ஸ்ரீ ஆழ்வார்களும் நவராத்திரியும்
கொலு
மணல் வீடு -சிற்றில் இழைத்து விளையாடி விளையாட
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-–2-3-
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்–2-8-
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா–2-9-
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்–2-10-
மண் பொம்மை இருக்கும் கொலுவில்
ஏலோர் எம்பாவாய் –
ஏல் கேள்
ஓர் பின்பற்று
பாவாய் பாவை வடிவு
நாராயணனின் திரு வடிவை மணலில் வடித்து
மழையே –மண் புறம் பூசி மெழுகு ஊற்றினால் போல் -பொம்மை பண்ணும் முறை
உள் பூச்சு -மெழுகு -வெளிப்பூச்சு -மெழுகை உருக்கி எடுக்க
நெஞ்சையே கொண்டு போனானே -உதாரணம் உள்ளம் கவர்வதை –
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-
மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று –
மண்ணைப் புறம்பே பேசி மெழுகி உள்ளில் மொழுக்கை வெதுப்பி ஊற்றுமா போலே ஊற்றும் –
உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்த்து-
நல் வேங்கடத்துள் நின்ற-
உங்களுக்குச் சென்று கூடிக் கொள்ளலாம் படி அணித்தாக நிற்கிறவர் –
அழகப பிரானார் தம்மை –
என்ன இப்பாடு படுத்துகைக்கு ஈடான பரிகரத்தை உடையவர் –
யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று –
நெஞ்சிலே பிரகாசித்து –
அணைக்கக் கோலி கையை நீட்டி அகப்படக் காணாமையாலே நோவு படுகை அன்றிக்கே-
நெஞ்சிலே பிரதி பாசிக்கும் படியே நான் அணைக்கும் படி பண்ணி –
உஷையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே –
என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே-
என்னை நெருக்கிக் கொண்டு
அப்போது இது தான் தேட்டமாய் இருக்கும் இறே
அவனைக் கூட்டி வைத்து ஊற்றுவாயாக -என்றபடி –
வீற்று இருந்து -ஏழு உலகும் தனிக்கோல் -செய்ய நம்மாழ்வார்
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–7-10-1-
கொலு -அழகுடன் வீற்று இருப்பது
கல்வி -மேன்மை ka
அகல் -கடினமாக -ga
கொலு வீற்று இருப்பது
அரசன் போல் கொலு பொம்மைகள் அமைப்பு
ஸ்ரீ வைகுண்ட நாதன் கொலு வீற்று இருந்து ஆட்சி செய்கிறான் –
ஒற்றைப்படை
ஏழு படி நிறைய பேர் வைப்பார்கள்
மேலே ஸ்ரீ மன் நாராயணன் கொலு வீற்று இருந்து –
பிராட்டி உடனே
அஷ்ட லஷ்மி
லஷ்மீ ஹயக்ரீவர்
ராமஜெயம்
நினைவூட்டவே
ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ஜெயந்தி போல் இந்த பத்து நாள்களும்
தமர் உகந்தது –பொய்கையார்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–
சாரங்க பாணி தனது திருநாமத்தையே ஆராவமுதன் என்று ப்ரஸித்தமாகக் கொண்டானே
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
மணல் வீடு கட்டி குழந்தைகள் மண் உருண்டை ஸ்வீ குறித்த எம்பெருமானார்
கொலுவில் ஸ்ரத்தை இருந்தால் அதிலேயே ஸாந்நித்யம் உண்டே
இறை அனுபவமே முதல் பலன்
கல்வி வீர செல்வம் -ஆனு ஷங்கிகம்
சீதா கல்யாணம் கீதா உபதேசம் வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன் -ஸூந்தர காண்ட-நேராகக் காணும் அனுபவம்
set
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னும் வீற்று இருந்த அம்மான் தன்னை அவன் இவன் என்று ஏத்தி -குலசேகரப் பெருமாள்
அவனே தான் இவன் -த்ரேதா யுக ராமரே இன்று இங்கே நமக்காக கோவிந்த ராஜராக சேவை –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -சரீரீ சரீர
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-
உடல் மிசை உயிர் எனக்கரந்து பரந்துளன்
திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
ஆகவே கொலுவில் எல்லாமே வைக்கிறோம்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓதார் கற்கின்றது எல்லாம் கடை -நான்முகன் -54-
தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-
ஸமோஹம் சர்வ பூதாநாம் உணர்வு வருமே
நவ கிரகங்கள் நவத்வாரம் நவ படிகள்
கீழ் ஓர் அறிவு செடிகள் -தெப்பக்குளம்
சங்கு நத்தை ஈர் அருவி பிராணிகள்
கரையான் எறும்பு ஊர்வன
நண்டு வந்து
மிருகங்கள் பறவைகள்
ஆராய்வதில் விவசாயி செட்டியார்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -நினைவூட்டவே
ஏழாவது
இதுவே கொலுவில் நாம் சேவிக்கும் பாக்யம் –
அத்தி வரதர் கொலு பிரஸித்தம் அன்றோ
அருள் பார்வையால் மேலே மேலே ஞான விகாஸம் பெற்றோம்
அரிது அரிது மானிடராவது அரிது
ஏழாவது வாழ்க்கைப்படிகள் படியில் -பக்தியில் ஈடுபட்ட மஹான்கள் ஆச்சார்யர்கள் -ஆழ்வார்கள் –
பின்பற்றி உயர
மேலே தேவர்கள் –
இத்தையும் கடந்து
மேலே ஸ்ரீ -ஸ்ரீயபதி மிதுனம்
உத்தரே உத்தரே -மனஸ்ஸை இறைவன் மேல் ஈடுபடுத்தி –
பாரம்பர்ய பெருமை கொண்டாட்டத்துக்குள்ளே தத்வம்
மஹா நவமி -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர்
ஆயுத பூஜை -விஜய தஸமி -நாமும் அவனுக்கு உடல் உபகரணம் -என்ற நினைவு வேண்டுமே –
செய்யும் தொழிலே தெய்வம் -இறை பணி
மஹா நவமி ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் ஞான மூர்த்தி -உபாஸ் மஹே
பரி முகமாய் அருளிய என் பரமன் -கலியன் -மது கைடவர் நிரஸனம் -வேதம் மீட்டு நான்முகனுக்கு அருளி –
ஓவ்ஷதகிரி -திருவயிந்ர புரம்
தீய சக்தி அழிக்க -விஜய தசமி –
ராவணனை வீழ்த்திய நாள்
வால்மிகி ராமாயணம் சித்ர மாதம்
கல்ப பேதம்
வட இந்தியா -தீபாவளி அயோத்யா திரும்பிய நாள் அதன் படி இது பொருந்தும்
அம்பு போட்டு கோயில்களில் உத்சவம் இன்றும் உண்டே
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -பொய்கையார் 29 பாசுரம்
உலகியல் வாழ்க்கை -இலங்கை
அசோகவனம் உடல்
இராவணன் -10 இந்திரியங்கள் -மனஸ் ஸூ -உருவகம் –
சத்வ குணம் விபீஷணன்
ரஜோ குணம் சூர்ப்பணகை
தமோ குணம் கும்பகர்ணன்
திருவடி -ஆச்சார்யர் ஸ்தானம்
சங்கு சக்ர லாஞ்சனை -பஞ்ச ஸம்ஸ்காரம்
சம்சாரம் அழிக்கப்பட்டு பரமாத்மாவுடன் சேர்க்கிறோம்
ஆத்ம விவாஹம் ஸ்ரீ சீதா ராமா பட்டாபிஷேகம் -விஜய தசமி
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply