ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————

ஸ்வர்க்க காமோ யஜேத-என்னும் இடத்தில்
பலா வம்சம் முதலில் ஏற்படுவதானாலும் பலவாப்தி என்பது
சாதன உத்பத்தியை அங்கீ கரிக்க வேண்டி இருப்பதாலும்
இதில் உத்பத்தி க்ரமத்தை அனுசரித்து
முதல் அத்தியாயத்தில் சங்கமான வித்யை நிரூபிக்கப் பட்டது –
இப்போது அந்த வித்யையின் பலத்தை நிரூபிக்கிறார்
‘என்று நான்காம் அத்யாயத்துக்கு சங்கதி

அந்த வித்யா பலன்களாக
1- உத்தர பாபம் ஒட்டாமையும்
2-பூர்வ பாபா விநாசமும்-ஸ்தூல தேகத்தில் இருந்து உதக்ரந்தியும்
3- அர்ச்சிராதி கதியும்
4-தேச விசேஷம் சென்று புறப்படும் பர ப்ரஹ்ம அனுபவம்
என்ற நான்கு பொருள்களும் நான்கு பாதங்களால் முறையே காட்டப்படுகின்றன என்று பாதங்களின் சங்கதி –

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –
முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது

கதி பாதம் –
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது

முக்தி பாதம் –
ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் இரண்டு பாதங்களால்
வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்
கூறப் படுகின்றன

பின் இரண்டு பாதங்களால்
உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும்
ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன என்று த்வீக சங்கதி –

முதல் பாதம் முதல் அதிகரணத்தில் -வித்யைக்கு முன் சொல்லப் படாதவையான
த்யான
உபாசனை
பக்தி
தர்சன
சாமானாகாரத்வம்
என்னும் ரூபங்களை நிரூபிக்கிறார் என்று அதிகரண சங்கதி –

ஆனாலும் இவ்வர்த்தத்தை சாதன அத்யாயத்தில் நிரூபிக்காமல்
பல அத்யாயத்தில் காட்டுவது பொருந்தாது என்றால்
அது இல்லை –
உபாசனத்திற்கும் முக்திக்கும் -ஸாத்ய சாதன பாவம் தோன்றவும்
பக்தி என்பது நிரதிசய ப்ரீதி ரூபை யாகையாலே பல கோடியிலும் அடங்கும் என்று காட்டவும்
இங்கு நிரூபிப்பதில் தோஷம் ஒன்றும் இல்லை என்பதாம் –

———————————————————————————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –

உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

———————————————————————————————————————————————————————-

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————–

151-ஆவ்ருத்தி அதிக ரணம்-4-1-1-

ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது

471-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –4-1-1-

ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது

தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ஸ்வேதாச்வதர -3-8- தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி –
ப்ரஹ்மத்தை அறிவதால் மட்டும் மரணத்தை கடந்து செல்கிறான் -என்றும்

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேதி ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் –

முண்டக -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் –
பொன் நிறமான ப்ரஹ்மத்தைக் கண்டவன்

உமி நீங்கும் வரை தானே நெல்லைக் குத்த வேண்டும்
ஒரு முறை ப்ரஹ்மத்தை அறியும் வரை உபாசனம் போதும்
என்பர் பூர்வ பஷி
ஜ்யோதிஷ்டோமம் ஒரு முறை அனுஷ்டித்து பலம் பெறுவது போலே என்பர்

இது சரி அல்ல –
த்யானம் உபாசனம் போலவே வேதனமும் –
உபாஸ்தி த்யாயதி பதங்கள் மூலம் வேதனமும் உணர்த்தப் படுகிறது

ஆவ்ருத்தி அசக்ருத் -வேதனம் அடிக்கடி ஆவ்ருத்தி செய்யப்பட்டே மோக்ஷத்திற்கு சாதனமாகும்
உபதேசாத்-தியானத்திற்கும் உபாசனத்திற்கும் பர்யாயமான சமமான -வேதன -ஸப்தத்தால் -உபதேசிப்பதால் என்றவாறு –

சாந்தோக்யம் -3-8-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனசை ப்ரஹ்மமாக உபாசிக்க வேண்டும் -மூலம் அறியலாம்

சாந்தோக்யம் -3-18-3-பாதி ச தபதி ச கீர்த்யா யசச ப்ரஹ்ம வர்ச்ச சேன ய ஏவம் வேத –
இப்படி அறிந்து கொள்கிறவன் ப்ரஹ்ம தேஜஸ் அடைகிறான் -இங்கு வேதன சப்தம்

சாந்தோக்யம் -4-1-4-யஸ்தத்வேத யத் ச வேத சமயைதத் உகத –
ரைக்வர் எதனை அறிகிராரோ அதனையே மற்றும் உள்ள அனைவரும் அறிகின்றனர் –
என்று தொடங்கப் பட்டதில் வேதன சப்தமும்
முடியும் பொழுது -4-2-2-அநும ஏதாம் பாகவோ தே வதாம் சாதியாம் தேவதாம் உபாஸ் ஸே -என்று
மூத்தவரே நீர் எந்த தேவதையை உபாசனம் செய்கின்றீரோ அதையே எனக்கு உபதேசிக்க வேண்டும் –
என்று உபாசன பத பிரயோகம் உண்டே

இது போலே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ப்ருஹத் -2-4-5-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்று
உயர்ந்த அந்த பரமாத்மாவே காணப் படத்தக்கது த்யானிக்கப் பட வேண்டியது என்னப்பட வேண்டியது ஆகும் என்றும்

முண்டக -3-1-8-ததஸ்து தம் பஸ்யதே நிஷ்கலம் த்யாயமான –
த்யானத்தில் உள்ளவன் அவனைக் காண்கிறான் -என்றும்

த்யானம் இடைவிடாமல் நினைப்பதே –
உபாசனையும் அவ்விதமே –
வேதனமும் இவற்றைப் போன்றதே –

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிபவன் அவனையே அடைகிறான்

ஸ்வேதாச்வதர -1-8-ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை
அதனை அறிந்தவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான் –

———————————————————————————————————————————

4-1-2- லிங்காத் ச–4-1-2-

லிங்கம் ஸ்ம்ருதி
அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்
ஸ்ம்ருதி எனபது லிங்கம் ஆகும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-
தத்ரூப ப்ரத்யயே சைகா சந்ததிச் சான்ய நிஸ் ஸ்ப்ருஹா தத் த்யானம்
பிரதமை -ஷட்பி அங்கை –நிஷ்பாத்யதே ததா -என்று

தாரணை மூலம் கிட்டும் ப்ரஹ்மத்தின் திரு மேனி குறித்த ஞானம் என்பதில்
வேறு விதமான அறிவு கலக்காமல் ஒரே எண்ணமாக இருப்பதே த்யானம்

அதற்கு முன்பு யமம் -நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் மற்றும் தாரணை
ஆகிய ஆறு அங்கங்களாக ஏற்படுகிறது-

ஸ்ரீ கீதையும்
மாம் த்யா யந்த உபாஸதே தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார சாகராத் யேத்
வஷரம நிர்த்தேச்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே –

இவ்வாறு பலமுறை ஆவ்ருத்தி செய்யப்பட பக்தி ரூப வேதனமே முக்தி சாதனம் என்று தேறிற்று

ஆக வேதனம் என்பது ஒரு முறை அல்லாமல்
பல முறை செய்யப்பட வேண்டியது என்றதாயிற்று –

————————————————————————————————————–

அதிகரணம் -152-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்-4-1-2-

உபாசன விஷயனான பரமபுருஷனை தன் அந்தர்யாமி என்றே
உபாஸிக்க வேண்டும் என்று சமர்ப்பிக்கிறார்
என்று சங்கதி –

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது

475-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –4-1-3-

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் –

உபாசகனான ஜீவனைக் காட்டிலும் உபாஸ்யனான ப்ரஹ்மம் வேறு
என்று பல ஸூத்ரங்கள் உள்ளதால்
வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும்
என்பர் பூர்வ பஷி –

ப்ரஹ்ம ஸூத்ரம் –
2-1-2-அதிகம் து பேத நிர்தேசாத் -வேறு பட்டது -என்றும்

3-4-8-அதி கோபதேசாத்–அதிகமான உபதேசம் உள்ளதால் -என்றும்

1-1-14-நேதரோ நுபபத்தே —

தத்க்ரது நியாயம் -சாந்தோக்யம் -3-14-1-யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி தத்த ப்ரேத்ய பவதி –

இங்கு எவ்விதம் உபாசிகின்றானோ அப்படியே அவ உலகிலும் அனுபவிக்கின்றான்

ஆக ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டவனாகவே உபாசிக்க வேண்டும் என்பர்

ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச
து -சப்தம் -ஏவ பொருளில் -ஆத்மாவாக மட்டுமே உபாசிக்க வேண்டும் –
தன் சரீரத்துக்கு தான் ஆத்மாவாக இருப்பது போலேவே
ஆத்மேதி து -ஆத்மா என்றே -உபாஸகன் உபாஸ்யத்தைத் தன் ஆத்மா என்றே உபாஸிக்கத் தகும்
வேறு ஒன்றாய் அல்ல -ஏன் எனில்
உபகச்சந்தி –சுருதிகள் கூறும் படி பழைய உபாசகர்கள் இவ்வாறே கருதினார்கள்
க்ராஹயந்தி ச-சில ஸ்ருதி வாக்கியங்கள் வேறாகக் கூறினாலும் அவை ப்ரஹ்மத்தை அந்தர்யாத்மாவாகவே கூறுவதால் –
மேலும் அதி கந்து பேத நிர்தேசாத் போன்றவையும் ப்ரஹ்மம் அந்தர்யாமி அல்ல என்று தெரிவிக்க வில்லை
ஸ்வரூபத்தால் வேறுபாட்டையே கூறுகின்றன
இப்படி உபாசகன் பரமாத்மாவின் சரீரம் என்றும்
பரமாத்மா ஆத்மாவுக்கு ஜீவ பூதம் என்றும் செல்வதாலும்
ஜீவன் ப்ரஹ்மத்துக்கு அதீனமான ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி இத்யாதிகள் என்றும்
தனக்கு ஆத்மாவாகையாலேயே -அஹம் ப்ரஹ்மாஸ்மி –என்றே அனுசந்திக்க வேண்டும் -பிரகார பிரகாரி பாவம் உண்டே –

பரமாத்மா தனக்கு ஆத்மா -ஏன் என்றால் இப்படியே உபாசிப்பவர்கள் செய்துள்ளார் –
த்வாம் வா அஹமசி புகவோ தேவதே அஹம் வை த்வம் அஸி-என்று
நீயே நான் ஆகிறேன் நானே நீ ஆகிறாய் –

சதபத ப்ராஹ்மணம்–14-16-7-30-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந-அந்தரயமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்ம நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்று
யார் ஒருவன் ஆத்மாவின் உள்ளும் புறமும் வியாபித்து -யாரை ஆத்மா அறியாமல் உள்ளதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவின் உள்ளே புகுந்து நியமனம் செய்கின்றானோ –
யார் அழிவற்றவனோ-அவனே உனக்கு ஆத்மாவாக உள்ள அந்தர்யாமி என்றும்

சாந்தோக்யம் -6-8-6-சந்மூலா சோம்யேமா சர்வா பிரஜா சதாயதநா -சத்ப்ரதிஷ்டா ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்று
இவை அனைத்தும் சத் எனப்படும் ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தியான பின்னர் அதனிடம் வாழ்ந்து
அதனிடமே லயித்து விடுகின்றன -இவை அனைத்தும் ஆத்மாவாகவே உள்ளன –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தாஜ்ஜலான் –
ப்ரஹ்மத்திடம் தோன்றி அதிலே லயித்து விடுவதாலும் அதனிடமே வாழ்வதாலும் இவை அனைத்துமே ப்ரஹ்ம் ஆகும் –

அனைத்து அறிவுகளும் ப்ரஹ்மத்திடமே சேர்வதால் அனைத்து சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –

ப்ருஹத் -1-4-10-அத யோன்யம் தேவதா முபாஸ்தே அந்ய அசாவந்ய அசமஸ்மீதி ந ஸ தேவதே -என்று
யார் ஒருவன் தன்னைக் காட்டிலும் வேறான தேவதையை -நான் வேறு அது வேறு -என்று உபாசிக்கிறானோ
அவன் ஏதும் அறியாதவனாக இருக்கிறான் –

ப்ருஹத் -1-4-7-அக்ருத்ஸ் நோ ஹி ஏஷ ஆத்மேத்யே வோயா சீத-
இந்த ஜீவன் பூர்ணம் அல்ல ஆகவே பூரணமான ஜீவனை உபாசிக்க வேண்டும்

ப்ருஹத் -2-4-6-சர்வே தம் பராதாத்யோ அந்யத் ராத்மனா சர்வே வேத -என்று
ஆத்மாவைக் காட்டிலும் அனைத்தையும் வேறுபடுத்திக் காண்பவனை -மற்றவை அனைத்தும் வேறுபடுத்தித் தள்ளிவிடும்

இந்த வரிகளும்
ஸ்வேதாச்வதர 1-5-ப்ருதகாத்மானம் ப்ரேரிதம் ஸ மத்வா -என்று
தன்னை விட வேறுபட்டதான நியமிப்பவனை -என்றதும் முரண்பட்ட வரிகள் அல்ல

ஆகவே
உபாசகனின் ஆத்மாவாகவே உள்ள ப்ரஹ்மமே உபாசனை செய்யப்பட வேண்டும் என்றும்
தனது ஆத்மாகவே ப்ரஹ்மத்தை எண்ணி உபாசிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப் பட்டது –

அஹம் சப்தமும் பரமாத்மாவிலேயே பர்யவசாயம் -முடிவு அடையும்
இதனால் அஹம் ப்ரஹ்ம என்றே உபாஸிக்க வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————

அதிகரணம் -153 ப்ரதீகாதி கரணம் -4-1-3-

இப்படி ப்ரஹ்ம உபாஸனத்தில் ஸ்வ ஆத்மா என்று உபாஸனம் இந்த்ர ப்ராண அதிகரணத்தில் சொல்லப்பட்டது
ஆனாலும் அஹம் புத்தி ஸப்தங்களுக்கு பரமாத்மா என்ற பொருளிலேயே முடிவு என்ற அர்த்தத்தை
உறுதிப்படுத்த இங்கு சொல்லப் பட்டது –
இவ்வாறு மநோ ப்ரஹமேத் யுபா ஸீத முதலிய ப்ரதீக உபாஸனங்களில் ப்ரஹ்ம உபாஸனம் ஆகையாலே
ஸ்வ ஆத்மா என்ற புத்தியில் உபாசனம் செய்யத் தக்கது என்ற சங்கையால் சங்கதி
மநோ ப்ரஹ்மேதி -முதலிய ப்ரதீக உபாஸனங்களிலும் மநோ அஹம் அஸ்மி என்று மனம் முதலியவற்றிலும்
உபாசனத்திற்கு ப்ரஹ்ம உபாசனம் ஸமமாகையால் ஆத்ம தயா அனுசந்தானம் செய்யத் தக்கது
என்பது பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –
இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

474-ப்ரதீகே ந ஹி ஸ –4-1-4-

சாந்தோக்யம் -3-11-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பனாக -என்றும் –

சாந்தோக்யம் -7-1-5-ஸ யோ நாம ப்ரஹ்ம இதி உபாஸ்தே-
நாமத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பவன்

ந ப்ரதீகே -மனம் முதலியவற்றில் ஆத்மாவை ஏற்றி உபாசனை செய்வது பொருந்தாது
ஏன் என்றால்
ந ஹி ஸ -அத்தைய மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல
உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –

ப்ரதீக உபாஸனத்திலே பிரதீகம் தான் உபாஸ்யம் -ப்ரஹ்மம் அன்று –ப்ரதீகமாவது அங்கம் –
சித் அசித் சரீரக ப்ரஹ்மத்தில் அசித்தும் ஏகதேசமான அங்கம் -என்று கருத்து
ப்ரதீக உபாஸனம் -ப்ரஹ்மம் அல்லாதவற்றில் -ப்ரஹ்மம் என்று த்ருஷ்டியில் விதிப்பதால் –
ப்ரஹ்மம் என்று அனுசந்தானம் என்று கருத்து –

இங்கு மனம் முதலியவை அல்ப சக்தி உள்ளவை யாதலால் அவற்றை ப்ரஹ்மம் என்ற த்ருஷ்டியுடன்
உபாஸனம் செய்யச் சொல்வது சரியில்லை
ஆகையால் ப்ரஹ்மமே மனம் முதலிய த்ருஷ்டியால் உபாஸிக்கத் தக்கது
என்ற பக்ஷத்திற்கு விடை அளிக்கிறார் –

—————————————————————————————————-

478-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –4-1-5-

ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது –
மனம் முதலானவற்றில் ப்ரஹ்ம திருஷ்டியை ஏற்கலாம் –
ப்ரஹ்மத்திடம் மனம் போன்றவற்றின் த்ருஷ்டி பொருந்தாது

வேலைக்காரனை அரசன் என்று புகழ்ந்தால் அவன் சில நன்மைகள் செய்வான்
அரசனை வேலைக் காரன் என்றால் தண்டனை தானே கொடுப்பான் –

ஆகையால் தீமையை விளைவிக்கும்
இவ்விஷயம் பூம வித்யையிலும் உள்ளது –

————————————-

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் –

கடந்த அதிகரணத்தில் கீழான பொருளில் மேலானவனே த்ருஷ்ட்டி செய்யத் தக்கது எனப்பட்டது
அப்படியாகில்
பல சாதனத்வேன உத்க்ருஷ்டமான உத்கீதாதியில் ஆதித்யாதி திருஷ்ட்டி செய்யத்தக்கது
என்னும் சங்கையால் சங்கதி –

உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

479-ஆதித்யாதி மதய ஸ அங்கே உபபத்தே —4-1-6-

உத்கீதாதிகளில் ஆதித்ய த்ருஷ்டி செய்யத்தக்கதா
ஆதித்யாதிகளில் உத்கீதாதிகள் த்ருஷ்டி செய்யத்தக்கதா
என சம்சயம்
தாழ்ந்தவன் இடமே உயர்ந்தவனாகவே த்ருஷ்டி செய்ய வேண்டும் அன்றோ என்ற நியாயத்தாலே
பல சாதனம் என்பதால் உயர்ந்த கர்மத்தை விட கர்ம சேஷ பூதமான ஆதித்யாதி தேவதை த்ருஷ்டமான படியால்
ஆதித்யாதிகள் இடம் உத்கீதாதி த்ருஷ்டி செய்வதே மேல்
என்ற பூர்வ பஷத்தை இங்கு நிரஸிக்கிறார்

சாந்தோக்யம் -1-3-1-ய ஏவ அசௌ தபதி தம் உத்கீதம் உபாசீத -என்று
யார் இப்படி ஒளிர்கிறானோ அவனையே உத்கீதமாக உபாசிக்க வேண்டும்

யாகங்களின் அங்கமான உத்கீதம் உயர்ந்ததா ஸூரியன் போன்றார்கள் உயர்ந்தவர்களா சங்கை

இதில் ஸ சப்தம் எவகாரம் உறுதியைச் சொல்கிறது
அங்கே – க்ரதுவின் அங்கமான உத்கீதா திகளில்
ஆதித்யாதி மதய ஸ -ஆதித்ய த்ருஷ்டியே செய்யத்தக்கது
ஏன் எனில்
உபபத்தே-கர்மங்கள் பலனை அளிப்பதும் ஆதித்யாதி தேவதை ப்ரீதியை முன்னிட்டே வருகிறபடியால்
அத்தேவதைகளே உயர்வு பொருந்துவதாதலின் முன் கூறிய நியாயத்தாலே
கர்ம அங்க உத்கீதாதியில் தான் ஆதித்யாதி த்ருஷ்டிகள் செய்யத் தக்கன –

தேவர்களை ஆராதிப்பதால் அன்றோ கர்ம பலன்கள் –
அவர்கள் மகிழ்ந்து அளிக்கின்றார்கள் –
ஆகவே உத்கீதம் முதலான வற்றை ஸூரியன் போன்றாராக எண்ண வேண்டும் –

சுத்தியில் இது வெள்ளி -அந்யதா க்யாதி ஞானம் -ராஜதத்வ பிரகார ரூப ஏக தேசத்தால் போலவே
பிரகார பிரகாரி ஐக்யத்தால் கொள்ளலாமே
ஸத் க்யாதி -யதார்த்த ஞான பக்ஷம்
பஞ்சீ கரண ப்ரக்ரியையால் -ரஜத்வ ஏக தேசம் இதில் உண்டே
நான் கருடன் -உத்கீதமே ஸூர்யன் மனமே ப்ரஹ்மம் -இவற்றுக்கு
தேகாத்ம பிரமம் போல் அஹம் த்வ பிரகார கருடனாகவும் கருடத்வ பிரகார கருடனாகவும் -இரண்டு ஞானங்கள்
பேதத்தை க்ரஹிக்காமை –
ஞானமும் வியவஹாரமும் அயதாவஸ்திதம் என்பர் பிறர்
விவகார மட்டும் அயதாவஸ்திதம் என்பது நம் ஆச்சார்யர்களின் திரு உள்ளம் –

——————————————————————————————-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் –

கீழ் ப்ரதீக அதிகரணமும் ஆதித்யாதி மத்ய அதிகரணமும் ப்ராசங்கிகம்
இதில் முதலில் கூறிய பகவத் உபாசனத்திற்கு அபேக்ஷிதமான ஆஸனாதிகள் சிந்திக்கப்படுகின்றன
என்று சங்கதி

விசேஷமாக ஏதும் கூறப்படாமையாலே நியமம் ஏதும் இல்லை என்கிற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

4-1-7-ஆஸிந சம்பவாத் —4-1-7-

ஆஸிந -உட்கார்ந்து கொண்டே உபாஸிக்க வேண்டும்
சம்பவாத்-உட்கார்ந்தவனுக்கே மனஸ்ஸூ ஒருமைப் படுவதால் என்றபடி
ஒருமை இல்லா விட்டால் உபாஸனம் சம்பவிக்காதே

அமர்ந்து கொண்டு மட்டுமே -அப்போது தான் கை கூடும் –
ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் –
மன ஒருமைப்பாடு உண்டாகும்

———————————————————————————

483-த்யா நாத் ஸ —4-1-8-

நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்த வித எண்ணமும் தோன்றாதபடி
இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்

——————————————————————————

484–அசைலம் ஸ அபேஷ்ய-4-1-9-

அசையாமல் இருப்பதே த்யானம் –

சந்தோக்யம் -7-6-1-த்யாய தீவ ப்ருத்வீ த்யாய தீவ அந்தரிஷம் த்யாய தீவ த்வயௌ த்யாய தீவ ஆப
த்யாயந்தீவ பர்வதா -போலே அந்த நிலை அவசியம் –

பூமி த்யானிக்கிறது
ஆகாசம் த்யானிக்கிறது
என்று பூம வித்யையில் உள்ளது இவற்றைப் போலவே அசலத்வம் ஸ்திதி மூலமாகவே சம்பவிக்கும் என்று கருத்து –

————————————————————————

485-ஸ்மரந்தி ஸ –4-1-10-

ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆசனம் ஆத்மந நாத் யுச்சரிதம் நாதி நீசம் சேலாஜி நகு சோத்தரம்-என்றும்

தத்ர ஏகாக்ரம் மன க்ருத்வா யத சிந்தேந்த்ரிய க்ரிய உபவிச்யாசதே யுஜ்ஞ்யாத் யோகம் ஆத்ம விசுத்தயே-என்றும் சொல்லிற்றே-

ஆஸீனம் -உட்கார்ந்தவனுக்கே தியானத்தை இவற்றில் ஸ்மரிக்கிறார்கள்

—————————————————————————

486-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–4-1-11-

மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

ஸ்வேதாச்வதர -2-10-சமே சுசௌ சர்க்கராவஹ் நிவாலுகா விவர்ஜிதே –
சம தளம் -மணல் நெருப்பு சிறுகற்கள் இல்லாத இடம் -மநோ அனுகூலே -மனத்து ஏற்ற இடம் தேவை –

யத்ர -எந்த தேச காலங்களில் மனதிற்கு
யகாக்ரதா -ஒருமித்த தன்மை ஏற்படுகிறதோ
தத்ர -அதே தேசத்தில் காலத்தில் உபாஸனம் செய்ய வேண்டும்
அவிசேஷாத்-மணல் முதலியன இல்லாமலும் -மனதுக்கு அனுகூலமாகவும் சுத்தமமாயும் உள்ள தேசத்தில்
என்ற வாஜஸ நேயத்தில் மனத்தின் ஓர்மை தவிர மற்ற தேச கால விவரணங்கள் ஏதும் இல்லை யாதலால்
மனா ஒற்றுமைக்கு அனுகூலமான தேசமும் காலமும் உபாஸன அனுகூலங்கள் என்றதாயிற்று
இதனால் ஆஸன ஸ்திதி காமனாதிகளுக்குள் ஆசனத்தை மட்டும் சொல்வதால்
உட்கார்ந்தே உபாஸனம் செய்ய வேண்டும் என்று தேறிற்று –

வித்ய அங்க பாதத்தில் வித்யையின் அங்கங்கள் எல்லாம் சொல்லப்பட்டு விட்ட படியால்
திரும்பவும் ஆசனாதிகள் அங்கங்கள் பற்றி இங்கு ஏன் சிந்தை என்றால்
தைல தாராவத் ஸ்ம்ருதி சந்ததி ரூபையான த்யானம் -பக்தி -தினமும் மென்மேலும் கவனத்துடன் சாதிக்கத் தக்கது
அது ஆசனாதி அங்கங்களுடன் மனதின் ஓர்மை யுடன் இதரங்களைப் பற்றிய அனைத்து முயற்சிகளுடன்
இருக்கா விடில் ஸித்தியாதே என்பதால் ஸூத்ரகாரரால் மீண்டும் இங்கு செய்யப்பட்டுள்ளது

————————————————————————-

அதிகரணம் -156-ஆப்ரயாணாதி கரணம் -4-1-6-

ஒரே நாளில் செய்தாலே ஸாஸ்த்ர பலன் சித்தித்து விடுவதாலும்
ஆயுள் உள்ளவரை செய்ய வேண்டும் என்ற ஸ்ருதியிலோ விதியைக் குறிக்கும் பதங்கள் இல்லாததாலும்
அவை பலத்தைக் குறிப்பதாகவே கொள்ளத்தாகும்
என்பர் பூர்வ பக்ஷி
இத்தை நிரஸிக்கிறார்

மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

488-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–4-1-12-

மரண காலம் வரையில் –
ஏன் –
ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

சாந்தோக்யம் -8-15-1-ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்று
ஆயுள் உள்ள வரையில் உபாசனத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து
ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -என்கிறது –

இந்த ஸ்ருதியில் விதி ப்ரத்யயம் இல்லாவிட்டாலும்
உபாஸனம் ஆவ்ருத்தி வேறே ப்ரமாணத்தால் கிடைக்காததால்
உபாசன ஆவ்ருத்தி விதியை ஏற்க வேண்டும் என்று கருத்து –

————————————————————————————–

அதிகரணம் -157-ததிகமாதிகரணம் – 4-1-7-

இப்படி ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபத்தை நிரூபித்து
தத் பலங்களான
பாப சம்பந்தம் இன்மை
பாபத்தை நாசம்
இவற்றை மேல் நான்கு அதிகரணங்களாலே நிரூபிக்கிறார்
என்று பேடிகா சங்கதி

ப்ரஹ்ம வித்யை ஸ்வதா ஆனந்த ரூபை யாகையாலே பலமாகவே சேர்க்கத் தக்கது
ஆதலின்
அதன் ஸ்வரூபத்தை ஆராய்வதும் இந்த பல அத்தியாயத்திலேயே பொருந்துவதாகும்

ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன
என்று நிரூபிக்கப் படுகிறது –

490-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —4-1-13-

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம்
கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று
ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாது என்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று
உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே

பூர்வ பஷி –
ப்ரஹ்ம வித்தின் வித்யா ஆரம்பத்திற்குப் பின்னால் வரும் பாபங்கள் சம்பந்திக்காமையும்
முன்புள்ள பாபங்களுக்கு விநாசமும்
ஏற்படுமா ஏற்படாதா என்று சம்சயம்
ந புக்தம் ஷீயதே கர்ம-என்று சொல்லுகையாலே
அஸ்லேஷ வி நாச ஸ்ருதி –ஸ்துதிக்காக ஏற்பட்டது என்பதால் உண்மையில்
அஸ்லேஷமும் விநாஸமும் ஸம்பவிக்க மாட்டா
என்பது பூர்வ பக்ஷம் –
இவை இரண்டும் சரி அல்ல
எதனால் என்றால்-
ப்ரஹ்ம வைவர்த்த புராணம் -நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி என்ற
சாஸ்திர வாக்யங்களுக்கு முரணாக இருப்பதால் –
இவை அர்த்த வாதங்களே –
வித்யையை புகழவே சொல்லப்பட்டவை

வித்யை ப்ரஹ்மத்தை அடைய மட்டுமே என்று
தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் –
முண்டகம் -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -என்றும் தானே சொல்லிற்று என்பர்

அப்படி அல்ல –

தததிகமே -ப்ரஹ்ம வித்யை அனுஷ்டித்த போது
உத்தர பூர்வாகயோ –வித்ய அனுஷ்டானத்தின் முந்தைய பிந்தைய பாபங்களுக்கு
அஸ்லேஷ வி நாசௌ -அஸ்லேஷமும் விநாசமும் வரும்
ஏன் எனில்
தத் வ்யபதேசாத் —அவ்வாறு ஸ்ருதி சொல்வதால்
இப்படியாகில் ந புக்தம் ஷீயதே கர்ம-என்று ஸ்ருதி சொல்வது என் எனில்
செய்த கர்மாக்களுக்கு ப்ரஹ்ம வித்யாதிகளால் பிராயச்சித்தம் செய்து கொள்ளா விடில்
கர்ம பலன்களை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்கிறது
ஆகவே விரோதம் இல்லை

வித்யையின் மஹாத்ம்யம் குறித்து –
சாந்தோக்யம் -4-14-3-ஏவம் விதி பாபாம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று
இப்படி அறிந்தவனை பாவங்கள் தீண்டுவது இல்லை என்றும்

சாந்தோக்யம் -5-24-3-ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –என்றது
நெருப்பு எரிக்கிறது என்பதற்கும் தீ அணைக்கும் என்பதரும் முரண்பாடு இல்லையே

பரம புருஷனின் ஆராதனத்தால் முன்பு செய்த பாவங்களால் உண்டான ப்ரஹ்மத்தின் அப்ரீதியை மாற்றி
ப்ரீதியை யுண்டாக்குவதாலே முன்பு செய்த பாவங்கள் அழியும்

அஸ்லேஷம் புத்தி பூர்வகமாக செய்யப்படாத தெரியாமல் செய்யும் பாவங்களையே குறிக்கும்
ஏன் எனில்

கட உபநிஷத் -2-24-நா விரதோ துச்சரிதாத் -என்று
முரணான ஒழுக்கத்தில் இருந்து விலகாதவன் பரமாத்மாவை அடைய முடியாது -என்பதால் –

ஆகையால் மரண காலம் வரை தொடரும் வித்யை நாள் தோறும் வலிமை அடைந்து –
தவறான செயல்கள் அழிவதால் -மாறிக் கொண்டே வரும் என்றதாயிற்று-

இப்படியானால் ப்ரஹ்ம வித்யை ஸர்வ பாப ப்ராயச்சித்த ருபை யாதலின்
ஸ்வர்க்கார்த்தம் சாதனமாக யாகத்தை அனுஷ்டிப்பது போலே முக்திக்காக வேறு சாதனத்தை
அனுஷ்ட்டிக்க வேண்டாவோ என்னில்
ஸ்வர்க்கனுபவம் கர்மாவை உபாதியாகக் கொண்டது -ஆதலால் கர்மாவை அனுஷ்ட்டிக்க வேண்டும்
முக்தியோ ஞான சங்கோச நிவ்ருத்தியை முதல் கொண்ட ப்ரஹ்ம அனுபவத்திற்குத் தடையான
எல்லா பாபங்களும் பிராயச்சித்தமாக வித்யா அனுஷ்டானத்தால் சமனமானவுடன்
சங்கோச காரணம் இல்லாததாலும்
ஞான சங்கோச நிவ்ருத்தியே முக்தி யாதலாலும் ஸ்வ பாவத்தால் ஸித்தித்த
விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவ சக்தி தோன்றுகையால் ஸ்வர்க்காதிகளில் இருந்து வேறுபாடு ஸித்தமாகையாலே
வேறு சாதனம் தேவையில்லை என்று கருத்து –

அஸ்லேஷம் என்பது கர்ம சக்தி உண்டாகாமை
பாப விநாசம் என்பது உண்டான கர்ம சக்திகளின் அழிவு
கர்மசக்தி புண்ய பாபங்களுக்கு ஏற்றபடி பலனைக் கொடுக்கும் பகவானின் நிக்ரஹமும் அனுக்ரஹமுமே
இவ்வாறானால் -நிமித்தம் இருப்பின் நைமித்திகம் உண்டு என்னும் நியாயத்தாலே
முன் பாபங்கள் தோன்றியவை யாதலின் அவற்றுக்கு ப்ரஹ்ம வித்யை பிராயச்சித்தம் ஆகட்டும்
பிந்திய பாபம் உண்டாகாமையால் அதற்கு ப்ரஹ்ம வித்யை எப்படி பிராயச்சித்தம் ஆகும் என்னில்
அபுத்தி பூர்வகமான பாபத்திற்கும் ப்ரஹ்ம வித்யை நைமித்திக பிராயச்சித்தம்
என்பது ஸூத்ரகாரர் திரு உள்ளம் அன்று
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அபுத்தி பூர்வ பாபம் பாபமே என்று என்பதே திரு உள்ளம்
ஆகவே ப்ரஹ்ம நிஷ்டனுக்கு புத்தி பூர்வக உத்தராகம் சம்பவிக்காது –
அப்படித் தோன்றினாலும் அந்த பாபத்தைப் பிராயச்சித்தத்தால் போக்கடிக்க வேண்டும் –
அது செய்யா விடில் விரைவில் பாப பலனை அனுபவித்தே முக்தி பெறுவான்
இந்த வ்ருத்தாந்தம் வ்ருத்ராதிகள் இடம் கண்டோம்
ஆகவே புத்தி பூர்வ ஆகத்துக்கு அவசியம் பிராயச்சித்தம் பண்ணியே யாக வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————-

அதிகரணம் -158-இதராதிகரணம்–4-1-8-

முன்பு
பாபத்திற்கு அஸ்லேஷமும் விநாஸமும் கூறப்பட்டன
இங்கு
ஸூஹ் ருதத்துக்கும் அஸ்லேஷமும் விநாஸங்கள் கூறப்படுகின்றன என்று
அதிதேசத்தால் சங்கதி

முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும்
இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

491-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —4-1-14-

சாந்தோக்யம் -8-4-1-சர்வே பாப்மான அதோ நிவர்த்தந்தே -என்றும் –

கௌஷீதகீ -1-4- தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூ நுதே –என்று
புண்ய பாவங்களை உதறுகிறான்

புண்ய பலன்கள் மழை உணவு போன்றவை
உபாசனம் முழுவதும் இயற்ற வேண்டுமே-அழிவு பற்றி கூறலாமோ என்ன

பாதே து – சரீரம் விழும் நேரத்தில் அந்த புண்ய பலன்கள் அழிகின்றன –
ப்ரஹ்ம ப்ராப்திக்கு தடையாக உள்ளதால் –

புண்ய பலம் ஸூக ரூபமாகையாலே ப்ரஹ்ம வித்துக்கு அநிஷ்டம் இல்லாமையாலும்
புண்யத்தின் அஸ்லேஷ விநாசங்கள் கூடா என்பது பூர்வ பக்ஷம்
அதனை நிரஸிக்கிறார்
இதரச்ய அபி -பாபத்தின் வேறான புண்யத்துக்கும்
ஏவம் அசம்ச்லேஷ பாதே து-பாபத்தைப் போலவே அஸ்லேஷ விநாசங்கள் ஸமமானவை
புண்ய பலமான ஸ்வர்க்கமும் முமுஷுக்கு அநிஷ்டமே
வித்யைக்கு ஏற்ற மழை உணவு ஆரோக்யம் போன்றவையும் சரீரம் விழுந்தபின் அநிஷ்டங்களே
உத்தர புண்ய ஸ்வேஷம் எவ்வாறு சொல்லக் கூடும் என்றால் வித்ய உத்பத்திக்காக செய்த
ஸூஹ் ருதங்களுக்குள் உப யுக்தமான எஞ்சிய சிஷ்ட ஸூஹ்ருதத்துக்கும்
மோஹத்தால் வேறு பலத்துக்காகச் செய்த ஸூஹ் ருதத்துக்கும் பிரபலமான கர்மாக்களால் தடை வரும்
ஆதலால் அப்போது பலனைக் கொடுக்காத அந்தக் கர்மமும் வித்வானின் விஷயத்தில் ஸ்நேஹத்தால்
பிறர் செய்த ஸூஹ்ருதமும் வித்வானுக்கு அநிஷ்டங்கள் ஆகையாலே
இவையே அஸ்லேஷ -அசம்பந்த -விஷயங்களாகக் கூடும் –

———————————————————————————–

அதிகரணம் -159-அநாரப்த கார்யாதிகரணம் -4-1-9-

ப்ரஹ்ம உத்பத்திக்கு முன்னும் பின்னுமுள்ள ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு
அஸ்லேஷமும் விநாசமும் கூறப்பட்டன
இப்போது வித்யைக்கு முன்புள்ள ப்ரார்ப்தே தரமான ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு மட்டும்
வித்யா மஹாத்ம்யத்தாலே விநாசம் இங்கே சமர்த்திக்கப் படுகிறது

பிராரப்தத்தினைத் தவிர்ந்த கர்மங்களுக்கு மட்டுமா அஸ்லேஷ விநாசங்கள்
என்று சம்சயம் இங்கு

சர்வ பாப்மாந பிரயந்துதே –என்று பொதுவாகக் கூறி இருப்பதால்
எல்லா பாபங்களும் விநாசம் கூடும் என்பது பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கிறார்

பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன
என்பது நிரூபிக்கப் படுகிறது –

492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-

இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –

சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்

சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-

து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு
உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே
ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –

——————————————————-

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம் -4-1-10-

வித்யா பலத்தால் ஸூஹ்ருதங்களும் அஸ்லேஷம் கூறப்பட்டது
அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய நைமித்திகமான தம் தம் ஆஸ்ரம தர்மங்களும்
பொதுவாக ஸூஹ்ருதத்தில் அடங்குவதால்
அவற்றின் பலன்களுக்கும் அஸ்லேஷம் வரத்தோன்றுவதால் பலத்தில்
விருப்பம் இல்லாதவனுக்கு அனுஷ்டானம் சம்பவிக்காது
என்ற சங்கையால் சங்கதி –

ஆகவே அக்னிஹோத்ராதிகள் வித்வானால் அனுஷ்ட்டிக்கத் தக்கவை அல்ல
என்று பூர்வ பக்ஷம்

பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை
இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

493-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –4-1-16-

அக்னி ஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
ப்ரஹ்ம விதியை -4-1-14-இதரஸ் யாப்யேவம் அசம்ச்லேஷ -என்று
ப்ரஹ்ம வித்யைக்கு பின்புள்ள புண்ய பாவங்கள் ஒட்டாமல் போகும் என்றால்
பலன் இல்லாத கர்மாக்களை யார் இயற்றுவார்கள்

து பதம் அக்னிஹோத்ரம் போன்றவை அன்றாடம் இயற்றப்பட வேண்டும்
தத் கார்யாயைவ -வித்யா உத்பத்தி என்னும் கார்யத்துக்காகவே அனுஷ்ட்டிக்கத் தக்கது என்றவாறு
தா தர்சநாத் இப்படி வேதங்களில் சொல்வதால் வித்யை வளரும் பொருட்டு நித்யம் இயற்றியே ஆக வேண்டும்
அப்படி அனுஷ்ட்டிக்கா விடில் விதியையே உண்டாக மாட்டாது என்று கருத்து
இல்லையேல் அதனால் வரும் பாவம் மன உறுதியைக் குலைத்து விடும் –
உபாசனை செய்ய இயலாமல் போய் விடும்-

அனுஷ்டித்த கர்மத்துக்கு பலம் ஏற்பட பிரதிபந்தம் ஏற்படுமா ஏற்படாதா என ஸந்தேஹித்து
ஏற்படலாம் என்று முன் கூறியதைக் காட்டுகிறார் –

————————————————————————

புண்ய பாவங்கள் அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்குமாகில்
சாட்யாயன சாகை -ஸூக்ருத சாதுக்ருத்யாம் -என்று
ஏன் கூற வேண்டும்

494-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –4-1-17-

அக்னி ஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால் –
ப்ரஹ்ம வித்யைக்கு முன்பும் பின்னும் பலன் மீது விருப்பம் கொண்டு செய்யப்பட புண்ய கர்மங்களுக்குள்
வலிமையான பாவ கர்மங்களால் தடைப்பட்ட ஏராளமான புண்ணியங்கள் இருக்கக் கூடும்

அத -வித்யைக்குக் காரணமான அக்னி ஹோத்ராதி தர்மத்தைக் காட்டிலும் வேறான
அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ-இது வரை பலன் தராத கர்மாக்களும் உள்ளனவே
என்று சில சாமிகளின் மதம் உண்டு –

இவற்றையே அழிகின்ற
பூர்வ புண்யங்களும் ஒட்டாமல் போகும் உத்தர புண்யங்களும் என்றது

——————————————————————————-

495-யதேவ வித்யயேதி ஹி —4-1-18-

ஹி-எதனால்
யதேவ வித்யயேதி -யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம்-என்று
உத்கீத உபாசனத்தாலே க்ரது பலமான
ஸ்வர்க்காதிகளுக்கு கரமாந்தரங்களால் பிரதிபந்தம் ஏற்படாமை கூறப்பட்டதோ
அதே காரணத்தால் பலம் பிரதிபந்தம் அடைந்த சாது க்ருதயங்கள் உண்டு என்று
வசனத்துக்கு முன் கூறியதே விஷயம் என்று –

வித்யையின் மூலமாக –
சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம் -என்று
எந்த கர்மத்தை உத்கீத விதையுடன் இயற்றுகின்றானோ அதுவே தடையின்றி பலன் தரும்

இவையே உபாசகனின் நண்பர்களுக்கு சென்று சேரும் –

ஸர்வ அபேஷா ச-என்ற அதிகரணத்தில்
கர்மாக்கள் அங்கம் எனப்பட்டன
இங்கும் கர்மாக்களுக்கு அங்க பாவத்தை ஏன் கூறுகிறார் என்றால்
முன் பாதத்தில் வித்யை எதையும் எதிர்பாராதது என்று சங்கித்து
சா பேஷம் -எதிர்பார்ப்பதே -என்று சாதிக்கப்பட்டது
இதில் ஸூஹ்ருதம் ஒட்டாது என்ற பிரசங்கத்தில் அக்னி ஹோத்ராதிகளும் ஸூஹ்ருதம் ஆகையால்
அவற்றை விட்டு விடலாம் என்று சங்கதி
அவை அவசியம் அனுஷ்ட்டிக்க வேண்டியவை என்று ஸ்தாபிக்கப் போவதால்
கூறியது கூறல் என்ற தோஷம் இல்லை யாம் –

———————————————————————–

அதிகரணம் -161-இதர ஷபணாதி கரணம் -4-1-11-

பலன் கொடுக்கத் தொடங்காத புண்ய பாபங்களுக்கு வித்யையாலே விநாசம் சொல்லப் பட்டது
இப்போது பிராரப்த கர்மங்களுக்கு வித்யை தோன்றின சரீரத்தின் முடிவிலேயோ
பிராரப்த கார்ய சரீராந்தரத்தின் முடிவிலோ விநாசம் என்று அநியமத்தை ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள்
ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது –

496-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –4-1-19-

ப்ரஹ்மத்தை அடைய சரீர மாத்ரத்தால் விளம்பம் ஸ்ருதமாகையாலே
வித்யா உத்பத்தியான சரீரத்தின் முடிவிலேயே அழிகின்றன
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்

து ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குகிறது
இதரே-ஆரப்த கார்யங்களான புண்ய பாபங்களை
போகேந ஷபயித்வா -பல அனுபவத்தால் போக்கடித்து
அத -பிறகு -பிராரப்த கர்ம அவசானத்தில்
சம்பத்யதே -ப்ரஹ்ம வித்தானவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்பதால்
ஸ்ருதியும் பிராரப்த கர்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் என்று கூறுகிறது
புண்ய பாபங்கள் எவ்வளவு சரீரங்களாலே அனுபவிக்கத் தக்கனவோ அவ்வளவு சரீரங்களைப் பரிக்ரஹித்து
புண்ய பாபங்களை அனுபவித்துத் தீர்த்த பின்னரே முக்தனாகிறான் என்று கருத்து –

பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-
அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்ய-என்பதால்
பிராரப்த கர்மாக்கள் முடிந்த பின்னரே ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————

இப்பாத அதிகரண பொருள்களை ஒரே ஸ்லோகத்தால் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம் என்றும்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: