Archive for January, 2022

ஸ்ரீ திரு விருத்தம் – – பாசுரங்கள் -1-10–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -வியாக்யானம் –

January 30, 2022

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் –
ஸ்ரீ ஆள வந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )

கரு விருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர் திரு நாட்டகத்தே –

கர்ப்ப அரங்கம் -காமக்கடும் குழி -உழன்று -உயிர் பொருள் -அனர்த்தம் படாமல் –
ஓர் அடி கற்று இரீர் என்று உபதேசம்

———-

பிரவேசம் –

ஆழ்வாரை முக்தர் என்பார்கள் சிலர் –
(அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கையாலே நித்யரும் முக்தரும் என்பர்
முக்தர் என்றது முதல் திருவாய் மொழியில் உபய விபூதியையும் ததீயத்வ ஆகாரரேண அனுபவித்த படியால்)

அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார் ஒருவர் முத்த ப்ராயர் என்பர்
(முமுஷு -ஸ்வேத தீப வாசிகள்–நம சொல்லிக் கொண்டே இருப்பார்களே -என்றுமாம்
ஸ்வேத தீப வாசி –சீதனையே தொழுவார் -தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்கள்
முக்த பிராயர் என்றது வீடுமின் முற்றவும் -பிறருக்கு உபதேசித்த ஞான வைபவத்தைப் பற்ற
அங்குத்தை இருந்து வந்தவர் இங்கு திருத்தினதைப் பார்க்க வந்தார்கள் )-

அங்கு உள்ளார் ஒருவரை நீர் போய் பிறவும் என்னப் பிறந்தார் -என்பார்கள் சிலர் –
(பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் இத்யாதியைப் பற்ற )

வங்கி புரத்து நம்பி -எம்பெருமான் தான் இப்படி வந்து அவதரித்தான் -என்பர்
(யானாய்த் தன்னைத் தான் பாடி -இதுக்கு மூலம் யான் நீ இத்யாதி ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி
திருக்குறுங்குடி நம்பியே திருக்குருகூர் நம்பி என்பார்களே
சேமம் குருகையோ –நாராணனோ இத்யாதி
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ –இத்யாதி )

இப்படிச் சொல்லுகைக்கு அடி ஆழ்வார் உடைய பிரபாவத்தாலே –
முக்தரிலே ஒருவரை இங்கே போர விட்டதாகில்
நாம் போந்த கார்யம் முடிந்த வாறே போகிறோம் என்று ஆறி இருக்கக் கூடும்

அங்கன் இன்றியிலே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை-என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ (6-9-9 )என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து (2-6-8 )என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ (7-1-10 )என்றும்
எல்லாம் கூப்பிடுகையாலே இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –

அராஜகமான தேசத்திலே பட்டத்துக்கு உரிய ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால்
ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை –

சிர காலம் சாத்யமான-அநாதி காலம் ஸஞ்சிதமான – கர்மத்தை உடையார் ஒருத்தருக்கு
கடாஷித்த அநந்தரம்
இங்கனே ஆகக் கூடுமோ என்னில்

பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா
சுபேக மனசா த்யாதம் கவாம் வ்ருத்திம் அபீப்சதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-28)-என்கிறபடியே
நெருஞ்சிக் காடாய் கிடந்த ஸ்ரீ பிருந்தாவனம் கிருஷ்ணன் உடைய வீஷணத்தாலே
(வீஷணத்தாலே-என்றது பொதுவாக அனைத்தையும் –
கடாக்ஷம் ஒருவரை நினைத்து அருளுவது
தியானிக்க தியானிக்க கடாக்ஷம் பெறலாம்
வீக்ஷணம் -ஸ்வா தந்தர்யம் அடியாக )
உத்பன்ன நவ சஷ்பாட்யம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-37 )-என்கிறபடியே
சாணரைப் புல்லாய் பசுக்கு பசுகு என்று அறுக்க அறுக்க தொலையாதே கிடந்தால் போலே
இவர்க்கும் இது கூடும் –

ஷோடச பதார்த்த ஞானத்தாலே நிஸ் ரேயசம் என்பாரும்
ஷட் பதார்த்த ஞானத்தாலே மோக்ஷம் என்பாருமாய்
இங்கனே சில அர்த்தங்களைச் சொல்லா நிற்பார்கள் இதர வாதிகள்

(நை யாயிக –16 பதார்த்தங்கள் –பிரமாண ப்ரமேய சம்சய ப்ரயோஜன த்ருஷ்டாந்தம் சித்தாந்தம்
அவயவம் தர்க்கம் வாதம் ஜல்பம் நிர்ணயம் விதண்ட பலம் ஜாதி விக்ரஹம்
வை சேஷிகர் பக்ஷங்கள்–6 பதார்த்தங்கள் – -த்ரவ்ய -குண கர்ம சாமான்ய விசேஷம் சமவாயம்
ஈட்டில் முதல் ஸ்ரீயப்படியில் ஸாதித்த அர்த்தங்கள் இவை )

நம் பக்ஷத்தில்
சித் அசித் ஈஸ்வரர் என்று தத்வம் மூன்றாய்
அவற்றில் இரண்டு பரதந்த்ரமாய்
ஓன்று ஸ்வதந்திரமாய்
பரதந்த்ரமாகிறன -சித்தும் அசித்தும் -சேதன அசேதனங்கள்
ஸ்வ தந்த்ரன் -ஈஸ்வரன்

சேதனன் ஆகிறான்
ஈஸ்வரன் கை பார்த்து இருந்து தன் கார்யம் தலைக்கட்டிக் கொள்ளக் கடவனாய்
அவனும்
இவர் கார்யம் செய்து தலைக்கட்டிக் கொடுக்கக் கடவனாய்
பின்னை அசித் அம்சம் த்யாஜ்யமாய் கடவதாய்
(அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -வீடுமின் முற்றவும் -வீடு செய்து –
ஞானம் வர வர அவற்றை எல்லாம் தள்ளி இவனையே கொள்வோமே )
இங்கனே யாயிற்று நம் தரிசனத்தில் நிர்ணயம்

அவதாரிகை –

ஈஸ்வரனைக் குறித்து சாதனம் அனுஷ்ட்டித்து அபிமதங்களைப் பெறுவாரும்
ஸ்வரூப ஞானத்தால் அவன் தன்னையே பற்றி பெறுவாரும்
(ஸ்வரூபம் அநந்யார்ஹத்வம் அறிந்து வேறு யாருக்கும் ஆட்படாமல் )
இப்படி எல்லாருக்கும் ஒக்குமாயிற்று அவனாலேயே பேறு
பல பிரதன் அவன் ஒருவனே
இப்படி இருக்கையாலே

சர்வேஸ்வரன் நிருஹேதுகமாக தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும்
விரோதி ஸ்வரூபத்தையும்
உள்ளபடி அறிய வல்லராம் படி ஞான விசேஷம் அருளி

இவரும் அப்படி ஹேய உபாதேய பிரித்து அறிந்து
உத்தேஸ்யமான உமது திருவடிகளுக்கு அடிமைக்கு விரோதியான த்யாஜ்ய அம்சத்தைப்
போக்கித் தர வேணும் என்று திரு முன்பே விண்ணப்பம் செய்கிறார் –

சம்சார ஸ்வ பாவத்தையும் -(பொல்லா )
பரமபத வ்ருத்தாந்ததையும் -(இமையோர் )
அங்குள்ளார் தம்மை அனுபவித்துக்கொண்டு இருக்கும் படியும்
இவரும் நாங்களும் அவர்களோபாதி -அடியேன் -ஸ்வரூப ஞானம் வந்த பின்பு -பிராப்தி உடையராம் படி-
அவர்களோடு ஓக்க அனுபவிக்க பிராப்தி உண்டே ஸ்வரூப ஞானம் வந்த பின் –

அங்குள்ளார் ஞானத்தையும் வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

அங்கு சம்யக் ஞானம்
தத் அனுரூப விருத்தங்கள் -கைங்கர்யம் ஏகதா பவதி
அதுக்குப் பாங்கான சரீரத்தையும் -சாரூப்பியம் -பெற்று -உடையராய்க் கொண்டு இருக்க
(நமக்கு எதிர்த்தட்டாக மூன்றும் உண்டே அங்கே )

இங்கே விபரீத ஞானத்தையும்
விபரீத விருத்தத்தையும்
உள்ளபடியே அனுசந்தித்து
விரோதி நிவ்ருத்தம் பண்ணி அருள விண்ணப்பம் செய்கிறார் –

இமையோர் தலைவா -அங்கு உள்ள பரிமாற்றம் காட்டிக் கொடுக்கையாலே
(ஆழ்வாருக்கு இம் மூன்றுமே இல்லை -ஆழ்வாரை இந்த உடம்புடன் கூட்டிச் செல்லப் பாரித்தானே
நமக்காக மன்றாடுகிறார் )
இங்கு உள்ளது எல்லாம் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்புமாய் தோற்ற
விரோதி நிவ்ருத்தம் பண்ணி அருள விண்ணப்பம் செய்கிறார் –

ஜரா மரண மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தியே -ஸ்ரீ கீதை -என்று கேவலரைப் போலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்பான் என் என்னில்
காந்தன் சந்நிதியில் காமினி அழுக்கு கழற்றுமா போலேயும்
ராஜ குமாரன் அபிஷேகம் ப்ராப்தமானால் முன்புள்ளார் புஜிப்பது அறிந்து தானும்
அத்தைப் புஜிக்க யோக்யமாக அதுக்கு பிரதிபந்தகங்களான ஷய வியாதிகளைப் போக்க கேட்க்குமா போலேயும்
தத் அனுபவ விரோதி என்று கழிக்க நினைக்கிறார்

சர்வேஸ்வரனுக்கு கௌஸ்துபம் போல் ஸ்ப்ருஹணீயமாய்
பகவத் அனுபவத்துக்கு யோக்கியமான உள்ள ஆத்ம வஸ்து
அநர்த்தப்படுவதை அறிந்து
தண்ணீர் துரும்பாக இருக்கும் தேக சம்பந்தத்தை
அறுத்து தர வேணும் என்று கால் காட்டுகிறார்

இது தான் ப்ரீதியோ அப்ரீதியோ என்னில் -இரண்டும்
மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும்
வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும்
பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும்
எம்பெருமானைக் கண்ட பிரியமும் –இரண்டும் உண்டே

(இதே தானே திருவாய் மொழி முழுவதும்
சீதா பிராட்டி ராக்ஷஸர்கள் உடன் இருப்பு போல் நம்மைப் பார்த்து அப்ரியமும்
அவனைப் பார்த்து பிரியமும் மாறி மாறிச் செல்லுமே )

இனி இப்பிரபந்தத்தில்
வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுவான் என் என்னில்
பகவத் விஷயத்தில் சேரும் பொழுது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
சுள்ளிக்கோல் -பாகவதர் கொள் கொம்பு ஆச்சார்யர்
கடகர் –
பின்பு பிராப்யர் -இவர்களும் ஸாத்யர்

இமையோர் தலைவா -என்றும்
அடியார் அடியார் தம் அடியார் -என்றும்
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை-(10-9) -என்றும் சொல்லுகையாலே
(எல்லா பாசுரங்களில் பாகவதர் பிரஸ்தாபம் உண்டே )

பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-
அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே –
நடுவில் இங்கு இருக்கும் நாள் போதயந்த பரஸ்பரம் பண்ணவும் வேண்டுமே
உத்தர கிருத்ய அதிகாரம் -ரஹஸ்ய த்ரயம்
பிரிவாற்றாமை ஆற்றவும் இவர்கள் வேணும்
மகிழ்ந்தால் அத்தை வர்த்திக்கவும்
துஷ்யந்த ச ரமந்தி ச -உசாத் துணை
ஆகையால் அவர்களை உத்தேசியர் என்று சொல்லிற்று

(ஆக
1-அடியார்கள் அவனைப் போலவே ப்ராப்யம் என்றும்
2-இவர்களே கடகர் என்றும்
3-போதயந்த பரஸ்பரத்துக்கு என்றும்
மூன்று காரணங்கள் )

பிரபந்தம் முழுவதும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்
பொல்லா அருவினை –அழுந்தார் பிறப்பாம் -என்றும்
உபக்ரமமும் உபசம்ஹாரமும் ஏகார்த்தம் ஆகையாலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.

எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-
த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –

வியாக்யானம் –

வேத வ்யாஸ பகவான்
125000 கிரந்தம்
மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை
இவ்வர்த்தம் எங்கோ மறைந்து இருக்கும் அங்கு –
பூசல் பட்டோலை முழுவதும் தேடி அறிய வேண்டும் –
இங்கனே இருக்கச் செய்தே
இவர் எல்லாம் நெஞ்சில் படும்படி
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்-

பொய் என்றும்
மெய் என்றும்
அசித்தையும் சித்தையும் சொல்கிறார்
பிரகிருதி நித்யம் பிரளயத்தில்

பொய் என்று
சூன்யம் என்றும் துச்சம் என்று சொல்ல வில்லை
சர்வம் சூன்யம் என்றும் இல்லை
அவன் ஒருவனே சத்யம் ஜகத் மித்யா என்றும் இல்லை
பரிணாமாதிகளைப் பற்றிச் சொல்கிறது

மெய் என்று ஏக ரூபம் என்பதால் சொல்கிறது
இரண்டும் நித்யம் தானே
தைத்ரியம் சொல்லும் -அவன் இடம் இருந்து
ஸத்யம் அஸத்யஞ்ச அந்ருத்தம் -இரண்டும் பிறந்தது -தைத்ரியம்
சத்யம் ஆத்மா
அந்ருத்தம் சரீரம்

அஸ்தி நாஸ்தி -என்றும் பராசரர் மைத்ரேயர் இடம்
பரிணாமங்கள் சொல்லுமே
வஸ்து சப்தம் -அஸ்தி -சத்யம் பர்யாயம்
அசித்துக்கு ஸ்வரூபமே மாறும் -பூ சருகாகும் -ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்கு ஸ்வ பாவம் மட்டுமே மாறும் -ஞான சங்கோசம் மாத்திரம்
அங்கு ஸ்வேண ரூபேண -ஆவிர்பாவம் பெறுகிறோம்
ஸ்வ பாவ அந்யதா பாவம் இங்கு அசித் சம்சர்க்கத்தால்

இது ஒழிய
துச்சமோ மித்யா என்றோ கானல் நீர் போல் பொய் என்றோ சூன்யம் என்றோ சொல்ல வில்லை
அழியாத மாறாத நிலை
பொய்யான ஞானம்
அர்த்தத்தில் உள்ள பொய் தனம் ஞானத்தில் தட்டுமே
பொய்யான அர்த்தம் விஷயீகரிப்பத்தால்
ஸ்வ தந்திரமாக ஞானத்துக்கு அஸத்யதை -பொய்மை இல்லையே
ஸ்வப்னத்திலும் ஞானம் உண்மை -தங்கக்குடம் ஸ்வப்னம் காண கையில் இல்லையே
ரொட்டி கதை அறிவோம் -எட்டி உதைத்து இழந்தானே –

விஷயத்துக்கு அசத்தியம்
ஞானத்துக்கும் இட்டுச் சொல்லலாமே
முத்துச் சிப்பி -வெள்ளித் தன்மை -இல்லா விட்டாலும் -பிரமம் ஏற்படும் -அது உண்மை
பொய்யான அசித்தை கிரகிக்கும் ஞானம்

அசித்தை அசித்தாக தானே கிரஹிக்கிறோம் –ஆத்மாவாக இல்லையே -ஏன் பொய் என்ன வேண்டும்
அன்று
தேவோஹம் மனுஷ்யோகம் -என்னும் பொழுது
தேவ சரீரம் மனுஷ்யம் சரீரம்
அஹம் -சேர்த்து சொல்கிறோம்
நான் கடிகாரம் சொல்ல வில்லையே
ஊர்த்வ ஆகாரம் -மேல் நோக்கி பயணம் செய்து -உள்ளே சென்று ஆத்மா -அதுக்கும் உள்ளே பரமாத்மா
அபர்யவசனத்தாலே ஈஸ்வரன் அளவும் சென்று -பின்னை அதுவே மோக்ஷ ஹேது வாகக் கடவது
அச்யுத னுக்கு தாஸ்யன் என்று அறிந்தால் தான் மோக்ஷம்
அவ்வளவு செல்லாமல் தன் அளவும் வராமல் சரீரம் அளவிலே நின்றால் ஸம்ஸார ஹேது
தஞ்ஞானம் ஞானம் -அஞ்ஞானம் மற்றவை
அவனைத் தவிர அனைத்தும் அஞ்ஞானம் கல்பமாகவே கொள்ள வேண்டுமே
அர்த்த ஸ்வ பாவத்தால் பொய் என்கிறது –

நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –

பொல்லா ஒழுக்கம்
ஞான அனுரூபமாய் அனுஷ்டானம்
கீழே சம்யக் ஞானமாய் அதுக்குத்தக்க அனுஷ்டானம் இல்லையே
ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம்
நான் எனக்கு என்று பிரதிபத்தி பிறந்தால் அதுக்குத் தாக்கவே அனுஷ்டானம்

பெருமாள் உடன் ஓக்க முடி சூடப் பிறந்த இளைய பெருமாள்
தம்பி என்று இருந்தால் பொய் நின்ற ஞானம்
பரவானஸ்மி காகுஸ்த -அடியேன் தேவருக்கு உரியவன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி
குருஷ்வமாம் அநு சரம்
குணைர் தாஸ்யம் -அடிமை
சேஷத்வம் ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம்

கையில் துரட்டி இவர் -பர்ணசாலை கட்ட
பெருமாள் வில் -அவருக்குத் தக்க
இரண்டும் இயற்க்கை இருவருக்கும்
கனியும் கிழங்கும் வெட்ட துரட்டி கையில்
கனியும் கிழங்கும் எடுத்துக் கொள்ள பாத்திரமும் தலையில் வைத்துக் கொண்டு போனார் அன்றோ

அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்
மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்

அழுக்கு உடம்பும்
நன்றான ஞானமும்
நன்றான ஒழுக்கமும் -அனுஷ்டானமும் -உடையவனாய்
ஸ்வேன ரூபேண -ஸ்வரூபம் -ஆவிர்பாவம் பெற்று
நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஏக ரூபமாய் ஈஸ்வர சேஷமாய்
விபரீத ஞானம் விபரீத அனுஷ்டானம் வருகைக்கு அடி தேக சம்பந்தத்தாலேயே
அசித் அயன சம்பந்தம் -அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்தம் ஆச்சார்ய ஹ்ருதயம்

சுக துக்கம் அனுபவிக்கும் போக்தா -உபாதை கர்மாதீனம்
ப்ராப்ய அப்ராப்ய விவேகம் பண்ணினால்
சுக துக்கம் -ப்ரக்ருதி யுடைய தர்மம் தானே
அங்கு நிரதிசய அனுபவம் -மிஸ்ரமானது அல்ல -அது தான் ஆத்மாவுக்கு -அப்ராக்ருதம் அங்கு
இங்கே சுக துக்கம் அனுபவிக்கும் பொழுது வாராது என் என்னில்
அசித் சம்சர்க்கத்தாலே தானே வரும்
இன்னும் அரை மணி -சொன்னால் -முட்டி -வலிக்கும் ஒவ்வொரு சொல்லும் அசித் சம்பந்தம்
நிஷ் க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை இல்லையே
ஆத்ம தர்மம் என்றால் முக்தனுக்கும் உண்டாக வேணுமோ
முக்தாத்மாவுக்கு இல்லையே
அங்கு துக்கமே கலக்காத சுகம்

தேக யோகாத் வா –ப்ரஹ்ம ஸூதரம் மூன்றாம் அத்யாயம்
ஸ்ருஷ்ட்டி காலத்தில் தேக சம்பந்தம் வருவதால்
ஸ்வரூப திரோதானம் -ஸ்வரூபம் மறைவு
பிரளய காலத்திலும் ஸூஷ்ம ப்ரக்ருதி
ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்தூல நாம ரூப விகாரம் உள்ள சரீரம் –
இவற்றைக் காட்டவே வா சப்தம்
தேக சம்பந்தத்தாலோ -பிரகிருதி சம்பந்தத்தாலோ -என்று விகற்பம் சொல்லும்
நாம ரூப விபாகம் இங்கு -பிரக்ருதியில் இவை இல்லை

த்ரி குணாத் மிகையான பிரகிருதி -விட்டு தாண்டி -ஸூத்த சத்வ மயம்
ஸ்வயம் பிரகாசமான அசித் அங்கு -அப்ராக்ருத விக்ரஹம் அங்கு
அது தானே
நன்றான ஞானத்துக்கும்
நன்றான ஒழுக்கத்துக்கு உடல் அங்கு –

நான்காம் அத்யாயம்
பாவம் -ஜைமினி விகற்பம் ஆமனாத்
சரீரம் இந்திரியங்கள் உண்டு அங்கும் -ஜைமினி இவ்வாறு கருதுகிறார்

ஏகதா பவதி –நாநா –கைங்கர்யத்துக்கு அனுரூபமாக
அங்கும் திரு மேனி உண்டு
நித்யம் ஸ்வரூப ஆவிர்பாவம் குறை இல்லை
மெய் நின்ற ஞானம் – நல்லா ஒழுக்கம்
முக்தனுக்கு நாநா பாவம் உண்டு –
விசேஷ விருத்திக்கு அனுரூபம் அங்கு –

இந் நின்ற நீர்மை –
இந்த விலகாமல் நிற்கும் ஸ்வ பாவம்
விபரீத ஞானமும் விபரீத அனுஷ்டானமும் இவற்றுக்கு அடியான தேக சம்பந்தமும் –
த்யாஜ்ய அம்சத்தை
கையிலே இட்டுக் காட்டுவாரைப் போலே –
இ -சுட்டு எழுத்து –
ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படும்படி உபபாதித்துக் காட்டுகிறார்

இந்நின்ற நீர்மை
உனக்கு அத்யந்த சேஷமுமாய் -கௌஸ்துப மணி போல் – ஆதரணீயமுதுமாய்
அநாதி காலம் உன்னைப் பிரிந்து தேடி சம்பாதித்த இவற்றைப் பார்
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்த பிள்ளை தந்தையிடம் காட்டுவது போல்
இவை தான் நான் சேர்த்த சொத்துக்கள்
உதிரக் கூறையைப் பிரித்துக் காட்டுகிறார்

ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு
ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-

ஸுக்ரீவாய ச தத்ஸர்வஂ ஷஂஸத்ராமோ மஹாபல: ৷৷1.1.59৷৷
ஆதிதஸ்தத்யதாவரித்தஂ ஸீதாயாஷ்ச விஷேஷத: .
ஸுக்ரீவஷ்சாபி தத்ஸர்வஂ ஷ்ருத்வா ராமஸ்ய வாநர: ৷৷1.1.60৷৷
சகார ஸக்யஂ ராமேண ப்ரீதஷ்சைவாக்நிஸாக்ஷிகம் .

மஹா ராஜர்-அண்ணியனான வாலியால் பட்ட துக்கம் ஸூஹ்ருத்தைத் தேடிக் காட்டுமா போல்
தாம் பட்ட பாட்டை ஆழ்வார்
நான் என்னும் படி அண்ணிய சரீரத்தால் இவர் பட்ட பாடு
தேஹாத்ம அபிமானம்
சரீரியாய் உடன் கேடனான ஈஸ்வரனுக்கு அறிவிக்கிறார் –

இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக் கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்
ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்

ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்
தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்

இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்
இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம்
இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு-

நின்ற
இது தான் ப்ரவாஹ ரூபமாய் நித்தியமாய்
ஆத்மா சத்தையாய் உள்ள அன்று தொடங்கி செல்லுமே
அநாதி -ஆதியே இல்லையே

அறிவுடையார் சிலர் தேஹாத்ம விவேகம் அறிந்து உபதேசித்தாலும் –
பிரமாணங்கள் காட்டி உணர்த்தினாலும்
அவர்களையும் தம் வழியிலே இழுத்துப் போகும்படி அன்றோ இது
நிலை நின்ற ஸ்வ பாவம் -பேதிக்க ஒண்ணாத படி இருக்குமே –

நீர்மை
இது தண்ணியது என்று அறியா நிற்கச் செய்தே –
புரிந்து உணராமல் -இத்தை அல்லது செல்லாதபடி இருக்குமே

ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே
பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே
இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை
தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –

நீரே பிரிக்க ஒண்ணாத படி இருக்கும் என்று சொன்னால்
நம்மால் செய்யலாவது உண்டோ என்று ஈஸ்வரன் அபிப்ராயமாக
மேல் உத்தரம் சொல்கிறார்

இது பொல்லாது பிறவாது ஒழியாமல்
நீ போக்குவான் ஒருவன் நீ உளாய் என்ற புத்தி பிறவாமல்
இருந்தால் அன்றோ எனக்குப் பட வேண்டும்

இதுக்கும் அவன் இடம் விகாரம் இல்லாமல்

மூன்றாவதாக
உனக்கு அறிவித்த பின்பும் எனக்கு பட வேண்டுமோ

கஜேந்திரன் ஆயிரம் தேவ வருஷம் பட்ட பின்பு நாராயணா மணி வண்ணா என்றதும்
ஓடி வந்து ரக்ஷித்தாயே
அநாதி காலம் பட்டது போதாதோ
உனது கண் பட்டதும் நான் பட வேண்டுமோ

ஒருவன் கையிலே சோறும் உண்டாய்
அவன் தான் இடுவானுமாய்
பிராப்தியும் உண்டாய் இருக்க
நமக்கு பசியும் இருந்து
உண்பானும் ஆனால்
பசித்து இருக்க வேணுமோ
லௌகிக த்ருஷ்டாந்தம் காட்டி அழகாக விளக்குகிறார்

இனி –
ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே
உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு
குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு

யாம்
தம்மைச் சொல்லுகிறார் ஆதல்-ஆத்மநி -பஹு வசனம்

யாம் உறாமை –
பர அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே
நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்
நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்
ஆத்மனி பஹூ வசனம் வா –

அளிப்பான்-
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –
சிலர் அபேஷித்தது உண்டோ -உன் கிருபை இறே
தான் சொல்லும் போதும் பஹூநிம் என்றான் இறே

உறாமை
இது துக்கம் கலந்த சுகம்
நான் கிட்டாதபடி இருக்க வேண்டும்

நம்மைக் கண்டதும் இதுவும் ஒரு வார்த்தை சொல்லி
இத்துடன் பல வருஷங்கள் போகட்டும்
மேல் பெறுகிறோம் என்று அவன் நினைவாக
அது இல்லை என்று மறுத்து பேசுகிறார்

அவனோ ஆழ்வாரைப் பார்த்து மயங்கி இருக்கிறான்

சர்வ பிரகாரத்தாலும் தனது உறுதியை வெளியிடுகிறார்

உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில்
அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன

சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் –
நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-

அவர் பிறக்கிற பிறவி நம்முடைய பிறவி அறுக்கவே என்று இருப்பவருக்கு அன்றோ பிரயோஜனம் ஆகும்
நண்ணுவார்கள் சிந்தையில் உளன்
உள்ளூவார் சிந்தையில் உளன் கண்டாய்
தாம் அறிந்தமை தோற்ற பிறந்தாய் என்கிறார்
நம் பிறப்புடன் தொடர்பு -வெட்டி விடவே -நீயும் பிறந்தாய் என்கிறார் –

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந–4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

அவதார பிரயோஜனம் இது என்று அறிந்தால் அதே பிறவியில் சரீரம் தொலைத்து என்னை அடைகிறான்
நானும் பிறந்து அவன் மீண்டும் பிறக்க வேணுமோ
ஈர் அரசு உண்டோ
அவனே ஸர்வேஸ்வரன் தெரியாமல் நாமே ஸ்வ தந்த்ரன் என்று இருந்தால் தானே பிறக்க வேண்டும்
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி பேரேன் என்று அன்றோ கிடக்கிறான் –

அகர்ம வச்யனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு
எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-

உயிர் அளிப்பான் –
உயிர்
பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான் -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே-
சகல ஆத்மாக்களையும் சம் ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –

அளிப்பான்
ரஷிக்கையே பிரயோஜனம்
அளித்து ஒரு கார்யம்
தர்மத்தை ரக்ஷிக்க -தாய் பாலூட்டுவதே பேறு

என்நின்ற
தாழ்ந்த பிறவி என்று ஒதுக்க வில்லையே
இவனுடைய-ஜீவாத்மாவுடைய ஜன்மத்துக்கு ஒரு அடைவு இருக்கும் -கர்மாதீனம் நம்மது
அவனுக்கு அவ்வாறு இல்லையே
இச்சா க்ருஹீத அவதாரங்கள்
தனது அனுக்ரஹத்தாலே எல்லாருக்குமாக அவதாரம்
பஹு தா விஜாயதே
பஹு நீ அவனும் சொல்லிக் கொள்கிறான்
பிறப்பில் பல் பிறவி பெருமான் -மர்மம் அறிந்த வார்த்தை

என் ஜென்மம் போக்கித் தர வேண்டும் என்று கால் கட்டிக் கொள்ளுவது போலேயோ
என்னை எடுக்க பிறந்த உனது பிறவி என்கிறார்

அளிப்பான்
ரஷிக்கையே பிரயோஜனம்
அளித்து ஒரு கார்யம்
தர்மத்தை ரக்ஷிக்க -தாய் பாலூட்டுவதே பேறு

ஆய்
அவதாரத்தில் மெய்ப்பாடு
பெருமையில் ஒன்றும் குறையாமல் ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து
மாசுடம்பில் நீர் வாரா பன்றியாய்
தோய்வின்றி வந்து பிறந்தாயோ
பவான் நாராயனோ தேவ -அடி அறிந்த நான்முகன் சொல்ல
ஆத்மாநாம் மானுஷ்யம் மன்ய -ப்ரதிஜ்ஜை பண்ணி சொன்னாயே

பிறந்தாய் –
தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து –
பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே

ஜஹ்னே -பிறந்தாய்
கீழ் குண சாம்யம் சொல்லிற்று ராம குணங்கள் பலவும்
சீல குணம் -ஸுசீல்யமே ராமாவதார குண அசாதாரணம்
ஆஸ்ரித பாரதந்தர்யம் கண்ணனுக்கு அசாதாரணம்

பிறந்தவர் தம் தம்முடைய ஜென்மம் அறுக்க நமக்காகா பிறந்த
அவன் ஜென்மம் அறிய வேண்டுமே –
இது தான் இப்போது உபதேசிக்க வேண்டும் படி
அப்ரஸித்தமாய் இல்லாமல் இருந்ததோ

இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –

பிறந்தாய்
யுகாவாதாரும் நிகர்ஷம் சொல்லும் பொழுதும் பிறந்தவன் என்று அன்றோ சொல்லுவார்கள்
ப்ரஹ்மம் பிறவாதவன் -குணம் விக்ரஹம் ஒன்றும் இல்லாதவன் என்பார்களே
வேண்டித் தேவர் இரக்க
இப்படி அவதரித்ததும் அனன்ய ப்ரயோஜனருக்காகவோ
கார்யம் கொண்ட அநந்தரம் நீயும் தேவன் நாங்களும் தேவன்
பாரிஜாத வ்ருத்தாந்தம் -நரகாசுர வதம் செய்த பின்பு அன்றோ
அபிமானிகளுக்கா அன்றோ செய்தாய்
சிவன் வில் ஹுங்காரம் செய்ய முறிய அதிகம் என்று புகழ்வார்கள்
பின்பு ஈஸ்வரோஹம் என்று இருப்பார்கள்
கையில் வில்லைக் கொடுத்து -இராவணனை வதம் செய் என்பர்
கழுத்திலே கயிறு வைத்து இழுத்தால் -கர வதம் ஆனபின்பு கேசவா என்று புகழ்வார்கள்
நான் இன்னது என்று அறிந்தேன் என்பர் பின்பு

சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
ஸ்லோக வியாக்யானம் செய்கிறார் மேல்

ராவணஸ்ய
நாடு முழுவதும் இருந்ததே குடியாக அவனுக்கே இருக்கும் படி ஆக்கி இருந்தானே –
தான் கைலாசாதிகளை எடுத்து கூப்பிடும்படி ஆனவன்

வாதார்த்திபி
ஈஸ்வர அபிமானிகள் இதுக்கு ஒருவனைக் கால் கட்டி கார்யம் செய்ய-
அபிமானம் தொலைந்து வந்தார்கள் என்று உகந்து அவதரிக்கிறாயே
அபிமான பங்கமாய் என்று இவன் திரு உள்ளம் கொண்டான் -அவர்கள் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும் –

மானுஷ்யே லோகே
இந்த லோகத்தில் -அவர்களும் கால் வைக்கக் கூசும் தேசம்
ப்ரஹ்மாதிகள் -இங்கேயே இருந்தும் –

ஜஹ்னே
தேவகி பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் -ரிஷிகள்
அவதாரத்தில் ஆசை கொண்டு
கர்ப்ப வாசம் பண்ணினான்
தாய் தந்தைகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
கிழக்கு ஸூர்யன் தொடர்பு போல் இல்லாமல் முழுசி கலக்க அன்றோ இவனுக்கு பாரிப்பு
இக்குணம் இழக்க ஒண்ணாதே

விஷ்ணு
வியாபகம் -ஒரு ஏக தேச -த்ரிவித பரிச்சேதம் உள்ளவன் அன்றோ

ச நாதன்
என்றும் இருப்பவன் ஒரு நாளில் பிறக்கிறான் அன்றோ –
நீர் மோர் பானகம் பண்ணி
ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடுகிறோம்

என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் கார்ய கரம் ஆகாதே
உடுத்த உரியலோடே -போந்தது அன்றோ
அது இன்று தலைக் கட்ட அன்றோ பிறக்கிறது
என்று பட்டர் அருளிச் செய்வார் என்று ஸ்ரீ வத்சாங்க தாசர் என்று அருளிச் செய்வார்

மாயப் பிறவி பிறந்த தனியன்-அன்றோ

மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

இதுக்குக் கருத்து
உம்முடைய கார்யம் நீரே நிர்வஹித்துக் கொள்ளும் -என்ன
அங்கனே யாகில்
தேவரீர் உடைய அவதாரங்களுக்கு வேறு பிரயோஜனம் என்ன -என்று

இமையோர் தலைவா பிறந்தாய்
பிறவாதார் துக்க நிவ்ருத்தியைப் போக்கவோ பிறந்தாய்
பிறக்கும் எங்கள் பிறப்பை அறுக்க அன்றோ பிறந்தாய்
இத்தால்
ப்ராப்யமான அங்குத்தை வாசம் உத்தேச்யம் என்று அருளிச் செய்கிறார்
நித்ய ஸூரிகள் கைங்கர்யம் உத்தேச்யம் என்று அருளிச் செய்கிறார்

நீ குறைவாளனாய் தானோ பிறந்தாய்
ஒரு நாடாக அங்கு நித்ய விபூதி ஐஸ்வர்யம் இருக்க அன்றோ அத்தை உபேக்ஷித்து
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்று இங்கே வந்து பிறந்தாய்

சூட்டு நன் மாலைகள் இத்யாதி
அசங்குசிதமான ஞானம் உள்ளோர் விண்ணப்பம் என்றால் அன்றோ ஸத்யம் மெய் என்று இருப்பது
நீரோ இங்கே உழன்று உள்ளீர்-உமது வார்த்தை விஸ்வசிக்கப் போகாது – என்ன
மெய் என்கிறார் –

மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் -கிட்டினவாறே மடி எற்ப்பர்கள் என்ன -மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம்
மங்க வொட்டு உன் மா மாயை -என்னும் அளவும் செல்ல
உபக்ரமத்திலே இங்கனே காணும் எல்லாரும் சொல்லுவது
நீரும் அவ்வோபாதி இறே-என்று
எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கன் அன்று
என்னுடைய விஞ்ஞாபனம் சத்யம் -என்கிறார்-

சரணம் என்றதும் போக்குவேன் என்ற உம்முடைய வார்த்தை ஆப்த வசனம் என்று நம்புகிறோம்
அதில் சங்கை இல்லை

நின்று கேட்டு அருளாய்
இது மெய்யே
மங்க ஒட்டு உன் மா மாயை
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இதுவே எனது வார்த்தை -முதலிலும் முடிவிலும் -இருந்தாலும்
அப்படி இறுதியில் சொல்லா விட்டாலும் இதுவே மெய்
ஐயார் கண்டம் அடக்குமே
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் உனது வார்த்தை
எனக்கு இனி எல்லா வார்த்தையும் இதுவே

அன்றிக்கே
இது வரை மானஸ
மெய் நின்று -அனுபவ யோக்யதாம் படி -சாஷாதாக உன்னைக் காட்ட வேண்டும்

கேட்டு அருளாய்
கேட்டபின் வேறே கார்யம் செய்ய வேண்டாம்
செவிப்பட்டால் பேறு தப்பாது
அறிவிப்பே அமையும்

சம்சாரிகளில் ஒருவர் இப்படி சொல்வது அலப்ய லாபம் அன்றோ அவனுக்கு

நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது –
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை
எம்பெருமான் பேரா நிற்கப் புக
இத்தை நின்று கேட்டு அருள வேணும்
என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –

வாக்ய பேதம் பிறக்கிறது என்ன
அடியேன் என்கிறார் –
அடியேன் செய்யும் விண்ணப்பமே –

வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று -நீர் ஆர் -என்றான் அடியேன் -என்கிறார்
இவருடைய நான் -இருக்கிறபடி –

நான் என்றாகில் இறே -சொன்ன வார்த்தை -என்பது
அடியேன் -என்கையாலே -செய்யும் விண்ணப்பம் -என்கிறார்

அடியேன் உடைய விஞ்ஞாபனம்
இவருடைய உக்தியிலே
இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள
அடியேன் -என்று
கீழ் சொன்ன வார்த்தை மெய் என்பதற்காக
தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்

தேவோஹம் என்றால் பொய் ஆகும்

செய்யும் –
இவ் வபேஷைக்கு மேல் இல்லை –

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே

——————————————————————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

பிரவேசம்

ஸ்ரீயபதி இந்த உலகில்
ஸ்வ கிருபா விஷய விசேஷங்களில் இந்த ஆழ்வாருக்கு
திவ்ய பிரபந்தம் அருளிச் செய்ய ஞான அனுஷ்டான பலன்களில்
கிரமேன உண்டாக்கத் திரு உள்ளம் பற்றி
ஸேனாபதி ஆழ்வானை நியமிக்க (அவரே ஆழ்வார் என்பாரும் உண்டே )
இவர் பிரபந்தம் அருளிச் செய்கிறார்

இதில் இந்த பிரதம பிரபந்த பலன்
முமுஷுக்களுக்கு சம்சாரம் த்யாஜ்யம் என்று அறிவிக்கையும்
திருமால் இடம் அன்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி வளர்க்கவும்
அன்பு ஆவது திருமந்தர்ரார்த்தால் ஏற்படும் ஞானம் முதிர்ந்த நிரதிசய பக்தி
ஆர்வம் -பிராட்டி போல் கலந்து அடிமை செய்யாமல் தரியாமை ஆவது
த்யாஜ்யம் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் –

வியாக்யானம்

பொய் நின்ற ஞானமும்
அநாத்மநி ஆத்ம -ஆத்மா அல்லா ஒன்றில் ஆத்ம புத்தியும்-அஹங்காரம்
அஸ்வேஸ்ய புத்தி -தன்னது அல்லாத ஒன்றைத் தன்னது என்றும் -மமகாரம்

பொல்லா ஒழுக்கும்
அவை அடியாகப் பிறக்கும் ஸ்வரூப அநநு குண
துஷ் கர்ம பிரவாகம்

அழுக்கு உடம்பும்
அவை அடியாக உண்டாகும்
சரீரம்
இம்மூன்றும் முமுஷுக்கு அதி துஷ்டமாகும் என்று அருளிச் செய்தார்

த்ரவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -16-
ஆத்யே திவ்ய பிரபந்தே -ஸம்ஸார -ஸம்ஸ்ருதே-
சடஜித் ஸம்ஸ்ருதி வெறுப்பு அஸஹத்வம் தங்க முடியாமல் வெளியிட்டார் -என்றார் தேசிகன்

இந் நின்ற நீர்மை
இது அன்றோ பிரகிருதியின் நிலை நின்ற ஸ்வ பாவம்

இத்தை போக்கவே சடாரிபு ஆக்கி அருளினாய்
இனி
மயர்வற மதி நலம் அருளின பின்பு

யாம்
ப்ரஹ்ம வித்யையால் தம்மை அனுசந்தித்தவர்களை
அறிந்த நாம்

உறாமை
நம்மவரை உஜ்ஜீவிக்க அன்றோ உனது அவதாரம்

உயிர்
ஸ்வரூப ஞானம் பெற்ற – ஆத்மா

அளிப்பான் –
ரக்ஷிக்க வர தடுக்காமல் இருக்க ஸ்வரூப ஞானம் வேண்டுமே
அனைவரையும் முக்தனாக்கவே
மீனாய் (5-1 )இத்யாதி பிறந்தாய்

இமையோர் தலைவா
ஸூரிகளை-திருவைப் போலவே அடிமை கொள்ளவே அங்கு அனுபவிப்பிக்கிறாய்

ஸ்வ பிரபந்தத்துக்கும்
அவன் பிறப்புக்கும் இதுவே பலம்

ஜகத் நிர்வாஹம் ப்ரவ்ருத்தி தான் எனது அவதார பலம் என்று சொல்லி ஓடப் புக
மெய் நின்று கேட்டு அருளாய் என்கிறார்

இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பம்
இத்தை கேட்டு நம்மவருக்கு சம்மருதி ஏற்படாமல் அருளாய்
சிஷ்யன் ஆச்சார்யர் இடம் பிரார்த்திக்க விஷ்ணு புராணம்
பொய்யில் பாடல் இது

இன் நின்ற நீர்மை
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஞான பிரவிருத்தி
சதுர்முகாதிகள் உடைய தேகங்களையும் நிந்தித்து வெறுத்தார் ஆயிற்று

—————–

விருத்தம் -நடந்த செய்திகள் -செய்திகளைக் கூறும் பிரபந்தம் என்றவாறு -ஆகு பெயர்
கார்ய ஆகு பெயர்
கருவி ஆகு பெயர்
அடை அடுத்த ஆகு பெயர் -திரு அடைமொழி
அன்மொழித்தொகை

தாழிசை -துறை -விருத்தம்– மூன்றில் ஒன்றான
விருத்தம் பொதுவான சொல் ஆகவுமாம்
கட்டளைக் கலித்துறை சார்ந்தது இது
ஒரு வரிக்கு ஐந்து சீர் இருக்கும் –
முதல் நான்கு சீர் ஈர் அசை சீராகவும் ஐந்தாவது சீர் விளங்காய் சீர் -அழுக்கு உடம்பு
நிரை நிரை நேர் சீர்கள் சேர்ந்து -விளங்காய் சீர்

அடி தோறும் நேர் அசையில் தொடங்கி -ஒற்று எழுத்து விட்டு 16 -எழுத்துக்கள் -ஒற்று விட்டு எண்ண வேண்டும் –
குறில் நெடில் தனித்து வந்தால் நேர் அசை
குறில் நெடில் சேர்ந்து வந்தால் நிரை அசை

நிரை அசையில் தொடங்கினால் -17 எழுத்துக்கள்

நேர் அசையில் தொடங்கி முதல் பாட்டு
நிரை அசையில் இரண்டாம் பாட்டு

செப்பல் ஓசையில் இருக்கும் -வினாவுக்கு விடை சொல்லுவது போல் இருக்கும்
நீர் சொல்வது உண்மையா மெய் -கேள்விக்கு பதில் இதில் உண்டே
பல வெண்டளை இருக்கும்
திருச்சந்த விருத்தம் துள்ளல் ஓசை
ஏகார ஈற்று இருக்கும் -விண்ணப்பமே –
பிரிநிலை ஏகாரம் -தேற்ற ஏகாரம் -பிரதானம் தோற்ற இருக்கும் –

சில பாசுரங்கள் கட்டளைக் கலி துறையிலும் வேறு பட்டும் இருக்கும்

இது வெண்பா ஆசிரியப்பா கலிப்பா,வஞ்சிப்பா நான்கு வகை

கலிப்பா,
1-கலித்தாழிசை
2-கலித்துறை
3-கலிவிருத்தம்
என்று மூன்று இனங்களைக் கொண்டது.

1-கலித்தாழிசை

(1) இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல அடிகளோ வரும்.
(2) ஈற்றடி மிகுந்து, ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து வரும்.
(3) ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும். தனியே வருவதும் உண்டு.

2-கலித்துறை
நெடிலடி (ஐஞ்சீர்அடி). நான்காய் அமைவது கலித்துறை ஆகும்.

கலித்துறையுள் கட்டளைக் கலித்துறை என்ற இன வகையும் உண்டு. இதன் இலக்கணம்:
(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3) ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4) அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 16 எழுத்தும்,
நிரையசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 17 எழுத்தும் வரும்.
(5) ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.

3-கலி விருத்தம் அளவடி நான்காய் வரும்.

———

இப் பாட்டில்
சுத்த அசுத்த ஸ்வரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
சித் அசித் பேதமும்
பத்த முக்த நித்ய விபாகத்தை யுடையவரான ஜீவர்களுடைய அந்யோன்ய பேதமும்
ஜீவ ஈஸ்வர பேதமும்
ஈஸ்வர ஐக்யமும்
ஞான ஞாத்ரு பேதமும்
ஸத் அஸத் ஞான பேதமும்
ஸத் அஸத் அநுஷ்டான பேதமும்
ஸித்த ஸாத்ய உபாய பேதமும்
பராபர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி யதா ஸ்தானம் ஸாப்தமாகவும் ஆர்த்தமாகவும் அனுசந்திப்பது –

இங்கு
இமையோர் தலைவா -என்கிற இதிலே சேஷியாய் ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்
யாம் -என்கிற இதிலே சேஷ பூதனாய் ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபமும்
உயிர் அளிப்பான் -என்கிற இதிலே -நிருபாதிக சேஷ வ்ருத்தி விசேஷமான பல ஸ்வரூபமும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-என்கிற இடத்திலே சேஷ வ்ருத்தி விரோதி ஸ்வரூபமும்
கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்கிற இடத்திலே
விரோதி நிவர்தன வ்யாஜமாய் சோபாதிகமான ஸாஸ்த்ரீய சேஷ வ்ருத்தி விசேஷமும்
இமையோர் தலைவா–அடியேன் -என்கிற இதிலே ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம்
முதலான அர்த்த பஞ்சகத்தினுடைய உபாய அனுசந்தானத்துக்கு அஞ்சுரு வாணியான சம்பந்த விசேஷமும் சுருங்க அனுசந்தேயம்
ஆகையாலே மேல் அருளிச் செய்தவை எல்லாம் இதன் விஸ்தாரமாகிறது –

புருஷோத்தம வித்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை உடையனான ஸ்ரீ யபதி
ஜகத் உபக்ருதி மர்த்ய -( ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை )
ஜகதாம் உபகாராய -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-7-71 )இத்யாதிகளில் சொன்ன
தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை
பஹுநி மே வ்யதீதாநி (ஸ்ரீ கீதை -4-5 )என்று தொடங்கித் தான் அறிவித்த படியே அறிந்தார்க்கு எல்லாம்
அதிகார அனுகுண உபாய பூர்த்தியைப் பண்ணிக் கொடுத்து
இத்தேஹம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற
இவ்வுபகாரம் இப்பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –

———–

அவதாரிகை
கீழ் இவர் பிரகிருதி ஸம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று த்வரித்த இது
ஈஸ்வரனுக்கு க்ரமத்திலே செய்யலாம்படி இன்றியே அப்போதே செய்ய வேண்டும் படி யாயிற்று
ஆனைக்கு உதவுகைக்கு த்வரித்து வந்து தோன்றினால் போல்
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி இவர் அபேக்ஷிதம் செய்ய வேண்டும் படி இறே

அநந்தரம் வந்து உதவக் கண்டிலர்
இவருக்கு அவனையிட்டு இவ்விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்கிற த்வரையிலே கண் அழிவு இல்லை
அவனுக்கு சக்தியில் வைகல்யம் இல்லை
இனி இவர் கார்யம் செய்து தலைக்கட்டிக் கொடுக்கைக்கு ஈடான சம்பந்தத்தில் குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே இவர் அபேக்ஷித்த போதே வந்து கார்யம் செய்யக் கண்டது இல்லை
இப்படி அவன் தான் இவர் கார்யம் செய்யாது ஒழிவான் என் என்னில்

ஸர்வேஸ்வரனுக்கு இங்கனே இருபத்தொரு ஸ்வ பாவம் உண்டு
அதாவது
ஸ்வ க்ருஹத்தைப் பட்டினி இட்டு வைத்து வந்த விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாரணர் காரியத்துக்கு முன்பே மத்யஸ்தர் கார்யம் செய்து தலைக்கட்டக் கடவனாயிற்று இருப்பது –

பெருமாள் தம்மை மீட்க்கைக்கு சரணம் புகுந்து வளைப்புக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குப் பதினாலு
ஆண்டும் கழித்துக் கார்யம் செய்வதாக அறுதியிட்டு
அதுக்கு முன்பே கைகேயி கார்யம் இறே தலைக்கட்டிற்று
மஹா ராஜர் கார்யம் செய்து பின்னை இறே பிராட்டி கார்யம் செய்தது
இவர்களுக்கு முற்படச் செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே இவர்களுக்கு உள்ளது

ஆனால் அசாதாரணர்க்குக் கார்யம் செய்யானோ என்னில்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு அபிஷேகத்தைத் தவிர்த்துக் கொடுக்கையாலே இவர்கள் அபேக்ஷிதமும் செய்யத் தட்டில்லை
அப்படியே இவர் காரியமும் தலைக்கட்டுவதாக நினைத்து ஏறிட்டுக் கொண்டோமாகில்
நாம் நினைத்த போதே செய்கைக்கு ஈடான சக்தியில் குறையில்லை யாகில்
இவருக்கு இத்தோடு பொருந்தாமை இனி நம்மைக் கொண்டே தவிர்த்துக் கொள்வாராம் படியான
ஞான லாபத்தைப் பிறப்பித்தோமாகில் இனி பிராப்தி என்று குவாலுண்டோ
செய்ய வேண்டுவது அது தானும் க்ரமத்திலே செய்து கொடுக்கிறோம்
இவர் இருந்த நாலு நாளை லாபம் சம்சாரிகள் பெற்றிடுவர்கள் என்று இருந்தான் அவன்
அங்கன் ஒரு ஞான லாபத்துக்காக த்வரித்தவர் அல்லரே இவர்
அவன் தனக்கே பரம் என்று அறிவித்தோமாகில் இனி அவன் செய்தபடி செய்கிறான் என்று
பாரதந்தர்ய ஞானத்தாலே ஆறி இருக்கவுமாம் இறே
அது அல்ல இறே இவருடைய தசை

முதலிலே இமையோர் தலைவா என்று கொண்டு என்று
அவனுடைய பரம பும்ஸ்த்வத்தை அனுசந்திக்கையாலே
அப்போதே கிட்ட வேண்டும் படியான அபேஷை பிறந்து
அதுக்கு ஈடாக அப்போதே வந்து அதுக்கு ஈடாக உதவிக் கார்யம் செய்ய
பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன
அவளோடு வாழ்ச்சியைப் பெறக் கடவி கோள்

முழுநீர் முகில் வண்ணன்
கழுத்து அளவாக பெருகின தெளி நீருள்ள முகில் போன்ற வர்ணனாய்

கண்ணன்-
கிருபா மயனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் -தொழுநீர் –இணையடிக்கே –
யத்ர பூர்வே என்று விண்ணாட்டில் பழையவரால் தொழப்படும்
சரண த்வந் வத்துக்கே
தத் விஷயமாகவே என்றபடி

அன்பு சூட்டிய
அன்புடையவர் ஆவீர்கள்

அதுக்கும் மேலே
சூழ் குழற்கே
கொள்கின்ற கொள் இருளை (திருவாய் -7-7-9 )என்னும்படி
உகந்து சூழ்ந்து கொண்டு அனுபவிக்கலான திருக்குறளை பேணி அடிமை செய்யவே
அன்பு பெற்றி கோளே -நீங்கள் வாழியரோ -என்று அன்வயம்

இதில் ஏவம்வித ஸ்வாவர பாகவதர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவதே
பெரியோர்க்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று –

——

அவதாரிகை
கீழில் பாட்டில்
பிரிவினுடைய பிரதம அவதி ஆகையாலே போன நெஞ்சு மீளுமோ மீளாதோ -என்கிறாள்
இத்தாளனெஞ்சு அவன் பக்கலிலே அபஹ்ருதமாயிற்று -என்கிறாள்
என் நெஞ்சு ஸந்நிஹிதமாயிற்றாகில் நான் —

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பள்ளின் பின்போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
ஸ்வ தந்திரமான நெஞ்சம்

பின் போகலான புள்ளின் ஸ்வ பாவம் எது என்னச் சொல்லுகிறாள்
தண்ணம் துழாய்-இத்யாதியால்
தண்ணம் துழாய்- அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
குளிர்ந்த அழகிய பரிமளமுள்ள திருத்துழாயையும்
அக்னி போல் மேல் விழா நின்றுள்ள திருவாழியையும்
உடைய ஸர்வேஸ்வரன்
விண்ணோர் அடிமை செய்து கொண்டு இருக்கவே கடவுமவனான –

தழற் போல் சினத்த அப்புள்
சினம் கோபம்
கோவலரோடு கலந்து பரிமாற்ற நினைக்கவும்
அதுக்குத் தடையாக நீங்கள் தொழுமதே என்றதாயிற்று இப்புள்

நற்புள் எனக்கு -என்று அதன் பின் போயிற்று என் நெஞ்சம்
ஏவ காரம்
என் அனுமதி திரஸ்காரத்தைக் காட்டும்

இது அங்கு நிற்கும் கொல் மீளும் கொல் -என்று அந்வயம்

இதில்
இப்புள் வேதமயனாகையாலே
மந்த்ரார்த்த ஞானமுடையவன் வேத மார்க்கத்தையே அநுசரிக்கக் கடவன் என்றதாயிற்று –

—————

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

அவர் புள்ளே
அவர் அபிப்ராயம் அறிந்த புள்ளே

முன் கவர்ந்தது
என் நெஞ்சை முன்னே கபளீ கரித்தது

துழாய் தான் விழுங்க வருகிறதே
பாரீர் என்ன
தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது
இனி அந்த அழகிய துழாய் தான் விழுங்குவது எந்தப்பிரதேசத்தை
இந் நெஞ்சத்தில் புள் அயர விழுங்கினதாய் அயர மிக்கதோ
நிர்வசேஷமாக அப்புள்ளே விழுங்கிற்றே
இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே
இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை

யாமிலம்
இப்படி நெஞ்சு பறி யுண்ட யாம் இங்கே இருக்கிறோம் என்று இருக்கிறாயோ
யாம் இலோம்

நீ நடுவே
நீ நடுவே வந்து பாதிக்கவோ

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான்
குபிதையாய் வஞ்சகையான பூதனையினுடைய முலையைச் சுவைத்தவன்
இத்தால் ஸ்வ ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் என்றதாயிற்று –

முடி சூடு துழாய்
இத்தால் ஸத் குண சீலரை சிரஸா வஹிக்குமவன் என்றதாயிற்று

பனி நஞ்ச மாருதமே
அந்தத் துழாயில் தங்கின பனி யாகிற நஞ்சுமயமான மாருதமே
அவளோடும் அத்துழாயோடும் சீலித்த நீ என்னைப் பாதிக்கத் தகுவையோ என்றபடி

எம்மதாவி பனிப்பியல்வே
என் பிராணனை நடுங்கப் பண்ணலாமோ உன் ஸ்வ பாவத்தாலே –

———-

அவதாரிகை
நாயகனும் தானும் கலந்து இருந்த சமயத்தில் அனுகூலமான வாடையானது
அவனைப் பிரிந்து தனியிருக்கும் சமயத்திலே வெற்றிலை இடுவாரே கொல்லுமா போலே நலிய
அத்தாலே நலிவு பட்டுத் தன் தசையைத் தான் அறியாதே
தன் தசையைத் தான் அறிவிக்க க்ஷமையும் இன்றிக்கே
நோவு பட்டுக் கிடக்க
அத்தைக் கண்ட

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இ காலம்–இப்போது மாத்திரம்
இ ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

அவகாஹித்தபடி
அங்கன் அன்றிக்கே
கர்ம நிபந்தன தேகமும் அனுவர்த்தித்து
ஸம்ஸார ஸ்ம்ருதியும் செல்லா நிற்கச் செய்தே
காதாசித்கமாகப் பிறந்த ஞான லாப மாத்ரத்தைக் கொண்டு
அவ்விபூதியோடு ஓக்க இவ்வுபூதியும் உத்தேச்யம் என்று சொல்லுவார் சொல்லுமது வார்த்தை அன்று
அஞ்ஞாராகவே சொல்லுகிறார்கள்
அதாவது
பழைய ஸம்ஸாரத்தை வர்த்திப்பிக்கைக்காகச் சொல்லுகிற வார்த்தை
அப்போது பந்த மோக்ஷ வ்யவஸ்தையும் குலைந்து மோக்ஷ ஸாஸ்த்ரமும் ஜீவியாது –

————-

பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்

அவதாரிகை
இப்படி தன தாள் பட்ட தண் துழாய்த் தாரையை ஆசைப்பட்டுச் சொரியும் துக்காஸ்ரு யுள்ள
என் பெண் நிறத்தை அழிக்க
ஈஸ்வரன்
குளிர்ந்த தன் வஸ்துக்களை எல்லாம் என் மகள் மேல் எரி வீச நியமித்தான்
அழகிய தண் துழாயே
இப்படி அவன் செங்கோல் விளங்குகிறது
இனி என் மகள் பிழையாள்
நான் என் செய்கேன் -என்கிறாள் -இப்பாட்டில்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
குளிர்ந்த வாடையும்
இதே ஸ்வ பாவமான இக்காலமும் இவ்வூரும்

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
குளிரப் பண்ணுமதான ஸ்வ பாவத்தை எல்லாம் விட்டு

எரி வீசும்
அக்னி ஜ்வாலையை வீசா நின்றது

அம்தண் அம் துழாய்
இப்படி துழாயைச் சம்போதித்துச் சொல்லுமது
இவள் நம்மை ஆசைப்படா நின்றாள் என்று அதுக்கு மாத்திரம் ஸ்வ பாவ பேதம் பிறவாமையாலா யிற்று

அன்றிக்கே
துழாய்
அத்துழாய் விஷயமாகவே

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள் என்று ஆகக்கடவது

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறத்தைக் கெடுக்கவே இவைகளை இங்கனம் நியமித்தானேயோ

ஆம்
ஆயிருக்கும்

பனிப்புயல் வண்ணன் -செங்கோல் ஒருநான்று தடாவியதே
எல்லாருக்கும் குளிர்ந்த வர்ஷக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
என் மக்களுக்கு அத்தை ஒழித்தானாய்த் தன் செங்கோலே இங்கனே நடத்தா நின்றான்

செங்கோல் ஒருநான்று தடாவியதே —
இந்நாள் இப்படி அவன் செங்கோல் விளங்குகிறது
இப்படியும் ஒரு நாள் எனக்கு உண்டாக வேணுமோ என்று இன்னாதாகிறாள்

விரஹிணியில் சேஷ்யந்தந்திரங்கள் எல்லாம்
அவனைப் போலவே பின்ன ஸ்வ பாவராவர்
என்று இங்கு ஸ்வா பதேசம் –

————–

கிளவித் துறையில் இப்பாட்டு
நலம் பாராட்டு என்னுதல்
மருங்கு அணைதல் என்னுதல்
காட்சி என்னுதல்
ப்ராயேண காட்சியாய் இருக்கிறது
இம் மூன்றும் தான் நாயகன் வார்த்தை

இதில் காட்சி யாகிறது
நாயகனுக்கும் நாயகிக்கும் பிரதமத்திலே பிறக்கும் த்ருஷ்டி பந்தம்

இது தான் பின்னை பிரதமத்திலே ஆக வேண்டாவோ
முதல் பாட்டுத் தான் தானான தன்மையில் நின்றாராகில்
இரண்டாம் பாட்டிலே தான் உண்டாக வேண்டாவோ என்னில்

இப்பிரபந்தம் தன்னில்
இப்படி இருபத்தொரு கிளவி அடைவு இல்லாமையாலே
ஓர் இடத்தைச் சொல்லுமித்தனை வேண்டுவது –
அதில் இவ்விடத்தே சொல்லிற்றாகிறது

அன்றிக்கே
கண்ட போது எல்லாம் நித்ய அபூபர்வமாய் இருக்கும் இறே
அத்தாலே சொல்லிற்று ஆகவுமாம்

அன்றிக்கே
இனி பாகவதர்களைத் தலை மக்களாகச் சொல்லுகிற இடத்திலே
முதல் பாட்டு இதுவாகையாலே இத்தை முதல் பாட்டாகச் சொல்லிற்று ஆகவுமாம் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும்
நேரே படுக்கை தவிர்ந்து பரம்பிக் கொடு போய்ப் படுகிற அம்பும்
இத்தால் வரும் என்று இறாய்க்க ஒண்ணாத படி காணாக் கோலாய் இருக்கை
வில்லோடே கூட அடுத்துப் பிடித்த அம்பும்
வரந்த வாய் அம்பு

முரிந்த சிலைகளும்
அகர்மகமாய்
அகர்த்ருகமாய் இருக்காய்

அம்பும் சிலைகளும் என்பான் என் என்னில்
அம்பும் -என்றது ஜாதி ஏக வசனமாய் இருக்கிறது
சிலைகள் -என்றது இரண்டு உண்டாகையாலே
இத்தால்
கண்களையும் புருவங்களையும் சொன்னபடி இறே

அம்பும் சிலைகளும் என்று
உபமானமாகச் சொல்லாதே
தானேயாகச் சொல்லுவான் என் என்னில்
ஸர்வ ஸாம்யம் உண்டாகையாலே

போக விட்டு
பொகட்டு என்றபடி
விஷய அநுரூபமாக வேண்டுவது அமையாதோ என்று இவற்றை யிட்டு வைத்து –

கடாயின கொண்டொல்கும்
மற்றும் நடத்திப் போருகிறவற்றைக் கொண்டு

வல்லி ஈதேனும் அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அஸூரர்கள் நசிக்கும்படி துரத்தத் தக்க வேகமுள்ள பக்ஷி ராஜனை நடத்துமவனே என்று அறிவியுங்கோள்

ஆகில் என் செய்யக் கடவோம் என்ன
மதன செங்கோல் நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
இப்புண்ய பூமியிலே பிறந்த நீங்கள்
உங்களை ரஷித்துக் கொள்ளுங்கோள்

அதாவது
அவர்கள் சத்ருக்கள் இவர்கள் என்று அத்யவசித்தும் ஹேயப்பட்டும்
அவனில் கோப்த்ருத்வ வரண யுக்த பராதி நிக்ஷேபத்தை நைர் பர்ய சிரஸ் கமாக
உபாயத்வ ப்ரார்தனையோடு அபாய நிவ்ருத்தி பெற்றவர்களாய்ச் செய்கை –

ஸ்வா பதேசம்
இதில் தலை மக்கள் ஸ்ரீ வைஷ்ணவர்
இப்படி தலை மக்கள் பேதித்தால்
தலைவி ஒருத்தியே ஆழ்வார் தம்மதே
திருப்புளி கீழே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பொலிய
வெற்றிச் செல்வம் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை
லோகத்தில் அஹங்காரம் மமகாராம் கொண்டு உலாவுவார் இங்கே வராதே கொள்ளுவீர்
ஐஸ்வர்யம் புருஷார்த்தம் அல்பம் அஸ்திரம் கண்டு அவ்வருகே போகலாம்
ஸ்திரமான ஆத்ம அனுபவம் பற்றினாருக்கு அவனையே அனுபவிக்க அவ்வருகே போகலாம்
பகவத் விஷயத்தில் நிற்கிறவன் பிரதம நிலை தாண்டி சரம நிலையான பாகவத விஷயம் போகலாம்
அதுக்கு மேல் போக முடியாதே
குறை சொல்லி மேலே போக முடியாதே
பகவத் சேஷத்து அளவில் நின்றால் குறை உண்டே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
அநந்யார்ஹ சேஷ ஞான அனுரூபமான விருத்தம் இவர்கள் அளவும் வர வேண்டுமே
ஆகவே கிளவுத் துறையில் பாடுகிறார் –

———

அவதாரிகை

உபய விபூதி யுக்தனாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
ஸர்வ ஸ்மாத் பரனான
ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாகத் தன்னைக் கொடு வந்து இவருக்குக் காட்டிக் கொடுக்க

அவன் கொடுத்த வெளிச்சிறப்பாலே -அவனை உள்ளபடி கண்டு
விரோதி த்யாக பூர்வகமாக அல்லது உத்தேச்ய ஸித்தி அனுபவிக்கப் பெறாமையாலே
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோட்டை ஸம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்தார் முதல் பாட்டில் –

பிரதம தர்சனத்திலே சிரகாலம் வாஸனை பண்ணிப் போந்த விஷயங்களை விடுவிக்க வேணும்
என்று கால் கட்டப் பண்ணின விஷயத்தை
அப்போதே இவ் விரோதி போய் அனுபவிக்கப் பெறாமையாலே
தாமான தன்மை அழிந்து
ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய்
நாயகனோடே உயிர்த் தோழியும் போய் நிற்கிற சமயத்திலே

யாதிருச்சிகமாக ஸம்ஸ்லேஷம் வ்ருத்தமாய்
அநந்தரத்திலே
பிரிவு உண்டாக
வ்ரீளை யாலே தனக்கு ஓடுகிற தசையைத் தோழிக்கு அறிவியாதே இருக்க

இவளும் அவளது அனுமதி பூர்வகமாகத் தனக்குப் பரிஹாரம் பண்ண வேண்டுகையாலே
தாம் பகவத் விஷயத்திலே கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிற இருப்புக் கண்ட பாகவதர்க்கு
தர்ச நீயமாய் இருக்கிற அம்முகத்தாலே
ஸ்வ தசையைத் தம்மைத் தாமே அனுபவித்தார்
இரண்டாம் பாட்டில்

இமையோர் தலைவா என்று முதல் காட்டிக் கொடுத்தது நித்ய –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

வியாக்யானம் –

பூமியில் பனி விழுகிறதே –
என் கணவன் வரக் காணேனே -என்று தோழியோடு ஏங்கிச் சொன்னாள்
அன்று காண் –

ஞாலம் பனிப்பச் செறித்து
பயத்தால் இந்த பூமிக்கு வேர்ப்பு உண்டாம்படி தன்னில் தானே சேர்ந்து

நன்னீரிட்டுக்
பொல்லாத ஸ்வக ஜலத்தை விட்டுக் கொண்டு

கால் சிதைந்து
காலால் பூமியைக் கீறவும் வாராவுமாய்க் கொண்டு

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைத்தான
வலிய ருஷபங்கள்

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்தில் பொருகிறன அத்தனை -என்றாள்

மேல் தான் அநாப்தை யாகாமைக்குச் சொல்கிறாள்
திருமால் கோலம் சுமந்து
மின்னலாலும்
கறுத்த நிறத்தாலும்
திருமாலுடைய அழகிய ஆகாரத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
பிரிந்து போய் வாராதாருடைய கொடுமையைத் தன்
அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்த அழகிய காலம் தானோ

வறியேன்
இன்னது என்று அறிய மாட்டேன்

வினையாட்டியேன் காண்கின்றவே
பாபியான நான் உன் வேதனையைக் காணும்படி யாயிற்று –

——

அவதாரிகை

காலமும் இதுவேயாய்
நாயகனும் வந்து ஸம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
இன்னபடி அப்ரியமும் விளையும் என்று தெரியாது இறே
தலைமகன் பொருள் வயிற் பிரிவை நினைத்து
அத்தாலே தன் தடுமாற்றம் தோற்றப் பரிமாற
அவள் அத்தை அறிந்து
நினைத்தபடி இது வன்றோ
தன்னுடனே இருக்கச் செய்தே பிரிவதாக நினைத்தாய் -என்று அத்தலைமைகள் வார்த்தையாய் இருக்கிறது –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல்
குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும்
ஹர்ஷ ஹேதுக்கள் எல்லாம் நிற்க நெஞ்சு தடுமாறுவது
அஞ்சலி பண்ணுவது
பாத உப ஸங்க்ரஹணம் பண்ணுவதாகத் தொடங்கினான்
அதைக்கண்டு -நீர் தாம் இப்போது எங்கு இருந்து தான் இவை எல்லாம் செய்கிறது தான் -என்னுமே இவள்
பிறருக்கு சேஷபூதராய் இருப்பாருக்குப் போக்கு உண்டோ
பிரியேன் பிரியில் தரியேன் -என்றால் போலே சொல்லத் தொடங்குமே இவன்

கேட்கின்றகளும்
தாத்ருசமான சேஷ்டிதங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே

காணில்
அவை தான் –

நம் பிள்ளை ஈட்டில்
ஸ்ரீ ராமாயணத்தில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கழுத்து தோள் மாலை சாத்தி
சக்ரவர்தியைக் காண செல்ல
தாற்காலிகமாக பிரிவு
இங்கும் பிரிவு பக்தி வளர்க்க -ஆர்த்தி உண்டாக்க

பதி ஸம்மானம் சீதா
மைய கண்ணாள் பார்க்க
திவ்ய அந்தப்புரம் கனக புரம்
சக்ரவர்த்தி அருளப்பாடு கேட்டு சுமந்திரன் வர
பிராட்டி இரண்டு மூன்று திருவாசல் அளவும் மங்களா ஸாஸனம் பண்ணிக் கொண்டு புறப்பட
புரிந்து பார்த்து அருளி
அத்தைக் கண்ட பெருமாள்
அங்கும் இங்கும் –பரிவர் இல்லை -என்று நினைத்து பண்ணுவதைக் கண்ட பெருமாள்
பின்னவும் தவிர மாட்டாதே
வரும் அளவும் தாரகமாக தனது தோள் மாலையை இவள் தோளிலே இட்டு
முறை மாறாடி தாழ்வுகளை செய்து போனாள்
அஸீ தேக்ஷிணா -இந்தீவர மாலை இட்டாள்
அப்போது பிரிவு போல்- இங்கும் பிரிவு

இப்போது பிரியும் வருத்தம் அவனுக்கு உண்டோ என்னில்
உண்டு
விஷயம் நித்ய அபூர்வம் இருவருக்கும் உண்டே
இவனைப் பற்றி சொல்ல ஆள் இல்லையே -ஆழ்வாரே தானே சொல்ல வேண்டும்
பிரிவில் செய்வது என்ன அதிசங்கை இருவருக்கும் உண்டு

இவள் தனக்கும் தன்னுடைய ஸ்வரூபம் அறிந்தாலும்
அப்ருதக் சித்த விசேஷணம் அறிந்து கவலைப் படக் கூடாதே
பெருமாளுக்கும் ஸ்வரூப ஞானம் -இல்லை
இவளையே எங்கும் பக்க நோக்கு அறியான் என்று இவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்
விஷயம் விலக்ஷணமானால் இத்தனையும் பட வேண்டாவோ என்று இருக்கிறான் ஆயிற்று
விஷயம் ஏதேனுமாக தம்மதானால் நான் பட வேண்டுமோ ஆழ்வார் நினைவு
தம் தமதமானால் நல்லதானால் ஆறி இருக்கலாமோ
எல்லாம் செய்தாலும் முன்பு போல் செய்யாமல் இருப்பதால் நெஞ்சிலே இருப்பதை அறிவார்

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —பெரிய திருமொழி- 8-1-9-

பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால்
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும்
முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ –
எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –

சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் –
என்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி

சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் )
எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –
சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே
பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே
இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

ஸ்வரம் வைத்து அர்த்தம்
அனுபவம் நித்யம்
விஷயமும் நித்யம்
ஆனால் நித்யம் அபூர்வ விஷயம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
நித்ய அனுபவம் ஆனாலும் பிரிவுக்கு சம்பாவனை இல்லை என்றாலும்
பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்

இது எல்லாம் பகவத் விஷயத்தில்
இங்கு பாகவத விஷயத்தில்
இவர் அவகாஹம்
திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல
கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை
யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள
நிஷேதிக்க முடியாத விஷயம்
எழுந்து அருள ஆகாலாதோ
திரு நாள் அணித்தாய் இருந்தது
நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்று
இப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்

———–

அவதாரிகை

உன் நிலை இருந்தபடி இது அன்றோ -என்று
என்னோடே கூடி இருக்கச் செய்தே
திருமலைக்குப் போவதாக நினைத்தாய் -என்று பழி இட்டாள்
நானோ போக நினைத்தேன் -நீ அன்றோ திருமலைக்குப் போக நினைத்தாய் -என்றான் அவன்
பாகவத ஸம்ஸ்லேஷம் செல்லா நிற்க பகவத் பரிக்ரஹம் உள்ள தேசத்தில் போக நினைக்கும்படி அன்றோ
நீ பகவத் விஷயத்தில் வர நின்ற நிலை –
அப்படி நினைத்தேனாகில் நீ சொல்லிற்று எல்லாம் பொறுக்கிறேன் -என்கிறான் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

ஸ்வரூப ஞானம் இல்லாதார் சொல்லும் வார்த்தை பிரமாணமாகக் கொள்ளலாமோ –
தம் தாமை அறியாதே இங்கனே அதி சங்கை பண்ணலாமோ –
இவள் அதி சங்கை தீர்க்கை யாகிறது
இவள் ஸ்வரூபத்தை அறிவிக்கை போலே காணும்

திண் -என்றது
திருவாழி தான் திண்ணிதாய் இருக்கை
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் பிற்காலியாது இருக்கை
நித்ய விபூதியில் உள்ளார் அனுபவிக்கும் இடத்தில் அதி சங்கை பண்ணினால் –
அவ்வதி சங்கை பரிக்ரஹிக்கையில் போக்யமாய் இருக்கை
அஸ்தானே பய சங்கையோடே ஸ்தானே பய சங்கையோடே இவ்வாசி இல்லை இறே
பரிஹரிக்க வேண்டும் இடத்தில் சங்கா விஷயம் மரண ஹேதுவானாலும் பரிஹரிக்க வேணும் இறே
இனி ஸம்ஸாரிகளுக்குள்ளே பயமில்லை என்னும் அத்தனை அல்லது விஷயா தீனமாகவும் வருமது உண்டு இறே

பூ -போக்யமாய் -தர்ச நீயமுமாய் இருக்கை

திண் பூ என்றது –
தன்னைத் தரிக்குமவன் படி தனக்கும் உண்டாய் இருக்கும் இறே
ஸூ குமாரவ் -மஹா பலவ்(ஆரண்ய -1-14 )என்னுமா போலே
திருவாழி தனக்கு ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் -இரண்டிலும் உண்டே அந்வயம்

சுடர்
திருமேனியில் இருட்சிக்குக் கை விளக்கு பிடித்தால் போலே இருக்கை

நுதி -என்று கூர்மை
புகரையும் கூர்மையும் யுடைய நேமி -திருவாழி

அம் செல்வர்
திருக் கையும் திருவாழியும் சேர்ந்த சேர்த்தியால் வந்த ஐஸ்வர்யம் என்னலாம்
காந்தியைச் சொல்லவுமாம்
சேர்ந்த சேர்த்தி அழகாலே
கூராராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் (திருவாய் -6-9-1 ) என்னலாம் படி இறே இருப்பது

அஞ்செல்வர் விண்ணாடு அனைய -என்கிற இது
திருக்கையும் திருவாழியுமான இவ்வழகைக் காட்டிக் காணும் அவ்விபூதியை நிர்வஹிப்பது
லீலா விபூதியில் பிரதிகூலரை

தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
இவ்விபூதிக்கு ஓர் ஆபரணமான கொடி போன்றவள்

இத்தம் பூதையை
ஆரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையே கண்
இவை லோகத்திலுள்ள கண்ணோ

பூங்கமலம்
அழகிய கமலங்களே அன்றோ

அதுக்கு மேலே
கருஞ்சுடராடி
கரு விழியாலும்
அஞ்ஜனத்தில் ஒளியாலும்
அழகிய நீல ஜ்யோதிஸ் சலனம் உள்ளது

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்களாகிற முத்தை அரும்பிற்று
முத்தைச் சொரியுமதாயிற்று –

வண் பூங்குவளை
தர்ச நீயமாயும் ஸ்லாக்யமுமான கரு நெய்தலாயும்
செங்கழு நீர்ப்பூவாயும்
இரா நின்றது என்றபடி –

அதுக்கும் மேலே
மடமான் விழிக்கின்ற
இள மான் போலே காத்ராஷியாய் வாரா நின்றாய்

மாயிதழே
உன்ன தரம் மஹா ரஸமுடையதும் சிவப்பு யுடையது மான கனியே காண்
இன்னவகையான உன்னை நான் பிரிவேனே –

——

அவதாரிகை

இப்பாட்டு கிளவித் துறையில்
மதியுடன் படுத்தலாய் இருக்கிறது

அதாகிறது
தான் முன நாள் பிரிந்து
பிரிந்த தலைவன் பிற்றை நாள் தலைமைகளும் பாங்கி மாருமாகப் புனம் நோக்கி இருக்கும் இடத்திலே
வந்து தன் ஆசையை ஆவிஷ் கரிக்கை –

அது போலே இங்கு ஓடுகிறது
தன் ஆற்றாமையைத் தானே அறிவிக்கையுமாம்

இதிலே தானே அறிவிக்கை முக்யம்
தோழி அறிவிக்கை கௌணம்
மதியுடன் படுத்தல் தோழிக்கும் உரித்து என்றது அத்தனை
அன்றிக்கே
தோழிமார் இல்லையாகில் பந்து வர்க்கத்தை இட்டு அறிவிக்கையுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் -மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
பரமபதத்தில் வாங் மானசங்களுக்கு அபூமியாம் படி இருக்கிற இருப்பை
மாயோன் -என்னுதல்
அன்றிக்கே
பரமபதத்தை விட்டு
கணமும் வானரமும் வேடுவர்களுமான (நான்முகன் -47 )
திருமலையில் நிற்கிற நிலையில் அனுசந்தித்து அந்த ஆச்சர்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஒருவன் விபூதியில் இல்லாத ஆச்சர்யம் இல்லை யாகாதே

வட திருவேங்கட நாட
தனக்குக் கலவிருக்கையான பரமபதத்தை விட்டு சம்சாரிகளுடைய –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -2-10–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 30, 2022

அவதாரிகை –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் –
ஸூலபனாய் –
ஸூரி போக்யனான ஈஸ்வரன் –
திருவடிகளில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு
விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை

ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு
வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்

இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்
இமையோர் தலைவா என்றும்
சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

முழுநீர் முகில் வண்ணன்
கடலைக் கழுத்து அளவாகப் பருகின காளமேகம் போன்ற நிறத்தை யுடையவன்

கண்ணன்
அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய்
எட்டாதே இருக்கை இன்றிக்கே
பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் தொழுநீர் இணையடிக்கே
பூர்வே என்றும்
ப்ரதம ஜா என்றும்
சொல்லுகிறபடி முற்பாடராய்
பரமபதத்துக்கு நிலத்து ஆளிகளான அநந்த கருட விஷ்வக் ஸேனாதிகளான நித்ய ஸூரிகள்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
நிரந்தர கைங்கர்யம் பண்ணும் படியான ஸ்வ பாவத்தை யுடைய
பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளிலே –

அன்பு சூட்டிய சூழ் குழற்கே —
தன்னுடைய ப்ராவண்யத்தை சூட்டின செறிந்த குழலை உடையவளுக்கு

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை யுடைத்தான தடாகத்தில் கயலானது இடம் வலம் கொண்டால் போல

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
சிவந்த அரியை யுடைத்தான கண்கள் ப்ரேமத்தால் அழுத நீர் துளும்ப
ஆற்றாமையால் நின்ற இடத்திலே நில்லாமல் அலமருகின்றன

வாழியரோ
இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே
நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்
அன்றியே
இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று

(மீன் வாசஸ்தானம் செழும் நீர் தடாகம் ஆதாரம்
இவர் ஞானத்துக்கு அடி மயர்வற மதிநலம் அருளின-அவனே ஹேது ஆதாரம் )

சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே
அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

அழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே
அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது
(அன்பு ஆர்வம் அபிநிவேசம் -அன்பே தகளி -ஆர்வமே நெய் )

முழு நீர் முகில் வண்ணன் என்று
ப்ரேம விஷயம் பூர்ணமாய் –
தர்ச நீயமாய்
உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று

கண்ணன் என்று
இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே
விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே
அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று

அன்பு சூட்டிய என்கையாலே
இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே
அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது

வாழியரோ -என்கையாலே
இப்பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று –
(அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )

இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

——-

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–————

அவதாரிகை –

இப்படி பார்ஸ் வஸ்த்ரான ஸூஹ்ருத்துக்களும் கண்டு விஸ்மிதாராம் படி ப்ரேம பரவசரானவர்
இந்தப் பாரவஸ்யத்துக்கு மூலமான பகவத் விஷயத்திலே ப்ராமண புரஸ்சரமாக
(பிரமாணம் வேதம் -பிரமேயம் காட்டும் புள் -வேத மயன் )
நெஞ்சு சென்ற பிரகாரத்தை
பிரிந்து போன தலைமகன் பின் சென்ற நெஞ்சை நோக்கித்
தலைவி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல் போல் சினத்த–பி ள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு
குழலை நிரூபகமாக உடையவராகையாலே
அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான
கோப குலத்திலே பிறக்கையாலே
தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய்
மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்

சாயை போலே அனுவர்த்திக்கிற படியைக் கண்டு

நிற்கும் கொல் மீளும் கொல்
இவர்கள் அப்ருதக் ஸ்திதைகள் ஆனால் போலே
நமக்கு அபிமானியான நாயகிக்கும் செறியக் குறை இல்லையே -என்று நிற்குமோ
இவர்களும் அனுவர்த்திக்கும்படியான அவனைக் கிட்டல் அரிது என்று மீளுமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து அழகியதான திருத் துழாயையும்
ஆஸ்ரித விரோதிகளை அக்னி போலே பஸ்ம ஸாத்தாக்கும் திருவாழியையும் யுடையவனாகையாலே
ஸ்வாமி யானவன்

விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன
ப்ரஹ்ம ருத்ராதிகள் சேஷத்வ ப்ரகாசிகையான வ்ருத்தியைப் பண்ண
ஆஸ்ரித ஸம் ரக்ஷணார்த்தமாக
அதி த்வரையுடன் நடத்தப்படுவானாய்

பரிகர பூதனான ஆழ்வானிலும்
பரிகரவானான ஈஸ்வரனிலும்
விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான
மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள
பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தனி நெஞ்சமே
பின்னையும் விட்டு
அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட நெஞ்சம்
ஸ்வ தந்திரமான நெஞ்சம் என்றுமாம்

முகம் பெறும் அளவும் நிற்குமோ
மீண்டு போருமோ என்றுமாம்

குழல் என்று
இவள் தன் மயிர் முடி ஆகவுமாம் –

இத்தால்
இவ்வாழ்வார் தம் திரு உள்ளம்
வேத மயனான புள்ளின் பின் போனமை சொல்லுகையாலே
பிராமண அநு சாரித்த்வம் சொல்லிற்று

அப்புள் -என்கையாலே
ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

கடவும் என்கையாலே
காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி
பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று

விண்ணோர் தொழ -என்கையாலே
விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது
ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே
1-போக்யத்வமும்
2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
3-ஸ்வாமித்வமும்
ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம் என்று தோற்றிற்று

நிழற் போல்வனர்-என்கையாலே
ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே
இப்படி மஹிஷீ
பூஷண
பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு
வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ-
விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

இப் பாட்டு
தலைவன் பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழித்து உரைத்தது

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை
போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே
தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –

அப் புள்ளின் பின் போன-என்று
நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

———

ப்ராப்ய விஷயத்திலே பிராமண அதீனமாக நெஞ்சு பற்றி
அத்தால்
ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும்
அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த்
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்
என்னோடு உறவற்று நீங்கிய நெஞ்சத்தை

முன்னவர் புள்ளே கவர்ந்தது
முன்பு அவரோட்டை சம்பந்தத்தால் உண்டான
ராஜ குலத்தாலே
பெரிய திருவடியே அபஹரித்தான்

நெஞ்சம் புள்ளே கவர்ந்தது
பருந்து இறாஞ்சிக் கொண்டது

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
குளிர்ந்து அழகிய திருத் துழாய்க்கு இனி இங்குக் கவருகைக்கு நாம் நெஞ்சுடையோம் அல்லோம்

நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில்
திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே )
அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம்
நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து
(பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிந்து வஞ்சகத்தை உடையளான பேய் மகளுடைய முலையைப் பசையறச் சுவைத்த
(விஷம் கலந்து ரஸ்யம் சுவை -பராசரர் விஷ்ணு புராணத்தில் )
கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே
அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும்
கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய் முலை சுவைத்தான்
வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே
உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே
(ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )

பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று
பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு

அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது

முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்

பனி நஞ்ச மாருதமே
திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

எம்ம தாவி பனிப்பியல்வே
தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –
(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது
மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை
(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

முன் என்றது
பிரதமத்திலே சித்தாந்த அவகாஹி யாகை

அவர் புள்ளே என்றது
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று
ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )

புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக
ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் )
வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்

(உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே
தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்
வேதமே பெரிய திருவடி வடிவம் )

கவர்ந்தது என்று
வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் -என்று
இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில்
அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

(அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர
ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே )

இனி கவர்வது யாமிலம் -என்று
ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு
ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

நீ நடுவே என்று
ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய
சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே
ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி

(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து –
காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே
ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும் என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்
தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்
ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே
அத்தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து –

(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -)

———

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே
என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

————-

அவதாரிகை
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு
ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி
பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு
தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை

இக் காலம் இவ் ஊர்
இக் காலத்திலும் இவ் வூரிலும்
காலாந்தரத்திலும் இல்லை
தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்

இவளுக்கு என்னாதே
இவ்வூருக்கு என்றது
இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு

எரி வீசும்
வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று
தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது

வீசும்
ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

அம் தண் அம் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு )
இந்த நெருப்பை ஆற்றலாவது
அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள்
ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்
(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே
நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக
வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன்
குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்
வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை

ஒரு நான்று தடாவியதே
ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது

பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்
செவ்வையே ஸ்வ பாவமான இது
இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை -என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் -என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு
அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு
இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே
ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே
பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி
நேர் அறிவு கலங்கின படி

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும்
ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி
அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே
ஆர்த்தியினுடைய அதிசயம் –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க

அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத் துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

———————–

அவதாரிகை
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட
அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை
தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
வளைந்த அம்பையும்
முரி போன சிலைகளையும் தவிர்ந்து

கடாயின கொண்டொல்கும்
தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்

வல்லி ஈதேனும்
இது ஒரு கொடி என்று சொல்லும்படி
ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து
அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –

அம்பும் -என்றது
ஜாதி ஏக வசனம்

சிலைகள் என்று
முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்

பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய கூற்றம்
மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே
உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்

ஞாலத்துள்ளே–
இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று
உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
அம்பு என்று
லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது

சிலை என்று
ப்ரேரகமாகையாலே
க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –

இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது
அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே
அப்ராப்த விஷய அவகாஹநம்

சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை

(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல்
ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர்
மதி நலம் அருளப்பெற்றவர் )

ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு
கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்

அதாவது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட
நித்யத்வ
அபவ்ருஷேயத்வ
ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே
அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு
ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே
மதன செங்கோல் நடாவிய
நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான

கூற்றம்
பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே
ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்

இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்

ஞாலத்துள்ளே–
ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 )
ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று

பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் –
என்று அந்வயிக்கவுமாம் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

——

அவதாரிகை

ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்
அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை
ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக்
கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் எல்லாம் நடுங்கும்படி தன்னில் தான் நெருங்கி

நன்னீரிட்டு
ஸ்வ கதமான ஜலத்தை இட்டு

பனிப்ப நன்னீர் இட்டு -என்று
நனையும்படி நன்றாக நீர் இட்டு என்றுமாம் –

கால் சிதைந்து-
மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை
ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைய ஏறு என்று
மேகத்தை மயக்கி உரைக்கிறாள் –

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை

கால் சிதைந்து பொரா நின்ற -என்று
மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்

அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும்
ஸ்யாமளமான நிறத்தாலும்
ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத்
தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்து
அழகிய
கார் காலம் தானோ

வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-
உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான்
காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன்
தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –

இத்தால்
இவ்வாழ்வாருடைய அனுபவ யோக்ய காலத்தில்
விளம்ப அஷமத்வத்தாலே
அவி விவேக கன அநந்த திங் முகமாய்
பஹுதா சந்தத துக்க வர்ஷியான பவ துர் தினத்திலே (ஸ்தோத்ர ரத்னம் -49 )
அகப்பட்டோம் என்று ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே
இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி

நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து
(நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )

நீல வல்லேறு
நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்
ஏறு என்று
செறுக்கு சொல்லுகையாலே
ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்

பொரா நின்ற
ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற

வானமிது -என்கையாலே
இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –

இத்தால்
ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ
பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –

அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள்
ஸ்ரீ யபதியைப் பாவித்துத்
தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே
இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று
கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று

(ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும்
உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )

இங்கு வினையாட்டியேன் என்றது
பாரதந்தர்யத்தாலே
ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல்
அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல்
செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி –

—–

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை
ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————-

அவதாரிகை

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர்
பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை
அறிந்து அருளின இவர் –
அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி
தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்

பிரியலுற்ற அன்பரை நோக்கி
இவ்வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால்
அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன்
தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு
இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே
இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்

பாண்
பாண்மையாய் இரா நின்றது

குன்ற நாடர்
மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து

பயில்கின்றன
பல படியும்
செய்வது
சொல்வது ஆகிறன

இதெல்லாம்
இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்

அறிந்தோம்
ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து
கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய்
குளிர்த்தியை யுடைத்தாய்
பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே

மாட்சிமை -நன்மை

மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய்
குன்றம் ஏந்தியுமானவன் என்று
வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி

பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு
ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே
பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்

(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –
நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்
உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி
ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –

இவ்விடத்தே
குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி

(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————–

அவதாரிகை

அன்புடையாரை அகல மாட்டாத இவருடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தாலும்
ஞான வை லக்ஷண்யத்தாலும்
பிரிய மாட்டாமையால் அன்பர் சொன்ன பாசுரத்தை
பிரிவு அறிந்த தலைவி எழிலும் வேறுபாடும் கண்டு
பிரிய மாட்டாத தலைவனுடைய கோளான வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர்
திண்மையையும்
புகர் யுடைமையையும்
ஒளியையும்
‘கூர்மையையும்
உடைய திருவாழியோடே உண்டான சேர்த்தி அழகையும் உடையராய்
ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே
வைகுண்ட பர லோக -லிங்க புராண ஸ்லோகம்
பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ மானுடைய
(அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அம்மானுக்கு–ஆழி இத்யாதி
அங்கும் உண்டே -தாமம் ஸ்ரீ வைகுண்டம் )

விண்ணாடனைய
பரமபதம் போலே
நிரதிசய ஆனந்தா வஹையான

வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான கொடி போன்றவளை
(பூ மலர்ந்த கொடி )

யாரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையோ கண்
கண்ணாய் இருக்கிறானோ

பூங்கமலம்
அழகிய கமலமானது

கருஞ்சுடராடி
அஞ்ஐனத்தின் ஒளியை அணிந்து

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்கள் ஆகிற
வெளுத்த முத்தை அரும்பி

வண் பூங்குவளை
உதாரமாய்
அழகிதான
செங்கழு நீரினுடைய

மடமான் விழிக்கின்ற
மடப்பத்தை யுடைய
மானின் நோக்கை யுடைத்தாகா நின்ற

மாயிதழே–
பெரிய இதழை யுடைத்து என்னலான
இவை கண்ணாய் இருக்கின்றனவோ

இக் கொடிக்கு வண்ணம் சிறப்புடைய பூ என்னும் அத்தனை
ஆதலால் ஆரே பிரிபவர் என்று கருத்து
இது நீங்கல் அருமை கூறல்

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இத்தால்
இவ்வாழ்வாரைப் பிரிய நினைத்த அன்பரான பாகவதர்
பரத்வ ப்ரகாசகமான திருவாழியோடு உண்டான சேர்த்தியாலே
தர்ச நீயனான ஸ்ரீ மானுடைய பரமபதம் போலே
ஆனந்தாவஹமாய்

உதாரமாய் –
போக்யமாய் –
அத் யுஜ்ஜ்வலமாய் –
உபக்ந அபேக்ஷமான கொடி போலே –
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஸ்வரூபத்தை யுடைய இவரை
ஸ்வரூப ஞானம் பிறந்தாரில் விடுவார் யுண்டோ –

(வண் பூ மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல -நாயனார்
வல்லி கொடி -தேக ஆத்ம குணங்கள் )

அது நிற்க
இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு
பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

(கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்
இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்
ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்
திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்
பூம் கமலம் -அவள்
கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று

(இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே
ராகம் கலந்த ஞானம் )

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ
என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——-

தாத்பர்யம்

முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள்
தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க
அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்டா நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை
நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

சவுந்தர்யம்
லாவண்யம்
மார்த்தவம் –
சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை
ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான
வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே –
போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே

உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும்
கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து
மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய
உன்னைக் கண்டார் பிரிவாரோ
ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்
பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு

—————

அவதாரிகை

இப்படிப் பிரிய மாட்டாத அன்பரான பாகவதர்
இவ்வாழ்வாருடைய அவயவ சோபையிலும்
அருளிச் செய்த வசன வ்யக்திகளிலும்
ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தையை
தோழியும் தலைமகளும் இருந்த கானல் புனத்து எதிர்ப்பட்ட தலைவன்
மதியுடன் படுத்தலுற்றுக்
குறை யற யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய
ஸர்வேஸ்வரனதான

வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
வட எல்லையான திருமலையை நாடாக யுடைய
வல்லி போன்று இருந்த பெண்காள்

இங்குக் கொடி என்று
கொடிச்சியாய்
குற மகள் ஆகவுமாம்

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
உங்கள் முன்னே நின்று ஈடுபட்ட என்னுடைய நோய் காணாத அளவன்றியே
சொல்லவும் கேட்க்கிறீலீர்
ஸ்வர அவஸாதமும் செவிப்படுகிறது இல்லை

ஓ என்று
ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல்
உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி

நுமது வாயோ
உங்கள் விகசிதமான வாய் அழகோ

அதுவன்றி
அவ்வளவு இன்றியே

வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ
கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும்
சிதிலராம்படி
ஆய விடுகிற மிடற்று ஓசையோ

தொண்டையோ
அக்காலத்தில் தொண்டைப்பழம் போலே சிவந்த
அதர சோபையோ

அடும்
என்னை உயிர்க் கொலை செய்யா நிற்கும்

இது அறிவது அரிதே
இவற்றில் ஏதோ நலிகின்றது என்று அறிய அரிதாய் இரா நின்றது

உரையீர் அறை
நீங்கள் சொல்ல வல்லீராகில் சொல்லுங்கோள்
இவர்கள் வார்த்தை கேட்க்கையில் விருப்பத்தாலே கருத்து அறிவித்த
தலைமகன் மேலிட்டு உரைத்த பாசுரம்
குறை நயந்த தலைவன் கருத்து அறிவித்தல்

மாயோன் வட திருவேங்கட நாட
இத்தால்
பிரிய மாட்டாத அன்பர்கள்
மாயோன் இத்யாதியாலே
அபரிச்சின்ன போக்யதையாலே ஆச்சார்யாவஹனுடைய ஸர்வ உத்தரமான
திருமலையிலே நாட்டத்தை யுடைய -என்றபடி

வல்லிக் கொடிகாள்-என்று
பகவத் அனுபவ ரஸ அபேக்ஷமான பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது
பன்மை -கௌரவத்தைக் காட்டுகிறது

ஆக
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே
மானஸ அனுபவம் நடந்து
அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –

உரையீர்
இது அருளிச் செய்ய வேணும்

நுமது வாயோ
அனுபவ பரிவாஹ ரூபமான பிரபந்த நிர்மாண தசையில் முக விகாஸமோ

அதுவன்றி
அவ்வளவு அன்றியே

வல்வினையேனும்
உம்மைப் பிரிந்து போகாதபடி துவக்குவதான வலிய வினையை யுடைய நானும்

இவ்விடத்தில் வினை என்பது
பாவ பந்தத்தை

கிளியும் -என்று
பசுஞ்சாம நிறத்தாலும்
அவ்வதரத்தில் பழுப்பாலும்
வசன மாதுர்யத்தாலும்
போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது

எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற
இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று

(தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார்
அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் )

ஆயோ -என்று
வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி

தொண்டையோ -என்று
தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி

அடும்-என்கையாலே
இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி

அறையோ விதறிவரிதே—என்கையாலே
வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி

உரையீர் -என்று
நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன்/பிரவேசம் -முதல் பாசுரம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 28, 2022

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் வைபவம்

ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்

ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தூண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரைகளை சரண் அடைகிறேன் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாரர் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில் -ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் –உபதேச ரத்னமாலை –45-

இவரைப் பெரியவாச்சான் பிள்ளை திருத்திப் பணி கொண்டு அருளிய விவரம் இவர் வைபவத்தில் காட்டப்பட்டுள்ளது

மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில –(உபதேச 47)என்று மா முனிகள் அருளியபடி
திரு விருத்தம் ஸ்வாபதேச உரை முதலான மூவாயிரத்தில் சில பிரபந்தங்களுக்கு உரை
த்ராவிட உபநிஷத் சங்கதி -ஸம்ஸ்க்ருத பத்ய கிரந்தம்
தத்வ தீபம் -ஸம்ஸ்க்ருத கத்ய கிரந்தம்
அதுக்கு இவரே -தீப பிரகாசம் -மணிப்பிரவாள வியாக்யானம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்யத்ரய காரிகா வளி
ஸ்ரீ பகவத் கீதை வெண்பா இவை போல்வன நமக்கு கிடைத்துள்ளன –
இவர் அருளிச் செய்துள்ள கீதைக்கு மணிப்பிரவாள வியாக்யானம் போல்வன இப்பொழுது லுப்தம்

திருமாலை ஆண்டான் திரு வம்சத்தவரான யாமுனாச்சார்யர் இவரது சிஷ்யர்
ப்ரமேய ரத்னம் போன்ற கிரந்தங்கள் சாதித்தவர்

பூர்வாஸ்ரமத்தில் -வரதராஜர் என்னும் திருநாமம் –
உத்தம ஆஸ்ரமத்தில் ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் என்று திருநாமம் பெற்றார்
வாதிகளை ஜெயிக்கையால் வாதி கேஸரீ என்ற பட்டப்பெயர் பெற்றார் –

————————–

பிரவேசம்
ஸ்ரீ யபதியாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
பதிம் விஸ்வஸ்ய-என்று விஸ்வத்துக்கும் பதி யாகையாலே
தன்னுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான
வியாப்ய வியாபக பாவம்
சரீர ஆத்ம பாவம்
சேஷ சேஷி பாவம்
நியாந்த்ரு நியாம்ய பாவம்
ஆதார ஆதேய பாவம்
முதலான அவிநா பூத சம்பந்தம் ஸகல ஆத்மாக்களோடும் ஒத்து இருக்க

(அப்ருதக் ஸித்த விசேஷணம் – பிரிவில்லாமல் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிந சேஷ ஸாயினே –
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்துஸ் ச ஸக்யஞ்ச தத் தஸ்ய சரீரம்
அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகவே இருப்பதே சரீரம்
பரகத அதிசய ஆதேயன உபாயத்வமே -சேஷ சேஷி பாவம் -அவனுக்கே
பஸ்யமே லோக ஐஸ்வர்யம் -அனைத்தையும் நானே தாங்குகிறேன் -கீதை )

ஒரு விபூதியில் உள்ளார்
நிரந்தர அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த திருப்தராயப் போருகிற படியையும்
ஒரு விபூதியில் உள்ளார் –
அநீசயா சோசதி முஹ்யமாந -ஸ்வேதாஸ்வரம் -4-7-என்று
அநாதி அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
அநாத்மந் யாத்ம புத்தியும் -(அஹங்காரம் -யானே -ஸ்வரூபம் மாறி )
அஸ்வே ஸ்வ புத்தியுமாகிற -(மமகாராம்–என் தனதே -என்னுடையது அல்லாதவற்றை என்னுடையது ஸ்வ பாவம் மாறி )
அந்யதா ஞான
விபரீத ஞானங்களாலே
ஆத்ம அநநு ரூபமான அர்வாசீந புருஷார்த்தங்களிலே அதி ப்ரவணராய்
(தாழ்ந்த விஷயாந்தரங்களில் ஐஸ்வர்யார்த்திகளாய் )
ஆத்ம அநு ரூபமான அதிசயித புருஷார்த்தத்தில் அத்யந்த விமுகராய்
கர்ப்ப நரகாதி ஸகல கிலேசங்களாலும் வ்யாகுலராய்ப் போருகிற படியையும் கண்டு

இவர்களுக்கு அவகாசம் பிறக்கைக்கு அடியான ஸ்வ அபிமுக்யத்தைப் பண்ணுவிக்கைக்கு உப கரணமான
கரண களேபரங்களையும் கொடுத்து
மாநம் ப்ரதீபம் இவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-என்கிறபடியே

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-1-

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-)

அந்தகாரத்திலே திரிவாருக்கு அர்த்த பிரகாசம் பிறக்கைக்குக் கை விளக்கு கொடுத்தால் போலே
நிர்த் தோஷமான பிராமண ப்ரகாஸத்தையும் பண்ணுவிக்க

திமிர உபஹத த்ருஷ்டியானவனுக்கு தீபமும் ப்ரகாஸமும் அல்லாதாவோ பாதி
பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தாலே ஆந்த்ர சஷுஸ்ஸான நெஞ்சின் குருடு தீராமையாலே
அதுவும் அகிஞ்சித் கரமாக

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் சமுப ப்ரும்ஹயேத்–(பார்ஹஸ் பத்ய ஸ்ம்ருதி ) என்று
வேத உப ப்ரும்ஹணமான ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ரூபங்களாய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருத பராவர தத்வ விபாகரான பரம ரிஷிகளாலே
ப்ரணீதங்களான பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்தும்
அதுவும் கார்ய கரம் அல்லாமையாலே

ஓலைப் புறத்துச் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தான் ராம கிருஷ்ண ரூபத்தாலே திரு அவதரித்தும்

ரூப ஓவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணம் (அயோத்யா -3-26 ) என்று
ஸுந்தர்யாதி குண ஆவிஷ்காரேண
அக்ரூர மாலாகாராதிகான் பரம பாகவதான் க்ருத்வா -(கீதா பாஷ்யம் -அவதாரிகை )என்று சொல்லுகிறபடியே
ஸாஸ்த்ர சஸ்த்ரம் முனை மடிந்தால் எடுக்கும் -ப்ரஹ்மாஸ்திரமாகிற வடிவு அழகைப் பிரகாசிப்பித்தும்

உபதேஸ அநுஷ்டானாதி முகத்தால் தர்ம ஸம்ஸ்தாபநத்தைப் பண்ணியும்
வசீகரிக்கப் பார்த்த இடத்திலும்

அநாதி பாப வாஸநா தோஷ தூஷிதா சேஷ சேமுஷீகர் ஆகையாலே
பாஹ்ய குத்ருஷ்டி மத அவகாஹநம் பண்ணி
(புத்தோடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ )
வைதிக மார்க்க பராங் முகராகக் கண்டபடியாலே

இவர்களை வசீகரிக்கைக்கு உபாயம் ஏதோ என்று பார்த்து
(எம்பெருமானாராய் இருந்தால் அப்போதே ஒரு சிந்தை செய்து நாரணர்க்கு ஆளாக்கி அருளுவார் )
தீபகம் காட்டி மிருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீய புத்தி பண்ணலாம் படியான
ஆழ்வார்களைப் ப்ரவர்த்திப்பித்தான் –

இவர்கள் ஆகிறார் –
ரிஷிகளைப் போலே கர்மாதி ஸாத்ய ஞானர் அன்றியே –
பகவத் ப்ரஸாதத்தாலே
அயத்ன லப்த ஞான வைராக்ய பக்தி கராய்
வேத இதிஹாஸ புராணாதிகளைப் போலே அதி க்ருதாதிகாரம் இன்றியே
ஸர்வ அதிகாரமாய்
திராவிட ரூபமான பிரபந்த விசேஷங்களாலே
ஸகல வேத வேதாந்த ரஹஸ்ய அர்த்தத்தைப் பிரகாசிப்பிக்கையாலே
அத்யந்த விலக்ஷணராய் இருப்பார்கள் –

இவர்களிலும் வைத்துக் கொண்டு
நம்மாழ்வார் -அல்லாத ஆழ்வார்களைப் போலே லௌகிக ஞானம் நடையாடா நிற்க
பகவத் பிரஸாதத்தாலே -ஒரு கால விசேஷத்திலே தத்வ ஞானாதிகள் பிறந்து அனுபவிக்கை அன்றிக்கே
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமா போலே
ஸஹஜ ஞான பக்தியை உடையவராகையாலும்

மாதா பிதா –ஆத்யஸ்ந குல பதே –ஸ்தோத்ர ரத்னம் –5- என்று
இது தத்வ ஞான ப்ரவர்த்த நத்திலே பிரதம ஆச்சார்யராக விலக்ஷண பரிக்ருஹீதர் ஆகையால்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவர் என்று அங்கீ கரித்து

என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் -48- என்னும்படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தாமே ப்ரவர்த்திப்பிக்கையாலும்
அத்யந்த வ்யாவ்ருத்தராய் இருப்பார் ஒருவர் –

(மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-)

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடைய இவருக்கு உத்தம வர்ணாதிகளிலே அன்றியே
துரீய வர்ணத்திலே அவதாரமான இது
பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே –புருஷ ஸூக்தம் –என்கிற மரியாதையாலே
(முகத்தில் இருந்து பிராமணன் -சதுர்த்த வர்ணன் திருவடியில் இருந்து )
வர்ண உத்கர்ஷம் அன்றியே சேஷத்வமே உத்தார ஹேது என்னும்
அர்த்த விசேஷத்தை ஸூசிப்பிக்கைக்காக –

ஹரி கீர்த்திம் விநைவாந்யத் -(மாத்ஸ்ய புராணம் யம வசனம் )-என்கிற நியாயத்தாலே
பகவத் விஷயமான பாஷைக்கு அபகர்ஷம் உண்டாகில் இறே
ந சூத்ரா பகவத் பக்தா -என்கிற நியாயத்தாலே
சேஷத்வ ஞான ஆஸ்ரயமான இவ்வர்ணத்துக்கு அப கர்ஷம் உள்ளது –

இப்படி வை லக்ஷண்யத்தை யுடையவரான இவ்வாழ்வார் பக்கலிலே
பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி
என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –

அவற்றில் பிரதம பாவியான இப்பிரபந்தத்திலே
அஞ்ஞான கர்ம தேஹாதி ரூபமான (பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கு -அழுக்கு உடம்பு )
ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்திக் கொண்டு
அனுபவ உபகரணமான ப்ராவண்ய அதிசயத்தாலே அனுபவ அபி நிவேசம் நடந்த படியையும்
அனுபவ அலாபத்தில் ஆர்த்தி அதிசயித்த பிரகாரத்தையும்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஆர்த்திக்கு அதிசய ஜனகங்களான பிரகாரத்தையும்

இவருடைய ப்ராவண்யாதி வை லக்ஷண்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்களும் -பரிவருமாய் உள்ளார்
தாங்கள் ஈடுபட்டும்
இவரை ஆஸ்வசிப்பித்தும்
போந்த பிரகாரத்தையும் –
ஆர்த்தி அதிசயம் கால விளம்பம் பொறுக்க மாட்டாத ஸைதில்யத்தை ஜநிப்பித்த பிரகாரத்தையும்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி ஞானம் சங்குசிதமாகாத பிரகாரத்தையும்
ப்ராப்ய ப்ராபகங்கள் –பகவத் சீல ஸுலப்யங்களே

(ஆஸ்ரய ஸுகர்ய குணமே ஸுசீல்யம் -இதுவே ப்ராப்யம்
அனுபவத்துக்கு ஸுகர்ய குணம் -ஸுலப்யம்-இதுவே ப்ராபகம்
அங்கும் சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண
பாலேய் போல் சீர் குணங்களில் அனுபவம்
ஆகவே இவையே ஆறும் பேறும் என்றபடி -)

என்று அறுதியிட்டு பிரகாரத்தையும் வெளியிடுகையாலே
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே படும்படி இவர் தம்முடைய வ்ருத்த கதனம் பண்ணினார் ஆயிற்று –
ஆகையால் இறே இப்பிரபந்தத்துக்கு திரு விருத்தம் என்று பேர் ஆயிற்று

அல்லது
தாழிசை-
துறை –
விருத்தம் என்று இனத்தின் வகையான
கலித் துறையை விருத்தம் என்னக் கூடாது v –

(வெண்பா -கலிப்பா -ஆசிரியப்பா வஞ்சிப்பா -என்று இருக்க வேண்டுமே
வெண்பா தாழிசை -கலி தாழிசை -போல் இருக்க வேண்டும்
கலி விருத்தம் என்று சொல்லக் கூடாதே
நான்கு சீர் அடி நான்கு -எதுகை ஒத்து இருக்க வேண்டுமே )

இப் பிரபந்தத்திலே அத்யாத்ம ரூபமான இவ்வர்த்தங்களைப் பிரகாசிக்கிற இவர்
நாயக நாயிகா சங்கம ரூபமான காம ராக பிரகாரமாய் இருக்கிற
கிளவித் துறையைப் பேசுவான் என் என்னில்

காமமாவது –
இதர விஷயத்திலான போது அநர்த்தா வஹமாய் த்யாஜமாகக் கடவது
காமத் கோப்ய-(ஸ்ரீ மத் பாகவதம் -7-1-33)என்கிற கணக்கிலே
கண்ணனுக்கே காமமான போது புருஷார்த்த அந்வயியாய்க் கடவது –

(சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -இராமானுஜ நூற்றந்தாதி-40 – )

ஆகையால் இந்த வகை தமிழ் மர்யாதையான ஸ்ருங்கார ப்ரகாசகமான பாசுரங்களாலே
இவ்வத்யாத்மத்தை அருளிச் செய்தது –
கட்டி பூசிக் கடு தீற்றுவாரைப் போலே விஷயசக்தரான ஸம்ஸாரிகள் நெஞ்சிலே படுகைக்காக –
(இந்திரியங்கள் எந்த மார்க்கங்களில் போகுமோ
அவற்றையே கண்ணன் இடம் வைக்க -அவற்றை மாற்றலாமே )

ஆனால் ஈஸ்வரனே தலைமகனாகப் பாடப் ப்ராப்தமாய் இருக்க -அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாக வைத்துப் பாடின இடத்துக்குத் தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரன் போக்ய பூதனாமோ பாதி
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
பரி ஜனைஸ் தவ சங்க ஸீய -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77- என்றும்
தத் சம்பந்த முகத்தாலே ததீயாருக்கும் போக்யதை உண்டாகையாலே
அவர்கள் பக்கல் ப்ராவண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –
பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்
நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்
அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற
பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும்
பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் –
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும்
இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

இந்த நாயக நாயகிகளுடைய இயற்கைப் புணர்ச்சி முதலான சம்பந்தமானது ஸாஸ்த்ரீயமோ என்னில்
ஸாஸ்த்ரத்திலே
1-ப்ராஹ்மோ
2-தைவ
3-ப்ரஜாபத்ய
4-ஆர்ஷ
5-ஆஸூரோ
6-காந்தர்வோ
7-ராக்ஷஸ
8-பைஸாசா
இதி -என்று விவாஹம் எட்டு வைகையாக இருக்கும் என்றது

இது தான்
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம்
அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய
மறையோர் மன்றல் எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப்
புலமையோர் புணர்ப்பு பொருண்மை என்மனார் புலமையோரே -என்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது –

1-அற நிலை
3-ஒப்பே
4-பொருள் கோள்
2-தெய்வம்
6-யாழோர் கூட்டம்
5-அரும் பொருள் வினையே
7-இராக்கதம்
8-பேய் நிலை

அதில்
ப்ராஹ்மம் ஆவது
அபி ரூபனாய் வ்ருத்த ஸம்பன்னனாய் இருக்கிறவனை அழைத்து ஸத் கரித்து
அலங்க்ருதையான கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு அற நிலை என்று பெயர் –

தைவமாவது
தேவ யஜன ரூபமான யாகத்திலே ஆர்த்விஜ்யம் பண்ணினவனை அழைத்துக் கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு தெய்வம் என்று பெயர்

ப்ரஜாபத்யமாவது
ஓக்க இவர்கள் இருவரும் ப்ரஜா உத்பாதநாதி ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்கக் கடவர்கள் என்று
வாக்காலே அறுதியிட்டுச் சொல்லி
அக்னி காரியத்தையும் தானே அனுஷ்ட்டித்துக் கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்கு ஒப்பு என்று பெயர் –

ஆர்ஷமாவது
ஒன்றாதல் இரண்டாதல் கோ மிதுனத்தோடு கன்யகையை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்குப் பொருள் கோள் என்று பெயர் –

ஆஸூரமாவது
வரன் தானே கன்யகைக்கு ஆபரணம் பூட்டி சக்திக்கு ஈடாக பந்துக்களுக்கு
(தனம் )தானம் கொடுத்துக் கைப்பிடித்தல்
இதற்கு அரும் பொருள் வினை என்று பெயர் –

காந்தர்வமாவது
தனியிடத்து இருவருடையவும் காம மோஹத்தாலே கூடுகை
இதுக்கு யாழோர் கூட்டம் என்று பெயர்

ராக்ஷஸமாவது
பந்துக்களை அடர்த்துப் பெண்ணைக் கைப்பிடிக்கை
இதுக்கு இராக்கதம் என்று பெயர்

பைசாசமாவது
ஸூப்தை யாதல் – ப்ரமத்தை யாதல் -கன்யகையை ரஹஸ்யத்திலே கூடுகை
இதுக்கு பேய் நிலை என்று பெயர் –

இவை எட்டிலும் –
ப்ராஹ்மம் தைவம் ப்ரஜாபத்யம் ஆர்ஷம் என்கிற இவை நாலும்
அக்னி பூர்வகமாக ப்ராஹ்மணனுக்குக் கர்த்தவ்யம் ஆகையாலே ப்ரஸஸ்தங்கள்

அல்லாத நாலும்
ஐகன்யங்கள் (தாழ்ந்தவை)

இதில்
ப்ராஹ்ம விவாஹத்தில் பிறந்தவன் –
தச பூர்வான் தசா பரான் ஆத்மாநம் ச (போதாயன தர்மம் ) என்று
தன் வம்சத்தை இருபத்தொரு படி கால் சுத்தனாக்கும்

தைவ விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஏழும் பின் ஏழும் சுத்தனாக்கும்

ப்ரஜாபத்ய விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஆறும் பின் ஆறும் சுத்தனாக்கும்

ஆர்ஷ விவாஹத்தில் பிறந்தவன்
முன் மூன்றும் பின் மூன்றும் சுத்தனாக்கும்

ஆஸூராதிகளான நாலுக்கும் இவ்விசேஷம் இல்லையே யாகிலும்
விலக்ஷண புருஷ அனுஷ்டிதமாகில்
அதிசயித புருஷ உத்பாதகங்கள் என்று ஸாஸ்த்ரங்களிலே கண்டு கொள்ளப் படும்

இவ்
வெட்டிலும் வைத்துக் கொண்டு
காந்தர்வமானது ஸ்ருங்கார ரஸமுமாய் ஸ்திரீயினுடைய அநந்யார்ஹதா ரூபமான கற்புக்கும் முதலாகையாலே
அகத்தமிழ் மர்யாதைக்குப் பிரதானமாய்ப் போரும்

அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது அந்தணர் அரு மறை மன்ற வெட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்று அகத்தமிழிலும் -இறைவனார் அகப் பொருளில் சொல்லப்பட்டது –

இப்படி ஸாஸ்த்ரீயமாய்க் கற்புக்கும் உறுப்பான சம்பந்தமாகையாலே இந்தக் கிளவித்துறை
மர்யாதையாலே தம்முடைய அநந்யார்ஹதையைப் பிரகாசிப்பிக்கக் குறையில்லை

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வாதி பேதம் இன்றிக்கே இருக்க
நாயிகா ரூபத்தாலே ஸ்த்ரீத்வம் சொல்லுகைக்கு அடி என் என்னில்

ஸ்வரூபம் ஸர்வதா பரதந்த்ரமாகையாலும்
அநந்யார்ஹம் ஆகையாலும்
அநந்ய ரக்ஷகமாகையாலும்
அநந்ய போக்யமாகையாலும்
ஸ்த்ரீத்வ சாதரம்யம் உண்டாகையாலே சொல்லக் குறையில்லை

ச ஏவ வாஸூ தேவோ சவ் ஸாஷாத் புருஷ உச்யதே –
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் ஸரம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் ) என்று சொல்லக் கடவது இறே

ஸ்வாமித் வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யாஸ் ஸ்வாமிநோ குணா
ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயிந –என்று
ஸ்வாமி குண அனுசந்தானத்தில் ஸ்வத்துக்குத் தத் ப்ரதி சம்பந்திக ஸ்வ பாவங்கள் தோற்றுகையாலே
ஈஸ்வரனுடைய புருஷோத்தமத்வ அனுசந்தானத்தில்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வ அனுசந்தானம் அவர்ஜனீயம் என்றதாயிற்று –

இப்படி நாயக நாயிகா ஸம்பந்தம் ஸித்தமாய் இருந்துள்ள இடத்தில்
தாய் வார்த்தையான இடம் -ஞான தசையாதல் -பரிவர் வார்த்தை யாகக் கடவது
தலைமகள் -என்பது ப்ரேம தசையை
தோழி என்பது ஸூஹ்ருத்துக்களை
கிளவித் தலைமகன் என்பது அபிமத பாகவத விஷயத்தை
தூது என்பது -கடகமான ஆச்சார்ய விஷயத்தை
கண் அழகு என்பது ஞான வை லக்ஷண்யத்தை
முலை அழகு என்பது -பாரதந்தர்ய லக்ஷணமாய் போக உபகாரணமான பக்தி வை லக்ஷண்யத்தை
இடை அழகு என்பது -ஒன்றும் பொறாத வைராக்கியத்தை
நடை அழகு என்பது -அனுஷ்டானத்தை
வளை -என்பது அநந்யார்ஹதா சிஹ்னத்தை
இருள் என்பது அஞ்ஞானத்தை
வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்கள் என்பது ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான லௌகிக பதார்த்தங்களை
இரவு நெடுமை என்பது -விளம்ப அஷமத்வத்தை
பொழுதோடு புலம்பல் -மாலைக்கு ஆற்றாமை என்பது -போக யோக்ய கால ஸந்நிதியை
சந்த்ர உதயம் என்பது -அலாப தசையில் விவேகமும் பாதகமான படியை
இன்னமும் இப் பிரகாரங்களிலே வ்யங்யங்களும் (ஆழ் பொருள்களையும் உள்ளுறை பொருள்களையும் )
கண்டு கொள்ளப்படும் –

————-

இப் பாட்டு ப்ரபந்த தாத்பர்யத்தை ஸங்க்ரஹிக்கிறது
அதாவது
அவித்யா கர்ம தோஷாதிகள் விரோதி என்னும் இடமும்
(ஆதி வாசனா ருசி ஜென்மம் -ஸ்வரூப உபாய மோக்ஷ புருஷார்த்த விரோதிகள் )

இவை ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு நிவர்த்த நீயம் என்னும் இடமும்

நிவர்த்தகனானவன் –
ஸர்வ ரக்ஷகனாய் –
அவதார ப்ரயுக்த ஸுலப்ய விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் என்னும் இடமும்
(சர்வேஸ்வரன் பரத்வம் -நாம் கிட்ட ஸுலப்யம் உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்த விபவம் )

நிவ்ருத்த விரோதிகனுக்கு ப்ராப்யனானவன்
நித்ய ஸூரி ஸேவ்யனான சர்வாதிகான் என்னும் இடமும் அறுதியிட்டு –

இவ்வர்த்தத்தை புத்தி சாஷாத்கார ஸந்நிஹிதனான ஈஸ்வரனைப் பார்த்து
(புத்தி சாஷாத்கார–மானஸ ப்ரத்யக்ஷ சமானாதிகாரம்
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா)
ஸங்க்ரஹேண விண்ணப்பம் செய்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.-கேட்பதே அருள்

உரை

பொய் நின்ற ஞானமும்
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான
அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்

பொல்லா ஒழுக்கும்
அந்த தேஹாத்ம அபிமானம் அடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும்

அழுக்கு உடம்பும்
இக் கர்மம் அடியாக வரக் கடவதான மாம்ஸா ஸ்ருகாதி மல ரூபமான தேஹ சம்பந்தமும்

(பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–53-)

இந் நின்ற நீர்மை
இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )

இனி யாம் உறாமை
நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு
முன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய்
பிராணி பதார்த்தங்களினுடைய
அநிஷ்ட நிவ்ருத்தியையும் –
இஷ்ட ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுக்கைக்காக
ரூப ப்ரகார வ்யவஸ்திதங்களான ஸகல ஜாதிகளிலும்
அவதீர்ணன் ஆனவனே –

இமையோர் தலைவா
ஏவம் வித ஸுலப்ய விசிஷ்டனான உன்னை ஆஸ்ரயித்தாரை அனுபவிப்பிக்கைக்காக
ஸதா தர்சன பரரான அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே –
(தாங்களும் அனுபவித்தும் நாம் அங்கு போனாலும் வந்து எதிர் கொண்டு நம்மை அனுபவிப்பித்தும் )

அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் நின்று கேட்டருளாய்–
உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை
ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்

மெய்ந் நின்று கேட்டருளாய்–
அபேக்ஷிக்கும் படி நின்று கேட்டருளாய் என்றுமாம்
(சரீரத்தில் நின்று என்றுமாம் )

கேட்டு அருளாய்
என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –

(கேட்டு அருளி வேறே ஒன்றும் செய்ய வேண்டாம்
எழுந்து அருள வேண்டும் -என்று வந்ததே அருள் போல் –
கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –62- திரு நக்ஷத்ரம் -எழுந்து அருளி கடாக்ஷத்தாலே போதும்
உபன்யாசம் செய்ய வேண்டாம் என்பார்களாம் )

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் என்று அந்வயம் —

யாம் உறாமை
என்று பன்மையாய் இருக்க

அடியேன்
என்று ஒருமையாலே
ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய்
பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –

(விண்ணப்பம் உடையவர் ஒருவரே -பலம் நமக்கு எல்லாருக்கும் உண்டே
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்–60-)

இனி பிரபந்த சேஷமும்
இதில் சொன்ன அர்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறது –

செய்யும் விண்ணப்பம் -1- என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த –100-என்று தலைக் கட்டுகையாலே
ஸ்ருணு விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் –50- என்று தொடங்கி
மது மதந விஞ்ஞாபனம் —57- என்ற கணக்கிலே
இப் பிரபந்தமாக இப் பாட்டில் சொன்ன அர்த்தமே ஒரு வார்த்தையாய் இருக்கிறது –

(ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —50

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —57

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.)

இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும்
அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும்
அடியேன் -என்று ஸ்வரூபத்தையும்
மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே
அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -முதல் பாசுரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் -வியாக்யானம் –

January 27, 2022

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)

பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||

“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத
பெருமையை யுடைதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”

————-

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

ஸ்ரீ உபகார சங்க்ரஹம்- சில்லரை ரஹஸ்யம்–

இப்படி நம்முடைய அபேஷா நிரபேஷ முகமாகத்
தன்னுடைய புத்தி அதீனமான சஹகாரி விசேஷ ஸஹித சம்பந்த குண விசேஷங்களாலே

(குடல் துவக்கு பிராப்தி உண்டே அனைவருக்கும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
சம்பந்தம் மட்டும் இருந்தால் போதாதே
ஞான சக்தி போன்ற குணங்களும் வேண்டுமே )

முன்பு (மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு )

சர்வேஸ்வரன் பண்ணின உபகார பரம்பரைகளை முன்னிட்டுக் கொண்டு
மேல் தேச கால பரிச்சேதம் இல்லாத திவ்ய கைங்கர்யம் பர்யந்தமாக அபேக்ஷிக்கை
முமுஷுவுக்கு பிராப்தம் ஆகையால்

அயர்வறும் அமரர்கள் அதிபதியான திருமாலால் மயர்வற மதிநலம் பெறும்படி அருளப்பட்ட நம்மாழ்வார்
தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில்
முதல் பிரபந்தமாய்
இவர் தம் வ்ருத்தாந்தங்களை முன்னிடுகையாலே
திருவிருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில்
முதல் பாட்டில்
பூர்வ உபகார ஸ்ம்ருதியை முன்னிட்டுக் கொண்டு
உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –

(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –
இனி ஒன்னும் மாயம் செய்யேல் )

————-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.

எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாவது
சம்சார மூலமான
பிராந்தி ஞானமும் –

அது அடியாக வந்த
பிரதிகூல அனுஷ்டானமும் –

அது அடியாக வந்த
ரஜஸ் தமஸ் பிரசுரமான பிராகிருத தேகமும் –
(பஞ்ச பூதம் ஸ்தூலம் போன்ற தாழ்ச்சிகளும் உண்டே )

இவை
மற்றும் உள்ள ஹேயங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம் –
இங்கே அநுக்த சமுச்சயமும் (சொல்லாத அனைத்து தோஷங்களும் ) கொள்ளவுமாம் –

பொய் நின்ற ஞானம் என்றது –
நஸ்வரம் ஆகையால் பொய் என்னலாம் படி நிற்கிற
அபோக்யமான விஷயத்தில் கரண யாயத்தத்தால் பிறக்கிற போக்யதா புத்தி ஆகவுமாம்

அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து
சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )

இந்நின்ற நீர்மை –
இப்படி நின்ற பிரகாரத்தை

இனி யாம் உறாமை
சர்வ லோக சரண்யனாய் –
சரணாகத வத்சலனான உன் திறத்தில்
பிரதி புத்தரான நாங்கள்
இதற்கு மேல் இப் பிரதிகூல பரம்பரைகளை அடையாதபடி
(தேவரீர் போக்க வல்லவர் என்று அறிந்த யாம் -என்றபடி )

யாம் -என்கிற இது –
பரித்ராணாயா சாதூனாம் -என்கிற சாது பஹுத்வத்தைக் காட்டுகிறது
பசு மனுஷ்யா பஷி வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரய -இத்யாதிகள் படியே
சம்பந்திகளையும் கூடக் காட்டுகிறதாகவுமாம்
(பிள்ளை லோகாச்சார்யார் நம்பிள்ளை திருக்கை ஸ்பர்சத்தாலே
மரங்களும் பேறு பெற்றனவே )

உயிர் அளிப்பான் –
உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –
அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை –
தாச பூதோஹம் -என்கிறபடியை
நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்

என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் -என்கிற எல்லா பிரகாரத்தாலும்
பிராமண சித்தங்களாய் நின்ற பூத ஜாதகங்கள் நாலிலும்

பிறப்பிலியாய் பல் பிறவிப பெரு மாயன் –
அவற்றோடு சஜாதீயன் என்னலாம் படி ஸ்ரீ ஜென்ம ரகஸ்யத்தின் படியே
சத்தியமாய் –
(அவதாரஸ்ய ஸத்யம் முதலாக –ஆறு விஷயங்கள் தாத்பர்ய சந்திரிகையில் உண்டே )

ஞான சங்கோசாதி தோஷ பிரசங்க ரஹிதமுமாய்
நித்ய நிர்தோஷ சுத்த சத்வமய திவ்ய மங்கள விக்ரக பரிணாம ஆத்மகமுமாய்
(ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்து
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் இங்கும் )

ஸ்வ இச்சா மாத்தர ஹேதுகமாய்
கர்ம க்ருத கால நியம ரஹிதமாய்

சாது பரித்ராணாதி மாத்ர ப்ரயோஜனமாய்

வ்யூஹ வ்யூஹாந்தர-(பன்னிரண்டு கேசவாதிகள் ம் -மூவருக்கும் நான்கு )
விபவ -விபவாந்தர (முக்கிய ஆவேச அவதாரங்கள் )-ரூபமாயுள்ள அவதார வர்க்கத்தாலே

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
(ஜாயமானா ஸ்ரேயான் பவதி –பிறக்க பிறக்க ஒளி விஞ்சிய )-என்னும்படி பிறந்தாய் –

இமையோர் தலைவா –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே –
கர்ம வசத்தால் நாங்கள் இழந்து கிடக்க
நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும்படி
சர்வ சமனான சர்வ ஸ்வாமி யானவனே –
(கர்மத்தால் இழந்த எங்களுக்கு கிருபையால் அவற்றைப் போக்கி அருள வேண்டும் )

மெய் நின்று கேட்டு அருளாய் –
மெய் –
இப்படி ரஷ்ய யோக்யனான என்னுடைய படிகளும்
ரக்ஷண உன்முகனான உன்னுடைய படிகளும்
பிராமண சித்தங்கள் அன்றோ –

அவற்றில் ஓன்று அப்ரமாணங்கள் ஆகில் அன்றோ
உனக்குக் கண் அழிவு சொல்லலாவது என்று தாத்பர்யம்

உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும் என்றுமாம் –
திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே

நின்று கேட்டு அருளாய்
அவா அறச் சூழ்ந்தாய் -என்னும்படி
நான் அவா அற்று வீடு பெறும் அளவும் அந்நிய பரனாகாதே
அபி முகனாய்க் கொண்டு கேட்டு அருளாய்
(உகந்து திருச்செவி சாய்த்து அருள வேணும்
மலைக்கு நா வுடைய ஆழ்வார் அருளிச் செய்ய தென்னா தென்னா என்னப் பண்ணுமே
மயங்கி இல்லாமல் கேட்டு அருள வேணும் )

மெய் நின்று என்னவுமாம்
அப்போது நீ அவதரித்தது எல்லாம் ச பிரயோஜனமாம் படி
உன் அவதார விக்ரஹத்தோடே
(அன்று தேர் கடாவிய பெருமாள் கனை கழல் காண்பது ஆசை கொண்டாரே )
ஒரு நாள் காண வாராய் -என்று இருக்கிற எனக்கு பிரகாசித்து நின்று என்கிறது
(ஒரு நாள் காண வாராய்-என்பார்
வந்ததும் நின்று கேட்டு அருளாய் என்பார் )

அங்கன் இன்றிக்கே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (8-8-2 )என்னும்படி
என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே
அண்ணியனாய் நின்று என்னவுமாம் –

கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே-
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
நிருபாதிக தாஸ்யத்தில் நித்ய ப்ரதிஷ்டித புத்தியான நான்
என்னாலே உன்னை இன் கவி பாட ஒருப்பட்ட –

(என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் —
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை
ஆழ்வார் மூலமாக பகவான் தன்னையே பாடிக்கொண்டான் பாடுவித்தான் –
ஆழ்வார் மெய்யில் நின்றானே )

நிரபேஷ ஸ்வ தந்த்ரனான உன்னாலே பிரேரிதனாய்க் கொண்டு பண்ணுகிற
விஞ்ஞாபன கைங்கர்யங்கள் ஆகிற
நாலு பிரபந்தங்களையும் திருச் செவி சாற்றி-கேட்டு –

அருளாய்
ஸ்ருதி விஷயங்களான இத்தை –
தொண்டர்க்கு அமுது உண்ணலாம் படி பண்ணி அருள வேண்டும் என்று திரு உள்ளமாம் —

(தர்சனம் பேத ஏவ ச தேவப் பெருமாள் அருளிச் செய்ததை விளக்குகிறார் மேல்
வேதாந்த தேசிகன் என்பதால் பத்து அபேதங்களைக் காட்டி அருளுகிறார்
சாப்தமாகவும் அர்த்தமாகவும் இவை இங்கே உண்டே )

இப் பாட்டில்
1-சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
2-சித் அசித் பேதமும்
3-பத்த முமுஷு முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
4-ஜீவ ஈஸ்வர பேதமும்
5-ஈஸ்வர ஐக்யமும்(தலைவா ஒருவனே )
6-ஞான ஞாத்ரு பேதமும்
7-சத் அசத் ஞான பேதமும்
8-சத் அசத் அனுஷ்டான பேதமும்
9-சித்த ஸாத்ய உபாய பேதமும்
10-பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி
யதாஸ்தானம் சப்தமாகவும்
அர்த்தமாகவும் அனுசந்திப்பது

இங்கு
இமையோர் தலைவா -என்கிற இதிலே –
சேஷியாய் ப்ராப்யமுமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்

யாம் -என்கிற இதிலே –
சேஷ பூதனாய் -ப்ராப்தாவான -ப்ரத்யக் ஆத்ம ஸ்வரூபமும்

உயிர் அளிப்பான் -என்கிற இதிலே –
நிருபாதிக சேஷ விருத்தி விசேஷ ரூபமான பல ஸ்வரூபமும்

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிற இடத்திலே
சேஷ விருத்தி விரோதி ஸ்வரூபமும்

கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்கிற இதிலே –
விரோதி நிவர்த்தன வியாஜமாய் சோபாதிகமான சாஸ்திரீய சேஷ வ்ருத்தி விசேஷமும்
(வாசா கைங்கர்யம் )

இமையோர் தலைவா -அடியேன் -என்கிற இதிலே –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சகத்தினுடைய அனுசந்தானத்திற்கு
அஞ்சுருவாணியான சம்பந்தமும் சுருங்க அனுசந்தேயம் –
(ஸ்வாமி பரன் ப்ராப்யம் உபாயம் விரோதி போக்க சம்பந்தம் ஒவ்வொன்றுக்கும் வேண்டுமே
அவை எல்லாம் இங்கே உண்டே )

ஆகையாலே மேல் அருளிச் செய்யுமது எல்லாம்
இதன் விஸ்தாரம் ஆகிறது –

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யக் ஆத்மனா –
பிரபாத் யுபாயம் பலம் சைவ ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகல வேதா சே இதிஹாசா புராணாக –ஹரிதா சம்ஹிதை –

புருஷோத்தம வித்த்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை யுடையனான ஸ்ரீ யபதி
ஜகத் உபக்ருதி மர்த்யம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–30–81—
ஜெகதாம் உபகாராய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7–72-இத்யாதிகளில் சொன்ன
தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை

பஹுனி மே வியதீதானி என்று – தொடங்கி
தான் அறிவித்தபடியே அறிந்தார்க்கு எல்லாம்
அதிகார அனுகுண உபாய பூர்த்தியைப் பண்ணிக் கொடுத்து –

இத் தேகம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி
ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற இவ் வுபகாரம்
இப் பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –

——————————————–——————————————–

அயம் அபி அபர மஹா உபகார கலி தோஷாவில சேதஸாம்
கருணா ஜலாதித யத் ஏஷ தேவா ப்ரத்யாமாச மயா நிஜ உபகாரான்

கருணைக் கடலான எம்பெருமான் தானே -கலி கோலாகலத்தால் பீடிக்கப் பட்ட ஜீவர்களை உஜ்ஜீவிப்பவே
அடியேன் மூலம் இந்த மஹா உபகாரத்தை அவன் உபகார பரம்பரைகளுக்குள் சேர்வித்து அருளினான்

தான் தனக்குத் தன்னாலே தோன்றி தன்னூர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கொண்டு
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் சிறையில் தானே கூட்டி
ஊன் மருத்துப புலன் மனம் மானாங்காரங்கள் ஒரு மூலப பிரகிருதி அன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்ற இசைவு தந்த நாரணனை நான்மறையால் நான் கண்டேனே –

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப பாசங்கள் அடைய நீக்கி
கழியாத செவ்வழியில் துணைவரோடே தொலையாத பேரின்பம் தர மேல் ஏற்றி
அழியாத அருளாழிப் பெருமாள் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் ஆரே

ஸ்ரீ உபகார சங்க்ரஹம் சம்பூர்ணம்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -81-100-

January 25, 2022

சங்கத் தமரர் குழாத்தொடு மூழ்வினை தான் விலங்கச்
சங்கத் தமரன்ப ராயிருப்ப பீர்கடறானவர் தே
சங்கத் தமரம் படவெய்த சார்ங்கத் தனுவரங்கன்
சங்கத் தமரன் சரணே சரண் என்று தாழ்ந்து இருமே –81-

கடல் – சமுத்திரமும்,
தானவர் தேசம் – அசுரர்களுடைய நாடும்,
கத்த – தவித்துக்கதறவும்,
மரம் பட – (ஏழு) மராமரங்கள் அழியவும்,
எய்த – அம்பு எய்த
சார்ங்கம் தனு – சார்ங்கமென்னும் வில்லை யுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
சங்கம் தமரன் – (பாஞ்சஜந்யமென்ற) சங்கத்தின் முழக்கத்தை யுடையவனு மாகிய திருமாலினது,
சரணே – திருவடிகளே,
சரண் – ரக்ஷகம்,
என்று – என்று கொண்டு,
தாழ்ந்திரும் – (அவற்றை) வணங்கி யிருங்கள்; (அங்ஙனமிருப்பீராயின்),
ஊழ்வினை தான் விலங்க – (உங்கள்) கருமமுழுதுந் தொலைய,
சங்கத்து அமரர் குழாத்தொடும் – (எம்பெருமான் பக்கல்) மனம் பற்றுதலை யுடைய நித்திய ஸூரிகள் வர்க்கத்தோடு ஒப்ப,
சங்கத்து அமர் – (அவர்களுடைய) கூட்டத்திற் பொருந்திய,
அன்பர் ஆய் – அடியார்களாய் (முக்தர்களாய்),
இருப்பீர் – (பரமபதத்தில்) வாழ்ந்திருப்பீர்கள்; (எ – று.)

திருவரங்கனது திருவடியே தஞ்சமென்று சரண் புகுந்திருப்பீராயின், பரம பதத்தில் நித்ய ஸூரிகள் சமூகத்தில்
அவர்களோடொப்ப இருக்கப் பெறுவீரென உலகத்தார்க்கு உபதேசித்ததாம்.
முதலடியில், சங்கம் = ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் = ஸங்கம்; நான்காமடியில், சங்கம் = சங்கம்.
அமரர் மரணமில்லாதவர்; “அயர்வறு மமரர்களதிபதி யவனவன்” என்றவிடத்துப் போல,
“அமரர்” என்பது – இங்கு, முத்தி யுலகத்து நிரதிசய வின்பமனுபவிக்கிற நித்திய ஸூரிகளைக் குறித்தது.

இராமபிரான் ஆக்கினேயாஸ்திரம் பிரயோகித்துக் கடலை வற்றுவிக்கத் தொடங்கிய போது தாபமடைந்து
அஞ்சிக் கதறியோடி வந்து சரண் புகுந்து ஒடுங்கி நின்று தன் பிழையைப் பொறுக்குமாறு பிரார்த்தித்த
வருணனுக்கு அபயமளித்து அவனை நோக்கி “எனது அம்பு வீண் போகாதாதலால், அதற்கு இலக்கு ஏன்?” என்ன,
நீர்க்கடவுள் “மரு காந்தாரமென்ற தீவில் நூறு கோடிக்கும் மேலாக வாழ்கிற அசுரர்கள் மிகக் கொடியராய் உலகத்தை வருத்துதலால்,
அவர்கள் மேல் இந்த அனலம்பை விடுத்தருள்க” என்று சொல்ல,
இராம மூர்த்தி அங்ஙனமே அதனை விடுத்து அவ்வசுரர்களனைவரையும் எரித்தொழித்தன னென்ற வரலாற்றை யுட்கொண்டு,
“கடல் தானவர் தேசங் கத்த வெய்த” என்றார்.
இராமனம்பினாற் பீடிக்கப்பட்டு அம்மருகாந்தார பூமி அலறிற்றென்று ஸ்ரீவால்மீகி பகவான் கூறியிருத்தலுங் காண்க.
கடல் தானவர் தேசம் – கடலிடையேயுள்ள அசுரர் நாடுமாம்.
சார்ங்கமென்பது – திருமால் வில்லின் பெயர்.
திருமாலின் அம்சமான இராமபிரானது வில் அவ் விஷ்ணு தநுசின் அம்சமுடைய தென்பார், இங்கு “சார்ங்கத்தனு” என்றார்.

சரண் – சரண மென்ற வட சொல்லின் விகாரம்; ஏ – பிரிநிலை.
“சார்ங்கத்தன் றண்ணரங்கன்” என்றும், “என்று சார்ந்திருமே” என்றும் பாடமுண்டு.
கடல் தானவர் தேசம் – கடல்போன்ற (பெரு வெள்ளமாகத் திரண்ட) அசுரர்களுடைய நாடுகளை,
கத்து அமர் – ஆரவாரிக்கின்ற போரிலே, அம்பு அட – தனது அம்புகள் அழிக்கும்படி,
எய்த – பிரயோகித்த என்று உரைப்பாரு முளர்.
சங்கத்து அமரர் என்பதற்கு – சங்கமென்னுந்தொகை யளவினரான அமரர்க ளென்று உரைத்தலு மொன்று;
கீழ் “தாமரை மாத்திரை வானவர்” என்றாற்போல:
சங்கம் – ஓர் பெருந் தொகை; நூறு பதுமங் கொண்டது. ஈற்றடி – முற்றுமோனை.

———-

இருந்தே னுகமுட வன்வரை நோக்கி யிருப்பது போல்
இருந்தே னுகந்துனை வைகுண்ட நோக்கி யெதிர் பொருந்கேள்
இரும்தே னுகனும் படவதைத் தாய் வெண்ணை யாமத் தொளித்து
இருந்தே னுகரரங் காகாணு நாளினி யென்றருளே–82-

எதிர் பொரும் – எதிரில் வந்து போர் செய்த,
தேனுகனும் – தேநுகாசுரனும்,
கேளிரும் – அவ்வினத்தாரான மற்றும் பல அசுரர்களும்,
பட – அழியும்படி,
வதைத்தாய் – (அவர்களைச்) சங்கரித்தவனே!
யாமத்து – இராத்திரி காலத்தில்,
ஒளித்திருந்தே – (ஆயர் மனையில்) மறைந்திருந்து கொண்டே,
வெண்ணெய் நுகர் – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை (க் களவுசெய்து) உண்ட,
அரங்கா – ! –
இருந்தேன் உக – பெருமையுள்ள (சுவை மிக்க) தேன் (தனது நாவிலே) சிந்த வேண்டு மென்று கருதி
முடவன் – முடவனொருவன்,
வரை நோக்கி இருப்பது போல் – (அத் தேன் கூட்டை யுடைய) மலையை (ஆசையோடு அண்ணாந்து) பார்த்திருந்தாற்போல,
உனை உகந்து வைகுந்தம் நோக்கி இருந்தேன் – உன்னை யடைய விரும்பிப் பரம பதம் சேர்தலை நெடு நாளாக எதிர் நோக்கி யிருக்கிறேன்;
காணும் நாள் – (அப் பரம பதத்தை நான்) அடைந்து உன்னைத் தரிசிக்குங்காலம்,
இனி என்று – இனி எப்போதோ!
அருள் – அருளிச் செய்வாய்; (எ – று.)

யாதொரு முயற்சியுஞ் செய்ய மாட்டாத முடவன் தனக்குக் கிடைத்தற்கு அரிய தென்று ஆராய்ந்துணராது
கொம்புத் தேனுக்கு ஆசை யுற்றிருந்தாற் போல, அதிகார பூர்த்தி யில்லாத யான் பெறுதற்கு அரிதென்று கருதாமல்
பரம பதத்தில் உன்னை யடைய நெடுநாளாக அவா வுற்றிருக்கிறேன்;
அடியேனுக்கு விரைவில் அருள் புரிய வேண்டு மென்பதாம்.
காணும் நாள் இனி என்று அருள் – அந்நாள் இந்நாளென்று சொன்னாலும் அதனை
எதிர்பார்த்துக் கொண்டு ஆறி யிருப்பேனென்பது, குறிப்பு.

கேளிர் என்றது, மற்றும் கண்ணனைக் கொல்லும்படி கம்சனா லேவப் பட்ட பிரலம்பன், கேசி, பூதனை,
அரிஷ்டன், கபித்தன், வத்ஸன் முதலிய அசுர வர்க்கத்தாரைக் குறிக்கும்;
இனி, தனது உறவினரென்று கொண்டு, சிசுபாலன் முதல் நாராயண கோபாலர் ஈறாகத் தனது நெருங்கிய
உறவினர் பலரைத் தான் நேராகவும் அருச்சுனனைக் கொண்டுங் கொன்ற செய்தியைக் குறித்ததாகவுங் கொள்ளலாம்.

கேளிர் – (யோக க்ஷேமங்களைக்) கேட்குந் தன்மையை யுடையவர்; எனவே, உறவினரும் நண்பரு மாவர்:
இதனை, கேண்மை யென்ற பண்பினடியாப் பிறந்த தென்னலாம்: இர் – பலர்பால் விகுதி.
யாமம் – ஏழரை நாழி கைகொண்ட பொழுது, மூன்று யாமங்களை யுடையதான இரவுக்கு ஆகு பெயர்;
“த்ரியாமா” என்பது, இரவினொருபெயர். “இல்லிலொளித்து” என்றும், “ஆளுநாள்” என்றும் பாட முண்டு.
“வெண்ணெய்யாமத்து ஒளித்திருந்தே நுகர்” என்றதனால், இவ் வுடம்பாகிய உறியிலே கட்டுப் பட்டுள்ள
வெண்ணெய் போலச் சாரமான ஆத்மாவை விரும்பி எவரும் அறியாதபடி கைக் கொண்டு அநுபவிப்பவன்
எம்பெருமானென்பது தோன்று மென்பர்.
“ஒளித்திருந்து” என்றவிடத்து, “இருந்து” என்பது – துணைவினை: “எழுந்திருந்து” என்ற விடத்துப் போல.
“நுகர்” என்றதன் நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப் பட்டது, யமகத்தின்பொருட்டு.
வெண்ணெய் + யாமம் = வெண்ணெ யாமம்; தனிக் குறிலைச் சாராத யகரம், யகரம் வரக் கெட்டது.

————–

அரும்பாகவ தரிக்கும் பெயராய் புள்ளரசி னுக்கோர்
அரும்பாகவ தரத்துப் பனை யாயரங்கா வென வுண்
அரும் பாகவதர் பத தீர்த்தம் கொள்ளாதடிகள் கொப்புள்
அரும்பாகவதர் தொலைப்பார் கல்லார் கங்கை யாடுதற்கே –83-

கல்லார் – அறிவில்லாதவர்கள், –
“அரும் பாகு அவதரிக்கும் பெயராய் – (துதிப்பவர் நாவிலே) மேன்மையான கருப்பஞ் சாற்றுப் பாகு போன்ற
இனிமை யூறும்படியான திரு நாமங்களை யுடையவனே!
புள் அரசினுக்கு ஓர் அரும் பாக – பக்ஷி ராஜனான கருடனுக்கு ஓர் அருமையான பாகனே!
(கருடனை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனே!),
அதரம் துப்பு அனையாய் – வாயிதழ் பவழம் போலச் சிவந்தவனே!
அரங்கா – திருவரங்கனே!
என உணரும் – என்று (எம்பெருமானை) அறிந்து துதிக்கின்ற,
பாகவதர் – ஸ்ரீவைஷ்ணவர்களுடைய,
பத தீர்த்தம் – ஸ்ரீபாததீர்த்தத்தை,
கொள்ளாது – ஏற்று உட் கொள்ளாமல், –
கங்கை ஆடுதற்கு – கங்கா ஸ்நாநஞ் செய்தற் பொருட்டு,
அடிகள் கொப்புள் அரும்பு ஆக அதர் தொலைப்பார் – (நடந்து யாத்திரைசெய்வதனால்) உள்ளங் கால்களிற்
கொப்புளங்கள் அரும்பு போலுண்டாக அரு நெறிகளைக் கடந்து கழிப்பார்கள்; (எ – று.)

திருமாலின் மெய்யடியார்களுடைய ஸ்ரீபாத தீர்த்தங் கொள்ளாமல் கங்கா ஸ்நாநஞ்செய்தலினால் என்னபயன்? என்பதாம்.
பகவத் பாத தீர்த்தமாகிய கங்கையினும் பாகவத பாத தீர்த்தம் மேம்பட்ட தென்பது, குறிப்பு.
பாகவதர் – பகவானுடைய பக்தர்; வடமொழித்தத்திதாந்தநாமம்.
“ராமநாமமே கற்கண்டு” என்றாற்போல, “அரும்பாகு அவதரிக்கும்பெயராய்” என்றார்.
அதரம் – வடசொல். முதலடியில், அருமை – மேன்மை; (ஒப்பு) இல்லாமையுமாம்.

————

ஆடு முன் னீர்முதற் றீர்த்தத்தி னாலரு மாதவத்தால்
ஆடுமுன் னீர் மறை வேள்வியி னாலண்ட ராயுடன் மாறு
ஆடுமுன் னீரது மாயையி னால் என்று அரங்கனைக் கொண்ட
ஆடுமுன் னீர் செய்த பாவமும் போய் முத்தராம் வண்ணமே -84-

ஆடும் முந்நீர் முதல் தீர்த்தத்தினால் – நீராடுகிற கடல் முதலிய புண்ணிய தீர்த்தங்களினாலும்
(புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்),
அரு மா தவத்தால் – (செய்தற்கு) அரிய பெருந் தவத்தைச் செய்தலினாலும்,
ஆடு முன் ஈர் மறை வேள்வியினால் – ஆடு முதலியவற்றை அறுக்கிற வேத விதிப்படி செய்யும் யாகங்களினாலும்,
அண்டர் ஆய் உடல் மாறாடும் – (மனித சன்மம் நீங்கித்) தேவ சன்மமாக உடம்பு மாறும்:
அது, அங்ஙனம் வேற்றுமை யடைவது தானும்,
மாயையினால் – (திருமாலினது) மாயையினாலேயே,
என்று முன்னீர் – என்று எண்ணுங்கள்:
முன் நீர் செய்த பாவமும் போய் முத்தர் ஆம் வண்ணம் – முற் பிறப்புக்களில் நீங்கள் செய்த தீ வினைகளும் தீர்ந்து
முத்தி பெற்றவராகும்படி, அரங்கனை கொண்டாடும் – ஸ்ரீரங்கநாதனைத் துதியுங்கள்; (எ – று.)

தீர்த்த யாத்திரை, தவம், யாகம் என்பன செய்தலாற் சுவர்க்கம் பெறலாம்;
அங்ஙனம் பெறுதலில், மனித சன்மம் ஒழிந்து தேவ சன்மம் நேரும்: அதுவும் கரும வசப்பட்டதே யாதலால்,
அங்ஙனம் பிறவி மாறுதலிற் பயனென்னே!
எம்பெருமானைத் துதித்தால் தான் பிறப்பு ஒழிய மாயையைக் கடந்து முத்தி பெறலாம் என்பது, கருத்து.
தேவர்கள் நல் வினைப் பயனால் இன்ப நுகர்வரேனும் உயிரைப் பந்தப் படுத்துவதில் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலப்
புண்ணிய சன்மமும் பாவ சன்மமும் சமமே யாதலாலும், அத்தேவர்களும் நல்வினை முடிந்தவுடனே அவ்வுடம்பு ஒழிய மீளவும்
இவ் வுலகத்திற் கரும வசத்திற்கு ஏற்ப வேறு பிறவி கொள்வராதலாலும், சுவர்க்கப் பேறு வீடு பேறு போலச் சிறந்ததாகாதென்க.
தேவ சன்மம் எழுவகைப் பிறப்புக்களிலும் நால் வகைக் கதிகளிலும் ஒன்றாதல் காண்க.

முந்நீர் என்பது, முன்னீர் என னகரம் திரித்துக் கொள்ளப்பட்டது யமகத்தின் பொருட்டு;
முன்னீர் என்றே கொண்டு, பழமையான நீரெனக் கடலைக் குறிக்கலாமாயினும்,
நான்காமடியில் முன் என்பது – முற்காலத்திலென்ற பொருளில் வருதலால், அங்ஙனங்கொள்ளுதல் சிறவாது.
ஆடு – ஆட்டை, முன் – எதிரிலே, ஈர் – அறுக்கிற என்றும் பொருள்படும்; முன் – இடமுன்.
ஈர் வேள்வி – வினைத் தொகை; ஈர்தல் – அரிதல். அண்டம் – வானம்: அதிலுள்ளவர், அண்டர்.
முன்னீர் – ஏவற்பன்மைமுற்று; முன்னிலை யெதிர்மறைப் பன்மை முற்றாகக் கொண்டு, நினைக்க மாட்டீ ரென்றலு மொன்று;
உன்னீர் என்று எடுப்பினும், இப் பொருள்கள் படும்.

———-

வண்ணங் கலிவஞ்சி வெண்பா வகவல் வகை தொடுத்தோர்
வண்ணங் கலிகெட வேண்டுமென் றேமக்கண் மாட்டுரையேன்
வண்ணங் கலிகடல் போல் வானரங்கன் வகுளச் செல்வன்
வண்ணங் கலி யன் புகழ் தாள் எனக்கென்று மா நிதியே –85-

ஓர் வண்ணம் கலி கெட வேண்டும் என்றே – (ஏதேனும்) ஒரு விதமாக வறுமை யொழிய வேண்டுமென்றே கருதி
(எவ்வாற்றாலாயினும் பொருளீட்டுதலையே முக்கியமாகக் கொண்டு),
மக்கள் மாட்டு – மனிதர்கள் பக்கல் (மனிதர்கள் விஷயமாக),
வண்ணம் கலி வஞ்சி வெண்பா அகவல் வகை தொடுத்து உரையேன் – அழகிய கலிப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவும்
ஆசிரியப்பாவும் அவற்றின் இனமுமான செய்யுள்களைப் புனைந்து கவி பாடேன்;
வண்ணம் கலி கடல் போல்வான் – திருமேனி நிறம் ஒலிக்கின்ற கடல் போன்றவனாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
வகுளம் செல்வன் வள் நம் கலியன் புகழ் தாள் – மகிழ மலர் மாலையை யுடைய ஞானச் செல்வரான நம்மாழ்வாரும்
ஞான வளத்தையுடைய நமது திருமங்கையாழ்வாரும் துதி செய்த திருவடிகளே,
எனக்கு என்றும் மா நிதி – அடியேனுக்கு எப்பொழுதும் பெரிய செல்வமாம்; (எ – று.)

வண்ணம் என்பதற்கு – வண்ணமென்னும் உறுப்புக்கு இடமான என்றும் பொருள் கொள்ளலாம்:
செய்யுளுறுப்புக்களிலொன்றாகிய வண்ணமாவது – ஒரு பாவின் கண் நிகழும் ஓசை விகற்பம்;
அது, வல்லெழுத்துமிக்கு வருதலாகிய வல்லிசை வண்ணமும்,
மெல்லெழுத்து மிக்குவருதலாகிய மெல்லிசை வண்ணமும்,
இடையெழுத்துமிக்குவருதலாகிய இயைபு வண்ணமும்,
நெட்டெழுத்துப் பயின்று வருதலாகிய நெடுஞ்சீர் வண்ணமும்,
குற்றெழுத்துப் பயின்று வருதலாகிய குறுஞ்சீர் வண்ணமும்,
நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் சமமாக விரவி வருதலாகிய சித்திர வண்ணமும்,
ஓசையான் ஒழுகி நடப்பதாகிய ஒழுகு வண்ணமும் முதலாகப் பலவகைப்படும்.

கலிப்பா முதலிய நால் வகைப் பாக்களில் ஒவ்வொன்றன் இனமும், தாழிசை துறை விருத்தம் என்று மூன்று வகைப்படும்.
மக்கள் மாட்டு, மாட்டு – ஏழனுருபு: நான்கனுருபின் பொருளில் வந்தது.
வண்ணம் – வர்ண மென்ற வடசொல்லின் விகாரம்.
கலி கடல் – வினைத்தொகை. கலி – கடலுக்கு இயற்கையடை மொழி. அரங்கன்தாளென இயையும்.

வகுளம், நிதி – வடசொற்கள்.
தம் பக்கல் திருவுள்ளமுவந்து திருக் குறுகூர்ப் பொலிந்து நின்ற பிரான் பிரசாதித்த மகிழ மலர் மாலையைத் தரித்ததனால்,
நம்மாழ்வார்க்கு, வகுளாபரண ரென்று ஒரு திருநாமம் வழங்கும்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் திருவாய்மொழிப் பிரபந்தம் முதலிய நான்கு தமிழ் வேதங்களையும் அருளிச் செய்தவரான நம்மாழ்வாரையும்,
பெரிய திருமொழி முதலிய ஆறு அங்கங்களையும் அருளிச் செய்தவரான திருமங்கை யாழ்வாரையும் எடுத்துக் கூறியது,
மற்றைப் பதின்மர்க்கும் உபலக்ஷணம்.

எம் பெருமான் திருவடிகள், வேண்டும் பொருள்களை யெல்லாந் தந்து தாமும் குறையாமையால், “மாநிதி” எனப்பட்டன.
அத் திருவடியாகிய பெரு நிதியைப் பெற்றுள்ளேனாதலால், ஒருவாறு வறுமை கெட வேண்டுமென்று உரையேனென்றார்.
ஓர் வண்ணம் தொடுத்து என இயைத்தலுமொன்று.

————-

மானா கவரு நிருதன்புன் மாயையின் மங்கை யென்னு
மானா கவரு மணியை முன்நீங்கினான் மாயன் என்பார்
மானா கவரும் பலர் சோலை சூழ மதிலரங்கா
மானா கவரு மமுதே யதுவு நின் மாயமன்றே –86-

மால் – பெரிய,
நாகம் – புன்னை மரத்தினது,
அரும்பு – அரும்புகள்,
அலர் – மலரப் பெற்ற,
சோலை – சோலைகள்,
சூழும் – சூழ்ந்த,
மதில் அரங்கா – மதில்களை யுடைய திருவரங்கத்தி லுள்ளவனே!
மால் நா கவரும் – ஆசையுடன் (அடியார்களால்) நாவிற் கொண்டு நுகரப்படுகிற,
அமுதே – அமிருதம் போன்றுள்ளவனே! –
மாயன் – ஆச்சரியகரமான குணஞ் செயல்களை யுடையவனாகிய இராமபிரன்,
மான் ஆக வரும் நிருதன் புல் மாயையின் – மான் வடிவமாக வந்த மாரீசனென்ற அரக்கனது அற்பமான மாயையினால்,
மங்கை என்னும் – தனது மனைவியாகிய,
மால் நாகம் அரு மணி யை – (விஷத்தினால்) மயக்கத்தைச் செய்யுந் தன்மையதான சர்ப்பத்தினது பெறுதற்கு அரிய மாணிக்கத்தை,
முன் – முன்பு,
நீங்கினன் – பிரிந்தான்,
என்பார் – என்று சொல்வார்கள்:
அதுவும் – அங்ஙனம் மயங்கியதும்,
நின் மாயம் அன்றே – நீகாட்டிய மாயை யன்றோ; (எ – று.) – அன்றே – தேற்றம்.

நினது சங்கல்பத்தினாற் கொண்ட மநுஷ்ய பாவனையினாலேயே அங்ஙனம் மாயைக்கு உட்பட்டவன் போன்று காட்டினா யென்றபடி.

நாகமணி – நாகரத்நம்; கிடைத்தற்கு அருமையும் ஒளியும் பற்றி, அது பிராட்டிக்கு உவமை கூறப்பட்டது.
நாவினால் துதித்தற்கு இனிய னென்பது, “நா கவரும் அமுது” என்பதன் கருத்து

——————

மாயா தவர் தலை வாவரங் காவட மா மதுரை
மாயா தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிர
மாயா தவர்செய்வர் முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணமொப்ப
மாயா தாவரத் தனைக் குடர் கோத்ததுன் வாணகமே –87-

மா யாதவர் தலைவா – பெருமையை யுடைய யது குலத்தார்க்குத் தலைவனே!
அரங்கா – !
வட மா மதுரை மாயா – வடதிசையிலுள்ள பெரிய மதுரையிற் கண்ணனாக அவதரித்த மாயவனே! –
தவர் – முனிவர்களும்,
அண்டர் – தேவர்களும்,
வந்து அடைந்தால் – (கொடிய பகைவர்க்கு அஞ்சி) வந்து சரணமடைந்தால்,
மழு ஆளி – சிவனும்,
பிரமா – பிரமனும் ஆகிய,
அவர் – அவ்விரு மூர்த்திகளும்,
யாது செய்வர் – என்ன செய்ய மாட்டுவர்! (ஒன்றுஞ்செய்யத் திறமில்லாரென்றபடி);
உன் வாள் நகமே – உனது வாள் போற் கூரிய நகமே,
முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணம் ஒப்ப – (நினது மார்பில் விளங்கிய வெண்ணிறமான) முப்புரி நூல் சிவந்த நூலை
வடமாக அணிந்தவிதத்தை யொக்கும்படி,
மாயாத வரத்தனை குடல் கோத்தது – (பலவாற்றாலும்) அழியாத வரத்தைப் பெற்றவனாகிய இரணியனது
குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தது; (எ – று.) –
ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு, சிறப்பு.

“முந்நூல் செந்நூல் கொண்ட வண்ண மொப்ப” என்றது –

கூருகிர் நுதியில் பைந்தேன் பொழி மலர் அலங்கன் மார்பம் போழ்ந்து
செங்குருதி யூறி வழி பசுங்குடர் மென் கண்ணி யாளரி வளைந்ததன்றே –
என்றபடி நரசிங்க மூர்த்தி இரணியனது மார்பைத் தனது கைந்நகங்களினாற் பிளந்து குடலைப் பறித்து மாலையாகத்
தரித்துக் கொண்ட போது அக்குடலினின்று வழிந்த இரத்தப் பெருக்கின் சம்பந்தத்தால் வெண்புரிநூல் செந்நூல்போலாயிற் றென்றும்,
இரத்தமூறுதலாற் செந்நிறமான அக்குடலானது செந்நூலினாலானதோ
ருபவீதத்தை நிவீதமாக (கழுத்தில் மாலை போலத் தொங்கும்படி) அணிந்தது போலுமென்றுங் கருத்துப்படும்.

இரணியன், தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும்
பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்குமரணமில்லாதபடி வரம்பெற்றவனாதலால்,
“மாயாதவரத்தன்” எனப் பட்டான்.
பிரம ருத்திரர்கள் தம்மைக் குறித்துத் தவம் புரிந்து துதித்துப் பிரார்த்திக்கின்ற அசுரர் முதலிய கொடியவர்கட்கு அவர்கள்
வேண்டியபடி யெல்லாம் பெரு வரங்களைக் கொடுத்திடுதலும், அவற்றால் அவர்கள் மிகச் செருக்கி உலகங்களைப் பலவாறு
வருத்திய காலத்தில் தேவர்களும் இருடிகளும் முதலிற் சிவபிரானைப் போயடுக்க
அப்பெருமான் தன்னா லொன்றுமாகாமற் பிரமனை யடுக்க
அத்தேவனும் அங்ஙனமே விஷ்ணுவைச் சரணமடைய
அப்பரமன் அங்ஙனமே அவர்கட்கு அபயமளித்து அவ்வசுரர்களை உரிய சூழ்ச்சி பல செய்து அழித்தலுமாகிய
வழக்கத்துக்கு இரணியன் செய்தி ஓருதாரணமாதலை இச்செய்யுளில் விளக்கினார்.

சந்திரகுலத்து யது வென்னும் அரசனது மரபில் திருமால் கண்ணனாகத் திருவவதரித்துச் சிறப்புற்றதனால் “மா யாதவர்தலைவா” என்றும்,
அக்கண்ணன் மதுரையில் திருவவதரித்து முதலிற்செய்த மாயங்கள் அநந்தமாதலால் “வடமாமதுரைமாயா” என்றும் விளித்தார்.

மழுஆளி – மழுவென்னும் ஆயுதத்தை யாள்பவன்; இ – ஆண்பாற்பெயர்விகுதி.
வடமும், வடத்திற் புரியும், புரியிலிழையும் மூன்றாகவுள்ளதனால், உபவீதத்துக்கு, முந்நூ லென்று பெயர்.
முந்நூல், செந்நூல் – பண்புத்தொகைகள்.
மாயாத வரத்தனைக் குடல் கோத்தது உண் வாணகமே –
மேருகிரி யுடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே யறிந்தது யல்லால் கோவே நீ அறியாயால் -என்பரே

———-

நகமுண் டகந்தரித் தாற்கருண் மாயற்கு ஞால முந்நீர்
நகமுண் டகமகிழ்ந் தாற்கடியே மென்மி னற்கதிவா
நகமுண் டகம்பர னென்னா தரங்கனை நாடிலயன்
நகமுண் டகமலர் தான்குவி யாது நடுக்குளத்தே –88-

நக – (கண்டவரனைவரும்) பரிகாசமாகச் சிரிக்கும்படி,
முண்ட கம் தரித்தாற்கு – முண்டமாகிய தலையை (பிரம கபாலத்தை)க் கையிற் கொண்டவனான சிவபிரானுக்கு,
அருள் – கருணைசெய்த,
மாயற்கு – ஆச்சரிய சக்தியை யுடையவனும்,
ஞாலம் – பூமியையும்,
முந்நீர் – கடல்களையும்,
நகம் – மலைகளையும்,
உண்டு – (பிரளய காலத்திலே) திருவயிற்றினுட் கொண்டு,
அகம் மகிழ்ந்தாற்கு – மனமகிழ்ந்தவனுமான திருமாலுக்கு,
அடியேம் – தொண்டர்களாயினோம் (யாம்),
என்மின் – என்று எண்ணுங்கள்; (அங்ஙனம் எண்ணினமாத்திரத்தால்),
நல் கதி வானகம் உண்டு – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் (உங்கட்குச்) சித்திக்கும்: (மற்றும்),
அகம் பரன் என்னாது அரங்கனை நாடில் – நானே தலைவனென்று அகங்காரங் கொள்ளாமல் ரங்கநாதனை விரும்பிச் சரணமடைந்தால், –
அயன் – பிரமனது,
நகம் முண்டக மலர் – நகங்களையுடைய தாமரை மலர் போன்ற கையானது,
உம் நடு குளத்தே குவியாது – உங்கள் நடுத் தலையிலே (மீண்டும் பிறக்குமாறு விதித்தெழுதுதற்குக்) குவியாது; (எ – று.) – தான் – அசை.

அகம் பரன் என்னாது அடியேம் என்மின், –அயனது நகமுண்டகமலர் உம்நடுக்குளத்துக் குவியாது, நற்கதிவானகம் உண்டு
என்று இயைத்தும் கருத்துக் கொள்ளலாம்.
யானென்னுஞ் செருக்கை யறுத்து, ஆபத்காலத் திலே சிவனுக்கும் அருள்செய்தவனும்
நித்தியனு மாகிய மாயவனுக்குத் தொண்டு பூணுங்கள்;
அங்ஙனம் அடிமை பூண்டவளவிலே கருமமனைத்துந் தொலைதலால், பிரமன் கையைக் குவித்து உங்கள் தலையில்
மறுபடி பிறக்க விதித்துஎழுதான்; ஆகவே, உங்கட்கு முத்தி கைகூடும் எனக் காண்க.

நால்வகை நகையுள் இங்குக்குறித்த நகை, இகழ்ச்சி பற்றியது.
முண்டகம் – உடலினின்று கிள்ளியெடுக்கப்பட்ட தலை. முண்டம் – உடற்குறையென்ற படி.
இனி, நகமுண்டகம் தரித்தான் என்பதற்கு –
தாருக வன முனிவர் ஏவிய நகு வெண்டலையைச் சிரத்திலணிந்த சிவபிரானென்றும் பொருள்கொள்ள லாம்;
முண்டகம் – தலைமாத்திரமாகிய உடற்குறை,
நக – (தன்னை யழித்தற் பொருட்டுச்) சிரித்துக் கொண்டு வர,
தரித்தாற்கு – (அதனைக் கைப்பற்றிச் சிரத்தின் மீது) அணிந்து அடக்கினவனுக்கு என்று பதவுரை காண்க:

“சீற்றமா முனிவர் வேள்வித்தீயில் வெண்டலைதானொன்று,
தோற்றியே யுலகம்யாவுந் தொலைய நக்கெழுந்ததன்றே,”

“நக்கெழுசிரத்தை யன்னோர் நாதன் மேல் விடுத்தலோடும்,
அக்கணமணுக வற்றா லகிலமதிறவா வண்ணம்,
முக்கணன ருள்செய்தந்தமுண்ட முண்டகக்கைபற்றிச்,
செக்கரஞ்சடைமேற்கொண்டுன் செயவினைப் புரிதி யென்றான்” என்பன, இங்கு நோக்கத்தக்கன.

இனி, நக – விளங்க, முண்டகம் – சிரமாலையை, தரித்தாற்கு – தரித்த உருத்திர மூர்த்திக்கு என்று உரைப்பாரு முளர்.

நகம் – மலை யென்ற பொருளில், புடைபெயராத தென்று காரணப் பொருள்படும் வடசொல்.
வானகம் என்றதன் னகரத்தை நகரமாகத் திரித்துக்கொண்டது, யமகத்தின்பொருட்டு.
அஹம், பரன், நகம் – வடசொற்கள்.
அயனகமுண்டகமலர் என்று சந்திசேர்க்காமல் அயன் நகமுண்டக மலர் என்று சந்தி பிரித்தபடியே கொண்டதும், யமகத்தின்பொருட்டே.
“சிலவிகாரமா முயர்திணை” என்றபடி அயன் என்ற நிலைமொழியின் ஈற்றுனகரத்தை யொழித்து
“அயநகமுண்டகமலர்” என்ற பாடங் கொள்ளினும் இழுக்காது.
நகம்முண்டகமலர் – நகத்தையுடைய தாமரைமலர்: எனவே, கையென்றதாயிற்று; இது, யானையை “கைம்மலை” என்றல் போலும்.
குளம் – நெற்றி: இங்குத் தலையென்ற பொருளில் வந்தது; இலக்கணை:
சிறப்புப்பெயர் பொதுப்பொருளின் மேலது, கருமகதியைத் தலைவிதியென்றும், தலையெழுத்தென்றுங் கூறுதல், மரபு.
சிறுபான்மை “லலாடலிபி” என்றவழக்கும் இருத்தல் பற்றி, குளம் – நெற்றி யென்றே கொள்ளினுமாம்.
பிரமன் உங்களை மீண்டும் பிறப்பெடுக்கச் செய்யான் என்ற பொருளை வேறு வகையாகக் கூறிவிளக்கியது, பிறிதினவிற்சியணி.
எழுதும் பொழுது எழுது கருவி பிடித்தற்குக் கைகுவிதலாகிய இயல்பு, இங்குக் கருதற்பாலது.

———-

குளப்படி நெய்யடி சிற்கொத்த தோ கொள்ளப் பற்றிய தோ
குளப்படி யிற்றிங்கள் சேரரங்கா கோல மாய வன்றுன்
குளப்படி காட்டும் பிறை மறுப் போலொரு கோட்டிருந்து
குளப்படி யின்னகத் துட்பரல் போன்ற குவலயமே –89-

குளம் படியில் திங்கள் சேர் அரங்கா – குளத்தின் (சந்திர புஷ்கரிணியின்) படியிலே சந்திரன்
(தன்குறை தீர்த்தற் பொருட்டுத் தவஞ் செய்யுமாறு), சேர்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே! –
கோலம் ஆய அன்று – (நீ) மகா வராக ரூபமாகிய அந் நாளில்,
உன் குளம் படி காட்டும் பிறை மறு போல் – உனது நெற்றியினுருவத்தைக் காட்டுகின்ற பிறைச் சந்திரனிடத்து விளங்குங் களங்கம் போல,
ஒரு கோடு இருந்து – (உனது) ஒரு மருப்பிலே தங்கி,
குளம்பு அடியின் அகத்துள் பரல் போன்ற – காற் குளம்பின் கீழ்ப் பருக்கைக் கல்லை நிகர்த்து அடங்கிய,
குவலயம் – பூமண்டலமானது, (பிரளய காலத்தில் நீ உண்ட பொழுது),
குளம் படி நெய் அடிசிற்கு ஒத்ததோ – வெல்லமும் படி யளவு கொண்ட நெய்யுங் கலந்த உணவுக்கு ஒப்பாயிருந்ததோ!
கொள்ள பற்றியதோ – அமுது செய்தற்குப் போதுமானதாயிருந்ததோ! (எ – று.)

உனது பெரு வடிவுக்கு முன் மிகச் சிறியதாகிய மண்ணுலகம், நீ உண்ணுங் காலத்தில் உனக்கு ஒரு கவளத்துக்கேனும் போதுமோ!
அன்றி, மண்ணை யுண்டது அதன் இனிமைபற்றியோ! என வியந்து கூறியவாறு.

அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ உண்டு அருளும் காலத்தில் ஒரு தூற்றுக்கு ஆற்றாவால் –
என்பதுங் காண்க.

ஒவ்வாது பற்றா தென்பதே துணிவு;
நீ உண்டது நினது திருவிளையாட்டே: உயிர்களைக் காப்பது கருதியே அங்ஙனஞ்செய்தாய் என்பது, குறிப்பு.

நாண் மன்னு வெண் திங்கள் கொல்-நயந்தார்க்கு நச்சிலை கொல் –
சேண் மன்னு நாள் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே –

இரு நாள் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்
பெரு நாணில் பின் அவன் நெற்றி பெற்றிதாக பெறு மன்னோ –
நிறக்கும் செழும் சுடர்க் கோடு இப்பாரு நிசா முகத்து
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக்கும் சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகமதாய்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –திருவரங்கத்து மாலை-என்றபடி

எம்பெருமானது திரு நெற்றி பிறைச் சந்திரன் போலுதலால், “உன் குளப்படி காட்டும்” என்ற அடைமொழி பிறைக்குக் கொடுக்கப்பட்டது.

பிறை மறுப்போற் குவலயம் உன் ஒருகோட்டிருந்து – வளைந்த வெண்ணிறமான கோரதந்தத்துக்குப் பிறையும்,
அவ்வளை மருப்பிற் குத்தியெடுத்த பூமிக்குப் பிறையிலுள்ள களங்கமும் உவமையாம்;

“நிறக்குஞ் செழுஞ் சுடர்க்கோடு மிப்பாரு நிசாமுகத்துச்,
சிறக்கும் பிறையுங் களங்கமும் போலு மெனிற்சிறுகண்,
மறக்குஞ்சரஞ்செற்றமாயோ னரங்கன் வராகமதாய்ப்,
பிறக்கும் பிறப்பின் பெருமை யெவ்வா றினிப்பேசுவதே” என்பர் திருவரங்கத்து மாலையிலும்:

பன்றியாய் படியெடுத்த பாழியான் என்பரது வென்றியார் உனது எயிற்றின்
மென்றுகள் போன்று இருந்ததால் —
குளப்படி யின்னகத்துட் பரல் போன்ற குவலயம்

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு
ஏழின் உடன் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும்
ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் கமண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க
வளர் சேராதி முன் ஏனமாகி யாரானாய மூர்த்தியது நம்மை யாளும் அரசே

எனப் பெரியார் பணித்தது பார்க்கத் தக்கது.
குளப்படி நெய்யடிசில் – சர்க்கரைப்பொங்கல்.

பின்னிரண்டடி – உவமையணி.. கோலம் – பன்றி. குளம்பு + அடி = குளப்படி; மென்றொடர் வன்றொடராயிற்று.
அடியின்னகத்து, னகரமெய் – விரித்தல். நெற்றிக்குப் பிறை யுவமை – வளைந்த வடிவிலும், ஒளியிலும்.

———–

குவலையஞ் சூழ்கடல் காயா மரகதம் கொண்ட னெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவ ரென்றார் கொற்ற வாணற்குவா
குவலைய நேமிதொட் டாயரங் காகொடும் பல் பிறப்பா
குவலையங்க கற்றுனைக் காணிலென் னாங்கொல் குறிப்பவர்க்கே –90-

கொற்றம் வாணற்கு – வெற்றியை யுடைய பாணாசுரனுக்கு,
வாகு அலைய – தோள்கள் (துணிப்புண்டு) துடிக்கும்படி,
நேமி தொட்டாய் – சக்கராயுதத்தைப் பிரயோகித்தவனே!
அரங்கா – ! –
அன்பர் – (நினது) அடியார்கள்,
குவலையம் சூழ் கடல் – பூமண்டலத்தை வளைந்திருக்கிற சமுத்திரத்தையும்,
காயா – காயாம்பூவையும்,
மரகதம் – மரகதரத்தினத்தையும்,
கொண்டல் – நீர் கொண்ட மேகத்தையும்,
நெய்தல் – கரு நெய்தல் மலரையும்,
குவலையம் – கருங்குவளைமலரையும்,
கண்டு – பார்த்து,
நைவர் – (அவை நினது வடிவத்தை நினைப்பூட்டுதலால்) மனமுருகுவார்கள், என்றால் – , –
கொடும் பல் பிறப்பு ஆகு வலை அற்று அங்கு உனை காணில் – கொடிய பலவகைப்பட்ட பிறப்புக்களாகிய வலைகளின்
தொடர்பு ஒழிந்து அப்பரமபதத்திலே நினது திருமேனியைப் பிரதியக்ஷமாகத் தரிசித்தால்,
அவர்க்கு குறிப்பு என் ஆம் கொல் – அவர்கள் கருத்து மற்றும் யாதாகுமோ! (எ – று.)

பலவகைக் கலக்கத்துக்கு இடமான இவ்வுலகத்துப் பிறவியி லிருக்கை யிலேயே நினது உருவத்துக்குப் போலியாமவற்றைக்
கண்டவளவிலே மன முருகும் மெய்யடியார் பிறப்புநீங்கிப் பரமபதத்தில் உன்னையே நேரிற்கண்டால் எவ்வளவு ஆனந்த மடையார் என்றபடி;
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடல்முதலியன எம்பெருமானது திருமேனிநிறத்திற்கு உவமையாகுதலை,

கடலோ மழையோ முழு நீலக் கல்லோ காயா நறும் போதோ
படர் பூம் குவளை நாண் மலரோ நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மட்வாருயிர் உண்பதியாதோ வென்று தளர்வாள்-

பூவையும் காயாவும் நீளமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –

கருநெய்தலும் கருங்குவளையும் – சாதிபேதம்.
நெய்தல் குவலையம் என்பதற்கு – நெய்தல் நிலத்துத் தோன்றும் நீலோற்பல மென்று உரைப்பாரு முளர்.
தொட்டாய் என்ற சொல்லின் ஆற்றலினால், நீ படைக்கலத்தைத் தொட்டமாத்திரமே துஷ்ட நிக்கிரகத்துக்குப் போதும் என்ற குறிப்பு விளங்கும்;

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டான் –

வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர் சிந்தியோட நேமி தொட்ட திருவரங்க ராசரே –

குவலயம், மரகதம், பாணன், பாஹு, நேமி – வடசொற்கள்.
வாகு வலைய – வாகு என்பது வடமொழித் திரிபாதலால், அதன் குற்றியலுகரம் உயிர்வரக் கெடவில்லை.
முதலிரண்டடிகளில் குவலையம் என்றது, இடைப்போலி. பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துவதால், வலை யெனப்பட்டது.
காயா என்ற செடியின் பெயரும், நெய்தல் குவலயம் என்ற நீர்ப்பூங் கொடிகளின் பெயரும் – அதனதன்மலர்க்கு முதலாகுபெயராம்.
மரகதம் – பச்சையிரத்தினம். அங்கு – சேய்மைச்சுட்டு.

——–

குறியானைச் செங்கன் நெடியானை வானவர் கோனைச் சங்கக்
குறியானை வித்த திருவரங்கே சனைக் கூவி நின்று
குறியானை காத்தவனைப் பாடினேன் கொடி கூப்பிடினும்
குறியானை யப்பவர் போற் கொடியேன் சொலும் கொள்வன் என்றே –91-

குறியானை – குறுகிய வடிவமுடைய வாமனாவதாரஞ் செய்தவனும்,
செம் கண் நெடியானை – சிவந்த திருக் கண்களை யுடைய திரிவிக்கிரமனாய் நீண்டு வளர்ந்தவனும்,
வானவர் கோவை சங்கம் குறியால் நைவித்த திருவரங்கேசனை – தேவராஜனான இந்திரனை (த் தனது பாஞ்சஜந்யமென் னுஞ்)
சங்கத்தின் முழக்கத்தால் (பாரிஜாதாபஹரண காலத்திலே) மூர்ச்சித்து விழச் செய்த ஸ்ரீரங்கநாதனும்,
கூவி நின்று குறி யானை காத்தவனை – (“ஆதிமூலமே!” என்று தன்னைக்) கூவியழைத்துத் தியானித்த
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனு மாகிய திருமாலைக்குறித்து, –
கொடி கூப்பிடினும் குறி ஆ நயப்பவர் போல் கொடியேன் சொலும் கொள்வன் என்று – காக்கை (இயல்பாகக்) கத்தினாலும்
(அதனை ஒரு) நல்ல நிமித்தமாக விரும்பி உலகத்தார் கொள்வது போலக் கொடியவனான யான் வாய்க்கு வந்தபடி
சொல்லுஞ் சொல்லையும் நன்மையாக (அப்பெருமான்) ஏற்றுக்கொள்வ னென்று நினைத்து,
பாடினேன் – வாய்விட்டுக் கவிபாடினேன்; (எ – று.)

அற்ப ஜந்துவாகிய காக்கை தன்னடைவிலே செய்யுஞ் சத்தத்தையும் விருந்து வருதல் முதலியவற்றைக் குறிக்கும்
நற் குறியாக நிமித்தமுணர்ந்த பெரியோர் கொள்ளுதல் போல, எளியவனான யான் வாயில் வந்தபடி சொல்லுஞ் சொல்லையும்
எம்பெருமான் குற்றமாகக் கொள்ளாது குணமாகக் கொள்வ னென்றெண்ணியே யான்,
அப்பரமனது பெருமையையும் எனது சிறுமையையுங் கருதாது அவனைக் குறித்து வாய்விட்டுக் கவிபாடலானே னென்றன ரென்க.

நாக்கு நின்னை யல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -பெரியாழ்வார்

என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும்,
அதன் வியாக்கியானத்தில்
“அறிவுடையார் குற்றமாகாதவளவன்றிக்கே குணமாகவுங் கொள்வர்கள்; அது ஓரிடத்தே யிருந்து தனக்கு வேண்டினது
பிதற்றிப் போகவும் அத்தை அறிவுடையார் “நமக்கு நன்மைசொல்லுகிறது” என்று கொள்ளுவர்களிறே” என்றதையும் காண்க.

இது, திருமாலவன் கவி யாது கற்றேன் பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே —
என்றதனோடு ஒப்பு நோக்கத்தக்கது.

“குறியானைச் செங்கணெடியானை” என்றவிடத்து, முரண்தொடை காண்க.
செங்கண் – செந்தாமரைக் கண்ணென்ற குறிப்பு.
குறி – ஒலி. நைவித்தல் – வருந்தச்செய்தல். குறி யானை – வினைத்தொகை; குறித்தல் – கருதுதல்.
ஆ – விகாரம். “நயப்பவர்” என்பது, யமகத்துக்கு ஏற்பப் போலி விகாரங்களேற்றி “னையப்பவர்” என்று கொள்ளப்பட்டது.
உம்மை இரண்டும் – இழிவுசிறப்பு.

———-

வனத்திற் சிலம்பி விடு நூலுட் பட்டு மசக மெய்த்த
வனத்திற் சிலம்பின போற் பிணி வாய்ப்பட்டென் வாய் புலம்பின்
வனத்திற் சிலம்பின் குரலன்னம் வாழு மரங்கனிப்பு
வனத்திற் சிலம்பினின்றான் கேட்கு மோவும்பர் வாழ்த்தை விட்டே –92–

மசகம் – கொசுகானது,
வனத்தில் சிலம்பி விடு நூலுள் பட்டு – காட்டிலே சிலந்திப்பூச்சி வாய்விட்டு இழைத்த நூலினிடையே சிக்கிக் கொண்டு,
மெய் தவனத்தின் சிலம்பின போல் – உடல்தவிப்பினால் அரற்றியது போல,
பிணி வாய் பட்டு என் வாய் புலம்பின் – (யான்) நோயின்கண் அகப்பட்டு எனது வாய்விட்டு அரற்றினால், (அந்த அரற்றொலியை), –
சிலம்பின் குரல் அன்னம் வனத்தில் வாழும் அரங்கன் இ புவனத்தில் சிலம்பில் நின்றான் – சிலம்பென்னுங் காலணியினொலி போன்ற
குரலையுடைய அன்னப் பறவைகள் நீரிலே வாழ்தற்கிடமான திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருப்பவனும்
இந்த உலகத்திலே (திருவேங்கடமென்னும்) மலையில் நின்றருள் பவனுமான எம்பெருமான்,
உம்பர் வாழ்த்தை விட்டு கேட்குமோ – (பரம பதத்தில் வாழும்) நித்ய முக்தர்களுடைய மங்கலவாழ்த் தொலியை விட்டுக் கேட்டருள்வனோ? (எ – று.)

ரங்கநாதன் நித்தியசூரிகளுடைய மங்கல வாழ்த்தை விட்டு எனது புலம்பலொலியைக் கேட்பனோ வென்று இரங்கின ரென்க.

மசகம் – வடசொல், தவனம் – தபநமென்ற வடசொல்லின் திரிபு.
சிலம்பின் – சிலம்பினது என்பதன் தொகுத்தல்.
வனம் என்பது – காடு நீர் என்ற இருபொருளிலும், வநம் என்ற வடசொல் திரிந்ததாம்.
அன்னத்தின் குரலுக்குச் சிலம்பினொலி உவமையாதலை, “மின்னார்சிலம்பிற் சிலம்புங் குர வன்னம்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
புவநம் – வடசொல்.
மலையின் பெயரான சிலம்பு என்பது – இங்குச் சிறப்பாய், மலைகளிற் சிறந்த தான திருவேங்கடத்தை யுணர்த்திற்று;
அதற்கு “திருமலை” என ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
“கோயில் திருமலை” என்று சேர்த்துச் சொல்லுதல் தோன்ற, “அரங்கன் சிலம்பினின்றான்” என்றார்.
நான்கடியிலும் “வனத்து” என்ற பாடமும் உண்டு.

————-

விடத்தேரை மன்னும் வனப் பாழும் கிணற்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத்தேரை வாய் வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடு போய்
விடத்தேரையில் வெங்கட் கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கை எல்லாம்
விடத்தேரை யூரரங்கன்று இருந்தாளில் விழு நெஞ்சமே –93-

நெஞ்சமே – மனமே! –
விடத்தேரை மன்னும் – விடத்தேரை யென்னும்மரம் பொருந்திய,
வனம் – காட்டிலேயுள்ள,
பாழ் கிணற்றுள் – பாழடைந்த கிணற்றிலே,
வெம் பாம்பு பற்றும் – கொடிய பாம்பினாற் கௌவிக் கொள்ளப்பட்ட,
விடம் தேரை – நஞ்சுஏறிய தவளையினது,
வாய் – வாயிலேயகப்பட்டுள்ள,
வண்டு – வண்டானது,
தேன் வேட்டல் போல் – தேனை விரும்புதல்போல,
விசித்து கொடு போய்விட தேர் ஐயில் வெங் கண் கூற்றை எண்ணாது எண்ணும் – (உயிரை உடம்பினின்று பாசத்தாற்)
கட்டியிழுத்துக் கொண்டுபோய்விட எண்ணுகிற வேற்படையையும் கொடுந்தன்மையையு முடைய யமனை
(ப் பின்புறத்திலேயே யிருக்கிறா னென்று) எண்ணாமல் (நீ மேன் மேல்) எண்ணுகின்ற,
வேட்கை எல்லாம் – ஆசைகள்யாவும்,
விட – ஒழிய,
தேரை ஊர் அரங்கன் திரு தாளில் விழு – (அருச்சுனனுக்குத்) தேரையோட்டிய ரங்கநாதனது திருவடிகளிற் சேர்வாய்; (எ – று.)

துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையிலிருந்து கொண்டே தனக்கு உடனே வரக் கடவதாகிய துன்பத்தைச் சிறிதும்
நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு,
கொடிய விருக் ஷவர்க்கத்தை யுடைய வெய்ய கானத்தில் நீரற்றபாழ்ங்கிணற்றிலே பாம்பின்வாய்ப்பட்டு நஞ்சுலைதக்கேறிய
தேரையின் வாயி லகப்பட்டதொரு வண்டு தேனைவிரும் புதலை உவமை கூறினார்.

“வண்டு நஞ்சுபொருந்தின தவளையின் வாயிலுள்ள தேனை விரும்புவதுபோலத் தகுதியில்லாத பலவற்றை
அவாவுகிற ஆசைகளை யெல்லாம் விடு, அந்தத்தேரையூர்கிற அரங்கனது திருத்தாளில் விழு” என்று உரைப்பாருளர்;
‘அத்தேர்’ எனச் சுட்டுதல், கதையை உட்கொண்டு மனம் திருத்தாளில் விழுதலாவது – திருவடியையே இடைவிடாது தியானித்தல்.
அடியவர்க்கு எளியவ னென்பார், “தேரையூ ரரங்கன்” என்றார்.
இனி, “தேரையூ ரரங்கன்” என்பதற்கு – திருவிழாக்களிலே திருத்தேருத்ஸவங் கண்டருளுகிற நம்பெருமா ளென்றும் பொருள்கொள்ளலாம்;
கீழ் 83 – ஆஞ் செய்யுளில் “கரி யாடற்பரி தேர் நடத்து எந்தை” என்றது காண்க.
கொடியகருவியும் கல்நெஞ்சுமுடையா னென்பார், “அயில் வெங்கட் கூற்று” என்றார்.
அயில் – இங்கு, முத்தலைவேல்: சூலம். வெங்கண் – அஞ்சாமை, அஞ்சுவித்தல், கண்ணோட்டமின்மை; அச்சந்தருங் கண்களுமாம்.

பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு: அல்வழியிற் சிறுபான்மை இனமெலி மிக்கது; பாழாகியகிணறு. என்க.
வேட்டல், வேட்கை – தொழிற்பெயர்கள்; தல், கை – விகுதிகள். கொடு – தொகுத்தல். போய்விட, விடு – துணிவுணர்த்தும்.
தேர்கூற்று – வினைத்தொகை. ஐயில் = அயில்: முதற்போலி.

————–

விழுங்கூன் றசைச் சுவர் நீர் மலங் கோழை வெம் பித்தொடுங்க
விழுங்கூ னரம்புறி யென்பேணி தோற்சட்டை வீழ்ந்து நொந்த
விழுங்கூந்த லாரழப் பாடையில் போய் சுடும் வெய்ய செந்தீ
விழுங்கூன நோய்க் குடில் வேண்டேன் அரங்க விமானத்தானே –94-

அரங்கவிமானத்தனே – ஸ்ரீரங்கவிமானத்திற் பள்ளிகொண் டிருப்பவனே! –
கூன் விழும் – கூன்விழு மியல்புள்ள,
தசை சுவர் – தசை யினாலாகிய சுவரும், –
நீர் – ஜலமும்,
மலம் – மலமும்,
கோழை – கோழையும்,
வெம் பித்தொடும் – கொடிய பித்தமும் ஆகிய இவற்றுடனே,
கவிழும் – கவிழ்கிற,
கூன் – பாத்திரமும், –
நரம்பு உறி – நரம்புகளினாலமைக்கப்பட்டதொரு சிக்கமும், –
என்பு ஏணி – எலும்புகளினாலாகியதோ ரேணியும், –
தோல் சட்டை – தோலினாலாகியதொரு சட்டையும், –
அவிழும் கூந்தலார் – விரிந்த கூந்தலையுடையவர்களான மாதர்கள்,
நொந்து – வருந்தி,
வீழ்ந்து – கீழ்விழுந்து,
அழ – புலம்ப,
பாடையில் போய் – பாடைமேற் கொண்டு போய்,
சுடும் வெய்ய செம் தீ விழுங்கு – சுடுகிற கொடிய சிவந்த தீயினால் விழுங்கப்படுகிற (எரிக்கப்படுகிற),
ஊனம் நோய் குடில் – துன் பந்தரும்நோய்கள் வசிக்கிற குடிசையு மாகிய உடம்பை,
வேண்டேன் – விரும்பேன்; (எ – று.)

“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்” என்பதை அடியொற்றியது இச்செய்யுள்.

உடம்பின் பலவகையிழிவுகளையும் எடுத்து உரைத்து, இங்ஙனந் தூயதல்லாத உடம்பை வேண்டே னென்றார்.
இப் பிறப்பையொழித்துத் திவ்வியதேஜோமயமான வடிவத்துடன் பரமபதத்து நிரதிசயவின்பநுகரும் பேற்றை அளித்தருளவேண்டு மென்பது, குறிப்பு.
இவ்வுடம்பை வேண்டே னென்றதனால், உடம்பின்சம்பந்தமான இவ்வுலக வின்பங்களை வேண்டாமை தானே பெறப்படும்.
உடம்பாகிய ஒருபொருளை “தசைச்சுவர்” என்பது முதலாகப் பலவாறுபுனைந்துரைத்ததனால், புலபடப் புனைவணி.
இச்செய்யுள், அருவருப்புத்தோன்றக் கூறினமையால், பீபத்ஸ மென்னும் இழிப்புச்சுவைக்கு உதாரணமாம்.

கூன்விழுதல் – முதுகு வளைதல். தசை = சதை: எழுத்துநிலைமாறுதல், இலக்கணப்போலி.
கூன் என்பது மட்கலங்களில் ஒருவகையாதலை,
“கூனையுங் குடமுங் குண்டுசட்டியும், பானையும் வனையு – மங்குசப்பையல் யான்” என்ற விடத்துங் காண்க.
ஜலம் மலம் முதலியன வெளிப்படுதலால், அவற்றோடு கவிழுங் கூ னெனப்பட்டது. சட்டை – அங்கி.

“ஏற்புச் சட்டகம், முடைக்குரம்பை, புழுப்பிண்டம், பைம்மறியாநோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து,
ஐயும் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திரபுரீடங்களும் என்றிவற்றது இயைபு” என
உடம்பின் தூய தன்மையை விளக்கும் இறையனாரகப் பொருளுரை வாக்கியம் இங்கு நோக்கத்தக்கது.

———–

மானத் துவண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையாளராயினு மால் வளர் வி
மானத் துவண்டல மா மரங்கம் வழி யாவரினு
மானத் துவண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே –95-

மால் நத்து – பெரிய நத்தையானது,
வண்டல் உழ – சேற்றிலே ஊர்ந்து செல்ல,
ஓர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான – (அவ்வூர்தலாலாகிய வரையானது தற்செயலாய்)
ஓர் அக்ஷரத்தினது வடிவமாக அமைந்த சிறப்புப் போல, –
துவண்ட வினையாளர் ஆயினும் – வருந்துதற்குக் காரணமான ஊழ்வினையை யுடையவர்களே யானாலும், (அவர்கள்),
மால் வளர் விமானத்து வள் தலம் ஆம் அரங்கம் வழி ஆ வரினும் – திருமால் கண்வளர்ந் தருளுகிற (பிரணவாகார)
விமானத்தையுடைய சிறந்ததலமாகிய ஸ்ரீரங்கத்தின் மார்க்கமாய்த் தன்னடைவிலே வந்தாலும்,
அங்கே – அவ்வரவினாலே,
மானத்து வண்டு அமர் தார் அண்டர் ஆம் பதம் வாய்க்கும் – பெருமையையும் வண்டுகள் மொய்க்கும்
மாலையையுமுடைய முக்தர்களாகும் பதவி சித்திக்கும்; (எ – று.)

ஒருவனுக்குப் பக்தி முதலியன இல்லாதிருக்கையில் அபுத்தி பூர்வமாய் ஸ்ரீரங்க மார்க்கமாக யாத்திரை நேர்ந்தாலும்
அதுவே வியாஜமாக எம்பெரு மானருளால் அவனுக்குத் தீவினைகள் நீங்கி நிரதிசய வின்ப நுகரும்படியான முக்தி பதம் சித்திக்கு மென்பதாம்;

இதற்கு, வண்டலிலே நத்து ஊர்ந்து செல்லுதலாலாகிய கோடு ஒரோ சமயத்து ஓரெழுத்து வடிவமாகத் தன்னடைவிலே
அமைகிற குணாக்ஷர நியாயத்தை ஒப்புமை கூறினார்: உவமையணி. மான – உவமவுருபு.

துவண்ட வினை – பெயரெச்சம், காரணப்பொருளது; “நோய்தீர்ந்த மருந்து” என்றவிடத்துப் போல, வினையாளர் – கர்மிகள்,
அண்டம் – பரமபதம்; அதில் வாழ்பவர், அண்டர். “தேவர்கள் மாலையில் வண்டு மொய்க்காது” என்ற விலக்கு
அருளிற் சிறந்தவரான முக்தர்க்கு இல்லை யென்பது தோன்ற, “வண்டமர்தாரண்டர்” என்றார்.

————-

அங்காக்கைக் கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்கு வாய்
அங்காக்கைக் கே பசித்தான் நிற்க வே முத்தி யாக்கித் துயர்
அங்காக்கைக் கே சிலர் வேறே தொழுவரருந்திரவிய்
அங்காக்கைக் கே தனத் தாடரு மோதிரு வன்றியிலே –96-

அம் – அழகிய,
கா – சோலையை (இந்திரனது கற்பகச் சோலையிலுள்ள பாரிஜாத தருவை),
மங்கைக்கு – தன் மனைவியான சத்திய பாமைக்கு,
கைக்கே ஈந்தான் – கையிலே கொடுத்தவனும் (கைவசமாக்கித் தந்தவனும்),
அவனிக்கு – உலகத்தை யுண்பதற்கு,
வாய் அங்காக்கைக்கே – (தனது) வாயைத் திறக்குமவ்வளவாகவே,
பசித்தான் – பசியுற்றவனும் (வாய்திறந்து உலகத்தையுட்கொள்ள அவாக்கொண்டவனும்) ஆகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
நிற்கவே – இருக்கையிலே, (அவனை விட்டு),
முத்தி ஆக்கி துயரம் காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் – (தமக்கு) மோக்ஷத்தைக் கொடுத்துத் துன்பங்கள் வாராதபடி
(தம்மைக்) காப்பதற்காகவே வேறு தெய்வங்களைச் சிலர் வணங்குவார்கள்;
அருந் திரவியம் – அருமையான செல்வப்பொருளை,
திரு அன்றியிலே – திருமகள் கொடுப்பளேயல்லாமல்,
காக்கை கேதனத்தாள் தருமோ – காக்கை வடிவ மெழுதிய துவசத்தை யுடையவளான மூதேவி கொடுக்க மாட்டுவளோ? (எ – று.)

பொருட்செல்வத்தை அதற்கு அதிதேவதையான இலக்குமி கொடுக்க வல்லளே யன்றி அதற்கு மாறான தன்மையுள்ள
மூதேவி கொடுக்கவல்லளல்ல ளென்ற உபமான வாக்கியந் தானே,
பிறவித் துன்பத்தையொழித்து முத்திச் செல்வத்தை அதற்கு உரியதலைவனான திருமால் கொடுத்தருள்வனே யன்றி
அதற்கு உரியரல்லாத பிறதேவர்கள் கொடுக்கத்தரமுடையரல்ல ரென்ற உபமேயக் கருத்தை விளக்குதலால், பிறிதினவிற்சியணி.

முத்தியளித்துத் துயர்தீர்க்கும் எம்பெருமானி ருக்க அவனைத்தொழாது சிலர் தேவதாந்தரங்களைத் தொழுதல்,
செல்வந்தருந் திருமக ளிருக்க அவளைவழிபடாது மூதேவியைவழிபடுதல்போலப் பெரும்பேதைமையா மென்பது, குறிப்பு.

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர் காள் கெருட வாகனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -என்ற திருமாலைப் பாசுரம் இங்கு உணரத்தக்கது.

கைக்கே, ஏ – அசைநிலை. அங்காக்கைக்கே, ஏ – பிரிநிலை. காக்கைக்கே, ஏ – தேற்றம். தருமோ, ஓ – எதிர்மறை.
அன்றியிலே, ஏ – ஈற்றசை; இல் – சாரியை. அங்காக்கை, காக்கை – தொழிற்பெயர்கள்:
அங்கா, கா – பகுதி, கை – விகுதி. முக்தி, த்ரவ்யம், கேதநம் – வடசொற்கள். காக்கை காக மென்ற வடசொல்லின் சிதைவு:
கா என்று கத்துவது எனக் காரணப் பொருள்படும். துயரம், அம் – சாரியை. “அன்றியுமே” என்பதும் பாடம்.

———–

அன்றே யடைய யுனக்கே யடிமை என்றாய்ந்து உணர்ந்தார்
அன்றே யடையப் படுவாருனை யரங்கா வனத்திய்
அன்றே யடையை யயில்வோரு மீதறி யாரறிஞர்
அன்றே யடையைம் புலனாலு நன்கில்லை யாங்கவர்க்கே –97-

அரங்கா – ! – “அடைய – (உயிர்கள்) யாவும்,
அன்றே – அந்நாளிலேயே (தொன்றுதொட்டே யென்றபடி),
உனக்கே அடிமை – உனக்கே அடிமைப்பட்டவை,” என்று -,
ஆய்ந்து உணர்ந்தார் அன்றே – ஆராய்ந்து அறிந்தவர்களன்றோ,
உனை அடைய படுவார் – உன்னைச் சேர்தற்கு உரியர்;
வனத்து இயன்றே அடையை அயில்வோரும் – காட்டில் வசித்துக் கொண்டே இலையைப் புசிப்பவர்களான முனிவர்களும்,
ஈது அறியார் – இந்த உண்மையை யுணரா ராயின்,
அறிஞர் அன்றே – அறிவுடையார்க ளல்லர்;
அவர்க்கு – அவர்கட்கு,
ஆங்கு அடை ஐம்புலனாலும் நன்கு இல்லை – அவ்வனத்திலிருந்து அடைக்கப்பட்ட (அடக்கியாளப்பட்ட)
பஞ்சேந்திரியங்களாலும் நற்பயனில்லை; (எ – று.)

எல்லாச் சேதநாசேதநங்களும் உன்னுடைமையாமென்னும் உண்மை யறிவுள்ளவரே பரமபதத்தில் உன்னைச் சேர்வர்;
அஃதில்லாதவர் வனவாசஞ் செய்து இலை முதலியன புசித்துப் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்தாலும் பயனில்லை யென்பதாம்.

முதலடியில், அன்று – காலமுணர்த்துஞ் சுட்டிடைச்சொல். அடைய என்றது – எஞ்சாமைப்பொருளுணர்த்தும்.
இதற்கு, தாமும் தமதுடைமையு மாகிய எல்லாம் என்று பொருள்கொள்ளுதலு மொன்று.
இரண்டாமடியில், அன்றே – தேற்றம். அடையப்படுவார் = அடையத்தகுவார்.
மூன்றாமடியில், இயன்று ஏய் அடை என்று பிரித்து, ஏய் என்பதற்கு – (அவ்விடத்திற்) பொருந்திய என்று உரைப்பாரு முளர்; வினைத்தொகை.
நான்காமடியில், “அன்று” என்ற எதிர்மறைக்குறிப்பு முற்றுப் பலர்பாலுக்கு வந்தது; ஏ – தேற்றம். அடை புலன் – வினைத்தொகை. ஆங்கு அசையுமாம்.

————

ஆங்கார மாமின்னைத் தோய்மார் பரங்கனளை வெண்ணெயுண்டு
ஆங்கார மாநில முண்டாற்குத் தொண்டனிவ் வண்டத் தப்பால்
ஆங்கார மான்பகு திப்புறம் போயமு தாற்றிர் படிந்து
ஆங்கார மானடி காண்பே னவன்ற னருள் சிந்தித்தே –98-

கார் – மேகத்தில்,
ஆம் – உண்டாகின்ற,
அம் – அழகிய,
மின் – மின்னல் போன்றவளான,
மாவை – இலக்குமியை,
தோய் – தழுவுகிற,
மார்பு – மார்பையுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
அளையிணை உண்டு ஆங்கு – வெண்ணெயை யுண்டாற்போலவே,
ஆர – நிரம்ப,
மா நிலம் உண்டாற்கு – பெரிய உலகத்தை உட்கொண்டவனுமான திருமாலுக்கு,
தொண்டன் – அடியன் (யான்); (ஆதலால்),
அவன்தன் அருள் சிந்தித்து – அப்பெருமானுடைய கருணையைத் தியானித்து, –
இ அண்டத்து அப்பால் – இந்த அண்ட கடாஹத்துக்கு அப்புறத்திலே,
ஆங்காரம் மான் பகுதி புறம் போய் – அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஆவரணங்களைக் கடந்து மேற்சென்று,
அமுது ஆற்றில் படிந்து – அம்ருதமயமான விரஜாநதியில் நீராடி,
ஆங்கு ஆர் அ(ம்)மான் அடி காண்பேன் – அவ்விடத்தில் (பரமபதத்தில்) எழுந்தருளி யிருக்கின்ற
ஸ்வாமியினுடைய திருவடியைத் தரிசிப்பேன்; (எ – று.)

திருவரங்கனுக்குத் தொண்டனான நான் அவனருளாற் பரமபதத்திற் சென்று அவனைத் தரிசிப்பே னென்பதாம்.
எம்பெருமானது நீலமேனிக்குக் காளமேகமும் அதிலுறையுந் திருமகளுக்குக் காளமேகத்தில் விளங்கும்
மின்னலும் உவமை யென்பது தோன்ற, “ஆங்காரமாமின்னைத்தோய்மார் பரங்கன்” என்றார்.
அளையினையுண்டாங்கு ஆர மாநிலமுண்டான் – எம் பெருமான் விரும்பி யுண்ணும் உணவாதலில்
வெண்ணெயோடு உலகோடு வாசியில்லை யென்பது குறிப்பு. ஆங்கு – உவமவுருபு.
பதினான்கு லோகங்க ளும் அடங்கிய அண்ட கடாஹம் முறையே ஒன்றுக்கு ஒன்று பதிற்று மடங்கான
ஜலம் அக்நி வாயு ஆகாசம் அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஏழு ஆவரணங்களாலுஞ் சூழப்பட்டுள்ள தென்பதையும்,
இப்படிப்பட்ட அநந்த கோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால்
ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கும் பரமபதம் உள்ள தென்பதையும் தத்துவ நூல்களால் விளங்க உணர்க.

முதலடியில், “ஆம் கார் அம் மா மின் ஐ” என்ற பதப்பிரிவில்,
“ஐ” என்னும் இரண்டனுருபை “மா” என்றதனோடு கூட்டிப் பொருள் காண்க.
அஹங்காரம், மஹாந், ப்ரக்ருதி என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
அம்மான் என்பது, “அமான்” எனத் தொக்கது.
“அவன்ற னருள் சிந்தித்தே” – அவனருள் சிந்தித்தலல்லது, வீடுபேற்றுக்கு வேறுஉபாய மில்லை யென்றபடி.

————

சிந்தாகுல முய்யக் குன்றெடுத்தாய் தென்னரங்க சுற்றும்
சிந்தா குலகம் படைத்து அளித்தாய் நிலம் சென்று இரந்த
சிந்தா குலவு செல்வந்தந்தை தாய் குரு தெய்வமு நீ
சிந்தா குலமடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்து அருளே –99-

சிந்து – (இந்திரனேவிய மேகங்கள் விடாப் பெரு மழை) பொழிதலால் வருந்திச் சிதறிய,
ஆ குலம் – பசுக்கூட்டம்,
உய்ய – உயிர் பிழைக்கும்படி,
குன்று எடுத்தாய் – கோவர்த்தன மலையை யெடுத்துக் குடையாகப் பிடித்தவனே!
தென் அரங்க – அழகிய திருவரங்கத்தை யுடையவனே!
சுற்றும் சிந்து ஆகு – சுற்றிலும் கடல் அமையப் பெற்ற,
உலகம் – உலகத்தை,
படைத்து – சிருஷ்டித்து,
அளித்தாய் – ரக்ஷித்தவனே!
சென்று – (மகா பலிசக்கரவர்த்தி யினிடத்துப்) போய்,
நிலம் இரந்த – மூன்றடி நிலத்தை யாசித்த,
சிந்தா – வாமன மூர்த்தியே! –
குலவு – சிறப்புற்று விளங்குகின்ற,
செல்வம் – செல்வமும்,
தந்தை – தந்தையும்,
தாய் – தாயும்,
குரு – ஆசாரியனும்,
தெய்வமும் – கடவுளும், (ஆகிய எல்லாம்),
நீ – (எனக்கு) நீயே;
சிந்தா ஆகுலம் அடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்தருள் – (பிறப்புத் துன்பத்தைக் குறித்து) மனக் கலக்க
மடைந்துள்ளவனான அடியேனுடைய பிறப்பை யொழித்துக் கருணை செய்வாய்; (எ – று.)

சிந்துஆ, ஆகுஉலகம் – வினைத்தொகைகள். யமகத்தின்பொருட்டு, “ஆக்குலம்” என வலிமிகவில்லை.
இரண்டாமடியில், சிந்து – ஹிந்து என்ற வட சொல்லின் விகாரம்.
மூன்றாமடியில், சிந்தா – சிந்தன் என்பதன் விளி.
சிந்தன் = குறளன்: இரண்டடியுயரமுள்ளவனை “குறளன்” என்றும்,
மூன்றடி யுயரமுள்ளவனை “சிந்தன்” என்றும் குறிக்கிற சிறிது வேறுபாட்டை இங்குக் கருதாமல், பரியாய நாமமாகக் கொண்டு கூறினார்;
அன்றியும், வாமன மூர்த்தியின் வளருந்தன்மையைக் கருதி “சிந்தன்” என்றா ரெனக் கொள்ளினுமாம்.
சிந்தாகுலம் – தீர்க்க சந்தி பெற்ற வடமொழித் தொடர். தெய்வமும் என்ற இறந்தது தழுவிய எச்சவும்மை,
பெயர்ச் செவ்வெண்ணினீற்றில் வந்தது.

———

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-

“அத்தர் அங்க – தலைவர்களான பிரமருத்திரர்களைத் (தனது) திருமேனியிற் கொண்டருள்பவனே!
அபயம் – அடைக்கலம்”,
என்று – என்று ஓலமிடுவது போன்று,
ஆர்க்கும் – ஆரவாரிக்கின்ற,
திரை – அலைகளை யுடைய,
பொன்னி – காவேரியாறு,
சூழ் – சூழ்ந்த,
தீரத்து – வரம்பை யுடைய,
அரங்கன் – திருவரங்கத்தை யுடையவனான எம்பெருமானது,
சிலம்பு ஆர்ந்த செய்ய திரு அடி – சிலம்பென்னும் ஆபரணம் பொருந்திய சிவந்த சீர்பாதம்,
தரங்கம் பவம் நோய் தீர துடைத்து – அலை போல மாறி மாறி வந்து வருத்துகின்ற (எனது) பிறப்புத் துன்பத்தை யொழியுமாறு நீக்கி,
என்னை – அடியேனை,
தேவரொடும் – நித்திய ஸூரிகளோடும்,
தீரத்தர் (ஒடும்) – ஞானிகளாய் வீடு பெற்றவர்களான முக்தர்களோடும்,
அங்கு – அவ்விடத்தில் (பரம பதத்தில்),
அ பணி – (எம்பெருமானுக்குச் செய்யும்) அந்தக் கைங்கரியங்களை,
காப்ப – காத்திருந்து தவறாமற் செய்யுமாறு,
வைத்த -, செயல் என்பது – செய்கையை,
ஓர்தீர் – அறியுங்கள்; (எ – று.)

திருவரங்கனுடைய திருவடிகள், என்னைப் பிறப்பொழித்து பரமபதத்தில் நிச்சிய முக்தர்களுடனிருந்து பலவகையான
பகவத் கைங்கரியங்களைப் புரியச் செய்தன; ஆதலால், உலகத்தீர்! நீவிரும் அவன் திருவடிகளை யடைந்து உய்யுங்க ளென்பதாம்.
திருவடியடைந்தேன் பரமபதத்துக்கு உரியனானே னென்பது, குறிப்பு.
எம்பெருமான் தன்னடியார்க்குத் தவறாது பரமபதந் தந்தருள்வ னென்னும் நம்பிக்கை கொள்ளுதல் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மாதலால்,
பரமபதம் பெறுவே னென்னாது தெளிவு பற்றிப் பெற்றேனென் பார், “பணிகாப்ப வைத்த செயல்” என்றார்:
நம்மாழ்வார் “அவாவற்று வீடுபெற்ற” என்றாற் போல.
“அயர்வறு மமரர்கள்” என்ற இடத்தில் “அமரர்கள்” என்றது போல, இங்கு “தேவர்” என்றது – நித்திய ஸூரிகளைக் குறித்தது.
தீரர் என்ற சொல்லுக்கு ஞானிகள் என்ற பொருள், வேதத்திலும் வந்துள்ளது; இங்கு, அப்பெயர், முக்தர்களைக் குறித்தது.
நித்யராவார் – பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெருமான் போலவே என்றும் ஒரு படிப்படப் பரமபதத்தில்
வாழ்கிற அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.

முக்தராவார் – இவ்வுலகங்களிற் கரும வசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பை யொழித்து முத்தி பெற்றவர்.
“ஏறாளுமிறையோனுந் திசை முகனுந் திருமகளுங் கூறாளுந் தனியுடம்பன்” என்ற அருளிச் செயலின் பொரு ளமைய, “அத்தரங்க” என்றார்.
அபயமென்றது – அஞ்சாதேயென்று என்னைப் பாதுகாத்தற்கு உரியவன் நீ யென்றும்,
அஞ்சாதே யென்று உன்னாற் பாதுகாக்கப்படுதற்கு உரியன் யானென்றும் கருத்துப்படும்.
“அத்தரங்க அபயமென்று ஆர்க்கும் திரைப்பொன்னி” என்றது – தற்குறிப்பேற்றவணி.

பவம், தீரம் – வடசொற்கள். தேவரொடும் என்ற வும்மை, தீரத்தார் என்பதனோடும் எடுத்துக் கூட்டப்பட்டது.
பணி – பணிவிடை, செயலென்பது என்றவிடத்து, ‘என்பது’ – பகுதிப் பொருள் விகுதி, ஒர்தீர் – ஏவற்பன்மை முற்று; ஈர – விகுதி.

—————

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —

நீள் நிலம் மேல் – நீண்ட நிலவுலகத்திலே, –
குணம் ஆளர் ஆம் பட்டர்க்கு – உத்தம குணங்களை யுடையவரான பட்டரென்னும் ஆசாரி யர்க்கு,
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான் – பதினான்கு தலை முறைகளிலும் (தொன்று தொட்டுப்) பரம்பரையாக அடியவனான,
மணவாளதாசன் – அழகிய மணவாளதாசன், – யமகம் அந்தாதி வனைந்தனன் – யமகவந்தாதிப்பாமாலையைத் தொடுத்து, –
பரிதி – சக்கரமும், வளை – சங்கமும், நிணம் வாள் (பகைவர்களின்) கொழுப்புத் தோய்ந்த வாளும்,
அம் சார்ங்கம் – அழகிய சார்ங்க மென்ற வில்லும், கதை – கதையும் ஆகிய பஞ்சாயுதங்களையும்
தோளின் – (தமது) திருக்கைகளிற் கொள்பவரான,
பணம் வாள் அரவின் அரங்கஈசர் – படத்தை யுடைய ஒள்ளிய திருவனந்தாழ்வானைச் சயனமாக வுடைய ஸ்ரீரங்கநாதரது,
தாளில் – திருவடியிலே,
சாத்தினன் – சமர்ப்பித்தான்; (எ – று.)

செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் “மாட்டு” என்னும் உறுப்புப் பற்றி, பொருட் பொருத்தத்துக்கு ஏற்பச்
சொற்கள் எடுத்துக் கூட்டப்பட்டன; கொண்டுகூட்டுப்பொருள்கோள்.
தோள் = கை: “தோளுற்றொர்தெய்வந் துணையாய்” என்ற விடத்துப் போல்.
“பரிதி வளை நிணவாளஞ்சார்ங்கம் கதை தோளின் அரங்கேசர்” என்றதனை,
“தொனி தக்க சங்கந் திருச் சக் கரஞ் சுடர் வாண் முசலங், குனி தக்க சார்ங்கந் தரித்தா ரரங்கர்” என்பத னோடு ஒப்பிடுக.

ஸ்ரீ திருவரங்கத்தந்தாதி முற்றிற்று

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -61-80-

January 25, 2022

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாதம்பத் துக்கெதிர் மார்பா வரங்கத்து வாழ் பரந்தா
மாதம்பத் துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே –61-

பூ மாது அம்பத்துக்கு எதிர் மார்பா – தாமரை மலரில் வீற் றிருக்கிற திருமகளாரது கண்களுக்கு இலக்காய்
விளங்குகின்ற திருமார்பினழகை யுடையவனே!
அரங்கத்து வாழ் பரந்தாமா – திருவரங்கத்தில் நித்திய வாசஞ்செய்கின்ற பரந்தாமனே!
மா தம்பத்து – பெரிய தூணிலே,
கொங்கையும் – தனங்களும்,
அல்குல் தேரும் – தேர்த் தட்டுப் போன்ற அல்குலும்,
வயிறும் -, இல்லை -; மாதம் பத்து குறியும் கண்டிலேம் – (கர்ப்ப காலமாகிய) பத்து மாசத்துக்கு முரிய கர்ப்ப
சின்னங்களையும் (அத்தூணிலிருந்தனவாகக்) கண்டோமில்லை; (அங்ஙனமிருக்கவும்),
வந்துதோன்றினை – (தூணிலிருந்து நரசிங்கமூர்த்தியாக) வந்து அவதரித்தாய்; (இந்நுட்பத்தை யுணராமல்),
தம் கருத்து பத்து இல்லார் – தமது கருத்திலே (உன்விஷயமான) பக்தி யில்லாதவர்கள்,
வையகத்து பிறப்பு என்பர் – பூமியிலே (உனக்குக் கரும வசத்தால் நேர்ந்த) பிறப்பென்று (அதனைச்) சொல்வார்கள்; (எ – று.)

சாதாரணமான பிறப்புக்கு உரிய சின்ன மொன்று மில்லாமல் உனது நரசிங்காவதாரம் விலக்ஷணமாயிருக்கவும்
அதனையுமுட்படப் பிறப்பென்று இகழ்வது, உன்பக்கல் பக்தி யில்லாதவர்கள் அவதார ரகசிய ஞான மில்லாமையாற்
சொல்லும் பேதைமைச் சொல்லேயென்பது கருத்து.
“மண்ணும் விண்ணுமுய்ய, மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்,
தீதண்டத் தானத்தனுவெடுத்தானெனிற் றீநரகே”,

“மாயன் தராதலத்து, மீனவதாரம் முதலானவை வினை யின்றி
இச்சை, யானவ தாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் பிற பிரபந்தங்களிலும்.

ஜீவாத்மாக்கள் தேவதிர் யங்மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கரும வசத்தினாலன்றி,
பரமாத்மா மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் செய்வது துஷ்ட நிக்ரக சிஷ்ட பரி பாலநத்தின்பொருட்டுத் தான் கொண்ட
இச்சையினாலேயே யாகுமென்ற இவ் வுண்மையை யுணர்தல், அவதார ரஹஸ்ய ஞ்ஜாநம் எனப்படும்.

பத்து மாதக் குறி – மசக்கை நோய், உடல் விளர்த்தல், வயிறு பருத்தல், முலைக் கண் கறுத்தல் முதலியன.

“பீரமலர்ந்த வயாவுநோய் நிலையாது, வளைகாய்விட்டபுளியருந்தாது, செவ்வாய் திரிந்து வெள்வாய்பயவாது,
மனை புகையுண்டகருமணிடந்து, பவளவாயிற் சுவைகாணாது, பொற்குடமுகட்டுக் கருமணியமைத்தெனக்,
குங்குமக்கொங்கையுந் தலைக்கண்கறாது, மலர வவிழ்ந்த தாமரைக் கயலென, வரிகொடு மதர்த்த கண் குழியாது,
குறிபடு திங்களொருபதும் புகாது, தூணம் பயந்த மாணமர் குழவி” என்ற கல்லாடம், இங்குக் காணத்தக்கது.

பரந்தாமன் என்ற வடசொல் – மேலான இடத்தையுடையவ னென்றும், சிறந்த சோதிவடிவமானவ னென்றும் பொருள்படும்.
பக்தி என்ற வடசொல் ‘பத்து’ என்று விகாரப்படுதலை, “பத்துடையடியவர்க் கெளியவன்” என்ற திருவாய்மொழியிலுங் காண்க.
மஹா, ஸ்தம்பம், மாஸம், அம்பகம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. கொங்கையும் மல்குல், மகரவொற்று – விரித்தல்

———–

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை
வைகுந்த மேற்கொண்டு இருந்தார் வடிவைந்தின் வாழுமிடம்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே–62-

வை – கூர்மையான,
குந்தர் – குந்தமென்னும் ஆயுதத்தை யுடையவரும்,
தாமரை போல் பாதர் – செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவரும்,
மாதர் புடைவை – கோப ஸ்திரீகளுடைய சேலைகளை,
நாகத்து – புன்னை மரத்தின் மேலும்,
குந்தம் மேல் – குருந்த மரத்தின் மேலும்,
கொண்டு இருந்தோர் – கவர்ந்து கொண்டு சென்று ஏறி யிருந்தவருமாகிய திருமால்,
வடிவு ஐந்தின் – ஐந்து வடிவத்தோடும்,
வாழும் – வாழ்கிற,
இடம் – இடங்களாவன, (முறையே),
வைகுந்தம் – பரமபதமும்,
பால் கடல் – திருப்பாற்கடலும்,
மா நீர் அயோத்தி வள் பூ துவரை – மிக்க நீர் வளமுள்ள அயோத்தி வளப்பமுள்ள அழகிய துவாரகை ஆகிய நகரங்களும்,
வைகும் தம் அன்பர் மனம் – (சஞ்சலப்படாது) நிலை நிற்கிற தமது அடியார்களுடைய மனமும்,
சீர் அரங்கம் வடமலை – ஸ்ரீரங்கம் வடக்கிலுள்ள திரு வேங்கடமலை என்னுந் திவ்வியதேசங்களுமாம்; (எ – று.)

வடிவு ஐந்து என்றது – பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐவகை நிலைகளை.
இவற்றில், பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை.
வியூகமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவம் – ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம் – சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்து வசித்தல்;
அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும் இதில் அடங்கும்.
அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.

வலனோங்கு பரமபத மா மணி மண்டபத்தில் அமர்
நலனோங்கு பரம் பொருளாய் நான்கு வியூகமும் ஆனாய்
உபயகிரிப்புய ராமனொடு கண்ணன் முதலான விபவ வுருவமும் எடுத்து
வீறும் உயிர் தொறும் குடிகொள் அந்தர்யாமியுமான தமையாமே எளிதாக
இந்த நெடு வேங்கடத்தில் எல்லாரும் தொழ நின்றோய்–என்பது இங்கு நோக்கத்தக்கது.

அப்பொழுது கண்ணபிரான் ஏறினது புன்னைமர மென்றும், குருந்த மர மென்றும் இருவகையாகக் கூறுத லுளதாதலால்,
காலபேதத்தால் இரண்டையுங் கொண்டு கூறின ரிவ ரென்க.
இனி, ‘வைகுந்தந்தாமரை போற்பாதர்’ என்று பாடங்கொண்டு,
நாகத்து – (காளியனென்னும்) பாம்பின்மேல், வை – வைத்த, குந்து – குந்துகிற (சிறிதுதூக்கியெடுத்து நட னஞ்செய்கிற),
அம் தாமரை போல் பாதர் – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிகளையுடையவர் என்று உரைத்தலும் அமையும்;
குந்துபாதம் = குஞ்சிதபாதம்:
‘வைகுந்தந் தாமரைபோற் பாதர் நாகத்து’ –
“பாதமாம் போதைப் படத்துவைத்தார்” என்றாற் போலக் கொள்க; என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடி பதிந்த தழும்பு என்றும் நிலையாகவிருக்கும்படி அழுந்தவைத்தவ ரென்ற பொருளை விளக்கும்;

‘ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்கு அஞ்ச வேண்டாம்; உன்சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்’ என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

வை – உரிச்சொல்; “வையே கூர்மை” என்பது, தொல்காப்பியம். குந்தம் – ஈட்டியென்ற ஆயுதம்;
இது, மற்றைப்படைக்கலங்கட்கும் உபலக்ஷணம்.
எம்பெருமான் விசுவ ரூபத்தில் மிகப் பல கைகளுடையனாய் அவற்றில் ஏந்தும் ஆயுதங்களிற் குந்தமும் ஒன்றாம்.

“வடிநுதிக்குந்தம் வலமிடம் வாங்குவ”,
“வெங்கணை யத்திரள் குந்தநிறப்படை வெம்புமுலக்கைகள் போர்,……
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே” என்பன காண்க.

குந்தம், தாமரஸம், பாதம், நாகம், வைகுண்டம், அயோத்யா, த்வாரகா, ஸ்ரீ – வடசொற்கள்.
திருமாலின் திருப்பதிகளுள் தலைமை பெற்றனவான கோயில் திருமலைகளைக் கூறினது, பிறவற்றிற்கும் உபலக்ஷணமாம்.

————–

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வடமலை கொங்கைத் திருவோடிருப்புவை குந்தங்கர
வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே –63-

மால் – திருமால்,
நிற்பது – நின்ற திருக்கோலமாக எழுந் தருளியிருக்குமிடம்,
வடமலை தென்மலை கச்சி குறுங்குடி – வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும்
தெற்குத் திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும் திருக் கச்சி யத்திகிரியும் திருக் குறுங்குடியுமாம்;
வளரும் இடம் -(அப்பெருமான்) பள்ளி கொண்டு திருக் கண் வளர்ந்தருளுமிடம்,
வடம் அலை வேலை அரங்கம் குடந்தை – ஆலிலையும் அலைகளை யுடைய திருப்பாற் கடலும் ஸ்ரீரங்கமும் திருக்குடந்தையுமாம்;
வடம் அலை கொங்கை திருவோடு இருப்பு – ஆரங்கள் அசையப் பெற்ற தனங்களை யுடைய திருமகளுடன்
வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருக்கு மிடம்,
வைகுந்தம் – பரமபத மாம்;
நடை – நடந்து சென்று சேரு மிடம்,
கரவடம் மலை அன்பர் உளம் – கபடத்தை யொழித்த அடியார்களுடைய மனமாம்;
ஆட்டம் – திருவுள்ள முகந்து நடனஞ்செய்யுமிடம்,
மறை அந்தம் – வேதாந்தமாகிய உபநிஷத் துக்களாம்; (எ – று.)

முதல்வாக்கியத்திலுள்ள ‘மால்’ என்பதை மற்றை வாக்கியங்களிலுங் கூட்டுக; முதனிலைத்தீவகம்.
திருவேங்கடம் – நூற்றெட்டுத் திவ்வியதேசங் களுள் வடநாட்டுத்திருப்பதி பன்னிரண்டில் ஒன்று.
திருமாலிருஞ்சோலை மலையும், திருக்குறுங்குடியும் – பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டிற் சேர்ந்தவை.
கச்சி – தொண்டைநாட்டுத்திருப்பதி இருபத்திரண்டில் ஒன்று; பெருமாள்கோவில் என்று சிறப்பாக வழங்கும்.
அரங்கமும், குடந்தையும் – சோழநாட்டுத்திருப்பதி நாற்பதிற் சேர்ந்தவை.
ஆலிலையிற் பள்ளிகொள்ளுதல், பிரளயப்பெருங்கடலில். வேதாந்தம் எம்பெருமானது சொரூபத்தையும்
குணஞ் செயல்களையும் மகிமையையுமே எடுத்துப்பாராட்டிக் கூறுதலால்,
அதில் அப்பெருமான் மிக்ககுதூகலத்துடன் நிற்கின்றன னென்பார், ‘ஆட்டம் மறையந்தம்’ என்றார்.
கச்சி – காஞ்சீ என்ற வடசொல் லின் விகாரம்.
மால் – பெருமை, அடியார்களிடத்து அன்பு, திருமகள்பக்கல் மிக்க காதல், மாயை இவற்றை யுடையவன்.
நிற்பது – வினையாலணை யும்பெயர்.
வடம் – வடசொல்; இந்த ஆலமரத்தின்பெயர், முதலாகுபெய ராய், அதன் இலையை உணர்த்திற்று. வடம் = வடபத்திரம்.
இருப்பு, நடை, ஆட்டம் – தொழிலாகுபெயர்கள்.
நிற்பது முதலியவற்றிற்குப் பிறபல தலங்களும் உள்ளனவாயினும், இச்செய்யுளிற் சிலவற்றையே எடுத்துக் கூறினார்.
மலை அன்பருளம் – வினைத்தொகை.

—————-

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின்
அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் னாழ் தடங்கல்
அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே –64-

ராச லங்கா புரியார்க்கு – தலைமை பெற்ற இலங்காபுரி யில் வாழ்ந்த (இராவணன் முதலிய) அரக்கர்களுக்கு,
அந்தக – யமனானவனே!
அரங்கா – ரங்கநாதனே!
மறையின் அந்த – வேதாந்தத்தில் எடுத்துக் கூறப்படுபவனே!
கரஅசலம் கூக்குரல் ஓயும்முன் – கஜேந்திராழ்வான் (ஆதிமூலமேயென்று உன்னைக்) கூவியழைத்து முறையிட்ட ஓலம் அடங்குதற்கு முன்னமே,
ஆழ் தடம் கலந்த கரா சலத்தே துஞ்ச நேமி அறுக்க – ஆழ்ந்த தடாகத்திற் பொருந்திய முதலையானது
அந்நீரிலே யிறக்குமாறு (நீ பிரயோகித்த) சக்கராயுதம் (அதனைத்) துணிக்க,
கண்டு – பார்த்தும்,
அந்தகர் – ஞானக் கண் குருடரான பேதையர்கள்,
சலம் வந்தால் – (தங்கட்குத்) துன்பம் நேர்ந்த காலத்து,
உனை அழையாதிருப்பார் – (அதனைத் தீர்க்குமாறு) உன்னை அழையாமலிருப்பார்கள்;
ஆ – அந்தோ! (எ – று.)

ஆ – இரக்கக்குறிப்பிடைச்சொல்; அவர்களுடைய பேதைமையையும் வினைப்பயனையுங் குறித்து இரங்கியவாறு. ”

வேங்கடத்தாரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கடத்தாரை புனைந்து யேத்திலீர் சிறியீர் பிறவி
தாங்கடத்தாரைக் கடத்தும் என்று யேத்துதீர் தாழ் கயத்து
ளாம் கடத்தாரை விலங்குமன்றோ சொல்லிற்றைய மற்றே –திருவேங்கடத்து அந்தாதி

அந்தகர், சலம், அந்தகன், ராஜலங்காபுரீ, அந்தம், கராசலம், ஜலம், நேமி – வடசொற்கள்.
கரா – க்ராஹ மென்ற வடசொல்லின் சிதைவு. (பிராணிகளை) விடாது பிடித்துக்கொள்வது என்று காரணப்பொருள்படும்.
ராஜலங்காபுரியார் – லங்காபுரிராசர் எனினுமாம்.
கர அசலம் – துதிக்கை யையுடைய மலை: எனவே, யானையாயிற்று; வலிமை பருமைகளிலே மலைபோன்ற தென்க: தீர்க்கசந்தி.
துஞ்சுதல் – தூங்குதல்; இறத்தலைத் துஞ்சுத லென்பது – மங்கலவழக்கு: மீண்டும் எழுந்திராத பெருந்தூக்க மென்க.
அழையாதிருப்பார் என்பதில், இரு – துணைவினை. அழையாது – இருப்பார் என்று பிரித்து,
அழையாமல் அத்துன்பத்திலேயே உழன்றி ருப்பார்கள் என்று உரைத்தலுமொன்று.
‘கண்டு’ என்பதில் உயர்வு சிறப் பும்மை விகாரத்தால் தொக்கது;
கண்டும் அதன் பயனாகிய அழைத்தலைச் செய்யாமை பற்றி, குருட ரென்றார்.

————-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க்கிழ மாகியையள்
அறுகு தலைச் செய்து வீழ்காய் தாநென்னுமாரிருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே –65-

கு – பூமியை,
தலை – முடியின் மேல்,
கொள் – கொண்டு சுமக்கின்ற,
பணி – ஆதிசேஷனிடத்துப் பள்ளிகொண்டருள்கின்ற,
அரங்கா – ரங்கநாதனே!
அறுகு தலை பெய் பனி போன்ற – அறுகம்புல்லின் நுனியில் வீழும் பனிபோலச் சிறிய,
தாது – இந்திரியம்,
உரு ஆய் – மனிதவடிவ மாகப் பரிணமித்து,
பிறந்து – (பின்பு) ஜனித்து, (பிறகு),
அலறு – அழுகிற,
குதலை பிள்ளை ஆய் – மழலைச்சொற்களையுடைய பாலனாகி,
காளை ஆய் – (அதன்பின்னர்) யௌவநபருவமுடையவனாய்,
கிழம் ஆகி – (அப்பால்) மூப்படைந்து,
ஐ அளறு உகுதலை செய்து – கோழையாகிய சேறு சிந்துதலைச் செய்து,
வீழ் – இறக்கிற,
காயம் – உடம்பை,
நான் என்னும் – நான் என்று நினைத்து அபிமானிக்கிற அகங்காரமாகிய,
ஆர் இருளை – போக்குதற்கு அரிய (எனது)மனவிருளை,
அறு – நீக்கு:
நின்கண் ஆசை தந்து – உன் பக்கல் பக்தியை (எனக்கு) உண்டாக்கி; (எ – று.)

நின் கண் ஆசைதந்து, காயம் நானென்னும் ஆரிருளீ அறு என இயைத்து முடிக்க.

காயம் நானென்னும் ஆரிருள் – தானல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்யும் மயக்கம்;
இது, அகப்பற்று எனப்படும்.
ஆர்இருள் – பண்புத்தொகை; வினைத்தொகையாய், நிறைந்தஇரு ளெனினுமாம்.
ஆரிருள் – முச்சுடர்களினொளி முதலியவற்றாற் போக்கு தற்குஅரிய அகவிருள்: அஜ்ஞாநாந்தகாரம்;
சரீரத்தை ஆத்மாவென்று மாறு படக்கருதும் விபரீதஞானம்.

முதல்மூன்றடிகளில் யாக்கையினியற்கையை யெடுத்துக்கூறினார்;
(இதனை, “ஒளிகொள்நித்திலமொண்பவளச்செறு, விளைய வித்திய தென்ன நல்வீரியம்,
தளிர்நிறத்தெழுதாய் கருவிற்பனித் துளியிற்சென்றுபொருந்தித்துளக்குறும்” என்பது முதலாகப் பாகவதத்திற் பரக்கக்காணலாம்.)

தாது, காயம், கு, பணீ, ஆசா – வடசொற்கள்.
குதலை – நிரம்பாமென் சொல். காளை – இளவெருது: அதுபோலக் கொழுத்த பருவமுடையானுக்கு இலக்கணை.

———–

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்பூ
ஆசுக விக்கு வில் வேள் வடிவா வறி வாலகத்திய
ஆசுக விக்கு வலய மன்னா வென்ற ரற்றி யிரந்து
ஆசுக விக்கும் புலவீர் புகழ்மின் அரங்கனையே –66-

ஆசு கவிக்கு எனக்கு நிகர் இல்லை என்று – ஆசு கவிபாடுதலில் எனக்கு ஒப்பாவார் எவருமில்லை யென்று காட்டுபவராய்,
அற்பரை – புல்லர்கள் பலரை,
‘பூ ஆசுகம் இக்கு வில் வேள் வடிவா – மலர்களாகிய அம்புகளையும் கரும்பாகிய வில்லையுமுடைய மன்மதன் போலழகிய வடிவ முடையவனே!
அறிவால் அகத்தியா சுக – ஞானத்தினால் அகத்தியனையும் சுகனையும் போன்றவனே!
இ குவலயம் மன்னா – இந்தப் பூமண்டலத்துக்கு அரசனே!’
என்று அரற்றி – என்று தனித்தனி புகழ்ந்து விளித்துப் பிதற்றிக் கவி பாடி,
இரந்து – (அவர்களைக் கூறை சோறு முதலியன) வேண்டி,
ஆசு கவிக்கும் – குற்றங்களால் மூடப்படுகிற,
புலவீர் – புலவர்களே! –
அரங்கனை புகழ்மின் – நம்பெருமாளைப் புகழுங்கள்; (எ – று.)

பந்தத்துக்கு ஏதுவான நர ஸ்துதி செய்து கெடுவதை விட்டு மோக்ஷத்துக்கு ஏதுவான திருவரங்க நாதனைத் துதி செய்து
உய்யுங்களென்று உபதேசஞ் செய்தார்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -ஆழ்வார்

ஆசுகவிக்கு – உருபுமயக்கம். ஆசுகவி – வடமொழித்தொடர். ஆசுகவி – நால்வகைக்கவிகளுள் ஒருவகை; அதாவது

மூச்சு விடு முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சு என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம்மென்னு முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடினது எழு நூறே –நிமிஷக் கவிராயர் -என்னும்படி) விரைவிற் பாடுங் கவி.
(மற்றவை – மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி.)

தாமரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்ற ஐந்தும் – மன்மதனுக்கு அம்பாம்.
அகத்தியன் -தமிழ்ப் பாஷையை வளர்த்த முனிவன். சுகன் – வியாச முனிவனது குமாரன்:
அவனினும் மேம்பட்ட அறிவொழுக்கங்களை யுடையவன். தென்மொழி யுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்கு அகத்தியனே யென்றும்,
வடமொழியுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்குச் சுகனே யென்றும் விளிப்பரென்க.
இங்குக் குறித்த விளிகள் நான்கும், வடிவழகு அறிவு ஒழுக்கம் செல்வம் இவற்றின் சிறப்பைக் காட்டு மென்றுங் கொள்ளலாம்.

அல்பர், ஆசுகம், இக்ஷு, அகஸ்த்யன், சுகன், குவலயம் – வடசொற் கள்.
அகஸ்த்யன் என்ற பெயர் – (விந்திய) மலையை அடக்கியவ னென்று பொருள்படும்; அகம் – மலை.
மூன்றாமடியில், சுகம் என்று எடுத்து, மன்னனுக்கு அடைமொழியாக்கி, இன்பத்தை யனுபவிக்கிற அரசனே யென்றலு மொன்று.
நான்காமடியில், ஆசு உகவிக்கும் என்று பதம் பிரித்து, குற்ற முண்டாக மகிழ்விக்கிற என்று பொருள் கொள்ளலுமாம்.

———–

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென் கால் பெற்றவா
கனகவி மானற் கருடப் புள்ளூர்த்தியைக் கான்மலர்கோ
கனகவி மானம் புவிமான் றடவரக் கண் வளரும்
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே –67-

கால் பெற்ற – வாயு பகவான் ஈன்ற,
வாகன கவி – வாகன மாயமைந்த குரங்காகிய அநுமானையும்,
மால் நல் கருடன் புள் – பெருமையை யுடைய அழகிய கருடப் பறவையையும்,
ஊர்தியை – ஏறி நடத்துபவனும்,
கோகனக விமான் – தாமரை மலரில் வாழும் திருமகளும்
அம் புவி மான் – அழகிய பூமி தேவியும்,
கால் மலர் தவர – (தனது) திருவடித் தாமரைகளைத் தடவ,
கண் வளரும் – அறிதுயிலமர்கிற,
கனக விமானத்து – சுவர்ண மயமான விமாநத்தை யுடைய,
அரங்கனை -ரங்கநாதனுமாகிய எம்பெருமானை,
நா சொல்ல கற்ற பின் – (எனது) நாவினாற் புகழ்ந்து சொல்லப் பயின்ற பின்பு,
கனம் கவி – பெருமை பொருந்திய பாடல்களை,
மானம் அற்று – மானங்கெட்டு,
ஈனர்க்கு உரைக்கிலென் – அற்பர்கள் விஷயமாக (யான்) பாடேன்; (எ – று.)

‘நர ஸ்துதியாகக் கவி பாடலாகாதென்று பரோபதேசஞ் செய்யத் தலைப் பட்டீரே,
நீர் அங்ஙனம் நர ஸ்துதி செய்ததில்லையோ?’ என்று புலவர்கள் தம்மைக் குறித்து ஆசங்கித்ததாகக் கொண்டு,
‘யான் அரங்கனைத் துதிக்கக் கற்ற பின் ஈனர்க்குக் கவி யுரைக்கிலேன்’ என்றாரென்க.
அதற்கு முன்பு அறியாப் பருவத்தில் ஒருகால் மனிதரைப் பாடியிருந்தால் அது ”
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” –என்றபடி அமையு மென்பது, உட்கோள்.

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னாதெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே-

சீர் பூத்த செழும் கமல திருத் தவிசின் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடிவருட –அறி துயில் இனிதமர்ந்தோய்–திருவரங்க கலம்பகம் –

கால் பெற்ற வாகன கவி மானற் கருடப் புள்ளூர்தி – சிறிய திருவடியை இராமாவதாரத்திலும்
பெரிய திருவடியை மற்றை எப்பொழுதிலும் வாகனமாகக் கொண்டு அவர்கள் தோள் மேலேறி வருபவன்,
கோகனகவிமான் அம்புவிமான் கான்மலர் தடவரக் கண் வளரும் –

கநகவி, மாநம், ஹீநர், வாஹநகபி, கோகநதம், புலி, கநகவிமாநம் என்ற வட சொற்கள் விகாரப்பட்டன.
கால் மலர் – மலர் போன்ற கால் : முன் பின்னாகத்தொக்க உவமத்தொகை.
கோகநதம் என்ற வடசொல் – கோகமென்னும் நதியில் ஆதியிலுண்டானதென்றும்,
சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து மகிழ்ந்து விளையாடப் பெற்றதென்றும் காரணப் பொருள் கூறப்பெறும்.
வி – வீ என்பதன் குறுக்கல்; வீ – மலர். மான் – மான் போன்ற பார்வையை யுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயர்.
தடவர, வா – துணை வினை. தடவு வா என்ற இரண்டு வினைப் பகுதி சேர்ந்து ஒரு சொல் தன்மைப் பட்டு விகாரமடைந்து தடவா என நின்றதென்க.
கண் வளர்தல் – கண்மூடித் துயிலுதற்கு இலக்கணை.
உரைக்கிலென், கு – சாரியை, இல் – எதிர்மறை யிடை நிலை. உரைக்கில் என் என்று பதம் பிரித்து,
(எல்லாப் புருஷார்த்தங்களையும் பெருமையோடு பெறுமாறு) அரங்கனைப் புகழக் கற்ற பின்பு மானமிழந்து
ஈனர் மேற் கவி பாடுதலால் என்ன பயனென்று உரைத்தலு மொன்று. “நான் சொல்ல” என்றும் பாட முண்டு.

———–

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினைவ
கற்றின மாயமு நீ கன்று காளையராகிப் பல்ப
கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே –68–

அரங்கா – ! –
கன்று இனம் ஆயவை – கன்றுகளின் கூட்டங்களும்,
காளையர் – (இடையர் சாதிச்) சிறு பிள்ளைகளும்,
வான் கண்டு மீள் நினைவு அகற்றின – தாம் வானத்தை யடைந்து மீண்டமை பற்றிய ஞாபகத்தை யொழித்த,
மாயமும் – அற்புதமும், –
நீ -,
கன்று காளையர் ஆகி – அக் கன்றுகளும் ஆயச் சிறுவர்களுமாக வடிவு கொண்டு,
பல் பகல் – வெகு காலமளவும்,
தினம் – நாள் தோறும்,
ஆயர் பரிவு உற சேரி கலந்தமையும் – (தம் தமக்கு உரிய) இடையர்கள் கண்டு (தம் பக்கல் முன்னினும்)
அன்பு மிகுமாறு இடைச்சேரியிற் சேர்ந்து வந்த விசித்திரமும், –
செம் கமலற்கும் – சிவந்த (உனது நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரம தேவனுக்கும்,
இனம் கற்று ஆய ஒண்ணா – இன்னமும் ஆராய்ந்து அறிய முடியாதனவா யிருக்கின்றன; (எ – று.)

வான் கண்டது பிரமன் மாயையினாலாயினும், வான் கண்டு மீண்டமை பற்றிய நினைவு சற்றுமில்லாதபடி அகற்றியது மாயவனது மாயை யென்க.
மெய்ச் சிறுவரின் மேலும் மெய்க் கன்றுகளின் மேலும் உள்ள பரிவினும் மிக்க பரிவு போலிச் சிறுவரின் மேலும்
போலிக் கன்றுகளின் மேலும் உண்டானது, எம்பெருமான் கொண்ட வடிவமாதலினாலென்பர்.
கமலற்கும், உம் – உயர்வு சிறப்பு; உனது எதிரில் மாயை செய்ய வந்தவனுக்கும் உனது பெருமாயைகள் அறியப்படா என்றபடி.
எல்லா மாயைக்கும் மேம்பட்ட மாயை செய்ய வல்லாய் நீ யென்பது குறிப்பு.
கன்று + இனம் = கற்றினம்; வேற்றுமையில் மென் றொடர் வன் றொடராயிற்று.
ஆயவை – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
பகல் – நாளுக்கு இலக்கணை. தினம் என்றதில், தொறுப் பொருளதாகிய உம்மை விகாரத்தால் தொக்கது,
உற – மிகுதி யுணர்த்தும் உறு என்ற உரிச் சொல்லின் மேற் பிறந்த செயவெனெச்சம்.
சேரி – இங்குத் திருவாய்ப்பாடி. கற்று ஆய – ஆய்ந்து கற்க என விகுதி பிரித்துக் கூட்டுக.
இனம் – இன்னம் என்பதன் தொகுத்தல். ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ.

————-

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர் புனல் கா
கமலங் குவளை விளையாடரங்கன் விண் காற்றுக் கனல்
கமலங் குவளையுண் டான்றொண்ட ராயுய்ம்மின் காம மற்றே –69-

மடவார் – மாதர்களுடைய,
தனம் கண்கள் – கொங்கைகளையும் கண்களையும்,
கமலம் குவளை என்று உரைத்து – (முறையே) தாமரை மொட்டும் நீலோற் பலமலருமா மென்று புனைந்துரைத்து,
மலங்கு வளை முதுகு ஆகியும் அகம் கரைவீர் – வருந்துகிற கூன் முதுகான பின்பும் (முற்ற மூத்த பிறகும்)
(மகளிர் பக்கல் ஆசையால்) மனமுருகுகின்றவர்களே! –
(நீங்கள்),
காமம் அற்று – (இத் தன்மையதான) பெண்ணாசையை யொழித்து,
விண் காற்று கனல் கமலம் கு அளை உண்டான் – ஆகாசம் வாயு அக்நி ஜலம் பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும்
வெண்ணெயையும் அமுது செய்தவனும்,
புனல் காகம் மலங்கு வளை விளையாடு அரங்கன் – நீர்க் காக்கைகளும் மலங்கு என்ற சாதி மீன்களும் சங்குகளும் விளையாடுகிற
(நீர் வளம் மிக்க) ஸ்ரீரங்கத்திலெழுந் தருளியிருப்பவனுமான நம் பெருமாளுக்கு,
தொண்டர் ஆய் – அடியார்களாகி,
உய்ம்மின் – உஜ்ஜீவியுங்கள்; (எ – று.)

தீ வினைக்குக் காரணமான பெண்ணாசையை யொழித்து, வீடு பெறுமாறு எம்பெருமானுக்கு அடியார்களாகி ஈடேறுங்கள் என்பதாம்.
சிற்றின்பத்தால் உய்யீர், பேரின்பம் பெற்று உய்யப் பாரும் என்பது, குறிப்பு.
முதலடியில், கமலம் தனம் குவளை கண் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப் பொருள்கோள்; வடிவுவமை.
ஐம்பெரும்பூதங்களை யுட்கொள்ளுதல், மகா பிரளய காலத்தில். வெண்ணெ யுண்டது,
கிருஷ்ணாவதாரத்தில். விண் காற்று கனல் கமலம் கு என்ற ஐம்பூத முறைமை, உற்பத்தி கிரமம் பற்றியது.
கமலம், குவளை – முதலாகு பெயர்கள். ஓசை நயத்தின் பொருட்டு, காற்றுக் கனல் என வலி மிக வில்லை.

————

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சார்க்கு இரங்
கா மனத்தான ளக்கும் கடல் பார் கலம் போன்றது மீ
கானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –70 –

கா மன் – கற்பகச் சோலைக்குத் தலைவனான இந்திரன்,
நத்தால் விழ – பாஞ்ச ஜந்யத்தின் ஓசையினால் மூர்ச்சித்துக் கீழ் விழும்படி,
ஊதி – (அந்தத் தனது திவ்விய சங்கத்தை) ஊதி முழக்கி,
அ காவை கவர் – அச்சோலையிலுள்ள பஞ்ச தருக்களுள் ஒன்றான பாரிஜாத தருவைக் கவர்ந்து கொண்டு வந்த,
அரங்கன் – ரங்கநாதனும்,
காமன் அத்தா என்று நைவார்க்கு அமுதன் – “மன்மதனது தந்தையே!” என்று சொல்லி விளித்து(த் தன் பக்கல்)
மனமுருகும் அடியவர்க்கு அமிருதம் போலினியனாகின்றவனும்,
கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – (அங்ஙனமுருகாது தன் திறத்திற்) கல்லுப் போல வலிய
நெஞ்சை யுடையராயிருப்பார் பக்கல் தானும் மனத்துக் கருணை கொள்ளாதவனுமான எம்பெருமான்,
அளக்கும் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளிய,
கடல் பார் – கடல் சூழ்ந்த பூமியானது,
கலம் போன்றது – (அக்கடலில் மிதக்கும்) மரக் கலம் போன்றது;
அ தாமரையோன் – அந்த (மேலுலகமாகிய சத்திய லோகத்திலே வசிக்கின்ற) பிரமதேவன்,
மீகாமன் – மாலுமி போன்றனன்;
கால் மலர் – (மேல் நோக்கிச் சென்ற திருமாலினது) தாமரை மலர் போன்ற திருவடியானது,
மரம் – பாய் மரம் போன்றது;
கங்கை – (அத் திருவடி யினின்று பெருகிய) கங்கா நதியானது,
பாய் – (அம் மரத்திற் கட்டிய) பாய் போன்றது; (எ – று.)

பூமியை மரக்கலத்தோடும், பிரமனை மாலுமியோடும், கங்கையைப் பாயோடும், திருவடியைப் பாய் மரத்தோடும் உவமித்தார்;
இயைபுவமையணி.
விரி கடல் சூழ் மேதினி நான் முகன் மீகானாச் சுர நதி பா யுச்சி தொடுத்த –வரி திருத்தாள் கூம்பாக வெப்பொருளும் கொண்ட
பெரு நாவாய் யாம் பொலிவுற்றாயினதால் அன்று – என்றதனோடு இதனை ஒப்பிடுக. ”
போன்றது” என்ற முற்றை உரிய படி மற்றை வாக்கியங்களிலுங் கூட்டி யமைக்க.

கண்ணனது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான உருக்குமிணிப் பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென்ற வரலாறு பற்றி, திருமால் “காமன்தந்தை” எனப்படுவன்.
இங்கு “காம னத்தா” என்றது, காமனுக்கு நியாமகனே யென்றபடி.
நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – நல்லார்க்கு நல்லானும் பொல்லார்க்குப் பொல்லானுமாய் ஒழுகுபவனென்க.

———–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மலருந்தினான் அரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாண்
மலருந்தி வாக்கதிர் வண் குடையாய் முடி மா மணியாய்
மலருந்தி யாய்த் திருத்தாள் விரலாழி மணி யொத்ததே –71–

மலர் – மல்லர்கள்,
உந்தி மேல் விழ – தள்ளித் தன் மேல் வந்து விழ,
மெய் நெரித்தான் – அவர்களுடலை நொருக்கி யழித்தவனும்,
வையம் ஏழும் துஞ்சாமல் அருந்தினான் – ஏழு வகை யுலகங்களையும் அழியாதபடி யுட் கொண்டவனுமான,
அரங்கன் -,
குறள் ஆய் – (முதலில்) வாமன மூர்த்தியாய்ச் சென்று,
மண் அளந்த அநாள் – (உடனே பெரு வடிவாய் வளர்ந்து) உலகத்தை அளந்து கொண்ட அந்தக் காலத்திலே,
மலரும் திவாக் கதிர் – பரவி விளங்குந் தன்மையதான சூரிய மண்டலமானது, –
(அப்பெருமானுக்கு),
வள் குடை ஆய் – (முதலில்) அழகிய குடை போன்றிருந்து,
முடி மா மணி ஆய் – (உடனே) கிரீடத்திலுள்ள நடு நாயக மணி

போன்று, மலர் உந்தி ஆய் – (பிறகு) நாபித் தாமரை மலர் போன்று,
திருதாள் விரல் ஆழி மணி ஒத்தது – (அதன் பின்பு) திருவடி விரலிலணியும் மோதிரத்திற் பதித்த மாணிக்கத்தைப் போன்றது; (எ – று.)

இதுவும், கீழ்ச் செய்யுள் போலத் திரிவிக்கிர மாவதாரவைபவங் கூறியது. திருமால் திரிவிக்கிர மாவதாரத்தில் வானத்தை
யளாவி ஓங்கி வளர் கையிற் சூரியன் வரவரக் கீழ்ப் பட்டுப் பலவாறு உவமை கூறுதற்கு உரியனாயின னென்க.

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல்
மன்னும் திலகம் போல் வாள் இரவி
பொன்னகலம் தங்கு கௌத்துவம் போலும்
உந்தித் தட மலர் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்-என்ற செய்யுளிலும் இவ்வகைக்கருத்து நிகழ்தல் காண்க

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –திருவரங்கத்து மாலை -35

மல்லரென்பது, “மலர்” எனத் தொக்கது. திவாக் கதிர் – பகலிற்குஉரிய சுடர். ஆய் – உவமவுருபு. தாள்விரலாழி – காலாழி.

———

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச் சிந்தா
மணி வா சவனென வாழ்ந்திருப்பார் பின்னை மாதிருக்கு
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித் திரு
மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –72-

மணி – ஆராய்ச்சி மணி,
வாசல் தூங்க – அரண்மனை வாயிலிலே தொங்க,
ஒரு குடை கீழ் – ஒற்றை வெண் கொற்றக் குடையின் கீழ்,
வையம் காத்து – உலகத்தை யரசாண்டு,
சிந்தாமணி வாசவன் என வாழ்ந்திருப்போர் – சிந்தாமணி யென்னுந் தெய்வ ரத்தினத்துக்கு உரிய
இந்திரன் போல இனிது வாழ்ந்திருப்பவர்கள்,
பின்னை மாது இருக்கும் – திருமகள் வீற்றிருக்கின்ற,
மணி – அழகிய,
வாசம் மார்பு – திவ்விய பரிமளமுள்ள மார்பை யுடைய,
அரங்கா – ரங்கநாதனே!
கேசவா – கேசவனே! என்று வாழ்த்தி – என்று விளித்துத் துதித்து,
இ வாசகம் கொண்டு – இந்தக் கேசவாதி நாமங்களை யுச்சரித்துக் கொண்டு,
திருமண் அணிவார் – திருமண் காப்பைத் தரித்துக் கொள்ளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
அடியை – திருவடிகளை,
வணங்கினரே – நமஸ்கரித்தவர்களே; (எ – று.)

“ஈராறு நாம முரை செய்து மண் கொ டிடுவார்கள்” என்றபடி
கேசவன் நாராயணன் மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதநன் திரிவிக்கிரமன் வாமநன் ஸ்ரீதரன்
ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன் என்ற திருமாலின் துவாதச நாமங்களை முறையே சொல்லி
உடம்பிற் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக் கொள்ளுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்கினவர்களே
அந் நல் வினையின் பயனால் உலக முழுவதும் ஒரு குடைக்கீழாளுஞ் சக்கரவர்த்தி பதவி யெய்திச் சகல
ஐசுவரியங்களையு மனுபவித்து மேம்பட்டு வாழ்வோரென்று, பாகவதர்க்கு அடிமை பூணுதலின் மகிமையை வெளியிட்டவாறாம்.
அவ்வரசர் பெருமையினும் பாகவதர் பெருமையை பெருமை யென்பது, குறிப்பு.

ஆராய்ச்சிமணி – அரண்மனை வாயிலிற் கட்டி வைப்பதொரு மணி:
எவரேனும் அரசனிடத்துத் தமது குறையைக் கூற வேண்டின் இம் மணியை யடித்தலும், அவ்வொலி கேட்ட மாத்தி ரத்திலே
அரசன் விரைந்து போந்து வாயிலை யடைந்து அங்குள்ளாரை வினாவி அவர் குறையை யறிந்து அதனைத் தீர்த்தலும் இயல்பு.

சிந்தாமணி – கருதிய பொருளைத் தருந் தேவமணி. திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் மூதேவி முன்னர்ப் பிறக்க
அதன் பின்னர்ப் பிறந்த திருமகளுக்குப் பின்னை யென்றும் இளையாளென்றும் பெயர்கள் நிகழ்ந்தன.
பன்னிரு நாமத்துள் முதலான கேசவ நாமத்தைக் கூறியது, மற்றவற்றிற்கும் உப லக்ஷணம்.

வாசல் – வாயில் என்பதன் மரூஉ. தூங்குதல் – தொங்குதலாதலை “தூங்கு சிறை வாவல்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
கேசவன் என்ற திருநாமம் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் (க – பிரமன், ஈசன் – சிவன்),
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனென்றும், மயிர் முடியழகுடையவனன்றும் பொருள் பெறும்.
இவ் வாசகம் என்பது “இவாசகம்” எனத் தொக்கது. வாசகம் – சொல்: வடமொழி. ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

————

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ வாளரவு
வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை வானவர்க்கும்
வணங்கரி யான் அன்றிக் காப்பாரில்லாமை விண் மண் அறியும்
வணங்கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –73-

வணம் கரியான் “திருமேனி நிறம் கருமையாயுள்ளவனும்,
அடியார் தொழ – தொண்டர்கள் சேவிக்க,
வாள் அரசு உவணம் கரி ஆடல் பரி தேர் நடத்து – ஒளியையுடைய ஆதிசேஷனும் கருடனும் யானையும்
ஆட்டக் குதிரையும் தேரு மாகிய வாகனங்களி லெழுந்தருளித் திருவீதி யுத்ஸவங் கண்டருள்கிற,
எந்தை – எமது தலைவனும்,
வானவர்க்கும் வணங்கு அரியான் – தேவர்கட்கும் தரிசித்து நமஸ்கரித்தற்கு அருமையானவனும் ஆகிய,
அரங்கன் அன்றி – ரங்க நாதனே யல்லாமல்,
காப்பார் இல்லாமை – (சரணமடைந்தவர்களைத் துயர் தீர்த்து வேண்டுவன அளித்துப்) பாதுகாப்பவர்
மற்று எவருமில்லாதிருக்கிற உண்மையை,
விண் மண் அறியும் வணம் – வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் அறியும்படி,
கரி ஆனவர் – சாக்ஷியானவர்கள், (யாவரெனில்), –
வாணன் கண்டாகன மார்க்கண்டனே – பாணாசுரனும் கண்டா கர்ணனும் மார்க்கண்டேயனு மாவர்; (எ – று.)

இம் மூவரும் முதலிற் சிவபிரானை யடுத்து அவனால் தமது குறைகள் தீரவும் வேண்டுவனயாவும் பெறவும் மாட்டாமல்
பின்பு திருமாலருள் பெற்றுப் பேறு பெற்று உய்ந்தமை அவரவர் சரித்திரத்தால் நன்கு விளங்குதல் பற்றி, இங்ஙனங் கூறினார்.
சாக்ஷியாதற்கு ஏது – வாணாசுரனுடைய கைகளைக் கண்ணன் சக்கராயுதத்தால் அறுக்கிற போது அவனுக்கு ரக்ஷகனாய் நின்ற
சிவபிரான் ஒன்றும் எதிர் செய்ய மாட்டாது அப் பெருமானை இரக்க, அதற்கு இரங்கி அவன் நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருள,
அவ் வசுரன் பின்பு ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி உறவு பூண்டு உய்ந்ததும்; கண்டா கர்ணன் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்து பின்பு சிவனால் முத்தி பெற மாட்டாது கண்ணபிரானாற் பெற்றதும்;
மார்க்கண்டேயன் மகா பிரளய காலத்தில் திருமாலையே யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாது
அப் பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டது மன்றி, முன்பு சிவபிரானருளால்
நீண்ட ஆயுளை மாத்திரமே பெற்ற தான் பின்பு பரகதிக்குத் திருமாலையே வேண்டினமையுமாம்.

வர்ணம் என்ற வடசொல்லின் விகாரமான வண்ணம் என்பது, வணம் எனத் தொக்கது.
அரங்கன்னடியார், னகரவொற்று – விரித்தல். வாள் அரவு – கொடிய பாம்புமாம்.
உவணம் – ஸுபர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு.
ஆடல் பரி – வெற்றியையுடைய குதிரை யெனினுமாம். விண், மண் – இடவாகுபெயர்கள்.

—————–

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம் கவிரிதல் சொல்
கண்ட லங்கா ர முலையிள நீர் என்று கன்னியர் சீர்
கண்ட லங் காரங்கமருளேன் புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –74-

புனல் – நீரிலுள்ள,
கயல் – கயல்மீன்கள்,
கொக்கு என்று அஞ்ச – “கொக்கு” என்று நினைத்துப் பயப்படும்படி,
கண்டல் – தாழைகள்,
அங்கு – அந்நீரின்பக்கங்களில்,
ஆர மலர் – மிகுதியாக மலரப் பெற்ற,
அரங்கம் – திருவரங்கத்துக்கு,
ஈசர்க்கு – தலைவரான நம்பெருமாளுக்கு,
காதலன் – அன்பு பூண்டவனான யான், –
கன்னியர் – இளமங்கையரது,
கண் தலம் கார் அளகம் – கண்களும் கரிய கூந்தலும்,
கெண்டை மேகம் – (முறையே) கெண்டை மீனையும் காள மேகத்தையும் போலும்:
இதழ் – (அவர்களுடைய) அதரம்,
கவிர் – முருக்க மலர் போலும்:
சொல் – பேச்சு,
கண்டு – கற்கண்டு போலும்:
அலங்கு ஆரம் முலை – அசைகிற ஹாரங்களை யுடைய தனங்கள்,
இளநீர் – இளநீர் போலும்,
என்று -,
சீர் கண்டு அலங்காரம் மருளேன் – (அவர்களுடைய) சிறப்பைக் குறித்து அவர்கள் புனை கோலத்தால் மதி மயங்கேன். (எ – று)

திருவரங்கர்க்கு அன்பனாயினே னாதலால், பெண்ணாசை மயக்கத்தி லாழே னென்பதாம்.
பேரின்பத்துக்கு இடமான பெருமானிடத்துக் காதல் செலுத்தினால், சிற்றின்பத்திற்கு இடமான மகளிர் பக்கல் மோகம் தீருமென்பது, குறிப்பு.

கண்தலம் – கண்ணாகிய இடம்.
முதலடியில் கண்தலம் கெண்டை, காரளகம் மேகம் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள் கோள்.
இளநீர் – தெங்கினிளங்காய். கயல்மீன் வெண்டாழைமலரைக் கொக்கென்று கருதி அஞ்சிய தென்றது, மயக்கவணி;

“அருகு கைதை மலரக் கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” என்ற ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது இந்த வருணனை.

கொக்கு மீன் குத்திப் பறவை யாதலால், அதற்கு மீன் அஞ்சும்.
இதழுக்கு முருக்கம்பூ செந்நிறத்திலுவமம்.

————

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு காட்டியரங்
காதலை வா கழற் குள்ளாக்கி னாய்கரப் பெங்கெனவே
காதலை வார் குழை வைதேகியை நின் கருத்துருக்குங்
காதலை வானரரத் தேட விட்டாயிது கைதவமே –75–

அரங்கா-! தலைவா – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனே!-
காது – மோதுகின்ற,
அலை – அலைகளையுடைய,
வாரி – கடலினாற்சூழப்பட்ட,
மண் – பூமியை,
வெள் கோட்டில் வைத்து – (வராகாவதாரத்திலே) வெண்ணிறமான மருப்பிற் குத்தியெடுத்து,
உண்டு – (பிரளயகாலத்திலே) வயிற்றி னுட்கொண்டு,
காட்டி – (அந்தப் பிரளயம் நீங்கினவாறே) வெளிநாடு காண உமிழ்ந்து,
கழற்கு உள் ஆக்கினாய் – (திரிவிக்கிரமாவதாரத்திலே) ஓரடிக்குள் ஒடுங்கச் செய்தாய்;
(அங்ஙனம் நிலவுலகமுழுதையும் ஸ்வாதீனமாக நடத்திய நீ),
நின் கருத்து உருக்கும் காதலை – உனது மனத்தை யுருகச் செய்கிற ஆசை மயமானவளாகிய,
காது அலை வார் குழை வைதேகியை – காதுகளி லசைகிற பெரிய குழை யென்னும் அணிகலத்தையுடைய ஜாநகிப் பிராட்டியை,
கரப்பு எங்கு என வானரர் தேட விட்டாய் – (இந் நிலவுலகத்தில் இராவணன்) ஒளித்து வைத்தது எவ்விடத்தென்று
தேடிப் பார்த்தறியும்படி (அநுமான் முதலிய) வாந ரவீரர்களை (நாற்றிசைக்கும்) அனுப்பினாய்;
இது கைதவமே – இது (உனது) மாயையேயாம்; (எ – று.)

இரணியாக்ஷனாற் பூமி முழுதும் ஒளிக்கப்பட்ட போது அது இருந்த இடத்தை நாடிக் கண்டு அதனை யெடுத்து வந்தவனும்
அந்தப்பூலோகமுட்பட எல்லா வுலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனும்
பூமிமுழுவதையும் ஓரடிக்கு உள்ளாக்கினவனு மாகிய நீ.
அந்நிலவுலகத்தில் இராவணனாற் கவரப்பட்ட சீதை யிருக்குமிடத்தை அறியாய் போன்று வாநரரைத் தேடவிட்டது,
மாயச் செய்கையே யென்பதாம். எல்லாம் உன்திருவிளையாடலே யென்பது, குறிப்பு.

காது அலை – வினைத்தொகை. கரப்பு – தொழிற்பெயர்.
வைதேஹீ – வடமொழித் தத்திதாந்தநாமம்: விதேகராஜனது குலத்திற் பிறந்தவள்.
காதல் = காதலி. கைதவம் – வடசொல். ஏ – அசை.

———

தவராக வக்கணை யொன்றாற் கடற்றெய் வந்தான் என்றிருந்
தவராகந் தீர்த்துத் தொழக் கண்ட நீ தர்ப்பை மேற் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய் தண் அரங்கத்துமா
தவராக வாகண் ணனே எண் ஒண்ணா வவதாரத்தானே –76-

தண் – குளிர்ச்சியான,
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந் தருளியிருக்கின்ற,
மாதவ – திருமகள் கொழுநனே!
ராகவா – இராமனாகத் திருவவதரித்தவனே!
கண்ணனே – கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனே!
எண் ஒணா அவதாரத்தனே – மற்றும் கணக்கிடமுடியாத (மிகப்பல) திரு வவதாரங்களையுடையவனே!
தவர் – வில்லினின்று எய்யப்பட்ட,
ஆகவம் கணை ஒன்றால் – போர்க்கு உரிய அம்பு ஒன்றினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
கடல் தெய்வம் தான் என்று இருந்த அ ராகம் தீர்த்து தொழ கண்ட – கடலுக்கு அதி தேவதையான வருணன் தான் (ஸ்வதந்த்ரன்)
என்று செருக்கியிருந்த அந்த அபிமானத்தை யொழித்து (உன்னை) வணங்கும்படி (பின்பு) செய்த வல்லமையை யுடைய, நீ-, (
முதலில்), தர்ப்பைமேல் கிடந்து – தருப்பசயனத்திற் படுத்து,
தவர் ஆக பாவித்து – விரதாநுட்டானஞ்செய்பவர் போலப் பாவனை காட்டி,
என்னோ தொழுதாய் – ஏன் (அத்தேவனை) வணங்கினையோ? (எ – று.)

வருணனைச் செருக்கடக்கித் தொழும்படி செய்யும் வல்லமையுடைய நீ முதலில் வல்லமையில்லாதவன்போல அவனைத்தொழுது
வரங்கிடந்தது உனதுமாயையினாற் செய்த திருவிளையாடல்போலு மென்பது குறிப்பு.
முன்பு மாநுடபாவனையைக் காட்டிப் பின்பு பரத்வத்தை வெளியிடத் தொடங்கின னென்க.

ஆஹவம், தைவம், ராகம், தர்ப்பம், மாதவன், அவதாரம் – வடசொற் கள்.
தான் என்று இருந்த அராகம் – தான் இராமபிரானுக்கு அடங்கினவ னல்ல னென்று கருதி உபேக்ஷித்திருந்த அகங்காரம்.
அ ராகம் எனச் சுட்டியது, கதையை உட்கொண்டு.
இனி, அராகம் என்பதன் முதல் அகரத்தை “ரவ்விற்கு அம்முதலா முக்குறிலும்,……. மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
ராகம் என்ற வடசொல்லின் முதலில் வந்த குறிலாகவுங் கொள்ளலாம்.
தவர் என்றதில், “தவம்” என்றது, பிராயோபவேசத்தை.

மத்ஸ்யம் கூர்மம் முதலிய தசாவதாரங்களேயன்றி நாரதன் நரநாராயணர் கபிலன் தத்தாத்ரேயன் பிருது தந்வந்திரி
வியாசன் புத்தன் அருச்சுனன் முதலாகச் சமயோசிதமாக எம்பெருமான் தனது திவ்வியசங்கல்பத்தினாற் கொண்ட
திருவவதாரங்கள் பற்பலவாகப் புராணங்களிற் கூறப்படுதல் பற்றி, “எண்ணொணாவவதாரத்தனே” என்றார்.

—————

தாரா கணமண் ணளந்த வந்நாளன்பர் சாத்தும் துழாய்த்
தாரா கணம் புயம் போலரங்காதல மேழுக்குமா
தாரா கண மங்கை யாயும்பர் தூவிய தா ண் மலர் வீழ
தாரா கணமு நில்லா காற்றிற் சூழ் வளந்தான் ஒக்குமே –77-

அன்பர் – அடியார்கள்,
சாத்தும் – சமர்ப்பித்த,
துழாய் தாரா — திருத்துழாய் மாலையை யுடையவனே!
கண் அம்புயம் போல் – கண்கள் தாமரை மலர் போலிருக்கப் பெற்ற,
அரங்கா-!
தலம் ஏழுக்கும் ஆதாரா – ஏழுவகை யுலகங்கட்கும் ஆதாரமாயிருப்பவனே!
கண மங்கையாய் – திருக் கண்ணமங்கை யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே! –
மண் அளந்த அ நாள் – (நீ) உலகமளந்த அக் காலத்தில்,
தாரா கணம் – (வானத்திற் சுற்றுகின்ற) நக்ஷத்திர மண்டலம் (எப்படியிருந்த தென்றால்),
உம்பர் தூவிய தண் மலர் – தேவர்கள் (அக் காலத்தில் உன் மீது) சொரிந்த குளிர்ந்த மலர்கள்,
வீழ் தாரா – பூமியில் விழாதனவாயும்,
கணமும் நில்லா – ஒருகணப் பொழுதேனும் (வானத்தில் ஓரிடத்தில்) நிலையுற்றி ராதனவாயும்,
காற்றில் சூழ் – வாயு மண்டலத்தில் அகப்பட்டுச் சுழல்கின்ற,
வளம் – மாட்சிமையை,
ஒக்கும் – போன்றிருந்தது; (எ – று.) – தான் – அசை.

உனது பெருவடிவத்துக்கு முன் நக்ஷத்திரங்கள் மலர்கள் போலச் சிறி யனவாயின வென்பது, குறிப்பு.
பற்பல நிறமுடையனவாய் விளங்கும் நக்ஷத்திரங்கள், பற்பலநிறமுள்ள மலர்கள்போலும்.
இடையிற் பெருவடிவ மாய் எழுந்த எம்பெருமானைச் சுற்றிலும் நக்ஷத்திரங்கள் வானத்தில் திரிந் ததற்கு,
மலர்கள் காற்றிலகப்பட்டுக் கீழ்விழாமலும் ஓரிடத்துநிலையுறாமலும் சுழலுதலை ஒப்புமைகூறினார்; உவமையணி.
தேவர்கட்குப் பகைவனாய் அவர்களை வென்று அடக்கிய மாவலியைச் செருக்கடக்குதற்குத் திருமால் திரிவிக்கிரமனாய் வளர்ந்த
சமயத்தில் அதுகண்ட களிப்பினால் தேவர்கள் மேலுலகத்தினின்று மலர்மாரி சொரிந்தன ரென்க.

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி முறை முறையின் தாதிலகு பூத்தொளித்தால் ஒவ்வாதே
தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன் -ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது, இச்செய்யுள்.

கண் அம்புயம் போல் அரங்கன் – புண்டரீகாக்ஷன். எல்லாவுலகங்கட் குங் கீழே எம்பெருமான் ஆதி கூர்ம ரூபியாயிருந்து
கொண்டு அவற்றையெல் லாந் தாங்குதலும், பிரளய காலத்தில் அனைத்துலகத்தையும் வயிற்றில் வைத்திருத்தலும்,
பகவானது திவ்விய சக்தியின் உதவியினாலன்றி யாதொரு பொருளும் எங்கும் நிலைபெறாமையும் பற்றி, “தலமேழுக்கும் ஆதாரா” என்றார்.

திருக்கண்ணமங்கை – சோழநாட்டுத் திருப்பதிகளி லொன்று. உம்பர் – இடவாகுபெயர்.
மலர் – பால்பகாஅஃறிணைப்பெயர்; இங்குப் பன்மையின் மேலது. வீழ்தாரா, நில்லா – எதிர்மறைப் பலவின்பால் முற்றுக்கள் எச்சமாய் நின்றன;
ஆதலால், “அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா” என்றபடி இவற்றின் முன் வலி இயல்பாயிற்று.
வீழ்தாரா = வீழா; தா – துணைவினை, ர் – விரித்தல். தாரா கணம் – வடமொழித்தொடர்.

——–

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி
தானந் தியாகந் தருமிழி பாயின தண்ணரங்கத்
தானந் தியாகப் பகன் மறைத்தான் பெயர் தந்திடும்வே
தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே –78 –

தானம் – தானஞ்செய்தலும்,
தியாகம் – தியாகமளித்தலும்,
தவம் – தவஞ்செய்தலும்,
கல்வி – நூல்களை யோதுதலும்,
தீர்த்தம் – புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலும்,
தழலில் அவி நந்து யாகம் – அக்கினியிலே ஹவிஸ் பக்குவமாகப் பெறுகின்ற யாகமும், (என்னும் இவையெல்லாம்)
இழிபு ஆயின தரும் – இழிவான பதவிகளையே (தம்மை யுடையார்க்குக்) கொடுக்கும்;
அந்தி ஆக பகல் மறைத்தான் – மாலைப் பொழுது உண்டாம்படி சூரியனை (ச் சக்கரத்தால்) மறைத்தவனான,
தண் அரங்கத்தான் – குளிர்ந்த திருவரங்க நகருடையானது,
பெயர் – திருநாமமோ,
வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமத்தை தந்திடும் – (தன்னைக் கருதினவர்க்குப்) பிரமனும் சிவனும் இந்திரனும்
அறிய மாட்டாத பரம பதத்தைக் கொடுத்திடும்) (எ – று.) – இரண்டாமடியில், தான் – அசை.

ஆதலால், அவன் திருநாமத்தைக் கூறிப் பரமபதமடையுங்க ளென்பது, குறிப்பு.
நற்கதி பெறுதற்குஉரிய உபாயமென்று கொள்ளப்படுகிற தானம் முதலிய அனைத்தினும் பகவந் நாம ஸ்மரணத்துக்கு
உள்ள மகிமையை வெளி யிட்டார்.
மற்றவையெல்லாம், அழியுந் தன்மையனவான இழிந்த இந்திரன் முதலிய இறையவர் பதங்களையே கொடுக்க மாட்டும்;
நாமஸ்மரணமோ, அந்தமி லின்பத்து அழிவில் வீட்டைத் தரும் என வேறுபாடு விளக்கப்பட்டது.

இங்குத் தானம் முதலியனவாகக் கூறினது, சுவர்க்கம் முதலிய சிற்றின் பங்களை உத்தேசித்துச் செய்யும் காமியகருமங்களை;
முத்தி யுலகத்து நிரதிசய வின்பத்தைப் பெறுதற்கு உபயோகமாகச் செய்யும் நிஷ்காம்ய கருமங்களை யன்றென் றறிக.

தானம் – சற் பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும்,
தியாகம் – வரையறை யின்றிப் பொதுப்படக் கொடுத்தல் என்றும் வேற்றுமை யுணர்க;
முன்னது – புண்ணியக் கொடை யென்றும், பின்னது – புகழ்க் கொடை யென்றுங் கூறப்படும்.

தாநம், த்யாகம், தபஸ், தீர்த்தம், ஹவிஸ், யாகம், வேதா, நந்தீ, ஆகண் டலன், பரந்தாமம் – வடசொற்கள்.
அவி – வைதிகாக்கினியில் மந்திர பூர்வமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம் முதலிய தேவருணவு.
நந்துதல் – கெடுதல்; இங்கு, நன்றாகப்பசநமாதல். நந்துயாகம் – வினைத்தொகை.
நந்தியாகம் என்பதில் இகரத்தை, “யவ்வரி னிய்யாம்” என்றபடி நிலை மொழி யீற்றுக் குற்றியலுகரம் திரிந்த தென்றாவது,
“யவ்விற்கு, இய்யும் மொழி முதலாகி முன் வருமே” என்றபடி வருமொழி வடசொல்லின் யகரத்துக்கு முன் வந்த இகர மென்றாவது கொள்க.
ஆகண்டலன் – (பகைவரை) நன்றாகக் கண்டிப்பவன். பரந்தாமம் – மேலான இடம். தரும் – முற்று. இழிபாயின – பெயர்; செயப்படுபொருள்.
தந்திடும் என்றதில் இடு – துணிவுணர்த்தும். பகல் – சூரியனுக்கு இலக்கணை.
நந்தி என்றதன் நகரம், யமகத்தின் பொருட்டு னகரமாகப் கொள்ளப்பட்டது.

————-

தாமரை மாத்திரை மூப்பற்ற வானவர் தண்ணறும் செந்
தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க
தாமரை மாத்திரை போல்வளைந் தேற்றுத் தருப் பொருட்டால்
தாமரை மாத்திரைக் கேசங்கி னோசையிற் சாய்ந்தனரே –79-

தாமரை மாத்திரை – பதுமமென்னுந் தொகை யளவுள்ளவர்களான,
மூப்பு அற்ற வானவர் – முதுமை யில்லாத இயல்பை யுடைய தேவர்கள்,
தரு பொருட்டால் – பாரிஜாத தருவின் நிமித்தமாக,
திரை தண் நறுஞ் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை – திருப் பாற்கடலிற் குளிர்ந்த பரிமளமுள்ள
சிவந்த தாமரை மலரின் மீது தோன்றினவளான திருமகளினது கணவரும் குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை இடமாகக் கொண்டவருமாகிய நம்பெருமாளை,
மா திரை போல் வளைந்து ஏற்று – பெரிய திரைச் சீலை போலச் சூழ்ந்து எதிர்த்து,
சங்கின் ஓசையின் – (அப் பெருமான் ஊதி முழக்கிய) சங்கத்தினோசையினால்,
தாம் -,
அரை மாத்திரைக்கே – அரை மாத்திரைப் பொழுதிலே,
சாய்ந்தனர் – மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

பதுமமென்பது, ஒருபெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி.
இங்குப் பதுமமென்ற அத்தொகையை அதற்கு ஒருபரியாயநாமமாகிற “தாமரை” என்ற சொல்லினாற் குறித்தது. லக்ஷிதலக்ஷணை.
மாத்ரா என்ற வடசொல் விகாரப்பட்டது.
தா – வருத்தம் மிக்க,
மரை – மரணமும்,
மா – மிகுந்த,
திரை – தோற்சுருக்கமும்,
மூப்பு – முதுமையும்,
அற்ற வானவ ரென்று உரைப்பாரு முளர். திருப் பாற்கடல் கடைந்த போது, அதனினின்று மலர்ந்த செந்தாமரை மலரை
ஆசனமாகக் கொண்டு திருமகள் திருவவதரித்தனளென்று புராணம் கூறும்.

முதலடியிலும் இரண்டாமடியிலும் வந்த “தாமரை” என்ற சொல்லுக்குப் பொருள் வெவ்வேறாதலால், யமக விலக்கணம் சிதைந்ததாகாது.
மா – இலக்குமியைக் குறிக்கையில், வடசொல். திரை – அலை; கடலுக்குச் சினையாகுபெயர்.
பொருட்டு – நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு; ஆல் – அசை.
மாத்திரை – கண்ணிமைப் பொழுது, அல்லது கைந் நொடிப் பொழுது.
திரைச் சீலை யுவமை – பிறர் காண வொண்ணாதபடி சூழ்ந்து கொள்வதற்கு.

———-

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் தண் புனல் அரங்கே
சாகைக்குந் தத்துப் படையாழி யேந்த றமர்கள் வெய்யோர்
சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே–80-

சாகை – கிளைகளை யுடைய,
குந்தத்து – குருந்த மரத்தின் மேல்,
துகில் தூக்கி – (கோப ஸ்திரீகளுடைய) சேலைகளை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு,
மாதர் தமை நகைத்தாய் – அந்த இடைப் பெண்களை நோக்கிப் பரிகாசமாகச் சிரித்தவனே!
சாகைக்கும் தத்துவங்கட்கும் எட்டாய் – வேதங்களுக்கும் தத்துவங்களுக்கும் எட்டாதவனே!
தண் புனல் அரங்கம் ஈசா – குளிர்ச்சியான நீர் வளத்தை யுடைய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவனே! –
கை – (நினது) திருக் கைகளில்,
குந்தத்து – குந்தமென்னும் ஆயுதத்தோடு,
புடை ஆழி – பகை யழிக்க வல்ல சக்கரத்தையும்,
ஏந்தல் – தரித்திருத்தல்,
வெய்யோர் சாகைக்கும் தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும் – துஷ்டர்கள் அழியுமாறும்
அடியார்கள் துன்பம் நீங்குமாறும் நீகொண்ட கருத்தினாற் போலும்; (எ – று.)

“போலும்” என்பது – ஒப்பில்போலி: அதாவது – உவமைப் பொருள் தராத “போல்” என்னுஞ் சொல்;
“ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்” என்ற தொல்காப்பியத்தால்,
அச் சொல் உரையசைப் பொருளதாகி வாக்கியாலங்காரமாய் நிற்கு மென்று விளங்குதலால்,
எம்பெருமான் திருக்கைகளிற் சிறந்த படைக்கலங்களைக் கொண்டிருத்தல் துஷ்ட நிக்கிரகஞ் செய்து சிஷ்ட பரிபாலனம்
பண்ணுஞ் சங்கல்பத்தினாலேயே யாமென்ற கருத்து அமையும்.
சாகை – வேதத்தின் பகுப்பு; வேதத்துக்குச் சினையாகு பெயர்.
தத்துவங்கள் – ஐம்பொறி, ஐம்புலன், ஐம்பூதம், ஐந்துகருமேந்திரியம், பிரகிருதி, மஹாந், அகங்காரம், மநஸ் என்பன.
எட்டுதல் – புலனாதல். இனி, வேதங்கட்கும் மற்றைத் தத்துவ நூல்கட்கும் சிறிதளவே யன்றி
முழுவதுஞ் சொல்ல முடியாதவனே யென்று உரைப்பினும் அமையும்;
இப் பொருளில், தத்துவமென்பது – அதனை யுணர்த்தும் நூலுக்கு ஆகு பெயராம். தமர் – தம்மைச் சேர்ந்தவர்.

சாகா, தத்வம், ஸங்கல்பம் – வடசொற்கள்.
கை குந்த துப்பு உடை ஆழி ஏந்தல் என்று பதம் பிரித்து, கை – கையில், குந்த – இருக்க,
துப்பு உடை ஆழி ஏந்தல் – வலிமையை யுடைய சக்கரத்தைத் தரித்தல் என்று உரைத்தலு மொன்று.

“தமர்கள் வெய்யோர் சாகைக்கும் தத்துத் தவிர்கைக்கும்” என்ற தொடரில்,
“தமர்கள்” என்பது “தத்துத் தவிர்கை” என்பனோடும்,
“வெய்யோர்” என்பது “சாகைக்கும்” என்பதனோடுமாக மாறிச் சென்று இயைதல், எதிர் நிரனிறைப் பொருள்கோள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -41-60-

January 24, 2022

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள் இலைக்
கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக்
கலக் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே –41-

கலக்கு – (மனத்தைக்) கலங்கிச் செய்கிற,
ஊழை – ஊழ் வினையை,
கைக்கும் – வெறுத்து ஒழிக்க வேண்டு மென்னும்,
கருத்து உடையீர் -எண்ணத்தை யுடையவர்களே! (நீங்கள்),
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்திலே, –
காது – (பகைவரை) மோத வல்ல,
படைக் கலம் – ஆயுதங்களை யுடைய,
கூழை கைக்குள் – படை வகுப்பின் ஒழுங்கினிடையிலே,
வரு – (போர்க்கு) வந்த,
வாணனை – பாணாசுரனை,
கண் நுதலும் விட்டு அகல – (தன்னைச் சரண மடைந்தது பற்றிப் பாதுகாப்பதாக உடன் பட்ட) நெருப்புக் கண்ணை
நெற்றியிலுடையவனான சிவபிரானும் (பாதுகாக்கமாட்டாமற்) கைவிட்டு விலக,
கூழை கை குப்பை கண்டானை – (அவ் வாணனது) குறைபட்ட கைகளின் குவியலைக் கண்டவனை
(அவன் கைகளைத் துணித்து வீழ்த்திக் குவியல் செய்தவனான எம்பெருமானை),
வீதியில் கண்டு – திருவீதியிலே உத்ஸவங்கண்டருளத் தரிசித்து,
உவந்து – மன மகிழ்ந்து,
இலை கலம் கூழை கைக்கும் கறி இட்டு துய்த்தும் இரும் – இலையாகிய பாத்திரத்திலே கூழாகிய
இழிந்த வுணவைக் கசக்கின்ற கறிகளைச் சேர்த்து உண்டு கொண்டாயினும் வசித்திருங்கள்; (எ – று.)

வறுமையினால் வருந்தியாயினும் நம்பெருமாளைச் சேவித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திலே வசித்தல் கொடிய பழவினையை
யொழித்து முத்தி பெறுவித்தற்குச் சாதனமாகு மென்று சனங்களுக்கு உபதேசித்தவாறாம்.
அரங்கத்துள் கண்டு உவந்து இரும் என இயையும்.

இரண்டாமடியில், கலம் – உண்கலம், கைக்கும் – இனியதல்லாத என்றபடி.
கறி – கறிக்கப்படுவது; கறித்தல் – கடித்துத் தின்னுதல். இட்டுந் துய்த்து என்றவிடத்து உம்மை மாற்றப்பட்டது.
காது படைக்கலம் – வினைத்தொகை. படைக்கலம் – போர்க்கருவி.
கண்ணுதல் – வேற்றுமைத் தொகை யன்மொழி. கை – படைவகுப்பினது, கூழைக்குள் – பின்னணிக்குள்ளே,
வரு – வருகின்ற என்று உரைப்பாரு முளர்.
நான்காமடியில், கைக்குப்பை – கைகளின் தொகுதியை, கூழைகண்டான் – குறை செய்தவனென்று இயைத்து உரைப்பினுமாம்.

————-

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய் காலன் என்னும்
கண்ணா கனாவி கவர்வதுவே மெய்கதி நல்கேனக்
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள் காரங்கற்
கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –42-

யாவும் – (செல்வம் இளமை முதலிய) எல்லாப் பொருள்களும்,
கனாவின் கண்ட பொருள் போல பொய் – சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப் பொய்யாகும்
(சிறிதும்நிலைபேறின்றி அழியு மென்றபடி);
காலன் என்னும் கண்டகன் ஆவி கவர்வதுவே மெய் – யம னென்கிற கொடியவன் (பிராணிகளின்) உயிரை
(உடம்பினின்று) கவர்ந்து கொள்ளுதலே உண்மை: (ஆதலால்),
கதி நல்கு – (எனக்கு) உயர்ந்தகதி யாகிய பரமபதத்தை. அளித்தருள்வாய்,’
என – என்று (கண்டாகர்ணன்) பிரார்ததி்க்க,
கண்டகனா இ பொழுதே செல்க என்று அருள் – ‘கண்டா கர்ணனே! இப்பொழுதே (பரமபதத்திற்குச்)
சென்று சேர்வாயாக’ என்று சொல்லி அருள் செய்த,
கார் அரங்கன் – (கைம்மாறு கருதாத கொடையிலும் கரிய திருநிறத்திலும் குளிர்ச்சியிலும் காளமேகம்) போன்றவனான ஸ்ரீரங்கநாதனை,
கடிது – விரைவில்,
கண் தக கண்டு – கண்கள் தகுதி பெறுமாறு தரி சித்தும்,
நா இன்புஉற வாழ்த்தி – நாக்கு இனிமை யடையுமாறு துதித்தும்,
உய்ம்மின் – ஈடேறுங்கள்; (எ – று.)

காலன் – பிராணிகளின் ஆயுட் காலத்தைக் கணக்கிடுபவன். கண்டகம் – முள்;
அதுபோலப் பிராணிகளை வருத்துபவன், கண்டகன்.
மூன்றாமடியில் ‘கண்டகனா’ என்பது – வடமொழிச்சிதைவு.
செல்கென்று – தொகுத்தல்.
கண் தக நா இன்புற கண்டு வாழ்த்தி – முறைநிரனிறைப்பொருள்கோள்.
கண் தக – கண் படைத்த பயன் பெற என்றபடி.
அரங்கற்கண்டகநா வின்புறக்கண்டு என்றவிடத்து, உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது:
உயர்திணைப்பெயரீற்று னகரமெய் பொதுவிதிப்படி வலிவர இயல்பாகாது றகரமாத் திரிந்தது,
இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால்;
‘இயல் பின் விகாரம்.’ நாவின்புற என்றவிடத்து, நகரவேறுபாடு, யமகநயத்தின் பொருட்டுக் கொண்டது.

————-

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் தீங்கு நன்காகும் பராக்
கடிக்கும் பணியலர் தாழ்வார் கல்லாமையும் கற்றமையாம்
கடிக்கும் பணி யறம் எல்லாம் அரங்கர் பைம் கன்னித் துழாய்க்
கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே –43-

அரங்கர் – ரங்கநாதரது,
பைங் கன்னி துழாய் கடிக்கும் – பசிய இளமையான திருத்துழாய் மணம் வீசப் பெற்றனவும்,
பணி ஒளிக்கும் – ஆபரணங்கள் விளங்கப் பெற்றனவமான,
நல்ல பாதம் – அழகிய திருவடிகளை
கருதினர்க்கு – தியானித்தவர்கட்கு,
கடிக்கும் பணி நஞ்சு அமுது ஆகும் – கடிக்கிற பாம்பின் விஷமும் அமிருதமாகும்;
தீங்கும் நன்கு ஆகும் – (பிறர் செய்யுந்) தீமையும் நன்மையாய் முடியும்;
பராக்கு அடிக்கும் பணியலர் தாழ்வார் – பராமுகஞ் செய்து அவமதிக்கிற பகைவர்களும் கீழ்ப் படிந்து வணங்குவார்கள்;
கல்லாமையும் கற்றமை ஆம் – பயின்றறியாத பொருள்களும் பயின்றன போல விளங்கும்;
பணி அறம் எல்லாம் கடிக்கும் – (சாஸ்திரங்களிற்) சொல்லப்பட்ட தருமங்களெல்லாம் சித்திக்கும்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளை மநநஞ் செய்பவர்க்கு நேர்கிற இஷ்டப் பிராப்தியும், அநிஷ்ட நிவிருத்தியும் இச் செய்யுளிற் கூறப்பட்டன.

பணம் – படம்; அதனையுடையது, பணீ எனப் பாம்புக்குக் காரணக் குறி: அவ்வடசொல், பணியென ஈயீறு இகரமாயிற்று.
பராக்கடித்தல் – முகங்கொடாது அசட்டை செய்தல்; ஏமாற்றுதலுமாம்.
பணியலர் – வணங்காதவர்; எனவே, பகைவராயிற்று: எதிர்மறைப் பலர் பால் வினையாலணையும் பெயர்.

மூன்றாமடியில், கடித்தல் – கிடைத்தல். பணியறம் – வினைத்தொகை; இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொண்டு,
கைங்கரிய ரூபமான நல்வினைப் பயன்களெல்லாம் கை கூடு மெனினுமாம்.

நான்காமடியில், கடிக்கும் என்பது – கடி என்ற உரிச்சொல்லின் மேற் பிறந்த எதிர்காலப் பெயரெச்சம்.
ஒளித்தல் – ஒளி செய்தல். ‘கடிக்கும்’, ‘ஒளிக்கும்’ என்ற தெரிநிலைப் பெயரெச்சங்களும்,
‘நல்ல’ என்ற குறிப்புப்பெயரெச்சமும், அடுக்கி, ‘பாதம்’ என்ற பெயரைக் கொண்டன.
முதலிரண்டடிகளில் முரண்தொடை காண்க.
கடிக்கும் பணி நஞ்சு அமுதாதல் முதலியவற்றைப் பரம பாகவத னான பிரகலாதன் முதலாயினாரிடம் காணலாம்.
ஒளிக்குந்நல்ல, நகர மெய் -விரித்தல்.

————-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும் விண் மீ
தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும் சென்றெதிர் மோ
தினகரனாருயிர் செற்றார் அரங்கர் திகிரி சங்கேந்து
தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –44-

தினகரன் – சூரியனும்,
ஆர்கலி – கடலும்,
தீ – அக்கினியும்,
காற்று – வாயுவும், (ஆகிய இவைகளெல்லாம்),
ஒடுங்கும் செயலும் – தம் தம் வரம்பு கடவாது ஓரெல்லைக்கு உட்பட்டு அடங்கி யிருக்குஞ்செயலும்,
விண் மீதில் நகரனார் கொண்டல் ஏழ் செருக்காமையும் – வானத்தில் (அமராவதி யென்னும்) நகரத்தை யுடையவனான
இந்திரனாற் செலுத்தப்படுகிற ஏழு மேகங்களும் செருக்கி அளவிறந்த மழை பொழிந்து உலகங்களை யழித்திடாமையும்,
(என்னும் இவை யாதுகாரணத்தா லெனின்),
சென்று எதிர் மோதின கரன் ஆர் உயிர் செற்றார் – எதிராக வந்து பொருத கரனென்னும் அரக்கனது அருமையான உயிரை யொழித்தவரும்,
திகிரி. சங்கு ஏந்தின கரனார் – சங்க சக்கரங்களைத் தரித்த திருக்கைகளை யுடையவரும்,
நம்பெருமாள் – நம்பெருமாளென்று திருநாம முடையவருமான,
அரங்கர் – ரங்கநாதப்பிரான்,
அமைத்த – நில்லென்று குறித்து வைத்த,
திரு கை – திருக்கையை,
கண்டே – பார்த்தேயாம்; (எ – று.)

திநகரன் முதலியன அமைந்து நடப்பது திருவரங்கர் திருக்கை கொண்டு குறிப்பித்த திருவாணையைக் கண்டேயாமென
அப்பெருமானது ஸர்வ நியாமகத்வம் இதிற் கூறப்பட்டது.

நெடும் கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதுவும்-ஊழிதனில்
சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி யரங்கேசர் தம் திருவாணையினே-திருவரங்கத்து மாலை

திநகரன் – பகலைச்செய்பவன்: வடசொல்.
ஆர்கலி – நிறைந்த ஓசையையுடையது; வினைத்தொகையன்மொழி.
விண்மீதினகரனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – உயர்வுப்பொருளது.
கொண்டல் – நீர்கொண்ட மேகம்; தொழிலாகுபெயர்.
கொண்டலேழ் – ஸம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
இந்திரன் மேகவாகன னாதலால், ‘விண்மீதினகரனார்கொண்டலேழ்’ எனப்பட்டது.
ஆர்கொண்டல் என்றெடுத்து, ஒலிக்கின்ற மேகம் எனப் பொருள்கொள்ளினுமாம்.
ஆர்உயிர் – பண்புத்தொகை.
‘நம்பெருமாளமைத்த திருக்கை’ என்றது, அபயஹஸ்தமாயமைந்த வலத்திருக்கையை.
கரன் என்ற வடசொல் – கொடியவனென்று பொருள்படும்; இவன் இராவணனுக்குத் தம்பி முறையில் நிற்கின்ற ஓரரக்கன்;
தண்ட காரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறிப்பிட்ட ஜனஸ்தானமென்ற விடத்தில் அவட்குப்
பாதுகாவலாக இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர் சேனைக்கு முதல் தலைவன்.

————

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திரு கா விரிக்கும் – அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற,
யமுனைக்கும் – யமுனா நதிக்கும்,
கங்கைக்கும் – கங்கா நதிக்கும்,
தெள் அமுது ஆம் திரு காவிரிக்கும் – தெளிவான அமிருதம் போலினிய தாகிற மேன்மை யுள்ள காவேரி நதிக்கும்,
கடற்கும் – சமுத்திரத்துக்கும்,
பிரான் – தலைவனான எம்பெருமானது,
தென் அரங்கம் – அழகிய திருவரங்கம்,
என்ன – என்று (ஒருதரமேனும் வாயினாற்) சொல்ல,
அன்பு உய்த்து இருக்கா – அன்பு செலுத்தியிராமல்,
திருக்கு ஆவிர் – மாறுபடுவீர்கள்;
இக்கு மொழியார்க்கு – கருப்பஞ்சாறு போலினிய சொற்களை யுடைய மகளிர் திறத்திலோ,
தீ மெழுகு ஆவிர் – தீப்பட்ட மெழுகு போலக் கரைந்து உருகுவீர்கள்; (இவ்வாறு ஆக),
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமாது எ ஆறு – அப்பெருமான் உங்களுடைய பிறப்பை யொழிப்பது எங்ஙனம் நிகழும்? (எ – று.)

திருவரங்கமென்று வாயினாற் சொல்லுதலுஞ் செய்யாமல் விஷயாந்த ரங்களில் ஊன்றி நிற்கின்றீர்களே,
அவன் உங்கள் ஜந்மத்தை எங்ஙனம் ஒழிப்பான்? என்று, நல்வழிச் செல்லாதவர்களைக் குறித்து இரங்கிக் கூறினர்.
‘திருக் காவிரிக்கும்’ என்ற அடைமொழியைக் கங்கை காவிரிகட்குங் கூட்டலாம்.
யமுனைக்குப் பிரான் என்றது, யமுநாநதிதீரத்திற் கிருஷ்ணாவதாரஞ் செய்து பல திருவிளையாடல்களை நிகழ்த்தி யருளியதனால்.
கங்கைக்குப் பிரான் என்றது, அந்நதி திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமாதலால்.
காவிரிக்குப் பிரான் என்றது உபயகாவேரி மத்தியிற் பள்ளி கொண்டருளுதலால்.
கடற்குப் பிரான் என்றது, கடலை உறைவிடமாகக் கொண்டிருத்தலால்.
யமுனை கங்கை முதலிய புண்ணியநதிகளின் தீர்த்தத்தினும் காவேரி தீர்த்தத்திற்கு உள்ள இனிமை மிகுதி தோன்ற,
அதற்கு ‘தெள்ளமுதாம்’ என்ற அடைமொழி கொடுத்தார்.

யமுநா என்ற வடமொழி – யமனுடன் பிறந்தவன் என்று பொருள்படும். யமனும் யமுனையும் சூரியன் மக்க ளென்றறிக.
காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
இக்ஷு, ஜந்மம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இருக்கா = இராமல்; ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சம்;
கு – சாரியை; உடன்பாட்டு இறந்த கால வினை யெச்சமாக ‘இருந்து’ எனப் பொருள் கொண்டு,
‘தீமெழுகாவிர்’ என்றதனோடு இயைப்பினும் அமையும்.

———–

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு
சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்மந் தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கஞ்
சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே –46-

சென்மம் – (மாறி மாறி வருந் தன்மை யனவான) பிறப்புக்கள்,
தரங்கம் – (மாறி மாறி வரும்) அலைகளை யுடைய கடலாகும்;
கருமம் – (உயிர்களைப் பிறப்பிலே சுழலச் செய்வதான) ஊழ்வினை,
சுழி – (அகப்பட்ட பொருள்களைத் தன்னில் உழலச்செய்வதான) நீர்ச் சுழியாகும்;
பிணி – (பிறந்த உயிர்களை வருத்துகின்ற) தேக வியாதிகளும் மநோ வியாதிகளும்,
சேல் – (நீரி லிழிந்தாரைக் குத்தி வருத்துகிற) மீன்களாகும்;
குசென் – அங்காரகனும்,
மந்தர் – சனியும்,
அம் கதிர் – அழகிய சூரிய சந்திரர்களும்,
பொன் – பிருகஸ்பதியும்,
கோள்கள் – மற்றைய கிரகங்களும்,
மாரி – மழையும்,
திண் கூற்று – (பிராணிகளைத் தவறாது அழிக்கும்) வலிமையுடைய யமனும்,
அசனி – இடியும்,
(ஆகிய ஆதி தைவிகத் துன்பங்கட்குக் காரணமான தேவ வர்க்கங்கள்),
இனம் – (அம் மீனின்) இனமாய்ப் பிராணிகளை வருத்துகிற நீர் வாழ் ஜந்துக் களாகும்;
அவற்றுள் செல் மந்தர் – அப் பிறப்புக்களிலே (கரும வசத்தாற்) சென்று அகப்பட்டுக் கொண்ட அற்ப பாக்கியமுடைய மனிதர்கள்,
அங்கு விழுவோர் – அக் கடலில் விழுந்து வருந்துபவர்களாகும்;
செல் மந்தரம் கவின் தோளார் அரங்கர் திரு பதமே – மேகந் தவழும் மந்தர கிரி போன்ற அழகிய தோள்களையுடையவரான ரங்கநாதரது திருவடியே,
கரை சேர்க்கும் வங்கம் – (அப்பிறவிக் கடலினின்று) முத்திக் கரை சேர்க்கும் மரக்கலமாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலை.

அவயவி அவயவம் முதலிய அனைத்தையும் இங்ஙனம் உருவகஞ்செய்து உரைத்தது. முற்றுருவகவணி;
வடநூலார் ஸகலரூபக மென்பர்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்,”
“அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” என்பவாதலால்,
‘சென்மம்தரங்கம் செல் மந்த ரங்கு அவற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கம் அரங்கர் திருப்பதமே’ என்றார்.

‘செல்மந்தரம்’ என்றது, மந்தரத்தின் உயர்வு தோன்றக் கூறியதாம். அஷ்ட குல பர்வதங்களி லொன்றாகிய
மந்தரமலை போல ஓங்கி வளர்ந்த தோளென்க;
பாற்கடலைக் கலக்கிய மந்தரம் போலப் போர்க் கடலைக் கலக்குந் தோளென்றுங் கொள்க.

செல்வது செல் என மேகத்துக்குக் காரணக்குறி. கவின் – உவம வுருபுமாம்.
ஜந்மம், தரங்கம், கர்மம், குஜன், மந்தர், அசநி, பதம் – வடசொற்கள்.
தரங்கம் – கடலுக்குச் சினையாகுபெயர்.
குஜன் என்ற பெயர் – பூமியினின்று பிறந்தவ னென்றும்,
மந்தன் என்ற பெயர் – (நொண்டியாதலால்) மெதுவாக நடப்பவ னென்றும் பொருள்படும்.
குசென் என்றது, யமகநோக்கிய விகாரம்.

இரண்டாமடியில் ‘மந்தர்’ என்ற பன்மை – இழிவுணர்த்தும்.
செல் மந்தரம் கவின் தோளார் என்பதற்கு – மேகமும் மந்தர கிரியும் போன்ற திருமேனி யழகையும்
தோள்களை யுமுடையவ ரென்று உரைத்தலு மொன்று;
மேகம் போன்ற அழகிய மேனியும், மந்தரம் போன்ற தோளுமென முறைநிரனிறை.

மூன்றாமடியில், மந்தர் – மந்த புத்தி யுடையாருமாம்.

————-

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம லங்க ளறுசீ ரரங்க பகட்டயிரா
பதக்கம லங்கரித் தூர்வோன் சிவனையன் பார்க்கவந்துன்
பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே –47-

பதக்கம் – பதக்கமென்னும் அணிகலத்தையும்,
அலங்கல் – (பலவகை) ஆரங்களையும்,
அணி – அணிந்த,
மார்ப – திருமார்பையுடையவனே!
இமையோர் – தேவர்கள்,
பொன்னி படிந்து – திருக்காவேரி தீர்த்தத்தில் நீராடி,
பதக்கம் மலங்கள் அறு – தீவினைகளாகிய அசுத்தம் நீங்கப் பெறுதற்கிடமான,
சீர் அரங்க – ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
பகடு அயிராபதம் கம் அலங்கரித்து ஊர்வோன் – பெருமையை யுடைய ஐராவதமென்ற யானையின்
மத்தகத்தைச் சிங்காரித்து ஏறி நடத்துபவனான இந்திரனும்,
சிவன் – சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
பார்க்க -, வந்து (நீ) எழுந்தருளி,
உன் பதம் கமலங்கள் அடியேன் தலைக்கு பாலிப்பது – உனது திருவடித் தாமரை மலர்களை அடியேனுடைய
முடியில் வைத்து அருள்செய்வது, என்று – எந்நாளோ! (எ – று.)

அலங்கல் – தொங்கியசைதல்; மாலைக்குத் தொழிலாகுபெயர்.
இமையோர் – கண் இமையாதவர்.
யமகத்தின்பொருட்டு, பாதகம் என்ற வடசொல் குறுக்கலும் விரித்தலு மாகிய விகாரங்களைப் பெற்றுப் பதக்கம் என நின்றது.
அயிராபதம் – ஐராவதம் என்ற வடசொல்லின் போலிவிகாரம்.
கம், சிவன், பதம், கமலம் – வடசொற்கள். கம் – தலை. சிவம் – சுபம்; அதனை(த் தன் அடியார்க்கு)ச் செய்பவன், சிவன்.
அயிராபதப்பகடு என்று மாற்றி, ஐராவதமென்னும் ஆண்யானை யென்றும் உரைக்கலாம்:
பகடு – யானையின் ஆண்மைப்பெயர். கமலம் என்ற பெயர் – நீரை யலங்கரிப்பது என்று காரணப் பொருள்படும்.

——————

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு மாதர்பால் போகத்தையும்
பாலனம் செய்ய விருப்பதி லையம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே –48-

பால் அனம் – வெண்ணிறமான அன்னப் பறவைகள்,
செய் – கழனிகளில்,
அமர் – பொருந்தி வசிக்கப் பெற்ற,
நாடு – தேசத்தை,
ஆண்டு – அரசாட்சி செய்து,
பூணொடு பட்டு அணிந்து – ஆபரணங்களையும் பட்டாடையையும் தரித்து,
செய்ய கலத்து பால் அனம் உண்டு – சிவந்த (செம் பொன் மயமான) பாத்திரத்திற் பாற்சோற்றைப் புசித்து,
மாதர் பல் போகத்தையும் பாலனம் செய்ய இருப்பதில் – மகளிர் சேர்க்கையாலாகும் பல வகையின்பங்களையும் பரிபாலித்து வீற்றிருப்பதனினும்,
ஐயம் பருகி – இரந்து பெற்ற கூழைக் குடித்தாயினும்,
நந்தன் பாலன் அம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை – நந்தகோபனது குமாரனும் அழகிய
திரு மகளின் கணவனுமான திருமாலினது ஸ்ரீரங்கத்திலே வாசஞ்செய்தல், நன்று – நல்லது; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

அனம் – ஹம்ஸம் என்ற வடசொல்லின் சிதைவான அன்ன மென்ப தன் தொகுத்தல்.
நீர்வளமிகுதியால் தாமரை முதலிய நீர்ப்பூக்க ளுள்ள விடத்திலே சென்று விரும்பி வாழ்தல் அன்னப்பறவையின் இயல்பாதலால்,
‘பாலனஞ்செய்யமர்’ என்ற அடைமொழி நாட்டின்வளத்தை யுணர்த்தும்.
அணிதல் – பொதுவினை. அனம் = அந்நம்.
பசும் பொன்னினாலாகிய பூணை ‘பைம்பூண்’ என்றல் போல, செம் பொன்னினாலாகிய கலத்தை ‘செய்யகலம்’ என்றார்.
கலம் – உண்கலம். பாலனஞ்செய்தல் – தவறாமல் நுகர்தல்.
செய்ய = செய்து: எச்சத் திரிபு.
தமக்கு உரிய பலவகைப் போகங்களையும் மாதர்கள், பாலனம் செய்ய – தவறாது நடக்கும்படி பாதுகாக்க என்று உரைப்பினும் அமையும்.
இருப்பதில் – ஐந்தனுருபு எல்லைப் பொருளது.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் நகம் சனாற் சிறையிலிருத்தப்பட்டு
வடமதுரையில் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில் கண்ணனாய் அவதரிக்க,
அக் குழந்தையைக் கம்சன் கொல்லக் கூடு மென்ற அச்சத்தால், தாய் தந்தையர் அத் தெய்வக் குழவியின் அநுமதி பெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநாடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவனான
நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவன் மனைவியான யசோதைக்கு
மாயையின்அம்ச மாய்ப் பிறந்திருந்த தொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்து விட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே
நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.
செய்யவள் – செவ்வியையுடையவள். கோமான், மான் – பெயர்விகுதி. பையில்கை = பயில்கை;
இப்போலி, அடுத்த யமகச்செய்யுளின் அந்தாதித் தொடர்ச்சி நோக்கிக் கொள்ளப்பட்டது.
‘பருகி’ என்ற வினையை நோக்கி, ‘ஐயம்’ என்றது – கூழ் எனப்பட்டது. போகம்,, பாலநம், பாலன் – வடசொற்கள்.
நம் செய்யவள் கோமான் என்று எடுத்துரைத்தலுமொன்று.

————

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம் பரந்த குரம்
பையிலத்தி யுள்விளை பாண்டமென்னாமல் புன்பாவையர் தோல்
பையிலகத்தி செய்து நரகெய்து வீருய்யப் பற்றுமினோ
பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே –49-

பையில் – (ஒன்றோடொன்று) பொருந்தி யிருக்கின்ற,
அத்தி – எலும்பும்,
மூளை – மூளையும்,
நரம்பு – நரம்பும்,
ஊன் – தசையும்,
உதிரம் – இரத்தமும்,
பரந்த – பரவிய,
குரம்பை – (உயிர் சிலநாள் தங்குஞ்) சிறு குடிசை (இது):
இலத்தி உள் விளை பாண்டம் – மலம் அகத்திலே மேன்மேலுண்டாகப்பெறும் பாத்திரம் (இது)’,
என்னாமல் – என்று (உடம்பின் அசுத்தத் தன்மையைக்) கருதாமல்,
புல் பாவையர் தோல் பையில் அத்தி செய்து – இழிகுணமுடைய மகளிரது உடம்பினிடத்து ஆசை வைத்து,
நரகு எய்துவீர் – நரகத்தை யடைபவர்களே! – (நீங்கள்),
உய்ய – ஈடேறுமாறு,
அத்திபையில் மேவி துயில் கூர் அரங்கர் பொன் பாதத்தை பற்றுமினோ – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனது) படத்தின் கீழ்த்
திருவுள்ளமுவந்து யோக நித்திரை செய்தருளுகிற ஸ்ரீரங்கநாதருடைய அழகிய திருவடிகளைச் சரணமடையுங்கள்; (எ – று.)

அத்தி என்பது – எலும்பு என்ற பொருளில் அஸ்தி என்ற வடசொல்லும், ஆசை என்ற பொருளில் அர்த்தி என்ற வடசொல்லும்,
கடல் என்ற பொருளில் அப்தி என்ற வடசொல்லும் சிதைந்ததாம்.
பையில் = பயில்; முதற்போலி, ருதிரம், பாண்டம், நரகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
தோற்பை – தோலினாலாகிய பை. அத்தி செய்தல் – அர்த்தித்தல்: வேண்டுதல்.
பற்றுமினோ என்ற ஓகாரம் – கழிவிரக்கத்தைக் காட்டும்.

“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்றுள், எத் திறத்தா ளீர்ங்கோதையாள்”,
“ஊறி யுவர்த்தக்க வொன்பதுவாய்ப்புலனுங், கோதிக் குழம்பலைக்குங் கும்பம்,”
“தோற்போர்வை மேலுந் துளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும், மீப்போர்வை மாட்சித் துடம்பானால் –
மீப்போர்வை, பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப், பைம்மறியாப் பார்க்கப்படும்” என்ற
நாலடியார்ப் பாடல்கள் உடம்பின் அசுத்தியை நன்கு விளக்கும்.

இச் செய்யுளில் அடிதோறும் முதலிலுள்ள ஐகாரம் குறுக்கமாதலால், அதனைத் தனியே நேரசையாகக் கொள்ளாது
அடுத்த குறிலோடு சேர்த்து நிரையசையாகக் கொள்ள வேண்டும்;
இல்லாவிடின், “நேர்பதினாறே நிரை பதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்றது
முதலிய கட்டளைக் கலித்துறை யிலக்கணம் சிதையும்.
கீழ்ச்செய்யுளின் ஈற்றடியில் வந்த “பையில்கை” என்றவிடத்தும் இங்ஙனமே காண்க.

———–

பாதகங் கைக்கு மரங்கர் பல்பேய் பண் டிராவணனுற்
பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார் படிக்கேற்ற திருப்
பாதகங் கைக்குள் விழு முன்னமே பங்கயன் விளக்கும்
பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –50-

பாதகம் – (அடியார்களுடைய) பாவங்களை,
கைக்கும் – வெறுத்தொழிக்கின்ற,
அரங்கர் – ரங்கநாதரும், பல் பேய் – பலபேய்கள்,
பண்டு. முன்னாளில்
இராவணன் உற்பாதம் கம் கைக்கும் என்று எள்ள – இராவணனுடைய உற்பாதமான தலைகள் கசக்குமென்று இகழுமாறு,
கொய்தார் – (அத்தலைகளைத்) துணித்தவருமான திருமால்,
படிக்கு – (தாம் மாவலி பக்கல் வேண்டிய) மூவடி நிலத்தைத் தவறாது பெறுதற்காக,
ஏற்ற – வாங்குதற்கு உடன்பட்ட,
திருப்பாத கம் – (கொடுப்பதைத்) திருப்பக் கூடாத ஜலம்
(வாக்கு தத்தத்தோடு மகாபலி சக்ரவர்த்தி தாரை வார்த்துக் கொடுக்கிற நீர்),
கைக்குள் விழும் முன்னமே – (அப்பெருமானது) அகங்கையில் விழுதற்கு முன்னமே, –
பங்கயன் விளக்கும் பாதம் கங்கை குளிர் நீர் – பிரமன் திருமஞ்சனஞ் செய்த திருவடியின் தீர்த்தமாகிய குளிர்ந்த கங்கா ஜலமானது,
ஈசன் படர் சடைக்கே வீழ்ந்தது – சிவபிரானது பரவிய சடையிலே விழுந்திட்டது; (எ – று.)

மாவலி பக்கல் மூவடி மண் வேண்டிப் பெற்று உலகனைத்தையும் தனது உடைமை யாக்கி அவனைச் செருக்கடக்குதற்கென்று
திருமால் கொண்ட திருவவதாரமாகிய வாமன மூர்த்தியின் கையில் மகாபலி தாரை வார்த்துக் கொடுத்த நீர் விழுவதன் முன்,
அவ் வாமனன் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகமளக்க மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை
அங்குப் பிரமன் தன் கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகிய
கங்காநதி சிவபிரானது சடையில் வீழ்ந்தது என்றார்.

விரைவுமிகுதி தோன்ற; இங்ஙனம் காரணத்தின் முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறுதல், மிகையுயர்வுநவிற்சியணி.

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீரேற்ற தொன்னான் முகத்தோன் விளக்கவும்
செம்போன் முடிக் காரேற்ற யரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன
வண் திருக் குறளாகி நிமிர்ந்த வன்றே -திருவரங்கத்து மாலை

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னியின் மேல்
ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு

உத்பாதம் – வடசொல்: பின்நிகழுங் தீமைக்கு அறிகுறியாக முன்னர்த் தோன்றுந் தீ நிமித்தம்;
இராவணனது பத்துத் தலைகளை உலகத்தின் தீமைக்கு அறிகுறி யென்றும் இனியன வல்லவென்றும்
பிணம் பிடுங்கித் தின்னும் இயல்பினவான பேய்களும் இகழ்வதாகக் கூறியது, அவனது மிக்க இகழற் பாட்டை விளக்கும்.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது: வடசொல்; தாமரைக்குக் காரண விடுகுறி: அதில் தோன்றியவன், பங்கயன்.
ஈசன் – ஐசுவரியமுடையவன். சடைக்கு – உருபுமயக்கம்.

————–

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
பட நாகத் தந்தம் பறித்தோன் புகழைப் பரவுமின்க
பட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன் முற்பல்
பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே –51-

அந்தரம் மீது – பரம பதத்தில்,
படம் நாகத்து – படங்களை யுடைய திருவனந்தாழ்வான்மீது,
இருப்பான் – வீற்றிருப்பவனும்,
எம் பரன் – எமது இறைவனும்,
நாகம் தந்தம் பட பறித்தோன் – (கம்சனேவிய குவலயாபீடமென்னும்) யானையினது தந்தத்தை (அவ்வானை) அழியுமாறு பறித்துக் கொண்டவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
புகழை – கீர்த்தியை,
பரவுமின் – கொண்டாடித் துதியுங்கள்;
(அங்ஙனம் அனைவரும் புகழுமாறு அப்பெருமான் யாதுசெய்தா னெனின்), –
கபடன் – வஞ்சகனும்,
ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் – உடம்பின் அகத்துறுப்பான மனம் தீயவனுமாகிய,
சிசுபாலன் – சிசுபாலனென்பவன்,
முன் – முன்பு,
பல் பட – பலவாறாக,
நா கத்து – நாவினாற் பிதற்றின,
அந்த வசைக்கும் – அப்படிப்பட்ட (மிகக்கொடிய) நிந்தனைச் சொற்களுக்கும்,
தொல் பரகதி தந்தான் – அநாதியான பரமபதத்தைக் கொடுத்தருளினான்; (எ – று.)

சிசுபாலன் எம்பெருமானை இகழ்ந்ததற்குப் பயனாகப் பரகதியைப் பெற்றன னென்றால்,
அப்பெருமானைப் புகழ்வதற்குப் பயன் பரகதி யென்பது கூறாமலே யமையு மென்ற கருத்து, இதில் தொனிக்கும்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு அத்தையும்
சேதி தேசத்தரசனான தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசிரவையென்பவ ளுடைய மகன்.
திருமாலின் துவாரபாலகராகிய ஜயவிஜயர்கள் ஒருசமயத்தில் விஷ்ணுலோகத்தினுட் செல்லவந்த ஸநகாதியோகிகளைத்
தடுத்தமை பற்றி அவர்கள் வெகுண்டுகூறிய சாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப் பகைவராய்ப் பூமியிற் சனித்து
அத்திருமாலின்கையா லிறப்பவ ராகி, முதலில் இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின் இராவண கும்பகர்ணராகவும்,
அப்பால் சிசுபால தந்தவக்கிரராகவுந் தோன்றின ரென அறிக.

எம்பெருமான் பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்க்குத் திருவுள்ள முவந்து மோக்ஷமளிப்பதுபோலவே,
விரோதத்தினாலாகிலும் தன்னைஇடைவிடாது நினைந்திருந்தவர்க்கும் சிறுபான்மை தனது பரம
கிருபையால் அந்த முக்தியை யளிக்கின்றன னென்பது நூற்கொள்கை.

அந்தரம் – வானம், பரமாகாசம். மூன்றாமடியில் ‘கபடநாகத்து’ என்ற விடத்து, னகரவேறுபாடு யமகநயம்பற்றியது.
வசைக்கும், உம் – இழிவு சிறப்பு. பர கதி – உயர்ந்த கதி

————

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன நிரு
பறவையில் மேகலை ஈந்தான் அரங்கன் பணிந்து இமையோர்
பரவையிலாழிப் பிரான் அடிக்கீழுற் பவித்து அழியும்
பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–52-

பரவு – விசாலித்த,
ஐயில் அன்ன கண் – வேலைப்போன்ற (கூரிய) கண்களை யுடைய,
பாஞ்சாலி – திரௌபதி,
நின் பரம் என்ன – ‘(என்னைக் காப்பது) உனது பாரம்’ என்று சொல்லி முறையிட்டுச் சரணமடைய,
நிருபர் அவையில் – அரசர்கள் கூடிய சபையிலே,
மேகலை ஈந்தான் – (அவட்கு) ஆடையை யளித்தவனும்,
இமையோர் பணிந்து பரவு – தேவர்கள் வணங்கித் துதிக்கப்பெற்ற,
ஐயில் ஆழி பிரான் – கூரிய சக்கராயுதத்தை யேந்திய இறைவனுமான,
அரங்கன் – திருவரங்கநாதனது,
அடிக்கீழ் – திருவடியில்,
பரவையில் மொக்குளை போல் – கடலில் தோன்றும் நீர்க் குமிழிகள் போல,
பல கோடி பகிரண்டம் – அநேக கோடிக் கணக்காகிய அண்ட கோளங்கள்,
உற்பவித்து – தோன்றி,
அழியும் – (சிலகாலம் கழிந்தவாறே) மாய்ந்துபோம்; (எ – று.)

வாரித்தலமும் குல பூதரங்களும் வானு முள்ளே –
பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க முன்னாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமுழிகள் போலே முளைத்தனவே -திருவரங்கத்து மாலை

பாஞ்சாலீ – வடமொழித்தத்திதாந்தநாமம். பாஞ்சாலதேசத்து அரசனது மகள்; பஞ்சபாண்டவரது பத்தினி.
மேகலை யென்ற எண்கோவை யிடையணியின் பெயர், ஆடைக்கு இலக்கணை.
மேவு கலை என வினைத் தொகை நிலைத் தொடராக எடுத்து,
விரும்பப்படுகின்ற ஆடை யென்றும், பொருந்திய ஆடை யென்றும் பொருள் கொள்ளலாம்.
ஐயில் = அயில். பஹி ரண்டம் – வெளியண்டம்; இங்கு, அண்டமென்ற மாத்திரமாய் நின்றது. யமகநயத்தின்பொருட்டு,
‘நிருபரவையின் மேகலை’, ‘பரவையின் மொக் குளை’ என்று சந்தி புணர்க்காமல் லகரவீறாகவே நிறுத்திக் கொண்டார்.

————-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –53-

அம் – அழகிய,
பொன் – பொன்னையும்,
முத்து – முத்துக் களையும் கொழிக்கின்ற,
அலை – அலைகள்,
வான் அண்ட – மேக மண்டலத்தை யளாவி யுயர,
மடங்கலை ஈர்த்து ஓடும் – சிங்கங்களை யிழுத்துக் கொண்டு ஓடி வருகிற,
பொன்னி – காவேரி நதியினாற் சூழப்பட்ட,
அரங்கன் – திருவரங்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பெருமான்,
அண்டம் அடங்கலையும் – அண்ட கோளங்களெல்லாவற்றையும்,
தந்து – படைத்து,
காத்து – பாதுகாத்து,
அவை அந்தம் தன்பால் அண்ட மடங்கலை செய் – அவ்வண்டங்களெல்லாம் கற்பாந்த காலத்திலே மீண்டும்
தன் பக்கல் ஒடுங்கும்படி அழிவு செய்கின்ற, காரணம் – ஏது, (யாதெனில்),
காரண்டம் புள் அடங்கு அலை முந்நீர் மகள் உகப்பு ஆக என்றே – நீர்க் காக்கையாகிய பறவைகள் தம்மிலடங்கப் பெற்ற
அலைகளை யுடைய திருப்பாற் கடலினின்று தோன்றிய திருமகள் (கண்டு) களிப்படைதற்கு என்றேயாம்; (எ – று.)

எம்பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலை யுஞ் செய்வது பெரியபிராட்டியாரின் மனத்தை
மகிழ்விக்குந் திருவிளையாட லேயா மென்பது, கருத்து.
இரட்டுறமொழித லென்னும் உத்தியால், ‘முந் நீர்மக ளுகப்பாக’ என்பதற்கு –
(அண்டங்கட்கெல்லாம் அதிஷ்டாந தேவதையான) கடலாடை சூழ்ந்த பூமிப்பிராட்டி மகிழ்ச்சி யடைய வென்றும் பொருள் கொள்ளலாம்.

அண்டமடங்கலையுந் தந்து காத்து அவை அந்தந் தன்பால் அண்ட மடங்கலைச்செய் –
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருமழிசைப் பிரான் –

அடங்கல் என்றது, எஞ்சாமைப் பொருளைக் காட்டும்; உம்மை – முற்றும்மை, அந்தம் அண்ட – அழிவை யடைய,
மடங்கலைச்செய் – ஊழிக்காலத் தைச் செய்கிற வென்றுரைத்தலு மொன்று.
பொன்னும் முத்தும் சிங்கங்களும் – மலையிலுள்ளவை. மலையில் முத்து, யானைத் தந்தம் முதலியவற்றினின்று தோன்றியவை யென்க.
மடங்கல் – (பிடரி மயிர்) மடங்குதலை யுடைய தென ஆண் சிங்கத்துக்குக் காரணக் குறி.
காரண்டவம் – வடசொல். உகப்பு – தொழிற்பெயர்.

———–

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆக மதிக்கு நவநீதக் கள்வ வவனி கொள்வார்
ஆக மதிக் குளம் சேர் ரங்கா வுன்னை யன்றித் தெய்வம்
ஆக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே –54-

ஆகமம் – (காமிகம் முதலிய) ஆகமங்களைக் கூறிய,
திக்கு முகம் மேல் முகம் உடையான் – நான்கு முகங்களுக்கு மேலும் ஒருமுகத்தை (ஐந்து முகங்களை) யுடையவனான சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
வாழ் – இனிது வசிக்கின்ற,
ஆக – திருமேனியை யுடையவனே!
மதிக்கும் நவநீதம் கள்வ – கடைந்தெடுத்த வெண்ணெயை (க் கிருஷ்ணாவதாரத்திற்) களவு செய்துண்டவனே!
அவனி கொள் வாராக – பூமியைக் கோட்டினாற் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த வராக மூர்த்தியானவனே!
மதி குளம் சேர் அரங்கா – சந்திர புஷ்கரிணி பொருந்திய ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
அடியேன் – (உனது) அடியவனான நான்,
உன்னை அன்றி பிறர் ஆரையும் தெய்வம் ஆக மதிக்குள் எண்ணேன் – உன்னை யல்லாமல் வேறு எவரையும்
கடவுளாக மனத்திற் கருதுதலுஞ் செய்யேன்; (எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி பர தேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையே யன்றி அவனது திருமேனியிலடங்கிய
அபரதேவதை களைச் சிறிதும் பொருள் செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியை இங்ஙனம் வெளியிட்டார்.

திருமாலின் திருநாபியிற் பிரமனும், வலப் பக்கத்திற் சிவ பிரானும் அடங்கியுறைதலை,
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன்– என்ற அருளிச்செயல்கொ ண்டும் உணர்க.

இங்கு ‘ஆகமம்’ என்றது, காமிகம் முதல் வாதுளம் ஈறாகச் சொல்லப் படும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை.
சிவபூசை செய்யுந்திறம் சிவ ஸ்வரூபம் முதலியவற்றைச் சொல்லுகிற இந்தச் சைவாகமங்கள் அச்சிவபிரானாலேயே சொல்லப்பட்டவை.

திக்கு என்பது – இலக்கணையால், அதன்தொகையாகிய நான்கென்னும் எண்ணின் மேல் நின்ற தென்க.
சிவபிரான் நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களோடு மேல் நோக்கிய ஊர்த்துவமுக மொன்றுமாக
ஐந்துமுகங்களையுடையா னென்ற விவரம் விளங்க,
‘திக்கு முகமேல் முகமுடையான்’ என்றன ரென்றுங் கொள்ளலாம்.

சதாசிவமூர்த் தியினுடைய ஐந்து முகங்களுள்ளும்
சத்தியோசாதமென்னும் முகத்தினின்று காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
வாமமென்னும் முகத்தினின்று தீப்தம் சூக்குமம் சகத்திரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
அகோரமென்னும் முகத்தினின்று விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்நேயம் வீரம் என்னும் ஐந்துஆகமங்களும்,
தத்புருஷமென்னும் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் விம்பம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
ஈசாநமென்னும் முகத்தினின்று புரோற்கீதம் லளிதம் சித்தம் சந்தாநம் சர்வோக்தம் பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்னும்
எட்டு ஆகமங்களும் தோன்றின வென்று அறிக.

நவநீதம் என்ற வடசொல் – புதிதாக ஈட்டப்பட்டது என்றும், அவநி என்ற வடசொல் – காத்தற்கு உரியது என்றும் காரணப் பொருள்படும்.
கள்வன், வ் – பெயரிடைநிலை. சந்திரபுஷ்கரிணி – க்ஷயரோகமடைந்து அழியும் படி தக்ஷப் பிரஜாபதியினாற் சாபமடைந்த
சந்திரன் தவஞ்செய்து அச் சாப நிவிருத்தி பெற்ற குளம்.
மதி – நன்குமதிக்கப்படுபவன். மதி – அறிவு; வடசொல். ‘மதிக்குள் வையேன்’ என்றும் பாடம்.

———–

ஆரத் தநந்தருந் தாய்தந்தை யா நந்த மாவரிகழ்
ஆரத் தநந்தனன் றீமை கண்டாலங்கவுத் துவ பூண்
ஆரத் தநந்த சயனா வணியரங்கா திகிரி
ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –55-

அத்த – (எனது) தந்தையே!
அம் கவுத்துவ – அழகிய கௌஸ்துபமென்னும் இரத்தினத்தைத் (திருமார்பில்) தரித்துள்ளவனே!
பூண் ஆரத்து – அணிந்த ஹாரங்களையுடைய,
அநந்தசயனா – ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனே!
அணி அரங்கா – அழகிய திருவரங்கத்துக்குத் தலைவனே!
திகிரி ஆர் அத்த – சக்கராயுதம் பொருந்திய திருக்கையை யுடையவனே!
நந்தன் மதலாய் – நந்தகோபன் வளர்த்த குமாரனே! –
ஆர தநம் தரும் தாய் – (தான் பெற்ற பிள்ளைக்குக்) குடிக்க முலைப் பாலைக் கொடுக்கிற தாயும்,
தந்தை – தந்தையும்,
நந்தனன் தீமை கண்டால் – தமது புதல்வன் (இளமையில் தம்மை உதைத்தல் ஏசுதல் முதலிய) தீங்குகள் செய்தலைக் கண்டால்,
ஆநந்தம் ஆவர் – மகிழ்ச்சி யடைவரே யன்றி,
இகழார் – வெறுப்புக் கொள்ளார்: –
என் தீங்கு உனக்கு அ தன்மைத்தே – (அறிவிற் சிறியேனான) எனது பிழையும் (எந்தையான) உனக்கு அத் தன்மையதேயாம்; (எ – று.)

அன்பிற் சிறந்த தாய் தந்தையர் தம் மக்கள் இளமையிற் செய்கிற சிறு குறும்புகளைப் பொருள் செய்யாது
அவற்றைக் கண்டு களித்து நிற்றல் போல, அருளிற் சிறந்த எம்பெருமானும் தனது அடியாரது பிழைகளைப் பாராட்டாது
“என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்” என்னும்படி
அவற்றையே குணமாகப் பாவித்துப் போக்யமாகக் கொண்டு அருள் செய்வ னென்பதாம்.

“திருவரங்கத்துள்ளோங்கு, மொளியுளார் தாமே யன்றே தந்தையுந் தாயு மாவார்” என்ற திருமாலை இங்கு உணரத்தக்கது.

இக்கருத்துக்கு, இரண்டாமடியில் ‘அத்த’ என்றதைத் தந்தையை யழைக்கும் விளியாகக் கொண்டமை இனிது பொருந்தும்;

“அணியார் பொழில் சூழரங்க நக ரப்பா” என்றார் பெரியாரும்.

இனி, அத்தம் என்று பிரித்து அர்த்தம் என்ற வடசொல்லின் விகார மென்று கொண்டு,
அத்த நந்தனன் – செல்வப் புதல்வன் என்று உரைப்பாரும்,
அதம் நந்தனன் என்று பிரித்து அந்தத் தமது புதல்வ னென்று உரைப்பாருமுளர்.

இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆரத் தநந் தரும்’ என்பதற்கு –
(தனது மகனுக்குத்) தனது செல்வத்தை முழுவதுங் கொடுக்கின்ற என்று உரைத்து,
அந்த அடைமொழியைத் தந்தைக்குங் கூட்டலாம்; (ஆர – நிரம்ப; தநம் – செல்வம்.)
நந்தநன் என்ற பெயர் – (தாய் தந்தையர்க்கு) ஆநந்தத்தைச் செய்பவனென்று காரணப் பொருள்படும்.
‘என் தீங்கு’ என்றது; வணங்காமை புகழாமை முதலியவற்றை. தீங்கு – சாதி யொருமை.

ஸ்தநம், தநம், ஆநந்தம், நந்தநன், கௌஸ்துபம் ஹாரம், அநந்தசயநன், ஹஸ்தம் – வடசொற்கள்.
கௌஸ்துபரத்தினம், திருப்பாற்கடலினின்று தோன்றியது.
ஹாரம் – மார்பின்மாலை.
‘பூணாரத்து’ என்றது, அநந்த சயநனுக்கு அடைமொழி.
மதலாய் – மதலை யென்பதன் ஈறுதிரிந்த விளி.
தாய் தந்தை – பன்மை விகுதி பெறாத பொதுத்திணை யும்மைத் தொகை.

————–

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயைவீர்
அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்
அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே –56-

அத்தனும் – தந்தையும்,
அன்பு உள அன்னையும் – (மக்களிடத்து) மிக்க அன்பையுடைய தாயும்,
பேரும் – பெயரும்,
அனந்தம் அது ஆம் – எல்லை யில்லாததாகப் பெற்ற,
அ தனு – அந்தந்த உடலில் (பலவகைப் பிறப்புக்களில்),
மன் – பொருந்தி வருகிற,
பு(ல்)லன் – எளியவன் யான்:
ஆதலின் – ஆகையால்,
அம்புயை – இலக்குமி யென்றும்,
வீரத்து அனுமன் புயம் மீது ஏறு – பராக்கிரமத்தை யுடைய அநுமானை (இராமாவதாரத்தில்) வாகனமாகக் கொண்டு
அச் சிறிய திருவடியின் தோள்களின் மேலேறிய,
அரங்கன் – ரங்கநாதனாகிய,
அம் சார்ங்கம் வயிரம் தனு மன் – அழகிய சார்ங்க மென்னும் உறுதியான வில்லை யுடைய பெருமா னென்றும்,
புகல் – சொல்லப்படுகிற,
பேர் இருவீர்க்கும் – உங்களிரண்டு பேர்க்கும்,
அடியன் என்று – அடியவனாக என்னைக் கொண்டு,
ஆண்டு அருள் – பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

ஒவ்வொரு பிறப்புக்கு ஒவ்வொரு தந்தையும் தாயும் பெயருமாக எத்தனையோ பிறப்புக்களில் எத்தனையோ
தந்தை தாயர்களையும் பெயர்களையுங் கொண்டு உழன்று வருகிறவன் யானென்று தனது சிறுமையை விண்ணப்பித்து,
இனியாயினும் பரம பிதாமாதாக்களாகிய நீயும் பெரிய பிராட்டியாரும் என்னை ஆட் கொண்டு உங்கட்கு அடியனென்ற
பெயரையிட்டுப் பிராகிருத பிதாமாதாக்களின் தொடர்பையும் பிராகிருத நாமத்தையும் போக்கி எனக்கு
முத்தி யளித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தபடி.
“தாயொக்கு மன்பின்” என்னும்படி மக்களிடத்துத் தந்தையினன்பினும் தாயினன்பு மிகுதலால்,
அன்னைக்கு ‘அன்புள’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது;
இனி, அதனை மத்திம தீபமாகக் கொண்டு அத்தனுக்கும் இயைத்தலு மொன்று.

உள்ள, புல்லன் என்பவை – உள, புலன் என்று தொகுத்தல் விகாரமமடைந்தன.
‘தனு’ என்றது – உடம்பைக் குறிக்கையில் தநு என்ற வட சொல்லின் விகாரமும்,
வில்லைக் குறிக்கையில் தநுஸ் என்ற வட சொல்லின் விகாரமுமாம்.
மன்புலன் – வினைத் தொகை.
அம்புயை – அம்புஜா என்ற வட சொல்லின் விகாரம்; தாமரை மலரில் வாழ்பவ ளென்று பொருள்.
நான்காமடியில், மன் – மன்னன்; பண்பாகுபெயர். இருவீர் – முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.

————

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடியவராக வரங்கருக்கு ஆட்செய ருட்கதையால்
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே –57-

அடியவர் ஆகவும் – (ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாகிய தமக்குத்) தொண்டர்களாகுமாறும்,
ஆள் கொள்ளவும் – (அங்ஙனம் தொண்ட ரானவர்களைத் தாம்) அடிமை கொள்ளுமாறும்,
எண்ணி – திருவுள்ளங்கொண்டு,
அவர் – அப்பெருமான்,
அடி – ஆதிகாலத்தில் (சிருஷ்டிகாலத் தில்),
ஆர் உயிர்கட்கு ஆகம் படைத்தமையால் – நிறைந்த உயிர்கட்குச் சரீரத்தைக் கொடுத்ததனால்,
அகமே – மனமே!
பெரிய அடிய வராகம் அரங்கருக்கு ஆள் செய் – பெரிய கால்களை யுடைய வராக மூர்த்தியாக அவ தரித்த ஸ்ரீரங்கநாதர்க்கு (நீ) அடிமையாவை;
(அங்ஙனமாகி),
அருள் கதையால் – (அவருடைய) கருணையாகிய தண்டாயுதத்தைப் பெற்று,
அது கொண்டு,
அவம் ராகம் செய் மாரனுக்கு ஆள் செயும் ஐவரை அடி – கெட்ட ஆசையை விளைக்கிற மன்மதனுக்கு அடிமை செய்யும்
பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து உட் பகைவர்களையும் தாக்கி வலி யடக்குவாய்; (எ – று.)

உபயவிபூதி நாயகனான சர்வேசுரன், த்ரிபாத் விபூதியாகிய பரமபதத்திலுள்ளார் எப்பொழுதும் பரமானந்தத்தையே
நுகர்ந்து வருதல் போலவே, உரைமெழுக்கிற் பொன் போல் மூலப் பிரகிருதியிலழுந்திக் கிடக்கிற உயிர்களும்
தம் தம் முயற்சியால் அப் பெரும் பதவியை யடைந்து இன்புற்று வாழலாம்படி,
அவ்வுயிர்கள் தன்னைத் தரிசித்தல் தொழுதல் சேர்தல் தியானித்தல் துதித்தல் முதலிய பணி விடைகளைப் புரிதற்கு உபயோகமாக,
கண் கை கால் மனம் வாய் முதலிய உறுப்புக்களோடு கூடிய உடம்பை அவ்வுயிர்கட்கு ஆதியில் அளித்தருளினனாதலால்,
நீ அப் பரம கருணாநிதியின் பக்கலிலேயே அடிமை பூண்டு, அவனருளாற் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்து
வீடு பெறுவை யென்று தம் மனத்துக்கு நல்லறிவுணர்த்தினார்.

‘அருட்கதை யாலைவரை யடி’ என்றது –
“யானு மென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் வல் வினையைக், கானும் மலையும் புகக்கடிவான் –
தானோர், இருளன்ன மா மேனி யெம்மிறையார் தந்த, அருளென்னுந் தண்டா லடித்து” என்ற அருளிச் செயலின் கருத்தைக் கொண்டது.

அவராகஞ்செய்மாரனுக்குஆட்செயும் ஐவர் –
“மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும், பாரினார்” என்றார் பெரியாரும்.

அடி – அடிநாளில். ‘அவர்’ என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது,
செய்யுளாதலின்: ‘செய்யுட் கேற்புழி’ என்றார் நன்னூலாரும்.
அடியவர் என்று எடுத்து, ஆதிகாரணமானவ ரென்று உரைப்பாரு முளர்.

“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கண கணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெங்கோமான்” என்றபடி
பெரிய கால்களையுடைய மகா வராக ரூபமாகத் திருவவதரித்ததனால், ‘பெரிய அடிய வராக வரங்கர்’ என்றார்.

ஆர்உயிர் – அருமையான உயி ரெனினுமாம்; முக்தி பெறுதற்கு உரிய தென்றபடி.
மாரன் என்ற வடசொல் – (ஆசை நோயால்) மரண வேதனைப் படுத்துபவனென்று காரணப் பொருள்படும்.
‘அகமே’ என்ற விடத்து, ‘அறிவே’ என்றும் பாட முண்டு.
அரங்கர்க்கு ஆட் செய்தால் ஐவரை யடிக்கலாம்; அடித்தால் உய்யலாம் என்பது குறிப்பு.

————–

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –

வரையாழி வண்ணர் அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூக நாணு மதியுஞ் செங்கை
வரையாழி யும் வளையும் மிழந்தாள் என் மடமகளே –58-

வரை ஆழி வண்ணர் – (கண்டவர் மனத்தைக்) கவர்ந்து கொள்ளும் கடல் போன்ற கரிய திரு நிறத்தை யுடையவரும்,
ஈசன் முன் வாணன் திண் தோள் வரை ஆழியார் – (பாதுகாப்பதாக ஏற்றுக் கொண்ட) சிவபிரானது முன்னிலையிலே
பாணாசுரனுடைய வலிய தோள்களைத் துணித் தொழித்த சக்கராயுதத்தை யுடையவருமான,
அரங்க ஈசர் – திருவரங்கநாதர்,
புள்ளின் வாகனத்தே வந்த நாள்தொடு – கருட வாகனத்திலேறிப் பவனி வந்த நாள் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
என் மட மகள் – எனது மடமைக் குணமுடைய மகள்,
ஆழிய துயர் ஆய் – ஆழ்ந்த மனக் கலக்க முடையவளாய்,
தூசும் – ஆடையையும்,
நாணும் – நாணத்தையும்,
மதியும் – அறிவையும்,
செம் கை வரை ஆழியும் வளையும் – சிவந்த கைகளி லணிந்துள்ள மோதிரத்தையும் வளையல்களையும்,
இழந்தாள் – இழந்து விட்டாள்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய சில வகைகளால் தலைவியைக் களவிற் கூடிய தலைவன் பிரிந்த பின்பு அப் பிரிவாற்றாமைத்
துயரத்தால் உளமழிந்து உடல் மெலிந்து கை வளையும் விரலாழியும் நெகிழ்ந்து கீழ் விழ ஆடை சோர நாணங்குலைந்து
அறிவிழந்து நிலைமாறி நிற்கிற தலைவியின் துயர்க் காரணத்தைத் தோழியாலறிந்த செவிலித்தாய்,
அத்தலைவனைத் தலைவிக்கு வெளிப்படையாக மணம் புரிவித்துத் துயர் நீக்கக் கருதியவளாய்,
அத்தலைமளின் நிலைமையை நற்றாய்க்கு உரியவற்றாலுணர்த்திய துறை, இச்செய்யுளி லடங்கியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக் கண்ணுக்கு எம்பெருமான் கருடாரூடனாய்ப் புலனாகி மறைந்த வளவிலே,
அப்பெருமானது ஸதாஸாந்நித்யத்தை அபேக்ஷித்துப் பிரிவாற்றாமையால் வருந்துகிற ஐயங்காருடைய துயரத்தை
நோக்கிய ஞானிகள் அவர் பக்கல் தம்மினும் மிக்க ஆதரத்தை யுடைய பேரறிவாளர்க்கு
ஐயங்காரது நிலைமையை யெடுத்துக் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;

தன்னைச் சரணமடைந்தவன் பரிபவப் படுவதைப் பார்த்தும் ஒன்றும் பரிகாரஞ்செய்யமாட்டாதொழிய வென்பார், ‘ஈசன்முன்’ என்றார்.
தொட்டு என்பது ‘தொடு’ எனத் தொகுத்தல் விகாரப்பட்டது.
இன்று + வரை = இற்றைவரை; மென்றொடர் வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.
ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்: ‘இன்’ என்ற இடைநிலை ஈறுதொக்கது.
வளையும்மிழந்தாள், மகரவொற்று – விரித்தல். மடமை – பேதைமை; இளமையுமாம். வரைதல் – கவர்தல், நீக்குதல், கொள்ளுதல்.

————

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்

மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்திதி தன்
மகரந்த காதலை வானிலுள் ளோர்க்கு மண்னோர்க்கு வட்டா
மகரந்த காதலை வார் குழை யாய் வளர் சீரங்க தா
மகரந்த காதலை வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –59-

மகரம் – (கடலிலேயே வாழுமியல்பினவான) சுறா மீன்களும்,
அலை வாழ்வு தகாது என்ன – கடலில் வாழ்தல் இனிக் கூடாதென்று தவிததுக் கூறும்படி,
வாரி சுட்டாய் – கடலை (ஆக்நேயாஸ்திரத்தால்) எரிக்கத் தொடங்கியவனே!
திதி தன் மகர் அந்தகா – திதியென்பவளுடைய புதல்வர்களான அசுரர்கட்கு யமனானவனே!
வானின் உள்ளோர்க்கு தலை – மேலுலகத்திலுள்ளவர்களான தேவர்கட்குத் தலைவனே!
மண்ணோர்க்கு உவட்டா மகரந்த – நில வுலகத்து வாழும் மனிதர்கட்குத் தெவிட்டாத தேன் போலினியவனே!
காது அலை வார் குழையாய் – காதுகளில் அசைகிற பெரிய குண்டலங்களை யுடையவனே!
வளர் சீரங்க தாம – ஸ்ரீரங்கத்தைக் கண் வளருமிடமாகக் கொண்டவனே!
கரந்த காதலை – (உன் மேல் எனக்கு) அந்தரங்கமாக வுள்ள மோகத்தை,
மடவார் எதிரே வாக்கின் சொல்லேன் – (தோழியர் முதலிய) மகளிரின் முன்னிலையிலே
பகிரங்கமாக வாயினாற் சொல்லுந் தரமுடையேனல்லேன்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற் கூடி நின்ற தலைவன்
அங்குப் பழி யெழுந்த தென்று தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள்
ஒருவழிப் பிரிந்துறைதல், ஒருவழித்தணத்த லெனப்படும்; அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில்,
அப்பிரிவை யாற்றாது வருந்துகிற தலைவி, தனது நினைப்பு மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கின்றவாறு போலப் பாவித்து,
அங்ஙனம் உருவெளித் தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப் படுத்திக் கூறியது, இது.
ஒருவழித்தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்
கூறியதென்று இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன் பக்கல் தமக்கு உண்டான
வியாமோகத்தை அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

கரந்தகாதலை வாக்கிற் சொல்லேன் மடவாரெதிரே – எனது அந்தரங்க பக்திமிகுதியைப் பேதையரான
உலகத்தார் முன்னிலையிலே வாயினாற்சொல்லேன் என்க.

‘மகரம் தகாது அலைவாழ் வென்ன வாரிசுட்டாய்’ என விளித்தது,
பிரிந்த ஒரு தலைவியை மீளவுங்கூடுதற்காக அரிய பெரிய முயற்சி செய்த நீ இங்ஙனம்
என் பக்கல் உபேக்ஷைசெய்வது தகுதியோ வென்ற குறிப்பு.
‘காதலை வார்குழையாய்’ என்றது, காதும் குண்டலமும் சேர்ந்த சேர்த்தி யாலாகிய செயற்கை யழகைக்
கண்டு அதிலீடுபட்டுக் கூறியது. மற்றைவிளிகள்,
அப்பெருமானது பராக்கிரமம், துஷ்டநிக்கிரகம், பரத்வம், இனிமை, இனிய இடமுடைமை முதலியவற்றில் ஈடுபாடு.
மகரமென்னும் மீன் கடலிலேயே வாழ்வதாதலை ‘மகராலயம்’ என்ற கடலின் பெயர் கொண்டும்,
“கடல்வாழ் சுறவு” என்ற தொல்காப்பியங்கொண்டும் உணர்க. இது கடலில் வாழுமியல்பினதாய்ச் சிறத்தல் பற்றியே,
இதனைத் தலைமையாக எடுத்துக் கூறினார்: இது, மற்றை நீர்வாழுயிர்கட்கும் உபலக்ஷணமாம்.

வாரி – நீர்: வடசொல்: கடலுக்கு இலக்கணை.
அந்தகன் – அந்தத்தைச் செய்பவன்: அந்தம் – அழிவு திதிதன் மகரந்தகா – காசியப முனிவரது மனைவியருள்
திதியென்பவளது புதல்வராதலால் தைத்யரெனப்படுகிற அசுரர்களை அழித்தவனே யென்றபடி.
மகர் – மகன் என்பதன் பன்மை: மகார் என்றும் வழங்கும்.
தலை – தலைவனுக்குப் பண்பாகுபெயர்: உவமையாகுபெயராக,
உத்தம அங்கமாகிய தலைபோலச் சிறந்தவனே யென்றும் பொருள்கொள்ளலாம்: அண்மைவிளி யாதலின், இயல்பு.

ரங்கநாதன் நிலவுலகத்தில் எழுந்தருளி யிருந்து அவ்வுலகத்தார்க்குக் காட்சிக் கினியனாதல் பற்றி,
‘மண்ணோர்க்கு உவட்டா மகரந்த’ என்றார்.
இனி, தலைமை பெற்ற வானிலுள்ளார்க்கும் மண் ணுலகத்தார்க்கும் தெவிட்டாத தேனே யென்று உரைப்பாரு முளர்.

உவட்டா மகரந்த’ என்றதை “ஆராவமுதே” என்றாற்போலக் கொள்க. தாமம் – வடசொல்: இடம்.
இனி, ‘வளர் சீரங்க தாம’ என்பதற்கு –
ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து விளங்குகிற ஒளிவடிவமானவனே யென்று உரைத்தலும் அமையும்:
தாமம் – ஒளி. கரந்த காதல் – உயிர்ப் பாங்கிக்கும் ஒளித்த வேட்கை யென்றபடி.

————

இதுவும் அது –தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்-

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனு மட
வாராக வாதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –60-

வாராக – வராகாவதாரஞ்செய்தவனே!
வாமனனே – வாமந மூர்த்தியானவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே!
வட்டம் நேமி வலவா – வட்டவடிவமான சக்கராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே!
ராகவா – ரகுகுலராமனாகத் திருவவதரித்தவனே!
உன் வடிவு கண்டால் – நினது திருமேனியழகைப் பார்த்தால்,
மன்மதனும் மடவார் ஆக ஆதரம் செய்வன் – (எல்லாராலும் காமிக்கப்படுங் கட்டழகுடையவனான) மன்மதனும் (
தான் உன்னைக் கூடுதற்கு) மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன்: என்றால்,
வார் ஆகம் வாசம் முலையேனை போல் உள்ள மாதருக்கு உய்யும் வண்ணம் எங்கே – கச்சணிந்தனவும் மார்பிலெழுந்தனவும்
நறுமணப்பூச்சுடையனவுமான தனங்களை யுடையளாகிய என்னைப்போல விருக்கிற மகளிர்க்கு
(உன் வடிவழகு கண்ட பின்பு) பிழைத்திருக்கும்வகை எவ்வாறோ! (எ – று.)

அழகிற் சிறந்த ஆண் பாலான மன்மதனும் புருஷோத்தமனான நினது வடிவைக் கண்டு தான் பெண்ணுருக் கொண்டு
உனது அழகின் நலத்தை யனுபவிக்க. எண்ணுவனாயின், பெண்பாலான என் போன்ற மடமங்கை யர்க்குப்
பிழைக்கும் வழி என்னே யென்பதாம்.
கீழ் 24 – ஆஞ் செய்யுளின் விசேடவுரையிற் கூறிய விஷயங்கள், இங்கும் நோக்கத்தக்கன.

‘வாராக’ என்று விளித்தது, நினது காதலியரில் ஒருத்தியினது (பூமிதேவியினது) துயரத்தை நீக்குதற்குப்
பெரு முயற்சி செய்து அவளை யெடுத்துக்கொண்டு வந்து கூடி யருளியவனே யென்ற குறிப்பு.
‘வாமனனே’ என்றது – சௌலப் பியத்தையும்,
‘அரங்கா’ என்றது – இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற இனிய விடத்தில் வசித்தலையும்,
‘வட்டநேமிவலவா’ என்றது – பகையழிக்க வல்ல படைக்கலத்திற் கைதேர்ந்தவனாதலையும்,
‘ராகவா’ என்றது – உயர்குடிப் பிறப்பையும் உணர்த்தும்.

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் கண்டு காமுற்று ஆண்மை மாறிப் பெண்மை பெறவிரும்பும் படியான
சௌந்தரியாதிசயத் தையுடையா யென்ற கருத்தும், ‘ராகவா’ என்ற விளியில் தொனிக்கும்.

மன்மதன் தான் கொண்ட ஆசை மிகுதியால் தானொருவனே பலமகளிராக வடிவு கொண்டு உத்தம புருஷனான எம்பெருமானை
அநுபவிக்க விரும்புவ னென்பது, ‘மடவாராக’ எனப் பன்மையாற் கூறியவதனால் தோன்றும்.

‘வாராகவாசமுலையேன்’ என்றது, போகாநுபவத்துக்கேற்ற பருவம் நிரம்பியவ ளென்றவாறு.
‘நேமிவலவா’ என்பதற்கு – சக்கராயுதத்தை வலக் கையிலுடையவனே யென்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, ‘நேமி வலவா’ என்றதைக் கீழ் 35 – ஆஞ் செய்யுளில் “சங்கஇடவ” என்றாற் போலக் கொள்க;
வலவன், இடவன் என்பன – வலம், இடம் என்றவற்றின்மேற் பிறந்த பெயர்க ளென்க.

வாராக – வராஹ என்ற வடசொல்லின் விகாரம்.
வட்டம் – வ்ருத்த மென்ற வடசொல்லின் சிதைவு.
மந்மதன் என்ற வடமொழிப்பெயர் – (ஆசை நோயால்) மனத்தைக் கலக்குபவ னென்று பொருள்படும்;
உம் – உயர்வு சிறப்பு. வாமநன், நேமி, ராகவன், ஆதரம், வாஸம் – வடசொற்கள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -21-40-

January 23, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சுமே ———-21–

நரகு – நரகம்,
அந்தரம் – சுவர்க்கம்,
புவி – பூமி,
இ மூன்று இடத்தும் – என்கிற இந்த மூன்றுஉலகங்களிலும்,
நனி மருவுநர் – மிகுதியாகப் பொருந்தியுள்ள சனங்களெல்லாம்,
அகம் தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் – மனம் அலைந்து கொடிய யமனுக்குப் பயப்படுவார்கள்;
நாயக வாநர கந்தரம் புள் பிடர் ஏறு அரங்கர் – சிறந்த குரங்கான அநுமானுடைய கழுத்தின் மேலும்
(பக்ஷி ராஜனான) கருடனுடைய பிடரியின் மேலும் ஏறுகிற திருவரங்கரும்,
நல் ஆய்க்குலத்து இநர் – சிறந்த இடையர் குலத்தில் (வளர்ந்து அதனை விளக்கின) சூரியன் போன்றவரும்,
தரங்கம் அகம் உற்றார் – திருப்பாற் கடலை வசிக்குமிடமாகக் கொண்டு அங்கு வாழ்பவருமான நம்பெருமாளுடைய,
அடியார்க்கு – தொண்டர்கட்கு,
நமன் அஞ்சும் – அந்த யமன் பயப்படுவான்.

மூன்று உலகங்களிலுள்ளாரும் யமனுக்கு அஞ்சுவர்;
அந்த யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன் என்று அடியார்களின் பெருமையை விளக்கியவாறாயிற்று,
ஆதலால், அனைவரும் எம்பெருமானுக்கு அடியராய் உய்யக் கடவரென்பது, குறிப்பெச்சம்.
இங்ஙனம் இவர்கள் அஞ்சுதற்கும், அவன் அஞ்சுதற்கும் காரணம் – முறையே மூவுலகத்தாரும் தீராவினையை யுடைமையும்,
திருமாலடியார் வினை தொலைத்திருத்தலு மென்க.

அடியார்க்கு நமன் அஞ்சுதலை,
“திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன்னாமம், மறந்தும்புறந் தொழாமாந்த ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்ற அருளிச் செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில் பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன் சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து
“ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில் ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு;
நான் மற்றவர்களுக்குப் பிரபுவேயல்லது வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன் ………
“கமலநயான! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அச்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டே யிருப்பார்களோ, அப்படிப்பட்டமகாபரிசுத்தபுருஷரை ஓ படனே!
நீ கண்ணெடுத்துப் பாராமல் தூரமாய் ஓடிப்போ; விகாரநாசாதிகளில்லாமல் சத்திய ஞாநாநந்த மயனாய்ப் பிரகாசிக்கின்ற
அந்த எம்பெருமான் எவனுடைய இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம்
பிரசரிக்கு மிடங்களிலெல்லாம் நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்;
பதறிச்சென்றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின் தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்;
அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்’ என்று கூறினன்’ என்ற வரலாற்றை
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக்காணலாம்.

ஸ்வர்க்க மத்திய பாதாள மென்று மூன்றாகப்பகுக்கப்படுகிற பதினான்குஉலகங்களிலு முள்ள பிராணிகளெல்லாம்
இயல்பில் கர்மபந்தமுடையவர்க ளாதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனைக் குறித்து அஞ்சுவ ரென்க.

நரகு – நரகம்; இது, கீழுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
அந்தரம் – வானம்; இது, மேலுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
மருவுநர், ந் – பெயரிடைநிலை. அகம் – அகத்து உறுப்பு, அந்த:கரணம்; அகம் – உள்.
காலன் – பிராணிகளின் ஆயுளைக் கணக்கிடுபவன்.

பெருமான் இராமாவதாரத்தில் அநுமானையும், எப்பொழுதும் கருடனையும் வாகனமாகக் கொண்டு அவர்கள் பிடரியில் ஏறியருள்வன்;
அதுபற்றி, அவர்கள் முறையே திருவடியென்றும், பெரிய திருவடியென்றும் பெயர் பெறுவர்.
கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்பது: கம் – தலை. பிடர் – கழுத்தின் பின்புறம்.

இநன் – சூரியன்; வடசொல். “உலகங்களாகிய தாமரைகளெல்லாம் மலரும்பொருட்டு, தேவகியாகிய கிழக்குச் சந்தியில்
அச்சுதபாநு (திருமாலாகிய சூரியன்) உதித்தருளினான்” என்று கண்ணனைச் சூரியனாகக் கூறியுள்ளதனால்,
‘ஆய்க்குலத்துஇநர்’ என்றார். அக்குலத்துக்கு நன்மை, தேவாதி தேவனான திருமால் மனிதனாய் எழுந்தருளிக்
குழந்தைப் பருவத்தில் வளர்ந்தருளப் பெற்ற பேறுடைமை.

அகம் – இடம், வீடு. நமன் அஞ்சும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.
ஆய்க்குலத்திநர் அகம் தரங்கம் உற்றார் என்று எடுத்து,
இடைச் சாதியாருடைய வீட்டிலும், பாற்கடலிலும் பொருந்தியவ ரென்றும், ஆயர் குலத்தில் வளர்ந்தவரும்
பாற்கடலினிடத்துப் பொருந்திய வருமானவரென்றும் உரைப்பாரு முளர்.

———–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் அஞ்சிறைய
அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே
அஞ்ச கரத்தலை செய்து பித்து ஏக அருள் அரங்கன்
அம் சக்கரத் தலைவன் தாள் அலால் மற்று அரண் இலையே–22–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் ஏற்றலும் – பஞ்சாக்ஷர மந்திரத்துக்கு உரியவனும் தலையிற் கங்கா நதியைத்
தரித்தவனு மான சிவபிரான் (தன்பக்கல் வந்து) இரந்தவளவிலே,
அம் சிறைய அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே கரத்தலை செய்து அஞ்ச – அழகிய இறகுகளையுடைய
ஹம்ஸவாகனத்தையும் கையிற்கமண்டலத்தையு முடையனான பிரமனது கபாலமானது (அச்சிவபிரானுடைய)
உள்ளங்கையை நீங்கி மறைதலைச்செய்து விலகவும்,
பித்து ஏக – (அச்சிவபிரான் கொண்டிருந்த) திகைப்பு ஒழியவும்,
அருள் – கருணைசெய்த,
அம் சக்கரம் தலைவன் அரங்கன் – அழகிய சக்கராயுதத்தையுடைய இறைவனான ரங்கநாதனுடைய,
தாள் அலால் – திருவடியே யல்லாமல்,
மற்று அரண் இலை – வேறு ரக்ஷகம் (எவ்வுயிர்க்கும்) இல்லை; (எ – று.)

மும்மூர்த்தியில் ஒருமூர்த்தியான சிவபிரான் பிரமகபாலத்தால் தனக்கு நேர்ந்த சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள
வேறுவகையில்லாமற் கலங்கி எம் பெருமானைச் சரணமடைய, அப்பெருமான் எளிதில் அதனைத் தீர்த்தருளின னென்ற
வரலாற்று முகத்தால், நம்பெருமாளுடைய பரத்வத்தை வெளியிட்டு, அப்படிப்பட்ட சர்வேசுவரனல்லாமல்
வேறுபுகலிடமில்லையென்று ஜீவாத்மாக்களின் அநந்யகதித்வத்தை விளக்கினார்.

பித்தேகவருளரங்கன் –
“சிரந்தடிவா னிவனோ வென் றயன் வெய்ய தீய சொல்லக்,
கரந்தடிவான் தலைகவ்வப் பித்தேறலிற் கண்ணுதலோன்,
இரந்தடிவீழத் துயர்தீர்த்த வேங்கடத்தெந்தை” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.

ஐந்து – அஞ்சு; முழுப்போலி.
அக்ஷரம், கங்கா, ஹம்ஸம், பித்தம், சக்கரம், சரணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சிறைய – குறிப்புப் பெயரெச்சம்.
கரத்தலை, தலை – ஏழனுருபு; கரம் – வடசொல்.
வைதிகர் கையிலே எப்போதும் ஜலபாத்திரங்கொண்டிருத்தல், பரிசுத்தியின்பொருட்டென்க.
அகம் + கை = அங்கை; “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்றார் நன்னூலார்.
விட்டே, ஏ – அசை. அஞ்ச = விலக, காரியப் பொருளைக் காரணச் சொல்லாற் குறித்தார், உபசார வழக்கால்.
மூன்றாமடியில் உள்ள ‘கரத்தலை’ என்பது – கரத்தல் என்ற தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமை விரி.
சக்கரத் தலைவன் – ஆழிப் பிரான்.

————

இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே–23–

இலங்கு அயில் ஆதரன் – விளங்குகின்ற வேலாயுதத்தினிடத்து விருப்பமுடையவனான சுப்பிரமணியனும்,
ஐங் கரன் – (நான்கு கைகளோடு துதிக்கையுமாகிய) ஐந்துகைகளையுடையவனான விநாயகனும்,
மோடி – துர்க்கையும்,
எரி – அக்கினியும்,
சுரத்தோன் – ஜ்வர தேவதையும்,
இலம் கயிலாதமலை ஆன ஈசன் – வசிக்குமிடம் கைலாச கிரியாகப்பெற்ற இறைவனான சிவனும்,
இரிய – அஞ்சி நிலைகெட்டு ஓட,
வெம்போரில் – உக்கிரமான யுத்தத்தில்,
அம் கை இலாதபடி வாணனை செற்ற – அழகிய (ஆயிரம்) கைகள் இல்லாமற்போம் வண்ணம் பாணாசுரனை அழித்திட்ட,
என் அரங்கன் – எனது திருவரங்கனும்,
இலங்கையில் ஆதவன் போக கண்டான் – இலங்காபுரியிற் சூரியன் போகும்படி செய்தவனுமான திருமால்,
என் இதயத்தன் – எனது இருதயகமலத்தி லுள்ளான்; (எ – று.)

துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும், அங்ஙனம் நல்லோரைக்காத்தற் பொருட்டுத் தீயோரையழிக்குமிடத்துச்
சர்வசங்காரமூர்த்தியே வந்து தடுத்தாலும் தடுக்கவொண்ணாத பேராற்றலுடையவனு மான பெருமான்
எனது மனத்தில் எழுந்தருளியிருக்கும்படி அவனை நான் எப்பொழுதும் மனத்திலே நிலை நிறுத்தித் தியானித்து வருகின்றே னென்பதாம்.

“மோடியோட வங்கி வெப்பு மங்கியோடவைங்கரன்,
முடுகியோடமுருக னோடமுக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தி
யோட நேமிதொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவரங்கக்கலம் பகத்திலும்.

“இருணன்காசற வெழுகதிரவனிற்கவென்றும், அருணன் கண்களுங் கண்டிலா விலங்கை” என்றபடி
இராவணனிடத்து அச்சத்தால் சூரியன் சென்றறியாத இலங்கையிலே அவ்விராவணனைக் கொன்றதனால்
சூரியன் தனது சஞ்சாரரீதியின்படி அங்குத் தடையின்றி இனிதுசெல்லும்படி செய்தனன் இராமபிரானென்பது,
‘இலங்கையிலாதவன் போகக்கண்டான்’ என்பதன் கருத்து.

இலங்கையரசனாய்த் தேவர்கட்கு இடையூறு செய்து வந்த இராவணனைச் சங்கரித்துத் தேவர்கட்கு நன்மைசெய்தவனென்ற
பொருளை ‘இலங்கையி லாதவன் போகக்கண்டான்’ என வேறுவகையாற்சொன்னது, பிறிதினவிற்சியணி.
காணுதல் – செய்தலென்னும் பொருளில் வருதலை, ‘திருநகரங்கண்ட படலம்’ என்றவிடத்திலுங் காண்க.

முருகன் வேற்படையில் விருப்பமுடையனாதல், ‘வேலன்’ என்ற அவன் பெயரினாலும் விளங்கும். இவன், சிவபிரானது இளையகுமாரன்.
விநாயகன் யானைமுகமுடையனாதலால், ஐங்கரனாவன்; இவன், சிவபிரானது மூத்தகுமாரன்.
துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
அயில் என்பது – ஐயில் எனவும் கைலாஸம் என்ற வடசொல்லின் திரிபான கயிலாதம் என்பது கையிலாதம் எனவும்
யமகவமைப்பின் பொருட்டு முதற்போலியால் அகரத்துக்கு ஐகாரம் பெற்றன;
“அ ஐ முத லிடையொக்கும் சஞயமுன்” என்றார் நன்னூலார்.
ஜ்வரம், பாணன், ஆதபன், ஹ்ருதயம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இலம் – இல்லம் என்றதன் தொகுத்தல்; அம் – சாரியை. ஈசன் – ஐசுவரியமுடையவன்.
யமகநயத்தின்பொருட்டு ‘போரில்’ என்ற ஏழாம்வேற்றுமை விரி, போர் இல் என உருபுபிரிக்கப்பட்டது;
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும், பொருள்நோக்குமிடத்துச் சேர்த்துப் படித்துக் கொள்க.
ஆயிரங்கைகளிற் பெரும்பாலன ஒழிந்ததனால், ‘கையிலாதபடி’ எனப்பட்டது.
காலில் விழுந்தபின் கண்ணபிரானால் துணியாது விடப்பட்ட நான்கு கைகளும் பொலிவிழந்தன வென்பதும் தொனிக்க,
‘அங்கையிலாதபடி’ என்றன ரென்னலாம். செற்ற, செறு – பகுதி.
ஆதவன் – ஆதபன் என்ற வடசொல்லின் விகாரம்; நன்றாகத் தபிப்பவன் என்று பொருள்.

—————

அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை ஐம்படை சேர்
அத்தனை வேதனை வாய் வைத்த மாயனை ஆர் அணங்கு ஓர்
அத்தனை வேதனை தீர்த்தானைச் சேர்க்கிலள் ஆயிரம் சால்
அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —-24–

அத்தனை – எப்பொருட்கும் இறைவனும்,
வேதனை ஈன்ற அரங்கனை – பிரமனைப் பெற்ற திருவரங்கனும்,
ஐம்படை சேர் அத்தனை – பஞ்சாயுதங்கள் பொருந்திய திருக் கைகளை யுடையவனும்,
வேதனை வாய் வைத்த மாயனை – (கிருஷ்ணாவதாரத்தில்) வேய்ங்குழலைத் திருவாயில் வைத்து ஊதிய மாயவனும்,
ஆர் அணங்கு ஓர் அத்தனை வேதனை தீர்த்தானை – அருமையான (பார்வதியென்னுஞ் சிறந்த) தெய்வ மகளைத்
தனது உடம்பில் ஒருபாதியிலுடையவனான சிவபிரானைத் துயர் தீர்த்தருளியவனும் ஆன அழகிய மணவாளனை,
சேர்க்கிலள் – (என்னுடன்; சேரச் செய்யாள்;
அனை – (என்னுடைய) தாய், (பின்னை என் செய்வளென்றால்,-)
சாந்து என்று அனல் அரைத்து – சந்தனக்குழம்பென்று நெருப்பை யரைத்து,
ஆயிரம் சால் அத்தனை வேது அப்புவள் – ஆயிரஞ்சாலவ்வளவு வெப்பத்தை (என்னுடம்பிற்பூசி) நிரப்புவள். (எ – று)

கீழ் 23 – பாசுரங்களில் எம்பெருமானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அவனது உத்தம புருஷத் தன்மையைக்
கருதியதனாலே, அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை யுண்டாய்,
அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமான தன்மை யழிந்து ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்;

ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்:

தண்டகாரணியவாசிகளான முனிவர் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்மையைப் பெற விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே, யாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள்,”
“வாண் மதர் மழைக்கணோக்கி, ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)

அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையையே யன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒரு பிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக முழுதும் பெண் தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது சுவாதந்திரிய மின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால்
இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமாரோடொக்கச் சொல்லத் தட்டில்லை.

தோழி நிலைமையும் தாயார் நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனே யென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙன மாகுமென்க.
சிருங்கார ரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளைத் தோத்திரப் பிரபந்தரூபமான ஞானநூலாகிய
இதிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச், சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.

ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால் தோழியர் பிரிய அக் கன்னிகை அங்குத் தனித்து நின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப் புருஷன் அங்கு வந்து சேர,
இருவரும் ஊழ்வினை வசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவ விவாகக் கிராமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு அப்பிரிவினாலாகிய தாபத்தால் வருந்தி அரிதில் மீண்டு
வந்த அத்தலைமகளைக் கண்ட செவிலித் தாய் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்று அறியாளாய்
அப்பொழுது நிகழ்கிற வேனிற் காலத்தினாலாகிய தென்று கருதி அதனைத் தணித்தற் பொருட்டுச் சந்தனக் குழம்பை
அம் மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ் செய்ய, காலதாப மல்லாததால் அதனைத் தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு கலவிக் காலத்தில் இன்பஞ்செய்யும் பொருள்களுள் ஒன்றாதலால் பிரிவுக் காலத்தில் காம தாபத்தை
மிகுவிப்பதாய் மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய தலைமகள் தோழியின் முன்னிலையில் அத்தாய் செயலைக்
குறித்து வெறுத்துக்கூறியது இது.

அழகியமணவாளன் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுது அவனைக்கிட்டி
முத்தியின்ப மனுபவிக்கும்படியான ஆசைகொண்டவரான இவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக் கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவ் வருத்தத்தின் காரணத்தை இன்னதென்று அறியாத
அவரிடம் அன்புள்ள ஞானிகள் அவர்க்குச் செய்த உபசாரங்கள் அவர் வருத்தத்தைத் தணிவிக்க மாட்டாது
அதனை மிகுவிக்கிற நிலையிலே ஐயங்கார் அவர்களது திறத்தைத் தமது நண்பரை நோக்கி உரைத்தவாறாகும்
இது வென்று இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளும் காண்க.

வேதன் – வேதம் வல்லவன்; நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை யும் பாராயணஞ்செய்கின்றவன்;
வேதா என்னும் வடசொல்லின் திரிபெனக் கொண்டால், விதிப்பவன் (படைத்தற்கடவுள்) என்று பொருள்படும்.

இரண்டாமடியில் ஹஸ்தம் என்ற வடசொல் அத்தம் என்றும்,
மூன்றாமடியில் அர்த்தம் என்ற வடசொல் அத்தம் என்றும் விகாரப்பட்டன.

வே – மூங்கில்; வேய் என்பதன் விகாரம்: அதனாலாகிய புள்ளாங்குழலுக்குக் கருவியாகு பெயர்;
தன் – சாரியை. பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டும்,
அவற்றைமகிழ்வித்தற்பொருட்டும் கண்ணன் வேணுகானஞ்செய்தனன்.

மாயன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செயற்குஅரியன செய்யுந் திறம்;
ஆச்சரியகரமான குணங்களும் செயல்களுமாம்; பிரபஞ்ச காரணமான பிரகிருதியுமாம்.
வேதனை, பிரமகபாலம் கை விடாமையால் நேர்ந்தது.

‘ஆயிரஞ்சால்’ என்றது, மிகுதியை விளக்கக் கூறியது; சால் – பெரியபாத்திரம்.
வேது – வெவ்வியது. அனை – அன்னை; தொகுத்தல். வேதநா, சந்தநம் என்ற வடசொற்கள் – வேதனை, சந்து என்று விகாரப்பட்டன.
ஆர் அணங்கு ஓரத்தன் நை வேதனை எனப் பிரித்து, நிறைந்த அழகுடையளான அம்பிகையைப் பக்கத்திலுடையனான
சிவபிரான் வருந்திய வருத்தமென்று உரைப்பாரு முளர். நை – வினைத்தொகை,

————-

அரைக்கலை வேலை யுடுத்த மண் பல் பகலாண்டு பற்றல்
அரைக்கலை வேலை யுடை வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு நெஞ்சே
அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே———25–

நெஞ்சே – (என்) மனமே!
அரைக்கு – அரையினிடத்து,
அலை வேலை உடுத்த – அலைகளை யுடைய கடலை (ஆடையாக)த்தரித்த,
மண் – பூமியை,
பல் பகல் ஆண்டு – பலநாளளவும் அரசாண்டு,
பற்றலரை கலை வேலை உடை – பகைவர்களை நிலை குலைந்தோடச் செய்கிற வேலாயுதத்தை யுடைய,
வேந்தர் – அரசர்களது,
வாழ்வு – (நிலையற்ற) வாழ்க்கையை,
எண்ணல் – ஒரு பொருளாகக் கருதாதே:
ஐவரையும் – பஞ்சேந்திரியங்களையும்,
அரைக் கலை – நீ அடக்க மாட்டாமல்,
அவர்க்கே வேலை புரிவை என்றாலும் – அவ்விந்திரியங்கட்கே வசப்பட்டு (அவை செல்லும் வழியிலேயே நின்று அவற்றிற்குப்)
பணி விடை செய்வாயாயினும்,
அரை கலை வேலை – அரைக் கணப் பொழுதாயினும்,
அரங்கனுக்கு ஆட்பட ஆதரி – ஸ்ரீரங்கநாதனுக்கு அடிமை செய்ய விரும்புவாய்.

இவ் வுலகத்தில் எதிரற்ற தனியரசாட்சி கிடைப்பதாயினும், அது முத்திப் பெருஞ்செல்வத்தை நோக்கப் பெரிதும் அற்பமாதலால்,
அதனை விரும்பாதே; பெரும்பாலும் காலத்தை யெல்லாம் ஐம்பொறிகளின் வழியிலேயே செலுத்துவையாயினும்,
அவப் பொழுதிலும் தவப் பொழுது’ என்றபடி மிகச் சிறிது பொழுதேனும் நம் பெருமாளுக்கு அடிமை செய்ய விரும்புவையாயின்,
பஞ்சேந்திரிய மூலமாக வுண்டாகிற சகல கருமங்களையும் போக்கி எல்லாச் செல்வங்களினும் மேலான முத்திப் பேற்றைத்
தவறாமலடைதல் கூடும் என்று தன் நெஞ்சத்தைத் தானே விளித்து அறிவுறுத்தினார்.

அரை – பாதி; உடம்பின் நடுவுறுப்பான இடைக்கு ஆகுபெயர். அரைக்கு = அரையில்; உருபுமயக்கம்.
அலை வேலை – இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகை;
அலை யலைக்கிற வேலை யெனக் கொண்டால், வினைத்தொகையாம்.
இனி, அரை – இடையில், கலை – ஆடையாக, வேலை – கடலை, உடுத்த என்று பதவுரை கூறினுமாம்.
கலை – மேகலை யென்னும் இடையணியுமாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாகவும் அப் பெண் இடையிலணியும்
அணியாகவும் கூறுதலும், அரசனாளப் படுகின்ற பூமியை அக் கணவனாலளப்படும் மனைவியாகக் கூறுதலும் கவிசமயம்.
பகல் – நாளுக்கு இலக்கணை. ஆண்டு உடை என இயையும்.
பற்றலர் – விரும்பாதவர், சேராதவர்: எதிர்மறை வினையாலணையும் பெயர்.
கலை வேல் – வினைத்தொகை. எண்ணல் – எதிர்மறை யொருமை யேவல்.

அடக்குதற்கு அரிய உட்பகைவ ரென்ற கருத்து
‘ஐவர்’ என்ற உயர் திணைத் தொகைக் குறிப்புப் பெயரில் தோன்றுதல் காண்க;
உம் – முற்று அரைக் கலை – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம்:
கு – சாரியை, அல் – எதிர்மறை யிடை நிலை. ஏ – பிரிநிலை. உம் – இழிவு சிறப்பு.
கலை -கால நுட்பம்: ‘கண்ணிமைப் பொழுது பதினெட்டுக் கூடினால், ஒரு காஷ்டை;
முப்பது காஷ்டைகள் கூடினால், ஒரு கலை’ என்ற கால வளவையை யுணர்க.

—————

ஆதவன் அந்தரம் தோன்றாமல் கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆ தவனம் தர வெற்பு எடுத்தான் அடியார் பிழை பார்
ஆதவன் அம் தரங்கத்தான் அரங்கன் அடியன் என்று உள்
ஆத அனந்தரம் கண்டீர் வினை வந்து அடைவதுவே——–26–

ஆதவன் – சூரியன்,
அந்தரம் – வானத்திலே,
தோன்றாமல் – கட்புலனாகாதபடி,
கல் மழை – ஆலாங்கட்டியைப் பொழிகின்ற மேகங்கள்,
ஆர்த்து எழு நாள் – ஆரவாரித்துக் கொண்டு எழுந்த காலத்தில்,
ஆ – பசுக்கள்,
தவனம்தர – தவிப்பை யடைய,
வெற்பு எடுத்தான் – (அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுக்) கோவர்த்தந கிரியை (க்குடையாக) எடுத்துப் பிடித்தவனும்,
அடியார் பிழை பாராதவன் – தன் அடியார்களுடைய குற்றத்தைப் பொருள் செய்யாது அவர்கட்கு அருள் செய்பவனும்,
அம் தரங்கத்தான் – அழகிய அலைகளை யுடைய கடலிற் பள்ளி கொள்பவனும் ஆகிய,
அரங்கன் – ஸ்ரீரங்கநாதனுக்கு,
அடியன் தொண்டன்
யான், என்று உள்ளாத அனந்தரம் கண்டீர் – என்று (ஒருவன் தன்னைக்) கருதாத பின்பன்றோ,
வினை வந்து அடைவது – (முன்பு அவன் செய்த) கருமம் (தன் பயனை விளைத்தற்கு அவனிடம்) வந்து சேர்வது; (எ – று.)

பிறப்பு அநாதியாய் வருதலின் ஒருவன் முற் பிறப்புக்களில் எவ்வளவு கருமம் செய்திருப்பினும்,
அவன் தன்னைத் திருவரங்கநாதனது அடியவனென்று கருதுதல் மாத்திரஞ் செய்வனாயின்,
அவனது பழவினை யனைத்தும், விளக்கின் முன் இருள் போலவும், காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய்போலவும்
இருந்த விடமுந் தெரியாதபடி விரைவில் அழிந்திடு மென்பதாம்.

கண்டீர் என்ற முன்னிலைப் பன்மை யிறந்த கால வினை முற்று,
இடைச் சொல் தன்மைப்பட்டுத் தேற்றப் பொருள் குறித்து நிற்கும்.
அந்தரம் ஆர்த்து என்று இயைத்து, வானத்தை யுடைத்துக் கொண்டு எனினுமாம்.
எழு நாள் – வினைத்தொகை; பண்புத் தொகையாய், ஏழுநா ளென்றும் பொருள்படும்.
மேகங்களின் மிக்க மழை பசுக்களுக்கு வருத்தத்தை விளைத்ததோடு, அவற்றின் மிக்க பேரிடிகளினோசையும்
அச்சத்தால் ஆநிரையை மிகவருத்தின தென்பது, ‘கல்மழை யார்த் தெழுநாள் ஆதவனந்தர’ என்பதில் தோன்றும்.
ஆதவநம்தர என்பதற்கு – பசுக்கள் (அம்மழை மிகுதியைப் பொறுக்கு மாற்றலின்றி நிலை நிற்க மாட்டாமல்)
ஓடத்தொடங்க என்று உரைத்தலு முண்டு.

இந்திரன் கல்மழைபொழிவித்ததனால் அதனைக் கல்மலைகொண்டே தடுத்திட்டனன்,
அவன் நீர்மழைபொழிவித்திருந்தால் அதனை நீர்கொண்டே தடுத்திருப்பன்,
அகடித கடநாசாமர்த்தியமுடைய எம்பெருமான் என்ற தாற்பரியம்,
‘கன்மழைக்காக வெற்பெடுத்தான்’ என்ற சொற்போக்கில் தோன்று மென்பர் ஆன்றோர்.

அடியார் பிழை பாராதவன் – “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிவிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க்கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே” என்ற பெரியாழ்வாரருளிச்செயலைக் காண்க.

அம் – உரிச்சொல். தரங்கம் – அலை.
‘அம் தரங்கம்’ என்பதை அடையடுத்த சினையாகுபெயரென்றாவது, பண்புத் தொகை யன்மொழியென்றாவது கொள்ள வேண்டும்.
அடியார் அந்தரங்கத்தான் என்றும் எடுத்து, “மலர்மிசை யேகினான்” என்றபடி
அன்பால் நினைக்கின்ற அடியார்களுடைய இதயத்தில் அவர் நினைந்த வடிவோடு சென்று வீற்றிருப்பவன் என வுரைப்பினும் அமையும்.
அடியன் – தன்மையொருமை. உள்ளாதவன் அந்தரம் என்று பதம் பிரித்து,
உள்ளாதவன் – கருகாதவனுக்கு, அந்தரம் – முடிவில், வினை வந்து அடைவது என்று உரைப்பாரு முளர்.

அந்தரம், தபநம், தவநம், தரங்கம், அந்தரங்கம், அநந்தரம் – வடசொற்கள்.
அடைவதுவே – குற்றியலுகரம் சிறுபான்மை கெடாது பொது விதியால் வகர வுடம்படு மெய் பெற்றது.

—————

அடையப்பன் னாகம் கடிவா யமுதுக வங்கி குளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்று குன்றால்
அடையப்பன் னாக மிசை தாங்கப் பாலர்க்கு அருள் செய்ததால்
அடையப்பன் னாகம் கரியான் அரங்கன் எட்டக்கரமே –27-

ஆல் அடை – (பிரளயப்பெருங்கடலிலே) ஆலிலையிற் பள்ளி கொண்டருள்கிற,
அப்பன் – (யாவர்க்குந்) தலைவனும்,
ஆகம் கரியான் – திருமேனி கறுத்திருப்பவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
எட்டு அக்கரம் – திருவஷ்டாக்ஷரமந்திரமானது, –
பல் நாகம் அடைய கடி வாய் அமுது உக – விஷப் பற்களினாற் சர்ப்பங்கள் (உடம்பு) முழுவதிலும் கடித்த வாயினிடமாக அமிருதம் சிந்தவும்,
அங்கி குளிர் அடைய – நெருப்புக் குளிர்ச்சியை யடையவும்,
பல் நாகம் மருப்பு ஆயுதம் இற – பல யானைகளின் தந்தங்களாகிய ஆயுதங்கள் ஒடியவும்,
குன்றால் அடை அப்பு அ நாகம் மிசை தாங்க – மலையோடு அடுத்தலை யுடையதான ஜலம் (கடல்) அந்த மலையின்மீது ஏந்தவும்,
பாலற்கு – சிறுவனான பிரகலாதனுக்கு,
அன்று – அந்நாளில் (இரணியன் பலவாறு வருத்தத் தொடங்கிய காலத்தில்),
அருள் செய்தது – கருணை புரிந்தது; (எ – று.)

தனித்தனி எல்லாப்பிராணிகளாலும் இறவாதபடி வரம் பெற்றவனும் மூவுலகையும் வென்று தன்னையே கடவுளாக
அனைவரும் வணங்கும்படி செய்துவருகின்றவனுமான இரணியாசுரன்
தன்மகனான பிரகலாதனுக்கு அசுர குருவாகிய சுக்கிராசாரியரைக்கொண்டு அக்ஷராப்பியாசஞ் செய்விக்கிறபொழுது,
அக்காலவழக்கத்தின்படி அவ்வாசிரியன் ‘இரணியாயநம:’ என்று முதலிற் சொல்லிக் கல்வி கற்பிக்க,
பிரகலாதன் அங்ஙனஞ்சொல்லிக் கல்விகற்க உடன்படாது நாராயண நாமத்தை யுட்கொண்ட அஷ்டாக்ஷர மகாமந்திரத்தைச் சொல்ல,
அதனை யுணர்ந்த இரணியன் மைந்தனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறுமுயன்றும்
அவன் வழிப்படாது விடாப்பிடியையுடையனானமை கண்டு கடுங்கோபங்கொண்டு,
தன்னைச் சார்ந்த அசுரர்களை யழைத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டனன்;

அதற்கு இசைந்த அவர்கள் தக்ஷகன் முதலிய கொடிய அஷ்டமகாநாகங்களைக் கொண்டுவந்து அக்குமாரன்மீது கடிக்கவிட,
அந்தப்பெரும்பாம்புகள் காளி காளாத்திரி யமன் யமதூதி என்ற விஷப்பற்கள் கொண்டு
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடித்து உக்கிரமான விஷங்களைக் கக்க,
அவன் இடைவிடாது நாராயணநாமோச்சாரணஞ் செய்துவந்ததுபற்றி அவன்பக்க லெழுந்த திருமாலருளால்,
அக்கடித்தவாய்களினின்று சொரிந்த விஷமே அமிருதமயமாக, அந்தப்பரமபாகவதன் சிறிதும் ஊறுபாடின்றி யிருந்தனன்;

அசுரர்கள் அவனை நெருப்பிலே போகட, அத்தீயும் குளிர்ந்து அவனை எரிக்கமாட்டாதாயிற்று;
இரணியன் கட்டளையால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தங்கள் வலியதந்தங்களாற் பாய்ந்து இடித்தபோது,
திருவருள்வலிமைபெற்ற அவனது மார்பிற் பட்டதனால் அத்திசையானைகளின் தந்தங்கள் முறிந்து போய்விட்டன;

அசுரர்கள் அவனைப் பெரியமலையுடன் சேர்த்து நாகபாசங்களினாற் கட்டிக் கடலிலே போகட,
அச்சமுத்திரத்திலே அம்மலையானது பிரகலாதன் தன்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய்மிதந்தது:
நாகபாசந் தானே விடுபட்டதனாற் பிரகலாதன் இனிது பிழைத்துக் கரைசேர்ந்தனன்;

இங்ஙனம் பலவாறாகத் துன்பந்தீர்த்துப் பக்தனைப் பாதுகாத்தது எனப் பெரியதிரு மந்திரத்தின் பிரபாவத்தை வெளியிட்டார்.

நாகம் மருப்பு ஆயுதம் இற என்பதற்கு –
யானைத்தந்தங்களும் ஆயுதங்களும் ஒடிபட வென்று உரைத்தலுமாம்;
அசுரர்கள் ஒருங்குசேர்ந்து பலவகைப்படைக்கலங்களைக் கொண்டு பிரகலாதனை வதைக்கத்தொடங்க
அவ்வாயுதங்களெல்லாம் அவனுடம்பிற் பட்டமாத்திரத்தில் ஒடிந்துபோய்விட
அவன் அவற்றாற் சிறிதும்வேதனையுறாது விளங்கின னென்பதும் உணர்க,

நம்பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணி வாள்
வெம்படை மாசுணம் மாமத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –திருவரங்கத்து மாலை –81

நாகம் என்ற வடசொல் – யானையையும் பாம்பையும் குறிக்கும்போது, நகத்தில் வாழ்வது எனக் காரணப்பொருள்படும்:
தத்திதாந்தநாமம்; (நகம் – மலையும், மரமும்) அங்கி – அக்நி என்ற வடசொல்லின் சிதைவு.
குளிர் – முதனிலைத்தொழிற்பெயர்.

மூன்றாமடியில், அடை – அடுத்தல்; தொழிற் பெயர்: அடு – பகுதி, ஐ – விகுதி,
குன்றால் அடை அப்பு என்பதற்கு – மலைகளினாலே யடைக்கப்பட்ட சமுத்திர மெனினும் அமையும்;
நாகபா சத்தினாற்கட்டிக் கடலிலேயிடப்பட்ட பிரகலாதன்மேல் இரணியன்கட்ட ளைப்படி அசுரர்கள் அனேகமலைகளைக்
கொண்டுபோய்ப் போகட்டு அழுத்து வாராயின ரென்று புராணங் கூறும்.
‘அன்றுகுன்றாலடையப்பு’ என்று எடுத்து, அக்காலத்தில் (இராமாவதாரத்தில்) மலைகளைக்கொண்டு திருவணை
கட்டியமைக்கப்பட்ட கட லென்று இயற்கையடைமொழி புணர்ந்ததாகப் பொருளுரைத்தல் சிறப்பன்று.
‘நாகம்’ – மலையையுணர்த்தும்போது, நக மென்ற வடசொல்லின் நீட்டல்.
ஆயுதம், அப், பாலன் – வடசொற்கள். அப்பன் – ஸர்வஸ்வாமி. ஈற்றடியில், ன் – விரித்தல்.

முன்றாமடியில், ‘அந்நாகம்’ என்பது, ‘அன்னாகம்’ என்று கொள்ளப் பட்டது, யமகநயத்தின்பொருட் டென்க.

—————-

அக்கர வம்புனைந் தாரய னாரிடை யாயிரு நால்
அக்கர வம்பு மலராள் கொழுநன் அரங்கன் செங்கோல்
அக்கர வம்புயன்றான் மூலம் என்ப தறிவித்திடான்
அக்கர வம்புவி மேல் வேழ மே வெளி யாக்கியதே –28-

இரு நால் அக்கரம் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவனான,
வம்பு மலராள் கொழுநன் – வாசனையையுடைய தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்குக் கணவனும்,
செம் கோலம் கரம் அம்புயன் – சிவந்த அழகிய தாமரைமலர்போன்ற திருக்கைகளையுடையவனுமாகிய,
அரங்கன் ரங்கநாதன், –
அக்கு அரவம் புனைந்தார் அயனார் இடை ஆய் – எலும்பையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த
சிவபிரானுக்கும் பிரமதேவருக்கும் நடுவிலே தானிருந்து கொண்டு,
தான் மூலம் என்பது அறிவித்திடான் – தானே (எல்லார்க்கும்) ஆதிமூலப்பொருள் என்கிற உண்மையை வெளிப்படுத்தான்;
அ கரவு – அந்த ஒளிப்பை,
அம் புவிமேல் வேழமே வெளியாக்கியது – அழகிய நிலவுலகத்தில் (கஜேந்திரனாகிய) யானையே பகிரங்கப்படுத்தி விட்டது; (எ – று.)

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் முறையே செய்பவராதலாற் பிரம விஷ்ணு ருத்திர ரென்று
முறைப்படுத்திக் கூறப் படுகின்ற திரிமூர்த்திகளுள் இடைப்பட்டவனான திருமால்
முன்னும் பின்னு முள்ளமற்றையிருவர்க்கும் ஸமனானவன்போன்றிருத்தலால்,
‘அவனே அம் மூவரில் மற்றையிருவர்க்கும் முதற்பொருள்’ என்கிற மெய்ம்மை அறிதற்கு அரிதாயிருந்தது;
அந்த மறைபொருள், கஜேந்திராழ்வான் ஸ்ரீமந்நாராயணனை மற்றைப்பெயர்களாற் குறியாமல் ‘ஆதிமூலமே’ என்று குறித்து
விளித்ததனால் இனிது வெளியாயிற்று என்பதாம்.
“உன்னொக்க வைத்த விருவர்க்கு மொத்தி யொருவர்க்கு முண்மையுரையாய்” என்றது,
முதன் மூன்றடிகட்கு மேற்கோளாகத்தக்கது.
கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது, எம்பெருமானல்லாத பிறதேவரெல்லாரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
திருமால் தானே வந்து அருள்செய்தன னாதலால், இரகசியார்த்தம் வெளியாயிற் றென்க.

அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம். கரவு – கள்ளம். வேழமே, ஏ – இழிவு சிறப்பு;
“விலங்குமன்றோ சொல்லிற்று ஐயமற்றே” என்பர் திருவேங்க டத்தந்தாதியிலும்.

————–

ஆக்கு வித்தார் குழலால ரங்கே சரன் பால் விதுரன்
ஆக்குவித்தார வடிசில் உண்டார் கடலாடையகல்
ஆக்குவித்தாரறி வற்றேனைத் தம்மடி யார்க்கடிமை
ஆக்குவித்தாரடியே யடியேன்று ய்க்குமாரமுதே–29-

குழலால் – வேய்ங்குழலினிசையால்,
ஆ குவித்தார் – பசுக்களை (ஓரிடத்துத் திரளாக)க் கூட்டினவரும்,
விதுரன் ஆக்கு வித்தாரம் அடிசில் – விதுரன் சித்தஞ்செய்த விசேஷ போஜநத்தை,
அன்பால் உண்டார் – அன்பினாற் புசித்தருளியவரும்,
கடல் ஆடை அகலா – சமுத்திரமாகிய ஆடையை நீங்காத,
கு – பூமியின் உற்பத்திக்கு,
வித்தார் – விதை போலக் காரணமானவரும்,
அறிவு அற்றேனை தம் அடியார்க்கு அடிமை ஆக்குவித்தார் – அறிவற்ற என்னைத் தமது அடியார்கட்கு
அடியவனாகும்படி அருள்செய்தவருமாகிய,
அரங்கஈசர் – ரங்கநாதருடைய,
அடியே – திருவடிகளே,
அடியேன் துய்க்கும் ஆர் அமுது – தாசனாகிய யான் அனுபவிக்கும் அருமையான அமிருதமாம்.

அமிருதத்தை நுகர்ந்து ஆனந்தமடைவார்போல அடியேன் எம்பெரு மானுடைய திருவடிகளைத் தியானித்தல் துதித்தல் பூசித்தல்
முதலியன செய்து பேரானந்தமடையவே னென்பதாம்.
பலவிடங்களிற் பரவி மேய்கிற பசுக் கூட்டங்களை ஒருங்கு சேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற் பொருட்டும்,
கண்ணன் இனிமையாக வேணு காநஞ் செய்வன்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி முறையாகிறவன்;
விசித்திர வீரியனது மனைவியாகிய அம்பிகையினால் ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்;
பாண்டவர்க்குந் துரியோதனாதியர்க்குஞ் சிற்றப்பன். கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது பேசுபவனாய்
அத்தினாபுரிக்குச் சென்ற போது அங்கு வேறு யாருடைய வீட்டிற்குஞ் செல்லாமல் ஞான பக்திகளிற் சிறந்த
விதுரனுடைய திருமாளிகையினுட் புக்குத் தங்கி அங்கு அவனால் மிக்க அன்புடனமைக்கப்பட்ட
விருந்துணவை அமுதுசெய்தருளின னென்பது, பிரசித்தம்.

குழல் – அதனொலிக்கு, முதலாகுபெயர். அன்பால் உண்டார் என இயையும்; அன்பால் ஆக்கு என்றும் இயைக்கலாம்.
வித்தாரவடிசில் – பல வகைச் சுவைப் பண்டங்களோடு கூடிய உணவு, விஸ்தாரம், கு – வடசொற்கள்.
அகலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அடியே, ஏ – பிரிநிலை.
அடியே அடியேன் துய்க்கும் ஆரமுது – “உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங்,
கண்ண னெம்பெருமான்” என்றார் நம்மாழ் வாரும். அரங்கேசர் – குணசந்தி.

————-

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன்றிரு
ஆரா தனம் செய்வன் வேதா வென்றாலடியேன் புகழ்கைக்கு
ஆராதனம் செய்ய போதாந்திரு மகளாக பல் பூண்
ஆராதனம் செயன்பாகா வரங்கத் தமர்ந்தவனே –30-

செய்ய போது – செந்தாமரை மலர்,
ஆதனம் ஆம் – வீற்றிருக்குமிடமாகப் பெற்ற,
திருமகள் இலக்குமியை, ஆக – மார்பிலுடைய வனே!
பல் பூண் ஆரா – ஆரத்தையும் மற்றும் பலவகை யாபரணங்களையுந் தரித்தவனே!
தனஞ்செயன் பாகா – அருச்சுனனுக்குச் சாரதியானவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
ஆராத நஞ்சு எய்து கண்டன் – உண்ணத் தகாத விஷம் பொருந்திய கழுத்தை யுடையவனான சிவபிரான்,
நின் கீர்த்தி அறைவன் – உனது புகழை யெடுத்துச் சொல்லித் துதித்துப் பாடுவன்;
வேதா – பிரமதேவன்,
திரு ஆராதனம் செய்வன் – (உனக்குப்) பூசனை புரிவன்;
என்றால் -, அடியேன் புகழ்கைக்கு ஆர் – நான் (உன்னைத்) துதித்தற்கு என்ன தகுதியுடையேன்!

திரிமூர்த்திகளுள் மற்றை யிருவரும் புகழ்ந்து பூசனை புரியுஞ் சிறப்பை யுடைய உனது புகழ் எளியனான என்னால்
எடுத்துச் சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.
‘ஆராதநஞ்செய்துகண்டன்’ என்றது – மகா பாகவதனான உருத்திரனுடைய செயற்கரியன செய்யுந் திவ்விய சக்தியையும்,
‘வேதா’ என்ற பெயர் – விதித்தற் கடவுளான பிரமனது பெருமையையும் விளக்கும்.

திருமாலின் கட்டளைப்படி தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில், அதனினின்று எழுந்த
அதி பயங்கரமானதொரு பெரு விஷத்தைக் கண்ட மாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல்
அஞ்சி யோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளால் அவ்விஷத்தைச் சிவபிரான் அமுது செய்து
கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்பது வரலாறு;

பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் தோன்றத் திருமால் அவற்றில்
விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச் செய்தன ரென்றும் வரலாறு கூறப்படும்.
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரத யுத்தத்தில் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து
அதனாற் பார்த்தசாரதி யென்று ஒரு திருநாமம் பெற்றமை பிரசித்தம்.

முதலடியில் ‘னஞ்செய்து’ என்றவிடத்து நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப்பட்டது. யமகநயத்தின்பொருட் டென்க.
கண்டம், கீர்த்தி, ஆராதநம், வேதா, ஆஸநம், ஹாரம், தநஜ்ஞ்யன் – வடசொற்கள்.

மூன்றாமடியில், ஆர் – யார் என்பதன் மரூஉ. திருமகளாக – திருமகளாகன் என்ற பெயரின் ஈறுகெட்டவிளி.
ஹாரம் – பொன்னாலும் முத்தினாலும் மற்றையிரத்தினங்களாலும் மலரினாலு மாகிய மார்பின் மாலை.
தருமபுத்திரன் இராஜ சூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அருச்சுனன் வடக்கிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால், அவனுக்கு ‘தநஞ்ஜயன்’ என்று ஒருபெயராயிற்று;
இனி, இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும் ஒருபொருள் கொள்ளலாம்.
அடியேன் ஆர் என்றவிடத்து, யார் என்ற வினாவினைக்குறிப்புமுற்று – தன்மையொருமைக்கு வந்தது.

இரண்டாமடியிறுதியில், வருமொழி முதலுயிர்வரக் குற்றியலுகரக்கேடு கொள்ளாமலும், பொது விதிப்படி வகரவுடம்படுமெய்த்
தோற்றத்தையேனும் ஏற்காமலும் சந்திபிரித்து நிறுத்தினது, யமகவமைப்பின் பொருட்டு.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருக்கிற இடங்களிலெல்லாம், கட்டளைக்கலித்துறையிலக்கணவமைதியை நோக்குமிடத்து,
குற்றிய லுகரம் அலகுபெறவில்லை யென்று கொள்ளவேண்டும்;
இல்லாவிடின், “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே
நிரைபதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்ற கட்டளைக் கலித்துறை யிலக்கணம் அமையாது.
இங்ஙனம் கொள்ள வேண்டிய விடங்களிலெல்லாம் மூலத்தில் இப்பதிப்பில் (+) இக்குறி இடப்பட்டிருக்கிறது.

—————

அமர வரம்பையி னல்லார் பலரந்திக் காப்பெடுப்ப
அமர வரம்பையில் வேல் வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்
அமர வரம்பையில் கான்போயிறந்தன ராதலில் வீடு
அமர வரம்பையின் மஞ்சா ரரங்கருக் காட் படுமே –31–

அமர அரம்பையின் நல்லார் பலர் அந்திக் காப்பு எடுப்ப – தேவசாதியாகிய ரம்பை யென்னும் அப்ஸர ஸ்திரீயைக் காட்டிலும்
அழகிய வர்களான மகளிர் பலர் திருவந்திக்காப்பு எடுக்கவும்,
அமர அரம் பையில் வேல் வேந்தர் சூழ – போர்க்கு உரியதும் அரமென்னும் வாள் விசேடத்தால் அராவப்பட்டதுமான
வேலாயுதத்தை யேந்திய அரசர்கள் பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும்,
மண் ஆண்டு இருந்தோர் அமர – நிலவுலகத்தை யர சாண்டிருந்தவர்க ளெல்லாரும்,
(பின்பு),
வரம்பை இல் கான் போய் இறந்தனர் – எல்லையை யுடையதாகாத வனத்திற்குச் சென்று மாய்ந்தார்கள்:
ஆதலில் – ஆகையால்,
வீடு அமர – (நீங்கள்) பரமபதமடைதற்பொருட்டு,
அரம்பையில் மஞ்சு ஆர் அரங்கருக்கு ஆள்படும் – வாழை மரத்தின் மீது மேகங்கள் தங்கப்பெற்ற ஸ்ரீரங்கத்தில்
எழுந்தருளியிருக்கிற நம்பெருமாளுக்கு அடிமைப்படுங்கள்; (எ – று.)

செல்வம் யாக்கை இவற்றின் நிலை யில்லாமையை முதல் வாக்கியத்தில் எடுத்துக் காட்டி,
இரண்டாம் வாக்கியத்தில், அரங்கனுக்கு ஆட்பட்டால் அழியாச் செல்வமாகிய முத்தி சித்திக்கு மென்றார்.
அரசர்கள் தமது ஆயுளிற் பெரும்பான்மை அரசாண்டு முதுமை வந்த பின்பு அவ்வரசாட்சியைத் தமது மைந்தர்க்கு அளித்து
வனம் புகுந்து மறுமைப் பேற்றின் பொருட்டுச் சில காலம் தவஞ்செய்தலு முளதாயினும், அச்சில நாளைத் தவத்தால்
வீடு பேறு கிடைக்கு மென்ற நிச்சய மில்லை யென்பதும் இதிற் போதரும்.
‘வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்’ என்றதனால், சக்கரவர்த்திக ளென்றதாயிற்று.

அரம்பை – ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்; இன் – ஐந்தனுருபு, எல்லைப் பொருளது;
இங்ஙனம் உபமான உபமேயங்களினிடையே வரும் எல்லைப் பொருளை உறழ்பொரு வென்பர்.
அந்திக் காப்பு எடுத்தல் – பவனி வருதலாகிய திருவிழாவின் முடிவிலே கண்ணெச்சில் கழித்தற் பொருட்டு ஆரதி யேந்துதல்;
அந்திக் காப்பு – அந்தி மாலைப் பொழுதில் திருஷ்டி தோஷ பரிகாரத்திற்காக ஆரதியேந்துதலுமாம்.

இரண்டாமடியில், அமரம் – ஸமரம் என்ற வடசொல்லின் விகாரம்;
அமர என்று எடுத்து, அமர் என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்ச மெனினுமாம்.
பயில் என்பது பையில் எனப் போலியாய் நின்றது, யமகத்தின்பொருட்டு.
அரம்பயில்வேல்- கீழ் ‘அரங்காதுவார்கணை’ என்றதனோடு ஒப்பிடுக.

மூன்றாமடியில், அமர என்பது – ‘அடைய’ என்பது போல எஞ்சாமைப் பொருள் காட்டி நின்றது;
அம் மரம் என்று எடுத்து, அழகிய மரங்களையுடைய வென்று உரைப்பாரு முளர்.
வரம்பையில் என்றவிடத்து, இல் என்பது – செயப்படுபொருள் குன்றாததாய் நின்றது.
அரம்பையில் மஞ்சுஆர் அரங்கம் – வாழை மரங்களின் உயர்ச்சி வளத்தை விளக்க வந்த தொடர்புயர்வுநவிற்சி யணி.
ஆட்படும் – உம்ஈற்று ஏவற்பன்மை.

—————

ஆளாக வந்த வடியேற் கருள்பரி யானை திண் டேர்
ஆளாக வந்தனிற் செற்றிலங்கே சனை யட்டவல்வில்
ஆளாக வந்தன் புயந்துணித் தாயரங் காமுளரி
ஆளாக வந்தமி லுன்னடி யார்க்கன்ப னாவதற்கே –32-

ஆகவந்தனில் – போரிலே,
பரி – குதிரைகளையும்,
யானை – யானைகளையும்,
திண் தேர் – வலிய தேர்களையும்,
ஆள் – காலாள்களையும்,
செற்று – அழித்து,
இலங்கா ஈசனை அட்ட – இலங்கையரசனான இராவணனைக் கொன்ற,
வல்வில் ஆளா – வலிய வில்லை யாள்கிற வீரனே!
கவந்தன் புயம் துணித்தாய் – கபந்தனென்ற அரக்கனது தோள்களை யறுத்திட்டவனே!
அரங்கா – ரங்கநாதனே!
முளரியாள் ஆக – தாமரை மலரில் வாழ்பவளான திருமகளை மார்பிற் கொண்டவனே!
ஆள் ஆக வந்த அடியேற்கு – அடிமை யென்று வந்து உன்னைச் சரணமடைந்த எனக்கு,
அந்தம் இல் உன் அடியார்க்கு அன்பன் ஆவதற்கு அருள் – எல்லை யில்லாத உனது அடியார்கட்கு
அடியவனாகுமாறு கருணை செய்வாய்; (எ – று.)

எம்பெருமானுக்குத் தொண்டனாவதனோடு அப்பெருமானடியார்கட்கு அடிமை பூண்டொழுகுதலில்
தமக்கு உள்ள அபேக்ஷையைக் கூறினார்.

பரியானை தேர் ஆள் – சதுரங்க சேனை. குதிரை, ஓரங்கமாதலோடு மற்றோரங்கமான
தேரைச் செலுத்துவது மாதலால், முன்நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து யானையை நிறுத்தினது, அது சேனைக்கு அலங்காரமாதலும் வீரர்க்கு வாகனமாய் நிற்றலோடு
தானும் போர்செய்து பகையழிப்பதாதலும் பற்றியென்க.
ஆஹவம், லங்கேசன், அந்தம் – வடசொற்கள். லங்கேசன் – குணசந்தி.
முளரி – முட்களை யுடைய அரியையுடையது: வேற்றுமைத் தொகையன்மொழி; அரி = அரை: தண்டின் சுற்றுப்புறம்.

————-

ஆவா கனத்த ரடியார் மனத்துட் புள்ளான வொப்பில்
ஆவா கனத்த ரரங்கர் பொற்றாளுக்கு அடிமைப் படார்
ஆவா கனத்த வழுக்குடல் பேணி யறி வழிந்தவ்
ஆவா கனத்த ரிருந்தென் னிராமலென் னம்புவிக்கே–33-

அடியார் மனத்துள் ஆவாகனத்தர் – அடியார்களுடைய இதய கமலத்தில் வந்து வீற்றிருத்தலை யுடையவரும்,
புள் ஆன ஒப்பு இலா வாகனத்தர் – கருடப் பறவையாகிய ஒப்பற்ற வாகனத்தை யுடையவருமாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதருடைய,
பொன் தாளுக்கு – அழகிய திருவடிகளுக்கு,
அடிமைப்படார் – ஆட்படமாட்டார்கள் (சிலர்):
ஆ ஆ – அந்தோ!
கனத்த அழுக்கு உடல் பேணி – பாரமாயுள்ள அசுத்தமான தம் உடம்பைப் பாதுகாத்துக் கொண்டு,
அறிவு இழந்து – மதி கெட்டு,
அவா ஆகு – (சிற் றின்பத்தில்) ஆசை கொள்ளுகிற,
அனத்தர் – பயனற்ற அவர்கள்,
அம் புவிக்கு – அழகிய இந்நில வுலகத்தில்,
இருந்து என் – உயிர் வாழ்ந்திருத்தலால் என்ன லாபம்?
இராமல் என் – இராதொழிதலால் என்ன நஷ்டம்? (எ – று.)

அரங்கர்க்கு ஆட்படாதவர் இருந்தென்ன? போயென்ன? என்றபடி;
எனவே, இவ்வுலகத்தில் மானுடப் பிறப்பெடுத்தலின் பயன் அரங்கர்க்கு ஆட்பட்டு உய்தலே யென்பது, தேர்ந்தகருத்து.
‘மலர்மிசை யேகினான்’ என்றபடி அன்போடு தியானிக்கின்ற அடியார்களுடைய இதய கமலத்தில் எம்பெருமான்
அவர் நினைந்த வடிவத்தோடு வந்து வீற்றிருத்தலால், ‘ஆவாகனத்த ரடியார்மனத்துள்’ என்றார்.
ஆவாகனத்தர் – தம்மைத்தாமே அங்கு நிலைநிறுத்துபவ ரென்க.

ஆவாஹநம், மநஸ், வாஹநம், கநம், அநர்த்தம், புவி – வடசொற்கள்.
“நேமி சேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமிபாரங்கள்” என்றபடி
பகவத் பக்தரல்லாதவரது உடல் பூமிக்குப் பாரமாதலால், ‘கனத்த வுடல்’ எனப்பட்டது.
ஆ ஆ – இரக்கக் குறிப்பிடைச் சொல்லின் அடுக்கு.

————-

அம்பு விலங்கை நகர் பாழ் படச் சங்கு மாழியும் விட்டு
அம்பு விலங்கை கொண்டாயரங்கா வன்றிடங்கர் பற்றும்
அம்பு விலங்கை யளித்தா யினியென்னை யாசை யென்றிவ்
அம்பு விலங்கையிட் டேசம் சிறையி லடைத் திடலே –34-

அம் – அழகிய,
புவி – பூமியில்,
லங்கை நகர் பாழ்பட – இலங்காபுரியிலுள்ள அரக்கர்கள் அழியும்படி,
சங்கும் ஆழியும் விட்டு அம்பு வில் அம் கை கொண்டாய் – சங்க சக்கரங்களைக் கைவிட்டு
(வந்து இராமனா கத்திருவவதரித்து) அம்பையும் வில்லையும் அழகியகைகளிற் கொண்டவனே!
அரங்கா!
அன்று – அந்நாளில்,
அம்பு – ஜலத்திலே,
இடங்கர் பற்றும் – முதலையினாற் பிடித்துக் கொள்ளப்பட்ட,
விலங்கை – மிருக ஜாதியான கஜேந்திராழ்வானை,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே! –
இனி -, என்னை -,
ஆசை என்று இயம்பு விலங்கை இட்டு – ஆசை யென்று சொல்லப் படுகிற (ஆசையாகிய) விலங்கைப் பூட்டி,
ஏசும் சிறையில் அடைத்திடல் – இகழப்படுகிற (பிறப்பாகிய) சிறைச் சாலையில் அடைக்காதே; (எ – று.)

உனக்கு ஆட்பட்ட அடியேனது காமம் முதலிய குற்றங்களைப் போக்கி இனிப் பிறப்பில்லாதபடி
முத்தி யளித்தருள வேண்டு மென வேண்டியபடி.
பெருமாள் இலங்கை யரசனான இராவணன் முதலிய இராக்கதர்களை யழிக்கக் கருதி வனவாசஞ்செல்லுங்காலத்தில்
சங்க சக்கராம்சமான பரத சத்துருக்கனர்களை உடன் கொண்டு செல்லாது நகரத்திலேயே விட்டுச் சென் றமையும்,
‘சங்கும் ஆழியும் விட்டு’ என்றதில் அடங்கும்.

ஒருவிலங்கினாலே மற்றொரு விலங்கிற்கு நேர்ந்த துன்பத்தையும் பொறாமல் தனது பேரருளினால்
அரை குலையத் தலை குலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகா குணத்தி லீடுபட்டு,
‘அன்று இடங்கர் பற்றும் விலங்கையளித்தாய்’ என்றார்.
விலங்கு – திர்யக்ஜாதி. ‘விலங்கையிட்டேசஞ்சிறையில்’ என்று பாடமோதி,
விலங்கை யிட்டே, சம் – ஜந்மமாகிய, சிறையில் – சிறைக்கூடத்தில் என்று உரைப்பாரு முளர்;
சம் = ஜம்: ஜநநம், பிறப்பு. ஏசு அம் சிறை என்று எடுத்து, அம் – சாரியை எனினும் இழுக்காது.
உயிரைப்பந்தப்படுத்துதலால், பிறப்பு ‘சிறை’ எனப்பட்டது.
“அவாவென்ப எல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றது கொண்டு,
அவாவை ‘விலங்கு’ என்றதன் காரணத்தை உணர்ந்து கொள்க.

லங்கை நகர் – இடவாகுபெயர். மூன்றாமடியில், அம்பு – வடசொல்.
அடைத்திடல் – எதிர்மறை யொருமை யேவல்; எதிர்மறைவியங்கோளுமாம்.

————-

இடவ மலைக்கும் புயங்க மலைக்கு மிலங்குமால்
இடவ மலைக்கு மிருங்க மலைக்கு மிறை வசங்க
இடவ மலைக்கும் புனல் அரங்கா வெய்த்த மார்க் கண்டன் கண்டு
இடவ மலைக்கு முலகழி யாதுள் ளிருந்த தென்னே –35–

இடவ மலைக்கும் – ருஷப கிரியாகிய திருமாலிருஞ்சோலை மலைக்கும்,
புயங்க மலைக்கும் – சேஷ கிரியாகிய திருவேங்கட மலைக்கும்,
இலங்கும் அகல் இடம் அமலைக்கும் -விளங்குகின்ற விசாலமான நிலவுலகத்துக்கு உரிய அதி தேவதையான பூமி தேவிக்கும்,
இருங் கமலைக்கும் – பெரிய செந்தாமரை மலரில் வாழ்பவளான ஸ்ரீதேவிக்கும்,
இறைவ – தலைவனே!
சங்கம் இடவ – சங்கத்தை இடக்கையிலுடையவனே!
மலைக்கும் புனல் அரங்கா – (கரையை) மோதுகின்ற காவிரி நீர்ப் பெருக்குப் பாயுந் திருவரங்கத்தி லெழுந்தருளியிருப்பவனே!
எய்த்த மார்க்கண்டன் கண்டிட – (பிரளயத்தி லலைபட்டு) மெலிவடைந்த மார்க்கண்டேய முனிவன்
(நினது திருவயிற்றினுட் சென்று) காணுமாறு,
அம் அலைக்கும் உலகு அழியாது உள் இருந்தது – (பிரளய வெள்ள) நீரினால் அழிக்கப்பட்ட உலகங்களெல்லாம்
அழியாமல் நினது திருவயிற்றினுள்ளே யிருந்த விதம்,
என்னே – என்ன விசித்திரமோ!

ருஷபம் தவஞ்செய்து பேறுபெற்ற மலையாதலால் தென்திருமலைக்கு ‘ருஷபகிரி’ என்றும்,
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பல வகைக் கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே
அப்பெருமான் இனிது எழுந்தருளி யிருத்தற்கு மலை வடிவமானதனாலும்
மேரு மலையினிடமிருந்து ஆதிசேஷனுடணே வாயுவினாற் கொணரப்பட்ட மலையாதலாலும்
வடதிரு மலைக்கு ‘சேஷகிரி’ என்றும் பெயர்கள் வாய்த்தன.

இடவம் – ருஷபம் என்ற வடசொல்லின் விகாரம்.
புஜங்கமலை யென்பது – ‘சேஷகிரி’ என்பதன் பரியாயநாமமாக நின்றது. புஜங்கம் என்பது, புயங்கம் என்று விகாரப்பட்டது.
அமலா, கமலா என்ற வடசொற்கள் – ஆவீறு ஐயாயின. அமலை – குற்றமில்லாதவள்.
இறைவன் – இறைமை என்ற பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
மலைத்தல் – பொருதல். எய்த்தல் – மெலிதல்.
மார்க்கண்டன் – மிருகண்டுவினது குமாரன்; வடமொழித் தத்திதாந்தநாமம். அம் – நீர்; வடசொல்.

காலகதியைக் கடந்து என்றும் பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்க்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம் புரிந்து நரநாராயணரது தரிசனத்தைப்பெற்று
‘யான் பிரளயக்காட்சியைக் காணு மாறு அருள்புரியவேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அநுக் கிரகித்துச்
சென்றபின்பு மாயவன் மாயையால் மகாபிரளயந் தோன்ற, அப் பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு
வருந்திய மார்க்கண்டேயன், அவ்வெள்ளத்தில் ஆலிலையின் மீது ஒருகுழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற
ஸ்ரீமந்நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட் புக்கு, அங்கிருந்த உலகங்களையும் எல்லாச்
சராசரங்களையும் கண்டு பெரு வியப்புக் கொண்டன னென்பது, இங்குக் குறித்த விஷயம்.

—————–

இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலு நிம்பத்து
இருந்தை யிலந்தித்தி யாதவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து
இருந்தை யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் வெண்ணெ யில்லி லொளித்து
இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–36-

என் செய்தாலும் – என்ன உபாயஞ்செய்தாலும்,
இருந்தை – கரியானது,
இலங்க – விளங்கத் தக்கதாக,
வெளிறு படாது – வெண்ணிற மடையாது;
(என்செய்தாலும்) -,
நிம்பத்து இருந் தையிலம் தித்தியாது – சிறந்த வேப்பெண்ணெய் இன்சுவை பெறாது;
அவை போல் -, –
புல்லர் – அற்பகுணமுடையரான கீழ்மக்கள்,
யாவும் கற்று ஆய்ந்து இருந்து – சகல சாஸ்திரங்களையும் பயின்று ஆராய்ந்திருந்தும்,
ஐயில் அம்பு அன்ன கண் ணார்க்கு அல்லால் – கூரிய அம்பு போன்ற கண்களை யுடைய மகளிர்க்கு அன்பாயிருப்பரேயல்லாமல்,
இல்லில் ஒளித்து இருந்து வெண்ணெய் ஐயில் அம் கை அரங்கர்க்கு அன்பு ஆகி இருக்கிலர் – (ஆய்ச்சியருடைய) கிருகத்தில்
(அவரறியாதபடி) ஒளித்து வீற்றிருந்து வெண்ணெயை எடுத்து உண்ட அழகிய கையை யுடைய ரங்கநாதர்
விஷயமாக அன்பு கொண்டிருக்க மாட்டார்கள்; (எ – று.)

என்றது, புல்லறிவாளரியல்புக்கு இரங்கியவாறாம். உவமையணி.
‘என் செய்தாலும்’ என்பதை மத்யதீபமாக முன் பின் வாக்கியமிரண்டற்கும் கூட்டுக.
வெண்ணெயை ஒளித்திருந்து உண்டது, கிருஷ்ணாவதாரத்தில்.
நிம்பம், தைலம் – வடசொற்கள்.
இரண்டாமடியில் ‘தையிலம்’ என்பதும், மூன்று நான்கா மடிகளில் ‘ஐயில்’ என்பதும் – யமகத்தின் பொருட்டுக் கொண்ட போலிகள்.
தைலம் – எண்ணெய்; திலம் – எள்: அதன் சம்பந்தமானது. இங்கு இச்சொல் நெய் என்ற மாத்திரமாய் நின்றது.
வேப்பெண்ணெய்க்கு ‘இரும்’ என அடைமொழி கொடுத்தது, இகழ்ச்சிக்குறிப்பு; கைப்பிற் பெரிய என்று பொருள்கொள்ளினுமாம்.
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்பது – துணைவினை:
நான்காமடியில், ‘இருந்து’ என்பதற்கு – உட்கார்ந்து என்பது பொருள்;
ஆகவே, ஒரு சொல் வந்த பொருளில் வாராமை காண்க.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்றதன் பின் உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
ஐயில் அம்பு அன்ன – வேலையும் அம்பையும் போன்ற எனினுமாம்.

————

இருக்குமந் தத்தி லாரியா வரங்கன் மண் ஏழுக்குந்தய்
இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான் எட்டு எழுத்தைக் குறி
இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் கை போய்
இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–37-

இருக்கும் அந்தத்தில் அறியா அரங்கன் – வேதமும் தனது முடிவில் (வேதாந்தமாகிய உபநிஷத்துக்களில்) அறிய மாட்டாது நின்ற ரங்கநாதனும்,
மண் ஏழ் உண்டும் தயிருக்கும் அந்த திரு வாய் மலர்ந்தான் – ஏழு வகைப்பட்ட உலகங்களை யெல்லாம் புசித்தும்
(வயிறு நிரம்பாமற் கிருஷ்ணாவதாரத்திலே) தயிரை உண்ணும்பொருட்டாகவும் அந்த அழகிய வாயைத் திறந்தவனு மான திருமாலினது,
எட்டு எழுத்தை – திருவஷ்டா க்ஷரமந்திரத்தை,
குறியிருக்கும் – சிந்தியாத உங்களுக்கும்,
மந்தம் புத்தி ஈர்த்து நல் வீடு எய்தல் ஆகும் – கூர்மையற்ற அறிவை யொழித்து (தத்துவ ஜ்ஞாநம் பெற்று)ச் சிறந்த முக்தியை அடைதல் கூடும்:
கை போய் இருக்கும் அந்தன் செவிடு ஊமன் முந்நீர் கடந்து ஏறிடில் – கைகளில்லாத முடவனும் குருடனும் செவிடனும் ஊமையுமான
ஒருவன் கடலைக் கடந்து அக்கரையேறுவனானால்; (எ – று.)

ஏறிடில் எய்தலாகும் என இயையும். முடம், குருடு, செவிடு, ஊமை என்ற உறுப்புக் குறைகளை யெல்லாமுடைய ஒருவன்
கடல் கடந்து கரையேறுவது உண்டானால், எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தைச் சிந்தியாத உங்கட்கும்
பிறவிக் கடல் கடந்து முத்திக் கரை சேர்தல் உளதாம் என்றார்; என்றது, அஸம்பாவித மென்றபடியாம்:
இது, பொய்த்தற்குறிப்பணி; வட நூலார் மித்யாத்யவஸிதியலங்கார மென்பர்: இதன் இலக்கணம் –
ஒரு பொருளைப் பொய்யென்று நிரூபித்தற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல்.
நீந்த மாட்டாமைக்கு முடமும், கரை இன்னதிசை யிலுள்ளது எனக் காண மாட்டாமைக்குக் குருடும்,
அதனைக் குறித்துப் பிறரை உசாவியுணர மாட்டாமைக்கு ஊமையும், பிறர் சொல்லக் கேட்டறியமாட்டாமைக்குச் செவிடும் சேர்க்கப்பட்டன.

ருக், அந்தம், மந்தம், புத்தி, அந்தன் – வடசொற்கள்.
இருக்கும், உம் – உயர்வுசிறப்பு; பகவானது சொரூபத்தை யுணர்ந்து உரைத்தற்கென்றே யமைந்ததும் என்றபடி,
மண் ஏழ் – ஈரேழுலகம். மண்ணேழுண்டும், தயிருக்கும் என்ற உம்மைகள் – முறையே, உயர்வு சிறப்பு இழிவு சிறப்புப் பொருளன.
அந்தத் திருவாய் – உலகமுண்ட பெருவாய். குறியிர் – முன்னிலைப் பன்மை யெதிர்மறை வினையாலணையும்பெயர்;
இர் – விகுதி: எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. உம் – இழிவுசிறப்பு. எய்தல், எய்து – பகுதி.
முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மை யுடையது; நீர்மை – தன்மை:
ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுநீரையுடையது என்றலு முண்டு; பண்புத்தொகையன்மொழி.

—————

ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்
ஏறும் கரி மறை யாதலினால் ஐயாம் யாதுகுமக்கீடு
ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி
ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே –38-

‘ஏறும் – எருதையும்,
கரியும் – யானையையும்,
பரியும் – குதிரையையும்,
செற்றான் – வென்றவனான திருமால் தானே,
பரன் – (யாவர்க்கும்) மேலான இறைவன்,’
என்று – என்று ஐயந் திரிபறத் தெரிவித்து,
மன்றுள் ஏறும் – அவை யேறுகிற (நியாய சபையாராற் சரி யென்று ஏற்றுக் கொள்ளப்படுகிற),
கரி – சாட்சி,
மறை – வேதமாகும்:
ஆதலினால் – ஆதலால்,
உமக்கு – உங்கட்கு,
ஐயம் யாது – (திருமாலே பரம் பொரு ளென்கிற விஷயத்திற்) சந்தேக மென்ன?
(சிறிதும் சங்கைகொள்ளவேண்டா என்றபடி):
கரிய அரங்கர்க்கு அன்பு ஆய் – கரிய திருநிறமுடைய ரங்கநாதருக்கு (நீங்கள்) அன்புள்ள அடியார்களாகி,
ஈடேறும் – உய்வு பெறுங்கள்: (அங்ஙனம் நீங்கள் அன்பரானால்),
வினை என்னும் இடி ஏறும் கரியும் – (தொன்று தொட்டு வருகிற உங்கள்) கருமமாகிய பேரிடியும் கரிந்தொழியும்:
இனிமேல் பிறவி இடர் இல்லை – (உங்கட்கு) வரும் பிறப்புத் துன்பமும் இல்லையாம்; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

இது, உலகத்தார்க்கு நல்லறிவுணர்த்தியது.
அரங்கர்க்கு அன்புபூண்டு ஒழுகினால், அப்பரமனதருளால், மூவகைக் கருமங்களில் சஞ்சிதம் ஆகாமியம் என்ற இரண்டும் ஒழிய,
பிராரப்தகருமமும் வலியொடுங்கியிடுமென்க.
(சஞ்சிதம் – பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்கள்.
பிராரப்தம் – அவ்வினைப் பயன்களுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த உடம்பால் முகந்து நின்றவை.
ஆகாமியம் – இப் பிறப்பில் ஈட்டப்பட்டுப் பின் அனுபவிக்கக் கடவன.)

வேதம் அனைவராலும் தடையின்றி ஒப்புக் கொள்ளப்படும் மூலப் பிரமா ணமென்பார், ‘மன்றுளேறுங் கரி மறை’ என்றார்.
வினைப் பயன் தவறாது விளைந்து வருத்துதலால், ‘இடியேறு’ எனப்பட்டது.
ஏறு – ஆண்பாற்பெயர்; சிறந்ததையும் பெரியதையும் ‘ஏறு’ என்றல், மரபு.

————–

இடராக வந்தெனைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மா நாகம் என் செயும் யான் வெருவி
இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும் வில்
இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–39-

வில் – வில்லை,
இடம் – இடக்கையிலேந்திய,
ராகவன் – ரகுகுலத்தி லவதரித்தவனான,
அரங்கன் – ரங்கநாதனது,
திரு தாள் – திருவடி,
என் இதயத்தது – அடியேனது மனத்தி லுள்ளது: (ஆதலால்),
புல் சிறு தெய்வங்கள் – இழி குணமுடைய அற்ப தேவதைகள்,
என்னை – இடர்,
ஆக வந்து என் செயும் – துன்பம் விளைப்பனவாக வந்து நெருங்கி யாது செய்ய மாட்டும்?
மானிடர் ஆகம் வல் பிணி மா நாகம் – மனித சரீரத்துக்கு உரிய கொடிய நோய்களாகிய பெரும் பாம்புகள்,
என் செயும் -?
ராகம் வன்னி – செந்நிறமுடைய தீயும்,
புனல் – நீரும்,
இடி – இடியும்,
கோள் – (நவ)கிரகங் களும்,
மற்றும் – இன்னும் தீங்கு விளைப்பன யாவும்,
யான் வெருவியிட என் செயும் – நான் அஞ்சும்படி என்ன செய்ய மாட்டும்? (எ – று.)

“வேண்டுதல் வேண்டாமை யில்லானடி சேர்ந்தார்க்,கி யாண்டு மிடும்பையில” என்றபடி
தன்னைப் பற்றி வருவனவும், பிற வுயிர்களைப் பற்றி வரு வனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால்
வரும் பிறவித் துன்பங்கள்யாவும் எம்பெருமானது திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு உளவாகா என்பதாம்.
(தன்னைப் பற்றி வருவன – உடம்பைப் பற்றி வருந் தலைநோய் முதலியனவும், மனத்தைப் பற்றிய காமம் கோபம் முதலியனவும்;
இவை, ஆத்யாத்மிகம் எனப்படும்.
பிற வுயிர்களைப் பற்றி வருவன – மிருக பக்ஷி மநுஷ்ய பிசாச சர்ப்ப ராக்ஷ ஸாதிகளால் உண்டாவன; இவை, ஆதிபௌதிகம் எனப்படும்.
தெய்வத்தைப் பற்றி வருவன – குளிர் காற்று மழை இடி வெயில் முதலியவற்றால் நேர்பவை; இவை, ஆதிதைவிகம் எனப்படும்.
(இவற்றை வடநூலார் தாபத்ரய மென்பர்.)

மானிடர் – மாநுஷர் என்ற வடசொல்லின் விகாரம்.
ராகவஹ்நி என்ற வடமொழித் தொடர், விகாரப்பட்டது.
ராகவன் – வடமொழித்தத்திதாந்த நாமம்.
இதயம் – வடசொற்சிதைவு. தாள் – சாதி யொருமை. ராகவன்னரங்கன், னகரமெய் – விரித்தல்.

—————–

அத்திரங்கா யாமென வுணரேன் எனதாசையுன்கை
அத்திரங்கா யத்தியிற் பெரிதானாரை யாகிப்பல் வீழ்
அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே –40–

அரங்கா – ! –
காயம் – உடம்பு,
அத்திரம் – நிலையற்றது,
என உணரேன் – என்று அறியும் மெய்யுணர்வுடையனல்லேன் யான்;
எனது ஆசை – என்னுடைய அவாவோ,
உன் கை அத்திரம் காய் அத்தியின் பெரிது – உனது கையினால் எய்யப்பட்ட ஆக்கிநேயாஸ்திரத்தினால்
தவிப்படைந்த கடலினும் பெரியது;
நரை ஆகி – கிழத்தனம் முதிர்ந்து,
பல் வீழ – பற்கள் விழ,
திரங்கா – தோல் திரைந்து,
யந்திரம் போல் பொறி ஐந்து அழியும் அ காலத்து – யந்திரம் போல இடையீடின்றித் தொழில் செய்கிற
பஞ்ச இந்திரியங்களும் அழியும் மரண காலத்தில்,
இரங்காய் – இரக்கங் கொண்டு (அடியேனுக்கு) அருள் செய்வாய்;
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனது தாசனாகச் சரண்புகுந்தேன்; (எ – று.) – ஆல் – அசை.

“எய்ப் பென்னை வந்து நலியும் போ தங்கேது நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத்தரவணைப் பள்ளியானே” என்ற பெரியாழ்வாரருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

அஸ்திரம், காயம், ஆசா, அஸ்த்ரம், அப்தி, யந்த்ரம், காலம் – வட சொற்கள்.
அப்தி – நீர்தங்குமிடம்; அப் – ஜலம். ‘உன்கையத்திரங்காய்’ என்றது, கடலுக்கு அடைமொழியாய் நின்றது.
திரங்கா – உடன்பாட் டெச்சம்.
யந்திரம்போற் பொறியைந்து அழியும் என்பதற்கு – (சூத்திர மற்ற) மரப்பாவை போலப் பஞ்சேந்திரியங்களும்
அழியு மென்று உரைத்தலு மொன்று.
பொறியைந்து என்பதில், இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!–

January 22, 2022

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]

“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”

சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான்
“அடிமுடி தேடிய கதை” இந்த மூட பங்கத்தை நிர்மூலமாக்கவே இந்த பதிவு..!

சைவர்கள் இயற்றிய கதையை பார்ப்போம்;

முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க;
அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய்
அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும்,
பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..😀 நல்ல நகச்சுவை கதையொன்று இது.!

இதற்க்கான மறுப்பு இனி:-

“அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி—
துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்”.

இதன் கருத்து:— அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது.
பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது
ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான். அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல்
சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர். இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.

அண்டமளந்த வரலாறு.

விரோசனன் மகன் மாவலி. இவன் பெருவலி படைத்தவன்; வரபலம் மிக்கவன்.
இவன் தன் ஆற்றலால் மூன்று உலகங்களையும் வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான்.
ஒரு சமயம் மாவலி வேள்வியொன்று இயற்றினான். அதுகாலை, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கித் திருமால் வாமனனாகி
மாவலிபால் சென்று மூவடி மண் வேண்டினான். அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன், ‘
வந்திருப்பவன் மாயத் திருமால்; இவனுக்குத் தானம் கொடுக்காதே’ என்று தடுத்தான்.
மாவலியோ குருவின் சொல்லையும் மீறி வாமனனுக்குத் தாரை வார்த்து பாரைக் கொடுத்தான்.
தானம் கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கத் தொடங்கினான். நெடு வடிவங்கொண்டு ஓரடியால் மண்ணுலகையும்,
மற்றோரடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமலிருக்கவே மாவலியின் முடியில் வைத்து
அவனைப் பாதாளத்துக் கிறைவனாக்கினான் என்பது இவ்வரலாற்றினை—-

“ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்……” என்பர் திருமங்கையாழ்வார்,

இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.

“கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை”(பரிபாடல் 3-20)

“ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு” (கலித்தொகை- நெய்தற்கலி 7)

“மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்”(அகம் 220)
[நெடியோன்–திரிவிக்கிரமனாகிய திருமால்]

“ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை”
(பதிற்றுப்பத்து 2-5)

“இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்…”
(பெரும்பாணாற்றுப்படை)

“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்”
(முல்லைப்பாட்டு)

“நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக” (மதுரைக்காஞ்சி)

“கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு” (சிந்தாமணி)

“மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி”(சிலம்பு)

“திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே”(சிலம்பு)

“வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்”
(சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய” (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)

“நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி….”
(மணிமேகலை சிறைக்கோட்டம் – அறக்கோட்டம் ஆக்கிய காதை)

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி” (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)

என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.

உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.

“மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு”(திருக்குறள்-610)

என்று கூறுவது காண்க.

“கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப…” (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்…” (பரணர் -திருவள்ளுவமாலை)

“கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்—-
நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”
(திரிகடுகம் கடவுள் வாழ்த்து)

“வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் —வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்”.(புறப்பொருள் வெண்பா மாலை)
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.

தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும்.
சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர்.
இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர்,
நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன.
இதனை அடியிற் காண்க;

வேழம் வினாதல்

“வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்!
கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால்
களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே”(இறையனார் அகப்பொருளுரை 57)

“கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல்
கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான்
சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே” (இறையனார் அகப்பொருளுரை -88)

“சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான்
அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே”.
(இறையனார் அகப்பொருளுரை 317)

சங்கினை வாழ்த்துதல்

“தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த
நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே”. (இறையனார் அகப்பொருளுரை 314)

“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க,
திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு.
இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார். மேலும் சில பாடல்களும் காண்க:–

“வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.” (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)

“முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் —
நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்

வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் —
செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்.” (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி — கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் –திருமழிசைப்பிரான்]

உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு.
விரிவுக்கஞ்சி விடுத்தனம். இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.

“நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே
சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி யும்பரை
வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே.”(கம்பராமாயணம்- வேள்வி 36)

பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை.
நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:—-

“நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்.”(குலோத்துங்க சோழன் உலா)

“மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே– அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு.” (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும்.
கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை.
இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.

“போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே”
(கலிங்கத்துப்பரணி)என்றார் சயங்கொண்டாரும்.

“தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மேல்
ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்”(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.

“பூவரு மயன்முதல் யாவரு மறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி”
(திருவரங்கக் கலம்பகம்)

“அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.”
(அழகர் கலம்பகம்)
என்பனவும் காண்க.

இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன.
இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான
அருளிச்செயலமுதத் திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.

“நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்”
(பொய்கையாழ்வார்)

“அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்”
(பூதத்தாழ்வார்)

“வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே”
(பேயாழ்வார்)

“தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்”
(திருமழிசையாழ்வார்)

இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.

உலகுண்டபொழுது……மாலென்பதென்?

இதன் கருத்து;

திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான்.
உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய அனைவரும்
திருமால் திருவைற்றுள் உறைந்தனர். சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான்.
அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர்.
உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து.

இக்கருத்தினை..

“அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ்
மன்றல்கமழ் துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே.”[நாட்
என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.

இனி இதன் சான்றுகள்:—-

ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள்,
அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு,
உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;

“மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை.”(பரிபாடல்-3)

மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது.
ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை.
ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய திருமாலின்
முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.

“கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது”. (பரிபாடல் – 2)
என்றும்,

“புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்”.(பரிபாடல்-4)

என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய,
சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை.
இது ஸுதர்சனம் ஆசிரியரால் சங்ககாலத் தமிழர் சமயத்திலும், சாதிமத ஆராச்சியிலும் விரிவாக நிலைநாட்டப்பெற்றுள்ளது.

ஸுதர்சனம் வெளியீடான சோலைமலைக்குறவஞ்சியும்.

“சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
இவேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?.”

என்று கூறிச் செல்வது காண்க.

இனி. கூரேச விஜயத்தில், ‘அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:

“பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும்,
சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க,
இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி,
சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?………

“திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம். அதனுடைய சரித்திரமாவது—
ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின் பிரபாவங்களில்,
திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்….

“அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப,
அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின் பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க,
அவரும் அப்படியே வெகுகாலம் கழித்ததின் பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப,
அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின் பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார்.

அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?’ என்று கேட்க,
‘நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன.
அதற்க்கு பிரம்மா கோபித்து, ‘என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே’ என்று
வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,
‘ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்
கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு’ என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து,
‘ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர்,
உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன்,
என்னை நீர் கெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்’ என்று சொன்னார்.”

வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்சநகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது
மல்லாமல் விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில், திருவாழியாழ்வானும்
பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து, கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும்
என்று பிரார்த்திக்கையில், அப்படியே ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து ‘
நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்’ என்றும், ருத்திரனை அழைத்து ‘
நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்’ என்றும் நியமிக்க;
அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம்செய்து, ‘இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம்,
என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து,
‘ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான்,
அவனைக்கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர்,
முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்’ என்று நியமித்தார்

“சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும்,
தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து,
உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது”

“அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவஸ்தலமாக்கப் பட்டது. அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது”.

“இந்த சுதர்சநகிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர்
வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும்,
சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும்,
இந்தப் பொய்களுக்குத் தகுதியாய், தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே
போகக்கடவதென்று சபித்ததாயும் இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது
வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல் பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும்,
புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது.”

“விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச் சிவனுடைய
காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்.”
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]

எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.

“சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்..!
கூரேசர் திருவடிகளே சரணம்…!

ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

January 22, 2022

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

கஜேந்திரனைப் பாதுகாத்த கதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்கவிஷ்ணுபக்தியுடையனாய் ஒருநாள் விஷ்ணுபூசைசெய்கையில் அகஸ்தியமகாமுனிவன் அவனிடம்எழுந்தருள, அப்பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலட்சியஞ்செய்தா னென்று கருதிக் கோபித்து “நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள், பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறித்தற்குப் போய் இறங்கினபொழுது, அங்கே முன்பு நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹூஹூஎன்னுங் கந்தருவன் அவ்வானையின் காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்குஎழுந்தருளித் தனதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனன் என்பதாம். கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதியொழிய, அதற்கு உரிய திருமால் தானே வந்து அருள்செய்தன னென நூல்கள் கூறும், ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளியதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனைப் பாராட்டிக்கூறுவர். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

ஹம்ஸாவதார கதை:-
முன்னொருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் பேரிருள்மூடி நலியாநிற்க, பிரமன்முதலியோ ரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ளமிரங்கித் திருமால் ஹயக்கிரீவனாகிக் கடலினுட் புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின னென்பதாம். இவ்வரலாறு சிறிதுவேறுபடக் கூறுதலுமுண்டு.

அண்டமுண்டு ஆலிலைகலந்த கதை:-
பிரமன்முதலிய சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்தருளுகின்றன னென்பதாம்.

கடல்கடைந்த கதை:-
முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில், துர்வாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன்பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஐராவதயானையின்மேற் பவனிவந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைந்நீட்டிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துக் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச்செருக்குற்ற நினது ஐசுவரியங்களெல்லாம் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று சபிக்க, உடனே தேவர் செல்வம்யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக்கடையலாயினர் என்பதாம்.

துருவனது வரலாறு:-
சுவாயம்புவமனுவின் மகனான உத்தான பாத மகாராஜனுக்குச் சுநீதி யென்னும் மனைவியினிடத்துப் பிறந்த துருவனென்பவன், ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருந்த தன்தகப்பனுடைய மடியிலே யுட்கார்ந்திருந்த தனது மாற்றுத்தாயான சுருதியின் மகனாகிய உத்தமனென்பவனைப் பார்த்துத் தானும் அப்படி உட்காரவேண்டு மென்று அருகிற்போக, அதுகண்ட சுருசி, செருக்குக்கொண்டு “என்வயிற்றிலே பிறவாமல் வேறொருத்தி வயிற்றிற் பிறந்த நீ இச்சிங்காசனத்திலே யிருக்க
நினைக்கின்றது அவிவேகம்; நீ அதற்குத் தகுந்தவ னல்லன்; என்மகனே அதற்குயோக்கியமானவன்’ என்று இவனை இழித்துச்சொல்ல, அதுபொறாமல் துருவன் சரேலென்று தனது தாயார் வீட்டுக்குப் போய் அவளுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு, அப்பட்டணத்திற்குச் சமீபத்திலே யிருப்பதொரு உபவனத்திலே யிருந்த ஸப்தரிஷிகளைக்கண்டு தண்டனிட்டு அவர்களால் வாசுதேவ விஷயமான ஸ்ரீதுவாதசாக்ஷர மகாமந்திரம் உபதேசிக்கப்பெற்று, மதுவனத்துக்குப்போய் ஸ்ரீவிஷ்ணுவைத் தன் இருதயகமலத்திலே இடைவிடாது தியானித்துக்கொண்டிருக்க, எம்பெருமான் அவனது தியானத்திற்குத் திருவுள்ளமுகந்து பிரதியக்ஷமாய்க் கிருபைசெய்து வரமளிக்க,அவனுடைய அநுக்கிரகத்தினாலே மூன்றுலோகங்களுக்கும்மேற்பட்டதும், சகலதாரா கிரகநக்ஷத்திரங்களுக்கும் ஆதாரபூதமும், அவர்களுடைய ஸ்தானங்களுக்கெல்லாம் அதியுன்னதமுமான திவ்வியஸ்தானத்தை யடைந்து, தனதுதாயான சுநீதியும் நக்ஷத்திரரூபமாய்த் தனது அருகிலே பிரகாசித்துக் கொண்டிருக்க, கல்பாந்த பரியந்தம் சுகமாக இருக்கின்றன னென்பதாம்.

மத்ஸ்யாவதார வரலாறு:-
முன் ஒரு கல்பத்தின் அந்தத்திற் பிரமதேவன் துயிலுகையில் அவன்முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக்கொண்டிருந்த நான்குவேதங்களையும் மகாபலசாலியும் நெடுங்காலந் தவஞ்செய்து பெருவரங்கள் பெற்றவனுமான சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு பிரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின னென்பதாம். இவ்வசுரன்பெயர் சோமகனென்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு.

கூர்மாவதார கதை:-
கடல் கடைந்தகாலத்தில் அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பதாம்.

வராகாவதார கதை:-
இரணியனது உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட் புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.நரசிங்காவதார கதை:- தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனுமான இரணியன் தேவர் முதலிய எல்லோர்க்கும் கொடுமை இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான், இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படியே அவன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்ஙனம்வழிப்படாத அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒரு நாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்குஉளன்? காட்டு’ என்ன, அப்பிள்ளை, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று சொல்ல, உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப் புடைக்க, அதினின்று திருமால் மனிதரூபமும் சிங்கவடிவமுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மடியின்மீது வைத்துக் கொண்டு தனது திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தனன் என்பதாம்.

உலகமளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:-
மகாபலியென்னும் அசுரராஜன் தன்வல்லமையால் இந்திரன்முதலிய யாவரையும் வென்று மூன்றுஉலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்ததேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு காசியபமகாமுனிவனுக்கு அதிதிதேவியினிடந் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியஅனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண் வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, தானமாகப்பெற்ற மற்றோரடி நிலத்திற்கு இடமின்றாகவே அதற்காக அவன்வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியைவைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளந்ததில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே, எல்லாவுலகங்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்குதற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்திரம் வல்லவனென்பது தோன்றும்.

வெள்ளிநாட்டங் கெடுத்த கதை:-
திருமால் வாமனவடிவங்கொண்டு மாவலியினிடஞ் சென்று மூவடிமண் வேண்டியபோது அவ்வசுரன் அங்ஙனமே கொடுக்கிறே னென்று வாக்குதத்தஞ்செய்கையில் அருகுநின்ற அசுரகுருவாகிய சுக்கிராசாரியன் “உன்னை வஞ்சனையால் அழிக்கும்பொருட்டுத்திருமால்தானே இங்ஙனம் வந்துள்ளானாதலின், அவனுக்குக் கொடாதே’ என்று சொல்லி ஈவது விலக்க, அதுகேளாமல் மகாபலி ‘என்னிடம் ஒன்றை இரப்பவன் புருஷோத்தமனாயின் அவனுக்கு நான் அதனைக்கொடுத்துப் புகழ்பெறாதுவிடுவேனோ?’ என்றுகூறித் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யும் பொழுது அவ்வசுரராசனிடத்து மிக்க அன்பையுடைய சுக்கிரன் சிறுவடிவங்கொண்டு அம்மாவலியின் கைக்குண்டிகையின் துவாரத்திலே சென்று அடைத்து நீர்விழவொட்டாது செய்ய, அப்பொழுது வாமனன் அங்ஙனம் அடைத்துக்கொண்ட பொருளை அகற்றுவான்போலத் தனது திருக்கையிற் பவித்திரமாகத் தரித்திருந்த தருப்பைப்புல்லின் நுனியினால் அந்தச்சலபாத்திரத்தின் துவாரத்தைக் குடையவே, அதுபட்டுச் சுக்கிரனது கண்ணொன்று சிதைந்த தென்பதாம்.

இராவணனைக் கார்த்தவீரியன் வென்ற கதை:-
இராவணன் திக்குவிசயஞ் செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சுனனது மாகிஷ்மதிநகரத்திற்குச் சென்று போர்செய்ய முயலுகையில், அங்குள்ளார் ‘எங்களரசன் தனக்கு உரிய மாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடைசெய்கின்றான்’ என்று சொன்னதனால், உடனே இராவணன் அங்கிருந்து நருமதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில்மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேற்கே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சுனன் தனது நீர்விளையாட்டுக்கு அந்நீர்ப்பெருக்குப் போதாதென்றகருத்தால் அந்நீரைத் தனதுஆயிரங்கைகளுள் ஐந்நூற்றினால் தடுத்து நீரைமிகுவித்து மற்றை ஐந்நூறுகைகளைக்கொண்டு பலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனது சிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுங்கோபங்கொண்டு இராக்கதசேனையுடனே சென்று அருச்சுனனை யெதிர்த்துப்போர்செய்ய, அவன் தனது ஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனது இருபதுகைகளைப் பிடித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனது ஆற்றலால் எளிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விபீஷணனால் அறிந்து அவன்பாட்டனாராகிய புலஸ்தியமகாமுனிவர் அருச்சுனனிடம்வந்து வேண்டி அவனுக்கு ‘ராவணஜித்’ என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறைவிடுவித்துச் சென்றன ரென்பதாம்.

தார்த்தவீரியனைப் பரசுராமன் கொன்ற கதை:-
அவ்வருச்சுனன் ஒரு காலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரசுராமரது தந்தையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவர்க்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்தளித்தமை கண்டு அதனிடம் ஆசை கொண்டு அப்பசுவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்ந்துபோக, அதனை யறிந்த அப்பார்க்கவராமர் பெருங்கோபங்கொண்டு சென்று கார்த்தவீரியனுடன் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணிசேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம்.

அகலிகையின் சாபவிமோசன வரலாறு:-
கௌதமமுனிவனது பத்தினியான அகலிகையினிடத்திற் பலநாளாய்க் காதல்கொண்டிருந்த, தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் அம்முனிவனாச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவதுபோலக்கூவ, அதுகேட்ட கௌதமமுனிவன் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்டதென்று கருதியெழுந்து காலைக்கடன் கழித்தற்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இந்திரன் இதுவே சமயமென்று அம்முனிவருருக்கொண்டு ஆச்சிரமத்துட்சென்று அவளிடஞ் சேர்கையில் “தன்கணவனல்லன், இந்திரன்’ என்று உணர்ந்தும் அகலிகைவிலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை ஞானக்கண்ணினால் அறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவன் அவளைக் கருங்கல் வடிவமாம்படி சபித்து, உடனே அவள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டியதற்கு இரங்கி, “ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கி நிஜவடிவம் பெறுக’ என்று அநுக்கிரகிக்க, அவ்வாறே கல்லுருவமாய்க் கிடந்த அகலிகை ஸ்ரீராமலக்ஷ்மணர் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டமாத்திரத்திலே கல்வடிவம் நீங்கி இயற்கைநல்வடிவம் அடைந்தன ளென்பதாம்.

தசரதராமன் பரசுராமனை வென்ற வரலாறு:-
விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனதுகுலத்துப் பூர்விகராசனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்தமகளான சீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாமித்திர முனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற்சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சீதையை இராமனுக்கு மணஞ்செய்து வைத்தனன். சீதாகல்யாணத்தின்பின்பு தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை யெதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தையறிந்தேன்; அதுபற்றிச் செருக்கடையவேண்டா; வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற் கொணர்ந்த வில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து ‘இந்தப் பாணத்திற்கு இலக்கு யாது?’ என்றுவினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க, அவன் க்ஷத்திரிய வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக்கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதாம்.
இராமபிரான் வனஞ்சென்ற வரலாறு: – சீதாகல்யாணத்தின்பிறகு தச ரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில் மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநரான தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யை மகனான இராமனைப் பதினான்குவருஷம் வனவாசஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பந்திக்க, அதுகேட்டு வருந்திய தசரதர் சத்தியவாதி யாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும் இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்திற்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருஷம் உன்னைக் காடேறப்போகச் சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு, அந்த மாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ருவாக்ய பரிபாலனஞ்செய்தலினிமித்தம் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாதுதொடர்ந்த சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தி யைவிட்டுப் புறப்பட்டு வனவாசஞ்சென்றன னென்பதாம்.

காகன் நயனங்கொண்ட கதை: –
வனவாசகாலத்தில் சித்திரகூடமலைச் சாரலிலே இராமபிரானும் ஜாநகிப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன்மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக்கண்டு மோகித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டுவந்து, பிராட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற்குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதிகோபங்கொண்டு ஒருதர்ப்பைப்புல்லை யெடுத்து அதிற் பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்திரத்துக்குத் தப்பி வழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமையாலே மீண்டும் இராமனையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளின னென்பதாம்.

இராவணன் மாரீசனைக்கொண்டு மாயஞ்செய்து சீதையைக்கவர்ந்த வரலாறு:-
தாடகையின் மகனும், சுபாகுவின் உடன்பிறந்தவனும், இராவணனுக்கு மாமன்முறை பூண்டவனும், இராமபிரானிடத்துப் பழம்பகைமை யுடையவனும், மாயையில் மிகவல்லவனுமான மாரீசனென்ற ராக்ஷசன், சீதையைக் கவர்ந்து செல்லக்கருதி இராவணனது தூண்டுதலின்படி மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அவள் அதனைநோக்கி அதன்பக்கல் அன்புகொண்டு அதனைப்பிடித்துத்தரும்படி இராமபிரானைப் பிரார்த்திக்க, இலக்குமணன் “இது பொய்ம்மான்’ என்றுஉண்மை கூறித்தடுக்கவும் கேளாமற் பிராட்டி மீண்டும்நிர்ப்பந்திக்கவே, இராமன் அதனைப்பிடித்தற்குத் தொடர்ந்துசென்றபோது, அந்த மான் கையிலகப்படாமற் பலவாறு ஓட்டங்காட்டி நெடுந்தூரஞ்செல்ல, அதுகண்டு இராமன் மாயமானென்று துணிந்து அதன்மேல் அம்பெய்ய, மாரீசன் அம்புபட்டுவீழ்கையில், தன் மெய்வடிவங்கொண்டு “ஹாஸீதே! லக்ஷ்மணா!’ என்று இராமன்குரலாற் சத்தமிட்டு விழுந்திறக்க, அக்குரல்கேட்டவுடனே அதனை அரக்கன்வஞ் சனையென்று உணர்ந்த இலக்குமணன் வாளாஇருக்க, அவ்வுண்மையுணராமற் சீதை இராமனுக்கு அபாயம்நேர்ந்ததென்றே கருதிக் கலங்கி அதனையுணர்ந்து பரிகரித்தற்பொருட்டு இலக்குமணனை வற்புறுத்தியனுப்பி விட, சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து இராவணன் சந்யாசிவடிவங் கொண்டுவந்து பிராட்டியை வலியக்கவர்ந்து தேரின்மேல்வைத்துச்சென்று இலங்கைசேர்ந்தன னென்பதாம்.

மராமரம் எய்த கதை:-
இராவணனால் அபகரிக்கப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு சென்ற இராமலக்ஷ்மணரை அநுமான்மூலமாகச் சிநேகித்த பிறகு, சுக்கிரீவன், தனதுபகைவனும் மகாபலசாலியுமான வாலியைக் கொல்லும் வல்லமை இராமபிரானுக்கு உண்டோ இல்லையோ வென்று ஐயமுற்று, தன்சந்தேகம்தீரும்படி “எதிரிலுள்ள ஏழுமராமரங்களையும் ஏக காலத்தில் தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று சொல்ல, உடனே இராமபிரான் ஓரம்புதொடுத்து அந்த ஸப்த ஸாலவிருக்ஷங்களை ஒருங்கு தொளைபடுத்தின னென்பதாம்.

கவிக்கு முடிகவித்த கதை: –
இராமன் இலக்குமணனுடனே சீதையைத் தேடிச்செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான் மூலமாகச் சூரிய குமாரனான சுக்கிரீவனோடு நண்புகொண்டு அவன்வேண்டுகோளின் படி அவனது தமையனும் வாநரராசனுமான வாலியைத் தந்திரமாகக் கொன்று சுக்கிரீவனுக்குக் கிஷ்கிந்தைநகரத்தில் முடிசூட்டிவைத்தனன் என்பதாம்.

சூர்ப்பணகையின் மூக்கை யறுத்த வரலாறு:-
வனவாசம் புறப்பட்ட இராமலக்ஷ்மணர் சீதையுடனே கோதாவரி நதிதீரத்திற் பஞ்சவடியாச்சிர மத்தில் வசித்தபொழுது, அவர்களைக்கண்டு மோகங்கொண்ட இராவணன் தங்கையான சூர்ப்பணகை அந்த இராகவ வீரர்களிடம் தனித்தனி வந்து தன்னை மணம் புணரும்படி பலவாறு வேண்டவும், அவர்கள் உடன்படாததனால், அவள் ‘சீதையை அகற்றிவிட்டால் இராமன் என்னை மணம்புரிதல் கூடும்’ என்று எண்ணி, தனிப்பட்ட சமயம் பார்த்துப் பிராட்டியை யெடுத்துச்செல்ல முயன்றபோது, இலக்குமணன் கண்டு ஓடிவந்து சூர்ப்ப ணகையை மறித்து அவளது மூக்கு காது முதலிய சிலவுறுப்புக்களை அறுத்து விட்டனன் என்பதாம்.
கரனைக்கொன்ற வரலாறு:- இலக்குமணனால் மூக்குமுதலியன அறுக் கப்பட்டவுடனே இராமலக்குமணரிடங் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை கரன்காலில்விழுந்து முறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங் கொண்டு மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம் படைவீரரோடும் சேனைத்தலைவர்பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும் முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குப் பாதுகாவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து அவ்வரக்க ரனைவரையுந் துணித்து வெற்றிபெற்றன னென்பதாம்.

இராமபிரான் சடாயுவுக்கு முத்தியளித்த வரலாறு:-
இராவணன் மாய மான்வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு இராமலக்குமணரைப் பிரித்துச் சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து அவளை வலியஎடுத்துத் தேரின்மேல் வைத்துச் செல்லுமளவிலே, அவள்கூக்குரலிட்டதைக் கேட்டுக் கழுகரசனும் தசரதசக்கரவர்த்திக்கு உயிர்த்தோழனாய்ப் பிராயத்தில் அவரினும் தான் மூத்தவனாதலால் தமையன்முறை பூண்டவனும் அதனால் மக்களிடத்தும் மருகி யிடத்துங் கொள்ளும் அன்பை இராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும் கொண்டு பஞ்சவடியில் அவர்கட்குக் காவலாக இருந்தவனுமான ஜடாயு ஓடிவந்து எதிர்த்துப் பெரும்போர்செய்து அவனது கொடிமுதலியவற்றைச் சிதைத்து, முடிவில், அவனெறிந்த தெய்வவாளினாற் சிறகுஅறுபட்டு வீழ, இராவணன் சீதையைக் கொண்டுபோய் இலங்கையிற் சிறைவைத்திட்டான்; பின்புவந்த இராமலக்ஷ்மணர் பர்ணசாலையிற் சீதையைக்காணாமற் கலங்கி அவளைத்தேடிச்செல்லும்வழியிற் சடாயு வீழ்ந்துகிடக்கக்கண்டு சோகிக்கையில், குற்றுயிருடனிருந்த அக்கழுகரசன் நடந்தசெய்தியைச் சிறிதுகூறி உயிர்நீப்ப, இராமபிரான் தமக்குப்பெரியதந்தைமுறையான அச்சடாயுவுக்குப் பரமபதமளித்துச் சரமகைங்கரியஞ்செய்துமுடித்தன ரென்பதாம்.

கபந்தனைக் கொன்ற வரலாறு:-
இவன், தண்டகாரணியத்தில் ஒருபக் கத்திலே இருந்து தனது நீண்டகைகளிரண்டையும் எட்டியமட்டிற் பரப்பித் துழாவி அவற்றினுள் அகப்பட்ட ஜீவராசிகளையெல்லாம் வாரி வாய்ப்பெய்து விழுங்கிக்கொண்டிருக்க, அங்குச்சென்று இவன்தோள்களினிடையே அகப்பட்ட இராமலக்ஷ்மணர் அத்தோள்களை வாள்களால் வெட்டித்தள்ளியவளவில், இவன், முன்னையசாபமும் முற்பிறப்பின் தீவினையும் தீர்ந்து இராக்கத சரீரத்தையொழித்துத் திவ்வியசொரூபம்பெற்றுப் பெருமானைப் பலவாறு துதித்து நற்கதிக்குச் சென்றன னென்பதாம்.

கடல்சுட்ட கதை:-
இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கின்ற செய்தியை அநுமான் சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான் வாநரசேனையுடனே புறப்பட்டுச் சென்று கடற்கரையை யடைந்து, கடலைக்கடக்க உபாயஞ்சொல்லவேண்டுமென்று அக்கட லரசனாகிய வருணனைப் பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக்கிடக்க, சமுத்திரராசன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, ஸ்ரீராமன் அதுகண்டு
கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை வற்றச்செய்வே னென்று ஆக்கிநேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே, அதன் உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்க, பின்பு இராமமூர்த்தி வாநரங்களைக்கொண்டு மலைகளால் சேதுபந்த நஞ் செய்தனன் என்பதாம்.

அநுமான் ஓஷதிமலைகொணர்ந்த வரலாறு:-
இராமலக்ஷ்மணர் வாநர சேனைகளுடனே கடல்கடந்து இலங்கைசேர்ந்து நடத்திய பெரும்போரில் ஒருநாள் இராவணன்மகனான இந்திரசித்து பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனால் லக்ஷ்மணனையும், வாநரராஜனான சுக்கிரீவனையும் வாநரசேனைகளையும் கட்டுப்படுத்தி அவசமாய் மூர்ச்சித்து மரணமடைந்தவர்போற் கிடக்கும்படி செய்தபொழுது, இராமபிரானும் அவர்கள் நிலைமையைக் கண்டு துக்கித்து விழுந்திட, ஜாம்பவான்சொன்னபடி அநுமான் அதிவேகமாகப் புறப்பட்டு, இமவத்பர்வதத்திற்கு வடக்கேயுள்ள ஓஷதிபர்வதத்தைச் சார்ந்து அம்மலையிலுள்ள ம்ருதஸஞ்சீவநீ, விஸல்யகரணீ, ஸாவர்ண்யகரணீ, ஸந்தாநகரணீ என்ற மூலிகைகளைத் தேடுகையில், அந்தத்திவ்வியஓஷதிகள் மறைந்தனவாக, அநுமான் அந்தமலையையே வேரோடுபெயர்த்து எடுத்துக்கொண்டு வந்துசேர, அதன்காற்றுப்பட்டமாத்திரத்தால் அனைவரும் மயக்கம்ஒழிந்து மூர்ச்சைதெளிந்து ஊறுபாடுதீர்ந்து உயிர்த்துஎழுந்தனர் என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. அப்போரில் மற்றொருசமயத்தில் இராவணன் விபீஷணன்மேல் எறிந்த தெய்வத்தன்மையுள்ள வேலாயுதத்தை அவன்மேற்பட வொட்டாமல் இலக்குமணன் தன்மார்பில் ஏற்றுக்கொண்டு அதனால் மூர்ச்சையடைகையில் மீளவும் அநுமான் அம்மலையைக்கொண்டுவந்து இலக்குமணனை உயிர்ப்பித்தன னென்பதும் உணர்க.

இராமபிரான் சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றிய வரலாறு:-
இராம பிரான் இவ்வுலகத்தை விட்டுச்செல்லத்தொடங்கிய சமயத்தில், அயோத்தியா நகரத்து உயிர்களெல்லாம் அப்பெருமானைச் சரணமடைந்து “தேவரீர் எங்குச்சென்றாலும் அடியேங்களையும் உடனழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் அவர்களுடைய அன்பின் உறுதியைக் கண்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்; அப்பொழுது, அந்நகரத்திருந்த மனிதர்களே யன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து சுவாமியின்பின் சென்றன: இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் சரயூநதியில் இறங்கித் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில்மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும், பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே புக்கவர் மீண்டுவருதலில்லாத மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தருளினர் என்பது, இங்கு அறியத்தக்கது.
பலராமன் யமுனா நதியை அடக்கிய வரலாறு:- ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுநாநதியை நோக்கி, “ஓ யமுனாய்! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அவ்யமுனை அவர் மதுபானமதத்தினால் இப்படிச்சொல்லுகின்றாரென்று அவர்வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது ஆயுதமான கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான்போகும்வழியைவிட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகிய தன்றியும், தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில்வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில்நீராடின ரென்பதாம்.

பலராமன் அஸ்தினாபுரத்தைச் சாய்த்த வரலாறு:-
அஸ்தினாபட்டணத் திலே துரியோதனன் தன்மகளான இலக்கணைக்குச் சுயம்வரங்கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீகிருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டுபோக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற்கு எழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அக்கௌரவர் யாவரும் “துஷ்டகாரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரேகட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்துபேச, பலராமர் கரையில்லாத கோபங்கொண்டு எழுந்திருந்து, “குருகுலத்தார் வாசஞ் செய்துகொண்டிருக்கின்ற இந்நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்துவிட்டு, பூமியிற் கௌரவப் பூண்டில்லாமற் செய்துவிடுவோம்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின்மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க, அதனால் அப்பட்டணமுழுவதும் அசைந்துசாயவே, அதுகண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கிச்சாம்பனை இலக்கணையோடும்பல சிறப்புக்களோடும் கொண்டு வந்து சமர்ப்பித்து வணங்கி வேண்ட, இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளின ரென்பதாம்.

கண்ணன் பேய்ச்சியூட்டிய நஞ்சை அமுதுசெய்த விவரம்:-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவ னாதலால் அக்கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்சன், தன்னைக்கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்துகொல்லும்பொருட்டுப் பலஅசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி நல்லபெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகியகுழந்