ஸ்ரீ கூர நாராயண ஜீயர் அருளிச் செய்த ஸ்ரீ ஸூதர்சன சதகம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமி தெளிவுரை —

ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராத்தே சைவ விஷேத:
சிந்ததீய: சக்ரபாணி: ஸர்வா
கௌக விநாசந: ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத

என்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி,
எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..

சுதர்ஸன காயத்ரி
ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தந்நோ சக்ர ப்ரஜோதயாத்.

சக்கரத்தாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள் உள்ளன.
அவை, சக்கரம் மழு ஈட்டி தண்டு அங்குசம் அக்னி கத்தி ஆகியவை வலப்புற கையிலும்
வேல் சங்கம் வில் பாசம் கலப்பை வஜ்ரம் கதை உலக்கை சூலம் ஆகியவை இடது கையிலும் ஏந்தியுள்ளார்

———-

ஸ்ரீ ஸூதர்சன உபாசகர் –
நூறு ஸ்லோகங்கள் -மந்த்ர ரூபம் –
ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் நோவு சாத்தி இருக்க
ஸ்ரீ கூரத்தாழ்வான் நியமித்து அருளிச் செய்த கிரந்தம்
பூர்ண ஸ்வஸ்தம் அடைந்து மீண்டும் கைங்கர்யம் செய்தாராம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனம் என்றும் சொல்வர் –

ஆழி எழ -திருவாய் -7-4-வென்றி தரும் பத்து மேவிக் கற்பாருக்கே

மார்கழி கேட்டை
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பெரிய நம்பி போல் இவரதும்
கீழ திருச்சித்ர வீதி திரு மாளிகை

——–

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில் ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ரெங்கேச விஜ்ஞப்தி கராம யஸ்ய சகார சக்ரேஸ நுதிம் நிவ்ருத்தியே
ஸமாஸ்ரயேஹம் வர பூரணீம் யஸ் தம் கூர நாராயண நாமகம் முநிம்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரின் நோய் தீர்க்க -அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல
ஸ்ரீ திருவாழி ஆழ்வான் விஷயமாக ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை அருளிச் செய்த
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமியை வணங்குவோம் –

இந்த திவ்ய கிரந்தம் க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யரான ஸ்ரீ ராமானுஜருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே நமக்கு கிடைத்த மஹா நிதியாகுமே –

—–

ஸுவ் தர்சன் யுஜ்ஜி ஹாநா திசி விசிதி திரஸ் க்ருத்ய சாவித்ர மர்ச்சிஸ்
பாஹ்யா பாஹ்ய அந்தகார ஷதஸ் ஜகதக தங்கார பூம் நா ஸ்வதாம் நா
தோர் கர்ஜு தூர கர்ஜத் விபு தரிபுஸ் வதூ கண்ட வைகல்ய கல்யா
ஜ்வாலா ஜாஜ்வல்யமாநா விதரது பவதாம் வீப்ஸயா பீப்ஸிதாநி –1–

அகவிருள் புறவிருள் எனப்படும் இரண்டாலும் தடுமாறும் உலகோருக்கு
அந்த இருட்டுக்களைத் தொலைத்து வாழ வைக்க வல்ல
தன்னொளியாலே ஸூர்யனின் ஒளியைக் கீழ்ப்படுத்தி எங்கும் ஒளி விட்டு வியாபித்து விளங்குவதும்
தம் புஜ பலத்தால் கொக்கரிக்கும் அசுரர்களின் பெண்களைக் கைம் பெண்களாக ஆக்குவதில் வல்லமை பெற்றதும்
எப்போதும் ஒப்புயர்வற்று ஜ்வலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ஸூதர்சன ஜ்வாலையானது
உங்களுடைய விருப்பங்களை எல்லாம் பரிபூர்ணமாக நிறைவேற்றட்டும் –

——–

தேஜஸ்ஸூ பிறவியைப் போக்கி அருளி அந்தமில் பேர் இன்பமே கொடுக்க வல்லது அன்றோ –

ப்ரத்யுத்யா தம் மயூகைர் நபஸி தின க்ருதஸ் ப்ராப்த சேவம் ப்ரபாவிர்
பூமவ் ஸுவ்மேர வீபிர் திவிவரி வஸிதம் தீப்திபிர் தேவதாம் நாம்
பூயஸ்யை பூதயே வஸ் ஸ்புரது ஸகல திக் ப்ராந்த்ர ஸாந்த்ர ஸ்பு லிங்கம்
சாக்ரம் ஜாக்ரத் ப்ரதாபம் த்ரி புவன விஜய வ்யக்ர முக்ரம் மஹஸ் தத் –2-

பூ லோகத்தில் மேரு மலையில் ஒளிகளினால் ஸேவிக்கப் பெற்றதும்
ஆகாசத்தினில் ஸூர்ய கிரணங்களால் எதிர் கொண்டு உபசரிக்கப் பட்டதும்
ஸ்வர்க்க லோகத்தில் தேவர்களுடைய மாளிகைகளின் ப்ரகாசங்களால் ஸூஸ்ருஷை செய்யப் பெற்றதும்
மூ உலகங்களையும் வெல்லும் முயற்சி யுடையதும்
எப்போதும் ப்ரதாபத்தோடு இருந்து கொண்டு எதிரிகளுக்கு பயத்தை உண்டு பண்ணக் கூடியதும்
மிகவும் பிரசித்தமான ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானின் தேஜஸ்ஸூ உங்களுக்கு
அபரிமித ஐஸ்வர்யங்களைக் கொடுப்பதாக விளங்கட்டும் –

——————————–

கவலையை நீக்கி நிரந்தரமான மகிழ்ச்சியை அளிக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் கற்பக வ்ருக்ஷம் என்கிறார் –

பூர்ணே பூரைஸ் ஸூதாநாம் ஸூ மஹதி லஸதஸ் ஸோம பிம்பாலவாலே
பாஹா ஸாகா வருத்த ஷிதி ககன திவஸ் சக்ர ராஜ த்ருமஸ்ய
ஜ்யோதிஸ் சத்மா பிரவாள பிரகடித ஸூமநஸ் ஸம்பதுத்தம் ஸ லஷ்மீம்
புஷ்ணன் நாஸா முகேஷு ப்ரதிஸது பவதாம் ஸ ப்ரகர்ஷம் ப்ரஹர்ஷம் –3-

அம்ருத ப்ரவாஹங்களால் நிறைந்து பரிபூர்ணமாய் –
மிகப் பெருமை பொருந்திய சந்த்ர பிம்பமாகிற பாத்தியில் விளங்குகின்றதும்
திருக்கைகள் ஆகிற கிளைகளினால் பூமி ஆகாசம் ஸ்வர்க்கம் முதலிய இடங்களில் வியாபித்ததாகவும்
இருக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஆகிற கற்பக மரத்தின் புஷ்ப ஸம்ருத்தியையும்
தேவர்களின் செல்வத்தையும் விளங்குவதாகவும்
திசைகளில் எங்கும் பரவி அவற்றுக்கு ஸீரோ பூஷணமாகவும் இருந்து கொண்டு
அழகைத் தருவதாயும் இருந்துள்ள ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் ஜ்யோதிஸ்ஸூ ஆகிற தளிர்
உங்களுக்கு மேன்மை பொருந்திய சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———–

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லது என்கிறார் –

ஆராதாராத் ஸஹஸ்ராத் விசரதி விமத ஷேப தஷாத்ய தஷாத்
நாபேர் பாஸ்வத்ஸ நாபேர் நிஜ விபவ பரிச்சின்ன பூமேஸ் ச நேமே
ஆம் நாயை ரேக கண்டைர் ஸ்துத மஹிமமஹோ மாதவீ யஸ்ய ஹேதே
தத்வோ திஷ்வேதமாநம் சதஸ்ரு ஷு சதுரஸ் புஷ்யதாத் பூருஷார்த்தான் –4-

அரம் அக்ஷம் நாபி நேமி ஆகியவை ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் அவயவங்கள்
அவற்றில் இருந்து தோன்றிக் கிளர்ந்து எழும் ஜ்வாலையே ஸூ தர்சனுடைய ஜ்வாலையாகும்
அப்படிப்பட்ட ஸூ தர்சனுடைய தேஜஸ்ஸூ
உங்களுக்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் மிகுதியாக அள்ளிக் கொடுக் கட்டும் –

————-

ஸ்யாமம் தாம பர ஸ்ருத்யா க்வசன பகவதஸ் க்வாபி பப்ரு ப்ரக்ருத்யா
சுப்ரம் சேஷஸ்ய பாஸா க்வசன பணி ருசா க்வாபி தஸ்யைவ ரக்தம்
நீலம் ஸ்ரீ நேத்ர காந்த்யா க்வசிதபி மிது நஸ்யாதி மஸ்யேவ சித்ராம்
வ்யாதன்வா நம் விதானஸ்ரியம் உபசி நுதாத் சர்ம வச் சக்ர பாநம் –5-

பகவானின் திருமேனி நிறத்தின் பரவலால் சில இடங்களில் ஸ்யாம -பாசியின் நிறமாகவும் –
சில இடங்களில் மஞ்சள் நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் நிறத்தால் சில இடங்களில் வெள்ளை நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் திருமுடியில் இருக்கும் மாணிக்க ஒளியினால் சில இடங்களில் சிகப்பு நிறமாகவும்
கரு நெய்தல் போன்ற பிராட்டியின் கண் ஒளியினால் சில இடங்களில் நீல நிறமாகவும்
ஆக பல பல நிறங்கள் நிறைந்த ஸ்ரீ ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
பெருமாளும் பிராட்டியுமான திவ்ய தம்பதிகளுக்கு அழகிய விதானம் -மேற்கட்டி போல் விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களுக்கு ஸூ கத்தைத் தந்திடுக –

————-

ஸம் ஸந்த்யுந்மேஷ முச்சோஷித பரம ஹஸோ பாஸ்வத கைட பாரே
இந்தே சந்த்யேவ நக்கஞ்சர விலயகரீ யா ஜகத் வந்த நீயா
பந்நூ கச்சாய பந்துச்ச விகடித கநச்சேதமே தஸ்விநீ ஸா
ராதாங்கீ ரஸ்மி பங்கீ ப்ரணதது பவதாம் ப்ரத்ய ஹோத்தா நமே ந –6-

சந்திரன் முதலிய கிரஹங்களின் தேஜஸ்ஸை -மறைத்து -அழித்து -இல்லாதபடி செய்கிறது ஸூர்யனின் ஒளி
அந்த ஸூர்ய உதயத்தை விளங்கச் செய்கிறது ப்ராதஸ் ஸந்த்யை
அதே போல் பிரதிபஷிகளின் வலிமைகளை-தேஜஸ்களை – எல்லாம் அழிக்கும் எம்பெருமான்
சோபையை -சாதுர்யத்தை -விளங்கச் செய்கிறது ஸூ தரிசனத்தின் தேஜஸ்
இரவில் திரியும் துஷ்ட கொடிய ஜந்துக்கள் எல்லாம் ஸூர்ய உதயத்தைக் கண்டவாறே மறைந்து போகும்
இரவில் திரியும் அஸூர ராக்ஷஸர்கள் ஸூ தர்சன ஜ்வாலையைக் கண்டவாறே மறைந்து அழிந்து போவார்கள்
உதய ஸூர்யனின் செவ்விய கிரணங்கள் மேகத்தோடே கலந்து மேகத்தையும் சிவக்க வைக்கும்
ஸூ தர்சன கிரணங்கள் காள மேகத்தோடே கலந்து காள மேகத்தையும் சிவக்கச் செய்யும்
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்கள் பாவத்தை அழிக்கட்டும்

———

ஸாம்யம் தூம்யா ப்ரவ்ருத்தயா ப்ரகடயதி நபஸ் தாரகா ஜாலகா நி
ஸ்பவ் லிங்கீம் யாந்தி காந்திம் திசதி யதுதயே மேரு ரங்கார சங்காம்
அக்நிர் மக்ந அர்ச்சிர் ஐக்யம் பஜதி திநநிசா வல்லபவ் துர்ல பாபவ்
ஜ்வாலா வர்த்தா விவ ஸ்தஸ் ப்ரஹரண பதிஜம் தாம வஸ் தத் திநோது –7-

ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ கிளர்ந்து எழும் காலத்தில் தோன்றும் புகை மண்டலம் ஆகாசம் முழுவதும் பரவுதலால்
ஆகாசம் புகைக்கூண்டு போல் தோற்றம் அளிக்கிறது
நக்ஷத்திரங்கள் எல்லாம் நெருப்புப் பொறிகளாகத் தோற்றம் அளிக்கின்றன
ப்ரகாசகமான மேரு மலையானது பாதி எரிந்த கொள்ளிக் கட்டையைப் போலே ஒளி குன்றிக் காட்சி அளிக்கிறது
ஸூர்ய சந்திரர்கள் ஒளியை இழந்து சிறுவர்கள் விளையாடும் மாவலியில் இருந்து தோன்றும்
ஒளி வட்டம் போல் தோற்றம் அளிக்கின்றனர்
இப்படி எல்லா ஒளிப் பொருள்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்கும் ஸூதர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களை மகிழ்விக்கட்டும் –

————-

த்ருஷ்டே திவ்யோம சக்ரே விகச நவ ஜபா ஸன்னிகாஸே சகாசம்
ஸ்வர் பாநுர் பானுரேஷ ஸ்புடமிதி கலயன் நாகதோ வேக தோஸ்ய
நிஷடப்தோ யைர் நிவ்ருத்தோ விதுமிவ ஸஹஸா ஸ்ப்ரஷ்டு மத்யாபி நேஷ்டே
கர்மாம்சும் தே கடந்தா மஹித விஹதயே பாநவோ பாஸ்வரா வஸ் –8-

ஒரு சமயம் திருவாழி ஆழ்வான் ஆகாசத்தில் ஜபா புஷ்பம் போலே செக்கச்செவேல் என்று காணப்பட்டார்
ராஹு அவரை ஸூர்யனாக எண்ணி அருகிலே செல்ல ஒளியின் மிகுதியால் தாக்கப்பட்டுத் திரும்பினான்
அது முதல் கிரஹண காலத்திலும் உண்மையான ஸூர்யனைப் பிடிக்கச் சென்றாலும்
இவன் ஸூர்யனா ஸூ தர்சன ஆழ்வானா என்று சிந்தித்து முடிவுக்கு வந்த பின்பே ஸூர்யனைத் தாமதித்துப் பிடிக்கிறானாம்
ஸூர்யனை விட பன்மடங்கு ஒளி யுள்ள திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்கள் பகைவர்களை அழித்து ரக்ஷிக்கட்டும் –

————–

தேவம் ஹே மாத்ரி துங்கம் ப்ருது புஜ சிகரம் பிப் ரதீம் மத்ய தேசே
நாபி த்வீபாபி ராமாமர விபி நவதீம் சேஷ சீர்ஷா ஸநஸ்த்தாம்
நேமிம் ப்ர்யாய பூமிம் தினகர கிரணா த்ருஷ்ட ஸீம பரீத்ய
ப்ரீத்யை வஸ் சக்ர வாலா சல இவ விலஸந்நஸ்து திவ்யாஸ்த்ர ரஸ்மி–9-

திருவாழி ஆழ்வானின் நேமியைச் சுற்றி விளங்கும் ஜ்வாலையைப் பார்த்தால் பூமியைச் சுற்றி
லோகாலோக பர்வதம் -சக்ர வாள மலை -விளங்குவது போல் இருக்கிறது –
பூமி பெரிய சிகரத்தை யுடைய மேரு மலையைத் தன்னிடம் கொண்டு இருக்கிறது
தீவுகள் காடுகள் முதலியவற்றோடு திருவனந்த ஆழ்வானின் திரு முடியின் மீது இருக்கிறது
ஸூ தர்சன நேமியும் பூமியைப் போலவே இருக்கிறது
நேமியின் நடுவில் ஸ்ரீ ஸூ தர்சன உருவமே மேரு மலை
அவருடைய புஜங்கள் மேரு மலையின் சிகரம்
அவரது நாபியே தீவு
அரங்களே காடுகள்
பூமியைச் சுற்றி லோகாலோக பர்வதம் இருக்கிறது -இது ஸூர்ய கிரணங்களே புகாத இடம் -இருள் மயம்
இப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதி எப்போதும் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———-

ஏகம் லோகஸ்ய சஷுர் த்விவித மப நுதத் கர்ம நம் ரத்ரி நேத்ரம்
தாத்ரார்த்தாநாம் சதுணாம் கமய தரிகணம் பஞ்ச தாம் ஷட் குணாட்ட்யம்
ஸப்தார்ச்சி ஸ்ஸோஷி தாஷ்டா பத நவ கிரண ஸ்ரேணி ரஜ்யத் தஸாஸம்
பர்யஸ்யாத்வ ஸ்ஸதாங்க வயவ பரிப்ருட ஜ்யோதிரீ தீஸ் ஸஹஸ்ரம் –10-

உலகத்திற்குக் கண் போன்றதும் -புண்ய பாபங்கள் ஆகிற இரு வினைகளையும் போக்கடிப்பதும்
முக்கண்ணனால் -பரமசிவனால் -வணங்கப்படுவதும் –
தர்மார்த்த காம மோக்ஷங்களை அளிப்பதும் -பகைவர்களின் கூட்டங்களை அழிப்பதும்
ஞானம் சக்தி முதலிய ஆறு குணங்கள் நிறையப் பெற்றதும்
தீயில் காய்ச்சப்பட்ட தங்கம் போன்ற சிவந்த கிரணங்களால் பத்து திசைகளையும் வியாபித்து
இருப்பதுமான ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
உங்களுடைய அனைத்து துன்பங்களையும் அழித்து உங்களை ரக்ஷிக்கட்டும்

இந்த ஸ்லோகத்தில் எங்களின் பெயர்கள் அமைத்துள்ளது போல்
கருட பஞ்சாசத்தில் ஐந்தாம் ஸ்லோகம் அமைந்துள்ளது

ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-

ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –

———–

உச்சண்டே யச்சி கண்டே நிபிடயதி நப க்ரோட மர்க்கோட தித்யாம்
அப்யஸ்ய ப்ரவ்டதாப க்லபித வபுரபோ பிப்ர தீர பிரப்பங்க்தீ
தத்தே சுஷ்யத் ஸூ தோத் ஸோ விதுரப மதுந ஷவ்த்ர கோசஸ்ய ஸாம்யம்
ரக்ஷந் த்வஸ்த்ர ப்ரபோஸ்தே ரசித ஸூ சரித வ்யுஷ்ட யோ க்ருஷ்ட யோவ –11-

எந்த ஸூதர்சன ஆழ்வானின் கிரணங்கள் -சுடர்க்கொழுந்து -சுடர் ஒளி ஆகாசத்தை அடைந்தவுடன் அதனால் மிகவும் தபிக்கப்பட்டு
ஸூர்யன் மழை மேகங்களான கரு முகிலுக்குள் புகுந்து புகுந்து ஸஞ்சரிக்கிறானோ
தன்னிடமுள்ள அம்ருதப் பெருக்கு வற்றிப் போய் தேன் அற்ற தேனடை போல் சந்திரன் ஆகிறானோ
மேன்மேலும் புண்ணியத்தை வளர்க்க வல்ல அப்படிப்பட்ட திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்களைக் காத்து அருளட்டும் –
ஆழ்வார்கள் கனலாழி அனலாழி என்றே அருளிச் செய்கிறார்கள் அன்றோ –

————-

திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டம் எங்கும் வியாபித்து
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிக்கிறது –

பத்மவ்கோ தீர்க்கி காம்ப ஸ்வயநி தர தடே கைரி காம்பு ப்ரபாத
ஸிந்தூரம் குஞ்ஜ ராணாம் திசி திசி ககநே ஸாந்த்யமேக ப்ரபந்த
பாராவாரே ப்ரவாளோ வந புவி ச ததா ப்ரேஷ்ய மாண ப்ரமுக்தை
ஸாதிஷ்டம் வ ப்ரபோதம் ஜனயது தநு ஜத் வேஷிண ஸ்த்வைஷ ராஸி –12-

ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் திக்கஜங்களிடம் சிந்தூரப்பொடியாகவும்
ஆகாசத்தில் அந்திப்பொழுது தோன்றும் சிவந்த மேகத்திரளாகவும்
கடலில் பவழமாகவும் காடுகளில் செந்தளிராகவும் பாமர மக்களால் பார்க்கப்படுகின்ற
திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டமானது உங்களுக்கு நல்ல அறிவை உண்டாக்கட்டும்

————

பாநோ பாநோ த்வதீயாஸ் புரதி குமுதி நீ மித்ர தே குத்ர தேஜஸ்
தாராஸ் ஸ்தாரா ததீ ரோஸ்ய நல ந பவதஸ் ஸ்வைர மை ரம்ம தார்ச்சிஸ்
ஸம்ஸன் தீத்தம் நபஸ் ஸ்தா யதுதய ஸமயே சக்ர ராஜாம் சவஸ்தே
யுஷ் மாகம் ப்ரவ்டதாப ப்ரபவ பவகதா பக்ரமாய க்ரமந்தாம் –13-

ஸூ தர்சன கிரணங்களின் உதய காலத்தில் ஆகாசத்தில் திவ்ய விமானங்களில் செல்லும் தேவ கந்தர்வாதிகள்
ஓ ஸூர்யனே உன் ஒளியும் மங்கிப் போய் விட்டதே –
சந்திரனே உன் தேஜஸ்ஸூ என்னவாயிற்று
நக்ஷத்ரங்களே வெகுதூரம் சென்று விடுங்கள்
ஓ அக்னி பகவானே நீ இப்படி ஒளி குறைந்து பல ப்ரகாஸ -ஹீனனாக -ஆகி விட்டாயே
ஓ வஜ்ர அக்னியின் தேஜஸ்ஸே நீ ஸூ தர்சன ஒளியில் கலந்து உருவழிந்து தனித்தன்மையை இழந்து விட்டாயே
என்று கூறும்படி பெருமை வாய்ந்த
ஸூ தர்சன ஆழ்வானின் கிரணங்கள் தாப த்ரயங்களுக்கு பிறப்பிடமாகிய பிறவி நோயைத் தீர்க்கட்டும் –

————

ஜக்த்வா கர்ணே ஷு தூர் வாங்குர மரி ஸூத் ருசா மஹிஷு ஸ்வர்வதூ நாம்
பீத்வா ஸாம்ப ஸ்ஸரந்த்யஸ் ஸ வ்ருஷ மநு கதா வல்லவே நாதி மேந
காவோ வஸ் சக்ர பர்த்துஸ் பரமம்ருத ரஸம் ப்ரஸ்ரிதாம் துஹாநா
ருத்திம் ஸ்வா லோக லுப்த த்ரி புவன தமஸ ஸானு பந்தாம் ததந்தாம் –14-

அஸூர அரக்கர் மாதர்கள் மங்களகரமாகக் காதுகளில் அணிந்து கொண்டிருக்கும் அறுகம் புல்லைத் தின்று
தேவ மாதர்களின் கண்ணீரைப் பருகுகின்றனவும்
தரும நெறியில் சென்று மோக்ஷத்தில் ருசியை உண்டாக்குகின்ற ஸூ தர்சன கிரணங்கள்
நிலையான செல்வத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்
அறுகம் புல்லைத் தின்று தண்ணீரைப் பருகி காளையொடு
சேர்ந்து திரிகின்றவையும் தங்களுக்குப் பின்னால் கண்ணனை கோபாலனை வரப் பெற்றவையும்
அம்ருதம் போன்ற பாலைக் கொடுப்பவையும்
தம் கடாக்ஷத்தினால் மூன்று உலகத்தாரின் அறியாமையும் ஆகிற இருளைப் போக்கி அருளுவதுமான
கண்ணபிரானின் பசுக்கள் உங்களுக்குத் தொடர்ந்து நிலையான செல்வத்தை அளிக்கட்டும் –

————

ஸேநாம் ஸேநாம் மகோநோ மஹதி ரண முகேலம் பயம் லம் பயந்தீ
உத்ஸே கோஷ்ணுலு தோஷ் ணாம் ப்ரதம த்விஷதா மா வலீர்யா வலீடே
விஸ்வம் விஸ்வம் பராத்யம் ரத பததி பதேர் லீலயா பால யந்தீ
வ்ருத்திஸ் ஸா தீதிதீ நாம் வ்ருஜிந மநு ஜனுர் மார் ஜயத் வார்ஜிதம் வ –15–

பெரிய போர் களத்தில் தலைவர்களோடு கூடிய இந்திரா சேனையைப் பயமுறுத்தி செருக்கினால்
போர் செய்யத் துடிக்கின்ற வலிய கைகளைக் கொண்ட அசுரர்களின் கூட்டங்களை அழித்து
பூமி முதலிய எல்லா உலகங்களையும் அவலீலையாக ரஷிக்கின்ற ஸூ தர்சன ஆழ்வானுடைய கிரணங்கள்
நீங்கள் பிறவி தோறும் ஈட்டிய பாவங்களை அழிக்கட்டும்

———

தப்தா ஸ்வேநோஷ் மணேவ ப்ரதிபட வபுஷா மஸ்ர தாரா தயந்தீ
ப்ராப்தேவ ஷீபபாவம் ப்ரதி திச ம ஸக்ருத் தன்வதீ கூர்ணிதாநி
வம்ஸாஸ்த்தி ஸ்போட ஸப்தம் ப்ரகடயதி படூன் யாவ ஹந்த்யட்ட ஹாஸான்
பாஸா வ ஸ்யந்த நாங்க ப்ரபு சமுதயிநீ ஸ்பந்த தாம் சிந்தி தாய –16-

தனது உஷ்ணத்தினால் தாபம் அடைந்தது போல் எந்த திருவாழி ஆழ்வானின் பிரகாஸமானது
எதிரிகளின் உடலில் தோன்றும் ரத்தைப் பெருக்கைப் பருகி பெருமிதம் கொண்டு எல்லாத் திசைகளிலும்
சுற்றிக் கொண்டும் சத்ருக்களின் முதுகு எலும்பை முறிக்கும் பேர் ஒலியை எழுப்பிக் கொண்டும்
அட்டஹாஸ மான பெரும் சிரிப்பை வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறதோ
அந்த ஸூ தர்சன ப்ரபையானது உங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சிறிது புறப்படட்டும் –

———–

தேவை ராஸேவ்ய மாநோ தநு ஜபட புஜா தண்ட தர்போஷ் மதப்தை
ஆசாரோ தோதி லங்கீ லுடதுடு படலீ லஷ்ய டிண்டீரபிண்ட
ரிங்கஜ்ஜ்வாலா தரங்க த்ருடித ரிபு தரு வ்ராத பாதோக்ர மார்க
சாக்ரோ வஸ்ஸோசி ரோக ஸ்ஸ மயது துரிதா பஹ் நவம் தாவ வஹ்னிம் –17-

திருவாழி ஆழ்வானின் ஜ்வாலை ப்ரவாஹம் போன்றது -ஸூர்ய வெப்பத்தினால் தபிக்கப் படுகிறவர்கள்
ஜல ப்ரவாஹத்தில் ஆழ்ந்து மூழ்குவார்கள்
அது போல் அஸூரர்களின் புஜ பலத்தின் செருக்கினால் தபிக்கப் பட்ட தேவர்கள் திருவாழி ஆழ்வானின்
ஜ்வாலப் ப்ரவாஹத்தில் மூழ்கி வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்
ஜலப் ப்ரவாஹம் நுரைகள் மிகுந்து ஜ்வாலையும் கரை கடந்து செல்லும் திசைகளைக் கடந்து செல்கிறது
வெள்ளம் மரங்களை அறுத்து வீழ்த்தி வழிகளை எல்லாம் பயங்கரமாக ஆக்கும்
ஜ்வாலைப் ப்ரவாஹமும் சத்ருக்களின் உடல்களை அறுத்து வீழ்த்தி அச்சத்தை ஏற்படுத்து கிறது
இத்தகைய ஜ்வாலைப் பிரவாகம் உங்களுடைய பாவங்கள் ஆகிற காட்டுது தீயை அணைக்கட்டும் –

———–

ப்ராம் யந்தீ ஸம்ஸ்ரிதாநாம் பிரம சம நகரீச் சத்ந ஸூர்ய ப்ரகாசா
ஸூர்யா லோகாநு ரூபா ரிபுஹ்ருதய தமஸ் காரிணீ நிஸ்தமஸ்கா
தாரா ஸம்பாதி நீ ச பிரகடித தஹநா தீப்திரஸ்த்ரே சிதுர் வ
சித்ரா பத்ராய வித்ரா வித விமத ஐநா ஜாய தாமாய தாய –18–

தன்னிடம் புத்தி பிரமம் இல்லாவிட்டாலும் பிரமத்தினால் சுழற்சியினால் ஆஸ்ரிதர்களின் பிரமத்தைப் போக்குவதும்
ஸூர்யனை மறைத்தாயினும் (ஆழி கொண்டு இரவி மறைத்தான் -நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற -பெரியாழ்வார் )
ஸூரி ஜனங்களின் பண்டிதர்களின் -நல்லறிவு வளர்வதற்கு உதவுவதும்
தன்னிடம் தமஸ்ஸூ இல்லா விட்டாலும் சத்ருக்களின் நெஞ்சில் அஞ்ஞான இருளை உண்டு பண்ணுவதும்
பெரு மழையைத் தருவதாயினும் சத்ருக்களின் மீது அக்னியை வெளிப்படுத்துவதுமான
ஸூ தர்சன ஜ்வாலை உங்களுக்கு மங்களங்களை அளிக்கட்டும் –

———-

நிந்யேவந்யேவ காசீ தவசிகி ஜடில ஜ்யோதிஷா யேந தாஹம்
க்ருத்யா வ்ருத்யா விலில்யே சலப ஸூலபயா யத்ர சித்ர ப்ரபாவே
ருத்ரோப் யத்ரேர் துஹித்ரா ஸஹ கஹந குஹாம் யத் பயா தப்ய யாஸீத்
திஸ்யாத் விச்வார்ச்சிதோ வஸ் ஸ சுப ம நிப்ருதம் சவுரி ஹேதி ப்ரதாப –19-

முன்பு ஒரு கால் ஸூ தர்சன ஜ்யோதி காசீ பட்டணத்தைக் கொளுத்தியது –
பவ்ண்டர வாஸூ தேவ வத வ்ருத்தாந்தம் இத்தை விவரிக்கும் –
துர்வாஸ முனிவரால் தோற்றுவிக்கப் பட்ட க்ருத்யையானது -ஏவல் -ஸூ தர்சன தேஜஸ்ஸில்
வீட்டில் பூச்சி போல் மாண்டு ஒழிந்தது (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-34-31இத்தை விவரிக்கும் )
ஒரு சமயம் திருவாழியின் தேஜஸ்ஸைக் கண்டு பயந்து பரமசிவன் பார்வதியோடு ஓடிச் சென்று
மலைக்குகையில் ஒளிந்து கொண்டு தப்பித் பிழைத்தான் (ஸ்ரீ கூரேச விஜயம் -14 ஸ்லோகம் இத்தை விவரிக்கும் )
அப்படிப்பட்ட பெருமை கொண்ட ஸூ தர்சன ப்ரபாபமானது உங்களுக்கு நிலையான மங்களங்களைக் கொடுக்கட்டும் –

————-

உத்யன் பிம்பாது தாரான் நயன ஜல ஹிமம் மார்ஜயன் நிர் ஜரீணாம்
அஞ்ஞான த்வாந்த மூர்ச்சாகர ஜநிரஜநீ பஞ்ஜந வ்யஞ்ஜி தாத்வா
ந்யக் குர்வாணோ க்ரஹாணாம் ஸ்புரண மப ஹரன் நர்ச்சிஷஸ் பாவ கீயாஸ்
சக்ரே சார்க்க ப்ரகாசோ திசது தச திசோ வ்யச் நு வாநம் யசோவ -20-

ஸூ தர்சன ஸூர்ய பிரகாசம் ஸூ தர்சன ஸூர்ய பிம்பத்தில் இருந்து உண்டாகிறது
தேவமாதரின் கண்ணீர் ஆகிய பனியை நீக்குகிறது
மோகத்தை உண்டு பண்ணும் ஸம்ஸாரமாகிற ராத்ரியை அழித்து விவேகத்தை ஏற்படுத்தி
நல்ல வழியை விளக்கிக் காட்டுகிறது
கிரஹங்களின் ஒளியை மழுங்கச் செய்கிறது -அக்னியின் ஒளியைக் கொள்ளை கொள்கிறது
கோடி ஸூர்ய ப்ரகாஸத்தை யுடைய இந்த ஸூ தர்சன ஸூர்ய ப்ரகாஸம்
பத்துத் திசைகளிலும் பரவக்கூடிய புகழைக் கொடுக்கட்டும் –

———–

வர்கஸ்ய ஸ்வர்க்க தாம் நாமபி தநுஜ நுஷாம் விக்ரஹம் நிக்ர ஹீதும்
தாதும் ஸத்யோ பலா நாம் ஸ்ரீ ய மதி சயி நீம் பத்ர பங்கா நு வ்ருத்யா
யோக்தும் தே தீப்யதே யா யுகபதபி புரோ பூதி மய்யா ப்ரக்ருதியா
ஸாவோ நுத்யா தவித்யாம் த்யுதி ரம்ருத ரஸ ஸ்யந்தி நீ ஸ் யாந்த நாஙகீ–21-

மோக்ஷ ரஸத்தைப் பெருக்கும் திருவாழி ஆழ்வானின் ப்ரகாஸமானது ஒரே சமயத்தில்
அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்படும் விரோதத்தையும் அசுரர்களை ஒழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகப் பெண்களுக்கு மென்மேலும் ஸம்பத்தைக் கொடுப்பதற்கும்
அசுரர்களின் சேனைகளின் உள்ள வாகனங்களை அழிப்பதால் செல்வத்தை அழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகத்தில் ஐஸ்வர்யம் நிரம்புவதற்கும்
அசுரப் பட்டணங்களை சாம்பலாக்குவதற்கும் சக்தி யுள்ளதாக விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன த்யுதியானது உங்களுடைய அஞ்ஞானத்தை நீக்கட்டும் –

அஸுர ஸமூஹ த்வம்சமும் தேவ ஸமூஹ ஜீவனமும் ஒரே சமயத்தில் நிகழ்வது ஆலங்காரிக நியாயம்

—————

தாஹம் தாம் ஸபத் நான் சமரபுவி லஸத் பஸ்மநா வர்த்மநா யான்
க்ரவ்யாத ப்ரேத பூ தாத்யபி லஷித புஷா ப்ரீத காபாலிகே ந
கங்கா லை கால தவ்தம் கிரிமிவ குருதே யஸ் ஸ்வ கீர் தேர் விஹர்த்தும்
க்ருஷ்டிஸ் ஸாந்த்ருஷ்ட்டிகம் வ ஸகல முப நயத்வாயு தாக்ரே சரஸ்ய –22-

திருவாழி ஆழ்வானின் கிரணமானது போர்க்களத்தில் அசுரர் ராக்ஷஸர்கள் தேஹங்களை நீறு படக் கொளுத்தி பஸ்மம் படிந்ததும்
அவர்களுடைய சரீரத்தின் மாம்சங்களால் பூத ப்ரேத பிசாசுகளுக்கு திருப்தி அளித்ததும்
அழித்த உடல்களின் வெண்மையான எலும்புகளை மலையாகக் குவித்துத் தன் காதலியான கீர்த்திக்கு புகழுக்கு
விளையாட்டு வெள்ளி மலையாகச் செய்ததுமாய் விளங்குகிறது
அந்த ஸூ தர்சன கிரணம் உங்களுக்கு எல்லா வகையான பலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் –
___________________________________________

“தக்தாநாம் தாநவாநாம் ஸபஸிதநிசயை;அஸ்த்திபிஸ் ஸர்வ சுப்ராம்
ப்ருத்வீம் க்ருத்வாபி பூயோ நவருதிர ஜரீ கௌதுகம் கௌணபேப்ய:
குர்வாணம் பாஷ்ப பூரை: குசதடகுஸ்ருண க்ஷாலநைஸ் தத்வநூ நாம்
பாபம் பாபச்யமாநம் சமயது பவதாம் சஸ்த்ரராஜஸ்ய தேஜ:”.–23-

ஸூதர்சன தேஜஸாலே அசுரர்கள் கொளுத்தப்பட்டு, அவர்களுடைய சரீரத்திலுள்ள மாம்ஸங்களும் நன்கு உண்ணப்பட்டு ,
எலும்பும் நீறுமே எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டு , இனி நமக்கு உணவு கிதைக்க வழியே இல்லையே என்று
பூதப்ரேதாதிகள் ஏங்கி இருந்தன.
ஸூதர்சன கிரண பிரகாசத்தைக் கண்ட அசுரமாதர்கள் தங்களுடைய கணவர்கள் இறந்தார்கள் என்பதை அறிந்து
கண்ணீர்விட்டு அழுந்தார்கள். அக்கண்ணீர் பெருக்கு அவர்களுடைர மார்பில் இருந்த குங்குமங்களை அழித்து சிவப்பாகப் பெருகிறது.
இதைக் கண்ட அந்த பூதப்ரேதாதிகள் நமக்கு புதிய இரத்தம் கிடைத்துவிட்டது.பருகி மகிழ்வோம் என்று ஆசைப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஸூதர்சன த்யுதி உங்களுடைய பாபங்களை போக்கடிக்கட்டும்.

___________________________________________

“மாகாந் மோஷம் லலாடநல இதி மதநத்வேஷிணா த்யாயதேவ
ஸ்ரஷ்ட்ரா ப்ரோந்நித்ரவாஸாம்புஜ தலபடலப்லோஷமுத்பச்யதேவ,
வஜ்ராக்நிர் மாஸ்ம நாசம் வ்ரஜதிதி சகிதேநேவ சக்ரேண பத்தை:
ஸ்தோர்த்ரைரஸ் த்ரேச்வரஸ்ய த்யது துரிதசதம் த்யோதமாநா த்யுதிர் வ”.–24-

தன்னுடைய நெற்றிக்கண் நாசம் அடையாமல் இருக்கவேண்டும் என்று எப்போதும் தியானம் செய்யும் ருத்திரனும்,
தன்னுடைய இருப்பிடமான தாமரை மலர் எரிந்து போய்விடாமல் இருக்கவேண்டும் என்று சிந்திக்கும் பிரம்மாவும் ,
தன்னுடைய வஜ்ராயுதத்தின் அக்னி நாசம் அடையாமல் இருக்க வேண்டுமே என்று பயப்படும் இந்திரனும்
எப்போதும் ஸூதர்சன த்யுதியை ஸ்தோத்திரம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஸூதர்சன தேஜஸ் உங்களுடைய நூற்றுக் கணக்கான பாவங்களைக் போக்கட்டும்.

———-

(இதுவரை ஸூதர்சன ஜ்வாலை வர்ணனம்)
25 முதல் 38 வரை நேமி(சக்ரத்தின் மறுபக்கம்) வர்ணம்.
தனித்தனியே பாகங்களை வர்ணித்தாலும் திருவாழியான சுதர்சன பெருமைகளே ஆகும்.

“சஸ்த்ராஸ்த்ரம் சாத்ரவாணாம் சலபகுலமிவ ஜ்வாலயா லேலிஹாநா
கோஷை: ஸ்வை: க்ஷோபயந்தீ விகடித பகவத்யோக நித்ராந் ஸ்முத்ராந்
வ்யூடோர: ப்ரௌடசார த்ருடித படு ரடத் கீகஸ க்ஷுண்ணதைத்யா
நேமிஸ் ஸெளதர்சநீ வ: ச்ரியமதிசயநீம் தாசதாதா சதாப்தம்”.–25-

விட்டில் பூச்சிகளின் கூட்டங்களைக் கவர்ந்து அழிப்பது போல் அசுர ராக்ஷஸர்களின் அஸ்த்ர சஸ்திரங்களை அழிப்பதும்
எம்பெருமானின் யோக நித்திரையைக் தம் ஓசையினால் கலைக்கும் சமுத்திரத்தை தன் கோஷங்களினால் கலங்கச் செய்வதும்,
அசுரர்களின் உடலை அழிப்பதுமான ஸூதர்சன நேமி நூறாண்டுகள் உங்களுக்குச் செல்வம் அளிக்கட்டும்.

மந்த்ர சுத்தமான ஆயுதங்கள் அஸ்திரங்கள்
அமந்த்ரமானவை அஸ்திரங்கள்

———

“தாரா சக்ரஸ்ய தாராகண கண விததி த்யோதிதத்யுப்ரசாரா
பாராவாராம்புபூர க்வதன பிசுநிதோத்தாள பாதாளயாத்ரா,
கோத்ராத்ரிஸ்போடசப்த ப்ரகடித வஸுதாமண்டலீ சண்டயாநா
பந்தாநம் வ: ப்ரதிச்யாத் ப்ரசமநகுசலா பாப்மநாமாத்ம நீநம்”.–26-(கண விததிகுப் பதில் -கபிச க்ருணி பாட பேதம் )

நக்ஷத்திர கூட்டங்கள் போல் தன் தீப்பொறிகளினால் வானத்தை நிறைத்துக்கொண்டு ஆகாச சஞ்சாரம் செய்வதும்,
கடல் நீரையும் வற்றச்செய்து கொண்டு பாதாள லோகத்தில் சஞ்சரிப்பதும் ,
குல பர்வதங்களை யெல்லாம் பிளந்து கொண்டு பூமண்டலத்தில் திரிகின்றதும் ,
பாவங்களைத் தணியச் செய்யவல்லதுமான திருவாழியின் நேமியானது
உங்களுக்கு ஆத்ம ஹிதமான வழியை (அர்ச்சிராதி மார்கத்தை) அல்லது அதற்கு நிகரான ஸத் மார்கத்தையோ கொடுக்கட்டும்.

___________________________________________

“யாத்ரா யா த்ராதலோகா ப்ரகடித வருணத்ராஸமுத்ரே ஸமுத்ரே
ஸத்த்வாஸத்த்வா ஸஹோஷ்மா க்ரு தஸகமிதகஸ்பந்தகாநா ததாநா,
ஹாநிம் ஹா நிந்திதாநாம் ஜகதி பரிஷதாம் தாதவீநாம் நவீநாம்
சக்ரே சக்ரேசநேமிஸ் சமுபஹரது ஸா ஸப்ரபாவப்ரபா வ:”.–27-

உலகங்களை ரக்ஷிப்பதும், ‘தமக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ’ என்று வருணன் நடுங்குவதை
விளக்கிக் கொண்டிருக்கும் கடலில் அடிக்கடி சஞ்சரிப்பதும் , சேதன அசேதனங்களால் தாங்க முடியாத ப்ரதாபத்தை கொண்டதும்,
தன்னுடைய இறகுகளின் உதவியால் ஆங்காங்கு பறந்து சென்று ஜனங்களுக்குப் பலவகையாகத் தொல்லைகளைக்
கொடுத்துக் கொண்டிருந்த மலைகளின் இறகுகளை அழித்து மலைகளின் சஞ்சாரத்தை நிறுத்தி
மலைகளை ஒரே இடத்தில் இருக்குமாறு ஆக்கியதும், அசுரக் கூட்டங்களை அழித்து மேலும் ஒளி பெற்று விளங்குவதுமான
ஸூதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை கொடுக்கட்டும்.

(இந்திரனின் வஜ்ராயுதமே மலைகளின் இறகுகளை வெட்டியதாக சரித்திரம்.ஆயினும்
ஸூதர்சன ஆழ்வானின் சக்தியே வஜ்ராயுதத்தில் அமைந்து இச் செயலை செய்ததாக கொள்ள வேண்டும்.)

___________________________________________

“யத்ராமித்ராந் திதக்ஷௌ ப்ரவிசதி பலிநோ நாம நிஸ்ஸீமதாம்நி
க்ரஸ் தாச ஸ்தாபசீர்ணை: ப்ரகுணிதஸிகதோ மௌக்திகைச் சௌக்திகேயை:
ராசிர் வாராமபாராம் ப்ரகடயதி புநர் வைரி தாராச்ருபூரை:
வ்ருத்திம் நிர்யாதி நிர்யாபயது ஸ துரிதாந்யஸ்த்ரராஜப்ராதி வ:”.–28-

அபரிமிதமான தேஜஸையுடைய ஸூதர்சன நேமியானது சத்ருக்களை அழிப்பதற்கு கடல் வழியாக பாதாள லோகத்திற்கு
சென்ற போது கடல்நீர் வற்றிப்போய் , ஸூதர்சன வெப்பத்தால் சிதறி விழுந்த முத்துக்கள் எங்கும் மணலில் நிறைந்திருந்தன.
அங்கு சென்று அசுரர்களை அழித்துத் திரும்பிய பிறகு , அசுர பத்தினிகளின் கண்ணீர் பெருக்கால் மீண்டும் கடல் நிரம்பியது.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸூதர்சன நேமியானது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.

___________________________________________

“கக்ஷ்யாதௌல்யேந கத்ரூ தநயபணமணீந் கல்யதீபஸ்ய யுஞ்ஜந்
பாதாளநத ப்ரபாதீ நிகிலமபி தம: ஸ்வேந தாம்நா நிகீர்ய,
தைதேப்ரேயஸீநாம் வமதி – ஹ்ருதி ஹதப்ரேயஸாம் பூயஸா ய:
சக்ராக்ரீயாக்ரதேசோ தஹது விலஸிதம் பஹ்வஸாவம்ஹஸாம் வ:”.–29-

திருவாழி ஆழ்வானின் நேமியானது பாதாள லோகம் சென்று நாகங்களின் படங்களிலுள்ள மாணிக்கங்களை ,
தன்னுடைய தேஜஸினால் ஒளி குன்றச் செய்து , அவற்றைப் பகல் விளக்குகளாக ஆக்கியது.
தன் ஒளியினால் அங்கிருந்த இருளைக் கவர்ந்து , விதவைகளான அசுர ஸ்திரீகளின் நெஞ்சில் கொண்டு வந்து தேக்கியது.
இப்படிப்பட்ட திருவாழியாழ்வான் உங்கள் பாவங்களின் பெருமிடுக்கை எரித்து அழிக்கட்டும்.

___________________________________________

“க்ருஷ்ணாம் போதஸ்ய பூஷா க்ருத நயந நய வ்யாஹதிர் பார்கவஸ்ய
ப்ராப்தாமாவே தயந்தீ ப்ரதிபட ஸுத்ருசாம் உத்படாம் பாஷ்ப வ்ருஷ்டிம்,
நிஷ்டப்தாஷ்டாபத ஸ்ரீஸ் ஸமமர சமு கர்ஜிதைருஜ்ஜிஹாநா
கீர்திம் வ: கே தகீபி ப்ரதயது ஸத்ருசம் சஞ்சலா சக்ர தாரா”.–30-

எம்பெருமானாகிற கருமேகத்திற்கு ஆபரணமாகவும் , சுக்கிரனின் கண்ணை அழித்தவனும்,
அசுர ராக்ஷ ஸ்த்ரீகளிடமிருந்து கண்ணீராகிய மழையப் பெருகச் செய்ததும்,
நன்கு காய்ச்சப்பட்ட பொன் போன்று பளப்பளபாக விளங்குவதும் ,
தேவ சேனைகளின் விஜய முழக்கங்களோடு புறப்படுகின்றதும், மின்னல் போன்று சஞ்சலமாயும் இருக்கிற
ஸூதர்சன நேமியானது உங்களுக்குத் தாழம்பூ போன்ற புகழை செழிப்பாக வளரச்செய்யட்டும்.

——–

“வப்ராணாம் பேதநீம் ய: பரிணதிம் அகிலச்லாகநீயாம் ததாந:
க்ஷúண்ணாம் நக்ஷத்ர மாலாம் திசி திசி விகிரந் வித்யுதா துல்யகக்ஷ்யா:
நிர்யாணே நோத்கடேந ப்ரகடயதி நவம் தாநவாரிப்ரகர்ஷம்
சக்ராதீசஸ்ய பத்ரோ வசயது பவதாம் ஸ ப்ரதிச் சித்த வ்ருத்திம்”.–31-

ஸூதர்சன நேமி பத்ரம் என்னும் யானை போன்றது. அந்த யானை தந்தங்களால் கரைகளை இடித்துத் தள்ளும்;
ஸூதர்சனமும் சத்ருக்களின் பட்டணங்களிலுள்ல ப்ராகாரங்களைப் பிளக்கிறது.
தனக்கு அணிவிக்கப்பட்ட இருப்பத்தேழு முத்துக்களைக் கொண்ட நக்ஷத்திர மாலையை யானை
கீழே வீழ்த்திப் பொடியாக்கி இறைத்துவிடும்.
ஸூதர்சனமும் மின்னல் போல் ஒளி மிக்கு இருக்கிறது.
அந்த யானை அபாங்க வழியாக மதஜலத்தைப் பெருக்கும்;
ஸூதர்சனம் ஆடம்பரமாக வெளியில் புறப்படும்போதே எம்பெருமானின் பெருமையை வெளிபடுத்திக் கொண்டு புறப்படும்.
அனைவராலும் கொண்டாடத்தக்க மங்களகரமான அந்த ஸூ
தர்சன நேமியானது உங்களுடைய மனத்தை இஷ்சப்படி திரியாமல் அடக்கியாளட்டும்.

கஜ ஜாதியில் பத்ரம் ஓன்று

___________________________________________

“நாகௌகச் சத்ரு ஜத்ரு த்ருடந விகடித ஸ்கந்த நீரந்த்ர நிர்யத்
நவ்யக்ரவ்யாஸ்ரஹவ்ய க்ரஸந ரஸ லஸஜ்ஜ்வால ஜிஹ்வால வஹ்நிம்
யம் த்ருஷ்ட்வா ஸாம்யுகீநம் புநரபி விததத்யாசி ஷோ வீர்ய வ்ருத்த்யை
கீர்வாணா நிர்வ்ருணாநா விதரது ஸ ஜயம் விஷ்ணு ஹேதி ப்ரதிர் வ:”.–32-

தேவ சத்ருக்களான அசுர ராக்ஷஸர்களின் தோள் பட்டைகளை அறுத்து வீழ்த்துவதால் விரிந்த தோள்களிலிருந்து
பெருகும் மாமிச ரத்தங்களைப் புதிய ஹவிஸ்ஸை பெறுவதில் ஆசையோடு ஜ்வாலையாகிற நாக்கைத்
தீட்டிக்கொன்டு இருக்கும் அக்னியை உடையதும்,யுத்தம் செய்வதில் வல்லதும் மேன் மேலும் வீர்யம் வளர வேண்டும் என்று
தேவர்களால் மங்களாசாசனம் செய்யப்படுவதுமான ஸூதர்சன நேமியானது
எப்போதும் ஐய ப்ரதமாக இருந்து கொண்டு உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்.

___________________________________________

“தந்வாத் வந்யஸ்ய தாராஸ லிலமிவ தநம் துர்கதஸ்யேவ த்ருஷ்டி:
ஜாத்யந்தஸ்யேவ பங்கோ: பத விஹ்ருதிரிவ ப்ரீணநீ ப்ரேம பாஜாம்:
பத்யுர் மாயா க்ரியாயாம் ப்ரகட பரிணதிர் விச்வ ரக்ஷாக் ஷமாயாம்
மாயா மாயாமிநீம் வஸ் த்ருடயது மஹதீ நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.–33-

பாலைவனத்தில் நடந்து சென்று பெருந்தாகம் கொண்டவனுக்கு ஓடும் தண்ணீர் கிடைத்தது போலவும்,
குருடனுக்குப் பார்வை கிடைத்தது போலவும்,நொண்டிக்கு காலால் நடப்து விளையாடும் நிலை கிடைத்தது போலவும் ,
பக்தர்களுக்கு ப்ரீதியை உண்டு பண்ணக் கூடியதும் ஸ்ரீபதியான எம்பெருமானின் இவ்வுலகங்களை ரக்ஷிக்கும் சமயத்தில்
எம்பெருமானாகவே பரிணமிப்பதுமான (மாறுவதுமான) ஸூதர்சன நேமியானது
உங்களுடைய தொடர்ச்சியாக வுள்ள அவித்யையை நீக்கட்டும்.

___________________________________________

“த்ராணம் யா விஷ்டபாநாம் விதரதி ச யயா கல்ப்யதே காம பூர்த்தி:
ந ஸ்தாதும் யத் புரஸ்தாத் ப்ரபவதி கலயா ப்யோஷதீ நாமதீச:,
உந்மேஷோ யாதி யஸ்யா ந ஸமயநியதிம் ஸா ச்ரியம் வ: ப்ரதேயாத்
ந்யக்க்ருத்ய த்யோதமாநா த்ரிபுர ஹர த்ருசம் நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.–34-

சிவன் சம்ஹாரத்தைச் செய்கிறவனாதலால் அவனுடைய நெற்றிக் கண் உலகங்களுக்கு நாசத்தை அழிக்கும்.
ஸூதர்சன நேமியானது லோக ரக்ஷணத்தில் ஊற்றமுடையதாக இருக்கும்.
தவ நிலையில் இருக்கும் சிவனுடைய நெற்றிக் கண்னால் மன்மதன் எரிக்கப்பட்டு சரீரம் இழந்தான்.
தக்ஷ முனிவனின் சாபத்தால் கலைகள் குறைந்து ஒளி குன்றிய சந்திரன் முக்கண்ணனின் கண் எதிரில் காலமாத்ரனாக நின்றான்.
அந்த சந்திரன் கலாமாத்ரனாகவும் சக்ர நேமியின் எதிரில் நிற்க இயலாதவனானான்.
முக்கண்ணனின் நெற்றிக்கண் ஏதோ ஒரு கால விசேஷத்தில் சம்ஹார காலத்தில் திறந்துப் பிரகாசமாயிற்று.
சக்கர நேமியின் பிரகாசம் எல்லாக் காலத்திலும் உண்டு.
இப்படி பலவகைகளாலே முக்கண்ணனின் நெற்றிக் கண்ணை வென்று விளங்கும் சக்ர நேமியானது உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கட்டும்.

___________________________________________

நக்ஷத்ர க்ஷோத பூதி ப்ரகர விகிரண ச்வேதி தாசாவகாசா
ஜீர்ணை: பர்ணைரிவ த்யாம் ஜலதர படலைச் சூர்ணி தைரூர் ணுவாநா,
ஆஜா வாஜாந வாஜா நதரிபுஜ நதாரண்ய மாவர்தமாநா
நேமிர் வாத்யேவ சாக்ரி ப்ரணுதது பவதாம் ஸம்ஹதம் பாப தூலம்.–35-

நக்ஷத்திர கூட்டங்களாகிற சாம்பலை நான்கு பக்கமும் வீசி திகந்தங்களை எல்லாம் வெளுக்கச் செய்ததும்,
மேகக் கூட்டங்களைப் பொடியாக்கி ஆகாசத்தை மறைத்ததும், அசுர ராக்ஷஸர்களாகிற அரண்யத்தில் பெரு வேகத்தோடு சுழல்வதும்
பெருங்காற்று போன்றதுமான சக்ர நேமியானது உங்களுடைய பாபமாகிற பஞ்சுகளை உருவழிக்கட்டும்.
காற்று நிலத்திலுள்ள நீறுகளை வாரியிறைத்துத் திசைகளை வெளுக்கடிக்கும்.
சக்ர நேமியும் நக்ஷத்திரங்களைப் பொடியாக்கி வீசி திகந்தங்களை வெளுக்கச் செய்யும்.
காற்று பழுத்து விழுந்த இலைகளை எல்லாம் வீசி எறிந்து வானத்தை மறைக்கும்.
நேமியும் மேகங்களைப் பொடியாக்கி சிதிலமாக்கி ஆகாசத்தை மறைக்கச் செய்யும்.
காற்று, பெருங்காடுகளை நோக்கிச் செல்லும்.
நேமியும் சத்ருக்களாகிற அரண்யத்தை நோக்கிச் சுழன்று செல்லும்.
காற்று பஞ்சுகளைப் பறக்கடிக்கும்.
சக்ர நேமியும் பாப ராசிகளைப் பறக்கடிக்கும்.
___________________________________________

“க்ஷிப்த்வா நேபத்த்ய சாடீமிவ ஜல தகடாம் ஜிஷ்ணு கோதண்ட சித்ராம்
தாரா புஞ்ஜம் ப்ரஸூநாஞ்ஜலிமிவ விபுலே வ்யோம ரங்கே விகீர்ய,
நிர்வேத க்லாநி சிந்தா ப்ரப்ருதி பரவசா நந்தரா தாந வேந்த்ராந்
ந்ருத்யந் நாநா லயாட்யம் நட இவ தநுதாம் சர்ம சக்ர ப்ரதிர் வ:”.–36-

நடன அரங்கில் நாட்டியமாடும் நாட்டியக்காரனைப் போன்றது சக்ர நேமி.
நாட்டியமாடுகிறவன் நடன அரங்கில் புகும் போது பல வண்ணங்களைக் கொண்ட திரையைத் தள்ளிவிட்டு புஷ்பாஞ்சலி செய்வான்.
சக்ர நேமியும் ஆகாசத்தில் புகும் போது வான வில்லால் பல நிறங்களோடு காட்சியளிக்கும் மேக மண்டலத்தை நீக்கிக் கொண்டு
நக்ஷத்திரக் கூட்டங்களை வாரி இறைக்கும்.
நாட்டியக்காரன் நாட்டியமாடும்போது அபிநயத்தினால் சபையில் சிலருக்கு துக்கம், சிலருக்கு முகவாட்டம்,
சிலருக்கு விசாரம் முதலியவற்றை ஏற்படுத்துவான்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களிடையே துக்கம் வாட்டம் விசாரம் முதலியவற்றை ஏற்படுத்திக் கொண்டு
பலவகை லயங்களோடு கூத்தாடுகிறது.அப்படிப்பட்ட சுதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை உண்டு பண்ணட்டும்.
___________________________________________

ஸூதர்சன நேமியை மேகமாலையாக உருவகித்துக் கூறும் சுலோகம் இது.

“தௌர்கத்யப்ரௌடதாப ப்ரதிபட விபவா வித்ததாராஸ் ஸ்ருஜந்தீ
கர்ஜந்தீ சீத்க்ரியாபிர் ஜ்வலதநல சிகோத்தாமஸெள தாம நீகா,
அவ்யாத் க்ரவ்யாத்வதூடீ நயந ஜலபரைர் திக்ஷú நவ்யாநநாவ்யாந்
புஷ்யந்தீ ஸிந்துபூராந் ரதசரணபதேர் நேமிகா தம் பிநீவ:”–37-

மேகமாலை தாங்கமுடியாத தாபத்தையும் மழையையும் கொடுக்கும்.
ஏழ்மையினால் ஏற்படும் அளவற்ற துக்கத்தைப் போக்கடிக்கும் வகையில் ஸூதர்சன நேமி செல்வ மழையைக் கொடுக்கும்.
மேகங்கள் இடி இடித்துக் கொண்டுக் கிளம்பும்.
பளபளப்பான மின்னல்களைக் கொண்டிருக்கும்.சக்ர நேமியும் கர்ஜித்துக் கொண்டு கிளர்ந்து எழும்; அக்னி ஜ்வாலை மின்னும்.
மேகங்கள் மழை பொழிந்து நதிகளில் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
சக்ரநேமியும் அசுர ராக்ஷஸ பத்னிகளின் கண்களில் கண்ணீர் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன நேமியானது உங்களை காப்பாற்றட்டும்.

___________________________________________

ஸூதர்சன நேமியை யாகம் செய்யும் யஜமானனாக உருவகப்படுத்துகிறது இந்த ஸ்லோகம்.

“ஸந்தோஹம் தாந வாநாம அஜஸமஜமிவாஸ் லப்ய ஜாஜ்வல்ய மாநே
வந்ஹாவந்ஹாய ஜுஹ்வத் த்ரிதச பரிஷதே ஸ்வ ஸ்வபாக ப்ரதாயீ,
ஸ்தோத்ரைர் ப்ரஹ்மாதி கீதைர் முகர பரிஸரம் ச்லாக்க்யசஸ்த் ப்ரயோகம்
ப்ராப்தஸ் ஸங்க்ராம ஸத்ரம் ப்ரதிரஸுர ரிபோ: ப்ரார்த்திதம் ப்ரஸ்நுதாம் வ:”.–38-

யஜமானன் ‘பசூந் ஆலபேத’ என்கிற விதிக்குச் சேர ஆடுகளை வெட்டி யாகாக்னியில் ஆஹூதிகளைச் செய்கிறான்.
ஸூதர்சன நேமியானது அசுர வர்கங்களை வெட்டி வீழ்த்தி யுத்தாக்னியில் இடுகிறது.
பிரம்மா,உத்காதா முதலானவர்கள் உச்சரிக்கும் ஸ்தோத்திரம் ஒலிகள் நிறைந்த இடம் யாக பூமி;
பிரம்மா முதலான தேவர்களால் துதிக்கப்படும் ஸ்தோத்திர ஒலிகள் நிறைந்தது யுத்த பூமி.
சாஸ்த்ர ரூபமான மந்த்ர வாக்யமும் சஸ்த்ர ரூபமான வேத வாக்கியமும் கேட்கப்படும் இடம் யாகபூமி.
கத்தி முதலான சஸ்திரகளின் சப்தங்கள் கேட்கும் இடம் யுத்தபூமி.
இவ்வாறு அசுர ராக்ஷஸர்களை வீழ்துவதும் , தேவ சமூஹம் விரும்புவடைக் கொடுக்கின்றதுமான
திருவாழியின் நேமியானது உங்களுடைய அபேக்ஷித்தைப் பெருக்கட்டும்.

___________________________________________

இனி முதல் 50 வது ஸ்லோகம் வரை அர வர்ணனம்.

அரம் என்பது திருவாழியாழ்வானின் பாகங்களில் ஒன்று.
குடைகளில் கம்பி போல சக்கரத்தில் விளங்கும் பாகம்.
அரங்களை வர்ணித்தாலும் அது திருவாழி யாழ்வானையே துதித்ததாக ஆகும்.

“உத்பாதாலாத கல்பாந் யஸுர பரிஷதா மாஹவ ப்ரார்த்தி நீநாம்
அத்வாந த்வாவபோத க்ஷபண சண தம: க்ஷேபதீபோமாநி
த்ரைலோக்யாகார பாரோத்வஹந ஸஹமணி ஸ்தம்ப ஸம்பத் ஸகாநி
த்ராயந் நாமந்தி மாயாம் விபதி ஸபதி வோஸ்ராணி ஸெளதர்சநாநி”.–39-

உத்பாதம் திடீர் என்று தோன்றும் அசூப நிமித்தங்கள்
யுத்தத்தை விரும்புகிற அசுர கூட்டங்களுக்கு ஏற்படப் போகும் விநாசத்தை முன் கூட்டியே தோற்றுவிக்கும் ஆகாசக்
கொள்ளிக் கட்டை போன்றவைகளாயும்
நல்ல வழி தீய வழிகளை தெரிந்து கொள்வதைக் கெடுக்கும் இருளை நீக்குவதில் தீவட்டிகள் போன்றவைகளாயும்,
மூவுலகமாகிற மாளிகையின் சுமைகளைத் தாங்கும் ரத்ன ஸ்தம்பம் போன்றவைகளாயும் இருக்கிற
திருவாழி யாழ்வானின் அரங்கள் உங்களைக் கடைசி கால ஆபத்திலிருந்து காப்பாற்றட்டும்.

___________________________________________

கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் சக்ர அரங்கள் -கநக லதைகளாக உருவகம் இதில் –

“ஜ்வாலாஜால ப்ரவாள ஸ்தபகித சிரஸோ நாபி மாவால யந்த்ய:
ஸிக்தா ரக்தம்பு பூரைச் சகலித வபுஷாம் சாத்ரவா நீகிநீநாம்,
சக்ரா க்ரீட ப்ரரூடா புஜக சய புஜோ பக்ந நிச்ந ப்ரசாரா:
புஷ்யந்த்ய: கீர்த்தி புஷ்பாண்யர கநக லதா: ப்ரீ தயே வ: ப்ரதந்தாம்”.–40-

திருவாழியாகிறத் தோட்டத்தில் முளைத்தவை யாகிற நாபி என்னும் அவயவத்தைப் பாத்திகளாகக் கொன்டு,
சத்ரு சேனைகளின் ரத்தமாகிற ஜலத்தினால் நனைக்கப்பட்டு ,
அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளின் புஜத்தையே தான் வளர்வதற்குக் கொழு கொம்பாக நாடிச் செல்வதுமாயும் ,
ஜ்வாலைகளாகிற கொழுந்துகளைக் கொத்தாக கொண்டும் விளங்கும் அரங்களாகிற பொற்கொடிகள்
உங்களுடைய ப்ரீதி அதிகமாவதற்காக வளர்ந்து வ்ருத்தி அடையட்டும்.

___________________________________________

சக்கரத்தின் அரங்களும் ஆதிசேஷன் படங்களும் ஒன்று.

“ஜ்வாலா ஜாலாப்தி முத்ரம் க்ஷிதிவலய மிவா விபிப்ரரதீ நேமி சக்ரம்
நாகேந்த்ரஸ்யேவ நாபே; பண பரிஷதிவ ப்ரௌடாத்ந ப்ரகாசா,
தத்தாம் வோ திவ்ய ஹேதேர் மதிமரவிததி: க்க்யாத ஸாஹஸ்ர ஸங்க்க்யா
ஸங்க்க்யாவத் ஸங்க்க சித்தஸ் ஸ்ரவண ஹர குணஸ் யந்தி ஸந்தர்ப்ப கர்ப்பாம்”.–41-

ஆதிசேஷனின் பணங்கள் பூ மண்டலத்தைத் தாங்கி கொண்டிருக்கும்.
அரங்களும் சக்கரத்தின் நேமியைத் தாங்கி நிற்கும்.
பூமண்டலம் சமுத்திரத்தின் திரத்தினால் சூழப்பட்டு இருக்கும்.
நேமியும் ஜ்வாலையால் சூழப்பட்டிருக்கும்.
சுருண்டிருக்கும் பாம்பின் உடம்பிலிருந்து பல படங்கள் பரவி பரந்து இருக்கும்.
ஸூதர்சன நாபியிலிருந்து பல அரங்கள் பணைந்திருக்கும்.
பாம்பு பணங்களில் ரத்தினங்கள் இருக்குமாதலால் ரத்தின ப்ரகாசமாக இருக்கும்.
அரங்களும் ரத்தின ப்ரகாசங்கள் நிறைந்தவையாக இருக்கும்.

இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு பண்டிதர்களின் நெஞ்சையும் காதுகளையும் கவரக் கூடிய சொற்களைச்
சொல்லும்படியான வாக் விலாஸங்களைப் பெருக்கும் புத்தியை அளிகட்டும்.

___________________________________________

“ப்ரம்ஹேசோப க்ரமாணாம் பஹுவித விமத க்ஷோத ஸம்மோதி தாநாம்
ஸேவாயை தேவதாநாம் தநுஜ குலரிபோ: பிண்டிகாத் யங்க பாஜாம்,
தத்தத் தாமாந்த ஸீமா விபஜந விதயே மாநத கண்டாயமாநா
பூமாநம் பூயஸா வோ திசது தசசதீ பாஸ்வராணா மராணாம்”.–42-

தங்கள் தங்களுடைய சத்ருக்களைத் திருவாழி வாழ்வான் பங்கப்படுத்தி அழித்து அருளினர் என்கிற காரணத்தினால்
நன்றி தெரிவிக்கும் வகையில் அத்திருவாழி யாழ்வானை எப்போதும் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு சேவிப்பதற்காக
பிரம்மா சிவன் இந்திரன் முதலிய தேவர்கள் சக்கரத்தின் நாபி முதலிய அவயவங்களை வந்து அடைந்திருக்கிறார்கள்.
அவரவர்களுக்கு உரிய இடங்களை உலகத்தை அளந்து கொடுக்கும் அளவு கோல்களோ என்னும்படி இருக்கும்
அரங்கள் உங்களுக்கு அதிசயமான வியக்கத்தக்க பெருமையை அளிக்கட்டும்.
(சக்கரத்தாழ்வாரின் நாபி முதலான அவயவங்களில் பிரம்மேசாதி தேவர்களை ஆவாஹனம் பண்ணி
இருப்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறது.)

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் ஒரு சமுத்திரமாக ரூபிக்கப்படுகிறார்.

“ஜ்வாலா கல்லோல மாலா நிபிட பரிஸராம் நேமி வேலாம் ததாநே
பூர்வேணா க்ராந்த மத்த்யே புவந மய ஹவிர் போஜிநா பூருஷேண,
ப்ரஸ்ப் பூர்ஜத் ப்ராஜ்ய ரத்நே ரதபத ஜலதா வேதமாநை: ஸ்புலிங்கை:
பத்ரம் வோ வித்ருமாணாம் ச்ரயமர விததிர் விஸ்த்ருணாநா விதத்தாம்”.–43-

சமுத்திரம் அலைகள் மோதுகின்ற கரையை உடையதாக இருக்கும்.
ஸ்ரீ ஸூதர்சனாழவான் ஜ்வாலைகளாகிற அலைகள் மோதும் நேமியாகிற கரையை உடையவர்.
ஜல ரூபமான ஹவிஸ்ஸைப் புஜிகின்ற பூர்வ புருஷனை தன் நடுவில் கொண்டிருக்கும் சமுத்ரம் ,
உலகங்களை எல்லாம் புஜிக்கும் ஸூதர்சன புருஷன் வீற்றிருக்கும் மத்திய ப்ரதேசத்தைக் கொண்டிருக்கும் சக்கரம்.
கடலின் பவழங்கள் இருக்கும்.
பவழம் போன்ற தீப் நொறிகளை யுடைய அரங்களைக் கொண்டிருக்கும் திருவாழி.அரங்களே பவழ ஜ்வாலையை ஒத்திருக்கும்.
கடலில் ரதனங்கள் இருக்கும். திருவாழியிலும் ரத்னங்களே அமைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு க்ஷேமத்தை அளிகட்டும்.

வைஸ்வாரன அக்னியே -கடலில் வடவாக்னியாக ஜாலமாகிற ஹவிஸ்ஸைப்
புஜிக்கும் பரமாத்மா -ப்ரஹ்ம ஸூதரம் சொல்லுமே

___________________________________________

ஸூதர்சன நாபியும் தாமரையும் ஒன்று.-

நா ஸீரஸ் வைர பக்ந ப்ரதிபட ருதிரா ஸார தாரா வஸேகாந்
ஏகாந்த ஸ்மேர பத்ம ப்ரகர ஸஹ சரச் சாயயா ப்ராப்ய நாப்யா,
முக்தாநீ வாங்குராணி ஸ்புரத நல சிகா தர்சித ப்ராக் ப்ரவாளா நி
அவ்யாகாதேந பவ்யம் ப்ரதது பவதாம் திவ்ய ஹேதேரராணி.–44-

தாமரையிலிருந்து அங்குரங்கள் தோன்றும்;
அது போல் நாபியிலிருந்து வெளியில் தோன்றும் அரங்கள் காட்சியளிக்கின்றன.
நாபியே தாமரைப்பூ.
தண்ணீர் பாய்ச்சப் பெற்று தண்ணீரில் நனைந்த விதையிலிருந்தே முளைகள் தோன்றும்.
போர் களத்தில் அழிக்கப்ட்ட அசுர ராக்ஷஸர்களின் ரத்த தாரைகளையே தண்ணீராகப் பெற்று
அரங்களாகிய அங்குரங்கள் தோற்றுவிக்கப் பட்டனவாம்.
அங்குரங்கள் தோன்றும் போது நுனியில் சிவந்த தளிர்களைக் கொண்டிருக்கும்.
இங்கும் ஆரங்களின் அக்னி ஜ்வாலைகள் தளிர்கள் போல் சிவந்திருக்கின்றன.
நன்றாக மலர்ந்த தாமரைகளின் சோபைகளைக் கொண்டது ஸூதர்சன நாபீ கமலம்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அரங்கள் உங்களுக்கு இடையூறு இன்றி க்ஷேமத்தை அளிக்கட்டும்.

___________________________________________

“தாவோல்கா மண்டலீவ த்ரும கண கஹநே பாட பஸ்யேவ வஹ்நே
ஜ்வாலா வ்ருத்திர் மஹாப்தௌ பரவயஸி தமஸி ப்ராதரர்க்க ப்ரபேவ.
சக்ரே யா தாநவாநாம் ஹய கரடிகடா ஸங்கடே ஜாகடீதி
ப்ராஜ்யம் ஸா வ: ப்ரதேயாத் பதமர பரிஷத் பத்மநாபா யுதஸ்ய”.–45-

காட்டுத் தீ பற்றி யெரிந்து மரங்கள் அடர்ந்த காட்டை அழிப்பது போலவும்,
கடலில் படபாக்னி ஜ்வலித்து மிகுதியான தண்ணீரை உட்கொள்வது போலவும்,
ஸூரியன் உதயமாகிப் பேரிருளை அழிப்பது போலவும்,
திருவாழியாழ்வானின் அரச சமூஹம், யானைக் கூட்டம் குதிரைக் கூட்டங்கள் நிறைந்த
அசுர மண்டலத்தில் புகுந்து அசுரர்களை அழிக்கின்றது.
அப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுக்கட்டும்.

___________________________________________

திருவாழியே குடை.-

“தாபாத் தைத்ய ப்ரதாபாத பஸமுசிதாத் த்ராயமாணம் த்ரிலோகீம்
லோலைர் ஜ்வாலா கலாபை; ப்ரகடய தபிதச் சீந பட்டாஞ் சலாநி,
ச்சத்ராகாரம் சலாகா இவ கநக க்ருதாச் ஸெளரிதோர் தண்டலக்நம்
பூயாஸுர் பூஷ யந்த்யோ ரத சரண மர ஸ்ப்பூர்த்தய; கீர்தயே வ”.–46-

வெய்யிலிலிருந்து குடை நம்மைக் காப்பாற்றுகிறது.ஆதலால் குடைக்கு ஆதபத்ரம் என்று பெயர்.
திருவாழி, அசுர ராக்ஷஸர்களின் ப்ரதாபமாகிற தாபத்திலே அகப்பட்டுக் கொண்டு வருந்துகிற உலகங்களைக் காப்பாற்றுகிறது.
குடையில் குடைக் கம்பிகள் இருக்கும்.
அதுபோல சக்கரத்திலும் பொற் கம்பிகள் போன்ற அரங்கள் இருக்கும்.
குடையில் சீனப்பட்டு ஜாலர்கள் தொங்க விடப்பட்டு இருக்கும்.
சக்கரத்தைச் சுற்றி ஜ்வாலைகள் சுழன்று கொண்டிருக்கும். அவை ஜாலர்களாக இருக்கும்.
ஒரு காம்பில் குடை மாட்டப்பட்டு இருக்கும்.
சக்கரமும் பகவானின் திருக் கையாகிற மணிக் காம்பில் மாட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்குக் கீர்த்தியை (புகழை) உண்டு பண்ணட்டும்.

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அரங்கள், யானை கட்டும் கம்பங்களைப் போன்றவை.

“நாபீ சாலா நிகாதாம் நஹந ஸமுசிதாம் வைரிலக்ஷ்மீ வசாநாம்
ஸம்யத் வாரீ ஹ்ருதாநாம் ஸமநுவிதததீ காஞ்ச நாலாந பங்க்திம்.
ராஜ்யா ச ப்ராஜ்யத் தைத்ய வ்ரஜ விஜய மஹோத்தம் பிதாநாம் புஜாநாம்
துல்யா சக்ராரமாலா துலயது பவதாம் தூலவச் சத்ரு லோகம்”.–47-

ஒரு பெரிய சாலையில் யானைகளைக் கட்டுவதற்கென்று பல கட்டுத் தறிகள் நாட்டப் பட்டிருக்கும்.
அது போல் சக்ர நாபியாகிற சாலையில் பல அரங்கள் இருக்கின்றன.
போர்களமே யானைப் படுகுழி. அதில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்ட யானைகள் அசுர ராக்ஷஸர்கள்.
அவர்களுடைய சம்பத்துக்களே யானைப் பேடைகள்.
அவற்றைக் கட்டும் ஆலாநபங்க்தியே ஸ்வர்ணமயமான அரங்கள்.
பகைவர்களை வெல்லும் காலத்தில் கைகளை உயரே தூக்கி ஆராவாரம் செய்வதுண்டு.
அசுர வர்கங்களை வெல்லும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்ய உயரே தூக்கிய புஜ பங்க்திகள் போல் இருக்கின்றன அரங்கள்.
இப்படிப்பட்ட சக்கரத்தாழ்வாரின் அரங்கள் உங்களுடைய சத்ரு வர்க்கத்தை பஞ்சு போல் பறக்கடிக்கட்டும்.

___________________________________________

பூமியைச் சுற்றி இருக்கும் மலை
உள்ளும் புறமும் இரண்டும் இடைவெளி இன்றி உள்ளதால் லோகாலோகம் எனப்படும்
சக்ரவாளம் லோகாலோக பர்வதம் -ஸூர்ய கிரணங்கள் பிரவேசிக்காத பாகம் உண்டே அங்கு
நேமி சக்ரத்தைச் சுற்றி இருப்பதால் லோகாலோகம் -சக்ரவாளமாக ரூபிக்கப்படுகிறது –

“ஆநேமச் சக்ரவாலாத் த்விஷ இவ விததா: பிண்டிகாசண்டதீப்தே:
தீப்தா தீபா இவாஸ்ராத் கஹநரணதமீகாஹீந: பூருஷஸ்ய,
சரணே ரேகாயிதாநாம் ரதசரணமயே சத்ருசௌண்டீர்யஹேம்நாம்
ரேகா: ப்ரத்யக்ரலக்நா இவ புவநமரச்ரேணய: ப்ரீணயந்து”.–48-

நேமியாகிற லோக பர்வதம் வரை பரவி இருக்கும் நாபியாகிற ஸூரிய கிரணங்கள் போன்றவயையும்,
போர்களத்தில் நள்ளிரவில் புகும் ஸூதர்சன புருஷன் அருகில் விளங்கும் தீவட்டிகள் போன்றவையும் ,
சக்கரமாகிற உரைகல்லில் உரைக்கப்பட்ட சத்ரு பராக்ரமமாகிற ஸ்வர்ணத்தின் ரேகைகள் போன்றவையுமான
ஸ்ரீஸூதர்சன அரங்கள் உலகை மகிழ்வுடன் வாழ வைக்கட்டும்.

___________________________________________

திருவாழியைத் தாமரையாக ரூபிக்கிறார்.

“தீப்தைரர்சி : ப்ரரோஹைர் தலவதி வித்ருதே பாஹு நாளேந விஷ்ணோ:
உத்யத் ப்ரத்யோத நாபம் ப்ரதயதி புருஷம் கர்ணிகா வர்ணிகாயாம்,
சூடாலம் வேத மௌளிம் கலயதி கமலே சக்ரநாம் நோபலக்ஷ்யே
லக்ஷ்மீம் ஸ்ப்பாரா மராணி ப்ரதி விததது வ: கேஸர ஸ்ரீகராணி”.–49-

தாமரை பல இதழ்களைக் கொண்டிருக்கும்.
திருவாழியின் வர்த்துலாகாரமான ஜ்வாலையின் ஸமூஹமே இதழ்கள்.
தாமரை மலர் நாளத்தின் நுனியில் இருக்கும்.
திருவாழியும் எம்பெருமானின் திருக் கைகளாகிற நாளத்தினால் தரிக்கப்பட்டு இருக்கிறது.
தாமரையின் நடுவில் கர்ணிகை (மகரந்தம் அடங்கிய பாகம்) என்று ஒன்று இருக்கும்.
சக்கரமாகிய கமலத்தின் நடுவில் மிகவும் ப்ரகாசமுடைய ஸூதர்சன புருஷன் இருக்கிறார்.
தாமரை சிரோ பூஷணமாக இருந்து அலங்கரிக்கும்.
திருவாழியும் வேத சிரஸ்ஸான உபநிஷத்தை அலங்கரிக்கின்றார்.
கமலத்தின் செந்நிறமான தாதுக்கள் உள்ளன.
திருவாழிக் கமலத்தில் அரங்கள் கேஸரங்களாக இருக்கின்றன.
அந்த அரங்கள் உங்களுக்கு லக்ஷ்மீ கடாக்ஷத்தை அளிகட்டும்.

மஹா உபநிஷத் சதபதம் போன்ற வேதாந்த பாகங்களில்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் மகிமைகள் பேசப்படும் –

___________________________________________

சக்கரமே மலை –
நேமியும் நாபியும் அதன் தாழ்வரை –
சிவந்த மலை அருவிகளே அரங்கள்

“தாதுஸ் யந்தைர மந்தை: கலுஷித வபுஷோ நிர்ஜ் ஜராம்ப: ப்ரபாதாந்
அர்சிஷ் மத்யா ஸ்வ மூர்த்யா ரத சரண கிரேர் நேமி நாபீ தடஸ்ய,
வ்யாகுர்வாணார பங்க்திர் விதரது விபுதா லிஸ்த்ருதிம் வித்த கோடீ
கோடீ ரச்சத்ர பீடிகடக கரிகடா சாமர ஸ்ரக்விணீம் வ:”.–50-

நேமியும் நாபியுமாகிற தாழ்வரையைக் கொண்ட சக்ரமாகிற பர்வதத்திலிருந்து ,
கைரிகாதி தாதுப் பொருள்களால் கலங்கி மேலிருந்து கீழே விழும் மலை யருவி வீழ்ச்சிகளைப் போன்ற
ஒளி மிக்க அரங்கள் உங்களுக்கு தன ராசிகளையும் ,
கீரிடம் தோள்வளை மாலை முதலியவற்றை அணிந்து கொண்டு,
திவ்ய சிம்மாசனத்தின் மேல் ஒற்றைக் குடையின் நிழலில் இருபுறமும் சாமரம் வீசப் பெற்று அமரும் பாக்யத்தையும்
பல்லாயிரம் யானைகளைக் கட்டிக் காப்பாற்றி வாழும் வைபவத்தையும் விளைவிக்கட்டும்.

___________________________________________

4- நாபி வர்ணனம்
இது முதல் அறுபத்தொன்றாம் சுலோகம் முடிய நாபி வர்ணனம்.
சுதர்சனாழ்வானின் அவயவங்களில் ஒன்று நாபி.
அவயவங்களுக்கு தனித்தனியாகப் பெருமையைச் சொன்னாலும் அது சுதர்சனாழ்வானுக்கே சொன்னதாக ஆகும்.

“ஜக்யேந் த்வாத சாநா மசிசிர மஹஸாம் தர்சயந்தீ ப்ரவ்ருத்திம்
தத்த ஸ்வர்லோக லக்ஷ்ம்யாஸ் திலக இவ முகே பத்ம ராகத்ரவேண,
தேயாத் தைதேய தர்பக்ஷித கரண ரண ப்ரீணிதாம் போஜநாபி:
நாபிர் நாபித்வ முர்வ்யாஸ் ஸுரபதி விபவ ஸ்பர்கிஸெள தர்சநீ வ:”.–51-

திருவாழியாழ்வானின் நாபி த்வாதச ஆதித்யர்களும் ஒன்று சேர்ந்து சக்ர நாபியாக ஆயிற்றே
என்று சொல்லும்படி ப்ரகாசமாக இருக்கிறது.
ஸ்வர்க லோக சாம்ராஜ்ய லக்ஷ்மியின் முகத்தில் பத்மராக மணியின் திரவத்தால் இடப்பட்ட திலகம் போன்று இருக்கிறது.
அசுரர்களின் கொழுப்பை அடக்கவல்ல போர் முறையினால் எம்பெருமானை மகிழ்விப்பதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நாபியானது செல்வச் சிறப்பு மிக்க இந்திரனுடைய ஆட்சிக்கு சமமான அரசாட்சியை உங்களுக்கு அளிக்கட்டும்.

___________________________________________

ஸூதர்சன நாபியை படபாக்னியாக ரூபகம் செய்கிறார்.

“சஸ்த்ர ஸ்யாமே சதாங்க க்ஷிதிருப்தி தரளை ருத்தரங்கே துரங்கை:
த்வங்கந் மாதங்க நக்ரே குபிதபட முகச்சாய முக்த ப்ரவாளே:
அஸ்தோகம் ப்ரஸ்துவாநா ப்ரதிபட ஜலதௌ பாடவம் பாடபஸ்ய
ஸ்ரேயோ வஸ் ஸம்விதத் தாம் ஸ்ரித துரித ஹரா ஸ்ரீதராஸ் த்ரஸ்ய நாபி:”

சமுத்திரம் கறுத்து இருக்கும்.
சத்ரு சைன்யமாகிற கடலும் சஸ்திரங்களால் கறுத்திருக்கும்.
மைநாகம் முதலிய மலைகளைக் கொண்டது சமுத்திரம் .
மலை போன்ற தேர்களைக் கொண்டது சத்ரு சைன்யம்.
கடலில் பெரிய பெரிய அலைகள் தாவி வரும்.
சத்ரு சைன்யத்தில் பெரிய பெரிய வெண் குதிரைகள் தாவி வரும்.
கடலில் மிகப் பெரியதாக கறுத்த முதலைகள் இருக்கும்.
சத்ரு சைன்யத்திலும் போர் வீரர்களின் முகங்கள் சீறிச் சிவந்து காணப்படுகின்றன.
இப்பட்டிப்பட்ட சத்ரு சைன்யக் கடலில் இருந்து கொண்டு சைன்யத்தையே விழுங்கும் படபாக்னி போன்ற
சக்ர நாபியானது உங்களுக்கு மங்களத்தை உண்டு பண்ணட்டும்.

___________________________________________

“ஜ்வாலா சூடால காலநல சலந ஸமாடம்பரா ஸமாம்பராயம்
யாஸாவாஸாத்ய மாத்யத் ஸுரஸு பட புஜாஸ்போட கோலாஹலாட்யம்,
தைத்யாரண்யம் தஹந்தீ விரசயதி யசோபூதி சுப்ராம் தரித்ரீம்
ஸா வச் சக்ரஸ்ய நக்ரஸ்யத ம்ருதித ஜகத் த்ராயிணீ நாபிரவ்யாத்”.–53-

தேவாசூரர்கள் போர் செய்யும் போர் களத்தில் புகுந்து, காலாக்னி போல் ஜ்வாலைகளினால்
அசுர ராக்ஷஸ சைன்யமாகிற பெருங்காட்டைக் கொளுத்தி சத்ருசைன்யத்தை அழித்ததால் ஏற்பட்ட புகழாகிற
சாம்பலை பூமி முழுவதும் பரப்பி வெளுப்பாக ஆக்கிய சக்ர நாபியானது,
முதலை வாயில் அகப்பட்டுத் துடித்த கஜேந்திராழ்வானை ரக்ஷித்தது போல் உங்களை ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

சக்ர நாபி ராத்ரியாக வர்ணிக்கப்படுகிறது.

“விந்தந்தீ ஸாந்த்ய மர்சிர் விதலித வபுஷ: ப்ரத்யநீகஸ்ய ரக்தை:
ஸ்பாயந் நக்ஷத்ர ராசிர் திசிதிசி கணச கீகஸை: கீர்யமாணை:
நாகௌக: பக்ஷ்மலாக்ஷீ நவமத ஹஸித ச்சாயாயா சந்த்ர பாதாந்
ராதாங்கீ விஸ்த்ருணாநா ரசயது குசலம் பிண்டி காயாமிநீ வ:”.–54-

ராத்திரியானது சாயங்காலத்தில் சந்தியா வேளையின் சிவந்த ஒளியைப் பெற்று சிவந்திருக்கும்.
சக்ர நாபியானது ராக்ஷஸர்களின் உடல்களைச் சிதைத்து அவற்றிலிருந்து தோன்றிய
ரக்தங்களால் நனைக்கப்பட்டு சிவந்திருக்கும்.
ராத்திரியானது நக்ஷத்திர கூட்டங்களால் வியாபிக்கப்பட்டு இருக்கும்.
சக்கர நாபியானது சத்ருக்களின் எலும்புகளைப் பொடியாக்கி எங்கும் இறைத்து இருப்பதால்
நக்ஷத்திரங்களால் நிரப்பப்பட்டது போல் இருக்கும்.
ராத்திரியானது சந்திரனின் ஒளியைப் பெற்றிருக்கும்.
சக்ர நாபியும் தேவதாஸ்த்ரீகள் சிரிப்பொளியால் நிலவு ஒளி வீசுவது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுக்கு க்ஷேமத்தை பண்ணட்டும்.

___________________________________________

சக்ர நாபியானது சக் ரஜ்வாலையாகிற நதியில் ஏற்பட்ட சுழிபோல் இருக்கிறது.

“நிஸ் ஸீமம் நிஸ் ஸ்ருதாயா: புஜதரணி தராகாடாத: கைடபாரே
ஆசாகூலங்க ஷர்த்ரே ஹதபல மஹாம் போதி மாஸாதயந்த்யா:
சக்ர ஜ்வாலா பகாயாச் சலதர லஹரீ மாவிகா தந்துராயா:
பிப்ரத்யா வர்தபாவம் ப்ரமயது புவநே பிண்டிகா வ: ப்ரசஸ்திம்”.–55-

பெரிய ஆறுகள் எல்லாம் மலைகளிலிருந்தே தோன்றி வெளிவரும்;பெருகும்.
எம்பெருமானின் மலை போன்ற புஜத்திலிருந்தே சக்ரஜ்வாலையாகிற நதி வெளிவருகிறது.
மஹாநதிகள் கரை புரண்டு ஓடும். ஜ்வாலா நதியும் திசைகளை மறைத்துக் கொண்டு பரவியுள்ளது.
நதிகள் கடலில் போய் சேரும்.சக்ர ஜ்வாலையும் தேவாசூர சைன்யமாகிற பெருங்கடலில் கலந்திருக்கும்.
நதிகள் அலைகளைக் கொண்டிருக்கும். சக்ரஜ்வாலா நதியும் பல ஆரங்களாகிற அலைகளைக் கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உலகமெங்கும் உங்கள் புகழைப் பரப்பட்டும்

———————–

ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.

பாணௌ க்ருத வாஹ வாக்ரே ப்ரதிபட விஜயோ பார்ஜிதாம் வீரலக்ஷ்மீம்
ஆநீதா யாஸ்த தோஸ்யா: ஸ்வ ஸலித மஸுரத்வேஷிணா பூருஷேண,
ப்ராஸாதம் வாஸ ஹேதோர் விரசித மருணை ரச்மிபிஸ் ஸூசயந்தி
நாபீர்வோ நிர்மிமீதாம் ரதசரண பதேர் நிர்வ்ருதிம் நிர்விகாதாம்”.–56

சத்ருக்களை வென்று சம்பாதித்து கொள்ளப்பட்ட வீரலக்ஷ்மியைப் போர்களத்தில் பாணி க்ரஹனம்
செய்து கொண்டு அழைத்து வந்து அவள் சுகமாஎ வாழ்வதற்காக
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன புருஷனால் சிவந்த கிரணங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மாட மாளிகைகள் போன்ற
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன நாபியானது உங்களுக்கு இடையூறு இல்லாத சுகத்தை உண்டு பண்ணட்டும்.

———–

“டிண்டீரா பாண்டு கண்டை ரரியுவதி முகை: பிண்டிகா க்ருஷ்ணஹேதே:
உச்சண்டாச்ரு ப்ரவர்ஷை ருபரததிலகை: உக்த சௌண்டீர்ய சர்யா,
த்வித்ர க்ராமாதி பத்ய த்ருஹிண மதமஷீ தூஷிதாக்ஷ க்ஷமாப்ருத்
ஸேவாஹேவா கபாகம் சமயது பவ தாம் கர்ம சர்மப்ர தீபம்.–57-

பர்த்தாக்களின் விரஹத்தினால் வெளுத்திருக்கிற சத்ரு ஸ்த்ரீகளின் கன்னங்களும்
அவர்களும் எப்போதும் அழுது கொண்டே இருப்பதும்,
நெற்றியில் மங்களகரமான திலகம் இல்லாததுமான நிலைகள் சக்ர நாபியின் மிடுக்கை அறுதி இடுகின்றன.
இரண்டு மூன்று கிராமங்களுக்கு அதிபதியாக இருப்பதைக் கொண்டே, தங்களை பிரம்மாவாக நினைத்துக் கொண்டும் ,
அஹங்கார மமகாரங்களால் இந்திரியங்கள் கெட்டு இருக்கும் அரசர்களுக்கு அடிமைப் பட்டிருக்க வேண்டும் என்ற
துர்புத்தியைத் தோற்றுவிக்கும் துஷ்கர்மாவை சக்ர நாபியானது போக்கி அருளட்டும்.

___________________________________________

“பர்யாப்தா முந்நதிம் யா ப்ரதயதி கமலம் யா திரோபாவ்ய பாதி
ஸ்ரஷ்டுஸ் ஸ்ருஷ்டேர் தவீய: குவலய மஹிதம் யா பிபர்தி ஸ்வரூபம்,
பூம்நா ஸ்வேநாந்தரிக்ஷம் கபலயதி ச யா ஸா விசித்ரா விதத்தாம்
தைதேயாராதிநாபிர் த்ரவிண பதிபத த்வேஷிணீம் ஸம்ப தம் வ:”–58-

பரிபூர்ணமான உயர்வை விளக்கி பிரகாசப்படுத்தி கொண்டிருப்பதும் ,
தாமரைப் பூவையும் திரஸ்கரித்து விளங்குவதும் பூமண்டலத்திலுள்ளவர்களாலும் பூஜிக்கப்படும்
ஸ்வரூபத்தை உடையதும் தன் பெருமையினால் அந்தரிக்ஷ லோகத்தையும் வெல்வதுமாகிற
விசித்திரமான ஸூதர்சன நாபியானது உங்களுக்கு குபேர செல்வத்தினும் மேலான செல்வத்தை அளிக்கட்டும்.
___________________________________________

பிரம்மா விஷ்ணு ருத்ரர்களாகிற த்ரீமூர்த்திகளின் பத்னி சாதர்ம்யம்
சக்ர நாபிக்கு உண்டு என்று இதில் கூறப்படுகிறது

“வாணி வாங்கைச் சதுர்பிஸ் ஸதஸி ஸுமநஸாம் த்யோதமாந ஸ்வரூபா
பாஹ்வந்தஸ்த்தா முராரே பிமத மகிலம் ஸ்ரீரிவ ஸ்பர்சயந்தீ,
துர்கேவோக்ரா க்ருதிர் யா த்ரிபுவந ஜநந ஸ்தேம ஸம்ஹார துர்யா
மர்யாதா லங்கநம் வ: க்ஷபயது மஹதீ ஹேதி வர்யஸ்ய நாபி:”–59-

வாக்தேவதையான சரஸ்வதியானவள் பண்டிதர்கள் நிரம்பி ஸதஸ்ஸில்
பரா பச்யன்தீ மத்யமா வைகரீ என்ற நான்கு அவயவங்களோடு கூடினவளாய் விளங்குவாள்.
சக்ர நாபியும் ஜ்வாலா நேமி அரம் அக்ஷம் என்கிற சக்ர அவயவங்களோடு கூடினதாய் தேவ ஸதஸ்ஸில் விளங்கும்.
மஹாலட்சுமி யானவள் பகவானின் திருமார்பில் அகலகில்லேன் இறையும் என்று இருந்து கொண்டு
எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பாள்.
சக்ர நாபியானது பகவானின் கை நுனியில் இருந்து கொண்டு வேண்டியதெல்லாம் தரும்.
பார்வதி போல் உக்ரமான ரூபத்தோடு இருந்து கொண்டு அசுர ராக்ஷஸர்களின்
சம்ஹார காரியத்தைக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுடைய ஸ்வாதந்திரிய அபிமானத்தைப் போக்கி
சேஷ்வத மர்யாதையை வளர்க்கட்டும்.
___________________________________________

ஸ்ரக்பிஸ் ஸந்தான ஜாபிர் மதுர மது ரஸ ஸ்யந்த சந்தோஹி நீபிஸ்
பாடீரை ப்ரவ்ட சந்த்ரா தப சய ஸூஷ மாலோ பநைர் லேப நைச்ச
தூபை காலா கரூணாமபி ஸூர ஸூத்ருஸோ விஸ்ர மர்ச்சா ஸூ யஸ்யா
கந்தம் ருந்தந்தி சா வ சிரம ஸூ ரபிதோ நபி ரவ்யதா பவ்யாத் –60-

தேவதா ஸ்தீரிகள் திருவாராதனங்களில் தேன் மணம் வீசும் கற்பக மலர் மாலைகளாலும்
பாரிஜாத புஷ்பங்களாலும் நிலாவின் ஒளியையும் வெல்லும் சந்தனப் பூச்சுக்களாலும்
காரகில் தூபங்களாலும் ஆராதிப்பதால்
அசுர ராக்ஷஸ சரீரங்களின் மாம்ச சம்பந்தத்தினால் ஏற்பட்ட துர்கந்தங்கள் நீங்கிப் பரிமளம் வீசும்
சக்ர நாபியானது நெடுநாட்கள் வரை உங்களை அசுபத்திலிருந்து ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

“அம்ஹஸ் ஸம்ஹத்யா தக்த்வா ப்ரதிஜநி ஜநிதம் ப்ரௌட ஸம்ஸார வந்யா
தூராத் வந்யாந தந்யாந் மஹதி விநதிபிர் தாமநி ஸ்தாபயந்தீ,
விச்ராந்திம் சாச்வதீம் யா நயதி ரமயதாம் சக்ர ராஜஸ்ய நாபி:
ஸம்யந்மோ முஹ்யமாந த்ரி தச ரிபுதசா ஸாக்ஷணீ ஸாக்ஷிணீ வ:”–61-

சம்சாரமாகிற மருகாந்தாரத்தில் காதம் பலவும் திரிந்து உழன்று வருந்தினவர்களின் பல ஜன்மங்களில்
செய்து ஒன்று சேர்ந்த பாவங்களைக் கொளுத்திவிட்டு,
பாபமில்லாதவர்கள் அடையும் இடமாகிய பரமபதத்திற்கு அழைத்து சென்று, அவர்களை நிலை நிறுத்தி
முடிவில்லாத பேரின்பத்தை அளிக்கின்ற சக்ர நாபியானது அநிஷ்டத்தை நீக்குவதிலும் இஷ்டத்தைக் கொடுப்பதிலும்
வல்லமை பொருந்திய சக்ர நாபியானது உங்கள் கண்களை மகிழ்விக்கட்டும்.
___________________________________________

அஷ வர்ணனம் –

“ஸ்ருத்வா யந்நாம சப்தம் ச்ருதி பத கடுகம் தேவ ந க்ரீட நேஷு
ஸ்வர்வைரி ஸ்வைரவத்யோ பய விவசதிய: காதரந்யஸ்தசாரா:
மந்தாக்ஷம் யாந்த்யமந்தம் ப்ரதி யுவதி முகைர் தர்சிதோத் ப்ராஸதர்பை:
அக்ஷம் ஸெளதர்சநம் தத் க்ஷபயது பவதா மேதமாநம் தநாயாம்”.–62-

சக்கரத்தின் நடுவில் குறி போன்று ஓரிடம் உள்ளது.இது ஸூதர்சன அவயவங்களில் ஒன்று,
இதற்கு அக்ஷம் என்று பெயர். சொக்காட்தம் என்ற விளையாட்டிற்கும் அக்ஷம் என்று பெயர்.
அக்ஷம் என்ற பெயரைக் கேட்டாலே அசுரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் நடுக்கம்.
ஒரு சமயம் அசுர ஸ்தீரிகள் தேவ மாதர்களோடு சொக்காட்டம் விளையாடினார்கள்.
அப்போது தேவ மாதர்களில் ஒருத்தி எதிர் பாராத விதமாய் அக்ஷம் என்று சொன்னாள்.
ஸூதர்சனத்தால் தாங்கள் விதவைகளாக ஆனபடியால் அக்ஷம் என்ற சொல்லைக் கேட்டவுடனே
ஸூதர்சனாழ்வானின் பெயர் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி விட்டது என்று அஞ்சி நடுங்கி ஆட்டக்காய்களை வீசி எறிந்தார்கள்.
இவர்களுக்கு அஸ்தாநஞ பயசங்கை ஏற்படுவதைக் கண்ட தேவமாதர்கள் சிரிக்க, இவர்கள் வெட்கிதலை குனிந்தார்கள்.
இப்படிப்பட்ட சக்ராக்ஷமானது உங்களுக்கு மேன் மேலும் ஏற்படும் பொருளாசையைத் தடுக்கட்டும்.
___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அக்ஷத்தை வானத்தில் முழங்கும் இடியாக உருவகம் செய்கிறார்.

“வ்யஸ்த ஸ்கந்தம் விசீர்ண ப்ரஸவ பரிகரம் ப்ரத்த பத்ரோப மர்தம்
ஸம்யத் வர்ஷாஸு தர்ஷா துர கக பரிஷத் பீ தரக்தோ தகாஸு
அக்ஷம் ரக்ஷஸ் தரூணாமச நிவத்சநை: ஆபதந் மூர்த்நி மூர்த்நி
ஸ்தா தஸ்த்ரா தீசி துர்வ : ஸ்பதகித யசஸோ த்வேஷிணாம் ப்லோஷணாய”.–63-

மழைக் காலங்களில் இடியானது வானத்திலிருந்து மரங்களின் மீது விழுந்து மரக் கிளைகளை முறிக்கும்.
சுதர்சனாக்ஷம் போர்க் காலங்களில் அசுர ராக்ஷஸர்களின் மீது விழுந்து அவர்களுடைய தோள் பட்டைகளை முறிக்கும்.
இடியானது புஷ்பங்களைச் சிதற அடித்துக் கொண்டு விழும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் பிரஜைகளையும் பரிஜனங்களையும் சிதற அடிக்கும்.
இடியானது மரங்களில் இருக்கும் இலைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் ரதகஜ துரக பதாதிகளாகிற சேனைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
மழை காலத்தில் நீர்நிலைகளில் சேரும் தண்ணீர் சிவந்திருக்கும்.
தாஹத்தோடு திரியும் பக்ஷிகள் அந்தத் தண்ணீரைப் பருகும்.
அது போல் போர் களங்களில் ஏற்படும் ரக்த தாரைகளை தேவ சமூஹம் பாணங்கள் பருகுவது போல் இருகின்றன.
இப்படிப்பட்ட மகா யசஸ்வியான சக்ராக்ஷமானது உங்களுடைய சத்ருக்களை அழித்து
உங்களுக்கு ஸம்ருத்தியான கீர்த்தியை உண்டாக்கட்டும்.

___________________________________________

திருவாழியாழ்வானை யுத்தமாகிற யக்ஞத்தில் தீக்ஷிதனாகவும்,
சக்ர நாபியை யாக வேதியாகவும்
சக்ர நேமியை சக்ர நேமியை தர்வியாகவும்,
அசுரகுலத்தை ஹவிஸாகவும் ,
அக்ஷத்தை ஹோம குண்டமாகவும் இதில் கூறுகிறார்.

“தீக்ஷாம் ஸங்க்ராம ஸத்ரே மஹதி க்ருதவதோ தீப்திபிஸ் ஹம்ஹதாபி:
ஜிஹ்வாலே ஸப்த ஜிஹ்வே தநுஜகுல ஹவிர் ஜுஹ்வதோ நேமி ஜுஹவா,
வைகுண்டாஸ்ரஸ்ய குண்டம் மஹதிவ விலஸத் பிண்டிகா வேதி மத்யே
திச்யாத் திவ்யர்த்திதேச்யம் பதமிஹ பவதா மக்ஷதோந்மேஷ மக்ஷம்”.–64-

மஹாஸத்ரம் என்னும் யாகத்தில் பெரிய யக்ஞத்தில் தீக்ஷிதன் அக்னியில் ஹவிஸ்ஸை இடுவான்.
அது போல் திருவாழி யாழ்வானும் தன்னிடத்தில் உள்ள அக்னியில் அசுர ராக்ஷஸர்களாகிற ஹவிஸ்ஹை இடுகிறார்.
ஹோம ஸாதன பாத்ரங்களில் ஒன்று ஜுஹூ என்பது
அது ஹோமத்திற்கு உரிய பொருள்களை அக்னியில் கொண்டு வந்து சேர்க்கும்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களைத் திரட்டிப் பிடித்து குண்டலத்தில் சேர்க்கிறது.
அக்ஷமே ஹோம குண்டம், ஹோமகுண்டம் ஹோமம் முடிந்த பிறகு நேரம் செல்லச் செல்ல
ஒளி குறைந்து கரியாய் கிடக்கும்.
இங்கு சக்ராக்ஷம் எப்போதும் ஒளி குன்றாமல் இருக்கும்.
இந்த அக்ஷம் உங்களுக்கு திவ்ய பதவியை கொடுக்கட்டும்.

அக்னி
காளீ கராளீ மநோஜவா ஸூலோஹிதா ஸூதூம்ரவர்ணா ஸ்பிலிங்கிநீ விஸ்வதாஸா –
என்று அக்னிக்கு ஏழு நாக்குகள்
___________________________________________

திருவாழியின் அக்ஷமும் சிம்மமும் ஒன்றே.
அக்ஷத்தின் செயலும் ஒன்றாகவே இருக்கிறது.

“துங்காத் தோர த்ரி ச்ருங்காத் தநுஜவி ஜயிந: ஸ்பஷ்ட தாநோத்யமாநாம்
சத்ருஸ்தம் பேர மாணாம் சிரஸி நிபதித: ஸ்ரஸ்த முக்தாஸ்த்தி புஞ்ஜே,
ரக்தைரப்யத மூர்த்தேர் விதலந கவிதைர் வ்யக்த வீராயிதர்த்தே:
ஹர்யக்ஷஸ்யாரி பங்கம் ஜநயது ஜகதாம் ஈடிதம் க்ரீடிதம் வ:”–65-

சிம்மம் மலை சிகரத்திலிருந்து யானைகளின் தலை மீது பாய்ந்து, அவற்றின் தலைகளிலிருந்து
முத்துக்களை உதிர்த்து ரத்தத்தில் அளைந்து தன் வீர்யத்தை காட்டும்.
அக்ஷமும் திருவாழியும் எம்பெருமானுடைய ஈரிரண்டு மால் வரைத் தோளிலிருந்து அசுர ராக்ஷஸர்களாகிற
யானைகளின் மீது பாய்ந்து, எலும்புகளைச் சிதற அடித்து ரத்தத்தில் அளைந்து தன் வீரியத்தைக் காட்டுகிறது.
எல்லா லோகங்களாலும் புகழப்படுகிற திருவாழியின் திருவிளையாடல்
உங்களுடைய சத்ருக்களுக்குத் தோல்வியை உண்டு பண்ணட்டும்.

___________________________________

உந்மீலத் பத்ம ராகம் கடகமிவ த்ருதம் பாஹுநா யந் முராரே:
தீப்தாந் ரச்மீந் ததாநம் நயநமிவ யதுத்தாரகம் விஷ்டபஸ்ய,
சக்ரேசார்கஸ்ய யத்வா பரிதிரபிததத் தைத்யஹத்யாமிவ த்ராக்
அக்ஷம் பக்ஷே பதித்வா பரிகடயது வ: தத் த்ரடிஷ்டாம் ப்ரதிஷ்டாம்”.–61-

எம்பெருமான் அணிந்து கொள்ளும் தோள் வளை பத்மராகக் கற்களால் இழைக்கப்பட்டுருக்கும்.
திருவாழி யாழ்வானின் அக்ஷம் தாமரை போல சிவந்திருக்கும். உலகுக்கு ஓர் கண்ணாக இருக்கும் .
இன்னார் இனியார் என்று இல்லாமல் பக்தர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி உஜ்ஜீவிக்கச் செய்யும்.
ஸூரியனைச் சுற்றி இருக்கும் அக்ஷம் , அசுர ராக்ஷஸர்களின் அழிவை அறிவிக்கும் பரிவேஷம் போல் இருக்கிறது.
இப்படிப்பட்ட அக்ஷமானது உங்களுக்கு நிலையான பெருமதிப்பை விரைவில் அளித்திடுக.

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் பகவானுக்கு நித்ய திவ்ய ஆபரணமாகவும்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பரிந்து காவல் புரியும் நித்ய ஸூரியாகவும்
ஆஸ்ரித ஸம் ரக்ஷகராயும் இருக்கிறார் அன்றோ –

___________________________________

இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு அடிகள் வராஹ அவதாரத்தின் சரீரத்தை கூறுகிறது.
(ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் வலிமையினால் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட்டான். தேவர்கள், மஹாரிஷிகள் ஆகியோரின் வேண்டுக்கோளை ஏற்றுத்
திருமால் வராஹாவதாரத்தை மேற்கொண்டு கடலுள் சென்று அவ்வசூரனை தேடிப் பிடித்துப் போர் செய்து
அவனை தந்தங்களினால் குத்திக் கொன்று, பாதாளத்தோடு சேர்ந்திருந்த பூமியைத் தன் கோடுகளினால்
மேலே கொண்டு வந்து ஜல தத்துவத்தின் மேல் விரித்தனன்).
ஆதி வராஹம் -வராஹ நாயனார் –
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத்துருவாய்

“க்ரீடத் ப்ராக் க்ரோட தம்ஷ்ட்ராஹதி தளித ஹிரண்யாக் ஷவக்ஷ: கவாட
ப்ராதுர்ப் பூத ப்ரபூத க்ஷதஜ ஸமுதி தாரண்ய முத்ரம் ஸமுத்ரம்,
உந்மீலத் கிம்சுகாபை ருபஹஸ தமிதை: அம்சுபி: ஸம்சயக்நீம்
அக்ஷம் சக்ரஸ்ய தத்தாமக சதசமநம் தாசுஷீம் மேமுஷீம் வ:”.–67-

முருக்க மலர் போன்று தேஜஸ்ஸை உடைய கோல வராஹம் தன் கோடுகளினால் ஹிரண்யாக்ஷனை
மார்பில் குத்திய போது ரத்தம் கிளர்ந்து கடல் நீரையே செந்நிறமாக்கியது.
அந்த நிறத்தையும் தோற்கடிப்பதாக இருக்கிறது ஸூதர்சன அக்ஷத்தின் நிறம்.
அந்த அக்ஷம் உங்களது பாவ சமூகத்தையும் அழித்து சம்சயங்களைப் போக்கவல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.
___________________________________

உலகில் தேஜஸானது ஸூர்யன் சந்திரன் அக்னி என்று மூன்றும் சேர்ந்து அக்ஷமாக இருக்கிறது
என்று இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

“பத்மோல்லாஸ ப்ரதம் யஜ் ஜநயதி ஜகதீ மேதமாந ப்ரபோ தாம்
யஸ்ய ச்சாயா ஸமாநா லஸதி பரிஸரே ரோஹிணீ தாரகாக்ரியா,
நாநா ஹேத் யுந்நதத்வம் பரகடயதி ச யத் ப்ராப்த க்ருஷ்ண ப்ரயாணம்
த்ரேதா பிந்நஸ்ய தாம்நஸ் ஸ்முதய இவ தத் பாது வச் சாக்ரமக்ஷம்”.–68-

ஸூரியன் தாமரையை மலர்விக்கிறது. இருளை நீக்கி பிரகாசத்தை வளர்கிறான்.
தீயோரை அழித்து நல்லோரை ரக்ஷிப்பது என்ற சங்கல்பம் கொண்ட பெரிய பிராட்டியாரின் திருவுள்ளத்தை உகப்பிக்கிறான்.
உத்க்ருஷ்டமான ஞானத்தை வளர்கிறான்.
கார்த்திகை நக்ஷத்திரங்கள் ஏழு.மற்ற அஸ்வினி முதலான நக்ஷத்திரங்கள் இருப்பத்தாறு.
ஆக மொத்தம் முப்பத்து மூன்று நக்ஷத்திரங்கள்.இவற்றுள் ரோகிணி நக்ஷத்திரத்தின் மீது சந்திரனுக்கு ப்ரேமம் அதிகம்.
ஸூதர்சன யந்திர அமைப்பில் ப்ரணவஸ்தாபனம் உண்டு என்று கூறப்படுகிறது.
இப்படி ஸ்ரேஷ்டமாய் சிவந்த ஒளியுடன் அக்ஷம் விளங்குகிறது.
பல ஜ்வாலைகளில் அக்னி ஜ்வாலையே உயர்ந்தது.புகையைப் பின்பற்றி புகை வழயே அக்னி செல்லும்.
அஸ்திரங்களில் சிறந்தது திருவாழி. க்ருஷ்ண பரமாத்மாவின் திருவுள்ளத்தைப் பின் பற்றியே இது செல்லும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

இந்த ஸ்லோகத்தில் பரசு ராம விருந்தாந்தம் கூறப்படுகிறது.
(ஸ்ரீமந்நாராயணனன் ஜமத்கனி மஹரிஷிக்கும் ரேணுகைக்கும் குமாரனாக அவதரித்தவர்.
இவர் பரசு எனப்படும் கோடாலிப் படையை ஆயுதமாக வைத்திருந்தார்.
தந்தையைக் கொன்ற கார்த்த வீர்யார்ஜுனன் மீது கொண்டிருந்த கோபத்தினால் அவனையும் அழித்து
இருபத்தொரு தலை முறை க்ஷத்திரிய அரசர்களையும் கொன்று, அவர்களுடைய ரத்தத்தினால் ஏற்பட்ட
குளத்தில் நீராடி அதில் பித்ரு தர்பணம் செய்ததாக வரலாறு).

“சோசிர்பி: பத்மராக த்ரவஸம ஸுஷமைச் சோபமாநாவகாசம்
ப்ரத்ய க்ராசோக ராக ப்ரதிபட வபுஷா பூஷிதம் பூருஷேண
அந்த: ஸ்வச் சந்த மக்நோத்தி ப்ருகு தநயம் க்ஷத்ரியாணாம் ஹதாநாம்
ஆரப்தம் சோணி தௌகைஸ் ஸர இவ பவதோ திவ்ய ஹேத் யக்ஷமவ்யாத்.”–69-

பத்ம ராகத்வம் போல் சிவந்து பெரிய குழிபோல் இருக்கிறது சக்ராக்ஷம்,
அசோக மலர் போல் சிவந்த ஒளியை உடைய ஸூதர்சன புருஷன் அக்ஷத்தின் நடுவில் இருப்பதானது,
ரக்த தடாகத்தில் மூழ்க்கிக் கிளம்பும் பரசுராமனே என்று சொல்லும்படி இருந்தது.
அப்படிப்பட்ட சக்ராக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

“மத்தாநாமிந் த்ரியாணாம் க்ருத விஷய மஹா காநந க்ரீடநாநாம்
ஸ்ருஷ்டம் சக்ரேச்வரேண க்ரஹண திஷணயா வாரிவத் வாரணாநாம்,
கம்பீரம் யந்த்ரகர்தம் கமபி க்ருததியோ மந்வதே யத் ப்ரதேயாத்
அஸ்தூலாம் ஸம்விதம் வஸ் த்ரிஜக தபிமத ஸ்தூலலக்ஷம் தத்க்ஷம்”–70-

பெரிய காடுகளில் கொழுத்து திரியும் யானைகளை பிடிப்பதற்காக அரசர்கள் மிகவும் ஆழமான
பெரும் பள்ளத்தை வெட்டுவிப்பார்கள். இந்த யானை விழும் பள்ளத்திற்கு வாரீ என்று பெயர்.
விஷயாந்தரங்களாகிற காடுகளில் மதம் கொண்டு திரியும் ஐம்புலன்களாகிற இந்திரியங்களை
மடக்கிப் பிடிக்கும் குழியாக இருக்கிறது சக்ராக்ஷம்.
இந்தக் குழியை வெட்டினவர் திருவாழியாழ்வான்.
அப்படிப்பட்ட ஸூதர்சன சக்கரமானது உங்களுக்கு ஸூக்ஷ்ம புத்தியை அளிக்கட்டும்.

———-

ப்ராணாதீந் ஸம்நியம்ய ப்ரணி ஹித மநஸாம் யோகிநாமந் தரங்கே
துங்கம் ஸங்கோச்ய ரூபம் விரசித தஹராகாச க்ருச்ச் ராஸிகேந,
ப்ராப்தம் யத் பூருஷேண ஸ்வ மஹிம ஸத்ருசம் தாம காம ப்ரதம் வ:
பூயாத் தத் பூர்புவஸ் ஸ்வஸ்த்ரய வரிவஸிதம் புஷ்கராக்ஷா யுதாக்ஷம்”.–71-

ப்ராணன் முதலான வாயுக்களை அடக்கி மனோ திடத்துடன் இருக்கும் யோகிகளின் ஹ்ருதயத்தில்
உள்ள மிகவும் ஸூக்ஷ்மமான தஹாரகாசத்தில், தன் பெரிய வடிவைச் சுருக்கிக் கொண்டு
திருவாழியாழ்வான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு வீற்றிருக்கிறார்.
அவருக்குத் தன் பெருமைக்கு ஏற்றவாறு தாராளமாக வீற்றிருக்க அக்ஷஸ்தானம் கிடைத்தது.
அதில் திருவாழி யாழ்வான் விசாலமான திருமேனியுடன் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறார்.
மூவுலகங்களிலும் பூஜிக்கப்படுகிற செங்கண்மாலின் திவ்யாயுதத்தினுடைய மிகப் பெரிய
சக்ராக்ஷமானது உங்களுக்கு சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கட்டும்.
___________________________________

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் தோற்றமளிக்கும் ஆகாசம் போல்
சக்கரத்தின் அக்ஷம் இருக்கிறது.

“வித்தாந் வீத்ரேண தாம்நா சரண நகபுவா பத்த வாஸஸ்ய மத்யே
சக்ராத் யக்ஷஸ்ய பிப்ரத் பரிஹஸித ஜபாபுஷ்ப கோசாந் ப்ரகாசாந்:
சுப்ரை ரப்ரைர தப்ரைச் சரதி தத இதோ வ்யோம விப்ராஜமாநம்
ப்ராதஸ் த்யாதி த்யரோசிஸ் ததமிவ பவத: பாது ராதாங்கமக்ஷம்”.–72-

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் ஆகாசத்தில் வெண்ணிறமான மேகக் கூட்டங்கள் நிறைந்திருக்கும்.
சில இடங்களில் வெண்மையான நிறமும்
சில இடங்களில் அடி வானத்தில் தோன்றும் ஸூரியனின் செஞ்சுடர் பரவி இருக்கும்.
அது போல் திருவாழியாழ்வானின் திருவடி நகங்களிலிருந்து தோன்றும் வெண்சுடர்களும்
ஜபாகுஸுமம்(செம்பருத்தி) என்ற புஷ்பம் போன்ற செஞ்சுடர்களும் எங்கும் கலந்து காணப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஆகாசம் போல் இருக்கும் திருவாழியின் அக்ஷம் உங்களைக் காப்பாற்றட்டும்.
___________________________________

“ஸ்ரீ வாணீ வாங் ம்ருடாந்யோ விதததி பஜநம் சக்தயோ யஸ்ய திக்ஷú
ப்ராஹ வ்யூஹம் யதாத்யம் ப்ரதமமபி குணம் பாரதீ பாஞ்சராத்ரீ,
கோராம் சாந்தாம் ச மூர்த்திம் ப்ரதயதி புருஷ: ப்ராக் தந: ப்ரார்த்தநாபி:
பக்தாநாம் யஸ்ய மத்யே திசது ததந காமக் ஷமத்யக்ஷதாம் வ:”–73-

ஸ்ரீ ஸூதர்சன அக்ஷமானது,
வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்கள் என்று சொல்லப்படுகின்ற ப்ரதம வியூகமாகவும்
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்களுள்
ஞானம் என்கிற ப்ரதம(முதல்) குணமாக அஹிர்புத்நிய சம்ஹிதைகளிலே சொல்லப்படுகிறது.
ஸ்ரீ, வாணீ,வாக், ம்ருடாநீ ஆகிய நான்கும் வாசுதேவாதிகளான நான்கு மூர்த்திகளின் சக்திகள்.
இவை நான்கும் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டு ஸூதர்சனரின் அக்ஷத்தை ஸ்தோத்திரம் செய்கின்றன
என்று பாஞ்சராத்ர சாஸ்திரம் கூறுகிறது.
பக்தர்கள் மங்களாசாசனம் செய்வதற்காக சேவிக்கும் போது சாந்த மூர்த்தியாக ஸூதர்சனாழ்வான் சேவை சாதிக்கிறார்.
பக்தர்கள் அநிஷ்ட நிவாரணத்திற்காக பிரார்த்திக்கும் போது பயங்கர உருவத்துடன் சேவை சாதிக்கிறார்.
அப்படிப்பட்டவர் உங்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் தன்மையை அளிக்கட்டும்.
___________________________________

“ரக்ஷ: பக்ஷேண ரக்ஷத் க்ஷதமமரகணம் லக்ஷ்ய வைலக்ஷ்ய மாஜௌ
லக்ஷ்மீ மக்ஷீய மாணாம் வல மதந புஜே வஜ்ர சிக்ஷாநபேக்ஷே,
நிக்ஷிப்ய க்ஷிப்ர மத்ய க்ஷயதி ஜகதி யத் தக்ஷ தாம் திவ்ய ஹேதே:
அக்ஷாமா மக்ஷமாம் தத் க்ஷபயது பவதாமக்ஷ ஜில்லக்ஷ மக்ஷம்”.–74-

போர் களத்தில் ராக்ஷஸர்களாலே தாக்கப்பட்டு வெட்கமடைந்து தலை குனிந்து நிற்கும்
தேவ கணத்தை ரக்ஷித்து நிற்கிறது ஸூதர்சன அக்ஷம்.
வஜ்ராயுதத்தைப் பிரயோகிக்கும் முறை அறிய இசையாத இந்திரனுடைய கையில் குன்றாத
விஜய லட்சுமியை கொண்டுவந்து சேர்த்து
(வஜ்ராயுதத்தினால் ஆக வேண்டிய காரியத்தை தானே நிர்வகித்து)
தன் சாமர்த்தியத்தைச் சக்ராக்ஷம் உலகுக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட ஸூதர்சனத்தின் அக்ஷத்தினால் கொடிய வியாதி போன்ற பொறாமை நீங்கட்டும்.

இந்த்ரிய கிங்கரர்கள் ஜெயித்தவர்கள் அஹிர் புத்ந்யாதிகள் என்கிறார் ஸ்வாமி தேசிகன்

___________________________________

(இது முதல் 100 ஸ்லோகம் வரை சுதர்சன புருஷ வர்ணநம்)

“ஜ்யோதிச் சூடால மௌளிஸ் த்ரி நயந வதன: க்ஷோடசோத் துங்க பாஹு:
ப்ரத்யாலீடேந திஷ்டந் ப்ரணவ சச தராதார ஷட்கோண வர்தீ,
நிஸ் ஸீமேந ஸ்வதாம்நா நிகிலமபி ஜகத் க்ஷேமவந் நிர்மிமாண:
பூயாத் ஸெளதர் சநோ வ: ப்ரதிபட பருஷ: பூருஷ: பௌருஷாய”.–75-

ஜோதிர் மயமான ஊர்த்வாக்ரமான ஜடா முடியை உடையவராய்,
மூன்று கண்களைக் கொண்டவராய்,
பதினாறு திருக்கைகளைக் கொண்டவராய்,
இடத் திருவடியை நீட்டிக் கொண்டு வலத் திருவடியைக் குறுக்கி நிற்பதாகிற ப்ரத்யாலீட ஸ்திதியில் நிற்பவராய்,
ப்ரணவத்தையும் சந்திரமண்டலத்தையும் ஆதாரமாக கொண்ட ஷட் கோணத்தில் இருப்பவராய்
எல்லை யில்லாத தன் தேஜஸ்ஸால் எல்லா உலகங்களுக்கும் க்ஷேமத்தை அளிப்பவராய்,
அசுர ராக்ஷசர்களுக்கு கொடியவராகவும் இருக்கும் திருவாழியாழ்வான் உங்களுக்கு பௌருஷத்தை அளிக்கட்டும்.

முன் பக்கம் சந்த்ர மண்டலத்தையும்
அதில் ப்ரணவத்தையும்
அதன் மேல் ஷட் குணத்தையும் எழுதி
அதன் மேல் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானை ப்ரதிஷ்டானம் செய்து
ஸ்ரீ ஸூ தர்சன யந்த்ரம் அமைப்பார்கள் –

———

“வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷணம் கைடபாரே:
சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ரா நக பரசு முக வ்யாபிநீ தத் விபூத்யாம்
கர்தும் யத் தத்வ போதோ ந நிசிதமதிபிர் நாரதாத்யைச்ச சக்ய:
தைவீம் வோ மாநுஷீம் ச க்ஷிபது ஸ விபதம் துஸ்தரா மஸ்த்ர ராஜ:”.–76-

பகவத் சாஸ்த்ரங்கள் திருவாழி யாழ்வானை பரவாசுதேவனுடைய சங்கல்பமாக தெரிவிக்கின்றன.
திருவாழி யாழ்வானுடைய சக்தியானது எம்பெருமானின் விபவாவதாரங்களில்
ராமாவதாரத்தில் அவனது பானங்களிலும்
வராஹாவதரத்தில் கோரைப் பற்களிலும்
நரசிம்ம அவதாரத்தில் நகங்களிலும்
பரசுராம அவதாரத்தில் கோடாலியிலும்
மற்ற அவதாரங்களில் அந்தந்த அவதாரங்களில் மேற்கொண்ட ஆயுதங்களிலும் ஆவேசித்து இருந்தது.
வாமனாவதாரத்தில் வாமனனின் கை பவித்திரத்திலும் திருவாழியின் சக்தி ஆவேசித்து இருந்தது.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையன் -பெரியாழ்வார்
திருவாழியின் உண்மையான ஸ்வரூபத்தை நாரத மகரிஷிகளாலும் அறிந்து கொள்ள முடியாது.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் தைவாதீனமும் மனுஷ்யாதீநமுமான ஆபத்தைப் போக்கட்டும்.

___________________________________

“ரூடஸ் தாரா லவாலே ருசிர தலசய: ச்யாமலைச் சஸ்த்ர ஜாலை:
ஜவாலாபிஸ் ஸப்ரவாள: ப்ரகடித குஸுமோ பத்த ஸங்கை: ஸ்புலிங்கை:,
ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ:
தத்தா முத்தோ: ப்ரகாண்ட: பலமபி லஷிதம் விஷ்ணு ஸங்கல்ப வ்ருக்ஷ:”.–77-

விரும்பிய பலன்களை கொடுக்கும் விஷ்ணு சங்கல்பமும் சக்கரத்தாழ்வாராகிற கல்ப விருக்ஷமும் ஒன்றே.
திருவடிகளை வணங்கியவற்கு இயற்கையான தன்னுடைய நிழலால் சம்சார தாபத்தைப் போக்கி
பகவத் சங்கல்பமானது விரும்பிய பலன்களைக் கொடுக்கும்.
ஓம் என்கிற ப்ரணவமாகிற பாத்தியில்
கறுத்த ஆயுத சமூகங்களாகிற இலைகளையும்
ஜ்வாலைகளாகிற தளிர்களையும்
தீப்பொறிகளாகிற புஷ்பங்களையும் கொண்டிருக்கும் திருவாழி யாழ்வானாகிற கற்பக மரம்,
தன்னை அடைந்தவர்களுக்கு நிழல் தந்து வெப்பத்தைப் போக்கி
உயர்ந்த கிளைகளாகிற திருக் கைகளால் உங்களுக்கு வேண்டிய பலன்களைக் கொடுக்கட்டும்.
___________________________________

“தாம்நா மைரம் மதாநாம் நிசயமிவ சிரஸ்தாயிநாம் த்வாதசாநாம்
மார்த்தண்டாநாம் ஸமூடம் மஹ இவ பஹுலாம் ரத்ன பாஸா மிவர்த்திம்
அர்சிஸ் ஸங்காதமேகீ க்ருதமிவ சிகிநாம் பாட பாக்ரே ஸராணாம்
சங்கந்தே யஸ்ய ரூபம் ஸ பவது பவதாம் தேஜஸே சக்ர ராஜா”.–78-

நிலைத்து மிளிரும் ( அபூத உவமை )மின்னோலிகளின் திரளோ!
த்வாதச ஆதித்யர்களின் திரண்ட தேஜஸ்ஸோ!
ரத்னங்களின் ஒளி ஸ்ம்ருத்தியோ!
படபாக்னிகளைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமான அக்னிகளின் தேஜோ ராசியோ! என்று
மகான்கள் கலங்கி கூறும்படியான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான் உங்களுக்கு தேஜஸை அளிக்கட்டும்.
___________________________________

“உக்ரம் பச்யா க்ஷமுத்யத் ப்ருகுடி ஸமுகுடம் குண்டலி ஸ்பஷ்ட தம்ஷ்ட்ரம்
சண்டாஸ்த்ரைர் பாஹு தண்டைர் லஸதநல ஸமக்ஷௌளம லக்ஷ்யோருகாண்டம்,
ப்ரத்யா லீடஸ்த பாதம் ப்ரதயது பவதாம் பாலந வ்யக்ரமக்ரே
சக்ரேசோ காலகாலேரித பட விகடாடோப லோபாய ரூபம்”.–79-

தீப்பொறி பறக்கும் கண்களையும், நெறித்த புருவங்களையும்,
கீரிடம், காதணிகள் முதலியவற்றையும் கோரப் பற்களையும்
கைகளில் பயங்கரமான ஆயுதங்களையும்
மெல்லிய பட்டு வஸ்திரம் அணிந்திருப்பதால் விரும்பிக் காணும் தொடைகளையும்
இடக்காலை நீட்டி வலக்காலைக் குறுக்கி நின்று ரக்ஷிப்பதில் ஊக்கமுடையதுமான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான்,
அகாலத்தில் ம்ருத்யுவினால் ஏவப்பட்ட யம படர்களுடைய கோலகலங்களை ஒழிப்பதற்குப் ப்ரகாசிப்பிக்க வேணும்.
யம படர்களை வெருட்டி ஓட்டி அருள வேணும்.
___________________________________

“சக்ரம் குந்தம் க்ருபாணம் பரசுஹு தவஹா வங்குசம் தண்ட சக்தீ
சங்கம் கோ தாண்டபாசௌ ஹல முஸல கதா வஜ்ர சூலாம்ச் ச ஹேதீந்,
தோர்பிஸ் ஸவ்யாபஸவ்யைர் தததுலபல ஸ்தம்பி தாராதிதர்பை:
வ்யூஹஸ் தேஜோபிமாநீ நரக விஜயிநோ ஜரும்பதாம் ஸம்பதே வா:”.–80-

சக்ரம் முதலிய பதினாறு ஆயுதங்களையும்
ஒப்பற்ற பலத்தினால் சத்ருக்களின் கொழுப்பை அடக்கின தன்னுடைய இடக்கை வலக்கைகளால் தாங்கி நிற்பவரும்,
நரகாசுரனை அழித்த எம்பெருமானுடைய தேஜஸ் எல்லாம் தன்னுடையது என்று அபிமானிக்கும்
அவதாரமான திருவாழியாழ்வான் உங்களுடைய சம்பத்துகளுக்காக ஓங்கி விளங்கட்டும்.

(வலப்பக்கம் எட்டு கைகள் வலப்பக்கம் எட்டு கைகள்.
வலப்பக்கம் : சக்கரம் ,ஈட்டி, கத்தி,கோடாலி, சதமுகாக்கனி, மாவட்டி, தண்டு, வேல்.
இடப்பக்கம்: சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை,கதை, வஜ்ரம், சூலம்.)
___________________________________

“பீதம் கேசே ரிபோரப்யஸ்ருஜி ரதபதே ஸம்ச்ரிதேப் யுத்கடாஷம்
சந்த்ராத : காரி யந்த்ரே வபுஷி ச தளநே மண்டலே ச ஸ்வராங்கம்,
ஹஸ்தே வக்த்ரே ச ஹேதி ஸ்தபகி தமஸமம் லோசநே மோசநே ச
ஸ்தாதஸ்தோகாய தாம்நே ஸுர வர பரிஷத் ஸேவிதம் தைவதம் வ:”.–81-

ஸூதர்சனம் பொன் மயமான கேசத்தை உடையது;
சத்ருக்களின் ரத்தத்தை குடித்தது.
சக்கரத்தில் கம்பீரமான அக்ஷத்தை உடையது;
பக்தர்கள் பால் தோன்றும் கடாக்ஷத்தை உடையது.(அக்ஷம் உத் கடாக்ஷம் )
யந்திரத்தில் சந்திரனைத் தாழ்த்தியது;
(ஸூதர்சன யந்திரத்தில் சந்திரனை எழுதி அதன் மேல் அன்றோ யந்த்ர ஸ்தாபனம் )
ஒளியினால் சந்திரனை வென்றது.
சத்ருக்களைக் கண்டிக்கும் போது வெற்றியை உணர்த்தும் சிம்ம நாதம்;
சந்திர மண்டலம் ப்ரணவத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும்.
ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் கை;
திருக் கண்களில் சமமில்லாத பார்வை;
தேவர்களின் தலைவர்களால் சேவிக்கப்படும் திருவாழியாகிற தெய்வம் உங்களுக்கு
அளவற்ற தேஜஸைக் கொடுக்கட்டும்.
___________________________________

திருவாழி ஆழ்வான் ஸக்ரவர்த்தீ சாம்யம்

“சித்ராகாரை: ஸ்வசாரைர் மித ஸகல ஜகஜ் ஜாக ரூக ப்ரதாப:
மந்த்ரம் தந்த்ராநுரூபம் மநஸி கலயதோ மாநயந்நாத்ம குஹ்யாந்.
பஞ்சாங்கஸ் பூர்த்தி நிர்வர்திந ரிபுவிஜயோ தாம ஷண்ணாம் குணாநாம்
லக்ஷ்மீம் ராஜா நைஸ்த்தோ விதரது பவதாம் பூருஷச் சக்ரவர்த்தீ”.–82-

திருவாழி யாழ்வான் கண்டநலுண்டன ஹரணம் ஆகியவற்றைச் செய்து கொண்டு,
சஞ்சாரங்களால் எல்லா லோகங்களிலும் வியாபித்து இருப்பார்.
சக்ரவர்த்தி தன்னுடைய ஒற்றர்களை உலகமெங்கும் பரவச் செய்வான்.
அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் சொல்லியபடி சுதர்சன மந்திரத்தை மறைத்து வைத்துக் கொண்டு
தியானிப்பவர்களிடம் திருவாழி யாழ்வான் திருவுள்ளம் இரங்குவார்.
ராஜ ரகசியமான விஷயங்களை வெளியிடாமல் அந்தரங்கமாக வைத்துப் பேசும் ராஜாங்க புருஷர்களை அரசன் பஹீமானிப்பான்.
திருவாழி யாழ்வான் ஜ்வாலை நாபி நேமி அரம் அக்ஷம் என்ற ஐந்து அங்கங்களால் சத்ருக்களை வெல்வார்.
அரசனும் ஐந்து கர்மங்களை செய்து எதிரிகளை வெல்வார்.
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு இருப்பிடமானவர் திருவாழி.
சந்தி விக்ரஹ யான ஆசன த்வைநீ பாவ சம்ச்ரயங்களுக்கு இருப்பிடமானவன் அரசன்.
திருவாழி சந்த்ர மண்டல ஆசனத்திலும் அரசன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பான்.
சக்கரவர்த்தியான இத்தகைய திருவாழி உங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்.

___________________________________

(ஸ்ரீ ஸூதர்சனாழ்வாரின் பயண வேகத்தை இந்த ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார் ஸ்ரீ கூர நாராயணர்)

“அக்ஷா வ்ருத்தா ப்ரமாலாந்யர விவர லுடச் சந்த்ர சண்டத்யுதீநி
ஜ்வாலா ஜாலாவ்லீட ஸ்புடதுடு படலீ பாண்டு திங்மண்டலாநி,
சக்ராந்தா க்ராந்த சக்ராசல சலித மஹீ சக்ர வாலார்த சேஷாணி
அஸ்த்ர க்ராமாக்ரீமஸ்ய ப்ரததது பவதாம் ப்ரார்த்திதம் ப்ரஸ்த்திதாநி”.–83-

ஸ்ரீ ஸூதர்சனர் வேகமாக செல்லும் போது மேகக் கூட்டங்கள் அக்ஷங்களில் சுழன்று வரும்.
ஸூரியனும் சந்திரனும் அரங்களுக்கு இடையே புரளும்.
நக்ஷத்திரக் கூட்டங்கள் ஸூதர்சன ஜ்வாலைகளால் மோதப்பட்டு திசைகளின் எல்லையில்
சிதறிப் பரவி வெளிச்சத்தை உண்டாக்கும்.
சக்ர நேமியானது சக்ரவாள பர்வதம் வரை செல்வதால் மலை நடுங்கி அதனால் பூமியும் நடுங்கி
பூமியைத் தாங்கும் அரவரசனும் (திருவனந்தாழ்வானும்) துன்பமடைவார்.
இத்தகைய திருவாழியின் சஞ்சாரமானது நீங்கள் விரும்பியவற்றை உங்களுக்குக் கொடுக்கட்டும்.
___________________________________

“சூலம் த்யக்தாத்ம சீலம் ஸ்ருணி ரணுக க்ருணி: பட்டிஸ: ஸ்பஷ்டஸாத:
சக்திச் சாலீ நசக்தி: குலிசமகுசலம் குண்டதார: குடார:
தண்டச் சண்டத்வ சூந்யோ பவதி தநு தநுர் யத் புரஸ்தாத் ஸ வ: ஸ்தாத்
க்ரஸ்தாசேஷாஸ்த்ர கர்வோ ரத சரணீபதி: கர்மணே சார்மணாய”.–84-

மிகப் பிரசித்தமான ஆயுதங்கள் திருவாழியின் முன்னே இருந்தும் இல்லாதது போல் ஆயின.
சூலம் சத்ருக்களை அழிக்கும் சாமர்த்தியத்தை விட்டது.
அங்குசம் ஒளி மழுங்கிப் போயிற்று.
பட்டாக்கத்தி களைத்துப் போய்விட்டது. (பட்டிஸ:-பட்டாக்கத்தி)
சக்தி என்ற ஆயுதம் வலிமை யற்று வெட்கமடைந்து தலை குனியப் பெற்றது.
வஜ்ராயுதம் சாமர்த்யம் அற்றுப் போய் விட்டது.
கோடாலி கூர்மை மழுங்கப் பெற்றது.
தண்டாயுதம் சாதுவாகி விட்டது.
வில் இளைத்துப் போய் விட்டது.
இப்படி எல்லா அஸ்திரங்களுடைய செருக்கையும் கொள்ளை கொண்ட திருவாழி யாழ்வான்
பிரம்மானந்த சாதனமான நல்ல காரியங்களில் உங்களுக்கு முயற்சியை உண்டு பண்ணட்டும்.
___________________________________

க்ஷாண்ணா ஜாநேய ப்ருந்தம் ஷுபித ரத கணம் ஸந்த ஸாந்நாஹ்ய யூதம்
க்ஷ்வேலா ஸம்ரம்ப ஹேலா கலகல விகலத் பூர்வகீர் வாண கர்வம்,
குர்வாணஸ் ஸாம்பராயம் ரத சரணபதி: ஸ்தேயஸீம் வ: ப்ரசஸ்திம்
துக்தாம் துக்தாப்தி பாஸம் பய விவச சுநா ஸீர நாஸீர வர்தீ.–85-

சத்ருக்களால் ஏற்படும் பயத்திற்கு அஞ்சி இந்திரன் ஓடி வந்து ஸூதர்சனாழ்வானைச் சரணமடைந்தான்.
அதனால் தேவாசுர யுத்தத்தில் ஸூதர்சனாழ்வான் இந்திரனுடைய சேனைகளுக்கு சகாயமாகச் சென்று
சத்ருக்களின் ரத கஜ துரகபதாதிகள் அழியும்படியாக சிம்ம நாத லீலா கோலகலங்களைச் செய்து போர் செய்தார்.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் பாற்கடல் போன்ற வெண்மையான புகழை மேன் மேலும் வளரச் செய்யட்டும்.

கீர்த்தியை வெண்மையாகக் கூறுவது கவி மரபு

_____________________________

“த்ருஹ்யத் தோச்சாலி மாலி ப்ரஹரண ரபஸோத்தாநிதே வைநதேயே
வித்ராதி த்ராக் ப்ரயுக்த: ப்ரதந புவி பராவர் தமாநேந பர்த்ரா,
நிர்ஜ்த்ய ப்ரத்ய நீகம் நிரவதிக சரத்தாஸ்தி காச்விய ரத்த்யம்
பத்த்யம் விஸ்வஸ்ய தாச்வாந் ப்ரதயது பவதோ ஹேதிரிந்த்ராநுஜஸ்ய”.–86-

பிறர்க்குத் தீங்கு இழைக்கும் புஜ பலத்தை உடைய மாலி என்ற அரக்கனுடைய ஆயுதத்தினால்
போர்களத்தில் தாக்கப்பட்டு கருடன் ஓடிச் சென்றவளவில்,
பகவான் அக்கருடன் மேல் ஏறிக்கொண்டு போர்களத்திற்கு வந்துத் திருவாழியினால் பகைவர்களின்
ரத கஜ துரகபதாதிகளை அழித்து மாலியின் தலையை அறுத்துத் தள்ளி வென்றான்.
உத்தர ராமாயணம் 7 சர்க்கம் இத்தைச் சொல்லும்
அப்படிப்பட்ட பகவானின் திருவாழியாழ்வான் உங்களைப் புகழுடையவராக ஆக்கட்டும்.
___________________________________

“நந்தி ந்யாய நந்த சூத்யே கலதி கண பதௌ வ்யாகுலே பாஹுலேயெ
சண்டே சாகித்ய குண்டே ப்ரமத பரிஷதி ப்ராப்தவத்யாம் ப்ரமாதம்,
உச்சித் யாஜௌ பலிஷ்டம் பலிஜ புஜவநம் யோத தாவாதி பிக்ஷோ:
பிக்ஷாம் தத் ப்ராண ரூபாம் ஸ பவத குசலம் க்ருஷ்ண ஹேதி: க்ஷிணோது”.–87-

மஹாபலியின் வம்சத்தில் பிறந்தவன் பாணாசுரன்.இவன் பரம சிவனிடமிருந்து வர பலங்களைப் பெற்றவன்.
ஆயிரம் கைகளையும் தன் நகரத்தைச் சுற்றி ரக்ஷகமாக இருக்கும்படி நெருப்பு மதில்களையும்
அளவற்ற செல்வத்தையும் பெற்றவன். சிவன் தன் கணங்களோடு பாணசுரனின் மாளிகையைப் பாடுகாத்து வந்தான்.
ஒரு சமயம் தன் பெண்ணாகிய உஷையின் காரணமாகக் கண்ணனின் நேரனாகிய அநிருத்தனைச் சிறையில் வைத்தான்.
இதை அறிந்த கண்னன் பாணசுரனோடு போர் செய்தான்.அப் போரில் நந்தி மகிழ்ச்சி இழந்தார்.
விநாயகர் போரிலிருந்து பின் வாங்கினார். சுப்ரமண்யர் கலங்கினார்.சண்டன் செயலற்றுப் போனான்.
ப்ரதம (முதன்மை) கணங்களெல்லாம் பயந்தோடின.
அப்போது ஸூதர்சனாழ்வான் வாணசுரனின் ஆயிரம் தோள்களை துணித்தார். உயிர் பிச்சை அளித்தார்.
அப்படிப்பட்ட திருவாழி உங்கள் தீமைகளை அழிக்கட்டும்.
___________________________________

“ரக்தௌ காப்யக்த முக்தாபல லுலித லலத் வீசி வ்ருத்தௌ மஹாப்தௌ
ஸந்த்யா ஸம்பத்த தாரா ஜலதர சபலாகாச நீகாச காந்தௌ,
கம்பீராரம்ப மம்பச் சரம ஸுரகுலம் வேத விக்நம் விநிக்நந்
நிர்விக்நம் வ: ப்ரஸூதாம் வ்யபகத விபதம் ஸம்பதம் சக்ர ராஜ:”–88-

ஒரு காலத்தில் பிரம்மாவிடமிருந்து அசுரர்கள் வேதங்களைக் கவர்ந்து சென்று கடலுக்குள் ஒளிந்துக் கொண்டார்கள்.
ஸூதர்சனாழ்வான் அதனுள் புகுந்து அவர்களை கொன்றார்.
அப்போது அசுரர்களின் உடம்பிலிருந்து கிளம்பிய இரத்தத் தாரைகள் கடலில் இருக்கும் முத்துக்களோடு சேர்ந்து
முத்துக்களை செந்நிறமாக்கிக் கொண்டு அலைகளோடு சேர்ந்து வீசின.
அந்தக் காட்சி நக்ஷத்திரங்களாலும் காள மேகங்களாலும் சூழப்பட்ட சந்தியா கால ஆகாசம் போல் இருந்ததாம்.
இப்படி வேதாபஹார அசுரர்களை அழிப்பதில் கம்பீரமான முயற்சியைக் கொண்ட
திருவாழி யாழ்வான் உங்களுக்கு அபாயமற்ற செல்வத்தை இடையூறு இன்றி அளிக்கட்டும்.
___________________________________

“காசீ விப்லோஷ சைத்ய க்ஷபண தரணிஜ த்வம்ஸ ஸூர்யாபிதாந
க்ராஹத் வேதாத்வ மாலி த்ருடநமுக கதா வஸ்து ஸத் கீர்தி காதா:
கீயேந்தே கிந்நரீபி: கநக கிரி குஹா கேஹிநீபீர் யதியா:
தேயாத் தைதேயவைரீ ஸ ஸகல புவந ஸ்லாகநீயாம் ஸ்ரியம் வ:”–89-

மேரு மலைக் குகைகளில் வாழும் கின்னர ஸ்தீரிகளால் காசீ தகனம் சிசுபால வதம் நகராசூர வதம்
சூர்யனை மறைத்த வரலாறு கஜேந்திரனைக் காப்பாற்ற முதலையை அழித்தல் மாலிக வதம் ஆகியவை
எந்த ஸூதர்சனாழ்வானின் வெற்றிச் சரிதங்களாகப் பாடப் படுகின்றனவோ அப்படிப்பட்ட
சக்கரத்தாழ்வார் எல்லோரும் புகழும் சம்பத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்.

சீ மாலிகனவன் -பாசுரத்தில் பெரியாழ்வார் மாலிகன் வதம் அருளிச் செய்கிறார்

___________________________________

“நாநா வர்ணாந் விவ்ருண்வந் விரசித புவநாநுக்ரஹாந் விக்ரஹாந் ய:
சக்ரேஷ் வஷ்டாஸு ம்ருஷ்டா ஸுர வர தருணி கண்ட்ட கஸ்தூரிகேஷு;
ஆதாரா தர்ண மாலாவதிஷு வஸதி ய: பூருஷோ வஸ் ஸ தேயாத்
வ்யத்வை ருத்தூத ஸத்த்வை: உபஹிதம பஹிர் த்வாந்த மத்வாந்த வர்தீ”.–90-

ஸ்ரீ ஸூதர்சன புருஷன் எட்டுச் சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும்
ஆறு சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும் பல ஸந்நிவேசங்கள் சொல்லப்படுகின்றன.
முதல் சக்கரம் ப்ரணவ சக்கரம். எட்டாம் சக்கரம் மாத்ருகா சக்கரம் எனப்படும்.
இந்த எட்டு சங்கரங்களும் அசுரர்களை அழித்தமையால் அவர்களுடைய பத்னிகள் தம் கழுத்தில் அணிந்த
கஸ்தூரி அழிந்து போய் விதவையானார்கள்.
ஸாத்விகர்களின் நெஞ்சில் வகிக்கும் ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் உலக மக்களை அனுக்ரகிப்பதற்காக
நீலம் மஞ்சள் முதலிய நிறங்களைக் கொண்ட திருமேனியுடன் இந்த எட்டு சக்கரங்களில் எழுந்தருளியிருப்பார்.
ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் கெட்ட வழிகளில் சென்று நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட
அஞ்ஞான அந்தகாரத்தை இந்த ஸூதர்சனாழ்வான் அழிக்கட்டும்.
___________________________________

த்வாத் ரிம்சத் ஷோட ஸாஷ்ட ப்ரப்ருதி ப்ருது புஜ ஸ் பூர்த்தி பிர் மூர்த்தி பேதை
காலாத்யே சக்ர ஷட்கே பிரகடித விபவ பஞ்ச க்ருத்ய அநு ரூபம்
அர்த்தா நா மர்த்தி தாநா மஹரஹ ரகிலம் நிர் விலம்பைர்
குர்வாணோ பக்த வர்கம் குசலி நம வதா தாயு தக்ரா மணீர் வ–91-

ஷடரம் கால சக்ரம் பஞ்சாரம் ப்ருத்வீ சக்ரம் சதுரரம் அப் சக்ரம் த்ரி அரம் தேஜஸ் சக்ரம் த்வி அரம்
வாயு சக்ரம் ஏகாரம் ஆகாச சக்ரம் ஆகிய ஆறு சக்கரங்களுக்கும்
உத்பத்தி ஸ்திதி ஸம்ஹாரம் நிக்ரஹம் அனுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில் களுக்கும் ஏற்றவாறு
முப்பத்திரண்டு -பதினாறு -எட்டு -நான்கு -இரண்டு புஜங்களுடன் கூடிய திருமேனியுடன்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார் சேவை சாதித்து அருள்கிறார்
இவ்வாறு இருப்பது பக்தர்கள் விரும்பிய பலன்களை கால விளம்பம் இல்லாமல் அளித்து ரக்ஷிக்கவே
இவ்வாறு க்ஷேமத்தை அளிக்கும் திருவாழி ஆழ்வான் உங்களை ரக்ஷிக்கட்டும் –

___________________________________

கோணை ரர்ணைஸ் ஸரோஜை ரபி கபிச குணை ஷ் ஷட் பிருத் பின்ன சோபே
ஸ்ரீ வாணீ பூர் விகாபிர் தததி விலஸதஸ் சக்திபிர் கேசவாதீன்
தாரந்தே பூபுரா தவ் ரத சரண கதா சார்ங்க கட்க அங்கி தாஸே
யந்த்ரே தந்த் ரோதிதே வஸ் ஸ்புரது க்ருத பதம் லஷ்ம லஷ்மீ ஸகஸ்ய –92-

ஷட் கோணங்களும் ஷட் அக்ஷரங்களும் ஷட் பத்மங்களும் அமைந்தது ஸூ தர்சன யந்த்ரம்
யந்திரத்தின் நடுவில் இருக்கும் ஸூ தர்சன புருஷன் சிவந்த உடலும் சிவந்த வஸ்திரமும்
சிவந்த தலை மயிரும் சிவந்த கண்களும் கொண்டவராய் இருப்பர்
அந்த நிற ஒளியால் பத்மங்கள் எல்லாம் செம்பட்டை நிறமுடையதாக -கபிச குணம் இருக்கும் –
இந்த யந்திரத்தில் கேசவன் முதல் தாமோதரன் வரை யில் உள்ள பன்னிரண்டு மூர்த்திகள்

கேசவன் நாராயணன் மாதவன் –இவர்கள் வாஸூதேவ வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ஸ்ரீ சக்திகள்
கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன் -இவர்கள் ஸங்கர்ஷண வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாணீ சக்திகள்
திரிவிக்ரமன் வாமனன் ஸ்ரீ தரன் -இவர்கள் ப்ரத்யும்னன் வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாக் சக்திகள்
ஹ்ருஷீகேசன் பத்ம நாபன் தாமோதரன் -இவர்கள் அநிருத்த வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ம்ருடாநீ சக்திகள் சக்திகள்
என்ற முறையில் அமைந்து இருப்பார்கள் –

எந்திரத்தை அமைக்கும் போது முதலில் பூ புரத்தையும் முடிவில் ப்ரணவத்தையும் அமைப்பர்
யந்திரத்தின் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் சக்கரம் கதை வில் கத்தி ஆகிய நான்கு ஆயுதங்களை அமைப்பர்
இப்படிப்பட்ட யந்திரத்தில் இருக்கும் ஸூ தர்சனர் ஸ்ரீ யபதி ரூபமாக இருப்பர்
இது உங்களுக்கு ப்ரத்யக்ஷம் ஆகட்டும்

___________________________________

அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படும் மா ஹேந்திர மண்டலம்-என்ற
எந்திர அமைப்பை இந்த ஸ்லோகம் கூறுகிறது –

தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே கபட கிடிதநோ கைடபாரே ரதஸ்தாத்
ஊர்த்வம் ஹாஸேந வித்தே நரஹரி வபுஷா மண்டலே வாஸ வீயே
ப்ராக் ப்ரத்யக் சாந்த்ய சாந்த்ரச் சவி பர பரிதே வ்யோம் நி வித்யோத மாந
தைதேயோத் பாத ஸம்ஸீ ரவிரிவ ரஹயத் வஸ்த்ர ராஜோ ருஜம் வ –93-

யந்த்ரத்தின் கீழ் பாகத்தில் வராஹ நாயனாரையும்
மேல் பாகத்தில் நரஸிம்ஹ மூர்த்தியையும் தியானிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது
கீழே வராஹத்தின் தந்த காந்தியும்
மேல் இருந்து நரஸிம்ஹனுடைய சிரிப்பு ஒளியும் கலந்து யந்த்ரம் கடார வர்ணம் பெற்று இருக்கும்
கிழக்கு மேற்கு ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கும்
வராஹத்தின் தந்த காந்தி இயற்கையிலே வெளுத்ததாயினும் ஹிரண்யாக்ஷனைக் கொல்லும் போது
அவனுடைய உடலில் தோன்றிய ரத்தத்தின் ஒளியினால் சிவந்ததாயிற்று
நரஸிம்ஹனின் சிரிப்பு ஒளியும் ஹிரண்யன் ரத்த ஒளியால் சிவந்ததாயிற்று
இவை இரண்டும் சந்த்யா காலம் போல் தோற்றம் அளித்தது
இதன் நடுவில் இருக்கும் திருவாழி ஆழ்வான் அசுரர் குலம் அழிய ஆகாசத்தில் தோன்றும்
உத்பாத ஸூர்யன் போல் தோன்றுவார் –
இப்படிப்பட்ட ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் -உங்களுடைய ரோகத்தை -வியாதியை -நீக்கட்டும்
கடார வர்ணம் -கபில வர்ணம் –

___________________________________

கோணே க்வாபி ஸ்திதோபி த்ரி புவன விததச் சந்த்ர தாமாபி ரூஷ
ருக்மச்சாயோபி க்ருஷ்ணா க்ருதி ரநல மயோ ப்யாச்ரித த்ராண காரீ
தாரா ஸாரோபி தீப்தோ தினகர ருசி ரோப் யுல்லஸத் தாரக ஸ்ரீ
சக்ரே சச் சித்ர பூமா விதாது விமத த்ரா ஸனம் ஸாஸனம் வா –94-

திருவாழி ஆழ்வான் எந்திரத்தின் ஏக தேசத்தில் எழுந்து அருளி இருந்தாலும் மூன்று லோகங்களையும் வியாபித்தவராயும் இருக்கிறார்
சந்தோஷத்தை அளிப்பவராயினும் தீஷ்ண ஸ்வ பாவத்தை யுடையவராயும்
சந்திரனை இருப்பிடமாகக் கொண்டு இருந்தாலும் சத்ருக்களுக்கு பயத்தை அளிப்பவராயும்
பொன் நிறம் கொண்டவராயினும் பகவானைப் போலே நீல நிறம் உடையவராயும்
அக்னி மயமாக இருந்தாலும் ஆஸ்ரித ரக்ஷகராயும்
குளிர்ந்த மழையைக் கொடுப்பவராயினும் ஜ்வலித்துக் கொண்டு இருப்பவராயும்
ஸூர்யன் போலே பிரகாசிப்பவராயினும் நக்ஷத்ர சோபையை உடையவராயும் இருக்கிறார்
இவ்வாறு விருத்த தர்மங்கள் உறைவிடமாய் இருந்து கொண்டு ஆச்சர்யமான மஹிமையை யுடையவரான
திருவாழி ஆழ்வான் உங்களுடைய ப்ரதிபஷிகளுக்கு பயத்தை உண்டு பண்ணட்டும்

___________________________________

சுக்லச் சக்ர ஸ்தவஸ்தே ஸஹ தஹந கலாம் கால தேயம் ந கால
கிம் வோ ரஷாம் ஸி ரஷா தவ பலது பதே யாத ஸாம் பாத ஸேவா
வாயோ ஹ்ருத்யோ ஸி பர்த்து ஸ்த் யஜ தநத மதம் ஸேவ்ய தாம் த்ர்யம்ப கேதி
ப்ரா ஹுர் யத் யந்த்ர பாலா ஸதனுஜ விஜயீ ஹந்து தந்த்ரா லு தாம் வ — 95-

தேவேந்த்ரனே நீ ஸ்தோத்ரம் செய்வது சுத்தமாக இருக்கிறது –
அக்னி பகவானே சிறிது நேரம் நில்
யமதர்மன் உனக்கு இது சமயம் அன்று
ராக்ஷஸர்களே உங்களுக்கு இனிமேல் ரக்ஷணம் இல்லை
எது
வருணனே நீ பண்ணிக் கொண்டு இருந்த ஸூ தர்சன கைங்கர்யம் பலித்திடுக
வாயு பகவானே நீ திருவாழி ஆழ்வானுக்கு உகப்பாக இருக்கிறாய்
குபேரனே துர் அஹங்காரத்தை விடு
வாராய் முக்கண்ணனே திருவாழியை வணங்கு
என்று எந்த ஸூ தர்சனுடைய யந்த்ர பாலகர்கள் சொல்லுகிறார்களோ
அந்தத் திருவாழி ஆழ்வான் உங்களுடைய சோம்பேறித்தனத்தை ஒழிக்கட்டும் –

___________________________________

இது ஒரு யந்த்ர அமைப்பு -அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படுகிறது –

காயத்ர்யர் ணார சக்ரே ப்ரதம மநு சக ஸ்மேரே பத்ராரவிந்தே
பிம்பம் வந்ஹேஸ் த்ரி கோணம் வஹதி ஜயி ஜயாத் யஷ்ட சக்தவ் நிஷண்ணா
சோகம் வோ அசோக மூலே பத ஸவித லஸத் பீம பீமா ஷபீ மா
பும்சோ திவயாஸ்த்ர தாமா புருஷ ஹரி மயீ மூர்த்தி ரஸ்ய த்வ பூர்வா –96-

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய -என்பது த்வாதச அக்ஷர மந்த்ரம்
யந்திரத்தில் பன்னிரண்டு தளங்கள் உள்ள பத்மம் அமைக்க வேண்டும்
நடுவில் அக்னியின் த்ரிகோண பிம்பத்தை அமைத்தல் வேண்டும்
ப்ராசீ திசையில் -ஐயை
ஆக்நேய திசையில் மோஹிநீ
யாம்ய திசையில் -விஜயை
நிருரித திசையில் -ஹலாதி நீ
மேற்கு திசையில் -அஜிதை
வாயு திசையில் மாயை -கறுப்பு நிறம்
வடக்கில் -அபராஜிதை
ஈசான்ய திசையில் -ஸித்தி
என்று அது அஷ்ட சித்திகளை உடையதாக இருக்க வேண்டும்
இருபத்து நான்கு அரங்களைக் கொண்ட சக்கரத்தில் -(காயத்ரியின் அக்ஷரங்கள் இருபத்து நான்கு )
அசோகா மரத்தடியில் -திருவாழியின் திருவடி வாரத்தில் பயத்தை உண்டு பண்ணும் இரண்டு பீமாஷர்கள் அமைய வேண்டும்
இப்படிப்பட்ட சக்கரத்தில் ஸூ தர்சன மூர்த்தியின் நரஸிம்ஹ மூர்த்தி இருப்பார்
இவர் நான்கு கைகளில் நான்கு சக்கரங்களை வைத்துக் கொண்டு யோக பட்டம் சாத்திக் கொண்டு இருப்பார்
இந்த நரஸிம்ஹ மூர்த்தியான ஸூ தர்சனர் உங்களுடைய துக்கத்தைப் போக்கட்டும்

___________________________________

பாச்சாத் யாசோக புஷ்ப ப்ரகர நிப திதைஸ் ப்ராப்த ராகம் பராகை
ஸந்த்யா ரோசிஸ் ஸ்கந்தைர் ஸ்வ பத சச தரம் ப்ரேஷ்ய தாராநு ஷக்தம்
பத்மா நா பத்த கோசா நிவ ஸூர நிவஹை ரஞ்ஜலீன் கல்ப்ய மாநான்
சக்ராதீ ஸோபி நந்தன் ப்ரதி சது ஸத்ரு ஸீம் உத்தம ஸ்லோக தாம் வ –97–

யந்திரத்தின் அமைப்பில் -எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கிற அசோகா மரத்தில் உள்ள
புஷபங்களில் இருந்து மகரந்தத் தூள் கீழே விழுகின்றன
மகரந்துக்களின் நிறம் ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கிறது –
அந்தத் தூள்களால் சிவந்து இருந்துள்ள பிரணவ ஸம்பந்தமுடைய -நக்ஷத்ரம் -சம்பந்தமுடைய –
திருவாழி ஆழ்வானின் சந்த்ர மண்டலத்தைப் பார்த்து
தேவ கணங்கள் தாமரை மொட்டு போல் அஞ்சலியை ச் செய்கின்றன –
அவற்றைக் கொண்டு திரு உள்ளம் உகக்கும் திருவாழி ஆழ்வான்
தன் கீர்த்தி போன்ற உத்தமமான கீர்த்தியை உங்களுக்கு அளிக்கட்டும்

___________________________________

ரக்தா சோகஸ்ய வேதஸ்ய ச நிஹி தபதம் ப்ராப்த சாகஸ்ய மூலே
சக்ரை ரஸ்த்ரை ஸ்த தாத்யைரபி மஹித சதுர்த் விச் சதுர் பாஹு தண்டம்
ஆஸீ நம் பாச மாநம் ஸ்தித மபி பயதஸ் த்ராய தாம் தத்வ மேகம்
பச்சாத் பூர்வத்ர பாகே ஸ்புட நர ஹரிதா மாநுஷம் ஜாநு ஷாத்வா –98-

சக்கரத்தின் பின் பாகத்தில் சாகோப சாகமாக வளர்ந்து இருக்கிற அசோக மரத்தின் அடியிலும்
வேத மூலமான ப்ரணவத்திலும்
நான்கு திருக்கைகளிலும் சக்கரத்தைத் தரித்துக் கொண்டு
சக்கரத்தின் பிற்பகுதியில் வீற்று இருந்த திருக் கோலத்தில் இருக்கும் நரசிம்மரின் தன்மையும்
சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைக் கொண்ட திருக்கைகளுடன் முன் பக்கத்தில் நிற்கும்
மனிதத்தன்மையும் கொண்டு விளங்கப்பெற்ற ஒரு தத்வம்
உங்களை ஸம்ஸாரிக பயத்தில் இருந்து காப்பாற்றட்டும் –

___________________________________

ப்ராணே தத்த ப்ரயாணே முஷி ததிசி த்ருசி த்யக்த சாரே சரீரே
மத்யாம் வ்யாமோஹ வத்யாம் சதமஸி மனஸி வ்யாஹதே வ்யாஹ்ருதே ச
‘சக்ர அந்தர் வர்த்தி ம்ருத்யு ப்ரதி பய முபயாகார சித்திரம் பவித்ரம்
தேஜஸ் தத் திஷ்ட் டதாம் வஸ்த்ரி தச குல தனம் த்ரீ க்ஷணம் தீஷ்ண தம்ஷ்ட்ரம் –99-

உடல் இளைத்து மதி மருண்டு நெஞ்சு இருண்டு கண்களில் பார்வை மறைந்து பேச்சு தடுமாறி
உயிர் போகும் அளவில் அந்த ம்ருத்யுவுக்கும் பயத்தை அளிக்க வல்லவரும்
ஸூ தர்சன சக்கரத்தில் நடுவில் இருக்கும் மிகவும் பரிசுத்தமான-இரண்டு உருவம் கொண்ட –
ஆபத் தனமாவன -முக்கண்களை யுடைய – நரஸிம்ஹர் உங்களுக்கு சேவை சாதித்து
உங்களுடைய பயத்தை நீக்கி உங்களைக் காப்பாற்றட்டும் –

___________________________________

யஸ்மிந் விந்யஸ்ய பாரம் விஜயிநி ஜகதாம் ஜங்கம ஸ்தாவராணாம்
லஷ்மீ நாராயணாக்க்யம் மிதுன மநு பவத்யத் யுதாரான் விஹாரான்
ஆரோக்யம் பூதி மாயுஸ் க்ருதமிஹ பஹு நா யத்யதாஸ்த் தாபதம் வ
தத் தத் ஸத்யஸ் ஸமஸ்தம் திசது ச புருஷோ திவ்ய ஹேத்யக்ஷ வர்த்தீ –100-

பெருமாளும் பிராட்டியும் ஸகல சராசரங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஜெயசீலனான
ஸூ தர்சன ஆழ்வானிடம் ஒப்படைத்து விட்டுப் போக லீலைகளிலே ஈடுபடுவார்கள்
அப்படிப்பட்ட நிர்வாஹப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை நடத்தி வரும் திருவாழி யாழ்வான்
உங்களுக்கு ஆரோக்யம் ஐஸ்வர்யம் நீண்ட ஆயூஸ்ஸூ மற்றும் நீங்கள்
அர்த்தித்த புருஷார்த்தங்களை எல்லாம் உடனே கொடுத்து அருளட்டும்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஸர்வ அபீஷ்ட பல ப்ரதன் அன்றோ –
இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகம் அவன் கடாக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் –

___________________________________

பத்யா நாம் தத்வ வித்யா த்யு மணி கிரிச வீத் யங்க சங்க்யா தராணாம்
அர்ச்சிஷ்யங்கேஷு நேம்யா திஷு ச பரமத பும்ஸி ஷட் விம்ச தேச்ச
சங்கைஸ் சவ் தர்சனம் ய படதி க்ருதமிதம் கூர நாராயணே ந
ஸ்தோத்ரம் நிர் விஷ்ட போகோ பஜதி ஸ பரமாம் சக்ர ஸாயுஜ்ய லஷ்மீம் –101-

இந்த ஸ்தோத்ரத்தில்
ஸூ தரிசன ஜ்வாலையை வருணித்துக் கூறும் 24 ஸ்லோகங்கள்
நேமியை வருணித்துக் கூறும் 14 ஸ்லோகங்கள்
அரங்களை வருணித்துக் கூறும் 12 ஸ்லோகங்கள்
நாபியை வருணித்துக் கூறும் 11 ஸ்லோகங்கள்
அஷத்தை வருணித்துக் கூறும் 13 ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஸூ தர்சன புருஷனை வருணித்துக் கூறும் 26 ஸ்லோகங்கள்
பல ஸ்ருதி ஸ்லோகம் ஓன்று
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை வாசிப்பவர்கள்
இந்த உலகில் ஐஹிக போகங்களை எல்லாம் பூர்ணமாக அனுபவித்துப்
பின்பு
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரோடு பரம ஸாம்யம் என்னும் அந்தமில் பேர் இன்பம் பெற்று மகிழ்வார்கள்

_____________________________________________________________________

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ விஜய வல்லி ஸமேத ஸ்ரீ ஸூ தர்சன பர ப்ரஹ்மணே நம
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: