ஆகம ப்ராமாண்யம்

யத்பதாம்போருஹ த்யாந வித்வஸ்தாஸேஷகல்மஷ |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் | (“கீதாபாஷ்ய மங்களம்”)

எவருடைய திருவடித்தாமரைகளை தியானிப்பதால் எல்லா தோஷங்களும் நீங்கப்பெற்று யான் ஒரு பொருளாக ஆனேனோ,
அத்தகைய யமுனைத்துறைவரை வணங்குகிறேன்.

——–

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க்ரஹம்|
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர தம் வந்தே யாமுநாஹ்வயம்||

[யதிகளுக்குத் தலைவரும், மறை பொருளின் உயரிய அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படியாக
ஶ்லோகங்களாக அருளிச் செய்தவருமான ஸ்வாமி யாமுந முநியை வணங்குகிறேன்.]

—–

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

“ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ||-(கூரத்தாழ்வான் அருளிய “வரதராஜஸ்தவம்” ஸ்லோகம் 102).

எம்பெருமானாரின் (இராமானுசர்) திருவடிகளை உபாயமாக உடையவனாகிறேன்.
அந்த எம்பெருமானார் யாமுநமுனியின் (ஆளவந்தார்) குலவிளக்காக இருக்கிறார்.
அந்த யாமுநமுனியாகிற ஆளவந்தார் நாதமுனிகள் திருவம்சத்தவர். அந்நாதமுனிகள் நம்மாழ்வாரின் வழி வந்தவர்.
அந்த நம்மாழ்வாரும் பெரியபிராட்டியின் (ஸ்ரீரங்க நாச்சியார்) திருவருள் பெற்றவர்.
வரதராஜரே! இவ்விதம் தேவரீருக்கு (உமக்கு) வழிவழித் தொண்டன் அடியேன் என்று
கடாக்ஷத்துக்குப் பாத்திரமாக இருக்கக் கடவேன் ஆகிறேன் என்று உரைக்கிறார் கூரத்தாழ்வான்.

விதாய வைதிகம் மார்க்கம் அகெளதஸ்குதகண்டகம் |
நேதாரம் பகவத்பக்தேர் யாமுநம் மநவாமஹை || ( ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்லோ.1.4)

ஏன் ஏன் என்று கேட்டு விதண்டாவாதம் செய்யும் வாதியராம் இல்லாததாக வைதிக நெறியைச் செய்து (அதில்),
அழைத்துச் செல்பவராய் பகவானிடம் தழைத்தோங்கச் செய்பவரான ஆளவந்தாரை தியானிப்போமாக.

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும் விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்கா விட்டால் பரம வைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக் கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

————-

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம –

வைகானஸம் பாஞ்ச ராத்ரம்

வைகானஸ ஆகமம் மகாவிஷ்ணுவால் சொல்லப்பட்டது என்பது ஐதீகம்.
வைகானஸ ஆகமத்தின் மூலமந்திரங்கள், ரகசிய விவரங்கள் ஆகியவற்றை விஷ்ணு உபதேசிக்க, விகனச முனிவர் எழுதி வைத்தார்.
வைகானஸ ஆகமத்துக்கு ‘பகவத் சாஸ்திரம்’ என்ற பெயரும் உண்டு.
பாஞ்சராத்ர ஆகமமும் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புகளையும் முறைகளையும் விவரிக்கிறது.

உட்பிரிவுகள்

சைவ ஆகமங்களுள் காமிகம், காரணம் என்ற இரண்டும் முக்கியமானவை ஆகும்.
ஆலயம் அமைப்பதற்கு கச்சிதமான இடத்தை தேர்ந்தெடுத்தல், கட்டிடம் நிர்மாணிக்கும் முறை,
சிற்பிகள் மற்றும் அர்ச்சகர் ஆகியோரது தகுதி நிலைகள், கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வது
போன்ற தகவல்களை இவை விரிவாக தருகின்றன.

—————-

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும்
விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்காவிட்டால் பரமவைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக்கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸ்ரீ ஆளவந்தாருக்கு முன்னர் குமரில பட்டர் என்ற மீமாம்சகர் இந்த ஆகமங்கள் வேதத்திற்கு புறம்பானவை என்றும்,
ஆதிசங்கரர் இவைகள் வேதாந்தங்களுக்கு முரண்பட்ட சில கருத்துக்களைக் கொண்டவை என்றும் தெரிவிக்கின்றனர்.
இக் கருத்துக்களைக் களைந்து பரம காருணிகரும், ஸர்வஜ்ஞனுமான ஸ்ரீ வாசுதேவன் வாயிலாக அவதரித்த
பாஞ்சராத்ர சாஸ்திரங்கள் வேத துல்யமானது என்று ஸ்தாபித்து மேலும்
பாட்ட, பிரபாகர, நையாயிக, அத்வைத மத வாதங்களையும் கண்டித்திருக்கிறார்.

——————————————————-

நிகமம் -வேதம் அங்கு போகும் வழியைச் சொல்லும்
ஆகமம் -அவன் இங்கு வந்து நம்மை அனுக்ரஹிக்கும் வழி
ஆகமம் (ஆ+ கமம்) என்பது தூய தமிழ் சொல்.
ஆ என்பது உயிர்களை குறிக்கிறது. எனவே உயிர்கள் கடை சேருவதற்காக அருளப்பட்டது.

மார்க்கண்டேய சம்ஹிதை
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
அறியாமை இருளைப் போக்கும்
ஐந்து இரவில்
பவ்ஷ்கார சம்ஹிதை – வேதம் வேதாந்தம் புராணம் சாங்க்யம் யோகம் ஐந்து சாரம்
விஸ்மித்ர சம்ஹிதை -ஐம்புலன்களில் இருந்து காக்கும்
அஹிர்புத்யை சம்ஹிதை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை சொல்லும்

வக்தா நாராயண ஸ்வயம் -வேதத்துடன் தொடர்பு இல்லை என்று சிலர் தயங்கி பிரமாணம் இல்லை என்பர்
வைகானச ஆகமம் யஜுர் வேத பகுதி
மீமாம்சகர் -குமாரில பட்டர் பாட்டர் -பிரபாகரர் -இரண்டு வகை -எதிர்க்கிறார்கள்
நையாயிகர்-நியாய மதம் – முழுமையாக எதிர்க்க வில்லை
அத்வைதிகள் நால்வரும் பூர்வ பக்ஷிகள்

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம

முழுவதும் உடல் மிசை உயிர் எங்கும் கரந்து பரந்துள்ள -விஷ்ணு-
எல்லாவற்றையும் கை இலங்கு நெல்லிக்கனி போல் உள்ளபடி காணும் அவனுக்கு -அவனுக்கு நமஸ்காரம்
(அந்தமில் பேர் இன்பம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலா
விநத விரத பூத வ்ரத ரக்ஷைக தீஷே -மோக்ஷ பிரதம் தனியாக ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் )
உள்ளபடி கண்டே பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் அருளி உள்ளான் என்று காட்டுகிறார்
விஷ் -உள்ளே நுழைந்து -வியாபித்து -அவனுக்கு நமஸ்காரம்

தூரமான கம்பீரா சாராசாரா -விவேகம் அறிந்தவர் புகழ்வார் -பொறாமை இல்லாதவர்
சமயச -சமகாலத்தில் உள்ளவர் நான் சொல்லும் நல்ல வார்த்தைகளில் குறை
பழிக்கில் புகழ்

தத்வ விசாரம்
பாட்ட பிரபாகர் நையாயிக அத்வைதி மற்றும் வேறே சிலர் -ஐவர் -ஆளவந்தார் மறுத்து சாதிக்கிறார்
பாட்ட மீமாம்சகர் -வேதம் மட்டுமே பிரமாணம் -உபநிஷத் கூட ஒத்துக் கொள்ளார் -முழுக்கவே பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை
பிரபாகர் -முன் பாக வேதம் -இதில் கட்டளை வாக்கியம் மட்டும் கொள்வார் -இவரும் பிரமாணம் இல்லை என்பர் –
நையாயிகர்-logic – அக்ஷபாதர் நியாயமதம் -ஏற்றுக் கொள்பவர்
வேதமும் மனிதனால் கொடுக்கப் பட்டது என்பர்
வேதாந்த க்ருத் -என்று கண்ணன் கீதை அருளியதை -வேத க்ருத் இல்லை -புருஷனால் செய்யப்பட்டது இல்லையே
அனுமானத்தால் ஏற்றுக் கொள்பவர் இவர்
நிர்விசேஷ அத்வைதி –
அபிகமனம் போன்றவற்றை எதிர்க்க வில்லை –
தத்வ ரீதியான -வாசுதேவன் இடம் சங்கர்ஷணம் பிறந்தான் போன்றவற்றையும்
கைங்கர்யம் போன்றவற்றையும் மட்டும் எதிர்ப்பார்
வேறே ஆகம வாதி தங்கள் ஆகமமே பிரமாணம்
இப்படி ஐவர் பூர்வ பக்ஷம் –

கர்மம் செயலே பலன் கொடுக்குமா -அபூர்வம் கல்பித்து பாட்ட மதம் -இறைவன் கொண்டு வர வேண்டாம்
வேதமே ஸ்வயம் பிரமாணம் –
பாஞ்சராத்ரம் ஒருவரால் கொடுக்கப் பட்டதால் பிரமாணம் இல்லை
தீக்ஷை எடுத்துக் கொண்டு ஆராதனம் பண்ணி முக்தி ஒத்துக் கொள்ள முடியாதே
ப்ரத்யக்ஷம் இல்லையே என்பர்

நையாயிகர் எழுந்து -ஒருவர் சொல்வதாலேயே தப்பு ஆகுமா
ஒரு பகுதி பூமி பார்க்கிறோம்
பறவை முழுவதும் பார்க்கும்
பார்க்காத ஒன்றை ஒருவர் சொல்வதால் பொய் ஆகுமோ
microscope பார்த்து சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்
அதிகமான சக்தன் -ஞானம் உள்ளவன்-பார்த்து -சொல்வதை தப்பு என்னலாமோ
இவர்கள் பர ப்ரஹ்மம் ஒத்துக் கொள்ளாதவர்

இதுக்கு பாட்ட மீமாம்சார் -இப்படிப்பட்ட ஒன்றை ப்ரத்யக்ஷமாக காண்பது ஸாத்யம் இல்லை –
அப்படி உள்ளவர் என்பதே வலிமை இல்லாத வாதம் என்பர்
அனுமானத்துக்கும் விரோதம் என்பர் -முன்பே பார்த்து இருந்தால் தானே யூகிக்க முடியும்
புகை நெருப்பு பார்க்காமல் அனுமானிக்க முடியாது
வேதத்துக்கே எதிரானது என்பர் -தனி மனிதன் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதே

அடுத்து -உபமானத்துக்கும் விரோதம் -உவமை சொல்லி விளக்க முடியாதே –
அர்த்தா பத்தி -சந்தர்ப்பத்தால் அறியும் அறிவு
தேவதத்தன் குண்டாய் உள்ளான் -பகலில் உண்ண மாட்டான்
என்றால் இரவில் உண்பான் என்று சொல்வது அர்த்தா பத்தி
நான் இத்தை தனியாக கொள்ளாமல் அனுமானத்தின் உள்ளே சொல்வோம்

நையாயிகர்-எழுந்து பேசுகிறான் -மனு ஸ்ம்ருதி -வேதம் இல்லாவிட்டாலும் கொள்கிறோம் அன்றோ –
மனு சொல்வது வேதத்துக்கு சமம் -தத் பேஷஜம் -நாமும் சொல்கிறோமே

இதுக்கு ஆறாவது வாதம் பாட்ட மீமாம்சகர் -மனு ஸ்ம்ருதிக்கு வேதத்துக்கு தொடர்பு உண்டு
இதுக்கு இல்லை –
ஜைமினி கர்ம மீமாம்ஸா ஸூத்ரம் -மனு ஸ்ம்ருதியும் வேதத்துக்கு நிகர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி -ஸுர்தா ஸ்மார்த்த –
பாகவதர்கள் என்று பிரித்து -ஒதுக்கி -வேதியர் கோஷ்ட்டியில் கொள்ளாமல் –
ஸம்ஸ்காரங்கள் –40-க்கு மேல் உண்டே -வேதியர் என்று கொள்ள முடியாது என்பர் –
விக்ரஹம் உடுத்துக் களைந்த மாலை அணிய மாட்டார் -பிரசாதம் கொள்ள மாட்டார்
சாண்டில்யர் -நான்கு வேதம் படித்தும் பலன் பெறாமல் பாஞ்ச ராத்ரம் பெற்று பலன் -வேத நிந்தனை என்றும் வாதம்
உப நயனம் -மட்டும் போதாது தீக்ஷை கொள்ள வேண்டும் என்று அதிகமாக
14-வித்யா ஸ்தானங்களில் இது இல்லையே
உத்பத்தி அசம்பவாத் வியாசர் தாமே ஒத்துக் கொள்ள வில்லை என்பர்

நையாயிகர் அடுத்து
வேதம் அடிப்படை இல்லை என்பதுக்காக எதுக்கு நிராகரிக்க வேண்டும்
இதை அனுக்ரகிக்காவிடில் வேதத்தையே நிராகரிக்க வேண்டும்
இரண்டும் சக்திமான் ஒருவனால் தந்தவை
அனுமான வாதிகள் -காரியம் இருக்க காரணம் இருக்க வேண்டும்
அபூர்வம் ஜடம் படைக்க முடியாதே -நன்கு அறிந்த சேதனன் தானே படைக்க முடியும்

பாட்ட மீமாம்சகன் -எழுந்து வேதத்துக்கு கர்த்தா இல்லை -சொல்லி இருந்தால் மனிதன் -கர்ம வஸ்யன்
எங்கு இருந்து கொடுத்தார் –
உலகைப் படைக்க தர்மம் தெரிய வேண்டாமே
குயவனுக்கு தண்ணீர் மண் chemical அறிவு வேண்டாமே
சரீரத்துடன் கூடி விருப்பத்துடன் உள்ளவன் தானே கார்யம் செய்வான்
தானே விளையும் வயலில் புல் -அதே போல் ஸ்ருஷ்ட்டி
எதைக்கொண்டு எங்கு இருந்து படைக்கிறான்
கருணை உடன் படைத்தால் துக்கம் சுகம் எதற்கு
பாப புண்யம் அடியாக என்றால் அது இவனை விட உயர்ந்ததா -இல்லை என்னலாம் என்கிறான்

ஆளவந்தார் –
சாஸ்த்ர யோநித்வாத் -ஸ்ருதி சிரஸ்ஸில் உள்ளவன் -சத ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -சாரத்தை விட்டு சக்கையைப் பற்றுவார்களோ என்றார்

பிரபாகரர்
கர்ம மீமாம்ஸையிலும் சிலவற்றையே கொள்வார்
புல் பச்சை என்றால் ஒத்துக் கொள்ள வேண்டுமோ
மஞ்சளாக உலர்ந்து இருந்தால்
கண்ணால் பார்ப்பதில் கண் முக்கியம்
ப்ரத்யக்ஷம் போல் வேதம் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் நம் கொள்கை
கட்டளை வாக்கியங்களை மட்டும் கொள்ள வேண்டும் என்பர்
பசு கொண்டு வா -சொல்ல கொண்டு வருதைப்பார்க்கும் குழந்தை பசு என்ன அறியும்
ஆத்மாவால் த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்வய மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -விதி வாக்கியம்
கொள்ள முடியாது என்பர்
யூப ஸ்தம்பம் ஸூர்யன் -அர்த்தவாதம் சுருதி சொல்லும்
உயர்வு நவிற்று அணி –
சொந்த விருப்பு உடன் சொல்லி இருக்கலாம்

ஆளவந்தார்
முழுவதாக உபன்யாசம்
பரம பிரமாணம்
ஜ்யோதி ஷ்டோ ஹோமம் சுவர்க்கம் தரும் போல் இதையும் நம்ப வேண்டும்
நையாயினரை முதலில் நிரஸித்து
வேதத்துக்கு புறம்பானது எது கேள்வி –
ஸப்த வடிவு -ஆப்த வாக்கியம்
பாஞ்ச ராத்ரம் பர ப்ரஹ்மம் பற்றியும் சொல்லும் -அதுக்கு அடிப்படை வேதம் தானே
வேத அடிப்படை இதுக்கும் உண்டு

அடுத்து மீமாம்சகர்கள் இருவரையும் நிரசிக்கிறார்
இதம் மஹ உபநிஷத் கொண்டாடி உள்ளார்கள் ரிஷிகள்
தர்க்க ரீதியிலும்-விரோதம் இல்லை
வார்த்தையிலே முரண் -வாழ் நாள் முழுவதும் மௌன விரோதம் இருப்பேன் பேசுவது போல்
தர்மி யுக்த விரோதம் மலடியான தாய் போல் இல்லை
உலகங்கள் இல்ல எல்லா வாக்கியமும் பொய் -என்றால் இதுவும் பொய்யா உண்மையா
அஹிம்சா சர்வ பூதானாம்
யாகத்தில் பலி
இரண்டுமே வேதத்தில் உண்டு
சாமான்ய விதி -விசேஷ விதி என்று கொள்ள வேண்டும்

பேச்சு மூலம் வந்தாலே குற்றம் இல்லை
எல்லா வார்த்தைகளும் தமக்கு உள்ள அர்த்ததைக் கொடுக்கும்
பசு மாட்டைப் பார்த்தேன்
எருமை மாட்டைப்பார்த்து சொன்னாலும் அதே அர்த்தம் -சொல்லுவன் குற்றம் தானே
இங்கு ஸர்வஞ்ஞன்-காருணிகன் -சர்வ சேஷி -குற்றம் வராதே –

உனக்கு ஒரு பிள்ளை பிறந்து உள்ளான் -கட்டளை வாக்கியம் இல்லை -ஆனாலும் கேட்டு மகிழ்கிறோமே
பாதி கிழவி பாதி குமரி சொல்வது போல் கட்டளை வாக்கியம் மட்டுமே கொள்வது
மந்த்ர சக்தியால் நெருப்பு சுடாமல் இருக்கும் -எங்கும் சுடாது சொல்ல கூடாதே
சிப்பி பார்த்து வெள்ளி -கண்ணில் கோளாறு -என்று கொள்ளக் கூடாது
ஏதோ ஒரு சமயம் பிரமம் வரலாமே
வார்த்தை பொருள் சம்பந்தம் அறிந்தால் -அத்தனை வார்த்தைகளும் அர்த்தம் கொடுக்கும்

ப்ரத்யக்ஷத்துக்கு விரோதமும் இல்லை –
நம் கண்ணுக்குத் தெரியாது
கண் இல்லாமல் பார்க்கிறான் -அவன் பார்வைக்கு இலக்கு ஆகுமே
அதுவே மங்கள ஸ்லோகத்தில் பஸ்யதே விஸ்வம் என்றார்

அர்த்த வாதம் -சில இருக்கலாம் -யூப ஸ்தம்பம் ஸூர்யன்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நாராயணனே பரஞ்சோதி பரமாத்மா
ஞானத்தால் அறிந்து அருளிய ஸாஸ்த்ரம்
முக்தி அடைய நல்ல வழி -ஆராதனம் செய்து உஜ்ஜீவிக்க –

மற்ற ஆகமம் -கொடுத்தவர்கள் சம்சாரிகள் -குற்றம் வருமே
இங்கு சங்கை கொள்ள வேண்டாமே
ப்ரஹ்மஹத்தியும் அஸ்வமேதம் ஒன்றாகாதே
லகு உபாயம்

வேத நிந்தனை -சாண்டில்யர் -வேதம் கற்று பலன் கிடைக்க வில்லை -இதனால் உஜ்ஜீவித்தேன்
நஹி நிந்தா நியாயம் இது –
பூமா வித்யா -சாந்தோக்யம் -பெருமை சொல்வது போல்
மஹா பாரதம் -தட்டில் வேதங்களை வைக்க இது உயர்ந்தது சொல்வது போல்
தத்வ ஞானம் சொல்வதில் வேதாந்தம் போல் இல்லை என்று பாஞ்சராத்ரமே சொல்லுகிறது
தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோமே போல்

உப நயனம் வைதிக சம்ஸ்காரம் -basic qualification

14 வித்யா ஸ்தானம் -ப்ரஹ்ம ஸூத்ரம் ராமாயணம் இவையும் இல்லையே

வியாசர் -2-2-39-உத்பத்தி அசம்பவாத்
ஜீவாத்மா தோன்றுவது சொல்லுவதால் அத்வைதி
நிராகாரத்துக்கு சொல்ல வில்லை
உத்பத்தி சொல்ல வில்லை
வாசுதேவன் -சங்கர்ஷணன் ஜீவன் -இதில் இருந்து -தோன்றி -ப்ரத்யும்னன் மனஸ் –
அநிருத்தினான் அஹங்காரம் தோன்றினான் சொல்லி
தத்துவத்துக்கு அதிபதி என்பதால் ஜீவ சப்தம்

விசித்ர தேக சம்பந்தி
தண்ணீரில் இருந்து ஜீவாத்மா படைத்தான் வேதம் சொல்லும் -வெளிப்படுத்தும்
சரீரம் எடுத்துக் கொள்வதையே தோன்றுவது

2-2-41-ஜீவன் இடம் -திவ்ய
அத்வைதி -நால்வரும் ஸ்வ தந்தரரா -சமமா -ஒரே ஒருவர் நான்கு வடிவா
ஏக வாஸூதேவ -லீலைக்காக பல வடிவம்
ராமன் நால்வராக
பலராமன் கண்ணன் இருவராக வந்தார்
விரோதம் இல்லை
அடுத்து வேறு விதமாக ஆளவந்தார்
இந்த அதிகரணம்
முதல் இரண்டு பூர்வ பக்ஷம்
அடுத்த இரண்டு சித்தாந்தம்
வியாசர் பதில் விஞ்ஞானாதி இரண்டும் ப்ரஹ்மத்தை குறிக்கும் ஆதி யாகவும் விஞ்ஞானமாகவும்
அவனே நான்கு வடிவமாக கொள்ளும் பொழுது விரோதம் இல்லையே
விப்ரதிஷேதாத் -நீங்கள் வைத்த எதிர்ப்பு முரண்பட்டு உள்ளது
கர்த்தா கருவி -வராதா அரிவாள் தானே பண்ணி வெட்டலாம்
விஞ்ஞானம் -அவனைப்பற்றிய ஞானம் -ஆதி அதுக்கு மூல காரணம் பாஞ்ச ராத்ரம்
நாராயணன் கொள்கைக்கு முரண்பாடு இல்லை
இன்னும் ஒரு வியாக்யானம்
ஞானத்தின் உத்பத்தி வராது
கர்த்தா இடம் வராது பூர்வ பக்ஷம்
விஞ்ஞானம் அறிவுக்கு ஆதி மூல காரணம் நாராயணனே இருக்கிறான்
மயக்க அருள வில்லை விப்ரதிஷேதாத் -கருணையே வடிவானவன்
தீய சக்திகளைத் தான் மயக்குவான்
ஏமாற்ற கொடுக்க வில்லை

பரத்வாஜர் நாரதர் போல்வார் பாஞ்ச ராத்ரம் பின் பெற்ற
பாகவதர் -சாஸ்ஸ்த்ரஞ்ஞர் -வாசி
சத்வ குணம் -சாத்விகர்
பாகவதர் -விசேஷித்து சொல்வதால் முரண்பாடு இல்லை

——–

உபபத்ய சம்பவாதி கரணம்
ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
-ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிராமண தமம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை

இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரமபுருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச –42-
இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து
ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுகத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்
இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம் அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

—————-

விக்ரஹ பூஜையால் ஜீவனம் நடத்தக் கூடாதே இன்னும் ஒரு வாதம்
பிரார்த்தனைக்காகவே பூஜிக்கிறார்கள்
அர்ச்சகர் -சம்பாவனை -பூஜை நிறைவு பெறவே வாங்கிக் கொள்கிறார் –
ஹோதாவுக்கு தக்ஷிணை கொடுத்தால் தான் யாகம் நிறைவு பெரும்

உடுத்துக் களைந்த -பிரசாதம் கொள்ளக் கூடாது
என்றால் நீங்களே ஒத்துக் கொண்டீர்கள்
தேவதைகள் குடி இருப்பதை ஒத்துக்கொண்டே இந்த வாதம்
ஆவாஹனம் சத்யம்
நிர்மால்யம்-அவசியம் பிரசாதம் கொள்ள வேண்டும்
அடியார்கள்
மூர்க்கர்களுக்குக் கொடுக்கக் கூடாது
பாவனங்களுக்கு பாவானத்வம் கொடுக்கும் பிரசாதம்
தேவதாந்த்ர நிர்மால்யம் தான் தவிர்க்க வேண்டும்
பிராண அக்னி ஹோத்தரம் போல் விஷ்ணு பிரசாதம் –

ஸ்ரீ நாதமுனிக்கு இது ஆனந்தம் கொடுக்கும் என்றும்
அவர் அருளாலே இந்த கத்ய பத்யம் வந்தது என்றும் அருளிச் செய்து நிகமிக்கிறார் –

————–

வைகானஸ ஆகம பிரமாணம்

ஸ்ரீமத்யாயதநே விஷ்ணோஃ சிச்யே நரவராத்மஜஃ
வாக்யதஃ ஸஹ வைதேஹ்யா பூத்வா நியதமாநஸஃ என,
மேலும் வேதத்தில் கூறப்பட்ட யாக மார்கத்தை ஆச்வலாயன ரிஷி முதலானவர்கள் ச்ரௌத ஸூத்ரமாக உபதேசித்தது போல்
வேதத்தில் கூறப்பட்ட தேவபிம்பபூஜையை ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரப்ரவர்தகரான ஸ்ரீவிகனஸ மஹர்ஷியு்ம்
அவருடய சிஷ்யர்களான ப்ருகு, அத்ரி, கச்யப, மரீசி மஹரிஷிகள் உபதேசித்தபடியால் இதுவும் ப்ரமாணமாகும்,
மேலும் ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் அமூர்தமான பூஜாநடைமுறையை மட்டும் ச்ரௌத ஸூத்ரங்களால் விளக்கினார்கள்,

ஸ்ரீவிகநஸ மஹரிஷியோவெனில் ச்ரௌதத்துடன் நிற்காமல் தர்ம க்ருஹ்ய ஸூத்ரங்களையும் உபதேசித்து
மற்றவர்களால் விடப்பட்ட ஸர்வலோகத்துக்கும் க்ஷேமத்தை பண்ணுகிற மூர்தியுடன் கூடிய பகவதாராதநத்தையும்
உபதேசித்து லோகத்ததுக்கு மஹோபகாரத்தை செய்தவராவார், ஆதலால் பிம்பத்தை பூஜிப்பது வேதத்தில் கூறப்பட்டதால் ப்ராமாணிகமாகும்.

ஆயினும் சிலரின் ஆக்ஷேபம் வருமறு,
ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்ரீவ்யாசமஹரிஷி பாஞ்சராத்ராகமம் ப்ரமாணம் என ஸ்தாபித்தார்,
ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிடவில்லை, அதுவும் ப்ரமாணமாகில் குறிப்பட்டிருப்பார்,
இது போல் ஸ்ரீயாமுனாசார்யரும் ஸ்ரீபாஞ்சராத்ராகமம் ப்ரமாணமென ஆகமப்ராமாண்யம் என்ற கரந்தத்தால் ஸாதித்தார்,
அவரும் ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிவில்லை ப்ரமாணமாகில் அதை உபேக்ஷிக்க காரணமென் என.

இதின் வாஸ்தவமான ஸமாதானம்,பாஞ்சராத்ராகமம் ப்ரமாணமில்லை என கூறுவதில் அநேக காரணஙகள் இருந்தன ,
அவையாவன,
நிர்மூலம்,
அஸத்பரிக்ரஹம்,
அவைதிக ஸம்ஸ்கார விதானம் . வித்யா ஸ்தானத்தில் உள் படுத்தாது ,
வைதிகஸம்ஸ்காரத்தை விட்டது, என,

ஆதலால் மந்தபுத்தியை உடையவர்கள் அதை ப்ரமாணமில்லை என கூற அவைகளுக்கு ஸமாதானம் கூறி
அதை ப்ரமாணம் என ஸாதிக்க வேண்டியிருந்தது,
அதுபோல் ஸ்ரீவைகைநஸம் ப்ரமாணமில்லை என ஆக்ஷேபம் இல்லாததால் ஸமாதானம் கூற ஆவச்யகமி்ல்லை ,
ஆதலால் அவர் அதை குறிப்பிடவில்லை,

ஆயினும் ஸ்ரீயாமுனமுனியானவர் ஸ்ரீபாஞ்சராத்ராகமத்துக்கு ப்ராமாண்யம் கூறியது போல்
ஸ்ரீவைகாநஸத்துக்கு ப்ராமாண்யம் கூறாததால் இது ப்ரமாணமில்லை என கூறுவர் என்று நினைத்தே
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தி எனும் நூலில் ஸ்ரீவைகாநஸ சாஸ்த்ரத்தை குறித்து
1,வேதாவிருத்தத்வாத்,
2.வைதிகமந்த்ரைரேவ ஸகலகர்மவிதாநாத்,
3,ஸூத்ராந்தராணாமபி குண்டஸம்நிவேசலகேஷணாதிஷு க்வசித் க்வசித் ததுபஜீவநாத்,
4.வர்ணாச்ரமதர்மாணாமனுகூலம் நாராயாணபரத்வப்ரதிபாதநாதேரபி
5.ஸத்வமூலத்வேன
6..ப்ராமாண்யைகஹேதுத்வாத்.
இந்த பகவத் சாஸ்த்ரம் வேத விருத்தமல்லாததால், வைதிக மந்த்ரங்களாலேயே எல்லா கர்மாக்களையும் அனுஷ்டிப்பதால் ,
மற்ற ஸூத்ரங்களிலும்,குண்டங்களை நிர்மாணம் செய்வதில் சிலவிடங்களில் ஸ்ரீவைகாநஸத்தை அனுஸரிப்பதால்,
வர்ணாச்ரம தர்மங்களுக்கனுகுணமாக நாராயணனே பரதேவதை என உரைப்பதால்
ஸத்வமூலமுமானபடியால் ப்ரமாணமென்பதில் மாத்ரம் இது காரணமானபடியால் இது ப்ரமாணமாகும் என,

மேலும் ஸ்ரீவைகாநஸானுஸாரிகளை குறித்து
த்ருச்யந்தே ஹி ஏதே வம்சபரம்பரயா வேதமதீயாநாஃ , வைகாநஸஸூத்ரோக்தவைதிகஸகலஸம்ஸ்காரசாலிநஃ,,
வர்ணாச்ரமதர்மகர்மடாஃ , பகவதேகாந்தா, ப்ராஹ்மணாஃ..
ஸ்ரீவைகாநஸர்கள் வம்ச பரம்பரயாய் வேதாத்யயனம் செய்தவர்களாய், வைகாந ஸஸூத்ரத்தில் கூறியபடி
எல்லா வைதிக ஸமஸ்காரங்களை உடையவர்களாய் வர்ணாச்ரம தர்ம கர்மாக்களை அனுஷ்டிப்பவர்களாய்
பகவானிடத்தில் மாத்ரம் பக்தியை உடைய ப்ராஹ்மணர்களாக காணப்படுகிறார்களல்லவா என ஸாதிக்கிறார்,

ஸ்ரீபாஷயகாரருக்கு பின்பு ஸ்ரீவைகாநஸம் ப்ரமாணமில்லை என எழுந்த ஆக்ஷேபத்தை பரிஹரித்து
ஸ்ரீவைகானஸாகமத்தை ஸம்ரக்ஷித்தவர் ஸ்வாமி தேசிகனானபடியாலேயே
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரானுயாயிகளான ஸ்ரீவைகாநஸ பட்டாசார்யர்கள் அனைவரும்,
க்ருதக்நே நிஷ்க்ருதிர் நாஸ்தி என சாஸ்த்ரம் கூறியபடி ஸ்வாமி தேசிகனின் அவதாலஸ்தலமான ஸ்
ரீதூப்புலில் கைங்கர்யம் செய்துவரும் பட்டாசார்யர்களைப்போல்,
ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்தி ச்ரத்தையுடன் க்ருதஞதையுடன் இருக்க ப்ராப்தம் என்பதாகிறது.

ஸ்ரீவைகாநஸாகமமானது சதுர்தச வித்யாஸ்தானத்தி்ல் ஒன்றான தர்ம சாஸ்த்ரத்தி்ல் சேர்ந்ததாகும்,
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தியில் மன்வத்ரிபார்கவாதிவத், மனு, அத்ரி, ப்ருகு முதலானவைகள் கூறியதும்
தர்மசாஸ்த்ரமாகும் என ஸாதித்தார்,
ஸ்ரீமத்பாகவதத்தில் வைதிகஸ்தாந்த்ரிகோ மிச்ர இதி மே த்ரிவிதோ மகஃ என்பதால்
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரத்தில் கூறியபடி செய்யும் ஆராதனமே வைதிகமாகும்–
பாஞ்சராத்ரோக்தாராதனம் தாந்த்ரிகமாகும்,மற்றது மிச்ரமாகும்,
மூர்தயஜனம் ஆமூர்தயஜனம் என்று இரண்டுவிதமான பகவதாராதனத்தில் ஸமூர்தமான ஆராதனத்தை குறிப்பிடும்

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தில் உள்ள ஸாம்யம் வருமாறு,
எல்லா வைதிககர்மாக்களுக்கும் மூலம் அக்ந்யாதாநமாகும், அதாவது,ஓரிடத்தி்ல் அக்னியை ப்ரதிஷ்டை செய்வது,
1,அக்ந்யாயதனங்களில் ஹிரண்யத்தை வைக்க வேணும், அது போல் பிம்பத்தி்ன் பீடத்தில் ரத்னாதிகளை வைக்கிறார்கள்,,
2,யாகத்தில் அக்னி, கார்ஹபத்யம், ஆஹவனீயம், அன்வாஹார்யம்,ஸப்யம், ஆவஸத்யம் என ஐந்து விதமாகும்,
ஆகமத்தில் த்ருவபேரம், கௌதுகபேரம், உத்ஸவபேரம்,ஸ்நபநபேரம், பலிபேரமென ஐந்து வகை உள்ளது,
3.ச்ரௌதத்தில் கார்ஹபத்யத்தில் நின்றும் ஆஹவநீயத்தை எடுப்பதுபோல்
த்ருவ பேரத்தில் நின்றும் மற்ற பேரங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு ஆராதநம் செய்யப்படுகிறது,
4, ச்ரௌதத்தில் சில இடங்களில் த்ரேதாக்னி ப்ரஸித்தம்,
அதுபோல் ஆலயத்திலும் சிலவிடங்களில் மூன்று பேரத்தை மாத்ரம் ஸேவிக்கலாம்,
5.ச்ரௌதத்ததில் நித்யாக்நிஹோத்ரம் போல் ஆலயத்தில் நித்யாராதனமாகும்,
தர்சபூர்ணமாஸ இஷ்டிபோல் ஸ்நபநம் , பஞ்சபர்வோத்ஸவங்கள்,
6.நித்யாக்நிஹோத்ரமும் நித்யாராதனமும் வைதீக மந்த்ரத்தால் நடைபெறுகிறதுகள், மேலும் மற்றுமுள்ள ஸாம்யம்
7.அமூர்தயாகத்தின் துல்யமான பலனும் வைதீக மந்த்ரவத்தான விக்ரஹாராதனத்தால் கிடைக்கும்,

மரீசிமஹரிஷி ஸாதிப்பது-
க்ருஹே தேவாயதனேவா பக்த்யா நாராயணமர்சயேத்,

கச்யபர் ஸாதிப்பது,
தஸ்மாதலயே நித்யம் விதிநா விஷ்ணோரர்சனம், அநாஹிதாக்நீநாமக்நிஹோத்ரஸமம்
யஸ்மாதேதச்சாக்நிஹோத்ரபலம் ததாதி,

ஆனபடியால் ஆலயத்தில் நித்யம் விதியுடன் கூடிய பகவதாராதனம் என்பது
ஆஹிதாக்னியல்லாதவர்களுக்கு அக்னி ஹோத்ர ஸமமாகும், காரணம் கூறுகிறார்
ஆராதனமானது அக்நி ஹோத்ரபலத்தை கொடுக்கும் என,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பல ஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவதுபோல்,
உதாஹரணமாக
மழையை வேண்டி காரீரி இஷ்டி செய்வதால் நடத்தியவர்களுக்கும் பயனை காண்கிறோம்
அது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸ அர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனால்
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வேத ப்ரதிபாதிதமான யாகத்ததை செய்வதில்லை,
யாகனுஷ்டான பரம்மபரை மிகவும் குறைவு என சிலர் குறை கூறுகிறார்கள்.
ஸ்ரீபாஷ்யகாரரின் பிதா கேசவஸோமயாஜீ , ஆயினும் ஸ்ரீபாஷ்யகாரர் ஸம்ஸாரத்தில் விரக்ராய்
ஸந்யாஸம் ஸ்வீகரித்தபடியால் யாகானுஷ்டானத்தில் அவகாசமில்லை,

ஸ்வாமி தேசிகன் காலத்தில், தற்சமயம் பாரத தேசத்துக்கு சீனா ,பாகிஸ்தான் முதலிய அண்டை நாடுகளின் உபத்ரவம் போல்
ஸம்ப்தாயத்துக்கு அத்வைதிகளாலும் ஏகதேசிகளாலும் அபாயம் ஏற்பட
அதை ஸம்ரக்ஷிக்கவேண்டிய நிர்பந்தம் .வாதம் செய்வதும் பரமத நிரஸநார்தமாக க்ரந்தம் அனுக்ரஹிக்க வேண்டிவந்ததாலும்
பரமத நிரஸந பூர்வகமாக ஆலயங்களில் யாக ரூபமான திருவாராதனத்தை நடத்தி வைத்த படியால்,
பிதாமஹன் புண்டரீகாக்ஷயஜ்வாவானபடியாலும் யாகம் செய்யாவிடினும் தோஷமில்லை என்பதாலும்
யாகானுஷ்டானம் செய்ததாக ப்ரமாணம் காணவில்லை எனலாம்,
ஆயினும் சிலர் ஸ்வாமி யாகமனுஷ்டித்ததாக கூறுகிறார்கள்.
சிலர் ஸ்ரீதேசிகனுக்குப்போல் விரக்தியில்லாதபோதும் யாகம் செய்யாததில் தேசிகனே யாகம் செய்யவில்லை என்பார்கள்.

வைகாநஸர்கள், வைஷ்ணவர்களே அல்ல,
பஞ்சஸம்ஸ்காரத்தில் சேர்ந்த தப்த சங்க சக்ர தாரணத்தை- ஸமாச்ரயணம் செய்தவர்களே வைஷ்ணவர்கள்,
வைகாநஸர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணரூபமான கர்மா கிடையாதே என கேள்விக்கு
ஸ்வாமிதேசிகன் சரணாகதி தீபிகையில் ஸாதிக்கும் ஸமாதானம்,
த்வாம் பாஞ்சராத்ரகநயேந ப்ருதக்விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாராஃ ஸம்ஞாவிசேஷநியமேந
ஸமர்சயந்தஃப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தந்யாஃ ப்ருதக்விதேந,
நியத என்கிற பதப்ரயோகத்தால் தப்தசங்கசக்ரதாரணம் இல்லாமலே வைகாநஸர்களுக்கு
பகவதாராதனத்தில் அதிகாரம் உள்ளது என்பதை குறிப்பிட்டதாகும்,
நியதாதிகாரமென்பது அவரவர்களின் சாஸ்த்ரத்தில் கூறிய ப்ரகாரம் அதிகாரமுள்ளவர்கள்,
ஆகையால் அவர்களுக்கு பகவாதாராதனம் செய்ய யோக்யதையை பெற தீக்ஷை இல்லை.
தீக்ஷை யில்லாததே பாஞ்சராத்ரத்தை விட வேறுபட்டதாகும்,
தீக்ஷைஷயிலேயே பஞ்சஸம்ஸ்காரமும் சேருவதால் தீக்ஷையில்லாதவர்களுக்கு பஞ்சஸம்ஸ்காரமும் தேவையில்லை என்பதாம்.

அவர்களின் சாஸ்த்ரத்தில்
கர்பே மாஸி அஷ்டமே விஷ்ணுபலிம் குர்யாத்யதாவிதி
தஸ்மின் திநே ப்ரவிஷ்டோஹம் கர்பே தஸ்யாஃ சிசும் ப்ரதி,
மத்கரேஷுஸ்திதம் சக்ரம் சங்கம் சைவ ததைவ ச
மத்கரேணைவ குர்வந்தி கர்பே தஸ்யாஃ சிசோர்புஜே.
வைகாநஸாதிசாஸ்த்ரேண ஸய்தயம் கர்பவைஷ்ணவஃ
கர்பத்தின் எட்டாவது மாதத்தில் விஷ்ணு பலி என்கிற கர்மாவை அனுஷ்டிப்பதால் அந்த தினத்தில்
நான் கர்பத்தில் ப்ரவேசிப்பதால், என்கையிலுள்ள சங்க சக்ரத்தாலேயே சங்கசக்ரதாரணத்தை செய்கிறார்கள் என்பதால்
அவர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணம் தேவையில்லை, இதனால் சில ஆலயங்களில் தப்த சங்க சக்ர தாரணம்
செய்த வைகாநஸர்களே ஆராதனம் செய்யவேணுமென்பது அவர்களின் சாஸ்தரத்துக்கு விருத்தமாம்.

வைகாநஸரிஷி முதலாக இதுநாள் வரையில் அவர்களின் வம்சத்தில் ஜனித்தவர்களான வைஷ்ணவர்களே
ஆலயத்தில் வைகாநஸாகமப்ரகாரம் ஆராதனம் செய்யத்தகுந்தவர்கள்,
போதாயன ஸூத்ரகாரர்கள் ஆபஸ்தம்பஸூத்ரப்ரகாரம் வைதீககர்மாவை அனுஷ்டிக்க முடியாதது போல்
வைகாநஸரல்லாதவர்கள் வைகாநஸமுறைப்படி வைகாமஸஸூத்ரப்ரகாரம் ஆராதநம் செய்ய அதிகாரிகளல்ல.

ஸ்ரீவைகாநஸ ஆகமப்ரகாரம் திருவாராதனம் நடைபெறுவதில் திருவேங்கடமாகிற திவ்யதேசம் ப்ரதானமாகும்,
பிற்காலத்தில் ஸ்ரீவைகாநஸத்தை ப்ரமாணமாக்கி ஸம்ரக்ஷித்தபடியாலேயே ஸ்வாமி தேசிகனின் அவதாரஸ்தலமான ஸ்ரீதூப்புலிலும்,
மற்றும் ஸ்வாமி உகந்தருளின திருவஹீந்திரபுரம், திருவிண்ணகர் முதலிய திவ்யதேசங்களிலும்
ஸ்வாமிக்கு ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரோக்தப்ரகாரம் நித்யபடி திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளும் நடைபெறுகிறது எனலாம்.

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தின் ஸாம்யம் உள்ளதுபோல்
திருமலைக்கும் ஸ்வாமிதேசிகனின் அவதார ஸ்தலத்துக்கும் பல ஸாம்யங்கள் உள்ளன,
1.திருமங்கையாழ்வார் ,பொன்னை மாமனியை –வேங்கடத்து உச்சியில்–காணும் தண்காவிலே என மங்களாசாஸநம் செய்கிறார்,
இதனால் இங்கு ஸ்வாமிதேசிகனின் அவதாரம் ஸூசிதம்,
2..இருவருக்கும் ஸ்ரீவேங்கடேசன் என திருநாமம்
3.இரண்டு ஸ்தலத்திலும் வைகாநஸ பகவத் சாஸ்த்ரோக்தப்ரகாரம் திருவாரதனம் நடைபெறுகிறது,
4.இரண்டு இடத்திலும் ஒரே காலத்தில் வார்ஷீக உத்ஸவம் நடைபெறுகிறது,
5.இரண்டு ஸ்தலத்திலும் திருவாராதனத்துக்கு த்ரவ்யம் அடியார்களால் ஸமர்ப்பிக்கப்படுகிறது,
ஸம்யகாசாரயுக்தாம் என ஸ்வாமிதேசிகனால் கொண்டாடப்பட்ட திருமலையில் திருவாராதனத்தில் வைகல்யில்லாததால்
ஸம்வத்ஸரப்ராயச்சித்தரூபமான பவித்ரரோத்ஸவம் ஸமீபகாலம் வரையில் நடைபெறவில்லை.,
6.இரண்டு ஸ்தலத்திலும் திருமலை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்கள் திருவாராதனத்தில் ப்ரதானமான பாராயணத்தையும்
மந்த்ர புஷ்ப கைங்கர்யத்தையும் செய்து வருகிறார்கள்,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பலஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸஅர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனாக
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள் என்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறபடியால்
இந்த திருத்தண்கா திவ்யதேசத்தில் நடைபெறும் நித்ய திருவாராதன
கைங்கர்யத்தில் இதுவரை அன்வயிக்காதவர்கள் ஸ்ரீதேசிகனடியார்கள் யதாசக்தி அன்வயித்தாலும்
எம்பெருமான் மற்றும் ஆசார்ய ச்ரேஷ்டரின் அனுக்ரஹத்தால் அவரவர்களின் இஷ்டங்களை பெறலாம் என்பது திண்ணம்,

————–

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:

——–

ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: