ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.
ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.
யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.
துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .
ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.
ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.
———————–
நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்
விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்
என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!
ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்
கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்
இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்
உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்
எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்
ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்
வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்
சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்
மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்
சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்
கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்
முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்
ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்
ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்
ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்
ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்
—–
ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :
ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் ,
மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஆசார்யர்களுக்கு நமஸ்காரம்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) சப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||
முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ,
நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ,
அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன்
ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–
1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||
இவைகளின் சுருக்கமான பொருளாவது:–
1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது.
மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது.
அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில்,
1-ஈசாவாஸ்ய ,
2-கேன,
3-கட ,
4-ப்ரச்ன ,
5-முண்டக,
6-மாண்டூக்ய ,
7-தைத்திரீய ,
8-ஐதரேய,
9-சாந்தோக்ய ,
10-ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.
இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.
மேலும் -8 உபநிஷத்துக்கள்
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்
உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும்.
ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர்.
உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108.
இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது.
இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.
ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–
ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||
ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||
இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும்
நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே
இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.
வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது.
நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம்.
சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம்.
நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன
ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச
வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்
————————————————–
புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள்.
அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது.
அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்
மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம
வேத சுதர்வாங்கிரச இதிஹாச
புராணம் வித்யா உபநிஷத் —என்று பிருஹதாரண்யம் கூறுகிறது.
இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.
18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்
ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும்
கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும்
வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.
——————-
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ஸ்ரீ ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே! -ஸ்ரீ சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்-ஸ்ரீ கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே-ஸ்ரீ கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்-ஸ்ரீ கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
———-
அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘ கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவிஉண்டோ
——–
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
” இதுவே தமிழின் சிறப்பு..”
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.