ஸ்ரீ மார்கழி கேட்டை ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ கூர நாராயண ஜீயர் அனுபவம்–

ஸ்ரீ மார்கழி கேட்டை-
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ஸ்ரீ பெரிய நம்பி
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்

———-

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனியன்:

தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணியம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே

ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

மா மறையோர்–
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-
திருக் கண்ணங்குடி திரு குறுங்குடி திரு புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது-
இவர் மா மறையோர் என்பதால்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்-

மா மறையோர் ஆகிறார்
மிக்க வேதத்தின் உள் பொருளை அறிந்து -ததீய வைபவம் அறிந்தவர்-
அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்-

“திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்”

வைஜயந்தி வனமாலை அம்சம் -2800 கிமு -பிரபவ வருஷம் –
228 கலி பிறந்து
ஜ்யேஷ்ட நக்ஷத்ரம் மார்க்க ஸீர்ஷம் மாதம்
துளவத் தொண்டு -மாலை அம்சமாக அவதரித்து மாலைக்குக் கைங்கர்யம்
அரங்கனுக்காகவே –

ஸ்ரீ விஷ்ணு தர்ம சார பிரபந்தம்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியே விஷ்ணு தர்மம்.
சதனீகர் என்னும் மன்னர் -பாண்டவர் வம்சத்தில் -நான்காவது தலைமுறை
‘பகவானை அடையும் வழி எது’ என்னும் தன் கேள்வியை
செளனகர் என்னும் ரிஷியிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கமே விஷ்ணு தர்மம்.

கலவ் ஸங்கீர்த்தநம் -பக்தி வளர -ஒரே வழி
பக்தி யோக நிஷ்டர் அந்த முனி -இவர் மயர்வற மதி நலம் அருளப்பெற்றவர்
அங்கு அரசன் கேட்டான் இங்கு ராஜாநாம் ஸர்வேஸ்வரேஸ்வரன் கேட்க்கிறான்
தெளிவாக எளிமையான வார்த்தையால் -தத்வ விளக்கம் இதில் உண்டே –
அரங்கன் ஆச்சார்யராக திரு நாம உபதேசம் செய்து அருளி –

தெற்கு வாசலில்-ரெங்க ரெங்கா கோபுரம் ரெங்க விலாஸ் மண்டபம் –
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடி திருப்பாண் ஆழ்வார் -மூவருக்கும் அருகில் ஸந்நிதி

முதல் மூன்று பாசுரங்கள் -தாம் பெற்ற பலன்
மேல் நமக்கு உபதேசம் 4-14-
அரங்கன் அருள் -15-25
தனது தாழ்ச்சி விண்ணப்பம் 26-34
விலகிப்போனாலும் சேர்த்து கொள்கிறான் –35-37-
த்வயாரார்த்தம் -சரம ஸ்லோகார்த்தம்-சரணாகதி -38-
அடியார்கள் பெருமை –39-44-
நூல் பலன் –45

அவர் பிரக்ருதி ஸம்பந்தம் ஜீவனுக்குத் தகாது என்று உணர்ந்திருந்தார்
எனவே தான் “ஆதலால் பிறவி வேண்டேன்” என்றார்.

அவர் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றிருந்தார்
ஆகவே, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்”–பாகவத ஶேஷம் அவர்களே தருவராகில் உணவாக உட்கொள்ள உசிதம் என்றார்.

லௌகிக பாரமார்த்திக ஐஸ்வர்ய பேதம் நன்குணரப் பெற்றிருந்ததால், “இச்சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்” என்றார்.

இந்த்ரிய நிக்ரஹம் கைவரப் பெற்றிருந்ததால், “காவலில் புலனை வைத்து” எனப் புலன்களை அடக்கியது சொன்னார்.
காவல் இல்லாமல் இருந்தாலும் திருநாமங்கள் கலியைக் கடக்கப் பண்ணுமே
திருநாமங்கள் தாமே நமது புலன்களைக் கட்டுப்படுத்தும்
அங்கு-சுக்ரீவனுக்கு – நாமி-பெருமாள்-நாமம் உடையவன் – பலம்
இங்கு நாம பலம்

நாம சங்கீர்த்தனம் புண்யம் தருமா என்றால்
புண்யம் செய்து இருந்தால் தானே நாவிலே நாமம் வரும் –
ஓராயிரமாய் உலகு அளிக்கும் பேர் அன்றோ
கட்டிப்பொன் – பணிப்பொன் -போல் அன்றோ அவனும் அவன் நாமமும் –
நாமி ஒரு சுவை நாமமோ அறு சுவை -பச்சை மா மலை போல் மேனி -இத்யாதி

குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி -வைத்து என்று சொல்லாமல்-
மண்டங்குடி அளவும் நீட்டி -வந்து
நின்ற திருக்கோலத்துடன் அங்கு சேவை சாதித்து அருளுவதைச் சொன்னவாறு

தாம் கர்ம யோகாதிகளை உபாயங்களாகக் கருதாது கை விட்டதை,
“குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒழித்திட்டேன்” என்றார்.

அவர்க்கு உபாய யாதாத்ம்ய ஞானம் (உண்மையில் உபாயம் எதுவோ அது பற்றி)
முழுதாகக் கை வரப் பெற்றிருந்ததால்
“உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்” என்றார்.

எம்பிராற்கு இனியவாறே
பலன் நேராகச் சொல்லாமல்
தாய் குழந்தை சொல்லை போக்யமாக அனுபவிப்பது போல்
நாமும் திருமாலையைச் சொல்ல திருமால் உகந்து தனது பேறாகவே நம்மைக் கைக்கொண்டு அருளுவான் –

தொண்டரடிப்பொடியாழ்வார் வாழி திருநாமம்

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டை தனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை யொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவி தனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே –
திருமண்டங்குடி என்ற ஸ்தலத்தில் அவதரித்து அந்த ஸ்தலத்திற்கு ஒரு பெருமை ஏற்படுத்திக் கொடுத்து
வாழ்ச்சியைக் கொடுத்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே –
எம்பெருமான் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் உயர்வாகக் கூறிய
மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இப்புவியில் வந்து அவதரித்த ஆழ்வார் வாழ்க.

தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே –
அரங்கர் என்றால் பெரிய பெருமாளாகிய ஸ்ரீ ரங்கநாதன்.
அவரையே பர தெய்வம் என்று பல பாசுரங்களில் எடுத்துக் காட்டியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

திருமாலையில் “நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்”
என்று எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் “கற்றினம் மேய்த்த எந்தை” என்ற வரியின் மூலம் அந்தக் கண்ணனே பரதெய்வம் என்று காட்டுகிறார்.

இவ்வாறு பல பாசுரங்களில் நாராயணனின் அர்ச்சாவதார ரூபமான ஸ்ரீரங்கநாதனே பர தெய்வம் என்று அறுதியிட்டுக் கூறியவர்.

தெளிந்த அலை மிகுந்த காவிரி நதியினால் சூழப்பட்ட திருவரங்கத்தில் இருக்கக்கூடிய திருவரங்க நாதனையே தெய்வம்
என்று காட்டிய தொண்டரடிப்பொடியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்று இந்த வரியில் கூறப்பட்டுள்ளது.

திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே –
நாற்பத்தைந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை என்ற அற்புதமான ப்ரபந்தத்தை அருளியவர் தொண்டரடிப்பொடியாழ்வார்.
இந்தப் ப்ரபந்தத்தில் எம்பெருமான் எவ்வாறு தன்னுடைய அழகைக் காட்டி நம்மைத் திருத்துகிறான் என்று அழகாக விளக்கியுள்ளார்.

மேலும் சரணாகதி தத்துவத்தை எளிய முறையில் “மேம்பொருள் போக விட்டு” (38வது பாசுரம்) என்ற பாசுரத்தில்
விளக்கியதோடு மட்டுமல்லாமல் சரணாகதி செய்த அடியார்கள் எம்பெருமானிடம் எவ்விதம் பக்தி கொண்டிருப்பார்கள்,
அவர்களை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்பதை
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்ற 41வது பாசுரத்தின் வரியில் காட்டியுள்ளார்.

பகவானின் அடியார்கள் எப்படிப்பட்ட தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அடியார்கள் ஆவதற்கு முன்னம் எப்படிப்பட்ட
இழி செயலைச் செய்திருந்த போதிலும் அவர்கள் அடியார்கள் ஆன பின்பு
அவர்கள் உண்ட மிச்சத்தை உண்ணும் பேறு பெரும் பேறு என்று விவரித்துள்ளார்.

அவ்வாறு சிறந்த நாற்பத்தைந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை ப்ரபந்தத்தை அருளிச் செய்த தொண்டரடிப்பொடியாழ்வார் வாழ்க.

பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே –
அக்காலத்தில் பத்து பாசுரங்கள் கொண்ட எம்பெருமானைத் துயிலெழுப்பும் விதமாக அமைந்த
திருப்பள்ளியெழுச்சி என்ற ப்ரபந்தத்தை உரைத்த தொண்டரடிப்பொடியாழ்வார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே –
திருமாலையில் பாவையர்கள் சுகத்தைப் பற்றி “பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோர் இடும்பைப் பூண்டு” என்று காட்டியுள்ளார்.
மேலும் அவரது சரித்திரத்தில் பெண் சுகத்தினால் அவர் பெற்ற துன்பத்தின் காரணமாக
அவர் சந்திக்க நேர்ந்த இடர்பாடுகளின் மூலமும் நாம் அறியலாம்.

எம்பெருமானின் லீலா விசேஷத்தினால் “தேவதேவி” என்ற பெண்ணிடம் “விப்ரநாராயணன்” என்ற பெயர் கொண்ட போது மயங்கி இருந்தார்.
பின் எம்பெருமானே அவரைத் திருத்திப் பணி கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார்.
அதன் பின் அவர் பெண் சுகத்தில் விரக்தராக மிகுந்த வைராக்யத்துடன் வாழ்ந்து வந்தார் என்பதை நாம் அறிகிறோம்.
அவ்வாறு பெண்களுடன் கலப்பது ஆத்ம விஷயத்திற்கு தடையாக இருக்கும் என்பதை விரிவாகத் திருமாலையில் காட்டியுள்ளார்.

வேதாந்தத்தில் நமக்கு விஹிதங்களாக சில போகங்கள் / இவ்வுலக இன்பங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் நமது ஆத்ம ஸ்வரூபத்தை நோக்கும்போது, தேஹ சம்பந்தமான எல்லா இன்பங்களும் விரோதம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இது வேதாந்தத்தில், மோக்ஷத்தில் நோக்காக இருப்பவர்களுக்குக் கைவிடவேண்டியதாகச் சொல்லியிருந்தாலும்,
பக்குவப்படாமல் இருப்பவர்களுக்காக திருமணம் என்ற நியமனத்திற்குள் அவர்களின் அனுபவத்தை கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது.
உண்மையான ஞானம் ஏற்பட்டவர்களுக்கு இந்த அனுபவம் தேவையில்லை என்று புரிந்து அவர்கள்
எம்பெருமானை அனுபவிப்பதிலேயே தங்கள் மனதை செலுத்துவார்கள்,
அந்த நிலையிலேயே தொண்டரடிப்பொடியாழ்வார் இருந்தமையால் அந்த அநுபவத்தை விலக்கினார் எனலாம்.
அதை அவர் தம் வாழ்நாளில் அனுஷ்டித்துக் காட்டினார். அப்படிப்பட்ட ஆழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே –
ஆழ்வார் நந்தவனம் அமைத்து புஷ்பங்களைச் சேகரித்து, மாலையாகத் தொடுத்து எம்பெருமானுக்குச் சமர்ப்பித்துக் கைங்கர்யம் செய்து வந்தார்.
இந்தக் கைங்கர்யத்தினால் ஆழ்வார் மிகவும் பிரகாசமாக ஜ்வலித்தார் -விளங்கினார்.
துளபம் என்றால் திருத்துழாய் – துளசி. புஷ்ப கைங்கரியம் செய்து துளசி மாலை கட்டி பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர்.
அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்பது இந்த வரியில் காட்டப்பட்டுள்ளது.

தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே –
மேன்மை பொருந்திய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இரண்டு திருவடிகள் நன்றாக வாழவேண்டும்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

——–

ஸ்ரீ பெரிய நம்பி

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஆளவந்தார்
ஶிஷ்யர்கள்: எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஶடகோப தாஸர்,
அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: சோழ தேசத்தில் உள்ள பசியது (பசுபதி?) கோவில்
பெரிய நம்பி திருவரங்கத்தில் அவதரித்தார். அவருக்கு மஹா பூர்ணர்,
பராங்குஶ தாஸர் மற்றும் பூர்ணாசார்யர் என்ற திருநாமங்களும் உண்டு.

பெரிய நம்பியின் தனியன்:

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:

பெரிய நம்பியின் வாழி திருநாமம்:

அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுர் கேட்டை தனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ் தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

பெரிய நம்பி ஆத்ம குணம் நிறைந்தவர் மற்றும் ராமானுஜர் மீது மிகவும் பற்று வைத்திருந்தார்.
அவருடைய திருக்குமாரத்திக்கு லௌகிக விஷயத்தில் ஏதேனும் உதவி வேண்டுமனால் கூட அதை ராமானுஜரிடம் தான் கேட்கச் சொல்வார்.

ஒருநாள் ராமானுஜர் அவருடைய ஶிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே ஸாஷ்டங்கமாக விழுந்து ஸேவித்தார்.
ராமானுஜர் அதை எற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில்
அதை ஒப்புக் கொண்டால் தன்னுடைய ஆசார்யரிடமிடருந்து ப்ரணாமத்தை எற்றுக்கொண்டதாக ஆகிவிடும்.
பிறகு பெரிய நம்பியிடம் ஏன் ஸேவித்தீர் என்று கேட்ட பொழுது
“ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது என்று கூறினார்”.

மாறநேரி நம்பி (மிகப் பெரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய ஶிஷ்யர் மற்றும் நான்காவது வர்ணத்தில் அவதரித்தவர்)
பரமபதித்த போது பெரிய நம்பி அவருக்கு சரம கைங்கர்யங்களை செய்தார்.
சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று இதைக் குறையாகக் கூறினார்கள்.
ராமானுஜரும் அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய நம்பியிடம் கேட்டபோது,
ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில்
அருளிச் செய்தபடியும் தான் அதைச் செய்ததாக அவர் கூறினார்.
இந்த ஐதீஹ்யத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டியுள்ளார்.
குருபரம்பரா ப்ரபாவத்திலும் இந்தச் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் பெரிய பெருமாளுக்கு ஏதொ ஒரு ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தவுடன்,
பெரிய நம்பியை பெரிய கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் ப்ரார்த்தித்தார்கள்.
பெரிய நம்பி கூரத்தாழ்வானிடம் விண்ணப்பம் செய்து அவரையும் தன்னுடன் வருமாறு அழைத்தார்,
ஏனென்றால் கூரத்தாழ்வான் மட்டுமே பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர்.
இதைத் திருவாய்மொழி (7.10.5) ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை காட்டியுள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, சைவ ராஜா ஒருவன் ராமானுஜரை அவனுடைய தர்பாருக்கு அழைத்த பொழுது
கூரத்தாழ்வான் ராமானுஜரைப் போல் மாறுவேடத்தில் சென்றார். தள்ளாத வயதிலும் பெரிய நம்பி ஆழ்வானுடன் சென்றார்.
அந்த ராஜா பெரிய நம்பியினுடைய கண்களைப் பறிக்க வேண்டும் என்று உத்திரவிட்டபோது பெரிய நம்பி அதை ஒப்புக்கொண்டார்.
மிகவும் வயதானதால் பெரிய நம்பி வலியைத் தாங்க முடியாமல் பரமபதித்தார்.
அவர் பரமபதிக்கும் பொழுது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தார்.

ஆழ்வானும் அத்துழாயும் (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஸ்ரீரங்கம் இன்னும் சிறுது தூரம் தான் உள்ளது,
அது வரை அவருடைய மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக் கொண்டனர்.
பெரிய நம்பி உடனேயே நின்று அந்த இடத்திலேயே பரமபதித்தார்.

ஏனென்றால் யாரெனும் இந்த ஸம்பவத்தைக் கேட்டால், திருவரங்கத்தில் (அல்லது எதேனும் ஒரு திவ்ய தேசத்தில்)
வந்து தான் பரமபதிக்க வேண்டும் என்று நினைத்து விடுவார்கள்.
அது நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் பெருமையை குறைத்துவிடும் என்று கூறினார்.

ஆழ்வார் “வைகுந்தம் ஆகும் தம்மூரெல்லாம்” – ஸ்ரீவைஷ்ணவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீவைகுந்தம் என்று கூறினார்.
எனவே நாம் எங்கிருந்தாலும் எம்பெருமானையே சார்ந்து இருக்க வேண்டும்.
பலர் திவ்ய தேசத்தில் இருந்தும் கூட அதன் பெருமையை அறியாமல் இருப்பார்கள்.
ஆனால் சிலர் திவ்ய தேசத்தை விட்டுத் தொலைவான இடத்தில் இருந்தாலும் எம்பெருமனையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்
(சாண்டிலினி-கருடன் கதையை நினைவில் கொள்க) .
இதன் மூலம் நாம் பெரிய நம்பியின் மேன்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

அவர் எம்பெருமானை மட்டுமே சார்ந்து இருந்தார்.
நம்மாழ்வார் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழியின் மீது
பெரிய நம்பி வைத்திருந்த பற்றினால் அவருக்குப் பராங்குஶ தாஸர் என்று மற்றொறு திருநாமமும் உண்டு.
பெரிய நம்பி ச்ரிய:பதியினுடைய கல்யாண குணானுபவத்தில் மூழ்கிக் கிடப்பதையும்,
அதிலே அவர் முழுமையாக திருப்தி அடைந்ததையும் அவருடைய தனியனில் காணலாம்.
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:

வார்த்தா மாலையில் எழுபத்து இரண்டாம் வார்த்தை

எம்பெருமானார் பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று –
பிரபத்தி என் -என்று விண்ணப்பம் செய்ய –

கனிப் பழம் -தானே -கம்பு அற்றால் போலே இருக்கும் என்ன –

இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது –
என்று விண்ணப்பம் செய்ய –

ஆகில் இவ் அர்த்தத்தை திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் கேளும் -என்ன –

பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும் விழுக்காடே -ஞான சாரம் -1-
இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய –

அவரும் -சக்ரு தேவ -என்று அருளிச் செய்ய –
சஹ சைவ–சடக்கென திருவடிகளில் விழ வேணும் –

இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று
விண்ணப்பம் செய்ய –

ஆகில் இவ் அர்த்தத்தை திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய –

அவரும் இத்தனை பிசகுகைக்கு உண்டோ –
ஒரு ரேகை மாத்ரம் என்ன –
அதாவது
நாம் பற்றும் பற்று ஸ்வீகாரம் ஆகுமோ -என்ற சங்கை வேண்டாம் –
கையில் உள்ள ரேகை போலே அதிகாரி விசேஷணம் ஆகவே இருப்பது பரிகாரம் என்ற கருத்து –

இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய –

ஆகில் இவ் அர்த்தத்தை ஆழ்வார்
திருவரங்க பெருமாள் அரையர் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய

அவரும் ததீய பர்யந்தமாக காணீர் -என்று அருளிச் செய்தார் –
பாகவத அபிமானத்துக்கு விஷயம்
ஆகிறவனுக்கு பிரபத்தி ஏற்பட்டு எம்பெருமான் அருள் கிட்டும் –

பராங்குச தாசர் -1025 திரு நக்ஷத்ரம் -இந்த 2022 வருஷம்
கண்ணி நுண் சிறுத்தாம்பு தனியன் அருளிச் செய்தார் –

பிரபத்தி
1-கனிப் பழம் காம்பு அற்றால் போலே இருக்கும் -பெரிய நம்பி -ஸ்வ ரக்ஷணம் விட வேண்டுமே —
பழம் கெட்டுப் போகும் முன்பு காம்பு அற வேண்டும்
பூ தண்டு காய் பழம் வேறே வேறே நிலைகள் வாழை மரம் உண்டே
கனி தானாகவே காம்பை வெட்டிக் கொள்ளாதே
மரத்திலிருந்து பக்குவமாகாத பழங்களைப் பறிக்கிறவன் அவைகளிலிருந்து ரஸத்தை அடைய மாட்டான்.
அந்த மரத்தினுடைய விதையும் நசித்து விடுகிறது.
ஆர்த்தி பெருக்கி கைங்கர்ய ருசியை வளர்த்து பக்குவமான பின்பே
தனது தாளிணைக் கீழ் இருத்திக் கைங்கர்யம் கொள்கிறான்

2-மேலும் உள்ள சங்கையை திருக்கோஷ்டியூர் நம்பி இடம் தீர்த்துக் கொள்ளப் போக
ஸக்ருதேவ ஸஹ சைவ -சீக்கிரமாக -சடக்கென பண்ண வேண்டும் –
திருநாரணன் தாள் -காலம் பெற சிந்தித்து உய்மினே-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ

3-காம்பு அறுந்தது காரணமா -நாம் பழம் சாப்பிட -சங்கை வருமே –
பற்றும் பற்றும் உபாயம் இல்லையே –
இந்த சங்கையை தீர்க்க
ரேகா சமமாய இருக்கும் –திருமாலை ஆண்டான்

4-நிழலும் அடிதாறுமாக ஆவதற்கு பாகவத அபிமானமும் வேண்டுமே
பாகவத அபிமானமாக இருக்கும் -திருவரங்கப் பெருமாள் அரையர்

ராமானுஜர் வளர்த்த ஆலமரம் போன்ற சம்ப்ரதாயம் நாம் எளிதாக அறிகிறோம்
அதிகாரி விசேஷணமாக இருக்கும்

பெரிய நம்பி தனியன் வாழி பாசுரம் விளக்கம்
யமுனைத் துறைவன் இணை அடியான்
மஹிமா ஆர்ணவம் -ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ர ரத்னம் சொல்லி ராமானுஜர்
வேதாந்தம் மெருகூட்டும் திவ்ய பிரபந்த அர்த்தம் அருளிச் செய்து

அரங்கேசனுக்கு உகந்ததை செய்தவர் வாழியே
பசுபதி கோயில் -தஞ்சாவூர் அருகில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
கர்மாதி இல்லை -மேலும் -ப்ராஹ்மணன் அடித்து இறந்தாலும் ஜடாயுவுக்கு பெருமாள் அடி கிட்டியதே
ஆழ்வான் மடியை விட ஸ்ரீ ரெங்கத்துக்கு ஏற்றமா என்றாரே
உம்பர் தொழும் அரங்கேசருக்கு உகப்பு இது அன்றோ
உகப்புடையோன் வாழியே -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்று இருக்குமே

ஓங்கு தனுர் கேட்டை -தொண்டர் அடிப்பொடி நிஷ்டை –
திருக்கச்சி நம்பி பற்றி கலாபக் காலத்தில் இவரே எழுந்து அருளி ராமானுஜர் மனக்கவலை தீர்த்தார் –
தங்கி உத்ஸவம் சேவிக்காமல் –

வம்பவிழ் தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
ராமானுஜர் உடையார் அருளப்பாடு இன்றும்

பிரமாணம் த்வயம்
ப்ரமேயம் -அத்திகிரி அருளாளப் பெருமாள்
பிரமாதா -நீரே -என்று ராமாநுஜரையே காட்டி அருளினார்
முன்னோர்க்கு திருமுடி சம்பந்தம்
பின்னோர்க்கு திருவடி சம்பந்தம்
இவரே உத்தாரக ஆச்சார்யர்
மற்றவர்கள் உபகார ஆச்சார்யர்கள்

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து
(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் |
பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
(சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.)என்றும்,

(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் |
அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே
பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி
“நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை.
ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை.
ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே
அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ; இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை.

“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்ட வீரன்” என்றும்,
ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா -(ரா-பா 67.22)
(ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்)என்றும் சொல்லுகிறபடியே,

“தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர்.
அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார்.
இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச் செய்வர்.

மாறனேர் நம்பிக்கு வாழ்வு அளித்தான் வாழியே
பாகவத பிரபாவம் அருளிச் செயல்கள் வெறுமனே இல்லையே –
என்ன சொல்லி உயிர் விட வேண்டும் -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் உண்டே
பெண் கண்ட பித்தன் வார்த்தை அது வராஹ சரம ஸ்லோகம்
அந்த பித்தே நமக்கு வாழ்வு

எம்பருமானார் முனிவர்க்கு ஹிதம் உரைத்தான் வாழியே
த்வயம் -ஆச்சார்ய அபிமானம் -ராமர் கோஷ்ட்டி இல்லை ராமானுஜர் கோஷ்ட்டி பிள்ளை உறங்கா வல்லி தாஸர் –
கமுகுக்கு தண்ணீர் விட்டால் அருகில் உள்ள வாழைக்கும் உண்டே
எனக்கும் இந்த சங்கை -பெரிய நம்பி ஆளவந்தார் நமக்கு உண்டு -உமக்கு நான் உண்டு
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சங்கிலித் தொடர் உண்டே -காட்டி அருளிய ஹிதம் –

எழில் பெரிய நம்பி திருவடி ராமானுஜர் எப்பொழுதும் வாழியே –

அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுர் கேட்டை தனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ் தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

———–

ஸ்ரீ கூர நாராயண ஜீயர்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர்
பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்
நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ ஸூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்)
சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின் ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
நலம் திகழ் நாராயண ஜீயர், நாராயண முனி, பெரிய ஜீயர், ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “எடுத்த கை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில் ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீஸூக்த பாஷ்யத்தையும் நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம், ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும்
நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

முன்பு நம்பெருமாள் திருக் காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்திப் பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைப்பட,
ஜீயர் சுதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸ்ரீ ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இப்படிப்பட்ட சிறந்த பெருமைகள் பெற்ற ஸ்ரீ கூர நாராயண ஜீயர் திருவடிகளில்
பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் நமக்கும் கிட்டப் ப்ரார்த்திப்போமாக.

இவரது தனியன்:

ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்

ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் என்று இதன் பொருள்.

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில் ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக் காவேரியில் கண்டருளும் போது திடீர் பெள்ளப் பெருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக் குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்

ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: