ஸ்ரீ நாராயணனின் ஸாத்விகம் பற்றிய பிரமாணங்கள்

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

மைதாரணீய உபநிஷத நிர்ணயம் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய
ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய
தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ (நாலாவது ப்ரபாடகம்)

பரமாத்மா விக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன.
பரம புருஷனானுடைய ராஜஸாமசம் பிரம்மன், ஸாத்வீகாமசம் விஷ்ணு, தாமஸாமசம் ருத்ரன் -என ஓதப்பட்டுள்ளது
ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

———-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே–ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது.
கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம்.

———-

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன:
ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான:
ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம்
பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய்,
ஸர்வேஷ்வரனும், ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய்
ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய்,
எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம்,
தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோ குணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம்.

—————

புருஷ,விஷ்ணு ஸூக்தவிநிர்ணயம்

ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே
லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில்
‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

————–

ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது விஷ்ணுஸூக்த வாசகம்

‘தம தவா கருணமி தவஸமவதவயாந க்ஷயநதமஸ ரஜஸ பராகே’

மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை
அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

————

‘தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)
‘தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)
‘ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)
ஸத்வ குணமுள்ள முன்போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.
“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)
ராமஸஸதபுருஷோலோகே” (அயோத்யாகாண்டம்2:29)

‘ஸ ச சர்வகுணோபேத (பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத (அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே (அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’ (கிஷ்கிந்தாகாண்டம்15:21)

சிறந்த மலைத் தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன்
என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

————–

‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று
நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக அநுஸநித்தது.

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக
பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான்.
அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;
பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும்
இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும்
அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர்.

ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது.

————

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான
அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது.

ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||
ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|
தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||
பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர|| (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத் பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார்.
கல்ப காலம் முடியும் வரை யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை உடைய
விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு
அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார்.
புசித்த பின் உலகம் முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார்.
என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன் ருத்ரன் எனவும் காட்டுகிறது.

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||
ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||
ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ|| (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான்.
ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான்.
ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோ குணத்தைகொண்டு ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று
இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது.

——————

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||
ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||
தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ ||
தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||
தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன.
ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது.
ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன்.
அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ,
அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது,
கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். என ருத்ரனே ஒப்புகொண்டான்.

——————-

லிங்கபுராண நிர்ணயம்

இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம்.

ஹிரண்யகர்ப்போ ரஜஸா தமஸா ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந ஸர்வகோ விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன் தமோகுணத்தோடும்,ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும் ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்
என்று பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ ருத்ரஸ் தமஸா ச ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா
ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத் ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன் கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு ஸத்வ குணமுடையவன்
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத||

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோக நமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும்
லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது.

———————

மத்யஸ்யபுராண நிர்ணயம்

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா | தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||
அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் | ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||
ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே | ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது.
அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது.
ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது.
ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிக பெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் .

—————

ஸ்ரீமத் பாகவத புராண நிர்ணயம்

அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மத விஷயங்களைப் பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள்,
பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும் முக்தியை அடையும்
நோக்கு எனும் அரிய விஷயங்களைப் பற்றி இப்புராணம் அடிக்கடி வசனிக்கிறது.
இதனாலேயே இதை “பரம ஹம்ஸ ஸம்ஹிதை” என்று பெயர் பெற்றது.
இதை வேதவியாஸர் இயற்றிய காரணம், இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து
ஆனந்தித்த சுகபிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை
ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும். இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது.

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|
ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்று குணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே.
ரக்ஷணம், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான்.
அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது.

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||
முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||
ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||

ஆதி காலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுண திருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர்.
அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர்.
கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய்
சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர்.
ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான
ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர்
என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும் தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது.

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு வசப்பட்டவன். தமோகுணமுடையவன்.
ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே.
இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது,
தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன.

——————-

பத்மபுராண நிர்ணயம்

ப்ருகு மஹரிஷி ஸாத்வீக பரம்பொருள் யார் என்பதை யறிய மூவுலகம் சென்று முடிவெடுத்த விஷயம்
பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது.
பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே! ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்
ஜீவாத்ம பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும் ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன.
ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,
உமக்கு என்னிடமுள்ள வாத்சல்யப் பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்ல வேணும்,
முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்?
சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்?
ஐந்து முகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்?
இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும்.

வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன்.
மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவா மனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான்.
அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர்.
ஸத்ரயாகம் நடக்கும் போது பரம் பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர்.
“வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது?
ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்?
எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது?
எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்?
எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ் வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று.

சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர்.
சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
அழிவற்ற தாமரை கண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே
பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர்.
அவர்களின் விவாதம் தொடர்ந்த கொண்டிருக்கையில் ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.
“சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன்.
ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட
மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர்.

“எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அருகில் சென்று ஸத்வகுண சரீரம் கொண்டு
ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” .
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார்.
சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார்.
“தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”.
இதைகேட்ட நந்தி கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார்,
எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”.

இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்க ஸ்வரூபமாக ஆகுக.
தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னை அவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான்,
ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும்.
இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக
வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார்.

அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார்.
முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை,
எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று
இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார்.
இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார்.
(இவ்வாறு நடக்க வேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு
அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி
அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார்.
உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி
வணங்கி சொல்லலானார். அஹோ! என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது?
குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன்.
உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர்.
சுத்த ஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது,

நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது,
மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன் ஸனாதனனான உன்னை பூஜித்து
உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான்.
பித்ரு ஸிராத்தத்தில் உன் தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர்.
உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது.
ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே! தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்),
மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,
வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனே ப்ராஹ்மன்யன்,
ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன்,
கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனே
ப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,
இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும்
ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம்,

ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான பரமாத்மாவுக்கு உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம்.
எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா!
உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!
அப்பாதஹமான செயலை பொறுத்தருள வேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார்.

வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தை யுறைத்தார்.
ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம் பெறுவான்.
அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத் நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை.
ஆகையால் மற்றயவர்களை விட்டு பழையோனாகிய விஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது

மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும்
ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம்.
ருத்ர பக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம்.
தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல்
“மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம்.
எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.

இதே புராண வாயிலாகவே புராண நிர்ணயமும் பார்வதி பரமேஸ்வரனின் சம்பாஷனையினூடே தெளிவுற விவரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டத்திலே 263ம் அத்யாயத்தில்
“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர்.
அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள்.
அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ,
அவருக்கு சமமாக ப்ரஹ்ம ருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ,
கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை
யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ
சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.

இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான
அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச் சென்று
நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேத தர்ம நிஷ்டர்களாய்
விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர்.
அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும்
என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும்
பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க
இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க
தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும்.
ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால்
உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.

இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற
தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய்.
இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன.
என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள்.

வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது.
இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன.
கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது.
தேவ குருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது.
திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய
பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது.
கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது.
வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும்.
அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும்.
அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது.
ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம்
வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது.
நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள்
1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம்
ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள்
1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம்
4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம்
தாமஸ குண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள்
1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம்
இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை
(+வாஷிஷ்டம்,ஹாரிதம், வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்) கொடுக்கும்
மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது.

——————————-

ஸ்கந்தபுராண நிர்ணயம்

சைவர்களால் சிவ, லிங்க புராணங்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் புராணம் ஸ்கந்தபுராணமே;
அப்புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு
உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது.

ஜைமினி சொன்னார்-
இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,
வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான்.
“உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்?
அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தி யுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ!
புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ
ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை முக்தியையடைகின்றனர்” என
ப்ரஹ்ம ஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார்.

பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்?
வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம் என்பவற்றை பகவான் செய்கிறார்.
ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;
அந்த புருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்,
இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என
தாமஸ குண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது.

இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம்
மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி.
அதுவே எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’. என்கிறார்.
இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது.

————-

‘யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ
எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே
என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராய பரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

—————–

‘ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர்
பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய்
ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன்
என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

———————–

பிதா புத்ரணே பித்ருமாந் யோநியோநௌ நாவே தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்” [யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந” [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்” [புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

————

ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந (பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று.
எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது?

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ| நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய்,
பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது.

————————-

ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது
‘ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி|

( இதைக்கேட்ட ருத்ரன் தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்”
என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால்

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை
மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும்
திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச் சான்றோரும்
‘….பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடி வைத்தனர்

——————-

‘ ந து நாராயணாதீதாம் நாம்நாமந்யத்ர ஸம்பவ| அந்யநாம்நாம் கதிர் விஷ்ணுரேக ஏவ ப்ரகீர்த்தித|
ருதே நாராயணாதீநீ நாமிநி புருஷோத்தம:| ப்ராதாததந்யத்ர பகவான்…‌…..‌.

நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்கமாட்டா,மற்ற தெய்வங்களினன் பெயருக்கு
விஷ்ணு ஒருவனே சேருமிடமாக கீர்த்திபெற்றிருக்கிறான்.
நாராயண நாமத்தை தவிற பிறபெயர்களை அவனே பிறதேவதைகளுக்கு கொடுத்தான் என்கிற வாமனபுராண வசனம்

—————

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய
பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை
ஸ்ருதி, ஸ்மிருதி இதிஹாச புராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: