ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

ஜகத்து முழுவதும் ப்ரஹ்மத்தின் கார்யம் என்பதை சமர்த்திக்க
சில ஸ்ருதிகளில் மேல் எழுந்த வாரியாக இந்திரியங்கள் நித்யங்கள் என்னும் எண்ணம்
சில மாந்தர்களுக்குத் தோன்ற இடம் இருப்பதால் அவ்வெண்ணத்தை நீக்க
ஜீவனின் உப கரணமான இந்திரியங்களுக்கு கார்யத்வத்தை சாதிக்கிறார் என்பது சங்கதி

இந்திரியங்கள் ஜீவன் போல் உண்டாவது இல்லையா –
ஆகாசாதிகள் போல் உண்டாகின்றனவா என்று சம்சயம்
உண்டாவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அஸத்வா இதம் அக்ர ஆஸீத் ததாஹு கிம் ததா ஸீத் இதி ருஷயோ வாவதே அக்ர ஆஸீத்
ததாஹு கேதே ருக்ஷய இதி ப்ராணா வாவ ருஷய இதி –
பிரளய காலத்தில் பிராண ஸப்த வாஸ்யங்களான இந்திரியங்களுக்கு இருப்பு கூறுவதால்
உத்பத்தி இல்லை என்பதாம் –

ஸூத்ரம் –265-கதா ப்ராணா –2-4-1- பூர்வ பக்ஷ ஸூத்ரம்

ஜீவன் எவ்வாறு உத்பத்தியும் மரணமும் இல்லாதவனோ
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
அப்படியே பிராணா -இந்திரியங்களும்
அஸத்வா –என்னும் ஸ்ருதிகளால் உத்பத்தி ஆவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அதைக் கண்டிக்கிறார் –

—————

ஸூத்ரம் –266-கௌண்ய சம்பவாத் தத் ஸ்ருதேச் ச –2-4-2-

ச என்றது து என்ற பொருளாய் பூர்வபக்ஷத்தை நிரசிக்கிறது
இந்திரியங்களும் வ்யத் யாதிகளைப் போலே உத் பன்னங்களே
தத் ப்ராக் ஸ்ருதேச் ச -அந்த பரமாத்மாவுக்கே பிரளய காலத்தில் இருப்பு ஸ்ருதியில் கூறப்படுவதால்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –இத்யாதி ஸ்ருதிகளில்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருக்கிறான் என்பது ப்ரஸித்தம்
ப்ராண ஸப்தமும் பிராணம் அபி ஸம் விசந்தி -என்ற ஸ்ருதியால் பரமாத்மாவைக் குறிப்பது
எல்லாவற்றையும் ஸாஷாத் கரிக்க வல்ல ரிஷி என்ற தன்மையும் அவருக்கே கூடும்
இப்படியாகில் ப்ராணா வாவ ரிஷயே என்ற பஹு பன்மை வசனம்
கௌணீ -உபசார வார்த்தை
ஏன் எனில்
அசம்பவாத் -இந்திரியங்கள் பிரளய காலத்தில் இல்லாமையால் –

————————–

ஸூத்ரம் –267-தத்வ பூர்வகத்வாத் வாச –2-4-3-

வாச -பரமாத்மேதரமான எல்லா நாமதேயங்களும்
தத்வ பூர்வகத்வாத் -அந்த அந்த வஸ்துவின் ஸ்ருஷ்ட்டியை முன்னதாகக் கொண்டு இருப்பதால்
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -தன் நாம ரூபாப்யாம் வியாக்ரியத -என்கிற ஸ்ருதி
அந்த வஸ்துக்களையும் நாமங்களையும் ப்ரஹ்மமே படைத்தது என்று சொல்வதால்
இந்திரியாதி ஸ்ருஷ்டிகளும் முன் உள்ள பிராணன் என்பது பரமாத்மாவே என்று சித்திக்கிறது –

——————

இதில் இந்திரியங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –268–ஸப்தகதேர் விசேஷி தத்வாச்ச–2-4-4-பூர்வ பாஷ ஸூத்ரம்

இந்திரியங்கள் ஏழா பதினொன்றா என்று சம்சயம்
ஏழே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

கதே ஸப்தப் ப்ராணா ப்ரபவந்தி-என்று
ஜீவனுடன் சேர்ந்து கதி சொல்வதால்
விசேஷி தத்வாச்ச
யதா பஞ்ச அவதிஷ்டந்தே ஞானாமி மனஸா ஸஹ –புத்திச்ச ந விசேஷ்டேதே தமாஹு பரமாம் கதிம் -என்று
ஏழு விஞ்ஞானங்களும் ஸ்திரமாய் இருந்தால் யோகம் ஸித்திக்கும் என்று விசேஷித்து
ஞானி என்று ஞான ஸாதனங்களான இந்திரியங்களை விசேஷிக்கையாலும்
ஸ்ரோத்ரம் -த்வக் -சஷுஸ்-ஜிஹ்வா -கிராணம் -மனஸ் -புத்தி -என்று ஏழு இந்திரியங்கள்
வேறே இல்லை என்பது பூர்வ பக்ஷம் –

——————–

ஸூத்ரம் –269-ஹஸ்தாத யஸ்து ஸ்திதே அதோ நைவம் –2-4-5-

அவ்வாறு அல்ல -இந்திரியங்கள் ஏழு என்பது சரி யல்ல
ஸ்ரோத்ரம் முதலிய ஞான இந்திரியங்கள் ஐந்து
மனம் ஓன்று -கர்ம இந்திரியங்கள் ஆக -11 இந்திரியங்கள்
அவற்றுள் ஐந்து ஞான இந்திரியங்களும் ஜீவனுடன் வேறு சரீரத்தில் கூட இணைந்தே செல்கின்றன
ஹஸ்தாத யஸ்து–கர்மா இந்த்ரியங்களோ எனில்
ஸ்திதே -உடல் உள்ளவரை உள்ளன -சரீரம் தோன்றும் போது தோன்றி மறையும் போது மறைபவை
அதோ நைவம்-ஆகையால் இந்திரியங்கள் ஏழு என்பது இல்லை
புத்தி அஹங்காரம் சித்தம் என்ற வளாகங்களை மநோ விருத்தியின் பேதங்களே யாதலின் வேறே அல்ல
ஆக இந்திரியங்கள் பதினொன்றேயாது

இவ்வாறு வியாக்யானம் தீபத்தைத் தழுவியது –

இங்கு ஓர் பூர்வ பக்ஷம்
ஜீவன் இருக்கையில் ஹஸ்தாதிகள் அவனுக்கு உபகாரமாய் இருப்பதாலும் எடுப்பது வைப்பது போன்ற
செயல்கள் இயற்றுவதாலும் இந்த்ரியத்தில் தடை இல்லை
ஆகையால் அவை ஏழு தான் என்று கூறப்படுவது இல்லை -அவை பதினொன்றே
ஜீவன் சரீரத்தை அடையும் போது கர்ம இந்திரியங்கள் உண்டாகி சரீரம் நசிக்கும் போது அடியோடு நசிக்கின்றன
ஜீவன் லோகாந்த்ரம் தேஹாந்த்ரம் அடையும் போது ஞான இந்த்ரியங்களே உடன் போகின்றன
கர்ம இந்திரியங்கள் போவது இல்லை என்ற இவ் வர்த்தங்களைச் சாதிக்க வில்லை

ஸ்ருத பிரகாசிகையிலோ -பதினோரு இந்த்ரியங்களுமே அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை யாதலின்
ஜீவனின் லோகாந்தர தேஹாந்தர கமனத்திலும் இவை கூடவே செல்கின்றன என்றும்
பிரளய தசையில் தவிர மற்ற காலங்களில் இவற்றுக்குப் பிரிவே கிடையாது என்றும் கூறி
ஏழே இந்திரியங்கள் என்பதைக் கண்டிக்கிறார்

சிந்தாமணியிலும் -ஸப்த இமே லோகா யேஷு சரந்தி பிராணா -என்கிற சுருதியில்
ஜீவனுடன் செல்லுதல் ஞான இந்திரியங்களுக்கு மட்டும் கூறினாலும்
கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் என்று கூறப்பட்டுள்ளது
இப்படி இருக்க தீப அனுசாரியாக வியாக்யானம் செய்யலாமோ என்பது பூர்வ பக்ஷம்

இவ்விஷயத்தில் நியாய பரிசுத்தி கிரந்தம் சமாதானமாகக் கூறும் வழியைக் காண்போம்
யாதவ பிரகாசர் மதத்தைப் போல் கர்ம இந்திரியங்களுக்கு ஒவ்வோர் சரீரத்திலும்
உத்பத்தி விநாசங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுக்கு இந்த்ரியத்வம் ஸித்தமாகிறது என்பதால்
இந்த ஸூத்ரத்துக்குப் பொருத்தமான பொருள் ஓன்று கூறப்பட்டது
ஆகையால் பதினோரு இந்த்ரியங்களுமே வேறே சரீரங்களிலும் தொடர்கின்றன என்பதே
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் என்று அறிகிறோம்
சரீரே ஸ்திதே -என்றும் பிரயோஜனந்தரத்தாலும் பிறர் மதத்தை அனுவதித்து
இந்திரியங்கள் பதினொன்றே என்று ஸ்தாபித்தாலும்
தீபத்தில் சொல்லியதத்திற்கும் விரோதம் இல்லை என்பதாம் –

—————

மூன்றாம் அதிகரணம் –பிராண அணுத்வ அதிகரணம்

ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6-

இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –
என்று பூர்வபக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –

————–

ஸூத்ரம் –271-ஸ்ரேஷ்டச்ச –2-4-7–

இந்திரியங்களுக்கு நிர்வாஹகம் ஆகையால் ஸ்ரேஷ்டமான பிராண வாயுவும் உண்டாகிறது
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மன -என்று சொல்வதால்
இங்கு ப்ராணனைச் சொன்னது மேலே பிராணனின் ஸ்வரூபத்தை விசாரிக்க வாம் –

———

நான்காம் அதிகரணம் -வாயு க்ரிய அதிகரணம் —

ஸூத்ரம் –272- ந வாயு க்ரியே ப்ருதக் உபதேசாத் –2-4-8-

இந்த ஸ்ரேஷ்ட பிராணன் கேவல வாயு ஸ்வரூபமா -அல்லது வாயுவின் சலனாதி கிரியையா
அல்லது தேஹாதி தாரணத்துக்கு அனுகுணமான ஒரு அவஸ்தா விசேஷத்தோடு கூடின வாயுவா என்று சம்சயம்
கேவல வாயுவே –முதல் பக்ஷம் –யஸ் பிராணா ச வாயு -என்று சொல்வதால்
இரண்டாவது பக்ஷம் -உஸ்வாச நிச்வாஸ ரூபமான வாயுவின் கிரியையே பிராணன் என்பது
இவற்றை நிரசிக்கிறார்

ந வாயு க்ரியே -வாயு மாத்ரமோ அதன் கிரியையோ அன்று
ப்ருதக் உபதேசாத்–ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மனஸ் ஸர்வ இந்த்ரியாண ச
கம் வாயு -என்று
வாயுவும்
பிராணனும்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உண்டாகின்றன என்று தனித்தனியே சொல்வதால் என்றபடி
ஆகையால் தேஹ தாரண யோக்யதா ரூபமான விசேஷத்தை யுடைய வாயுவே பிராணன் என்று சித்தம்

———–

இப்படி வாயுவைக் காட்டிலும் தனியாகச் சொல்லப்பட்ட அக்னியாதிகளைப் போலே
வேறே ஒரு பூதமோ என்னும் சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –273-சஷுராதி வத் து தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய –2-4-9-

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பிக்கிறது
பிராணன் தேஜஸ் முதலியவை போல் பூதம் அல்ல
சஷுராதி வத்–கண்–இந்திரியங்கள் போல் ஜீவனுக்கு உபகரணம் ஆகாது
தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய–உபகரணங்களான அவற்றுடன் சேர்ந்து உபதேசம் செய்யப்பட்டு இருப்பதால்
பிராண சம்வாதத்தில் -ஸர்வே ப்ராணா அஹம் ஸ்ரேயஸே விவத மானா -என்று
ச ஷுராதி இந்த்ரியங்களையும் பிராண வாயுவையும் கூட்டி பிராண ஸப்தத்தாலே உபதேசிக்கிறது
ச ஷுராதிகளைப் போலே பிராண வாயுவும் உபகரணம் என்ற வகையில் சமமானால் தான் பொருந்தும்
யோ அயம் முக்ய ப்ராணா -என்று ப்ராண சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ள கரணங்களுள்
பிராண வாயு முக்கியம் என்று கூறியது
ஸஹ சிஷ்ட் யா திப்ய-என்று ஆதி ஸப்தத்தின் பொருள் –

————–

ஸூத்ரம் –274-அகரணத் வாச்ச ந தோஷ ததாஹி தர்சயதி–2-4-10-

அகரணத் வாச்ச ந தோஷ –ஜீவனுக்கு உபகரிக்கை என்னும் காரணம் இல்லாமையாலே
ப்ராணனுக்கு உபகரணத்வம் கூடாது என்ற தோஷமும் இல்லை
ததாஹி தர்சயதி–யஸ்மின் உத் க்ராந்தே இதம் சரீரம் பாபிஷ்ட தரமிவ த்ருச்யதே ஸவை ஸ்ரேஷ்ட –என்றும்
ஸ்ருதி தானே பிராண வாயுவுக்கு தேஹ இந்திரியாதி அசை தில்ய கரண ரூபமான உபசாரத்தைக் காட்டுகிறது
ஆகையால் தோஷம் இல்லை என்பதாம் –

——————-

ஸூத்ரம் –275–பஞ்ச வ்ருத்திர் மநோ வத் வ்யபதிஸ்யதே–2-4-11–

பஞ்ச வ்ருத்திர்-ஒரே பிராண வாயு தான் பிராண அபா நாதி வ்ருத்தி பேத மூலமாக
ஐந்து பெயர்களால் கூறப்படுகிறது
மநோ வத்-ஒரே மனம் எப்படி காம நாதி வ்ருத்தி பேதத்தால்
காமம்
சங்கல்பம் விசிகித்சா
ஸ்ரத்தா
அஸ்ரத்தா
த்ருதி
அத்ருதி ‘
ஹ்ரி -வெட்கம்
தீ புத்தி
பீ பயம்
என்று வெவ்வேறாக கூறப்படுகிறது அப்படியே பிராணனும் ஐந்து இடங்களில் இருப்பைக் கொண்டு
பிராணன் அபானன் இத்யாதி பெயர்களால் குறிக்கப் படுகிறது

———————-

ஐந்தாம் அதிகரணம் –அணுச் ச அதிகரணம்

இந்தப் பிராணன் வாயுவா அல்லவா என்று சம்சயம்
சர்வகதன்-விபு -என்று பூர்வ பக்ஷம்
ஸ ஏபி த்ரி பி லோகை சம என்று அனந்தயம் சொல்வதால் என்று பூர்வ பக்ஷ ஹேது
இதை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –276–அணுச் ச –2-4-12–

தம் உத் க்ரமாந்தம் பிரானோ அனூத் க்ரமாதி –என்று உத் க்ராந்தி சொல்வதால்
இந்திரியங்கள் போலவே பிராணனும் ஸூஷ்ம பரிணாமம் உள்ளது
த்ரி பி பிராணை சம -என்றது பிராணனை ஸ்துதிப்பது அன்று வேறு இல்லை –

———–

ஆறாம் அதிகரணம் -ஜ்யோதிராத் அதிகரணம்

பராத் து தத் ஸ்ருதே -என்னும் அதிகரணத்தில் சொன்ன அர்த்தத்தை
இதில் ஸ்திரப்படுத்துகிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –277-ஜ்யோதிராத் யதிஷ்டா நந்து ததா மனனாத் ப்ராண வதா சப்தாத் –2-4-13–

ப்ராண வதா-பிராணனின் நியந்தா என ஜீவனுடன் கூடி
ஜ்யோதிராத் யதிஷ்டாநம் -அக்னி யாதி தேவதைகளுக்கு வாகாதி இந்த்ரியங்களில் அதிஷ்டானமானது
ததா மன நாத் து –ஆபி முக்யேந மனனம் ஆ மனனம் ஸங்கல்பம் –
அந்த பரம புருஷனின் சங்கல்பத்தாலே ஏற்படுகிறது என்று கருத்து
ஏன் எனில்
சப்தாத்-யோ அக்னவ் திஷ்டன் அக்னி மந்தரோ யமயதி ய ஆத்மனி திஷ்டன் –இத்யாதி
சப்தங்களால் என்றபடி –

——————–

ஸூத்ரம் –278- தஸ்ய ச நித்யத் வாத் –2-4-14–

தஸ்ய -ஸமஸ்த வஸ்துக்களும் பரமாதிஷ்டிதம் என்பதற்கு
நித்யத் வாச் ச -ஸ்வரூப அனு பந்தியாய் நியதத்வம் இருப்பதால்

ஆகவே பகவத் ஸங்கல்பத்தாலே தான் அக்னி யாதி தேவதைகளுக்கு
இந்திரிய அதிஷ்டாத்ருத்வம் தவிர்க்க முடியாததாகிறது –
தத் ஸ்ருஷ்ட்வா ததே வா அனு ப்ராவிசத் தத் அனு ப்ரவிஸ்ய சச்சத் யச்சா பவத் என்று
சர்வ நியாந்தாவாய் இருந்து அனு பிரவேசம் செய்தார் என்ற ஸ்ருதி இருப்பதால் என்று கருத்து –

————

ஏழாம் அதிகரணம் –இந்த்ரிய அதிகரணம்

ஸூத்ரம் –279-த இந்த்ரியாணி தத் வ்யபதேசாத் அந் யத்ர ஸ்ரேஷ்டாத் –2-4-15–

ஸர்வே பிராணா -என்று சஷு ராதிகளையும் பிராண வாயுவையும் பிராண சப்தத்தாலேயே சொல்லுகையாலே
முக்ய பிராணனையும் இந்த்ரியம் என்னலாம்
என்பதைக் கண்டிக்கிறார்
ஸ்ரேஷ்டாத் அந் யத்ர-ஸ்ரேஷ்ட பிராணன் அல்லாத பிற ப்ராணங்கள்
த இந்த்ரியாணி-அவையே இந்த்ரியங்கள்
தத் வ்யபதேசாத் -அவற்றையே அவ்வாறு வழங்குவதால்
இந்திரியாணி தசை கஞ்ச -என்று முக்ய பிராணனை விட்டு -சஷுராதி மனம் வரையானவற்றையே
இந்த்ரியம் எனக் குறிப்பிடுவதால்
முக்ய ப்ராணனுக்கு இந்த்ரியம் என்ற பெயர் கிடையாது என்பதாம் –

——————

ஸூத்ரம் –280-பேத ஸ்ரு தேர் வை லக்ஷண்யாச் ச–2-4-16–

பேத ஸ்ரு தேர்
ஏதஸ் மாஜ் ஜாயதே பிரானோ மனஸ் ஸர்வ இந்த்ரியாணி ச -என்று
பிராணனையும் இந்திரியங்களை வேறாகச்
சொல்லுகையாலும்
வை லக்ஷண்யாச் ச–இந்திரியங்கள் லயம் அடைந்த பிறகும் பிராண வ்யாபாரத்தைக் காண்கையாலே
இவற்றின் இடையே வேறுபாடு இருப்பதாலும் என்றபடி

இத்தாலும் ஸ்ரேஷ்ட ப்ராணனைத் தவிர்த்த ஏனைய சஷு ராதிகளே இந்த்ரியங்கள் என்று ஸித்தம் –

———–

எட்டாம் அதிகரணம் –ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம்

வ்யத் அதிகரணம் தொடங்கி இது வரை -14- அதிகரணங்களாலே
பூத இந்திரியாதிகளின் சமஷ்டி ஸ்ருஷ்டியை நிரூபித்து
இவ்வதி கரணத்திலே
தேவ மனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியை இங்கு நிரூபிக்கின்றார் என்று சங்கதி

ஸூத்ரம் -281–ஸம்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் -2-4-17-

பிரபஞ்ச ஸ்ருஷ்டியை சதுர்முகன் செய்கிறானா
சதுர்முக சரீரக பரமாத்மா செய்கிறானா
என்ற ஸம்சயத்தில்
அநேந ஜீவேந ஆத்ம நா அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டு நாம ரூப வியாகரணம் சொல்லுகையாலே
சதுர் முகனே வ்யஷ்டி ஸ்ருஷ்டியை செய்பவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் –
நாம ரூப வ்யாகரவாணி தாஸாம் த்ரி வ்ருதம்
த்ரி வ்ருதம் ஏகை காம் கரவாணி -என்று த்ரி வ்ருத கரணம் பண்ணுபவனுக்கே நாம ரூப வியாகரணம் உபதேசிக்கையாலே
த்ரி வ்ருத் க்ருதங்களான தேஜோ அப்பு அன்னங்களால் உத் பன்னமான அண்டத்தில் உள்ள சதுர்முகன்
அந்த த்ரி வ்ருத் கரணத்தின் கர்த்தா ஆக மாட்டான்
த்ரி வ்ருத் கரணமும் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் பரம புருஷனால் தான் செய்யப் பட்டன என்றாலே
வ்யாகரவாணி என்ற உத்தம புருஷனும் -தன்மை ஒருமை வினை முற்றும் -பொருந்தும்
ஜீவேந ஆத்ம நா என்ற சாமா நாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவமும் முக்கியப் பொருளாகும்
ஜீவேந ஆத்ம நா–ஜீவ சரீரகனான என்னால் என்றபடி–

————-

ஆமாம் அன்ன மசிதம் த்ரேதா விதீயதே என்று தொடங்கி
சதுர்முகன் படைத்த அன்னாதிகளிலும் த்ரி வ்ருத் கரண பிரகாரம் உபதேசிக்கப் படுகிறதே
ஆகையால் அவனும் த்ரி வ்ருத் கரணம் செய்யச் சக்தன் தானே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –282–மாம் ஸாதி பவ்மம் யதா ஸப்தம் இதர யோச்ச 2-4-18–

மாம் ஸாதி பவ்மம் -மாம்சமும் மனமும் பவ்மம்-பூமி சம்பந்தம் உள்ளவை
அவை ஆப்யமோ தைஜஸமோ அல்ல
யதா ஸப்தம் -ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்று ஸ்ருதி சொன்னபடியே
இதர யோச்ச-அன்னம் மசிதம் என்ற பிரதம பர்யாயம் தவிர்த்த
ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்ற இரண்டு பர்யாயங்களிலும் மூத்ர பிராணங்களுக்கு ஆப்யத்வமும்
அஸ்தி மஜ்ஜைகளுக்கு தைஜஸத்வமும் உபதேசிக்கப் படுகின்றன
இதன் பொருளாவது

தாஸாம் த்ரி வ்ருதம் என்று ஆண்ட ஸ்ருஷ்டிக்கு என்று குறிப்பிடப்பட்ட த்ரி வ்ருத் கரணம்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே -என்பதால் விதிக்கப்பட வில்லை
ஆனால் அண்டத்துக்குள் இருக்கும் ஸ்வேதகேது எளிதில் புரிந்து கொள்ள மனிதனால் உட் கொள்ளப்படும்
அன்னம் ஜலம் முதலியவற்றில் மூன்று வகைப்பிரிவு கூறப்பட்டது
தஸ்ய யஸ் ஸ்தவிஷ்டோ பாக தத் புரீ ஷம் யோ மத்யம் தன் மாம்ஸம் யோ அ ணிஷ்ட தன் மன –என்று
மாம்சமும் புரீ ஷமும் மனஸ்ஸும் போல் பவ்மம் என்று உபதேசிக்கப் படுகிறது
ஏன் எனில்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே–என்று தொடக்கத்தாலும்
அன்ன மயம் ஹி சோம்ய மனஸ் –என்று வாக்ய சேஷத்தாலும் என்றபடி

தேஜோ ஆபன்னங்களுக்குத் த்ரி வ்ருத் கரண பிரகாரம் இதில் சொல்லப் படுகிறது எனில்
மாம்சமும் மனஸ்ஸும் பவ்மமான புரீ ஷத்தைக் காட்டில் அணீ யஸ்ஸாகையாலே
ஆப்யத்வமும் தைஜஸத்வமும் ப்ரஸக்தமாகும்
அவ்வாறே ஆப பீத தேஜோ உசிதம் என்ற இரு பர்யாயங்களிலும்
லோஹிதம் மூத்ரம் பிராணன் இம் மூன்றுக்கும் ஆப்யத்வமும்

தேஜஸ் பர்யாயத்தில் அஸ்தி மஜ்ஜை வாக்கு இவை மூன்றுக்கும் தைஜஸத்வமும் சொல்லப்படுகிறது
ஏன் எனில்
பீதா என்று தொடங்குவதாலும் ஆபோ மய ப்ராண என்ற வாக்ய சேஷத்தாலும்
அப்படியே தேஜோ உசிதம் என்ற தொடக்கத்தாலும்
தேஜோ மயீ வாக் என்ற வாக்ய சேஷத்தாலும்
என்றபடி

இப்படி இல்லாமல் த்ரி வ்ருத் கரணத்தை உபதேசிக்கிறது என்றால் மூத்ரம் ஸ்தவிஷ்டமாகையாலே பவ்மம் ஆகிவிடும்
பிராணனும் அணீ யஸ் யாதலின் தைஜஸம் ஆகி விடும்
தேஜோ அஸிதம் என்ற மூன்று பர்யாயத்தாலும் அஸ்தி -பவ்மமாயும் மஜ்ஜை ஆப்யமாகவும் ஆகும்
உபக்ரம வாக்ய சேஷங்களுக்கு விரோதம் வருமாதலின் முன்பே த்ரி வ்ருத் க்ருதமான அன்னாதிகளுக்கு
ஜாட ராக்னி யாலே மூன்று விதமாகப் பரிணாமம் உபதேசிக்கப் படுகிறது

—————-

முன்பே த்ரி வ்ருத்தமானால் வெறும் அன்னம் முதலிய சொற்களால் எப்படி வழங்கலாம்
என்பதற்கு விடை தருகிறார்

ஸூத்ரம் –283-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பதாம்
வைசேஷ்யம்–விசேஷ பாவ -ப்ருத்வீ ஜலாதிகள் முன்னரே த்ரி வருத் க்ருத்யங்கள் ஆயினும்
பிருத்வீயில் தன் அம்சம் பாதியும் ஜல தேஜோ அம்சங்கள் கால் காலும் உள்ளது என்பது போலே
அந்த அ ந்த பூதத்தில் விசேஷமானது தன் பாகம் ஆதலாலும் அன்னம் அப்பு தேஜஸ் என்கிற வ்யவஹாரம் ஏற்பட்டது

தத் வாத தத் வாத -இரு முறை கூறி அத்யாய முடிவைக் காட்டுகிறது

இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால்
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை
ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்
அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும்
மற்றவன் வியாகரணம் செய்வதாயும்
கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே
த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –

————-

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: