ஸ்ரீ திருவடி அருளிச் செய்த ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் –/ஸ்ரீ வால்மீகி கூறும் ஸ்ரீ ராமரின் திரு வம்ச வ்ருக்ஷம் /ஸ்ரீ இராமாயண சுருக்கம் -16-வார்த்தைகளில் –/ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–/ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)–

ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்

அயோத்4யாபுரனேதாரஂ மிதி2லாபுரனாயிகாம் ।
ராக4வாணாமலங்காரஂ வைதே3ஹானாமலங்க்ரியாம் ॥ 1 ॥

ரகூ4ணாஂ குலதீ3பஂ ச நிமீனாஂ குலதீ3பிகாம் ।
ஸூர்யவம்ஶஸமுத்3பூ4தஂ ஸோமவம்ஶஸமுத்3ப4வாம் ॥ 2 ॥

புத்ரம் த3ஶரத2ஸ்யாத்3யஂ புத்ரீஂ ஜனகபூ4பதே: ।
வஶிஷ்டா2னுமதாசாரஂ ஶதானந்த3மதானுகா3ம் ॥ 3 ॥

கௌஸல்யாக3ர்ப4ஸம்பூ4தஂ வேதி3க3ர்போ4தி3தாஂ ஸ்வயம் ।
புண்ட3ரீகவிஶாலாக்ஷஂ ஸ்பு2ரதி3ன்தீ3வரேக்ஷணாம் ॥ 4 ॥

சன்த்3ரகான்தானநாம்போ4ஜஂ சன்த்3ரபி3ம்போ3பமானநாம் ।
மத்தமாதங்க3க3மனஂ மத்தஹம்ஸவதூ4க3தாம் ॥ 5 ॥

சன்த3னார்த்3ரபு4ஜாமத்4யஂ குங்குமார்த்3ரகுசஸ்த2லீம் ।
சாபாலங்க்ருதஹஸ்தாப்3ஜஂ பத்3மாலங்க்ருதபாணிகாம் ॥ 6 ॥

ஶரணாக3தகோ3ப்தாரஂ ப்ரணிபாத3ப்ரஸாதி3காம் ।
காலமேக4னிபஂ4 ராமஂ கார்தஸ்வரஸமப்ரபா4ம் ॥ 7 ॥

தி3வ்யஸிம்ஹாஸனாஸீனம் தி3வ்யஸ்ரக்3வஸ்த்ரபூ4ஷணாம் ।
அனுக்ஷணஂ கடாக்ஷாப்4யாஂ அன்யோன்யேக்ஷணகாங்க்ஷிணௌ ॥ 8 ॥

அன்யோன்யஸத்3ருஶாகாரௌ த்ரைலோக்யக்3ருஹத3ம்பதீ।
இமௌ யுவாஂ ப்ரணம்யாஹம் பஜ4ாம்யத்3ய க்ருதார்த2தாம் ॥ 9 ॥

அனேன ஸ்தௌதி ய: ஸ்துத்யஂ ராமஂ ஸீதாஂ ச ப4க்தித: ।
தஸ்ய தௌ தனுதாஂ புண்யா: ஸம்பத:3 ஸகலார்த2தா3: ॥ 1௦ ॥

ஏவஂ ஶ்ரீராமசன்த்3ரஸ்ய ஜானக்யாஶ்ச விஶேஷத: ।
க்ருதஂ ஹனூமதா புண்யஂ ஸ்தோத்ரஂ ஸத்3யோ விமுக்தித3ம் ।
ய: படே2த்ப்ராதருத்தா2ய ஸர்வான் காமானவாப்னுயாத் ॥ 11 ॥

இதி ஹனூமத்க்ருத-ஸீதாராம ஸ்தோத்ரஂ ஸம்பூர்ணம் ॥

————–

ஸ்ரீ ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி
ஸ்ரீ அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.

அயோத்யா புர நேதாரம் மிதிலா புர நாயிகாம்
ராகவாணா மலங்காரம் வைதேஹானா மலங்க்ரியாம்–1-

ஸ்ரீ அயோத்தியா பட்டினத்திற்கு அரசனே, ஸ்ரீ ரகு வம்சத்து அலங்காரம் பூண்ட ஸ்ரீ ராகவனே, ஸ்ரீராமா,
ஸ்ரீ மிதிலா பட்டினத்திற்கு அரசியே, விதேக வம்சத்து அலங்காரம் பூண்ட ஸ்ரீ வைதேகியான ஸ்ரீ சீதா தேவியே நமஸ்காரம்.

ரகூணாம் குலதீபம் ச நிமீனாம் குலதீபிகாம்
ஸூர்யவம்ஸ ஸமுத்பூதம் ஸோமவம்ஸ ஸமுத்பவாம்–2-

ஸ்ரீ ரகு வம்சத்திற்கு தீபம் போல் பிரகாசத்தைத் தருபவரே, ஸூர்ய வம்சத்தில் பிறந்தவரே ஸ்ரீராமா,
ஸ்ரீ நிமி வம்சத்தின் தீபம் போல் பிரகாசிப்பவளே, சந்திர வம்சத்தில் பிறந்தவளே, ஸ்ரீ சீதாதேவியே, நமஸ்காரம்.

புத்ரம் தஸரதஸ் யாத்யம் புத்ரீம் ஜனக பூபதே:
வஸிஷ்டா னுமதாசாரம் ஸதானந்த மதானுகாம்–3-

ஸ்ரீ தசரதருடைய மூத்த குமாரனே, ஸ்ரீ வசிஷ்டரால் உபதேசிக்கப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவரே ஸ்ரீராமா,
ஸ்ரீ ஜனகனுடைய மூத்த குமாரியே, ஸ்ரீ சதானந்தரின் உபதேசத்தை அனுசரிப்பவளே சீதாதேவியே, நமஸ்காரம்.

கௌஸல்யா கர்ப்ப ஸம் பூதம் வேதி கர்ப்போதிதாம்
ஸ்வயம் புண்டரீக விஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவ ரேக்ஷணாம்–4-

ஸ்ரீ கௌசல்யையின் கர்ப்பத்தில் உண்டானவரே, தாமரை மலர் போன்ற அகன்ற கண்களால் அருள்பவரே, ஸ்ரீராமா,
ஸ்ரீ யாக வேதியின் மத்தியில் ஸ்வயமாகவே ஆவிர்பவித்தவளே,
மலர்ந்த நீலோத்பலம் போன்ற கருணைக் கண்கள் கொண்டவளே, சீதாதேவியே, நமஸ்காரம்.

சந்த்ர காந்தானனாம் போஜம் சந்த்ர பிம்போப மானனாம்
மத்த மாதங்க கமனம் மத்த ஹம்ஸ வதூகதாம்–5-

சந்திரன் போன்ற அழகிய முகமுடையவரே, மதங்கொண்ட யானை போன்ற நடையழகு கொண்டவரே, ஸ்ரீராமா,
சந்திரனுக்கொப்பான முகமுடையவளே, பேரெழிலோடு நடை பயிலும் அன்னப் பறவை போன்ற நடையழகு கொண்டவளே,
ஸ்ரீ சீதா தேவியே, நமஸ்காரம்.

சந்தனார்த்ர புஜா மத்யம் குங்குமார்த்ர குசஸ்தலீம்
சாபா லங்க்ருத ஹஸ்தாப்ஜம் பத்மா லங்க்ருத பாணிகாம்–6-

சந்தனம் பூசிய பரந்த மார்பு கொண்டவரே, வில் அலங்கரிக்கும் திருக்கரங்களை உடையவரே, ஸ்ரீராமா,
குங்குமக் குழம்பால் அலங்கரிக்கப்பட்ட ஸ்தனங்களையுடையவளே,
தாமரை மலர்கள் அலங்கரிக்கும் திருக்கரங்களைக் கொண்டவளே, ஸ்ரீ சீதா தேவியே, நமஸ்காரம்.

ஸரணாகத கோப்தாராம் ப்ரணி பாத ப்ரஸாதிகாம்
காளமேக நிபம் ராமம் கர்த்த ஸ்வர ஸம ப்ரபாம்–7-

சரணமடைந்தவர்களை ரஷித்துக் காப்பவரே, திரண்ட கார் மேகம் போன்ற நிறமுடையவரே, ஸ்ரீராமா,
தன்னைத் துதிப்பவர்களை அந்த ஷணத்திலேயே ரஷித்துக் காப்பவளே,
மின்னி ஒளிரும் ஸ்வர்ணம் போன்ற நிறமுள்ளவளே, ஸ்ரீ சீதாதேவியே, நமஸ்காரம்.

திவ்ய ஸிம்ஹாஸனாஸீனம் திவ்ய ஸ்ரக் வஸ்த்ர பூஷணாம்
அனுக்ஷணம் கடாக்ஷாப்யா மந்யோந்யே க்ஷண காங்க்ஷிணௌ–8

பாரம்பரியமிக்க, மிகச்சிறந்த சிம்மாசனத்தில் கோலோச்சும் ஸ்ரீராமா,
ஒவ்வொரு நிமிஷத்திலும் தங்களது கடைக் கண்ணினால் ஒருவரையொருவர்
பார்த்துக்கொள்ள விரும்பும் அற்புத ஸ்ரீ தம்பதியே,
சிறந்த மாலை, வஸ்திரம், நகைகளைத் தரித்தவளே, ஸ்ரீ சீதாதேவியே, நமஸ்காரம்.

அன்யோன்ய ஸத்ரு ஸாகாரௌ த்ரை லோக்ய க்ருஹதம் பதீ
இமௌ யுவாம் ப்ரணம் யாஹம் பஜாம் யத்ய க்ருதார்த்ததாம்–9-

ஒருவருக்கொருவர்தான் எவ்வளவு பொருத்தம் என்று உலகே வியக்கும் வண்ணம் ஜோடிப் பொருத்தம் கொண்டவர்களே,
மூவுலகம் என்ற வியாபித்த வீட்டின் மாண்பு கூட்டும் ஸ்ரீ தம்பதியே, உங்கள் இருவருக்கும் நமஸ்காரம்.
இப்படி நான் பணிவதால் என் ஜென்ம லாபத்தை நான் மகிழ்ச்சியோடு அடைகிறேன்.

அநேந ஸ்தௌதி ய:ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தனுதாம் புண்யாஸ் ஸம்பத: ஸகலார்த்ததா:–10-

யாவருமே ஸ்தோத்திரம் செய்ய விரும்பும் தம்பதியான ஸ்ரீ ராமன்-ஸ்ரீ சீதை இருவரையும்,
மிகுந்த பக்தி மேலீட்டுடன் இந்த ஸ்லோகங்களால் துதிப்பவர்கள் அனைவருக்கும்
இந்த ஸ்ரீ தெய்வத் தம்பதி இருவரும் அவ்வாறு தம்மைத் துதிப்பவர்களுடைய எல்லா துன்பங்களையும் தீர்ப்பார்கள்;
எல்லா வளங்களையும் பரிசுத்தமான சம்பத்துக்களையும் வாரி வழங்குவார்கள்.

ஏவம் ஸ்ரீ ராமச் சந்த்ரஸ்ய ஜானக்யாஸ்ச விசேஷத:
க்ருதம் ஹனூமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்மா:
ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வான் காமானவாப்னுயாத்–11-

ஸ்ரீராமன், ஸ்ரீ சீதை இருவரிடத்திலும் மிகச் சிறந்த தாச பக்தி கொண்ட ஸ்ரீ திருவடியால் சொல்லப்பட்ட
இந்த ஸ்லோகங்கள் வெகு விரைவில் அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது;
மோஷத்தை அருள வல்லது. தினமும் காலையில் எழுந்து இந்த ஸ்லோகங்களைப் படிப்பவர்கள்
தம் விருப்பங்கள் எல்லாம் எளிதாக ஈடேறப் பெறுவார்கள்.
ஸ்ரீ திருவடி வழங்கிய இந்த ஸ்லோகங்களைச் சொல்லி எல்லா பாக்கியங்களையும் பெறலாம்.

————-

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

எந்தத் துன்பத்தையும் விலக்குபவரும் எல்லாவித சம்பத்துக்களையும் தருகிறவரும்
உலகின் பேரழகனான ஸ்ரீராமரை நித்தமும் வணங்குகிறேன்,

ஆர்த்தானாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாஸனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராம சந்த்ரம் நமாம் யஹம்

துயருற்றவர்களுடைய வேதனைகளையும் மிரண்டவர்களின் பயத்தையும் நாசம் செய்பவரும்
சத்ருக்களுக்கு யம தண்டமாயிருப்பவருமான ஸ்ரீராமரை வணங்குகிறேன்.

ஸந்நத்த: கவசீ கட்கீ சாபபாண தரோ யுவா
கச்சன் மமா க்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ்மண:

யௌவனப் பருவம் கொண்டவரும் எப்போதும் லட்சுமணனுடன் இணைந்திருப்பவரும்
கச்சையைத் தரித்தவராக, கவசம் அணிந்தவராக, கத்தி-வில்-பாணம் ஆகியவற்றை ஏந்தியவராகத் திகழும்
ஸ்ரீராமன் எப்போதும் என் முன்னே வந்து என் இடர்களையெல்லாம் களைய வேண்டும்.

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராய ச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே

வில்லைக் கையில் தரித்தவரும் நாண் கயிற்றில் தொடுக்கப்பட்ட பாணத்தை யுடையவரும்
எல்லா அசுரர்களையும் வதம் செய்தவரும் அனைத்து கஷ்டங்களையும் விலக்குபவருமான
ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.

ராமாய ராம பத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே: நமஹ

ஸ்ரீ வசிஷ்டர் முதலான பிரம்ம வித்துக்களால் ஸ்ரீ ராமர் என்றும்
ஸ்ரீ தசரதரால் ஸ்ரீ ராம பத்திரர் என்றும்
ஸ்ரீ கௌசல்யையால் ஸ்ரீ ராமச் சந்திரன் என்றும்
ஸ்ரீ ரிஷிகளால் வேதஸ்(ப்ரஹ்ம தேவன்) என்றும்
ப்ரஜைகளால் ஸ்ரீ ரகுநாதன் என்றும்
ஸ்ரீ சீதையால் நாதன் என்றும்
ஸ்ரீ சீதையின் தோழிகளால் ஸ்ரீ சீதாபதி என்றும்
அழைத்துப் போற்றப்படும் ஸ்ரீராமா, நமஸ்காரம்.

அக்ரத: ப்ருஷ்டதஸ் சைவ பார்ஸ்வதஸ்ச மஹா பலௌ
ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ

தமது காது வரை நாண் இழுத்து, அம்பினை எதிரிகள் மேல் விடத் தயாராக உள்ள நிலையில்,
பராக்கிரமம் நிறைந்த பலசாலிகளாகத் திகழும் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும் எனக்கு முன்னாலும் பின்னாலும்
இரு பக்கங்களிலும் வந்து என்னை முழுமையாகக் காக்க வேண்டும்.

———-

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்று தீருமே
இம்மையே “ராம”என்ற இரண்டு எழுத்தினால்.

————–

ஸ்ரீ வால்மீகி கூறும் ஸ்ரீ ராமரின் திரு வம்ச வ்ருக்ஷம்.

1) ப்ரம்மாவின் பிள்ளை மரீசி
2) மரீசியின் பிள்ளை காஸ்யபன்.
3) காஸ்யபரின் பிள்ளை சூரியன்.
4) சூரியனின் பிள்ளை மனு.
5) மனுவின் பிள்ளை இக்ஷாவக:
6) இக்ஷாவகனின் பிள்ளை குக்ஷி.
6) குக்ஷியின் பிள்ளை விகுக்ஷி.
7) விகுக்ஷியின் பிள்ளை பாணு
8) பாணுவின் பிள்ளை அரண்யகன்.
9) அரண்யகனின் பிள்ளை வ்ருத்து.
10) வ்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு.
11) த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் (யவனாஸ்யன்)
12) துந்துமாரனின் பிள்ளை மாந்தாதா.
13) மாந்தாதாவின் பிள்ளை சுசந்தி.
14) சுசந்தியின் பிள்ளை துருவசந்தி.
15) துருவசந்தியின் பிள்ளை பரதன்.
16) பரதனின் பிள்ளை ஆஷிதன்.
17) ஆஷிதனின் பிள்ளை சாகரன்.
18) சாகரனின் பிள்ளை அசமஞ்சன்
19) அசமஞ்சனின் பிள்ளை அம்சமந்தன்.
20)அம்சமஞ்சனின் பிள்ளை திலீபன்.
21) திலீபனின் பிள்ளை பகீரதன்.
22) பகீரதனின் பிள்ளை காகுஸ்தன்.
23) காகுஸ்தனின் பிள்ளை ரகு.
24) ரகுவின் பிள்ளை ப்ரவருத்தன்.
25) ப்ரவருத்தனின் பிள்ளை சங்கனன்.
26) சங்கனின் பிள்ளை சுதர்மன்.
27) சுதர்மனின் பிள்ளை அக்நிவர்ணன்.
28) அக்நிவர்ணனின் பிள்ளை சீக்ரவேது
29) சீக்ரவேதுவுக்கு பிள்ளை மருவு.
30) மருவுக்கு பிள்ளை ப்ரஷீக்யன்.
31) ப்ரஷீக்யனின் பிள்ளை அம்பரீஷன்.
32) அம்பரீஷனின் பிள்ளை நகுஷன்.
33) நகுஷனின் பிள்ளை யயயாதி.
34) யயாதியின் பிள்ளை நாபாகு.
35) நாபாகுவின் பிள்ளை அஜன்.
36) அஜனின் பிள்ளை தசரதன்.
36) தசரதனின் பிள்ளை ராமர்.

—————

ஸ்ரீ இராமாயண சுருக்கம் -16-வார்த்தைகளில் –

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”

விளக்கம்:
1. பிறந்தார்:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்:
தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய
அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்:
மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்:
அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்:
இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:
சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

————

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்– ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்

———————

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல,
கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர்,
தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்
அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

——————-

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ஸ்ருத:
நியத ஆத்மா மஹா வீர்யோ த்யுதிமான் த்ரிதிமான் வஷி ||
புத்திமான் நீதிமான் வாங்க்மி ஸ்ரீமான் சத்ரு நிபர்ஹன:
விபுலாம்சோ மஹா பாஹு: கம்பு க்ரீவோ மஹா ஹனு: ||
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூட ஜத்று அரிந்தம:
ஆஜானு பாஹு: சுஷிரா: சுலலாட: சுவிக்ரம ||
ஸம ஸம விபக்தாங்க: ஸ்நிக்த வர்ண பிரதாபவான்
பீன வக்ஷ விஷாலாக்ஷோ லக்ஷ்மீவான் சுப லக்ஷண: ||
தர்மஞ: சத்ய சந்த: ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத:
யஷஸ்வீ ஜ்ஞான சம்பன்ன: சுசி: வஷ்ய: சமாதிமான் ||
பிரஜாபதி ஸம: ஸ்ரீமான் தாதா ரிபு நிசூதன:
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா: ||
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா
வேத வேதாங்க தத்வஞ்யோ தனுர் வேதே ச நிஷ்டித: ||
ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்யோ ஸ்ம்ரிதிமான் பிரதிபானவான்
சர்வலோக ப்ரிய சாது: அதீனாத்மா விசக்ஷன ||
சர்வதா அபிகத: சத்பி: சமுத்ர இவ சிந்துபி:
ஆர்ய: சர்வசம: ச ஏவ சதைவ ப்ரிய தர்ஷன: ||
ஸ ச சர்வ குணோபேத: கௌசல்யா ஆனந்த வர்தன:
சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேன ஹிமவான் இவ||
விஷ்ணுனா சத்ருஷோ வீர்யே சோமவத் ப்ரிய தர்ஷன:
காலாக்னி சத்ருஷ: க்ரோதே க்ஷமயா ப்ரித்வீ ஸம: ||
தனதேன ஸம: த்யாகே சத்யே தர்ம இவாபர:
தம ஏவம் குண சம்பன்னம் ராமம் சத்ய பராக்கிரமம்||

——

வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18வது ஸர்கம் – இராமன் திருவவதாரம்
“தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வ உச்ச சன்ஸ்தேஷு பஞ்சஷு
க்ரஹெஷு கர்கடே லக்னே வாக்பதே இந்துனா ஸஹ
ப்ரோத்யமானே ஜகன்நாதம் சர்வலோக நமஸ்க்ருதம்
கௌசல்யா அஜனயத் இராமம் ஸர்வ லக்ஷன சம்யுதம்”

————-

புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய:
நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||

தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி |
பௌருஷே சாப்ரதித்வந்த்வ: ஷரைனம் ஜஹி ராவணிம் ||
லக்ஷ்மணஸ்வாமி இந்திரஜித்தை வதம் பண்ணும்போது சொன்னது. ரொம்ப முக்யமான ஸ்லோகம்.
என் அண்ணா, தசரத குமாரரான ராமர் தர்மாத்மா, சத்யசந்தர், பராக்ரமத்தில் எல்லாருக்கும் மேலானவர்,
யாரும் அவருக்கு நிகரில்லை என்பது உணமையானால், என்னுடைய இந்த அம்பு இந்த இந்த்ர்ஜித்தை கொல்லட்டும்

தூரிக்ருத சீதார்த்தி: பிரகடீக்ருத ராமவைபவ ஸ்பூர்த்தி: |
தாரித தச முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி: ||
இது ஆதிசங்கர பகவத்பாதாள் பண்ணின ஹனுமத் பஞ்சரத்னத்துல இருக்கிற ஸ்லோகம்.
‘புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:’ – சீதா தேவியினுடைய கஷ்டத்தை போக்கின அந்த ஹனுமார்,
என் கண் முன்னாடி இப்போது ஒளியோடு விளங்கட்டும் .
இந்த ஸ்லோகத்தை ஆதிசங்கர பகவத்பாதாள் சொன்ன உடனே, அவருக்கு ஹனுமத் தரிசனம் கிடைச்சது,

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

ஸக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம ||

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவடி சமேத ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ லஷ்மண சமேத ஸ்ரீ சீதா ஸ்ரீ ராமர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: