திரு அவதாரம் -கார்த்திகை புனர் பூசம்
இவர் பூர்வாஸ்ரம திரு நாமம் கோவிந்த தாஸர் அப்பன் -கோவிந்தர் -பட்ட நாதர் –
கோவிந்த தாசர் அப்பாவாக க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருக்கும் போது
மா முனிகள் அமுத செய்த இலையில் அவர் கடைசியாக அமுது செய்து அருளிய
மோர் பிரசாத ருசி மாறாமல் உண்பதையே வழக்கமாகக் கொண்டு இருந்தார்
அதனாலேயே மோர் முன்னர் ஐயன் -என்று பெயர் இட்டு அழைக்கப் பெற்றார்
ஜீயரான பின்பு பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -பட்ட நாத முனி
இவர் -அந்திம உபாய நிஷ்டை கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
சதுர் மறையின் உபநிஷத் என்று தொடங்கும் வாழித் திரு நாம பாசுரமும் சாதித்து அருளி உள்ளார்
பாரத்வாஜ கோத்ரம்
குலம் -பத்தங்கி பரவஸ்து
திரு அவதார ஸ்தலம் -திருக் காஞ்சி
திருத் தமப்பனார் -ஸ்ரீ மதுரகவி அப்பர்
சிஷ்யர்கள் -கோயில் அப்பன்
பூர்வாஸ்ரம திருக்குமாரர் -பரவஸ்து அண்ணன்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ பரவஸ்து பட்டர் ஜீயர் வம்ஸ பரம்பரை
நடுவில் ஆழ்வான்
ஆழ்வான்
வைத்த மா நிதி
அழகிய மணவாளர்
வரதாச்சார்யர்
வேங்கடத்து உறைவார்
சடகோபாச்சார்யர்
போரேற்று நாயனார்
கோவிந்தாச்சார்யார்
கிருஷ்ணமாச்சார்யார்
ராமானுஜாச்சார்யார்
கோவிந்த தாஸர் அப்பர் என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயருக்கு பூர்வாஸ்ரம வம்சம்
அண்ணன் பரவஸ்து அழகிய மணவாளர்
பரவஸ்து நாயனார்
சடகோபாச்சார்யர்
வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயரானார் –
இவர்கள் இவரது திருவடி சம்பந்தமுடைய சிஷ்யர்கள் ஒழிய
திரு வம்சத்தில் வந்தவர்கள் அல்லர் என்றும் சொல்வர் –
இவரையே புருஷகாரமாகக் கொண்டு
மேல் நாட்டுத் தோழப்பர்
அவர் திருத்தமையனார் அழகிய மணவாள பெருமாள் நாயனார்
திருமலை நல்லான் வம்சத்தரான அண்ணராக சக்ரவர்த்தி
அவரது திருத்தாய் ஆச்சி
ஆகியோர் பெரிய ஜீயரை ஆஸ்ரயித்தார்கள்
அவரும் இவரையே அவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க ஆணை இட
செய்து அருளி
திருமலையில் இவர்களைக் கைங்கர்ய பரராக இருக்க அருளினார் –
தனியன்
ய புனர் வஸூ நக்ஷத்ரே வ்ருஸ் சிகஸ்தே ரவாவுதைத்
சந்தோக வம்ஸே கோவிந்த பட்ட நாதம் தம் ஆஸ்ரயே
வ்ருஸ் சிகேஸ்திதி பேஜாதம் பரவஸ்த வம்ஸ பூஷணம்
வரயோகி பதா தாரம் பட்ட நாத முனிம் பஜே
வரயோகி பதா தாரம் பரவஸ்த வம்ஸ பூஷணம்
பட்ட நாத முனிம் வந்தே தீ பக்த்யாதி குணார்ணவம்
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்சல்யாதி குணார்ணவம்
வ்ருஸ் சிகே திதி பேஜதம் வர யோகி பத ஆஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத்பூதம் பட்ட நாதம் பஜே
இவர் மதுரகவி ஆழ்வாரைப் போலவும் வடுக நம்பியையும் போலவே ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்
என்ற நிஷ்டையிலே இருந்தவர்
மா முனிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் நிழலும் அடிதாறுமாக
கைங்கர்யம் செய்து கால ஷேபம் செய்து அருளினார் –
ஐப்பசி திருவோணத் திரு நன்னாளில் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரையே திரு உள்ளம் பற்றி
திருவாராதனப் பெருமாளாக அழகிய மணவாளப் பெருமாளை திரு ப்ரதிஷ்டை செய்து இருந்தார் மா முனிகள்
இதற்கு முன்பு பரவஸ்துவான இவர் நம் வஸ்துவானார் -நமக்கு ஈடு இவரே -என்று அபிமானித்து
தனது திரு ஆராதனப்பெருமாளான -அழகிய மணவாளனையே இவருக்கு மா முனிகள் ப்ரசாதித்து அருளி
ப்ராப்ய நிஷ்டையில் ஊன்றச் செய்து அருளினார்
இவர் ஒரு திரு ஆடிப்பூரத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் பிரசாதங்களை மா முனிகளுக்குக் கொடுத்து அருள
இவருக்கு பரவஸ்து பட்டர் பிரான் தாஸர் என்ற தாஸ்ய நாமம் சூட்டி அருளினார் –
ஸந்யாஸ ஆஸ்ரம ஸ்வீகாரம் பெற்ற பின்னர் -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -என்ற திரு நாமம் இடப் பட்டார் –
இவர் ஸந்யாஸ ஆஸ்ரம ஸ்வீ காரம் பெற்ற பின்னர்
இவரது சிஷ்யரான ஆனியூர் அண்ணன் சமர்ப்பித்து அருளிய தனியன்
வாத்ஸல்ய தீ பக்தி விரக்தி பூர்த்தி தயாதி கல்யாண குண ஏக ராஸிம்
ஸ்ரீ ஸும்ய ஜாமாத்ரு முனீந்த்ர பாஹு மூர்த்திம் பஜே பட்ட வரம் முனீந்த்ரம்
வாழித் திரு நாமம்
இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திகை புனர் பூசத்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தான் வாழியே
பாரில் அஷ்ட திக் கஜத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே –
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply