ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்–/ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்-ஸ்ரீ பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது/ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியும் ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வாரும் —

ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் ஸ்ரீ ஈஸ்வர சம்ஹிதையில் உள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மந்திரங்கள் எண்ணிலடங்காதது.
ஆனால், ஸ்ரீருத்ர பகவான், ஸ்ரீ நரசிம்மனிடம் பெற்ற அனுபவத்தை எல்லாம் விளக்குவதற்காகவே
இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் அருளிச்செய்தார்.
அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் இருக்கிறது. அஹிர்புத்ந்யன் என்றால் ஈஸ்வரனுக்கு பெயர்.

இந்த ராஜபத ஸ்தோத்திரம் மூன்று மத ஆசாரியர்களாலும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
மிகவும் மங்களகரமானது. இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் 32 அட்சரங்கள் கொண்ட மந்திரம்.
இதில் 32 பிரம்ம வித்தைகளும் அடங்கியிருக்கின்றன. 11 பதங்கள் இந்த மந்திரத்தில் உள்ளன.
அதில் ஏகாதச ருத்ரர்கள் 11 ருத்திரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அந்த பதினோரு பதங்களுக்கும் விவரமாக 11 ஸ்லோகங்களும் ,இறுதியாக ஒரு பலச் சுருதி ஸ்லோகம்.
12 சுலோகங்களால் இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் இருக்கிறது,
மூன்று காலங்களிலும் இந்த ராஜபத ஸ்தோத்திரம் யார் சொல்கிறார்களோ,
அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதது.
இதனை ஏதேனும் ஒரு நரசிம்மர் சந்நதியில், விளக்கேற்றும் நேரத்தில் ,சொல்வது மிகுந்த பலனை அளிக்கும்.

இதை சாஷாத் ஈஸ்வரனே பார்வதி தேவிக்கு உபதேசம் செய்தார்.

ஸ்ரீ ஈஸ்வர உவாச:

வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்.–1-

அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான்.
அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன்.
தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன்.
அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்.–2-

திதியின் மகனும், கொடிய அரக்கனுமான் இரணியன், உலகத்தில் எவராலும் தன்னைக் கொல்ல இயலாது
என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே. உம்மை நான் வணங்குகிறேன்.

பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்.–3-

விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையிலுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையிலுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார்.
அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ள விஸ்வரூபம் கொண்ட, அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்.–4

சூரியன, சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன.
இப்படிப்பட்ட (தேஜஸ்) ஒளிமிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகறேன்.

ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜா’நாதி நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்.–5-

சக இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு.
எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோ முகம்’ என போற்றப்படும் சக்தியையுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந:
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்.–6-

பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே!
பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்.–7-

உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல் ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே
பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோய்களையும் தீர்ப்பவரே!
எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

எவனுடைய பெயரை நினைத்தாலே, பூதங்கள், பிசாசுகள், ராக்ஷஸர்கள் நடுங்கி நான்கு திசைகளிலும் ஓடுவார்களோ,
எவனுடைய பெயரைச் சொன்னால், எந்த வியாதிகளும் ஒருவனை கிட்டே கூட அணுகாதோ,
எந்த நாமத்தைச் சொன்னால் ஏற்கனவே வந்த தீராத நோய்களும் அவரை விட்டு ஓடி ஒளியுமோ,
அப்படிப்பட்ட நரசிம்ம பிரபுவை நான் வணங்குகின்றேன். காரணம் அவன் எமனுக்கு எமன்,
அவன் திருவடிகளில் ‘‘நம:” என்று கூறி, ஆத்ம நிவேதனம் செய்து விட்டால், அவன் காப்பாற்றி விடுவான்.

வறுமை இல்லாத நிலையைத் தரும். எதிரிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அச்சம் என்பதே இருக்காது.
மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் இருக்கும். எல்லா உறவுகளும் தேடி வரும். எதிலும் தோல்வி என்பதே இருக்காது.
எமன் கூட வருவதற்குத் தயங்குவான்.

ஸர்வோபியம் ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே
ஸ்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்.–8-

அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற
‘ஶ்ரீ லக்ஷ்மி தாயாரால்’ விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாச’யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.–9-

மரணகாலத்தில் எம தூதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்கள் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும்,
அவர்களை வலியவந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும்,
மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’நந்தம் தம் நமாம்யஹம்.–10-

எந்த கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ,
யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்.–11-

இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர்.
அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து சரணடைகிறேன்.

ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ
நிர்ணயம் த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே.–12-

இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால்
மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில்,
மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும்,
நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.

கோபம், வீரம், தேஜஸ் (பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்
என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும்,
எல்லா நன்மைகளும் தரவல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

உக்ரம் என்கிற மந்திரத்தில் நரசிம்மனை உக்கிரமாக சொல்கின்றது.
வீரியத்தை உடையவராக இருப்பதால் வீரியம் என்று சொல்கிறது.
அவன் தான் மகாவிஷ்ணு என்பதை அடுத்த பதத்தில் காட்டுகிறது.
ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து நிற்கும் அவற்றைக் காட்டிலும் பெரிதாக பிரகாசிப்பவன் என்பதால்
அவனை ஜ்வலந்தம் என்று சொல்லி, எல்லாவிடத்திலும் அவன் நிறைந்திருக்கிறான்;
எங்கும் அவனைக் காணலாம்; அவன் முகத்தை எந்த இடத்திலும் பார்க்கலாம் என்பதால் ஸர்வதோமுகம் என்கிறது..

இவரிடம் உள்ள அச்சத்தினால் சூரியன் உதிக்கின்றான். சந்திரன் சொல்படி கேட்கின்றான்.
வாயு வீசுகின்றான். அக்கினி உஷ்ணம் தருகின்றான். வருணன் மழையைப் பொழிகின்றான்.
எனவே இவனை பத்ரம் என்கின்ற சொல்லினால், சர்வ மங்களங்களுக்கும் காரணமானவன் என்று உபநிஷத் சொல்லுகின்றது.
ம்ருத்யு ம்ருத்யும் என்பதால் சம்சார துக்கத்தைப் போக்குபவன் என்று பொருளாகிறது.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது இந்த ராஜ பத ஸ்தோத்திரம். இது மிகவும் சக்தி வாய்ந்தது.

பல்லவ மன்னர்கள் பலரும் நரசிம்ம அவதாரத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதனால் தங்கள் பெயரோடு நரசிம்மரின் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.
சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், ராஜசிம்மன் போன்ற பெயர்களை அந்த அரசர்கள் வைத்துக் கொண்டார்கள்.

ஸ்ரீ ராமானுஜருக்கு நரசிம்மரிடம் அளவு கடந்த ஈடுபாடு. அவர் 74 சிம்மாசன அதிபதிகளை வைணவ மதத்தைப் பரப்புவதற்காக நியமித்தார்.
அவர்களுடைய திருவாராதனப் பெருமாளாக நரசிம்மப் பெருமாளையே வழங்கி, நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.

ஸ்ரீ யோக நரசிம்மரின் சிறப்பு :
நரசிம்மரின் தோற்றத்தில் மூன்று தோற்றங்கள் முக்கியமான தோற்றங்கள்.
ஒன்று இரணியனை சம்ஹாரம் செய்கின்ற உக்கிர நரசிம்மர். அந்த நேரத்தில் அவரிடம் தேவர்களால் கூட நெருங்க முடியவில்லை.
எல்லோரும் அஞ்சி நடுங்கினர். அவன் மார்பில் சதா மகிழ்வித்து கொண்டிருக்கும்
பெரிய பிராட்டியார் மகாலட்சுமித் தாயாராலும் அருகில் செல்ல முடியவில்லை.
உக்கிர நரசிம்மரின் அருகில் பயமில்லாமல் நின்ற ஒருவன் நரசிம்மனின் பக்தனான பிரகலாதன் மட்டுமே.

சிவந்த விழியோடும், கோபம் கொண்ட முகத்தோடும், இருந்த நரசிம்மமூர்த்தி, பிரகலாதனை வாரி அணைத்துக் கொண்டார்.
பிரகலாதனிடம் மட்டும் இத்தனை கருணையும், உகப்பும் எப்படி வந்தது என்பதற்கு வைணவ ஆச்சாரியர் பராசர பட்டர் ‘
‘என்னதான் சிங்கமானது எதிரிகளோடு சண்டை போட்டாலும், தன் குட்டிக்கு பால் தந்து கொண்டுதானே இருக்கும்” என்று விளக்கம் அளித்தார்
பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்க உக்ர வடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணுவை போக மூர்த்தி என்றே கருதினாலும், அவர் தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞான மூர்த்தியாகவும் விளங்குகிறார்.

ஸ்ரீ நரசிம்ம காயத்ரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹீ
தன்னோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத்

———–

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்🐚
ஸ்ரீ பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது

1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே
ப்ரஹ்லாதே னோதிதம் புரா
ஸர்வ ரக்ஷகரம் புண்யம்
ஸர்வோ பத்ரவ நாசனம்

2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ
ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்
த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்
ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம்

3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம்
சரதிந்து ஸமப்ரபம்
லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்
விபூதி பிருபாஸிதம்

4. சதுர்புஜம் கோமளாங்கம்
ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்
ரத்ன கேயூர முத்ரிதம்

5. தப்த காஞ்சன ஸங்காசம்
பீத நிர்மல வாஸஸம்
இந்திராதி ஸுரமௌளிஸ்த
ஸ்புரன் மாணிக்ய தீம்திபி

6. விராஜித பத த்வந்த்வம்
சங்க சக்ராதி ஹோதிபி
கருத்மதாச வினயா
ஸ்தூயமானம் முதான்விதம்

7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்
க்ருத்வாது கவசம் படேத்
ந்ருஸிம்ஹோ மே சிர பாது
லோக ரக்ஷõத்ம ஸம்பவ

8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ
பாலம் மே ரக்ஷதுத்வனிம்
ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது
ஸோம ஸூர்யாக்னி லோசன

9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி
முனியாய் ஸ்துதி பிரிய
நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து
முகம் லக்ஷ்மீ முக ப்ரிய

10. ஸர்வ வித்யாதிப: பாது
ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம,
வக்த்ரம் பாத்விந்து வதன
ஸதா ப்ரஹ்லாத வந்தித

11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம்
ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்
திவ்யாஸ்த்ர சோபிதபுஜ
ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ

12. கரௌமே தேவ வரதோ
ந்ருஸிம் ஹ: பாது ஸர்வத
ஹ்ருதயம் யோகி ஸாத்யச்ச
நிவாஸம் பாதுமே ஹரி

13. மத்யம் பாது ஹிரண்யாக்ஷ
வக்ஷ: குக்ஷி விதாரண
நாபிம் மே பாது ந்ருஹரி
ஸ்வநாபி ப்ரம்ஹ ஸம்ஸ்துத

14. ப்ரம்ஹாண்ட கோடய கட்யாம்
யஸ்யாஸெள பாதுமே கடிம்
குஹ்யம் மே பாது குஹ்யானாம்
மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்

15. ஊருமனோ பவ பாது
ஜானுனீ நரரூப த்ருத்
ஜங்கே பாது தரா பரா
ஹர்தா யோஸள ந்ருகேஸரீ

16. ஸூர ராஜ்ய ப்ரத பாது
பாதௌ மே ந்ருஹரீச்வர
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ
பாதுமே ஸர்வதஸ் தனும்

17. மஹோக்ர பூர்வத பாது
மஹா வீரா க்ரஜோக்னித
மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது
மஹா ஜ்வாலஸ்து நைருதௌ

18. பச்சிமே பாது ஸர்வேசோ
திசிமே ஸர்வதோ முக
ந்ருஸிம்ஹ பாது வாயவ்யாம்
ஸெளம்யாம் பூரண விக்ரஹ

19. ஈசான்யாம் பாது பத்ரோமே
ஸர்வ மங்கள தாயக
ஸம்ஸார பயத பாது
ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ

20. இதம் ந்ருஸிம்ஹ கவசம்
ப்ரஹ்லாத முக மண்டிதம்
பத்திமான் ய படேந்நித்யம்
ஸர்வ பாபை ப்ரமுச்யதே

21. புத்ரவான் தனவாம் லோகே
திர்க்காயு ரூப ஜாயதே
யம் யம் காமயதே காமம்
தம் தம் ப்ராப்னோத்ய ளும்சயம்

22. ஸர்வத்ர ஜய மாப்னோதி
ஸர்வத்ர விஜயீ பவேத்
பூம்யந்தரிக்ஷ திவ்யானாம்
க்ரஹாணாம் வினிவாரணம்

23. வ்ருச்சிகோரக ஸம்பூத
விஷாப ஹரணம் பாம்
ப்ரம்ஹ ராக்ஷஸ யக்ஷõணாம்
தூரோத்ஸாரண காரணம்

24. பூர்ஜே வா தாளபத் ரேவா
கவசம் லிகிதம் சுபம்
கரமூலே த்ருதம் யேன
ஸித்யேயு: கர்ம ஸித்தய

25. தேவாஸூ ரமனுஷ்யேஷூ
ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்
ஏக ஸந்த்யம் த்ரிஸந்த்யம்வா
ய: படேந் நியதோ நர

26. ஸர்வ மங்கள மாங்கல்யம்
புத்திம் முக்திஞ்ச விந்ததி
த்வாத்ரிம்சதி ஸஹஸ்ராணி
பவேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்

27. கவசஸ் யாஸ்ய மந்த்ரஸ்ய
மந்த்ர ஸித்தி: ப்ரஜாயதே
அனேன மந்த்ர ராஜேந
க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்

28. திலகம் வின்யஸேத் யஸ்ய
தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்
த்ரிவாரம் ஜபமானஸ்து
தத்தம் வார்யபி மந்த்ரியச

29. ப்ராசயேத்யோ நரம் மந்திரம்
ந்ருலிம் ஹ த்யானமா சரண்
தஸ்ய ரோகா ப்ரணச்யந்தி
யேசக்ஷü குக்ஷி ஸம்பவா

30. கிமத்ர பகுனோக்தேன
ந்ருஸிம்ஹ ஸத்ருசோ பவேத்
மனஸா சிந்திதம் யத்து
ஸதச் சாப்னோத்ய ஸம்சயம்

31. கர்ஜந்தம் கர்ஜயந்த நிஜ புஜ படலம்
ஸ்போடயந்தம் ஹஸந்தம்
ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி
திதிஜம் ÷க்ஷபயந்தம் க்ஷிபந்தம்

32. க்ரந்தந்தம் கோக்ஷயந்தம் திசி திசி
ஸததம் ஸம் ஹரந்தம் பரந்தம்
வீக்ஷந்தம் கூர்ணயந்தம் கர நிகர
சதை திவ்ய ஸிம்ஹம் நமாமி🐚

——-

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியும் ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வாரும்

ஸ்ரீ ஸூதர்சன காயத்ரி
ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஜோதயாத்.

ஸ்ரீ ஸூதர்சன ரக்ஷா மந்திரம் :-
ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||

ஸூதர்சன மஹா மந்திரம்:
ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீ ஜனவல்லபாய ,
பராய பரம புருஷாய, பரமாத்மனே பர கர்ம , மந்த்ர , யந்த்ர தந்த்ர ஔஷத
அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர ஸமஹர ம்ருத்யோர் மோசய மோசய
ஓம் நமோ பகவதே மஹா ஸூதர்சனாய தீப்த்ரே ஜ்வாலாபரிதாய
ஸர்வ திக் க்ஷோபண கராய ஹூம் பட் பரப்ரஹ்மணே பரஞ்ஜோதிஷே ஸ்வாஹா

ஸ்ரீ பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5).
ஆனால் ஸ்ரீ ஸூதர்சனாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள்!
ஸ்ரீ சுதர்சனர், சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும்
எட்டு ஆயுதங்களை வலது கையிலும்,
இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ளார்.

முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி
பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும்,
எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

ஸ்ரீ கோவில்களில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், ஸ்ரீ நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம்.
பக்தனான ஸ்ரீ பிரகலாதனைக் காக்க ஸ்ரீ திருமால் ஸ்ரீ நரசிம்மராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்’ என்பர்.

‘நாளை என்பது ஸ்ரீ நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர்.
துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், ஸ்ரீ நரசிம்மரையும்
ஒரு சேர வழிபடுவது சிறப்பு.
இதன் அடிப்படையில் கோவில்களில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், ஸ்ரீ நரசிம்மரையும்
முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

ஸ்ரீ ஸூதர்ஸன சக்கரமாவது ஸ்ரீ ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்திரத்தை கொண்டு அமைவது!
ஸ்ரீ ஸூதர்ஸன சக்கரத்தின் கடைசி வெளிப்புற இதழ்களும் சரி, மைய பிந்தும் சரி ஸ்ரீ ந்ருஸிம்ஹர் இல்லாமலில்லை.
ஆகவே ஸ்ரீ ஸூதர்ஸன சக்கரமும், ஸ்ரீ ந்ருஸிம்ஹரும் பிரிக்க முடியாத ஒரே விஷயங்கள்.
ஸ்ரீ ஸூதர்ஸனரை வடித்தாலே தானே அதில் ஸ்ரீ ந்ருஸிம்ஹரும் வந்து விடுவார்.

ஸ்ரீ ஸூதர்ஸன சக்கரம் நடுவில் மையமாக இரண்டு மந்திரங்களை கொண்டது. அது ஒன்று ஸ்ரீ நரசிம்மருடையது.
அதற்கப்புறம் ஆறு இதழ்கள், எட்டு இதழ்கள், பனிரெண்டு இதழ்கள், அதற்கப்புரம் 32 இதழ்கள் என்று கொண்ட வடிவம் அது.
அந்த 32 இதழ்களில் 32 ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம் இருக்கும்.
இந்த ஸ்ரீ ஸூதர்ஸன வடிவமே ஸ்ரீ நரசிம்ம மந்திரத்தை விளக்கும் ஒரு உன்னத மறையில் இருப்பதுதான்.
ஆகவே ஸ்ரீ ஸூதர்ஸனரை வடிக்கும் போது, ஆவாஹனம் பண்ணும் போது ஸ்ரீ நரசிம்மரும் சேர்ந்தே தான் வருவார்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமதே லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: