ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

ஸ்ரீ ரிக்வேதம் முழுவதிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பல இடங்களில் துதிக்கப் பட்டாலும்,
அவருக்கென்று முழுமையாக சில துதிகள் மட்டுமே உள்ளன.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த ஸுக்தம்.

ஓம்

விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம்
ய: பார்த்தி வானி விமமே ரஜாக்ம்ஸி
யோ அஸ்க பாயதுத் தரகம் ஸதஸ்தம்
விசக்ர மாணஸ் த்ரேதோருகாய: –1-

யார் பூமியையும் அதிலுள்ள அனைத்தயும் உருவாக்கி உள்ளாரோ,
மேலே உள்ள விண்ணுலதைத் தாங்கியுள்ளாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ,
சான்றோரால் போற்றப் படுகிறாரோ அந்த மஹாவிஷ்ணுவின் மகிமை மிக்க செயல்களைப் போற்றுவோம்.

———

விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி
விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி
விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவ மஸி
விஷ்ணவே த்வா –2-

யாக மண்டபத்தின் வாசல்படி விட்டமே, நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய். பின்புறமாக இருக்கிறாய்.
வாசற்கால்களே, நீங்கள் அவரது இரண்டு கால்களாக உள்ளீர்கள்.
கயிறே, நீ அவரது நாடிகளாக இருக்கிறாய்.
முடிச்சுகளே, நீங்கள் விஷ்ணுவின் முடிச்சுகளாக இருக்கிறீர்கள்.
யாக மண்டபமே, நீ விஷ்ணுமயமாகவே இருக்கிறாய்.
விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக உன்னை வணங்குகிறேன்.

——–

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யாம்
நரோ யத்ர தேவயவோ மதந்தி
உருக்ரமஸ்ய ஸ ஹி பந்துரித்தா
விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: –3-

எங்கே தேவர்கள் மகிழ்கிறார்களோ, எங்கே மனிதர்கள் போக விரும்பு கிறார்களோ,
எது விஷ்ணுவின் மனத்திற்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகின்றதோ,
விஷ்ணுவின் மேலான அந்தத் திருவடிகளை நான் அடைவேனாக.

———–

ப்ரதத்விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய
ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்ட்டா:
யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு
அதிக்ஷியந்தி புவனானி விச்வா
பரோ மாத்ரயா தனுவா வ்ருதான
ந தே மஹித்வமன்வச்னுவந்தி –4-

மலைமீது திரிகின்ற பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,
மூன்று பெரிய அடிகளில் எல்லா உலகங்களையும் அடக்கியவருமான அந்த விஷ்ணுவை
அவரது மகிமைகளுக்காகப் போற்றுவோம்.

———–

உ பே தே வித்வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ
தேவத்வம் பரமஸ்ய வித்ஸே
விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம்
க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே தசஸ்யன் –5-

உமது மணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையே நாங்கள் அறிவோம்.
ஒளி பொருந்திய திருமாலே, நீர் மட்டுமே மேலான உலகை அறிவீர்.
இந்த பூமியில் நீர் நடந்து, அதனை இருப்பிடமாகக் கொள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுத்துள்ளீர்.

—————

த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ:
ஊருக்ஷிதிக்ம் ஸுஜனிமாசகார த்ரிர் தேவ:
ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்ச்சஸம் மஹித்வா
ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான்
த்வேஷக்ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –6-

பணிவு மிக்க ஜனங்கள் அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள்.
அவர் இந்த பூமியை அவர்களுக்காக பரந்த வாழ்விடமாகச் செய்துள்ளார்.
எண்ணற்ற அழகுகள் பொருந்திய இந்த பூமியை விஷ்ணு தமது மகிமையினால் மூன்று முறை அளந்துள்ளார்.
மஹா விஷ்ணுவே! உமது மேலான பெருமை காரணமாக நீர் விஷ்ணு என்று பெயர் பெறுகிறீர்.
மேலும், இது உமது மகிமைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

———-

அதோ தேவா அவந்து நோ யதா விஷ்ணுர் விசக்ரமே
ப்ருதிவ்யாஸ் ஸப்த தாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே
த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாக்ம் ஸுரே –7-

எந்த பூமியின் ஏழு பகுதிகளிலும் விஷ்ணு நடந்தாரோ அந்த பூமியின் பாவங்களிலிருந்து தேவர்கள் நம்மைக் காக்கட்டும்.
விஷ்ணு நடந்த போது தமது திருவடிகளை மூன்று முறை வைத்தார். அவரது திருப்பாத தூசியால் பூமி மூடப்பட்டது.

——————

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய:
ததோ தர்மாணி தாரயன் விஷ்ணோ கர்மாணி பச்யதோ
யதோ வ்ரதானி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ்ஸகா — 8-

விஷ்ணு அனைத்தையும் காப்பவரும் யாராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார்.
அவர் தமது மூன்று அடிகளால் உலகை அளந்து இங்கே தர்மங்களை நிறுவியுள்ளார்.
இந்திரனின் நெருங்கிய நண்பரான விஷ்ணுவின் செயல்களைப் பாருங்கள்.
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

———-

தத் விஷ்ணோ பரமம் பதக்ம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம் தத் விப்ராஸோ விபன்யவோ
ஜாக்ருவாக்ம் ஸஸ்ஸமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -9-

பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
எப்போதும் காண்கிறார்கள். கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,
விழிப்புற்றவர்களுமான இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிபெறச் செய்கிறார்கள்.

——————–

பர்யாப்த்யா அனந்தராயாய ஸர்பஸ்தோமோ(அ)திராத்ர
உத்தம மஹர் பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய
ஜித்யை ஸர்வமேவ தேனாப்னோதி ஸர்வம் ஜயதி –10-

அளவற்ற வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்கா புகழ் பெறுவதற்கும் அதிராத்ரம் எனப்படும் யாகமே
மிக மேலான யாகம் ஆகிறது. அந்த யாகத்தால் எல்லாம் கிடைக்கிறது,
எல்லா வெற்றியும் கிடைக்கிறது, எல்லாமே அடையப் படுகிறது. எல்லாமே வளம் பெறுகிறது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: