ஸ்ரீ திருப்பாவை-2021-22- உபன்யாச சாரம்–

ஸ்ரீ கும்பகோணம் -ஸ்ரீ ஆராவமுதன்
கோயில் திருமலை பெருமாள் கோயில் மூவரில் முதலாய முதல்வன் ஆராவமுதன் தானே –
இவர் பாசுரம் கொண்டே நாதமுனிகள் ஆழ்வார் அருள் பெற்றார் அன்றோ
ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி நீணிலா முற்றத்தில் இருந்து
நீணீலா முற்றம் மங்களா சாசனம் செய்யப் பெற்ற முற்றம் மன்றோ
மூன்று dimention – திருப்பாவை உபன்யாசம் ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் இந்த வருஷம்
பத உரை -விளக்க உரை -ஸ்வாபதேச உரை -ஆச்சார்ய சரம நிஷ்டை -ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யாசம்
சித்திரையை விட உயர்ந்த மாதம் மார்கழி -பெரியவாச்சான் பிள்ளை -பகவானுக்கு தொண்டர்களை உபகரித்த மாதம் –

நன்னாளால் -ஆல் -நினைத்து நினைத்து ஈடுபட்டு அருளிச் செய்யும் பதம் –
சோக அக்னி எரிய வாயு புத்ரன் நேரில் வந்ததைக் கண்ட ஹர்ஷம் போல்
நாளும் மாதமும் வாய்த்தனவே

நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்
ஆழியான் -நமது விதி வகையே அருள் தருவான்
கூர் வேல் கொடும் தொழிலன் -சங்கு சக்ர லாஞ்சனம் பண்ணி நமது பாபங்களைத் தொலைந்தது
அஷ்டாக்ஷரம் -மந்திரமே யசோதை ஸ்தானம் -கதிர் மதியம் -வேதம் பாஷ்யம் -அருளிச் செயல்கள் –
நாராயணனே உறங்குமவனே உலவும் ஆச்சார்யர் சாஸ்த்ர பாணி -கைப்பாவையாக இருந்தாலே பேறு –

——–

பாடுவோம் உண்ணோம் என்று இல்லாமல் பாடி உண்ணோம் -உண்டார்க்கு உண்ண வேண்டாமே –
நீராடுவதுக்கும் முன்பும் நாம சங்கீர்த்தனம் செய்யலாமே
ஆறு செய்பவையும் ஆறு செய்யக் கூடாததையும் இதில் உண்டே –
நாமும் -தன்னைப் போல் பெரியாழ்வார் திருவடி அபிமானத்தில் ஒதுங்கியவர்கள் –
பரமனடி -ஆழ்வாரையே பாடுவோம் –
நெய் உண்ணோம் ஆத்ம அனுபவம் பால் உண்ணோம் காம தேக அனுபவம் –
திமிங்கில கில கில –சரணாகதியையும் கார்யகரம் ஆகாத பாகவத அபசாரம் -செய்யாததான செய்யோம்
ஐயம் காலஷேபம் பிச்சை உபன்யாசம் –
உய்யும் ஆறு த்வயம் –

————-

யான் அளப்ப -விசேஷணம் வைத்து பின்பு மூவடி கேட்டு -ஜாக்ரதையாக வார்த்தை உபயோகம்
ஓங்கி -வளர்ந்து எழுந்து மகிழ்ந்து வேகமாக -நான்கு அர்த்தங்களும் உண்டே
நாராயணன் -முதலில் -அடி அடுத்து -பேர் பாடி மேலே மேல் உயர்ந்த –உலகு அளந்த உத்தமன் பேர் ஓங்கிப் பாடி –
ஓங்கி சாற்றி -உரத்த குரலில் சாற்று முறை பாசுரம் போல் –
வாழ்ச்சி எது என்பதை இதில் உத்தமன் பேர் பாடி என்று காட்டுகிறாள்

இது பாவை நோன்பு – மழை பொழிய -வெளியே அறியும்படி -உள்ளே கண்ணனது ஸம்ஸ்லேஷம் நினைத்து
உத் இது நாம -ஸ்ரீ வைகுண்டநாதன் -உத்தர ஷீராப்தி நாதன் -உத்தம -விபவம்
உத்தமன் -ஆச்சார்யன் -உலகம் -சாஸ்திரம் –

கஷ்டப்பட்டாலும் பேறு அவனைப் பற்றினாருக்குக் கிட்டாது
இங்கோ இஷ்டப்பட்டாலே போதும் -ஆசை உடையார்க்கு எல்லாம் -மும்மாரி -ரஹஸ்ய த்ரயம் –
பக்தி உழவன் -பயிர்கள் தானே ஜீவாத்மா-கயல்கள் -அவனது திருக்கண்கள் –
வண்டாக வந்து ஹ்ருதயக் கமலத்துள் வந்து –
மனஸ் வாக்கை விட பலம் -எண்ணங்கள் வலிமை -கண்ணனை ஸமஸ்லேஷிக்க எண்ணி வாயாலே ஸம்ருத்தி கிட்டுமோ என்ன
திரு நாராயண நாம சங்கீர்தன மஹிமை இரண்டையுமே கொடுக்கும் -maal-அனைத்தும் வாங்கிக் கொள்கிறோமே –

—-

வள்ளல் மணி வண்ணன் கர சுதர்சத்தாலும் குழல் ஓசையாலும் வளர்ந்த வள்ளல் பெரும் பசுக்கள்
மாடு செல்வம் -பசு மாடு பெரும் செல்வம் –வீட்டிலே பசு மாடு –
அந்த நாளும் வந்திடாதோ என்று அன்றோ நாம் ஆசைப்படுகிறோம்

ஆழி -சுழல் -கடல் -சக்கரத்தாழ்வார் -கம்பீரமாக கட்டளை விடுகிறாள் பர்ஜன்ய தேவதைக்கு -வளையல் தேர்ச் சக்கரம் –
முதல்வன் போல் ஆக முடியாதே -முதல்வன் உருவம் போல் ஆவதற்கு கொஞ்சம் ப்ரஸக்தி உண்டே –
உலக நிகழ்வு எல்லாம் அவனே -நிற்கின்றது எல்லாம் அவனே என்று காணும் சம்ப்ரதாயம்
நாங்கள் ப்ரீதி காரித கைங்கர்யம் மகிழ்ந்து உகந்து நீராடுவதைப் பார்த்து நீ உகக்க வேண்டுமே

மார்க்க ஸீர்ஷம்-தலையான மார்க்கம் -ஆச்சார்ய அபிமானம் -நீராட -ஸமாஸ்ரயணீயம் தொடங்கி –
தேஜஸ்ஸூ மூலம் கடாக்ஷம் –முன்னோர் மொழிந்த -சங்கு ஒலி -சர மழை போல் உபதேசங்கள்

கம்ப ராமாணத்தில் விபீஷணன் பற்றி அனுமன் ராமனுக்கு யுத்த காண்டத்தில் எடுத்துச் சொல்கையில்
த்ரிஜடையை விபீஷணன் மகள் என்கிறார்
கம்ப ராமாயணம் யுத்த காண்டம் விபீடணன் அடைக்கல படலம் 101ஆவது பாடல்.

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்–2-7-கீதா ஸ்லோகம் சொல்லி ஸமாச்ரயணம் செய்ய பிரார்த்திக்க வேண்டும் –

கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன்
யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது
தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
அஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்,
யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக.
நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

இத்தை தமிழில் ஆண்டாள் இப்பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று நம்மாழ்வார் போலக்
கண்ணனுடைய சிந்தனையுள்ள ஆயர் குலச் சிறுமிகள், ’ஆழிமழைக் கண்ணா’ என்று அழைத்து,
மழை சம்பந்தமான இடி, மின்னல், மழை என்று எல்லாம் பெருமாளுடன் சம்பந்தப்படுத்தி உவமைகளாக பாடினால்
வருண தேவன் மழையைக் கொடுக்காமல் என்ன செய்வான் ?
வருணனின் உள்ளே அந்தரியாமியாகக் கண்ணன் தானே ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்கிறான் ?

ஆண்டாள் தனது திரு அவதார ரஹஸ்யத்தை தானே அருளிச் செய்யும் பாசுரம் மாயனை –
துருவன் தவம் புரிந்த இடமும் வடமதுரையே
வராஹ நாயனார் உபதேசப்படியே சூடிக் கொடுத்த நாச்சியாராகவும்
பாடி அருளிய நாச்சியாராகவும் பால்யத்திலே அனுஷ்ட்டித்தாள் அன்றோ

துரியோதனன் -நாராயணனால் கொல்லக் கூடாது வரம் சிவன் இடம் பெற்று-வஜ்ர உடம்பு –
கதா வல்லமை -ரிஷி சாபம் தொடையால் கதை அடிபட்டு முடிவாய் -பீமனால் -சண்டை -கதை தானே விழுந்து முடிந்தால்

வட -ஆல மரம் போல் நிலை பெற்றவன் -ஆலின் நிலையாய்
தம் அத்புதம் பாலகம் அம்புஜ ஈக்ஷணம் சதுர் புஜம் சங்க கதா யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷணம் கால ஸோபி கௌஸ்துபம் பீதாம்பரம் சந்த்ர பயோத ஸுபாக்யம்

தம் அத்புதம் பாலகம் -பாலன் இல்லாமல் பாலகம் -க -பிரம -குழந்தை ப்ரம்மாவுடன் -உந்தித் தாமரையில் இருப்பதையும் காட்டினான்
பேரனையும் காட்டிய மிடுக்கு -ஸ்ரீ வத்ஸ லக்ஷணம் -பிராட்டியையும் காட்டினான் –

யமுனைத் துறைவன் -கிடந்த கோலம் பழகி-கோபிகளை மயக்கி -புஜங்கன் ஆன பின்பு
அரங்கனாக உலகோரை மயக்கி -மஹா புஜங்கன் ஆனான் -தேசிகன் -யாதவாத்புதம்
உரவிடை ஆப்புண்டு உரலினோடு இருந்து ஏங்கிய எளிவே-அவனுக்கு முன்பு இவளும் தானே பக்த பாராதீனை
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் -இதுக்காக வர வர படிப்படியாக முன்னேறுவோம் –

தீயினில் தூசாக செப்ப வேண்டாம் –செப்பு -தன்னடையே போகும் -சுவைக்காக செய்ய வேண்டும் –

நாராயணனே – பையத் துயின்ற பரமன் அடி -உலகு அளந்தான் பேர் பாடி -அதுவும் மகிழ்ந்து உகந்து-
செப்ப வேண்டிவற்றை காட்டி அருளுகிறார் இந்த ஐந்து பாசுரங்களாலே

——–

மாயனை –எல்லாம் வகுத்த இடமான ஆச்சார்யர் -பிறவிப்பிணி போக்கும் மிடுக்கு –
தீர்த்தர்-பூஜையால் பகவான் -தீர்த்தங்களில் நீராட – தர்சன மாத்திரத்தாலே -கடாக்ஷத்தாலே இவர் –
ஆர்யர் குலம் -74 ஸிம்ஹாஸனாதிபதிகளில் -அறியாமை போக்கும் விளக்கு – -திருமந்திரம் விளக்கம் –
தாம் ஓதும் அதரம் -ஆச்சார்யர்

ஹரி -அபஹரித்த-ஹரி பரியாக வந்தானே – கஜேந்திர மோக்ஷ அனுசந்தானம் –
பரத்வாதி நிலைகள் -அனுசந்தானம் -காலையில் எழுந்து இருக்கும் பொழுதே பண்ண வேண்டுமே
ஷீரா சாகர தரங்க -முகுந்த மாலை ஸ்லோகம் சொல்லி உறங்க வேண்டும் -அவரையே நினைத்து எழ வேண்டும்

க்ராஹ க்ரஸ்தே த்விபேந்த்ரே ருததி ஸரபஸம் தார்க்ஷ்யம் ஆருஹ்ய தாவன்
வ்யாகூர்ணன் மால்யபூஷா வஸன பரிகரோ மேக கம்பீர கோஷ:
ஆபிப்ராணோ ரதாங்கம் சரம் அஸிம் அபயம் சங்க சாபௌ ஸ கேடௌ
ஹஸ்தை: கௌமோதகீம் அப்யவது ஹரிரஸௌ அங்ஹஸாம் ஸங்ஹதேர்ந:– நடாதூர் அம்மாள் -கஜேந்திர மோக்ஷ அனுசந்தானம் –

ஜயாத்யாயாம் கீதாம் விஜய ஸுஹ்ருதே யோ புவி ஜகௌ
ஜயம் குர்வன் வ்யாஸஸ் ஸ்வயமபி யஜன் ஸ்வம் ச பஹுதா
ஜகத் த்ராணம் குர்வன் அபி கில கஜத்ராணம் அபி ய:
ஜகந்நாத ஸ்வாமீ ஜநயது ஜயம் நஸ்ஸ ஹி ஸதா-பத்து ஜய உள்ள ஸ்லோகம் –
வெற்றி -18-விஜயனுக்கு -மஹா பாரதம் – ஜகம் மறந்து கஜம் ரக்ஷணம்
இத்தைச் செல்பவருக்கு கஜேந்திர வரதன் ஜெயம் தருவான்

ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிய ‘ஸ்ரீ வைஷ்ணவ தினசரி’யில் முதல் பாசுரம்

வரியிருள் அழி வழி மனம் வரும் உணர்வொடு
கரி கிரி மருவிய கரியபன் அடியிணை
பரிவோடு பரவும் நல் அடியவர் பழ வுரை
யரி யரி யரி யரி யரி யரி யரியே

பெருமாளின் திருவடிகளை அன்புடன் (மெள்ள எழுந்து) பணியும் பாகவதர்கள் (உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்)
அதிகாலை நித்திரை நீங்கிய பின் மனத்தெளிவு பெற்று வெகு காலமாய் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்று
ஏழுமுறை அனுஸந்திப்பர்( அரி என்ற பேரரவம்). இது தொன்று தொட்டு வந்த முறையாகும்!.

உண்டான் -பாலையும் உயிரையும் அவளது அடுத்த பிறவியையும் மூன்றையுமே உண்டான்
அரவம் கேள் -அல்ல காண் –
ராமானுஜன் லஷ்மண பூர்வஜன் போல் இங்கும் புள்ளரையன் கோயில் –
எழுந்திராய் -எழுந்தால் உளளாவாய் –
கோயில் ஸ்ரீ ரெங்க நாயகித்தாயார் -உணர்த்தப்படுகிறாள்

—-

ஆனைச்சாத்தன் என்பது பறவை இனங்களில் ஒன்று. இந்தப் பறவைகள் விடியலில் பேசிக்கொண்டது பற்றி
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்புலவர் குறிப்பிடுகிறார்.
இதனை வலியன்-குருவி எனப் பெரும்பாலோர் கூறுகின்றனர்.
வலியன் குருவிக்குப் பரத்வாஜப் பறவை என்னும் பெயரும் உண்டு என்பர்.
முனிவர் பரத்வாஜர் எண்ணம் பரத்திலே வாழ்ந்து கொண்டிருந்தது.
அதனால் அவருக்கு அப் பெயர் அமைந்தது. இந்த முனிவர் இந்தப் பறவை உருவில் இருந்தவராம்.

இது செம்போத்துப் பறவை என்பாரும் உளர். செம்போத்து என்பது காக்கையை விடச் சற்றே பெரிதாக இருக்கும்.
வால்-தோகை அகன்று பலவாக நீளமாக இருக்கும். இது விருந்து வரக் கரையும் காக்கை போலப் பேசும் என்பதை
நாட்டுப்புறப் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர்.
ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.
“ஆனைச் சாத்தன்” என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி,
தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

“கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு” என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே,
(அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.

செம்போத்து செம்போத்து யாரு வாரா செம்பாத்து
மாமனார் வாரார் செம்மோத்து
மாமனார்க்கு என்ன சாதம் கறி வரகுக் கஞ்சி குடிச்சுக்கிட்டு
மாட்டுத் தொழுவம் காத்துக்கிட்டு, வந்திருங்க மாமனாரே
செம்போத்து செம்போத்து யாரு வாரா செம்பாத்து
அப்பா வாரார் செம்மோத்து
அப்பாவுக்கு என்ன சாதம் கறி குத்துப் பருப்பிட்டு,
குழிநிறைய நெய் ஊற்றி, தின்னுங்க அப்பா
தின்னுப்புடேன் மகளே
பட்டு மெத்தை மேலே படுத்துக்குங்க அப்பா.

ஓசை -தயிர் அரவம் -தனிப்பதம் -தாம்பு கயிறு பார்த்ததும் அரவிந்த லோசனா என்று நாம சங்கீர்த்தனம் பண்ண
மூன்று லோகங்களுக்கும் மங்களம் -இதுவே அரவம் -நான்கு ஒலி கூட்டணி இப்பாசுரத்தில்
பாற் கடல் -மூன்று ஒலி தான் –
ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி — அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி — கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி,
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.

நாசக -நாயக -எதுகைக்கு வராமல் மங்கள சொல்
முதல் பாசுரத்தில் தாங்குபவன் பஹு வரீஹீ சமாகம் -ஆறாம் வேற்றுமை தொகையில் –
இதில் அன்மொழித் தொகை-அந்தர் -உள்ளே – நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன் –
ஞானிகளுக்கு எல்லா இடங்களிலும் -ரிஷிகளுக்கு ஹ்ருதயத்தில் –வைதிகர்களுக்கு அக்னியில் –
முட்டாள்களுக்கு அர்ச்சை–அப்ரதிப்புத்தா நாம் ப்ரதிமா -நீர் பள்ளத்தில் பாயாதோ –
முட்டாளுக்கு கூட என்றால் அனைவருக்கும் அர்ச்சாவதார பெருமை சொல்ல வந்த ஸ்லோகம் –

திருச்சானூர் பத்மாவதித்தாயார் -கிளி ஸூக ப்ரஹ்மம் -தவம் புரிந்த ஸ்தலம் -இதில் உணர்த்தப்படுகிறாள்
பேய்ப்பெண் -பெரிய -ஆகாச ராஜன் புத்ரி -காசு த்வயம் -பிறப்பு -திருமந்திரம் -தயிரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு உபதேசம் -அர்ச்சாவதார கந்தம் -மூர்த்தி திருமலை
எங்கும் கலந்து பேசின பேய் ஆழ்வார் சிஷ்யர் திருமழிசைப்பிரான் -என்றும் சொல்லலாம் படி
காசு பிறப்பு -வெண்பா -நேர் நேர் -கல கலப்ப -விருத்தம்
பிரான் இவர் ஆராவமுத ஆழ்வார் -ஆகவே நாயகப் பெண் பிள்ளை
நாரணன் நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை –
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே -தேஜஸ் மிக்கு -மக நக்ஷத்ரமும் தேஜஸ் மிக்கு –
உள் பொசிந்து காட்ட என்றதும் காட்டினான் அன்றோ

வந்தவர் – அவர் வந்து -எதிர் கொள்கிறான் -இருந்து எழுந்திராய் -நிதானமாக-
ஆளவந்தார் திரு முதுகு அழகையே தியானித்து தாம் நீராடுவதாக திருக்கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வார் –
பறை கொண்டு பாடி -கைங்கர்யமாக திருநாம சங்கீர்த்தனம் –
பாடுவதே பறை புருஷார்த்தம் -ராம நாமம் பாடினால் புண்யம் வருமா என்றவருக்கு புண்யம் செய்தால் தான் நீ பாடுவாய் பதில்
ஆ ஆ -சந்தோஷத்தாலும் வருத்தத்தாலும் ஆராய்ந்து அருளுவான் -ஆ பசு பிராயராக இருக்கும் நம்மை மகிழ்ந்து அருள்வான்

பெரும் தேவித்தாயார் -கல்யாண கோடி விமானம் -பகலோன் பகல் விளக்கு ஆகும் படியான தேஜஸ் கொண்டு பேர் அருளாளன் –
போவான் போகின்ற ராமானுஜரை போகாமல் காத்து –

பொய்கை ஆழ்வார் இதில் -நா வாயில் உண்டே -13/14/15-வரிசையாக தேவாதி தேவனைப்பாடி
தமர் உகந்தது -ஆராய்ந்து அருளுவான் என்றார்

தூ மணி -பிரதி வசனம் இல்லை உண்மையாகவே உறங்குகிறாள்
கோபி பாவனை அனைத்து பாசுரங்களும் -இதில் -தானான தன்மையில் கோபி தேக சம்பந்த ஆசையை வெளியிடுகிறாள்
தம் வீட்டைத் தந்தவன் தந்தை -தாங்குபவள் தாய் –ஆள்பவன் அண்ணா –ஆக்குபவள் அக்கா —
தம் பின் பிறந்தவன் தம்பி -தம் கை போல் உதவுபவள் தங்கை –தாத்தா பேரை உடையவன் பேரன்
மாமான் மகள் ஒருமையில் -மாமீர் -பன்மை -தேவிகள் சாரங்க பாணி ஸ்ரீ தேவிகள் பூ தேவிகள்
பணிப்பெண் போலும் மந்திரி போலும் மஹா லஷ்மி போலும் பொறுமையில் பூமி தேவி அன்பு காட்ட அன்னை
தனிமையில் மனைவி -ஆறு பேருக்கு சமம்

கம்பர் -திருவடி மந்த்ரம் போட்டு ராக்ஷஸிகளைத் தூங்கப் பண்ணினார் -விரிசை வினை செய்தார் –
அசோகவனத்தில் சீதையை காணவந்த அனுமார் காவல் புரியும் அரக்கிகளைப் பார்க்கிறார்.
அவர்களை மந்திரத்தால் உறங்கச் செய்தார். இதை கம்பர்

காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார்’ என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார்

சீதைப் பிராட்டியைக் கண்ட அனுமார் தூங்காமல் விழித்துக்கொண்டு காவல் காத்துக்கொண்டிருந்த
அரக்கிகளை ஒரு மந்திரத்தால் (வினை செய்தான்) உயிரற்றவர் போல மயக்க அடையச் செய்தான்.

ஏமப் பட்டாள்-பெருந் துயில் மந்த்ரம் பட்டாள்
ஏமம் -இரவு –அதிரடியான இன்பம் -தியானத்தால் -பெரிய தூக்கம் -கலக்கம் -மயக்கம் -பைத்தியம் போல் -பல பொருள்கள்
இன்பம்; களிப்பு; மயக்-கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.
மஹா மாய -மாதவ -வைகுண்ட
விஷ்ணு சஹஸ்ர நாமம் capsule கங்கா மைந்தன் பீஷ்மர் கொடுத்த மந்த்ரம்

மேதாவி மகான் மகள் -ப்ரதா தேவி வஞ்சுள வல்லித் தாயார் -நம்பிக்கை நாச்சியார்-மார்பிலே கை வைத்து உறங்கலாமே –
நம்பியை கை யிலே கொண்டு – -சுகந்த கிரி நறையூர் -சுற்றும் விளக்குகள் கடை உண்டே -தோழி பொன்னி சந்நிதியும் உண்டே மாமீர் –
பெண் அரசு நாடு -ஏக தாயார் -ஆண்டாளும் தாயாரே -ஆவணி விசாகம் திருக் கல்யாணம் –
பூதத்தாழ்வார் -என்றும் சொல்லலாம் படி -விளக்கு எரிய -வாசனை மிக்க அன்பே -ஞானச் சுடர் விளக்கு -பெரும் தமிழன் தானே –
பர ஞான தசையே ஊமை செவிடு அனந்தல்
17 பாசுரங்கள் நாம சங்கீர்த்தனம்
பேர் ஓதி மாதவன் என்பதே சுருக்கு

முடி துழாய் -அசாதாரணம் அவனுக்கு
வாசல் திறவாதார் மாற்றமும் தாராரோ -பன்மையில் -பொதுவாக சொன்னபடி
அம்மனாய் -சொல்வதால் பேசவில்லை -மா மாயன் மாதவன் வைகுந்தன் நாமங்கள் கேட்டு மயங்கி
அடியார் பேச பேசக்கூடாது
நாராயணன் ஒருக்கலாம் என்று பேச இல்லை என்கிறாள் –
நாராயணன்–ஆதாரம் முதலில் -உள்ளே உறைபவன் அடுத்து –
இதில் -அழியாத கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் -அங்கு காட்ட முடியாதவை எல்லாம் இங்கு தானே –
நம்மால் போற்ற -நம் மால் -நமக்கும் பூவின் மிசை மங்கைக்கும் இன்பன்
குழல் இனிது யாழ் இனிது தன் மக்கள் மழலைச் சொல் கேளாதவன் -இளைய புன் கவிதை யே லும் எம்பிராற்கு இனியவாறு
தனது புல்லாங்குழலை விடவும் நாரதராது வீணையை விடவும் நமது புகழ்ச்சியை இனியது என்னும் நம் மால் –
நாம் கூடப் போற்றப் பறை தருவான்
புண்ணியனால் வீழ்த்தப்பட்ட கும்பகர்ணன் இல்லை -வீட்டில் பூச்சிகள் விழுந்து தானே –
அவதாரம் அடியார் -ஸாதூனாம் பரி த்ராணம் ஒன்றே நோக்கு -தசரதன் பெற்ற மரகத மணித்தடத்தில் இவர்களே வீழ்ந்தார்கள் –
யுக்த லக்ஷண தர்ம சீலர் தாரக போஷக போக்ய –க்ஷண மாத்ரம் அஸஹிஷ்ணுத்வம் கல்ப ஸஹஸ்ரம் —
சாதுக்களுக்கு லக்ஷணம் ராமானுஜர் -அதி விலக்ஷணம்

ஒப்பிலி அப்பன் பூமி பிராட்டித் தாயார் -துளசி வனம் -திரு விண்ணகரம் -பிறந்த புகுந்த இடம் ஒன்றே இவளுக்கு –
கோயில் வாசலே வைகுண்ட வாசல் -அமுதனுக்கும் அப்படியே – அம்மனாய் இவளே பிரதானம் இங்கு
பொன்னப்பன் –தந்தனன் தன் தாள் நிழலே –

பேயாழ்வார் -விளக்கு ஏற்றாமல் கண்டார் -அம்மனாய் -தலைவி -வேங்கடம் பாடும் -14 பாசுரங்கள் -தண் துழாய்
அகஸ்தியர் அ காரமும் ராகரமும்-முதல் முடிவு எழுத்து -தமிழ் தலைவன் பேயாழ்வார்
அரும் கலம் தாயார் அருளுக்குப் பாத்திரம் -திருவில் தொடங்கி முடித்து

வைரமுடி உத்சவம் லௌகிக உத்சவம் உடையவர் திரு நக்ஷத்ர உத்சவம் வைதிக உத்சவம்
திருநக்ஷத்ர உத்சவம் என்றாலே ஸ்வாமி திரு நக்ஷத்ரம் தான்
அடுத்த நாள் முதலியாண்டான் திரு நக்ஷத்ர உத்சவம் பரம வைதிக உத்சவம் என்பர்
யாதவாத்ரி கிரி சமம் எங்கும் இல்லை பத பட்டணம் –
எல்லா ஆச்சார்யர் திரு நக்ஷத்ரங்களிலும் முதலியாண்டான் சாதிப்பதே பெரும் சம்மாநம் –
மாமன் மகள் ஏற்றம்

பெரும் துயில் -பெருமை மிக்க துயில் -குண அனுசந்தானம் -பூமா -காவலில் புலனை வைத்து –

ஐம் புலன்களையும் தோழிகளாக எழுப்பி –11-15 வரை –
கண்ணுக்கு உறக்கம் -காதுக்கு அவனை கேட்பதே -மூக்கு -திருத் துழாய் வாசனை நுகர்வதே –
நாமங்களைப் பாட -சரீரம் கைங்கர்யத்துக்காகவே –
துல்ய சீல வயோ வ்ருத்த -கண்ணனே நோற்று அடைய வேண்டிய பெருமை -நம்மாழ்வார் என்று சொல்லலாம் படி
பொற் கொடி ருக்மிணி பிராட்டி போல் இவளும்
மூப்பு உன்னை சிந்திப்பாருக்கு இல்லை திரு மாலே -கற்றுக்கறவை
பவாமி திருஷ்ட்வா புனர் யுவா வா போகு இன்னும் ஒரு கால் வந்து போகு
கறவைக் கணங்கள் எருமை பசு ஆடு முத்திறக் கணங்கள்
புற்றில் அரவு போல் புனத்தில் மயில் போல் பாகவதர் கூட்டமே உனக்கு இயற்கையான இடம்
சுற்றம் தோழி உறவும் நட்பும் ஒன்றாகவே பேணும்
வாசல் படி வாழ்க்கைப்படி ரேழி நடைப்பாதை கற்றபின் நிற்க கூடம் –
அடியார்கள் உடன் கூடி சமையல் பக்குவம் -பூஜை ஆராதனம் செய்து முற்றம் வாழ்க்கை முற்றும்

ஹேமாப்ஜ நாயகி–செங்கமலத்தாயார் -மன்னார்குடி -கோவலன் -ராஜ கோபாலன் –

வேதம் காமதேனு கற்றுக் கறவை -வேதம் தமிழ் செய்த மாறன் -மாறாமல் இளமை புராதனம்
கோவலர் வாக்கில் வல்லவர் கோதா -வாக்கு அருளியவள்

வான மா மலையே
அடியேன்
தொழ வந்து அருளே
அவனே அடியேன் என்று -பக்த வத்சலன் -அங்கு தான் நாம் தொழ வேண்டும் -இங்கு இவன் தொழுவானே
திருப்புளி மரத்தில் அனைத்து திவ்ய தேச எம்பெருமான்களும் சேவை சாதிப்பார்கள்

ராமன் -ரமயதீ -மனத்துக்கு இனியான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -நற் செல்வன்
மூன்று நாள்கள் தான் பிரிந்து இருந்தான் -ஆயில்யம் புனர்பூசம்-அங்கு இரண்டு நாள்கள் –
ஒரு நாள் முன்பு தன்னுடைச் சோதி –
பொறி முகந்து அட்ட–மைத்துனன் -இல்லா குறை சீதா கல்யாணம்
ருக்மிணி கல்யாணத்திலும் -ஐந்து சகோதரர்கள் இருந்தாலும் -ருக்மி ருக்ம ரதன் ருக்ம பாஹு ருக்ம கேசன் ருக்ம மாலி
அது போல் குறை ஒன்றும் இல்லாமல் ஆக்கவே இப்பாசுரம்
பக்தி ஸ்ரத்தா -பெண் பாலில் சமஸ்க்ருதம் -கொடுப்பவள் ஸ்ரீ தானே –
திரு மணத்தூணை பற்றி நின்றால் போல் -ஆமோத ஸ்தம்பம் -ஸர்வ கந்த வஸ்து ஆகையால்
அவனது பரிமளமே வடிவு எடுத்தன போல் இங்கும் -வாசல் கடைத் தண்டைப்பிடித்து நிற்கிறார்கள் –
சாரங்க பாணி -சரம் பாணி இல்லை -பாபங்களை நோக்கி நமது பாபங்களில் மேல் விட்டு வில்லுடன் சேவை
செற்ற -அவமானம் படுத்தி இன்று போய் நாளை வா -இரண்டாம் நாள் செய்தது –
நமஸ்தே ருத்ர நமஸ்தே தன்வீ -வேதம் -அழ வைப்பதால் ராமனே ருத்ரன் -அம்பாலும் அழகாலும் அழ வைப்பானே
தக்ஷிண அயோத்தியை ஸ்ரீ ராம ஸ்வாமி திருக் கோயில் சீதா பிராட்டி -த்யான ஸ்லோகம் படியே இங்கு சேவை வைதேஹி ஸஹிதம்
அருள் பால் வெள்ளம் சுரக்கும் -சரணாகதி சொல்ல தெரியாத ராக்ஷஸிகள் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
நற்செல்வன் லவ குசர்கள் -தங்காய் தாங்கும் தாய்
திருவடி கையில் வீணையுடன் பாட எழுந்து இருக்க வேண்டாமா -பிரகாரம் அனைத்து இல்லாரும் அறியும் படி ராமாயணம் உண்டு
குலசேகரப்பெருமாள்
ராமாயணம் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் -நம் ஸ்வாமி ராமானுஜர் இருவரையும் உணர்த்தும் பாசுரம் –
1 3 16 18 23 24 27 28 29 30–பத்து -பாசுரங்கள் எல்லா இடங்களிலும் இரண்டு தடவை சேவிப்பார்கள் –
ஸ்ரீ பெரும்பூதிரில் இந்த பாசுரமும் இரண்டு தடவை சேவிப்பார்கள் –

புள்ளின் வாய் கீண்டான் -இன் புள் வாய் ஜடாயு-பெரிய உடையார் அன்றோ இவர் – கீண்டிய பொல்லா அரக்கன் –
ஆயுஷ்மான் சீதை யுடன் எனது உயிரையும் கொண்டு போனான் -இந்தம் முஹூர்த்தம் -காணாமல் போன பொருள் அப்படியே திரும்பி கிடைக்கும் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வானை புகழ்ந்து ஸ்ரீ கோமள வல்லித் தாயார் உணர்த்தப் படுகிறாள்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

நற் செல்வன் தம் கை மதுரகவி ஆழ்வார் -ஏடு படுத்தி -மீண்டும் கிடைக்க கண்ணி நுண் சிறுத்தாம்பு அருளிச் செய்தார் அன்றோ –
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வார் தம் கையே என்று சொல்லும்படி -அஹிர்புத்ய ஸம்ஹிதை -கருதும் இடம் பொரும் சக்கரம் அன்றோ –

நற் செல்வன் என்று ராமனையே சொல்லி தம் கையான லஷ்மணனையும் சொன்னவாறும் கொள்ளலாம்

கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக்கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை, அடியார்க்கு
ஆ ஆ! என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை, யான் கண்டு கொண்டு திளைத்தேனே.

பிரிந்து ஒன்று நோக்காது, தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
ஆ ஆ! என இரங்கார், அந்தோ! வலிதே கொல்*
மா வாய் பிளந்தார் மனம்?

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு
ச ஏவா ஸர்வ லோகாநாம் உத்தார்த்தன ஸம்சய

ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்பதற்கு எடுத்துக்காட்டு ’நாயகனாய்’ என்று
வார்த்தையை பொருத்தமாக அமைத்த விதம்.

– நாயகனான நந்தகோபனுடைய திருமாளிகையை காப்பவனே
– நந்தகோபனுடைய திருமாளிகைக்கு காவலாய் இருக்கும் நாயகனே
– நந்தகோபனுடைய திருமாளிகையின் வாசலைக் காக்கும் நாயகனே!”

ஆண்டாள் ”நீலமேனியில் பீதா’அம்பரம்’ ஒளிவீச, கார்க் கடல் நீர்(தண்ணீர்) வண்ணன்,
சோற்றினை வாங்கி நெய்யிடை நல்லதோர் சோறாக உண்டு மூன்று அடி நிலத்தை தானம் கேட்ட
கரு மலை குட்டனை(அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த) எங்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்!” என்றாள்.

‘உ’ என்பது திருமகளான பிராட்டியைக் குறிக்கும். திருப்பாவையில் திருவிற்குப் பஞ்சம் இல்லை.
திருக்கோயில் திருவே, திருத்தக்கச் செல்வமும், திங்கள் திருமுகத்து, செங்கண் திருமுகத்து,
செல்வத் திருமாலால் என்று எங்கும் திருவருள் பெற்று இன்பம் பெறலாம்.
இந்தப் பாசுரம் திருவிற்கு ஆண்டாள் சிறப்பாகச் செய்த மங்ளாசனம் இந்தப் பாசுர ஆரம்பமும் ‘உ’ !

திருப்பாவையில் ‘அணிவிளக்கு’, ’தூமணி மாடத்து விளக்கு’, ‘குல விளக்கு’, ‘கோல விளக்கே’ மற்றும் ’குத்து விளக்கு’
மற்ற ஆழ்வார்கள் ‘ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு’ ‘ஞான வெள்ள சுடர் விளக்காய்’
’மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை’ ‘நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே’

கிடந்த திருக்கோலம் -படுத்த இல்லையே -சம்சாரம் கிழங்கு எடுத்து அல்லது பேரேன்-என்று விரதம் கொண்டு தவம் கிடந்த
உறங்கும் பேடையுடன் சேர்ந்து உறங்கும் – -யத்ர –தனுர் தர பார்த்த -சரண் அடைந்த பார்த்தன் வியாக்யானம் –
கீழே முதலில் காண்டீபம் கீழே விழுந்ததே -சரண் அடைந்து மனா உறுதி பெற்றான்
அழகிய சிங்கர் -ஒன்பது செயல்கள் சிங்கத்துக்கு இப்பாட்டில் -நவ நரஸிம்ஹர் –
ஹிம்ஸன் -மாற்றி -ஸிம்ஹம் -நா நா வித நரகம் புகுந்து அனுபவிக்க வேண்டியதை ஒரு நொடியில் இங்கேயே அனுபவிப்பித்து -ஹிதம் –
இங்கனே -மதுரை பிராந்திய வார்த்தை
பிராட்டி இல்லாமல் சீறிய சிங்காசனம் ஆகும் நப்பின்னை உடன் இருந்தால் தானே சீரிய சிங்காசனம் ஆகும் –
யாம் -வந்த -கார்யம் ஆராய்ந்து மூன்றையும் -நீயே ஆராய்ந்து அனுக்ரஹம் செய்ய வேண்டும்
ராமானுஜர் -முக்தி மழை பொழியும் முகில் வண்ணர் -அருள் மழையில் -நனைந்து -பூண்ட அன்பாளன் –
ஒருவன் ஒருவன் முதலாளி –தொழிலாளி –உபநிஷத் குஹ்ய -ஸரீராத்மா பாவம் -பூவைப்பூ அண்ணா அன்றோ
யாம் வந்த கார்யம் -ஆழ்வார்கள் அவதரித்த கார்யம் -ஆராய்ந்து அருள்

‘வந்து திறவாய்’ என்று கூறும் போது அவள் நடை அழகைக் கண்டார்கள்.
’கையால் சீரார் வளை ஒலிப்ப’ அதைக் கேட்டார்கள்
’உன் மைத்துனன் பேர்பாட’ அதைச் சுவைத்தார்கள்.
’கந்தம் கமழும் குழலி’ அதை முகர்ந்தும் பார்த்தார்கள்.
‘செந்தாமரைக் கையால்’ கையை பிடித்த போது இந்த ஐந்து புலன்களின் பயனை அறிந்து,
உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றப்பட்டு ‘குத்து விளக்கு எரிய ‘
’கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!’ என்ற
பெருமாளும், பிராட்டியுடன் கூடிய சேர்த்தி சேவை கிடைத்தது!

கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயண புரம் என்று நான்கு கோயில்கள் பிரசித்தம்.
அது போல ஆண்டாள் திருப்பாவையில் நான்கு கோயில்கள் இருக்கிறது –
புள்ளரையன் கோயில், தங்கள் திருக்கோயில், நந்தகோபன் உடைய கோயில், உன் கோயில்.
அது மட்டும் அல்லாது நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோலங்களையும் திருப்பாவையில் நாம் அனுபவிக்கலாம்!
– திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் உலகினில் தோற்றமாய் நின்ற திருக்கோலம்
– நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த திருக்கோலம்.
– மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு இங்ஙனே போந்தருளிய போது நடந்த திருக்கோலம்.
– கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்த திருக்கோலத்தில் எங்களுக்கு ஆராய்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறாள்.

திருப்பாவையில் ஆண்டாளும் ’கோயில் காப்பானே! வாசல் காப்பானே’ என்று அவர்கள் செய்யும்
கைங்கரியப் பெயர்களைக் கொண்டு தான் அழைக்கிறாள்.
தன்னையும் ஒரு கைங்கரியம் செய்பவளாகவே எல்லோரும் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
தெருவில் நடந்து சென்றால் அதோ ‘கேசவ நம்பியை கால் பிடிக்கிற பெண்’ போகிறாள் என்று இவளை அழைக்க வேண்டுமாம்.
இந்த ‘திருத்தக்க செல்வம் கிடைக்க ’அருத்தித்து வந்தோம்’ என்கிறாள்

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் படித்தால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”

வாவியில் செங்கழு நீர்
செம்மையான வாடாத -தண்டோடு
வாய் நெகிழ்ந்து
பங்கயக் கண்ணன்
கப்யாஸம் ஸ்ருதி இது கொண்டே ராமானுஜர் -தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்

நாங்கள் தோட்டத்து வாவி என்னாமல் உங்கள் -பிரித்து பேசுகிறாள்

திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் -பங்கயச்செல்வி -திரு அரங்கத்தின் புழக்கடை
திருப்பாண் ஆழ்வார்

சிறை இறைந்தவள் ஏற்றம் அறிந்து சிறையில் பிறந்தான்
தூது போனவன் ஏற்றம் அறிந்து தூது போனாலும் கார்ய கரம் ஆகவில்லையே
ராம கிருஷ்ண அவதார ப்ராவண்யம் உள்ளார் வார்த்தைகளே
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை
காயத்ரி கீதா கங்கா கோவிந்தா–சதுர் பதங்களாலும் – கோதா-ஓன்றாலே –புனர் ஜென்மம் வாராதே
துருவனைப் போலே ஒருவன் வருவானோ என்றே திரு பாஞ்ச ஜன்யம் திருக்கையில் கொண்டு இன்றும் பார்த்த சாரதி சேவை

ஸூக ப்ரஹ்மம் கிளி -இவள் இளம் கிளி –
செய்யாத பழி சுமந்த பாரம் -பரதன் -நானே தான் ஆயிடுக –
கூரத்தாழ்வான் வைஷ்ணவர் திரு மண் கோணல் என்று எண்ணி இருந்து இருப்பேன் -அதனாலே கண்ணை இழந்தேன் –
நான் அஹங்காரம் போக்கும் -வல்லானை கொன்றான் –
பிரதிபந்தங்களைப் போக்க -மாற்றாரை மாற்று அழிக்க -வல்லவன் –
மாயன் -நாம் இட்ட வழக்காவான்
பகவத் பிரபாவம் சொல்பவரை கொண்டாட வேண்டுமே –
திருக்கோட்டியூர் செல்வ நம்பி மனைவி விதை நெல் வைகுண்டத்தில் விதைத்த வ்ருத்தாந்தம் –
இவரையே பெரியாழ்வார் கொண்டாடுகிறார் –

ஆதி வராஹ க்ஷேத்ரம் -திருக்குடந்தை -அம்புஜவல்லித்தாயார் -இடந்து எடுத்த -தூயோமாய் வந்து கிளி போல் அருளி
நானே தான் ஆயிடுக ஆண்டாள் தானே இவள்
தோள் மேல் ஏறி அமர்ந்து உனக்கு ஏன் வேறுடையை

மங்கையர் தோள் கை விடாமல் காமத்தால் ஆழ்வார் ஆனார் கலியன்
நறையூரில் கண்டேனே -யானை -பாசுரம் தொடும்
வேதாந்த தேசிகனை -கிளி என்றுமாம்

நம்பெருமாளை தஞ்சம் என்று இருப்பாரே தஞ்சம் என்று இரும் என்று பட்டர் நஞ்சீயர் இடம் உபதேசம்
காமதேனுவை முன்னிட்டே இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம்
நந்தகோபன் கண்ணனுக்கே நாயகன் -யத்ர லோகேஸ்வர கிருஷ்ணா -வசுதேவ புத்திரர் கீதா பாஷ்யம் –
துயில் எழுப்ப பாட மாட்டோம் எழப் பாடுவோம் -அவன் எப்பொழுது எழுகிறானோ அப்பொழுதே பாடுவோம் –
பாடுவதே ப்ரயோஜனமாகக் கொண்ட தூய்மை –
பாதுகா தேவை தூங்கும் பொழுதும் பிரியாமல் -பிரதம கடாக்ஷம் பெரும் ஆசையினால் –
ராம கமல பத்ர அஷ மநோ ஹர -அருள் பெற்று கண் அழகைப் பேசி தான் ராமதூதன் என்று காட்டி -சொல்லின் செல்வன்
கோயில் -கோ ஸ்வாமி இல் -அஷ்டாக்ஷரம் காப்பான்
வாசல் -ஸ்ரீ வைகுண்டம் அடைவிக்கும் த்வயம் காப்பான்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்த சரம ஸ்லோகம்

இல்லாதது தானே வர வேண்டும்
தேவர் -தா -தாம்யத-புலன்களை அடக்க –
அசுரர் -தா -தயத்வம் -கருணை காட்ட –
மனுஷ்யர் -தா -தத்த -தானம் கொடுக்க வேண்டும்
ததத -இடி முழக்கம் இதுவே
ரகு மஹாராஜர் தானம் -பலமாக ராகவன்
யது மஹாராஜர் தானம் -வாங்கின முதல் ஆள் தானே தானம் கொடுப்பான் -யாதவனாக கண்ணன்

ஸ்ரத்தையா தேயம் அஸ்ரத்தையா தேயம் – தானம் வாங்குபவர் மேல் ஈடுபாடு கொண்டும்
பொருளில் ஈடுபாடு இல்லாமலும் தானம் செய்ய வேண்டும் –
யாரையும் சம்ஹாரம் பண்ணாத அவதாரம் உலகு அளந்த உத்தமன் -ஆகவே பத்து பாசுரங்களுக்கு ஒரு தடவை
இந்திரனுக்கும் மஹாபலிக்கும் சமோஹம் சர்வ பூதாநாம் -நித்ய அனுக்ரஹம் -நிக்ரஹம் அஞ்ஞாதன் –
உம்பியும் நீயும் உம்பியும் நீயும் -நரசிம்மம் போல் –
பாயை உருகி எழுப்புகிறாள் -கௌசல்யா ஸூப்ரஜா -லஷ்மணன் படுக்கையாக -விசுவாமித்திரர் கொடுத்த தர்ப்பை பாய் காணாமல்
ஒரு நாள் சேர்க்கை அனுபவித்து பாடினார்
நற் செல்வன் கீழ் -தூக்கத்தை விட்டானே
இங்கு செல்வா பலதேவா -தூங்கி இருக்கிறானே
கன்னிகை இல்லாத கல்யாணமா -ஆகவே இன்னும் எழுந்து இருக்க வில்லை

ஆச்சார்யன் -திரு மந்த்ரம் -பொருள் -சாரம் -நான்கையும் நந்தகோபன் -யசோதை -உம்பர் கோமான் -பலராமன்
அம்பரம் -வைகுண்டம் –தண்ணீர் சாமகானம் -திருவாய் மொழி -சோறு -கண்ணன் கல்யாண குணங்கள்

சக்ரவர்த்தி திருமகன் வான் இளவரசு வைகுந்தக்குத்தான்
`நந்த கோபன் குமரன்
யதிராஜ சம்பத் குமாரர்
ஆதி கேசவ பெருமாள் தாயாரைப்பார்த்து எழுந்து அருளி
தங்க மண்டபம் ராமானுஜர்
படிக்கட்டு கீழே ஆழ்வாராதிகள்
பூத புரீஸ்வரர் -திரு நாமம் கொடுத்து
தாயாரும் எதிராஜா நாத வல்லித்தாயார்
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய -உடையவர் ஸூசகம்
தேசிகேந்த்ரர் -திருவேங்கடமுடையான்

ஸ்ரீ ஸூ க்தம் -அர்த்தமே உந்து -ஸ்ரீ ஆறு அர்த்தங்களும் இதில் உண்டே -நாலாயிரத்திலும் ஒரே பாசுரம் பிராட்டிக்கு இதுக்கு –
குறுக்கத்திப்பூ மாதவிப் பந்தல் -ஆராவமுத ஆழ்வான் தல வருஷம்

கூவின கான் காதால் கேட்டு
திறவாய் -வாய் திற
கந்தம் கமழும் குழலி தூய்மைப்படுத்தி
பக்தி வளர்த்து -சீரார் வளை ஒலிப்ப
ஆச்ரயிக்க -எங்கும் கோழி அழைத்தன
ஆஸ்ரயிக்கிறாள் -நந்தகோபன் மருமகளே

ந பின்னை -பிரியாமல் -ஆவணி விசாகம் மட்டும் தனி புறப்பாடு சக்கரத்தாழ்வார் -சந்நிதி –
திருக்கல்யாணம் -நாச்சியார் -வஞ்சுள வல்லி தாயார்
கந்தம் ஸூ கந்தவனம் -நம்பி யையே கையில் பந்தார் விரலி
யானை வாகனம் அங்குசம் தாயார் இடம்-இவளே முன்
பின்னால் நம்பி
ஆச்சார்யர் பரம் -நப்பின்னை போல் புருஷகாரம் -பிராட்டி பரிகரம்
குழல் -ஞானம்
கைப்பாவை அவனுக்கு பந்தார் விரலி
ராமானுஜர் திருவடி பரமாகவும் இப்பாசுரம்
ராமனை விட்டுப்பிரியாமல் நப்பின்னை
கந்தம் -ஆலிங்கனம் பரிமளம் சஞ்சீவிமலையையே பந்தாக தூக்கி

வந்து திருவாய்
அஸ்து தே -புருஷகாரம்
பின்பு அதிகாரி க்ருத்யம் கார்யகாரம் -அவனைப்பார்த்து சரண் அடைந்தார் உடையவர் –
பிராட்டி பரிகரமாக -நின்று இவளைத் தோண்டச்சொல்லி
பின்பு இருவரும் மிதுன கைங்கர்யம் பிரார்த்தனை –

வாயைக் கொப்பளிக்க இடது பக்கம் தான் செய்ய வேண்டும்

கோ -ஞானம் மங்களம் பூமி நல் வார்த்தை -இவற்றைத் தந்து அருள்பவள்
குத்து விளக்கு -பதம் தோறும் சோக ரஸம்
கோட்டுக்கால் -பின்பே குவலயாபீடம் -இப்பொழுதே சங்கல்பித்தான்
நூற்றுவர் நூல் இழப்ப -திரௌபதிக்கு புடைவை சுரந்தது -பின்பே படைத்தாலும் முன்பே சங்கல்பித்து போல்
அம்மான் திருக்கோலம் -ஆராவமுத ஆழ்வார் கோமளவல்லித்தாயார் -மாற்று திருக்கோலம் குத்து விளக்கு அன்று
மலர் மார்பா -மலர்ந்த மலர்கின்ற மலரப்போகின்ற -ஏறு திரு உடையான் போல் -மாசூணா சுடர் உடம்பாய் மலராது குவியாது
வனம்-பக்தி வளர்க்கவே -கவனம் வால்மீகி -சோகவனம் ராமன் -அசோகவனம்
தாமரையாள் ஆகிலும் சிதைக்குரைக்குமேல் -என் அடியார் அது செய்வார் -என்பதே தத்வம் அன்று தகவு அன்று என்று சொல்லும்படி இருந்தாள்
ஆச்சார்ய பரம் -இப்பாசுரம் -அறியாமையே இருக்காதே குத்து விளக்கு போல் -அர்த்த பஞ்சகம் -திருமலை வாசம் -மலர்ந்த திரு உள்ளம் –
தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -கருணை
தத் தவம் அஸி -எங்கும் உள்ள ப்ரஹ்மமே உனக்குள்ளும் இருக்கிறான் –

தேவர் பாற்கடலில் இருந்து வந்த அமுதம் அறிவார் -அதற்கே அமுதம் வந்ததை ஆழ்வார்கள் அறிவார்கள் -ஆராவமுதம் அன்றோ
காஞ்சி தேவ பெருமாளே முன் வந்ததையே இங்கு முன் சென்று என்று காட்டி அருளுகிறாள்
ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணம் -பத்மாவதி பிராட்டியார் -நீராட்டி வைத்து அருளி –
ஆகவே வேங்கடவர்க்கே என்னை விதிக்கிற்றியே -தனியன் இதனாலே
நப்பின்னை இத்துடன் கோபிகளுடன் சேர்ந்து விட்டாள்
நப்பின்னை ததீய விஷய ருசி அறிந்து -பஞ்ச லக்ஷம் குடி பெண்களை வந்தவாறே இவனை விட்டு அங்கெ சேர்ந்தாள்
இதுவே ஆச்சார்ய பரம் -தேவதாந்த்ர பஜநம் தவிர்த்து -ராகம் -விராகம் -வைராக்யம் -இடை -த்வயம் – விசிறி -தாபத்ரயம் தீர்க்கும்

இரட்டைப் புறப்பாடு காஞ்சியில் – -வெள்ளிக்கிழமை தாயாரும் சேர்ந்து –
பஞ்ச பர்வ -திருவடி சந்நிதியில் கோஷ்ட்டி ஆரம்பம் -தளிகை அமுது செய்த பின்பே –விநியோகம் இல்லாமல் மற்ற நாள்களில்
வெள்ளிக்கிழமை மட்டும் தாயார் தோட்டம் சென்ற பின்பு தளிகை -அமுது செய்த பின்பு கோஷ்ட்டி விநியோகம் -செய்த பின்பே தொடக்கம்
பெரும் தேவி -இவளாலே பேர் அருளாளன் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் தாயார்கள் பேசிக்கொண்டது
மாமனாரும் கூட வீதிப் புறப்பாடு

லஷ்மணனைப் பார்த்து சொன்னதையும் பரதன் இடம் சொன்னதையும் தாமாகவே செய்தன பாதுகைகள் -இவையே உண்மையான தம்பிகள் இவையே –
அத்யந்த சேஷத்வ பாரதந்தர்யம் இவற்றுக்கே கிருபை பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் பிராட்டியைப் போலவே இவற்றுக்கும் -ஸ்ரீ பாதுகா தேவி அன்றோ
நித்ய அனுசந்தானம் பிராட்டி முன்பு ஸ்லோகங்கள் திரு நாராயண புரத்தில் உண்டே

பாற்கடலில் அநிருத்தன் சயனம் -இவரே அவதார கந்தம்
அண்டங்களுக்கு வெளியில் உள்ள ஆவரண ஜலத்தில் வ்யூஹ வாஸூ தேவன் சயனம்

கப்பம் தவிர்க்கும் கலியன் அன்றோ பரகாலன்

ஆர்ய புத்ர -மகனே -ஆர்ய தீர்க்காயுஸ்ஸூ உள்ளவான் -ஆர்ய -மகன் -விதேயமானவன்
கூப்பிட வேண்டிய முறை நப்பின்னை சொல்லிக் கொடுக்க இப்பாசுரம்
ஆற்றப் படைத்தான்
பசுக்கள் ஆற்றப் படைத்தான்
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
அறிவுறாய் -பஞ்ச லக்ஷம் பெண்களும் இங்கு உள்ளோம்
அனைவருமே இவர் மகனே -அசாதாரண -ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
16 தத்வங்கள் -பூமா வித்யை -சாந்தோக்யம் -ஸநத்குமார் நாரதருக்கு உபதேசம் – பேச்சு முதல் பரமாத்மா வரை
பஹு மா பூமா பெருமை -பெரியதாய் இருக்கும் தன்மை -ச ஏகதா பவதி-இத்யாதி பலம் பூமா வித்யை கேட்டவர்கள்
பிரார்த்திக்காமல் ஸ்வயமேவ ஆச்சார்யர் உபதேசம் –
மா முனிகளையே குறிக்கும் பாசுரம் -ஈட்டுப்பெருக்கர் -மகனே மா முனி –

பசுக்களின் heart beat slow -உடல் வெப்பம் -கட்டி therapy -90 minutes –22000 செலவில் -cowminuticarion -கோ சாலை -வள்ளல் பெரும் பசுக்கள்
Dubbed “koe knuffelen” in Dutch (literally “cow hugging”), the practice is centred on the inherent healing properties of a good human-to-animal snuggle. Cow cuddlers typically start by taking a tour of the farm before resting against one of the cows for two to three hours. The cow’s warmer body temperature, slower heartbeat and mammoth size can make hugging them an incredibly soothing experience, and giving the animal a backrub, reclining against them or even getting licked is all part of the therapeutic encounter.
“It’s a positive energy exchange. The person cuddling the cow becomes relaxed by being next to the cow’s warmer body and sometimes even manages to follow their heartbeat. It’s a win-win situation and great experience for both.

சுடரே -முடிச்சோதி கடிச்சோதி அடிச்சோதி மூன்று அடுக்கு விளக்கு திருநாராயண புரத்தில் உண்டே

வந்து தலைப் பெய்தோம்
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
காம்பற தலை சிரைத்து -வாழும் சோம்பர் -இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ச அஹம் -தாச அஹம் –ச த மேலும் மேலும் சேர்த்து

சாபம் போக்குவது திருவடி -திருக்கண் -திருக்கரம் -திருவாழி -தூது செய் கண்கள் -பிரிவே சாபம் –
அம் கண் ஞாலம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்குமே உடலே -பஞ்ச பூதங்களும் உண்டே -26 தத்துவங்களும் உண்டே –
இதில் -A Z -காஞ்சி படிக்கட்டுகள் -24-காயத்ரி -அ ரசன் பக்தி ரசம் இல்லாதவன் -ஆச்சார்ய அபிமானத்தால் -அஹங்காரம் தொலைத்து -திருவடி கீழ் அமர்ந்து
‘சாத்மிக்க சாத் மிக்க உபதேசம் –
ஸ்ரீ பாஷ்யம் திருவாய் மொழி -ஆதித்யனும் திங்களும் போல்
ஆச்சார்யர் திருக்கண்களுக்கு நான்முகன் எட்டு கண்களும் ருத்ரன் மூன்று கண்களும் விஷ்ணு ஆயிரம் கண்களும் இணை அல்லவே

திசை முகனின் தந்தை மேல் திசை முனியின் பிள்ளை யானான்
கனகமாலினி குசன் பெண் -யது வம்சத்தில் யதுத்தமனுக்கு திருக்கல்யாணம் -சீதனமாக ராம பிரியனைக் கொடுக்க
யதிராஜருக்கு யுவராஜர் ஆனார்
சேர்த்தி உத்சவம் இன்றும் உத்சவர் சேர்ந்த உத்சவம்
வெண்மையான பாற்கடல் சூர்யன் போல் ராமானுஜர் 84 திருநக்ஷத்ரம்
இளம் சூர்யன் செல்லப்பிள்ளை
அரங்கன் -ஆச்சார்யர்
வேங்கடவன் சிஷ்யர்
தேவப்பெருமாள் தந்தை
சம்பத் குமார் மகன் -நமது ஸ்வாமிக்கு –

தலைப்பெய்து – தலைப்பெய்தல் – ஒன்றுகூடுதல்; கிட்டுதல்; பெய்துரைத்தல்; கூடுதல்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்-குறள் 405

எழநண்ணி நாமும்* நம்வானநாடனோடு ஒன்றினோம்*
பழன நல்நாரைக் குழாங்கள்காள்* பயின்றுஎன்இனி*
இழைநல்லஆக்கையும்* பையவே புயக்குஅற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து – விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று

அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = “ஸ்ரீ”
* லக்ஷ்மி + பூமிதேவி + நீளாதேவி = “ஸ்ரீ”

* அறம் + பொருள் + இன்பம் = வீடு!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = “ஸ்ரீ”-மன்-நாராயணன்!

ஊற்றம் உடையாய் = பரம் => வைகுந்தப் பரம்பொருள், பரப் பிரம்மம்! கட+உள்
* பெரியாய் = வியூகம் => திருப்பாற்கடலில் குறை கேட்டு அருளும் இறைவன்!
* உலகினில் தோற்றமாய் = விபவம் => நரசிம்ம, வாமன, ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்!
* நின்ற = அர்ச்சை => அனைத்து ஆலயங்களில் இருக்கும் அர்ச்சா விக்ரக இறைவன்!
* சுடரே = அந்தர்யாமி => எல்லாரின் அந்தராத்மா, அடி மனசில், சுடராய் ஒளிரும் இறைவன்!

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!
பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள்

தலைப் பெய்தோம் = தலைகள் பல திரள, உன் சன்னிதியில் (மழை போல) பெய்தோம்!
தலைப்பு எய்தோம் = தலைப்பில் (முகப்பில்), உன்னைக் கிட்டக்க வந்து ஆசை ஆசையாச் சேவிச்சோம்!

தலங்கள்!
* இருந்தான் (அமர்ந்தான்) = சீரிய சிங்காசனத்து “இருந்து” => திருக்கடிகை (சோளிங்கபுரம்) போன்ற தலங்கள்!
* கிடந்தான் = மன்னிக் “கிடந்து” உறங்கும் => திருவரங்கம் போன்ற தலங்கள்!
* நடந்தான் = இங்ஙனே “போந்து”, “புறப்பட்டு” => திருக்கோவிலூர் போன்ற தலங்கள்! (நடந்து, உலகளந்த பெருமாள்)

நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான்! அதையும் இந்தப் பாட்டிலேயே கொண்டாந்து காட்டி விட்டாள் கோதை!

பரித்ராண உத்சவம் திரு நாராயணபுரத்தில் உண்டே
நடை அழகு -சேஷ்டிதங்கள் வ்ருத்தாந்தமும் அழகு தானே

முன்னிலும் பின் அழகு பெருமாள் -பார்த்த பெரிய பெருமாள் கிடந்தே இருப்பாரே

இது அன்றோ எழிலாலி -அவன் சொல்வான்
உனது வீட்டுக்கு வா என்று கூட்டிப்போனார் விதுரர்
அடியேன் க்ருஹத்துக்கு வா என்றார்கள் பீஷ்மஅதிகள்

தெள்ளிய சிங்கர் நரசிம்மன் -அஞ்சுவை அமுதம் -திருவல்லிக்கேணி -ஒண்டிக் குடுத்தனம் –
ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள் -ஆஹ்வாத ஹஸ்தம் -அணுக்கர்களை அருகில் கூட்டு சேவை –

‘மாரி மலை’ பாசுரத்தில் ‘மன்னிக் கிடந்து உறங்கும்’ என்னுமிடத்தில் ‘மன்னி’ ( பொருந்தி இருந்து )
என்னும் பயன்பாடு உற்று நோக்கத்தக்கது. பல ஆழ்வார்களுக்கு இந்த ‘மன்னி’யின் பால் ஒரு ஈர்ப்பு உள்ளது.

தேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார்
‘அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன்’ என்றும்,
நம்மாழ்வார் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்றும் பாடுகிறார்கள்.

திருப்பாவையில் திருப்பல்லாண்டு இது
நாவில் இருந்து அக்னி -குழந்தையாகப் பார்த்து -அம்மாள் -பேசினானே –
நடாதூர் அம்மாள் –ஆயி ஜகனாச்சார்யர் –
ஆழ்வார் இனி மேல் ஆழப் போகிறார்கள்
ஆண்டாள் ஆழ்ந்தாள்
அளந்தாய் -அளந்தவனே -இல்லாமல் -தாய் போல் பல்லாண்டு
அந்த உயர்த்தி -இந்த தாழ்ந்த -அதே போல் அன்று இன்று -இவ்வுலகம் –
இந்த உடலை விட்டு அந்த வைகுந்தம் அடைகிறான் சாந்தோக்யம்
அபசாரம் உபசாரமாக இந்திரன் உபேந்த்ரன் உபர இந்திரன் super இந்திரன் சொல்ல வந்ததை வாய் குழறி உபேந்த்ரன்
உன் மகனான அர்ஜுனனுக்கு உதவுவேன் என்ற உபகாரம் -குணம் போற்றி -குணம் -என்றாலே ஸுசீல்யம் போற்றி என்கிறாள்
சக்கரத்தாழ்வார் -கையில் 16 ஆயுதங்கள் உண்டே -வேலும் ஓன்று ஷோடச ஆயுதம்
ஸ்காந்த புராணம்-திருவேங்கடம் குமார தாரீகா-வேல் பெற்ற இடம் –
சிக்கில் -மாமா இடம் வாங்கியதை அம்மா பார்வதி தொட்டுக் கொடுத்தாள் சூர சம்ஹாரத்துக்கு
இரங்கு -அன்று பல்லாண்டு படத்துக்கும் -உறங்கும் உன்னை உணர்த்தியத்துக்கும்
நடக்க போந்து அருள் என்றத்துக்கும் –ஷாமணம்-கருணையே உபாயம்
ஆச்சார்யருக்கு பல்லாண்டு -திருவடி தொடங்கி –சிறிய விஷயம் தொடங்கி -நம அர்த்தம் -கண்ணன் -திண்ணம் நாரணமே -சங்கப்பலகை –
சங்கல்ப சூரியோதயம் இலங்கை -திருவடி ஆச்சார்யர் -அசோகா வானம் சரீரம் ஒன்பது வாசல்

பிறவி சகடம் ஒழிக்கும் ஆச்சார்யர் திருவடி சம்பந்தத்தால்
கன்று -குதர்க்க வாதம் கொண்டே தார்க்கிக ஸிம்ஹம் – பூர்வ பக்ஷம் விளக்கி குற்றங்கள் காட்டி –
குன்று போன்ற குணங்களையே குடையாக காட்டி
சங்கு சக்ர லாஞ்சனை வேல்
இன்றி ஆகிஞ்சன்யம் -யாம் வந்தோம் –

பிள்ளை -இல்லை மகன் -தாய் தந்தை வாக்கு பரிபாலனம்
கர்க்காச்சார்யார் மாட்டுத் தொழுவத்தில் ரஹஸ்யமாக இருவருக்கும் திரு நாமம் சூட்டி
மாமியார் பேரை கணவன் முன்னே சொல்ல மாட்டார்களே -ஒருத்தி
கம்சபயம் என்றுமாம் ஒப்பற்ற ஒருத்தி என்றுமாம்
ப்ரஸித்த அர்த்தம் ஒருத்தி -ஒருத்தி என்றே சொல்ல பராங்குச நாயகி
மஹான்கள் பெரியோர் பேரை சொல்ல மாட்டோம் என்றுமாம்
கோபத்தால் -நான்கு கை மறைக்கச் சொன்னதால் கட்டியதாலும் செல்லமாக கோபம்
ஜெயந்தி-ஜெயம் புண்யம் தரும் -தே பிறை அஷ்டமி ரோகினி சேர்ந்த சம்பவம் தாம – இரவுக்கு 60 ஸ்லோகங்கள் தேசிகன்
ஏகம் ஏவ அத்விதீயம் -அர்த்தம் இத்தைக்கொண்டே ஸர்வம் -சமஞ்சயம் -மாயை இரண்டாவது இல்லை நிரசனம்

தான் தீங்கு தனக்குத்தானே நினைத்து
வயிற்றில் நெருப்பு ஜாடராகினி -பயத்தால் -அதி சங்கை நெருப்பு எல்லாம் -விரஹ அக்னி கொண்டே இலங்கை எரித்தது போல்
உன்னையே கேட்டு -33 கோடி தேவர்களும் ஆராவமுதம் சந்நிதி –
உன்னுடைய வருத்தம் தீர நாங்கள் மகிழ்ந்து பாட என்றுமாம் –
திருத்தக்க செல்வம் செல்வப் பிள்ளை அவனே -செல்வச் சிறுமீர்களுக்கு ஏற்ற -திரு விரும்பும் -திருவின் தொடர்பால் –

ஆச்சார்ய பரம் -திருமந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து இரண்டுமே ஒப்பற்ற மந்த்ரங்கள்
சேவகம் -வீர்யம் -தொண்டு

aal in நிலையாய் -திருப்பாவையில் எல்லா மொழிகளும் உண்டே
பொன் அரங்கம் என்னில் மயிலே -மாலே -தயிர் சாதம் நாகப்பழம் –
பறை குரு பரம்பரை -பால் – சத்வ குணம்-கொடித் தோன்றும் வைகுண்ட வாசல் பிராப்தி –
பல்லாண்டு பிரேம பக்தி -ஆலின் நிலையாய் நிழல் கொடுத்து புகல் இடம் ஆச்சார்யர்

மால் கறுமை பெருமை மையல்
சம்பவாமி ஆத்ம மாயா
ஞானிகள் ஆத்மாவைப் போன்றவர்
ஆத்மா சப்தம் -இரண்டு இடத்திலும் -ஸாஸ்த்ர ஸஸ்த்ர பாணிகள் -ஞானிகளாக ஆக்கிக் கொண்டு நானே பிறக்கிறேன் –
தத் ஆத்மநாம் ஸ்ருஜாமஹம் -பரித்ராணாம் சாதூனாம் பிரதான பிரயோஜனம் -மற்றவை ஆனுஷங்கிகம்

கோ-பத்து அவதாரங்கள் -வேதம் -மலை -பூமி -புரிதல் வேண்டுதல் –
போற்றி என்றதே நீராட்டம் -நோன்பு முடிந்தது சம்பாவனை பிரார்த்தனை
வெல்லும் வேறே தோற்கடிப்பது வேறே
சூடகமே ஏவகாரம் -கண்ணனையே சொன்னவாறு
கைபிடித்து முதலில் -தோளுடன் அணைத்து -காதைக்கடித்து -ரஹஸ்யம் சொல்லி காலில் விழுவான்
நகைக்கு அப்புறம் புடவை

குணங்களால் அவனுக்கு ஏற்றம் –
ரிஷிகள் தானே ஸ்வரூபத்திலே இழிவார்கள் –
ஸ்வரூபத்தை விட ரூபங்களுக்கும் குணங்களுக்கும் ஏற்றம் என்பதால்
ரிஷிகளைப் போல் இல்லாமல் ஆழ்வார்கள் இவற்றிலே இழிவார்கள்
ஆச்சார்ய பரம் -வேத யாதாத்ம்யம் அறியாமல் –
கோவிந்தன் சொல்லின் செல்வன்
பஞ்ச சம்ஸ்காரம் இவற்றால் -தோடு மந்த்ர உபதேசம் -செவிப்பூ தாஸ்ய நாமம் -சூடகம் திருவாராதன கிராமம்
பாடகம் -பன்னிரு திருமண் சாத்தி
ஆடை-ஸ்வரூப ஞானம் திருவாய் மொழி நெய்

அனுகூலர் -பிரதிகூலர் -உதாசீனர் -மூன்று வர்க்கம் கூடாதார்
சூடகம் அஞ்சலி பரமா முத்ரா சிப்ரம் தேவ பிரசாதம்
சங்கு சக்ர லாஞ்சனை
ரஹஸ்ய த்ரய மந்த்ர உபதேசம்
மங்களா ஸாஸனம் பண்ண யோக்யதை பாடகம் -பதியே பரவித்தொழும் தொண்டராக வேண்டுமே –

ஏழு பிறவி- = தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, விலங்கு, நரகர், தேவர், மக்கள்..

* அங்கு-அப் பறை = அங்கு, அங்கு-ன்னு மோட்சம் தேடறீங்களா மக்களே?
* இங்கு-இப் பரிசு = இங்கு, இங்கு-ன்னு இங்கேயே இருக்கு!
அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = நித்ய கைங்கர்யம்!
என் கடன் பணி செய்து “கிடப்பதே”! = இதுவே மோட்சம்! இதுவே இன்பம்! இதுவே இறைவன் உள்ள உகப்பு!
* திருவரங்கமே மோட்சம்!அவரவர் அபிமானத் தலம் எல்லாமுமே மோட்சம்!
* அவரவர் அந்தராத்மாவே மோட்சம்! அந்தர்யாமியே மோட்சம்!

சங்கு: மந்த்ராசனம்.
பேரிகைகள் = ஸ்னானாசனம் (திருமஞ்சனம்)
வேதகோஷம் பல்லாண்டு
அலங்காராசனம்.: விளக்கு: நைவேத்ய சமர்ப்பணம்.
கொடி: விஞ்ஞாபனம்,
பந்தல்: பர்யங்காசனம்.
ஆண்டாள் கேட்ட 6 அயிட்டங்களும் பகவத் ஆராதனத்தில் உபசார ஆசனங்கள்

நெய், சோறு, பால் விஷயத்தில் மகளும் தந்தையும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.
பெரியாழ்வார் பாசுரத்தைப் பாருங்கள்.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

தூமலர் தூவித் தொழுது -செய்ய விடில் ( ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
நாவினால் பாடி -செய்யா விடில் – (ஊமையோ)
மனத்தினால் சிந்திக்க -செய்யா விடில் ( அனந்தலோ = சோம்பல் உடையவளோ )

ஐந்து அங்கங்கள் சரணாகதி ஐயங்கார்
ப்ராயச்சித்தார்த்தம் -கிருஷ்ண அநு ஸ்மரணம்-மனதுக்குள் சேஷ பூதன் சரீரம் என்று அனுசந்திக்க வேண்டும்
தப்பாக கிருஷ்ண கிருஷ்ண கிருஷண நாம் சொல்வார்கள்
நீ தாராய் பறை உயிரான சொற்கள் -ச காஷ்டா ச பரகதி கட உபநிஷத்
அவனே அவனது சொத்தை அவன் இடம் சேர்த்து கைங்கர்யங்களை ஏவி பணி கொள்வான்
குறை குறை ஓன்று -குறை ஒன்றும் இல்லாமல் -மூன்றும் தோஷங்கள் இல்லாமல் –
அவதாரத்தில் குறை இல்லாமல் -அடியார் குறைகளைப் பார்க்கும் குறை இல்லாமல் மூன்றும்

இறை வா கொஞ்சம் வா பறை தா
ஆச்சார்யர் தகவலால் மாதவனும் தராதவற்றை அருள்வார்

கோவிந்தா -கோ தா நடுவில் lock பண்ணி win வெல்லும் கோத்தா -அத்யாபயந்தி
ஏழு ஏழு-14-49-மட்டும் அல்ல -நீ -எழுகின்ற பிறவிகள் தோறும்
உடைமைக்கு ஒரு முழுக்கு உடையனுக்கு பல முழுக்கு -எதிர் சூழல் புக்கு கிடைப்பானா நப்பாசை உண்டே அவனுக்கு
பல பல வடிவங்களால் கைங்கர்யம் ச ஏகதா பவதி இத்யாதி உண்டே அங்கும்

காமம் மாற்று -உன்னைத் தவிர
மற்றைக் காமம் -வேறே ஒன்றைக் கொண்டு உன்னை அடைய
மற்றைக்காமன்கள் –
நமது எமது -தமிழ் மட்டும் இது போல் உண்டு
நம் -எமக்கும் உனக்கும் -கைங்கர்யம் கொடுத்து ஆனந்தம் உனக்கு
போக்கி போகி மருவி

1 5 23 26 -நான்கிலும் மா -என்று -தொடங்கி லஷ்மீ கல்யாணம் சொல்லி நிகமனம்
திரு -அழகான முகம் -திருமால்-ஸ்ரீ யபதி -திரு அருள் -ஒப்பற்ற அருள் -மூன்று திரு
ஏல் ஓர் வேண்டாமே இதில்

ஏலோர் எம் பாவாய்
28 பாசுரங்கள்;
ஓர் எம்பாவாய் ஒன்று;அம்பரமே
எம்பாவாய்- இன்புறுவர் ஒன்று.-வங்கக்கடல்
வினை யெச்சம் 13 பாசுரங்கள்
வினை முற்று 14 பாசுரங்கள்

வங்கம் -கப்பல் விஷ்ணு போதம் -வைகுந்தன் என்னும் தோனி -கிடந்த கடல் –
அங்கு ஒரு பெண் அமுதம் கொண்டான் இங்கு பஞ்ச லக்ஷம் கோபிகள் அமுதம் கொண்டான்
லஷ்மீ கல்யாணம் பரம மங்களம் பிள்ளை பேரன் கேசவன் உடன்
வாசம் செய் பூம் குழலாள் -இவன் கேச-பாசத்தால் மயங்கி மாதவன் ஆனான் –
தடைகளைப் போக்கி நம்மை கொள்வான் கிலேச நாசகன்
திங்கள் திரு முகம் சந்திரனும் திரு போன்ற தாமரை போலவும் முகம் –
அங்கு அப் பறை -வேண்டியவருக்கு வேண்டிய பலன் -ஆச்சார்ய பரமாயும் உண்டே –
தண் தெரியல் சூடிக் களைந்த -உள்ளத்தில் உள்ளாருக்கு மாலை –
மறை நான்கும் ஓதிய பட்டன் -நறையூர் நம்பியே பட்டர் -சாலி உத்சவம் ஜாலி உத்சவம்-மாமனாருக்கு உபகாரம் அரங்கன் –

26-பரமாத்ம ஸ்வரூபம்
27-கூடி இருந்து குளிர் ஜீவாத்ம ஸ்வரூபம்
28- இறைவா நீ தாராய் உபாய ஸ்வரூபம்
29- நம் காமங்கள் மாற்று விரோதி ஸ்வரூபம்
30- திருமாலால் திருவருள் பெற்று இன்புற்று -புருஷார்த்தம் ஸ்வரூபம்

மந்த்ராஸனம் -மாரி
ஸ்நாநாசனம் -நீராட்டம்
அலங்காராசனம் -சூடகமே
போஜியாசானம் பால் சோறு
புனர் மந்த்ராஸனம் -உற்றோமே ஆவோம் பிரார்த்தனை
பயங்காசனம் -மாதவனை கேசவனை

செல்வத் திருமாலால் -ஆண்டாள் சூடிக் களைந்த மாலை
நாச்சியார் திருமொழி திருமஞ்சனம்
திருப்பாவை நித்யம் செவி சாய்த்து அருளுகிறார்
இவளால் திருவேங்கடத்தானுக்கு வந்த செல்வம்
சீற்றத்தோடு அருள் அவனாலே
திரு அருள் இவளாலே
எம் பாவாய் -திருப்பாவை போல் இன்பம் பெறுவதே பலன் –

ஆச்சார்ய பரம்-சாஸ்திரம் கடைந்து –

திருப்பாவை ஜீயர் சதஸ் –
The Statue of Equality —Inauguration Ceremony 02 FEB TO 14 FEB 2022
ராமானுஜர் -216 அடி வீற்று இருந்த திருக் கோலம் ராம் நகர் -1035 யாக குண்டம் -15 நாள்கள் –
ஸ்ரீ லஷ்மி நாராயண க்ருதி யாகம் -108 திவ்ய தேச ப்ரதிஷ்டை இங்கு -ஆகவே 216 அடி

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: