ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூப

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

வித்வானுக்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிக தேவதைகளால் செய்யப்படும் உபசார ரூபமான
ப்ரஹ்ம வித்யா பலத்தை மூன்றாம் பாதத்தில் நிரூபிக்கிறார் என்று சங்கதி

இப்படி தேகத்தில் இருந்து வெளிக்கிளம்பிய வித்வானுக்கு மூர்த்தன்ய நாடியாலே
கதி தொடங்குவது முன் பாதத்தில் கூறப்பட்டது
இந்தப் பாதத்தில் மார்க்கம் நிர்ணயிக்கப் படுகின்றது என்று சங்கதி –

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் –

சாந்தோக்யத்தில் உபகோஸல வித்யையில் அர்ச்சிராதி கதி சொல்லப்பட்டு
மீண்டும் எட்டாம் அத்தியாயத்தில் தஹர வித்யையிலும் சொல்லப்படுகிறது
கௌஷீதகி சாகையிலும் வேறு விதமாக அர்ச்சிராதி கதி சொல்லப்படுகிறது
ப்ரஹ்தாரண்யத்திலும் இரண்டு இடங்களிலும் உண்டு
இவை எல்லாம் ஒன்றா பலவா
வித்வான் ஒரே மார்க்கத்தில் செல்கிறானா
இவ்வாறு பல மார்க்கங்களில் செல்கிறானா என்று சம்சயம் –

அந்தவந்த மார்க்கங்களுக்கு ப்ரஹ்ம ப்ராப்தியில் பரஸ்பர அபேக்ஷை இல்லை –
பற்பல மார்க்கங்கள் தோன்றுவதால் விகல்பமே-
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

அர்ச்சிராதி கதி மூலமே -அதற்கே பிரசித்தம் உள்ளது –

சாந்தோக்யம் -4-15-5/6-
அத யது ச ஏவ அஸ்மின் சவ்யம் குர்வந்தி யது ச ந அர்ச்சிஷமேவ அஹ-அன்ஹ -அபூர்யமாண பஷம்
அபூர்யமாண பஷாத் யான் ஷடுதங்நேதி மாசாம்ஸ்தான் மாசேப்ய-சம்வத்சரம் சம்வத்சரான் ஆதித்யம்
ஆதிதான் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் தத்புருஷோ அமாநவ ச ஏதான் ப்ரஹ்ம கமயதி
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமா நா இமம் மா நவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே -என்கிறது

இதே உபநிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் -8-6-5-
அத ஏதைரேவ ரச்மிபி ஊர்த்வம் ஆக்ரமதே -என்று
ஸூர்ய கிரணங்கள் மூலமாகவே கிளம்புகிறான் என்கிறது –

கௌஷீதகீ -1-3- ச ஏதம் தேவயாநம் பந்தா நம் ஆபத்ய அக்னி லோகம் ஆகச்சி ச வாயு லோகம் ச வருண லோகம்
ச ஆதித்ய லோகம் ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம் ச ப்ரஹ்ம லோகம் -என்கிறது

ப்ருஹதாரண்யகம் –
6-2-15-
ய ஏவமேவ விது-ஏ ச கிமே அரண்யே ஸ்ரத்தாம் சத்யம் உபாஸ்தே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹ –
அஹ்ந ஆபூர்யமாண பஷம் ஆபூர்யமாண பஷாத் யான் ஷண்மாசான் உதங் ஆதித்ய ஏதி மாசேப்ய தேவலோகம் தேவ லோகாத்
ஆதித்யம் ஆதித்யாத் வைத்யுதம் வைத்யுதாத் புருஷோ மானச ச ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -என்றும்

5-10-1-
யதா வை புருஷ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமா கச்சதி தஸ்மை ச விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன
ச ஊர்த்வம் ஆக்ரமதே ச ஆதித்யமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ஆடம்பரச்ய கம் தேன ச
ஊர்த்வமாக்ரமதே சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்த விஜிஹீதே யதா துந்துபே கம் -என்கிறது

இப்படி அனைத்து இடங்களிலும் அர்ச்சிராதி கதி பிரசித்தம் –
சில இடங்களில் கூட்டியும் குறித்தும் சொல்லப் பட்டாலும்
அர்ச்சிராதி கதி அக்னி ஸூர்யன் போன்றவை ஓன்று போலே படிக்கப் படுகிறது –

அர்ச்சிராதி நா -வித்வான் அர்ச்சிராதி மார்க்கத்தில் தான் போகிறான்
தத்ப்ராதிதே –எல்லா ஸ்ருதிகளிலும் அதற்கே ப்ரஸித்தி இருக்கிற படியால்
ஆதித்யாதர்கள் விளக்கப்படுவதால் அனைத்தும் ஒரே மார்க்கமே
ஒன்றில் கூறிய விசேஷங்களை கூறப்படாத இடத்தில் உப சம்ஹாரம் செய்து
சேர்த்து அனுசந்தானம் செய்யப்பட வேண்டும்
சிலருக்கு ப்ரஹ்ம பிராப்தி இம் மார்க்கம் இல்லாமலும் உண்டு என்பதே பாஷ்ய காரர் திரு உள்ளம்
சிசுபாலாதிகள் -அயோத்யையில் வாழும் சராசரங்கள் -புண்டரீக பீஷ்மாதிகள் –
விபவ அவதார வ்யூஹ அவதார லோகத்தவர் -ப்ரஹ்மாக்கள் -அவர்கள் புத்ரர்கள் -போல்வார்
அதிகாரத்துக்கு ஏற்ப வேறு மார்க்கங்கள் உண்டே –

————————————————————————————————–

அதிகரணம் -2-வாய்வதிகரணம் –

அர்ச்சிராதி மார்க்கத்தால் வித்வான் போகிறான் என்றது கீழ்
இப்போது அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கிரமத்தை நிரூபிப்பதே சங்கதி –

சாந்தோக்யத்தில் ஸம்வத்ஸரத்துக்கும் ஆதித்யனுக்கும் நடுவிலே வாயு நிரத்திஷ்டன்
ப்ரஹதாரண்யத்தில் மாசத்திற்குப் பிறகு வாயு நிரத்திஷ்டன்
இவ்விடத்தில் சாந்தோக்யத்தில் சொன்ன சம்வத்சரத்தை மாதத்திற்குப் பிறகு வைக்க வேண்டும்
இப்படி இரண்டு இடத்திலும் மதியத்தில் நிர்த்திஷ்டையான வாயு தேவ லோக சப்தங்கள்
ஒரே பொருள் உள்ளவையா
வெவ்வேறு பொருள் உள்ளவையா என்று சம்சயம்

அவை வெவ்வேறு பொருள் உள்ளவை யாதலின்
வாயுவிற்கு பின் தேவ லோகம் சென்று பின் ஆதித்யனை அடைகிறான்
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்

சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது

4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும்

ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது

வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர
விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது

சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் –
தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்

வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும்

யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ –
வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-

வாயும் அப்தாத் -சம்வத்சரத்துக்கு மேலேயும் ஆதித்யனுக்குக் கீழும் வாயுவை மட்டும் வைக்க வேண்டும்
ஏன் எனில்
அவிசேஷ விசேஷாப்யாம்-பொதுவாயும் சிறப்பாயும் உள்ள சொற்களால் என்றபடி
இங்கு தேவலோக ஸப்தம் ஸாமான்யம்
வாயு ஸப்தம் விசேஷம்
தேவ லோக ஸப்தத்தால் தேவர்களின் வாசஸ் ஸ்தானம் என்ற காரணத்தால் வாயுவே கூறப்படுகிறது –
அதுவே விசேஷமாகும்
இரண்டும் ஒரே பொருளைக் கூறுவதால் ஸம்வத்சரத்துக்கு மேல் வாயுவை மட்டிலும்
அதற்கு மேல் ஆதித்யனையும் குறிப்பதே சரியான க்ரமம் என்றதாயிற்று
யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் ப்ரிய -என்பதே இதற்குப் பிரமாணம் –

—————————————————————————————–

அதிகரணம் 3-வருணாதி கரணம் –

இங்கும் ஆதி வாஹிக க்ரம சிந்தனையே என்று சங்கதி –

தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் –

கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது

ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல் வருணன்

வாயு வின் பின்னாலா வருணளின் பின்னாலா

சாந்தோக்யத்திலும் வாஜஸ நேயத்திலும் ஸர்வ ஸாகா பிரத்யய நியாயத்தாலே
அர்ச்சஸ் அஹஸ் பூர்வ பக்ஷம் உத்தராயணம் சம்வத்சரம் வாயு ஆதித்யன் சந்திரன் மின்னல்
வருணன் இந்திரன் பிரஜாபதி -ஆக 12 தேவதைகளும் அர்ச்சிராதிகள் என்று ப்ரஸித்தர்கள்
அவற்றுள் வாயு வரை ஸ்ருதி க்ரமம் கூறப்பட்டது
வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு மேலே மின்னலுக்கு இடம் குறிப்பது சரியா என்று சம்சயம்

கௌஷீ தகியின் பாட க்ரமம் படி -வாயுவுக்கு மேல் வருணனுக்கு
வருணனுக்கு மேல் இந்த்ர ப்ரஜாபதிகளுக்கும்
வாய்ப்பு பொருந்தும் என்பது பூர்வ பக்ஷம்

இத்தை நிரஸிக்கிறார்

மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்

அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் –
அமானவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –

தடித- அதி வருண -சம்பந்தாத் —
வருண-தடித- அதி–வருணன் மின்னலுக்கு மேல் வைக்கத் தக்கவன் –
சம்பந்தாத் —இருவருக்கும் சம்பந்தம் இருப்பதால்
மின்னல்கள் மேகத்திலும் இருப்பதால் -அதிலே இருக்கும் ஜலத்துக்கு வருணன் அதிஷ்டான தேவதை யாதலின்
இருவருக்கும் சம்பந்தம் தோன்றுகிறது
ஆகையால் கௌஷீதகி பாடக்ரமத்தைக் காட்டிலும் -மேகத்தினுள் இருப்பு என்ற சம்பந்த க்ரமம் பலமுள்ளதாதலின்
மின்னலுக்கு மேல் தான் வருணனை வைக்க வேண்டும்
அதனால் ஸ ஏநாத் ப்ரஹ்ம கமயதி -என்கிறபடி
வித்யுத் தேவதையான அமானவனுக்குச் சொன்ன ப்ரஹ்ம கமயித்ருத்வம் -ப்ரஹ்மத்தை அடைவிக்கும் தன்மை –
வருணனை வைப்பதால் இடையீட்டைப் பொறுக்கக் கூடியது என்று தோன்றுகிறது
ஆகையால் இந்த்ராதிகளுக்கு வருணனுக்கு மேலே இடம் வைப்பது உசிதம்

ஆகவே அக்னி தொடங்கி பிரஜாபதி வரை 12 ஆதி வாஹிக தேவர்களுக்கும் க்ரம விசேஷம் ஸித்திக்கிறது –

—————————————————————————————————————

அதிகரணம் -4-ஆதி வாஹாதி கரணம் –

அர்ச்சிராதிகள் மார்க்கத்தின் அடையாளமானவர்களா
அல்லது போக ஸ்தானங்களா
அல்லது ப்ரஹ்மத்தை அடையும் வித்வான்களை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்களா
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி

அடையாளமானவர் என்பர் பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் இதில்

அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-

இவர்கள் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்-
இப்படியாக ப்ரஹ்மத்தால் நியமிக்கப் பட்டவர்களே அடையாளங்கள் உண்டே –
அதி வஹ -அழைத்து செல்பவர்கள்

சாந்தோக்யம் -4-15-5-/5-10-2-தத் புருஷ அமானவன் ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
இறுதியில் சொன்னதால் முன்பே கூறப்பட்டவர்களும் ஆதி வாஹர்கள் என்றே கொள்ள வேண்டும்

அர்ச்சிஸ் பதங்கள் அபிமான தேவதைகளையே குறிக்கும்

மின்னலுக்கு பின் படிக்கப் பட்ட வருணன் இந்த்ரன் பிரஜாபதிகளை விட்டு
வித்யுத் புருஷன் மட்டும் என்பர்
பூர்வ பஷி –

சித்தாந்தம் அப்படி அல்ல
பரமபுருஷனால் நியமிக்கப் பட்ட அபிமானி தேவதைகள்
ப்ரஹ்மத்திடம் வித்வான்களை அழைத்துச் செல்பவர்கள்
ப்ரஹ்மத்திடம் சேர்ப்பிப்பதற்கு அங்கங்கள் உண்டே

—————————————————————-

4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

வருணன் உள்ளிட்டவர்கள் அமாநவ புருஷனுக்கு இந்த பணியில் உதவி செய்கிறார்கள் –

இந்த அர்ச்சிராதிகள் அக்னியாதி தேவதைகளுக்கும் அதிஷ்டாதாக்களான நித்ய ஸூரிகள் என்று ஒரு பக்ஷம்
வைத்யுதன் மட்டும் நித்ய ஸூரி என்று ஒரு பக்ஷம் உண்டு என்பது ஸ்வாமி தேசிகன் திரு உள்ளம்

அர்ச்சிராதி மார்க்கத்தால் ஸூர்ய பிராப்தி போலே
தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது
இது கர்மபலனை அனுபவிக்க ஆனதால் முன் கூறிய சந்த்ர ப்ராப்தியை விட வேறானது
அப்படியே புருஷ வித்யையில் ப்ரஹ்ம வித்துக்களுக்கும் தஷிணாய மானத்தால்
சந்திரனை அடைதல் ஆகிய பலன் கூறப்படுகிறது
இதுவும் வேறு தான்
இந்த அதிகரணத்தில் தஷிணாயணத்திலும் உத்தராயணத்தில் இறந்த ஸர்வ ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
சாதாரணமாக ஆதி வாஹிக க்ரமத்தில் எட்டாவதாக சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது
இதுவும் முன் சொன்ன இரு வகை சந்த்ர ப்ராப்திகளிலும் வேறு பட்டதாய் அபவர்க்கம் செல்பவர்கள்
அனைவருக்கும் பொதுவாய் உள்ளது என்று நுண் அறிவுள்ளோரால் அறியத்தக்கது என்று
அதிகரண சாராவளியில் ஸ்வாமி தேசிகன் காட்டி அருள்கிறார் –

———————————————————————————————————————————————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் –

இதில் இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ராப்யமான ஸ்தான விசேஷத்தை
நிஷ் கர்ஷிக்கிறார்
என்று அதிகரண சங்கதி –

இந்த ஆதி வாஹ்யகர்களின் கூட்டம் பர ப்ரஹ்மத்தின் படைப்பான
ஹிரண்ய கர்ப்பனின் உபாசகர்களை சேர்ப்பிக்கிறார்களா
அல்லது பர ப்ரஹ்ம உபாசகர்களையா
அல்லது ஜீவனை -ப்ரத்யகாத்மாவை -ப்ரஹ்மாத்மகமாக உபாசிக்கும் பஞ்சாக்னி நிஷ்டர்களையும்
ஸ்வ ஆத்மாவை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாசிப்பவர்களான சத் வித்யா தஹர வித்யா நிஷ்டர்களையா
என்று மூன்று வித சங்கைகள் –

இதில் கார்யமான ஹிரண்யகர்ப்ப உபாசகர்களையே ஹிரண்ய கர்ப்ப லோகத்தில் சேர்ப்பிக்கிறது
என்பது பூர்வ பக்ஷம்
இவ்விஷயம் ஐந்து ஸூத்ரங்களால் விளக்கப்படுகிறது –

ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள்
என்பது நிரூபிக்கப் படுகிறது –

4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே

ஹிரண்ய கர்ப்பனான நான்முகனை உபாசிப்பவர்களையே –
என்பர் பூர்வ பஷி –

பரிபூர்ணான ப்ரஹ்ம உபாசகனுக்கு ஒரு இடம் தேடி செல்ல வேண்டியது இல்லையே
எங்கும் உளன் ஆதலால்-

பின் பர ப்ரஹ்ம உபாசனம் இவர்களுக்கு எதற்கு எனில்
அவித்யையின் நிவ்ருத்திக்கே யானது
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ஆனதல்ல
இந்த பாதிரி மதமே சங்கர மதத்துக்கு ஆதாரம் –

எனவே கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாசிப்பவர்களையே
அமானவன் கூட்டிச் செல்கிறார்கள் என்பர் –

———————————————————————————–

4-3-7- விசேஷி தத்வாத் ச

ப்ருஹத் -6-2-15-புருஷ மானஸ ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி –
ப்ரஹ்ம லோகம் அழைத்து செல்கிறான் என்பர்

சாந்தோக்யம் -8-14-1-ப்ரஜாபதே சபாம் வேச்ம ப்ரபத்யே –
பிரஜாபதியின் அரச சபையை அடைகிறேன் -என்பர்

அப்படி ஆகில் –
சாந்தோக்யம் 4-15-5/5-10-2-தத்புருஷ அமாநவ ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
என்றது பொருந்தாதே

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம் பொருந்தாதே –

ப்ரஹ்மாணம் கமயதி என்று அன்றோ இருக்க வேண்டும் –

——————————————————————————–

4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம்-நான்முகனைக் குறிக்கும் என்பர்
நெருக்கமாக உள்ளவன் என்பதால் இப்படியே கூறப்படுகிறது

சாந்தோக்யம் -6-18-யோ ப்ரஹ்மாணம் விததாதி –
பிரமனை யார் படைக்கின்றானோ

சாந்தோக்யம் -4-15-6-
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதே ந பிரதிபத்யமா நா இமம் மானவமவர்த்ததம் நாவர்த்தந்தே -என்றும்

கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-/தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி -என்றும்
திரும்புதல் இல்லை என்றதே

ஆனால் ஸ்ரீ கீதை-8-16- -ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன -என்று
நான்முகன் இருப்பிடம் வரை சென்ற அனைத்தும் திரும்புகின்றன என்றதே

இரண்டு பரார்த்தங்களின் முடிவில் நான்முகனுக்கும் முடிவு உண்டே

——————————————————————————–

4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —

ப்ரஹ்ம லோகம் நான்முகன் அழியும் போது பாசகன் அங்கு இருந்து
பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது

மஹா நாராயண உபநிஷத் -12-3-
தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரிமுச்யந்தி சர்வே -என்றதே –

இப்படி ஹிரண்ய கர்ப்பனின் ஸ்தானமே ப்ராப்யமானால்
அது நசிக்கக் கூடியதாதலால்
அமும் லோகம் நாவர்த்தந்தே என்று அபுநா வ்ருத்தியைச் சொல்லுகிற ஸ்ருதிக்கு உப பத்தி யாது என்றால்
கார்யாத்யயே -கார்யமான பிரமலோகம் நசித்த போது
ததத்ய ஷேண ஸஹ -அந்த லோகத்தின் தலைவருடன்
அத பரம் -அவனை விடச் சிறந்த ப்ரஹ்மத்தை அடைகிறான்
அவிதா நாத் —பாரமான அம்ருதத்வத்தை அடைந்து முக்தியை அடைகிறான் என்பதாம் –

———————————————————————————

4-3-10-ஸ்ம்ருதேச்ச

ஸ்ம்ருதியிலும் இவ்வாறே கூறப்படுகிறது –

ஸ்ரீ கூர்ம புராணம் -12-269-ப்ரஹ்மணா சஹ தே சர்வே சம்ப்ராப்தே பிரதிசஞ்சரே பரஸ் யாந்தே
க்ருதாத்மனா ப்ரவி சந்தி பரம் பதம் -என்கிறது-

பிரளயத்தின் முடிவில் சதுர்முகனின் ஆயுள் முடிந்ததும் அவருடன் சேர்ந்த அனைவரும் பரமபதத்தை அடைகின்றனர்
ப்ரதி சஞ்சாரம் -பிரளயம் -நான்முகனின் ஆயுள் முடிவு

இப்படியாக பல ஸூத்ரங்களால் நான்முகனை உபாசிப்பவர்களையே அழைத்து செல்வதாக
பாதரி என்னும் ஆச்சார்யர் உரைத்தார்

இனி ஜைமினி அடுத்த 3 ஸூத்ரங்களால் தனது கருத்தை உரைக்கிறார் –

————————————————————————————-

4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்

பரம் பொருளை உபாசிப்பவர்களையே அழைத்துக் கொண்டு செல்வதாக ஜைமினி கூறுகிறார் –
முக்கியமாக உள்ளதால்

பர ப்ரஹ்மம் எங்கும் இருந்த போதிலும் பரமபதம் சென்ற பின்னரே ப்ரஹ்ம ஞானிக்கு
தனது ஸ்வரூபம் மறைக்கும் கர்மங்கள் அழியும்

அவித்யை நீங்கி ப்ரஹ்ம அனுபவம் ஏற்படும் –
ப்ருஹத் -ப்ரஹ்ம லோகன் -என்றது
ப்ரஹ்மமாக உள்ள லோகம் என்று பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
லோகான் என்ற பன்மை கௌணமாகும்

———————————————————————————————————

4-3-12-தர்ச நாத் ச —

ஸ்ருதியிலும் காணலாம் –

சாந்தோக்யம் -8-3-4-
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஞோதிரூப சம்பந்தய ஸ்வேண ரூபேண அபி நிஷ்பத்யதே

நான்முகனை அடைதல் தள்ளப் பட்டது

————————————————————————————————————————

4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —

அர்ச்சிராதி மார்க்கத்தால் சென்ற வித்வானுக்கு
கார்யே-கார்யமான சதுர்முக லோகத்தில்
ந ச பிரத்யபி சந்தி-ஆர்வம் இல்லை
ஏன் எனில்
ப்ராப்யமான லோகம் நித்யம் என்று விசேஷிதம் ஆகையால்

சாந்தோக்யம் -8-14-1-யசோஹம் பவாமி ப்ரஹ்மணாநாம்-
அனைத்துக்கும் ஆத்மாவாக பரமாத்மா உள்ளதாக எண்ணுவதால் அவித்யை நீங்கப் பெற்று
இந்த எண்ணம் நிலைக்கப் பெற்று உள்ளான் –

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூயபாபம் சந்திர இவராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருத்தாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றது

நித்தியமான பர ப்ரஹ்ம லோகத்தையே -நான்முகனின் பிரமலோகம் அல்ல –

——————————————————————————————————————————————————————————

4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச

ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பிராப்யமாகக் கொண்டு உபாசிக்காதவர்களை
அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்து செல்கின்றனர் -என்பர் பாதராயணர்

இவ்விதம் கூறாமல் மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன –
இதனையே தத் க்ரது நியாயம் கூறும்

பிரதீகம் -ப்ரஹ்மத்தின் அவயவம்சித் அசித் -போன்றவை –

ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்கிறார்

பர ப்ரஹ்மத்தை உபாசிப்பவர்கள் அனைவருக்கும் மோஷ பிராப்தி இல்லையே –
ஐஸ்வர்யம் கைவல்யம் வேண்டுவாரும் அவனையே உபாசிப்பதால்

ஜீவாத்மா ஸ்வரூபத்தை பஞ்சாக்னி வித்யையின் படி -பரமாத்மாவின் ஸ்வரூபமே ஆத்மா என்று உணர்ந்து –
உபாசிப்பவர்களும் மோஷம் அடைகிறார்களே

இவர்களும் பூர்ண ப்ரஹ்ம உபாஸகர்களே
உபாசனத்தில் விசேஷண விசேஷ்ய பாவத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது
இதனால் எந்தக் குறையும் இல்லை

அதாவது
ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மா -என்று உணர்ந்து
உபாசனையின் படியே பலம் என்பதையே தத் க்ரதுச்ச தத்க்ரது -என்கிறது –

——————————————————————————————————————

4-3-15-விசேஷம் ச தர்சயதி

ப்ரதீகங்களை உபாசிப்பவர்களுக்கு அல்ப பலமே கிட்டும் –

சாந்தோக்யம் -7-1-5-யாவன் நாம் நோ கதம் தத்ர அஸ்ய காமசாரோ பவதி –

அளவான பலனே கிட்டும்
அர்ச்சிராதி மார்க்கம் கிட்டாது

பராந்த காலே – சரம தேஹ அவசான காலத்தில்
பராம்ருதாத் -உபாசன ப்ரீதனான பரமாத்மாவின் மூலமாக
பரிமுச்யந்தே சர்வே -வேதாந்த விஞ்ஞானத்தால் மயர்வற்று தெளிவு பெற்று
பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்

——————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

ஐந்து அர்த்தங்களை ஸ்தாபித்து அருளினார் இப்பாதத்தில் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: