ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥
வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1 ॥
தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுல-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2 ॥
ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥
வானர-னிகராத்⁴யக்ஷம் தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம் பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥
ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-னிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா
ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6 ॥
இதி ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம் – ஸம்பூர்ணம் ॥
————
வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥
“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” –
எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக் கூடிய, போகப் பொருட்கள் மேல்
இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்.
“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –
அவர் ராம நாமத்தை ஜபிச்சு,
‘ஆனந்த அஶு’ – ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும்,
‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது ராம நாம ஜபத்துனால,
எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா,
எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பா கிட்ட பிள்ளைக்கு பயம்!
எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வர மாட்டார்!
அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு
‘அத்யச்ச²ம்’ –
ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!
“ஸீதாபதி தூ³தாத்³யம்” –
ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர்.
இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல
ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்!
ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம் பண்ணி, ரொம்ப அழகா பேசறார்.
“நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்!
சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்!
உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி ,
ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது!
அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார்.
“நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!”
அப்படீன்னு சொல்லிடறார்.
அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.
“ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத் தான் இந்தமாதிரி பேச முடியும்!
இவளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல!
இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடி தொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல!
ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”
ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||
மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார்.
‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்!
இப்பேர்ப் பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”
ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||
“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால
எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே
‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’
லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் .
“இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார்.
தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான்.
எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது,
ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் ,
புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது
இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்!
அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு அழைச்சுண்டு போறார்.
ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும்.
இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!”
அப்படீன்னு சொன்னவொடனே,
ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான்.
ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார்.
உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!
ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி,
ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா,
அவ காதுல மட்டும் விழறமாதிரி ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய்
எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி,
அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,
ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||
“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!
விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |
“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு!
‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு!
இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி,
மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!”
அப்படீன்னு கொண்டாடறா.
“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” – எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா,
ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,
“ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன்.
அதனால உன்னால வாயு மாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ,
அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ண முடியும்!
த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:
உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப் படுத்தி,
எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணின உடனே,
“ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்!
இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,
யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |
க3ச்சேத் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||
“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி இப்போ இலங்கைல போய் குதிப்பேன்!
அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்!
இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!”
அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.
‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ –
‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.
———–
அடுத்த ஸ்லோகம்,
தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥
‘தருணாருண முக²கமலம்’ –
‘அருண:’னா ஸூரியன். ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம்.
‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!
‘கருணாரஸபூர’ –
கருணாரஸம் நிரம்பிய,
‘பூரிதாபாங்க³ம்’ –
கண்கள். அவருடைய கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு! அப்பேர்ப்பட்ட கருணை!
அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார்.
இந்த ஸீதை இப்படி கஷ்டப் படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற
இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப் படறாளே!
இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!
ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷
ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார்.
எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார்.
அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.
நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |
ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷
இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல!
ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!
‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ –
‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ!
அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’
அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்றார்.
அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,
ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|
‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!
‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ –
உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்!
லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்
அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |
அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ –
அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு!
அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,
‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ –
‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து,
அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது,
ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து,
மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா.
அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்!
“ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது.
இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”!
அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது!
ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!
இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.
அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே குருவினுடைய வடிவம்தான்!
ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா.
தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹா பெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு,
அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.
பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷
ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ –
‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’
அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி,
“ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”.
“க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:”
சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக்
காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார்.
உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப் போறது!
இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல!
அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்!
“பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!”
அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார்.
அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை!
அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு!
———-
ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥
‘ஶம்ப³ர:’ –
ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன்.
மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார்.
அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான்.
பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா.
அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார்.
ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார்.
“என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே!
இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”.
அப்புறம், “மனசு தான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு.
அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை.
ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன்.
நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்?
அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார்.
அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட
சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார்.
Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும்.
ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது.
“ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும்.
அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது.
நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால,
உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார்.
இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார்.
அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை.
ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார்
அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!
‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள்.
‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர்.
பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார்.
சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார்.
ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான்.
ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது.
உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார்.
உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும்,
இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன
வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார்.
அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.
‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது.
புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||
அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம்,
நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும்.
ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .
பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர்,
இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம்.
அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும்.
அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை,
‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன்.
————
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥
‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ –
சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து,
அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான்.
கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”
“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும்,
பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன்.
நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண்,
ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார்.
அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும் போது,
“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”
“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம்.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு
சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.
‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ –
ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார் தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி,
“என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார்.
“எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ,
அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.
‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ –
‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார்.
முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே!
சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர் கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,
ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||
“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா,
நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான்.
விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான்.
அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.
‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ –
எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்!
முதல்ல அசோக வனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான்.
அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார்.
அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.
ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||–என்று கர்ஜிக்கறார்.
“1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம்.
ஆன ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்!
சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன்.
என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார்.
அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான்.
அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.
‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார்.
அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது.
ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ,
எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ,
அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார்.
அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥
—————–
வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥
‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ –
வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும் போது,
“ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார்.
ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோக வனத்தை அழித்த போது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான்.
80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை.
சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன்,
ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான்.
அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார்.
இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம்.
இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர்.
இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.
வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||
இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா.
சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா?
அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.
கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||
“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”
கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||
விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா?
“மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது,
இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார்.
அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!
‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ –
சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.
வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!
‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார்.
இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸ குலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர்.
அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார்.
ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான்,
நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார்.
ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு.
உன் பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன்.
ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார்.
உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான்.
ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார்.
அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான்.
இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான்.
அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து
பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார்.
உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான்.
இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான்.
அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான்.
லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால,
லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம்.
லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து,
“ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான்.
ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது!
லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட சேர்த்துடறார்.
ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.
ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம்.
அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது,
நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது!
ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே,
ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும்,
‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு!
பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார்.
குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து.
தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார்.
முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க.
ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன்.
நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர்.
இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.
‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ –
இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார்.
ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ,
அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!”
அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!
‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ –
‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது.
அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார்.
போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார்.
“இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார்.
அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!
——–
ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥
‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ –
இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,
‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ –
ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,
‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ –
வெகு காலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,
‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ –
ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா,
ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராம பக்தி வராதா?
அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!
அவரை பார்க்கும் போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா!
பரத் வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத் வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு.
பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார்.
“உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார்.
ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும்
தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக!
பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு.
என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார்.
நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார்.
ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராம காரியம் தான் அவருக்கு விருந்து!
ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான்.
நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து,
‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன்.
எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார்.
ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர்.
அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.
ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும்.
தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல்,
எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ,
அந்த மாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்!
———————
வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥
தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥
ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥
வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥
ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம
——–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ திருவடி -ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply