ஸ்ரீ ஸூகர் கூறுகிறார்
எப்போதும் உண்மையே பேசும் சத்யவாதிகளான ப்ராஹ்மணர்களே
எல்லா பாபங்களையும் அடியோடு அழிக்கும் சக்ர தீர்த்தத்தின் மஹாத்ம்யத்தைச் சொல்கிறேன்
எவன் ஒருவன் சக்ர தீர்த்தத்தின் மஹிமையைக் கேட்க்கிறானோ அவன் பரமபதத்தையே அடைகிறான்
அன்ன தானம் கோ தானம் தீர்த்த தானம் போன்றவற்றை ஒரு போதும் செய்யாதவனாய் இருந்தாலும்
சக்ர தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பரி ஸூ த்தனாகி விடுகிறான்
ஆதலால் சக்ர தீர்த்தம் மிகவும் பரிசுத்தமானது –
முன்பு ஒரு கால் ஸ்ரீ வத்ஸ கோத்ரரான பத்ம நாதர் என்கிற ஒரு முனிவர்
இந்த சக்ர புஷ்கரணிக் கரையில் கடும் தவம் புரிந்தார்
அவர் கருணை கொண்டவர் =ஐம் புலன்களை அடக்கியவர் -தன்னைப் போலவே பிற உயிர்களையும் நினைப்பவர் –
ஆசை அற்றவர்
சில ஆண்டுகள் உலர்ந்த இலைகளையும் -சில ஆண்டுகள் தண்ணீரையும் மட்டும் ஆகாரமாக உட் கொண்டு
தேவர்களாலும் செய்ய முடியாத கடும் தவத்தை பன்னிரண்டு ஆண்டுகள் செய்தார்
அந்தத் தபஸ்ஸினால் மகிழ்ந்த ஸ்ரீ நிவாஸன் சங்கு சக்ர கதா பாணியாய் அந்த முனிவருக்குப் பிரத்யக்ஷமானார்
அப்போது அலர்ந்த தாமரை இதழ் போன்ற திருக்கண்களைக் கொண்டவரான பகவான்
கோடி ஸூர்ய ப்ரகாசத்தோடு எதிரில் நின்றார்
சங்கு சக்ரத்தைத் தரித்துக் கொண்டு இருப்பவரும் மிகவும் சாந்தமானவரும் கருணைக் கடலும்
மஹாத்மாவுமாகிற ஸ்ரீ நிவாஸனை நேரில் கண்டு ஸ்தோத்ரம் செய்கிறார் –
தேவாதி தேவனும் -சார்ங்க பாணியுமான -நாராயணாத்ரியில் வாஸம் செய்து அருளுபவனும் –
திரு வேங்கட நாதனுமான ஸ்ரீ நிவாசனுக்கு நமஸ்காரங்கள் –
பாபங்களை போக்குகிறவனும் வாஸூதேவனும் விஷ்ணுவும் சேஷா சலத்தில் வாழ்பவனுமான
ஸ்ரீ நிவாசனுக்கு என் ப்ரணாமங்கள் –
மூ வுலகு நாதனாகவும் -எல்லா உருவங்களாகவும் -நினைத்த பொழுதில் கண் முன்னே ஸேவை சாதிப்பவனும்
ப்ரஹ்மாதிகளால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ நிவாசனுக்கு எனது ப்ரணாமங்கள்
தாமரைக் கண்ணனும் பாற்கடலில் பள்ளி கொண்டு இருப்பவனும் திஷ்டர்களான ராக்ஷஸர்களை அழிப்பவனுமான
ஸ்ரீ நிவாசனுக்கு எனது அஞ்சலி
பக்தர்களுக்குப் பிரியமானவனும் தேவர்களுக்குத் தலைவனும் தன்னைச் சரண் அடைந்தவர்களின்
துன்பங்களை அழிப்பவருமான ஸ்ரீ நிவாசனுக்கு எனது நமஸ்காரங்கள்
யோகிகளின் தலைவனும் வேதங்களால் எப்போதும் அறியத் தகுந்தவனும் விஷ்ணுவும்
பக்தர்களின் பாபங்கள் அனைத்தையும் அழிப்பவனுமான ஸ்ரீ நிவாசனே உனக்கு ஓர் அஞ்சலி என்று ஸ்தோத்ரம் செய்தார் –
சக்ர தீர்த்த வாஸியான பத்ம நாபா முனிவரால் ஸ்துதிக்கப் பட்டவனும் உலக மயமாக இருப்பவனும்
மிகப் பெருமை யுடையவனும் திரு வேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
கருணைக் கடலும் புருஷோத்தமனுமான ஸ்ரீ நிவாஸன்
மிக சாந்தமானவரும் தர்ம சிந்தை யுடையவரும் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டருமான பத்ம நாபரைக் குறித்து
அம்ருத தாரை போன்று இனிமையான ஒரு வார்த்தை சொன்னார்
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரே -என்னுடைய திருவடித் தாமரைகளைப் பூஜிக்கும் பாக்ய ஸாலியே
நீர் இந்த சக்ர தீர்த்தத்தின் கரையிலேயே இந்தக்கல்பம் முடியும் வரை என்னைப் பூஜித்துக் கொண்டு இரும்
என்று ஸ்ரீ நிவாஸன் அங்கெ அருளிச் செய்து பார்வையிலே இருந்து மறைந்தார்
அவர் மறைந்தவுடன் மஹா புத்திசாலியான பத்ம நாபா முனிவர் சக்ர தீர்த்தத்தின் கரையிலேயே வாஸம் செய்தார் –
ஒரு சமயம் பயங்கரமான உருவத்தையுடைய ஒரு ராக்ஷஸன் நாராயண பக்தரான பத்ம நாதரை
உண்பதற்காகப் பசியோடு ஓடி வந்து அவரைப் பிடித்துக் கொண்டான் –
கருணைக்கடலே -சரணாகதர்களை ரக்ஷிப்பவனே ஆண் புலி போன்றவனே ஸ்ரீ யபதியே
வைகுண்ட நாதா கருடக் கொடியோனே
தாமோதரா ஜகந்நாதா விஷ்ணுவே ஹிரண்யாசூரனை அழித்தவனே வேங்கடேசா
முதலையால் பீடிக்கப்பட்ட யானையைக் காப்பாற்றியது போலவும் ப்ரஹ்லாதனைக் காப்பாற்றியது போலவும்
இந்த ராக்ஷஸனிடம் இருந்து என்னைக் காப்பாற்று என்னைக் காப்பாற்று என்று
சக்ர பாணியான நாராயணனைத் துதித்துக் கூவிக் கதறினார் –
ஓ ப்ராஹ்மணர்களே இவ்வாறு கதறி ஸ்தோத்ரம் செய்கிற தன்னுடைய பக்தனாகிய பத்ம நாபற்கு
ஏற்பட்டு இருக்கும் பயத்தை அறிந்து
கருணைக் கடலான சக்ர பாணி ஸ்ரீ நிவாஸன் பக்தனைக் காப்பாற்றுதற்க்காக சக்ராயுதத்தை ஏவினார்
சக்ராயுதம் மிகவும் வேகமாக சக்ர புஷ்கரணிக் கரையை வந்து அடைந்தது –
பல ஸூர்யன் போலேயும் மிகுந்த அக்னி போலேயும் பிரகாசித்துக் கொண்டு மிக்க ஒலியோடு வருகிற
ஸூ தர்சனத்தைக் கண்டு ராஷசன் ஓடினான் –
மஹா ஜ்வாலைகளோடே கூடின ஸூ தர்சனம் ஓடுகின்ற அரக்கனின் தலையை அறுத்துத் தள்ளியது
பிறகு அரக்கன் பூமியில் விழுந்தத்தைக் கண்ட ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான பத்மநாபர்
மகிழ்ந்து ஸூ தரிசனத்தை ஸ்தோத்ரம் செய்தார் –
உலகைக் காப்பாற்றுவதில் உறுதியுடைய விஷ்ணு சக்ரமே —
ஸ்ரீ மன் நாராயணனின் தாமரை மலர் போன்ற வலக்கரத்தில் திரு ஆபரணமே -உனக்கு நமஸ்காரம்
போர்க்களத்தில் அஸூரர்களை அழிப்பதில் ஸமர்த்தரே -பக்தர்களின் துன்பங்களை அழிப்பவரே -உமக்கு நமஸ்காரம்
பயத்தை உண்டு பண்ணும் சகல பாபங்களில் நின்றும் என்னைக் காப்பாற்று
மோக்ஷத்தை அடைய விரும்பும் சேதனர்களின் நன்மைக்காக சக்ர தீர்த்தத்தில் நீர் எப்பொழுதும்
எழுந்து அருளி இருக்க வேண்டும் என்று பத்மநாபர் பிரார்த்தித்தார் —
உலகைக் காப்பாற்றுவதில் உறுதியுடைய விஷ்ணு சக்ரமே —
ஸ்ரீ மன் நாராயணனின் தாமரை மலர் போன்ற வலக்கரத்தில் திரு ஆபரணமே -உனக்கு நமஸ்காரம்
போர்க்களத்தில் அஸூரர்களை அழிப்பதில் ஸமர்த்தரே -பக்தர்களின் துன்பங்களை அழிப்பவரே -உமக்கு நமஸ்காரம்
பயத்தை உண்டு பண்ணும் சகல பாபங்களில் நின்றும் என்னைக் காப்பாற்று
மோக்ஷத்தை அடைய விரும்பும் சேதனர்களின் நன்மைக்காக சக்ர தீர்த்தத்தில்
நீர் எப்பொழுதும் எழுந்து அருளி இருக்க வேண்டும் என்று பத்மநாபர் பிரார்த்தித்தார் —
பத்ம நாபரால் இப்படிச் சொல்லப்பட்ட சக்கரத்தின் பெருமையைக் கேட்ட மஹரிஷிகள்
பத்மநாபரை மிகவும் அன்புடன் கொண்டாடினார்கள் –
ஓ பத்மநாபரே உலகில் எல்லாருக்கும் நன்மை ஏற்படுவதற்காக உத்தமமான
இந்தப் புண்ய தீர்த்தத்தில் நிரந்தரமாக வஸிக்கிறேன்
ராக்ஷசனால் உனக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து மஹா விஷ்ணுவினால் அனுப்பப்பட்டு
என்னால் அந்த ராக்ஷஸ அதமன் கொல்லப்பட்டான்
பகவத் பக்தனான நீ பயத்தில் இருந்து விடுவிக்கப் பட்டாய்
உனக்காகவே உன் வேண்டுகோளின்படியே எல்லா பாபங்களையும் போக்கும்
புண்ய தீர்த்தமாகிய சக்ர தீர்த்தத்தில் இருக்கிறேன் –
நான் இங்கேயே இருக்கிறபடியால் இன்று முதல் இக்குளம் என் பெயராலேயே சக்ர தீர்த்தம் என்று பெயர் பெறும்
இனிமேல் இங்கு யாருக்கும் பூதங்களாலோ ராக்ஷசர்களாலோ ஆபத்து ஏற்படாது
மோக்ஷம் அளிக்கக் கூடிய இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்கிறவன்
புத்ர பவ்த்ராதிகளோடே விளங்குவான் -வம்ச விருத்தி ஏற்படும் –
பிறவிப் பெரும் துயர் நீங்கி ஸ்ரீ வைகுண்டத்தை அடைவான் –
இவ்வாறு சொல்லிவிட்டு பத்மநாபரும் மற்ற மகரிஷிகளும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே
ஸ்ரீ ஸூ தர்சனம் சக்ர தீர்த்தத்தில் பிரவேசித்தது –
ஓ ப்ராஹ்மணர்களே -ஸுநாகாதி மஹ ரிஷிகளே -உங்களுடைய பாபங்கள் எல்லாம் நீங்குவதற்காக
சக்ர தீர்த்த மஹாத்ம்யம் சொல்லப்பட்டது
சக்ர தீர்த்தத்துக்கு நிகராக எந்தத் தீர்த்தமும் இல்லை -இருக்கப் போவதும் இல்லை
இதில் ஸ்நானம் செய்யும் ப்ராஹ்மணர்கள் மோக்ஷம் அடைவார்கள்
இந்த அத்தியாயத்தை சொல்லுகிறவர்களும் கேட்பவர்களும் சக்ர தீர்த்த ஸ்நானத்தால்
அடையும் உத்தம பலன்களை பெறுவார்கள் –
——–
ஸ்ரீ ஸூ தர்சன அஷ்டோத்தர சத நாமாவளி
ஓம் ஸூ தர்சனாய நம
ஓம் சக்ர ராஜாய நம
ஓம் தேஜோ வ்யூஹாய நம
ஓம் மஹா த்யுதயே நம
ஓம் ஸஹஸ்ர பாஹவே நம
ஓம் தீப்தாங்காய நம
ஓம் அருணாஷாய நம
ஓம் ப்ரதாபவதே நம
ஓம் அநேக ஆதித்ய ஸ்ங்காஸாய நம
ஓம் ப்ரோர் த்வஜ் வாலா ப்ரஞ்ஜிதாய நம
ஓம் ஸுவ்தாமி நீ ஸஹஸ்ரா பாயா நம
ஓம் மணி குண்டல சோபிதாய நம
ஓம் பஞ்ச பூத மநோ ரூபாய நம
ஓம் ஷட் கோணாந்தர ஸம்ஸ்திதாய நம
ஓம் ஹாராந்தக் கரண உத்பூத ரோஷ பீஷண விக்ரஹாய நம
ஓம் ஹரி பாணி லஸத் பத்ம விஹாராரா மநோ ஹராய நம
ஓம் ஸ்ராகார ரூபாய நம
ஓம் ஸர்வஞ்ஞாய நம
ஓம் ஸர்வ லோக அர்ச்சித ப்ரபவே நம
ஓம் சதுர் தச ஸஹஸ்ராராய நம
ஓம் சதுர் வேத மயாய நம
ஓம் அதலாய நம
ஓம் பக்த சந்த்ர மச ஜ்யோதிஷே நம
ஓம் பவ ரோக விநாசகாய நம
ஓம் ரேபாத் மகாய நம
ஓம் மகாராத்மநே நம
ஓம் ரஷோ ஸ்ருக் ரூஷி தாங்க காய நம
ஓம் ஸர்வ தைத்ய க்ரைவ நாள விபேதன மஹா கஜாய நம
ஓம் பீம தம்ஷ்ட்ராய நம
ஓம் உஜ்ஜ்வலா காராய நம
ஓம் பீம கர்மணே நம
ஓம் த்ரி லோச நாய நம
ஓம் நீல வர்த்மநே நம
ஓம் நித்ய ஸூ காய நம
ஓம் நிர்மல ஸ்ரீ யை நம
ஓம் நிரஞ்சநாய நம
ஓம் ரக்த மால்ய அம்பர தராய நம
ஓம் ரக்த சந்தன ரூஷி தாய நம
ஓம் ரஜோ குணா க்ருதயே நம
ஓம் ஸூ ராய நம
ஓம் ரக்ஷக் குலய மோபமாய நம
ஓம் நித்ய ஷேம கராய நம
ஓம் ப்ராஞ்ஞாய நம
ஓம் பாஷண்ட ஜன கண்டநாய நம
ஓம் நாராயண ஆஜ்ஞ அநு வர்த்திநே நம
ஓம் நைக மார்த்த ப்ரகாசகாய நம
ஓம் பலி நந்தன தோர் தண்ட கண்ட நாய நம
ஓம் விஜயா க்ருதயே நம
ஓம் மித்ர பாவி நே நம
ஓம் ஸர்வ மயாய நம
ஓம் தமோ வி த்வம்ஸ நாய நம
ஓம் ரஜஸ் ஸத்வ தமோத் வர்த்தி நே நம
ஓம் த்ரி குணாத்மநே நம
ஓம் த்ரி லோக க்ருதே நம
ஓம் ஹரி மாயா குண உபேதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் அஷ ஸ்வரூப பாஜே நம
ஓம் பரமாத்மநே நம
ஓம் பரஞ் ஜ்யோதிஷே நம
ஓம் பஞ்ச க்ருத்ய பராயணாய நம
ஓம் ஞான பல ஐஸ்வர்ய வீர்ய தேஜ ப்ரபா மயாய நம
ஓம் ஸதஸத் பரமாய நம
ஓம் பூர்ணாய நம
ஓம் வாங் மயாய நம
ஓம் வரதாய நம
ஓம் அச் யுதாய நம
ஓம் ஜீவாய நம
ஓம் ஹரயே நம
ஓம் ஹம்ஸ ரூபாய நம
பின் பஞ்சா ஸத் பீட ரூபகாய நம
ஓம் மாத்ருகா மண்டலாத் யஷாய நம
ஓம் மது த்வமஸிநே நம
ஓம் மநோ மயாய நம
ஓம் புத்தி ரூபாய நம
ஓம் ஸித்த ஸாக்ஷிணே நம
ஓம் சாராய நம
ஓம் ஹம்ஸாஷர த்வயாய நம
ஓம் மந்த்ர யந்த்ர ப்ரபாவாய நம
ஓம் மந்த்ர யந்த்ர மயாய நம
ஓம் விபவே நம
ஓம் ஸ்ரஷ்ட்ரே நம
ஓம் க்ரியாஸ் பதயே நம
ஓம் ஸூ த்தாய நம
ஓம் மந்த்ரே நம
ஓம் போக்த்ரே நம
ஓம் த்ரி விக்ரமாய நம
ஓம் நிராயுதாய நம
ஓம் அஸம்ரம்பாய நம
ஓம் ஸர்வாயுத ஸமந்விதாய நம
ஓம் ஓங்கார ரூபாய நம
ஓம் பூரணாத்மநே நம
ஓம் அஹங்காராத் ஸாத்ய பஞ்ச நாய நம
ஓம் ஐங்காராய நம
ஓம் வாக் ப்ரதாய நம
ஓம் வாக்மிநே நம
ஓம் ஸ்ரீம் கார ஐஸ்வர்ய வர்த்த நாய நம
ஓம் க்லீம்கார மோஹ நாகாராய நம
ஓம் ஹும் பட் சோபணா க்ருதயே நம
ஓம் இந்த்ர அர்ச்சித மநோ வேகாய நம
ஓம் தரணீ பார நாசகாய நம
ஓம் வீரராத்யாய நம
ஓம் விஸ்வ ரூபாய நம
ஓம் வைஷ்ணவாய நம
ஓம் விஷ்ணு பக்திதாய நம
ஓம் ஸத்ய வ்ரதாய நம
ஓம் ஸத்ய பராய நம
ஓம் ஸத்ய தர்ம அநு ஷஞ்ஜகாய நம
ஓம் நாராயண க்ருபா வ்யூஹ தேஜஸ் சக்ராய நம
ஸ்ரீ விஜய வல்லி ஸமேத ஸ்ரீ ஸூ தர்சன பர ப்ரஹ்மணே நம —
———-
ஸ்ரீ ஸூ தர்சன மந்த்ர ஜபம் செய்யும் முறை
அஸ்ய ஸ்ரீ ஸூ தர்சன மஹா மந்த்ரஸ்ய
அஹிர் புத்ந்யோ ரிஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ ஸூ தர்சன மஹா விஷ்ணுர் தேவதா
ரம் பீஜம் -ஹும் சக்தி -பட் கீலகம் –
ஸ்ரீ ஸூ தர்சன ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஜபே விநியோக –
கர ந்யாஸம்
1-ஓம் ஆசக்ராய நம -அங்குஷ்டாப்யாம் நம
2-ஓம் விசக்ராய நம -தர்ஜ நீப் யாம் நம
3-ஓம் ஸூ சக்ராய நம -மத்ய மாப் யாம் நம
4-ஓம் த்தீ சக்ராய நம –அநாமி காப் யாம் நம
5-ஓம் ஸச் சக்ராய நம –கனிஷ்டி காப் யாம் நம
6-ஓம் ஜ்வாலா சக்ராய நம –கரதல கர ப்ருஷ்டாப் யாம் நம
ஹ்ருதயாதி ந்யாஸம்
1-ஓம் ஆசக்ராய நம -ஹ்ருதயாய நம
2-ஓம் விசக்ராய நம -சிரஸே ஸ்வாஹா
3-ஓம் ஸூ சக்ராய நம – சிகாயை வஷட்
4-ஓம் த்தீ சக்ராய நம –கவஸாய ஹும்
5-ஓம் ஸச் சக்ராய நம –நேத்ர த்ராயாய வவ்ஷட்
6-ஓம் ஜ்வாலா சக்ராய நம –அஸ்த்ராய பட்
ஓம் பூர்ப் புவஸ் ஸூரோம் இதி திக் பந்தஸ்
த்யானம்
சங்கம் சக்கரம் ச சாபம் பரசும் அஸி மிஷும் சூல பாச அங்குச அப்ஜம்
பிப் ராணம் வஜ்ர கேடவ் ஹல முசல கதா குந்த மத் யுக்ர தம்ஷ்ட்ரம்
ஜ்வாலா கேசம் த்ரி தேத்ரம் ஜ்வல தனல நிபம் ஹார கேயூர பூஷம்
த்யாயேத் ஷட் கோண ஸம்ஸ்தம் ஸகல ரிபு ஜன ப்ராண ஸம்ஹார சக்ரம்
லம் -ப்ருதிவ்யாத்மநே –கந்தாம் தாரயாமி
ஹம் -ஆகாசாத்மநே -புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம் -வாயுவாத்மநே –தூபம் ஆக்ராபயாமி
ரம் -அக்னியாத்மநே –தீபம் ஸந்தர்சயாமி
வம் -அம்ருதாத்மநே –அம்ருதம் நிவேதயாமி
ஸம் -ஸர்வாத்மநே -ஸர்வ உபசாரான் ஸமர்ப்பயாமி
———-
ஷட் அக்ஷரீ மந்த்ரம்
ஓம் ஸஹஸ்ரார ஹும் பட்
ஸூ தர்சன காயத்ரி
ஓம் ஸூ தர்சநாய வித்மஹே மஹா ஜ்வாலாயா தீ மஹி
தன்னஸ் சக்ர ப்ரசோதயாத்
ஸூ தர்சன மாலா மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபீ ஜன வல்லபாய பராய பரம் புருஷாய
பரமாத்மநே பர கர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஒவ்ஷத அஸ்த்ர சஸ்த்ராணி
ஸம் ஹர ஸம் ஹர ம்ருத்யோர் மோஸய மோசய
ஓம் நமோ பகவதே மஹா ஸூ தர்சநாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வ திக் ஷோபண கராய
ஹூம் பட் ப்ரஹ்மணே பரம் ஜ்யோதிஷே நம –ஸ்வாஹா
ஸ்ரீ நரஸிம்ஹ மந்த்ரம்
ஓம் ஷ்ராம் ஹ்ரீம் ஷரவ்ம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம் யஹம்
ஓம் ஷ்ரவ்ம் நாரஸிம்ஹாய நம
ஸ்ரீ நரஸிம்ஹ காயத்ரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீ மஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்
ஸ்ரீ விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
ஸ்ரீ லஷ்மீ காயத்ரி
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை தீ மஹி
தந்நோ லஷ்மீ ப்ரசோதயாத்
ஸ்ரீ லஷ்மீ மந்த்ரம்
ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் ஸ்ரீ ம்
கமலே கமலாலய
ப்ரஸீத ப்ரஸீத
ஸகல ஸுவ்பாக்யம் தேஹி
ஸ்ரீ ம் ஹ்ரீம் ஸ்ரீ ம்
ஓம் மஹா லஷ்ம்யை நம
ஸ்ரீ தன்வந்திரி மந்த்ரம்
ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வா மய வி நாசாய த்ரை லோக்ய நாதாய
ஓம் மஹா விஷ்ணவே நம
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய காயத்ரி
ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே பாவமாநாய தீ மஹி
தன்னச் சங்க ப்ரசோதயாத்
——
ஸ்ரீ ஸூதர்சன ஷட்கம்:
ஸஹஸ்ராதித்ய ஸங்காஸம் ஸஹஸ்ர வதானாம்பரம்
ஸஹஸ்ரதோஸ் ஸஹஸ்ராரம் ப்ரபத்யேஹம் ஸுதர்ஸனம்
ரணத்கிங்கிணிஜாலேந் ராஹஸக்னம் மஹாத்புதம்
வ்யாப்தகேசம் விரூபாக்ஷம் ப்ரபத்யேகம் ஸுதர்சனம்
ப்ராகார ஸகிதம் மந்த்ரம் வதந்தம் சத்ருநிக்ரஹம்
பூஷணை: பூஷிதகரம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம்
புஷ்கராஸ்ய மநிர்தேசம் மஹா மந்த்ரேண ஸம்யுதம்
சிவம் ப்ரஸன்னவதனம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம்
ஹூம்கார பைரவம் பீமம் ப்ரபந்நார்திஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமனம் ப்ரபதேஹம் ஸுதர்ஸனம்
அனந்த ஹாரகேயூர மகுடாதி விபூஷிதம்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம்
ஏதைஷ் ஷட்பி ஸ்துதோ தேவோ பகவான் ஸ்ரீ ஸுதர்ஸன :
ரக்ஷாம்கரோதி ஸர்வாத்மா ஸர்வத்ர விஜயீ பவேத்
———
ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
ஸ்ரீ ஸூதர்சனம் சக்ரம்
ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யேமிமி
தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண் டது போல பிரகாசமானதும்
அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.
ஸ்ரீ பாஞ்சஜன்யம் சங்கு
விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே
மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும்
தன் கம்பீர ஓசையால்அசுரர்களுக்கு ஒலி அச் சத்தைக் கொடுக்கக்கூடியதும்,
வெண்மை வண் ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம்
என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.
ஸ்ரீ கௌமேதகம் கதை
ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும்,
வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிசபாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.
ஸ்ரீ நந்தகம் வாள்
ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்ப தால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன்
காட்சிதரும் நந்தகம் என்னும் பெயருடைய வீரவாளை என்றும் சரணமடை கிறேன்.
ஸ்ரீ சார்ங்கம் வில்
யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும்,
மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான
சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.
இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி
உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான
பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும்
அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.
வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ:
வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும்,
அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு
சகல நன்மைகளையும் அடைவர்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ ஸூகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ விஜய வல்லி ஸமேத ஸ்ரீ ஸூ தர்சன பர ப்ரஹ்மணே நம
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply