)
இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க.
நடு – இடை. தேம் – தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு
மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின்,
சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும்.
அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை – மானை” என்பதனா லறிக.
பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம்.
அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன.
சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது.
அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.

302.அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும்
வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்–பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து. (814)

இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது.
கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை?
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக.
பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு.

303.பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற்
புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி.
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் – ற்று.

(இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது
மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம்.

முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங்
கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்–தெற்றெனவே
தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே
னித்தமநித்தந்தெளியீர்நீர். (815)
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி,
‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று.
தெற்றென – தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன – சித் தசித் தீச்சுரம்.

304.அச்சமுங்காமமுமகமிகினுரித்தே.
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் – உள்ளம். காமம் – விருப்பம்.

வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற்
கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா–நேசமது (439)

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம். (816)
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

305.உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று
பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு.
இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள–னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி. (817)
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டி
நோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.

306.அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்
மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்–வெள்ளிமலை
பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன். (816)
இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம்.
அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ;
ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின்,
நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன
அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்
பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற்
பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.

307.உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.
(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்
காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்–கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம் (819)
இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார்
மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க.
பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு
நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது
சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம்.
அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு.
பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத்
தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.

308.வசைபொருந்தாவழிவரினதுமரபே.
(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா–நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல். (820)
இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை?
யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தா
லெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும்,
அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயே
சென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி
விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நின்செலவை நீயேகூறென்றல்.

309.முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.
(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் – ற்று.

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்
பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு.
பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் – முறை. நிரை – கூட்டம். பிறழ்தல் – தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா–யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால். (821)
என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர்
இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.
(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் – ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்று
கொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்–பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள். (822)
என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன : மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி,
மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு
என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு – சாதியேகவசனம்.

311.நசைதீர்யதிவழுநாடுகிலோசை
யிசைதரநிகழாதிழுக்குவதாகும்.
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சி
யிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு.

பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா
நீக்கும்பொழுதுநிலம்பாரா–நோக்கு
வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந்
தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. (823)
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று.

312.அதுவே,
வழுவின்றாமெனல்வகையுளிக்காகும்.
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்
சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு.

வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை
வேளினடல்விற்போன்மிளிருநுத–லாளிநிகர்
காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம்
யாவருணர்வுட்காதிவட்கு. (824)
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல்.

313.திணைமுதலாகச்செப்பியவழுவினொன்
றணைதருமாயினுமதுசொல்வழுவே.
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச்
செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு.

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்–மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி. (825)
இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்
சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

314.மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.
(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் – ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்–வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல். (826)
இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும்,
சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.

315.ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய
கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்–தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை. (827)

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென
“லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான்,
ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

316.ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்–கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல். (828)
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்”
என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை….

317.பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்
பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து. (829)

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

318.தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.
(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்
பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு. (830)
இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது
மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த்
தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின்
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க.
அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்,
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான்
வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச்
சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

319.உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.

(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் – ற்று.

(இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்று
கூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு.

ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல்.
எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப்
பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல்
பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ;
பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற்
சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க.

320.ஒழுக்கநடையேயுலகமதாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு.

எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொரு
சொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும்
அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை.
அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல்.

பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி
நேமிவரைதனினேர்நின்றமரர்–கோமகிழ்வுற்
றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென
மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. (831)
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து,
சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத்
தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று
மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று.

321. இடமதுமலைநாடியாறெனமூன்றே.
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று.

(இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு.

மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள்.
யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள்
பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை,

காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண்
ணாரமுதின்மெல்லடிகட்கையனே–பார்பரலாய்ச்
செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச்
சந்தனச்சோலைத்தடமாந்தான். (832)
எனவும்,

பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ
ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின்
னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர்
திறைதருகலினத்திரள்வாம்பரிகளு
மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை
யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட
னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து
புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங்
கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந்
துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு
மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற்
பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத்
திருமகளாமெனச்சிறந்தவள்
வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. (833)

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை
யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று.
தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று.
மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரிய
முதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.

322.சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :
ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே
நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே. (834)
என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும்,
பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

323.பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.
(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே. (835)

இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது
மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து
ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங்
கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங்
கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது
மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது
பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை.
இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும்,
ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும்
இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை?
“ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி – முந்தை, யிணைகொண்ட யாழெழுவு
மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக.
அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின்
இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம்.
அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம்.
தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள்.

324.அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற
முளமுறமதித்துரைப்பதுவேநியாயம்.
(எ-ன்) நியாயமாமாறுணர் – ற்று.

(இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி
முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு.

அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல்.
அவற்றை யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள–தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன். (836)
என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்ட
கோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப்
புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று.
அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

325.அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.
(எ-ன்) ஆகமமாமாறுணர் – ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது : இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப–லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம். (837)
எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

326.நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.
(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.
நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத்
தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :-

மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென
மீளவருவித்துலகின்வாய்
மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு
மாறிவருவிப்பனிமையோ
ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ
ணாகவுமமைப்பனழகார்
சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு
சோதியைவிதிப்பனெளிதே. (838)
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது.

காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங்
கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங்
கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற்
கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து
மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு
மாவுநாகமும்பணைமருதுந்
தாழையுமகிழும்வாழையுங்கரும்புந்
தனித்தனிதழைத்ததெம்மருங்கும். (839)
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும்
புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று.

காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய
வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை
மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப்
புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி
லாடவர்முகத்தையுமருணோதயமென
வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும்
பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ
பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு
முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன்
புலந்தெவன்பொதுவுணின்மார்வங்
கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. (840)
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்
குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – பள்ளியிடத்தூடல்.

வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள்
வெறிவரிவண்டினமிரைத்துப்
பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப்
பருவமாமழைப்பெயலெனவே
குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக்
குறிப்பொடும்வெளிப்படவிருந்து
மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப
வருந்தனீமதர்மழைக்கண்ணாய். (841)
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று.

செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின்
குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ்
தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே
நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். (842)
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய
வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற்
பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா
துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே (843)
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்
றிடங்கொள்புல்லறிவினரேனுஞ்
சிறந்தவந்நகரத்தினியொருபிறவி
சிறக்கவிங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே
பிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக்
கழலகத்தமைப்பரக்கணத்தே. (844)
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

327.ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன்முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே.
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறு
வருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.

* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது.

“இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ்
சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.”

இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங்
கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும்
நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும்,
வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை
இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும்,
தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும்,
அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும்,
வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி
முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும்,
வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்
வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு.

அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது
தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்ற
முறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின்
கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க.
நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும்
எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற்
சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான்
யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க.

அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே
யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன.
ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ;
ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது.
அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ;
“முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின்.

எச்சவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
மாறனலங்காரம் முற்றும்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

April 30, 2022

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு–ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு

அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம்.
இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர்.
இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது.
வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி,
ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம்,
சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்)
முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள்.

தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான்.
அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத்
தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர்.

நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர்.
இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத்
தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர்.
இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில,
தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக்குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர்.
இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர்.

அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அச்சுலோகம் வருமாறு :-
இதன் மொழிபெயர்ப்பு,

“உவமையென்னுந்தவலருங்கூத்தி
பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து
காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி
யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம்.

இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது.
“எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி”
என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால்,
தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது.
இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு,
தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது.
அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம்,
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது.
இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம்.
இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம்.
இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல்,
தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம்.

தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள்
அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன.
இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம்.
யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று
கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும்.

நேமிநாதவிருத்தியில்,
“புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே”
“முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது.
இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில்,
தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது.
ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில்
“இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ்
சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென
இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார்.
இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது
வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும்.

பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே
வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய
பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம்.

இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன.
இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது
அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது.

ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது.
அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்)
எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன.
இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக
எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.

இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம்.
மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ;
இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது.
இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர்.
மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன்,
பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள்
இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது.

இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய்
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத்
ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும்
திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக
லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர்.
இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
ஆசார்யராக மதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும்
ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர்.

வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின்,
இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை.
இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டு பூண்டு
மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே,
தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி
லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி
இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை
ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக்
‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா)
‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர்.
ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது.

வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன்
குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது.
கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று,
அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது.

இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி
இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார்.
அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர்
இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும்
இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர்.

தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான்.
தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம்.
ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது.
தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு.
மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும்,
“முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்,
சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது.
ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும்.

இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும்,
தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார்.
இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு.
எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க.

தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35.
இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64.
இந்நூலார், தண்டியாசிரியர்கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார்.
சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும்
மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும்
செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார்.
வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின்,
இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார்.
தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம்,
தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும்,
ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும்,
தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி
நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார்.
இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும்.

தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல,
இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார்.
‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில்
‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும்
இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற்
‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன.

தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல,
இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது.
“இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும்
பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது.
இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி,
சிலப்பதிகாரம், வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை,
இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும்
அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும்
வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய்
நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன.
பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன.
சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன.
நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம்
மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.

இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.

ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்–தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
வேண்டுமோவீங்கிதற்குமேல்”

சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்
பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில்
இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம்.
கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய்
முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன்,
தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும்,
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில்
இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர்
இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர்.
முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும்,
முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும்
இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது.
எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத்
தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நூலாசிரியர்

பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள்.
“திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தான கவிரா யராதலால் அவருக்குத்
திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று.
இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும்.

தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம்.

ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும்
ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது.
ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு
ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது.
அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு
இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர்.
ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர்.
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர்
திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர்.
இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும்.
இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா
வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.

ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :-

“பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமாளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்திருக்குருகைப்பெருமாள்கவிராயன்
அருட்குணத்துடன்வளர்சடையன்பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”–(மாறனலங்காரப்பாயிரம்)

“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள்
பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன்
திருக்குருகைப்பெருமாள்கவிராசன்
அருட்குணத்தவர்புகழ்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”(மாறனகப்பொருட்பாயிரம்)

“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை
யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந்
தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித்
திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே”(திருக்குருகாமான்மியப்பதிகம்)
முதலியன.

மதம் :- வைணவம்.
இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும்,
ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர்.

ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர்
‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும்
மாறனலங்காரப் பாயிரத்தாலும்,
‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது.
அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :-

“முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து”(காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து)

“முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்”(திணை : வாகை, துறை : தாபதவாகை)

இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற
திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ;
திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக)
இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு
நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள்.
இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது,
பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும்.

“இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை
யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான்
சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா
தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே”
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது.
இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது.

இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :-
1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும்.
2. திருக்குருகாமான்மியம்.
3. நம்பெருமாள் மும்மணிக்கோவை.
4. மாறன் கிளவிமணிமாலை முதலியன.
இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.*

காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும்,
இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால்
அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-

அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”
இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது
எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது.
குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம்.
ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும்.
ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது.
உரையாசிரியர் காலமும் இதுவேயாகும்.
இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம்
வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள்
இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய்,
மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும்,
பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான
நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து
சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.

“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”

———

இந்நூலுரையாசிரியர்

இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே.
தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது.
இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக்
கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார்.
செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது.
ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது.
‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள்.
‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்)
‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக.
இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது.
சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார்.
சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார்.
இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித்
தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
இவர் காலம் முன்னே கூறப்பட்டது.

இவர்செய்த வேறு நூல்கள் :-
தொல்காப்பிய நுண்பொருண்மாலை,
பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது),
ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை,
மாறன்பாப்பாவினம் முதலியன.

இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான்.
அவற்றை இன்னமும் இவர்சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள்.
இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள்,
ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே.
இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும்,
அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும்,
பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன.
இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள்
ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும்.
இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள்.
வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர்.
சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர்.
குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம்
பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது.
இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.

A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.

—————

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

——-

1. நான்காரச்சக்கரபெந்தம்

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று
அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி,
மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று
அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி,
அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

———-

2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.

இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி,
இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி,
மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று,
தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமே திருமலை யென நின்றவாறு காண்க.
ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.

——————-

3. ஆறாரச்சக்கரபெந்தம்

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.

இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி,
அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின்முனையிறுதிமேலேறி இரண்டாமடிமுற்றி,
அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின்முனையிறுதிமேலேறி மூன்றாமடிமுற்றி,
முற்றிய வேகாரத்தினின்று மறித்துந் தொடங்கி வட்டை வழி யிடஞ்சுற்றிச் சென்று மறித்தும்
அவ்வேகாரத்தைக்கொண்டு நான்காமடி முற்றியவாறு காண்க.

——–

4. எட்டாரச்சக்கரபெந்தம்

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே.

இது, இடக்குறுக்காரின்முனைதொடங்கி வலக்குறுக்காரின்முனை யிறுதிசென்று முதலடிமுற்றி,
அதனையடுத்த இடக்கீழாரின்முனை தொடங்கி அதனெதிர் மேலாரின்முனையிறுதி இரண்டாமடிமுற்றி,
அதனையடுத்த கீழாரின்முனைதொடங்கி யதனெதிர்நின்ற மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அதனையடுத்த வலக்கீழாரின் முனைதொடங்கி யெதிர்நின்ற மேலாரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய தகரத்தினின்று வட்டைவழியே யிடஞ் சுற்றி ஐந்தாமடியாறாமடிகள் முற்றியவாறு காண்க.

இதனுள், முதலடிதொடங்கிவந்த குறட்டெழுத்துக்களை யிடஞ் சுற்றிப்படிக்க
வடமலையப்பன் என்னுந் திருநாமம்வருமாறு காண்க.

————

5. இதுவும் எட்டாரச்சக்கரபெந்தம்

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமது றவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே

இது, இடக்குறுக்காரின் முனைநின்றுதொடங்கி அதனெதிராரின் முனையிறுதிசென்று முதலடிமுற்றி,
அடுத்தஇடக்கீழாரின்முனைநின்று அதனெதிராரின் முனையிறுதிசென் றிரண்டாமடிமுற்றி,
அடுத்தகீழாரின் முனைநின்று எதிர்த்தமேலாரின்முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அடுத்த வலக்கீழாரின்முனைநின்று அதன் எதிராரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய சேகாரம்தொட்டு வட்டைவழியிடஞ்சென்று எதிராரினிறுதியில் ஐந்தாமடிமுற்றி,
அதனடுத்தஅறை தொடங்கி அம்முறைசென்று முன்னடிதொடங்கிய சேகாரத்தைக் கொண்டு ஆறாமடிமுற்றியவாறு காண்க.

முதலடி தொடங்கிக் குறட்டில்விழுமெழுத்துக்களை யிடஞ்சுற்றிப் படிக்கச் சீராமராமசெயம் என்னும் ராமதோத்திரம் வருதலும்,
குறட்டினின்றும் ஐந்தாமறைகளில் இடஞ்சுற்றிப்படிக்கத்தருமமேகைதரும் என வருதலுங் காண்க.

—————-

6. பதுமபெந்தம்

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா

இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்சென்று வலமே
அடுத்த புறவித ழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் வழி அடுத்த
கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள
அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள
புறவித ழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மே லிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று மே லிடக்கோணத் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவித ழகவிதழ்
சென்று பொகுட்டினிழிந்து முதலடிதொடங்கிச் சென்றகோ ணத்திகழ்களிற்சென்று நான்காமடிமுற்றியவாறு காண்க.

—————-

7. முரசபெந்தம்

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா

இது, செவ்வேவரைந்தநான்கடியுள்ளும் முதலடியு மீற்றடியும் நான்கடிகளிலும் மாறாடிக்
கோமூத்திரிபோல மடங்கிச்சென்று முற்றியும்,
இரண்டாமடி முற்சதுரத்தின்வலஞ்சென்று நான்கடியிலும் மாறாடி மூன்றாமடிமுதலெழுத்தான்முடிந்தும்,
மூன்றாமடி, பிற்சதுரத்தின் இரண்டாமடி யினிறுதியெழுத்தினின்றுதொடங்கி இடஞ்சென்று நான்கடியினுமாறாடி
மூன்றாமடியினிறுதியெழுத்தான் முடியுமாறு காண்க.
அன்றியும், இரண்டுமூன்றாமடிகள் முறையே முற்பாதி பிற்பாதிகளில் வலமிடமாகத் தம்முண் மாறாடிமுழுவதுங் காண்க.

——————

8. உபயநாகபெந்தம்

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை

இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி
வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க.

————

9. இரதபெந்தம்

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம.
மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம

இவற்றுள், முதற்பாட்டு, மேற்பாதியின்சிகரத்தினின்றும் இரு மருங்கிலு மிடையிலும்நாராயணாயநமவென்னும்
மந்திரம்நிற்க வலமிடமாக மடங்கியிறங்கிமுடியுமாறும், பிற்பாட்டு, கீழ்ப்பாதியின் மேற்றளத்தின்முதலறை தொடங்கி
வலமிடமாகமடங்கியிறங்கி அடியறையினின்று நடுப்பத்தியில்நாராயணாநமவென் றேழ்தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க.
இதனுள் விண்ண் என்னு மொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள்நின்றது.

————–

10. சருப்பதோபத்திரம்

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா

இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும்,
நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும்
சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.

————

11. கூடசதுர்த்தம்

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா

இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு
மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி
மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க.

——————

12. கோமூத்திரி

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா

இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி,
அவ்வரியிரண்டையும் கோமூத்திர ரேகைவழிபடிக்க ஒன்றுவிட்டொன்று மாறாடிமுடியுமாறு காண்க.

———–

13. சுழிகுளம்

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான

இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும்
சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.

————–

Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்தேடல்
தேடல்…
த.இ.க. பற்றி தொடர்புக்கு
English
முகப்பு
Tamil Nadu Logo
கல்வித் திட்டங்கள்
நூலகம்
கணித்தமிழ்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
தகவலாற்றுப்படை
முகப்பு >TVU
TVU
முகப்பு தொடக்கம்

14. எழுகூற்றிருக்கை

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.

——–

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்

மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக

மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்

முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

——————–

15. சதுரங்கபெந்தம்

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யானதவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய.

*இச்செய்யுளை இச்சதுரங்க அரங்கின் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும் மாதவன் என்னுந் திருநாம நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக்கொள்க.

————

16. கடகபெந்தம்.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.

இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி,
மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று,
அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே
கூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.

———-

17. கடகபெந்தம் (வேறு)

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராசியிணையில்லா–தார்கணிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.

இது, பூட்டுவாய்நின்று வலப்பக்க மிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி யவ்வழியே மேலறையிலேறியிறங்கி
வலஞ்சென்று இடை யிடையேயுள்ளகுண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்றுமீண்டு மிறுதியறை சென்று முடியுமாறு காண்க.
இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும்
சுத்தபாடந்தோன்றாமையாலும் பெந்தத்திற்குப் பொருந்துமாறு இங்குச் சிறிது வேறுபடுத்தி யெழுதப்பட்டிருக்கிறது.

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-2 -சித்திரகவி.–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சித்திரகவி.

270.வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ; என்னை?
“எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

வல்லினப்பாட்டு

271.அவற்றுள்,
வல்லினமுழு துறல்வல்லினப்பாட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே வல்லினப்பாட்டாமா றுணர்-ற்று.

(இ-ள்) வல்லினவெழுத்தாறும்வந்து ஒழிந்தவினமிரண்டும் வாராதேபாடுவது வல்லினப்பாட்டா மென்றவாறு.

பொற்றொடிகற்சட்டகத்தைப்போக்கிப்புறத்திறுத்த
கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த–சிற்றடிப்போ
துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது
கச்சிப்பதிக்கத்தாகை. (767)

இதனுள் வல்லினவெழுத்தாறும்வந்து பிறவினவெழுத்துக்கள் வாராதது கண்டுகொள்க.

(இ-ள்) திருக்கச்சிப்பதிக்குக் கத்தனே ! என்னை யமன்வந் தச்ச முறுத்தாது, நீ பொன்னினாற்செய்த
தொடியினையுடையாள்கற்படிவத்தைப் போக்கி யவளைவிட்டுப் புறமாறினகற்பு மீட்டு மவளிடத்தெய்தவும்
பண்டைச்சரீரத்தினதழகெய்தவுங்கூட்டுஞ் சாபவிமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய
தாமரைப்போதை யென்சென்னியிலே சூடத் தருவாயாக, அதனோடும், அஞ்சாதேயென்னும் அபயத்தமுந் தருவாயாக வென்றவாறு.

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாதெனத் தொகுக்கும் வழித்தொகுத்தலென்னும்விகாரத்தானின்றது ;
“குணமாலையையச்சுறுத்த” வென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள்வணக்கம்.

மெல்லினப்பாட்டு

272.மெல்லினமுழுதுறன்மெல்லினப்பாட்டே.
(எ-ன்) மெல்லினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) மெல்லினவெழுத்தாறும்வரப்பாடுவது மெல்லினப்பாட்டா மென்றவாறு.

மனமேநினைஞானமன்னாமைமீன
மனமேனமெங்ஙனெனினங்ஙன்–முனமானா
னேமிமான்மாமானினிநீண்மனமான
நேமிமானன்னாமநீ. (768)
இது மெல்லினமாறினாலும்வந்த மெல்லினப்பாட்டு.

(இ-ள்) மனனே ! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியேயிருக்குமென்னி லப்படியே முன்னந் திருவவதாரமானவன்,
பூமிதேவியாகிய மான்போலும்விழியையுடையாளுக்குந் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள்மனமெப்படி யப்படியான
ஞானமன்னன், சக்கரத்தையுடையான், அவனது நல்ல திருநாமங்களை யிடைவிடாது நீ நினைப்பாயாக வென்றவாறு.
எனவே அந்நினைவே யான்மலாபத்தைத் தருமென்பது கருத்து. துறை – இதுவுமது.

இடையினப்பாட்டு

273.இடையினமுழுதுறலிடையினப்பாட்டே.
(எ-ன்) இடையினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) இடையினமாறும்வரத்தொடுப்ப திடையினப்பாட்டா மென்றவாறு.

வேயாலலையால்வில்வேளாலயலவரால்
யாயாலுயிர்வாழ்வார்யாவரே–யோய்விலராய்
வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள
ராழ்வாரருளிலரேயால். (769)
இஃது இடையினமாறும்வந்தபாட்டு.

(இ-ள்) ஒழிவில்லாதவாழ்வினையுடையார், உயிரின்கண்ணே நீங்காதுவாழும் வாழ்வினையுடையார்,
கிருபையை யாட்சியாகவுடையார், அவர்யாரெனில்? ஆழ்வாரென்னுந் திருநாமத்தையுடையார்
(எமக்குத்தாரு மார்புந் தரவேணுமென்னுங்) கிருபையிலர் ; ஆனபடியாலே தோழீ ! வேய்ங்குழல்முதலாகிய
பகைகளாற் புமான்களையெய்தாது தனியிருந்தவரு ளுயிர்வாழ்வா ரொருவருமில்லை யென்றவாறு.

முன்னிலை யெஞ்சிற்று. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

நிரோட்டியம்

274.இதழ்குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரோட்டியமாமா றுணர்-ற்று.

(இ-ள்) அதரமு மதரமுங் குவியாதுங் கூடாதும் நடப்பது நிரோட்டியமா மென்றவாறு. உம்மை யிரண்டிடத்துந் தொக்கன.

நாதனரங்கநகர்நாராயணனறைசேர்
சீதநளினத்தினிற்சிறந்த–காதற்
கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்
தனிநாயகன்றாள்சரண். (770)
இது நிரோட்டியம்.

இதனுள் நறைசேர்சீதநளினத்தினிற்சிறந்தகாதற்கனி – திருமகள். நானிலக்கிழத்தி – பூமிதேவி.
கட்கினியகாந்தி – கண்ணிற்கு விருப்பத்தைத்தரு மழகு. துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியம்

275.இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே யோட்டியமாமா றுணர்–ற்று.

(இ-ள்) அதரமுமதரமுங் குவிந்துங் கூடியு நடப்பதுவே யோட்டியமா மென்றவாறு.

குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறுகோ. (771)
இஃது இதழ்குவிந்தவோட்டியம்.

(இ-ள்) மனனே ! சங்க சங்கொடுங் குருகென்றபறவைகள் குருகுகளோடுந் திரண்டியங்குங் குருகாபுரியுட்கோவை நினை யென்றவாறு.

மூன்றாமுருபின்மே லும்மை தொக்கு விரிந்தன. ஓடு இடைநிலைத்தீபகம். கோவை என்னு மிரண்டாவது இறுதியிற் றொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று. மனனேயென்னு மெழுவாயுருபு முன்னிலையெச்சமாயிற்று.
பா – குறள்வெண்பா. துறை – கடவுள்வணக்கம்.

பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பாம். (772)
இஃது இதழியைந்தவோட்டியம்.

(இ-ள்) மை பம்மும் – (வலவனே யுனதுதேரைப்பின்னிட்டு விரைந்த) மேகம்,
(இதன்முன்சென்று தேர்வரும்வழிமேல்விழி வைத்த இல்லறக்கிழத்தியிருந்த நகரின்கட்) படியும்.
பம்மும்பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் ; இருள்செய்யும் என்றபடி.
(அங்ஙன மிருள்செய்யுமிடத்து) அம்மம்ம – ஐயோ ! ஐயோ ! மாமைபம்முமம்மமும்மேமம்பாம் – அழகியமுலை பசலைதழைவதாம் என்றவாறு.

எனவே என் சத்தியவசனமென்னாமென்பது பயனிலை. அடுக்கு அவலப்பொருணிலைக்கண்வந்தன.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – வலவனொடுகூறல். பா – இதுவுமது.

குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு–முருகொழுகு
பூமாதுவாழும்புவிமாதுமேவுமொரு
கோமானுவா*வோதுகோ. (773)
இஃ திருவகையோட்டியமும்வந்த வோட்டியம்.

இதன்பொரு ளுரையிற்கொள்க. அவன்றிருவடிகளேகதியென்பது பயனிலை.
* உவா – நிறைவு.
துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியநிரோட்டியம்

276.இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்.
(எ-ன்) இதுவு மவ்வோட்டியநிரோட்டியங்கட் கோர் சிறப்பு விதிகூறுகின்றது.

(இ-ள்) ஓட்டியம், நிரோட்டியமென்னு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்தா யிரண்டுகூறுபாட்டானடை பெறுதலுறும்
பெருமையுடையது ஓட்டியநீரோட்டியமெனப் பெயர்பெறு மென்றவாறு. இரண்டுகூறு பாட்டானென்னுமவை மேற்காட்டுதும்.

மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர்–விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற. (714)
இஃது ஓட்டியமும் நிரோட்டியமும் முறைதடுமாறாது முறையே வந்தஓட்டியநிரோட்டியம்.

இதனுள், குறிதோ – ஓரொன்று குறியதுன்பத்தைச்செய்வதோ வென்க. ஓகாரம் எதிர்மறை. முறி – தளிர்.
ஒழிந்தபொரு ளுரையிற்கொள்க. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – துயரறிவுறுத்தல்.

வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு–முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனெனநெஞ்சேதரி. (775)
இது முன்னடியிரண்டு மோட்டியமும் பின்னடியிரண்டு நிரோட்டியமு மாகவந்தவோட்டியநிரோட்டியம்.
இவ்விரண்டுதாரணமு மிங்ஙன மிரண்டு கூறுபாட்டான்வந்த வோட்டியநிரோட்டியம். இதன் பொருளுரையிற்கொள்க.
திணை – பாடாண். துறை – சமயவணக்கம். உறுமென்ற விதப்பினானே நிரோட்டியவோட்டியமுமுள. அவை வருமாறு :-

கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைக்கரங்கள்சிரங்கணிறைந்–தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ. (776)
இது முதலீரடியுந் தனிச்சொல்லும் நிரோட்டியமும் பின்னிரண்டடியு மோட்டியமுமாகவந்தநிரோட்டியவோட்டியம்.
இவற்றின் வேறுபாடு களெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

அக்கரச்சுதகம்

277.ஒருபொருள்பயந்தவொருதொடர்மொழியாய்
வருவதையோரெழுத்தாய்க்குறைவகுப்பிற்
சுருங்குபுபலபொருடோன்றுவதாய
வருங்கவியக்கரச்சுதகமாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரச்சுதகமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைத் தருவதொருதொடர்மொழியாய்த் தொன்று தொட்டுவருவதைப் புவலனா லொரோ
வெழுத்தாகக்குறைத்துக்கூறுங் கூறுபாட்டாற் றொடர்ச்சொ லீரெழுத்துப்பதமு மோரெழுத்துப்பதமு மாகச் சுருக்கமெய்திப்
பலபொருடோன்றுவதாய அரியகவி அக்கரச் சுதகமாமென்றவாறு. சுதகம் – அழிவு.

ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன்
றுளிகொண்டபூந்துளபத்தோன்றலாற்கீந்த
தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (777)
இஃது அக்கரச்சுதகம்.

(இ-ள்) கீர்த்தியைக் கைக்கொண்ட வில்லிபுத்தூருறையுங் கோதை சூடிக்கொடுத்தா ளினிய தேன்றுளிக்குஞ் செய்கையைக்
கைக்கொண்ட பூவோடுகூடிய துளவமாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவு மதனைச் சூடியதும்
அதனைப் பற்றியதும் புலவீர்காள் ! கூறுங்காலத்துத் தேனையுண்டு களித்தலையுடைய
வண்டுக ளாரவாரிக்கும் வாசிகை சிகை கையா மென்றவாறு.

வாசிகை – மாலை. சிகை – திருக்குழற்கற்றை. கை – திருக்கை. இதனு ளவ்வாறுநின்ற கூறுபாடு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – வள்ளிவாழ்த்து.

அக்கரவருத்தனை

278.ஒருதொடர்மொழியீற்றோரெழுத்தினைப்பிரித்
தொருபொருடாவைத்தோரொன்றாக
மிக்கபல்பொருடாமேல்வைப்பனவே
யக்கரவருத்தனையாகுமென்ப.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரவருத்தனையாமா றுணர்ற்று.

(இ-ள்) ஒருபொருடருவதொருதொடர்மொழியீற்றின் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொருபொருடரவைத் ததன்மேல்
ஒரோவெழுத்தாகப் பலபொருடோன்றவைப்பது அக்கரவருத்தனை யென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா
விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு–முந்தெழுத்துஞ்
சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா
லத்தமெழிலோலைப்பூவாம். (778)

இஃது அக்கரவருத்தனை. அப்படி யிதனுட்சேர்க்கும்படி யெப்படி யென்னில், எம்முடைய சுவாமியாகிய
ஸ்ரீமந்நாராயணன் றிருவடிகளிலெழுந்த கங்கையென்றதொடர் மொழியீற்றினின்ற ககரவைகாரத்தைப் பிரித்துக்
கையெனக்கொண்டு, அரவிந்தமலராட்கிசைந்த வீறென்பதனைத் தகையென்றாக்கி, அதற்குமுதலெழுத்தாகிய
தகரத்தைப்பிரித்துச்சேர்த்துத் தகையென்றாக்கி, சித்தசனன்-காமன் ;
அவனுடைய வாளாகிய கேதகையென்றதிற் ககரவேகாரத்தைப் பிரித்துச்சேர்த்துக் கேதகையென்றாக்கி
அத்தம், எழில், ஓலைப்பூ என முடிக்க. வீறு – அழகு. அதனைத் தகையெனக் கூட்டினமையுங் காண்க

வக்கிரவுத்தி

279.வெளிப்படைவிளியினும்வினாவினுமெய்ம்மை
யொளித்துமற்றொன்றினையுரைப்புழிமறித்து
நிரைத்தபன்மொழிதொறுமிசைதிரிநிலைத்தா
யுரைப்பதுதானேவக்கிரவுத்தி.
(எ-ன்) வைத்தமுறையானே வக்கிரவுத்தியாமா றுணர்-ற்று.

(இ-ள்) வெளிப்படையாகவிளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக
வெதிர்மொழி கொடுத்தவிடத்து மீட்டுந் தெளிவிப்பனவாய்நிரைத்த தொடர்மொழி தோறும்
அம்முன்னின்றவ ரிரட்டுற விசைதிரிநிலைத்தாயுரைப்பதே வக்கிரவுத்தியா மென்றவாறு.

வெளிப்படை யீரிடத்துங் கூட்டுக. இரட்டுற – சிலேடையாக. முன்னிலையோ ரெச்சமாக விரித்துரைக்கப்பட்டது.

ஏற்றமுறுமோதிமத்தாவென்றேன்விண்ணோர்க்
கின்னமுதன்றளித்தவன்பேரென்றான்வெற்பிற்
றோற்றமுறுமெகினவாகனத்தாவென்றேன்
றொன்மறையோன்பெயரென்றான்சுரந்துவிண்ணோர்
போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்
புரந்தரனார்பெயரென்றான்பொன்னேயென்னே
மாற்றமுறப்பகர்ந்தமகிழ்மாறற்கென்றன்
மையலுரைத்தெவ்வாறுமருவுவேனே.
இது வக்கிரவுத்தி.

(இ-ள்) பொன்னையொப்பாய் ! நமதுவீதியி லுலாப்போந்த மகிழ்மாறரைத் தொழுத யான், ஒருதலைபற்றிய
காதலாலே யேறுதற்குண்டான வோதிமத்தையுடையவனேயென்றேன் ;
அப்பொழுது மலையை மத்தாகவுடையவ னெனும்பெய ரென்பெயரன்று, திருப்பாற் கடலைக் கடைந்து இனிய வமிர்தத்தைத்
தேவர்களுண்ணும்படிக்குக் கொடுத்த திருமால்பெய ரென்றான். மீட்டும் வெள்ளிமலைபோன்று பிரகாசிக்கு மெகினவாகனத்தாவென்றேன் ;
அப்பொழுது அதற்கு மிமவானிடத்துப்பிறந்த அன்னம்போலுநடையையுடைய வுமையை வாமபாகத்திலுடைய சிவனது
அத்த னென்னும்பெயர் பழைய மறையையுடைய பிதாமகன்பெய ரென்றான்.
மீட்டும், சுரந்துவிண்ணோர் போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்; அதற்குந் திரண்டு தேவர்கள்போற்று மன்னவனே !
மேகத்தையுடையவனே யென்னு மிருபெயரும் புரந்தரனதுபெய ரென்றான் ; ஆகையா லென்னே?
யான் கொண்ட மையலை யவனொடுகூறி யவன்றிருமார்பைத் தழுவுவ தெவ்வா றென்றவாறு.

பொன்னேயென்றது தோழியை. திணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை. துறை – மெலிவொடுகூறல்.

அஞ்சக்கரனோவென்றேன்சங்
கரனாமென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்
யவனோவென்றேன்வெயிலென்றான்
செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்
டோவென்றேன்பொற்சிலம்பென்றான்
வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்
மாலெப்படியேமொழிவேனே. (780)
இதுவுமது.

(இ-ள்) அழகிய சக்கரத்தையுடையானோவென்றேன் ; அப்பொழுது அஞ்சக்கரங்களையுடையவ னுருத்திரனா மென்றான்.
ஒப்பற்ற திருவாழியை வலது கையிற் றரித்தவனுமாய்த் திருமகளைச் சிந்திக்கிறவனுமாய்த்
திருமகளாற் சிந்திக்கப்பட்ட விருப்பத்தையுடையானோ வென்றேன் ; அப்பொழுது மது வெயிலோனென்றான்.
மீளவுஞ் செம்மையொடுகூடிய கீர்த்தியையுடைய பரிதியை வலதுகையிற்றரித்த விண்டுவோவென்றேன்;
அதற்கும் அது பொற்சிலம்பென்றான்; ஆகையால் வஞ்சத்தையுடையோரிடத்துக் கருணைசெய்யாத்
திருவரங்கேசனுக் கியான்கொண்ட காதலை யெப்படியேகூறுவே னென்றவாறு.

துறை – இதுவுமது. முன்னது வெளிப்படைவிளியினும் பின்னது வெளிப்படைவினாவினும் அடைவே வந்தவாறு காண்க.

வினாவுத்தரம்

280.துதித்திடுமொருபொருட்டொடர்ச்சொலைப்பிரித்து
மதிப்படவினாயவகைக்கெதிர்மொழியாய்
விதிப்படவுரைப்பதுவினாவுத்தரமே.
(எ-ன்) வைத்தமுறையானே வினாவுத்தரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) உலகம் புகழ்வதா மொருபொருளைக் காட்டு மொரு தொடர்மொழியினைப் பிரித்துப் பிரித்த பதந்தொறு
மனத்துட்கொள ஒருவர் வெளிப்படையாகவினாய பலவேறுவகைத்தாங்கூறுபாட்டிற்கு முன்னின்றவன்
மாற்றமில்லாதமுறையொடு மெதிர்மொழியாவுரைப்பது வினாவுத்தரமா மென்றவாறு.

வண்டுளபத்தான்றுயிலும்வாழ்வேதுதெள்ளமுதம்
பண்டுகடைநாட்டறியாய்ப்பற்றியதென்–முண்டமுனி
போசனமாய்க்கொண்டதெவன்போதிலானுக்குவந்த
வாசனமதென்னரவிந்தம். (781)
இது வினாவுத்தரம்.

இதனுள், போதிலான் – பிரமன். அவனாசனமென் னரவிந்தம் என உலகந்து திப்பனவாய ஒருபொருடருமொழியை
அரவு+இந்து+அம் எனப் பிரித்து, துளபத்தான்றுயிலும்வாழ்வு அரவு, அமுதம் பண்டுகடைநாட் டறியாய்ப்பற்றியது இந்து,
முண்டமுனிபோசனமாய்க்கொண்டது அம் என முறையே நிறுத்தி, போதிலானுக் குவந்த வாசனமதென் னரவிந்தமென்னச்
செவ்வனம்விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டியது காண்க.
இது வாகைத்திணையுட் புலமைவென்றி.

சக்கரபெந்தம்

281.சக்கரத்துட்டடுமாறுதறானே
சக்கரபெந்தமெனச்சாற்றினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சக்கரபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது தானே சக்கரபெந்தமெனச் சாற்றினர் பெரியோ ரென்றவாறு.
பெந்தம் – சம்பந்தம்.

282.அதுவே,
நாலிருமூன்றிருநாலெனநாட்டுஞ்
சார்பினிலார்புனைதன்மையவாகும்.
(எ-ன்) இதுவும் சக்கரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் கூறப்பட்ட சக்கரம், நரலார் ஆறார் எட்டாரெனப் புனையப்பட்ட தன்மைகளை யுடையவா மென்றவாறு.

சக்கரமென்பது தேரினதுருள். ஆர் என்பது அதனதகத்துச் செறிக்கப்பட்ட கதிர். புனைதல் – செய்தமைத்தல்.

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா (782)
இது நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு வா வென்னு மெழுத்து நின்று எட்டாகியும், நாலார்மேலும் நாலு னகாரம்நின்று எட்டாகியும்,
சூட்டின்மேனின்ற எழுத்துப் பன்னிரண்டினுள் நாலுதிக்கினுநின்ற மகரஆகார மிரண்டும் வகர ஆகார மிரண்டும்
ஆக நாலும் எட்டாகியுந் தடுமாறி ஆக எ-ம் 32 எழுத்தாகி, சிந்தடிநான்கான்வந்த வஞ்சிவிருத்த மமைந்தவாறு காண்க.

(இ-ள்) வானாதியாய பஞ்சபூதமானவனே! தேவர்கள்விரும்பும் மனுகுலமானவனே!
பெருமையையுடைய வாமனரூபமானவனே! விசும்பினிடத்து மேகம்போலுநிற மாக்கஞ்செய்தவா ! என்றவாறு.
எனவே யென்னைக் காப்பாயாக வென்பது கருத்து. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது. (783)
இதுவும் நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரநின்று அதனைச்சூழ்ந்த குறட்டின்மேல் திருமலையென்னும்பெயர் நின்று ஆர் நாலினும்
நாலுநாலாகப் பதினாறெழுத்து நின்று சூட்டினமே லிருபத்தெட்டெழுத்து நின்று
ஆக எழுத்து நாற்பத்தொன்பதும் ஐம்பத்தஞ்சாக மாறாடின.
அவை மாறாடினவகை :- நடுவு தகரம் இரண்டாகவும்,
சூட்டின்மையங்களில் முதன்மையத்தில் து மூன்றாகவும்,
ஒழிந்தமையத்தில் தே பூக மூன்றும் ஆறாகவும் மாறாடினவாறு காண்க.

(இ-ள்) தேவா – சகலதேவன்மாருக்குந் தேவனே ! மோகூரா திருமோகூரானே !
திதமகிபா – உண்மைப்பொருளானமகிபனே !
மாமோக – பெரியபிராட்டியைமோகிக்கப்பட்டவனே ! பிராட்டியால் மோகிக்கப்பட்டவனே! எனினுமாம். என்னை?
“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிவரை யிலவே பொருள்வயி னான” என்பதனா னறிக.
பூவாளி ஓஒ பொருதலைக்க – காமன் மிகவும் பாணங்களாற் பொருது அறிவினதுநிலையைக் குலைக்க அதனோடும்.
ஓவாது – ஒழிவின்றியே. துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு – காமனது வெற்றிமுரசான கடலே துன்பமதெனும்
பூமடந்தைபோல்வாளுக்கு அவற்றினோடும்,
வெங்கனலாவானேன்விது – குளிர்ந்தசந்திரனும் வெம்மையைச்செய்யுந் தழலாவானே னென்றவாறு.

பூவாளி – பூவைப்பாணமாகவுடைய காமன். இதனைப் பெந்திக்குமாறு :- இடதுபக்கத்துச்சூட்டின்மையத்துத்
தேவாவென்றெடுத்து மோகவென முடித்து, வலமாக அதற்கடுத்தசூட்டின்மையத்துப் பூவாளியென் றெடுத்து
ஓவாது என்று முடித்து இறுதிநின்ற துவ்வென்பது முதலாகச் சூட்டின்வலமேறி விதுவென முடிக்க.

இதனுள், ஓஒ வென்னு மோகார வளபெடை சிறப்பின்வந்தது. என்னை?
“தெளிவினேயுஞ்சிறப்பினோவு, மளபினெடுத்தவிசையவென்ப” என்பதனா னறிக.
“இசைகெடின்…. குறியே” என்பதனால் இரண்டு மாத்திரையான ஓகாரம் செய்யுட்கண் ணோசைசிதைந்தவிடத்து
மூன்று மாத்திரையாய் நீண்ட குறிக்குத் தனக்கினமாகிய குற்றெழுத்தினொடு நின்றதல்லது இரண்டெழுத்தல்லவென்ப தறிக.
திணை – பெண்பாற் கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே. (784)
இஃது ஆறாரச்சக்கரம்.

இதனுள், நடுவு கே யென்னுமெழுத்து நின்று அதனைச்சூழ்ந்த குறட்டில் ஆறக்கரம்நின்று சூட்டிற் பதினெட்டெழுத்து நின்று
குறட்டுக்குஞ் சூட்டுக்கு நடு ஆராறில் ஆர்தோறும் ஏழெழுத்துநின்று ஏழெழுத்தில் நடுவெழுத்தாறும்
தென்குருகூர் என்னும் பேராகநின்று ஆக அறை அறுபத்தேழில் எழுத் தறுபத்தேழும் ஒற்றுள்பட ஒன்பதெழுத்து
மாறாடினமுறையாலேறி எழுபத்தாறாக நேரசைக்கலித்துறை நின்றவாறு காண்க.

நடுவிற் கே மூன்றாகவும், முதற்சூட்டின்மையத்து வே மூன்றாகவும், ஒழிந்தசூட்டின்மையத்துநின்ற
மா கு பொ மே வா ஐந்தும் ஒரோவொன்று இவ்விரண்டாகவும் நின்றன. இதனைப் பெந்திக்குமாறு :-
இடதுபாகத் திரண்டாஞ்சூட்டின்மையத்து மாதவனே யென்றெடுத்து நேரே மிகு என முடித்து,
அதற்கடுத்த மூன்றாஞ்சூட்டின் மையத்துப் போதன் என எடுத்து மே யென நேரே முடித்து,
நாலாஞ் சூட்டின்மையத்து வாதிதமாகுதற்கென எடுத்து, பொதுவே என முடித்து,
முடித்த வே நாலாமடிக்கு முதலெழுத்தாகப் பின்னும் மேதகவேயென அதனின்முடிக்க.

(இ-ள்) திருமகள்காந்தனே ! அழகிய அரங்கேசனே ! மேகம் போன்ற திருமேனியனே !
பெரிய பிரமனு மவன்முதலாங் கடவுளரு மன்பினோடுந்தொழுங் கேசவனே ! சகலான்மாக்களுக்கும் பொதுநின்றவனே !
என் றுன்னைநினைந்து மிகவுங்குழைவார்க் கிதயதாமரை யகத்தோனே ; வேதமுதல்வனே ;
நின்னைக்குறித்து நமாநம என்னா நின்றேன் ; அதற்குத்தகுவதாகவென்னாருயி ரின்னும் பொல்லாங்கை விளைக்கப்பட்ட
செனனத்தை யிவ்வுலகத்தெய்தாது இன்பமெய்துதற்கு என்னைக் காப்பாயாக வென்றவாறு.

போதனும் என்னு மும்மை எச்சவும்மை. இதனுள், இரண்டாமடியீறு தொடங்கி யொழிந்தன மாட்டுறுப்பாக நிகழ்ந்தன.
துறை -கடவுள்வணக்கம்.

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே. (785)
இஃது எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரம் நின்று சூழ்ந்தகுறட்டில் வடமலையப்பன் என்னும் பெயர் நின்று
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின் மேன் முப்பத்திரண்டாய்நின்றவாறு காண்க.
நடுநின்ற தகரம் நாலெழுத்தாய் முதற்சூட்டின்மையந்தொடங்கிநின்ற த பொ ம மா ம் ர் டா ர் எட்டும் பதினாறாய்,
குறட்டில் வடமலையப்பன் என்னும் எட்டும் பதினாறாய், பத்தொன்பதெழுத்து மாறாடி அறை எண்பத்தொன்பதினின்ற
எண்பத்தொன்பதுக்கு நூற்றெட்டெழுத்தால் ஆறடி நிலைமண்டிலவாசிரி யப்பாவாய் முற்றியது.

இதனுள், நிடதப்புரைவரைநிகர் – நிடதமாகியவுயர்ந்தமலையை யொத்த. மலைதன் – மலைதன்னில்.
மின்போன்றொளிர் – மின்னைப் போன் றொளிராநின்ற. தண்ணென்பொற்சுனை – குளிர்ந்த பொன்னோடு கூடிய சுனை.
மன்னியமாமலர் – நிலைபெற்ற நீலோற்பலம்போல்வ.
அம் மடவார்மையுண்டாட்டமர்கண் – அழகியமடவார் மையெழுதப்பட்டுக் களிப்போடுகூடிய கண்கள். உண்டாட்டு – களிப்பு.
நண்பனே ! பத்தரல்லாத தாமதத்தினைவிரும்புவோர்க் கெட்டா மாறன் றுடரிவெற்பிடந் தன்னி லெனக் கூட்டுக.
நண்பனே யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமதுறவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே. (786)
இதுவும் எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு ரி என்னு மெழுத்துநிற்க, குறட்டிற் சீராமராமசெயம்என்னும் ராமதோத்திரநின்று,
ஆர்மேற் குறட்டுடன் அஞ்சா மறையில்நின்றும் வலமாக,தருமமேகைதரும் என்னும் பழமொழி நின்று,
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின்மேன் முப்பத்திரண்டெழுத்தாய் முதலடியின் முதலெழுத்தாகிய சே அஞ்சாமடிக்கு
முதலெழுத்தாய் ஆறாமடிக்கு நெஞ்சேயென்ன முடிந்தமொழிக்கீறாய் மூன்றெழுத்தாயவாறுங் காண்க.
இதனைப் பேந்திக்குமாறு :- தன் முன்னர்ச் சூட்டுமையத்துநின்றுஞ் சேடுறு என நோரோட்டிக் கைவிலின்
என அஞ்சாமாரின் முடித்து, வலமாக இரண்டாமார்தொடங்கி நாலாமார்வரைக்கும் லுறு என முடித்து,
மீட்டும் முதலடியிற் சே என்றவெழுத்தை யெடுத்துச் சேர்மழைதொடங்கி நெஞ்சேயெனச் சூட்டின் வலமாகச்சுற்றி முடிக்க.

(இ-ள்) நெஞ்சே – நெஞ்சமே ! சேடுறு…. விலின் – பெருமை யெய்துங் குளிர்ந்த சீர்பொருந்திய
விமவானென்னுங் கிரியைக் கைவில்லாக்கி அதனால், போர்…. அடர்த்து – திரிபுராதிகளுடன் போரைப் பொரும்
வீரத்தையுடைய புராரியென்னுஞ் சிவன் கைலையை யெடுத்தலைத்ததனாற் கோபித்து விரலையூன்றி மதுகையையழிப்ப வீடுபட்டு.
இன்பமது…. முன்பும் அவன் பாடிய பாட்டினுக்குருகி மீள வின்பமுறும்படி சமர்க்கு வேண்டு மாயுதமுதலிய வியல்பினை
யெல்லா மடர்த்த சிவன் றான்கொடுப்பவெய்திய மழைபோனிறநிருதன் சமர்க்கு நேர்பட்ட முதனாளுங்
கும்பகருணன்முதலியோர் பட்டபின்னும். எதிர்தாளுற்று – அவனெதிர்தரத் தானும் போர்க் கெதிரு முயற்சியையுற்று.
இம்பரேத்தமர் – இவ்வுலகின்கண்ணே யாவரு மேத்துந் தனதுபோரால். ஆர் – அவனதுயிரையுண்ணும்.
திருவுறை…… தாள் – திருமகள் விட்டுநீங்காத முதல்வனது தாமரைப்பூப் போன்ற இரண்டு திருவடிகளையும்.
உறுநம்பால் – மிக்க விருப்பத்தால். உன் – சேர். நினை – தியானத்தாற் கூடுவாயாக என்றவாறு.

இங்ஙனந் தியானிக்க வீடேறலா மென்பது பயன். அவனுயிரை என்பது சொல்லெச்சம்.
முன்பும் என்னும் உம்மை யெச்சமாதலாற் பின்னுமென்ப தாயிற்று. அமரால் மூன்றாவது தொக்குநின்று விரிந்தது.
ஆர் உண்ணும் என வினைத்தொகைவாய்பாடு செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடாக விரிந்து
தன்னெச்சமான திருவுறைமுதல்வனென்னும் பெயர்கொண்டு முற்றியது. திணை – பாடாண். துறை – கடவுள் வணக்கம்.

பதுமபெந்தம்

283.எண்ணிரண்டிதழாய்க்கோணிருநான்கின்
கண்ணுறநடுவணப்பொகுட்டதுகாட்டிப்
பண்ணமைப்பதுவும்பதுமபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே பதுமபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) ஒரு தாமரையை எட்டுக்கோணினு மிவ்விரண்டாகப் பதினாறிதழெழுதி நடுவே
யொரு பொகுட்டினையுங் காண்பதாக்கிச் செய்தமைப்பதும் பதுமபெந்தமா மென்றவாறு.
உம்மையான் மகாபதும பெந்தமு மொன்றுள.

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா. (787)
இது பதுமபெந்தம்.

(இ-ள்) முதலடியீற்று மா – திருவன்னாள். மாறாமாலால் – நீங்காத மாலால். ஏமாறா – வருந்தும்படிக்கு.
(இரண்டாமடி) மாறாமாவேளேமாறாமாம் – மாயோன் றரப்பட்ட கரிய வேளம்பு மாற்றமாமாம்.
மூன்றாமடியில் மகரவொற்றைப்பிரித்து, ஆறாமா – ஆறுபோலவாம் ஐயோ என்றாக்கி,
(மூன்றாமடியி லிறுதியில் மா என்னும் எழுத்தைப்போட்டு) கோவாமாறா என்பதனைக் கூட்டி, கண்ணீர்தீராது
ஐயோவெனச் சேர்த்து, மூன்றாமடியினின்ற மாவை நாலாமடியின் முதன்மாவொடுங்கூட்டி,
மாமாறா என்றாக்கி, பெரிய மாறனே ; என்க.
மாவாதேமாறாமா – வண்டுகள் தேனையுண்ணவரும் தேன்றுளும்புந் தரமத்தனே யென்றவாறு.

பெரியமாறனே ! திருவன்னாள்வருந்தும்படிக்குக் கரிய வேளம்பு மாற்றமாகாநின்றன ; கண்ணீர் தீறாது ;
ஐயோ ! இனி எங்ஙனமுய்யு மென்னும் பயனிலைகூட்டி முடிக்க. மகாபதுமபெந்தம் வந்தவழிக் கண்டு கொள்க.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

இனிப் பதுமபெந்தத்தினுள் நடுவிற்பொகுட்டினின்ற மா என்ற எழுத்தொன்றும் எட்டெழுத்தாகவும்,
அதனைச்சூழ்ந்த நாற்கோணங்களினின்ற எட்டெழுத்தும் பதினாறாகவும்,
இடையிற்கோணாலினுநின்ற எழுத்தெட்டுந் திரிந்து மாறாடாதுநிற்கவும் பாடினவாறு காண்க.

முரசபெந்தம்

284.எழுதியவரிநாலினுண்முதலீறன
பழுதறமந்திரிச்செலவாய்ப்படர்ந்தய
லொழுகியுங்கீழ்மேற்றனதீற்றுற்றபின்
னறைதொறுமேனையவடைவேபாதியின்
முறைதடுமாறுதன்முரசபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே முரசபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) நாலடியான்வரு மொருசெய்யுளை நாலுவரியாக வெழுதி
அவற்றுண் முதலடியுமீற்றடியுமாகியவிரண்டின்முதலடி கீழ்முன்றுவரியினும் மந்திரிச்செலவாகச் சென்று
நாலாமடியி லஞ்சாமறையி லேறி யந்தவார் மேனோக்கி மீள வப்படியே முதலடியீற்றின்முற்றியும்,
இறுதிவரியும் மந்திரிச்செலவாய் மேனோக்கி நாலாமடியுற் றஞ்சாமறையிலேறி யந்தவார் கீழ்நோக்கி
யவ்வண்ணமே யிறுதியடியீற்றின் முற்றியும்,
ஏனையிரண்டனுள் இரண்டாமடி முற்பாதியினின்றுங் கீழ் வலமாக மூன்றாமடியின்முதலே முற்றியும்,
மூன்றாமடி யிரண்டாமடிப்பிற்பாதியினின்றுழிநின்றுங் கீழிடமாக மூன்றாமடி யிறுதியின்முற்றியும்,
இரண்டடியும் முத லீறென்னும் முறைதடுமாறப் பாடுவது முரச பெந்தமா மென்றவாறு.

இங்ஙனம் மேல்வருஞ் செய்யுளை எழுதிக் கண்டுகொள்வது.

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா. (788)
இது முரசபெந்தம்.

(இ-ள்) போத – ஞானவானே ! வானதுவாதரா – வானவராதரிக்கப் பட்டவனே ! மாதவா – திருமகள்காந்தனே !
(மூன்றாமடி முதலீறாக) நா தணவாத நாத – நாவைவிட்டுநீங்காத வென் னாதனே !
வாண- உலகினைக் காக்கப்பட்டவனே! தவாரவா – அழிவில்லாத அராவையுடையவனே !
வான வேத துவாரகா – (எனப் பாடமாற்றுக) பரமபதமிடமாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமையை
யுடைய வேதத்தை வாயிலாகவுடையவனே ! என்னைக் காப்பாயாக வென்றவாறு. துறை – கடவுள் வாழ்த்து.

நாகபெந்தம்

285.வரியரவிரண்டாய்வால்வயிறிரண்டாய்த்
தெரிமூலைநான்காய்ச்சிறந்துமும்மூன்றுட
னிலைபெறுமொருபானிருபானிறீஇத்
தலையிரண்டெழுத்தாய்ச்சார்தரச்சந்தியிற்
கவினுறுத்தெழுத்துக்கலந்துறுப்பாக
நவிலிருபாவேநாகபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே நாகபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) வரியையுடையபாம்புக ளிரண்டாக, அவற்றிற்கு வாலிரண்டாக வயிறிரண்டாகத் தோன்றப்பட்ட
மூலைக ணான்காகச் சிறப்பெய்தி, வாலிரண்டி னிலைபெறுமெழுத் தொன்பதுடன்,
வயிறிரண்டி லெழுத்துப் பத்தாய், மூலைநான்கி லெழுத் திருபதாய்த் தலையிரண்டி லெழுத் திரண்டாய்ப் பொருந்த நிறுத்தி,
சந்திகளில் அழகுதருவனவா மெழுத்துக்க ளிரண்டிற்குங் கூடிநிற்பனவா முறுப்பாகப் புலவனாலுரைக்கப்படு
மிரண்டுபாவென்பது தானே நாகபெந்தமா மென்றவாறு.

நிறுத்தியென்பது மத்திமதீபம். மும்மூன் றொருபானிருபானென்பன நிரனிறை.
புலவனா லென்பது எச்சம். தெரிமூலை – தோன்றப்பட்ட மூலை.

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை. (789)

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை. (790)
(இ-ள்) மாறனென்றுஞ் சடகோபனென்றுந் திருநாமத்தையுடையான்,
வளவிய குருகூரின்கண்வாழும் பொருநையாற்றையுடையவன்,
கிருபையோடு கூடிய அன்னத்தையேறு முத்தமன்,
நாவினால் திருமகளையுடைய பெரிய சரதனாம் மாயோன் றிருவடிகளைப்பாடும் பாவினையுடைய மன்னன்,
எம்மனோர்க்கு மாதா, எம்மையாளு மிறைவ னென்றவாறு. எனவே, யமனு மெம்மிடத்து வாரான் ;
எமக்குச் செனனமு மில்லை, சித்திப்பதும் முத்தியேயா மென்பது பயன்.

அறத்தினது பகுதியு மறத்தினாலமைவெய்திய அன்பென்று கூறப்படுவதும் நமக்குண்டாதலும்
நல்ல பேரின்பத்தையெய்துவ துண்மை யாக வது நம்மைவிட்டு நீங்கா தவற்றையுறும்பகுதிக்கு ஒப்பற்ற பெரிய மனனே !
காளமேகத்தினது அழகிய நிறமேவிய திருமாலை, ஏனமாக வடிவெடுத்தவனை,
எம்மையாளப்பட்டவனை நினைப்பாயாக வென்றவாறு.

ஆக வெண்பா விரண்டினால்
எழுத்து நூற்றொருபத்தெட்டும் அறை தொண்ணூற்றாறனுண் மாறாடி யடங்கினவாறு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

இரதபெந்தம்

286.தேரெனமந்திரிச்செலவெனச்செய்யுளை
யேர்தரவடக்குவதிரதபெந்தம்
(எ-ன்) வைத்தமுறையானே இரதபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சதுரங்கவறையுட் டேர்செல்வது எனவும், மந்திரி செல்வதெனவு மொருசெய்யுட்குண்டான
வெழுத்துக்களைத் தேரின தறைக்குநடுவே ஒரு திருநாமமாதல் ஒரு பழமொழியாத லழகுபெற்று நிற்க
விரதத்திலே பெந்திப்பது இரதபெந்தமா மென்றவாறு.

சதுரங்கவறையினுளென்பது சொல்லெச்சம். செய்யுளையென்பதாகு பெயர்.
அறைக்கு நடுவே திருநாமமாதல் பழமொழியாத னிற்க வென்பது ஏர்தர என்பதே ஞாபகமாக விரிந்தது.

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம. (791)
இஃது இரதபெந்தம்.

(இ-ள்) நாரார் – அன்பினையுடையார். ஆராய் அ நயன் – ஆராயப் பட்ட அந்தப் பேரின்பத்தினிடத்து.
அயணா – வியாபரிக்கப்பட்டவனே! விண் – ஆகாயமும். ஆராம் – மிகுந்த செலமும். மண் – நிலமும். ஆய் – ஆகி.
அனிலம் – காற்றும். ஆயவா – ஆனவனே ! சீராய – பொலிவினையுடைய நந்தகோபாலனே!
நன்காநமநம – நன்மையையுடையவனே ! உன்னை நமக்கரிக்கிறேன். நன்காநமநம – முன்னைப்போல வுரைக்க.
மன்காமன் – மகளி ராடவர்க் கரசனாகிய மன்மதன். தாதாய் – தந்தையே !
நம – உன்னை மீளவு மென தான்மாவைக் காத்தற்பொருட்டு நமக்கரிக்கிறே னென்றவாறு.

நார் – அன்பு. அ சுட்டு. நயன் – சுகம். அயணம் – வியாபாரம். ஆம் – செலம்.
மண்ணாய் என்பது மணாய் என இடைகுறைந்துவந்தது. ஆயவா – ஆனவனே. நன்கு – நன்மை. மன் – அரசன்.
தாதை என்னும் ஐகாரவீறு விளிக்கண் ஆயாயிற்று. நமநம நமநம என்பது இசைநிறையசைநிலை.
விண்ண் என்னு மொற்றளபெடை, வெண்பாவினது செப்பலோசைசிதைந்தவழி யோசையை நிறைத்தற்பொருட்டு வந்தது.
என்னை? “குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதனா லறிக.
இதனுள் நடுவும் இருபக்கமும்நாராயணாயநமவென நின்றவாறு காண்க. துறை – கடவுள்வணக்கம்.

மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம. (792)
இதுவும் இரதபெந்தம்.

சீர் – திருமகள். தோள்நிலமான் – தோளிலிருக்கும் பூமிதேவி.
இதனுள், நடுவே நாராயணாயநமவென்னுந் திருநாமம் நின்றவாறு காண்க.

மாலைமாற்று

287.ஒருசெயுண்முதலீ றுரைக்கினுமஃதாய்
வருவதைமாலைமாற்றெனமொழிப.
(எ-ன்) வைத்தமுறையானே மாலைமாற்றாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாட்டையீறுமுதலாக வாசிக்கினு மப்பாட்டேயாகி வருவதனை மாலைமாற்றென்னுஞ்
சித்திரக்கவியென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

லாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா (793)
இது மாலைமாற்று.

(இ-ள்) வாமனா – வாமனனேயென்று.
வானவாவானவானாம – தேவர்களால் விரும்பிச்சொல்லுவதாய பெரியதிருநாமத்தை யுடையவனே !
மான மா பூ – பெருமையையுடைய திருமகளுக்கும் பூமிதேவிக்கும். பூமானமனா – பூமானாகியமன்னனே !
மானாம – மாலாகிய திருநாமத்தை யுடையவனே! வா – என்முன்னேவந்துதோன்றுவா யென்றவாறு.

இஃ திரண்டுவிகற்பத்தான்வந்த வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

கரந்துறைசெய்யுள்

288.முதலொருசெய்யுண்முடித்ததனீற்றிற்
பதமதனிறுதியிற்பயிலெழுத்துத்தொடுத்
திடையிடையிட்டெதிரேறாய்முதலய
லடைதரப்பிறிதொருசெய்யுள்கரந்தங்
குறைவதுகரந்துறைசெய்யுளென்றுரைபெறும்.
(எ-ன்) வைத்தமுறையானே கரந்துறைசெய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதலே யொருசெய்யுளை எழுதிமுடித்து, முடித்த விறுதிமொழியினீற்றெழுத்துத்தொடங்கி,
எதிரேறாக இடையிடையோரெழுத்தாக இடையிட்டு முதன்மொழிமுதலெழுத் தயலடைய முடிக்கப் பிறிதோர்
செய்யுளாக வதனகத்துக் கரந்துறைவது கரந்துறை செய்யுளென் றுரைக்கப்பெறு மென்றவாறு.

போர்வைவாயூராரலரளிபொருகாம
நீர்மையாழ்வாரயலணைதருமிக
வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு
தார்தராமூதாமணிதகவுருவமும். (794)
இது கரந்துறைசெய்யுள்.

(இ-ள்) ஆரலரளி என்பதை அளியாரலரென மாற்றி, வண்டுக ளாரவாரிக்கப்பட்ட பூவாளியால் என்க.
பொருகாம – பொரவந்த காமனே ! நீர்மையாழ்வார் – நற்குணத்தையுடைய ஆழ்வார்.
மயில்கை – எமது மயில்போலுஞ்சாயலையுடையாள்கையில்.
மூதாவுருவமுமணிதக வாழ்தலாம் – பெருமையையுடையவா முருவங்களு மழகினது பெருமை யெய்த உயிர்வாழ்தலாம்படிக்கு.
ஏர்தவா முருகுகு தார்தரா – அழகு கெடாத தேனொழுகும் வகுளமாலிகையைத் தந்து.
வாயூர் – (ஊர்வாய் என மாறுக) எமதுபதியிடத்து. அயலணைதருமிக – அய லெம்மோடு மிக நட்புச்செய்யாநின்றாராதலால்.
போர்வை – உனதுபோரை யொழிவாயாக வென்றவாறு. இது மாட்டுறுப்பு. அப்படி யிதனுட் கரந்த செய்யுள் :-

முருகணிதாரார்
குருகையிலாழ்வார்
கருணையவாயார்
மருளிலராவார். என்பதாம். (37)
காதைகரப்பு

289.காதைகரப்பதுகாதைகரப்பே.
(எ-ன்) வைத்தமுறையானே காதைகரப்பாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவராற்குறிக்கப்பட்ட செய்யுளுட் பிறிதொருசெய்யுட் குக்கூடுவதானவெழுத்துக்கள்புகுதாதே
தாங்குறித்த பழையசெய்யுட் கரந் தெழுத்துப் பிறக்கிக்கொள்ளலாம்படி பாடுவது
காதைகரப்பா மென்றவாறு.

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்–புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன். (795)
இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது.
இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

பிரிந்தெதிர்செய்யுள்

290.பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து
வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா. (786)
இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.
என்பதாம்.
இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :- நீரநாக – நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே !
மா தாரமாக – திருமகளைப் பாரியாக. மேவாரமாக – பொருந்து மாரங்கிடக்கு மார்பனே !
மாணாரணாக – பெருமையையுடைய வேதசொரூபனே ! கா – என்னைக் காப்பாயாக வென்றவாறு.

எதிரேற்றின்பொருள்:-
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார – நற்குணத்தையுடையவனே !
மேகமாக – மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா – சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே !
நாரணா – நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் – நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு
நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா – எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை – கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

பிறிதுபடுபாட்டு

291.பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும்
வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா. (797)
இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க.
தார் – பூ. ஆரியன் – பரமாசாரியன். வாரி – கடல். வாரி – மிகுதி.

சருப்பதோபத்திரம்

292.இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை
யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி
நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு.

இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம்.
இது மாட்டுறுப்புப்பொருள்கோள்.

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா. (798)
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க.

(இ-ள்) தே மா பூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா – பெரிய திருமகளும்.
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்.
ஆகாவாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே !
தாமா – துளவமாலிகையையுடையவனே !
பூகாவாலாலா – பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே !
நீலா வாமா – நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே !

மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி,
நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு.

இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமை பன்மை
மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம். வா – வந்து. மாது – மாதர்கள். பூ – தாமரை. பூ – பொலிவு.

கூடசதுர்த்தம்

293.பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக்
கூடமுற்றதுவேகூடசதுர்த்தம்.
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் – ற்று.

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று
மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா. (799)
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா – சுவாமியே ! என்மனத்திலுள்ளானே !
தூயதாருளா ணீதா னாவா – பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக.
அதுவுமின்றி, சீராமனாமனா – சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் – அழகுடையவனே!
ஆதரவிராமா – சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா – போதத்திலுள்ளானே !
வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ – உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு.

துறை – இரண்டுங் கடவுள்வாழ்த்து.

கோமூத்திரி

294.கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது
ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி
மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா. (800)
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டு கொள்க.

(இ-ள்) மாயாமாயா – அழியாத மாயையையுடையவனே ! நாதா – சுவாமியே ! மாவா – திருமகளையுடையவனே !
வேயாநாதா – வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா – பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே !
காயாகாயா – காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா – ஞானத்தையுடையவனே !
பேதாபேதா – பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே !
காவா – என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா – கலிவிருத்தம். துறை – கடவுள்வாழ்த்து.

சுழிகுளம்

295.தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.
(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு
சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான. (801)
இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே !
தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே !
நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

திரிபங்கி

296.நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.
(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய்
மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. (802)
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதிபார்
ஊரலர்பார் அன்னையிங்கேசல்பார் உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார துய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297.ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த
வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு.
செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

298.அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙன மெண்ணப்படு மெண்கடா மிரதத்திற் பெந்திக்கு மிடத்துமையத்திற்பத்தி யிரண்டுபத்தியாய்க் கீறி
வலமே யிடமே நடத்தலைத்தரும்பகுதியில் மையத்திலொன்று பன்னான்காகவு மதனயலிரு பத்தியி லிரண்டும்
பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய வெண்ணும் பத்திதோறு மிரண்டுகுறைந் தேழென்னுந்தொகைபொருந்தி
முதலேநின்ற வொன்றில்வந்துமுடியு மென்றவாறு.

அயலென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. இரதபெந்தம் – தேரிலே எழுதிக் கூட்டுதல்.

299.இரட்டுறமொழிதலோடீறுதிரிந்தெண்
டிரட்டவும்பெறூஉந்தெரியுங்காலை.
(எ-ன்) இதுவு மவ்வெண்ணிற் கோர் ஒழிபுகூறுகின்றது. இரட்டுறல் – சிலேடை. ஈறுதிரிதல் – ஈற்றெழுத்து வேறொன்றாதல்.

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா

விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணசுகோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. (803)
இஃது, எழுகூற்றிருக்கை.

(இ-ள்)
(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்
திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு
(இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்
(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே
(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும்,
பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து,

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட
விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல
விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற
மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப,
விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு
மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்
மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந்
தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு
மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென
நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண
மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற
வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள
இனியவுயிர்களஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த
கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர
கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு
நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து,
பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு,
பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய
மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற
திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்
பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா
நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச்
சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு
முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே !
ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந்
தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை
புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.
ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் – சற்சரைவடிவு.
செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய – விரும்பப்பட்டன. முழுநலம் – பேரானந்தம்.
தெற்றென – தெளிய. பிறழாது – மாறாடாது. ஒருங்கு – ஒக்க. ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை. முற்குணம் – சாத்துவிககுணம். நாலாங்கடவுள் – இந்திரன். அமைத்த – விதித்த.
இறும்பூது – ஆச்சரியம். உளர்தல் – குடைதல். அவிழ்த்தல் – ஒழுக்குதல். நலம் – ஆனந்தம்.
நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.
உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் –
தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின்
முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழு
கடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல்
மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும்
பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத்
தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி–நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. (805)
இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது,
ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்
சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்
பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள்,
அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது
முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது.
அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்னும் ஏவற்பொருளும்,
கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை
யொருமாத்திரை பெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும்
இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன.
அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” (49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” (50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” (51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” (52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” (53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
கருதுகிற்கடகபெந்தமாகும்” (54)
என்பனவாம

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்–செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும். (806)
இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து,
எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க.
திணை….. துறை…..

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா–ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர். (807)
இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க.
முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.
இதனுள் ஓராழி வையம் – ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும்,
பேராவிருடுணித்தல் – தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும்,
உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் – கேசவாதி துவாதசநாமம் எனவும்,
தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும்,
மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை…… துறை…….

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ–றந்தச்
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம். (808)
இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி.
அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே. (809)
இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய. (810)
இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா – மனுகுலங்காவலனாக.
மேவலாமாறன் – நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன்.
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன – தன்னிடத் தாக்கம்பெற்ற.
தவபோதனுமா – மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ – அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன்.
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் – எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும்.
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் – என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ;
ஆதலா லுனக்கு வரப்போகா தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர்.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி. (811)
இது கடகபெந்தம். நெடுவீடு – பரமபதம். திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா–தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான். (812)
இதுவும் கடகபெந்தம்.
ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க.
திணை -…… துறை – சமயவணக்கம்.

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

——-

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-1-மடக்கு –ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

ஸ்ரீ:–மூன்றாவது–சொல்லணியியலுரை

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

மடக்கு

252.குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி
மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து.
அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி
வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு.
புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க

253.அதுவே,
தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு
மடைவினிலிருமையுமமைவனவாகியு
நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே.
(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்
பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு.

எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க.

254.ஒன்றாதியவாவொருநான்களவுஞ்
சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே.
(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று.

(இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக
வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு.

ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை
முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும்.

255. முதலிடைகடையேமுதலொடிடைகடை
யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே.
(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்–ற்று.

(இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும்,
இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது.

256.அவற்றுள்,
அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும். (5)

257.இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. (6)

258.உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே.
(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்
இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப்
பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறு
ஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு.

அவையாவன முதலடிமுதன்மடக்கு, இரண்டாமடி முதன்மடக்கு, மூன்றாமடி முதன்மடக்கு,
நாலாமடி முதன்மடக்கு இவைநாலு மோரடியோரிடத்து முதன்மடக்கு
இனி, முதலிரண்டடியுமுதன்மடக்கு, முதலடியுமூன்றாமடியு முதன்மடக்கு, முதலடியுநாலாமடியுமுதன்மடக்கு,
கடையிரண்டடியு முதன்மடக்கு, இடையிரண்டடியு முதன்மடக்கு, இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு இவையாறுமீரடிமுதன்மடக்கு,
ஈற்றடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, முதலயலடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு,
ஈற்றயலடியொழித் தேனைமூன்றடியு முதன்மடக்கு முதலடி யொழித்தேனைமூன்றடியுட் முதன்மடக்கு
இவைநாலு மூன்றடிமுதன்மடக்குநாலடிமுதன்முற்று மடக்குஆக விவைபதினைந்தும் அடிமுதன்மடக்கு.
இனி, அடியிடை மடக்கும், அடியிறுதிமடக்குமிவ்வண்ணமே பதினைந்து பதினைந்தாம்.
இவை நாற்பத்தைந்திற்கு முதாரண முன்னர்க்காட்டுதும்.

259.அடிதொறுமீரிடத்தனவாய்முதலொ
டிடைகடையிடைகடைகளினியன்றனவுந்
திதமுறநான்கறுபானெனச்சிவணி
யதனொடுமடக்கொருநூற்றைந்தாகும்.
(எ-ன்) அடிதொறு மீரிடத்தனவாமடக்கிற்கும், மூவிடத்தனவா மடக்கிற்குந் தானமும் வரையறையு முணர்–ற்று.

(இ-ள்) செய்யுளினடிதொறும் ஆதியொடிடை, ஆதியொடுகடை, இடையொடுகடை யென்றுசொல்லப்பட்ட
தானங்களி னீரிடத்தனவாய் நடந்தனவும், முத லிடை கடையென மூன்றிடத்து மடக்குவனவுமான
நாலுதானத்திலு முண்மையாக வறுபதென்று கூறும்படிக்குப் பொருந்தி முன்னர்க்கூறப்பட்ட வோரிடத்துமடக்கு
நாற்பத்தைந்தொடு மடக்கு நூற்றைந்தா மென்றவாறு.

இச்சூத்திரத்துண் முதலேவந்த முதலொடென்பதனை முதனிலைத் தீபகமாக்கி யிடைகடையென்னு மிரண்டினு மேற்றுக.

260.அவற்றுள்,
முதற்றொடைவிகற்பமேழொடுநான்கொடுந்
திதப்படவோரடியொழிந்தனசிவணும்.

(எ-ன்) இதுவு மத்தானங்களைத் தொடைவிகற்பங்களாற் கூறுபடுத்தி விரித்துணர்–ற்று.

(இ-ள்) அவற்றுள், (அங்ஙனங்கூறப்பட்ட வோரிடத்தனவு மீரிடத்தனவு மூவிடத்தனவுமாக மடக்குமவற்றுள்)
அடியொடு பொருந்தின முதற்றொடை விகற்பமென்னு மிணைமுதலாகிய வேழொடுங் கடையிணை, யிடையிணை,
முதற்கூழை, இரண்டாஞ்சீர் நான்காஞ்சீரொடு புணர்ந்த பின் னென்னு நான்கொடுங்கூடிப் பதினொரு
தொடைவிகற்பங்களொடுந் தெளிவுபெற வோரடியொழிந்தமடக்குகள் வருதலைப்பொருந்து மென்றவாறு.

261.இடைவிடாமடக்கிவையெனமொழிப.
(எ-ன்) இது தொடர்பிடைவிடாதுமென்றசூத்திரத்தினுள் மூன்று பாகுபடு மடக் கென்றவற்றுள், முதலேகூறியபாகுபா டுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட நூற்றைந்துமே யிடைவிடாமடக் கென்றுகூறுவர் புலவரென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு

மதியார்மதியார்வனைவேணியினான்
விதியாலிரந்ததனைமீட்ட–முதியானை
மாதவனையல்லான்மதிப்பரோபேரின்பத்
தாதரவுபூண்டவுளத்தால். (624)
இது முதலடி முதன்மடக்கு.

(இ-ள்) அறிவுடையோர், பிறையையும் ஆத்தித்தாரையுஞ்சூடின சடையையுடையான் பிரமசிரத்தையறுத்தகாரணத்தாற்
பிரமசிரத்தி லிரந்ததனைப்போக்கின முதன்மையுடையோனைப் பெரியபிராட்டிகொழுநனை யுள்ளத்தாற்றியானிப்பதன்றிப்
பரமபதத் தின்பத்தின்மே லாசை பற்றினவுள்ளத்தால் வேறொருகடவுளைத் தியானிப்பதில்லை யென்றவாறு.

வேறொருகடவுளரையென்பது சொல்லெச்சம். ஓகாரம் – எதிர்மறை. இதற்குப் புலவிர்காளென்னு
முன்னிலையெழுவாய் தோன்றாது நின்றதாக விரித்துரைக்க. மதிப்பரே யெனினுமாம். அதற்கு ஏகார மெதிர்மறை.
திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉகடவுள்வாழ்த்துமாம்.

அமுதமடப்பாவையாடகப்போதல்கக்
குமுதங்குமுதங்கொளுந்தீத்–தமியராய்த்
தாழ்ந்தார்தமையன்றித்தண்ணளிமால் *கள்வனிற்பொய்
சூழ்ந்தார்தமைவருத்தாதோ. (625)
இஃ திரண்டாமடி முதன்மடக்கு.

(இ-ள்) அமுதமடப்பாவை – திருமகள். ஆடகப்போது – பொற்றாமரை. அல்கல் – குவிதல்வறுமையெய்தலெனினுமாம்.
குமுதம் – ஆம்பல். குமுதங்கொளுந்தீ – மகிழ்ச்சியெய்துந்தீ. தீ – சந்திரன், தன்னைச் சுடுதலாற் றீயென்றாள்.
தமியராய்த்தாழ்ந்தார் – புமான்களை நீங்கி மெலிந்தார். பொய்சூழ்ந்தார் – பொய்சொல்லவு நினைந்தார்.
தமை வருத்தாதோ – அவர்தமை வருத்தாதோ வருத்திற்றாகில் நமது தலைவரும் வருவர். வாராமையால் வருத்தாதொழிந்த தென்றவாறு.

பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவுகண்டழுங்கல். இதற்குந் தோழீயென்பதனைத் தோன்றாதுநின்றதாக விரிக்க. ஓகாரம் வினா.

சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ
1ழட்டபுயகரத்துளாயிழையார்க்–கிட்டிடைதான்
சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு
மத்திரமோகண்ணென்பவை. (626)
இது மூன்றாமடிமுதன்மடக்கு.- இது அட்டபுயங்கமெனப்படும்.

(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.
சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.

நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர்
மன்கார்வரைமயிற்குமன்னவா–மென்கோங்
கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற்
சுரும்பாநயனத்துணை. (627)
* கள்வன் – திருக்கள்வனூர்.
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்–வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம். (628)
இது நாலாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.
சேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.
வானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.

உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.

நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்–புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர். (629)
இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.
அலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.

மாதவனின்மாதவனின்வன்றாட்டுகளணவு
போதவண்மெய்ச்சாபமதைப்போக்கினளப்–பாதமலர்ப்
பொற்போதிப்பொற்போதிப்பூதலத்திட்டஞ்சலிப்பா
ரிற்போதமிக்கவர்யார்யார். (630)
இது முதலடியும் மூன்றாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாதவனில் – கௌதமபாரியையாகிய அகலிகை. மாதவனின் – திருமகள்காந்தனேநினது. வன்றாள்…
போக்கினள் – வலியதாளிற்பூழியைப் பரிசித்தகாலத்தக் கௌதமனாற் றனதுமேனிக் கெய்திய கற்படிவத்தைப்போக்கின ளாகையால்.
அப்பாதமலர்…………… பூதலத்திட்டு – அந்தத் திருவடித்தாமரைசெய்தபொலிவையேத்திப் பொன்போலுநிறத்தை
யுடையபூக்களை யிப்பூமியிலிருந் தத்திருவடிகளிற் சாத்தி.
அஞ்சலிப்பாரிற் போதமிக்கவர்யார்யார் – தியானித்து வணங்குவாரினும் ஞானமிகுந்தவரில்லை யென்றவாறு.

இன் – நீக்கம். அடுக்கு, துணிவின்கண்வந்தது.
மாதவனில் “மென்மைவரினேளலணனவா” மென்பதனால் லகாரந்திரிந்து னகார மாயிற்று.
மாதவன் – படர்க்கைமுன்னிலையாகிய இடமயக்கத்துவந்த அண்மைவிளி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு–முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம். (631)
இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்…………. மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய
காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான்.
மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை விரும்பின விவளுடையமனமானது.
மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்
போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

ஆயிரம்பெற்றானொருமூன்றைந்துற்றானாதியர்க்கு
மேயமுதல்வனெனுமெய்வேதம்–பாய்திரைப்பா
லாழியானாழியானஞ்சிறைப்புட்பாகனெனுங்
கோழியான்கோழியான்கோ. (632)
இது கடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகிய
சிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும்,
ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளே
பொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு.

மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ – கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி – உறையூர். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

சலராசிமண்மேற்றவறிழையாஞான
மிலராயிலராயினுமா–மலரா
னனத்தானனத்தானருட்குருகூர்மாற
னெனத்தானணுகாதிடர். (633)
இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) தவறிழையாஞானம் – தீங்கினைப்பயவா வுண்மைஞானம்.
இலராயிலராயினுமா மென்பது – ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு.
உம்மை – இழிவுசிறப்பும்மை.
மலரானனத்தானனத்தா னென்பது – தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான் அன்னவாகனத்தையுடையா னென்றவாறு.
அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறின
வரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை – இதுவுமது.

மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத்
தாசரதிதாசரதிதன்னாமந்–தேசுபெறப்
பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ
வீடாதவீடாதன்மேல். (634)
இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாசரதந்தன்னை………. தாசரதி – பரதெய்வங்களைத் துதியாது தன்னைத்துதிப்பதே ஆன்மலாபமாகிய
பெரிய சதிர்ப்பாடென்றறிந்து தன்னிடத் தன்புறுதலைப் பேதையேனாகிய எனக்குந் தரப்பட்ட சதிர்ப்பாட்டையுடையவன்.
சாசரதிதன்னாமம் – தசரதன் பிள்ளையினது திருநாமமாகிய ராம வென்பதனை தேசுபெற……….
பல்கால் – நாவும் மனதும் விளக்கமெய்தப் பலகாலுஞ்சொல்லார், சிந்திப்பதுஞ்செய்யார்.
இவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல் – இவ்வறியாமையுடைய வித்தன்மையோர்க்குச் சரீரம்விட்டகாலத் தழிவில்லாத
பரமபதத்தின்கட் சென்று பேரின்பமெய்துத லெளியதொன்றாகா தென்றவாறு.

உம்மை இழிவுசிறப்பு. ஓகார மெதிர்மறை. துறை – இதுவுமது. இவையாறு மீரடிமுதன்மடக்கு. இனி மூவடி முதன்மடக்கு வருமாறு

வேலைவேலைக்கடுவைவென்றவிழிநீர்ததும்பு
மாலைமாலைப்பணிவார்வண்குருகூர்ச்–சோலைக்
கயலேகயலேகவர்குருகேநீக்க
முயலேமென்றார்க்கேமொழி. (635)
இஃ தீற்றடியொழிந் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) வேலினை, கடலுட்பிறந்த நஞ்சினை வென்றதாமென்று அவர் பாராட்டின விழிகளானவை துன்பநீர்துளிக்கும் மயக்கத்தினை,
திருமாலடிகளைவணங்குவார் வளவிய குருகாபுரியின்கட் சோலைப்பக்கத்து நீரின்கட் கயலைப்பருகாநின்றகுருகேநின்னைவிட்டுநீங்குதல்
உள்ளத்தாலும் முயலுதல்செய்யேமென்று வஞ்சமொழிகூறிப் பிரிந்தவருடன் கூறுவாயாக வென்றவாறு.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – பறவையோடு பரிவுற்றுரைத்தல்.

போதகமுன்போதகமுன்புட்பாகன்பூங்கமல
மாதகலாதெய்துமணிமார்பன்–சீத
மலர்மலர்நீர்ப்பொன்னிமதிளரங்கன்பேர்கற்
கலர்கலருள்வன்பாதகர். (636)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) போதகமுன்பு – கசேந்திரன்முற்காலத்து. ஓதகமுன் – மூலமேயென்றுகூறப்பட்டவாவியினிடத்தெதிர்ப்பட்ட.
புட்பாகன் – கலுழவாகனன். பூங்கமல……………….. மணிமார்பன் – பொலிவினையுடைய குளம்பினொடுங்கூடிய
ஆவினது கூட்டத்தைவளர்ப்பான், திருமூழிக்கள மென்னுந் திருப்பதியையுமுடையான் றீயமக்களுக் கொளிக்குங்
கள்ளத்தையுடையனா மென்றவாறு. எனவே, நன்மக்களை வெளிவந்து காப்பானென்பது பயன். துறை – கடவுள்வாழ்த்து.

பணியும்பணியும்பனிமாமதியா
மணியுமணியுமரற்கும்–பிணிசெய்
தலைதலைதீர்த்தான்சரணமல்லாதேதம்ப
மிலையிலைத்தாரீந்துபுலவீர் (639)
இது நாலடியும் முதன்முற்றுமடக்கு.

(இ-ள்) புலவிர்காள் ! பாம்பையுங் குளிர்ந்த பெரியமதியாய் மேலாக்கஞ்செய்யு மாலையையுஞ் சடைமேற்புனைந்த
சிவனாகிய பெரியோனுக்குந் துன்பத்தைச்செய் தறிவைநடுங்குவித்த பிரமசிரமானதைக் கையைவிட்டு நீங்குவித்தானாகிய
ஸ்ரீமந் நாராயணன்றிருவடிகளல்லாதே, அந்தியகாலத் தறிவுநிலைகலங்கிச்சாய்ந்து பிறவியாகியகுழியிலே
நீர் விழும்பொழுது வீழாதே நும்மைத் தாங்குந்தூண் வேறில்லையாதலா லவன்றிருவடிகளிற்
றுளபமாலிகையைச்சூட்டி வணங்குவீராக வென்றவாறு.

அரற்கு மென்னு மும்மை சிறப்பும்மை. இலைத்தார் – இலைமாலை யாதலால், துளவமாலிகையென்றாயிற்று.
புலவீர் பணியு மெனக்கூட்டுக. திணை – பாடாண். துறை – ஓம்படை ; கடவுள்வாழ்த்துமாம்.
இவை பதினைந்தும் அடிமுதன்மடக்கு.

இனி இடைமடக்கு வருமாறு :-

கயிலாயம்பொன்னுலகம்புரந்தரனும்புரந்தரனுங்
களிக்கமேனா
ளெயிலார்தென்னிலங்கையர்கோன்பஃறலைக்கோர்கணைவழங்கு
மிந்தளூரான்
மயிலாய்மைவரையணங்கேநினதுயிராமேவல்புரி
மயிலைக்காவல்
பயிலாயத்தெழுந்தருளித்துணைவிழியாலுணர்த்தியருள்
பாரிப்பாயே. (640)
இது முதலடியிடைமடக்கு.

(இ-ள்) கயிலாயம் பொன்னுலகம் புரந்தரனும் புரந்தரனுங் களிக்க என்பது வெள்ளிமலையையுந் துறக்கத்தையுந் தமதாகப்புரந்து அரனும்
புரந்தரனுங் களிப்பெய்த என்பதாம். எயிலார்………. கோன் – கோட்டையாற் பெருத்த தெற்கின் கண்ணுண்டாய
விலங்கையிலுள்ளார்க்கு அரசனாகிய விராவணன்.
பஃறலைக்கோர்……. ளூரான். பல தலைகளும் அறும்படிக் கொருவாளிதொட்ட திருவிந்தளூரான்.
மயிலாய்………. பாரிப்பாயே – மயில்களாடப்பட்ட மேகந்தவழும் மலையிலுறையுந் தெய்வமனையாய் !
நினதுயிர்போன்றவளாய் நினதேவல்விரும்புமவளாம் மயில்போலுஞ்சாயலை யுடையாளை நின்னைக்காப்பவரா யிடைவிடாத
ஆயவெள்ளத்தார் கூட்டத்தடைந்து திருக்கண்பார்வையாற் குறிப்பினுணர்த்திக் கருணையை விரிப்பாயாக வென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – தோழியைக் காட்டென்றல்.

புண்டரிகப்பொகுட்டணங்கேமும்மதமாவிருமருப்பிற்
புழைக்கைநீட்டி
யொண்டிறலானொருவனைநம்மகிழ்மாறன்மகிழ்மாற
னுறந்தையோங்கற்
கொண்டலுணின்றிருபிறைநள்ளிடைவருபாம்பெனவளைத்துக்
கொண்டகாலை
மண்டமர்க்கூற்றுவன்கணிச்சியெனத்தடிந்தததனையவன்
வாகைவேலே. (641)
இஃ திரண்டாமடியிடைமடக்கு.

இதனுள், மகிழ்மாறன்மகிழ்மாறனுறந்தையோங்கல் என்பது வகுளமாலிகையையுடைய காரிமாறப்பிரான் மகிழ்ந்து
போற்றும் மாயோன்றனது திருவுறையூர்வரையிடத்தென்பதாம். ஒழிந்தனவுரையிற் கொள்க. பகுதி – நடுங்கநாட்டம். துறையு மது.

பாரெழுதும்படிக்கெழுதாமறைமொழியைத்தமிழ்மொழியாய்ப்
பகர்ந்தமாற
னீரெழுதெண்டிரைப்பொருநைத்திருநாடன்வரையணங்கி
னீர்மைகுன்றாச்
சீரெழுதியெனையெழுதிக்களபமுலைக்களபமுலைத்
தேமென்கோதை
யூரெழுதிப்பேரெழுதிக்கிழிகொடுசீறூர்மறுகே
யுலாவுவேனே. (642)
இது மூன்றாமடியிடைமடக்கு.
இதனுள், களபமுலைக்களபமுலைத்தேமென்கோதை என்பது மான் மதக்குழம்பையுடைய முலையாகிய யானையையும்,
முல்லைமாலிகையினது தேனொடுங்கூடிய குழலையுமுடையா ளென்றவாறு. பார் என்பது உலகின் கண்ணுயர்ந்தோ ரென்றவாறு.
நீர்மைகுன்றாச் சீரெழுதியென்பது பெண்ணினதிலக்கணங்குன்றாத அவயவ அவயவிகளின்பொலிவினை யெழுதி யென்றவாறு.
பகுதி – சேட்படை. துறை – மடலேறும்வகை யுரைத்தல்.

மறைபடுசொற்பொருளினைத்தெற்றெனத்தமிழ்செய்நாவீறன்
மழைதோய்செவ்வி
யுறைபடுதெள்ளறலருவித்துடரிவரையரமகளிர்க்
குவமையாவீர்
நறைபடுசந்தனப்பொழில்சூழ்புனத்திடைவந்தடைந்ததெனி
னவில்வீரொன்னார்
கறைபடுவன்பகழியொடுமன்னாகமன்னாகங்
கதிகற்றாங்கே. (643)
இது நான்காமடியிடைமடக்கு.

(இ-ள்) மறையிடத்துண்டானசொல்லின்கண் மறைந்தபொருளினைத் தெளியும்படிக்குத் தமிழ்மொழியாகச்செய்த நாவீறரது
மேகம் படிந்த பருவத்துப்பெய்யுந் துளிகளாலுண்டான தெளிந்தநீராய்வரு மருவியையுடைய துடரிவரையில்
அரமகளிர்க் குவமையாகப்பட்ட மங்கைமீர் ! முகையவிழ்ந்தபூவிற்றேன் றுளித் தாரவாரிக்குஞ் சந்தனப் பொழில்சூழ்ந்த
நுமதுபுனத்தின்கண் சத்துருக்களைக் கொலைசெய் துண்டான குருதியின்முழுகிய பகழிதைத்ததொடும்
ஒரு அரசுவா ஆக்கம்பெற்ற மலை நடைகற்றதுபோல வந்தடைந்த துண்டெனிற் கூறுவீராக வென்றவாறு.

உவமையாவீரென்றதனாலவர்கள் காந்தியை யுயர்த்திக்கூறினானாம். ஆங்கு என்ற துவமவுருபு. கதி – நடை.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – வேழம்வினாதல். இவைநாலு மோரடியிடைமடக்கு.

இனி யீரடியிடைமடக்கு வருமாறு :-

அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன்
னந்தண்சாரற்
சந்தனப்பூந்துணர்மலிந்தவண்டழையவண்டழைய
தனைக்கொண்டுற்றேன்
சிந்துரவாணுதற்களபப்புளகமுலைத்துவரிதழ்வாய்ச்
செவ்வேலுண்கட்
கொந்தவிழ்பூங்குழலீர்கைக்கொள்வீர்மாரனையடிமை
கொள்வீர்மாதோ. (644)
இது முதலிரண்டடியும் இடைமடக்கு.

இதனுள், அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண் சாரலென்பது-விசும்பின் உச்சியினின்றுமிழிந் தாரவாரிக்கு நீரருவியும்,
யானைத்திரளும் ஆலமரத்தினையலைக்கும் நிலைபெற்ற வடவேங்கட மென்னும் மலைக்கு மன்னன்,
அவனதாம் அழகிய குளிர்ந்த மலைப்பக்கத் தின்கண் ணென்றவாறு.
பூந்துணர்மலிந்த வண்டழைய வண்டழை யதனைக்கொண்டுற்றே னென்பது – பூங்கொத்துக்கள் பரிமளத்தினாற் கூட்டமான
வண்டுகளைத் தன்னிடத்தழைக்கப்பட்ட அழகியவளப் பத்தையுடைய சந்தனத்தழையதனைக் கையுறையாகக் கைக்கொண்டு
நும்மிடத்துவந்தே னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – கருத்தறிவித்தல்.

கதியேபற்றுனர்ஞானக்கண்ணகலாக்கண்ணகலா
காயங்காண்பா
னதியேமுற்றியவரங்கத்திடைதுயிலும்புயல்வரைமே
னயந்துவாழ்நும்
பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீர்நறையீர்மென்
பதுமைபோல்வீர்
மதியேதிங்கினியெனவுந்தெளிகிலனேகுதற்குமொரு
வழிசொல்வீரே. (645)
இது முதலடியும் மூன்றாமடியும் இடைமடக்கு.

(இ-ள்) பேரின்பத்தையுட்கொண்டா ருள்ளக்கண்ணைவிட்டு நீங்காத இடமகன்ற பரமாகாயத்தைச் சென்றுகாணவேண்டித்
திருக்காவிரியாகிய விரண்டாறுசூழ்ந்த அரங்கத்தினடுவே கண்வளருங் காளமேகம்போன்ற திருமேனியையுடைய
அரங்கநாதன்வரையினிடத்து விருப்பத்துடன் வாழுந்தேனோடுங்கூடிய குளிர்ந்ததாமரையாளையொப்பீர் !
இவ்விடத்து நும்முடையபதி யேதென்று கூறுகவென்றனன் கூறுகின்றிலீர்,
இனிமேன் மதி யாதென்றுந் துணிகிலன் ; மீண்டுபோவதற்கொருவழியுங் காண்கின்றில னென்றவாறு
னறையீர்நறையீரென்பதனைப் பாடமாற்றி ஒற்றைப் பெயர்த்து அறையீரெனக்கூட்டுக.
இதனுள், கதியேபற்றினர்ஞானக்கண்ணகலாக் கண்ணகலாகாயமென்பனமுதலாக அரங்கத்திடைதுயிலும்
புயல்வரைமே னயந்து வாழ்நும் பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீ ரென்பன வீறாக நோக்கென்னும் யாப்புக்காலெனக்கொள்க ;
என்னை “மாத்திரை முதலாவடிநிலைகாறு, நோக்குதற்காரணநோக்கெனப்படுமே” என்றாராகலின்.
அஃதே லிதனுள் நோக்கிக்கொள்ளக்கிடந்தமை யாதோவெனின், பேரின்பத்தைவிரும்பினார் ஞானக்கண்ணை விட்டு
நீங்காத பரமாகாயத்தை யவர்சென்று காணவேண்டிப் பரமகிருபையால் வெளிவந் தரங்கத்திடைக் கண்வளரும்
அவன்வரையிடத்து விருப்பத்துடன்வாழுந் தாமரை யாளைப்போல்வீரென்றதனால், அவன்வரையிலிருந்தும் யான்விரும்பிய
நுமது சீறூரை யெனக் குரைக்கின்றிலீ ரென்னதறுகண்மையோ என்பது நோக்கிக்கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
ஏகாரமிரண்டனுள், முன்னையது பிரிநிலை. ஏனைய தீற்றசை. ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பதிவினாதல்.

வயற்கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையேகொழுநனையே
மகிழ்நன்மாதர்
கயற்கருங்கண்ணெனமலராமுனங்களைகட்டெறிதிருக்காட்
கரைமால்வெற்பிற்
செயற்கரியதிருவுருவாலுயிர்கொல்லிப்பாவையராய்ச்
சிறந்தீருங்க
ளியற்பெயர்யாதெனவினவியதைமொழியுமொழியுமிகழ்
வதனைமன்னோ. (646)
இது முதலடியும் ஈற்றடியும் இடைமடக்கு.

இதனுள், கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையே கொழுநனையே மகிழ் நன்மாதர் என்பது செங்கழுநீரினது
மிக்க அழகினையுடைய மாட்சிமைப்பட்ட கொழுவியபூமுகையைத் தங்கள்புமான்களை விரும்பு நல்ல கடைசிய ரென்றவாறு.
கொழுநனையேயென்பது தேற்றேகாரம் ; பிரிநிலையுமாம்.
கொழுநனையேவிரும்பும்மாதர் கொழுவியநனை மலராமுன்னங் களைகட்டெறியென்றது இறைச்சி. என்னை?
முகையாய்நிற்பதன் மலர்ந்தா லிவை யெமது கண்ணுக் குவமையா யெமது கொழுநற்கு விருப்பத்தைக்
கொடுக்குமென்னு மாற்சரியத்தாற் களைகட்டெறிந்தா ரென்னுங் குறிப்புப் பொருட்புறத்ததாய்நிற்றலானெனக்கொள்க.
அதன்றெனில். கண்ணெனமலராமுன்னங் களைகட்டெறிந்தாரென்பது பயனில்கூற்றாம்.
சிறப்புப்பெயர் கொல்லிப்பாவையென்பது செய்தற்கரிய வுமது அழகிய வடிவினாலறிந்தேம். அறியாத இயற்பெயரை மொழியும் ;
எம்மையிகழ் வதனை யொழிவீராக வென்றவாறு. செயற்கரியதிருவுரு – எழுதுதற் கரியதிருவுரு.
பகுதி – இதுவுமது. துறை – பெயர்வினாதல்.

பூந்துளபம்புனைதிருமால்பொன்னியினுட்பொறியரவிற்
புயல்போல்வண்ணந்
தோய்ந்து துயில்பயிலரங்கேசனைத்தொழுமாறன்றுடரித்
தோகைபோல்வீர்
வாய்ந்தவனப்பல்குலுக்குத்தனக்குவடுதனக்குவடு
வகிராமுங்க
ளேந்தெழிற்கட்புலங்கொளநின்றிடையேதங்கிடையேதங்
கியம்புவீரே. (647)
இது கடையிரண்டடியும் இடைமடக்கு.

(இ-ள்) வாய்ந்தவனப்பல்குலுக்குத் தனக்குவடுதனக்குவடு வகிராமுங்கள் என்பது வனப்புவாய்ந்தவெனப் பாடமாற்றி
அழகுவாய்ந்த அல்குலுக்குந் தனமாகிய மலைதனக்கும் வடுவகிர் நிகராகியவுங்கள் என்றவாறு.
ஏந்தெழிற்கட்புலங்கொள என்பது உயர்ந்த அழகினையுடைய கட்புலனாக என்றவாறு.
இடையேதங்கிடையேதங்கியம்புவீரே என்பது இரண்டிற்குநடுவே குடியிருக்கும் மருங்கான தெது தானவ்விடத்தென்று
வினவுவேற் கிதுவென்று சொல்லுவீராக வென்றவாறு.
எனவே, எனது கண்ணிற்குப் புலப்படுவதின்றென்பது போந்தபொருள். பகுதி – இதுவுமது. துறை – இடைவினாதல்.

உரையார்ந்ததொகைப்பனுவன்முழுதுணர்ந்துமுலகியலொன்
றுணராதார்போல்
வரையாதுமறைபுரிகோமானினைவுமானினைவு
மனத்துணாடி
விரையார்நன்பசுந்துளபத்திருமாலைத்திருமாலை
வில்லிபுத்தூர்த்
திரையாடைப்புவிமகடன்கோமானைவணங்கலரிற்
றிகைக்கின்றேனே. (648)
இஃ திடையிரண்டடியு மிடைமடக்கு.

இதனுள், கோமானினைவுமானினைவுமனத்துணாடி என்பது தலைவனே ! உனதுள்ளத்துநினைவும், எனது மான் போலும்
விழியினை யுடையாண்மனத்துணினைவும் எனதுமனத்துட்குறித்து என்றவாறு.
துளபத்திருமாலைத்திருமாலை வணங்கலரிற் றிகை்கின்றேனே என்பது துளபமாகிய அழகியமாலையையுடைய
திருமகளோடுங்கூடிய மாயோனை வணங்காத் தீயமக்களைப்போல யான் மனமறுகாநின்றே னென்றவாறு.
உலகியலொன்றுணராமை-உலகநடை சிறிதுமறியாமை. மறைபுரிதல் – வரைந்துகொள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கவிரும்புதல்.
பகுதி – பகற்குறி. துறை – வருத்தங்கூறி வரைவுகடாதல்.

மீனமாதியவாயவவதாரம்புரிந்தருண்மால்விண்ணோர்போற்றும்
வானமாமலைவளர்சீவரமங்கைவரமங்கைமார்நீரென்றான்
மோனமாயிருந்ததனாற்பயனேதுவிருந்தினர்க்குமுகமன்கூறி
யீனமாகியவுறுநோய்களைகண்ணாங்களைகண்ணாங்கியற்றிலீரே. (649)
இஃ திரண்டாமடியு மீற்றடியு மிடைமடக்கு.

இதனுள், சீவரமங்கை வரமங்கைமார் நீரென்றா லென்பது சீவர மங்கையென்னுந்திருப்பதியிற் சேட்டமாகிய மங்கைப்
பருவத்து மடந்தையரையொப்பீரென் றுலகினுள்ளா ரும்மைக் கூறுவராயின் என்பதாம்.
பருவம் பெதும்பையராயினும் வியப்பினான் மங்கைப்பருவத் துள்ளாரையொப்பீ ரென்றான். மோனம் – மௌனம்.
நோய்களைகண் ணாங்களைகண்ணாங்கியற்றிலீ ரென்பது காமமாகியபிணியைக்களையுங் கருணையாங் காவலை நீர் செய்கிலீ ரென்றவாறு.
ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – மதியுடன்படுதல். துறை – மொழிபெறாதுவருந்தல். இவையாறு மீரடியிடைமடக்கு.

இனி மூன்றடியிடைமடக்குவருமாறு :-

இருங்கணையின்றிவணுறிவர்தனுவேட்டைதனுவேட்டை
யிசையாதெவ்வுள்
வருந்திருமால்பனிவரைமேற்காவியங்கண்காவியங்கண்
மதியுட்கொண்டோ
ரொருங்குபுகழ்வதற்கரிதாமாதினைமாதினைக்காவ
லுவந்தாளென்கை
பொருந்துவதன்றிருவருந்தம்முட்காதன்மதர்நோக்கிற்
புகல்கின்றாரே. (650)
இஃ தீற்றடியொழிந்த வேனைமூன்றடியு மிடைமடக்கு.

(இ-ள்) இவ்விடத் திப்புனத்துற்றவிவர்கையிற் பெருமையுடைய கணையு மில்லை, இவர்யாக்கையுந் தளர்ச்சியுடையது,
ஆகையா லிவர் வில்வேட்டையும் பொருந்துவதன்று ; இஃதன்றி, இந்த மாதராளைப் பெரியு தினைக்காவல்
வரும்பினாளென்கையு முண்மையன்று, இவள் நீலோற்பலம்போன்றகண்களைப் பலகாப்பியங்களையு முணர்வினாலுட்
கொண்டோரெல்லாங்கூடியும் புகழ்தற்கரிதாம் ; இருவருமொருவ ரொருவர்மேலுள்ளவுள்ளக்காதலைக் கண்களாலுரைக்கின்றனரென்றவாறு.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – இருவர்நினைவுமொருவழியுணர்தல்.

சுனையுணீனிறநாண்மலர்நாண்மலர்தொறுந்துணர்தெகிழ்ந்துக்க
நனையுண்மூழ்கியபலவினின்சுளையினைநாங்கைமால்வரைக்கிள்ளை
யனையபேடைவாயருத்தியினருத்தியின்புறுநிலையதுகண்டோர்
நினைகலானழுங்காற்றலையாற்றலைநினதுகண்ணுறின்மானே. (651)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) சுனையுணீனிற……….. தொறும் என்பது சுனையின்கண் ணுண்டாவதாய நீலமணியினொளியு முவமைக்கு
நாணும் நீலோற்பலம் பக்குவம்வந்து மலருந்தொறும் என்றவாறு.
துணர்தெகிழ்ந்து………. கிள்ளை என்பது அகவிதழ்நிறைந்தொழுகிய தேனின்கண், கரைசார்ந்த சோலைப்புறத்து
வீசுகொம்பர்நின்று மளிந்துவீழ்ந்து நனைந்த பலவி னினியசுளையைத் திருநாங்கைமாயோன்வரையிற் சேவற்கிளியானது என்றவாறு.
அனையபேடைவாய்….. கண்டு என்பது தனதுயிரனைய பெடைவாயி லன்பினாலருத்தி யின்பமெய்து நீதியைக் கண்டு என்றவாறு.

ஓர்நினைகலான்……………… மானே என்பது ஒருவராலுநினைத்தற்கரிய பெருமையானொருவ னிரங்கு மிரக்கத்தின்
மிகுதியை நினது கண் காணி னாற்றுவாயல்லை, மான்போலுங்கண்ணினையுடையா யென்றவாறு.
ஒருவராலு மென்பதும், உயிரென்பதும், பேடையென்பதனாற் சேவலென்பதும் வருவிக்கப்பட்டன.
பகுதி – குறைநயப்பித்தல். துறை – விரவிக்கூறல்.

மாமடந்தைகுடிபுகுந்தவன்பிலுறுமன்பிலுறுமாயோன்வெற்பிற்
காமருவண்டினமேநீர்தாந்தாந்தாந்தாமெனவாழ்கமலவைப்பிற்
பூமடந்தைமுகமலர்போன்றொருகமலத்திருகுவளைபூத்தவாகத்
தாமருவிக்குமுதமும்வெண்முல்லையுமுல்லையுமுளவோசாற்றுவீரே. (652)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) மாமடந்தைகுடிபுகுந்த வன்பிலுறுமன்பிலுறு மாயோன் வெற்பில் என்பது பெரியபிராட்டிகுடிகொண்ட
அன்பிலென்னுந்திருப்பதியின் மிக்க அன்பிலெய்திய மாயவனதுவெற்பில்வந்த என்றவாறு.
காமருவண்டினமே………. கமலவைப்பின் என்பது அழகிய வண்டுகாள் ! நீங்கடாம் தாந்தாந்தாமென்ற பாட்டோடும்
வைகும் மருதநிலத்தின் கண்ணேயுள்ள தாமரையோடையின்கண் என்றவாறு. பூமடந்தை…………… சாற்றுவீரே என்பது
இந்தப் பூமகள் முகத்தாமரையையொப்பதா யொருதாமரையினிடத் திரண்டுகுவளை பூத்தனவாக நிலைபெற்று
மவற்றுட னொருசேதாம்பலும் முல்லையரும்பும் முல்லையாகியபண்ணுங் கண்ணிற்
கண்டனவுஞ் செவியாற்கேட்டனவு முளவாகிற் சொல்லுவீராக வென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – வண்டொடுநன்னய முரைத்தல்.

உருவளர்மாத்தினமகலத்துறுதிறத்திற்பயோதரங்க
ளொருங்குதோய்ந்து
பொருவருநன்பரிமளங்கூர்வனமாலைவனமாலை
பொருந்திச்செய்ய
பருதியுடன்பனிமதியுமிருபாலுமிருபாலும்
பயின்றுதோன்றுந்
திருநெடுமால்பொருவருமிவ்வடமலையும்வடமலையு
முலைச்செந்தேனே. (653)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) முத்துவடங்கிடந்தசையுமுலையொடுங்கூடிய தேன்போலு மொழியினையுடையாய் !
ஒளிதழையாநின்ற பெரியபிராட்டி நாளுந் திருமார்பிற் குடிகொண்ட கூறுபாட்டால் அவளது திருமுலைச்சுவடுகளைத் தழீஇயதுடன்,
ஒப்பில்லாமணத்தைப்பெருப்பித்துக்காடாகிய வியல்பையுடைய துளபமாலையையும் பொருந்தி, செம்மையுடையநேமியாகிய
ஆதித்தனுடன் பாஞ்சசன்னியமாகிய குளிர்ந்த மதியையும் வல மிட மென்னு மிரண்டுபக்கமுந் தரித்திருக்குமுறையும்
இடைவிடாத தோற்றப்பொலிவுண்டாந் திருவொடுங்கூடிய மாயோனையொக்கும் ;
சினையோடும்வளராநின்ற மாமரத்தின்கூட்டந் தன்னிடத்துற்ற கூறுபாட்டோடுங் காளமேகங்க ளொக்கத் தவழ்தல்பொருந்தியும்
ஒப்பில்லாத நல்ல மணத்தைப்பெருக்குங் காடாகிய வியல்பையுடைய துளபமாலைபொருந்தியும்,
ஆதித்தனுடன் சந்திரனும் இரண்டுபக்கமுமிருக்குமுறையும் பொருந்தியுந் தோன்றுமிவ் வடவேங்கடமாகிய மலையு மென்றவாறு.
இதனுள் வனமாலைவனமாலை யென்பது அத்தச்சிலேடை. பருதியும் பனிமதியுமென்பது மாட்டேறில்லா வுருவகம்.
ஒழிந்தன சத்தச்சிலேடை. பகுதி – குறைநயப்பித்தல். துறை – அறியாள்போறல்.

முளைநிலாவினைநேர்நுதனேர்நுதன்முகிணகையணைமென்றோ
ளிளையளாமிவட்கேமமேமமதுறவேதிலரணிவானற்
கிளையினீண்டினர்கேளினிக்கேளினிக்கெழுதகையுறல்வேண்டிற்
களைகணானிறைகடிநகர்க்கடிநகர்காணமன்விரைவாயே. (654)
இது நான்கடியும் இடைமுற்றுமடக்கு.

(இ-ள்) இளம்பிறையை யுவமை குறிக்கப்பட்ட சிறியநுதலினையும், முல்லைமுகைபோன்ற பல்லினையும்,
அணை போன்ற மெல்லிய தோளினையும், இளமைத்தன்மையையு முடையளா மிவளுக்குப் பொன்னை யின்பமுற
வணிவான் அயலவர் மகட்பேசித் தமரொடு மெமதுமனையிடத்துக் குழுமின ராகையா லினிக் கேட்பாயாக மன்னனே !
உனது சுற்றத்தோடும் எம்மோடுண்டாகிய இந்த நட்பு மிகுதல்வேண்டினையே லுலகத் துயிர்கட்குக் காவலாகிய
இறைவனாம் மாயோன் திருக்கடிநகரிடத்துத் திருமணம் நகரிலுள்ளார்காண அயலவர்க்குமுன்னே
யிவளை வரைந்து கொள்வான் விரைவாயாக வென்றவாறு.
நேர்நுதல் – சிறுநுதல். “சிறுநுதற்பேரமர்க்கட்செய்யவா” யென்றார் பிறரும்.
பகுதி – உடன்போக்கு. துறை – மகட்பேச்சுரைத்தல். இவை 15-ம் இடைமடக்கு.

இனி அடியிறுதிமடக்கு வருமாறு :-

கூன்பிறையவெண்கோட்டிற்கொன்னாகங்கொன்னாகந்
தான்பதைத்துமூலமெனத்தாழாதுதவியமால்
வான்புகழுந்தென்னாகைமானனையீர்வண்டழையிங்
கேன்புரிந்துகொள்ளாதிருப்பதிசைப்பீரே. (655)
இது முதலடியிறுதிமடக்கு.

இதனுள், கூன்பிறைய வெண்கோட்டிற் கொன்னாகங் கொன்னாகந்தான்பதைத்தென்பது வளைந்த பிறைபோன்ற
வெண்கோட்டினாற் கொல்லும் யானை பெரியவுடம்பு நடுக்கமுற்று என்பதாம். தான் – அசை.
மூல,,,,,,,,,மால் என்பது மூலமென்றுகூறத் தாமதியாதுதவிய மாயோ னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – சேட்படை. துறை – தழைகொண்டுசேறல்.

தோலாதநேமிமுதலைம்படையுஞ்சூழ்ந்திறைஞ்சப்
பாலாழியுட்டுயில்கூர்பன்னகத்தான்பன்னகத்தான்
மேலாமவுணனுரங்கிழித்தவிண்ணகரான
காலானதென்றலைமேல்வைத்துக்களித்தேனே. (656)
இஃ திரண்டாமடியிறுதிமடக்கு.

இதனுள், பன்னகத்தான் – பாம்பணையான். பன்னகத்தான் மேலாமவுணனுரங்கிழித்தான் என்பது பலநகங்களால்
வெற்றியான் மேம்பட்ட விரணியனுரத்தமார்பைப் பிளந்தா னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

சூழித்தறுகட்கடாயானைதோலாத
பாழிப்பகுவாயிடங்கரின்கைப்பட்டநா
ளாழிப்படையுடன்சென்றாளரியையாளரியைக்
காழித்திருமாலைக்கண்டுட்களித்தேனே. (657)
இது மூன்றாமடியிறுதிமடக்கு.

இதனுள், ஆளரியையாளரியை…………… களித்தேனே என்பது ஆண்ட அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
நரனுஞ் சிங்கமு மானானை, சீகாழியில்வாழுந் திருமாலைக் கண்களாற்கண் டுள்ளங்களித்தே னென்றவாறு.
துறை – கடவுள்வாழ்த்து.

அண்ணாந்தெழுந்ததுணைமுலையார்க்காருயிர்தங்
கண்ணாங்கொழுநரெனுங்கட்டுரைகேட்டுற்றுணர்ந்துந்
தண்ணார்வகுளத்தமிழ்மாறர்க்கன்பிலர்போன்
றெண்ணாதகன்றனராலென்சுகமேயென்சுகமே. (658)
இது நாலாமடியிறுதிமடக்கு.

இதனுள், என்சுகமேயென்சுகமே என்பது எனக்கு என்னுடைய கிளியே ! என்னமகிழ்ச்சியுள்ள தென்றவாறு.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – பறவையொடுபரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யிறுதிமடக்கு. இனி ஈரடியிறுதிமடக்கு வருமாறு :-

மூன்றாயமைந்ததொழின்முன்னானைமுன்னானை
தான்றாழ்தடத்தழைத்தசங்கரியைச்சங்கரியைத்
தோன்றாதிடத்தமைத்தசூழ்ச்சியனைத்தொல்லைநா
ளீன்றானையீன்றானையென்னுளத்தேவைத்தேனே. (659)
இது முதலிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) சிருட்டி திதி சங்காரமென்று தன்னாலமைக்கப்பட்ட மூன்றிற்கு மங்கங்கு முன்னாயிருக்கப்பட்டவனை,
முதலைமுன்னானயானை தா னாழ்ந்ததடத்துநின்று மூலமென்றழைத்த சங்கினையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
உமையை வேறுபட்டுத்தோன்றாது தனதிடப்பாகத்தடக்கின விசாரத்தையுடைய அரனை
முற்காலத்தீன்ற பிரமனையீன்றவனை முத்தியளிக்கவல்ல பிரமமென வுட்கொண்டே னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கோதறவில்வாங்கியுடக்குஞ்சரத்தாற்குஞ்சரத்தாற்
கேதமிழைத்தவிராவணியையன்றுதவ
சாதனத்தாற்கொன்றபிரான்றம்முன்னைத்தம்முன்னைப்
பாதகந்தீரப்புகழ்வார்பாதம்பணிந்தேனே. (660)
இது முதலடியும் மூன்றாமடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) குற்றந்தீரத் தனுவைக் கைக்கொண்டு தொடுக்கும் அம்பினால் ஐராவதப்பாகனான இந்திரனுக்கு மானபங்கத்தை
யுண்டாக்கின இந்திரசெயித்தை, முற்காலத்துத் தவசரிதையாற்கொன்ற இலக்குமண னென்னு மெனது
சுவாமிக்குத் தமையனை, யாவரேயாயினுந் தங்கள் கழிபிறப்பிற் பாவந்தீரப் புகழாநின்றார்
அவர்பாதத்தை யெனதுபிறவித் துன்பம்நீங்க வணங்கினே னென்றவாறு. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

பொன்பொற்றிலங்குமலர்ப்பூவையேபூவையே
மன்பொற்றிருமேனிமாயோன்வடமலைமேன்
மின்பொற்றொடித்தடக்கைகூப்பாதவீறென்னோ
நின்பொற்றிருநுதற்குநேர்மதிக்குநேர்மதிக்கும். (661)
இது முதலடியும் ஈற்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், மலர்ப்பூவையேபூவையே மன்பொற்றிருமேனி என்பது தாமரையிலிருக்குந் திருமகளையொப்பாய் !
காயாம்பூவையொத்த மிக்க பொலிவினையுடைய திருமேனி என்றவாறு. நின்பொற்றிருநுதற்கு நேர்மதிக்கும் நேர்மதிக்கும் என்பது
உனது அழகியநெற்றிக் குவமை குறிக்கும் நேரிய பிறைக்கு மென்றவாறு ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – நாணநாட்டம். துறை – பிறைதொழுகென்றல்.

அந்தமுதலாயமைந்தானையெம்மனோர்
பந்தமறுத்தாள்பரனைச்சுமித்திரைதன்
மைந்தனொடுங்கான்போந்தமாதவனைமாதவனை
யெந்தையையல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே. (662)
இது கடையிரண்டடியும் இறுதிமடக்கு.

இதனுள், மாதவனைமாதவனை என்பது திருமகள்காந்தனை, பெரிய தவசரிதையுடையானை யென்றவாறு.
எந்தையை – எம்முடைய சுவாமியை. அல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே என்பது அவனை யன்றி
வேறு பரப்பிரம முண்டென்றுகூறா தென்னுடையநா வென்றவாறு. ஏகார மிறுதிய தீற்றசை. துறை – கடவுள்வாழ்த்து.

தாவாதபேரின்பஞ்சார்வதற்குச்சிற்றின்பத்
தேவாமலென்னைமதனெய்யாமையெய்யாமை
மாவாதனைமறந்துவாமனனேவாமனனே
தேவாதிதேவனெனச்சந்ததமுஞ்சிந்தித்தே. (663)
இஃ திடையிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) என்னைமதனெய்யாமையெய்யாமை என்பது என்னைக் காமன் சிற்றின்பத்திலேவேண்டிமூட்ட
என்மேற் பஞ்சபாணங்களை யிடைவிடாமைத் தொடுத்திடாமல் என்றவாறு.
வாமனனே………………….. வாமனனே என்பது வாமனாவதாரமாகிய நாராயணனே தேவர்க்கெல்லாம் முதலான
தேவனென அனவரதமுஞ் சிந்தித்துக் கழிந்தபிறப்பிலு மிப்பிறப்பிலு முண்டான பொல்லாத வாதனைகள்யாவும் மறந்து
என்னோ டொத்துவா என்னுடையமனனே ! என்றவாறு.
திணை – காஞ்சியைச் சார்ந்த பொதுவியல். துறை – பொருண்மொழிக்காஞ்சி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்தெனினு மாம்.

காண்டகுபொற்பூமடந்தைநற்பாரிகண்ணன்பே
ராண்டபழம்பதியுமந்தாமமந்தாமங்
கூண்டளிபண்பாடுதுழாய்கூராழிகைவலத்தே
பூண்டதவன்சீருளத்தேபூரியார்பூரியார். (664)
இது நாலாமடியும் இரண்டாமடியும் இறுதிமடக்கு.

இதனுள், ஆண்டபழம்பதியும்………. துழாய் என்பது அவன்புரந்த தொன்மைப்பதமாவது பரமபதம்,
அழகிய மாலையாவதும் வண்டுகள் தேனையுண்டு பண்களைப்பாடும் வனமாலையாம் என்றவாறு.
அவன்சீ ருளத்தேபூரியார் பூரியார் என்பது அவனதாந் திருமேனியிற்காந்தியைத் தீயமக்கள் உள்ளத்தாற் றியானித்து
அகத்தே நிறையா ரென்றவாறு. எனவே யெப்படியீடேறுவ ரென்பது குறிப்பு. திணை – பாடாண்.
துறை – புகழார்ப்பழித்தல் ; கடவுள்வாழ்த்தெனினு மாம். இவையாறும் ஈரடி யிறுதிமடக்கு.

இனி மூன்றடியிறுதிமடக்கு வருமாறு :-

முன்னிலங்கொள்ளாதபிலமுன்பரையுமுன்பரையுந்
தன்னரனாலீந்தவரந்தாவுறவேதாவுறவே
மன்னிலங்கேசன்முதலாமைந்தரையுமைந்தரையு
மின்னுயிருண்டான்குணங்கற்றின்பம்பயின்றேனே. (665)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) மன்னிலங்கேசன்முதலா மைந்தரையு மைந்தரையும் என்பது இராவணன்முதலாய மிடுக்குள்ளாரையும்,
அவர்கள்புதல்வரையும் என்றவாறு ; முன் னிலங்கொள்ளாத பிலமுன்பரையு முன் பரையுந் தன்னரனாலீந்தவரந் தாவுற
வேதா வுறவே என்பது முன்னாளிற் பூமி யிடங்கொள்ளாத பாதாலத்தின் மூலபெலப்படையாய்வந்த வலியுடை யாரையும்
முன்னா ளுமை தனதுபுமானான சிவனாற்கொடுப்பித்த வரமும், பிறர்கொடுத்தவரமும் அழிவுறப் பிரமாவும்
பேராண்மையிருந்தபடியோ வென்று மனத்திலே விசாரிக்க என்றவாறு ;
இன்னுயிருண்டான்……………. பயின்றேனே என்பது அவர்க ளினியவுயிரையுண்ட தெசரதராமன் கலியாண
குணங்களைக் கூறிப் பேரின்பமெய்தினேன் என்றவாறு. திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

கண்படையுண்கண்சிறிதுங்கண்ணகன்றகண்ணகன்றவ்
வொண்பொருள்செய்வார்பிரிவினுண்ணிறையுமுண்ணிறையும்
பண்புறநில்லாதினியீங்கென்செய்வேன்பாமாறன்
றண்பொருநைத்தண்டுறைவாழ்தாராவேதாராவே. (666)
இது கடையயலடி யொழிந்த வேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) பாமாறன்றண்பொருநை……………… தாராவே ! என்பது திருவாய்மொழியாகிய பனுவலைச்செய்த காரிமாறப்
பிரான்பொருநைத் தண்டுறையினிடத்துத் தாராவாகியபறவையே ! என்றவாறு.
கண்ணகன்ற……….. பிரிவின் என்பது இடம்விரிந்தநாட்டின்கணீங்கிச் சுத்ததிரவியத்தை யீட்டவேண்டிப் பிரிந்தார்பிரிவினால் என்றவாறு ;
உண்ணிறையுமுண்ணிறையும் பண்புறநில்லாது என்பது என துள்ளத்து ணிறைந்ததொன்றாய மகளிர்க்குச்சிறந்ததென
வுலகம் விசாரிக்கப்பட்ட எனது நிறையானதும் எனது குணத்தின்வழி நில்லாது ; அதுவேயுமன்றி என்றவாறு ;
கண்படை யுண்கண் சிறிதுந் தாரா என்பது எனது மையுண்கண்களானவை கணப்பொழுது முறங்குவதுஞ் செய்கின்றில என்றவாறு.
இனி யீங்கென்செய்வேன் என்பதுமே லிவ்விடத் தியான்செய்வது யாதுதா னென்றவாறு.
இது கொண்டு கூட்டுப்பொருள்கோள். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவை யொடுபரிவுற்றிரங்கல்.

பாழிமருப்பேனமதாய்ப்பாரிடந்தான்பாரிடந்தான்
சூழியல்புற்றாடுபுலித்தோலுடையான்றோற்றஞ்சால்
காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக்கண்டகனை
யூழறக்கொன்றானகர்பூந்தேனிலுறையூருறையூர். (667)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஏனமதாய்ப் பாரிடந்தான்-வராகமாகிப் பூமியை யுழுதெடுத்தான்;
பாரிடந்தான்…….. தோற்றஞ்சால் – பூதகணங்கள் சூழுமியல்புபொருந்தச் சுடுகாடரங்காக நடஞ்செய்யும்
புலித்தோலுடை யுடையானது
தோற்றஞ்சான்ற காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக் கண்டகனை யூழறக்கொன்றானகர் – மிகவுந்திண்ணியகயிலையை
யெடுத்த விராவணனாகியபாதகனைச் செருக்களத்துக்கண்டு திருவுள்ளத் திரக்கத்தின் முறையின்றிக் கொன்றவனது
நகரமானது பூந்தேனிலுறையூருறையூர் கோட்டிலுங் கொடியிலு நீரிலுமுண்டாகிய பூவிற்றேன்றுளி திசைதிசை
பரக்குந் திருவுறையூரா மென்றவாறு. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து கடவுள்வாழ்த்துமாம்.

ஏற்றமாம்வெள்ளோதிமத்தான்மழவிடையூர்
தோற்றமார்வெய்யபுலித்தோலுடையான்றோலுடையான்
போற்றவாழ்வுற்றவிருப்புள்ளேறுபுள்ளேறு
மாற்றலானன்பிலார்க்கன்பிலானன்பிலான். (668)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், புலித்தோலுடையான் றோலுடையா னென்பது புலியினதுதோலை யுடையாகவுடையானும், ஐராவதத்தையுடையானும் என்பதாம்.
விருப்புள்ளேறுபுள்ளேறு என்பது தன்னிடத்தன் புள்ளத்து மிகும் கருடனிலேறும் என்பதாம் ;
அன்பிலார்க்கன்பிலானன்பிலான் என்பது தன்னிடத் தன்பிலாரிடத் தன்பிலாதா னவன்யாவனெனி லன்பிலென்னுந்திருப்பதியின் மாயோ னென்பதாம்.

எனவே அயனும் அரனும் இந்திரனும் பரவும்படிக்கு வாழ்வுபெற்ற கருடவாகனத்திலேறும் பெருமையையுடையான்
அவன் யாவனெனில் அன்பிலாதாரிடத் தன்பிலாதான், அன்பிலென்னுந், திருப்பதியின் மாயோன்;
அவனுக்கன்புசெய்வீராயிற் புலவீர்காள் ! நுமக்கு முத்தி பெறலாமென்பது குறிப்பு. திணை – வாகை. துறை – பொருளொடு புணர்தல்.

வாமவெங்கதிர்மண்டிலமண்டில
நாமநேமியினான்மறைநான்மறைப்
பூமன்றந்தையொண்பொற்கழற்பொற்கழற்
காமன்பாரடிப்போதென்றலைத்தலை. (669)
இது நான்கடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஆதித்தன்மண்டிலத்தை வட்டத்திருவாழியான் மறைக்கப் பட்டவன், நாலுவேதத்தையு மோதியுணர்ந்தவனாந்
தாமரைப்போதிற் பிறந்த பிரமனுக்குப் பிதா, அவனதாம் பொன்னின்வீரக் கழல்புனைந்த பொலிவினையுடைய
திருவடிகளிடத்துண்டாம் அன்புடையார் திருவடித் தாமரைப்பூவை எனதுசிரத்தின்கட்புனைந்தே னென்றவாறு.

கழற்கு என்பது ஏழாவது நான்காவதாயிற்று. மண்டிலம் ஆதித்தன்மண்டலத்திற்கும், வட்டத்திற்கும்பேர்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பணிதல்.

இவை பதினைந்தும் அடியிறுதிமடக்கு. ஆகமடக்கு-45.
இவை நாற்பத்தைந்து மோரடியு மீரடியு மூவடியு நாலடியுமாகி யடிதோறு மோரிடத்தைமடக்கியது.

இனியடிதோறு மீரிடத்தனவா மூவகைமடக்கினுள் முதலொடிடைமடக்கு வருமாறு :-

கட்காவிகட்காவிநைவதும்வண்டிமிர்காமன்காமன்வாளிக்
குட்காநைவுறுநிறையுமுற்றுணர்ந்துமுறுதியெனக்குறுகிலீராற்
புட்காமன்வடமதுரைப்புரிகுழலீர்காமவலையுள்புக்காழ்ந்து
மட்காநின்றதற்குறுதிப்புணைமடலென்றேயுளத்தேமதிக்கின்றேனே. ()
இது முதலடி முதலொடிடைமடக்கு.

இதனுள், கட்காவிகட்காவிநைவதும் என்பது கண்ணாகியசெங்கழு நீர்களுக் கெனதாவி வருந்துவதும் என்பதாம்.
காமன் காமன்வாளிக்கு என்பது காவினிடத்து நிலைபெற்ற காமன்பஞ்சபாணங்களுக்கு என்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – மடல். துறை – தன்றுணி வுரைத்தல்.

அலையோடுயர்பாற்கடல்கடைந்தானன்பிலனையீர்திருவயிறா
லிலையோவிலையோவிடைநினைவிங்கென்னோவென்னோவறியீர்போன்
மலையோமுலைவாணுதல்சிலையோமையுண்கருங்கட்குவளையுள்வன்
கொலையோகுடிகொண்டதுசிறிதுங்குடிகொண்டிலவோகருணையுமே. ()
இஃதிரண்டாமடி முதலொடிடைமடக்கு.

இதனுள், வயிறாலிலையோ விலையோவிடையென்பது நுமது அழகிய வயி றாலினிலையோ இடையென்னுமுறுப் புமக்கில்லையோ என்பதாம்.
நினைவிங்கென்னோ வென்னோவறியீ ரென்பது இவ்விடத்து நுமது விசாரம் யாதோ? எனது காமப்பிணியையுந் தெளிகிலீர் என்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. பகுதி -……. துறை-இடைவினாதல்.

இரவிற்குப்படருழந்திவ்விரவொழிப்பாயெனவிரங்கியிடதுபாகம்
புரவிற்குங்களிவரவன்றிரப்பொழித்ததுறிலரங்கபொருணீயன்றே
கரவெற்புக்கரவெற்புக்கவினணியான்கங்கையன்கங்கையனாமந்த
வரவெற்பன்மலரயனுமகிழ்ந்திடச்சென்றுதவியதூஉமதிக்குங்காலே. ()
இது மூன்றாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) பிரமசிரத்திலிரந்ததற்குத் துன்பமிகுந் தவ்விரப்பினைத் தவிர்ப்பாயாக வென்று சிவன்வேண்டற்குக் கருணைகூர்ந்து,
அவனதிடப் பாகத்தை யச்சிவன்கொடுப்பத் தனதாகவாண்ட அவன் பாரியா முமைக்கும் மனத்துட்களிப்புண்டாக
முற்காலத் தவ்விரப்பைத் தவிர்த்தகருணையை விசாரிப்பாருண்டாகி லப்பரப்பிரமம் அரங்க நாதனே ! நீயேயாம் ;
அதுவுமன்றி, கைபடைத்தமலையென்பதாங் கெசேந்திரன் மூலமேயென்ன அதற்கும்,
அரவும் எலும்பும் அழகுசெய்யு மாபரணமாகப் புனைந்தான், பிரமசிரத்தைக் கையிலேந்தினான்,
கங்கை யாற்றை வேணியிற்கட்டினான், அந்தச் சேட்டமானவெள்ளிமலையானும் மலருளானாம்
பிரமனு மகிழும்படிக்குச்சென்று தவியதூஉம் விசாரிக்கிலென்றவாறு.

ஒழித்ததும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. வெற்பன் மலரயனும் என்பது
“எஞ்சுபொருட்கிளவிசெஞ் சொலாயிற், பிற்படக்கிளவார்முற்படக்கிளத்தல்” என்பதனால் வெற்பனும் என்னுஞ் சொல்
வெற்பனென வும்மையில்சொல்லாயிற்று. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அருண்மாலைபயின்றகெழுதகையிகுளைவேண்டலிற்சென்
றறையாண்மாரன்
பொருமாலைக்கிடுகருப்புச்சிலைவளைத்தித்துயர்க்கடற்கோர்
புணையுங்காணேன்
மருண்மாலைவரும்வருமென்றிடைவேற்காயெவன்செயன்மேன்
மனனேமல்லைத்
திருமாலைத்திருமாலைக்கண்டளியாயளியாய்நின்
றிருத்தாரென்றே. (673)
இது நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) மனனே ! இருண்ட மாலை வரும்வருமென் றுண்டியு முறக்கமுந்தவிர்ந் துடம்புமுயிரு மெலியா
நின்றவெனக் குடலு முயிரு மாக்கமெய்த என்னிடத்து வைத்தகருணை யியல்பாக இடைவிடாத உரிமையையுடைய
எனதுயிர்த்தோழியானவள், திருக்கடன்மல்லை மாயோனைச் சென்றுகண்டு, நினதுதாமத்தை
விருப்புற்றமையா லென்னுயிரான பொலிவினையுடையாள் பொலிவிழப்ப அவளிடத் துண்டான மயக்கத்தை நினது
திருவுளத்தாற்கண்டு நினதுதிருமார்பிற் புனைவதாய வண்டுகள் நல்லதென்றாராயும் அழகியதிருமாலிகையைத்
திருவருள் புரிந்து தாராயென்று வேண்டிக்கோடலோடுங் கூறாள்;
அஃதறிந்து காமனானவன் ஆலையினிடத் திடும்படிக்குண்டானகரும்பைச் சிலையாக வளைத்துப்
பூப்பாணங்களையுடக்கிப் போர்செய்யாநின்றான் ; ஆதலால் இத்துன்பமாகியகடலைக் கடக்க அவன்றாமமாகிய
புணையேயன்றி வேறு புணையுங் காணேன், இனிமேல் யாதுசெய்வ தென்றவாறு.

இதனுள், திருமாலைத் திருமாலையென்பது திருவினோடுங்கூடிய மாலை, பொலிவினையுடையாண்மயக்கத்தை யென்பதாம்.
கண்டென்பதனைத் தோழி சென்றுகண்டு, திருவுளத்தாற்கண்டு என இரண்டிடத்துங் கூட்டுக.
அளியாயளியாயென்பவற்றுள் முன்னையது ஒருதொழிலினை மேற் செய்யாயென்னு மெதிர்மறையாகிய முன்னிலைவினைச்சொல்,
அத் தொழிலைச்செய்யென்ன எடுத்தலோசையாற்கூறி வேண்டிக்கோடற்கண் ணுடம்பாட்டு முன்னிலைவினைச்சொல்லாயிற்று ;
என்னை “செய்யாயென்னு முன்னிலைவினைச்சொல், செய்யென்கிளவியாகிடனுடைத்தே” என்றாராகலி னறிக.
பின்னையது வண்டுகள் நல்லதென்றாராயும் என்பதாம். திருமாலையென்பது பிறள்போற்கூறியதாம். தலைவிகூற்று.
முன்னிலை -தோழி. மனனே என்பது முன்னிலைப்புறமொழி. பொருள்கோள் -கொண்டுகூட்டு; மாட்டுறுப்பெனினுமாம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல். இவைநாலு மோரடியிடத்து முதலுமிடையு மடக்கியது.

இனி யீரடியிடத்து முதலு மிடையு மடக்குதல் வருமாறு :-

பொருந்தார்பொருந்தார்வரைமார்பிற்புதையப்புதையப்புதைவரிவில்
வருந்தாவருந்தாபதனமனதுகளிக்கக்களிக்கமிதிலைபுகுந்
திருந்தாரணியோர்புகழவளைத்திறுத்தானிமையோரிடுக்கணுறா
தருந்தாரமுதன்றருள்குடந்தையாராவமுதென்னகத்தமுதே. (674)
இது முதலிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்களாயுள்ளார் சமர்முகத்துப் புறங்கொடாது போர்செய்யும் வெற்றிமாலைபுனைந்த வரைபோன்ற
மருமத்திற் புதையும் படிக்குக் கட்டிலம்பைத்தொடுக்கப்பட்ட நாரிவரிந்த தனுவை இந்திரியங்களில் வியாபரிக்குஞ்
சத்தாதிகளுக்குச் சற்று மீடுபடாத அரியதவத்தையுடையோனாகிய விச்சுவாமித்திரன்மனத்துட்பிரியமோங்கப்
பிராட்டி திருவுள்ளமுஞ் சனகராசன்மனதுங் களிக்க மிதிலையுட்புகுந்து பெரிய தாரணியோர் கொண்டாட வளைத்து முறித்தான்,
அவன் யாரெனில் விண்ணோர்துன்பமெய்தாமை யாராவமுதைக் கடைந்துகொடுத்த திருக்குடந்தையாராவமுதம்,
அவன் என்னுள்ளத்துக்குத் தித்திக்கு மமுதமா மென்றவாறு. துறை – கடவுள்வாழ்த்து.

உமையாளுமுமையாளும்பசுபதியுமும்பரினும்
பரின்வாழ்வெய்துஞ்
சுமையாகநிலைபெறுமீங்கிதுகிளையேலெனநந்தி
சொன்னபோது
மமையாதுன்னமையாதுன்னக்கயிலைகிளைகிளைக்கை
யரக்கனாதி
கமையாலெய்தியவரங்கள்காட்கரையாய்களைந்திலையேற்
களைகண்யாரே. (675)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) உமையாளும்…… வாழ்வெய்தும் என்பது உம்மை யாட்கொள்ளும் உமையானவளுஞ் சிவனும் உச்சிமலையின்கண்
தேவர்க ளோடுங்கூடிச் செல்வமெய்தும் என்பதாம் ; சுமையாக….. போதும் என்பது அவர்களைத் தனது
சென்னியிற்கொண்டுநிற்கும் இவ்விடத் திந்த மலையை யெடாதேகொள்வாயென நந்திசொன்னகாலத்தும் என்பதாம் ;
அமையாதுன்….. அரக்கன் என்பது அவனுரைக்குமடங்காதே உன்னமரமும் மூங்கிலும் ஆச்சாவும் நெருங்கின
அந்தக் கயிலையைக் கிண்டியெடுத்த விருபதாகியகையையுடைய விராவணன் என்பதாம் ;
ஆதி….. யாரே என்பது ஆதிகாலத்து இந்திரியங்களையடக்கின பொறையாலெய்தியவரங்களைத் திருக்காட்கரையாய் !
அழித்து அவனைக் கொன்றிலையெனி லுலகுயிர்கட் கியாவர் காவ லென்றவாறு. துறை-இதுவுமது.

இமையவரையிமையவரைமகிழ்விப்பான்பொருவில்பொரு
வில்லாயேந்திச்
சமையவுடக்குபுசரந்தொட்டெயிலொருமூன்றெரிகதுவத்
தலைநாள்வென்ற
வுமையவருமதிப்பவெயிலேழுடையான்பஃறலைக்கு
முறையூராயா
டமையமைவில்லினைவளைத்தன்றேவினையேவினைநினைப்போன்
றளியார்யாரே. (676)
இது முதலடியும் நாலாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இமையவரை யிமையவரைமகிழ்விப்பா னென்பது இமவா னென்னுமலையைத் தேவர்களைக் களிப்பிக்கவேண்டி யென்பதாம் ;
பொருவில் பொருவில்லாயேந்தி என்பது ஒப்பற்ற போர்பொருதற்குரிய வில்லாகவெடுத் தென்பதாம் ;
சமையவுடக்குபு…… மதிப்ப எனப்து குறைவறவுடக்கி யம்பைத்துரந்து மூன்றுகோட்டையினும் அனல்பற்ற முன்னை
நாண் முப்புராதிகளைவென்ற வுமைபாகரும் மதிப்பதாக என்பதாம் ;
எயிலேழுடையான்…. உறையூராய் என்பது ஏழுகோட்டையோனாகிய விராவணன்பத்துத்தலைக்குந் திருவுறையூராய் ! என்பதாம் ;
ஆடமை யமைவில்லினை….. யேவினை என்பது வெற்றிபொருந்தின மூங்கில்வில்லைவளைத்து முன்னாள் அம்பினைவிட்டனை என்பதாம் ;
நினைப்போன்றளியார்யாரே என்பது ஆதலால் நின்னைப்போ லுலகுயிர்களைக் காக்குங்கருணையுடையகடவுளர் இல்லை யென்றவாறு.
துறை-இதுவுமது.

சுந்தரத்தோளிணையழகர்துணையடிசேர்மகிழ்மாறன்
றுடரிநீடுஞ்
சந்தனச்சோலையுளுறைவார்க்கிறைவாசங்கர
னுதற்கட்டழலான்மேனாள்
வெந்திறல்வெந்திறல்வேளுமிரதியிரதியுமாண்மை
விழைமென்கொங்கை
மந்தரமந்தரமிடைவிற்கரும்புருவங்கரும்புருவ
மதிக்குங்காலே. (677)
இது கடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இறைவனே ! அழகியதிருத்தோளிணையையுடைய அழக ருபயதிருவடிகளை மனோ வாக்குக்காயங்களாற்பொருந்தின
வகுளாபரண மாறன்றுடரிமலையினிடத் தோங்கின சந்தனச்சோலையுளுறைவார் கொங்கைக் குவமை
குறிக்குங்கான் மந்தரபருவதமேயாம், இடைஆகாயமாம், கரியபுருவம் காமனுக்குவில்லாகிய கரும்பினதுருவமா மென்றவாறு.

சிவனுடைய நெற்றிக்கண்ணினுண்டாகியதழலினான் முன்னைக் காலத்து வெவ்வியவீரம் வெந்ததனோடும்
உருவமுமிழந்த காமனும் விரும்புவதா மிரதியும் ஆணாந்தன்மையையுவப்பதாங் காந்தியையுடைய கொங்கைக்கெனக் கூட்டுக.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

பொய்யாதபேரின்பம்வேண்டினர்கள்பேரண்டம்பூத்தவுந்திச்
செய்யாசெய்யாள்விரும்பியுறையுறையூராவெனவேதிளைப்பக்கண்டு
மெய்யாமையெய்யாமையேத்திலரஞ்சிலர்சிலரவ்வியமதண்ட
மெய்யாகமதிக்கிலரந்தோவந்தோநரகத்தேவீழ்கின்றாரே. (678)
இஃ திடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) அழிவில்லாதபேரின்பத்தைவிரும்பின அறிவுடையோர்கள், எண்ணில்பல்கோடியண்டங்களைப்பெற்ற
திருவுந்தியாகிய செறுவையுடையவனே ! திருமகள்விருப்புற்றுக்குடியிருக்குந் திருவுறை யூரையுடையவனே
யென்றொழிவில்லாதுகூறிப் பேரானந்தமெய்துவதனைக் கண்டுங் கேட்டும், விட்டுநீங்காத அறியாமையாற் சிலர்
அவன்றிருவடிகளை யேத்துகின்றிலர், அவ்வியமதண்டத்தைநினைந் தஞ்சுவதுஞ் செய்கின்றிலர்,
அதனை மெய்யென்பதுந் தெளிகின்றிலர், ஐயோ ஐயோ நரகின்கண்ணேவீழாநின்றன ரென்றவாறு.
எனவே எங்ஙன மீடேறுவ ரென்பது குறிப்பு. எய்யாமை எய்யாமையால் என மூன்றாவதுதொக்குநின்றுவிரிந்தது.
அந்தோ அந்தோ என்பது இரக்கத்தின்கட்குறிப்பு. திணை – பாடாண். துறை – வாயுறை வாழ்த்து.

கைம்மலைக்கன்றுதவியமால்காட்கரைமான்கற்புநிலை
காட்டவேண்டி
யம்மனையம்மனைவிரும்பிக்கிளைகிளைபோலயர்ந்திடவைத்
தகன்றகாலை
நம்மனையைக்காண்டொறுமெய்ந்நடுங்குதன்மேலுணர்வழிக்கு
நயந்தக்கிள்ளை
யெம்மனையெம்மனைபுக்காளினியினியபாலளிப்பா
ரெமக்காரென்றே. (679)
இது முதலயலடியொடு நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) கையையுடைய மலையென்பதாம் யானைக்கு, அது முதலை கைப்பட்டநாண் மூலமேயென்றழைப்பச்
சென்றுதவிய மாயோன் றிருக்காட்கரையின் மான்போலும் விழியினையுடையாள், நாணினுங் கற்புச் சிறந்ததென்று
நூல்சொல்லக் குடிப்பிறந்தார்கண் ணிலைபெற்றதனை யெமக்கறிவிக்கவேண்டி, அழகியமன்னனை எம்முடைய
ஆய்விரும்பிக் கிள்ளையான தெமதுகிளைபோலவருந்தும்படிக்குத் தோழிகைப்படவைத்துடன் போனகாலத் தியா னெமதுமனையினது
பொலிவழிவைக் காணுந் தோறும் மெய்ந்நடுக்குறுதன்மேலும், முன்னங்கூறிய அக்கிள்ளை, தன்னைவளர்த்த
அன்னையைக் காணவிரும்பி அவ்வையே ! எம்முடைய அன்னை யிம்மனையைவிட் டெந்த மாளிகையிலேபுகுந்தா ளென்று
மெமக்கினியபாலினை மேற்றருவார்யாவ ரென்று மென்னுணர்வை யழியாநிற்குமென்றவாறு.
பகுதி – உடன்போக்கு. துறை – நற்றாயிரங்கல். இவை யாறு மீரடி யாதியொடிடைமடக்கு.
இனி மூன்றடி முதலொடிடை மடக்கு வருமாறு :-

நூறுநூறுபோன்றாரமுமாரமு
நொய்தினின்வெதும்பாநீ
ரூறுமூறுமாமதன்படைபடைத்திட
வுபயகண்மலரந்தோ
வேறுமேறுமாபதிபதிகிளைத்திடு
மிருபதுகரத்தானைக்
கூறுசெய்கணையரங்கன்மெய்தோய்ந்திடாக்
கொம்மைவெம்முலையாட்கே. (680)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு,

இதனுள், நூறுநூறுபோன்றாரமுமாரமு மென்பது துகள்படும், சுண்ணாம்புபோல முத்துவடமுஞ் சந்தனச்சேறு என்பதாம்.
நீரூறு மூறுமாமதன்படைபடைத்திட வுபயகண்மல ரென்பது துன்பக்கண்ணீ ரூறாநிற்கும் ;
விரணங்களைக் கரியமதனன்பூப்பாணங்களுண்டாக்கு கையா லிரண்டுகண்மலர்களினிடத்து மென்பதாம்.
ஏறு மே றுமா பதிபதி கிளைத்திடு மிருபதுகரத்தானை யென்பது இடபத்தையும் பூதத்தையும் வாகனமாகவேறும்
உமைக்குப்புமானானவன்பதியாகிய கயிலையை யெடுத்த இருபதுகையுடைய இராவணனை யென்பதாம்.
கூறு செய்கணை யரங்கன்மெய் தோய்ந்திடாக் கொம்மைவெம்முலையாட்கே யென்பது துண்டஞ்செய்த பாணத்தையுடைய
அரங்கநாதனைத் தழுவாத கொம்மைவெம்முலையாட் கென்பதாம்.
கொம்மைமுலையாட்கு, நூறும் ஆரமும் ஆரமும் ; கண்கள் நீருறும் என்று முடிக்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மின்னுமின்னுநுண்ணிடையிடைந்தனளினிமேதகுமின்னோடு
மன்னுமன்னுமெம்மனைவயின்வயினுறத்தினையொடுதேனார்ந்தே
துன்னுகங்குலிற்றுயின்றெழுந்திறையுறைதுவரைமாநகர்க்காலை
முன்னுமுன்னுமுண்டுண்டிவணிவணிகர்முறையொடும்பதிந்தாரே. (681)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், மின்னு மின்னு நுண்ணிடை யிடைந்தன ளென்பது ஒளிரும் மின்னுப்போன்ற சிறிய இடையினையுடையாள் வருந்தின ளென்பதாம்.
மேதகுமின்னோடு மன்னு மன்னு மெம்மனைவயின் வயினுறத் தினையொடு தேனார்ந் தென்பது பெருமைபொருந்தின
மின்னை யொப்பாளுடன்பொருந்திய மன்னனே! நீயும் நுமக்குரிய எம்மில்லினிடத்துக் காலம்பெறத் தினையுந் தேனு மருந்தி யென்பதாம்.
துவரை மாநகர்க் காலை முன்னு முன்னுமுண்டுண்டிவ ணிவணிகர்முறையொடும் பதிந்தா ரென்பது துவராபுரியினிடத்துக் காலையிற்செல்வாயாக ;
நுமக்குமுன்னே தினையொடுந் தேனைக்கூட்டியுண்டு இவ்விடத் திவளை யொத்த கற்புங் காந்தியும்பெற்றமுறையொடும்
புமான்களை நீங்காது தங்கினார் பலருமுண் டென்பதாம். மின்னு – உகரவிகுதி அல்வழிக்கண் மிக்கது, இயல்புகணம்வரலாலென்றறிக.
மன் அண்மைவிளி. நீ யென்னும் முன்னிலைப்பெய ரெஞ்சிநின்று விரிந்தது. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறிவிலக்கல். விருந்து விலக்கென்பது மிது.

தோலாததோலாதபனைநோக்குநோக்குபயசுடரைக்கூட்டி
மேலாகமூன்றுடையசிவனயன்கேட்பவுமழைப்பவிரைந்துமேனாட்
பாலாழிப்பாலாழிப்படையுடனேவந்துவந்துபடிறுதீர்நீ
யாலாலநுண்டுளைப்பற்பணியணையாயணையாயென்னனந்தையானே. (682)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், தோலாத தோல் – சிங்கவேற்றிற்குந் தோற்றிடாத கெசேந்திரன். நோக்குநோக்கு – அழகியகண்கள் ; பார்க்குங்கண் களென்றுமாம்.
ஆதபன் – சூரியன். உபயசுடர் – ஒழிந்த இந்துவும் அக்கினியும். மேலாக மூன்றுடைய வென்பதனை ஆகமேன் மூன்றுடைய என மாறி,
சொரூபத்தின்மேல் நோக்குமூன்றாகவுடைய வெனவியைக்க.
சிவனயன் கேட்பவும் என்பது சிவனும் அயனும் கேட்கும் படிக்கும் (உம்மையால்) யாவருங் கேட்பவும் என்பதாம்.
அழைப்ப – மூலமேயென் றொருகாற் கூப்பிட. மேனாள் – பண்டு. பாலாழிப்பால் – திருப்பாற்கடலுட் கடவுள் ;
“பாலதாணையி” னென்பதா லறிக. வந்து வந்தென்பதை உவந்துவந்து என மாறுக.
படிறுதீர்நீ – இடுக்கண் டவிர்த்த நீ. ஆலால நுண்டுளைப்பற் பணியணையாய் – துளும்புநஞ்சினைக் கக்குஞ் சிறியதுளைப்பற்
பாம்பணையையுடையாய். அணையாயென் னனந்தையானே யென்பது – என்னை அனந்தபுரத்தானே ! அணைவாயாக வென்பதாம்.

(இ-ள்) பாலாழியுட்கடவுளாகிய அனந்தபுரத்து மாதவனே ! கெசேந்திரன், சிவனும் அயனுங் கேட்க மூலமே
யென்றழைப்பச் சக்கராயுதத்துடன் வந்துதவிய கருணையையுடைய நீ, யான் பலகாலும் நினது
திருமார்பைநினைந் திரங்கவு மென்னை யணையாதது என்ன தறுகண்மையோ வென்றவாறு.
பொருள்கோள் – கொண்டுகூட்டு ; மாட்டுறுப்பெனினு மாம். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

வயவாற்றவழ்சூல்வளையுயிர்த்தமணிவெண்டரளநிலவெறிக்குங்
கயவாய்க்கயவாய்க்கருமேதிகமலக்கமலக்கழிநறவுண்
டுயவாற்றுயவாற்றிடையுழக்கத்தூநீர்க்கயலேகயலேய்திவ்
வியவாவியவாமரங்கேசனெய்தானெய்தான்மதனம்பே. (683)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு. இதனுள், வயாவென்பது வயவாயிற்று.

(இ-ள்) சூலுளைந்தவருத்தத்தோடுந் தவழுஞ் சூல்வளையீன்ற அழகிய வெண்முத்தம் நிலவுபோலச் சுடர்விடுங் கயத்தினிடத்துப்
பெரிய வாயையுடைய கரிய எருமைச்சாதி, தண்ணீரிடத்துத் தாமரையுக்க மிக்கதேனையுண் டதனாலறிவுதிரிந்து
துய்யவாற்றி னடுவேபுகுந்து கலக்கத் தூயநீரின்கரையருகே கயலுகண்டுசேரும் நல்லவாவியை யுடையவா மிரண்டாற்றினடுவே
வாழ்வுபெற்ற அரங்கநாத னென்னைத் தழுவுகின்றிலன், அதனையறிந்து காமன் றனது மலர்ப்பாணங்களைத் தொடுத்தன னென்றவாறு.
எனவே, இதற் கினிச் செயல் யாதென்பது குறிப்பு. திணையுந் துறையு மிதுவுமது.

நாதனாதனூர்விளங்கிறையெண்ணிலாவெண்ணிலாநகுபோத
வேதன்வேதனைபுரிந்திடமறைதருமறைதரும்விறன்மாயன்
பாதபாதபந்தனையுணர்ஞானமாம்பலன்பலன்றருமாபோ
லோதியோதியினுறுநர்பாற்றருவதுதருவதுமுளதாமே. (684)
இது நான்கடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) நாத னாதனூர்விளங்கிறை யென்பது சகலதேவன் மார்க்குஞ் சுவாமியாவான், திருவாதனூரின்கண் டோற்றமெய்தின சோதி யென்பதாம்.
எண்ணிலா வெண்ணிலா நகு போத வேதன் வேதனைபுரிந்திட மறைதருமறை தரும் விறன்மாய னென்பது
அலகிறந்த வெண்ணிலாவைப்போலமிளிரும் ஞானத்தையுடைய பிரமன் றுன்புற மது கைடவரான்மறைந்த
வேதத்தை மீளவும் அன்னமாகி ஓதி அவனுக்குபதேசிக்கும் ஞானவென்றியையுடைய மாதவனாமலையிடத்தென்பதாம்.
பாதபாதபந் தனையுணர் ஞானமாம்பலன் பலன்றருமாபோ லென்பது திருவடிகளாகிய கற்பகதரு, தன்னைப்
பிரமமென்றுணரும் ஞானமாகியகனியை யுலகத்துயிர்கட்குதவு மிலாபம்போ லென்பதாம்.
ஓதி யோதியினுறுநர்பாற் றருவது தருவது முள்தாமே யென்பது எல்லாநூல்களையுங் கற்று மலைகளினிடத்திருக்கும் பெரியோரிடத்து அம்மலைகளென்பவற்றினுளுண்டாகியமரங்கள் தரு மான்மலாபங்கள் இல்லை யென்றவாறு.
மாதவனாமலை யென்பது மாட்டேறில்லா வுருவகம். திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து. ஆகமுதலொடிடைமடக்கு-15.

இனி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

அருங்காயமருங்காயமருந்தனங்கள்வடமேரு
வன்னவன்ன
விருங்காவித்துணைநெடுங்கட்கிணையெனலாந்துணைமென்றோட்
கிணையென்சொல்வேன்
சுருங்காவண்புகழ்த்திருமால்வடமலைமானெழில்புணர்ந்து
துறந்தாராவி
யுருங்காமெய்ந்நிறைதளர்வித்திடுமுணராதிகழ்ந்தனனென்
னுயிரைமன்னோ. (685)
இது முதலடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அளவிடற்கரிய ஆகாயம் இடையாகவமராநிற்கும் ; அதன் மேன் முலையிரண்டு மிரண்டுமேருவையொத்தன ;
நிறத்தையுடைய பெருமைபொருந்தின நீலோற்பலமிரண்டும் நெடியகண்ணிணையென்று சொல்லப்படுவதாம் ;
இவையன்றி இணையாகிய மெல்லியதோள்கட் குவமை யாதென்று கூறுவேன்?
ஆகையால் இம்மானின தவயவி யவயவங்களின்காந்தி, இவளைப்புணர்ந்து நீங்கினாரான்மாவை யுருக்கி,
நிறையைத் தளர்வித்திடுமென்பதனையறியாதே மிகவு மென்னுயிரனை யானை யிகழ்ந்தன னென்றவாறு.

எனவே, இகழ்ந்தது தகாதென்பது பயன். இதனுள், உருக்கா வென்னும் வினையெச்ச எதிர்மறைவாய்பாடு,
உருங்காவென மெலிக்கும் வழிமெலிந்துநின்று, தளர்வித்திடுமென்னுந் தன்வினைகொண்டது.
மன் ஆக்கம். ஓகாரம் ஈற்றசை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் றலைவனையிகழ்ந்ததற் கிரங்கல்.

வயல்வாய்மென்முறுக்கவிழ்ந்ததாமரைவாய
வதனராசிக்
கயல்வாவிக்கயல்வாவித்துணையுடனேயமைவரக்கண்
டப்பாலப்பால்
வியல்வாய்தண்செறுவுழுநர்மகளிர்துணைவிழிமுகமும்
வெய்யபோதுந்
துயவாலங்கறிவரிதாங்* குறுங்கேசனெனும்பிறவித்
துயர்போமன்றே. (686)
இஃ திரண்டாமடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வயலினிடத்து மெல்லியமுகையாய்ப் பிணியவிழ்ந்த தாமரைக்கண், அந்த வயல்வாய்க் களைகடியு மகளிர்முகசமூகத்துக்கயல்,
வாவியினிடத்துக் கயல்கள் பாய்ந்து இரண்டாகத்தங்க, அந்த வயற்கடுத்த அவ்விடத்து, தண்ணீர்துளும்பும்பரப்புடைய
குளிர்ந்த வயலின் கண் ணுழு மள்ளர், வயலிற் களைகடியும் முற்கூறிய மகளிர்துணைவிழியோடுகூடிய முகத்தினையும்,
கண்டார்விரும்புங் கயல்தங்கு தாமரைப் போதினையும் மயக்கத்தாற் பகுத்தறிவரியதன்மையராய் வாழுஞ் செய்கையையுடைய
குறுங்காபுரிக்கீசனேயென் றுலகத்துள்ளீர்சொல்லுமின் ; நுமது பிறப்பாயதுயர் நும்மைவிட்டு நீங்கு மென்றவாறு.
திணை – பாடாண். துறை – ஓம்படை. செவியறிவுறூஉ, வாயுறைவாழ்த்தினுஞ்சாரும்.
* குறுங்கை – திருக்குறுங்குடி.

மாந்தரிலொன்றெனலாயமனுராமனேவலிற்போய்
வாரிதாவி
யேந்தெழிற்பொன்னாழியினைச்சானகிகைக்கொடுத்தருள்பெற்
றிலங்கைமூதூர்
வேந்தனையும்வேந்தனையும்விண்ணிடைவைத்தேமீட்டும்
வேலைவேலை
பாய்ந்தெளிதிற்கண்டனன்றேவியையென்றாற்கிணையெவரே
பகருங்காலே. (687)
இது மூன்றாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், அருள்பெற் றிலங்கைமூதூர் வேந்தனையும் வேந்தனையும் விண்ணிடைவைத் தென்பது பிராட்டியருள்பெற்ற
பின்ன ரிலங்கையாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய இராவணனையும்
அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத் தொப்பா ரொருவருமில்லை யென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.

ஓவாதகருங்கடன்மொண்டெழுபருவப்புயல்பெயலோடுபயகண்ணீர்
தூவாநின்றுறுபுணரிக்கிடைவலவாகொடிநெடுந்தேர்தூண்டுமாற்றாற்
றேவாதிதேவனெனுந்திருநெடுமால்புவிமகள்கோன்சிறந்தசெல்வ
நாவாயினாவாயினடைவதல்லாலடைவதிடனாமேநாமே. (688)
இது நாலாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், நாவாயி னாவாயினடைவதல்லா லென்பது திருநாவா யென்னுந் திருப்பதியினிடத்துக் கப்பலிற்சென்றடைவதல்லாதே யென்பதாம்.
அடைவதிடனாமேநாமேயென்பது நாமடைவ துண்மை யாமோ வென்பதாம். விரைவிற்சென்றடைவ துண்மையாகா தென்றவாறு.
ஏகார மிரண்டனுள், முதலது எதிர்மறை. ஏனைய தீற்றசை பகுதி பொருள்வயிற்பிரிதல். துறை – பாகனைவெறுத்தல்.
இவை நாலு மோரடி முதலொடுகடைமடக்கு. இனி யீரடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

விண்டுவிண்டுவீழ்தரும்படிமுருகவேள்விடவேல்வேல்
வண்டுவண்டுவீழ்காவிமாவடுவுமைபூமான்மான்
அண்டராரமிர்தமர்விழிமலைமுலையவளாடக்
கண்டகாவரங்கேசர்தங்கனவரைக்கடிகாவே. (689)
இது முதலடியிரண்டும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) விண்டுவிண்டு…. விடவேல்வே லென்பது மலைபிளந்து வீழும்படி குமரனெறிதற்குப்பொருந்தின வேலு மென்பதாம்.
வண்டு வண்டுவீழ்….. பூமான்மா னென்பது அம்பும், வண்டுகள் தேனையுண்ணவிரும்பு நீலோற்பலமும், மாவடுவின்பிளவும்,
உமாபதிகரத்தின்யாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய
இராவணனையும் அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத்
தொப்பா ரொருவருமில்லை யென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.மானு மென்பதாம்.
அண்டராரமிர் தமர்விழி…….. கடிகாவே யென்பது அமிர்தும் போன்ற அமர்செய்யும்விழியையும்,
மலைபோன்ற முலையையுமுடையா ளவள் விளையாடக்கண்டகா, நண்பனே !
அரங்கேசரது மேகந்தவழும்வரையினிடத்துக் காவலையுடையசோலையென்ற றிவாயாக வென்பதாம்.
எண்ணும்மைகள் தொக்குவிரிந்தன. ஏல்வேல் – வினைத்தொகை. நண்பனே யென்னும் முன்னிலை தோன்றாதுநின்றது.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனாலால்
பண்டுகண்டுயிலணையுளானவன்மகன்படைபௌவ
முண்டமுண்டமாமுனிநிகர்காதிகான்முறைமுன்முன்
கண்டவில்லினைக்கண்டவில்லாக்கினனெமர்கண்ணே. (690)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனா லென்பது அண்டத்தை மேலேயோங்கி யோடாநின்ற பிரளயம்,
எல்லாவுலகத்தையு முண்டதனாலே யென்பதாம். ஆல் பண்டு கண்டுயி லணையுளா னவன் மகன் படை பௌவ மென்பது
ஆலாகிய அமளியுள்ளான்மகனாகிய பிரமன்படைத்த உப்புக்கடலை யென்பதாம்.
உண்ட முண்டமாமுனி நிகர் காதிகான்முளைமுன் மு னென்பது உண்ட குறுமுனியையொத்த காதிசேயாம்
விச்சுவாமித்திரன் முன்னே முன்னா ளென்பதாம்.
கண்ட வில்லினைக் கண்டவில்லாக்கின னெமர்கண்ணே யென்பது அவன்கண்ட வில்லினைக் கையினாற் றுண்டப்பட்ட
வில்லாக்கின னெவ னவ னெம் போல்வார்கண்போல்வா னென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை- பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கற்றவர்கற்றவர்வியப்பான்வளைத்தவன்மூவெயின்முருக்கக்
கணையானானா
னற்றவர்தம்மகந்துறப்பதற்றவன்வெள்ளியங்கிரியை
யடியோடேந்தப்
பெற்றவளங்கெழுமதுகையிருபதுகையுடைவயிரப்
பிறங்கல்போன்ற
கொற்றவன்கொற்றவன்சிரத்தைக்குறைத்தவனூர்தமிழ்மறைசங்
கோவில்கோவில். (691)
இது முதலடியும் நான்காமடியும் முதலொடு கடைமடக்கு.

இதனுள், கற்றவர் கற்றவர்வியப்பான் வளைத்தவன் மூவெயின் முருக்கக் கணையானான் நானற்றவர்தம்மகந் துறப்பதற்றவன்
என்பது கல்லை வில்லாகத்தனுசாத்திரங்கற்றவ ராச்சரியமுற வளைத்தவன் பொன்னும் வெள்ளியும் இரும்புமான
மூன்றுகோட்டையையுமழிக்க அவனுக்குக் கணையானவன், நானென்னு மாங்காரமில்லாதாரிதயத்தை விட்டுநீங்காதவன் என்பதாம்.
கொற்றவன்கொற்ற வன்சிரத்தைக் குறைத்தவனூர் தமிழ்மறை சங் கோவில் கோவி லென்பது இலங்கைக்கரசன் வெற்றி
பொருந்தின வலியசிரத்தைக் கணையாற்குறைத்தவ னுறையும்பதி, திருவாய்மொழியாகிய தமிழினொலியுஞ் சுருதியாகிய
வடமொழியொலியுந் திருச்சங்கொலியும் ஒழிவில்லாத திருவரங்கம் பெரியகோவி லென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

குன்றலைக்குமிருபதுகைக்குன்றினைக்கொன்றுலகளித்த
குறுங்கைக்கோமான்
கன்றலைக்குங்குணிலெனச்செங்கனியுதிர்த்தோனணைகிலன்மேற்
களைகண்யாதோ
தென்றலைத்தென்றலைத்தேராய்வருமதன்விற்கரும்பாய்நாண்
டேனாய்தேனாய்
மன்றலைமன்றலைக்காவின்மலரம்பாய்வருமதிகொல்
வானில்வானில். (692)
இது கடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) கயிலையாகியகுன்றினை யெடுத் தசைக்கு மிருபதுகையை யுடையனாங் குன்றுபோன்ற இராவணனைப்
பாணத்தாற்கொன் றுலகத் துயிர்களைக் காத்த குறுங்கைக்கரசனாகிய கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு
கனியுதிர்த்த மாயோன், தன்னை விரும்பப்பட்ட என்னைத் தழுவுகின்றிலன்,
ஆதலால், தென்றிக்கிற் றென்றலானதைத் தேராகவும், கரும்பை வில்லாகவும், பூவிற்றேனையாராயப்பட்ட வண்டை நாணாகவும்,
மணத்தைப் பொருந்தின தலைப்பட்ட காவின்மலர்களை அம்பாகவுங் கொண்டு மதனன் வாராநின்றனன் ;
வானில் மதி யமனைப்போல் மேல் வரும் ; இனி இதற்கு மேற் களைகண் யாதோ அறிகிலே னென்றவாறு.
கொல்வான் – நமன். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுவைகல்.

கோட்டுநித்திலக்குவையொடுங்குங்குமத்தொளிமீதே
பூட்டுபூட்டுவெம்முலைமலையிடைபொறாதேவீவீ
நாட்டுநாட்டுதலின்றுறீஇநாங்கைமால்வரையார்யார்
மீட்டுநீள்குழற்காட்டின்மேற்பன்மலர்வேய்ந்தாரே. (693)
இஃ திடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், கோட்டுநித்திலக்குவை யென்பது சங்கீன்ற முத்தின் றிர ளென்பதாம்.
பூட்டுபூட்டு வெம்முலைமலை யென்பது பூட்டப்பட்ட பூணையுடைத்து, விருப்பத்தைத்தரும் முலையாகியமலை யென்பதாம்.
இடைபொறாதே வீவீ யென்பது முலையாகியமலைகள், தம்மைத்தாங்கு மிடையானதற்குத் தம்மைப்பொறாதே இறுதியைக்கொடுக்கு மென்பதாம்.
நாட்டுநாட்டுதலின்றுறீஇ நாங்கைமால்வரையார்யா ரென்பது நாளையுடைத்தென்று கண்டார்குறித்தலை இக்காலத்தறிந்தும்,
திருநாங்கைமாயோன்வரையார் யார்தா மென்பதாம்.
மீட்டு நீள்குழற் காட்டின்மேற் பன்மலர்வேய்ந்தா ரென்பது அதன்மேலே மீளவும் நீண்ட குழலாகியகாட்டின்மேற்
பலமலரையும் அணிந்தவ ரென்பதாம். பூட்டு பூணையுடைத்து. வீவீ-இறுதலைக்கொடுக்கும்.
நாட்டு – நாளையுடைத்து. நாட்டுதல் – குறித்தல். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – மருங்கணைதல்.

படுகொலைவாளாக்கனைக்கொன்றுலகளித்தான்வடமலைபோற்
பணைத்தகொங்கை
யிடுகிடையொன்றிடுகிடையொன்றேனுமதுபொறுக்கலா
தென்றாலென்றால்
விடுகதிர்வெவ்வழல்கதுவியடிநிலந்தோயாதெழின்மெல்
லியலையானே
கொடுகொடுவன்சுரங்குறுகினன்னுதாஅலென்னிருதோட்
குன்றுங்குன்றும். (694)
இது முதலயலடியும் நாலாமடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், நன்னுதால் – நல்லநுதலையுடையவளே !
வடமலைபோற் பணைத்தகொங்கை யென்பது முலைகளிரண்டும் வடமலைவாணன்மலை போலப் பணைத்தன வென்பதாம்.
இடுகிடையொன் றிடுகிடையொன்றேனு மதுபொறுக்கலாதென்றா லென்றா லென்பது சிறுகிய இடையுமொன்றே ; சேம இடையில்லை ;
இதன்மே லினி இடப்பட்ட கிடைச்சர மெனினு மதுவும் பொறாதென்றறிந்தா லதன்மேலும் ஆதித்தனாலென்பதாம்.
விடுகதிர்வெவ்வழல்கதுவி யடி நிலந்தோயா தென்பது நீட்டப்பட்ட கிரணங்களாலுண்டான வெம்மையையுடைய
அழல் பற்றுதலால் நடப்போர்பாதங்க ணிலத்திற் றோயா தென்பதாம்.
எழின் மெல்லியலை யானேகொடு கொடுவன்சுரங் குறுகி னென்னிருதோட் குன்றுங்குன்று மென்பது
அழகிய மெல்லிய சாயலையுடையாளை யான் கொண்டுபோய்க் கொடிய வன்சுரத்தை யணுகில்
அவளது மலர் போன்ற தாள்களை என்சொல்லவேணும், எனது இருதோள்களாகிய மலைகளும் மெலிவெய்து மென்பதாம்.
ஆதலா லுடன்கொண்டுபோகக் கூடாதென்பது பயன். பகுதி – உடன்போக்கு. துறை – அருமை கூறல்.
இவை யாறு மீரடி முதலொடுகடைமடக்கு.

இனி மூன்றடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

பொய்யாமைபொய்யாமையானுடனைம்புலனவித்த
பொற்பார்பொற்பார்
மொய்யாமொய்யாடரக்கர்முரணழிப்பாயெனவிரங்கி
முன்பின்முன்பின்
கையாற்கையாற்றினொடும்பொருசரந்தொட்டழித்ததனாற்
காமர்காமர்
மெய்யானதெரித்தவற்கும்பரனயோத்தியிலுதித்த
வேந்தர்வேந்தன். (695)
இது முதலடிமுதலிய மூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) பொய்யாமைபொய்யாமையுரனுட னைம்புலனவித்த பொற்பார் பொற்பா ரென்பது சத்திய
வசன மிடைவிடாத ஞானத்துடன் புலனைந்தையும் வென்ற பொலிவினையுடையோரா முனிவரும்,
பொன்னுலகின்கண்ணுள்ள விண்ணோரு மென்பதாம். பொற்பார் – இடத்தானான ஆகுபெயர்.
மொய்யா மொய்யாடரக்கர் முரணழிப்பாயென விரங்கி யென்பது திருப்பாற்கடலிற் றிரண்டுசென்று அமர்விளைக்கும்
அரக்கராகியபகையை யழிப்பாயாகவென்று முறையிட்டதற் கிரங்கி யென்பதாம்.
முன்பின் முன்பி னென்பது முன்னாளில் மிடுக்கினையுடைய வென்பதாம்.
கையாற் கையாற்றினொடு மென்பது கைகளாற் காவலா மொழுக்கத்தோடுமென்பதாம்.
பொருசரந்தொட்டழித்ததனா லென்பது போரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர்
துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகிய வுடலை
யெரித்த சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான்.
திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம்.
இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியையாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம்.
மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப் பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது
மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும் வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய
பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும், உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம்.
குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோபோரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர் துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகியவுடலையெரித்த
சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான். திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம். இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியை
யாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம். மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப்
பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும்
வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும்,
உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம். குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோரிடும்பையைப்போக்கினா னிருக்கு நகர் தமிழ்ச்சங்கத்தார் கூடியிருத்தலை யுடைய மதுராபுரியா மென்றவாறு.
திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

வானைநீவியவரைகளுயர்மரங்களனைத்தையும்வா
னரங்களாய
தானைதானையவாக்கொண்டமர்விளைநாள்வீடணனார்
தம்முன்றம்முன்
னானையானையினுதிவன்கோடுழுமார்பனையுயிருண்
டம்பாலம்பா
லேனையேனையர்வியப்பான்மீட்டவனல்லாற்பொருள்வே
றென்னாவென்னா (697)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வானைநீவியவரைக ளுயர்மரங்களனைத்தையு மென்பது மேகபடலத்தைத் தைவரு மலைகளு மரங்களுமாகிய
அனைத்தையு மென்பதாம். வானரங்களாயதானை தானையவாக்கொண் டமர்விளைநாள் வீடணனார்தம்முன் றம்முன்னானை
யானையினநுதிவன்கோடுழுமார்பனை யென்பது மர்க்கடங்களாகிய படைக ளாயுதமாகக் கைக்கொண்டு
செருச் செய்யாநின்றகாலத்து வீடணனார்தம்முன்பாக அவர்தமையனானானை, அட்டகசங்களின் கூரிய வலிய
கோடுகளழுத்து மார்பானை யென்பதாம். உயிருண்டு அம்பால், அம்பாலேன் ஐ ஏனையர் வியப்பான் மீட்டவனல்லாற்
பொருள் வேறென்னா வென்னா வென்பது அம்பினா லுயிரை யுண்டபின் அழகிய நல்வினையுடையேன்சுவாமினியாகிய
சீதையைத் தன்னையொழிந்த கடவுள் ராச்சரியப்படுவான் சிறையை மீட்டுக்கொண்டு வந்தவனையல்லாதே
வேறேசிலபொருளுண்டென்று என்னுடையநா வோதா தென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மூன்றினுமூன்றினுந்தொழிலோடொன்றாமீளாநரகத்
தூடுமூடு
மான்றதுயரிழைநன்றிகொல்வினைபோன்றிடரிழைவல்
லரக்கர்தங்கோ
மான்றலைமான்றலையடைந்தவேனையர்வன்றலையுருட்டு
மாலைமாலைத்
தேன்றழைதேன்றழைதுளபத்தொடையானைத்தொழுஞ்சனனந்
தீரத்தீர. (698)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) மூன்றினு மூன்றினுந்தொழிலோடொன்றா மென்பதனை ஊன்றினுந்தொழிலோ டொன்றாம் மூன்றினு மெனப் பாடமாற்றி,
ஒன்றனைக்கொன் றதனூனைத்தின்னுந் தீயதொழிலோ டொத்தகொடுமையை யுடைய பார்ப்பார் பெண்டிர்
பசுவென்னு மிவரைச்செய்யுஞ் சொல்லொண்ணாத தொழின்மூன்றையும்பார்க்க வென்றுரைக்க.
மீளா நரகத்தூடு மூடு மான்றதுயரிழை நன்றிகொல்வினைபோன் றிடரிழை வல்லரக்கர்தங்கோமான்றலை யென்பது
ஒருகாலங்களினும் மீட்சியறநரகங் களினடுவேயிட்டு மூடுதலைச்செய்யு மிக்கதுயரையுண்டாக்குஞ் செய்ந்நன்றி கொன்ற
தீவினைபோல மூவுலகிற்குந் துன்பத்தைமிகுத்த இராக்கதர்க்கரசனா மிராவணன்றலையையு மென்பதாம்.
மான்றலையடைந்த வேனையர்வன்றலை யுருட்டும் மாலைமாலை யென்பது மயக்கத்தையடைந்த ஒழிந்த அரக்கர்
வலியதலையையுஞ் சரந்தொடுத்துருட்டும் வெற்றி யினதியல்பையுடைய திருமாலை யென்பதாம்.
தேன் றழை தேன்றழை துளபததொடையானைத் தொழுஞ் சனனந் தீரத்தீர வென்பது தேனுமிலையும் வண்டுமிகுதலு முடைய வனமாலையானை,
உலகத்துள்ளீர் நுமதுசெனனஞ் சந்தயமறத்தவிரும்படிக்கு வணங்குவீ ரென்றவாறு.
இதனுள்ளும், பலவிடங்களினும் எச்சங்களைக் கூட்டியுரைக்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

இருந்தாதிருந்தாதரித்துண்ணவரிவண்
டினமேவமலர்முண்டகந்தாயதாய
மருந்தாமருந்தாமமெய்த்தாயுமெய்து
மங்கைக்குமணிமார்பளித்தாயளித்தாய்
சுரும்பாய்சுரும்பாய்மதங்கக்குகரடத்
துடனன்றுமுதலைத்தொடுப்பானையானை
வருந்தாவருந்தாவில்சக்ராயுதத்தாய்
வரமங்கையாயென்மனத்தாய்மனத்தாய். (699)
இது முதற்கண்ணுங் கடைக்கண்ணும் அடிதோறும் முற்றுமடக்கு.

(இ-ள்) பெருமையையுடைய தாதுக்களைப் பூவின்கண்ணிருந்து அன்புடனுண்ணவேண்டிப் பாட்டினையுடைய
வண்டின்கிளை பொருந்த மலர்ந்த தாமரையுந் தாயென்பதாய் இருக்கச்செய்தே, அழகிய அமிர்தமாம் பெறுதற்கரிய
வொளியையுடைய மேனித்தாயையுந் தாயாகவுடைய பெரியபிராட்டியென்னு மங்கைக்குக் கவுத்துவமணியணிந்த
திருமார்பைக் கிருபையுடைத்தாயளிக்கும் பூமானே ! சுரும்புகளாராயப்பட்ட மலையையொப்பதாய் மதத்தினைச்சொரியுங்
கரடத்துடன்கூடி முதலையினது பிடிப்பினால் மேனிநையப்பட்ட கெசேந்திரன் வருந்த அந்நா ளதனிடர் தீர்க்கச்செல்லும்
அழிவில்லாத சக்கரத்தையுடையாய் ! சீவர மங்கையென்னுந் திருப்பதியினுள்ளாய் !
என்மனத்தினுள்ளே குடிபுகுந்து நிலைபெறுவாய், பாஞ்சசன்னியத்தையுடையா யென்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

ஆக முதலொடுகடைமடக்கு-15.
ஆக வகை யைந்தான்வந்த மடக்கு-75.

இனி இடையொடுகடைமடக்கு வருமாறு :-

தளிநறவப்பொலமலர்கூராவிரையாவிரைவரைதேத்
தாயர்தாயர்
அளியமடத்தகையசோதையிற்புவனத்தறஞ்செய்தார்
யாரேயென்ன
வொளியமைந்தமரகதக்குன்றவண்வளர்நாள்வெண்ணெயிற்கட்
டுண்டுநின்ற
வெளிமையைக்கண்கலுழ்வதைக்கேட்டிரங்குமனங்காண்பவர்க்கன்
றென்னாமன்னோ. (700)
இது முதலடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) துளிக்குந்தேனையுடைய பொன்போன்றபூவினைத் தன்னிடத்து மிகுத்த ஆவிரையை ஆவானது அருந்தாது
நீக்கும் முல்லை நிலத்தையுடைய ஆயர்க்குத்தாயராயினார், கிருபையுடையமடத்தகையாம் அசோதையைப் போலப்
புண்ணியஞ்செய்தா ருலகத் தியாவருளரென்று சொல்லும்படிக்குப் பச்சைநிற மிகுந்த மரகதக்குன்றம்போன்ற
கண்ணபிரான் றிருவாய்ப்பாடியி லவண்மனையில்வளர்கின்றகாலத்து வெண்ணெய்கட்டுக் கட்டுண்டுநின்ற
வெளிமையையுந் திருக்கண்மலர் கண்ணீர் பனிப்பதனையுங் கேட்டவர்க் குள்ள மின்றிரங்காநின்றதென்றா லன்று
காண்பவர்க் குள்ளமென்னாம் மிகவு மென்றவாறு.

ஓ – அசை. இதனுள், தேம் – இடம் ; அது முல்லைநிலமென்பது ஆவிரைவரைதேத் தென்னுங் குறிப்பினாற்கொள்ளநின்றது.
துறை-கடவுள்வாழ்த்து.

வெங்களபமூர்தரவீதியிற்பனித்தமதத்திடைமென்
பிடியிற்செல்வார்
செங்களபந்திமிர்ந்தளறாய்ச்சேந்தனவாஞ்சேந்தனவாஞ்
சிறுவர்தேர்தே
ரங்குறமண்மகளகலத்தளங்குறுகாதுருளுருளா
வரங்கத்தாய்நீ
யெங்குளனென்றவன்முனமற்றங்குளனானதைப்புகழ்வா
ரெமையாள்வாரே. (701)
இஃ திரண்டாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய மதப்பெருக்கிற்
களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத் திமிர்ந்திட்டதா லக் கரிய
மதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார் தமக்கேற்றமாமென விசாரித்தூருஞ்
சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா தச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே !
நீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற அவ னிங்குளனோவென்றடித்ததூணத்
தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

புத்தமிர்தந்தனிற்பிறந்தபொன்கொடியையகலாத
புனிதனாகி
யத்திகிரிதனிலுதித்தகைத்திகிரிப்பரன்பரனென்
பதனைநாடி
யுத்தமநான்மறைகண்மதித்தொன்றுரைதொன்றுரையணங்கே
யோதியோதி
மொய்த்துயர்வன்பரற்கடஞ்சென்றழுந்தவுணர்வதற்கிறைவர்
முயல்கின்றாரே. (702)
இது மூன்றாமடி யிடையொடுகடைமடக்கு

(இ-ள்) அணங்கே ! நமதிறைவர், புதிய அமிர்திற்பிறந்த பொன்னங்கொடிபோன்ற பெரியபிராட்டியைக் கணப்பொழுதும்
விட்டு நீங்காத பவித்திரவானாகி யத்திகிரியினிடத்துதித்த திருக்கைத் திருவாழியுடையபரனே பரப்பிரம மென்பதனைச்
சுருதிகணாலு முத்தம ஞானத்தாலறிந் துயர்த்தி யொன்றுபோலவுரைத்த பழையவுரையைப் பொற்றைகணெருங்கின
வலியபரலையுடைய சுரத்தைக்கடந்து நாட்டின் கட்சென் றாரியருடன் நாவழுந்தவோதி உண்மைதெளிவதற் கேகமுயலா நின்றா ரென்றவாறு.
இது கொண்டுகூட்டுப்பொருள்கோள். தொன்று- பழமை. ஓதி – பொற்றை. பகுதி – ஓதற்பிரிதல். துறை – நினைவுரைத்தல்.

என்புருகவுயிருருகவவற்றினொடுமீறிலா
வின்பம்பெற்ற
வன்புருகப்புணர்ந்தொருநாளகலேமென்றகல்வதுமக்
கறமேயென்னாய்
புன்பொருளைப்புறம்போக்கிநன்பொருளென்னரங்கனெனப்
புகன்றமாற
னன்பொருநைத்துறையுளிருந்திரையுளிருந்திரையுளவார்
நாராய்நாராய். (703)
இது நாலாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உடலும் உயிரும் உருக அவற்றினோடும் ஒழிவில்லாத பேரின்பத்தைப்பெற்ற வுணர்வுருகக் கலந்து,
இனி யொரு கணத்தும் நின்னிற்பிரியே னென் றுரைத்த நீர் இவளை வைத் தகல்வ துமக் கறமன் றென்று கூறிற்றிலை ;
இதரபுருடார்த்தங்களைவிடுத்து எம்பெருமானே பரமபுருடார்த்தமென்றறுதியிட்ட மாறனது நல்ல பொருநைத் துறையிற்
பெரிய திரைநடுவிருந்து இரையாயுள்ள ஆரன் முதலாயுள்ளவற்றை யுண்ணப்பட்ட நாரையே ! என்னிடத் தன்புடையையா யென்றவாறு.

என்னிடத்தென்பது சொல்லெச்சம். என்பும் அன்பும் ஆகுபெயர். இருந்திரை – பெரியதிரை.
இருந்திரை – தங்கி, இரையை. நார் – அன்பு. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவையொடு பரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யீரிடத்துமடக்கு. இனி யீரடி யீரிடத்துமடக்கு வருமாறு :-

புக்கிலதாயமைந்ததயனகரமயனகரமெழிற்
பொன்னேபொன்னே
தக்கிலராமலைக்குறவர்குறவர்மனையெனத்தெளிந்த
தாமந்தாமந்
தொக்கமரர்தொழப்புரந்தவரங்கேசர்திருமுகம்போற்
சோதிமேய
வக்கமலந்திறந்தெவனோவரையிருளிற்றமியிவணின்
றடைந்தவாழ்வே. (704)
இது முதலீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) அழகிய பொன்னையொத்த திருமகளே ! உனக் கெஞ்ஞான்று மிருப்பதோ ருசிதமான இல்லாயமைந்தது
பிரமன் அகரமாயுறைந்த தாமரையே ; அயலா யொதுக்கிருந்த நகரம், பொருந்துந் தகுதி யிலராம் மலைகளுக் குறவுடையராய
குறவர்மனையென வென்னுள்ளந் தெளிந்ததாம் ; ஆகையாற் பரமபதத்தினிடத்து நித்தர் கூண்டுதொழ அதனையாண்ட
அரங்கேசர்திருமுகம்போற் சோதிமேய பிரமன் அகரமாகிய அக்கமலத்தைத் திறந் தியாதோ நடுச்சாமத்திருளிற் றமி யொருவர்
துணையின்றி யவ்விடத் தடைந்த வாழ் வென்றவாறு.

அகரம் – அந்தணரிருக்கை. அயல் நகரம் – அயலாய மனை. புக்கில் – பின் புறப்படாது புக்கிருக்கும் இல்.
உனக்கென்பது முதலாகியசொற்களைக் கூட்டி விரித்துரைக்க. பகுதி – இரவிற்குறி.
துறை நலம் பாராட்டல் ; தளர்வகன் றுரைத்த லென்பது மிது.

இட்டமணிப்பரற்சிலம்புசிலம்புதளிரேய்ந்தவிரு
தாளந்தாளம்
வட்டமுலைத்துவரிதழ்க்கோமளக்கொடியுமணமகனும்
வாணுதாஅல்போய்ச்
சிட்டர்தொழுமரங்கேசர்காவிரிகாவிரியிதன்முன்
செல்வர்செல்வர்
நட்டதிறந்திருமாதுந்திருமாலுமெனும்படித்தா
நவிலுங்காலே. (705)
இது முதலடியும் மூன்றாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உள்ளிடுமணியாகிய பரலையுடைய சிலம்பு ஆரவாரிப்பனவாய், மாந்தளிர்போன்ற தாள்களையும்,
அழகியவாந் தாளம்போன்ற வட்டமுலையையும், பவளம்போன்ற இதழினையுமுடைய இளைய பொன்னங்கொடியும்,
மணக்கோலத்தையுடையகாளையும் ஒளிபொருந்தின நுதலினையுடையாய் !
தொண்டராயுள்ளார்தொழும் அரங்கநாதரது, சோலைகள் மலரை மலர்த்தப்பட்ட காவிரித்துறையின்கண் ணிதற்கு முன் செல்வர் ;
அச்செல்வத்தையுடையார் தம்முட்கொண்ட நட்பின் கூறுபாடும்,
பிராட்டியும் மாதவனு மென்று கூறப்படு முவமையுடைத்து, சொல்லுமிடத் தென்றவாறு.
எனவே, நீ போவதாற் பயனில்லை யென்ப தாயிற்று. பகுதி – உடன்போக்கு. துறை – மீளவுரைத்தல்.

குலத்தருவாழ்வாசவனம்பதிவாசவனம்பதிமென்
கோதைக்கோதைக்
கிலக்கணமாம்பதியெனிற்பொன்னலக்காவுமுலகுமா
விந்தமென்னிற்
சொலத்தகுகைத்தலநான்கினிதியமுமாதுளங்கனியுந்
துணைமென்போது
நலத்தகைக்கண்களிதரக்காண்கிலமீதோவிலமீதோ
நாட்டினாட்டின். (706)
இது முதலடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) மனனே ! மெல்லிய மாலைசூட்டப்பட்டகுழலையுடைத்தா யிங்ஙனநின்ற இவட்கு நல்லபதி,
ஐந்தருவு மாக்கம்பெற்ற பரிமளக்காக் குடிகொண்ட இந்திரனது நல்லபதியென்று விசாரிப்பேமாகில்
அக்காவும் இவ்வுலகமும் பொன்மயமல்ல ; அஃதன்றிப் பதி தாமரையென்று விசாரிப்பேமாகில்,
இவட்கு, நூல்கள் கூறத்தகுவதாங் கரங்கள் நான்காய், அவற்றின்கண் ஐச்சுரியமும், மாதுளங்கனியும், தாமரைப்பூக்களும்
இன்பத்தைப்பெற்ற நமது அழகிய கண்கள் களிதரக் காண்கின்றிலம் ;
இவட்குச் சொன்னவையன்றி இல்ல மிவ்வுலகமோ? விசும்போ? (பரமபதமோ?) இவ்விரண்டிடத்திற் குறிக்கில் யாதோ அறிவரி தென்றவாறு.
யாதோ அறிவரிதென்பதனைப் பயனிலையெச்சமாக்கி விரித்துரைக்க.
மனனே யென்பது தோன்றா எழுவாய். இல்லமென்பதனை மத்திம தீபமாக்கிக் கூட்டுக.
ஒழிந்த அரும்பதங்களுங் குறித் துட்கொள்க. பகுதி – இயற்கை. துறை – ஐயுறல்.

மின்னியனுண்ணிடைகளபப்புளகபடாமுலைகளிணைமேருவாகுந்
தன்னிகர்மற்றில்லாதவிழிக்குவமையரங்கர்துணைத்தாமமான
பொன்னியிடத்தின்பானலின்பானல்வாயிலவம்பூவேபூவே
கன்னிதுவரிதழ்க்குவமையுவமைகுழலுரைக்கவடங்காதேகாதே. (707)
இது கடையீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) பூமியைப்போலப் பொறையுடையாய் ! அழியாத கற்புடையாட்கு, மின்போன்ற இயல்பையுடையது சிறிய இடை ;
மான்மதக் குழம்போடும் புளகிக்கப்பட்ட முலைகள் உபயமேருவொப்பன ; தனக்கு வேறுநிகரில்லாத கண்களொப்பன
அரங்கனுக் கிணைமாலையான காவிரியிற்றோன்றிய நீலோற்பலமே ; நல்ல மொழியானது இனிய பாலே ;
சிவந்த இதழ் இலவம்பூவே ; குழலானது உவக்குந்தன்மையையுடைய மேகமே ; காதானது உவமைகூறுதற் கடங்குவதல்ல என்றவாறு.
உவமை – கண்டார்விரும்பப்பட்ட மேகம். ஒழிந்த அரும்பதமுங் குறித்துட்கொள்க. இறுதியேகார மீற்றசை.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர்கெழுதண்கடற்கானலிற்பான
லுளர்பொற்சுரும்பேபொருநர்முனையுள்ளாருள்ளாரென்கேள்கேள்
வளர்பைச்சடம்பேசடம்பேயின்வடிவாயதுவேவாயதுவே
தளர்வுற்றதுமன்னுயிரெவனோதான்மேலுறுமென்றறியேனே. (708)
இஃதிடையீரடியும் இடையொடுகடைமடக்கு

இதனை, கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர் கெழுதண்கடற்கானலிற் பானலுளர் பொற்சுரும்பே ! வளர் பைச்சடம்பே ! கேள்,
என்கேளாகிய பொருநர் முனையுள்ளார் உள்ளார், என்சடம் பேயின்வடிவாயது, வாயதுவே தளர்வுற்றது,
மன்னுயிர் எவனோதான் மேலுறுமென்றறியேனென இங்ஙனம் பாடமாற்றி மாட்டுறுப்பென்னும் பொருள்கோள் கொள்க.

இதனுள், முனையுள்ளா ருள்ளாரென்பது பாசறையுள்ளா ரென்னை நினையா ரென்பதாம்.
பைச்சடம்பே – பசுத்த அடம்புகாள். கேள் – கொழுநரான. கேள் – கேளும். கேளுமென்பது கேளென உம்மைதொக்கது.
உள்ளா ரென்கேளென்பது “என்னீரறியாதீர்போலவிவைகூற, னின்னீர் வல்லநெடுந்தகாய்” என்பதுபோல
ஒருவரைக்கூறும் உபசாரப்பன்மைப் பாலோடு ஒருமைப்பான் மயங்கியது.
சடம் பேயின்வடிவாயது – மெய் பேயின்வடிவாயிற்று. வாயதுவே தளர்வுற்றது – வசனம் குழறியது.
ஒழிந்தனவும் உரையிற்கொள்க பகுதி – வினைவயிற்பிரிதல். துறை-….

மருள்பயில்வல்லவுணரைக்கொன்றரக்கரைக்கொன்றளித்ததல்லால்
வாழ்நாளெண்ணித்
திருவரங்கத்திடைதுயின்றவமுதமேயமுதமே.
தேத்ததேத்த
வுருவளர்வான்புனற்குதரத்துயிர்களைவைத்தளித்தநின்னை
யுவந்திடாதே
யிருணரகத்திடைவீழ்வார்வீழ்வார்மற்றொருதெய்வ
மென்னேயென்னே. (709)
இஃதிரண்டாமடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சிறப்புடையுயிர்கள் பெற்றயாக்கையோ டிருக்குநாள்கழிந்து, இன்னும் ஓ ரீனயாக்கையுட்புகுதுநா ளெய்தாதே
சோதிச்சொரூபமான யாக்கையுட்புக்குப் பரமபதப்பேரின்பத்தை அனுபவித்து வாழுநாள் பெறவேண்டுமென்று திருவுளத்துற்று,
அர்ச்சாவதாரமாகி, அரங்கத்தினடுவே கண்வளர்ந்த அமுதே !
முன்னாள் நீ அறியாமை யிடைவிடாத அவுணரைக் கொன்று காத்ததோடும், அரக்கரையுங்கொன் றுலகுயிர்களைக் காத்ததல்லாமலும்,
ஏகோதகப் பிரளயமிகுந்ததேயத்துட் கரசரணாதிகளிழந்த வுயிர்களை அக் கழிபெரும்புனலுள் அழியாது திருவுதரத்துள்வைத்துக்
காத்த நினது செய்ந்நன்றியறிந்து, நின்னை விரும்பாதே, இருண்டநரகத்துள்மேல் விழுவார், பிறிதொருதெய்வத்தை விரும்பாநின்றனர் ;
இஃதென்ன செய்ந்நன்றியறிதல் ! அந்தோ? என்றவாறு.

பின்னர்வந்த அமுதம் ஏகோதகம். தேத்த – மிகுந்த. தேத்து – இடத்து. அவ் – சுட்டு. வீழ்வார் – விழுவார். வீழ்வார் – விரும்புவார்.
என்னே – என்ன. என்னே – அந்தோ. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல். இவை யாறும் ஈரடி ஈரிடத்துமடக்கு.

மன்னுயிரைக்குறித்துளநைந்துளவத்தாதுளவத்தா
மாயாமாயா
பொன்னிநடுத்துயில்பரமாபரமாகாயத்தும்விருப்
புள்ளாய்புள்ளாய்
பன்னருமூன்றுடனமையஞ்சக்கரத்தாய்சக்கரத்தாய்
பாராய்பாராய்
நன்னிலைபெற்றெழுபூதமீற்றனவாயைவரெனை
நலியாவாறே (710)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) நிலைபெற்றவுயிர்களைக் காப்பதுகருதித் திருவுள்ளங் குழைவதுள்ள அத்தனே ! துளவமாலையுடையவனே !
ஒருகாலமும் அழியாத மாயவனே ! பொன்னிநடுவே துயில் பரமனே ! பரமபதத்தினும் லீலாவிபூதியினும் அன்புள்ளவனே !
கருடவாகனத்தையுடையவனே ! சொல்லிப்புகழ்தற்கரிய ஐந்தும் மூன்றுமாகிய திருவட்டாக் கரத்தையுடையவனே !
சக்கரத்தையுடையவனே ! பூமியென்பதாய் நல்ல நிலைபெற்றுத்தோன்றும் பூதமீறாகவுடையனவாம்
ஐந்து பூதவாயில்களில் ஐந்து புலன்களும் என்னை வருத்தாவண்ணம் உனது திருக்கடைக்கண்ணாற் பார்ப்பாயாக என்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

உரங்காயுமன்னரவைமன்னரவையுவப்பவுதைத்
தாடலாட
லரங்காய்முன்னடியரங்காவடியரங்காதரித்திடவோ
ரம்பாலம்பா
லிரங்காழிவளைத்தவெயிலிலங்கையர்கோனையும்வதைசெய்
யெந்தாய்நின்னைப்
பரங்காணென்றிருந்தவிருந்தவர்தமைச்சுற்றாதியம
பாசம்பாசம். (711)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்கள் மிடுக்கைக்கொடுக்கும் நிலைபேறுடைய பாம்பைத் தெய்வ அரசர் விருப்பமுறத் தாளினா லுதைத்து
வெற்றியுடனாடும் அரங்காக முற்காலத் தாடும் அரங்கனே ! அடியராகிய தேவர் தேவருலகத்தினிலிருந் தன்புற்றிட
ஓரம்பினாலே, புனலலைதலுடனே ஆரவாரிக்குஞ் சமுத்திரம் வளைக்கப்பட்ட மதிலையுடைய
இலங்கையிலுள்ளார்க்கரசனாகிய இராவணனையும் வதைத்த எம்முடைய தாயே ! நின்னை, நெஞ்சமே !
இவன்காண் பரத்துவ மென்று காண்பாயாகவென்று யோகித்திருந்த பெரியதவத்தையுடையோரை இயமபாசமும்,
மண் பண் பொன் னென்ற பாசத்தளையும் வளையா தென்றவாறு. நெஞ்சேயென்பது முதலியன சொல்லெச்சம். துறை – இதுவுமது.

கெடலருமெய்த்தரணிதரணிகளழுங்கமறைந்ததுபோய்க்
கேளீர்கேளீ
ரடலருமாளியினிரைத்தாறலைப்பவருண்டிரவிவண்வை
கலுந்தேனார்ந்தே
மடலவிழ்தண்டுளபத்தானாங்கையினாங்கையினளிப்ப
வதுவையாயாய்
தொடலைநறுங்குழற்குழற்றேமொழியொடும்வைகுறுமறுகிற்
றோன்றறோன்றல். (712)
இது முதலயலடியொழித்தேனைமூன்றடியும்இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கேடில்லாத மெய்ம்மையையுடைய ஆதித்தன் குடகடற் புகக் கிரணம், பூமியிலுள்ளா ரிரங்க மறைந்தது ;
எமக்குக் கேளாகுவீர் ! யாங்கூறுவதனைக் கேட்பீராக ; ஒருவராலும் அடுத்தற்கரிய சிங்கம்போன் றாரவாரித்து, வழிபறிப்பவரு முண்டு ;
ஆகையால் இரவின்கண் ணெம் மிடத்து வைகுதலோடும், தேனும் விருந்தாக அருந்தி, நாங்கள் கைப்பிடித்துத்தரக் கலியாணமு மெய்தி,
ஆராயப்பட்ட மாலையைச்சூட்டும் நறுவிதாங் குழலையும், குழலிசைபோலும் தேன்போலும் மொழியையு முடையாளோடும்
வைகறையிற் றுயிலொழிந்தெழுந்து துளபத்தானது திருநாங்கைமறுகிடத்திற் பெரியோனே ! தோன்றுவாயாக வென்றவாறு.

கேளீரென்பது இருவரையும். தோன்றலென்பது அண்மைவிளி. பொருள்கோள் – கொண்டுகூட்டு.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கிக்கூறல்.

அலம்வருசெங்கதிராழிகணிச்சியினுங்கொடிதுணராதணுகாதேநீ
நிலனிடைமன்னுயிர்பிரிக்குநடுக்கற்றாய்நடுக்கற்றாய்நின்னினின்னி
னலனுடைவானவர்துதிக்கைத்துதிக்கைமலையழைத்தவனென்னாதனாமா*
மலர்மகள்சேர்மணிமார்பன்வைகலும்வைகலுமறுகில்வண்டூர்வண்டூர். (713)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

*இக் கடைமடக்கு. அயலடிமுதலெழுத்துள்ளும் மெய்யெழுத்து, பொருளொழியப் பிரிந்து சேர்ந்து ஆம் ஆம் என வந்ததுபோலும்.
இதனுள், நடுக்கற்றாய் நடுக்கற்றாயென்பது நடுவுநிலைமைகற்றவனே ! நடுக்கமற்றவனே ! என்பதாம்.
நடுவுநிலைகற்றவன் – சமன். நில் நில் – நிற்பாயாக, நிற்பாயாக நின்னில் – நின்னிலும்.
வானவர்து திக்கைத் துதிக்கைமலை – தேவர்களேத்துந் துதிக்கையையுடைய யானை. நாதனாம் – சுவாமியாம்.
மா மலர்மகள்சேர் மணிமார்பன் – பெரிய தாமரையாளைத் தழுவும் மார்பினையுடையான்.
வைகலும்வைகலும் – எல்லாநாளுந் தங்குதலும்.
மறுகில் வண்டூர் வண்டூ ரென்பது வீதிதோறுஞ் சங்குதவழும் திருவண்வண்டூ ரென்றவாறு.
துதிக்கைமலையழைத்தவன் என் நாதனாம் ; அவன்கையிற் சுற்றுதலையுடைய கதிராழி உன்கணிச்சியினுங் கொடிது ;
இதனை யறியாதே என்னிடத்தணுகாதே ; நமனே ! நிற்பாயாகவெனக் கூட்டுக.
எனவே, உனக் கென்னிடத்துவருதல் கூடாதென்பது கருத்து. திணை- வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

மாறர்குருகூர்குருகூர்வடிவேலவேல
நாறுமளகத்தளகத்துணைவீகையீகை
யாறினகலாதகலாததாமாகமாக
நீறனிலவானிலவாநினைத்தேகலேகல். (714)
இது நான்கடியும் இடையொடுகடை முற்றுமடக்கு.

(இ-ள்) காரிதரும் மாறருடைய சங்குகள் தவழப்பட்ட குருகூரினிடத்துக் கடைந்தவேலையுடையவனே !
ஏலம் பரிமளிக்கும் அளகத்தையுடையா ளுள்ளத்துட் டுன்பம், நீ பொன்னைக்கொண்டுவந்து தரும்வழியால் நீங்காது ; தக்கதல்லவாம் ;
இவள்மேனியும், ஆகாச நீறும்படிக் கிரவிலெழும் நிலவினாலே அழகழியும் ;
ஆகையால் இவற்றை நினைத் தேகலையுடைய கடங்கடந்து பொருள்செய்யப்போவதை ஒழிவாயாக வென்றவாறு.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல்.

இவை பதினைந்தும் இடையொடுகடைமடக்கு. இவை நாற்பத்தைந்தும் ஓரடியும் ஈரடியும் மூவடியும் நாலடியுமாக
அடிதொறும் ஈரிடத்தைமடக்கியது. ஆக மடக்கு-90.

இனி அடிதோறுமிடைவிடாது மூன்றிடத்துமடக்கு வருமாறு :-

முன்னினைமுன்னினைமிடல்வல்லிடங்கரிடங்கரிநொந்த
மூலமூல
மென்னுரைசென்றடங்காமுன்னவ்வுழியவ்விடங்கருயி
ரினையேயுண்பா
னின்னிலையிவ்வுழியுளதோவெனக்கனகனுருத்தடித்த
நெடியதூணின்
மன்னிலைபெற்றவனுயிருண்டனையரங்காநினக்கிணையார்
மதிக்குங்காலே. (715)
இது முதலடி மூன்றிடத்துமடக்கு.

இதனை மிடல்வல்லிடங்கரிடம் நொந்தமூலம், முன் நினை கரி மூல மென்னுரை சென்றடங்காமுன்ன ரவ்வுழி
அவ்விடங்கருயிரினை யுண்பான் முன்னினையெனச் சேர்க்க.

(இ-ள்) மிடுக்கையுடைய வலிய முதலையின்கையி லகப்பட்டு நொந்ததேதுவாக, முன்னொளி லுன்னைநினைத்த
யானை சொல்லிய மூலமே யென்னு முரையினொலி நினதுதிருச்செவியுட்புக் கடங்காதமுன்னம்
அக்கயத்தினிடத் தந்த முதலையினுயிரை யுண்ணவேண்டிச் சென்றனை ;
அஃதன்றியும், அரங்கனே ! நீ அந்தரியாமியாகநின்ற திங்குமுளதோ வென் றிரணியன் கோபித்தடித்த நெடிய
தூணினிடத்து மிகவுநின்று அவ்விரணியனு யிரையு முண்டனை ; ஆகையால் விசாரிக்குமிடத்து
நின்னோ டிணையான கடவுள ரில்லை யென்றவாறு. இதன்கண் அகப்பட்டென்பது சொல்லெச்சம். உரை ஆகுபெயர்.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

வெளியதாயமைந்ததிடைமேருவதாமுலையுயிரோவியத்தைப்பெற்ற
வளியதாயளியதாய்மலர்மாதேமாதேவராருமாரு
மொளியதாமமுதமொழிகருங்குவளைவிழியெனலாமுறையுணண்பா
வெளியதாயிருபது கைக்குன்றினைவென்றானிடபகிரியாமன்றே. (716)
இஃ திரண்டாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நண்பனே ! உயிரோடுங்கூடிய ஓவியம்போல்வாளைப்பெற்ற கிருபையையுடைய தாய்,
வண்டு மதுவுண்ண வாராயப்பட்ட தாமரை மலரே; மாது அம்மலரிற் செய்யவளே! சந்தயமில்லை.
முலை மேரு; இடை ஆகாயம்; வானோர்யாவருமுண்ணும் அமிர்தம் மொழி ;
விழி கருங்குவளை யென்பனவாம். உறையுமிடம், இராவணனாகிய இருபது கைக்குன்றை யெளிதாகப்
போர்க்களத்துவென்ற சுந்தரத்தோளழகர் சோலைமலையா மென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல் பிடங்கூறல்.

ஏதுகொண்டுமானிடர்தமைப்பாடுதலிழிபென்றெப்
போதுமாறனைப்போற்றுதற்கென்னொடின்புறுநெஞ்சே
யாதுமாதுமென்முல்லைமுல்லையினிறையாவான்வா
னீதியாய்ந்தனமாகையான்முத்திநிச்சயமன்றே. (717)
இது மூன்றாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,
அதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து,
அவர்களைப் பாடா தெப்போதும் காரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே !
ஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ;
பசுக்கள் பொசிப்பாகமெல்லும் முல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.
வான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.
முத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.

ஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;
என்னை? “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

வீடாளிவீட்டினுக்குவீடாயதனைநிலையாய்விழுமிதாக்குங்
கேடாளர்கேண்மையினைப்பிரித்தெனையுந்தனதடியார்கேண்மையாக்கும்
வாடாதமகிழ்மாலைப்பெருமானைத்துணைநெஞ்சேமதித்துவிண்மே
னாடாளநாடாளரியையுநினைநினையினித்தென்னாட்டானாட்டான். (718)
இது நாலாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும்
நிலையிற்றாகும் முக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி,
அறிவிலியாகிய வென்னையுந் தன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை,
எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே! இவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;
அவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகிய
நாட்டினையுடைய நமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.

நம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை,
முத்தியையு மெய்தலா மென்பது பயனாம். திணை – காஞ்சி.
துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.
இவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு.

இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-

தாம்பரியதாம்பரியதிரைதிரைத்தபொனங்கொடியிற்
சங்கஞ்சங்கந்
தேம்பணைத்தேம்பணைத்தெறியும்விண்ணகராய்விண்ணகராய்
செல்வாசெல்வா
யாம்புகழ்செண்பகமா றன்கொழித்ததமிழ்மறையினைக்கற்
றிறைவனீநீ
யாம்பரிசுற்றவரிதயத்தினிற்குடிகொண்டிருப்பதற்கென்
னாகத்துள்ளே. (719)
இது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகிய
கொடியினோடுஞ் சங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந்
திருவிண்ணகரின்கண் ணுறைபவனே ! பரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே !
எம்மனோர் புகழ்பவனாஞ் செண்பகமாறன் வேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,
நீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ
என்னிதயத்துள்ளுங் குடிகொண்டிருப்பதற்கு வருவாயாக வென்றவாறு.
இதனுள், பின்னர்வந்த செல்லென்பதனை வினைத்தொகையாக்கிப் பின்னர்நின்ற நீ யென்பதனோடுஞ் சென்ற நீ யெனக் கூட்டுக.
பொருள்கோள் – கொண்டுகூட்டு. திணை-பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

முன்னைமுன்னைநாட்டுறந்தவனவனியைமுதலானான்
றன்னைவந்தடைக்கலம்புகக்கொடுத்தமெய்த்தண்காவா
னென்னையென்னையெண்ணுவதினியினியவரென்கேள்கேள்
உன்னையந்தகாமதிக்கிலன்பிறருளருனக்கன்றே. (720)
இது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன். தன்னைவந் தடைக்கலம்புக
முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன
அந்த மூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய
திருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி.
இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம். ஆகையால், கேள் அந்தகா – அந்தகனே ! கேட்பாயாக என்னை ?
எண்ணுவதினி – என்னைக்குறித்து நீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,
பிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;
உன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.

அன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.
முதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.
திணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

முண்டகமுண்டகநெகுகோடுறுமேதிமேதிகளே
முற்றுமுற்றும்
வண்டிமிர்காவியுமேயுமரங்கத்தானருட்கிலக்கா
மகிழ்நர்வாய்மைத்
தொண்டமைபாணரைக்கன்னுவாயிலின்கட்கரிக்கலம்போற்
றோன்றநம்மிற்
கண்டனங்கண்டனம்புரைமென்மொழிநடையெங்கையாயர்தற்
காதகாத. (721)
இது முதலடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) தாமரையைமேய்ந் துள்ளமகிழப்பட்ட கொம்பினை மிக்க வாயுதமாகவுடைய எருமைகள்,
அதன்மேலு மின்புற்று, எல்லாநாளும் வண்டுக ளாரவாரிக்கு நீலோற்பலத்தினையும் மேயுந்
திருவரங்கத்தா னருட்கிலக்காம் நம்முடைய தலைவர்க் குண்மையாகத் தொண்டுபா டமைந்த பாணரை,
இன்று கன்னவாசலிற் கரிப்பானைபோல நம் மில்லத்துவாயிலின்கட் டோன்றவுங் கண்டனம் ;
இங்ஙனங் கண்டது நமக்குத்தக்கதாயினும், தோழீ ! பாகினையும், அன்னத்தினையும்போன்ற மெல்லிய மொழியினையும்
நடையினையு முடைய எங்கையர்காணில் அந்தோ ! வருந்துதற் கேதுவரதலா லிது தகாததா மென்றவாறு.
இன்று என்பதனோடு பிறவுஞ் சொல்லெச்சங்கள் வருவித்துரைக்க. பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப்பழித்தல்.

பத்தர்தீவினைப்பற்றறுத்தருள்பரம்பரன்மாயோ
னித்தனின்றவூர்வரைமயிற்களிநிரைத்தெழுகாந்த
ளத்தமத்தம்வமபடர்முலைமுலைமொழிநகைவேய்வேய்
முத்தமுத்தமவிலவிதழிதழ்குழன்முருகார்கார். (722)
இது கடையிரண்டடியும் மூன்றிடத்து மடக்கு.

(இ-ள்) பத்தரிடத்துப் பழையதீவினையாலடைந்த ஆசைகளைத் தீர்த்துக் கருணைசெய்யும் மேலாகிய பரமனாகிய
மாயோன் அழிவில்லா தான் அவனது நின்றவூரென்னுந்திருப்பதியைச் சார்ந்த வரையிடத்து மயில்போலுஞ் சாயலையுடையாட்கு,
தோழீஇ! வண்டுகள் கூண்டெழு தலையுடைய காந்தள்போலும் கை ; பொன்மலைபோலும் கச்சையறுக்கப் படாநின்ற முலை.
முல்லையென்னும் பண்போலும் மொழி ; வடத்தி னிரைத் தணியப்பட்ட வேய்முத்தம்போலும் நகை;
நல்ல இலவம்பூப் போலும் அதரம்; பரிமளிக்கப்பட்ட முகில்போலும் குழ லென்றவாறு.

இதனுள் அத்தமென்றது பொன்மலை ; “அத்தம்மனையகளிற்றந் நகர்” என்றார் முனிவரும். முலையென்பது இடைக்குறை ;
“முலையணிந்த முறுவலாள்” என்பதுபோலக் கொள்க. முருகார்கார் அற்புத வுவமை.
தோழீயென்னும் முன்னிலை எச்சம். பகுதி- சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கண்டனனொண்பொருளேமெய்ப்பொருளெனலுமுயிருளதாக்
கழிந்தயாக்கை
மண்டலமண்டலம்புரந்தமாவலிமாவலிமுழுது
மாற்றமாற்றங்
கொண்டறல்கொண்டறலிமையோருறவுறவேசிறைவைத்த
கொண்டல்கொண்டல்
வெண்டிரைமுத்தெறிமயிலைமடமயிற்கெப்படிபிரிவை
விளம்புவேனே. (723)
இஃ திடையிரண்டடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பொன்னாகியநல்லபொருளே பொய்யில்லாப் பரப்பிரமமாகிய பொருளென்று வியந்துகூறலும்,
உடனே உயிருண்டாயிருக்கவும் உயிர்நீங்கப் பொலிவுநீங்கியிருக்கும் யாக்கையாக அவள்யாக்கையைக் கண்டனனென்றால்,
வட்டத்தையுடைத்தாய் அணுச்செறிந்த பூமியை யாண்ட மாவலியுடைய பெரியவலிமுழுதும் மாற்றும்படிக் கவனோடு மாற்றங்கொண்டு,
அவன்பெய்யு முதகத்தையேற்றுத் தேவர் கலியாண மெய்த மிகவும் அவனைப் பாதாளத்திற் சிறைவைத்த
காளமேகம்போலு நிறத்தையுடையானது, கீழ்காற்றானது கடலிற் றிரையெடுத்த சங்கு மிப்பியு மீன்ற முத்துக்களைத்
திரையோடுங்கூடிக் கானலிலெறியுந் திரு மயிலாபுரியில் மடப்பத்தோடுங் கூடிய மயில்போலுஞ்
சாயலையுடையாட் கென்பிரிவை, தோழீஇ! யா னெவ்வாறுரைப்ப லென்றவாறு.

இதனுள், மாவலி – அவுணன். மாவலி – பெரிய பெலம். மாற்ற- நீக்க. மாற்றங்கொண்டு – மாறுபாடுகொண்டு.
அறல்கொண்டு – உதகத்தைக் கையிலேற்று. அற லிமையோருற – தேவர்கள் கலியாண மெய்த. உற – மிகவும்.
கொண்டல் – மேகம். கொண்டல் – கீழ்காற்று. தோழீ யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல்.

கவளக்கரிக்கன்றுதவியமால்கடிகைச்சிலம்பிற்கடிபொழில்வாய்த்
தவளத்தவளத்தளவமுகையாம்பலாம்பல்சமன்வாய்வாய்
துவளத்தனிநுண்ணிடையமிர்தந்துடியேய்மடந்தாய்நின்கருங்கட்
குவளைக்குவளைக்குலஞ்செறிகைக்கைக்காந்தளிற்கூட்டமதென்னென். (724)
இஃ திரண்டாமடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) கெசேந்திரனுக் குதவிய மாயோன் றிருக்கடிகைச்சிலம்பில் விளங்கிய சோலைவாய் வெண்மை
நிறத்தோடுங்கூடிய அழகாகிய வளத்தை யுடைய முல்லைமுகைபோலப் பல்லையும், சேதாம்பல்போல வாயையும்,
அமிர்தத்தையுந் துடியையும்போல மொழியையு மிடையையு முடைய மடந்தையே !
நினது கண்ணாகிய குவளைக்கு, வளையினது கூட்டஞ் செறியுஞ் செய்கையையுடைய கையாகிய காந்தளோடுங்
கூட்ட முண்டானகிரியைக் கேது யாதென்று கூறுவாயாக வென்றவாறு.

யாதென்பது ஐயவினாவாகலால், காமனது அறுதிப்பாணமாகிய கண்ணென்னும் நீலம் என்னுயிரைக் கொல்லாமைக்
கெண்ணியோ பிறிதொன்று கருதியோ வென்றவாறு. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக் கண்புதைக்க வருந்தல்.
இவையாறு மீரடி மூன்றிடத்துமடக்கு. இனிமூன்றடிமூவிடத்துமடக்கு வருமாறு :-

குன்றாவின்குன்றாவின்றுயர்க்குயர்நன்குடைக்குடைக்கொள்
கோமான்கோமா
னன்றாமன்னன்றாமன்னுலகமுழுதுழுதுயர்தீர்
நாதன்வார்வார்
நின்றானைநின்றானையுடன்வருகவருகவெனா
நேமிநேமி
யொன்றால்வல்லிடங்கரைக்கொன்றருள்புரிகாரரங்கனென
துள்ளத்தானே. (725)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) குறைதலில்லாத இனிமைகளைத்தரும் மலையைப் பசுக்களின்றுன்பத்திற் குயர்த்திய நன்மையுடைய
குடையாகக் கைக்கொள்ளுந் தலைமையையுடையோன், பூமிதேவியிடத்து நட்புடைத்தாங் கொழுநன்,
பிரமகற்பங்கூடும் அந்தியகாலத்து ஏகோதகப்பிரளயம், நிலைபெற்ற உலகமனைத்தையும் கிளைத்தெழ அதனு ளழுந்துந்
துயரத்தைத் தீர்த்துத் திருவுதரத்துள் வைத்த சுவாமி, நீண்டொழுகிய நீரின்கண்ணின்று ஆனைநின்கைச்சக்கரத்தோடும்
வருக என்னையுடையவனே யென்றழைப்பச் சென்று, வட்டத்திகிரியொன்றினான் மிடுக்கையுடைய முதலையைக் கொன்று
யானையினுயிரைக் காத் தருள்செய்த காளமேகம் போலத் திருமேனியையுடைய அரங்கன் என்னிதயத் திருப்ப னென்றவாறு.

எனவே, எனக் கியாதுகுறை? ஒருதுன்பமு மில்லை யென்பது பயனாம்.
இனிமை – காட்சிக்கினிமையும், பலமூலாதிகளைத் தருதலும்.
கோமான் – தலைமையையுடையோன். கோமான் – பூமிதேவி. நன்றாம் -நட்பாம். வார்வார் – ஒழுகும்நீர்.
நின்றானை – நினது சக்கரப்படை. அருக – உடையவனே. நேமி – வட்டம். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

வாக்கினால்வாக்கினாலாரணனாரணன்மலராண்மன்னன்மன்ன
னாக்கம்யாவையும்புகழ்செந்தமிழ்மாறன்றுடரியிலென்னன்பாநண்பா
தாக்கர்தாக்கரந்தையுறத்தாக்கணங்குமணங்குநுதித்தாரைதாரை
நோக்கினாணோக்கினாணெனையகன்றதகன்றதுளனோயுநோயும். (726)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) என்னிடத் தன்பாம் நண்பனே ! தனது திருப்பவளத்தினி லுண்டான நாலுகவிகளாலும்,
வேதாந்தத்துட்பொருளாம் நாராயணனாகிய தாமரையாள்தழுவும் நல்லமன்னன்செல்வமுழுவதும் வாழ்த்துஞ் செம்மையையுடைய
திருவாய்மொழியாகிய தமிழையுடைய காரி மாறப்பிரான் றுடரிமலையினிடத்துப் பொருவார்போர் துன்பமுறும்படி பொரும்
வீரமாகாளியுங் கண்டால் வருத்தத்தையெய்தும் வாளின் வாய்க்கூறுபோலக் கொலைபுரியுங்கண்ணோடுங்கூடிய
அழகினையுடையா ணோக்கத்தா லெனதுநிறையினது தலைமை யென்னைவிட்டுநீங்கியது ;
எனதுள்ளம் தளராநின்றது ; காமநோயும் மிகுந்த தென்றவாறு.

வாக்கு – திருப்பவளம். நாலுவாக்கு – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமாகிய நாற்கவி. மன் நன் – தழுவும் நல்ல.
மன்னன் – தலைவன். ஆக்கம். சொரூப ரூப குண விபூதிகள். தாக்கு – படை. அரந்தை – துன்பம். தாரை – கண்.
நோக்கு – அழகு. ஆண் – தலைமை. நுதி – ஆகுபெயர். தாக்கரந்தையுற எனப் பொருந்தாரெய்துந் துன்பம் போரின்மே லேற்றப் பட்டது.
என்னை? “வேண்டும்பனுவற்றுணிவு” என்பதுபோலக் கருத்தாமயக்கம் பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

மருணயனமருணயனம்பாலளித்தவளித்ததல்லான்மழலைவாய்வாய்
தருநகையீதருநகையீதருஞ்சோலைமலைமலைநத்தான்றனான்றன்
முருகவிழ்பூமகளுலகிற்கருணோக்குநகையுமெனுமுறைபோலென்றா
லொருதலையன்றொருதலையன்றிங்காமிக்காமிக்கையுள்ளேயுள்ளே. (727)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நெஞ்சமே ! இம்மழலைமொழியையுடையாளது மருட் பார்வையோடுங்கூடிய கண்கள் அருட்பார்வையோடும்
ஆனந்தத்தை நம்மிடத்திலே தந்த கருணையையுடைத்து ;
அதுவுமன்றியே இவள் வாயிலுண்டாகிய இக் குறுநகையும் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத் தரா நிற்கும் ;
இவையிரண்டும், திருமாலிருஞ்சோலைமலையில்வாழ்பவனாம் போரையுடைய பாஞ்சசன்னியத்தையேந்துவான்றன்
பாரியாகிய மிகுந்த மதுவைச் சொரியுந் தாமரையாள் உலகத்துயிர்கட் குதவும் அருணோக்கும்,
திருநகையும் கொடுக்கும் பேரின்ப மெப்படியோ அப்படி யென்னும் முறையேபோ லென்றா லும்மைதொடுத் திவ்வுலகின்
கண் ணாமிவளைவிரும்பும் இவ்விருப்பம், ஒருதலையிலுள்ளதல்ல, இருதலையிலு முள்ளதென்பது நிச்சயமென்று விசாரிப்பாயாக என்றவாறு.

உள்ளே – நெஞ்சமே. உள் – விசாரிப்பாயாக. அருணயன் – அருட் பார்வையோடுங்கூடிய ஆனந்தம்.
அளித்த அளித்து – தந்த கருணையை யுடைத்து. ஈது – இதுவும். தருநகை – உண்டாய புன்முறுவல்.
அருநகை – பெறுதற்கரியமகிழ்ச்சி. அன்று – கழிபிறப்பில். இருதலையுமுள்ளதென்பது எதிர்மறைச்சொல்லெச்சம். ஏகார மீற்றசை.
பகுதி – இயற்கை. துறை – குறிப்பறிதல்.

மானனையாளிணைமென்றோளணியிழாயரங்கேசன்
மலரோன்றன்பாற்
பானலம்பானலம்புரிவோருயிருயிர்ப்பானிகல்விளையாப்
பாலன்பாலன்
பானிரையானிரைக்கடுக்கல்கவிகவிகைப்புயலரவி
னாடியாடி
தேனிறைதேனிறைத்தெழுபொன்னியுட்போதுபோதுமுகஞ்
சிவணாவேய்வேய். (728)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) அழகியபூணினையுடையாய் ! என்னால் விரும்பப்பட்ட மான்போலுநோக்கினையுடையா ளுபய மெல்லிய தோள்களானவை,
துளை பொருந்தா மூங்கில்போலும் ; முகம், திருவரங்கத்தீசன், பிரமனாகிய மூத்தபிள்ளையிடத்தும்,
பூலோகத்தின்பத்தைவிரும்பினோரிடத்துத் தாமரை முதலிய பூப்பாண நான்கினையுந் தொடுத்தபின்னர் நீலோற்பலமாகிய
அறுதிப்பாணத்திற் கைவைப்பதல்லால் அப்பாணத்தை விரும்பியவின்பம்பெறாது வருந்துவாருயி ருடலைவிட்டு
நீங்கும்படிக்குத் தொடுத்துப் போர்செய்தறியா மன்மதனாகிய இளையபிள்ளையிடத்தும் அன்புசெய்வான்,
கன்மாரியாற்கதறப்பட்ட பசுக்களினிடரைத்தீர்த்தற்கு மலையைக் குடையாகக்கவிக்கப்பட்ட காளமேகம்,
பாம்பினை யரங்காக நாடி யாடப்பட்டவனது (பொன்னியுட்போது தேனிறை தேனிறைத்தெழுபோது)
காவிரியுளுண்டான வண்டுகள் தங்கு மதுவை யொழுக்கியோங்குந் தாமரைப்பூப்போலு மென்றவாறு.

இது, வேய்சிவணாவேய் எனவும், பொன்னியுட்போது, தேனிறை தேனிறைத்தெழுபோது எனவும் பாடமாற்றினவாற்றாற்
கொண்டு கூட்டுப்பொருள்கோளாயிற்று. ஒழிந்த அரும்பதங்களு முரையிற் கொள்க.
என்னால்விரும்பப்பட்டவென்பது சொல்லெச்சம். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

மதுமதுகையினுணவளிமகிழ்மகிழ்முனிவரைமயில்குழல்வான்வான்
விதுவிதுவெனவொளிதருமுகமயிலயில்விழிமொழிகுயில்வாய்வா
யதுவதுவையமரைமுகைமுலைமுலைநகையறனுரைதெளிவாயாய்
முதுமுதுவருமிலவிதழிதழெனலொடுமொழிவதுவயிறாலால். (729)
இது நாலடியும் மூன்றிடத்தும் முற்றுமடக்கு.

(இ-ள்) தேனை யுரனுடனுண்ண வண்டுகள்விரும்பும் வகுள மாலிகைமுனிவன் றுடரிமலையினிடத்து
மயில்போலுஞ்சாயலையுடைய யாட்கு நண்பனே ! குழலானது விசும்பின்கண்ணுறையுங் காளமேக மென்பதாம் ;
முகமானது உதயமதியை இதுவென்று கண்டார் கூறும்படிக் கொளியைத் தருவதாம் ; விழியானது கூரிய வேலையொக்கும் ;
மொழியானது குயிலின்வாயில் மொழியதனை யொக்கும் ; முலையானது மணத்தையுடைய தாமரைமுகுளத்தையொக்கும் ;
நகையானது முல்லையரும்பையொக்கும் ; அதரமானது, அறத்தைக்கூறு நூல்களினுரையைச் சந்தயமற ஆராயுந் தலைமையை
யுடைய அறிவினான்மூத்தோர் இலவம்பூப்போலு மென்பதனோடும், வயிற்றிற் குவமைசொல்வது கொம்பரினின்றசையு மாலிலையேயா மென்றவாறு.

மதுகை – உக்ரம். வான் – மேகம். இது – சுட்டு. அயில் – கூர்மை. வாய் – வசனம். அது – சுட்டு. வதுவை – மணம். மரை – தாமரை.
முலை – முல்லை. ஆய் – ஆராய். முதுவரும், உம்மைசிறப்பு. இதழ் – பூவின்றோடு.
ஆல் – அசையப்பட்ட. முல்லை, ஆல் முதலிய ஆகுபெயர். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
முன்னிலை தோன்றா எழுவாய்.

ஆக வகை யேழினால் இடைவிடாமடக்கு நூற்றைந்தும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
வகையேழாவன :- அடிமுதன்மடக்கு-15. அடியிடைமடக்கு-15. அடியிறுதிமடக்கு-15.
ஆக அடிதொறும் ஓரிடத்துமடக்கு-45. முதலொடிடைமடக்கு-15. முதலொடுகடைமடக்கு-15. இடையொடுகடைமடக்கு-15.
ஆக அடிதொறு மீரிடத்துமடக்கு-45. அடிதொறு முதலிடைகடை மூன்றிடத்துமடக்கு-15.
ஆக வகையேழினால் மடக்கு நூற்றைந்தும் இடைவிடாமடக்கு.

262.ஏனையதாமுமிதனதென்பெறுமே.
(எ-ன்) ஒழிந்த இருவகைமடக்கிற்கும் தொகையுணர்-ற்று.

(இ-ள்) ஒழிந்தனவாம் இடைவிட்டுவருமடக்கும், இடைவிட்டும் விடாதும்வரு மடக்கும் ஆகிய இரண்டுங்கூறிய
இவ் விடைவிடாமடக்கே போல எழுவகையாய் ஒரோவொன்று நூற்றைந்து நூற்றைந்தாந் தொகைபெறு மென்றவாறு.

ஆக மூவகைத்தா யெழுதொடையான் மூன்றிடத்தான் மடக்கு முந்நூற்றொருபத்தைந்தா மென்பது பெற்றன.
அவையு மிம்முறையே கூறுகிற் பெருகும். அவற்றுள்ளுள்சில வருமாறு :-

வாமனன்மழவிடையினான்பாற்கடல்வழங்கு
வாமனன்புகழ்கள்வன்வைகுந்தைமாதவனாம்
வாமனன்றனையிடைவிடாதுணர்வினுள்வைப்பான்
வாமனன்னமக்கெளியதாமும்பர்வைகுந்தம். (730)
இஃ திடைவிட்டுவந்த அடிமுதன் முற்றுமடக்கு.

(இ-ள்) பறந்துபாயும் அன்னத்தையுடைய பிரமனும், இளைய இடபத்தையுடைய சிவனும்,
திருப்பாற்கடல்பெற்றுத்தரப்பட்ட அயிராவதத்தை யுடைய இந்திரனும் என்னும் மூவரும் வழுத்துங் கள்வனென்னுந்
திருநாமத்தோடும் வைகுந்தைமாதவனாகிக் குறளுருவான வன்றன்னை விட்டுநீங்காது ஞானத்தினா னினைக்கும்
படிக்குப் புலாதி களிற்போகாது என்னோடுங்கூடி வருவாயாக மனனே !
அங்ஙனம் நினைத்தாற் பெறுதற்கரியவா மெல்லாப்பதத்திற்கும் மேலாய பரமபதம் நா மெய்துதற் கெளியதா மென்றவாறு.
திணை- பாடாண். துறை – கடவுள் வணக்கம். ஓம்படையுமாம்.

வாசநாண்மலர்வண்டுகள்வாய்விடாவகையுண்டு
மூசியேழிசைவண்டுகள்களிமுகிற்குழலாளைப்
பூசன்மாமதன்வண்டுகள்பொரத்துழாய்புல்லாணி
யீசனல்கிலன்வண்டுகளிறைதுறந்தெழுமன்னோ. (731)
இஃ திடைவிட்டுவந்த இடைமுற்றுமடக்கு.

இதனுள், நாண்மலர்வண்டுகள் என்றது, பருவத்தின்மலர்ந்த பூவின் வளவிய தாதுக்கள் என்பதாம்.
பூசன்மாமதன்வண்டுகள் எ-து பஞ்சபாணங்கள் என்பதாம்.
வண்டுகளிறைதுறந்தெழும் எ-து சங்குகள் முன்கையைவிட்டு நீங்கும் என்பதாம். ஒழிந்தனவு முரையிற் கொள்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

மறைபயின்றவண்டமிழ்முனிகுருகையின்மன்காவெ
யிறைவர்பின்னர்நெஞ்சகன்றதுகன்றிடத்திரங்காவே
யறையிலிங்கிணையாமெனவுயிருணவங்காவே
யுறைபுரந்தகண்மலர்களுமொல்லையுமுறங்காவே. (732)
இஃ திடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு.

(இ-ள்) சுருதிகூறியவுரையொடும்பொருந்திய திருவாய்மொழியைப் பாடித்தந்த சீபராங்குசமுனிவன்
குருகாபுரியினிடத்து நிலைபெற்ற சோலைகளே ! நின்னிற்பிரியேனெனப் பிரிந்த தலைவர்பின்னே யென்னெஞ்சமானது,
ஈன்றணிமைப்போதில்விட்டுநீங்கின கன்றின்பின் செல்லு மீற்றாவே சொல்லுமிடத் தொப்பென்பதாக அகன்றது ;
அதனாற் றனியிருந்தவுயிரையுண்பான் றனது துளையாகிய வாயை அங்காக்கப்பட்ட ஆயர்வேய்ங்குழல் தருவதாந்
துளிகளையுடைய கண்ணாகிய குவளைகளு மெனதுவசமாகச் சிறுவரையுந் துயில்கில வென்றவாறு.
ஆதலான் மேல் யாதுசெய்வே னென்பது பயன். பகுதி – இரவிற்குறி. துறை – காமமிக்க கழிபடர்கிளவி.

தாமாலமாலமருமென்றமாலமால
நாமாலமாலநளிநீர்கடமாலமால
தேமாலமாலகரிசேர்மலர்மாலமால
மாமாலமாலமலதாளுளமாலமால. (733)
இஃ திடைவிட்டும் இடைவிடாதும்வந் திடையு மிறுதியும் நாலடியும் முற்றும் மடக்கியது.

(இ-ள்) தாமாலம் – அண்டத்தையெல்லாந் தட்டழித்துண்டு கடக்கும் மிக்க பிரளயத்தில்.
ஆல் அமரும் – ஆலமரத்தினிடத் துற்பவித்துத் தங்கும். மென்றமாலமால – மெல்லிய இலையிற் றுயிலுதலுடைய.
நாமாலமால – அச்சத்தைத் தரப்பட்ட நஞ்சம்போலுங் கருமையையுடைய.
நளிநீர்கடமால மால – செறிந்த நீராங் கடலைக் கடக்கப்பட்ட பெருமையொடுங் கூடிய மற்கடமாருதத்தையுடைய.
தேமால – தேன்றுளும்ப. மா – வண்டுகள். லகரிசேர் – அதனையுண்டு களிப்பைப்பொருந்தும்.
மலர்மால – தாமரைப்பூவிருப்பமாக. மால – பெரிய இல்லமாகவுடைய. மாமால் – திருமகள் மயங்கும்.
அமால் – அழகையுடைய மாயோன். அமலதாள் – அழுக்கற்ற திருவடிகளை. உளமால் – உள்ளத்திலேயுடையேமாகையால்.
அமால – அந்தப் புதனுக்கு, நெஞ்சமே ! யாஞ் சரி யென்றவாறு.

ஆலம் – மீமிசை. நளிநீர்கடமாலமால் – திருவடி. லகரி – ஆரியம். மால் – துயில் ; இஃதாகுபெயர்.
ஒடுக்கத்தில் அகரம் அசை. புதனுக்குச் சரியெனவே, ஞானமுடையேம் என்பதாயிற்று. திணை….. துறை…..

பொருநற்புனற்சங்கணித்துறையான்
புல்லர்களச்சங்கணித்துறையான்
வருநற்றுடரியுரிஞ்சென்றூழ்
வைகுந்தலைக்காவினுஞ்சென்றூழ்
நெருனற்றருமவ்வணங்குளவே
னெஞ்சேநினைத்துவணங்குளவே
தருநட்புளதுவருந்தேனே
தானேமறித்துவருந்தேனே. (734)
இஃ தோரடியை யிரண்டாகப்பகுத் தடிதொறும் நான்கடியும் ஈரிடத் திறுதி முற்றுமடக்கு.

(இ-ள்) பொருநையிடத்துப் புனல்வளமறாத சங்கணித் துறையை யுடையவன், அறிவில்லாதார் பொல்லாச்
சடத்து ளணித்தாகக் குடிகொண்டறியாதவன், அவனதங்கமாகிய துடரிமலைக்கொடுமுடி சென்று பரிசிக்கப்பட்ட
ஆதித்தன் றங்கியேகு முச்சியையுடைய சோலையினிடத் தின்ன முஞ் சிறிது முயற்சியொடுஞ்செல்ல
நேற் றூழொடுங்கூடி யவளைத் தந்த தெய்வ மின்று மிறவாதிருப்ப துண்டென்றா லதனை நெஞ்சமே !
நினைத் ததனுள்ளத்துறும்படி வணங்குவாயாக ; நேற்றைப்போலே என்னிடத்துக் கூட்டித்தரு நட்புடையதாம் ;
அத்தேன்போலு மொழியை யுடையாளு மாயத்தைவிட்டுநீங்கிக் கூடுவள் ; மீள வருந்துவேனல்ல வென்றவாறு.

இதனுள், சென்று என்பது செல என ஒருவினையெச்சம் மற்றொரு வினையெச்சமாயிற்று.
இதன்வேறுபாடும் அறிந்துகொள்க. பகுதி – இடந்தலை. துறை – பொழிலிடைச்சேறல்.

எட்டுமாதிரமாதிரமாதிரம்
வட்டமாறினுமாறினுமாறினும்
விட்டுவாமனன்வாமனன்வாமன
னிட்டர்மால்கடிமால்கடிமால்கடி. (735)
இது முதற்சீரொழித் தேனைமூன்றுசீரும் நான்கடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) அட்டகுலபருவதத்தையும், அட்டகயத்தையும், அட்டதிக்கையும், அவற்றையுடைய பூமியையும்,
இதன்கீழாயவுலகங்களையும், மேலாயவுலகங்களையும் ஏகோதகம் விழுங்குமாற்றா லின்னு மழியினும்
(அழியாதகாலத்திற்கும்) விண்டுவாகிய வாமனன், வாவும் அன்னத்தை யுடையவன், அழகிய மனத்தினுள்ளான்,
தன்னைவிரும்புவார் சித்தப் பிராந்தியைநீக்கும் மேகம்போன்ற திருமேனியன் ; விளக்கத்தையுடைய மாயோன்,
அவனே யுலகிற்குக் காவலாவா னென்றவாறு.

ஆல் – வெள்ளம். தின்னுமாறு – விழுங்குமாறு. இன்னும் – இன்னமும். மாறினும் – அழியினும்.
வாமனன் – வாவும் அன்னத்தையுடையவன். வாமனன் – அழகியமனன் (விகாரம்). இட்டர் – தன்னை விரும்புவார்.
மால் – பிராந்தி. கடி – நீக்கும். மால் – மேகம். கடி – விளக்கம். மால் – மாயோன். கடி – காவல்.
அழியினும் என்னுமும்மையால் அழியாக் காலத்திற்கும் அவனே காவலென்பது தானே போதரும்.
எட்டென்பதனை முதல் விளக்காக்கி மூன்றிடத்து மேற்றுக.
எண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குநின்று விரிந்தன. இதன் வேறுபாடும் அறிந்துகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

263.பாதமனைத்துமடக்குதல்பழிதீர்த்
தோதியவனைத்தினுமுறுமழகுடைத்தே.
(எ-ன்) இன்னும் மடக்கலங்காரத்தையே யொருவழி வேறுபடுத்துக் கூறுகின்றது.

(இ-ள்) அடிக்கண்ணுள்ள சீர்முழுதும் மடக்கிவருதன் முன்னர்க் குற்றமறுத்துக்கூறிய
மடக்கனைத்தினும் மிக்கஅழகுடைத்தென்றவாறு.

அவை இரண்டடிமடக்கு, மூன்றடிமடக்கு, நான்கடிமடக்குமெனப்படும். அவற்றுட் சில வருமாறு :-

மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமான்
மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமா
னிறைசிலம்பினிலொண்ணுதனேத்திரத்
தறையுமங்கைக்கறைவலென்காதலே. (736)
இது முதலடியும் இரண்டாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) வேதத்தினந்தத்தைக்கடந்த (சொல்) கீர்த்தியையுடைய (மாமகிழ்மாலைமால்) பெரியபிராட்டி
விரும்பும் சொரூப ரூப குணங்களினியல்பையுடைய மாயோன்,
அவனது ரகசியங்களைச் சொல்லித்தந்த (சொல்) திருவாய்மொழியையும்,
(மாமகிழ்மாலைமால்) வண்டுசெறியும் வகுளமாலிகையையுமுடைய பெருமையையுடையான்
(நிறைசிலம்பினில்) சகலவளங்களு மல்கின துடரிமலையின்கண் ஒள்ளிய நுதலினையுடையாள்
தன்கண்களாற்சொல்லித்தந்த மங்கைக்குக் கூறுவ லெனதுவிருப்பத்தை யென்றவாறு.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – குறையுறத் துணிதல்.

அஞ்சுவாளிவளைத்தழுவான்மதன்
மஞ்சுதோய்குழலீரெய்யமல்லைமால்
அஞ்சுவாளிவளைத்தழுவான்மத
னஞ்சமோமதியென்றுடனையவே. (737)
இது முதலடியும் மூன்றாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) மேகத்தினது கருமையைப்பொருந்தின குழலையுடையீர் !
வலியநஞ்சமோ சந்திரகிரணங்களென் றுடனையாநிற்ப வுள்ளம் அச்ச முறுவாளாகிய இவளை
அதன்மேலுந் துன்பக்கண்ணீரொழுகும்படிக்குக் காமன் பஞ்சபாணங்களையும் வில்லைவளைத் தெய்யவுந்
திருக்கடன் மல்லையின்மாயோன் றழுவுகில னென்றவாறு.

ஆகையா லிவனைக் கருணாகரனென் றுலகங்கூறுவ தியாது தரனென்பது பயன். பொருள்கோள் – கொண்டுகூட்டு.
மதி – ஆகுபெயர். மதன் நஞ்சம் – கொல்லும்வலியையுடைய நஞ்சம். ஓகாரம் வினா. இறுதிப்பயனிலை சொல்லெச்சம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வா
னுய்யும்படிக்கருள்கூருத்தமனாமாதவன்சீர்
வையம்புகழச்சிலர்வழுத்தாவாறென்னோ
ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வான். (738)
இது முதலடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) (நாலாமடி) பஞ்சபாணங்களைச்சொரியுங் காமனால் மேனிமெலிந் துள்ளத்தில் வருத்தமுற்ற சிவன் ;
இது வினைப்பெயர்.

(முதலடி) பிச்சைக்கு மனைதொறுஞ்செல்லு மஃதேதுவாகக் காசிக் கங்கைவடகரை யாகிய அவ்விடத்துத் தன்னை
யஞ்சலித்தபெருமையா லவனதுசாபந்தீரக் கருணையை மிகுத்த வுத்தமகுணத்தையுடைய மாதவனது கீர்த்தியை
யுயர்ந்தோர்புகழச் சிலமானிடர் வழுத்தாத தியாதுதா னென்றவாறு.

இதனுள், உள்ளமென்பன முதலாயின சொல்லெச்சம். அஞ்சலித்த வுயர்வா னென்னுமிடத்துச் செய்தவென்னும்
பெயரெச்சவாய்பாட்டீற்றின் அகரம் செய்யுள்விகாரத்தாற் றொக்கது ; என்னை?
“புகழ்புரிந்தில்லி லோர்க்கு” என்பதுபோலக் கொள்க. பின்னர்வந்த வுயர்வு – வருத்தம் ;
“உயர்வறவுயர்நலம்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல்.

தளைவிட்டார்மகிழ்மாறன்றன்வெற்பில்வான்
முனைவிற்போனுதலீருங்கண்முன்றில்வாய்
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ. (739)
இது கடையீரடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) தளை…… விற்கோ-பாசமாகியவிலங்கைவிட்டு நீங்கினார்விரும்பும் மாறனென்னுந் திருநாமத்தையுடையவன்
வெற்பினிடத்து வானிற்றோன்று மிந்திரதனுப்போன்ற நுதலையுடையீர் !
உங்கள் முன்றிலின்கண், சங்குவளைவிற்கவோ? மன்மதனம்படுக்க – என்னிடத்து நிலைபெற்ற
விருப்ப மெனதறிவை யகப்படுத்தாநிற்ப. வளைவிற்கோ-வளைக்குங் கருப்புவில்லையுடைய பகையாகிய.
மன்மதனம் படுக்கவோ – காமன்றொடுக்கும் பூப்பாணங்களை நுமதுகுழற்கணியும் மாலையாகத் தொடுக்கவோ வென்றவாறு.

ஓகாரம் முதலு மீறும் வினா. இரண்டாவது அசை. கோ – பகை. பகுதி – குறையுறவுணர்தல்.
துறை – குறையுற்றுநிற்றல் ; பணிவிடை கிளத்தலு மாம்.

கார்வானமால்வரையாய்கட்டுரைகூறானொருவன்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
போர்வாங்குசேயகலான்பூம்புனமென்செய்வதே. (740)
இஃ திடையீரடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) கார்வான……. னொருவன் – திருக்கார்வானத்துத் திருமால்வரையினுள்ளாய் ! ஒருவன் கட்டுரையுங்கூறுகின்றலன்.
சூர்வாரணத்தான் – பகைவர்க்குநோயைச்செய்யுங் கோழிக்கொடியனுமாய்.
பொற்சூழியினாற்றோற்றஞ்சார் – பொன்னினாற்செய்த முகபடாத்தோடும் பெருமைபெற்ற.
சூர்வாரணத்தான் – அஞ்சாத யானையையுடையனுமாய்.
பொற்சூழியினாற்றோற்று – பொலிவுபெற்ற சரவணப்பொய்கையினிடத்துப் பிறக்கப்பட்டவனுமாய்.
அஞ்சார்போர்வாங்குசேய் – சத்துருக்கள்போரை நீக்கும் முருகனையான்.
பூம்புனமகலான் – பூவையுடைய புனத்தைவிட் டகல்வதுஞ்செய்கின்றிலன்.
என்செய்வதே – இதற்கியான் யான் செயத்தகுவ தியா தென்றவாறு.

கட்டுரை – அழகியவுரை. வாங்கும் – நீக்கும், ஆல் அசை. பகுதி – குறைநயப்பு. துறை – குறிப்பறிதல்.

ஒருத்தல்வெற்புடையானும்பர்துற்றுணா
வருத்தமன்கடன்மாவனமேபுக
லருத்திநாண்மலர்கொயதறலாடியோ
வருத்தமன்கடன்மாவனமேபுகல். (741)
இஃ திரண்டாமடியும் ஈற்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) ஒருத்தல்வெற்புடையான் – அத்திகிரியினையுடையான்.
உம்பர்துற்றுணாவருத்த – தேவர்கள்பொசிக்கு மமிர்தத்தை யுண்டாக்கும் படிக்கு.
மன்கடல் – நிலைபெற்றகடலிற் கடைந்துபிறந்த. மா – திருமகளே ! வனமேபுகல் – புனலே புகலிடமாகிய.
அருத்திநாண்மலர் – கொய்தறலாடியோ – கண்டார்விரும்பும் பருவமலர்களைக்கொய்தோ? புனலாடியோ? அன்றி யாதானோ?
வருத்தமன்கடன் – உனது திருமேனிக்குத் தளர்ச்சியெய்தியமுறை.
மாவனமேபுகல் – பெருமைபெற்ற அன்னம் போலு நடையினையுடையாய் ! கூறுவாயாக வென்றவாறு.

துற்றுணா வினைத்தொகை. வருத்த – உண்டாக்க. மா அண்மை விளி. வனம் – தண்ணீர் ; நந்தவனமுமாம்.
புகல் – புகலிடம். அருத்தி – விருப்பம். நாண்மலர் – பருவமலர். ஓகார மிரண்டிடத்துங் கூட்டுக.
கடைந்தென்பதும், திருமேனியென்பதும் முதலாயின சொல்லெச்சம். பகுதி – முன்னுறவுணர்தல்.
துறை – வாட்டம்வினாதல். இவையாறும் ஈரடி முழுதுமடக்கு.

இனி மூன்றடி முழுதுமடக்கு வருமாறு :-

காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
வாவியும்புடைசூழரங்கேசனென்மனத்தான். (742)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) வாவியும் – வாவிகளும். விரிகாவியங்கணல்லார்படி காவிரி -மலர்ந்த நீலோற்பலம்போலும் அழகிய கண்ணையுடைய
மகளிர் புனல் குடையுங் காவிரியும். விரிகாவியங்க ணல்லார் படி கா – அறமுதலிய நாற்பொருளுங் குறைபாடின்றிப்
பரந்த காப்பியங்களை நல்லோ ரிருந்து கற்பனசெய்யுங் காவும். படிகா – ஊரைக்காக்கப்பட்ட.
காவியம் – வாரினாற்கட்டித் தோளிற் காவிய வாச்சியங்கள். அல் ஆர் கண் – இரவின் கண் ணாரவாரிக்குமிடங்களும்.
புடை…… மனத்தான் – பக்கமெல்லாஞ் சூழப்படாநின்ற திருவரங்கேச னென்மனத்துளா னென்றவாறு.

இதனுள், சூழ், படி, படி, விரி, விரி என்பன இறந்தகாலமு நிகழ்காலமுங் கரந்துநின்ற பெயரெச்சவினைத்
தொகைவாய்பாடு. “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற், பிற்படக் கிளவா முற்படக் கிளத்தல்” என்பதனாற்
காவிரியும் காவும் அல்லார்கண்ணும் என்பனவற்றிற் கும்மைகொடாராயினார்.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம். பா – கலித்தாழிசை ; என்னை?
“அந்தடி நீண்டிசைப்பிற், கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்” என்பவாகலான்.

(செய்யுள்)
“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்,
கேள்வரும் போதி னெழால்வாழி வெண்டிங்காள்,
கேள்வரும் போதி னெழாலாய்க் குறாலியரோ,
நீள்வரிநாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்” என்பதிற் காண்க.
இது விதலை யாப்புப்பொருள்கோள்.
“அணியுமமிழ்தும்” என்னும் பாட்டில்
மின்னும், பணியும் புரை மருங்குற் பெருந்தோளி படைக்கண்கள், பிணியுமதற்கு மருந்தும் பிறழப்பிறழ என்பதனாலறிக.

ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
தாமோதரன்றஞ்சையர்க்கோதில்வண்டேன்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர். (743)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) ஆம் ஓதம்உந்து உவரிவண்டு உகள் நீர் – (இது முதலடி முற்றும்) ஆக்கஞ்செய்வதாந் திரை கரையிலெறியும்
சமுத்திரத்திற் சங்குதவழும் புனலையுடைய வாவியில். வண்தேன் ஆமோதமும் து – வளவியதேனையும், பரிமளத்தையு முண்ணும்.
வரிவண்டுகணீர் – பாட்டையுடைய வண்டுகளே ! நீர்.
மோதமுந்து உவர் இவ்வண்டுகள் – என்னைப் பொர என்முன்னெதிர்ந்த (உவராகிய) காமனாரும்,
இப் பஞ்ச பாணங்களும் என்னை வருத்து மிதனை. தாமோதரன் றஞ்சையர்க் கோதில் – தாமோதரனது திருத்தஞ்சை
யிலுள்ளாராய தலைவர்க்குரைப்பீராகில். நீராம் – (நாலாமடியீறும் முதலும்) உமக்கு நல்லதா மென்றவாறு.

ஆம் – ஆக்கஞ்செய்யும். ஓதம் – திரை. உந்து – எறியும். உவரி – சமுத்திரம். வண்டு உகள் – சங்குதவழ்.
நீர் ஆகுபெயர். ஆமோதம் – பரிமளம். து – உண். “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்,
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்” என்பதனால் வண்டேனென்பது

உம்மையில்சொல்லாய் முன்னின்றது. வரி – பாட்டு. வண்டுகள் ! அண்மைவிளி. உவர் முன்னிலைச்சுட்டுப்பெயர்.
வருத்துமிதனை யென்பது சொல்லெச்சம். பொருள்கோள் – மாட்டுறுப்பு. பகுதி – இரவுக்குறி. துறை – காமமிக்ககழிபடர்கிளவி.

நாகவரையானளியமலருள்ளா
னாகவரையானளியமலருள்ளான்
பாகவதர்தம்பிரான்பாமாறன்றம்பிரா
னாகவரையானளியமலருள்ளான். (744)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) புலவீர்காள் ! பாம்பையணியும் அரையையுடையசிவன், வண்டுறுதலையுடைய தாமரையையிடமாகவுடைய
பிரமன், பொன்னுலகின தெல்லையையுடைய இந்திரன், கருணையையுடைய அழுக்கற்றோ ரென்னு மிவர்களுள்ளத்திற்
குடிகொண்டிருப்பான் ; (நளியமலருள்ளான். நாலாமடியீறு) செறிந்த அழுக்குடையோரைத் திருவுளத்தானினையான் ;
அவன் யாரெனில்? பாகவதர்தம்பிரானாகிய பாமாறனுக்குத் தம்பிரானாகிய அத்தகிரிநாத னென்றவாறு.

புலவீர்கா ளென்னு மெழுவாய்முன்னிலை யெச்சம். அவனை மனமொழிமெய்களி னினைந்து
வாழ்த்தி வணங்க அறமுதலிய நாற்பொருளும் பயக்கு மென்பது கருத்து.

சிலைநுதாலொழிதேடுதல்பார்சுலா
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை. (745)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) (நாலாமடியீறும் முதலடிமுதலும்) வரிவளைசிலைநுதால் – நாரினால்வரிவனவாய் வளையப்பட்ட
விற்போலு நுதலினையுடையாய் !
(முதலடியீறு மிரண்டாமடிமுதலும்) பார்சுலாம் அலையும் – பூமியை வளைக்குங் கடலும்.
(இரண்டாமடியீறும் மூன்றாமடிமுதலும்) அரி வளைமலையும் – குரங்குகள் சூழப்பட்ட பருப்பதமும்.
(இரண்டாமடி மூன்றாஞ்சீரிறுதி) ஆ – தம்மிடத்துண்டாக்கப்பட்ட.
இரண்டாமடியில் ஆரமணி, மூன்றாமடியீற்று வரிவளை, நாலாமடியில் ஆரம் – முத்தையும் மாணிக்கத்தையும்
சங்குகளையும் சந்தனத்தையும். அணியா அணியா – அழகுபெற அணிவனவல்ல.
ஆகையால், நீபெற்ற இவளு முனக் கந்நீர்மையளென்பதறியாதே தேடிப் பின்றொடர்ந்து வருதல்,
(மலையுமார என்பவற்றை ஆரமலையுமெனப் பாடமாற்ற) உலகியற்கு மிக மாறுபடுமென்றால்.
(முதலடி) தேடுதலொழி – தேடுதலை யொழிவாயாக வென்றவாறு.

இதுவும் மாட்டுறுப்பு. இதனுள்ளுஞ் சொல்லெச்சங்கள்வந்தனவுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – உலகியலுரைத்தல்.

ஆனகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா (746)
இது நான்கடியும் ஏகபாதமாக முற்றுமடக்கு.

(இ-ள்) ஆல் நகம் மலல் நயனத்தானத்தா – ஆலந்தளிராகிய பாம்பினை வளப்பத்தையுடைய திருக்கண்டுயிலிடமாகவுடையவனே !
ஆல் நகு அமல நத்து ஆன அத்தா – வெள்ளத்தினிடத்துமிளிரும் அழுக்கற்ற சங் கிருப்பான திருக்கையையுடையவனே !
ஆனகமலன் அயன் ந தானத்தா – உனதுந்தியிற்றோன்றின தாமரையானாகிய ஆதிப்பிரம னில்லையாக
மீளவும் பெற்றளித்த கொடையினையுடையவனே !
*வான கமல னயன் – ஆகாயத்தாகிய கங்கையைத்தரித்தவனாஞ் சிவன் மூதாதையே !
நத்தானத்தா – சிறப்புடைய முக்கியத்தானமாகிய பரம பதத்தையுடையவனே !
இடைச்சொல் ந-சிறப்புப்பொருட்டு. (இரண்டாமடியில்) நய – என்னை ஆட்கொள்ள விரும்புவாயாக வென்றவாறு.

ஆல் ஆகுபெயர். நகம் – பாம்பு (விகாரம்). மலல் இடைக்குறை. நயனத்தானம் – துயிலணை.
ஆல் – வெள்ளம். நகு – மிளிர். அமலம் – அழுக்கற்ற. ஆன – இருப்பான.
(மூன்றாமடியில்) ந-இல்லை. ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

* இவ்வடிக்கு, ஆனகமலனயன் நத்து ஆன் அத்தா – பிரமன்விரும்பிக் கவர்ந்த ஆன்வடிவெடுத்த அத்தனே ! எனினு மமையும்

264.ஒருசொலின்மடக்கலுமுளவெனமொழிப.
(எ-ன்) இதுவும் அம்மடக்கினதுபேதமுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாவினது நான்கடியு மொருசொல்லானே முற்றும் மடக்குவது முண்டென்று
கூறுவர் பெரியோ ரென்றவாறு. யமயமக மென்பது மிது.

அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார். (747)
இஃ தொருசொல்லினான்மடக்கல்.

(இ-ள்) அரியார் – யாவராலும் அளவிடற்கரியார். அரி ஆர் – சத்துருக்களுயிரைப் பருகும்.
அரியார் – சக்கராயுதத்தையுடையார். அரியார் – பாம்பை மிக்க. அரியார் – சயனமாகவுடையார்.
அரியார் – ஏனமாக அவதரித்தவர். அரியார் – அனுமானையுடையவர்.
அரியார் – அவர்யாரெனில்? அரியென்னுந்திருநாமத்தையுடையா ரென்றவாறு.

எனவே அவரே பரப்பிரமமாவா ரென்பதுஉ மவரே முத்திக்கு வித்தாவா ரென்பதூஉ மாயிற்று.
துறை – கடவுள்வாழ்த்து. பா-குறளடி வஞ்சித்துறை.

265.பதத்தொடுபதமடக்குதல்பதமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினையே வேறுபடுத்திக்கூறுகின்றது.

(இ-ள்) ஒருசெய்யுணான்கடியாய்வருவதனுள் இரண்டடி யொரு நோக்கமாக மடக்குதல் பாதமடக்கெனப் பெயர்பெறு மென்றவாறு.

சக்கரநாகணைத்தகைத்தலத்தின
சக்கரநாகணைத்தகைத்தலத்தின
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா. (748)
இது முதலிரண்டடியும் கடையிரண்டடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) கடலிற்றுயிலும் பாம்பணையாகிய அழகிய இடத்தை யுடையவனே !
சக்கரத்தையுஞ் சங்கையுந் தரித்த கையையுடையவனே !
கரும்பினடியிலே அழகிய சங்குதவழு மாக்கத்தோடு மின்பந்தரும் வாவிக்கரையையுடைய பொருநைத்
தென்கரைக் குருகூர்க்கு மன்னவனே ! என்னைக் காக்கவருவாயாக வென்றவாறு. துறை – இதுவுமது.

தரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான்
றரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான். (749)
இது முதலடியும் மூன்றாமடியும் இரண்டாமடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) பூமியானது பிரளயத்து ளாழ (அதனையெடுத்தற்குத்) தோன்றும் அழகிய ஏனம் ; பெருமையையுடைய நரசிங்கம் ;
வாமன ரூபமானவன் ; பாஞ்சசன்னியத்தையுடையான் ; கோவர்த்தன கிரியைக் குடையாகவெடுத்து நிமிரும் மிடுக்கினையுடையான் ;
(இதன் கண் முன்பான் என்னு மிரண்டடியி னிறுதியைச் சேர்க்க). பஞ்ச பாண்டவர்களுள்ளத்துக்கு மாறுபாடான நூற்றுவர்க்குக் கூற்றுவன் ;
தாவும் அன்னத்தையுடைய பிரமனுக்குப் பிதா ; எல்லாக்கடவுளர்க்கு முன்னானவ னென்றவாறு.

முரண் – பெருமை. நரரி – நரசிங்கம். முன்பு – மிடுக்கு. அரி – யமன். ஒழிந்த அரும்பதமு முரையிற்கொள்க.
துறை – இதுவுமது.

இலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவா
னலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரிலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவான். (750)
இது முதலடியும் நாலாமடியும் தம்மிலும், இடையி லிரண்டடியும் தம்மிலும் முற்றுமடக்கு.

(இ-ள்) முதலே நின்ற இலங்கொண்மூவெயில் என்பவற்றுள் இல்லை யீறாக்கி அங்கொண்மூவெயிலில் எனச் சேர்த்து,
செலத்தைத் தரித்த மேகம் வெயிலினு மிகுந்து என்க.
நாலாமடியில் இல் நிற்ப அம் கொள் மூவெயில்குன்ற – அழகுகுடிகொண்ட மூன்றுமதிளும் அழியும்படிக்கு.
(முதலடியிறுதியிருசீரும் நாலாமடிமுதல் இல்லும்) குன்றவில்லேற்றுவானில் – இமவானாகிய குன்றவில்லிற்
பாம்பாகிய நாணையேற்றுஞ் சிவனைப்போல. (நாலாமடியீறு) வில்லேற்று வான் – மின்னுதலைப் பொருந்தி வானினின்றும்.
(இரண்டாம் அடியில்) அலம் கல் அமைந்து – நிறைவையுடைய மலையினுச்சியிற்பதிந்து.
(இரண்டாமடியி லிரண்டாஞ்சீர்) வாரி – மழைத்தாரையை.
(அதன் கண்ணீற்றுவேர் மூன்றாமடிமுதல் அல் அதன்கணீற்று வேர் இவற்றை அடைவே கூட்ட. )
வேரல்வேர் – மூங்கில்வேரையும்.
(மூன்றாமடியில்) அம் கல் வாரிய மைந்து – அழகிய மாணிக்கத்தையுங் கிளைத்து முகந்தெடுத்த மிடுக்கினோடும்.
(இரண்டாமடி) இறப்பு எய்த – வெள்ளமாயோடுதலைப் பொருந்தும்படி.
(மூன்றாமடியில்) இறப் பெய்த – தண்ணீர் தன்னிடத் தில்லையாம்படி முழுதும் பெய்த வென்றவாறு.

பொருள்கோள், முதலும் நாலும் தம்மிலும், இடையிலிரண்டுந் தம்மிலும் மாட்டுறுப்பாகக் கொண்டது ;
(குருகாமான்மியம்). திணை – பாடாண். துறை – மலைவருணனை.

266.அந்தாதிப்பதந்தாதிமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினை வேறுபடுத்துக்கூறுகின்றது.

(இ-ள்) அடிதொறு மிறுதிச்சொல்லை யதன்மேல்வருமடிக் காதி யாகத்தொடுப்ப தந்தாதிமடக்கென்பதா மென்றவாறு.

நாகமுற்றவுங்களிதரநிருதர்கோனாக
நாகமையிரண்டொருங்கறப்பொருதமைந்நாக
நாகமூலமென்றழைத்தகார்துயிலிடநாக
நாகமொய்த்தபூம்பொழிற்றிருநாகையென்னாகம். (751)
இஃ தந்தாதிமடக்கு. இதனைச்சந்தொட்டியமகமென்றுஞ் சொல்லுப.
அல்ல திடைவிட்டு முதலுமிறுதியுமடக்கிய முற்று மடக்கெனவுங் கொள்க.

இதனுள், நாகம் – துறக்கத்துள்ளார். முற்ற – அனைவரும். ஐயிரண்டுநா கம் – பத்துநாக்கும் பத்துத்தலையும்.
ஒருங்கற – ஒருதொடை யொருவாளியி லொக்கவற. மைந்நாகம் – நீலமலை.
நாகம் – யானை. நாகம் – திருவனந்தாழ்வான். நாகம் – சுரபுன்னை. என்னாகம் – என்னுள்ளம்.
நா கம் என்பது “ஆ பயன்” என்பதுபோல ஒற்றுத்தோன்றுஞ் சந்தி ஒற்றின்றி இயல்புசந்தியாய்நின்றது.
துறை – கடவுள்வணக்கம்.

தேனேகமழ்நறுந்திருமகிழ்மாறன்
மாறன்சேவடிவணங்கிறைவரைவாய்
வரைவாயன்றெனில்வல்லைநீயிறைவா
விறைவால்வளையைநீப்பினும்வருந்தேனே. (752)
இது முதலு மீறு மொருசொல்லா யிடையிடை பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதிமடக்கு.

இதனுள், மால்தன்சேவடி – மாயன்றனது சிவந்ததிருவடித் தாமரை. வரைவாயன்றெனில் – வரைந்துகொள்வாயாக,
அஃதல்ல வெனில். வல்லைநீயிறைவா – விரைந்து தலைவனே.
இறைவால் வளையைநீப்பினும் வருந்தேன் – முன்கையிலணியுஞ் சங்கினையுடையாளொடுநீங்கினும் வருந்தேன்.
வளையினையுடையாளொடு நீங்கல் உடன் கொண்டுசேறல். ஏகார மீற்றசை.
நீப்பினுமென்றவும்மையாற் சிறிதுநாளிவளையணைதற்கு வாராதுநீங்கினும் வருந்தே னென்பதாம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – அகன்றணைவுகூறல்.

267.அம்மனைகைக்கொண்டாடுநர்தம்மையு
மம்மனையாய்மதித்தாங்கொர்கர்த்தாவினை
நிந்தாத்துதிதுதிபெறநிகழ்த்துதலு
மந்தாதித்திடையடிமடக்காகவு
மீற்றடியிரட்டுறவிசைத்ததைத்தாபித்
தாற்றலினமைக்குமம்மனைமடக்கொன்றுள.
(எ-ன்) இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலென்பதனால் அம்மனைமடக்குணர்-ற்று.

(இ-ள்) அம்மனைகைப்பற்றியாடு மிருமகளிர் தம்மைத்தாமே யம்மனையாகப் பெயர்குறித்ததாக வதற்குப்புணர்த்த
கலித்தாழிசையிடத் தோர்கருத்தாவினை நிந்தாத்துதியானாதல் துதியானாதல் முதலே
யொருவரொருபொருள்பெறக்கூறலு மதற்கு முன்னிருந்த மகளிர் செய்யுளினிடைப்பட்ட அடியை யடிமடக்கா யந்தாதித்து
வினாயதற்கு முன்னர்க் கூறியமகளிர்தாமே பின்னுந் தாங்கூறியது தப்பாதுதாபித்த தாம் பெருமையொடுங்கூறு
மீற்றடி சிலேடைவாய்பாட்டாற்புணர்க்கும் அம்மனைமடக்கு மொன்றுள தென்றவாறு.

ஆற்றலினமைக்குமென்றதனால் முதலடி யிரட்டுறவருதலு மாமென்றறிக.
இது பொருளணியுஞ் சொல்லணியுங்கூடியதென வுணர்க.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளறைமாயன்
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனம்மானை
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனேலமுதுட்
கொண்டபரிகலமுன்கொட்டினனோவம்மானை
கொட்டினதுமுண்டுகுழிதாலமம்மானை. (753)
இது நிந்தாத்துதி. கஞ்சக்கண்ணாளன் என்பது தாமரைபோலுங் கண்களையுடையா னென்றும்,
வெண்கலங்கொட்டுங் கன்னுவனென்றும் சிலேடைநிந்தாத்துதியாயிற்று. கண்டஅளவி லென்பது கண்டளவிலென விகாரத்தாற்றொக்கது.
கொட்டினது என்பது உண்டதுமிழ்தலும் தட்டுதலும்.
குழிதாலம் – உண்டுகுழிக்கப்பட்டபூமியும், குழிதாலமான உண்கலனுமாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

வண்டமிழோர்கொண்டாடுமன்குருகூர்வாசமகிழ்க்
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றங்காணம்மானை
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றமதானாலதன்கண்
ணெண்டிசையுஞ்சந்தனக்காவில்லையோவம்மானை
யில்லாமற்சாந்தமணமெய்துமோவம்மானை. (754)
இது துதி. சாந்தமணம் – சந்தனப்பரிமளமும் சாந்தரசம் பொருந்துதலுமாம்.
தமிழ்க்குன்றம் – பொதியமும், தமிழுக்கு மலைபோலும் பெருமையுடையோன் என்பது மாம்.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.

268.தொடர்ச்சொற்பலபொருட்சிலேடைமுந்துறவே
யிடர்ப்பாடின்றியீற்றுறுமிணைமடக்குள

(எ-ன்) இதுவும் இலக்கியங்கண்டதற்கிலக்கணங்கூறலாக இன்னும்
அம்மடக்கினுட் சிலேடைமுன்னிட்டனவாய் வருவதோர்மடக்குணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளின்முதற்கட் டொடர்ச்சொல்வாய்பாட்டாற் பலபொருளைக்காட்டுஞ் சிலேடைவந்து
அதன்பின்ன ரிடைவிடாதனவா யீரிடத்துவரு மொருசார்மடக்குகளு முளவென்றவாறு.

இடர்ப்பாடு- இடைவிடுதல். இன்றி – அஃதில்லாமை. பலபொருளாவன ; ஒருதொடர்ச்சொ லிருபொருண்முதலாக
அஞ்சீறாயபொருளைக் காட்டுதல் எனக்கொள்க. எனவே இதுவும் பொருளணியுஞ் சொல்லணியுங் கூடியதெனவுணர்க.

மூவுலகெண்முத்தரைப்போன்முந்நீர்முகிற்பெயல்போற்
காவலர்கள்வீழ்வேங்கடவெற்பே–தேவர்
பெருமான்பெருமான்கட்பெய்வளைக்கையார்மூ
வருமால்வருமாலின்வைப்பு. (755)
இஃ திருபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) தேவர்பெருமான் – கடவுளர்க்கெல்லாஞ் சுவாமி.
பெருமான் கட்பெய்வளைக்கையார் – பெரியவாய மானினதுகண்ணோக்கம்போலு நோக்கமைந்த கண்ணினையும்,
இடப்பட்ட வளையோடுங்கூடிய கையினையுமுடைய.
மூவரு மால்வருமாலின்வைப்பு – திருமகள். மண்மகள், நீளை யென்னு மூவருள்ளத்தும் வேட்கையுண்டாம் மாயோன்வாழுமிடம்.
மூவுலகெண்….. காவலர்கள்வீழ் வேங்கடவெற்பு – பூமி யந்தர சுவர்க்க மென்னு மூவுலகின்கண்ணுள்ளாரு மதிக்கப்பெறும்
பரமபதத்து முத்தரைப்போல நெருங்கிப் பூலோகமன்னர் சேவிக்கவிரும்புந்தன்மையவாய்,
அதனொடுங் கடலிற்படிந்த மேகத்தினிழியுமழைபோலக் காவினிடத்து மலர்களிற் றேன் றுளித்துவீழும் வேங்கடவெற்பா மென்றவாறு.

கள் – தேன். வீழ் – வினைத்தொகை. இதனைச் செய்யுமென்னும் பெயரெச்சமாகவிரித்துக் காலமூன்றினு மேற்றுக.
திணை – பாடாண். துறை – மலைவருணனை.

மாயன்சேய்வில்லுமலர்ப்பொழிலுங்கஞ்சனையுங்
காயம்புதைதிறங்கூர்கச்சியே–நேய
மகத்தாரகத்தாரருவினையாட்செய்யு
மகத்தார்மகத்தார்தம்வாழ்வு. (756)
இது மூன்றுபொருட்சிலேடையிணைமடக்கு.

(இ-ள்) நேயம் அகத்தாரகத்தார் – கருணையைத் திவ்யாத்மாவுக்குத் தாரகமாகவுடையார்.
அருவினையாட்செய்யுமகத்தார் – நீக்குதற்கரிய வினைக ளடிமைத்தொழில்செய்யு மகத்துவத்தையுடையார்.
மகத்தார் தம்வாழ்வு யாகத்தின்கட்டோன்றின பேரருளாளர் வாழுமிடம்.
மாயன்…….. கஞ்சனையும் – திருமால்புதல்வனாகிய காமனது கருப்புவில்லும், பூவோடுகூடிய சோலைகளும், கண்ணாடிகளும்,
காயம்புதைதிறங்கூர் கச்சி என்பதற்கு, கூடிப்பிரிந்தபுமான்கள் மகளிரறிவை நிலைதிரிக்கும் பூவாளியைச்
செலவிடுந் தொழில்புரியும், ஆகாயத்தைமூடுங் கூறுபாடுமிகும்,
கண்டோர்மெய்யை யுட்கொள்ளுந்திறமிகும் – கச்சிஎன அடைவேகொள்க. வாழ்வு – ஆகுபெயர்.
திணை – இதுவுமது. துறை – நகர வாழ்த்து.

கொம்பரஞ்சொன்மின்னார்குயம்பொன்னியன்பருள
மம்பரந்தோயுந்தென்னரங்கமே–தும்பி
யுரைத்தானுரைத்தானுயர்திரைநீர்தட்டீ
னரைத்தானரைத்தானகம். (757)
இது நாலுபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) கொம்பர் – பூங்கொம்புகள். அம்பரந்தோயும் – ஆகாயத்தைத் தோயும். குயம் – முலை.
அம்பரந்தோயும் – கூறைவிட்டு நீங்காதிருக்கும். பொன்னி – காவிரி. அம்பரந்தோயும் – கடலைப் பொருந்தியிருக்கும்.
அன்பருளம், அம்பரந்தோயும் – அழகியபரப்பிரமத்தை அநுபூதிசெய்து கொண்டிருக்கும்;
தென்னரங்கம், நுரைத்தானுயர்திரைநீர்- நுரையையுயர்த்துந் திரையையுடைய கடலை.
(உயர்திரை வினைத்தொகை. நுரைதான், நுரைத்தான் என ஒற்றுத் தோன்றாதுந் தோன்றியுநிற்கும். )
தட்டு – அடைத்து. ஈனரைத்தானரைத்தானகம் – அறிவில்லாதவீனராகிய இராவணாதிகளை ஆயுதத்தாற்
கண்டஞ்செய்து பூமியின்கட்போட் டரைத்தான்பதி யெனக் கூட்டுக. துறை – இதுவுமது.

சூழிமறுகாடவர்தோள்விரல்பொழிற்றே
னாழிபயிலுமரங்கமே–யூழி
திரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட
வரிநாட்டரிநாட்டகம். (758)
இஃ தைந்துபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) சூழி – வாவி, ஆழிபயிலும் – வட்டம்பொருந்தும் ; மறுகு – வீதி, தேர்வண்டி முதலாயின பொருந்தும் ;
ஆடவர்வலது தோள் திருச்சக்கரப்பொறிபொருந்தும் ; மகளிர் புமான்கள் கைவிரல்கள் நவமணியாழிபொருந்தும் ;
பொழிலிற் பூந்தேனும் வைத்ததேனும் முகைவிண்டொழுகியும் உடைந்தும் நதிவாய்ச் சமுத்திரத்தைப் பொருந்துமென்க.
ஊழிதிரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட – கற்ப வந்தியத்தில் உகங்கள் மீளவருநாள் மூன்றுலகின்கண்ணுமுள்ள
வுயிர்க்கணத்தைத் திருவுதரத்துள்வைத்துப்பிழைக்கக்கொண்ட.
அரிநாட்டரி நாட்டகம் – பாற்கடலென்னுமிடத்தையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையா னிலைபெறுத்தின பதி என்றவாறு.

ஒழிந்த அகல முரையிற்கொள்க. துறை – இதுவுமது.
இவற்றிற் கெல்லாம் “எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி – யிசையிற் றிரித னிலைஇய பண்பே” என்பதனால்
ஒலியெழுத்துக்கள் எடுத்தல் படுத்த லென்னுமோசைவேற்றுமையாற் புணர்ச்சியிடத்துப் பொருள்வேறு படுதல்
நிலைபெற்றபண்பாக அறிந்துகொள்க ; செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என்பனபோல. பிறவுமன்ன.

269.மதித்தோரெழுத்தினைமடக்கலுமடக்கே.
(எ-ன்) இன்னும் மடக்கிற்கோர்வேறுபாடுணர்-ற்று.

(இ-ள்) ஓரெழுத்தினைச் செய்யுளின்கண் ணடிதொறு முதலேவந்த பொருளினையுட்கொண்டு
வேறுமொருபொருடருவதாகமடக்கலு மடக்கின்பாற்படு மென்றவாறு.

எனவே மேலே முதற்சூத்திரத்தின் மடக்கலுமென்றவும்மையாற் றொடரெழுத்துமொழியேயன்றி
யோரெழுத்தானாமொழிகளைப்பெயர்த்து மோர்பொருடா மடக்குவது மப்பெயராமென்றாராதலாற் றொடரெழுத்து
மொழிகளானா மடக்குகளுணர்த்தி யதன்பின்னர் ஓரெழுத்தா னாமடக்குணர்த்து வான்றொடங்கினாரெனக் கொள்க.

மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்திக்
காகாகாமர்மல்லையின்மோதுங்கடலேமுன்
னானானாமெய்தாமுயிரென்றார்நகர்மீள
வாவாவாய்மைதந்ததுமுளதோபகர்வாயே. (759)
இஃ தோரெழுத் தடிமுதன்முற்றுமடக்கு.

(இ-ள்) மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்தி என்பது பெரிய திருமகளாகியமாது விரும்புந் திருமார்பையுடையான்
மகிழ்ச்சி பொருந்தி என்றவாறு. காகாகாமர்மல்லையின்மோதுங்கடலே என்பது காவல்பூண்ட காவினோடுங்கூடிய
அழகிய திருக்கடன்மல்லையென் னுந்திருப்பதியிற் கரைதொறுமெற்றுங் கடலே யென்றவாறு.
முன்னானானாமெய்….. மீள் – பிரியுமுன்னர் நான் நீங்காதமெய்யாக வுந் தா மதன்கண்வைகு முயிராகவு மெனக்
குட்கொளக்கூறினா ரிந்நகர்க்குமீளும்.
அவாவாவாய்மை….. வாயே – என்பது அன்புண்டாம்வசனம் நின்னுடன்கூறியதுளவாகி லென்னுடன் கூறுவாயாக வென்றவாறு.

இதனுள், இடைநின்ற மா – திருமகள். கா-சோலை. ஆனா – நீங்காத. மீள் (மீளும்) என்பது வினைத்தொகை.
அவாவா – அன்புண்டாம். வாய்மை – வசனம். இது நெடிலெதுகை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – கடலொடுவரவுகேட்டல்.

“ஓரெழுத்தினைமடக்கலு” மென்ற வும்மையா லீரெழுத்துமுதலாக நாலெழுத்தீறாக வுயிரும் உயிர்மெய்யுமாகியவை
யொரோசெய்யுண் முழுதுங்கோடலு மொரோஅடிமுழுதுங் கோடலு முரியவெனக் கொள்க. அவற்றுள் ஓருயிர்மடக்குவருமாறு :-

அரவமகரசலசயனபடவரவ
கரசரணநயனவதனகமலதர
வரதசரதமகவரதசரதமக
பரமபரமமலவனகபரமபத. (760)
இஃது அகரக்குற்றுயிர்மடக்கு.

(இ-ள்) ஆரவாரத்தையுடைய மகராலயமாஞ்சமுத்திரத்திற் றுயிலுஞ்சயனமாகிய படத்தோடுங்கூடிய பாம்பையுடையவனே !
கரமுங் காலுங் கண்ணும் முகமுங் கமலமொத்தவனே ! வரதனே ! சரதனே ! மகத்துவமான வரத்தைப்பெற்ற தசரதன்மகனே !
பரமனே ! அமலனே ! அனகனே ! பரமபதத்தையுடையவனே ! உனக்கேபரம் என்றவாறு. துறை – கடவுள்வணக்கம்.

ஆயாபாலாகாராபாராராலாலா
மாயாமாயாமாமாதாகாவானாளா
காயாகாயாவாளாவாளாநாகாளா
தாயாநாதாநாதாகாகாதாளாளா. (761)
இஃது ஆகார நெட்டுயிர்முற்றுமடக்கு.

(இ-ள்) ஆயா – கோபாலனே! பாலாகாரா – பாலைப்பருகப்பட்டவனே ! பாராராலாலா – பூமியையுண்ட பிரளயத்தின்
மேலான ஆலிலையிற் றுயின்றவனே! மாயாமாயா – அழிவிலாத மாயோனே ! மாமாதாகா – திருமகள்தங்குமார்பனே !
வானாளா – பரமபதத்தையாள்வானே ! காயாகாயா – காயாமலர்போலுந் திருமேனியையுடையவனே!
வாளா – வாளினையுடையவனே! வாளாநாகாளா – வெளுப்பான சங்கினையுடையவனே !
தாயாநாதா – எமக்குத் தாயா நாதனே ! காதாளாளா – சர்வலோகத்தை யுங்காக்கு முயற்சியுடையவனே !
நாதா – நின்னைப் புகழும்படிக்கு நாவைத் தருவாயாக ; கா- பிறரைப் புகழாவண்ணம் என்னைக் காப்பாயாக வென்றவாறு.

முன்னின்ற நா தா கா என்பவற்றைப் பாடமாற்றித் தாளாளா வென்ற தன்முன்னர்ச்சேர்க்க. துறை – இதுவுமது.

கூக்குக்கிக்காக்காகா
கூக்கக்குகைக்கொக்கோ
கூக்கொக்காகைக்காகா
கூக்காக்கைக்கேகாகா. (762)
இது ககரமெய்வருக்கம்.

(இ-ள்) கூ – பூமியை குக்கிக்கு – திருவுதரத்துக்கு. ஆக்காகா – இரையாக்குந் திருமேனியையுடையவனே !
கூக்கக்குகைக்கொக்கோ – பூமியை மீளப் புறத்தேயுமிழ்தற்கொத்த கோவே !
கூக்கொக்காகைக்காகா – கூவினிடத்து மேற் குதிரையாகைக்கிருக்குந் திருமேனியையுடையவனே !
கூக்காக்கைக்கேகாகா – பூமியைக்காப்பதற்குப் பரமபதத்தினின்றும் லீலாவிபூதியில் வரப்பட்டவனே !* என்றவாறு.
எனவே என்னைக் காப்பாயாக வென்பது பயன். இது குருகாமான்மியம். பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.
* கூக்காக்கைக்கேகாகா என்பதற்கு, ஜகத்ரக்ஷணத்துக்கு அத்விதீயனானவனே என்னை நீ காப்பாயாக எனினு மமையும்.

தத்தோதத்தத்திதாதத்தைதுதிதிதா
தத்தோதத்தத்தத்திதாதிதித்தே–துத்தூத்
ததிதித்தித்தேதுத்துத்துத்துத்தத்தாதி
துதிதாதைதாதைதுதித்து. (763)
இது தகரமெய்வருக்கம்.

(இ-ள்) தத்தோதத்தத்தி – கரைமீதுபாயுந்திரையையுடைய திருப்பாற்கடல்.
தாதத்தை – பெற்றுத்தரப்பட்ட கிளியைப்போலு மொழியையுடைய திருமகள்.
துதி திதா- துதிக்கப்பட்ட வுண்மைப் பொருளே ! தத்தோது – தனக்கு முதலையாலுண்டானதத்தினிடத்து மூலமேயென்றுகூறும்.
அத்தத்தத்தி – துதிக்கையையுடையயானையை. தாதிதித்தே – (காத் ததனுடையவுயிரைத்) தரப்பட்ட காவற்கடவுளே !
துத்தூ – உண்ணும் தூய. ததிதித்தித்தே – 1தயிரை வாயாலினிமை யாகக்கொண்டு. துத்துத்துத்து – உணவாகவுண்டு.
தத்தாதி – கூத்தாடுங் கண்ணனாகியகாரணனே ! துதிதாதை – சருவலோகமுந்து திக்கும் பிதாமகனுக்கு.
தாதை – பிதாவே ! துதித்து – உன்னைத் துதிக்கிறே னென்றவாறு.
1 தித்தித்து என்பது சுவைத்து என்பதன் பரியாய வினையெச்சம்.

இதில் இறந்தகாலம் நிகழ்காலமாயிற்று. என்னைக்காப்பாயாக வென்பது பயன். துறை – இதுவுமது.

மாலைமலைமுலைமேலம்மாலைமாலை
மாலைமலைமாலைமாலுமோ–மூலமா
மெல்லைமாலாலாலிலைமேலாமாலில்ல
மல்லைமாலாமாமைமால். (764)
இஃ திரண்டெழுத்தான்வந்தது.

(இ-ள்) முத்தமாலையணியு மலைபோன்ற முலைகளின்மீதே யுனது துளபமாலைவேட்டதனாலே பசலையாகிய
பொன்னுப்பூணுமியல்பினையுடைய பூமாலைபோல்வாள் போரைச்செய்யும் மாலைக்காலத்தான் மயங்குவாளோ?
சகலதேவன்மார்க்கு முதலாகிய காலவளவையுடைய பெரியவனே !
பிரளயத்தின்மேலாய ஆலிலைமேற் கண்வளர்வதான விருப்பத்தையுடை யவனே !
இல்லந் திருக்கடன்மல்லையாங் காளமேகம்போலு நிறத்தையுடைய திருமாலே ! என்றவாறு.
மால் – அண்மைவிளி. திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

சூலமலைமைம்மாமைமாலிசுமாலிசலச்
சீலமலைசூலிசெலச்செல்லச்–சாலமலை
சோலைமலைமாலைச்சொல்லச்சொல்சொல்லானம்
மாலைமலைசீலமாம். (765)
இது மூன்றெழுத்தான்வந்தது.

(இ-ள்) சலச்சீலமலைசூலி – தீயவினைகளைச்செய்யுஞ் சீலத்தை யுடையளாய்ப் போர்புரிசூலத்தையுடைய தாடகையும்.
சூலமலை மைம்மாமைமாலிசுமாலி – சூலினோடுங்கூடி யாரவாரிக்குங் காளமேகம்போலு நிறத்தையுடைய மாலியுஞ் சுமாலியும்.
செல – போர்க் கெதிர்செல்ல. செல்ல – அவர்களுயிர் கூட்டைவிட்டுநீங்க. சால – மிகவும். மலை – பொருத.
சோலைமலைமாலை – சோலைமலையிலுள்ள திருமாலானவனை. சொல்லச் சொல் – நெஞ்சமே !
சொல்லினாற் றோத்திரஞ்செய்யென்று நாவிற்குச் சொல்லுவாயாக.
சொல்லால் நம்மாலைமலை சீலமாம். அத்தோத்திரமேதுவாக நம்மிடத் தறிவின்மையைப் பொருதுபோக்கப்பட்ட நல்ல ஞான நமக்குண்டா மென்றவாறு.

சூல் – கற்பம். அமலை – ஆரவாரம். மை – மேகம். மாமை – நிறம். சலம் – தீயவினை. சீலம் – புத்தி.
சூலி – சூலத்தையுடைய தாடகை ; காளியனையாள் எனினுமாம். செல – எதிர்செல்ல. செல்ல – நீங்க.
சொல்லச்சொல் – தோத்திரஞ்செய்யச்சொல்லுவாயாக. மலைதல் – மாறுபடுதல். சீலம் – நல்லுணர்வு. ஆம் – உண்டாம்.
நெஞ்சேயென்பது தோன்றாஎழுவாய். இது தன்னுணர்வைப் பிறிதொன்றாக்கிக் கூறாதவற்றைக் கூறென
அகத்திற் கூறுவனபோலக் கூறும் மயக்கம். என்னை?

“ஆம்புடைதெரிந்துவேந்தற் கறிவெனுமமைச்சன்சொன்னான்”
“ஓதிய பொறியற்றாயோரரும்பொறிபுனைவியென்றான்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை -…..

கோகிலமாலைக்கேகொலைமல்கக்கோலமுலைக்
காகுலமாமோகமிகலாகுமோ–சோகமிகு
மேமாசலமாமிகலமைமாச்சொல்லுமிசை
மாமாமலிகச்சிமால். (766)
இது நாலெழுத்தான்வந்தது.

(இ-ள்) முதலையாற்றுன்பமிகாநின்ற பொன்மலைபோலப் பெருத்ததாய்ப் போருக்கமைந்த யானை மூலமே
யென்னும்பொருளுரையையுந் திருமகளையும் மாமரமிகுந்த திருக்கச்சியையு முடைய மாயோனே !
குயில்களானவை மாலைக்காலத்திலே (காமா கூகூவென்று காமனை யழைத்துக்) கொலைத்தொழிலை மிகுப்ப,
அழகியமுலையினையுடையாட்கு வருத்தத்தைச்செய்யும் மிக்க காதன் மேன்மேலு மிகுதலுன்கருணைக்கு முறையாகுமோ வென்றவாறு.

எனவே யிவளைத் தழுவுவதே நீ பேரருளாளனான திருநாமத்திற்கு முறையென்பதாயிற்று. சோகம் – துன்பம். இசை – பொருளுரை ;
அஃதாவது மூலமந்திரம். மா – பெரியபிராட்டி. மா – மாமரம். மலிதல் – மிகுதல். மால் – அண்மைவிளி.
கோகிலம் – சாதியொருமை. ஆகுலம் – வருத்தம். மாமோகம் – மிக்ககாதல். மிகல் – பெருத்தல். ஓகாரம் ஒழியிசை.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகை சோர்தல்.

மடக்கு முற்றும்.

———————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை– பகுதி-4-ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

18-வது பின்வருநிலையலங்காரம்.
19-வது தீபகவலங்காரம்
20-வது நிரனிறையலங்காரம்.
21-வது பூட்டுவில்லலங்காரம்.
22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.
23-வது பொருண்மொழியலங்காரம்
24-வது அதிகவலங்காரம்
25-வது வகைமுதலடுக்கலங்காரம்
26-வது இணையெதுகையலங்காரம்
27-வது விரோதவலங்காரம்
28-வது உபாயவலங்காரம்
29-வது விசேடவலங்காரம்
30-வது சமாயிதவலங்காரம்
31-வது ஏதுவலங்காரம்
32-வது சுவையலங்காரம்.

——

157.நெறிப்படுசெய்யுண்முன்னிலைபெறுசொற்பொருண்
மறித்துறுபலபுடைவரிற்பின்வருநிலை.
(எ-ன்) வைத்தமுறையானே பின்வருநிலையென்னுமலங்காரமாமாறுணர்-ற்று.

(இ-ள்) முன்னர்க் கூறியநெறியே யுண்டான செய்யுட்களின் முதலேவருஞ் சொல்லாயினும் பொருளாயினும்
அச்செய்யுளின்கண் மீட்டும் பலவிடத்தும் வருமெனின் அது பின்வருநிலையென்னும் அலங்காரமா மென்றவாறு.

158.அதுவே,
சொற்பின்வருநிலைபொருட்பின்வருநிலை
சொற்பொருட்பின்வருநிலையெனமூன்றாம்.
(எ-ன்) இதுவும் அவ் வலங்காரத்தினது விரியுணர்-ற்று.

இதன்பொருள், சூத்திரத்தானே விளங்கும்.

மானைப்பொருகயற்கண்மானைக்கமலமலர்
மானைப்புவனமடமானை-மானைப்
பரித்தபிறையுஞ்சுடுமோபாடகத்தான்றோண்மேற்
றரித்ததுளபத்தார்தரில். (363)
இது சொற்பின்வருநிலை. பாடகம்-திருப்பதி. ஒழிந்த அகலமுரையிற் கொள்க.
திணை-பெண்பாற்பெருந்திணை. துறை – நிலவு கண்டழுங்கல்.

மாய்த்தேன்செனனம்வதைத்தேனென்வல்வினையைத்
தேய்த்தேனறிவின்சிறுமையினைச்-சாய்த்தே
னனிவினையாங்கூற்றைநறையூர்வருமால்
பனிமலர்த்தாள்போற்றிப்பணிந்து. (364)
இதன்பொருளு முரையிற்கொள்க. இது பொருட்பின்வருநிலை. மாய்த்தேனென்பதனோடும் ஒழிந்தவினை
பரியாயமாகப் பொருள்கோடலா னென்றறிக. திணை-வாகை. துறை-அறிவன்வாகை.

வலம்புரிதுவைத்தனவரம்பிலாம்பனின்
றுலம்பினகரடிகையுலப்பில்பேரிகை
சிலம்பினமுழவுடன்றெழித்ததெங்கணு
நலம்புரிகின்னரர்நவின்றநாதமே. (365)
இதுவுமது. இதன்வேறுபாடுங் காண்க.

மாதர்மாதர்கூர்வாளமருண்கண்மாநிலத்து
மாதர்மாதர்கூர்வண்டிமிரளியதாமரைப்பூ
மாதர்மாதர்கூர்மாலும்வேலையுமெனவளர்வான்
மாதர்மாதர்கூர்கெழுதகைபடைத்தமாண்பினவே. (366)
இது சொற்பொருட்பின்வருநிலை.

(இ-ள்) இம்மாதராள்விருப்பத்தைமிகுத்த வாள்போன் றமர் விளைக்குங்கண்களானவை,
பூலோகத்துமகளிர்காணவிருப்பமிகும் வண்டு களாராவாரிக்குந் தாமரையிற் கருணையோடுங்கூடிய
பெரியபிராட்டி விருப்பமிகு மாயோனும் பாற்கடலுமொப்பெனக் கரியகுணங்களாலொளிவளரா நின்ற
பொன்னுலகி னரமகளிர்விருப்பமிகுநட்பினையளிக்கும் பெருமையுடைய வாமென்றவாறு.
பகுதி-சேட்படை. துறை- கண்ணயப்புரைத்தல்.

159.உவமானப்பொருட்பின்வருநிலையுந்
தவலருஞ்சிறப்பிற்றான்வாலுளதே.
(இ-ள்) அப் பின்வருநிலை உவமானப்பொருட்பின்வருநிலை யெனவும் வருமென்றவாறு.

பொன்னசலம்வண்கோபுரமாடகசயில
மன்னுசிகரம்வடபொருப்பா-நன்ன
ருரங்கொண்மதிண்மேருவகுமாயோ
னரங்கமணிமாளிகை. (367)
இஃ துவமானப்பொருட்பின்வருநிலை. இதனுள் அசலம், சயிலம், பொருப்பு, மேரு எனப் பரியாயச்
சொல்லா லுவமானப்பொருட்பின்வருநிலை வந்தவாறு காண்க. துறை-நகர்வாழ்த்து.

18-வது பின்வருநிலை முற்றும்.

————-

19-வது தீபகவலங்காரம்

160. தொழில்குணஞ்சாதிபொருளெனுமிவற்றொரு
மொழிபுணர்செய்யுளின் முதலிடைகடைநின்
றாங்கதன்பலபுடையடைபொருள்விளக்கும்
பாங்குறுதீபகம்பன்னிருபாற்றே.
(எ-ன்) வைத்தமுறையானே தீபகம் என்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) தொழில், குணம், சாதி, பொருளென்னு மிவற்றினொன்றைக் காட்டும் மொழி புலவனாற் புணர்க்கப்பட்ட
செய்யுளின் முதல் இடை கடை யென்னு மோரிடத்துநின்று பலவிடத்து நின்ற சொற்களோடுமடைந்து
பொருளைவிளக்குவதாய்ச்செய்யுந் தன்மையையுடைய தீபகம் பன்னிரண்டுபகுதி யுடைத்தென்றவாறு.

ஒழுகுங்கயற்கண்ணீரொண்டளிர்க்கைச்சங்க
மழுகும்பிறைநுதல்வேர்மன்னா-முழுதுமுணர்ந்
தார்பந்தழுவாரணத்தமிழ்செய்ந்நாவீறர்
மார்பந்தழுவாமயிற்கு. (368)
இது முதனிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஒழுகுமென முதலே நின்ற நிகழ்காலவினைச்சொல்லைக்,
கண்ணீர், சங்கம், வேரென்னு மூன்றிடத்தும் ஒட்டுக. திணை-பெண்பாற்பெருந்திணை. துறை- கண்டுகை சோர்தல்.

வளைத்ததுராமன்கைவல்விற்பகழி
துளைத்தவரக்கரைப்பேய்ச்சுற்றந்-திளைத்தசெருக்
கண்டகளம்புண்ணீர்கடலிலங்கைமாநகரைச்
சண்டதான்வீசியபாசம். (369)
இதுவுமது. இதனுள் இராமன்கை வில்லைவளைத்தது. அரக்கரைப் பேய்ச்சுற்றம் வளைத்தது.
செருக்களத்தைப்புண்ணீர்வளைத்தது. சண்டதான் வீசியபாசம் இலங்கைமாநகரைவளைத்தது.
என முதலே நின்ற இறந்தகாலவினையை யெங்கு மொட்டுக. திணை-வாகை. துறை-பேராண்முல்லை.

பூரித்ததுகோசலநாடன்விற்புணர்தோள்
பாரிற்பொடித்தாள்பருவமுலை-தேரிற்
றடுகளத்துவீழ்ந்தவரக்கரைத்தின்றாழு
மடுநிகர்த்தபல்பேய்வயிறு. (370)
இது முதனிலைக்குணத்தீபகம். இதனுள், பூரித்ததென முதனின்ற பண்பைத் தோள், பருவமுலை, பேய்வயிறு என எங்குமொட்டுக,
பூரித்ததெனக் காலந்தோன்றிற்றேனும் பொருளின்புடைபெயர்ச்சியல்லாமை யாற் குணமாயிற்று. திணையுந் துறையுமிதுவுமது.

பாம்பாடல்வாகனமாம்பாயலாம்பாதுகையாந்
தீம்பாற்பாவைத்திரைகடைநாட்-டாம்பாகுந்
தாசரதிகொற்றக்குடையாந்தனிவிளக்கா
மாசனமாம்பின்னவனுமாம் (371)
இது முதனிலைச்சாதித்தீபகம். பாம்பென்பது சாதி. ஆடல்-வென்றி. பாதுகை – திருவடிநிலை. பின்னவன் – தம்பி.
துறை-அரவவென்றி. திருவநந்தாழ்வானும் நித்தருண் முதலாதலால் அறுமுறை வாழ்த்துள்ளுமாம்.

மாறன்சடகோபன்வண்குருகூரான்பொருநை
யாறன்றுடரியருளாளன்-வீற
னொருநான்மறைத்தமிழாலொண்பொருளைக்காட்டுந்
திருஞானமுத்திரைக்கைத்தே. (372)
இது முதனிலைப்பொருட்டீபகம். துறை – கடவுள்வாழ்த்து.

தேர்வண்டமிழ்மாறன்றென்குருகூர்வீதிதொறுஞ்
சார்வண்டாளமுகுஞ்சங்கினங்க-ளூரும்
பெருமாளிகைமுகட்டிற்பெய்முகில்கள்கங்குல்
வருமாலையில்வெண்மதி. (373)
இஃது இடைநிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஊரும் என்பதனை ஊரும் தேரும்; ஊரும் சங்கும்; ஊரும் முகில்களும்;
ஊரும் மதியும் என முன்னும் பின்னு மொட்டுக. துறை – நகரவாழ்த்து.

பூண்டுறந்தவாசவன்றன்பொற்புயமுமுன்னோன்பின்
னூண்டுறந்துசென்றோனுடக்கம்பு-நாண்டுறந்த
கொற்றவிராவணிதன்கொள்கைக்குலக்கோதைக்
குற்றதிரள்கண்டமும். (374)
இது பெயரோடுங்கூடி யிடைநின்ற தொழிற்றீபகம். முன்னோன்-இராமன். அவன்பின் னூண்டுறந்துசென்றோன் – இளையபெருமாள்.
உடக்கம்பு-நாணிற்செறிந்தபாணம். நாண்டுறந்த-எய்தகாலத்து நாணைவிட்டு நீங்கின. ஈண்டு நாண்-விரற்சரடும், வின்னாணுமாம்.
பூண்டுறந்த வாசவன்றன்பொற்புயமும் நாண்டுறந்த என்பது இராவணி சமர்முகத்துக் கட்டினவன்றே வாகுவலயமென்னும்
ஆபரணத்தை மானபங்கத்தாலணியாது விட்ட இந்திரன்புயத்தில் அவன்கட்டினநாணும் அன்று விட்டுநீங்கின எனவும்,
கொற்றவிராவணிதன் கொள்கைக்குலக்கோதைக்குற்ற திரள்கண்டமும் நாண்டுறந்த என்பது,
இராவணிகுலத்திற்குரிய பாரி திரண்ட கண்டமும் மங்கிலிய மன்று விட்டுநீங்கின எனவும் முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-வாகைசார்ந்த பொதுவியல். துறை-வில்வென்றி.

வட்டமுலைக்கண்குளிர்ப்பவண்பனிநீரிற்குழைத்துக்
கொட்டியகத்தூரிக்கொழுங்குழம்புஞ்-சுட்டதந்தோ
செய்வளைக்குந்தென்குருகூர்ச்செண்பகமாறன்றழுவாப்
பெய்வளைக்கும்விண்மேற்பிறை. (375)
இஃ திடைநிலைக்குணத்தீபகம். இதனுள், சுட்டது கத்தூரிக் குழம்பும், விண்மேற்பிறையும் என முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-பெண்பாற்கைக் கிளை. துறை – கண்டுகைசோர்தல். கொட்டியது – அப்பியது.
கொழுங் குழம்பு-நெகிழ்ந்தொழுகுங்குழம்பு. அந்தோவென்ப திரக்கத்தின்கட்குறிப்பு.

வஞ்சநிருதர்மறப்படைக்கோர்கூற்றமா
நஞ்சனையமாயைக்கோர்நன்மருந்தா-மஞ்சனைதன்
கன்றுமனுராமனகவசமாம்வாகனமா
மன்றுகுறித்தேவியதூதாம் (376)
இஃ திடைநிலைச்சாதித்தீபகம். அஞ்சனைகன்று – திருவடி. கன்றென்ற துவப்பின்கண் மயக்கம்.
“பாலறிமரபிற்பொருநர்கண்ணும்,
அனைநிலைவகையோடாங்கவையுளப்பட” என்பதனால் வாகைப்புறத் திணையுள், துறை – வானரவென்றி.

தன்னிகரொன்றில்லாத்தனிமுதலாய்நின்றானு
மன்னுயிர்க்குமன்னுயிராவாழ்வானுந்-தென்னரங்க
னாரரவமுதன்றமரர்க்களித்தானு
மோராயிரம்பெயரானும். (377)
இஃ திடைநிலைப்பொருட்டீபகம். ஓராயிரம்பெயர் – ஒப்பற்றளவிருந்த திருநாமம்.
சூழிந்த அகல முரையிற்கொள்க. துறை-கடவுள் வாழ்த்து.

பெருவிறல்கூர்நாகப்பிடர்மேன்மாமு
முருகெழுதோள்வாலியுரமு-மிருபதுகைக்
குன்றின்வாமுங்குணராமன்வாளியினா
லன்றுதுளைபட்டது. (378)
இது கடைநிலைத்தொழிற்றீபகம். இருபதுகைக்குன்றென்றது இராவணனை.
திணை-வாகைசார்ந்தபுறத்திணை. துறை-வில்வென்றி.

மைம்மாண்புயல்கிழிக்கும்வண்சுடர்மீதாமிமையோர்
தம்மாநகரணவுஞ்சால்பிற்றே-பெம்மான்
முருகவிழ்பூந்தார்வகுளமுன்னோன்குருகூ
ருருவளர்பொன்மாடவுயர்பு. (379)
இது கடைநிலைக்குணத்தீபகம். துறை – நகரவாழ்த்து.

தன்னெவ்வநோக்காதுதாயர்வெறுத்துளதா
மென்னெவ்வநோக்குமிகல்விளைப்பான்-மன்னருண்மால்
மோகூரனைத்தொழுதேன்மோகமிகக்காமாகூ
கூகூவெனுங்கோகிலம். (380)
இது கடைநிலைச்சாதித்தீபகம். திணை-பெண்பாற்கூற்றுப் பெருந் திணை. துறை -குயிலொடுவெறுத்துக்கூறாநிற்றல்.

தாடகைகைச்சூலமுரண்சாய்த்தானும்வில்லிறுத்துச்
சூடகக்கைச்சானகிதோடோய்ந்தானுங்-கேடகத்தான்
செம்பொன்மணிமாடத்தென்னிலங்கைசெற்றானு
மம்பொன்மணிக்கூடத்தான். (381)
இது கடைநிலைப்பொருட்டீபகம். கேடகத்தான் – கேட்டோடுங் கூடிய வுள்ளத்தையுடையான்;
அவன் இராவணன். துறை – கடவுள் வாழ்த்து.

161.அதுவே,
ஒருபொருளுவமையுடனுறல்சிலேடை
விருத்தமாலையென்றிவற்றொடும்விரவும்.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினொழிபுணர்-ற்று.

(இ-ள்) அத்தீபகம் ஒருபொருட்டீபகமுதலாக மாலாதீபகமீறாகக் கூறப்பட்ட வைந்தினோடும் விரவிவரு மென்றவாறு.

வெங்கதிரோன்மெய்வருடும்வெண்மதியின்மெய்தடவு
மங்கணுயர்வானகடணவு-மெங்க
ளனகனபிராமனாழியான்மூழிக்
கனகமணிமாளிகை. (382)
இஃ தொருபொருட் கடைநிலையிடத்தீபகம். ஒருபொருளாவன:- வருடும், அணவும், தடவும் என்பன. துறை – நகரவாழ்த்து.

பொன்னங்கொடியனையள்பொற்பமைந்துமென்னடைகற்
றன்னந்தனையனையளாயிழாய் – நன்னுதலாள்
வாய்ந்தவியல்பெற்றுமயிலனையண்மின்னனைய
ளாய்ந்தநுடங்கிடைபெற்றாங்கு. (383)
இஃ துவமானப்பொருட்டீபகம். வாய்ந்தவியல்-தோற்றமுள்ள சாயல். பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

ஏகாவடநிலைபெற்றின்புட்டகமணந்து
மாகாமருவாமொய்வாழ்வுறலாற்-றோகை
முலைக்குமகிழ்மாலைமுன்னோன்றுடரி
மலைக்குமகிழ்வெய்துமனம். (384)

இது சிலேடாதீபகம். துடரிமேற்சொல்லுங்கால், ஏகாவடம் (-இயங்காத ஆலமரம்) நிலைபெற்று நல்லபுள்ளுக்கள்
பெருமையோடு பொருந்துவனவாய்க் கரிய அழகிய யானைத்திரள்கள் செறியும்படி வாழ்வுற்றெனவும்,
முலைமேற்சொல்லுங்கால், ஏகாவடமென்னும் ஆபரணம் நீங்காது கண்ணுக்கினிமைதரும் படாந் தன்மேற் றகவோடு
தழுவுவனவாய்ப் பெரிய விருப்பத்தையளிக்கு மிளமைத்தன்மையுடனிறுகி வாழ்வு பெறுதலால் எனவுங்கொள்க.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

தணந்தாருயிர்குறைக்குந்தந்துணைவர்பொற்றோண்
மணந்தாருயிர்நிறைக்குமானே – யுணர்ந்தார்நல்
யாகத்து திமாலிபகிரிமேன்மைதவழ்நீண்
மாகத்துதிமாமதி. (385)
இது விருத்ததீபகம். இபகிரி-அத்திகிரி. விருத்தம், குறைக்கும் நிறைக்குமென்பன.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவு கண்டழுங்கல்.

வாவிக்கழகுமலர்கமலமன்கமலப்
பூவிற்கதனுட்பொலிதேவி-தேவிக்கு
நாளும்புதியதமிழ்நாவீறனையடிமை
யாளுந்திருநாரணன். (386)
இது மாலாதீபகம். இதனுள் அழகென்னுமதனை முதனிலைக் குணத்தீபகமாக்கிக் கமல முதலாக
எவ்விடத்தும் மாலைப்படுத்திக் கூட்டுக. துறை – கடவுள்வாழ்த்து.

19-வது தீபகம் முற்றும்.

——–

20-வது நிரனிறையலங்காரம்.

162. குறித்திடும்பெயர்வினைகூறியசெய்யுளி
னெறிப்படநிரலுறனிரனிறையாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரனிறையலங்கார முணர்-ற்று.

(இ-ள்) இடுகுறியெனவுங் காரணமெனவுங் குறிப்பனவாம் பெயரேயாதல் வினையேயாதல்
புலவனாற் கூறப்பட்ட செய்யுளினிடத்து முறையே யிரட்டிப்பது நிரனிறையென்னு மலங்காரமாமென்றவாறு. நிரலுதல் – இரட்டித்தல்.

163.அவற்றுள்,
பெயரொடுபெயர்நிரலுதல்பெயர்நிரனிறை.
(எ-ன்) அவ்விரண்டினுட் பெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்.

தாதிவர்பூந்தாமந்திருநாமந்தந்தைதாய்
மேதினியேழும்புகழ்நாவீறற்கு-மாதராய்
வேரியார்வண்டிரைக்கும்வெய்யமகிழ்மாறன்
காரியார்நங்கையார்காண். (387)
இது பெயரொடுபெயர்ரெதிர்நிரனிறை. இதனுள் தாமம், திருநாமம், தந்தை, தாய்:-
மகிழ், மாறன், காரியார், நங்கையார் என அடைவே நிரைந்தமை காண்க. துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

164. பெயரெதிர்நிரலுதல்பெயரெதிர்நிரனிறை.
(எ-ன்) பெயரெதிர்நிரனிறையமாறுணர்-ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

ஏடவிழ்தாரேதியெழில்வாகனந்தளிம
மாடாவமஞ்சிறைப்புள்ளாழிதுழாய்-நீடுபர
மேட்டியூர்வெண்டிரைவாயென்றுந்துயின்றதிருக்
கோட்டியூர்வாழ்நெடுமாற்கு. (388)
இது பெயரொடுபெயர்எதிர்நிரனிறை. அரவம் தளிமம் அஞ்சிறைப்புள்வாகனம்,
ஆழி ஏதி, துழாய் தார், எனப் பெயரொடுபெய ரெதிர் நிரனிறையாயவாறு காண்க. துறை – கடவுள்வாழ்த்து.

165.உயர்வுறுபெயரொடுவிறையுநிரல்வது
மயர்வறுபெயர்வினைநிரனிறையெனவரும்.

(எ-ன்) பெயரொடு வினை நிரனிறையாமாறுணர்-ற்று. இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

மற்றுளபம்போர்வேழம்வாராழிமுல்லைநிலங்
கொற்றமகிழ்மாறனையாட்கொண்டருளும்-விற்றுவமா
லாடினதுஞ்சூடினதுமட்டதுவுந்தட்டதுவும்
பாடினதுநேடினதும்பண்டு. (389)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை. மல்லென்பது கூத்து. முல்லை-பண். நிலம் – பூமிதேவி. அட்டது – கொன்றது.
தட்டது – அடைத்தது. நேடினது – தேடினது. இதுவுங் கடவுள்வாழ்த்து.

பணிமொழியுண்கண்மலராள்பங்கயத்தாள்செய்ய
மணிமலர்க்கைபறியவாட்டாற்றா-னணிமலர்த்தாள்
பேரமுதுண்சேடமெழில்பேரின்பமுற்றுமுகஞ்
சீரடியர்க்கேவல்செயல். (390)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை.

(இ-ள்) நெஞ்சமே! தாமரையாள் சிவந்த மணியு மலரும்போன்ற திருக்கையைப்பற்றின திருவாட்டாற்றா னழகிய திருவடிகளைப் பணி;
நாமத்தை மொழி; அமுதுசெய்த சேடத்தை உண்; திருமேனியின் காந்தியைத் தியானஞ்செய்;
அதன்பின்னருற்ற பேரின்பத்தான் முகமலர்; அவன் றிருத்தொண்டர்க்கேற்ற ஏவல் செய்வதனை ஆட்சிசெய்வாயாக வென்றவாறு.

நெஞ்சமேயென்னுமெழுவாய்முன்னிலை யெஞ்சிநின்றதாக விரிக்க. இதனுள், பணிமொழியுண்கண்மலராளாகிய
தாமரையாளெனத் தொடர் புடைத்தாய்நின்றனவுமாய்த் தொடர்பிற்பிரித்தது தன்றொழிலேவலாயின வாறுங் காண்க.
திணை – பாடாண். துறை – ஓம்படை.

166.ஓதியபெயரினோடுயர்வினையெதிரி
னீதிகொள்பெயர்வினையெதிர்நிரனிறையாம்.
(எ-ன்) பெயரொடுவினை யெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வேதியனையீன்றளித்தமேன்மைத்திருவுருவே
வாதியர்தம்வாய்மதமேவண்டமிழே-யோதிமமே
யேறியதுங்கூறியதுஞ்சீறியதுமீசனெனத்
தேறியதுங்காரிதருஞ்சேய். (391)
இது பெயரொடுவினையெதிர்நிரனிறை. இதனுள் வேதியனை யீன்றளித்த மேன்மைத்திருவுருவென்றது சீமந்நாரயணனை.
வாதியர் வாய் மதமென்றது அகம்பிரமிமுதலாயவர் புன்சாத்திரமதம். வண்டமிழ்-திருவாய்மொழி. ஏறியது ஓதிமம்;
கூறியது வண்டமிழ்; சீறியது பரவாதியர்மதத்தை; பரதத்துவமெனத்தேறியது சீமந் நாராயணனை;
அவன்யாரெனிற் புலவீர்காள்! காரிமாறப்பிரானாமென்றவாறு. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல். மொழிமாற்றுநிரனிறையுமிது.

167. வினையொடுவினைநிரல்வதுவினைநிரனிறை.
(எ-ன்) வினையொடுவினை நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வானுலகெண்வில்வளைத்துமாநீர்செறுத்தவுணர்
கோனுதகம்பெய்ததுகைக்கொண்டுதான்-சானகிதோண்
மேயினான்றென்னிலங்கைவென்றானெழுபுவியுந்
தாயினானீர்மலையத்தான். (392)
இது வினையொடுவினைநிரனிறை. அவுணர்கோனென்றது மாவலியை. தாயினான்-அளந்தான். துறை-கடவுள்வாழ்த்து.

168. வினையெதிர்நிரல்வதுவினையெதிர்நிரனிறை.
(எ-ன்) இது வினையொடுவினையெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதனுள் வினையொடு என்பதனை முதலே விரித்துரைக்க.

வன்சயிலமேந்திவளைமுழக்கிவெண்டயிர்கட்
டன்புறக்கட்டுண்டமர்வென்றாவளித்தா-னன்புட்
கடவெந்தைவானோர்கடிகாவிடந்த
விடவெந்தையில்வாழிறை. (393)

இது வினையொடுவினை யெதிர்நிரனிறை. ஆவளித்தான்-ஆவினைக் காத்தான்.
நன்புட்கடவெந்தை – நல்லகருடனையேறப்பட்ட வெமது சுவாமி; என்னப்பனென்றுமாம். துறை – இதுவுமது.

169. வினைபெயர்நிரல்வது வினைபெயர்நிரனிறை.
(எ-ன்) வினையொடுபெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

ஏந்தினான்வேய்ந்தானிறுத்தானினிதாக
மாந்தினானாழிதுழாய்வன்சிலைபார்-காந்தன்
றொலைவில்லிமங்கலத்தான்றோலாதார்வென்றி
தொலைவில்லிவானோர்துணை. (394)
இது வினையொடுபெயர்நிரனிறை. காந்தன் – அழகன்.
தொலைவில்லிமங்கலத்தான் – தொலை வில்லிமங்கலமென்னுந் திருப்பதியையுடையவன்.
தோலாதார்வென்றிதொலை வில்லி-போர்க்குப் புறமிடாதசத்துருக்களது வென்றியைத்தொலைக்கப்பட்ட வில்லையுடையான்.
வானோர் துணை – வானோருயிர்க்குநற்றுணை யென்றவாறு. வானோர் – நித்திய சூரியர்.

170.வினையொடுபெயரெதிர்கொளவருநிரனிறை
வினையொடுபெயரெதிர்விதிநிரனிறையே.
(எ-ன்) வினையொடுபெயரெதிர்நிரனிறையுணர்-ற்று.

விதிநிரனிறை-இலக்கணத்தால்விதிக்கப்பட்ட நிரனிறை. ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

நடித்தானொடித்தானடந்தானிடந்தான்
பொடித்தானொருதூணிற்புள்வாய்-வடித்ததமிழ்ப்
பாவலன்பின்கோதண்டம்பையரவிற்பல்லுயிர்க்குங்
காவலவன்றென்னரங்கன்காண். (395)
இது வினையொடுபெயரெதிர்நிரனிறை தூணிற் பொடித்தான்; புள்வாய் இடந்தான்; பாவலன்பின் நடந்தான்;
கோதண்டம் ஒடித்தான்; பையரவில் நடித்தான் என வினையொடுபெயரெதிர்நிரனிறை காண்க.
பொடித்தல்-தோன்றுதல். இடந்தது-பிளந்தது. ஒடித்தல்-முறித்தல்.

171.இருபெயர்க்கமைநாலெழுத்தைமுறைமாறிப்
பொழிப்புறப்பிரித்துப்புணர்த்துநிரைவகை
யெழுத்துநிரனிறையென்மனார்புலவர்.
(எ-ன்) இதுவும் அந் நிரனிறையலங்காரத்திற்கு எழுத்தாலாயதோர் சிறப்பிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத் திரண்டுபெயர்க்கு நிரம்பின நாலெழுத்தை மாறாடி யொரோவொன் றிடையிட்டுப் பிரித்துக்கூட்டி
நிரையுங் கூறுபாடு புலவரெழுத்து நிரனிறையென்றுகூறுவரென்றவாறு.

மேவாருளிமுலைகண்ணண்பாமிளிர்விபதுண்
பூவார்வதனமொழிபொன்மகள்சேர்-தேவாதி
தேவேபிரமமெனத்தேர்மகிழ்மாறன்சிலம்பிற்
காவேயவட்கிடமாங்காண். (396)
இஃதெழுத்துநிரனிறை. இதனுள் மேவாருளி என்றமொழிக்கண் நின்ற நாலெழுத்தினை
ஒரோவொன்றிடையிட்டு மேரு வாளி எனப் பிரித்து, மேரு முலை; வாளி கண் எனக் கூட்டியும், விபதுண் என்ற மொழிக்கண்
நின்ற நாலெழுத்தை ஒரோவொன்றிடையிட்டு விது பண்: வதனம் மொழி எனக் கூட்டியு நிரனிறையானவாறு காண்க.
இவற்றுள் உவமைமுதலிய அலங்காரங்கள்விரவினு மீண்டு நிரனிறையே நோக்கமெனக் கொள்க.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

172. முறைமுறைநிரைவதுமுறைநிரனிறையே.
(எ-ன்) இதுவும் நிரனிறைக்கோர் சிறப்பிலக்கணங்கூறுதனுதலிற்று.

(இ-ள்) பெயர் வினையென்னு மிரண்டினையு மொருசெய்யுளகத் தொருமுறை முதலேகூறியவற்றான்முற்றாது
அவற்றைப் பயனிலை முற்று விப்பான் மறித்தும் பெயரும் வினையுமாகநிரைத்து முறைபெற முடிப்பது முறைநிரனிறையா மென்றவாறு.

பொன்னனைவாளரக்கனை நூற்றுவரைக்காவைப்
பொருசிலையைக்கருங்கடலைப்பொன்னனீன்ற
நன்மகற்காய்ச்சுரர்க்காயைவருக்காய்க்காத
னப்பினைக்காய்ச்சானகிக்காய்நடவைக்காக
மன்னுகிரால்வடிக்கணையால்வளையாற்புள்ளால்
வளங்கெழுதோள்வலியால்வானரங்களாலு
முன்னுடல்கீறிச்சிரங்கொய்தமரில்வீழ்த்து
முதலொடுங்கீண்டிறுத்தடைத்தான்மோகூரானே. (397)
இது முறைநிரனிறை. இதனுள் அங்ஙனம் பெயரும், வினையுமொவ் வொருபொருட்டொடர்ச்சிக்கண்ணே
யொருமுறைவந்தவற்றோடு மறித்து முறைமுறையாக வந்தமைகாண்க. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

173.இணைபெறவிடைநின்றிருவயிற்பெயரொடும்
புணர்தகைநிரனிறைபுகலிலொன்றுளதே.
(எ-ன்) இன்னு மவ் வலங்காரத்திற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) செய்யுளினிடைக்கண் இருமொழிபெறநின்று முன்னும் பின்னுமாகிய வீரிடத்தும் பொருள்களுட னெடுத்து
நிரைக்கும் இடையிணைநிரனிறையுங் கூறுமிடத் தொன்றுளதா மென்றவாறு.

அருண்மனையாளாயுவந்ததாழியான்கோடு
பொருதிரைப்பாற்றெள்ளமிர்திற்போந்த-திருவரங்கம்
பூம்பதுமக்கண்முகிழ்த்துப்புத்தேளிர்கைதொழமால்
பாம்பணைவேல்வைகும்பதி. (398)
இஃதிடையிணைநிரனிறை. இதனுள், இடைநின்ற திருவரங்கமென்னுந் தொடர்மொழியைத் திரு அரங்கம் எனப் பகுத்
திருமொழியாக்கி திரு ஆழியா னருளோடுங்கூடிய பாரியாயுவந்தது;
அரங்கம்மால் பாம்பணைமேலாய்ப் பள்ளிகொள்ளும்பதியென முன்னும் பின்னும் நிரனிறையாக்கி முடிக்க.
அல்லது ஆழியானாகியமால் பாரியாகவுவந்தது திரு; புத்தேளிர் கைகளாற்றொழப் பாம்பணைமேல்வைகும் பதி அரங்கம்
எனச் சேர்த்துக் கொண்டுகூட்டெனினுமாம். கோடு – கரை. போந்தது – தொன்றியது.
ஆதலாற் பரமபதத்தினுந் திருப்பாற்கடலினுஞ் சேய்த்தாயவன் உலகத்துயிர்களீடேற அர்ச்சாவதாரமாகிச் சேவித்தற்கெளிதாய்
அணித்தாய்க் கண்வளர்கின்றான்; அவனைச்சேவிப்பார்க் கிம்மைப்பயனாகிய அனைத்துச் செல்வமும்,
மறுமைப்பயனாகிய பேரின்பமும் பெறலாம்; சேவிப்பீராக வென்பது பயன். திணை-……….. துறை-…………
” நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு” என்னுங் குறட்பாவு மிது.

174.உரைபயின்முதலீற்றுறும்பெயரொடுபெயர்
நிரைநிறையெதிர்பெறநிகழ்ந்தீறொடுமுதல்
புரைதீர்தரவிற்பூட்டுறுவதுமுள.
(எ-ன்) நிரனிறையென்னும்பொருள்கோளலங்காரம் பூட்டு விற் பொருள்கோளோடு விரவுமாறுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்து விட்டுநீங்காத பெயரொடுபெய ரெதிர்நிரனிறையலங்காரமாகநடைபெற்றுச்
செய்யுளீற்றுப்பெயரொடு செய்யுண் முதனின்றபெயரெழுவாயுடனெதிர்வனவாய் விற்பூட்டுப்பொருள்கோளாவன வுமுள வென்றவாறு.

காவிகமலங்கமழ்தளவஞ்செங்காந்த
ளாவியனையாயரங்கத்தான்-பூவிற்
பிரமனைமுன்பெற்றபெருமான்வரைமான்
கரமுறுவலானனமுண்கண். (399)
இது பெயரொடுபெயரெதிர்நிரனிறை; எழுவாயு மீறு மெதிர்வன வாய்ப் பூட்டுவிற்பொருள்கோளாயிற்று.
பகுதி-பாங்கற்கூட்டம். துறை-இயல்பிடங்கூறல்.

20-வது நிரனிறை முற்றும்.

———-

21-வது பூட்டுவில்லலங்காரம்.

175.செய்யுளினிறுவாயெழுவாய்புணர்ந்து
மெய்யுறப்பொருணிலைவிளக்கல்விற்பூட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே விற்பூட்டலங்காரமுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்க.

வருமதற்குமுன்னேமதிட்குருகூருள்புக்
கிருமகிழ்மாறற்கடிமையென்னுங் – கருமமிது
மற்றொப்பிலாதமதிப்புலவீர்பாசமுடன்
கொற்றப்பகடேறிக்கூற்று. (400)
இது விற்பூட்டு. இதனுள், கூற்றுவரு மதற்குமுன்னேயெனச் செய்யுளிறுவா யெழுவாயுடன்புணர்ந்து
பொருணோக்குடைமைகாண்க. திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

மறவாதுகூறுமதிப்புலவீரென்றும்
பிறவாதபேறுபெறலாந்-துறவாளர்
தோய்ந்தமறையாதியந்தந்துதிப்பதற்கு
வாய்ந்தமுதற்றிருநாமம். (401)
இதுவுமது. துறவாளர் – மனத்தாற்றுறப்பனவற்றைத் துறப்பதாட்சி யுள்ளார். மறை யாதியந்தந்துதிப்பதற்குவாய்ந்த
முதற்றிரு நாமம் அரி யென்னுந்திருநாமம். நாமம் மறவாது கூறுமெனப் புணர்க்க. திணை- இதுவுமது. துறை – செவியறிவுறூஉ.

21-வது பூட்டுவின் முற்றும்.

——–

22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.

176.கருப்பொருள்களனாங்கட்டுரைபயின்ற
பொருட்புறத்தனவாமிறைச்சிப்பொருளணி.
(எ-ன்) வைத்தமுறையானே இறைச்சிப்பொருளலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஐந்து நிலத்தினும் அவ்வவநிலங்களிற் கருப்பொருளே தனக்குநிலைக்களனா மழகியவுரையோடும்
பொருந்திப் பொருட்குப்புறத்த வாய்ப் பயன்றரும் இறைச்சிப்பொருளலங்கார மென்றவாறு.

ஏனலுமிறடியுமிடர்சிறிதின்றா
வான்வளஞ்சுரத்தலும்வயின்வயின்வனப்புற
விளைத்தவர்பலரொடுமிசைதிறத்தேவலின்
வளைத்தரிகுநரரிதற்கருமையவா
யொழிந்தபல்வளங்களுமோங்கினசெழுந்தேன்
வழிந்தொழுகியமகிழ்மார்பினன்வரைவாழ்
சேயரிக்கருங்கட்டிருநுதல்
வாய்மையின்வழா அமன்மரீஇயபைம்புனமே. (402)
இதனுள் வாய்மையின்வழாஅ மன் என்பதே கூறவேண்டும் பொருள். அதன்புறத்தே இங்ஙனம் வழாஅ மன் மரீஇயபைம்புனத்தும்
ஏனல் முதலிய பலவளங்களும் அழகுமிக வானுந் தன்வளனாகிய புனலைச் சுரந்துபொழிவதென்னென
இறைச்சிப்பொருளணி தோன்றியவாறு காண்க.

திருநுதல் – அண்மைவிளி. வாய்மையின்வழாதோன் என்றது இகழ்ச்சிக்குறிப்பு. ஏனல் – செந்தினை.
இறடி – கருந்தினை. வான்வளம் – மழை. சுரத்தல் – பெருகுதல். வயின்வயின் – இடந்தொறுமிடந்தொறும்.
விளைத்தவர் – விளைவித்தார். மிசைதிறத்து – துய்த்தற்பொருட்டு.
அரிகுநரிதற்கருமையவாய் – அறுப்பவர் அறுத்துத்தொலைத்தற்கரிய தன்மையவாகி.
ஏனையவளங்களும் – அவையிரண்டுமொழிந்த பலவளங் களும். ஓங்கின – அவற்றோடும் பெருத்தன.
வழா அமன் – வினையெதிர் மறுத்த வினைத்திரிசொல். பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – தலைவனைத் தோழியியற்பழித்தல்.

அகத்திற்குரியவா மிறைச்சிப்பொருள்கோளெல்லா மிகுதியாய் வருவன தலைவன்கொடுமைகூறுமிடத்தென வுணர்க.
ஏனையுவப்பினுஞ் சிறுபான்மை வரும். இப்பொருள்கோள் கருப்பொருளே தனக்கு நிலைக்களனாகவரு மென்பது
இதற்கு முதனூல்செய்த ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரும்,
பொருளியலுள் “இறைச்சி தானே பொருட்புறத்ததுவே” என்பதனாலுங் கண்டுகொள்க.

கறையடிச்சிறுகட்களிநல்யானை
யறைபொருக்கெழவெயிலழலுமிழதரிடை
யுருப்பமதாற்றாதுயங்கியபிடியி
னடிக்கீழடிக்கடியளிதகவிலாழியைப்
பிணர்படுபுழைக்கையிற்பெய்துபெய்தாற்றி
யுடனமர்ந்தொரீஇயவொண்சுரமூடறுத்
திகந்தவர்நின்கவினிறந்துபாடெய்த
நெடுநாள்வைகுநரல்லரின்னே
செய்பொருண்முற்றுபுவருவர்
மையமருண்கணாய்வருந்தனீயே. (403)
இது, “அன்புறுதகுநவிறைச்சியுட்சுட்டலும், வன்புறையாகும் வருந்திய பொழுதே” என்பதனா லிறைச்சிப்பொருண்
முற்கூறியவற்றின் வேறுபடவரு மென்கின்றது என்னை? முன்னே நெஞ்சத்தன்புடையர்,
அதன்மேலுங் களிறு தன்பிடியின் கறையடிவெப்பத்தினை விலாழியைக் கையால்வாங்கி யடிக்கடி யிறைத் தாற்றி யுடன்
கொண்டு சுரத்தினைக் கடக்கு மன்பினையுடைத் தென்றனர்; அவர் அதனை யிப்பொழுதுங் காண்பர்கா ணென்று
அன்புறுதகுநகூறிப் பிரிவாற்றாதவட்குத் தோழி வற்புறுத்தினவாற்றா னறிக.

கறையடி – உரல்போன்ற அடி. அறைபொருக்கெழ – பாறை தகடுதக டாகவெடித்துச்சிந்த.
வெயிலழலுமிழதரிடை – ஆதித்தன் அழலைச்சொரியுங் கடத்தற்கரிதாய சுரத்துவழியில்.
உருப்பமதாற்றா துயங்கியபிடியின் – வெப்பமானதற் காற்றாதுவருந்திய பிடியின்.
அடிக்கீழடிக்கடி யளிதக விலாழியை- அப்பிடியினடிக்கீழ்ப் பலகாலு மன்புமிக விலாழியை.
பிணர்படு புழைக்கையிற் பெய்துபெய் தாற்றி – சருச்சரையுடைய துளைக்கையா லிறைத்து வெப்பத்தைநீக்கி.
உடனமர்ந்தொரீஇய – உள்ளு முடலு மொன்றெனக் கலந்து கடந்த.
ஒண்சுர மூடறுத்திகந்தவர் – ஒள்ளியசுரத் தினதுவழியைத்தொலைத்துக்கடந்தவர்.
நின்கவி னிறந்துபாடெய்த – நினது மேனியினழகு மேனியை விட்டுப் புறம்போக.
நெடுநாள்வைகுநரல்லர் – நெடுநா ளங்குத் தங்குவாரல்லர்.
இன்னே செய்பொருண்முற்றுபுவருவர் – இக்காலத்துத் தாம் ஈட்டுதற்கமைந்த நிதியீட்டுங்கருமமுற்றி வருவர்.
மையமருண்கணாய் வருந்தனீயே – ஆகையான் மையெழுதவிரும்பிய மையுண்கண்ணாய் வருந்தாதிருப்பாயாக வென்றவாறு.
பகுதி – இதுவுமது. துறை – வருத்தங் கண்டு தோழிவற்புறுத்தல்.

நீடியவியன்சினை நிலாய்நறைவிளைவுறு
பாடிமிழருவிப்பனிவரைநன்னாட
விட்டகல்வின்றாய்விழுமியோர்நுவலுங்
கட்டுரைமதியாக்காவலன்போலவும்
பாகரையடங்காப்பகட்டுளம்போலவு
மோகமுற்றனையாய்மூதுரைப்படுத்திய
வொருவழித்தணத்தலுடன்கொண்டேகலென்
றிருவழித்தாயதிலிசைந்ததொன்றுள்ளாய்
வயல்வளஞ்சிறந்தமருங்குடைப்பொன்னியுட்
புயல்படிந்ததுபோற்பொறியரவணைத்துயி
லரங்கனைவழிபட்டவனருட்கிலக்காய்
வரம்பெறுநரின்யாமனமகிழ்வெய்த
விரைவொடுமுயல்வையேல்விரைமென்
மரைமலர்மடந்தைநின்வயத்தினளாமே. (404)
இது, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே, திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே” என்பதனால் எய்தியதிகந்து படாமற்காத்தது;
என்னை? கருப்பொருள் பிறிதோர்பொருட் குபகாரப்படும் பொருட்டாதலேயன்றி யக்கருப்பொருடன்னுள்ளேதோன்றும் பொருளுமுள.
அஃதுள்ளுறையுவமமன் றிறைச்சியென் றாராய்ந்துகொள்ளும் நல்லறி வுடையோர்க்கென்றார்,
இதனுள்ளு மவ்வாறே அரசியற்கமைந்த நீதியை விட்டுநீங்குதலின்றி யமைச்சியன்முற்றவு முணர்ந்தோர்
காலமுமிடனுந் துணிந் துரைத்தவுறுதிக்கட்டுரையையுறுதியென்றுட்கொள்ளா மன்னரைப்போலவும்,
பாகர்க்கடங்கா மதயானையினுள்ளம்போலவும் மயக்கமெய்தினையாய், முதியவுரையாக வுனதுணர்வுட்கொளுத்திய
வொருவழித்தணத்த லுடன்கொண்டேகலென விருமுறையாய்வருவனவற்று ளுனது
புத்திக் கொன் றிசைவதாக வுட்கொண்டொழுகுங் குறிப்புமில்லையாயினை;
இனியாயினும் பொன்னியுள் அரங்கனைவழிபட் டவனருட்கிலக்காகித் தாஞ் சிந்தித்த வரம்பெற்றாரைப்போல
யாங்களு மனமகிழ்வெய்த விரைவினோடும் வரைந்துகொள்வது முயல்வையேற்றாமரை மலர்மகளை
யனையாணினக்குரிமையாவளென்றமையா னிறைச்சியாயிற்று; என்னை?

வண்டுகளென்றவுவமை யெச்சமாகநின்றவை தமக்குப் பின்னைக் குப் புசிப்பதாகவைத்த தேனின்விளைவையோர்ந் தந்நிலத்து
வாழ்வார் மால்பியற் றிக்கொண்டு போமாறுபோல நீயும் மேல் வரைந்துகொள்ளலாமென்றிருக்கு மிவளையும்
முதிர்ச்சி கண்டயலவர் பொன்னணிந்துகொடுபோவரென வுள்ளுறையுமவமெய்திற்றேனும் பின்னர்நின்ற
பொருளோ டியையாமையி னிவ்வுலம முள்ளுறையுற்றுப் பொருள்பயவாதுவமையாகக்குறிக்கப்பட்ட
அவ் வண்டுகளெஞ்சிநிற்பது நோக்கமாக நீ யினி வரைந்து கோடல்வேண்டு மென்றுகூறுதலே கருத்தாதலை யறிவித்ததால்
இறைச்சியாய் நாடவென்பதனுள் வேறொர்பொருடோன்றுவித்து நின்றதாதலின்.
“நீடிய வியன்சினை நிலாய்நறை விளைவுறு, பாடிமி ழருவிப் பனிவரை நன்னாட” வென்றது
பிறரிவளைப் பொன்னணிந்துகொடுபோவரென்னுந் துணையன்றி யுள்ளுறையுவமம் பொருளை முற்றவுணர்த்தாமை யுணர்க.
“ கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற், றினைபிடி யுண்ணும் பெருங்கன்னாட” வென்ற குறுந்தொகைப் பாட்டும்,
“ வேங்கைதொலைத்த” வென்னுங் குறிஞ்சிக்கலியு மது பகுதி வரைவுமுடுக்கம். துறை – வரைவுகடாதல்.

22-வது இறைச்சிப்பொருண் முற்றும்.

__________

23-வது பொருண்மொழியலங்காரம்

177. ஊதியமெய்ப்பொருளுணர்த்தல்பொருண்மொழியாம்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருண்மொழியென்னும் அலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) ஆன்மலாபமான வண்மைப்பொருள் புலவனாற் செய்யுளிடத் துணர்த்தப்படுவதும்
பொருண்மொழியென்னும் அலங்காரமென்று சொல்லப் படுவதாமென்றவாறு.
இது தா அனாட்டித்தனாதுநிறுத்தலென்பதாம். உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.
அலங்காரமென்பது அதிகாரத்தால் வருவிக்கப் பட்டது.

இந்தவுடல்பெற்றிருக்கப்பெறுபொழுதே
நந்திபுரவிண்ணகர்மாலைச் – சிந்திப்பா
ரன்றறிவாமென்னாதறஞ்செய்வார்பேரின்பஞ்
சென்றறிவார்நெஞ்சேதிடன். (405)
(இ-ள்) நெஞ்சமே! நால்வகைத்தோற்றத்துட் பெறுதற்கரிய ஆராவமிர்தமாம் இந்த மானிடவுடலம்பெற்றதோடு
மின்னிலுநிலையில்லாத இந்தயாக்கை யிருக்கபெற்றபொழுதே நாம் இதுபொழுதிளையமாகலின் இறக்குஞான்று
சிந்திப்போமெனக்கருதாதே நந்திபுரத்திருமாலைக் காலம் பெறச்சிந்திப்பாரும், அறத்தினை நாடோறுஞ் செய்வாரும்
இவ்வுலகத்தின்பமெய்துவதோடும் அவ்வுலகத்துப் பேரின்பமுமெய்துவ துண்மையாமென்றவாறு.

ஆதலால் நாமு மவைசெய்வதே நமக்குறுதியென்பது பயன். சிந்திப்பார், அறஞ்செய்வார், பேரின்பம் என்னும்
மூன்றிடத்தும் உம்மை தொக்கனவாக விரிக்க. அறிவாரென்பது காண்பரென்பதாயிற்று.
பொருள் என்பது மெய்; “பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு, மருளானா மாணாப் பிறப்பு’ என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – பொருளொடுபுகறல்.

23-வது பொருண்மொழி முற்றும்

——–

24-வது அதிகவலங்காரம்

178.ஆதாரத்தினுமாதேயம்பெருத்
தகலம்பெறாதடங்கியதெனலதிகம்.
(எ-ன்) வைத்தமுறையானே அதிகமென்னும் அலங்கார முணர்-ற்று.

இதன்பொருள் சூத்திரத்தானே விளங்கும்.

வசையிலாவிரசதத்தினால்வயின்வயினமைத்த
வசைவிலாப்பனிவரைக்குலமளவிடற்கரிதாந்
திசைகளெங்கணுஞ்சென்றிடம்பெறாதவாமதன
திசைகணின்றவண்செறிந்தடங்கியதெனலாமே. (406)
இது அதிகம் வசையிலாவிரசதம் – மாற்றிற்குறையாவெள்ளி, அசைவிலா – நடுக்கற்ற. இசைகள் – கீர்த்திகள்.
செறிந்தடங்கியது – மிகவுஞ்செறிந்தது. ஆதாரம் பூமியும் ஆகாயமும். ஆதேயம் – கீர்த்தி. (குருகாமான்மியம். ) துறை – நகரவாழ்த்து.

24-வது அதிகம் முற்றும்.

__________

25-வது வகைமுதலடுக்கலங்காரம்

179. பொதுப்படவொருவகைமுதலடைபுணரா
தடுக்கலும்வகைமுதலடுக்கணியெனத்தகும்.
(எ-ன்) வைத்தமுறையானே வகைமுதலடுக்கணியுணர்-ற்று.

(இ-ள்) நால்வகைத்தோற்றத்துட் பொதுப்பெயர்க்கூட்டமான முதற்பொருள்களை அடை சினை புணராது
முதல்களை முதலாம்படி புலவன் செய்யுண்முழுது மடுக்குவதும் வகைமுதலடுக்கணியா மென்றவாறு.

வகைமுதலடுக்கென்பது பண்புத்தொகை.
வகையாவன:-மரம், விலங்கு, புள், மீன், ஊர்வன, மணி, பண், நாள், மக்கள், தேவர் எனக் கூறப்பட்ட ஒரு பலவகைமுதலாம்.

மரவமுங்கடம்பும்பனசமுமருதும்வடமுமாதவியுமாதுளமுங்
குரவமுமிலவுந்திலகமும்விளவுங்கொன்றையுஞ்செருந்திலுங்குமிழு
மரசுநாவலுந்தான்றியுமரீதகியுமாமலகமுநரந்தமுமாம்
பிரமுமேலமுஞ்சண்பகமும்வேழமுஞ்சம்பீரமுந்தழைந்துளவொருசார். (407)
இது மரமெனப் பொதுப்படக்கிடந்தவகைமுதல்களை யடைசினை புணரா தெண்ணும்மைப்பட அடுக்கினதாம். துறை – நகரவாழ்த்து.

இந்தளமுகாரிகுச்சரிபௌளிமலைமைசீராகம்வயிரவிதனாசா
கிரிவசந்தன்பழம்பஞ்சுரங்கொல்லிமருளிந்தளஞ்சாதாரிசா
மந்தமல்லாரிபந்துமுகாரியாரியவராடிகொல்லவராடிநை
வளமிராமக்கிரிகுறிஞ்சிகரம்போதிபூவாளிசௌராட்டநாட்டை
செந்துருதியருமவதிதக்கேசிகௌடிகௌசிகமேகராக்குறிஞ்சி
செவ்வழிப்பாலைவிளரிப்பாலைசெம்பாலைசீகாமரஞ்சிகண்டி
யந்தாளிமலகரிநளுத் தைகாந்தாரமுரலளிசெறியும்வகுளமார்ப
னமலன்வருகனகதண்டிகைவாழ்வினைக்காணவாயிரங்கண்வேண்டுமே. (408)
இது, பண் இராகமெனப் பொதுப்பட்ட வகைமுதற்பொருள்களையடை சினைகூடாதடுக்கின வகைமுதலடுக்கு.
பகுதி – பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பவனிவாழ்த்து.

25-வது வகைமுதலடுக்கு முற்றும்

——–

26-வது இணையெதுகையலங்காரம்

180.வாய்ந்தயாப்பினுள்வருமிணையெதுகை
யாய்ந்தவெதுகையணியெனத்தகுமே.
(எ-ன்) வைத்தமுறையானே யிணையெதுகையலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல், ஏனைப் பாவினமெனத் தோன்றப்பட்ட
செய்யுளகத்துப் பெருக வரும் இணையெதுகைநடையினையும் எதுகையலங்காரமென்று கூறவுந்தகு மென்றவாறு.

மேலைச்சூத்திரத்துள் அடுக்கலுமென்னும் உம்மையைச் சிங்கநோக்காக்கி யதற்குமேலே புதியனவாகக் கூறியவற்றிற்கும்,
இதுமுதலாக முன்னர்ப் புதியனவாகப்புணர்த்தவற்றிற்கும், தகுமென்பதனை யாண்டு மேற்றிக்கொள்க.
ஆய்ந்தவெனவே யிதுவுந் தன்குறியிடுதலென்னுந் தந்திரவுத்தியு ளடங்கும்.

கணையும்பிணையுங்கடுவும்வடுவு
மிணையொன்றியவிழியாரெய்தார்-துணைதனக்குத்
தானேயெனுமாயன்றங்காலுள்வேள்கணைக்கும்
யானேயிலக்காகுவேன் (409)

இஃ திணையெதுகையலங்காரம். இதனுள் வேள்கணைக்கும் என்றதனால் ஒழிந்தபடைக்கு மிலக்காயது பெற்றதாம்.
திணை – ஆண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை-புணர்ச்சிபெறாதழுங்கல்.

ஆய்ந்த வெதுகை யென்றதனான் மூவசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரமுமுள.

துடியிடையார்பிடிநடையார்துணைமலையாமிணைமுலையா
ரடிபிடியாமடிபடியாவணைந்தழிசாந்தகலத்தாய்
வடிபுரைமாண்கருநெடுங்கண்மடநல்லார்நாடுகிலிப்
படியிரத்தல்பழுதொன்றாற்பற்றேலெங்கைத்தலமே. (410)
இது மூவசைச்சீர்முழுதொன்றிணையெதுகையலங்காரம். துணை மலையாமிணைமுலையாரடிபிடியாவென்பது
உபயமலைபோலு முபயமுலையை யுடையராம் பரத்தையர் பாதத்தை நீ பிடித்தென்க.
மடிபடியாவென்பது இடக்கர். அணைந்தழிசாந்தகலத்தாய் என்பது அதன்பின்னர்
அவர்களைத் தழுவுதலாலழிந்த சந்தனத்தையுடையமார்ப வென்க.
இப்படி யிரத்தலென்பது இவ்வணநின்று நீ யெம்முடன் குறையிரத்தலென்பதாம்.
பற்றேல் என்பது அல்லீற்றுவியங்கோள்வினைச்சொல்; அல்ஏலென ஈறுதிரிந்ததாம்.
பகுதி-பரத்தையிற்பிரிதல். துறை-பள்ளியிடத்தூடல்.

குயில்போன்மொழியும் அயில்போல்விழியுங்
கொடிபோலிடையும்பிடிபோனடையும்
பயில்வோரரவிற்றுயில்வோர்மயிலைப்
பதியார்முகமாமதியார்முலைதான்
மயில்போலியலாள்* பயலாநதியும்
மதியும்பதியுஞ்சடையார்விடையா
ரெயில்போர்பொருநாள்வளைவார்சிலையே
யெழில்வாணுதலும்புதலுஞ்சிலையே. (411)
இதனுள் நாலசைச்சீர்முழுதொன்றியதூஉங் காண்க. துறை-இயல்பிடங் கூறல். (திருப்பதிக்கலம்பகம்)
* பயல் – பாதி

24-வது அதிகம் முற்றும்.

__________

27-வது விரோதவலங்காரம்

181. சொற்பொருண்முரணத்தொடுப்பதுவிரோதம்.
(எ-ன்) வைத்தமுறையானே விரோதமென்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலும் மாறுபாடுதோன்றப் புணர்ப்பது விரோதமென்னும் அலங்காரமாமென்றவாறு.

182.அதுவே,
சொல்லும்பொருளுமொருமையிற்பன்மையிற்
றம்மின்முரணுஞ்சால்பொருநான்காய்ச்
சொல்லும்பொருளுஞ்சொல்லொடும்பொருளொடு
மொல்லுபுமுரணலினோரைந்தாகும்.
(எ-ன்) இதுவும் அவ்விரோதத்தினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட விரோதமென்னுமது, சொல்லொடும் பொருளொடு மொருமையிலும் பன்மையிலுந்
தம்மிற்றா மாறுகொள்ளு மொழுக்க மொருநான்காயும் அவ்விரண்டுஞ் சொல்லொடுபொருளும் பொருளொடு
சொல்லும் விரவிப் பொருந்துபு மாறுகொள்வதோடு மைந்தாகு மென்றவாறு.

மெய்யுரைப்பாரென்பதுபொய்மெல்லியலாளின்றெமையும்
பொய்யுரைப்பாரென்றுபுகலுமே-பையரவி
லாடுந்திருமாலரங்கத்தேதேர்வலவா
வோடும்புயன்முந்துறின் (412)
இது சொல்லுஞ் சொல்லும் முரணியது. மெய் பொய்யென்பது பொருளின்றிச் சொல்லு முரணினமையானென்றறிக.
“செவ்வி வாய்த்த செம்பாட்டீரத்து, வெள்ளைவெண்மதி” யென்பது மிது. அடிமுரண்.
பகுதி – பொருட்பிரிதல். துறை – பாகனோடு கூறல்.

செம்மையோர்வெண்மையோராகித்திடனழிந்தோர்
தம்மையோர்நட்பாகச்சார்வரோ-வெம்மையோ
ராளாயுவந்தானரங்கத்துளாயிழையாய்
வாளாதென்கண்புதைத்தவாறு. (413)

இது பொருளும் பொருளும் முரணியது. என்னை? செம்மையோ ரெனவும், வெண்மையோரெனவு மிரண்டுயர்
திணைப்பொருளுளவாய்த் தம்மின் முரணியதா லெனக்கொள்க. செம்மையோர்-அறிவுடையோர்.
வெண்மையோர்-அறிவிலாதோர். ஆளாயுவந்தான்-அடிமையாக ஆளுதற்கு விரும்பினோன்.
வாளாது – பேசாது. என்கண்புதைத்தவாறு-புறம்புல்கி எனது கண்களைப் புதைத்தபடி யாதுதா னென்றவாறு.
பகுதி-பரத்தையிற் பிரிதல். துறை – நினைவறிகண்புதை.
இஃ தோரள வடிக்கண் ணிணை முரணாயிற்று. இவையிரண்டு மொருமை.

வெந்தழலைத்தண்ணீர்மைமேதகுவெண்சாந்தென்றே
சந்ததமும்பூசுவதென்றையன்மீர்-பைந்துளபக்
கொத்தணிந்ததாரழகர்கூடாநாட்கண்பனிநீர்
முத்தணிந்தபொற்பூண்முலைக்கு. (414)
இது சொல்லும் பொருளுஞ் சொற்களோடு முரணின, என்னை? வெம்மை – வெப்பம். தனியேபொருளின் றிச்சொல்.
தழல் பொருள், ஆதலால் அவை சொல்லும் பொருளுமாம் தண்ணீர்மை ; தண்மை – குளிர்மை. நீர்மை – நன்மை.
இரண்டுந் தனியே பொருளின்மையாற் சொல்லாயிற்று. மேதகுவெண்சாந்து – பெருமைபொருந்தியவெண்சாந்து.
கண்பனிநீர்முத்து – கண்கள்சொரியாநின்ற தண்ணீராகிய முத்து. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடு கூறல்.

கண்காலருவிகொடுங்கைம்மேல்விழுந்தொழுகும்
பெண்காதனீக்கலார்பேதைமீர் – மண்காவல்
பூண்டவராமுன்னம்பொருகணையாற்றேவியைமீட்
டாண்டவராம்பேரருளாளர் (415)
இது பொருளுஞ் சொல்லும் பொருளோடு முரணின ; என்னை? கண் பொருள்; காலென்ப துறுப்பன்றி, உகுமருவியெனத்
தனிநிற்கும் பொருளின்றிப் புனலினது கிரியையாதலாற் சொல்.
கொடுங்கை பொருளாத லானென்றறிக. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

கருவிடமும்வெண்மருந்துங்கைக்கொண்டகண்ணம்
பிருபுருவவிற்கீழிலகுந்-திருமகட்குக்
கற்றார்புகழ்மாறன்கார்வரைமேற்கோங்கரும்பு
முற்றாதபொற்பூண்முலை. (416)
இதனுள், சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணின. என்னை? கருவிடம்: கருமைசொல்;
விடம் பொருள். வெண் மருந்து; வெண்மை சொல்;மருந்து பொருள் ஆதலால் அறிக.
இதனுள், கைக்கொண்ட கண்ணம்பென்பனவும் அம்பு வில் என்பனவும் முரண். துறை – இயல்பிடங்கூறல்.

தம்மின்முரணுஞ் சால்பென்றதனால் இணைமுரண்முதலாகிய ஏழு விகற்பமும் ஒரு செய்யுளகத்து
வரும் விரோதவலங்காரமும் உள. அவை வருமாறு:-

அறிவிலருணர்வுளரெனுமவரளவினி
லருவமொடொளிர்திருவுருவம துடையனை
யெளியனையடியவர்க்கேனையோர்க்கரியனைக்
கனவினுநனவினுமறிதுயிற்கண்ணும்
வெண்சங்காழிசெம்மணிப்பொன்முடி
காலையுமாலையுங்கண்டுநன்பகலினு
மின்புறத்துன்பமற்றிம்பரொடும்பர்
நறவார்மலர்மகணாதனை
மறவாதவர்பதம்வழுத்துமென்னாவே (417)
இதனுள் இணைமுரண்முதலாகிய ஏழுவிகற்பமும் முறையே வந்தவாறு காண்க. முரணாவது விரோதம்.
உலகத்துட்பொருளெல்லாம் காட்சிப் பொருளும் கருத்துப்பொருளுமாமெனினும் ஈண்டுக் கருத்துப் பொருள் சொல்லாயிற்று.
இதனுள் அறிவிலர் உணர்வுளர்-பொருளும் பொருளும். அருவமொடுருவம்-சொல்லொடுபொருள்.
ஒழிந்தனவும் மொழியினும் பொருளினும் முரணினவாறு கண்டுகொள்க. திணை – பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

27-வது விரோதம் முற்றும்.

__________

28-வது உபாயவலங்காரம்

183.ஒருபயன்கோடற்குறுபொருட்டெனலா
மொள்ளியசூழ்ச்சியுணர்த்துதலுபாயம்.
(எ-ன்) வைத்தமுறையானே உபாயமென்னும் அலங்காரம் உணர்–ற்று.

(இ-ள்) யாதாயினும் ஓரூதியங்கோடற்கு மிக்ககாரணமென்று கூறப்படு வதாம் முக்கியமானதொரு
சூழ்ச்சியையுணர்த்துதல் உபாயமென்னும் அலங்காரமாம் என்றவாறு. சூழ்ச்சி-உணர்வோடுசாவியுண்டான வுறுதியறி வாம்.

சூடிக்கழித்ததுளபச்சருகெனினு
நாடித்தருகதிருநாகையா – யூடிப்
புலவாததற்குநினதருட்கும்பொற்றோள்
கலவாதவெற்குநலங்காண். (418)
இஃ துபாயம்.

(இ-ள்) நாகையின்கண்வாழும் மாதவனே ! நினதுமார்பத்தைத் தோய்வதற்கு விரும்பியவேட்கையுடைய
எனக்குத் திருமகள் விட்டு நீங்காததிருமார்பத்து அணைவதற்குக்கூடாதாயினும், அத்திருமார்பிற்சூடிக் கழித்த
துளபமாலிகைச்சருகையாகிலும் நினது திருவுள்ளக்குறிப்பாற் றருக; அங்ஙனம் திருவுள்ளக்கருணையால் உட்கொண்டு தருதல்,
பெரியபிராட்டி நின்னுடனேயூடியதன்மேலும் புலவாது நலனெய்துதற்கும் உபாயமாம்;
நினது திருவருணலனெய்துதற்கும் உபாயமாம்; நினது திருப்புயத்தினை ஆலிங்கனஞ்செய்யாத
எனக்கு நலனெய்துதற்கும் உபாயமாம் என்றவாறு.

நலமென்பது ஆகுபெயர். அதனை எங்கும் ஏற்றுக. திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல்.

மன்கரம்பைமாயோன்வருகளிறேவேள்சிலையாங்
கொன்கரும்பைநின்பனைக்கைகொண்டுநின்று-தின்பையெனி
லிக்கரும்பின்மோகமும்போமீதேயுபாயமுனக்
கக்கரும்பாற்றாகமுமின்றாம். (419)
இதுவும் உபாயம்.

(இ-ள்) கரம்பனூருத்தமன்வாகனமாகவருகளிறே! நீ இவனைக் கொண்டுலாவரும்பவனிகண் டிவன்மார்பத்தை
விரும்பினஇவளை எய்வதற்குக் காமன்கைச்சிலையான கரும்பை உனது பனைபோன்ற கையினாற் பற்றி
முன்னின்று தின்பையெனில் இக்கரும்பு போன்ற மொழியினையுடையாள்மையலுந் தீரும், உனதுபசியுந் தீரும்,
ஆதலால் இருதலைக்கும் இதுபோற் றெள்ளியசூழ்ச்சி பிறிதில்லை யென்றவாறு.

ஏகாரம் பிரிநிலையாதலாற் பிறிது பாயமில்லையென்பதாயிற்று. திணை- பெண்பாற்பெருந்திணை.
துறை-பவனிகண்டழுங்கிய பைந்தொடி தோழி இவளுயிர்தருகென ஏற்றம்வேண்டல்.

28-வது உபாயம் முற்றும்.

__________

29-வது விசேடவலங்காரம்

184. சாதிகுணந்தொழில்பொருளிடமுறுப்பென்
றோதியவிருமூன்றினுமுறுகுறைபட
லேதுவினதற்கதற்கிசைமேம்பாட்டா
னீதிகொள்புலவர்நிகழ்த்துதல்விசேடம்.
(எ-ன்) வைத்தமுறையானே விசேடமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) சாதியும் குணனும் தொழிலும் பொருளும் இடனும் உறுப்பும் என்னும் ஆறினும் மிக்க குறையுண்டாதல்
காரணமாக அதற்கதற்கிசைமேம் பாட்டானே இலக்கணநீதியுட்கொள்புலவர் கூறுவது விசேடமாம் என்றவாறு.

கொச்சைப்பொதுவர்குலச்சிறுவன்சிற்றடிமீ
திச்சைப்படுபார்த்தனிட்டமலர்-நிச்சயமாய்
முன்னாண்முடிக்கொண்டான்முக்கட்கடவுளா
மென்னாமுரைப்பேமிதற்கு. (420)

இது சாதிக்குறைவிசேடம். கொச்சை-ஆடு. நிச்சயம்-உண்மை. முடி-சடாமகுடம். இதற்கு-இப்பெருமைக்கு.
என்னாமுரைப்பேம்யாம் யாதுரைப்பேம்; என்பது ஆச்சரியம். துறை-கடவுள்வாழ்த்து.

வண்ணமகிழ்மாறன்வாய்மலர்ந்தநாண்மூரல்
வெண்ணிலவுசற்றேவிரியாமுன் – கண்ணகன்ற
தானமளவும்விரிந்தனவேதத்துவமெய்ஞ்
ஞானமெனும்வெண்ணிலா. (421)
இது குணக்குறைவிசேடம். மூரல்வெண்ணிலவு – திருமுத்தின் வெண்மை. கண்ணகன்றதானம் – பரமபதம்.
திணை – வாகை. துறை-சால்புமுல்லை.

தில்லைத்திருச்சித்திரகூடத்தான்றிருக்கை
வில்லைக்குனித்தருநாண்வீக்காமுன்-பல்பெரும்போர்
தாக்கினாரென்னுஞ்சலநிருதர்மெய்யுறநாண்
வீக்கினான்றென்றிசைவாழ்வேந்து. (422)
இது தொழிற்குறைவிசேடம். குனித்து-குனிக்க. அருநாண்-அறுதலில் லாதவிற்சரடு. வீக்காமுன்-கட்டாதமுன்.
சலநிருதர்-தீய நெறியையுடைய அரக்கர். தென்றிசைவாழ்வேந்து – இயமன்.
திணை-வாகை. துறை – வில்வென்றி. பேராண்முல்லையுமாம்.

உள்ளபடியேயுழக்கென்னுந்தண்டுலத்தால்
வெள்ளமெனவேவிருந்துறினு-நள்ளரணத்
தாவிதானன்புற்றமுதமைத்தாளைவருக்குந்
தேவியாஞ்செல்வத்திரு. (423)
இது பொருட்குறைவிசேடம். தண்டுலம் – அரிசி. வெள்ளம்-வெள்ளம் என்னும் இலக்கம். நள்ளரணம்-நடுக்காடு.
அமுதமைத்தல்-அசனம் நிறைத்தல். திணை-பொதுவியல். துறை-இல்லாண்முல்லை.

ஆலந்தளிருளடங்குமொருபுனிதப்
பாலன்பசித்தசிறுபண்டிக்கே-மேலைநாட்
பல்லாயிரமாகப்பாரித்தபேரண்ட
மெல்லாமடங்கிற்றெனும். (424)

இஃ திடக்குறைவிசேடம். புனிதப்பாலன். அநிருத்தன். பாரித்தது – பாத்தினது. பேரண்டம் – அளவிறந்த அண்டம்;
“பெரியயோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே” என்பதனால் அறிக. எனும் – என்று புராணங்கள்கூறும். துறை – கடவுள்வாழ்த்து.

கரமுஞ்சிரமுங்கணக்கின்றுரமும்
வரமும்வரம்பின்றரக்கர்-சரராமன்
றான்மானிடனிருகைசானகியைநீங்குதளர்
வானாகவும்வென்றனன். (425)
இஃ துறுப்புக்குறைவிசேடம். கணக்கின்று – எண்ணிறந்தன. அரக்கர் – மூலபலப்படை. தளர்வான் – தளர்ச்சியையுடையான்.
ஆகவும் வென்றனன் – இத்தனையெல்லாம் உறுப்புக்குறைவுண்டாயிருக்கவும் வென்றான்! என்ன ஆச்சிரியமோ என்பதாம்.
முன்னுள்ள இடக்குறை விசேடத்திற்கும் இஃதென்ன அகடிதகெடிதசாமர்த்தியகுணமோ எனக் கூட்டுக.
திணை – வாகை. துறை – பேராண்முல்லை.

29-வது விசேடம் முற்றும்.

__________

30-வது சமாயிதவலங்காரம்

185.ஒருவினைமுயன்றதனாலுறுபயனைமற்
றொருவினைதரவுறுவதுவேசமாயிதம்.
(எ-ன்) வைத்தமுறையானே சமாயிதமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) முதலே ஒருவர் ஒருவினையை முயல அதனாலெய்துங் காரியத்தைப் பிறிதொன்றன்வினைதர
அதுகாரணமாக அக்காரியத்தை யெய்துவது சமாயிதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

ஊடினாளூடியபினுள்ளத்துவகையெழ
வாடினாள்வண்சுடர்தான்வாடையினால்-வீடியதாற்
காதலன்பொன்னாகங்கலந்தாளருள்கலப்ப
மாதவன்றன்மோகூர்மயில். (426)
இது சமாயிதம். இதன்பொருள் வெளிப்படை; கூற்றான்விளங்கும். பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – துறைகூறல்.

30-வது சமாயிதம் முற்றும்.

—–

31-வது ஏதுவலங்காரம்

186. ஏதுவென்பதிதனினிஃதாயதென்
றோதுவதாமெனவுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே ஏதுவென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) ஏதுவென்றுகூறப்படுவது இப்பொருட்டிறத்தினான் இதனிடத் திஃதுண்டாய தென்றுகூறப்படுவதாமென்று
கூறினர் அறிவுடையோ ரென்றவாறு.

187.அதுவே,
காரகஞாபகமெனவிருகாட்சிய.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட ஏதுவெனத் தொகையானொன்றாய் நின்ற வது காரகவேது ஞாபகவேது என இருவகைப்படுமென்றவாறு.

188.அவற்றுள்,
முதலதுமுதல்வனுங்கருவியுங்கருமமுங்
காலமுமிடனுங்கண்ணியநெறித்தாய்ப்
போக்கறுபொருளொடும்புகலிருமூன்றினு
மாக்கமுமழிவுமென்றமர்தருவிரித்தே.

(எ-ன்) இஃ தவ் விருவகையினுட் காரகவேதுவின்விரித்தொகை யுணர் – ற்று.

(இ-ள்) அக் காரக ஞாபக மிரண்டனுள் முதலேவந்தகாரகவேது,முதல்வன்முதலாக இடமீறாகக்கூறப்பெறும்
ஐந்தினோடுங்கருதப்பட்ட மார்க் கத்தையுடைத் தாகியும் குற்றமற்ற பொருளோடுங்கூடி யாறுமார்க்கத்தினுமாக்கமும்
அழிவுமென்றுபொருந்தும் விரியையுடைத்தா மென்றவாறு.

189.ஏவன்முதல்வனியற்றுதன்முதல்வனென்
றாவயின்வருமுதல்வனுமிரண்டாகும்..
(எ-ன்) இஃ தவ்வாறனுள் முதலேவந்த முதல்வன்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் காரகவேதுவின்கண்வரும் முதல்வனும் ஏவன் முதல்வன் இயற்றுதன் முதல்வனென விருவராவரென்றவாறு.

முதல்வன் என்பவன் கருத்தா. முதல்வனுமென்றவும்மையாற் கருவியும் முதற்கருவியும் துணைக்கருவியுமென
இரண்டாம். கருவியென்பது காரணம். இவற்றிற்கெல்லாஞ் செய்யுள்வருமாறு:-

சீதரனேநாதனெனத்தேர்ந்துலவாப்பொன்னுலகை
யாதரவாற்றன் னுலகென்றாக்கினான்-மாதரா
யெங்கண்மாறன்குருகூரெம்பிரானின்னருள்கூர்ந்
தங்கண்ஞாலத்துதித்தேயன்று. (427)
இது கருத்தாகாரகவேது. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

பல்வளைக்கைச்சானகிதோள்பைம்பொற்றடக்கையால்
வில்வளைத்துமேனாளின்மேவினான்- சொல்வளையா
மெய்ம்மாதவர்சேரரிமேயவிண்ணகர்வாழ்
பெம்மானிமையோர்பிரான். (428)
இது கருவிக்காரகவேது. சொல்வளையாமெய்ம்மாதவர்-உரைதவறா வுண்மையுடையமாதவர்.
கருவி-தடக்கை. இது முதற்கருவி. வில்லும் நாணும் முதலியன துணைக்கருவி.
திணை-வாகை. துறை – வில்வென்றி. இவையிரண்டும் செய்வதன்றொழிலாக்கம்.

ஆழியுடையான்பொன்னாழிகொடுத்தேவ
வாழிகடந்தன்றடலனும்-னாழி
யளித்தலிற்கைக்கொண்டணைத்தவாகம்போன்றாவி
தளிர்த்ததுவேசானகிக்குத்தான். (429)
இது கருமக்காரகவேது. திணை – பாடாண்சார்ந்தபொதுவியல் துறை – கலன்கண்டுகளித்தல்.
கருமம் – திருவடி திருவாழியைக் கொடுத்தலாற் பிராட்டி திருக்கைகொண்டணைத்தல். இதுவும் ஆக்கம்.

போற்றிப்படைத்தபொருண்மாறனன்பரையே
போற்றிப்புறத்தபொருளிரண்டும்-வேற்றுமையாய்க்
கொள்ளாதெமையுமுடன்கொள்கென்றெதிர்ந்தவென
விள்ளாவிழிநீர்மிகும். (430)
இதுவுமது. புறத்தபொருளிரண்டும் என்பன அறனும் இன்பமும். கொள்கென் றெதிர்ந்தவென விள்ளாவென்பது
எம்மையுங் கைக்கொள் வாயாக எனப் படைத்தபொருளையுடைய காரிமாறப்பிரானன்பரை முயற்சியின்றி
யெதிர்கொண்டன என யான் வாய்திறப்ப அக்காலத்து எ-று.
விழிநீர்மிகும் – துன்பக்கண்ணீர் மிகாநின்ற வென்றவாறு. இதனுள், கருமம் வாய்திறப்ப என்றது. இது அழிவு.
இவையிரண்டும் செய்விப்பதன்றொழில். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-வாட்டங் கூறல். தலைவன் கூற்று

தோலாதமாவலிபாற்றொல்லுலகமூன்றுமிரு
காலாலளந்துமுனங்கைக்கொண்டான்–மேலாய
வத்தியூர்நின்றானடியார்தமக்கழியா
முத்தியூர்காட்டுமுதல். (431)
இதுவும் கருவிக்காரகவேது. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை-கடவுள்வாழ்த்து.

பொறிவழியேதாக்கும்புலனைந்தவித்த
வறிவழியாயோகமதனா–லெறிதிரைநீ
ராறன்றுயிலாயமர்ந்தானடிசேர்தன்
மாறன்றனக்கேவரும். (432)
இதுவும் கருமக்காரகவேது. ஆறன்றுயிலாயமர்ந்தான் என்பது ஆலமரத்தைத் தான் றுயில்கொள்ளுந்
திருவனந்தாழ்வானாகவைத் ததனிற் றுயில்விரும்பினா னென்றவாறு. ஆல் – ஆகுபெயர். திணை – வாகை.
துறை – தாபதவாகை. இவையிரண்டும் செய்வதன்றொழில் ஆக்கம் ;
இவைநாலும் அடைவே ஏவற்கருத்தாவும் கருமக்கருத்தாவுமா மெனக்கொள்க.

இமிழ்திரைநீர்ஞாலமிருள்விழுங்கச்சோதி
யுமிழ்கதிரும்புள்ளுமொடுங்க–வமிழ்தொத்
தருண்மாலையெய்தாதவர்மனம்போன்மாலு
மருண்மாலைவந்தென்மனம். (433)
இது காலக்காரகவேது. ஒடுங்க – அடங்க. மாலும் – மயக்கத்தை யெய்தும். மருண்மாலை – மயக்கத்தைத்தரும் மாலை.
திணை – பெண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை – மாலையம்பொழுது கண்டிரங்கல்.

சங்கனழியாத்தமனியநாடெய்தியதும்
பொங்குபுகழ்த்தாந்தன்புலவீர்கா–ளெங்கோனாஞ்
சோதிபதமெய்தியதுஞ்சொற்றமிழ்மாறன்னருள்கூ
ராதிநகர்த்தெய்வீகத்தால் (434)
இது திடக்காரகவேது. துறை – நகரவாழ்த்து.

நந்திபுரமாலேவநன்மாருதிகொளுத்தும்
வெந்தழலால்வெந்துவிளிந்ததே–முந்தைப்
பெருவானவர்வரமும்பேரறமும்பொன்றப்
பொருவானிலங்காபுரம். (435)
இது பொருட்காரகவேது. மாருதி – அனுமான். திணை – வஞ்சி. துறை – உழபுலவஞ்சி. இது செய்விப்பதன்றொழில்.
இதற்கு மேலைச் சூத்திரத்துள்ள முதல்வனை
“ஏவன் முதல்வ னியற்றுதன் முதல்வன்” என்று ஒருபான்மேல் உயர்திணைநோக்கிவைத்தாரேனும்,
“ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” என்பதனால் ஐந்துபாவினும் கொள்க.
இவற்றுள் முன்னதும் பின்னதும் அழிவு. இடைநின்ற இடக்காரகவேது ஆக்கம்.

கற்பனைமேற்கொண்டொழுகுங்கடைப்பிடியார்வயிற்றிருநாண்
பொற்புறுமாற்றலிற்பொறித்தபொருவருசெவ்வணிநோக்கித்
தற்பொதிவாட்டுறந்தகெழுதகைத்தாயபுனலூர
னிற்புகலால்வெஞ்சினநஞ்செனக்கூர்த்தமருணோக்க
முற்பலந்தெள்ளமிர்துயிர்த்தற்றொளிதிகழ்சீர்பயின்றனவே
அதனொடும்,

அநகனிங்கெமையாண்டருண்மகிழ்மாறன்
புனல்வறங்கூராப்பொருநையுட்புரைதீர்
தினகரோதயத்திற்செவ்விபெற்றலர்ந்த
தண்மலர்புரைதகைக்தாகு
மொண்ணுதலரிவையுவகைவாண்முகமே. (436)
இது செய்வதன்றொழிற்கருத்தாகாரகவேது. பா – தரவு. தனிச்சொல், சுரிதகம் என்னும் மூன்றுறுப்பால்
வந்த தரவுகொச்சகக்கலிப்பா. இதனுள் அழிவும் ஆக்கமும் முறையேநிகழ்ந்தமை காண்க.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – முகமலர்ச்சிகூறல்.

புத்தேளிர்நிரப்பிகப்பான்பொருதிரைப்பாற்கடல்கடைந்து
மெய்த்தேவர்பெருமானாம்வேங்கடத்தெங்கண்ணபிரான்
புரந்தருணன்மருந்திறுத்தபுலந்துவரத்துறந்திழைத்த
வரந்தருபெண்ணமிர்தாமிம்மடவரன்மென்றோடுறந்தே
யில்லறத்தின்றொடர்புடையோர்க்கின்பமுமாதுலர்க்களிக்கு
நல்லறத்தின்றொடர்ப்பாடுநனிதருஞ்செம்பொருளென்றே
(இது தரவு. )

ஒருதலைபெற்றனனாகியுருப்பவிர்வெங்கடத்திடைப்போய்
வருபொழுதிற்பெருவறங்கூர்மணிநாவின்மம்மர்நோ
யருண்மடந்தையிலவிதழ்த்தெள்ளமிர்தருந்தத்துறந்தனவே;
அதான்று,

வேனுதல்வன்பரற்கடத்தாரிடைவேனில்வெயிற்குமையாள்
கோனுதற்கட்டழற்குளித்தமதனெனமெய்கூர்த்தநோய்
பானலங்கட்கிளிமொழிமெய்ப்பரிசத்தாற்றுறந்தனவே;
அதான்று,

உருவிலாவுருவிற்றாமுருளிலாமசரதத்தைப்
பருகுவான்புனலெனச்செல்பாலையுட்சார்ந்துளங்கொதிநோய்
திருமகளாற்பெறுமின்பத்திரையாடத்துறந்தனவே;
அதான்று,

வரையிருமருங்கினுமரீஇயவெவ்விடம்
புரைசுரத்தாரதர்ப்புக்குயிர்க்குறுநோ
யம்மென்சாயலணிமயில்பைம்பூட்
கொம்மைவெம்முலைக்குன்றிடைமுயங்கலி
னனவுகனவாநயந்துழி
நினைகலாநீளிடைநீத்தனவே. (437)
இஃ திடையிடை தனிச்சொற்பெற்றுத் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்குறுப்பினோடு
நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிதுவேறுபட்டுவந்த சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா.
இதுவும் கருவிக்காரகவேது. இதனுள்ளும் ஆக்கமும் அழிவும் கூடி வந்தமைகாண்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-உண்மகிழ்ந்துரைத்தல்.

190.ஏனையதொன்றுவெளிப்படமற்றது
தானுணர்விற்புலப்படுந்தன்மையதாய்க்
காரணகாரியந்தாமுறழ்ந்துணர்த்துஞ்
சால்பினுநடைபெறுஞ்சாற்றுங்காலே.
(எ-ன்) கருத்தாமுதலாகப் பொருள் ஈறாகக் கூறப்பட்ட அறு வகைப்படுங் காரகவேது வினையுணர்த்தியொழிந்த
ஞாபகவேதுவுணர்த்து வான்றொடங்கி அதன் பொதுவிலக்கணம் உணர் – ற்று.

(இ-ள்) காரகவேதுவொழிந்த ஞாபகவேதுவென்னுமது ஒன்று வெளிப்பட்டு வெளிப்படாததொன்றை
யறிவிப்பதுவாய்க் காரணகாரி யங்கண் மாறாடியுணர்த்துமொழுக்கத்தினுங்கூடிநடைபெறுங் கூறுமிடத் தென்றவாறு.
காரகம் ஞாபகம் என்பது முறையே செய்விப்பதும் அறிவிப்பதுமா மாதலால், காரண காரிய முறழ்தலாவது
புகையுண்மையால் அதன்கீழ் எரியுண்மையை எரியினது காரியமாம்புகை அறிவித்தலெனவுணர்க.

191.எய்தியவின்பந்துன்பமிவற்றிற்
கையமில்பான்மையாக்கமுமழிவும்.
(எ-ன்) இதுவும் அவற்றிற்கோர்புறனடையுணர் – ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட காரகம் ஞாபகம் இரண்டிற்கு மாக்கமும் அழிவுமென்றுகூறப்பட்டன.
அவ்வேதுக்களாலெய்தும் இன்பந் துன்பங்களா மென்றவாறு.

அணியார்மென்றோளுமயில்விழியுஞ்சற்றுந்
தணியாதிடந்துடிக்குஞ்சால்பான்–மணிமாடக்
கோயிலார்வெற்பிற்கொடியிடையாய் வைகறைநம்
வாயிலாங்காவலர்தேர்வந்து (438)
இது காரணங்கண்டு காரியம்புலப்பட்ட ஞாபகவேது. பகுதி – வரைபொருட்பிரிதல்.
துறை – ஏதுக்காட்டி வருத்தந்தணித்தல். தணியா தென்றல் – இடைவிடாதென்றல். ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

காவிநெடுங்கண்சிவப்பக்காமருசெவ்வாய்விளர்ப்ப
வாவிதளிர்ப்பதுவுமன்றியே–யோவியமே
வண்ணந்தனில்வெயர்ப்புமாறனார்பூஞ்சிலம்பிற்
றண்ணஞ்சுனையேதரும். (439)
இது புணர்ச்சியாலுண்டான தோற்றப்பொலிவாங் காரியம் ஞாபக வேதுவாய்ப் புணர்ச்சியாகிய காரணத்தை யறிவித்தது.
பகுதி – நாண நாட்டம். துறை – புணர்ச்சியுரைத்தல்.

192.இருளறவறிவிப்பனவாமேதுவும்
பொருளிடம்வினைபண்பவற்றொடும்புணரும்.
(எ-ன்) இது ஞாபகவேதுவின்கூறுபா டுணர் – ற்று.

(இ-ள்) முற்கூறிய ஞாபகவேது என்பதும் பொருள், இடம், வினை, பண்பு என்னும்
நான்கினோடும் பொருந்துவனவாம் என்றவாறு.

தேக்குகதிர்வெய்யோன்றினமும்பகனாடிப்
போக்குவரவுபுரிதலாற்–காக்குந்
திருநாரணனுளனாஞ்செம்மையுணர்வித்தான்
குருநாதனாகியவெங்கோன். (440)
இது பொருண்ஞாபகவேது.

(இ-ள்) உலகமெங்கும் நிறைக்குங்கிரணங்களையுடைய ஆதித்தன் பகல் இரவு என்னும் பொழுதிரண்டினுள்
இரவின் கண