அபவித்ர பவித்ரோ வா ஸர்வ அவஸ்த்தாம் கதோபி வா
யா ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ச பாஹ்யாப் யந்தரஸ் ஸூசி –
பரிசுத்தனாய் இல்லாவிடினும் இருந்தாலும் -எந்த நிலையில் இருந்தாலும்
செந்தாமரைக் கண்ணனை நினைப்பவன் உள்ளும் புறமும் ஸூத்தனாகிறான் –
1-ஆசமனம்
ஓம் அச் யுதாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் கோவிந்தாய நம
ஓம் கேசவாய நம
ஓம் நாராயணாய நம
ஓம் மாதவையா நம
ஓம் கோவிந்தாய நம
ஓம் விஷ்ணுவே நம
ஓம் மது ஸூ தநாய நம
ஓம் த்ரி விக்ரமாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஸ்ரீ தராய நம
ஓம் ஹ்ருஷீகேசாய நம
ஓம் பத்மநாபாய நம
ஓம் தாமோதராய நம
——-
2-ப்ராணாயாமம்
ஓம் பூ பின் புவ ஓம் ஸூவ ஓம் மஹ ஓம் ஐந ஓம் தப ஓம் ஸத்யம்
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீ மஹி
தி யோ யோ ந ப்ரசோதயாத்
ஓம் ஆப ஜ்யோதீ ரஸ
அம்ருதம் ப்ரஹ்ம
பூர்ப் புவஸ் வரோம்
ஓம் பூ பின் புவ ஓம் ஸூவ ஓம் மஹ ஓம் ஐந ஓம் தப ஓம் ஸத்யம் –ஏழு வ்யாஹ்ருதிகாலால்
சொல்லப்படுபவன் ஓங்கார வாஸ்யனான பகவானே –
பூ லோகம் முதல் ஸத்ய லோகம் வரை எல்லாமே ஓங்கார வாஸ்யனான பகவானே –
ஸர்வாத்ம என்றவாறு -அனைத்தும் அவனுக்கு சரீரமே
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோ ந ப்ரசோதயாத்
இதுவே காயத்ரி மந்த்ரம்
ஓம்
ஸவிதுர் –உங்களை ஸ்ருஷ்டித்தவனான
தேவஸ்ய-நாராயணனுடையவையும்
வரேண்யம் -எல்லாராலும் வரிக்கத் தகுந்தவனாயும்
தத் பர்க்கோ -அந்தக் கல்யாண குணங்களின் ஸமூஹத்தை
தீ மஹி –த்யானம் செய்வோம்
ய -எந்தத் தேவன்
ந திய -நம்முடைய புத்திகளை
ப்ரசோதயாத் –தன் விஷயமான உபாஸன கைங்கர்யங்களிலே தூண்டுகிறாரோ
தேவஸ்ய –தேஜஸ்ஸூ முதலிய குணங்களை யுடைய
ஸவிது –ஸூர்யனுக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பவனும்
வரேண்யம் -எல்லாராலும் வரிக்கப் படுபவனும்
பர்க்க-ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுமான பகவானை
தீ மஹி -த்யானம் செய்கிறோம்
ய -எந்தத் தேவன்
ந திய -நம்முடைய புத்திகளை
ப்ரசோதயாத் –தன் விஷயமான உபாஸன கைங்கர்யங்களிலே தூண்டுகிறாரோ
ஓம் ஆப ஜ்யோதீ ரஸ அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப் புவஸ் வரோம்
இதுவே காயத்ரீ சிரஸ்ஸூ
அப்பு ஜ்யோதி ரஸம் அம்ருதம் ப்ரஹ்ம பூ புவ ஸூவ என்று சொல்லப்படுபவர் ஓங்கார வாஸ்யனான பகவானே
ஆக இந்த மூன்றும் சேர்ந்தே பிராணாயாமம்
பூரக கும்பக ரேசகங்களுடன் உச்சரிக்க வேண்டும்
——–
3-சங்கல்பம்
ஓம் ஸ்ரீ அச்யுதாய நம -ஓம் அநந்தாய நம -ஓம் கோவிந்தாய நம -ஸ்ரீ பகவத் ஆஜ்ஞாய பகவத் கைங்கர்யம்
ப்ராத ஸந்த்யாம் உபாஸிஷ்ய -(அல்லது ஸந்த்யா வந்தனம் கரிஷ்யே )
மாத்யாந்நிஹம் கரிஷ்யே
சாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்ய -(அல்லது ஸந்த்யா வந்தனம் கரிஷ்யே )என்று
அவன் ஆணையால் அவனுக்கு கைங்கர்யமாக இருக்கும்
அந்த அந்தக் கர்மங்களை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்கிறோம் –
——–
4-ஜல அபி மந்த்ரண மந்த்ரம்
ஆபோ வா இதம் ஸர்வம் -விஸ்வா பூதாநி ஆப -பிராணா வா ஆப –
பசவ ஆப -அம்ருதம் ஆப -அன்னம் ஆப -ஸம்ராட் ஆப -விராட் ஆப
ஸ்வராட் ஆப -சந்தாம் ஸி ஆப -ஜ்யோதீம்ஷீ ஆப -ஸத்யம் ஆப
ஸர்வ தேவதா ஆப -பூர்ப் புவஸ் ஸ்வர் ஆப -ஓம்
1-ஆபோ வா இதம் ஸர்வம் -உயிர் அற்ற இவை எல்லாம் அப்பு எனப்படும் பகவானே
2-விஸ்வா பூதாநி ஆப -எல்லா உயிர்களும் அவனே
3-பிராணா வா ஆப – முக்கிய பிராணனும் அவனே
4-பசவ ஆப -ஸம்ஸாரி சேதனனும் அவனே
5-அம்ருதம் ஆப -மோக்ஷ ஸூகமும் அவனே
6-அன்னம் ஆப -இவ்வுலக ஸூ கமும் அவனே
7-ஸம்ராட் ஆப -மிக விளங்கும் பரமபதமும் அவனே
8-விராட் ஆப -இவ்வுலகமும் அவனே
9-ஸ்வராட் ஆப -முக்த புருஷனும் அவனே
10-சந்தாம் ஸி ஆப -வேதங்களும் அவனே
11-ஜ்யோதீம்ஷீ ஆப -எல்லா ஜோதிஸ்ஸுகளும் அவனே
12-ஸத்யம் ஆப -உண்மையும் அவனே
13-ஸர்வ தேவதா ஆப -எல்லா தேவதைகளும் அவனே
14-பூர்ப் புவஸ் ஸ்வர் ஆப -ஓம் -மூ உலகங்களும் ஓங்காரப் பொருளான அவனே –
இந்த மந்திரத்தால் அபி மந்த்ரணம் செய்து
ஓம் ஸ்ரீ கேசவாய நம என்று நெற்றியிலே ஜலத்தால் ஊர்த்வ புண்டரத்தைத் தரிக்க வேண்டும்
——–
5-ப்ரோக்ஷண மந்த்ரம்
ஆபோ ஹிஷ்டா மயோ புவ
தா ந ஊர்ஜே ததா தந
மஹே ரணாய சஷஸே
யோ வஸ் சிவ தமோ ரஸ
தஸ்ய பாஜயதேஹ ந
உஸதீரவ மாதர
தஸ்மா அரங்க மா மாவ
யஸ்ய ஷயாய ஜின்வத
ஆபோ ஜநயதா ச ந
ஆபோ ஹிஷ்டா மயோ புவ -ஜலங்கள் அனைவருக்கும் -ஸூ கத்தை அளிப்பவையாய் அன்றோ நீங்கள் இருக்கிறீர்கள்
தா -அப்படிப்பட்ட நீங்கள்
ந -எங்களை
ஊர்ஜே -உறுதியானவனும்
மஹே -பெரியவனாயும்
ரணாய -அழகியவனாயும்
சஷஸே -அனைவருக்கும் கண்ணாய் இருக்கும் பரமபுருஷனுக்கு
ததா த ந -சமர்ப்பியுங்கோள் -சரணமாக அடைவியுங்கோள்
யோ வஸ் சிவ தமோ ரஸ -மிக மங்களமான உங்களுடைய ரஸம் -பக்தி -யாது ஓன்று உண்டோ
தஸ்ய -அந்த அன்பில் ஒரு சிறிதையாவது
இஹ -இவ்வுலகிலேயே
ந -எங்களுக்கு
உஸதீ மாதர இவ –அன்பு நிரம்பிய தாய்மார் போல் உள்ள நீங்கள்
பாஜயத-அடைவியுங்கோள்
யஸ்ய -எந்த பகவானுக்கு
ஷயாய-இருப்பிடமாய் இருந்து கொண்டு
ஜின்வத -ப்ரீதியை அடைகிறீர்களோ
தஸ்மை -அந்த பகவானை அடையும் பொருட்டு
வ -உங்களை
அரம் கமாம-மிகவும் த்யானிக்கிறோம்
ஆப -ஜலங்களே
ந ஜநயத-எங்களை உயிர்ப்பியுங்கோள்
இந்த மந்த்ரத்தை உச்சரித்து -ஜலத்தைப் ப்ரோக்ஷித்துக் கொண்டு
பின்பு ஓம் பூர் புவஸ் ஸூவ -என்று ஜலத்தால் ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்
———-
6-காலையில் தீர்த்த ப்ராஸன மந்த்ரம்
ஜலத்தைக் கையில் எடுத்து இந்த மந்த்ரம் சொல்லி பருக வேண்டும்
ஸூர்யஸ் ச மா மன்யுஸ் ச மன்யுபத யஸ் ச மன்யுக்ரு தேப்ய
பாபேப் யோ ரஷந்தாம்-யத் ராத்ராத்ய பாபம கார்ஷம் –
மனஸா வாஸா ஹஸ்தாப் யாம்
பதாப் யா முதரேண ஸிஸ் நா ராத்ரிஸ் அவலும்பது
யத் கிஞ்ச துரிதம் மயி இதம் அஹம்
அம்ருத யோநவ் ஸூர்யே ஜ்யோதிஷு ஜூ ஹோமி ஸ்வாஹா –
ஸூர்யஸ் ச -ஸூர்யனும்
மன்யுஸ் ச –இந்திரனும்
மன்யுபத யஸ் ச –இந்த்ரனைத் தலைவனாகக் கொண்ட மற்ற தேவர்களும்
மா -என்னை
மன்யுக்ரு தேப் ய -கோபத்தினால் செய்யப்பட
பாபேப் யோ –பாபங்களில் இருந்து
ரஷந்தாம்-காப்பாற்றட்டும்
மனஸா -மனத்தினாலும்
வாஸா -வாக்கியத்தாலும்
ஹஸ்தாப் யாம் -கைகளினாலும்
பத் ப்யாம்-கால்களினாலும்
உதரேண -வயிற்றினாலும்
ஸிஸ் நா -குறியாலும்
யத் ராத்ராத்ய பாபம கார்ஷம் -யாதொரு பாபத்தை ராத்திரியிலே நான் செய்தேனோ
யத் கிஞ்ச துரிதம் மயி -அதற்கு முன் என்னால் செய்யப்பட மற்றும் யாவை சில பாபங்கள் உண்டோ
தத் -அந்த எல்லா பாபத்தையும்
ராத்ரிஸ் -ராத்திரிக்கு நிர்வாஹனான பகவான்
அவலும்பது-போக்கடிக்கட்டும்
இதம் மாம் -இந்த என்னை
அஹம் -நான்
அம்ருத யோநவ் -மோக்ஷ காரணமாய்
ஸூர்யே -ஸர்வ காரணனாய்
ஜ்யோதிஷு -ஜ்யோதிஸ்ஸூ யுருவான பகவான் இடம்
ஜூ ஹோமி -ஹோமம் செய்கிறேன் -ஆத்ம சமர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வாஹா – அதற்காக நன்கு அழைக்கிறேன் –
மத்யாஹனத்தில் தீர்த்த ப்ராஸன மந்த்ரம்
ஆப புநந்து ப்ருத்வீம்
ப்ருத்வீ பூதா பு நாது மாம்
பு நந்து ப்ராஹ்மணஸ் பதி
ப்ரஹ்ம பூதா பு நாது மாம்
யதுச் சிஷ்ட ம போஜ்யம்
யத்வா துஸ் சரிதம் மம
ஸர்வம் பு நந்து மாமாப
அஸ்தாம் ச பிரதி க்ரஹம் ஸ்வாஹா
ஆப புநந்து ப்ருத்வீம் -ஜலம் பூதங்களாலே யான என் தேஹத்தைப் பரிசுத்தப் படுத்தட்டும்
ப்ருத்வீ பூதா பு நாது மாம் -என் தேகம் பரிசுத்தமாகி எண்ணெய் பரிசுத்தப் படுத்தட்டும்
ஆப மாம் பு நந்து-ஜலம் என்னை நேராகவும் பரிசுத்தப்ப படுத்தட்டும்
ப்ராஹ்மணஸ் பதி -வேதத்துக்கும் நான்முகனுக்கும் ஸ்வாமியாய் இருப்பவராய்
ப்ரஹ்ம பூதா -வேதங்களையும் நான்முகனையும் பரிசுத்தப் படுத்தும் பகவான்
பு நாது மாம் -என்னையும் பரிசுத்தப் படுத்தட்டும்
அபோஜ்யம் யத் உச்சிஷ்ட ம =புஜிக்கத் தகாத யாது ஒன்றை நான் புஜித்தேனோ
யத் வா மம துஸ் சரிதம் –யாதொரு கேட்ட கார்யம் என்னால் செய்யப் பட்டதோ
அஸதாம் ச பிரதி க்ரஹம்-தீயவர்கள் இடம் இருந்து தீய பொருள்களை நான் வாங்கியது யாது ஓன்று உண்டோ
ஸர்வம் பு நந்து மாமாப -முன் கூறிய அனைத்தினின்றும் என்னை பகவான் பரிசுத்தப் படுத்தட்டும் –
ஸ்வாஹா -அதற்காக நான் அழைக்கிறேன் –
மாலையில் தீர்த்த ப்ரஸாந மந்த்ரம்
அக்னிஸ் ச மா மந்யுஸ் ச மந்யு பதயஸ் ச மந்யு க்ருதேப்ய பாபேப்யோ ரஷந்தாம்
யதந்ஹா பாபமகார்ஷம் மனஸா வாஸா ஹஸ்தாப்யாம்
பத்ப்யா முதரேண ஸிஸ்நா அஹஸ் தத வலும்பது
யத் கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாம் அம்ருதயோ நவ் சத்யே ஜ்யோதிஷி ஜூ ஹோமி ஸ்வாஹா –
இதுவும் காலையும் சொல்லும் மந்த்ரத்தைப் போலவே
அக்னி என்றது அக்னிக்கும் அந்தர்யாமியான பகவான்
என்றும் அக்ர நயனன் -நற் கதிக்கு அழைத்துச் செல்வதன் -என்றுமான பகவான்
அஹஸ் -பகலுக்கு நிர்வாஹகானான பகவான்
சத்யே -உண்மைப் பொருளான பரமபுருஷன் என்றபடி
————–
மறுபடியும் முக்காலத்திலும் ப்ரோக்ஷண மந்த்ரம்
ததிக் ராவ்ண்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோ ரஸ் வஸ்ய வாஜிந
ஸூரபி நோ முகா கரத் ப்ரண ஆயூம்ஷி தாரிஷத்
ததிக் ராவ்ண்ணோ –தயிருக்குத் தன்னைக் கொடுத்தவனாய்
வாஜிந -மிகவும் வேகமுடைய
அஸ் வஸ்ய –குதிரை உருக்கொண்ட கேசியை
ஜிஷ்ணோ -ஜெயித்த கிருஷ்ணனுக்கு
அகார்ஷம் –ஆத்ம சமர்ப்பணம் செய்கிறேன்
ந முகம் -எங்களுடைய முகங்களை
ஸூரபி கரத் -நல்ல மணம் உள்ளவையாக அந்த பகவான் செய்து அருளட்டும்
ந ஆயூம்ஷி ப்ர தாரிஷத் -எங்களுடைய ஆயுஸ்ஸுக்களை வளரச் செய்து அருளட்டும் –
ஆபோ ஹிஷ்டா மயோ புவ தா ந ஊர்ஜே ததா தந
மஹே ரணாய சஷஸே யோ வஸ் சிவ தமோ ரஸ
தஸ்ய பாஜயதேஹ ந உஸதீரவ மாதர
தஸ்மா அரங்க மா மாவ யஸ்ய ஷயாய ஜின்வத
ஆபோ ஜநயதா ச ந
ஆபோ ஹிஷ்டா மயோ புவ -ஜலங்கள் அனைவருக்கும் -ஸூ கத்தை அளிப்பவையாய் அன்றோ நீங்கள் இருக்கிறீர்கள்
தா -அப்படிப்பட்ட நீங்கள்
ந -எங்களை
ஊர்ஜே -உறுதியானவனும்
மஹே -பெரியவனாயும்
ரணாய -அழகியவனாயும்
சஷஸே -அனைவருக்கும் கண்ணாய் இருக்கும் பரமபுருஷனுக்கு
ததா த ந -சமர்ப்பியுங்கோள் -சரணமாக அடைவியுங்கோள்
யோ வஸ் சிவ தமோ ரஸ -மிக மங்களமான உங்களுடைய ரஸம் -பக்தி -யாது ஓன்று உண்டோ
தஸ்ய -அந்த அன்பில் ஒரு சிறிதையாவது
இஹ -இவ்வுலகிலேயே
ந -எங்களுக்கு
உஸதீ மாதர இவ –அன்பு நிரம்பிய தாய்மார் போல் உள்ள நீங்கள்
பாஜயத-அடைவியுங்கோள்
யஸ்ய -எந்த பகவானுக்கு
ஷயாய-இருப்பிடமாய் இருந்து கொண்டு
ஜின்வத -ப்ரீதியை அடைகிறீர்களோ
தஸ்மை -அந்த பகவானை அடையும் பொருட்டு
வ -உங்களை
அரம் கமாம-மிகவும் த்யானிக்கிறோம்
ஆப -ஜலங்களே
ந ஜநயத-எங்களை உயிர்ப்பியுங்கோள்
—————-
அர்க்க்ய பிரதானம்
காயத்ரி மந்த்ரத்தைச் சொல்லிக்கொண்டு ஸூர்யனை நோக்கிக் கொண்டு
காலையிலும் மாலையிலும் மூன்று தடவையும்
மத்யாஹனத்தில் இரண்டு தடவையும்
இரண்டு கையாளும்
நின்று கொண்டு அர்க்க்ய பிரதானம் செய்ய வேண்டும்
காலம் கடந்து இத்தைச் செய்தால்
காணாமல் கோணாமல் கண்டு கொண்டே செய்ய வேண்டுமே -அது தவறினால்
ஒரு பிராணாயாமம் செய்து
கால அதீன ப்ராயச்சித்தார்த்தம் ஏக அர்க்க்ய ப்ரதாநம் கரிஷ்யே -என்று சங்கல்பித்துக் கொண்டு
முன் போலவே காயத்ரி மந்த்ர உச்சாரணத்துடன் ஒரு அர்க்க்ய ப்ரதானம் செய்ய வேண்டும்
இதற்குப் பின் தீர்த்தத்திக் கையில் எடுத்துக் கொண்டு
ஓம் பூர்ப் புவஸ் ஸூவ -என்னும் மந்திரத்தால் ஒருதடவை ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு
அஸ ஆதித்யோ ப்ரஹ்ம -இந்த ஸூர்யன் பர ப்ரஹ்மமே -என்று சொல்லிக் கொண்டே அஞ்சலி செய்ய வேண்டும் –
அதற்குப் பின் ஆசமனம் செய்து
பின்வரும் 21 மந்திரங்களால் ஜல தர்ப்பணம் செய்ய வேண்டும்
1-ஆதித்யம் தர்ப்பயாமி
2-அங்காரகம் (செவ்வாய் ) தர்ப்பயாமி
3-ஸூக்ரம் (வெள்ளி ) தர்ப்பயாமி
4-ஸோமம் (சந்திரன் ) தர்ப்பயாமி
5-புதம் (புதன் ) தர்ப்பயாமி
6- ப்ருஹஸ்பதி (வியாழன் )தர்ப்பயாமி
7-ஸநைஸ் ஸரம் (சனி ) தர்ப்பயாமி
8-ராஹும் தர்ப்பயாமி
9- கேதும் தர்ப்பயாமி
10-கேசவம் தர்ப்பயாமி
11- நாராயணம் தர்ப்பயாமி
12-மாதவம் தர்ப்பயாமி
13-கோவிந்தம் தர்ப்பயாமி
14-விஷ்ணும் தர்ப்பயாமி
15- மது ஸூ தனம் தர்ப்பயாமி
16-த்ரி விக்ரமம் தர்ப்பயாமி
17-வாமனன் தர்ப்பயாமி
18-ஸ்ரீ தரம் தர்ப்பயாமி
19-ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி
20-பத்மநாபன் தர்ப்பயாமி
21- தாமோதரம் தர்ப்பயாமி –
இப்படி தர்ப்பணம் செய்த பின்பு
ஆசமனம் செய்து
கிருஷ்ண அர்ப்பணம் அஸ்து
வாஸூதேவ அர்ப்பணம் அஸ்து என்று
தீர்த்தத்தால் பகவத் அர்ப்பணம் செய்து
ஸந்த்யாவந்தன ஜல பாகம் முடித்து
மேல் ஜப பாகம் தொடங்க வேண்டும் –
———
ஜப பூர்வ அங்கங்கள்
முதலில் ஒரு தடவை பிராணாயாமம் செய்து
ஓம் அச்யுதாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் கோவிந்தாய நம
என்று ஸ்தோத்ர ஆசமனம் செய்து
ஸ்ரீ பகவத் ஆஜ்ஞயா பகவத் கைங்கர்யம்
ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ மந்த்ர ஜபம் கரிஷ்யே
மாத்யாந்ஹிக காயத்ரீ மந்த்ர ஜபம் கரிஷ்யே
சாயம் ஸந்த்யா காயத்ரீ மந்த்ர ஜபம் கரிஷ்யே —
என்று சங்கல்பித்துக் கொள்ள வேண்டும்
சங்கல்பித்த பின்பு
ரிஷி சந்தஸ் தேவதைகளை பின் வருமாறு அனுசந்திக்க வேண்டியது –
ப்ரணவஸ்ய ப்ரஹமா ரிஷி -தேவீ காயத்ரீ சந்தஸ் -பரமாத்மா தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீ நாம் -அத்ரி -ப்ருகு -குத்ஸ-வஸிஷ்ட -கௌதம -காஸ்யப -அங்கீ ரஸ -ரிஷய
காயத்ரீ உஷ்ணுக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி த்ரிஷ்டுப் ஜகத்ய -சந்தம்ஸி
அக்னி வாயு அர்க்க(ஸூர்யன் ) வாகீஸ (ப்ருஹஸ்பதி )
வருண இந்த்ர விஸ்வே தேவா தேவதா
காயத்ர்யா விச்வாமித்ர ரிஷி தேவீ காயத்ரீ சந்தஸ் ஸவிதா தேவதா
காயத்ரீ சிரஸ பிரஹ்மா ரிஷி அனுஷ்டுப் சந்தஸ் பரமாத்மா தேவதா
ஸர்வேஷாம் ப்ராணாயாமே வி நியோகே
இவ்வாறு ரிஷி தேவதா சந்தஸ்ஸுக்களை அனுசந்தித்த பின்பு
10 தடவை பிராணாயாமம் செய்ய வேண்டும்
பின்பு
ஓம் அச்யுதாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் கோவிந்தாய நம
ஸ்ரீ பகவத் ஆஜ்ஞயா பகவத் கைங்கர்யம் காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே
என்று அனுசந்தித்து
காயத்ரீ ஆஹ்வான மந்த்ரத்தையும்
ரிஷி சந்தஸ்ஸு தேவதைகளையும் பின்வருமாறு அனுசந்திக்க வேண்டும்
ஆயாத் வித்ய அநு வாகஸ்ய வாம தேவ ரிஷி அனுஷ்டுப் சந்தஸ் காயத்ரீ தேவதா
ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம்
காயத்ரீம் சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜூஷஸ்வ ந
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி பிராஜோஸி தேவா நாம் தாம நாமாஸி
விஸ்வமஸி விஸ்யு வா ஸர்வமஸி ஸர்வா யுரபி பூ ரோம்
காயத்ரீம் ஆவாஹ யாமி
ஸாவித்ரீம் ஆவாஹயாமி
ஸரஸ்வதீம் ஆவாஹயாமி –
ஆயாது வரதா தேவீ -வரங்களை அளிக்கும் ஸ்ரீ தேவீ இங்கே எழுந்து அருளட்டும்
அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம் -அழியாததாயும் -நன்கு அறியப்பட்டதுமான ப்ரஹ்மமும் இங்கே எழுந்து அருளட்டும்
காயத்ரீம் சந்தஸாம் மாதா -வேதங்களுக்குத் தாயாய் இருக்கும் காயத்ரீ தேவியே
ஈம் -ஸ்ரீ தேவியையும்
இதம் ப்ரஹ்ம -பர ப்ரஹ்மமான இந்த நாராயணனையும்
ஜூஷஸ்வ ந -எங்களுக்காக அடைவிப்பாயாக
ஸ்ரீ மன் நாராயணனே
ஓஜோஸி –தாரண சக்தியை யுடையவனாய் இருக்கிறாய்
ஸஹோஸி -நியமன சக்தியை யுடையவனாய் இருக்கிறாய்
பலமஸி -பலத்தை யுடையவனாய் இருக்கிறாய்
பிராஜோஸி -ஒளியை யுடையவனாய் இருக்கிறாய்
தேவா நாம் –தேவர்களுக்கு
தாம –இருப்பிடமாயும்
நாமாஸி -பெயராகவும் ஆகிறாய்
விஸ்வமஸி -விஸ்வம் என்னும் பெயரை யுடையவனாய் இருக்கிறாய்
விஸ்யு வா அஸி -எல்லாவற்றுக்கும் சேருமிடமாய் இருக்கிறாய்
ஸர்வமஸி -எல்லாமுமாய் ஆகிறாய்
ஸர்வாயு அஸி-எல்லாவற்றுக்கும் ஜீவனம் ஆகிறாய்
அபி பூ அஸி-விரோதிகளை வெல்லுபவனுமாகிறாய்
ஓம்-இப்படிப்பட்ட அகார வாச்யனுக்கு அடிமைப்பட்ட நான்
காயத்ரீம் ஆவாஹ யாமி -காயத்ரீ தேவதையை அழைக்கிறேன்
ஸாவித்ரீம் ஆவாஹயாமி -சவிதாவை தேவதையாக உடைய ஸாவித்ரீ தேவதையை அழைக்கிறேன்
ஸரஸ்வதீம் ஆவாஹயாமி -வாக் ரூபமாய் இருக்கும் காயத்ரீ தேவதையை அழைக்கிறேன் –
இதற்குப் பின்
காயத்ர்யா விச்வாமித்ர ருஷி தேவீ காயத்ரீ சந்தஸ் சவிதா தேவதா என்று
ருஷி தேவதா சந்தஸ்ஸுக்களை அனுசந்தித்து
காயத்ரீ ஜபம் இயன்ற வரையில் ஜபிக்க வேண்டும் –
———
உபஸ்தானம்
காயத்ரி ஜபம் முடிந்தவுடன்
ஒரு பிராணாயாமம் செய்து
ஸ்தோத்ர ஆசமனம் செய்து
ஸ்ரீ பகவத் ஆஜ்ஞாய பகவத் கைங்கர்யம்
ப்ராத ஸந்த்யாம் (அல்லது மாத்யாந்நிஹ- அல்லது சாயம் ஸந்த்யாம் )
காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே உபாஸிஷ்ய என்று சங்கல்பித்துக் கொண்டு கை கூப்பி
காயத்ரீ உத்வாஸந மந்த்ரத்தை முக்காலத்திலும் உச்சரிக்க வேண்டும் –
உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தி நி
ப்ராஹ்மணேப்யோ ஹ்யநுஜ் ஞானம் கச்ச தேவி யதா ஸூகம்
தேவி-காயத்ரீ தேவியே -ஸ்ரீ தேவியே
ப்ராஹ்மணேப்யோ ஹ்யநுஜ் ஞானம் (ததா ஸி ) ஹி -ப்ரஹ்ம ஞானிகளுக்கு உன் அனுக்ரஹத்தால் வரும் அறிவித்த தருகிறாய் அன்றோ
தேவி -ஸ்ரீ தேவியே
உத்தமே -மிக உயர்ந்த
பர்வத மூர்த்தி நி சிகரே -ஸ்ரீ வெங்கடாசலம் ஸ்ரீ சித்ர கூடம் போன்ற சிகரங்களிலே
யதா ஸூகம் -இஷ்டப்படி மகிழ்ந்து விளையாடுவதற்காக
கச்ச -செல்வாயாக
இனி ஸூர்யனை நோக்கிக் கை கூப்பிக் கொண்டு பரமபுருஷனைக் குறித்து
மூன்று வேலைகளிலும் மூன்று உபஸ்தான மந்த்ரங்களை அனுசந்திக்க வேண்டும்
காலையில் அநுஸந்திக்கும் உபஸ்தான மந்த்ரம்
மித்ரஸ்யேதி மந்த்ரஸ்ய விஶ்வேதேவா ரிஷய: | காயத்ரீ ச்சந்த: மித்ரோ தேவதா |
ப்ராதஸ்ஸந்த்ய உபஸ்தானே விநியோக:
மித்ரஸ்ய சர்ஷணீத்ருத : ஶ்ரவோ தேவஸ்ய ஸாநஸிம் |
ஸத்யம் சித்ரஶ்ரவஸ்தமம் ||
மித்ரோ ஜநான் யாதயதி ப்ரஜாநந் மித்ரோ தாதார ப்ருதிவீ முதத்யாம் |
மித்ர: க்ருஷ்டீ ரனிமிஷாபி சஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் விதேம |
ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாந் யஸ்த ஆதித்ய: சிக்ஷதி வ்ரதேந |
ந ஹந்யதே ந ஜீயதே த்வோதோ நைந மகும்ஹோ அஶ்நோத்யந்தி தோ ந தூராத் ||
சர்ஷணீத்ருத : சஞ்சரிக்கும் உலகங்களை தரித்து நிற்பவனாய்
மித்ரஸ்ய -அனைவரையும் ரக்ஷிக்குமவனான
தேவஸ்ய ஸாநஸிம் |-பகவானுடைய விரும்பத்தக்கதும்
ஸத்யம் -நிலை நிற்பதும்
சித்ரஶ்ரவஸ்தமம் ||-மிக உயர்ந்த விசித்திர கீர்த்தியை யுடையதுமான
ஶ்ரவோ -ஸம்ஸார ரக்ஷணத்தை விரும்புகிறேன்
ப்ரஜாநந்-எல்லாம் அறிந்த
மித்ரோ -பகவான்
ஜநான் -ஜீவர்களை
யாதயதி -நடத்தி வைக்கிறான்
மித்ரோ -அளவற்ற பர ப்ரஹ்மம்
தாதார ப்ருதிவீ முதத்யாம் |-பூமியையும் ஸ்வர்க்கத்தையும் தரித்து நிற்கிறான்
மித்ர: -ஓங்கி உலகு அளந்த உத்தமன்
க்ருஷ்டீர் -பயிர்களால் ஜீவிக்கும் உயிர்களை
அனிமிஷ அபி சஷ்டே -கண் கொட்டாமல் கடாஷித்திக் கொண்டு இருக்கிறான்
ஸத்யாய -உண்மைப் பொருளான அவனுக்கு
ஹவ்யம் க்ருதவத் விதேம |-அன்பாகிய நெய்யுடன் கூடி ஆத்ம ஆகிற ஹவிஸ்ஸை ஹோமம் செய்யக் கடவோம்
மித்ர-சர்வ ரக்ஷகனே
ஆதித்ய: -அதிதியின் பிள்ளையான வாமனனே
ய மர்த்தோ -எவன் ஒருவன்
தே வ்ரதேந சிக்ஷதி-உனது சரணாகத ரக்ஷணத்தை அனுசந்தித்து தன்னைத் தேற்றிக் கொண்டு இருக்கிறானோ
ஸ ப்ர-அவன் அதிகமாக
ப்ரயஸ்வாந் அஸ்து -உன் அனுபவம் ஆகிய அன்னத்தை உடையவனாகட்டும்
த்வோதோ-உன்னுடைய பக்தன்
ந ஹந்யதே -எவராலும் ஹிம்சிக்கப் படுவது இல்லை
ந ஜீயதே -எவராலும் ஜெயிக்கப் படுவது இல்லை
ஏநம் -இவனை
அம்ஹ-பாபம்
அந்தித-அருகிலும்
ந அஶ்நோதி -அணுகாது
தூராத் -வெகு தூரத்திலும் –
ந அஶ்நோதி -அணுகாது
ப்ரஜைகளைப் போஷிக்கிறவரும், ப்ரகாசமானவரும் ஆகிய ஸுர்யனுடைய, உண்மையானதும்
யோகிகளால் அடையக் கூடியதும் மிகவும் ஆச்சர்யமாகக் கேட்கப் படுவதும் ஆன, கீர்த்தியை ஸ்துதி செய்கிறேன்.
இந்த மித்ரதேவர் அவரவர் கர்மா முதலியவைகளைத் தெரிந்து ஜனங்களை அவரவர் கர்மாவுக்கேற்றபடி நடப்பிக்கிறார்.
இந்த மித்ரதேவர் பூமியையும், மேலும் ஸ்வர்க்கத்தையும் தரிக்கிறார். மித்ரர் ஜனங்களை கண் கொட்டாமல் பார்க்கிறார்.
அவருக்கு நாம் நெய்யுடன் ஹோமம் செய்யும் பொருளை பூர்ண பலனைப் பெறுவதற்காக அளிக்கிறோம்.
மித்ரராயிருக்கும் ஸூர்யரே,
எவன் நியமத்தோடு உம்மை உபசரிக்கிறானோ அந்த மனிதன் கர்ம பலத்துடன் கூடினவானாக ஆகட்டும்.
உம்மால் ரக்ஷிக்கப் பட்ட அவன் ரோகம் முதலியவற்றால் பீடிக்கப்பட மாட்டான். சத்ருக்களால் ஜயிக்கப்பட மாட்டான்.
மேலும் உம்மால் இப்படி ரக்ஷிக்கப்பட்ட இவனை பாபமானது ஸமீபத்திலும் தூரத்திலும் அணுகாது.
———
மாத்யாஹ்னிகத்தில் ஸூர்ய உபஸ்தானம்
ஆஸத்யேன இதி மந்த்ரஸ்ய ஹிரண்யகர்ப்ப ரிஷி; | த்ருஷ்டுப் ச்சந்த: ஸவிதா தேவதா
ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஶயன் அம்ருதம் மர்த்யஞ்ச |
ஹிரண்யயேன ஸவிதா ரதேனா (அ)(அ)தேவோ யாதி புவனா விபஶ்யன் |
உத்வயம் தமஸஸ்பரி பஶ்யந்தோ ஜ்யோதிருத்தரம் |
தேவம் தேவத்ரா ஸூர்யம் அகன்ம ஜ்யோதி ருத்தமம் |
உதுத்யம் ஜாத வேதஸம் தேவம் வஹந்தி கேதவ: |
த்ருஶே விஶ்வாய ஸூர்யம் |
சித்ரம் தேவானாம் உதகாதனீகம் சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: |
ஆப்ரா த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷகும் ஸூர்ய ஆத்மா ஜகதஸ்தஸ்துஷஶ்ச |
தச்சக்ஷுர் தேவஹிதம் புரஸ்தாச் ஶுக்ர முச்சரத்.
ஸத்யேன ரஜஸா -அழிவற்ற பரமபதத்தில்
மர்த்யஞ்ச -மரணத்தை இயற்கையாகக் கொண்ட சம்சாரியையும்
நிவேஶயன் அம்ருதம் -மோக்ஷத்தை அடைவிக்க விரும்பியவனாய்
புவனா விபஶ்யன் |-உலகங்களை நன்றாகக் கடாக்ஷித்து
ஆ வர்த்தமானோ -எதிர் சூழல் புக்கவனாய்
ஸவிதா தேவ -ஸர்வ லோகங்களையும் ஸ்ருஷ்டித்த பகவான்
ஹிரண்யயேன ரதேனா -பொன்மயமான திருமேனியோடே -அல்லது கருட வாகனத்தில்
ஆ யாதி -எழுந்து அருளுகிறார்
உத் தமஸஸ் உத்தரம் -சிறந்ததாய் மூலப் பிரக்ருதிக்கு மேலான பரமபதத்தில் விளங்கும்
ஜ்யோதி தேவம்-பரஞ்சோதியான தேவனாய்
தேவத்ரா -மற்ற தேவர்கள் அனைவரையும் காப்பாற்றுவனுமாய்
ஸூர்யம் -எங்களை நியமிப்பவனாய்
உத்தமம் ஜ்யோதி -பரஞ்சோதியான நாராயணனை
பரி பஶ்யந்த-நேரே காணும் நாம்
அகன்ம -சரணம் அடைந்தோம்
ஸூர்யம் -சூர்யன் எனப்படுபவனாய்
ஜாத வேதஸம் -வேதங்களை பிறப்பித்தவனாய்
த்யம் உ -அந்தத் தேவனையே
கேதவ: -மஹான்கள்
உத் வஹந்தி -தங்கள் நெஞ்சிலே தரித்து நிற்கிறார்கள்
எதற்க்காக என்றால்
த்ருஶே விஶ்வாய -உலகம் எல்லாம் காண்பதற்காக
யஸ்மாத் -எந்த பகவான் இடம் இருந்து
சித்ரம் -விசித்திரமான
அநீ கம் -சேனை
தேவானாம் -தேவர்களை ரக்ஷிக்க
உதகாத் -உண்டாயிற்றோ
ஸ ஸூர்ய -அந்தப் பரமாத்மா
ஜகதஸ் தஸ்துஷஶ் ச -ஸ்தாவர ஜங்கமங்களுக்கு
ஆத்மா -அந்தர்யாமி யாவான்
த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஆப்ரா -தேவ லோகம் பூமி இடையில் உள்ள அந்தரிக்ஷம் ஆகிய அனைத்திலும் சுற்றிலும் வியாபித்து இருப்பவன்
தத் சக்ஷுர்-அனைவருக்கும் கண்ணாய் இருப்பவன்
தேவஹிதம் -தேவர்களுக்கு நன்மை அளிப்பவனாய்
ஶுக்ரம் -அழுக்கு அற்ற பகவான்
புரஸ்தாச் முச்சரத்.-முன்னதாகவே அவதரித்தது திரிகிறான்
நல்லவர்களுக்கு ஹிதமாய் ப்ரகாசிக்கின்ற தேஜஸ்ஸினால் சுற்றி வருபவரான ஸூர்யதேவன்
தேவர்களையும் மனிதர்களையும் தத்தமது கார்யங்களை அனுஷ்டிக்கும்படி செய்துகொண்டு,
ஸ்வர்ண மயமான ரதத்தில் ஏறிக்கொண்டு, உலகங்களில் அவரவர் கர்மங்களுக்கு ஸாக்ஷியாகப்
பார்த்துக்கொண்டேஸஞ்சரிக்கிறார்.
அந்தகாராதிகளை (இருட்டை) அழிப்பவரும் தேஜோரூபமானவரும் உத்தம தேவதையும் ஶ்ரேஷ்டமானவரும்
தேவதைகளை ரக்ஷிப்பவருமான ஸூர்யனை பார்க்கும் நாங்கள் ஶ்ரேஷ்டமான தேஜஸ்ஸை அடைவோம்.
நாம் செய்யும் ஸகல கர்மாக்களையும் அறிந்தவரும் ஸூர்யனான அந்த தேவரை உலகத்தில் உள்ள ஜனங்கள்
பார்ப்பதற்காக ஆயிரம் கிரணங்கள் உயரவஹிக்கின்றன.
மித்ரன், வருணன், அக்னி இந்த தேவதைகளுக்குக் கண் போன்ற ஸூர்யமண்டலமானது உண்டாயிற்று.
அம்மண்டலத்திலுள்ள ஸூர்யன் ஜகத்தில் உள்ளவர்களுக்கு ஆத்மாவாக இருந்துகொண்டு,
ஆகாசம், பூமி இவைகளையும் ஸ்வர்க்கத்தையும் வ்யாபித்திருக்கிறார்.
தேவதைகளுக்கு ஹிதமானதும் அவர்களுக்குக் கண் போன்றதும்
உதய காலத்தில் வெளுப்பாக உதயமாவது அந்த மண்டலம் ஆகும்.
வ்யோம முத்திரையால் ஸூர்யனைப் பார்த்துக் கொண்டே கீழ் உள்ள மந்த்ரம் சொல்ல வேண்டும் –
பஸ்யேம சரதஸ் சதம் -ஜீவேம சரதஸ் சதம்-நந்தாம சரதஸ் சதம்-
மோதாம சரதஸ் சதம்-பவாம சரதஸ் சதம்-ஸ்ருண வாம சரதஸ் சதம்
பரப்ரம வாம சரதஸ் சதம்-அஜீதாஸ் ஸ்யாம சரதஸ் சதம்
ஜ்யோக் ச ஸூர்யம் த்ருஸே -ய உதகான் மஹதோ அர்ணவாத் விப்ராஜ மாநஸ் ஸரிரஸ்ய மத்யாத்
ஸ மா வ்ருஷ போரோ ஹி தாஜஸ் ஸூர்யோ விபஸ்ஸின் மனஸா புநாது
பஸ்யேம சரதஸ் சதம் -உன்னை நூறு ஆண்டுகள் காணக் கடவோம்
ஜீவேம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் வாழக் கடவோம்
நந்தாம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் இன்புறுவோமாக
மோதாம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் ஆனந்திப்போமாக
பவாம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் உய்வு பெறக் கடவோம்
ஸ்ருண வாம சரதஸ் சதம்–நூறு ஆண்டுகள் கேட்ப்போமாக
பரப்ரம வாம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் பேசக் கடவோம்
அஜீதாஸ் ஸ்யாம சரதஸ் சதம்-நூறு ஆண்டுகள் வெல்லப்படாதவர்களாக இருப்போமாக
ஜ்யோக் ச -வெகு நீண்ட காலம்
ஸூர்யம் த்ருஸே -பரமாத்மாவை அறியக் கடவோம்
ய உதகான் மஹதோ அர்ணவாத் -எந்தப் பரம புருஷன் பெரிய பாற்கடலில் இருந்து அவதரித்து அருளினானோ
விப்ராஜ மாநஸ் ஸரிரஸ்ய மத்யாத் -அவதரித்து அருளின பின்பும் பாற்கடலின் நடுவே விளங்குகிறானோ
வ்ருஷப -மிகச் சிறந்தவனாய்
ரோஹி தாஜஸ் -செந்தாமரைக் கண்ணனாய்
ஸூர்யோ -ஜகத் காரணனாய்
விபஸ்ஸின் –ஸர்வஞ்ஞனான
ஸ மனஸா மா புநாது -அப்பரமாத்மா தனது திரு உள்ளத்தால் என்னைப் பரிசுத்தப் படுத்தி அருளட்டும் –
———
மாலையில் ஸூர்ய உபஸ்தானம்
இமம் மே இதி மந்த்ரஸ்ய தேவராத (ஶுனஶ்ஶேப) ரிஷய: | காயத்ரீ ச்சந்த: வருணோ தேவதா
இமம் மே வருண ஶ்ருதீஹவ மத்யா ச ம்ருடய |
த்வாம வஸ்யு ராசகே |
தத்வாயாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் ததா ஶாஸ்தே யஜமானோ ஹவிர்ப்பி: |
அஹேடமாநோ வருணேஹ போத்யுருஶகும் ஸமாந ஆயு: ப்ரமோஷீ |
யச்சித்திதே விஶோ யதா ப்ரதேவ வருண வ்ருதம் |
மினீ மஸித்யவித்யவி |
யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனேபி த்ரோஹம் மனுஷ்யாஶ்சராமஸி |
அசித்தீயத்தவ தர்மா யுயோபிம மாநஸ் தஸ்மா தேனஸோ தேவ ரீரிஷ: |
கிதவாஸோ யத்ரிரிபு: நதீவி யத்வாகா ஸத்யம் உதயன்ன வித்ம |
ஸர்வாதா விஷ்ய ஶிதிரேவ தேவாதா தேஸ்யாம வருண ப்ரியாஸ: ||
வருண- வரிக்கத் தக்க பரம புருஷனே
மே -என்னுடைய
இமம் ஹவம் -இந்த ஸ்துதியை
ஶ்ருதீ -கேட்டு அருள்வாயாக
அத்ய ச-இப்போதும்
மாம் -என்னை
ம்ருடய -இன்புறச் செய்து அருள்
த்வாம் -உன்னை
அவஸ்யு ராசகே -யூன் ரக்ஷணத்தை விரும்பி யாசிக்கிறேன்
தத்-நீண்ட ஆயுளுக்காக
த்வா -உன்னை
ப்ரஹ்மணா வந்தமானஸ் -வேதத்தால் வணங்கியவனாய்
யாமி -சரண் அடைகிறேன்
தத் -நான் விரும்பும் அவ்வாயுளையே
யஜமானோ -யாகம் செய்யும் யஜமானனும்
ஹவிர்ப்பி: -ஹவிஸ்ஸுக்களாலே
ஆ ஶாஸ்தே -விரும்புகிறேன்
வருண -வருணனே
அஹேடமாநோ -கோபம் கொள்ளாமல்
இ ஹ -இவ் விஷயத்தில்
போதி -சங்கல்ப்பிப்பாய்
யுருஶகும் ஸ-மிகவும் புகழப் படுபவனே
ந ஆயு: -எங்களுடைய ஆயுளை
மா ப்ரமோஷீ -அபஹரிக்காதே
ஹே தேவ வருண -தேவனே வரிக்கத் தக்கவனே
சித் ஹி -அறிவுடைய நாங்களும்
விஶோ யதா -ஜந்துக்களைப் போலே
த்யவித்யவி -தினம் தோறும்
யத் தே வ்ரதம் பிரமிநீ மஸி -உன்னுடைய யாதொரு கைங்கர்யத்தை மிகவும் அழித்தோமோ
கிஞ்ச -மேலும்
தைவ்யே ஜனே–தேவனாகிய உன் அடியார்கள் இடம்
மனுஷ்யா-நீச மனிஷராய் இருக்கும் நாங்கள்
மினீ மஸி
யத் இதம் அ பி த்ரோஹம் சராமஸி -யாதொரு பெரும் துரோகத்தை இழைத்தோமோ
அசித்தீ -அறியாமையால்
தவ தர்மா -உன் விஷயமான தர்மங்களை
யத் யுயோபிம -அழியச் செய்தது யாது ஓன்று உண்டோ
தஸ்மாத் ஏனஸ-அந்த அந்த பாபங்களினால்
மா ந ரீரிஷ: -எங்களை நீ ஹிம்ஸிக்க வேண்டாம்
தீவி -சொக்கட்டான் போன்ற சூது விளையாட்டுக்களில்
கிதவாஸ ந -துஷ்டர்களைப் போலே
யத் அகாரி ரிரிபு–யாதொரு பாபங்களை எங்களுக்கு ஓட்ட வைத்தார்களோ
யத் வா ஸத்யம் -எந்தப் பாபம் அறிந்து செய்யப் பட்டதோ
உத யத் ந வித்ம -எதை நாங்கள் அறியாமல் செய்தோமோ
ஶிதிரா இவ -ஏற்கனவே சிதைந்து கிடக்கும்
ஸர்வா தா -அந்த எல்லாப் பாபங்களையும்
விஷ்ய -என்னை விட்டுப் பிரிந்து ஓடச் செய்வாய்
தே ய வருண-வரிக்கத் தக்க வாஸூதேவனே
அத -அதற்குப் பின்
தே -உனக்கு
ப்ரியாஸ-இனியவர்களாக
ஸ்யாம -நாங்கள் ஆகக்கடவோம் –
ஓ வருணதேவரே ! என்னுடைய இந்தப் ப்ரார்த்தனையைக் கேளும்.
இப்பொழுதே என்னைச் சுகப்படுத்த வேண்டும். என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் உம்மை வேண்டுகிறேன்.
அதற்காக உம்மை வேத வாக்யத்தால் ஸ்துதி செய்துகொண்டு சரணமடைகிறேன்.
யாகம் செய்பவன் புரோடாசம் முதலியவைகளால் தன் இஷ்டமான பலனைக் கோருகிறான்.
ஓ வருண தேவரே கோபமில்லாதவராய் இந்த உலகத்தில் என் ப்ரார்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.
பெரிய கீர்த்தியை உடையவரே எமது ஆயுஸ்ஸை நாஶம் செய்யாதீர்.
வருண தேவரே எந்த வ்ரதமானது உமக்காக செய்ய வேண்டுமோ தினந்தோறும் அதைச் செய்யாதவரைப் போல்
நாங்களும் உமது வ்ரதத்தைச் செய்யாமல் இருந்து விட்டோம். (இரண்டும் அசை பொருளில்லாத ஶப்தங்கள்.)
ஓ வருணரே தேவதைகளிட்த்தில் மனிதர்களாகிய நாங்கள் எந்த எந்த இவ்விதமான த்ரோஹத்தை
அக்ஞானத்தால் செய்தோமோ, எந்த உமது தர்மங்களை நாஶம் செய்தோமோ,
ஓ தேவரே, எங்களை அந்த பாபத்தால் ஹிம்ஸிக்காதீர்.
கபடிகளாகிய எங்கள் சத்ருக்கள் சூதாடுமிடத்தில் எந்த பாபத்தை என்மீது சுமத்தினார்களோ,
உண்மையாகவே எதைச் செய்தோமோ, மேலும் எந்த பாபத்தை அறியவில்லையோ,
அவை எல்லாவற்றையும் நாஶம் செய்யும் அவைகள் சிதறி அழியட்டும். பின்பு உமக்கு இஷ்டர்களாக ஆகக் கடவோம்.
———
உபஸ்தானம் செய்த பிறகு
ஸந்த்யாய நம
ஸாவித்ரியை நம
காயத்ரியை நம
ஸரஸ்வத்யை நம
சர்வாப்யோ தேவதாப்யோ நம
காமோ கார்ஷீன் மந்யு கார்ஷீன் நமோ நம
ஸ்ரீ விஷ்ணவே நம
பூம்யை நம
ப்ரஹ்மணே நம
என்று கை கூப்பி யவனாய் நான்கு திக்குகளையும் நோக்கி உச்சரித்தவனாய்
இரண்டு தடவை ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும் –
இதற்குப் பின் அபிவாதன மந்த்ரம்
அபிவாதயே
தர்யார் ஷேய ப்ரவர அன்வித
கோத்ர
ஸூத்ர
யஜு ஸாகாத்யாயீ
சர்மான்
அஹம் அஸ்மி போ
அபிவாதயே
வைஸ்வாமித்ர, ஆகமர்ஷண,கௌசிக, த்ரையாருஷேய, ப்ரவரான்வித, கௌசிக கோத்ர:,
ஆபஸ்தம்ப ஸூத்ர:,
யஜூர் ஸாகா அத்யாயி,
ஸ்ரீ திருவேங்கடத்தான் சர்மாநாம அஹம் அஸ்மிபோ:”
என்று சொல்லி
சாஷ்டாமாக தண்டன் சமர்ப்பிக்க வேண்டும்
பின்பு ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ணாய நம என்று
ஸ்ரீ கிருஷ்ண சேஷபூதன் என்று உணர்ந்து – பத்து தடவை ஜபிக்க வேண்டும்
ஆதியில் 9 ரிஷிகளிடமிருந்தே கோத்ரங்கள் உண்டாயின.
அவை பின்னர் நூற்றுக்கணக்காக வளர்ந்தன.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையிலிருந்து நேராக உண்டானோமோ, அவர்களையே கோத்ர ரிஷி என்கிறோம்.
ஆஸ்வலாயநம், கௌஷீதகம், போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகாநஸம்,
காத்யாயனம், த்ராக்யாயனம், ஜைமினீயம் என ஸூத்ரங்கள் பல உள்ளன.
ரிக்வேதத்திற்கு ஆஸ்வலாயனம், கிருஷ்ண யஜுர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம்,
ஸத்யாஷாடம், வைகானஸம் என்ற ஸூத்ரங்கள் ப்ரசித்தமானவை. சுக்ல யஜுர்வேதத்திற்கு காத்யாயனம்,
ஸாம வேதத்திற்கு த்ராஹ்யாயனம் என்ற ஸூத்ரங்களாம்.
https://thiruvonum.wordpress.com/2020/02/02/–
ஸ்ரீ வேத ஸம்ஹிதைகள்- / ஸ்ரீ ப்ரவரம், கோத்ரம், ஸூத்ரம் கோத்ரம் -விவரணங்கள்
————-
காயேந வாசா மனஸே இந்த்ரியைர் வா புத்த்யாத்மநா வா ப்ரக்ருதேஸ் ஸ்வ பாவாத்
கரோமி யத் யத் சகலம் பர்ஸ்மை நாராயணா யேதி ஸமர்ப்பயாமி
என்று அனுசந்தித்து
ஆசமனம் செய்து
ஸ்ரீ கிருஷ்ண அர்ப்பணம் அஸ்து
ஸ்ரீ வாஸூதேவ அர்ப்பணம் அஸ்து
என்று அர்க்க்ய ப்ரதாநம் செய்து
பின்வரும் ஸ்தோத்திரங்களை அநு சந்திக்க வேண்டும் –
த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் ஸரஸிஜாஸந சந்நிவிஷ்ட
கேயூரவாந் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர
சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலய அச்யுத
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணம் கதாம்
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச
ஜகத்திதாய கிருஷ்ணாய கோவிந்தாய நம
ஸ்ரீ ரெங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி நிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீ ஸம் நமாமி சிரஸா யது சைல தீபம்
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply