ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்
ஸ்ரீ லக்ஷ்மீ பர்த்ருர் புஜாக்ரே க்ருத வஸதி ஸிதம்யஸ்ய ரூபம் விசாலம்
நீலாத்ரேஸ் துங்க ச்ருங்க ஸ்திதவ ரஜநீ நாத பிம்பம் விபாதி
பாயாந்ந:பாஞ்ச ஜன்ய:ஸ திதிஸுத குலத்ராஸநை:பூரயன் ஸ்வை:
நித்வானை:நீரதௌக த்வனி பரிபவதை ரம்பரம் கம்புராஜ:–1-
ஸ்ரீ லக்ஷ்மீ நாயகரான நாராயணனின் கையில் விளங்கும் விசாலமான வெண் சங்கு நம்மையெல்லாம் காப்பதாகுக.
அந்த சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். அதன் ஒலி அசுர குலத்தை பயமுறுத்தி நடுங்கச் செய்வது மட்டுல்லை.
மேகங்களின் இடியை விட கம்பீரமானது. ஆகாயம் முழுவதும் அதந் ஒலி பரவியுள்ளது.
நீலமலை மீது உதித்து வரும் சந்திரன் போன்று விளங்குகிறது.
ஆஹர்யஸ்ய ஸ்வரூபம் க்ஷணமுக மகிலம் ஸ¨ரய:காலமேதம்
த்வாந்தஸ்யை காந்தமந்தம் யதபிச பரமம் ஸர்வதாம்நாம் சதாம்
சக்ரம் தச்சக்ரபாணே:திதிஜ தனுகலத்ரக்த தாராக்ததாரம்
சச்வந்நோ விச்வவந்த்யம் விதரது விபுலம் சர்ம கர்மாம்சு சோபம்–2-
ஸ்ரீ சக்ரபாணியான ஸ்ரீ விஷ்ணுவின் பார் புகழ் கொண்ட சக்ராயுதம் நமக்கு உற்ற மங்களம் கொடுக்கட்டும்.
சூரியன் போன்று சுழலும் அச்சக்ராயுதம் காலம் முழுவதையும் ஒரு நொடியாக்க வல்லது என சான்றோர் கூறுவர்.
இருளின் முழுமுடிவு என்று மட்டுல்லை ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியுடையதுமாகும்.
அதன் ஆரமுனைகளில் அசுரரின் ரத்தக்கரை படிந்துள்ளதால் அது அவரை அழித்து உலகைக் காத்துள்ளது தெரியவரும்.
அவ்யாத்நிர்காதகோரோ ஹரிபுஜ பவநாமர்ச மாத்மாத மூர்தே:
அஸ்மான் விஸ்மேர நேத்ரத்ரிதச நுதிவச:ஸாது காரை:ஸுதார:
ஸர்வம் ஸம்ஹர்துச்சோ:அரிகுலபுவனம் ஸ்பாரவிஸ்பார நாத:
ஸம்யத் கல்பாந்தஸிந்தௌ சரஸலில கடாவார் முச:கார்முகஸ்ய–3-
பகைவர் கூட்டமாகிய உலகை முழுமையாக அழிக்க விரும்பியதும் ஆகவே தான் அம்புகளாகிய தண்ணீர் பொழியும்
மேகமோவெனத் திகழும் வில்லின் பரக்க விர்ந்த ஒசை நம்மை காக்கட்டுமே.
அம்பின் அடியால் கொடியதாயும், வியப்புற்ற வானவர் ஆமோதிக்கும் பேச்சுகளால் அவ்வோசை மேலும் வலுப்படுகிறது.
ஜீமூதச்யாம பாஸாமுஹ§ரபி பகவத் பாஹ§நா மோஹ மந்தீ
யுத்தேஷ¨த்தூயமாநா ஜடிதி தடிதிவாலக்ஷ்யதே யஸ்ய மூர்நி:
ஸோsஸிஸ்த்ராஸாகுலாக்ஷத்ரிதசரிபுவபு:சோணிதாஸ்வாத த்ருப்தோ
நித்யானந்தாய பூயாத் மதுமதன மனோ நந்தநோ நந்த கோ ந:–4-
எந்த வாளின் வடிவம், முகில் வண்ணம் படைத்த ஸ்ரீ விஷ்ணுவின் கையினால் மோஹமுறச் செய்கிறதோ,
யுத்த காலத்தில் சப்படும் பொழுது ன்னலெனத் தோன்றுகிறதோ,
பயந்த அசுரர்களின் உடல் இரத்தம் பருகி திருப்தி யடைகிறதோ அத்தகைய நந்தகம் எனப்படும் வாள்
நம் நித்யானந்தத்தை தோற்றுவிக்கட்டும். அந்த வாள் கையில் இருப்பதால் ஸ்ரீ மகிழ்ச்சியல்லவா
கம்ராகாமுராரே:கரகமலதலேநா னுராக்தே க்ருஹீதா
ஸம்யக்வ்ருத்தா ஸ்திதாக்ரே ஸபதி நஸஹதே தர்சனம் யா பரேஷாம்
நாஜந்தீ தைத்ய ஜீவாஸவமத முதிதா லோஹிதாலேப நார்த்ரா
காமம் தீப்தாம்சுகாந்தா ப்ரதிசது தயிதேவாஸ்ய கௌமோதகீ ந:–5-
முராரியின் நேசத்துடன் பற்றியுள்ள கௌமோதகீ என்ற கதை மனைவியைப் போல் விரும்பியதை
நமக்கு அருள வேண்டுமே. அது பெருமான் கையில் கீழ் முகமாக இருந்து நுனியில் உருனையாகவும் உள்ளது.
பகைவரது காட்சியை ஏற்காமல் விளங்குது அசுர உயிராகிய மது அருந்தி
மகிழ்ச்சி கண்டு பிரகாசிப்பது (மனைவியான ஸ்ரீ லக்ஷ்க்கும் பொருந்தும்)
யோவித்வ ப்ராண பூத ஸ்தனுரபிசஹரேர்யான கேதுஸ்வரூப:
யம் ஸம்சிநத்யைவ ஸத்ய, ஸ்வய முரகவதூவர்ககர்பா:பதந்தி
சஞ்சத் சாண்டோரு துண்டத்ருடித பணிவஸா ரக்தபங்காங்கிதாஸ்யம்
வந்தே சந்தோமயயம் தம் ககபதிமமலம் ஸ்வர்ண வர்ணம் ஸுபர்ணர்–6-
வேத வடிவான, தங்க நிற மொத்த கருடனை வணங்குகிறேன்.
அசையும் பயங்கர அலகினால் அவர் கிழிந்த நாகங்களின் வஸை ரத்தம் இவை படிந்த முகத்தை யுடையவராயுள்ளார்.
அவர் சிறியவராயினும் உலக மூச்சுக்காற்றாகவும், நாராயணரின் வாஹனமாகவும் உள்ளார்.
அவரை நினைத்தவுடனேயே நாகங்களின் சிசுக்கள் மடிந்து ழ்கின்றன.
விஷ்ணோர்விச்வேச்வரஸ்ய ப்ரவரசயன க்ருத்ஸ்ரவலோகைகதர்தா
ஸோsனந்த:ஸர்வபூத:ப்ருது விமலயசா:ஸர்வவேதைஸ்ச வேத்ய:
பாதா விச்வஸ்ய சச்வத் ஸகல ஸுரரிபு த்வம்ஸன:பாபஹந்தா
ஸர்வஜ்ஞ:ஸர்வஸாக்ஷீ லகல விஷபயாத் பாது போகீச்வரோந:–7-
அகில உலகையும் தாங்கும் அனந்தநாகன் உலக நாயகனாக விஷ்ணுவுக்கு சயனமாகி புகழ்பெற்றவர்.
வேதம் மூலமே அறியத்தக்கவர். பாபங்களைப் போக்கி, அசுரர்களையும் அழித்து உலகைக் காப்பவர். எல்லாம் அறிந்தவர்.
வாக்பூ கௌர்யாதிபேதைர் விதுரிஹமுனயோ யாம் யதீயைஸ்ச பும்ஸாம்
காருண்யார்த்ரை:கடா¬க்ஷ:ஸக்ருதபி பதிதை:ஸம்புத:ஸ்யு:ஸமக்ரா:
குந்தேந்து ஸ்வச்ச மந்தஸ்தமதுர முகாம் போருஹாம் ஸுந்தராங்கீம்
வந்தே வந்த்யா மசேஷைரபி முரபிதுரோ மந்திரா ந்திராம்தாம்–8-
அகில உலகங்களும் வணங்கி நிற்கும் ஸ்ரீ நாராயணனின் திருமார்பை கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை வணங்குகிறேன். குந்தமலர், சந்திரன் நிகரான இனிய புன்முறுவல் தவழும்
முக மலருடன் அழகியவள் தாயார். அவளது கருணை ததும்பும் கடாக்ஷம் ஒரு முறை கிடைத்தால்
எல்லா செல்வங்களும் ஒருவனுக்கு கிடைத்துவிடும்.
முனிவர்கள் அந்த தாயாரை ஸ்ரீ ஸரஸ்வதியாகவும், ஸ்ரீ பூதேவியாகவும், ஸ்ரீ பார்வதீ தேவியாகவும் வர்ணித்துள்ளனர்.
யா ஸ¨தே லத்வ ஜாலம் ஸகலமபி ஸதா ஸந்நிதாநேந பும்ஸ:
தத்தே யா தத்வ யோகரத் சாமசர தம் பூதயே பூதஜாதம்
தாத்ரீம் ஸ்தாத்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருதிமவிக்ருதிம் விச்வசக்திம் விதாத்ரீம்
விஷ்ணோர் விச்வாத்மநஸ்தாம் விபுல குணமயீம் ப்ராணநாதாம் ப்ரணௌ–9-
எப்பொழுதும் உடனிருக்கும் புருஷனின் துணை கொண்டு ப்ரக்ருதியாகியதாய் பிராணி வர்க்கம் அனைத்தையும் பிரஸவித்து,
சரமும் அசரமுமான அந்த பிராணி வர்க்கத்தை தத்வங்கள் கூடியதால் அதை தாங்கி நிற்கிறாள்.
தாங்கியும், நிலைபெறச் செய்தும், பின்னும் பின்னும் உண்டாக்கியும், மாறாத உலக மக்தியை தோற்றுவித்தும்
வருகிற ஸ்ரீ விஷ்ணுவின் பிராண நாதையை நமஸ்கரிக்கிறேன்.
யேப்யோsஸ¨யத்பிருச்சை:ஸபதி பத முரு த்யஜ்யதே தைத்ய வர்கை:
யேப்யோ தர்தும் சமூர்த்நா ஸ்ப்ருஹயதி ஸததம் ஸர்வ கீர்வாண வர்க:
நித்யம் நிரமூலயேயு:நிசிததரமமீ பக்தி நிக்நாத்மநாம் ந:
பத்மாக்ஷஸ்யாங்க்ரி பத்மத்வய தல நிலயா:பாம்ஸவ:பாபபங்கம்–10-
எவைகளை வெறுத்து அசுரர்கள் தங்களுக்கு வரும் பெரிய பதியைக்கூட இழக்கிறார்களோ,
ஆனால் அவற்றை தலையால் தாங்கவும் தேவர்கள் ஸததமும் விழைகிறார்களோ
அப்படிப்பட்ட தாமரைக் கண்ணனான ஸ்ரீ விஷ்ணுவின் திருவடித் தாமரையிலுள்ள ரேணுக்கள்
பக்திமான்களான எங்கள் பாபச் சகதியை முழுதும் போகும்படி செய்யட்டும்.
ரேகா லேகாதிவந்த்யா:சரணதலகதாஸ்சக்ர மத்ஸ்யாதிரூபா:
ஸ்நிக்தா:ஸ¨க்ஷ்மா:ஸுஜாதா ம்ருதுலலித தரªக்ஷளம ஸ¨த்ரா யமாணா:
தத்யுர்நோ மங்கலாநி ப்ரமரபரஜுஷா கோமலே நாப்திஜாயா:
கம்ரேணாம்ரேட்யமாநா:கிஸலயம்ருதுநா பணிநா சக்ரபாணே:–11-
சக்ரபாணியான ஸ்ரீ விஷ்ணுவின் சக்ரங்களிலுள்ள கோடுகள் சக்ரம், மத்ஸ்யமென விளங்குவை
மெல்லிய பட்டுத்துணியின் நூல்கள் தானொவென்று னுனுப்பாய் இருப்பவை.
ஸ்ரீ லக்ஷ்மீ தேவி தனது மெல்லிய துளிர் போன்ற கையினால் அவற்றை வருடுவாளே
அந்த கோடுகள் எங்களுக்கு மங்களம் உண்டாக்கட்டுமே
யஸ்மா தாக்ராமதோ த்யாம் கருடமணி சிலாகேதுதண்டாயமாநாத்
ஆஸ்ச்யோதந்தீபபாஸே ஸுரஸரிதமலா வைஜயந்தீவ காந்தா
பூஷ்டோ யஸ்ததான்யோ புவன க்ருஹ ப்ருஹத்ஸ்தம்ப சோபாம் ததௌ ந:
பாதாமேதௌ பயோஜோதர லலிததலௌ பங்கஜாக்ஷ்ஸ்ய பாதௌ–12-
தாமரை புஷ்பத்தின் உட்புறம் போன்று கவும் ருதுவான திருவடிகள் எங்களைக் காப்பதாக அவற்றிலொன்று
முன்பு (ஸ்ரீ த்ரிவிக்ரமாவதார காலத்தில்) பச்சை மகரத மணிக் கொடித் தம்பம் போல் ஆகாயத்தில் பரவியதே
அதிலிருந்து ஆகாச கங்கை பரவகித்தது.
பூயில் இருந்த மற்றொரு கால் பூலோகமாகிய வீட்டின் நடுவீட்டுத் தூண் போல் இருக்கிறதே
ஆக்ராமத்ப்யாம் த்ரிலோகீ மஸுரஸுரபதீ தத்க்ஷணாதேவ நீதௌ
யாப்யாம் வைரோ சநீந்த்ரௌ யுகபதபி விபத்ஸம்பதோ ரேகதாம
தாப்யாம் தாம்ரோதராப்யாம் முஹ§ரஹமஜிதஸ் யாஞ்சிதாப்யாமுபாப்யாம்
ப்ராஜ்யை ச்வர்ய ப்ரதாப்யாம் ப்ரணதிமுபகத:பாதபங்கேருஹாப்யாம்–13-
மூவுலகையும் ஆக்ரத்த திருவடித் தாமரைகளால் அசுரத் தலைவரான வைரோசனியும் சுரபதியான இந்த்ரனும்
ஒரே சமயத்தில் விபத்துக்களையும், ஸம்பத்துக்களையும் முறையே அடைவிக்கப்பட்டனர்.
ஸ்ரீ திரிவிக்ரம ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அந்த திருவடிகள், சிவந்த தலத்தை யுடையவனாயும்,
அளவற்ற ஐச்வர்யம் நல்குபவையாயும் மிளிர்கின்றன. அவற்றிற்கு நமஸ்காரம் செய்கிறேன்.
யேப்யோ வர்ண ஸ்சதுர்த:சரமத உதபூத் ஆதிஸர்கேப்ரஜாநாம்
ஸாஹஸ்ரீசாபிஸங்க்யா ப்ரகடமபிஹாதா ஸர்வவேதேஷ§ யேஷாம்
வ்யாப்தா விச்வம்பரா யை ரதிவிதததநோ:விச்வமூர்தேர்விரோஜோ
விஷ்ணோ ஸ்தேப்யோ மஹத்ப்ய:ஸததமபி நமோsஸ்வத்வங்க்ரி பங்கேரு ஹேப்ய:–14-
ப்ரஜைகளை முதலில் சிருஷ்டிக்கத் தொடங்கிய போது நான்காவது வர்ணம் ஸ்ரீ விஷ்ணுவின் எந்த திருவடிகளிருந்து தோன்றயதோ,
எவை கணக்கில் ஆயிரம் என்று எல்லா வேதங்களிலும் கூறப்பட்டுள்ளதோ,
விராட் புருஷனான ஸ்ரீ விஷ்ணுவின் எந்த திருவடிகளால் பூலோகம் முழுதும் வியாபிக்கப் பட்டுள்ளதோ, அந்த திருவடிகளுக்கு நமஸ்காரம்.
விஷ்ணோ:பாதத்வயாக்ரே விமலநகமணி ப்ராஜிதா ராஜதேயா
ராஜீவஸ்யேவ ரம்யா ஹிமஜலகணிகா லங்க்ருதாக்ரா தலாலீ
அஸ்மாகம் விஸ்மயார்ஹாண்யகில ஜனமந:ப்ரார்த்தநீயா ஸேயம்
தத்யா தாத்யா நவத்யா ததிரதிருசிரா மங்கலான்யங்குநாம்–15-
ஸ்ரீ விஷ்ணுவின் இரண்டு கால் நுனிகளிலும் தூய நகங்களுடன், பனித்துளியுடன் கூடிய தாமரையிதழ்
போன்று விளங்கும் விரல் கூட்டம் நமக்கு வியக்கத் தகும்படி மங்களங்களை வழங்கட்டும்.
யஸ்யாம் த்ருஷ்ட்வாமலாயாம் ப்ரதிக்ருதி மமரா:ஸம்பவந்த்யா நமந்த:
ஸேந்த்ரா:ஸாந்த்ரீக்ருதேர்ஷ்யாஸ்த்வபரஸுர குலாசங்கயா தங்கவந்த:
ஸா ஸத்ய:ஸாதிரேகாம் ஸகல ஸுககரீம் ஸம்பதம் ஸாதயேந்ந:
சஞ்சச்சார்வம் சுசக்ரா சரண நலிநயோ:சக்ரபாணேர் நகாலீ–16-
இந்திரன் முதலிய தேவர்கள் நமஸ்கரிக்கும் போது ஸ்ரீ விஷ்ணுவின் நகங்களில் தங்களது உருவத்தைப் பார்த்து
வேறு தேவர்களின் உருவமோ என சங்கித்து கவலை கொண்டவர்களாய் ஆகி விடுகிறார்கள்.
அப்படிப்பட்ட பளபளக்கும் காந்தி கிரணங்களைக்களை யுடைய ஸ்ரீ சக்ர பாணியின் நகஸமுகம் எங்களுக்கு செல்வத்தை சேர்ப்பதாக
பாதாம்போஜன்ம ஸேவாஸமவநத ஸுரவ்ராத பாஸ்வத்கிரீட
ப்ரத்யுப்தோச்சாவசாச்மப்ரவர கரகணை:சித்ரிதம்யத்விபாதி
நம்ராங்காநாம் ஹரேர்நோ ஹரிதுபல மஹா கூர்ம ஸெளந்தர்யஹாரி
ச்சாயம் ச்ரேய :ப்ரதாயி ப்ரபதயுகதம் ப்ராபயேத் பாப மந்தம்–17-
ஸ்ரீ ஹரியின் புறங்கால்களிரண்டும் வணங்கியவர்களின் பாபத்தை நீக்கட்டும். அவை இயல்பாகவே ச்ரையஸை கொடுப்பன.
பச்சைக்கற்களால் அமைக்கப்பட பெரும் ஆமை வடிவழகு கொண்டவை, காலில் விழுந்து வணங்கும்
தேவர்களின் கிரீடத்திலுள்ள வைரக் கற்களின் நிறம் நிழல் படிந்து அழகாகத் தோற்றமளிக்கின்றன இவை.
ஸ்ரீமத்யௌ சாருவ்ருத்தே கரபரிலனாந்த ஹ்ருஷ்டே ரமாயா:
ஸெளல்தர்யாட் யேந்த்ர நீலோபல ரசிதமஹாதண்டயோ:காந்திசேளரே
ஸ¨ரீந்த்ரை:ஸ்தூயமாநேஸுர குலஸுகதே ஸ¨திதாராதிஸங்கே
ஜங்கே நாராயணீயே முஹ§ரபிஜயதா மஸ்மதம்ஹோ ஹரந்த்யௌ–18-
பகைவரை அழித்து தேவர்க்கு ஸுகமளித்து காக்கும் நாராயணனது முழங்கால்கள் எங்கள் பாபத்தைப் போக்கி விளங்கட்டும்.
சான்றோர் போற்றுமளவு உருண்டு திரண்டவை:ஸ்ரீ லக்ஷ்மீதேவியின் கை வருடல் காரணமாக ஸுகம் நேடியவை.
நேர்த்தியான இந்தர நீலக் கல்லால் சமைத்த தண்டங்களின் அழகையும் கொண்டவை.
ஸம்யக்ஸாஹ்யம் விதாதும் ஸமவஸததம் ஜங்கயோ:கிந்நயோர்யே
பாரீபூதோரு தண்டத்வய பரணக்ருதோத்தம்ப பாவம் பஜேதே
சித்தாதர்சம் நிதாதும் மஹிதவ ஸதாம் தே ஸமுத் காயமாநே
வ்ருத்தாகாரே விதத்தாம் ஹ்ருதி முத மஜித ஸ்யாநிசம் ஜனுநீந:–19-
சோர்ந்து போன முழங்கால்களுக்கு சற்று நல்ல உதவி செய்ய எண்ணியும், பாரமாக இருக்கும் தொடைகளைத்
தாங்க வேண்டியும் சற்று முன் தள்ளி அமைந்தவையும், நல்லோரின் தூய மனக் கண்ணாடியை வைக்கும்
பேழை போன்றிருப் பவையும் உருண்டு இருப்பவையுமான ஸ்ரீ விஷ்ணுவின் முட்டிக் கால்கள் எமக்கு மகிழ்ச்சி பொங்கச்செய்யட்டும்.
தேவோ பீதிம் விதாது:ஸபதிவிதததௌ கைடபாக்யம் மதும்சா
ப்யாரோப்யாரூடகர்வாவதி ஜலதி யயோரதி தைத்யௌ ஜகாந
வ்ருத்தாவன்யோன்ய துல்யௌ சதுரமுபசயம் பிப்ரதாவப்ரநீலௌ
ஊரூசாரூ ஹரேஸ்தௌ முதமதிசயிநீம் மானஸே நோ விதத்தாம்–20-
ஸ்ரீ ஹரி, முன்பு பிரம்ம தேவனுக்கு பயம் காட்டிய மது கைட பாஸுர்களை தன் தொடையின் மீது ஏற்றி சமுத்ரத்தில் வதைத்தார்.
அந்த தொடைகள் ஒன்றுக்கொன்று இணையானவை. அழகியவை, பருத்து உருண்டுருப்பவை.
அவை எமக்கு வெகுவான மகிழ்ச்சியைத் தந்தருளட்டும்.
பீதேந த்யோததே யத் சதுரபரிஹிதே நாம்பரேணாத்யுதாரம்
ஜாதாலங்காரயோகம் சலவ ஜலதேர்வாட வாக்னி ப்ரபாபி:
ஏதத் பாதித்ய தாந்நோ ஜகந மதிக நாதேனஸோ மானனீயம்
ஸாதத்யேநைவ சே தோவிஷயமவதரத்பாது பீதாம்பரஸ்ய–21-
பீதாம்பரனான ஸ்ரீ விஷ்ணுவினுடைய போற்றத்தக்கதும் அடிக்கடி மனதிற் கொள்ளப் படுவதுமான குஹ்ய ப்ரதேசம்
எங்களை பெரும்பாபத்தினின்று காத்தருளட்டும். அந்த ஜகன பிரதேசம் அழகாக அணியப்பட்ட மஞ்ஜள் பட்டினால்
நேர்த்தியாக உள்ளது. பாடவத்தீயின் ஒளிகளால் சமுத்ர ஜலம் போன்று ஒப்பனை கொண்டதாயுருக்கிறது.
யஸ்யா தாம்நா த்ரிதாம்நோ ஜகநகலிதயா ப்ராஜதேsங்கம்யதா ப்தே:
மத்யஸ்தோ மந்தராத்ரி:புஜகபதி மஹாபோக ஸந்நத்த மத்ய:
காஞ்சீஸா காஞ்சநாபா மணிவரகிரணை ருல்லஸ்த்பி:ப்ரதீப்தா
கல்யாம் கல்யாண தாத்ரீமம மதிமநிசம் கம்ரரூபா கரோது–22-
ஸ்ரீமந் நாராயணுடைய இடுப்பில் அணியப்பட்ட எந்த ஒட்டியாணப் பட்டையால், கடல் நடுவில் இருப்பதும்,
வாஸுகியின் நீண்ட உடல் சுற்றிய நடு பாகத்தை யுடையதுமான மந்தர மலையோல் அவரது உடல் விளங்கிதோ,
தங்க மயமானதும், பல நல்ல வைரங்கள் பதித்து அழகிய தோற்றமுடையதுமான
அந்த ஒட்டியானம் என் புத்தியை யோக்ய மாணவராகச் செய்யட்டும்.
உந்நம்ரம் கம்ரமுச்சை ருபசிதமுத பூத் யத்ர பத்ரைர் விசித்ரை:
பூர்வம் கீர்வாண பூஜ்யாம் கமலஜமது பஸ்யாஸ் பதம் தத் பயோஜம்
யஸ்ந் நீலாச்ம நீல ஸ்தரலருசிஜலை:பூரிதே கேலி புத்யா
நாலீகாக்ஷஸ்ய நாபீஸரஸி வஸது நஸ்சித்தஹம்ஸ:சிராய-23-
தாமரைக் கண்ணனான ஸ்ரீ நாராயணரின் நாபியாகிய வாவியில் நீலமேணி போல் நீலமான சலசலக்கும்
தண்ணீர் நிரம்பி வழிகிறது. அந்த தாடகத்தில் எங்கள் மனமாகிய அன்னப்பறவை விளையாடும்
எண்ணத்தில் வெகுநாட்கள் தங்கலாமேஅந்த நாபியில் தானே நெடிதுயர்ந்த அழகிய
ஒரு தாமரை விசித்ரமான இலையுடன் பிரம்ம தேவனுக்கு இருப்பிடமாக வளர்ந்தது.
பாதாலம் யஸ்யநாலம் வலயமபி திசாம் பத்ரபங்க்திம் நதேகந்த்ரான்
வித்வாம்ஸ:கேஸராலீ:விதுரிஹ விபுலாம் கர்ணிகாம் ஸ்வர்ணசைலம்
பூயாத்காயத் ஸ்வயம்பூ மதுகரபவனம் பூமயம் காமதம்நோ
நாலீகம் நாபிபத்மாகரபவமுரு தந்நாக சய்யஸ்ய சௌரே:–24-
ஸ்ரீ ஆதிசேஷனாகிய படுக்கையுடைய சௌரியின் நாபி தடாகத்தில் அமைந்த, ரீங்கார கானம் செய்யும்
பிரம்மனாகிய வண்டின் தாமரை எங்கள் விருப்பங்களை அருளுவதாகட்டும்.
அந்த கட்டிடத்தின் அடித்தலம் பாதாலமென்றும், இதழ் வரிசைகள் திசைகளின் வட்டம் என்றும்,
கேஸரங்கள் மலைகள் என்றும், கர்ணிகை மேருமலை என்றும் அறிந்தவர் கூறுவர்.
ஆதௌ கல்பஸ்ய யஸ்மாத் ப்ரபவதி விததம் விச்வமேதத் விகல்பை:
கல்பாந்தே யஸ்ய சாந்த:ப்ரவிசதி ஸகலம் ஸ்தாவரம் ஜங்கமம்ச
அத்யந்தாசிந்த்யமூர்தே:சிரதர மஜித ஸ்யாந்தரிக்ஷஸ்வரூபே
தஸ்ன் அஸ்மாகமந்த:கரண மதிமுதா க்ரீடதாத் க்ரோடபாகே–25-
யுக ஆரம்பத்தில் இந்த உலகம், பல பல வேறுபாடுகளோடு எந்த ஒரு அஃகுளிலிருந்து உண்டாகிறதோ,
அதே போல் யுக முடிவில் எங்கு அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் ஒடுங்குகின்றனவோ அதே அந்த
அந்தரிக்ஷரூபமான ஸ்ரீ பரமனின் அஃகுளில் நமது அந்த:கரணம் மகிழ்ச்சியுடன் விளையாடட்டும்.
காந்த்யம்ப:பூரபூர்ணே லஸதஸித வலீபங்க பாஸ்வத்தரங்கே
கம்பீராகார நாபீ சதுரதர மஹாவர்த சோபிந்யுதாரே
க்ரீடத்வா நத்த ஹேமோதரநஹன மஹோபாடவாக்னி ப்ரபாட்யே
காமம் தாமோதரீயோதரஸலில நிதௌ சித்தமத்ஸ்யஸ்சிரம் ந:–26-
ஸ்ரீ தாமோதரனின் உதரமாகிய கடலில் எங்கள் மனதாகிய மீன் இஷ்டப்படி விளையாடலாமே
அந்த கடல் பளபளப்பு என்ற தண்ணீர் நிறம்பப் பெறுகிறது. கருநீல த்ரிவலீமடிப்பு என்ற அலைகள் அங்கு காண்கிண்றன.
ஆழமான நாபீ என்ற சூழல் அங்கு சிறந்த விளங்குகிறது.
மேலும் தங்க வயிற்றுப் பட்டை என்ற வாடவத்தீயின் கொழுந்தும் இருக்கின்றதல்லவா
நாபீ நாலீக மூலாத் அதிகபரிமலோன் மோ ஹிதாநா மலீநாம்
மாலா நீலேவ யாந்தீ ஸ்புரதி ருசிமதீ வக்த்ரபத்மோன் முகீ யா
ரம்யா ஸா ரோமராஜி:மஹிதருசிகரீ மத்யபாகஸ்ய விஷ்ணோ:
சித்தஸ்தா மா விரம்ஸீத் சிரதர முசிதாம் ஸாதயந்தீ ச்ரி யம் ந:–27-
நாபீ என்ற தாமரையடியிலிருந்து வரும் குந்த வாசனையால் மயங்கிய வண்டுகளின் நீலநிற மலையவென மேலே சென்று,
முகமாகிய தாமரையைத் தாவித் பிடிக்க முயலுகின்ற அந்த அழகிய ரோமவரிசை ஸ்ரீ விஷ்ணுவின் இடைப்பாகத்திற்கு
அழகு கூடுகிறதே அதை நினைக்கும் போதெல்லாம் நமக்கு செல்வச் செழிப்பு விரிவடைகிறது.
ஆகவே அது மனதை விட்டு அகல வேண்டாமே
ஸம்ஸ்தீர்ணம் கௌஸ்துபாம்சுப்ரஸர கிஸலயை:முக்த முக்தா பலாட்யம்
ஸ்ரீவாஸோல்லாஸி புல்லப் ரதிநவ வந மாலாங்கி ராஜத்புஜாந்தம்
வக்ஷ:ஸ்ரீவத்ஸ காந்தம் மதுகர நிகர ச்யாமலம் சார்ங்கபாணே:
ஸம்ஸாராத்வச்ரமார்தைருபவனவ யத்ஸேவிதம் தத்ப்ரபத்யே–28-
ஸ்ரீ கௌஸ்துப மணியின் காந்தி ச்சுத் துளிர்கள் பரப்பியதும் முத்து மணிகள் நிரம்பியதும்,
ஸ்ரீ லக்ஷ்மீவாஸம் செய்வதால் மலர்ச்சி பெற்றவன மாலை துலங்க விளங்குவதும்,
ஸ்ரீவத்ஸம் அமைந்து அழகாயிருப்பதும், தேன் வண்டுக் கூட்டம் போல் நீலநிறமாய் இருப்பதுமான
ஸ்ரீ சாரங்கபாணியின் மார்யை-சம்ஸாரம் என்ற பெருவழியில் களைத்தவர் பூங்காவாக எண்ணி
ஒய்வு பெற விழையும் அந்த மார்பை சரணடைகிறேன்.
காந்தம் விக்ஷே£ நிதாந்தம் விதததிவ கலம் காலிமாகாலசத்ரோ:
இந்தோர் பிம்பம் யதாங்கோ மதுப இவதரோர் மஞ்ஜரீம் ராஜதே ய:
ஸ்ரீமான் நித்யம் விதோயத் அவிரல லித:கௌஸ்துப ஸ்ரீப்ரதானை:
ஸ்ரீவத்ஸ:ஸ்ரீபதேஸ்ஸ ச்ரேயஇவ தயிதோ வத்ஸ உத்சை:ச்ரேயம் ந:–29-
காலகாலனான பரமேச்வரனன் கழுத்தை ஆலகால கருமை அழகாகச் செய்வது போலவும்,
சந்த்ர பிம்பத்தை கலங்கமும், மரத்தின் பூங்கொத்தை தேன்வண்டு போலவும் அழகு சேர்ந்த வண்ணம் விளங்கும்
ஸ்ரீவத்ஸம் எங்களுக்கு செல்வச் செழிப்பை நல்கட்டும். அது ஸ்ரீ தேவியின் செல்லப் பிள்ளையாயிற்றே
ஸம்பூயாம் போதிமத்யாத் ஸபதி ஸஹஜயா ய:ச்ரியா ஸந்நிதத்தே
நீலேநாராயணோர:ஸ்தலககனதலே ஹாரதாரோ பஸேவ்யே
ஆசா:ஸர்வா:ப்ரகாசா:விதததபி ததத்சாத்ம பாஸாsன்ய-தேஜாம்ஸி
ஆஸ்சர்யஸ்யாகரோ நோ த்யுமணிரிவ மணி:கோஸ்துப:ஸோsஸ்து பூத்யை–30-
ஸ்ரீ பாற்கடலிலிருந்து உடன்பிறந்த ஸ்ரீ லக்ஷ்யுடன் சேர்ந்தே, ஹாரங்களாகிய நக்ஷத்திரங்களுடன் விளங்கும்
நாலமான ஸ்ரீ நாராயணனின் மார்பு என்ற ஆகாயத்தில் சூர்யன் போல் மிளிரும் ஸ்ரீ கௌஸ்துபம் என்ற வியத்தகு மணி
எங்களுக்கு ஐச்வரியத்தை விளைவிக்கட்டும். அந்த மணி, ஸகல திசைகளையும் பிரகாசமடையச் செய்யதோடு,
இதர ஒளிகளை மழுங்கவும் செய்கிறது.
யா வாயாவானுகூல்யாத்ஸரதிமணிருசா பாஸமாநாsஸமாநா
ஸாகம் ஸாகம்ப மம்ஸே வஸதி விதததீ வாஸுபத்ரம் ஸுபத்ரம்
ஸாரம் ஸாரங்கஸங்கைர் முகரிதகுஸுமா மேசகாந்தா சங்கர மடம் காந்தா
மாலா மாலாலிதா ஸ்மாந் நவிரமது ஸுகை:யோஜயந்தீ ஜயந்தீ–31-
காற்று அனுகூலமாக சும்போது மணிமாலை போல் விளங்கும் ஸ்ரீ ஜயந்தீ மாலை ஸ்ரீ லக்ஷ்மீ தேவியால் போற்றப்பட்டு
தளதளப்புடன் தோளில் இருந்துகொண்டு ஸ்ரீ வாஸுதேவனை கல்யாணங்களுடன் இருக்கச் செய்கிறது.
அதில் வண்டுகள் மொய்பதால் புஷ்பங்களே ஆரவாரிப்பதாகத் தோன்றுகிறது.
அந்த மாலை எங்களுக்கு சுகங்களை அனவரதமும் உண்டாக்கட்டும்.
ஹாரஸ்யோருப்ரபாபி:ப்ரதிநவ வந மாலாம்சு:ப்ராம்சுரூபை:
ஸ்ரீபிஸ்சாங்கதாநாம் கபலிதருசி யந்நிஷ்க பாபிஸ்ச பாதி
பாகுல்யேநைவ பத்தாஞ்ஜலிபுட மஜிதஸ்யாபியாசாமஹே தத்
பந்தார்திம் பாததாம் நோ பகுவிஹதி க ரீம் பந்துரம் பாகுமூலம்–32-
ஸ்ரீ அஜிதனுடைய அடக்கமான பாஹுமூலம் துன்பங்களைத் தரும் சம்சார பந்தத்தை நீக்கட்டும் என்று கைகூப்பி
பல தடவை பிரார்த்திக்கிறோம். அந்த பாஹு மூலம் ஹாரங்களின் ஒளிகளாலும், புத்தம் புதிய ஸ்ரீ வனமாலையின்
அழகாலும் தோள் வளைகளின் காந்தியாலும், தங்க நகைகளின் சோபையாலும் ளிர்கிறது.
விச்வத்ரானைணதீக்ஷ£ஸ்ததனுகுண குணக்ஷத்ர நிர்மாணதாக்ஷ£:
கர்தாரோ துர்நிரூபா:ஸ்புடகுருயசஸாம் கர்மணாமத்புதாநாம்
சார்ங்கம் பாணம் க்ருபாணம் பலகமரிகதே பத்மசங்கௌ ஸஹஸ்ரம்
பிப்ராணா:சத்ஸ்ரஜாலம் மமத்தது ஹரே:பாஹவோ மோஹ ஹாநிம்–33-
ஸ்ரீ ஹரியின் கைகள் சார்ங்கம், பாணம், வாள், கேடயம், சக்ரம், கதை, பத்மம், சங்கவை போன்ற
ஆயுதங்களை தாங்கியதாய் என்று மோஹத்தை நீக்கட்டும். அவை உலகைக் காப்பதற்கென்றே கருத்தாய்
பல அற்புதச் செயல்களையும் செய்து, க்ஷத்ரியர்களையும் தோற்றச் செய்துள்ளனவே.
கண்டாகல்போத்கதைர்ய:கநமகய லஸத்குண்ட லோத்தை ருதாரை:
உத்யோதை:கௌஸ்துபஸ்யா ப்யுருபிபசித:சித்ரவர்ணோ விபாதி
கண்டாச்லேஷே ரமாயா:கரவலய பதைர்முத்ரிதே பத்ரரூபே
வைகுண்டீயே அத்ர கண்டே வஸது மம மதி:குண்டபாவம் விஹாய–34-
கழுத்தில் அணியும் ஆபரணங்கள், தங்கமயமான குண்டலங்கள், இவற்றின் பிரகாசங்களாலும்,
ஸ்ரீ கௌஸ்துப மணியின் ஒளியும் சேர்ந்து பல நிறமுள்ளதாகச் செய்யப்படுகிறது ஸ்ரீ ஹரியின் கண்டம்.
அதோடு ஸ்ரீ லக்ஷ்மீதேவியின் ஆலிங்கனத்தில் பதிந்த கைவளையல்களின் தழும்பும் அங்கு உள்ளன.
அத்தகைய கழுத்தில் என் மனம் தடையின்றி நிலை பெறட்டும்.
பத்மானந்தப்ரதாதா பரிலஸதருண ஸ்ரீபரீதாக்ரபாக:
காலேகாலே ச கம்புப்ரவரசசதரா பூரணேய:ப்ரண:
வக்த்ராகாசாந்தரஸ்த ஸ்திரயதி நிதராம் தந்த தாரௌகசோபாம்
ஸ்ரீபர்து:தந்தவாஸோத்யுமணி ரகதமோ நாதனா யாஸ்து அஸெள ந:–35-
ஸ்ரீ லக்ஷ்மீபதியான ஸ்ரீ நாராயணனது உதடாகிய சூரியன் எனது பாப இருட்டைப் போக்குவதாக அமையட்டும்.
அந்த சூர்யன் முகமாகிய பத்மத்திற்கு அழகு சேர்ப்பதாகவும் ஸ்ரீதேவிக்கு இன்ப மகிழ்ச்சியை கொடுப்பதாயும்
முன்பாகத்தில் அருண (சிவப்பு) காந்தியுடையதாகவும், அவ்வப்போது கண்டமாகிய சந்திரனை முழுமையாக்கத் தேர்ந்ததாயும்,
முக்யமாக ஆகாயத்தில் இருந்தவாறு தந்தங்க (பற்களின்) ளாகிய நக்ஷத்திரங்களின் சோபையை மறப்பதாகவும் இருக்கிறது.
நித்யம் ஸ்நேஹாதிரேகாத் நிஜகது ரலம் விப்ரயோகாக்ஷமா யா
வக்த்ரேந்தோ ரந்தராலே க்ருதவஸதிரிவா பாதி நக்ஷத்ரராஜி:
லக்ஷ்மீகாந்தஸ்ய காந்தாக்ருதி ரதிவிலஸன் முக்த முக்தாவலிஸ்ரீ:
தந்தாலீ ஸந்ததம் ஸா நதிநுதிநிரதான் அக்ஷதான் ரக்ஷதாத் ந:–30-
பற்களின் வரிசையாகிய நக்ஷத்திரக் கூட்டம் தனது காதலனாகிய முக சந்திரர்களின் வியோகம் வேண்டாமே
என்று தானோ முகத்தினுள்ளேயே வசிக்கிறது. அந்தந்த வரிசை அழகிய முத்துமணிகளின் வரிசை போல் உள்ளது.
அத்தகைய பல்வரிசை ஸ்ரீ லக்ஷ்மீகாந்தனின் பக்த்தர்களை குறையுறாவண்ணம் காக்கட்டும்.
ப்ரஹ்மன்ப்ரஹ்மண்ய ஜிஹ்மாம் மதிமபி குருஷேதேவஸ்யபாவ யேத்வாம்
சம்போ, சக்ர த்ரிலோகீ மவஸி கிமமரை:நாரதாத்யா:ஸுகம் வ:
இத்தம் ஸேவாநம்ரம் ஸுர முனிநிகரம் க்ஷ்ய விஷ்ணோ:ப்ரஸன்ன
ஸ்யாஸ்யேந்தோராஸ்ரவந்தீ வரவசன ஸுதா ஹ்லாதயேத் மானஸம் ந:–37-
பிரம்மனே, கீழ்தரமான எண்ணுவதில்லையே ஹே சம்போ உம்மை கௌரவிக்கிறேன்.
ஹே இந்த்ரனே உலகைக் காக்கிறாயல்லவா ஏ நாரதர் முதலிய ரிஷிகளே உங்களுக்கு சுகம் தானே
என்றிவ்வாறு தேவர்களையும் முனிவர்களையும் பார்த்து அகமகிழ்ந்து கேட்கும்
சீரிய பேச்சு (ஸ்ரீ விஷ்ணுவின்) ஆகிய அம்ருதம் எங்களை மகிழ்விக்கட்டும்.
கர்ணஸ்தஸ்வர்ண கம்ரோஜ்வல மகர மஹாகுண்டலப்ரோத தீப்யத்
மாணிக்ய ஸ்ரீப்ரதாநை:பரிலித மலிச்யாமலம் கோமலம் யத்
ப்ரோத்யத்ஸ¨ர்யாம்சு ராஜன் மரகத முகுராகார சோரம் முராரே:
காடா மாகாநீம் ந:சமயது விபதம் கண்டயோர் மண்டலம் தத்–38-
காதில் தொங்கும் தங்க மகர குண்டலங்களில் பதிந்துள்ள மாணிக்ய மணி காந்தியால் ஒளி பொருந்தியதும்
அழகு கருநிறமுள்ளதும், சூர்யன் உதிக்கும்போது மகரதக் கண்ணாடியோவெனத் திகழும்
ஸ்ரீ நாராயணனின் கன்ன பிரதேசங்கள், எங்களை எதிர்நோக்கிய ஆபத்துக்களைப் போக்கட்டும்.
வக்த்ராம்போஜே லஸந்தம் முஹ§ரதரமணிம் பக்வபிம்பாபிராமம்
த்ருஷ்ட்வாதஷ்டும் சுகஸ்ய ஸ்புட மவதரத ஸ்துண்டதண்டாயதே ய:
கோண:சோணீக்ருதாத்மா ச்ரவணயுக லஸத்குண்டலோ ஸ்ரைர்முராரே:
ப்ராணாக்யஸ்யா நிலஸ்ய ப்ரஸரணஸரணி:ப்ரானதாநாய ந:ஸ்யாத்–39-
பழுத்த கோவைப்பழம் போன்ற உதடு (கீழ்) ஆகிய மணியைப் பார்த்து அதைக் கடித்துச் சுவைக்க முற்படும் கிளிக்கு
முகத்தின் தண்டெனத் திகழ்கிறது மூக்கு. அது மேலும் காதுகளில் குலுங்கும் குண்டலங்களினின்று விழும்
கண்ணீரால் சிவப்பேறி இருக்கிறது. அத்தகைய ப்ராண வாயு போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும்
ஸ்ரீ ஹரியின் மூக்கு எங்கள் உயிருக்கு உதவட்டும்.
திக்காலௌ வேதயந்தௌ ஜகதி முஹ§ரிமௌ ஸஞ்சரந்தௌ ரந்தூ
த்ரைலோக்யா லோகதீபாவபிதததி யயோரேவ ரூபம் முனீந்த்ரா:
அஸ்மாநப்ஜப்ரபே தே ப்ரசுரதர க்ருபா நிர்பரம் ப்ரேக்ஷமாணே
பாதா மாதாம்ர சுக்லாஸித ரு சிருசிரே பத்மநேத்ரஸ்ய நேத்ரே–40-
சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களால் அழகியவையும் தாமரையிதழ் ஒத்தவையும்,
கருணையுடன் அனைவரையும் காண்பவையும் ஆன கமலக்கண்ணன் ஸ்ரீ நாராயணனின் கண்கள் எங்களை காக்கட்டும்.
அவை சூர்ய சந்திரர்கள்தான் என்று முனிவர் கூறுவர். சூர்ய சந்திரர்கள் திசையையும் காலத்தையும் அறிய காரணமானவர்.
உலகை சுற்றி வருபவர்;மூவுலகுக்கும் பிரகாசமளிக்கும் தீபங்கள் போன்றவர்.
பதாத் பாதால பாதாத் பதிகபதிகதேர்ப்ரூயுகம் புக்நமத்யம்
யேநே ஷச்சாலிதேந ஸ்வபதநியதா:ஸாஸுராதேவஸங்கா:
ந்ருத்யல்லாலாட ரங்கே ரஜநிகரதநோ:அர்த கண்டாவதாதே
கால வ்யாலத்வயம் வா விலஸதி ஸமயா வாலிகா மாதரம் ந:–41-
நடுவில் பள்ளமாயுள்ள ஸ்ரீ நாராயணனின் எந்த புருவங்கள் சிறிதசைவாலேயே தேவாஸுரர்கள்
அவரவர் நிலையில் நிறுத்தப்பட்டனரோ, நெற்றியரங்கில் நடனமாடும் அவை, கருவிழிக்கு அருகில்
இருகால நாகமெனத் திகழும் அத்தகைய புருவங்கள் எங்களை கீழ்நிலைக்குப் போகாமல் பாதுகாக்கட்டும்.
லக்ஷ்மாகாரால காலிஸ்புரதலிக சசாங்கார்தமீல
ந்நேத்ராம் போஜப்ரபோதோத்ஸுக நிப்ருததராலீநப்ருங்கச்சடாபே
லக்ஷ்மீ நாதஸ்ய லக்ஷ்யீக்ருத விபுதகணாபாங்க பாணாஸ நார்த-
ச்சாயே நோ பூரிபூதி ப்ரஸவகுசலதே ப்ரூலதே பாலயேதாம்–42-
அடையாளக் கறையோவெனத் திகழும் கேசத்தோடு அமைந்த நெற்றியாகிய அரைவட்டச் சந்திரன் தோன்றியுள்ளதால்
மூடிய கண் தாமரையிதழ்கள் மலர்வதை எதிர்நோக்கி புடை சூழக் காத்திருக்கும் வண்டின் வரிசை போலிருக்கிறது
ஸ்ரீ லக்ஷ்மீநாதனது புருவ வரிசை. அது செல்வச் செழிப்பை தந்து எங்களை காக்க வேண்டும்.
ரூக்ஷஸ்மாரேக்ஷ§சாப ச்யுதசரநிகர க்ஷீணலக்ஷ்மீ கடாக்ஷ
ப்ரோத்புல்லத் பத்மமாலா விலஸித மஹித ஸ்பாடிகை சானலிங்கம்
பூயாத் பூயோ விபூத்யை மம புவனபதே:ப்ரூலதா த்வந்த்வமத்யாத்
உத்தம் தத்புண்ட்ர மூர்த்வம் ஜநிமரணதம:கண்டனம் மண்டனம்ச–43-
உலக நாயகனான ஸ்ரீநாராயணனின் இருபுருவங்களிடையே மேனோக்கிய இருபுண்டங்கள் பிறப்பு இறப்பு ஆகிய
இருளை யழிப்பதாயும் அலங்காரமாயுருந்து என் ஐச்வர்யத்தை வளரச் செய்யட்டும்.
அந்த ஊர்த்வ புண்ட்ரம், கோபங் கொண்ட மன்மதனின் வில்லினின்று செல்லும் பாணங்களால் அடங்கிய
ஸ்ரீ லக்ஷ்யின் கடாக்ஷம்போல் மலர்ந்த செந்தாமரை மாலையுடன் விளங்கும் ஸ்படிக லிங்கம்போல் விளங்குகிறது.
பீடீபுதாலகாந்தம் க்ருத மகுடமஹாதேவ லிங்கப்திஷ்டே
லாலாடே நாட்யரங்கே விகடதரதடே கைடபாரேஸ்சிராய:
ப்ரோத்காட்யைவாத் மதந்த்ரீப்ரகட படகுடீம் ப்ரஸ்புரந்தீம் ஸ்புடாங்கம்
பட்யம் பாவநாக்யாம் சடுலமதிநடீ நாடிகாம் நாட யேத்ந:–44-
கைடபனை வதைத்த ஸ்ரீ விஷ்ணுவின் அலகத்தை பீடமாய்க் கொண்டிருக்கும்படி கிரீட மணிந்தாற்போன்ற
மகாதேவலிங்கப் பிரதிஷ்டை கொண்ட நெற்றியாகிய நாடக மேடையில் வெகுகாலமாக தன்சோர்வாகிய
பெரிய கூடாரத்தைப் போட்டு தெளிவாய்த் தெரியும் இந்த நுட்பமறியும் புத்தியாகிய நடிகை பாவனை என்ற நாடகத்தை நடிக்கட்டும்.
மாலாலீவாலிதாம்ந:குவலயகலிதா ஸ்ரீபதே:குந்லாலீ
காலிந்தீ ஆருஹ்ய மூர்த்நோ கலதி ஹரசிர:ஸ்வர்துநீஸ்பர்தயா நு
ராகுர்வா-ஆயாதி வக்த்ரம் ஸகல சசிகலாப்ராந்திலோ லாந்தராத்மா
லோகை ராலோக்யதே யா ப்ரதிசது ஸததம் ஸாகிலம் மங்கலம் ந:–45-
கூட்டிலிருந்து கிளம்பிய வண்டுகள் கூட்டு வரிசையோ என நினைக்கத் தோன்றும் கருநெய்தல் நிரம்பிய
ஸ்ரீபதியின் குந்தலக் கொத்து அது. ஆனால், அது பரமேச்வரன் தலையில் இருக்கும் கங்கையோடு
போட்டி போட்டுக் கொண்டு யமுனைதானோ இங்கு ஸ்ரீபதியின் தலையிலிருந்து பொங்கி விழுகிறாள் என்று வியக்கத் தோன்றும்.
அல்லது சந்திரக் கலைகள் முழுதும் சேர்ந்துள்ளதே என்று பிரத்து ஸ்ரீபதியின் முகத்தை நோக்கி
ராகுதான் வருகிறானோ என்றும் நினைக்கத் தோன்றும். அத்தகைய கேசக் கொத்து எங்களுக்கு எல்லா மங்களங்களையும் கொடுக்கட்டும்.
ஸுப்தாகாரா:ஸுப்தே பகவதி விபுதைரப்ய த்ருஷ்ட ஸ்வரூபா:
வ்யாப்தவ்யோமாந்த ராலா:தரலமணிருசா ரஞ்ஜிதா:ஸ்பஷ்டபாஸ:
தேஹச்சாயோத்கமாபா ரிபுவபு ரகரு ப்லோஷரோஷாக்னி-தூம்யா:
கேசா:கேசி திவ்ஷோ நோ விததது விபுலக்லேச பாசப்ரணா சம்–46-
பகவான் உறங்கும்போது உறங்குவது போல் இருக்கும் கேசங்கள், தேவர்களே கண்டறியப் படாதவனாய்
திசையந்தரங்களில் பரவி நின்று, உடலழகே வெளிப்பட்டு பரவுகின்றனவோ என்று மயக்கமுறச் செய்யும்.
எதிரிகளின் உடலாகிய அகருவைப் பொசுக்கும் காட்டுத்தீயின் புகைமண்டலமோ எனவும் நினைக்கத் தூண்டும்.
அத்தகையதான ஸ்ரீ நாராயணன் கேசங்கள் எங்கள் கஷ்டங்களை நீக்கிக் களையட்டும்.
யத்ர ப்ரத்யுப் ரத்னப்ரவர பரிலஸத் பூரிரோ சிஷ்ப்ரதாந
ஸ்பூர்த்யா மூர்திர் முராரா:த்யுமணி சதசித வ்யோமவத் துர்நிர்க்ஷ்யா
குர்வத்பாரே பயோதி ஜ்வலதக்ருச சிகா பாஸ்வ தௌர்வாக்னி சங்காம்
சச்வத் ந:சர்ம திச்யாத் கலிகலுஷ தம:பாடனம் தத்கிரீடம்–47-
பகவான் அணிந்துள்ள கிரீடம், கலியின் கடிய அஜ்ஞான இருளைக் களையட்டும். அந்த கிரீடம் சமுத்திரத்தின்
அக்கரையில் எரியும் வாடவத் தீயின் ஜாவாலையோ என நினைக்கத் தோன்றும்.
அதில் பதித்த பல அரிய ரத்னக் கற்களின் ஒளிக்கற்றைப் பரவுவதால் ஸ்ரீ நாராயணனின் மூர்த்தி
நூற்றுக்கனக்கான சூர்யர்கள் நிரம்பிய வானம் போல் கண்ணைக் கூசச்செய்யும்.
ப்ராந்த்வா ப்ராந்த்வா யதந்த ஸ்த்புரிபுவன குருரப்யப்தகோடீ ரநேகா:
கந்தும் நாந்தம் ஸமர்தோ ப்ரமரஇவ புநர்நாபி நாலீகநாலாத்
உன்மஜ்ஜன் ஊர்ஜித ஸ்ரீ ஸ்திரிபுவனமபரம் நிரமமே தத்ஸத்ருக்ஷம்
தேஹாம்போதி:ஸ தேயாத் நிரவதிரம்ருதம் தைத்யவித்வேஷிணோந:–48-
பலகோடி வருஷங்கள் எதனுள்ளே அலைந்து அலைந்தும் த்ருபுவன குருவும் முடிவை எட்டவில்லை –
நாபி கமலத்தின் தண்டில் பட்ட வண்டுபோல, வேறு வழியின்றி, அதே போன்ற வேறு ஒரு உலக மண்டலத்தை ஸ்ருஷ்டித்தாராம்.
அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் கண்ணுக்கு எட்டாத தேகங்களின் கடல் அம்ருதத்தை எங்களுக்கு அளிக்கட்டும்.
மத்ஸ்ய:கூர்மோ வராஹோ நரஹரிண பதிர்வாமநோ ஜாமதக்ன்யை:
காகுத்ஸ்த:கம்ஸகாதீ மனஸிஜ விஜயீயஸ்ச கல்கீபவிஷ்யன்
விஷ்ணேரம்சா வதாரா:புவனஹிதகரா தர்மஸம்ஸ்தாப நார்தா:
பாயாஸுர்மாம் த ஏதே குருதர கருணாபார கிந்நாசயா யே–49-
மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரஸிம்மம், வாமநம், பரசுராமர், ராமன், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகிய
ஸ்ரீ விஷ்ணுவின் அம்சாவதாரங்கள் உலகத்தோர்கு நன்மையை உண்டாக்கவும், தர்ம நிலை நாட்டவும் எடுக்கப்பட்டன.
கருணையின் எடுத்துக்காட்டுகள் கூட. அவை நம்மை காக்கட்டும்.
யஸ்மாத் வாசோ நிவ்ருத்தா:ஸமமபி மனஸா லக்ஷணாமீக்ஷமாணா:
ஸ்வார்த்தாலாபாத் பரார்த்தவ்யபகம கதக ச்லாகினோ வேதவாதா:
நித்யானந்தம் ஸ்வஸம் விந்நிரவதி விமல ஸ்வாந்த ஸங்க்ராந்தபிம்ப
ச்சாயாபத்யாபி நித்யம் ஸுகயதி யநோ யத்ததவ்யாத் மஹோந:–50-
எந்த நித்யானந்தத்தைப் பற்றி பேச முற்பட்ட வேத வாதங்கள் அந்த பேச்சிலிருந்து மனதுட்பட திரும்ப வேண்டியதை உணர்ந்தனவோ,
ஏனெனில் ஸ்வார்த்தம் சித்திக்காத பொழுது வேறும் பரார்த்தமும் கிடைக்காமற் போனதை வைத்து
தங்களை தாங்களே மெச்சிக் கொண்டனவோ, அவ்வானந்த உணர்வின் தூயமனதிற்பட்ட படிவத்தை மட்டும்
எண்ணி யோகிகள் கூட மகிழ்ந்து விட்டனரோ அத்தகைய நித்யானந்த ஜ்யோதி எங்களை காக்கட்டும்.
ஆபாதாத் ஆச சீர்ஷாத்வபுரிதமநகம் வைஷ்ணவம் ய:ஸ்வசித்தே
தத்தே நித்யம் நிரஸ்தாகில கலிகலுஷே ஸந்ததாந்த:ப்ரமோத:
ஜுஹ்வத் ஜிஹ்வாக்ருசானௌ ஹரிசரித ஹவி:ஸ்தோத்ரமந்த்ரானுபாடை:
தத்பாதாம் போருஹாப்யாம் ஸததமபி நமஸ்குர்மஹே நிர்மலாப்யாம்–51-
காலடி முதல் தலை முடி வரை புனிதமான இந்த ஸ்ரீ விஷ்ணுவின் வடிவத்தை, கலிகல்மஷம் ஏதுல்லாத மனதில்
மகிழ்ச்சியுடன் கொள்ளும் பொழுது, ஜிஹ்வா (நாக்கு) என்ற அக்னியில் ஸ்தோத்திரம், மந்த்ரம் இவற்றுடன்
ஸ்ரீ ஹரிசரிதம் என்ற இந்த ஹவிஸை ஹோமம் செய்வதற்காகவே கொள்ளலாம்.
அத்தகையவரது திருவடித் தாமரைகளுக்கு அனவரதமும் நமஸ்காரம் செய்கிறோம்.
மோதாத் பாதாதி கேச ஸ்துதிதி ரசிதாம் கீர்தயித்வா த்ரிதாம்ந:
பாதாப்ஜத்வந்த்வ ஸேவாஸமய நதமதி:மஸ்தகே நாநமேத்ய:
உன்முச்யைவாத்ம நைநோ நிசய கவசகம் பஞ்சதாமேத்ய பாநோ:
பிம்பாந்தர்கோசரம் ஸ ப்ரவிசதி பரமானந்த மாத்மஸ்வரூபம்–52-
ஸ்ரீ திரிவிக்ரமனின் பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் என்ற இந்த பனுவலை சொல்லிக் கொண்டு,
ஸ்ரீ திருவடித் தாமரையை ஸேவிக்கும்போது மனதுடன் தலை வணங்கியவர். பாப கவசத்தை தானே கழற்றிவிட்டு
சூர்ய பிம்பத்தினுள் பிரவேசித்து பரமானந்தமயமான ஆத்ம ஸ்வரூபத்தை எய்துவர்.
ஸ்ரீ விஷ்ணு ஸ்ரீ பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம் முற்றிற்று.
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply