ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்ரம் /ஸ்ரீ தாடீபஞ்சகம் /ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்–

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்

– (ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்)

—————

ஸ்ரீ தாடீபஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்தது என்றும்,
ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர்.
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர்
யார் அருளிச் செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய்,
செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச்செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக
இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான்
இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத்தாழ்வான் தனியன்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸிரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

யவருடைய திவ்யஸ்ரீஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்களஸூத்ரமாக
(மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான
ஸ்ரீகூரத்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலியாண்டான் தனியன்கள்

1–பாதுகே யதிராஜஸ்ய கத யந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ,
அந்த தாசரதி என்னும் திரு நாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய
திருவடி யிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2-யச் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய சச் சாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி)
ஸ்ரீதாடீ பஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ,
அந்த ராமாநுஜருடைய ப்ரிய சிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான
ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி––முதல் ச்லோகம்–

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்படுபவர்.
காட்டுத் தீ வளர்த்தால் எவ்விதம் மரங்கள் அழியுமோ அது போன்று,
எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார்.
சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார்.
பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார்.
ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார்.
மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார்.
ஸ்ரீரங்கநாதனின் திருக்கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

————

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-இரண்டாம் ச்லோகம்–

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை
இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரிதண்டம் தண்டிக்கிறது.
மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரிதண்டம் உள்ளது.
“இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ்பொருள்கள்,
இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது.
அந்த இருளை நீக்கும் தீபமான த்ரிதண்டியாக எம்பெருமானார் நின்றார்.

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

————

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –மூன்றாம் ச்லோகம்–

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது.
இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின். அவற்றை சீர் செய்து,
சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும்.
வேதாந்தத்தில் உள்ள ஸத்வித்யை, வாச்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு
நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும்.
“கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச்செய்தது போன்று,
கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் காலதண்டம் போன்றது.
வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கைகொடுக்கும் தண்டம் போன்றது.
மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண்கொற்றக்குடையின் மணிக்காப்பு போன்றது.
எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ரதண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது

7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

————

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–நான்காம் ச்லோகம்–

வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும்
தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது.
த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திருநாமம் ஆகும்.
அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.
மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.
கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக்கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.
எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால்,
இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது.
மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர்.
ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

————-

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ச்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.
பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.
ஸ்ரீமந்நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.
இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் சிஷ்யர் ஸ்ரீ கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ரீ ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
ஸ்ரீ எறும்பி அப்பாவோ –
ஸ்ரீ கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-

அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்
யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே! பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான
நடாதூர் அம்மாளைப் பார்த்து, அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச் செவி சாற்றியருள வேணும்.

———-

அநாதி பாப ரசிதாம் அந்தக்கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-

வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன்.
இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்க வேண்டும்.

————–

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-

விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும்.
ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்கவேண்டும் –
காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

—————–

யதா அபராதா ந ஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-

பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

யதிராஜரே! முக்தி அடியும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான்,
ஒரு போதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்தி விடக் கூடாது.

——————-

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீல நை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹவாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-

கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் –
ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹவாஸம் –
பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –
லக்ஷ்மண முனியே! இந்த உடல் பிரியும் காலம்வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே காலக்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்க வேண்டும்.

————–

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-

ஆழ்வார்களையே பரமாச்சார்யா சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

————-

இத்யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7

ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று
பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்
சாதரம் படன்-என்று பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –
யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ,
அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

————–

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் தி நேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ரு ஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-

ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும் நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: